| ஈழநூல் 79 | |
| நூல் |
நாடகம் நான்கு (பகுதி 1, பகுதி 2) |
| ஆசிரியர் |
சி.மௌனகுரு, நா.சுந்தரலிங்கம், இ.முருகையன், இ.சிவானந்தன் |
| மின்னூலாக்கம் |
இ. பத்மநாப ஐயர் |
| மின்பதிப்பு | ஈழநூல் |
நாடகம் நான்கு
சி.மௌனகுரு, நா.சுந்தரலிங்கம், இ.முருகையன்,
இ.சிவானந்தன்.
பகுதி
2
--------------------------------------------------------------------------------------
முருகையனின்
கடூழியம்
கவிதை
நாடகம்
முதல் மேடையேற்றம்
காலம்: 1971-03-03
இடம்:
கொழும்பு, ஹக்லொக் நகர் லும்பினி அரங்கு
தயாரிப்பு:
கூத்தாடிகள்
நெறியாட்சி: நா. சுந்தரலிங்கம்
நடிகர்:
பாங்கன்
: இ.சிவானந்தன்
சயந்தன் : நா.சுந்தரலிங்கம்
கணக்கர்: நா.
சிவபாலன்
மேலாளர்: இர.சிறினிவாசன்
வீரவாகு தேவர்:
த.சிதம்பரநாதன்
இராசாக்கள்: வே.சங்கரசிகாமணி
ந.துரைசிங்கம்
பணியாட்கள்:
இ.சத்தியநாதன்
அ.சத்தியகீர்த்தி
இராணுவ வீரர்:
தை.திருவாதவூரர்
பூ.வேலுப்பிள்ளை
இணுவை ஸ்ரீரங்கன்.
கடூழியம்
I
மரஞ்செடி கொடிகளோ கட்டிடங்களோ இல்லாத
பரந்தவெளி. பல அளவுகளில் நாலைந்து பாறைகள் மட்டும் பின் மேடையில் உள்ளன. இரண்டு
பெரிய பாறைகளுக்கு நடுவே பின் நடு மேடைக்குச் சற்று வலப்புறமாக ஒரு நடைபாதை
செல்கிறது. சயந்தன், பாங்கன் என்னும் இருவர் இந்தப் பாதை வழியாற் பின்புறம் சென்று.
தாம் கொண்டு செல்லும் கூடைகளில் எத்தனையோ இட்டு நிரப்பிச் சுமந்துகொண்டு வந்து,
வலப்பக்க முன்மேடையில் உள்ள லொறியில் ஏற்றுகிறார்கள். மேடையில் லொறியை அமைத்துக்
காட்டுவது அவசியமில்லை. வேண்டுமானால் அதில் ஒரு பகுதி சபையோருக்குத் தெரிவதாகக்
காட்டலாம். சயந்தன், பாங்கன் என்போரின் உடைகள் எந்த நாட்டுக்கு உரியவை, எந்தக்
காலத்துக்கு உரியவை என்று குறித்துச் சொல்ல இயலாத வகையில் இருத்தல் வேண்டும்.
அவர்களின் உடை பின்வருமாறு: தோல் போல ஆடை; தொடையில் ஒரு வார்ப்பூட்டு, கால் மேசு,
நெஞ்சுவரைக்கும் இறங்கிப் பளீர் விரிக்கும் பொற்பதக்கம் கோத்துப் புனைந்த
மணிச்சங்கிலி. இந்தச் சங்கிலி முக்கியமானது. இதன் பின்புறத்தில், சயந்தனுக்கும்
பாங்கனுக்கும் தெரியாமல் ஒரு தொக்டுப்பு இருக்கிறது, அதிலிருந்து தொடங்கித்
தொடர்ந்து செல்லும் சங்கிலி இவர்களைக் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. தாங்கள்
கட்டப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது.
மேடையின் வலப்பக்க முன்
மூலையில் ஒரு மேடு உண்டு. அதிலே கணக்கர் என்பவர்- மிக உதாžனமாக உடையணிந்த ஒரு
தூங்கற் பேர்வழி- அமர்ந்திருக்கிறார். பக்கத்திலே ஒரு கூடையில் வெந்நீர்ப்போத்தில்,
சிகரட்டுகள், வேறும் சில பொருள்கள் உள்ளன, சில போத்தில்கள் கிளாசுகளும் அவர்
வைத்திருக்கிறார். அவர் கழுத்தில் பைனோக்குலார் கருவியொன்று வார்த்தடத்தினால்
மாட்டப்பட்டிருக்கிறது. நாடகத்தின் பெரும்பகுதியில் கணக்கர் தூங்கிக்கொண்டே
இருக்கிறார்.
திரை உயர்ந்ததும் சில நிமிடங்களுக்குச் சயந்தனும் பாங்கனும்
மும்முரமாக வேலையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறிருக்கும் ஒரு நிலையில் அவர்களை
'உறைவித்து', பின்னணியில் ஒரு பாட்டு ஒலிக்கிறது.
பாட்டு-
தொழிலாளன் தேவாதி தேவன் - அவன்
துணையாலே புவிமீது பொருள் யாவும்
மேவும்
அழகான மணியாடை தருவான்- உண்ண
அமுதான உணவோடு குளிர்பானம்
பொழிவான்
எழுமாடி நிலைவீடு புரிவான்- இவன்
இழிவான துயர்போக உலையாது
பொருவான்
தொழிலாளன் தேவாதி தேவன்....
அவர்கள் நன்றாகக்
களைத்துவிட்டார்கள். உடைகள் கசங்கியும் தலை குழம்பியும் உள்ள அவர்களின் சோர்வு,
அவர்களுடைய அங்க அசைவுகளினாலே மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. முதல் ஒரு தடவை
கூடையைத் தோளிலே வைத்தபடி விரைவாகக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். பின்னர் ஆறுதலாக
ஒருதடவை (சோர்வுடன்) அதையே செய்கிறார்கள்.
பாங்கன்: தண்ர்
விடாய்க்குதா?
சயந்தன் : சாய்....சாய்...
பாங்கன் ஓமோம்,
தேவையானால், தராமலா விடுவார்?
சயந்தன்: சங்கிலி மிகவும் தரத்திற் சிறந்தது.
ஐயம் எனக்கதில் இம்மியும் இல்லை.
பாங்கன்: பளபள பள எனப் பகட்டிடும்
சங்கிலி!
பூணக் கிடைத்தது புண்ணியப் பேறு.
பொன்னில் நான் புரள்கிறோம்;
பொன்னில் நான் புரள்கிறோம்.
அடடா ஒவ்வொரு குண்டிலும் எத்தனை
சுடரொளிப்
பளிச்சு! தூண்டாச் சுடர் அது.
சுடர் ஒளி, சுடர் ஒளி! தூண்டாச் சுடர் ஒளி.
அவன் இளைத்துப் போய்விட்டான். பேசியதால் அவனுக்கு மூச்சு வாங்குகிறது.
சயந்தன்: உனக்கு வேண்டுமா தண்ர்?
பாங்கன்: வேண்டாம்.
தேவையானால், தராமலும் விடுவாரோ?
சயந்தன்: ஏ! பார் அங்கே.
பாங்கன்:
என்ன?
சயந்தன்: மழை முகில்.
சயந்தன் முகிழைச் சுட்டிக்
காட்டுகிறான். பாங்கனும் ஆவலுடன் வைத்த கண் வாங்காமற் பார்க்கிறான்.
பாங்கன்: ஒரு துளி விழுந்தால் உள்ளம் மகிழ்வேன்.
சயந்தன்: தொண்டை
வரட்சியும் சுகப்படும் அல்லவா?
முகில்மேல் வைத்த கண்களை அகற்றி இருவரும்
ஏமாற்றத்துடன் குளிகின்றனர்.
பாங்கன்: என்ன நேரம்?
சயந்தன்:
எட்டாய் இருக்குமோ?
பாங்கன்: இருக்காது என்றுதான் எனக்குப்
படுகுது.
சயந்தன்: எட்டாய் இருந்தால் எங்கள் தண்ர்
தரப்பட்டிருக்கும்.
தராதபடியால்,
இன்னும் பொழுது வந்திலது
என்றே
நம்புகிறேன் நான்.
நாக்கு.....
சயந்தனின் நாக்கு வெளியே துவண்டு
தொங்குகிறது.
பாங்கன்: பொறு, பொறு.
ஏ, ஏ...என்ன?
ஏன் அது
வெளியே
துவண்டு தொங்குது?
சயந்தன் சும்மா - பொய்;
பொய்!
டக்...டக்...என்ற சப்பாத்தொலி கேட்கிறது.
பாங்கன்:
உஸ்ஸ்...உஸ்ஸ்...
சயந்தன்: ஓ, ஓ!
பாங்கன்: உழைப்பு
மேலாளர்.
மேலாளரும் ஏவலாள்களும் வருகிறார்கள். சயந்தனும் பாங்கனும்
பரபரவென்று வேலை செய்கிறார்கள். மேலாளர் அவர்களை மறித்து, அவர்களுடைய உடம்பைப்
பரிžலனை பண்ணுகிறார்.
மேலாளர்: ஏதடா இன்னம் வேர்வையே காணோம்?
இத்தனை
நேரம் ஆகியும், வியர்த்துளை
சற்றுமே இல்லையே!
பாங்கன்:
தண்ர்.....
மேலாளர்: ஏ, ஏ!
தேவையே ஆனால், தராமலும்
விடுவமோ?
தரப்படவில்லை என்பதால், இன்னும்
உரிய நேரம் வரவில்லை.
இதை நீர்
உணர்ந்து கொள்ளாமல் உளறுநீர் ஆயின்.
கடமையை மறந்த காதகர் ஆகிறீர்.
ஐம்பது
கூடை ஆயினும் இன்னும் சுமந்த பிறகுதான் துளியளவாயினும் தண்ர் தரப்படும்.
(சயந்தனைப் பார்த்து) உமக்கும்தான்...
சயந்தன்: ஐயனே!
மேலாளர்:
அடிக்கடி நீர் உம் மார்பையே பார்க்கிறீர்.
சயந்தன்:
சங்கிலி........
மேலாளர்: அது சரி.
பாங்கன்: எங்களின்
பாக்கியம்.
போக போக்கியப் புண்ணிய வாழ்க்கையின்
சின்னமாய்- எமது சித்தியாய்
உள்ளது.
சுதந்திரம் பரிசாய்த் துலங்கி மிளிர்வது.
சங்கிலி பற்றி நான்
பெருமைப்படுகிறேன்.
அதனாலேதான்....
மேலாளர்: அதை நாம்
உணர்கிறோம்,
உங்கள் பெருமிதம் நியாயமானதுதான்.
ஆயினும், கடமையை அலட்சியம்
செய்வது
சுதந்திரத்துக்கே துரோகமாய் முடியும்.
பாங்கன்: இனிமேல்
இப்படிச் செய்யவே மாட்டோம்.
மேலாளர்: சரி, சரி, போங்கள். மீன் சுமவுங்கள்.
ஐம்பது கூடை ஆயினும், லொறியில் ஏற்றிய பிறகுதான் இனிமேல் ஆறுதல்.
ஓடி ஆடி
முழு மூச்சாய் வேலை செய்கிறார்கள். இடையிடையே டக் டக் டக் என்று மேலாளரின்
சப்பாத்தொலி கேட்கிறது. மேலாளர் போய் லொறியிலே சாமான் ஏற்றப்படுவதைப் பார்க்கிறார்.
சற்று நேரத்தில் அவர் வெளியேறுகிறார். அவர் வெளியேறியதும் வேலை வேகம் சோர்வடைகிறது.
சயந்தனும் பாங்கனும் கூடைகளைக் கீழே போட்டுவிட்டு இருக்கிறார்கள்.
பாங்கன்:
அண்ணே!
சயந்தன்: என்னடா?
பாங்கன்: மூச்சு வாங்குது.
சயந்தன்:
சோர்வு கூடாது, சுதந்திரப்பணியிலே.
