நூலகம் திட்டம் (நூலக எண்: 37)

 
 

மின்னூலாக்கம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, தி. கோபிநாத்

 
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கவனிக்க: நூலகம் திட்ட மின்னூல்களைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
     
  சமூக விரோதி  
 

சி. சிவசேகரம்

 

சமூக விரோதி

தமிழில் : சி. சிவசேகரம்

----------------------------------

சமூக விரோதி

நாடகமேதை ஹென்றிக் இப்சன் (Henrik Ibsen) எழுதிய மூலத்தைத் தழுவி அமெரிக்காவின் பிரதம நாடகாசிரியர்களுள் ஒருவரான ஆதர் மிலர் (Arthur Miller) எழுதிய An Enemy of the People நாடகத்தின் தமிழ் வடிவம் இது.

தமிழில் : சி. சிவசேகரம்

தேசிய கலை இலக்கியப் பேரவை

-------------------------------------------------------

தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 94

நூற்பெயர் : சமூக விரோதி
பதிப்பு : ஓகஸ்ட், 2002
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை
அச்சிட்டோர் : கௌரி அச்சகம்
முகப்பு ஓவியம் : இரா. சடகோபன்
விநியோகம் : சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிடட், 44, மூன்றாம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு -11.
தொலைபேசி : 335844.
விலை: ரூபா. 100/=

-------------------------------------------------

Title : Samooga Virothy
Edition : August, 2002
Publishers : Theshiya Kalai Ilakkiyap Peravai
Printers : Gowry Printers
Cover Design : R. Shadagopan
Diustributors : South Asian Books,
Vasantham (Pvt) Ltd,
No. 44, 3rd Floor,
C.C.S.M. Complex,
Colombo -11.
Tel : 335844
ISBN No : 955-8637-07-6
Price: Rs. 100/=

---------------------------------------------------------------------

பதிப்புரை

கவிஞர் சிவசேகரம் தமிழிற் தழுவிய ‘அபராதி நானல்ல’ என்ற தலைப்பிலான நாடகநூலுக்குப் பிறகு அவரது தழுவல்களில் அதி நீளமான நாடகச் சுவடியான இந்த நூலை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த நூலின் மொழிநடை‘அபராதி நானல்ல’ நூலினது போல சமகாலப் பேச்சுத் தமிழ்நடையே எனினும் முன்னையதிலும் சிறிது பழமையானது. இதற்கான காரணம், நாடகம் நடக்கும் காலம் சில தசாப்தங்கள் முந்தியது என்றே நினைக்கிறோம். பேச்சுத்தமிழ், நாடகங்களில் நகைப்புக்குரிய முறையிலேயே பயன்படுத்தப்பட்டுப், பேராசிரியர் கணபதிப்பிள்ளை போன்றோரால் நம்மிடையே செம் மொழிக்குரிய தகுதியைப் பெற்றது. அந்த வழியிலேயே கவிஞர் சிவசேகரமும் தனது நாடக உரையாடல்களை அமைத்து வருகிறார். நகர வயப்பட்ட வட இலங்கைப் பேச்சு மொழியைச் சார்ந்து அமைந்துள்ள இந்தச் சுவடி, தெளிவான கருத்துப் பரிமாறலில் பேச்சுத்தமிழின் ஆற்றலைப் புலப்படுத்துகிறது என்பது இதன் சிறப்பு.

மூலக்கதை சமூக யதார்த்தமான அறக் கருத்துக்கள் யாவற்றையும் உள்ளடக்கியது என்பதாலும், இதன் தமிழாக்கம் நூல்வடிவு பெறுவது சமூகப்பயன் மிக்கதாகிறது. நாடக மாந்தரில் இலட்சியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், சமூகக் கோட்பாடு உள்ளோர், இல்லாதோர் என்று பலர் வந்தாலும் எல்லாரும் குறை நிறைகள் உடைய மனிதர்களாயே நாடகத்தின் மூலம் விருத்தி பெறுகின்றனர். இது சுவடியின் யதார்த்தப் பண்புக்கு உரமூட்டுவது.

நாடகமேடை பற்றிய பல நுணுக்கங்கள் இந்தச் சுவடியில் தரப்பட்டுள்ளன. எனினும் மேடை வடிவ வசதிகட்கேற்ப அவை மாற்றிப் புனையக்கூடியன. அதேவேளை இந்தச் சுவடி வாசிப்புக்குரிய ஒரு ஆக்க இலக்கியமாகவும் பரவலான வாசிப்புக்கு உகந்தது என்பது எமது எண்ணம். இது பரவலான வாசிப்புக்கு உள்ளாவது இலக்கிய நோக்கில் மட்டுமன்றி நமது சமுதாய விழுமியங்களின் உயர்வின் நோக்கிலும் பயனுள்ளது என்பதும் எமது எண்ணம்.

அட்டைப்படம் வரைந்த கவிஞரும் ஓவியரும் பத்திரிகையாளரும் சட்டத்தரணியுமான இரா. சடகோபன் அவர்களுக்கும் கணனி வடிவமைத்த சோபனா, சிந்தியா ஆகியோருக்கும், இந்நூலை அச்சிட்டு வழங்கிய கௌரி அச்சகத்தினருக்கும், திரு.எஸ்.இராஜரட்ணம் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

என்றும் போல இப்போதும் விமர்சனங்களை மனமார வரவேற்கிறோம்.


தேசியகலை இலக்கியப் பேரவை,
இல. 44இ 3-ம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு - 11
தொலைபேசி : 335844.

---------------------------------------------------------------------

உண்மைகளைக் கூறத் துணிதல்

இந்த நாடகத்தின் மூலம், நவீன உலகின் நாடகமேதைகளுள் ஒருவராகக் கருதப்படும் ஹென்றிக் இப்சன் எழுதிய “மக்களின் எதிரி’ என்ற நோர்வீஜிய நாடகமாகும். இதன் சமூக-அரசியல் முக்கியத்துவம் கருதி, அமெரிக்காவின் முற்போக்குச் சிந்தனையாளரும் முக்கியமான நாடகாசிரியர்களுள் ஒருவருமான ஆதர் மிலர் இதை ஆங்கிலத்திற் தழுவினார். அந்தச் சுவடியை ஒட்டி வங்காள மொழியில் “புண ஷத்ரு” என்ற பேரில் சத்யஜித் ராய் ஒரு திரைப்படம் எடுத்ததாக அறிகிறேன். அதை நான் பார்க்கவில்லை. இச் சுவடி மிலரின் சுவடியின் தழுவலாகும். இதைத் தமிழ்ப் படுத்துவதில் அதிகம் சிக்கல் இருக்கவில்லை. பேர்களில் மாற்றங்கள் செய்ததற்கு மேலாகச் சம்பவங்களில் அதிகம் கைவைக்க வேண்டிய தேவை இல்லாமலே இத் தழுவலை என்னாற் செய்ய முடிந்தது.

பெண்ணுரிமைக்காகத் தனது நாடகமான “பொம்மை வீடு” (A Doll's House) மூலம் குரல் கொடுத்த முதலாவது நாடகாசிரியர் என்ற பெருமைக்குரிய இப்சனின் இந்த நாடகம் எழுதப்பட்ட சூழ்நிலை பற்றிய ஒரு குறிப்பு மிலரால் தரப்பட்டுள்ளது. “பேய்கள்” என்ற நாடகத்தை வழங்கத் துணிந்ததற்காக, கல்லெறிவாங்காத குறையாக மேடையிலிருந்து விரட்டப்பட்டதன் பின்னணியில் இந்த நாடகம் உருவானது என்றும் ஊர்க் கிணறு ஒன்றில் நச்சுத் தண்ணீர் இருந்ததாகக் கண்டறிந்து சொன்னதற்காகக் கடுமையாகத் தாக்கப்பட்ட ஒரு ஹங்கேரிய விஞ்ஞானி பற்றிய செய்தியே இதன் அடிப்படை என்றும் கூறப்படுவதாக மிலர் தெரிவிக்கிறார்.

இவை காரணமாக, மூலச் சுவடியில் வரும் சில பகுதிகளுக்கு குசூஸிஸத் தன்மையுடைய வாசிப்புக்கள் இயலும் எனக் கருதி அவற்றை விலக்கியதாகவும் மிலர் கூறியுள்ளார். இடீசனின் அரசியலைத் தெளிவாக அறிந்த காரணத்தினாலேயே அவர் அவ்வாறு செய்தார் என்பதையும் அதற்கான நியாயத்தையும் விவரமாக மிலர் விளக்கியுள்ளார். எனினும் இச்சுவடி மிலர் எழுதியதன் தழுவல் என்பதால் அவ்விளக்கம் இங்கு அவசியமில்லை என நினைக்கிறேன். இது மிலர் எழுதியதற்கு விசுவாசமானது என்று என்னால் உறுதி கூற இயலும்.

நாடகத்தின் கதை மிக எளிமையானது. ஒரு விஞ்ஞானி மனிதருக்குத் தீங்கான ஒன்றைக் கண்டறிகிறார். அதை உலகறியச் செய்வதன் மூலம் தான் மனித இனத்திற்கு நன்மை செய்வதாகவும் அதற்காகத் தனக்கு நன்றியாவது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். மாறாக, ஊரில் உள்ள சிலரது நலன்கட்கு அந்த உண்மை பாதகமாக உள்ளதன் விளைவாகத் தனது கண்டுபிடிப்பைத் ‘திருத்தி’ எழுதுமாறு விஞ்ஞானி கட்டாயப் படுத்தப்படுகிறார். அதை அவர் ஏற்க மறுத்து அதன் விளைவுகளை எதிர்கொள்கிறார்.

இதன் மூலம் வலியுறுத்தப்படுவன இரு விடயங்கள்: உண்மைகள் பங்கப்படுத்தக் கூடாதன. உண்மையைத் திரிப்பதற்கு முற்படுகிறவர்கள் தவிர்க்க இயலாமல் வக்கிர நடத்தை உள்ளவர்களாகிச் சீரழிகின்றனர்.

உண்மை என்பது பெரும்பான்மை வலிமையால் நிறுவப்படுவதல்ல என நாம் அறிவோம். எந்தச் சரியான கருத்தும் முதலில் சிறுபான்மைக் கருத்தாகவே தொடங்கிக் காலப்போக்கில் பெரும்பான்மையினரைத் தன் வசமாக்குகிறது. இதற்கு மனித இன வரலாற்றில் நிறைய ஆதாரங்களைக் காட்டலாம். இதைத் தனிநபர்வாத நியாயங்களுடன் நாம் குழம்பிக் கொள்ள அவசியமில்லை. எந்த ஒரு உண்மையின் பெறுமதியும் அதன் சமூகச் சார்பாகவே தீர்மானிக்கப்படுகிறது என்பதுஇ சமூகத்தின் உடனடியான அங்கீகாரத்தை ஒரு உண்மையினதோ அதன் பெறுமதியினதோ அளவுகோலாக்கி விடாது.

இந்த நாடக் சுவடி லண்டனில் நான் வாழ்ந்த காலத்தில், ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் முன்பு, நண்பர் பாலேந்திரா கேட்டுக்கொண்டதற்கமைய அவைக்காற்றுக் கலைக் கழகத்தினருக்காகத் தமிழிற் தழுவியது. இரண்டு ஆண்டுகட்கு முன்பு மேடையேறும் என அறிவிக்கப்பட்டும் அங்குள்ள பலவேறு சிரமங்கள் காரணமாக மேடையேறவில்லை.

