|
நூலகம் திட்டம் (நூலக எண்: 100) |
||
|
மின்னூலாக்கம்: இ. பத்மநாப ஐயர் |
||
| மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை | ||
| கவனிக்க: நூலகம் திட்ட மின்னூல்களைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். | ||
| ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் | ||
|
ஆ. சதாசிவம் (தொகுப்பாசிரியர்) |
| ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் ஆ. சதாசிவம் (தொகுப்பாசிரியர்) --------------------------------------------------- சாகித்திய மண்டல வெளியீடு ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் ஈழத்துப் பூதன்றேவனார் காலந் தொடக்கம் கலாநிதி நடேசபிள்ளை காலம் வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்களின் கவிதைக் களஞ்சியம் தொகுப்பாசிரியர் ஆ. சதாசிவம் --------------------------------------------- ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் தொகுப்பாசிரியர் ஆ. சதாசிவம் வெளியீடு: சாகித்திய மண்டலம் 135, தர்மபால மாவத்தை கொழும்பு 7 --------------------------------------------- பதிப்பு - 1966 பதிப்புரிமை பதிப்பகம்: திருமகள் அழுத்தகம் சுன்னாகம். -------------------------------------------- பொருளடக்கம் பக்கம் அணிந்துரை vii சிறப்புப் பாயிரம் xv முகவுரை xvii 1. சங்ககாலம் 1 2. யாழ்ப்பாணத் தமிழ்வேந்தர் காலம் 1216-1621 8 3. போர்த்துக்கேயர் காலம் 1621-1658 77 4. ஒல்லாந்தர் காலம் 1658-1796 92 5. ஆங்கிலேயர் காலம் 1796-1947 131 6. தேசிய எழுச்சிக்காலம் 1948- 429 பிற்சேர்க்கை 503 புலவர் அகராதி 551 நூல் அகராதி 556 செய்யுள் அகராதி 566 --------------------------------------------- அணிந்துரை இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரும் சாகித்திய மண்டலச் செய்ற்குழு உறுப்பினருமாகிய திரு. வி. செல்வநாயகம் அவர்கள் அளித்தது. ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் 'ஈழத்துத் தமிழ்க் கவிதை களஞ்சியம்' என்னும் இந்நூல், பல நூற்றாண்டுகளாக இந்நாடு தமிழிலக்கியப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. ஈழநாட்டுப் புலவர்கள் இயற்றிய பல பிரபந்தங்களுட் சிலவே அச்சிடப்பட்டுள்ளன. அங்ஙனம் அச்சிடப்பட்டுள்ளனவற்றுட் பெரும்பாலானவை ஒரு முறை மட்டும் பதிப்பிக்கப்பட்டமையால், அந்நூற் பிரதிகள் அருகியே காணப்படுகின்றன. அவற்றையும் ஏட்டு வடிவிலுள்ள ஏனை நூல்களையுந் தேடிப்பெற்று, அவற்றிலுள்ள செய்யுட்களுட் சிலவற்றைத் திரட்டி நூல்வடிவில் உதவிய கலாநிதி ஆ. சதாசிவம் அவர்களின் தமிழ்த்தொண்டும், அதனை அச்சிடுதற்கு வேண்டிய பணத்தை உதவி ஊக்கிய இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் பணியும் பாராட்டற் குரியவை. ஈழநாட்டுத் தமிழிலக்கிய வளத்தினை வரலாற்று முறைப்படி ஆராய்வதற்கும், ஈழத்துத் தமிழ்ப் பிரபந்தங்களின் இலக்கியச் சிறப்பினை மட்டிடுவதற்கும் சிறந்த கருவியாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலிலே தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்களுட் பல கற்பனை வளமும் ஓசைச் சிறப்பும் வாய்க்கப் பெற்றவை. நாயக்கர் காலப்பிரிவிலும் ஆங்கிலேயர் காலப்பிரிவிலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த பெரும் புலவர்கள் இயற்றிய செய்யுட்களோடு ஒப்பிட்டுப் பாராட்டக்கூடிய அத்துணைச் சிறப்பு வாய்ந்த செய்யுட்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. அத்தகைய செய்யுட்களை இயற்றிய புலவர்களையும் எம்முடைய நாடு தோற்றுவித்துள்ளது என்பதை நாம் அறிந்து பெருமிதம் கொள்ளுதற்கும், எம்முடைய நாட்டில் வாழ்ந்த புலவர்களை நாம் போற்றுவதோடு அவர்கள் இயற்றிய நூல்களையுந் தனிச்செய்யுட்களையும் நாம் தேடிப் பெற்றுப் படித்து அனுபவிப்பதற்கும் இந்நூல் ஒரு கருவியாகின்றது. எம்முடைய நாட்டில் எழுந்த நூல்களுள் இன்னும் அச்சிடப்படாதனவற்றைத் தக்க முறையிலே ஆராய்ந்து அச்சிடுவதற்கு வேண்டிய ஊக்கத்தை இந்நூல், தமிழறிஞர்களிடையே எழச்செய்யும் என்பதில் ஐயமில்லை. இலங்கைச் சாகித்திய மண்டலம் தொடர்ந்து இத்தகைய பணிகளுக்குப் பொருளுதவி செய்து வருமாயின், அது எம்முடைய இலக்கியத்துக்குப் பெரும் பணி புரிந்ததாகும். வி.செல்வநாயகம். 14.9.1966. ----------------------------------------------------------------------- அணிந்துரை யாழ்ப்பாணம், ஆறுமுக நாவலர் காவிய பாடசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் வித்துவான் ந. சுப்பையபிள்ளை அவர்கள் அளித்தது. கல்வி கேள்விகளால் அறிவில் மேம்பட்ட சான்றோர் புலவர் எனப்படுவர்; புலமையை யுடையவர் என்ற காரணத்தால் ஆகிய பெயர் இது; புலமை- அறிவு. புலவர்: கவி, கமகன், வாதி, வாக்கி என நால்வகையினர் எனவும், அவருள்ளே கவி என்பார் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என நால்வகைப்படுவர் எனவும் குணவீரபண்டிதர் தமது வெண்பாப் பாட்டியலிற் கூறுவர். புதியவாகச் செய்யுள் புனைந்து இயற்றவல்ல புலவரே 'கவி' என்றும், 'கவிஞர்' என்றும் வழங்கப்படுவர். கமகன் என்போர் ஒருவர் சொல்லிய நூலினை அல்லது செய்யுளைத் தாம் பயிலாதிருந்தும், விசேட ஞானமாகிய நுண்மதியாலாவது கல்வி கேள்விகளின் ஆற்றலினாலாவது அதன் மெய்ப்பொருளை விரித்து உரைக்கவல்ல புலவராவர். இத்தகைய புலமையினாற்றான் வில்லிபுத்தூரரை அருணகிரிநாதர் வென்றதும், வில்லிபுத்தூரர் குறைபாடுற்றுத் தோல்வியுற்றதும் என்று வரலாறு கூறும். வாதி என்போர் தாம் நிலைநாட்ட எடுத்துக் கொண்ட பொருளாகிய மேற்கோளினை (பிரதிஞ்ஞையை), ஏதுவும் (காரணமும்) எடுத்துக் காட்டும் (உதாரணமும்) காட்டித் தாபித்து முடித்து முறைப்படி வாதஞ் செய்தலால் எதிர்வாதஞ் செய்வோரை வெல்லவல்ல புலவராவர். ஆதிசங்கராசாரிய சுவாமிகள் அக்காலத்தில் ஏனைய மதத்தவர்களை வாதில் வென்று தமது அத்வைத மதத்தைத் தாபித்தமை இத்தகைய புலமையின் பாற்படும். வாக்கி எனப்படுவோர் தாம் விரித்துப் பேசலுற்ற பொருளை அவைக்களத்திலிருந்து கேட்போர் யாவருக்கும் இனிது விளங்கவும் சுவை ததும்பவும் சுருங்கிய சொல்லாற் பொருட் செறிவு பொருந்த விரித்துப் பிரசங்கிக்க வல்ல புலமையாளராவர். இவ்வகையினருள்ளே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் முதன்மையாளராக விளங்கியமை உலகப்பிரசித்தமானது. இனி, ஆசுகவி முதலாகிய நால்வகைக் கவிஞருள்ளே ஆசுகவி என்போர் 'இவ்வெழுத்தாலே பாடுக, இச்சொல்லாலே பாடுக, இப்பொருள்பற்றிப் பாடுக, இவ்யாப்பினாலே பாடுக, இவ்வலங்காரம் பொருந்தப் பாடுக' என்பனபோல ஒருவர் கூறியபொழுது உடனே அவரெதிரே அவ்விதம் பாடி முடிக்கும் வல்லமையுடைய புலவராவர்; (ஆசு- விரைவாக, (ப்பாடவல்ல); கவி - கவிஞன்.) காளமேகப்புலவர் போல்வார் இவ்வகையில் முதன்மைபெற்று விளங்கியவர். மதுரகவிப்புலவராவர் ஓசையும் பொருளும் இனியவாய், முழுவதுஞ் செஞ்சொல்லாய், அலங்காரமும் பொருளுந் தெள்ளிதிற் புலப்பட, கேட்டோர் புகழும்படி செய்யுள் பாடுந் தகைமை யுடையவர். உதாரணமாக, ஓளவையார் பாடிய தனிப்பாடல்கள் பெரும்பாலன இவ்வகையின என்னலாம். சித்திரக்கவிப் புலவர் எனப்படுவோர் மாலைமாற்று, சக்கர பந்தம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, வினாவுத்தரம் முதலிய பலவகைப்படும் விசித்திரங்கள் அமையும்படி