ஈழநூல் 059  
நூல் 

திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு

ஆசிரியர்:

கா. சிவத்தம்பி

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -
ஒரு வரலாற்று நோக்கு

** கார்த்திகேசு சிவத்தம்பி**

நினைவின் சுவடுகள்

நிறைவேறும் ஓர் ஆசை

1997 இல், இக்கட்டுரையை எழுதியபொழுது நான் இலங்கைக் கிழக்கப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தநிலைப் பேராசிரியராகக் கடமையாற்றினேன். 1998 செப்டம்பர் வரை அது நீடித்தது.

யாழ்ப்பாணத்துக்குத் திரும்பமுடியாத உடல் நிலை. பல்கலைக்கழகச் சேவையின் இறுதி வருடங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்திற் செலவிடுதலில் ஒரு தார்மீக நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு சுவாரசியமான இடம்.

நான் அங்கு தங்கிய காலத்தில் எனது போக்குவரத்துக்கான ஒழுங்கு, பல்கலைக்கழக ஊழியர் வாகனத்திற் செய்யப்பட்டிருந்தது. காலை போய் மாலை திரும்புவோம்.

அது ஒரு 'றோசா' பஸ். அதன் சாரதி அம்பலவாணர். அதில் பயணிப்போர் மோகன், சூரி, ஆனந்தராஜன், ஸ்ரீ எனப் பலர். மட்டக்களப்பின் இயல்பான கிண்டற் குறிப்புரைகள் மாறி மாறிப் பறக்கும். அதற்குள் ஓர் உறவுக்குழுமம் இருந்தது.

எனக்கு அவர்கள் அபரிமிதமான அன்பு காட்டினர். என்னை நேசித்தனர். ஒரு முதுபுலமையாளனை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை அறிந்திருந்தனர்.

அவர்களின் அந்தச் செயல்கள் எனக்கு ஒரு 'மானுடத்திடலாக' இருந்தது. நான் அதில் நின்று கொண்டு மட்டக்களப்பின் மனிதாபிமானத்தைச் சுவைத்தேன்.

அவர்களை நான் என்றும் மறக்கமாட்டேன் என்பதற்கு இச்சிறு அர்ப்பணம் சாட்சி.

சென்னை 5-10-99

கா. சிவத்தம்பி

பதிப்புரை

ஆங்கில ஆட்சியில் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சென்று அள்ளிக் கொண்ட பிராமணர்கள் பெற்ற அதே பேறுகளைத் தாங்களும் பெறவேண்டும் என்ற நோக்கில், படித்த பிராமணரல்லாத பிரிவினரால் தொடங்கப்பட்ட 'சென்னை மகாஜன சபை'யின் தோற்றம், அன்றைய காலகட்டத்தில் பிராமணர்களின் செல்வாக்கால் அழுத்தப்பட்டுக்கிடந்த சைவம், தனித்தமிழ் உள்ளிட்ட பல்வேறு போக்குகளை எழுச்சிபெறச் செய்து இதில் கலக்க வைத்தது, பிராம­யத்தின் சமூக-பண்பாட்டுப் பிடிப்பினை எதிர்த்துத் தோற்றம் பெற்று, சமத்துவம்-சமதர்மம் உள்ளிட்ட பொருளாதாரத் தன்மைகளையும் மையப்படுத்தியதாக அமைந்திருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் அப்போது பிராம­ய எதிர்ப்புச் சக்திகளை ஈர்த்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், நீதிக்கட்சி ஆட்சியில் இடஓதுக்கீடு, கடன் நிவாரணச் சட்டம் அல்லாத வேறெந்தச் சமூக-பண்பாட்டு மாற்றத்துக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சமூக சக்தியாக மாறாமல், நிலவுடைமை மற்றும் வணிக நலன்களையே பேணிவந்த நீதிக்கட்சி செல்வாக்கிழந்து தனது இருப்பையே உறுதி செய்துகொள்ள இயலாத நிலையில், பெரியார் என்ற பேராற்றில் கலக்கவேண்டியதாயிற்று.

நிலவுடைமை-வணிகர்-படித்தவர் நலன்களை மட்டுமே அடித்தளமாகக் கொண்டிருந்த நீதிக் கட்சி, பிராமணரல்லலாத அடித்தட்டு மக்களின் எழுச்சியை அப்போ‘து உறுதிப்படுத்தியிருந்த சுயமரியாதை இயக்கமெனும் தீயில் விழுந்துவிட்டது. இந்தத் தீயில் உருக்கியெடுக்கப்பட்டதுதான் திராவிட இயக்கக் கருத்துநிலை. இது, அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டு செயல்திட்டத்துக்கான ஒரு நிலைப்பாடு.

திராவிட இயக்கத்தின் பெயரால் அமைந்த கட்சிகள் இதிலிருந்து நழுவியிருந்தாலும், மாநிலக் கட்சிகளிலேயே திமுக இன்றும் வேறுபட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஒரு கட்சி என்ற முறையிலோ ஆட்சி வகைப்பட்டோ, திமுகவின் அரசியல் முடிவுகள்-செயல்பாடுகள்கூட, சமூக-பண்பாட்டுப் பின்னணியிலேயே மதிப்பிடப்படுகின்றன.

தங்களது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகவே பிற மாநிலங்களிலுள்ள கட்சிகள் காட்டிக்கொண்டாலும், அவை அரசியல் இயக்கங்களாகக் குறுக்கிடக்கின்றனவேயன்றி, சமூக-பொருளாதார-பண்பாட்டுத் தளத்தில் தங்களை நிறுத்திக்கொள்ளவில்லை. தலித் இயக்கங்களின் இருப்பு சற்று வேறுபட்டது என்றாலும், இவையும் அரசியல் அளவுகோலுக்கு அப்பாற் செல்லவில்லை.

இத்தகைய பின்னணியில் நாம் புரிந்துதுகொள்ளவேண்டிய-எதிர்நோக்கவேண்டிய தன்மைகளைத் தமக்கேயுரிய நுணுக்கத்தோடு-பார்வையோடு மார்க்žயப் பேரறிஞரும் ஆய்வுப் பேராசிரியருமான கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்நூலில் விளக்கியுள்ளார்கள்.


11.10.1999 மே.து.ராசு குமார்.


முன்னுரை

தமிழ்த் தேசிய உணர்வு வளர்ச்சி பற்றிய எனது ஆய்வுகளில் இது மூன்றாவது, தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி (1979) Understanding the Dravidian Movement - Problems and Perspective (1988-95) என்பனவற்றைத் தொடர்ந்து இது வருகிறது.

1996-97 இல் தமிழகத்தில் முன்னிலைப்பட்ட தலித் எழுச்சியும் சாதிச் சண்டைகளும் திராவிட இயக்கக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு' என்பது பற்றி ஒரு கருத்தரங்கத்தை நடத்துவதற்குத் தூண்டின. மதுரை ஆராய்ச்சி வட்டத்தைச் சேர்ந்த திரு.வி.எம்.எஸ். சுபகுணராஜன் முதலியோர், நண்பர் அ.மார்க்சினுடைய உதவியுடன் 1994 மே 24-25இல் 'திராவிட இயக்கமும் கருத்தியலும்: நோக்குகளும் போக்குகளும்' என்ற கருத்தரங்கை நடத்தினர். அதில் திறப்புரையாக எனது இந்தக் கட்டுரை அமைந்தது.

நான் இவ்வுரையினை எழுதுவதற்குக் காலாக இருந்த நண்பர் அ.மார்க்சுக்கு எனது நட்புக் கலந்த நன்றி.

திராவிட இயக்கச் செல்வாக்குக் காரணமாகத் தமிழ் நாட்டில் அடிநிலை எழுச்சி திடீரென வந்துவிடாது என மண்டல் கமிஷன் உள்ளிட்ட பலரது முன்னுரைப்புக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் சாதிக் கலவரங்களும் தலித் எழுச்சியும் தோன்றியுள்ளமை வெறும் சாதாரண அரசியல் நிகழ்வு அன்று. 19-20ஆம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு வளர்ச்சியின் பல அடிப்படை முரண்பாடுகளை அது வெளிக்கொணர்ந்தது. ஒருவகையில் பார்க்கும்பொழுது இந்தக் கிளர்ச்சிகளைத் தமிழ் நாட்டின் சனநாயகமயவாக்க நடைமுறையின் தவிர்க்க முடியாப் பெறுபேறு என்று கொள்ள முடியும் என்றாலும் திராவிட இயக்கம் குறிப்பாகப் பெரியாரியம் வற்புறுத்திய சமூக விடுதலை உணர்வு, பிராமணியத்துடன் நேரடி மோதுதலில் ஈடுபடாதிருந்த ஆழ்அடிநிலை மக்களிடத்துச் செல்லவில்லையோ என்ற ஐயங்கிளம்புவது இயல்பாயிற்று.

இது பற்றிய நோக்கலுக்கு வருவதற்கு முன்னர் திராவிடக் கருத்துநிலை (Dravidian Ideology) 20ஆம் நூற்றாண்டின் தமிழர் எழுச்சியில் தமிழர் பண்பாட்டில் சில மாற்று நியமங்களையும் குறியீடுகளையும் (alternate norms and symbols) உண்டாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது, தமிழை முதன்மைப்படுத்தும் ஒரு சிந்தனைப்போக்குக் காரணமாக, தமிழர்கள் என்கின்ற வகையில் ஒரு பொதுப்படையான எழுச்சி மேற்கிளம்புவதைக் காணலாம். இதற்குள் சாதக அம்சங்களும் உள்ளன; பாதக அம்சங்களும் உள்ளன. அவை பற்றி ஆராயாது இந்தப் பண்பாட்டு முனைப்பு ஏன் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்றுவிட்டது என்பது பற்றி நோக்குவது முக்கியமான ஓர் ஆய்வாகும்.

இக்கட்டத்தில்தான் மார்க்žய நோக்கு பயனுடையதாகக் காணப்படும். வர்க்கம் என்கின்ற எண்ணக் கரு சாதியத்தை எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பது இந்த ஆய்வுகளினூடாக வெளிவரும். அத்துடன் வரலாற்று அசைவியக்கம் என்பதும் ஒரு முக்கியமான அம்சமாகும். வரலாற்றின் இயக்கியல் தன்மை காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை விரிவாக ஆராய்தல் வேண்டும்.