இச் சுவடியின் உரையாடல்களிலும் ஈழத்தின் வடக்கின் நகர் சார்ந்த நவீனத் தமிழ்ப்பேச்சு வழக்குக்கு இசைவான மொழிநடை பாவிக்கப்பட்டுள்ளது. அயற் சொற்களை எழுத ஆங்கிலத்திற் புழக்கத்தில் உள்ள வரிவடிவங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளேன். சிங்கள அடையாளம் ஒன்று இம் முன்னுரையிலும் உள்ளது. இந்த நடைமுறை பற்றிய விவாதங்களுக்கு என் நியாயத்தை விளக்க இங்கு இடம் போதாது. எனினும் என் நிலைப்பாட்டை இங்கு மீளவும் கூறுகிறேன்.

பேச்சுத் தமிழ் இன்று ம-ப-h, ள-உh-த, வ-ன, வா-னா, p-டி எனும் ஒலி வேறுபாடுகளையும் க, ண எனும் ஒலிகளையும் பழந் தமிழ் மரபிற்குப் புறம்பான முறையில் ஏற்றுப் பிரயோகிக்கிறது. சில உயிரோசைகளையும் அது உள்வாங்கியுள்ளது. இது தமிழின் தூய்மை பற்றிய பிரச்சனை அல்ல. வாழும் தமிழ் எவ்வாறு எழுதப்படக்கூடும் என்ற பிரச்சனை. இதுவரை பலர் இப்பிரச்சினையை ஏற்றாலும் தீர்வுகள் பற்றிய தயக்கங்களும் அச்சங்களும் அதிகம். வழங்கப்பட்டுள்ள தீர்வுகளில் குறைந்தளவு சிக்கல் கொண்டதும் விளக்கங்களின்றியே பெருமளவுஞ் சரியாக வாசிக்கக் கூடியதுமான தீர்வாகவே, பு, வு, னு, P, டீ, கு, ணு ஆகிய எழுத்து வடிவங்கள் ஒவ்வொன்றையும் ஒரு கிரந்த வரிவடிவம் (ஷ,ஸ போன்று) எவ்வாறு கையாளப்படுமோ அவ்வாறே பயன்படுத்தி வருகிறேன்.

இது இறுதியான தீர்ப்பல்ல என்பதிலும் எப்போதும் தெளிவாகவே உள்ளேன். தமிழுக்கு வேண்டிய புதிய தனி வரிவடிவங்களும் இன்றைய எழுத்து முறையும் இணைந்த ஒரு முறையில் புதிய வடிவங்களை இன்னொரு அயல் மொழியினின்றோ வழக்கில் இருந்து போன கிரந்த எழுத்து முறையில் இருந்தோ பெறவும் புனையவும் இயலும். மாறாக, இன்னும் ஒரு படி மேலே சென்று, முழுத் தென் ஆசியாவுக்கும் பயன்படக் கூடியதும் ஆங்கில, கிரேக்க, ரஷ்ய மொழிகட்கு உள்ளது போன்ற எழுத்து முறையை ஒட்டியதுமான ஒரு முறையை வகுக்க முடியும். இவ்வாறான முயற்சிகளாற் தமிழ் வளருமே ஒழியத் தேயாது. தமிழின் அழிவுக்குத் துணை போவன பத்தாம் பசலித்தனமான சிந்தனைகளும் நவீன உலகின் தேவைகட்குத் தமிழ் முகங்கொடுப்பதற்கு நாமே விதித்துக் கொள்ளும் தடைகளுமே தாம்.

நான் பயன்படுத்தியுள்ள அயல் எழுத்து வடிவங்கள் சமகாலத் தமிழின் தேவையொன்றையும் எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு திசைக்காட்டலையும் மனதிற் கொண்டே உருவானவை. அவற்றை ஏற்பதோ விடுவதோ என்பதல்ல நமது பிரச்சினை. அவை போன்ற புதிய வடிவங்களை உருவாக்கிப், புதிய சூழலில் பதிய பண்புகளை உள்வாங்கியுள்ள ஒரு மொழியை முறையாக எழுதுவதற்கான ஒரு தீர்வு பற்றிய பொது உடன்பாட்டை நாம் வந்தடைவதே நம் முன்னுள்ள சவால்.

எனது ஆலோசனையைத் தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பது என்றால் அது ஒரு விரிவான விவாதத்தின் பின்னரே இயலுமாகும். அதே வேளை எனது நடைமுறையை ஒரு கருத்து என்ற மட்டத்தில் மதித்து அதை நூல் வடிவில் நடைமுறைப்படுத்த உடன்பட்ட தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கு என் நன்றி. இதற்கும் மேலாக எந்த வெளியீட்டாளரிடமும் எதையும் நான் எதிர்பார்ப்பது நியாயமாகாது.

இந்தச் சுவடி தமிழ் நாடகத் துறைக்குப் பயனுள்ள ஒரு பங்களிப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இது நூல் வடிவம் பெறுவதற்குக் காரணமாயும் துணையாயும் இருந்த பாலேந்திரா, தேசிய கலை இலக்கியப் பேரவையினர்,தேவராஜா ஆகியோருக்கு எனது நன்றிகள்.

சிவசேகரம்
30-03-2002.

---------------------------------------------------------------

அங்கம் 1 : காட்சி 1

(மாலை நேரம். டொக்வுர் நல்லதம்பியின் வரவேற்பறை. எளிமையாக, ஆனால் மனோரம்யமாக, அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் வலது உட்புறத்தே உள்ள ஒரு வாயில் நுழைவதற்கு வழி விடுகின்றது. நுழைவறையின் மறுபுறம், வரவேற்பறைக்குப் பின்னால் மறைவாக உள்ள சாப்பாட்டு அறையுடன் சேர்ந்துள்ளது. இடது புறத்தே ஒரு கதவு டொக்;வுரின் அலுவலறைக்கும் பிற அறைகட்கும் வழிவிடுகிறது. மேடையின் உட்புற இடது மூலையில் ஒரு அடுப்பு உள்ளது. இடது புறத்தே ஒரு ஸோகுhவும் அதன் பின் ஒரு மேசையும் உள்ளன. வலது முன்புறத்தே இரு கதிரைகளும் இடையே ஒரு மேசையும் அதன் மேல் ஒரு விளக்கும் வட்டிலில் பழங்களும் உள்ளன. பின்பக்கத்தே இடது புறமாக, ஒரு திறந்த கதவு சாப்பாட்டறைக்கு வழி விடுகிறது. அதில் ஒரு பகுதி தெரிகிறது. யன்னல்கள் வலது சுவரில் உள்ளன. அவற்றுக்கு முன் ஒரு வாங்கு உள்ளது.)

(திரை விலக, விநாயகமும் ஐயாத்துரையும் சாப்பாட்டறையில் உணவு அருந்துகின்றனர். விநாயகம் ‘தினப் புதினம்’ பத்திரிகையின் துணை ஆசிரியர். ஐயாத்துரை கொஞ்சம் அலங்கோலமான தோற்றமுடைய கிழவர். அவசர அவசரமாக உண்கிறார். கடைசி வாயை விழுங்கிக் கொண்டு வரவேற்பறைக்கு வருகிறார். வந்துஇ பழைய குடையை எடுத்துக் கொண்டு சால்வையையும் அணிகிறார். விநாயகம் உதவிக்கு வருகிறான்.)

வி : நீங்கள் கெதியாத்தான் சாப்பிடுகிறியள் ஐயா. (விநாயகத்தின் உற்சாகம் முட்டாள்த் தனத்தின் விளிம்பில் உள்ளது.)
ஐ : சாப்பிட்டு ஏதேன் ஆகப் போகுதோ தம்பி. எங்கட மோளிட்ட நான் வெளிக்கிட்டுட்டன் எண்டு சொல்லு.

(ஐயாத்துரை முன்வாசலுக்குப் போகிறார். விநாயகம் தனது உணவை முடிக்கப் போகிறான். வழியில் ஒரு பழத்தை எடுத்துக் சுவைக்கிறான். நன்றாக இருந்ததால், இன்னொன்றை எடுத்துச் சட்டைப் பொக்கற்றில் போட்டபடி கதவு வரை செல்கிறான். நின்று, திரும்பி வந்துஇ இன்னொரு பழத்தைப் பொக்கற்றில் போடுகிறான். மேசையில் பெட்டியில் சிகரெட் இருப்பதைக் காண்கிறான். ஐயாத்துரைக்குத் தெரியாமல், மோந்து பார்த்து, மறைவாகச் சிலதை எடுத்துச் சட்டையின் உள்ளே வைக்கிறான். பெட்டியை மூடும் போது திருமதி புனிதம் நல்லதம்பி சாப்பாட்டறையிலிருந்து வருகிறார்.)


பு : அப்பா! நீங்கள் நிக்கிறியள் தானே என்ன?
ஐ : வேலை இருக்குப் பிள்ளை.
பு : உங்களுக்குத் தெரியும் உங்கட அறைக்குத்தான் போறியளெண்டு. நில்லுங்களன். விநாயகம் நிக்கிறார். துரைசாமியும் வாறார். உங்களுக்கும் முசுப்பாத்தியாயிருக்கும்.
ஐ : பல வேலையும் இருக்கு. ஏன் வந்தனானெண்டா, இறைச்சிக் கடையில சொன்னவன் நீங்கள் கோழி வாங்கினியளெண்டு. நல்ல ருசியா இருந்தது பிள்ளை.
பு : அவர் வருந்தனைக்கேன் நில்லுங்களன். உலாத்தத்தான் போனவர்.
ஐ : (மேசையைக் காட்டி) அவற்ற சிகரெட்டில எடுத்தாக் கோவிப்பாரோ?
பு : சீ, எடுங்கோ. இங்க, கொஞ்சம் பழமும் எடுங்கோ. உங்கட அறையில எப்பவும் கொஞ்சம் பழம் வைச்சிருந்தா நல்லந்தானே.
ஐ : இல்லைஇ இல்லை, அதெல்லாம் வேண்டாம். (வாசல் மணி ஒலிக்கிறது.)
பு : துரைசாமியாத்தான் இருக்கும். (போய்க் கதவைத் திறக்கிறார்.)

(மாநகர மேயர் திரு. ராசலிங்கம் கைத்தடி, தொப்பி சகிதம் வருகிறார். அறுபது வயதுள்ள அவர் கலியாணமாகாதவர். கப்பல் கரை புரளாமல் தளத்தின் நடுவில் நின்று சமன் படுத்துவதையே தம் வாழ்வின் பிரதான சாதனையாகக் கருதுகிறவர்களில் இவர் ஒருவர், இந்தக் குடும்பத்தின் இணக்கமான வாழ்க்கையைப் பார்க்கும் போது சிறிது ஏக்கமாக இருந்தாலும், இங்கு வரும் போது வீடு தேடி வந்ததை ஒத்துக் கொள்ளாத பாவனையில் தலையில் வைத்த தொப்பியைக் கழற்றாமலே உட்காருவார்.)

