கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கனவின் மீதி

Page 1
s!!! :) , , ,|-| | 1siae"o"**』*』』 ------| ----+---+ +-+ --) ... . .*****』』 |-| . || ● |-
 


Page 2


Page 3

()
W.
(I
料 ଦ୍ଯୋ灰龛
%
澱 感盛
æRN.
珍つ
W
2
[ン Sジ/う
Z &ރޗި
క్తి D$ằ
グ 2
シ
乙 N
கி.பி.அரவிந்தன்
f
SV
タ
/
ܟܘܘܠܐ

Page 4

கி.பி.அரவிந்தன்
பொன்னி 29. கண்ணகி தெரு, மடிப்பாக்கம், சென்னை - 600 091

Page 5
கனவின் மீதி
கவிதைத் தொகுப்பு
C)
முதல் பதிப்பு
பக்கங்கள்
விலை
உள் ஒவியங்கள்
அட்டை
வெளியீடு
அச்சுக்கோப்பு
அச்சாக்கம்
KANAVIN MEEDH
கி.பி. அரவிந்தன்
1999, ஆகஸ்ட்
96
40
ஆதிமூலம், வீரசந்தானம், மருது
ட்ராஸ்ட்கி மருது
பொன்னி,
29. கண்ணகி தெரு,
மடிப்பாக்கம்,
ിsഞ്ഞുങ്ങ് - 600 091 gangoOTuub : www.intamm.com/nool/ponni Lé6760Té556) : ponniGintamm.com
மதர்போர்டு, சென்னை - 600 014.
மணி ஆப்செட், சென்னை - 600 005.
C) Ki. Pi. Aravindan
First Edition 1999, August
Price 40
Published by Ponni,
29, Kannagi Street, Madipakkam, Chennai - 600 091. website: www.intamm.com/nool/ponni email: ponniGintamm.com
حسن : |
கனவின் மீதி 4

அரவிந்தனின் முப்பரிமாணம்
கடல்தாண்டியிருந்தாலும் சரி, கண்டங்கள் தாண்டியிருந்தாலும் சரி அரவிந்தன் கரம்பற்றி கருத்துப் பயணம் செய்வதை யாராலும் பிரிக்க முடியாது என்பதற்குக் கனவின் மீதி நூல் வெளியீடே சான்று.
உழவர் குடியில் பிறந்த என்னை வறுமைத்துயர் ஆட்டிப் படைத்தது. அந்த காலத்தில் தஞ்சையில் அறிவுறுவோன் பேருந்து ஏற்றிவிட அரணமுறுவல் சென்னையில் ஏற்றுக்கொண்டார். ஏற்றுக் கொண்ட அரணமுறுவல் சுந்தர் என அறியப்பட்ட கி.பி.அரவிந்தனிடம் ஒப்படைத்தார். மிரள வைத்த சென்னையைப் பரிச்சியப்படுத்தியவர் பழக்கப்படுத்தியவர் அரவிந்தன் தான். இது நடந்தது 1979ஆம் ஆண்டு. அப்போது தொடக்கம் இன்றுவரை உறவு அறாத நட்பு வட்டத்தின் நெருங்கிய சொந்தக்காரர் அரவிந்தன்.
அரவிந்தனோடு ஒரே மாடியில் உறங்கியிருக்கிறோம். உறக்கமற்று பல இரவுகளில் பேசியிருக்கிறோம். அப்போது பார்த்த அரவிந்தனிலிருந்து 85ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுற்றி சுற்றி வந்து சொற்பொழிவாற்றிய அரவிந்தன் ஆற்றல் மிகுந்த பேச்சாளராக உயர்ந்து நின்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நான் வியந்து நின்றேன்.
எந்தப் பேச்சிலும் ஒரு விவாதத் தீயை மூட்டிவிடுகின்ற வல்லமை பெற்ற அரவிந்தன் '99களில் நெஞ்சை உலுக்குகின்ற கவிபுனையும் கவிஞனாக நிமிர்ந்து நிற்கிறார்.
அமைப்பைக் கட்டுகின்ற அமைப்பாளன், ஈழ விடுதலையை முன்னெடுக்கின்ற வலிமைமிக்கப் பிரச்சாரகன், புலம்பெயர்ந்து அயல்நாட்டில் வாழும்போதும் தாயகப் பிரிவை எண்ணியேங்கும் கவிஞன் ஆகிய மூன்று நிலைகளிலும் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.
தமிழகத்தில் அரவிந்தனின் கவிமனதைக் கண்டு கொண்டவர்களில் கே.எம்.வேணுகோபால் முக்கியமானவர். பதிப்பகப் பணியில் என்னை ஊக்கப்படுத்துவதில் முனைவர் இராஇளவரசு, முனைவர் சுப.வீரபாண்டியன், முனைவர் பாரதிபுத்திரன், நிலவளம் கசந்திரசேகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நந்தன் இதழில் பணியாற்ற வாய்ப்புத் தந்து பதிப்புப் பணியில் ஆர்வப்படுத்தி வளர்த்தெடுக்கும் தந்தை பெரியார் தமிழிசை மன்றத் தலைவர் திரு. நா.அருணாசலம் அவர்களை மறக்கவியலாது.
இவர்கள் அனைவருக்கும் நன்றி. கனவின் மீதி கவிதைத் தொகுப்பு வெளியிட வாய்ப்புத் தந்த அரவிந்தனுக்கும். அரவிந்தனின் நட்பு வட்டத்தினருக்கும் நன்றி.
வைகறை
5 (கி.பி.அரவிந்தன்

Page 6
வெளிநாட்டுக் கனவுகளுடன் புறப்பட்டு பயண முகவர்களின் வழிகாட்டலில் எல்லைகள் கடக்கும் முயற்சியில்
தம்முயிர் இழந்த தோழர் மகேஷ் என அறியப்பட்ட அக்கரைப்பற்று விநாயகமூர்த்திக்கும் என் இரத்த உறவினனும் தோழனுமான முகில் என அறியப்பட்ட சில்வேஸ்டர் அன்ரன் முகிலுக்கும் இவர் போன்றே உதிர்ந்து போன
அனைவர்க்கும்.
கனவின் மீதி 6
 

உலக இலக்கிய வாசற் கதவுகளைத் தட்டும் ஈழத்துத் தமிழ் இலக்கியம்
கி.பி.அரவிந்தன் கவிதைகளுடன்.
ஓர் ஆள்நிலைத் துலங்கல் (A Personal response)
கைப்பழக்கத்தில் அரவிந்தன் கவிதைகளை வாசிக்கும் பொழுது என்று தலையங்கத்தை எழுதிவிடுவேனோ என்ற பயம். இப்பொழுதெல்லாம் வாசித்தல், சுவைத்தல் என்ற பதப்பிரயோகங்கள் விமர்சனத்திலிருந்து விடுபட்டு “பாடத்தோடு
Girl TGg56)" (Interacting with the text) GT6iTug Gugsa, Tés GSL-gi.
அதில் ஓரளவு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. பாடம் வாசிப்பிலேயே பூரணப்படுகிறது. அதனுடைய உயிர் ஆயுள் எல்லாமே வாசிப்பில்தான் தங்கியுள்ளன.
தமிழுக்கு இது புதிதும் அல்ல. உண்மையில் உரைகள் என்பவை வாசிப்புகளே. (பரிமேலழகரின் திருக்குறள் வாசிப்பு - நச்சினார்க்கினியரின் பத்துப்பாட்டு வாசிப்பு - பெரிய வாச்சான் பிள்ளையின் பாசுர வாசிப்பு இன்றைய ஊடாட்டத்திலுள்ள சிக்கல் ஆக்கியோன் முக்கியம் பெறுவதில்லை என்கிறார்கள்.
எனது சக தமிழ்ப் பேராசிரியர்கள் பலருக்கு இது புதிதாக இருக்கலாம். "புலவர் எதைக் கூறுகிறார் எப்படிக் கூறுகிறார் அதிலுள்ள சிறப்புகள் யாவை" என்று நயம்பேசும் வாய்பாடு இப்பொழுது அதிகம் இல்லை.
7 (கி.பி.அரவிந்தன்

Page 7
இவற்றைக் கூறுவதற்குக் காரணம் கி.பி.அரவிந்தனை மையப்படுத்தி மாத்திரம் அரவிந்தன் கவிதைகளை மதிப்பிட்டுவிட முடியாது என்பதுதான்.
அது உண்மையே. ஆனால் அதற்காக ஆசிரியர் இறந்துவிட்டார் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆசிரியரும் வாசகரும் சந்திப்பதுதான் முக்கியம். இன்றைய கட்டவிழ்ப்பு முயற்சிகளெல்லாம் இந்தச் சந்திப்புக்கான பாதைகள்தான்.
சமஸ்கிருதக் கலை விமர்சனத்தில் 'சஹ்ருதய என்ற ஒரு கோட்பாடு உண்டு. அதாவது இருவரும் ஒரே மனத்தினர் ஆகுதல். (ச*ஹ்ருதய அப்பொழுதுதான் "இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்த" முடியும்.
கி.பி. அரவிந்தன் கவிதைகளை வாசிக்கும் பொழுது நான் என்னை வாசிக்கிறேன்.
அகதியாக இருப்பதற்கு மைல் தொலைவு அவசியமில்லை. இரண்டு மைல்களே போதும். பழக்கப்பட்ட பரிச்சயப்பட்ட மனிதர்களையும் பொருள்களையும் மண்ணையும் வானத்தையும் குடிதண்ணீரையும் கோயிலையும் இழக்க வேண்டி நேரிடும் பொழுது, இழந்து அதன்பின் தொடர்ந்து வாழுதல் வேண்டும் என்ற நினைப்பில் தொழிற்படுகிற பொழுது அகதி உருவாகிறான்!ள்.
இவையெல்லாம் நான் சொல்ல விரும்புபவை, என்னிடம் கவித்துவம் இருப்பின், கி.பி.அரவிந்தனின் கவிதைகள் ஈழத்து வடபுலத்தின் இந்தக் காலகட்டத்தின் சமூக அனுபவங்களுக்கான மறக்கமுடியாத கவிதைப் பதிகை ஆகியுள்ளன.
I
இந்த கவிதைகள் கிளறும் சோகம் தணிக்க முடியாதவையாகப் படுகின்றன. அரவிந்தனின் துயரம் எங்களின் துயரமாகிறது.
இது எவ்வாறு நிகழ்கிறது அல்லது நிகழ்த்தப்படுகிறது என்பதுதான் முக்கியமான வினா. முதலில் முக்கியப்படுவது இந்தக் கவிதைகள் தோற்றுவிக்கும் சோக, ஏக்கச் சூழமைவே.
எந்தக் கவிதையை எடுத்துக்கொண்டாலும் அந்த தொலைந்துபோன, தனித்துப் போன ஏக்கம் நன்கு தெரிகிறது. கவிதைகளின் ஊடே வருகின்ற படிமங்களால் இது சாத்தியமாகிறது. கவிதையின் ஆரம்பத்திலேயே அரவிந்தன் அந்த உணர்வுச் சூழலைப் படம்பிடித்து விடுகிறார்.
"பிடிக்கப் பிடிக்க
சறுக்குகின்றது
ஏறிய இடத்திலாயினும்
இறங்கலாமென்றால்
வழுக்கிச் செல்கிறது சரிவு,
ஏறிய இடம் எது.?" இறக்கம்)
"நகரம் குறண்டிப்போய் \ எரிவிளக்கும் நனைந்தபடி
ஒளியுறிஞ்சும் புகாரில்" (மழை)
கனவின் மீதி 8

"பேசலாமா வேண்டாமா?
நிலைகொள்ளாதாம் தராசுமுள்" விஇ$4ஃ
(மேலே உள்ள கவிதை வரிகளின் ஒவ்வொரு சொல்லி உள்ள மனப்படிமங்களை உள்வாங்கிக் கொள்ளத் தவறக் ଗ\) gib
அகதி வாழ்க்கையின் சோகம் திசையிழந்த காணப்படுகிறது. நாங்கள் திசையிழந்து நிற்கிறோம்.
"திசைகள்" என்ற கவிதையில் இது முனைப்புடன் எடுத்துக் கூறப்படுகிறது. மனிதர் மாத்திரமல்ல இலைகள், தளிர்கள், கொழுந்துகளும்தான்.
"கூடவே
ہالماI|(لیا لا
Eಜ್ಜೈ').
தளிர்கள்
கொழுந்துகள்.
எது எந்த மரத்தினிதுcேia
அள்ளுண்டவை அறியுமோ
எற்றுண்ட தம் நிலைபற்றி. (அறிதல்
அகதி வாழ்க்கை ஏற்படுத்தும் இந்த அனாதைத் தன்மை, இழப்புநிலை வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களிலும் தெரிய வந்துவிடுகிறது. "கோடை" கவிதையில் இது வெளிப்படுகின்ற முறைமை எங்களையும் கி.பி.அரவிந்தனையும் ஒன்றாக்கி விடுகிறது.
படிமங்கள் நிறைந்த நெஞ்சக் கிளறலோடு தொடங்கும் கவிதைகள் முடியும் முறைமையில் (முடிக்கப்படும் முறைமையில்) சோகம், இயலாமை, கையறுநிலை ஆகியன பற்றிய கவித்துவ மனநிலை திடீர் முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது. அல்லது படிப்படியே குமிழிகள் கிளம்ப இறக்கிவிடப்படுவதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. குறுங்கவிதையின் ஒரு இயல்பு இது. சொல்லுக்கும் அப்பாலான ஒரு நிசப்தமான ஒரு சிந்தனைக் கீற்று அல்லது சோக ஆலாபனை அதற்குள் தொக்கி நிற்கும்.
கி.பி.அரவிந்தன் கவிதைகளுக்கு இது இயல்பான பண்பாகிறது.
நாம் அரவிந்தன் ஊடாக கிளப்பிக்கொள்கிற முக்கியமான முதல் சுயசிக்கல், அடையாள்ம் பற்றியதாகும். அடையாளம் என்பதும் ஒருவகைப் பிரிவு உணர்வுதான்.
அதுவாக அதனோடு அதற்குள் இருக்கையில் அடையாளங்கள் தேவைப் படுவதில்லை. அதிலிருந்து பிரிகிறபொழுதுதான் அது தேவைப்படுகிறது. செல்லும் தூரம் கூடக்கூட அதற்கான தேவையும் கூடிக்கொண்டே போகிறது. அதுகூட மற்றவர்களுடைய தேவைக்கும் பார்க்க நாம் யாரென்ற நமது தேவைக்கே முக்கியமாகிறது. இந்த அடையாளத் தேடலின் பரிமாண மாற்றங்களை
"சொல் யாராக இருக்கலாம் நான்?" என்ற சற்று நீண்ட கவிதை மிகத் துல்லியமாகக் கொண்டு வருகிறது.
சாதி, இனம், நாடு என்பவற்றிக்கு அப்பாலே போய் நிறம் முக்கியமாகிறது.
9 (கி.பி.அரவிந்தன்

Page 8
"இனியும் என்ன சொல்வேன்
இறுதிச் சொல்லும் எனக்கில்லை எனும்போது.
அர்த்தங்கள் மாறிப்போன சொற்களும்
நம்பிக்கை தராதபோது
ஆதலால் தயை செய்து
என்னை நெருக்காதே வதைக்காதே.
நீ யாரெனச் சொல் எனக்கேட்டு. *
இது ஒரு முக்கிய கட்ட்ம். ஈழத்துத் தமிழ் அகதி என்கின்ற நிலையிலிருந்து அப்பர்லேபோய் ஒரு சர்வதேசியத்திற்குச் செல்லுகின்ற தன்மை இதில் காணப்படுகிறது. ஈழத்து அகதி வாழ்க்கையின் பிரச்ஞ்ைநிலை இன்னொரு தளத்திற்கு மாறுகிறது. இதனை மற்றைய கவிஞர்களும் பேசியுள்ளன்ர். ஆனால் இந்தத் துன்பங்களுக்கு அப்பால் உள்ள, இவற்றின் காலான சர்வதேச முதலாளித்துவம் அரவிந்தன் கைக்குள் பிடிபட்டு விடுகிறது. "அதிசயம் வளரும்" எனும் கவிதையில் அரவிந்தன் அந்த உண்மையைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார். ஈழத்துத் தமிழ்க் கவிதை பிரக்ஞை பூர்வமாக சர்வதேசியத்திற்குச் செல்கிறது.
இவ்வாறு இந்த அகதி உலகப்பொது ஆக, ஆக அவன் தன்னுள் தானே ஒளிந்துகொள்ளுகிற, தன்னுள்தானே அகவயத்தானாகின்ற, தான் தானாக இல்லாது போகின்ற ஒரு மனநிலையும் வந்து விடுகிறது. "தந்தையும் குழந்தையும்" என்கிற கவிதை இந்தக் கேள்வியை மிகுந்த வன்மையோடு பதிகிறது. 'கனவின் மீதியிலும் இது தெரிகிறது.
இந்தச் சுய உள்வாங்கலோடு யாழ்ப்பாணத்தின் நினைவுகள் இணைகின்றன.
இவனுடைய ஆற்றாமைகளெல்லாம் அந்தக் குழந்தையின் முன்னே விஸ்வரூபமெடுக்கின்றன. நூலக முன்றிலில் ஒருமாலை என்னும் கவிதையில் இந்தத் தனிமை மிகத் துல்லியமாகத் தெரிகிறது.
"விழுந்தும் கிடந்தும்
போதையில் புரண்டும்
தலைநிமிர்த்த மாட்டாமல்
உலகம் வெறுத்தும்
தன்னுள் சுருண்டும்
எனக்கொரு பாடலின்றி"
தன்னுடைய நிர்க்கதியைப் புலப்படுத்துவதற்கு அரவிந்தன் கையில் குழந்தை அற்புதமான பாத்திரமாக மேற்கிளம்புகிறது.
அந்தக் குழந்தையின் வினாக்களுள் எங்கள் வரலாறே தொக்கிக் கிடக்கிறது.
கி.பி.அரவிந்தனின் சொற்கையாளுகை பற்றிய ஒரு குறிப்பு அவசியம். தான் வழிபடும் இறைவனை உணர்ச்சிப் பூர்வமாகக் குறிப்பதற்கு "சொல்பதம் கடந்த சோதி” என்று கூறுவர். சொற்களால் கிளப்பப் பெற்று. ஆனால் அதன் பின்னர் சொற்களுக்குள் கொண்டுவர முடியாத ஒரு உணர்வுநிலை/சிந்தனைநிலை உண்டு. புதுக்கவிதையின் சொல் இந்தத் தன்மையது. சந்த நியமங்களுக்கு அப்பாலான ஒரு லயத்தை, லயிப்பை இத்தகைய கவிதைகள் ஏற்படுத்தும். கி.பி.அரவிந்தனின் கவிதைகளில் சொல்லுக்குள் வரமுடியாத உணர்வோசை கைப்பிடியாகக் கொண்டு வரப்படுகிறது.
கனவின் மீதி 10

"காற்று கொணரும்
இம் மொழிக் கரைசலினுள்
விரவிக்கிடக்கும் சோகப் பகிர்வு
மோதல் குரோதம் எள்ளல் இகழ்ச்சி
களைந்த துயரம்
பிணையப்பட்ட கட்டுமரமென
மூங்கில் குழல் கட்டு
வடிக்கும் இசைநாதத்தில் மிதக்கின்றது
செவ்விந்தியர் பாட்டு
மூங்கில் பேசப்பேச
தோல்மேளம் கொட்டக் கொட்டி
மூச்சு முட்டுகின்றது
துயரம் உடைகின்றது"
நூலக முன்றிலில் ஒரு மாலை)
மனோதர்மவளம் மிக்க சங்கீத வித்வானின் ராக ஆலாபனையின் உச்சநிலையில் வரும் தம்புரா சுருதியுடனான நிசப்தம் போல் இந்தச் சொற்கள் அந்த அனுபவம் தெரிந்தவனை மேலே மேலே கொண்டு செல்லும்.
(ஏற்கனவே தீர்மானிக்கப்படாத லயம் புதுக்கவிதையின் பெரிய ஆஸ்தி)
III
கி.பி.அரவிந்தனுக்கு மாத்திரம் நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரேயானால் அவருடைய வாசகர் வட்டம் நிச்சயம் விரியும்.
ஒரு நாட்டில் வாழுகின்ற ஒரு இனத்திலுள்ள ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன்.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் உலக இலக்கிய வாசற்கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது.
'கனவின் மீதி ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. எங்கள் அண்மைக்கால வரலாற்று அனுபவங்களுக்கான உதாரணம்.
சமூக அனுபவங்கள் ஆழ அகலமாகி கீழ்நோக்கிச் சென்று உயிர்க்குலையைப் பிடிக்கும் பொழுது மறக்கமுடியாத கலை இலக்கியங்கள் தோன்றும். இது உலகப் பொதுவிதி.
ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை.?
பார்த்' எதையும் சொல்லட்டும். நல்ல கவிஞர்கள் என்றும் வாழ்வார்கள்.
56.99 கார்த்திகேசு சிவத்தம்பி வருகை தரு பேராசிரியர்,
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,
தரமணி, சென்னை.
11 கி.பி.அரவிந்தன்

Page 9
கனவின் மீதி 12
 

உயிரொடியும் ஓசை
இத்தொகுப்பின் அனைத்துக் கவிதைகளையும் படித்து முடித்தபின் எழுகின்ற உணர்வுநிலை கலவையானது. அதில் துயரத்தின் அழுத்தமும் சூன்யத்தின் வெறுமையும் எதிர்ப்பின் தகிப்பும் கலந்துள்ள விகிதத்தைப் பிரித்தறிய முடியவில்லை. கைபிசைந்துகொண்டு, உதிரும் கண்ணீரையும் துடைக்க மறந்துவிடத்தான் நேருகிறது.
8 e : 蛟纷 @@ 砂登
ஒரு கவிதை வளரும் கனாக்கள், துயிலாத நான் இரண்டு கனாக்களைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை.
"இறந்து படும் சூரியன்
அலையடங்கும் தொலைகடலில்
வெளிறிவரும் ஆழ்நீலம்.
கரை நக்கும் நுரையின் நுனியில் குருதி
குருதிக்குள் துருத்தும் முலைக்காம்பு
மிதக்கும் துடுப்பைப் பற்றிய பாதிக்கை
எரிந்த பாய்மரத்தண்டில் கருகிய மயிர்.
கடலூதிப் பருத்த முண்டத்தில் வடியும் ஊனம்.
கொட்டிக்கிடக்கும் கடவுளரின் கண்கள்.
அகவய எதார்த்தவாதம் (Surealism) என்றழைக்கப்பெறும் பாணியிலான இக்கவிதையை மேலைநாட்டு ஓவியங்களில் நிறையக் காண முடியும். முதல் உலகப்போரின் விளைவாய் உடைந்து சிதறிய சமூக அமைப்பும் உருக்குலைந்த உறவுகளும் விளைவித்த நம்பிக்கை இழப்பும் அச்சமும் விரக்தியும் ஏற்படுத்திய மன உளைச்சலால் கனவுகள் இனிமையற்றும் பயங்கரமாயும் இருந்தன.
"நான்
என் காலணிகளைக் கவ்வும் சர்ப்பங்களை
இழுத்துக்கொண்டு." என எழுதினார் பெளதலேர் (Baudelaire)
இன்று 20ஆம் நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சமுதாயத்துள் இக்கவிதையின் வரவு எப்படி நேர்ந்தது?
இந்தக் கனவுக்காட்சியின் சொற்களிடை பயணம் செய்தால் இது ஏதோ ஒரு தனிமனிதனின் மனப்பிராந்தியல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. அஸ்தமிக்கும் சூரியன், கடலின் ஆழ்நீலம், இரையும் அலை, பாதிக் கை, பருத்த முண்டம். - --
இவையனைத்தும் நனவு மனதிலிருந்து நனவிலிக்குள் நழுவிப்போய் புதைந்து கிடப்பனவல்லவா? எலும்புக்குள் அச்சத்தைச் செருகி நடுங்கச் செய்த விகாரக் காட்சிகளின் வெளிப்பாடுகளல்லவா?
13 கி.பி.அரவிந்தன்

Page 10
இத்தகைய மனதைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற ஒருவன் தூங்கிவிட முடியுமா? இரவெல்லாம் புரண்டு களைத்து, எரிகின்ற விழிகளோடு படுக்கையில் அமர்ந்து அரண்டு வெறிக்கும் நாள் ஒன்றே ஒன்றாக இருந்துவிட இயலுமா?
நம்மால் பார்த்தறிந்து விடமுடியாத இந்த பீதியோடு உலகெங்கும் நொறுங்கிக் கிடக்கும் இதயங்களின் ஒற்றை நாவாகச் சொற்களை உதிர்த்துக் களைக்கின்றது. கி.பி.அரவிந்தன் கவிதை.
மீண்டும் இங்கே பதியப்பட வேண்டியதில்லைதான் அந்தத் துயரம். ஏறத்தாழ, கடந்த இருபது ஆண்டுகளில் மரணத்தின் செய்தி சுமக்காத காற்றில்லை. எத்தனை விதமான சித்திரவதைகளை வரலாற்றின் பக்கங்களில் கதைகளைப் போல் படித்தோமோ அவை கண்ணெதிரே நேர்ந்தன. மிதிக்கப்பட்ட குழந்தைகளும் அழிக்கப்பட்ட பெண் களும் துளைக்கப்பட்ட இளைஞர்களுமாக. கண்டுகண்டு மூர்ச்சித்துக் கிடக்கிறது பூமி.
உயிரற்றுச் சாயும் உடல்களைக் கண்டு கலங்கி ஓடுகின்றவர்களைச் சூழ்ந்து ஆர்ப்பரிக்கும் கடலலைகள்
"சாயும் பக்கம் சாய்ந்தபடி
அல்லோல கல்லோலமாய்
பயணிகள் தத்தளிப்பில்
சாவின் வீச்சு அலையில்
சுழித்து வரும் காற்றில்
திடமற்ற மனதில்
ஒரே பக்கமாய்ச் சாயாதீர்கள்
கூவுகிறான் தண்டேல்
சுக்கானைப் பிடித்தபடி"
மிதந்து மிதந்து ஒதுங்கிய கரைகளில் யாரும் யாரையும் ஆரவாரத்துடன் வரவேற்றுவிடவில்லை. அங்கே அவர்களுக்கு வேறுபெயர்; வேறு தகுதி, தனதென்று ஏதுமற்ற புதிய சூழலில் வேறுவகையாக இருக்கின்றன சித்திரவதைகள், பறவைகள் கூடச் சொந்த ஊர்ப்பெயரால் அழைக்கப்படும் சொற்கள் அவர்களைக் காயப்படுத்து கின்றன.
"இனியும் என்ன சொல்வேன்
இறுதிச் சொல்லும் எனக்கில்லை எனும்போது.
ஆதலால்
தயை செய்து
என்னை நெருக்காதே வதைக்காதே
நீ யாரெனச் சொல்' எனக் கேட்டு."
என்று குமுறுகிறார்கள்.
"விழுந்தும் கிடந்தும்
போதையில் புரண்டும்
தலைநிமிர்த்த மாட்டாமல் ,
உலகம் வெறுத்தும்
தன்னுள் சுருண்டும்
அந்நியமாவனோ
எனக்கொரு பாடலின்றி.
கனவின் மீதி 14

