கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடலி

Page 1
துே செப்ரம்பர் மாத வெளி யீடாக கவிஞர் சி.சிவசேகரம் அவர்க ளின் வடலி என்ற கவிதைத் தொகு தியை வெளியிடுவதில் மகிழ்ச்சிய
டைகின்றோம்.
சமகால மக்களின் வாழ்வின் பின் புலத்தில் போர்க்கால மனிதர்களின் வாழ்வின் அவலங்களையும் நெருக் கீடுகளையும் உணர்வுகளையும் தீண்டி
வரும் முயற்சியாக இக்கவிதைகள்
அமைகின்றன என நம்புகின்றோம்.
ஈழத்துக்கவிஞர்களின் வரிசை யில் மக்கள் நலனுக்கும் கவித்துவத் தின் அழகியல் அடிப்படை அம்சங் களுக்குமிடையில் சமநிலை கண்டு சமூக மாற்ற நோக்கில் கவிதை படைக் கும் கவிஞர் சி.சிவசேகரத்தின் ஏனைய கவிதை நூல்களுக்கு வரவேற்பளித் தமை போல் இந்நூலுக்கும் வாசகப் பெருமக்கள் தமது ஆதரவை வழங்கு வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
 

N |』蚊工」 A. N
گیری

Page 2

6) JClaf
சி. சிவசேகரம்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
தலைப்பு ஆசிரியர்
முதல்பதிப்பு
அச்சு
வெளியீடு
விநியோகம்
அட்டைவடிவமைப்பு :
விலை
வடலி
சி. சிவசேகரம்
1999 புரட்டாதி
டெக்னோ பிரின்ட், தெஹிவளை
தேசிய கலை இலக்கியப் பேரவை
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிரைவேட்) லிமிட்டட் 44, 3வது மாடி, கொழும்பு மத்தியகூட்டுசந்தைத்தொகுதி, கொழும்பு - 11 தொலைபேசி 335844 தொலைநகல் : 075-524358
நளிம்
ரூபா. 60.00

பதிப்புரை
தே சிய கலை இலக்கியப் பேரவையின் இருபத்தைந் தாண்டு நிறைவையொட்டி மாதாந்தம் ஒரு நூலை வெளியிடு வதெனத் தீர்மானித்துச் செயற்பட்டு வருகின்றோம்.
கொழும்பிலே ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் எமது மாதாந்த வெளியீடுகளை வெளியிடுவதென்பதும் அன்றைய தினமே எமது புத்தகப் பண்பாட்டுச் செயலர்களுடாக விநியோக இணைப்பைச் சீரமைப்பதுமென்ற திடசங்கற்பதுடன் முயன்று வருகின்றோம்.
இந் நிகழ்வின் மூலம் எழுத்தாளர் - வெளியீட்டாளர் - வாசகர் மத்தியிலான உறவையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கின் றோம்.
எமது செப்ரம்பர் மாத வெளியீடாக கவிஞர் சி.சிவசேகரம் அவர்க ளின் வடலி என்ற கவிதைத் தொகுதியை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
சமகால மக்களின் வாழ்வின் பின்புலத்தில் போர்க்கால மனிதர் களின் வாழ்வின் அவலங்களையும் நெருக்கீடுகளையும் உணர்வு களையும் தீண்டிவரும் முயற்சியாக இக்கவிதைகள் அமைகின்றன என நம்புகின்றோம்.

Page 4
ஈழத்துக்கவிஞர்களின் வரிசையில் மக்கள் நலனுக்கும் கவித் துவத்தின் அழகியல் அடிப்படையம்சங்களுக்குமிடையில் சமநிலை கண்டு சமூக மாற்ற நோக்கில் கவிதை படைக்கும் கவிஞர் சி.சிவ சேகரத்தின் ஏனைய கவிதை நூல்களுக்கு வரவேற்பளித்தமை போல் இந்நூலுக்கும் வாசகப் பெருமக்கள் தமது ஆதரவை வழங்கு வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் வெளிப்படையான விமர்சனங்களையும் வரவேற் கின்றோம்.
நன்றி
தேசிய கலை இலக்கியப் பேரவை 44, 3th tong.
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுக் கட்டிடத்தொகுதி கொழும்பு -11

உங்களிடம் இன்னுஞ் சில கவிதைகளுடன்
த் தொகுதியில் உள்ளவை, கடிகாரம் என்ற தலைப்பி லானது நீங்கலாக, 1994 இலும் பின்னரும் எழுதப்பட்டவை. தாயகத்தில் பிரசுரமான கடிகாரம், ஏகலைவ பூமியில் வரவிருந்தது. கவனப்பிசகாகத் தவறவிடப்பட்டது. 1994 - 1996 காலத்தில் நான் எழுதியவற்றிற் பல போரின் முகங்கள் தொகுதியில் வந்தவை. அக் கால இடைவெளியில் எழுதப்பட்டு (நோர்வே) சுவடுகளில் வெளி யான அயல் உல்லாசப் பிரயாணிகட்கான வரவேற்பு விளம்பரம், பணங்காய்ச்சி மரம், இன்னொரு காதலின் கதை, அந்திமம், (ஒல்லாந்து) அஆஇயில் வெளியான தெரு, லண்டனிலிருந்து நியூஹாம் தமிழர் நலன்புரிச் சங்கத்திற்காக பத்மநாப ஐயர் வெளி யிட்ட கிழக்கும் மேற்கும், இன்னுமொரு காலடி போன்ற சிறப்பிதழ் கட்காக எழுதிய நாராய் நாராய், மாநகரும் மானுடரும், புதிய உலக அமைப்பும் அமைதியும், பினோஷேக்காக ஒரு கவிதை என்பன புலம்பெயர்ந்தோர் ஏடுகட்காக எழுதப்பட்டவை. பூனைக்குத் தோழர்கள் இலங்கையில் ஒரு அரசியல் விமர்சன ஏட்டுக்கு அனுப்பப்பட்டு தபாலில் தவறவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்பு பிரான்சிலிருந்து இவ்வருடம் "தோற்றுத்தான் போவோமா என்ற சபாலிங்கம் நினைவு மலருக்கு அதை அனுப்பினேன். தமிழகத்திலிருந்து வந்த இலக்கு சஞ்சிகையில் களவு பற்றிய ஒரு பாடம், உன் தெய்வமும் என் தெய்வமும் என்பன வெளியாயின.

Page 5
பிரசுரமான பிற, ஈழத்து ஏடுகளான தாயகம், புதியயூமி, தேசிய கலை இலக்கியப் பேரவையின் 25ம் ஆண்டு விழா மலரான புது வசந்தம், சிறுவன் மணியதாஸ் நினைவு மலர் ஆகியவற்றில் வந்தவை. போரும் அமைதியும் பற்றிய ஒரு நவீனத்துவப் பின் வாசிப்பு, தமிழகத்தின் சதங்கையிலும் வந்தது. பல்லி, மந்திப்பு, பச்சோந்தி, நிலவு, காணாமற் போன வண்ணத்துப்பூச்சிகள் ஆகி யன இன்னமும் அச்சேறாதவை.
சில கவிதைகளைப் பற்றிய குறிப்புகள் இங்கு அவசியமாகின்றன. நண்பர் செந்திவேலின் மகன் மணியதாஸ் இறந்த போது நான் லண்டனில் சிறிதுகாலம் தங்கியிருந்தேன். அந்தச் சாவை ஒரு இயற்கையான சாவாக என்னால் ஏற்க முடியவில்லை. ஏனெனில் வடக்கின் போர்ச்சூழல் குழந்தைகளின் உடல் நிலையையும் உளநிலையையும் பலவகைககளிலும் பாதித்துள்ளது. முன் அறிந்தி ராத அளவில் இன்று சில பாரிய நோய்கள் பரவலான அளவிற் காணப்படுகின்றன. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதிய அந்தக் கவிதையைப் போராற் பறிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர் அனைவருக்குமான ஒரு அஞ்சலியாகவே எழுதினேன். அதையே இத் தொகுதியின் பேராகவும் தெரிந்துள்ளேன். போர்ச் சூழல் தொடர்பான கவிதைகளுக்கு இன்றைய நிலையில் விரிவான விளக்கங்கள் தேவையில்லை. குரங்குகள் பற்றிய ஒரு விசாரணை யாரைக் குறிக்கிறது என்று விசாரணைகள் நடந்ததாக அறிந்தேன். மக்களின் நலனையும் உணர்வுகளையும் மதிக்காத எவரையும் அது குறிக்கலாம் என்பதே உண்மை.
மந்திப்பு, தபாலிற் தவறியதாகக் கூறப்பட்ட இன்னொன்று. படிமக் கவிதைகள் ஒரு பம்மாத்தாகப் பல்கிப் பெருகிய சூழலில் 1995 வாக்கில் அவற்றின் ஏளனமாக அது எழுதப்பட்டது. பச்சோந்தி,

வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றமான தோற்றத்தைக் காட்டுகிற ஒரு ஆக்கம். கவிதைகளை மீள நோக்கும்போது, போரின் முகங்கள் தொகுதியின் நீட்சியாகவே பலவும் தோன்றுகின்றன. போர் எங்களை முகத்தில் உற்று நோக்கியவாறு இருக்கையில், கவிதையில் அதன் முகமே அதிகம் வரையப்படுவது இயல்பானதே. எனினும் கவிஞர்கள் சோர்ந்துவிடக் கூடாது. ஒடுக்குமுறைப் போருக்கு எதிரானதும் நியாயத்திற்கானதுமான குரலாகவே கவிதை ஒலிக்க வேண்டும் என்பது என் எண்ணம். கவிதைகளை வரிசைப்படுத்துவதிற் சில பிரச்சினைகள் இருந்தன. ஏனெனில் விடயச் சார்பாக நோக்கினாற் பல கவிதைகள் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுட் தேறும். எனவே, அண்ணளவாகத், தேசிய இன ஒடுக்கல், சாதியம், ஆணாதிக்கம், ஏகாதிபத்தியம், புலம் பெயர்ந்த வாழ்க்கை, பிற விடயங்கள் என்றவாறு வரிசைப் படுத்தியுள்ளேன்.
கவிதைகளைக் கணனி அச்சிட்டுப் பதிப்பித்த நண்பர் கே.தியாக ராஜாவுக்கும், பிரதியைப் பிழைதிருத்தி உதவிய நண்பர் சோ.தேவ ராஜாவுக்கும் முகப்புப் படம் வரைந்த இளம் ஓவியர் எஸ்.நளி முக்கும் மீண்டும் எனது கவிதைத் தொகுதியொன்றை வெளியிட முன்வந்த தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் நேர்த்தியாக அச்சிட்டுத்தரும் டெக்னோ பிரின்ற்றேர்ஸ் நிறுவனத்திற்கும் எனது நன்றிகள்.
சி.சிவசேகரம் பேராதனை
28.8.99

