யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு கார்த்திகேசு சிவத்தம்பி -------------------------------------------- யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு - ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம் பேராசிரியர். கார்த்திகேசு சிவத்தம்பி தலைவர், நுண்கலைத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அனுசரணை - ப்ரவாத ---------------------------------------- ஆசிரியர்: யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு - ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம் பேராசிரியர். கார்த்திகேசு சிவத்தம்பி (M. A., PH.D.) தமிழ்ப் பேராசிரியர், தலைவர், நுண்கலைத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தில் ஆற்றிய உரையின் திருத்திய பிரதி. முதற்பதிப்பு: பெப்ரவரி 1995 வெளியீடு: சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு இல 61, பழைய கொட்டாவ வீதி மிரிஹான நுகேகொடை அச்சிட்டோர்: டெக்னோ பிரின்ட், 6, ஜெயவர்த்தன அவெனியூ, தெகிவளை விலை: 30/= -------------------------------------- முன்னுரை யாழ்பாணத்து இலக்கிய வரலாற்றைச் சில ஆசிரியர்களதும், சில நு}ல்களினதும் காலவரன்முறைப்பட்ட பதிகையாகக் கொள்ளும் ஒரு மரபு வலிமையுடன் நிலவுகின்றது. ஆந்த இலக்கிய வரலாற்றை யாழ்ப்பாணத்தின் சிந்தனை மரபின் பின்புலத்தில் வைத்து எடுத்துக் கூறுவதற்கான ஓர் அறிமுக முயற்சியே இது. யாழ்ப்பாண இலக்கிய வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சிந்தனை மரபின் வெளிப்பாடாகக் கொள்ளும் ஒரு கருத்து நிலையும் உண்டு. குறிப்பாக 19ம் நு}ற்றாண்டு இலக்கியத்தை அவ்வாறு எடுத்துக் கூறுவதும், அந்தக் கருத்து நிலையின் பின்னணியிற் சென்ற கால இலக்கியத்தை நோக்குவதும் மரபாகி வந்துள்ளது. யாழ்ப்பாணத்து இலக்கிய வரலாற்றில் பல புலமைத்துவப் போக்குகள் (intellectual trents) முக்கிய இடம் பெற்றுள்ளன என்பதை வற்புறுத்துவதே இவ்வுரையின் நோக்கமாகும். இவ்வுரையை நான் ஏற்கனவே எழுதியுள்ள ஈழத்தில் தமிழ் இலக்கியம்(1978, 1988) யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல் (1993) ஆகிய நு}ல்களுடன் இணைத்து வாசித்தல் வேண்டும். அப்பொழுது தான் யாழ்ப்பாணச் சமூகத்திற்கும் அதன் இலக்கியத்திற்குமுள்ள உறவு முழுவதும் விளக்கும் எனக் கருதுகிறேன். இந்நு}லிலே தொட்டுக்காட்டப் பெற்றுள்ள சிந்தனைச் சொல் நெறிகள், இஸ்லாமிய நோக்கு, கிறிஸ்தவத்தின் வழிவந்த நவீன மயப்பாடு, மாணவர் காங்கிரஸ் இயக்கம் சுட்டி நிற்கும் சனநாயக, சமூக சீர்திருத்தப் போக்கு ஆகியன விரிவாக ஆராயப்படவேண்டியவை. யாழ்ப்பாணத்தின் இருபதாம் நு}ற்றாண்டின் இலக்கிய வரலாற்றுச் செல்நெறியின் ஒரு முக்கிய அம்சம் பாரம்பரிய இலக்கியங்களும், நவீன இலக்கியங்களும் ஒரே நேரத்தில் ஏறத்தாழ சமமான சமூக பலத்துடன் நிலவுவதாகும். இது யாழ்ப்பாணச் சமூகத்தின் முக்கியமான பண்பை எடுத்துக் காட்டுவதாகும். வந்துசேரும் “புதியன” வற்றால்தான் அடித்தள மாற்றமடையாது “புதியன” ஒரு மட்டத்திலும், அதே வேளையில் இன்னொரு மட்டத்தில் மரபு பேணுகையும் நடைபெறுவதைக் காணலாம். இதிலுள்ள சுவாரசிமான அம்சம் யாதெனில், இந்த மரபு பேணுகை ஒவ்வொரு தலைமுறைலும் சொல்லப்பட்டு வருவதே ஆகும். இந்த மரபு பேணுகைக்கான “ஆட்சேர்ப்பு” என்ன அடிப்படையில் நடைபெறுகின்றதென்பது உன்னிப்பாக ஆராயபபடவேண்டியதொன்றாகும். இத்தகைய உசாவலாகளின் பொழுது இலக்கிய வரலாறும் சமூக வரலாறும் ஒன’றிணையும். ஆப்பொழுது தான் இலக்கியங்களின் மூலமாக வரலாற்றுப் போக்கை அறியும் முறைமை வளரும். இந்த உரையினை ஆற்றுவதற்கு என்னைத் து}ண்டியவர் எனது மாணவர் யாழ் பல்கலைக்கழகத்து தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் சி.சிவலிங்கராஜா ஆவார். அவருக்கு என் நன்றிகள். இந்த உரையின் உருவகத்திலும் அதன் உள்ளீடான “வாதத்திலும்” தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மேற்றிராணியார் ஆயர், கலாநிதி எஸ்.செபநேசன் மிகுந்த அக்கறை காட்டினார். அவருக்கு என் நன்றிகள் உரித்து. உரையின் தட்டச்சுப் பிரதியை வாசித்த திரு.மதுசூதனன் இதனை வெளியிடுவதில் பெருஞ் சிரத்தை காட்டினார். வுpபவி அலுவலர் திரு.ஹ.சுரேஷ் சர்மா அவர்களும் இவ்விடயமாக பேரார்வம் காட்டினார். இவர்களுக்கு என் நன்றி கார்த்திகேசு சிவத்தம்பி 2/7, 58, 57வது ஒழுங்கை வெள்ளவத்தை கொழும்பு - 06 27.01.1995 ---------------------------------------------------------------------- யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு - ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம் "வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட் வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள் எமக்கு இங்கு இயைபுடைய ஒன்றாகின்றது. வுரலாற்று முகவர்களின் “சிந்தனைப் பக்கத்தை” அறிவது வரலாற்றாசிரியரின் கடமையெனின், இலக்கிய வரலாற்றாசிரியனின் பணியோ, இலக்கியங்கள், வாத விவாத எழுத்துக்கள் ஆகியவற்றில் எடுத்துக் கூறப்பட்ட கருத்துக்கள் வரலாற்றை எவ்வாறு வெளிப்படுத்துவனவாயுள்ளன என அறிவதாகும். எந்த எழுத்தும், சம்பந்தப்பட்டவரின் அறிகை முறையின் (றுயல ழக உழபnவைழைn) அடியாக வருவதாகும். ஏந்த அறிகையும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட எழுத்தாளரின் சமூக நிலைப்பாடுகளோடு சம்பந்தப் பட்டதாகும். இந்த அறிகை முறை அவ்வச் சமூக பொருளாதார மரபுகளினு}டாக வரும் அறிகை முறைமைகயோட ( முழெறடநனபந ளலளவநஅ) சம்பந்தப் பட்டதாகும். அறிவு முறைமை என்பது கல்வி, கேள்வி மரபு, பயிற்சிமரபு, அவை பற்றிய கருத்து நிலைகள் ஆகியனவற்றை உள்ளடக்கி நிற்பதாகும். ஊயர் அங்கீகாரம் பெறும் அறிவு முறைமை, சம்பந்தப்பட்ட சமூகத்தின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் ஒரு “நிறுவன” மாகவே அமையும். யுhழ்ப்பாணச் சமூகத்தின் வரலாற்றோட்டதில் மேலாண்மையுடையனவாக விளங்கியமையும், மேலாண்மையடைய விரும்பியவையுமான சிந்தனை மரபுகள் யாவை என்பதையும், அந்தச் சிந்தனை மரபுகள் எவ்வாறு நடந்தேறிய சமூக வரலாற்று மாற்றங்களின், அன்றேல் மாற்ற முயற்சிகளின் பட்டெறிவாக (சுநகடநஉவழைn) இருந்தன என்பதையும் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒரு சமூகத்தின் சிந்தனைகள், அதன் புலமையாளரால (ஐவெநசயெவழையெட) வெளிக்கொணரப்படுகின்றன. “புலமையாளர்” (சற்று இலக்கியமயத்திக் கூறினால் ‘புலத்துறை போகியோர்’) என்னும் பதம், அறிவு, காரணி விளக்க ஆற்றலையுடையோரைக் குறிக்கும். இந்தப் புலமையாளர் அறிவினாலும், அறிவு தரும் கற்பனைத் திறனாலும் ஆற்றலாலும் வாழ்க்கையை நடத்துபவர் ஆவார். புலமைத்துவ (ஐவெநசயெவழையெட) மரபு என்பது இப்புலமைச்செல்நெறி பாய்தோடிய பாங்கினை விளக்குவதாகும். இந்தப் புலமைத்துவ மரபினை எழுத்துக்களிலும் மற்றைய ஆக்கங்களிலும், இயக்கங்களின் செயற்பாடுகளிலும் கண்டு கொள்ளலாம். ஐஐ யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபினை அதற்குரிய பின்புலத்தில் வைத்து விளங்கிக் கொள்வதற்கும் நாம் இரு அமிசங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும். முதலாவது, யாழ்ப்பாணத்தில் இயல்புகளை அறிந்துக் கொள்ளுதல். இரண்டாவது, புலமைத்துவ வெளிப்பாட்டு முறைமைகளான எழுத்துக்கள், சமூக சீர்திருத்த முயற்சிகள் போன்றவற்றின் தளமாக அமையும் சிந்தனைக் செல்நெறிகள் யாவை என்பதைக் தெளிவுபடுத்திக் கொள்ளல். யாழ்ப்பாணம் இலங்கையின் வடகிலுள்ள தீபகற்ப பகுதியாகவும், இந்தியாவின் தென்பகுதிக்கு மிக அண்மையானதாகவும் அமைந்துள்ளது. இத்தீபகற்பத் தன்மை காரணமாக ஓர் ஒதுக்கற்பாட்டுணர்வு நிகழ்தேறியது. அந்;த அளவுக்கு இது முக்கியமான ஒரு தமிழ்க் குடியிருப்பாக அமைகின்றது. இந்த முக்கியத்துவம் இலங்கை, இந்தியா, தென்னாசியா ஆகிய மூன்று நிலைகளிலும் உணரப்படுவதொன்றாகும். இப்பிரதேசம் பிரதானமான சைவமும் தமிழும் என்ற ஒரு மேலாக்கக் கருத்து நிலையோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், இங்கு சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். முத அடிப்படையில் நோக்கும் பொழுது கிறிஸ்தவர்களும் கணிசமான தொகையினர் உள்ளனர். கிறிஸ்தவர்களுள் றோமன் கத்தோலிகரே பெருந் தொகையினரெனினும், புரட்ஸ்தாந்திகள் கல்வி முதலாம் புலமைத்துவத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். யாழ்ப்பாணத்து