செய்யுளைச் சந்தங்கெடாமல், எழுத்துக் குற்றம் முதலிய ஐவகைக் குற்றமும் இன்றிப் பாடவல்ல புலவராவர். சித்திரக் கவியின் பாற்படுஞ் செய்யுள் வகைகளின் இலக்கணங்களை உதாரணத்துடன் தண்டியலங்காரம் முதலிய அணியிலக்கண நூல்களிற் காணலாம். வித்தாரகவி என்பார் பல செய்யுள் தொடர்ந்துவரும் தொடர்நிலைச் செய்யுள் அல்லது அடிபலவாய் விரிந்து செல்லும் தனிப்பாச்செய்யுள் ஆகிய இவற்றைப் பாடவல்ல கவிஞராவர். (தொடர் நிலைச் செய்யுள் - பதிகம் இரட்டைமணிமாலை கலம்பகம் முதலாகிய சிறுபிரபந்தங்களும், காவியங்களும். அடிபலவாய் விரிந்த தனிப்பாச் செய்யுள் - பத்துப் பாட்டிலுள்ள ஒவ்வொரு நூலும், உலா, மடல் போல்வனவும்). ஆசுகவி முதலிய நான்கு பெயர்களும் அவ்வப் புலவர்களின் அவ்வத்தகைமை வாய்ந்த செய்யுளுக்கும் பெயராக வழங்கப்படுவனவாகும். கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைப் புலவர்களும் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவிஞர்களுமாயுள்ள நம் முன்னோர் பலர் இவ் வீழ மண்டலத்தின் கண்ணே காலத்துக்குக்காலந் தோன்றி, தங்கள் புலமையினாலுங் கவிதைகளாலுந் தமிழ் மொழியைப் பேணி வளர்த்து வந்தார்கள் என்பது வரலாற்று நூல்களால் அறியப்பட்ட பல புலவர்களின் நூல்களின் பெயர் மாத்திரம் அறியத்தக்கனவாகி, அந்நூல்கள் வெளிவராமலும் கிடைக்கப்பெறாமலு மிருத்தல் எம்மவரது தவக்குறைவின் பயனே என்னலாம். இந்நிலைமையில்,புது நூலாக வெளிவருகின்றது 'ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்பது. இது சங்ககாலம் தொடக்கம் சமீபகாலம் வரையில் இலங்கையில் வாழ்ந்து மறைந்தவர்களாய் அறியய்பட்டுள்ள ஈழத்தின் எல்லாப் புலவர்களுடைய கவிதைகளையுந் துருவித் தேடிப்பெற்று, அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, காலம், அன்னார் நூல்களிலிருந்துந் தனிப்பாடல்களிலிருந்தும் மாதிரிகைப் பொருட்டாகத் தேர்ந்தெடுத்த சில சில செய்யுட்கள் என்பவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துக் கூறும் முறையில், ஆக்கப்பட்டுள்ள புதியதொரு தொகுப்பு நூலாகும். இவ்வித நூலாக்கப் பணியானது, சங்ககாலப் புலவர்களுங் கடைச் சங்கத்தை அண்மிய காலத்துப் புலவர்களுமாகிய பற்பல புலவர்களுடைய தனிப்பாடல்களையும் நூல்களையும் முற்காலத்துள்ள அரசரும் புலவரும் போன்ற சான்றோர் 'பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு' எனத் தொகுத்து வைத்த அரும்பணி போன்றதொரு பெரும்பணியாகும். அவ்வாறு அப்பணி முன்னைச் சான்றோராற் செய்யப்பட்டிலதேல், பத்துப்பாட்டு முதலிய அறிவுக் களஞ்சியங்களாயுள்ள நூல்களும் பாடல்களும் நின்று நிலவாது எங்களுக்குக் கிட்டாமல் மறைந்தொழிதல் ஒரு தலையாகும். காலவிகற்பத்தால் ஈழத்துத் தமிழ் கவிதைகளும் அவற்றையாக்கிய யுலவர் விபரங்களுங் காலகதியில் மறைந்து வருவதைக் கண்டு, அவ்வாறு மறைந்துபடாமற் பாதுகாத்தலை நோக்கமாகக் கொண்டு, இத்தொகுப்பு நூலை யாக்கித்தந்த கலா நிதி திரு. ஆ. சதாசிவம் அவர்களின் இவ்வரும்பெருந் தொண்டு இக்கால நிலைக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததொரு பணியாக மெச்சத்தக்கதாகும். பழங்காலத்தைய ஏட்டுச்சுவடிகளையும் அச்சேறிக் கிடைக்கப்பெறாமல் மறைந்துள்ள நூல்களையும் பாடல்களையும் திசைதொறுஞ் சென்று பிரயாசப்பட்டுத் துருவித் தேடிப்பெற்று, இத் தொகுப்பு நூலை யாக்கிக்த் தந்த தொண்டின் அருமை பெருமைகள் திரு.சி.வை.தாமோதரம்பிள்ளை, தாட்சினணாத்திய கலாநிதி திரு. உ.வே. சாமி நாதையர் போன்றார்கன்றி எம்மனோர்க்கு எளிதிற் புலப்படத்தக்கனவல்ல. தமிழ்போசும் எல்லாச்சாகியத்தவரும் ஏற்றுப் போற்றத்தக்கவாறு சகல சாகியப் புலமையாளர்களுடைய கவிதைகளும் இந்நூலிற் கோவைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. வித்துவசிரோமணி பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்களாலியற்றப்பட்ட 'ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்' கி.பி. 1939ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதனால், அக்காலத்திலும் அதன் பின்னரும் வாழ்ந்து மறைந்த தமிழ்ப்புலவர்களையும் அவர்களின் நூல்களையும் தனிப்பாடல்களையும் அந்நூலினால் அறிதல் இயலாது. அக் கவிதைகளையும் புலமையாளரையும் தொகுத்து அறியும் வாய்ப்பும் இந்நூலாற் பெறத்தக்க ஒரு விசேட பயனாகும். இக்களஞ்சிய நூலுள் எடுத்துக் காட்டப்பட்ட பொருள் விளங்கமுடியாத செய்யுட்களுக்குப் பொருட் விளக்கம் அல்லது அரும்பதப் பொருள் போன்ற பகுதியும் சேர்க்கப்படுமாயின், அது அச்செய்யுள்களின் அருமை பெருமைகளை உணரவும், அவற்றைப் போற்றி வழக்கில் எடுத்தாண்டு பயண் பெறவும் ஏதுவாகும். தமது அரும்பெரு முயற்சியின் பயனாகிய இக்களஞ்சிய நூலை உலகிற்குத் தந்துதவிய கலாநிதி திரு. ஆ. சதாசிவம் அவர்கள் மேலும் இத்தகைய பணிகளை நிறைவேற்றி வாழவும் நீண்ட ஆயுள், உடல் நலம், பொருள்நலம் முதலிய பேறுகளைப் பெற்று வாழவும் அருள்புரியும் வண்ணம் எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகின்றோம். ந. சுப்பையபிள்ளை 15.4.1966 ------------------------------------------------------------- சிறப்புப் பாயிரம் புலவர் பாண்டியனார் அவர்கள் இயற்றியவை நேரிசையாசிரியப்பா ஒரு பொருள் குறித்த பலசொல் வகையும் பலபொருள் குறித்த வொருசொல் வகையுமென் றிருவகைப் பட்ட திரிசொற் கிளவி செய்யுட் சொல்லெனச் செந்தமிழ் மொழிநூல் பழந்தொல் காப்பின் பணித்தது கூறுவார் 5. திழந்த மதியினோ டெழுந்தது கூறுவார் எல்லா மொழியிலு மெளிமையு மருமையுங் கல்லார்க் கல்லது வல்லார்க் கில்லென நல்லா ரெல்லாம் நவில்வது கேளார் ஆங்கில மொழிச்சொல் லாக்க மின்றும் 10. யாங்கணும் பயிலா விலத்தின் மொழிச்சொலும் அச்சொல் லடியு மாதலை நினையார் திரிசொ லின்றேற் புதுச்சொல் லாக்கம் புரித லரிதெனப் புலங்கொள லில்லார். மொழிவளங் காட்டுஞ் சொல்வள மெல்லாம் 15. அழியாது காப்பது தழகிய செய்யு ளல்ல தில்லையென் றறிதலு மறியார் வழக்குச் சொல்லே கலைச்சொல் லல்ல தெழுத்துச் சொல்லென வில்லையென் றுளறி மொழியின் மரபு முதியோர் மரபு 20. அழியக் கொன்றுசொல் லாக்கஞ் செய்யும் புல்லறி வாளர் போலிப் படைப்பினர் நல்லறி வாளரை நகைசெய் தெள்ளுவார் இழிவடைக் காமமு மிழிவுடை வழக்குமே பொருளெனக் கொண்டு புனையுரை வரைவார் 25. புலன்வழிச் செல்லும் பொதுவியன் மக்கள் பலர்வழிச் செல்ல•ம பான்மை யுடையார் கனைதுளி பொழிந்துழிக் காளான் போலப் புனைபெயர் கொண்டு போந்தவிந் நாளில் அன்னை மொழியி னயர்வு பொறாது 30. முன்னை மரவும் பின்னை யாக்கமும் ஒருங்குடன் பேணி யுயர்வு காப்ப வெழுந்த புலுமை யெழத்திய லாளருள் தொழுந்தகை யிறைவன் றூய வருளால் மரபுவழி திறம்பாப் புலவர் மாண்பு 35. நிலைபெறு மாறு மவர்வாய் நிகழ்த்துஞ் சொல்லும் பொருளு மோசையுஞ் சொரியும் பல்வகை நயமும் பாங்குறு முணர்வும் மல்குறப் பின்னர் வாழுந் தமர்க்கு நல்விருந் தாக நண்ணுதல் காட்டு மெடுத்துக் காட்டென விலங்கு மாற்றாற் றெடுத்துப் பாச்சில தொகுத்து விளக்கி யீழத் தரசர் காலமொ டியைய வீழத்துப் பூதந் தேவன் முதலா வீழத் தெழுந்த புலவர் திறங்குறித் 45. தீழத் துத்தமிழ்க் கவிதைக் களஞ்சியம் எனத்தொகை நூலொன் றியற்றின னம்ம தனக்கிணை யில்லாத் தண்டதமிழ் மரபு வனப்போடு நிலவும் வகைபுரி நல்லோன் றொல்கட லிலங்கையிற் றோற்றி நிறுவும் 50. பல்கலைக் கழகச் சொல்வலர் தம்முள் வராலுகள் வயல்வள