கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வம்ச விருத்தி  
 

அ.முத்துலிங்கம்

 

வம்ச விருத்தி

அ.முத்துலிங்கம்

பதிப்பரை

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது சங்க காலத்து செந்நாப் புலவன் ஒருவன் கற்பித்த இனிய உலகம். அந்த உலகளாவிய மனித நேயம் போற்றப்பட்ட சங்கச் சான்றோர்ன் ஈழத்து பூதன் தேவனார். இவர் ஈழத் தமிழரின் தாய்மொழி நேசிப்பை நாட்டினார் என ஈழத் தமிழர் கொண்டாடுவர். இது வரலாறல்ல; ஐதிகமே என்று சொல்வாரும் உளர். ஆனால், சென்ற நூற்றாண்டில் ஆறுமுகன் என்னும் இளைஞன் தமிழ்நாடு சென்றான். தனது சொல் வன்மையினால் 'நாவலர்' என்று மகிமை பெற்றார். அவருடைய தமிழ் வசன ஆளுமையைத் தமிழ்நாடு ஏற்றது. இந்த நூற்றாண்டில் விபுலாந்த அடிகளாரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தனது முதலாவது தமிழ் பேராசிரியராய் சிறப்பித்தது, ஆஹா, தமிழகத்திற்கம் ஈழத்துக்கும் இடையில், எத்தகைய நாகரிகமான புரிந்துணர்வும், பரஸ்பர வித்துவ அங்கீகரிப்பும் நிகழ்ந்தது!

பிறகு, சமன்பாடுகள் மாறின. தமிழகத்திலே, வியாபாரத்திலே முதன்மை பெற்ற சஞ்சிகைகள் சில, தமிழ் இலக்கியப் படைப்புத் தங்களுடைய ஏகபோகம் என்று சத்தம் போட்டன. இலங்கை அரசியலில் 'காலாள்கள்' போல நகர்த்தப்பட்ட ஈழத்தமிழர் சிலர், 'தமிழகச் சஞ்சிகைகளுக்குத் தடை விதியுங்கள்' என்ற கோஷங்கள் வைத்து ஆர்ப்பரித்தனர். இரண்டு தவறுகள் இணைத்து ஒரு சரியாகி விடுமா? இல்லை என்பது தான் உண்மை.

இப்பொழுது மீண்டும் சமன்பாடுகள் மாறியுள்ளன. தமிழ்நாடு - ஈழம் ஆகிய இரு நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாலும், தமிழ் இலக்கியப் படைப்பும் பகிர்வும் நடைபெறும் நிதர்சனம் விடிந்துள்ளது. உலகளாவிய இந்தத் தமிழ் இலக்கிய வியாபித்தலினால், தமிழே செழிப்பும் சேமமும் பெறும் என்கிற இதம் தமிழ் நாட்டில் கனிந்துள்ளது. இத்தகைய ஒரு சகாயச் சூழலிலே, புலம் பெயர்ந்த ஈழத் தமிழருடைய இலக்கியப் படைப்புகள் உரிய வகையிலே தமிழ் நாட்டில் பிரசித்தமாகுதல் வேண்டும். அவ்வாறே தமிழ் நாட்டின் ஆதர்சமான படைப்புகள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் வாசகர்களைச் சென்றடைதல் வேண்டும். இந்தப் பணியினை முன்னெடுத்துச் செல்வதையும் மித்ர வெளியீடு தனது இலக்கிய ஊழியமாக வரித்துள்ளது.

'வம்ச விருத்தி'யில் உள்ள கதைகள் பல, தமிழுக்குப் புதிது. இதுவரை தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தாத புதிய கதைக் களங்களையும், கதைப் பொருளுக்கான புதிய அக்கறைகளையும் இத்தொகுதியின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு அ. முத்துலிங்கம் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்ச் சுவைஞர்கள் மட்டுமன்றி, தமிழ்க்கதைப் படைப்பாளிகளும் 'வம்சவிருத்தி' யினாலேயே பயனடைவார்களென்று நம்புகின்றேன்.

டாக்டர் பொன். அநுர


என்னுரை

'ஒஸ்கார் வொயில்டு' என்ற சிறந்த ஆங்கில அறிஞர் ஒரு நாள் முழுக்க எழுத்து வேலைகளில் மும்முரமாக இருந்தார். அவர் மதிய உணவு அருந்துவதற்காக வந்தபோது அவருடைய நண்பர் ஒருவர் 'நீங்கள் நிறைய எழுதி முடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே?' என்றார். அதற்கு ஓஸ்கார் வொயில்டு 'ஆமாம், ஒரு காமா போட்டேன்' என்று கூறினாராம். அன்று இரவு மறுபடியும் அதே நண்பர் அவரிடம் 'இரவு வந்தது கூடத் தெரியாமல் விழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருந்தீரே! என்ன? இன்னொரு காமா போட்டீரா?' என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு ஓஸ்கார் வொயில்டு, மூச்சுவிடும்நேரம் கூட எடுக்காமல், 'இல்லை, ஏற்கனவே போட்ட காமாவை மீண்டும் அடித்துவிட்டேன்' என்று கூறினாராம்.

