ஈழநூல் 68  
நூல் 

இலக்கணச் சுருக்கம் (பகுதி 1,  பகுதி 2)

ஆசிரியர்

ஆறுமுகநாவலர்

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

இலக்கணச் சுருக்கம்

ஆறுமுகநாவலர்

பகுதி 1

-----------------------------------------

பொருளடக்கம்

எழுத்ததிகாரம்

எழுத்தியல் 5
பதவில் 15
புணரியல் 29

சொல்லதிகாரம்
பெயரியல் 84
வினையியல் 112
இடையியல் 151
உரியியல் 166

தொடர் மொழியதிகாரம்

தொகைநிலைத் தொடரியல் 169
தொகாநிலைத் தொடரியல் 178
ஒழியியல் 178
பகுபத முடிபு 202
சொல்லிலக்கணங்கூறுதல் 213
சொற்றொடரிலக்கணங் கூறுதல் 215

இலக்கணச் சுருக்கம்
முதலாவது
எழுத்ததிகாரம்

1.எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுல் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.

2. அந்நூல் எலுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

தேர்வு வினாக்கள் - 1. இலக்கண நூலாவதியாது? 2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?

எழுத்துக்களின் பெயர்

3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்

4.அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம்

உ-ம். அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.

உ-ம். எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே

யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணுhறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.

உ-ம். எஃகு, கஃசு, அஃது, பஃறி

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.

தேர்வு வினாக்கள் -- 3. எழுத்தாவது யாது? 4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்? 5.உயிரெழுத்துக்கள் எவை? 6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 7.குற்றெழுத்துக்கள் எவை? 8. நெட்டெழுத்துக்கள் எவை? 9. மெய்யெழுத்துக்கள் எவை? 10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 11. வல்லெழுத்துக்கள் எவை? 12.மெல்லெழுத்துக்கள் எவை? 13. இடையெழுத்துக்கள் எவை? 14. சுட்டெழுத்துக்கள் எவை? 15. வினாவெழுத்துக்கள் எவை? 16. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும். 17. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை? 18. உயிர்மெய் குற்றெழுத்து எத்தனை? உயிர்மெய்க் குற்றெழுத்து எப்படி தொண்ணுhhறாகும்? உயிர்மெய் நெட்டெழுத்து எத்தனை? உயிர்மெய் நெட்டெழுத்து எப்படி நூற்றிருபத்தாறாகும்? உயிர்மெய் வல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் வல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் மெல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் மெல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் யிடையெழுத்து எத்தனை? உயிர்மெய் யிடையெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? 18. ஆய்தவெழுத்தாவது எது? 19. ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை?



எழுத்துக்களின் மாத்திரை

20. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.

மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.

ஊயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின ளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு.

மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.

21. உயிரெழுத்துக்குள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். ஆவ்வுகரத்திற்கு குற்றியலுகரமென்றும் பெயராம்.

22. குற்றியலுகரமாவது, தனிக் குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளிளிறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாகும்.

ஆக்குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத்தொடர்கின்ற அயலெழுத்தின் வகையiனாலே, நெடிற் றொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம், வன்றொடர்க்குற்றியலுகரம், மென்றொடர்க்குற்றியலுகரம், இடைத்தொடர்க்குற்றியலுகரம், என ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்றொடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், மற்றையைந்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பல வெழுத்து மொழியாகியும் வரும்.

உ-ம். நாகு, ஆடு நெடிற்றொடர்க்குற்றியலுகரம்
எஃகு, கஃசு ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம்
வரகு, பலாசு உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்
கொக்கு, கச்சு வன்றொடர்க்குற்றியலுகரம்
சங்கு, வண்டு மென்றொடர்க்குற்றியலுகரம்
அல்கு, எய்து இடைத்தொடர்க்குற்றியலுகரம்

23. தனிக்குற்றறெழுத்துக்குப்பின் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும், மெல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம்.

உ-ம். நகு, கொசு, கடு, அது, கணு, திரு, வழு: பூணு, வாரு, உருமு, கதவு, நெல்லு, கொள்ளு.

24. குற்றியலிகரமாவது, யகரம் வந்து புணருமிடத்துக் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.

உ-ம். நாகு + யாது = நாகியது
எஃகு + யாது = எ.கியாது
வரகு + யாது = வரகியாது
கொக்கு + யாது = கொக்கியாது
சங்கு + யாது = சங்கியாது
அல்கு + யாது = அல்கியாது

அன்றியும், மியாவென்னும் அசைச்சொல்லிலே மகரத்தின் மேல் ஏறி நிற்கும் இகரமுங் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.

25. பாட்டில் ஓசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக்களுள்ளும், ஒற்றையெழுத்துக்குள்ளும், சிலசில, தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும், அவிவுயிரெழுத்துக்கு உயிரளபெடை என்றும் பெயராம்.

26. உயிரளபெடையாவன, மொழிக்கு முதலிலாயினும் இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற நெட்டெழுத்துக்களேழுமாம். ஆளபெடுகின்ற நெட்டெழுத்துக்குப் பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும்.

உ-ம்.
ஆஅடை, ஈஇடு, ஊஉமை, ஏஎடு, ஐஇயம், ஓஒடு, ஒளஉவை, பலாஅ.

சில விடயங்களிலே குற்றெழுத்து நெட்டெழுத்தாகிப் பின்னளபெடுக்கும்.

உ-ம்-
எழுதல் ஸ்ரீ எழூஉதல், வரும் ஸ்ரீ வரூஉம், குரி ஸ்ரீ குhPஇ

27. ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்து மெய்களும் ஆய்தமுமாம். ஆளபெடுகின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ் வொற்றொழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறலிணைக்கீழும் வரும்.

உ-ம். சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்கலந்த.

28. குற்றியலுகரத்துக்குங், குற்றியலிகரத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை, உயிரௌபெடைக்கு மாத்திரை மூன்று, ஒற்றளபெடைக்கு மாத்திரை ஒன்று.

29. பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், இராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.

தேர்வு வினாக்கள் - 20. குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை? நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை? மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை? ஆய்தவெழுத்துக்கு மாத்திரை எத்தனை? உயிர்மெய்குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை? உயிர்மெய்நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை? மாத்திரையாவது எது? 21. தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் எழுத்துக்கள் உளவோ? தன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் உகரத்திற்கு பெயர் யாது? ன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் இகரத்திற்கு பெயர் யாது? 22. குற்றியலுகரமாவது யாது? அக் குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? நெடிற்றொடர் எத்தனையெழுத்து மொழியாகிவரும்? 23. முற்றியலுகரமாவன எவை? 24. குற்றியலிகரமாவது யாது? 25. தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும் எழுத்துக்கள் உளவோ? அதிகமாக ஒலிக்கும் உயிரெழுத்துக்குப் பெயர் யாது? அதிகமாக ஒலிக்கும் ஒற்றெழுத்துக்குப் பெயர் யாது? 26. உயிரௌபெடை யாவன யாவை? 27. ஒற்றளபெடையாவன யாவை? 28. குற்றியலிகரத்துக்கு மாத்திரை எத்தனை? உயிரள பெடைக்கு மாத்திரை எத்தனை? ஒற்றளபெடைக்கு மாத்திரை எத்தனை? 29. எவ.வௌ;விடங்களில் எழுத்துக்கள் தமக்குச் சொல்லிய அளவைக்கடந்து நீணடடொலிக்கும்?

