கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாவலர்

Page 1


Page 2

நாவலர்
சுருக்க வரலாறு
வரதர்
வரதர் வெளியீடு

Page 3
நாவலர்
திருத்திய முதலாம் பதிப்பு: டிசம்பர் 1979 மறுபதிப்பு: ജങ്ങrഖfി 1980
ஆக்கம்: o en Tisri”
மேலட்டை ஓவியம்: ரமணி"
பதிப்புரிமை வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம். அச்சுப்பதிவு: ஆனந்தா அச்சகம், யாழ்ப்பாணம் ගෘහ්‍රිකා ගුණuff 2-09

இலக்கிய கலாநிதி, பண்டிதமணி, சி. கணபதிப்பிள்ளே அவர்கள் மனமுவந்து அருளியது.
முனனுரை
குழந்தைப் பருவத்திலிருந்து, அறிவை மெல்ல மெல்ல வளர்க்கும் முறையில், கருவி நூல்களையும், சமய நூல் களையும் படிக்கிரமத்தில் உபகரித்தவர்கள் நாவலர் அவர்கள்.
இலக்கண வினவிடை, சைவ வினவிடை, பாலபாடம் முதற்புத்தகம் அரிவரியிலிருந்து தொடங்குகின்றன.
ஒளவைப்பாட்டியிலிருந்து, நீதி நூல்கள் தொடங்கு கின்றன. 本 率
குழந்தைகள் மத்தியில், தாமுமொரு குழந்தையாய், வின், தாயார்ய்த் தந்தையாய்க் குருவாய்த் தெய்வமாய், நம்மை வளர்த்தெடுத்த பெருமான், நாவலர் பெருமான். குழந்தைகள் மத்தியில் குழந்தையாய், அவர்களுக்கு ஏற்றவை செய்துவைத்த, நாவலர் பெருமானின் சரித் திரத்தை, குழந்தைகள் பருகும் முறையிற் பருக, எவ்வாறு பக்குவப்படுத்திக் கொடுக்கவேண்டுமென்று,
வெகுகாலத்துக்கு முன்னமே எண்ணிய ஒரே ஒருவர். * வரதர் " 事 冰
இப்பொழுதைய தூண்டுதல், அக்காலத்திலிருந் திருக்குமாயின்,
சிறுவர் சிறுமியரின் பருவங்களைப் பல கூறு செய்து பருவத்துக்கு ஒருவராக, எத்தனையோ நாவலர் உதய மாயிருப்பர். 冰 冰
நாவலர் நூற்ருண்டுச் சபையோர்கள், திருவாளர் "வரதர் அவர்களைப் பயன் செய்து நாவலர் சரித்திரம் வர வர வளர்ந்து, வளமுறச் செய்வார்களாக,
கலாசாலை வீதி, திருநெல்வேலி. 10-11-79

Page 4
ஆசிரியர் குறிப்பு
எனது பாடசாலை மாணவப் பருவத்திலே நாவலர் கோன்" என்ற சிறு நூலை எழுதி வெளியிட்டேன். அதைச் சற்றே திருத்தி 1949 ல் "நாவலர்" என்ற பெயரில் மறுபிரசுரம் செய்தேன்,
இப்போது வெளிவந்திருக்கும் இந்த "நாவலர்' நூலை முற் றிலும் புதிதாகவே எழுதியிருக்கிறேன். நாவலருடைய வர லாற்றை மிகச் சுருக்கமாக அறிய விரும்புகிறவர்களுக்கு இது உதவும்.
நான் இதை எழுதுவதற்கு மூலகாரணர்: இலக்கியகலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்.இத்தகைய ஒரு காரணகர்த்தர் கிடைத்தது நான் பெற்ற பாக்கியம், அவர்களே மனமுவந்து முன்னுரையும் அருளியது பெரும்
பாக்கியம்.
இந்நூலை எழுதும்படி என்னைத்தூண்டியவர்கள் பூரீலறுரீ ஆறுமுகநாவலர் சபையின் சார்பில் என்னைச் சந்தித்த திரு. ம. பூரீகாந்தா அவர்களுக்கும், திரு. ச. அம்பிகை பாகன் அவர்களுமாவர். இந்நூலின் முதற் பதிப்பை வெளியிட்டவர்கள் பூரீலழறி ஆறுமுகநாவலர் சபையார். இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
யாழ்ப்பாணம், 2-I-80.

õl
5T66)T
r
{ஆறுமுகநாவலர் ‘’ என்ற பெயர் தமிழ்படித் தவர்களால் மறக்கப்பட முடியாத ஒரு பெயர்.
" ஆறுமு 3ம் ‘’ என்பது அவருடைய தகப்ப ஞர் கொடுத்த பெயர்.
** நாவலர் என்பது அவருக்குக் கிடைத்த பட்டப்பெயர்; அவருடைய சம்பாத்தியம். அவ ருடைய அறிவாற்றலையும், பேச்சுத் திறனையும் கண்டு வியந்து மகிழ்ந்த திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு நாவலர் என்ற பட்டத்தை அளித்துப் பெருமைபெற்றது, அன்றைய திருவாவடுதுறை ஆதீனம் ஒருவகையில் இன்றைய பல்கலைக்கழகம் போன்றது; அதைவிட உயர்ந்தது என்றும் சொல்லலாம்,
(ஆறுமுகத்தின் தந்தையார் கந்தர் தாயார் சிவக்ாமி, யாழ்ப்பாணத்து நல்லூரிலே பரம்பரை யாகத் தமிழ் அறிவும் செல்வாக்குமுள்ள குடும்பம். அவர்களுடைய பன்னிரண்டு பிள்ளைகளில் ஆறு பேர்கள் ஆண்கள், அவர்களுள் இளை ய வ ர் ஆறுமுகம்
கந்தர் அரசாங்க உத்தியோகம் வகித்தவர். தமிழ்படிப்பதும், நாடகம் எழுதுவதும் அவருடைய இதயத்தின் விருப்பங்கள். ஒருநாள் எழுத்தாணி

Page 5
6
யைக் கையிற்பிடித்து ஏட்டிலே ஒரு நாடகம் எழு திக்கொண்டிருந்தபோதே சடுதியாக அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.
ஆறுமுகத்திற்கு அப்போது வயசு ஒன்பது. தமது ஐந்தாவது வயசிலேயே ஏடு தொடக்கப் பெற்று, சுப்பிரமணிய உபாத்தியாயர் என்பவ ரிடத்தில் ஆறுமுகம் தமிழ் படித்துவந்தார்.
தகப்பனர் அவருடைய கடைசி நேரத்தில் எழுதிக்கொண்டிருந்த ஏட்டை ஆறுமுகம் ஒருநாள் எடுத்துப் பார்த்தார்.
பிறகு -
தகப்பணுருடைய எழுத்தாைைய எடுத்து ம6: மள என்று அந்த நாடகத்தை எழுதி முடித்து விட்டார் ஆறுமுகம், அந்த ஒன்பது வயசிலேயே !
இந்த ' வாற்பேத்தை செய்த வேலையை அவ ருடைய தமையன்மார் கண்டுகொண்டார்கள் , அவர்களுக்கு ஒருபுறம் ஆச்சரியம். மறுபுறம் பெரிய ஆனந்தம். ' இனிமேலும் இவனை இந்தச் சிறிய பள்ளிக்கூடத்தில் விட்டுக் காலத்தை வீணுக் கக்கூடாது. இவனுக்குள்ளே பெரிய "ஆள் இருக் கிருன் ‘’ என்று துணிந்த தமையன்மார், அந் தக் காலத்தில் சிறந்த ஆசிரியர்களாக விள ங் கிய வேலாயுதபிள்ளை, சரவணமுத்துப் புலவர், சேஞதிராய முதலியார் என்பவர்களிடம் அனுப் பிச் சிறப்புப் படிப்புக்கு ஒழுங்கு செய்தார்கள்.