பனிதாங்கும் பைன்மரங்களைப் பார்க்கப் பிடிக்காமல் ஒற்றைப் பனைத் தோப்பை எண்ணியும் செர்ரிப்பழங்கள் சுவைக்காமல் கனியுதிர்த்து நிற்குமந்த சிறுநெல்லி மரம் நினைத்தும் வெடித்துவெடித்துச் சீழ்கட்டும் நெஞ்சு.
கலைகள் உண்மையைத் தேடுகின்றன அல்லது கண்டடைந்து சொல்லுகின்றன. அத்தனை வடிவங்களும் இந்த வாழ்க்கையின் அடிமுடியைத்தான் தேடுகின்றன. வாழ்க்கை எது என்பதுதான் வற்றாத கேள்வி: சுட்டெரிக்கும் கேள்வி. பொருட்கள் வாழ்வுக்குப் புறக்காரணிகள். அவை பயன்கொள்ளத் தக்கனவன்றி நிறைவுகொள்ளத் தக்கனவல்ல. அதனால்தான் எந்த மண்ணில் இருந்தால் என்ன? எந்த மொழியால் மொழிந்தால் என்ன? எந்த உணவை உண்டாலென்ன? என்றெல்லாம் இருந்துவிட முடிவதில்லை. தனதென்னும் உரிமையும் விடுதலையுமே ஆன்மாவைச் சமாதானப் படுத்துகின்றன. எத்தனை குறைபாடுகளிருந்தாலும் அவற்றிற்காக எதனையும் இழக்கத் துணிகிறது இதயம்.
தன் ஆன்ம நிறைவைத் தேடியும், தன் சகமனிதர்களுக்கு அது இல்லையே என ஏங்கியும் எழுகின்ற விசும்பலின், கண்ணீரின், அரற்றலின், சினத்தின் வார்த்தை களாகவே அரவிந்தனின் அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன. தான் இழந்தவை தாம் தான் என்று கண்டுகொண்ட தகிப்பில் சொற்களாகக் குமைந்து வெடிக்கின்றன.
தமிழகத்திலும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்கள் பற்றிப் போராட்டங்கள் எழுந்துள்ளன. அவற்றைச் சார்ந்து படைப்பாளிகளும் தோன்றியுள்ளனர். ஆயினும் ஈழப் படைப்பாளிகளின் இலக்கியங்கள் நம்மைப் பல்வேறு வகைகளிலும் திடுக்கிடச் செய்துவிட்டன. அதற்குக் காரணமிருந்தது. இரத்தம் சிந்துவதை எழுதுவதற்கும், இரத்தம் சிந்திக் கொண்டே எழுதுவதற்குமான வேறுபாட்டின் விளைவு அது. தமிழ்ச் சமுதாயம் கண்டிராத இராணுவ ரீதியிலான அரசியல் படுகொலைகளும், இன அழிப்பும், மொழியழிப்பும், பண்பாட்டுச் சிதைப்பும் அவர்களது படைப்புகளுக்குப் புதிய கருக்களையும் புதிய மொழியினையும் புதிய வேகத்தினையும் வழங்கியுள்ளன. அது கண்ணீராயினும் ஆர்த்தெழும் சினமாயினும் புதிய வடிவங்களில் தெறிக்கின்றன. தமிழ் வாசகர்களுக்கு அன்னிய மண்ணில் பிழைத்து அடையாளமிழக்கும் நெஞ்சத்தின் இடிபாடுகளைக் காணும் புதிய உள்ளடக்கச் சுவையினையும் தமிழ்க் கவிஞர்களுக்கு எளிய பதங்களில் உணர்ச்சிகளைப் பொதித்துத் தரும் இலாவகத்தினையும் வழங்குவன கி.பி.அரவிந்தன் கவிதைகள்.
தேசிய இன ஒடுக்குமுறை பல்லாயிரம் உயிர்களைப் பலிகொள்ளும் மண்ணிலிருந்து வெளிவரும் அரசியல் கவிதைகள் விடுதலைக்கான போராட்ட உணர்வை உரத்து முழங்குகின்றன. தமிழகம் சந்தித்த அரசியல் கலை வடிவங்களிலும் பல பரிமாணங்களில் வேறுபட்டதாகவும் ஆற்றல்மிக்கதாகவும் ஈழக் கவிதைகள் முகிழ்த்தன. அவை இதழ்களில், நூல்களில் மட்டுமன்றிச் சுவரொட்டிகளிலும் அஞ்சலி நோக்கில் எழுதப்பட்ட உரைகளிலும் அறிக்கைகளிலும் இடம்பெற்றன. இவையனைத்தும், தேசிய விடுதலை என்பதை வெறும் அரசியல் சுதந்தரம் சார்ந்ததாக, பொருள் மீட்புச் சார்ந்ததாகப் பார்க்காமல் மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகள், ஏன்? வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் அசைவிலும் விடுதலை இருப்பதைப் பேசின.
15 கி.பி.அரவிந்தன்

Page 11
போராளிகளும் போராட்டத்திற்குத் துணைநிற்கும் படைப்பாளிகளும் - அவர்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் - காதல் கவிதைகளையும் விடுதலையோடு இணைத்துள்ளனர். அப்படைப்புகள் 'மானுடன் தன்னைக் கட்டிய தளைகளெல்லாம் சிதறும் போதுதான் மனிதம்' என்பதே சாத்தியம் என உணர்த்தின; எத்தகைய வெளிப்பாட்டு முறையில் நின்ற போதிலும் உலகெங்கும் உள்ள இதயங்களுக்கு நம்பிக்கைகளை எடுத்துச் சென்றன. அரசியல் கவிதைகளைப் பற்றியிருந்த செயற்கைப் பண்புகள் உடைபடுவதற்கும் தங்களது தனித்துவம் மிக்க குரலை இலக்கியத் தளத்தில் கவித்துவம் மிளிரப் படைப்பதற்கும் இன்றைய போர்ச்சூழல் தந்துள்ள உணர்ச்சி வேகமும் உலகம் முழுவதிலிருந்தும் படைக்கப்படும் இனவெழுச்சிக் கலைவடிவங் களின் அறிமுகமும் பயன்பட்டுள்ளன.
ஈழக் கவிதைகளுள்ளும் அரவிந்தனின் இத்தொகுப்புத் தனித்தன்மை பெறுவது இவ்விடத்தில்தான். இத்தொகுப்பு ஒடுக்குமுறைக்கெதிரான நேரடிப் போர்க்குரலாக அமையாமல், ஒடுக்கப்பட்ட ஆன்மாவின் துயர ஒலியாகவே பெரும்பாலும் அமைந் துள்ளது. இது அன்னிய மண்ணில் வாழ நேர்ந்து, சொந்த மண்ணை எண்ணியெண்ணி ஏங்கும் ஏக்கத்தின் குரல். இது போராட்டத்தைப் பற்றியதல்லாமல், போராட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதும் ஆத்திரத்தைக் கிளறுவதுமாகும்.
தன் உயிரில் நின்றழும் உணர்வுகளுக்கு வடிவம் தருவதில் படி, பயணம். திசை, மலர், சருகு, காற்று, அலை யெனப் பழகிய பொருட்களையே பயன்படுத்தியிருப்பினும் அவற்றைப் புதிய வகைகளில் படிமங்களாக்கியுள்ளார். இவை வெறும் வாழ்வின் சிக்கல்களைச் சொல்வதாக இல்லாமல் அரசியல் வடிவம் கொள்வதற்குப் படைப்பாளி யின் வாழ்வுக் களங்களும் காலமும் காரணங்களாகின்றன.
தம்மைப் பயிலும் நெஞ்சங்களுக்கு ஒற்றைக் கேள்வியை இக்கவிதைகள் முன்வைக்கின்றன :
"குழந்தை தோளில் சரிகிறது
நெஞ்சுள் ஏதோ குமைகிறது
நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி."
மடிபற்றி எழுகிறது கேள்வி"
உண்மைதான். நமக்காக மட்டுமன்றி நம் தலைமுறைகளுக்காகவும் போராட வேண்டும் என்ற வரலாற்றுக் கடமையை உணர்த்தி வீறுகொள்ளச் செய்கின்றன இக்கவிதைகள்.
உண்மையே அலங்காரமாகி நிற்கும் கவிதைகளைப் படைத்த கி.பி.அரவிந்த னுக்கு வாழ்த்துச் சொல்வதும் அவற்றை நம் கைகளில் வழங்குகின்ற வைகறைக்கு நன்றியுரைப்பதும் பண்பு.
சென்னைக் கிறித்தவக் கல்லூரி பாரதிபுத்திரன் தாம்பரம் - 600 059 19.6.1999
கனவின் மீதி 116

என்றென்றும் அன்புடன்.
இது எனது கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு: 1991ம் ஆண்டு மார்ச் மாதம் இனி ஒரு வைகறை என்ற முதலாவது தொகுப்பும் 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் முகம் கொள் என்ற இரண்டாவது தொகுப்பும் வெளிவந்திருந்தன. ஆறாண்டு காலத்தின் பின் கனவின் மீதி என இத்தொகுப்பு வெளி வருகின்றது. இது தொகுக்கப்பட்ட நிலையிலேயே நல்லதொரு நூல் வெளியீட்டாளரை எதிர்பார்த்து நீண்டநாட்கள் காத்திருந்தது. தேர்ந்த நூல்களை வெளியிட்ட தமிழியல் சார்பாக இதனை வெளிக்கொணர நட்பார்ந்த முறையில் திரு. பத்மநாப ஐயர் விரும்பி இருந்தார். ஆயினும் அவருடைய ஓயாத பணிகளுக்கு இடையே மேலும் சுமையைத் தர விரும்பவில்லை. எனவே அவருடைய விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அத்துடன் இத்தொகுப்பை ஈழத்தில் இருந்து வெளிக்கொணரவும் விரும்பியிருந்தேன். அங்கிருந்து வெளிக்கொணர நண்பர்கள் யாரும் தயாராயிருக்கவில்லை. ஆதலால் மீளவும் சென்னையில் இருந்தே வெளிவருகிறது. ஒருவகையில் கவலைதான். அதனைச் சமன் செய்வதுபோல் ஈழத்தின்பால் நேசங்கொண்ட நெடுநாளைய தோழரும், நந்தன் வழி இதழின் பொறுப்பாசிரியருமான நண்பர் வைகறை அவர்கள் தனது பொன்னி பதிப்பகத்தால் இக்கவிதை நூலை வெளியிடுகின்றார். அவர்தான் எனது முதல் கவிதை நூலான இனி ஒரு வைகறையையும் வெளியிட்டவர். எனது இரண்டாவது தொகுப்பை யும் அவர்தான் வெளியிட்டிருக்க வேண்டும். கடிதங்கள் கோபமூட்டிகளாய் மாறியபோது, நட்பில் ஏற்பட்ட தொய்வு கனவின் மீதி தொகுப்பின் மூலம சீராக்கப்படுகின்றது.
இத்தொகுப்பிலுள்ள அநேகமான கவிதைகள் நண்பன் வரன் அவர்களை வெளியீட்டாளராகக் கொண்டு, திரு முகுந்தனுடன் இணைந்து என்னால் தொகுக்கப்பட்ட மெளனம் காலாண்டிதழிலும்; நோர்வே நாட்டிலிருந்து வெளிவந்த சுவடுகள் மாத இதழிலும், கனடா நாட்டிலிருந்து வெளிவந்த 'சக்தி' வார இதழிலும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் ஈழமுரசு வார இதழிலும், லண்டனிலிருந்து வெளிவரும் தமிழர் நலன்புரிச் சங்கத்தின் ஆண்டு மலரிலும் வெளிவந்தவை. இவற்றில் நூலாக்கத்திற்கென என் வாழ்க்கைத் துணைவி சுமத்திரியால் திரட்டியவற்றை ஒருசேர மீளப்படித்த போது பலவற்றைச் செப்பனிட நேர்ந்தது. சிலவற்றை இருவரும் தள்ளிவிட்டோம். இப்போது தொகுப்பு ஓரளவு திருப்தி தருகின்றது. இப்படைப்புகளின் கரு மையங்கள் அவற்றின் உருவடிவங்கள் எல்லாம் ஒரே தரத்துடனும் செய்நேர்த்தியுடனும் கவித்துவத்துடனும் விளங்குகின்றன என்பதே மிகச்சரியானது. அவை எழுதப்பட்டுள்ளனவா அல்லது செய்யப்பட்டுள்ளனவா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ۔۔۔۔
இத்தொகுப்பிற்கு கனவின் மீதி எனத் தலைப்பிட்டது பல்வேறு வகைகளில் பொருத்தமானது என்றே கருதுகின்றேன். எழுபதுகளின் பின்னான எங்கள்
17 கி.பி.அரவிந்தன்

Page 12
புலப்பெயர்வுகள் தனியே அரசியல் சார்ந்தது என்பது எங்களில் சிலரின் வசதிக்குரிய காரணமே தவிர அது அவ்வாறானதல்ல; உண்மை வேறானது என்பது எனதெண்ணம். அது வெளிநாடென்று படித்த குழாத்தினரால் வளர்த்தெடுக்கப்பட்ட லண்டன் கனா ஒன்றினதும் தொடர்ச்சியேயாகும். ஆதலால் லண்டன் கனா ஐம்பது விழுக்காடும், அரசியல் ஐம்பது விழுக்காடும் என்பதே மிகச் சரியானது. பிரித்தானியாவுக்கு வெளியே ஐரோப்பிய புலத்தில் வாழ நேர்ந்துள்ள பலரும் இன்றைக்கும் லண்டன் செல்லும் தவத்துடன்தான் வாழ்கின்றனர் என்பதையும் இதனுடன் பொருத்திப் பார்க்கலாம். அந்த லண்டன் கனா அறுபடா வண்ணம் இன்றுவரை அரசியல் முண்டுகொடுத்து நிற்கின்றது என்பதுதான் உண்மை. இன்றிந்தப் புலப்பெயர்வுத் தாயகப் போராட்டத்தின் முன்னெடுப்பிற்குப் பல்வேறு வகைகளில் கைகொடுத்து உதவுவதும், எங்கள் சமூகத்தின் பெறுமானத்தை விருத்தியுறச் செய்துள்ளதும் நல்ல அம்சங்களாகும். இதனை ஒரு பாவ விமோசனமாகவும் கொள்ளலாம். அந்த லண்டன் கனாவும், அரசியல் போராட்டமும் உமிழ்ந்த எச்சங்களாகவே இந்தப் புலம் பெயர் வாழ்க்கையை நான் புரிந்து கொள்கின்றேன். அந்த மீதிகளை உள்ளீடாகக் கொண்டவையே இப்படைப்புகள்
அறுபதுகளின் இறுதிப்பகுதியில் முகிழ்ந்த ஒரு தலைமுறையின் எழுச்சியுடன் என் கனவுகளும் பின்னிப் பிணைந்திருந்தன. அத்தலைமுறை எழுச்சிக்கு சிறிலங்கா அரசின் தரப்படுத்தல் என்னும் கல்விக் கொள்கைதான் காரணமென்பது ஒற்றைப்பரிமாண நோக்காகும். அவ்வெழுச்சியானது அரசமைப்பு அவ்வரசமைப்பின் உட்சாரமான இனவாதம் ஆகிய புறநிலைத்தாக்கங்களில் மட்டுமல்லாது. சமூக அமைப்பின் உள்நிலை முரண்களினதும் அழுத்தங்களினதும் வெளிப்பாடுமாகும். பல ஊற்றுக்கண்களின் கசிவுகளில் இருந்தும், சொட்டுச்சொட்டாய்த் தேங்கிய அவமானங்களின் ஆழ்மனப்படிவுகளிலிருந்தும், மடைஉடைத்த வெள்ளந்தான் அந்தத் தலைமுறை எழுச்சி. அதன் பன்முகப் பரிமாணம் ஆய்வாளர் பலராலும் புரிந்து கொள்ளப்படவில்லை. அதனால்தான் அந்த எழுச்சியின் உச்சநிலைப்புள்ளி எதுவரையானது என்பதை யாராலும் இதுவரை கணித்துக்கூற இயலவில்லை. தவறுகளும், தவறுகளிலிருந்து படிப்பினைகளும், படிப்பினைகளினூடான முன்னெடுப்பு களும் அந்த எழுச்சியை, ஓர் இலக்கினை நோக்கி நகர்த்துகின்றன. அர்ப்பணிப்பும், ஆற்றலும், இன்னுயிர்த் தியாகமும், உறுதியும், சளைக்காத போர்முறை ஓர்மமும் கொண்ட தலைமையொன்று அவ்வெழுச்சியினைப் பொறுப்பெடுத்து நம்பிக்கையுடன் முன்னெடுத்து செல்கின்றது. அது வெற்றியை நோக்கியே நகர்கின்றது. இந்த நம்பிக்கை மட்டும் நாள்தோறும் என்னுள் வளர்ந்து வருகின்றது. இதில் நான் எங்கு நிற்கிறேன். என் பங்களிப்பு என்ன என்பது பற்றியதான கேள்விகளை எப்போதும் என்னுள் எழுப்பிய வண்ணம் உள்ளேன். ஏனெனில் புறத்தியானாக எட்டி நிற்கவும் முடியாது: பொறுப்பற்றவனாக நடந்துகொள்ளவும் முடியாது. இந்நிலையில் அணில் சுமந்த மண்ணளவாயினும் என்னால் ஏதும் செய்ய முடிந்துள்ளதா? என்னும் உறுத்தல் என்னை அலைக்கழிக்கின்றது. அப்படியிருக்க எவ்வகைக் காரணங்களால் நான் தேசந் துறந்த வனானேன். இப்படி தனித்த பயணியாகிப் போனேன். இன்னும் சொல்வதானால் கானல் நீர்க் கனவுகளுக்கும் அதன் மீதிகளுக்கும் எப்படி நானே சாட்சியமாகிப் போனேன் என்பவை எல்லாம் இப்படைப்புகளில் உள்ளனவா நான் அறியேன். ஆனால் அச்சாட்சி யங்களாகவே, ஒருதேசம் துறந்த தவிப்பாகவே இப்படைப்புகள் இருக்கின்றன என்பதை நீங்கள் உணர்வீர்களாயின் அவற்றைப் படைத்தவன் எனும் வகையில் சிறிது மகிழ்ச்சியே.
கனவின் மீதி 18

தேசம் ஒன்றைத் துறந்து விடுதல் என்பது அத்தனை எளிமையானதொன்றல்ல. இது எனக்கு மட்டுமேயான தனித்த பிரச்சனையுமல்லத்தான். வரலாறு முழுவதும் ஊர் துறத்தல் மனித சமூகத்தின் விதியாகச் செயற்பட்டு வந்தபோதும் எல்லாச் சமூகமும் இவ்வியல்பு விதியைச் சொல்லொணா வலியாகவே கருதி வந்துள்ளது. தமிழ்ச் சமூகமும் ஊர் துறந்து. உலகெங்கும் கொத்துக் கொத்தாய்ச் சிதறி வலிகளுடன் வாழ்வது இன்று நேற்றல்ல. தமிழ்ச் சமூகத்தின் ஒரு தொகுதியான இலங்கைத் தீவின் சமூகத்திற்குள்ளதும் அந்த வலிதான். அந்த வலிகளே இன்று அச்சமூகத்தின் வலிமையாக மாற்றம் பெறுகின்றது என்பது மறு விளைவு. இந்த நூற்றாண்டின் பின் கால்நூற்றாண்டுப் பகுதியில்தான் எங்களின் ஊர்துறத்தல் வேகம் பெற்றது. ஒரு தேசம், இன்னும் சொல்லப் போனால் ஓர் ஊர் என்பது வெறுமே கல்லாய், மண்ணாய், மரஞ்செடி தோப்பாய், ஊமையாய் நிற்குமாப்போல் இருந்தாலும் மனிதரை வாழ்விக்கும் உயிர் அணுக்கள் அவைதான். ஆதலால் ஓர் ஊர் என்பதனை நம்வாழ்வின் தொன்மம் என்றே கருது கிறேன். அத்தொன்மத் தொடரை யாராலும் அறுத்துவிட முடியாது. அந்த ஊரென்னும் குறுஞ்சூழல் படிவுகளிலேயே ஒவ்வொரு மனிதரும் வார்க்கப்படுகின்றனர். அங்கிருந்தே அவர்தம் உலகமும் வளர்கின்றது. அந்த ஊருக்கு அந்நியமாகாமல் அதன் நேசத்திற்குரிய மகனாக இருத்தல் எல்லோருக்கும் வாய்த்ததொன்றல்ல. எந்த மனிதரும் இறுதி நாட்களில் தம் ஆணிவேர் தொட்டு நிற்கும் அந்த ஊரினைச் சென்றடையவே விரும்புகின்றனர். இது எனக்கு வாய்க்குமா நான் அறியேன். இந்த தவிப்புடனேயே நான் அலைந்து கொண்டிருக்கிறேன் பலரையும் எழுதத் தூண்டிய அந்தத் தவிப்பே என்னையும் எழுதத் தூண்டுகின்றது. எழுத பல்வேறு வடிவங்கள் உள்ளதாயினும் கவிதையென நான் கருதும் இவ்வடிவமே எனக்கு வசதியாக அமைந்துவிடுகின்றது.
கவிதையை இலக்கிய வடிவங்களின் உச்ச வடிவம் என்கின்றனர் கற்றறிந்தோர். அதனால்தான் அவர்கள் கட்டுரையை, கதையை, படித்ததும் இது கவிதையைப்போல் இருந்தது. கவித்துவமாக இருந்தது என விதந்துரைக்கின்றனர். எனது இத் தொகுப்பில் உள்ள பல கவிதைகளின் கருக்கள் கட்டுரைகளாகவும், கதைகளாகவும், நாவல்களாகவும் விருத்தியுறும் வாய்ப்புகள் கொண்டிருப்பதனை நீங்கள் உணரக்கூடும். இக்கருக்களை சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களில் சொல்வதற்கு என்னால் இயலாமல் போய்விட்டது. அதற்காக இவை கவிதைகள் இல்லையென நீங்கள் கூறுவீர்களாயின் அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. ஏனெனில் நாரினில் பூத்தொடுக்கின்றேன். அது பூக்களை விற்பதற்கு அல்ல என்னும் அழகியல் கோட்பாட்டை எனக்கு நானே வகுத்துள்ளதனால்தான் இலக்கியத்தில் அழகியல் என்பது ஒரு கருவி மட்டுமே என்பதனை என்னைக் கவர்ந்த இலக்கியங்கள் எனக்கு கற்றுத் தந்தள்ளன. அவை தந்த பாடங்கள்தான் இப்படைப்புகள்.
இப்பக்கத்தில் மேலும் மேலும் புலம் பெயர் வாழ்வு பற்றி நான் பேசுவதைத் தவிர்க்கவே விரும்புகிறேன். ஏனெனில் எனது படைப்புகள் அவை பற்றித்தான் பேசுகின்றன. ஆதலால் மேலும் தொகுப்புகள் பற்றியே சிறிது பேச விரும்புகிறேன். அதிலும் முதலிரு தொகுப்பினிலும் நான் எதுவும் பேசவில்லை. அத்துடன் அதில் யாருக்கும் நன்றி தெரிவிக்கவுமில்லை. அந்தக் கடமைகளை இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். அவ்வகையில் என் கவிதைத் தொகுப்புகளுடன் ஈடுபாடு கொண்டவர் கள் என்றதும் ஓவியர் மருது அவர்கள்தான் நினைவுக்கு வருகின்றார். ஏனெனில் எனது மூன்று தொகுப்புகளிலும் தொடர்ச்சியாக அவரது கைவண்ணம் படிந்துள்ளது. முதலாவது தொகுப்பிற்கு அவர் முகப்போவியம் வரைந்தார். இரண்டாவது தொகுப்பிற்கு
19 கி.பி.அரவிந்தன்

Page 13
உள்ளீடாகச் சில கவிதைகளுக்கான ஒவியங்கள் வரைந்தார். தற்போது இந்தத் தொகுப்பிற்கு முகப்போவியமும், உள்ளீடான ஓவியங்களும் வரைந்துள்ளார். அடுத்து என் நினைவிற்கு வருபவர் எனது இரண்டாவது கவிதை நூலான முகம் கொள் தொகுப்பினை வெளியிட்ட தமிழக - ஈழ நண்பரும், மருத்துவ அறிவியல் மலர் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியரும் என் அன்பிற்குரியவருமான சமாபன்னீர்செல்வம். இந்தத் தொகுப்பில் அவருடைய கைபடாத போதும் தொடக்கத்தில் அவர் தயாராக இருந்தார். அவருக்குள்ள வேலைப் பளுவினிடையே எனது தொகுப்பின் பணி சுமையாக அமைந்துவிடுமென நான் கருதியதனால், அவரின் உதவியை என்னால் பெறமுடியாமல் போயிற்று. இவருடன் அக் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய அறிவுவாதிகளான வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை அவர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது. முகம் கொள் கவிதைத் தொகுப்புக்கு மதுரையில் வெளியீட்டு விழா நடத்திச் சிறப்பித்தவர் தமிழக - ஈழ நண்பரும், உடன்பிறவா சகோதரருமான இரா.திரவியம். எனது அந்த இரண்டாவது தொகுப்பான முகம் கொள் வெளிவந்த போது புலம் பெயர் நாடுகளில் பல நண்பர்கள். தோழர்கள் தம் சொந்த வெளியீடு போன்று பல முனையிலும் ஒத்துழைப்பு வழங்கி யிருந்தனர். பிரான்சில் எனது நீண்ட நாளைய நண்பன் நல்லையா, கொடி, கமுகுந்தன், சிமனோகரன், யேர்மனியில் ஜெமினி, சுவிஸில் திலக், நோர்வேயில் சுவடுகள் நண்பர்கள். இலண்டனில் வளவன், பாலஸ்கந்தர், கைலாஷ், நவநீதன், அருட்குமரன் கனடாவில் ஜெயபால். இப்படி இன்னும் பலர். ஆண்டுகள் பல கடந்த நிலையில் இவர்கள் என் நன்றி கூறலை ஏற்கமாட்டார்களாயினும் நன்றி மறப்பது நன்றன்று.
அடுத்து புலம் பெயர் வாழ்வில் எனக்குக் கிடைத்துள்ள அருமையான பல இள நண்பர்களில் ஒருவனான கவிஞன் தா.பாலகணேசனை அவனது துணைவியை நினைவில் கொள்கிறேன். இத்தொகுப்பைச் சாத்தியமாக்கியதில் முன் நின்றவர்கள் அவர்கள்.
எனது கவிதைகள் கூறும் புலம் பெயர் வாழ்க்கையின் நெருக்கடிகளில் கரைந்துவிடாமல் என்னை துலங்கச் செய்வதில், என் ஆன்ம உயிர்ப்பைப் பேணுவதில் சலிப்புறாத நண்பனும் தோழனுமான வரனுக்கு என் முதல் மரியாதை,
முகமறியா நிலையிலும் நண்பர் வைகறையின் வேண்டுகோளுக்கிணங்க இத்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் பாரதிபுத்திரன் ஆகியோருக்கு நூலாசிரியன் எனும் வகையில் எனது நன்றிகள். இக்கவிதைத் தொகுப்பில் தங்கள் ஒவியங்கள் இடம்பெறும் வகையில் ஈடுபாடு காட்டிய ஓவியப்படைப்பாளிகளான ஆதிமூலம், வீரசந்தானம் ஆகியோருக்கு என் நன்றிகள். அத்துடன் இத்தொகுப்பை அழகுடன் வடிவமைத்த நண்பருக்கும் என் நன்றிகள். எல்லாவற்றிற்கும் மேலாக இக்கவிதைத் தொகுப்பின் வெளியீட்டாளர் வைகறைக்கு.
என்றென்றும் அன்புடன்
கி.பி.அரவிந்தன்
11.06.1999 தொலைபேசி - தொலைநகல் : 33-1-3450 6256 மின்னஞ்சல் : kipianofree.fr
kipianGhotmail.com
கனவின் மீதி ) 20