காலனித்துவம் பாரம்பரியச் சமூக அமைப்பைச் சற்று வேறுபடுத்தியதே தவிர மாற்றவில்லை. அதனுடைய அடிப்படையான சமூக அடுக்குநிலையையும் (Social Hierarchies) அடுக்கு நிலை உணர்வையும் மாற்றவில்லை. இந்த அடுக்குநிலையோடு காலம்காலமாக ஒரு சமனற்ற பொருளாதார வளர்ச்சிப் போக்கு சம்பந்தப்பட்டிருப்பதனை, உண்மையில் தமிழ்நாட்டின் நானில ஐந்திணை வகுப்புக் காலம் முதலே இருந்து வருவதை ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தச் சமனற்ற பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திய சமனற்ற வாழ்நிலைப் பண்பாட்டு நிலைமைகள் பற்றி அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இந்தப் பொருளாதாரக் குழுமநிலைமையைப் பேணுவதற்கான ஒரு சமூக ஒதுக்கற்பாட்டுணர்வும் சேர்ந்தே வளர்ந்து வந்துள்ளது. சாதி அமைப்பு விதித்த தொழிற்பிரிவினை (division of labour) சமூக ஒதுக்கற்பாட்டினையும் வலியுறுத்தி ஊடாட்டங்களை மிகக் குறைந்த பட்சத்துக்குக் கொண்டு வந்தது. இந்து மதம் இதற்கான இறையியல், சடங்காசார நிலைப்பாடுகளை வழங்கிற்று. இவை யாவும் சமூக அடிநிலை பற்றிய நமது பார்வையைத் தீர்மானித்தன எனலாம்.

அதே வேளையில் சமூக விடுதலை பெற்ற இடைநிலையினர்களுக்கு வேண்டிய தொடர்ச்சியான அரசியற்கல்வி (Continued Political Education) அளிக்கப்படவில்லை. இதனால் பிராமணித்தியலும் பார்க்க 'நமது' பண்பாடு சிறப்புடையது என்ற ஒரு திருப்திநிலையே ஏற்பட்டது. இந்தத் திருப்திநிலையைச் சகலசாதி மட்டத்திற்கும் கொண்டு செல்ல முடியாததாகிவிட்டது. இதற்குக் காரணம், பிராமணிய எதிர்ப்பு முதலில் சமூக-பொருளாதார உயர்மட்டத்தினராலே மேற்கொள்ளப்பட்டமையேயாகும். அவர்கள் தங்கட்குக் கீழே வந்தவர்களைச் சமமாக நடத்தத்தயாராகவிருக்கவில்லை.

இவை காரணமாக ஒரு தேக்கம் ஏற்பட்டது உண்மையே. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சாதியொழிப்பிற்கு உதவுவதாக அமையவில்லை. முரணிலையாக அதன் 'இருப்பை', தொடர்ச்சியை அது வலியுறுத்துகிறது.

இந்த வரலாற்றுப் பொறிக்குள் நாம் சிக்கிக் கொள்கிற பொழுது விடுபடுவது என்பது மிகுந்த நிதானத்துடன் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றாகிறது (Thesis, antithesis ஆக மாறுவதற்கு இது ஒரு நல்ல உதாரணம்). இவ்வாறு நோக்கும் பொழுதுதான் காலனித்துவத்தின் தாக்கம் பற்றி நாம் போதுமான தமிழ்நிலை ஆய்வுகள் மேற்கொண்டு விட்டோமா எனும் வினா மேலெழும்புகின்றது. காலனித்துவம் இந்தச் சமூக முரண்பாட்டைத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பது பற்றிய ஒரு தெளிவும் அவசியம், இக்கட்டுரை வரலாற்றுப் போக்கினைச் மிகச்சிறிய அளவிற் பார்க்க முனைகிறது. புதிய நூற்றாண்டில் தமிழகத்தின் அரசியல் சமூகச் சிந்தனை உணர்வுகள் எவ்வாறு செல்லும் என்பதற்கான ஓர் இலங்கியல் உதாரணமாக இக்கட்டுரைப் பொருள் அமைகிறது.

இதனை எழுதுபொழுது எனது ஆள்நிலை (personal) விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலேயே நிற்பதாக நான் கருதும் வரலாற்றின் தர்க்கத்திற்கு இங்கு முதலிடம் கொடுத்துள்ளேன். இந்தக் கட்டுரையில் கூறப்படுவன விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை இன்று எதிர்நோக்குகின்ற இந்த, மேற்செலவைத் தடுக்கும், கருத்துநிலைத் தடைப்பாட்டை (ideological impasse) உடைப்பதற்கான ஒரு மனந்திறந்த புலமைக் கருத்தாடல் நடத்தல்வேண்டும். அதைச் செய்வதற்கான புலமை எதுவும் வளமும் தமிழ்நாட்டில் இன்று நிச்சயமாக உண்டு.

தமிழகத்தின் இன்றைய வரலாற்றுக்கட்டம், அத்தகைய ஒரு கருத்தாடலைக் கோரி நிற்கின்றது.

சமூக சக்தியாகத் தொடங்கி, அரசியல் சக்தியாக மாறியுள்ள திராவிடக் கருத்துநிலைக்கான வரலாற்றுத் தேவை இன்று உண்டா; உண்டெனின் அது எவ்வாறு பரிணமிக்கின்றது என்பது சுவாரசியமான வினாவாகும்.

திராவிட இயக்க வளர்ச்சியைத் தமிழ்நாட்டுப் புலமையாளர் மிக நுண்ணிதாக ஆராயத் தொடங்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில், திராவிடக் கருத்துநிலையின் வகிபாகத்தை (role) மிக ஆழமாக ஆராயவேண்டிய தேவை அவசியமாகிறது, திராவிடக் கருத்துநிலை தனது வரலாற்றுப் பணியை நிறைவேற்றிவிட்டதா என்பது ஒரு முக்கிய வினாவாகும்.

இந்தக் கருத்தாடலில், மார்க்சியப் பகுப்பாய்வாளர்கள், தமிழகச் சமூக உருவாக்கம் (social formation) பற்றிய தீட்சண்ணியம் நிறைந்த ஆய்வுகளால் இக்கருத்தாடலுக்கு நிறைய உதவலாம்.

இக்கட்டுரைக்கான நன்றிக் கடப்பாட்டில் இரண்டு நிலைகளுக்குரிய நன்றிக் கடன்கள் உள்ளன. முதலில் இது 1997 இல் எழுதப்பட்டபொழுது ஏற்பட்டவை. திராவிட அரசியற் போக்குகளைச் சில புதிய கண்ணோட்டத்தில் பார்க்குத் தராக்கி டி.சிவராம் இந்தக் கட்டுரைப் பொருள்பற்றி விரிவாக விவாதித்து உதவினார். நண்பர் தெ. மதுசூதனனுடைய உதவி மறக்க முடியாதது. செ.யோகராசா சில முக்கிய நூல்களைத் தந்து உதவினார். மாநாட்டு மட்டத்தில் நண்பர் அ.மார்க்சினுடைய குறிப்புரைகள் பெரிதும் உதவின. சென்னையில் இதுபற்றி அப்பொழுது விவாதித்துதவியவர்கள் தோழர் சி.மகேந்திரன், வீ.அரசு ஆகியோர்.

இரண்டாவது கட்டம் இப்பொழுதுள்ளதாகும். இது 'ஆராய்ச்சி' சஞ்சிகைக்கான கட்டுரையாகவும் தனிச் சிறு நூலாகவும் வெளிவருகின்ற இந்தக் கட்டமாகும். மாநாட்டுக்கான கட்டுரை வரைவினைத் தமது உன்னிப்பான விமர்சனங்களை வைத்து விளங்க எடுத்துக்கூறி உதவினார் டாக்டர் மே.து. ராசுகுமார்; அவருக்கு எனது நன்றி. இவ்விடயம் தொடர்பான கருத்தாடல் நடத்தியுதவியவர் முனைவர் தெயவசுந்தரம்; இப்பொழுது இதனைத் திருத்துவதற்கான அலுவல்களில் உதவியுள்ளவர் கி.பார்த்திபராஜா; இவர்களுக்கு எனது நன்றி உரித்து.


பல்கலைக்கழக விருந்தினர் விடுதி
மெரினா சென்னை 600 005
17.09.1999 கார்த்திகேசு சிவத்தம்பி



திராவிட இயக்கக் கருத்துநிலையின்
இன்றைய பொருத்தப்பாடு
-ஒரு வரலாற்று நோக்கு


'கருத்துநிலையின் பிரச்சினை', அது ஒரு பௌதீகக் கொள்கை அமைப்புக்குள் நின்றுகொண்டு, சமூகக் கருத்துக்கள் எவ்வாறு எழுகின்றன என்பது பற்றி ஒரு விளக்கம் தரவேண்டும் என்பதாகும். ஒரு குறிப்பிட்ட சமூக உருவாக்கத்தில் இவற்றின் (சமூகக் கருத்துக்களின்) வகிபாகம் யாது என்பதை நாம் விளங்கிக்கொள்ளல்வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தை மாற்றுவதற்கு எவ்வாறு போராடவேண்டுமென்பதைத் தெரிவித்து, சமூகத்தின் சமதர்ம மாற்றத்துக்கான பாதைகளைத் திறந்துவிடலாம். 'கருத்துநிலை' (ideology) என்பதன் மூலம் நான் கருதுவது, பல்வேறு வர்க்கங்களும் சமூகக் குழுமங்களும், சமூகமானது எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அந்த இயங்குமுறையின் தன்மையை அறிந்துகொள்வதற்கும், வரைவிலக்கணம், கொடுப்பதற்கும் தெளிவாக விளக்குவதற்கும் பயன்படுத்தும் மனக் கட்டமைப்புக்களையேயாகும்-அதாவது அது பயன்படுத்தும் மொழிகள், எண்ணங்களுக்கான வகைபாடுகள் சிந்தனைப்படிமங்கள், சித்திரிப்பு முறைகள் ஆகியவை கருத்துநிலையாகும்.