பு : அண்ணையோ! என்னஇ அத்தி பூத்தாப் போல!
ரா : இதால போனாப் போல ... ( ஐயாத்துரையைக் கண்டு சிரிப்பு வர, முறுவலிக்கிறார்.) மிஸ்;;வுர் ஐயாத்துரை!
ஐ : (நக்கலாக) வணக்கம் மேயர் ராசலிங்கம் அவர்களே!
(பழத்தைக் கடித்தபடி வெளியேறுகிறார்.)
பு : அண்ணாஇ நீங்கள் அவரைக் கவனியாதையுங்கோ, அவருக்கு அறளை பெயருது. ஏதேன் சாப்பிடுவியளோ?
ரா : தாங்க்ஸ். ஒண்டும் வேண்டாம். (விநாயத்தைக் காண்கிறார். சாப்பட்டறையில் இருந்தபடி அவருக்குத் தலையசைக்கிறான்.)
பு : (பதற்றப்பட்டு) அவன் தற்செயலா வந்தவன்.
ரா : அதில என்ன. பின்னேரத்தில நான் சூடாச் சாப்பிடமாட்டன். வயித்துக்கு ஒத்துக் கொள்ளுதில்லை.
பு : இங்க வேற எதையேன் சாப்பிடக் கூடியதாத் தரட்டோ?
ரா : அவதிப்படாதையுங்கோ. நான் என்ட Nவுhஸ்ற்றும் தேத்தண்ணி யோடையும் நிண்டிருவன். உடம்புக்கும் நல்லது. சிலவுங் குறைய.
பு : (முறுவலித்தபடி) நீங்கள் சொல்லிறதைக் கேட்டா, நானும் இவரும் காசைத் தூக்கிக் காத்தில எறியிறம் போல எல்லோ இருக்கு.
ரா : உங்களைச் சொல்லயில்லை. தம்பி இல்லையோ?
பு : அவர் பெடியங்களோட உலாத்தப் போயிட்டார்.
ரா : சாப்பிட்ட கையோட போறது கொஞ்சம் பயமெல்லோ. என்ன சொல்லுறீங்கள்? (கதவு உரக்கத் தட்டப்படுகிறது.) அதெண்டா என்ட தம்பியார் போலத்தான் இருக்கு.
பு : நான் நினைக்கேல்லை, இவ்வளவு கெதியா... வாங்கோ. வாங்கோ.
(துரைசாமி வருகிறார். வயது 30க்குச் சற்று அதிகம். அதிகாரத்தையும், செல்வத்தையும் ஒரு புறம் வெறுத்தாலும், அவற்றை அடையவும் ஆசை சிறிது உள்ளவர். அவரது சங்கடம் ஏதென்றால், எல்லாவற்றிலும் மேலாகத் தன் சமுதாயச்சூழலைச் சார்ந்தவராக இருக்க விரும்புகிறார். ஆயினும் சமுதாய மாற்றத்தை வேண்டும் ஒருவரைப் பொறுத்த வரை, அது சாத்தியமாகாமலே துவண்டுவிடக் கூடிய ஒரு ஆசை.)

பு : மிஸ்வுர் துரைசாமி...
து : வரக் கொஞ்சம் பிந்திப் போச்சு. கோவிக்காதயுங்கோ. பிறெஸ்ஸில கொஞ்சம் சுணக்கிப் போட்டினம். (அதிசயத்துடன்) மேயர் ஐயா, வணக்கம்.
ரா : (விறைப்பாக) துரைசாமி, என்ன, அலுவலாத்தானே வந்தனீ.
து : அதுவுந்தான். பேப்பருக்கு ஒரு கட்டுரை விஷயமா.
ரா : (நக்கலாக) ஓ! அதெண்டாத் தெரிஞ்சதுதானே. என்ட தம்பியார் எழுதுறாராம். அதென்ன பேப்பர்?... பணப் புதினமோ?
து : (சிரித்தபடி, பிடி கொடாமல்) தினப் புதினம் ஐயா. சில வேளையில டொக்வுர் உண்மை எதையேன் அம்பலப்படுத்த நினைச்சால் புதினத்துக்கு எழுதிக் கவுரவிப்பார்.
ரா : உண்மை! ஓ, அதுதான் பாத்தன்.
பு : (கலக்கத்துடன்இ துரைசாமியிடம்) நீங்கள் ஏதேன்... (சாப்பாட்டு அறையைச் சுட்டிக் காட்டுகிறார்.)
ரா : உங்கட பேப்பரைப் பாவிக்கிறதுக்கு டொக்வுரில பிழை சொல்லுறன் எண்டு நினையாத. ஒவ்வொரு கூத்தாடிக்கும் நல்லாக் கைதட்டுற சபையிலதானே விருப்பம். உங்கட பேப்பரோடையும் எனக்குக் கோவமில்லைத் துரைசாமி.
து : நானும் அப்படி நினைக்கேல்லை ஐயா.
ரா : உண்மையில இந்த நகரத்துச் சனங்கள் எவ்வளவு பொறுமையானதுகள் எண்டு அறிஞ்சு அதுகள மதிக்கிறன். எவ்வளவு நல்லது கண்டியோ. நாங்கள் எல்லாம் ஒரே விஷயத்தில நம்பிக்கையுள்ள ஆக்கள் எண்டதை மறந்திராத. அதுதான் எங்களை ஒத்துமைப் படுத்துது.
து : ஆம்பல் வயல் நீரூற்றைத் தானே சொல்லுறியள்.
ரா : நீரூற்று. துரைசாமி, எங்களுக்குக் கிடைச்ச வரம் இந்த நீரூற்று. எங்கட நகரத்தின்ட ஆத்துமாவையே மாத்திப் போட்டுது. நான் சொல்லுறதைக் கவனிச்சுக் கேள், ஆம்பல்வயல் நீரூற்று எங்கட நகரத்தின்ட பேரை உலகப்படத்தில பொறிக்கப் போகுது. அதில ஒரு ஐமிச்சமுமில்லை.
பு : அப்படித்தான் அவருஞ் சொல்லுறவர்.
ரா : எல்லாம் முன்னேறுது. காணி பூமி விலை ஏறுது, காசு நல்லாப் புழங்குது, யாவாரம் எக்கச்சக்கமா நடக்குது.
து : வேலையில்லாப் பிரச்சினையும் இல்லை.
ரா : சரியாச் சொன்னாய்இ மழை காத்து இல்லாத ஒரு ஸீஸன் எண்டா, உள்ள வருத்தக் காறரெல்லாம் வண்டில் வாகனம் நிறைய வருவினம். அதுக்குப் பிறகு, நீரூற்று ஒரு நுவரெலியா மாதிரித்தான். நகரத்தில காசுக்காறர் மட்டும் தான் வரி குடுக்கிற நிலமையும் மாறிவிடும்.
து : முன்கூட்டியே ஆக்கள் அனுமதிக்கு விண்ணப்பஞ் செய்யினம் எண்டு கேள்விப்பட்டன்?
ரா : ஒவ்வொரு நாளுமல்லோ விண்ணப்பம் வருகுது. மெத்த நம்பிக்கையா இருக்கு. மெத்த நம்பிக்கையா.
து : நல்லதுதானே. (திருமதி நல்லதம்பியிடம்) அப்பிடியெண்டா டொக்வுரின்ட கட்டுரையும் பிரயோசனப்படும்.
ரா : டொக்வுர் இன்னொருக்காலும் ஏதேன் எழுதுறாரோ?
து : சீ. மழைக் காலந் தொடங்கேக்க அவர் எழுதின ஒரு விஷயம் - நீரூற்றுத் தண்ணி விஷேசமெண்டு சொல்லி. அந்த நேரம் நான் போடாமல் வச்சனான்.
ரா : ஏதேன் பிரச்சனையோ?
து : அப்படியொண்டுமில்லை. இந்த மழைக்காலம் போகவிட்டுத்தான் ஆக்கள் விடுமுறையில கிளம்புவினம். அதுவரைக்கும் விட்டனான்.
ரா : அதெண்டாக் கெட்டித்தனந்தான் துரைசாமி. வலுங்கெட்டித்தனம்.
பு : அவர் இந்த நீரூற்றைப் பற்றிப் பலவிதமான யோசனை சொல்லுறவார். ஒவ்வொரு நாளும் அவர்...
ரா : செய்வார் தானே. அங்கையிருந்து தானே அவற்ற சம்பளம் வருகுது.
து : அம்மட்டுமில்லை. எண்டு நினைக்கிறன். டொக்வுர் தான் அந்த நீரூற்றையே உண்டாக்கினவர் எண்டு சொல்லலாம். என்ன சொல்லுறியள்?
ரா : அப்படிக் கதையாத! இந்தமாதிரிக் கிட்டடியில கனக்கக் காதில விழுகுது. ஏன் நானும் அதில கொஞ்சம் செய்தனான் தானே!
பு : ஓ! அவர் எப்பவுஞ் சொல்லிறவர்...
து : நான் சொன்னது என்னெண்டா, யோசனைய முதல்ல...
ரா : என்ட தம்பிக்கு யோசனையளுக்குத் தட்டுப்பாடில்லை. பலமாதிரி யோசனையளுஞ் சொல்லுவான். அதுகளை நடைமுறைப் படுத்திறதுக்கு வேற ஆள் வேணும். இந்த வீட்டில உள்ளவையேன் அதை உணருவினம் எண்டு...
பு : அண்ணை, நாங்கள் ஆரும் அந்த மாதிரி - துரைசாமி, போய் ஏதேன் சாப்பிடுங்கோ. அவர் இப்ப வந்திடுவார்.
து : தகூங்க்ஸ். கொஞ்சமா ஏதேன்... (விநாயகத்துடன் சாப்பாட்டு மேசையருகே அமர்கிறார்).
ரா : (குரலைத் தாழ்த்தி) கவனிச்சீரோ! ஏன் இந்த எளிய பரம்பரையளுக்கு கொஞ்சம் நயமாகக் கதைக்கத் தெரியாதோ?
பு : அதைப் பற்றி ஏன் யோசிக்கிறியள்? நீங்களும் அவரும், சகோதரங்கள் மாதிரி அந்தப் பெருமையில பங்கு பாராட்டேலாதோ.
ரா : இங்க பாரும் புவனம். சில பேருக்குப் பங்கு போடுறதில திருத்தியில்லை.
பு : விசர்க்கதை கதையாதேங்கோ. நீங்கள் இரண்டு பேரும் நல்லா ஒத்துப் போவியள். அவராகத்தான் இருக்க வேணும்.

(முன் வாசலுக்குப் போய்த் திறக்கிறார். நல்லதம்பி வெளியே கந்தசாமியுடன் சிரித்துப் பேசுகிறார். அவர் தனது வாழ்க்கையின் உச்சநிலையில் உள்ளார். எல்லாவற்றையும் எப்போதுமே சுயவிருப்பிற்காகச் செய்பவர் எனலாம். பொருட்களை, மனிதரை, வாழ்க்கையை நேசிப்பவர். அவரைப் பொறுத்தவரை, நாட்களில் மணித்தியாலங்கள் போதாது. எதிர்காலம் உன்னதமானது. இத்தனைக்கும், பலருக்கு அவரைப் பிடிக்காது. ஏனென்றால், அவர் இயற்கை விதித்த பங்கிற்கு கீழாக எதையும் ஏற்கமாட்டார். மற்றவர்களோ, மனிதர் விதித்த பங்கிற்கு கீழாகவே ஏற்கப் பழகி விட்டவர்கள்.)

ந : (நுழைவாயிலில் நின்றபடி) புவனம்! உமக்கு இன்னுமொரு விருந்தாளி வந்திருக்கிறார். கப்வுன் இப்பிடி உள்ளுக்க வாங்கோ. பிள்ளையள், உள்ளுக்கை ஓடுங்கோ, உங்களுக்கு இப்ப இன்னொருக்காப் பசி கிளம்பியிருக்கும். கப்வுன் கந்தசாமி, இந்த றோஸ்ற் சிக்கினை ஒருக்கா வந்து ருசி பாருங்கோ.


(கப்வுனை அழைத்தபடி மண்டபத்து வழியே சாப்பாட்டறைக்குப் போகிறார். முத்துவும் இரத்தினமும் தொடர்கிறார்கள்.)