Page 6
6)JU65
 

இந்தக் கரும்பனைகள்
இங்கேதான் முளைக்கும் இடம்பெயரச் சொல்லி எவர் வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும் இந்தக் கரும்பனைகள்
எப்போதோ என்றோ இங்கேதான் முளைக்கும்.
எத்தனையோ பெரும் புயல்கள்,
இடிமழைகள், சுடு வேனில்
எல்லாமே எத்தனையோ
நூற்றாண்டாய்க் கண்டவைதாம்.
பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரையார்
போயொழிந்தார்.
ஆனாலும்
எங்கள் கரும் பனைகள்
எங்கள் வெளிகளிலே
ஒலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும்
6JU65

Page 7
எனவேதான் எத்தனை நாட்போனாலும் எத்தனை தான் கடிதாய் நீவிர் முயன்றாலும் எங்கள் கரும்பனைகள்
இங்கேதான் முளைக்கும்.
பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள் என்றாலும்
வெட்டிச் சரித்தீர் குண்டு எறிந்து கூரைகளைப் பறித்தீர் அன்னையரின் தந்தையரின் ஆதரவை நீர் பறித்தீர் அங்கங்குறைத்தீர்.
அமைதி கெடச் செய்தீர்.
கல்வி பறித்தீர்.
போர்க்களத்துட் புகுவித்தீர் பிஞ்சிற் கருக்கிப் பிணமாகத் தேய்வித்தீர்.
பனைபோல அல்ல பாரிலுள்ள மானுடர்கள். பனைகளிலும் மிகவலியோர் அவர் தமது பாலகர்கள் இங்கே விழுவர் இங்கேயே வேர்விடுவர் இங்கே முளைப்பர்
நிமிர்வர்
காடாய் அவர் விரிவர்
6) JU65
 

சூரியகந்தவில் சிறுவர்களைப் புதைத்த கரங்கள்
எவையோ அவையே செம்மணியிலும் இளைஞர்களைப் புதைத்தன. சூரியகந்தவின் பிணங்கள் மெளனச் சாட்சிகளாகி கொலை செய்தோர் யாரென அறியப்பட்ட பின்னரும் கொலைஞர்கட்கு அபயம் அளித்த கரங்கள் எவையோ அவையே செம்மணியின் புதைகுழிகளைத் தோண்டாமல்
மறிக்கின்றன.
அடக்குமுறை அதிகாரத்தை வலுப்படுத்தவே புதைகுழிகளில் அத்திவாரம் இடப்படுகிறது. புதைகுழிகளின் எலும்புகள் வெளியேற்றப்படும் போது அதிகார நிறுவனம் ஆட்டங் காணுகிறது. பிணங்கள் கிடந்த குழிகளின் வெற்றிடம் விழுகின்ற அரசதிகாரத்தை விழுங்கக் காத்திருக்கிறது. எனவேதான்
புதைகுழிகள் மீளத் தோண்டப்படுவதை அதிகாரத்தின் கரங்கள் மறிக்கின்றன.
6) JU.65

Page 8
அதிகாரம் எத்தனை தான் இனவாதம் பேசினும் அதன் கொலைக்கரங்கட்கு இனவேறுபாடு இல்லை. அவை நீளுகிற எல்லைவரை புதைகுழிகளும் நீளுகின்றன. அதே அரசு, அதே காவற்படைகள்,
அதே கொலைக்கரங்கள், அதே விசாரணைகள், அதே மழுப்பல்கள்,
அதே மூடிமறைப்புகள். மீண்டும் அதே புதைகுழிகள்.
6Ju 65
 

அமைதியான இரவொன்றில்
வில் வீல் வில் வில் அயலில் ஒரு குழந்தை அழுகிறது வில் வீல் வில் வில் வெளியே நாயொன்று ஊளையிடுகிறது வீல் வீல் வீல் வில் தூரத்தே வண்டுகள் கீச்சிடுகின்றன.
கண் காணாத தொலைவில் போரொன்று தொடர்கிறது செவிக்கெட்டாத தொலைவில் வேட்டுக்கள் அதிர்கின்றன மனிதர் மேனி நடுங்குகின்றனர் மனிதர் ஒடிச் சிதறுகின்றனர் மனிதர் வீழ்ந்து மரிக்கின்றனர். உண்ண உணவும் உறுஞ்ச நீரும் வழங்கிய மண் மறுபடியும் குருதியை அருந்துகிறது.
6Jul65.

Page 9
மாநகரின் அமைதியான இரவொன்றில் வானொலியின் செய்தி அறிக்கை மெல்ல ஒலிக்கிறது "பயங்கரவாதிகளின் தாக்குதல் முற்றாக முறியடிக்கப்பட்டு விட்டது அரச தரப்பில் சேதங்கள் இல்லை உயிரிழப்பும் இல்லை'
வில் வில் வீல் வீல் அம்புலன்சுகள் கூவுகின்றன இரவின் வீதிகளில் மோனம் சூழ முன் போரின் உண்மைகளைச் சுமந்தபடி அம்புலன்சுகள் விரைகின்றன.
6J 65
 

(தணிக்கை உத்தரவுக்கமையக் கவிதை எழுதுதல்) **** பற்றிப் பேசாமலிருத்தல்
அரசாங்க ஆணைப்படி ****ச் செய்திகட்குப் பூரணமான தடை. **** பற்றிய செய்திகளைத் தொலைக் காட்சியிலோ வானொலியிலோ ஒலிபரப்பவும் புதினத் தாள்களிற் பிரசுரிக்கவும் மின்மடல் மூலமோ தொலைமடல் மூலமோ தொலைபேசி மூலமோ பரிமாறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது அரசாங்க ஆணை.
அதற்கும் மேலாகப், பொறுப்பதிகாரிகள் மாநகரின் பெருந்தெருவை இரவுபகலாக அளந்தபடி கூவுகிற அம்புலன்சுகளின் ஸைரன்களின் மின்கம்பிகளைத் துண்டிக்கலாம் இரத்த தான விளம்பரங்களை முற்றாக நிறுத்தி விடலாம். இனி வரமாட்டாத மகனையோ கணவனையோ
62 U.65

Page 10
காதலனையோ சகோதரனையோ தோழனையோ எண்ணி அழுகுரல் எழுப்பும் ஒவ்வொரு வாயிலும் ஒரு துணிப் பந்தை அடைக்கலாம்.
அல்லது நாம்
அதற்குப் பதிலாக **** செய்வதை நிறுத்த வழி தேடலாம். **** இல்லையாயின் ****ச் செய்திகளைத் தடைசெய்யும் தேவையும் இல்லாது போய் விடலாம்.
6J 65
 

எதைவேண்டி எழுகிறது இந்தப் பெருநெருப்பு? எதை வேண்டி நிகழ்கிறது இந்தப் பெருவேள்வி? இனமென்று மொழியென்று மதமென்று காற்றடிக்க வீரியமாய் இங்கு ஒரு தேசத்தின் பேராலே தொடர்கிறது பகைமைத் தீ.
தீ வளர்க்க வேண்டியும் தீ வளர்க்க வேண்டாதும் தீ பற்றி நன்கு அறிந்தும், அறியாதும் தீக்குட் குதிக்கின்றார்: சுள்ளிகளாய்ச் சடலங்கள் நெய்யெனச் செங்குருதி பெய்யப் பெருகி விரிகிறது நெடுநெருப்பு எல்லையற எட்டியன எல்லாம் தமதாக்கும் பொற் கரங்கள்.
இம் மண்ணை வளைத்து ஒமகுண்டம் ஒன்றமைத்துக் கனல் மூட்டிப் போய்விட்டார்.
6Jule

Page 11
போனவரின் கற்சிலைகள் காவற் தெய்வங்கள் போல் மூலைக்கு மூலை கைவிறைத்து நின்றிருக்க இம் மண் எரிகிறது, எம் மனிதர் எரிகின்றார்,
எம்மனங்கள் எரியாமல் ஏன் பார்த்து நிற்கின்றோம்? எவர்க்காக இவ்வேள்வி, எவர்க்காக இந்நெருப்பு?
6Ju 65
 

பூசாரி கூவுகிறான்: 'தின்பண்டங் கொண்டு வா திரவவகை கொண்டு வா என்னுடைய சாமி பசியாற வேண்டுமே இன்னமும் நீ நிற்பதேன் சொன்னதெலாம் கொண்டு வா'.
பூசினியின் காய் அறுத்தோம் பலகாரம் பழவகைகள் பற்பலவும் நாம் படைத்தோம் பொங்கல் உலைவைத்தோம் பால் மோரும் இளநீரும் போதாத சாமிக்குச் சாராயம் கள்வகைகள் சீராக நாமீந்து கோழி அறுத்தோம் ஆடும் பலி தந்தோம் காசு பணம் தந்தோம், கட்டிடவும் துணி தந்தோம்
உரக்க உடுக்கடித்துப் பூசாரி கூவுகிறான்: 'தின் பண்டங் கொண்டுவா திரவ வகை கொண்டு வா"
62JU65

