கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மோகவாசல்

Page 1


Page 2

மோகவாசல்
ரஞ்சகுமார்
பின்னுரை : கார்த்திகேசு சிவத்தம்பி
مکگی CS VN
தேசிய கலை இலக்கியப் GLI6)6)

Page 3
f Mohavasal
Ranjakumar -
First Published : April 1995
Printed at " : Suriya Achagam, Madras.
Published in Association with ''
National Aft & Lițerary Association by . • South Asian Books 6/1, Thayar Sahib II Lane Madras - 600 002.
Rs... 24.00
இந்நூலின் முதல் இலங்கை பதிப்பு 1989இல் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. அட்டை ஓவியம் : வீரசந்தானம்
மோகவாசல்
ரஞ்சகுமார்
முதல் பதிப்பு : ஏப்ரல் 1995
அச்சு * சூர்யா அச்சகம், சென்னை - 41.
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவையுடன்
இணைந்து சவுத ஏசியன் புக்ஸ் 6/1, தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை - 609 002. ლეხ. 24.00

பூதிப்புனர் ரஞ்சகுமாரின் , இச்சிறுகதை தீொகுப்பு 1989-ஆம் ஆண்டு இல்ங் கையில் வெளியானது. அந்தப் பதிப்பிற்குப் பின் திரு. க. சிவத் தம்பி ஆவர்களின்” விமர்சன குறிப் போடு மீண்டும் இத்தொகுப்பை
பதிப்பிப்பதில் தேசிய 56തബ இலக்கியப் பேரவை மசிழ்ச்சி அடை கிறது.
சீன அறிஞர் லூ சுன் கூறுகிறார்: **. ஒருவன் தன் உள்ளத்தில் உணர்ந்தவாறு இயல்பாகவே எழு துவான். அத்தகைய எழுத்து சக்கிமுக்கிக் கல்லினால் இரும் பிலோ கல்லிலோ உராயப்பட்டு எழுப்பப்பட்ட பொறிபோலல் லாது, எல்லையற்ற பேரொளி மிக்க ஒளிக் கதிர்களை வீசுகின்ற பகலவன் ஒளி போன்றது. அது மட்டுமே உண்மைக் கலையாகும். அத்தகைய எழுத்தாளன் மட்டுமே உண்மைக் கலைஞனாவான். ஆனால், நானோ. நான் எந்த ரகத்தைச் சேர்ந்தவன்?" உங்கள் கருத்துக்களை விமர்சனங் களையும் எழுதுங்கள். தேசிய கலை இலக்கிய பேரவை
14, 57-வது ஒழுங்கை
கொழும்பு-6
26-4-95

Page 4
உள்ளே.
சுருக்கும் ஊஞ்சலும் 5
கபரக் கொயாக்கள் 19*
காலம் உனக்கொரு பாட்டெழுதும் 30ሉ கோசலை 51
அரசி 79
கோளறு பதிகம் 96.
மோகவாசல் 115
பின்னுரை : கார்த்திகேசு சிவத்தம்பி 121

சுருக்கும் ஊஞ்சலும்
வெயில் கொளுத்துகிறது, ஆனிமா தத்து வெயில் . மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது. இங்கே, கல்லாப் பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால்மைல் தூரத்துக்கு முன்னால் ‘கண்டிவீதி' விரிகிறது. வீதியின் இடது ஓரத்தில், கடை வாசலிலிருந்து சுமார் நூறு அடி தூரம் தள்ளி இந்த ஊரின் பெயரைத்தாங்கிய சிமெந்துப் பலகை ஒன்று வெள்ளையாகத் தெரிகிறது. அதன்மேல் இந்த வெயிலிலும் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து கொண்டு கரைகின்றன. அந்தக் காக்கை களின் சத்தம் சன்னமாக, காதுக்கு சிரமந்தருவதாக இருக்கிறது. சுறுசுறுப்பாக, அங்குமிங்கும் பறந்துதிரிந்து, இரைதேடும், இந்தக் காக்கைகள் கூட ஓரிடத்தில் சோம்பியிருக்கின்றனவே! அவ்வளவு வெயிலா?
கடைவாசலுக்கு நேரே ரோட்டுக்கு அப்பால் ஒரு கம்பிவேலி. அக்கம்பிவேலிக்கும் ரோட்டுக்கும் இடையில் ஒரு பசுமாடு படுத்துக்கொண்டு அச்ை போடுகிறது. பக்கத்தில் ஒரு வெள்ளைக் கன்றுக்குட்டி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, கண்கள் அரைத் தூக்கம் போலச் செருகிக்கொள்ள, கால்களைப் பரப்பிக் கொண்டு நிற்கிறது. இந்தமாடு எப்போதும் ஆவ் ஆவ்' என்று வாய்கொள்ளாமல் புல் மேயுமே? இன்று இதற்கு என்ன வந்தது? ஆறுதலாகப் படுத்திருக்கிறதே! கன்னத் தோலினுக்கூடாக தாடை எலும்புகள் பீறித்தெரிய
GLDnt-l

Page 5
6 () சுருக்கும் ஊஞ்சலும்
மெதுவாக இது அசைபோடுவதைப் பார்க்க, ஒரே சினமாக இருக்கிறது.
கம்பிவேலிக்கு அப்பால் சிறிய வயல்வெளி. அவ்வயல்வெளியின் மத்தியில் மஞ்சளாகவும் . சற்றுப் பெரிதாகவும் காட்சியளிக்கிறது "அப்போதிக்கரி ஆசுப்பத்திரி’. வயல்வெளியில் நான் வந்திறங்கிய போது சிறிய பூண்டாக-இன்னசெடி என்று அடையாளம் காண முடியாத நிலையிலிருந்த-சணல் இப்போ வேலியளவுக்கு வளர்ந்து மஞ்சட்பூக்களுடன் குலுங்கிச் சாய்கிறது. ஆசுப்பத்திரி விறாந்தையில் ஒடலி பரமசிவம் இருந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறார். கால்கள் இரண்டையும் அகட்டிப்போட்டுக்கொண்டு, வாங்கில் முதுகு சாயுமிடத்தில் கைகளை வீசிப் போட்டுக்கொண்டு, தலையைக் கவிழ்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சுருட்டுப் பிடிக்கிறாரா இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது. குரங்கு தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் இடைக்கிடை புகை மெல்ல வருவதுதான் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அவரும் கூட இந்த வெயிலில் சோர்ந்து சுருண்டுபோய் இருப்பதாக எனக்குப்படுகிறது.
ஆசுப்பத்திரிக்கு இடதுபுறம் கொஞ்சத் தூரம்தள்ளி சிவப்பாக அரசாங்க குவாட்டஸ் தெரிகிறது. குவாட்ட ஸின் முன் விறாந்தையில் இருதூண்களுக்கு நடுவே ஒரு கயிற்றுக்கொடி கட்டப்பட்டு அதில் சில துணிகள் காய விரிக்கப்பட்டிருக்கின்றன. சுவரோடு சாய்த்து சாயும் இடம் இல்லாத கதிரை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. காற்றில் ஆடும் துணிகள் மெதுவாக, ஆடிக்களிக்கவே பிரியமற்றவைபோல, பலவந்தமாக ஆட்டப்படுவதாக எனக்குப் படுகிறது. அனேகமான வேளைகளில் அந்தக் கதிரையில் கனகசிங்கம் கால்மேல் கால்போட்டுக் கொண்டு, தொடையில் ஊன்றிய கையை நாடிக்கு

ரஞ்சகுமார் () 7
முண்டு கொடுத்துக்கொண்டு, இருப்பதைக் காணலாம்" இப்போ அதுவெறுமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
கல்லாவிலிருந்து பின்புறம் திரும்பிப்பார்த்தால் யன்னலினுரடாக “ரெயில்வேலைன்’ தெரிகிறது. அதை ஒட்டினாற்போல பற்றையும் மரமுமாக ஒரே காடு. அந்தப் பச்சைக்குமேல் நிர்மலமான நீல ஆகாயம். பச்சையும் நீலமும் பார்க்கவே சசிக்கவில்லையே. வானத் தைக் கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை, வெயில் கண்ணைக் குத்துகிறது. அப்பாடா, வெயில்! இந்த வெயில்
நாசமாய்ப்போக!
முன்புறம் இப்படிக் கிட்டவாகக் காடு இல்லை. ஆசுப்பத்திரி, குவாட்டஸ் எல்லாம் தாண்டி பெரிய வயல் வெளி. 'லக்ஷபான விலிருந்து “யாழ்ப்பாணக்குடாவுக்கு ‘கரண்ட்டைச் சுமந்து செல்லும் நீள நீளமான கம்பிக ளும், அவற்றைத் தாங்கி நிற்கும் பிரமாண்டமான *போஸ்ட்'களும் அவ்வயல்வெளியை ஊடறுக்கின்றன. அதற்குமப்பால் கருநீல நிறமாகத்தான் காடு தோன்று கிறது, எங்களூரில் தொலைதூரப் பனைகள் காட்சியளிப் பதும் ஏறத்தாள இதே காட்சித்தான்.
மேலே கூரைக்குத் தகரம்தான் போட்டிருக்கிறார்கள். அதனால் ஒரே வெக்கையாக அடிக்கிறது. அடிக்கிற் வெக்கையில் முகம் கருகிவிடுமாற்போல் எரிந்து தள்ளு கிறது. போதாத குறைக்கு பின்னாலிருந்து “பொய்லர்' சூடு முதுகை எரிக்கிறது. தண்ணிர் கொதிக்கும் "தளதள' சத்தம் வேறு காதுக்கு நாராசமாக இருக்கிறது.
கண்டி வீதியில் செருப்புச்சத்தம் ‘சரசர' என கையில் பிரப்பங்கூடையுடன் கருணே நடந்து போகிறான். அதற் குள் போத்தில்"கள் இருக்கும். போகிற போக்கில் அவன் மெல்லிதாக என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு போகிறான். வெயில் வெக்கையில் கண்ணையும், முகத்த்ை

Page 6
8 () சுருக்கும் ஊஞ்சலும்
யும் இடுக்கிக்கொண்டு, அவன் வேண்டா வெறுப்பாகச் சிரிப்பதைப் பார்க்க பாவமாக இருக்கிறது.
இப்படி அவன் போகிற பாதையில் சிறிது தூரம் போனால் 'முதுபண்டாவின் தச்சுவேலைக் கொட்டிலுக்கு. முன்னால் சிறுபற்றைகளுக்கு இடையில் உள்ள பழு தடைந்த கிணற்றின் ‘மிதி'யில் அவன் இந்தப் பிரப்பங் கூடையுடன் உட்கார்வதைக் காணலாம். "இரண்டு ரூபா, ஐந்து ரூபா’ பேர்வழிகள் அடிக்கடி அவனிடம் வருவார் கள். ஒருதடவை போலிசிடம் கூட அகப்பட்டிருக் கின்றான்.
அப்பா இப்போதைக்கு வரமாட்டார். வந்தால் நான் கொஞ்சம் தூங்கலாம். வர இரண்டுமணியாவது ஆகும். இப்போது நேரம் பன்னிரண்டிற்குள்தான் இருக்கும். நேரம் பார்ப்பதற்கு கடை மணிக்கூட்டை நம்ப முடியாது.
உள்ளே குசினியிலிருந்து தேங்காய் துருவுகிற சத்தம் கேட்கிறது. யாரோ இரண்டு பேர் துருவுகிறார்கள் போல இருக்கிறது. யாராக இருக்கும்? சமையல்காரனும் சிரிபாலாவும்தான். சிவலிங்கம்தான் இங்கே முழங்கையை முண்டுகொடுத்துக் கொண்டு மேசையில் தூங்கிவழிந்து கொண்டிருக்கிறானே. சின்னவன் அப்பாவுடன் சந்தைக் குப் போய்விட்டான்.
இது ஒரு சனியன் பிடித்த ஊர், சந்தைக்குப் போவ தானாலும் எட்டுமைல் தூரம் பஸ்ஸில் போகவேண்டும். எனக்கு இப்போதுள்ள நிலையில் பஸ்ஸைப்பற்றி நினைக் கவே எரிச்சலாக இருக்கிறது. அதிகம் ஏன்? கக்கூசுக்குப் போவதாக இருந்தாலும் பின்னால் ரெயில்வேலைனைக் கடந்து, காட்டுக்குள்தான் போகவேண்டும். எனக்கு ரெயில்வே லைனைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆயினும் என்னசெய்வது? இயற்கைக் கடனை நிற்ை. வேற்ற நானும் ரெயில்வே லைனைக் கடந்துதான் தீர வேண்டும்.

ரஞ்சகுமார் () 9
நெடுக, இப்படிக் காட்டையும் ரோட்டையும் பார்த் துக்கொண்டிருக்கச் சலிப்பாகத்தான் இருக்கிறது. இந்த ஒருமணி நேரமாக ரோட்டிலும் வாகன நடமாட்டங் குறைவு. அப்படியிருந்தால் வியாபாரமாவது சுறுசுறுப் பாக இருக்கும்.
யாராவது பேச்சுதுணைக்கிருந்தால் பரவாயில்லை? சிவலிங்கத்தைக் கூப்பிடலாமா? வேண்டாம். பாவம்! அவன் இரவு படுக்கப் போனபோது நேரம் இரண்டு மணியிருக்கும். அதுதான் இப்போது தூங்கி வழிகிறான்.
ஐஸ் மாதிரிக் குளிராக ஏதாவது குடித்தால் நல்லது. சோடா...வேண்டாம் .செலவு கூட. இளநீர்.குடிக் கலாம்.என்ன செய்வது? கத்தி எடுக்க சிவலிங்கத்தைத் தான் அருட்ட வேண்டியிருக்கிறது.
*சிவலிங்கம்.சிவலிங்கம்.டேய்'
அவன் மெல்ல அருண்டு விழிக்கிறான். சிவந்த
கண்களைக் கைகளால் தேய்த்து, கொட்டாவி விட்டுச் சோம்பல் முறித்துக் கொள்கிறான்.
**எண்ண, சிண்ண மொதலாளி'
‘குசினிக்கைபோய் சின்னக்கத்தி ஒண்டு எடுத்துக் கொண்டந்து ஒரு இளனி வெட்டித்தா. போ"
இவன் அரைச் சிங்களவன். தாய் சிங்களத்தி, தகப்பன் இந்தியத்தமிழன். அதுதான் தமிழ்ப் பெயரும் சிங்களக் கதையுமாக இருக்கிறான்.
அதோ, அந்தப் பெயர்ப்பலகையருகில் கனகசிங்கம் வருகிறார். எங்கோ, இந்த வெயிலில் போய்விட்டு களைத்து விழுந்து, வியர்த்தொழுக "டியூட்டி யூனிபோம் உ. ஃ வருகிறார். இந்தப் போறஸ்ற் காட் வேலைகூடச் சிரமந்தான். காட்டுக்குள்ளே தனியாக அலையவேண்டும்.

Page 7
10 0 சுருக்கும் ஊஞ்சலும்
ஆனால் கனகசிங்கம் அப்படியல்ல. குவாட்டஸிலேயே அந்தக் கதிரையில் இருந்துகொள்ளுவார். எப்போதாவது ஒருநாள்தான் அத்தி பூத்தாற்போல் டியூட்டி யூனிபோம் உடம்பில் ஏறும்.
சிவலிங்கம் குசினிக்குள்ளிருந்து நன்கு சீவிவெட்டிய இளநீருடன் வருகிறான். சிங்களவனாகியபடியால் * குறும்ப வெட்டிப் பழகிய கையால் நல்ல அழுத்தமாக, வாய்பொருத்திக் குடிக்க ஏதுவாக இளநீர் வெட்டித் தருகிறான். ஆனால் இதைத் தூக்கிக் குடிக்கவே பெரிய சோம்பலாக இருக்கிறது, எனக்கு
கனகசிங்கம் நேரே இங்கேதான் வருகிறார். சிகரட் வாங்கவாக இருக்கும். வாசலில் ஏறும்போதே 'சூ. சரியான வெயில்' என்று அலுத்தபடியேதான் வருகிறார்.
‘போறேசஸ் ஒண்டு தா. தம்பி'
இலாச்சியை இழுக்கவே அலுப்பாக இருக்கிறது. வேண்டா வெறுப்பாக சிகரட் விற்பனை நடத்துகிறேன் அவர் சிகரட்டைப் பற்றவைக்க சதா எரிந்துகொண் டிருக்கும் விளக்கண்டை போகிறார். அது அணைந்து போயிருக்கின்றது.
‘விளக்கு நூந்துபோச்சுத்தம்பி"
சிவலிங்கத்திடம் சொல்லிக் கொளுத்து விக்க லாம்தான் : அவன் பாவம்! மீண்டும் மேசையில் தூங்கி வழிகிறான். எனக்கும் எழச் சோம்பலாக இருக்கிறது.
‘'இப்பிடி உள்ளைவந்து பொயிலர் நெருப்பிலை பத்துங்கோ. அல்லது உப்பிடி உந்தக்கூரைத் தகரத்திலை பிடியுங்கோ எரியும்'
என்னுடைய நகைச்சுவைக்காக ஏதோ கடமைக் காகச் சிரிப்பதுபோல் சிரித்துவிட்டு, சிகரட்டைச்

ரஞ்சகுமார் () 11
கொழுத்திக்கொண்டு மெதுவாக குவாட்டஸை நோக்கி நடக்கிறார் அவர்.
மீண்டும் வெறுமை. ஒரே எரிச்சலாக இருக்கிறது. ரேடியோவைத் திருகுகின்றேன். ஏதோ கிரிக்கட்நேர்முக வர்ணனை நடக்கிறது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் ‘டெஸ்ட்மச் நடப்பதாக கனகசிங்கம்தான் நேற்றுச் சொன்னார். **வெங்கட்ராகவனின் பந்துவீச்சுக்கு யாரோ ஒரு நியூசிலாந்துக்காரன் பெளண்டரி அடித்த தாக" அறிவிப்பாளன் அறிவிக்கின்றான். வெங்கட் தமிழன். ஒரு தமிழனின் பந்துவீச்சுக்கு அந்நியன் ஒருவன் அடித்தானாம் பெளண்டரி! தமிழனுக்குச் சோம்பலா? சே. இந்த அறிவிப்பாளனின் கரகரத்த, சோம்பலான குரலைக் கேட்கவே பற்றிக்கொண்டு வருகிறது. ரேடியோவை வெறுப்புடன் மூடுகிறேன்.
துரத்தே யாரோ மஞ்சள் நிற ஜப்பான் குடையுடன் வருகிறார்கள்.
ஜப்பான் குடை தான் இப்போது "பாசன்'
பெண்கள்தான் அதிகமாக ஜப்பான்குடை பாவிக் கின்றார்கள். எதிரே வருவதுகூட ஒரு பெண்ணாக இருக்கலாம். இருக்கலாம் என்ன? பெண்ணே தான்.
மஞ்சளுக்குக் கீழே சிறிது இடைவெளிவிட்டு மெல்லிய. மிக மெல்லிய சிவப்பாகத் தெரிகிறது. ரோட்டின் கறுத்தப் பின்னணியில் மஞ்சளும் மென்சிவப் பும் நல்ல எடுப்பாக இருக்கிறது. அந்த மென்சிவப்பு, அப்பெண்ணின் ஆடையாக இருக்கும்.
மினிகவுண்தான் இப்போது "பாசன்'
இவளுக்கு தூரத்தே நின்று பார்க்க இது அழகாகத் தான் இருக்கிறது. கிட்டவர நன்கு பார்க்கலாம். முகத்தை யும் பார்க்கலாம்.

Page 8
12 0 சுருக்கும் ஊஞ்சலும்
அழகாக இருப்பாளோ? அழகாகத்தான் இருப்பாள். அதையே நான்.நான்மட்டுமென்ன, எல்லோரும் விரும்பு கிறார்கள்.
இந்த வெயிலில் நடந்து வருகிறாளே! பாவம்! சுடாதா?
குதிச்சப்பாத்து போட்டிருப்பாள்.
குதிச்சப்பாத்துதான் இப்போது "பாசன்'
குதிச்சப்பாத்துப் போட்டால் வேகமாக நடக்க முடியாது. அதுவும் நல்லது. சில பெண்களுக்கு அதுவே ஆற அமர.நிதானமாக நடக்கப் பழக்குகிறது.
இந்தப் பெண்ணின் நடை நன்றாயிருக்கிறது. மிக நன்றாயிருக்கிறது. அன்னநடை என்பார்களே! அது மாதிரி.
இப்போது அவள் அந்தப் பெயர்ப்பலகைக்குக்கிட்ட வந்து விட்டாள். நல்ல நிறம். நான் பெண்கள் எந்த நிறத் தில் இருக்கவேண்டுமென எண்ணுவேனோ? அந்த நிறம். இன்னும் கிட்டவந்தால் ஏன் கடைக்கே வந்தால்..? நன்றாகப் பார்க்கலாம்.
இந்த நேரத்தில் எங்கே வருகிறாள்? ஆசுப்பத்திரிக்காக இருக்கும். இந்த அழகான பெண்ணுக்கு ஆசுப்பத்திரிக்குப் போகுமளவுக்கு நோயா? சீ. கூடாது. அப்படியிருப்பதை நான் விரும்பவில்லை.
இப்பொழுதுதான் நன்றாகக் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. குழுகுழு கண்ணாடி மாட்டியிருக்கிறாள். சிவந்த முகத்திற்கு கறுத்தக் கண்ணாடி எடுப்பாக இருக்கிறது.
ஆமாம், இந்தச் சனியன் பிடித்த ஊரில் கூட இப்படிப் பெண்கள் இருக்கிறார்களா? ஏன் இருக்கக் கூடாது? ஒரு

ரஞ்சகுமார் () 13
வேளை இவர்கள்-இப்பெண்ணின் குடும்பத்தினர்என்னைப்போல் வெளியூர்க்காரர்களாக இருக்கலா மல்லவா? இங்கே "பாம் ஏதாவது.
என்ன! இவள் கடைக்கல்லவா வருகிறாள்? நான் சற்று
உஷாராக இருக்கவேண்டும். இப்படி இருந்தால் எப்படி? அதுவும் ஒரு அழகான பெண்ணுக்கு முன்னால்.
கடைவாசல்படி கொஞ்சம் உயரம். அதில் ஏறும் போது அவளுடைய குதிச்சப்பாத்து வழுக்கப்பார்க்கிறது. வாசல் தூணைப்பிடித்துக்கொண்டு சமாளித்துக் கொள் கிறாள்.
* கவனம்.பாத்துவரக்கூடாதா'
“Its alright thank you'
ஆகா! மதுரமான குரல். இவள் இங்கிலீசு தெரிந்த வள், நானும் எனக்குத் தெரிந்ததாக காட்டிக்கொள்ள வேண்டும்.
“What do you want'
*சோடா ஒண்டு தாங்க"
சோடா என்று சொல்லும்போது சாயம் பூசிய, சிறிய அளவான உதடுகளின் பின்னணியில் முத்து வெள்ளைப் பற்கள்.வடிவமே முத்துப்போலச் சிறிதான பற்கள்நன்றாக இருக்கின்றன. சோடா கொடுக்க சிவலிங்கத்தை எழுப்பலாமா? வேண்டாம் நானே கொடுக்கலாமே! எழுந்த வேகத்தில் பாதி திறந்திருந்த இலாச்சி தொடை யைப் பதம்பார்க்கிறது. கனகசிங்கம். அவரால் தானே இலாச்சி திறக்கவேண்டி வந்தது. அவர் பாழாய்ப் போக.
'அம்மாடி' என்றவாறு திரும்ப உட்கார்ந்து கொள் கிறேன். அவள் முன்னாலிருந்த "சோடா ராக்’கிலிருந்து
சோடா ஒன்றை எடுக்கிறாள்.

Page 9
14 () சுருக்கும் ஊஞ்சலும்
'பரவாயில்லை opener ஐத் தாங்க.நானே உடைக் கிறேன்'
எடுத்துக் கொடுக்கிறேன். நல்லகாலம் அது கையெட்டும் தூரத்திலேயே இருக்கிறது. இல்லாவிடில் அவள் முன்னாலேயே நொண்டி. நொண்டி. சீ. வெட்கக்கேடு.
சோடா குடிப்பதற்காகப் போலும், கண்ணாடியைக் கழற்றிக் கொள்கிறாள். நல்ல பெரிய விசாலமான கண்கள். உதட்டுக்குச் சாயமிட்டவள், கண்ணுக்கு மையும் இட்டிருக்கலாமே! இட்டிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.
*எவ்வளவு காசு.
9
"ஒண்டிருபது தாங்க. 9 காசு தரும்போது தான் கவனிக்கிறேன். கையில் மெல்லிய பூனை மயிர்கள். அது கறுப்பாக இல்லாமல் உடலின் நிறத்திலேயே இருக்கிறது. அதுவும் ஒரு அழகு தான்.காலிலும் இருக்கும், எட்டிப்பார்க்கலாமா? சீ. அவள் என்ன நினைத்துக் கொள்வாள்.?
நான்தான் அவளையே பார்க்கிறேனே! அவள் என்னைக் கவனிப்பதாகவே காணோம்.
முகத்தைக் கைக்குட்டையால் ஒற்றித்துடைக்கிறாள். திரும்ப அதை மடிக்கும்போது. நான் நினைத்தது நடக் கிறது. கணநேரம்தான். கண்களைத் திருப்பிக்கொள் கிறாளே! ஆமாம்,இப்படியான சந்தோச சமாச்சாரங்கள் எல்லாம் கணநேரம்தானா?
இ இன்னும் நிற்கிறாள். ஏதாவது வேறு தேவைகளும்
}ருககும்.
“வேறை என்ன வேணும்?"

ரஞ்சகுமார் 0 15
"வெறும் Sodabottle கொடுத்தா. நல்லது’’ 'ஒ.அது நாங்கள் விக்கிறதில்லையே'
“Oh I See''
**எண்டாலும் பரவாயில்லை..உதிலை கிடக்கிற போத்தலை எடுங்க, இன்னும் ஒரு ரூபா தாங்க’
அலுவல் முடிந்து போகும்போது மீண்டும் ஒருதடவை மின்வெட்டு, இப்போது அவள் மெதுவாக சிரிக்கிறதாக எனக்குப்படுகிறது.
திடீரென பெயர் தாங்கிப் பலகையில் இருக்கும் காக்கைள் உச்சஸ்தாயியில் கத்துகின்றன. அவை ஆரவார Dit . . . . . . மகிழ்ச்சிப் பெருக்குடன் கரைவதாக எனக்குப் படுகின்றது. அவை இப்போ நெருக்கமாக அமர்ந்து ஒன்றை ஒன்று கொத்தியும் சீண்டியும் விளையாடு கின்றன.
அந்த மாடு இப்போது எழுந்து நிற்கிறது. அ ைச போடுவதை நிறுத்திவிட்டது. புல்மேய ஆயத்தமா கின்றதா?. முதுகில் தொந்தரவு தரும் ஈக்களை வாலால் விளாசி விரட்டுகின்றது. அப்படித்தான் இருக்கவேண்டும் எதிரியை அடித்து ஓட.ஒட விரட்டவேண்டும்.
கன்றுக்குட்டி துள்ளித் துள்ளி தாய்க்குக்கிட்ட வருகிறது. தாயைமுட்டி மோதிப் பால் குடிக்கிறது. அப்படித்தான் இருக்க வேண்டும். சேரவேண்டியதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக.கோலாகலமாக வாழ வேண்டும். ஒ! வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகர tDfT6ðrgi).
அந்தப்பெண் ஆசுப்பத்திரிக்கேதான் போகிறாள். பரமசிவம் யோகத்திலிருந்து விழித்தெழுகின்றார். போகத்திற்கா? சீ.என்ன அசிங்கமான எண்ணம்.

Page 10
16 L சுருக்கும் ஊஞ்சலும்
சுருட்டு 'புக். புக்’ என்று புகை கக்குகிறது. அந்தப்புகை அப்படியே மேலெழுந்து. மேலே. இன்னும் மேலே போய்க் கரைந்து காற்றோடு ஐக்கியமாகின்றது. அப்படிக் கரைவதைப் பார்க்க, எனக்கும் நான் அவ்வாறு மேலே மேலே போகவேண்டும்போல் இருக்கிறது.
குவாட்டஸ் முன் விறாந்தையில் கதிரவன் மேல் வழமையான பாணியில் கனகசிங்கம் உட்கார்ந்திருக் கிறார். கொடியிலுள்ள துணிகள் காற்றுடன் கலந்துறவாடி இன்பப் பெருக்கால் கனகசிங்கத்தின் முதுகில் மெல்ல விசிறுகின்றன. ஒரோரு சமயம் அவரின் முகத்திலேயே செல்லக் குழந்தையின் விளையாட்டு அடிகள் போலப் பட்டு விலகுகின்றன. அவர் முகத்தில் புன்னகை. அப்படித்தான் இருக்கவேண்டும். சதாநேர மும் சிரித்த முகத்துடன். அதைவிட்டு விட்டு கடுவன் பூனை மாதிரி கடுகத்த முகத்துடனா?
வெயில் இப்போதும்கூட சுள்ளென்று அடிக்கிறது. இந்த வெயில் இல்லாவிட்டால் நானில்லை. எதிரே தெரியும் காடு இல்லை. தூங்கிவழியும் இந்தச் சிவலிங்கம் இல்லை. இந்தக் கடையில்லை. அந்தக் கன்னி யில்லை. ஒன்றுமே இருக்காது. வெயில் வேண்டும், நன்கு எரித்து, எரிந்து தள்ளவேண்டும்.
கருணே செருப்புச் சத்தம் ‘சரசர’க்கக் கடைக்கு வரு கிறான். ரீ குடிக்கவா? வரட்டுமே! ஒரே வீச்சில் ஒன்பது f அடிக்கமாட்டேனா நான்! அவனும் வெகு உற்சாக மாக இருக்கிறான். சீட்டி கூட அடித்துக் கொள்கிறானே! கைக்சரக்கு தீர்ந்துவிட்டதா? காசு சேர்ந்து விட்டதா? சந்தோசம் கொண்டாட வருகிறானா..?
அப்பா இப்போதைக்கு வரமாட்டார். வராவிட்டால் போகட்டுமே! நானிருக்கிறேன். கடையை நடத்த,

ரஞ்சகுமார் () 17
வேலை செய்வது ஒன்றும் பெரிய கஷ்டமான காரிய மில்லையே!
ரெயில்வேலைனில் கூட்ஸ் ஒன்று போகிறது. கடையே அதிருகிறது. கடை அதிர. கடையில் நிலம் அதிர. நான் அதிர. என்னோடு பொய்லர் அதிர. எதிரே வீதி அதிர. ஆசுப்பத்திரி, அந்தப் பெண் அதிர. ஷோக் கேஸ்கள் அதிர. சிவலிங்கம் அதிர. அதிர. இந்த அதிர்வுகள்கூட இவ்வளவு லயத்தைத் தேக்கி வைத்திருக் கின்றனவே!
இந்தச் சத்தத்தில் சிவலிங்கம் விழித்துக்கொள் கிறான். அவனது சோம்பல் முறியவில்லையோ? சனியன் பிடித்தவன். மத்தியான வியாபாரநேரம் துரங்கி வழி. கிறானே!
*சிவலிங்கம். டே! சிவலிங்கம், என்ன நெடுகத் தூங்கிவிழுகிறாய்? போ. போய் முகத்தைக் கழுவிக் கொண்டுவா. இப்பிடிநெடுகத் தூங்கிவழிஞ்சா வாற வனும் சாப்பிடாமல் திரும்பிப் போடுவான்.'
ரெயில்வே லைனைக் கடந்து ஒருவன் போகிறான். காலைக்கடனை மத்தியானத்தில் கழிக்க, கூட்ஸ் போன கையோட போகிறான். இவ்வளவு நேரமும் கூட்ஸ் போகட்டும் என்று காத்து நின்றானா? பயந்தாங் கொள்ளி!பயம். என்ன பயம் சாவதற்கு?. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு?
இருந்தாற்போல் ரோட்டில் ஒரு பஸ் போகிறது. வேகம் அவ்வளவாக இல்லை. ஆமைவேகத்தில் உருட்டு கிறானே பஸ்ஸை அடே! சோம்பேறிப் பயலே பஸ்ஸை வேகமாக, உன்னால் முடிந்தவரை வேகமாக ஒட்டு! பஸ்ஸ்ைப் பார்க்க எனக்கு பரமானந்தமாக இருக்கிறது. ரோட்டில் சுறுசுறுப்பு விஷம்போல் ஏறுவதாக எனக்குத் தோன்றுகிறது.

Page 11
18 ( ) சுருக்கும் ஊஞ்சலும்
ரேடியோவைத் திருகிறேன். சத்தம். ஏகச்சத்தம். யாரோ விக்சர் அடித்துவிட்டானாம்! யார் பந்து வீசு வது? மடயன். ஸிக்சர் அடிக்கும்படியாகவா பந்து வீசுவது? 'வெங்கட்ராகவனின் பந்துவீச்சு' என்ன அறிவிப்பாளன் சொல்கிறான். அவனுடைய குரலில் மிகுந்த உற்சாகம் தொனிக்கிறதா? அவனுடைய குரலை யும் மீறி சனங்கள் கத்துகிறார்களே! உயரேபோன பந்தைப் பார்த்து குதூகல வெறியுடன் அவர்கள் குரவை யிடுகிறார்களா? கத்துங்கள் மகாசனங்களே; கத்துங்கள்! உலகமெங்கும் உற்சாகத்தை விதைக்கக் கத்துங்கள்!
வெங்கட் தமிழன்! தமிழன் என்றால் என்ன? எந்தக் கொம்பனாக இருந்தால் என்ன? திறமையைப் பாராட் டியே ஆகவேண்டும். ஸிக்சர் அடித்தவனுக்கு ஜே!
ם נם

கபரக் கொய்யாக்கள்
சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஒர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக் கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி.
கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தரிசிக்கும் புத்தனின் சிலை.
ஒரு பள்ளிக்கூடம். ஏதோவொரு ‘பாலிக மஹா வித் தி யா ல ய என்று பெயர். பையன்களும்கூடப் போனார்கள்!
சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்கு கிறது. அங்கிருந்து "சறுக்கீஸ்" விட்டால் அந்தத்தி லிருக்கிற கருவாட்டுக் கடையில் முடிவடைகிறமாதிரி லாவகம் கொண்டு வளைந்து போகிற தெரு, பளபள வென்றிருந்தது. இருபுறமும் புகையிலையும் வெற்றி லையும், அரிசி, பருப்பு, கருவாடு விற்கிற கடைகள், சங்கக்கடை, ‘சாளி'யின் சாப்பாட்டுக் கடை, ரெக் கோடிங் பார் ஒன்றுமிருந்தது. எனக்கு சுருட்டுக்கடையில் மூச்சு வாங்குகிறபடிக்கு வேலை; நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத வேலை!
ஒட்டு வீடுகள் வலு குறைவு. களிமண்ணும் நெறி யற்றுப்போன காட்டுக் கம்புகளும் கொண்டு சுவரெழுப்பி. தென்னங்கீற்றுகளால் வேய்ந்த வீடுகள், விசாலமாகவே இருந்தன.