பாங்கன்: காப்பை ஒருதரம் மீண்டும்
பாடுவோம்.
சயந்தன்: வேலை தொடங்கும் சமயமும் முடிவிலும் மாத்திரம் தானாம்
காப்புப் பாடுவார் முன்னைப் பழையோர்.
பாங்கன்: மூடர்,
பாவம்!
சயந்தன்: காப்புப் பாடவும் காலமா பார்ப்பார்?
மூச்சு விடவும்
முகூர்த்தமா பார்ப்பார்?
நெஞ்சுக்கு நீதியும் நிமிர்ச்சியும்
எழுச்சியும்
நிறைவும் தருவது காப்புப் பாடலே.
ஆகையால் அதனை எந்த
நேரமும்
எந்த வேளையும் பாடலாம், பாடலாம்.
பாடுதல் வேண்டும், பாடுதல்
வேண்டும்.
மீண்டும் மீண்டும் பாடுதல் வேண்டும்.
வேண்டும் வேண்டும் மீண்டும்
மீண்டும்
வேண்டும் மீண்டும் மீண்டும் வேண்டும்.
பாங்கன்: (செருமி,
கைகூப்பி)
திருப்-‘ற்சங்கிலி...
பொன்னினால் மணியாற் பண்ணிப்
புனைந்த
சங்கிலியே போற்றி.
முன்னைநாள் வினைகள் யாவும்
முடிவுற அருள்வாய்
போற்றி.
என்னை ஆளுடையார் தொண்டில்
இடையறா ஊக்கம் நல்கி
மின்னுவாய் போற்றி;
வாழ்வின்
மெய்ப்பொருட் டுணையே போற்றி.
-
திருப்பொற்சங்கிலி.
முகங்களில் மலர்ச்சி தோன்றுகிறது. சயந்தன் பாங்கனின்
முதுகிலே தட்டுகிறான். அவர்கள் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுகிறார்கள்.
இரண்டாம் தடவை சுபை கொண்டு போகும்போது அவர்களின் வேகம் குறைகிறது.
பாங்கன்:
அண்ணே, அதோபார்.
சயந்தன்: ஆரவன்.
பாங்கன்: அவர்தான்-
வீரவாகு
தேவர் வருகிறார்
வீரவாகு நம் நண்பரா, விரோதியா?
சயந்தன்: நண்பனா? அவனா?
நான் அதை ஒப்பேன்.
நம்பத் தகாதவன். நஞ்சுப் பயல் அவன்.
பாங்கன்: ஆயினும்,
இனிமையாய் அடிக்கடி பேசுவார்.
பாட்டும் பாடுவார், பண்ணிசை
நிபுணர்.
சயந்தன்: பண்ணிசை நிபுணனே ஆயினும் பதகன்.
புன்னெறிச் செல்லும்
போக்கினை ஊக்குவான்,
அடிக்கடி அவன் நம் முயற்சிக்கிடையிலே
வந்து நுழைவது
வருந்தத்தக்கது.
பாங்கன்: உழைப்பு மேலாளரும் அறிந்தால் அதட்டுவார்.
சயந்தன்: இன்றைக்காயினும் உண்மையைச் சொல்லுவோம்.
பாங்கன்: முகத்தை
முறிக்கவும் விருப்பம் இல்லை.
பழகும் முறையிலும் பதமை ஆனவர்
வீரவாகு
தேவர்.
ஆகையால்.....
சயந்தன்: என்ன செய்வது கொஞ்சம்
பொறுப்போம்.
பாங்கன்: முதுகிலே மூட்டை.
சயந்தன்: என்னவாய் இருக்குமோ?
பாங்கன்: இங்கே தான் வருகிறார்?
வந்ததும்
கேட்டுப்பார்ப்போம்
சயந்தன்: கேற்றைத் திறக்கிறான்.
வீரவாகு
தேவர் என்பவர் வருகிறார். படலையைத் திறப்பதும் மூடுவதும் பேசாப்பாவனையில்
நடக்கின்றன. நெடிய வெள்ளைச் சட்டை, கையிலே சில பைகள் உள்ளவர் அவர்.
பாங்கன்: வீரவாகுவா? வாரும், வாரும்,
நீருமா களைத்து நிலைகுலைந்
திருக்கிறீர்?
வீரவாகு: அப்படி ஒன்றும் ஆபத்தில்லை
பழங்கள் ஒருசில பையிலே
உண்டு
மலையிலே ஏறிய சிரமமே தவிர
வேறு யாதும் விக்கினம் இல்லை.
வீரவாகு
தேவர் பழங்களைக் கொடுக்க, சயந்தனும் பாங்கனும் அவைகளைத் தின்கிறார்கள்.
சயந்தன்: இதோ....(பழத்தோலைப் பையினுள் மறைத்துவிடுகிறார்)
எனக்கெல்லாம்
தெரியும் ஐசே!
விளங்கப்படுத்த வேண்டியதில்லை
ஆனால், இப்படி அஞ்சி, அஞ்சி
நீர்
அடங்கிப் போவதும் நல்லாயில்லை.
சயந்தன்:
தொடங்கிவிட்டீரா;தொணதொணப்பதற்கு?
வீரவாகு: இல்லை. நீங்கள்
இளைஞர்-சிறுவர்
முந்திய சரித்திரம் முழுவதும்- சகலதும்
மறந்தே
இருக்கும்...மறந்தே இருக்கும்.
சயந்தன்: (ஒரு மூலைக்கப் போய்)
இந்த
மனிதன் இனிமேல் எங்கள்
பழங்கதை என்று பல பல கூறுவான்.
கேட்க வேண்டிய தலைவிதி
நமக்கும்.
என்ன செய்யலாம்?
பாங்கன்: இரு, இரு கேட்போம்.
வீரவாகு:
பழங்கதை என்று நீர் பகிடி பண்ணுவீர்.
உண்மையை நினைக்க உள்ளமோ வேகும்.
அன்றைய
வாழ்க்கையின் அருமையும் பெருமையும்
மறந்து நீர் இன்று மண்ணிலே
புரள்கிறீர்.
கற்பகப்பைஞ் சோலைக் கடிகமழும் சூழலிலே
அற்புதச் சங்கீதம்
அமர்ந்து நுகர்ந்தபடி
பொற்புடைய ரம்பை, திலோத்தமைகள் ஆடியதன்
விற்பனத்தைக்
கண்டு விளையாடும் வேளையிலே.
கைப்புறத்தில் மின்னும் கணையாழி வில்
எறிக்கத்
தட்டிய செங்கைகள் இவை- சாளையிட்ட செங்கை இவை.
சயந்தன்: ஐயோ,
இவரோ அழவும் தொடங்கிவிட்டார்.
குய்யோ முறையோ குரங்கோ என இரங்கி
ஒப்பாரி
வைப்பார். உது மிகவும் ஆபத்து.
பாங்கன்: மேலாளர் கண்டால், விலா ஒடியும்
எங்களுக்கு
சயந்தன்: தோல்போல ஆடை; தொடையில் ஒரு வார்ப்பூட்டு
கால் மேசு-
வேர்வை களைந்துவிட மேலாளர்
நெஞ்சு வரைக்கும் இறங்கிப் பளீர்
விரிக்கும்
பொற்பதக்கம் கோத்துப் புனைந்த மணிச் சங்கிலி
நாம்
செய்யும்
வினைக்குத் தகுந்த பயனாகக்
கையில் வழங்கிக் கழிக்கப்படும் கூலி
இத்தனையும்
உள்ளோம்.
எதற்கும் நாம் சோர்வடைந்து
குந்தியிருக்கோம்;
குறைவறியோம்.
ஆகையினால்
உங்கள் முணுமுணுப்பை உள்ளபடி
முற்றாய்
வெறுக்கிறோம் ஐயா.
வேண்டாம். போம்.
மேலாளர்
இங்கு வருதற்குரிய
சமயம் இதே.
ஆகையினாற் போங்கள்-அதே, அதுதான் பாதையும்.
கும்பிட்டு
வேண்டுகிறோம்-கோபம் அடையாதீர்.
இம்மட்டும் இங்கே இருந்ததற்கு
நன்றி.
உங்கள்
மாம்பழத்துக்காக மனமார வாழ்த்துகிறோம்.
தேம்பி
அழுதிருக்கத் தேவையில்லை நீர்.
ஆனால்.
எங்கள் பொருட்டாய் இதனைப்
புரிந்துள்ளீர்.
அன்பீர்! அதனால் அதற்கெம் மனமார்ந்த
நன்றி ஒரு கூடை
நவின்றும்மை வேண்டுகிறோம்-
போங்களையா, போங்கள் இனி; போய்ப்
பிறகு
வாருங்கள்.
வீரவாகு: நீங்கள் எனை ஏன் வெறுத்து
விலக்குகிறீர்?
உங்கள் உழைப்பை உறிஞ்சும் அசுரர்களின்
வெங்கொடுமை சற்றும்
உணராது வீணாக
ஏமாந்து போனீரா.
இவர்கள் சதி தொலைத்தால்
செய்யும்
வினைக்குத் தகுந்த பலன் கிடைக்கும்.
நொய்வு தொலையும்.
அந்த நுட்பத்தைப் பின்
ஒரு நாள்
நீரே உணர்வீர்.
சயந்தன்: நிறுத்துமா. போய்
வாரும்.
வீரவாகுதேவர் அவர்களின் நாடியைப் பிடித்து அன்பைத் தெரிவித்துக் கை
குலுக்குகிறார். தமது போருட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்கிறார். பாங்கன் அவருக்கு
உதவி செய்கிறான். சயந்தன் அவர்களைப் பார்த்தபடியே நிற்கிறான். வீரவாகுதேவர்
வெளியேறுகிறார். மூலையில் இருந்த கணக்கர் பைனோக்குலரைக் கழுத்திலே மாட்டியபடி முன்
மேடைக்கு வந்து, சயந்தனையும், பாங்கனையும் உற்றுப் பார்க்கிறார். அவர்கள் இவரைக்
கண்டும் பொருட்படுத்தவில்லை. தம்பாட்டிலே தமது மீன்சுமப்பு வேலையில்
ஈடுபட்டிருக்கிறார்கள். கணக்கர் மறுபடியும் போய் மேட்டில் அமர்கிறார்.
பைனோக்குலரைக் கண்ணிலே வைத்து, வேலையாளரை அவதானித்துத் தம் குறிப்புப் புத்தகத்தில்
எழுதிக் கொள்கிறார். திருப்தியோடு தலை ஆட்டுகிறார். டாண், டாண் என்று மணி
அடிக்கிறது. சயந்தனும் பாங்கனும் வேலையை நிறுத்துகின்றனர். இருவரும் பயபக்தியுடன்
கைகூப்பி நிற்கின்றனர். சயந்தன் பாடுகிறான்.
சயந்தன்:
திருப்பொற்சங்கிலி-
பொன்னினால் மணியாற் பண்ணிப்
புனைந்த சங்கிலியே
போற்றி
முன்னைநாள் வினைகள் யாவும்
முடிவுற அருள்வாய் போற்றி.
என்னை
ஆளுடையார் தொண்டில்
இடையறா ஊக்கம் நல்கி
மின்னவாய் போற்றி;
வாழ்வின்
மெய்ப்பொருட் டுணிவே
போற்றி.
--திருப்பொற்சங்கிலி.
சயந்தனும், பாங்கனும் மூன்று தடவை விரைவாக
வேலை செய்கிறார்கள். நாலாவது தடவை சோர்வுடன் ஆறுதலாக அசைகின்றனர். இடப்புறமிருந்து
மேலாளர் வருகிறார். திடீரென்று நின்று ஊதுகுழல் ஒன்றை எடுத்து ஊதுகிறார், கணக்கர்
திடுக்குற்றுக் கண் விழித்துத் திகைப்படைந்து. 'சல்யூற்' கொடுக்கும் நிலையில்
நிற்கிறார். பின்னர் இடப்புறமிருந்து ஏவலாளனும் இரண்டு இராசாக்களும் வருகிறார்கள்.