மருவு மராலிச் சதாசிவ மெனும்பெய ரவனே. கலி விருத்தம் வேந்தர் போயினர் வேளிரும் போயினர் ஈந்த வள்ளல்கள் யாவரும் போயினர் போந்த தீங்கினைப் போக்கிநம் ஆண்டவன் தீந்த மிழ்த்திறஞ் செல்விதிற் காக்கவே. ------------------------------------------------- முகவுரை நூற்பெயர்- 'ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்னும் இந்நூல் ஈழநாட்டில் வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட சிறந்த தமிழ்ப்பாடல்களின் தொகுதியாகும் தமிழ்மொழி வழங்கும் நாடுகள் பல. அந்நாடுகளுள்ளே தமிழகமும் ஈழத்தின் பகுதிகளும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழ்மொழியின் தாயகமாய் விளங்குகின்றன. முச்சங்கங்கள் மூலங்கன்னித்தமிழை வளர்த்த பெருமையைப் பாண்டி நாடு பெற்றது. அவ்வித சங்கங்களின் தோற்றத்துக்குத் தான் இருப்பிடமாய் அமையாதபோதும், பூதன்றேவனோர் முதலிய செந்தமிழ்ப் புலவர்களைப் பாண்டி நாட்டு மதுரையம்பதிக்கு அனுப்பி,செந்நாப்புலவர்களுடன் ஒக்க அமர்ந்து தீந்தமிழ்ச் செல்லோவியங்களைப் புனையச் செய்த பெருமையை ஈழவளநாடு பெற்றது. அத்துடன், பிற்காலங்களிலே தமிழகத்திற் பிறந்த செந்தமிழ்ப் புலவோர் பலரைத் தான் அழைத்து அவர்களைக்கொண்டு பாடுவித்து அவர்தஞ் செஞ்சுவைக் கவிதைகளின் உரிமையையும் பெற்றது ஈழம். ஈழத்துத் தமிழ்ப் புலவர்களால் யாக்கப்பட்ட செய்யுளிலக்கியங்களுந் தனிப்பாடல்களும் ஓழத்து இயற்கைச் சூழலினடியிற் றோன்றியவை, மக்கள் தம் பண்பாட்டினையும் வாழ்க்கை முறைகளையுந் தமிழ் மரபு பிறழாது கூறுபவை, ஈழத்துக்கே சிறப்பாகவுரிய நல்லை, நயினை, மாவை, கோணாமலை, கதிர் காமம் முதலிய நூற்றுக்கு மேற்பட்ட தலங்களின் பெருமையைப் பத்திரசம் ததும்ப உணர்த்துபவை, இந்து, இசுலாமிய, கிருஸ்தவத் தமிழ் மக்களது பண்பாட்டின் ஒருமையையுஞ் சிறப்பியல்புகளையுஞ் சொல்லோவியங்களில் வடித்துக்காட்டுபவை. இங்ஙனம் அமைந்த சிறப்புடன் நூற்றுநாற்பத்துமூன்று ஈழத்துத் தமிழ்ப் புலவர்களாற் பாடப்பட்ட செய்யுளிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என்பனவற்றினின்றுந் தெரிந்தெடுத்த தீஞ்சுவைக் கவிதைகளின் களஞ்சியமாகிய இந்நூலுக்கு 'ஈழத்துத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம்' எனப் பெயரிடப்பட்டது. நூலமைப்பு - இந்நூல் ஈழத்துக் கவிதைகளின் களஞ்சியமாக மட்டுமின்றி ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்று நூலாகவும் விளங்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. முந்நூற்றைம்பத்தெட்டுச் செய்யுள் நூல்களின் பெயர்கள் இந்நூலில் உள்ளன. அவற்றுள் நூற்றுநாற்பத்தேழு நூல்களிலிருந்துந் தனிப்பாடல்களிலிலுந்துஞ் செய்யுள்கள் தொகுக்கப்பட்டன. சில புலவர்களுக்குத் தனிப்பாடல்கள் மட்டுமே உள்ளன. சிறந்த சில புலவர்களின் பாடல்கள் இரண்டு அல்லது மூன்று நூல்களில்லிருந்துந் தேர்ந்தேடுக்கப்பட்டன. பண்டுதொட்டு இன்றுவரையுமுள்ள நீண்ட காலப் பகுதியிலே காலத்துக்காலந் தோன்றித் தம் பூத•வுடலை நீத்துப் புகழடம்புடன் விளங்கும் புலவர் பெருமக்களின் பாடல்கள் அவர் வாழ்ந்தகால முறைப்படியே வரிசைப்படுத்தப்பட்டன. இம் முறையில் முதலில் அமைவது பூதன்றேவனாரின் (கி.பி.130) பாடல்- ஈற்றில் அமைவது இலக்கிய கலாநிதி சு. நடேசபிள்ளையின் (-1965) பாடல். காலத்தைத் திட்டமாக தெரிந்து கொள்ள முறடியாத சில புலவர்களின் பாடல்களம், உரிய காலத்திற் கிடையாத புலவர் சிலரின் பாடல்களும் இந்நூலின் பிற்சேர்கையிற் சேர்க்கப்பட்டன. அடுத்த பதிப்புகளில் அவை உரிய இடத்தைப் பெரும். ஒவ்வொரு புலவரின் பாடல்களின் முன்னுரையாக வரலாற்றுக் குறிப்புக்கள் சேர்க்கப்பட்டன. இக்குறிப்புகளிலே புலவரின் பெயர், அவர் வாழ்ந்த காலம், ஊர், எழுதிய செய்யுள் நூல்கள்மற்றும் இன்றியமையாக செய்திகள் என்பன சுருக்கமாக உள. இவ் வரலாற்றுக் குறிப்புகளை எழுதுவதற்குத் துணை புரிந்த நூல்கள் சதாசிவம்பிள்ளை எழுதிய பாவலர் சரித்திர தீபகமும், வித்துவான் கணேசையர் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதமுமாகும். அந்நூல்களிற காணப்படாத பல புலவர்கள் பற்றிய குறிப்புக்கள் அப்புலவர்களின் வழித் தோன்றிய பரம் பரையினரிடமிருந்து பெற்றுச் சேர்க்கப்பட்டன. காலத்தைப் பற்றிய செய்திகள் தெரிந்த அளவிற் கூறப்பட்டன. உதாரணமாக சிவசம்புப் புலவர் பிறந்த ஆண்டு 1852 எனவும் இறந்த ஆண்டு 1910 எனவுந்த திட்டமாகக் கூறப்பட்டன. சில புலவர்களின் இறந்த ஆண்டு மட்டும் அவர் யெர்க்-திலே கூறப்பட்டது. பீதாம்பரப் புலவர் 1819 என்பது அவர் 1819 என்னம் ஆண்டை உள்ளிட்ட காலப்பகுதியில் வாழ்ந்தார் எனப் பொருள்படும். இந்நூலிற் புலவர்களின் வரிசையமைந்த விதம் அவர் இறந்த ஆண்டை யொட்டியதாகும். உதாரணமாக முருகேச பண்டிதர் 1830 - 1900, தாமோதரம்பிள்ளை 1831-1901, திருஞானசம்பந்தப்பிள்ளை 1849 - 1901, வயித்தியலிங்கப்பிள்ளை 1852 - 1901, சபாபதி நாவலர் 1843 - 1903 என்போரது வரிசையை நோக்குக. ஓரே ஆண்டில் இறந்த பல புலவர்களை வரிசைப் படுத்தும்போது அவர் பிறந்த ஆண்டு வரிசையுங் கருத்திற் கொள்ளப்பட்டது. இந்நூல் பெரும்பாலும் அரசியற்காலப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு சங்ககாலம், யார்ப்பாணத் தமிழ்வேந்தர் காலம் 1261 - 1505, போர்த்துக்கேயர் காலம் 1505 - 1658, ஒல்லாந்தர் காலம் 1658 - 1796, ஆங்கிலேயர் காலம் 1796 - 1947, தேசிய எழுச்சிக் காலம் 1948 - என ஆறுகாலப் பகுதிகளாக இலக்கிய வரலாற்றாசிரியர் கோட்பாடு களுக்கேற்ப வகுப்பப்பட்டது. ஒவொரு காலப் பகுதியில் எழுந்த செய்யுளிலக்கியங்களின் பொதுவியல்பாக அக்காலத்திய அரசியல் நிலை, இலக்கியப் பண்பு என்பன இந்நூலின் அவ்வக்காலப் பகுதிக்கு முன்னுரையாகச் சுருக்கி விளக்கப்பட்டன. தமிழ் கூறும் நல்லுலகத்து இலக்கியத்தின் ஒரு கூறே ஈழத் தமிழிலக்கியம் என்பதனையும், தமிழிலக்கிய மரபு என்பது இரு நாட்டுக்கும் ஒன்றே என்பதனையும் உணர்த்துமுகமாகவே முதலாவது காலப்பகுதியைச் சங்ககாலம் என அழைத்தனம் என்க. நூலிலுள்ள பிரபந்த இலக்கியங்கள் பிரபந்தம் என்பது பிர - மிகுந்த, பந்தம் - கட்டு என்னும் இரு சொற்களாலாய தொடர். ஒவ்வொரு பிரபந்தமும் யாதாயினுமொரு கட்டினாற் கட்டப்படுவது என்பது பொருள். கலம்பகம் என்னும் இலக்கியம் பதினெட்டுத் துறைகளாற் கட்டப்படுதல் போன்று பிள்ளைத் தமிழும் பத்துப் பருவங்களாற் கட்டப்படுகின்றது. ஏனையவும் அன்ன. தமிழிலுள்ள பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகையின என்பர். பிற்காலத்திய சி பிரபந்தங்கள் இத் தொகுப்புள் அகப்பட்டில. ஈழத்துப் புலவர்களாற் பாடப்பட்ட பிரபந்தங்கள் முப்பதுக்கு மேற்பட்ட வகையின. அவையாவன - அகவல், அந்தாதி, அம்மானை, இரட்டைமணிமாலை, இருபாவிருபஃது, உலா, ஊஞ்சல், ஒருபாவொருபஃது, கலம்பகம், கலித்துறை கலிப்பா, கலிவெண்பா, காதல், காவியம், கும்மி, குறவஞ்சி, கோவை, சதகம், சிந்து,தூது, நான்மணி மாலை, பள்ளு, பிள்ளைத்தமிழ், புராணம், மடல், மான்மியம், மும்மணிமாலை, மும்மணிக்கோவை, விருத்தம், வெண்பா முதலியன. பின்வரும் நுல்கள் ஒவ்வொரு வகைக்கும் எடுத்துக்காட்டுக்கள். அகவல் : அகவற் பாவினாற் படபபடுவது நல்லைக் கந்தரகவல் 181 விநாயகரவல் 279 அந்தாதி: அந்தத்தை ஆதியாகவுடையது அந்தாதியாகும். ஒரு செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும், அசையாயினும், சீராயினும், அடியாயினும் அடுத்த செய்யுளி• முதலாக அமையும்படி பாடுவது. இது பெரும்பாலும் ஒரேவகைச் செய்யுளால் நூறு பாடல்கள் கொண்டுவரும். இணுவையந்தாதி 241 கதிர்காம முருகேசர் ஆறாதார சடாட்சர அந்தாதி 365 கல்வளையந்தாதி 108 காரைநகர்த் திண்ணபுரவந்தாதி 209 கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி அந்தாதி 307 சங்களையந்தாதி 190 சன்மார்க்கவந்தாதி 358 சிங்கைநகரந்தாதி 197 திரிகோணமலை அந்தாதி 142 நல்லையந்தாதி 134 பசுபதீசுரர் அந்தாதி 354 புலியூர் அந்தாதி 272 மறைசை அந்தாதி 108 மாவை அந்தாதி 191இ 235 வண்ணைநகரந்தாதி 197 வருத்தலைவிளான் மருதடி விநாயகர் அந்தாதி 490 வெல்லையந்தாதி 201. அந்தாதி நூல்களுள் யமகம் அமைத்துப் பாடப்படுவன 'யமகவந்தாதி' எனப்படும். சிவதோத்திர யமக அந்தாதி 395 செந்தில் யமகவந்தாதி 244 திருச்சிற்றம்பல யமகவந்தாதி 235 திருநாகை நிரோட்ட யமகவந்தாதி 294 திருத்தில்லை நிரோட்ட யமகவந்தாதி 417 திருவேரக யமகவந்தாதி 244 நயினை நீரோட்ட யமகவந்தாதி 345 புலியூர் யமகவந்தாதி 129 சந்தம் வேறுபட்ட பத்துவகையான செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதியாகத் தொடவமைவது 'பதிற்றுப்பத்தந்தாதி' எனப்படும். இணுவைப் பதிற்றுப்பத்தந்தாதி 279 திருவிடைமருதூ‘ப் பத்தந்தாதி 232 அம்மானை : மூன்று பெண்கள் அம்மனைக்காய் எறிந்து விளையாடும்போது பாடும் பாடல்களாக அமைவது இப் பிரபந்தம். கொச்சைமொழிகள், உலக வழக்குச் சொற்கள் என்பன மிக்கும், ஒரு செய்தியையே மீட்டும்மீட்டுஞ் சொல்லும் பான்மையிலமைந்தும் நாடோடிப பாடல்களின் தன்மையிலமைவது அம்மானைப் பாட்டாகும். அடிவரையறையின்றித் தரவு கொச்சகத்தின் இலல்பிற்றாய்ப் பெரும்பாலும் அமைந்து வரும். அர்ச். யாகப்பர் அம்மானை 85 இரட்டைமணிமாலை : வெண்பாவுங் கலித்துறையுமாக அல்லது வெண்பாவும் விருத்தமுமாக இருப்பது பாக்கள் அந்தாதித் தொடையில் அமைவது. கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டைமணி மாலை 307 சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலை 120 நாகைத்திருவிரட்டை மணிமாலை 406 பாற்கரசேதுபதி இரட்டைமணிமாலை 214 வண்ணைத் திருமகள் இரட்டைமணிமாலை 382 விரகந்தி விநாயகர் இரட்டைமணிமாலை 451 இருபாவிருபஃது : வெண்பாவும் ஆசிரியப்பாவும் முறையே அந்தாதியாய் வந்து இருபது செய்யுளாய் முடிவது. வருத்தலைவிளான் மருதடி விநாயகர் இருபாவிருபஃது 490 உலா: இளமைப் பருவமுடைய தலைவனைக் குலம், குடிப்பிறப்பு, பரம்பரை முதலியவற்றால் இன்னானென்பது தோன்றக்கூறி, அவன் வீதியிற் பவனிவர, அவ்விடத்து நெருங்கியுள்ள பேதை முதலாகிய ஏழு பருவத்துப் பெண்களுங் கண்டு காதல் கொண்டதாக நேரிசைக கலிவெண்பாவாற் பாடுவது. தெய்வம், அரசர், உபகாரி, ஆசிரியர் என்போருள் ஒருவர்மீது பாடப்படுவது உலாப் பிரபந்தமாகம். நெல்லை வேலவருலா 160 ஊஞ்சல் (ஊசல்) : ஈழத்துப் புலவர்களாற் பெரிதுஞ் சிறப்பாகக் கையாளப்பட்ட பிரபந்தங்களுள் இதுவுமொன்றாகும். ஆசிரிய விருத்தத்தாலாதல், கலித்தாழிசையாலாதல் பொலிதருங் கிளையொடும் பொலிகவெனப் பாடுவது ஊசல். அல்வாய் விநாயகர் ஊஞ்சல் 477 கந்தவனநாதர் ஊஞ்சல் 174 கவணாவத்தை வைரவ ரூஞ்சல் 266 காலித் கதிரேச ரூஞ்சல் 266 குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல் 266 கச்திரசேகர விநாயக ரூஞ்சல் 218 சுனனாகம் ஐயனார் ஊஞ்சல் 161 திண்ணபுர ஊஞ்சல் 377 பத்திரகாளியம்மை ஊஞ்சல் 116 மயிலமணி ஊஞ்சல் 218 மயிலைச் சுப்பிரமணியர் ஊஞ்சல் 279 மாதகற் பிள்ளையா ரூஞ்சல் 266 மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல் 174 வடிவேலர் ஊஞ்சற்பதிகம் 382 வண்ணை நகரூசல் 197 வண்ணை செங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் 382 வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் ஊஞ்சல் 490 வீரபத்திரர் ஊஞ்சல் 180 வேலணை மகாகணபதிப்பிள்ளையார் திரு ஊஞ்சல் 261 ஒருபாவொருபஃது : அகலாவது, வெண்பாவாவது கலித்துறையாவது அந்தாதித் தொடையிலே பத்து வருவது. புதுவை சிறீ மணக்குள விநாயகர் ஒருபாவொருபஃது 482 கலம்பகம் : ஒரு போக்கு அல்லது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, வெண்பா, கலித்துறையாகிய மூன்றும் முன்னும், புயவகுப்பு முதல் ஊசலீறாகிய பதினெண் பொருட் கூறுபாடுகள் பின்னுமாக மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறையாகிய பாவும் பாவினமுமமைய இடையிடை வெண்பாக் கலித்துறை விரவ அந்தாதித் தொடையாற் பாடுவது. இது தேவர்ககு நூறும், முனிவர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சருக்கு எழுபதும் வணிகர்க்கு ஐம்பதும் ஏனையோர்க்கு முப்பதுமாக அமையும். மறைசைக் கலம்பகம் 144 கலித்துறை : கலித்துறை யென்னும் பாவினத்தாற் பாடப்படுவது. பாற்கர சேதுபதி கல்லாடக் கலித்துறை 237 வருத்தலைவிளான் மருதடி விநாயகர் கலிநிலைத்துறை 490 கட்டளைக் கலித்துறை 221 கலிப்பா: கலிப்பாவினாற் பாடப்படுவது. சந்தர் கலிப்பா 307 கலிவெண்பா : கலிவெண்பாவினாற் பாடப்படுவது நல்லைக் கலிவெண்பா 120 நீராவிக் கலிவெண்பா 134 வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் கலிவெண்பா 490 காதல் : கடவுள்மீது காதல் கொண்டதாகக் கவிபாடுவது சித்திர வேலாயுதர் காதல் 104 காவியம் : நூலின் முகத்தில் வாழ்த்து, வணக்கம், வருபொருள் இவற்றினொன்று அமைய, தன்னிகரில்லாத் தலைவனொருவனுடைய வாழ்க்கையை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளும் பொருந்த அமைத்துப் பாடுவது பெருஞ்காப்பியம் என்பர். பெருஞ்காப்பிய விலக்கணத்திற் குறைபாடுடையது சிறுகாப்பியம் அல்லது காப்பியம் ஆகும். இருது சங்கார காவியம் 439 கஞ்சன் காவியம் 123 கண்ணகி வழக்குரை காவியம் 39 திருச்செல்வர் காவியம் 101 வல்லான் காவியம் 538 கீர்த்தனை : பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று அங்கங்கள் கொண்டதாய இசைப்பாடல் அமைந்த பிரபந்தங்கீர்த்தனையாகும். அனுபல்லவியில்லாமலுங் கீர்த்தனைகள் உண்ட. சிலவற்றிற் பத்து அல்லது பதினைந்து சரணங்களுக்கு மேலும் உள்ளன. சரணங்கள் யாவும் ஒரேவர்ன மெட்டையுடையவை. கதிர்காம சுவாமி கீர்த்தனம் 409 கும்பிளாவளைப் பிள்ளையார் கீர்த்தனங்கள் 395 சிங்கைவேலன் கீர்த்தனைகள் 395 சிவதோத்திர கீர்த்தனை 180 நல்லைக்கந்தர் கீர்த்தனம் 181 நலவண்ணக் கீர்த்தனை 376 பெரியபுராணக் கீர்த்தனை 495 கும்மி : இசைப் பாட்டால் அமைந்த பிரபந்தங் கும்மியாகும். குத்துவிளக்கையோ கடவுளர் சிலையையோ நடுவில் வைத்து, அதனைச் சுற்றிப் பல பெண்கள் ஆடிவருகையில் அவர் வாயிலிரந்து வரும் பாடல்களாக அமைவது. ஐம்புல வேடக்கும்மி 454 ஞான அகீதாக்கும்மி 360 ஞானக்கும்மி 161 மது மானிடக் கும்மி 382 யாழ்ப்பாண சுவதேசக் கும்மி 322 குறவஞ்சி : ஒரு குறத்தி குறி கூறுவதுங் குறவனுடன் பேசி அளவளாவுவதுமாகிய செய்திகள் தலைமைபெறப் பாடும் பிரபந்தங் குறவஞ்சியாகும். குறவஞ்சி - குறமகள். அவகல், வெண்பா, தரவு, கொச்சகம், கலித்துறை, கலிநெடில் விருத்தம் இவைகளிடையே சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது. குறவஞ்சி நாடகம் எனவும் இது பெயர் பெறும். குறிஞ்சி நிலத்துச் செய்திகளைக் குறவஞ்சி வருணிக்கும். சேரிவழக்கு முதலியன இதில் இடம்பெறும். திருக்கோணேசர் மலைக் குறவஞ்சி 160 நகுமலைக் குறவஞ்சி154 நல்லைக் குறவஞ்சி 