அறிவு முறைமையின் ஓர் அங்கமான உயர் பாடசாலை வளர்ச்சியில் இவர்கள் ஏற்படுத்திய மிக முக்கிமானவையாகும். யாழ்ப்பாணத்தின் பொருளாதார வரலாற்றின் பண்புகளை எடுத்துக்கூறிய பேராசிரியர் அரசரத்தினம். The strength of the Jaffna settlement has been this concentration of population and their density. This has enabled them to develop economic relationships among themselves and has encouraged regional specializations and exchange of commodities. It has also enabled the region to grow in insolation from the rest of the island and shelterd it from vicissitudes else where ………………………….. ………………………. ………………………………….. ………………. With in peninsula itself patterns of settlement have continued with relatively little change over last 400 years. These has been little internal movement of population except with in small distance in areas of little productivity and areas subject to sabination. குடியேற்றம், சனநெருக்கம் பற்றிய இந்த ஸ்திரப் பண்பு ஏறத்தாழ 1984வரை காணப்படுகின்றதெனலாம். அதன் பின்னர் இனக்குழுமப் போர் காரணமாக பெருமளவில் சனத்தொகை மாற்றம் ஏற்படுகின்றது. எனினும் இதற்கு முன்னர் ஏறத்தாழ 14, 15 ஆம் நு}ற்றாண்டிலிருந்து ஒரு நிலையான சமூக - பொருளாதார அமைப்பு உருவாகி நிலைபெற்று வந்துள்ளது. இந்த ஸ்திரப்பாட்டிற்கு இம்மக்களிடையே நிலவிய ஒரே சீரான பொருளாதார நடவடிக்கை மரபும், சட்ட ஒழுங்கு மரபும் காரணமாக அமைகின்றன. இதனை யாழ்ப்பாணத்தில் நிலவிய தேச வழமைச் சட்டமும், சாதியமைப்பையும் வழங்கின. துனியார் சொத்துக்கு வழங்கப்பட்ட மரியாதையும், அவை பேணப்பட்ட முறைமையும் (வேலியிட்டுப் பிரித்து வைத்துக் கொள்ளல்) இந்த ஸ்திரப்பாட்டுடன் காரணகாரியத் தொடர்பு கொண்டவையாகும். யாழ்ப்பாணத்தின் சமூக, பொருளாதார ஸ்திரப்பாடு பற்றியும் அரசரத்தினம் அவர்கள் தொகுத்துக் கூறுவது உற்றுநோக்கப்பட வேண்டியது. There was then the institution of caste which evolved in ways different from the original home - lands of the Tamils. The absence of a large group of Tamils weakend the Brahminie norms which the Tamils had brought from south India. Castes did not have to strictly adhere to traditional occupations and there was some socio - economic mobility. These occupations did not and could not have the same social values attached to them in south India. Agriculture and Agriculture persuuts continued as the most valued occupations but seafaring and the industries associated with seproduce achieved a value greater than I n south India provided the means to upward social mobility. /The numerical preponenrance of the major agricultural caste, which soon become the dominant caste in society gave a stability to society. (S.Arasarathnam Historical foundation of the Tamils of North SriLanka - Fourth Chelvanayagam Memorial lecture Jaffna. - 1982) மாற்றங்கள் அதிகம் ஏற்படாது தொடர்ந்தமைக்கும், அதே வேளை மேனிலை நோக்கிய சமூக - பொருளாதார அசைவியக்கத்துக்கான (தென்னிந்திய சாதி மரபில் இருக்காத சில) சாத்தியப்பாடுகளும் இங்கு நிலவியமைக்கான காரணங்கள் இப்பொழுது துல்லியமாகின்றன. யாழ்ப்பாணச் சாதியமைப்பு வழங்கிய மேலாண்மையுடன் விவசாயம் பிரதான இடத்தை வகிக்கத் தொடங்கிற்று. இந்த விவசாய மேலாண்மைக்கான இன்னொரு காரணம் இங்கு ஒரு வன்மையான வணிக வர்க்கமோ, முயற்றியாளர் குழாமோ (நவெசநிநnரெசயைட பசழரிள) இல்லாது போனமையாகும். சிறு வியாபாரிகள் ஆன வணிக குழுவினரைத் தவிர இங்கு எடுத்துப் பேசக்கூடிய வணிக மரபினர் மிகக் குறைவானோரே, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை கடலோடிகளால் நடத்தப் பெற்று வந்த ஒரு வர்த்தகப் பாரம்பரியம், பாய்க்கப்பல் முறைமையின் ஒடுங்குதிசையின் பின்னர்(இதே காலத்திலேற்பட்ட சுங்கத்திணைக்கள வளர்ச்சியுடன்) மங்கிப் போயிற்று. வணிக முனைப்பும், பெருந்தொகை வணிக முதலீடுமில்லாது இருந்தமையும், இச்சமூகத்தில் ஒரு வகையான மாற்றமின்மையைத் தவிர்க்க முடியாததாக்கிற்று எனலாம். இவ்வாறான ஒரு “பாரம்பரிய” ச் சூழலில், பாரம்பரியப் பேணுகை முக்கிய இடம் பெற்றது ஆச்சரியத்தைத் தருவதன்று. இத்தகைய சமூகங்களில் மதம் முக்கியம் பெறுகின்றது. அதனை மையமாகக் கொண்டே பாரம்பரியப் பேணுகை நடப்பதும் இயல்பே. இத்தகைய சமூகத்தில் நிலவும் அறிவு - முறைமையும், சமூகப் பாரம்பரியங்களைப் பேணுவதாகவே அமையும். இங்கு வரன்முறையான கல்வியென்பது மதம் சார்ந்ததாகவும், சமூகத்தின் சகல ஆக்கங்களையும் உள்ளடக்காததாகும். உண்மையில் இச்சமூகத்தின் அடிநிலையினருடன் சம்மந்தப் படாததாகவே இருக்கும். அடுத்து, இந்தச் சமூகப் பொருளாதாரப் பின்புலமுள்ள இச்சமூகத்தில் எழுத்துக்களும் புலமைத்துவச் செல்நெறிகளும் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்குவது அவசியமாகின்றது. அதனைப் பின்வரும் வகையில் மிகச் சுருக்கமாக உடுத்துக் கூறலாமெனக் கருதுகிறேன். மேனாட்டு வருகைக்கு முந்திய காலம்(Pசந - றநளவநசn) அ. யாழ்ப்பாண அரச உருவாக்கம் நடந்தேறிய காலம் (14ஆம்,15ஆம்) பெரும்பாலும் ~வரலாறு| சார்ந்த எழுத்துக்களே காணப்படுகின்றன. இவை இந்துப் பாரம்பரியத்தில் வரலாறு எடுத்துக் கூறப்படும் பௌராணிக, ஐதீக மரபை ஒட்டியே அமைந்துள்ளன. தக்கிண கைலாசபுராணம்,கோணேசர் கல்வெட்டு, வையாபாடல்,கைலாயமாலை ஆகியன. மற்றையவை மதம், மருத்துவம் சார்ந்தவை. ஆ. முஸ்லிம்களின் வருகை: மேனாட்டார் வருகைக்கு முந்திய காலத்து முஸ்லிம் இலக்கியப் படைப்புக்கள் எதுவும் இல்லையென்றே கூறல் வேண்டும். புpரிட்டிஷ் ஆட்சிக்கு முற்பட்ட காலம் (1505 - 1796) அ. போர்த்துக்கேய,ஒல்லாந்தர் காலங்கள் - கிறிஸ்தவத்தின் வருகை - கத்தோலிக்கம், இறப்பறமாதுக் கிறிஸ்தவம் இந்துமதமும் இஸ்லாமும் பலத்த பாதிப்புக்குள்ளாக்கப்படல், இக்காலத்துக்குரியனவாக உள்ள கிறிஸ்தவ, இந்து எழுத்தாக்கங்கள் ஆ. அந்நிய கல்விமுறை நிறுவப்படல் - டச்சு ஆட்சியின் கல்வி முறைமை. பாரம்பரியக்கல்வி முறையின் தொடர்ச்சி - தமிழக் தொடர்புகளின் தொடர்ச்சி. பிரிட்டிஷ் காலம் (1796 - 1948) பிரித்தானிய ஆட்சியின் மதநெகிழ்ச்சிக் கொள்கைகள்: சமூக - பண்பாட்டுத் தலைவர்கள் பிரித்தானிய ஆட்சியை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவம் சாராத ஒரு கல்வி முறையைக் கோரியமை: கிறிஸ்துவத்திற்கான இவ்வெதிர்ப்பு கல்வி முறைமைக்குள் கிறிஸ்தவம் முனைவுப்படுத்தப்பட்ட முறைமை பற்றியிருந்ததுவே தவிர அந்தக் கல்வி முறைமைக்கு அது கொண்டு வந்த உள்ளடக்கம், அமைப்பு ஆகியவற்றுக்கு எதிரானதன்று. இந்தக் கல்விமுறைமையை ஏற்பது பற்றி நடந்த போராட்டங்கள் முக்கியமானவையாகும். தமிழ்க்கல்வி மரபையும்,ஆங்கில மொழிப் பயில்வையும் எவ்வாறு இணைப்பதென்பது ஒரு பிரச்சனை மையமாக விளங்கியது. ஆறுமுகநாவலரின் இயக்கம் இது சம்மந்தப்பட்டதாகவே அமைந்தது. இறுதியில் சமூகத் தேவைகளையும் மதத் தேவைகளையும் இணைக்கும் சைவ ஆங்கிலப் பாடசாலை மரபு தோற்றுவிக்கப்பட்டது. இந்த இணைப்பு ஏற்பட்டதும் பாரம்பரியப் பேணுகையையும் புதிய தேவைகளையும் அனுசரிக்கும் ஒரு சமூக அசைவியக்க முறைமையையும் கடைப்பிடிப்பது சுலபமாயிற்று. இந்து மத மட்டத்தில் இவ்விணக்க இயைபு முயற்சி மேற்கொள்ளப்பட்ட வேளையில் புதிய கல்வி மரபு கிறிஸ்தவ முகாமையின் கீழ் வளர்த்தெடுக்கப்பட்டாலும், விஸ்தரிக்கப்படலும் நடைபெறுகின்றன. இதனை முதலில் ஏற்படுத்தியவர்கள் புரட்டஸ்தாந்துப் பிரிவினர்களே. (அமெரிக்க மிஷன், வெஸ்லியன் மிஷன், ஆங்கிலத் திருச்சபை மிஷன் ஆதியன முதலிலும் கத்தோலிக்கம் பின்னருமே வந்தன) பிரித்தானிய ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்களின் பின்னர், நவீனமயப்பாடு(ஆழனநசணையவழைn) ஆங்கிலக்கல்வி முறைமையே மூலமே வந்தது. இந்த நவீன மயப்பாடு இல்லாது சமூக அந்தஸ்துப் பேணுகையையோ, சமூக மேனிலைப்பாடோ சாத்தியமற்றதாகிற்று. இதனால் இந்த நவீன மயப்பட்ட கல்வி சமூக முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்றாயிற்று. அதனால் இக்கல்வியை மிகச் சிறந்த சூழலிற் பெறக்கூடிய கல்வி