Page 12
லட்சக் கணக்கான மானிடரின் உடலங்கள் வெட்டி வழிந்த வெங்குருதி குடக் கணக்காய்க் கொட்டிக் கறுத்த தரைமீது நின்றபடி பறையொலி போல் வேட்டதிர, அழுகை ஒலி சங்கூத வெறியோடிச் சிவப்பான விழிகள் கனல்கக்க உடுக்கடித்துப் பூசாரி உரு ஆடிக் கூவுகிறான்: 'கோழிகளும் ஆடுகளும் கொண்டு பசி தீருவதோ சாராயங் கள்ளருந்தித் தாகம் தணிகுவதோ பத்தாயிரம் உயிர்கள் பலிகேட்கும் தெய்வமிது ரத்தத்தைக் கொண்டுவா, நரபலியைக் கொண்டுவா. கிழடுபட்ட தசை வேண்டாம் இளைய பரம்பரையின் இனியதசை கொண்டுவா பட்டம் பதவி பல அதிகாரம் பணமுடையோர் பெற்றெடுத்த பிள்ளைகளின் ஊளைத் தசை வேண்டாம் சிங்களத்தின் ஏழைகளின் சிறுவர்களைக் கொண்டு வா. பச்சை கறுப்போடு பழுப்பாடை அணிவித்து ஒட்ட முடி நறுக்கித் தொப்பி தலைக் கேற்றி சப்பாத்துக் கால்களுடன் போர்ச்சாமி சந்நிதியில் வெட்டிச் சரிக்கப் பத்தாயிரம் புதல்வர் கட்டி இறுகக் கயிற்றாற் பிணைத்தெனினும் கட்டாயமாய் எனது களத்தினுக்குக் கொண்டுவா"
ola
 

திருகோணமலைத் துறைமுகம்
எத்தனையோ கப்பல்களைக் கண்டது இத் துறைமுகம் எத்தனையோ கப்பற்காரர்களைக் கண்டது இந் நகரம் அம்மா சொன்ன கப்பல்கள் ஆச்சி சொன்ன கப்பல்கள்
நானுங் கண்ட கப்பல்கள் வெள்ளைத் தொப்பி வெள்ளை உடை
வெள்ளைத் தோல் மாலுமிகள் விரைவாக அடையுண்ட கதவிடுக்கின் வழிப் பாய்ந்து
அம்மாவின் கண்களை ஆச்சியின் கண்களை அகல விரித்தது அச்சமா ஆவலா அதிசயமா கடற்சிறையின் கதவு திறந்து
மாலுமிகளை விடுவிக்கும் துறைமுகம் கால்களை அகட்டிச் சரிந்து
மாலுமிகள் நடந்த தெருவழியே கைகளிற் கிடக்கும் சில்லறை கரைய மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கும் துறைமுகம் வந்தவை போர்க்கலங்கள் என்பதை மறக்கடிக்கும்
வாணவேடிக்கை துறைமுகத்து வானத்தின் இருளைப் பொய்ப்பிக்கும் அம்மா சொன்ன ஆச்சி சொன்ன நான் கண்ட கப்பல்கள்
பின்னர் வரவில்லை
6Ju 65

Page 13
கப்பலாற் கழித்துவிட்ட
வண்ணவண்ணக் கொடிகள் மட்டும் கலியான வீடுகளில் கோயில் விழாப் போதில் தோரணங்கள் மேலாகத் தொங்கிப் பறந்து
மெல்ல மறைந்து இன்று நெடுங்காலம் பின்னரும் கப்பல்களைக் கண்டது இத் துறைமுகம் வணிகக் கப்பல்கள் மீன்பிடிக் கப்பல்கள் இன்னமும் முன்போல,
முன்போலல்லாத போர்க்கப்பல்கள் வந்து போகின்றன. துறைமுக விளிம்பில் கடலின் ஒரத்தில் படகுத் துறையில்
எவரதோ வீட்டில் காவல் நிலையத்தில் நடுத்தெருவில் அரச அலுவலகத்தில் அகதி முகாமில் ஒரு கப்பலுக்காக ஊர் திரும்பிச் செல்வதற்கு ஒரே ஒரு கப்பலுக்காகக் காத்திருக்கிறார்கள் அம்மா கண்ட கப்பல்கள் ஆச்சி கண்ட கப்பல்கள்
நான் கண்ட கப்பல்கள்
ஊர் திரும்பிச் செல்வதற்கு ஒரே ஒரு கப்பல்
Ju 65
 

போரும் அமைதியும்
- ஒரு நவீனத்துவப் பின் வாசிப்பு
போரென்று ஒன்று இல்லாத போது அமைதியென்று ஒன்று பொருளற்று விடுகிறது எனவே/ எனவோ/ எனினும்/ எனுமாறு/ எவ்வாறும் போர் மூலம் அமைதி எனவும் அமைதிக்கான போர் எனவும் போரும் அமைதியும் வாசிக்கப்படுகின்றன.
மேலுங் கட்டுடைப்பின்
ஈற்றில்
அமைதியெனின் போரென்றும்
போரெனின் அமைதியென்றும்
மீள வாசிக்கலாம்.
மெய்யாக, இன்னும்
எதையும் அதுவாக அன்றி
வேறு எதுவாகவும்
வேண்டின் எவரும்
(எவரும் எனின் எவருமே என்னற்க)
6) Jul65

Page 14
எவ்வாறும் வாசிக்கலாம். இதுவரை எவரும் போரையும் அமைதியையும் கட்டுடைத்து அமைதி மூலம் போர் எனவும் போருக்கான அமைதி எனவும் மீளவாசித்ததில்லை.
(வாசித்து மீளவில்லை எனவுங் கொள்க) வாசிப்புக்களின் வரையறையின்மை கருதி இனியும் அவ்வாறே இருக்க வேண்டியதில்லை
ஆதலின் இதையும் அமைதிக்/ போருக்
+ கு/கும்/ குரிய/கோ/கே/காக/காகா//// என்று எவ்வாறுங் கொள்க/
கொள்ளற்க.
Jule
 

குரங்குகள் பற்றிய ஒரு விசாரணை
குரங்குகள்
குரங்குகள் குரங்குகள் ஊரின் மரங்கள் மீது குரங்குகள் மதில்கள் மீது குரங்குகள் வீடுகளின் கூரைகள் மீதும் வீதிவழி எங்கணும் வாகனங்கள் மீதும்
குரங்குகள் கண்கள் பாய்கிற ஒவ்வொரு திசையிலும் கண்கள் விழுகிற ஒவ்வொரு இடத்திலும்
குரங்குகள் தனியாகவும் கூட்டமாகவும் குரங்குகள்
குரங்குகள் இவை எங்கிருந்து வருவன எனக் கேட்டேன் தென்திசையின் வனங்களில் இருந்து என்றனர் சிலர் மேற்கென்றும் வடக்கென்றும் கூறி மறுத்தனர் சிலர் கோட்டைச் சுவர்களின் பின் குடியிருக்கும்.
6Ju 65

Page 15
மலைக்காட்டுக் குரங்குகளும் சேர்த்தி இதிலென்று திருத்தினர் சிலர் என்றோ ஒருகாலம் போல் கடல் கடக்கக் கற்பாலம் அமைத்து வந்தவைதாம் இவை யென்றும் தமக்கிடையே கதைகூறி வாதிட்டு
இருந்தனர் சிலர் குரங்குகளால் எவருக்கும் தொல்லையெதும்
இல்லையா எனக் கேட்டேன் குரங்குத் தொல்லை போனால்
வேறேதாவது தொல்லை தொல்லையே இல்லாத ஊரொன்று உனக்குத் தெரிந்தால் சொல்லென்றார்கள் உளவாளிக் குரங்குகள் கதவிடுக்குகளாலும் பிரித்த கூரை வழியாகவும் வீட்டினுள் பார்ப்பதுண்டு அதிகாரிக் குரங்குகள் கதவுகளை நீக்கியும் யன்னல்கள் வழியாகவும் நினைத்த பொழுது வீட்டுக்குள் வருவதுடன் கையில் அகப்பட்டதைத் தின்கிறதும்
சிலசமயம் கொண்டு செல்கிறதும் உண்டு
6)JU65
 

காவலாளிக் குரங்குகள்
சிறுவர்களை மிரட்டுவதோடு
இளம் பெண்களுடன்
சேட்டைகள் செய்வதும் உண்டு
குரங்குகள் பற்றி
எவரும் எதுவுமே செய்வது இல்லையா என்று கேட்டேன் என்ன செய்யலாம் என்று
என்னையே திருப்பிக் கேட்டார்கள் என்ன செய்தாலும் குரங்குகள் எப்போதும்
வந்தபடியும் போனபடியும்தான் என்று ஆறுதலாகவே சொன்னார்கள். கையில் அனுமார் படம் இருந்தால் குரங்குகளால் பயமில்லை என்றனர் சிலர். தன்னுடைய அனுமார் படத்தையும்
அடையாள அட்டையையும் குரங்கு கிழித்துவிட்டது என ஒருவர் முறையிட்டார் முறையிட்டவருக்குப் பக்தி போதாது என இன்னொருவர் கண்டித்து விளக்கினார்.
எப்படியும்
எல்லாருக்கும் குரங்குகளுடன் வாழ்ந்து பழகி விட்டது
வடலி