ஆடம்பரமாக உடை உடுத்த இவர்களின் நடையிலே செயற்கையான கம்பீரமும் தலைநிமிர்வும்
காணப்படும். ஏவலனின் கையில் ஒரு தட்டமும், அதிர் மதுச்சாடியும் கிண்ணங்களும்
காணப்படும். சயந்தனும் பாங்கனும் வெறுங் கூடையுடன் வந்து குனிந்தபடி நிற்க, மேலாளர்
ஒரு துணியினால் அவர்களின் மேனியிலுள்ள வேர்வையை ஒற்றி எடுத்து, துணியை முறுக்கிப்
பிழிந்து மதுச்சாடியை நிரப்புகிறார். ஏவலன் சாடியிலுள்ள மதுவைக் கிண்ணத்தில் ஊற்றி
இரண்டு இராசாக்களுக்கும் கொடுக்கிறான். அவர்கள் குடித்துவிட்டு ஆடுகிறார்கள்.
ஆடியவாறே அவர்கள் வலப்புறமாக வெளியேற சயந்தனும் பாங்கனும் மறுபடி வேலையைத்
தொடங்குகிறார்கள். இவ்வளவும் பேசாப்பாவனையாக நடக்கிறது. தொடங்குகிறார்கள்.
இவ்வளவும் பேசாப்பாவனையாக நடக்கிறது. கணக்கர் தூக்கத்தில் ஆழ்கிறார்- தமது
வழக்கம்போல. இப்பொழுது மின்மணி ஒலி கேட்கிறது. முன்மேடையின் மேலிருக்கும்
சுப்பியிலிருந்து இரண்டு பெட்டிகள் இறங்குகின்றன. சயந்தனும் பாங்கனும்
மகிழ்ச்சிக்குறி முகத்திலே புலப்பட, ஆசையோடு பெட்டிகளைப் பார்க்கிறார்கள்.
பெட்டிகள் எட்டும் உயரத்துக்கு வந்ததும், தொடையிலுள்ள வார்ப்பூட்டுகனுள்ளிருந்து
ஒவ்வொரு சாவியை எடுக்கிறார்கள். எடுத்துப் பெட்டிகளைத் திறக்கிறார்கள். இரண்டு
போத்தில்கள் இருக்கின்றன. போத்தில்களை எடுத்துப் பார்க்கிறார்கள். அடியிலே சிறிது
தண்ர் மட்டுமே காணப்படுகிறது.
சயந்தன்: என்ன தம்பி, ரொம்ப
கம்மி?
பாங்கன்: தண்ணி ரொம்ப கம்பி-
ஆனதால்,
முதலிலே உணவை முடித்துக்
கொள்ளுவோம்.
பின்னர் பார்க்கலாம் தண்ர்ப் பிரச்சினை.
ஒரு
சாப்பாட்டுச் சிமிழை எடுத்து, சிறு சாவி ஒன்றைப் போட்டுப் பூட்டைத் திறக்கிறார்கள்.
உள்ளே இருந்த ஒரு பாண்துண்டடை எடுத்துப் பார்க்கிறார்கள். பின்னர் மற்றுமோர்
அரைத்துண்டை எடுத்துப் பார்க்கிறார்கள். பிறகு முழுத்துண்டைச் சிமிழுக்குள்
வைத்துவிட்டு, குறைத்துண்டை அங்கலாய்போடு கடித்துக்கொண்டு
பேசுகிறார்கள்.
சயந்தன்: இருக்குமே வழக்கமாய்ப் போதிய தண்ர்!
இன்று
மட்டுமே ஏன் கம்மி?
பாங்கன்: (திரும்பி
உற்றுப்பார்த்து...தரிப்பு...பாணைப்பழையடி
கடித்துக்கொண்டு)
ஓ,
தண்ணியா?
போதாது என்றா நினைக்கிறாய்?
சயந்தன்: (பதைத்து) போதும்
தேவை
ஆனால் தராமலும் விடுவரோ?
காற்போத்தில் தான் இன்றைய பங்கு.
"பங்கீட்டளவுப்
படியே கிடைப்பது
போதும்" என்பதே
சர்வ சுதந்திர தயாள உரிமை சால்
நல்ல நம்
ஆட்சி நடுக்கற நிலைத்திட
இந்தப் பொது விதி ஏற்றிருக்கின்றோம்.
திருப்பொற்
சங்கிலிச் செல்வம் எம் உரிமையாய்
அமைந்திட அருளிய ஆட்சியைப்
போற்றுவோம்.
ஆட்சியின் பெருமையோ அளவிடற்கரியதாம்.
ஆயினும் தலையீடு அணுவும்
இல்லையே!
சர்வ சுதந்திர தயாள உரிமை சார்
நல்ல நம் ஆட்சி நடுக்கற
நிலைத்திட
"பங்கீட் டளவுப்படியே கிடைப்பது
போதும்" என்ற பொது விதி
போற்றுவோம்.
வேலையைச் செய்கிறோம், கூலியை நமது
கண்ணிலே காட்டி எம் கடனையும்
கழிக்கிறார்.
பங்கீட்டுணவையும் பரிவுடன் தருகிறார்.
ஆயினும் தலையீடு அணுவும்
இல்லையே!
"பங்கீட்டளவுப்படியே கிடைப்பது
போதும்" என்ற பொது விதி
போற்றுவோம்.
சயந்தனுக்கு விலக்கல் எடுக்கிறது, போத்திலில் உள்ள தண்ரில்
ஒருதுளியைச் சயந்தனின் மிடற்றினுள்ளே பாங்கன் விடுகிறான்.
சயந்தன்:
போற்...பொதுவிதி போற்றுவோம்
முழுதையும் விடாதே, பிறகும் தேவைதான்.
பாங்கன்: திருப்பொற்சங்கிலிச் சுதந்திரப் பெருமையை
அடிக்கடி சொல்லி நீ
அதனைப் புகழ்வதை
நிச்சயமாக நான் மெச்சுகிறேன் அடா!
அத்துடன் அன்பனே, அன்பனே
நமது
கைத்தலச் சாவியின் மெய்த்திறன் பாடடா.
சயந்தன்: (தோத்திரம் செல்லும்
தொனியில்)
உணவுப் பெட்டியின் சாவியே, உன்னை நாம்
பத்திரமாக நாம்
பாதுகாத்திடுமே,
எங்கள் உணவெலாம் எங்களின் உடைமையாம்.
எங்கள் தண்ர்
எங்களுக்குரியதே.
நீரும் பாணும் நிறைக்கப்படுமிவ்
வுணவுப் பெட்டியைத்
திறக்கவும் பூட்டவும்
உரிமை உடையோம்; உடையவர் நாம் எலாம்.
உடையார் என்பதன்
அடையாளம்போல்
விளங்குவாய் சாவியே, மேன்மை சால் திறப்பே.
திறவுகோல் எனவும்
செப்பப்படும் உன்
திறமையும் முறைமையும் இறைமையும் பெரியதே.
உணவுப் பெட்டியின்
சாவியே!
பத்திரமாய் உனைப் பாதுத்திடுவமே.
சாவியை மேலே உயர்த்திப்
பிடித்து, பின்னர் மூன்று தடவை முத்தமிட்டுவிட்டு, தண்ரையும் குடித்த பிறகு
பெட்டியைப் பூட்டுகிறார்கள். இதற்குள் மின்மணி ஒலி கேட்கிறது. அவர்கள் ஒருவாறு
சமாளித்துக்கொண்டு, சாவியைப் பழையபடி தொடையில் இருக்கும் வார்ப்பூட்டுக்குள்
வைக்கிறார்கள். தூரத்திலே டக், டக் என்ற சப்பாத்தொலி கேட்கிறது. அவர்கள் வேலைக்குத்
தயாராகிறார்கள். பாங்கன் கண்மூடிக் கைகூப்பி நிற்க சயந்தன் காப்புச் சொல்கிறான்.
சயந்தன்: திருப்பொற்சங்கிலி
பொன்னினால் மணியாற் பண்ணிப்
புனைந்த
சங்கிலியே போற்றி.
முன்னை நாள் வினைகள் யாவும்
முடிவுற
அருள்வாய்.....
சட்டென்று மேலாளர் தோன்றுகிறார். ஏதோ செய்யத் தகாததைச்
செய்துவிட்டவன் போல; சயந்தன் திக்குமுக்காடித் தளம்புகிறான். மேலாளர் பரவாயில்லை
என்பது போலச் சைகை காட்டுகிறார். சயந்தன் காப்பைப் பாடி முடிகிறான்.
சயந்தன்: பொன்னினால் மணியாற் பண்ணிப்
புனைந்த சங்கிலியே
போற்றி.
முன்னைநாள் வினைகள் யாவும்
முடிவுற அருள்வாய் போற்றி.
என்னை
ஆளுடையார் தொண்டில்
இடையறா ஊக்கம் நல்கி
மின்னுவாய் போற்றி; வாழ்வின்
மெய்ப்பொருட் டுணையே போற்றி.
-திருப்பொற்சங்கிலி
காப்பு முடிந்ததும்
இருவரும் தம் தியானத்திலிருந்து மீண்டு மேலாளரைப் பார்க்கிறார்கள். அவர் மிடுக்கோடு
பேசுகிறார்.
மேலாளர்: கடமையில் மிகவும் கண்ணாய் இருக்கிறீர்
இதனால் நாம்
மிக இதயம் மகிழ்கிறோம்
பரந்த பொதுநல விருத்தியின் பொருட்டாய்
உங்கள் நலன்களை
ஒறுத்து வருகிறீர்.
மிகவும் உயர்ந்த விழுமிய செயல் இது
ஆயினும் ஒன்றை நாம்
ஞாபகப்படுத்துவோம்.
இவ்வாறுழைப்பது தூய உம் கடமையே!
திருப்பொற்சங்கிலிச்
சேவையின் பெயரால்
புனிதக் கடமையாய்ப் போற்றிட தக்கது.
பூர்வ புண்ணியப்
பேறாய்க் கிடைத்தது.
அந்தக் கடமையிற் சோர்வது பாதகம்.
இசைக்குழு:
(பாட்டாக)
"இவ்வாறுழைப்பது....சோர்வது பாதகம்"
சயந்தன்: இல்லை, நாம்
சோரவே இல்லை.
மேலாளர்: இடையிடை
காப்பினை இசைப்பதால், கடமையின்
ஊக்கம்
மிகுதிப்படுதல் வெளிப்படை ஆதலாம்
காப்புப் பாடுதல் கடமையின்
பகுதியே.
தயக்கமே வெட்கமோ சற்றும் வேண்டாம்.
பாங்கன்: வாழ்க
சங்கிலி!
மேலாளர்: வளர்க நும் தொண்டு.
பாங்கள்: சாவி உரிமைத்
தனித்துவம் வாழிய
சயந்தன்: (மிதப்பாக)
சாவி உரிமைத் தனித்துவம்
வாழிய
மேலாளர் சயந்தனும் பாங்கனும் வேலை செய்வதை கொஞ்சநேரம்
பார்த்துக்கொண்டு நிற்கிறார். பின்ன போகிறார். சயந்தனும் பாங்கனும் வேலையைத்
தொடர்கிறார்கள். கணக்கர் பைனோக்குலரால் நோக்கித் தமது புத்தகத்திலே
பதிந்துகொள்கிறார். ஏவலன் ஒருவன் இரண்டு பத்திரங்களைக் கொண்டுவந்து சயந்தனிடமும்
பாங்கனிடமும் கொடுக்க அவர்கள் அவற்றில் ஏதோ எழுதிவிட்டுத் திருப்பிக்
கொடுக்கிறார்கள்.
இசைக்குழு: (பாட்டு) இவ்வாறுழைப்பது....சோர்வது பாதகம்.
சிறிது நேரம் செல்ல வேலையை நிறுத்திவிட்டுப் பாங்கன் தலையைச்
சொறிகிறான்.
