கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு

Page 1
ஓர் இலக்கிய வரலாற்றுச்
பேராசிரியர் கார்த்திகேசு. சிவத்த
ர இலக்கிய விழா வெளியீ
 
 
 

>மைத்துவ மரபு
கண்ணோட்டம்

Page 2

யாழ்ப்பாணத்தின்புலமைத்துவ மரபு
ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்
G. குணரத்தினம் தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்
பேராசிரியர். கார்த்திகேசு சிவத்தம்பி தலைவர், நுண்கலைத் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
அனுசரணை - ப்ரவாத

Page 3
யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்
ஆசிரியர் : Guyırflflui öır. f6)yö3ıöı? (M.A:, PH.D.)
தமிழ்ப் பேராசிரியர், தலைவர், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தில் ஆற்றிய உரையின்திருத்திய பிரதி.
முதற்பதிப்பு : பெப்ரவரி 1995
வெளியீடு சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு
இல61, பழைய கொட்டாவ வீதி மிரிஹான நுகேகொட
அச்சிட்டோர் : டெக்னோபிரின்ட்,
6, ஜெயவர்த்தன அவெனியூ, தெகிவளை
விலை : 30/-

முன்னுரை
யாழ்ப்பாணத்து இலக்கிய வரலாற்றைச் சில ஆசிரியர்களதும், சில நூல்க ளினதும் காலவரன்முறைப்பட்ட பதிகையாகக் கொள்ளும் ஒரு மரபு வலிமையுடன் நிலவுகின்றது. அந்த இலக்கிய வரலாற்றை யாழ்ப்பாணத் தின் சிந்தனை மரபின் பின்புலத்தில் வைத்து எடுத்துக் கூறுவதற்கான ஒர் அறிமுக முயற்சியே இது. யாழ்ப்பாண இலக்கிய வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சிந்தனை மரபின் வெளிப்பாடாகக் கொள்ளும் ஒரு கருத்து நிலையும் உண்டு. குறிப்பாக 19ம் நூற்றாண்டு இலக்கியத்தை அவ்வாறு எடுத்துக் கூறுவதும், அந்தக் கருத்து நிலையின் பின்னணியிற் சென்ற கால இலக்கியத்தை நோக்குவ தும் மரபாகிவந்துள்ளது.
யாழ்ப்பாணத்து இலக்கிய வரலாற்றில் பல புலமைத்துவப் போக்குகள் (intelectual trents) முக்கிய இடம்பெற்றுள்ளன என்பதை வற்புறுத்துவதே இவ்வுரையின் நோக்கமாகும்.
இவ்வுரையை நான் ஏற்கனவே எழுதியுள்ள ஈழத்தில் தமிழ் இலக்கியம் (1978, 1988), யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் (1993) ஆகிய நூல்களுடன் இணைத்து வாசித்தல் வேண்டும். அப்பொழுதுதான் யாழ்ப் பாணச் சமூகத்துக்கும் அதன் இலக்கியத்துக்குமுள்ள உறவு முழுவதும் விளக்கும் எனக்கருதுகிறேன். இந்நூலிலே தொட்டுக்காட்டப்பெற்றுள்ள சிந்தனைச் செல்நெறிகள் - இஸ்லாமிய நோக்கு, கிறிஸ்தவத்தின் வழிவந்த நவீன மயப்பாடு, மாண வர் காங்கிரஸ் இயக்கம் சுட்டினிற்கும் சனநாயக, சமூக சீர்திருத்தப் போக்கு ஆகியன விரிவாக ஆராயப்படவேண்டியவை.
யாழ்ப்பாணத்தின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றுச் செல்நெ றியின் ஒரு முக்கிய அமிசம், பாரம்பரிய இலக்கியங்களும், நவீன இலக்கி யங்களும் ஒரே நேரத்தில் ஏறத்தாழ சமமான சமூக பலத்துடன்நிலவுவதா கும். இது யாழ்ப்பாணச் சமூகத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை எடுத்துக்காட்டி நிற்பதாகும். வந்துசேரும் "புதியன'வற்றால்தான் அடித் தள மாற்றமடையாது, அந்தப் 'புதியன” ஒரு மட்டத்திலும், அதே

Page 4
வேளையில் இன்னொரு மட்டத்தில் மரபுப் பேணுகையும் நடைபெறுவ தைக் காணலாம். இதில் உள்ள சுவாரசியமான அமிசம் யாதெனில், இந்த மரபுப்பேணுகை ஒவ்வொருதலைமுறையிலும் சொல்லப்பட்டு வருவ தேயாகும். இந்த மரபுப்பேணுகைக்கான 'ஆட்சேர்ப்பு' என்ன அடிப்ப டையில் நடைபெறுகின்றதென்பது உன்னிப்பாக ஆராயப்பட வேண்டிய தொன்றாகும்.
இத்தகைய உசாவல்களின் பொழுது இலக்கிய வரலாறும், சமூக வரலா றும் ஒன்றிணையும். அப்பொழுதுதான் இலக்கியங்களின் மூலமாக வர லாற்றுப்போக்கை அறியும் முறைமை வளரும்.
இந்த உரையினை ஆற்றுவதற்கு என்னைத் தூண்டியவர் எனது மாணவர் யாழ்.பல்கலைக்கழகத்து தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு. சி.சிவலிங்கராசா ஆவார். அவருக்கு என் நன்றிகள். இந்த உரையின் உருவாக்கத்திலும் அதன் உள்ளீடான 'வாதத்திலும்', தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணமேற்றிராணியார் ஆயர், கலா நிதி எஸ்.செபநேசன் மிகுந்த அக்கறை காட்டினார். அவருக்கு என் நன்றி கள் உரித்து.
உரையின்தட்டச்சுப்பிரதியை வாசித்த திரு.மதுசூதனன் இதனை வெளியி டுவதில் பெருஞ்சிரத்தை காட்டினார். விபவி அலுவலர் திரு.ஹ.சுரேஷ் சர்மா அவர்களும் இவ்விடயமாக பேரார்வம் காட்டினார்.
இவர்களுக்கு என் நன்றி.
2/7, 58, 37வது ஒழுங்கை கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை கொழும்பு - 06
27.01.1995

யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
- ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ன்ேனாட்ட
“வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஒர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப்புறம் உள்ளது”
ஆர்.சி.கொலிங்வூட் வரலாற்றியலறிஞர்.
பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள் எமக்கு இங்கு இயைபுடைய ஒன்றாகின்றது. வரலாற்று முகவர்களின் 'சிந்தனைப் பக்கத்தை' அறிவது வர லாற்றாசிரியரின் கடமையெனின், இலக்கிய வரலாற்றாசிரியனின் பணியோ, இலக்கியங்கள், வாதவிவாத எழுத்துக்கள் ஆகியவற்றில் எடுத்துக் கூறப்பட்ட கருத்துக்கள் வரலாற்றை எவ்வாறு வெளிப்படுத்துவனவாயுள்ளன என அறிவதா கும். எந்த எழுத்தும், சம்பந்தப்பட்டவரின் அறிகை முறையின் (Way of cognition) அடியாக வருவதாகும். எந்த அறிகையும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட எழுத்தாளனின் சமூக நிலைப்பாடுகளோடு சம்பந்தப்பட்டதாகும்.
இந்த அறிகை முறை அவ்வச் சமூக - பொருளாதார மரபுகளினூடாக வரும் அறிகைமுறைமையோடு (Knowledge System) சம்பந்தப்பட்டதாகும். அறிவுமு றைமை என்பது கல்வி, கேள்வி மரபு, பயிற்சி மரபு, அவை பற்றிய கருத்து நிலைகள் ஆகியனவற்றை உள்ளடக்கி நிற்பதாகும். உயர் அங்கீகாரம் பெறும் அறிவு முறைமை, சம்பந்தப்பட்ட சமூகத்தின் நிலைப்பாடுகளை நியாயப்படுத் தும் ஒரு 'நிறுவன’மாகவே அமையும்.
யாழ்ப்பாணச் சமூகத்தின் வரலாற்றோட்டத்தில் மேலாண்மையுடையனவாக விளங்கியனவும், மேலாண்மையடைய விரும்பியவையுமான சிந்தனை மரபுகள் யாவை என்பதையும், அந்தச் சிந்தனை மரபுகள் எவ்வாறு நடந்தேறிய சமூக வரலாற்று மாற்றங்களின், அன்றேல் மாற்ற முயற்சிகளின் பட்டெறிவாக (Reflection) இருந்தன என்பதையும் கோடிட்டுக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்க மாகும.
ஒரு சமூகத்தின் சிந்தனைகள், அதன் புலமையாளரால் (Intelectual) வெளிக்கொ

Page 5
ணரப்படுகின்றன. 'புலமையாளர்' (சற்று இலக்கியமயப்படுத்திக் கூறினால் "புலத்துறை போகியோர்) என்னும் பதம், அறிவு, காரணி விளக்க ஆற்றலையு டையோரைக் குறிக்கும். இந்தப் புலமையாளர் அறிவினாலும், அறிவு தரும் கற்பனைத்திறனாலும் ஆற்றலாலும் வாழ்க்கையை நடத்துபவர்ஆவர். புலமைத் துவ(Intelectual) மரபு என்பது இப்புலமைச்செல்நெறி பாய்ந்தோடிய பாங்கினை விளக்குவதாகும். இந்தப் புலமைத்துவ மரபினை எழுத்துக்களிலும் மற்றைய ஆக்கங்களிலும், இயக்கங்களின் செயற்பாடுகளிலும் கண்டு கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபினை அதற்குரிய பின்புலத்தில் வைத்து விளங்கிக் கொள்வதற்கும் நாம் இரு அமிசங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளு தல் அவசியமாகும். முதலாவது, யாழ்ப்பாணத்தின் இயல்புகளை அறிந்து கொள் "ளல். இரண்டாவது, புலமைத்துவ வெளிப்பாட்டு முறைமைகளான எழுத்துக் கள், சமூக சீர்திருத்த முயற்சிகள் போன்றவற்றின் தளமாக அமையும் சிந்தனைச் செல்நெறிகள் யாவை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளல்.
யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கிலுள்ள தீபகற்பப் பகுதியாகவும், இந்தியா வின் தென்பகுதிக்கு மிக அண்மையானதாகவும் அமைந்துள்ளது. இத்தீபகற்பத் தன்மை காரணமாக ஓர் ஒதுக்கற்பாட்டுணர்வு நிலவுவதையும் நாம் மனங்கொள் ளல் அவசியமாகும்.
ஆனால், அதே வேளையில் தமிழ் நாட்டுக்கு வெளியே தோற்றுவிக்கப் பெற்ற தமிழருக்கான ஒர்அரசஉருவாக்கம் இப்பிரதேசத்திலேயே நிகழ்ந்தேறியது. அந்த அளவுக்கு இது முக்கியமான ஒரு தமிழ்க் குடியிருப்பாக அமைகின்றது. இந்த முக்கியத்துவம் இலங்கை, இந்தியா, தென்னாசியா ஆகிய மூன்று நிலைகளிலும் உணரப்படுவதொன்றாகும்.
இப்பிரதேசம் பிரதானமாக சைவமும் தமிழும் என்ற ஒரு மேலாதிக்கக் கருத்து நிலையோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், இங்கு சிறுபான்மையினராக முஸ்லிம் கள் வாழ்ந்து வந்துள்ளனர். மதஅடிப்படையில் நோக்கும் பொழுது கிறிஸ்தவர்க ளும் கணிசமான தொகையினர் உள்ளனர். கிறிஸ்தவர்களுள் றோமன் கத்தோலிக் கரே பெருந் தொகையினரெனினும், புரட்டஸ்தாந்திகள் கல்வி முதலாம் புல மைத்துவத்துறையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். யாழ்ப்பா