எனவே கருத்துநிலை பற்றிய பிரச்சினை என்பது, பல்வேறு கருத்துக்கள் எவ்வாறு மக்கள் திரள்களின் மனங்களை இறுகப்பற்றி, அதன் காரணமாக, ஒரு 'பிண்டப் பிரமாணமான சக்தியாக' அமைகின்றது என்பதேயாகும். பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்தப் பார்வைப்பரப்பில், கருத்துநிலை பற்றிய கொள்கை (theory) என்பது, கிராம்ஸ்சி கொள்வதுபோன்று, எவ்வாறு சில கருத்துத் தொடைகள் (sets of ideas), ஒரு வரலாற்றுக் குழுமத்தின் சிந்தனை மீது மேலாதிக்கம் செலுத்துகின்றன என்பதாகும்; அவ்வாறு செய்யும்பொழுது, அது, அந்தக் குழுமத்தை அதனுள்ளேயே நின்று அதனை ஒற்றுமைப்படுத்தி, முழுச் சமூகத்தின் மீதும் அதற்குள்ள அதன் மேலாண்மையையும் தலைமையையும் பேணுவதற்கு உதவுகின்றது என்பதை அறிந்து கொள்வதாகும். கருத்துநிலை என்பது, ஒரு குறிப்பிட்ட வகை அதிகாரத்தையும் மேலாண்மையையும் பேணுவதற்கான நடைமுறைநிலை, எண்ணக்கருக்கள் அவற்றுக்கான மொழிகள் சம்பந்தப்பட்டதாகும். அல்லது, குறிப்பிட்ட ஒரு சமூக உருவாக்கத்துக்குள், மக்களிற் பெருந்தொகையினரை, அவர்கள் தம் கீழ்நிலையை மன இசைவுடன் ஏற்றுக்கொள்வதற்கும், ஏற்று அதனுள் வாழ்வதற்கும் வேண்டிய எண்ணக்கருக்கள் முதலியன பற்றியதாகும். அது மாத்திரமல்லாது கருத்துநிலை என்பது, நடப்பு நிலையிலுள்ள முறைமைக்கெதிராக வரலாற்று முக்கியத்துவமுள்ள செயற்பாடுகளில் ஈடுபட மக்கள் திரளை ஊக்குவிக்கும், புதிய பிரக்ஞை வடிவங்கள், உலகம் பற்றிய புதிய எண்ணக்கருக்கள் தோன்றுகின்ற நடைமுறைகள் பற்றியதுமாகும். சமூகப் போராட்டத்தின்பொழுது இந்த விடயங்களே விவாதங்களுக்குள்ளானவையாக அமைகின்றன. இவற்றை விளக்குவதற்கு, இவற்றை நன்கு புரிந்துகொள்வதற்கும், இந்தக் கருத்துநிலைப் போராட்டத்தின் களங்களை விளக்கி அவற்றை வசப்படுத்துவதற்கும் எமக்கு ஒரு கொள்கை தேவைப்படுகிறது.

அது வெறுமனே ஒரு கொள்கையாகவல்லாது, நாம் விளக்கவிருக்கும் சிக்கற்பாடுகள் எல்லாவற்றுக்கும் போதுமானதான ஒரு கொள்கையாக இருத்தல்வேண்டும்.*

-- ஸ்ருவாற் ஹோல்

1

திராவிடக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி நோக்க முனையும் நம்முன் உள்ள வினாக்கள் தெட்டத் தெளிவானவை:

--இக் கருத்துநிலை எவ்வாறு தோன்றுகிறது?

--அது எவ்வெவ் அமிசங்களைக் கொண்டுள்ளது?

-------

* Stuart Hall. 'The Problem of Ideology: Marxism without Guarantees', Critical Dialogues in Cultural Studies, David Morlay Kuang Hsing Chan, London, 1996.

....

--இது எவ்வாறு மக்கள் திரளின் மனங்களைக் கவ்விப் பிடித்து ஒரு பிண்டப் பிரமாணமான (நிஜமான) சக்தியாக அமைகின்றது; அமைந்துள்ளது?

என்பனவே அவை.

2

இந்த விஷயங்களைப் பற்றிய ஆய்வுக்கு இறக்குவதற்கு முன்னர், தமிழ்நாட்டின் முக்கியமான அண்மைக் காலத்துப் புலமை வளர்ச்சியொன்றினைப் பதிவு செய்தல் அவசியமாகும்.

திராவிட இயக்கம் பற்றி 1984 இல் நான் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில்

திராவிட இயக்கம் பற்றிய செயற்பாடுகளுக்குத் தளமாக எந்த மொழி அமைகின்றதோ அந்த மொழியில்--தமிழில்--இது சம்பந்தமாக விமர்சனபூர்வமான ஆய்வு எதுவும் இதுவரை வெளிவராதது துரதிர்ஷ்டவசமானது ஆகும்.

என்று குறிப்பிட்டிருந்தேன்.* ஆனால் இப்பொழுதோ, குறிப்பாக 1990 முதல் ஏற்பட்டுள்ள ஒரு புலமை முன்னேற்றம் காரணமாக இன்று இரண்டு முக்கிய வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன:

1 திராவிட இயக்கம், கருத்துநிலை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கங்கள், விளைவுகள் பற்றிய விமர்சனபூர்வமான தமிழ் ஆய்வெழுத்துக்கள்;

2 திராவிட இயக்கத்தின், நோக்கம், செயற்பாடு, முனைப்பு ஆகியன பற்றிய தமிழ்நிலைநிற்கும் ஒரு நோக்கினை வெளிப்படுத்துகின்ற தமிழர்களாகிய புலமையாளர்களின் ஆங்கில எழுத்துக்கள்.

முதலில் கூறப்பட்டுள்ள செல்நெறிக்கு உதாரணம் நிறப்பிரிகைக் குழுவினர் ஆற்றியுள்ள பணி. பெரியாரியம் பற்றிய விவாதத்தை ஒரு புதிய தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளமை முக்கியமான ஒரு விஷயமாகும். ஆய்வாளர்கள், விமர்சகர்கள் எனத் தனிப்பட நோக்கும்பொழுது, நிறப்பிரிகைக் குழுவினரும்

----

* K. Sivathamby, Understanding the Dravidian Movement--Problems and Perspectives, Chennai, 1995.

.....

வேறு சிலரும் முக்கியமாகின்றனர். கோ. சேவகன், கருணா மனோகரன், அ. மார்க்ஸ், பொ. வேலுசாமி, ராஜ் கௌதமன் என இந்தப் பட்டியல் நீளும். இவர்கள் எல்லோரும் ஒரே கருத்தினை உடையவர்கள் அல்லர். ஆனால் திராவிடக் கருத்துநிலை பற்றிய கருத்தாடலில் (discourse) இவர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். இந்தப் பட்டியலில் எஸ்.வி. ராஜதுரை, வி. கீதா (பெரியார் 1996) ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.

திராவிடக் கருத்து நிலை, இயக்கம் பற்றிய வரலாறெழுதியலில் தமிழ் நிலைப்பட்ட கண்ணோட்டத்தை நிலை நிறுத்தி, இதுவரை இது பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்கள் சிலவற்றின் கருத்துநிலை எடுகோள்கள் ஆகியனவற்றைக் கேள்விக்குள்ளாக்கி, இந்த விவாதத்திற்கு இது சம்பந்தப்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளரிடையே தமது வருகையையும் இருக்கையையும் வன்மையாகப் பதிவு செய்துகொண்டவர்களாக, எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆ. இரா. வெங்கடாசலபதி, எஸ். ஆனந்தி ஆகியோரைக் குறிப்பிடல் வேண்டும். எஸ்.வி. இராஜதுரையும் வி. கீதாவும், ஆங்கிலத்தில் இக்காலப் பகுதியில் எழுதியுள்ளனர். இந்த எழுத்துக்கள் காரணமாக, இக்கண்ணோட்டத்தில் தொண்ணூறுகளுக்கு முன்னர் நம்பியாரூரன் மங்கள முருகேசன், ஈ.சா. விஸ்வநாதன் ஆகியோரின் ஆய்வுகள் மீள நினைவுகூரப்படுகின்றன.

இந்தப் புலமைப் பங்களிப்புக்கள், திராவிட இயக்கம் பற்றியும் பெரியார் ஈவெரா அவர்களின் கொள்கைகள் பற்றியும் செய்யப்படும் ஒரு முக்கியமான சமூக-அரசியல்வாத விவாதத்தினூடேயே வந்துள்ளன. இவ்விவாதம் தமிழகத்தின் இனம், சமூக அறிவியல் ஆய்வாளர்களிடையே ஒரு புதிய முனைப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாட்டினது வரலாற்றின் இதுவரை தெரியப்படாத பகுதிகள் ஆய்வு ஒளிவீச்சுகளுக்கு ஆட்படுகின்றன.

இந்தக் கருத்தரங்கினைக்கூட இந்தப் புலமையார்வத்தின் ஒரு வெளிப்பாடு ஆகவே கொள்ளவேண்டும்.

3

திராவிடக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது, தொடக்கத்தில் திராவிடக் கருத்துநிலை என்பது யாது, அது எதனை அல்லது எவற்றைச் சுட்டி நிற்கின்றது என்பதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளல் அவசியம்.

தமிழ்நாட்டில் வாழும் பிராமணரல்லாத சாதிக் குழுமங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் சமூக நிலைமையையும் தங்கள் சமூக அசைவியக்கத்தையும் வரையறை செய்த 'பிராமணக் கருத்து நிலை' தம்மீது திணித்ததென அவர்கள் கண்ட, கொண்ட மேலாண்மைக்கெதிராக நடத்திய போராட்டங்களினூடே மேற்கிளம்பியதும், அந்தப் போராட்டங்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதுமான சிந்தனை நிலைப்பாடே, 'திராவிடக் கருத்துநிலை'யாகும்; அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் 'தமிழ்ப் பிரக்ஞை' ஏற்படுவதற்கு இது தளமாக அமைந்து வந்துள்ளது. இது, மதம் சமூக நடத்தை முறை பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தினை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது (அந்தக் கண்ணோட்டத்தின் பிரதான எண்ணக்கருக்கள் 'நாத்திகம், பகுதித்தறிவுவாதம், சுயமரியாதை' என்பனவாகும்; இது 'ஆரிய'த்தைப் 'பிராம­யமாக நோக்குவதுடன், 'திராவிடம்' என்பது 'பிராம­யம்' என்று கொள்ளப்படுவதன் எதிர்நிலையாகக் கொள்ளப்படுவதாகும். இது காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வடிவம் பெற்றது. அத்துடன், இந்திய வரலாறு, பண்பாடு பற்றிய காலனித்துவ வாசிப்புக்களினால் உந்துதல் பெற்றதும் உண்மையாகும். (சிவத்தம்பி 1979).

இந்தச் சொற்பிரயோகத்துக்கு, ஆங்கில ஆட்சி, தென்னிந்திய நிர்வாகத்துக்கெனத் தோற்றுவித்த சென்னை மாநிலம் (Madras Presidency) என்ற அலகினது சனத்தொகையமைப்பினுள் ஒரு நியாயப்பாடு இருந்தது. அந்தச் சென்னை மாநிலம் உள்ளடக்கியிருந்த கன்னடப்பிரதேசம், ஆந்திரா (தெலுங்கானா நீங்கலாக), தமிழ்நாடு, (சமஸ்தானங்கள் தவிர்த்த) கேரளம் ஆகிய பிரதேசங்களை இணைப்பதற்கு, அவற்றினூடே ஓர் ஒருமைப்பாட்டைக் காண்பதற்கு, அக்காலத்திற் 'கண்டு பிடிக்கப் பெற்ற', 'திராவிடர்' என்ற மொழி நிலைக் கருதுகோள் உதவிற்று (சிவத்தம்பி 1995). இந்திய வரலாறெழுதியலில் இந்தத் தொடர், தென்னித்தியாவின் பிரிநிலைத் தன்மையையும் தமிழரின் தனித்துவத்தையும் குறிப்பாகக் கொள்ளப்பட்டது. 'திராவிடம்' என்பது 'ஆரிய'த்தின் எதிர்நிலையாகக் கொள்ளப்பட்டது.