பு : இஞ்சாருங்கோ (வரவேற்பறையிலுள்ள ராசலிங்கத்தைக் காட்டுகிறார்.)
ந : (வாசலடியிற் திரும்பி, வரவேற்பறையில் ராசலிங்கத்தைக் காண்கிறார்.) ஓ, அண்ணா. (அறைக்குட் சென்று தோளிற் கையைப் போடுகிறார்.) கண்டு கனகாலம்.
ரா : நான் உடன வெளிக்கிட வேணும்.
ந : திறமான விஸ்கி மேசையில எடுத்து வைச்சிருக்கேக்க, இதென்ன போறகதை சொல்லுறீங்கள். புனிதம் விஸ்கியை மறக்கேல்லைத் தானே.
பு : நானொண்டும் மறக்கேல்லை. அங்க தண்ணி கொதிக்குது. (சாப்பாட்றைக்குப் போகிறார்.)
ரா : விஸ்கியுமோ?
ந : சும்மா கதிரையில கொஞ்சம் ஆறுதலா இருங்கோவன்.
ரா : அதொண்டும் வேணாம். நான் உந்தத் தண்ணிப் பாட்டியளுக்கு ஒரு நாளும் போறேல்ல.
ந : இது பாட்டி இல்லை, அண்ணை.
ரா : இல்லாட்டி வேறென்ன? (சாப்பாட்டறைக்குள் எட்டிப் பார்க்கிறார்.) நீங்களெல்லாம் இந்தளவையுஞ் சாப்பிட்டு எப்படிச் சீவிக்கிறியள் எண்டு விளங்கேல்லை.
ந : (கைகளை உராசியபடி) ஏன்? இளம்பிள்ளையள் சாப்பிடுறதைப் பாக்கிறதை விடப் பெரிசா என்ன சந்தோசம் இருக்கு? இவர்கள் தான் முழு எதிர்காலத்தையும் உலுக்கப் போறவங்கள்.
ரா : (சற்று அதிர்ச்சியுடன்) அப்பிடியோ? என்னத்த உலுக்கப் போறாங்கள்? (இடப்புறமுள்ள கதிரையில் அமர்கிறார்.)
ந : (உலாவியபடி) யோசிக்காதையுங்கோ. நேரம் வரேக்க சொல்லுவாங்கள். எங்களைப் போல கிழட்டு மடையர் ...
ரா : என்னை ஒருவனும் இற்றை வரையில அப்பிடிச் சொல்லேல்லை.
ந : சும்மா எடுத்ததுக்கெல்லாம் ஏன் அண்ணா என்னில பாயிறியள். உங்கட பிரச்சினை என்னெண்டா, உங்கட புலன்கள் மழுங்கிப் போச்சு. எங்கையேன் போய்த் தியானத்தில இருந்து போட்டுஇ இவங்கள் புது உலகம் படைக்கிறதைப் பாக்க வாங்கோ.
ரா : இங்க!
ந : எழுப்பவும் எதிர்க்கவும் எத்தனை இருக்கு! அதில்லாம, அண்ணா, மனிசர் செத்தமாதிரித்தான். புவனம், தபாற்காரன் வந்தவனோ?
பு : (சாப்பாட்டறையிலிருந்து) இண்டு ஒரு தபாலும் இல்லை.
ந : இன்னொரு விஷயம் அண்ணா, நல்ல வருமானம். வயிறு காஞ்சு சீவிச்ச பிறகுதான் அதின்ட அருமை தெரியும்.
ரா : நீ எப்ப பட்டினி கிடந்தனீ.
ந : கிட்டத்தட்ட! அங்க வடக்கில கனகாலமா வலுங் கஷ்டமான சீவியம். இப்ப ராசா மாதிரிச் சீவியம். இண்டைக்கு றோஸ்ற் சிக்கின். கடவுள் புண்ணியத்தில நாளைக்கும் மிச்சமிருக்கு. ஒரு துண்டு எடுங்களன்- வாங்கோ.
ரா : வேண்டாம், வேண்டாம். ஒண்டும் வேண்டாம்.
ந : அதை உங்களுக்கும் காட்ட வேணும். விடுங்களன். உள்ளுக்கு வாங்களன் - எங்கட மேசைக்கு ஒரு விரிப்பும் இருக்கு. (தமையனைச் சாப்பாட்டு அறைக்குள் இழுக்கிறார்.)
ரா : நான் கண்டனான் எண்டா.
ந : வாழ்க்கைய அனுபவிக்கிறது. அதுதான் என்ட கொள்கை! எண்டாலும் புவனஞ் சொல்லுறா, நான் இப்ப சிலவழிக்கிற அளவுக்குக் கிட்ட சம்பாதிக்கிறனாம்.
ரா : (ஒரு பழத்தை வேண்டாமென்று மறுத்தபடி) அப்ப நீ கொஞ்சம் முன்னேறுறாய்தான்.
ந : அண்ணாஇ அது பகிடி! அதுக்குச் சிரிக்கவெல்லோ வேணும்!
(இடது புறத்திலுள்ள மற்றக் கதிரையில் அமர்கிறார்.)
ரா : அடுத்தடுத்து றோஸ்ற் சிக்கின் தின்னுறது பகிடி இல்லைக் கண்டியோ!
ந : என்னைச் சுத்தி மனிசர் இருக்கிற சந்தோசத்தை நான் அனுபவிக்கக் கூடாதோ? எதையாவது செய்ய வேணும் எண்ட துடிப்புள்ள உசாரான, சந்தோசமான, சுதந்திரமான இளம் ஆக்களைக் காணவேணும் எண்டு எனக்கொரு தேவை இருக்கு. நீங்கள் பாருங்கோ. துரைசாமி வந்தவுடன கதைப்பம்.
ரா : ஓ! துரைசாமி! இப்ப தான் நினைவு வருகுது. உன்ட கட்டுரை ஒண்டைப் போடப் போறானெண்டு சொன்னான்.
ந : என்ட கட்டுரையையோ?
ரா : ஓ, இந்த நீருற்றைப் பற்றி - மழை காலத்தில நீ எழுதினதாம்.
ந : ஆ, அதையோ! முதலாவதா, அதை இப்ப அச்சடிக்கிறதை நான் விரும்பேல்ல.
ரா : என்ன? நான் நினைச்சன், இதுதான் சரியான தருணம் எண்டு.
ந : வழமையான நிலைமையள்ள அப்பிடி இருக்கலாம். (மேலும் கீழும் நடக்கிறார்.)
ரா : (அவரைப் பார்த்தபடி) நிலைமையளுக்கு இப்ப என்ன நடந்திட்டுது?
ந : (தயங்கியபடி) எனக்கு உடன சொல்லேலாது. எப்பிடியும் இண்டைக்கு ஏலாது. சிலவேளை, பாரதூரமான நிலவரமா இருக்கலாம். சிலவேளை, ஒண்டுமில்லாமலும் இருக்கலாம்.
ரா : குழப்பிறதை மட்டும் நீ சரியாச் செய்து போட்டாய். ஏதேன் பிழையோ? என்னட்ட இருந்து எதையேன் ஒளிக்கிறியோ? அந்த நீருற்று நிர்வாக சபைக்கு நான் தான் தலைவர் எண்டு உனக்கு நினைப்பு வந்தாப் பிழையில்லை எண்டு நினைக்கிறன்.
ந : உங்களுக்கும் ஒண்டு நினைப்பிருந்தா நல்லமெண்டு நினைக்கிறன் அண்ணா. சும்மா நாங்கள் ஏன் ஆளோடை ஆள் கொழுவ வேணும்?
ரா : ஆக்களோட கொழுவிற பழக்கம் என்னட்ட இல்லை! ஒண்டு மட்டுஞ் சொல்லுறன். ஆம்பல் வயல் நீருற்று அலுவல்ல எல்லாம் முறைப்படி ஒழுங்கா அந்தந்த அதிகாரியளுக்குள்ளால செய்யப்பட வேணும். என்ட முதுகுக்குப் பின்னால எதையேன் செய்ய நான் விடமாட்டன்.
ந : அண்ணா, உங்கடை முதுகுக்குப் பின்னால எப்ப போனனான்.
ரா : தம்பி, நீ எப்பவும் நினைச்ச காரியம் செய்யிற தரவழி. ஒரு கட்டுப்பாடான சமூகத்தில அது சரிவராது. தனி மனிசர் முழுச் சமூகத்துக்கும் கீழ்ப்படிய வேணும். எப்பிடியெண்டா (வார்த்தைக்குத் தட்டுத்தடுமாறியபடி, தன்னைக் காட்டி) பொது நன்மைக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய வேணும். (எழுகிறார்.)
ந : இருக்கலாம். அதுக்கும் எனக்கும் என்ன தொடசல்?
ரா : இங்கதான் தம்பி நீ ஒரு நாளும் பாடம் படிக்கமாட்டாய். கவனமா இரு. இல்லாட்டி, எப்பவேன் ஒரு நாள் துக்கப்படுவாய். சொல்லிப் போட்டன். இனி நான் வாறன்.
ந : உங்களுக்கு என்ன விசரோ? நீங்கள் பிழையான லைனில போறியள்.
ரா : நான் வழமையாப் பிழை விடுறேல்ல. நான் வெளிக்கிடட்டோ?
(சாப்பாட்டறையை நோக்கித் தலையசைத்து) வாறன் புவனம்.
(மற்றவர்களை நோக்கி) வாறன். (புறப்படுகிறார்.)
பு : (வரவேற்பறைக்குள் வந்தபடி) போட்டாரோ?
ந : எரிஞ்சல்லோ போட்டார்!
பு : அவரை என்ன செய்தனியள்?
ந : அவருக்கு என்னட்ட என்ன வேணும்? நான் ஆயத்தமா இல்லாமல் நான் சொல்லிற செய்யிற ஒவ்வொண்டையும் அவருக்கு ஞாயப்படுத்திக்; கொண்டிருக்கேலுமோ?
பு : ஏனாம்? அவருக்கு நீங்கள் என்னத்தை ஞாயப்படுத்த வேண்டியிருக்கு?
ந : புவனம் அதை என்னட்ட விடும். தபாற்காரன் இண்டைக்கு வராதது புதுமையாத்தான் இருக்கு.

(விநாயகமும் கந்தசாமியும் துரைசாமியும் சாப்பாட்டு மேசையருகிலிருந்து எழுந்து வரவேற்பறைக்கு வருகின்றனர். முத்துவும், இரத்தினமும் சிறிது நேரம் பின்னர் வருகின்றனர். புவனம் வெளியேறுகிறார.;)

வி : (கைகளை அகல விரித்தபடி) இப்படி ஒரு சாப்பாட்டுக்குப் பிறகு, முருகா, நான் ஒரு புது மனிசன் மாதிரி எல்லோ இருக்கிறன். இந்த வீடு.
த : (குறுக்கிட்டு) மேயர் இண்டைக்கு நல்ல குணத்தில இல்லை.
ந : அது அவற்ற வயிறு. அவருக்கு அவ்வளவாச் செமியாது.
து : தினப் புதினத்தில இருந்து ரண்டு ஆசிரியர்மார் வந்ததும் அதைக் கொஞ்சம் மோசமாக்கி இருக்கும்.
ந : அண்ணர் எப்பவும் தனிச்ச ஆள். பாவம். அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் கந்தோர் அலுவலும் கடமையும் குடங்குடமாக் குடிக்கிற வெறுந் தேத்தண்ணியுந்தான். புவனம் எங்களுக்குக் கொஞ்சம் விஸ்கி கொண்டு வாறீரே?
பு : (சாப்பாட்டு அறையிலிருந்து) இப்ப தான் எடுக்கிறன்.
ந : கப்வுன் இதில என்னோட செற்றியில இருங்கோ. எப்பாகிலும் அருமையா வாற விருந்தாளி எல்லோ நீங்கள். இருங்கோ.
க : முந்திஇ இந்த வீடு பார்க்க வடிவே இல்லை. இப்ப நல்ல லட்சணமா இருக்கு.