முதனிலை

30. பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம்.

உ-ம்.
அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.

31. இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.

உ-ம்.
1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கோண்டை, கோடை, கௌவை.
2. சட்டி, சாநந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, சௌரியம்.
3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேழ், தையல், தொண்டு, தோடு, தௌவை.
4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி.
5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.
6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல்.

32. வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.

உ-ம்.
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.

33. யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறயிரோடு, மொழிக்கு முதலாகிவரும்.

உ-ம்.
யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.

34. ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.

உ-ம்.
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

தேர்வு வினாக்கள் - 30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை? 31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்? 32. வகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்? 33. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்? 34. ஞகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?

இறுதி நிலை

35. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம்.

உ-ம்.
விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள்.

தேர்வு வினா - 31. மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் எவை?

எழுத்துக்களின் சாரியை

36. உயிர்நெட்டெழுத்துக்கள் காராச்சாரியை பெற்றும், அவைகளுள், ஐ ஒள, இரண்டுங் காராச்சாரியை யேயன்றிக் கான்சாரியையும் பெறும்.

உ-ம்.
ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம், ஒளகாரம், ஐகான், ஒளகான்.

ஊயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும், கரம், காரம், கான், என்னும் மூன்று சாரியை பெறும்.

உ-ம்.
அகரம், அகாரம், அஃகான், ககரம், ககாரம், கஃகான்.

மேய்யெழுத்துக்கள், அ என்னுஞ் சாரியை அதனோடு கரம், காரம், கான் என்னும் சாரியை பெறும்.

உ-ம்.
க, ங, ககரம், ககாரம், கஃகான், ஙகரம், ஙகாரம். ஙஃகான்.

உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெறும் மெய்கள் சாரியை பெறாதும் இயங்காவாம்.

தேர்வு வினாக்கள் -- 32. உயிர்நெட்டெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? ஐ, ஒள, இரண்டும் காரச்சாரியை யன்றி வேறு சாரியை பெறுமா? உயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும் எச்சாரியை பெறும்? மெய்யெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? எவ்வெழுத்துக்கள் சாரியை பெற்று வருவதில்லை?

போலியெழுத்துக்கள்

37. அகரத்தோடு யகரமெய் சேர்ந்து ஐகாரம் போன்றும். அகரத்தோடு வகரமெய் சேர்ந்து ஒளகாரம், போன்றும் ஒலிக்கும்.

உ-ம். ஐயன் ஸ்ரீ அய்யன்; ஒளவை ஸ்ரீ அவ்வை

தேர்வு வினாக்கள் -33. இரண்டெழுத்துக்கள், சேர்ந்து ஒரெழுத்தைப்போல் ஒலிப்பதுண்டோ.

ஏழுத்தியல் முற்றிற்று.

2. பதவியல்

38. பதமாவது,த ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிப்பதாம். ஆது, பகாப்பதமும், பகுபதமும் என இருவகைப்படும்.

39. பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்புடைய பதமாம். ஆது, பெயர்ப்பகாப்பதம், வினைப்பகாப்பதம், இடைப் பகாப்பதம், உரிப் பகாப்பதம், என நான்கு வகைப்படும்.

உ-ம்.
நிலம், நீர், மரம் பெயர்ப் பகாப்பதம்
நட, வா, உண் வினைப் பகாப்பதம்
மற்று, ஏ, ஓ இடைப் பகாப்பதம்
உறு, தவ, நனி உரிப் பகாப்பதம்

40. பனுபதமாவது, பகுக்கப்படும் இயல்பையுடைய பதமாம். அது, பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம், என இருவகைப்படும். அவற்றுல், வினைப் பகுபதம், தெரிநிலை வiனைப் பகுபதம், குறிப்பு வினைப் பகுபதமும் என இருவகைப்படும்.

உ-ம்.
பொன்னன் .. பெயர்ப் பகுபதம்
நடந்தான் .. தெரிநிலை வினைப் பகுபதம்
பெரியன் .. உரிப்பகாப்பதம்

தேர்வுவினாக்கள் - 38. பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 39. பகாப்பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 40. பகுபதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? வினைப் பகுபதம் எத்தனை வகைப்படும்?

• தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் பகுபதமாகும் எனவே, அவ்விருவகை வினையாலணையும் பெயர்களும் பகுபதமாகும் என்பது பெறப்படும்.




பகுதவுறுப்பு

41. பகுபதத்துக்கு உறுப்புக்கள், பகுதி, விகுதி, இடைநிலை சாரியை, சந்தி, விகாரம், என ஆறாம். புகுபதம், இ;வ்வாறுறுப்புக்களுள்ளும் பகுதி விகுதி என்னும் இரண்டு முதலியவவைகளினால் முடிவு பெறும்.

உ-ம்.
(1) கூனி என்பது, கூன், இ எனப் பகுதி, விகுதி என்னும் இரண்டுறுப்பால் முடிந்தது.
(2) ஊண்டான் என்பது, உண், ட், ஆன் எனப் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்றுறுப்பால் முடிந்தது.
(3) உண்டனன் என்தது, உண், ட், அன், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை என்னும் நான்குறுப்பால் முடிந்தது.
(4) பிடித்தனன் என்பது, பிடி, த், த், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்னும் ஐந்துறுப்பால் முடிந்தது.
(5) நடந்தனன் என்பது, நட, த், த், அன், அன் எனப் பகுதி, முதலிய ஐந்தும் பெற்று, சந்தியால் வந்த தகர வல்லொற்று நகரமெல்லொற்றாதலாகிய விகாரமும் பெற்று, ஆறுறுப்பால் முடிந்தது.

தேர்வு வினாக்கள் - 41. பகுபதத்துக்கு உறுப்புக்கள் எவை? புகுபதம் இவ்வாறுறுப்புக்களும் பெற்றே முடிவு பெறுமோ?

பகுதி

42. பகுதிகளாவன, பகுபதங்களின் முதலிலே நிற்கும் பகாப்பதங்களாம்.

43. பெயர்ப்பகுபதங்களுக்குப் பெரும்பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என்னும் ஆறவகைப் பெயர்ச்சொற்களும், சிறுபான்மை சுட்டிடைச் சொற்கள், வினாவிடைச் சொற்கள், பிற மற்று என்னும் இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.

உ-ம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) அவன், இவன், உவன், எவன், ஏவன், யாவன், பிறன், மற்றையன்.

44. வினைக்குறிப்பு பகுபதங்களுக்கு, மேற்சொல்லப்பட்டனவாகிய அறுவகைப் பெயர்ச்சொற்களும், இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.

உ-ம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) ஆற்று, இற்று, எற்று

45. மை விகுதி புணர்ந்து நின்ற செம்மை கருமை முதலிய பண்புப் பெயர்கள், விகுதி புணரும்பொழுது, பெரும்பாலும் விகாரப்பட்டு வரும். இவை விகாரப்படுதல் பதப்புணர்ச்சிக்குங் கொள்க.

