கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனியில் மொழி எழுதி

Page 1
||||3|s} so slo[[Do] ] J P T.
词层Im后写I
 


Page 2
மனியில் மொழி எழுதி
(கவிதைத் தொகுதி)
சோலைக்கிளி
PANYAL MOL ELUT
Solaikkili
(C) sebàiun
முதற் பதிப்பு : ஜனவரி 1996
ଇରାଗfiufi(ତ : விடியல் பதிப்பகம் 3, மாரியம்மன் கோவில் வீதி உப்பிலிப்பாளையம்
கோவை - 641 015
வடிவமைப்பு : ரவி (சுவிஸ்)
விலை : ரூபா 30
அச்சு : மனோ ஆப் செட்
சென்னை - 600 005
(C) Author
First Edition: January 1996
Published by : Vidiyal Pathippagam 3 Mariamman Kovil Street Upplipalayam Coimbatore- 641 015
Layout: Ravi (Swiss)
Price : Rs. 30.-
Printed at: Mano Offset
Madras - 600 005

ஏனென்று கேட்கக்கூடாது

Page 3

இளந்தாரி வெய்யிலும் கொய்யாமர்ப் புலவனும்
விஞன் விஷயங்களைப் பெயரிட்டு அழைக்கக் கூடாது ; கருத்துக்களை நிரூபிக்கக் கூடாது; தர்க்கரீதியான சிந்தனை என்ற மலைச்சரிவில் அவன் சறுக்கிச் சென்று கொண்டிருக்கக் கூடாது; கவிதை உலகிலுள்ள தம் முன்னோர்களை நகல் செய்யக்கூடாது. மாறாக, அவன் மரபான உண்மைகளை மறந்துவிட வேண்டும்; மூடிமறைக்கப்பட்டுள்ள நட்சத்திரங் களின் முகங்களை அவன் வெளிப்படுத்த வேண்டும்; உலகிலுள்ள ஜீவிகளுக்கும் விஷயங்களுக்கும் இடையே யுள்ள உறவுகளை -இதுவரை பரிச்சயப்பட்டிராத வித்தியாச மான உறவுகளை- அவன் நிரூபித்துக் காட்ட வேண்டும். கவிஞன் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அது நேரடியாக, வெளிப்படையாக, தெளிவாக ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கக்கூடாது. அப்படியிருப்பின் அது கலைத்தன்மை குன்றியதாகவே இருக்கும். கலைப் படைப்புகள் நிறைந்த ஒரு அருங்காட்சி யகத்திற்குள் முன்வாசல் மூலமாக நுழைவதைக் காட்டிலும் மடத்தனமானது வேறில்லை. ஒரு உண்மையான கவிஞன் கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் உள்ளே நுழைவான். - ஏ.வோழ்னெஸென்ஸ்கி 19AUoznessenskழி
இத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளை இன்று பொஸ்னியா விலுள்ள ஒரு கவிஞன். எழுதியிருக்க முடியும். ருவாண்டாவில், சோமாலியாவில், சூடானில், ஆப்கானிஸ்தானில், குர்திஸ்தானில், ஈராக்கில், பெரு நாட்டின் ஆண்டெஸ் மலைகளில் - ஏன் காஷ்மீரிலும் பஞ்சாப்பிலும் கூட - இக் கவிதைகளை ஒருவர் கேட்டிருக்கக்கூடும். போர்- அது எந்தவகையான போராக இருந்தாலும்சரி, அதன் பக்கச்சார்பாளர்கள் யாராக இருந்தாலும் சரி- அதற்கு எதிரான பிரகடனம்தான் இக் கவிதைகள் :

Page 4
இராணுவக் குரல்களுக்கு எதிரான ஒரு குடிமகனின் குரல் :
கிண்டியெடு உன்னுடைய படைவீட்டை ஆட்டி அசைத்துப் பிடுங்கி இந்தக் கடற்கரையில் சுமார் ஆறு ஆண்டுகளாய் முளைத்திருந்த இந்தப் படைவீட்டின் கிழங்கைக் கடடத் தோண்டு
மழைவந்தால்
பொச்சென முளைக்காத விதமாய்.
சோலைக்கிளியைப் பொறுத்தவரை மானுடர்களை இரட்சிக்கிற அம்சம் போரில் ஏதுமில்லை; ஏனெனில் “யுத்தகாலத்து அந்தி வானத்தில்” பூக்கள் பூப்பதில்லை. “மண்ணில் நடக்கும் அக்கிரமம் வானத்துக்குத் தொற்றியது”. அந்த வான்கூட படைவீரனின் “உடுப்பின் நிறத்தில் மாறிஇருக்கிறது”. அந்த வானத்தில் “ஓடாமல் உசும்பாமல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் கிடக்கிறது நிலா", “நாயேறி நிற்கும்” அந்த நிலாவின் ஒளியில் வானம் “பூதங்களை இறக்கும்”. மேகங்கள் தொப்பியணிந்து உலாவர, காற்றுக்கும் கூட “இரவு மகாராஜா”வின் தடையுத்தரவு. "இயற்கை செத்த” இக் கால இணைவில் “குருவிகள் வால் எரிந்து மரங்களில்” முனகும். “புறாக்கள் தோல் கறுத்துக் காணப்படும்”. இது “நஞ்சு பூசிச் சிரிக்கின்ற யுகம்”. இங்கு “அறையெங்கும் அரவங்கள், பூவுக்குள் கண்கொத்தி”.
போர், புறவாழ்வை மட்டுமல்ல, அகவாழ்வையும் அழிக்கிறது. நான்கு சுவர்களுக்குள்கூட ஒருவனால் முடங்கிக் கொள்ள முடிவ தில்லை. இங்கு ‘சுவர்கள் நடக்கும்'; எழுந்து ஓட முயன்றாலோ "வாசல் உதைக்கும்'; அவன் கோழிமுட்டைக்குள் ஒளிந்து கொள்ளவும் சிறு பூச்சியின் மூச்சுக்குள் புகலிடம் தேடவும் முயலுவான். ‘எறும்பின் வயிற்றுக்குள் போயிருந்து வாழ்வதற்கும்’ அவன் விரும்புவான்.

காதலுக்கு இங்கே இடமேது? "போரில் பிழைத்த பூவின்மூலம் காதலிக்குத் துாதுசொல்லியனுப்ப கவிஞன் விரும்பலாம். ஆனால் அது சாத்தியமாகுமா ? - மரணம் சுவாசித்த காலத்தில், "ஒரு பல்லி இலகுவாய் இழுத்துப் போய்விடும் அளவுக்கே அவனிடம் பலம் எஞ்சியுள்ளபோது! காற்றைக் கேட்டால் அது "யுத்தத்தில் பெருவிரல் கருகி நொண்டிக் கொண்டிருக்கிறது. மேகங்களுங்கூட காதலியின் கூந்தலை ஒருமுறைகூட விரித்துக் காட்ட இயலாத வையாய் 'மழை இறுகி முகம் பிதுங்க" தப்பித்தோம் பிழைத்தோ மென்றிருக்கும்.
பாசத்திற்கும் பரிவுக்கும் இங்கு இடமில்லை. தென்னை மரத்தைப் பனைமரம் காவு கேட்கும் காலமிது. நுங்கு தள்ளிய பனைமரமானாலும் தென்னையின் 'பழுக்காத ஒலையையும்’ பிய்த்துப் பிறாண்டவே விரும்புகிறது. உலகில் "தேங்காயே இருக்கக்கூடாது' என்கிறது.
கருணைக்கு இது காலமில்லைதான். ‘அற்பர்களின் கோடை யில் தெள்ளும் ஈரும் தம் சிலைகளை நட்டு பிறர் அவற்றை வணங்கும்படி நிர்ப்பந்திக்கும் : எறும்பைக் கண்டாலும் எழுந்து நிற்கும்படி வற்புறுத்தும்; அவர்களது இரவையும் பகலையும் புழுக்களே நிர்ணயிக்கும். இங்கு ஒருவனது மண்டையே பிணக் காடாகும். உயிர் உடலைத் துறந்து மூலையில் "முண்டமாய்த் திரியும்". அப்போது இரண்டு கையிலும் தங்கள் முக்ங்களைத் துாக்கி வந்தவர் துயர் போக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மனத்தை வதைக்கும்.
இந்த அசாதாரணமான நிலைமையில் சாதாரணமானவனாக இருப்பது மிக அசாதாரணமானது. அரசவைக் கவிஞனாக இருப்பதும் எதிர்ப்புப் படையின் துந்துபி முழக்கியாக இருப்பதும் கடினமானதல்ல. இரண்டிலுமே சொந்தக் குரலில் பாட முடியாது.

Page 5
யெஸினின் கூறினானே -
உங்களுக்கு நான் ஒரு கூடண்டுப் பறவை அல்ல நானொரு கவிஞன்
இரவல் குரலில் மாடும் கூண்டுக் கிளிகள் வெறும் கிலுகிலுப்பு ஓசை, ஒரு தஙயரச் சிரிப்பு
என்று ;
முக்கியமானது : உன் வழியில் பாடுவது தவளையாக இருந்தாலும்சரி, கத்து
என்று.
அதுபோலவே நமது கவிஞனும் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறான் :
ஒவ்வொரு இரவும் இப்படி சூரியன் மறையும் மேற்குத் திசையாய் உன் கண்மாறிப் போனாலும் போலிகள்போல் மாறாதே
உணர்மையாய் நேர்மையாய் தனித்துவமாய்
சிந்தி
சூரியனின் மலமாவது சேரும் இந்த உலகிற்குப் பசனையிட, ஒளிமுளைக்க!
பரந்து விரிந்த உலகிலிருந்து தனிமைப்பட்டு, வாழ்வும் செயலும் மண்டைக்குள்ளேயே சுழலும் நிகழ்வுகளாகி, காகங்களும் எருமை களும் நெஞ்சுக்குள் புகுந்து மனம் அவதியுறச் செய்கையில் கவிஞனால் இப்படித்தான் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள முடிகிறது.
இந்த நுாற்றாண்டின் போரின் விகாரங்கள் கவிதைகளாய் எழுதப் படுவது அப்படியொன்றும் புதினமல்ல. முதலாம் உலகப் போரின்
iv

பதுங்கு குழிகளில் மானுடம் புதைக் கப்பட்டது குறித்து பாடியிருக்கிறார் ஸ்க்ஃப்ரீட் ஸாஸுன். போருக்குப் பிந்திய உலகம் முழுவதையுமே 'பாழ்நிலமாக கண்டார் டி.எஸ்.இலியட். அவரது நெடுங் கவிதை முதலாம் உலகப்போர் அழித்த ஐரோப்பியப் பண்பாட்டிற்கு, ஐரோப்பிய மரபிற்கு எழுதப்பட்ட இரங்கற்பா. அத்தகைய பேரழிவிற்குப் பின் கவிஞனால் தன் மரபை முழுமை யாக மீட்டெடுக்க முடியாது; தன்னை ஓர் இலக்கிய மரபோடு அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது; பார்வையிழந்த தீர்க்க தரிசியாக -யாராலும் பொருட்படுத்தப்படாத, யாராலும் நம்பப்படாத தீர்க்கதரிசியாக மட்டுமே- கவிஞன் இனி வாழவேண்டியிருக்கும் என்ற முடிவுக்கு வந்த இலியட்டின் கற்பனைத்திறனுக்கு, சொல்லழகிற்கு, கவிதா நேர்த்திக்கு ‘பாழ்நிலம் சாகாவரம் பெற்றதொரு சாட்சியம். இந்தப் பாழ்நிலத்தில் யாருக்கும் "மீட்பு இல்லை; இரட்சிப்பு இல்லை.
இரண்டாம் உலகப்போரில் நாஜிகளுக்குப் பலியான போலந்திலே கவிஞன் ஸ்வோலாஸ்கி எழுதினார் :
காடுகள் பற்றியெரியும்போது ரோஜாக்களுக்காக வருத்தப்பட நேரமேத.
நாஜிசம் இழைத்த கொடுமைகளுக்கும் கொடூரங்களுக்கும் பிறகு - ஒளவுத்விட்சுக்குப் பிறகு- ‘இனி கவிதை ஏதும் இருக்க முடியாது’ என்ற அதீத முடிவுக்கு வந்துசேர்ந்தார் தியோடோர் அடோர்னோ. ஆனால் கவிதை இறந்துவிடவில்லை. நம்பிக்கை வறட்சியை விதைப்பதில் போரால் முற்றாக வெற்றிகொள்ள முடியவில்லை -குறைந்தபட்சம் ஐரோப்பாவின் மற்றொரு பகுதியில்; ஐரோப்பாவையும் மானுடத்தையும் நாஜிகளிடமிருந்து விடுவிக்க மாபெரும் விலைகொடுத்த ரஷ்யர்களின் தேசத்தில், பாஸ்டர்நாக் எழுதினார் :

Page 6
“போர் என்பது சதுரங்க ஆட்டமல்ல. வெள்ளைக் காய்கள் கறுப்புக் காய்களை வெற்றிகொள்வது போன்றதல்ல. போரிலிருந்து வேறு விஷயங்கள் வந்தாக வேண்டும். இத்தனை தியாகங்கள் வீணாகிப் போய்விடா.புதியது ஏதோ பிறந்தாக வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம், மனித குலத்திற்குத் தனது மதிப்புப் பற்றிய உணர்வு பிறந்தாக வேண்டும்."
அழகும் மண்பும் நிறைந்த நம்பிக்கை! ஆனால் ரஷ்யாவிலும்சரி, உலகின் பிற பகுதிகளிலும்சரி - யதார்த்தமோ..?
ஆக்கிரமிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக நடந்த போர்களில் - உள்நாட்டுப் போர்களில் - அந்தந்தத் தருணங்களில் நாம் தரிசித்துவந்த ‘விரிந்த அழகுகள், காலம் ஏற்படுத்திய இடைவெளிக்குப் பிறகு பின்னோக்கிப் பார்க்கையில், தமக்குள்ளே ஒளித்துவைத்திருந்த விகாரங்களை வெளிப்படுத்தி நமக்குக் கொக்காணி காட்டிச் சிரிக்கின்றன. அன்று துப்பாக்கிக் குழாயிலிருந்து கவிதைகள் வெடித்தன -பிறக்கப்போகும் அரசியலதி காரத்திற்குக் கட்டியம் கூறியபடி. அதிகாரம் வந்ததும் சில கவிதைகளே துப்பாக்கிகளாக மாறின; அல்லது குண்டுகளுக்கு இலக்காகின. புரட்சிகளுக்கும் இலக்கியங்களுக்குமிடையே இப்படியும் சில உறவுகள் இருந்துவந்துள்ளன. இன்று இனத்துவம், இனவிடுதலை, இனத்துாய்மை என்ற பெயர்களால் - மத, மொழி, பண்பாட்டு, மரபின அடையாளங்களை முன்னிறுத்தி - போர்கள் நடத்தப்படும் நாடுகள் பெரும்பாலானவற்றில் துப்பாக்கிக் குழாய் களிலிருந்து பிறக்கும் கவிதைகளைவிட, மரணக் குறிப்புகளாகவும், இரங்கற்பாக்களாகவும் வெளிப்படும் கவிதைகளே கூடுதலான முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. ஒருவரின் இனவிடுதலை, இனத்துவ அடையாளம் என்ற பெயரால் நடத்தப்படும் போர்களில் பல அவரோடு நீண்ட நெடுங்காலமாய் வாழ்ந்துவந்த பிறரின், சிறுபான்மையினரின் அடையாளங்களை ஒடுக்குவதாய், பெண்களின் உரிமையை நசுக்குவதாய், செயற்கையான கட்டுப்பாடுகளை
W