இந்தச் சொற்பிரயோகத்துக்கான ஒரு வன்மையான தேவையுமுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் சகல சமூகக்குழுமங்களையும் 'தமிழர்' என்ற தொடராலே சுட்டிவிட முடியாது. தெலுங்கு பேசும் சில குழுமங்களும் (ரெட்டியார், நாயுடு முதலியோர்) கன்னடம் பேசும் சில குழுமங்களும் (நாயக்கர் முதலியோர்) இந்தப் பதக்குடையின் கீழ் வரமாட்டார்கள். அத்துடன் 'தமிழர்' என்னும் சொல், தமிழ்ப் பிராமணர்களையும் உள்ளடக்கிவிடும். இதனால் திராவிடர் என்ற பதப்பிரயோகம் அவசியமாகிறது என்று கருதப்படுகிறது.

மேலும் இந்தச் சொற்பிரயோகம், கடந்த காலத்து வரலாற்று நினைவுகளைத் தரும் ஒன்றாகவும் பயன்படுகிறது. இந்தியாவின் ஆரிய வருகைக்கு முற்பட்ட திராவிட வரலாற்றுப் புகழை மீட்பதற்கும் (சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் பற்றிய சில கொள்கைகள்) தமிழ்நாட்டில், ஆரியச் செல்வாக்குக்கு முற்பட்டதாகக் கருதப்படும் தமிழ் நாகரிகத்தைச் சுட்டவும் (சங்க காலம்) இந்தப் பதம் வாய்ப்பான ஒன்றாக அமைகின்றது. மாக்ஸ் முல்லர் வழிவந்த இந்தோ-ஆரிய மேன்மைக் கோட்பாட்டின் எதிர்நிலையாக இது வழங்கி வருகின்றது.

குறிப்பாக மொழியியல் ஆய்வில் இது ஒரு வரலாற்று நிதர்சனமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் வழங்கும் இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து (சமஸ்கிருதம், அதன் வழிவருவன) வேறபட்ட மொழியமைப்பைக் கொண்ட அடுத்த பிரதான மொழிக் குடும்பம் 'திராவிடமே' ஆகும். அண்மைக்கால மொழியியல் ஆராய்ச்சிகளில் திராவிட மொழியியல், இந்திய மொழியியல் துறையில் முக்கிய இடம் பெறுவதாகும்.

இவற்றைவிட 'திராவிடர்', 'திராவிடக் கருத்து நிலை என்ற இந்தப் பதப்பிரயோகங்கள், இன்று, அதாவது சமகாலத் தமிழ்நாட்டுச் சமூகப் பார்வையில், பெரியார் ஈவெராவினால் நடத்தப்பெற்ற சுயமரியாதை இயக்கத்தினை நினைவுறுத்துவனவாக அமைகின்றன. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் மெய்யியல் எடுகோள்கள் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய பகுத்தறிவுவாதத்தின் (Atheism) அடியாக வந்தனவாகும். இங்கர்சால் என்ற அமெரிக்கச் சிந்தனையாளரின் எண்ணங்கள் இதிற் பெரும்பங்கு வகிக்கின்றன. சென்னையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பாகத்தில் நிறுவப்பட்ட பிரம்மஞான இயக்கம் (Theosophical Movement) சம்பந்தப்பட்டவர்கள் இங்கர்சால் பற்றிச் சிரத்தை கொண்டிருந்தனர் என்பதற்கான சில வரலாற்றாதாரங்கள் உள்ளன (ஹார்வாட் பல்கலைக்கழக இறையியல் துறை நூலகத்திலுள்ள பிரசுரிக்கப்படாத அமெரிக்க மிஷன் ஆவணங்கள்).

'திராவிடம்' என்ற இத்தொடர் இந்தியச் சுதந்திர காலத்துக்கு முன்னரிருந்து கையளிக்கப்பட்ட ஒரு சிந்தனை மரபின் பெறுபேறாக அமைகின்றது என்பது இதுவரை கூறியவற்றினாலே புலனாகின்றது. சுதந்திர காலம் முதல் இத்தொடர் வன்மையான அரசியல் கட்சிநிலைப் பதமாகவும் தொழிற்படுகிறது. 1949 முதல் இன்று வரையுள்ள சென்னை/தமிழ் நாட்டு மாநில ஆட்சி 'திராவிட' என்ற அடையைக் கொண்ட கட்சிகளால் நடத்தப்படுவதையும், அக்கட்சிகளுக்குள்ளே பிளவுகள் ஏற்படும்பொழுதுங்கூட 'திராவிட' என்ற அடை தொடர்ந்து பேணப்படுவதையும் (திமுக, அதிமுக, மதிமுக முதலியன) நோக்கும்பொழுதும் இப்பதம் ஒரு அரசியற் குறியீடு ஆகியுள்ளது என்பது புலனாகின்றது. அரசியற் பலத்தை நாடாத, ஆனால் தமிழகத்தின் பிரதான அமுக்கக்குழுக்களில் (Pressure groups) ஒன்றாக விளங்கும் திராவிடர் கழகமும் (பெரியாரின் உத்தியோக பூர்வவாரிசாகத் தன்னைச் சுட்டிக் கொள்வது) அந்தப் பிரயோகத்தையே பயன்படுத்துவது நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

4

'திராவிட' என்னும் அடையின் இன்றைய அர்த்த விகசிப்புக்களை நோக்கிய நாம் அடுத்து , இத்தொடர் சுட்டும் கருத்து நிலையின் இன்றைய (சமகால) பொருத்தப்பாட்டை நோக்கத் தொடங்கல்வேண்டும்.

அவ்வாறு நோக்க முனையும்பொழுது மூன்று முக்கிய விடயங்கள் ஆராயப்படவேண்டியனவாகின்றன:

1 திராவிட இயக்கம்/கருத்துநிலை பெற்றிருந்த வரலாற்று வகிபாகம்--அதாவது வரலாற்று நோக்கில் அது ஆற்றியுள்ளவை;

2 அனைத்திந்திய மட்டத்தில் இன்று காணப்படும் அரசியல் நிலைமை;

3 ஏக வல்லரசாண்மை கொண்ட பூகோளக் கிராமத்திலும், சர்வதேசியச் சந்தை முதலாளித்துவம் உலக ஆண்மை செலுத்தும் நிலையிலும், தமிழ்ப் பிரக்ஞை/தமிழ்த் தேசியம் பெறும் இடம்.

இந்த மூன்று அமிசங்களும் மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியனவாகும். இந்த அளிக்கை, இந்தக் கருத்தரங்கின் தொடக்க உரையாக அமைவதால்,இப்பிரச்சினைகளின் முகப்புக் குறிப்புக்களாகச் சிலவற்றைக் கூறிச் செல்வதே பொருத்தமானதெனக் கருதுகிறேன்.

5

முதலில் திராவிட இயக்கம், தென்னிந்திய, தமிழ் நாட்டு வரலாற்றிற் பெறும் இடத்தினை நோக்குவோம்.

அவ்வாறு நோக்கும்பொழுது, முதன்முதலில் நமது கவனத்தைக் கவருவது, இந்த இயக்கத்தினது தோற்றம் வளர்ச்சியும், அந்த வரலாற்றினூடே தெரியக் கிடக்கும் இதன் நிலைப் பெயர்வுகளுமாகும் (Shifts). இந்த நிலைப்பெயர்வுகள் இக்கருத்துநிலையின் தன்மையிலும், அது ஆதரவாளர்களாலும் எதிரிகளாலும் புலப்பதிவு செய்யப்பட்ட முறைமையிலும் பல கருத்து நெகிழ்ச்சிகளை/அழுத்த வேறுபாடுகளை ஏற்படுத்தின.

இதன் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தொடங்குகின்றது எனும் வரலாறு இப்பொழுது ஓரளவுக்கு நன்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது (சுந்தரலிங்கம் 1980, இர்ஷ’க் 1969, பாண்டியன் 1995).

ஆங்கில ஆட்சியமைப்பின் குடியியல் எடுகோள்கள் இந்திய அதிகாரப் படிமுறைச் சமூகத்தின் சில எடுகோள்களை (பிறப்பால் உயர்வு-தாழ்வு) நிராகரித்ததெனினும், அதன் உள்ளூர் நிர்வாகம் அமைந்த முறைமையில் அந்த அதிகாரப்படிமுறை அரசு சேவையிலுள்ள பிராமண மேலாண்மை மூலமாகப் புதிதாக நிலைநிறத்தப்படுவது கண்டு, ஆங்கில ஆட்சி வழங்கிய சில சமத்துவ நடவடிக்கைகளினாலே மேலே நோக்கிப் புடை பெயர்ந்துகொண்டிருந்த குழுமங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் சமூகக் குறைபாடுகளை முன்வைக்கத் தொடங்குகின்றனர். இது ஆரம்பத்தில் அடிநிலைச் சமூகங்களின் சுய பிரக்ஞைப் போக்குக்களிலே காணப்படுகிறது. மிராசுதார் பண்ணைகளில் வேலை செய்யும் விவசாயக் கூலிகளைக் குறிக்க முதன் முதலில் 'ஆதி திராவிடர்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டமையை இர்ஷ’க் (1995) குறிப்பிடுகிறார். எம்.சி.ராஜாவின் பறையர் மகாஜன சபையின் எழுச்சியும் இதனோடு தொடர்புடையதே.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னையை மையமாகக் கொண்டியங்கிய பிராமணரல்லாத, உயர் சாதிகள் என்று கருதப்படும் குழுமங்களைச் சேர்ந்தவர்கள் (தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள்) சிலர் 1916 இல் பிராமணரல்லாதார் விஞ்ஞாபனத்'தை (The non-Brahmin Manifesto) முன்வைக்கின்றனர். இக்குழுமம் தன்னைத் தென்னிந்தியத் தாராண்மைவாதக் கூட்டுக்குழு (The south Indian Liberal Fedeartion) என்று கூறிக்கொண்டது. இதுதான் பின்னர், அதன் ஆங்கிலப் பத்திரிகையின் பெயர் காரணமாக ஜஸ்டிஸ் கட்சி (Justice Party) எனப்பட்டது.