உ-ம்.
அணியன்: இங்கே அணிமையின் மை விகுதி கெட்டது.
கரியன்: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, நடு உகரம் இகரமாய்த் திரிந்தது.
பாசி: இங்மே பசுமையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டது.
பேரறிவு: இங்மே பெருமையின் மைவிகுதியோடு நடு நின்ற உகரவுயிர் கெட்டு முதல் நீண்டது.
குருங்குதிரை: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, வரும் வல்லெழுத்திற்கு இனமெல்லெழுத்து மிகுந்தது.
பைந்தர்: இங்கே பகமையின் மை விகுதியோடு நடு நின்ற ககரவுயிர் மெய் கெட்டு, முதலகரம் ஐகாரமாய் திரிந்து, வரும் வல்லெழுத்துக்கு இன மெல்லெழுத்து மிகுந்நது.
வெற்றிலை: இங்கே வெறுமையின் மைவிகுதி கெட்டு, நடு நின்ற மெய் இரட்டித்தது.
சேதாம்பல்: இங்கே செம்மையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டு, நடு நின்ற, மகரமெய் தகரமெய்யாய்த் திரிந்தது.

46. தெரிநிலைவினைப் பகுபதங்களுக்குப் பெரும்பாலும் நட வா முதலிய வினைச்சொற்களும், சிறுபான்மை பெயர்ச்சொல் இடைச்சொல் உரிச்சொற்களும், பகுதிகளாய் வரும்.

உ-ம்.
நட, நடந்தான் வினையடி
வா, வந்தான்
நில், நின்றான்
காண், கண்டான்

சித்திரம், சித்திரித்தான் பெயரடி
கடைக்கண், கடைக்கணித்தான்

போல், பொன்போன்றான் இடையடி
நிகர், புலிநிகர்த்தான்

சால், சான்றான் உரியடி
மாண், மாண்டான்

47. தெரிநிலைவினைப் பகுதிகள், விகுதி முதலியவற்றோடு புணரும்போது, இயல்பாகியும், விகாரமாகியும் வரும்.

உ-ம்.
1. தொழு: தொழுதான் இயலபாகி வந்தன உண், உண்டான்
2. சேறல்: இங்கே சொல்லென்பகுதி முதல் நீண்டது.

தந்தான்: இங்கே தாவென்பகுதி முதல் குறகியது.

தருகின்றான்: இங்கே தாவென்பகுதி முதல் குறுகி, ருகரவுயிர்மெய் விரியப்பெற்றது.

செத்தான்: இங்கே சாவென்பகுதி முதலாகரம் எகராமாய்த் திரிந்தது.

விராவினான்: இங்கே விராவென்பகுதி நடுக்குறில் நீண்டது.

கொணார்ந்தான்: இங்கே கொணாவென் பகுதியீற்று நெடில் குறிகி, ரகரமெய் விரிந்தது.

கற்றான்: இங்கே கல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்தாய்த் திரிந்தது.

சென்றான்: இங்கே சொல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்துக்கு இனமாய்த் திரிந்தது.

48. தொரிநிலை வினைப்பகுதிகள், வி, பி, முதலிய விகுதி பெற்றேனும், விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதி பெற்றேனும், பிறவினைப் பகுதிகளாய் வரும்.

உ-ம்.
1. செய், செய்வி, செய்வித்தான் நட, நடப்பி, நடப்பித்தான்
2. திருந்து, திருத்து, திருத்தினான் ஆடு, ஆட்டு, ஆட்டினான் தேறு, தேற்று, தேற்றினான் உருகு, உருக்கு, உருக்கினான்
3. திருத்து, திருத்துவி, திருத்துவித்தான் ஆட்டு, ஆட்டுவி, ஆட்டுவித்தான் தேற்று, தேற்றுவி, தேற்றிவித்தான் உருக்கு, உருக்குவி, உருக்குவித்தான்

49. பொன்னன், கரியன், முதலானவை, எட்டு வேற்றுமைகளுள் ஒன்றை யேற்கும் போது பெயர்ப்பகுபதங்களாம்: முக்காலங்களுள் ஒன்றைக் குறிப்பாகக் காட்டும்போது வினைக்குறிப்பு முற்றுப்பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இம் மூன்றுக்கும் வேறுபாடம்.

50. நடந்தான், வந்தான், முதலானவை காலங்காட்டும் போது தெரிநிலை வினை முற்றப் பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும்போது தெரிநிலை வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இவ்விரண்டுக்கும் வேறுபாடாம்.2

தேர்வு வினாக்கள் - 42. பகுதிகளாவன யாவை? 43. பெயர்ப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? 44. வினைக்குறிப்புப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? 45. விகுதி புணரும் பொழுது விகாரப்பட்டு வரும் பெயர்களும் உளவோ? 46. தெரிநிலை வினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? 47. தெரிநிலை வினைப்பகுதிகள் விகுதி முதலியவற்றோடு புணரும் பொழுது எப்படி வரும்? 48. தெரிநிலை வினைப்பகுதிகள் பிறவினைப் பகுதிகளாமிடத்து எப்படி வரும்? 49. பெயர்ப்பகுபதம் குறிப்பு வினைமுற்;றுப் பகுபதம் குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதம் என்னும் மூன்றுக்கும் வேறுபாடு என்ன? 50. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம் என்னும் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?

விகுதி

51. விகுதிகளாவன, பகுபதங்களின் இறுதியிலே இடைப்பதங்களாகும்.

52. பெயர் விகுதிகள், அன், ஆன், மன்,மான், ன், அள்,ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அ, வை, வ், தை, கை, பி, முன், அல், என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.

உ-ம். குழையன், வாகத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குநற்தாளன, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்.

53. தொழிற்பெயர்விகுதிகள், தல், அல், அம், ஐ, கை,வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.

உ-ம். நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும்.

மை விகுதி, செய்தமை, செய்கின்றமை, என இறந்த காலவிடை நிலை, நிகழ்காலவிடை நிலைகளோடு கூடியும் வரும்.

துவ்விகுதி, அவர் செய்தது, செய்கின்றது. செய்வது என முக்கால விடைநிலைகளோடு கூடியும் வரும்.

54. பண்புப் பெயர்விகுதிகள், மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், என்னும் பத்தும் பிறவுமாம்.

உ-ம். நன்மை, தொல்லை, மாட்சி, மான்பு, மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வருமு;.

55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டுமு;, தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பெத்தெட்டும் பிறவுமாம்.

உ-ம்.
நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தெனன், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மாறல், அழேல், நடமின், உண்ணும்.

56. குறிப்பு வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ,
டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம், ஐ, ஆய், இ, இர், ஈர், என்னும் இருபத்திரண்டும் பிறவுமாம்.

உ-ம்.
கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குநற்தட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர்.

57. தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள், அ, உம், என்னும் இரண்டுமாம்.

உ-ம்.
செய்த, செய்கின்ற் செய்யும்.

குறிப்பு வினைப்பெயரெச்சவிகுதி, அ ஒன்றேயாம். உம், விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங்காட்டலாற் குறிப்பு வiனைப் பெயரெச்சத்துக்கு வாராது.

உ-ம். கரிய

58. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள், உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும்.

உ-ம்.
நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுh, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டகடகால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே.

குறிப்பு வினை வினையெச்ச விகுதிகள், அ, றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து, என்னும் எட்டும் பிறவுமாம்.

உ-ம்.
மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து.

59. பிறவினை விகுதிகள், வி, பி, கு, சு, டு. து, பு, று என்னம் எட்டுமாம்.

உ-ம்.
செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று.

60. இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும், வினைமுதற்பொருளையுஞ் செயற்படு பொருளையும் கருவிப்பொருளையும் உணர்த்தும்.