மறைநுால்களின் பெயரால் திணிப்பதாய், மாற்றுக் கருத்து களுடையோர்மீது சகியாமை காட்டுவதாய், தான் விரும்பும் ஒற்றை வார்ப்பிலேயே அதை விரும்புபவர்கள், விரும்பாதவர்கள் ஆகிய அனைவரையும் வார்த்தெடுக்கத் தீர்மானித்துக் கொண்டவையாய் உள்ளன. எந்த எதிரியின் சகியாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகத் தொடங்கப்பட்டனவோ அந்த எதிரியின் அத்தனை விழுமியங்களையும் துாக்கிச் சுமப்பவையாகிவிட்டன.
இத்தகைய போர்களிலே சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் நடத்தும் வன்முறைகள் மக்களை ஒரேயடியாக அழித்துவிடக் கூடிய மாபெரும் யுத்தங்களல்ல. தொழில்நுட்ப வல்லமை கொண்டு, தரையில் இறங்காமல் வானத்திலிருந்தே ஈராக்கைப் பணியவைத்த அதிநவீனப் போர்களுமல்ல. இந்த உள்நாட்டுப் போர்கள் மனித உடலுக்குள் தோன்றியுள்ள புற்றுநோய்போல் கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயத்தின் அவயங்களை, அமைப்பை, மையத்தை அரித்தும் அழித்தும் வருபவை.
எங்கிருந்தோ ஒரு குண்டு சீறிப்பாயும். தனது விதி பற்றி எதுவுமே தெரியாத ஒரு இளஞ் சிறுமி சாலையில் நடந்து வருகையில் அக் குண்டு அவளது உடலைத் துளைத்துச் செல்லும். தந்தையோ தாயோ அல்லது ஒரு வழிப்போக்கனோ அந்த உடலைத் துாக்கிச் செல்ல, வீடியோக் கமராக்கள் பின்தொடரும். நமக்கோ, நிகழ்ச்சி நடக்கும்போதே உடனுக்குடன் ஒளிபரப்பு அன்றாடப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்போல பியி.சி சி.என்.என். என அடுத்தடுத்த போர்க் காட்சிகள். நமது மனங்களும் மரத்துப்போய், மரணக் காடுகளைக் கண்டு பெருமூச்செறிவதுகூட நின்றுபோய்விடுகிறது.
எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப் புறப்படும் இளைஞர்படை, வேற்றினக் கிழவிகளைக் குத்திக் கிழிக்கிறது;
vii

Page 7
பச்சிளம் பாலகர்களை வெட்டித் துண்டாக்குகிறது. வரிசை வரிசை யாய்ப் பிணக் காட்சிகள். அடிவானம்வரை வெண்ணிற சமாதிகள். தொடர்ந்து நிகழும் மரணங்கள். காய்கறிக் கடைக்கோ மளிகைக் கடைக்கோ இயல்பாகச் சென்றுவரும் பெண்கள். உடைந்து ஒழுகும் குழாய்களிலிருந்து நீர்பிடிக்கும் பாட்டியர். ஆண்களே இல்லாத இல்லங்கள். புலம்பெயர்ந்தோரின் புலம்பல்கள். அகதி முகாம்கள். ஏகே47 உடன் உலாவரும் சிறுவர்கள்-அவர்கள் குல்லாய் அணிந்திரு க்கலாம், லுங்கி கட்டிக் கொண்டிருக்கலாம், மலையிடுக்குகளில் ஒளிந்திருக்கலாம். இளம் பெண்களுமிருப்பர்- ஆண் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்பட்டு. “ஆண்மையை பெண்ணில் தாங்கியபடி; பெண்மைக்கு ஆணுடை அணிந்தபடி,
சோலைக்கிளி இந்த யதார்த்தத்திற்கு அடிபணிய மறுப்பவர். மானுட குலத்தின் ஒருமையைப் போற்றுபவர். அவருக்கு மொழி, இன, மதம் ஆகிய எல்லாமே மனிதரைச் செயற்கையாகப் பிரிக்கும் கற்பனைக் கோடுகள். அவர் கண்டனம் செய்வது யாரையும், எந்த ஒரு இயக்கத்தையும் குறிப்பிட்டு அல்ல. மாறாக, நிழற்கோடுகள் கிழிப்பவர்கள் எல்லோரையும்தான் :
நிலவுக்கு வேலியிடு சூரியனையும் பங்குபோட்டுப் பகிர்ந்துகொள் வெள்ளிகளை எண்ணு இனவிகிதாசாரப்படி பிரி நாகரீக யுகத்து மனிதர்கள் நாம்
கடலை அளந்து எடு வானத்தைப் பிளந்த தண்டாடு சமயம் வந்தால் காற்றைக் கடத்த
viii

எறம்புக்கும்
இனமுத்திரை இடு மரத்திற்குக்கூட சாதி சமயத்தைப் புகட்டு புறா முக்கட்டும் இன்னொரு இனத்தை நகைத்த
இந்த யதார்த்தத்திலிருந்து தனக்கொரு ‘மீட்பு’, ‘இரட்சிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு. இதனை பல நிலைகளில் சாதிக்க முயல்கிறார்.
தனக்கு வெளியேயும் உள்ளேயும் உள்ள விலங்குகளுக்கு முகங்கொடுத்தல்; அவற்றைக் கடந்து வருதல். மனிதர்கள் விலங்காகிவிட்டதால், விலங்குகளில் மானுடத்துவத்தைக் கண்டறிதல் அல்லது விலங்குகளை மானுடத்தன்மை பொருந்தியவர்களாக்குதல் :
அருமை! அற்புதம்!
அழகு! ஒரு நாயின் தோளில் ஒரு காகம் பயணம்! இந்த மனிதன் வெட்கப்பட வேண்டும், *மனிதம் இவைகளிடம் இருக்கிறது. பொருந்தமுடியாத இரு ஜீவராசிகள் பொருந்திக் கொண்ட வியப்பில், சேவலுடன் கூடிவிட்டு குளிக்கமுடியாமல் நீரின்றி
இருந்த குருவி ஆனந்தக் கண்ணிர்விட்டே அதனை நீராட்டிக் கொள்கிறது.
іх

Page 8
தன்னையே பேரண்டத்தளவிற்கு விரிந்துகொள்ளச் செய்தல் :
என் நாண்"
எனக்கு மிகவும் சிறிதென்று
நான் உணர்கிறேன் என்றும்,
எனது பெரும் விழிகள்
எல்லோருக்கும் திறந்துவிடப்பட்ட கோவில் கதவுகள் மக்கள் ~
நேசிக்கப்பட்டவர்
நேசிக்கப்படாதோர்
தெரிந்தவர்
தெரியாதோர்
எல்லாம்
66 ஆன்மாவிற்குள் புகுகின்றனர்
முடிவில்லாத ஊர்வலமாய்.
என்றும் பாடிய மயகோவ்ஸ்கியின் மனநிலைக்குத் தன்னை உயர்த்துதல் :
பறக்கின்ற பூவின் அழகு வரும்
நிலா எனக்குள் பயிர் செய்யும், அது நீர் இறைக்கும்
வாய்க்காலில்
வெள்ளி மீன்கள் சினை பீச்சி
பொரித்த
கோடிக்கணக்கில் துள்ளும், என்னை -
பொறாமையின்றி
இந்த வாழ்க்கையிலே எழுதினால்
நாம் திறந்து
கொட்டமுடியாத பொருளா
நமது நெஞ்சு

கடல் கறுப்பாகிப் போகும் அளவுக்கு நெஞ்சில் உள்ள அசிங்கத்தையெல்லாம் அதிலே கொட்டிவிட்டு நடந்தால் பறக்கின்ற பூவின் அழகு வரும். அதனால்தான் விங்கிப் பெருத்த நானை' கொண்டிருக்கும் நண்பனுக்கு கவிஞர் வேண்டுகோள் விடுக்கின்றார் :
உனது "நாண்" ஓங்கிநின்றது மலையாய்! தேயிலை நடுவதற்கு மிகச் சிறந்த இடம் உனது "நாண்"
உனது நானில் ஓர் அருவியும் ஓடினால் மிக அழகாக இருக்கும்
மேகங்கள் உண் நானில் இனி தவழ்ந்து விளையாடட்டும்
நணர்ய, உனது நானில்
சிலர்
வீடுகட்ட வருவார்கள் மிகவும் அடிவாரத்தில் கட்டிக்கொள்ள வைக்காதே அவர்களை.
உனது நான் சரிந்தால் அவர்கள் அழிவர் இல்லையா!
கவிதைத் தொழிலை இடையறாது செய்தலின் மூலமும் கவிஞர் தான் எதிர்கொள்ளும் யதார்த்தத்தைக் கடந்து செல்ல முயல்கின்றார். ‘எருமை மாடும் மிக இனிமையாய்ப் பாடி தவளைக்கும் குயில்தன்மை கொடுக்கும் மண்ணைச் சேர்ந்தவர் அவர். 'கவிஞர் பலர் வந்து கட்டி, கூரைக்கு தமிழெழுத்தால் ஒடுவேய்ந்த அவரது வீடு பாழடைந்து 'அழுக்குமனை யாக
xi

Page 9
மாறிவிட்டாலும் ஒவ்வொரு இரவும் கவிதை எழுதவேண்டும்’ என்பது அவரது சங்கற்பம் :
ஒவ்வொரு இரவும் எழுதவேண்டும்
கவிதை
நான் குதிரையிலே பறக்க வேண்டும்
நீச்சல் குளத்தில்
விரிந்திருக்கும் ஒரு பூவாய் நானும் விரிந்து
எண்ணில் வண்டு குந்த, மனம்
குளிரவேண்டும்.
வெண்கொக்கின் தோகையைப்போல் எனக்கும்
6 facssoa.
ஒவ்வொரு இரவும்
முளைக்க வேண்டும்
அதிலே பல பெண்கள் ஊஞ்சல் ஆடி
என் மீசையைப் பிடித்துக் குதிக்க
களைப்பாற வந்து இருக்க வேண்டும் என் இதயத்துள்.
கவிதை எழுதாத இரவே
இனி எனக்கு வராதே!
கவிதைத் தொழில் புரிபவனுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும். யாருடைய விருப்பத்தையும் முழக்கத்தையும் விமர்சனத்தையும் பொருட்படுத்துவதல்ல அவன் வேலை :
நச்சுமரம்
அப்படித்தான் துப்பும் நீ கவலைப்படக்கூடாது கவிஞனாய் ஓர் அணிலிருந்தால்கடட உறுதியுடன் பழங்கடிக்கும் அந்த மரத்திலேயே
அந்த மரத்திற்கே
f sq.
போதையூட்டி இலைகள் உதிரவைக்கும்
xii

ஒகு மூன்ற கோட்டு அணிலைவிடவா
முள்ளந்தண்டுள்ள கவிஞன் பலயினம்
கவிதை, இயற்கைக்கும் கூட அழகு சேர்ப்பதால்தான் கவிஞருக்கு அது அத்தனை முக்கியமானதாகிறது :
ஒரு கவிதை பறந்துவந்த பூமரத்தில் குந்தி இன்று காலையிலும் எதையோ சொன்னது கொஞ்சம் அழகாகத்தான் பூமரம், தன்னை சோடித்துக் கொண்டு நின்றத.
கவிதை சிறு கவிதை ஆனாலும் அழகு பூமரத்தில் நின்றால் இரண்டிற்கும் புத்துணர்ச்சி
இயற்கையோடு ஒன்றுதலில் , இயற்கையைத் தன் தோழனாக்குவதில், அதற்கு மனிதக் காலும் கையும் வைத்துப் பார்ப்பதில் கவிஞருக்கு ஒரு மீட்புநிலை கிடைக்கிறது. நெட்டி முறித்துக்கொண்டு விடியும் காலைப் பொழுதும், ஒரு கோப்பி குடித்துவிட்டு பீடியொன்று பற்றவைக்க விரும்பும் சூரியனும் அவரது தோழர்கள். இயற்கை இயற்கையாக இருப்பதற்கே போரும் மரணமும் தடைவிதித்துள்ளபோது, ‘ஒன்றும் வெடிக்காத ஒரு இரவில் நிலவு பால் வார்க்கையில் அதுவொன்றே அவருக்கு பேரானந்த தரிசனமாகிவிடுகிறது. தப்பிப் பிழைத்த இயற்கையில் அவர் புக, இயற்கையுமே அவரைத் தேடிக்கொண்டு வருகிறது. தென்னை மரங்கள் கடலை பாய்போல் சுருட்டித் தலையில் சுமந்துகொண்டு கவிஞரின் வீட்டிற்குக் கொண்டுவந்துவிடுகின்றன. அவரது மனக் கதவை உடைக்கின்றன பறவைகள், ‘கண்ணாடித் துாள்போல மனதின் கதவு தகர்ந்து கொட்டித்தான் விடுகிறது.
xiii

Page 10
இலைப் பச்சை நிறப் பறவை, நெத்தலிமீன், ‘பூக்குந்திப் பின்னெழுந்து, பூக்குந்திப் பின்னெழுந்து போகும் சிறு பூச்சி - இவை போதும் கவிஞர் தன் வாழ்க்கையை ஒட்டிவிட, இயற்கையோடு ஒன்றிவிட்டபிறகு மரணமேது :
இவனை நீங்கள் கொண்டுபோய் புதையாதீர்! மணல்கள் எழுத்துக்களாய் மாறும். இவன் சாவில் நீங்கள் இடுகின்ற ஒலங்கள் இனிய கீதங்களாய் மாறி காற்றோடு கலப்பதால் மாட்டுப்பாடித்தான் புயல்வரும் இனி
இவன் இனிப் பேசத் தேவையில்லை இவனுடைய பேச்சைக் கடலலைகள் பேசிடுதே!
இவனோ இதயத்தின் நரம்புகளால் கவிதை மழை
பொழிந்த
அந்த மழைக்குள்ளே தன் விதையைப் பயிரிட்டாண்
மணர்னெல்லாம் கவிதை உறைந்து கிடக்கிறது:
உயிர்க் கவிதை தடிக்கும், மணல் எழுத்தாகும்.
சோலைக்கிளி கையாளும் உவமைகளும் தட்டியெழுப்பும் காட்சிப் படிமங்களும் அலாதியானவை :
இலைப் பச்சைநிறப் பறவை நெத்தலி மீண் விட்ட கடதாசி பட்டம்போல் எண்னைத் தேடி அலைகளுக்கு மேலால் ஆடிப்பறந்திருக்கும்
யாரடா, இந்த அந்தி வானத்தில் சித்திரம் கீறியது? பட்டும் படாமலும் நாய் நக்கிய விதமாக
Χίν

எழுதுவதற்கு ஒன்றாமில்லை ரொட்டி சுட்ட ஒடு நெருப்பில் கிடந்து காய்வதைப்போல மணத்துடன் கிடக்கிறது
மனம்,
எனினும் அவர் ஒரு இயற்கைக் கவிஞர் அல்ல; வட்டார மணமிருந்தும் ‘வட்டாரக் கவிஞர் அல்ல. அவரது நுண்ணுணர்வு கள் மிக நவீனமானவை. நவீனத்துவம் சார்ந்தவை. அவற்றைச் சாத்தியப்படுத்துபவை இன்று இலங்கைத் தமிழர்களின் வாழ்விலுள்ள உக்கிரமான போர் அனுபவங்கள், சகியாமை பேய்ச் சூழல். ஆனால் அந்தத் தனிப்பட்ட, குறிப்பிட்ட அனுபவங்களை உலகு தழுவியதாக்குவதுதான் அவரிடமுள்ள ரசவித்தை.
சென்னை - எஸ்.வி.ராஜதுரை 11.9.1995 வ.கீதா
XV

Page 11
மொழிகள்
1. நவீன தமிழ் அப்பம் . 4 2. வண்டு வணங்கிகள் . 6
3. எனது கவிஞனுக்குச் செதுக்கியது . 8
4. விஷர்நாய்க்குப் பூத்த புன்னகை . 10 5. நண்பரின் ‘நான்’
12 ܘܙܘ.
6. மேற்குத் திசையான என் கண் . 14
16 .ܚ... ܐܶ&ܗ݇ܣܛ .7
8. காக்கை நாய்ச் சவாரி . 18
9. பல் முளைத்த பனை . 20 10. கல்லில் நட்ட கிராமம் . 22
11. நாய் நக்கிய தெரு . 24
12. மூடப்படும் கடற்கரைப் படைவீடு . 26 13. போரில் பிழைத்த, . 28
14. எனது இனத்துப் பேனையால் அழுதது . 30
15.
மிக நவீன ஈழத்துக் கனவு . 32 ቋ 16. நாட்டுக் காட்டில் குறையாய்க் கேட்ட மனிதனின் சத்தம் . 34
17. பாம்பு பாம்பு பாம்பு . 36
18. கர்ப்பிணிப் பெண்களைக் கண்ட தினம் . 38 19. பென் குலிக்கும் அறை . 40 20. கோழிமுட்டைக் கோது விதி . 42
21. பல்லில் ஒட்டிய பொய் . 44
22. நஞ்சு பூசிச் சிரிக்கின்ற யுகத்தில் . 46 23. என் பிரியமுள்ள உனக்கு . 48 24. பனியில் மொழி எழுதி . 50
25. மனதை உடைத்த வெண் வண்ணாத்தி . 52