(துரைசாமியும் விநாயகமும் வலப்புறமாக அமர்கிறார்கள். புவனம் பானங்களைக் கொண்டு வந்து செற்றிக்குப் பின்னாலுள்ள மேசையில் வைக்கிறார்.)

வி : (கந்தசாமியிடம், நெருக்கமான தோரணையில் நல்லதம்பியைச் சுட்டி) உயர்ந்த மனுசன்.
பு : இந்தாங்கோ. விரும்பினதை எடுத்துக் கொள்ளுறீங்களோ?
ந : (ஒரு கிளாசை எடுத்;தபடி) நாங்கள் பாத்துக் கொள்ளுறம். (விஸ்கியை ஊற்றுகிறார்.) சுருட்டு... முத்து, சுருட்டுப் பெட்டி எங்கையெண்டு தெரியுந்தானே. ரத்தினம், என்ட சுங்கானை எடு. (பிள்ளைகள் இடப்புறமாகப் போகிறார்கள்.) எனக்கு இவன் முத்து இடையில என்ட சுருட்டுகள்ளை ஒண்டு ரண்டை எடுக்கிறவன் எண்டு ஒரு ஐமிச்சம் எண்டாலும், தெரிஞ்சமாதிரி நான் காட்டிக் கொள்ளுறேல்லை. புவனம் எங்க வைச்சனாணெடு தெரியுமோ? ஆ, கொண்டு வந்திட்டான். நல்ல பிள்ளையள்! (பிள்ளைகள் கேட்டவற்றைக் கொண்டு வருகிறார்கள்.) எல்லாரும் வேண்டியதை எடுங்கோ. நான் சுங்கானைக் கொளுத்துறன். எத்தனை காத்திலையும் மழையிலையும் இந்தச் சுங்கான் காடு வழிய என்னோட அலைஞ்சிருக்கு. ச்சியர்ஸ்!

(பிள்ளைகள் யன்னலருகே ஒரு வாங்கோடு அமர்கிறார்கள்.)

பு : (உட்கார்ந்து துணியில் பூவேலை செய்தபடி) கப்;வுன் நீங்கள் சுறுக்காக் கடலுக்குப் போயிருவீங்களோ?
க : அடுத்த கிழமை வெளிக்கிடுவமெண்டு நினைக்கிறன்.
பு : அதுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கோ?
க : அப்பிடித்தான் யோசினை.
வி : அப்ப அடுத்த தேர்தலுக்கு நிக்க மாட்டியள்.
க : என்னஇ தேர்தல் நடக்கப் போகுதோ?
வி : உங்களுக்குத் தெரியாதோ?
க : சீ, நான் இதுகள்ளை கனக்க ஈடுபடுறேல்லை.
வி : என்ன. உங்களுக்குப் பொது விசயங்கள்ளை நிறைய அக்கறை இருக்குத்தானே?
க : உண்மையா, எனக்கு இதொண்டும் விளங்காது.

(அவருக்கு விளங்கும், ஆனால் அதிகம் ஈடுபாடில்லை. அதிகம் பேசாத ஒருவர் அவர். ஆனால் அவருக்குக் குணவியல்புகள் இல்லாமல் இல்லை. தைரியமான அமைதியான நண்பர் இருப்பது இப்போதெல்லாம் மவுசான விசயம் இல்லை. என்றாலும் அதில் ஒரு கேடும் இல்லை.)

பு : (அனுதாபமாக) எனக்குத்தான், கப்வுன், அதுதான் உங்களைக் காண எனக்குச் சந்தோசமா இருக்கிறது.
வி : என்னெண்டாலும் கப்டன் நீங்கள் வோட்டுப் போடவேணும்.
க : ஒண்டும் விளங்காவிட்டாலுமோ?
வி : விளங்கிறதோ! என்ன சொல்லுறியள்? கப்டன், சமுதாயம் ஒரு கப்பல் மாதிரி. கப்பலைச் செலுத்த ஒவ்வொருத்தனும் ஏதேன் செய்ய வேணும்.
க : கரையில அது சரிவரேலும், ஆனாக் கப்பலில அவ்வளவா வேலை செய்யாது.

(தோளிற் பையும், கையிற் புத்தகங்களுமாக பவளம் நுழைவறைக்குள் வருகிறாள். நாம் எதிர்காலத்தின் நம்பிக்கைச் சுடராகக் கருதும் பெண் அவள். நேர்மையான மனவுறுதியுடைய அவளுக்குத் தொழிலின் பொருள் தெரியும். தொழிலை உலகின் நலன்களின் ஆக்க சக்தி என நினைப்பவள்.)

ப: (நுழைவாயிலிருந்து) ஹலோ!
ந : (அன்பாக) வா பவளம்.
வி : (கந்தசாமியிடம்) உயர்ந்த இளம் பெண்!

(பரஸ்பர வணக்கங்கள். பவளம் பையைத் தோளாற் கழற்றிப் புத்தகங்களை நுழைவறையில் ஒரு கதிரையில் வைக்கிறாள்.)

ப : (அறைக்குள் வந்தபடி) நான் பாடுபட்டு வேலை செய்திட்டு வாறன். இங்க எல்லாரும் சாக்குகள் மாதிரிச் சரிஞ்சு கிடக்கிறியள்.
ந : நீயும் வந்து ஒரு சாக்கா மாறுறதுதானே. வா, பவளம். வந்து பக்கத்தில இரு. இவளைப் பாத்திட்டு, “எப்பிடி இவள் எனக்கு வாய்ச்சாள்” எண்டு நினைக்கிறனான்.

(பவளம் தகப்பனருகே சென்று ஆதரவாகத் தடவிச் செல்கிறாள்.)

வி : உங்களுக்குக் குடிக்க ஏதேன் ஊத்தித் தரட்டோ?
ப : (மேசையருகே வந்து) உங்களுக்கேன் கரைச்சல். நானே எடுக்கிறன், அப்பா, மறந்தே போனன், உங்களுக்கு ஒரு கடிதம் இருக்கு. (புத்தகங்கள் இருக்கும் கதிரைக்குப் போகிறாள்.)
ந : (திடுக்குற்று) ஆரிட்டயிருந்து?
ப : கொலேஜூக்குப் போற வழியில காலம தபாற்காரரைக் கண்டன். உங்கட கடிதத்தையும் தந்தார். வீட்ட திரும்பி வர நேரம் இருக்கேல்லை.
ந : (எழுந்து அவளை நோக்கி நடந்து) இம்மட்டு நேரமா நீ அதை என்னட்டைத் தரேல்லை!
ப : அப்பா எனக்குத் திரும்பி வர நேரம் இருக்கேல்லை.
பு : அவளுக்கு நேரமில்லாட்டி...
ந : சரி, தா பிள்ளை பாப்பம்! (கடிதத்தை வாங்கி உறையைப் பார்க்கிறார்.) ஆ! இதுதான்.
பு : இதுக்கோ காத்துக் கொண்டிருந்தனியள்?
ந : நான் உடன வந்திடுவன். என்ட அறையில மேசை விளக்கு இருக்குதோ?
ப : ஓ, மேசையில எரிஞ்சபடி இருக்கு.
ந : ஒரு நிமிஷம் மன்னியுங்கோ. (அறைக்குட் போய் விரைவாகவே திரும்புகிறார். புவனம் அவரது கண்ணாடியைக் கொடுக்கிறார். திரும்பிப் போகிறார்.)
ப : அதென்ன, அம்மா?
பு : எனக்குத் தெரியாது. போன ரெண்டு மூண்டு நாளாத் தபாற்காரன் வந்தவனோ எண்டு திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்.
வி : ஒரு வேளை வெளியூரில இருக்கிற ஆரேன் நோயாளியாயிருக்கும்.
ப : பாவம் அப்பா, வேலை மெத்திப் போச்சு. (பானத்தை அருந்தியபடி) ஆ!
து : நீங்கள் எங்களுக்காகத் தமிழாக்கப் போறதாகச் சொன்ன அந்த ஆங்கில நாவலுக்கு என்ன நடந்தது?
ப : துவங்கினனான், பிறகு வேற வேலையள்.
து : பின்னேரப் பள்ளியில படிப்பிக்கத் துவங்கிவிட்டியளோ?
ப : ஒரு நாளைக்கு ரெண்டு மணித்தியாலம்.
வி : அதை விடக் கொலேஜ் படிப்பும்?
ப : (ஸோகுhவில் அமர்ந்தபடி) ஓ அஞ்சு மணித்தியாலம். அதோட, ஒவ்வொரு நாளும் இரவில ஊரிற்பட்ட பாடங்களைத் திருத்த வேணும்!
பு : அவள் ஒரு நாளும் போகாம விடாள்.
து : (பவளத்திடம்) அதுதான் உங்களை ஓடிக் களைச்ச ஆள் மாதிரி நினைவு வாறது. அதோடஇ ஓஇ ஓடிக் களைச்ச மாதிரி.
ப : எனக்கு அப்படித்தான் விருப்பம். ஒரு கலாதியான களைப்பு.
வி : (துரைசாமியிடம்) ஆள் நல்லாத்தான் களைச்சுப் போயிட்டா.
ர : நீ ஒரு பொல்லாத பொம்பிளையா இருக்க வேணும் அக்கா?
ப : (சிரித்தபடி) பொல்லாதவளோ?
ர : நீ கடுமையாய் வேலை செய்யிறாய். என்ட வாத்தியார் சொல்லுறவர்இ பாவஞ் செய்த ஆக்களுக்குத்தான் கடவுள் தண்டனையா வேலை தாறவராம்.
மு : நீயும் அதை நம்பிறியோ?
ப : முத்து! அவன் வாத்திமார் சொல்லுறதை நம்பிறவன் தான்.
வி : (முறுவலுடன்) அவனை மறியாதையுங்கோ...
து : ரத்தினம்இ உமக்கு வேலை செய்ய விருப்பமில்லையோ?
ர : வேலையோ? சீ!
து : அப்ப நீர் உலகத்தில என்னவா வரப்போறீர்.
ர : நானொரு கடற் கொள்ளைக்காரனா வரப்போறன்.
மு : உன்னால ஏலாது! அதுக்கு நீ ஒரு நாத்திகனா இருக்க வேணும்.
ர : அப்ப நானொரு நாத்திகனா இருப்பன்.
பு : பிள்ளயைள்இ நேரஞ்செண்டு போகுது.
வி : ரத்தினம் நீர் சொல்லிறது சரியெண்டுதான் நான் நினைக்கிறன்.
பு : (விநாயகத்துக்குச் சைகை செய்தவாறு) நீங்கள் அப்பிடியொண்டும் நினைக்கயில்லைஇ என்ன விநாயகம்?
வி : கடவுளாணைஇ நினைக்கிறன். நானொரு முழு நாத்திகன் எண்டு பெருமைப்படுறன். இருந்து பாருங்கோஇ கொஞ்ச நாளில நாங்கள் எல்லாரும் நாத்திகராய் போயிடுவம்.
ர : அப்ப நாங்கள் நினைச்ச எல்லாஞ் செய்யேலும்!
வி : ஓ! ரத்தினம்இ இங்க பாரும்.
பு : (இடைமறித்து) பிள்ளையள் உங்களுக்குப் பள்ளியல வீட்டுவேலை தரேல்லையோ? உள்ளுக்குப் போய் அதைக் கவனியுங்கோ.
மு : அம்மாஇ நாங்கள் கொஞ்ச நேரம் நிக்கேலாதோ?
பு : இல்லைஇ ரெண்டு பேரும் ஓடுங்கோஇ ம்...