உ-ம்.
1. அலரி, பறவை, எச்சம், என்பன வினைமுதற்பொருளை உணர்த்தின. இவை முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது, எனப் பொருள் படும்.
2. ஊருணி, தொடை, தேட்டம், என்பன செயற்படு பொருளை உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொடுக்கப்படுவது, தேடபபடுவது எஎனப்பொருள்படும்.
3. மண்வெட்டி, பார்வை, நோக்கம், என்பன, கருவிப்பொருளை, உணர்த்தின. இவை முறையே, டண்வெட்டற்கருவி, பார்த்தற் கருவி, நோக்கற்கருவி எனப் பொருள்படும்.
61. இதுவரையுங் கூறிய விகுதிகளேயன்றிப் பிற விகுதிகளும் உண்டு. அவை வருமாறு:-
விடு, ஒழி, விகுதிகள், துணிவுப்பொருளை உணர்த்தும்.
உ-ம்.
வந்துவிட்டான், கெட்டொழிந்தான், என வரும்.

கொள்விகுதி, தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும்.
உ-ம்.
அடித்துக்கொண்டான்.

படு, உண், விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும்.
உ-ம்.
கட்டப்பட்டான், கட்டுண்டான்.

மை விகுதி தன்மைப்பொருள் உணர்த்தும்.
உ-ம்.
பொன்மை, ஆண்மை

இரு, இடு, என்பன, தமக்கென வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும்.

உ-ம். எழுசந்திருக்கின்றான், உரைத்திடுக்கின்றான்.

தேர்வு வினாக்கள்-- 51. விகுதிகளாவன யாவை? 52. பெயர் விகுதிகள் எவை? 53. தொழிற்பெயர் விகுதிகள் எவை? 54. பண்புப்பெயர் விகுதிகள் எவை? 55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள் எவை? 56. குறிப்பு வினைமுற்று விகுதிகள் எவை? 57. தெரிநிலை விiனாப் பெயரெச்ச விகுதிகள் எவை? 58. தெரிநிலை வினை வினையெச்ச விகுதிகள் எவை? குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை? 59. பிறவினை விகுதிகள் எவை? 60. வினை முதற்பொருள் செயற்படு பொருள் கருவிப்பொருள்களை உணர்த்தும் விகுதிகள் எவை? 61. துணிவுப் பொருளுணர்த்தும் விகுதிகள் எவை? தற்பொருட்டுப் பொருளுணர்த்தும் விகுதி எது? செயற்பாட்டு வினைப்பொருளுணர்த்தும் விகுதிகள் எவை? தன்மைப்பொருளுணர்த்தும் விகுதி எது? பகுதிப்பொருள் விகுதிகள் எவை?

புணர்ந்து கெடும் விகுதி

62. முன்னிலையேவலொருமை ஆய் விகுதியும், பெயெரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும், வினைமுதற் பொருளை உணர்த்தும் ஐ விகுதியும், பகுதியோடு புணர்ந்து நின்றாற் போலவே தம்பொருளை உணர்த்தும்.

உ-ம். நீ, நட, நீ நடப்பி: இவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது.

கொல்களிறு, ஒடாக்குதிரை: இவைகளிலே பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன.
அடி, கேடு, இடையீடு : இவைகளிலே தல்லென்னுந் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது.
காய், தளிர், பூ, கனி : இவைகளிலே வினைமுதற் பொருளை உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டது.
ஊண், தீன், எழுத்து : இவைகளிலே செயப்படு பொருளை உணர்த்தும் ஐ விகுதி புணர்ந்து கெட்டது.

தேர்வு வினா- 62. பகுதியோடு புணர்ந்து பின்கெடும் விகுதிகள் எவை?

இடைநிலை

63.இடைநிலைகளாவன, பகுபதங்களிலே பகுதிக்கும் விகுதிக்கும் நடுவிலே நிற்கும் இடைப்பகாப்பதங்களாம். அவை, காலங்காட்டாவிடைநிலையும், காலங்காட்டுமிடைநிலையும் என இரண்டு வகைப்படும்.

64. காலங்காட்டாவிடைநிலைகள் பெயர்ப்பகுபதங்களுக்கு வரும்.

உ-ம்.
அறிஞன் .. ஜஞஇடைநிலைஸ
ஒதுவான் .. ஜவ இடைநிலைஸ
வலைச்சி .. ஜச இடைநிலைஸ
வண்ணாத்தி .. ஜத இடைநிலைஸ

65. காலங்காட்டுமிடைநிலைகள் தெரிநிலைவினைப் பகுபதங்களுக்கு வரும்.

அவை, இறந்தகாலவிடைநிலையும், நிகழ்காலவிடைநிலையும், எதிர்காலவிடைநிலையும் என, மூன்று வகைப்படும்.

66. இறந்தகாலவிடைநிலைகள், த், ட், ற், இன், என்னும் நான்குமாம்.

உ-ம்.
செய்தான், உண்டான், தின்றான், ஓடினான்.

சிறுபான்மை இன்னிடைநிலை, போனான், என இகரங்குறைந்தும், எஞ்சியது என னகர மெய் குறைந்தும் வரும். பேயாது என யகரமெய் இறந்தகாலவிடைநிலையாயும் வரும்.

67. நிகழ்காலவிடைநிலைகள், ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றுமாம்.

உ-ம்.
நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான்.

68. எதிர்கால விடைநிலைகள், ப், வ், என்னும் இரண்டுமாம்.

உ-ம்.
நடப்பான், செய்வான்.

தோர்வு வினாக்கள் - 62. இடைநிலைகளாவன யாவை? 63. அவை எடதனை வகைப்படும்? 64. காலங்காட்ட விடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்? 65. காலங்காட்டுமிடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்? ஆவை எத்தனை வகைப்படும்? 66. இறந்தகால விடைநிலைகள் எவை? 67. நிகழ்கால விடைநிலைகள் எவை? 68. எதிர்கால விடைநிலைகள் எவை?



எதிர்மறையிடைநிலை

69. இல், அல், ஆ, என்னும் மூன்றும் எதிர்மறை யிடைநிலைகளாம். இவற்றுள், ஆகாரவிடைநிலை, வருமெழுத்து மெய்யாயிற் கெடாதும், உயிறாய்க்கெட்டும் கெட்டும் வரும்.

உ-ம்.
நடந்திலன், நடக்கின்றிலன், நடக்கலன், நடவாதான், நடவான், நடவேன்.

நடவாதான் என்பதிலே தகரமெய் எழுத்துப்பேறு.

தேர்வு வினாக்கள் - 69. எதிர்மறையிடைநிலைகள் எவை? ஏதிர்மறை ஆகாரவிடைநிலை எங்கே கெடதும், எங்கே கெட்டும் வரும்?

காலங்காட்டும் விகுதி

70. சில விகுதிகள், இடைநிலையேலாது, தாமே காலங்காட்டும், அவை வருமாறு:-

து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும், எதிர்காலமுங்காட்டும்.

உ-ம்.
வந்து, (ஸ்ரீவந்தேன்), வந்தும், (ஸ்ரீவந்தேம்) வருது, (ஸ்ரீவருவேன்) வருதும், (ஸ்ரீவருவேம்) எ-ம்.

சென்று, (ஸ்ரீசென்றேன்) சென்றும், (ஸ்ரீசென்றேம்) சேறு, (ஸ்ரீசெல்வேன்) சேறும், (ஸ்ரீசெல்வேம்) எ-ம். வரும்.

கு, கும் என்னும் விகுதிகள் எதிர்காலங் காட்டும்.

உ-ம்.
உண்கு, (ஸ்ரீஉண்பேன்) உண்கும், (ஸ்ரீஉண்பேம்) என வரும்

டு, டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங் காட்டும்.