Page 12
20 L கபரக் கொய்யாக்கள்
பொலிஸ் கிடையாது. உப தபாற்கந்தோருண்டு. வெள்ளியும் புதனும் முறை வைத்துக் கூடுகிற சந்தை. அரசமரததுக்குப் பின்னால் கூடாரங்களிட்டு கூவி விற் பார்கள். வாயகன்ற மண்பானைகளில் காய்ச்சிய தேங்காயெண்ணெயும், எருமைத்தயிரும் கா ற் றில் சுகந்தத் தாதுகளைப் பரப்பும்.
அடிக்கடி நினைத்துக் கொண்டு மழை ஒரு பிடி பிடிக்கும். போகிற போக்கில் குசாலாக கண்ணடித்து விடடுப் போகிற விளையாட்டுக்கர்ரப் பெண்ணைப் போல. சில நிமிட நேரங்களில் ஒய்ந்து மறுபடி வானம் வெளிக்கும், துடைத்து ஏற்றிவைத்த சிம்னி விளக்கு மாதிரி. -.
எல்லோரும் ஆற்றுக்குத்தான் குளிக்கப்போவார்கள். நானும் அருளும் பாதி விடியுமுன்னே போவோம். அருள் சுருட்டுப்புகைத்தபடி "சாளி' கடைக்கு பக்கத்திலிருக்கிற முடுக்கில் நுழைந்து விடுவிடென்று நடந்து போவான். தென்னந் தோப்புகள் தெரியும். அழகியொருத்தி ஒருக், களித்துச் சயனித்துக் கிடப்பதென நிலத்தைச் செதுக்கியி ருந்தது. தோப்புகளுக்கிடையே பெயர் தெரியாத பற்றை கள். நம்மூரின் பாவட்டைப் புதர்களை ஞாபகம் காட்டின. அந்த நெடி கிடையாது. தொட்டால் ஒடிந்து போகிற தன்மையும் இல்லை, கம்புகள் வலு மிகுந்திருந் தன. இலைகளும் தோற்றமும் பாவட்டை மாதிரி. எறும். பூர்ந்த தடங்களென ஒற்றைச் சுவட்டுப் பாதைகள் வகிடெடுத்துத் தெரியும்.
ஒரு பெண்ணின் மார்புகளைப் போன்றுஇலயிப்புடன் வளைத்தபடி ஏறி இறங்கும் ரோட்டு பளபளவென்று திடுமென முன்னே விரியும். இது கடைத்தெருவிலிருந்து குறுக்கே பிரிந்துவருகிற பாதை. மார்பின் நுனிக்காம்பில் பக்கமாக சுநீதா முதலாளியின் பேக்கரி. இன்னும் போக

ரஞ்சகுமார் () 21
ரோ டுக்குக் கீழால் கள்ளத்தனமாக வருகிற மாதிரி ‘சளசள’ சத்தத்துடன் ஆறு எதிர்ப்படும். \oபயர் தெரியாத ஆறு. தண்ணிரில் களிமண் நிறம். நிமிர்ந்து பார்த்தால் எதிரே தொடத்தொட விலகிப் போகறதென மலைச் சிகரமொன்று ஆசைகாட்டும்.
மாங்கொட்டை போட்டுத் தத்தி தத்தி ஒடலாம் என பாறைகள் ஒழுங்கற்று தெற்றுப் பற்களைப் போன்று தண்ணிருக்குள் துருத்திக்கொண்டு நின்றன. கொஞச தூரம் இறங்கினால் ஆளுயரத்துக்கு ஜல்' என்று நீர் சரிந்து விழுகின்றது. ஒரு யுகம் கழியட்டும் என்று விச் ராந்தியாக தலையை இதமாகத் திருப்பித் திருப்பிக் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம். உச்சியில் முத்தமிட்டு முத்தமிட்டுக் களைத்துப் பிரிந்து போவ தென 'ஒ'வென்று அழுதவாறு தண்ணிர் பாயும்.
மற்றபடி எங்கும் போலவே இவ்வூரிலும் சனங்கள், சனங்கள்! ஒருசாண் வயிற்றுக்கும் ஒருமுழத் துணிக்கும் ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!
திண்ணிய மார்புகளை இறுக்கிக் காட்டும் ரவிக்கை களைப் பூட்டி, ஒன்றைச் சீத்தைத் துணிகளில் கம்பாயம் கட்டிய பெண்கள்.
காய்ச்சிய தேங்காயெண்ணெயைப் பூசி, தலைமயிரை வழித்தெடுத்து, பின்னுச்சியில் சிறு பாக்களவு குடுமி வைத்திருக்கிற ஆண்கள். கடையில் ‘களுசுருட்டு’ கேட் பார்கள்.
ஏழு மணிக்கெல்லாம் கீழேயிருந்து மெதுவாக மேலேறிவரும் ரோட்டில் வெள்ளைப் புறாக்கள் மாதிரி பள்ளிக்கூடம் போகின்ற குழந்தைகள். 'கொப்பிபொத்” உம் "பன்சில்" உம் வேண்டுமென்றே சற்றுநேரம் வீணடித்துவிட்டு வாங்கிப் போகின்ற குமரிகள்.
மோ-2

Page 13
22 0 கபரக் கொயாக்கள்
இந்தக் கபரக்கொயாக்கள் மட்டும்.? எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று சொல்ல முடியாது. பெயர் தெரியாத அந்தப் பற்றைக்குள் சரசர வென்று அரக்கிக் கொண்டு போகும்.
தலைக்கு மேலே சளசளவென்று தண்ணீர் விழச் 'சுகம் சுகம்.' என முனகிக்கொண்டே குளிக்கிறபோது வாயைப் பிளந்துகொண்டு, துருத்தித் தெரிகின்ற மூஞ்சி யில் மூக்குகள் விரிந்து, துவாரங்கள் பெரும் பொந்துகள் என்று தெரிய கள்ளத்தனமாகக் கிட்டவே வந்துவிடும்.
நேரம் காலமற்று சோடி சேர்ந்தபடியே தண்ணிருக் குள் ஊறி வெடித்துவிடும் என்று அச்சங்கொள்ள வைக்கும்படி இறுக்கிப் பிணைந்து புணர்ந்தபடியே புரண்டு புரண்டு ஆற்றுக்குள் நெளிவன.
அரைத்துரக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எரிச்சல் மிகக் கொள்ளும் படி முன் கதவில் 'படிர்' என்று ஒசைஎழ வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும். வால் பட்டால் சதையைப் பிய்த்து எடுத்துக் காகங் களுக்கு விருந்து போடுகிறமாதிரி, என்ன ஒரு வலிமை யான சொடுக்கல்! கத்தி முனைகள்மாதிரி, செதில்கள் குத்திக்கொண்டு நிற்கும்.
இன்னுமொன்று இருந்தது, அசாதாரணமாக நெஞ்சில் துருத்திக்கொண்டு.!
கடைக்குப் பின்னே தோட்டத்து லயன்கள் மாதிரி வரிசையாகக் காம்ராக்கள் இருந்தன. நேரே அடுத்தது காமினி.மீன் வியாபாரிக்கு. அடுத்தது சோமரத்னவுக்கு. அவனுக்குக் காய்கறி வியாபாரம்.பிறகு லியனமாத்தயா அப்புஹாமிக்கு. அதற்கும் அடுத்தது ஆரியவதி ஆமினேக்கு.மணக்க மணக்க அப்பம் சுட்டுத்தருவாள். இப்படி. ஏழோ எட்டுக் கழிய க.ை சிக்கோடியில் எங்களுக்கு ஸ்ரோர்! புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப்

ரஞ்சகுமார் () 23
பெட்டிகளும் வழியவழிய அடுக்கிக் கிடக்க, ஒரு சோடிக்குப் படுக்க இடம் வசதிப்பட்டதுபோல் பெரிய மேசை.சுருட்டுக்குக் கோடா தடவுவதற்கு. மூன்று பேருக்குப் படுக்கப் பாய் விரிக்க இடம் மீந்திருந்தது தரையில். பின்னால் ஒரு சாய்ப்பு இறக்கி காட்டுக் கம்பு களாலும் பச்சை மண்ணாலும் அறுக்கை' பண்ணித் தந்திருந்தார்கள். ஏறக்குறைய இதேமாதிரி பக்கத்து அறைக்குப் பின்னாலும் ஒரு சாய்ப்பு இறங்கியிருந்தது. துரய்மையான ஆற்றுமணல் சொரசொரவென்று பரப்பி யிருந்தது. அதில் கோலமிழைத்ததுபோல இரு அழகிய பாதங்கள் நெடுகலும் படர்ந்து இருந்தன. தொட்டுக் கண்களில் ஒற்றி ஒருகணம் மூடி அனுபவிக்கச் சொல்லும்
LJц ште6.
சுற்றிலும் அரைவட்டமாக புல்லுச் செதுக்கி யிருந்தது. தென்னைக்கும் சாய்ப்பு உச்சிக்குமாக ஒரு "வயர்' ஓடியது. இளைய பெண்ணொருத்தியின் ஆடை கள் பெரும்பாலும் அதில் வெயில் குளித்தன.
இரவுகள் முற்றத் தொடங்கும்போது சுருட்டுக்குக் கோடா தடவ வேண்டும். ‘முணுக் முணுக்...' என்று மண்ணெண்ணெய்ப் புகையினைக் கக்கிக்கொண்டு விளக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அருள் சுருட்டுப் புகையுடன் சேர்த்து பொய் புழுகுகளையும் அநாயாசமாக ஊதித் தள்ளிக்கொண்டிருக்க. கைகள் பரபரவென்று சுருட்டுக் கட்டுகளைப் பிரித்துப் பிரித்து. கோடாச் சட்டிக்குள் தோய்த்துத்.தோய்த்து.
இருந்தாற் போல இரவின் நிசப்தத்தைத் தொலைத்து விட்டு ஒரு பாடல் வரும். 'ஹ"ம்" என்று கூடவே சுருதி சேர்க்கிற ஆர்மோனியம் இழையும். மண்ணெண்ணெய்ப் புகை மயங்கி மயங்கிச் சுழலும். சுவர்களும் செவி களுக்குப் பின்னே கைகளைக் குவிப்பதெனத் தோன்றும். புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும்

Page 14
24 ) கபரக் கொயாக்கள்
மரத்துப்போய் பெரும் கரு நிழல்களைச் சுவரிலே படிய விடும்.
நெலா கன்ன பா மகே அத்த திகெ தா அனே! ஐ தவ மல் பிப்பியங்! சீறும் நாகப் படத்தின் கவர்ச்சியென ஒரு குரல் அழகாகக் கொலைசெய்யும். 'சொள சொள' எனத் தலையை முத்தமிட்டுக் கழிந்துபோகும் நீரென சுவர்களைத் தழுவி இதமாகத் துளைத்துக்கொண்டு நாதம் பிரம்மமெனப் பெருகும்.
அழகிய மலர்கள மலாநது கொண்டேயுள்ளன எனது கைகள் பறிக்கவென நீளும்போது அவை கூழங் கைகளாய்ப் போவதென்ன? ஓ! அழகிய மலர்கள், இன்னும் மலர்ந்து கொண்டே இருக்கின்றனர். கல்லா மேசைமீது அரைத் தொடைகளில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, நீலக்கல்லு மோதிரம் சிமிட்ட சுநீதாமுதலாளி தொடைகளில் தாளம் போடும்போது கேட்டேன்.
*ஆர் அந்தப் பெட்டை? பக்கத்துக் காம்பராவிலை பாட்டுப் பாடிக்கொண்டு.'
*அவளொரு மாதிரியான. பெட்டை." ‘தணியவோ. இருக்கிறவள்?. *சாய். கனபேர் வந்து போவினமே!.
y 9
s
கனபேர் வந்துபோனார்கள்.
கண்ணாடி போட்ட கொக்கென தொங்கலுடன் விசுக்கென நடந்துபோகும் ஒரு பெண்., ஒரு டீச்ச ரம்மா என எனக்குள் கணக்குப் போட்டேன்.

ரஞ்சகுமார் () 25
கட்டைக் காற்சட்டை போட்ட ஒரு பையன், ‘அம்மா மடியில் உட்கார்ந்து நிலாப்பார்த்து சோறு தின்னு. ராசா!' என்று சொல்லவேண்டும் போல இருக்கும்.
பிறகு,
தடித்த கண்ணாடிக்குப் பின்னால் ஆழப்புதைந் திருந்த விழிகளுக்குள் இருந்து பார்வை குத்தும்படி, தாடி வைத்த ஒருவன்., காமா சோமாவென்று உடுத்துவான்.
சாறனைத் தூக்கிக் கட்டியபடி. தொடைகளில் *பிலு பிலு" என்று உரோமம் மண்டித் தெரியும். ஒருவன்., தலைமயிர் நீக்ரோ மாதிரி சுருண்டிருக்கும்.
மைம்மலாக இருள் மெதுவாகச் சூழும்போது வரு வார்கள். இராப்பொழுதுகள் அவர்களுக்குக் குறுகிப் போயின. சமையல் அன்றையப் போதுகளில் மணக்கும். தீய்ந்து போகிற மீனின் வாசனை வரும்.
மெதுவான உறுதியான குரலில் ஒரு பிரசங்கமென ஒருவன் பேசிக்கொண்டே போவான்.
சனங்கள் பெரும் மர்மத்தைக் காண்பதைப் போலப் பார்த்தார்கள்.
பெருங்கோட்டையொன்றைப் பிடிக்கும் திட்ட மொன்றுக்காக, அவர்கள் உத்வேகத்துடன் இருக்கிற மாதிரி தென்பட்டனர்.
கோட்டைகள்-பிடிபட்டன!
ரேடியோக்கள் கறுப்புக்குரலில் கத்தத் தொடங்கின. ஊர்களை அடங்கிப்போகுமாறு உத்தரவுகளைப் பிறப் பித்தன. சந்தை களை குலந்து போயிற்று. ஆறு தனியே ஏக்கத்துடன் போனது. கடைகள் கதவிடுக்கு களால் பீதியுடன் ரகசியம் பார்த்தனபோல தோற்றம் காட்டின.

Page 15
28 () கபரக் கொயாக்கள்
ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக பச்சை நிறத்தில் ட்ரக்குகளும், ஜிப்புகளும் தென்பட்டன.
பின் கதவைத் திறந்து போட்டபடி ஸ்ரோருக் குள்ளேயே கிடந்தோம். கால் வைத்தால் தொடைகளில் கூச்சம் காட்டும்படி உயரே வளர்ந்த புல் கதவுக்கு வெளியே தெரிந்தது. வளைந்தபடி சூரியனை நோக்கிக் கையசைத்தபடி, ஆற்றாமையுடன் தலை விரித்து காற்றைச் சாடும் தென்னைகள் அரற்றின.
புல்லுக்குள் கால்வைக்க அடிவயிற்றுக்குள் பிசைகிற பீதி! தொடையளவு அகன்ற கரிய பெரும் நாகங்கள் படர்ந்திருப்பன போல.., கபரக்கொயாக்கள் எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று உணராது தவிப்பதைப் போல.
இராப்பொழுதுகள் நிசப்தமாய் நீண்டுகொண்டே போயின. பக்கத்து அறை பெரும்பாலும் மூடியே கிடந்தது. பின் சாய்ப்புக்குள் மட்டும் கால்கள் கோல மிழைத்துத் தெரிந்தன.
ஒரு முழுநிலவு நெருங்கி வந்தது. கடைக்குள் போய் சில சாடின் ரின்களைத் தூக்கிக்கொண்டு வந்திடும் அவசரம் எனக்குத் தொற்றியது.
பக்கத்து அறையின் முன் கதவு ஒருபாதி திறந்து கிடந்தது. சுவரிலே இறுக்கிய சிறு மரப் பீடத்தில் புத்தன் உலகை மறந்த மோணத்தில் மூழ்கிப் போய்க் கிடந்தான். ஒற்றைத் தீபம் ஒன்று அரையிருளில் சோபை இழந்து துடித்துக் கொண்டிருந்தது.
மண்டியிட்டு ஒருக்களித்தவாறு ஒரு கையைத் தரையில் ஊன்றிய படி அவள். , முகத்தில் ஒருகோடி சூரியர்கள் உதயமாகிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டில், தூய வெள்ளை விரிப்பு, ஒரு மேசை, குவிந்து கிடந்த புத்தகங்கள். கூஜா ஒன்றை மூடிக்

ரஞ்சகுமார் () 27
கவிழ்ந்தபடி ஒரு தடித்த 'கிளாஸ்". சுவரோடு ஒட்டிப் பதித்த அலுமாரி ஒன்று.
மற்றப்படி எங்கும் தூய்மை. மெதுவாகத் தயங்கித் தயங்கி உதயமாகும் நிலவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் போல..,
நண்பர்களை எண்ணி துக்கித்திருந்தாள் போல. இரவு பிசாசுபோலத் துரத்திக்கொண்டு வந்தது. நிலவு தனித்துப்போய் இராப்பாராக்காரனாக ஒளி யிழந்து ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது.
குழம்பிக் குழம்பி உழன்றபடி சொப்பனாவஸ்தை கொடுக்கின்ற நித்திரை. கபரக்கொயாக்கள் வாலைச் சுழற்றி காற்றில் விசுக்குகிற சத்தங்கள் கேட்டன.
சிறு தொலைவில் ஏதோ உறுமியது. பதில் சொல்வது , போல இன்னுமொன்று. உறுமி உறுமி நெருங்கி வருவனபோல..,
வெளியே சப்பாத்துக் கால்களின் சந்தடிகள் 'திமுதிமு' என்று கேட்டன. கதவை உதைத்துத் திறந்தார்கள்! h− அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எரிச்சல் மிகக் கொள்ளும்படி கதவில் ‘படீர்’ என வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும் கபரக்கொயாக்கள் போல்.
"மொடமொட'வென்று எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்தனரென. கட்டிலை கொரகொரென இழுத்துத் தள்ளுவதென., ஏதோ ஒரு இனிய வஸ்து நிலத்தில் படீரென வீசப்பட்டு சிதறுண்டுபோனது போல..,
காட்டுக் கூச்சல்களாக கேள்விகள் உறுக்கின.
தலைக்கு மேலே சளசள வென்று தண்ணிர்விழத் திளைத்து குளிக்கின்றபோது, கள்ளத்தனமாக அசிங்

Page 16
28 (1 கபரக் கொயாக்கள்
கத்தை வீசிக்கொண்டு கிட்டவே கபரக்கொயாக்கள் வருவதென.
.ஏதோ ஒன்று. எந்நேரமும் சதா துள்ளலுடன், கூரிய கொம்புகளால் பூமியை உழுது கொண்டு, பீரிடும் வீரியத்தை ஒடுக்க இயலாது தவித்தபடி பிணையல்களை அறுத்துவிட உன்னிடும் ஒரு காளை. பிணையல்களை அறுத்துவிட. பூமியில் விழுத்திப் புரட்டினார்களென. மூஞ்சியில் ஒருவன் பாரமாகக் குந்தியிருக்க கால்களை அகலவே பிரித்து அமுக்க.,தொடைகளின் நடுவே.,தொடைகளின் நடுவே. வலிய கம்புகளால் விதைப்பைகளை நசித்து காயடிப்பதேயென. பொறுக்க முடியாத வலியுடன் பீதியும் சேர்ந்து இயலாமையுடன் அவலமும் சேர அடி வயிற்றிலிருந்து நாதியற்ற அபயக் குரல் எழுந்தது! சுவர்கள் அதிர்ந்தன.
கால்ளை படபட வென்று தரையில் போட்டு அடித் தாள் போலும். குரல் கேய்ந்து தேய்ந்து போக. இறுதிக் கணங்களில் சில முனகல்களே மிஞ்ச, அதுவும் போய்., பிறகு,
வேகமாக மூச்சு வாங்கும் சப்தம் மட்டும். நிலவு மிகவும் பயந்து போய் முகம் வெளிறி மேற்கே ஓடிச் சென்றது. சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்து வந்தான்.
முரட்டு பூட்ஸ்"கள் தாம்தூமென பூமியில் தடமுழுது சென்றன. கூந்தலைப் பற்றி வலிந்து இழுத்தபடி சென்றனர்.
புயலில் உருக்குலைந்த ஒரு கொடி போனது, தொடை களில் நடுவிலிருந்து குருதி பெய்தபடி.,
சனங்கள் சந்தையை மறந்துபோய் இதைப் பார்த்த படி நின்றனர். கையினால் ஒரு சொடக்குப் போடும்

ரஞ்சகுமார் () 29
நேரத்தில் ஒன்று. பத்து. நூறு. கோடியென கபரக் கொயாக்கள் பெருகின.
காலம் நேரமற்று முழுநாளும் புணர்ந்தவாறு தண்ணி ருக்குள் நெடுநேரம் புரள்கின்ற...,
தனை மறந்து அருவிப்பெயலில் தலைமுழுகிச் சிலா கிக்கும்போது நீட்டிய மூஞ்சியில் மூக்குத் துவாரங்கள் பெரும் பொந்துகளெனத் தெரிய.
பற்றைகளுக்குள் சரசரவென அரக்கிக்கொண்டு ஏதோஒரு இரையைக் குறிவைத்துக் கவ்வென வாயை "ஆ"வெனப் பிளந்தபடி கள்ளத்தனமாக.
எங்கணும் கபரக்கொயாக்கள் பெருகின, குட்டியும் முற்றலுமாக.
சனங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாலைச் சுழற்றி ஒரு வலிந்த சொடுக்கலில் சதை யைப் பிய்த்தெடுத்துச் காகங்களை கபரக்கொயாக்கள் விருந்துக்கழைத்தன!
சனங்கள். காமினி, அப்புஹாமி, ஆரியவதி ஆமினே. , சுநீதா முதலாளி., அருள்., சாளி, சனங்கள்! ஒருசாண் வயிற்றுக்கு ஆலாய்ப் பறக்கிற சனங்கள்! சனங்கள் சும்மா பார்த்துக்கொண்டே இருந்தார்கள்!! கபரக்கொயா:-
இது முதலைக்குத் தம்பி, உடும்புக்கு அண்ணன், முதலையைப் போல அவ்வளவாகத் தீங்கற்றது; ஆனால் உடும்பைப் போல சாதுவும் அல்ல, நீரிலும் நிலத்திலும் உயிர் வாழும். மலைப்பாங்கான ஆற்றோரக் காடுகளில் மிகவும் பெருவாரியாகக் காணப்படும்; அசிங்கங்களை உண்டு உயிர் வாழும். சிங்களப் பகுதிகளில் இதை அதிகமாகக் காணலாம்.

Page 17
காலம் உனக்கொரு பாட்டெழுதும்
வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல், இன் றையப் போதின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை மாதத் தின் கதகதப்பான விடியலாக இன்றிச் சற்றே குளிரூட் டியபடி, ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டுகிற குளிர்.
இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை விரித்துக் காட்டியபடி, எங்கு பார்த்தாலும் புகையிலைத் தோட் டங்கள் தெரிந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்துகொண் டிருந்தன வாட்டர் பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் எரிந்துபோகிற புகை கதம்பமாக மணத்தது.
அருளுக்குத்தான் முதலில் ஐடியா வந்தது. சட்டென எழுந்துபோய் சேட்டைக் கூட கழற்றாமல் தலைவழி நீர் சொரியுமாறு குத்துக்காலிட்டு உட்கார்ந்துவிட்டான். எல்லாரும் கோணாமலையைத் திரும்பிக் கேள்வியோடு பார்த்தார்கள். கோணாமலைக்கு ஏன் எந்நேரமும் சிவந்தே போயிருக்கின்றன கண்கள்? இறுக மூடிய மெல்லிய உதடுகளுக்குள் எப்போதும் கோபமும் ரோஷ மும் ஒளிந்திருப்பதாகத் தோன்றும். முகம் கருங்கல்லு மாதிரி விசித்திரமானதொரு பளபளப்புடன் கடினமாக, விருக்கும்.
கோணாமலை இன்று காலை சிவந்த கண்களால் சிரித்தான். 'பொளபொளவெனப் பாய்கின்ற நீர்த் தாரையில் ஒரு சிறு குழந்தை மாதிரி தலையை உதைத்

ரஞ்சகுமார் ( 31.
துக்கொண்டிருந்த அருளை ஒரு தந்தையின் கனிவுடன் பார்த்தான்.
“ஒராள் கடைசியிலை குளிக்கலாம்”
அப்பா! இது என்ன குரல்? பேசாத வாய் பேசுகின்ற போது ஒவ்வொரு சொல்லிலும் மிகுந்த அழுத்தம் தெரிகின்றது.
மைக்கேல் உட்கார்ந்தான்.
கோணாமலை, கோதாரி, பெரியண்ணன், பெருமாள் யோசேப், அன்பரசன், பிறகு இவன். எல்லோரும், உறுமிக்கொண்டிருந்த வாட்டர் பம்ப்பை நோக்கிப் போனார்கள்.
மைக்கேல் செய்திகளை சேகரிக்க உட்கார்ந். திருந்தான்.
சனங்கள் இவர்களை ஒரு தரம் நிமிர்ந்து பார்த்தார் கள், பிறகு தலையைக் குலுக்கிக் கொண்டு தம்பாட்டில் வேலையில் ஆழ்ந்தார்கள். பத்தோ பன்னிரண்டோ வயதிருக்கும். ஒரு சிறுபையன் கையில் சோப்புப்பெட்டி குலுங்க இவர்களை நெருங்கி ஓடிவந்தான். நீட்டியபடியே” நின்றான். இவர்கள் சட்டை செய்யாதவர்களென உடம்பைத் தேய்த்துக்கொண்டிருந்தார்கள்.
கோணாமலை நிமிர்ந்து பார்த்தான். பையனின் விழிகள் 'வாங்கிக்கொள்.வாங்கிக்கொள்" எனக் கொஞ் சும் பாவனை காட்டின.
'அருள் சோப்பை வாங்கு'
அருள் தலை, தொப்புள், தொடை, பாதம் எங்கும் சோப்புநுரை பொங்கி வழிய இளிக்கவாரம்பித்தான். அருள் கொஞ்சம் குஷாலான பேர்வழி. இவனுக்கு அந்தரங்கம் எல்லாம் சொல்லுவான். ஒருமுறை இவனும் அருளும் சைக்கிளில் டபிள் அடித்துக்கொண்டு அவசர அலுவலாகப் போனார்கள். சீமைக்கிழுவை மரங்கள்

Page 18
32 0 காலம் உனக்கொரு பாட்டெழுதும்
பூத்திருந்த ஒரு உயரவேலிக்குப் பின்னே கம்பிர மாக உயர்ந்த தெரிந்த ஒரு வீட்டுக்கு முன்னால் போகை யில் அருள் இவன் விலாவில் இடித்தான்.
‘என்ரை ஆளின்ரை வீடு." எனக் காதினுள் கிசு கிசுத்தான்.
‘எப்பிடி வீடு.?"
'வீடு. நல்லாத்தான் இருக்கு. "
ஆளை நீ பாக்கயில்லை. பாத்தாலெல்லோ தெரி யும்! ...'
6 S 9
ஹ"ம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சு. நானும் உயிரோட இருந்தா...'
'இருந்தா?." 'ஹ'ம்'
இவன் திரும்பி அருளின் முகத்தை ஏறிட்டுப் பார்த் தான். லோக செளந்தர்யங்கள் யாவும் அருளின் இறுகிய முகத்தில் ஒருவினாடி பூத்திருக்கக் கண்டான். இவனும் அருளுக்காக ஒரு பெருமூச்சை உதிர்த்தான்.
ஒரு கணம்தான்!
பிறகு அருள் மாறிவிட்டான். கண்களில் பழைய இருக்கம் பரவியது. கால்கள் கனவேகமாக சைக்கிளை உழக்க வாரம்பித்தன. ஒரு உண்மையான ஊழியன்!
வெகு காத்திற்குப் பிறகு, இன்று அருமையான சாப்பாடு, எந்த மகராசி கைகளோ! மணக்கிற சமையல். அருள் கைகளை வழித்து வழித்துச் சூப்பியபடி இவனைப் பார்த்து கண்களைச் சிமிட்டி இளித்தான்.

ரஞ்சகுமார் ( 83.
ஒவ்வொரு பெண் கைச்சமையலுக்கும் ஒவ்வொரு ருசி இருக்கிறது. என்றாலும் அம்மாவின் எளிமையான சமையலின் ருசி வேறெவருக்கும் வாய்க்காது. அம்மா கையால் வெந்நீர் தந்தாலே அதற்குத் தனி ருசி இருக்கும். மெல்ல இருள் சூழும் போதுகளில் அம்மா கோவிலால் திரும்பி வருவாள். அவள் கும்பிட்ட தெய்வங்களெல்லாம் அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளைச் சேலை உடுத்தி வன்மத்துடன் வேடிக்கை பார்த்தன. அம்மா தலைமுழுகி, ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து போட்டபடி ஒவ்வொரு நாள் மாலையிலும் கூந்தலிலிருந்து நீர் சொட்டிச் சொட்டி வெள்ளைச் சேலையின் பின்புறம் நனைந்தபடி தோற்றம்காட்ட, அம்மன் கோயில்களைத் தேடிப்போக, ஆரம்பித்தாள். திரும்பி வரும்போது அம்மா மேனியில் கற்பூர வாசனை வீசும். அம்மா பேரில் அம்மன் குடியேறி வருவாள் போல, பார்க்க பயமாகவும் அழகாகவும், இருக்கும்.
அம்மா மச்சம், மாமிசம் சேர்ப்பது கிடையாது
இருட்டிய பிறகு தனியாக செங்கல் அடுப்பைமூட்டி தனிச் சமையல். ஒரு நேரம் மட்டுமே கொஞ்சம் போலச் சாப்பிடுகிற அம்மாவால் எவ்வாறு இப்படி பம்பரமாகச் சுழன்று காரியம் பார்க்கமுடிறது! மிகவும் குழைந்து போய்க் கஞ்சிப் பசையுடன் சோறும், ஏதோ ஒரு காயை வதக்கி வறட்டலாக ஒரு குழம்பும், கடித்துக்கொள்ள அப்பளம் உண்டு கட்டாயமாக.
நொடிக்குள் சமைப்பாள் அம்மா. இவன் நாவில் நீர்” சொட்டச் சொட்ட காத்திருப்பான். அம்மா இவன் தோளளவு உயரமிருப்பாள். வெள்ளரிப்பழத்தை பிளந்து வைத்திருக்கிற மாதிரி ஒரு நிறமும் குளுமையும் அம்மா வுக்கு. அம்மா அந்தக்காலத்தில் பேரழகியாக இருந் திருக்கவேண்டும். அதுதான் நிறையக் குழந்தைகள் பெற்றாளோ! தோல்வற்றி நடை மெல்லத் தளர்கிற

Page 19
34 0 காலம் உனக்கொரு பாட்டெழுதும்
இந்த வயதிலும் அம்மா கண்கள் ஜோதியென ஜொலிக் கின்றள.
இவன் நிமிர்ந்து வீம்பாக நிற்பான், கண்களால் அம்மாவப் பார்த்து கனியச் சிரித்தபடி, அம்மா அண் ணாந்து இவன் நெற்றியில் திருநீறு பூசிவிடுவாள்.
'அம்மாளே!.'ஆத்மார்த்தமாக வேண்டுகிற அம்மா குரலில் இவன் கரைந்து போய் விடுவான். கற்பூரம் எரிந்த மீதியின் வாசனையும் சூடுமாக ஈரலிப்பாக அம்மா நெற்றியைத் தீண்டுகிற போது வாசனை நாசியை நிரப்ப இவன் சிலிர்ப்பான். அம்மா மூச்சு ஒருகணம் இவன் மார்பில் பட்டு விலகும். இவனுக்கு உடனே பசியெடுத்து விடும்!
சுலோசனா அக்கா அவசரச் சமையல். இவளுக்கு எதிலும் அவசரம். என்னத்தைக் கண்டாளோ? இந்த அத்தானிடம். மகுடி கேட்ட நாகம்போல மயங்கிக் கிடக்கிறாள். அக்கா நிறையக் கறிகள் வைத்திருப்பாள். நிறையக் குழந்தைகளைப் பெற்றதுபோலவே. ஒன்றுக்கு உப்புக்கூடினால் இன்னொன்றில் உப்பே இருக்காது. மீன்குழம்பு மட்டும் அசலாக வைத்திருப்பாள். எல்லா வற்றையும் சேர்த்துக் கலந்துவிட ஒரு ஆபூர்வ ருசி பிறக்கத்தான் செய்கிறது.
சுலோ அக்கா வீட்டுக்கு இவன் கடைசியாகப் போன நாளே மறந்துவிட்டது. அத்தான் முணு முணுத்தபடி சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டு போனான். இந்த அத்தான் ஒரு சரியான "சேற்று எருமை, "காட்ஸ்’ அடிக்கிறதையும், கடமைக்காக ஏதோ வேலைக்குப் போவதையும், மீதி நேரமெல்லாம் ஒரே குடியையும் தவிர இவன் எதைச் சாதித்தான்? சுலோ அக்காவை வருஷம் தவறாமல் அம்மாவாக்குகிறதில் மட்டும் படுசமர்த்தன். சுலோ அக்கா இதழ்கள் வெடித்து மார்பு வற்ற வதங்கிய கத்தரிக்காய் போல ஆகிவிட்டாள்.

ரஞ்சகுமார் () 35
அத்தான் மீண்டும் ஏதோ வாய்க்குள் ‘கசமுச" என்றான். போனால் போகட்டுமே! இவன் அக்காவைப் பார்க்கத் தானே வந்தான்.
‘இருக்கிறதுகளுக்கும் வீண் கரைச்சல்.’ அத்தான் வெளிப்படையாகவே கொக்கரிக்க ஆரம்பித்தான். அக்கா நாக்கைக் கடித்தபடி இவனைக் குசினிக்குள் இழுத்துப் போனாள். இவன் கைகளை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டேயிருந்தாள்.
‘சாப்பிடுறியடா...' தளதளக்க கேட்டாள். இவன் நிமிர்ந்து பார்க்க சக்தியற்றுப் போனதால் மெளனமாக உட்கார்ந்தான். அக்கா மளமளவென்று சாப்பாடு போட்டாள். பிசைந்து பிசைந்து இவன் கைகளில் கொடுக்க ஆரம்பித்தாள்.
அக்கா மூக்கை உறிஞ்சுவது கேட்டது, 'அம்மா கோயிலுக்கு போவதை விட்டுட்டா...'
9 y
**அப் மா கோயிலுக்கு போறதையும் விட்டுட்
- IT-T ...
‘அம்மா கோயிலுக்கு." அக்கா குரல் உணர்ச்சி வேகத்தில் உடைந்து கீச்சிட ஆரம்பித்தது.
இவன் கையை உதறிவிட்டு வேகமாக வெளியே போக ஆரம்பித்தான்.
‘கையைக் கழுவிவிட்டு போடா...' அக்கா கடைசி யில் அழுகை வெடிக்கிற குரலில் அழைத்காள். இவன் திருப்பிப் பார்க்க விருப்பமில்லாமல் உள்ளங்கைகளை இறுகப் பொத்தியபடி காற்றைக் குத்தியபடியே
போனான்.