வாய்ப்புக்கள் முக்கியமானவையாகின. யாழ்பாணத்தில் நடந்தேறிய நவீன மயமாக்கம் ஏறத்தாழ 1950 கள் வரை தொழிநுட்ப மயவாக்கத்துடன் (வநஉhழெடழபணையவழைn) சம்மத்தப்படவில்லை. கல்வி மூலமாகவே இந்த நவீன மயவாக்கம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் பிராமணிய முறையில்லாததால் சாதியமைப்பில் தமிழகத்திற் காணப்படாத ஒரு நெகிழ்ச்சி இங்கு இருந்தது. இடைநிலைச் சாதியினர் தங்கள் இந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும், தங்கள் இடம் நன்கு வரையறுக்கப்படாதிருந்த சாதிக் குழுமங்கள் (அகம்படியார், தனக்காரர், சாயக்காரர் போன்றோர்) உயர்நிலையினருடன் தம்மை இணைத்துக் கொள்ளவும் கல்வி பயன்பட்டது. இந்த நெகிழ்சிசியினைப் பயன்படுத்திய நவீனமயமாக்கம், கல்வியை ஒரு முக்கிய பொருளாதார முயற்சியாக்கிற்று. ழூ ஆங்கிலக்கல்வி வாயில்களாக அமைந்த நிறுவனங்களினுள் அமெரிக்க மிஷரினர்மார் நடத்திய யாழ்ப்பாணக்கல்லு}ரி, இருந்த ஆங்கிலக் கல்லு}ரிகளிலும் பார்க்க உயர் வகுப்புக்களை நடத்தியபடியாலும், பிரிட்டிஷ் காலனித்துவ மேலாண்மைக்குக் கட்டுப்படாதிருந்தமையாலும், பாடசாலை நிர்வாகத்தி;ற்கு அரச நிதியுதவியை எதிர்பாராதிருந்தாலும் 19ஆம் நு}ற்றாண்டு அமெரிக்கத் தாராண்மைவாதக்கல்வி முறைமையைப் பின்பற்றியதாலும் மற்றைய கல்வி நிலையங்களில்லாத ஒரு தாராண்மை (டiடிநசயட) வாதப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடியதாகவிருந்தது. இந்தக் தாராண்மைவாதச் சூழலில் அக்கல்லு}ரி மாணவர்கள், யாழ்ப்பாணத்தில் எல்லாக் காலத்திலும் நிலவி வந்துள்ள இந்தியச் செல்வாக்குக் காரணமாக வந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சமகாலப் போக்குளை உள்வாங்கி முற்றிலும் புதிய தளமாற்றவாத (சயனiஉயட) சமூக, அரசியற் கோடபாட்டை முன்வைக்கின்றனர். இது நடந்தது 1924- சமகாலப் பிரிவிலாகும். இதுவே யாழ்ப்பாணத்தின் மாணவர் பேரவை இயக்கமாகும். (ளுவரனநநவெ ஊழபெசநளள) அதனைத் தொடர்ந்து 1939 முதல் மார்க்ஸியச் சிந்தனை பரவப் தொடங்குகின்றது. அடிப்படைப் பொருளாதார உறவுகள் மாறாத ஒரு சூழலில் மார்க்ஸியம் இங்கு வன்மையாக சமூக - பொருளாதாரக் கோட்பாடாக கிளம்பாது புலமை நெறியாகவே வளரத் தொடங்குகின்றது. புலமை நெறியாகத் தொடங்கியது நிறுவன அமைப்பாக மாறத்தொடங்க சமூகச் சுரண்டல்கள் இடம் பெறும் இடங்களில் வேரூன்றித் தொடங்கிற்று. அரசியலில் இது இலங்கையை ஒரே தேசியச் கூறாகக் கொண்டது. சுpங்களத் தேசியவாதக் காலம் (1948) இந்தப் புலமைத்துவ நெறிப்பரவலைத் தொடர்ந்து, மிக முக்கியமான சிந்தனை மரபாக மேற்கிளம்புவது இலங்கையை முற்று முழுக்கத் தனது என உரிமை கொண்டாடிய சிங்களத் தேசியவாதமாகும். இது 1920 களில் தொடங்கி 1930களில் முக்கியமாகி, சுதந்திரத்தின் பின்னர் தன்னைப் புவியியல் hPதியாகவும், நிர்வாக hPதியாகவும் நிலைநிறுத்தத் தொடங்கிற்று. சிங்களத் தேசிய எழுச்சியின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள், தமிழரின் சமூக மேனிலைப்பாட்டுக்கான பிரதான வாயிலான கல்வியுரிமைகளைப் பாதிக்கத் தொடங்கவே, அதற்கெதிரான இனக்குழுமத் தனித்துவ வெளிப்படுத்துகை தொடங்குகின்றது. இது 1949 இல் நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் தொடங்குகின்றதெனலாம். 1956 இன் பின்னர் இது வளரத் தொடங்கி 1972 இல் ஓர் அரசியல் திருப்புமுனையை எய்துகின்றது. 1972 ஆட்சியமைப்பில் தமிழர்கக்கான இடம் பேசப்படாமலே விடப்பட்டது. இலங்கைத் தமிழ்ப் போராட்டம், அது எதிர்நோக்க வேண்டிய சிங்களத் தேசியத்தின் அரச நிலைப்பட்ட ஒடுக்குமுறைகள் காரணமாக வன்முறைப்பட்டதாகவும், புதிய தலைமையை நாடுவதாகவும் அமைந்தது. 1970 களின் பின்னர் தமிழ்த்தேசியம் முக்கிய அரசியற் சக்தியாகி மேற்கிளம்புகின்றது. அடுத்து மேற்கூறிய காலகட்டங்களில் தோன்றிய எழுத்துக்களையும் பிற புலமைத்துவ வெளிப்பாடுகளையும் சற்று விரிவாக நோக்குவோம். அவ்வாறு ஆராய்வதற்கு முன்னர், ஒரு அவதானிப்பினைப் பதிவு செய்து கொள்ளுதல் அவசியமாகின்றது. யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய அமைப்புக்குச் சவால்கள் கிளம்பிய காலகட்டங்களிலேயே முக்கியமான புலமைத்துவ நடவடிக்கைகள் தோன்றின என்பது உய்த்தறியப்படத்தக்கதாகவுள்ளது. அவ்வாறு நோக்கும் பொழுது புலமைத்துவ நடவடிக்கைகள் இருநிலைகளில் வைத்துக் பார்க்கப்படலாம். ஓன்று - நிலவும் அமைப்புச் சவால் விடுவன யாவை என்பதும் அவை எவ்வகையில் சவாலை சவாலை விட்டன என்பதும், இரண்டு - நிலவும் அமைப்பு புதிய சவால்களை எவ்வாறு ஏற்றக் கொண்டது என்பதும், அதனால் அவ்வமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை என்பதும். இவ்வாறு நோக்கும் பொழுது மேனாட்டார் வருகைக்கு முற்பட்ட புலமைத்துவ மரபானது பிரதானமாக, சமூக அமைப்பின் உருவாக்கத்திற்கு உதவுவனவாகவும் அந்த அமைப்பினை நியாயப்படுத்துவனவாகவும் காணப்படும். இது பற்றி “ஈழத்துத் தமிழ் இலக்கியத்” தில் விளக்கியுள்ளேன்.(2 ஆம் பதிப்பு 1987 - பக்கம் 10-11, 163-5) வையாபாடல், கையாலயமாலை, தட்சணகைலாச புராணம், பரராஜசேகரனுலா, கதிரைமலைப் பள்ளு ஆகிய நு}ல்களின் தோற்றத்தை மனங்கொள்ளல் வேண்டும், அவை தோன்றிய அந்தக் காலப் பிரிவிலேயே வைத்திய நு}ல்களும் (செகராசசேகரம்) தோன்றின. இந்த நு}ல்களின் தோற்றத்துக்கும், ஆட்சியதிகாரத்துக்கும் தொடர்பு இருந்ததென்பது இந்நு}ல்கள் பற்றிய தகவல்கள் வழியாகத் தெரியவருகின்றன. மக்கள் நிலைப்படடதான இக்கால இலக்கியமென்று கூறப்படத்தக்கதாக அமைவது கண்ணகி வழக்குரையே. இந்நு}ல் கோயில் ஏடுகள் வழியாகப் பேணப்பட மற்றைய நு}ல்களோ வரன்முறையான உயர்நிலைப் பேணுகை வழியாக கையளிக்கப்பட்டனவாகும். யாழ்ப்பாண அரசின் ஆட்சியம்சங்களின் முக்கியமான ஒன்று பிரதேச முதலிகளின் முக்கியத்துவமாகும். யாழ்ப்பாண அரசு ஒருமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆட்சி முறைமை நடைமுறைப்படுத்தியிருந்தது. என்பதற்குப் போதிய சான்றுகளில்லை. அத்துடன் தென்னிந்தியாவில் நிலவி வந்த கூறாக்க முறைமைக்கு (ளநபஅநவெயசல ளவயவந வசயனவைழைn) மாறான ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் ஆட்சி முறைமை யாழ்ப்பாணத்தில் நிலவிற்று என்று கூறமுடியாது. யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்கே பிரதேசப் பிரதானிகள் சூழ்ச்சி முக்கியமான ஒரு காரணியாக விளங்கிகிற்று என்று கொள்ளப்படுவதிலிருந்து இந்த உண்மை நன்கு புலனாகின்றது. மேனாட்டார் வருகைக்கு முன்னர் நிலவிய கல்வி முறைமை பாரம்பரிய தமிழ்க்கல்வி முறைமையாகவே இருத்தல் வேண்டும். அதாவது குரு - சிஷ்ய மரபினைப் பேணியதாகவும், உயர் நிலைப்பட்டோருக்கு உரிய ஒன்றாகவும், மதச்சார்புடையதாகவுமே இருந்;திருத்தல் வேண்டும். அந்த அளவில் இச்சமூகத்தின் இயல்பான அடுக்கமைவு முறைக்கு (hநைசயசஉhiஉயட யெவரசந) இயைந்ததாகவே அமைந்திருத்தல் வேண்டும். “உலகம் என்பது உயர்ந்தோர்மேற்றே” எனும் கருத்துநிலை இத்தகைய சமூகங்களில் இயல்புநிலையாகும். இக்கால இலக்கியங்களில் முக்கியமானது யாழ்ப்பாணத்தின் சிந்தனை மரபில் முக்கியமானதாக எடுத்தோதப்படவேண்டிய நு}ல் இரகுவம்சமாகும். காளிதாஸனது மூலநு}லின் மொழிபெயர்பாக அமைந்த இந்த ஆக்கம், அரசகேசரியினுடையது. அரசகேசரி யாழ்ப்பாண அரசர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். சுமஸ்கிருத மரபுவழிவரும் ஓர் இந்த முறைமையை யாழ்ப்பாணத்து மரபின் தளமாகக் கொள்ளும், ஒரு செயற்பாடு இதனுள் தொக்கு நிற்கின்றது. தன்யொரு நு}லினை வைத்துக் கொண்டு பொதுப்படையான ஒரு வரலாற்றுச் செல்நெறியை வகுத்துக் கொள்வது சிரமமெனினும் பின்வரும் யாழ்ப்பாணத்தில் வளர்ந்த மரபினை நோக்கும் போது (சைவசித்தாந்தத்தை வேதாகத்தின் பிழிவாகக் கொள்வது) இரகுவமிசத்தின் தமிழ்ப்படுத்துகைக்கான புலமைத்துவச் செல்நெறி மிக உன்னிப்பாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிக்காலங்கள் இப்பிரதேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகின்றன. மேனாட்டாட்சி முறையும் கிறிஸ்தவரும் இலங்கை நாட்டினதும் இப்பிரதேசத்தினதும் வரலாற்றையே மாற்றியமைக்கின்றன. இங்கு நிலவிய விவசாய அமைப்பும், அடுக்கமைப்புச்; சமூக முறைமையும், கூறாக்க ஆட்சி அமைப்பும்; வந்த ஆட்சியை எதிர்பதற்கோ அன்றேல் அதற்கு எதிராகக் கிளம்புவதற்கோ வேண்டிய ஒரு கருத்து நிலையை மக்களிடத்தே ஏற்படுத்தக் கூடியனவாக அமையவில்லை. கிறிஸ்தவத்தின் வருகையும், அது