134 நல்லைநகர்க் குறவஞ்சி 158 வண்ணைக் குறவஞ்சி 154 வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி 116 கோவை : காமவின்பத்தைப் பற்றி அகப்பொருளிலக்கணம் நானூறு கட்டளைக் கலித்துறையாற் பாடுவது. "முதற்பொருள் கருப்பொரு ளுரிப்பொருண் முகந்து களவு கற்பெனும் வரவுடைத் தாகி நலனுறு கலித்துறை நானூறாக ஆறிரண் டுறுப்பும் ஊறின்றி விளங்கக் கூறுவ தகப்பொருட் கோவை யாகம்" (இலக்கண விளக்கப் பாட்டியல் 56) அடைக்கலங் கோவை 169 அருளம்பலக் கோவை 174 கரவை வேலன் கோவை 108 திருநல்லைக் கோவை 371 பன்றிமலையரசன் கோவை 399 கோவை நூலுட் கூறப்படும் ஏதாவது ஒரு துறை பற்றி நூறு கட்டளைக் கலித்துறை பாடின் அந்நூல் 'ஒருதுறைக் கோவை' எனப்படும். ஈழமண்டல சதகம் 326, 338 சன்மார்க்க சதகம் 358 திருச்சதகம் 201 வீரபத்திரா சதகம் 180 நீதி நூறு 218 சிந்து : இது இசைப் பாட்டு வகைகளில் ஒன்று. பெரும்பாலும் மூன்று சீர்களைப் பெற்ற சிந்தடிகளால் ஆனதாற் சிந்து எனப்பட்டது. பிற்காலத்தில், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பவற்றையுடைய கீர்த்தனைகளைப் போலன்றி, அளவொத்து வரும் அடிகளையுடைய இசைப் பாடல்களைச் சிந்து என்று வழங்கினர். தூது : தலைவன் தலைவயிருள் விரகதாபத்தாலே துன்புற்ற ஒருவர் மற்றொருவர்பாற்றம் வருத்தத்தைக் தெரிவிக்கும்படி உயர்திணைப் பொருள்களையேனும் அஃறிணைப் பொருள்களையேனும் விடுப்பதாகத் கலிவெண்பாவிற் பாடப்படுவது. கிள்ளைவிடு தூது 95, 138 பஞ்சவர்ணத் தூது 122 தத்தைவிடுதூது 212. நான்மணிமாலை : வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் ஆகிய நான்கும் அந்தாதித் தொடையாய்வர நாற்பது செய்யுள் கொண்டது. கதிரை நான்மணிமாலை 382 கந்தவனக்கடவை நான்மணிமாலை 454 நந்லை நான்மணிமாலை 307 பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை 244 புலோலி நான்மணிமாலை 244 பள்ளு : பள்ளு அல்லது உழத்தியர் பாட்டு கமத் தொழிலாளராகிய பள்ளர் அல்லது உழவர் தொழில் செய்யும் முறையையும் பள்ளனுக்கும் அவன் மனைவியராய மூத்தபள்ளி இளையபள்ளியருக்கும் இடையிலுள்ள குடும்பச்சச்சரவுளையுங் கூறும் நூலாகும். இது மருதநிலத்தை வருணிக்கும் பிரபந்தமாகும். கதிரை மலைப் பள்ளு 59 ஞானப் பள்ளு 79 தண்டிகைக் கனகராயன் பள்ளு 125 நவாலியூர் வன்னியசேகரன் பள்ளு 454 பறாளை விநாயகர் பள்ளு 108 பிள்ளைத் தமிழ்: ஒரு தலைவனது குழந்தைப் பருவத்தைப் பற்றிக் காப்பு முதலிய பத்துப் பருவங்களும் முறையே பொருந்தும்படி ஒவ்வொன்றிற்கும் பத்துச் செய்யுள் வீதம் ஆசிரியவிருத்தத்தாற் சிறப்பித்துப் பாடுவது. அவற்றுள், ஆண்பாற் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர், என்னும் பத்துப் பருவங்களுள் சிற்றில் சிறுபறை, சிறுதேர் என்பன வொழிப் தொழிந்தனவற்றோடு, அம்மானை, நீராடல், ஊசல், என்னும் மூன்றினையுஞ் சேர்த்துக் கூறப்படுவது பெண்பாற் பிள்ளைத் தமிழாகும். அவ்வாய் முத்துமாரியம்மை பிள்ளைத்தமிழ் 477 கதிர்காமமுரகன் பிள்ளைத்தமிழ் 521 சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் 122 நெல்லியவோடை அம்மாள் பிள்ளைக்கவி 159 பிள்ளைக்கவி124 புராணம் : பழைய வரலாற்றைக் கூறும் நூல் புராணம். புராணம் - பழைமை ; பூர்வகாலத்திலுண்டாயது. பழைய வரலாறு ஐந்து விதமாகப் பிரித்துக் கூறப்படும். அவையாவன - உலகத் தோற்றம், ஒடுக்கம், மன்வந்தரம், முனிவர் அரசர் மரபு, அவர் சரித்திரங்கள் என்பன. பிற்காலத்திய புராணங்களில் இவ்வகுப்பு முறை கைக் கொள்ளப்படவில்லை. ஏகாதசிப் புராணம் 95 கதிர்காம புராணம் 450 சாதி நிர்ணய புராணம் 230 சிதம்பர சபாநாத புராணம் 235 சிவராத்திரிப் புராணம் 95 சீமத்தனி புராணம் 304 ஞானானந்த புராணம் 91 தக்கண கைலாச புராணம் 450 தக்கிண கைலாச புராணம் 27 திருக்கரைசைப் புராணம் 45 திருவாக்குப் புராணம் 266 புலியூர்ப புராணம் 120 வலைவீசு புராணம் 123 வியாக்கிரபாத புராணம் 72 மடல் : அறம், பொருள், வீட்டை யெள்ளி, அரிவையர் திறத்துறும் இன்பத்தையே வலியுறுத்திப் பாட்டுடைத் தலைவ னியற்பெயருக்குத் தக்க முழுது மொரே யெதுகையாகத் தனிச்சொலின்றிக் கலிவெண்பாவாய் மடலூரும் பெற்றியிற்றென்று பாடுவது. அழகர்சாமி மடல் 172 மான்மியம் : மகிமை கூறுவது. அருணாசல மான்மியம் 342இ 399 இராமநாத மான்மியம் 399 திருநாவலூர் மான்மியம் 342 நயினை மான்மியம் 345 விநாயக மான்மியம் 304 மும்மணிக் கோவை: நேரிசை ஆசிரியப் பாவும், நேரிசை வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் முறையே அந்தாதியாக முப்பது செய்யுள் வருவது. ஈப்போ தண்ர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை 382 கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி மும்மணிக்கோவை 307 வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை 269 மும்மணிமாலை: வெண்பாவும், கலித்தறையும் ஆசிரியமும் அந்தாதியாய் முப்பது செய்யுள் வருவது. மயிலை மும்மணி மாலை 279 மாவை மும்மணி மாலை 371 விருத்தம் : விருத்தப்பாவாற் பாடப்படுவது விருத்தமாகும் இலுப்பைக் கடவை கட்டாடி வயல் பிள்ளையார்விருத்தம் 335 இலுப்பைக் கடவை கட்டாடி வயல் சுப்பிரமணியர் விருத்தம் 335 நல்லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம் 382 மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம் 279 முகியிதீன் ஆண்டகையவர்கள் பேரில் ஆசிரிய விருத்தம் 294 முன்னைநாதசுவாமி வடிவழகம்மை ஆசிரிய விருத்தம் 307 வடிவேலர் திருவிருத்தம் 382 வெண்பா: வெண்பா யாப்பினாற் பாடப்படுவது வெண்பா வென்னும் நூலாகும். கதிரைச் சிலேடை வெண்பா 454 காந்திவெண்பா 462 குடந்தை வெண்பா 218 சகுந்தலை வெண்பா 497 சனிவெண்பா 324 சாணக்கிய நீதி வெண்பா 309 திண்ணபுர வெண்பா 451 தேர் வெண்பா 268 நல்லை வெண்பா 134 நீர்வை வெண்பா 444 நூலாக்கத்துக்கு உறுதுணையாயினோர்: தமிழ் சிங்களமாகிய மொழிகளிற் கவிதைக் களஞ்சியங்களைத் தொகுப்பித்து வெளியிட வேண்டுமென்று இலங்கைச் சாகித்திய மண்டலம் 1963ஆம் ஆண்டில் முடிவு செய்தது ; அம் முடிவிற்கேற்ப, சிங்களக்விதைக் களஞ்சியம் தொகுக்கும் பொறுப்பை மூன்று பல்கலைக் கழகங்களினின்றுந் தெரிந்தெடுத்த பேராசிரியர் மூவர் குழவினிடத்தும், தமிழ்க்கவிதைக் களஞ்சியந் தொகுக்கும் பொறுப்பை மண்டல உறுப்பினராகிய எம்மிடத்திலும் ஒப்புவித்தது. இந்திய சாகித்திய மண்டலத்தின் வேண்டுகோளுக்கினங்கி காலஞ்சென்ற பேராசிரியர் ரா.பி. கேதுப்பிள்ளை யவர்கள் 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற பெயரிலே தொகுப்பு நூலொன்றை வெளியிட்டனராகையின் ஈழத்தில் வெளியிடும் இத் தொகுப்பு நூலில் ஈழத்துத் தமிழ்ப் புலவர்களின் பாடல்கள் மட்டும் இடம் பெறல் வேண்டுமென்றும், இன்று உயிருடன் இல்லாத புலவர்களின் பாடல்களே இத் தொகுப்பில் அடங்க வேண்டுமென்றும் இலங்கைச் சாகித்திய மண்டலம் எம்மைக் கேட்டுக்கொண்டது. மண்டலத்தின் இவ் வேண்டுகோளுக்கமைய உருவாயதே இந்நூல். ஈழத்தின் பல பாகங்களிற் சிதறிக்கிடக்கும் பழைய ஏட்டுப் பிரதிகளையும் அச்சில் வெளிவந்த நூல்களையுந் தேடிப் பெற்றுக் கொள்வதில் எம்முடன் ஒத்துழைத்தோர் பலராவர். அவர் எல்லோர்க்கும் எமது மனப்பூர்வமான நன்றி உரியதாகுக. அவருட் குறிப்பாக, வித்துவான் பொன்.