Page 20
36 () காலம் உனக்கொரு பாட்டெழுதும்
அக்கா குமுறிக் குமுறி அழைத்தபடி இவன்பின்னே வரும் அரவம் கேட்டது. காதைப் பொத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
இனிமேல் ஒரு வீட்டுக்கும் போக மாட்டேன்' இவன் காற்றுக்கு சபதம் செய்து கொடுத்தான்.
ஒருதரம் நான்கு மெயின் ரோட்டுகளுக்கும் உள்ள பெரிய பாலங்களை உடைத்துவிட்டுப் போய் விட்டார்கள்! w
கோணாமலை ஆட்களைப் பிரித்துப் பிரித்து விட் டான். இவனுக்கு வடக்கு ரோட்டு. டிராக்டர்களில் மண்ணையும் கல்லையும் கொண்டுவந்து குழிகளைச் சனங்கள் பீதியால் பரபரத்தபடி நிரப்பினார்கள் .
இவன் காவல்! ‘ரெடி"யாக நின்றான். சுறுசுறுப்பும் பொறுப்பும் மிக்கவனாக சுற்றுமுற்றும் பார்த்தபடி. வான்களும், பஸ்களும் பாரத்தைக் குறைத்து பள்ளத்தில் மெதுவாக இறங்கி இறங்கிப் போயின.
யாரோ இவன் முழங்கையில் இதமாகப் பற்றி னார்கள்.
திரும்பிப் பார்த்தான்.
சுந்தரியக்கா!
விந்தி விந்தி நடக்கிற சுந்தரியக்கா! உதயகாலத்தில் பஸ் பிடித்து வேலைக்குப் போய் மாலை மயங்க துருள் சூளும் நேரங்களில் வீட்டுக்குப் போய்ச்சேர்கிற சுந்தரி யக்கா? அம்மா பதைபதைப்புடன் வாசலை பார்த்த படியே நிற்பாளோ! இந்த விந்தல் கால் மட்டும் இல்லா விட்டால் இந்திரன், சந்திரன் எல்லாரும் கந்தரியக்கா பின்னால் வரிசையாக காத்து நிற்க மாட்டார்களோ? உதயகாலத்தில் பஸ்பிடித்து வேலைக்குப்போய் இருட்டிய பிறகு வீட்டுக்குப் போய்ச்சேர உறுதியுடன் பழக்கப் படுத்திக் கொண்டாள் சுந்தரியக்கா.

ரஞ்சகுமார் ( ) 37
சுந்தரியக்கா இவனையே புார்த்தபடி நிற்க. இவன் பராக்குப் பார்ப்பவன் போல வேறெங்கோ பார்த்தான். பஸ் மெல்ல பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. சுந்தரியக்கா மேலும் இவனை நெருங்கி நின்றாள். கைப் பையைத் திறந்து சில நோட்டுக்களை இவன் பொக்கெற் றுக்குள் திணித்தாள். இவன் திரும்ப அவள் கைகளுக்குள் திணிக்க. ஆற்றாமையுடன் இவனையே பார்த்தாள்.
**வச் சிரன்ரா." ‘'வேண்டாம். எனக்கொண்டும் வேண்டாம்.'
சுந்தரியக்கா இவனை மேலும் கீழுமாக பார்த்தாள். பறட்டை பற்றிப்போன தல்ைமுடியிலிருந்து வெயிலிலும் மழையிலும் அலைந்து திரிந்த கால்வரை செம்புழுதி படிந்திருந்தது. சாறனை உயரத் தூக்கி தொடை தெரியு மளவுக்கு முடிச்சுப்போட்டு இருந்தான்; சேட் தோள் மூட்டில் பிரிந்திருந்தது.
‘ஒரு சேட்டாவது வாங்கலாமெல்லே."
A
up
*வச்சிரன் ரா." * அங்கா. பார். பஸ் வெளிக்கிடப் போகுது.' பெரிய கண்கள் சுந்தரியக்காவுக்கு. இவனை உறுத் துப்பார்த்தாள். கண்களுக்குள் இவனைச் சிறைப் பிடித் துக் கொண்டு போய் விடும் உத்வேதத்துடன் பார்த்தாள். கன்னங்களை நனைத்துக்கொண்டு பாயுமாறு இரு வைரச் சொட்டுகள் உருகி வழிவதென சிந்தினாள்.
தி ரும் பித் திரும்பிப் பார்த்தபடி சுந்தரியக்காள் போனாள். கடைசி ஆளாக விந்தி விந்திப் போய் பஸ்ஸில் ஏறினாள். பின்புறக் கண்ணாடியூடாக இவனையே
GLDT-3

Page 21
38 () காலம் உனக்கொரு பாட்டெழுதும்
பார்த்துச் கொண்டு நின்றாள். இவன் தற்செயலாக திரும் புபவனென அந்தப் பக்கம் பார்த்தான்.
பின்புறக் கண்ணாடி முழுவதும் விசாலித்தபடி சுந்தரியக்காவின் பெரிய கண்களைக் கண்டான். இவன் சட்டென்று மறுபுறம் திரும்பிக் கொண்டான்.
< 'சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க மாட் டேன்' காற்றிடம் சபதம் செய்தான்.
இன்று எல்லாம் அசாதாரணமான புதிய தோற்றம் காட்டின. திளைத்துக் குளித்த மேனியைக் குளிர்காற்று தழுவிக் கொண்டுபோயிற்று. இவன் வானத்தை நிமிர்ந்து நோக்கினான். 'பளிச் செனும் நீலவானில் பஞ்சுப் பொதிகள் மிதப்பதென்ற அழகிய சித்திரைவானம் இன்றில்லை. மழைக்கோலம் காட்டிற்று. கா ற் று இறுக்கமாக இருந்தது. மெல்லமெல்ல கிழக்கு மூலையி லிருந்து இருண்ட மேகங்கள் பரவிக் கொண்டிருந்தன.
மைக்கேல் சேதி சொன்னான்.
"தெற்கு ரோட்டாலை சாமான் வருகுதாம். நாங்கள் இடையிலே மாத்திக் கொண்டு வரவேணுமாம்."
கோணாமலை விருட்டென எழுந்தான். படபடவென சில உத்தரவுகளைப் போட்டான்.
"தெற்கு ரோட்டுத்தானே!. சாமான் வேண்டாம். ஆளுக்கொண்டு போதும்.'
'பெருமாள் வெகிக்கிளை எடு. மழை வரும்போல
சாமான் நனையாமல் கவனமாக மாத்து.
பயமில்லை. கன
கிடக்கு. வேணும்."
*யோசேப் இஞ்சேயே இருக்கட்டும்." பெருமாள் ஒரு அருமையான ட்ரைவர், ரோட்டுகளை ஒவ்வொரு அங்குல அங்குலமாகப் படித்து வைத்திருந் தான். குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டுகளிலே

ரஞ்சகுமார் () 39
கியரை மாற்றாமலே ஒடித்து வெட்டியபடி பறந்து செல்ல முடியும் பெருமாளால்,
பெருமாளுக்குப் பக்கத்தில் கோணாமலை தாவி ஏறினான்; அவனுக்குப் பக்கத்தில் பெரியண்ணன்.
இவன். கேதாரி. அருள். அன்பரசன். மைக்கேல் . பின்புறம் புகுந்து கொண்டார்கள். இவன் கதவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். பெருமாளைத் தவிர எல்லோருடைய உள்ளங்கைகளிலும் பொத்தியபடி , சாமான்’ இருந்தது. ‘ரெடி'யாக இருந்தார்கள்.
செம்புழுதியைக் கிளப்பியவாறு பாய்ந்து செல்ல வாரம்பித்தான் பெருமாள்.வானம் ஒருமுறை பெரிதாக உறுமிற்று.
இன்னும் கொஞ்ச தூரத்தில் மெயின் ரோட்டில் ஏறி விடலாம். சட்டென்று செங்கோணத்தில் திரும்ப வேண்டும். பெருமாள் கியரை மாற்றுவதற்கு ஆயத்த மானான். சந்திக்கும் இடத்தில் கிழட்டு ஆலமரத்தின் நிழலில் சனங்கள் கூடி நின்றார்கள். பெருமாள் வேகத் தைக் குறைத்துக் கொண்டான்.
கண்கள் பெரும் ஒளிவெள்ளத்தில் கூசின. உச்சியிலி ருந்து கீழ்வானம் நோக்கி படர்கின்ற ஒரு கொடியாக மின்னல் பளபளத்தபடி இறங்கிற்று. வானம் மீண்டும் ஒரு தரம் வஞ்சனையுடன் கனைத்தது. பெருமாள் தடு மாறினான். ஒரு கணம் நிதானித்தான்.
படபடவென ஏதோ முறிந்து விழுகின்ற சத்தம் கேட்டது. சனங்கள் விலகிச் சிதறினர். ஆலமரத்தின் பெரிய கிளையொன்று ஓ'வென அலறியபடி பூமியை அறைந்தது.
சனங்கள முகத்தில் பெரும் குழப்பம் பரவிற்று" கோணாமலை 'முன்னேபோ' என்றான். பெருமான், கிளச்சை ஊன்றி மிதித்தான்.

Page 22
40 0 காலம் உனக்கொரு பாட்டெழுதும்
கோழை வழிகின்ற ஒரு திரைத்த கிழவன் கைகளை ஆட்டிக்கொண்டே முன்னே வந்தான்.
'மக்காள்.'
கோணாமலை என்ன என்பவெனப் பார்த்தான்.
‘ஆல் முறிஞ்சு விழக்கூடாது மக்காள். போற பயணம் ஆபத்து மக்காள்.'"
அருள் கெக்கெலி கொட்டிச் சிரிக்கவாரம்பித்தான்.
‘எங்களுக்கு ஒவ்வொரு நிமிசமும் ஆபத்துத் தானே அப்பு!..'
கிழவன் பரிதாபமும் பச்சாதாபமும் வழிய இவர் களைப் பார்த்தான்.
பெருமாள் லாவகமாக திரும்பியபடி மெயின் ரோட்டில் ஏறினான். மீண்டும் ஒரு மின்னல் அடிவானம் நோக்கி இறங்கிற்று. காற்று மிகவும் கனமாக இறுக்கிக் கொண்டே போனது என்ன இது? இன்று எல்லாம் அசாதாரணமாக மாறிவிட்டன. தென்கிழக்கு மூலையி லிருந்து, இது சித்திரை மாதம் என்பதை மறந்துபோய்படுவேகத்தில் ஊதல் காற்று வீசிக்கொண்டிருந்தது.
‘பெருமழை வரப்போகுது பெருமாள். கெதியா...' பெருமாள் பலங்கொண்ட மட்டும் மிதித்தான்.
சனங்கள் பரபரத்தவாறு வீடுகளுக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள். பருவந் தப்பிப் பெய்யும் மழையை ஆச்சரியமும் ஆவலுமாக வரவேற்கும் பாவம் அவர்கள் முகங்களில் தெரிந்தது. இவர்களின் வான் உறுமிக். கொண்டே செல்வதை வாசல்களில் நின்று கவனமாகப் பார்த்தார்கள்.
கனத்த பெருந்துளிகளாக மழை இறங்க ஆரம்பித்தது. கண்ணாடி மங்கத் தொடங்கிற்று, கனவில் தெரியும்

ரஞ்சகுமார் () 41
தோற்றமென ரோட்டும் மரங்களும் விசித்திரத் தோற்றம் காட்டின. பெருமாள் ‘வைப்பரை'ப் போட்டான்.
வேலை செய்யவில்லை.!
பெருமாள் இலகுவில் சளைத்து விடுபவனல்ல. கும்மி ருட்டை ஊடுருவி பூனையைப் போல பார்க்க இவர்கள் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். கூர்ந்து பார்த்துக் கொண்டே போனான்.
என்ன மாதிரி ஒரு மழை! இவன் தனது வாழ்நாளில் காணாத மழை. புழுதி அடங்கிப் போகிற வாசனை மிகுந்தது. இவன் நாசி நிறைய வாசனையை வாங்கி அனுபவித்தான். காலைத்துக்கி முன் சீட்டில் இலகுவாக வைத்துக்கொண்டான்.
சட்டென்று ரோட்டு வெறிச்சோடிப் போகிறது. ஏனோ? சனங்கள் எவரும் இல்லை. மழைதான் கார ணமோ என்னவோ? எதிரே ஒரு வாகனம் கூட வர வில்லை. கொட்டும் மழையில் சளைக்காமல் நனைந்த படி ஆடி ஆடிப்போன ஒரு கிழட்டு எருதைத்தவிர, வெறிச் சோடும் ரோட்டு,
மூர்க்கத்தனமாக பூமியை மூழ்கடிக்கும் ஆவேசத் துடன் அம்புகளாக மழை வீழ்ந்து கொண்டிருந்தது. வானம் எச்சரிக்கிறமாதிரி அடிக்கடி ப்ெருமிடிகளைக் கொடுத்தது. கூடவே உச்சியிலிருந்து கீழ்வான் நோக்கி வானத்தை கூறுகளாகப் பிரிக்கும் கூர் வாளென பாயும் மின்னல்.
இவர்கள் எல்லோருக்கும் ஏனோ மயிர்க்கால்கள் குத்திட ஆரம்பித்தன. இதைவிட குருதியை உறைய வைக்கும் குளிரை தாங்க இவர்கள் பழகிக்கொண்ட வர்கள். ஆனால் இன்று என்னவாயிற்று? எலும்புக் குருத்துக்குள் ஊடுருவிப் புகுந்து கொள்கிற குளிர்.

Page 23
42 ) காலம் உனக்கொரு பாட்டெழுதும்
அருள் கைகளைத் தேய்த்து சூடாக்கினான். நெஞ் *க்குக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டான். இவனைப் பார்த்து இயல்பான தோழமையுடன் சிரித் தான். அருள் இன்று ஏனோ வழமையை விட அதிகமாக இளிக்கிறான். முகத்தில் ஒரு விசித்திரமான ஒளி பிறந்தது அருளுக்கு.
இவனுக்குள் ஏனோ திடீரென அம்மா, சுலோ அக்கா, சுந்தரி அக்கா, எல்லோரும் உதித்தார்கள்.
மழையுடன் சேர்ந்து அம்மா மேனியில் மணக்கிற கற்பூரவாசனை வீசிற்று. மழையில் கற்பூரத்தை கரைத் தவன் எவன்?
சுந்தரியக்காவின் பெரியகண்கள் முன்னே தோன்றின. இருகனத்த வைரத்துளிகளைச் சிந்தின. சுந்தரியக்கா இதமாக இவன் கைகளைத் தொடுவது போலிருந்தது. சுந்தரியக்கா இந்த மழையிலும் வேலைக்குப் போயிருப் List Git!
சுலோ அக்காவின் கீச்சுக்குரல் பேய்க் காற்றில் கலந்து வந்தது. இவனை, ஆதங்கமும் பொறுக்க முடி யாமல் பீறிடுகிற அன்புமாக சுலோ அக்கா அழைத்துக் கொண்டிருப்பதாக தோன்றிற்று.
இவன் ஒருகணம் கண்களை மூடினான். நீண்ட பெருமூச்சு ஒன்று அடி இதயத்திலிருந்து உற்பத்தி கொண்டு தொண்டைக்குழியைப் பிளந்துகொண்டு ஒரு நாகமென வெளிவந்தது.
இவன் கண்களைத் திறந்தான். பெருமாள் ஒரு வளைவில் வேகத்தை மாற்றாமலே லாவகமாகத் திரும்பிக் கொண்டிருந்தான். சூரன்தான்! ஒரு நூறுயார் தூரத்துக்கப்பால் பார்வை புலப்படாதபடிக்கு கனத்த திரைகளாக மழை விழுந்துகொண்டிருக்க, வைப்பர்

ரஞ்சகுமார் () 43
வேலை செய்யாமலே படுவேகமாக வானைச் செலுத்திப் போகிறான்! வேறு எவனால் இப்படி முடியும்? அசகாய சூரன்தான்!
ரோட்டு நேரே கோடுபோட்டதெனச் செல்கின்றது பெருமாள் கிழித்துக்கொண்டு போனான்.
ஏன்?. ஏன்?. என்ன..? பெருமாள் சடக்கென்று பிரேக் போட்டான். எதிரே ஏதோ பிசாசுத்தனமாக நெருங்கிக் கொண்டிருந்ததாக எல்லோரும் உணரவாரம்பித்தார்கள்.
பெருமாள் கோணாமலையைத் திரும்பிப் பார்த்தான். கோணாமலை இறுகிய முகத்தவனாய் “முன்னேபோ" என தலையைக் குலுக்கினான். எல்லோருக்கும் வேக மாக மூச்சு வாங்கவேண்டும் போலிருந்தது. உள்ளங் கையை இறுகப் பொத்திக் கொண்டார்கள்.
பெருமாள் நிதானமாக முன்னே போனான். தலையை வெளியே நீட்டி நீட்டிப் பார்த்துக்கொண்டே போனான். எல்லா வீடுகளும் தெருவாசலைப் பூட்டியபடி மெளனமாய் மழையில் கொட்டக் கொட்ட நனைந்து கொண்டிருந்தன.
எதிரே ஒரு சிறிய ரோட் மெயின் ரோட்டில் கலக் கும். அந்தச் சந்தியில் ஏதோ கள்ளத்தனத்துடன் வஞ்ச கம் புரிய ஒளிந்திருப்பதாகப்பட்டது. பெருமாள் கொட் டும் மழையில் வெளியே தலையைப் போட்டான்.
பெரிய வாகனம் ஒன்று, தனது பூதாகரமான உடலை மறைக்கப் பெரும் பிரயத்தனம் செய்தவாறு நின்று கொண்டிருந்தது!.. பெருமாள் கொடுப்புகளை இறுக நெறுமினான். முகம் சட்டென கறுத்து வீங்கிப் போனது.
கோணாமலை புரிந்து கொண்டான். கண்கள் இரத்தம் கொட்டுபவையெனச் சிவந்தன. இவர்கள்

Page 24
44 L காலம் உனக்கொரு பாட்டெழுதும்
எல்லாருக்கும் புரிந்துவிட்டது. மண்டைக்குள் ஒரே விறு விறு', மிக வேகவேகமாக மூச்சுவந்தது. உடல் தகிப்பதெனச் சுட்டது.
'ரெடி. ரெடி. ரெடி.." என இதயம் துடித்தது. உத்தரவுகளைப் பெற ஆயத்தமாக இருந்தார்கள். ஒவ்வொரு அங்கமும் துடிக்கவாரம்பித்தது.
கோணாமலை பரபரத்தான்.
"அம்பிட்ட கையொழுங்கையுக்குள்ளை விடு. உடைச்சுக்கொண்டு தப்பவேண்டியதுதான். எங்கெங்கை யெல்லாம் நிக்கிறாங்களோ?. வளைச்சுப்போட்டான் களோவும் தெரியாது. சனியன் பிடிச்ச மழை!..."
பெருமாள் வேகமாக பின்னே போக ஆரம்பித்தான், இவன் பின்னால் பார்த்தான். பின்புறமிருந்தும் ‘வாகனம்' ஒன்று பிசாசு மாதிரி நெருங்கிக்கொண் டிருந்தது!
பக்கத்திலே ஒழுங்கைமாதிரி ஒரு ஒடை தெரிந்தது. பெருமாள் பெரும் பிரயத்தனத்துடன் உள்ளே நுழைய முற்பட்டான். ஆனால் அதற்குள் அவர்கள் முந்திந் கொண்டார்கள். நெருப்பை உமிழ்ந்தபடி இருபுறமிருக் தும் அச்சமும் அவதானமுமாக நெருங்க ஆரம்பித்தார் கள். மழை அவர்களுக்கு வாழ்ததுக் கூறிக்கொண் டிருந்தது. வானம் இவர்களைப் பார்த்து இடிஇடியெனச் சிரித்தது. மின்னல் பழிப்புக் காட்டுவதென அடிக்கடி பளபளத்துக் கண் சிமிட்டியது.
ஒவ்வொரு நொடியும் மிகப் பெறுமதியானதென இவர்கள் உணர்ந்தார்கள். தோல்வி படுவேகமாக இவர்களை நோக்கி வாயைப் பிளந்தபடி வந்தது. தோற்று விடுவார்களா இலகுவில் என்ன?. அருள் மிகப் பரபரத்தான். தலையை அப்படியும் இப்படியும் குலுக்கினான். உணர்ச்சி வேகத்தில் கிடுகிடுவென நடுங்

ரஞ்சகுமார் () 45
கினான். ஏதாவது செய். அவசரமாக. கெதியாக..
வாயில் கிளிப்பைக் கடித்து இழுத்தான், ஐயோ! இடதுகை. இடதுகை. வழமில்லை! இழுபட மாட்டேன் என்கிறது.
இவனுக்கு துரதிர்ஷ்டவசமான தப்பு ஒன்று நிகழ்வது நன்றாகவே தெரிந்தது.
தொடைகளிலும், கணுக்காலிலும் குதிரைபலம் சேர்ந்தது. கால்விரல்களில் முழுபலத்தையும் சேர்த்துக் கொண்டே உந்தி எழுந்தான். பேய்த்தனமாக ஊதிக் கொண்டிருந்த காற்றிலும், பெரு அம்புகளாகத் துளைக்கும் மழையிலும் ஒருகணம் "ஜில்'வெனப் பறந்து மழையில் நனைந்து சொதசொதவென அனுங்கிக்கொண் டிருந்த சகதியில் விழுந்தான். அவசர அவசரமாக நாலைந்து சுற்றுக்கள் புரண்டு தூரவிலகினான்.
இவனுக்கு புரிந்துவிட்டது. அவ்வளவு தான். இன்னும் ஒரு நொடிதான். அருள்! அடமுட்டாளே!. அவசரப்பட்டு விட்டாயே!
தொடைகளில் இலேசாக அடிபட்டிருக்க வேண்டும். நொண்டிக் கொண்டே எழுந்தான். கால்போன திக்கில் ஒட ஆரம்பித்தான். செம்மண் நிறத்திலே கனுக்கால் வரை உயர்ந்து கனவேகத்துடன் வெள்ளம் ஒழுங்கைகள் வழியே பாய்ந்து கொண்டிருந்தது. 'சளசள' என்று இவன் கனத்த காலடிகளைத் தாங்கமாட்டாமல் வழி விட்டுக் கொடுத்தது.
பெரும் இடிபோல முதல் தரம் வெடித்தது. வான் ஒருதரம் பெருகக் குலுங்கிற்று. தொடர்ந்து ஒன்று. இரண்டு. மூன்று.நாலு.ஐந்து.ஆறு.

Page 25
46 () காலம் உனக்கொரு பாட்டெழுதும்
அவர்கள் அஞ்சி நின்று விட்டார்கள் நிலையாக! இவன் ஒடிக்கொண்டே ஒருதரம் திரும்பிப்பார்த் தான். பெரும் புகைமண்டலமொன்று மழையை விலக்கிச் செல்லும் கரும் பூதமென மேலெழுந்து கொண் டிருந்தது. மூச்சுத் திணறும் கந்தக நெடி எங்கும் சட்டெனப் பரவிற்று.
இவன் மூளை செயலற்றுப் போய்விட்டது. கண்கள் நேரே வெறித்தன. கால்கள் மட்டும் தம்பாட்டில் இவனை கனவேகமாக எங்கோ இழுத்துச்சென்றன.
கோணாமலை!. பெருமாள்!. கேதாரி!. பெரியண்ணன்!.மைக்கேல்!. அன்பரசன்!.
அவ்வளவுதான்!. இனியென்ன?. அவ்வளவு தான். துண்டு துண்டாகப் போயிருப்பார்கள்
இனி? இவன் செய்யவேண்டியது என்ன? எப்படியாவது தெற்கு ரோட்டுக்கு பத்திரமாகப் போய்ச்சேர வேண்டும். 5 TLDITait' வரும். அவர்களைத் திசை திருப்பி விடவேண்டும். வருகிறவர்களுக்குச் செய்தி தெரிந்து திரும்பிப் போயிருப்பார்களோ?. செய்தி சொல்லுவது யார்? இந்தக் காற்றும், மழையுமா?
இவன் தெற்கு ரோட்டுக்குப் போய்ச்சேரவேண்டும்" சனியனே! மழையே! நீ நிற்க மாட்டாயா?.
வானம் கடைசித்தடவையாக பெருமிடியொன்றைக் கொடுத்து ஒய்ந்தது. மழைவேகம் குறைய ஆரம்பித்தது. இவனுக்கு பன்னீர் தெளிப்பதென மெதுவான தூற்றல் களைப் போட்டது.
இவன் வெகுதூரம் ஓடிவந்து விட்டான். இனிப் பயமில்லைப் போல் இருந்தது. இவன் பெருநடையாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் மூன்று மைல்களாவது

ரஞ்சகுமார் () 47
கடக்க வேண்டியிருந்தது. இவன் கடந்து விடுவான். எப்படியாவது!
மழை முற்றாக ஓய்ந்தது. மயான அமைதி நிலவிற்று! மரங்கள் மழையில் நடுங்கி அஞ்சிப்போய் ஆடாமல் அசை யாமல் கண்ணிர் சிந்தின. வெள்ளம் மட்டும் இவனுடன் கூட வந்தது.
ஒழுங்கைகள் வலை பின்னிக் கிடப்பதென திக்குமுக் காட வைத்தன.
சனங்கள் வீட்டு வாசல்களில் நின்றார்கள். இவனை விசித்திரமாகப் பார்த்தார்கள். ஆஜானுபாகுவான ஒரு வித்தியாசமான இந்த இளைஞன், கொட்டும் மழையில் நனைந்துவிட்டு எங்கே இவ்வளவு அவசரமாகப் போகி றான்!
ஆறிப்போகலாமே, கொஞ்சம் இளைப்பாறிப் போக லாமே!. அல்லது போகாமலே விட்டுவிட்டால் என்ன. இன்னும் என்ன என்ன விபரீதங்களும் நிகழக் காத்திருக் கின்றனவோ இன்று!
இவன் போகாமலே விட்டால் என்ன?
சனங்கள் இவனை விசித்திரமாகவும், ஆவலாகவும் புதினம் பார்த்தார்கள். அவர்கள் கண்களில் ஒருவிதமான பயமோ. அன்றிப், பக்தியோ தெரிந்தது. சிலர் கண் களில் அடக்கமாட்டாமல் பீரிடுகின்ற நட்பு தெரிந்தது.
ஜன்னல்களில் நிலவு முகங்கள் தோன்றின. கொஞ்சும் விழிகளால் இவன் முகத்தை துளைத்தன.
'போகாதே. போகாதே...' எனக் கெஞ்சுவது போல் இருந்தது அவர்களின் பார்வை.
இவன் விரும்பினால் ஒரு வீட்டுக்குள் புகுந்து ஒய்" வெடுக்கலாம்.

Page 26
48 () காலம் உனக்கொரு பாட்டெழுதும்
இவன்தான் ஒரு வீட்டுக்கும் போகமாட்டானே! இவனுக்கு இவன்வேலை பெரிது. தெற்கு ரோட்டுக்கு விாைவில் போய்ச் சேர வேண்டும். ஒழுங்கைகளை விட்டுப் பிரிந்து ஒரு ரோட்டில் ஏறி விடுவிடென நடக்க ஆரம்பித்தான்.
கொஞ்ச வயல்கள் இடையில் இவனைக் கண்டன. மழை நீரை ஆவலாக உறிஞ்சி குடித்துக்கொண்டிருந்தன. வருண தேவனோ இவன் என, நன்றியுடன் இவனை மெளனமாகப் பார்த்தன.
இவன் தாண்டிப் போனான்.
ஒரு மாதா கோயில் தெரிந்தது. கன்னிமேரி ஒரு கையில் குழந்தை ஏசுவை ஏந்தியபடி இவனைக் கனிவுடன் பார்த்தாள். மறுகைகளை காற்றில் தூக்கி இவனுக்கு ஆசீர்வாதங்களை அனுப்பினாள்.
இவன் தாண்டி தாண்டிப் போனான். கோயில் ஒன்று வந்தது. விசித்திரம் தான்! ஊரிலி ருந்து கொஞ்சம் விலகி தனியே இருந்தது. சில பனை களுடன் சல்லாபித்தபடி, வெறுமையாக கதவுகளைத் திறந்துபோட்டபடி இவனை ஆதங்கத்துடன் அழைப்பது "போல இருந்தது. வானோக்கி உயரும் மணிக்கோபுரம் இவனை 'வா" என அழைப்பதெனத் தோற்றம் காட்டிற்று.
இவன் விரும்பினால் கோயிலுக்குள் சற்றுநேரம் படுத்து இளைப்பாறலாம்!
இவன் ஆறமாட்டான். இவனுக்கு வேலை பெரிது. தெற்கு ரோட்டுக்கு கூடிய விரைவில் போய்ச்சேர வேண் -டும். தனியனாக நடந்தோ. அல்லது. ஒடியோ.
மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

ரஞ்சகுமார் () 49
இவனுக்கு சற்று களைப்பு தெரிந்தது. அதிர்ச்சியும் ஒட்டமும். சற்றுக் களைத்துததான் போனான். வான் ஏதாவது போகுமெனில் தொற்றி விடுவான். விரைந்து போய்ச் சேரலாம்.
சற்றுத் தூரே தெற்கு ரோட்டை போய்ச் சந்திக்கிற பாதை இவன்வழியே செங்குத்தாக வெட்டிப்போவதைக் கண்டான். பழைய காலத்து வான் ஒன்று நிறைந்த சுமை யுடன் முக்கி முனகிப் போய்க்கொண்டிருந்தது. கையைத் தட்டினால் கேட்குமா? நிற்பாட்டுவார்களா? இவனையும் தங்களுடன் அழைத்துப் போவார்களா?
கையைத் தட்டினான். திரும்பத் திரும்பத் தட்டி, 630.
“வரட்டோ?. நானும் வரட்டோ!.."
மெல்ல ஒடிக்கொண்டே கேட்டான்.
வா. வா. ஒடி வா!...” விசித்திரமான வேற்றுப் பாணியில் ஒரு குரல் கூப்பிட்டது.
இவன் நெருங்கிக்கொண்டிருந்தான். வெற்றுடம் புடன் சில பேர் இருந்தார்கள். எல்லோரும் ஆண்கள் எங்காவது கோயிலுக்கு போய் வருகிறார்களோ?
இவன் மிகவும் நெருங்கிவிட்டான்.
வான் நின்றுவிட்டது. பழகாத புதிய முகங்கள் போலும்! வேறு புறம் திரும்பி அசட்டையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இல்லை. இல்லை. இல்லவே இல்லை! சட்டென்று சொல்லிவைத்தாற்போல இவன் முகம்பார்த்து எல்லாரும் திரும்பினார்கள். கண்களில் சொல்லொணா வன்மம் தொனித்தது.
ஒரே சமயத்தில் குதித்தார்கள். கைகளில் 'பளபள" எனக் குத்தீட்டிகளுடன் துப்பாக்கிகள் மின்னின. இவன் இதயம் சடக்கென நின்றுவிட்டது ஒருகணம்.

Page 27
50 0 காலம் உனக்கொரு பாட்டெழுதும்
தொலைந்தான்! இவன் எதிர்பார்க்கவில்லை. கனவில்கூட. ‘அவர்கள்’’ இப்படி ஒரு கோலத்தில் தந்திரமாக உலாவுவார்களென!
துப்பாக்கிகள் இவனை பசியுடன் நெருங்கிச் சூழ்ந் தன. மார்பை நோக்கி ஒரு இடி இறங்கிற்று. பிறகு தொடைகளின் நடுவே குறி பிசகாத ஒரு உதை!
சுருண்டு விழுந்தான். தலைமயிரைப் பற்றி இழுத்து வானுக்குள் எறிந்தனர்.
இரத்தமும் நிணமும், குமட்டும் வாசனையைப் பிறப் பித்துக் கொண்டிருக்க சிதறிப்போன தசைத்துண்டு
95GT5......
கோணாமலை!. கேதாரி!. பெருமாள்!. பெரியண்ணன்!. மைக்கேல்! அன்பரசன்.
எல்லையற்ற அந்தகாரம் இவனைச் சூழ்ந்தது.

கோசலை
'குலம்!. மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே"
குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஒலைப் பாயில் தலையணை கூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவிமாதிரி இருக்கிறான்!
அம்மா திண்ணைக் குத்தில் கால் நீட்டி உட்கார்ந்த வாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்
"கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன். மாடுகள் கத்துதெல்ல. p.
குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்ட வாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மார் பில் உரோமங்கள் படர்கிற வயது. முரட்டுத்தனமான உடல்வாகு. குரல்கூட கட்டைக்குரல். இவனுடைய அப்பா மாதிரி. நெற்றியில் தூக்கிப் போட்டிருந்த கைகளைப் பார்த்தாள். நரம்புகள் புடைத்துக்கொண்டு விம்மித் தெரிந்தன. உள்ளங்கைகள் முதலையின் முதுகு மாதிரி காய்த்துப் போயிருந்தன. விரல்கள் ஒயிலும் கிறீஸும் படிந்து பழுப்புநிறமாகத் தெரிந்தன. நகக் கண்களில் கறுப்பாக ஒயில் அழுக்குப் படிந்திருந்தது.
‘குலம். கொஞ்சம் வைக்கல். p.
அவசரமாகப் பாய்த்து இடை வெட்டியவாறு மகன் சிடுசிடுத்தான்.