2
(படிப்பு என்ருல் ஆறுமுகத்திற்கு கற்கண்டு. அதிகாலையில் எழுந்தால் இரவு பத்துமணிவரை படிப்புத்தான் வேலை, தமக்குக் கிடைத்த உபாத் தியாயர்களிடம் கற்கக் கூடியன யாவற்றையும் அவர் கற்ருர், தாமாகவும் அமைதியான இடங் களில் போயிருந்துகொண்டு படித்துக்கொண்டிருப் பார். இலக்கியமும் இலக்கணமும் ஆறுமுகத்திற் குள்ளே குடிபுகுந்துகொண்டன)
அந்தக் காலத்திலே யாழ்ப்பாணத்தில் கந்த புராணம் விரிந்து, மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. ஒரு அறிஞர் புராணம்படிக்க இன்னெரு அறிஞர் ' பயன் (உரை) சொல்லு வார். ஊர் மக்களெல்லாம் கூடியிருந்து ஆவலோடு கேட்டு மகிழ்வார்கள். புராணம் படிப்பவருக்கும், பயன் சொல்பவருக்கும் ஊரிலே மிகுந்த மதிப்பு உண்டு.
ஆறுமுகம் இந்தப் புராணப் படிப்பிலும் பயன் சொல்வதிலும் பங்குகொள்ளத் தொடங்கினர். வழக்கமாக எல்லோரும் சொல்லுகிற கருத்துக் களுக்கெல்லாம் மேலாகப் புதிது புதிதாகச் சிறந்த கருத்துக்களையும் ஆறுமுகம் சொல்லத் தொடங் கினர். பிழையாகப் பயன் சொல்வோரைக் கண் டால் அந்த இடத்திலேயே கண்டிக்கவும் அவர் தவறமாட்டார். அப்போதே ஆறுமுகத்தின் பெயர் மதிப்பிற்குரிய பெயர் ஆயிற்று.

Page 6
அப்போது ஆறுமுகம் பன்னிரண்டு வயசுப் பையன்,
3
தம்பி ஆறுமுகம் மிகவும் கெட்டிக்காரனுக வருவதைத் தமையன்மார் கவனித்தார்கள். தங் களைப்போலவே, தங்களுக்கும் மேலாகவே இவன் நல்ல அரசாங்க உத்தியோகத்தில் சேரவேண்டு மென்று அவர்கள் நினைத்தார்கள்.
தமிழிலக்கிய இலக்கண நூல்களை எவ்வளவு தான் கற்றபோதிலும் அரசாங்கத்தில் உத்தியோ கம் கொடுப்பார்களா ? ஆறுமுகத்தை ஆங்கிலம் படிக்க அனுப்பவேண்டுமென்று தமையன்மார் தீர் மானித்தார்கள். அவரை பேர்சிவல் பாதிரியா ருடைய ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்பி வைத் தார்கள். யாழ்ப்பாண நகரிலே " மத்திய கல்லூரி ? என்ற பெயரோடு இப்போது செழித்து நிற்கும் கல்லூரியின் ஆரம்பம் அந்தப் பேர்சிவல் பாடசாலை தான். ஆறுமுகம் அங்கேதான் ஆங்கிலம் படிக்கப் போனுர்,
ஆறுமுகத்திற்கு ஆங்கிலமும் நன்ருக வந்தது. அந்தப் பாடசாலையிலே தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த மாணவன் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. பாடசாலை அதிபரான பேர்சிவல் பாதிரியாரும் ஆறுமுகத்தை மிக அக்கறையோடு கவனிக்கலானர்.

9
பேர்சிவல் பாதிரியார் அந்தக் காலத் தி ல் இருந்த மற்றைய பாதிரிமார்களுக்கு விதிவிலக் காய் இருந்தவர். எதிரியேயாயினும் அவருடைய திறமைக்கு மதிப்புக் கொடுத்தவர். தமது நெஞ் சுக்கு நீதி செய்தவர்.
ஆறுமுகத்தின் தி ற மை யை நன்குணர்ந்த பேர்சிவல், அவரை மேல் வகுப்பு மாணவர்களுக் குத் தமிழும், கீழ்வகுப்பு மாணவர்களுக்கு ஆங் கிலமும் படிப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார் ஆறுமுகம் சம்மதித்து வேதனம் எதுவும் வாங்கா மலே அந்தக் கடமையைச் செய்துவந்தார்.
4
யாழ்ப்பாணம் தொன்றுதொட்டு சைவத் தமிழ்மக்கள் நிரம்பிய ஊராயிருந்தது. தமிழரச ரின் ஆட்சிமறைந்து, போர்த்துக்கீசர்களும் அவர் களுக்குப் பின்னல் ஒல்லாந்தரும் வந்து பலாத் காரத்தினுல் தங்கள் கிறீஸ்தவ சமயத்தை யாழ்ப் பாணத்தில் பரப்ப முனைந்தார்கள். தங்கள் சமயத் தைப் பரப்புவதைவிட, சைவசமயத்தை அழித்து நாசமாக்குவதிலேயே அவர்கள் மிகக் கருத்தாக இருந்தார்கள்.
ஒல்லாந்தருக்குப் பிறகு வந்த ஆங்கிலேயரும் கிறீஸ்தவ சமயத்தை இங்கு பரப்புவதில் மிகவும் அக்கறையோடு இருந்தார்கள். இவர்கள் மக்க ளைப் பெரிதும் பலாத்காரம் செய்யாமல் பொருள்,

Page 7
O
செல்வாக்கு. ஆங்கிலப்படிப்பு, உத்தியோகம் முத லியவற்றின்மீது ஆசைகாட்டியும், சைவசமயத் தைப் பொய்ச்சமயம் என்று பலவகையாலும் இழித்துக் கூறியும் மதமாற்றம் செய்தார்கள். இவர்களது வழி ஓரளவு வெற்றியும் கொடுத்தது.
பேர்சிவல் பாதிரியாரின் கோட்டைக்குள் புகுந்து கிறிஸ்தவரின் நடவடிக்கைகளே நன்கு அறிந்த, அறிவும் வயசும் வளர்ந்த ஆறுமுகத்துக் குள்ளே அப்பொழுதே " நாவலர் ' உருவம்கொள் ளத் தொடங்கியது.
நாவலருடைய சுய அபிமானம் வீரிட்டு எழுந் தது. தம்முடைய மக்களுக்குச் செய்யப்படும் அநீதி கண்டு அவருடைய நெஞ்சு கொதித்தது.
நாவலருடைய மனத்திற்குள்ளே பல திட்டங் கள் உருவாகத் தொடங்கின.
பேர்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் பகல்நேரத்தில் கடமையைச் செய்துவிட்டு இரவி லும், ஒய்வுநாட்களிலும், தமது தமிழ், சமய அறிவைப் பெருக்கிக்கொண்டார். தாம் மாத்திரம் படித்தால் போதாது; இன்னும் பலபேர் படிக்க வேண்டும்; அவர்கள் நல்ல உபாத்தியாயர்களாக வரவேண்டும்; அந்த உபாத்தியாயர்கள் ஊர் தோறும் பாடசாலைகளை அமைத்துத் தமிழையும், சைவத்தையும் வளர்க்கவேண்டும் என்று பலவா முக நாவலர் சிந்தித்துச் செயல்படத் தொடங் கினர்.