அரசயந்திரத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப் படுத்தப்பட்டமையும் இங்கு நிலவிய சமூக - மத மேலாண்மைக்குப் பெருஞ்சவாலாக அமைந்தன. இந்த வருகையுடன பாரம்பரிய அமைப்பு அதனைப் பேணுவதற்கான ஆட்சியதிகார ஆதரவை இழந்தது. திருச்சபையோடிணைந்த ஒரு கல்வி மரபு இச்சமூகத்தின் பாரம்பரிய புலமைத்துவ மரபுக்குச் சவாலாக விளங்கிற்று. இந்த வருகையின் பாரம்பரிய புலமைத்துவ நிறுவனங்களிடையே ஓர் ஒதுக்கற்பாடு (நஒஉடரளiஎநநௌள) காணப்பட்டது. இப்பிரதேசத்தின் மத பண்பாட்டு ஊற்றின் தளமான தமிழகத்திற்குச் செல்லும் ஒரு செல்நெறியும் காணப்பட்டது. கிறிஸ்தவம் இத்தகைய ஒரு பாதிப்பை ஏற்படுத்திற்று என்றாலும் அந்த ஆரம்ப நிலையில் கிறிஸ்தவம் பாரம்பரிய அமைப்பினை அது ஜீவமரணப் போராட்டம் நடத்தும் ஒரு நிலைக்குத் தள்ளவில்லை. ஏனெனில் முதலில் வந்த கத்தோலிக்க மதத்தினர், இச்சமூகத்தின் உயர்மட்டத்திற்கு எத்தகைய ஒரு பெருஞ்சவாலையும் ஏற்படுத்தவில்லை. இந்தப் பிரதேசத்தின் பாரம்பரியப் பண்பாட்டினைப் பேணும் அதன் களஞ்சியமாக விளங்கிய சமூக மட்டத்தில் ஒரு மிகச் சிறிய பகுதியினரே கத்தோலிக்கத்திற் சேர்ந்திருந்தனர். பெரும்பான்மையான கத்தோலிக்கர் அடிநிலைப்ப்பட்ட சாதிக்குழுமங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். போர்த்துக்கேய ஆட்சிக் காலத்தில் அவ் ஆட்சி வழி வந்த பண்பாட்டமிசங்களை புறக்கணிக்கும் ஒரு மனோபாவமே உயர் குழாத்தினரிடம் நிலவிற்று. ஒல்லாந்தர் ஆட்சியில் குறிப்பாக அதன் பிற்பகுதியில் கிறிஸ்தவத்தின் பரப்புகை பற்றிய அவர்களது சிரத்தை, பொருளாதாரத் துறையில் காட்டப்பட்ட அளவு காட்டப் பெறவில்லை எனலாம். கிறிஸ்தவ மதத்தை ஊக்குவிப்பதென்பது ஒல்லாந்தராட்சியில் இரண்டாம் பட்ச இடத்தையே பெற்றிருந்தாலும், ஒல்லாந்தக் கல்வி முறையானது திருச்சபையுடனேயே இணைக்கப்பட்டிருந்தது. Youth with some education had career openings in the company's Junior administrative service. They were employed as translators in the company's offices, in the revenue services in a wide range of duties, and as school masters and catechists. (S. Arasaratnam9. V, P-17) போர்த்துக்கேயர் காலத்து மேற்கொண்ட ஒதுக்கல் நிலைப்பாட்டை யாழ்ப்பாணச்சமூகத்தின் உயர்குழாத்தினர் ஒல்லாந்தர் காலத்தில் மேற்கொள்ளவில்லை எனலாம். தங்களைக் கிறிஸ்தவர்களாகக் காட்டிக் கொள்ளவும் அவர்கள் தயங்கவில்லை. யாழ்ப்பாணத்தில் 1758 இல் 37 தேவாலயங்களும்,200, 233 இறப்பிறமாத்துக் கிறிஸ்தவர்களுமிருந்தனரென்று கூறப்படுகின்றது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்கர்களும் இன்னல்களுக்காளாக்கப்பட்டனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் போர்த்துக்கேய ஆட்சியே மோசமாக இருந்தது. கத்தோலிக்கர்களைப் பொறுத்தவரையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் தங்கள் மதத்தைப் பேணுவதற்குக் தங்கள் அடிநிலைத் தொடர்புகளை வற்புறுத்திக் கொண்டனர் எனலாம். ஓல்லாந்தர் ஆட்சியின் கீழ் உள்நாட்டு நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் தரகர்களும் நல்ல நிலையிலிருந்தனர் என்பர். இலக்கியத்தின் மூலம் இந்த உண்மை நிரூபிக்கப்படுகின்றது. உள்ளுர்ப்பிரபுத்துவ பரம்பரை பற்றித் தோன்றிய முதலாவது நு}ல் - கரவை வேலன் கோவை - ஒல்லாந்தர் காலத்தைச் சார்ந்ததாகும். யாழ்ப்பாண வைபவ மாலை கூட “உரராச தொழுகழன் மேக்னு}னென்றோதும் உலாந்தேசு மன்னன் உரைத் தமிழாற் கேட்க” மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்டதாகும் என்பர். யாழ்ப்பாணத்தின் பாரம்பரியச் சுமூக அமைப்பு அந்நிய ஆட்சியுடனும் கிறிஸ்தவத்துடன் “உடனுறைய” ப் பழகிக் கொண்டுவிட்டது எனலாம். பிரித்தானிய ஆட்சி வருகையுடன் ஆட்சியாளரின் மதக் கொள்கையில் மேலும் நெகிழ்ச்சி காணப்படுகிறதெனினும், இக்கால பிரிவில் புரட்டஸ்தாந்து மதங்களின் பரவல் (வெஸ்லியன் மிஷன், சேச் மிஷனரிக் கழகம்) பாரமபரிய சமூக அமைப்புக்கான பெரிய சவாலாக அமைந்தது. (மு.ளுiஎயவாயஅடில - ர்iனெர சுநயஉவழைn வழ ஊhசளைவயைn Pசழஉடலவணையவழைn யனெ றுநளவநசnணையவழைn in 19வா உநவெரசல துயககயெ - ளுழஉயைட ளுஉநைnஉந சுநஎநைற ழே 1இ 1979 - ஊழடழஅடிழ) இரண்டாவது - இது முக்கியமானது - இவர்கள் உயர்சமூகதிதினரிடையே தங்கள் மதத்தினைப் பரப்பினர். அடிநிலைச் சமூக மக்களிடையே மதத்தைப் பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டவி;ல்லை எனலாம். புரட்டஸ்தாந்திகளாக மதம் மாறிய அடிநிலைப்பட்டோர் மிகச் சிலரே. மூன்றாவது அரச உத்தியோகங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஆங்கிலக் கல்வி பிரதானமாக இந்த நிறுவனங்கள் மூலமே போதிக்கப்படலாயிற்று. நான்காவது இந்தத் திருச்சபைகள் வழிவந்த கல்வி முறைமை, நவீன மயவாக்கத்துக்கான ‘முகவர்’ (யபநnஉல) நிறுவனமாகக் கணக்கிடப்பட்டது. இதனால் கிறிஸ்து மயப்பாட்டினை எதிர்த்த சுதேசிகள் புதிய கல்வி முறைமையைக் கையேற்று அதன் மூலமே தமது பண்பாட்டுப் பேணுகையை நடத்த வேண்டியதாயிற்று. ஆங்கில ஆட்சியும், மிஷனரிமார்கள் அறிமுகப்படுத்திய கல்வி முறைமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கிறிஸ்தவத்தின் நேரடித் தாக்கமில்லாத கல்வியை உணர் மட்டத்தினர் விரும்பினர். அதாவது பாரம்பரியச் சமூகச் செல்வாக்கையும் அதிகார மேலாண்மையையும் ஊறுசெய்யாத வகையில் புதிய கல்வி முறை அமைந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்பதைப் பட்டவர்த்தனமாகத் தெரிவித்தனர். இந்த விடயம் பற்றிக் கணிசமான ஆராய்ச்சி நடந்துள்ளது. ஆறுமுகநாவலர் பற்றிய ஆய்வுகள் பலவற்றில் இவ்விடயம் பேசப்பட்டுள்ளது. (நாவலர் நிறைவு நு}ற்றாண்டு விழா மலர் - பதிப்பு க. கைலாசபதி 1979) எனவே அவற்றை மீண்டும் இங்கு எடுத்துக் கூறாமல், கிறிஸ்தவ கல்வியை இந்துக்கள் நோக்கிய முறைமை பற்றியும், கிறிஸ்தவ வழிக்கல்விக்கான எதிர்;புக்கான காரணங்கள் யாவை எனக் கிறிஸ்தவர்கள் கருதினர் என்பது பற்றியும் சில முக்கியமான தரவுகளை அருகருகே வைத்துக் பார்ப்பது இவ்விடயம் பற்றிய ஒரு தெளிவான புலப்பதிவுக்கு உதவுவனவாகும். தனது பாடசாலைக்கான நிதிக்கொடை கேட்டு ஆறுமுகநாவலர் எழுதிய முறையீடு பின்வருமாறு : ??????? (Appendix - Navalar Apeals for state Aid” in நாவலர் பணிகள் - தனஞ்ஜெயராசசிங்கம் பேராதனை - 1969) ஆங்கில ஆட்சியை வரவேற்கும் நாவலர், மிஷனரிகளின் தேவையையும் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டு ஆங்கிலம் கற்க வருபவர்கள் மீது கிறிஸ்துவ மதக்கருத்துக்களைக் திணிக்கக் கூடாது என்று சொல்கிறார். அந்தக் கல்வியைப் பெறும் வரையில் தான் அவர்கள் மிஷனரிமார் சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்கள். கல்வி முடிந்த பின்னர் அதற்குக் கிஞ்சித்தேனும் மதிப்புக் கொடுக்கவில்லை என்று கூறுகிறார் இங்கு தமிழ் மாணவர் எனக் கொள்வது அக்காலக் கல்வி முறைமைக்குள் வரக்கூடிய தமிழ் மாணவரையே. நாவலரின் இந்த நிலைப்பாட்டை ஒரு கிறிஸ்தவ மிஷனரி எவ்வாறு பார்த்துள்ளார் என்பது சுவாரசிமானதும். வெஸ்லியன் மிஷனரியைச் சேர்ந்த றொபின்சன் என்பவர் நாவலர் கல்வி இயக்கத்தின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் பொழுது பின்வருமாறு குறிப்பிடுகிறார். “As long as 1842, the gentry of Vannarpanne showed themselves very uneasy at the ???? கிறிஸ்தவம் சாதாரண மக்களிடையே பரவுவதனாலும், திறமையும் கல்வியுமுடையோர் தமது பாரம்பரிய அதிகார அடுக்கமைவு மேலாளரை மீறி முன்னேறுவதனாலுமே உயர்மட்டத்தினர் தங்களுக்கென ஒரு பாடசாலையை 1842 இல் நிறுவினர் என றொபின்சன் பாதிரியார் கூறுகின்றார். மேலிருந்து வரும் சமூகச் சலுகைகளை அடிநிலைக்குச் சுவறவிடாது தமது நிலையினுள் அமைத்துக் கொள்வது யாழ்ப்பாணத்துச் சமூக மேலாண்மை மரபின் ஒரு பண்பு என்பதனை எனது ~~யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளலில்|| (1993) எடுத்துக் கூறியுள்ளேன். கிறிஸ்தவம் ஏற்படுத்திய பண்பாட்டுத் திரைவுக்கு எதிராக இந்தியாவின் சில பாகங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சகலரையும் உள்ளடக்கிய இயக்கங்கள் தோன்ற, இங்கோ சமயப் பேணுகை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலன்களின் பேணுகையையே வற்புறுத்திநின்றது. கிறிஸ்துமதத் தாக்கத்தினதும் நவீனமயவாக்கத்தினதும் தாக்கங்களிடையே பாரம்பரியப்பேணுகையானது இரண்டு கருத்துநிலைத் தளத்திலிருந்து தொழிற்பட்டது. 