༔2
S0 dir...
உலக இலக்கிய வாசற் கதவுகளைத் தட்டும்
ஈழத்துத் தமிழ் இலக்கியம்
உயிரொடியும் ஓசை
என்றென்றும் அன்புடன்
Llq
இறக்கம்
திசைகள்
தூதுரைக்கும் பருவம்
மழை
அழகியல்
நான்
அறிதல்
சமநிலை
தரிசிப்பு
வகுப்பு
சொல். யாராக இருக்கலாம் நான்?
வயல்
பறவையும் பாடலுமாய்
இருப்பு
சுழல
காணாமல் போவோர் பற்றி
வராது போயிற்று காண்
விலகும் தொலைவில்
வளரும் கனாக்கள் துயிலாத நான்
தந்தையும் குழந்தையும்
நூலக முன்றிலில்
அதிசயம் வளரும்
கோடை
மதியம்
கனவின் மீதி
முளைப்பாய்
வரும் வழியில்
அழைப்பு
மொழிவுகள்
நெல்லியும் உதிரும் கனிகளும்
21
Lansa கி.பி.அரவிந்தன்

Page 14
22
கனவின் மீதி
 

LJI.
படிகளில் நான் ஏறும்படியில் ஒருதடவையும் இறங்கும் படியில் மறுதடவையுமாய் பதட்டத்துடன்
உயிர்ப்பிண்டங்கள் பிதுங்கும் நியான்ஒளி கசிந்த தரிப்பிடத்தில் திரும்பும் முகம் ஒவ்வொன்றிலும் சாக்களை
676@
சாறு உறிஞ்சித் துப்பும் நிறமற்ற சக்கைகள் காணும் முகமெல்லாம் கலங்கல்.
ஒடியும் துரத்தியும் பிடிபடாமல் போமோ வாழ்க்கை நெரிசலின் சுழற்சியில் உதறப்படுவேனோ நானும்.?
உருளும் படிகளின் வேகம் போதாததனால் போலும் என்னையும் முட்டி மோதி பாய்ச்சலில் கடக்கின்றன உருக்கள் திசையற்ற ஒருமுகமென.
வெளிச்ச அணைவுக்குள் கணங்கள் தோறும் ஒவ்வோர் ஒலியின் உதிர்விலும் ஏதேனும் அடையாளச் சிதறல் நிகழும் போலும்
23 கி.பி.அரவிந்தன்

Page 15
ւմlգւյԼյlգԱյո& ஏறி இறங்குவதுதான் பயணம் மாறிவழி போகாதவரைக்கும்.
ஏறவா..? இறங்கவா..? பதிலுக்காய் உள்முகமாய்த் திரும்புகிறேன்.
இன்னமும் படிகளில் நான்
இளவேனிற்காலம், 1996
கனவின் மீதி 24

இறக்கம்
பிடிக்கப் பிடிக்க சறுக்குகின்றது.
ஏறிய இடத்திலாயினும் இறங்கலாமென்றால் வழுக்கிச் செல்கிறது சரிவு
ஏறிய இடம் எது.?
நின்றேறிய இடத்திற்கும் கீழுமா இத்தனை இருட்டாழம்.? அல்லது அங்கேதான் ஏறினேனா..?
அழுகையும் விம்மலும் குழ்ந்த ஏழேழு நிறத் துக்கமும் படிவுகளான மெளன இருட்திட்டு.
ஒரு தீக்குச்சி உரசலே போதுமாய் இருந்திருக்கும் ஏறாத சிகரமெல்லாம் துலங்க ஏறி இறங்க
இது இருக்க உயரவே பார்த்தேனே ஏறினேனே சுற்றும் முற்றும் பாராமல்
அது சரி இறங்கும் படி இல்லாமல் எதற்கு நீ ஏறினாய்.?
இருட்டின் இறுக்கத்தில் நசிந்ததோர் குரல். "
இளவேனிற்காலம், 1996
25 கி.பி.அரவிந்தன்

Page 16
திசைகள்
காலைச் சூரியனுக்கு முகம் காட்டி நின்றால் புறமுதுகில் மேற்கிருக்கும்.
இடக்கைப் பக்கம் வடக்கு வாடைக்காற்று தழுவும்.
வலக்கைப் பக்கம் தெற்கு சோழகம் பெயரும்.
வாடை, சோழகம் கச்சான், கொண்டல் என்றே திசைகள் உணர்த்தும் காற்றின் பெயர்கள்.
அன்றைக்கு அம்மா சொல்லிடும் எளிமையில் திசைகள் துலக்கமாய் இருக்கும்.
இப்போவெல்லாம் திசைகள் எனக்கு துலக்கமாயில்லை.
பெயர் சொல்லும்படியான காற்றுகளும் ஏதுமில்லை
வீசுவது புயலெனத் தெரியும் புயலுக்குண்டா திசை? அதனிடை நான் இல்லாததால் வெளியில் நின்றபடி திசைகளைத் துலக்கும் ஒரோர் தடவையும் முயற்சியில் தோற்கிறேன்.
அவை தொலைந்திருக்குமோ?
கனவின் மீதி 26

ஏன் இந்த சந்தேகம் வடக்கிருந்து புறப்பட்டவன் நான் என் நினைவு சொல்கிறது.
தெற்கிருந்து வருகிறாய் நீ குளிர் வலையத்தில் எதிர்கொள்பவர் சொல்கின்றனர்.
எங்கிருந்து வந்தேன் எத் திசையில் செல்கிறேன்? என் விந்தணுவில் முளைத்தவையும் குரலெழுப்புகின்றன எத்திசையை முகங்கொள்வது?
எனக்குச் சொல்லித்தர அம்மாவுக்கு இலகாயிருந்தது என் குழந்தைகளுக்குச் சொல்லித்தர எனக்கோ முடியவில்லை.
அம்மாவின் எளிமை எனக்கில்லை. ஒரேவொரு தடவை எழுவான் திசையை யாரேனும் சுட்டுவீராயின் சுடரும் விடியல் சூரியனுக்கு முகம் காட்டி நிற்பேன். திசைகளைக் கண்டு கொள்வேன். குழந்தைகளுக்கும் அறிவிப்பேன்.
27 கி.பி.அரவிந்தன்

Page 17
தூதுரைக்கும் பருவம்
வரும் வழமைதானாம். ஆனாலும் என்னே சீற்றம்? பிடரிசிலிர்த்த கடுகதிப்புரவியாய் மரங்களிடை ஏறி அலைந்திடும்
29/
ஊளையிட்டபடி.
மண்டிக்கிடக்கும் மாடித் தொடரிடை சூழ்ந்து துழாவி யன்னல் செட்டைகளை செவிப்பறையதிர ஓங்கி அறைந்திடும் அது
உலுப்பியபடி.
அள்ளப் புழுதிஇல்லையால் பழுத்து விழுந்ததை சருகானதை ஒத்திப் பறித்த பச்சை இலைகளை வாரிச் சுருட்டி இடம் பெயர்ந்திடும் அது
திசையற்றபடி.
முகத்தில் மோதி மயிர்க்காலைச் சிலுப்பி தூசுப்படலத்தை உள்ளுறிஞ்சி சட்டெனச் சுழித்து என்னில் கொட்டும் /5/قیسی
எதிர்பாராதபடி.
அலையும் சுழிப்பு வீச்சிழக்கும். நளின நெளிப்பில் அழகு காட்டும் அவ்வேளையில் விழிகளை உருட்டியபடி சபிப்பேன்.
சனியன் பிடித்த காற்று.
மீதி 28

ஆனால் இந்தக் காற்றிடமும் காற்று அள்ளிய தூசுப்பட்டாளத்திடமும் தொக்கி நிற்கிறது பருவத்தின் தூது.
முடிவுறுவது கோடை வசந்தமாம் வரப்போவது பனிக்குளிராம் கூடவே இருளுடன். தயார்தானா நீங்கள்.?
செப்டம்பர் 1993, பாரிஸ்.
29 கி.பி.அரவிந்தன்

Page 18
மழை
நகரம் குறண்டிப்போய் எரிவிளக்கும் நனைந்தபடி ஒனியுறிஞ்சும் புகாரில் போர்வையாகும் நீர்மை, உசும்பும் காற்றில் இலையுதிர்க்கும் மரங்கள் பரிதவிக்கும் எனைப்போல். வானம் பூமியுடன் புணரும் தருணம் போலும் விந்தென கசிந்து வழிந்து பொழிகின்றது மழையாய் நனையாத ஆடையுள் மறைந்து திரியும் மனிதருள் இந்த மழையை ஏன்தான் நான் நோக்குகிறேன். கானல் நீர் தேடி பாலையாகிறவன் நான் அழகுறுமோ மழைநாள் எனக்கு. அடிபிய்ந்த என் சப்பாத்துள் சளசளப்பாய் நாசமாய்ப் போன மழை. குதித்தோடும் மழைநாள் ஊரில் வெறுங்கால் வெறும்மேல் சில்லிடப் பூக்கும்
நிலம். அந்தமழை எப்போது விடும் என்னை.?
seðl. 1994, Lisrflsso.
கனவின் மீதி 30

31 |கிபி.அரவிந்தன்

Page 19
அழகியல்
நாரினில் பூத்தொடுக்க மாலை வரும்.
மாலையில் பூவுதிர நாரிழை எஞ்சும்
நாரினைக் கடைவிரித்தால் கொள்வாரும் உளரோ
தேடிப் பலவண்ணத்தில் பூக்கொய்யலாம்
நாளின்றேல்.!
என்னிடத்தே நாருண்டு எப்பூவையும் நான் தொடுப்பேன்
ஆனால் அது பூக்களை விற்பதற்கல்ல.
கனவின் மீதி 32

33 கி.பி.அரவிந்தன்

Page 20
நான்
தெறிக்கின்றேன் ஒளிக்கதிர்களாய் உங்கள் கண் கூச நான் கண்ணாடியுமல்லன்.
மறுபதிப்பாகின்றேன் எழுத்துக்களாய் உங்கள் வேர் கிளற புத்தகமுமல்லன்.
ஏற்றப்படுகின்றேன் அகல்விளக்குகளாய் உங்கள் உள் ஒளிர நான் நெருப்பனுமல்லன்.
நீங்கள் உள் நானும் நான் உள் நீங்களும் உங்கள் சொல்போல் நானும் நான் போல் நீங்களும் ஒன்றுள் ஒன்றாகி ஒன்றொன்றும் ஒன்று இல்லாகி மானிட உருவாகி நானெனும் நாங்களாகி.
இளவேனில், 1993
கனவின் மீதி 34

அறிதல்
வீசும் திசைக்கு அள்ளிச்செல்லும் சிலபல வேளையில்
மகரந்தம் காவும் வேறொரு நேரம் திசைமாறி விரையும்
அண்டங்கள் கண்டங்கள் துழாவித் துருவும் பேதங்கடந்த காற்று அது ஏதுமது அறியாது அக்காற்றில் அள்ளுண்டு வருகின்றன மரத்தில் செத்ததும் வாடி உதிர்ந்ததுமான சருகுகள்
கூடவே
ஒத்திப் பறிபட்ட பச்சை இலைகள்
தளிர்கள்
கொழுந்துகள்.
எது எந்த மரத்தினது.? அள்ளுண்டவை அறியுமோ எற்றுண்ட தம்நிலை பற்றி.!
O இலையுதிர் காலம், 1995
35 கி.பி.அரவிந்தன்

Page 21
கனவின் மீதி 36
 

சமநிலை
காற்றும் கடலுமாய் திசையற்ற வெளி
அலையினில் புரள்கின்றது ஒரு சிறு படகு
எதிர்வின்றி இசைவாயும் சாய்ந்தோடி அலையேறியும் பயணம்.
சாயும் பக்கம் சாய்ந்தபடி அல்லோலகல்லோலமாய் பயணிகள் தத்தளிப்பில்
சாவின் வீச்சு அலையில் சுழித்து வரும் காற்றில் திடமற்ற மனதில்
ஒரேபக்கமாய்ச் சாயாதீர்கள் கூவுகிறான் தண்டேல் சுக்கானைப் பிடித்தபடி
37 கி.பி.அரவிந்தன்

Page 22
38
கனவின் மீதி
 

தரிசிப்பு
ஆளுருவும் இல்லை வசீகரமும் இல்லை இருந்தும்
கண்ணாடி முன்நான்
தலைமுடி கலைந்திருந்தால் சீர்செய்ய முகம் அழுக்காகியிருந்தால் துடைக்க
அதுமட்டுமல்லாது என்னுள் நான் உற்றுப்பார்க்க மனக் கண்ணாடி முன் எந்நாளும்
கைகுலுக்குவதற்கும் முதுகு சொறிவதற்கும்
9j6ᏓᎧᎧᎧfᎢ1Ꮭ6Ꭷ நெருப்பினை மூட்டுவதற்காய்.
39 கி.பி.அரவிந்தன்

Page 23
வகுப்பு
வகுப்பேற்ற நிகழ்வு களைகட்டும் பள்ளி
கலை விஞ்ஞானம் வர்த்தகம் அவரவர் மாறியாக வேண்டும் துறை சார்ந்து
பிரிக்கப் பட்டாயிற்றென்னும் பிரிவுத்துயரில் நண்பர்
ஒரே வகுப்புக்கு மாறலாம் நீயும் நானும் ஆவல் கொப்பளிப்பில் புரியாமை இடரிடும்
கலை ஆர்வலர்க்கு வர்த்தகப் பிரிவு சுமைதான் துறைசாராத ஒவ்வொன்றும் சிதம்பரச் சக்கரம்தான்
நட்பெனப்படுவது யாதெனில் வகுப்பினுள் தேங்கித் தேயாமல் துறைசார்ந்து ஆற்றலாய் மிளிர்தல் அதன் பின் மோகித்தல் சக்தியாய் ஒன்றித்தல்
வகுப்புகள் பிரியினும்.
கனவின் மீதி 40

சொல் யாராக இருக்கலாம் நான்
சொல்
இலகானது என்றா நினைக்கின்றாய்? நீ யாரெனக் கேட்டால் பதில் சொல்வதற்கு.
எனக்கோ அச்சொல் இலகற்றதாயிற்று
இப்படித்தான் நான் தமிழனென்றேன் ஒருமுறை.
பெருமிதச் சொல்லில் சப்பளிஞ்சு போனது முகம்
மூக்குடைந்து பல்கழல காய்ந்து போனது இரத்தம் சொற்குட்டில்.
எளிய சாதிப் பயல்களுக்கெல்லாம் என்னடா தமிழ்.?
அதுவும் சரிதானே
ஊரின் புறத்தே ஒதுங்கி இருக்கவும் அடிமை குடிமையாய் ஊழியஞ் செய்யவும் ஊழியத்திற்காகவே புசித்திருக்கவும் விதிக்கப்பட்டோர்க்கு என்ன தமிழ்.!
மாடாய் கழுதையாய் இருந்திருக்க வேண்டாமோ கைகளின் பாத்திரம் மாறாமல் எனக்குத்தான் புரியாமல் போயிற்று
41 கி.பி.அரவிந்தன்

Page 24
தமிழனேன்
இலங்கையன் எனச் சொல்லென்பாயா! போர் என்றால் போர் எனப் பிரகடனமாகி நாட்பட்டு போயிற்றே அந்தச் சொல்லும்.
நீ அறியாயா! சமாதானம் என்றால் சமாதானம் - என ஆகியிருக்கலாம்தானே என்கிறாயா?
பெருவிருட்சமதில் படர்வதனால் உயிர்வாழும் செடிகொடிகள் தேசிய இனங்கள் இதுதானென்று சொற்களாலும் அறுக்கப்பட்டாயிற்று
சமாதானமும் இலங்கையனென எஞ்சிய பகல்கனாவும் என்ன செய்யலாம்!
மனிதனெனச் சொல்லிவிடலாம்தான். ரொம்பவும் சுலபம்தான்.
ஆனால் புருவ உயர்வின் நெற்றிச் சுருக்கத்துள் சிறுக்கும் விழியின் நெருக்கத்துள் தொக்கி நிற்கிறதே நிறம்
தள்ளுதே புறம்.
மூடுபனி வலயம் நீங்கி எந்தனுரர் பற்றைக்காடு தேடி வந்து வந்து மீள்கின்றன எல்லைகளில்லா பல்வகைப் பறவைகள் சைபீரியன் டக் எனவாய் தம்சொந்த ஊர்ப் பெயர்களுடன் அடையாளத்துடன்
ஆனால் பார் எனக்கிட்ட பெயரோ அகதி அரசியல் அகதி வெளிநாட்டான்.
கனவின் மீதி 42

, பாரிஸ்.
என்னை நெருக்காதே வதைக்காதே
நீ யாரெனச் சொல்
இலைதுளிர் காலம், 1994
எனக்கேட்டு.
இறுதிச் சொல்லும் எனக்கில்லை எனும்போது
அர்த்தங்கள் மாறிப்போன சொற்களும் நம்பிக்கை தராதபோது
இனியும் என்ன சொல்வேன்
ஆதலால் தயை செய்து
S乡
Q
N
དེ་ནི་ང་སེང་དང་
AVNş
43 கி.பி.அரவிந்தன்

Page 25
丝
 
 
 

வயல்
விதைப்புக்கும் காலம் உண்டு
காலம் தப்பாத உழைப்பு வேண்டும் விதைத்தால்தான் உயிர் ஒம்பும் உழைப்பின் கடினம் வியர்வையாகும்
விளையும் விதை பயிராகும் விளைந்ததைக் களை மூடக்கூடும்
களைபிரிக்கத் தெரியவேண்டும் தயங்காததை அகற்ற வேண்டும்
பயிர்கொல்லிகளும் மொய்க்கக்கூடும் கிருமிநாசினி வகைதெரிந்து தெளிப்பானாயும் மாறவேண்டும்
கதிர்முற்றும் பயிர் தேடி காட்டு விலங்கும் புகக்கூடும் பரண் வேண்டும் இருட்டு விழி வேண்டும் பொறி அமைக்கும் மதி வேண்டும் பொறியில் அகப்பட்டதை கச்சிதமாய் பதனமிடும் கலையும்அறிய வேண்டும்
இத்தனைக்கும் நெஞ்சிலுரம் வேண்டும்
வயல் காக்கும் ஓர்மம் வேண்டும் அறுவடை உணவாக
உயிர்வாழ
உயிர்களிடத்தே
அன்பு செய்ய.!
தைப் பொங்கல், 1994, பாரிஸ்.
45 கி.பி.அரவிந்தன்

Page 26
பறவையும் LL- 6ջյաnան.
தமிழின் புதுக்கவியாளர் எடுத்தியம்பும் பீனிக்ஸ் பறவையுமல்ல
பாலையும் நீரையும் பிரிக்குமாமென பழந்தமிழ் கூறிடும் அன்னப்பறவையுமல்ல இது
வசந்தத்தை எதிர்பார்க்கையில் கூவெனக் கூவி குயிலாகி
மழைமேகம் காண்கையில் தோகை விரித்தாடி மயிலாகி
துணைக்கு இணை தேடுகையில் குரல் இரங்கிக்கேவி செண்பகமாகி
ஒன்றாய் கூட வேண்டுகையில் காவெனக் கரைந்து காகமாகி
எடுத்துரைக்க நேருகையில் கேட்டதைச் சொல்லி கிளியாகி
உறவற்று தொலைவுறுகையில் தூதுரைக்கும் புறாவாகி
இரைக்குக் காத்திருக்கையில் ஒடுமீனோடி உறுமீன் வரும்வரை ஒற்றைக்கால் தவத்தினில் காத்திருக்கும் கொக்காகி
நீலவான் பெருவெளியில் கட்டறுத்த பாடலுடன் தடம்பதிக்கும் பறவை இது
கனவின் மீதி 46

கி.பி.அரவிந்தன்
47

Page 27
2 பறந்து செல்லும் தடங்களில் இடறிவிடும் விண்கற்கள்
உதிராது முறியும் சிறகுகளில் படியும் அமிலச் சேறுகள் பருவம்மாற்றி இழைத்த கூட்டில் குடியேறும் கோட்டான்கள்
அடைக்கு இட்ட முட்டைகளைக் கவர்ந்து செல்லும் பாம்புகள்
எஞ்சியது சிலதும் கூழ்முட்டை அதனெதிரும் பாழ்வெட்டை குரல் வற்றியும் போயிற்று நீர் வார்ப்பார் எவருமிலர் இருந்தும் களைக்காதாம் இது
3 கால மழைச்சிதறலில் தோன்றிச் சுடரிடும் வானவில்
ஞானச் சிறகசைப்பில் திறந்துகொள்ளும் ஊற்றுக்கண்
வண்ணங்கள் வடிவங்களை வாரி இறைக்கும் ஐம்பூதங்கள்
வாழ்வுப் பெருஞ்சுழிப்பினுள் குமிழியிடும் அன்பு நுரைப்புகள் இவற்றிடை முக்குளித்து முக்குளித்து தேக்கத்திலும் இயக்கத்திலும் உருமாற்றம் கொள்கின்றது
உயரனழுந்து உன்மத்தமாகி ஊழிக்கூத்தின் ஒத்திகைபோல 6ջՕ5 ւյս յbւմ0606)JԱյTսն ஓங்காரப் பாடலாய் மீள இசைக்கிறது அது
1994 கோடை
கனவின் மீதி 48

இருப்பு
குளிர் சிரிக்கும் தோற்றுக் கொண்டிருப்பது தெரியாமல்
மரங்கள் எதிர்கொள்ளும் தயங்காமல் தங்களை நட்டுக்கொள்ளும் தலைகீழாய் பட்டுப்போன பாவனையாய்
பணியாய் படிந்து நளின அழகில் பரிசோதிக்கும் குளிர்
பின்வாங்கல் வேருக்குள் சூரியன் வரும்வரை.
49 கி.பி.அரவிந்தன்

Page 28
சுழல்
1
புகை அடைந்து களிபடர்ந்திருந்தது முகட்டுக்கூரை
எரிந்தணைந்த கொள்ளி விறகுகளில் பழுத்தநெருப்பு
இனி மெல்லத்தான் பூக்கும் சாம்பல் அடுப்புக்குள்
சிம்னி விளக்கில் சட்டியைத் துழாவி அம்மாதான் சொதிவிடுவா.
சோறும் சொதியும் பிசைந்த குழையலாய் கசியும் சொற்கள்
ஐயாதான் சொல்வார் எனது கஸ்டம் என்னோட போகட்டும்'
பார்வையில் ஒழுகும் மீதி
அவங்களுக்காகத்தானே சாமஞ்சாமமாய் நெருப்பில் வேகிறன்' சலித்துக்கொண்டாவோ நெக்குருகினாவோ எதுவாயினும் அம்மாதானே நொய்ந்து போகிறா.
2 எழுத்துண்ட கிறக்கத்தில் கண்ணயர்ந்தால் பாயில் தலையணையில் ஐம்பொறித் துவாரங்களில் ஊர்ந்து அரிக்கும் புத்தகப் பூச்சிகள்
அச்செழுத்தும் இலக்கமும் மலக்கழிவிலும் போதாதற்கு இவன்களை நல்லா படிக்கச்சொல்லு" வாய்ப் புலம்பல் யாரினதோ
கனவின் மீதி 50

அம்மாதான் அணைத்திருப்பாவோ முனகலை மூடாதாம் இருட்போர்வை எல்லாம் எல்லாம் பட்டத்தில் தொங்கி காற்றில் மிதவென.
3 காற்றெனைக் கைவிட்ட இக்கரை மீதினிலே உங்களைத்தான் நினைத்திருக்கேன் ஐயாவே அம்மாவே. நீவிர்சுமந்த துன்பச் சிலுவைகளை என்றன் கைக்குத் தரமறுத்தீர்
அவையெல்லாம் தொலையட்டுமென்றோ பட்டங்களில் தொங்கெனச் சொன்னீர்
வானில் என்னை ஏற்றியும்விட்டீர் இங்கெதுதான் தொலைந்தது காலநிலைதான் மாறியது ஐயாவே அம்மாவே. இவைகளை எல்லாம் வெளியே சொல்லாதீர்
ரூபாயால் அளக்கும் உயரமட்டமும் வெள்ளையர் தேச இருப்பு மகிமையும் குறைஞ்சு போய்விடும்
மலிஞ்ச கூலியாய் அடிச்சுக் கொடுக்கிறேன் பொலிஞ்ச கூலியை உறிஞ்சிக் கொள்கிறான் தோலைத் தள்ளி சுளையை முழுங்குகிறான் அதெல்லாம் போக முன்னம் நாளில் நம்ம ஊரில் வேலைக்கார அடிமைகள் தேடி தோட்டக்காட்டில் பிள்ளை பிடித்த பெரியவளவு ஆண்டைகளெல்லாம் அடிமை குடிமை கூலிகளாய் நாளும் பொழுதும் பெருமை பொங்க.! கோள்களும்தான் சுழல்கின்றது.
O
51
கி.பி.அரவிந்தன்

Page 29
காணாமல் போவோர் பற்றி.
மகனே மகளே என் உதிரத்துதித்தோரே எங்கே தான் சென்றீர் என்னையேன் மறந்தீர் என்ன குற்றம் செய்தேன் எனதரும் பிள்ளைகாள்
நெல்மணிக் கதிர்களாய் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேனே கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய்
நினைக்க நினைக்க இனித்தேனே
பரவைக் கடல்தனில் நீர் எறிந்த வலைகளில் மீன்பாடாய் இருந்தேனே
கடலடித்தள மேடைகளில் வண்டல் படிவுகளில் வளங்களாய்த் திரண்டேனே
வரஞம் நெஞ்சாங்குழிக்கு வருடும் சுருட்டுப் புகையானேனே
பனையாய் தென்னையாய் கற்பகதருவெனவாய் நிமிர்ந்தேனே,
முற்றத்து நிலவின் தண்மையாய் வேப்பங்காற்றின் இதமாய் சித்திரை வெயிலில் நிழல் தோப்பாய் மழைதூறிக் கிளம்பும் புழுதி மண் மணமாய்
மக்காள். தஞ்சம் கேட்டுப் போனிரோ
கனவின் மீதி 52

என்னில்தான் குற்றமென்று பஞ்சம் பிழைக்கப் போனிரோ
எட்டுத்திக்கும் சென்றோரே மகிமைகளைக் கைகழுவி அழுக்குகளைக் காவினிரோ
சொல்லுங்கள் தோற்றுத்தான் போயிற்றோ தமிழ் இன்பத்தேனென பாய்ந்த நும்காதும்
தந்தையர் நாடென்ற பேச்சில் சக்தி பிறந்த நும் மூச்சும்
நும் தொப்புள் கொடியின் விருத்திகளில் படிந்த எந்தன் முகச்சாயலும் எல்லாமும் எல்லாமும் போயிற்றா உங்களிடம் கவலைதான் மக்காள்
காணாமல் போனவை பற்றியே கவனம் எவர்க்கும் மிகுமாப்போல பெருங்கவலைதான் எனக்கும் சென்றவர்கள் வந்தடைவீரென்றே பொறுத்திருக்குமோ எந்தன் அடிவயிற்றுக் கனம் காயங்களெல்லாம் கருமையங்களாகி நாளாயிற்று
மக்காள் ஒளிப்பிழம்பை பிரசவிப்பேன் உங்களைக் காணாமலே என்ன செய்யப் போகிறீர்கள்
இனி
-مستحسـيـسـ இலை துளிர்காலம், 1994
53 | கி.பி.அரவிந்தன்