26. தோல் கறுத்த புறா . 54
27 அரை அங்குலமாய் பூனை பூச்சியாய் நான் . 56 28. நெட்டி முறித்த காலை . 58
29.
இளந்தாரி வெயில் . 60
30. இதயமுள்ள பிரிய தென்னைகள் . 62
31.
ஆடு கார்வதைப் போன்ற ஓவிய அந்தி . 64 32. இரத்தம் மினுக்கும் பொன்மாலைப் பொழுது . 66
33. மனதுக்குள் மரம் விழுந்த ஒரு மாலைப்பொழுது . 68
34. மரங்கள் காய்ப்பதைப்போன்ற இரவு . 70
35. பூதங்கள் இறங்கிய இரவு . 72 36. நகம் உரசும் வட்ட நிலா . 74
37. இன்றிரவு கட்டிலுடன் . 76
38. சுவர்கள் நடந்துவரும் அறை . 78
39. விரால்மீன் துள்ளாத குளம் . 80
40. குடைபிடித்துப் பாய்கின்ற இரத்தம் . 82 41. என் காதலை அவியவைத்து அழித்த பேய்மழை . 84
42. என்னை வாழ்க்கையில் எழுதும் செய்தியொன்று . 86
43. நெஞ்சங்களைப் பகிர்ந்த மழை . 88
44. தலைக்கிறுக்குப் புல் . 90
45.
ஆட்டுக்குட்டிக்கு அஞ்சலி . 92 46. பூத்தல் . 94 47. தோணி ஆடும் பாட்டு . 96 48. படைபோன பிறகு கண்ட என் அலரிமர மாமி . 98 49. தமிழ் எழுத்து ஓட்டு வீடு . 100 50. அவள் கூந்தலில் சூடிய தென்னாபிரிக்கக் காற்று . 102 51. பிள்ளைத்தாய்ச்சிக் கவிஞன் . 104
52. எனக்கான இரங்கற்பா . 106

Page 12
உயிரற்ற ஜடப்பொருட்கள் உயிர்பெற்று என்னோடு பேசத் தொடங்கியிருக்கின்ற இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்தத் தொகுதி வெளிவருகின்றது. இது என் ஆறாவது தொகுதி ஏற்கனவே; நானும் ஒரு பூனை, எட்டாவது நரகம், கரகம் கலைத்த கனவு, ஆணிவேர் அறந்த நார்ை, பார்பு நரம்பு மனிதனர் என்று ஐந்து தொகுதிகள்
வெளியாகிவிட்டன.
இயற்கைகளைப் புசித்து கவிதைகளோடு தினமும் ஐக்கியப்பட்டுப் போகின்ற ஒருவனுக்கு உலகில் உயிரற்ற பொருட்கள் என்று எதுவும் இருக்க முடியாது.
கல்லுக்கும் கண்ணும் மூக்கும் வாயும் ஆத்மாவும் இருப்பதை நானும் இப்போதுதான் காண்கிறேன். மண்ணுக்குள் மணமும், மனமும், இருப்பதைப்போல் இரத்தமும் ஓடுகிறது.
எண்னுரை
இப்படியான புரிதல்கள் வந்த பின்னர் நான் ஒன்றை உணர்கிறேன். அதுதான் ; உலகிலுள்ள எந்தப் பொருட்களின் ஆத்மாவின் குரலும், மொழியும் எனக்கும் விளங்கிப்போகிறது.
இல்லையென்றால், தோணியும் தோணியும் காதல் செய்வதைப் பற்றி நானிங்கு எழுதியிருக்க முடியாது. அஃறிணைப் பொருட்களெல்லாம் ஒரு கவிஞனுக்கு காலக்கிரமத்தில் உயர்திணைகளாக மாறுவது தவிர்க்க முடியாது. ஏனென்றால்; பாசமும், நேசமும் நிறைந்த ஒரு மனிதனாக கவிஞன் பூமிக்கும் இந்த வானத்திற்கும் இடையில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அஃறிணை வேறு உயர்தினை வேறு என்று அவனால் பிரிக்கமுடியாது. எந்தப் பொருட்களையுமே அவன் இந்த உயரிய உயிருள்ள ஸ்தானத்தில் வைக்கத்தொடங்குவான்.

சூரியனைத் துாக்கி தன் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு ஒரு கவிஞன் திரிவது இதனால்தான் சாத்தியமாகிறது. வண்ணத்துப் பூச்சி அவனுக்கு வாகனமாகிப்போவதும் இதனால்தான். முழு உலகமுமே ஓர் உயிருள்ள பண்டமாக அவன் அனுபவிக்கத் தொடங்கத் தொடங்க, அவன் வேறு, பிற வேறு என்று அவனால் பிரித்துப்பார்க்க முடியாததாகி
விடுகிறது.
இந்தப் பணியில் சிமாழி விழுதி வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர்கள், (சுவிஸ்) புகலிட நண்பர்கள் ; வெளியிடுவது விடியல் பதிப்பகம்.
அவர்களும், இத் தொகுதியோடு சம்மந்தப்பட்ட அனைவரும், குறிப்பாக இதை கைப்பிரதியெடுப்பதில் எனக்கு உதவிய நண்பர்கள் ஏ.எம்.றஸ்மி, வஃபா பாறுாக் என்போரும் என் இரத்தத்தில் எழுதப்பட்டவர்கள்.
எங்கும் பிரச்சினைதான் ன்ன்ன செய்வது, எல்லோரும் சந்தோசமாக இருங்கள். நாம் நினைப்பதுபோல் அவ்வளவு கெதியில் இந்த உலகம் சாகாது. அதன் ஆவி நமது இரவுகளில் வந்து பல்லை நீட்டிப் մաԱՔԱ):ՖՖոՖl.
அன்புடன் பணியில் மொழி எழுதி,
சோலைக்கினி 374, செயிலான் வீதி கல்முனை ~04 நான் இலங்கையா.
0.07. 1995

Page 13
W Lasiusep Ghangs sugge
சோலைக்கிளி
\
நவீன தமிழ் அப்பம்
உடம்பெல்லாம் எங்களுக்கு
சக்கரங்கள் முளைத்த தினம்
அன்று!
பொன்வண்டின் குணம்கூடி பூ மொய்க்கும் தனத்தோடு
இந்த உலகிற்கு அப்பாலும் போகின்ற வேகமுடன்
தவழ்ந்தோம்
தவழ்ந்தோம்
ஒன்று. இரண்டு. மூன்று.
சிறு மிட்டாய் உண்பதற்குள் ; கடந்த துாரம் அதிகம்!
மனிதனென்றால் :
இருநாள் எடுக்கும் பயணம்!
புரிகிறதா, இப்படிச் சொன்னால் புரியாது உங்களுக்கு போங்கள்!

நீங்கள் புளித்த கவிதை உண்ட ஜீவன்கள்! தமிழில்
நவீன கவிதை அப்பம் தந்தால், விரைவில் விளங்காது, உங்களுக்கு இனிக்காது!
நாங்கள் சைக்கிளில் நெடுந்துாரம் போன கதையைத்தான் சொல்லுகிறேன் கேளுங்கள் ;
என்னோடு இருவர் இருவருக்கும் இரு சைக்கிள்.
மிதி வண்டி,
ஆம் !
எனக்கும் ஒரு வண்டி. தவழ்ந்தோம் தவழ்ந்தோம் இன்பம் பெருங்காடாய் தலை உச்சியிலும் விளைய.
நீங்கள் சந்திரனில் கல்பொறுக்கி கொண்டுவந்து வீடுகட்ட பூ மொய்க்கும் தனத்தோடு சைக்கிளிலே போங்கள் ; ஒரு மிட்டாய் உண்பதற்குள், நடக்கும்! உங்கள் பல்லும் உருளும், தேன் காற்றுவந்து உருட்டி.
31.7.1994

Page 14
\ La sullaù fius
சோலைக்கிளி
\
வண்ரு வணங்கிகள்
நான், கோயிலுக்குப் போகவேண்டும் ஊத்தை வண்டை வணங்க. என் தலை எழுத்து இது! வெறும் கரித்துண்டால் எழுதப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறது.
தவளையை தோளில் வைத்துக்கொண்டு திரியட்டாம் இன்றைய சமூக விதி
அப்படிச் சொல்கிறது.
எறும்பைக் கண்டால்
நான் எழுந்து நிற்க வேண்டும். அதைப் பகைத்துக்கொண்டால், எனது உணவு வாசல்கள் அடைக்கப்படும்.

ஊரில்
வெயில் இல்லாத அற்பர்களின் கோடை இறைக்கிறது. புழுதான் சொல்கிறது, இரவையும் பகலையும் நாங்களே நிர்ணயிக்கிறோம் என்று.
இங்கு வணக்கஸ்தலங்களில் உள்ள தெய்வங்கள் எல்லாம் சோறும் கஞ்சியும் வழங்கப்படாத V− சிறையில் உள்ளன.
பல்லியும் பூச்சியும்
ஏன் ; தெள்ளும் ஈரும்தான் தமது சிலைகளைத் தாங்களே நட்டு வணங்கச் சொல்லுகின்றன எம்மை.
என் பயிர் வாடுகிறது ;
மழை வேண்டும், முதலையைப் பிரார்த்திக்கப்போகிறேன்; வழியில் பூனை இல்லையே, நல்ல சகுனம்தான்!
06.1.1992

Page 15
\ uasluað Ghong sugg
சோலைக்கிளி
\
எனது கவிஞனுக்குச் சிசதுக்கியது
[běĉjo LIDIJLb அப்படித்தான் துப்பும் நீ கவலைப்படக்கூடாது.
கவிஞனாய் ஓர் அணிலிருந்தால்கூட உறுதியுடன் பழங்கடிக்கும், அந்த மரத்திலேயே,
அந்த மரத்திற்கே
LifItջ, போதையூட்டி இலைகள் உதிரவைக்கும்.

62([b
மூன்று கோட்டு
அணிலை விடவா முள்ளந்தண்டுள்ள கவிஞன் பலயினம்! அவன் ‘அப்படிச் சொன்னதற்காக: தலையை முழங்காலில்
முழங்காலைக் கழுத்தில்,
தொப்புளைக் குதியில்
விதையில் குதியை, இடம்மாற்றிக்கொண்டா நீ உருக்குலைந்து போவது!
வை கவிஞனே தலையை தலையுள்ள இடத்திலேயே. தொப்புளையும் அப்படிச் செய்.
குதியை முழங்காலை
விதையை அனைத்தையுமே அவை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு மீண்டும் பாடு நிலம்மலர!
கவிஞனுக்கு நஞ்சு
ஏறியதாய், உயிர்குடித்து அவன் மாண்ட சங்கதிகள் உலகத்தில் ஒன்றுமில்லை. வேண்டுமென்றால் அந்த அணிலைக்கேள் கூறும் கொய்யாமரப் புலவனது,
நெடுநாளாய்.
20.1.1995
9

Page 16
\ Lafulaj6ìnnự16igg'
சோலைக்கிளி
\
விஷர்நாய்க்குப் பூத்த புண்ணகை
பிடித்துப், பொத்தி எறி நான் உனக்குப் பூத்த புன்னகையை எனக்கு.
நான் என்பாட்டில் போயிருக்கலாம். உன் முகத்தைப் பார்த்து நான் பூத்த நகையை நுளம்புக்கும் கொசுவுக்கும் பூத்துக் காட்டியிருக்கலாம்.
சரி, என் புன்னகையைச் சிதைத்து என் முகத்தில் வீசு. நீ மனதுக்குள் வளர்க்கும் விஷர்நாய்க்கு நான் மிட்டாய்போட்டு உறவாக்கிக் கொள்ள நினைத்தது தவறேதான், எறி
என் புன்னகையை நான் மீண்டும் சப்பி விழுங்கிக் கொள்கிறேன்.

உன்னைக் கண்டால்
நான் இனி
எட்ட நடந்து கொள்கிறேன். உன்னைப் பார்த்து
என் பூவைப் பூக்காமல் தோளில் என்முகத்தைச் சுமந்தபடி நான்தான் போகிறேன்.
உன் இதயத்தின் இரத்தத்தின் நிறமோ கறுப்பு!
அதை நான்
எப்படிச் சிவப்பாக்குவது ? சரி, உன் பல்லின் ஒட்டறையை இனி நான்
பார்க்க விரும்பவில்லை. இன்று நீ சிதைத்த என் புன்னகையின் துயரத்தால் மழையில் நனைந்த காகம் கொடுகுவது மாதிரி
கொடுகுகிறேன். ஒரு பட்ட மரத்தின் கிளையில் குந்தி இருந்து
அழுகிறேன். உன் விஷர்நாய் மகிழட்டும்!
11
14.5.1992

Page 17
W பணியில் மொழி எழுதி
சோலைக்கிளி
W
நண்பரின் நாண்"
உனது ‘நான்’ ஓங்கி நின்றது LD60)6OuUTUů!
தேயிலை நடுவதற்கு மிகச் சிறந்த இடம் உனது ‘நான் உல்லாசப் பயணிகள் தங்கி உனது நானின் அழகை ரசிக்க, வசதி செய்தால் வருவர்; உனது நானுக்கு.

உனது நானில், ஓர் அருவியும் ஓடினால் மிக அழகாக இருக்குமே நண்ப! மிகக் குளிர்ப் பிரதேசமாக உன் நான் இருக்கட்டும்.
மேகங்கள், உன் நானில் இனி தவழ்ந்து விளையாடட்டும். பனிக் குருவிகள், ஆமாம் ; கண் கறுத்த சிவந்த பனிக் குருவிகள்,
உன் நானில் கூடுகட்டியும், கூடியும் புணர்ந்தும் கத்தித் திரியட்டும் நான் ரசிக்க.
நண்ப, உனது நானில்
ઈી6of
வீடுகட்ட வருவார்கள். மிகவும் அடிவாரத்தில் கட்டிக்கொள்ள வைக்காதே, அவர்களை. உனது நான் சரிந்தால்
அவர்கள்
அழிவர் இல்லையா!
21.9.1993

Page 18
W LaudaŮ Grong aggi
சோலைக்கிளி
W
மேற்குத் திசையான எண் கண்
இந்த உலகைப்பற்றி தனித்துச் சிந்திப்பவன் கண் மேற்குத் திசைதான்! சூரியன் அதற்குள்தான் மறையும்.
ஆய், எரிகிறது கண் கொண்டுவா, நீர் ஊற்று.
மண்டைக்குள் பல காகங்கள் கரைய மறைந்தது என் கண்ணுக்குள் சூரியன். ஆய், கருகி எரிகிறது இமை,
துாக்கமே இழந்துபோய், அந்தியில் மேய்ந்த எருமைகளும் வந்து நெஞ்சுக்குள் கிடக்க அவதிதான்!

இவ்வுலகில்
தனித்துச் சிந்திப்பவனே!
ஆம், எனக்கு
நானே சொல்லுகிறேன்; ஒவ்வொரு இரவும் இப்படி, சூரியன் மறையும் மேற்குத் திசையாய் உன் கண்மாறி, போனாலும் போலிகள்போல் மாறாதே. உன் கண்ணுக்குள் இரவெல்லாம் சூரியன் ஒளித்திருந்து இமைக்குள் மலங்கழித்து விடிந்தபின்பு சென்றாலும் உண்மையாய் நேர்மையாய் தனித்துவமாய்
சிந்தி.
சூரியனின் மலமாவது சேரும் இந்த உலகிற்குப் பசளையிட, ஒளி முளைக்க!
15
25.4.1994

Page 19
பணியில் மொழி எழுதி
சோலைக்கிளி
V
கண்
எனது கண் உருண்டுபோகிறது கடலுக்குள். விலகுங்கள் நண்டுகளே, விலகுங்கள் ; முட்டி
கோழி முட்டைபோல் உடைந்துபோகாமல் பத்திரமாய்ச் சேர.
பெருங்கடலே என் கண்ணை மீன் விழுங்கி அதன் வயிற்றுள் சமிப்பதற்கு முன்னர்
தக்க
நடவடிக்கை மேற்கொண்டு உன் இரகசிய அறையினிலே பூட்டு. முத்து விளைகின்ற பெட்டிக்குள் எனினும் அது இருக்க வழிசெய்.