5
பேர்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் நாவலர் படித்ததும், படிப்பித்ததும் ஏழு வருடங் கள். அவருக்குப் பத்தொன்பது வயசு ஆயிற்று: நாவலரோடு பழகிய பேர்சிவலுக்குத் தாமும் தமிழ் கற்கவேண்டும் என்ற ஆசை உண்டானது. தமக்குத் தமிழ் சொல்லித் தரும்படி அவர் நாவல ரிடம் வேண்டுகோள் விடுத்தார். நாவலர் நிபந் த%னகளுடன் அதற்குச் சம்மதித்தார். தாம் எந்த நேரமும் சிவசின்னங்களான விபூதி, உருத்திராக் கம் அணிந்திருப்பார் என்பதும், சைவசமயத்தை இழித்துரைப்போரைக் கண்டனம் செய்வதை நிறுத்த மாட்டார் என்பதுமே அவர் நிபந்தனைகள். பேர் சிவல் ஒரு சிரிப்புடன் அந்த நிபந்தனைகளை ஏற்று நாவலரிடம் தமிழ் கற்றுவந்தார். நாவலரை விட்டால் அவரைப்போலச் சிறந்த தமிழ்ப்பண் டிதர் தமக்குக் கிடைக்கமாட்டார் என்பது ஒரு புறம் இருக்க, இந்த மாதிரி நேர்மையும் சுய அபி மானமுமுள்ள ஒரு உயர்ந்த மனிதரோடு பழகுவ தில் அவர் பெருவிருப்பங் கொண்டிருந்தல்வேண் டும். அவர் நல்ல நீதிமான்.
நாவலர் எதிர்பார்த்தபடியே சில கிறீஸ்தவர் கள் பேர்சிவலிடம் சென்று ' எங்கள் சமயத்தின் பெரிய எதிரியுடன் நீங்கள் உறவு வைத்திருக்க லாமோ ' என்று தங்கள் கருத்தை வெளியிட்டார்

Page 8
12
கள். பேர்சிவல், " என்ன செய்வது, வேறு நல்ல பண்டிதர் கிடைக்கவில்லையே ! ' என்று ஒருமாதி ரிச் சமாதானம் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, நாவலரிடம் வந்து " அவர்கள் இப்படிச் சொல் கிருர்களே.' என்று தொடங்க, நாவலர் ' என் னுடைய கடமையில் நான் ஏதும் தவறியிருந்தால் சொல்லுங்கள் ‘’ என்று முறித்துப் பதில் சொன் ஞர். உள்ளுக்குள் முகிழ்ந்த மகிழ்வு புன்சிரிப்பாய் வெளிப்பட, பேர்சிவல் அந்த அளவில் அந்தப் பேச்சை நிறுத்திவிட்டார்.
நீதியையும் நியாயத்தையும் ஒழுக்கத்தையும் தம்பால் கொண்டிருந்ததால் நாவலருடைய தலை எந்த மனிதருடைய மிடுக்குக்கும் ஒருபோதும் தாழ்ந்தது கிடையாது.
6
பேர்சிவல் பாதிரியாருக்கு நாவலர் தமிழ் மொழியைக் கற்பித்துக்கொண்டிருந்த காலத்தில் நாவலரிடம் இன்னுமொரு பெரிய வேலையையும் பேர்சிவல் ஒப்படைத்தார். கிறிஸ்தவ வேதநூலா கிய "பைபிள் நூலைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆவல் அப்போது தமிழ்க் கிறீஸ் தவர்களிடம் தோன்றியிருந்தது. அந்த மொழி பெயர்ப்பு வேலையைத் திறம்படச் செய்வதற்கு நாவலரைவிடச் சிறந்த அறிஞர் வேறு எவரும்

13
இல்லை என்று பேர்சிவல் பாதிரியார் கருதி, அப் பெரும்பணியைச் செய்து த ர வேண்டு மென்று நாவலரை வேண்டினர். உள்ளன் போடு தம்மை நேசித்த பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை மீறமாட்டாமல் நாவலரும் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
சைவசமயத்தை இழித்துரைத்த பாதிரிமார் களுக்கு நாவலர் விரோதி. ஆனல் கிறிஸ்துசம யத்தின் விரோதியல்லர்.
யாழ்ப்பாணத்தில் நாவலர் பைபிளே மொழி பெயர்த்துக்கொண்டிருந்த அதே காலத்தில் தென் விந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ அறி ஞர்களும் பைபிளுக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப் புச் செய்துகொண்டிருந்தார்கள்.
நாவலருடைய மொழிபெயர்ப்பு நிறைவுற்ற தும் அதைச் சென்னேயில் உள்ள கிறிஸ்தவ சபை யில் காட்டி அங்கீகாரம் பெறுவதற்காகப் பேர்சிவல் அதைச் சென்னே க்கு எடுத்துப்போனர். தம் முடன் நாவலரையும் அழைத்துச் சென்ருர், என்னதான் நாவலரின் தமிழ் - ஆங்கில அறிவில் பேர்சிவலுக்கு அசைக்கமுடியாத நம் பிக்கை இருந்தபொழுதிலும், சென்னே அறிஞர்களின் மொழிபெயர்ப்புக்கு மேலாகத் தம்முடைய நூலைச் சபையார் எடுத்துக்கொள்வார்களோ என்ற அச் சம் அவர் மனத்தின் ஒருபக்கத்தை அரித்துக் கொண்டிருந்தது.
E.

Page 9
24
சென்னையில் இருந்த அறிஞர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்பே சரியானதென்றும், நாவல ருடைய மொழிபெயர்ப்பில் தவறுகள் இருப்பதாக வும் வாதிடத் தொடங்கினர்கள். எனவே கிறீஸ் தவ சபையார் இந்த இரண்டு மொழிபெயர்ப்பு களில் எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்கும் படி அக்காலத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய மகாலிங்கையர் என்பவரை நியமித்தார்கள்.
இர ண் டு மொழிபெயர்ப்புகளையும் நன்கு ஆராய்ந்து பார்த்த மகாலிங்கையர், நாவலரின் மொழிபெயர்ப்பே மிகச் சிறந்ததெனத் தீர்ப்புச் சொன்னது மட்டுமன்றி " யாழ்ப்பாணத்தில் இவ் வளவு சிறந்த தமிழ் உண்டோ ? “ என்று ஆச்சரி யப்பட்டு வியந்துங் கூறிஞர். பேர்சிவல் கொண்டு போன நாவலரின் மொழிபெயர்ப்பையே சபை யார் ஏற்று அச்சிடுவித்தனர். இதனுல் பேர்சிவ லின் உள்ளத்தில் நாவலரைப் பற்றிய மதிப்பு மேலும் ஒருபடி உயர்ந்தது.
7
பேர்சிவல் பாதிரியாரிடம் தமிழ்ப் பண்டித ராக இருந்துகொண்டே நாவலர் தமது உள்ளத் தில் வளர்ந்துவந்த திட்டங்களைச் செயற்படுத்தத் தொடங்கிவிட்டார்.
காலையிலும், மாலையிலும் ஆர்வமுள்ள இளை ஞர்களைச் சேர்த்து, நாவலர் அவர்களுக்குக் கற்