Page 30
வராது போயிற்று காண்.
ஆட்காட்டி குருவிகளும் அறியாமல் என்புகளும் நசிந்த அந்த ஆதங்க இறுக்கத்தின் போது ஒளியிழந்ததே அந்த பிறைநிலவு
பனங்கூடலின் இருட்டொதுக்கில் உன்னிதழ்கள் என்னில் பதிகையில் வெள்ளிகள் உலர்த்தி கிடந்ததே ஒலை நீக்கலிடை ஒரு துண்டு வானம்
கொடிப்பந்தலிட்ட முற்றத்தில் ஊரடங்கிய சாமத்தில் நாம் அணைந்தெரிந்த தாபத்தில் பிய்ந்துதிர்ந்ததே அந்த மல்லிகை இதழ்
மற்றவர் கண்கட்டி விரல் முகர்ந்து விழியுள் பிணைந்த இளஞ்சூட்டில்
நீ பருகத் தந்த தேநீர் கரைசலிடை தேயிலையுடன் நசிந்த அக்கிண்ணம்
வராதநாளில் வந்துசேரும் மடல்களில், மையாய் கசிந்து நீ நெகிழ்கையில் என்முத்த எச்சில் படிந்ததே அக்காதல் தாளின் கிழிசலொன்று
இப்படி A. ஒரு பிறை நிலவு ஒரு துண்டு வானம் ஒரு பிய்ந்த இதழ் ஒரு நசிந்த கிண்ணம் ஒரு கிழிசல் தாள் கறள் கட்டியும் உருக்குலைந்தும் இறைபடும் சேற்றிடை துரத்தியபடி
| கனவின் மீதி 54

55 கி.பி.அரவிந்தன்

Page 31
இதையெல்லாம் பொறுக்கியெடுக்கவும் அடையாளம் கண்டு அசைபோடவும் எனக்கு இலகுவாய் வாய்க்கையில் வராது போயிற்று காண் புள்ளியாய் நெருடிய உந்தன் முகம் புள்ளிகள் தேடி அவிந்து போன நீ
கனவின் மீதி 56

விலகும் தொலைவில்
GustavimuDIT Gau6øóTL muot? நிலைகொள்ளாதாம் தராசுமுள்
வணக்கம் நான்தான்'
புருவநெரிவினுள் சிக்குண்டது ஒருகணந்தானானாலும் வறுத்தெடுத்த வதைதான் அப்பாடா.
அலைந்த வெளியில் என்விழியை முறித்துச் சென்ற ஒருபுள்ளி
நீள்சுற்றுப் பாதையோரத்திலே மெளனம் பொய்க்கும் ஒருபொழுதில்
மீளவும் எந்தன் எதிர்முகமாய் சுருங்குண்ட குழிக்குள்
கூர்மழுங்கிய விழி
கணியாது வதங்கிய காயாய் ஆனாலும் இக்கணமும் பார்வையில் கசிகிறது சொல் அறுக்கும் முன்னான அக்கனிவுக் காதல்.
இன்னும்தான் உதிர்கின்றன பூக்கள் அக்கட்டுக்குலையாச் சிரிப்பில் கனவெரிந்த மேட்டினில் பூக்கின்றதோ பட்டிப் பூ?
ஒதுங்கலாமா குடைக்குள் நாம் மழை விடும் வரையில்.?
57 கி.பி.அரவிந்தன்

Page 32
வேண்டாம் நாம் ஒரேகுடைக்குள் நனைந்தாலும் குடையைச் சுருக்கிக் கொள்வதுதான் சரி குடையால் நாம் விலகாமல்
தெருவெல்லாம் தாழ்வாரம் விலகியும் ஒதுங்கலாம் அங்கே நாம் நனையலாம் மழைபொழியும் அழகில்
வா. பேசலாம் விலகும் நம் தொலைவிலும்.!
O இலையுதிர் காலம், 1993, பாரிஸ்.
கனவின் மீதி 58

வளரும் கனாக்கள் துயிலாத நான்
முதலாம் கனா இறந்துபடும் சூரியன் அலையடங்கும் தொலைகடலில்
வெளிறிவரும் ஆழ்நீலம்
தேங்கிய குட்டையில் பாசிப்பச்சையாய்
நிரைகுலைந்து இரையும் அலை அறுபட்டசேவலின் செட்டையடிப்பென
கரைநக்கும் நுரையின் நுனியில் குருதி குருதிக்குள் துருத்தும் முலைக்காம்பு
மிதக்கும் துடுப்பைப் பற்றிய பாதிக்கை எரிந்த பாய்மரத்தண்டில் கருகியமயிர்
இறுக்கிக் கவ்வும் சிவப்பாடையில் சடலம் கடலூதிப்பருத்த முண்டத்தில் வடியும் ஊனம்
பிளவுபட்ட கபாலத்துள் வட்டெழுத்துக்கள் நரம்புப்பின்னலில் அஃதோர் சாதிப்பெயர்
மாமிசத்தை உண்டு செரிக்கிறது அரசமரம் ஒடிந்த கிளையிலும் வெட்டுப்பல்
தந்தப்பிடியிட்ட வாள்தனைச் சுழற்றிடும் சிங்கமுதுகில் மதயானையின் சவாரி
மனிதம் மேவாத விலங்கின ஆடலில் வெளிக்கோட்டில் ஆடுபுலி ஆட்டம்
கதைகதையாம் காரணமாம் என
நாட்டுவளப்பம் கூறும் கிணற்றுத் தவளைகள்
பாம்பின் நாக்கென முன்முனை ஆட மீன் வாலுடன் நீச்சலடிக்கும் பேனா

Page 33
VC
கனவின் மீதி 60
 
 

கள்ளியும் நாகதாளியும் கற்றாழையும் மடல் விரித்துப் பரப்பும் நிழலில்.
"சிறு நண்டுமணல் மீது படமொன்று கீறும்"
எழுவான் கரையில் தனியனாய் நான்
இரண்டாம் கனா விழுந்து கிடக்கும் வானம் புல்வெளி மடங்கும் மலையிடையில்
மங்கிவருகின்றது பயிர்ப்பச்சை காய்ந்த கதிரின் செம்மஞ்சளாய்
தேவதச்சர்கள் தேவதைகளுடன் புணர்ந்துலவ கொட்டிக்கிடக்கும் கடவுளரின் கடைக்கண்கள்
தங்கத்தால் வார்த்ததெருக்களிலிடையே பிளாட்டின தூண்களில் தூங்கும் தாரகைகள்
காவித்துகில் போர்த்தபடி அலையும் உரு மயிர்த்திரையுள் முகம் புதையும் ஜீசஸ்
நேரகாலம் அழிந்தழிந்து கொழிக்கும் பணம் உருகி ஒழுகும் கடிகாரம்
வளர்கின்ற கட்டிடங்களில் முளைத்த கால் கணுக்கால் எலும்பில் பொறித்திருக்கும் பூர்வீகம்
பொழியும் அமில மழையுள் கரையும் இயற்கை மொட்டைக் கொப்புடன் மூளியாய் மரங்கள்
அச்சில் பதிந்துவரும் பத்துவீதக் கறுப்பாய் வெண்பனிப் பரப்பில் படரும் குருட்டுநிலவு ஒலிவ் கிளைகாவி நோவாவுக்கு அமைதிசொன்ன ւմDIT பனிப்பரப்பில் தலைகுப்புற குண்டடிக் காயத்துடன்
ஒலிவ் இலைக்காம்புகள் ஒவ்வொன்றிடையும் சீறும் அணு ஒலிவ் இலைக்காம்பிடையும் சீறும் கந்தகப்புகையில் உயிரினச் சுத்திகரிப்பு
61 கி.பி.அரவிந்தன்
y

Page 34
அகோரப்பசியில் அலைகின்றன டைனோசர்கள் அவை சப்பித்துப்பிய எச்சங்கள் புளித்தகாடியுள்
வகைதொகையற்று மொய்க்கின்றன எறும்புகள் எறும்புகளின் ஆவியை அரிந்துண்ணும் இனிப்பு
மெல்லெனக்கசியும் குளிர்காற்றிலும் கரையும் பாடல் நசிபட்ட சிற்றெறும்பொன்றின் ஈனக்குரல் ஊரான ஊர் இழந்தேன் ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்.
உறையும் பனியில்
உருகி ஒழுகும் நான் அரக்கப் பரக்க எழாத எந்தக் காலையிலும் கூட
கிளர்த்தும் ஆழ்மனம் அம்மாவும் சொல்வதுண்டு விடிகாலைக் கனவுகள் பலிக்குமாம் கலையும் துயில்
17.03.1994, பாரீஸ்,
s
6T
வின் மீதி 62

தந்தையும் &քյ5605պմ
1 குழந்தை என்றால் குதூகலம்தான் களிப்புறும் இன்பந்தான் சலிப்பறாத புத்தகம் என்பேன் நான்
மழைதூறி நிலமூரும் கம்பளிப்பூச்சி அலைமீறிக் கரையாடும் முரல்குஞ்சு சிறுகை அழாவி தளிர்க்கால் மேவி
சுடரிடும் விழியில் மின்மினிச் சிதறி
மலர்நகை பூக்குமாம் மழலை
அம்மம்மா சொல்லிச் சொல்லி மாளாதாம் வாயூறும்
அச்சச்சா செல்லம்
இருக்காதா பின்னே கர்ப்பத்தில் கணிகையில் கைவிட்டு வந்தோனின் மடியினில் புரள்வது கால்முளைத்த அருங்கனியென்றால் சும்மாவா?
அதுவும் காலந்தப்பி வந்த கடிதங்களில் சுகமே பிரசவமாகி குண்டொலித் தாலாட்டில் தவழ்ந்து நிமிர்ந்து நாசகாரிகளான பொம்பரை கெலியை
63 கி.பி.அரவிந்தன்

Page 35
அப்பாபோன விமானமென கண்டதும் கைகாட்டிய பிஞ்சு கொஞ்சும் எச்சிலில் துளிர்க்கிறது நெஞ்சு
2 நிரையில் வருமுறைக்காய் காத்திருக்கும் என்தோளில் கொஞ்சும் சிணுங்கலுடன் தொங்கும் மகவு
அப்பா குளுருது வீட்டபோவம்
சிணுங்கல் வெடிக்கிறது விம்மலாய் குழந்தையைத் தேற்றத்தான் கதை சொன்னேன் நான்
ஊரைத் துறந்த அப்பாவாம் தூர தேசம் வந்தாராம் வேரைத் தேடித் தவித்தாராம் யாரை நொந்து கொள்வாராம்
அப்பா என்ரை அப்பாவாம் அப்பா அம்மா செல்லமாம் இப்போ நாங்க வந்தோமாம் எப்போ வீட்ட போவமாம்
அமைதி காணாது போனதாம் அகதி நாங்களும் ஆனோமாம் இனிமே போகவும் ஏலாதாம் இங்கே கதையும் முடிந்ததாம்
இல்லை இல்லை இல்லையாம் இன்னும் கதை வேணுமாம் ஒன்றாய் வீட்ட போவமாம் அப்பா என்ர செல்லமாம்
3 பிடிபட்ட தாளலயம் விடாப்பிடியில் குழந்தை
கனவின் மீதி 64

குட்டிக்கதையையும் நீட்டும் கெட்டித்தனம் அதன் கண்ணில் ஆறாத மனம் போலும் என்னையே வெறிக்கின்றது நிரையோ மெல்ல ஊர்கின்றது இரைச்சல் காதைப் பிளக் கின்றது குழந்தை தோளில் சரிகின்றது நெஞ்சுள் ஏதோ குமைகின்றது
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி.
மடிபற்றி எழுகின்றது கேள்வி ஓ. என் குழந்தைகளே.
குளிர்காலம், 1993
:
図。
2
s
منبع
e
65

Page 36
நூலக முன்றிலில்
1 விரிந்த கல் பதித்த முன்றிலில் சப்பை மூக்கு கூர்நாசி தடித்தசொண்டு உட்குவிந்த வாய் சிறுத்தவிழிகள் நீலக்கண்கள் உப்பியகன்னம் ஒட்டியசொக்கு இரட்டைநாடி ஒரல்முகம் எனவாய் விரியும் கலைக்களஞ்சியம்
பக்கங்கள்தோறும் பண்பாட்டுக்கோலம் மொட்டவிழும் சிரிப்பின் அலாரிப்பில் உறுத்தாத பால்பேதம் முற்றம் சிலிர்த்திடும் முத்தம் கதம்ப மாலையாய் தொடுக்கப்படவோ இணைகள் கிளைகளாய் குவிகின்றன இப்பூக்கள் இரண்டாயிரம் ஆண்டு முடியும்
பூச்சிய கணத்திற்கு இறங்கிச் செல்கிறது நேரக்கணக்கு
سم/
வினாடிகளாய் இறங்கும் இந்நகர்வு உயிரின இயக்கத்தின் பூச்சிய புள்ளிக்கா?
காற்றில் உராய்ந்து தேய்ந்து பிணைந்து மோதி அமுங்கும் மொழிகள் மின்னொலியலைகளாய்க் கரைகின்றன
சூரியச்சுருக்கத்தின் இப் பின்மாலைப்பொழுதினில் இவற்றில் ஏதேனும் ஒருபாடல் எந்தன் அலைவின் அடையாளம் சொல்கிறதா.?
கனவின் மீதி 66

2
காற்றுக் கொணரும் இம் மொழிக்கரைசலினுள் விரவிக்கிடக்கும் சோகப்பகிர்வு
மோதல் குரோதம் எள்ளல் இகழ்ச்சி களைந்த துயரம்
பிணையப்பட்ட கட்டுமரமென மூங்கில் குழல் கட்டு வடிக்கும் இசைநாதத்தில் மிதக்கின்றது செவ்விந்தியர் பாட்டு
மூங்கில் பேசப்பேச தோல்மேளம் கொட்டக் கொட்ட மூச்சு முட்டுகின்றது துயரம் உடைகின்றது
பாடுபட்ட கிழவா பாயைவிட்டெழும்படா சுண்ணாம்பு தாறன் சுடலைக்கு வாடா. இத்தாளக்கட்டில் கொட்டும் பறை கேட்டதுண்டா உனதுரிலென அறைகின்றது என்நெஞ்சில் யாரினதோ அம்மாளாச் சோகம்.?
நாரி தொடும் குழலைப் பின்னிவிட்டுள்ளனர் அந்தீஸ் மலையிருந்து இறங்கி வந்த கலைஞர் அவர் சொல்லக்கூடும் தாயகம் நாம் துறந்தவரில்லை எம் தேசம்தான் தொலைந்து போனது மாயா இன்கா எனத் தொல்கதையாய்
நான் இதைக்கொள்வேனா என்பாடல் பொருளென்று.?
3
கிட்டார் நரம்புகளில் ی-------- விரல் நுனியின் கட்டறுப்பில் உயிர்பெற்றெழுகின்றான் அழுகைக்குரலாளன் பொப் மார்லி
67

Page 37
சுருண்ட மயிரை வாரி நிமிர்த்தி பயற்றங்காய் அளவில்
பின்னலிட்ட சுருள்கள்
காற்றின் வெளியில் திமிறுகின்றன
றேகே இசையில் வடிகின்றது குருதி பொப்பல்லோ சோல்ஜர். ஆபிரிக்காவிலிருந்து கட்டி இழுத்துவரப்பட்டாய் நீ கண்ணிர்க் கதறலில் ஆபிரிக்கர் இதைச் சொல்லலாம்
நான் சொல்லத் துணிவேனா என் பாடலும் இதுதானென்று.?
4
தடித்த உதடுகளால் சொற்களை விசிறுகிறான் குந்தொன்றில் நின்றபடி ஒரு கறுவல்
.என்னைப் போய்விடு என்கிறாய் அதுவும் சரிதான் நான் வந்ததும் தப்புத்தான்
மின்னணுத் தொலைபேசி மின்சார விரைவூர்தி மின்னொளிக் குளிப்பில் நகரம் கண்வெட்டும் நேரத்திடை காரியங்கள் உன்னிடத்திருந்தது வந்துவிட்டேன் மன்னித்துக் கொள்
என்னிடத்தே மின்னொளி மின்னூர்தி தொலைபேசி தொலைக்காட்சி
ஏன் அறிவியல் எதுவுமே இருந்ததில்லை அப்படித்தான்.
பின்னேன் காட்டுவிலங்காண்டியான என்னிடம் முன்னம் நீ வந்தாய் எந்தன் கோவணத்துடன்
கனவின் மீதி 68

உயிர்க்குலையையும் உருவிவந்தாய்.?
காதைப் பொத்தியறைந்தாற்போல் நூலகத் தொடர்மாடியை உலுக்கியும் கண்ணாடித் தடுப்புச் சுவரில் மோதி எதிரொலித்தும் காற்றில் பிதுங்குகின்றன சொற்கள்
இதுவாயிருக்குமா என்தன் அலைவின் பாடுபொருள்.?
வெளிச்சத்திற்கலைந்து நெருப்பில் வீழும் விட்டிலோ நான்.!
விழுந்தும் கிடந்தும் போதையில் புரண்டும் தலைநிமிர்த்த மாட்டாமல் உலகம் வெறுத்தும் தன்னுள் சுருண்டும் அந்நியமாவனோ எனக்கொரு பாடலின்றி.!
இலை துளிர்காலம், 1993
69 கி.பி.அரவிந்தன்

Page 38
அதிசயம் வளரும்
1 ஆணையல்ல, ஒழுங்கு. உத்தரவல்ல, கோட்பாடு கட்டளையல்ல, கடப்பாடு
இதிலெதையும் எப்படியும் அவரவர்க்கு ஏற்றாற்போல் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் பொருள் ஒன்றேதான் காலால் இட்ட பணியைத் தலையால் சுமப்பது உழைப்பொன்றையே ஏற்பது அதற்கு இயைபாவது
வாழையைப் பயிரிடலாம் என்றால் வாழையை மட்டுமே பழக்குலைகளை அனுப்பினால் தோல்கள் தானமாய் திரும்பிவரும் வாழைத்தேசமாகலாம் நீவிர்
நெல்லைப் பயிரிடலாம் என்றால் நெல்லை மட்டுமே அரிசிமுட்டைகளை அனுப்பினால் உமியும் தவிடும் உங்களுக்காகும் நெல் நாடாகலாம் நீவிர்
கரும்பைப் பயிரிடலாம் என்றால் கரும்பை மட்டுமே சீனி வெல்லத்தை அனுப்பினால் சக்கைகள் நிறையவே மீதமாகும் கரும்புத் தேசமாகலாம் நீவிர்
உயிர்தனை ஒம்பும் நுகர்பண்டம் மெல்ல
கனவின் மீதி ) 70

தேசங்களாகி உயர்திணையாகிடும் நம்மொத்த மானிடர் சமைத்திட்ட தேசங்கள் நுகர்பொருளாகி அஃறிணையாகிடும்
2 தேசங்கள் கடந்து உலகத்தை அளந்து அடிமுடி அறிந்த வல்லமையாலே ஆத்மாக்கள் புசித்து மகாத்மாக்களாகி உண்ணவும் உடுக்கவும் உறையவுமான ஆதி உயிரின டைனோசர்களின் சாம்பலில் உயிர்த்து உலவிடுமிந்த புதிய உலகக் கோட்பாட்டாளரே வாழ்க நீவிர்! உங்கள் பாத திருவடி போற்றி பாடல்கள் புனைந்து ஒருவெண்கொற்றக் குடைநிழலில்
இவ்வுலகாள் வேந்தன் வாழியவே" என்று
ஒழுங்காய் கோட்பாடாய் கடப்பாடாய் நிமிர்ந்து இசைப்பீர் ரொபோக்கோக்களாய் ஆணைகளேற்று என்றென்றைக்குமாய்
அதிசயம் வளரும்
இலையுதிர் காலம், 1994.
71 கி.பி.அரவிந்தன்

Page 39
கோடை
என்னைப் பார் என் ஒளிர் மஞ்சள் அழகைப் பார் உமிழும் வெம்மை தகிப்பைப் பார் உறைந்த உலகின் சிலிர்ப்பைப் பார் முடிந்தால் என்னைச் சுகித்துப் பார் எனவாய் என்தன் சுயம் சீண்டி வலுச்சண்டைக்கு அறைகூவும் இந்தக் கோடை
போதாததற்கு தன்னை எழுதென்றும் அடம் பிடிக்கும் தான் வரும்போதெல்லம் நீள்கின்ற பகலையும் கூடவே நெடிய விடுமுறையையும் அழைத்து வந்திடும் கோடை
உச்சி வெயிலை உயர்த்திப்பிடித்தபடி உலாவரும் இக்கோடையுடன் பொருதும் பலம் எனக்கில்லையாதலால் அழலும் வெறுப்பும் அதன் மீதான சினமும் மீதூர பல்லைக்கடித்தபடி வெறித்திருப்பேன்.
இல்லையேல் கொடுப்புக்குள் மெல்லச் சிரித்துக் கொள்வேன் நான்
தாயகம் நீங்கிய என் சுயம் சீண்டும் ஆறாவது கோடை இது.
அசைவேனா நான் பாசாங்கு காட்டும் இக்கோடையின் பசப்பல்களுக்கு.
கண்கூசும் ஒளியின் பிரகாசப்பரவலால் சிற்சில அழுக்குகள் கறைகள் நிழல்களை
கனவின் மீதி 72

73 கி.பி.அரவிந்தன்

Page 40
வெளித்தெரியாதபடிக்கு தன்னுக்குள் அமுக்கி கொள்வது போலவே குளிர்வலையச் சமூகத்தின் ஏற்றமும் இறக்கமும் பிளவுண்ட வெளிகளும் சமன் செய்தாற்போல் காட்டும் கோடை தன்நாட்களில்,
பூத்துக்குலுங்கி வண்ணங்கள் பரப்பி இருண்ட ஒதுக்கத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சி பருவமேட்டிலும் நளினச்சரிவிலும் அழகின்சிரிப்பை அள்ளிச் சொரிந்தபடி பல்லிளிக்கும் இக்கோடை
கள்ளத்தனமாக மடிகளின் கனத்திற்கும் செல்வக்கொழிப்பிற்கும் ஏற்றாற்போல் சலாமிட்டு கைகட்டி சேவகம் செய்வதனை என்னொத்த தேசத்தார் பலரறியார் நான் அறிவேன்.
2 கோடையென்றால் குதூகலமும் கூடிவரும் சிலரையும் பார்க்கின்றேன் இதோ குமையும் நெஞ்சினனாய் துவண்டு கிடக்கும் எனக்குப் போய்வருகிறேன் எனப்பயணம் சொல்கிறார்கள் அயலவர்களான மொறோக்கியரும் அல்ஜீரியரும்
வாகனம் தழும்ப தழும்ப பொருட்களை ஏற்றி தார்ப்பாயினால் சுற்றிக்கட்டி தங்கள் குஞ்சுகுருமான்களை வாகனத்துள் அடைத்தபடி ஊர்ப்பயணம் கிளம்புகிறார்கள் விடைகொடுத்து அனுப்புகிறேன் என்ன களிப்பு? அவர்கள், பாக்கியவான்கள் பொறாமை கொப்பளிக்கிறது என்னுள் இதற்கு முன்னான கோடையிலும் அவர்கள் பயணம் போனார்கள் நாங்கள் பறவையைப் போன்றவர்
கனவின் மீதி 174

என இசைத்தபடியே ஜித்தோன்களின் காரவன்களும் பயணமாகி நாளாயிற்று.
தாயகம் இல்லாப்பயணம் அவர்களது.
ஓராயிரமாண்டு ஓடித்தாண்டியும் முடிவற்ற நாடோடிப்பயணம் அவர் வாழ்வு
கோடை எல்லோரையும் அருட்டிவிட அயலெல்லாம் மெல்ல வெறிச்சோடிப் போகின்றது
தனித்துப்போகும் நான் என்னையே தேற்ற முயல்கின்றேன் நெஞ்சடியில் இருந்து பீறிட்டெழுகின்றது ஒருகாலம் ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே” இதுவும் கோடைதான் கூடிக்குலாவிடும் விழாக்காலந்தான்
எல்லாக்காலமும் எங்கோ ஒரு தொலைவில் ஆழ்மனப்படிவிலும் உயிர்த்தடம் அழிய கோடை எறிக்க நீர்வற்றிப் போகும் ஏரித்திடலிடை துடிதுடித்துழலும் மீன்கிளைகளென என்சனம் மெல்ல அழிந்துபடுவதாய் புலம்பும் உள்மனம்
கோடை, 1996
75 கி.பி.அரவிந்தன்

Page 41
மதியம்
1
சீதளச் சீமையில் தாளாத வெயில் கண்கள் பொங்கும் சூரியக் கடைக்கண் படரும் கானலாய் என்னெதிர் வெளி நிழலின்றி தகிக்கும் ஒட்டுக் கூரைகளும் புகையினைக் கக்கும் ஆலை முகடுகளும் விரவிக் கிடக்கும் உலைக் கலன்களும் நொய்ந்த குடையென மர உச்சிகளும் இவையுடன் கூடவே வெயிலில் காயும் நனவிலி மனமும் நினைவின் நிழல்களும்
2
உள்ளுக்குள் கொன்கிறீற் சுவர்களால் கசியும் புழுக்கம். வெளி வெக்கையை வாளி இறைக்கும் வரண்ட காற்று. மூடிய அறையுள் அடைபட்டு அலைவது சூடுபட்ட பூனையல்ல
நான்
எழுது இல்லையென்றால் மூடு காய்ந்தல்லவா போகிறேன் கதறுகிறது பேனா
முடித்து விடு மூளியாய் விடாதே பொரிகிறது தாள்
வெப்பத்தில் சுருண்டு எழுத்தெழுத்தாய் கழல்கிறது
என்னின்று கொட்டுண்ட வார்த்தைகள்
போகட்டும் கவிதையும் கத்தரிக்காயும்
கனவின் மீதி 178

3. ஒளியும் ஒலியும் சல்லாபிக்கும் தொலைக்காட்சித் திரையிலும் வெக்கையில் பற்றி மூளும் ஏதெனும் ஒருதேசம்
அணைக்க அணைக்க மூண்டு எழுகின்றது நெருப்பு
யார் யாரிடம் சரணடைவது அப்பா ருவாண்டா கண்ணை மூடுங்கோ மடிக்குள் முகம் புதைக்கும் குழந்தை
போர்வையில் சுற்றிய பொட்டலங்கள் கிடங்குக்குள் வாரிக் கொட்டப்படும் சதைப்பிண்டங்கள் சின்னத்திரையில் பிதுங்கி வழிந்து என்காலடியில்
தப்பித்தோமென தொலைதேசம் வந்தால் என் உச்சிமுதல் உள்ளங்கால்வரை உறைகின்றது உயிர்த் தீ இதற்கு அப்பாலுமா அவலமும் அழிவும் சமனுறாத இருப்பில் மனிதமும் மாண்பும்
4. போகவும் வரவும் திரும்பத்திரும்ப அதைப்பார்த்தும் முறைத்தும் தன்பாட்டில் உறங்குகிறது தொலைபேசி
ஏதேனுமொரு மெலிதான ஒலிகேட்டாலும் எனக்குத்தானோவென அவாவுகின்றது
இல்லை அழைப்பார் யாருமில்லை மண்டைக்குள் நரம்புகள் முறுகி திருகி அறுந்துவிடப் போகிறது போலும்
அறட்டும் மரத்துப் போயிற்றென்றால் " இடம் காலம் அற்று சொரணை கெட்டு ஒளிபெற்று விடலாம்
______ _ " ". . . ." ........... ] 77 கி.பி.அரவிந்தன்