பின்னொருநாள் அது வேண்டும் பெருங்கடலே, எனக்கு அது வேண்டும், அதற்குள்தான்
அவள் உள்ளாள்.
அதனாலும் ; நான் பூவுண்டு, இயற்கை அழகுண்டு பசியாறும் வழியாக
அது அமைந்த படியாலும் ; வேண்டும், அதுவேண்டும், என் கண்ணுண்டு பெருமீன் பாறைகளில் கழிக்காமல்
கடற்கன்னி உறங்கும்
குளிர் அறைக்குள் உள்ள
மெத்தைக்குக் கீழே என் கண்ணைக் கொஞ்சம் வை.
என் முகத்தில் அது இருக்க உலகம் தரமில்லை. ஒரு தரமான உலகத்தை தேடி எனது மனம் வெண்புறாவின் வாலினிலே
தொங்கித் திரிகிறது.
அதுவரைக்கும் என் கண்! தானாகக் கழன்று உருண்டு வந்த என் கண்!
17
4
233.1995

Page 20
\
பணியில் மொழி எழுதி
சோலைக்கிளி
W
காக்கை நாய்ச் சவாரி
ஒவ்வொரு காகமும் இப்படி மாறவேண்டும். ஒவ்வொரு நாயும் இப்படி உதவவேண்டும்.
தான் கடிக்கும் எலும்பை தனது தோழனுக்குக் கொடுக்க
வேண்டும்
நாய். தான் கொத்தும் பிணத்தை தனது நண்பனுக்கு வழங்க
வேண்டும் காகம்,
அருமை! அற்புதம்! அழகு!
ஒரு நாயின் தோளில் ஒரு காகம் பயணம்!

23.1.19
\இந்த மனிதன் வெட்கப்படவேண்டும், 'மனிதம் இவைகளிடம் இருக்கிறது. பொருந்தமுடியாத இரு ஜீவராசிகள் பொருந்திக்கொண்ட வியப்பில், சேவலுடன் கூடிவிட்டு குளிக்கமுடியாமல் நீரின்றி இருந்த குருவி ஆனந்தக் கண்ணீர் விட்டே அதனை அது நீராட்டிக்கொள்கிறது.
இன்னும் நாய் போகிறது. அதன் தோளில் இன்னும் காகம் இருக்கிறது.
இது உலக சமாதானம் ஏற்படும் சகுனமா! மனித அழிவுகள் நிற்கும் நேரமா!
ஓராயிரம் காகங்கள் பாடி மகிழட்டும். பல்லாயிரம் நாய்கள் குரைத்துக் களிக்கட்டும்.
ஒரு கவிஞன் ; அது நான்தான், தினமும் கண்ணீர் விடுகிறேன் மனித அழிவுகளுக்காக. இந்த காக்கை நாய்ச் சவாரி திருப்தி தருகிறது
T555
iiiii 19
9
1

Page 21
W Laadudað Glikong sugg
சோலைக்கிளி
\
பல் மூளைத்த மனை
தென்னைமரத்தைப் பனைமரம் அடித்துத் தள்ளியது குலை தெறித்து
அது சாக.
உலகில் தேங்காயே இருக்கக்கூடாது என்று கத்தியது.
நுங்கு தள்ளிய பனைமரம்தான் ஏனோ, இன்று அதற்கு வெறி! ஒலைகளை ஒருதரம் சடசடவென அடித்தது, பொத்தடா வாயை
என்று குட்டியது,
இன்னொரு தென்னம் பிள்ளையை!

எல்லாம் ஒரு தோட்டத்தில் நின்ற மரங்கள்தான், என்ன நடந்ததோ நான் அறியேன்!
பாய்ந்து இன்னொரு தென்னையின் பழுக்காத ஒலையை பிடித்து இழுத்தது.
கையோடு பிடுங்கி
தரையில் எறிந்தது.
பச்சை ஓலை
இலகுவில் சரிப்படுமா! அந்தத் தென்னைமரம் அலறிய அலறலில் குருவிகள் பறந்தன. ஆனால் பனைமரம் சிரித்தது.
என் தோட்டத்தில் நிற்கின்ற பல் உள்ள பனைமரமே அதைவிடு, அதைவிடு, நேற்று வைத்த மஞ்சள் சிறு பிள்ளை!
ගිණී ....
உனக்குப் பல்லும் முளைத்து நடக்கப் பெரியதொரு காற்றும் அடித்தால்.
21
18.2.1995

Page 22
\ Lassula) Guy Grugg
சோலைக்கிளி
\
கல்லில் நட்ட கிராமம்
இது கல்லில் நட்ட கிராமம், கிழங்கே இறங்காது. இருவருடம் இந்தக் கிராமம் நடப்பட்டு, தலையில் துளிருமில்லை சிறு வேரும் ஓடவில்லை.
கல்லில் பனங்கொட்டைகளைக்கூட புத்தியுள்ளோர் நடுவதில்லை. கிழங்கு முடங்கும்
அல்லது உருண்டையாகும்.

இந்தக் கிராமத்தின் வருங்காலக் கிழங்குகளை முடக்கி உருண்டையாக்கும் முயற்சி யாருக்கோ இருக்கிறது. இருப்பதனால்,
இந்தக் குடியேற்றம்! அகதிக் கிராமமென்ற பெயரில் இந்த பனங்கிழங்கை முடக்கும் முயற்சி.
பாருங்கள், சிறு குடில்கள்! ஆட்டுப் புளுக்கைகள்போல் தள்ளி இருந்தால் தெரிகின்ற அதற்குள்ளே - குமரும் வாலிபனும்.
மருமகனும் மாமியும்.
தகப்பன் படுக்கின்ற இடத்தில் மகன் சாப்பிடுகின்றான். மாமியின் புடவை மருமகனில் படுகிறது.
அடேய், தம்பி ; வெள்ளைநிறக் கோழிக்குப் பின்னால் ஓடுகின்ற பையா!
கல்லுடைத்துக் கொஞ்சம்
துாள்கொண்டு வாடா,
நான் குடிக்க. தாகம் உனதுாரில் அதிகம், வந்தவுடன் என் குதியும் தவிக்கிறது,
நீர்கேட்டு.
20.1.1995

Page 23
\ பணியின்மொழிஎழுதி
சோலைக்கிளி
\
நாய் நக்கிய சிதரு
இது நாய்நக்கிய தெரு blஇன்னும் பிணநாற்றம் எழுகிறது.
மூக்கைப் பொத்தி மூக்கைப் பொத்தி நுனி வீங்கிப் போச்சு. இன்னும் கால்த்துண்டு விலா முதுகெலும்பு எல்லாம் தெரிகிறது, போ தள்ளி.
எட்டிப் போட்டு நட தெருவில் குருவி தும்பியும் இல்லை. யுத்தகாலத்துத் தினத்தில் பயணங்கள் கூடாது.
இருந்தும், தேவைக்காய் வெளிக்கிட்டோம் வேகமாய் ஓடு.

அவன் தப்பியிருப்பானோ தெரியவில்லை ? நமக்குத் தெரிந்த அந்தப் பெட்டை செத்தாள்!
உன் காதலி என்னானாள், எனக்கும் விளங்கவில்லை ? பெருவிரல் முறிந்து நொண்டித் திரியிது காற்றும் துாதனுப்பத் தோதில்லை.
இது மனிதர் இல்லாத உலகம்தான். LJffff; யுத்தகாலத்து அந்தி வானத்தை,
ஒரு பூவும் பூக்கவில்லை எழுதி அழித்து எழுதி அழித்து என்னுடைய அவளின் பெயரை காட்டுகின்ற ஆகாயம் பெண்டாட்டி செத்த பறவைகள் புலம்ப அழுகிறது.
நிலவில் -
நாயேறி நிற்கிறது.
-9L. f.
பிணத்தில் இடறி விழாதே
(SUT.
G
25。
15.7.1990

Page 24
W பணியின்மொழி எழுதி
சோலைக்கிளி
\
மூடப்பரும் கடந்தரைப் படைவீரு
கிண்டியெடு உன்னுடைய படைவீட்டை ஆட்டி அசைத்துப் பிடுங்கி,
இந்தக் கடற்கரையில் சுமார் ஆறு ஆண்டுகளாய் முளைத்திருந்த இந்தப் படைவீட்டின் கிழங்கைக் கூடத் தோண்டு.
மழை வந்தால், பொச்சென முளைக்காத விதமாய்.

நான் வாய்க்குள் போடும் சீனிமணல் கடற்கரை இது. தென்றல், தனது கரங்களில் ரோஜாப்பூவை ஒவ்வொரு மாலையிலும் இந்தக் கடற்கரையில் வைத்துக்கொண்டே வருவோரை
தடவிக்கொடுத்து
இதயத்தின் கோளாறு திருத்தி
வழியனுப்பிவைக்கும்
தொழில்நுட்ப மேதை.
அந்த மேதையை நீ மீண்டும் அழைத்துத் தந்துவிட்டுப் போ போர்வீரா! நீ இந்தப் பால்நிலத்தில் வந்து குடியிருந்த காலம்முதல் என் இதயம் இயங்கவில்லை, அதன் சக்கரங்கள் காற்றுப்போய் நசிந்து கிடக்கின்றன நெஞ்சுள்.
விரைவாய்
உன் படைவீட்டைப் பிடுங்கு. இது இருந்த இடத்தின்மேல் இருந்த வான்கூட உன் உடுப்பின் நிறத்தில்
மாறி இருக்கிறது.
அதைக்கூட உடைத்தெடுத்துப் போ! வெண் கடற்கரைக்கு மேலிருந்து, அவளின் கண் நீல வானம் மீண்டும் படரட்டும் அந்தரம் ஒரு கொப்பாகி.
27
25.4.1994

Page 25
7\ Lasduflað Gong aggi
சோலைக்கிளி
\
போரில் பிழைத்த,
பூவே! அவள் QUuu6ODJở QćFT 6ůò6 JT u JIT ? யுத்தத்தில் பெருவிரல் கருகி நொண்டி வருகின்ற என் இனிய காற்றே! அவள் மணத்தை ஒருதரம் ஞாபகப்படுத்தேன். மழை இறுகி முகம் பிதுங்கி பின் பிழைத்த முகிலே வா!
அவள் கூந்தலை ஒருதரம் விரித்துக்காட்டு.
இந்த இயற்கை செத்த காலத்தில்நாம் மரணத்தின் மணத்தைச் சுவாசித்த காலத்தில் - நம்மையே நாம் தொலைத்தோம்.
ஏன் ;
பூமியே சுழலவில்லை. சூரியனையும் சேர்த்து சுற்றி வரவுமில்லை. என் மூச்சுகள் உறைந்தன பயத்தில். ஒரு பல்லி இலகுவாய் இழுத்துப்போகும் அளவுக்கே பலம் இருந்தது.

- 23.6.19
பூவே!
நீயும் மூழ் அவிந்து போனாய். இருந்தாலும் பிழைத்துவிட்டாய். நான் ரசிக்க உன்னை மொய்க்கும் வண்டுதான் இறகு கருகி, கோது உதிர்ந்து கிடக்கிறது!
பாவம்! மேனி வெடித்த வானம் தொலைந்த நட்சத்திரங்கள் போக மீதியை ஏங்கித் தேடிக்கொண்டிருக்கிறது.
பொதுவாகச் சொன்னால் சூரியன் தன் அறுந்த கதிர்களை இன்னும் திருத்தவில்லை.
குருவிகள் வால் எரிந்து மரங்களில் முனகுகையில் பழம் வெடித்துச் சொண்டு பறந்த கொடுரத்தின் பீதி கலையவில்லை.
ஏதோ நாம் நம்மைப் பொறுக்கி எடுத்தது மாத்திரம்தான்
്ഥu).
அவள் பெயரென்ன ?
p
9
O

Page 26
W ummula16ừngolsto
சோலைக்கிளி
\
எனது இனத்துப் பேனையால் அழுதது
நிலவுக்கு வேலியிடு. சூரியனையும் பங்குபோட்டுப் பகிர்ந்துகொள். வெள்ளிகளை எண்ணு. இன விகிதாசாரப்படி பிரி. நாகரீக யுகத்து மனிதர்கள் நாம்!
கடலை அளந்து எடு. வானத்தைப் பிளந்து துண்டாடு.
சமயம் வந்தால்,
காற்றைக் கடத்து.
அல்லது,
சூறாவளியைக் கொண்டு சகோதர இனத்தை அழி. அங்கே - செவ்வாய் கிரகத்தில் நம்மில் ஒருவன் இறங்கட்டும்.

எறும்புக்கும்
இன முத்திரை இடு.
மரத்திற்குக் கூட
சாதி சமயத்தைப் புகட்டு.
புறா முக்கட்டும் இன்னொரு இனத்தை நகைத்து. பல்லியும் பூச்சியும் நத்தையும் தவளையும் கத்தும் ஒலியிலெல்லாம் பேதங்கள் தொனிக்கட்டும். 6Ꭷl[Ꭲ , வண்ணத்துப் பூச்சியே! இது உன்னுடைய இனத்து மலர்தான் நுகர்.
பாவம்,
மனிதன் பிரிந்த விதம்! நான் கூட இந்தக் கவிதை எழுதுகையில் ஒரு பேனை மறுத்தது. “உனது இனத்துப் பொருளல்ல நானென்று.” ஒ.அது வேறு இனத்துப் பேனை!
31
26.11.1989

Page 27
Laffubað Gitong sugg
சோலைக்கிளி
\
மிக நவீன ஈழத்துக் கனவு
மூன்று ரயில்வண்டி ஆமாம் மூன்று ரயில்வண்டி என் மண்டைக்குள் மோதிப் புரண்டு சிதறின.
அனைத்து வண்டியிலும் சனங்கள் மிக அதிகம். என் நெஞ்சுக்குப் போக வந்தவர்கள் அனைவருமே!
கண்ணருகில் வருவதற்கு
முன்னாலே கோளாறு. யாரும் உயிர்தப்பி என் மூளையிலே குதித்ததுவாய் இன்னும் தகவலில்லை.
பெருவிபத்து.
என் மண்டை
இன்று பிணக்காடு.

பல உயிரை உடனடியாய் குடித்த ரயில் விபத்து நிகழ்ந்த என்னுடைய தலையே! உன்னைத் தாங்கி
நான் இன்னும் உலவுவது மெய்தான் ; ஆனால் உற்றுப்பார், உன்னை கழற்றி அந்த
மூலையிலே போட்டுவிட்டு உயிர் முண்டமாய் திரிவதை,
என் நெஞ்சுக்கு வந்தவர்கள்
அகதிகள்.
மேற்சொன்ன சம்பவமும், அதன் துயரும்கூட எங்கள் ஈழத்துக் கனவொன்றே,
மிக நவீன!
33
23.3.1995

Page 28
\ Lsulla su sug
சோலைக்கிளி
\
நாட்டுக் காட்டில் குறையாய் கேட்ட மனிதனின் சத்தம்
பொத்தி, என் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டுப் போனான் அவன் உயிரை. கண்ணுறங்கு அவன் உயிரே! கன்னுறங்கு.
புல் நாக்கு நீட்டி காற்றில் கொடி. படர்ந்து தவிக்கின்ற மதியத்தில் பிசாசு நடமாட்டம் இருக்கிறது கண்ணுறங்கு!

