|
நூலகம் திட்டம் (நூலக எண்: 50) |
||
|
மின்னூலாக்கம்: இ. பத்மநாப ஐயர் |
||
| மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை | ||
| கவனிக்க: நூலகம் திட்ட மின்னூல்களைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். | ||
| தமிழில் இலக்கிய வரலாறு | ||
| கார்த்திகேசு சிவத்தம்பி |
| தமிழில் இலக்கிய வரலாறு கார்த்திகேசு சிவத்தம்பி நூற்பகுதி 1 ++++++++++++++++++++++++++ தமிழில் இலக்கிய வரலாறு கார்த்திகேசு சிவத்தம்பி M. A. (இலங்கை), Ph.D (பமிங்காம்) தமிழ்ப் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. ++++++++++++++++++++++++++ THAMILIL ILAKKIYA VARALAARU by Karthikesu Sivathamby நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு முதல் பதிப்பு : மார்ச், 1988 இரண்டாம் அச்சு : மார்ச் 1988 மூன்றாம் அச்சு : ஜூன், 2000 (c) நூலாசிரியருக்கு Code No : A371 ISBN : 81-234-0522-7 விலை : ரூ.73.00 ஒளி அச்சு: NCBH Computers அச்சிட்டோர் :Aiyanar Offset 10, Subbarao Nagar, Choolaimedu, Chennai-94 4757931, 3790743 ++++++++++++++++++++++++++ பதிப்புரை தமிழ் பற்றிய ஆய்வுகள் தமிழில் வெளிவரும் பொழுது பல்வேறு கருத்துநிலை நிர்ப்பந்தங்கள் காரணமாக போதிய அளவு விஞ்ஞான பூர்வமாக அமையாது போய்விடுவது தமிழ்ப் புலமை மரபின் ஓரமிசமோ என்று ஐயுறத் தக்க அளவுக்கு அதிகமாகவே வளர்ந்து விட்டது. விஞ்ஞான பூர்வமான நோக்கு இல்லாதவிடத்து அந்த ஆய்வின் வழியாக வரும் முடிபுகள் எமக்கு உண்மை நிலையைச் சுட்டிக்காட்டமாட்டா. உண்மையை வெளிக் கொணராத ஆய்வுகளாற் பயனேற்படுவதில்லை. 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசும்' இந்நிலையை தமிழ் ஆய்வுத் துறையில் வலுவிழக்கச் செய்யும் புதிய ஆய்வுச் சக்திகள் வரலாற்றுப் பொருள் முதல்வாத வழியாக வந்தன. அத்தகைய ஆய்வாளர்களுள் ஒருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவருடைய இந்த ஆய்வு, தமிழாராய்ச்சி வளர்ச்சியின் சில முக்கிய பண்புகளை வெளிக் கொணருகின்றது. தமிழில் இலக்கிய வரலாறு எழுதப்பட்ட முறைமைகள் பற்றி ஆய்வதன் மூலம், எத்தகைய வரலாறு வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. தமிழாராய்ச்சியின் வரலாறே பல்கலைக் கழகத் தமிழ்த்துறைகளின் நெறிகளுள் ஒன்றாக அமைந்துள்ள இந் நாட்களில், இந்நூல் தமிழாராய்ச்சியை மேலும் விஞ்ஞான பூர்வமானதாக்க நிச்சயம் பயன்படும் என்று கருதுகிறோம். அந்தத் துணிவு காரணமாகவே இது என்.சி.பி.எச். இலச்சினையுடன் வெளிவருகிறது. பதிப்பகத்தார். ++++++++++++++++++++++++++ இலங்கையின் இனக் கலவரம் சோகம் பீறிடும் மனித அழிப்புக்களின் வரலாறாகிற்று.... இந்த மனித அழிப்புக்களையும் இயன்ற அளவுக்குக் குறைப்போம் என்று, மனித நேசத்தையே தனது ஆயுதமாகவும் கேடயமாகவும் கொண்டு போராடினான் ஒருவன்.... ஐந்து பெண் குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பத்துக்கான வருவாயுழைப்பையே மறந்து, கைதிகளுக்காகவும், அகதிகளுக்காகவும், பாடுபட்டான் அவன். இந்த இன்னல்களை அறிந்தவர்கள், காண வந்தவர்கள், தீர்க்க முனைந்ததவர்கள் எல்லோருமே அவனையும் அறிந்திருந்தனர். 1984 முதல் நான் இப்பணி காரணமாக ஏற்றுக் கொண்ட சகல பதவிப் பொறுப்புக்களிலும் என்னுடன் என் மனச்சாட்சி போல நின்றவன். என் வெற்றி தோல்விகளைத் தன் வெற்றி தோல்வியாகக் கொண்டவன். 'அண்ணா, உங்கள் செக்கிறற்றறி நான்' என்று வாய் நிறைய சொல்லி, நான் சொல்லும் இடங்களுக்குகெல்லாம் வந்தவன். நான் செல்ல முடியாத வேளைகளில்ல தான் சென்றவன். அவன்.... இறுதியில் ஒரு நாள், ஒப்பந்த நிறைவேற்றத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, பாதையோரத்திற் கிடந்த சடலமொன்றை எடுக்கச் சென்று, தனது சடலத்தின் அடையாளமே இல்லாத வகையில் மறைந்து போனான். அவன் பெயர் வருணகுலசிங்கம் அரசரத்தினம் (1942-1987) அந்த மகாமனிதனின் நினைவுக்கு ++++++++++++++++++++++++++ பொருளடக்கம் பக்கம் முன்னுரை 5 I. 'இலக்கிய வரலாறு' எனும் பயில்துறை, அதன் புலமைப்பரப்பமைவு பற்றிய சுருக்க அறிமுகம் 18 II. தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி 55 III. தமிழிலக்கிய வரலாற்றில் பிரச்சினை மையங்கள் 159 IV. தமிழிலக்கிய வளர்ச்சியைப் பார்க்கும் முறை: கால வகுப்புப் பிரச்சினைகள் 188 பின் இணைப்புகள் I- VIII 229 நூல்கள் சஞ்சிகைகள் கட்டுரைகள் ஆசிரியர், விடய அகர நிரல் 256 ++++++++++++++++++++++++++ இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை ஒன்பது வருடங்கனின் பின்னர் இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவருகின்றது. இதற்கான மாணவ நிலைக்கேள்வி (demand) கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்துள்ளது. இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் 1982இல் எழுதப்பட்டு 1986இல் வெளிவந்தது. தமிழ்ப்பதிப்பு (மொழிப்பெயர்ப்பு அன்று) 1988இல் வெளிவந்தது. தமிழ் வடிவத்திலேயே இதன் புலமைத்தாக்கம் முக்கியமாக இருந்தது. 1988இன் பின், குறிப்பாக 1990இன் பின்னர், தமிழகத்தில் இலக்கிய விமர்சனச் சித்திப்பிற் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களைச் சுட்டும் எழுத்துக்களில் இந்நூல் பற்றிப் பேசப்பட்டது. சர்வதேசிய மட்டத்தில், இந்தக் காலகட்டம் மிகப்பயனுள்ள புலமை விவாதங்களைக் கண்டுள்ளது. அறுபதுகளிலே தொடக்கி, எழுபது எண்பதுகளில் விரிந்து, பரந்து, தொண்ணூறுகளில் ஒட்டத் தெளிவையுணர்த்தும் போக்கினைப் புலப்படுத்தி நிற்கும் இச்சிந்தனைப் போராட்டங்கள், ஒரு நிலை நின்று பார்க்கும் பொழுது தவிர்க்க முடியாதவை என்பது புலனாகும். இந்தக் காலகட்டத்திலே (எண்பதுகள் தொண்ணூறுகளில்) உலக வரலாற்றில் மிக முக்கியமான இரு விடயங்கள் நடந்தேறியுள்ளன. 1. உலக முதலாளித்துவத்தின் போக்கு, பரிணாமத்தில் மாற்றம் தேசிய ஏகாதிபத்திய முறைமையிலிருந்து தேசங்கடந்துறை முறைமைக்கு (transnational) அது வருகின்றது. 2. சோவியத் ஒன்றியத்தினதும் கிழக்கு ஐரோப்பிய பொதுவுடைமை கட்சிகளினதும் வீழ்ச்சி (1989) உலக வரலாற்றின் ஒரு முக்கிய காலக்கோடாக இலங்கும் இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரு புறங்களே. உலகப் பெரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சிகளுக்கும் முன்னும் பின்னும் ஒரு சித்தனைப் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதும் இயல்பே. உண்மையில் சிந்தனைப் புரட்சி இல்லாது இந்த மாற்றங்கள் சாத்தியமாகி இராது. மார்க்ஸீயத்தைப் பொறுத்தவரை இந்த மாற்றங்களின் வருகையை அல்தூஸர் முன் மொழிந்துள்ளார் என்று கூறலாம். அல்தூஸரின் சமூக உருவாக்கம் (Social formation) (இது உண்மையில் socio economic formation சமூக பொருளாதாரக் கூட்டமைவே 'Social` (சமூக) என்பது அல்தூஸருக்கு முழுச் சமூகக் கூட்டமைப்பையும் குறித்தது எனலாம். தமிழில் நாம் இப்பொழுது ஒரு சமூக உருவாக்கம் என்னும் பொழுது ஒரு கட்டமைப்பின் தோற்றம் வளர்ச்சியைக் குறிக்கின்றோம்) பற்றிய கோட்பாடு இலக்கிய வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், இலக்கிய வரலாற்றை மீட்டெழுதுவதற்குமான ஒரு தளமாகக் கொள்ளப்பட்டுள்ளது. அறுபதுகள் முதல் நடத்து வரும் சிந்தனை விவாதங்களினூடாக இப்பொழுது பிரதான கருதுகோள்களாக