1. நவீனமயவாக்க உத்திகளையே பயன்படுத்தல் - அச்சுப்பதிவு - செய்யுளிலக்கியங்களை உரை வடிவில் தரல் - துண்டுப் பிரசுங்களைப் பயன்படுத்தல் 2. பாரம்பரியக்கல்வி முறையையும் சில நடவடிக்கைகளையும் பேணுதல் - புராணபடனமரபு - குரு - சிஷ்ய முறையைப் பேணல் - பாரம்பரியச் சமூகக் கொள்கைகளைப் பேணல். ஆதில் எவ்வித அசைவியக்கத்தையும் காண விரும்பாமை. நூவலர் இந்த இரண்டு அமிசங்களையும் இணைத்து நின்றார். ஆனால் அவரது காலத்தின் பின்னர் வந்த இந்து ஆங்கிலப் பாடசாலை முறைமையானது பாரம்பரியக் கல்வி முறைத் தொடர்ச்சியினைப் பேணும் முறையைக் கைவிட்டு, இந்து மதச்சூழலில் புதிய பாடத்திட்டத்தினைப் பயிற்றுவிக்கும் முறைமையை ஏற்றுக் கொண்டது. அந்தப் பெருமாற்றத்தைக் குறிப்பதே யாழ். இந்துக் கல்லு}ரியின் தோற்றமாகும் (1889). இந்த மாற்றம் நாவலரின் பின்னரே நடைபெறுகின்றது. ஆறுமுக நாவலரின் பின்னர் சைவப் பேணுகை சம்பந்தமாக இரு சிந்தனைப் போக்குகள் தொழிற்படுவதைக் காணலாம். ஓன்று சைவ ஆங்கிலப் பாடசாலைகளைக் கட்டும் மரபு; மற்றது மேனாட்டு நாகாPக இணைவு சற்றுமின்றிப் பாரம்பரிய சைவத் தமிழ் கல்வியைப் பேணும் முறைமை. 1889 யாழ் இந்துக் கல்லு}ரியின் தோற்றத்தின் பின்னர் ஆங்கிலக் கல்வியை சைவச் சூழ்நிலையில் பயிலும் பண்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சைவ ஆங்கிலக் கலாசாலைகள் தோன்றத்தொடங்கின. அதே வேளையில் மறுபுறத்தில் நாவலர் தோற்றுவித்த இலக்கிய மரபைப் பின் பற்றும் பாரம்பரிய இலக்கிய இலக்கணப் பயில்வும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த மரபின் தன்மையைப் பற்றி வல்வை. சுp. வைத்தியலிங்கம்பிள்ளை எழுதியுள்ள சிறு நு}லில் குறிப்பிட்டுள்ளேன். யாழ்ப்பாணத்துத் தமிழரிடையே காணப்பட்ட இந்த மரபுப் பேணுகை முயற்சிகள் போன்ற ஒரு பேணுகை முயற்சியினை யாழ்ப்பாணத்து முஸ்லிம்களிடையேயும் காணலாம். ஹக்கீம் மீரு முகிய்யதீன் புலவர், யாழ்ப்பாணம் சேகுத்தம்பிப் புலவர், சுலைமான் லெப்பை, சுல்தான் தம்பிப் பாவலர் முதலியோர் 19ஆம் நு}ற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர்களாவர். (அப்துல் ரகீம் - யாழ்ப்பாண முஸ்லிம்கள் - வரலாறும் பண்பாடும் - 1979) ஆனால் இந்துக்கள் ஆங்கிலக்கல்வியை தமது மதச்சூழலில் படிப்பிக்கத் தொடங்கிய அந்த முறைமையினை முஸ்லிம்கள் மேற்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் கல்வியில் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருபதாம் நு}ற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் யாழ்ப்பாணம் சோனக குடியிருப்புக்கு அருகே இருந்த பாடசாலைகளில் ஆங்கிலம் படித்தனர். இவ்வகையில் வைத்தீஸ்வராக் கல்லு}ரி முக்கிய இடம் வகித்ததெனலாம். அப்பாடசாலையின் நிர்வாகம் இராமகிஷ்ணமிஷனை சார்ந்திருந்தமை அனுமதி நெகிழ்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கலாம். கிறிஸ்தவம் யாழ்ப்பாணப் பாரம்பரியத்துக்கு ஊறுசெய்ததா என்பது ஒரு முக்கியமான விடயமாகும். நாவலரும் அவர் தம் மரபினரும், குறிப்பாக நாவலர் மரபினைப் போற்றியோர் எடுத்த நிலைப்பாடும், பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டத்தை நோக்குவது கடமையாகின்றது. எஸ்.ஜெபனேசனின் அமெரிக்க மிஷனும், இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் (1983) என்னும் நு}லுக்கு முன்னுரை வழங்கிய முன்னாள் பிசப்பான கலாநிதி எஸ்.குலேந்திரன். “To say that the cultural activities of the missionaries destroyed our culture is not due to (as some of us think ) malice but to a mistake. There are many who say the British destroyed the ancient culture of India; but few of them, if given the chances, World like to live in India before the British, with it suttee system, its thuggery, child widons and the highhanded behavions of the Brahmins. A culture that to al;l new influences, new ideas and new insights, does not express itself to new experiences but is handed down from generation to generation, wrapped up as in a parcel is a died thing. It is new influences and experiences that renew a culture and make it like. The mistake made by those who denounce the cultural activates of the missions as having dealt out death to the old cutture of Jaffna are actually denouncing it for having given it a new life” புதிய பண்பாட்டு அனுபவங்களுக்கு முகங்கொடுத்ததானாலேயே தமிழ்ச்சமூகம் விழிப்படைந்து புத்து}க்கத்துடன் வரும் காலத்தை எதிர்நோக்ககியதென்று கூறும் ஆயர் குலேந்திரன் தேவ ஊழியச் சபைகள் மரபு வழிப்பண்பாட்டை மரணிக்கச் செய்யாமல் அதற்குப் புத்துயிர் வழங்கினர் என்று கூறுகின்றார். கலாநிதி குலேந்திரனின் இக்கருத்து சற்று நிதானமாகவே நோக்கப்படல் வேண்டும். கிறிஸ்தவர்கள் பங்களிப்புப் பற்றிப் பேசும் இக்கட்டத்தில், அவ்வழியாக வந்த இரு முக்கிய செல்நெறிகளைப் பதிவு செய்து கொள்வது அவசிமாகும். அ. கிறிஸ்தவர்கள் தம் தழிழ் வழிப்பேற்றைத் தமிழில் பதிவு செய்து கொண்டமை. ஆ. தமிழின் புராதான இலக்கிய வளத்தை ஆங்கிலத்தில் எழுதியமை. முதலாவதற்கு உதாரணமாக பாவலர் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தைக் (1886) குறிப்பிட வேண்டும். ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை மேனாட்டு மரபுக்கியைய எடுத்தக் கூறியவர் (1859) புத்தளத்தை வரலாற்றைச் சேர்ந்த காசிச் செட்டியாராவர். கிறிஸ்தவர்கள் தங்கள் தமிழ்ப்பாரமபரியத்தை விதந்து கூறும் பண்பு தமிழகத்திலும் காணப்படுவதொன்றாகும். (தமிழில் இலக்கிய வரலாறு 1888 - 1898) இருபதாம் நு}ற்றாண்டின் முற்கூற்றில் சுவாமி ஞானப்பிரகாசர் ஆற்றிய ஆராய்ச்சிகள் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். கிறிஸ்தவர்கள் தாக்கம் ஏற்பட்டதன் பின்னர், அதற்கு முகங்கொடுக்கத் தக்க முறையில் நாவலரால் வளர்ந்தெடுக்கப்பட்ட சைவமானது மெதடிஸ்த து}ய்மைவாத அணுகுமுறையைக் கொண்டது என்பது ஏற்கனவே எடுத்துக் கூறப்பட்டுள்ளது. (ளுiஎயவாயஅடில 1979) நாவலரின் பாரம்பரியப் பேணுகை முயற்சியின் பின்னர், யாழ்ப்பாணத்துப் புலமைத்துவப் போக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது யாழ்ப்பாண மாணவ காங்கிரசாகும். (வுhந ளவரனநவெ உழபெசநளள) 1924 டிசெம்பரில் நடைபெற்ற அதன் முதலாவது மகாநாட்டில் அது நிறைவேற்றிய தீர்மானங்கள் அது எத்துணைத் தளமாற்றைத்தன்மை (சயனiஉயட) உடையதாயிருந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அத் தீர்மானங்கள் பின்வருமாறு; “1. தாய்நாட்டின் சேமநலத்திற்கும், அதன் நலன்களை எல்லாச் சமயங்களை சார்ந்தவர்களாலும் சமமான நேர்மையுடனும், விநயத்துடனும் ஊக்குவிப்பது முடியும் என்று இந்த காங்கிரஸ் நம்புவதால், இக்காங்கிரசானது அதனைப் பொறுத்தவரையில் நாட்டிலுள்ள பல்வேறு சமயநிறுவனங்களிடையே வேறுபாடு காட்டுவதில்லையென்றும், எந்த ஒன்றுக்கும் முதலிடம் கொடுப்பதில்லையென்றும் காங்கிரஸின் பொதுக்கூட்டங்களிலோ, செயற்குழுக் கூட்டங்களிலோ அல்லது செய்யும் பிரச்சார வேலைகளின் பொழுது எந்தவொரு மதம் சார்ந்த எந்த விடயமும் கிளப்பக்கூடாதென்றும், இதற்கான ஒரு வாசகம் ஆட்சியமைப்பு விதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும், 2. ………………………….. 3. தற்போது நாட்டில் நிலவும் சாதி வேறுபாடுகள் முன்னேற்றத்திற்குக் தடையென இக்காங்கிரஸ் கருதுகின்றதென்றும், நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்தவர் முயல்வாரென்றும் 4. தேசிய இலக்கியத்தைப் படிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வாரத்தில் குறைந்தது மூன்று மணித்தியாலங்களையாவது செலவிடுவதென காங்கிரசின் அங்கத்தவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தும் வாக்குறுதியொன்றைச் செய்து கொள்வதென்றும், 5. தேசிய இலக்கியம், கலை, இசைத்துறைகளில் அவற்றின் மீட்பிற்கு வேண்டிய தன்னாக்கப்படைப்பினைத் தோற்றுவிக்கும் எவருக்கும், பரிசு, பதக்கம் அன்றேல் யாதுமொரு ஊக்குவிப்பினை காங்கிரஸ் கொடுக்கவேண்டுமென்றும், 6. அ. விஞ்ஞானம் ஆ. புனைகதை இ. சுமூகவரலாறு வாழ்க்கை ஆகிய துறைகளில் தேசிய இலக்கியத்தை அபிவிருத்தி செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை உண்டாக்குவதற்கு செயற்குழுவினால் ஐந்து அங்கத்தினரைக் கொண்ட குழுவை நியமிப்பதென்றும், 7. தென்னிலங்கையில் தமிழும், வட இலங்கையில் சிங்களமும் சிங்களமும் படிப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக காங்கிரஸ் எடுக்க வேண்டும் என்றும், 8. 