ணத்து அறிவு முறைமையின் ஓர் அங்கமான உயர் பாடசாலை வளர்ச்சியில் இவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக முக்கியமானவையாகும்.
யாழ்ப்பாணத்தின் பொருளாதார வரலாற்றின் பண்புகளை எடுத்தக்கூறிய பேரா சிரியர் அரசரத்தினம்.
The strength of the Jaffna settlement has been this concentration of population and their density. This has enabled them to develop viable economic relationships among themselves and has encouraged regional specializations and exchange of commodities. It has also enabled the region to grow in insolation from the rest of the island and shelterd it from vicissitudes else where.................. ................ ................. ...................................... SSL LSS SLLSL LLS LS CS LLSLL LS LS LS LSSS SS LSSL LS LSL S LSL LS LS LS LS LS LSSSL LSL LS LS LS LSLL LS LS LSLSLL LSSLS SSSS S LSSL LS S S LSL LSSL LS S LSL LSSL LS SL LS LSSS LS LS S LSS LSL LSSL LS S LS LSLL LS S SL LS S S S LSL S S S S S S S L S S S SL LSL S With in peninsula itself patterns of settlement have continued with relatively little change over last 400 years. These has been little internal movement of population except with in small distances in areas of little productivity and areas subject to sabination.
குடியேற்றம், சனநெருக்கம் பற்றிய இந்த ஸ்திரப் பண்பு ஏறத்தாழ 1984 வரை காணப்படுகின்றதெனலாம். அதன் பின்னர் இனக்குழுமப் போர் காரணமாக பெருமளவில் சனத்தொகை மாற்றம் ஏற்படுகின்றது. எனினும் இதற்கு முன்னர் ஏறத்தாழ 14,15 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு நிலையான சமூக - பொருளாதார அமைப்பு உருவாகி நிலைபெற்று வந்துள்ளது. இந்த ஸ்திரப்பாட்டிற்கு இம்மக்களிடையே நிலவிய ஒரே சீரான பொருளாதார நடவடிக்கை மரபும், சட்ட ஒழுங்கு மரபும் காரணமாக அமைகின்றன. இதனை யாழ்ப்பாணத்தில் நிலவிய தேசவழமைச்சட்டமும், சாதியமைப்பும் வழங்கின. தனியார் சொத்துக்கு வழங்கப்பட்ட மரியாதையும், அவை பேணப்பட்ட முறை மையும் (வேலியிட்டுப் பிரித்து வைத்துக் கொள்ளல்) இந்த ஸ்திரப்பாட்டுடன் காரணகாரியத் தொடர்பு கொண்டவையாகும். யாழ்ப்பாணத்தின் சமூக, பொருளாதார ஸ்திரப்பாடு பற்றியும் மேன்மைச் சக்தி கள் பற்றியும் அரசரத்தினம் அவர்கள் தொகுத்துக் கூறுவது உற்றுநோக்கப்பட வேண்டியது. There was then the institution of caste which evolved in ways differrent from the original home - lands of the Tamils. The absence of a large group of Tamils weakend the Brahminie norms which the Tamils had brought from south India. Castes did not have to strictly adhere to traditional occupations and there was some socio - economic mobility. These

Page 6
occupations did not and could not have the same social values attached to them as in South India. Agriculture and Agriculture persuits continued as the most valued occupations but seafaring and the industries associated with seproduce achieved a value greater than in South India and provided the means to upward social mobility. The numerical preponderance of the major agricultural caste, which soon became the dominant caste in society gave a stability to society. This also contributed to the orderly progress of economic relationships in society.
(S.Arasaratnam Historical foundation of the Tamils of North SriLanka-Fourth Chelvanayagam Memorial lecture Jaffna - 1982)
மாற்றங்கள் அதிகம் ஏற்படாது தொடர்ந்தமைக்கும், அதே வேளை மேனிலை நோக்கிய சமூக - பொருளாதார அசைவியக்கத்துக்கான (தென்னிந்திய சாதி மரபில் இருக்காத சில) சாத்தியப்பாடுகளும் இங்கு நிலவியமைக்கான காரணங் கள் இப்பொழுது துல்லியமாகின்றன. யாழ்ப்பாணச் சாதியமைப்பு வழங்கிய மேலாண்மையுடன் விவசாயம் பிரதான இடத்தை வகிக்கத் தொடங்கிற்று.
இந்த விவசாய மேலாண்மைக்கான இன்னொரு காரணம் இங்கு ஒரு வன்மை யான வணிக வர்க்கமோ, முயற்சியாளர்குழாமோ (entrepenurialgroups) இல்லாது போனமையாகும். சிறு வியாபாரிகள் ஆன வணிக குழுவினரைத் தவிர இங்கு எடுத்துப் பேசக்கூடிய வணிக மரபினர் மிகக் குறைவானோரே, வல்வெட்டித் துறை, பருத்தித்துறை கடலோடிகளால் நடத்தப் பெற்று வந்த ஒரு வர்த்தகப் பாரம்பரியம், பாய்க்கப்பல் முறைமையின் ஒடுங்குதிசையின் பின்னர் (இதே காலத்திலேற்பட்ட சுங்கத்திணைக்கள வளர்ச்சியுடன்) மங்கிப் போயிற்று. வணிக முனைப்பும், பெருந்தொகை வணிக முதலீடுமில்லாது இருந்தமையும், இச்சமூகத்தில் ஒரு வகையான மாற்றமின்மையைத் தவிர்க்க முடியாததாக்கிற்று எனலாம். இவ்வாறான ஒரு 'பாரம்பரிய'ச் சூழலில், பாரம்பரியப் பேணுகை முக்கிய இடம் பெற்றது ஆச்சரியத்தைத் தருவதன்று. இத்தகைய சமூகங்களில் மதம் முக்கியம் பெறுகின்றது. அதனை மையமாகக் கொண்டே பாரம்பரியப் பேணுகை நடப்பதும் இயல்பே. இத்தகைய சமூகத்தில் நிலவும் அறிவு - முறைமையும், சமூகப் பாரம்பரியங்க ளைப் பேணுவதாகவே அமையும். இங்கு வரன் முறையான கல்வி என்பது மதஞ்சார்ந்ததாகவும், சமூகத்தின் சகல ஆக்கங்களையும் உள்ளடக்காததாகவும்,

உண்மையில் இச்சமூகத்தின் அடிநிலையினருடன் சம்பந்தப்படாததாகவே இருக் கும். அடுத்து, இந்தச் சமூக பொருளாதாரப் பின்புலமுள்ள இச்சமூகத்தில் எழுத்துக்க ளும் புலமைத்துவச் செல்நெறிகளும் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை வர லாற்றுப் பின்னணியில் வைத்து நோக்குவது அவசியமாகின்றது.
அதனைப் பின்வரும் வகையில் மிகச்சுருக்கமாக எடுத்துக் கூறலாமெனக் கருதுகி றேன்.
மேனாட்டு வருகைக்கு முந்திய காலம் (Pre - Westem)
அ. யாழ்ப்பாண அரச உருவாக்கம் நடந்தேறிய காலம் (14ஆம், 15ஆம்) பெரும் பாலும் ‘வரலாறு' சார்ந்த எழுத்துக்களே காணப்படுகின்றன. இவை இந் துப் பாரம்பரியத்தில் வரலாறு எடுத்துக் கூறப்படும் பெளராணிக, ஐதீக மரபை ஒட்டியே அமைந்துள்ளன. தக்கிண கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, வையாபாடல், கைலாயமாலை ஆதியன. மற்றையவை மதம், மருத்துவம் சார்ந்தவை. ஆ. முஸ்லிம்களின் வருகை: மேனாட்டார் வருகைக்கு முந்திய காலத்து முஸ் லிம் இலக்கியப் படைப்புக்கள் எதுவும் இல்லையென்றே கூறல் வேண்
டும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்பட்ட காலம் (1505 - 1796)
அ. போர்த்துக்கேய, ஒல்லாந்தர்காலங்கள் - கிறிஸ்தவத்தின் வருகை - கத்தோ
லிக்கம், இறப்பிறமாதுக் கிறிஸ்தவம் இந்துமதமும் இஸ்லாமும் பலத்த பாதிப்புக்குள்ளாக்கப்படல். இக்காலத் துக்குரியனவாக உள்ள கிறிஸ்தவ, இந்து எழுத்தாக்கங்கள்.
ஆ. அந்நிய கல்விமுறை நிறுவப்படல் - டச்சு ஆட்சியின் கல்வி முறைமை.
பாரம்பரியக் கல்வி முறையின் தொடர்ச்சி - தமிழகத் தொடர்புகளின் தொடர்ச்சி.

Page 7
பிரிட்டிஷ் காலம் (1796 - 1948)
* பிரித்தானிய ஆட்சியின் மதநெகிழ்ச்சிக் கொள்கைகள்; சமூக - பண்பாட்டுத் தலைவர்கள் பிரித்தானிய ஆட்சியை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவம் சாராத ஒரு கல்வி முறையைக் கோரியமை; கிறிஸ்துவத்திற்கான இவ்வெதிர்ப்பு கல்வி முறைமைக்குள் கிறிஸ்தவம் முனைப்புப்படுத்தப்பட்ட முறைமை பற்றியிருந்த துவே தவிர அந்தக் கல்வி முறைமைக்கு அது கொண்டு வந்த உள்ளடக்கம், அமைப்பு ஆகியவற்றுக்கு எதிரானதன்று.
இந்தக் கல்விமுறைமையை ஏற்பது பற்றி நடந்த போராட்டங்கள் முக்கியமான வையாகும். தமிழ்க்கல்வி மரபையும், ஆங்கில மொழிப் பயில்வையும் எவ்வாறு இணைப்பதென்பது ஒரு பிரச்சினை மையமாக விளங்கியது. ஆறுமுகநாவலரின் இயக்கம் இது சம்பந்தப்பட்டதாகவே அமைந்தது.
இறுதியில் சமூகத் தேவைகளையும் மதத் தேவைகளையும் இணைக்கும் சைவ ஆங்கிலப் பாடசாலை மரபு தோற்றுவிக்கப்பட்டது.
இந்த இணைப்பு ஏற்பட்டதும் பாரம்பரியப் பேணுகையையும் புதிய தேவைக ளையும் அனுசரிக்கும் ஒரு சமூக அசைவியக்க முறைமையையும் கடைப்பிடிப் பது சுலபமாயிற்று.
இந்துமத மட்டத்தில் இவ்விணக்க இயைபு முயற்சி மேற்கொள்ப்பட்ட வேளை யில் புதிய கல்வி மரபு கிறிஸ்தவ முகாமையின் கீழ் வளர்த்தெடுக்கப்படலும், விஸ்தரிக்கப்படலும் நடைபெறுகின்றன.
இதனை முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள் புரட்டஸ்தாந்துப் பிரிவினர்களே. (அமெரிக்கன்மிஷன், வெஸ்லியன்மிஷன், ஆங்கிலத்திருச்சபை மிஷன் ஆதியன முதலிலும் கத்தோலிக்கம் பின்னருமே வந்தன)
பிரித்தானிய ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்களின் பின்னர், நவீனமயப்பாடு (Modernization ) ஆங்கிலக்கல்வி முறைமை மூலமே வந்தது. இந்த நவீன மயப்பாடு இல்லாது சமூக அந்தஸ்துப் பேணுகையையோ, சமூக மேனிலைப்பாடோ சாத்திய மற்றதாகிற்று. இதனால் இந்த நவீன மயப்பட்ட கல்வி சமூக முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்றாகிற்று. அதனால் இக்கல்வியை மிகச் சிறந்த சூழலிற் பெறக் கூடிய கல்வி வாய்ப்புக்கள் முக்கியமானவையாகின.

யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய நவீன மயமாக்கம் ஏறத்தாழ 1950கள் வரை தொழில்நுட்ப மயவாக்கத்துடன் (technologization) சம்பந்தப்படவில்லை. கல்வி மூலமாகவே இந்த நவீனமயவாக்கம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் பிராமணிய முறைமையில்லாததனால் சாதியமைப்பில் தமிழகத்திற் காணப்படாத ஒரு நெகிழ்ச்சி இங்கு இருந்தது. இடைநிலைச் சாதியினர் தங்கள் அந்தஸ்தை உயர்த் திக் கொள்ளவும், தங்கள் இடம் நன்கு வரையறுக்கப்படாதிருந்த சாதிக்குழுமங் கள் (அகம்படியார், தனக்காரர், சாயக்காரர் போன்றோர்) உயர்நிலையினருடன் தம்மை இணைத்துக் கொள்ளவும் கல்வி பயன்பட்டது. இந்த நெகிழ்ச்சியினைப் பயன்படுத்திய நவீனமயமாக்கம், கல்வியை ஒரு முக்கிய பொருளாதார முயற்சி யாக்கிற்று. * ஆங்கிலக்கல்வி வாயில்களாக அமைந்த நிறுவனங்களினுள் அமெரிக்க மிஷ னரிமார் நடத்திய யாழ்ப்பாணக் கல்லூரி, இருந்த ஆங்கிலக் கல்லூரிகளிலும் பார்க்க உயர் வகுப்புக்களை நடத்தியபடியாலும், பிரிட்டிஷ் காலனித்துவ மேலாண்மைக்குக் கட்டுப்படாதிருந்தமையாலும், பாடசாலை நிர்வாகத்திற்கு அரச நிதியுதவியை எதிர்பாராதிருந்தாலும் 19ஆம் நூற்றாண்டு அமெரிக்கத் தாராண்மைவாதக்கல்வி முறைமையைப் பின்பற்றியதாலும் மற்றைய கல்வி நிலையங்களில்லாத ஒரு தாராண்மை (liberal) வாதப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடியதாகவிருந்தது. இந்தத் தாராண்மைவாதச் சூழலில் அக்கல்லூரி மாணவர்கள், யாழ்ப்பாணத்தில் எல்லாக் காலத்திலும் நிலவி வந்துள்ள இந்தியச் செல்வாக்குக் காரணமாக வந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சமகாலப் போக்குகளை உள்வாங்கி முற்றி லும் புதியதளமாற்றவாத (radical) சமூக, அரசியற் கோட்பாட்டை முன்வைக்கின் றனர். இது நடந்தது 1924- சமகாலப்பிரிவிலாகும். இதுவே யாழ்ப்பாணத்தின்மாணவர் பேரவை இயக்கமாகும். (Student Congress) அதனைத் தொடர்ந்து 1939 முதல் மார்க்ஸியச் சிந்தனை பரவத் தொடங்குகின்றது. அடிப்படைப் பொருளாதார உறவுகள் மாறாத ஒரு சூழலில் மார்க்ஸியம் இங்கு வன்மையான சமூக - பொரு ளாதாரக் கோட்பாடாக கிளம்பாது புலமை நெறியாகவே வளரத் தொடங்குகின் றது. புலமை நெறியாகத் தொடங்கியது நிறுவன அமைப்பாக மாறத்தொடங்க சமூகச் சுரண்டல்கள் இடம் பெறும் இடங்களில் வேரூன்றத் தொடங்கிற்று. அரசியலில் இது இலங்கையை ஒரே தேசியக் கூறாகக் கொண்டது.

Page 8
சிங்களத் தேசியவாதக் காலம் (1948)
இந்தப் புலமைத்துவ நெறிப்பரவலைத் தொடர்ந்து, மிக முக்கியமான சிந்தனை மரபாக மேற்கிளம்புவது இலங்கையை முற்று முழுக்கத் தனது என உரிமை கொண்டாடிய சிங்களத் தேசியவாதமாகும். இது 1920களில் தொடங்கி - 1930களில் முக்கியமாகி, சுதந்திரத்தின் பின்னர்தன்னைப் புவியியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் நிலைநிறுத்தத் தொடங்கிற்று. சிங்களத் தேசிய எழுச்சியின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள், தமிழரின் சமூக மேனிலைப்பாட்டுக்கான பிரதான வாயிலான கல்வியுரிமைகளைப் பாதிக்கத் தொடங்கவே, அதற்கெதி ரான இனக்குழுமத் தனித்துவ வெளிப்படுத்துகை தொடங்குகின்றது. இது 1949 இல் நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் தொடங்குகின்றதெனலாம். 1956இன் பின்னர் இது வளரத்தொடங்கி 1972இல் ஒர் அரசியல் திருப்புமுனையை எய்துகின்றது. 1972 ஆட்சியமைப்பில் தமிழர்களுக்கான இடம் பேசப்படாமலே விடப்பட்டது. இலங்கைத் தமிழ்ப் போராட்டம், அது எதிர்நோக்க வேண்டிய சிங்களத் தேசியத்தின் அரச நிலைப்பட்ட ஒடுக்குமுறைகள் காரணமாக வன்மு றைப்பட்டதாகவும், புதிய தலைமையை நாடுவதாகவும் அமைந்தது. 1970களின் பின்னர் தமிழ்த்தேசியம் முக்கிய அரசியற் சக்தியாகி மேற்கிளம்புகின்றது.
அடுத்து மேற்கூறிய காலகட்டங்களில் தோன்றிய எழுத்துக்களையும் பிற புல மைத்துவ வெளிப்பாடுகளையும் சற்று விரிவாக நோக்குவோம்.
அவ்வாறு ஆராய்வதற்கு முன்னர், ஒரு அவதானிப்பினைப் பதிவு செய்து கொள் ளுதல் அவசியமாகின்றது. யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய அமைப்புக்குச் சவால் கள் கிளம்பிய காலகட்டங்களிலேயே முக்கியமான புலமைத்துவ நடவடிக்கை கள் தோன்றின என்பது உய்த்தறியப்படத்தக்கதாகவுள்ளது. அவ்வாறு நோக்கும் பொழுது புலமைத்துவ நடவடிக்கைகள் இருநிலைகளில் வைத்துப் பார்க்கப்பட GR) fÒ.
ஒன்று - நிலவும் அமைப்புக்குச் சவால் விடுவன யாவை என்பதும் அவை எவ்வகையில் சவாலை விட்டன என்பதும், இரண்டு - நிலவும் அமைப்பு புதிய சவால்களை எவ்வாறு ஏற்றக் கொண்டது என்பதும், அதனால் அவ்வமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை என்பதும். இவ்வாறு நோக்கும் பொழுது மேனாட்டார் வருகைக்கு முற்பட்ட புலமைத்துவ மரபானது பிரதானமாக, சமூக அமைப்பின் உருவாக்கத்துக்கு உதவுவனவாகவும்

அந்த அமைப்பினை நியாயப்படுத்துவனவாகவும் காணப்படும். இது பற்றி 'ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் விரிவாக விளக்கியுள்ளேன். (2ஆம் பதிப்பு 1987 - பக்கம் 10-11, 163 - 5) வையாபாடல், கைலாயமாலை, தட்சண கைலாச புராணம், பரராஜசேகரனுலா, கதிரைமலைப் பள்ளு ஆகிய நூல்களின் தோற் றத்தை மனங்கொள்ளல் வேண்டும், அவை தோன்றிய அந்தக் காலப் பிரிவி லேயே வைத்திய நூல்களும் (செகராசசேகரம்) தோன்றின. இந்த நூல்களின் தோற்றத்துக்கும், ஆட்சியதிகாரத்துக்கும் தொடர்பு இருந்ததென்பது இந்நூல்கள் பற்றிய தகவல்கள் வழியாகத் தெரியவருகின்றன. மக்கள் நிலைப்பட்டதான இக்கால இலக்கியமென்று கூறப்படத்தக்கதாக அமைவது கண்ணகி வழக்கு ரையே. இந்நூல் கோயில் ஏடுகள் வழியாகப் பேணப்பட மற்றைய நூல்களோ வரன்முறையான உயர்நிலைப் பேணுகை வழியாக கையளிக்கப்பட்டனவாகும்.
யாழ்ப்பாண அரசின் ஆட்சியம்சங்களின் முக்கியமான ஒன்று பிரதேச முதலிக ளின் முக்கியத்துவமாகும். யாழ்ப்பாண அரசு ஒருமுகப்படுத்தப்பட்ட ஒர் ஆட்சி முறைமையை நடைமுறைப்படுத்தியிருந்தது என்பதற்குப் போதிய சான்றுக ளில்லை. அத்துடன் தென்னிந்தியாவில் நிலவி வந்த கூறாக்க முறைமைக்கு (segmentary State tradition) மாறான ஒழுங்கமைக்கப்பட்ட ஒர் ஆட்சி முறைமை யாழ்ப்பாணத்தில் நிலவிற்று என்றும் கொள்ள முடியாது. யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்கே பிரதேசப் பிரதானிகள் சூழ்ச்சி முக்கியமான ஒரு காரணியாக விளங் கிற்று என்று கொள்ளப்படுவதிலிருந்து இந்த உண்மை நன்கு புலனாகிற்று.
மேனாட்டார் வருகைக்கு முன்னர் நிலவிய கல்வி முறைமை பாரம்பரிய தமிழ்க் கல்விமுறைமையாகவே இருத்தல் வேண்டும். அதாவது குரு-சிஷ்ய மரபினைக் பேணியதாகவும், உயர்நிலைப்பட்டோருக்கு உரிய ஒன்றாகவும், மதச்சார்புடை யதாகவுமே இருந்திருத்தல் வேண்டும். அந்த அளவில் இச்சமூகத்தின் இயல்பான அடுக்கமைவு முறைக்கு (hierarchical nature) இயைந்ததாகவே அமைந்திருத்தல் வேண்டும். 'உலகம் என்பது உயர்ந்தோர்மேற்றே" எனும் கருத்துநிலை இத்த கைய சமூகங்களின் இயல்புநிலையாகும்.
இக்கால இலக்கியங்களில் முக்கியமானதும், யாழ்ப்பாணத்தின் சிந்தனை மர பில் முக்கியமானதாக எடுத்தோதப்பட வேண்டிய நூல் இரகுவமிசமாகும். காளி தாஸனது மூலநூலின் மொழிபெயர்ப்பாக அமைந்த இந்த ஆக்கம், அரசகேசரியி னுடையது. அரசகேசரி யாழ்ப்பாண அரசர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். சமஸ்கிருத மரபுவழிவரும் ஓர் இந்து முறைமையை யாழ்ப்பாணத்து மரபின் தளமாகக் கொள்ளும், ஒரு செயற்பாடு இதனுள் தொக்கு நிற்கின்றது. தனியொரு நூலினை வைத்துக்கொண்டு பொதுப்படையான ஒரு வரலாற்றுச்செல்நெறியை