5
பிக்க ஆரம்பித்தார். அவருடைய முக்கிய நோக் கம், தமிழையும் சைவத்தையும் நாடெங்கும் வளர்ப்பதற்கு ஆங்கர்ங்கு பாடசாலைகளை நிறுவு வதும் அவைகளில் கற்பிப்பதற்கும் ஊர்தோறும் சைவப் பிரசாரம் செய்வதற்கும் தகுதியான ஆசிரி யர்களைத் தோற்றுவிப்பதுமாக இருந்தது.
நாவலர் முதன்முதலாக யாழ் ப் பாண ம் வண்ணுர்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியா சாலை ஒன்றை ஆரம் பித் தார். அதைத் தொடர்ந்து கந்தர்மடம், கோப்பாய், இணுவில் மாதகல், பருத்தித்துறை ஆகிய இடங்க்ளிலும் சைவ வித்தியாசாலைகள் தோன்றின. பின்னல் தென்னிந்தியாவில் அதிக தொடர்பேற்பட்ட போது சிதம்பரத்திலும் ஒரு பாடசாலையை நாவ லர் நிறுவினர். அந்தப் பாடசாலை இன்றும் நடை பெற்று வருகிறது.
பாடசாலைகள் மூலம் சிறு வயதிலேயே பிள்ளை களின் அறிவையும் கயாபிமானத்தையும் வளர்ப் பதற்குத் திட்டமிட்ட நாவலர், வயது வந்தவர் களின் அறியாமையைப் போக்குவதற்காகச் சொற் பொழிவுகள் மூலம் பிரசாரம் செய்யவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருந்தார்.
அந்தக் காலத்திலே, கற்றுத் தேர்ந்த அறிகுர் கள் கோயில்களிலே புராண படனம் நடத்துவ தன்றி, சொற்பொழிவுகள் மூலம் மக்களுக்குப்

Page 10
6
பிரசாரம் செய்யும் வழக்கம் இருந்ததில்லை, நாவ லரே அதைத் தொடங்கிவைத்தார்:
வண்ணுர்பண்ணைச் சிவன்கோயிலிலே 1849-ம் ܚ ஆண்டில் முதன்முதலாக நாவலர் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்திஞர். அன்றையதினம் அவ ருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் எல் லோரும் பரவசமடைந்தனர். அறிஞர்கள் வியந்து பாராட்டினர். அன்றிலிருந்து ஒவ்வொரு வெள் ளிக்கிழமையிலும் நாவலருடைய சைவப் பிரசங் கங்கள் அந்தக் கோயிலிலே நடைபெற்று வந்தன.
வண்ணைச் சிவன் கோயிலில் தொடங்கிய பிர சங்கம், பின்னர் பல இடங்களிலும் பல சந்தர்ப் பங்களிலும் நடைபெறலாயிற்று. பிரசங்கங்களைக் கேட்டவர்கள் மூலம் நாவலருடைய பேரறிவும் பேச்சுவன்மையும் மூலைமுடுக்கெல்லாம் பரவ லாயிற்று. தென்னிந்தியாவிலும் பல இடங்களில் இந்தக் காளமேகம் பொழிந்த சொன்மாரியால் அங்குள்ளவர்களும் நன்முக நனைந்து குளிர்ந்து போனர்கள்.
நாவலர் கடைசியாகச் செய்த சொற்பொழிவு அவரது யாழ்ப்பாணம் சைவப்பிரகாச வித்தியா சாலையிலேயே நடைபெற்றது. ' உங்களிடம் கைம் மாறு பெறுவதனைச் சிறிதும் எதிர்பாராமல் முப் பத்திரண்டு வருடகாலம் சைவசமயத்தின் உண்மை களை உங்களுக்கு எடுத்துச் சொல்லிவந்தேன்.

7
நான் உயிருடன் இருக்கும்போதே உங்களுக்காக ஒரு நல்ல பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம் ‘’ என்ற கருத்துப்பட அன்றைய பிரசங்கத்தின் இறுதியில் நாவலர் கூறினர். இது நடந்தது 1879 ஆடி மாதம்.
1879 கார்த்திகை மாதத்தில் நாவலர் தாம் சேவித்துவந்த இறைவன் திருவடிகளைச் சென் றடைந்தார். அவர் " கடைசிப் பிரசங்கம் ‘’ என்று சொன்னது உண்மையிலேயே கடைசிப் பிரசங்கமாகிவிட்டது !
8
அந்தக் காலத்தில் படிப்பன யாவும் பாடல்க ளாகவே இருந்தன. இலக்கியம் " என்ருல் அது கவிதையாக மட்டுந்தான் இருக்கவேண்டுமென்ற கருத்துச் சமீபகாலங்களில் கூடப் பண்டிதர்க ளிடையே இருந்து வந்தது. அந்தக் காலத்தில் இலக்கியம் மட்டுமல்ல; இலக்கணம், நீதிநூல்கள் மற்றும் சோதிடம், வைத்தியம் முதலிய சாத் திரங்கள்கூடக் கவிதைகளாகவே இருந்தன.
கவிதை உலகில் இருந்த தமிழன்னையை வசன உலகிற்குக் கொண்டுவந்த தில் நாவலருக்கு மிகவும் பெரிய பங்குண்டு. நாவலர் ஆத்திசூடி முதலிய நூல்களுக்கு உரை எழுதினர். சிறுவர்களுக்காக முதலாம், இரண்டாம் , நான்காம் பாலபாட

Page 11
s
நூல்களை எழுதினர். பெரியவர்களுக்காகத் திரு விளையாடற் புராண வசனம் , பெரிய புராண வச னம் ஆகிய நூல்களை எழுதினர். தமிழ் இலக்க ணம் கற்போருக்காக இலக்கண விஞவிடை, இலக் கணச் சுருக்கம், நன்னூற்காண்டிகையுரை, நன் னுால் விருத்தியுரை, இலக்கணக் கொத்து, இலக் கணவிளக்கச் சூழுவளி. தொல்காப்பியப் பாயிர முதற் குத்திரவிருத்தி, பிரயோக விவேகம், சேணு வரையம், தருக்க சங்கிரகம் முதலிய பல நூல் களைத் தந்தார்.
சைவசமயிகளுக்காக, முதலாம் சைவ வின விடை, இரண்டாம் சைவ வினவிடை, நித்திய கருமவிதி, புட்பவிதி, சிதம்பர மான்மியம், சைவ சமய நெறியுரை, கோயிற் புராணவுரை, திருமுரு காற்றுப்படை உரை, சிவஞான போதச் சிற்றுரை, பதினேராந் திருமுறை, திருவாசகம், அகத்தியர் தேவாரத் திரட்டு மற்றும் பாரதம், சேதுபுராணம், கந்தபுராணம், பெரியபுராணம், திருக்குறள் பரி மேலழகருரை, திருக்கோவையார் உரை முதலிய நூல்களை வெளியிட்டார். இவற்றுள் சில நாவலர் எழுதியவை. மற்றவை அவரால் பரிசோதிக்கப் பட்டுத் திருத்தமுற அச்சிடப்பெற்றவை.
இவற்றைவிடக் கிறீஸ்தவ பாதிரிமார்களின் அவதூறுகளைக் கண்டித்துச் சைவ தூஷண பரிகா ரம், சுப்பிரபோதம், மித்தியாவாத நிரசனம் முத லிய கண்டன நூல்களையும், அவ்வப்போது ஏற்