1925 ஏப்பிரலில் நடத்தப்படவுள்ள காங்கிரஸ் அமர்வுடன் எல்லா இனங்களினதும் (பிரதானமாக சிங்களவர்களினதும் தமிழர்களினதும் ) கொள்கைகளையும் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைப்பதற்கு வேண்டிய நடவடிக்ககைகளை எடுக்க வேண்டுமென இந்தக் காங்கிரசின் செயற்குழுவைக் கேட்டுக் கொள்வதென்றும், 9. இந்தக் காங்கிரஸ் இயக்கத்தின் நோக்குகளை வெகுசனத்திற்கு விளக்கவும், மது ஒழிப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளினை அவர்களுக்குப் புகட்டவும் வேண்டிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதற்கென பிரசுரக்குழுவொன்றைத் தோற்றுவிப்பதென்றும், 10. காங்கிரஸ் அங்கத்துவர்கள் இயன்றளவு உள்ளுர் வர்க்கத்தையும், கைத்தொழில்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும், அவர்கள் குறிப்பாக அந்நிய சவர்க்காரம், வாசனைத்திரவியங்கள், பூசல் மா, மது, சிகரெட் ஆகியவற்றை வாங்காது தவிர்க்க வேண்டுமென்றும், இக்காங்கிரஸ் தீர்மானிக்கிறது” எனப் பிரகடனப்படுத்திற்று. சைவமும் தமிழும், கிறிஸ்தவமும் தமிழும், சமூக ஒதுக்கற்பாடு, பாரம்பரிய மரபுப்பேணுகை என இது வரை பேசப்பட்டு வந்த அரங்கில் இது முற்றிலும் புதுமைiயான பார்வையையும் கண்ணோட்டத்தையும் முன்வைத்தது. காங்கிரஸ் மொழியும், இலக்கியமும், மொழி வளர்ச்சியும் பேசப்பட்டு வந்த முறைமையானது இதற்கு முன்னர் மொழி, இலக்கியம் பற்றி நிலவிய கண்ணோட்டங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மதங்களைக் கடந்த ஒரு மனிதாயத நோக்கில் கலை இலக்கியங்கள் பேசப்படத் தொடங்குகின்றன. பாரமபரியப்பண்பாட்டை மதநோக்குக்குள் வரையறை செய்துவிடாது தேசிய பண்பாடு என்ற பரிமாணத்தில் நோக்கும் மாற்றம் மிக முக்கியமானதொன்றாகும். பாரம்பரியத்தின் மேன்மையை தேசிய கண்ணோட்டத்தில் வலியுறுத்தும் அதே வேளையில் பாரம்பரியச் சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறையை - சாதி வேறுபாட்டை - அது முற்றாக நிராகரித்தது. மேனாட்டாட்சி எதிர்ப்பு இந்தக் கண்ணோட்டத்தில் முக்கிய இடத்தை வகித்தது. இதன் காரணமாக சனநாயகம், விடுதலை, சுதந்திரம் என்ற கோட்பாடுகள் முன்னிலை எய்தத் தொடங்குகின்றன. மாணவர் காங்கிரஸ் முன்வைத்த சுதந்திரம் சனநாயக அடிப்படையில் இயங்கும் ஒன்றாகும். பாரம்பரிய அடுக்கமைவுச் சமுதாயத்தின் பாகுபாட்டுக் கொள்கைக்குப் பழகிக் போயிருந்தவர்களுக்கு இந்தக் கோரிக்ககைகள் சமூகத்தின் அடித்தளத்தையே மாற்றுவனவாகக் காணப்பட்டது. இந்தத் தாராண்மைவாத தளமற்ற அணுகுமுறையானது ஆங்கிலக்கல்வி வழியாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட உந்துதல் வழியாக வந்தனவாகவும், அத்துடன் 1920 முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உந்துசக்தியாகவிருந்த காந்தீயத்தினடியாகவும் வந்தது. இந்தப் புதிய கண்ணோட்டத்தின் இலக்கியநிலைப் பிரதிபலிப்பாக ‘ஈழகேசரி’ (1930) பத்திரிகையும் பின்னர் 1942 இல் தோன்றிய ‘மறுமலர்ச்சி’ இலக்கிய இயக்கமும் அமைந்தன. இந்த உந்துதல் காரணமாகவே வட இலங்கைச் சங்கீதசபை(1931இல்) தோன்றுகின்றது. தாகூரின் வருகை கலை அபிமானிகளுக்கு புத்து}க்கத்தை அளித்தது. இச்சந்தர்ப்பத்தில் பாரம்பரிய சமூக அமைப்பிலும், நாவலரியக்கக் கண்ணோட்டத்திலும் கலைகள் உயரிய இடத்தைப் பெறுவனவாக அமையவில்லை. எனினும் உண்மையைக் குறிப்பிடவேண்டும். இது பற்றிய விபரங்களை காரைசுந்தரம்பிள்ளையின் இசைநாடக வரலாற்றுக்கு (1986) எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். கலை இலக்கியம் பற்றிய இந்தக் கண்னோட்டம் எத்தகைய பயனுள்ள சாதனைகளுக்கு காரணமாயிருந்தது என்பதற்கு ஐசாக் தம்பையாவினதும், அவரது மனைவி மங்களநாயகி தம்பையாவினதும் புலமைத்துவ பங்களிப்புக்கள் சான்றளிக்கின்றன. கிறிஸ்தவரான ஐசாக் தம்பையா தாயுமானவர் பாடல்கள் ஐரோப்பிய சிந்தனைமரபில் வைத்து நோக்கும் பொழுது மிக நுண்ணிதானவை என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். ஆவர் அந்நு}லுக்கு (1926) எழுதியுள்ள முன்னுரையில் தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பியல்புகளை பெருமித உணர்வுடன் எடுத்துக்கூறுகின்றார். ஐரோப்பிய சிந்தனைதரபு வழியாக வந்த புதிய நோக்குகள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் விளங்கவும் புது முறையில் வியாக்கியானிக்கவும் உதவும் முறையினை இந்நு}லிலே காணலாம். மங்களநாயகி தம்பையாவே “நொறுங்குண்ட இருதயம்” என்ற நாவலை எழுதியவர். இப்புதிய கண்ணோட்டம் சமூகச் சிந்தனையில் ஏற்படுத்திய விஸ்தரிப்பினை இந்த ஆக்கங்களில் காணலாம். 1920 களிலிருந்து நவீன தமிழிலக்கியம் ஈழத்துத்தமிழ்ப்பாரம்பரியத்துடன் இரண்டற இணைகின்ற தன்மையை அவதானித்துக் கொள்ளல் வேண்டும். ஆங்கிலத்தின் தாக்கம் இரண்டறச்சுவறத் தொடங்கியமையால் இப்பண்பு காணப்படுகின்றதெனலாம். வந்த மேனாட்டுப் பண்பாட்டுப் பண்புகளை தளமாகக் கொண்டு எமது சமூகத்தைப் பார்க்கத் தொடங்கும் செல்நெறிதொடங்குகின்றதெனலாம். இது அரசியலில் மாத்திரமல்லாமல் சமூக பண்பாட்டுத் துறைகளிலும் காணப்படுவதையே இப்பண்பு காட்டுகின்றது. இதற்கான உதாரணங்களாகவே இலங்கையர்கோன், வைத்திலிங்கத்தின் சிறுகதையாக்கங்களைக் கருதவேண்டும். மேனாட்டுத்தாக்கங்களை உள்வாங்கி மேற்கிளம்பிய இன்னொருதுறை நாடகமாகும். கலையரசு சொர்ணலிங்கம் இத்துறையில் முன்னணியில் நிற்கின்றார். இப்பண்பின் வெளிப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது யாழ்ப்பாணத்தின் கலை, இலக்கிய வரலாற்றில் அதிக முக்கியத்துவமளிக்காதுள்ள ஒருவர் கலைப் புலவர் க.நாகரத்தினம் - பற்றிக் குறிப்பிடல் அவசியமாகும். தூகூர் வழிவந்த இந்தியக்கலை மறுமலர்ச்சியின் யாழ்ப்பாணக் கலை வெளிப்பாடு கலைப்புலவரதும் அவரது மனைவியாரினதும் கலைத்தொழிற்பாடுகளில் தெரிய வருகின்றதெனலாம். ஆறுமுகநாவலரால் கண்டிக்கப் பெற்ற இசை, நடனக் கலைப்பயில்வினை யாழ்ப்பாணத்து மத்தியதரவர்க்கத்தினரிடையே கொணர்ந்த பெருமை இக்குடும்பத்தைச்சாரும். சுhஸ்திhPய இசைப்பயில்வினை இவர்கள் ஊக்குவித்தார்கள். ஆறுமுகநாவலரால் கண்டிக்கப்பெற்ற இசை, நடனக் கலைப்பயில்வினை யாழ்ப்பாணத்து மத்தியதர வர்க்கத்தினரிடையே கொணர்ந்த பெருமை இக்குடும்பத்தைச்சாரும். சாஸ்திhPய இசைப்பயில்வினை இவர்கள் ஊக்குவித்தார்கள். இவர்களின் சமகாலத்தவர்களாக விளங்கிய கனகசபை போன்றோரே யாழ்ப்பாணத்தின் சமய சார்பற்ற ஓவிய மரபை வளர்ப்பதில் முன்நின்றனர். நாவலர் பாரம்பரிய வழியே நின்ற யாழ்ப்பாணத்துக்கலை இலக்கியவரலாற்றினை நோக்கும் பொழுது வலியுறுத்தப்படாத இந்தப் புலமைப் பாரம்பரியத்திற்குரிய இடத்தை வழங்குதல் அவசியமாகும். மேற்குறிக்கப்பெற்ற இவர்கள் தாம் வாழ்ந்த காலத்தின் சமூகப்பண்பாட்டு விடயங்களில் முக்கிய பங்கெடுத்தனர். 