கனகசபை அவர்கள் இத் தொகுபபுநூல் ஆரம்பித்த காலத்தில், யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் வாழ்ந்துவரும் புலவர் பரம்பரையினரிடந் தாமே நேரிற் சென்று நூல்களைப் பெற்றும் சில புலவர்களின் தீஞ்சுவைப் பாடல்களைத் தெரிந்து தந்தும் உதவினார்கள். அவர்களுக்கு எமது நன்றி. யாழ்ப்பாணத் தமிழ்வேந்தர் காலத்திலும் போர்த்துக்கேயர் காலத்திலும் ஈழத்தில் இயற்றப்பட்ட பல செய்யுணூல்களைத் தேடியலைந்த காலத்தில் எம்மை அங்ஙனம் அலைய விடாது தாம் பல்லாண்டுகள் அரிதிற் றேடித் சேகரித்து வைத்த பழைய நூற் பிரதிகள் அத்தனையும் எம்மிடம் ஒப்படைத்த கொழும்பு அரசாங்க மொழித்திணைக்களத்து மொழிபெயர்ப்பாளர் வித்துவான் எப்.எக்.சி. நடராச அவர்களின் வள்ளன்மையை மெச்சுவதோடு எமது நன்றியையுந் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்நூற் றொகுப்புவேலை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை தமது அரிய நேரத்தையும் பொருட் செலவினையும் பொருட்படுத்தாது இக்களஞ்சிய வெளியிட்டிற்கு உறுதுணையாயிருந்து வரபவர் இலங்கைச் சாகித்திய மண்டலத்து உறுப்பினராகயிருந்தவரும், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிலிருந்திச் சங்கத்தின் உப காரியதரிசியாகவும் ஈழத்துப் பண்டித கழகத்தின் செயலாளராகவும் கடமை யாற்றுபவருமாகிய மண்டிதர் செ. துரை சிங்கம் அவர்களாவர். அன்னாரின் ஒத்துழைப்பினால் இந்நூல் பெற்ற சிறப்புக்கள் பலவாகும். பிற வெளியீடுகளிற் காணப்படாத ஈழத்துப் புலவர்களின் வரலாறு, காலம் என்பனவற்றைப் பெற்றுத்தந்தும், இந்நூற் கையெழத்துப் பிரதியினைப் படித்துத் திருதங்கள் பல செய்தும், நூல் அச்சாகுங்கால் எம்முடனிருந்து அச்சுப்பிழைகள் ஏற்படாது பார்த்தும் இலக்கண வழுக்கள் முதலியனவற்றைக் களைந்தும் உதவிய பண்டிதரவர்களுக்கு யாம் மிகக் கடமைப் பாடுடையேம். இந்நூலுக்கு அணிந்துரை நல்கி சிறப்பித்த மூவராகிய எமது ஆசிரியர், பேராசிரியர் வி. செல்வ நாயகம் அவர்களுக்கும், ஈழத்துச் செந்தமிழ் மரபைப் பாதுகாத்து வளர்த்துவரும் முதுபெரும் புலவர்களாகிய வித்துவான் ந. சுப்பையபிள்ளை, புலவர் பாண்டியனார் ஆகியோருக்கும் எமது நன்றியறிதல் உரியதாகுக. இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் அழைப்பின்பேரில் இந்நூலை அச்சிடும் பொறுப்பை யேற்றுத் தமது பிற வெளியீடகளைப் போல் இந்நூலினையுஞ் சிறப்புற வெளியிட்ட சுன்னாகம் திரமகள் அழுத்தகத்தினருக்கும், சிறப்பாக மனேசர் திரு. மு. சபாரத்தினம் அவர்களுக்க எமது நன்றி உரியதாகுக. ஈழத்துப் புலவர்களாற் பாடப்பட்ட செந்தமிழ்க் கருவூலங்களைத் தமிழ்கூறும் நல்லுலகத்துக்குச் சமர்ப்பிக்குஞ் சீரிய பணியை மேற்கொண்ட இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் இவ் வெளியீட்டைத் தமிழ்ப் பெருமக்கள் ஆதரிப்பரேல் மண்டலம் மேலும் பல நூல்களை வெளியிட அது தூண்டுதலாகும். இவ்வரிகையில் ஈழத்தெழுந்த தூது, பள்ளு, உலா, குறவஞ்சி முதலிய பிரபந்தங்களைத் தனித் தனி தொகுதி நூல்களாக வெளியிட வேண்டுமென்பது எமது அவா. அங்ஙனம் வெளிவரின் ஆராய்ச்சி மாணவர்க்கும் பிறர்க்கும் அது பெரிதும் பயன்படுவதோடு பழைய எமது நூல்கள் அழிந்துபோகாது பாதுக்கப்படும். இம் முயற்சிக்கு தமிழ் மக்களின் பூரண ஆதரவும் எல்லாம் வல்ல இறைவனின் தூண்டுதலுங் கிட்டுவனவாகுக. ஆ. சதாசிவம் இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பு, 17.9.66 --------------------------------------------------------------- ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் 1. சங்க காலம் தமிழிலக்கிய வரலாற்றிற் சங்ககாலம் எனப்படுவது பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்னும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் எழுந்த கி.மு 300 கி.பி 200 ஆசிய கால எல்லையிற் பாண்டிநாடடின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலமாகும். அக்காலத்திலே சேர சோழ பாண்டி நாடுகளிலும் ஈழத்தின் வட பகுதியிலும் வாழ்ந்த தமிழ்ப் புலவோர் மதுரைக்குச் சென்று சிகாலம் அங்கு வாழ்ந்து தாம் பாடிய செய்யுள்களை அரங்கேற்றுவது வழக்கமாயிருந்தது. ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்ற தமிழ்ப் புலவர் பூதன்றேவனார் ஆவர். இவர் ஈழத்துப் பூதன்றேவனார் ஆவர். இவர் ஈழத்துப் பூதன்றேவனார் என அழைக்கப்படுவர். இவரையன்றி வேறும் ஈழத்துப்புலவர் சங்கத்திலமர்ந்திருந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. திருவளர் மதுரைத் தென்றமிழ்ச் சங்கப் புலவரு ளொருவராய்ப் புவியிசை நாட்டிய பூதந் தேவனார் முதலிய சான்றோர் தோன்றுதற் கிடமாந் தொன்றுகொள் சீர்த்தித் திரைவளை யீழத்து வடபால்........ என்பர் வித்துவான் கணேசையர். பூதன்றேவனார் காலம் கி.பி. 130 வரையிலாகும். இதன் விளக்கம் பின்வருமாறு. பூதன்றேவனாராற் பாடப்பட்ட மன்னருள் ஒருவன் பசும்பூட்பாண்டியன். இப்பசும்பூட்பாண்டியனைப் பரணரும் பாடியுள்ளனர். பரணர் பாடிய பிறவரசர் சேரன செங்குட்டுவன், கரிகாற் சோழன், அவன் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி முதலியோர். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் அமைத்தபோது ஈழநாட்டு மன்னன் கயபாகுவும் அங்கு சமுகமளித்திருந்தான் என்பதைச் சிலப்பதிகாரமும் சிங்கள வரலாற்று நூல்களுங் கூறுகின்றன. கயபாகுவின் காலம் கி.பி.114 - 136 வரையிலாகும். எனவே, கயபாகுவின் சமகாலத்தவனான செங்குட்டுவனைப் பாடிய பரணரும் பூதன்றேவனாரும் ஒரு காலத்தவர் என்பது போதரும். பூதன்றேவனார் ஈழத்தைவிட்டுச் சென்ற காலம் இதுவெனத் திட்டமாகக் கூறுதல் முடியாது. கி.பி. 67 - 111 இல் ஈழத்தை ஆண்ட சிங்கள மன்னனாகிய வசபாகு என்பான் யாழ்ப்பாணப் பகுதியையுங் கைப்பற்றி ஆண்டான் என்பதற்குத் திட்டவட்டமான ஆதாரங்கிடைத்துள்ளது. பருத்தித்துறைக்கு அண்மையில் வல்லிபுரம் என்னும் ஊரிற் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று வசபாகுவின் ஆட்சிக் காலத்தில் அவன் ஈட்டிய வெற்றியைச் சுட்டுவதாய் உள்ளது. எனவே, பூதன்றேவனார் முதலிய பலர் அக்காத்தில் மதுரைக்குச் சென்றிருக்கலாம் என ஊகிக்கக் கிடக்கின்றது. ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னருட் தலைசிறந்தோன் எல்லாள மன்னன். அவனது ஆட்சிகாலம் கி.மு. 205 - 161 ஆகும். தன் பிள்ளையிலும் பார்க்கப் பிரசைகள்மீது கூடிய அன்பு காட்டி 44 ஆண்டுகள் ஈழம் முழுவதையும் ஆண்ட இம் மன்னனே மனுச்சக்கரவர்த்தி என்றும் மனுநீதி கண்ட சோழன் என்றும் புகழப்படுபவன். இன்னும், 'எல்லாள மன்னன் இருதயம் போலவும்' எச் சோமசுந்தரப்புலவரும், 'ஈ‘நன் னாட்டு மேவுதமி ழரசனாஞ் சொல்லமர் நீதியி னெல்லாள னென்கோ!' எனத் தென்கோவை ச.கந்தையாபிள்ளையும் கூறுவன காண்க. இவ்வரலாறுகளை ஊன்றி ஆராயுமிடத்துக் கடைச்சங்க காலத்தில் ஈழத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்துவந்ததென்பதும், மனுநீதிகண்டசோழன் எனப் புகழப்படும் எல்லாளன் முதலியோர் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒருங்கே ஆண்டுவந்தனர் என்பதும், தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒரேயொரு புலவரவைக்களமாயிருந்த மதுராபுரியை நாடிப் பல பகுதிகளிலுமிருந்து புலவர்கள் சென்றனர் என்பதம் தெரியக்கிடக்கின்றன. எனவே ஈ‘த்துப் பூதன்றேவனார் முதலிய யாவருக்கும் பொதுவாகிய சங்க இலக்கிய மரபே ஈழத்துத் தமிழிலக்கிய மரபுமாகும். சங்கப்பாடல்கள் தூய தமிழ்ச் சொற்களாலானவை ; விழுமிய ஓசையும் பொருளுங் கொண்டவை ; இன்ன பொருளை இன்னவாறு பாடுக எனப் புலவோர் வகுத்துக் கொண்ட புவனெறி வழக்கை அடிப்படையாகக் கொண்டவை. அகம், புறம் என்றும் இருதிணையின் பாற்படுபவை அவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய அகத்திணைக் கூறுபாடுகளையும் வெட்சி, வஞ்சி, அழிஞை, தும்பை, வாகை என்னும் புறத்திணைக் கூறுபாடுகளையுங் கொண்டு விளங்குபவை சங்கப்பாடல்கள். ஈழத்துப பூதன்றேவனார் கி.