மூன்று மேற்கிளம்புகின்றன. பண்பாடு (Culture) அதிகாரம் (Power) வரலாறு (History) இக்காலகட்டத்தின் பிரதான விவாதவிடயங்களுள் இரண்டாக விளக்கிய பின் காலனித்துவம் (Post colonialism) பால்நிலை (gender) (இதனைப் பால்மை என மையீற்றுப் பண்புப் பெயராகக் குறிப்பிடுவதே பொருத்தம் போலத் தோன்றுகின்றது) இந்த மூன்றுள்ளும் செறிந்து நிற்கின்றது. ஃபூக்கா முதல் லக்கான் வரை, றேமன்ட் வில்லியம்ஸ் முதல் ஸருவாற் ஹோல் வரை, சகலரையும், அர்த்தம் (meaning) பற்றிய பிரச்சினையைத் தமது கட்டவிழப்பு வாதம் மூலமாகக் கிளப்பியுள்ள டெறிடாவையும் இந்தமூன்று பெருந்துறைகளுக்குள் வைத்து நோக்கிவிடலாம். இந்த நூலைப் பொறுத்தவரையில் இதனை ஒரு வினா மூலம் தெளிவுபடுத்தலாம். தமிழில் இது வந்த (இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும்) காலம் முதல் எழுதப்பட்ட இலக்கிய வரலாறுகளின் ஆக்கத்திலும் எடுத்துரைப்பிலும் 'பண்பாடு', 'அதிகாரம்', 'வரலாறு' எனும் கருதுகோள்கள் எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளன? இந்த வினாவினை மனதிற்கொண்டு இரண்டாவது அத்தியாயத்தினை நாம் மீள நோக்கலாம். பண்பாடு பற்றிய உணர்வும் அதிகாரம் பற்றிய துலச்சல்களும் (response) வரலாறு பற்றிய பிரக்ஞையும் புலமையோட்டத்தைத் தீர்மானிக்கின்றன. அந்த அளவில் தமிழில் வரும் இலக்கிய வரலாற்று எழுத்துக்களும் இந்தப் பொது உண்மையை நிரூபிப்பவையே. இவ்வாறு நோக்கும் பொழுது காலனித்துவம், பின் காலனித்துவம் ஆகியவை எமது சிந்தனை மரபில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியதாகும். எமது வரலாறுகள் எல்லாமே ஒவ்வொரு கருத்து நிலைப்பட்ட கட்டமைப்பு ஆக்கங்களே (Constructs) இவற்றினூடே தொழிற்படும் கருத்து நிலைகளையும் (ideologies) இந்தக்கருத்து நிலைகளின் பின்புலத்தில் உள்ள சமூக- பொருளாதார உந்துதல்களையும் புரிந்து கொள்ளல் வேண்டும். இலக்கியமும், இலக்கிய வரலாறும் இவற்றுக்கான முக்கிய தளங்களாகும். நமது மாணவர்களிடத்தே, இந்தப் பிரக்ஞை ஏற்படுத்தப்படுவது அவசியம். எனவே தான் பகுப்பாய்வு ஆக்கங்கள் (Analytical works) அவசியமாகின்றன. எமது அடுத்த தேவை இந்த நோக்குக்களை வெளிக் கொணரக்கூடிய இலக்கிய வரலாற்று எழுத்துக்களே. தமிழிலக்கியத்தைக் குறியீட்டியலின் அடிப்படையிலோ, பால்நிலை அடிப்படையிலோ, கட்டவிழ்ப்புவாத அடிப்படையிலோ பார்க்கும் கண்ணோட்டங்களை உற்சாகப்படுத்துவது அவசியமாகின்றது. அடுத்த நூற்றாண்டுக்கு நாமும் தமிழும் செல்வதற்கு இத்தகைய சிந்தனைகள் தேவை. வரலாறு பற்றிய பிரஞ்ஞையே இன்று தம்மிடையே அடுத்த நூற்றாண்டு பற்றிய (மிதமிஞ்சிய) உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நூற்பொருள் பற்றி ஆர்வங்காட்டிவந்துள்ள புலமையாளர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்பதிப்பின் அவசியத்தை உணர்த்திய நண்பர்களுக்கும், இப்பதிப்பினை வெளியிடும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கும் எனது நன்றியுரித்து. கார்த்திகேசு சிவத்தம்பி 7.11.1997 2/7, றாம்ஸ்கேற் 58, 37வது ஒழுங்கை வெள்ளவத்தை கொழும்பு-06 இலங்கை. ++++++++++++++++++++++++++ முன்னுரை I 1983 நடுக் கூற்றில் வருவதற்கெனச் செய்து முடிக்கப்பெற்ற இந்நூல், 1988இலேதான் வெளி வருகின்றது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தினால் இதன் ஆங்கிலப் படிவம் 1986இலேயே வெளியிடப் பெற்றது. தமிழ் நூல் வெளிவருவது மேலும் தாமதப்படுத்தப்படக் கூடாது என்பதனை வற்புறுத்திய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினருக்கு என் மனங் கனிந்தத நன்றிகள். அவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே இப்பொழுது இந்நூல் வெளிவருகின்றது. இது, ஆங்கிலத்தில் வெளிவந்த, எனது "Literary History in Tamil-A Historiographical Analysis" என்பதன் தமிழ் வடிவமாகும். இத்தமிழ்ப் படிவத்திற் பலவிடயங்கள் விரித்து எழுதப் பட்டுள்ளன. ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகவல்லாது, ஆங்கிலநூலின் தமிழ் நிலைப்பட்ட ஒரு தனி 'ஆக்கமா'கவே இது எழுதப்பட்டுள்ளது. இன்று தமிழ் நாட்டிற், குறிப்பாக மேற்பட்ட நிலையில் வற்புறுத்தப்படும் இரு முக்கிய ஆய்வு ஈடுபாடுகளோடு இந்நூல் தொடர்பு படுகின்றது. முதலாவது இலக்கிய வரலாறும் இலக்கிய ஆராய்ச்சி வரலாறும் இணைந்த துறையாகும். இரண்டாவது சமூகவியல் நோக்கில் தமிழிலக்கிய வளர்ச்சிகளை மதிப்பீடு செய்தல் ஆகும். 'இலக்கிய வரலாற்றினை'த் தனியே 'இலக்கியத்தின் வரலாறு' ஆகக் கொள்ளாது, 'இலக்கிய வழி வரலாறு' ஆகக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதன், மூலம், இந்நூல் இலக்கியமும் வரலாறும் இணையும் முறைமை பற்றிய சில முக்கிய பிரச்சினைகளைத் தமிழில் முதன் முறையாக ஆராய முற்படுகின்றது. II இம்முன்னுரையில், இவ்விடயம் பற்றிய ஆய்வுக்கான தேவையையும் அவசியத்தையும் குறித்துக் கொள்ளல் நன்று. பல்கலைக் கழக ஆசிரியன் எனும் வகையில், பட்ட வகுப்பு மாணவர்க்குக் கற்பிக்கும் பொழுதும், உயர் பட்ட வேட்பாளர்க்கு அவர்தம் ஆய்வினை மேற்பார்வை செய்யும் பொழுதும், தமிழிலக்கிய வரலாற்று நூல்களின் ஆதார சுருதியாகவமைந்துள்ள வரலாறெழுது முறையியலின் அடிப்படைகளைத் தெளிவுபடுத்த வேண்டுவதன் அவசியத்தை வன்மையாக உணர்ந்துள்ளேன். 'வரலாறு' என்னும் ஆய்வுத் துறையில், அவ்வரலாற்றினை எழுதுவதற்கு அடித்தளமாக அமையும் நோக்குகள், மனப்பாங்குகள், ஆய்வுமுறைகள் அணுகு முறைகள் என்பனவற்றை, அதாவது வரலாறு எழுதப்படும் முறையை, ஆராய்வதே தனியொரு பயில்துறையாக வளர்ந்துள்ளது. ஆங்கிலத்தில் அதனை 'ஹிஸ்ற்றோறியோகிறஃபி' (Historiography) என்பர். தமிழ்மொழி மூலம் உயர்கல்வி பெற்ற கலைத்துறை மாணவர்க்கு இத்துறை இன்னும் சரிவர அறிமுகப் படுத்தப்படவேயில்லை. இந்திய வரலாற்றின் வரலாறெழுது நெறியை ஆராய்ந்து மிகச் சிறப்பான கட்டுரையொன்றினை றொமிலா தாப்பர் எழுதியுள்ளார். வரலாற்றுப் பாடநூல்கள் எழுதப்படும் முறைமை பற்றிய விவாதமொன்று காரணமாக, இந்திய மத்திய அரசு மட்டத்தில் தோன்றிய ஒரு சர்ச்சை காரணமாக, இந்திய வரலாற்றின் வரலாறெழுது நெறி பற்றிய விவாதம் ஒன்று நடைபெற்றது. அக்கால கட்டத்தில், றொமிலா தாப்பரினால் எழுதப்பட்ட ஒரு நீண்ட கட்டுரை (Past and Prejudice) தமிழில், காலஞ் சென்ற நா. வானமாமலையால் 'வரலாற்றும் வக்கிரங்களும்' என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. நா.