பிராமணர்களல்லாத, படித்தவர்களுக்கு உரிய அளவு உத்தியோகங்கள் கொடுபடவேண்டும் என்பதே இவர்களின் பிரதான வாதமாகும். இவர்கள் பிராமணர்களைச் சமய ரீதியாக எதிர்க்கவில்லை. மதச்சடங்குகளில் பிராமணருக்குள்ள முதன்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், இதே வேளையில் தமிழ் நாட்டில் தோன்றிய இன்னொரு சமூக இயக்கம், ஜஸ்டிஸ் கட்சியின் சமூகக் கோரிக்கைகளை ஆதரித்த அதே வேளையில், பிராமணர்களின் மத-பண்பாட்டு மேலாண்மையை நிராகரித்துச் சைவ வேளாள முதன்மையை வற்புறுத்தியது (சிவத்தம்பி 1979). இது பிராமணரின் மொழி-பண்பாட்டு மேலாண்மைக்கெதிராகத் தனித் தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தது.

ஜஸ்டிஸ் கட்சியும் தனித் தமிழியக்கத்தின் தந்தை மறைமலையடிகளும் ஆங்கில ஆட்சியை எதிர்த்தவர்களல்லர். ஆனால் இவர்களிடையே நிறுவன ரீதியான ஒருமைப்பாடு இருக்கவில்லை என்பது உண்மையே. ஆனால், திராவிடக் கருத்துநிலையின் ஒரு முக்கிய எடுகோளான ஆரிய மேன்மை நிராகரிப்பினைத் தனித் தமிழியக்கம் மிக வன்மையாக முன் வைத்தது. சைவ-வேளாளர் நிலை தமிழர் நாகரிகத்தின் ஆணிவேர் என்று எடுத்துக்கூறப்பட்டது.

ஜஸ்டிஸ் கட்சியின் கோரிக்கைகள் அதிகாரப் பகிர்வு, உத்தியோக வாய்ப்புக்கள் நிலைப்பட்டனவாகக் காணப்பட, சைவ வேளாள இயக்கமோ பிராமண எதிர்ப்புக்கு ஒரு பண்பாட்டுப் பரிமாணத்தை வழங்கிற்று.

தேசிய அரசியற் கோக்குக்கள் காரணமாகச் சென்னையில், ஜஸ்டிஸ் கட்சியினர் இரு தடவைகள் மந்திரிசபை அமைக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. அவ்வேளையில், ஜஸ்டிஸ் கட்சியில் இருந்த தமிழ்-தெலுங்கு முரண்பாடுகளும் நிலவுடைமை வணிக முரண்பாடுகளும் முனைப்பாகத் தெரியவந்தன. ஜஸ்டிஸ் கட்சி வகுப்புவாரித் தொழில் வாய்ப்புச் சட்டத்தை அமுல் செய்தது (கேசவன்).

இந்தக் காலத்தில் (1920-37) ஈவெரா (பெரியார்), தமது சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பிக்கின்றார் (1925). இது திராவிட இயக்கத்துக்கு அதுவரை இல்லாத முற்றிலும் புதிய ஒரு பரிமாணத்தைக் கொடுத்தது.

சுயமரியாதை இயக்கம், பிராமணியத்தைச் சமூக நடவடிக்கை மட்டத்தில் எதிர்க்கும் žர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் அடிப்படையாக நாத்திகம், பகுத்தறிவுவாதம் என்பன அமைந்தன. இது மதத்தை முற்றிலும் நிராகரித்தது. இதன் காரணமாக சைவ-வேளாளப் பண்பாட்டு மேலாண்மைவாதம் பேசிய மறைமலையடிகளுக்கும் பெரியார் ஈவெராவுக்குமிடையில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின.

சுயமரியாதை இயக்கத்தின் மேலோங்குகையுடன், தனித் தமிழ்வாதம் முன் வைத்த சில கருத்துநிலை எடுகோள்கள் (பிராமணர்களில்லாத சைவ மதப்பயில்வு, மொழித் தூய்மை பேசதல்) நேரடியாகவும் மறைமுகமாகவும் நிராகரிக்கப்பட்டன. தமிழைச் சமயச் சார்பற்ற போக்குடையதாக்க வேண்டுமென்ற போக்கு மேலெழும்பத் தொடங்கிற்று.

சைவ வேளாளவாதம், சுயமரியாதைவாதம் ஆகியவற்றுள்ளே காணப்பட்ட கருத்துநிலை மோதல்களைத் தொடர்ந்து, திராவிட இயக்கக் கருத்துநிலை வரலாற்றின் அடுத்த கட்ட நிலைப்பெயர்வாக வருவது, 1944 இல் பெரியாரின் த€லைமையின் கீழ் தோற்றுவிக்கப்பெற்ற திராவிடர் கழகமாகும். இது ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் மேலாண்மையின் கீழ் வருவதைச் சுட்டுகிறது. இந்த இயைபின் பொழுதே 'திராவிட நாடு' என்பது உத்தியோகபூர்வக் கோரிக்கையாக முன்னுரைக்கப்படுகின்றது. ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து திராவிடர் கழகம் தோன்றிய வரலாற்றுக்குள், வர்க்கப் போராட்டக் குணாம்சங்கள் பல துல்லியமாகத் தெரிந்தன. சமீன்தார்கள், பெருநிலவுடைமையாளர்களுக்கும் புதிதாகச் சமூக அசைவியக்கம் பெற்று மேலுக்கு வரும் ஒரு மத்தியதர வர்க்கத்தினருக்குமிடையே ஒரு முரண்பாடாகவும் இதனை நோக்குதல் வேண்டும். மேலும் திராவிடர் கழகம், குறிப்பாக அண்ணாதுரையின் செயற்பாடு காரணமாகத் தன்னை ஒர் அகண்ட வெகுசன நிறுவனமாக ஆக்க முனைந்தது.

திராவிடர் இயக்கத்தில் அடுத்து ஏற்படும் நிலைப்பெயர்வு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றத்தால் (1949) ஏற்படுகிறது. இக்கட்டத்தில்தான் இது தமிழ்த் தேசியப் பிரக்ஞையை முற்று முழுதாகக் கொண்டு மேற்கிளம்புகின்றது என்பது தெரிகின்றது. இக்கட்டத்தில் சில முக்கியத் தளமாற்றப் போக்குக்கள் காணப்படுகின்றன:

(அ) தேர்தல் அரசியலில் பங்கு கொள்வது என்றதீர்மானம் (1956);

(ஆ) நாத்திக நிலையிலிருந்து விடுபடுகை (ஒன்றே குலம் ஒருவனே தேவன்);

(இ) திராவிட நாட்டுக் கோரிக்கை கைவிடப்படல் (1963).

இவை யாவற்றுக்கும் மேலாகப் பெரியாருடன் ஏற்பட்ட பிளவு மிக முக்கியமானதாகும். இந்தப் பிளவு திராவிடக் கருத்துநிலை முனைப்பில் முக்கியமான ஒரு பலவீனத்தையே தோற்றுவித்தது எனலாம்.

இந்த நிலைப்பெயர்வு நடைபெறும் காலகட்டம் முக்கியமானதாகும். இந்தியா சுதந்திரமடைந்து அது தனது சுதந்திர கால வளர்ச்சியிலிறங்கும் பொழுது, அனைத்திந்திய மட்டத்திற் காங்கிரசுக்கிருந்த மேலாண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதும், முதன் முதலிற் பிரதேசவாதம் முக்கியமுறுவதும் சென்னை மாநிலத்தில் என்று கூறலாம். சுதந்திரப் போராட்ட காலத்தில்,இந்தியத் தேசிய காங்கிரஸ் தமிழ் நாட்டில் நிலவிய பாரம்பரிய சமூக வேறுபாடுகளுக்கும் சமூக ஒடுக்குமுறைகளுக்கும் அதிகக் கவனம் செலுத்தாது, அப்பொழுதே இலைமறை காயாகவிருந்த சமூக வேறுபாட்டு நோக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்த வேளையில், காந்தீயத்தின் அடிநிலைச் சுவறல்களையும் புறங்கண்டு, திராவிட இயக்கம், சமூக-பண்பாடு மனக் குறைபாடுகள் கொண்ட சமூகத்தினர்களின் சமூக வெளிப்பாடாக மேற்கிளம்பியது. அவ்வெளிப்பாடு முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டது திமுகவின் தோற்றத்துடனேயே--இது தமிழகத்தின் அரசியற் செல்நெறியில் ஒரு புதிய மாற்றத்தையும் புதிய தலைமைப் பாணிகளையும் புதிய அரசியல் ஆட்சேர்ப்பு--ஒழுங்கமைப்பு முறைமைகளையும் (new forms of recruitment and political mobilisation) ஏற்படுத்திற்று. திமுக அரசியலில் ஒரு புதிய சொற்களஞ்சியத்தைக் கொண்டுவந்தது.

ஆயினும் இந்த நிலைப்பெயர்வு, அரசியல்மயப்பட்டிருந்த அளவுக்கு பொருளாதாரநிலைப்பட்டிருக்கவில்லை. இந்த உண்மை, அதன் அரசியல் அதிகார வரலாற்றுக் காலகட்டத்தில் மிகத்துல்லியமாகத் தெரியத் தொடங்கிற்று. அரசியலதிகாரத்தினைப் பெற்ற நிலையில் தலைமை வேறுபாடுகள் முக்கியமடையத் தொடங்குவதை அவதானிக்கலாம். திடமான அரசியல்-பொருளாதாரச் செயல் நிகழ்ச்சி நோக்கு ஒன்றினை வகுத்துக்கொள்ள முடியாதுபோனமையால், தலைமை, சன விருப்பு முறைமையிற் (Populist) செல்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த மாற்றத்தினை, 1972 இல் ஏற்பட்ட நிலைப்பெயர்விலே காண்கின்றோம்.

அதனைக் குறிப்பிடுவதற்கு முன்னர், திமுகவில் அண்ணாதுரை இருக்கும்பொழுதே ஏற்பட்ட பிளவைக் குறிப்பிடல் வேண்டும். உள்கட்சிப் போராட்டம் காரணமாக, ஈ.வெ.கி. சம்பத் (1961) தமிழ்த் தேசியக் கட்சியைத் தோற்றுவிக்கின்றார்.

இது தலைமை காரணமாக ஏற்பட்ட பிளவே என்பது பின்னர் நடந்தவற்றாலும் மெய்ப்பிக்கப்படுகின்றது. ஆயினும் அரசியலைப் பொறத்தவரையில் திராவிடக் கருத்துநிலை முற்றிலும் தமிழ்நாடு நிலைப்பட்டதே என்ற கருத்தும் இதன் மூலம் மேலும் உறுதியாகின்றது.

எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் தோன்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கருத்துநிலை எடுகோள்களில் சில தளப்பெயர்வுகளை ஏற்படுத்துவதனை அவதானிக்கலாம். முதலாவது, (அரசியல் உத்தித் தேவைகள் காரணமாகச் செய்யப்பட்டதெனினும்) அது தன்னை அனைத்திந்திய என்ற ஒரு பெரிய வட்டத்தினுள் திராவிட இயக்கத்தைக் கொண்டு வந்தமையாகும். மாநில சுயாட்சி பற்றி ஏற்கனவே திமுக எடுத்திருந்த நிலைப்பாட்டிலிருந்து இது வேறுபடத் தொடங்குகிறதென்றே கொள்ள வேண்டும். அத்துடன் திராவிடக் கருத்துநிலையான நாத்திக நிலைப்பாட்டிலும் பெரு வேறுபாடு ஏற்பட்டது.

அஇஅதிமுகவின் தோற்றம் வளர்ச்சியுடன் திராவிட இயக்கம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்கத் தொடங்கியமையை மனத்திருத்தல் அவசியம். பெரியார் (1879-1973) தலைமை தாங்கி அவர் பின் மணியம்மை, வீரமணியின் தலைமைக்குச் சென்ற திராவிடர் கழகம், கருணாநிதி தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தலைமையில் இயங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமெனத் திராவிட இயக்கம் முக்கியமான மூன்று பிரிவுகளாகக் காணப்பட்டது. இந்தப் பிளவு நிலை காரணமாக, திராவிடக் கருத்துநிலையின் ஒருமைப்பாட்டிற் பலத்த உடைவு ஏற்பட்டது என்பதைக் கவனத்திற் கொள்ளுதல் அவசியமாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது எம்ஜிஆரின் மறைவின்பொழுது ஏற்பட்ட தலைமைப் போட்டி இந்த மாற்றங்களைக் குறிப்பிட்டுச் செல்கின்றது. எம்ஜிஆர் இறந்ததும், அஇஅதிமுகவின் தலைமைக்கு பிராமணப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

எம்ஜிஆரின் அரசியல் மேலாண்மை, திராவிட இயக்கப் போக்கில் பல மாற்றங்களை ஏற்படுத்திற்று. அரசியல்மயப்படத்தப்பட்ட திராவிட இயக்க மட்டத்தில், திராவிடக் கருத்து நிலையின் மைய அமிசங்கள் பல (நாத்திகம், தமிழ் மேன்மை வாதம் ஆகியன) கைவிடப்பெற்றன. வகுப்புவாரிப் பதவி ஒதுக்கீட்டில், கூடிய விகிதாசார ஒதுக்கலும் பாடசாலைக் குழந்தைகளுக்கான சத்துணவுத்திட்டமும் முக்கிய சமூகத்தாக்கங்களை ஏற்படுத்தினவெனினும், திராவிடக் கருத்து நிலையின் சமூக-மத நோக்குத் தனித்துவம் சிதையத் தொடங்கிற்று.

திராவிட இயக்கத்தின் மிக அண்மையில் ஏற்பட்ட 'பெயர்வு' மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றமாகும் (1993). திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழ்த் தேசியநிலைபாடுகளின் போதாமையே இதன் தோற்றத்துக்கான காரணம் என்று கருத்துநிலைபடக் கூறப்பட்டது.

திராவிட இயக்கக் கருத்துநிலையில் ஏற்பட்ட இந்த அத்தியோகபூர்வ நிலைப்பெயர்வுகளை நோக்கும்பொழுது,திராவிடக் கருத்துநிலையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கப்பட்டுள்ளது என்பது நன்கு தெரிகின்றது. அதே வேளையில் திராவிட இயக்கம், அரசியல் ரீதியாக முதன்மைப்படுத்துகின்ற தமிழ்ப் பிரக்ஞை, தமிழ்த் தேசியவாதம் என்பன திராவிட அடையற்ற பிற கட்சிகள்--குறிப்பாகப் பாட்டாளி மக்கள் கட்சி--மேற்கொண்டுள்ளன என்பதும் தெரிகிறது.

காய்தல் உவத்தலற்று நோக்கும்பொழுது இந்த நிலைப் பெயர்வுகள், அரசியல் அதிகாரம், மதம், பண்பாடு சம்பந்தமாகத் திராவிடக் கருத்துநிலையின் தோற்றகால நிலைபாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது புலனாகின்றது.

6

மேற்கூறிய நிலைப்பெயர்வுகள் அதன் 'அரசியல்' பற்றிய புலப்பதிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினவெனினும், 'திராவிட' என்ற கருதுகோளுக்குத் தமிழ் நாட்டின் அரசியற் பிரக்ஞையில் ஒரு மைய இடமுண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது. அந்தப் பிரக்ஞை காரணமாக ஏற்பட்ட (கருத்துக்களின்) பிண்டப் பிரமாணக் கருத்துருவாக்கம் ஒன்று நடைபெறுகின்றது.

இந்த மாற்றங்களினூடே காணப்படும் ஒரு முக்கியப் பண்பினை முனைப்புறுத்திக் கூறுதல் அவசியம். அதாவது, திராவிட இயக்கம்/கருத்துநிலையின் வரலாற்றினூடே பல்வேறு சாதிக் குழுமங்களின் அரசியல் செயற்பாட்டசைவுகளைக் (Political articulation of various caste groups)காணக்கூடியதாக இருக்கின்றது. வரலாற்று ரீதியாகப் பார்க்கும்பொழுது, முதலில் பிராமணரல்லாத உயர்நிலைக் குழுமங்களும் (வேளாளர்), தொடர்ந்து நாடார்கள், முக்குலத்தோர் (கள்ளர், தேவர் முதலியோர்) ஆகியோரும் அரசியல்-சமூகச் செயற்பாட்டு வேகம் கொண்டவர்களாக மேற்கிளம்புதலைக் காணலாம்.

இந்தப் பண்பினூடே, அதிகாரப் படிநிலை வைப்பு முறைமைக்குப் (hierarchy) பழகிப்போன ஒரு சமூக அமைப்பில், ஒரு படிப்படியான சனநாயகமயப்பாடு (democratisation) ஏற்படுவதை அவதானிக்கலாம். இந்தச் சனநாயக மயப்பாடு இப்பொழுது (1997) இந்தப் படிநிலைச் சமூகத்தின் அடித்தளங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளது. அண்மைக் காலத் 'தலித்' எழுச்சியினை இக்கண்ணோட்டத்திலேயே நோக்கல் வேண்டும்.

ஆனால், இந்தப் படிப்படியான, வேகவிரைவற்ற சனநாயக மயப்பாட்டுக்குத் திராவிட இயக்கம்/கருத்துநிலையே ஒரேயொரு காரணி என்று கூறுதல் முடியாது. சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி மாற்றங்கள், மேற்கொள்ளப்பட்ட பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள், சமூகநலத் திட்டங்கள் ஆகியனவற்றுக்கு இதில் மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், திராவிடக் கருத்துநிலை இந்தச் சமூக மட்ட மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு (Political aspirations) ஒரு நியாயப் பாட்டையும் முன்னுதாரணத்தையும் வழங்கிற்று.

இந்த மாற்றத்தின் பின்புலத்திலுள்ள வர்க்க மாற்றத்தையும் அவதானித்துக் கொள்ளத் தவறக் கூடாது. சைவ, வேளாள மேலாண்மைவாதம், ஜஸ்டிஸ் கட்சி ஆகிய இரண்டும் நிலவுடைமைவாதத்தையும் மேற்கிளம்பும் வணிக மேலாண்மை வாதத்தையும் முனைப்புறுத்துவனவாகும். இந்த வர்க்கப் பின்புலம் படிப்படியாக மாறத் தொடங்கி, சமூக மேலோங்கு நோக்கம் கொண்ட மத்திய வர்க்கத்தினரை மையப்படுத்தி நிற்பதைக் காணலாம். திராவிடக் கட்சிகளிடையே ஏற்படுகின்ற பிளவுகளுக்கு, பிளவுபட்டு நிற்கும் குழுக்களின் பின்னருள்ள ஆதரவாளர்களின் வர்க்கத் தன்மையும் புதிய பல சக்திகளை 'உள்ளே' கொண்டுவருகின்றன. தொடர்புச்சாதனங்கள் வாயிலாகப் புதிய சமூக அபிலாசைகள் கொள்ளும் நகர்ப்புற ஏழைகளும் கிராமப்புற ஒதுக்குநிலைக் குழுமங்களும் (இது சாதியமைப்பால் ஏற்படுவது) இந்த இயக்கத்தின் அரசியலுக்கான 'வாக்குக் களஞ்சிய' மாகின்றன. ஆனால், இந்த ஆதரவுத் தளம் எந்த அளவுக்குத் தலைமையின் வர்க்க நிலைபாடுகளை மாற்றிற்று என்பது விவாதத்துக்குரிய ஒரு விடயமாகும்.

7

திராவிட இயக்க வரலாற்றுச் செல்நெறியிற் காணப்படுகின்ற ஒரு முக்கியமான பண்பு, ஐம்பதுகளிலும் அதற்குப் பின்பும் காணப்படும், திராவிட இயக்கத்தின் அரசியல், சமூகச் செயற்பாட்டு இரு கிளைப்பாடு ஆகும். இது ஒரு மிக முக்கியமான பண்பாகும்.

முதலில் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்த (அந்த அளவில் அதன் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த) ஈவெரா அவர்கள் 1925 முதல் சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இது முற்றிலும் சமூக žர்திருத்த நிலைப்பட்டதேயாகும். இதற்கு ஒரு வெளிப்படையான அரசியல் 'நிகழ்ச்சித் திட்டம்' இருக்கவில்லை (நிச்சயமாக அரசியல் தாக்கம் இருந்தது). ஆனால் அவர் அரசியலை முதன்மைப்படுத்திய ஜஸ்டிஸ் கட்சியின் தலைமையை ஏற்றுக் கொள்கிறார். 1944 இல் திராவிடர் கழகம் உருவாகுகின்றபொழுது அதற்கு நேரடியான அரசியல் நிகழ்ச்சித் திட்டமிருப்பினும், தேர்தல் அரசியலில் ஈடுபடுவதைப் பெரியார் விரும்பவில்லை என்றே கொள்ளல்வேண்டும். பெரியாரின் செயற்பாடு பிரதானமாகச் சமூக அசமத்துவத்தைச் சமூக மதநிலையில் எதிர்ப்பதே. 1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற திராவிட முன்னேற்றக் கழகமோ, 1956 இல் முடிவெடுத்து, 1957 முதல் தேர்தல் அரசியலில் ஈடுபடுகின்றது.