Page 9
வகுத்துக் கொள்வது சிரமமெனினும் பின்வரும் யாழ்ப்பாணத்தில் வளர்ந்த சைவசித்தாந்த மரபினை நோக்கும் பொழுது (சைவசித்தாந்தத்தை வேதாகமத் தின் பிழிவாகக் கொள்வது) இரகுவமிசத்தின் தமிழ்ப்படுத்துகைக்கான புலமைத் துவச் செல்நெறி மிக உன்னிப்பாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிக்காலங்கள் இப்பிரதேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகின்றன. மேனாட்டாட்சிமுறையும் கிறிஸ்தவ ரும் இலங்கை நாட்டினதும் இப்பிரதேசத்தினதும் வரலாற்றையே மாற்றியமைக் கின்றன. இங்கு நிலவிய விவசாய அமைப்பும், அடுக்கமைப்புச் சமூக முறைமை யும், கூறாக்க ஆட்சியமைப்பும்; வந்த ஆட்சியை எதிர்பதற்கோ அன்றேல் அதற்கு எதிராகக் கிளம்புவதற்கோ வேண்டிய ஒரு கருத்துநிலையை மக்களி டத்தே ஏற்படுத்தக்கூடியனவாக அமையவில்லை.
கிறிஸ்தவத்தின் வருகையும், அது அரசயந்திரத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப் படுத்தப்பட்டமையும் இங்கு நிலவிய சமூக - மத மேலாண்மைக்குப் பெருஞ்ச வாலாக அமைந்தன. இந்த வருகையுடன் பாரம்பரிய அமைப்பு அதனைப் பேணு வதற்கான ஆட்சியதிகார ஆதரவை இழந்தது. திருச்சபையோடிணைந்த ஒரு கல்வி மரபு இச்சமூகத்தின் பாரம்பரிய புலமைத்துவ மரபுக்குச் சவாலாக விளங் கிற்று. இந்த வருகையின் காரணமாக பாரம்பரிய புலமைத்துவ நிறுவனங்களி டையே ஓர் ஒதுக்கற்பாடு (exclusiveness) காணப்பட்டது. இப்பிரதேசத்தின் மத பண்பாட்டு ஊற்றின் தளமான தமிழகத்திற்குச் செல்லும் ஒரு செல்நெறியும் காணப்பட்டது.
கிறிஸ்தவம் இத்தகைய ஒரு பாதிப்பை ஏற்படுத்திற்று என்றாலும் அந்த ஆரம்ப நிலையில் கிறிஸ்தவம் பாரம்பரிய அமைப்பினை அது ஜிவமரணப்போராட்டம் நடத்தும் ஒரு நிலைக்குத் தள்ளவில்லை. ஏனெனில் முதலில் வந்த கத்தோலிக்க மதத்தினர், இச்சமூகத்தின் உயர்மட்டத்திற்கு எத்தகைய ஒரு பெருஞ்சவாலையும் ஏற்படுத்தவில்லை. இந்தப்பிரதேசத்தின் பாரம்பரியப் பண்பாட்டினைப் பேணும் அதன் களஞ்சியமாக விளங்கிய சமூகமட்டத்தில் ஒரு மிகச் சிறிய பகுதியினரே கத்தோலிக்கத்திற் சேர்ந்திருந்தனர். பெரும்பான்மையான கத்தோ லிக்கர் அடிநிலைப்பட்ட சாதிக்குழுமங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் அவ் ஆட்சிவழிவந்த மத பண்பாட்டமிசங் களை புறக்கணிக்கும் ஒரு மனோபாவமே உயர் குழாத்தினரிடம் நிலவிற்று. ஒல்லாந்தர் ஆட்சியில் குறிப்பாக அதன்பிற்பகுதியில் கிறிஸ்தவத்தின் பரப்புகை பற்றிய அவர்களது சிரத்தை, பொருளாதாரத் துறையில் காட்டப்பட்ட அளவு

காட்டப் பெறவில்லை எனலாம். கிறிஸ்தவ மதத்தை ஊக்குவிப்பதென்பது ஒல்லாந்தராட்சியில் இரண்டாம் பட்ச இடத்தையே பெற்றிருந்ததெனினும், ஒல்” லாந்தக் கல்வி முறையானது திருச்சபையுடனேயே இணைக்கப்பட்டிருந்தது. Youth with some education had career openings in the company's Junior administrative service. They were employed as translators in the company's offices, in the revenue services in a wide range of duties, and as school masters and catechists.
(S.Arasaratnam 9.V., P-17) போர்த்துக்கேயர் காலத்து மேற்கொண்ட ஒதுக்கல் நிலைப்பாட்டை யாழ்ப்பா ணச் சமூகத்தின் உயர்குழாத்தினர் ஒல்லாந்தர் காலத்தில் மேற்கொள்ளவில்லை எனலாம். தங்களைக் கிறிஸ்தவர்களாகக் காட்டிக் கொள்ளவும் அவர்கள் தயங்க வில்லை. யாழ்ப்பாணத்தில் 1758இல் 37 தேவாலயங்களும், 200, 233 இறப்பிறமா துக் கிறிஸ்தவர்களுமிருந்தனரென்று கூறப்படுகின்றது. ஒல்லாந்தர் ஆட்சியில் கத்தோலிக்கர்களும் இன்னல்களுக்காளாக்கப்பட்டனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் போர்த்துக்கேய ஆட்சியே மோசமாகவி ருந்தது. கத்தோலிக்கர்களைப் பொறுத்தவரையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் தங்கள் மதத்தைப் பேணுவதற்கு தங்கள் அடிநிலைத் தொடர்புகளை வற்புறுத்திக் கொண்டனர் எனலாம். ஒல்லாந்தர்ஆட்சியின்கீழ் உள்நாட்டு நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் தரகர்க ளும் நல்ல நிலையிலிருந்தனர் என்பர். இலக்கியத்தின் மூலம் இந்த உண்மை நிரூபிக்கப்படுகின்றது. உள்ளூர்ப்பிரபுத்துவ பரம்பரை பற்றித் தோன்றிய முதலா வது நூல் - கரவை வேலன் கோவை - ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்ததாகும்.
யாழ்ப்பாண வைபவ மாலை கூட
'உரராச தொழுகழன் மேக்னூனென்றோதும் உலாந்தேசு மன்னன் உரைத் தமிழாற் கேட்க'
மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்டதாகும் என்பர். யாழ்ப்பாணத்தின் பாரம்பரியச் சமூக அமைப்பு அந்நிய ஆட்சியுடனும் கிறிஸ்த வத்துடனும் "உடனுறைய'ப் பழகிக் கொண்டுவிட்டது எனலாம். பிரித்தானிய ஆட்சி வருகையுடன் ஆட்சியாளரின் மதக் கொள்கையில் மேலும் நெகிழ்ச்சி காணப்படுகிறதெனினும், இக்கால பிரிவில் புரட்டஸ்தாந்து மதங்க

Page 10
ளின் பரவல் (வெஸ்லியன் மிஷன், அமெரிக்க மிஷன், சேச் மிஷனரிக் கழகம்) பாரம்பரிய சமூக அமைப்புக்கான பெரிய சவாலாக அமைந்தது. (K.Sivathamby - Hindu Reaction to Christian Proclytization and Westernization in 19th century Jaffna - Social Science Review No.1, 1979 - Colombo)
முதலாவதாக இந்த மூன்று தேவ ஊழியச் சபைகளினிடையேயும் ஒரு பருமட்ட நிலையில் ஒருங்கிணைப்பு நிலவிற்று.
இரண்டாவது - இது முக்கியமானது - இவர்கள் உயர்ச்சமூகத்தினரிடையே தங்கள் மதத்தினைப் பரப்பினர். அடிநிலைச் சமூக மக்களிடையே மதத்தைப் பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை எனலாம். புரட்டஸ்தாந்திகளாக மதம் மாறிய அடிநிலைப்பட்டோர் மிகச் சிலரே.
மூன்றாவது அரச உத்தியோகங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஆங்கிலக் கல்வி பிரதானமாக இந்த நிறுவனங்கள் மூலமே போதிக்கப்படலாயிற்று.
நான்காவது இந்தத் திருச்சபைகள் வழிவந்த கல்விமுறைமை, நவீன மயவாக்கத் துக்கான 'முகவர் (agency) நிறுவனமாகக் கணக்கிடப்பட்டது. இதனால் கிறிஸ்து மயப்பாட்டினை எதிர்த்த சுதேசிகள் புதிய கல்வி முறைமையைக் கையேற்று அதன் மூலமே தமது பண்பாட்டுப் பேணுகையை நடத்த வேண்டியதாயிற்று.
ஆங்கில ஆட்சியும், மிஷனரிமார்கள் அறிமுகப்படுத்திய கல்வி முறைமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கிறிஸ்தவத்தின் நேரடித் தாக்கமில்லாத கல்வியை உயர் மட்டத்தினர் விரும்பினர். அதாவது பாரம்பரியச் சமூகச் செல்வாக்கையும் அதிகார மேலாண்மையையும் ஊறுசெய்யாத வகையில் புதிய கல்விமுறை அமைந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்பதைப் பட்டவர்த்தனமாகத் தெரி வித்தனர். இந்த விடயம் பற்றிக் கணிசமான ஆராய்ச்சி நடந்துள்ளது. ஆறுமுகநாவலர் பற்றிய ஆய்வுகள் பலவற்றில் இவ்விடயம் பேசப்பட்டுள்ளது. (நாவலர் நிறைவு நூற்றாண்டு விழா மலர் - பதிப்பு க.கைலாசபதி 1979) எனவே அவற்றை மீண்டும் இங்கு எடுத்துக் கூறாமல், கிறிஸ்தவக் கல்வியை இந்துக்கள் நோக்கிய முறைமை பற்றியும், கிறிஸ்தவ வழிக்கல்விக்கான எதிர்ப்புக்கான காரணங்கள் யாவை எனக் கிறிஸ்தவர்கள் கருதினர் என்பது பற்றியும் சில முக்கியமான தரவுகளை அருகருகே வைத்துப் பார்ப்பது இவ்விடயம் பற்றிய ஒரு தெளிவான புலப்பதி வுக்கு உதவுவனவாகும். தனது பாடசாலைக்கான நிதிக்கொடை கேட்டு ஆறுமுகநாவலர் எழுதிய முறை

யீடு பின்வருமாறு:
The petitioner in common with the best informes portion of the Tamil Community is bound to acknowledge wihtgratitude the important advantage which his countrymen have derived from her majestys's government under whose protection a gracious providence has placed the inhabitants of this land.
The petitioner is equally bound to acknowledge that by the labours of the different Missionaries in the Northern Province the state of society has been considerably informed. It would however be disignenons on his part, were he to hesitate respectfully and with deference express his own conviction that, had the influence of the Missionary schools been exacting of the renunciation of the conscientious attachment to the religions predilections entertained by the Tamil Youths instructed there in, the latter would have derivem morally greater sdvavtages from the tution imparted to them. The desire to acquire a competent knowledge of the English language and other information afforded in those seminaries induced many to conform for a time to the rules to which however they paid little respect after the complestion of their studies.
(Appendix - Navalar Appeals for state Aid” in Bintavanuit Lu Gofs Gir - gSGOTE 5 Goggu u JITFáFfi கம் பேராதனை - 1969) ஆங்கில ஆட்சியை வரவேற்கும் நாவலர், மிஷனரிகளின் தேவையையும் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டு ஆங்கிலம் கற்க வருபவர்கள் மீது கிறிஸ்தவ மதக்கருத்துக்களைத் திணிக்கக் கூடாது என்று சொல்கிறார். அந்தக் கல்வியைப் பெறும் வரையில் தான் அவர்கள் மிஷனரிமார் சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்கள். கல்வி முடிந்த பின்னர் அதற்குக் கிஞ்சித்தேனும் மதிப்புக் கொடுக்கவில்லை என்று கூறுகிறார். இங்கு நாவலர் தமிழ் மாணவர் எனக் கொள்வது அக்காலக் கல்வி முறைமைக்குள் வரக்கூடிய தமிழ் மாணவரையே.
நாவலரின் இந்த நிலைப்பாட்டை ஒரு கிறிஸ்தவ மிஷனரி எவ்வாறு பார்த்துள் ளார் என்பது சுவாரசியமானதாகும்.
வெஸ்லியன் மிஷனரியைச் சேர்ந்த றொபின்சன் என்பவர் நாவலர் கல்வி இயக் கத்தின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் பொழுது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"As long ago as 1842, the gentry of Vannarpanne showed themselves very uneasy at the appearance which saivaism as exhibited by the Missionaries and their assistant, was assuming: the hold Christianity had me the true castes of talent, were and learning asserting themselves above the hereditary rules of the country'