Page 28
52 [) கோசலை
hr
"நீயே இழுத்துப் போடன். எனக்கு ஒரே அலுப்பு."
அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சிரித். தாள்.
சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக்கும்? அம்மா சொல்லாமலே வேலை எல்லாம் செய்து கொடுப் பான். மாடுகளுக்கு வேளாவேளைக்கு வைக்கோல் இழுத்துப் போடுவான். தண்ணிர் கொண்டு போய்” வைப்பான். கோழிகளைக் கவனித்துக் கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு தேங்காய் கூட அம்மாவுக்கு துருவிக் கொடுப்பான்.
எவ்வளவு அருமையான மகன்? அவன் ஏன் அப்படிப் போனான்?
ஊரை நீங்கித் தூரே வயல்வெளிகள் பரந்திருக் கின்றன. இடையிடையே பனங்கூடல்களும் திடல்களும் தனித்துக் கிடக்கின்றன. மாலைநேரங்களில் அம்மா அவ், விடங்களில் புல் செதுக்கிக் கொண்டுவரப் போவாள். சைக்கிள் ஒட்ட முடியாது அவ்விடங்களில், சீலன் சைக், கிளில் சாய்ந்த படியே ரோட்டில் காத்து நிற்பான்.
அம்மா புல்லுக் கட்டுடன் திரும்பி வரும் நேரங்களை அவன் நன்கு அறிவான். அம்மாவின் உருவம் மிகதூரே மங்கலாகத் தெரியும்போதே ரோட்டை விட்டிறங்கி அம்மாவை நோக்கி விரைந்து போவான். பாரத்தை மாற்றிக்கொண்டு அம்மாவுக்கு முன்னே வீட்டுக்கு. சைக்கிளில் பறப்பான்.
அம்மா வழியிலேயே துரவில் உடம்பைக் கழுவிக். கொள்ள, முருகன் கோயில் மணி சிணுங்கி அழைக்கும். அம்மா உருகியவாறு கோயிலுக்குப் போவாள். பூசை முடிய நன்றாக இருள் குழ்ந்து விருடும். உள்ளங்கையில் பொத்தியபடி விபூதியும், சந்தனமுமாக திரும்பி வரும்

ரஞ்சகுமார் () 53
போது, சீலன் வீட்டில் "பளிச் சென விளக்கேற்றி யிருப்பான்.
மேசைக்கு முன்னால் விளக்கொளியில் முகம் விக சித்துத் தெரியும் படிக்கு அவன் உட் கார்ந்திருப்பான். ஏதாவது படித்துக் கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பான். முன்னால் மென் குரலில் இசைத்தபடி ரேடியோ அவனை ரசிக்கும். பக்கத்திலே சைக்கிள் முன் சில்லை ஒயிலாக ஒடித்துச் சாய்த்தபடி அவனைப் பார்த்து பளிரென ஒளிவீசிச் சிரிக்கும்.
மகள் அழகிய மொட்டு. மிகவும் சின்னவள்தான். ஆயினும் குசினியில் தேநீர் தயாரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பாள். குலத்தை மட்டும் காணக் கிடைக் காது. அவன் வீட்டில் இருக்கும் நேரங்களை அம்மா வுக்கு அறுதியிட்டுக் கூறமுடியாது. அவன் தொழில் அப்படி!
மாடுகள் கழுத்து மணிகள் கிணுகினுக்க புல்லை. அரைக்கின்ற சத்தம் கேட்கும். கூடவே மாடுகள் பலத்து மூசி மூச்சுவிடுவதும் வாலைத் தூக்கி ஈக்களை விளாசி விரட்டுவதும், கேட்கும். சாணியின் மணத்துடன் பசும் புல்லின் வாசனை நாசியில் உறைக்கும். கோழிகள் எல்லாம் ஏற்கனவே கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். குறுகுறு வெனக் கொக்கரிக்கும். "படபட" வேனச் சிறகுகளை உல்லாசமாக அடிப்பது கேட்கும.
சுடச்சுட ஒரு கோப்பை தேநீர். கடுமையான உழைப்புக்குப் பின், தொழுகையின் பின், மோகனமான இரவின் பிறப்பு நேரத்தில். அருமையான தனது
பிள்ளைகளுடன் அம்மா அருந்து வாள். அது வல்லவேர வாழ்க்கை!
GLont-4

Page 29
54 ロ @5T字5の6)
எல்லாமே சீலனுடன் கூடவே சேர்ந்து அம்மாவிடம் பிரிவு சொல்லாமலே போயினவோ?
அம்மா அலுத்தபடியே வைக்கோல் போரை நோக்கிப் போனாள்.
ஒரே வயிற்றில் உதித்த பிள்ளைகள் ஏனோ இவ்வாறு வேறு வேறு குணம் கொண்டவர்களாய் ஆகிப் போனார்கள்? இரண்டு பேரையும் அம்மா ஒரே மாதிரித்தான் சீராட்டினாள். ஒரே மாதிரித்தான் உணவூட்டினாள். ஒரே பள்ளிக்கூடத்திலேதான் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டாள். புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு, எண்ணெய் பூசி படியச் சீவிய தலைகளுடன் அவர்கள் பள்ளிக்கூடம் போவதை வாசலில் நின்று பார்த்து ரசித்தாள்.
குலம் மட்டும் படிப்பை ஒரேயடியாகக் குழப்பினான். அண்ணனுடன் நெடுகலும் சண்டை போட்டான். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு சிலவேளை சாப்பிடா மலே போனான். ஆறாம் வகுப்புக்குமேல் அவனால் ஏறவே முடியவில்லை. அம்மா அறிவாள், அவனது இளையமகன் மிகவும் புத்திசாலி. ஆனாலும் ஏன் அவனால் படிக்க முடியவில்லை என அம்மாவுக்குப் புரியவில்லை.
லேன் அமைதியாகப் படித்தான். அவன் மிகவும் அமைதியான மகன். இரைந்து கதைக்கத் தெரியாதவனாக இருந்தான். நடப்பது கூட மிகவும் மென்மை. ஒரு கம்பீரம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் புல்லுக்குக் கூட நோகாத நடை. கண்கள் பெரிதாக இருந்தன. உள்ளங்கைகள் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தன. நகங்கள் ரோஸ் நிறமாகவும், நீளமாகவும். விரல்கள் சுட மெலிந்து நீளமாக நளினமாக இருந்தன, பெண்களைப் போல.

ரஞ்சகுமார் ( 55
சீலன் ஒரு மோகனமான மாலை நேரம் பிறந்தான். பறவைகளின் கீச்சொலிகள் அடங்கிய பிறகு, மாடுகள் எல்லாம் மேய்ச்சல் நிலங்களிலிருந்து திரும்பி வந்துவிட்ட பிறகு, மென்மஞ்சட் கதிர்களை மண்ணெண்ணெய் விளக்குகள் உமிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில். அம்மாவின் இடது தொடையை சற்றே உரசியபடி ஒரு வளர்பிறை நாளில் சீலன் பிறந்தான். புனர்பூச நட்சத்திரம். ‘இவன் பெரிய காரியங்களைச் சாதிக்கப் பிறந்தவன்’ என அவனது சாதகம் சொல்லிற்று.
குலம் அத்த நட்சத்திரம், அதுதான் அவனிடம் முரட்டுச் சுபாவங்கள் சேர்ந்து விட்டனவோ? அத்தம், அதமம் என்றார்கள் சாத்திரிமார்.
மத்தியான நேரம் கொடுமையானது. மெளன மானது. காற்றை வெயில் விரட்டிவிடும். ஒழுங்கைகளில் படிந்திருக்கிற புழுதியில் கச்சான் வறுக்கலாம் எனத் தோன்றும். பூவரச மரங்கள் கொடு வெயிலில் வாடித்துவளும். சனங்கள் வெளியில் தலை காட்டவே மாட்டார்கள். சொறி பிடித்த நாய்கள் மட்டும் நாவைத் தொங்கப் போட்டபடி இளைத்தவாறு நிழல் தேடி ஒடித்திரியும். 'கர்ர்ர்" எனக் கடூரமாகக் கத்துகின்ற காக்கைகள் நீர் தேடிப் பறக்கும்.
குலம் ஒரு மத்தியான நேரம் பிறந்தான். பிறந்த வுடன் எட்டு இறாத்தல் நிறை காட்டினான். அம்மா இராஜவலியில் துவண்டாள். மயக்கம் தீர நெடு நேரமாயிற்று. காய்ச்சல் ஒய சில நாளாயிற்று.
என்னவோ அம்மாவுக்கு குலத்தைவிட சீலனை மிகவும் பிடித்தது. அவன் அவளை விட வளர்ந்து விட்ட பிறகும், மேலுதடு அரும்பிய பிறகும். அவனது கேசங்களை வருடுவதில் அம்மா இன்புற்றாள். ஒரு குழந்தையினது போல மிகவும் மிருதுவான தலைமயிர்.

Page 30
56 () கோசலை
குலத்துக்கு, மிகவும் முரட்டுத் தலைமயிர். சுருண்டு சுருண்டு இருக்கும். கண்கள் சிறுத்து உள் வாங்கி இடுங்கி இருந்தன. மேனியில் மண்ணெண்ணெய் நாற்றமும் ஒயில் நாற்றமும், வியர்வை வாடையும் சதாகாலமும் வீசிற்று. அவன் தொழில் அப்படி குலம் ஒரு மெக்கானிக் ஆகவேண்டி ஆயிற்று, அவனது மாமனைப் போல. நேரங்காலமற்ற வேலை. சில நாட்கள் சேர்ந்தாற் போல வராமல் இருக்க நேர்ந்தது. நேரத்துக்கு உண்ண முடியாமல் போயிற்று. தன்னைக் கவனிக்க நேரமில் லாமல் போயிற்று. அண்ணன் நிறையப் படிக்க வேண்டுமென நினைத்தானோ, என்னவோ? ஒய்வொழிச் சல் இல்லாமல் வேலை வேலை எனப் பறந்தான். v நினைக்க நினைக்க அம்மாவுக்கு நெஞ்சைப்
பிளக்கும்படி நெடு மூச்சு எறிந்தது.
சீலன் ஏன் அப்படிப் போனான்?
அம்மா மெல்ல மெல்ல போரிலிருந்து வைக்கோலைப் பிடுங்கி இழுத்தாள். நாய் அம்மாவிடம் ஓடி வந்தது. கால்களில், “சில்லென இருந்த ஈரமூக்கைத் தேய்த்தது. வாலைத்துரக்கி சுழற்றிச் சுழற்றி ஆட்டியது. அம்மா காலால் எட்டி உதைக்க நினைத்தாள்.
நாயின் கண்களில் நன்றி வழிந்தது. அது சீலன் கொண்டு வந்து நாய். அம்மா அதை உதைப்பாளா? கால்களை மடக்கிக் கொண்டாள்.
*சொதசொத"வென்ற மாரிக் காலத்தின் சோம்பலான ஒருநாளில் சீலன் அதைத் தூக்கிக்கொண்டு வந்தான். வந்தபோது வெள்ளை நிறமாக இருந்தது. இப்போ பழுப்பு நிறமாக வளர்ந்து விட்டது.
மழைநீர் ஓடிக்கொண்டிருந்த தெருக்களில் மிகவும் நனைந்து போய் அனுங்கிய குரலில் கத்தியபடி நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்கும் தோன்றாத இரக்கம் அவனுக்குள் சுரந்தது. தூக்கிக் கொண்டு வந்தான்.

ரஞ்சகுமார் () 57
ஒலைப் பெட்டியால் கவிழ்த்து மூடினான். பெரிய காரிய வாதி போன்ற பாவனையுடன் அம்மாவுக்குச் சொன் னான்.
'வளர்ந்தாப் பிறகு நல்லது. மரநாய் வராதம்மா. கோழிகளுக்குக் காவலாயிருக்கும்."
தினமும் செங்காரிப் பசுவில் பால் கறந்து ஊட்டி னான். அவனுக்குத் தெரியும், எந்தப் பசுவின் பால் ருசியும், கொழுப்பும் மிக்கதென்று.
அம்மா மாடுகளை நோக்கிப் போனாள். நாய் அம்மாவின் கால்களைத் தடுக்கப் பண்ணி விளையாடிய படி பின்னே ஓடியது.
வாலிபத்தில் துள்ளுகிறது நாய். கொழுப்பேறி உடல் பளபளக்கிறது. நன்றாகத் தான் கொழுத்து விட்டது சீலன் கூட கொழு கொழு என்று தான் இருந்தான். திரட் சியான கன்னங்களும், காந்தக் கண்களுமாக..எவ்வளவு அழகனாக இருந்தான் இந்த அம்மாவின் மகன்!
அமைதியாக இருந்தான. ரேடியோவைக் கூட சத்த மாக முடுக்கி விடமாட்டான். அவனைச் சுற்றி மட்டுமே இசை இருக்கும். இரண்டாம் பேரைத் தொந்தரவு செய்ய அவன் விரும்புவதில்லை. அவன் படிக்கும்போது கூட ரேடியோ முன்னாலிருந்து ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருக்கும். சைக்கிளைத் துடைக்கும் போதும் பாடியவாறு பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் உதயகாலத்தில் 'பளபள" மென மின்னுமாறு சைக்கிளைத் துடைப்பான். காற்று இருக்கிறதா எனக் கவனித்து திருப்தியுடன் தலையைக் குலுக்குவான். எதிலும் ஒரு ஒழுங்கு அவனிடம் இருந்தது.
அவன் போன பிறகு எல்லாமே ஒழுங்கற்றுப் போயிற்று. ரேடியோ அநேகமாக மெளனித்து விட்டது. அந்த வீடே ஜீவனற்றுப் போயிற்று. சைக்கிள் சீந்து

Page 31
58 கோசலை
வாரற்று தூசி படிந்துபோய், ரயர்கள் காற்று இறங்கி மெலிந்துவிட, சுவரோடு சாய்த்து வைக்கப்பட்டு விட்டது.
குலத்துக்கு சைக்கிள் அவசியமென்றில்லை. அவனுக்கு நேரத்துக்கு ஒரு வாகனம், காரோ, வானோ, மோட்டார் பைக்கோ. காற்றைக் கிழித்துக் கொண்டு வருபவனென வந்து நிற்பான்.
சீலன் போன பிறகு இந்த வீட்டில் முரட்டுத்தனமும், மெளனமும், அம்மாவின் ஏக்கப் பெருமூச்சுகளும் மட்டுமே மிஞ்சிநிற்கின்றன. மகளோவெனில் மிகவும்: சின்னவள். புரியாத பேதை. அழகிய சிறு மொட்டு.
சீலன் ஏன் வீட்டை விட்டுப் போனான்?
அம்மா நன்றாகவே கவனித்தாள். சில நாட்களாக சீலன் சரியாகவே இல்லை. பரீட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது.
எதையோ குறித்து தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டி ருப்பதாகத் தோன்றியது; எதையோ குறித்து மிகவும் கவலை கொள்பவனாகவும் தெரிந்தது.
பரீட்சையை நினைத்துக் கலவரப் படுகிறானோ? ஏன், நன்றாகத்தானே படித்தான்!
பிடிப்பில்லாதவன் போலக் காணப்பட்டான். அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்தான். வாய்க் குள் ஏதோ முனகிக் கொள்பவனாய் தலையை அடிக்கடி குலுக்கினான். இரவு நேரங்களில் நித்திரையைத் தொலைத்து விட்டான். புரண்டு புரண்டு படுக்கின்ற அரவங்கள் கேட்டன. காலை நேரங்களில் அவன் சைக் கிளைத் துடைப்பதில்லை. ரேடியோவை மீட்டுவதில்லை. ஆம்! ரேடியோவை அவன் மீட்டுவதாகத்தான் அம்மா இவ்வளவு காலமும் எண்ணினாள். ரேடியோவில் இருந்து

ரஞ்சகுமார் ロ 59
அவனது இனிய சாரீரமே மிதந்து வருகிறது போல. உலகின் இனிய வஸ்துகள் யாவும் அவனுக்காகவே படைக்
கப்பட்டிருப்பதென. அவன் தொட்டதெல்லாம்துலங் கும் என.. அவனுக்காக எங்கோ ஒர் அரிய நங்கை வளர்ந்து வருகிறாள் என. அவர்கள் அம்மாவுக்கு
அழகிய, மதலை குதம்பும் பேரக் குழந்தைகளைப் பெற் றுத் தருவார்கள் என.
சீலனோ எனில், சில நாட்களாக ஏனோ தானோ என மாறிவிட்டான். பரீட்சை எழுதப் போனான். மற்றப் பையன்களிடம் காணப்பட்ட ஆர்வமோ பரபரப்போ அவனிடம் காணப்பட வில்லை. அம்மா அவனை ஏதும் கேட்கவில்லை. அவளது இனிய குழந்தையைத்தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. எங்காவது காதல், கீதல். w a என்று ஏதாவது?...அவனாகவே சொல்லட்டும் என விட்டு விட்டாள்.
பரீட்சை நடந்து கொண்டிருந்தது. சீலன் வரவர மிக வெளிறினான். முகத்தில் ததும்புகிற ஜீவகளை எங்கே போயிற்று? அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
சீலன் அன்று வெகு சீக்கிரமே எழுந்தான். மிக நீண்ட நேரம் எங்கோ கவனமாக பல் துலக்கினான். தன்னுணர் வற்றவன் போல உலவினான். 'பளிச் சென அம்மா பெருக்கி விட்டிருந்த முற்றத்தில் அவனது சீரான காலடி கள் பதிந்தன. அம்மா மிகவும் அதிசயப்பட்டாள்.
*நேரமாகுதெல்லே மேனே.
சரியாகச் சாப்பிடத்தானும் இல்லை. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான். வழமை போல் ஒரே தாவலில் ஏறிப் பறந்து விடவில்லை. மிக நிதானமாக ஏறி, உட்கார்ந் தான். காற்றை அளப்பவனைப்போல் சுற்றிலும் பார்வை ஒட்டினான்.
*போயிட்டு வாறன் அம்மா.

Page 32
60 () கோசலை
"வடிவாக் கடவுளை நேர்ந்து கொண்டு போ. பிறகும் ஏன் நிற்கிறான்? "நேரமாகுதெல்லே." ‘நான் போறன்." "மொட்டையாக முணுமுணுத் தான்.
மெல்ல மெல்ல ஒரு கிழவனைப் போல உழக்கிக் கொண்டு போனான். அம்மா அவன் பின்னாலேயே போனாள். தெருவில் இறங்கி நின்றுகொண்டு அவன் போவதைப் பார்த்தாள். முடுக்கால் திரும்பி மறையுமுன் "சட் ' என ஒருதரம் திரும்பிப் பார்த்தான்.
அம்மா உள்ளே வந்தாள். சற்று நேரம் திண்ணை யில் உட்கார்ந்தாள். பிறகு, தலைக்கு எண்ணெய் பூசி சீவி முடிந்துகொள்ள நினைத்து எண்ணெய்ப் போத் தலைத் தேடினாள்.
வாசலில் யாரோ சைக்கிளில் வந்து நிற்பதைப் போல உணர்ந்தாள். எட்டிப் பார்த்தாள்.
சீலன்! என்னவாயிற்று இன்று இவனுக்கு? மீண்டும் சீலன் உள்ளே வந்தான். எதையாவது மறந்துபோய் விட்டுவிட்டுப் போனானோ?
திண்ணையில் ஏறி அமர்ந்தான். முகம் செத்துப் போய் இருந்தது.
"ஏன் மேனே தலையிடிக்குதோ. 9 ““F Tj SFTuiu ...... குனிந்து நிலத்தைக் கீறவாரம்பித்தான். "இரு கோப்பி போட்டுத் தாறன்.
U F P.

ரஞ்சகுமார் 0 81
**இண்டைக்குப் பாடம் உனக்கு ஓடாதோ?” அசிரத்தையாகத் தலையைக் குலுக்கினான். "அப்ப ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?"
*காசு. கீசு. ஏதாவது வேணுமோ?" சிரித்தான். இந்த அம்மா எவ்வளவு அப்பாவி! அம்மா அவசரமாகக் கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கினான். இல்லை. பறித்தான்! அவனது ஆவலும் பரபரப்பும் அம்மாவை வியப்பிலாழ்த் தின. வாங்கும்போது அம்மாவின் கைகளை அவன் விரல்கள் தீண்டின. என்றுமில்லாத அழுத்தம் அவ்விரல் களில் இருந்தது. உள்ளங்கைகள் பிசுபிசுத்து வியர்த் திருந்தன.
'தங்கச்சி எங்கை அம்மா . . 2 *ப்ச் . உங்கை தான் எங்கையாவது போயிருப்பள்.'
a gir?'
"சும்மா தான்' 'அவளைப் பார்த்துக் கொண்டு நில்லாமல் வெளிக்கிடு. நேரம் போகுது.'
ஏதோ ஒரு உறுதியுடன் விருட்டென எழுந்தான். விறைத்து நின்று கொண்டான் சிறு நேரம். ஒரு நொடி அம்மாவின் கண்களைக் கூர்ந்து பார்த்தான். அவளது கண்களுக்குள் எதையோ தேடினான் போலும்!
'நான். போ-ற-ன் . அம்மா!' வெடுக்கெனத் திரும்பிச் சைக்கிளில் பாய்ந்து ஏறி னான். வெகுவேகமாகப் போனான். ஏதோ ஒரு இனம்

Page 33
62 0 கோசலை
புரியாத சக்தி அவனை அம்மாவிடமிருந்து பிரித்து இழுத்துச் செல்கிறதென.
அம்மா கலவரத்துடன் தெருவுக்கு விரைந்தாள். சீலன் முடுக்கால் திரும்பி மறைந்து கொண்டிருந்தான். ஒரு தரம் திரும்பிப் பார்ப்பான் என எதிர்பார்த்தாள். அவன் பார்க்கவில்லை. ஆனால் ஹாண்டிலில் ஒரு சிறு பொலித்தீன் பாய்க் தொங்கிக் கொண்டிருப்பதை அம்மா அப்போதுதான் கவனித்தாள். சைக்கிள் சில்லு தெரு நீளத்துக்கு பாம்பு ஊர்ந்து போன சுவடாகத் தடம் பதிந்துத் தெரிந்தது.
அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. புருவங்களைச் சுருக்கினாள்.
மாலையில் யாவும் புரிந்தன. தயங்கித் தயங்கி ஒரு பையன் சீலனின் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான், தலையைக் குனிந்து கொண்டே போய்ச் சுவருடன் சைக் கிளைச் சாத்தினான். அவனை எங்கோ பார்த்த ஞாபகம் காட்டிற்று அம்மாவுக்கு. அம்மாவின் முகத்தைப் பாரா மல் எங்கோ வேண்டுமென்றே பார்வையைத் திருப் பினான்.
வெகு ஆயத்தமாக தொண்டையைச் செருமிச் சரி பண்ணிக் கொண்டான்.
“சீலன். இதை.. இஞ்சை கொண்டு வந்து விடச் சொன்னவர்.'
"ஆங்!. சீலன் எங்கையப்பு."
9
"ஐயோ! என்ரை பிள்ளை .
அந்தக் குரலின் அவலம் பையனைத் துரத்தியது. தலையைக் குனிந்தவனாய் விடுவிடென விரைந்து: போனான்.

ரஞ்சகுமார் () 63
அம்மா பதைத்தாள். கிரீச்சிட்டாள். **சீலன் எங்கையப்பு...' பையன் பின்னே தட்டுத் தடுமாறி ஓடியபடி அம்மா கேட்டாள். அவன் பதில் சொல்ல முடியாமல் ஒடத் தொடங்கினான்.
*சீலன் எங்கையப்பு.’’ இலேசாக குளிர்ந்துபோய் தன்னைக் கடந்துபோன கரற்றை, அம்மா கேட்டாள், அது மெளனமாகப் போனது.
இவ்வாறான எத்தனை அன்னையரின் சோகங்களை அது பார்த்திருகிறது! அது பேசாமல் போனது.
"ஐயோ, என்ரை சீலன் எங்கை." சிவந்து மின்னிக் கொண்டிருந்த அந்திவானை அம்மா கேட்டாள்.
இவ்வாறான எத்தனை சீலன்கள் அதன் கீழ் உள்ள னர், அது பேசாமல் கண்ணை மூடிற்று.
**சீலன் எங்கை?"
அவளுக்குத் திருப்தியான பதிலைத் தர ஒருவரும் இல்லை.
**சீலன் எங்கை?'
அம்மாவின் பரிதாபமான அக்கேள்வி ஊர் மேல் ஓங்கி அடித்தது. அம்மாவைச் சுற்றி ஊர்ப்பெண்கள் ஒவ் வொருவராகக் கூடத் தொடங்கினார்கள்.
அவர்களுக்குப் புரிந்தது சீலன் எங்கே போனான் என்று! இவ்வாறான எத்தனை கதைகளை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அம்மாவை ஆதரவாக உள்ளே கூட்டிப் போயினர்.
பிறகு,

Page 34
*84 L கோசலை
அந்த எளிமையான சிறிய வீட்டின் ஆனந்த வாழ்வும் அவனுடன் கூடப் போய் விட்டதாய்.
வெறுமை. O
மாலை நேரங்களில் அம்மா ஊரை நீங்கித் தூரே இருக்கின்ற வயல்வெளிகளிலும், பனங்கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கின்ற திடல்களிலும் புல் செதுக்கிக் கொண்டு வரப் போவாள். முழுத் தூரமும் இளைத்து, இளைத்து முதுகொடியச் சுமந்து வந்தாள்.
அவள் பாரத்தை மாற்றிக்கொள்ள யாரும் இல்லை அவள் பாதி வழியில் வரும்போதே முருகன் கோயில் மணி சிணுங்கிக் கேட்கும். அவளால் வேளா வேளைக்குப் பூசை காணப் போக முடியவில்லை. அவள் போகும் போது கோயில் நிசப்தமாக இருளில் மூழ்கி இருக்கும். பூசை முடிந்து போனதின் தடங்களாக சிந்திக் கிடக்கின்ற சில மலர்களும். மெல்லமெல்லக் காற்றில் கரைந்து கொண்டிருக்கிற கற்பூர வாசனையும். முணுக்கென எரிகின்ற ஒரு சிறு தூண்டாமணி விளக்கும் . இழுத்துப் பூட்டப்பட்டிருக்கிற சித்திர வேலைப் பாட்டுடன் கூடிய கனத்த கதவும்.
அம்மா வாசலில் நின்று தனியே தொழு தாள். தனது அருமையான புதல்வனின் நலத்துக்காக அம்மா தினமும் தனியே நின்று உருகினாள்.
வீட்டுக்குத் திரும்பிவரும் நேரங்களில் மாடுகள் பின் புறத்தில் ஒன்றையொன்று கொம்புகளால் குத்தி விரட்டியபடி துள்ளித் திரியும். கண்ட இடத்திலெல்லாம் குளம்புகளால் உழக்கிய அடையாளங்களும். சாணியும். அம்மாவே ஒவ்வொன்றாக இழுத்து வந்து கட்டை களில் கட்ட வேண்டியிருந்தது.
கோழிகள் பூவரச மரங்களில் குடிபுகப் பழகின: அம்மா கற்களை எடுத்து வீசுவாள். 'கு' என விரட்டு

ரஞ்சகுமார் 3 65 வாள். நிசப்தமான முன்னிரவு அவற்றின் கொக்கரிப்புக் களாலும், சிறகடிப்புக்களாலும் நிம்மதி இழந்து தவிக்கும். அம்மாவே தனியாக, அவற்றைக் கூடுகளில் அடைக்க வேண்டி இருந்தது.
புகை படிந்துபோய் மங்கிய ஒளி சிந்தும் ஒரு சிறு விளக்கு. மேசை மீது சீலனின் புத்தகங்கள். ஒரு சைக்கிள். மெளனமாகிவிட்ட ஒரு ரேடியோ, அருகிலே மகள் அமர்ந் திருப்பாள். அழகிய சிறு மொட்டு. வயதுக்கு மீறிய குருட்டு யோசனைகள், கொட்டக் கொட்ட விழித்தபடி தனிமையில் உட்கார்ந்திருப்பாள். பாவம்!
அந்த அருமையான மாலைநேரத் தேநீர் அம்மா வுக்குப் பிறகு கிடைக்கவேயில்லை.
அம்மா வரவர மெலிந்தாள். கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் தோன்றின. நடை வரவரத் தளர்ந். தாள். முன்புபோல உற்சாகமாக வேலை செய்ய முடிய வில்லை. அம்மா வயோதிபத்தை நோக்கி மெல்ல மெல்லப் போய்க் கொண்டிருந்தாள்.
இரவு நேரங்களில் நித்திரையின்றி வாடுவாள். புரண்டு புரண்டு படுப்பாள். அலுத்துப்போய் எழுந்து உட்கார்வாள். ஏதோ ஏதோ தோன்ற பெருமூச்சுகள் விடுவாள்.
விபரீத எண்ணங்கள்
குலத்தைப் பற்றியும் அம்மாவுக்கு வரவர ஒன்றும்புரிய வில்லை. எப்போதாவது மூன்று நான்குநாட்களுக்கொரு முறை வருவான். அம்மா அரைத் தூக்கத்தில் அவஸ் தையுடன் புரளும்போது கனவேகத்தில் வந்த ஒரு வாகனம் வாசலில் நின்று ஒருதரம் உறுமி ஒயும். குலம் 'திமுதிமு'வென உள்ளே வருவான். அம்மாவுடன் ஒரு வார்த்தைகூடப் பேசாமலே. அம்மா முகத்தைச் சரியாக ஏறிட்டுக்கூடப் பார்க்காமலே. கைகளில் பணத்தைத் திணிப்பான். சேட்டைக் கழற்றிக் கண்ட இடத்தில் எறிவான். ஒலைப் பாயை விரித்து, தலையணைகூட.

Page 35
66 Gas Ts606)
இன்றிப் படுப்பான். வலிய கரங்களை நெற்றியின் மீது அழுந்தப் போட்டபடி. கால்களை ஆட்டியபடி. மயிரரும்பும் மார்புகள் விம்மித் தணிய ஒரு நொடியில் தூங்கிப் போவான்.
இப்போ தாங்கிக் கொண்டிருச்கிறானே, அது மாதிரி! ஒரு காட்டுப் பிறவி!
இப்போ, குண்டுச் சத்தங்கள் அடிக்கடி கேட்கின்றன. குண்டுச் சத்தங்களைக் கேட்டவுடன் அம்மா நடுங்குவாள். கண்கள் பீதியால் விரியும், அடிவயிறு குலுங்கும்.
"அவர்கள்" அடிக்கடி ஊர்களைச் சுற்றி வளைத்தனர். கனரக வாகனங்களின் உறுமலைக் கேட்டவுடன் அம்மா பாதி உயிரற்றுப் போவாள். நீட்டிய துப்பாக்கிகளுடன் 'மகன் எங்கே?' என உறுக்கியபடி அவர்கள் வரும்போது -துப்பாக்கிச் சனியன்களில் குத்திக் கொண்டு போகும் பாவனையில் பிள்ளைகளை அவர்கள் வளைத்துக்கூட்டிச் செல்லும்போது-அம்மா படும் சஞ்சலம் சொல்லி மாளாது.
‘கடவுளே!.நான் சாக முதல் என்ரை பிள்ளையை ஒருக்கால் கண்ணிலை காட்டு."
ஊரில் தினமும் இரவு நேரங்களில் குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. அம்மாவின் காதுச் சவ்வுகள் கிழிந்து விடு மாற்போல் 'கிண்’ என வலிக்கின்றன. நெஞ்சு நீரற்று வரண்டு போய்விடுகின்றது.
ஓ! இந்த இரவுகள் மிகவும் கொடியன. அம்மாவுக்கு மிகவும் பரிச்சயமான அந்த வயல் வெளி களிலே, பனங் கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கும் திடல் களிலே பொடி யன்கள்’ குண்டு வெடிக்கவைத்துப் பழகு கின்றார்கள் என ஊர்ப்பெண்கள் அம்மாவிடம் சொல் லினர்.

ரஞ்சகுமார் () 67
சீலனும் அவர்களுள் ஒருவனாக இருக்கலாமோ? அம்மா பெரும் பீதியுடன் எண்ணினாள். ஆனால் சீலனைக் கண்டதாக ஒரு நாய்கூட அம்மாவிடம் சொல்ல வில்லை.
அவன் எந்த ஊரில் குண்டு வெடிக்கவைத்துப் பழகு றானோ? அம்மா பிற ஊர்களை அதிகம் அறியாள்.இந்தச் சிறு குடிசைவீடும். முருகன் கோயிலும். புழுதி பறக்கின்ற ஒழுங்கைகளும். பனங்கூடல்களும்.திடல் களும்.மாடுகளும். கோழிகளும் தான் அம்மாவின் உலகம். அவளது பிள்ளைகளே அவளிட்டிய ஈடற்ற செல்வம்.
2
இன்று அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. ஒவ்வொரு சத்தத்திற்கும் சீலனின் நினைவு அம்மாவுக்குள் கனதியாக ஏறிற்று.
குலம் கூட நாலைந்து நாட்களாக வீட்டுக்கு வர வில்லை. இன்றாவது அவன் வருவான் என அம்மா மிகவும் ஆசைப்பட்டாள். .
இவன் என்ன பிள்ளை? வீட்டுக்கு வருவதே குறைவு. வந்தவுடன் விழுந்து படுக்கிறான்.
'அம்மா.பசிக்கிது' என ஒரு வார்த்தை!
ம் ஹ"ம்.
பசி என ஒரு பிள்ளை கேட்டாலே தாயின் வயிறு நிறைந்து விடுமே. இதுகூடப் புரியாத, காட்டுப் பிறவி.
எங்கேதான் இவன் சாப்பிடுகிறானோ?