பாங்கன்: அண்ணே!
சயந்தன்: என்ன சங்கதி,
பாங்கன்?
பாங்கன்: (தயங்கி) இல்லை....எனக்குச் சின்னதோர்
ஐயம்.
சயந்தன்: திடீரென ஏது?
பாங்கன்: திடீரென இல்லை.
சிலநாளாய்
இதே சிந்தனை எனக்கு.
உன் பெயர் சயந்தன்-உண்மை தானே?
சயந்தன்:
நிச்சயமாக.
பாங்கன்: ஆனால்; உனது
தந்தையார் இந்திரன் என்றுதான்
சொன்னார்.
வீரவாகுதேவர் முந்தநாள்.
ஒருகால் அதுவும் உண்மையாய்
இருக்குமோ?
சயந்தன்: நேற்றைய நிகழ்ச்சியை நினைவில் வைப்பதே
எனக்கு
மிகவும் சிரமம்.
முந்தநாள்
நடந்ததா எனக்கு ஞாபகம் இருக்கும்?
பாங்கன்:
ஒன்று செய்வமா?
சயந்தன்: என்னது?
பாங்கன்: நாங்கள்
மேலாளரிடம்
கேட்டுப் பார்ப்போம்.
வரவு இடாப்பிலே முழுப்பெயர் இருக்கும்.
அதிலே
பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.
இந்திரன் தானா இல்லையா என்பதை
சயந்தன்:
இந்திரன், சந்திரன்-இதில் ஒரு பெருமையா?
எனக்கிதில் எல்லாம் அக்றை
இல்லை
மேலும் இதெல்லாம் வீண் செயல், வீண் தொழில்.
இன்றைய எனது தேவையோ
உழைப்பு.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
கட்டுப்பாட்டைக் குலைக்க
முயல்வதே
முட்டாள் வீரவாகுவின் முயற்சி.
அடிக்கடி வந்து கலைக்கிறான்
மனத்தை.
கலகம் விரும்புவோன்; கபடம் நிறைந்தவன்.
பாங்கன்: நீயோ அவரை
முழுமையாய் வெறுக்கிறாய்.
எனக்கோ அவரிலோர் கவர்ச்சி உண்டாகுது.
சயந்தன்:
வெள்ளைச் சட்டையை விரும்பினாய் போலும்.
பாங்கன்: வெள்ளைச் சட்டை
மட்டுமா?
சயந்தன்: ஆளிடம்
புத்தியும் கொஞ்சம்......
பாங்கன்:
பொறு, பொறு சற்றே
உண்மையைத் திறந்து சொல்லப்போனால்
அவரைப்போல் ஓர் அறிஞரை
இதுவரை
கண்டதே இல்லை நான்! கண்டதே இல்லை!
சயந்தன்: என்னடா தம்பி
சொல்கிறாய்?
பாங்கன்: வீரவாகு தேவர் ஓர் மேதை.
சயந்தன்: இத்தனை தூரமா
இவரை நீ மதிக்கிறாய்?
பாங்கன்: ஆமாம் அண்ணே! அதில் தவறு
ஏதும்
இருக்குமேயானால் என்னை மன்னிப்பாய்,
சயந்தன்: இல்லை, இல்லை, உன்
இச்சைப்படியே
எண்ணிக்கொள்ளலாம்.
இதுதான் தம்பி.
எண்ணச் சுதந்திரம்
எனப்படும் சலாக்கியம்.
பாங்கன்: அதுசரி அண்ணே. உன் கருத்து
என்ன?
சயந்தன்: எதனைப்பற்றி?
பாங்கன்: இந்த மனிதரின்
போக்குகள்
பற்றி
சயந்தன்: போக்குகள் என்றால்....
அண்ணாந்து தூரப் பார்த்து
யோசிக்க முயல்கிறான். தலையைச் சுரண்டிக்கொண்டு பிறகு எதுவும் ஓடாத பாவனையில்
மிகவும் சிரமப்பட்டு ஏதோ சொல்வதற்காக, சொற்களை மனத்துள்ளே கூட்டி உதடுகளால்
முணுமுணுக்கப் பார்க்கிறான். இயலவில்லை. ஆற்றாமையோடு, அபிப்பிராயம் சொல்லும்
முயற்சியைக் கைவிடுகிறான்.
சயந்தன்: மிகவும் களைத்து நான்
போனேன்
சிந்தனை செய்வதே சிரமமாய் உள்ளது.
வயோதிப காலம் வந்தது
போலும்.
பாங்கன்: வயோதிப கலாமா? உனக்கா?
ž ž,
வாய்கொளாப் பேச்சு! வாய்
கொளாப் பேச்சு!
இந்திரன் மகன் சயந்தனா இப்படி
துர்ச்சகுனம் போற் சொற்களைச்
சொல்வது?
விடுதலை கிடைக்கும் நமக்கும் ஒருநாள்
வீரவாகுத் தூதுவர் கூட
அந்த
நன்னம்பிக்கையை அழுத்திக் கூறினார்.
சயந்தன்: விடுதலை என அவர் எதனைக்
கருதினார்?
பாங்கன்: முழுவதும் எனது மூளையில், தெளிவாய்
ஏறவும் இல்லை-
எனினும், இன்றைய
நிலைமையைக் காட்டிலும் žரிய நிலைமை
உதயமாகும்,
உண்மையோ,
பொய்யோ?
சைக்கிள்மணி அடிக்கிறது. தபாற்காரன் வருகிறான்.
சயந்தன்: ஏது
தபால்கள்?
சயந்தன் இரு தபால்களை வாங்குகிறான். ஒன்றைப் பாங்கனிடம்
கொடுக்கிறான். இதற்கிடையில், பாங்கன் சயந்தனுக்கு வந்த தபாலின் உறையிலுள்ள
விலாசத்தை எட்டி வாசிக்கிறான்.
பாங்கன்: இந்திரன் சயந்தன்.
ஏ, ஏ!
தூதுவர் எமக்குச் சொன்னதும்
உண்மைபோல் தானே தெரியுது, சயந்தா?
சயந்தன்:
என்ன குதிக்கிறாய்!
பாங்கன்: இந்திரன் மைந்தன் நீ.
பென்னம்பெரிய மரபிலே
பிறந்தவன்.
போக போக்கியப் பூரண வாழ்க்கையை
ஆளும் உரிமை அமைந்தவன் நீ தான்.
சயந்தன்: என்வலப் பிதிலே எழுதிய பெயரைக்
கண்டா, இத்தனை கரணம்
அடிக்கிறாய்?
பாங்கன்: ஐயா சயந்தரே! (இருகைகளாலும் சயந்தனின் தோள்களைப்
பற்றி அன்பையும் மதிப்பையும் தெரிவித்து ஆயிரம் வணக்கம்.
இலேசுப்பட்டவர் இல்லையே
தாங்கள்?
இந்திரன் மைந்தர் நீர்- இனிப்பயம் இல்லை.
போக போக்கியப் பூரண
வாழ்க்கையை
ஆளும் உரிமை அமைந்தவர் தாங்கள்.
சயந்தன்: ஆளும் உரிமையா? அதை
ஏன் எமக்கு?
வலிமை என்பது மனிதரைக் கெடுக்கும்.
பாங்கன்: பெரிய
துறவிபோல் பேசுகிறாயே!
சயந்தன்: நாங்கள் செய்யும் பணிக்கு
பரிசாய்க்
சம்பளம் தருகிறார். தண்ர், பாண்வகை
சகல வசதியும் தகுதி
உணர்ந்தே
திருப்திகரமாய்ச் செய்து தருகிறார்
சங்கிலிகூடத்
தந்துள்ளார்கள்.
உணவுப் பெட்டியின் உரிமைச் சாவியும்
எங்களிடமே இருக்க
விட்டுள்ளார்
இத்தனை சலாக்கியம் எமக்குண்டல்லவா?
இதற்குமேல் உரிமையேன்?
எமக்கிதுபோதும்.
ஆளும் உரிமையா? அதை ஏன் எமக்கு?
பாங்கன்: தன் கடிதத்தை
உடைத்துப் பார்க்கிறான்.
பாங்கன்: (கத்துகிறான்)
வங்கிக் கணக்கா
வந்திருக்கிறது?
மாதக்கணக்கில் மர்மமாய்க் கிடந்தது
விடாப்பிடியாக நாம்
வேண்டியபடியால்
இந்தக் கிழமை வந்திருக்கிறது.
(கணக்கை உற்றுப் பார்க்கிறான்.
முகம் சுருங்கி விடுகிறது.)
சிவப்பிலக்கங்கள் ஏன் கணக்கிலே
வருவான்?
சயந்தனும் இதைக் கேட்டுத் துணுக்குறுகிறான். முந்திய
அசமந்தப்போக்குச் சற்றுக்குறைய, கோபக்குறி சிறிதே தோற்றுகிறது.
சயந்தன்:
இந்த என் கணக்கிலும் சிவப்பிலக்கங்கன்
சிவப்பிலக்கங்கள் ஏன் கணக்கிலே
வருவான்?
இதற்கு நாம் விளக்கம் பெறவே வேண்டும்.
சில மணி நேரச் சிறிய
ஒய்வுகள்.
தவிர்த்த மற்றைய சகல வேளையும்
உழைக்கிறோம், அழைக்கிறோம்,
உடம்பால்
உழைக்கிறோம்.
பாங்கன்: இப்படி உழைத்தும் ஏன் நயம்
இல்லை.
இதில் ஒரு கொடிய சூழ்ச்சி இருக்குமோ?
சயந்தன்: (சற்று முன் வந்த
ஆவேசம் தணிந்து விடுகிறது. குளிர்ந்து விடுகிறான்.)
இல்லைப் பாங்கா! இரு நீ
பொறுமையாய்
தக்க காரணம் இருக்கவே செய்யும்.
சங்கிலி உடமையும், சாவி
உரிமையும்
தந்த நம் செவ்விய தயாள மூர்த்திகள்
சூழ்ச்சிகள் அறியார்; தூயவர்
அவர்கள்.
பாங்கன்: அப்பாடியானால் வங்கிக் கணக்கிலே
போமதி அதிகமேன்?
வருமதி குறைவேன்?
சயந்தன்: பழைய கடன்களின் பாரமாய்
இருக்கும்.
பாங்கன்: பழைய கடன் எனில் - பாவிகள் எங்கன்
கூலியை எங்கே
கொண்டுபோச் சேர்க்கிறார்?
இத்தனை கடுமையாய் உழைத்தும்கூட,
கடன் சிறிதேனும்
குறைவதாய்க் காணோம்,
வரவரப் பெருகி வளர்வதே அன்றி,
எமக்கொரு நன்மை இம்மியும்
இல்லையே!
சயந்தன்: தம்பி பாங்கன்! தயவு செய்து நாம்
ஆத்திரப்படாமல்
ஆறுதலாக
எதையும் தீர எடுத்து நோக்குவோம்.
வங்கிக்கணக்கு வந்தது
தொடக்கம்
என் மன அமைதியும் இழுபறிப்படுவது
மெய்தான்-
ஆயினும்,
விசால
பரநலக்
கோட்பாடுடைய குலநலம் வாய்ந்தவர்
ஆட்சிப் பொறுப்பினர்; ஆதலால்
பிழைகள்-
பாரிய, கொடிய பழுதுகள்-இடம் பெற
அனுமதியார்கள். ஐயமே வேண்டாம்.
பாங்கன்: முப்பது முக்கோடி ரூபாய்
(திகைத்துச்
சிலையாகிறான்.)
சயந்தன்: முழி பிதுங்கி
இப்படி ஏன் தம்பி, இனியும் நீ
சோருகிறாய்?
பாங்கன்: அப்பப்பா, அந்த அளவா பழைய கடன்?
எப்படித்தான் இந்த
அளவு கடன் பெருகி
மிக்கு வளர்ந்திருக்கும்?
சயந்தன்:
முழுத்தொகைக்கும்
என்ன விபரம் என நாம் விசாரிப்போம்.