Page 42
அல்லது போனால் பெருங்காயம் வறுத்த சட்டியென மண்மணம் மாறாமல் அல்லாடி வேக்காட்டில் வறுபட்டபடியே ஒண்டிக் கொண்ட இடமெல்லாம் தன்தேசமெனக் கொள்ளும் எம்மவர் மூடத்தனம் பற்றியும் அதனையவர்கள் நிறுவிக்காட்டும் வெட்கம் கெட்ட சாகசம் பற்றியும் நினைத்து நினைத்து வதையுற நேரிடும் இப்படி.
5 அறைக்குள் மண்டும் சிகரெட் புகையென மூட்டத்துள் மலைத்தொடர் தொலைவில் சூரிய தகிப்பிற்கு நிழல்தரும் நிறத்தில் பார்வை முறியும் வான விளிம்பாயும் இரவாடை மாற்றும் அந்தப்புரமாயும் மடிந்தெழும் அலையாய் அடுக்காயும் ஒன்றுக்குள் ஒன்றாய் நீளப்படிந்தும் முலையென கூம்பியும் குழிந்தும் விரியும் சித்தரிப்பின் முடிச்சுகளை அவிழ்த்துப் பார்ப்பதில்தான் ஆற்றுப்படுத்த முடிகிறது மனத்தை வெயில் தாளாத இம் மதியப் பொழுதில்.
கோடை, 1994
கனவின் மீதி 178

கனவின் மீதி.
அம்மாவென குழந்தை திடுக்கிட்டழுதது
கனவெனப்பட்டது.
மிச்சமென்ன சொல்லுங்கப்பா மிச்சமென்னப்பா..? நுளம்பின் ரீங்களிப்பில் குழந்தையின் சினுக்கம் காதைக் குடைகின்றது.
பாருங்கள் நான் மாட்டிக்கொண்ட நேரத்தை வெறிச்சென்ற தெருக்களினதும் தெருவோர கட்டிடங்களினதும் ஆசுவாச பெருமூச்சை நெட்டிமுறிப்பை ஏன் விசும்பலையும் கூட செவிப்பறையால் உள்வாங்கியபடி தாண்டித் தாண்டி ஓடிவந்து படுக்கையில் விழுந்தால் கொக்கி போடுகிறது குழந்தை.
இப்போ எதை நான் சொல்வதாம் அடி நுனி புரியாது இந்தக் குழந்தைகளிடம் மாட்டிக்கொண்டாலே இப்படித்தான் திக்குமுக்காடிப் போகின்றது அறிவு
குளிர் வாட்டி எடுக்கும் பின்னிரவுப் பொழுது உணவகத்தில் கையைக் காலை அடிச்ச களை கண்ணுறங்கும் அசதி.
79 கி.பி.அரவிந்தன்

Page 43

அப்பா நாங்க எங்க பயணம் போறம்? வீச்சா மேலெழும்பிற்று பிளேன் தேடித் தேடிப் பார்த்தன் உங்களைக் காணவில்லையே நான் பயந்திட்டன் ஏனப்பா முழிப்பு வந்தது மிச்சமென்னப்பா எங்கேயப்பா போனனீங்க சொல்லுங்கப்பா. அப்பா. பா.
நனைந்த ஆடைகளைக் கழற்றிக் கடாசிவிட்டு கணைகளைத் தொடுத்தபடி எந்தன் போர்வையுள் குழந்தை நாசியில் ஏறுகிறது மூத்திர வீச்சம்
சுள்ளென குண்டியிலொன்று அல்லது உயர்த்திய தொனியிலொரு சொல்
இது போதும் குழந்தை அடங்க நான் கொஞ்சம் கண்ணயர
வேண்டாம் அது பெருவிரலைச் சூப்பி சுதிசேர்க்க தலைமயிரைச் சுருட்டி என் வாய்ச்சொற்களுக்காய் அகலத் திறந்திருக்கும் சிறு விழிகள் இரண்டிலும் சுடரும் தீ
இருட்டிலும்.
நான்தான் சொன்னேன் போலும் வீடுவிட்டு வந்த பயணம் மீண்டும் போக வேணும்தானே பிளேன் பறக்க வேண்டுமென்றால் உந்தி வீச்சா எழும்பும்தானே வானில் மூட்டம் படிந்திருந்தால்
81
கி.பி.அரவிந்தன்)

Page 44
பயணம் தடைப்படும்தானே கண்முழிப்பும் வரும்தானே இன்னொருக்கா புறப்படலாம் இப்போ நீ கண்ணுறங்கு.
அப்பா எங்க போனிங்க அதை இன்னும் சொல்லலையே
அதுதானே அதுதானே நான் எங்க தொலைந்து போனேன் நானாய்த் தான் தொலைந்தேனா? உருவற்றுப் போனேனா? என்னை யாரும் தொலைத்தாரா? மாயம் என்ன நிகழ்ந்தது நான் எங்கே?
நான் எங்கே?
எங்கே நான்?
என்னங்க குழந்தைகளுக்கு நரிவிரட்டுகிற மாதிரி சுழிக்கிறீங்க சிரிக்கிறீங்க கனாக் கண்டீங்களா..?
என்ன நானா? 856,076 IT? அப்படியானால் மீதி.?
O கோடை, 1994, பிரான்ஸ்
6ST
வின் மீதி 82

முளைப்பாய்
சப்த நாடிகளும் ஒடுங்கித்தான் போனது எனக்கு.
எனது இளநண்பனே ஆசைத்தம்பியே மெட்டிட்டு பாட்டொன்று கட்டி இசைக்கு முன்னம் இவ்வாறாய் உறைந்ததோ உன் துடிப்பு
என்னைப் போன்றே உன் எழுத்தில் மையல் கொண்டு காதல் வயமாகி நின்ற பாடல் மறந்த பலரிடத்தும் இசை நுரைத்துத் ததும்புகையில் கொடிதடா கொடிது உன் மரணம்.
போய்விட்டாய் பார் இன்னுந்தான் நம்ப முடியவில்லை. ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரையாய் விலைப்பட்ட வேளையிலே கனன்றதே உன்னுள்ளும் ஓர் சூரியன்
முரண்பாடு அரசியலிலா? விட்டுவிடுங்கள் இலக்கியம்.
நாம் செய்யலாம் அண்ணன்'
83 (கி.பி.அரவிந்தன்)

Page 45
ஓராண்டின் முன்னர்தான் உன்னை நான் கண்டுகொண்டேன். ஒரு சிறு மெழுகுவர்த்தியாய் அது போதும் என்றே சிறுத்திருந்த எந்தன் தீ உன்னிடத்தே அது நெருப்பென மூண்டெரிய நான் கண்டேன். எப்படிப் பற்றிற்று காண் நம் காதல்.
எழுத்தாளனாய் நீ இதழாளனாய் நீ
கலையாளனாய் நீ செயலாளனாய் நீ
எந்தக் கண் பட்டதோ எல்லாமே ஒரு மின்வெட்டாய்
என் இளநண்பனே சதைப் பிண்டத்தைத்தான் குண்டெட்டும், உயிர்த்தலத்தையல்ல! உனைத் தொட்டு பிரகடனம் செய்யும் வலிமையும் எனக்கில்லை ஏனெனில் நான் சாதாரணன் முளைப்பதென்பது இயல்விளைவு பலர் முளைப்பர் அவர்களில் உனைக்காண்பேன் காதல்வயப்படுவேன்.
ᎧᏈᎢ
வின் மீதி 84

வரும் வழியில்
1 உள்ளங் கைக்குள் உலகம் எல்லாமும் கணப்பொழுதில் எத்தகைய பொய் இது
எப்போதேனும் சந்திக்கலாம் என்றிருந்த நண்பர்கள் நினைவுச் சுழற்சிக்குள் - கனவுப் பொருளாகிப் போயினர்.
சந்திக்காமலேயே எனக்கும் அவர்க்குமான இடைபட்ட பயணமோ
உயிர் துறக்கும் தூரம் யார் அறிவார் இதனை?
கிரேக்கக் கடலில் மூழ்கியும், ஹங்கேரி நெடுஞ்சாலையில் பாரவண்டியுள் மூச்சு முட்டியும், பாதிவழியில் வழிந்தது அவர் கனவின் மீதி.!
2
முகில்! விமான நிலையம் வரையில் வழியனுப்ப வந்திருந்தாய் போகுமிடத்தில் பத்திரமாய் இரு நலமாக நாளை நீ திரும்பி வா" என்றுதானே சொன்னாய் இங்கு நான் வந்த பின்பு திரும்பும் நாள் குறித்துள்ளேன் என்றதை நீ நம்பாமலா நானிருக்கும் இடம் நாடிப் புறப்பட்டாய்?
85 கி.பி.அரவிந்தன்

Page 46
உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கியது அகதிகளுக்கல்ல மச்சான்! கிரேக்க கடல் மடியில் குளிரில் நீ விறைக்கையில் என்னை நீ நினைத்தாயோ! உன் பெயரை நான் பத்திரிகையில்தான் கண்ணுற்றேன் கொப்பளித்து பொருமியது. வெடிக்காமல் போயிற்று நெஞ்சு!
3
மகேஷ்!
இந்தப் பெயர் உனக்கு நான்தான் குட்டியிருக்கக்கூடும் அப்பெயர் என்னை ஈர்த்ததில்லை அக்கரைப்பற்று வினாயகமூர்த்திதான் என் நினைவில் வருகிறான்.
கால் எலும்பின் மச்சைவரை ஆறாக்காயம் பட்டிருந்தும் சிறையிருந்து மீண்ட நீ களப்பணியில் முன்நின்றாய்
நாம் தோழமை கண்ட மையம் உளுத்துப்போனதால் தனியராய் கலைந்து போனோம்.
அப்போதோ இல்லையேல் அதற்கும் முன்போகூட மயிரிழையில் பலமுறை மரணத்தை எட்டி உதைத்திருந்தாய் நான் அறிவேன்.
ஆனால் ஆறாயிரம் மைல் தொலைவில் அதன் பொறியில் அகப்பட்டாய் பார் ஆச்சரியந்தான்
மாயமான் வேட்டையில் உன்னைப்போல் எத்தனையோபேர் தோழா
கனவின் மீதி 186

ஹங்கேரி நெடுஞ்சாலையில்
பலருடன் மூச்சிழந்தாய் உலுக்கிவிட்டாய் நான் பனிப்பாளமாகாமல் உயிர்த்தேன்
பணியின் திசையறிவித்தாய்
87 கி.பி.அரவிந்தன்

Page 47
அழைப்பு
யாரழைத்தார் என்னை? எங்கிருந்து வருகின்றது உயிர்யாசிக்கும் இந்த அழைப்பு
குரல்வளை நசிபட பிசிறும் ஈனத்திடை அக்குரல் எதுவென எப்படி அடையாளம் கொள்வேன்
தலைகள் திரண்ட கடலிடை யாரென்றுதான் தேடுவேன்
மூன்றாம் சாமத்தில்தான் கண்விழித்தேன் பனிப்பாலையில்தான் எனது இருப்பு புகாரிருளில் குளிர்வெளியில் விறைத்த நான் வேர்த்து விதிர்விதிர்த்தேன்
எண்ணியெண்ணி தருகிறாய் மகனே நானுனக்கு அளந்தளந்தா பால் தந்தேன் மூளைக்கதவங்கள் ஒவ்வொன்றாய் திறபட ஒவ்வொன்றுள்ளும் சனத்திரள்
மண்ஒட்டி புழுதிப்படிவுடன் ஊனம் காய்ந்த மாமிசத்துண்டங்கள்
கனவு வழிந்தொட்டிய கடைக்கண் ஒரங்கள் கண்ணிர்வற்றி உரிந்த கருவிழி மணிகள்
உலர்ந்து வரண்ட நாவுகள் உறைந்த உமிழ்நீர் சுரப்பிகள் இறுக்கப்பட்ட குரல்வளைகள் காற்றுண்ட பெருமூச்சுகள் எல்லாம் மனிதம் மேவும் முகங்கள்
ஊரின்றி பேரின்றி பதிவுகள் ஏதுமின்றி என்முன் இறைஞ்சும் இவற்றிடை
۔۔______
கனவின் மீதி 88

ரூவாண்டா பால்கன் ஈழம். என எப்படிப் பேதங் கொள்வேன்
நாடி நாளங்கள் புடைத்து அறுபட நெஞ்சக்கூட்டுக்குள் ஒடுங்குகின்றது ஆவி ஐயகோ.1 \ - எனது மொழியில்தான் அழைக்கப்பட்டேனா? அல்லது அழைப்பை எனது மொழியால் புரிந்துகொண்டேனா?
வருமழைப்பைப் புறந்தள்ளி மினுக்கும் பூச்சும் மின்மினியின் பகட்டும் நுரைக்கும் மதுவும் கொறிக்கும் வம்புமாய் கிடப்பேனா நானும்
தவித்த வாய்க்கு தண்ணீர்கூட தரமாட்டாமல் வந்தவழி மறந்து வக்கரித்து செயலற்று உயிர்தப்ப வாழும் நானும் வாழ்வோங்கி உயிர்மாயும் இவ்வழைப்பாளரும் எந்தச் சமன்பாட்டில்
எந்த நிறையளவில்
இன்னும் யார்அழைப்பாரோ
எங்குந்தான் தேடுவனோ கவிதைதான் இசைப்பனோ..?
குளிர்காலத் தொடக்கம், 1995
89 (கி.பி.அரவிந்தன்

Page 48
மொழிவுகள்
1 முன்மொழிவு ஏதொன்றும் எழுதப்பட்டிராத ஒருபாலை வெளியும் பாலையோர விளிம்பில் குழுமியிருந்த நினைவும் என்னொத்தவர் பலர்க்கும் எழாதிருக்கக் கூடும்!
நெடும்வழித் தொலைவா? தொடுவானந்தான் முடிவா? மணற்புயல் பலதா? ஒயாசிஸ்தான் இலக்கா? எதுவரும் எதிரே..? எவருந்தான் அறிந்திலர் அவ்வேளைதனில்:
ஆனாலும் இருளுள்ளும் நாம் நடப்போம் எம்கால்களில் நிற்போம் விடியும்பொழுதில் நாமிருப்போம் நம் புல்வெளியில். இச்சொற்களை மொழிந்தோர் யாராகவும் இருக்கலாம் எல்லாமே குறிப்புகள்தான் வெற்று வார்த்தைகளன்றி வேறெதுவுமிருந்ததில்லை அப்போது
2 ஆயினும்
என்றைக்கோ இருந்துமிருக்கிறதாம்
கனவின் மீதி 90

வாக்களிக்கப்பட்ட பூமியும் கர்த்தரான வல்லவரும் அந்த வல்லவரோட தெரிவான மொய்சேயும் மொய்சேக்கான கைக்கோலும் கல்மழையும் கல்மழையூடே கலந்த அக்கினியும் கூடவே நீர்நிலைகள் எல்லாவற்றின் மேலும் இரத்தமயமாக்கவும் சமுத்திரம் பிளக்கவும் சமுத்திரம் பிளந்து வெட்டாந்தரை தோன்றவும் அற்புதங்கள் செய்யவும் அடிமைகளை மீட்கவும் விவிலியத்தில் முன்மொழிவு அப்புறம் என்ன?
3
இதோ எல்லாமே முடிந்து விட்டது முடிவை நெருங்கிவிட்டது எனத்தான் அவ்வப்போதிங்கே பலரும் முன்மொழிகின்றனர்
என்னொத்தவரும் கூடத்தான் தம்மொழிவுகள் மறந்தவராய் அப்பாலை நிலப்பயணிகள் பற்றி. அப்பயணிகள் எதிரே இமயம் புரண்டு இடியென்றிறங்கியதும் கானல் நீராடும் ஒயாசிஸ் குறுக்கிட்டதும் முகிற்கற்றைகள் வானின் முடிவென்றிலங்கியதும் உண்டுதான் ஆனால். சொரிமணல் போல் ஒட்டாது உதிரும் உதிரிகளால் கட்டப்பட்டதோ என நம்பப்பட்ட என் சின்னஞ்சிறு கூடே முகம் கொண்ட முதற்கொண்டு எவ்வண்ணம் இவ்வாறாய்
T 91 (கி.பி.அரவிந்தன்

Page 49
மிளிர்கின்றாய் உந்தன் ஒளிகண்டு சிலிர்க்கின்றது உலகு.
4 தொல்கதைகளில் இதிகாசங்களில் தோன்றும் வானின்றிறங்கிய தேவர்கள் தேவதூதர்கள் போலன்றியும்
விவிலியம் கூறுமாப்போல் அற்புதங்கள் நிகழ்த்த கர்த்தர்களால் இரட்சிக்க வழிவகைகள் ஏதுமின்றியும்
உனதருமைப் புதல்வர்கள் கரந்துறைந்து உலவினர். இரத்தம் நனைத்தனர் உடலம் புதைத்தனர் உள்ளம் உயிர்த்தனர் ஓர்மம் வளர்த்தனர் ஒளடதம் ஆகினர் நெடும்பாலை வெளிதனிலோ ஒளிரும் பாதையாகினர்
இப்போது பார்க்கிறேன் சுற்றிவரவும் என்னொத்தவர் எவருமிலர் ஓர விளிம்பதனில் தனியே குந்தியிருக்கின்றேன் இன்னமும் நான் வியந்தபடி வழிமொழிதல் ஒன்றுக்காய்.!
தைப்பொங்கல், 1997
கனவின் மீதி 92

நெல்லியும் உதிரும் கனிகளும்
வேப்பமர நிழலில் கொப்பெல்லாம் காய்க்கொத்தாய் சாய்ந்து நிற்குமே பாரமதைத் தாங்காமல் நெல்லி மரம் நினைவுண்டா?
கனி உதிர்த்து நிற்குமந்த சிறு நெல்லி மரத்தில்தான் காய் சுவைத்தோம். சாட்சியமாய் வாய் சுவைத்தோம். காய்த்திருந்தது பார் தேனடையில் தேனீக்களாய் கலையாத சுற்றம்போல் குலைகள்
அப்போது உன்வயிற்றிலும் நம்கனி
இரும்புச் சிறகசைத்து சாவரக்கன் வானேறி வருகையிலும் சின்னி விரலால் அவனைப் புறந்தள்ளி அதனடியில்தானே வெயில் காய்ந்திருக்க - வேப்பங்காற்றினால் நாம் தோய்ந்திருந்தோம்.
93 (கி.பி.அரவிந்தன்

Page 50
வான் வெளியை அளந்தபடி நம் கனவில்
நெல்லி
இலைக்காம்புதனை ஒன்றொன்றாய் நீ பொறுக்கி மடக்கென்று மொக்கொடிக்கும் மெல்லொலியிலும் கேட்டது பார் நம் சுற்றமெல்லாம் உயிரொடியும் ஓசை அறியாயா?
அறிந்தோமா நாம் ஊரொடிந்து ஊரோடிணைந்த உறவொடிந்து உறவின் ஊற்றான குடும்ப அலகொடிந்து உதிர்ந்த கனிகளாய் வேறாகி வேற்றாளாகி அந்நியமாகும் கதை
காலவெளிதனில் கரைந்தது ஒரு பத்தாண்டானாலும் நெல்லி உண்ட அவ்வையின் பழங்கதையைச் சிதறி உருண்டோடும் நம் வயிற்றுக் கனிகளுக்கு ஒப்புவிக்கும் போதினிலே உயிர் பின்னிக் கிடக்குமெம் காதல்தனை இசைக்கின்றது கண் நிறைத்து வீற்றிருக்கும் நெல்லி
சித்திரை, 1998
கனவின் மீதி 194


Page 51


Page 52


Page 53
கி.பி.அ ஈழத்தமிழர் பிரச்சினையில் களிடையே பரவலாக அறிமுகமா சொந்தப் பெயர் கிறிஸ்தோப்பர் பி போரை தலைநிமிர்ந்து நடத் ஏற்றத்தாழ்வும் வைதீக முரண்பா என்பதில் செயல்பற்று மிக்கவர்
பதினேழு வயதுடைய இளம்ட
போராட்டத்தில் மூழ்கியவர் முட்
திரும்பினார்.
பதினான்கு வயதில் பெரியாரி இறுக்கமிக்க கத்தோலிக்க மதகு வழிபாட்டைத் துறந்தார், மதத்தைய சமூக மாற்றத்தை வழிநடத்து ஏற்றுக்கொண்டு தம் வாழ்க்கையி கத்தோலிக்க மதவழிக் குடும் பிரான்சிஸ் சைவமத வழிக் குடும்ப அணிதல் போன்ற சடங்குக:ை கொண்டவர்.
இவர்களுடைய குடும்ப நி அனுமதித்ததில்லை. சாதி, மதம் cut" Lupnifili. Glairgia Lauri.
தற்போது தீவிர அரசியல் த மிக்கச் செயல்பாடுகளை முன்னெ புலம்பெயர் வாழ்வில் 'மெளன. ஈழமுரசு வார இதழ் ஆசிரியர் கு இயற்பெயர் கிறிஸ்தோப்பர் பி இலக்கியப் பெயர் கி.பி.அரவி கனவின் மீதி இவரின் மூ முதலிரண்டு தொகுப்பு இனியெ தற்போது குடும்பத்தோடு பிரா

ாவிந்தன்
ஈடுபாடுள்ள தமிழகத் தமிழர் ன பெயர் "சுந்தர் அந்த சுந்தரின் ரான்சிஸ், தேசிய இன விடுதலைப் தும் அதேநேரத்தில் சமுதாய டுகளும் முற்றாக நீங்க வேண்டும்
பருவத்திலேயே வீட்டைத் துறந்து பத்தாறு வயதில் மீண்டும் வீடு
ன் கருத்துகளில் மனம் பதித்தவர். ரு ஏற்படுத்திய மனக் கசப்பால் பும் துறந்தார். பெரியாரியத்தையும், ம் மாற்றுச் சிந்தனைகளையும் லும் பின்பற்றுபவர்
பத்தைச் சேர்ந்த கிறிஸ்தோப்பர் த்தைச் சேர்ந்த சுமத்திரியை தாலி ௗ மறுத்து திருமணம் செய்து
றுவனத்தில் மதத்தை நுழைய கடந்த நண்பர்களையே உறவு
விர்த்த சமூகப் பொறுப்புணர்வு டுத்து வருகிறார். ம் காலாண்டிதழின் தொகுப்பாளர்
ழுவில் பணியாற்றியவர். ரான்சிஸ்
ந்தன். ன்றாவது கவிதைத் தொகுப்பு
ாரு வைகறை, முகம் கொள்
ன்சில் வசித்து வருகிறார்.

Page 54
தத்தவத்தின் தொடக்கம்
நானும் நண்பனும் நடந்து களைத்தோம் கதைத்தோம். நீண்ட கால இடை வெளியில், இந்த இனிமைச் சந்திப்பில் படித்திருந்த, பதிந்திருந்த தத்துவங்களை மீட்டோம். பேட்டன் ரஸ்ஸலும்
விற்கின்சைனும்
வெளியே வந்தார்கள்.
முரண்பட்ட கருத்துக்கள் மோதுகின்ற உச்சத்தில் ரஸ்ஸலின் புத்தகத்தில் இதோ காட்டுகிறேன் வா என்னுடன்’ என நண்பன் எழுந்து நின்றான். பின்னர்,
மூச்செறிந்துவிட்டு மெளனித் தமர்ந்தான்.
புத்தகம் நூலகத்தில் சாம்பராயிற்று முனகிய படியே முகம் கவிழ்ந்தான்.
பேட்டன் ரஸ்ஸலும், விற்கின்சைனும் உள்ளே போனார்கள் படித்திருந்த, பதிந்திருந்த தத்துவங்கள் செத்த பிணமாயிற்று.
கண்ணும் கண்ணும் நோக்கக் கனத்தன நெஞ்சங்கள் இதற்குப் பிறகு புதிய தத்துவம் வேண்டும் நண்பா. நாம் எழுந்து நின்றோம்.
O
102

இ ஆதவன்
உனக்கு மட்டுமல்ல இருட்டு
நேற்றும் இப்படித்தான்,
வானம் இருண்டு கொண்டு போனது
பிறகு
யாருமற்ற வெளியில்
விழி நிமிர்த்தி, நீ
öFLLDTü சல்லடையாய்க் கிடந்தாய்.
சுதந்திர மூச்சுக்கள் உள்ளடங்கிய இருட்டில் யாரையோ யாரோ தட்டுத் தடுமாறித் தேடும் 966),856T.
எய்தவர்கள் போகமாய்ப் போக, அம்புகள் வேகமாய் நோக எங்கோ ஒரு குடிசையில் அழுகுரல் ஒலிக்கும்.
மாங்காய் புடுங்கக் கல்லெடுத்த சிறுவன் 'சப்பாத்துக்கால் கண்டு கலங்கி விறைத்து ‘அண்ணா இல்லை' என்பான்.
நந்தவனங்களில் மலராத இந்தச் சுதந்திரப் பூக்கள் ஒவ்வொன்றாய். ஒவ்வொரு இருட்டிலும். உன்னைப் போல் ரகசியமாய்.
இன்றும் சில பூக்களைக் காணவில்லையாம். நேற்றுப் போல
இன்றும் வானம் இருண்டு கொண்டு போகிறது.
O
மரணத்துள் வாழ்வோம்

Page 55
விடியலில், கருக்கல் கலைகிற பொழுதில் எனக்குக் கிடைத்த தற்காலிக அமைதியில்
நான் உறங்கும் போது. O ஊர்வசி
இடையில் ஒரு நாள்
எப்பொழுதாவது ஒரு மாலையில் அது நடக்கலாம் :
6905. LD5(g)(5 அல்லது முக்காடு அணிந்த 6905 LDT.gif ஒரு தாடி மீசைப் பிச்சைக்காரன் இப்படி, இன்னும் வேறு யாராவது என் வீட்டு வாசலில் கதவைத் தட்டலாம்.
நான் அவர்களைச் சட்டென அடையாளம் கண்டு கொள்கிறேன். அந்த இரவு முழுவதும் நீ என்னருகில் இருப்பாய். வாய் திறந்து பேச விரும்பாத மெளனம் இடையே கவிந்துள்ளது. உனக்கு மிகவும் பரிச்சயமான துப்பாக்கியை, துண்டுப் பிரசுரங்களை, அடர்ந்த காட்டை, இன்னும் எதையெதை யெல்லாமோ மறந்து போய் உனது உடலும், மனமும் எனக்குள் அடைக்கலமாகும்.