1920 - 30 களிற் காணப்படும் இன்னொரு முக்கிய பண்பு இக்காலத்தில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே யாழ்ப்பாண வாழ்க்கையின் வளத்தைச் சித்தரிக்கும் ஆற்றலுடையவர்கள் தோன்றியமையாகும். அழகு சுப்பிரமணியம், தம்பிமுத்து ஆகியோர் இதற்கான உதாரணங்களாவர். தம்பிமுத்துக்கவிஞர், அழகு சுப்பிரமணியத்தின் எழுத்துத்திறன் காரணமாக யாழ்ப்பாண வாழ்க்கையின் செழுமை ஆங்கில இலக்கியத்தின் ஆற்றலுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேனாட்டுச் சூழலில் வாழ்ந்தே, இந்த இலக்கியச் செயற்பாட்டினில் ஈடுபட்டனர் என்பதும் உண்மையாகும். சைவப்பாரம்பரியத்தில் வந்தோரும் தங்கள் சிந்தனைகளை ஆங்கிலத்தில் பொறிக்கும் ஒரு மரபு இருந்தது என்பதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். இந்தச் செல்நெறியின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் சேர் பொன்னம்பலம் இராமநாதனும், அவரது சகோதரர் சேர் பொன்னம்பலம் அருணாசலமுமாவார்கள். மாணவர் காங்கிரஸின் சனநாயக நோக்கு சாதி முறைமை பற்றிய அவர்களது கண்ணோட்டத்தில் நன்கு புலனாகிறது. இந்த நடவடிக்கையுடன் தாழ்த்தப்பட்டோருக்கு விதிமுறையான கல்வி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது. கட்டாயக்கல்விச் சட்டம் ஆகியவற்றினை இணைந்து நோக்கும் பொழுது இது ஒரு முக்கிய செயற்பாடாகும். இவர்களுக்கான ஆங்கிலக்கல்வி பெரும்பாலும் கிறிஸ்தவக்கல்வி நிலையங்கள் மூலமாகவே கிடைக்கின்றது. சமாசன இயக்கம் மூலம் கல்விவசதி தமிழ்ப்பாடசாலைகளில் கிட்டிற்று. மாணவர் காங்கிரஸை இளைஞர் காங்கிரஸ் என 1931 இல் பெயர் மாற்றம் செய்துகொண்டனர். யாழ்ப்பாணச் சமூகச்சிந்தனையின் வரலாற்றில் இவ்வியக்கம் பெருத்தமாற்றங்களை ஏற்படுத்தியது. டொனமூர் ஆணைக்குழு ப10ரணசுய ராட்சியத்தை வழங்கவில்லையென்பதால் அதற்கான தேர்தலையே பகிஸ்கரிக்கும் முயற்சியில் அது ஈடுபட்டது. அதன் பின்னர் செல்வாக்கு குன்றத் தொடங்கிற்று. எழுத்துநிலையில் பார்க்கும் பொழுது மாணவர் காங்கிரஸ் இயக்கம் திடீரென பரிய மாற்றங்களைக் கொண்டுவரவில்லை என்பது உண்மையே. சுமூக அடுக்கமைவு காரணமாக எழுத்தறிவு வரையறுகச்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் அந்த அறிவுமுறையை மாற்றுவதற்கான முயற்சிகளை முன்வைத்ததே இவ்வியக்கத்தின் முக்கியமான பணியாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசிய பண்பாடுகளில் மறுமலர்ச்சி, சனநாயக மயவாக்கம் ஆகிய துறைகளில் இவ்வியக்கம் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது. இவ்வாறு கூறுகின்றபொழுது மாணவர் இளைஞர் காங்கிரஸ் யாழ்ப்பாணத் தமிழர்களிடையே ப10ரணமான தளமாற்றத்தினை ஏற்படுத்திவிட்டதாக கூறிவிட முடியாது. இது அரசியல் துறையில் அது பெற்ற தோல்வியால் நன்கு தெரியவருகின்றது. மேலும் இந்த இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தின் அடிப்படைப் பொருளாதார அமைப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியவில்லை. ஆயினும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் பாரம் பரிய நவீனத்துவ நோக்குகள் இலங்கைத் தமிழரிடையே சனநாயக அடிப்படையில் பரவுவதற்கான ஒரு வாயிலாக அமைந்தன. இதன் செயற்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு கருத்து நிலைகள் நிலவத்தொடங்கின. ஓன்று, நாவலர் இயக்கம் வழிவந்த பாரம்பரியப்பேணுகை. அதாவது மேலிருந்து கீழ்வரும் புதிய நடவடிக்கைகளை சமூகத்தின் அடிப்படை அமைப்பு மாறாத முறையில் ஏற்றுக்கொள்ளல். இது பெரும்பாலும் சமூக - மத விடயங்களில் காணப்பட்டது. இன்னொன்று தாராண்மைவாத நோக்காகும். இது பிரதானமாக அரசியலில் தொழிற்பட்டதாகும். இத்தாராண்மைவாதம் சிலரால் சமூக - மத மட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. சிலர் அவ்வாறு சொல்லவில்லை. முற்றும் முழுதாக நோக்கும் பொழுது சமூகத்தில் நெகிழ்ச்சி ஏற்பட்டதெனலாம். இளைஞர் காங்கிரஸின் செல்வாக்கு ஏறத்தாழ 1922 முதல் 1922 முதுல் 1938 வரை நீண்டதென சீலர் கதிர்காமர் குறிப்பிடுவர். இளைஞர் காங்கிரஸ் தோற்றுவித்த தளமாற்ற நோக்கு அதில் ஈடுபட்டிருந்தோர் பலரை காங்கிரஸின் ஒடுக்குதிசையின் பின்னர் மாக்ஸியத்தை நோக்கி நகரச்செய்தது. (சிலன் கதிர்காமர் 74, 99, 102) “By the mid thisties the youth congress members began to go their several ways. Some joined the left mevoment. Among there were P.Nagalingam, Tharmakulasingam, whose premature death robber the Lanka Sama Samaya Party of an able leader in the North, S.Sellamuthu and K.Satchithanandam, T.Duraisingam and others were involve with the Suriya Mal Movement in the South and later became consistent supporters of the communist party. Handy Perinbanayagam himself admitted later that his pohheal sympathies were “leftish and that by and large without special connections, be sympathized with the LSSP” (Silan Kathirkamar p 102) யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் வலுக்குன்றத் தொடங்கிய கட்டத்தில் இலங்கை மட்டத்தில் மார்க்சீயச் சிந்தனை மேலெழும்பத்தொடங்குகின்றது. சிங்களப் பிரதேசங்களிலும் மார்க்சீயச் சிந்தனை இளைஞர் இயக்கமாகவே தொடங்குகின்றது. 1935 இல் லங்கா சமசமாஜக் கட்சி தொடக்கம் பெறுகின்றது. இலங்கையில் மார்க்சீய வளர்ச்சியால் “சூரியமல் இயக்கம்” (1939) முக்கியமான ஒரு கட்டமாகும். சூரியமல் இயக்கம் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் மார்க்சீயம் ஆரம்பத்தில் இரண்டு நிலைகளிற் தொழிற்பட்டதெனலாம். முதலாவதாக அது ஒடுக்கு முறைக்கெதிரான ஒரு சக்தியாகத் தொழிற்பட்டமையாகும். ஏற்கெனவே தொழிற்பட்டுவந்த ஒடுக்கப்பட்டோhர் ஊழியர் சங்கத்துடன் (னுநிசநளளநன ஊடயளள ளுநசஎiஉந டநயபரந) இதன் முதன்மையாளராக ஜோன்பவுல், ஜேக்ஸ் ஆகியோர் தொழிற்பட்டனர்) இயைபினை ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாவதாக அக்காலத்து இலங்கை மட்ட முக்கிய மார்க்சீயச் செயற்பாடு ஒன்றுக்கிணங்க தொழிற்சங்க நடவடிக்கையிலீடுபட்டமையாகும். பஸ் தொழிலாளர் இயக்கம், சுருட்டுத் தொழிலாளர் இயக்கம் என முக்கிய தொழிற்சங்க நிறுவனங்கள் வளர்ந்தன. நிறுவன hPதியாக நோக்கும் பொழுது முதலில் தோற்றுவிக்கப்பட்ட மார்க்ஸிட்கட்சி லங்கா சமசமாஜக்கட்சியாகும். (1935) பின்னர் இரஷ்ய நாட்டில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக (டிறொஸ்கி - ஸ்டாலின் பிணக்கு, ஸ்டாலினின் மேலாண்மை ஆகியன) பிளவுகள் ஏற்பட்ட முதலில் (1941) ஐக்கிய சோஷலிசக்கட்சி உருவானது. அது 1943 ய10லையில் பொதுவுடமைக்கட்சியாக நிறுவப்பட்டது. ஆரம்பகாலத்தில் லங்கா சமசமாஜக்கட்சியிலும் பொதுவுடமைக்கட்சியிலும் தமிழர்கள் முக்கிய இடம் வகித்தனர். தர்மகுலசிங்கம் உத்தியோகப10ர்வ அங்கத்தவராக இருக்கவில்லையெனினும் சமசமாஜக்கட்சி ஆதரவாளராகவே விளங்கினார். கம்ய10னிஸ்ட் கட்சியில் பொன்.கந்தையா, அ.வைத்தியலிங்கம் ஆகியோர் முக்கிய இடம்பெற்றனர். யாழ்ப்பாண மட்டத்தில் மார்க்சீய இயக்கங்களில் ஈடுபட்டோர் இருவகைப்படுவர். முதலாவது குழுவினர்,தமது கல்வி காரணமாக மார்க்சீயம் சுட்டும் சமத்துவம், சுரண்டலெதிர்ப்பு ஆகியவற்றில் புலமைத்துவ ஈடுபாடு கொண்டவர்களாக இவர்களிற் பெரும்பாலும் உயர் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருந்தமை வரலாற்றின் தவிர்க்க முடியாத நியதியாகும். ஆரம்ப காலத்தில் இந்த புலமைத்துவ நிலைப்பாட்டுடன் கட்சி அங்கத்துவம் அன்றேல் கட்சிச் சார்பும் தொழிற்பட்டது. இரண்டாம் குழுவினர் ஒடுக்குமுறைக்கு ஆளான சமூக மட்டங்களைச் சேர்ந்தவாக்ளாவர். இவர்கள் தமது சமூக எதிர்ப்புணர்வு காரணமாக சேர்ந்து, பின்னர் கட்சி நிலைப்பட்ட இலக்கியங்களையும் பிற எழுத்துக்களையும் வாசித்தமையால் புலமைத்துவப் பரிச்சயமுடையோராகிக் கொண்டவர்களாவர். இத்தகைய அணியினரைக் கட்டி வளர்ப்பதில் சமசமாஜக் கட்சியிலும் பார்க்க கம்யூனிஸ்ட் கட்சி அதிக ஆதரவைப் பெற்றிருந்ததெனலாம். யாழ்ப்பாணக் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இந்த இரண்டாவது குழுவினர் 1948 அளவில் இலக்கிய ஆர்வமுடையோர் வளர்ந்திருந்தனர்.டொமினிக் ஜீவா, டானியல் முதலியோர் இவ்வாறு வளர்ந்தவர்களே. இவர்கள் கார்த்திகேயனால் வழிப்படுத்தப்பட்டவர்கள். இளைஞர் காங்கிரஸ் வழியாக வந்த ஊக்கத்தினால் வளர்ந்த மறுமலர்ச்சி இயக்கத்தில் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் ( அ.ந.