எங்கே என்
பேனை
பாங்கன்: எழுது.
சயந்தன் சேமக்கலமொன்றை எடுத்து ஒரு தாளத்துக்கு
அடிக்கிறான். ஏவலன் ஒருவன் வர, கடதாசி கொண்டு வருமாறு அவனக்குச் சைகை காட்டுகிறான்.
கடதாசி வருகிறது, வாங்கி பாங்கனைக் குனியும்படி செய்து அவன் முதுகிலே கடதாசியை
வைத்து வதவத என்று கடிதம் எழுதுகிறான். "அப்பப்பா அந்த அளவா பழைய கடன்...." என்ற
பாட்டை இசைக்குழு ஒலிக்கிறது. ஒளி மங்குகிறது, பிறகு திரை விழுகிறது.
II
பாங்கன்: (கை காட்டி மகிழ்ச்சி கொண்டு)
வீரவாகு தேவர்
வருகிறார்.
வீரவாகு தேவர் வருகிறார்.
சயந்தன்: வீரவாகுவா? வரட்டும்
வரட்டும்.
பாங்கன்: முன்பு நீ அவரை நம்பவே இல்லை
சயந்தன்: பின்புதான்
எல்லா உண்மையும் வெளித்தது.
பாங்கன்: அன்பிலா மாக்கள்
அவர்கள்-நேற்றுத்
தின்பதன் பொருட்டு, திறந்த பெட்டியுள்
கதைப்பான்
நொருக்கலும் காணவில்லையே!
சயந்தன்: இப்படிப் போனால் - இந்த
றேற்றிலே
ஒட்டறை பிடிக்கும் தண்ர்ப் போத்தலில்!
மின்மினி ஒலிக்கிறது.
உணவுப்பெட்டி இறங்குகிறது.
பாங்கன்: (பழக்கத்தின் பீடிப்பால் வழக்கம் போலக்
காப்புச் சொல்லத் தொடங்குகிறான்)
திருப்பொற் சங்கிலி.
பொன்னால் மணியாற்
பண்ணிப்
புனைந்த சங்கிலியே போற்றி
முன்னைநாள் வினைகள் யாவும்
முடிவுற
அருள்வாய் போற்றி
என்னை ஆளுடையார் தொண்டில்....
சயந்தன் வழக்கம் போலக்
கைகளை இப்போது கூப்பவில்லை. பாங்கனை வெறுப்புடன் பார்க்கிறான். காப்புப் பாட்டு
முடிபை நெருங்க நெருங்க அவன் ஆத்திரம் கட்டு மீறுகிறது. இப்பொழுது வீரவாகுத்தேவர்
ஒரு சூற்கேஸ் ஒரு தூக்குச் செம்பு என்பனவற்றுடன் வருகிறார். பாங்கனின்
காப்புப்பாடலை இடைமறித்து அவன் கூப்பியகரங்களை இழுத்துக் குழப்பி
நிற்பாட்டிவிடுகிறான் சயந்தன்.
சயந்தன்: இனியும் ஒர்காப்பேன்
தம்பி?
பாங்கன்: (பயமும் திருப்தியும் கலக்க)
சின்னவர் பிழைகள்
செய்தால்
சயந்தன்: சிவசிவா, இரங்கவேண்டாம்
வீரவாகு: சாப்பாட்டு வேளை
சமயம் சரியில்லை
போய்ப்பிறகு பின்னால் வரவா?
சயந்தன்: பொறுங்கள்
ஐயா,
எங்கள் உணவு வசதி சவுகரியம்
இங்குள்ள சூழல்- இவை நீங்கள் காண்பதுவும்
மிக்க அவசியம்தான்.
பாங்கன்: வேடிக்கை என்னவென்றால்...
தங்கள்
உணவுப் பெட்டிகளைத் திறந்து, சிமிழ்களை எடுத்துக் கவிழ்க்கிறார்கள். பழைய கரைப்பான்
நொருக்கல்கள் சில கொட்டப்படுகின்றன. சாப்பாட்டுச் சிமிழைக் கவிழ்த்தபடி தடவி அங்கு
ஒன்றும் இல்லாமையை வீரவாகுத் தேவருக்கும் காட்டுகிறார்கள். பின்னர் தண்ர்ப்
போத்தல்களை எடுக்கிறார்கள். அவற்றுள்ளே தண்ர் இல்லை. போத்தலின்
வெளிப்பக்கத்திற் படிந்த தூசியைத் தன் லேஞ்சியாலே துடைத்து, கூறுகிறான் சயந்தன்.
தூசிப்படலம் ஒன்று கிழம்பிப் பறக்கிறது.
சயந்தன்: நாலு நாளாகவே நாங்கள்
முழுப் பசிதான்
வீரவாகு: பட்டினியா என்ன?
பாங்கன்:
பதகர்.
சயந்தன்: குடிப்பதற்குத்
தண்ர் தரவும் தயங்கி
மறுக்கின்றார்.
வீரவாகு: தாகத்தைத் தீர்க்கத் தடையா?
சயந்தன்:
தருக்கு மிக்கார்.
பாங்கன்: நோகத் துயர்கள் பல நூறு எமக்கு மூட்டுகிறார்.
மின்மினி ஒலிக்கிறது. பெட்டிகள் ஏறத்தொடங்குகின்றன.
பாங்கன்: ž,
கெடுவாய்!
(பெட்டிகள் இரண்டையும் கூட்டிப் பிடித்து மேலே போகவிடாமல்
இழுக்கிறான். அவற்றை அறுத்து எறிய முயலுகிறான்.)
பெட்டி வெறும்பெட்€
பெரீஇய
திரவியம்போல்,
கட்டி இழுத்தே உயர்த்தி இறக்குகிறாய்
முட்டாட் பயல் நீ.
ஆனாலும் பெட்டியில் மாட்டிய கயிறு இலேசில் அறவில்லை. அது பாங்கனையும்
இழுத்துக்கொண்டு மேலே போக முயல்கிறது. பாங்கன் சிறிது நேரம் போராடிவிட்டுத்
தொபபென்று விழுகிறான். பெட்யை நிறுத்துவதற்குச் சயந்தனும் முயல்கிறான். இயலவில்லை.
இருவரும் பின்வாங்குகின்றனர், வீரவாகு தேவர் இவற்றைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்.
பின்னர் உணவு பெட்டியுள் வைக்கப்படாது கீழே கிடக்கும் சாப்பாட்டுச் சிமிழையும்
தண்ர்ப் போத்தலையும் எடுத்துச் சின்னத்துடன் வீசி நொறுக்கி நாசஞ்
செய்கிறார்கள். மேலாளர் வருகிறார், வீரவாகுதேவர் பாறைக்குப் பின்னால் மறைகிறார்.
மேலாளர்: முரட்டுத்தனம் என்ன?
ஏது குழப்பம்?
எகிறிக் கிழம்பி
இங்கு
மோதி உடைத்து முறுக்கி அடித்தது யார்?
தீது புகட்டித் திரிபு இதயத்தை
பாங்கன்: பாண் துண்டு கூட......
மேலாளர்: பழைய முறைமைகளைத்
தாண்டி விடுவதுதான் தக்கதென உங்களை யார் தூண்டிவிட்டார்?
பாங்கன்:
தண்ர் துளியும் கிடையாமல்.....
மேலாளர்: ஆண்டவனின் பேரால் அமைந்த
குடியாட்சி-
மண்டியிட்டுப் போற்றி மதித்து நடக்காமற்
கோளாறு செய்து குழப்பம்
விளைவித்தால்,
தாளாது சர்க்கார்; சடுதி நடவடிக்கை
மேற்கொள்ளும்; உண்மை;
மிகவும் வெளிப்படையாய்
நாட்டுடமை போட்டுடைக்க நாணாது முற்பட்டுச்
சேட்டை
புரிவோர் சிதைக்கப்படுவார்கள்.
காப்பை இனிச் சொல்லுங்கள்.
பாங்கன்:
(சயந்தனைப் பார்த்து) காப்பம்.
சயந்தன்: கடும் பசியால்
செய்யத்தகாத
செயல்புரிய முற்பட்டோம்
மன்னிக்கவேண்டும்.
மேலாளர்: மறுபடியும்
முன்போல
மீன் சுமப்பில் ஈடுபட்டு மேன்மை பல ஈட்டுங்கள்,
தீன் சுவைப்பில்
மட்டும் செலுத்தாதீர் நும் புலனை
ஐம்புலனை வென்றோர் அறவோர்
எனப்படுவார்.
துன்ப வெயில் தாக்காத தூயோர் எனப்படுவார்.
அந்த வழியில்
அறவோரோய் வாழுங்கள்.
ஐம்புலனின் போக்கில் அவற்றுடனே ஒன்றாகி
அள்ளுப் படுவோர்
அறவோர் எனப்பட்டார்.
தள்ளப் படுவார் தகாதோர் எனப்படுவார்,
ஆதலினால் நீங்கள்
அறவழியில் வாழுகிற
நீதியராய் அந்நெறியில் நிற்கக் கடவீர்கள்.
போங்கள் இனி
மீன் சுமக்க.....
பொறங்கள்.
(கையிலே தட்டிக் கணக்கரை
கூப்பிட்டு)
ஒய்.
இங்கு நடந்த கலக விபரங்கள்
யாவும் பதிவு புரிந்து
கணக்கெடுப்பீர்
கண்ணாடிச் சுக்கல் கயிற்றுச் சிலும்பல்கள்
பண்ணிய
நற்பாத்திரத்தின் பக்கச் செவித்துணுக்கு
யாவும் கணிப்பீடு செய்தே எழுதி
வையும்.
(சயந்தனையும் பாங்களையும் பார்த்து)
மீன் சுமக்கப் போங்கள்; வியர்வை
ஒரு துளியும்
காணோம் உமதுகடலில்!
காலை தொடக்கம் இங்கே
வீணே பொழுதை விழலிற்
செலவிட்டீர்.
மேலுமிது நீடித்தல் வேண்டாம்.
சயந்தன்: சரி,
துரையே!
சயந்தன் பாங்கனைப் பார்க்கிறான். அவன் மனமில்லாதவனாக
வேண்டாவெறுப்போடு காப்பைச் சொல்லத் தொடங்க மேலாளர் போய்விடுகிறார், மேலாளர்
மறைந்ததும் காப்பை முடிக்காமல் நக்கலாக அதே இராகத்தில் முணுமுணுத்துவிட்டு
மீன்சுமப்பைத் தொடங்குகிறான். சயந்தனும் வேலையில் ஈடுபடுகிறான். கணக்கர் கைவில்லை
ஒன்றை எடுத்துப் பிடித்து அதனூடே பார்த்துப் பார்த்து நிலத்திலே சிதறிக்கிடக்கும்
உடைசல்களை எண்ணிக் கணக்கிட்டுப் பதிவு செய்கிறார். வேலை செய்யும் சயந்தனையும்
பாங்கினையும் இடையிடையே னைனோக்குலராற் பார்த்து தம்தாள்களிலே எதையோ
குறித்துக்கொள்கிறார். ஏவலர் இருவர் சில பத்திரங்களைக் கொண்டுவந்து சயந்தனிடமும்
பாங்கனிடமும் கொடுத்து நிரப்புவித்துக் கையொப்பம் வாங்கிச் செல்கிறார்கள். இரண்டு
இராசாக்களும் ஏவலன் ஒருவனும் மேலாளரும் வருகிறார்கள். அங்கே உடைந்து
சிதறிக்கிடக்கும் துண்டங்களைப் பார்த்து பிரிந்து மதுச்சாடிக்குள் விடுகிறார். சாடி
நிரம்பவில்லை இராசாக்கள் கிண்ணங்களை எடுத்துக் குடிக்க முயலும்போது அவற்றுட் போதிய
மது இல்லை. அங்கு 'அற்றென்ஷன்' நிலையில் நிற்கும் மேலாளரைக் கூப்பிட்டு விளக்கம்
கேட்கிறார்கள். மேலாளர் சயந்தனையும் பாங்கனையும் சுட்டிக்காட்டிச்
சாட்டிவிடுகிறார். அவர்கள் இவ்விருவரையும் விசாரணை செய்கிறார்கள். இவ்வளவும் பேசாப்
பாவனையில் நடக்கிறது. இராசாக்கள் வெளியேறுகிறார்கள். மேலாளர் வேலை செய்யும்படி
சயந்தனுக்கும் பாங்கனுக்கும் சைகை காட்டிவிட்டு வெளியேடுகிறார். கணக்கர் தமது
மூலையிலே பழையபடி தூக்கத்தில் ஆழ்கிறார். வீரவாகு தேவர் பாறை மறைவிலிருந்து
வெளிப்படுகிறார்.