உ-ம்.
உண்டு, (ஸ்ரீஉண்டேன்) உண்டும், (ஸ்ரீஉண்டேம்) என வரும்.

இ என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி யொன்றும், ப, மர், என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல், என்னும் வியங்கோண் முற்று விகுதுp நான்கும், ஆய், இ, ஆல், ஏல், காண், மின், உம், ஈர், என்னும் முன்னிலையேவன்முற்று விகுதியேழும், ஆகிய பதிநான்கு விகுதிகளும் எதிர்காலங்காட்டும்.

உ-ம்.
(1). சேறி, (ஸ்ரீசெல்வாய்) (2) நடப்ப, (ஸ்ரீநடப்பார்) நடமார், (ஸ்ரீநடப்பார்) (3) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல் (4) நடவாய், உண்ணுதி, மாறல், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணீர்.

உம்
என்னஞ் செய்யுமன் முற்று விகுதி நிகழ்காhலமும் எதிர்காலமுங் காட்டும்.

உ-ம்.
உண்ணும்

எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டு கொள்க.

தேர்வுவினாக்கள - 70. இடைநிலையேலாது தாமே காலங்காட்டும் விகுதிகள் உளவோ? து, தும், று, றும், விகுதிகள் எக்காலங் காட்டும்?, கு, கும், விகுதிகள் எக்காலங் காட்டும்? டு, டும் விகுதிகள் எக்காலங் காட்டும்? ஏதிர்காலங்காட்டும்? வேறு விகுதிகள் உளவோ? உம் என்னுஞ் செய்யுமென் முற்று விகுதி எக்காhலங் காட்டும்?


காலங்காட்டும் பகுதி

71. கு, டு, று, என்னும் மூன்னுயிர்மெய்களை இறுதியாக உடைய சில குறிலிணைப் பகுதிகள் விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும்.

உ-ம்.
புக்கான், விட்டான், பெற்றான்.

தேர்வு வினா - 71. காலங்காட்டும் பகுதிகள் உளவோ?

சாரியை

72. சாரியைகள், அன், ஆன், அம், ஆம், அல், அத்து, அற்று, இன், இற்று, தன், தான், தம், தாம், நம்,நும், அ, ஆ, உ, ஏ, ஐ, கு, து, ன் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.

உ-ம்.
நடந்தனன், ஒருபற்கு, புளியங்காய், புற்றாஞ்சோறு, தொடையல், அகத்தன், பலவற்றை, வய்டின் கால், பதிற்றுப் பத்து, அவன்றன்னை, அவன்றான், அவர்தம்மை, அவர்தாம், எல்லாநம்மையும், எல்லீர் நும்மையும், நடந்தது, இல்லாப்பொருள், உண்ணுவான், செய்து கொண்டான், ஆன்.

தேர்வு வினா- 72. சாரியைகளென்பன எவை?

சந்தி

73. சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்டுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம்.

தேர்வு வினா -- 73. சந்திகளாவன எவை?

விகாரம்

74. விகாரங்களாவன, மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்களும், நெட்டெழுத்தை கற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தை தொகுத்தலும் ஆம்.

தோர்வு வினா - 74. வகாரங்களாவன எவை?

பதவியல் முற்றிற்று

3. புணரியல்

75. புணர்ச்சியாவது, நிலைமெழியும் வருமொழியும் ஒன்டுபடப்புணர்வதாம்.

76. அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல் வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும்.

77. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம்.

உ-ம்.
வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி

மரம்வெட்டினான் .. ஜஐஸ மரத்தை வெட்டினான்
கல்லெறிந்தான் .. ஜஆல்ஸ கல்லாலெறிந்தான்
கொற்றன்மகன் .. ஜகுஸ கொற்றனுக்கு மகன்
மலைவீழருவி .. ஜஇன்ஸ மலையின் வீழருவி
சாத்தான்கை .. ஜஅதுஸ சாத்தனதுகை
மலைநெல் .. ஜகண்ஸ மலையின்கணெல்

78. அலவழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். ஆது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்களுக்கு உதாரணம்

(1) கொல்யானை .. வினைத்தொகை
(2) கருங்குதிரை .. பண்புத்தொகை சாரைப்பாம்பு .. இருபெயரொட்டுப் பண்புத் தொகை
(3) மதிமுகம் .. உவமைத் தொகை
(4) இராப்பகல் .. உம்மைத் தொகை
(5) பொற்றொடி .. அன்மொழித் தொகை

தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணம்

(1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர்
(2) சாத்தவா .. விளித் தொடர்
(3) வந்தான் சாத்தன் .. தொரிநிலை வினைமுற்றுத் தொடர்
(4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர்
(5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர்
(6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர்
(7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர்
(8) நனிபேதை .. உரிச்சொற்றொடர்
(9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர்

79. இப்படி மொழிகள், வேற்றுமை வழியாலும், அல்வழியாலும், புணருமிடத்து, இயல்பாகவாயினும், விகாரமாகவாயினும் புணரும்.

80. இயலபு புணர்ச்சியாவது, நிலைமொழியும், வருமொழியும், விகாரமின்றிப் புணர்வதாம்.

உ-ம்.
பொன்மணி சாத்தன்கை

81. விகாரப்புணர்ச்சியாவது, நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விரு மொழிமேனும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றையாயினும் பெற்றுப் புணர்வதாம்.

உ-ம்.
வாழை 10 பழம் ஸ்ரீ வாழைப்பழம் தோன்றல்
மண் 10 குடம் ஸ்ரீ மட்குடம் திரிதல்
மரம் 10 வேர் ஸ்ரீ மரவேர் கெடுதல்
நிலம் 10 பனை ஸ்ரீ நிலப்பனை கெடுதல், தோன்றல்
பனை 10 காய் ஸ்ரீ பனங்காய் கெடுதல், தோன்றல், திரிதல்

82. தோன்றல், திரிதல், கெடுதல், என்னும் இவ் விகாரமூன்றும், மயக்க விதி இன்மை பற்றியும், அல்வழி வேற்றுமைப் பொருணோக்கம் பற்றியும் வரும்.


தேர்வு வினாக்கள்- 75. புணர்ச்சியாவது யாது? 76. அப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 77. வேற்றுமைப்புணர்ச்சி யாவது யாது? 78? ஆல்வழிப் புணர்ச்சியாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 79. மொழிகள், வேற்றுமை வழியாலும் அல்வழியாலும் புணருமிடத்து, எப்படி புணரும்? 80. இயல்பு புணர்ச்சியாவது யாது? 81. விகாரப் புணர்ச்சியாவது யாது? 82. தோன்றல் முதலிய விகாரங்கள் எவை பற்றி வரும்?


மயங்கா எழுத்துக்கள்

83. உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிhPற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும்.

உடம்படு மெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய், நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்யெனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன் படுத்தலெனினும் ஒக்கும்.

84. மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின், நிலைமொழியீற்றேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.

85.மொழிக்கு ஈராகுமெனப்பட்ட பதிகொருமெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம் :-

லகர ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. ணுகர னகரங்களழன் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. முகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் இரண்டும் மயங்கா ஞகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. நுகரத்தின் முன்னே தகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. வுகரத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா.

தேர்வு வினாக்கள் - 83. உயீறிற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்? உடம்படுமெய்யாவது யாது? உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோ? 84. மெய்யீற்றின் முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின் எப்படியாகும்? 85. லகர ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ணகர னகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? மகரமெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? நகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? வகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?

மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல்

86. தனிக்குற்றெழுத்தைச் சாரத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும்.

உ-ம்.
ஆண் 10 அழகு ஸ்ரீ ஆணழகு
மரம் 10 உண்டு ஸ்ரீ மரமுண்டு

87. தனிக்குற்றெழுத்தை ச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்: இரட்டித்த மெய்யீற்றின் மேல் வந்தவுயிர் ஏறும்.

உ-ம்.
கல் 10 எறிந்தான் ஸ்ரீ கல்லெறிந்தான்
பொன்; 10 அழகியது ஸ்ரீ பொன்னழகியது

தேர்வு வினாக்கள்- 86. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்? 87. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?




உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்


88. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.

உ-ம்.
கிளி; 10 அழகு ஸ்ரீ கிளியழகு
தீ 10 எரிந்தது ஸ்ரீ தீயெரிந்தது
பனை 10 ஓலை ஸ்ரீ பனையோலை

89. அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.

உ-ம்.
பல 10 அணி ஸ்ரீ பலவணி
பலா 10 இலை ஸ்ரீ பலாவிலை
திரு 10 அடி ஸ்ரீ திருவடி
பூ 10 அரும்பு ஸ்ரீ பூவரும்பு
நொ 10 அழகா ஸ்ரீ நொவ்வழகா
கோ 10 அழகு ஸ்ரீ கோவழகு
கௌ 10 அழகு ஸ்ரீ கௌவழகு

கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.

உ-ம்.
கோ 10 இல் ஸ்ரீ கோயில்
ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.

90. ஏகாரவுயிhPற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.

உ-ம்.
அவனே 10 அழகன் ஸ்ரீ அவனேயழகன்
சே 10 உழுதது ஸ்ரீ சேவுழுதது

தேர்வு வினாக்கள்- 88. இ, ஈ, ஐ எ;ஏம் மூன்றுயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்? 89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்? கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ? 90. ஏகாரவுயிhPற்றின் முன் உயிர் முதன்மொழி வந்தால் எப்படி புணரும்?

குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

91. குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்: யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.

உ-ம்.
ஆடு 10 அரிது ஸ்ரீ ஆடரிது
நாகு 10 யாது ஸ்ரீ நாகியாது

குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் இல்லாமையால், சம்பு, இந்து முதலிய வட மொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படு மெய் தோன்றும்.

உ-ம்.
சம்பு 10 அருளினான் ஸ்ரீ சம்புவருளினான்
இந்து 10 உதித்தது ஸ்ரீ இந்துவுதித்தது

தேர்வு வினாக்கள்- 91. குற்றியலுகரத்தின் முன் உயிர் வந்தால் எப்படியாம்? குற்றியலுகரத்தின் முன் யகரம் வந்தால் எப்படியாம்? குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் உண்டா இல்லையா? வுட மொழிகளின் ஈற்றுகரத்தின் முன் உயிர் வரின் எப்படியாம்?


சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

92. சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும்.

உ-ம்.
கதவு 10 அழகு ஸ்ரீ கதவழகு
கதவு 10 யாது ஸ்ரீ கதவியாது
தேர்வு வினா -- 92.முற்றியலுகரங் குற்றியலுகரவீற்று விதி பெறாதா?

எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்

93. உயிரும் மெய்யுமாகிய எல்லாவீற்றின் முன்னும் வரும் ஞ ந ம ய வ க்கள், இருவழியினும், இயல்பாம்: ஆயினும் இவற்றுள் ண ள ன ல என்னும் நான்கின் முன்னும் வருநகரந் திரியும். இத்திரிபு மேற் கூறப்படும்;

வின, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கௌ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், என்னும் நிலைமொழிகளோடு, அல்வழிப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, என்னும் வருமொழிகளையும், வேற்றுமைப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, என்னும் வருமொழிகளையும் கூட்டிக்கண்டு கொள்க.

உ-ம்.
விள 10 ஞான்றது ஸ்ரீ விளஞான்றது
உரிஞ் 10 ஞான்றது ஸ்ரீ உரிஞ10ஞான்றது
விள 10 ஞாற்சி ஸ்ரீ விளஞாற்சி
உரிஞ் 10 ஞாற்சி ஸ்ரீ உரிஞ10ஞாற்சி

நிலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அல்வவ்வீற்றிற் கூறும் விதியாற் பெறப்படும்.

94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்ஃ

உ-ம்.
மெய் 10 ஞானம் ஸ்ரீ மெய்ஞ்ஞானம்
செய் 10 நன்றி ஸ்ரீ செய்ந்நன்றி
கை 10 மாறு ஸ்ரீ கைம்மாறு

95. நொ, து என்னும் இவ்விரண்டும் முன் வரும் ந ம ய வக்கள் மிகும்.

உ-ம்.
நொ 10 ஞௌ;ளா ஸ்ரீ நொஞ்ஞௌ;ளா
யவனா ஸ்ரீ நொய்யவனா
து 10 ஞௌ;ளா ஸ்ரீ துஞ்ஞௌ;ளா
யுவனா ஸ்ரீ துய்யவனா
நோ - துன்பப்படு, து- உண்

தேர்வு வினாக்கள்- 93. எல்லாவீற்றின் முன்னும் ஞ ந ம ய வக்கள் வந்தால் எப்படிப் புணரும்? 94. ஞ ந ம ய வக்கள் எந்த மொழி முன்னும் மிகவோ? 95. நொ, து என்னும் இவ்விரண்டின் முன்னும் ஞ ந ம ய வக்கள் இயல.பேயாமோ?

மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல்

96. யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தாள் இகரச்சாரியை பெறுதலுமுண்டு.

உ-ம்.
வேள் 10 யாவன் ஸ்ரீ வேளியாவன்
மண் 10 யானை ஸ்ரீ மண்ணியானை
வேள்யாவன் என இகராச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம்.

97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் வருமொழி யகரம் வந்தாற் கெடும்.

உ-ம்.
வேய் 10 யாது ஸ்ரீ வேயாது
தேர்வு வினாக்கள் -- 96. யகரமல்லாத மெய்களின் முன் யகரம் வந்தால் எப்படி புணரும்? 97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் முன் யகரம் வந்தால் எப்படிப் புணரும்?

மூன்று சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் நாற்கணமும் புணர்தல்

98. அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.


உ-ம்.
அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை
அம்மலை அம்மலை உம்மலை எம்மலை
அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி
அவ்யபனை இவ்யானை உவ்யானை எவ்யானை
அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர்


99. அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும்.

உ-ம்.
அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல்

தேர்வு வினாக்கள்- 98. அ, இ, உ என்னும் மூன்று கட்டின் முன்னும், எகரவினா முன்னும் யகரமொழிந்த மெய்கள் வந்தால், எப்படி புணரும்? இந்நான்கன் முன்னும் யகரமும் உயிரும் வந்தால் எப்படிப் புணரும்? 99. அந்த, இந்த, உந்த, எந்த என்னும் மரூஉமொழிகளின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?

உயர்தினைப் பொதுப் பெயர்களின் முன் வல்லினம் புணர்தல்

100. உயர்தினைப் பெயாப் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகரமெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம்.