வானமாமலைக்கும் திராவிட இயக்கத்தினைச் சார்ந்த பத்திரிகையாளர், அறிஞர் சிலருக்கும், தமிழ் வரலாறு பற்றி நடந்த விவாதம் தமிழ்நாட்டின் வரலாறெழுது நெறி பற்றிய விவாதமாகவே அமைந்ததெனினும் அந்த விவாதத்தில் வாதிடப்பட்ட பொருள் 'வரலாறெழுது நெறி' (Historiography) எனும் ஆய்வுத் துறை பற்றியது எனும் புலமைப் பிரக்ஞை முன்னிலை பெறவில்லை. தமிழாய்வில் தமிழிலக்கிய வரலாறு எனும் துறை, மேற்கூறிய 'வரலாறெழுது முறை' எனும் ஆய்வு நெறியால் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்பதை அப்பாடத்தினைக் கற்பிக்கும் பொழுதும், ஆராய்ச்சிகளை வழி நடத்தும் பொழுதும் பெரிதும் உணாந்து வந்துள்ளேன். பண்டைய காலத்தினைப் புகழ்ந்து கூறுதல், அரசபரம்பரையின் ஆட்சிக்கும் இலக்கியத்தின் தரத்துக்கும் இயைபு காண முற்படுதல் போன்ற சில கருத்துநிலைகள் இலக்கிய வரலாற்றுப் பாடப்புத்தகங்களினால் வளர்க்கப்பட்டு விட்டமையால், தமிழின் சமூக-இலக்கிய வளர்ச்சியை முற்று முழுதாக, ஒருங்கிணைந்தத நோக்கிற் பார்க்கும் பழக்கமே மாணவர்களிடத்து இல்லாதுது போயுள்ளமையைப் பல தடவைகளில் உணர்ந்துள்ளேன். ஒரு சமுதாயத்தின் இலக்கியத்தை, அச்சமுதாயத்தினை ஆண்ட அரச பரம்பரைகளைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாமென்ற ஒரு கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இலக்கியங்களின் வரலாறுகள், இலக்கியத்தின் தோற்றம், சமூக இயைபு பற்றி ஆய்ந்தறியப்பட்ட உண்மைகளுக்கு முரணான கருத்துக்களைத் தெரிந்தும் தெரியாமலும், (பெரும்பாலும் தெரியாமலே) மாணவர்கள் மனதிலே தூவி விடுகின்றன. தமிழ் மக்களின் இலக்கிய வளர்ச்சி பற்றிச் செய்யப்படும் கால வகுப்பு, அவர்களின் சமூக-அரசியல் வளர்ச்சி பற்றிச் செய்யப்படும் கால வகுப்பிலிருந்து வேறுபடுகின்ற நிலையை. தமிழர் சமூக வரலாற்றில் ஈடுபாடு கொண்டவன் எனும் வகையில், என்னால், ஏற்றுக் கொள்வது சிரமமாகவேயுள்ளது. அரசியல் இயக்கங்கள் சில தமிழ் மக்களின் பெருமையை எடுத்துக் கூற முறையும் பொழுது, தமிழ் மக்களின் 'இலக்கியப் பண்பாட்டை'யே அழுத்துவதையும், அதன் தொன்மையை, வடமொழியோடு ஒப்பு நோக்கும் பொழுது தெரியப்படும் தமிழின் தனிச்சிறப்புக்களைப் பாராட்டுவதையும் காண்கின்றோம். இந்தப் பண்புகளுக்கான சமூக-பண்பாட்டுக் காரணங்களை நிச்சயம் செய்து கொள்வது மிக முக்கியமான ஓர் ஆய்வுப் பணியாகும். தனித்தமிழியக்கக் காலம் முதல் இப்பண்பை நாம் அவதானிக்கலாம். அக்காலம் முதல் தமிழராய்ச்சியாளர்களின் முக்கியமான ஆய்வுப் பொருளாக அமைந்துள்ளது இலக்கிய இலக்கணங்களிற் காணப்படும் 'தமிழின் தனிச்சிறப்பு' என்னும் விடயமேயாகும். இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளாது, இலக்கியத்தின் வரலாறு சமூகத்தின் தேவைகளுடன் இயைவது பற்றிய கொள்கை விளக்கங்களில் இறங்குவது பயன்தராது. இதைவிடத் தமிழ்ச் சமூகத்தின் நடைமுறைகளுள் ஒன்று என்ற வகையில் தமிழிலக்கியத்தின் வளர்ச்சியை நோக்குவது முக்கியமான அறிவு நிலைப்பட்ட தேவையாயுள்ளது. இந்நிலைநின்று ஆராயப்படும் பொழுதுதான், இலக்கியத்திடம் வேண்டப்படும், சமூக-அழகியல் அமிசங்கள், இலக்கியப் பயில்வாளரின் சமூக நிலைமை, சமூகத்தின் பொதுவான உற்பத்தி முறைமைகளுக்கும் இந்த இலக்கிய உற்பத்தியாளருக்குமுள்ள உறவுகள், இலக்கியத்தின் கருத்து நிலைப்பங்கு ஆகியன தெளிவாகும். இவ்வாறு நோக்கத் தொடங்குவதன் மூலம் தமிழ் மக்களின், வரலாற்றை அவர் தம் இலக்கியம் மூலம், அவ்விலக்கியங்களின் நிலை நின்று விளங்கிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டேன். தமிழரின் சமூக-உளப்பாங்கினை அறிவதற்கு இது ஒரு நல்ல வழி என்பதைத் தெரிந்துது கொண்டேன். ஆய்வின் இக்கட்டத்திலேயே, இலக்கியத்தின் வரலாற்றுக்கும் (அதாவது, உள்ள இலக்கிய நூல்கள், வகைகள், மதிப்பீடுகள் ஆகியனவற்றின் கால வரன் முறையான வளர்ச்சிக்கும்) இலக்கிய வழி வரலாற்றுக்கும் (அதாவது, இலக்கியத்தை சாதனமாகக் கொண்டு வரலாற்றோட்டத்தைப் புரிந்து கொள்ளுவதற்கும்) வேறுபாடு உணர்த்தப்படல் வேண்டுமென்பதை உணர்ந்து கொண்டேன். ஆங்கிலத்தில் இவை முறையே "History of Literature", "Literary History", எனும் தொடர்களால் எடுத்துக் கூறப்படுகின்றன. இவ்வாறு நோக்கும் பொழுது 'இலக்கிய வரலாறு' எனநாம் கற்பிக்கும் பாடத்தின் போதாமைகள் படிப்படியாக மேற்கிளம்பத் தொடங்குகின்றன. 'இலக்கியத்தின் வரலாறு', 'இலக்கிய வழி வரலாறு' ஆகாது. இலக்கியத்தின் வரலாறு என்பது, சமூகத்தில் இலக்கியம், அதற்குரிய பண்புகளோடு வளர்ந்த முறையை எடுத்துக் கூறுவது, ஆனால் உண்மையான 'இலக்கிய வரலாறு' என்பது, ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அதன் இலக்கியங்களைக் கொண்டு, அதன் இலக்கியங்களின் அடிநாதங்கள், வெளிப்பாடுகள், தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக் கூறுவதாகும். 'இலக்கிய வரலாறு' என்னும் தொடரை நாம் 'இன்' எனும் நான்காம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு விட்டோம். அதனை ஓர் உம்மைத் தொகையாகக் கொண்டு இலக்கியமும் வரலாறும் இன்றியமையா வகையிற் பின்னிப் பிணைந்து கிடப்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். 'இலக்கியத்தின் வரலாறு', இலக்கிய நிலை நின்ற வரலாறு' என்ற இந்த எண்ணக்கரு, முதலாவது அத்தியாயத்தில் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. III தமிழிலக்கியத்தினை ஆதாரமாகக் கொண்டு தமிழ் மக்களின் வரலாற்றை எடுத்துக் கூற எத்தனிக்கும் முயற்சியினை ஆறு மாதங்களில் நிறைவு செய்வது முடியாத காரியமாகும். தமிழிலக்கியத்தைக் கொண்டு தமிழ் மக்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் பணிக்கு அறிவியல் பூர்வமாக வழி வகுக்கும் வகையில் இதுவரை எழுதப்பட்ட இலக்கிய(த்தின்) வரலாறுகளின் 'வரலாறெழுது முறை' அமிசங்களை ஆராவும் பணியினைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருக்கும் காலத்தில் மேற்கொள்வது பொருத்தமாகவிருக்குமெனக் கருதினேன். இந்த ஆய்வு பற்றி, இத்துறையிலும், இத்துறை சார்ந்த துறைகளிலும் ஆராய்ச்சிப் பணி புரிந்த அறிஞர்களின் பதிற்குறிப்பினை அறிந்து கொள்வது பயனுள்ளதாகவிருக்கும் என்ற கருத்தினைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அன்றைய துணை வேந்தரிடத்துக் கூறியதும் 'கருத்தரங்கு ஒன்றினைக்கூட்டி, உங்கள் கருத்தை எடுத்துக் கூறி, அவர்கள் கருத்தை அறிந்து, அந்தக் கருத்துப் பரிமாற்றம் மூலம் இத்துறை ஆய்வினை விரிவாக்கலாம்' என அவர் உற்சாகமூட்டினார். கருத்ததரங்கின் அமைப்பாளர்களாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அன்றைய தமிழியல் விரிவாக்கத்துறை இயக்குநரையும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரையும் ஒழுங்கமைப்பு வேலைகளைப் பொறுப்பேற்குமாற வேண்டிக் கொண்டார். தமிழகத்தின் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வு நற்பெயருடைய அறிஞர்கள் முத்து சண்முகப்பிள்ளை, என். சுப்பிரமணியம், கே.டி.திருநாவுக்கரசு, கு.அருணாசலக் கவுண்டர், பொ.திருஞான சம்பந்தம், ப.அருணாசலம், மு.அருணாசலம், எ.சுப்பராயலு, கோ.கேசவன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இப்பத்து அறிஞர்களுடன் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற் கடமையாற்றிய அறிஞர்கள், கு.நம்பியாரூரன், க.வெள்ளைவாரணார், சுந்தர சண்முகனார், மு.சண்முகம் பிள்ளை, தி.முருகரத்தினம், இராம.