வெண்கொக்கு கருங்கல் முள்ளு மலை வேம்பு யானை குள்ளநரி விஷப்பாம்பு என்றிருந்தால், உலகம் பயமில்லை!
கண்ணுறங்கு, அவன் உயிரே கண்ணுறங்கு, என் சட்டை பல்லில்லா அப்பாவி! கடித்துக் குதறாது.
அவன் வருவான், வந்து
உனக்குக் கண்ணேறு
கழித்துப் பின் எடுப்பான் அப்படியா, இது என்ன ஆச்சரியம் என்றெல்லாம் நீ எனது சட்டைப்
பைக்குள்ளே கிடந்து
முனகுவது கேட்கிறது,
இது புதிய நடைமுறைகள். ஒரு பயணி உயிரைத் தொலைக்காமல் இருப்பதற்கும்.
LLLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLL
SS
3S
20.3.1995

Page 29
V பணியில் மொழிஎழுதி
சோலைக்கிளி
\
υιτώι υιτώι υιτώι.
பTம்பு பாம்பு பாம்பு
கண்ணுக்குள் ஒன்று. காதுக்குள் ஆறேழு.
மூக்குக்குள் இரண்டு.
பிடரியில் நாலைந்து.
LITլծԼվ.
பாம்பு.
UTLÖL!.
தெருவில் : குதிவரைக்கும் எரிந்த அரை உயிருப் பிணத்தை கண்டுவிட்டு வந்தேன், பாம்பு.
பாம்பு.
பாம்பு.

தோளில் ஒரு பாம்பு. என் தொடையில் எட்டு. தொப்புளுக்குள் மூன்று. குதியில் விஷ நாகம்.
ஒருபாம்பு இழுத்துப்போய் என் ஈரலைத்தான் புசிக்கிறது. இன்னொன்று கண்ணை முட்டைபோல் குடிக்கிறது. நெஞ்சைப் பிளக்கிறது ஒருபாம்பு வெறியோடு. இதயத்தைச் சப்பி ருசிக்கிறது இன்னொன்று. பாம்பு.
LITլbւկ.
ullbւլ.
என் கட்டிலெல்லாம் பாம்பு. அறையெல்லாம் அரவங்கள். நித்திரையில் வருகின்ற அவள்கனவைக்கூட ஒரு பாம்பு கொத்தி அவள் முடியைத் தின்கிறது. காற்றில் பல பாம்பு. வாசலிலே விரிந்திருக்கும் பூவுக்குள் கண்கொத்தி. LuTubL.
பாம்பு.
பாம்பு.
OOOOO 3
20.2.1995

Page 30
\ Lafflugið Ghong sugg
சோலைக்கிளி
\
கர்ப்பிணிப் பெண்களைக் கண்ட தினம்
இன்று தெருவெல்லாம்கண்டது கர்ப்பிணிப் பெண்களைத்தான். முட்டை தள்ளிய பல்லிமாதிரி
சில பெண்கள்.
மேளம் அடிப்பவனைப்போன்று
ஒரு சிலர்.
கூடை நிறையப் பூ
a 6.6d சுமந்தபடி போகின்றான். மாட்டு வண்டி நிறைய காய்கறியும் துாப்பானும்.

தேனீர்க்கடைக்கு இழுத்து வருகின்றான் B
கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளி. சாப்பாட்டுக் கடையில் எறிந்த பாண்துண்டை துாக்கமுடியாமல் அவதி
காக்கைக்கு.
எங்கும் பெரிய சுமை. யாருக்கும் இயலாமை.
முலைபெருத்த அவளும் தள்ளாடி வருகின்றாள் இன்று காலையில்தான்.
பொலிஸ்வண்டி நிறைய
சந்தேகப்பேர்வழிகள்
இட நெருக்கம் அதற்குள்,
வாகனத்துள் நான்
எனக்குள்ளே ஐவர். அடிவயிற்றின் சதைகொழுத்த இறைச்சியினப் பெண்ணும் என் உரோமத்தின்
கண்ணுள்.
இன்று காலையில்கண்டதெல்லாம் கர்ப்பிணிப்
பெண்களைத்தான்.
る 3 総 。
39
18.2.1992

Page 31
V LaadudaŮ Grong sugg
சோலைக்கிளி
\
பெண் குலீக்கும் அறை
இன்று எங்கும் நான்போகத் தயாரில்லை. வண்ணத்துப் பூச்சிகளே ஓய்வெடுங்கள். உங்கள் சிறகை
இன்னும் சற்று மினுக்கி.
நீங்கள்தானே என்னுடைய வாகனம். பூக்கள் என்னுடைய தோழர்கள்.

ஒரு கவிஞன் இருந்தானாம் தேன் நிலவில் சோறுவைத்து பிசைந்து அவன் உண்டு வெளிக்கிட்டுப் போனால் : வண்ணத்துப் பூச்சிகளின் தோளில் அவனேறிப் போவானாம் என்றெல்லாம், நாளைய வானத்தில் முகில் எழுதிப் பாடட்டும். இன்று நம் அனைவருக்கும் ஓய்வு! (8U[IưỦ
பூமரத்தில் குந்துங்கள்.
இன்றும் பிள்ளைத்தாய்ச்சியாய் போனேனே பூச்சிகளே! என் கண்ணுள்ளால் சிலகவிதை, காதின் துவாரத்தால் விரல் இடுக்கின் வழியால் தொப்புளாலும் ஒன்றிரண்டு, பிறக்கின்றன அழகுகளே, இந்நிலையில் நாம்போனால் : வழி நெடுக உதிரும். - அந்த இனிப்பை நாய் நக்கும். பின் அதுவும் கவிபாடி தமிழை இழிவாக்கும் ; பெயர்ப்பலகைக் கொலைபோல, ஆம், நம்நாட்டின்
- கொடிய, தமிழ் பெயர்ப்பலகைக் கொலைபோல. 41 உதாரணமாய - "பென் குலிக்கும் அறை” စိန်နိစိန်
09.3.1995

Page 32
\ Lausò suso
சோலைக்கிளி
\
கோழிமூட்டைக் கோது வீதி
கோழிமுட்டைக் கோதினிலே பூ எறிந்து திரியாதே, கன்னிப்பூ, சிறுபூ,
மழையின்றி வெம்பியது, எந்தப் பூ எறிந்தாலும் இவ்விதி உடையும். இவ்விதி கடந்த
தேர்தலுக்குள் ஓடியது.
தண்ணீரில் கரி*கலந்து
'தார்’ என்ற பேர் சொல்லி ஊற்றிக் காட்டியது நான் மூக்கைச் சீறி எறிந்தாலும் விளிம்பு நசுங்கும் விதமாக.

கையிலென்ன நகம் வளர்ந்து
நீண்ட செயற்பாடோ! எங்கள் தார்த் தெருவில் பூ எறிந்து கோழிமுட்டைக் கோதுடைத்து விளையாடும் காற்றே, நிறுத்து; இன்று பகல் கொழுத்த விரால்மீனை
எண்ணையிலே பொரித்து,
நீ உண்டுவந்த வாசம்
எனக்கும் அடிக்கிறது.
தயிர் உண்ண நீ பழகி
ஊரில் அது பஞ்சம். கிழமைகளில் சில நாளில், குளிரான பொழுதுகளில் மாலைகளில், தென்னையிலே : நீ அவல் பிசைந்து உண்ணும் பழக்கம் வந்தபின்தான் ஊரில் அவல் ஒறுப்பு.
இந்த உஷாரையெல்லாம் மாமரத்தில் போய்க்காட்டு.
is is
43

Page 33
R
\ Laula) Gony aggi
சோலைக்கிளி
\
ualisatists 42 guy 6lust
விடிவதற்கு முன்பாகவே
இன்று அவன் வந்தான். ஓராயிரம் பொய்களையும், நம்பமுடியாத பல செய்திகளையும், என் அறைக்குள் இருந்து என்னுடன்
கொட்டினான்.
கேட்ட என் காது வழிந்து
நிலத்திலும் சிந்தி
கிடந்தன அவனது பொய்கள்.
பொய்யின் நிறத்தை நான் அவனால்தான் அறிந்தது, பச்சை 1. அவன் அடிக்கடி வந்து கொட்டுகின்ற பொய்களுக்கு நாற்றம்கூட உண்டு,
GöflԼջա.

இன்று காலையிலே ஏன்வந்தான் அவன்! நான் விளக்காத பல்லில் அவனின் சில பொய்கள் ஒட்டி காய்ந்து போனதே பச்சையாய்!
அவன் கக்குகின்ற பொய்யில் உயிர் இருக்கும். ஆனால், சுவாசம் இருக்காது. ஒவ்வொரு செய்திக்கும் கையும் காலும் அவ்விடத்தில் செய்வான். வாலும் வைப்பான் மூக்கையும் நீட்டிவைத்து.
இன்று அவன் சொன்ன ஒரு பொய்க்கு நான்கு தலை.
பதினெட்டுக் கண்கள். வால் இருபத்திமூன்று. கழுத்துகள் பதினாறு.
அந்தப் பொய்தான் எனது பற்களிலும்
கெட்டியாய் ஒட்டியது ;
யாவரும் இங்கு சமமென்ற பழைய
பெரும் பொய்யைப்போல, நாற்றத்துடன்.
45
07.4.1994

Page 34
\ unfidai Ghiyaga
சோலைக்கிளி
W
நஞ்சு பூசிச் சீரிக்கிண்ந யுகத்தில்
உன்னைப்பார்த்துச் சிரிக்கத்தான் வேண்டும் ஆனாலும் நான் தயங்குகிறேன், பேரன்பே நஞ்சு பூசிச் சிரிக்கின்ற ஒரு யுகத்தில் ஒரு குழந்தைபோல் மனதை திறந்துவைத்து உன்னை பூங்கொத்தைப்போல பார்த்துச் சிரிக்க வெட்கம்வருகிறது.
மழைக்குள்ளே சிறியகுடை கொண்டுவந்து இருந்தால் உனக்கிந்த வீண்சிரமம் இல்லை; அறிந்துகொள். வெள்ளை ஆடையில்
தெருநீர்த் துளிகள்!

நீ பாடம் எழுதிப் பயிலுகின்ற புதுக்கொப்பி மழையில்
நனையக்கூடாது அழகே!
6) If
உள்ளே வந்து இரு!
இது பெருமாரிப் பாட்டம்
விடக் கொஞ்சம் சுணங்கும்.
உன் கண்ணழகில் மின்னல்கள்
தெறிக்கும்.
நேரம் அதிகமில்லை இன்னும் பாடசாலைக் கதவு திறந்திருக்க நியாயமில்லை. யார்தான் இப்போது,
நேரப்படி இயங்குகின்றார்! கடமைக்கு வராமலே சம்பளத்தை வாங்குகின்ற ஆசிரியர் உன் பள்ளியிலும் உண்டு.
மறுபாட்டம் வருகிறது, இது விடாது பெரிய மழை! உள்ளே வா, கோழி ஒரத்தில் நிற்கட்டும், வீட்டுக்குள் எடுத்தால் நாறும்.
|47
23.1.1995

Page 35
W பணியில் மொழி எழுதி
சோலைக்கிளி
V
எண் பீரியமுள்ள உனக்கு
பிடி, அந்தக் குருவியைப் பிடி என் நெஞ்சுக்குள் நுழை.
அவர்களைக் கண்டதும் எனக்குள் இருந்த குருவிகள் செத்தன.
அந்த - இரண்டு கையிலும் தங்கள் முகங்களைத் துாக்கி வந்தவர் துயரை,
அறிந்ததும் எனக்குள் ஆறுகள் வற்றின. மலை இடிந்து சரிந்தது. உடம்பெல்லாம் வெந்து புழுத்தது. நான், நார் நாராய் கிழிந்தும் போனேன்.

வா, என்னைக் கூட்டிப் பெருக்கு. திரும்பவும் என்னை உருப்படியாய் சமை. குயில்களைச் சாய்த்து எனக்குள்ளே புகுத்து. சின்னக் குருவியையும் எனக்குள் நுழை நான் மீண்டும் பாட.
ஆமாம், என் ஆறுகளே
பொங்குங்கள். அருவியே நீ பாய்ந்து தமிழைக் குளிப்பாட்டு. “அகதிகள் போய்விட்டார்கள். ஒருவாறு என்னுடைய வாசல் விரிந்தும் பூமரங்கள் விலகி வழிவிட்டும் அவர்களை ஆதரித்ததால்,
அவர்கள் கரத்தில் முகங்களைத் துாக்காமல் கண்ணுக்குள் எரிந்த தீயைத் தணித்தபடி போனார்கள் பறவைகள்போல் இன்னொரு மரத்திற்கு.
அங்கும் பழம் பழுக்கும், அவர்கள் புசிப்பார்கள்.
மீண்டும் பழையபடி சிறகுயர்த்திப் பறப்பார்கள். என் மலையே எழு எனக்குள் உன்னில் இருந்து ஊற்றுப் பிறக்கட்டும். நான் பாட அவர்கள் எங்கிருந்தாலும் கேட்கலாம் காற்றுமாமி பாட்டுச் சுமந்தே பைத்தியமாய் போனவள் அலைகிறாள். V நுாறு குருவிகளை நுழை. iiiii
49
27.1.1990

Page 36
W Lafludflaŭ Gkonigi sigø
சோலைக்கிளி
\
uafujas 6lud/B 695
உனக்காகவே கவிதை எழுதுகிறேன். எனது ஒவ்வொரு மூச்சையும் உனக்காகவே விட்டு அதில் பூச்சூடிக் காட்டுகிறேன். பொதுவாகச் சொன்னால் : எல்லாம் உனக்காகத்தான். மணல்களுக்கு உயிரேற்றி அவைகளுக்குக் கண்வைத்து நீ போகின்ற இடமெல்லாம் கவனிப்பது, நீராகி வந்து
நீ குளிக்கக் குளிர்வது,
6T66) if
6T6)6) Tib
எல்லாமேதான்.

நித்திரையில்
நான் எழும்பி நடப்பது
உனக்காகத்தான்.
வெயிலுக்குள் நான் முளைத்து கன்னிகட்டிப் பூப்பது,
நெருப்பில்
சீனி செய்வது, பனியில் மொழி எழுதி பத்திரிகை தயாரித்து உன் செய்திகளை உலகு அறியப் பரப்புவது, அனைத்தும் ;
ஆம், உலகத்தைத் துாக்குவது என் உள்ளங் கையுள் அதைப் பொத்திக் காட்டுவது,
நிலவை
அடைக்கு வைப்பது,
அதன் குஞ்சுகளை என் கவிதைக்குத் தீன் கொடுத்து அது குளிர்ந்து கொழுக்க
செய்வது கூட.
யார் அந்த நீ ?
யாருமில்லை !
51
02.8.1994

Page 37
\R
\ ಯಾರು agog
சோலைக்கிளி
\
மனதை உடைத்த சிவண் வண்ணாத்தி
சிலநேரங்களில் சில பறவைகள் மனதை உடைக்கத்தான் செய்கின்றன. கண்ணாடித் துள்போல மனதின் கதவு தகர்ந்து கொட்டித்தான் விடுகிறது.
நீான் என் மனதின் கதவைப் பூட்டி திறப்பை
இடுப்பில் செருகியிருக்கிறேன். ஒரு புறாவும் அதில் மேயக்கூடாது, அதற்குள் பூத்திருக்கும் புல்லின் பனியை சொன்டால் முட்டையுடைத்து விளையாடக்கூடாது,
என்று.