Page 36
68 D கோசலை
இன்று குலம் கட்டாயம் வருவான் என எண்ணினாள் அம்மா. தூங்காமல் விழித்திருந்தாள். திண்ணைக் குந்தில் கால் நீட் டி உட்கார்ந்தாள்
இன்று மங்கிய நிலவு வெளிச்சம் இருக்கிறது" சந்திரனின் முகம் ஒரு அழகிய பெண்ணின் நெற்றி போலத் தெரிகிறது வெள்ளை மேகங்கள் வேகமாக வானில் திரிவதை அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். பூவரசமிலைகள் மங்கிய நிலவொளியில் பளபளத்துத் தெரிகின்றன.
அம்மா மட்டும் தனித்திருந்தாள். விளக்கின் சிம்னி புகை படிந்திருந்தது. மகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். மாடுகள் மூச்சு விடும் சத்தத்தை, கோழிகள் குறுகுறுப்பதை, நாய் மூச்சுவாங்க அங்கும் இங்கும் ஒடுவதை, நிலத்தைப் பிராண்டுவதை. அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிள்வண்டு ஒன்று கீரிச்சென குரலெடுத்து அலற ஆரம்பித்தது. நாய் காரணமற்றுப் பலமுறை குரைத்தது.
நிலவைக் கண்டு அது குரைப்பதாக எண்ணினாள்.
செங்காரிப்பசு வேதனையான குரலில் கதறியது. எதுவோ அதைத் துன்புறுத்துவதாகத் தோன்றியது. அம்மாவால் எழுந்து பின்புறம் போக முடியவில்லை.
ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
தடுநிசியின் மணத்தையும். உருவத்தையும். சத்தத்தை யும் அம்மா உன்னிப்பாகக் கவனித்தாள். எங்கோ புல்லாந்தி மலர்ந்திருக்க வேண்டும். குரக்கன் பிட்டு வாசனை மூக்கைக் கமறச் செய்கிறது. புடையன் பாம்பு இரையெடுக்கின்ற போதும் இதே வாசனை! வேலி சரசரத்தது. உடலெங்கும் கபடான அழகுமிக்க முத்திரை களைப் போர்த்தியபடி கொடிய விஷமுடைய புடையன் பாம்பு, வழுவி வழுவி வேலிக்குள் ஊர்கிறதோ?- அம்மா வுக்கு ஒரே பயம்! -

ரஞ்சகுமார் () 69
குலம் எப்போது வருவான்? அவன் கட்டாயம் வர வேண்டும் என அம்மா முருகனை அடிக்கடி வேண் டினாள்.
அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. நிலமும், காற்றும், வானும் அதிர்கின்றன. அடிவயிறு குலுங்கு கிறது.
சிறுவயதில், இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலேயே ஒட்டியபடி படுத்திருந்த புதல்வர்கள், யாருமற்ற வயல் வெளிகளிலே. பிசாசுகளும் உலவத் தயங்கும் நடுநிசி வேளைகளிலே இவ்வாறு திரிய எப்படிப் பழகினர்? இந்தப் பயங்கர சத்தங்களை எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனர்? இந்த ஆபத்துக்களை எவ்வாறு சிரிப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்? இவ்வளவு வேகத் தையும் வெஞ்சினத்தையும் அவர்களின் மனங்களில் விதைத்தது யார்?
‘கடவுளே!. எவளெவள் பெத்த பிள்ளையளோ. இப்பிடி வாய்க்கு வயித்துக்கில்லாமல்."
குண்டு ஒன்று பிசிறடித்த சத்தத்துடன் வெடிக் கின்றது. கேட்டுப் பழக்கமில்லாத வித்தியாசமான வெடிப்பு. மிகவும் வெறுக்கத்தக்க. அருவருப்பானசத்தம் அரை குறையில் பிரசவமான ஒரு உயிரற்ற முண்டத்தைப் போல.
அம்மாவுக்கு உடல் "பட்டென வியர்த்தது. ஏதோ கெட்ட விஷயம் நடந்தேறியதாக உள்ளுணர்வு சொல் லிற்று.
எழுந்து மேசையை நோக்கிப் போனாள். நடுங்கும் கரங்களால் விளக்கைத் தூண்டினாள். இறங்கி முற்றத்
மோ-5

Page 37
70 () கோசலை
துக்கு வந்தாள். சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு குண்டுச் சத்தம் வந்த திசையில் பார்த்தாள். நாய் அம்மாவின் காலடியில் நின்றது. வாலைக் கால் களுக்கிடையில் நேராகத் தொங்கப் போட்டபடி செவி களை வானோக்கி உயர்த்தி எதையோ உற்றுக் கேட்டது. மெல்ல உறுமிற்று. பிறகு வேதனையான குரலில் ஊளை யிட்டது. வீட்டைச் சுற்றிச்சுற்றி வேகமாக ஓடியது, அம்மாவின் காலடியில் நிற்பதும். பிறகு ஒடுவதும். கெட்ட சேதியொன்றை அம்மாவுக்கு உணர்த்த அது துடித்தது போலும்!
செங்காரிப்-பசு மீண்டும் மீண்டும் கதறியது. சிள் வண்டின் பிலாக்கண ஒசை மிகைபடக் கேட்கலாயிற்று. குரக்கன் பிட்டு வாசனை எங்கும் நீக்கமற நிறைந்நது.
அம்மா சோர்ந்துபோய், துடிக்கும் நெஞ்சுடன் முற்றத்தில் உட்கார்ந்தாள். நெஞ்சு மிக வறண்டு விட்டது. தொண்டைக் குழிக்குள் கனமான வஸ்து ஒன்று அடைத்து விட்டது போலத் திமிறித்திமிறி மூச்சு விட்டாள்.
சீலனை நினைத்து நினைத்து ஏங்கினாள். குலம் இன்றாவது வருவான் என்ற நம்பிக்கையும் பொய்த்தது. இரவு மிகவும் முற்றி அம்மாவைச் சுற்றிக் கனமாகப் படிந்தது. துன்பம் தரும் குரலில் ஏதோ சொல்லிற்று.
சற்றுத் துரரே போகும் ரோட்டில் ஒரு வாகனம் விரைந்து போகும் சத்தம். ஆபத்தான நோயாளியை யாரோ சிலர் அவசர அவசரமாகச் சுமந்துகொண்டு காப்பாற்ற ஒடிக் கொண்டிருப்பதாக.
எங்கோ ஏதோ பிசகு நடந்துவிட்டது.
கோழி ஒன்று பரிதாபமாகக் குழறுகிறது. மரநாய் பிடித்திருக்க வேண்டும். தீனமான அந்தச் சத்தம் மெல்ல மெல்லத் தேய்ந்து தேய்ந்து தூரே போய், மறைகிறது

ரஞ்சகுமார் () 71
நாய் துரத்திக்கொண்டு ஓடிப்போய் இயலாமையுடன்
திரும்பி வருகிறது.
விழிகள் திறந்தபடியே இருக்க அம்மா கனவு
.96
வயல் வெளியில் அம்மா நிற்கிறாள். சூரியன்
பயங்கரமாகக் காய்ச்சுகிறான். மழையும் பெய் கிறது. வெம்மையாக அம்மா உடலைப் பொசுக் கிற்று மழைநீர் . அம்மா ஒடுகிறாள், இழைத்து இழைத்து ஊருக்குள் நுழைகிறாள். ஒழுங்கை களில் வெள்ளம் பாய்கிறது. ஒரு கிவப்பு நூல் போல இரத்த ஓடை ஒன்று வெள்ளத்தில் கலக் கிறது. அம்மா அதன்வழி போனாள். வெகு தூரம். வெ-கு-தூ-ர-ம். கடைசியில் வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் சீலன் தலையைக் கவிழ்ந்தபடி இருக்கிறான். கண்களிலிருந்து இரத்தம் தாரை தாரையாகக் கொட்டுகிறது; மழைநீரில் கலக்கிறது. வீடெங்கும் இரத்தம். நாய் இரத்தத்தை நக்கி நக்கிக் குடிக்கிறது.
கனவில் இரத்தத்தைக் காண்பது கூடாதே! அம்மா வீரிட நினைத்தாள். இயலாமல் போயிற்று.
குலம் அன்று வரவேயில்லை. அம்மா முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்தக் கொடிய இரவின் ஒவ்வொரு வினாடியையும் வேதனையுடன் அனுபவித் தாள்.
கிழக்கு வானிலே விடிவெள்ளி காலித்தது. சந்திரனை அது மேற்கு நோக்கி விரட்டிற்று. காகங்கள் துன்பம் நிரம்பிய குரலில், விடிந்து கொண்டிருப்பதைப் பூமிக்குச் சொல்லின. கோழிகள் சிறகடித்துக் கொக்கரித்தன, கூவின. முதல் நாள் இரவில் பறி போன தங்களது தோழனுக்காக அவை அஞ்சலி செலுத்தின. மாடுகள்

Page 38
72 () கோசலை
மடிநிறையப் பால் சுரந்து கனக்கின்ற வேதனை தாளா மல் கன்றுகளை அழைத்தன. செத்த வீட்டுக்கு தலையைக் குனிந்துகொண்டு வரும் ஒருவனைப் போல, சூரியன் மெல்ல மெல்ல உதயமாகினான்.
புரியாத பேதையான மகள் சோம்பல் முறித்தபடி எழுந்து வந்தாள். முற்றத்தில் நாடியில் கையூன்றி உறைந்து போய்விட்ட அம்மாவைப், புரியாத பார்வை யால் அளந்தாள். அம்மாவின் ஜீவன் எங்கோ ஒடி ஒளிந்துவிட்டது. சிறு காற்றுக்கூட அம்மாவின் பலகீனமான தேகத்தைப் பூமியில் புரட்டி விடும்.
மெல்ல எழுந்து திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந் தாள். யாராவது ஒரு வேலையற்ற பெண் அம்மாவைத் தேடி வரமாட்டாளா? கேவும் குரலில் அவளிடம் தன் துன்பங்களைக் கொட்டி அம்மா ஒரு பாட்டம் அழுது ஓயமாட்டாளா?
ஒருவரும் வரவில்லை. பதிலாக மகள் பள்ளிக்கூடம் போக வேண்டியிருந்தது. மாடுகளை அவிழ்த்து மேய்ச்ச லுக்குத் துரத்த வேண்டியிருந்தது. கோழிகளைக் கவனித் துக்கொள்ள வேண்டியிருந்தது.
அம்மா யந்திரகதியில் அவற்றைச் செய்தாள். மூளை வேலை செய்து மரத்துப் போயிற்று. கண்கள் காந்தின; அம்மாவுக்கு உட்காய்ச்சல் கண்டுவிட்டது. நெருப்புக் காற்றுப்போல உஷ்ணமான மூச்சுக்கள் உதடுகளைப் பொசுக்கின. காரணமற்று சில தப்படிகள் நடப்பதும். பிறகு நெடுநேரம் ஒரேயிடத்தில் உட்கார்வதும்.துரரே அர்த்தமற்றுப் பார்வைபதித்து பெருமூச்சுக்கள் எறிவ தும்.
சூரியன் யாருக்கும் பிரிவு சொல்லாமல் மறைந்து போனது. இருளுடன் போரிட்டுத் தோற்றுப்போய் அழுது வடிகிறது நிலவு. காற்று சோர்வாக நடந்து போய்க்

ரஞ்சகுமார் () 73
கொண்டிருந்தது. அம்மாவால் இவற்றைக் கவனிக்க முடியவில்லை.
சீலன் என்ன ஆனான்? குலம் ஏன் நாலைந்து நாட்களாக வரவில்லை?
அம்மா மனதில் கேள்விகள் மாறிமாறி எழுந்தன; ஒன்றை ஒன்று துரத்தின.
தொடர்ந்து மூன்று நாட்களாகக் குண்டுச் சத்தங்கள் கேட்கவில்லை அச்சமூட்டும் பேரமைதி ஊர்மேல் கவிந்தது. மூன்று நாட்களும் அம்மாவால் ஒரு வாய்கூட உண்ண முடியவில்லை. ஒரே விக்கல்!
நாலாவது இரவு வேகமாக வந்தது. ஒ! இந்த இரவுகள் மிகவும் கொடியன: அம்மா திண்ணைக் குந்தில் கால்நீட்டி உட்கார்ந் திருந்தாள். மரஇலைகள் நடுநடுங்கிக் கொண்டிருக்க, காற்று அவற்றைச் சீண்டிவிட்டுப் போய்க் கொண்டி ருந்தது. நிலவு மேகங்களுக்குள் பயந்துபோய் ஒளித்துக் கொண்டு அடிக்கொருதரம் எட்டிப்பார்த்து, 'சடக்" எனத் தலையை உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. ஒழுங்கை யில் யாரோ சுருட்டுப் பிடித்துக்கொண்டு போனான் போலும். “குப்பென சுருட்டின் நாற்றம் வீசிற்று. நாய் சுருண்டுபோய் அம்மா பக்கத்தில் படுத்திருந்தது.
வாகனம் ஒன்று வருவதை அம்மா உணர்ந்தாள். அளவான வேகம். கண்களைக் கூசச் செய்யும் ஒளி வெள்ளத்தை உமிழ்ந்த படி வாசலில் நின்றது. "ஹோர்ன்" ஐ ஒலித்து, வந்துவிட்டதாகச் சேதி சொல்லிற்று.
அம்மா ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.
கடவுளுக்கு நன்றி! குலம் இன்று வீட்டுக்கு வந்திருக் கிறான்!!

Page 39
74 () கோசலை
கதவுகளைத் திறந்து அறையுஞ் சத்தம். குலம் மட்டு மல்ல, வேறு சிலர் வந்திருக்கவேண்டும். குசுகுசுவென்று கதைக்கின்ற சத்தம். படலையை மெல்லத் தள்ளித் திறந் தனர். கூட்டமாக வந்தனர்.
யாரோ ஒருவனைக் கைத்தாங்கலில் கூட்டிக்கொண்டு வந்தனர். அம்மா பயந்தவளாய் விருட்டென எழுந்தாள். விளக்கைத் தூக்கி உயரப்பிடித்தாள்.
குலம் சோர்ந்துபோய் வந்துகொண்டிருந்தான். அவனைத் தாங்கி அழைத்து வருகின்றனர். வலது கையை ஒருவன் மென்மையாகப் பற்றியபடி வந்தான். மணிக் கட்டுக்கு கீழே இரத்தம் ஊறிப்போன ஒரு துணிப் பந்து!
ஐயோ! இந்த அம்மாவின் முரட்டுக் குழந்தைக்கு என்ன வாயிற்று?
அம்மா அலற நினைத்தாள், முடியவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.
அம்மா அசைய நினைத்தாள், முடியவில்லை. பாதங் களை யாரோ ஆணியால் தரையுடன் சேர்த்து அறைந்தது மாதிரி.
அவர்கள் ஒலைப்பாயை விரித்தனர். தலையணை களைப் போட்டனர். குலம் பொறுக்கமுடியாமல் முனகிய படி சரிந்தான். முகம் மிக வெளிறியிருந்தது. உதடுகள் காய்ந்து தோலுரிந்திருந்தன. மிகவும் தாகமாக இருந் தான். நாவால் உதடுகளை நீவினான்
**அம்மா...' தீனக்குரல் அம்மாவை அழைக்கிறது, அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.
மகன் தாகத்தால் தவிக்தின்றான். அம்மாவால் அசைய முடியவில்லை.
அவர்கள் கிட்ட வந்தனர். தலையைக் குனிந்தபடி அம்மாவைச் சூழ நின்றனர். ஒருவன் அம்மாவைத்

ரஞ்சகுமார் () 75
தொட்டசைத்தான். அம்மா இமைக்க மறுக்கும் விழி
களால் அவர்களைப் பார்த்தாள்.
அவர்களை அம்மா அடையாளங் கண்டாள்! நடு
நிசிகளில்.யாருமற்ற வெளிகளில்.திரிகின்ற புதல்
வர்கள்!!
ஓ! குலமுமா இந்த அப்பாவி அம்மாவை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்தான்?
**கோப்பி வச்சுக் குடுங்கோ..."
அம்மாவின் தோள்களைக் குலுக்கியபடி ஒருவன் சொன்னான்.
அவளுடைய முரட்டு மகன், புரியமுடியாத புதல்வன் கையைக்காவு கொடுத்து வந்திருக்கிறான்! தாகத்தால் தவிக்கின்றான்!!
கடவுளே அம்மாவுக்கு கொஞ்சம் பலமளிக்க மாட்டாயோ?
அம்மா எதுவோ கேட்க உன்னினாள். அர்த்தம் குலைந்த பலகீனமான ஒரு முனகல் மட்டுமே வந்தது.
அம்மா அசைய முயற்சித்தாள். பெரும் பிரயாசை யுடன் கால்களைப் பெயர்த்தாள். உடல் முழுவதும் மரண வேதனை போலும் நோவெடுத்தது. ஒரடி எடுத்து வைத்தாள். "மொளக்கென ஏதோ சுளுக்கிக் கொண்டது அம்மா பிருஷ்டம் அடிபட மல்லாந்து விழுந்தாள்.
அவர்கள் அம்மாவைத் தூக்கினர். ஒலைப்பாயை விரித்தனர். தலையணைகளைப் போட்டனர். பாயில் அம்மாவை மெல்லச் சரித்தனர்.
ஊருக்குள் எப்படித்தான் விஷயம் பரவிற்றோ?
அவசர அவசரமாக மண்ணெண்ணெய் விளக்குகள் மீண்டும் ஏற்றப்பட்டன. ஒவ்வொருவராக ஊர்ப்

Page 40
76 D கோசலை
பெண்கள் அம்மாவின் வீட்டு முற்றத்தில் கூடத்தொடங் கினர்.
‘கையிலையே வெடிச்சிடுத்தாம்." ஒருத்தி பீதி கவ்விய குரலில் மற்றவளிடம் குசுகுசுத்ததை, அம்மா கனவிற் கேட்பதைப் போலக் கேட்டாள்.
குலத்தைத் திரும்பிப் பார்த்தாள். அரை மயக்கத்தில் கிடந்தான். சொட்டுச் சொட்டாகக் கருஞ்சிவப்பு இரத்தம் தலையணையில் சிந்திக் கொண்டிருந்தது.
முத்து முத்தாக சூடான கண்ணிர் அம்மாவின் கன்னங் களை நனைத்தபடி சிந்தத் தொடங்கிற்று.
3
முதுகுப் பிடிப்புடன் ஒரு முதிய டெண். அவள் வெகு வேகமாகக் கிழவியாகிக் கொண்டிருந்தாள். ஊரில் ஒருவரு டனும் அவள் இப்போ பேசிச் சிரிப்பதில்லை.
ஒரு அழகிய சிறு மொட்டு. புரியாத பேதை, வாடிக் கொண்டிருக்கும் பூமரம். அவளது வயதுக்கு மீறின குருட்டு யோசனைகள். கவலைகள். ஏக்கங்கள். தாயின் வேலையில் பாதிக்குமேல் இதன் பிஞ்சுத் தோள்களில் பல வந்தமாக இறக்கிவைக்கப்பட்டது. பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை. போகும் நாட்களிலும் பிந்தித்தான் போகும். ஒரு அழுக்கு யூனிபோமுடன், கலைந்த கேசத்துடன், வாடிய முகத்துடன், கண்களில் பிந்திவிட்டதின் கலவரமும் பயமும் தெறிக்க, மார்பில் புத்தகக் கட்டுக்களை அணைத்தபடி, புழுதி பறக்கும் ஒழுங்கைகள் வழியே ஒட்டமும் நடையுமாக விரையும்.
ஒரு முரட்டு இளைஞன். மணிக்கட்டுக்குக்கீழே அவனது ஒரு கரத்தை துணித்து விட்டார்கள். அவனிடம்

ரஞ்சகுமார் () 77
அடிக்கடி அவன் தோழர்கள் வருகின்றனர். அவன் ஒரு அருமையான மெக்கானிக். மிகவும் மூளை சாலி. அவசிய மானவன். ஒற்றைக் கையால் கடுமையாக உழைக்கக் கூடிய அசகாய சூரன். நாலைந்து நாட்களுக்கொருமுறை நடுநிசி நேரம் வீட்டுக்கு வருவான். அவன் முகத்தில் காணப்படும் கடுமையும், ஏதோ ஒரு வெறியும் காண் போரைப் பிரமிக்கச் செய்யும். அவன் ஒரு முசுடு. அதிகம் பேசமாட்டான். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுக்குப் பணம் கொடுப்பான். உடனே ஒலைப்பாயை விரித்தபடி தலையணை கூட இன்றித் தூங்கிப்போவான்.
வீடு மிகவும் பழையது. ஒரு சிறு குடிசை. கூரை மிகவும் உக்கிப் போய் விட்டது. முற்றத்தில் எங்கனும் பூவரசமிலைகள் சருகாக குப்பையாகச் சேர்ந்திருக்கும்.
ஒரு நாய். அதைக் கவனிப்பாரில்லை, எலும் பெடுத்துத் தெரிய மெலிந்து விட்டது. சொறி பிடித்து விட்டது. காதுகளில் உண்ணிகள் படையாகப் பெருகி விட்டன. காதுகள் கீழ்நோக்கி வளைந்து பாரத்தால் தொங்கிவிட்டன. வளவின் ஒரு மூலையில் மண்ணைத் தோண்டி விட்டுச், சோம்பிப் படுத்திருக்கும். அது குரைப் பதோ, ஒடுவதோ கிடையாது, விரைவில் இறந்துவிடும்.
அடிக்கடி இந்த வீட்டுக்கு மாட்டுத் தரகர்கள் வருகின் றனர். கதறக் கதற ஒரு பசுவையோ, கன்றையோ இழுத்துப் போகின்றனர். கால்களைப் பரப்பிக்கொண்டு, போக மறுத்து அது கதறும். உதவிக்கு அம்மாவை அழைக்கும். தன் இனத்தை அழைக்கும். பரிதாபமான குரலில் மாடுகள் எல்லாம் சேர்ந்து அழும்.
இரவு நேரங்களில் அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கும். மரநாய்கள் கோழிகளைக் குழறக் குழறத் தொண்டையில் திருகியபடி இழுத்துப்போகும். உயிரை வாட்டும் அத்தீனமான ஒலம் மெல்ல மெல்லத் தேய்ந்து துர்ரே போய் மறையும்.

Page 41
78 D கோசலை
அம்மா இப்போ குண்டுச் சத்தங்களைச் சட்டை செய் வதில்லை. அவள் துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் பழக்கப்பட்டவள்.
குலத்தினதும் சீலனினதும் ஜாதகங்களைத் தூக்கிக் கொண்டு பெயர் பெற்ற சாத்திரிமார்களைத் தேடிப் போகிறாள்.
சீலன் புனர்பூச நட்சத்திரம் ராமன் கூடப் புனர்பூச நட்சத்திரம்!!
அவனும் காடுகளில் வசிக்க நேர்ந்தது! கடலைக் கடக்க நேர்ந்தது! அதர்மர்களுடன் நெடுகலும் போரிட்டுக் கொள்ள நேர்ந்தது!
வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் தென்னிலங் கையில் மமதை கொண்டிருந்தவர்களை அவனும் வென் றான்!
சாபத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அவனும் விமோசனமளித்தான்!
அவனும் பேதங்களைக் கடந்தவன். குரங்கும் வேட லும் அவனது தோழர்கள்!
ஒ ஆயினும் ராமன் பேரில் அன்பு கொண்டவர்கள் அவன் பிரிவால் துன்புற நேர்ந்தது.
தசரதன்!. கோசலை!. சீதை! குலம் அத்த நட்சத்திரம். அத்தம் அதமம் என்றார் கள் சாத்திரிமார்.
அவன் ராஜத்துரோகமான காரியங்களில் ஈடுபடுவான் என்றும்.
மிகப் பெரிய கண்டங்களில் மாட்டிக்கொள்ள நேரும் என்றும்.
மறியல் வீட்டுக்குப் போகின்ற பலன் கூட அவனுக்கு. உண்டென்றும்.
கிரகங்கள் யாவும் நீசதிசை அடைந்திருக்கின்றன வென்றும்.

9Jef
* . பசிக்குப் பிச்சை கேட்க யாரிடமும் என் னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு. தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு. பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள்: ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான்.'
- மெளனி -
நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப் போகிறாள். அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும். வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே சிதிலமாகி விட்டது. உட்சுவரிலும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர, ஆலங்கன்றுகளும் வேறு சில பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லா வற்றையும் சேர்த்து பழுது பார்க்க முனைந்து நிற்கிறாள் அண்ணி. -
அண்ணியைத் தவிர இந்த வீட்டில் வேறுயார் தான்" முனைப்பு மிகக் கொண்டவர்களாயுள்ளனர். அண்ணா வுக்கோவெனில் கடைதான் உலகம். கடையையும் அண்ணியின் முகத்தையும் தவிர அவர் வேறெதையும். இப்போ ஏறிட்டுப் பார்ப்பது கிடையாது.

Page 42
80 () அரசி
முன்னரெல்லாம், அண்ணா இரவு நேரங்களில் வானத்தைப் பார்த்தபடி நெடுநேரம் நிற்பார். அக் காலங்களில் அவரது நேஞ்சம் கசந்த நினைவுகளை மட்டுமே கொண்டிருந்தது. இருண்ட இரவுகளில் நட்சத் திரங்கள் கொண்டாட்டமாக கண் சிமிட்டுவதைப் பார்த்தபடி நிற்பார். அங்கே, அம்மாவும். அப்பாவும் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்களாம், ஒரு நாளைக்கு வடக்கு மூலையில் அவை தெரிவதைக் காண்பார். பிறகொரு நாளில் அவை சற்று இடம் பெயர்ந்து போயிருக்கும். அவை பிரகாசமாக மின்னும். அருகருகாக இருந்து கொண்டு அண்ணாவைப் பார்க்கும். வெகு நேரம் வரைக்கும் அண்ணாவுக்கு அவை சேதிகள் சொல்லும். அவரது கண்களில் நீர் திரளும்.
நிலவு பொழிகின்ற நாட்களில் அண்ணா மிகவும் மனவெழுச்சி கொண்டு காணப்படுவார். கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி முற்றத்திலோ அல்லது வானம் நிர்வாணமாகத் தெரியக்கூடிய இடத்திலோ நின்று மெது நடை போடுவார். அவரது கண்கள் உணர்ச்சி வேகத்தில் பளபளக்கும். அண்ணாவினது உணர்ச்சிகளை அந்த நாட்களில் புரிந்து கொண்டவர் எவரும் இலர். அவருக்கு நெருங்கிய சினேகிதர்களும் கிடையாது. அந்தக் காலத் தில் எல்லாம் அண்ணா தனக்குள்ளாகவே சில விவகாரங் களைச் சீரணிப்பதும் மீள அசைபோடுவதுமாக இருந் தார். அப்போ, அண்ணா முகத்தில் சிரிப்புத் தெரிவது அபூர்வம். யோசனை! . சதா குருட்டு யோசனை களும், கண்களில் அடியாழத்திலிருந்து எட்டிப்பார்க்கும் துக்கக்குறியும் தான்.
அவருக்கு நிறையக் கற்பனைகள். துக்கம் வழிகின்ற கற்பனைகள். தாம் அரைவாசி வாழ்நாளில் இறந்து போய் விடுவோமென அவர் உறுதியாக நம்பினார். அதைச் விரும்பக்கூட செய்தார். வாழ்க்கை அந்தள

ரஞ்சகுமார் - 81
வுக்கு அவரை அடித்து வசக்கியிருந்தது. இழப்புக்களா லும், ஏமாற்றங்களினாலும், சக்திச்கு மீறிய செலவுகளா லும் சோர்ந்து போயிருந்தார். பாலனுக்கும், சுதாவுக் கும், சுமிக்கும் அவர் சோறு போட வேண்டியிருந்தது. படிக்க வைக்க வேண்டியிருந்தது. அவர்கள் எந்நேரமும் அவரிடம் ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தார்கள் அவர்களுக்குக் கொடுக்கத் தெரியவில்லை. முடியவு மில்லை. அவர்களுக்குப் பராயம் காணாது, சிறிசுகள் அப்படி அவர் எண்ணிக் கொண்டார்.
அண்ணியைப் போலொரு பெண்ணைத் தனக்குக் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கிட்டும் என அவர் எதிர் பார்க்கவேயில்லை. அது எப்படி நடந்தது என இன்றும் கூட அவர் ஆச்சரியப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். அண்ணி வந்தபிறகு அவரும் கூட ஆச்சரியப்படும் விதத் தில் மாறித்தான் போனார்.
உண்மையில் ஆரம்பத்தில் அவர் அண்ணியை வெறுத் தார். அவளைக் கண்டு பயந்தார். அவளது பிரகாச மான விழிகளைப் பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகள் கடும் கருமை நிறத்தனவல்ல, ஆயினும் அவளது வெண்விழிகள் வியப்பூட்டும் அளவுக்கு வெண்மையாக இருந்தன. கண்மணிகள் பெரிதாக இருந்தன. அவை எதிரேயிருப்பவரை ஊடுருவிப் பார்க் கும். அந்தப் பார்வை எவரையும் பணிய வைக்கும். ஆளுமை கொண்டது.
அந்த ஆளுமைதான். பிறகு அண்ணாவுக்கும்தொற்றி யிருக்க வேண்டும். இல்லாவிடில், இந்தப் பத்து வருடங்க ளில் இவ்வளவு காரியங்களை ஒப்பேற்றியிருக்க (LDւգ սյւOfr? அண்ணி கொடுத்த நகைகள்தான் இப்படிப் பல்கிப் பெருகி விட்டனவா; அல்லது அவளது துணிச்சலும், அர்ப்பணிப்பு மிகுந்த அன்பும்தானா என அண்ணாவுக்குச்

Page 43
82 ) அரசி
சொல்லத் தெரியவில்லை. அவரால் ஆச்சரியப்பட மட்டுமே முடிகிறது.
கல்யாணமான புதிதில் ஒரு நாளிரவு; தனது நகை களையும் தன்னையும் முழுமையாகக் கழற்றி அண்ணா விடம் அவள் கொடுத்தாள். அன்றிலிருந்து அண்ணா புது மனிதராகி விட்டார். அவரது துக்ககரமான சிந்தனைகள் குடியோடிப் போயின. அவர் வாழ விரும்பினார். உலக இன்பங்களை மிகுந்த வெறியுடன் காதலித்தார். அவரது மனதில் புதுத்தெம்பு பிறந்தது. கன்னங்கள் சற்றே மெழுகினாற் போல தசைப் பிடிப்புள்ளனவாகின. மேனி மினுங்கிற்று.
ஆனால், அண்ணி அதற்குப் பிறகு நகைகள் அணி வதைத் தவிர்த்து வந்தாள். இரண்டே வருடங்களில் அவள் கொடுத்ததை விட பத்துமடங்கு நகைகள் செய்யு மளவுக்கு அண்ணா “பெரியமனிதர்" ஆகிவிட்டார். செய்து கொடுக்கவும் செய்தார். ஆனால் அவள் அணிவ தில்லை. இப்போதெல்லாம், காதுகளில் வெகு சாதா ரணமான தோடுகளை மட்டும் அணிகிறாள். அது வொன்றே அவளது கீர்த்தி வீசும் முகத்துக்கு வெகு சோபையை அளிக்கிறது. அவள் நெற்றியில் பெரிய வட்ட மாக குங்குமம் துலங்கும். அது தான் அவளது உண்மை யான ஆபரணம். அது மிகுந்த கவர்ச்சியை அளிக்கிறது. சிவந்து விழிக்கிறது. அந்தத் திலகத்தினால் அவள் அண்ணாவைச் சுண்டிசுண்டித் தன்பால் இழுத்தாள்.
கடை ஆரம்பித்த புதிதில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளாது. ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி, வீட்டுக்கு ஒடிஓடி வருவார். அண்ணியோ வெனில், குறும்புக் குறுஞ்சிரிப்புடன் திரும்ப ஒடஒட விரட்டுவாள்.
**இவ்வளவு காலமும் ‘ங்ே.ங்ே' எண்டு மேகத்தைப் பார்த்து முழிச்சது போதாதா. ஒடுங்கோ, கடைக்கு ஒடுங்கோ...'

ரஞ்சகுமார் () 83
அண்ணா திரும்பிச் செல்வார். நடந்துதான் போவார். அதில் அவருக்கு பெரிய சுகம் தெரிந்தது. கடை கூப்பிடுதூரம்தான். பிறகு, கார் வாங்கிய பின்பும் வீட்டுக் கும் கடைக்குமிடையே நடைதான். கார் வீட்டின் முன் புறம் அலங்காரமாக நிற்கும். அண்ணியை விடவும் இந்த ஜடங்கள் வீட்டுக்கு அணிகலனா, என்ன? எதிரில் வரும் காரின் பின் சீற்றிலிருந்து முகம் நிறைந்த சிரிப்பும் கும்பிடு களும் எட்டிப்பார்க்கும். சைக்கிள்களோவெனில், "ஸ்லோ" பண்ணி வந்தனம் தெரிவித்தபடி போகும். அவையெல்லாம் தனக்கா, தனக்கா' என அண்ணா ஆச்சரியப்படுவார்.
*அவளுக்கு, அவளுக்கு!’ என முணுமுணுத்தபடி ஏறுநடை போடுவார். அவருக்கு இப்போ சாடையாகத் தொந்தி வைத்து விட்டது. அண்ணி அதில் அடிக்கடி செல்லமாகக் குத்துவாள்.
*செல்லவண்டி.கள்ளவண்டி.." என்பாள். ‘அவளால்., அவளால்!" என்றபடி கடைவாசல் படியை அழுந்த மிதித்து ஏறுவார்.
எதிர்ப்புறமிருந்து "ஜோன்சன் முதலாளி கண்களை மிகச்சிறப்பித்துக் காட்டும் கண்ணாடியினுாடாக ஒரப் பார்வை பார்த்த படி அண்ணாவை வம்புக்கிழுப்பார்.
p
‘என்ன முதலாளி.வீட்டை போய் வாறியளோ..?" எமகாதகன்; ஆள் சரியான ஜொலிப் பேர்வழி **ஊம். ஊம்' என அண்ணா முனகுவார்.
'தண்ணி விடாய் போலை. கெஹ்கெஹ்ஹே. விடாய்க்கும்! விடாய்க்கும்!! ஹி..ஹி..."
ஜோன்சன் முதலாளியின் பெரிய தொந்தி சிரிப்பால் தழும்பிக் குலுங்கும். அண்ணா மானசீகமாக ஜோன்சன் முதலாளியின் தொந்தியில் ஒரு குத்து விடுவார். பிறகு,

Page 44
84 () அரசி
எதிர்ப்படுகிற பையனை காரண காரியமற்று விரட்டு வார்.
அண்ணா தான் ஒடிஓடி அண்ணியைப் பார்க்கப் போவார். அவள் கடைக்கு வருவது அபூர்வம், விரல் விட்டெண்ணக் கூடிய தடவைகளே வந்திருக்கிறாள். அந்நேரங்களில் கடை நிறைந்து விடும். றாக்கைகள், ஷோகேஸ்கள் எல்லாம் கொள்ளாமல் வழிவன போல. இருக்கும். கடையில் கால்வைக்க இடம் பற்றாது என மொழியத் தோன்றும். ஒரு கோடி சூரியப் பிரகாசமுள்ள அரிய வஸ்து உள்ளே நுழைந்து விட்டதென, ஒரு வசீகரத் தோற்றம் கிடைக்கும், அண்ணி சில நொடி நேரம் தான் நிற்பாள். அவள் நெடுநேரம் நிற்க வேண்டும், கல்லா மேசையடியில் உட்கார வேண்டும், என்பதில் அண்ணா வுக்கு நிறைய ஆசை. ஆனால் அவள் உட்கார்ந்தது கிடையாது. உடனேயே போய் விடுவாள். எல்லாமே வெறிச்சோடி விட்டது போல ஆகிவிடும். கடைச்சிப்பந்தி கள் வாட்டமுற்றது போலக் காணப்படுவார்கள். ஆனால் அன்றிரவு கடை பூட்டும் போது காசு எண்ணி யெண்ணி மாளாது. சாம்பிராணியுடன் மிளகாயும், உப்பும் இட்டுப் புகைக்கும் போது மிளகாயின் கார நெடி
உறைப்பதேயில்லை. "படபட" வென பொரிந்து வெடிக்கும்.
'இலட்சுமி கடாட்சம். இலட்சுமிகடாட்சம்'
என்கிறார்களே; அது இதுதான் போலும்!
எல்லோருக்கும் அண்ணி எதைக் கொடுத்தாள் என்று சொல்வது கடினம். பாலன், சுமி, சுதா எல்லாரும். அண்ணியைச் சார்ந்தவர்களாகி விட்டனர். கெளசல் யாவைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. அண்ணி நொந்து பெற்ற பெண்ணில்லையா அவள்? அண்ணாவை அவர்கள் இப்போ தொந்தரவு படுத்துவது கிடையாது. அதிலும் இந்தச் சுதா-அண்ணி வந்த போது ஒரு

ரஞ்சகுமார் () 85
சின்னப்பெண்ணே போன்று அவளைத் தொட்டுப் பார்த்துக் கையை இழுத்துக் கொண்டவள்-அண்ணியுட னேயே ஒட்டிக்கொண்டாள். அவளைப் பிரிந்தால் அண்ணியின் உடலிலிருந்து உதிரம் பெருகும் என்பதென அண்ணிக்கும் அவள் மீது விசேஷப்பற்றுதல்.
அந்த சுதா இனிப் போய்விடுவாள். இன்னும் ஒரேயொரு நாள். அப்புறம் போய்விடுவாள். அண்ணியை விட்டுப் பிரிந்தே இராத சுதா பஸ் ஏறி. பிளேன் ஏறி, அவளுக்குரியவனிடம் போயே விடுவாள். *அவன்” அண்ணிக்கு தூரத்து உறவுமுறையில் தம்பியாக வேண்டும். அவர்களுக்குள் முடிச்சுப் போட்டு வைத்த வளும் அண்ணி தான்.
முதலில் சுதா பிணங்கினாள், பயந்தாள்.
'அந்த ஆள் வில்லன் மாதிரி இருக்கிறான்.” என்றாள்.
அண்ணி தேறுதல் சொன்னாள்.
'உங்கடை அண்ணா. அப்ப, பெரிய முனிவர் மாதிரி இருந்தாரே!. இப்ப எப்பிடி? எனக்கு என்ன குறைவைச்சார். அதெல்லாம் சரிவரும்."
அப்படிச் சொல்கிற போது அண்ணியின் குரலில் ஒரு குறை இ- றிற்று.
"எண்டாலும் . இந்த ஆம்பிளையளை நம்பேலாதடி. சுதா’ என்றாள் நைந்து போன குரலில்.
அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே “ஏதோ" உண்டு!
'இப்ப உப்பிடித்தான் சொல்லுவாய். பிறகுப்பிறகு அண்ணியை பார்க்க நீ ஒடியா வரப்போறாய். எனக்குத்
GLDT-6

Page 45
86 () அரசி
தெரியாதா பெட்டையளைப் பற்றி.’’ என்று நையாண்டியாகக் குத்தவும் செய்தாள்.
சுமியையும் இப்படித்தான் தனியே பிரித்தனுப் பினாள். சுமியின் “விஷயம் அண்ணா காதில் விழுந்த தும், அவர் வானத்துக்கும் பூமிக்குமாகப் பாய்ந்தார்.
* யாரவன்?' என்று குதித்தார். ‘எங்கடை அந்தஸ் தென்ன. குலமென்ன, கோத்திரமென்ன' என்று சொல்ல முனைந்தார். அண்ணி வேறு யாருக்கும
கேட்காத வகையில் அண்ணாவை ஏதோ சொல்லிக் கடிந்தாள். அண்ணா தலையைக் குனிந்து கொண்டு கூனிக் குறுகி அப்பால் போனார். அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே ஏதோ 'புகைச்சல்' உள்ளதை மற்றவர்கள் கவனித்தது அப்போதுதான்.
சுமி மெளனமாய்ப் போனாள். ஆனால் அண்ணி அறிவாள், சுமிக்கு அண்ணாமீதும் அண்ணிமீதும் தாளாத பிரியம் உண்டென்பதை. சுமியின் சுபாவமே தனி. இல்லாவிடில் பூனை மாதிரி மெளனமாக இருந்துவிட்டு, ‘‘தைரியமாகக் காதல் பண்ணினேன், கல்யாணம் பண்ணுவேன்' என அடம் பிடித்திருப் பாளா? எல்லோருடைய சுபாவமும் அண்ணிக்குத் தெரியும்.
பாலனைப் பற்றியும் அறிவாள். அவனுக்கும் 'ஒரு இடம் பார்க்கச் சொல்லி எப்போதிருந்தோ அண்ணாவை நச்சரித்து வருகிறாள். பாலன் இப்போ அவர்களுடன் இல்லை. அவனுக்குச் சிறகு முளைத்துவிட்டது. அவனும் பறக்க வேண்டும் என அண்ணி மிக விரும்பினாள்.
கெளசிக்குட்டியைப் பற்றி அண்ணியின் கற்பனை களும், திட்டங்களும் எண்ணியோ எழுதியோ அடங்காதவை. இப்போதிருந்தே கெளசிக்காக நிறைய சம்பத்துகள் சேர்க்கத் தொடங்கி விட்டாள்.