Page 16
குரங்குகள் பற்றிய முறைப்பாடுகளும்
குறைந்துவிட்டன
அதைவிடக்
குரங்குகள் கொலைக்கருவிகள் காவுவதில்லை
எவரையும் கடத்திச் செல்வதில்லை பெண்கள் மீது பாலியல் வன்செயல் புரிவதில்லை விசாரணையின்றியோ விசாரணையுடனோ எவரையும் மறியலில் வைப்பதில்லை
என்றவாறாக
ஊரில் இப்போது
குரங்குகள் பற்றி நல்லெண்ணமே உள்ளது
குரங்குகள் ஊருக்குள் வந்த காரணம்
காடுகளில் நிகழும் போரெனவும் மரங்களின் அழிவு எனவும் உணவு போதாமை எனவும் குரங்குகளின் சார்பான நியாயமும்
பரவலாக ஏற்கப்பட்டது போர் முடிந்த பிறகு குரங்குகளிடமே ஊரை ஒப்படைத்துக் காட்டுக்குப் போய் விடலாமென்றும் சிலர் கூறி வருகிறார்கள் ஆனால் போர் தான் முடிகிற பாடாக இல்லை
GJU65
 

பூனைக்குத் தோழர்கள்
நண்பனே
அரசினரின் சித்திரவதை முகாமொன்றில்
செத்திருக்கலாமே; அவர்கள் முழுகடித்த ஒரு கலத்தோடு போயிருக்கலாமே; அவர்களுடைய துப்பாக்கி வேட்டுக்குப்
பலியாகியிருக்கலாமே; இல்லையேல் காணாமற் போனோருள் ஒருவனாகப்
புதைகுழியொன்றுள் அடையாளம்
இழந்திருக்கலாமே; குண்டு விழுந்து சரிந்த கூரையொன்றன் கீழோ
சாய்ந்த சுவரொன்றன் கீழோ
புதையுண்டிருக்கலாமே; போகட்டும், அகதி முகாமொன்றில் பட்டினியோ பெரும்பிணியோ உன்னை மெல்ல
அரித்திருக்கலாமே
6) Ule

Page 17
ஆனாலும், அவ்வாறு நிகழாமல் எமனுலகு போய் விட்டாய்.
உனக்காக இரங்குகிறான் இங்கொருவன் . நண்பனாம். நினைவுகளைக் கொஞ்சம் இரைமீட்டுப் பார்க்கிறான் நிலையாமையென்றும் சாவின் நிச்சயமென்றும் சொல்லுகிற வார்த்தை சுடலை ஞானம் தான். உன் சாவைக் கொணர்ந்தவர்கள் அவனுக்கு இனியவர்கள் உன் கொலையை, கொலைஞர்களை ஏசிடவும்
முடியாமல் கொலைச் செயலை வீரமெனக் கொண்டாட முடியாமல் திணறுகிறான், பாவம். சாவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கையிலே ஏனிந்த விதமாய் உன் நண்பனது வாயடைக்க முதலைகளுங் கூடக் கண்களிலே நீர்வற்ற வானவெளியிலுந்தன் சாவினை நீ தேடினாய்?
(1998 ஒக்டோபரில் விமான விபத்தில் இறந்த சசி கிருஷ்ணமூர்த்தி பற்றிய சில இரங்கற் சொற்களின் அருவருப்பாக எழுதப்பட்டது)
6JU65
 

சந்தடி குறைந்த அத் தெருவழியாய் வழமை போல அவன் நடந்து போனான் விரையும் ஒரு வாகனம் முன்பின் தெரியாத முகங்கள்
சுவர்வழியே ஒரு பூச்சி மின்னலென வெட்டி மறைந்த ஒரு நாக்கு
அவன் காணாமற் போகக்
கண்டவரைக் கண்டவர் யார்?
60J 65

Page 18
வண்ண்த்துப்பூச்சிகள்
என் குழந்தைப் பருவத்துத் துயிற்பொழுதுகளில் வண்ணத்துப்பூச்சிகள் ஏராளமாகச் சிறகடிப்பன என் அம்மா எனக்காகச் சேகரித்து வைத்த வண்ணத்துப்பூச்சிகள் என் அம்மாவுக்கு அம்மாவின் அம்மா சேமித்து
வைத்தவை என் குழந்தைகட்காக நான் அவற்றைச் சேமித்து
வைத்தேன் என் குழந்தைகள் வெடிமணங் கமழும் இந்த இரவு வேளைகளில்
அலறுகின்றனர் என் குழந்தைகளின் வண்ணத்துப்பூச்சிகளைக்
களவாடியது யார்? என் குழந்தைகளின் குழந்தைகளின் துயிற்
பொழுதுகளுக்கு நானன்றி அவற்றை மீட்டுத் தரப்போவது யார்?
6Jul65
 
 

ஏழை அழுத கண்ணிர் பற்றி
கூரிய வாளை ஒக்கும்(?) ஏழை அழுத கண்ணிர் வயல்களைச் சேறாய் உழுது சென்றது, பாலை வனத்திற் பயிர்கள் விளைத்தது. ஆலையிற் கரும்பைச் சாறு பிழிந்தது, தறிகளில் வழிந்து துணிகளை நெய்தது, ஆழக் கடலில் மீனை வளைத்தது, கடலின் நீரில் உப்பு விளைத்தது, மண்ணைக்குடைந்து பொன்னை எடுத்தது, உலைகளிற் கொதித்து இரும்பை அடித்தது.
ஏழை அழுத கண்ணிர் எசமானர்களின் உடலை வளர்த்தது, எசமானியரின் முகத்திற் சொலித்தது, பல்லாக்குகளிற் சுமந்தும் வந்தது, தருமம் பற்றிய போதனை கேட்டது, தலைவிதி பற்றிய தத்துவங் கேட்டது, நீதியுரைக்கும் நூல்களைக் கண்டது, சட்டங்களின் முன் பணிந்து நின்றது.
6JU65

Page 19
ஏழை அழுத கண்ணிர் தோளிற் கிடந்த துணியை இழந்தது, வாயில் இருந்த உணவை மறந்தது, இரவற் கூரையை உறுதி செய்தது.
ஏழைகள் கண்களை உலர்த்திப் பழகினர், கண்களிற் தேக்கி மறித்த கண்ணிர் எரியும் வயிற்றிற் கொதித்து எழுந்தது, ஏழ்மையைப் போற்றும் நூல்களை எரித்தது, அழுத கண்ணிர் உறையிற் கிடந்தது, அழாத கண்ணிர் உலகை அசைத்தது.
6) JU65
 

பல ஆயிரம் வருடம் முன்
Gg, TG ġiga L I Tas-SOTI
எய்தவனிருக்க அம்பை நோவானேன்
என்கிறீர் ஐயா.
உண்மை தான்.
என்றாலும் இவ் அம்பு
எப்போதோ எய்தது.
இதன் முன்பு
எழுமரம் துளைத்த
பாணமெலாம் எம்மூலை நிற்குமோ நீர் சொல்லும்.
என் பாட்டனுக்குப் பாட்டனுக்குப்
பாட்டன் தலை கொய்து
பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டி சிரமறுத்து
பரம்பரைக்குப் பரம்பரையாய்
எல்லார் தலையும் அறுத்தெறிந்த அம்பிது.
அப்பன் தலை பறித்து ஆத்தாள் தலை பறித்து
என் அண்ணன் என் அக்காள் என் தம்பி என் தங்கை
எல்லார்க்கும் குறி வைத்து எகிறி வரும் இவ் அம்பு
என் மீதும் பாய்கையிலே ۔۔۔۔
எய்தவனைத் தேடி எங்கெங்கே நான் போவேன்?
60J 65

Page 20
என் தலையும் என் சுற்றம் எல்லாரது தலையும் எற்றி எறிந்து இனி வருகும் பரம்பரையும்
இலக்காக்கும் முன்னாலே
இவ் அம்பை நாங்கள் இப்போதே
முறித்தெறிவோம்.
அதன் பின்பு
அம்பை நாம் நோகோம்
எய்தவனை நாம் நோகோம்.
Ju 65
 

என்னுடைய தெய்வமும்
உன்னுடைய தெய்வமும்
என்னுடைய தெய்வம் ஊரெல்லையில் உட்கார்ந்திருக்கிறது கறுப்பாய்க் களிமண்ணாய்க் கண்களை முழித்தபடி கையிலே வாளுடன் பற்கள் தெரியச் சிரிக்கிறது உன்னுடைய தெய்வமே உயர்ந்தது என்கிறாய் அது சிவனானால் என்ன மாலானால் என்ன அல்லாவோ இல்லை அந்தப் பரமபிதா எனில் என்ன எதுவுமே அல்லாத பரம்பொருள் தான் எனில் என்ன என்னுடைய தெய்வம் உன்னுடைய தெய்வத்தை விட எனக்கு எட்டுந்தொலையில் உள்ளது உன்னுடைய தெய்வம் உன்னை மோட்சத்துக்கு வழிகாட்டும் என்னுடைய தெய்வம் நான் அயலூர் போய் வரும் வரையும் எனக்காகக் காவலிருக்கும்
6) JU65

Page 21
உனக்கு அது போதுமோ போதாதோ எனக்கு இது போதும்
என் ஊரானைக் கேள்
உன் தெய்வம் பற்றி நீ சொல்லும் ஒவ்வொரு கதைக்கும் தன் தெய்வம் பற்றி அவன் இன்னொரு கதை வைத்திருக்கிறான்
GJU65
 

கிளி அழகான பறவை
கிளி அழகான பறவை கிளியின் நிறம் பச்சை கிளியின் அலகு சிவப்பு நிறம். கிளி.
நிலத்தில் சிவந்த வளைந்த மலர்கள் மேலே மரத்தின் நிறம் பச்சை முள்ளில்லாத மலையகத்து முள்முருக்கு. இதழ் விரிந்து வாடி உதிருமுன் காலை மலர்கையில் மலர்கள் விழுகின்றன. விழுந்த மலரொன்றைக் கையில் எடுக்கிறேன் சிவந்த வளைந்த மலர் போன்ற தனது அலகினால் முழுதும் விரியுமுன் ஒவ்வொரு மலராகக் கொத்தி விழுத்துகிறது. முள்முருக்கம் இலைகளின் பசியநிறத்தில்
ஒரு கிளி.
62U65