பி. 130 கடைச்சங்கப் புலவருள் ஒருவராய இவர் ஈழநாட்டிலிருந்து மதுரைக்குச் சென்று குடியேறியவர் எனக் கருதப்படுவர். தந்தையார் பெயர் பூதன் என்பது ; பூதனி• மகன் தேவன், பூதன்றேவன் என்றாயிற்று*. இவர் பரணரின் காலத்தவர். 'விசும்பிவர் வெகுண்டைப் பசும்பூட்பாண்டியன், பாடுபெறு சிறப்பிற் கூடல்' (அகநானூறு 231-12) என இவர் புகழ்ந்து கூறும் பசும்பூட்பாண்டியனை 'வில்கெழு தானைப் பசும்பூட் பாண்டியன்' (அகநானூறு 162-21) எனப் பரணரும் பாடியுள்ளனராகையின் இரு வரும் ஒருகாலத்தவர் என்பது முடிபு. ___________________________________________________ *பூதந்தேவ• எனக் கணேசையரின் நூல்களிற் காணப்படுகிறது. அகநானூறு, குந்தொகை, நந்றிணை ஆகிய நூல்களிலே மொத்தம் ஏழு பாடல்கள் பூதன்றேவனாராற் பாடப்பட்டுள்ளன. அவை பாலை, குறிஞ்சி ஆகிய திணை வகையை விளக்குவன. குறிஞ்சி இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகந் தோழி சொல்லியது முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை ஓங்குவணர்ப் பெருங்குரல் உஇய பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும் புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக் கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய 5 நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம் நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோ தானே குன்றத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக் கவுள்மலிபு இழிதருங் காமர் கடாஅம் 10 இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்து இருங்கல் விளரளை அசுணம் ஓர்க்குங் காம்புபயில் இறும்பிற் பாம்புபடத் துவன்றிக் கொடுவிரல் உளியங் கெண்டும் வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே. 15 - அகநானூறு தலைமகள் சிறைப்புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது. வெறியென உணர்ந்த வேலன் நோய்மருந்து அறியா னாகுதல் அன்னை காணிய அரும்பட ரெவ்வம் இன்றுநாம் உழப்பினும் வாரற்க தில்ல தோழி சாரற் பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் 5 உண்கிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலம்புஞ் சோலை இலங்குமலை நாடன் இரவி னாமே. - குறுந்தொகை - 360 பாலை தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது செறுவோர் செம்மல் வாட்டலுங் சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உவக்கு முதவி யாண்மையும் இல்லிருந்து அமைவோர்க்கு இல்லென்று எண்ணி நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்ததோர் 5 படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக் கள்ளியம் பறந்தலைக் களர்தொறுங் குழீஇ உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை வெஞ்சுரம் இறந்தன ராயினும் நெஞ்சுருக வருவர் வாழி தோழி பொருவர் 10 செல்வமங் கடந்து செல்வா நல்லிசை விசும்பிவர் வெண்குடைப் பசும்பூட் பாண்டியன் பாடுபெறு சிறப்பிற் கூட லன்னநின் ஆடவண்டு அரற்று முச்சித் தோடர் கூந்தல் மரீஇ யோரே. - அகநானூறு - 231 பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளைச் செலவு விலக்கியது. சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய் அகலெழில் அல்குல் அவ்வரி வாடப் பகலுங் கங்குலு மயங்கிப் பையெனப் பெயலுறு மலரிற் கண்பனி வார ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து 5 நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை அடுமுரன் தொலைத்த நெடுநல் யானை மையலங் கடா அஞ் -ருக்கிமதஞ் சிறந்து இயக்குநர்ச் செகுக்கு மெய்படு நனந்தலைப் பெருங்கை யெண்கினங் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர புதலியவர் பொதியிற் கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து உடனுறை பழைமையிற் றுறத்தல் செல்லாது இரும்புறாப் பெடையொடு பயிரும் பெருங்கல் வைப்பின் மலைமுத லாறே. - அகநானூறு 307 வினை தலைவைக்கப்பட்டவிடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது இன்றை சென்று வருவது நாளைக் குன்றிழி யருவியின் வெண்தேர் முடுக இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக் காலியற் செலவின் மாலை யெய்திச் 5 சின்னிரை வால்வளைக் குறுமகள் பன்மா ணாகம் மணந்துவக் குவமே. - குறுந்தொகை - 189 தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. நினையாய் வாழி தோழி நனைகவுள் அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென மிகுவலி இரும்புவலிப் பகுவா யேற்றை வெண்கோடு செம்மறுக் கொளீஇய விடர்முகைக் கோடை யொற்றிய கருங்கால் வேங்கை 5 வாடுஞ் சினையிற் கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயரு மாறே. - குறுந்தொகை - 343 உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ் வீடுறு நண்துகில் ஊடுவந்து இமைக்குந் திருந்திழை யல்குற் பெருந்தோட் குறுமகள் மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக் கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி 5 மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த இரும்பல் மெல்லணை யொழியக் கரும்பின் வேல்போல் வெண்முகை விரியக் கரும்பின் வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை மூங்கி லங்கழைத் தூங்க ஒற்றும் 10 வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழியிவ் வுலகத் தானே - நற்றிணை - 366 *** 2. யாழ்ப்பாணத் தமிழ்வேந்தர் காலம் 1216 - 1621 அரசியல் நிலை : வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஈழத்தின் வடபாகம் தமிழ் வேந்தரால் ஆளப்பட்டு வந்தது தென்னிலங்கையிற் சிங்களஇராச்சியங்கள் சிறப்புற்றிருந்த காலங்களில் வடபகுதியும் சிங்கள அரசுக்குட்பட்டது. 1044ல் இலங்கை முழுவதும் தமிழ் வேந்தராகிய சோழரின் ஆறுகைக்குட்பட்டது. அக்காலத்திற் பொலனறுவையே சோழராசதானியாக்கப்பட்டது. 1044 _ 1070 ஆகிய காலப்பகுதியிலே தமிழ்மக்கள் பெருந்தொகையாகத் திருக்கோணமலைப் பகுதியிற் குடியேறினர். எனவே, அப்பகுதியிற் பல சிவாலயங்களுங் கட்டப்பட்டன. சோழருக்குப் பின் ஈழத்தை ஆண்ட மகாபராக்கிரம வாகுவின் காலத்திலிருந்து பாண்டிய அரச குடும்பங்களோடு சிங்கள அரசகுடும்பங்கள் மணவுறவு கொண்டன. இதன் பயனாகப் பொலனறுவையிலும் தம்பதேனியாவிலுமிருந்து அரசாண்ட சிங்கள அரசர்கள் தமிழர்களோடு நட்புறவு கொண்டிருந்தனர். 1215 இல் கலிங்க நாட்டிலிருந்து மாகன் என்பான் படையெடுத்துவந்து பொலனறுவையைக் கைப்பற்றி ஆண்டான். அடுத்த ஆண்டில் அவன் தம்பி சயபாகு வடஇலங்கையைக் கைப்பற்றி ஆண்டான். எனவே, 1216இலிருந்து வடஇலங்கையிலே தனியரசு நிலவலாயிற்று 1236இல் இரண்டாம் பராக்கிரமவாகு என்பான் தம்பதேனியாவைத் தலைநகராக்கி ஆண்டான். அவனது ஆட்சிக்காலத்திலே தமிழ் நாட்டிற் பாண்டியர் தலையெடுக்கலாயினர். 