உ-ம்.
அல்வழி வேற்றுமை
நம்பிக்குறியன்
விடலைசிறியன்
செய்பெரியன்
அவர் தீயர் நம்பிக்கை
விடலை செவி
சேய்படை
அவர்தலை உயர்தினைப் பெயர்
சாத்திகுறியள்
சாத்திகுறிது சாத்திகால் போதுப்பெயர்
தந்தைசிறியன்
தந்தைசிறிது தந்நைசெவி
தாய்பொடியாள்
தாய்கொடிது தாய்கை
ரகரமெய் பொதுப்பெயர்க்கு ஈறாகாது


நும்பிக்கொற்றான், சாத்திப் பெண், சேய்க்கடவுள், தாய்ப்பசு என இருபெயரொட்டுப் கண்புத்தொகையினும், தாய்க்கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையினும் வல்லின மிகுமெனக்கௌ;க.

முகப்பிறந்தது, மகப்பெற்றாள், எ-ம். பிதாக்கொடியன்.பிதாக்கை, எ-ம். ஆடுச்சிறியன், ஆடுச்செவி, எ-ம். கோத்தீயன், கோத்தலை, எ-ம். அகர, ஆகார ஊகார ஓகாரங்களின் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகுமெனக் கொள்க.

101. உயர்திணைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகர மெய்கள், வல்லினம் வந்தால் இருவழியினுந் திரியாதியல்பாம்.


உ-ம்.
அல்வழி வேற்றுமை

தேன்றல்குறியன்
அவள்சிறியள்
அவன்பெரியான் தோன்றல்கை
அவள்செவி
அவன்பொருள் உயர்திணைப் பெயர்
ணகரமெய் உயர்திணைப்பெயர்க்கு ஈறாகாது.
தூங்கல் குறியன்
தூங்கல் குறிது தூங்கல் கை பொதுப் பெயர்
மகக்கள் சிறியர்
மக்கள் சிறிய மக்கள் செவி
ஆண் பெரியன்
ஆண் பெரிது ஆண்புறம்
சாத்தன் சிறியன்
சாத்தன் சிறிது சாத்தன் செவி

உயர்திணைப் பெயாPற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.

லகர ளகரங்களின் முன்னும், ணகர னகரங்களின் முன்னும், தகரம் மயங்குதற்கு விதியில்லாமையால், வரும் விகாரம் மேற்கூறப்படும்.

தேர்வு வினாக்கள் - 100. உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வல்லினம் வரின் எப்படிப் புணரும்? இவைகளின் முன் வரும் வல்லினம் எந்தவிடத்தும் மிகவோ? 101. உணர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்று லபர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்? இவைகள் வல்லினம், வந்தால் எவ்விமத்துந் திரியாவோ?

சில வுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணர்தல்

102. னகலர லகரவீற்றுச் சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணருமிடத்து, உம்மைத் தொகையினும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையினும் ஆறாம் வேற்றமைத் தொகையினும், நிலைமொழியேனும், இவ்விரு nhழியுமெனும், விகாரப்படும்.

உ-ம்.
உம்மைத் தொகை

கபிலன் 10 பரணன் ஸ்ரீ கபிலபரணர்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

சிவன் 10 பெருமான் ஸ்ரீ சிவபெருமான்
முருகன் 10 கடவுள் ஸ்ரீ முரகக்கடவுள்
சதாசிவன் 10 நாவலன் ஸ்ரீ சதாசிவ நாவலன்
கந்தன் 10 வேள் ஸ்ரீ கந்தவேள்
வேலாயுதன் 10 உபாத்தியாயன் ஸ்ரீ வேலாயுதவுபாத்தியாயன்
தியாகராசர் 10 செட்டியர் ஸ்ரீ தியாகராசச் செட்டியர்
விநாயகர் 10 முதலியார் ஸ்ரீ விநாயகமுதலியார்



வேற்றுமைத் தொகை

குமரன் 10 கோட்டம் ஸ்ரீ குமரகோட்டம்
குமரக்கோட்டம்
வாணியர் 10 தெரு ஸ்ரீ வாணியத்தெரு
வேளாளர் 10 வீதி ஸ்ரீ வேளாளவீதி

தேர்வு வினாக்கள்- 101. எல்லாவுயர்தியைப் பெயரும், நாற்கணங்களோடு புணருமிடத்து, இயல்பாகவே புணருமொ?

விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல்

103. விளிப்பெயாPற்று உயிர் முன்னும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆப் பெயாPற்று லகர ளகர ணகர னகரங்கள் வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.

உ-ம்.
புலவபாடு சாத்தா கேள்
நம்பிசெல் தம்பீ தா
வேந்து கூறு மகனே படி
விடலை போ நங்காய் பார்
நாய்கீர் சென்மின் நாய்காய் பார்
தோன்றல் உறாய் மக்கள் சொல்லீர்
ஆண் கேளாய் கோன் பேசாய்

விளக்கொடியை, பிதாகடகூறாய், ஆடூச் சொல்லாய், சேச்சொல்லாய், கோப்பேசாய், என அகர ஆகார ஊகார ஏகார ஓகாரங்களை இயல்பீறாகவுடைய விளிப்பெயர் முன் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.

தேர்வு வினாக்கள்- 103. விளிப் பெயாPற்று உயிர் முன்னும், யரழ மெய் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்? வுpளிப்பெயாPற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? விளிப்பெயர் முன் வரும் வல்லினம் எவ்விடத்தும் மிகவோ?

ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல்

104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யபவினா முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.

உ-ம்.
அவனா கொண்டான் அவனே சென்றான்
அவனோ தந்தான் யா பெரிய

தேர்வு வினாக்கள்- 104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்

105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள் திரியாதியல்பாம்.

உ-ம்.
தெரிநிலை வினைமுற்று

உண்டன குதிரைகள் உண்ணா குதிரைகள்
வருதி சாத்தா வந்தனை சாத்தா
வந்தது புலி வந்தாய் பூதா
உண்டீர் தேவரே உண்டாhட தேவர்
உண்பல் சிறியேன் உண்டாள் சாத்தி
வந்தேக் சிறியேன் வந்தான் சாத்தன்

குறிப்பு வினைமுற்று

கரியன குதிரைகள் வில்லி சாத்தா
கரியது தகர் கரியை தேவா
கரியாய் சாத்தா கரியீர் சாத்தரே

கூயிற்றுக் குயில், குநற்தாட்டுக் களிறு என வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வனை முற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.

ஏவலொருமை வினைமுற்று

நட கொற்றா வா சாத்தா
எறி தேவா கொடு பூதா
ஓடு கொற்றா வெஃகு சாத்தா
பரசு தேவா நடத்து பு_தா
அஞ்சு கொற்றா எய்து சாத்தா
வனை தேவா செய்கொற்றா
சேர் சாத்தா வாழ் பூதா
நில் கொற்றா கேள் சாத்தா
உண் கொற்றா தின் சாத்தா



நொ, து என்னும் ஏவலொருமை வினைமுற்றிரண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

உ-ம். நொக்கொற்றா துச்சாத்தா

வினைத்தொகை

விரிகதிர் ஈபொருள்
அடுகளிறு வனைகலம்
ஆடு பாம்பு அஃகுபிணி
பெருகுபுனல் ஈட்டுதனம்
விஞ்சுபுகழ் மல்கு சுடர்
உண்கலம் தின்பண்டம்
கொல்களிறு கொள்கலம்
செய்கடன் தேர்ப்பொருள்
வீழ்புனல்

ஏவலொருமை வினைமுற்றும் வினைத் தொகையும் வன்றொடர்க் குற்றியலுகரவீற்றனவாயினும், அவற்றின் முன் வரும் வல்லினம் மிபாமை காண்க.