சுந்தரம் ஆகியோரும் கருத்தரங்கிற் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கு இரு அமிசங்களிற் புதுவழி வகுப்பதாக வமைந்தது. ஆய்வாளர் ஒருவர் தனது கருத்துக்களை அத்துறை போகிய அறிஞர் முன்வைத்துத் தனது கருத்துக்களைப் புடமிட்டுப் கொள்ளல் நமக்குப் புதியதொன்றாகும். இரண்டாவதாக, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக ஆய்வரங்கொன்றில் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வில், வரலாற்றுப் பொருள் முதல்வாதத அணுகுமுறையைப் பிரயோகிப்பதனையே தனிப்பொருளாகக் கொண்ட காத்திரமான விவாதமென்பது மேற்கொள்ளப்பட்டதுது இதுவே முதல் தடவையாகும். IV இந்நூலில் இடம் பெறும் நான்கு அத்தியாங்களும், தமிழில் இலக்கிய வரலாற்றாய்வுக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளன. முதலாவது ஆய்வு, 'இலக்கிய வரலாறு' பற்றிய ஒரு வரைவிலக்கணத்தை எடுத்துக் கூறி, சமூக வரலாற்றோடு இணைந்த ஆய்வொழுங்குடைய பயில்துறையான இலக்கிய வரலாற்றின் கற்கைப் பயன்பாடுகள் பற்றி ஆராய்கின்றது. சமூக உருவாக்கத்தில் இலக்கியத்தின் பங்கு எடுத்து விளக்கப்பட்டுள்ளது. இதனால், சமூக உருவாக்கத்தை விளங்கிக் கொள்வதற்கு இலக்கியத்தின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது ஆய்வு, தமிழில் இலக்கிய வரலாறு ஆய்வின் வளர்ச்சியை எடுத்துக் கூறுவதாகும். இலக்கிய வரலாற்றாய்வு வளர்ச்சிக் கட்டங்கள், இலக்கியத் தொடர்பு முறைமையின் பண்புகளையே அடிப்படையாகக் கொண்டு (அச்சுக் காலம், அச்சுக்குப் பிற்பட்ட காலங்கள்; இலக்கிய உருவாக்கத்தில் இவற்றின் முக்கியத்துவம்) வகுக்கப்பட்டுள்ளன. இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞை காணப்பட்ட வரலாற்று வேளைகள் யாவை என்பது சுட்டப்பட்டுள்ளது. அதனால் சங்கச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டமையும், பக்திப் பாடல்கள் திருமுறைகளாக வகுக்கப்பட்டமையும் ஆராயப்பட்டுள்ளன. மூன்றாவது ஆய்வு, இலக்கிய வரலாற்றாய்விற் பிரச்சினை மையங்களாகவுள்ள விடயங்கள் பற்றி, அதாவது பல்வேறு இலக்கிய வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் விடப்பட்டனவும், நியமமான இலக்கிய வரலாற்றுக்க வேண்டப்படுவனவும் யாவை என்பது பற்றி, ஆராயப்பட்டுள்ளது. நான்காவது ஆய்வு, கருத்து மோதல்களுக்க இடமளிக்கம் கால வகுப்புப் பற்றி ஆராய்கின்றது. இங்கு தரப்பட்டுள்ள கால வகுப்பு, சமூக உருவாக்க எண்ணக்கருவின் அடிப்படையிலே செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலவிய சமூக உருவாக்கங்கள் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்துக்க வேண்டிய ஆய்வுகள் இன்னும் வரன் முறையான வகையில் மேற்கொள்ளப்படவில்லையென்பது தமிழ்நாட்டு வரலாற்றாய்வுகளிற் பரிச்சயமுடையோருக்குத் தெரியும். இதனால், மேலாண்மையுடையதாக விளங்கம் சமூக உருவாக்கத்தினடிப்படையில், இலக்கிய வரலாற்றை எடுத்துக் கூற விரும்பும் எந்த முயற்சியும் சரிதிட்டமான சமூக வரலாறு எழுதப்படும் வரை காத்திருத்தல் அவசியமே. இத்துறையில், நம்பிக்கை ஒளிகள் பல தென்படுகின்றன. கறாஷ’மா, சுப்பராயலு, நாராயணன் ஆகியோரின் ஆராய்ச்சிகளில்லையேல், இந்தக் காத்திருப்பு, மேலும் நீண்டதாகவே இருந்திருக்கும். கல்வெட்டுத் துறையில் முக்கியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இவ்வேளையில், இலக்கியச் சான்றுகளின் அடிமையிற் சமூக வரலாற்றைக் கண்டு கொள்வதற்கான ஒரு வரன் முறையான ஆய்வு பெரும் பயன் தருவதாகவே அமையும். நான்காவது ஆய்வுக் கட்டுரை வரலாறெழுது நெறியில் மிகவும் அடிப்படையா‘ள ஒரு விடயம் பற்றியும் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ கி.பி.600 முதல் 1400 வரை நிலவிய, மேலாதிக்கம் பெற்றிருந்த உற்பத்தி முறைமையின் சரிதிட்டமான பண்பு பற்றிய கருத்து மாறுபாடுகள் தரபட்டுள்ளன. கி.பி. 600-க்கு முற்பட்ட காலத்தைப் பிரச்சினைகளை முதல் முதலாக ஆராயும் இவ்வாய்வில் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளையும் போதுமான வகையில் எடுத்துக் கூறிவிட முடியாது. அறிவியல் பூர்வமான தமிழிலக்கிய வரலாற்றை எழுத முனையும்பொழுது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இது. இங்க இதுவரை இலக்கிய வரலாறுகள் எழுதப்பட்ட முறைமையும் அந்த முறைமையின் ஆதார சுருதியாகவமைந்த கருத்துநிலை எடுகோ‘ள்களுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரை எவ்வெக் கருத்துக்களினடிப்படையில் இலக்கிய வரலாற எழுதப்பட்டுள்ளது என்பதை அறியும் பொழுது தான், எவ்வெக் கருத்து நிலைகள் பயன்படுத்தப்படவில்லை என்பதும், இனிமேல், எவ்வெக் கருத்து நிலைகளின் அடிப்படையில் இலக்கிய வரலாறு எழுதப்படின் புலமைத் திருப்தி ஏற்படும் என்பதும் புலனாகும். இன்னுமொரு விடயமுண்டு, கால வகுப்புப் பற்றிய கொள்கைப் பிரச்சினைகளை வேண்டிய அளவு எடுத்தாராயாது விட்டால், சமூக வரலாற்றினை எழுதுவதும் சிரமமாகவே இருக்கும். v இந்நூலில் தரப்பட்டுள்ளவை. முன்னர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப் பெற்றுள்ள தமிழ் வடிவமேயாகும்; தமிழ் வடிவமேயன்றித் தமிழ் மொழி பெயர்ப்பு அன்று. ஆங்கில மூலத்தில் இல்லாத பல விளக்கங்கள் இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் இத்தகைய ஆய்வு மரபு நன்கு வேரூன்றி விட்டமையால், தமிழில் விரித்துக் கூறப்பட வேண்டிய பல விடயங்களை அம்மொழியிற் சுருக்கமாகவே கூறிவிடலாம். தமிழ்மொழி மூலக்கல்வியின் பயில்வுவட்டம் விரிவடைகின்ற இந்நாட்களில், ஆங்கில ஆய்வுகளில் இடம் பெறும் எண்ணக்கருக்களை அறிமுகஞ் செய்து வைப்பது அத்தியாவசியவாகும். மேனாட்டு ஆய்வு முறைகளின் வாதமுறைகளை அவ்வாத முறைகளுக்கேற்ற நடையமைதியுடன் எடுத்துக் காட்டுவதும் முக்கியமானதே, வாக்கிய அமைதியும், நடையும், வெறுமனே சொற்கள், சொற்களின் அடுக்குப் பற்றிய விடயம் மாத்திரமன்று. அவை சிந்தனையின் தன்மையை, சிந்திப்பின் நெளிவு சுளிவுகளை, ஏற்ற இறக்கங்களை, அழுத்தங்களின் மென்மை வன்மைகளைக் காட்டுபவை. விவரிக்கப்படும் பிரச்சினையை அதன் பன்முகப்பாட்டில் விளங்க முனையும் பொழுது, வெண் தொடர்கள் முக்கியத்துவம் பெறா. தமிழ் உரை நடையின் விவாதப் பாரம்பரியத்தை நினைவுறுத்திக் கொண்டால், இவ்விடயம் நமக்குப் புதியதன்று என்று தெரியும். அடுத்தது, கடப்பாட்டினைத் தெரிவிக்கும் முக்கியமான பணியாகும். இந்நூலாக்கம் நிறைவேற்றுகை பற்றிய நன்றிக் கடப்பாட்டினைத் தெரிவிக்கும் பொழுது அதனை மூன்று நிலைப்படுத்திக் கூறவேண்டியுள்ளது. முதலாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையிற் செலுத்தப்பட்ட வேண்டிய நன்றிக் கடனாகும். இது 1982-இல் செய்யப்பட வேண்டியது. அடுத்து தமிழ்ப் பிரதியாக்கம் செய்யப்பட்ட நிலையிற் செய்யப்பட வேண்டியவை. அது நிகழ்ந்தது 1982 இறுதியில், மூன்றாவது, இந்நூலில் இப்பொழுது தமிழில் வெளிவரும் பொழுது தெரிவிக்கப்பட வேண்டியவையாகும். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதலிரண்டு சிறப்பாய் வாளர்களுள் என்னையும் ஒருவனாக வரவழைத்த அப்பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்களுக்க என் மனமார்ந்த நன்றியுரிந்து. இவ்வாய்வின் பல்வேறு பிரச்சினை மையங்கள் குறித்து அவருடன் விரிவாகக் கலந்துரையாடும் வாய்ப்புக்கிட்டிற்று. காட்டிய அன்புக்கும் சுட்டிய தெளிவுக்கும் அவருக்கு என் நன்றி. வித்துவான் மு. சண்முகம் பிள்ளையும், டாக்டர், வெங்கடேச ஆத்ரேயாவும் இவ்வாய்வு பற்றிக் கலந்துரையாடியுதவினார். பேராசிரியர் றொமிலா தரப்பர் நான்காவது கட்டுரை பற்றிய விளக்கத் தெளிவுக்குப் பெரிதும் உதவினார். ஆசிற உற்பத்தி முறைமை பற்றிய விவாதத்தின் பின்னணி பற்றி அவர் விவரித்தார். இவர்களுக்கு என் நன்றி. பேராசிரியர் றொமிலா தாப்பருடன் உரையாடிய விடயங்கள் முழுவதும் இக்கட்டுரையில் இடம் பெறவில்லை. தமிழ் நாட்டு வரலாற்றில் சமூக உருவாக்கங்கள் பற்றிய ஆய்வின் பொழுது அவை மேலும் பயன்படுத்தப்படும் மிக விரிவான கலந்துரையாடல் மூலம் உதவிய மற்றவர், டாக்டர் எ.