Page 11
(E.J.Robinson Hindu Pastor, London 1869)
(9.V. Sivathamby opcit)
கிறிஸ்தவம் சாதாரண மக்களிடையே பரவுவதனாலும், திறமையும் கல்வியுமு டையோர் தமது பாரம்பரிய அதிகார அடுக்கமைவு மேலாளரை மீறி முன்னேறு வதனாலுமே உயர்மட்டத்தினர் தங்களுக்கென ஒரு பாடசாலையை 1842 இல் நிறுவினர் என றொபின்ஷன் பாதிரியார் கூறுகின்றார்.
மேலிருந்து வரும் சமூகச்சலுகைகளை அடிநிலைக்குச்சுவறவிடாது தமது நிலை யினுள் அமைத்துக் கொள்வது யாழ்ப்பாணத்துச்சமூக மேலாண்மை மரபின் ஒரு பண்பு என்பதனை எனது “யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளலில்’ (1993) எடுத்துக் கூறியுள்ளேன்.
கிறிஸ்தவம் ஏற்படுத்திய பண்பாட்டுத் திரைவுக்கு எதிராக இந்தியாவின் சில பாகங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சகலரையும் உள்ளடக்கிய இயக்கங்கள் தோன்ற, இங்கோ சமயப் பேணுகை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலன்க ளின் பேணுகையையே வற்புறுத்திநின்றது. கிறிஸ்துமதத் தாக்கத்தினதும் நவீனமயவாக்கத்தினதும் தாக்கங்களிடையே பாரம்பரியப்பேணுகையானது இரண்டு கருத்துநிலைத் தளத்திலிருந்து தொழிற் பட்டது.
1. நவீனமயவாக்க உத்திகளையே பயன்படுத்தல்
- அச்சுப்பதிவு
- செய்யுளிலக்கியங்களை உரை வடிவில் தரல்
- துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தல் 2. பாரம்பரியக்கல்வி முறையையும் சில நடவடிக்கைளையும் பேணுதல்
- புராணபடன மரபு
- குரு - சிஷ்ய முறையைப் பேணல்
- பாரம்பரியச் சமூகக் கொள்கைகளைப் பேணல், அதில் எவ் வித அசைவியக்கத்தையும் காண விரும்பாமை. நாவலர் இந்த இரண்டு அமிசங்களையும் இணைத்து நின்றார். ஆனால் அவரது காலத்தின் பின்னர் வந்த இந்து ஆங்கிலப் பாடசாலை முறைமையானது பாரம்ப ரியக் கல்வி முறைத் தொடர்ச்சியினைப் பேணும் முறையைக் கைவிட்டு, இந்து

மதச்சூழலில் புதிய பாடத்திட்டதினைப் பயிற்றுவிக்கும் முறைமையை ஏற்றுக் கொண்டது. அந்தப் பெருமாற்றத்தைக் குறிப்பதே யாழ். இந்துக் கல்லூரியின் தோற்றமாகும் (1889). இந்த மாற்றம் நாவலரின் பின்னரே நடைபெறுகின்றது.
ஆறுமுக நாவலரின் பின்னர் சைவப் பேணுகை சம்பந்தமாக இரு சிந்தனைப் போக்குகள் தொழிற்படுவதைக் காணலாம். ஒன்று சைவ ஆங்கிலப் பாடசாலைக ளைக் கட்டும் மரபு; மற்றது மேனாட்டு நாகரீக இணைவு சற்றுமின்றிப் பாரம்ப ரிய சைவத் தமிழ் கல்வியைப் பேணும் முறைமை.
1889 யாழ் இந்துக் கல்லூரியின் தோற்றத்தின் பின்னர் ஆங்கிலக் கல்வியை சைவச் சூழ்நிலையில் பயிலும் பண்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சைவ ஆங்கி லக் கலாசாலைகள் தோன்றத்தொடங்கின.
அதே வேளையில் மறுபுறத்தில் நாவலர் தோற்றுவித்த இலக்கிய மரபைப் பின் பற்றும் பாரம்பரிய இலக்கிய இலக்கணப் பயில்வும் நடைபெற்றுக் கொண்டிருந் தது. இந்த மரபின் தன்மையைப் பற்றி வல்வை. சி. வைத்தியலிங்கம்பிள்ளை எழுதியுள்ள சிறு நூலில் குறிப்பிட்டுள்ளேன்.
யாழ்ப்பாணத்துத் தமிழரிடையே காணப்பட்ட இந்த மரபுக் பேணுகை முயற்சி கள் போன்ற ஒரு பேணுகை முயற்சியினை யாழ்ப்பாணத்துமுஸ்லிம்களிடையே யும் காணலாம். ஹக்கீம் மீரு முகிய்யதீன் புலவர், யாழ்ப்பாணம் சேகுத்தம்பிப் புலவர், சுலைமான் லெப்பை, சுல்தான் தம்பிப் பாவலர் முதலியோர் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர்களாவர். (அப்துல் ரகீம் - யாழ்ப்பாண முஸ்லிம்கள் - வரலாறும் பண்பாடும் - 1979). ஆனால் இந்துக்கள் ஆங்கிலக்கல் வியை தமது மதச்சூழலில் படிப்பிக்கத் தொடங்கிய அந்த முறைமையினை முஸ்லிம்கள் மேற்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் கல்வியில் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் யாழ்ப்பாணம் சோனக குடியி ருப்புக்கு அருகே இருந்த பாடசாலைகளில் ஆங்கிலம் படித்தனர். இவ்வகையில் வைத்தீஸ்வராக் கல்லூரி முக்கிய இடம் வகித்ததெனலாம். அப்பாடசாலையின் நிர்வாகம் இராமகிஷ்ணமிஷனை சார்ந்திருந்தமை அனுமதி நெகிழ்ச்சிக்கு கார ணமாக இருந்திருக்கலாம்.
கிறிஸ்தவம் யாழ்ப்பாணப் பாரம்பரியத்துக்கு ஊறுசெய்ததா என்பது ஒரு முக்கி யமான விடயமாகும். நாவலரும் அவர் தம் மரபினரும், குறிப்பாக நாவலர் மரபினைப் போற்றியோர் எடுத்த நிலைப்பாடும், பற்றிய கிறிஸ்தவக் கண்

Page 12
ணோட்டத்தை நோக்குவது கடமையாகின்றது.
எஸ்.ஜெபனேசனின் அமெரிக்க மிஷனும், இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் (1983) என்னும் நூலுக்கு முன்னுரை வழங்கிய முன்னாள் பிசப்பான கலாநிதி எஸ்.குலேந்திரன்
"To say that the cultural activities of the missionaries destroyed our culture is not due to (as some of us think) malice but to a mistake. There are many who say the Bristish destroyed the ancient culture of India; but few of them, if given the chance, World like to live in India before the British, with it suttee system, its thuggery, child widons and the highanded behavions of the Brahmins.
A culture that itself to all new influences, new ideas and new insights, does not express itself to new experiences but is handed down from generation to generation, wrapped up as in a parcel is a died thing. It is new influences and experiences that renew a culture and make it live.
The mistake made by those who denounce the cultural activities of the missions as having dealt out death to the old culture of Jaffna are actually denouncing it for having given it a new life'
புதிய பண்பாட்டு அனுபவங்களுக்கு முகங்கொடுத்ததனாலேயே தமிழ்ச்சமூகம் விழிப்படைந்து புத்தூக்கத்துடன் வரும் காலத்தை எதிர்நோக்கியதென்று கூறும் ஆயர் குலேந்திரன் தேவ ஊழியச் சபைகள் மரபு வழிப்பண்பாட்டை மரணிக்கச் செய்யாமல் அதற்குப் புத்துயிர் வழங்கினர் என்று கூறுகின்றார். கலாநிதி குலேந் திரனின் இக்கருத்து சற்று நிதானமாகவே நோக்கப்படல் வேண்டும். கிறிஸ்தவப் பங்களிப்புப் பற்றிப் பேசும் இக்கட்டத்தில், அவ்வழியாக வந்த இரு முக்கிய செல்நெறிகளைப் பதிவு செய்து கொள்வது அவசியமாகும். அ. கிறிஸ்தவர்கள் தம் தமிழ் வழிப்பேற்றைத் தமிழில் பதிவு செய்து கொண் ll685)LAD.
ஆ. தமிழின் புராதன இலக்கிய வளத்தை ஆங்கிலத்தில் எழுதியமை. முதலாவதற்கு உதாரணமாக பாவலர் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தைக் (1886) குறிப்பிட வேண்டும். ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை மேனாட்டு மரபுக்கியைய எடுத்துக் கூறியவர் (1859)புத்தளத்தைச் சேர்ந்த சைமன் காசிச்செட்டியாவார். கிறிஸ்தவர்கள் தங்கள் தமிழ்ப்பாரம்பரி

யத்தை விதந்து கூறும் பண்பு தமிழகத்திலும் காணப்படுவதொன்றாகும். (தமி ழில் இலக்கியவரலாறு 1888-1898) இருபதாம் நூற்றாண்டின் முற்கூற்றில் சுவாமி ஞானப்பிரகாசர்ஆற்றிய ஆராய்ச்சிகளின்முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள் ளல் வேண்டும். கிறிஸ்தவத்தின் தாக்கம் ஏற்பட்டதன் பின்னர், அதற்கு முகங்கொடுக்கத் தக்க முறையில் நாவலரால் வளர்த்தெடுக்கப்பட்ட சைவமானது மெதடிஸ்த தூய்மை வாத அணுகுமுறையைக் கொண்டது என்பது ஏற்கெனவே எடுத்துக் கூறப்பட் @cirang. (Sivathamby 1979)
நாவலரின் பாரம்பரியப் பேணுகை முயற்சியின் பின்னர், யாழ்ப்பாணத்துப் புலமைத்துவப் போக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது யாழ்ப்பாண LDITsirou sitti Suartel b. (The student congress)
1924 டிசெம்பரில் நடைபெற்ற அதன் முதலாவது மகாநாட்டில் அது நிறைவேற் றிய தீர்மானங்கள் அது எத்துணைத் தளமாற்றத்தன்மை (radical) உடையதாயிருந் தது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
அத்தீர்மானங்கள் பின்வருமாறு:
"1. தாய்நாட்டின் சேமநலத்திற்கும், அதன் நலன்களை எல்லாச் சமயங்களை சார்ந்தவர்களாலும் சமமான நேர்மையுடனும், விநயத்துடனும் ஊக்குவிப்பது முடியும் என்று இந்த காங்கிரஸ் நம்புவதால், இக்காங்கிரஸானது அதனைப் பொறுத்தவரையில் நாட்டிலுள்ள பல்வேறு சமயநிறுவனங்களிடையே வேறு பாடு காட்டுவதில்லையென்றும், எந்த ஒன்றுக்கும் முதலிடம் கொடுப்பதில்லை யென்றும் காங்கிரஸின் பொதுக்கூட்டங்களிலோ, செயற்குழுக்கூட்டங்களிலோ அல்லது செய்யும் பிரச்சார வேலைகளின் பொழுது எந்தவொரு மதம்சார்ந்த எந்த விடயமும் கிளப்பப்படக்கூடாதென்றும், இதற்கான ஒரு வாசகம் ஆட்சிய மைப்பு விதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும்,
3. தற்போது நாட்டில் நிலவிவரும் சாதி வேறுபாடுகள் தேசத்தின் முன்னேற்றத் திற்குத் தடையென இக்காங்கிரஸ் கருதுகிறதென்றும், நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்த வர் முயல்வாரென்றும்
4. தேசிய இலக்கியத்தைப் படிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வாரத்தில்