இ ஊர்வசி
விடியலில், கருக்கல் கலைகிற பொழுதில் எனக்குக் கிடைத்த தற்காலிக அமைதியில் நான் உறங்கும் போது, ஒரு முரட்டுத்தனமான கதவுத் தட்டலுக்குச் செவிகள் விழிக்கும்.
ராணுவக் கும்பல் அல்லது பொலிஸ் படை
பிறகு கூந்தல் அவிழ்ந்து விழுகிற வரையில் விசாரணை
என்னருகே அம்மாவும் கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட ஒரு அணில் குஞ்சைப்போல.
நீ போய்விட்டாய்; நாள் தொடர்கிறது.
O (1982/ புதுசு-6)
மரணத்துள் வாழ்வோம்

Page 56
நீட்டிய துவக்குகள் முதுகில் உறுத்த அவன் நடந்தான் அவர்களுடன் அந்த இரவில், )ே ஊர்வசி
அவர்களுடைய இரவு
நிழலே இன்றி வெயில் தகிக்க நீளும் பகல் பொழுதில் தனியாக ஒரு காகம் இரங்கி அழும்.
வேலி முருங்கையும் மெளனமாய் இலையுதிர்க்கும் அரவமொடுங்கிய நள்ளிரவுகள். ஆள்காட்டி மட்டும்
ஒற்றையாய்க் கூச்சலிடும் சேலைக் கொடியில் அவனது வேட்டி ஆடும். நெஞ்சில் திகில் உறையும் விழித்தபடி தனித்திருத்தலில் மனம் வெந்து தவிக்கும்.
அன்றைய முன்னிரவில் நெஞ்சில் ஆழப் பதிந்தவை மீண்டும் கருக் கொள்ளும்; அச்சம் சுண்டியிழுக்கும். அந்த இரவில் இருள் வெளியே உறைந்து கிடந்தது ஐந்து ஜிப்புகள் ஒன்றாய்ப் புழுதி கிளப்பின சோளகம் விசிறி அடித்தது

இ ஊர்வசி
6.[6] ஆழ்மனதில் அச்சம் திரளாய் எழுந்து புரள அவனை இழுத்துச் சென்றனர்.
பல்லிகள் மட்டும் என்னவோ சொல்லின கூரைத்தகரமும் அஞ்சி, அஞ்சி மெதுவாய்ச் சடசடத்தது. காலைச் சுற்றிய குழந்தை வீரிட்டழுதது. விடுப்புப் பார்க்க
அயலவர் கூடினர்.
நீட்டிய துவக்குகள் முதுகில் உறுத்த அவன் நடந்தான் அவர்களுடன் அந்த இரவில் ஐம்பது துவக்குகள் ஏந்திய கரங்கள் என்னுள் பதித்த சுவடுகள் மிகவும் கனத்தவை.
அந்த இரவு அவர்களுடையது.
O (1982/ புதுசு-6)
மரணத்துள் வாழ்வோம்

Page 57
சிறுதுண்டு மேகம் மேலே ஊர்ந்து செல்வதில்
இன்னும் மரக்கிளையின் நுணிஅரும்Uத் தளிர்ப்பதில் எப்போதாவது ஒரு குருவி
நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத் தாண்டிப் பறப்பதில், நான் இதுவரை வாழ்ந்த உலகில் என் மனிதரைக் காண்பேன். 9ே ஊர்வசி
சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்
Fgulff, என்னை அடைத்து வைக்கிறீர்கள் நான் ஆட்சேபிக்க முடியாது சித்திரவதைகளையும் என்னால் தடுக்க முடியாது
ஏனெனில்,
நான் கைதி. நாங்கள் கோருவது விடுதலை எனினும் உங்ளது வார்த்தைகளில் பயங்கரவாதி"
உரத்துக் கத்தி அல்லது முனகி எனது வேதனையைக் குறைக்கக்கூட முடியாதபோது எனது புண்களில் பெயர் தெரியாத எரிதிராவகம் ஊற்றப்படும் போது எதையும் எதிர்த்து எனது சுண்டுவிரலும் அசையாது. மேலும் அது என்னால் முடியாதது என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். 108

இ ஊர்வசி
அதனால்தான் ஐயா, ஒரு தாழ்மையான விண்ணப்பம் என்னை அடைக்கிற இடத்தில் எட்டாத உயரத்திலாயினும் ஒரு சிறு சாளரம் வேண்டும். அல்லது, கூரையில் இரண்டு கையகல துவாரம் வேண்டும் சத்தியமான வார்த்தை இது. தப்பிச்செல்லத் தேடும் மார்க்கமல்ல தகிக்கும் எனது ரணங்களில் காற்று வந்து சற்றே தடவட்டும் சிறுதுண்டு மேகம் மேலே ஊர்ந்து செல்வதில்
இன்னும் மரக்கிளையின் நுனி அரும்பித் தளிர்ப்பதில் , எப்போதாவது ஒரு குருவி நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத் தாண்டிப் பறப்பதில், நான் இதுவரை வாழ்ந்த உலகில் என் மனிதரைக் காண்பேன்.
பைத்தியமென்று நீங்கள் நினைக்கலாம்
ஆனால்,
எதைத்தான் இழப்பினும் ஊனிலும் உணர்விலும்
கொண்ட உறுதி தளராதிருக்க
அவர்களுக்கு நான் அனுப்பும் செய்தி
இவைகளிடம்தான் உள்ளது ஐயா.
O (1984)
மரணத்துள் வாழ்வோம்

Page 58
காத்திருப்பு எதற்கு?
எதற்காக இந்தக் காத்திருப்பு?
வயல் தழுவிய பனியும் மலை மூடிய முகிலும் கரைவதற்காகவா?
இல்லையேல் காலைச் செம்பொன் பரிதி வான் முகட்டை அடைவதற்காகவா?
அதுவரையிலும் என்னால் காத்திருக்க முடியாது. என் அன்பே, எத்தனை பொழுதுகள் இவ்விதம் கழிந்தன?
காதல் பொங்கும் கண்களை
மதியச் சூரியன் பொசுக்கி விடுகிறான்
கடலலைகள் அழகு பெறுவதும் தென்னோலையில் காற்று கீதம் இசைப்பதும் காலையில், அல்லது மாலையில் மட்டுமே
ஆனால், எமது பூமி, எமது பொழுதுகள் எதுவுமே எமக்கு இல்லையென் றானபின் இதுபோல் ஒரு பொழுது கிடைக்காமலும் போகலாம். தொடரும் இரவின் இருளில் எதுவும்
நடக்கலாம்.
ஆதலால் அன்பே, இந்த அதிகாலையின் ஆழ்ந்த அமைதியில் நாம் இணைவோம்.
O (1983 / புதுசு-8)
y

இ ஊர்வசி
உங்களுடைய அம்மாவின் கடிதங்களை நான் பிரிக்கவேயில்லை. அவை சுமந்துள்ள புத்திர சோகத்தை என்னால் தாள முடியாது. கு
நான் எழுதவத புரிகிறதா உங்களுக்கு?
யாழ்பாணம்
10-11-83
எனக்குத் தெரிந்த
எந்த விலாசத்திற்கும் இக் கடிதத்தை அனுப்பிப் பிரயோசனமில்லை. ஆனாலும் இதை எப்படியும் உங்களிடம் சேர்ப்பித்தே ஆகவேண்டும். உங்களிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னுள் உறுதியாக உள்ளது.
இங்கே முற்றத்து மல்லிகை நிறையவே பூத்துள்ளது. பகலில் தேன் சிட்டுக்களும் இரவுகளில் பூமணம் சுமக்கின்ற காற்றும் எங்கள் அறை வரையிலும் வருகின்றன. அடிக்கடி எனக்குத் தெரியாத யாரெல்லாமோ வீட்டுப்பக்கம் வந்து போகிறார்கள். ஆயினும் இன்றுவரை விசாரணை என்று யாரும் வரவில்லை.
சின்ன நாய்க்குட்டி காரணமில்லாமலே வீட்டைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறது. வாலைக் கிளப்பியபடி, எதையோ பிடித்துவிடப் போவது போல.
மரணத்துள் வாழ்வோம்

Page 59
விழித்திருக்க நேர்ந்துவிடுகிற இரவுகளில் உங்களுடைய புத்தகங்களை துாசி தட்டி வைக்கிறேன். அதிகமானவற்றைப் படித்தும் முடித்துவிட்டேன். உங்களுடைய அம்மாவின் கடிதங்களை நான் பிரிக்கவேயில்லை. அவை சுமந்துள்ள புத்திர சோகத்தை என்னால் தாள முடியாது.
மேலும், அன்பே எங்கள் மக்களின் மீட்சிக்காகவே நீங்கள் பிரிந்திருக்க நேர்ந்துள்ளது என்பதே எனக்கு ஆறுதல் தருவது. இந்தத் தனிமைச் சிறை தரும் துயர் பெரிது ஆயினும் உங்களைப் பிரிந்தபின் எதையும் தாங்கப் பழகியிருக்கிறேன்.
மேலும் இன்னொன்று, இதுதான் மிகவும் முக்கியமாக நான் எழுத நினைத்தது நான் ஒன்றும் மிகவும் மென்மையானவளல்ல முன்புபோல் அவ்வளவு விஷயம் புரியாதவளுமல்ல நடப்பு விஷயங்களும் எதுவும் நல்ல அறிகுறிகளாக இல்லை. நீண்ட காலம் நாங்கள் பிரிந்திருக்க வேண்டும் என்பது என்னவோ நிச்சயமானதே.
பின்னரும்
ஏன் இன்னமும் நான் வீட்டுக்குள் இங்கே இருக்க வேண்டும்?
என்ன, நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?
O (1985 / 6řáøo-1)
一但一厂甲

28 ஆளும்சத்வனி
வெளவால்கள்
A வெண்மையான விண்ணகத்து
மேகங்கள், கருக்கொண்டு கருமுகிலாகிய கார்காலம்,
பனைகளின் கீழே அறிவுக் கதிரவன் ஆடி அடங்கும் அந்தி வேளை,
எங்கள் சாம்ராச்சியத்தின் எண்ண வானத்தில் மேற்கே தலைவைத்து வடக்கே பறக்கும் வெளவால்கள்.
அந்நியம் தான்
எங்கள் கிராமத்திற்கு சொந்தமில்லாத ’கறுப்புக் கோட்' வெளவால்கள்.
எங்கள் இத்திகள் இலுப்பைகளின் இளைய தளிர்களை பூக்கள் ஓலமிட, சப்பி, துப்பி சக்கையாக்கும்.
அடுத்த பருவத்திலும் வெளவால்கள் அலைகடல் தாண்டி
பறந்து வரும் அப்போதும் இலுப்பைகள் மணம் நிறைந்து பூப்பூக்கும் இத்திகளிலே இளந்தளிர்கள் எண்ணிக்கையற்று நிறைந்திருக்கும்.
இனி சுழன்று வீசும் காற்றில் களைத்துப் போய் ஒதுங்கிக் கொள்ளும் வெளவால் கூட்டம். O (1980 / 436-2)
மரணத்துள் வாழ்வோம்

Page 60
உலகை வெறுத்துப்
போதிமரத்தில்
துாக்குப் போட்டுச் செத்தான் புத்தன். ஹம்சத்வனி
புத்தனின் நிர்வாணம்
போதி மரத்தின் கீழ் அன்று ஒரு நாள் மூடிய விழிகளைத் திறந்தான் புத்தன்.
கால்களை நனைத்தது குருதி ஆறு. அவனது தத்துவம் கிடந்து தவித்தது.
அதிர்ந்து, எழுந்து, ஓடினான்.
காற்றாய், கடலாய் திசைகள் தோறும். எங்கேயேனும் அவனது ஞானம் ஒரு துளியாவது..? தார்மீக உலகில் கால்கள் பதிக்க விரும்பாத மனதுடன்
உலகை வெறுத்துப் போதி மரத்தில் துாக்குப் போட்டுச் செத்தான் புத்தன்.
பரிநிர்வாணமாய்.
O (சிறையிலிருந்து)
A.
15

இ ஆரும்சத்வனி
இறந்த காலங்களும் நிகழ் காலமும்
சேற்றில் வீழ்ந்தன பொன் மணி முடிகள். எங்கே எமது அம்பும் வில்லும்?
மீண்டும், சங்க இலக்கியம் படிப்போம்.
வீரயுகத்தை எண்ணி மகிழ்வோம்.
பதுங்கி இருந்து அழிந்த கோடையில் சில்லறை தேடித் தீக் குளிப்போம்.
காக்கிகள் துரத்த கோபுர நிழல்களில் கல்லாய்ச் சமைந்தவைக்கும் பாலாபிடேகம் 舱 செய்வோம்.
வீதிகளில் ஓடிய இரத்தக் கறைகளைப் போக்க,
கதவிடுக்குளில், கிழிபட்ட கற்புத் திரைகளை எண்ணிக் கண்ணிர் வடிப்பதா?
மீண்டும் அவற்றை மறந்து விடலாம்.
சாம்பல் மேட்டில் மறைந்து விட்டன மணி முடிகள் தான்.
அம்பும் வில்லும்,
கூடவா..?
O (ők)pujajg5ég)
மரணத்துள் வாழ்வோம்

Page 61
6സ്ക്) அப்படி இருக்கமுடியாது. 9 ஹம்சத்வனி
சோலையும் கூவலும்
எனது நாடும் சோலையும் எரிந்த புகைக்காடு இன்னும் அடங்கவில்லை.
சாம்பல் மேட்டில் நின்றபடி
எந்தக் கடலிலோ
நிற்கும் உனக்கு எழுதுகின்றேன்
b603TLIT நீயும் அறிந்திருப்பாய் கலங்கியும் இருப்பாய் வானத்தை வெறித்து பார்ப்பதைத் தவிர நீ வேறு என்ன செய்யப் போகிறாய்?
[6 திரும்பி வரும் போது நாடும் சோலையும் இருக்கும் என்பதில்லை.
உனக்கு இது எல்லாம் சாதாரணம் என்கிறாயா?
என்னால் அப்படி இருக்கமுடியாது.
எனது சோலை எனக்கு வேண்டும் எனது கூவல் நிறைய வேண்டும்.
O (சிறையிலிருந்து)
17

கி நாசபேசன்
காலம்
மஞ்சளாய்ப் பழுத்த இலைகள் சொரியும் பூவரச வேலிகளும், வயல் வெளியெலாம் ஓரங்கட்டும் பனைகளும் நிறைகிற
எனதுாரில் காகங்கள் கூட சுதந்திரமாய் திரிந்த காலமொன்றுண்டு.
செம்பாட்டு மண்ணிலும் மிளகாயும், வெண்காயமும் நிறைய நிறைய விளைந்திருக்கும். சாமம்வரையும் திருவிழா நடக்கும் கலகலத்தபடி நடந்து செல்வர் எமது பெண்கள். நிலாமுற்றத்தில் எமதன்னையர் பாடலிசைத்தனர்.
அந்நியமணம் வீச ஆரம்பித்த தெமதுாரில் மக்களுக்கே தெரியாத கால்களெமது ஒழுங்கைகளை ஆக்கிரமித்தன.
நிழலையும் பூவையுந் தந்திருந்த குடைவாகை மரத்தின் கீழொருநாள் - இளைஞர் இருவர் குருதியில் கிடந்தனர் அவர்களின் உடல்களை கொம்புலுப்பிப் பூக்கள் அஞ்சலி செய்தன.
சுவாமி காவிய பக்தர்கள் மீதும் திருக்கைவால் பட்டது வாகனத்தினது தலை துாரவிழுந்தது திருவிழாபோய் பூசை மட்டுமே நடக்கத் தொடங்கியது. அதுவும் போயிற்றுப் போ.
O (1982 / d/stayabustia-21)
மரணத்துள் வாழ்வோம்

Page 62
ஒழுங்கை முடக்குகளில் காதலர்களோடு நின்று சல்லாயிக்கும் உன்வயதுப் பெண்களை காண நேர்கையில் என்னரும் சிநேகிதி
മ-മസ്ത്ര நினைவு பிரமிப்பாகும். நோ.சபேசன்
ஒரு சிநேகிதிக்கு எழுதியத.
என்னரும் சிநேகிதி, உன்னை 'அவர்கள் உதைத்தனரா காக்கிகள் போட்ட காவற் கூட்டம்.
"இனமத பேதமற்று இன்று
உண்ணா விரதம் பத்திரிகையில் படித்து தெரிந்து கொண்டேன் நீயும் அங்கிருப்பாய் என்றும் நினைத்தேன்.
வயல்கள் நிறையும் கிராமத் தெருக்களில் சைக்கிளில் திரியும் உனது நினைவு சந்தோஷமளிக்கும் எனக்கு ரியூஷனுக்கு செல்லும் பெண்களை, ஒழுங்கை முடக்குகளில் காதலர்களோடு நின்று சல்லாபிக்கும் உன்வயதுப் பெண்களை காண நேர்கையில் என்னரும் சிநேகிதி உனது நினைவு பிரமிப்பாகும்.
"எல்லோரும் படித்தால் என்னரும் மக்களை, தங்களைப்பற்றியே தெரியாதிருக்கும் எங்கள் பெண்களை உணரச் செய்வது யாராம்? ' அன்றொருகால் என்னைக் கேட்டாய் யாழ்ப்பாணத்தில்.
திரும்பவும் உனைக் கண்டது கிராமத்திலே தான். 18
119

இ நாசபேசன்
என்னரும் மக்களை, தங்களைப் பற்றியே தெரியாதிருக்கும் எங்கள் பெண்களை தட்டியெழுப்பும் உன்னைக் கண்டேன்.
ஒரு சைக்கிள் போதுமுனககு எமது மக்களை தட்டியெழுப்ப. ஊரிலிருந்து நீ கொணர்ந்ததும் இவைதான் செருப்பு, ஒரு சைக்கிள், புத்தகங்கள் கொஞ்சம், இரண்டு சோடி உடுப்புகள்.
என்னரும் சிநேகிதி இன்று தான் ஒருவர் சொன்னாரிதனை கண்ணிர்ப்புகையின் பின்னர் உனது கூந்தலை பிடித்து உதைத்தனராம்.
கண்ணிர்ப்புகைகளும்
குண்டாந்தடிகளும் உன்னை இன்னும் வளர்க்கும் என்பதை அவர்கள் அறியார்!
O (ófo/i-1)
மரணத்துள் விழ்வோம்

Page 63
பதில்
ஆறுமணிச் செய்தி - முடிகையிலேதான் கேட்டேன். பூமி பிளந்து என்னையே விழுங்குவதாய் உணர்வு வந்தது.
முகமறிந்த சிலரதும் முகமறியாப் பலரதுமாய் ஐம்பத்து நால்வரின் நினைவும் முகிழ்த்தது. ஒளிமிகுந்த நாட்களை எமது மண்ணில் நிறுவ துயர் மிகுந்த நாட்களை உறுதியோடு கடந்தீர்.
‘விடுதலை பெறும் எனது நாட்டை பார்க்க அந்தகன் ஒருவனுக்கு அளியுங்கள் விழிகளை.' அந்நிய நீதிமன்றில் முழங்கினீர்கள் தோழர்காள்!
நீங்களும் இன்றில்லை உங்கள் குரல்களும் இன்றில்லை துவக்கெடுத்த உங்கள் கரங்களும் துண்டிக்கப்பட்டு விட்டன.
ஒப்பாரிகளும் ஒலங்களும் எழும் எமது நாட்டில் இன்னும் நாங்கள் எஞ்சியுள்ளோம்!
துயரினை அறிவோம் அழுகையை அறிவோம் மரணத்தை அறிவோம் அதனை மீறி எங்களின் வலிமையும் அறிவோம்!
அழுகுரல் இனி அடங்கும்
எங்கள் கரங்கள் பேசத்தொடங்கும்.
O(1984)
12O
121

E நாசபேசன்
பொபி ஸ்ாண்ட்ஸின் மரணம்
"பொபி ஸான்ட்ஸ்' உலகின் நரம்புகளை ஒர்கணம் அதிரச் செய்ததுன் மரணம்! முகமிழந்த மனிதரின் மத்தியிலிருந்த என் உரோமங்கள் சிலிர்ப்புற்றன, தோழ!
வாழ்க்கை என்பது கடவுளின் தீர்மானமாகக் கொண்டவர் மத்தியில் உன்னைப் போன்ற எண்ணம் கொண்ட நாங்களும் இருந்தோம். ‘வாழ்க்கை என்பது மனிதனின் சிருஷ்டி’ 6T66TD L 1985(5 மிகச் சில பேராய் ஓங்கிய குரலில் நாங்கள் கத்தினோம்! -
வாழ்வு இல்லை என்பதை உணர்ந்து இன்றைக் கெங்கள் மக்கள் எழுந்து வருகிறார்.
எங்களால் இயன்ற வழிகளில் நாங்கள் மானிடர் என்பதை உரத்துக் கத்துவோம்.
நியூயோர்க் நகரத்துப் பூங்காவில் காதலி மார்பில் துவஞம் மனிதனும் 'ஹேக் நகர நீதவான்களும் இன்னும் எஞ்சிய எல்லா மனிதரும் எங்கள் உறுதி உணர்வர்.
அலையலையாய் மக்கள் எழுந்துவரும் காலைப் பொழுதிலும்
பனி உறைகிறது.
"பொபி ஸான்ட்ஸ்’
உந்தன் நினைவில் வாழ்வை மீட்பதன் வலிமை உணர்கிறேன்!
O (1984)
மரணத்துள் வாழ்வோம்

Page 64
எமக்கென நிலவு பால் வீசும் எத்தனை பொழுதுகள் செத்திருக்கும். நினைக்க வியர்க்கும் . எனினும் முனைப்பு முடிவிடத்தில்
சுவர்கள் வீழ்ந்தன. இளவாலை விஜயேந்திரன்
நாளைய நாளும் நேற்றைய நேற்றும்
முன்னே - முகிழ்க்கின்ற பனிப் போர்வையிலும் தோளின் சால்வை துாக்குதலை இன்னும் நாங்கள் பேணவில்லை.
"அவர்கள் தாமே மனிதரென்றார் நாமும் நாமும்' என்றார்த்தோம். சுவர்கள் - சுற்றி எழுந்திருந்தன தகர்த் தெறிந்தோம்.
சுவர்கள் தகர்க்கப் படும் போதில் கற்களெம் மீதில் விழுந்தனதாம் ஓய்வுக்குள் தலைபுதைக்க மறுத்துவிட்டு தொடர்ந்து தகர்த்தோம்; தகர்த்தோம்.
எமக்கென நிலவு பால் வீசும் எத்தனை பொழுதுகள் செத்திருக்கும்.! நினைக்க வியர்க்கும் - எனினும் முனைப்பு முடிவிடத்தில் சுவர்கள் வீழ்ந்தன.
வெற்றி எனச்சிறு நினைப்பில் ஊறினோம். கால்கள் - அத்திபாரக் கல்லில் தடுக்குது. தோள்கள் மலையெனத் தொடுத்து வைத்திருக்கிறோம், நாளைய நிகழ்விற்காய்!
O (1980 / புதுசு-1) 122

இ இmவாலை விஜயேந்திரன்
சுதந்திர நாட்டின் பிரஜைகள்
நேற்றும் தலையுயர்த்தி நடந்த தெருக்கள் தான் இப்போது நெஞ்சிடிக்க
எவனெவனோ கைகொண்டு கழுத்தை நெரிக்கும் கனவுகள் நேற்றல்ல, இன்றல்ல நாளைக்கென் வீட்டில் அதிரும் என்றுய்த்தபறை செவிக்குள் அதிர்கிறது.
மலங்க விழித்தபடி இருண்ட கண்களினால் எதுவோ தேடும் நாங்களும், எங்கள் பொழுதும்.
O (1981 / 2.3-4)
மரணத்துள் வாழ்வோம்

Page 65
UffD.0, ஊர் முழுக்கக் குலுங்கியதில் ஒப்பாரிவைத்தழுது பிறகும், வீசுகிற எலும்புக்காய்
விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும் சாகாமல் உயிர் வாழ்ந்தார். 9 இளவாலை விஜயேந்திரன்
ஆண்ட பரம்பரைக்கு
எமதுாரின் மன்னவரை எங்கேனும் கண்டீரோ?
வான முகட்டில் வழி தெரியாச் சேனைப் புலத்தில் காடுகளில் ஊர்ப் புறத்துத் திண்ணைகளில் அவருலவும் அந்தப் புரங்களில்.
பாவம், ஊர் முழுக்கக் குலுங்கியதில் ஒப்பாரி வைத்தழுது பிறகும், வீசுகிற எலும்புக்காய் விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும் சாகாமல் உயிர் வாழ்ந்தார்.
கோடிப் புறமிருக்கும் குதிரை லாயங்களில் இரவுகளில் வந்து தங்குவாரோ? பிடியும்,
சேணம் இட்டுவையும்.
தொலைநீளக் கடற்பரப்பில் நீந்தித் தொலைத்தாரோ?
மறுகரையில்,
இன்னும் ஒருதடவை
அழுது தொலைத்தாரோ? 12

இ இவைாலை விஜயேந்திரன்
பொழுதின் இருட்டோடு இராவணனின் புஷ்பகத்தில் போய்ச் சேர்ந்து விட்டாரோ? சிம்மாசனம் அமர்ந்த மாபெரிய மன்னவனின் படையெடுப்பை விழிபதிக்க நாதியற்றுப் போனோரோ? பாவம்தான்.
அக்கரையின் அரண்மனையில் வீசும் சாமரையில் உடல் குளிர்ந்து வேர்வையற்று, உண்டு களித்து வாழ்கிறாரோ? ஓய்வுக்கு,
வில்லெடுத்து வெளிக்கிளம்பிக் காடுகளைத் திணறடித்து (அவர் வீரம் தெரியாதா?) வேகவைத்த பறவைகளை ருசிக்கிறாரோ?
மன்னவரின் தேரோடிய வீதிகளில் கோடையிலோ பாளம் வெடிக்கிறது. வெடிப்புகளில் எங்களது பச்சை ரத்தம் உறைகிறது.
கடல் குடைந்து மீன்தேடும்
மனிதர்களே! அக்கரையில் அவருடைய தலைதெரிந்தால் உரத்துச் சொல்லுங்கள், “உங்கள் கிரீடம் எங்களிடம் இருக்கிறது. தின்று கொழுத்தும், சிந்தித்தும் உம்முடைய மண்டை பெருத்திருக்கும் வரவேண்டாம், அளவுள்ளவன் சூடிக்கொள்ளட்டும்.
Ο (1985)
மரணத்துள் வாழ்வோம்

Page 66
இருளின் அமைதியில் வெளியில் கரைந்தேன்
യറ്റിഡ് ഗജീർണി)
தீப் பொறி ஏந்தினேன். 9 இளவாலை விஜயேந்திரன்
பாதியாய் உலகின் பரிமாணம்
இளமையோ நெருப்பை விழுங்கிய ஒவ்வொரு கணமாய் ஊரும் என்று சாபமிட்டாய், உழன்றேன். காற்றும் இல்லாத அறையில் மூடச் சொல்லி விழிகள் கெஞ்சவும் மூச்சற்றுக் கிடந்தேன் கன்னங்கள் நனைந்தபடி.
வாழ்வைச் சிறிதாய் அர்த்தப்படுத்தி பார் இதோ உன் உலகம்' என்று மனதிடம் சொல்லி வெளிக் கொணர்ந்தேன். வீதியெல்லாம் குருதி கிடந்தது வேலியெல்லாம் எரிந்திருந்தது. தொலைவில் துவக்கு வெடிகளின் சத்தம் கேட்க நெஞ்சோ மறுபடி உறைந்தது. கழுகுகளா தரையிறங்கியது?
LDL19
உறக்கம் கலைத்தாயிற்று. இருளின் அமைதியில் வெளியில் கரைந்தேன் விழியின் மணிகளில் தீப்பொறி ஏந்தினேன்.
ஒன்று சொல்லாமல் போய்விட்ட உன்க்கு மற்றது சொல்லாமல் வந்துவிட்ட அவர்களுக்கு. Ο(1985) 126

இ பாலசூரியன்
அமைதி குலைந்த நாட்கள்
தெருவில் புழுதி எழும் வேட்டொலிகள் தீர துப்பாக்கிகள் இடுப்பில் ஒளியும் ஜீப் வண்டி சீறும் புழுதி எழும்
துயரத்தை காற்று விழுங்கும் - தெருவில் குருதி நிறையும்; தரையில் வற்றி உலர இலையான் விழும் சிலவேளை வாலாட்டி முகருகிற தெரு நாய்.
இருப்பினும், S. 6)85b அமைதி தழுவி நிற்கும்.
ஒரு பொழுதில் வேட்டொலிகள் தீரும் அமைதி குலையும். இலையானும் சிலவேளை தெருநாயும் படையெடுக்கும்.
துயரத்தை நிறைத்த காற்று அதிரும். "இடையே இப்படித்தான்
6T6
O (1981 / .367-3)
மரணத்துள் வாழ்வோம்

Page 67
உழைத்து ஓடான அம்மாவின் நம்பிக்கை அண்ணாவின் வரம்பில்லாக் கற்பனைகள்
தரப்படுத்தப் பட்டு தரைமட்டமான போது. 9 மைத்ரேயி
கல்லறை நெருஞ்சிகள்
"அவர்கள்’ கூறுகிறார்கள் - எங்களை நெருஞ்சிகள் என்று. நெருஞ்சி விதை துாவியதே அவர்கள் தான். பிறகென்ன நித்திய கல்யாணியா முளைக்கும்?
அவர்களின் மொழி படிக்காமல் ஒய்வு பெற்ற அப்பா - w வாழ்வின் பொருளாதார அத்திவாரம் ஆடியதால் நிர்ந்தர ஓய்வு பெற, அவருடன் எம் வசந்தங்களும் புதைக்கப்பட்ட போதே. நெருஞ்சிகள் விதைக்கப்பட்டன.
உழைத்து ஓடான
அம்மாவின் நம்பிக்கை,
அண்ணாவின் வரம்பில்லாக் கற்பனைகள் - தரப்படுத்தப் பட்டு தரைமட்டமான போது.
நெருஞ்சிகள் முளை கொண்டன. 128