Page 22
கிளி அழகான பறவை
சேனையில் சோளப் பயிர்களிடையே கிளிகளை விரட்டக் கல் எறிகிறானே அந்தச் சிறுவனிடம் போய்ச் சொல்லிப் பாருங்கள்
6)/U65
 

கற்புப் பற்றிய ஒரு பாடம்
இதுவரை கற்பின் மேன்மை பற்றிக் கற்றோம் இனிக் கற்புக்கரசியரிடம் சிறிது கேட்போம்
சூரியனை எழாதே என்று மறித்தவளே சூரியன் எழாததால் உயிர் தப்பியவர் யார்? யமனோடு போராடி உயிரை மீட்டவளே? மீட்டெடுத்த உயிர் எவருடையது? நீதி தவறிய மாநகரைச் சுட்டவளே அறுந்து போன முலை யாருடையது? கணவனைப் பிரியாமற் காட்டுக்குப் போனவளே தீக்குளித்த பின்னாலும் சந்தேகம் தீர்ந்ததா? வாளியை அந்தரத்தில் விட்டு அவசரமாய் ஒடியவளே வாளியில் இருந்த நீர் யாருடைய தேவைக்கு?
சோரம் போன கணவனைத்
தாசி மனைக்குச் சுமந்து போய்க் கற்பின் மகிமையைப் பறை சாற்றும் மாதரே
6Ju65

Page 23
உங்கள் கற்பால் உங்களுக்கே பயனில்லாத போது எங்களுக்கு எதற்கு? உடன்கட்டை ஏற எவனாவது ஆண்பிள்ளை ஆயத்தமா என்று கேளுங்கள் அவனது கற்பைப் பரீட்சிப்போம்
Ju 65
 

இன்னுமொரு காதலின் கதை
மாலைப் பொழுதுகளின் கடற்கரை மணல்விளிம்பில் விழுந்து விழுந்து சிரித்த அலைகளுடன் பகிர்ந்த பகிடிகளையும் கவிழ்ந்து கிடந்த வள்ளங்களின் காவலுட் கைகளாற் பரிமாறிய ஸ்பரிஸ் வார்த்தைகளையும் நீ திரும்பக் கேட்கவில்லை. முற்றவெளியில் எல்லோரது காதற் கதைகளையும் கேட்டுச் சுவைத்தபடி புற்றரை மீது ஊருகிற காற்றுக்குங் கேளாமற் கூறிய மெளன ரகசியங்களையும் வீதியோரமாக விரிந்து நிற்கிற மரக்குடைக்கீழ் நின்று களவாகக் கொய்த முத்தங்களையும் நீ மீளக் கேட்கவில்லை, மெளன வேளைகளின் மனத் துடிப்புக்களையும் விலகிச் செல்லலின் வேதனை மிகுந்த இன்ப எதிர்பார்ப்புகளையும் நேரத்தின் நகர்வை வெறுத்துக் கழிந்த வேளைகளின் பின் நேரத்தின் (நகராமையை வெறுக்கும் ஏக்கங்களையும் நீதிரும்பக் கேட்கவில்லை, நிச்சயமான காதலின் நிச்சயமற்ற மறுநாளைப் பற்றிய ஆசை மிகுந்த அச்சங்களையும்)நீ கேட்கவில்லை, ஒலியும் எழுத்தும் இல்லாது விழிகளும் இதழ்களும் வீதிகளின் இரைச்சலூடு பரிமாறும் மொழிகளையும் தற்செயலான மோதல் போன்று நிகழும் அரைகுறைத் தழுவல்களையும் வேலி மறைவுகளின் அரை
GJU65 ۔۔۔۔

Page 24
நிமிடத்து அரவணைப்பின் பெருமூச்சுகளையும் நீ கேட்கவில்லை, தபாற்காரச் சிறுவனது வேர்வை நனைந்த சட்டைக்குள் மறைந்து வந்த கடிதங்களையும் நீ கேட்கவில்லை, கொண்டுவந்து தருவதாக வாக்களித்த நிலவையும் வானவில்லையும் நீ கேட்கவில்லை. கொண்டு வர மறந்த கொய்யாப்பழங்களையும் மல்லிகைப் பூச்சரத்தையேனும் நீ நினைவூட்டிக் கேட்கவில்லை, இன்னும் மீறப்பட்ட உறுதிமொழிகளையும் நீ கேட்கவில்லை,(நள்ளிரவு தாண்டியும் நித்திரையை மறித்த நினைவுகளை அந்த நினைவுகட்கும் எட்டாத இனிமைகளையுடைய அதிகாலைக் கனவுகளை என்றாலும் கேட்பாய் என நினைத்தேன், நீ கேட்கவில்லை.
இக் காதற் கதை முடிந்தது என்பதைக் கூற என் சொற்கள் தடுமாறிய வேளை, நான் வருமெனக் காத்திருந்த கண்ணீரோ சுடுசொற்களோ கெஞ்சுதலோ இல்லாமல் என்னுடன் ஒரு வார்த்தையும் வாதாடாமல் எழுந்தாய், என்னுடைய காதல் பொய் என்பது உன் தீர்ப்பு. (நான் இல்லை என்பது போல என்னைத் துளைத்துத் தூரச் சென்றது உன்பார்வை) எந்தக் குண்டாலும் அதைவிட நிச்சயமாய் என்னைக் கொன்றிருக்க முடியாது.
6tl65
 

களவு பற்றிய ஒரு பாடம்
களவு பெருகி வருகிறது கதவுகளைத் தாழிடுக, யன்னல்களைப் பூட்டுக, எப்பொழுதும் விழிப்புடன் இருந்திடுக. இருந்தார்கள்,
ஆனாலும்,
களவு பெருகி வருகிறது. சந்தேக நபர்கள் சகலரையும் சிறையிடுக, மேலுஞ் சிறைச்சாலைகளைக் கட்டியெழுப்புக. கட்டினார்கள்,
ஆனாலுல்
களவு பெருகி வருகிறது. சிறைச் சாலைகளிற் கண்டிப்பை வலுப்படுத்துக, காவலை அதிகப்படுத்துக, காவல் நாய்களையும் சிறைக் காவலரையும் எச்சரிக்கை மணிகளையும் அவதான விளக்குகளையும் இருபத்து நான்கு மணிநேர விழிப்பில் வைத்தார்கள். ஆனாலும்
களவு பெருகி வருகிறது.
60J 65

Page 25
சிறைக் கைதிகளை ஒளிபுகாத வாகனங்களிலேற்றிக்
கவனமாகவே கொண்டு திரிந்தார்கள்.
ஆனாலும்
களவு பெருகி வருகிறது.
வீட்டுச் சுவர்களில் எச்சரிக்கை மணிகளையும்
அவதான விளக்குகளையும் பொருத்தி
உயர்ந்த மதில்களின் உள்ளும் புறத்தும்
தடித்த காவலாட்களையும் நெடிய நாய்களையும்
காவலிருத்தி
மின்கம்பி வேலிகட்கும் கற்சுவர்கட்கும் பின்னால்
மறிக்கப்பட்ட கடற்கரைகட்கும் தோட்டங்கட்கும்
சன்னந்துளையாத இருண்ட கண்ணாடி பொருத்திய
வண்டிகளில்
ஆயுதந்தரித்த சாரதிகளுடன்
போய் வந்தார்கள்.
ஆனாலுங்
களவு பெருகிவருகிறது
தேசம் இரண்டு விதமான சிறைக்கூடங்களாயானது:
சட்டத்துக்கு எட்டுந் தொலைவில் உள்ளோர்க்கு ஒன்று
எட்டாத தொலைவில் உள்ளோர்க்கு ஒன்று
ஆனாலுங்
களவு பெருகி வருகிறது.
oles
 

அமெரிக்க தேசத்துக்காக
மரித்தோர்
6Ju 65
ஏ, அமெரிக்க தேசமே உனக்காக மரித்தோரின் பட்டியல் மதில் நீளத்துக்கும் இருக்கிறது ஆயிரம் மீற்றர் உயரத்திலிருந்து உயிருக்கும் அஞ்சாமல் குண்டு வீசும் வீரத்தை மெச்சியவாகள் சன்னந் துளையாத கண்ணாடிக் கதவுகளின் பின்னிருந்து சொன்னார்கள்: இந்த விமானங்கள் பாதுகாப்பானவை. உயிரிழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை.
ஆனாலும்
விமான வீரர்களின் பேர்களும்
அந்த மதில் நீளப் பட்டியலில் உள்ளது
மரித்தோர் பட்டியலை முழுமைப்படுத்த
வேண்டுகிறாய்
தாம் ஏன் மரித்தோம் என்று அறியாது, ܗܝ
அமெரிக்க தேசமே,

Page 26
உனக்காகக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான வியற்நாமியர்களின் பேர்கள் எந்த மதிலிற் பொறிக்கப்பட்டுள்ளன?
நீ இருப்பதையே அறியாத அரைவயிற்றுக் கறுப்பர்களிடம் இருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு இன்னும் எத்தனை போர்கள்? எத்துணை நீளத்துக்கு மதில்கள்?
 