சுப்பராயலு அவர்கள், அதுவரை அச்சேறாத தமது கட்டுரையொன்றினைத் தத்துதவிய அவரது ஆராய்ச்சி நேயத்துக்கு என் மதிப்பார்ந்த வணக்கங்கள். இவ்வாய்வுக்கு வேண்டிய உசாத்துணை நூல்களை ஓரிடத்திற் பெற முடியவில்லை. பல நூலகங்களிற் பெற வேண்டியிருந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகம், அண்ணாமல பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் நூல் நிலையங்களிலும், சென்னை மறைமலையடிகள் நினைவு நூல் நிலையம், கரந்தைத் தமிழ்ப்புலவர் கல்லூரி நூல் நிலையம் ஆகிய நூல் நிலையங்களிலும், பாண்டிச்சேரிப் பிரெஞ்சுக் கழகத்தின் பிரசித்தி பெற்ற நூலகத்திலும், இவ்வாய்வுக்கு வேண்டிய நூலகர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி உரித்து. பாண்டிச்சேரிப் பிரெஞ்சுக் கழக இயக்குநர், கழகத்தின் தங்கு நிலையத்தில் இடம் தந்து உபசரித்தார்‘. அந்த அன்புக்கு நன்றி நூல்கள் தந்துதவியர்களுள் முக்கியமான ஒருவர் சேக்கிழார் அடிப்பொடி எனத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் தஞ்சை சட்டவறிஞர், தமிழறிஞர் திரு.ரி.என். இராமச்சந்திரன் ஆவர், அவருக்கு என் நன்றி. டாக்டர்கள் தி. முருகரத்தினம், இராம சுந்தரத்துக்கு என் நன்றிகள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னை நாட் பதிவாளரும், முதலாவது பிரசுரப் பொறுப்பாளருமான திரு.சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் இப்பிரசுரம் பற்றிப் பேரார்வம் காட்டினார்கள். அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நான் கடமையாற்றிய காலத்து அங்குப் பணியாற்றிய எழுத்தர்கள். அடிப்படை அலுவலாளர் பலர் என் நண்பர்களாயினர். என்னைத் தம்மில் ஒருவனாகவே கருதினர். கருதி உதவினர், ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும் அந்த நினைவுகள் பசுமையாகவேயுள்ளன. தமிழ்ப் பல்கலைக் கலுகத்தில் நான் ஆய்வுப் பணி மேற்கொண்டிருந்த பொழுது எனக்குப் பேருதவி புரிந்த எனது தஞ்சை நண்பர்கள் பற்றிக் குறிப்பிடல் வேண்டும். அறிவுத் தொடர்பாகத் தொடங்கியது இன்று அன்பிணைப்பாக வளர்ந்துள்ளது. அ. மார்க்ஸ், அவர்களின் உதவியில்லையேல் இப்பணியினை நான் நிறைவு செய்திருக்கவே முடியாது. பின்னிணைப்புக்கள் தயாரிப்பில் அவர் பெரிதும் உதவினார். மார்க்ஸ் தன்னலமற்ற நண்பன்; அவரது நண்பராய் வந்து, இன்று எனது நட்பைத் தமதுரிமைப் பொருளாக்கிக் கொண்ட திரு. பொ.வேலுசாமி, எமது பல்வேறு உரையாடல்களின் பொழுதுகேட்ட கேள்விகள் காரணமாகப் பல்விடயங்கள் பற்றிச் சிந்திக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. வழக்கறிஞர் வே.சிதம்பரம் அவர்கள் காட்டிய அன்பு பெரிது. சி.அறிவுறுவோன், ரமணி, மதிவாணன் முதலியோர் பெரிதும் உதவினர். இவர்களுக்கு என் நன்றி. தஞ்சைப் பணி முடிந்துது இலங்கை திரும்பிய பின்னரே தமிழில் இந்நூலை எழுதும் வேலையில் ஈடுபட்டேன். எனது மனைவியும் பிள்ளைகளும் பெரிதும் உதவினர். அவர்களுக்கு என் நன்றி. எனது கையெழுத்துப் பிரதியினைப் படியெடுத்துதவிய எனது மாணவியர் காமினி இளைய தம்பி, விக்னேஸ்வரி செல்வ நாயகம், சத்திய தேவி துரை சிங்கம் ஆகியோருக்க நன்றி. பிரதியொப்பீடு செய்து பிழைகளைத் தவிர்க்க உதவிய ஆராய்ச்சி மாணவி ஆசிரியை திருமதி அம்மன்கிளி முருகதாசுக்கு என் நன்றியுரித்து. அவர் இவ்விடயத்திற் பெருஞ்சிரத்தை காட்டினார். தமிழ் நூலை எழுதிக் கொண்டிருந்த நாட்களிலே தான் (டிசம்பர், 82இல்) கைலாசபதி காலமானான். முப்பது வருட காலத்து நட்பு நினைவுகளின் சுமையை விட்டுச் சென்று விட்டான். நானும் அவனும் அடிக்கடி பேசிக் கொண்ட ஒரு விடயம் இப்பொழுது நூல் வடிவில் விரிவாக ஆராயப் பெறுகிறது. அடுத்து, இந்தப் பதிப்பின் பொழுது நான் பெற்ற உதவிகளையும், நான் செலுத்த வேண்டிய நன்றிக் கடன்களையும் பொறித்தல் அவசியமாகின்றது. என்.சி.பி.எச். நிறுவனத்தினரின் தூண்டுதல் இல்லாது போயிருப்பின் இந்நூல் இன்னும் வெளியிடப்படாமலேயிருந்ததிருக்கும். இந்நூலினை மேலும் தாமதப்படுத்தாது வெளியிட வேண்டியதன் அவசியத்தை எனக்கு வற்புறுத்திய தோழர் ஆர்.பார்த்தசாரதிக்கு எனது நன்றிகள். தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் ஐந்து வருடங்களின் முன்னர் தொடங்கியது. இப்பொழுது சென்னைப் பல்கலைக் கழகத்தில் விருந்துப் பேராசிரியனாயிருக்கும் பொழுது தான் அச்சு 'வாகனம்' ஏறுகின்றது. நான் சென்னையில் தங்கியிருக்கும் இவ்வேளையில் இது வெளியிடப்பட வேண்டுமென்பதனை வற்புறுத்தி, அதற்க வேண்டிய தொழிபாடுகளைத் துரிதப்படுத்திய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தாருக்கு நன்றி. பாவை பிரிண்டர்சைச் சேர்ந்த தோழர்கள் முதற்பதிப்பு அச்சேற்றுகையின் பொழுது காட்டிய ஆர்வத்தையும் பொறுமை யுணர்வையும் நான் என்னும் மறவேன். இந்த நூலுக்கு விரிவான பொருளடைவு தேவை என்பதை டாக்டர் வீ.அரசு மிக வற்புறுத்திக் கூறினர். அவரே அந்தப் பணியையும் ஏற்றுக் கொண்டார். அவரும் அவர் துணைவியர் திருமதி பத்மாவும், அவர்களுக்குதவிய எமது மாணவர்கள், குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி, ஜார்ஜ் சீனிவாசன் இப்பொருளடைவை மிகக் குறுகிய காலத்திற்குள் செய்து முடித்தனர். அவர்களுக்கு என் நன்றி. இந்த நூலாக்கத்தின் பொழுது எனக்கு உதவிய எனது மகள்மார் கிருத்திகா, தாரிணிக்கு என் நன்றி. சொந்த இல்லத்திருக்க முடியாத நிலைமை காரணமாக எனது மனைவியாரும் மகள்மாரும் சென்னைக்க வரவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. அவர்களுக்கரிய வேளைகளிற் பல இந்நூலின் வேலைகளிற் சென்றது. அத்தகைய வேளைகள் ஒன்றில்தான் இந்நூல் யார் நினைவாக வெளியிடப்பட வேண்டும் என்பதை கடைசி வர்த்தனி நினைவுறுத்தினான். நிகழ்வுகள் நினைவுகளாகி, அந்த நினைவுகளின் நினைப்பிலே வாழ்வது மனிதனின் 'மானுட'த் தன்மைக்கு வலுவும், ஆழமும் வழங்குகின்றது. கார்த்திகேசு சிவத்தம்பி பல்கலைக் கழக விருந்தினர் விடுதி சென்னைப் பல்கலைக் கழகம் சென்னை. 19.2.1988 ............... 'இலக்கிய வரலாறு' எனும் பயில்துறை அதன் புலமைப் பரப்பமைவு பற்றிய சுருகக அறிமுகம் ஆங்கில மொழி வாயிலாக நம்மை வந்தடைந்த மேனாட்டுச் சிந்தனை, கல்வி மரபுகள் பல நாம் தமிழ் மொழியைக் கற்கும் முறையில்-அதாவது நமது மொழியை நாம் நோக்கும். அணுகும், அறியும் முறையில்-புதிய நெறி முறைகளை அறிமுகஞ் செய்து வைத்துள்ளன. இலக்கிய வரலாறு எனும் பயில்துறை அத்தகைய புதிய பயில்துறைகளுள் ஒன்றாகும். 1930இல், கா.