இ மைத்ரேயி
வலைவீசி மீன் வாரி ‘ட்றக்குள் போட்டு அடித்துதைத்து உடல் நெரித்துக் கருவாடாக்கி கதறக் கதறக் கற்பழித்து, கைவேறு கால் வேறு உடல்கள் வேறாய் மண் உண்ட தீயணைத்த சடலங்கள் மீதில் சிறு நெருஞ்சி தலைநிமிர்ந்து கிளை கொண்டன.
நெருஞ்சிமுள் அவர்காலைக் குத்தும், அவருடலைக் கிழிக்கும், நெருஞ்சிகள் தாம் முளைத்த கல்லறையின் பக்கலில்
அவர்கட்கும் நிலையான சமாதிகளைக் கட்டும்.
O
மரணத்துள் வாழ்வோம்

Page 68
இரவுகள் துாங்குவதற் கென்பது
என்வரையில் பொய்யாயிற்று. 0 மைத்ரேயி
காத்திருத்தல்
நேற்றுப் போல இருக்கிறது எங்கள் திருமணம் நடந்தது.
பந்தலைப் பிரிக்குமுன், வந்த உறவினர் போகுமுன் நீதான் போய்விட்டாய்.
என் மன ஆழத்திற்கு இது தெரிந்து தானிருந்தது இருந்தும்,
திருமணம் சிலவேளை உனை மாற்றலாமென. பலவந்தமாக - ஆம், பலவந்தமாகத்தான் உன்னை மணந்தேன். எனக்கு அப்போது உன் லட்சியத்தின் களபரிமாணமோ உன்னைத் தடைசெய்ய முடியா தென்பதோ விளங்கியிருக்கவே யில்லை.
இப்போது துக்கப்படுகிறேன் - அன்று உன்னைத் தடைசெய்ய நினைத்ததற்கு. உன் லட்சியத்தின் நியாயம் இப்போதுதானே புரிகிறது.
எனினும் ஒரு சந்தோசம்
மனைவியான படியால் தானே
உன் சாதனைகளில் மகிழ்தலும்
உனை நினைத்து அழுதலும்
சாத்தியமாயின.
༤
இரவுகள் துாங்குவதற் கென்பது
என்வரையில் பொய்யாயிற்று.
நிசப்த ராத்திரிகளில் °一厂可
っつ

இ மைத்ரேயி
இடையிட்டு எழும் ஒலிகளில் காலடி ஒசைக்காகக் காத்திருந்து காத்திருந்து. கனத்த இருளினுள் கறுப்புப் பூனையைத் தேடித் தேடித் தோற்று.
சிலவேளை காலடிகள் கனத்த பூட்ஸ்களாய் நெஞ்சில் - கண்ணிவெடி விதைக்கும்.
ஆனால், நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை.
காத்திருந்த இரவுகள் கணக்கு வைக்க முடியாமற் பெருகி விட்டன் கல்யாணத்தன்று நட்ட முருக்கு கொப்பும் கிளையுமாய் சிவப்பாய்ப் பூத்திருக்கு.
பாலர் வகுப்புக்குச் செல்லும் மகன் கேட்கிறான்:
“ஏனம்மா எங்கட வீட்டுப் பின்கதவை - நீ பூட்டுறேல்ல? ”
“முன்கதவு திறந்திருந்தா மட்டும் கண்டவன் எல்லாம் நுழைவான் பூட்டு பூட்டு எண்டுவாய்.”
எனது காத்திருத்தல்கள் அவனுக்குப் புரிய இன்னும் சில காலமாகாலாம்.
அதன் பின்,
அவன் கேள்வி கேட்க மாட்டான்.
O
மரணத்துள் வாழ்வோம்

Page 69
பெற்ற தாயாரால் அடையாளம் கண்ட பின்னும் காட்டிக் கொள்ளப் படாதவர்கள். இதனால் இவர்கள். 0 மைத்ரேயி
முகம் மறுக்கப்பட்டவர்கள்
இவர்கள் நகரின் யந்திரமயத்தில் முகமிழந்த மனிதரல்ல.
வீதியில் சென்ற வீட்டினில் இருந்த சுருங்கக் கூறின் இம்மண்ணில் பிறந்த சாதனைக்காகச் சன்னங்களால் பரிசளிக்கப் பட்டவர்கள் அத்துடன், தீச் சுவாலை போர்த்திக் கெளரவிக்கப் பட்டவர்கள் இதனால் - முகம் மறைக்கப்பட்டவர்கள்!
ஆஸ்பத்திரிச் சவச்சாலையில் அடையாளம் காணப்படாதவர்கள் உற்றாரால்.
பெற்ற தாயாரால் அடையாளம் கண்ட பின்னும் காட்டிக் கொள்ளப் படாதவர்கள். இதனால் இவர்கள் முகமிருந்தும் மறுக்கப் பட்டவர்கள்.
O (1985 / 2.600)-25)
132

25 69ATS8942
சொல்லாமற் போகும் புதல்வர்கள்
மார்கழி மாதத்தின் முன் இரவில் ஒர்நாள் . அவன் நேரமாகியும் வீடு திரும்பவில்லை. வழமையாக கோயில் மணி ஒன்பதடிக்க வாசலில் அவன் வருவது தெரியும். எழுந்து சென்று
கதவைத் திறந்து
அவனை அழைத்து உணவு போடவும் அப்போதும் அவன் மெளனம்தான். எப்பொழுதும் அவன் அப்படித்தான் சாப்பிடும்போது எதுவும் பேசான். என்மகன் - நள்ளிரவாகியும் வரவேயில்லை எங்கே போனான்?
அன்று தங்கை அயர்ந்து துாங்கியிருந்தாள் நானும் அவனைத் தேடி இருந்தேன் அதன் பின் வரவேயில்லை. நீ எங்கு போனாய் என்பதை அறியேன்.
ஆனால், இன்று அறிந்தேன் வேறொரு கதை உனது நண்பன் சொன்னான் , மீசை அரும்பும் இந்த வயதில் நாட்டுப்பற்று வந்ததா உனக்கு! அப்படியானால் கடமைகள் இருக்கும் வீரனாய் இருந்து வீடு திரும்பு.
O (1984 / gaf-9).
மரணத்துள் வாழ்வோம்

Page 70
நானும் நீயும் மனிதர்களென்று அவர்களுக்குத் தெரியாது. e ,
அவர்களுக்குத் தெரியாத
நேற்று ஒருவன் இறந்தான்; الإلك
நானல்ல, நீயல்ல. இன்று ஒருவன் இறந்தான்; அது நானோ நீயோ அல்ல. நாளை ஒருவன் இறந்தால் அது நான் அல்லது நீ
நிச்சயமாக எம்மில் ஒருவர்தான் தோழா!
அதிகாலை கவச வண்டிகளின் நடமாட்டம் அதிகரிக்க கிராமத்துத் தெரு இழுத்து மூடப்படும்.
அப்போது
நான் அல்லது நீ நிச்சயமாகக் கைதுசெய்யப்படலாம் அல்லது, சுட்டுக் கொல்லப்படலாம். நானும் நீயும் மனிதர்களென்று அவர்களுக்குத் தெரியாது.
அவர்களுக்குத் தெரிந்த தெல்லாம் நானும் நீயும் மனிதர்கள் அல்ல என்பதுதான்.
O(1984) 13

இ துஷ்யந்தண்
பகலினைப் போல ஒளிக்கதிர் வீசி சூரியன் இருந்தால் எவ்வளவு இனிமை
Sagay O
காலை பற்றிய கவிதை
காலை பற்றிய கவிதையைச் சொல்வேன் நட்சத்திரங்கள்
சந்திரன்
காரிருள் எதுவுமே எனக்குப் பிடிப்பதில்லை என்னைப் போலவே எனது மக்களும் அவற்றினை வெறுப்பர்.
நடுநிசிப் பொழுதில் பல முகங்கள் காணாது போவதும் விடிந்ததும் ஒருசில வீதியில் கிடப்பதும் இன்னும் ஒருசில கடலில் மிதப்பதும் . எஞ்சிய மீதி
முகவரியின்றி தனித்து நிற்பதும் ஆரம்பமான அன்றிலிருந்தே இரவினை வெறுத்தோம். பகலினைப்போல ஒளிக்கதிர் வீசி சூரியன் இருந்தால் எவ்வளவு இனிமை இரவு.
காலை பற்றிய கவிதையை சொல்லென மக்கள் என்னிடம் திரும்பக் கேட்டனர் காலையே நீ வெற்றிகொள் இரவின் கொடிய தனங்களும் அந்நியக் கூச்சலும்
அழிந்துபோக
காலையே,
நீ இரவினை வெற்றிகொள்!
O (1984 / .357-9)
மரணத்துள் வாழ்வோம்

Page 71
பூக்களை கல்யாணம் செய்து கொண்ட காற்று இப்போ இல்லை
பிணங்களுடன் புணர்ந்து விட்டு நீசத்தனமாகவே வருகிறது காற்று 0 ரஞ்சகுமார்
நான் அனுமதிப்பதேயில்லை.
இப்படித்தான் நான் அப்போ நினைப்பேன், எதுவும் சுலபமானதென்று. முகத்தில் காற்று அறையுமாறு நின்றபடி நான் நினைப்பேன், எல்லாம் நல்லவையே என்று. எல்லோரும் திருப்தியுடனேயே வாழ்ந்தார்கள் என்றுதான் நான் நினைப்பேன். யாரும் குரலெடுத்து அழுதுபுலம்ப நான் கேட்டதில்லை! பாருங்கள்! இளஞ்சூரியன் எவ்வாறு அந்நாட்களில் தன்னம்பிக்கையால் முகஞ்சிவந்தபடி 'ஜிவ்' என்று கிழக்கைவிட்டு விரைந்து எழுவான்! அப்போ, அந்நாட்களில்.
இரட்டை மாட்டுவண்டிகள் தார் ரோட்டுக்களில் கரகரத்துச் செல்லும்; தலைப்பாகையுடன் இருப்பான் முன்னணியத்தில் உழவன். மணிகளுடன் 'கணகணத்தவாறு "ஹேய்' என்று அவன் அதட்டுவது கேட்கும். பின்னே செல்லும் ஏரும் சாக்கு நிறைந்த வைக்கோலும். சின்னஞ்சிறு மகனும் இருப்பான் சிமிட்டும் கண்களால் ஜோடிப்புறாக்கள் 'குறுகுறுத்துப் பறப்பதைப் பார்ப்பான். சைக்கிளொன்றின் பின்னே பாரம் நெளிய மீனவனொருவன் காற்றைக் கிழித்தவாறு செல்வான். அவனைச் சுற்றி மீன் வீச்சம் இருக்கும். கரகரத்த குரலில் மகனைத் திரும்பிப்பார்த்துக் கத்துவான்! “பள்ளிக்குப் போடா!' 36

இ ரஞ்சகுமார்
இப்படித்தான் அந்நாட்களில் இருந்தனயாவும்.
பாருங்கள், நான் பொய்யுரைத்தேனா? நீங்களும் அறிவீர்கள் யாவும் நேர்த்தியாகவே நடந்து வந்தன. வயல் விளைந்தது, மீன் நிறைந்தது. சுறுசுறு வென்று திரியும் சனக்கூட்டத்தின் தலைக்கு மேலே நகைத்தவாறு சூரியன் போவான்.
சந்திரனோவெனில், பெண்குணம் கொண்டு நாணி முகில்களுக்குள் மறைந்து
季 நோக்குவான் காற்று பூக்களுக்குச் சாமரம் வீசும். தென்றலென மலர் மணக்க என்முகத்தில் காற்று அறையுமாறு நின்றபடி நான் நினைப்பேன்.
இப்போ, பாருங்கள்! தார் ரோட்டு கிழடுதட்டிக்கிடக்கிறது, தன்னந்தனியனாய் வெயிலில் காய்ந்தபடி. இரட்டை மாட்டு வண்டிகள் கரகரத்தபடி சென்றகாலம் எங்கே? "ஹேய் என்று மாட்டை அதட்டிய குரல் கேட்பதேயில்லை. எங்கோ துாரத்தில் ஒரு கிழவி மகனுக்காக அழுகிறாள்.
தார்ரோட்டு தனித்துக் காய்ந்தபடி, எழும்பிக் குதித்து நிலம் அதிருமாறு செல்லும் அழுக்குப் பச்சை ட்ரக்குகளைக் தவிர எந்தச் சிநேகிதனும் அதற்குக் கிடையாது! ட்ரக்குகளிலிருந்து முட்டாள்தனமாக தலையை நீட்டுகின்றன துப்பாக்கிகள்!
ஆம்,
மிக முட்டாள்தனமான துப்பாக்கிகள்! அவற்றுக்கு மூளையே கிடையா, மிகவும் மடத்தனமாக அவை உயிர்களை உறிஞ்சும்
மரணத்துள் வாழ்வோம்

Page 72
இன்றும்கூட, அந்தக் கிழவியியன் மகன். Lb
எங்கோ துாரத்திலிருந்து ஒரு கிழவி மகனுக்காக அழுகிறாள்!
பாருங்கள்! எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று. நான் பொய்யுரைக்கின்றேனா? நீங்களே காண்கின்றீர்கள். உழவனின் மகனும், அந்தச் செம்படவனின் மகனும் எங்கோ கண்காணாத இடத்திற்கு ஒடிப்போனார்கள்.
கிழவிகள் அவர்களைப்பற்றிக் கிசுகிசுத்துக் கதைக்கிறார்கள்: "அவர்கள் துப்பாக்கி சுடுவார்களாம்!" துப்பாக்கிகள்.! துப்பாக்கிகளுக்கு முளையே கிடையாது.
எல்லாவற்றையும் நாசம் செய்வன அவை சூரியனைக் கூட!
பாருங்கள்.
அவனுங்கூட தயங்கித் தயங்கி பனைவட்டுக்குள் மறைந்தபடி திரிகிறான் சந்திரனைப்பற்றி நான் இப்போ அறியேன்! இரவுகளில் நான் சுவர்களுக்குள்ளேயே முடங்குகிறேன். சந்திரன் வெட்கம் கெட்டபடி நிர்வாண வலம் வருகின்றான்.
முகத்திலறையும்படி காற்றை நான் இப்போ அனுமதிப்பதே இல்லை! பூக்களை கல்யாணம் செய்து கொண்ட காற்று இப்போ இல்லை. பிணங்களுடன் புணர்ந்து விட்டு நீசத்தனமாகவே வருகிறது,
காற்று.
காற்றை நான் முகத்தில்பட அனுமதிப்பதே இல்லை.
O (1984/ புதுசு-9) 38

es மாசித்திலினாயகம்பிள்ளை
இந்தக் கடலின் நீண்ட பரப்பில் நீந்திப் பழகி
இறால்கள். மீன்கள் - கடல்படு திரவியம் சுதந்திரமாகப் பெற்ற ஓர் காலம் தாத்தாவோடு அற்றுப் போயிற்று O
கடலும் கரையும்
அலையடிக்கும் கடல் அதனருகே நீண்ட பெரு மணற்காடு.
குருஷேத்திரத்துப் போர்க்காட்சி போல விம்மித் தணிந்த அலைகளோ தரையை
ஓர் முறை தழுவி,
வெட்க முற்றுப் பின்னே வேகமாய்த் திரும்பின.
இந்தக் கரையின் மணற் பரப்பினிலே இலந்தை மரங்கள்.
இந்த மரங்களின் உச்சியில் ஏறினால் இராமேஸ்வரத்தின் ஓர் முடி தெரியுமாம். அவ்வளவு நெருக்கம். இதுவும் அதுவும் ஒன்றாய் இருந்து இடையே கடலால் அரியுண்டு போனதாய் பூமிசாத்திர வல்லுனன் ஒருவன் போல் தாத்தா, அனுபவ முதிர்ச்சியில் சொல்லுவார். இந்தக் கடலின் நீண்ட பரப்பில் நீந்திப் பழகி இறால்கள் - மீன்கள் - கடல்படு திரவியம் சுதந்திரமாகப் பெற்ற ஓர் காலம் தாத்தாவோடு அற்றுப் போயிற்று
மரணத்துள் வாழ்வோம்

Page 73
காட்டுக் குதிரை கனைக்கும் வேளை வயிற்றுப் பிழைப்பை மனதிற் கொண்டு மனைவியைத் கரையே காவல் வைத்து,
கடலில் சென்ற காளைகள் எல்லை தாண்டிய புலிகளாய் மீண்டும் திரும்புதல் இல்லை.
தாத்தா,
அவரது தாத்தா அதற்கு முன்பு இருந்த பரம்பரை நிமிர்ந்து கிடக்கும் இந்தக் கடலிற் தான் நம்பிக்கையுற்றுக் கிடந்தது.
இன்று, கொலம்பஸ் கண்ட ‘அத்திலாந்திக்காய் ‘சமுத்திர விழுங்கிகள் நிறைந்து,
இப்போதெல்லாம் இலந்தை மரத்தின் உச்சியிலேறினால் இராமேஸ்வரத்தின் முடி தெரியாது; நீல நிறத்தில்
கடற்படைக் கப்பல்கள்.
O (1983 / 456-3)
140
14

ES Dướiffuasi
எல்லாம் தெரிந்தவர்கள்
தோழா, இன்னமும் உயிர் போகவில்லை இறுதி மூச்சில் ஒரு வார்த்தை உன் படத்தைக் காட்டி, தெரியுமா? என்று கேட்கிறார்கள் இந்த மடையர்கள் கேட்டுக் கேட்டுக் களைத்து விட்டனர் என்மனமும் இன்னமும் களைக்கவில்லை.
என்ன புன்னகை உன் படத்தில்! இதனை யார் இவர்களுக்குக் கொடுத்தது? யார் காட்டிக் கொடுத்தது? புலப்படவில்லை.
‘எல்லாமே எங்களுக்குத் தெரியும் என்று விட்டு,
என்னை "சொல்! சொல்!!’ என்கிறார்கள்.
யார் சொன்னது? யார் காட்டிக் கொடுத்தது? புலப்பட வில்லை. ஆனால் ஒன்று இன்று நான்; நாளை நீ! இந்தக் கழுகுகள் நாளை உன்னையும் சிதைக்கலாம்.
நான் ஒன்றும் சொல்லவில்லை - நீயும் ஒன்றும் சொல்லாதே ஏனெனில் அவர்களுக்குத்தானே எல்லாம் தெரியுமாம்!
O (1985 / Yoo)-25)
மரணத்துள் வாழ்வோம்

Page 74
தோட்டங்களைத் தோட்டாக்கள் நிரப்புகின்றன அங்கு உழவு நடக்கவில்லை ജൂബ്ബ് മീ' ) அழுகை கேட்கிறது. 9 கிதப்பிரியன்
உழவு நடக்காத நிலம்
ஒன்றுமே புரியவில்லை இது என்ன வாடை?
இடம்மாறி வந்து விட்டோமோ? இல்லை. அதே இடம்தான்!
அந்த இனிய களனிகள், பச்சைப் பயிர்கள். அதோ.
இல்லை! அவை காக்கிகள் அதோ மாட்டுக்குளம்பு அடையாளங்கள் இல்லை. பூட்ஸ் அடையாளங்கள்! ஏர் அடையாளங்களுக்குப் பதில் போர்ச் சுவடுகள்!
அது என்ன? புதிய உழவு யந்திரமா? அல்ல -
856)if 6. T856OTb தானிய விதைகளும் இல்லை - தன்னியக்கத் துப்பாக்கி ரவைகள்.
தோட்டங்களைத் தோட்டாக்கள் நிரப்புகின்றன. அங்கு உழவு நடக்கவில்லை இழவு வீட்டில் அழுகை கேட்கிறது.
O (1984)

இ உதயன்
குறுகிய காலத்தில் விழுதுகள் ஊன்றி சொந்தமாய் எமக்கென ஓர் இடம் வரும் கூடிக் கதைத்து நிம்மதியுடனே ஆறுதல் கொள்ளலாம். கனவுகள் கண்டோம், கற்பனை செய்தோம். கு
நாம் இப்போதும் எப்போதும் போலவே பார்த்தக் கொண்டேயிருக்கிறோம்!
நான்
நீ
96)60
அன்று
அதைப்பார்த்த பொழுது எப்படி இருந்தது? பரந்த குளத்தின் இடக்கோடியில் குவிந்த குப்பையின் நிலமேட்டருகே மெல்லியதாய் நீண்டு இலை பல துளிர்த்து எப்படி இருந்தது?
குறுகிய காலத்தில் விழுதுகள் ஊன்றி சொந்தமாய் எமக்கென ஓர் இடம் வரும் கூடிக் கதைத்து நிம்மதியுடனே ஆறுதல் கொள்ளலாம். கனவுகள் கண்டோம், கற்பனை செய்தோம்.
மரணத்துள் வாழ்வோம்

Page 75
ஒரு நாள் ஒன்று திரண்ட வெறியர் கூட்டம் மரத்தை அழிப்பதாய் சுற்றி இருந்த வீட்டினை எரித்தது கடைகளை எரித்தது மரத்தை நாட்டியோர் தப்பி ஓடினர்.
மற்றொரு நாள்,
தனிமரம் பற்றிக் கதைப்போர் அனைவரும் பயங்கரவாதிகள்' என்று சொல்லி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றது கூலிக் கும்பல்.
நேற்று அழைத்துச் செல்லப்பட்டவர் வீதியில், கடல் கண்காணிப்பு வலயங்களில், சிறைகளில் கொலை செய்யப்பட்டனர்!
இன்று ஒன்று திரண்ட
D556 LD மரத்தைச் சுற்றி காவலுக்காய் நிற்க குண்டினை வைத்து கலையச் செய்து சுட்டுக் கொன்று.
நான்
96)6OT
இப்பொழுதும் அதைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றோம்.

இ உதயன்
பரந்த குளத்தின் இடக்கோடியில் துளிர்த்த மரத்தை நடுவால் முறித்து
குளத்தின் நீரும் சிவப்பாய் மாறி நாட்டிய மரத்தை அபிஷேகம் செய்கின்றது.
இத்தனைக்கும் பின்னர் நாம் எப்போதும் போல் இப்போதும் அதைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்.
எமக்குத் தெரியாதது ஒன்று உண்டு மரத்தின் வேர்கள் ஆழப் புதைந்து வேர்பல விட்டுள்ளது நுனியால் கருகல் குப்பைகள் மறைத்தல் தற்காலிகமானவையே சிறிய இடைவெளிகளின் பின்னர் மீண்டும் மீண்டும் துளிர்த்துக் கொண்டேயிருக்கும்.
ஒருநாள் அது முற்றாய் முழுதாய் கிளைபல விட்டே நிழல் தரும் மரமாய் மாறும் அதுவே நிச்சயமானதும் கூட.
O
மரணத்துள் வாழ்வோம்

Page 76
மக்களை நேசித்த
எங்கள் கண்களில்
கண்ணிர்ப் பூக்கள் உதிர்வதை நான் வெறுக்கிறேன். மகிழ்ச்சிக்காய் வாழ்ந்து மகிழ்ச்சிக்காய் இறந்து போய்விட்ட எங்கள் தோழர்கள் மத்தியில் அமையும் என் சமாதியில்
அழுகையின் ஒலி
கேட்கவே கூடாது. 0 செழியன்
பயிற்சி முகாமிற்கு ஓர் கடிதம்
கார்த்திகா! என் நினைவுகளோடும் உடலோடும் என்னுடையவளாகிவிட்டவளுக்கு
இப்போதெல்லாம்
இங்கு பூக்கள் வாசனை வீசுவதில்லை கருவண்டுகளெல்லாம் தெருக்களில் செத்துச் செத்துக் கிடக்கின்றன. நிலவு பெய்கின்ற இரவுகளெல்லாம் இப்போ இனிப்பதேயில்லை.
நேற்று - என்னுடைய துப்பாக்கிக்கு நான் எண்ணெய் தடவும்போது அந்த நாட்களில் என் மார்பில் சாய்ந்திருந்து நீ செய்த குறும்புகளெல்லாம் என் நினைவுக்கு வந்தன.