வீரவாகு: அந்தோ குழந்தைகளே! ஆசைச் சிறுவர்களே இந்த
நிலைக்கா இறங்கிவீட்டீர்?
சயந்தன்: மேலவரே,
இன்னல்மிகுந்த இந்த
நிலைமையிலும் ஓர் ஆறுதலே உள்ளதையா எங்களுக்கு.
வீரவாகு: வேர்வை களைந்து
விடுகின்ற செய்கைமுறை
இன்னும் இருப்பதையா சொல்லுகிறீர்?
சயந்தன்:
ஏனையா,
அந்த ஒன்றுமட்டும் அரசின் தயாளகுணம்
காட்டும் ஒரு சுட்டி - கருணை நிதி
காட்டி.
இல்லையா?
வீரவாகு: ஏ, ஏ! இதையும்
புரிந்துகொள்ளும்
சக்திகெட்டுப் போனீரோ, தம்பியரே, தம்பியரே?
இங்கிவர்கள்
வந்து வியர்வை திரட்டுவதும்
உங்கள் நலம் கருதி என்றா
நினைத்திருந்தீர்?
இல்லை, இல்லைத் தம்பி - இவர்கள் வெளியேறிக்
கூத்தாடும்
நோக்கமே கொண்டவர்கள் - அல்லாமல்,
காத்தாளும் நோக்கம் கடுகளவும்
இல்லாதார்,
சயந்தன்: žž, எதிலுமே தீதும் உண்டு; நன்றும் உண்டு,
ஏசி
எதிலும் இழிவுகளே காணுகிற
வஞ்சநெஞ்சம் கொண்டதொரு வன்கண் மனிசரையா
உண்பதற்குத்
தக்க உணவும் குடிநீரும்
இல்லாது உழன்று வருந்துகிறோம்- உண்மைதான்.
அந்நிய
நாணயம் அற்றதனால் வந்துள்ள
சந்தை நெருக்கடியாற் சார்ந்த நிலைமை இது.
பஞ்சம்
இன்று வந்தபடியால், அதற்காக
ஆட்சி நலத்தை அவமதித்துப் பேசுவதா?
பஞ்சம்பரும்;
போகும்.
பண்டைப் பழஞ்செல்வம்
மிஞ்சு வளம்கூட மீண்டும் திரும்பி
வரும்.
அல்லும் பகலும்-
அதிலே வியப்பில்லை
கோடை முடிந்த பிறகு, நல்ல மாரி
வரும்.
ஆனபடியால்....
வீரவாகு: அடங்கி ஒடுங்கிப்போய்க்
கொத்தடிமை வேலை
செய்துகொண்டு சுழல்வதற்கே
மெத்த விருப்பம் படைத்திரோ, தம்பியரே?
(கண்
கலங்குகிறார்)
இந்திரனின் மைந்தன் இவனா?
கடூழியத்தால்
நைந்த துயர நலிவால்,
மதி கலங்கிப்
போனானா இந்தப் பொடியன்?
கடவுளே!
சொந்த நலமும் சுறட்டிற்
பெருவிருப்பும்
எந்த அறமும் இலாத மறத்தருக்கும்
பேராசை கப்பிப் பிடித்த சதிச்
சூழ்வும்
மிக்கோரின் ஆட்சி விருதாக் கொடுமையினால்
இந்திரனின் மைந்தன் - இளைய
உயிர்க்கொழுந்து
வாடித் துவண்டு வரளல் விதியாமோ?
பாங்கன்: ஐயா, பெரியவரே!
ஆத்திரத்தில் ஏதேதோ....
சயந்தன்: ஆத்திரமே அல்ல. அறியாமை-
மன்னிப்பீர்.
வீரவாகு: வேண்டாமே சோர்வு- தம்பீ!
சயந்தன்:
குழைந்துகொண்டு வருகிறான்.
வீரவாகு: வீரியம்தான் மூலதனம் (வீரவாகுதேவர் ஒரு
சிறு குப்பியைத் தம் கூடையிலிருந்து எடுக்கிறார். குப்பியிலிருந்து சில குளிகைகளை
எடுத்துப் பாங்கனுக்குக் கொடுக்கிறார்.
சத்துணவுச் சாரம். (சயந்தனுக்கும்
குழிகை கொடுத்த பிறகு குப்பியை மூடிக் கூடையுள் வைக்கிறார்)
தைரியத்தை
மேன்மேலும்
ஊட்டுவதே நன்மை உதவும்- மறவாதீர்.
நீதி குலைக்கின்ற நீசர்களைப்
போர்முனையில்
மோதி விழுந்த முறையான சாதனங்கள்
வேண்டும், துணிவும் மிகவும்
அவசியமே;
எத்தர் சதியை எடுத்துப் புறம் களைந்து
மத்துத் தயிராய் மமதை தனைக்
கடைந்து
வெல்வோம் சமரில் விழுத்திடுவோம் வெம்பகையை
இசைக்குழு:(வசனமாக)
நீதி குலைகின்ற....வெம்பகையை
உங்களது போக்கே உகந்ததென
எண்ணுகிறேன்.
என்றாலும், இன்னும் எனக்குள் சமுசயங்கள்
தோன்றி மறைந்து
தொடர்வனவே, என் செய்வேன்?
வீரவாகு: நாள் போகப் போக எல்லாம் நல்லாய்
விளங்கிவிடும்
அம்பலவி மாம்பழங்கள் ஆறேழை
உங்களுக்க்காய்க்
கொண்டுவந்துள்ளேன், குழந்தைகளே சாப்பிடுங்கள்
(பழங்களையும்
பாலையும் கொடுக்கிறார். ஓரு சிறு நூலை எடுத்துச் சயந்தனிடம்
கொடுக்கிறார்.)
சுட்ட பசுப்பால் - தொழிற்கொள்கை பற்றி ஒரு
கட்டுரை நூல்
-சின்னன்-கடின நடை இல்லை.
சயந்தன்: மேலாளர் இல்லாத வேளை இடையிடை
நாம்
நூலைப் படிப்போம்.
வீரவாகு: துணுக்கக் கருத்துகளில்
ஏதும் ஐயம்
உண்டென்றால் என்னிடத்திற் கேளுங்கள்
தீது-நன்மை பாகுபடுத்துகிற
நோக்குகளின்
வேதம் என்று சொல்ல மிகவும் தகுதி உள்ள
ஆராய்ச்சி அந்த அரிய சிறு
புத்தகம்.
மேலாளர் வருவது சப்பாத்தொலிமூலம் தெரிகிறது. வீரவாகு தேவர் தம்
பொருள்களை அவரசமாக அள்ளிக்கொண்டு வெளியேறுகிறார். சயந்தன் தனக்குக் கொடுக்கப்பட்ட
நூலைப்பயந்து பதுங்கிப் பதுங்கி ஒரு பாறை மறைவிலே பத்திரப்படுத்துகிறான். சயந்தனும்
பாங்கனும் கூடைகளை எடுத்துக்கொண்டு மேடைப் பின்புறமாகச் சென்று இரண்டு சுமை மீனுடன்
வருகிறார்கள். இதற்குள் மேலாளர் வந்துவிடுகிறார்.
மேலாளர்: ஏய்!
வேலைச்
சுறுசுறுப்பு மேலும் அதிகரித்தல்
சாலும்.
அதற்குத் தடையாக
ஏதேனும்
உண்டென்றாற் சொல்வீர்.
உமக்குச் சகலவித
சௌகரியம் செய்து
தருமாறு
மேலிடத்தார்
உத்தரவு போட்டுள்ளார்.
ஒன்றும்
ஒளிக்காமற்
சொல்லலாம் நீங்கள்.
தொழிற்சிறப்பால் உம்முடைய
அல்லல்
போம்.
வாழ்வில் அனைத்தும் நலமாகும்.
மேலாளர் கணக்கரிடம் சென்று அவர்வசம்
இருக்கும் பத்திரங்களிற் சிலவற்றைப் பார்வையிடுகிறார். இதற்கிடையில், சயந்தனம்
பாங்கனும் பேசிக்கொள்கிறார்கள்.
பாங்கன்: உண்மையினை இன்றே உடைத்து
விடுவோமா?
சயந்தன்: வேண்டாம் அவதி; மிகவும் அவதானம்
மேலாளர்:
திரும்பி வருகிறார்-- முன்மேடைக்கு
சயந்தன்: ஐயா உணவுச்
சிமிழில்....
மேலாளர்: அதை அறிவோம்.
போதிய பாண் இல்லை; புறுபுறுக்க
வேண்டாம்.
உலகத்துச் சந்தை நிலை படு மோசம்.
ஆகையினால் இந்த அவலம்.
சில
நாளில்
இந்த நெருக்கடியும் எப்படியோ தீர்ந்துவிடும்.
உங்கள் உழைப்பின்
உதவி
எமக்கு மிக
வேண்டும் இந்த வேளை
விரும்பித் தொழில் புரிந்து
வீர
மகேந்திரன் மேன்மையினைக் காத்திடுங்கள்.
பொற் சங்கிலியைப் புனையும் உரிமை
தந்து
வைத்திருக்கும் இந்த மகத்தான ஆட்சியினைப்
பேணி உடமை உரிமைத்
தனித்துவத்தால்
யாவர் மனமும் நிறைவு பெறுமாறே
ஆளும் சிறந்த அரசை
மதித்துழைக்கும்
உங்கள் ஒழுக்கம்
உணர்ச்சி
விழுப்பம் எல்லாம்
பாராட்டத்
தக்கவையே, பாராட்டத் தக்கவையே....
பாங்கன்: போத்திலிலே
தண்ரும்....
மேலாளர்: போதாதா?
பாங்கன்:
காலையிலே
பார்த்தபொழுது துளி நீரும் இல்லை ஐயா.
மேலாளர்: என்ன
கொடுமை!
இனிமேல் ; இதுபோலச்
சம்பவிக்க மாட்டாது
தக்க
நடவடிக்கை
மேற்கொள்வோம் நாங்கள்.
பாங்கன்: மிகவும் இடைஞ்சல்
ஐயா!
மேலாளர்: (உறுக்குகிறார்) என்னையா! பாங்கன்?
இதோ, வாரும்
முன்னாலே!
பாங்கன் மேலாளரின் முன்னிலையில் வந்து நிற்கிறான், முதலிலே
கைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றவன், பிறகு மேலாளரின் முறைப்பைத்
தாங்கமாட்டாதவனாக, மெல்லமெல்லக் கைகளைத் தூங்குகிறான். இறுதியில், பணிவு தோன்ற
முறைப்படி கைகட்டி நிற்கிறான்.
மேலாளர்: கொஞ்ச இடத் தந்தால், குதித்துக்
கிளம்புகிறீர்.
பஞ்சம் எங்கே?
நீரோ பதக்கம்
அணிந்துள்ளீர்.
தட்டுப்பாடுண்டிங்கு சற்றே....
அது தவிரப்
பட்டினியாய்த்
தானா இருக்கிறீர்?
இல்லையே!
சாப்பாடில்லாது தவித்தல் நிசம்
என்றால்,
இன்னும் உயிரோடிருக்கிறீர்- எவ்வாறு?
சின்னக்குறையைப்
பெரிதுபடுத்துகிறீர்.