ரஞ்சகுமார் () 87
எல்லாவற்றையும் முனைப்புடன் நின்று கவனித்து வருகிறாள். அண்ணாவுடனேயே அவள் எப்போதும் இருப்பாள். கிணறு பழுது பார்க்கச் சொல்லி அவரிடம் சொல்லிச் சொல்லி அலுத்து, கடைசியில் தானே முன்னின்று முடித்து விட்டாள். தொப்பிக் கட்டும், உட்சுவரும் ஆங்காங்கே புதிய பூச்சுக்களைக் காட்டி இளித்தன. இறைத்து விட்ட நீர் வளவெங்கும் ஒடித்தேங்கியதில் காற்று ஈரத்தையும் இலேசான சேற்று வாசனையையும் சுமந்து திரிகின்றது. தேங்கிய நீரில் நட்சத்திரங்களும், குறைநிலவும், வீட்டின் பிரகாசமான வெளிவிளக்குகளும் பிரதிடலித்துத் தெரிந்தன. அவற் றைப் பார்த்தபடியே அண்ணி சற்றே தூங்கிவிழுந்தாள். நேற்றிரவு தூக்கமில்லை. இன்றும் எப்படியோ?
சுதா நாளைக்குப் போகப்போகிறாள். தலைக்கு மேலே இன்னும் வேலைகள் காத்துக்கிடக்கின்றன. கூடவே பிரிவும் அண்ணியின் இதயத்தை தொட்டழுத் தியது.
2
விடிகாலையில் சுதா பயணமாகிறாள்.
சுமி வந்திருந்தாள். வேறும் பலர் வந்திருந்தார்கள். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் அண்ணாவைக் கண்டும் காணாமலே போனவர்கள் தான். இப்போதோவெனில், தமது சமூகத்தை அண்ணா காணாமல் விட்டுவிடுவாரோ என அச்சப்படுபவர்களாகக் காணப்பட்டனர். பெண்கள் அண்ணா பார்வையில் படும்படி நடமாடினர். ஒருத்தியோ வெனில் கெளசிக்குட்டிக்கு முத்தம் கூடக் கொடுத்தாள். வல்லவன் வீட்டுப் பெண்ணல்லவா? ஆண்களெல்லாரும் அண்ணியைச் சூழ உட்கார்ந்து அரசியலும், விலைவாசி யும் பேசினார்கள்.

Page 46
88 ) அரசி
அண்ணாவுக்கு நிறைய வேலைகள். அங்குமிங்குமாக ஒடியாடிக் கொண்டிருந்தான். கெளசிக்குட்டி அம்மாவின் சேலைத்தலைப்பை பிடித்துக்கொண்டு பின்னாலேயே இழுபட்டது. அம்மா, பெரிய பெரிய பெட்டிகளில் வித விதமான பளபளக்கும் சாரிகளும், திண்பண்டங்களும் திணியத் திணிய அடுக்குவதைப் பார்த்தது. சுதா அன்ரி யை இழுத்து வைத்துக்கொண்டு அம்மா கொஞ்சலும் சிரிப்புமாக ஏதேதோ சொல்வதை கண்டது. ஆனால் சுதா அன்ரி அழுதாள். அம்மாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுதாள். அப் மாவும் கூடத்தான் கொஞ்க மாக அழுதாள். அம்மா முகத்தில் இட்ட பொட்டு கரைந்து வழிந்தது, ஏற்கனவே சிவந்த அம்மாவின் முகம் மேலும் சிவந்து போயிற்று. அதைத் துடைக்க நேர மில்லாமல் அம்மா குசினிக்கும் அறைகளுக்கும், ஹோலுக் குமாக ஒடித்திரிகிறாள்.
எல்லா விளக்குகளையும் ஏற்றியிருந்ததில் வீடெல் லாம் ஒரே பிரகாசமாக ஜொலித்தது. அதே ஜொலிப்பில், கெளசிகுட்டிக்கு கண்ணைச் சுற்றியது. சீக்கிரம் துரங்கிப் போனது. கெளசிக்குட்டிக்கு மீள விழிப்பு வந்தபோதும், வீடெல்லாம் வெளிச்சம். வாசலில் கார் தயாராக, நின்றது. அப்பா பின்னுக்கு கைகளைக் கட்டியபடி வானத்தை அண்ணாந்து கொண்டிருந்தார். அம்மா நல்லபுடவை கட்டியிருந்தாள். பெரிதாகப் பொட்டு இட்டுக்கொண்டிருந்தாள். சுதா அன்ரி ‘ரிப்ரொப்பாக, ஆயத்தமாக நிற்கிறாள். அவளி மிருந்து நல்ல வாசனை வீசியது. அவள் எதையோ எண்ணி ரகசியமாக, சுகிப்பதைப்போல கன்னங்களுக்குள் கள்ளச்சிரிப்பொன்று
ஒடியது.
ஆனால் சுதா அன்ரி புறப்படும் போது மிகவும். அழுதாள். வாய்விட்டே அழுதாள். அம்மாவும் அழுதாள். உம்முணா மூஞ்சியான சுமிஅன்ரியும், அழுதாள். அப்பா வேறெங்கோ பார்த்தவராய்.

ரஞ்சகுமார் () 89
**சரிதான். வாங்கோடி. வாங்கோடி" என இலேசாக அதட்டினார்.
காருக்குள் ஒரே பிசுபிசுவென இருந்தது. சாலைகளில் இன்னும் இருள் விலகவில்லை. சுதா அன்ரி மேலும் கரைந்து கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் அவளுக்கு மாறிமாறி ஏதாவது சொல்லிக் கொண்டே யிருந்தார்கள். அவை எல்லாம் பெரியவர்களின் விஷயங் கள். அவற்றில் கெளசிக்குட்டி தலைபோடாது. அம்மா அப்படிச் சொல்லித் தந்திருக்கிறாள்.
கடைசியாக பஸ் புறப்பட்ட போது சுதா அன்ரியும், அம்மாவும் வெட்கம் கெட்டவர்களாய் சத்தமிட்டு அழுதார்கள். அப்பாகூட அழுதார். சுதா அன்ரி பாதியு டம்பை வெளியே நீட்டியபடி கைகளை ஆட்டியபடியே போனாள்.
திரும்ப வரும் போது சுமி அன்ரியை வீட்டில் இறக்கி விட்டு வந்தார்கள்.
மெல்ல மெல்ல மிகவும் சோம்பலாக அன்றைய காலை விடிந்தது.
வீடெல்லாம் ‘ஓ’ என்ற ஒரு மெளனம். வெறுமை.
கடையில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. சுதாவைப் பற்றிய ஞாபகங்கள் மீண்டும் மீண்டும் மேலெழுந்தன. சுதா அவருக்கு கடைசித் தங்கை, அவளுடனான பிரியமான சில நினைவுகள் அவருக்கு உண்டு. பழைய நாட்களில் சுதாவைப் பற்றிய கவலை களும் நிறைய இருந்தன. அவளது அழகுக்கும், சுட்டித்தனத்துக்கும், கெட்டித்தனத்துக்கும் ஏற்ற ஒருவனைத் தேடிப்பிடித்து தம்மால் கட்டிவைக்க முடியுமா என மலைத்திருந்தார். அண்ணி அதைத் தான் எவ்வளவு சுலபமாக நிறைவேற்றியிருக்கிறாள்!

Page 47
90 () அரசி
அவருக்கு அண்ணியைப் பார்க்கவேண்டும், அவளு டன் சிறிது நேரத்தைக் கழிக்கவேண்டும் போல இருந்தது.
'அட. தம்பியவ.நான் வீட்டுப்பக்கம் ஒருக்காகப் போயிட்டுவறன். பாத்துக்கொள்ளுங்கோ. நான் வரச் சுணங்கினா சாவியைக் கொண்டந்து தந்திட்டுப் போங்கோ...'
அண்ணா நடக்க ஆரம்பித்தார். எதிர்ப்புறமிருந்து ஜோன்சன் முதலாளி அடுக்கிக்கிடந்த மூடைகளினுர்டாக எட்டிப்பார்த்தார். அவரது தலைக்கு நேரே பின்புறம் சுவரில் 'சிவமயம், இலாபம்' என ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருப்பது தெரிந்தது.
**வீட்டுக்கா?." 'ஓம்." என அண்ணா மெல்ல முனகினார். 'தங்கச்சி போவிட்டாவோ?"
தலையை ஆட்டினார். ‘எல்லாம் காலா காலத்திலை நடக்கவேண்டியது
தானே. சந்தோசம்.'
9
'தம்பி. உம்மடை வீட்டிலை லச்சுமி குடியிருக்கு. அது வந்த பிறகு தான் நீர் மனிசனா வந்தீர்."
அண்ணா அசட்டுச் சிரிப்புடன் நின்றார். ‘அப்ப நான் நிற்கிறன்." ‘சரி" என்றவாறு அண்ணா மேலே நடந்தார்.
அண்ணி வழக்கத்துக்கு மாறாக எதையோ பறிகொடுத்தவள் போலச் சோகித்துக் காணப்பட்டாள். அண்ணா மெதுவாக அவளருகில் போய் அமர்ந்தார். அண்ணி அவருக்கு வழக்கம் போல பணிவிடை செய்ய

ரஞ்சகுமார் () 9
முந்தவில்லை. தன் பாட்டில் எங்கோ 566). தலையை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.
‘என்னப்பா. அவ்வளவு யோசினை."
'ப்ச். ஒண்டுமில்லை." என்றாள் அசிரத்தையாக.
3. 3
‘சுதாவை நினைச்சியா?.
'ஏன் அவளை நினைக்க வேணும். போக வேண்டி யவள் தானே. போவிட்டாள்.'
* அப்ப. என்ன யோசினை" "கட்டாயம் உங்களுக்குச் சொல்ல வேணுமா?" 'எனக்கு, என்னவோ என்னட்டையிருந்து கழண்டு
போனது மாதிரியிருக்கு..' என்று தயக்கத்துடன் இழுத் தார் .
‘கழட்டி எவளட்டைக் குடுத்தனிங்கள்?" அண்ணாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அண்ணி ஒரு போதும் சுரீர் எனத் தைக்கும்படி இவ்வாறு கதைத்த
வளல்ல.
'சுமி போனாள். சுதா போகிறாள். பாலனும் ஒருதிக்குப் பின்னாலை போவான். கெளசியும் போகும்.”
போகட்டும்!'
'பிறகு எனக்கு ஆரடி இருக்கிறது. ' "ஏன் நீங்களும் உங்கடை அவளட்டை போங்
கோவன்!'
என்ன?!'
* உங்கடை "அவளட்டை'

Page 48
92 C. அரசி
அண்ணா அதிர்ந்தார். இதைப்யற்றி அண்ணிக்கு இலேசாகத் தெரியும் என அண்ணா அறிவார். ஆனாலும் இத்தனை காலத்துக்குக்குப் பிறகு இதை வெளிப்படை யாக கேட்பாள் என அவர் எண்ணியதில்லை. அண்ணி யும் கூட அதை விரும்பவில்லை. அப்படிக் கேட்பதனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவள் தயங்கினாள் போலும், ஆனால் இன்று அண்ணியின் மனம் மிகப் பேதலித்திருந்தது. பெண்களின் மனங்களே இப்படித் தானோ என்னவோ, கோடை காலத்து மழை மாதிரி!
'ஏன் அவளை ஏமாத்தின்னிங்கள்?"
*அதுக்குப் புறகும் தொடர்பிருக்கா?"
“இப்பவும் காணிறனீங்களா?"
*செலவுக்கு ஏதாவது குடுக்கிறனிங்களா?" அண்ணா விக்கித்துப் போயிருந்தார். 'ஏன் ஏமாத்தின்னிங்கள் .என்ரை காசுக்காகவா?’ அண்ணா பற்களை நெறுமினார். கதிரையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார்.
'சொல்லுங்கோ. என்னுடைய காசுக்காகத் தானே என்னைக் கட்டின்னிங்கள். அவளிலை தானே உங்க ளுக்கு ஆசை. ஆம்பிளையளை நம்பக்கூடாது.
‘அப்பிடி. எத்தனை ஆம்பிளையளோடை உனக்குப பளக்கம்' என அண்ணா திரும்பச் சாடினார்.
‘என்னையும் உங்களைப் போல நினைச்சியளோ?" எனச் சீறினாள். அந்தக் குரலில் தொனித்த உக்கிரம் அண்ணாவை அவளை ஏறிட்டுப் பார்க்க வைத்தது.

ரஞ்சகுமார் () 93
அண்ணியின் அழகிய விழிகள் பெரு வெறுப்பை உமிழ்ந்தன. முகத்தில் ஒரு அருவருத்தபாவம் தொக்கி நின்றது.
‘போங்கோ. உங்கடை அவளட்டைப் போங்கோ. உங்களுக்கு அவளிருக்கிறாள்.'
அண்ணாவின் கோபம், இயலாமை, அவமானம் எல்லாம் ஒன்றாய் திரண்டன. கைகள் முறுக்கேறின. கைகளை மடக்கி அண்ணியின் தாடையில் ஒரு அடி கொடுத்தார். அது தான் அண்ணி அண்ணாவின் கோபத்தை ஸ்பரிசிக்கும் முதல் தடவை.
அண்ணியின் பெரிய ஆளும் திறன் படைத்த விழிகள் கலங்கின. நீண்ட இமை மயிர்கள் சடுதியாக நனைந்து ஒரு பெரிய கண்ணிர்த்துளி பளபளவென மின்னியது. *சொட்டெனச் சிந்தித் தெறித்தது. அதன் பெறுமதி அளவிடற்கரியது. அதில் ஒரு பெண்ணின் தன்மானமும், காதலும் பொதிந்திருக்கிறது.
அண்ணா வெறுப்புடன் எழுந்து அப்பால் போனார். கட்டிலில் சாய்ந்து கைகளைத் தூக்கி முகத்தில் போட்டு மூடிக் கொண்டார். அண்ணி அப்படியே உறைந்தாள். அவள் தொடர்ந்து அழமாட்டாள். ஆளுமையும் மனவு றுதியும் மிக்கவர்கள் அப்படித்தான்!
பிறகு,
கெளசி பள்ளிக் கூடத்தால் ஒட்டமாக ஓடிவந்தது, அம்மா அதற்கு சாப்பாடு கொடுக்கவில்லை. உடம்பைக் கழுவி தலை சீவிச்சிங்காரித்து கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுக்கவில்லை. கெளசி அப்பாவிடம் ஒடிற்று. பிறகு அம்மாவிடம் ஒடி அவளது கன்னத்தைத் தாங்கித் தன்புறம் திரும்ப முனைந்து தோற்றது. அம்மா உயிரற்றவள் போல இருந்தாள். கெளசி புரியாமையுடனும் பசியுட னும் அங்குமிங்கும் அலைந்து திரிந்தது.

Page 49
94 () அரசி
அப்புறம், வெகுவேகமாக மாலை மங்கி இருள் சூழ்ந்தது. அம்மாவும் அப்படியே. அப்பாவும் அப்" படியே! கெளசி கதிரைகளில் ஏறி நின்று விளக்குகளைப் போட்டது. அம்மா ஒரு பெரு மூச்சுடன் எழுந்து உள்ளே போனாள். அப்பாவும் கைகளை முகத்திலிருந்து எடுத்துவிட்டு சிடுசிடு மூஞ்சியுடன் போய் கிணற்றுக் கட்டில் உட்கார்ந்து கொண்டு வானத்தை நோக்கி நிமிர்ந்தார்.
பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழுந்து சிதறும் சலங் கைச்சத்தம் "சளசள' எனக் கேட்கவாரம்பித்தது. சோப் பின் நல்ல வாசனை வீடெங்கும் வீசிற்று. அந்த வாசனை யுடன், கெளசி அகப்பட்ட இடத்தில் விழுந்து தூங்கிப் போயிற்று.
அண்ணி நிறைய நீராடினாள. ஈரம் சொட்டும் கூந்தலை நெடுநேரம் வரை உலவியபடி உலர்த்தினாள். பிறகு திலகமிட்டுக் கொண்டாள். அதுதான் அவளது உண்மையான ஆபரணம். அண்ணாவை சுண்டி இழுக்க வல்லது. பிறகு அலுமாரியைத் திறந்து அண்ணாவுக்குப் பிடித்த அரக்குப்பச்சை வர்ணச்சேலையை எடுத்தாள். அதிலிருந்து வீசும் சுகமான வாசனையை நுகர்ந்தபடி அதை உடுத்த ஆரம்பித்தாள்.
அண்ணாவோ வெனில், கிணற்றுக் கட்டில் உட்கார்ந் தபடியே வானத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் அவரது பிரியமான நட்சத்திரங்களைத் தேடினார். அவற்றைக் காணவில்லை. நிலவு வரவும் இன்னும் சற்று நேர மிருந்தது. ஒளியற்ற நட்சத்திரங்கள் வானில் அங் கொன்றும் இங்கொன்றுமாய் மெல்ல மின்னி பலகீனமாக முனகின. மோனமான மெல்லிய இருள் எங்கும் வியாபித் திருந்தது. நடமாடித்திரிய மனமற்றுப் போன காற்று முடவனைப்போல தவழ்ந்தது. மெல்ல மெல்ல ஒரு பெண்ணின் இனிய போதையூட்டும் வாசனையை அது.

ரஞ்சகுமார் 95,
பெற்றுக்கொண்டு அண்ணாவை நோக்கிச் சென்றது. அண்ணாவின் நாசியில் அதை தேய்த்தது. அண்ணாவின் கழுத்தைச் சுற்றி இரு மென்கரங்கள் மாலையென விழுந் தன. அவை ஈரலிப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருந்தன. அதே சமயம் மெல்ல நடுங்கின. அண்ணாவை மெல்ல தம்முள் வளைக்க முயன்றன.
பிறகு. 'உங்களுக்கு. நானிருக்கிறேன்.' என மிகத் தவிப் புடனும், அடக்க முடியாமல் பீரிட்டெழும் அன்புடனும் ஒரு மிருதுவான பெண்குரல் அபயமளித்ததைக் கேட்ட வுடன், காற்று அவ்விடத்தை விட்டு நாகரீகமாக நழுவிற்று.
அண்ணா திருப்பிப் பார்த்தார். அந்த இருளிலும் ஜொலிக்கும் இரு விழிகளைக் கண்டார். அவை அண் ணாவை மன்னித்த சேதியை இதமாகத் தெரிவித்தன. அவள் மீண்டும் தன்புறம் அவரை இழுத்தாள். அப்புறம்: அன்றிரவும் அண்ணியால் தூங்க முடியவில்லை அண்ணாவுக்கும் துக்கம் வரவில்லை.

Page 50
கோளறு பதிகம்
பயிர்வையாளர்களை அனுமதிக்கும் நே ர ம் முடிவடைந்து விட்டது. அனேகமாக எல்லோரும் வெளியேறி விட்டார்கள். மாலை மங்க ஆரம்பிக்கும் போதுதான் நான் உள்ளே நுழைந்தேன். ஆஸ்பத்திரி களுக்கே உரிய அந்த நெடி கனமாக வீசிற்று. கூடவே ஈக்களும் திரிந்தன. நான் OPDக்குள் நுழையும் தருவாயில் எனக்குப் பின்னே ஒரு கனமான வாகனம் உறுமியபடி வந்து நின்றது. தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலே, ஒரு எலுமிச்சம் பழத்தைப் புதைத்து வைக்கலாம் எனத்தோன்றும்படி ஒரு பள்ளம் பறித்திருந்தது. அதன் ஒரத்திலிருந்து கிழிபட்டுப் போன தோலோ, தசையோ ஒரு ஜாண் நீளமுள்ள ஒரு சிவந்த பேப்பர்நாடா போன்று காற்றில் துடித்தது. மிகுதிக் கரம் முழுக்க காய்ந்த இரத்த ஓடைகள் கறுத்துப் போயிருந்தன. பள்ளத்திலிருந்து உறைந்த களி போன்ற இரத்தம் சொட்டுச் சொட்டாக பாகுத் தன்மையுடன் ஒழுகித் தரையில் விழுந்தது. தரை அதை அவசர அவசரமாக விழுங்கிற்று.
ஒரு ஸ்ரெட்சரில் பிரேதம் கிடத்தப் பட்டிருந்தது* மறுகரம் சேதமெதுவுமின்றிச் சுத்தமாக இருந்தது. ஆனால் வலிப்பினால் மிகவும் முறுக்கேறி ஸ்ரெட் சரின் ஒரத்தைப் பற்ற விளைந்தது போல் பாவனை காட்டிற்று.

ரஞ்சகுமார் () 97
விறைப்பேறிய நிலையிலும் அந்தக்கரம் வாளிப்பாகவும் மென்மையாகவும் இருந்தது.
ஒரு பெண்ணின் பிரேதம்தான்.
சனங்கள் சிலர் கூடினார்கள், கூடவே ஈக்களும். ஒரு ஒடலிப் பையன் இன்னொரு ஸ்ரெட்சரை ஒசையெழத் தள்ளியபடி அவசரமாக வந்தான், தோசையைத் திருப்பிப் போடுவது போல அசிரத்தையுடனும், இலாவத்துடனும் பிரேதத்தை தனது ஸ்ரெட்சருக்கு புரட்டிப் போட்டுக் கொண்டு OPD ஐ நோக்கி ஓடினான். அவனுக்கு வீட்டுக்குப் போகும் அவசரம் போலும்.
அவ்வளவாக உயரமில்லை. சாதாரணமாக பெண்கள் வீட்டில் அணியும் உடைகள் அணிந்திருந்தாள். முழங் கால்களுக்கு கீழே உள்ள வாளிப்பான தசைப்பிடிப்பான கால்கள் விறைத்துப் போய் திகம்பரமாகத் தெரிந்தன. முகம் முழுக்க இரத்தவிளாறாக அடிக்கப்பட்டிருந்தது. இடது புருவத்துடன் கூடவே ஒரு குண்டு பாய்ந்திருந்தது. அவ்விடத்தில் ஒரு புடைப்பு. அதிலிருந்தும் இரத்தக் கூழ் ஒழுகிற்று. மற்றைய குண்டு இடது மார்பில் பாய்ந்திருக்க வேண்டும், சட்டையின் மேல்புறம் இரத்தத்தில் தோய்ந் திருந்தது. ஈக்கள் மிக ஆவலுடன் மொய்த்தன; கூடவே சனங்களும்.
சேதமாகிப் போன மேல் சட்டையினுாடு வெளுப் பான திரட்சியான மார்புத்தசைகள் தெரிந்தன. ஒரு ஆணின் ஸ்பரிசத்தையோ, ஒரு குழந்தையின் இதழ் களையோ அனுபவத்தறிந்திராத மார்பகங்கள்.
ஆகக் கூடினால், இருபது வயதிருக்கலாம்.
OPD யிலிருந்து ஒரு டாக்டரம்மா ஸ்டெதஸ்கோப்பை யும், வார்த்தைகளையும் சுழற்றி வீசிய வண்ணம் வந்தாள். அவளுக்கு நிறைந்த களையான முகம். கூடவே ஒரு தாதி, முகம் முழுக்க பருக்களும் பீதியும்.

Page 51
98 [) கோளறுபதிகம்
பிறகு சனங்களும் ஈக்களும். சனங்களுக்கென்ன, எல்லாமே புதினம் தான்! ஈக்களுக்கு ருசிமிகுந்த சாப்பாடு!! -
ஆளரவம் அடங்கிக் கொண்டிருக்கும் ஒடுங்கிய நீண்ட ஆளோடிகளினூடாக நடக்க ஆரம்பித்தேன். எனக்கு முன்னே நடுத்தர வயதைக் கடந்த மெலிந்த உயரமான ஒரு பெண்ணும், அவளைத் தாங்கியபடி வேறும் இரு பெண்களும் போய்க் கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்கு தொடைகளில் ஏதாவது கட்டி புறப்பட்டிருக்க வேண்டும். வேதனையால் கூனிய முதுகுடன், கால்களைப் பதனமாக எடுத்து வைத்து தள்ளாடித் தள்ளாடி மெல்ல அவள் நடந்து கொண்டி ருந்தாள். அவர்களைக் கடக்கும் போது ஒரப் பார் வையால் பார்த்தேன்.
அந்தப் பெண்ணின் முகத்திலுள்ள தசைகள் யாவும் ஒருவாறு கோணிப்போய் துடித்தன. வாயும் கண்களும் அகல விரிந்திருந்தன. கண்களில் அதிர்ச்சியும் ஏக்கமும் தேங்கிப் போய்க்கிடக்க வாய் சில வார்த்தைகளை வெளிப்படுத்த முயல்வதாய் மெல்ல அசைய உன்னியது.
அவளுக்கு நோயல்ல, துக்கம்! தாங்க முடியாத துக்கம். அழுது குழறுவதால் மட்டும் அப்படியான துக்கங்களை முழுமை வெளிக்கொணர முடியாது. அனேகமாக அவளது கணவனோ, குழந்தையோ எங்காவது குண்டு வெடிப்பிலோ, துப்பாக்கிச் சூட்டிலோ மிக மோசமாகக் காயப்பட்டிருக்க வேண்டும். இறந்து கூடப் போயிருக்கலாம்.
நான் ஒரு பத்தடி தூரம் கடந்திருப்போன். பின்னா லிருந்து "ஐயோ ஐயோ ஐயோ" என ஈனஸ்வரத்தில் மூச் செடுக்க முடியாத அவதியுடனும் அவசரத்துடனும் ஒரு குரல் பிறந்தது. வர வர அதன் ஸ்தாயி கூடி உரத்த வீரிடல்களாகத் தெறித்தது. ஒடுக்கமான ஆளோடியின்

ரஞ்சகுமார் D 99
இருபுறமும் உயர்ந்திருந்த சுவர்களுக்குள்ளும், கூரையின் கீழும் திரிகின்ற அசுத்தமான காற்று அந்த அவலக் கூக் குரலினால் மேலும் அசுத்தமாக்கப்பட்டு என் நெஞ்சினுள் புகுந்து கொண்டது.
இன்னும் ஒரு நொடிகூட அந்தக் காற்றை என்னால் சுவாசிக்க முடியாது. என்னால் எதையும் காணமுடியாது. அவசர அவசரமாகத் திரும்ப நடந்தேன்.
வெளியே, சைக்கிள் பார்க்கின் முன்புறம். தேவனைச் சந்தித்தேன். வெகுகாலத்துக்குப் பிறகு அவனைக் கண்ட தில் சிறிய மகிழ்ச்சியும், பெருவியப்பும் ஒருங்கே எய்
தினேன், கூடவே கொஞ்சம் பயமும்.
தேவனை நான் கடைசியாகக் கண்டபோது ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருப்பதாகச் சொன்னான்.
'அரசியல்லை தோத்தவனும், புறமொதுக்கப் பட்ட வனும் இலக்கியத்திலோ அல்லது வேறேதாவது கலைத் துறையிலோ ஈடுபடவேண்டியது அவசியம். மச்சான்' என்றான்.
பிறகு, 'அதுக்கிடையிலை நான் செத்தாலும்செத்துப் போவன் போல கிடக்கு' 'என்றபடி ஹோ.ஹோ' என போலிக்குரலில் சிரித்தான்.
கூடவே, ‘மாட்டன்.’’ என சங்கல்பமும் செய்தான்.
அதன் பின் இன்றுதான் அவனைக் காண்கிறேன். முன்னரை விட கொஞ்சம் பருத்தும், உற்சாகமாகவும் இருந்தான். வழக்கம் போல இதழ்கள் சிவக்க, வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பித் துப்பிக்கொண்டிருந் தான்.
தேவனை நான் முதன் முதலாகக் கண்டபோது அவனது 'அய்யா'வின் கைகளைப் பற்றிய வண்ணம்

Page 52
100 D கோளறுபதிகம்
சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது" சிலேற்பமிகவும் பழையதாகவும் அழுக்கேறிக் கீறல் விழுந்த, தாகவும் இருந்தது. புத்தகம்கூட மேலுறையை உரிந்து
விட்டும் பக்கங்கள் எல்லாம் ஒரம் மடிந்தும் காணப் பட்டது. எனது சிலேற்றும் புத்தகமும் புத்தம் புதியன
வாய் மிளிர்ந்தன. புத்தகத்திலிருந்து புதிய காகிதத்தின் இனிய மணமும், சிலேற்றிலிருந்து காய்ந்த மண்ணின்
வாடையும் வீசின.
தேவன் பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்காக வருவது கிடையாது. வரும் நாட்களிலும் அனேகமாக வாங்கின் மீது ஏறிநிற்பது கட்டாயமாக்கப்பட்டது. எல்லாப் பாட வேலைகளிலும் அனேகமாக அடி வாங்கினான். கணிக்குப் பாட வேளைகளில் அகோர அடி விழுந்தது. ஆனால் அவன் அழுவது கிடையாது. கல்லுளி மங்கன் போல முழித்துக் கொண்டே நிற்பான். அவன் மிகவும் சகிப்புத். தன்மை வாய்ந்தவன். எனினும், எட்டாம் வகுப்புக்குப் பிறகு அவன் பாடசாலைக்கு வரவில்லை.
அதன் பின், அவனது 'அய்யா'வுக்குப் பின்னால், அவனும் ஒரு பழைய, பெரிய ‘கரியர்' பூட்டிய சைக்கிளில் ஒலைப்பறியுடன் வலைகளைப் பொதிந்து ஏற்றியபடி, முன்னால் சற்றே வளைந்தவனாய் சைக்கிளை உழக்கிக். கொண்டு வீச்சு'க்கும் போகக் காண்பேன். அந்நாட்களில் தான் அவன் வெற்றிலை போடப் பழகியிருக்க வேண்டும்.
தேவனது வீட்டுக்கு ஒரே ஒரு தரம் போயிருக்கிறேன். அது எங்களது வீட்டிலிருந்து முக்கால் மைல் தூரம் தள்ளியிருந்தது. ஒரே ஒலைக் கூரையின் கீழான ஒரு சிறு அறையும், சற்றே அகன்ற காற்றோட்டமான மாலும் தான் வீடு. அறையின் சுவர்கள் தென்னங் கீற்றுகளால் நெருக்கமாக அடைக்கப்பட்ட தட்டிகளினால் ஆனவை. மாலுக்குள் கிடந்த தீராந்திகளிலும் வேலிகளிலும் வலை கள் கிடந்து மீன் நாற்றத்தை ஈன்றன. பக்கத்திலே

ரஞ்சகுமார் () 101
இன்னுமொரு சிறு கொட்டில். அது அடுக்களை. அதற் குள் நுழைவதெனில், ஆள்பாதியாக மடியவேண்டும். எந்நேரமும் அதற்குள் புகை மண்டிச் சுழலும்,
எனக்கொரு பழையவலை அவசரமாகத் தேவைப்
பட்டது. எங்களது தோட்டத்தில் நிறைய தக்காளிகள் இருந்தன. கிளிகளின் தொல்லை பொறுக்க முடியாமல் இருந்தது. வலை போட்டால் கிளி விழாது என அப்பு ஆலோசனை சொன்னார். ஆனாலும் ஒரே ஒரு கிளியா வது வலையில் விழவேண்டும் என நான் உள்ளூர ஆசை வைத்திருந்தேன். தேவனிடம் வாங்கப் போகும் வலையில் சிறு துண்டொன்றை வெட்டியெடுத்து ’கிளிகூண்டு’ ஒன்றை செய்யும் உத்தேசமும் எனக்கு இருந்தது. அந்த வலையை கிளிகள் அறுக்க மாட்டா, என அந்த இரண்டுங்கெட்டான் வயதிலும் பேதமையுடன் நான் நம்பினேன்.
மாலின் ஒரு மூலையில் ஒரு பழைய 'சன்லைட்” பெட்டியும் அதற்குள் நிறையப் புத்தகங்களும் கிடந்தன. அவை எல்லாம் தேவனின் புத்தகங்கள்! பள்ளிக்கூடத்தில் மாடுபோல் அடிவாங்கிய தேவனால் இவ்வளவு புத்தகங் களைப் படிக்க முடிகிறதா?
பிற்காலங்களில் அவனை அடிக்கடி இலக்கியக் கூட்டங்களில் காண நேர்ந்தது. நான் எண்ணியது போல தேவன் மக்கு அல்ல, அவனது புலன்களும் புத்தியும் வேறு திசைகளை நோக்கித் திரும்பப் பட்டிருந்தன.
இன்னும் கொஞ்சகாலம் போனதும், அவனது சைக் கிளின் பெரிய 'கரியர் கழற்றி வைக்கப்பட்டது. அவனது 'அய்யா'வுக்கும் அவனுக்கும் ஒத்து வரவில்லை. தேவனின் சைக்கிள் விரைந்து செல்லத் தக்கவாறு உரு மாற்றப்பட்டது. அத்துடன், ஹாண்டிலில் ஒரு பெரிய
Glpt-7

Page 53
102 () கோளறுபதிகம் துணிப்பை தொங்கிய வண்ணம் இருந்தது. அது சிறிய, கனமான சில பொருட்களைச் சுமந்தது.
ஒரு நாள், அவனது வீட்டின் பக்கமாக இருந்து பெரும் இடியோசை போன்ற சத்தத்துடன் கூடவே புகை மண்டலம் எழுந்தது. தீயில் கருகிய சருகுகள் வெகு உயரத்துக் கிழம்பி காற்றினால் அடித்து வரப்பட்ட தையும், பலர் கூடி சத்தமிடுவதையும் கேட்டேன். அதற்குப் பிறகு வெகு நாட்களாக தேவனைக் காண
வில்லை. அவனது 'அய்யா' 'அவனைக் கண்ட இடத் திலை வெட்டுவன்' எனச் சொல்லி திரிந்தார். அவர்
களது சொற்ப சொத்துக்களான வலைகளும், அந்தச் சிறிய கொட்டில் வீடும், துணிமணிகளும், தேவனது புத்த கங்களும் அந்த விபத்தில் நாசமாய்ப் போயின.
அதற்குப் பிறகு, ‘ஒப்பந்தம் முடிந்த கையோடே அவனைப் புத்தக கடை ஒன்றில் முன் கண்டேன். அப் போதுதான், அவன் நாவல் எழுதிக் கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னான். அன்று முழுக்க வெற்றிலை கூடப் போடவில்லை என்றும் சொன்னான். மிக மெலிந்து போய் இருந்தான். என்னிடம் கொஞ்சம் காசு *கடன்' வாங்கினான்.
அதற்குப் பிறகு இன்று தான் காண்கிறேன். என் னுடன் தங்குவதற்கு தேவன் விரும்பினான். ※ நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் பேய்களும் அந்துமீறிக் குடியேறிவிட்டதாகச் சொல்கிறார்கள். வீடு மிகப் பெரியது. புதிய ‘பாஷனில் அமைந்திருந்தது, மேல் மாடியில் நான் மட்டும், கீழே ஒரு இளந் தம்பதி களும், அழகிய துடியான பெண் குழந்தையும். வீட்டின் முன்புறம் பாஷனுக்கு சற்றும் பொருந்தாத வகையில் ஒரு நீற்றுப் பூசினிக்காயில் குங்குமத்தினால் வரைந்த கோரமுகம் தொங்கியது. பேய்களுக்கு ‘சாந்தி' செய் வித்ததை அது கட்டியம் கூறிற்று. சாந்தி செய்த பிற ஜூ பேய்கள் ாேலைச் சுருட்டிக் கொண்டனவாம்.