பினோஷேக்காக ஒரு கவிதை
அவர்களது லாபத்தில் ஒருபகுதி காணாமற் போன போது சனநாயகம் பற்றி நிறையவே பேசப்பட்டது. சனநாயகத்தைத் துப்பாக்கி முனைகள் தாங்கி
நின்ற போது மனித உரிமைகள் ஒவ்வொன்றாகக் காணாமற் போயின. அதன் பின் காணாமற் போன உரிமைகள் பற்றிக் குரல்கள் எழுந்தன. குரல்கள் எழும் போதே குரல்கொடுத்தோர் ஒவவொருவராகக்
காணாமற் போயினர். அதன் பின் 6d காணாமற் போனோர் பற்றிய கேள்விகள் எழுந்தன. கேள்விகள் எழும் போதே கேட்டோர் ஒவ்வொருவராகக் காணாமற் போயினர். கேள்விகள் மட்டும் புதைகுழிகட்கு வழிகாட்டி விட்டு மெளனமாயின அதன்பின் மண்மேடுகள் மீது புல் முளைத்துப் புதைகுழிகளும் ஒவ்வொன்றாகக் காணாமற் போயின.
JU65

Page 27
கேள்விகளும் காலத்தினுட் கரைந்து காணாமற்
போயின என்று காலடியை மெல்ல வெளியில் வைத்தான். மெளனங் கலைத்து ஒரு கேள்வி காலை இடறியது; இன்னொன்று கைகளைப் பிணைத்தது; வேறொன்று சிறைக்கூடமாக விரிந்தது. கேள்விகளாற் சூழப்பட்ட அவனை மீட்க அவர்கள் வரவில்லை.
அவர்களது லாபம் குறைவின்றிக் கிடைக்கிறது. அவன் போனால் என்ன லாபம் குறைவுபடும் வேளை. அவர்கட்காகப் புதிய குழிகளை வெட்ட இன்னொரு கொலைகாரன்.
62/U65.
 

புதிய உலக அமைப்பும்
o Gorfflu i ni
அவர்கள் அமைதியை வேண்டுகின்றனர். தங்கள் மூதாதையர் செய்த தவறுகளைத் தவறாது கண்டிக்கின்றனர். தங்கள் மூதாதையர் கால் வைத்த இடமெல்லாம் சிந்தப்பட்ட குருதியையிட்டும் திருடப்பட்ட பொருளையிட்டும் பறிக்கப்பட்ட மண்ணையிட்டும் மிகவும் வருந்துகின்றனர். தங்கள் மூதாதையர் வேரனுத்தோர் தசைகளிலே விளைந்த கோப்பித் தோட்டங்களையும் தேயிலைக் காடுகளையும் கரும்பு வயல்களையும் தங்கச் சுரங்கங்களையும் பற்றி மிகவும் வெட்கப்படுகின்றனர்.
நீங்கள்
நடந்தவற்றை மறந்து தமது நண்பர்களாக இருப்பதை
6)ht 65

Page 28
அவர்கள் மிகவும் வேண்டுகின்றனர் அத்தோடு உங்கள் வாழ்வு மிகவுஞ் சீரழிந்தும் வறுமைப்பட்டும் உங்கள் பண்பாடு சிதைக்கப்பட்டும் நீங்கள் கடவுளரால் நிராகரிக்கப்பட்டும் இருப்பதை அவர்கள் நன்றாக உணர்கின்றனர்.
உங்கள் மண்ணின் மீதும் உழைப்பின் மீதும் உங்களது ஆளுமையை வலியுறுத்தி அவர்களது அதிகாரத்தை மறுதலித்துக் கிளர்ந்து
போராடிக்
கலகங் செய்து
உலக அமைதியை நீங்கள் குலைக்காதவாறு
அவர்கள் உங்கள் மீது போர் தொடுக்கும் போதும் ஒன்றை மட்டும் மறவாதீர்: உலகம் உள்ளபடியே உள்ளவரையில்
அவர்கள் அமைதியையே வேண்டுகின்றனர்.
6).JUG5
 

6Jul65
அயல் உல்லாசப் பிரயாணிகட்கான
வரவேற்பு விளம்பரம்
வருக நல் விருந்தினரே வருக. நும் வரவு நலன் மிகவென
இந்நாடு
தன் விமான நிலையத்தில் நுமது பாதங்கள் நோவாமற் கம்பளம் விரிக்கிறது. கை கூப்பி வரவேற்கிறது. வெல்கம், ஆயுபோவன், வணக்கம், நும் கழுத்தில் மாலைகளைச் சூட்டி மகிழ்வித்துச், சொகுசான வாகனத்திலேற்றி
நும்மை இந் நாடு தன் குளிரூட்டப்பட்ட ஹொட்டல்கட்குக் கொண்டு செல்கிறது. நீவிர் மனங்கனிந்து சிந்துகிற சில்லறைக்காய்ப் பல்லிளிக்கும் இந்நாடு நும் பெட்டிகளைச் சுமக்கிறது. நீச்சற் குளத்தருகே நீளத்துவாய்களுடன் நுமக்காகக் காவலிருக்கிறது.

Page 29
இந்நாடு தன் கடலோர மணற் பரப்புகளிற் தன் பிள்ளைகளின் கால்படாது மறித்து நுமக்காக ஒதுக்குகிறது. நுமக்கு விஸ்கியும் கோக்கும் அலுத்தால் மரமேறிச் செவ்விளநீர் பிடுங்குகிறது. நுமக்குக் களிப்பூட்டத் தன் மாலைப்பொழுதுகளில் ஒப்பனை செய்து வேடம்பூண்டு கூத்துக்கள் ஆடுகிறது. நும் படுக்கையறைகளில் அம்மணமாய்க் காத்திருக்கிறது. அவசியமானால் இந்நாடு தன் குழந்தைகளையும் தருவதற்குச் சித்தமாய் இருக்கிறது. இவ்விடுமுறை கழிந்து நீவிர் சென்றாலும் விருந்தினரே. இன்னொருகால் வருக. நும்மிடம் இந்நாட்டை அடகுவைத்த எசமானரின் எசமானர்காள், இந்நாட்டின் அறிதுயில் கலையுவரை
வருக. ۔۔۔۔
GJU65
 

பனங்காய்ச்சி மரம்
பனங்காய்ச்சி மரமேறிக் காய் பிடுங்கவும் மரத்தை உலுப்பிக் காய் பொறுக்கவும் பணங்காய்ச்சி மரமிருக்கும் இடந்தேடி அவர்கள் எல்லாருந்தான் போனார்கள். ஆண்களும் போனார்கள். பெண்களும் போனார்கள். வலியவர்களும் மெலியவர்களும் போனார்கள். கற்றவர்களும் கல்லாதவர்களும் நல்லவர்களும் அல்லாதவர்களும் உள்ளவர்களும் இல்லாதவர்களுமாக அவர்கள் எல்லாரும் போனார்கள். பணங்காய்ச்சி மரம் டொலர், டொய்ட்ஷ் மார்க், யென், பவுண் என வண்ணவண்ணமாய்க் காய்த்துத் தள்ளியது. பணங்காய்ச்சி மரத்தை நாடிக் கிராமத்திலிருந்து பட்டணத்துக்குப் போனார்கள். பட்டணத்திலிருந்து பெருநகரத்துக்கும் நாட்டைவிட்டு நாட்டுக்கும் போனார்கள். நடந்தும் வண்டிகளிலேறி நகர்ந்தும் போனார்கள். கடலிலுங் காற்றிலும் மிதந்தும் போனார்கள். குதிரைகளின் முதுகில் அமர்ந்தும் வாகனங்களின் அடியிற் பதுங்கிக் கிடந்தும் போனார்கள். மின்சார வேலிகளைத் தாண்டிக் குதித்தும் பாதாளச் சாக்கடை வழியே குனிந்தும் போனார்கள். எப்படியெப்படிப் போகலாமோ அப்படியப்படியெல்லாம் பணங்காய்ச்சி மரத்தின்

Page 30
திசைநோக்கி அவர்கள் எல்லாரும் போனார்கள். ஊரைவிட்டும் உறவைவிட்டும் போவதை எண்ணி அழுதுகொண்டு போனார்கள். சிரித்துக் கொண்டு போனார்கள். சஞ்சலத்துடன் போனார்கள். சந்தேகங்களுடன், நிச்சயத்துடன், நம்பிக்கைகளுடன் போனார்கள். போன எல்லாருமே எதிர்பார்ப்புகளுடன்தான் போனார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப் பூசைகள், தோத்திரங்க்ள், பணிவிடைகள் எல்லாமே செய்தார்கள். பணங்காய்ச்சி மரம் கொஞ்சம் உண்ணவும் உடுக்கவும் கொடுத்தது. தங்குவதற்கு நிழலுங் கொடுத்தது. விளையாடவும் பொழுதைப் போக்கவும் வழிகளைக் கொடுத்தது. பிடுங்கியும் பொறுக்கியும் எடுத்த காய்களை விலையாக வாங்கிக் கொண்டது. அவர்களது சுதந்திரத்தைக் களவாடிக் கொண்டது. பணங்காய்ச்சி மரத்துக்குச் சொந்த மண்ணென்று எதுவுமில்லை என்றும் அதன் வேர்கள் உலகெங்கும் பரவி எல்லா மண்களதும் வளங்களை உறுஞ்சிக் கொள்கிறது என்றும் அறியமாட்டாதவர்கள் அறிந்து சொன்னவர்கள் மீது எரிந்து சினந்தார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப் பணிவிடை செய்வதே தங்களது பிறவிப் பயன் என்று உரத்துக் கூறினார்கள். பணங்காய்ச்சி மரத்தை நோக்கிய தங்களது பயணம் வீண்போகவில்லை என்று மெய்யாகவே அவர்கள் நம்புகிறார்கள்.
இன்னமும் பணங்காய்ச்சி மரத்தை நோக்கிப் போகிறவர்களை எல்லாருந்தான் வரவேற்கிறார்கள். எல்லாருந்தான் வழிமறிக்கிறார்கள்.
 

என் தந்தை மடியில் நான் அமர்ந்த காட்சி எனது மாற்றாந்தாயின் மனதில் பொறாமைத் தீயாக மூண்டெழுந்தது. நான் வேகினேன். என் புண்களை ஆற்றவோ வெம்பி அழுத என் கண்களைத் துடைக்கவோ இயலாது என் தந்தையைத் தடுத்தது அவரது கோழைத்தனம். கொடுமையைத் தாங்கிய என்னாற் கோழைத்தனத்தைத் தாங்க இயலவில்லை. நாடு நீங்கிக் காடேகினேன்.
முன் கண்டிராத இன்னல்கள், முன் அறிந்திராத இடர்கள், எண்ண முனையாத துன்பங்கள், என் பயணம் ஒரு நீண்ட நடைத் தவமாகத் தொடர்ந்தது. என் முகத்தில் அறைந்த மணற் புயல்களையும் என்னை முழுக்கி எழுப்பிய பேரலைகளையும் கால்களைத் தீய்த்த சுடுமணல் வெளிகளையும் வழிமறித்த மா மலைகளையும் சூறைக்காற்றையும் கடல் ஆழத்தையும் சதுப்பு நிலங்களையும் தாண்டினேன். புகலிடம் ஒன்றே இலக்காக நெடுந்தொலைவுகளைக் கடந்தேன். என் கடுந்தவம் வென்றது. என் தெய்வம் எனக்கு இரங்கியது.