கந்தசாமி) இந்த இலக்கிய இயக்கத்தில் முக்கிய இடம் பெறத் தொடங்கினர். இந்த இடதுசாரி இலக்கியக் களமாக 1954 முதல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திகழ்ந்தது. கொழும்பை மையமாகக் கொண்டியங்கிய இது யாழ்ப்பாணத்தில் ஒரு வன்மையான கிளைகளைக் கொண்டிருந்தது. மார்க்சீய இலக்கியச் சிந்தனைப் பரம்பலில் இந்நிறுவனத்தின் பணி கணிசமானதாகும். புpன்னர் 1960களில் பொதுவுடைமைக்கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பு என இருகிளைப்படப் பிரிந்த பொழுதும் எழுத்தாளர் மட்டத்தில் இந்தச் சங்கத்தின் தொழிற்பாடு காரணமாக ஒற்றுமை பேணப்பட்டது. இலங்கைத் தமிழ் எழுத்தாளரிடையே முற்போக்கு இலக்கியக் கோட்பாடு தொழிற்பட்டமை காரணமாக இருநிலைப்பட்ட எண்ணக்கருக்கள் இலக்கியத்தில் வளர்நதெடுக்கப்படலாயின. ஓன்று தேசிய இலக்கியக் கோட்பாடு. அக்காலத்து மார்க்சீயக் கட்சிகள் கொண்டிருந்த அரசியல் கோட்பாட்டிற்கமைய இது இலங்கை மட்டத் தேசியத்தையே வற்புறுத்தியது. ஆயினும் இலங்கைத் தமிழ் இலக்கியம் இந்திய வணிக இலக்கியத்தின் வழிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும், முதல் நிலைப்படுத்தி பேச வேண்டும் என்பதற்காகவும் ஈழத்தின் தமிழ் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட ஓர் ஈழத்தமிழ் இலக்கியத்திற்காகப் போராடியது. இலக்கிய நிலையில் முன்வைக்கப்பட்ட ஈழத்தமிழ் இலக்கியக் கோட்பாடு 1983 இன் பின்னர் தமிழ்த் தேசிய வளர்ச்சி பற்றிப் பேசப்பட்ட பொழுது, அதன் வளர்ச்சிக்கான பசளையாக அமைந்தது. மற்றயது யதார்த்தவாதம் என்னும் கோட்பாடாகும். இந்த அணுகுமுறை காரணமாக எழுத்தாளர்கள் சமூக ஜீவிகள் என்ற வகையில் தம்மைப் பாதிக்கும் சமூகப் பிரச்சனைகளை இலக்கியப் பொருளாக்கினர். இவ்விலக்கியச் செல்நெறி பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திற்று. சலுகைகள் மறுக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்சனைகள் பற்றிய முதல் நிலை அனுபவங்களை எழுதத் தொடங்கியபோது, சமத்துவக் கருத்துநிலைகளை வற்புறுத்திய பொழுதும் ஈழத்தில் முதற் தடவையாக பாரம்பரிய மரபுகள் பற்றிய தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கத் தொடங்கிற்று. அது ஒரு நிலையில் நவீன எழுத்தாளர்களையும்,நவீன எழுத்து வடிவங்களையுமே நிராகரித்தது. இதனால் மரபு பற்றிய ஒரு முக்கிய இலக்கிய விவாதம் 1960களில் நடைபெற்றது. இந்த மார்க்சீய இலக்கியத்தின் முக்கிய அங்கமாக விளங்கியது அது தோற்றுவித்த விமரிசனமாகும். இலக்கியத்தின் சமூக அடிப்படைகளை வற்புறுத்திய அந்த விமர்சன முறைமை புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களை நியாயப்படுத்தியது மாத்திரமல்லாமல் நவீன காலத்திற்கு முற்பட்ட இலக்கியங்களையும் மார்க்சீய நோக்குநிலை நின்று விமர்சிக்கத் தொடங்கிற்று. இது தமிழிலக்கிய ஆய்வுச் செல்நெறியில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திற்று. அது மாத்திரமல்லாது இந்த விமர்சன முறைமை தமிழகத்திலும் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்தது. இந்த விமரிசன மரபுடன் கைலாசபதியின் பெயரும் எனது பெயரும் இணைக்கப்படுதல் வழக்கு. ஆயினும் இக்கால கட்டத்திற் பயின்ற எல்லா எழுத்தாளர்களும் இலக்கியத்தின் விமர்சன அமிசங்கள் பற்றிய தெளிவுடனேயே எழுதினர். இக்கால இலக்கிய வளர்ச்சியில் ஆக்கமும் விமர்சனமும் இணைந்தே சென்றன. இதன் காரணமாக ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் பலர் விமர்சனங்களையும் எழுதினர். ( முருகையன், இராசதுரை, இளங்கீரன் முதலியோர்) இவ்வாறு பெருநிலைப்பட வளர்ந்த மார்க்சீய இலக்கியம் பற்றிய இரண்டு முக்கியமான சமகால விமரிசனங்கள் இருந்தன. முதலாவது இது அன்று நிலவிய தமிழ்த் தேசியத்தை வகுப்பு வாதமாகக் கருதியமையாகும். இது இலக்கிய அணி சார்ந்திருந்த அரசியற் கட்சிகளின் நோக்குக் காரணமாக ஏற்பட்ட ஒரு விளைவாகும். அக்காலத்தைய தமிழ்த் தேசியம் சமூகப் பி;ற்போக்குவாதத்துடன் இணைந்து நின்றமையும் இதற்கு ஒரு காரணமாகும். இரண்டாவது இந்த இலக்கியக் கண்ணோட்டம் ‘ மார்கசீயத்திற்கு அப்பாலான’ நிலைப்பட்ட விழுமியங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவில்லை என்பதாகும். இவ்வாதத்தை மு.தளையசிங்கம் முன்வைத்தார். இவருடைய வாதம் இலக்கியம் ஆன்மீக சனநாயகத்திற்கான( ளிசைவைரயட னநஅழஉசயஉல) ஒரு களமாக அமைய வேண்டும் என்பதாகும். இந்த இரண்டு சமூக முக்கியத்துவம் உடைய மார்க்சீய எதிர்ப்பு வாதங்களைத்தவிர நவீனத்துவத்தின் இயல்பான ஒரு அங்கமாக நவ வேட்கை வாதத்தின் எதிர்ப்புக் குரலும் காணப்பட்டது. ஆனால் அது சமூக முக்கியத்துவம் உடையது என்று கூறிவிடமுடியாது. ஆனால் இந்த விமர்சன முறைகள் யாவுமே நவீன இலக்கியத்தையே இயல்பான இலக்கிய வெளிப்பாடமாகக் கொண்டன. முற்போக்கு இலக்கிய ஆக்கவீச்சு (1970) தொடக்கத்துடன் ஒடுங்குகின்றதெனக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து இரு காரணிகள் முக்கிமாகின்றன. ஓன்று, 1970கள் முதல் தொடங்குகின்ற சிங்கள் மேலாண்மைவாதப் போக்கு. 1930கள் முதலே சிங்கள மேலாண்மைவாதம் முக்கிய ஒரு சக்தியாக மேற்கிளம்பிக் கொண்டு வந்ததெனினும் 1956 உடனேயே அது திட்டவட்டமான ஒரு அரசியல் செல்நெறியாயிற்று. தேசிய மறுமலர்ச்சி பற்றிய தெளிவின்மை காரணமாக மார்க்சீஸ்ட் கட்சிகளிலும் சிங்களத் தேசியத்தை இலங்கைத் தேசியமாக மயங்கிக் கொண்டன. சிங்கள மேலாண்மை வாதம் வெகுவிரைவில் அரச அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கொடுக்கத் தொடங்கியது (பொலிஸ், இராணுவ அட்டூழியங்கள்). ஆதனை எதிர்த்துத் தமிழ் இளைஞர் தீவரவாதம் மேற்கிளம்பத் தொடங்கிற்று. இத்தீவிரவாதம் தமிழ்த் தேசியத்தையம் மார்க்சீயத்தையும் இணைத்துக் கொண்டது. ஆத்துடன் இது தன்னைத்தான் நீக்கக் கோட்பாட்டுடன் (டுiடிநசயவழைn) இணைத்துக் கொண்டது. தளைநீக்கம் என்பது அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகும். 1970களில் மேலோங்கித் தொடங்கிய இந்தத் தீவிரவாதத்தில் 1974இல் நிறுவப் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இளைஞர் இயக்கங்கள் ஒவ்வொன்றிலும் பல்கலைக்கழக மாணவாகள் இடம் பெற்றிருந்தமை மாத்திரமல்லாமல், போராட்டத்தின் சமூக பொருளாதார அமசங்களிலும் பல்கலைக்கழகம் தொடர்புபட்டது. இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் இதுவரை வந்தவற்றைக் கொண்டு நோக்கும்பொழுது இந்தக் கோட்பாடு நிலைப்பாடுகள் எடுத்துக் கூறப்படுவதிலும் பார்க்க, அரச நிலைப்பாடு காரணமாக ஏற்பட்ட அடக்குமுறையின் கோரமும், அந்த அடக்கு முறை காரணமாக மேற்கிளம்பும் மானிட அவலங்களுமே (ர்ரஅயn வசயபநனல) முக்கிய இடம் பெறத் தொடங்கின.கவிதையில்இது “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. புனைகதைத் துறையுள் சிறுகதையில் இது நன்கு தெரியவந்துள்ளது. யோகநாதனின் “இரவல் தாய்நாடு”, “நேற்றிருந்தோம் அந்த வீட்டிலே” முதலிய நாவல்களிலும் இது நன்கு தெரிய வந்துள்ளது. இவ்வாறு வந்து சேர்ந்து வரலாற்று முக்கியத்துவம் உடையனவாகக் காணப்படினும் இவை யாவும் எந்த அளவிற்கு பாரம்பரியச் சமூக அமைப்பினை மாற்றியுள்ளன என்பது முக்கியமான வினாவாகும். யுhழ்ப்பாணத்தின் உற்பத்தி முறைமைகளை நோக்கும்போது, அடிப்படை மாற்றமின்மை தெரிவரும். புதிய விவசாய முறைகள் (பயிர் மாற்றம், தொழில்நுட்ப பயன்பாடு) பாரம்பரிய அமைப்புடன் ஒன்றிணைக்கப் பெற்றுள்ளனவே தவிர இவை காரணமாக அடிப்படை உற்பத்தி உறவோ, உறவுகளோ ஏற்படுத்தப்படவில்லை.இதன் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் மேலோட்டமானவையாகவுள்ளனவே தவிர அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக மேனிலைப்பட்டோரும் தமது அந்தஸ்தினை நிலைநிறுவுவதற்குப் பாரம்பரியத்தையும் பாரம்பரிய முறைகளையுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த அமிசம் காரணமாக யாழ்ப்பாணத்தின் சமூகத்தளம் மாற்றப்படாதிருபதை அவதானிக்கலாம்.இதன் காரணமாக ஆமற்கூறிய கருத்தோட்டங்கள் செல்வாக்குச்செலுத்தி வருகின்ற அதே வேளையில் சமூகத்தில் சமாந்தரமான முறையில் பாரம்பரியமும், மரபுபேணுகையம் முக்கிய செயற்பாடாகத் தொழிற்படுவதைக் காணலாம். முத ஒழுகலாறுகள் முதல் புலமைத்துவ நெறிகள் வரை இந்தச் சமாந்தரத் தன்மை காணப்படுகின்றது. இது காரணமாக ஒரு சுவாரசியப் போக்கு ஒன்றுஉருவாவது வழக்கம். வருகின்ற புதுமைகள் தம்மைப் பழமையுடன் இணைத்து நிலைநிறுத்த விரும்பும் பண்பும், அதே வேளையில் பழைமையும் புதுமையின் தன்மைகளைக் காட்டிக் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்ற ஒரு தன்மையுள்ளது. முதலாவது போக்கின் விளைவாக நாலரைத் தேசிய வீரராகக் காட்டிய ஒரு செயற்பாடு நிகழ, இரண்டாவது போக்கின் நிரந்தரத் தன்மை கரணமாக நாவலரின் கோடபாடுகள் இன்று பண்பாட்டுப்பேணுகையுடன் இணைந்து பேசப்படுகின்றது. இந்த இயல்பு காரணமாக, நாம் ஆராய்ந்த எல்லாக் காலப்பகுதியிலும் பாரம்பரிழய இலக்கிய மரபு வன்மையுடன் பேணப்பட்டு வருவதைக் காணலாம். கோயில் சார்ந்த இலக்கியங்கள் இந்தத் பாரம்பரியத் தொடர்ச்சியினை எடுத்துக் காட்டுவனவாக அமைகின்றன. 1984க்குப் பின் ஏற்பட்டுள்ள சனவேற்ற மாற்றம், வாழ்க்கைக் குலைவு ஆகியன புதிய ஒரு சமூகப்போக்குக்கு வழி சமைப்பனவாக அமையும் சாத்தியப்பாடுகள் உள்ளன. ஆனால் அது நிகழ நாட்கள் செல்லும். அதுவரை ஒரே கிராமத்திலிருந்தே தசைச் சிலேடை வெண்பாவும், கோசலையும் தோன்றுகின்ற நிகழ்வினை நாம் கண்டு கொண்டேயிருப்போம்.