Page 13
குறைந்தது மூன்று மணித்தியாலங்களையாவது செலவிடுவதென காங்கிரஸின் அங்கத்தவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தும் வாக்குறுதியொன்றைச் செய்து கொள் வதென்றும்,
5. தேசிய இலக்கியம், கலை, இசைத்துறைகளில் அவற்றின் மீட்பிற்கு வேண்டிய தன்னாக்கப்படைப்பினைத் தோற்றுவிக்கும் எவருக்கும் பரிசு, பதக்கம் அன் றேல் யாதுமொரு ஊக்குவிப்பினை காங்கிரஸ் கொடுக்கவேண்டுமென்றும்,
6. அ. விஞ்ஞானம் ஆ. புனைகதை இ.சமூகவரலாறு வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளில் தேசிய இலக்கியத்தை அபிவிருத்தி செய்வதற்கு வேண்டிய வழிவ கைகளை உண்டாக்குவதற்கு செயற்குழுவினால் ஐந்து அங்கத்தினரைக் கொண்ட ஒரு குழுவை நியமிப்பதென்றும், 7. தென்னிலங்கையில் தமிழும், வட இலங்கையில் சிங்களமும் படிப்பிப்பதற் கான நடவடிக்கைகளை விரைவாக காங்கிரஸ் எடுக்க வேண்டும் என்றும்,
8. 1925 ஏப்ரலில் நடத்தப்படவுள்ள காங்கிரஸ் அமர்வுடன் எல்லா இனங்களின தும் (பிரதானமாக சிங்களவர்களினதும் தமிழர்களினதும்) கொள்கைகளையும் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்தக் காங்கிரஸின் செயற்குழுவைக் கேட்டுக் கொள்வதென்றும்,
9. இந்தக் காங்கிரஸ் இயக்கத்தின் நோக்குக்களை வெகுசனத்திற்கு விளக்கவும், மதுஒழிப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளினை அவர்களுக்குப் புகட்டவும் வேண் டிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதற்கென பிரசுரக்குழுவொன்
றைத் தோற்றுவிப்பதென்றும்,
10. காங்கிரஸ் அங்கத்தவர்கள் இயன்றளவு உள்ளூர் வர்த்தகத்தையும், கைத்தொ ழில்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும், அவர்கள் குறிப்பாக அந்நிய சவர்க்கா ரம், வாசனைத்திரவியங்கள், பூசல் மா, மது, சிகரெட் ஆகியவற்றை வாங்காது தவிர்க்க வேண்டுமென்றும்,
இக்காங்கிரஸ் தீர்மானிக்கிறது" எனப் பிரகடனப்படுத்திற்று.
சைவமும் தமிழும், கிறிஸ்தவமும் தமிழும், சமூக ஒதுங்கற்பாடு, பாரம்பரிய மரபுப்பேணுகை என இதுவரை பேசப்பட்டு வந்த அரங்கில் இது முற்றிலும் புதுமையான பார்வையையும் கண்ணோட்டத்தையும் முன்வைத்தது.
காங்கிரஸில் மொழியும், இலக்கியமும், மொழி வளர்ச்சியும் பேசப்பட்டு வந்த

முறைமையானது இதற்கு முன்னர் மொழி, இலக்கியம் பற்றி நிலவிய கண் ணோட்டங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மதங்களைக் கடந்த ஒரு மனிதாயத நோக்கில் கலை இலக்கியங்கள் பேசப்படத் தொடங்குகின்றன. பாரம்பரியப்பண்பாட்டை மதநோக்குக்குள் வரையறை செய்துவிடாது தேசிய பண்பாடு என்ற பரிமாணத்தில் நோக்கும் மாற்றம் மிக முக்கியமானதொன்றா கும்.
பாரம்பரியத்தின் மேன்மையை தேசிய கண்ணோட்டத்தில் வலியுறுத்தும் அதே வேளையில் பாரம்பரியச் சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறையை - சாதி வேறு பாட்டை - அது முற்றாக நிராகரித்தது. r
மேனாட்டாட்சி எதிர்ப்பு இந்தக் கண்ணோட்டத்தில் முக்கிய இடத்தை வகித்தது. இதன் காரணமாக சனநாயகம், விடுதலை, சுதந்திரம் என்ற கோட்பாடுகள் முன் னிலை எய்தத் தொடங்குகின்றன. மாணவர் காங்கிரஸ் முன்வைத்த சுதந்திரம் சனநாயக அடிப்படையில் இயங்கும் ஒன்றாகும்.
பாரம்பரிய அடுக்கமைவுச் சமுதாயத்தின் பாகுபாட்டுக் கொள்கைக்குப் பழகிப் போயிருந்தவர்களுக்கு இந்தக் கோரிக்கைகள் சமூகத்தின் அடித்தளத்தையே மாற் றுவனவாகக் காணப்பட்டது.
இந்தத் தாராண்மைவாத தளமாற்ற அணுமுறையானது ஆங்கிலக்கல்வி வழியாக வும், இந்திய சுதந்திரத்திரப் போராட்ட உந்துதல் வழியாக வந்தனவாகவும், அத்துடன் 1920 முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உந்துசக்தியாகவிருந்த காந்தீயத்தினடியாகவும் வந்ததாகும்.
இந்தப் புதிய கண்ணோட்டத்தின் இலக்கியநிலைப் பிரதிபலிப்பாக 'ஈழகேசரி" (1930) பத்திரிகையும் பின்னர்1942இல் தோன்றிய 'மறுமலர்ச்சி இலக்கிய இயக்க மும் அமைந்தன.
இந்த உந்துதல் காரணமாகவே வட இலங்கைச் சங்கீதசபை (1931இல்) தோன்று கின்றது. தாகூரின் வருகை கலைஅபிமானிகளுக்கு புத்தூக்கத்தை அளித்தது. இச்சந்தர்ப்பத்தில் பாரம்பரிய சமூக அமைப்பிலும், நாவலரியக்கக் கண்ணோட் டத்திலும் கலைகள் உயரிய இடத்தைப் பெறுவனவாக அமையவில்லை. எனி னும் உண்மையைக் குறிப்பிடவேண்டும். இது பற்றிய விபரங்களை காரைசுந்த ரம்பிள்ளையின் இசைநாடக வரலாற்றுக்கு (1986) எழுதிய முன்னுரையில் குறுப் பிட்டுள்ளேன்.
கலை இலக்கியம் பற்றிய இந்தக் கண்ணோட்டம் எத்தகைய பயனுள்ள சாதனை

Page 14
களுக்கு காரணமாயிருந்தது என்பதற்கு ஐசாக் தம்பையாவினதும், அவரது மனைவி மங்களநாயகி தம்பையாவினதும் புலமைத்துவ பங்களிப்புக்கள் சான்ற ளிக்கின்றன. கிறிஸ்தவரான ஐசாக் தம்பையா தாயுமானவர் பாடல்கள் ஐரோப் பிய சிந்தனைமரபில் வைத்துநோக்கும் பொழுது மிகநுண்ணிதானவை என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். அவர் அந்நூலுக்கு (1926) எழுதியுள்ள முன்னுரையில் தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பியல்புகளை பெருமித உணர்வுடன் எடுத்துக்கூறு கின்றார். ஐரோப்பிய சிந்தனைமரபுவழியாக வந்த புதிய நோக்குகள்தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் விளங்கவும் புது முறையில் வியாக்கியானிக்கவும் உதவும் முறையினை இந்நூலிலே காணலாம். மங்களநாயகி தம்பையாவே " நொறுங்குண்ட இருதயம்' என்ற நாவலை எழுதியவர். இப்புதிய கண்ணோட் டம் சமூகச் சிந்தனையில் ஏற்படுத்திய விஸ்தரிப்பினை இந்த ஆக்கங்களில் காண 6) st fo
1920களிலிருந்து நவீன தமிழிலக்கியம் ஈழத்துத்தமிழ்ப்பாரம்பரியத்துடன் இரண் டற இணைகின்ற தன்மையை அவதானித்துக் கொள்ளல் வேண்டும். ஆங்கிலத் தின் தாக்கம் இரண்டறச்சுவறத் தொடங்கியமையால் இப்பண்பு காணப்படுகின் றதெனலாம். வந்த மேனாட்டுப் பண்பாட்டுப் பண்புகளை தளமாகக் கொண்டு எமது சமூகத்தைப் பார்க்கத் தொடங்கும் செல்நெறிதொடங்குகின்றதெனலாம். இது அரசியலில் மாத்திமல்லாமல் சமூக பண்பாட்டுத்துறைகளிலும் காணப்படு வதையே இப்பண்பு காட்டுகின்றது. இதற்கான உதாரணங்களாகவே இலங்கை யர்கோன், வைத்திலிங்கத்தின் சிறுகதையாக்கங்களைக் கருதவேண்டும். மேனாட்டுத்தாக்கங்களை உள்வாங்கி மேற்கிளம்பிய இன்னொருதுறை நாடக மாகும். கலையரசு சொர்ணலிங்கம் இத்துறையில் முன்னணியில் நிற்கின்றார். இப்பண்பின் வெளிப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது யாழ்ப்பாணத்தின் கலை, இலக்கிய வரலாற்றில் அதிக முக்கியத்துவமளிக்காதுள்ள ஒருவர்- கலைப் புலவர் க.நாகரத்தினம் - பற்றிக் குறிப்பிடல் அவசியமாகும். தாகூர் வழிவந்த இந்தியக்கலை மறுமலர்ச்சியின் யாழ்ப்பாணக் கலை வெளிப்பாடு கலைப்புலவ ரதும் அவரது மனைவியாரினதும் கலைத்தொழிற்பாடுகளில் தெரிய வருகின்ற தெனலாம்.
ஆறுமுகநாவலரால் கண்டிக்கப் பெற்ற இசை, நடனக் கலைப்பயில்வினை யாழ்ப்பாணத்துமத்தியதர வர்க்கத்தினரிடையே கொணர்ந்த பெருமை இக்குடும் பத்தைச்சாரும். சாஸ்திரீய இசைப்பயில்வினை இவர்கள் ஊக்குவித்தார்கள்.
இவர்களின் சமகாலத்தவர்களாக விளங்கிய கனகசபை போன்றோரே யாழ்ப்பா

ணத்தின் சமய சார்பற்ற ஒவிய மரபை வளர்ப்பதில் முன்நின்றனர்.
நாவலர் பாரம்பரிய வழியே நின்று யாழ்ப்பாணத்துக்கலை இலக்கியவரலாற் றினை நோக்கும் பொழுது வலியுறுத்தப்படாத இந்தப் புலமைப் பாரம்பரியத் திற்குரிய இடத்தை வழங்குதல் அவசியமாகும். மேற்குறிக்கப்பெற்ற இவர்கள் தாம் வாழ்ந்த காலத்தின் சமூகப்பண்பாட்டு விட யங்களில் முக்கிய பங்கெடுத்தனர். 1920 - 30களிற் காணப்படும் இன்னொரு முக்கிய பண்பு இக்காலத்தில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே யாழ்ப்பாண வாழ்க்கையின் வளத்தைச் சித்தரிக்கும் ஆற்றலு டையவர்கள் தோன்றியமையாகும். அழகு சுப்பிரமணியம், தம்பிமுத்து ஆகி யோர் இதற்கான உதாரணங்களாவர். தம்பிமுத்துக்கவிஞர், அழகு சுப்பிரமணி யத்தின் எழுத்துத்திறன் காரணமாக யாழ்ப்பாண வாழ்க்கையின் செழுமை ஆங் கில இலக்கியத்தின் ஆற்றலுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேனாட்டுச் சூழலில் வாழ்ந்தே, இந்த இலக்கியச் செயற்பாட்டினில் ஈடுபட்டனர் என்பதும் உண்மையாகும்.
சைவப்பாரம்பரியத்தில் வந்தோரும் தங்கள் சிந்தனைகளை ஆங்கிலத்தில் பொறிக்கும் ஒரு மரபு இருந்தது என்பதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். இந்தச் செல்நெறியின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் சேர் பொன்னம்பலம் இராமநாதனும், அவரது சகோதரர் சேர் பொன்னம்பலம் அரு
ணாசலமுமாவார்கள்.
மாணவர் காங்கிரஸின் சனநாயக நோக்கு சாதி முறைமை பற்றிய அவர்களது கண்ணோட்டத்தில் நன்கு புலனாகிறது. மாணவர் காங்கிரஸினர் அக்காலத்தில் நடத்தப் பெற்று வந்த சமாசன சமபோசனப் போராட்டத்தில் முக்கிய பங்களிப் பைச் செய்தனர். இதனால் அவர்களது 1930 மகாநாடு பெரிதும் பாதிக்கப்பட்டது.
சமாசன சமபோசனக் கிளர்ச்சி காரணமாக யாழ்ப்பாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்படுகின்றது. இந்த நடவடிக்கையுடன் தாழ்த்தப் பட்டோருக்கு விதிமுறையான கல்வி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது. கட்டாயக்கல்விச் சட்டம் ஆகியவற்றினை இணைந்து நோக்கும் பொழுது இது ஒரு முக்கிய செயற்பாடாகும். இவர்களுக்கான ஆங்கிலக்கல்வி பெரும்பாலும் கிறிஸ்தவக்கல்வி நிலையங்கள் மூலமாகவே கிடைக்கின்றது. சமாசன இயக்கம் மூலம் கல்விவசதி தமிழ்ப்பாடசாலைகளில் கிட்டிற்று.
மாணவர் காங்கிரஸை இளைஞர் காங்கிரஸ் என 1931 இல் பெயர் மாற்றம்