Page 31
வடபுலத்து வானவெளியிலே எனக்காக ஒரு இடத்தை ஒதுக்கிய தேவனே, எனக்கு நிலையாக ஒரு நிழல் தந்த தேவனே, எல்லாமும் முன்னமே அறிவாயா? அவ்வாறெனின் ஏன் என்னிடம் நீ கூறவில்லை? தேவனே நீ தந்த இடத்தில் நான் ஒரு பெருங் கற்குவியலிடையே இன்னொரு கல். ஒரு கோடி மின்மினிகளிடையே இன்னொரு மின்மினி. எண்ணி மாளாத தாரகைகளிடையே இன்னொரு தாரகை. என் தனிமையை நீ அறிவாயா? ஒன்றோடொன்று ஒட்ட இயலாத வைரங்களுடு ஒளியைப் பாய்ச்சி வர்ணச் சிதறல்களால் வேடிக்கை காட்டுகிற தேவனே வைரக்கல்லின் தன்மையை நீ அறிவாயா? அதன் வேதனையை நீ அறிவாயா? கடுமையை மீறிய அதன் கண்ணிரை நீ அறிவாயா? ஒய்வின்றி இயங்குகிற எந்திரங்களின் பற் சக்கரங்களின் உயிரற்ற இயக்கத்தை நீ அறிவாயா? இயந்திரப் பேரொலியின் இடையே அவற்றின் அழுகுரலை நீ அறிவாயா?
தீயினின்றும் தப்பி வந்த என்னை இந்தத் துருவத்துக் கடுங்குளிர் உறையச் செய்கிறது. சுடு சொற்களென எனைச் சூழச் சொரியும் எரிகற்களைக் கண்டு என் மனம் மரத்துப் போயிற்று. என் மண்ணில் ஒரு சொல் மூட்டக்கூடிய நெருப்பின் வெப்பத்தை இந்த வடபுலத்து வானத்தின் நெருப்புக் கோளங்களால் ஏன் மூட்ட இயலவில்லை? என்னைச் சூழும் இக் குளிர் என்னுள்ளும் குடி கொண்டு விட்டதா?
6), 65
 

நான் காண்பதெல்லாமென்ன? இதயங் கல்லான பனிப்பாறைகளையும் தங்கள் கடுமையைப் பனிப்போர்வையால் மூடி மறைக்கும் கற்குன்றுகளையும் வடபுலத்து மண்ணுடன் என் உறவை மறிக்கும் பனிப்படலத்தின் எல்லையற்ற விரிவையும் தவிர என் கண்களுக்குத் தெரிவதென்ன? வட துருவ வானிலே வண்ண ஒளிகளாய் மாயங் காட்டும் தேவனே, சொல் என்றுமே எனதாக முடியாத இந்த வடபுலத்து வானவெளி நடுவே என்னை ஏன் கொண்டுவந்து வைத்தாய்?
கணனிகளின் கட்டளைக்கிசைய ஒளிவிடும் உயிரும் உறவுமற்ற வண்ண விளக்குகளின் நடுவே நான் காற்றில் தடுமாறும் ஒரு மெழுகுதிரியின் சுடருக்காக ஏங்குகிறேன். சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே தடுமாறும் ஒரு அகல்விளக்குக்காக ஏங்குகிறேன். நடுங்குகிற ஒரு குத்துவிளக்குச் சுடருக்காக ஏங்குகிறேன். எரிகின்ற எனது தேசத்துக்காக ஏங்குகின்றேன். தன் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டுக் களிமண் சட்டியில் வைத்துப் பராமரிக்கப்படும் காட்டுச் செடி போல, என் தாய்
மண்ணுக்காக ஏங்குகிறேன்.
என் சகோதரனே, என் இன்னொரு தாய் மகனே நான் சொல்வதைக் கேள். அகதி மின்னலின் ஒளியைக் கண்டு பொறாமை படாதே. அந்நிய வானில் அகதி நட்சத்திரமும் தடுமாறிப் புரளும் எரிகற் துண்டமும் ஒன்றே தான். நான் ஒளிரவில்லை, எரிகிறேன். என்
6)JU_6ტ

Page 32
மண்ணிலிருந்து என்னை விரட்டிய தீ இன்னமும் என்னுள் எரிகிறது. அது உன்னையும் எரிப்பதை நீ அறிவாயா? நீ அதை அறியாயெனின் யார் அதை உனக்கு எடுத்துரைப்பார்?
பொத்திய கைகள் மூட்டிய பொறாமைத் தீயைப் பொத்தி வைக்கவும் முடியாது, பொத்தி அணைக்கவும் முடியாது. மூட்டிய கைகளையே சுட்டெரிக்கும் தீ அது. இன்று எரிகிற மண் தனியே என் மண்ணுமல்ல, உன் மண்ணுமல்ல. இது எங்கள் மண். இதன் தீயை எங்களால் அன்றி எவரால் அணைக்க முடியும்? எம் மண்ணை எங்களாலன்றி எவரால் மீட்க முடியும்?
என் சகோதரனே, சென்றதை வெறுமனே மறந்து விடுவது தீர்வல்ல, தப்பி ஓடுவது. தவறுகளை அறிவது, தவறுகளினின்று கற்பது, தவறுகளைத் திருத்துவது, தவறுகள் மீள நேராமல் தவிர்ப்பது. இதுவே மீட்சிக்கான பாதை, கல்லும் முள்ளும் நிறைந்த போராட்டப் பாதை. இந்த மண்ணை இந்தத் தீயினின்று உனக்காகவும் எனக்காகவும் மீட்டாக வேண்டும். அதை விட மேலாக எங்கள் எதிர்காலத்தின் குழந்தைக்கட்காக மீட்டாக வேண்டும்.
ஒரு புதிய தொடக்கத்திற்கான வேளை நெருங்குகிறது. கனல் நெருப்பையும் கடுங்குளிரையும் விட அதிகமாகக் காலம் நம்மை நெருக்குகிறது. சகோதரனே, அன்று கைகோத்து விளையாடிய நாங்கள் ஒன்றாகக் கைகோத்து
6Ju 65
 

நடக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது. உன் அழைப்புக்காக என் செவிகள் இன்னும் அகலத் திறந்துள்ளன. வடபுலத்து வானத்தின் எரிகற்களின் ஓயாத இரைச்சலையும் ஊடுருவி உன் சொற்கள் எழட்டும். முதலில் மெலிதாக எழுந்தாலும் மீள மீள உச்சரிக்க அவை உரத்து எழுந்து வான் முகட்டில் எதிரொலித்து வடபுலத்தை அடையட்டும்.
எரிகின்ற எமது மண்ணின் ஒவ்வொரு சாம்பற்
துளியினின்றும் உயிரை மீள உருவாக்கும் வித்தையை ஒன்றாகப் பயில்வோம், வா!
6) JU65

Page 33
நாராய் நாராய்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்து பயன்மிக அறிந்த பனைசெறி நாட்டார் வழிபல சென்றே பலதிசைப் பரந்தார் வருகுவ தெந்நாள் அறிவையோ நாராய்
திரைகடல் ஒடித் தம்முயிர் பேணத் திரிந்தவர் தமக்கோ எங்கனும் அவலம் கரியவர் அயலார் என வசை கேட்போர் கவலைகள் நீயும் உணர்வையோ நாராய்
அகதியின் வாழ்வின் இழிநிலை தாங்கி அந்நிய மண்ணில் அண்டிக் கிடந்து மிகநலி மாந்தர் தம்நகர் மீளும் வகையென ஒன்றேன் மொழிவையோ நாராய்
பெருங்குளிர் வருமுன் கடல் பல தாண்டிப் புலம்பெயர் புள் நீ கிளையுடன் மீண்டும் வருகுவை நின்மண் தவறுதல் இன்றிப்
GJU65
 

GJU65
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் நாராய் நினக்கோ யாதும் ஊரே நாராய் நின் இனம் யாவருங் கேளிர் பாராய் எங்கள் மனிதரின் நிலையை நாராய் நமக்கோர் நல்வழி கூறாய்.