19
பட்ட பல பிரச்சனைகள் குறித்த துண்டுப் பிரசுரங் களையும் நாவலர் எழுதி வெளியிட்டார்.
நாவலர் சிறந்த ஒரு பேச்சாளராக மட்டு மன்றி, மிகச் சிறந்த எழுத்தாளராகவும் விளங் கிஞர். தமிழ் எழுத்துக்களே மிகுந்த திறமையோடு அவர் ஆண்டார். தமிழ்மொழிக்கு இவ்வளவு சக்தி - அதன் வசன உருவத்தில் இருக்கிறதா என்று கற்ருேர் வியக்கத்தக்க விதத்தில் தமிழ் எழுத்துக்களே ஆள்பவராக அவர் விளங்கினர்.
9
புத்தகங்கள் எழுதத் தெ (ா ட ங் கி யது ம் அவற்றை அச்சிட்டு வெளியிடுவதற்காக நாவல ருக்கு ஒரு அச்சகம் தேவைப்பட்டது, அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ பாதிரி பார்களிடம் மட்டுமே அச்சகம் இருந்தது. அவர் கள் நாவலருடைய நூல்களை அச்சிடுவார்களா ? எனவே தாமே ஒரு அச்சகத்தை நிறுவவேண்டு மென்று நாவலர் துணிந்தார். 1849-ம் ஆண்டில் - தமது இருபத்தேழாவது வயசில் அச்சகம் ஒன்று வாங்குவதற்காக நாவலர் சென்னைக்குச் சென்ருர்,
அக்காலத்தில் தென்னிந்தியாவில் திருவாவடு துறையாதீனம் சைவத்திற்கும் தமிழுக்கும் ஒரு நிலைக்களமாக உயர்ந்துநின்றது. நாவலர் சென்னை போகும் வழியில், திருவாவடுதுறையாதீனத்துக் கும் சென்ருர், ஏற்கனவே நாவலரின் கீர்த்தி

Page 12
20
ஆதீனம் வரை ஓரளவு எட்டியிருந்தது. அதன் தலைவர் பெரிய கல்விமான். கற்றரைக் கற்ருர் காமுறுவர். ஆதீனத் தலைவர் நாவலரை வர வேற்று, இலக்கிய இலக்கண விஷயங்களிலும், சைவசித்தாந்த விஷயங்களிலும், அவரோடு அள வளாவினர். அந்த அளவிலேயே நாவலருடைய பெருமை ஆதீனத் தலைவருக்கு நன்கு விளங்கிவிட் டது. சில நாட்கள் நாவலரைத் தம்முடனேயே வைத்திருந்து மகிழ்ந்தார் அவர்.
ஒருநாள் அறிஞர்களுடைய சபை ஒன்றை حصـــــــــــــ ஆதீனத் தலைவர் கூட்டி அந்தச் சபையிலே சைவப் பிரசங்கம் ஒன்று செய்யும்படி நாவலரைக் கேட் டுக்கொண்டார்.
அன்று அந்தச் சபையிலே நாவலர் செய்த சொற்பொழிவு அந்த அறிஞர்களுக்கு மிகப் புதுமை யாக இருந்தது. எடுத்துக்கொண்ட விஷயத் தைச் சுருங்கச் சொல்லி விளக்கிய திறனும், செந் தமிழ் நடையும், இலக்கணப் பிசகற்ற கவர்ச்சிகர மான சொற்பிரயோகமும், கற்றவர் மட்டுமன்றி மற்றெல்லோருமே விரும்பிக் கே ட் க க் கூ டி ய தன்மையும் சபையோர் அனைவரையும் புல்லரிக் கச் செய்தது . " ஆகா, ஆகா " என்று அவர்கள் தமது பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்கள். ஆதீனத் தலைவரும் மிக்க மனக்கிளர்ச்சி பெற்றவ ராய் அந்த அறிஞர்கள் சபையிலே ' நாவலர் " என்ற பட்டத்தைச் சூட்டி அவரை " ஆறுமுக நாவலர் ஆக்கிவைத்தார்.

2.
10
தமிழறிஞரும், சைவப்பிரசார கரு மாக ச் சென்னைக்குச் சென்ற ஆறுமுகம் "ஆறுமுகநாவலர் ஆக மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார். வரும் போது ஒரு சிறிய அச்சகத்தையும் வாங்கிவந்து, யாழ்ப்பாணத்தில் தமது சைவப்பிரகாச வித்தியா சாலைக்குப் பக்கத்தில் அதை நிறுவினர். அந்த அச்சகத்திற்கு ' வித்தியானுபாலன யந்திரசாலே " என்று பெயர். 1849-ல் நாவலருடைய அச்சகத் தில் அச்சுவேலைகள் ஆரம்பமாயின. மூச்சுவிட நேரமில்லாமல் நாவலருக்கு வேலைகள் நிறைந் திருந்தன. பேர்சிவல் பாதிரியாரிடம் தமிழ்ப் பண்டிதராக இருந்த வேலையையும் விட்டுநீங்கிவிட் டார். பேர்சிவலுக்கு மிகுந்த கவலே. எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அதிக சம்பளம் தரலா மென் ருர், பேர்சிவல் பர்திரியாரிடம் நாவலருக்கு மிகுந்த நல்லபிப்பிராயம் இருந்தபோதிலும் அவ ருடைய வேண்டுகோளை ஏற்கமுடியவில்லை. நாவல ரின் மனம்நிறைந்த இலட்சியக் கடமைகள் அவரை வா, வா " என்று நெருக்கி, பேர்சிவலிடமிருந்து பிரித்துவிட்டன.
பாடசாலை நிருவாகம், அச்சகத்தின் நிருவா
கம், புதிய நூல்கள் எழுதுதல், பழைய ஏட்டுப்
பிரதிகளைப் பரிசோதித்தல், சைவ தூ ஷணம்
செய்வோருக்குக் கண்டனம் எழுதி வெளியிடுதல்
3.

Page 13
22
மாணவர்களுக்குக் கற்பித்தல், சைவப்பிரசாரச் சொற்பொழிவுகள் செய்தல், ஒ, ஓ, நாவலர் மூச்சு விட முடியாதபடி வேலைகள் நிறைந்து கிடந்தன !
சுமார் பத்து ஆண்டுகள் இவ்விதம் கழிந்தன. யாழ்ப்பாணத்திலிருந்த சிறிய அச்சகம் தமது தேவைகளை நிறைவேற்றப் போதாமலிருந்ததை நாவலர் உணர்ந்தார். எனவே அந்த அச்சகத்தை விற்றுவிட்டு, சென்னையில் பெரிய அச்சகம் ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் 1858-ல் நாவலர் சென் னைக்குப் புறப்பட்டார்.
சென்னை போகும் வழியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கும் தருமபுர ஆதீனத்துக்கும், மற்றும் வேதாரணியம், சீர்காழி, சிதம்பரம் முதலிய பல ஊர்களுக்கும் விஜயம் செய்து, சென்ற இடமெல் லாம் மிகுந்த மரியாதையுடன் கெளரவிக்கப் பட்டார்.
பல இடங்களிலும் சைவப் பிரசங்கங்கள் செய் தார். அறிஞர்கள், பெரியார்களிடத்தில் நாவல ருடைய மதிப்பு மேலும் மேலும் உயரலாயிற்று.
1859-ம் ஆண்டு, வித்தியானுபாலன யந்திர சாலை என்ற பெயரிலே சென்னையில் ஒரு பெரிய அச்சகத்தை நிறுவிய நாவலர், அங்கே பல நூல் களை அச்சிட்டு வெளியிட்டார். அக்காலத்தில், இராமநாதபுர சமஸ்தானம் பொன்னுசாமிதேவ ரின் வேண்டுகோளின்படி நாவலரால் அச்சிடுவிக்