Page 15
செய்துகொண்டனர். யாழ்ப்பாணச் சமூகச்சிந்தனையின் வரலாற்றில் இவ்வியக் கம் பெருத்தமாற்றங்களை ஏற்படுத்தியது. டொனமூர் ஆணைக்குழு பூரணசுய ராட்சியத்தை வழங்கவில்லையென்பதால் அதற்கான தேர்தலையே பகிஸ்கரிக் கும் முயற்சியில் அது ஈடுபட்டது. அதன் பின்னர் அதன் செல்வாக்கு குன்றத் தொடங்கிற்று.
எழுத்துநிலையில் பார்க்கும் பொழுது மாணவர் காங்கிரஸ் இயக்கம் திடீரென பாரிய மாற்றங்களைக் கொண்டுவரவில்லை என்பது உண்மையே. சமூக அடுக்க மைவு காரணமாக எழுத்தறிவு வரையறுக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் அந்த அறிவுமுறையை மாற்றுவதற்கான முயற்சிகளை முன்வைத்ததே இவ்வியக்கத் தின் முக்கியமான பணியாகும்.
ஏகாதிப்பத்திய எதிர்ப்பு, தேசிய பண்பாடுகளில் மறுமலர்ச்சி, சனநசாயக மய வாக்கம் ஆகிய துறைகளில் இவ்வியக்கம் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது.
இவ்வாறு கூறுகின்றபொழுது மாணவர் இளைஞர் காங்கிரஸ் யாழ்ப்பாணத் தமிழர்களிடையே பூரணமான தளமாற்றத்தினை ஏற்படுத்திவிட்டதாக கூறிவிட முடியாது. இது அரசியல் துறையில் அது பெற்ற தோல்வியால் நன்கு தெரியவரு கின்றது. மேலும் இந்த இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தின் அடிப்படைப் பொரு ளாதார அமைப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியவில்லை. ஆயினும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் இந்திய சுதந்திரப் போராட்டமும் தந்த உந்துதல் கள் காரணமாக இந்தியாவின் பாரம் பரிய நவீனத்துவ நோக்குகள் இலங்கைத் தமிழரிடையே சனநாயக அடிப்படையில் பரவுவதற்கான ஒரு வாயிலாக அமைந்
தன.
இதன் செயற்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு கருத்து நிலைகள் நிலவத்தொடங்கின. ஒன்று, நாவலர் இயக்கம் வழிவந்த பாரம்பரியப் பேணுகை. அதாவது மேலிருந்து கீழ்வரும் புதிய நடவடிக்கைகளை சமூகத்தின் அடிப்படை அமைப்பு மாறாத முறையில் ஏற்றுக்கொள்ளல். இது பெரும்பாலும் சமூக - மத விடயங்களில் காணப்பட்டது. இன்னொன்று தாராண்மைவாத நோக் காகும். இது பிரதானமாக அரசியலில் தொழிற்பட்டதாகும். இத்தாராண்மைவா தம் சிலரால் சமூக - மத மட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. சிலர்அவ்வாறு சொல்லவில்லை. முற்றும் முழுதாக நோக்கும் பொழுது சமூகத்தில் நெகிழ்ச்சி ஏற்பட்டதெனலாம்.

இளைஞர்காங்கிரஸின் செல்வாக்கு ஏறத்தாழ 1922 முதல் 1938 வரை நீண்டதென சீலன் கதிர்காமர் குறிப்பிடுவர். இளைஞர் காங்கிரஸ் தோற்றுவித்த தளமாற்ற நோக்கு அதில் ஈடுபட்டிருந்தோர் பலரை காங்கிரஸின் ஒடுக்குதிசையின் பின்னர் மாக்ஸியத்தை நோக்கி நகரச்செய்தது. (சீலன் கதிர்காமர் 74, 99, 102)
"By the mid thisties the youth congress members began to go theri several ways. Some joined the left mevoment. Among there were P.Nagalingam, Tharmakulasingam, whose premature death robbed the Lanka Sama Samaya Party of an able leader in the North, S.sellamuthu and K.Satchithanandam, T.Duraisingam and others were involved with the Suriya Mal Movement in the South and later became consistent supporters of the communist party. Handy Perinbanayagam himself admitted later that his pohheal sympathies were "leftish and that by and large without special connections, be sympathised with the LSSP'
(Silan Kathirkamar p 102)
யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் வலுக்குன்றத் தொடங்கிய கட்டத்தில் இலங்கை மட்டத்தில் மார்க்சீயச் சிந்தனை மேலெழும்பத்தொடங்குகின்றது. சிங்களப் பிரதேசங்களிலும் மார்க்சீயச் சிந்தனை இளைஞர் இயக்கமாகவே தொடங்குகின்றது. 1935 இல் லங்கா சமசமாஜக் கட்சி தொடக்கம் பெறுகின்றது. இலங்கையில் மார்க்சீய வளர்ச்சியால் "சூரியமல் இயக்கம்' (1939) முக்கியமான ஒரு கட்டமாகும். சூரியமல் இயக்கம் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் மார்க்சீயம் ஆரம்பத்தில் இரண்டு நிலைகளிற் தொழிற்பட்ட தெனலாம். முதலாவதாக அது ஒடுக்குமுறைக்கெதிரான ஒரு சக்தியாகத் தொழிற் பட்டமையாகும். ஏற்கெனவே தொழிற்பட்டுவந்த ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்துடன் (Depressed Class Service league; இதன் முதன்மையாளராக ஜோன் பவுல், ஜேக்ஸ் ஆகியோர் தொழிற்பட்டனர்) இயைபினை ஏற்படுத்திக் கொண் டது. இரண்டாவதாக அக்காலத்து இலங்கை மட்ட முக்கிய மார்க்சீயச் செயற் பாடு ஒன்றுக்கிணங்க தொழிற்சங்க நடவடிக்கையிலீடுபட்டமையாகும். பஸ் தொழிலாளர் இயக்கம், சுருட்டுத் தொழிலாளர் இயக்கம் என முக்கிய தொழிற் சங்க நிறுவனங்கள் வளர்ந்தன.
நிறுவனரீதியாக நோக்கும் பொழுது முதலில் தோற்றுவிக்கப்பட்ட மார்க்ஸிஸ்ட் கட்சி லங்கா சமசமாஜக்கட்சியாகும் (1935). பின்னர் இரஷ்ய நாட்டில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக ( டிறொஸ்கி - ஸ்டாலின் பிணக்கு, ஸ்டாலினின்

Page 16
மேலாண்மை ஆகியன) பிளவுகள் ஏற்பட்டு முதலில் (1941) ஐக்கிய சோஷலிசக் கட்சி உருவானது. அது 1943 யூலையில் பொதுவுடமைக்கட்சியாக நிறுவப்பட் டது. ஆரம்பகாலத்தில் லங்காசமசமாஜக்கட்சியிலும் பொதுவுடமைக்கட்சிலும் தமிழர்கள் முக்கிய இடம் வகித்தனர். தர்மகுலசிங்கம் உத்தியோகபூர்வ அங்கத்த வராக இருக்கவில்லையெனினும் சமசமாஜக்கட்சி ஆதரவாளராகவே விளங்கி னார். கம்யூனிட் கட்சியில் பொன்.கந்தையா, அ.வைத்தியலிங்கம் ஆகியோர் முக்கிய இடம் பெற்றனர்.
யாழ்ப்பாண மட்டத்தில் மார்க்சீய இயக்கங்களில் ஈடுபட்டோர் இருவகைப்படு வர். முதலாவது குழுவினர், தமது கல்வி காரணமாக மார்க்சீயம் சுட்டும் சமத்து வம், சுரண்டலெதிர்ப்பு ஆகியவற்றில் புலமைத்துவ ஈடுபாடு கொண்டவர்களாக இவர்கள் பெரும்பாலும் உயர் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருந்தமை வரலாற்றின் தவிர்க்க முடியாத நியதியாகும். ஆரம்ப காலத்தில் இந்தப் புலமைத் துவ நிலைப்பாட்டுடன் கட்சி அங்கத்துவம் அன்றேல் கட்சிச் சார்பும் தொழிற் பட்டது. இரண்டாம் குழுவினர் ஒடுக்குமுறைக்கு ஆளான சமூக மட்டங்களைச் சேர்ந்தவர்களாவார். இவர்கள் தமது சமூக எதிர்ப்புணர்வு காரணமாக சேர்ந்து பின்னர் கட்சி நிலைப்பட்ட இலக்கியங்களையும் பிற எழுத்துக்களையும் வாசித் தமையால் புலமைத்துவப் பரியச்சயமுடையோராகிக் கொண்டவர்களாவர்.
இத்தகைய அணியினரைக் கட்டிவளர்ப்பதில் சமசமாஜக் கட்சியிலும் பார்க்க கம்யூனிஸ்ட் கட்சி அதிக ஆதரவைப் பெற்றிருந்ததெனலாம். யாழ்ப்பாணக் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இந்த இரண்டாவது குழுவினர் 1948 அளவில் இலக்கிய ஆர்வமுடையோராய் வளர்ந்திருந்தனர். டொமினிக்ஜீவா, டானியல் முதலியோர் இவ்வாறு வளர்ந்தவர்களே. இவர்கள் கார்த்திகேசனால் வழிப்படுத் தப்பட்டவர்களாவர்.
இளைஞர் காங்கிரஸ் வழியாக வந்த ஊக்கத்தினால் வளர்ந்த மறுமலர்ச்சி இயக் கத்தில் இடதுசாரிச்சிந்தனையாளர்கள் (அ.ந.கந்தசாமி) இந்த இலக்கிய இயக்கத் தில் முக்கிய இடம் பெறத் தொடங்கினர்.
இந்த இடதுசாரி இலக்கியக் களமாக 1954முதல் இலங்கை முற்போக்கு எழுத்தா ளர்சங்கம் திகழ்ந்தது. கொழும்பை மையமாகக் கொண்டியங்கிய இது யாழ்ப்பா ணத்தில் ஒரு வன்மையான கிளையைக் கொண்டிருந்தது.
மார்க்சீய இலக்கியச் சிந்தனைப் பரம்பலில் இந்நிறுவனத்தின் பணி கணிசமான தாகும். பின்னர் 1960களில் பொதுவுடமைக்கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பு என