சில மைனாக்கள் தகர்க்கின்றன.
என் மனதின் கதவை,
பெயர்த்து எறிந்துவிட்டு
அதற்குள் புதிய ஆறுகளையும் சலசலக்கும்
நீரோடைகளையும்
எளிதில் உருவாக்கி
என் திறப்பை
நகைக்கின்றன.
இன்றும் ஒரு வெண் வண்ணாத்தி நிலவில் நட்ட மல்லிகைமரத்தின் பூவொன்றை பூத்தது,
தெருவில், ஆமாம்.
உடைந்தது என் நெஞ்சு
கதவு ஆடியது. மனதுக்குள் திடீரென கொய்யாமரம் முளைத்து பழுத்துச் சொரிந்தது. பெரிய அழகுதான், ஆமாம் இளஞ்சிவப்பு கொக்குத்தோல் மேனி வண்ணாத்தி.
என் காலடியில் மனதின் கதவின் உடைந்த
துாள்கள். திறப்பு இன்னும் இடுப்பில்தான்.
53
19.2.1992

Page 38
\ Ladullað Glikong sugg
சோலைக்கிளி
W
தோல் கறுத்த நா
அவள் இன்று என்னைப்
பார்த்த விதம்
-2|f)eFuld ! ஒரு கண்முளைத்த பூவாய் இன்று என்னைப் பார்த்தபடி என் முகத்தில் மெல்ல
மெல்ல மெல்ல விரிந்தாள்.
தன் நெஞ்சை என் உள்ளத்தில் தேய்த்தபடி.
முன்பெல்லாம் நிலம் நோக்கி
உதடு கடிக்கும் புறாவே என்னைப் பார்க்கின்ற துணிச்சல் இன்றுனக்கு ஏன் எங்கிரு வந்தது கண்ணுசுப்பிச் சொல்லு! என் உயிருள்
ஒவ்வொரு பாட்டமாய மழைபெய்ய,

தோல் கறுத்த புறா
காதலுக்கு ஆகாதா ?
யார் சொன்னது நிலா! நீ என்னைப் பார்க்கையிலே மினுங்குகின்ற மினுக்கத்தில் சூரியன் கண்கூசும், பகற்சேற்றில் விழுந்த வெள்ளி நல்ல துல்லியமாய் தெரியும்!
உள்ளிருக்கும்
என் குடலும் தெரியப் பிறருக்கும்.
எண்ணு நிலா, எண்ணு! உன் பார்வை பட்டு என் உரோமங்கள் சிலிர்த்து அவற்றிலெல்லாம் பனி பிடித்து இந்த மதியத்தில் நான் தெருவில் உலகத்தை வென்று உயிருக்குள் குதிக்க, குதிப்புகளை,
பின்னொருநாள் நான் கேட்க,
நீ சொல்ல,
சிரிப்புடன்தான்.
55
13.10.1994

Page 39
\ பணியில் மொழிஎழுதி
சோலைக்கிளி
\
அரை அங்குலமாய் பூனை பூச்சியாய் நாண்.
இரவு பயங்கரமாய் இருக்கும் வா, நெஞ்சோடு அணைந்துகொள் என் பூனைக் குட்டியே!
உன் மியோவ் மியோவ் சத்தம் இன்றிரவு ஒலிக்காது. எலிகள் பொந்துக்குள் செத்திருக்கும். என்னைப்போலதான் உனக்கும் பிணம்தின்ன இஸ்டமில்லை.
என் பூனைக்குட்டியே!
இது தென்னைகளும் பயங்கரக் கனவுகண்டு குரும்பைகளை உதிர்த்துகின்ற இரவு.

குருட்டு நிலா வானத்தில்
ஓடாமல் உசும்பாமல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் கிடக்கிறது. நெஞ்சுக்குள்
என் பூனைக் குட்டியே
புகுந்துகொள். இதயம் உனக்கொரு தொல்லையில்லை. அது எப்போதோ தண்ணியாய் கரைந்து வியர்வையாய் வந்துவிட்டது.
LJssI, பூமரம் பயங்கரமாய் நடந்து வருகிறது! நிலம் வெடிக்கும் சத்தத்தில் தண்ணி தெறித்து வெள்ளிகள் அழிகின்றன. என் பூனைக்குட்டியே! உன் மயிரும் உதிர்கிறது அச்சத்தில்,
எங்கே உன் ;
காலை முடக்கு
வாலைச் சுருட்டு உடம்பை அரை அங்குலமாய் மடக்கி, எனக்குள்ளே நுழைந்துகொள் நான் ஒரு கோழிமுட்டைக்குள் ஒளிக்கிறேன், பூச்சியாய் சிறுத்து.
57
13.6.1990

Page 40
\
uafluflóklons sló
சோலைக்கிளி
\
சிநட்டி முறித்த காலை
நெட்டி முறித்துக்கொண்டுதான் விடிந்தது
56O6).
சூரியனுக்கு, ஒரு கோப்பிகுடித்துவிட்டு, பீடியொன்று பற்றவைக்க எண்ணம்தான், ஆனாலும் V. ஆளில்லை, குடிக்க கோப்பி கொடுக்க,
என்போல ஒரு பிரமச்சாரிதான்
சூரியனும்.
ஒரு சின்ன அறைக்குள்ளே கிடந்து
கொசுவிரட்டி,
யாரும் தருவதை உண்டு, தராவிட்டால் பட்டினியாய் பொழுதுகளை ஒட்டும்
உயிர்தான்.

கொத்து சூரியனே உன் பலத்தையெல்லாம் கூட்டி வானத்தில் வெயில் விதைக்கவேண்டும். மண்வெட்டி உன்தோளில் இருந்து, உன் கைக்கு இன்னும்
மாறவில்லையே, காலை :
இருளில் சிக்கி
என் அறைக்குள்ளும் கிடக்கிறது.
ஒரு கோப்பி கொடுக்க ஆளில்லாத சூரியன்தான் 岛!
நானும்தான்! இருந்தாலும் கவிதை நானும் எழுதுகிறேன் நீயும்தான் எப்படியோ வெயில் விதைத்து.
59
... 21.1.1995

Page 41
\ La sulla su sugg
சோலைக்கிளி
\
இளந்தாரி வெயில்
விலகு. ஓடிப்போய் நிழலுக்குள் ஒளி. குளிராக எதையாவது குடி, காலில் நீரூற்றிச் சூடாற்று. அடித்த மாரிக்குச் சவாலாக இறைக்கிறது சரியான இளந்தாரி வெயில்.
இரத்தம் கொதிக்கும் வயது
வெயிலுக்கு. மரங்களின் குருத்தைத் தின்னும் வெறி. நான் பிடுங்கி நட்ட பூமரத்தைத் திமிரோடு சாறு குடித்துக் கொன்ற துரோகி.
என் ஆடை வெயிலில் கொடியில் எரிகிறது. ஆண் வெயில், அதுவும் இளந்தாரி.
Ꭷ 6uᎠ] ; பெண்கள் உடுதுணி வெயில் இடுதல் முறையல்ல.

(3LT
அந்த ரவிக்கையை எடு.
உனது குடைவெட்டுப் பாவாடை மணத்தை வெயில்
சுவைக்கும்.
எடு! கொஞ்சம் கேள்; இது இளந்தாரி வெயில்.
சற்று முன்னர் உடுத்துக் களைந்த சேலை உலரவிட கொடிநோக்கி நீ வருதல் எனக்கு விருப்பமில்லை.
இரவும்
குளிர் பெறுவது கடினம். இந்த வெயில் நடந்து நாக்கால் தடவியதில் கிணறு கொதிக்கிறது.
இனி சுடுநீர் குடித்து, குளித்து உடல் நோவைப் போக்க ஒரு வசதி, இந்த இளந்தாரி வெயில். குமர்குட்டி உடுதுணி உலர்த்தல் சங்கடம்தான் அது ஒரு குறை.
வெயிலே!
நீ என்று கிழடாகி
உடல் கூனி என் முற்றத்தின் முதுகில் விழுவாய் ? அதுவரை என் புறா ரவிக்கை பாவாடை சட்டை தாவணியும் உலாததல தடை. 61
குளிராக எதையாவது தா! iiiii
O9.2.1991

Page 42
V
undulo holy suga
சோலைக்கிளி
W
இதயமுள்ள பீரிய சிதண்ணைகள்
ஒரு பாய்போல சுருட்டி தென்னைகள் கடலை வைத்திருந்தன தலையில் என் அறைக்குக் கொண்டுவர.
போடுங்கள் கடலை, விரித்து மரங்களே மீண்டும் அலை எழும்ப அதை விடுங்கள். சிலநாள் தானே நான் வராமல் மறந்திருந்தேன், அதற்குள்ளா இந்த அவசரம், பெருங் கடலை சுற்றி ஒரு பாயாய்
எல்லோரும் ஒருமித்து
துாக்கி மிகப் பாரம்
தாங்காமல் விழி பிதுங்கி என் வீடுவர எத்தனித்த உங்கள் புத்திக்கு நானென்ன செய்ய!

69(!b சின்ன வருத்தம், குலை தள்ளிய தென்னைகளே ; மனதுக்குள் சுண்டெலி புகுந்து நிம்மதியை அறுத்துத் தள்ளியதால் வந்துகொள்ளக் கிடைக்கவில்லை.
நேற்றுத்தான் மனதை
ஒருவாறு சரிசெய்தேன். எலியறுத்த குப்பைகளை வெளியேற்றி அதற்குள்ளே பூவாசம் செலுத்தி சிதைந்த அவள் படத்தை மீண்டுமந்த உயிர் நரம்பில் புதுப்பித்து மாட்டியதால்,
புதுத் தெம்பு இன்று உலகத்தைத் துாக்கி என் சட்டைப் பைக்குள் போட்டுக், கடற்கரையில் உருட்டி உருட்டிக் குழந்தைபோல் விளையாட வந்தேன்; அதற்குள்ளே -
உங்கள் தலைகளில் கடல் பாயாய் இருக்கிறது!
63
20.1.1995

Page 43
\ Laua Giorg
சோலைக்கிளி
\
ஆடு கார்வதைப்போன்ற ஓவிய அந்தி
யாரடா, இந்த அந்திவானத்தில் சித்திரம் கீறியது ? பட்டும் படாமலும்
நாய் நக்கிய விதமாக கடமைக்குக் கீறி என்னை ரசி என்று நிர்ப்பந்தித்த ஓவியன் எவன்!
அவன் மீசையை வழித்து நான் விடுவேன், பலர் பார்த்துச் சிரிக்க. கண் புருவத்தையும் இறக்கி பெண்களுக்கு மத்தியிலே துரத்தி கேலிக்கு ஆளாக்கிக் காட்டுவேன், தெரிந்தால்!
கை முடங்கிய பயல்.

அங்கொரு நீலம்
இங்கொரு பச்சை
ஊதா சில இடத்தில். பன்னீர் தெளிப்பதுபோல் நிறத்தைத் தெளித்து இன்றைய
அந்தி வானத்தை ஏழைப்பெண் சோடித்தல் போல
செய்த ஒவியா,
உனக்கு ; கரி கிடைக்கவில்லையா கொஞ்சம், வானத்தில் நிறைய நிறையத் தீட்ட! சுண்ணக் கட்டியாலும் சித்திரங்கள் தீட்டுகின்றோர்
இந் நிலத்தில் உண்டு.
மாடு ஓடுவதுமாதிரி
முன்பெல்லாம் ஓர் ஓவியன் கீறுவான் பார்க்க அழகாக இருக்கும், அந்திப் பொழுதுகளில். பாலத்தை ஒரு கிழவி கட்ப்பாள், காலுக்குள் பூச்சிவந்த மீன் துடிக்கும்.
அந்த ஓவியனின் கரத்தை எந்த மரம் அரிபவன் மெஷின்
அரிந்து தள்ளியது,
பூக்களுக்கு எருவாக! நீ மரத்தை ஆடு கார்வதைப்போன்று கீற முயன்றாலும் அழகாகக் கீறு
கீழிருந்து நான்மட்டும் இல்லை என் நெஞ்சுக்குள் இருக்கும்
புறாக் குஞ்சும் ரசிக்க ; , 65 பூப்படர நாம் நீந்தி, பொன்னந்திச் சுகம் உண்டு போகப் போக எங்கென்றே தெரியாமல். iiiii
28.7.1994

Page 44
W uflulationslaug
சோலைக்கிளி
\
இரத்தம் மினுக்கும் பொண்மாலைப் பொழுது
வருகின்றேன்
இருண்டுவிடாதே பொன்மாலைப்பொழுதே கொஞ்சம் பொறு உலகிற்கு இதம்கொடுத்து நில்லு.
ஒரு கோழிமுட்டைக்குள் கிடப்பதனைப்போல இந்த அறைக்குள்ளே கிடந்துவிட்டேன். கவிதை எழுதித்தான். உயிர் பூக்கும் குயிலைப்
பற்றி ஒரு கவிதை, கடற்கரையில் நிற்கின்ற என்னில் பிரியமுள்ள தென்னைமரங்களைப் பற்றியும் ஒன்று.

ஒரு பொன்மாலைப்பொழுதே மறக்கின்ற அளவுக்கு இன்று கவிதை எனக்கு வரல் மகிழ்ச்சியேதான். ஆனாலும் உன்முகத்தைக் காணாமல் இருப்பதற்கும் முடியாது பொழுதே, கொஞ்சம் பொறு, மரங்களிலே உன்கரத்தால் தங்கத்தைப் பூசி நேரத்தை மினக்கெடுத்திக் கொள்ளு, நான் வந்துவிட சற்று.
உன் காற்று வாங்காமல் எனதுமனம் பூக்காது. மாலைத் தங்கநிறம் பட்டால்தான் என்குருதி மினுமினுக்கும். ஆம், என் குருதி மினுமினுக்க
பொன்மாலை நீ வேண்டும்! மினுங்காத இரத்தத்தை நான்சுமக்க முடியாது.
67
23.1.1995

Page 45
W பணியில் மொழி எழுதி
சோலைக்கிளி
\
மனதுக்குள் மரம்விழுந்த ஒரு மாலைப்பொழுது
இன்று கடற்கரைக்குப் போகவில்லை. புல்லாங் குழலுாதும் இளந்தாரிக் காற்றுக்கு நெஞ்சு மயிர்களை விளையாடக் கொடுத்து ரசிக்க மனமுமில்லை.
பாவம் அந்த இலைப் பச்சை நிறப் பறவை, நெத்தலிமீன் விட்ட கடதாசி பட்டம்போல் என்னைத் தேடி அலைகளுக்கு மேலால் ஆடிப் பறந்திருக்கும்.
துக்கம்தான், மனதுக்குக் குறுக்காலே விழுந்துள்ள மரத்தை துாக்கி வீசி எறிந்துவிட்டுப் போனால் உதிக்கும்
நிலவென்ன குளிர்ந்திடுமோ? கொச்சிக்காய் கரைத்த
பால்தான் வழியும்!

நான்
தோல் கழற்றி எறிந்து நரம்பில் நெருப்புவைத்து கொழுப்போடு சேர்ந்து கரைகின்றேன், நீ போ.
ஏன் அந்தி மாலையிலும் சூரியன் நடுவானில் நின்று எரிகிறது!
என் மண்டை ஓடு பறந்து எங்கோ போக மூளை கொதித்து வழிந்து நிலத்தில் கசிகிறது.
if (UT
கடற்கரைக்கு நீ போ! பாவம் அந்த இலைப் பச்சை நிறப் பறவை எதிர்பார்த்துத் திரியும் அதனிடத்தில் போய் சொல்லு “அவர் வரமாட்டார்.”
அங்கே. அதோ! அங்கே. என் இதயத்தின் பாதியை கொத்திப் புசித்தபடி ஒரு குருவி!
169
06.9.1991

Page 46
\ பணியின்மொழிஎழுதி
சோலைக்கிளி
W
மரங்கள் காய்ப்பதைப் போன்ற இரவு
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகிய நிலவும், நிம்மதியான ஓர் இரவும் இது. கதவைத் திற
வாசலுக்கு வா! வானத்தின் ஓரங்களில் புல்முளைத்துப் பூக்கிறது.
LD60076)
தானாக உயிர்த்து நகர்கிறது. இரவுகள் கொதித்ததால், கரியமிலவாய்வை விட முடியாமல் தவித்திருந்த மரங்கள் தப்பிப் பிழைத்து எதிர்காலத்தில் அரும்ப வைத்திருந்த குருத்துக்களை மொத்தமாய் கக்கி வியக்கின்றன.

எவ்வளவு காலம் இப்படி ஓர் இரவை நாங்கள் தரிசித்து! 曲
கால் நீட்டிப் போட்டு வாசலில் கிட. மணல்களை அள்ளி
ഗ്രീ.
மரங்கள் காய்ப்பதைப்போலவும், வெயில் உறைப்பது
D[Igfölsuð, இயற்கையாய் குளிர்கிறது இரவு. ஒன்றும் வெடிக்கவில்லை இன்றிரவு. எந்தப் பயங்கரமும் இல்லை.
நேற்றுவரைக்கும் இரத்தம் குடித்தவன் தெவிட்டி, வாந்தி எடுத்து நீர் அருந்த நினைத்தானோ இன்று! பால் வார்க்கிறது நிலவு
இரண்டு
கைகளையும் நீட்டிக் குடி,
i: i is
71
19.11.1991

Page 47
\ Laflusi Guns
சோலைக்கிளி
\
பூதங்கள் இநங்கிய இரவு
வானம் சிலநாளில்
பூதங்களை இறக்கும். நிலவை மடிக்குள்ளே பதுக்கிவிட்டு நட்சத்திரத்தை மட்டும் குருட்டொளியில் ஆங்காங்கே எரியவிட்டு மேகத்தை எண்ணெய் தேடி அலையவைக்கும்.
இன்றும் f நான் வாலுதிர்ந்து கிடப்பேன். ஒரு கொட்டைவால் குருவி துடிக்கின்ற வேதனைக்கு தென்னை தலைகுனிந்து என்ன பயன் ? தும்பிக்கு றாங்கி
முகத்தில் அடிக்கிறது. வெள்ளியே நீ கறுத்துக் கொழுத்துப் பூதமாய் இறங்காமல் போ.
இதயம் சாவிடாய் இருக்கிறது.