23
கப்பெற்ற புத்தகங்கள் மகாவித்துவான் மீனுட்சி சுந்தரம்பிள்ளையின் பாயிரத்தோடு வெளிவந்தன. அந்நூல்களுக்குப் பாயிரம் எழுதிய காரணத்தால் மீனட்சி சுந்தரம்பிள்ளையின் மதிப்பு உயர்ந்தது. திருவாவடுதுறை ஆதீனம் அக்கணமே மீனட்சி சுந்தரம்பிள்ளையை ஆதீன வித்து வான க் கி க் கொண்டது. பிள்ளையின் வெகுகால முயற்சி பயன் செய்தது.
சென்னையில் நாவலர் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்ட காலத்தில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானுக இருந்தவர் மகாவித்துவான் மீனுட்சி சுந்தரம்பிள்ளை. அவரும் அவரது தலைமாணுக்க ரான தியாகராசச் செட்டியார் என்பவரும் நாவல ருடைய பணிகளையும் திறமையையும் மிக மிகப் பாராட்டிப் புகழ்ந்து பாடியிருக்கிருர்கள்.
11
யாழ்ப்பாணத்தில் நாவலர் பிறந்த ஊர் நல் முரர். நல்லூர் கந்தசுவாமிகோவிலில் நாவலருக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. அந்தக் கோவிலின் சீர் திருத்தங்களுக்காக நாவலர் அநேக துண்டுப் பிர சுரங்கள் வெளியிட்டார்; சொற் பொழிவுகள் நிகழ்த்தினர்.
முதலில் நாவலரை எதிர்த்து அவருடைய செயல்களைப் பரிகசித்தார் கோயிலதிகாரி. அந்த அதிகாரிக்குப் பின்னல் வந்தவர், நாவலருடைய

Page 14
&4
நேர்மையையும், பெருமையையும் உணர்ந்து, அவர் சொன்னபடி கோயிற் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு ஒப்புக்கொண்டார்.
தாம் தொடக்கிவைத்த சீர்திருத்த வேலைகள் பெரிதும் நிறைவேற்றப்பட்டு மிகச் சிறந்தமுறை யில் நல்லூர்க் கந்தசுவாமிகோவில் பிரகாசித்து வருவதை, இன்று சிலாரூபமாக கோவிலின் பக் கத்தே அமர்ந்து நாவலர்பெருமான் பார்த்துக் கொண்டிருப்பது யாழ்ப்பாண மக்களுக்கு ப் பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாகும்.
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமிகோயி லைப்போலவே, தென்னிந்தியாவில் சிதம்பரம்கோயி விலும் நாவலருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. சிதம்பரம் நடராசப்பெருமானுக்குப் பூசைசெய் பவர்கள் "தீட்சிதர் " எனப்படுபவர்கள். அவர்க ளுடைய ஒழுங்கீனங்களைக் கண்டும் நா வல ர் \கொதித்து எழுந்து கண்டனங்களைத் தொடுத்தார். "வள்ளலார் ’ என்று புகழ்பெற்ற இராமலிங்க சுவாமிகளும் தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஒருசம யத்தில் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். நாவலருக்கு மகா கோபம். நெற்றிக் கண் காட்டி ஞலும் குற்றம் குற்றமே. இராமலிங்கசுவாமிக ளும் நாவலருடைய கண்டனங்களுக்குள் அகப் பட்டுத் திக்குமுக்காடினர்.
ஒருமுறை இராமலிங்கசுவாமி தீட்சிதர்களு டன் சேர்ந்து சிதம்பரம் கோயிலிலே ஒரு கூட்டம்

25
கூட்டி, அக்கூட்டத்தில் நாவலரைக் கண்டபடி திட்டிவிட்டார்.
சிதம்பரம் நீதித்தலத்தில் வழக்குத் தொடுத் தார் நாவலர். சைவப் பிரசாரகரை அவமதித்த தாக வழக்கு. இராமலிங்கசுவாமி தனது தவறு களை மனதிற்குள் உணர்ந்துகொண்டதாலோ என் னவோ, தாம் அவ்விதம் நாவலரைத் தூவிக்க வில்லை என்று நீதித்தலத்தில் சொல்லித் தப்பிக்
கொண்டார்,
இராமலிங்கசுவாமி " வள்ளலார் " என்று புக ழப்படுபவர். பக்திமான். சிறந்த பாவலர். ஆளுல் நேர்மையும் நெஞ்சத் துணிவும் இல்லாதவரென் பதை தாவலருடைய வழக்கு எடுத்துக் காட்டி விட்டது.
நாவலரும் ஒருமுறை தவருக நடந்த ஒருவரை கடுமையாக ஏசிவிட்டார். ஏச்சுவாங்கியவரும் நாவலர்மீது வழக்குப்போட்டார். 1" ஓம் அவர் தவறு செய் த ரா ர். நான் ஏசினேன் ** என்று மிகுந்த நெஞ்சுறுதியுடன் நீதித்தலத்தில் சொல்லி ஏழு ரூபா குற்றமும் கட்டிஞர் நாவலர். - நேர்மை யும் நெஞ்சுறுதியும் அங்கே பிரகாசித்தன !
நாவலர் சிதம்பரத்திலே ஒரு பெரிய சைவ ஸ்தாபனத்தை நிறுவவேண்டுமென்று கனவுகண் டார். அதற்குப் பெருந்தொகை பொருள் வேண் டும். * எப்படியாவது யாசிப்பது நாவலருக்கு

Page 15
26
வழக்கமில்லாததால் அவ்வளவு பொருளைச் சேக ரிக்க நாவலரால் முடியவில்லை. க  ைட சி யில் யாழ்ப்பாணத்தில் நிறுவியதுபோன்ற ஒரு பாட சாலையையே சிதம்பரத்திலும் நிறுவிநடாத்தினர்.
12
நாவலர் தமிழுக்காகவும் சைவத்திற்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்துவந்தார். அவை களை அவர் தமக்காக மட்டுமே வளர்த்துக்கொண் டாரா ? தமது சொந்த ஆன்ம ஈடேற்றம் ஒன் றையே கருதி வாழ்ந்த ஞானிகளும் இருந்தனர். ஆணுல் நாவலர் தமிழையும் சைவத்தையும் தமது மக்களுக்காகவே வளர்த்தார் - மக்களுக்காகவே தமது வாழ்நாளைத் தியாகஞ்செய்தார் என்ற பெரிய உண்மையை நாம் மறந்துவிடலாகாது.
சைவமும் தமிழும் அப்போது மிகுந்த ஆபத் தில் சிக்கியிருந்த காலம். அவைகளுக்குக் கை கொடுக்கவேண்டியது அவருக்கு முழுநேர வேலை யாக இருந்தது. அப்படியிருக்கவும், இந்தக் காரி யங்களுக்கு வெளியேயும் அவ்வப்போது சில பொதுத் தொண்டுகளில் நாவலர் ஈடுபட்டிருக் கிருர்,
1877-ம் ஆண்டில் தென்னிந்தியாவிலும் இலங் கையிலும் மழையில்லாமல் நெல் விளைச்சல் அரு கிப்போயிற்று. அதனல் கடும்பஞ்சம் உண்டானது.