(இரு பிள்ளைகளும் மற்றவர்கட்கு வணக்கம் சொல்லி இடப்புறமாக வெளியேறுகின்றனர்.)

து : இந்தக் கதையளைப் பிள்ளையள் கேக்கிறது கூடாதெண்டு நினைக்கிறியளோ?
பு : தெரியாதுஇ எண்டாலும் எனக்குப் பிடியாது.

(நல்லதம்பி தன் அலுவலறையிலிருந்து வருகிறார். கையிற் கடிதத்தை விரித்தபடிஇ வியப்புடன்இ எங்கோ நினைவில் மூழ்கி நித்திரையில் நடப்பவர் போலஇ முன் வாயிலை நோக்கி நடக்கிறார்;.)

பு : இஞ்சாருங்கோ!

(நல்லதம்பி திடீரென அவர்கள் இருப்பதை உணர்ந்தது போற் திரும்புகிறாhர்.)

ந : தம்பிமாரே ஊருக்கு ஒரு புதினம் வருகுது.
வி : புதினமோ?
பு : என்ன மாதிரிப் புதினம்?
ந : ஒரு பாரதூரமான கண்டு பிடிப்புப் புவனம்.
து : மெய்யாவோ?
பு : நீங்கள் கண்டு பிடிச்சதோ?
ந : நான் கண்டு பிடிச்சதுதான். (மேலும் கீழுமாக நடக்கிறார்.) இனி நகரசபையை நடத்துகிற வானரங்கள் எனக்கு விசரெண்டு சொல்லட்டும். இனி அவை கவனமா இருக்க வேணும். கோபுரத்தில ஏறி இருந்தவை எப்பிடிக் கீழ விழுகினம் எண்டு பாருங்களன்.
ப : அப்பா! என்ன சொல்லிறியள்?
ந : ஓ! அண்ணர் இப்ப இங்க இருந்தா! மனிசர் எப்பிடி ஓடித் திரிஞ்சு குருட்டுப் பூனையள் மாதிரி முடிவுகளுக்கு வருகினம் எண்டு பாப்பியள்.
து : டொக்வுர்இ என்ன நடந்திட்டுதெண்டு சொல்லுங்கோவன்.
ந : (மேசையருகே நின்று) எங்கட ஊர் ஒரு உருப்படியான ஆரோக்கியத் தலம் எண்டுதானே எல்லாரும் நினைக்கிறம்.
து : இல்லாமலென்ன?
பு : என்ன நடந்திட்டுது?
ந : ஒரு விஷேசமான ஆரோக்கியத் தலமெல்லோ! கடவுளே! சும்மா ஆக்களுக்கு மாத்திரமில்லாமஇ வருத்தக்காரருக்குமெல்லோ தக்கதெண்டு சொல்லிறம்.
பு : இஞ்சாருங்கோஇ நீங்கள் என்ன...
ந : நாங்கள் எல்லாரும் பெரிசா விளம்பரம் பண்ணினாங்களெல்லோ! நானும் எல்லோ தினப் புதினத்தில் துண்டுப் பிரசுரங்கள் எழுதினனான்.
து : ஓம்இ ஓம்இ அதுக்கு...
ந : எக்கச்சக்கமாச் சிலவழிச்சுக் கட்டியெழுப்பின அற்புத நீருற்றும் முழுச் சுகாதார நிலையமும் ஒரு நோய்க் கிடங்காயெல்லோ போச்சு.
ப : அப்பாஇ நீருற்றோ?
பு : (ஏககாலத்தில்) எங்கட நீருற்றோ?
வி : நம்பேலேல்லை!
ந : அங்கால சாம்பல் மடுவில கிடக்கிற அழுகலைக் கண்டிருக்கிறியள் தானே! தாங்கேலாத நாத்தம். அங்கால கொஞ்சம் தள்ளி இருக்கிற மேட்டிலஇ தோல் பதனிடுற ஆலையிலிருந்து வாற கழிவுதான் அது. அந்த நஞ்சுக் கழிவெல்லாம் இந்த அற்புதங்கள் செய்யிற தண்ணிக்குள்ள வந்து சேருது. இந்தத் தண்ணியெல்லோ ஆக்களின்ட வருத்தங்களை மாத்துது எண்டு சொல்லிறம்.
க : எங்கட கடற்கரை இருக்கிற இடத்தில எண்டுறியளா?
ந : சரியா அங்க தான்.
து : டொக்வுர் நிச்சயமா இதைப்பற்றித் தெரியுமோ?
ந : கனகாலமா எனக்கொரு ஐமிச்சம் இருந்தது. போன வருஷம் உல்லாசப் பிரயாணியள் கனபேருக்கு வயிற்றுளைவும் நெருப்புக் காய்ச்சலும் வந்ததெல்லோ!
பு : வந்ததுதான். மணிமேகலையின்ட மருமகளுக்கும்...
ந : ஓம்இ புவனம். அப்ப நாங்கள் உல்லாசப் பிரயாணியள் தான் வருத்தத்தைக் கொண்டந்தினம் எண்டு நினைச்சம். போன மழைகாலத்தில எனக்கொரு யோசினை வந்தது. தண்ணியைப் பரிசோதனை பண்ணத் துவங்கினன்.
பு : இவ்வளவு காலமும் அதையோ விழுந்து விழுந்து செய்தனியள்?
ந : தண்ணியில கொஞ்சம் சாம்பிள்கள் எடுத்துப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினன்.
து : அதோ இப்ப வந்து சேர்ந்தது?
ந : (கையில் இருந்த கடிதத்தை அலைத்தபடி) அதே தான்! தண்ணியில நோய்க்கிருமியள் இருக்கெண்டு இது ஒப்புவிக்குது.
பு : கடவுளே! நல்லவேளைஇ நேரத்துக்குக் கண்டுபிடிச்சம்.
ந : அப்பிடித்தான் சொல்ல வேணும்.
பு : கடவுள் புண்ணியம்!
து : டொக்வுர்இ இப்ப என்ன செய்ய யோசிக்கிறியள்?
ந : வேற என்னஇ பிழையைத் திருத்திறது.
து : எப்பிடிச் செய்யப் போறியள்?
ந : ம்... சும்மா விட்டா முழு நிலையமும் அநியாயமாப்போம். கவலைப்பட ஒண்டும் இல்லை... என்ன செய்ய வேணுமெண்டு எனக்கு வடிவாத் தெரியும்.
பு : அப்ப ஏன் இவ்வளவு நாளா ரகசியமா வைச்சிருந்தனீங்கள்?
ந : என்னை வேற என்ன செய்யச் சொல்லிறீர்? ஒண்டும் நிச்சயமாத் தெரியாம நான் வளவளக்கிறதோ? (கைகளைப் பிசைந்தபடி நடக்கிறார்.) புவனம் உமக்கு விளங்கேல்லைஇ இது எதில கொண்டு போய் விடுமெண்டு - தண்ணீர் விநியோகம் முழுவதையும் மாத்த வேணும்.
பு : முழுவதையுமோ?
ந : முழுவதையும்! தண்ணியை எடு;கிற குழாய் ஆகலும் பதிவா இருக்கு. அதை உச்தி வைக்க வேணும். முழுக் கட்டிட வேலையையும் பிரிச்செடுக்க வேணும்.
ப : கடைசியாஇ இப்பவேனும்இ நீங்கள் சொன்னதை அப்பவே கேட்டிருக்க வேணும் எண்டு அவையளுக்கு நீங்கள் நிரூபிக்கேலும். இல்லையோ?
ந : ஆஇ அவளுக்கு நினைப்பிருக்கு!
பு : மெய்தான்இ நீங்கள் அவையளை எச்சரிச்சனியள் தான்.
ந : நான் எச்சரிச்சனான் தான். அந்த இழவைக் கட்ட வெளிக்கிடேக்க அங்கினைக்க கட்டாதையுங்கோ எண்டனான். எங்க கட்டிறதெண்டு அரசில்வாதியளுக்குச் சொல்ல நானார்? வெறும் விஞ்ஞானி! இப்ப அவையள் வள்ளிசா வாங்கிக் கட்டப் போயினம்.
வி : இதெண்டா அருமையான கதைதான். (கப்வுனிடம்) இவரெண்டா உயர்ந்த மனிசன் தான்!
ந : அருமையான கதையை விடப் பெரிய விஷயமிது. (அலுவலறை நோக்கி நடக்க முனைகிறார்). முதல்ல இதை அவை காணட்டும். (நிற்கிறார்.) பவளம். என்ட மேசையில என்ட அறிக்கை இருக்குது... (பவளம் அறைக்குட் போகிறாள்.) ஒரு தபால் உறைக்குள்ள. (அவள்அதை எடுக்கப் போகிறாள்.) கேளுங்கோஇ இதுதான் பல்கலைக் கழகத்தில இருந்து வந்திருக்கிற கடைசி அத்தாட்சி. (பவளம் அறிக்கையுடன் அறைக்குள்ளிருந்து வந்து அவரிடம் கொடுக்கிறாள்.) இது என்ட அறிக்கை (பக்கங்களைப் புரட்டுகின்றார்.) அஞ்சு முழு விளக்கமான பக்கங்கள்...
பு : (அவரிடம் ஒரு பெரிய உறையைக் கொடுத்தபடி) இது போதுமோ?
ந : நல்லாப் போதும். உடனையே நிருவாக சபைக்கு அனுப்பிறன். (அறிக்கையை உறைக்குள் இட்டுப் புவனத்திடம் கொடுக்கிறார்.) இதை வேலைக்காரப் பெட்டையிட்டக்; குடும். அவளின்ட பேரென்னஇ மறந்திட்டன்.
பு : தங்கம்.
ந : எங்கட தங்கத்தைக் தன்ட மூக்கைத் துடைச்சுப் போட்டு உடனயே மேயரிட்ட ஓடிப் போகச் சொல்லும்.

(புவனம் அவரையே அசையாமற் பார்த்தபடி நிற்கிறார்.)

ந : என்ன புவனம்?
பு : தெரியேல்லை.
ப : பெரியப்பா இதுக்கு என்ன சொல்லுவாரோ தெரியேல்லை.
பு : அதுதான் நானும் யோசிக்கிறன்.
ந : அவர் என்ன சொல்லிறது! ஒரு தொற்று நோய்ப் பீடை பரவ முன்னால இவ்வளவு முக்கியமான ஒரு உண்மையை வெளியில கொண்டு வந்திட்டம் எண்டு அவர் சந்தோசப்படவெல்லோ வேணும்.

(புவனம் இடப்புறமாக வெளியேறுகிறார்.)

து : இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிச் சின்னனா ஒரு செய்தி புதினத்தில போட யோசிக்கிறன்.
ந : நல்லாச் செய்யுங்கோ! உண்மையில நான் அதுக்குக் கடமைப்பட வேணும்.
து : சனங்களுக்கு இதைப்பற்றி நேரத்தோட தெரிய வேணுந்தானே.
ந : உடன தெரிய வேணும்.
வி : கடவுளறியஇ இந்த ஊரில நீங்கள் தான் தலைமையான ஆளா இருப்பியள் டொக்வுர்.
ந : (திருப்தியுடன் உலாவிவாறு) இதில என்ன கெட்டித்தனம்? துப்பறியிறவனுக்கு அதிட்டத்தில ஒரு நல்ல தடயங் கிடைக்கிறேல்லையோ? அதுமாதிரித்தான் எனக்கும் எண்டு சொல்லுங்கோவன்.
வி : துரைசாமி அண்ணைஇ ஊரால டொகவுர் நல்லதம்பிக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தாலென்ன?
ந : சீஇ சீஇ சீ...
து : நாங்கள் எல்லாம் இதைப்பற்றி ஒரு சொல்லு.
வி : நான் தயாநிதியாரிட்டப் போய்க் கதைக்கிறன்!