சுப்பிரமணியப் பிள்ளை தமிழ் இலக்கிய வரலாறு எனும் பெயரில் நூல் எழுதிய காலம் முதல் இத்தொடர் தமிழிலக்கிய ஆய்வாளரிடையே பெரு வழக்கிலிருந்து வருகின்றது. எனினும் 1960இல் தொடங்கிய பத்தாண்டுக் காலத்திலே தான் இது ஒரு பயில்துறை என்னும் வகையில் தமிழ் நாட்டிற் பட்டடிப்படிப்புக்கான ஒரு பாடமாக்கப் பெற்றது. அதற்கு முன்னரே அது இலங்கைப் பல்கலைக் கழகத்திற் பாடமாக்கப்பட்டிருந்த தெனினும், தமிழ்நாட்டிற் பாடமாக்கப்பட்ட பொழுதுதான் அதன் சனரஞ்சகப்பாடு சிதறிப்ப பரவியது எனலாம். இலக்கிய வரலாறு என்னும் இத்தலைப்பின் கீழ் (பாடத்தில்) தமிழ் இலக்கியங்களின் வரலாறு (சரித்திரம்) படிப்பிக்கப் பெற்றது. தமிழிலுள்ள இலக்கியங்களின் காலமும், தமிழ்ப் புலவர்களின் காலமும் இலக்கியங்களின் அமைப்புப் பற்றிய விளக்கமுமே முதலில், இப்பாடத்தில் முக்கிய இடம் பெற்றன. புலவர்கள், நூல்களின் கால அடைவு, எவர் முந்தியவர் எவர் பிந்தியவர், எது முந்தியது எது பிந்தியது என்பனவே இப்பாடத்தின் பிரதான சிரத்தைகளாகவிருந்தன. இந்தக் கால விசாரணைகளில் நவீன இலக்கியங்கள் பற்றி அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இலக்கியகளின் வரலாற்றை எடுத்துக் கூறும் இம்முயற்சிகள், பிரதானமாக, இலக்கியத்தின் பின்னணியிலேயே செய்யப்பட்டன. பின்னர் தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியிலேல எடுத்துக் கூறம் ஒரு செல்நெறி காணப்பட்டதெனினும், இப்புலமை முயற்சி அக்காலகட்டத்திலும் முற்றிலும் இலக்கியத்தின் வரலாறாகவே இருந்தது. இலக்கண நிலை நின்று கூறவதானால், இலக்கிய வரலாறு எனும் தொகை நிலைத் தொடர், ஒரு வேற்றுமைத் தொடராக, ஐந்தாம் வேற்றுமையுருபுகளிலொன்றான 'இன் உருபுதொக்கு நின்றதாகவே கொள்ளப்பட்டது. அதாவது இலக்கியத்தின் வரலாறு, இந்திய வரலாறு எனப்பட்டது போல, தமிழின் வரலாறு தமிழ் வரலாற எனப்பட்டது போல இதுவும் நின்றது எனலாம். இப்பாடத்தின் முக்கிய பிரச்சினையெனக் கருதப்பட்ட 'நூல்கள், புலவர்கள் காலம்' பற்றிப் பருமட்டான ஓர் எற்புநிலை தோன்றி பின்னர், இப்பாடப் பயில்விற் 'பண்புகள்'-அதாவது ஒரு காலப் பிரிவிலே தோன்றிய நூல்களிலே பொதுவாகக் காணப்பெறும் இயல்புப் பொதுமைகள்- விதந்தோதப்படும் ஒரு நிலை ஏற்பட்டது. (இக்கால கட்டத்திலேதான் இப்பயில்துறை பாடமாக 'வைக்கப்பட்டது) அந்நிலையிலும் இத்தொடர், அதே வேற்றமைத் தொடராகவே அதாவது இலக்கியத்தின் வரலாறாகவே தொழிற்பட்டது. முதலில் மேனாட்டுக் கல்விப் பாரம்பரியம் போற்றப் பெறும் கல்விச் சூழல்களிலேயே- கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலுமே பயிற்றுவிக்கப்பட்ட இப்பயில் துறை கால அடைவிலே பாரம்பரிய வழி வந்த தேர்வுகளுக்கும் (பண்டிதர், புலவர், வித்துவான் தேர்வுகளக்கும்) பாடமாக்கப் பெற்றது. இந்நிலையில் அது ஐயந்திரிபற இலக்கியத்தின் வரலாறாகவே கொள்ளப்பட்டுப் பயிலப்பட்டது. ஆங்கிலச் சூழலின் தேவைகட்கென இப்பாடம் ஆங்கிலத்தில் எடுத்துக் கூறப்பட்ட பொழுது, 'ஹ’ஸ்ற்றறி ஓஃப் தமிழ் லிற்றறேச்ச(ர்)' (History of Tamil Literature) என்றே கூறப்பட்டும் கொள்ளப்பட்டும் வந்தது. 'ஹ’ஸ்ற்றறி ஓஃப் லிற்றறேச்சர்' என்பதன் மொழிபெயர்ப்பு 'இலக்கியத்தின் வரலாறு' என்பதேயாகும். ஆங்கிலத்தில் 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி (Literary History) எனும் ஒரு தொடரும் உண்டு. 'ஹ’ஸ்ற்றறி ஓஃப் லிற்றறேச்சர்' எனும் தொடரின் பொருளின் ஒரோ வேளைகளிற் சிலரால், 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி' எனும் இத்தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளதெனினும், இவை இரண்டும் இருவேற கோட்பாடுகளை உணர்த்தும் இரு வேறுபட்ட தொடர்கள் என இப்பொழுது கொள்ளப்படுகின்றன. 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி' (Literary History) என ஆங்கிலத்திற் குறிப்பிடப் பெறும் பொருள் பற்றியே இந்நூல் ஆராயவுள்ளது. இத்தொடரைத் தமிழில் எவ்வாறு எடுத்துக் கூறுவது என்பது முதற் பிரச்சினையாகிறது. தமிழ்ழத் தொடர் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர், இத்தொடர் நுதலும் பொருள் யாது என்பதனை முதலில் நோக்குவோம். ஒரு நாட்டினது அன்றேல் ஒரு மொழிக் கூட்டத்தினரின் வரலாற்றை அவர்களது இலக்கியத்தின் வழியாகப் பார்க்கும் பயில்துறையை இத்தொடர் (Literary History) கொண்டு குறிப்பர். ஒரு வழியாக (உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகியனவற்றின் வழியாகவும் அவற்றின் பின்னணி ஆகியனவற்றின் வழியாகவும்) அவர்தம் வரலாற்றை எடுத்துக் கூறுவது எவ்வாறு பொருளாதார வரலாறு எனக் குறிப்பிடப் பெறுகின்றதோ அதே போல இலக்கியத்தைக் கொண்டு நாட்டினது, அல்லது மொழிக் கூட்டத்தினது வரலாற்றைக் கண்டறியும் முறைமையை 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி' என்பர். வேறொரு வகையாகக் கூறினால், ஒரு நாட்டின் வரலாற்றை அதன் இலக்கியம் மூலம் கண்டறிந்து கொள்வதே இப்பயில் துறையின் முக்கிய அமிசமாகும். இவ்வாறு நோக்கும்பொழுது 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி' என்பதனைத் தமிழில் இலக்கிய வரலாறு என்று குறிப்பிடுவதே பொருந்தும் என்பது புலனாகிறது. இலக்கியம் வழியாக வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சியை இலக்கிய வரலாறு என்றே கூறல் வேண்டும். இவ்வாறு நோக்கும் பொழுது இலக்கியத்தின் வரலாற என்பதும், இலக்கிய வழி வரலாறு (அல்லது இலக்கிய நிலைப்பட்ட வரலாற) என்பதும் ஒன்றிலிருந்துது மற்றது வேறானது எனும் உண்மை தெளிவாகும். ஒரு சமூகத்தின் மதம் பற்றியோ அல்லது விளையாட்டுக்கள் பற்றியோ படிப்பது போன்று அந்தச் சமூகத்தின் இலக்கியத்தின் பற்றிப் படித்துக் கொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட அந்த இலக்கியம் எவ்வாறு தோன்றியதுது. எவ்வாறு வளர்ச்சியடைந்தது. அவ்விலக்கிய வளர்ச்சியிலிடம் பெறும் இலக்கிய வடிவங்களின் தோற்றம், வளர்ச்சி தேய்வு எவ்வாற அமைந்தன என்பன பற்றி இலக்கியத்தின் வரலாற்றிலே அறிந்துது கொள்ளலாம். ஆனால் இத்தகைய ஒரு வரலாறு, ஒரு நாட்டின் வரலாற்றை அதன் இலக்கியங் கொண்டு அறியும் வரலாறு முறைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனவே இந்நூலில் 'இலக்கிய வரலாறு' என்னும் தொடர் இலக்கியத்தின் வரலாற்றையல்லாது இலக்கிய வழி வரலாற்றையே குறித்து நிற்கம் 'இலக்கிய வரலாறு' என்னும் தொடர் மூலம் இலக்கியத்தின் வரலாற பற்றிக் குறிப்பிடும் ஒரு நடை முறை நூல்கள் பலவற்றிற் காணப்படுகின்றமையால், அவை பற்றிக் குறிப்பிடும் பொழுது நூற்பெயர்கள் தவிர்ந்த இடங்களில், இலக்கியத்தின் வரலாறு என்றோ அன்றேல் இலக்கியங்களின் வரலாறு என்றோ விரித்துக் கூறிவிட்டு, ஆங்கிலத்தில் 'லிற்றறறி ஹ’ஸ்ற்றறி' (Literary History) எனப்படும் தொடருக்கு இலக்கிய வழி வரலாற எனும் தொடரையே பயன்படுத்தலாமெனவுள்ளேன். 'இலக்கிய வழி வரலாறு', 'இலக்கியங் கொண்டு வரலாற்றையறிதல்' ஆகிய இரு கருதுகோள்களையும் தன்னுள்ளடக்கி நிற்கம் 'இலக்கிய வரலாறு' என்னும் இப்பயில் துறையின் புலமைப்பரப்பையும், இப்பயில் துறைக்கான நியாயப் பாட்டையும் சிறிது விரிவாக நோக்குதல் இக்கட்டத்தில் அவசியமாகின்றது. 'அமெரிக்காவின் இலக்கிய வரலாறு' என்னும் பெரு நூலொன்றின் பிரதான ஆசிரியப் பொறுப்பினை வகித்த றொபெட் ஸ்பில்லர் கூறுவதுது உற்று நோக்கத் தக்கது. 'இலக்கிய வரலாற்றாசிரியன் மற்றைய வரலாற்றாசிரியர்களிடையே -அரசியல் வரலாற்றாசிரியன், பொருளாதார வரலாற்றாசிரியர்கள், புலமை வரலாற்றாசிரியன், பண்பா‘ட்டு வரலாற்றாசிரியன் ஆகிய பல்வேறு வரலாற்றாசிரியர்களிடையே-ஒரு வரலாற்றாசிரியனாகவுள்ளான். மற்றைய வரலாற்றாசிரியர்கள் எவ்வாறு, அரசாங்கத்தின் மூலமாகவும், வர்த்தகம் மூலமாகவும் கருத்துக்கள் மூலமாகவும், ஓவியம், சிற்பம், அன்றேல் அது போன்ற வடிவங்கள், நடைமுறைகள் வழியாகவும் வரும் மனித வெளிப்பாடுகளைக் கொண்டு மனிதனுடைய வரலாற்றினை எழுதுவதைத் தங்கள் பணியாகக் கொள்கிறார்களோ, அதே போன்று இலக்கிய வரலாற்றாசிரியனான இவனது பணி இலக்கியம் வழிய வெளிப்படுத்தப்படும் மனித வரலாற்றினை எழுதுவதாகம்.1 ஒரு நாட்டினது, அல்லது கூட்டத்தினரது வரலாற்றை, அந்நாட்டினது அன்றேல் அம் மக்கட் கூட்டத்தினரதுது இலக்கிய உற்பத்தி, விநியோகம், நுகர்வு கொண்டு அறிந்து கொள்ளும் முயற்சி 'இலக்கிய வரலாறு' ஆகும். இலக்கியம் வரலாற்றின் இயங்க கருவியாக அமைகின்ற தென்பது இப்பயில்துறையின் முக்கிய எடுகோளாகும். இவ்வாறு நோக்கும் பொழுது 'இலக்கிய வழி வரலாறு' ஆனதுது இலக்கியத்தின் வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதென்பது நிச்சயமாகின்றதுது. ஆயினும் இக்கட்டத்திலே முக்கியமான ஓர் உண்மையினை வலியுறுத்தல் வேண்டும். நாம் இங்க எடுத்துக் கூறும் இலக்கிய வரலாற்றினை அறிவதற்கு அத்திவாரமாக இலக்கியத்தின் வரலாறு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். இலக்கியத்தின் வரலாற்றினை ஐயந்திரிபற அறிந்து கொள்ளாமல் இலக்கிய வழி வரலாற்றை, அறிந்து கொள்ள முடியாது. இலக்கியத்தின் வரலாற்றையே இலக்கிய வழி வரலாறாக மயங்கிக் கொள்ளும் நிலையே. இலக்கியத்தின் வரலாறு பூரணமாக எழுதப்படாமை காரணமாக ஏற்படும் ஒரு நிலைமையாகும். 