இருகிளைப்படப்பிரிந்த பொழுதும் எழுத்தாளர் மட்டத்தில் இந்தச் சங்கத்தின் தொழிற்பாடுகாரணமாக ஒற்றுமை பேணப்பட்டது. இலங்கைத் தமிழ் எழுத்தாளரிடையே முற்போக்கு இலக்கியக் கோட்பாடு தொழிற்பட்டமை காரணமாக இருநிலைப்பட்ட எண்ணக்கருக்கள் இலக்கியத் தில் வளர்த்தெடுக்கப்படலாயின. ஒன்று தேசிய இலக்கியக் கோட்பாடு. அக்கா லத்து மார்க்சீயக் கட்சிகள் கொண்டிருந்த அரசியல் கோட்பாட்டிற்கமைய இது இலங்கை மட்டத்தேசியத்தையே வற்புறுத்திற்று. ஆயினும் இலங்கைத் தமிழ் இலக்கியம் இந்திய வணிக இலக்கியத்தின் வழிச்சென்றுவிடக்கூடாது என்பதற் காகவும், முதல் நிலைப்படுத்திப் பேசவேண்டும் என்பதற்காகவும் ஈழத்தின் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட ஒர் ஈழத்தமிழ் இலக்கியத்துக்காகப் போராடியது. இலக்கிய நிலையில் முன்வைக்கப்பட்ட ஈழத்தமிழ் இலக்கியக் கோட்பாடு 1983இன் பின்னர் தமிழ்த்தேசிய வளர்ச்சிபற்றிப் பேசப்பட்ட பொழுது, அதன் வளர்ச்சிக்கான பசளையாக அமைந்தது. மற்றது யதார்த்தவாதம் என்னும் கோட்பாடாகும். இந்த அணுகுமுறை காரணமாக எழுத்தாளர்கள் சமூக ஜீவிகள் என்ற வகையில் தம்மைப்பாதிக்கும் சமூகப்பிரச்சினைகளை இலக்கியப் பொருளாக்கினர்.
இவ்விலக்கியச் செல்நெறி பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திற்று. சலுகைகள் மறுக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்சினைகள் பற்றிய முதல் நிலை அனுபவங் களை எழுதத்தொடங்கிய போது, சமத்துவக்கருத்துநிலையை வற்புறுத்திய பொழுதும் ஈழத்தில் முதல் தடவையாக பாரம்பரிய மரபுகள் பற்றிய தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கத் தொடங்கிற்று. அது ஒரு நிலையில் நவீன எழுத்தாளர் களையும், நவீன எழுத்துவடிவங்களையுமே நிராகரித்தது. இதனால் 12 ரபு பற்றிய ஒரு முக்கிய இலக்கிய விவாதம் 1960களில் நடைபெற்றது.
இந்த மார்க்சீய இலக்கியத்தின் முக்கிய அங்கமாக விளங்கியது அது தோற்று வித்த விமரிசனம் ஆகும். இலக்கியத்தின் சமூக அடிப்படைகளை வற்பறுத்திய அந்த விமர்சன முறைமை புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களை நியாயப்படுத்தி யது மாத்திரமல்லாமல் நவீன காலத்திற்கு முற்பட்ட இலக்கியங்களையும் மார்க் சீய நோக்குநிலை நின்று விமர்சிக்கத்தொடங்கிற்று. இது தமிழிலக்கிய ஆய்வுச் செல்நெறியில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திற்று. அது மாத்திரமல்லாது இந்த விமர்சன முறைமை தமிழகத்திலும் கணிசமான செல்வாக்கைக் கொண்டி ருந்தது. இந்த விமரிசன மரபுடன் கைலாசபதியின் பெயரும் எனது பெயரும் இணைக்கப்படுதல் வழக்கு. ஆயினும் இக்கால கட்டத்திற் பயின்ற எல்லா எழுத்

Page 17
தாளர்களும் இலக்கியத்தின் விமர்சன அமிசங்கள் பற்றிய தெளிவுடனேயே எழு தினர். இக்கால இலக்கிய வளர்ச்சியில் ஆக்கமும் விமர்சனமும் இணைந்தே சென்றன. இதன் காரணமாக ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் பலர் விமர்சனங்களை யும் எழுதினர். (முருகையன், இராசதுரை, இளங்கீரன் முதலியோர்)
இவ்வாறு பெருநிலைப்பட வளர்ந்த மார்க்சீய இலக்கியம் பற்றிய இரண்டு முக்கியமான சமகால விமரிசனங்கள் இருந்தன. முதலாவது இது அன்று நிலவிய தமிழ்த்தேசியத்தை வகுப்பு வாதமாகக் கருதியமையாகும். இது இலக்கிய அணி சார்ந்திருந்த அரசியற் கட்சிகளின் நோக்குக் காரணமாக ஏற்பட்ட ஒரு விளைவா கும். அக்காலத்தைய தமிழ்த் தேசியம் சமூகப்பிற்போக்குவாதத்துடன் இணைந்து நின்றமையும் இதற்கு ஒரு காரணமாகும். இரண்டாவது இந்த இலக்கி யக் கண்ணோட்டம் 'மார்க்சீயத்திற்கு அப்பாலான நிலைப்பட்ட விழுமியங்க ளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவில்லை என்பதாகும். இவ்வாதத்தை மு.தளை யசிங்கம் முன்வைத்தார். இவருடையவாதம் இலக்கியம் ஆன்மீக சனநாயகதிற் கான (spiritual democracy) ஒரு களமாக அமையவேண்டும் என்பதாகும். இந்த இரண்டு சமூக முக்கியத்துவம் உடைய மார்க்சீய எதிர்ப்பு வாதங்களைத்தவிர நவீனத்துவத்தின் இயல்பான ஒரு அங்கமான நவ வேட்கைவாதத்தின் எதிர்ப்புக் குரலும் காணப்பட்டது. ஆனால் அது சமூகமுக்கியத்துவம் உடையது என்று கூறிவிடமுடியாது. ஆனால் இந்த விமர்சன முறைகள் யாவுமே நவீன இலக்கியத்தையே இயல்பான இலக்கிய வெளிப்பாடமாகக் கொண்டன.
முற்போக்கு இலக்கிய ஆக்கவீச்சு (1970) தொடக்கத்துடன் ஒடுங்குகிறதெனக் கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து இருகாரணிகள் முக்கியமாகின்றன.
ஒன்று, 1970கள் முதல் தொடங்குகின்ற சிங்கள மேலாண்மைவாதப் போக்கு. 1930கள் முதலே சிங்கள மேலாண்மைவாதம் முக்கிய ஒரு சக்தியாக மேற்கிளம் பிக் கொண்டு வந்ததெனினும் 1956உடனேயே அது திட்டவட்டமான ஒரு அரசி யல் செல்நெறியாகிற்று. தேசிய மறுமலர்ச்சி பற்றிய தெளிவின்மை காரணமாக மார்க்சீஸ்ட் கட்சிகளிலும் சிங்களத்தேசியத்தை இலங்கைத் தேசியமாக மயங்கிக் கொண்டன.
சிங்கள மேலாண்மைவாதம் வெகுவிரைவில் அரசஅடக்குமுறை நடவடிக்கைக ளுக்கு இடம் கொடுக்கத் தொடங்கியது (பொலிஸ், இராணுவ அட்டூழியங்கள்).

அதனை எதிர்த்துத் தமிழ் இளைஞர் தீவிரவாதம் மேற்கிளம்பத் தொடங்கிற்று. இத்தீவிரவாதம் தமிழ்த் தேசியத்தையும் மார்க்சீயத்தையும் இணைத்துக் கொண் டது. அத்துடன் இது தன்னைத்தளை நீக்கக் கோட்பாட்டுடன் (Liberation) இணைத்துக் கொண்டது. தளைநீக்கம் என்பது அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகும்.
1970களில் மேலோங்கத் தொடங்கிய இந்தத் தீவிரவாதத்தில் 1974இல் நிறுவப் பெற்ற யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். இளைஞர் இயக்கங்கள் ஒவ்வொன்றிலும் பல்கலைக்கழக மாணவர்கள் இடம் பெற்றிருந்தமை மாத்திரமல்லாமல், போராட்டத்தின் சமூக பொருளாதார அம் சங்களிலும் பல்கலைக்கழகம் தொடர்புபட்டது.
இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் இதுவரை வந்தவற்றைக் கொண்டு நோக்கும் பொழுது இந்தக் கோட்பாட்டு நிலைப்பாடுகள் எடுத்துக்கூறப்படுவதிலும் பார்க்க, அரச நிலைப்பாடு காரணமாக ஏற்பட்ட அடக்குமுறையின் கோரமும், அந்த அடக்குமுறை காரணமாக மேற்கிளம்பும் மானிட அவலங்களுமே (Human tragedy) முக்கிய இடம்பெறத்தொடங்கின. கவிதையில் இது "மரணத்துள் வாழ் வோம்" கவிதைத்தொகுதி முதல் நன்கு தெரியவந்துள்ளது. புனைகதைத்துறை யுள் சிறுகதையில் இது நன்கு தெரியவந்துள்ளது. யோகநாதனின் "இரவல் தாய்நாடு', 'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ முதலிய நாவல்களிலும் இது தெரிகின்றது. இவ்வாறு வந்து சேர்ந்து வரலாற்று முக்கியத்துவம் உடையனவா கக் காணப்படினும் இவை யாவும் எந்த அளவுக்கு பாரம்பரியச் சமூக அமைப் பினை மாற்றியுள்ளன என்பது முக்கியமான வினாவாகும்.
யாழ்ப்பாணத்தின் உற்பத்தி முறைமைகளை நோக்கும் பொழுது அடிப்படை மாற்றமின்மை தெரியவரும். புதிய விவசாய முறைமைகள் (பயிர் மாற்றம், தொழில்நுட்பப் பயன்பாடு) பாரம்பரிய அமைப்புடன் ஒன்றிணைக்கப்பெற் றுள்ளனவே தவிர இவை காரணமாக அடிப்படை உற்பத்தி உறவுகள் அகற்றப் பட்டு ஒரு புதிய உற்பத்தி உறவோ, உறவுகளோ ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் மேலோட்டமானவையாகவுள்ளனவே தவிர அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்பட்ட சில மாற்றங்கள் காரண மாக மேனிலைப்பட்டோரும் தமது சமூக அந்தஸ்தினை நிலைநிறுத்துவதற்குப் பாரம்பரியத்தையும் பாரம்பரிய முறைமைகளையுமே நம்பியிருக்க வேண்டியுள் ளெது.
இந்த அமிசம் காரணமாக யாழ்ப்பாணத்தின் சமூகத்தளம் மாற்றப்படாதிருப்

Page 18
பதை அவதானிக்கலாம். இதன் காரணமாக மேற்கூறிய கருத்தோட்டங்கள் செல் வாக்குச் செலுத்தி வருகின்ற அதே வேளையில் சமூகத்தில் சமாந்தரமான முறை யில் பாரம்பரியமும், மரபு பேணுகையும் முக்கிய செயற்பாடாகத் தொழிற்படுவ தைக் காணலாம். மத ஒழுகலாறுகள் முதல் புலமைத்துவ நெறிகள் வரை இந்தச் சமாந்தரத்தன்மை காணப்படுகின்றது. இது காரணமாக ஒரு சுவாரசியப் போக்கு ஒன்று உருவாவது வழக்கம். வருகின்ற புதுமைகள் தம்மைப் பழமையுடன் இணைத்து நிலைநிறுத்தவிரும்பும் பண்பும், அதே வேளையில் பழமையும் புது மையின் தன்மைகளைக் காட்டித் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்ற ஒரு தன்மையுள்ளது. முதலாவது போக்கின் விளைவாக நாவலரைத் தேசிய வீரராகக் காட்டிய ஒரு செயற்பாடு நிகழ, இரண்டாவது போக்கின் நிரந்தரத் தன்மை காரணமாக நாவலரின் கோட்பாடுகள் இன்று பண்பாட்டுப் பேணுகையு டன் இணைந்து பேசப்படுகின்றது.
இந்ந இயல்பு காரணமாக, நாம் ஆராய்ந்த எல்லாக் காலப்பகுதிகளிலும் பாரம்ப ரிய இலக்கிய மரபு வன்மையுடன் பேணப்பட்டு வருவதைக் காணலாம். கோயில் சார்ந்த இலக்கியங்கள் இந்தப் பாரம்பரியத் தொடர்ச்சியினை எடுத்துக் காட்டுவனவாக அமைகின்றன.
1984க்குப் பின் ஏற்பட்டுள்ள சனவேற்ற மாற்றம், வாழ்க்கைக் குலைவு ஆகியன புதிய ஒரு சமூகப்போக்குக்கு வழிசமைப்பனவாக அமையும் சாத்தியப்பாடுகள் உள்ளன. ஆனால் அது நிகழ நாட்கள் செல்லும். அதுவரை ஒரே கிராமத்திலி ருந்தே தசைச்சிலேடை வெண்பாவும், கோசலையும் தோன்றுகின்ற நிகழ்வினை நாம் கண்டு கொண்டேயிருப்போம்.


Page 19