நேற்றுப் பால்பொழிந்த நிலவிற்குக் கைவிலங்கு. எனது மண்ணில் நடக்கின்ற அக்கிரமம் வானுக்கும் தொற்றியது. மேகம் எல்லாம் இப்போது தொப்பியுடன் ஊர்காவல் செய்ய இரவு மகாராஜா சட்டம் இயற்றிவிட்டார் காற்றுக்கும் பூரணமாய் தடை.
எங்கிருந்து அந்தப் பறவை அழுகிறது ? இதுதானா சுதந்திரத்தைக் கேட்கின்ற பறவை ? அவள் பறந்த மனதுள்
புற்கள் கருகி
நான் கிடக்கின்ற நேரத்தில் எங்கிருந்து அந்தப் பறவை அழுகிறது ? இது இரவுகளைத் தின்று பசியாறிக் கொள்ளும் ஒரு கவிஞன் கேள்வி.
73
15.8.1988

Page 48
uasludaŮ Grong aggi
சோலைக்கிளி
\
நகம் உரசும் வட்ட நிலா
ன்ெ பறவைகள் கொடுகுகின்றன. இறகுகள் ஊறி, நெஞ்சுக்குள் கிடக்கின்றன. நிலவே! பனி இன்றிரவு மிக அதிகம், கொஞ்சம் கிட்ட வந்து எரி. பறவைகள் குளிர்காய. இறகு உலர்ந்து துள்ள.
இன்றிரவு பனி ஊசியின் வடிவில் பொழிகிறது. எனது உரோமக் கண்களின் ஊடாக தேகத்துள் நுழைகிறது. பறவைகள் துடிக்கின்றன. குளிரின் கொடுமை கண்டு அவை முடங்க முடங்க நான் வானத்தில் பறப்பது மிக சிரமமாக இருக்கிறது.

நான் உரசி முத்தமிடும் சிறிய நட்சத்திரம்,
என் வரவைக் காத்து வானத்தில் குருட்டு லாம்பு
கொளுத்துகிறது.
கண்ணில் எடுத்து நான் ஒற்றுகின்ற வெள்ளி
நான் வராதது கண்டு
கால் பூட்டுகிறது
என்னைத் தேடி வர.
போயும் போயும் ஒரு நட்சத்திரம் தேடிவரும் அளவுக்கு நான் கொடுரமாய் இருக்கக்கூடாது. கொஞ்சம் கிட்டவந்து காய். என் பறவைகளின் இறகுகள் சூடாகட்டும். அவைகள் சுமந்து பறக்க,
நான் அதைக் கண்ணில் ஒற்றிக் கொள்வேன்.
இன்றிரவு,
காற்றும் குடில்லை. எந்தக் குளத்திலோ குளித்துவிட்டு தலை துடைக்காமல் வருகிறது போலும்!
தோல் கரைகிறது. சதை அவிந்து தரையில் விழும் அபாயம்
இருக்கிறது.
கொஞ்சம், ஒரு எட்டுவைத்துக் கிட்டாகு. பறவைகள் குளிரில் புரளப், புரள, நெஞ்சுக்குள் ஒரே கடகப்பு. அவஸ்தையின் ஒலங்கள். உன் காதைக் கொடுத்துக் கேள்; இரக்கம் வரும். நகம் உரசி, நகம் உரசி தன்னைச் சூடாக்கிப்
பாலிறைக்கும் வட்ட நிலா! iiii:
75
07.1.1992

Page 49
\
பணியின்மொழி எழுதி
சோலைக்கிளி
\
இண்நிரவு கட்டிலுடண்
Öf L9086) 35LL9086) நீ குப்பறக் கிடப்பது எப்போது? எப்போதும் நீ மல்லாக்கக் கிடக்கிறாய். அதனால் உன்மீது குப்பறப் படுக்கிறேன்.
என் நரம்புகளின் இரைச்சல் உனக்குத் தெரியும். அவைகளின் பாஷைகூட உனக்குப் புரியும்.

நேற்றிரவும் முணுமுணுத்தேன் அதை நீ பதிவுசெய்து வைத்திருப்பாய். ஆடை உரிய இன்றிரவும் கிடக்கின்றேன் இதையும் நீ படம்பிடித்துக் கொள்வாய்தான்.
உனக்கு வாய் முளைத்தால் எனக்கு மிக அவதி
என் கட்டிலே!
என் முனகல்
என் அனுகுல் அவளது பெயரை நான் சொல்லுகின்ற நளினம் எல்லாம் உனக்குத் தெரியும்.
எங்கே உன்னுடைய இதயத்தைத் தேடுகிறேன், கழற்றி எடுப்பதற்கு. எங்கே உன்னுடைய இரத்தத்த்ை தேடுகிறேன், குடிப்பதற்கு.
இளம் பெண்ணின் தேகம்போல் உன் மெத்தை! அந்தச் சுகத்தில் நான் மயங்கி உழறுகிறேன்.
எங்கே உன் நரம்புகளைத் தேடுகிறேன் ଊଥ$(TଠେରD !.
77
20.6.1991

Page 50
\ ukudlalo akang saga)
சோலைக்கிளி
\
சுவர்கள் நடந்துவரும் அநை
உன் மூச்சுக்குள் வரவா
நான் குடியிருக்க, அழகு வெள்ளைப் பூக்களில் குளிர்காலைச் சுகத்தில் குந்திப் பின்னெழும்பி
பின்னொரு பூவில்
குந்தி எழும்பி குந்தி
பறக்கும் சிறு பூச்சே!
இது பெரிய உலகம்தான் ஆனாலும் எனக்கு இருக்க இடமில்லை. எறும்பின் வயிற்றுக்குள் போயிருந்து வாழ்வதற்கும் விண்ணப்பம் செய்துள்ளேன், இன்னும் பதிலில்லை.

நானிருக்கும் அறைக்குள் சுவர்கள் நடக்கின்றன. தினசரியும் அவைநடந்து என்னை நசுக்க வருகின்றன
வெறியோடு.
எழும்பி ஓடினால்
வாசல் உதைக்கிறது. தெருவில் நடந்து மரத்திற்குக் கீழ் நின்றால்,
66T60)6OS காகம் துாக்க வருகிறது, சிறு பூச்சே - உன் மூச்சுள் ஒரு குட்டிச் சுவர்வைத்து சிறு இல்லம் அமைக்க தயவுசெய்து இடம்தா, நீ பூக்குந்திப் பின்னெழுந்து, பூக்குந்திப் பின்னெழுந்து போவதற்குள் நிரந்தரமாய், பதில்சொல்லு என் தலையில் வந்து குந்தி.
79
29.7.1994

Page 51
V ukdlaló akang saggi
சோலைக்கிளி
\
விரால்மீன் துள்ளாத குளம்
ஒவ்வொரு இரவும் எழுதவேண்டும், கவிதை. நான் குதிரையிலே பறக்கவேண்டும். நீச்சல் குளத்தில் விரிந்திருக்கும் ஒரு பூவாய் நானும் விரிந்து என்னில் வண்டு குந்த, மனம் குளிரவேண்டும்.
வெண்கொக்கின் தோகையைப்போல் எனக்கும் பெரிய தோகை ஒவ்வொரு இரவும்
முளைக்கவேண்டும்.
அதிலே பலபெண்கள் ஊஞ்சல் ஆடி என் மீசையைப் பிடித்துக் குதித்து களைப்பாற வந்து இருக்கவேண்டும் என் இதயத்துள்.

கவிதை எழுதாத இரவே
இனி எனக்கு வராதே!
நீ சுருங்கி
ஒரு சிறிய
கருகிய மலர்போன்று
குப்பைகளில் ஒதுங்கு! எப்போதாவது என் வீட்டுப் பையன் நெருப்புடன் வந்து கொளுத்தி எரிப்பான் தெருவில்,
உன்னை.
நேற்றைய இரவே : உனக்குத்தான் நான் மேற்சொன்ன கதை, கேட்டுக்கொள்! ஒரு கவிதை எழுதாமல், எனக்குத் தோகை வளர்ந்து என் விரலால் தேன் வடியாமல், நாட்டின் சுதந்திரம்போல்
பொய்யாய் குளிரையும் கறுப்பையும் கொண்டுவந்து; என்னை உலர்ந்த பொருளாக்கி
கட்டிலில்
பல்லிச் சத்தம் இரசிக்கச் செய்த இரா
曲!
நான் விரால்மீன் துள்ளாத குளம்.
ii KDOXDg
81
13.5.1994

Page 52
\
Lmfudaű Giorgo Gaggio
சோலைக்கிளி
W W
குடைபிடித்துப் பாய்கின்ற இரத்தம்
எழுதுவதற்கு ஒன்றுமில்லை ரொட்டி சுட்ட ஒடு நெருப்பில் கிடந்து காய்வதைப்போல மணத்துடன் கிடக்கிறது,
மனம்.
ஒரு நீர் ஊற்றுச் சுரப்பதற்கும் இன்று சந்தர்ப்பம் இல்லை. சிறு புல் முளைத்து மனதுக்குள் இரு ஒலை கக்கி நின்று, அதிலே ஒரு புழுமயங்கி நெழிவதற்கும் வாய்ப்பில்லை, மனக் கோடை இறைக்கிறது.

என் இதயத்தின் இரத்தம் குடை பிடித்து நரம்புக்குள் பாய்கிறது, காயாமல். மீன் கொத்திப் பறப்பதற்கு வந்த அவளுடைய நினைவுக் கொக்கு வரண்டு வெடிக்கின்ற
என் மனதின் ஓரத்தில் துக்கித்து நின்றே மடிகிறது.
மழை வேண்டும்! என் மனதுக்குள் பெரியதொரு மாரி, பாடிப் பாடி இறைத்து ஆறு பெருகி, தெரு பாலம் கிராமமெல்லாம் eppé5.
என் இதயத்தின் வானத்தின் ஓரங்களில் ஒரே வியர்வை. நாலு தென்னை முளைத்து அடிக்கின்ற தென்றலுக்கு சட சடவெனத் தலை வீச - இரத்தம் தான்பிடித்துப் பாய்கின்ற குடையை மடித்து தோளில் கொளுக
83
15.10.1992

Page 53
\
Ladullað akang sugg
சோலைக்கிளி
\
எண் காதலை அவியவைத்து அழித்த ώυ ύιDωop
தோணிக்கும் தோணிக்கும் காதல். அது எனக்குத் தெரியும் ; அந்த பச்சைத் தோணிக்கும், இந்த மஞ்சள் தோணிக்கும்.
பச்சைத் தோணி மீன்பிடிக்கப் போனால் மஞ்சள் தோணிக்கும் அரிப்பு. மஞ்சள் தோணி கடலுக்குள் வலம்வந்தால் பச்சைத் தோணி நகரும்.
இந்த இரண்டு தோணிக்கும் பகுத்தறிவு இருந்தது. காதல் பாட குரலும் அழகுதான்.

ஒருநாள் பச்சை ஊர்விட்டு ஊர்போக மஞ்சள் தோணிமட்டும் சொந்தமண்ணில் நிற்க, காற்று மழை
மூன்றுநாட்கள் மீனவர்கள் கடலுக்குள் போகவேண்டாம் என்ற அறிவிப்பு.
போன இடத்தில்
பச்சை கிடந்தது.
இங்கேயே மஞ்சள் கிடந்து வெயிலுக்கும், நல்ல காலநிலை வேண்டியும், தவிக்கத் தவிக்க நெருப்பைப்போல் மழை கூடிக்கொண்டே பெய்தது, என் காதல் முற்றிப் பழுத்த நேரத்தில் அவியவைத்து அழித்த பேய்மழையைப்போல.
85
29.4.1994

Page 54
V
unfulsi Gongaya
சோலைக்கிளி
V
எண்ணை வாழ்க்கையில் எழுதும் சிசய்திசியாண்று
பறக்கின்ற பூவின் அழகுவரும்.
நிலா எனக்குள் பயிர்செய்யும், அது நீர் இறைக்கும்
வாய்க்காலில்
வெள்ளி மீன்கள் சினை பீச்சி
பொரித்து
கோடிக் கணக்கில் துள்ளும், என்னை
பொறாமையின்றி:
இந்த
வாழ்க்கையிலே எழுதினால்,
கன்னிகட்டுகிறேன் என்று உணருகிறேன், பறக்கும் அழகுவர நான். நிலா இப்போது என் தலையில் காய்கிறது.

நாம் திறந்து கொட்ட முடியாத பொருளா நமது நெஞ்சு!
எனது அசிங்கத்தையெல்லாம் பெருங்கடலில்
கொட்டுகிறேன்;
வரவர அதன் நிறம்
கறுப்பாகிப் போவதற்கு,
காரணத்தில் என்னுடைய அசிங்கமும் ஒன்று!
அசிங்கத்தில் பெரிய அசிங்கமென்று நான் நினைப்பேன், உனக்குள் விளைந்துள்ள பொறாமைகளின் மலையில் ஒரு துண்டு
எனக்குள் விளைந்ததைத்தான்! நீ எங்குபோனாலும் யாரிலும் எரிச்சல்படும் அளவுக்கு என் சிறுமலை பெருக்காமல் முளையோடு கொத்தி கடலுக்குள் கொட்டுகிறேன், எனக்கு
நான் நடந்தால்
பறக்கின்ற பூவின் அழகுவர.
iii :: OOHOO0
87
15.5.1994

Page 55
\
Laureò fius
சோலைக்கிளி
\
சிநஞ்சங்களைப் பகிர்ந்த மழை
என்னைக் கண்டதும் நின்றாய்
கதைத்தோம், ஒருபகல் போய் இன்னொன்றும் வந்து அதுவும் போய் அடுத்ததும் தலைநீட்ட.
பிரிய நெஞ்சங்களைப் பகிரப் பகிர சுகம்தான் நண்பனே! பெரிய சுகம்தான்! உன் நெஞ்சை நீ எனக்குப் பகிர என் மனதை நானுனக்குக் கொடுக்க ஒருபகலில் இருந்து எத்தனையோ பகல் கடந்தோம், ஆனால் இளமை
துள்ளித் துள்ளி வர.

இளமை
துள்ளித் துள்ளி வர இனியும் நாம் மழைக்குள் சந்திக்கவேண்டும். இன்று நாம் கதைத்த
மிக நெடிய நேரம் முழுக்கவும் மழைதானே, தெருவில் வாகனங்கள் தண்ணீர் அடித்து
எருமை முணுமுணுத்த மாரி.
அது
இந்த மழைக்குள்ளே குடைபிடித்து வந்து தெருமேய்ந்தபோதும் மாரி ஓயவில்லை, வானம் இன்னும் இடிக்கிறது. மாடும்
அலுப்புடன்தான் மிதக்கிறது.
89
22.1.1995

Page 56
\
Lafuria Giorgiaggi
சோலைக்கிளி
\
தலைக்கிறுக்குப் புல்
ஒரு மரியாதை தெரியாத தலைக்கிறுக்குப் புல் நீ கொண்டையில் பூ!
நான் எழும்பி நிமிர்கின்ற முன்வாசல் என்று தெரியாதா உனக்கு ? இநத இடத்தில்தான் நிலாப்பால் நான் குடித்து சில இரவில் கிடப்பேன். அவளை நினைத்து இந்த வாசலில்தான் விம்முவேன்.
அழுவேன்.
உம்மா பார்த்தால்
சாட்டுக்குச் சிரிப்பேன்.