27
அநேக ஏழைமக்கள் சாப்பாடு கிடைக்காமல் துன் புற்றர்கள். அச்சமயத்தில் நாவலர் முன்வந்து பல தனவந்தர்களின் உதவிகளைச் சேகரித்து கஞ்சித் தொட்டி ' ஏற்படுத்திப் பசித்த ஏழை களுக்குக் கஞ்சிவார்க்க ஒழுங்குசெய்தார்.
1878-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த துவைனம் துரை என்பவர் நீதி நியாயந் தவறி நடக்கத் தொடங்கினுர், தலைபோன வழிதானே வாலும்போகும் ? அவருக்குக் கீழிருந்த உத்தியோகத்தர்களும் கிராமத் தலைமைக்காரர்க
ளும் கூட நீதி தவறத் தொடங்கினர்கள்.
நீதி எங்கே தவறினுலும் நாவலருடைய நெற் றிக்கண் அங்கே பாயும். நாவலர் சீறி எழுந்து கண்ட3ங்களை எழுப்பினர். அவருடைய கண்ட னங்கள் வெற்றுவேட்டுக்களல்ல. உண்மையான சூடுகள். அந்தச் சூடுகள் துவைனம் துரையைத் தாக்கி, வேலையிழந்து தண்டனைபெறும் நிலைக்கு அவரை வீழ்த்தின.
அந்தக் காலத்தில், இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்தது. பாராளுமன்றம் இல்லை. கவர்ணரே சர்வாதிகாரி. ஆனலும் நீதிசெய்வ தாகப் பாவனையேனும் செய்த ஆங்கிலேயர் சட்ட நிரூபண சபை என்ற ஒருசபையை ஏற்படுத்தி, அச்சபைக்குச் சுதேசப் பெருமக்கள் சிலரைத் தெரிவுசெய்து அவர்கள் மூலமும் ஆலோசனைகளைப் பெற்றுவந்தார்கள்.

Page 16
2ö
அந்தச் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினர்க ளைத் தெரிவுசெய்வதற்கு இன்றுபோலச் சர்வசன வாக்குரிமை கிடையாது. தகுதிவாய்ந்த பெருமக் கள் மாத்திரமே கூடி உறுப்பினரைத் தெரிவு செய்வர்.
1878-ம் ஆண்டு ஒரு தேர்தல் போட்டி வந்தது. சட்டநிரூபண சபைக்குப் போவதற்கு இரண்டுபேர் போட்டியிட்டார்கள்.
ஒருவர் அப்போது எல்லோருக்கும் தெரிந்த வரும், மிகவும் செல்வாக்குள்ளவருமான அப்புக் காத்து பிறிற்ருே என்பவர்,
மற்றவர் இப்போது எல்லோருக்கும் தெரிந் திருக்கும் சேர். பொன். இராமநாதன்.
இராமநாதனுக்கு அப்போது அவ்வளவு செல் வாக்கு இல்லை.
யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணேச் சைவப்பிர காச வித்தியாசாலையிலே பெரிய பெரிய மனிதர்க ளெல்லாம் கூடியிருந்தார்கள். அவர்களிலே பிறிற் ருேவை ஆதரிப்பவர்களே அநேகர்.
இராமநாதனுக்கு ஆதரவாக நாவலர் இருந் தார்.
பிறிற்ருேவுக்காகப் பல சட்ட அறிஞர்களும்
தமிழறிஞர்களும் பே சி ஞர் க ள், இராமநாத னுடைய பக்கம் நாடி விழுந்துபோன நேரம் .

29
நாவலர் எழுந்தார்.
தமிழ்மொழியின் கம்பீரம் பிரகா சித்தது நீதி தலைநிமிர்ந்தது !
இராமநாதன் சட்டநிரூபண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
13
தமிழர்கள், சைவர்கள் - முக்கியமாக யாழ்ப் பாணத்தவர்கள் நாவலர் பெருமானை மறக்கமுடி யாது. -- மறக்கக் கூடாது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னுல் யாழ்ப் பாணத்திலும், தமிழகத்திலும் வாழ்ந்த மக்க ளுக்கு அத்தியாவசியமாக என்ன செய்யவேண்டி யிருந்ததோ அதை நாவலர் செய்தார்.
மகாத்மா காந்தி ஒரு அவதார புருஷர். அவ ருடைய கால த் தி ல் இந்திய மக்களுக்கு எது தேவைப்பட்டதோ அதை அவர் செய்தார்.
நாவலரும் ஒரு அவதார புருஷர், மகாத்மா காந்தியைப் போலவே தாம் எடுத்துக்கொண்ட பிரசார வேலைகளுக்கும் மேலாக நீதிக்கு இடம் கொடுத்த மகான் அவர் சைவசமயத்தை நீதியின் உருவமென்று கண்டவர் நாவலர். "" நமது சம யம் " வைதீக சமயம் ." வைதீகமாவது வேதநெறி. அதாவது அறிவுநெறி. கருவி கரணங்களை நெறிப்
4

Page 17
30
படுத்தி அறிவுத்தூய்மை செய்யும் நெறி. சைவ சமயத்தவன் செய்யத்தக்கது எது, தகாதது எது என்று தர்மவிசாரமுடையவனுய், தன்னிலையை உணர்ந்து, நீதிவழுவா நெறிமுறையில் தன் வாழ்க் கையை இட்டுவைத்து பாதுகாத்தற் பாலன் "' என்று நாவலருடைய மனக் கருத்தைக் கூறியிருக் கிருர், அவருடைய வாரிசு " ஆக, எம்மிடையே விளங்கும் பண்டிதமணி, கலாநிதி கணபதிப்பிள்ளை அவர்கள்.
இம்மட்டோ !
மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகளால் நெரிந்து, புழுங்கிக்கொண்டிருந்த அந்தக் காலத் லேயே,
" சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனு பவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம் " என்று எக்காலத்திற்கும் ஏற்ற சீர்திருத்தக் கருத் தைக் கூறி நீதி செய்தவர் நாவலர்,
நாவலரைப்போல் நமக்கு ஆளில்லை. - அ ருச்கு முன்பும் இல்லை; பின்பும் இல்லை.
நாவலரை நாங்கள் இறுகப் பற்றிக்கொள்: வேண்டும் ,