'இலக்கிய வரலாறு' பற்றி இதுவரை தரப்பட்ட பத விளக்கத்தினை நோக்கும் பொழுது, இலக்கிய வரலாற்றில், இலக்கியத்தின் வளர்ச்சி எனும் விடயத்திற்க அப்பாலுள்ள விடயங்கள் பற்றிய ஒரு புலமைச் சிரத்தை உணடென்பது தெளிவாகின்றது. 'இலக்கிய வரலாறு' இலக்கியத்துக்கு 'அப்பாலானவை' என்று கருதப்படுவனவற்றுக்குட் செல்லலாமா என்ற வினா உடன் கிளம்பலாம். அத்தகைய ஒரு வினா இலக்கிய வரலாற்றின் தேவை பற்றியும், இலக்கிய வரலாற்றின் வரையறைகள் பற்றியும் சிந்தனைகளைக் கிளப்பி விடும். இதே விடயத்தை இன்னொரு வகையாகவும் வினவலாம். 'நமக்கு எதற்கா‘க இலக்கியத்தின் வரலாறு ஒன்று தேவைப்படுகின்றது? உள்ள இலக்கியங்கள் யாவற்றையும் ஒரே சமகால அமைப்பாகக் கொண்டு அம்முறையிலேயே அவற்றை ஆராய்ந்தால் என்ன? இக்கட்டத்தில் தான் நமக்கு நமது புலமைத் தளத்தின் அடிப்படைகள் பற்றிய தெளிவு இருத்தல் வேண்டும். இத்தெளிவு இருந்தால், அதன் பின்னர் வரும் விவாதங்களை மேற்கொள்வது சுலபமாகவேயிருக்கும். ஏனெனில் அதற்கு மேல் வெளிக் கிளம்பும் கருத்து வேற்றுமைகள், புலமைத் தளங்களின் நியாயம் அநியாயம் பற்யிதாகவல்லாமல் அந்தப் புலமைத் தளத்தை விட்டு, ஏன் இந்தப் புலமைத் தளத்தைக் கொள்ள வேண்டும் என்பன காரணமாகவே தோன்றலாம். இவ்வாறாக நோக்கும் பொழுது, இவ்விவாதம் முழுவதற்கும் அடிப்படையானதாக, சீவாதாரமானதாக அமைவது இலக்கியம் என்றால் என்ன, அல்லது இந்த ஆய்வினைப் பொறுத்த வரையில், எதனை இலக்கியம் என்று கொள்வது, என்ற வினாவே யாகும். இலக்கியம் பற்றியும், வரலாறு பற்றியும், இவை இரண்டுக்குமுள்ள ஊடாட்டங்கள் பற்றியும், அகல்விரிவான விளக்கத்தினையுடையதாகவிருக்க வேண்டிய இவ் ஆய்வில் பொன் மொழிகள் போலவுள்ள குறுங்கூற்றுக்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்க வியாக்கியானங்கள் கூறிக் கொண்டிருத்தல் முடியாது. நிலைமையைத் தெட்டத் தெளிவாக முன்வைத்தல் வேண்டும். உண்மையில் இது ஒரு வாதமேயாகும். எனவே அதனை நாம் வாதத்திற்குரிய முறையிலேயே எடுத்துக் கூறவும் வேண்டும். இலக்கியத்தின் வரலாறாயினும் சரி, பொது வரலாறாயினும் சரி வரலாற்றின் தேவைகட்காக, நாம் இலக்கியத்துக்க வரைவிலக்கணம் வகுக்க முனையும் பொழுது, முதலில் நாம் இலக்கியத்தினை, அதன் பயன்பாடு கொண்டும், ஒரு நடைமுறை என்ற வகையில் அதன் செயற்பாடு கொண்டும் விவரித்தல் அத்தியாவசியமாகின்றது. இலக்கியத்தின் நடைமுறை பற்றி டேவிட் அத்தியாவசியமாகின்றது. இலக்கியத்தின் நடைமுறை பற்றி டேவிட் கிறெய்க் தரும் விவரணம் பொருத்தமான ஆரம்பமாகும். வரலாற்றில் தொழிற்படும் ஆழ வேரூன்றிய சக்திகள் - வாழ்க்கை முறை பற்றிச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே நடக்கும் போராட்டங்கள்-வாழ்கை முறையை மாற்றியமைக்கின்றன. அதாவது வாழ்வதற்கென மக்கள் ஒழுங்கபட்டு உழைக்கும் பொழுது தோன்றும் மக்கள் உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன. (இந்த உறவுகள் உறவியற் சுகவாழ்வு, உறையுள் ஆகியனவும் இடம் பெறும்). இந்த மாற்றமைப்பு புதிய தொடர்பு முறையமைப்புக்கள் தோன்றுவதற்கு இடமளிக்கும் (இது ஒரே சார்பினரான மக்களுக்கான வாய்மொழிப் பாடலாகவோ, கலப்புச் சார்பினரான மக்களுக்காக, வணிக விநியோக நிலைப்பட்ட அச்சு முறை ஆக்கங்களாகவோ அல்லது வேறெதுவாகவோ இருக்கலாம்.) இவற்றினடியாக, சொல்லால் வெளியிடப் பெறுவதான (பெரும்பாலும் இசையுடனும் வரைகலையுடனும் தொடர்பான) இலக்கியம் தோன்றும். அது, ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் புதி வாழ்க்கைப் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக அமையும். இவ்வாறு எடுத்துக் கூறப்படுவது, தனிப்பட்ட கலைஞனது, அன்றேல் கலைஞர்களது, உள்ளார்ந்த, சூழலால் தாக்கப் பெற்ற நிலை முறைகளுக்கியைந்த பாணிகளிலே அமையும், அத்துடன், இவை, அச்சமுதாயத்திலே, அக்காலத்திலே நிலவும் தொடர்புச் சாதனங்களக்கேற்றதாக, அவற்றின் வழியாக வருவனவாக அமையும்.2 இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, பண்புகளை நன்கு அமைத்துக் கூறும் இக்கூற்றினிலே, கிறேய்க், இலக்கியத்தின் தொடர்பு முறைமை அமிசத்தினை, வாழ்க்கைச் செயற்பாட்டின் பொழுது தோன்றும் மனித நிலைகள் பற்றிய (இது உண்மையில் அக்காலத்தில் உள்ள சமூக உறவுகளினடியாகத் தோன்றுவதாகும்) ஆழ வேரூன்றிய சிரத்தையினை, அதன் உற்பத்தி முறைமை வழி நின்று நோக்கும் பொழுது தெரிய வரும். அதன் தனித்துவத்தை, சிறப்பாக, அதனை உண்டாக்கும் ஆசிரியனது தனித்துவத்தை நன்கு விதந்தோதுவதனை நாம் அவதானிக்கலாம். மனிதப் புத்தாக்கங்களில், மானுடத்துக்க வரைவிலக்கணம் வகுப்பதற்கான கவர்ச்சி நிறை பரப்பெல்லையைப் பொறுத்த வரையில் இலக்கியத்தை வேறெதனாலும் விஞ்ச முடியாதுது எனும் உண்மையை முனைப்புறுத்திக் கூறல் வேண்டும். எனவே இலக்கியத்தின் பெறுமானத்தை, மனிதனின் மானுடத் தன்மை பற்றி அது வழங்கும் அறிவிலேயே கண்டு கொள்ளல் வேண்டும். எல்.சி..நைற்ஸ் அதனைப் பின்வருமாறு கூறுவர். 'கவிதைக்கும் 'புஷ்-பின்'* ஆட்டம் எனும் குழந்தை விளையாட்டுக்கும் உண்மையாகவே வித்தியாசம் காண முடியாத ஒரு பொறியியல் விஞ்ஞானி (ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய விருப்பங்கள்) ஒருவருக்கு, இலக்கியத்தின் செல்பயன் பற்றிய ஒரு சுருக்கமான பொழிப்புரை யொன்றினைக் கூறுமாறு நான் நிர்ப்பந்திக்கப் பட்டால், ____________ * புஷ் பின் (Push-Pin) எனும் குழந்தை விளையாட்டில் ஆணிகள் போன்ற சில காய்கள் ஒன்று மாறி ஒன்றாக நகர்த்தப்படும். இலக்கியம் என்பது, நாம் மனிதர்களாகத் தொடாந்திருப்பதற்கு அன்றேல், போதுமான அளவு மனிதர்களாக விருப்பதற்கு வேண்டிய மிக மிக முக்கியமான உண்மைகளை அறிந்து கொள்வதற்கான, பிறிதொன்றினைவிட்டு நிரப்பி விட முடியாத, ஓர் அறிவு முறை என்று கூறுவேன். ஏன் 'பிறிதொன்றினை இட்டு நிரப்பி விட முடியாத' எனக் கூறுதல் வேண்டும்? அதற்கு இரண்டு விடைகள் உள்ளன. ஒன்று, சம்பந்தப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்வது மிகக் கஷ்டமான ஒன்றாகும். இதற்குக் காரணம் நமக்கும் நமது உலகின் உண்மையான தன்மைக்கும் இடையே உள்ள 'நெருங்கிய பழக்க தோழத் திரை, மாத்திரமன்று, நாம் மிக நுண்ணிய அரண்களை ஊடுருவிச் சென்றே அவ்வுண்மைகளை அறிய வேண்டியுள்ளது. தோஸ்த் தோவொஸ்க்கியைப் பற்றிக் கமூ கூறியது போன்று 'அவர் நமக்கத் தெரிந்தவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு நாம் கண்டு, கொள்ள மறுப்பனவற்றையும் கற்பிக்கின்றார்', 'ஷேக்ஸ்பியரைப் பற்றி மெல்வில் கூறியது போன்று 'நான் தேடுவனவாயும் காண