ணகர ழகரவீறுகள், வினைத் தொகைக்கும் ஏவன் முற்றுக்குமன்றி, மற்றை வினை முற்றுக்களுக்கு இல்லை. லகர வீறு குறிப்பு வினை முற்றுக்கு இல்லை.

தேர்வு வினாக்கள்- 105. வினைமுற்று வினைத் தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? ஆச் சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகலங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்? வுல்லினம், எந்த வினை முற்றின் முன்னும் மிகவோ? வுன்றொடர்க் குற்றியலுகரவீற்று ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகுமோ? ஏந்த ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகவோ?

பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்

106. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா. ஈற்றுயிர் மெய் கெட்டு ஈகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.

உ-ம்.
உண்ட கொற்றன் கரிய டிகாற்றன்
உண்ணாத குதிரை இல்லாத குதிரை
உண்ணாக் குதிரை இல்லாக் குதிரை

தேர்வு வினாக்கள்- 106. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? ஈற்றுயிர்மெய் கெட்டு ஆகார விறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?

வினைடியச்சத்தின் முன்வல்லினம் புணர்தல்

107. இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

உ-ம்.
தேடிக்கொண்டான் போய்க்கொண்டான்
உண்ணாச்சென்றான் உண்ணுhச் சென்றான்
உண்டெனப்பசஜ தீர்ந்தது உண்ணப் போனான்
மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான்
உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான்
அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செண்வான்

108. இய, இயர், Nமு, டை என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.

உ-ம்.
உண்ணிய சென்றான் உண்ணியா சென்றான்
உண்ணாமே போனான் உண்ணாமை போனான்

109. வன்றொடர்க்குற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்: மற்றைக் குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.

உ-ம்.
அடித்துக் கொன்றான் உண்பாக்குச் சென்றான்
பொருது சென்றான் நடந்து போனான்
எய்து கொன்றான் அவனல்லது பேசுவார் யார்

துவ்விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினமிகும்.

உ-ம்
உண்ணாப் போனான்

110. வினையெச்சத்தீற்று னகர லகரங்கள், வல்லினம் வந்தால், றகரமாகத் திரியும்: வான் பான் இரண்டுந் திரியா.

உ-ம்.
வரிற்கொள்ளும் உண்டாற்கொடுப்பேன்
அறிவான்சென்றான் உண்பான் போனான்

தேர்வு வினாக்கள்- 107. எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்? 108. எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா? 109. வன்றொடர்க் குனுற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? வன்றொடரழிந்த குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? துவ் விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? 110. வினையெச்சத் தீற்று னகர லகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்? எல்லா வினையெச்சத் தீற்று னகரமும் வல்லினம் வந்தாற்றிரியுமொ?

இ உ ஐ யொழிந்த உயிரீற்றஃறிணைப் பெணர் முன் வல்லினம் புணர்தல்

111. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, என்னும் ஆறயிரீற்றஃறிணைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.

உ-ம்.
அல்வழி வேற்றுமை

விளக்குறிது விளக்கோடு
தாராச்சிறிது தாராச்சிறை
தீச்சுடும் தீச்சுவாலை
கொண்மூக்கரிது கொண்மூக்கருமை
சேப்பெரிது சேப்பெருமை
கோச்சிறிது கோச்செவி

112. அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும்: வகரவைகாரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகா.

உ-ம்.
அல்வழி வேற்றுமை

பல போயின பல படைத்தான்
சில சென்றன சில சொற்றான்
உள்ளன குறைந்தன உள்ளன கொடுத்தான்
உள்ளவை தகர்ந்தன உள்ளவை தந்தான்

பல சில என்னும் இரு பெயருந் தம் முன்னே தாம் வரின், வருமொழி முதலெழுத்து இயல்பாகியும், மிக்கும், நிலைமொழியீற்றின் அகரங்கெட லகரம் றகரமாகத் திரிந்துந் தியாதும், வரும்.

உ-ம்.
பலபல பலப்பல பற்பல பல்பல
சிலசில சிலசில சிற்சில சில்சில

பல, சல என்னும் இரு பெயர் முன்னும் பண்புத் தொகையிற் பிற பெயர் வரின், நிலை மொழியீற்றின் அகரங்கெடாதுங் கெட்டும் வரும்.

உ-ம்.
பல்கலை பல்கலை சிலகலை சில்கலை
பலமலை பனடமலை சிலமலை சின்மலை
பலயானை பல்யானை சிலயானை வில்யானை
பலவணி பல்லணி சிலவணி சில்லணி

113. ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன்வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்.

உ-ம்.
ஆ தீண்டிற்று மா சிறிது ஆமா பெரிது பீ கிடந்தது நீ பெரியை
மா - இங்கே வலங்கு. ஆமா - காட்டுப்பசு

114. பூ என்னும் பெயர் முன் வரும் வல்லெழுத்து மிகுதலேயன்றி இனமெல்லெழுத்தும் மிகும்.

உ-ம்.
பூங்கொடி பூங்கரும்பு

பூ என்பது மலருக்கும் பொலிவுக்கும் பெயர். முலர்ப்பொருளில் வேற்றுமை: பொலிவுப் பொருளில் அல்வழி.

தேர்வு வினாக்கள் - 111. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஒ என்னும் ஆறயிரீற்று அஃறிணைப் பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? 112. அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர், வகரவைகாரவீற்றஃறிணைப் பன்மைப்பெயர் என்மும் இவைகளின் முன் வரும் வல்லினமும் மிகுமோ? புல, சில என்னும் இரு பெயருந் தம்முன்னே தாம் வரின் எப்படி புணரும்? இவ்விரண்டின் முன்னும் பண்புத்தொகையிற் பிறபெயர் வரின் எப்படி புணரும்? 113. ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? 114. பூ என்னும் பெயர் முன் வல்லினம் மிகுதலேயன்றி வேறு விதுயும் பெறுமோ?

முற்றியலுகர வீற்றுப் பெயர் முன் வல்லினம் புணர்தல்

115. முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
பசுக்குறிது பசுக்கோடு

116. முற்றியலுகர வீற்று அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்பெயர் முன்னும், எது என்னும் வினாப் பெயர் முன்னும், ஒரு, இரு, அறு, எழு என்னும் விகாரவெண்ணுப் பெயர் முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.

உ-ம்.
அல்வழி வேற்றுமை

அது குறிது அது கண்டான்
இது சிறிது இது சொற்றான்
உது தீது உது தந்தான்
எது பெரிது எது பெற்றான்

அல்வழி

ஒருகை, இருசெவி, அறுகுணம், எழுகடல்

தேர்வு வினாக்கள்- 115. முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வல்லினம் வரின் எப்படி புணரும்? 116. முற்றியலுகரவீற்றுச் சுட்டுப்பெயர் முன்னும், வினாப்பெயர் முன்னும், விகார வெண்ணுப்பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படி புணரும்?

இ ஐ ர ழ வீற்றஃறிணைப் பெயர்முன் வல்லினம் புணர்தல்

117. இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ வொற்றுக்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும், மிகும் எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் மிகவாம்.

உ-ம்.

கரிக்கோடு
நாய்க்கால் யானைச்செவி
தேர்த்தலை பூழ்ச்செவி வேற்றுமை
மாசித்திங்கள்
மெய்க்கீர்த்தி சாரைப்பாம்பு
கார்ப்பருவ