(புவனம் வருகிறார்.)

ந : இங்கஇ சும்மா சேட்டையாக்கிப் போடாதையுங்கோ! எனக்கிந்த ஆரவாரமெல்லாம் சரிவராது. நிர்வாக சபை எனக்குச் சம்பளத்தைக் கூட்டித்தர வெளிக்கிட்டாலும் நான் வாங்க மாட்டன். புவனம்இ நான் வாங்கவே மாட்டன்.
பு : (வெறுப்புடன்) நீங்கள் சொல்லிறதுதான் முறை.
ப : (கிண்ணத்தை உயர்த்தி) ச்சியர்ஸ்இ அப்பா!
அனைவரும்: ச்சியர்ஸ் டொக்வுர்!
து : டொக்வுர் இது உங்களுக்கு மனத் திருத்தி எண்டு நம்பிறம்.
ந : எல்லாருக்கும் மெத்த உபகாரம். எல்லாத்திலையும் பாக்க மேலானது ஒண்டு என்னெண்டா அயலாரின்ட மதிப்பைப் பெறுகிறதுதான் - புவனம். எனக்கிப்ப ஆடவேணும் போல இருக்கு.

(எல்லோருமாக இசைக்கு ஆடுகிறார்கள். பிள்ளைகள் ஆரவாரம் கேட்டு வலது கதவிடுக்கால் எட்டிப் பார்க்கிறார்கள். புவனம் அவர்களை மேல் வீட்டுக்கு விரட்டுகிறார்.)

- திரை -

----------------------------------------------------------

அங்கம் 1: காட்சி 2

ஜடொக்வுர் நல்லதம்பி வீட்டு வரவேற்பறையில் மறு நாட்காலை. திரை உயரப் புவனம் சாப்பாட்டறையினின்று கையில் சீல் வைக்கப்பட்ட உறையுடன் வருகிறார். அலுவலறைக்குள் எட்டிப் பார்க்கிறார்.ஸ

பு : இங்கையோ இருக்கிறீங்கள்?
ந : (உள்ளே இருந்தபடி) இப்ப தான் வந்தனான். (வரவேற்பறைக்குள் வருகிறார்.) என்ன விஷயம்?
பு : அண்ணரிட்டையிருந்து இப்பத்தான் வந்துது. (உறையைக் கொடுக்கிறார்.)
ந : ஆஇ என்னெண்டு பாப்பம். (உறையைத் திறந்து கடிதத்தைப் படிக்கிறார்.) “நீவிர் அனுப்பிய அறிக்கையை இத்துடன் திருப்பி அனுப்பியுள்ளேன்...” (மிகுதியை முணுமுணுப்hபக வாசிக்கிறார்).
பு : என்னவாம்? சும்மா அப்பிடி நில்லாதையுங்கோ!
ந : (கடிதத்தைச் சட்டைப் பையிற் போட்டவாறு) மத்தியானம் இங்க வாறாராம்.
பு : ஓஇ அந்நேரம் வீட்டில நிக்க மறந்து போகாதையுங்கோ!
ந : காலமை போக வேண்டிய இடமெல்லாம் போயாச்சு. நான் நிப்பன்.
பு : அவர் இதைப்பற்றி என்ன நினைக்கிறார் எண்டு அறிய அவதியாயிருக்கு.
ந : வேறென்னெண்டு நினைக்கிறீர்? அதை நானில்லைத்இ தான் தான் கண்டு பிடிச்சனெண்டு காட்டப் பாப்பார்.
பு : அதைப் பற்றி உங்களுக்கும் யோசினையா இல்லையோ?
ந : உள்ளுக்க அவருக்குத் திருத்தியாகத்தான் இருக்கும் புவனம். எண்டாலும் அவரை விட வேற ஆரேன் ஊருக்கு நன்மை செய்திடுவினம் எண்டு அவருக்குப் பயம்.
பு : நீங்களும் அவருக்குக் கொஞ்சம் விட்டுக்குடுத்து மரியாதை சேர்க்கிறது நல்லந்தானே. அவர்தான் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டினார் எண்டு சொல்லேலாதோ?
ந : ஓ அதில என்ன - அவர் சந்தோசப்பட்டா எனக்கென்ன நட்டம்!

(ஐயாத்துரை கதவினூடு தலையை நீட்டுகிறார். சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத் தனக்குட் சிரிக்கிறார். வீட்டை விட்டுப் போகும் வரை தனக்குட் சிரிக்கிறார். வீட்டை விட்டுப் போகும் வரை தனக்குட் சிரித்தபடியே இருப்பார். இடீஸனுடைய நாடகங்களில் வந்து போகும் ஒளிருங் கண்களையுடைய பாத்திரம். தனக்குட் சிரித்தபடியே உங்களை மலையுச்சியிலிருந்து புரட்டி விடுவார். ஒரு எலியின் கூர்மையான அவதானமுடைய மூளையைக் கொண்ட வியாபார புத்தியுள்ள மனிதர். ஆயினும் சில நேரங்களில் இவர் விரும்பத்தக்க ஒருவராக இருப்பார். ஏனெனில் இவருக்கு ஒழுக்க நெறி என்பது ஏதும் இல்லையென்பது இவர் தனக்குட் சிரிக்கும் முறையிலேயே தெரிந்துவிடும்).

ஐ : (தந்திரமாக) மெய்யாத்தானோ?
பு : (அவரை நோக்கி நடந்தபடி) அப்பா!
ந : வாங்கோஇ வாங்கோ!
பு : உள்ளுக்கு வாங்களன்.
ஐ : அந்தக் கதை மெய்யில்லாட்டி நான் வெளிக்கிட்டிருவன்.
ந : எந்தக் கதை மெய்யில்லாட்டி?
ஐ : தண்ணீர் விநியோகத்தப் பற்றின இந்த விசர்க் கதைதான். மெய்யாகத்தானே?
ந : மெய்யில்லாம என்ன? உங்களிட்ட ஆர் சொன்னது?
ஐ : கொலேஜூக்குப் போற வழியிலை பவளம் எட்டிப் பாத்தவள்.
ந : அப்பிடியோ?
ஐ : ஓஇ நான் நினைச்சன் என்னோட பகிடி விடுறாளெண்டு.
பு : அவள் ஏன் அப்பிடிச் செய்ய வேணும்.
ஐ : இந்த நாளை இளம் பிள்ளையளுக்குக் கிழவரோட சேட்டை பண்ணிறதை விடப் பெரிய சந்தோசம் என்ன? என்ன சொல்லிறியள்?
ந : அந்தக் கதை மெய்தான். இங்க இருங்கோவன். ஊரின்ட நல்ல காலம்இ என்ன?
ஐ : (சிரிப்பை அடக்கிக் கொண்டு) நல்ல காலமோ?
ந : நானென்ன சொல்லிறனெண்டாஇ ஆகலும் பிந்திப் போக முந்திஇ நான் அதைக் கண்டுபிடிச்சிட்டன் எண்டு.
ஐ : நல்லதம்பிஇ கொண்ணருக்கு இப்பிடிப் பேப் பட்டங் கட்டுற அளவுக்கு நீர் கெட்டிக்காரனெண்டு நான் நினைச்சிருக்கேல்லை.
ந : பேப் பட்டங் கட்டினனோ?
பு : ஐயாஇ அவர்...
ஐ : என்ன நடந்திட்டுது எண்டு எனக்கு விளம்பரமாச் சொல்லும். தண்ணிப் பைப்பில கரப்பொத்தான் பூச்சி.
ந : (சிரித்தபடி) கரப்பொத்தான் இல்லை.
ஐ : அப்ப வேறேதேன் சின்னப் பூச்சி பிராணி ஆக்கும்.
பு : பற்றீரியாஇ அப்பா.
ஐ : (சிரிப்பிற்கு நடுவே தடுமாறும் சொற்களால்) அப்ப எக்கச் சக்கமான தொகை என்ன?
ந : கோடி கோடியா இருக்கும்.
ஐ : ஆனா ஆற்ற கண்ணிலையும் தெரியாது. அப்பிடித்தானே?
ந : ஓ அது. இல்லை எவரிட்டையேன் ஒரு நுண்காட்டி மைக்ரோ... (நிறுத்துகிறார்.) இப்ப என்னத்துக்குச் சிரிக்கிறியள்?
பு : (ஐயாத்துரையைப் பார்த்து முறுவிலத்தபடி) அப்படி உங்களுக்கு விளங்காது. ஆரும் பற்றீரியாக்களைப் பாக்கேலாது. அதால அதுகள் இல்லையெண்டு போயிடாது.
ஐ : நல்ல பெண்சாதி மாதிரி அவற்ற கதைக்குத் தாளம் போடு. கடவுளறிய நான் என்ட சீவியத்தில கேட்ட திறமான கதையெண்டா இதுதான்.
ந : (முறுவலுடன்) அப்பிடியெண்டா?
ஐ : உம்மட அண்ணரை எப்பிடி இதை நம்பப் பண்ணுவீர் எண்டு ஒருக்காச் சொல்லும்.
ந : கொஞ்ச நேரத்தில தெரியவரும்!
ஐ : நீர் அந்தாளுக்கு விசர் எண்டு நினைக்கிறீரோ?
ந : முழு ஊருக்கும் அந்தளவு விசரா இருந்தா நல்லதெண்டுதான் நினைக்கிறன்.
ஐ : இருக்கும். அவைக்கு அது நல்லா வேணும். எங்களைப் போல பழைய நாளை ஆக்களை விடத் தாங்கள் கெட்டிக்காறரெண்டு எண்ணம். உம்மட நல்ல அண்ணரின்ட கதையைக் கேட்டு என்னை நகரசபையிலையிருந்து நாயைக் கலைக்கிற மாதிரிக் கலைச்சினம். இப்ப அவர் எல்லாரையுங் கோவேறு கழுதையளாக்கிப் போட்டார்.
ந : ஓம் மாமா.
ஐ : நீட்டுக் காதும் கட்டை வாலும் வைச்ச கோவேறு கழுதையள்! (எழுகிறார்). நல்லதம்பிஇ இந்தக் கதையை மேயரும் அவற்ற பரிவாரங்களும் நம்புமெண்டாஇ பத்தாயிரம் ரூவா தருவன். இப்பஇ உடனஇ மேசையில வைப்பன்.
ந : தந்தால் மெத்த உபகாரம் மாமா. நான்...
ஐ : எனக்குப் பகிடி விட நேரமில்லை. நீர் மட்டும் உந்தக் கரப்பொத்தான் கதையைச் சொல்லி அவற்ற காலை வாரி விட்டீரெண்டா ஆயிரம் ரூவா சிலவளிச்சுக் கோயிலில ஏழையளுக்கு அன்னதானமுங் குடுப்பிப்பன். அதுக்குப் பிறகேனும் நகரசபையிலை நாலு மூளைசாலியளைப் போட வேணுமெண்டு இதுகளுக்கு அறிவு வரும்!

(துரைசாமி நுழைவறைக்குள் வருகிறார்.)