நன்மை பனைபோல் இருக்க, அதை மறந்து
தீமை தினைபோலத் தேடி
அதைப் பாராட்டி
மாண்பில் உயர்ந்த மகேந்திரத்தைத் தூற்றுகிறீர்.
(சயந்தனைப்
பார்த்து)
ஐயா; சயந்தன்! அறியாத் தனத்தாலே
தாறுமாறாகத் தகாத வழி
செல்ல
எண்ணும் இவரைத் திருத்தி நடத்துங்கள்.
சம்மதம் என்பது போல அரை
மனத்துடன் இருவரும் தலையசைக்கிறார்கள்.
மேலாளர்: ஏதும் ஐயம்
உண்டா?
இருந்தால்...பதில் தருவோம்.
சயந்தன்: வங்கிக் கணக்கு விபரம்
விசாரித்துக்
காகிதங்கள் போட்டிருந்தோம்
காணவில்லை ஓர் பதிலும்.
ஏழு கிழமை
இருக்கும், தபால் எழுதி.
மேலாளர்: வங்கிக்கணக்கு விபரம் ஏன்
உமக்கு?
சயந்தன்: மோசரடி ஏதேனும் இருந்தால்....
மேலாளர்:
இருக்காதே,
சயந்தன்: ஆண்டாண்டு தோறும் உழைத்துழைத்து
மாய்ந்தாலும்
சேர்ந்த பழைய கடன் ஒழிய மார்க்கம் இல்லை
மேலும், புதிய கடனும்
வளருகிறது.
எவ்வாறோ என்றால் எமக்கு விளங்கவில்லை.
மேலாளர்: கூடைக்
கணக்காற் கொடுக்கப்படவுள்ள
வாடகைக் காசும்
வளர்ந்திருக்கும்
வட்டிகளும்
சம்பளத்தைத் தின்று குறைத்து விடுகிறது.
பாங்கன்: கூடைக்கு
வாடகையா?
மேலாளர்: வாடகை, ஆம்-- கூடைக்கு.
மீன் சுமக்கும்
கூடை....
பாங்கன்: அதற்கும் ஒரு வாடகையா?
மேலாளர்: ஏன் திகைக்க
வேண்டும்?
சயந்தன்: இது பெரிய வேடிக்கை.
மேலாளர்: வேடிக்கை என்ன
இதில்?
பாங்கன்: மீனைச் சுமப்பதற்கு கூடை அவசியம் தான்.
மேலாளர்:
கூடை உங்கள் சொத்தில்லை
ஆதலினாற் கூலி அறவிட்டுக் கொள்ளுகிறோம்.
சயந்தன்:
எங்கள் பணியால் இராசாங்கம் நன்மை பெற்றால்
அந்த நன்மைக்காக அவர்கள்
இலவசமாய்க்
கூடை தந்தால் என்ன?
மேலாளர்: ž, கூடாத
பேச்சிதெல்லாம்.
சும்மா கிடைக்கும் பொருளால், கெடுதி அல்லால்
இம்மியளவும்
நலமே கிடையாது.
எந்த நலமும் இலவசமாய் எய்தும் எனில்
வந்த பலனின் மதிப்பும்
உணþ‘ம் நாம்.
சோம்பல் பெருகும்; சுகவீனம் மிஞ்சிவிடும்.
தேம்பல் வளரும்;
திரேகம் சதை பிடிக்கும்.
சயந்தன்: ஐயா.
மேலாளர்:
சயந்தன்!
சயந்தன்: அடுக்கித் தொடருகிறீர்.
கூடைக்கு
வாடகையா?
பாங்கன்: கொள்ளை இலாபம் இது.
மேலாளர்: கொள்ளை என்ன
கொள்ளை?
பாங்கன்: கொடுமை
மேலாளர்: மடைமை, உங்கள்
உன் மத்தப்
போக்கும் உதவாக்கரை நோக்கும்,
மூலதனம் போட்ட முதலோர் அதன் பேறாய்
ஏலும்
வகையில் இலாபம் எடுப்பதுதான்
காலங்கள் கண்டு கடந்த பழைய நெறி.
வட்டிக்கடையின்
வரும்படியும்
மேல்மாடி
கட்டிவிட்ட பேர்க்குக் கிடைக்கின்ற
வாடையும்
கம்பெனிகள் தோறும் எங்கும் காசு பெருகுவதும்
சாதாரணமான
சம்பவங்கள்.
இசைக்குழு: (வசனமாக)
வட்டிக்கடையின்...சம்பவங்கள்
சயந்தன்: மீன் கூடை....
பாங்கன்:
யாருக்குச் சொந்தம்?
மேலாளர்: அதை உமக்கேன்?
ஆர் சொத்தே ஆனாலும்
அன்னாரைப் யோயடையும்
வாடகைக் காசு வருடம் தவறாமல்.
சயந்தன்: கூடைக்
கணக்காற் கொடுக்கப்படவுள்ள
வாடகைக் காசு, நிலுவை,
கடு
வட்டி.......
பாங்கன்: முன்னைப் பழைய கடன்கள்....
சயந்தன்: அதன்
வட்டி....
பாங்கன்: உன் தந்தை பட்ட ஒழியாப் பழைய
கடன்
பாண்காசு
தண்ர்......
மேலாளர்:
பகிர்வு
பராமரிப்பு
கப்பி எண்ணெய்க் சாசு
கயிற்றுக்குக்
கட்டணங்கள்
வேலை அறிக்கை விகிதம் சமர்ப்பிக்கும்
ஆகுறுதிப் பத்திரங்கள்
அச்சடிக்கும் கட்டணங்கள்...
வேர்வை ஒற்றிப் போக்கும் வினைக்குரிய
வேதனங்கள்
தீர்வை வரிகள், திரள் சுங்கச் சேர்மதிகள், அந்நிய
மாற்றின்
அளிப்புரிமைச் சான்றிதழ்கள்,
இவ்வாறாய் எல்லாம் எடுக்கப்படுகின்ற
வாழ்வுச்
செலவினங்கள் போ......
பாங்கன்: மனிதர்களைச்
சக்கை பிழிந்தெடுத்த
சம்பளத்தில் மிஞ்சியது
முப்பத்து முக்கோடி ரூபா கடன் நிலுவை,
மேலாளர்:
அப்பத்தை நாளும் அடைகின்றீர் வாய்க்குள்ளே.
பாங்கன்: அப்பம் என்ன,
அப்பம்?
அருகுக் கருகல்- தூள்.
தூசி தும்பு சேர்ந்த துணுக்குப் பழம்பாண்கள்.
மேலாளர்: ஏசி இவ்‘வறெல்லாம் எடுத்தெரிற்து பேசினால்,
தூசி தும்புகூடத்
தொடவும் கிடையாது.
சயந்தன்: ஏது, மிரட்டவுமா எண்ணுகிறாய்?
இப்படி
சொல்லிக்கொண்டே சயந்தன் மேலாளரை நெருங்கி அவரது கொலரைப் பிடித்து இழுக்கிறான்.
மேலாளர் அவனது பிடியை விலங்கி அப்பாலே தள்ளுகிறார். சயந்தன் தளர்ந்து பின்வாங்க,
மேலாளர் இரண்டடி பின்சென்று துப்பாக்கியைச் சுடும் நிலையிற் பிடித்தவாறு, ஊதுகுழலை
எடுத்து ஊதுகிறார். பாங்கன் திகைப்படைகிறான். போர்வீரர்கள் துவக்குகளுடன் வந்து
சண்டையை அடக்குகிறார்கள். எல்லாரும் சிலையாகிறார்கள். வெடிப்பிரயோக ஒலிகள்
தொடர்ந்து கேட்கின்றன. ஒலிகள் தணிந்து மறைய, சயந்தனும் பாங்கனும் வேலைக்குத்
திரும்புகிறார்கள். இரண்டு தடவை மெது‘க விருப்பமின்றி மீன் சுமந்து செல்கின்றனர்.
வெளியொலி முற்றாக மறைந்ததும், தம்மைக் கட்டியுள்ள சங்கிலியைக் காணுகிறார்கள். தாம்
கட்டிவைக்கப்பட்டுள்ளமையை இப்பொழுது தான் முதன்முதலாக அவர்கள் உணருகிறார்கள்.
மேலாளர்: என்ன சயந்தரே, பாங்கரே! ஓகோ!!
தாக்கவா
நினைத்தீர்?
சயந்தன்: சங்கிலி....
மேலாளர்:
உங்களை
அலங்கரிப்பதற்காய் அமைக்கப்பட்டது.
சயந்தன்: என்றுதான் இதுவரை
எண்ணியிருந்தோம்.
பாங்கன்: பொன், பொருள் செல்வ போக்கியம் எனவும்
போற்றி
மதித்துப் புகழ்ந்து பாடினோம்
ஆனால் உண்மை அப்படி இல்லையே!
மேலாளர்:
ஆமாம், நண்பரே! அது நகை அல்ல.
சயந்தன்: சொத்துச் சுதந்திரம் சுய
மதிப்புடையோம்
என்பதை நம்பி நாம் ஏமாத்திடும்படி
பொன்முலாம் பூசிய மாயப் பொறி
அது.
இசைக்குழு: (வசனமாக) சொத்துச் சுதந்திரம்....மாயப்பொறி அது
மேலாளர் சயந்தனின் கழுத்திலிருக்கும் பொற்சங்கலியின் பின்புறத்தே மறைவாக
உள்ள ஒரு பூட்டையும், அதிலிருந்து தொடர்ந்து செல்லும் ஓர் இரும்புச் சங்கிலியையும்
எடுத்து அவர்களுக்குக் காட்டுகிறார்.
மேலாளர்: ஆமாம், உண்மை அதுதான்
நண்பரே!
பொன்முலாம் பூசிய இரும்பு விலங்கது
பாங்கன்: இரும்பு விலங்கால்
எங்களைக் கட்டினீர்!
மேலாளர்: (சிரித்து) ஓடாதிருக்க உதவும்
அல்லவா?
சயந்தன்: ஓடாதிருக்க?
மேலாளர்: உழைத்த சலிப்பிலே
வெறுப்பு
மேலிட்டு வெளிக்கிட நினைத்தால்,
தடுத்து நிறுத்தவே சங்கிலி
இட்டோம்.
சயந்தன்: மகேந்திரம் என்றீர், மகோன்னதம் என்றீர்
சமரசம்
என்றீர், சமதர்மம் என்றீர்
சுதந்திரம் என்றீர், சுகநலம் என்றீர்
மக்கள்
ஆட்சியின் மகத்துவம் என்றீர்
உடைமைகள் என்றீர், உரிமைகள் என்றீர்
கடமைகள்
என்றீர், கண்ணியம் என்றீர்
சங்கிலி என்றீர், சம்பத்தென்றீர்
சாவி உரிமைத்
தனித்துவம் என்றீர்.
இன்னவை எல்லாம் எங்களைப் பிடித்துக்
கட்டி வைத்துக்
கடூழிய வேலை
வாங்குதற் பொருட்டாய் வகுத்த திட்டமா?
அடிமைப்படுத்தவா அழகிய
சங்கிலி?
பாங்கன்: பொன்முலாம் பூசிய இரும்புச் சங்கிலி?
மேலாளர்:
தப்பி ஓடாது தடுப்பதற்காகவே.
(ஆணவச் சிரிப்பு)
சயந்தன்: இனியும் நாங்கள்
இவைகளைச் சகியோம்.
(சங்கிலியை உதறுகிறான்)
மனிதரை மனிதராய் மதித்திட
அறியா-
உலுத்தரை உதைத்தே ஒழிப்போம். விரைவிலே
வருத்தி உழைக்கும் எம்
திருந்திடா வாழ்க்கையை
உறிஞ்சிக் குடித்திடும் உணர்விலா மாக்களின்
கெடுபிடி
பொடிபடக் கிளர்ந்து பொங்குவோம்.
ஏன் சுமக்கின்றோம் என்பதை
நலன்களும்
நயங்களும் இலாபமும் நாங்கள் அறியோம்.