ரஞ்சகுமார் ( 103
அதற்கு முன்னரோ வெனில், தினம் தினம் இருட்டியதும் தாகத்துடன் யாரோ நாவைச் சப்புக் கொட்டுவதும், அங்குமிங்கும் "தடபட வென ஒடித் திரிவதும், உபாதைகளுடன் முனகுவதும் என சத்தங்கள் கேட்குமாம். கதவுகளும் ஜன்னல்களும் தம்பாட்டில் திறந்து படார்’ என சாத்திக் கொள்ளுமாம்.
எனது அறையின் ஜன்னலைத் திறந்தால், பூஞ்செடிகள் வரிசையாக வளர்ந்திருந்த முற்றமும், சுற்றுமதிலும், அனேகமாக மெளனமாகவே இருக்கும் பாதையும் தெரி யும். கதவைத் திறந்தால், கால்வட்டமாக வளைந்தபடி மாடிப்படிகள் இறங்கி ஹோலுக்குள் போவதைக் காண லாம். அந்தக் கால்வட்ட விளிம்புடைய சுவரின் சரி பாதியில் ஒரு கண்ணாடி அலுமாரி போல உள்வாங்கிய பீடம் இருக்கிறது. அதற்குள் செம்மஞ்சள் ஒளியில் குளிக் கின்ற கண்ணன் சிலை வேய்ங்குழலை உதடுகளில் பொருத்தியபடி குறுஞ்சிரிப்புச் சிரிக்கிறது.
அந்தக் கண்ணன் சிலை, இதே வீட்டில் முன்பு நடந்த கோரங்களுக்குச் சாட்சியாக அப்போதும் குழலூதிச் சிரித் திருக்க வேண்டும். வீட்டின் சுவர்களில் எல்லாம் துப்பாக் கிக் குண்டுகள் மழையெனப் பொழிந்ததில் மேற்பூச்சுகள் புண்பட்டு மூளியாகிப் போயினவாம். இதே மாடிப்படி களின் வழியாக இரத்த ஓடை குதுகலத்துடன் கீழிறங்கிப் போயிற்றாம். உட்கட்சிப் போராட்டத்தை சில துப்பாக் கிக் குண்டுகள் சப்தித்து முடித்து வைத்தனவாம். மொத்த மாக பன்னிரண்டு பேர்கள் ஒரே இரவில் சில நொடி களுக்குள் கட்சியினின்றும் உலகத்தினின்றும் வெளி யேற்றப்பட்டபின் மயான அமைதி நிலவிற்றாம். அதற்குப் பிறகு அந்த பன்னிரண்டு பேரும் பேய்களாகி விட்டார்களாம். இல்லாத தொந்தரவுகள் எல்லாம் உண் டாக்கிக் காட்டினார்களாம். இரவானதும் சந்தடிகள் மிகச் செய்து தமக்கிழைக்கப்பட்ட அநியாயத்தைக் சொல்லிப் புலம்பினார்களாம்.

Page 54
104 () கோளறுபதிகம்
பிறகு குடியிருக்க வந்தவர்கள் சாந்தி செய்தார்கள். எனக்கும் குடியிருக்க ஒரு அறையும், கொஞ்ச பயமும் கிடைத்தன.
எனக்குப் பேய் பிசாசுகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. தேவனுக்கும் இதையெல்லாம் சொன்னேன்.
'எனக்கு இப்ப ஒண்டிலும் நம்பிக்கை இல்லை மச்சான்' என்றான்.
தேவனின் "அய்யா'வின் தகப்பனார் இப்போது இறந்து போய்விட்ட அப்பு - பல பேய்க்கதைகளைத் தேவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாராம், அடிக்கடி அவர் பல பேய்களைப் பேய்க் காட்டிவிட்டு வெறும் பறி யுடனும் காய்ச்சலுடனும் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கி றாராம். ܗܝ
ஒருநாள், நல்ல நிலவு. அப்பு விடிகாலையில் வீச் சுக்குப் போக ஆயத்தங்கள் பண்ணிவிட்டு படுக்க எண்ணி னார். வெள்ளி காலிக்கும் போது கனகன் வந்து கூப்பிடு வதாகச் சொல்லியிருக்கிறான். அப்பு ஆச்சியிடம் சொல்லி விட்டு அண்ணாந்து முகட்டுவளையைப் பார்த்தபடி படுத்திருக்கிறார். அன்றிரவு நாய்கள் மிகுதியாகக் குரைத்தன. ஆச்சி சுருட்டுப் பிடித்தபடி கால் உளைவு போக்க முணுமுணுத்தபடி தைலம் தடவுகிறாள். சுருட் டின் கார நெடியுடன் தைலத்தின் வாசனையும் சேர்ந்த அபூர்வமான கிறக்கும் வாசனை. அப்பு கிறங்கினார்.
‘எடேய். கந்தப்பு. வாடா' எனக் கண்டாயத் திலிருந்து கனகன் கூப்பிடுவது போலக் கேட்கிறது. அப்பு எழுந்து ஒரு மிடறு தண்ணிர் குடித்தார். வலை களைத் தூக்கித் தோளில் போட்ட வண்ணம் ஆச்சியைப் பார்த்தார். ஆச்சி நல்ல நித்திரை. தலைமாட்டில் குறை சுருட்டு கருகிப் போய்க்கிடக்கிறது. தீப்பெட்டி யும், சுருட்டும், வெற்றிலைக் கொட்டப்பெட்டியும். திரு நீற்றுச் சம்புடமும், வில்லுக்கத்தியும் எடுத்து மடியில்

ரஞ்சகுமார் () 105
பொதிந்துகொண்டு அப்பு முற்றத்தில் இறங்கினார். நிலவு வெளிச்சத்தில் கண்டாயத்தடியில் யாரோ நிற்பது தெரிகிறது.
“டேய். கந்தப்பு வெள்ளி காலிச்சுப் போட்டுது. வாடா" என கனகனின் குரல் கேட்கிறது. அப்பு மடியைத் தடவிய வண்ணம் அவனுடன் போய்க் கொண்டிருக் கிறார். நிலவு வெளுறி ஒளியிழக்கிறதோ, அல்லது மேகங்கள் மூடி மறைக்கிறதோ? அப்பு வானை நிமிர்ந்து பார்த்தார். விடிவெள்ளி காலிக்க இன்னும் நிறைய நேரம் இருப்பதாகப் பட்டது. பக்கத்தில் வருபவன் சுண்ணாம்பு கேட்கிறான். சுண்ணாம்பு எடுத்துக் கொடுத்தபோது தான் அவனுக்கு கால்கள் இல்லாததை அப்பு கண்டார். விக்கித்துப் போனார். திரேகம் "ஜில்" லிட்டுக் குளிர்ந்தது. எவ்விடத்தில் நிற்கிறோம் என அறிய, சுற்று முற்றும் பார்த்தார். எதிரே தண்ணீர் மினிங்குகிறது. குளிர்காற்றை அள்ளித் தெளிக்கிறது, மறுபடியும் பக்கத்தில் பார்த்தால், கூடவந்தவனைக் காணோம்! W
*கந்தப்பா. வீசடா வீசு. நல்லா மீன் படும்!" என அசரீரி மட்டும் கேட்கிறது. அப்பு அவதியுடன் நீருக்குள் இறங்கினார். “தொளப்" என தண்ணிர் குழப்பத்துடன் ஒலியெழுப்ப மேலும் மிரண்டார். அரை யில் கட்டிய நான்கு முழத்தையும் ‘மடியின் பாரங்களை யும் சேர்த்து தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண் டார். திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டு *வைரவா’ என உளமுருகி உரக்கக் கூவினார்.
*கந்தப்பா. கந்தப்பா’ என கரையிலிருந்து குரல் நைச்சியம் பண்ணிக் கூப்பிடுகிறது. அப்புவுக்கு தேவா ரங்கள் நல்ல மனனம், கோளறு பதிகத்தை வரிசைக் கிரமமாக பக்திலயத்துடனும், பயத்தால் நடுங்கும் குரலு டனும் பாடத் தொடங்கினார். பாடுகிறார். பாடு

Page 55
106 () கோளறுபதிகம்
கிறார். பயம் பறக்கிறது. விடிவெள்ளி மெல்ல உதய மாகி அப்புவுக்கு தைரியம் சொல்லிற்று. துரரே ஊரிலி லிருந்து கோழிகள் கூவி அப்புவுக்கு சுருதி சேர்த்தன. அப்பு கோளறு பதிகத்தை திரும்பத் திரும்பப் பாடு கிறார். கிழக்கு வெளுக்கிறது. மேனி விறைக்கிறது. அப்பு தைரியமாகக் கரையில் ஏறினார். உடல் நடுங்கு கிறது. நடுங்கிய படியே வீட்டில் வந்து விழுந்தவர் தான். ஒரே குலைப்பன் காய்ச்சல்.
‘அட. மேனே, இப்ப உந்த இஞ்சின் போட்டுகள் கடலுக்குள்ளை ஒட டா ஓடெண்டு ஓடி. பேயும் இல்லைப் பிசாசும் இல்லை. நம்மோடொத்தவனுக்கு மீனும் இல்லை' என்று தேவனின் அப்புவின் கதை முடியுமாம்.
என்னுடைய அம்பாவின் தகப்பனார்- இன்னும் ஜீவியவந்தராய் தாடியைக் கோதிக் கொண்டிருக்கும் எனது அப்பு- ஒரு தரம் ஒரு பேய்க்கு துவரந்தடியால் விளாசியிருக்கிறார். அந்தப் பேய் வஞ்சம் மறக்காமல் சில இரவுகளில் ஞாபகமாய் வந்து அப்புவின் மென்னி யைத் திருகுமாம். உடலைப் பெரும் பாறையாக அழுத்துமாம். முறித்து எடுக்குமாம். அப்பு சில இரவு களில் 'ஊ. ஊ' எனத் திணறுவதையும், உடலை முறுக்குவதையும், வாய் பிதற்றுவதையும் நானே நேரில் கண்டிருக்கிறேன். தொடர்ந்து சில நாட்களாக அப்பு வுக்கு காய்ச்சல் காயும். அப்புவுக்கும் ‘இங்கிலீசு மருந்து’’க்கும் ஒத்து வராது. காய்ச்சல் குடிநீரை அம்மா சுண்டச் சுண்டக் காய்ச்சி ஒரு துண்டு பனங்கட்டியுடன் கொடுப்பாள். அப்பாவோ வெனில், நல்ல தென்னஞ் சாராயத்தில் ஒரு அரை’ எடுத்துவந்து அம்மாவிடம் கொடுத்து விடுவார். கிழவனார் ஆசையால் கண்கள் மின்ன சாராயக் கிளாஸை பதபக்குவமாக பற்றுவார்.
'போடா அங்காலை. எளிய வடுவா, வாய் பாக்கா மல்..' என்று என்னை விரட்டுவார். பிறகு, தொண்

ரஞ்சகுமார் L} 107
டையைச்செருமுவதும், நாவை ச் சப்புக் கொட்டுவதும் கேட்கும்.
சற்று நேரத்தில், ‘இஞ்சை வாடா மேனே." என கிழவனார் ஆசையாகக் கூப்பிடுவார். அவரது முகத்தி லிருந்தும் தாடியிலிருந்தும் சாராய நெடி அடிக்கும். ஒளியிழந்த கண்கள் சிமிட்டும். பல்லிழந்த பொக்கை வாய் இளிக்கும். துவரந்தடியால் பேய்க்கு விளாசிய கதை நுாறாவது தடவைக்கு மேல் எனக்கு விஸ்தாரமாகச் சொல்லப்படும், கேட்கக் கேட்க அலுக்காத கதை. அப்பு கதை சொல்லும் பாணியே அலாதி. அடிக்கடி நான் * ஊம் கொட்டி எனது ஆர்வத்தைக் காட்டி, அவரது வீரத்தையும் மெச்சவேண்டியது அவசியம்!
அப்பு கல்வீட்டினுள் படுப்பது கிடையாது. வேப்ப மரத்தின் குளிர் நிழலின் கீழ் கிழவனார் தனக்காக ஒரு கொட்டில் போட்டு வைத்திருக்கிறார் தீராந்திகளில் கலப்பையும், பிக்கானும், நுகக் காலும், நாலைந்து துவரந்தடிகளும், இரும்புப் பூண் இட்ட கரிய ஏழுமுள்ளுக் கொட்டனும் சொருகப் பட்டிருக்கும். பாம்புகள் மாதிரி மாடுகளின் கழுத்துச் சங்கிலிகள் வளைந்தபடி தூங்கும். ஒரு பழைய உறுதி யான நார்ப்பெட்டிக்குள் லாடங்கள், மாட்டின் கழுத்துச் சதங்கைகள், . இன்னும் பல கிழவனாரின் அரிய பொக்கிஷங்கள் எல்லாம் உண்டு. அவையெல்லாம் அவருக்கு மிக இனியவை, அவரது வாலிபத்தின் நினைவு களைத் தூண்டுவன வல்லவா? அவை எவ்வளவு கதைகளை அறிந்திருக்கும்? எவ்வளவு பேய்களுடன் அப்புவுடன் தோளோடு தோள் நின்று போராடியிருக்கும்!
‘அப்ப நான் நல்ல வடக்கன் மாடுகள் ஒறணை வைச்சிருந்தனான். என்னைவிட உயரம். மாவெள்ளை நிறம். ஒரு நாளைக்கு ஒரு கடகம் பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும் வேணும்.’’ என்று கதை தொடங்கும்.

Page 56
108 () கோளறுபதிகம்
எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது, எங்களது வீட்டுக்கு அப்போ மதில் கட்டப்படவில்லை; அலம்பரும் பனையோலையும் கொண்டு மிக நெருக்கமாகவும் கலா நேர்த்தியுடனும் அடைக்கப்பட்ட அழகிய வேலி தான் இருந்தது. அந்தக்காலத்தில், எங்களூரில் தோட்டவேலை யும் வயல்வேலையும் குறைந்த, வெயில் மிகுந்த ஆனி ஆடி மாதங்களில், எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து 'அலம்பல் காட்டுக்கு' வண்டி பூட்டிப் போவார்கள் போகமுதல் வைரவர் கோயிலில் மடை பரவுவார்கள் ஒரு கிழமையோ, பத்து நாட்களோ பயணம். பானை சட்டிகள், அரிசி, நல்லெண்ணெய், பருப்பு கருவாட்டுடன் போவார்களாம்.
ஒரு தடவை மற்றவர்களை விட நல்ல அலம்பர் வெட்ட வேண்டும் என்ற அவாவில் அப்பு காட்டுக்குள் வெகுதூரம் போய் விட்டார். அப்புவுக்கு அப்போ நல்ல வாலிபம். மல்லன் போல உடல் கட்டு. கல்யாணமாகி எனது அம்மா பிறந்து அப்போதுதான் தவழ்கிறாளாம். அப்புவின் வாழ்க்கையில் உல்லாசம் வீசுகின்ற காலம். நல்ல பாரமாக அலம்பர் வெட்டி விட்டார். மற்றவர் களுக்கெல்லாம் பொறாமை. அப்புவையும் அவரது பிரசித்தி பெற்ற 'வடக்கன்' களையும் விட்டு விட்டு அவர்கள் முன்னே வண்டிகளை ஒட்டிச் சென்று விட்டார்கள். அப்பு இரண்டு மூன்று "கட்டை பின் தங்கிவிட்டார். அக்காலங்களில் அப்புவுக்குப் பயமே கிடையாது. வாலிபம் அல்லவா?
நிலவு பகல் போலக் காய்கிறது. அப்போ தார் ரோட்டுகள் கிடையாது. குண்டுங் குழியும் புழுதியும் நிறைந்த மக்கி ரோட்டுக்களும், வண்டிப் பாதை களும்தான். வண்டி நிறைந்த பாரம். ‘வடக்கன்கள் முக்கித்தக்கி இழுக்கின்றன. வண்டி அப்படியும் இப்படியுமாக இலேசாகத் தாலாட்டுகிறது. பாதையின் இருபுறமும் தாழம்புதர்கள் மலர்ந்திருந்ததால் 'கம்"மென்ற

ரஞ்சகுமார் () 109
வாசனை. கண்டல் மரங்கள் நீருக்குள் முக்குளித்து நிமிர்ந்தன. நீரில் கண்டல் சாயம் ஊறி தேயிலைச்சாயம் போல மனோரம்யமான சிவந்த நிறம் காட்டுகிறது. காற்று வேறு மெல்ல வீசிற்று, தனிமை தந்த சலிப்பும் ஏக்கமும் வாட்டுகிறது. அப்புவுக்கு பாட்டு வந்தது. பாடத் தொடங்கினார்.
வயல் வெளிகளும் சிறுபற்றைகளும் மாறிமாறி வருகின்றன. அப்புவை நோக்கிக் கையசைத்து பின்னால் போய் நின்று திரும்பிப் பார்த்தன. வயல்வெளிகளினூ டாக யாரோ ஒருவன் நொண்டி நொண்டி வருகிறான்" செம்பாட்டு மண்ணில் விழுந்து புரண்டவன் போல பழுப்புநிற வேட்டி கட்டியிருக்கிறான். வந்தவன், வாய் பேசாமல் பின்னணியத்தில் பிடித்து தூங்குகிறான். பின்பாரம் மிக அதிகரித்து மாடுகளை தூக்க எத்தனித்தது. மாடுகளின் வாயிலிருந்து வெண்நுரை கக்கிற்று. அப்பு திட்டினார்.
“வேசைபிள்ளை, எடடா கையை..துவரங்கம்பாலை வெளுப்பன்."
அவன் முன்னால் வந்தான். வந்தவன், நுகத்தடியில் ஏறி உட்கார்ந்தான். அவனுடலிலிருந்து கெட்ட நாற்றம்-மலநாற்றம் வீசிற்று. மாடுகள் வெருண்டடித் தன. கதறின. பாரம் தாங்காமல் முன்னங்கால்களை மடித்து விழுந்தன. அப்புவுக்குச் சினம் பொங்கிற்று.
'எளிய வடுவா." என உறுமியபடி, ஆசனத்தி லிருந்தபடியே எட்டி அவனது முதுகில் துவரங்கம்பால் சாத்தினார். கூர்மையான குரலில் ஒலமெழுப்பியபடி அவன் பாய்ந்து இறங்கினான். அப்போது கோடை வானம் கிழியும்படி ஒரு மின்னல் தெறித்தது. மின்னல் ஒளியில் வந்தவனை அப்பு நன்றாகக் கண்டார். வானத்துக்கும் பூமிக்குமாக அவன் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தான். சில நொடி கழித்து பெரும்

Page 57
110 () கோளறுபதிகம்
இடியோசை கேட்டது. அத்துடன் கூடவே அப்புவின் நெஞ்சில் பலத்த உதைகிடைத்தது. வண்டியின் துலாவில் அப்பு மயங்கிச் தாய்ந்தார். எப்ப்டி வீடு வந்து சேர்ந்தேர்மென அப்புவுக்கு இப்போதும் தெரியாதாம். அதெல்லாம் அவரது பாதை பழகிய அருமையான வடக்கன் மாடுகளின் மகிமை என நன்றியுடன் சொல்லுவார்.
'நீ பேயைக் கண்டா என்னடா செய்வாய்?' என்று அப்பு எகத்தாளமாய்க் கேட்பார்.
“பயத்திலை கழிஞ்சு போடுவாய்' GT பொக்கைவாய் சிரிக்கும்.
“இப்ப உந்த மெஷினுகள் வயலுகளுக்கை ஒண்டுபாதி சாமமெண்டும் பாராமல் உழுது உழுது பேய் பிசாசெல்லாம் எந்தப் பக்கம போனதெண்டு சொல்லேலாமல் போவிட்டுது" என மிக வருத்தத்துடன் முத்தாய்ப்பு வைப்பார்.
இதையெல்லாம் நான் அடங்கிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தேன். தேவன் வெகு சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருத்தான். பிறகு தொண்டைக்குள்ளாகவே ஒரு சிரிப்புச் சிரித்தான். பேசாமல் சிலநேரம் படுத்துக் கிடந்தோம்.
வெளியேயிருந்து இரவின் மிகவும் சூக்குமமான ஒலிகள் கேட்டன. இருந்தாற்போல சிறு தொலைவி லிருந்து ஒரு நாய் ஊளையிட்டழுதது, பிறகு இந்தத் தெருவிலிருக்கும் எல்லா நாய்களும் சேர்ந்து எச்சரிக்கை. யும், பயபிராந்தியும் கலந்த குரலில் குரைக்கத் தொடங் கின. எங்களது வீட்டின் முன்புறமாக சில நாய்கள் பயந்தடித்து ஓடியதால் ஏற்பட்ட துடியான காலடிச் சத்தங்களையும், அடித்தொண்டையிலிருந்து புறப்பட்ட அவற்றின் பீதி கலந்த முனகல் ஒலிகளையும் தெளிவாகக் கேட்டோம்.

ரஞ்சகுமார் () 111
ஒரு வெடிச்சத்தல் இருளுைஉலுத்தியது. நாய்களின் சந்தடிகள் ஒய்ந்தன. தெருவித்து மட்டும் அச்சம் தரும் அமைதியைச்* శిక్షా தன வாய் தெறித்துப் பார்த்தன.
ஜன்னலை எச்சரிக்கையாகத் திறந்தோம். தெருவில் சிலபேர் கனமாக நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். இரண்டு ஒரங்களினாலும் அவர்கள் வரிசையாகப் போனார்கள். நிழல்கள் போல, காலடி அரவங்களைக் கிளப்பாது, ஈசலைப் பிடிக்க எத்தனிக்கும் பல்லிகளெனப் போயினர். சுற்றுச் சூழல் முழுவதற்கும் அச்சமூட்டும் தோற்றமொன்றை அவர்கள் வெகு இலகுவாகக் கொடுத்துச் சென்றனர்.
யாரோ ஒருவன் பாடினான் போலும். அர்த்தம் புரியாத வேற்று மொழியில் ஒரு முரடான கரகரத்த குரல். ஆனால் ஆத்மார்த்தமாக உணர்ச்சியைச் சிந்தும் வண்ணம் பாடிற்று. அனேகமாக அதுவொரு விரகந் தெறிக்கும் காதல் பாடல்.
விளக்குகளை அணைத்துவிட்டு சிறு பெருமூச்சு களுடன் படுத்தோம்.
சற்று நேரத்தில், சற்றுத் துரத்திலிருந்து இன்னொரு வெடிச் சத்தம் கேட்டது. வெகுநேரம் வரை எமது காது களுக்குள் அந்தச் சத்தம் சுழன்று சுழன்று ஒடிக்கொண்டே யிருந்தது.
விடிந்தது. தேவன் மேலும் சில நாட்கள் என்னுடன் தங்க விரும்புவதாகச் சொன்னான். எனது சைக்கிளை சில நாட்களுக்கு இரவல் தரும்படியும் கோரினான்
மிகச் சில நாட்களே என்னுடன் தங்கினான். நன்கு இருட்டிய பிறகு, சாப்பாட்டுப் பார்சலுடனும், அலைந்து திரிந்த களைப்புடனும், வியர்வை நாற்றத்

Page 58
112 () கோளறுபதிகம்
துடனும், துர்மரணங்களைப் பற்றிய செய்திகளுடனும் வருவான். இந்தச் சில நாட்களில் தேவனது பல நண்பர் கள் எனக்கு அறிமுகமானார்கள்.
தேவன் என்னை விட்டு மறுபடியும் பிரிந்து போன பிறகு, வீட்டில் ஒரு விசித்திரமான விரும்பத்தகாத மாற்றம் ஏற்பட்டிருந்ததை உணர்ந்தேன். இப்போ, வாடைக் காற்று மாறி சோளகம் புறப்பட்டு விட்டது" இரவு நேரங்களில் எனக்கு தெளிவற்ற கனவுகளும், விவ ரிக்க முடியாத பயப்பிராந்திகளும் ஏற்பட்டன. வெளியே உக்கிரமாகச் சோளகம் வீசிற்று.
ஜன்னல்களும் கதவுகளும் தம்பாட்டில் திறந்து கொள்ள காற்று புழுதியையும் சருகுகளையும் அள்ளிக் கொண்டு வீட்டினுள் விசையாக நுழையும். “фц—тії படார்" என ஜன்னல்களும் கதவுகளும் மூடிக்கொள்ளும். சற்று நேரத்தில் தாமே திறந்து கொள்ளும். யாரோ சிலர் பிராணாவஸ்தையுடன் முனகும் அவல ஒலங்கள் கேட்பதைப் போலிருக்கும். மிக நெருங்கும் அபாயத்தி லிருந்து தப்பித்துக் கொள்ளும். அவதியுடன், மூத்திரம் முட்ட, சிலபேர் வீட்டினுள் தாறும் மாறுமாக தடுமாறி ஒடிக்கொண்டிருப்பதெனவும் அரவங்கள் எழுந்தன. சில வேளைகளில் சொட்டுச் சொட்டாக நீர் விரைந்து சிந்து வதைப் போல, ஆனால் மிகவும் பெருத்த உரப்புடன் குளியலறையிலிருந்து சத்தங்கள் வரும்.
எனதுடல் வியர்க்கும். இதயம் துடிக்கும். வேக வேகமாக மூச்சு வரும். எழுந்து போகவோ மறுபுறம் திரும்பிப் பார்க்கவோ இயலாதவனாய் போர்வையால் முகத்தை மூடியபடி படுத்துக்கிட ப்பேன்.
ஒரு தரம், ஒரு கனவு கண்டேன்.

ரஞ்சகுமார் () 113
தேவனை யாரோ சிலர் கூட்டிக் கொண்டு போவது போல தெளிவற்ற காட்சி. அது மார்கழி மாதமாக இருக்க வேண்டும். ஒரே பனிப்புகார். தேவன் மறுபடி யும் மெலிந்திருக்கிறான். அவனது மேலில் சேட் இல்லை. வலையை தோள்கள் மீது போட்டிருக்கிறான். கிழிந்து போன பழைய சாரன் உடுத்திருக்கிறான். அவனுக்கு கால்கள் இல்லை. அந்தரத்தில் தொங்குகிறான். ஒரு நிறைந்த நீர்நிலைப் பக்கமாக அவர்கள் போகையில், தேவன் நீருக்குள் இறங்க ஆரம்பித்தான். அவர்கள் அடே தம்பி. வாடா...' என நைச்சியம் பண்ணும் குரலில் கூவி அழைத்தனர். அவன் மேலும் நீருக்குள் இறங்குகிறான். சாரனை கழற்றி தலையில் முண்டா சாக கட்டிக்கொள்கிறான். திருநீறு பூசிக்கொள்கிறான். ஏதோ முணுமுணுக்கிறான். அவர்கள் கைகளை வீசி வீசி அவனைப் பயமுறுத்த எத்தனிக்கின்றனர். மல நாற்றம் வீசுகிறது. மலநாற்றமா அல்லது பிணம் கருகும் நெடியா? அது மார்கழி மாதப்பனியா, அல்லது ஊர்கள் எல்லாம் சுட்டெரிக்கப்படும் புகையா? எனக்கு மூச்சு முட்டுகிறது. ஒன்றுமே தெளிவாகத் தெரியமாட்டேன் என்கிறநு.
மிகப் பிரயாசைப்பட்டு கண்விழித்தேன். உடல் வியர்த்திருந்தது. மிகத்தாகமாக இருந்தது. நீர்க்குவளை இருந்த பக்கம் கைகளைத் துளாவி, அதை இருட்டில், நிலத்தில் உருட்டி உடைத்தேன்
அடுத்த நாள் காலையில், தேவனின் நண்பன் ஒருவன் என்னைத்தேடிவந்தான். தேவனைக் கண்டாயா, என வினாவினான்.

Page 59
114 [) கோளறுபதிகம்
மேலும் சில நாட்கள் கழித்து இன்னொருவன் வந்தான். இரண்டொரு நாள்கழித்து இரண்டு பேர் வந்து தேவனை விசாரித்தார்கள்.
அதற்குப் பிறகு நான் தேவனைக் காணவேயில்லை!
அத்துடன், நான் வீடு மாறிவிட்டேன். பேய்கள் பற்றி நான் மிகவும் அஞ்சுகிறேன். இரவுகளில் நிம்மதி யின்றி தூக்கத்துக்கு போகிறேன். நடு இரவில் விழித் தெழுந்து தேவனை நினைவுபடுத்த முயற்சித்தவாறு, நெடுநேரம் புகைபிடிக்கிறேன்.