1251இல் முடிசூடிய சடாவர்ம சுந்தரபாண்டியன் 1258 இல் பெரியதொரு படையத் திருக்கோணமலையருகில் யாழ்ப்பணக் குடா நாட்டிலும் இறக்கிப் பொலனறுவையைக் கைப்பற்றி மாகனைத் தரத்தினான். இரண்டாம் பராக்கிரமவாகு சுந்தபாண்டியனுக்கு அடிபணிந்து திறைகொடுத்தான். அக்காலத்திலிருந்து ஈழம் முழுவதிலுந் தமிழ் மன்னராகிய பாண்டியரின் செல்வாக்கு உயர்ந்தது. 1284இல் மூன்றாம் பராக்கிரமவாகு முடிசூடினார். அவனது ஆட்சிக் காலத்திற் பாண்டிநாட்டை ஆண்ட மாறவர்மன் குலசேகர பாண்டியன்'ஆரியச் சக்கரவர்த்தி' என்னும் பட்டப் பெயருடை சேனைத்தலைவனை அனுப்பி ஈழத்தைத் கைப்பற்றிப் புத்தரின் புனிததந்தத்தை அபரிப்பித்தான். மூன்றாம் பராக்கிரமவாகுவின் அவைக்களப் புலவரே தேனுவரைப் பெருமாள் என்னும் இயற்பெயர்கொண்ட போசராச பண்டிதர். அவர் 1310 இல் சரசோதிமாலை என்னும் சோதிடநூலைத் தமிழிற் பாடினார். பாண்டிய மன்னனின் சேனைத் தலைவனாகிய ஆரியச் சக்கரவர்த்தி என்பான் 1284இல் யாழ்ப்பணத்தைக் கைப்பற்றி அங்கு தமியரசை அமைத்தான். அப்போதைய தலைநகரம் சிங்கைநகர் ஆகும். அவனுக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர் அனைவரும் 'ஆரியச் சக்கரவர்த்தி' என்னும் பட்டப்பெயர் சூடினர். 1621இல் யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் வசமாகும்வரையும் ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் வட இலங்கையிலே தமிழரசு நிலவிற்று. யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின்படி ஆரியச் சக்கரவர்த்தி என்னும் பெயர் பூண்ட தமிழரசர் பன்னிருவராவர். இவர்கள் செகராசசேகரன், பரராசசேகரன் என்னும சிறப்புப் பெயரை மாறிமாறிப் பெற்றனர். 1216-1450 வரையும் யாழ்ப்பணத்தின் தலைநகர் சிங்கை. 1450 - 1621 வரையும் நல்லூர் தலைநகராக விளங்கியது. இவ்வியாழ்ப்பாணத் தமிழ் மன்னருட் சிறந்தோர் சிங்கைக் செகராசசேகரனு• (1380 - 1414) நல்நூர்ப் பரராசசேகரனும் (1478 - 1519) ஆவர். இவ்விருவர் காலத்திலும் தமிழிலக்கியம் சிறப்புற்று வளர்ந்தது. இவர்களுட் சிங்கைச் செகராசசேகரன் தமிழகத்திலிருந்து தமிழ்ப் புலவர்கள் பலரை வருவித்து இங்குக் குடியேற்றினான். திருக்கோணமலைப் பகுதியில இவன் குடியிருத்திய புலவர்கள் சிறந்த தமிழிலக்கியங்களை இயற்றித் தமிழ் மொழியை வளம்படுத்தினர். எனவே,சிங்கைச் செகராசசேகரனின் வரலாறு பொன்னெழுத்துக்களாற் பொற்றிக்கப் படவேண்டியது. இலக்கியப்பண்பு : யாழ்ப்பாணத் தமிழ் வேந்தரின் ஆட்சிக்காலத் தொடக்கத்தில் எழுந்த நூல்கள், வடமொழி மொழி பெயர்ப்புகளாம்,இரகுவமிசம் முதலியன இவ்வகுப்புள் அடங்கும். தமிழகத்தில் வடமொழியின் செல்வாக்கு மிக்கிருந்த காலமும அதுவாகும். ஆயினும் ஈழத்தெழுந்த இம்மொழிப்பெயர்ப்பு நூல்களில்களிலே மிக்குள்ளது. நூல்களை இயற்றுவித்த பராக்கிரமவாகு, செகராசசேகரன், பரராசசேகரன் முதலியோர் நூல்களுட் புகுழ்ந்து கூறப்படுதல் குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற் கம்பன் சடையப்பவள்ளலையும் புகழேந்தி சந்திரன் சுவர்க்கியையும் நூலினுட் புகழ்ந்து கூறுதலும் ஈண்டு நோக்கத்தக்கது. தமிழகத்தில் விருத்தப்பா செல்வாக்குப் பெற்றிருந்ததுபோல் ஈழத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. எனவே, தமிழிலக்கியப் பொதுப் பண்புகளும் மரபுஞ் சிறிதும் நிலைதிரியாது ஈழத்துத் தமிழ்ப்புலவராற் போற்றப்பட்டன. ஈழத்துத் தேசியப் பண்புகளை மிகுதியாகக் கொண்டது. திருக்கரசைப் புராணம் என்னும் காவியம். ஈழத்து மக்களின் வாழ்க்கை முறைகளும் மகாவலிகங்கையின் சிறப்பும் இல்நூலிற் றனியிடம பெறுகின்றன. கயபாகுவின் காலத்திலிருந்து (கி.பி. 114 - 136) ஈழத்துத் தமிழ் மக்களும் சிங்கள மக்களம் கண்ணகி வழிபாட்டி லீடுபட்டிருந்தனர். தமிழ் மக்கள் படித்துச் சுவைத்துவந்த சிலப்பதிகார காவியம் பொதுமக்களின் பிரார்த்தனைக்கென பழகு தமிழிற் 'கண்ணகி வழக்குரை' என்னும் பெயரிற் புதியதோர் காவியமாக ஆக்கப்பட்டது. தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஈழம் தன் பங்கைக் கொடுத்துதவியதற்குச் சாட்சியாக 'கண்ணகி வழக்குரை' நிலவுகின்றது. ஈழத்தெழுந்த மற்றொரு நூலான கதிரை மலைப் பள்ளு, பொதுமக்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்தம் இன்பதுன்ப வுணர்வுகளையும் படமிபிடித்துக் காட்டுகிறது. எனவே, யாழ்ப்பாணத் தமிழவேந்தர் காலத் தெழுந்த நூல்களுட் திருக்கரசைப் புராணம், கண்ணகி வழக்குரை, கதிரைமலைப்பள்ளு ஆகிய மூன்னும் ஈழவளநாட்டுக்கே சிறப்பாகவுரிய பண்புகள் பலவற்றைக் கொண்டு மிளிருகின்றன. தேனுரைப்பெருமாள் என்னும் வழக்கு போசராச பண்டிதர் 1310 ஈழத்தின் மத்திய பகுதியிலுள்ள குருநாகல் என்னும் நகரத்தின் அருகிற் சிங்கள மன்னரின் இராசதானியாய் விளங்கிய தம்பதேனியாவை ஆண்ட மூன்றாம் பராக்கிரமவாகுவின் அவைக்களப்புலவரால் 1310ஆம் ஆண்டில் இயற்றி அரங்கேற்றப்பட்டது சரசோதிமாலை என்னும் சோதிட நூல். இப்புலவரின் பெயர் 'தேனுவரைப் பெருமாளென்றோது பண்டித போசராசன்' எனப் பாயிரங் கூறுகின்றது. இவர் ஓர் அந்தணர்; வைணவ சயத்தவர். இவரின் தந்தையார் பெயர் சரசோதி. ஈழத்தெழந்த தமிழ்நூல்களுட் காலத்தால் முந்தியதாகக் காணப்படுஞ் சரசோதிமாலை என்னும் இந்நூல் 934 விருத்தப்பாக்களாலானது. நூலின் முகத்திற் காணப்படும் பின்வருஞ் செய்யுள் நூலைப்பற்றிய பல குறிப்புக்களைக் கொண்டுள்ளது : உரைத்தசக வருடமுறு மாயிரத் திருநூற் றொருநாலெட் டினிலிலகு வசந்தந் தன்னிற் றரித்திடுவை காசிபுதன் பனையி னாளிற் றம்பைவளர் பராக்கிரம வாகு பூப ளித்தருவையிற் சரசோதி மாலை யீரா றெய்துபடல நூற்றொன்பான் முப்பா னான்காம் விருத்தமரங் கேற்றினனோற் போச ராச விஞ்சைமறை வேதியனாம் புலவ ரேறே. சரசோதிமாலை பாயிரம் பூமாது மேவு தோளான் பொற்கம லத்து வாழு மாமாது சேரு மார்பன் மாமணி நாட னெங்கோன் காமானுஞ் செங்கை வள்ளல் கதிரவன் மரபில் வந்தோன் பாமாலை சூடு மீளிப் பராக்ரம வாகு பூபன். 1 தம்பைகா வலவன் வாசத் தாதகி மாலை மார்பன் செம்பொன்மால்வரையில் வெற்றிச் சினப்புலிபொறித்தவேந்தன் அம்புரா சியினை மேனாள் அமுதெழக் கடைந்த மாயன் கும்பமார் முலையார் மார்பன் கோரவாம் புரவி வீரன். 2 வாரண மெட்டும் பாம்பு மகிழ்வுற வளர்ந்த தோளான் கோரவெஞ் சமரில் வென்று குலவிய வாகை வாளான் சேரலர் மகுட ரத்நக் தேய்வுறத் சிவந்த தாளான் பேருல கனைத்தும் வாழப் பிறந்தபூ ராட நாளான். 3 நீதியும் பொளையு மன்பு நெறியுமோர் வடிவ மானோன் கோதிலா யிரமா மத்த குஞ்சரத் தானை ராசன் மேதகு கருணை தன்னால் விளங்குமா முனிவன் றந்த தாதுவின் பூசை யாலுஞ் சதக்கிரு தனைய தக்கோன். 4 திங்கண்மும் மாரி பெய்யச் சிறந்துயர் தரும மோங்கப் பொஞ்குசீர் பரந்து வீசப் போற்றுசெங் கோல்வி ளங்கப் பங்கயத் தாரோர் வாழ்த்தப் பாவலர் துதித்த மிக்க மங்கல வளமே கூட மன்னவர் வணங்கிச் சூ‘. 5 சேனையும் பொருளும் வாழ்வு மேன்மையுஞ் சிறப்புஞ் சீருந் தானமு நெறியு மோங்கத் தன்னுட னுதித்து வாழு மானநால் வாகை வேந்த ரருந்திசை முழுதுஞ் காக்க மானவேந் றரும னென்ன மாநிலம் புகழ வாழ்ந்து. 6 கனகமா மகுடஞ் சூடக் காசினி யனைத்துங் காக்குந் தமிமதிக் குடைக்கீழ்ச் சிங்கா சனத்தின்மே லினிதி ருந்து மனுநெறி நடாத்தி வாழு மங்கல வாண்டோ ரேழி லினியசோ திடநன் னூலைத் தமிழினோ லியம்பென் றோத. 7 புண்டரீ கத்தார் மார |