3.
14
சென்னைத் தமிழ்வளர்ச்சிக் கழகம் வெளி யிட்ட தமிழ்க் கலைக்களஞ்சியத் தொகுதிகளில் முதலாம் தொகுதியில் பண்டிதமணி, கலாநிதி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் நாவலரைப்பற்றி இரத்தினச் சுருக்கமாக ஒரு கட்டுரை எழுதியிருக் கிருர்கள். இச்சிறிய நூலைச் சிறப்புச் செய்வதற் காக அந்தக் கட்டுரையையும் தருகின்றேன்.
கலைக்களஞ்சியத்தில் நாவலர்
யாழ்ப்பாணத்து நல்லூரிலே செல்வாக்குள்ள சைவ வேளாளக் குடும்பம் ஒன்றில் 1822 ஆம் ஆண்டு மார்கழி மாதம் பிறந்தவர். தந்தை கந்தப்பிள்ளை; தாய் சிவகாமியம்மை. இவர் திண் ணைப்பள்ளியில் படித்த பிறகு 12 ஆம் வய சில் பார் சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் ஆங்கிலமும், சேனதிராய முதலியார் சரவணமுத் துப் புலவர் முதலிய வித்துவான்களிடம் தமிழும் படித்தார். பார் சிவல் பாதிரியார் இவருக்கு 19 ஆம் வயசிலேயே இருமொழித் திறமை இருப்பதைக் கண்டு, தமது பாடசாலையில் தமிழ், ஆங்கில உபாத்தியாயராகவும் தமக்குத் தமிழ்ப் பண்டித ராகவும் அமர்த்திக்கொண்டு, பைபிளைத் துர ய தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். நாவலர்

Page 18
3
பைபிளை மொழிபெயர்த்து வருகிற காலத்திலே தமது சமயத்தை உணரவேண்டுமென்ற உணர்ச்சி தோன்றச் சைவசித்தாந்த சாத்திரங்களயும், திரு முறைகளையும், சம்ஸ்கிருதத்தையுங் க ற் று ச் சைவாகமங்களிலே வேண்டிய பகுதிகளையும் தாமே கற்றுக்கொண்டார். இளமைதொட்டே கோயில் களிற் புராணங்களுக்குப் பதப்பொருள் கூறி விருத்தியுரை சொல்லுதல், தருக்கித்தல் முதலிய பழக்கங்சளும் இவரிடம் இருந்துவந்தன. சைவா நுஷ்டானங்களில் என்றுமே இவர் தவறியதில்லை.
அக்காலத்திலே பாதிரிமார் மதமாற்றத்துக் குக் கையாண்ட முறைகளால் நாவலருக்கு வருத் தம் உண்டாயிற்று. அவருடைய வாழ்க்கையே மாறியது. அவர் இல் வாழ்க்கையிற் புகாமல் சமய வளர்ச்சிக்கே உழைக்கவேண்டும் என உறுதி செய்து கொண்டார். 24 ஆம் வயசின் தொடக் கத்தில் மாணவர் சிலரைச் சேர்த்துச் சம்பளம் பெருமல் இராக்காலங்களில் சமய நூல்களையும் சருவி நூல் சளையும் படிப்பிக்கத் தொடங்கினர். 25 ஆம் வயசில் வெள்ளிக்கிழமை தோறும் பெருந் திரளான வர்களுக்குச் சமயச் சொற் பொழிவு செய்து வந்தார். பின்னர் தமது உத்தியோகத்தை விடுத்து 26 ஆம் வயசில் யாழ்ப்பாண நகரத்தில் சைவப் பிரகாச வித்தியாசாலையைத் தாபித்தாரி இவருடைய மாணவர்களே ஆசிரியர்கள் ஆஞர்

33
கள். மருமகரும் மாணவருமான வித்துவசிரோ மணி பொன்னம்பலபிள்ளை பாடஞ் சொல்வதி லேயே காலங்கழித்தார். சபாபதிநாவலரும் இவ ருடைய மாணவர்களிற் சிறந்தவர். தமிழ் நாடு முழுவதிலும், சிதம்பரம் முதலிய முக்கியத் தலங் கள் தோறும் சைவ வித்தியாசாலைகள் அமைக்க வேண்டும், சைவப் பிரசாரகர்களை உண்டாக்க வேண்டும் என்கின்ற ஊக்கம் நாவலருக்கு வர வரக் கிளர்ந்தது. நாவலர் என்ற பட்டம் 27 ஆம் வயசில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப் பட்டது. இராமநாதபுர சமஸ்தானம் நாவலர் முயற்சிகளுக்கு வலிந்து உதவ முன் வந்தது.
சிறுவர்களுக்கும் வயதுவந்தவர்களுக்கும் உப யோகமான கருவிநூல் சமய நூல்களின் இன்றி யமையை உணர்ந்து புதியனவாக நூ ல் க ள் எழுதவும் ஏட்டில் இருந்தவைகளை ஆய்ந்து அச் சிடவும் இவருக்குப் பணி ஏற்பட்டது.(இலங்கைப் பூமிசாஸ்திரம்கூட இவர் எழுதினர்; (கணித ாைய்பாடுகளும் எழுதினர். நாவலருடைய எழுத் துக்களும் பேச்சுக்சளும் பதிப்புக்களும் சூழ்நிலை யின் படிப்படியான வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவை. அக்காரணத்தால் இவர் முயற்சிக ளெல்லாம் சிறந்த அடிநிலையிலிருந்து தொடங்கி நடந்தவைகள் என்ன லாம்.

Page 19
1. இவர் எழுதிய 1 ஆம் 2 ஆம் 4 ஆம் பால பாடங்கள், திருவிளையாடற் பு ர |ா ன வ ச ன ம், பெரியபுராண வசனம், சூசனம் என்பவை ஒரு வகையில் அமைந்திருக்கின்றன.
2. இலக்கண விஞவிடை இலக்கணச் சுருக் கம், நன்னூற் காண்டிகை எழுதி யதும், நன்னூல் விருத்தி, இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கச் குருவளி, தொல்காப்பியப் பாயிர முதற் குத் திர விருத்தி, பிரயோக விவேகம், சேஞவரையம், தருக்க சங்கிரகம், நிகண்டு பதிப்பித்ததும் மற் ருெ?ருவகை.
3. 1 ஆம் 2 ஆம் சைவ விஞ விடை, நித்திய சருமவிதி, சிவாலயதரிசன விதி, புட்பவிதி, சிதம் பர மான் மியம், சைவசமய நெறியுரை, கோயிற் புராண உரை, திருமுருகாற்றுப்படை உரை எழு தியதும் சிவஞான போதச் சிற்றுரை, பதினேராந் திருமுறை, திருவாசகம், அகத்தியர் தேவாரத் திரட்டு பதிப்பித்ததும் வேருெருவகை.
4 பாரதம், சேதுபுராணம், கந்தபுராணம். பெரியபுராணம், தி ருக்குறள் பரிமேலழகர் உரை, திருக்கோவையார் உரை ஆகிய பதிப் புக் க ள் வேருெரு வரிசை,
5. சைவதூஷண பரிகாரம், சுப்பிர போதம், மித்தியாவாத நிரசனம் முதலிய கண்டன நூல்

( نه
கள் எழுதியது ஒருவகை. மேலும் சமூக அr சியற் பிரச்சனைகளில் ஈடுபட்டுக் காலந்தோறும் வெளியிட்ட கட்டுரைகள், கண்டனங்கள் மிகப் பல. அவற்றுட் சில நாவலர் பிரபந்தம் ' என்ற பெயரில் வந்திருக்கின்றன. இவர் இயற்றிய கீர்த் தனங்களும் பாடல்களும் சில உண்டு. எண் 0ணிறந்த பிரசங்கங்களும் புராண வியாக்கியானங் களும் இவர் செய்தவை எழுதப்படவே இல்லை.
தமிழ் உரைநடை ஆறுமுகநாவலரால் gÀ{5 வகைத் திருத்தமும் அழகும் பெற்றது.
சி. க

Page 20
NAVALAR
By VARATHAR
-
printers: The An Andal
 

inting Works. Jaffna.