Page 34
மாநகரும் மானுடரும்
ஒவ்வொன்றும்
விலக்கின்றி மற்ற ஒவ்வொன்றும் போல வளர்வதன்றி வேறு வழியின்றி
மாநகரம் வளர்கிறது. அதன் விளிம்பு அயல்களைக் கரைத்துப் புரள்கிறது அதன் மையம் வானை விழுங்கி உயர்கிறது மாநகரம் தனது முகத்தை
மொழியைப்
பண்பாட்டை அடையாளத்தை இழக்கிறது.
வருவதையன்றி
வேறுவழியின்றி
மனிதர் மாநகருள் வருகின்றனர் மாநகரின் மையத்தின் கோபுரங்களுட் புதைகின்றனர் அதன் விரையும் விளிம்பினுள் கரைகின்றனர் மாநகரின் முகத்தை
மொழியைப்
6) JUG5
 

பண்பாட்டை அடையாளத்தைத் தமதாக்கும் முயற்சியில் தமது நாட்களை இழக்கின்றனர் விலக்கின்றி
மனிதர் ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரும் போல மாநகரம் போல
25 Dgle . . . .
Ju 65

Page 35
அந்திமம்
வேனிற்கால மாலைப்பொழுதுகள்
என்றுமே
வீண்போனதில்லை. வானத்தின் அந்தி வர்ணங்களை இலைகளின் அந்திக் காலம்
வாங்கிக் கொண்டது.
தொடர்வன மரணங்கள். சருகுகளை அள்ளி அலுத்த பூங்காவின் பராமரிப்பாளர்
ஏக்க்த்துடன்
விழாத இலைகளை எண்ண
அண்ணாருகிறார் அரச மருத்துவமனை முகாமையாளர் (செலவுகள் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும்) சாக மறுக்கின்ற 4 கிழவர்களை எண்ணுகிறார்.
6) JUL65
 

மாநகரின் முகில்கள் விரைந்தோடுகிற குறுகலான வான விதியைக் கடக்க நிலவுக்கு நெடு நேரமெடுத்தது: இருமருங்குமிருந்த கொங்கிறீற்றுச் சுவர்களின் ஒளிச்சதுரங்களால் உபயோகமில்லை. சற்று முன்னர் தெருக் கரையில் நின்ற தாத்தாவுக்கும் வெகு நேரம் எடுத்தது.
() It els'

Page 36
எனக்கு மந்திப்பாக இருந்தது மக்னீசியா சாப்பிட்டுப் படுத்தேன் எனக்குள்ளிருந்து பாலாறு பெருகி ஓடி வான வீதியில் நட்சந்திரங்களை முழுகடித்தது கனவு கண்டு விழித்தேன் ஆனாலும் மலம் மட்டும் கழியவில்லை தொடர்ந்தும் மந்திப்பாக இருந்தது ஆமணக்கெண்ணெய் சாப்பிட்டுப் படுத்தேன் எனக்குள்ளிருந்து எண்ணெய்க் கிணறு பெருகி வழிந்து கொதித்து பூமி தீப்பற்றி எரிந்தது கனவு கலைந்து எழுந்தேன் இன்னமும் மந்திப்பாகவே இருந்தது கடுக்காய் சாப்பிட்டுப் படுத்தேன் எனக்குள்ளிருந்து மரங்கள் வளர்ந்து மேகங்களைப் பிடித்து சூரிய வெளிச்சத்தை மறித்தன கனவுக்குள்ளிருந்து எழுந்தேன் மந்திப்புத் தொடர்ந்தது
GJU65
 

GJU65
சவர்க்காரத் திரி வைத்துப் படுத்தேன் எனக்குள்ளிருந்து திராவக ஊற்று பொங்கிச் சாக்கடை வழியே ஒடி கடல்களில் மீன்களைச் சாகடித்தது கனவை நீங்கி எழுந்தேன் மந்திப்பு மட்டும் மாளவில்லை மருந்தெடுப்பதில்லை என்று முடிவு செய்தேன் தற்கொலை முயற்சி என்று என்னைப் பிடித்துச் சென்று மருத்துவமனையில் அடைத்தார்கள் மலக்குவியல்களால் சூழப்பட்டேன் கனவல்ல ஆனாலும் மலம் மட்டும் கழியவில்லை

Page 37
பச்சோந்தி: ஒருபுறம்
எங்களது உறவுக்கு
இவ்வேலி சாட்சி. நண்பகலின் சுடு வெயிலில் நிகழும் எங்கள் சந்திப்பில் v,
ஒரு சொல்லும் பரிமாறாது, எந்தனை நீ உந்தனை நான் நோக்கி நிற்கும் பொன்னான பொழுதை வெறும் மோனம் ஆளும். நின்றபடி பார்த்து அலுத்த படலை சோரும். சின்ன ஒரு முறுவலும் நீ செய்ததில்லை என்றாலும்
என்கதை நீ அறிவாய் போல உன் தலையைச் சாய்த்து
ஒருகால்
ஒயிலாய் வெட்டி ஒன்றுக்கும் சைகை இது இல்லை என்று கண்சிமிட்ட உனக்கியலும். அந்த ஆற்றல் என்னிடத்து இல்லை. நீ என்னை வென்றாய்.
6) JU65
 

6J 65
உன்மொழியை விளங்க எனக்கு ஆற்றல் இல்லை, என்மொழியை நீ அறியாய். என்ன செய்வேன்?
எம்மிடையே பொது மொழியென்று ஒன்றிருந்தால் இம் மோனச் சுவர் என்றோ தகர்ந்திருக்கும்.
ஒருவேளை
நெடுநேரம் கதைகள் பேசி நெருங்கியதோர் நட்புறவும் மலர்ந்திருக்கும். மறுபுறத்து யோசித்துப் பார்த்தால் எங்கள் உரையாடல்
வரையின்றி நீண்டு
ஈற்றில்
ஆதி முதற் குரங்கின் அடி வந்த எங்கள் மூதாதையர் பெருமை
இன்னும் முன்னோர் சாதி மத மேம்பாடும் அன்னார்
அன்று பாதி உலகு ஆண்டிருந்த கதை நான் பேச, இம் மண்ணில் குரங்கினங்கள் தோன்ற முன்பே உன் முன்னோர் உலகமெலாம் ஆண்டார் என்றும்

Page 38
அன்னாரின் உடல் வலிமை
உயரம்
வேகம்
என்றெல்லாம் நீ சொல்ல நான் மறுக்க நம்மிடையே வீண் கதைகள் நீண்டு பின்னர் நம் உறவு சீரழிந்து அழிவுபட்டு மாளுதற்கோ நம்மிடையே கதைகள்? வேண்டாம்.
மூளுகிற பகை எமக்குள் என்றும் வேண்டாம். நாளும்
நடு வெயிலில் நம் உறவு நட்பாய் வாழட்டும் நெடுங்காலம்,
மோனமாக,
6) U.65
 

பச்சோந்தி : மறுபுறம்
எங்களது உறவுக் கிவ் வேலி சாட்சி நண்பகலின் சுடுவெயிலில் நிகழும் எங்கள் சந்திப்பில் ஒரு சொல்லும் பரிமாறாது
எந்தனை நீ உந்தனை நான் நோக்கி நிற்கும் பொன்னான பொழுதை வெறும் மோனம் ஆளும் நின்றபடி பார்த்தலுத்த படலை சோரும் சின்னவொரு முறுவலும் நீ செய்ததில்லை என்றாலும் என்கதை நீ அறிவாய் போல உன் தலையைச் சாய்த்தொருகால் ஒயிலாய் வெட்டி ஒன்றுக்கும் சைகை இது இல்லை என்று கண்சிமிட்ட உனக்கியலும் அந்த ஆற்றல் என்னிடத்து இல்லை நீ என்னை வென்றாய் உன்மொழியை விளங்க எனக் காற்றல் இல்லை என்மொழியை நீ அறியாய் என்ன செய்வேன் எம்மிடையே பொதுமொழியென் றொன்றிருந்தால் இம்மோனச் சுவரென்றோ தகர்ந்திருக்கும் ஒருவேளை நெடுநேரம் கதைகள் பேசி நெருங்கியதோர் நட்புறவும் மலர்ந்திருக்கும் மறுபுறத்து யோசித்துப் பார்த்தால் எங்கள்
60J 65

Page 39
உரையாடல் வரையின்றி நீண்டு ஈற்றில் ஆதிமுதற் குரங்கினடி வந்த எங்கள் மூதாதையார் பெருமை இன்னும் முன்னோர் சாதி மத மேம்பாடும் அன்னார் அன்று பாதி உலகாண்டிருந்த கதை நான் பேச இம் மண்ணில் குரங்கினங்கள் தோன்ற முன்னே உன் முன்னோர் உலகமெலாம் ஆண்டார் என்றும் அன்னாரின் உடல்வலிமை உயரம் வேகம் என்றெல்லாம் நீ சொல்ல நான் மறுக்க நம்மிடையே வீண்கதைகள் நீண்டு பின்னர் நம்முறவு சீரழிந்து அழிவுபட்டு மாளுதற்கோ நம்மிடையே கதைகள் வேண்டாம் மூளுகிற பகை எமக்குள் என்றும் வேண்டாம் நாளும் தடு வெயிலில் நம் உறவு நட்பாய் வாழட்டும் நெடுங்காலம் மோனமாக
6ju65
 

6),65
புகையிரத மேடை, பேர்ப்பலகை மின்விளக்குகள் எல்லாமே
என்னை விலகிச் சென்றுவிட்டன.
மரங்களும் கம்பங்களும் தலைதெறிக்க ஓடுகின்றன. யன்னலூடு தலைநீட்டும்
அந்த
நிலவுத் துண்டு மட்டும் என்னைத் தொடர்ந்து வருகிறது. அம்மாவின்
நினைவுத் துண்டு போல.

Page 40
நேரத்தைக் கணக்கெடுத்துக் காலத்தை ஆள்வதற்குக் கண்டறிந்த தோர் கருவி
நிழல் பதித்து மணல் வழித்து நாடி துடிக்கப் பல் முளைத்த சில்லுருட்டிக் கைகாட்டி மணியொலிக்கக் கற்றதொரு கடிகாரம்
கூண்டுகளிற் கூவிக் கோபுரத்திற் கொலுவிருந்து சங்கிலியிற் கோத்துச் சட்டையிலும் தொற்றிக் கைகளிலும் ஏறியபின் கையிழந்த கடிகாரம்
ough
 

6Ju 65
எண்சிமிட்டப் பழகியது பாடப் பழகியது பேசப் பழகியது காணுந் திசை தோறும் கால் பதிக்கும் இடந் தோறும் கடிகாரம் கடிகாரம்
வேலைக்குப் போவென்று ஏவும் துயில் கலைக்கும் ஒய்வாக இருக்குங் கால் எழுந்திரென எனை விரட்டும்
ஓடென்று சொல்லும் நேரம் அளந்து
கணக்கெடுத்து விரும்பியதைச் செய்வதற்கு வேளையெதும் இல்லையெனத் தீர்ப்பு வழங்கி
எந்தன்
காலத்தை ஆள்வதற்கோ கண்டறிந்தார் கடிகாரம்.