திமுக அரசியற் செயற்பாட்டை அதிகரிக்க அதிகரிக்க, பெரியார் தமது நடவடிக்கைகளை, அவற்றுக்கு அரசியல் முக்கியத்துவம் உண்டெனினும், சமூகச் செயற்பாட்டுத் தளத்திலேயே மேற்கொள்கிறார்.

பாராளுமன்ற முறைமை அரசியலில் ஈடுபடுவதென்ற இத்தீர்மானம், பல தொகுநிலை அர்த்தங்களைக் கொண்டதாக அமைந்தது. முதலாவதாகக் குறிப்பிடப்படவேண்டியது இத்தீர்மானம், திமுக அனைத்திந்தியக் கட்டுக்கோப்புக்களுள், அந்தக் கட்டுக்கோப்பு (அதாவது இந்திய ஆட்சியமைப்பு முறைமை) திணிக்கும் கருத்துநிலை வரையறைகளுக்குள் நின்று, அவற்றை ஏற்றுக்கொண்டு 'அரசியல்' நடத்தவேண்டிய ஒரு நிலையை ஏற்படுத்திற்று. அப்பொழுதிருந்த நிலையில், அனைத்திந்தியக் கட்டுக்கோப்பை நிராகரித்து, வடக்கு தெற்கு என்ற அடிப்படையில் ஆரிய-திராவிடக் கருத்துநிலையை மேற்கொள்ளும் ஒரு கட்சியை, இத்தீர்மானம் முற்றிலும் புதிய திசைகளில் இட்டுச் செல்லும் சாத்தியப்பாடுகளைக் கொண்டதாக அமைந்தது. பிரிவினைவாதத் தடைச்சட்டத்தையொட்டி 1963 இல் திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டமையும், 1972 இல் திமுகவிலிருந்து பிரிந்து சென்ற எம்.ஜி.ராமச்சந்திரன் பின்னர் 1976 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தனது கட்சிக்குப் பேரிடவேண்டி வந்தமையும் இந்தத் தீர்மானத்தின் தர்க்க ரீதியான விளைவுகளாகும்.

பெரியார் தமது நடவடிக்கைகளை முற்றிலும் சமூக நிலைப்படுத்திக் கொண்டு, தேர்தல் அரசியல் முக்கியத்துவம் பெறும்பொழுது சமகாலத்துப் போக்குகளுக்கியைய யாருக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்று தீர்மாணிக்கும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

இந்த இரு கிளைப்பாடு மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

8

அடுத்து, திராவிட இயக்கம், அரசியல் அதிகாரத்திலிருந்த பொழுது ஈட்டிய சாதனைகளைப் பற்றிய ஒரு மதிப்பீடு அவசியமாகிறது.

இவ்வேளையில், 'திராவிட' என்ற இந்த அடைவின் அரசியல் முக்கியத்துவத்தையும் குறிப்பாக அதன் 'வாக்கு'த் தளத்தையும் அத்தளத்தின் கால் நூற்றாண்டுக்கும் மேற்படும் காலத்தொடர்ச்சியையும் விளங்கிக்கொள்ளல் வேண்டும். 1967 முதல் 1997 வரை வந்துள்ள தமிழக மாநில ஆட்சி, 'திராவிட' என்ற தொடர் குறியீட்டைக் கொண்ட கட்சிகளாலேயே நடத்தப் பெறுகின்றது. பெயரளவில் ஒருமைப்பாடு காணப்படினும் அழுத்த வேறுபாடுகள் பல தொழிற்பட்டுள்ளன என்ற அரசியல் நிதர்சன உண்மைய ஏற்றுக்கொள்வது அவசியமாகும். தமிழ்நாட்டின் 'பின்தங்கிய சமூகக் குழுமங்கள்' என்று கணிக்கப்பட்டுள்ள சாதிக் குழுமங்களிடையே (வன்னியர், தேவர், வேளாளக் கவுண்டர், நாடார் முதலிய குழுமங்களிடையே) திராவிட இயக்கத்துக்கான ஒரு வாக்குத்தளம் உள்ளது என்பதைத் தமிழகத்தின் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். எம்.ஜி ஆரைப் பொறுத்தவரை அவரது 'படிமம்' (அந்தப் படிமம் மக்களிடையே 'தொடர்பாடல்' செய்யப்பட்ட முறைமை) அவருக்கு நகர்ப்புறத்து, கிராமப்புறத்து ஏழைகளிடமும் குறிப்பாகப் பெண்களிடத்தும் மிகப் பெரிய கவர்ச்சியைக் கொண்டிருந்தது.

திராவிடக் கருத்துநிலையின் அரசியலாதிக்கம் காரணமாக, பிராமண எதிர்ப்பு நடவடிக்கைகளின் பொழுது முனைப்பு எய்திய சமூக நடைமுறைகள் (žர்திருத்தக் கலியாணம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படல், தமிழின் பயன்பாடு போன்றவை), உத்தியோகபூர்வ வழக்குக்கள் ஆகின. குறிப்பாக வகுப்புரிமை ஒதுக்கீடுகள் பற்றி ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிக முக்கியமானவையாகும். இந்த மாற்றம் காரணமாக அரசு உத்தியோகத்துறையில் பிராமண முதன்மை குறைந்து, பிராமணரல்லாதாரின் மேலாண்மை ஏற்படத் தொடங்கியுள்ளமையைக் குறிப்பிடல் வேண்டும், ஆனால், இது பிறிதொரு சுவாரசியமான சமூகச் செல்நெறிக்கு இடமளித்துள்ளது. அதாவது பிராமண இளைஞர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டை விட்டு வெளிமாநிலங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லுதலும், அவர்கள் சமகாலத் தொழில் நுட்பத் துறைத் தேர்ச்சி பெறுதலும், இதன் காரணமாக இன்று முக்கியத்துவமடைந்துள்ள கன்னித் துறை முகாமைத்துவத் துறை ஆகியவற்றில் அவர்கள் முனைப்டுன் ஈடுபடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், வரன்முறையான பொருளாதாரத் துறையினை நோக்கும்பொழுது, திராவிடக்கருத்துநிலையானது (சமதர்மம், பொதுவுடைமை போன்று) திட்டமிட்ட பொருளாதார அமைப்பு முறைமையை உள்ளடக்கியதன்று. சமூகச் சமத்துவம் பேசும்பொழுது அது, குறிப்பாக அண்ணாதுரையின் பின்னர் சமதர்ம, பொதுவுடைமைக் கோஷங்களை உள்வாங்கியுள்ளதெனினும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் திட்டமிடப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென்பதைப் பற்றிய பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் சத்துணவுத்திட்டம் போன்ற சில முக்கியச் செயற்பாடுகள், தமிழகத்துக் கிராமப்புறங்களில் பின் தள்ளப்பட்டோரின் கல்வி வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது என்பது மிக முக்கியமான உண்மையாகும். இந்தக் கல்விவட்ட விஸ்தரிப்பு, தொடர்புச் சாதனப் பரிச்சயத்தோடு (பிரதானமாக கட்புல அழுத்தம் கொண்ட தொடர்பு ஊடகங்களின் பரிச்சயத்தோடு) இணையும்பொழுது சமூக அபிலாசைகள் (Social aspiration), அதிகரிப்பதை அவதானிக்கலாம். இந்த அபிலாசை அதிகரிப்பு, அரசியல் நோக்கப்படும் முறையிலே பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

1967 முதல் மாநில ஆட்சியிலிருந்து வந்துள்ள 'திராவிட'க் கட்சிகள் மேற்கொண்ட சமூக-பொருளாதார நடவடிக்கைகளை நோக்கும்பொழுது, அரசு நிறுவன உத்தியோகங்களுக்கான வகுப்புவாரி இடஒதுக்கீடு முக்கியத்துவம் பெறுவதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். வளர்ச்சி வாய்ப்பு வசதியற்ற மக்களிடையே அரசு உத்தியோகத் துறையில் ஒரு சமத்துவமான பங்கீடு இருத்தல்வேண்டுமென்ற நோக்குடனேயே இடஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. ஐஸ்டிஸ் கட்சி அமைச்சுப் பதவியிலிருந்த காலத்திலிருந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளது.

இப்பிரச்சினையைச் சற்று உன்னிப்பாக நோக்கும் பொழுது, இது இந்தியச் சமூகத்தின் ஓர் அடிப்படைப் பண்பைப் புலப்படுத்தி நிற்பது விளங்கும். இந்தியாவின் புவிபரப்புக் காரணமாகவும், அந்தப் புவியியல் வளங்கள் நன்க பயன்படுத்தப்படாததாலும், இந்தியச் சமூக அமைப்பின் அதிகாரப் படிநிலை அமைப்புக் காரணமாகவும், அந்தப் படிநிலை அமைப்பு மத-சமூக-பண்பாட்டு நியமமாக விதித்த ஒதுக்கற்பாடுகள் காரணமாகவும், இந்தியாவில் ஒரு சமனற்ற வளர்ச்சி காணப்படுகின்றது. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற சனநாயக எடுகோள் வந்ததும் இந்த அசமத்துவ வளர்ச்சிகளின் சமூகக் கொடூரங்கள் மிக வன்மையாக உணரப்பட்டன. எனவே, இந்தச் சமூகத்தின் சனநாயகமயப்பாட்டுக்கான எந்த முயற்சியிலும் இத்தகைய ஒரு முறைமையைக் கையாளவேண்டுவது அவசியமாகிறது.

மண்டல் கமிஷன் அறிக்கை இப்பிரச்சினை ஓர் அனைத்திந்தியப் பிரச்சினை என்பதை நன்கு எடுத்துக்காட்டுகின்றது. திறமை, வளர்ச்சி, வாய்ப்பு ஆகியனவற்றுக்கிடையே ஒரு சமன்பாடு காணவேண்டிய ஒரு நிலைமையை இது வற்புறுத்துகின்றது.

இந்த வகுப்புவாரி ஒதுக்கீடு, கல்விவாய்ப்பு உத்தியோகத் துறைகளிலே காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் (இந்தியா முழுவதிலும் கூட) இந்த ஒதுக்கீட்டுமுறைமை தொழிற்பட்டு வந்துள்ள முறைமையை நோக்கும்பொழுது இது பிராமணரல்லாத சாதிக் குழுமங்களின் நிரந்தரத்தன்மையையும் சாதிக் குழும மட்டப் பிரக்ஞையையும் மிக மிக அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது என்பது தெரியவருகின்றது.