து : ஹலோ! ஓஇ மன்னிச்சு; கொள்ளுங்கோ...
ஐ : (தனது கருத்துக்குக் கிடைத்த இந்த ஆதாரத்தால் மிக மகிழ்ந்து) ஓஇ உவருக்கும் உந்த அலுவல்ல பங்கு இருக்கோ?
து : என்னையா சொல்லுறீங்கள்?
ந : இல்லாம வேறென்னஇ இவருந்தான் இருக்கிறார்.
ஐ : அதுதானே பாத்தன்! கதை பேப்பரில வரப்போகுது எண்டு நினைக்கிறன். பிசிறில்லாமல் வேலையை நடத்திறியள். நல்லம். வடிவாச் செய்யுங்கோ. நான் இனி வெளிக்கிட வேணும்.
ந : அந்த மாதிரி ஒண்டும் இல்லை மாமா. கொஞ்சம் நிண்டு நான் சொல்லிறதைக் கேட்டுப் போட்டுப் போங்கோ.
ஐ : ஓஇ விளங்குது. யோசியாதையும்! உமக்கு மட்டுந்தான் அதுகள் கண்ணில தெரியும். இவ்வளவு காலமும் நான் அறிஞ்ச திறமான யோசினை எண்டா இதுதான். இப்பிடி வேலையள ஒரு நயமில்லாமச் செய்யக் கூடாது. (நுழைவறைக்குப் போகிறார்.)
பு : (சிரித்தபடி அவரைத் தொடர்ந்து) அப்பாஇ உங்களுக்குப் பற்றீரியா எண்டா விளங்காது.
ஐ : (சிரித்தபடி) பிள்ளை இந்தக் கிழட்டு நரி உதில ஒரு சொல்லை நம்பாது.
து : (நல்லதம்பியிடம்) நீங்கள் என்ன செய்யிறியளெண்டு அவர் நினைக்கிறார்?
ந : அண்ணரைப் பேயனாக்கப் பார்க்கிறனெண்டு - யோசிச்சுப் பாரும்!
து : உங்களிட்டைக் கொஞ்சங் கதைக்கலாமோ?
ந : ஓ நல்லாக் கதைக்கலாமே?
து : மேயரிட்டையிருந்து கேள்விப்பட்டனியளோ?
ந : கொஞ்ச நேரத்தால வாறார் எண்டுதான் தெரியும்.
து : நேத்துக் துவக்கம் நான் உதைப் பற்றி நல்லா யோசிச்சனான்.
ந : மாறிட்டியள் எண்டு சொல்லாதையுங்கோ!
து : உங்களைப் போல ஒரு டொக்வுர்இ விஞ்ஞானிக்கு உந்த அலுவல் ஒரு அருமையான வாய்ப்பு எண்டாலும்இ உதில வேற விஷயங்களும் சம்மந்தப்பட்டிருக்கெண்டு யோசிச்சன்.
ந : எப்பிடியெண்டு சொல்லுங்கோ? இருங்கோவன். (வலப்புறமாக அமர்கிறார்கள்.) என்ன சொல்லப் பாக்கறியள்?
து : நிலத்திலயிருந்து அசுத்தம் வருகுதெண்டுதானே சொன்னீங்கள்.
ந : ஓஇ சாம்பல் மடுவிலையிருக்கிற நச்சுக் குப்பையிலையிருந்து.
து : வேறோரு இடத்திலயிருந்து எண்டு நான் சொல்லிறன்?
ந : என்ன சொல்லிறியள்?
து : (பெருகும் உற்சாகத்துடன்) இந்த நகரத்தின்ட சமுதாய வாழ்க்கையை மாசுபடுத்திற குப்பை மேட்டில இருந்துதான் இதுவும் வருகுது எண்டிறன்.
ந : கடவுளறிய! துரைசாமி என்ன உளம்பிறியள்?
து : இந்த நகரத்தில முக்கியமான எல்லா அலுவலும் சில நிருவாகியளின்ட கையில தான் இருக்கு.
ந : அவை எல்லாரும் நிருவாகியளில்லையே.
து : அவையிட்டைக் காசிருக்கு. பேர் போன குடும்பங்களில இருந்து வருகினம். அவைக்குத் தேவையான எல்லாம் அவையின்ட உள்ளங்கையில கிடக்குது.
ந : அதில என்ன? அவை கெட்டிக்காரர். விஷயந் தெரிஞ்சவை தானே.
து : அவையின்ட கெட்டித்தனமும் அறிவும் நீர் விநியோகத்தைக் கட்டேக்க எங்க போட்டுது?
ந : பிழை விட்டவை தான். அதையெல்லாம் இனிச் சரி பண்ணிப் போடலாம்.
து : அவ்வளவு லேசில முடியுமெண்டு நினைக்கிறியளோ?
ந : லேசோஇ இல்லையோஇ செய்;ய வேண்டிய காரியம்.
து : டொக்வுர். இந்த ஊழலை ஒரு பிரட்டுப் பிரட்டிற எண்டு முடிவு பண்ணிப் போட்டன்.
ந : கொஞ்சம் பொறுங்கோ. இதை இன்னம் ஊழல் எண்டு சொல்ல ஏலாது.
து : டொக்வுர்இ தினப் புதினத்தில நான் பொறுப்பெடுக்கேக்க இந்தக் கிழட்டுப் பிடிவாதம் பிடிச்ச றாங்கிக்காற கூட்டத்தைத் தூக்கியெறியிறதெண்டு சபதம் எடுத்தனான். இந்தக் கதையோட என்ட சபதம் நிறைவடையும்.
ந : என்னெண்டாலும்இ நீருற்றைக் கட்டியெழுப்பினதுக்கு நாங்கள் அவைக்குக் கடமைப்பட்டிருக்கிறம்.
து : மேயர்இ உங்கட அண்ணர். வழக்கமாக எண்டாஇ நான் அதைத் தொட விருப்பப்படமாட்டன். ஆனா எனக்கு நல்லாத் தெரியும்இ அந்த மாதிரி விசயங்கள் உண்மைக்குக் குறுக்க வர நீங்கள் விடமாட்டியளெண்டு.
ந : விடமாட்டன் தான்இ எண்டாலும்...
து : என்னை நீங்கள் சரியா விளங்கிக் கொள்ள வேணும் எண்டு நினைக்கிறன். நான் ஒரு சாதாரணமான குடும்பத்தில பிறந்தவன். கீழ் நிலையில உள்ளவனுக்கு என்ன தேவையெண்டு ஆரும் சொல்லாமலே எனக்குத் தெரியும். அவனுக்கு சமுதாய நிருவாகத்திலை ஒரு உரிமை இருக்க வேணும். அப்பதான் மனிசற்ற திறமைஇ அறிவுஇ சுயமரியாதை எல்லாம் முன்னுக்கு வரும்.
ந : எனக்கு அது விளங்குதுஇ எண்டாலும்...
து : கீழ் நிலையில உள்ளவனை உசத்தி விட ஒரு வாய்ப்பிருக்கேக்கஇ அதைத் தட்டிக் கழிக்கிற பத்திரிகைக்காரரின்ட சுமை எனக்குத் தேவையில்லை. சனங்களைத் தூண்டி விடுற வேலை எண்டு நாகரிகமானவை சொல்லுவினம் எண்டு எனக்கு நல்லாத் தெரியும். அவை எதையேன் சொல்லட்டன். எனக்கு என்ட மனச்சாட்சி இருக்கு.
ந : (குறுக்கிட்டு) துரைசாமி உங்களோட எனக்கு ஒரு மறுப்புமில்லை. ஆனா இது வெறும் நீர்விநியோகப் பிரச்சினை. (கதவில் யாரோ தட்டுகிறார்கள்.) என்ன அறுப்பு! வரலாம்!

(பிரசுரகர்த்தா தயாநிதி நுழைவாயிலிலிருந்து தலையிற் தொப்பியும் கையிற் குடையுமாக வருகிறார். களைத்த வயக்கெட்ட தோற்றம். அவரைப் பற்றி அதிகம் சொல்ல அவசியமில்லை.)

த : திடீரெண்டு வந்திட்டன் எண்டு கோவியாதையுங்கோ. டொக்வுர்...
து : (எழுந்து) என்னைத் தேடியோ வந்தனீங்கள்?
த : நீர் இங்க நிப்பீர் எண்டு எனக்குத் தெரியவும் மாட்டுது. நான் டொக்வுரிட்டைக் கதைக்க வேணும்.
ந : தயாநிதி அண்ணைஇ உங்களுக்கு நான் என்ன செய்யலாமெண்டு சொல்லுங்கோ.
த : மெய்யோ டொக்வுர்இ விநாயகம் சொன்னான்இ நீங்கள் நீர் விநியோகத்தைத் திருத்த வேணுமெண்டு பிரசாரம் செய்ய யோசிக்கிறியளாம்.
ந : ஓஇ சுகாதார நிலையத்தின்ட நீர் விநியோகம். அதை யார் பிரசாரமெண்டது?
த : நான் என்ட முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கெண்டு சொல்லத்தான் வந்தனான்.
து : (நல்லதம்பியிடம்) பாத்தியளோ!
ந : அண்ணை உங்கட ஆதரவுக்கு என்ட மனதார உபகாரம். ஆனா...
த : நாங்கள் முக்கியமான ஆக்களா இருக்கலாம் டொக்வுர். ஆனாச் சின்ன யாவாரி எதையேன் ஆதரிக்க நினைச்சாஇ அவன் தான் பெரும்பான்மைஇ கண்டியளோ. பெரும்பான்மையை எப்பவும் உங்கட பக்கத்தில வைச்சிருக்க வேணும்.
ந : அதெண்டா மெய்தான்இ ஆனா என்ன சொல்லப் பார்க்கிறியள் எண்டுதான் விளங்கேல்லை. எனக்கெண்டா இது ஒரு நெளிவு சுழிவில்லாத அலுவல். தண்ணீரில...
த : நாங்கள் கவனமாயும்இ நிதானமாயுந்தான் நடக்க யோசிக்கிறம் டொக்வுர். நான் எப்பவும் கவனமான நிதானமான மனிசனாத் தான் இருக்கப் பாக்கிறன்.
ந : அது ஊரறிஞ்ச விஷயந்தானே அண்ணைஇ ஆனா...
த : எங்களைப் போல சின்ன டீஸினஸ்காரருக்கு நீர் விநியோகம் ஒரு முக்கியமான விஷயம். ஆம்பல் வயல் நீருற்றுஇ ஊருக்கு ஒரு பொன்வயல் மாதிரி வருகுது. விஷேசமாக் காணி பூமிக்காறருக்கு. காணிச் சொந்தக்காரர் சங்கத்தின்ட தலைவர் எண்ட முறையில.
ந : ஓ.
த : அதைவிடஇ நான் மது ஒழிப்புச் சங்கத்தின்ட பிரதிநிதியாகவும் இருக்கிறன். டொக்வுர்இ நான் மது ஒழிப்புக்காகக் கடுமையா உழைக்கிறனான் எண்டு தெரியுந்தானே.
ந : கேள்விப்பட்டனான்.
த : அதால பலமாதிரி ஆக்களையும் எனக்குத் தெரியும். அதை விட நான் சட்டம் ஒழுங்கு மீறாத ஒரு நல்ல பிரசை எண்டும் ஆக்களுக்குத் தெரியும். அதால எனக்கு இந்த ஊரில கொஞ்சஞ் செல்வாக்கிருக்கு. அதிகாரம் எண்டு வேணுமெண்டாச் சொல்லுங்கோ.
ந : அது எனக்கு நல்லாத் தெரியுமையா.
த : அதாலதான்இ ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யிறதுஇ எனக்கொரு சின்ன விஷயம்.
ந : ஆர்ப்பாட்டமோ? எதைப்பற்றி?
த : இந்த முக்கியமான அலுவலை எல்லா