விரும்பாது வெறுத்தொதுக்குவன யாவும் அங்கேயுள்ளன.' மற்றது, இச் சூழலில் எடுத்துக் கூறப்படும் உண்மையானது, தர்க்க ரீதியான செயல் விளக்கத்தினாற் பெறுகின்ற அன்றேல் முயன்றடைகின்ற ஒன்றன்று. ஒரு குறிப்பிட்ட வகைப்பட்ட, விதிமுறையான அமைப்புக்களைக் கொண்ட ஒன்றிலே ஈடுபடுகின்ற பொழுது அதன் சிக்கலான வேறுபடும் நடவடிக்கையினுள்ளே வாழ்ந்து கொள்ளும் முறைமை யாகும்.'3 இலக்கியம் என்பது நாம் போதுமான அளவு மனிதத் தன்மையுடையவர்களாக விருப்பதை உறுதிப்படுவதற்கு வேண்டிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கான, மற்றொன்றினால் இட்டு நிரப்ப முடியாத அறிவு முறைமையெனில், அதன், காலக்கிரம நிலைப்பட்ட ஒரு மீளாய்வு, அந்த மனிதத்தன்மைக்காக வாதிட்ட, அதனை நிலை நிறுத்த காலங் காலமாக வாதிட்ட, முயற்சிகளை இனங் கண்டு கொள்ள உதவும். எனவே, அதிக கண்டனங்களுக்குட் படுத்தப்பட்ட பிரதி பலிப்புக் கோட்பாடு (இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பது எனும் கோட்பாடு) வழியாக வாழ்க்கையிலிருந்து இலக்கியத்துக்க வராமல், விரி மைய முறைப்படி இலக்கியத்தின் தளத்திலிருந்து பரந்த மன்பதையைச் சென்றடையலாம். 'சமூக நிலைப் பொருளில், மானிடவியற் பொருளில்ல அல்ல, தனிப்பட்ட மனிதன் என்பவன், தன் சமூகஞ் சார்ந்த, உயிர் சார்ந்த வாழ்க்கை முழுவதனாலும் தோற்றுவிக்கப் படுபவனே. இதுதான், இலக்கியத்தின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் சரிசமனாக உருவாக்கும் கருவுள் ஆகும். இதனாலே தான் இலக்கியம் சமூகவியலாய்வுப் பரப்புக்குரியதாகின்றது.' 'இலக்கியப் படைப்புப்க்கள், சமூக மனிதனை, அவனது உயிர்கள் வாழ்க்கையின் பல்வேற கோலத்துடன், அவனது உணர்வுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளுடன், சமூகத்துடனான அவனது உறவுகளுடன், அவனது அக வாழ்க்கையையும் புற நடத்தைகளையும் சித்திரிக்கின்றது. இவற்றிலிருந்து நாம் தனிமனிதனுக்கம் அவனது வாழ்கையில்ல வரலாற்று நிலைமைக்குமுள்ள இணைப்புக்களை, அவனது சமூகச் சூழ்நிலையின் பண்பைக் காட்டும் வரலாற்றுப் புலவெளித் தோற்றத்தை கருத்துக்களின் போராட்டங்களை, சமூக மோதுதல்களை, உய்த்தறிந்து கொள்கின்றோம். மேற் குறிப்பிட்டவற்றின் அவன் கொள்ளும் இணை வீடுபாடு தான் அவனது தனிமனிதத் துவத்தின் பூரணத்துவத்தை நிரணயிக்கின்றது. இந்த இணை வீடுபாட்டைக் கொள்கை நிலையில், அதற்குரிய கலை அறிதிறன் முறைமையிலிருந்து பிரித்துவிட முடியாது.'4 மேலே குறிப்பிட்ட இணைப்புக்களை உய்த்தறிந்து கொள்ளும் முயற்சி தான் இலக்கிய வரலாற்றின் பணியாகும். ஆனால் இலக்கிய வரலாற்றின் இப்பணி ஆற்றப்படும் முறைமையினை அறிந்துது கொள்வதற்கு முன்னர், இலக்கியங்கற்பதற்கான இவ்வணுகுமுறை இலக்கியத்தின் சிறப்பியல்புகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தவிர்த்துக் கொள்வதற்காக இலக்கியத்தின் தன்னாதிக்க வட்டத்தை நிறுவி அதன் பண்புகளை விவரிப்பது அத்தியாவசியமாகும். பிரதிபலிப்புக் கொள்கையினடிப்படையில் மிக்க கொச்சைத் தனமான முறையில் இலக்கியத்திலிருந்து உய்த்தறியப்படும் சமூகம் பற்றிய சில கருத்துக்கள் பற்றியே இங்கக் குறிப்பிடப் பெறுகின்றது. அத்தகைய மிகைப்படுத்தப்பட்ட வரலாற்று எளிமைப்பாடுகள் தமிழிலக்கிய வரலாற்றில் மலிந்து காணப்படுகின்றன.5 இலக்கியத்தை மேற்கட்டுமானத்தின் அமிசமாகக் கொள்ளும் பொழுது, அந்த மேற்கட்டுமானாமானது, (பொருளாதார) அடித்தளத்தின் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் நிச்சயமாகப் பிரதிபலிக்குமென்னும் எண்ணத்தின் விஸ்தரிப்பதாகவே இந்த உளிமைப்பாடான முடிவுகள் காணப்படுகின்றன. இலக்கியம் பண்பாட்டுவயப்பட்டது என்பது உண்மையே, ஆனால் அது பண்பாட்டை உருவாக்குவது என்பதையும் மறந்துவிடக் கூடாது. மேற்குறிப்பிட்ட முறையிலே எளிமைப்பாடான முடிவுகள் விதிவருமுறையாகக் கொள்ளப்படும் பொழுது இலக்கியத்தின் 'பிரசவத்திற்' சம்பந்தப்படும் ஆக்கவியல், புலமை நெறி நடை முறைகளும், அந்தத இலக்கியம் தோன்றிய, குறிப்பிட்ட காலப்பகதியிற் பரந்து ஊடுருவி நின்ற 'கருத்துத் தெளிவு முறைமைகளும், இத்தெரிவு முறைமையின் சமூகப் பண்புகளும் மறக்கப்பட்டு விடுகின்றன. அதாவது சமூகத்தின் எவ்வெவ் நடைமுறைகள் இலக்கியப் பொருளாகக் கொள்ளப்படுகின்றன. ஏன் அவ்வாற கொள்ளப்படுகின்றன. மற்றவை ஏன் கொள்ளப்படுவதில்லை எனும் விடயங்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இலக்கியத்தை மிக பெரிதான ஒரு கண்ணாடியாகக் கொண்டு, பொருளாதார அமைப்பில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் அக்கண்ணாடிக்குட் கண்டுபிடிக்கும் முயற்சி திறமைத் தகவுடைய ஆசிரியர்களிடையே சாதாரணமாகக் காணப்படும் பண்பாகி விட்டது.6 அடித்தளம்-மேற்கட்டுமானம் எனும் கோட்பாட்டின் மிகையா‘ன எளிமைப்பாடு காரணமாகவே இப்பண்பு காணப்படுகின்றதெனலாம். அடித்தளம்-மேற்கட்டுமானக் கோட்பாட்டினைப் பிரயோகிக்கும் பொழுது, நாம் குறிப்பிடும் அல்லது கருதும் 'அடித்தளம்' என்பதும் இயக்கவியலுக்குட்பட்ட ஒரு நடைமுறையே அன்றி 'மாறாத நிலைமை' யன்று என்பது கருத்திற் கொள்ளப்படுவதில்லை. அடித்தளமாகிய அந்த 'நடைமுறை' சில நிலையான இயல்புகளைக் கொண்டதென்று கூறிவிட்டுப் பின்னர் அந்த நடைமுறையிலிருந்து மாறும் இயல்பினதாகிய மேற்கட்டுமானத்திற்கு சில பண்புகளை விதிவருமுறையிற் கொள்ள முடியாது7 அடித்தளம், மேற்கட்டுமானக் கோட்பாட்டினை மலினப்படுத்திப் புரிந்து கொண்டு இலக்கிய மாற்றங்களுடன் ஒன்றுக்கொன்றா‘க இணைத்து நோக்கும் எளிமைப்படத்தப்பட விளக்கங்களுக்கப் பதிலாக, சமூக முழுமையையும் (ஜோர்ணி லூக்கார்க்ஸ்) அதனுள் வரும் அமைப்பு மட்டங்களையும் (ஹ’ண்-ஸ், ஹேர்ஸ்ற்) நோக்கும் மார்க்ஸ“ய சிந்தனை வளர்ச்சிகள் பகப்பாய்வுக்கு வேண்டிய சில சிந்தனாக் கருவிகளைத் தந்துள்ளன. இத்தகைய சிந்தனை வளர்ச்சிகளை மனதிற்கொண்டு நோக்கும் பொழுது, வால்ற்றர் பெஞ்சமின் மிக்க வன்மையுடன் எடுத்துக் கூறிய ஒரு கருத்தினை கணக்கிற் கொள்வது அத்தியாவசியமாகின்றது. 'இன்று செய்யப்பட வேண்டியது, எழுதப்பட்ட நூல்களை அவற்றின் காலப்பின்னணியிற் காட்டுவதன்று. மாறாக, அந்த நூல்களைத் தெரிந்து கொண்டுள்ள காலத்தை, அதாவது நாம் வாழும் இந்தக் காலத்தை, அந்நூல்கள் தோன்றிய காலத்தினுள் வைத்துப் பார்ப்பதே செய்யப்பட வேண்டியதாகம். இவ்வாறாகப் பார்க்கும் பொழுதுதான், இலக்கியம் சமூகத்தின் சிந்தனைக்கான கருவியாகின்றது. இலக்கியத்தை இவ்வாறு (சமூகத்தின் சிந்தனைக்கு வேண்டிய கருவியாக) காட்டுவது தான் இலக்கிய வழி வரலாற்றின் கடமைப் பொறுப்பு ஆகும், இலக்கியத்தை வெறுமனே வரலாற்றுக்கான ஒரு சான்றாக ஆக்குவதன்று.'8 இலக்கியத்தைச் சமூக சிந்தனை வேண்டிய ஒரு கருவியாகப் பார்க்க வேண்டுமென 1931-ம் ஆண்டிலேயே எடுத்துக் கூறப்பட்டு விட்ட இக்கருத்து இன்று பூரணமாக ஆராயப்பட்டுள்ளது. இலக்கியத்தினதும் இலக்கிய வரலாற்றினதும் கடமைப் பொறுப்புகள் பற்றி ஆராயும் காத்திரமான ஆய்வு எதுவும் இதனைக் கவனிக்காது விட்டு விடவில்லை. இந்த வாதத்தினை றேய்மண்ட் வில்லியம்ஸ் பின்வருமாறு முன்வைத்துள்ளார். 'இலக்கியம் என்பது ஆரம்பத்திலிருந்தே சமூகத்திலே ஒரு பயில்வழக்காக விருந்து வருகின்றது. உண்மையில், இப்பயில்வழக்கும் மற்றைய எல்லாப் பயில் வழக்குகளும் இல்லாத வரையில், அந்தச் சமூகம் பூரணமாக உருவாக்கப்பட்டதாகக் கொள்ள முடியாது'9 |