இது ஒரு வரலாற்று முரண் நிலையையும் தோற்றுவித்துள்ளமையை நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. அதாவது, தமிழ்நாட்டில் எந்த இயக்கம் ஒரு குறிப்பிட்ட சாதியின் சமூக-பண்பாட்டு மேலாண்மையை மறுதலித்துத் தொழிற்பட்டதோ அதே இயக்கம், சமத்துவம் பேணப்படவேண்டிய இடை, அடி நிலைகளிற் சாதியுணர்வை மிக வன்மைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் நவீன கால வரலாற்றில் சாதிக் கலவரம் என்பது ஒரு தொடர்ச்சியான அம்சமாகக் காணப்படுகின்றது.

இந்தச் சாதி கலவரங்களின் ஒரு மறக்கக் கூடாத அமிசம், இக்கலவரங்கள் சமூக மேனிலைப்பாட்டை அவாவுகின்ற குழுமங்களுக்கும்/குழுமத்துக்கும், அவர்களுக்கு நேரடியாக மேலேயுள்ள சாதிகளுக்கிடையேயுமான ஒரு பேராகவே புலப்பதிவு செய்யப்படுகிறது.

1920-30 களில் நடந்த நாடார்-வேளாளர் சண்டைகள், இப்பொழுது நடக்கின்ற தேவேந்திரகுல வேளாளர்-தேவர் சண்டைகள் ஆகியனவற்றை இக்கண்ணோட்டத்திற் பார்ப்பது அவசியம் ஆகும். இலங்கையிலும், யாழ்ப்பாணத்திற் சாதிச்சண்டை உச்சநிலைப்பட்டு நின்ற 1968 இல் (மாவிட்டபுரம் கோயிலினுள் புகுதல் விவகாரத்தில்) உண்மையான சண்டை நளவர்-பள்ளருக்கும் கோரியருக்குமே நடைபெற்றது.

இதில் நாம் முக்கியமாக நோக்கவேண்டிய அமிசம் யாதெனில், சாதியமைப்புக்கெதிராகத் தொடங்கிய போராட்டம் அடிப்படைச் சமூக-பொருளாதார அமைப்பு மாறாததனாலும், மாற்றம் ஏற்பட்டச் சிற்சில துறைகளிலுங்கூட நிலவிய 'உறவுகள்' காரணமாகவும் சாதியமைப்பு மீள் வலியுறுத்தப்படுகிறது.

இது தொலைநோக்கில் ஒட்டுமொத்தச் சனநாயகமயப்பாட்டைச் சிக்கற்படுத்துவதாக இருக்கும். ஆனால், அதே, வேளையில் சனநாயகமயப்பாட்டின் தாக்கத்தினாலேதான் இந்நிலை ஏற்படுகின்றதென்ற உண்மையையும் மறந்துவிடுதல் கூடாது.

தலித்திய எழுச்சி இந்தச் சமூகச் சிக்கற்பாடுகளின் வெளிப்பாடாக அமைகின்றது. அது பற்றிச் சற்று விரிவாகப் பின்னர் நோக்குவோம்.

9

திராவிட இயக்க வரலாறு வழிவந்த சமூக அனுபவங்கள் பற்றிப் பேசும் இந்நிலையில், திராவிட இயக்கம் அது 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதிய துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை நோக்குதல் வேண்டும். இது மிக முக்கியமான ஓர் அமிசமாகும். ஏனெனில் 1850, 1900,1930,1950களில் 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்பட்டனவற்றுக்கும், பின்னர் வரும் காலகட்டங்களிலே 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்படுவனவற்றுக்குமிடையிலே பார்வைப்பரப்பு வேறுபாடு உண்டு.

தமிழ்ப் பண்பாடு சம்பந்தமாகத் திராவிட இயக்கத்தின் பிரதான தாக்கம், இக்கருத்துநிலை காரணமாக, தமிழ்ப் பண்பாடு என்று கொள்ளப்படும் ஒரு 'பொதுமைப்பரப்பினை' சமயச் சார்பற்றதாக்கியமையே. (செக்கியூலர்-secular என்னும் தொடரை நாம் இன்றுங்கூட சமய நீக்கம், சமயச் சார்பின்மை என எதிர்நிலையில் மொழிபெயர்க்கின்றோமேயன்றி, அதனை ஒரு 'உடனிலைப்'பாடான -positive எண்ணக் கருவாக எழுத முடியாதுள்ளது.) சைவத் தமிழ், வைஷ்ணவத் தமிழ், கிறிஸ்தவத் தமிழ், இஸ்லாமியத் தமிழ்ப் பாரம்பரியங்கள் பற்றிய ஆய்வுகள் இக்காலகட்டத்திலே செய்யப்பட்டு, அவையாவற்றையும் தமிழின் பொதுப்பாரியத்தினுள்ளே கொண்டுவரும் ஒரு புலமைப் போக்கு இன்று வலுவுடையதாகவிருப்பினும், இவையாவற்றுக்கும் அப்பாலான, சமயச் சார்பற்ற ஒரு 'தமிழ்ப் பண்பாட்டு' இருக்கை ஒன்று உள்ளது என்ற ஒரு பார்வைப் பரப்பு இன்று உள்ளது. இதன் உருவாக்கத்திலே திராவிடக் கருத்து நிலைக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.

'தமிழ்ப் பண்பாடு' எனும் பொழுது மதப் பாரம்பரியங்களுக்கு அழுத்தம் கொடுக்காது, பிற மொழிச் செல்வாக்குக்கள் குறைந்தவை/அற்றவை என்று கருதப்டும் இலக்கியங்களை முதன்மைப்படுத்தும் ஒரு செல்நெறியும் தோன்றிற்று. இதன் காரணமாகச் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியன தமிழ்ப் பண்பாட்டின் கருவூலங்களாக எடுத்துரைக்கப்பட்டன.

இவ்வேளையில், அனைத்திந்திய, உலக மட்டத்தில் தமிழ்/தமிழ்ப் பண்பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புக்கள் என்று கருதப்படுகின்ற பக்தி இலக்கியம், நடராஜர் சிலை போன்றவற்றை இக்கருத்துநிலை முதன்மைப்படுத்தாது விட்டமையையும் குறிப்பிடல் வேண்டும்.

திராவிடக் கருத்துநிலையின் தொழிற்பாடு காரணமாக முற்றிலும் அதன் தொடர்பியல் தேவைகளுக்காக, தமிழின் மொழிப் பயன்பாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. தனித்தமிழியக்கம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தை உணர்த்தி நிற்பதாகும். ஆனால், பெரியார், அண்ணாதுரை கருத்தாடல்களில் இந்த மொழிப் பிரயோகம் மாற்றங்களைப் பெற்றது. பெரியாரின் பயன்பாட்டில் பேச்சு நிலை வழக்கு (spoken dialict) முதன்மைப்பட அண்ணாதுரையின் பயன்பாட்டில் (பின்னர் கருணாநிதியிலும்) தமிழின் விதி முறைப் பிரயோகத்திற் (formal use) பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு குறிப்பிட்ட மொழிநடை (அடுக்குத் தமிழ்) அரசியல் சமூகத் தொடர்பாடலைப் பெரிதும் வலுப்படுத்துவதாக இருந்தது. மேலும், திராவிட இயக்கத்தினர் பத்திரிகைகளையும் தமது தொடர்பாடற் சாதனமாகக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். இவர்களது வாசக வட்டத்தின் தன்மை, பார்வைப் பரப்புக் காரணமாகத் தமிழின் பத்திரிக்கை எழுத்துத் துறையில் ஒரு புதிய 'மரபு' (idiom) தோன்றிற்று எனலாம். திராவிட இயக்கத்தின் செல்வாக்குச் சினிமாத் துறையையும் பாதித்தது. அந்தப் பாதிப்புக் காரணமாக, இந்தப் புதிய 'நடை' மிக்க பரவலினைப் பெற்றது.

தமிழ்ப் பண்பாட்டுத் துறையில் திராவிட இயக்கத்தின் தொழிற்பாடுகளை மிக உன்னிப்பாக ஆராயும்பொழுது, தமிழ்ப் பண்பாடு இவர்களால் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஓர் எண்ணக் கருவாகிற்று என்றும் துணிந்து கூறலாம். தமிழ் நாட்டில் ஏற்கனவே நிலவிய 'தமிழர்' என்ற சொல்லின் ஒரு பயன்பாடு பிராமணர்களல்லாத தமிழர்களையும் குறிப்பது. தமிழகத்தில் 'தமிழர்' பற்றிய குறிப்பீட்டுக்குத் 'தமிழியன்' (Tamilian) என்ற ஆங்கிலப் பிரயோகத்தையும் அவதானித்தல் வேண்டும். தமிழரைத் 'தமிழ்ஸ்' (Tamils) என்னாமல் (இலங்கையிலுள்ளது போல்), 'தமிழியன்' எனும் பொழுது, தொனிப்பொருளாக வேறுபாடு வெளிப்படுத்தப்படுகின்றது.


* * * Travida 1 - ன் தொடர்ச்சி * * *

இந்த அரசியல்மயப்பாடு காரணமாக, தமிழ்ப் பண்பாட்டின் குறியீடுகளிலும் வேறுபாடு ஏற்படத் தொடங்கிற்று. தைப்பொங்கல், தமிழர் திருநாள் ஆகிற்று; திருக்குறள், 'உலகத்துக்கு அறிவு வழங்கிய தமிழ் மகன் திருவள்ளுவனாரின் நூல்' (சக்திப் பதிப்பக மலிவுப்பதிப்பு முன் அட்டையில்) ஆயிற்று; திருமணங்கள் பாரம்பரிய வடமொழி வரும் சடங்குகளின்றி நடைபெறத் தொடங்கின (žர்திருத்தக் கலியாணம்); தமிழ்ச் சினிமாவிற் சில குடும்பநிலைப் பண்புகள், தமிழ்ப் பண்புகளாகப் போற்றப்பட்டன. தமிழனின் மானம், தமிழச்சியின் கற்பு என்பன உருவுடைப் பொருள்கள் (reification) ஆகின அரசியல் தொடர்பாடலில் இப்பிரயோகங்கள் வலிமை மிக்க கூற்றுக்களாகின.

தமிழ்த் தேசியப் பிரக்ஞை உருவாக்கத்தில் இந்தக் குறியீடுகள் மிக முக்கிய இடம்பெறத் தொடங்கின.

10

திராவிட இயக்கம்/கருத்து நிலை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய மிகப் பிரதானமாக 'தாக்கங்களில்' ஒன்று மதம் பற்றிய அதன் நோக்கு ஆகும்.

இவ்வியக்கம்/கருத்துநிலையின் உடனுறை நோக்கமான பிராமணிய எதிர்ப்புக் காரணமாக, திராவிட இயக்கம் அதன் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் 'வைதிக' (வேத வழி வருகின்ற) இந்து மதச் சடங்குகளை எதிர்த்த