வேலையின்
பலாபலன்-விளைவுகள்-கணக்குகள்
எவை என அறிந்திலோம், யாவுமே மருமம்,
ஒழிப்பு
மறைப்புகள் ஒன்றா இரண்டா?
சுழிப்புகள் நெளிப்புகள் வளைப்புகள்
அனந்தம்
பாங்கன்: சாவி உரிமை, சங்கிலி, தனித்துவம்...
சயந்தன்:
இப்படிச் சிலசில சொற்களைப் பேசியே
கண்ணிலே இதுவரை மண்ணையே தூவினார்.
இனியும்
நாங்கள் இவைகளைச் சகியோம்.
மேலாளர்: என்னதாம் செய்வீரோ?
சயந்தன்:
எதிர்ப்பகை தொலைப்போம்.
மேலாளர்: பார்ப்போம், பார்ப்போம்.
சயந்தன்:
பகிடியா செய்கிறாய்?
அடக்கு முறைகளை உடைத்து நாம் வீசுவோம்
ஒடுக்கும் விதிகளை
ஒடித்து நாம் ஊதுவோம்
கெடுக்க நினைப்பவர் கொடுக்குகள் நறுக்....
மேலாளர்:
தன் கைக்கோலை விசுக்கிச் சயந்தனை அடக்குகிறார்.
மேலாளர்: வெடுக்கென நாலு
வெறுமொழி பேசினாய்.
பெரியதொரு மணி ஆறு தடவை அடிக்கிறது. மேடை இருள்கிறது,
மேலாளர் ஊதுகுழலை ஊதுகிறார், போர்வீரர்கள் வருகிறார்கள், சயந்தனும் பாங்கனும் பாறை
மறைவில் இருக்கும் ஓர் அரிக்கன் லாம்பை எடுக்கிறார்கள்.
மேலாளர்: நிலைமை
கொஞ்சம் கடுமை.
அவர்கள்
உண்மை முழுவதும் உணர்ந்துவிட்டனர்
ஆனபடியால் இரவு
முழுவதும்
காவல் அவசியம்
கவனம்.
தெரிந்ததா?
'சரி' என்ற பாவனையில்
போர்வீரர்கள் தலையாட்டுகிறார்கள் மேலாளர் போய்விடுகிறார். சயந்தனும் பாங்கனும்
லாம்பைக் கொளுத்தி ஒரு பாறையில் வைத்துவிட்டு, வீரவாகு கொடுத்த புத்தகத்தை
எடுத்துக்கொண்டு வருகிறார்கள். போர்வீரர்கள் தமக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள்.
இடையிடையே சயந்தனையும் பாங்கனையும் பார்க்கிறார்கள்; பின்னர், போர்வீரரில் ஒருவன்
சயந்தனுக்கும் பாங்கனுக்கும் வீரவாகு தேவர் கொடுத்தது போன்ற ஒரு புத்தகத்தை
எடுக்கிறார்கள். அவர்கள் அப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்குகிறார்கள்.
சயந்தன்: வீரவாகு தேவர் ஓர் மேதை.
பாங்கன் தன் சங்கிலியிலுள்ள
பதக்கத்தைப் பிடுங்கி எறிகிறான். சங்கிலியையும் அறுக்க முயல்கிறான். அது அறுபட
மறுக்கிறது.
பாங்கன்: அண்ணே! ஏதோ சொன்னியா என்ன?
சயந்தன்: வீரவாகு
ஓர் மேதைதான் என்றேன்,
பாங்கன்: ஒவ்வொன்றாக உண்மை வெளிப்படப்
பொய்மைகள்
எல்லாம் பொடிப்பொடி ஆகும்.
சயந்தன்: புகையினை விலக்கிப் புறத்தே
ஒதுக்கினால்
சுடர்விடும் நெருப்பின் துலக்கமே நிலைக்கும்.
சுடர்விடும்
துலக்கம் தூயமெய் காட்டும்.
தூயமெய்க்காட்சி தொழிற்பட வைக்கும்.
இசைக்குழு: (பாட்டாக) "புகையினை....தொழிற்படவைக்கும்"
பாங்கன்:
புத்தகம் படிக்கத் தொடங்கிவிட்டாயா-
வீரவாகு தேவர் தந்தது?
சயந்தன்:
இல்லை, இல்லை. இனித்தான் படிப்போம்
கூடிப் படிப்போம்
கொள்கை
விளக்கமாய்த்
தெள்ளத் தெளிந்த சிறிய நூல் என்றார்.
ஆகையால், அதனை நாம் அணு
அணுவாக
விளங்கிப் படிப்பது மிக மிக அவசியம்.
பாங்கன்: சங்கிலிச் சதியைச்
சாடுவது எப்படி?
சயந்தன்: வீரவாகு தேவரைக் கேட்போம்
ஏதும் உபாயம்
எடுத்துக் கூறுவார்.
பாங்கன்: உண்மையில், அவர் மகா
உத்தமர்-சத்தியர்.
சயந்தன்: நான்தான் முதலிலே பிழைபட
விளங்கினேன்.
பாங்கன்: பொறாமையே இல்லாப் புண்ணிய žலர்.
சயந்தன்:
பொதுநலம் விரும்பும் பூரணர்-காரியர்
பாங்கன்: அவரது புத்தகம் அருமையாய்
இருக்கும்.
சயந்தன்: ஆமாம் படிப்போம்.
பாங்கன்:
அவர்களும்...?
சயந்தனும் பாங்கனும் புத்தகம் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இப்பொழுது போர்வீரர்களும் பேசாப் பாவனையிலே புத்தகம் படிக்கிறார்கள். சயந்தனும்
பாங்கனும் திகைப்புடன் பார்த்துச் சிலையாகிறார்கள். "புகையினை விலக்கி.... தொழிற்பட
வைக்கும்" என்ற பாட்டு ஒலிக்க, திரை விழுகிறது.
III
சயந்தனும்
பாங்கனும் கூடைகளை கவிழ்த்துவிட்டு அவற்றின்மேல் உட்கார்ந்து முழங்கால்களைக்
கைகளாற் கட்டியபடி இருக்கிறார்கள். காவலாட்கள் அங்குமிங்கும் அலைந்து காவல்
காக்கிறார்கள். எந்த நேரம் குலைந்து குழம்புமோ எனத்தக்க உறுதிப்பாடற்ற அமைதி
நிலவுகிறது. இடையிடையே துவக்கு வெடிச் சத்தங்கள் தூரத்திலே கேட்கின்றன. பெருஞ்
சனத்திரளின் ஆரவார இரைச்சலும் முழக்கங்களும் இடையிடையே கேட்கின்றன
மேலாளர்:
(ஒரு பெரிய காகிதச் சுருளை விரித்து வாசிக்கிறார்)
ஆபத்துக்கால நிலைமை
பிரகடனம்-
சட்டத்தை அவமதித்துச் சிலபேர் நாட்டிற்
சதி புரிந்த காரணத்தை
ஒட்டி, இன்று
நட்டநசி வேளையிலே மகேந்திரத்தார்
நடவடிக்கை அவசியத்தை
உணர்ந்துகொண்டார்.
திட்டமிட்டுக் கலகங்கள் விளைத்தல், கூட்டம்,
தீயிடுதல்,
உழையாமை, சூழ்ச்சி, சூது
மட்டுமின்றி சங்கிலியின்
மான்மியத்தை
மறுத்துரைத்தல்- இவை அனைத்தும் குற்றம் ஆகும்.
சாவி நலம்
அவமதிப்போர்
மகேந்திரத்தின்
தனித்துவத்தை அவமதிப்போர்
ஆவார்.
மேலும்........
பாங்கன்: (ஏளனமாக) போவிசரா.
சயந்தன்:
மேலாளர் இவராம்-
இங்கே
புதிதாக விதி உரைக்க வந்துவீட்டார்
மேலாளர்:
காவலர்கள் வாருங்கள்.
உடனே, இந்தக்
கயவர்களைக் கைது செய்வீர்.
கைது
செய்வீர்.
சயந்தன்: மேதை இவர்- மகா மேதை!
மகேந்திரத்தின்
மேலாளர்
பாங்கன்: கத்தரிக்காய்ச் சாம்பார்ச் சட்டி,
சயந்தன்:
தூதுவளங்காய்க் குழம்பு முட்டி என்றும்
சொல்லிவிடலாம் அவருடைய மண்டை
ஓட்டை
ஆதி தொட்டே சங்கிலியாற் பிணிக்கப்பட்டோம்.
அதன் பிணைப்பில்
உழலுகிறோம்.
அதற்கு மேலும்
ஓதுகிறார், கைது
செய்யும்படியாய்,
என்ன
உயர்வான புத்தி ஐயா?
நியூற்றன் தோற்றான்.
பொன்
பூசிச் சங்கிலியாற் கட்டிவைத்துப்
புறத்திருந்த இரகசிய விலங்குப்
பூட்டை
எங்கேயோ மறைவிடத்தில் ஒளித்து வைத்த
இவர்களினால் என்றென்றும்
சிறைப்பட்டோம் நாம்.
பின்பேதோ புதிதாகக் கைது செய்யப்
பெரிதாய் ஓர் கட்டளையை
விடுக்கின்றாரே!
அன்பேதும் இல்லார்க்குப்
புத்திகூட
அறுபட்டுப் போம்போலும்
காலப் போக்கில்!
சங்கலியை அறுப்பதுதான் இனி நமக்குச்
சரியான ஒரு மார்க்கம்.
பாங்கன்: இரும்பு- பாரம்.
எங்களினால் இயலுமா?
சயந்தன்:
இயலாதென்றால்
இப்படியே இருப்பதா?
நல்லது கூத்து!
பாங்கன்: பின்,
கழன்று தானாக விழுமா, என்ன?
சயந்தன்: பேசி என்ன பயன் கண்டோம்?
செயல்தான்
வேண்டும்.
கழுத்தின் பின்புறமாகச் செல்லும் இரும்புச் சங்கிலியைப் பிடித்து
இழுக்கிறான், அந்தச் சங்கிலியை வலித்து வலித்து இழுக்க, அது நீண்டு செல்கிறது.
முடிவே இல்லாத ஒன்றுபோல விரைவாகவும் ஆறுதலாகவும் மாறி மாறிச் சங்கிலியை
இழுக்கிறார்கள். இது பேசாப்பாவனையாக ('மயிம்' ஆக) நடக்கிறது.
பாங்கன்:
தங்கமுலாம் பூசியதன் இணைப்பாய், இந்தச்
சனி இரும்புச் சங்கிலி - ž!
சயந்தன்: இதனைப்பற்றி
முன்பறிந்தோம் அல்லம், அடா!
பாங்கன்:
நீண்டு நீண்டு
முடிவின்றித் தொடர்கிறதே!
சயந்தன்: முனையில்
ஏதும்
பூட்டிருக்கும்,
அதைத் திறந்து போட்டோம்
என்றால்.....
புனைசுருட்டின் முடிவு எமக்குக் கிடைக்கும் தம்பி
வெளியே
போயிருந்த காவலாளர்கள் இருவர் திரும்பி வருகிறார்கள். சயந்தனும் பாங்கனும்
சங்கிலியை அப்பால் போட்டுவிட்டு வேறு ஏதோ செய்வதுபோலப் பாவனை பண்ணுகிறார்கள்.
இரண்டுபுறமிருந்தும் வந்த காவலர்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்புறமாகப் போய்
மறைகிறார்கள்.
சயந்தன்: கேட்டிருக்குமோ எங்கள் பேச்சு?
பாங்கன்:
žச்ž.
சயந்தன்: கேட்டாலும் அவர் என்ன செய்யக்கூடும்?
பாங்கன்:
தோட்டாக்கள் உள்ளவர்கள்; துவக்குக்காரர்.
சயந்தன்: துணிந்துவிட்டோம்
இனி
என்ன?
ஆனால் நாங்கள்
தக்க படைக்கலம் இல்லாத் தனித்த பேர்கள்.
தணிந்து