இ சிசழியன்
கார்த்திகா! கடந்துபோனவையை நினைப்பதிலும் ஒரு சுகம் இருக்கின்றது.
கார்த்திகா! போன தடவை எழுதியிருந்தேனே என் கூடவே இருக்கின்ற எனக்கும் பிரியமான முரட்டுத் தோழனைப்பற்றி நன்றாகவே சண்டை போடுவான்.
என் துப்பாக்கிக்கு சில வேளைகளில் அவன்தான் எண்ணெய் போட்டு வைப்பான். உன்னைப்பற்றி அவனிடம் நிறையவே பேசியிருக்கிறேன். அவனுக்கும் ஒரு இளம் காதலி இருக்கிறாள் அவன் ஆரம்பத்தில் படித்த புத்தகங்களெல்லாம் இப்போ அவளுக்கு கொடுத்து வருகிறான்.
கார்த்திகா!
என்னவென்று அதை நான் எழுதுவது சென்ற வாரம் நடைபெற்ற தாக்குதலின் போது அவன் செத்துப் போய்விட்டான். அவனது பிரியமான துப்பாக்கியில் இப்போ
அவனது காதலி சுடுவதற்குப் பழகி வருகிறாள்.
கார்த்திகா! மரணத்தை எதிர்கொண்டு நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் துப்பாக்கிகளுக்காக புதிய தோழர்கள் காத்திருக்கின்றனர்.
மரணத்துள் வாழ்வோம்

Page 77
பயிற்சி முடிந்து விரைவில் நீ திரும்பி வருவாயென எதிர்பார்க்கிறேன். நீ வரும்போது
ஒருவேளை நான் இல்லாமற் போகலாம்.
கார்த்திகா!
மக்களை நேசித்த எங்கள் கண்களில் கண்ணிர்ப் பூக்கள் உதிர்வதை நான் வெறுக்கிறேன். மகிழ்ச்சிக்காய் வாழ்ந்து மகிழ்ச்சிக்காய் இறந்து போய்விட்ட எங்கள் தோழர்கள் மத்தியில் அமையும் என் சமாதியில்
அழுகையின் ஒலி கேட்கவே கூடாது.
கார்த்திகா!
என்னவளே! என் சமாதியில் முட்களைத் தாங்கி அழகிய பூச்செடி ஒன்று துளிர்விட்டு வளரும். நான் நம்புகிறேன்.
O (1985/ இல்லாமல் போன தோழனுக்கு)
148

இ சிசழியன்
மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை ஒரு அனாதைப் பிணமாய் ஒரு அடிமையாய் புதிய எஜமானர்களுக்காக தெருக்களில் மரணிப்பதை நாம் வெறுக்கிறோம் ! 9
மரணம்
எங்கே இருக்கின்றாய்? எம் உண்மைத் தோழ!
முகம் தெரியாத கரிய இருளில் திசை தெரியாத சம வெளிகளில் உன் முகத்தை எங்கே என்று கால்களை இழந்த நாம் தேடுவது?
நசுக்கப்பட்டவைதான் எம் குரல்கள் பால்நிலவு தெறிக்க குமுறி எழுந்துவரும் கடல் அலையாய் சடசடத்து இலை உதிர்க்கும் பசுமரங்களை அதிரவைத்து அசைந்து செல்லும் காற்றாய் எங்கள் குரல்வளைகள் அறுக்கப்படும்வரை உண்மைக்காக
குரல் கொடுப்போம்!
தோழ! மரணத்தின் நாட்களை நாங்கள் எண்ணுகிறோம் இப்போதெல்லாம் உணர்கிறோம் மரணம் - கடினமானதல்ல.
மரணத்துள் வாழ்வோம்

Page 78
மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை ஒரு அனாதைப் பிணமாய் ஒரு அடிமையாய் புதிய எஜமானர்களுக்காக தெருக்களில் மரணிப்பதை நாம் வெறுக்கிறோம்!
மகிழ்ச்சிக்காய்ப் போராடி மக்களுக்காக மரணிப்பதற்கு நாம் அஞ்சவில்லை.
தோழ
நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம். துளிர் விட்டு வளரும் பூச்செடியில் புதிதாய் அரும்பும் பூக்களுக்காக,
சிறகு முளைத்த இளம் பறவைகள் சிறகடித்துப் பறக்கும் ஒலிகளுக்காக.
எங்களை நெருங்கி வருகின்ற மரணத்துக்காக நம்பிக்கையோடு நாங்கள் காத்திருக்கிறோம்!
O (1985)
151

28 613yfiuat
கறை படிந்துபோன பாடங்களின் முடிவில்
மக்கள்
எப்போதும் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.
பெர்லினுக்கு ஒரு கடிதம்!
தொலைதுார தேசத்தில் குளிர் உறைக்கும் இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்து அவள் எழுதிய கடிதம் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு.
எங்கள் முற்றத்து மாமரத்தோடு எங்கள் கிராமத்து செம்மண்ணோடு எங்கள் தேசத்து பனைவடலிகளோடு வளர்ந்து மலர்ந்த
அந்த உடன்பிறவா இனிய நேசத்தை இன்னமும் அவள் மறந்துவிடவில்லை.
560TT
நாம் ஏன் உடன்பிறக்கவில்லையென தினமும் சபித்துக் கொண்டும் எவரையுமே கேட்காமல் கூடித்திரிந்த நாட்களுக்குப் பின்
மரணத்துள் வாழ்வோம்

Page 79
அடுத்து வந்த ஒரு குறுகிய அரசியல் வாழ்க்கைக்குப் பின் அரசியல் இல்லாத துப்பாக்கிகளைக் கண்டு
s
சகிக்க முடியாமல் விட்டுப் பிரிந்து சென்றதும்.
அதற்கும் பின்னால் எங்கே என்றே தெரியாமல் சிலகாலம் தேசமெங்கும் திரிந்து நான் திடீரென உனைக் காணவந்தபோது நீ எனக்காக எழுதிவைத்த கடிதமும்
அந்நிய தேசமொன்றில் மிக்க மோசமான மரங்களிடையே புன்னகைக்க நீ மறந்து உன் கணவனோடு கைகோர்த்து அனுப்பிவைத்த புகைப்படமும் எனக்காகக் காத்திருந்தன.
நீனா இப்போதெல்லாம்
血 ஏன் சிரிப்பதேயில்லை?
உனது கடிதத்தில் கேட்டிருந்தாய் பிரியமான
உனது சினேகிதி பற்றி உனக்கும் பின்னால் விடுதலைக்காய் வீட்டை விட்டு புறப்பட்டவள்தான் வெகு நாட்களாய்
அவளைப் பற்றி செய்தி எதுவும் தெரியவில்லை.
பின்னர் அறிந்து கொண்டோம் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவனின் தகவலின் பின்னால் கிளறப்பட்ட ஆறு புதைகுழிகளில் இருந்து GL6)LDITU Li606LT6ir.
152

இன் செழியன்
2-60135) பழைய நண்பர்கள் பலரையும் விசாரித்திருந்தாய் நீ கேட்டதாக அவர்களிடம் கூறும்படி எழுதி இருந்தாய்.
நீ கேட்டவர்களில் பலர் இன்று இல்லை. பலருக்கு என்ன நிகழ்ந்ததென்றே தெரியவில்லை.
என்னதான் இருந்தபோதும் up36866iТ up (Bib முன்புபோல இப்போ இல்லை.
நீயே நிரம்ப ஆச்சரியப்பட்டுப்போவாய் நீண்டு விரிந்து கிடக்கும் வானத்தில் இருந்து,
அதன் பின்னால்
dinLLD 3in LLDTu
எங்களைப் பார்த்துச் சிரிக்கின்ற நட்சத்திர மண்டலங்களிலிருந்து
எப்போதும் போராடிக் கொண்டேயிருக்கும் கருங்கடல்களுக்கு அப்பால்
ஏதோ பெயர்தெரியாத அந்நிய தேசமொன்றில் இருந்து
திடீரென
எங்களை மீட்க மீட்பர்கள் வருவார்கள் என முன்பு போல இப்போதெல்லாம் மக்கள் நம்புவதில்லை.
மரணத்துள் வாழ்வோம்

Page 80
இப்போதெல்லாம்
LDis856
சந்தேகிக்கின்றனர், அடிக்கடி கேள்விகள் கேட்கின்றனர், தமக்குள் நீண்ட நேரம் பேசிக் கொள்கின்றனர்.
இவற்றையெல்லாம் பார்க்கையில் என்ன ஏது என்று
புரியாவிட்டாலும்
ஒன்றுமட்டும் நிச்சயமாக எனக்குத் தெரிகின்றது, மக்கள் ஏதோ செய்யப் போகின்றார்கள்.
அது, முன்பு நடந்தது போல இருக்காது.
எங்கள் மண்ணில் ஒரு புதிய வரலாற்றை நானும் நீயும்
திட்டித் தீர்த்த, அதே சனங்கள் எங்கள் மக்கள் படைக்கப் போகின்றனர்.
நேசமானவளே!
இதுவரை
சோவியத்திலும் சீனாவிலும் வியட்னாமிலும் உள்ள மக்களால்தான் முடியுமென நானும் நீயும் நம்பி இருந்தது நமது தேசத்திலும் நிகழப் போகிறது.
நிரம்ப ஆச்சரியம்தான்!
புத்தகங்களை புரட்டிப் பார்த்தேன் மனித வரலாறு அப்படித்தான் நடக்கும் என்று கூறுகிறது.
臀54

க சிகுழியண்
நீயும் உன் இனிய குழந்தையும் இப்போ வாழ்கிற தேசத்திலும் நிகழுமாம்.
இது
இன்னமும்
ஆச்சரியமான விடயமாய் உனக்கு இல்லையா?
சகோதரி!
இந்நிலையில்
எரிகின்ற
எங்கள் தேசத்தில் எழுகின்ற எங்கள்
மக்களின் கரங்களுடன்
மெலிந்துபோன என் கரங்களை
இணைத்துக் கொள்வதற்காய்
நான் எங்கள் தேசத்தில் வாழவிரும்புகிறேன்.
எங்கள் தேசத்து நகரங்களை எரித்த தீச்சுவாலைகள் அணைந்து போக முன்னரே எங்கள் தெருக்களில் படர்ந்த எம்மவர் குருதியின் சுவடுகள் உறைந்துபோக முன்னரே மனித வேட்டையரால்
கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்ட எங்கள் தேசத்து இளைஞர்களின் சடலங்களின் மேல் நடந்து
பெர்லின் விமான நிலையத்தில் வந்து இறங்கும் அகதிகள் கூட்டத்தில் என்னைத் தேடி நீ அலையாதே.
மரணத்துள் வாழ்வோம்

Page 81
கறை படிந்துபோன பாடங்களின் முடிவில் LD566i
எப்போதும்
புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.
எப்போதாவது
மீண்டும்
f எங்கள் தேசத்திற்கு வந்தால்
LD556ir
எங்கள் தேசத்தில் வாழ்ந்து கொண்டுதான்
இருப்பார்கள்.
O(1985)

இ நிலாந்தன்
கடலம்மா..!
கடலம்மா. நீயே சொல்
குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?
எம்மவரின் அவலங்களைச் சடலங்களாய்ச் சுமந்துகொண்டு குமுதினி குருதி வடிய வந்தாள். கடலம்மா கண்டாயோ கார்த்திகேசு என்னவானான்? எந்தக் கரையில் உடலுாதிக் கிடந்தானோ? ஓ..! சோழகக் காற்றே
5,
வழம்மாறி வீசியிருந்தால். 'குமுதினி” வரமாட்டாள் என்று நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய். UT6) b
மரணங்களின் செய்தி கூடக் கிட்டாத தொலைதீவில், ஏக்கங்களையும் துக்கங்களையும் கடலலைகளிடம் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் மக்கள்.
கடலம்மா நீ மலடி
ஏனந்தத் தீவுகளை அனாதரவாய்த் தனியே விட்டாய்?
85L6)LDDT.
உன் நீள் பரப்பில் அனாதரவாய் மரணித்த எம்மவரை புதிய கல்லறைகளை எழுப்பி "அனாதைக் கல்லறைகள்' என நினைவூட்டு. ஆனால், இனிவருங் கல்லறைகள்
வெறும்
இழப்புக்களின் நினைவல்ல,
எமது இலட்சியங்களின் நினைவாகட்டும்! O (1985 / Yao)-26)
மரணத்துள் வாழ்வோம்

Page 82
துாரப் பயணங்களுக்காகவோ, துப்பாக்கி ஏந்தி
திரிவதற்காகவோ அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கவில்லை. 9 வண்ணச்சிறகு
விழித்திருக்கும் மரங்கள்
கிடுகு வேலிகளுக்கு மேலாக கிளை விட்டு நிற்கும் முள் முருங்கை மரங்கள் புதிதாய் பூக்க விழித்திருக்கும்.
குடில்களில் வயோதிக ஜீவன்கள் தன் புத்திரர்கள் இன்று வரலாம் நாளை வரலாம் என்ற கனவில் மிதந்திருக்கும்.
துாரப் பயணங்களுக்காகவோ, துப்பாக்கி ஏந்தி திரிவதற்காகவோ அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கவில்லை.
காலம் தன் நடையில் சில கதைகளை சிருஷ்டிக்கும். நேற்றுவரை சின்னஞ் சிறிசுகளாக திரிந்தவர்கள்
இன்று
மக்கள் ராணுவமாக மாறியது விந்தையல்ல!

11,
இ வண்ணச்சிறகு
இன ஒடுக்கல் இராணுவம் எல்லா வீதிகளிலும் பேயாக அலைகையில் துப்பாக்கிக் குண்டுகளால் சொந்த பூமியின் மண்கட்டிகளை அபகரிக்கையில் இளசுகள் புயலாகாமல் புல்லாகவா மாறும்?
இனியும்
துாரத் தெரியும் பனை ஓலைக் குடிசைகள் எரிக்கப்படலாம்; சின்னஞ் சிறிசுகள் வீதியில் சுட்டு வீழ்த்தப்படலாம்.
கிடுகு வேலிகளுக்கு மேலாக பார்த்திருக்கும் வயோதிப கண்கள் குத்திக் கிழிக்கப்படலாம் ஆனால் என்ன? கிடுகு வேலிகளுக்கு மேலாக கிளை விட்டு நிற்கும் முள் முருங்கை மரங்கள் இனியும் புதிதாய் பூக்க விழித்திருக்கும்.
O (வண்ணச்சிறகு கவிதைகள்)
மரணத்துள் வாழ்வோம்

Page 83
சென்று வருகிறேன் ஜென்ம பூமியே!
நக்கிள்ஸின் தொடர்களை நான் நாளெல்லாம் பார்க்கிறேன். 'நீ பார்த்துச் சலிக்காத பொருளென்ன என்று நீர் எனைக் கேட்டால் நான் சொல்லும் பதிலிதுதான் - "குளிர்மேகம் வாடியிடும் நக்கிள்ஸின் தொடர்கள்தான் நான் பார்த்துச் சலிக்காத நல்ல பொருள்” என்பேன் நான்!
மக்களென்னும் சமுத்திரத்தில் நானுமோர் துளி; மனம் விட்டு நேசிக்கும் பழக்கம் எனக்குண்டு தாம் பிறந்த நாடுகளை நேசிக்காத மக்களில்லை இயற்கையெனும் பெரும் கலைஞன் செதுக்குகிற சிற்பங்களை ரசிக்காத கவிஞனில்லை
நக்கிள்ஸின் தொடர்களை நான் நாளெல்லாம் பார்க்கிறேன் வயது ஐந்திருக்கும்; இத் தொடரில் - வந்து குடியேறினேன்! அன்றிருந்து என் கண்கள் நக்கிள்ஸின் தொடர்களை நாளெல்லாம் - ஆயிரம் தடவைகள் அழகுறக் காணுமே! இருபது வருடங்கள் ஓடி மறைந்தன; என்றாலும் இன்றைக்கும் இத் தொடர்கள் இதயத்தில் குளிரூட்டும் பொருளாகும்!
இந்நாட்டு மக்களை நான்
இதயத்தில் நேசித்து, நக்கிள்ஸின் தொடர்களிலே
_g一厂 161

இ வண்ணச்சிறகு
சில காலம்
நாளெல்லாம் ஏறி இறங்கியுள்ளேன் இன்றைக்கும் அந்நாட்கள் இதயத்தில் குறுகுறுக்கும்!
நாட்கள் கழிகின்றன; நாடுகடக்கும் வேளை நெருங்குகின்றது; பிரிவு என் வாசலைத் தட்டுகிறது. பிரிவு வேதனையின் பிரதிநிதி விழி வாசலை முட்டுகிறான். அழுது விடுவேனோ என்ற பயம் என்னை அமுக்குகிறது.
நம்மிணைப்பு, நம்நேசம் நம் இயக்க விளைபொருளே, நம் இயக்கம், நம் வர்க்க செயல்பாட்டின் விளைபொருளே! நாமெல்லாம் - எங்கெங்கு இருந்தாலும், இதயத்தால், எடுத்த லட்சியத்தால் உலக இயக்க மெனும் அணியினிலே ஓர்மணியாய் தானிருப்போம்! என்றாலும் - நான் பிறந்த நாட்டினிலே நான் இருக்க விதியில்லை; என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை என்றக்கால் - வேதனைகள் முட்டாதோ! சொல்லுங்கள் தோழர்களே உங்களுக்கும் ஒரு நாள் உங்களது நாட்டை பிரிகின்ற நிலை வந்தால் உங்களது மனநிலையில் உவப்பா மேலோங்கும்? இல்லை, இல்லை,
மரணத்துள் வாழ்வோம்

Page 84
ஓர் துயர் அலை நெஞ்சில் மேவிவருமன்றோ!
ஓ!
என்னருமைத் தோழர்களே! இறுதியாக கப்பலிலே நான் நின்று கையசைத்து விடை சொல்லும் போதினிலே - என் கண்கள் மாத்திரமா? உங்களது கண்களும்தான் உணர்ச்சிமிக்க ஒரு பாஷையினை வெளிப்படுத்தும் நானறிவேன்! ஏனெனில் என் கவிதைப் பொருள்களை நான் இன்று பிரிகின்றேன் இதயத்தின் சுமையோடு தேசம் கடக்கின்றேன்.
சென்று வருகின்றேன் மலைத்தொடர்களே, திரும்பவும் நான் உன்னை என்று காண்பேனோ? சென்று வருகிறேன் தோழர்களே! திரும்பவும் நாம் ஒன்றாய் என்று மலையேறுவோமோ? சென்று வருகின்றேன் கொற்ற கங்கையே! திரும்பவும் உன் மேனியில் என்று நீராடுவேனோ? சென்று வருகின்றேன் வெகுஜனங்காள்; திரும்பவும் நான் இதயமகிழ்வோடு என்று கரம் குலுக்குவோமோ? சென்று வருகின்றேன் ஜென்ம பூமியே! திரும்பவும் உன் வெளிகளில் என்று ஓடிமகிழ்வேனோ?
O (வண்ணச்சிறகு கவிதைகள்) 162
一但一厂

இ வண்ணச்சிறகு
இந்த இரவில் நாம் எரியாதிருந்தால். 9
விடியல்
நிச்சயமற்றுப் போயின நம் இரவுகள்.
அன்பே படுக்கைக்குப் போகுமுன் இறுதி அர்த்தங்களுடன் பார்த்துக் கொள்வோம்!
குழந்தைகளின் கன்னங்களில் அழுத்தமான உன் உதடுகளை ஒருமுறை பதித்துவை, 9 JЦBLDTuЈ,
நம் உறவுகளை ஒருமுறை நினைத்துக் கொள்வோம்! .
இறுதியாக
மாறி, மாறி நம் கண்ணிர்த்துளிகளை நாமே துடைத்துக் கொள்வோம்!
இந்த இரவில் நாம் எரியாதிருந்தால் விடியலில், பனி முத்துக்கள் தாங்கும் தேயிலைத் தளிர்களில் விரல்கள் பதிப்போம்!
O (வண்ணச்சிறகு கவிதைகள்)
மரணத்துள் வாழ்வோம்

Page 85
தோழமை நிலவுகள் மண்ணில் புதைவது
தோழி உனக்குத்தான்
“நம் இரவுகள்
உடையுமா?
நம் சூரியன் நமக்கென ஒளிருமா? நம் வாழ்க்கை நம்முடையதாகவே
இருக்குமா?
நாங்களும் சுதந்திரமாய் நடந்து செல்ல வாய்க்குமா? நானும் வருகிறேன் தோழனே சொல்!”
கிடுகு வேலிக்குள் கிளர்ந்த புயலே! உன் கனவுகள் பனைகளுக்கு மேலாக பரவியது உன் பாதங்கள் பூமிக்கு மேலாக முளைத்தது. கைகளில் நகம் வளர்க்க கடல் கடந்தாய் எங்களுடன்.
தோழி! நீ விரல்களுக்கு சொந்தம் கொண்டாடு. வளர்த்த நகங்களுக்கும் சொந்தம் கொண்டாடு.
If நம் கிடுகு வேலிக்குள்ளும் கள்ளப் பூனைகள்.

இ அருள்
உன் நகங்களுக்கு
அது வண்ணந் தீட்டும். அதனை வாழ்க்கையென்று நினைக்காதே!
இன்றெமது போராட்டம் இன விடுதலைக்கானது LDL (6D66).
தோழமை நிலவுகள் மண்ணில் புதைவது இங்கும் நிகழலாம்.
ஆடை கிழிவதும் நகத் தீண்டலும் அங்கே மட்டுமல்ல; இங்கேயும்!
அடி! முள் முளைத்த வசந்தமாகு. இடி சுமந்த மேகமாகு. கிடுகு வேலிகளை கிழித் தெறியும் மின்னலாகு.
கள்ளப் பூனைகளை கண்டுபிடி. அப்புறமாய் வீசியெறி.
அடைகாத்த Luj6) (p60உடையட்டும்.
நம் கரங்கள் இருந்த இடத்தில் சிறகு முளைக்கட்டும்! O (1985 / ởÜ6)ustus)
மரணத்துள் வாழ்வோம்

Page 86
நாங்கள் எல்லாம்
இப்போ அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவதில்லை.
ஆமியும் பெடியளும்
என்ற
புதிய விளையாட்டை கண்டு பிடித்துள்ளோம். O வில்
பாப்பாக்களின் பிரகடனம்
எங்களுக்காய் எங்கள் எதிர்கால வாழ்வுக்காய் பாதயாத்திரையில் பங்கு கொண்ட
எங்கள்
பாச அண்ணாக்களே.! அக்காக்களே.!
“பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ பயங் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா' என்ற பாரதி பாடலை
பாடி மகிழும்
பாப்பாக்கள் நாங்கள் 20ம் நூற்றாண்டின்
புரட்சி யுகத்தில்
நடப்பதை..!
எம் பிஞ்சு மனதிலே பதிய வைத்துள்ளோம்.
எத்தனை கொலைகள். எத்தனை கொடுமைகள்.!! ஒ. வெலிக்கடையின் இருட் சிறைக்குள்ளே

இ விமல்
பசித்த வயிற்றுடன் பட்டினி கிடந்து
எங்களுக்காக எங்கள் எதிர்கால வாழ்வுக்காக இறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும்
எங்கள் ஆசை அண்ணாக்களே!
சிறையில் உங்கள் நகங்கள் பிடுங்கப்படுவதை வாய்க்குள் பாம்புகள் திணிக்கப்படுவதை கட்டி அடிப்பதை சிறுநீர் பருக்குவதை பக்கத்து வீட்டு மாமா சொல்வதைக் கேட்டு எங்கள் பிஞ்சுமணம் வெஞ்சினம் கொள்கிறது.
அன்று உங்கள் அண்ணாவும் அக்காவும் அப்பாவும் அம்மாவும் போராடியிருந்தால் இன்று நீங்கள் சித்திரவதைப்பட்டிருப்பீர்களா?
இன்றும் சில அண்ணாக்கள், அப்பாக்கள் அக்காக்கள், அம்மாக்கள் எங்கள் வீடு
எங்கள் காணி எங்கள் சொத்து எங்கள் பிள்ளை
660
இடித்த புளியைப்போல் இருக்கத்தான் செய்கிறார்கள்!
மரணத்துள் வாழ்வோம்

Page 87
மற்றவரின் தியாகத்திலே நல்வாழ்வு தேடும் நரிக் கூட்டங்கள்
ઈી6)
பறந்து சென்று வெளிநாடுகளிலே
பார்வையாளர் வரிசையிலே.
ஓ.
இவர்கள் எல்லாம் எளிய சனியன்கள்; எங்கள் எதிர்காலம் பற்றி எள்ளளவும் சிந்திக்காத முழியன்கள்.
ஆனாலும்
எங்களுக்காக
எங்கள்
ஆசை அண்ணாக்கள் சிறையிலே சித்திரவதைப்படுகிறார்கள். எங்கள் பாச அண்ணாக்களும் அக்காக்களும் பாத யாத்திரையிலே.
ஓ..!!
எட்டு நாட்கள் தொடர்ந்து நடக்கும் எங்கள் அண்ணாக்களின் கால்கள் வலிக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.!
நல்லுாருக்கு நடந்து போனபோது எங்கள் கால்களும் வலித்ததுதானே.!
பக்கத்து வீட்டு அம்மாக்களின்

இ விமல்
UFLJ360LJub (53,553,60)LIulb பொருட்படுத்தாமல் பாதயாத்திரையிலே தொடர்ந்து வரும் எங்கள் அக்காக்களில் எங்களுக்கு சரியான ஆசை.
எங்கள் அன்பான அக்காக்களே!
உங்கள் கால்கள் வலிக்கிறதா? அப்படியானால் சொல்லுங்கள் எங்களுக்காக நடந்து வீங்கிய உங்கள் கால்களை
6ts,856ft
பிஞ்சுக் கரங்களால் தடவி விடுகிறோம்.
உங்கள்
களைப்பை எல்லாம் போக்க கட்டி அணைத்து முத்தமழை பொழிகின்றோம்.
ஓ..!!
ബ5ണ് அன்புக்குரிய அண்ணாக்களே! உங்களுக் கொன்று தெரியுமா? நாங்கள் எல்லாம்
இப்போ அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவதில்லை ஆமியும் பொடியளும் என்ற
மரணத்துள் வாழ்வோம்

Page 88
புதிய விளையாட்டை கண்டு பிடித்துள்ளோம்.
எம்மை அடக்கும் காடையருக்கு எங்கள் அண்ணாக்கள் தெருவினிலே கண்ணிவெடி வைப்பதுபோல் மணலுக்குள் ஊமல் கொட்டையை நாங்களும் தாட்டு வைத்து எங்கள் நண்பர்களை ஆமிக்காரர்போல் ஓடவைத்து ஊமல் கொட்டையை வெடிக்கச் செய்வதுபோல் பாசாங்கு செய்து அந்த வெடியினிலே ஆமிக்கு வரும் எங்கள் நண்பர்கள் சிக்கிச் சாவதுபோல் விளையாடுவதைப் பார்த்து மகிழ்ச்சி பொங்க நாங்கள் ஆர்ப்பரிக்கின்றோம்.
பள்ளிக்கூடம் விட்டதும்
நாங்கள் பறந்தோடிவந்து எங்கள் வீட்டு கோடிக்குள்.! வேப்ப மரத்திற்கும் வெலிக்குமிடையிலே கட்டப்பட்ட கயிற்றிலே பாய்ந்து விழுந்து.! தவழ்ந்து. எழுந்து. 'பிஸிக்கல் ட்ரெயினிங் எடுக்கிறோம்.
17O
171

இ விமல்
ஓ..!
இந்த முறை நல்லுாரிலே பொம்மைகள் எங்கள் கவனத்தை திருப்பவில்லை; முஸ்லிம் கடையிலே துாங்கிய துப்பாக்கிகளும் . போர் விமானங்களும் காற்றாடிக் கப்பல்களுமே எங்கள் கவனத்தைக் கவர்ந்தன.
ബ86ബ சின்னத் தம்பிக்கும் அப்பா
ஒரு துப்பாக்கி வாங்கிக் கொடுத்திருக்கிறார்; எங்கள் படலையிலே எந்தநாள் பின்னேரமும் அவன்..!
அந்த. துப்பாக்கியுடன் "சென்றிக்கு நிற்கிறான்.
இப்போதெல்லாம் விளையாட்டில் அவனுக்கு ஆர்வமில்லை; தன் பிஞ்சுக் கரங்களிலே துப்பாக்கி ஏந்தி 'சென்றி’க்கு நிற்பதே இன்று அவனது விளையாட்டு.
இன்று எங்கள் அண்ணாக்கள் நடாத்தும் போர்
மரணத்துள் வாழ்வோம்

Page 89
எங்களுக்கு நல்வாழ்வு தேடித் தரவில்லை யெனில் உங்கள் குரல்வளையை நெரித்த அந்தக் கொடியவர்களுக்கு எதிராக
நாளை எங்கள் கரங்கள் உயரும்! இதை நம்புங்கள்!!
O
யூறிலங்கா வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை “விசாரணை செய் அல்லது விடுதலை செய்’ என கோரி யாழ். பல்கலைக் கழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட வேளை, 1985 செப். 26 முதல் ஒக்,3ம் திகதி வரை எட்டு நாட்கள் பாதயாத்திரையும் நிகழ்ந்தது. ஏழாம் நாளான ஒக்.2ம் திகதி பாதயாத்திரைக் குழு இருபாலைக்கு வந்த சமயம் கோப்பாய் விழிப்பு மன்றத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட வரவேற்பின்போது பல குழந்தைகள் குழுமி நிற்க ஒரு குழந்தையினால் வாசிக்கப்பட்ட கவிதை இது. இத் தொகுதிக்காக, தலைப்பு எம்மால் இடப்பட்டது. - தொகுப்பாளர்.
米 米水 米米米 米米 米


Page 90


Page 91
1958 முதல் 1 ஏழாண்டு கால இ யைக் கணிப்படி கொண்டு, இலங்கை ளாதார, அரசிய மீது மு. தண்யசி பார்வை இப்புத்த தன்மை. நபர்களின் யிலிருந்து போக்கு களின் மீதான
பேர்களையும் அணு நிலைகள் ஒன்ருேடெ பிரிங்தும் ஆக்கபூர் விமர்சனமாகவும், சமூகத்தின் மனுே அதன் காரணமாக மாறி மாறித் ே கின்றன. கம் விமர் விரிவாக்கக் கூடிய பு

963 வரையான இலக்கிய வளர்ச்சி இலக்காகக் 5யின் சமூக, பொரு "Gü, 6m/Taluy/Talibறின் ங்கம் செலுத்தும் நகத்தின் தனித் * மீதான பார்வை களேயும், போக்கு பார்வையிலிருந்து கும் இவருடைய ான்று பின்னியும், வமான இலக்கிய வரலாருகவும், ஒரு அலசலாகவும்,
இலக்கியமாகவும் தாற்றம் கொள் F607 L U Tifaonvas2T த்தகம்.
க்ரியா