நீ இதில் முளைத்ததை : என் மெத்தையில் போய் முளைத்திருக்கலாம். அதைவிட எனக்கு
இதுதான் குளிர். என் தலையணைக்குள்ளும் நீ முளைத்தால் மகிழ்ச்சிதான், அதை நான் துாக்கி எறிந்து மிகக்காலம், அவள் தொலைந்த தினத்தில் இருந்து.
ஓம், புல்லே!
என் சோற்றுப் பாத்திரத்துள் நீ முளைத்தால் கூட
துக்கம் இருக்காது.
இன்னும் ஏன் ;
என் பெண்ணின் தொப்புளுக்குள்கூட குருத்துவிட்டு நீ
கொழுத்து
நின்றால் கூட கோபிக்கேன்.
UTT,
இது ஒரு தவறு.
மிகப் பெரிய குற்றம். என் உள்ளங்கையில் முளைத்தமாதிரி ஒரு மாபெரிய குற்றம்.
யோசித்துச் செய், இரவைக்கு நான் அவளை நினைக்கவேண்டும்.
91
O5.1992

Page 57
\
Lansdudlað akang sugg
சோலைக்கிளி
\
ஆட்ருக்குட்டிக்கு அஞ்சலி
புல்லை இனிநான் உண்கிறேன். கோடி வேலியிலே தளைத்துள்ள கிறுசிலியாக் கம்பை இனிநான் காருகிறேன். ஆலங் கொத்தைப் புசிக்கிறேன். யார் கையை நீட்டினாலும்
துள்ளுகிறேன்.
குதிக்கிறேன்.
எவரும் துாக்கினால் இரண்டு கைகளுக்குள்ளும் இருந்து 'மே' என்கிறேன்.
என் ஆட்டுக் குட்டி என் ஆத்மா!

தலையில் கறுப்பும் புறங்காலில் வெள்ளையுமாய் சித்திரம் கீறிய தோலுள்ள என் உயிர்!
இனி என் ஜன்னலுக்குள்ளால் என்னை எட்டிப் பார்ப்பதற்கு யார் உண்டு ? நான் நடக்கின்றபோது ஓடிவந்து என் காலை கட்டி மகிழ எந்தச் சீவன் இனிப் பிறக்கும் ?
இனி நான்
மழை வந்தால், 'மே' எனக் கத்துகிறேன். கொச்சிக் காயை கிள்ளித் தேய்க்கும் வெயில் வந்தாலும், 'மே' என்றே கத்துகிறேன். என்னை நானே என் ஜன்னலுக்குள்ளால் எட்டிப் பார்க்கிறேன்.
நேற்று இரவு
செத்த எனது ஆட்டுக் குட்டியைப்போல், புழுக்கை புழுக்கையாய்
கழிக்கிறேன். எறும்பு கடித்தால் நிலத்தில் சடாரென விழுந்து துடிக்கிறேன், உம்மா துரத்தட்டும்.
93
26.6.1991

Page 58
\
usuallaðahagi apg
சோலைக்கிளி
V
பூத்தல்
ஒரு கவிதை பறந்துவந்து பூமரத்தில் குந்தி இன்று காலையிலும் எதையோ சொன்னது ; கொஞ்சம் அழகாகத்தான் பூமரம், தன்னைச் சோடித்துக்கொண்டு நின்றது.
நேற்றுக் காலையிலும் இக்கவிதை வந்தது. பூமரத்தின் நெஞ்சிருக்கும் கன்னிக்குலை அதிகமுள்ள பகுதியிலே குந்தி சொண்டாலே எதையோ எழுதி விளக்கியது, பூமரமும் நேற்றும் ;
தலையாலும் சோடித்து காலாலும் அலங்கரித்து
நின்றது பார்க்க: என்னுடம்பில் மயிர் மணக்க.

கவிதை சிறு கவிதை
ஆனாலும் அழகு. பூமரத்தில் நின்றால் இரண்டிற்கும் புத்துணர்ச்சி. காலையிலே பனியில் அழகுக் கவிதைவந்து குந்தி ஒதுகின்ற பாட்டால் இம் மரவேரும் பூக்கிறது.
பூமரமே பூமரமே
உன் வேரும் பூக்கின்ற அதிசயத்தை நான்கண்டு வியக்கத் தயாரில்லை. உன் பொருத்தக் குருவி உன் நெஞ்சுக்குள் பாலாறு பொங்கச்செய்து உன் கொண்டையிலும் இன்பத்தை கொட்டி வார்ப்பதனால்,
பூக்கின்றாய் பூக்கின்றாய் பூக்கின்றா' க்கின்றாய்
பூக்கின்றாய் அவன்போல, அவனுடைய பெண்போல!
95
23.1.1995

Page 59
\ uflufla álms sugg
சோலைக்கிளி
\
தோணி ஆரும் பாட்டு
தோணி ஆடும் பாட்டு எனதுாரின் மீனவரின் ஏலேலோக் கீதம். உங்கள் அழகு நாட்டிய மேடைகளில் இனி எங்கள்
தோணிகளை அழையுங்கள். அமைச்சர்களையும் விருந்தினராய் எடுத்துவைத்து.
கவிஞன் கட்டாமல் இயற்கை கட்டிய பாட்டு மீன் மயங்கி வலைக்குள்
ஏறிவந்து கரைக்கு குதித்துத் தாளம் போட்டுப் பின் காசாகும் செம்படவன் குரல் சொத்து

இந்தச் சொத்து கடல் நெஞ்சைக் கிழிக்கையில்தான் எங்கள் ஊர்த்தோணி ஆடும், வாரும் ; UTCblb,
பின் அழைத்து, நகரத்து மேடையிலே ஏற்றும்!
உங்கள் நர்த்தகிக்கு
கால் முடம்.
ஒருத்திக்கு இடுப்புவலி, கழுத்துச் சுளுக்கு ஒருத்திக்கு முழங்காலில் நோவு, இன்னொருத்தி வாதை.
இவர்கள் ஆடித்தான் நீங்கள் ரசிக்கின்றீர். கையடித்து மாலையிட்டு. பொட்டுவைத்த பிறைத்தோணி போ இவர்கள் மேடைக்கு! ஏலேலோப் பாட்டுக்கு நீ ஆடித் தேர்ச்சிபெற்ற அழகு நாட்டியத்தை ஆடு! அமைச்சர்கள் மட்டுமல்ல ; வந்திருக்கும் பிரமுகர்கள் கையெல்லாம் வாய்மொய்க்கும் கொசுத்தட்டி விரச. அவர்கள் ரசித்த
நர்த்தகிகள் குனிந்துவந்து உன் கால்த்துாசைத் தட்டிக் கொஞ்ச.
97
28.4.1994

Page 60
\ Lasudai Ghony Gugg,
சோலைக்கிளி
\
படையோன பிறகுகண்ட 6rør HøsfuD0 uDrib
கண்ணாடி போட்டிருந்தாள் மாமி! யாரோ ஓர் ஆமிக்காரன் வாங்கிக்கொடுத்திருந்தான்.
அவளின் முத்துப்போன்ற பற்களில் சிலதை முன் முரசில் காணவில்லை.
தலைக்கு நிறச் சாயம். இருந்தாலும் முகம் சுருங்கி, புன்னகைக்கும் பூ வெந்து இளமையை ஒரு நுாலில்கட்டி அவள் உடம்பில் வைத்ததுபோல் இருக்கிறது இன்றுநான் பார்க்க!

μΟΠιδ என்னைத் தெரிகிறதா உங்களுக்கு ? நான்தான், வெயில் மங்கி நிலா விதைக்க, இருள் வானம் உழும் நேரம் ஊர் இருந்து பறந்துவந்து இந்தப் பெருங்கொப்புள் குந்தியிருந்த தினம் வரும் குருவி.
நீங்கள் என்னைக் கக்கத்தில் இடுக்கி இருப்பதுபோல்
இருக்கும்
உங்கள் கொப்புக்குள் இருந்தால் நான்,
பார்ப்போர்க்கு.
DITLE
ஆமி வந்து உங்களைத் தமது
படைவளவுள் சிறைப்படுத்த,
அறுந்தது நமது தொடர்பு.
ஆரம்பத்தில்
காற்றில்
இரண்டொரு கடிதம் ;
பூக்கேட்டு
வேரில்
சப்பாத்துக் காலால் உதைக்கின்றான் என்றுசொல்லி
அழுதெல்லாம்.
பின் காற்றும் இறந்தது. நாம் கடிதம் எழுதி வாசிக்கும் எழுத்துகளும்
மறந்தன. 99
மாமி என்னைத் தெரிகிறதா உங்களுக்கு ? iiiii
- 23.4.1994

Page 61
\
umfluflað hong slygi
சோலைக்கிளி
\
தமிழ் விழுத்து ஒட்டு வீடு
வானின் உச்சிக்கு உயரத் தொடங்கி இன்னும் மூன்றடி குறைவாய் நிற்பதுதான் எனது ஊர்.
கத்துங்கள் பறவைகளே கத்துங்கள், தேன்காற்றில் இனிமை கலந்து பூசுங்கள் மரங்களுக்கு. மாடு கத்தும் சத்தத்தில் தமைமறந்து நீர்தவளை வந்து
குடிக்கட்டும், எருமை மாட்டின் ஒலியைத்தான், பூவிரிய பின் அவைகள் பாட், தன்னினத்தின்
குரல் வடிவே மாறி!

ஆம், எருமைமாடும் மிக இனிமையாய் பாடி தவளைக்கும் குயில் தன்மை கொடுக்கும் எனதுாரில் ஒரு பெண் இருந்தாள்.
அவள் கண்ணுள் நிலவு
சட்டை மாற்றி
வானுக்குத் தினம் போகும்.
அந்த, நிலவு உடைமாற்றும் நம்பிக்கைக் கண்ணுப் பெண் வாழ்ந்த குளிர் வீடே
இந்தப் பாழ்வீடு! -
கற்கண்டால் கல்செய்து
6ਹੀ L. Suਰੰਠੰ
கவிஞர் பலர் வந்து
கட்டி, கூரைக்கு
தமிழெழுத்தால் ஓடுவேய்ந்த
அழகு வீடே
இந்த அழுக்கு மனை!
ஊரழிந்து மரமெரிந்து மண்ணும் கருகி
மனிதர் ஊரோமங்களும் பொசுங்கி.
101
19.3.1995

Page 62
W Lausò stoso
சோலைக்கிளி
\
அவள் கூந்தலில் சூ2ய சிதண்ணாவிரிக்கக் காந்று
காற்றைக் கிள்ளி தன் தலையில் சூடி போனாள் அவள்.
எங்கு தேடிக் கொய்தெடுத்தாள் இந்த நறுமணக் காற்றை தெருவின் தொடக்கத்தில் அவள் நுழையும்போதே
6) Téff
வீசத் தொடங்கிய அது, இன்னொரு தெருவின் வாய்க்குள் விழுந்து அதன் பற்கள் அவளை அரைத்துப் புசித்து துாங்கிக் கிடந்த பின்னரும்கூட,

என் மூக்கைக் கொளுவி அவள் பின்னால் இழுத்து செல்லும் அவள் கூந்தலில் சூடிய காற்றின் தேசம் எங்கே உண்டு ?
தென்னாபிரிக்காவா!
15.5.1994
103

Page 63
W uaflufla klimgslö
சோலைக்கிளி
W
பிள்ளைத்தாய்ச்சிக் கவிஞண்
பொக்கணிக்கொடி வெட்டாமல் நாலைந்து. கை சூப்பியபடி இதோ, ஒன்று. காலையில் தேனீருடன் வருகின்ற தாயே, தொட்டில்கள் சில கொண்டு வா.
இன்றிரவு;
விடிய விடியப் பிரசவம்தான். வேதனை அதிகம். எலும்புகள் வாய்முளைத்துப் பேசிய பேச்சில் ஒரே களைப்பு.

என் தாயே!
கவிஞனும் ஒரு பிள்ளைத்தாய்ச்சிதான். என் இதயத்தின் பெண்குறி
நன்றாக விரிந்துவிட்டது. துவாலை கட்டி கட்டியாய் பாய்ந்து அவளை அணைக்கின்றபோது ஏற்படும் மயக்கம்போல் மயக்கமும், வெப்பமும்.
இதோ, இன்னும் வருகிறது நோக்காடு. மனதோடு உணர்வு புணர்ந்து இரட்டைக் குழந்தையும், ஒரே சூலில் பத்தும் இருபதுமாய் பிள்ளை, பிள்ளை, பன்னீர்க்குடம் உடைகிறது. மாக்கொடி விழுகிறது. அவதிதான், கவிதைப் பிரசவம் அவதிதான். கத்துகிறது கவிதை, என் தாயே, எடுத்துப் படி, உன்பேரக் குழந்தையைப்போல்.
105
20.2.1995

Page 64
W Lallula) Siongauge
சோலைக்கிளி
\
எனக்கான இரங்கற்பா
இவனொரு பொதுநலப் பிறவி.
நிலாவை -
இல்லை : இயற்கையின் அத்தனை செல்வங்களையும் பூசி மினுக்கிய மனிதன்.
இவன் கண்மூடித் துாங்குவது மரணித்து அல்ல. கண்கள் இவனுக்கு இரண்டென்றால்
நம்பலாம்! உரோமங்கள் எல்லாம் இவனுக்குக் கண்கள். இவன் உயிர்கள் கவிதைகள். அவைகள் மரித்தல் கடினம்!
இவனை நீங்கள் கொண்டுபோய் புதையாதீர்! மணல்கள் எழுத்துகளாய் மாறும். இவன் சாவில் நீங்கள் இடுகின்ற ஒலங்கள் இனிய கீதங்களாய் மாறி காற்றோடு கலப்பதால் பாட்டுப் பாடித்தான் புயல்வரும் இனி!

கவிஞன்!
நீடுழி வாழும் கவிஞன்! அமைதியாய் போனதுபற்றி அலட்டாதீர்! இவன் இனிப் பேசத் தேவையில்லை. இவனுடைய பேச்சை கடலலைகள் பேசிடுதே!
ஊர் ஒருநாள்
இந்த மைந்தனையும் இழப்போமென
என்னித்தான் இருந்திருக்கும்.
இவனோ, இதயத்தின் நரம்புகளால் கவிதை மழை
பொழிந்து
அந்த மழைக்குள்ளே தன்விதையைப் பயிரிட்டான்.
பார்க்கும் இடமெல்லாம் இக்கவிஞன் நிற்கின்றான்! நன்றாக முற்றி விளைந்து குலுங்குகிறான்! மண்ணெல்லாம் கவிதை உறைந்து கிடக்கிறது! இந்த மண்ணிலே அடிமரத்தை இடலாமா ? உயிர்க்கவிதை துடிக்கும், மணல்
எழுத்தாகும்.
தயவுசெய்து இந்த
உடலைச் சுணக்காதீர்! இனிப்புக் கண்டு எறும்பு படையெடுக்கும். கொண்டுபோய்,
அடைவைத்துப் பாருங்கள்! கோடிக்கணக்கில் குயில்கள் உருவாகும். வானம் பாடிகள் உயிர்க்கும்.
தாமதித்தால்,
கவிஞனைத்தேடி மேகம் வரும் கொண்டுசெல்ல. :
107
24.2.1990

Page 65


Page 66
இதொரு இன்று போஸ்னி தியிருக்கமுடியு வில், சூடானில், னில், ஈராக்கில், களில் - ஏன், க - இக்கவிதைகை போர் - அது எந் லும் சரி. அதன் ட தாலும் சரி - அ இக்கவிதைகள்.
சோலைக்கி நவீனமானவை. றைச் சாத்தியப்ப தமிழர்களின் வா அனுபவங்கள், ஆனால் அந்தத் த
EAST சோலைக்கிளியிட

ப்பிலுள்ள பல கவிதைகளை யாவிலுள்ள ஒரு கவிஞன் எழு ம், ருவாண்டாவில், சோமாலியா ஆப்கானிஸ்தானில், குர்திஸ்தா பெருநாட்டின் ஆண்டெஸ்மலை ாஷ்மீரிலும் பஞ்சாப்பிலும் கூட ள ஒருவர் கேட்டிருக்கக் கூடும். த வகையான போராக இருந்தா க்க சார்பாளர்கள் யாராக இருந்
தற்கு எதிரான பிரகடனம்தான்
ளியின் நுண்ணுணர்வுகள் மிக நவீனத்துவம் சார்ந்தவை. இவற் டுத்துபவை இன்று இலங்கைத் ழ்விலுள்ள உக்கிரமான போர் சகியாமை, பேய்ச் சூழல். $னிப்பட்ட, குறிப்பிட்ட அணுப உலகுதழுவியதாக்குவதுதான் முள்ள ரசவித்தை.