(ID15GTJG
தேவர்கள் இறைவனிடம் ஒடினார்கள். விசுவாமித்திரனின் தவவமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று.
இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.
*தேவ தேவார். எமைக் காத்தருள்க.’’ என தேவர் கள் இறைவனிடம் இறைஞ்சிய ஒலியில் சப்த சமுத்திரங் களின் குமுறல்களும் தோற்று அடங்கின.
இறைவன் மதனை அழைத்துவர பூதகணங்களை ஏவினான். கரும்புவில்லும் பஞ்சமலர்களும் மணம் பரப்ப மதனும், அவனுடன் குனிந்த சிரத்துடன் ரதியும் வந்தனர். இறைவன் இதழ்களில் குமிண்சிரிப்பு மேலும் சற்றே விரிந்தது.
ரதி நடுங்கினாள். தன் நாதனுக்காக ஏங்கினாள். விசுவாமித்திரன் சினத்தை ஈரேழு உலகமும் அறியும். அவனது தவத்துக்கு பெண்களால் குந்தகம் ஏற்பட ஏற்பட அவனது கோபாக்கினி கொழுந்துவிட்டு ஜ்வா லித்தது.
தேவர்கள் விடாப்பிடியாக முயன்றனர், ரிஷிகள் அதற்கு நெய் வார்த்தனர்.
சகல சம்பத்துகளும், நால்வகைச் சேனையும், விசா லித்த தேசத்தையும் உடைய கெளசிகராஜன் பிரம்ம ரிஷி என பட்டமும் பெற்று விடுவானாகில்.
வசிஷ்டன் கர்வபங்கம் செய்யப்படுவான் என அவர் கள் ஏங்கினர்

Page 60
116 () மோகவாசல்
பெண்களால் உலகில் கலகம் விளையும் என்பது எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது. என்ன தான் ஒரு பசுவேயாயினும், சபலையும் ஒரு பெண்ணினம் அன்றோ? அவளை மோகிதது, வசிஷ்டனிடம் இச்சித்ததனால் அல்லவா கெளசிகராஜன் கடும் விரதம் அனுஷ்டிக்க. விதியுண்டாயிற்று.
விசுவாமித்திரனுக்கு பெண்களை எண்ண எண்ண சினம் பொங்கிற்று.
தேவர்களும் சளைத்து விடாமல் அப்சரஸுகளை மாறி மாறி ஏவினர். முனிவனும் தன்வயமிழந்து சபித்தல் தொடர்ந்தது. நீண்ட நெடுங்காலமாக தபஸ் இருந்து தான் பெற்ற ஆற்றல்களையெல்லாம் விசுவாமித்திரன் நொடிப் பொழுதுகளில் இழந்தான்.
மீண்டும் பூரக ரேசக் முதலிய அட்டவாயுக்களையும், ஐம்புலன்களையும் மிகமுயன்று அடக்கி நிர்ச்சிந்தையாக, லயிக்க முயன்றான்.
தேவர்கள் மறுபடி மறுபடி இறைவனிடம் ஓடினர்.
இறைவன் மேனகையை அழைத்துவர பூதகணங்களை ஏவினான்.
வனத்தில் வசந்தம் பூத்துக் குலுங்கிற்று. மலர்களின் நறுமணமும், தேறலின் போதையும் தித்திப்பும் எங்கும் நிறைந்தன. காட்டுப்பட்சிகளில் உல்லாசமிகுந்த கூவல் ஒலிகளும் வனவிலங்குகளின் வேட்கை ததும்பும் கனைப்பு ஒலிகளும் எங்கும் எதிரொலித்தன.
முனிவனது சிந்தை தடுமாறிற்று. மதன் தருணம் அறிந்து குறி பிசகாமல் கணை தொடுத்தான்.
கூடவே, மின்னல் ஒன்றைப் பற்றிவளாய் மேனகை, பூமியில் குதித்தாள்.
அவளது தேகத்தை தழுவிய காற்றைச் சுவாசித் ததுமே, முனிவன் சிலிர்த்தான். மிருக வேட்கையினால்

ரஞ்சகுமார் () 117
அலைப்புற்றான், முன்னே ராஜனாயிருந்த காலத்தில் போக சமுத்திரங்களில் சளைக்காது நீந்தித் திளைத்த வனல்லவா?
தாபத்துடன் "மேன்கா’ என முனிவன் கூவி அழைத் தான்.
தேவர்கள் களிகொண்டு துள்ளினர். ரிஷிகள் 'ஓம்' என கேலியாக மந்திர உச்சாடனம் செய்தனர்.
இறைவன் இதழ்களில் புன்சிரிப்பு. விழிகளில் விஷக்கி றக்கம்.
ரதிதேவி ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். தன் நாதன் தோள்களில் சாய்ந்தாள்.
கீழே, பூமியில்; மேனகை முனிவனை விழுங்கிக் கொண்டிருந்தாள்.
முனிவனது விரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. ஈவிரக்கமற்ற அவளது உண்மைத் தேடல் தளர்த்தப் பட்டது. ஒரேவிதமான சலிப்பூட்டும் தடத்திலே அவனது வாழ்க்கை செல்லலாயிற்று. திகட்டும் வரை மேனகையை அவன் தழுவிக் கிடந்தான்.
ஞானத்தை எய்துவதற்கு பதில், குழந்தையை ஏந்த 'வேண்டியவனானான் முனிவன்!
முனிவனின் காய்த்துப்போன கரங்களில் குழந்தை வீரிட்டழுதது. விதி சிரித்தது. கானகம் மானிட வாழ்வின் விசித்திரங்களை தரிசித்ததில், பெருமூச்செறிந்து ஒய்ந்தது. w
மேனகைக்கு முனிவனிடம் சலிப்புத் தட்டிற்று. முனிவனது தழுவல்களில் முன்பு போல மூழ்கடிக்கும் ஆவேசம் இருக்கவில்லை. தவிர, தேவலோகத்தின் செளகர்ய வாழ்வு எங்கே? கிழங்கையும், கனியையும்
Gudr-8

Page 61
118 () மோகவாசல்
புசித்து தர்ப்பையின் மீது உறங்கும் இந்த மானிடன் எங்கே?
போகப்போக முனிவனின் உடலில் இன்ப வேட்கை குன்றிற்று. ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருந்த இந்திரியங்கள் பீரிட்டுப் பாய்ந்து சென்றதும், முனிவனுக்கு பெண்ணைக் கூடுவதில் ஒருவிதமான யந்திரீகப் பாங்கு மேலோங்கிற்று. மேனகையின் மேனியில் புதுமை எதுவுமில்லாமல் போவதாகத் தெரிந் தது. அவள் ஒரு சாதாரண பெண்ணே போன்று தோன்றினாள். அவளைக் காண்பதில் சலிப்பும், வெறுப்பும் தோன்றியது.
முனிவன் 'திருதிருவென விழித்தான்.
வீணை ஒலி தூரே கேட்டது. நாரதனின் மிதியடி களின் ஓசையும் கலந்து வந்தது.
கிண்டலுக்கும், கலகத்துக்கும் பெயர் பெற்ற நாரதன்.
முனிவன் கூனிக் குறுகி நின்றான். அதலபாதாளத்தில் வீழ்ந்து புரள்வதாய் உழன்றான்.
ஒரு பொறி தட்டிற்று.
மோகம் என்பது ஒரு வாசல்தான். கண்ணையும் கருத்தையும் பறிக்கும் அலங்காரமான மாயவாசல். அந்த வாசலை ஒரு தரம் நிதானமாக கடந்துவிட்டால் அதற்குமப்பால் பெரும் அதிசயங்கள் ஒன்றும் நிகழக் காததிருக்கவில்லை என முனிவன் உணர்ந்தான்மோகவாசலைக்கடக்கும் தருணத்தில் ஏற்படும் கண நேரச் சிலிர்ப்புக்காக, ஆண்டாண்டு காலமாக கட்டி வளர்த்த தனது தேஜஸை இழந்து விட்டோமே எனக்கலங்கினான்.

ரஞ்சகுமார் 119
வசிஷ்டனின் பரிகாசத்துக்கு ஆளாவோமே எனவெண்ணி ஏங்கினான்.
முனிவன் (மேனகையை கடைசித் தடவையாக
அழைத்தான். அவனது குரலில் வளமைக்கு மாறான ஏதோ ஒன்று இருந்தது*
மேனகை அஞ்சினாள். சாபத்தை எதிர்கொள்ள நடுங்கும் இதழ்களுடன் காத்து நின்றாள்.
முனிவனோ, ஒரு சிசுவை ஏந்துதல் போன்று அவளை மென்மையாகத் தழுவி நேத்திரங்களிலும், நுதலிலும் முத்தமிட்டான்"
போய் வா மேனகா!" ஞானத்தின் வாசற்கதவை ịẵ எனக்காகத் திறந்து விட்டாய்!”
(மேனகையை அழைத்துச் செல்ல மின்னல்கள் இறங்க ஆரம்பித்தன.
ஸ்வாமி. தங்களது குழந்தை.?”
'குழந்தை என்னுடையதல்ல டுபண்னே,. அது பூமியின் புத்திரன். பூமி அவனைக் காக்கட்டும்.’’ என்று மிகததெளிவுடன் பதில் சொன்னான் விசுவாமித்திரன்.
முனிவன் தனது பயணத்தை மீண்டும் மிக நிதானத் துடன் ஆரம்பித்தான். மிகவடர்ந்த கானகங்களையும் பனிபடர்ந்த மலைகளையும் நோக்கி அவன் சென்றான்.
மேனகை அவன் சென்ற திக்கை நோக்கி சிரம் தாழ்த்தி ஒருமுறை தொழுதாள். அவனது பாததுரளியை எடுத்து சிரசில் தரித்துக்கொண்டு, பிரகாசமான ஒரு .மறைந்தாள் الأ6 سا إلى 651 LBGr.
நிராதரவாக விடப்பட்ட குழந்தை அழுத்து வாழ்க்கை எதிரே நின்று அதைப் பயமுறுத்தியது. அழட்டும்! பூமியில் பிறந்தவர்கள் அழாமல் இருத்தல் கூடுமா ?

Page 62
120 () மோகவாசல்
விசுவாமித்திரனின் உறுதி மிக்க பயணத்தைக் கண்டு தேவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். ரிஷிகள் இடிந்தனர்.
*ஹே1. முனிசிரேஷ்ட, உனது இஷ்ட சித்தியை நீ அடைவாய்' என ஒரு அசரீரி முழங்கிற்று.
தேவலோகம்.
இறைவன் முகத்தில் சதா குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.
இறைவிக்கு ஒரே வியப்பு. கூடவே சந்தேகம்.
*நாதா, தாங்கள் முனிவனுக்கு உதவி செய்தீர்களா, அல்ல தேவர்களுக்கா?"
“யாருக்கும் எனது உதவி தேவையில்லை, உபத்திரவ மும் தேவையில்லை. அவரவர் அவரவருக்குரிய பாதையில் செல்லட்டும். இடையிடையே நான் கொஞ்சம் விளையாடு வேன். அதிலொரு இன்பம்! பொழுது போகாதே!!' என அலுத்துக்கொண்டான் இறைவன்.
நிசப்தம்.

பின்னுரை
கார்த்திகேசு சிவத்தம்பி

Page 63
ß60)MIIIßß 65I6II(hßÖs
glGffb6
-தமிழில் சிறுகதை பெறும் மேலுமொரு பரிமாணம் (வளர்ச்சி) பற்றி, ரஞ்சகுமாரின் மோகவாசல் தொகுதி வழியாக எழும் சிந்தனைகள் சிலவற்றின் பிராரம்பப் பதிவு.
இந்தக் குறிப்பு 1989இல் எழுதப்பட்டிருக்க வேண் யது. பதினாறு மைல் தூரம் கடந்து வெளியீட்டு விழாவுக்கு செல்ல முடியாத ஒரு படைக் கெடுபிடி நிகழ்ச்சி காரணமாக அன்று நிறைவேற்றப்படாத ஒரு "கடன் இன்று கொழும்பில் இயைபுடை நூல்கள் இல்லாமை, விளக்க வாசிப்புக்கான பின்புல மூலங்கள் இல்லாமை, ஆகிய தடங்கல்களுக்கு இடையே நிறைவேறு கின்றது. விவரண விளக்கங்களற்ற சிந்தனையோட்ட மாகவே இந்தக் குறிப்பு அமைகின்றமைக்கான மன்னிப்பைக் கோர வேண்டியுள்ளது. எனது நூலின் (தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்-1966) கால எல்லைக்கு அப்பால் ஏற்பட்ட தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக் கட்டங்களுள் (ஜெயகாந்தனுக்குப் பின் வந்த வளர்ச்சிகளுள் (Post-Jayakantan period) ஒன்று பற்றிய சில அவதானிப்புகளாகவும் இந்தக் குறிப்பு அமையும்.
*இலக்கிய வரலாறுகள், இலக்கியங்களின் பின்னரே" எழமுடியுமாதலால், இந்தக் குறிப்பையும் தொகுதியின் பிற்சேர்க்கையாக இணைக்கும்படி ரஞ்சகுமாரிடம் கூறியுள்ளேன் .

கார்த்திகேசு சிவத்தம்பி () 128
விழர்சனங்கள், சிலர் நினைப்பதும் பயப்படுவதும் போன்று நியம விதிப்புக்கள் (Prescriptions) அன்று; அவை ஆய்வுவழி அறிக்கைகளே (Diagnosis)
தமிழ்ச் சிறுகதை இன்று பெருமாற்றமடைந்துள்ள ஒரு இலக்கிய வடிவமாகும். உலகச் சிறுகதைகளில் 1950-60கள் முதல் ஏற்பட்டு வந்த மாற்றம் இப்பொழுது தமிழ்ச் சிறுகதைக்கும் வந்துவிட்டது.
இந்த மாற்றத்தின் பிரதான அம்சம் கதை *சொல்லப்படும்' முறையில் (Narative Narrativial forms) ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான். “தொடக்கம்", 'உச்சம்'. 'முடிவு' என்ற அரிஸ்ரோட்டிலிய நியம விதிப்பு புனைகதையில் நடைமுறை உத்தியுடன் சிதையத் தொடங்கியது. இப்பொழுது முற்றிலும் தகர்ந்துள்ளது நாடகத்திலேயே இன்று அரிஸ்ரோற்றலீய எதிர்ப்புவாதம் (anti-aristotelianism) வந்துவிட்டது. 'நன்கமைக்கப் பட்ட கதை' என ஒன்று இருக்க முடியாதென்பது, உளவியல், மெய்யியற் சிந்தனை வளர்ச்சிகளினால் வற்புறுத்தப்படும் ஓர் உண்மையாகும். இந்த மாற்றங்கள், எழுத்தாளர்களின் கதைகள் மனப்பதிவு செய்துகொள்ளப்படும் முறையிலும் (in the manner
percieved) அறிந்துகொள்ளப்படும் முறையிலும் (Cognition) ஏற்பட்ட மாற்றங்களாகும். அமைப்பியல் வாதத்தையே (Structuiralism) இன்னும் சரியாக
உள்வாங்கிக் கொள்ளாத ஒர் எழுத்துப் பண்பாட்டினுள், அமைப்பியல் வாதத்துக்குப் பிந்திய (Post-Structuralist) சிந்தனைகளின் முக்கியத்துவத்தை, அறிவதும், அவை கூறும் பொருள்களைத் தமிழில் இனங்கண்டறிவதும் சிரமம் தான்.
இந்தக் “கதை கூறு முறைமை (narrative) மாற்றம் என்பது மூன்று மாற்றங்களை உள்ளடக்கியது.

Page 64
124 0 பின்னுரை
(1) கதைகளில் ஏற்பட்ட மாற்றம். அதாவது எவையெவை கதையாகும், எப்பொழுது கதை யாகும் என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றம் இது சமூக நிலைப்பட்டது. (11) ‘கதைகளை" உணர்ந்து கொள்வதில் ஏற்பட் டுள்ள மாற்றம். அதாவது இது உணர்திறன் முறைமையில் (Sensibility) ஏற்பட்ட மாற்ற மாகும். இது முக்கியமானது. இதனாலேயே முதலாவது மாற்றமும் ஏற்படுகின்றது. சமூகத்தின் உணர்திறன்கள் மாறும் பொழுது ᏯᎦ5ᏛᏡᎶb , இலக்கிய வடிவங்களில் முக்கிய மாற்றங்கள் நிச்சயமாகப் பாணி’ (Style) மாற் றங்கள் ஏற்படும். (III) எடுத்துக் கூறப்படும் 'மொழி'யில் ஏற்படும் மாற்றம். இது இரண்டாவது மாற்றத்தின் தவிர்க்க முடியாத பலன்; அத்துடன் இந்த மாற்றங்களின் **வெளிப்பாட்டு' வாயிலும் இதுதான். ஆசிரியர் / எழுத்தாளர் நிலைப்பட்ட இவை காரண மாகப் புனைகதையின் (அதாவது சிறுகதை, நாவல் இரண்டினதும்) 'பாடம்' (Text) மாறியுள்ளது.
ஆனால் இந்த மாற்றம் வெறுமனே ஆசிரியர் மட்டத்தில் மாத்திரம் ஏற்பட்டுள்ள ஒன்றன்று. வாசகர் மட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். அனுபவ மாற்றங்கள், அறிகை முறை மாற்றங்கள் (Changes in experience and cognition) LÉlg (Lp68)ul DTGIT 60Fu.
வாசக மாற்றங்கள் ஏற்பட்டதனாலே தான் தொடர்பு (Communication) வலுவும் சுவாரசிய முடைய தாகின்றது.
இந்த மாற்றங்களை ஒட்டுமொத்தமாக சூழ்வு சந்தர்ப்பங்களிலும் (Context) “பாடத்திலும் (text).

கார்த்திகேசு சிவத்தம்பி 0 125
ஏற்பட்ட, காரண-காரியத் தொடர்புடைய மாற்ற மெனலாம்.
இந்த மாற்றங்கள் தமிழின் புனைகதை புதிய எல்லைகளைத் தொட உதவியுள்ளது. தமிழ்ப் புனை கதை வரலாற்றின் நிலை நின்று கூறினால், ராஜநாரா யணனின் கதைகள் கோலமானது, புதுமைப்பித்தன், கு. ப. ரா, லா. ச. ரா, ஆகியோரின் கதைகள் மரபுகளுடன் இணைந்த பொழுது, தமிழுக்கு புதிய “கதை நூல் முறைமை'கள் மேற்கிளம்பின எனலாம்.
இந்த மாற்றத்தின் எடுத்துக்காட்டாகவும், சமிக்ஞை களாகவும், அமைந்துள்ள புனைகதை எழுத்தாளர்களாக *கோணங்கி, ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் முதலியோர் எடுத்துப் பேசப்படுகின்றனர்.
இந்த மாற்றம் முற்றிலும் தமிழ்நாடு நிலைப்பட்டது அல்ல. அது இலங்கையிலும் காணப்படுகிறது என்ப தைக் காட்டி நிற்பவர் எண்பதுகளில் தமிழிலக்கியத்துக்கு அறிமுகமான இருவர். ஒருவர் உ. மா. வரதராஜன், மற்றவர் இந்தச் சிறுகதைத் தொகுதியின் ஆசிரியரான ரஞ்சகுமார்.
இந்தக் குறிப்பு. ரஞ்சகுமார் உதாரணப்படுத்தி நிற்கும் இலங்கை நிலை மாற்றங்கள் யாவை. அந்த மாற்றங்கள் சற்று முன்னர் எடுத்துப் பேசப்பட்ட கதை சொல் முறைமை, இலக்கிய உணர்திறன் ஆகிய விடயங் களுடன் எவ்வாறு தொடர்பு பட்டு நிற்கின்றது என்பது பற்றி பேசுதல் வேண்டும்,
ரஞ்சகுமார் வழியாகத் தெரியும் இலக்கிய உணர் முறைமை மாற்றத்தைப் பற்றிப் பேசத் தொடங்குமுன், இலக்கிய வரலாற்று புராணத்துவத்துக்காக ஒரு விடயம் பற்றி குறிப்பிடல் அவசியமாகின்றது.

Page 65
126 () பின்னுரை
1980களில் ஏற்பட்ட புதிய உணர்வு முறைமை, புதிய சிந்தனைக் கூட்டு (problematic) எழுச்சி ஆகியவற் றினூடாக வரும். படைப்பாளியாக ரஞ்சகுமாரை கொள்ளும் அதே வேளையில் 1960, 70களிலிருந்தே எழுதிக்கொண்டு வருபவர்கள் 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் எவ்வாறு பரிணமித்துள்ளனர் என்பது சுவை யான ஒரு நிலையாகும்.
இந்த அறுவடைத் தொடர்ச்சி மிக முக்கியமானதாகும். கவிதைத் துறையில் சேரன், புதிய முறையின் எடுத்துக்காட்டு என்றால், முந்தி வந்தவர்கள் இந்தப் புதிய நிலையை எவ்வாறு நோக்குகின்றார்கள் GT 6ös lu தற்கு முருகையன், வ. ஐ. ச . ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் முக்கியமானவர்களாகின் றனர். அவர்களின் தொடர்ச்சியில், அந்தத் தொடர்ச்சி யினுாடே பளிச்சிடும் மாற்றங்களில் அவர்களின் திறமை யும், பிரச்னைகளின் உக்கிரத் தன்மையும் குத்திட்டு நிற் கின்றன.
சிறுகதைத் துறையில் இவ்வகையில் முக்கியமான வர்கள் சட்டநாதன், தெணியான், சாந்தன் முதலியோ ராவார். சிறுகதைத் துறையில் இன்னொருவரையும் மிக முக்கியமாக எடுத்துக் கூறல் வேண்டும். 1970களிலே எழுதத்தொடங்கி இலைமறை காயாக இருந்துவிட்டு இப் பொழுது 90களில் 'மக்கத்து சால்வை' என்னும் சிறு கதை தொகுதியுடன் இலக்கிய கவனத்தை ஈர்த்துள்ள எஸ். எல். எம். ஹனிபாவின் ஆழமான மனிதாயதம் அவரது சிறுகதைகளில் நன்கு தெரிகின்றது.
இங்கு, இந்தக் குறிப்பில், அதிகாரப்பட்டு நிற்பது 1980களில் ஏற்படும் உணர்முறைமை மாற்றங்களும், அவற்றை ரஞ்சகுமார் சித்தரிக்கும் முறைமையுமாகும்.
சரித்திரம் என்பது சாகாத் தொடர்கதை. கால கட்டங்கள் என்பவை வகுத்தற் சுகத்துக்காக செய்யப்படு:

கார்த்திகேசு சிவத்தம்பி (; 127
பவையே. அவற்றுக்கான வருட நிர்ணயம் என்பது ஒரு சைகையே. இலங்கையின் வரலாற்றின் அத்தகைய ஒரு சைகை (sign) யாகவிருப்பது 1983 (1970 களில்லாமல் 80கள்வலுத்துவிடவில்லை. அது 80களுடன் நின்று விடவு மில்லை) இந்த 1983 பலவகைகளில் இலங்கையின் வர லாற்றில் ஒரு முக்கிய கோடு ஆகும். அதற்கு முன் பின் என்று பிரிக்கலாம்.
இலங்கையில் விடயங்கள் நோக்கப்படும் முறையிலும் உணரப்படும் முறையிலும் 1983 ஒரு பிரிகோடுதான். ஒரு காலக்கோட்டுக்குப் பின் வருகின்ற புதிய உணர்திறன் முறைமையை எழுத்தில் வடித்தல் என்பது மிகச்சிக்கலான ஒரு விடயமாகும். அந்தக் காலக் கோட்டுக்கு முந்திய வர்கள், பிந்தியதைப் பார்ப்பதிலுள்ள முறைமைக்கும், அந்தக் காலக் கோட்டுக்குப் பின் 'சமூக பிரக்ஞை நிலைக்கு வந்தவர்கள் அதனைப் பார்ப்பதற்கும் வேறு பாடு உண்டு. தொடர்ச்சிகள் பற்றிப் பேசிவிட்டோம். புதிய தலைமுறையின் உணர்திறன் வெளிப்பாடு கவிதையில், மற்றைய இலக்கிய வடிவங்களிலே தெரியப் படுவதற்கு முன்னர் தெரியவருவது இயல்பே. அது கவிதையின் அடிப்படையான பண்பு; உணர்ச்சிகள் தம்மை இனங்காட்டிக் கொள்வதில் பெரிதும் பின்தங்கு வது இல்லை.
ஈழத்துத் தமிழிலக்கியத்தில் கவிதைத்துறையில் புதிய தலைமுறையினரின் உணர்திறன் முறைமை புதுமையைச் சேரனின் கவிதைகள் எடுத்துக் காட்டின. அதற்குப்பின் வந்த புலம்பெயர் இலக்கியங்களும் (கவிதைகளும்) போராளிகளின் கவிதைகளும் (குறிப்பாக போராளிப் பெண்களின் உணர்முறைமை வெளிப்பாடுகளும்) இந்தப் புதிய உணர்திறனை ஆழப்படுத்தின.
புனைகதை வித்தியாசமான ஒரு கலை வடிவம், எவ்வளவுதான் அது மனித உணர்ச்சிகளை எடுத்துக்

Page 66
128 () பின்னுரை
கூறுவதென்றாலும், தளத்தில் அது ஒரு பகுப்பாய்வு வடிவம் (analytical form). மனித உறவுகள் அவற்றின் மாறுதல்கள், வெளிப்பாடுகள் ஆகியவற்றினை நுணுக்க மாக சித்தரிப்பது. கதைக்குள் ஒரு நோக்கு இருக்கும். அந்த நோக்கு என்பது அந்த விடயத்தினாலும், அதனைப் பார்ப்பவனாலும் தீர்மானிக்கப்படுவது. “உலக வழக்கி" லுள்ள ஒரு நிகழ்ச்சியை அல்லது நிகழ்ச்சிகளை ‘புனை கதை இலக்கிய வழக்குப் படுத்தும்பொழுது ஒரு கட்ட மைப்பு அல்லது சட்டகம் தேவைப்படுகின்றது. அந்த gCupil 9,65) LD L 15g, IT dist (organization of the material in fiction) புனை கதையினை முக்கியத்துவப்படுத்துவது.
புனைகதையுள்ளும் தருக்கப்படி இந்தப்புதிய உணர் முறைமை நாவலிலும் பார்க்க சிறுகதையிலேயே தெரிய வரும்.
இந்த வருகையின் தன்மைகள் பற்றியும், இதன் வழியாக வந்த ஆரம்ப அறுவடைகள் சிலவற்றின் இலக்கியத் தரம் பற்றியும் நான் ஏற்கெனவே 'உயிர்ப்பு' (1987) எனும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய 'பின்னுரை'யிற் கூறியுள்ளேன்.
சிறுகதைத் துறையில் 1983இல் ஏற்பட்ட புதிய உணர்முறையைச் சித்தரித்த புதிய தலைமுறையினருள் ரஞ்சகுமாருக்கு ஒரு முக்கிய இடமுண்டு.
ஈழத்து தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் ரஞ்சகுமார் பெறும் முக்கியத்துவத்துக்கான காரணம், அவர் இலங்கையில் 1983 உடனும் அதன் பின்னும் வரும் அனுபவங்களுக்கு வழக்கில் உள்ள இலக்கிய அமைவு ஆகும். இந்த இலக்கிய அமைவினுள் ஒரு புதிய தலைமுறையின் உணர்முறைமை, நோக்கு முறைமை ஆகியன பளிச்சிட்டு நிற்கின்றன.
பலர் எழுதத் தொடங்குவதும், சிலர் பிரச்சார வாடைப்பட எழுதுவதுமான இளைஞர். தீவிரவாத

கார்த்திகேசு சிவத்தம்பி () 129
எழுச்சியை ரஞ்சகுமார் இலக்கியமாக்கியுள்ள முறைமை அற்புதமானது. இங்கு ‘ஆக்கியுள்ள முறைமை நன்கு" என்று கூறுவதே பொருத்தமற்ற சொற்றேர்வு ஆகும். உண்மையில் அது "இளைஞர் தீவிரவாதம் ரஞ்சகுமார் என்ற இளம் எழுத்தாளனின் புலப்பதிவுகள் வழியாக வெளிப்படும் முறைமை' என்றே எழுதப்படல் வேண்டும். *காலம் உனக்கொரு பாட்டெழுதும்', 'கோசலை’ *கோளறு பதிகம்' என்பன இளைஞர் தீவிரவாதம். யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியுள்ள முறைமையினை யும் அதன் வழியாகத் தோன்றியுள்ள சாதக, பாதக 'அமிசங்களையும் அமரத்துவமுடைய இலக்கியப் பொரு ளாக்கியுள்ளன.
இவற்றுள் ‘கோசலை' மிகச்சிறந்த காலப்பதிவான படைப்பு ஆகும்.
யாழ்பபாணத்தின் மிகமிகச் சாதாரணமான, ஒரு குடும்பத்தின் நிகழ்ச்சிகளினுாடே, அந்தச் சமூகத்தில் மேற்கிளம்பிக் கொண்டிருக்கும் ஒரு புதிய சமூக இயக்கத், தின் முழுப்பரிமாணத்தையும் இந்தக் கதையிற் கான லாம். யார் யாரெல்லாம் இயக்கங்களிற் சேருகிறார். கள், ஏன் சேருகிறார்கள், அவ்வாறு சேர்வது குடும்ப அலகை எவ்வாறு பாதிக்கின்றது, இவற்றுக்கிடையே காணப்படும் மனித அவலம் ஆகியன எல்லாம் மனதை விட்டகலாத முறையிலே எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
1983ஐத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தச் சமூக அசைவி யக்கத்தை ரஞ்சகுமார் எவ்வாறு நோக்கின்றார் என்பது தான் முக்கியம்.
அடுத்த நேரச் சாப்பாட்டுக்கு வழியில்லாத விதவைத் தாய் இங்கு 'கோசலை' ஆகிறான, அவளின் சொந்தப் பெயரே கதையில் வரவில்லை. ராமனின் தாய் பெயர் அவள் பெயராகிறது.
ராமனையும், சீலனையும் ஒப்பிடும் இடம் (கதையின் இறுதிப்பகுதி) இளைஞர் தீவிரவாதத்தின் சமூக முக்கியத்,

Page 67
130 () பின்னுரை
துவத்தை வற்புறுத்துகின்றது. போராளிப்பையன் ராமன் ஆனால் தான் அவனது தாய் கோசலை ஆக முடியும். ரஞ்சகுமார் அந்தத் தாயை கோசலையாகவே காணுகிறான். r
இது அந்தக் கதையின் ஒரு பரிமாணமே. இன்னும் பல பரிமாணங்கள் இந்தக் கதைக்கு உள்ளன. இளைஞர் தீவிரவாதம் ஆரம்பத்தில் வளர்ந்த முறைமை, இந்த இளைஞர் தீவிரவாதத்தினுட் சிறுவர் என்ற முறைமை, அக்காலத்தில் நிலவிய பயம், திகில் ஆகியனவும், அதே வேளையில் ஒரு கிராமத்தின் ஏழைக்குடும்பம் வாழ்ந்த தன்னிறைவான வறுமையிற் செம்மையான வாழ்க்கை, அத்தகைய குடும்பங்களிலே நிலவிய மனதைக் கவ்வும் அந்நியோந்நியமான அன்புப் பிணைப்புக்கள் ஆகியன சிலிர்க்க வைக்கின்றன.
**கோசலை" என்னும் நாணயத்தின் மறுபுறமாக அமைகின்றது, ‘கோளறு பதிகம்' இயக்கங்களினூடே காணப்படும் ஒற்றுமையின்மைகள், அவை காரணமாக ஏற்படுத்தும் ஆபத்துக்கள் ஆகியன கோளறு பதிகத்தி னுாடே ஒருவிதத் திகிலுணர்வுடன் வெளிவருகின்றன.
இந்த இளைஞர்களின் தியாகம் ‘காலம் உனக்கொரு பாட்டெழுதும்' வழியாக நமது மூச்சைத் திணற வைக் கின்றது.
ரஞ்சகுமாரின் சாதனைகள் இரண்டு என்று கருது கின்றேன்- ஒன்று இளைஞர் இயக்கங்களின் எழுச்சியை, ஆரம்ப காலச் செயற்பாடுகளை சமூக உறவுகளின் உணர்ச்சிப் பின்புலத்தில் தருவது; மற்றது இவ்வாறு சமூக உறவுகளை உணர்ச்சிப் பின்புலத்திலே தரும்" பொழுது, அவற்றை நம் பண்பாட்டுக் குறியீடுகள் மூலம், அந்தக் குறியீடுகளினூடாக தெரிய வைப்பது. திறமை யுள்ள எழுத்தாளன் முதலாவதைச் செய்வது சுலபம். ஆனால் இரண்டாவதைச் சாதிப்பதற்கு அசாதாரண திறமை வேண்டும். அந்தப் பண்பாட்டினுள்ளே நின்று

கார்த்திகேசு சித்தம்பி () 131
அதனைச் சித்தரித்தல் வேண்டும். இதற்கு அகப்-புறப் பார்வைச் செம்மை வேண்டும்.
ரஞ்சகுமாரின் திறன் இந்தச்சித்தரிப்பு ஆற்றலுக் குள்ளே தங்கி நிற்கின்றது.
யாழ்ப்பாணத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்ட தமிழ் இளைஞர் இயக்கத்தை மாத்திரமல்லாது, இலங் கையின் சிங்களப் பிரதேசங்களின் சமூக வாழ்க்கைமுறை யையே மாற்றி அமைத்து விட்ட ஜே.வி.பி. இயக்கத்தின ரின் (ஜனதா விமுக்திப் பெரமுன - மக்கள் விமோசன முன்னணி) செயற்பாடுகளை ரஞ்சகுமார் தந்துள்ள முறைமை, பண்பாட்டுக் குறியீடுகளை அவர் பயன்படுத் தும் ஆற்றலைக் காட்டுகின்றது. ‘கபற கொயா' எனும் ஊர்வன வகையைச் சேர்ந்த ஜந்து ஏற்படுத்தும் பயம், அருவருப்பு, திகில் என்பன அந்தப் பண்பாட்டை அறிந்தவர்களுக்குத்தான் புரியும். ஜே.வி.பி. இயக்கத்தின் தோற்றம், செயற்பாட்டைக் குறிக்கும் தொடர்பு வன்மை யுடைய இந்தச் சிறுகதையைப் போல, சிங்களத்திற்கூட எத்தனை சிறுகதைகள் இருக்க முடியும். நிச்சயமாக அதிகம் இருக்க முடியாது.
ரஞ்சகுமாரின் உணர்முறைமையை அவரது உரை நடை மிகத்து ல்லியமாகக் காட்டுகின்றது. பொருட்களை. இடங்களை, மனிதர்களை விடயங்களை விவரிக்கும் முறைமையிலும், குறிப்பாக ஒவ்வொரு சிறுகதையையும் முடிக்கும் முறையிலும் ரஞ்சகுமாரின் மொழி ஆற்றல் தெரிகின்றது. (கோசலை, கோளறு பதிகம்).
உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தன்வயமாக்கி கொண்ட ஒருவர், தனது புலப்பதிவு நிலையில் எவ்வாறு மற்றயவற்றைப் பார்க்கின்றார். அவற்றையெல்லாம் தானே எவ்வாறு உணர்ந்து கொள்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதாக அவரது உரைநடை அமைந் துள்ளது. ‘கோசலை" சிறுகதையின் முடிவும் கோளறு பதிகத்தின் முடிவும் இதனை நன்கு காட்டுகின்றன.

Page 68
132 b பின்னுரை
இந்த இடத்திலேயே ரஞ்சகுமார் தமிழகத்தின் இன்றைய Tமுக்கிய சிறுகதை எழுத்தாளர்களான கோணங்கி. பிரபஞ்சன், ஜெயமோகன் ஆகியோருடன் ஒப்பிட வேண்டியவராகின்றார்.
இவர்கள் யாவருமே தமது மொழி நடையால், தமிழ் சிறுகதையின் உணர்ச்சிச் சித்தரிப்பு பாங்கினை மாற்றிய வர்கள். இவர்களது மொழிநடை, இவர்களது ஆளுமை களுக்குள் ஊறிப்போய் அவ்வவ் ஆளுமைகளினதும் உண்ர்வு ஆழத்தினதும் பிரத்தியேகமான அதே வேளை பண்பாட்டுச் சுகந்தம் மாறாத மொழிநடையாகும்.
து உண்மையில் வெறுமனே மொழிநடை பறறிய க விடயமல்ல. அது பார்வை முறைமை பற்றியது, *புலப்பதிவு' (Perception) பற்றியது. ஆழமாகப் பார்த்தால் கருத்து நிலைகளின் ஆழமான மனப்பதிவுகள் பற்றியது.
இந்த நடை: பேச்சு வழக்கையும், செந்தமிழ் வீச்சையும் பிரித்துப்பார்க்க முடியாதபடி இணைப்பது.
இந்த நடையில் செந்நெறி விடயங்களும் எழுதப் படலாம், கிராமியக் கதைகளும் எழுதப்படலாம். ஜெயமோகன் போன்றோர் அதைச் சாதித்துள்ளனர். (27ம் திசைகளின் நடுவே) 'மோகவாசல்" சிறுகதையில்: ரஞ்சகுமாரும் இதனையே எத்தனித்துள்ளார்.
தமிழ்ச் சிறுகதையின் FD 5 6 வளர்ச்சியில் நேற்றைய இந்தத் துளிர்கள் இன்று கிளைகளாகப் பிரிகின்றன.
தமிழ் புனைகதை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதபபடத தொடங்கியுள்ளது.
திறந்த பொருளாதாரத்தின் சர்வதேசியச் சந்தைமய்ப்பாட்டுக்குக்கூடவே இந்தச் செல்நெறி பரு முக்கியமான வளர்ச்சிப் போக்கினைக் காட்டுகின்றது.
தமிழின் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு. எமது நன்றிகள். கொழும்பு கார்த்திகேசு சிவத்தப் 27一8一1993


Page 69
சவுத் ஏசி