இந்த நிலைதான் அநேகமான எழுத்தாளர்களுக்கு. ஆனால் என்னுடைய நிலைமையோ இன்னும் மோசமானது. நான் தமிழ் பண்டிதன் அல்லன். என் அநுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அடக்க முடியாத அவாவிலே புறப்பட்ட சாதாரணன். ஒவ்வொரு வார்த்தையாக பொறுக்கி எடுத்து அவற்றை நேர்த்தியாகக் கோத்து, நகாசு வேலை செய்து சிறுகதை வடிவங்களாக தருவதற்க பல மாதங்களாகிவிட்டன. இந்தக் கருக்கள் வடிவமின்றி என் மனதிலே தூங்கிக் கொண்டிருந்த காலமோ மிகப் பெரியது. ஆனால் அவற்றை எழுத்து வடிவத்திலே கொண்டு வருவதற்குத்தான் இவ்வளவு ஆக்கினைப் படவேண்டி வந்துவிட்டது.

முப்பது வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு திரும்பவும் இலக்கியம் படைக்க வந்தது ஏன்? இதுதான் பலருடைய கேள்வி? தமிழ்கூறும் நல்லுலகம் நட்டப்பட்டு போகாமல் மிகவும் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறது. அப்படியிருக்க, திடீரென்று எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது எப்போது? சம்பந்தரைப்போல ஞானப்பால் குடித்து பிறக்கவில்லை என்பது நிச்சயம்; காளமேகப் கவியைப்போல எச்சில் தம்பலத்தை சுவைத்தபின் எழுந்த உற்சாகத்தில் எழுத்தாணியை எடுக்கவில்லையென்பதும் நிகம். பிரம்மாவே வந்து வால்மீகிக்கு சந்தம் எடுத்துக் கொடுத்தது போன்ற பாக்கியமும் எனக்கு கிட்டவில்லை; எனக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு நண்பருடைய முழங்கை இடிதான்.

தமிழ்நாட்டில் ஓர் இசைவிழாக் கச்சேரியை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த நண்பர் சள்ளையிலே ஒரு இடி இடித்து இதற்கு கால்கோள் விழா நாட்டினார். அவர் உசுப்பிவிட்டதைத் தொடர்ந்து மற்ற நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உசாரும்தான் இதற்குக் காரணம்.

நான் சிறுவனாக இருந்தபோது அம்ம எனக்கு அடிக்கடி கதைகள் சொல்லுவார். அந்தக் கதைகளை 'கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது' என்று சொல்லி முடிப்பார்கள். கதைக்கும், கத்தரிக்காய்க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நான் பல நாட்களாக கற்பனை செய்து வைத்திருந்தேன். கத்தரிக்காய் காய்த்தால் காய்த்துவிட்டு போகட்டும். ஆனால் என் கதைகள் 'முடிவது' எனக்கு சம்மதமில்லை. அவைகள் 'நிறைவு பெறுவதையே' நான் விரும்புகிறேன். தமிழ் வாசகர்களின் கற்பனை விலாசத்திலும், மதியூகத்திலும் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே என் கதைகளின் கடைசி வரிகளைப் படித்த வாசகர்களின் கற்பனை ஓட்டத்திலே அந்தக் கதைகள் பூர்த்தியடைவதையே நான் இச்சிக்கிறேன். அவைதான் சிறப்பான கதைகளென்றும் எண்ணுகிறேன்.

நான் அளப்பரிய மரியாதை வைத்திருக்கும் ஓர் எழுத்தாளர், அண்மையில் ஒரு பத்திரிகையில் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். கதை படிக்க மிகவும் ரசமாக இருந்தது. நகைச்சுவை இழையோடி சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்கக்கூடத் தோன்றியது. ஆனால் கடைசி வாக்கியம் முடிந்தபோது கதையும் 'முடிந்துவிட்டது'. ஒரு நீண்ட விகடத்துணுக்கை படித்தது போலத்தான் எனக்கு இருந்தது. வெங்காயத்தை உரித்து, உரித்து கடைசியிலே ஒன்றுமே இல்லாமல் ஆகியதுபோல எனக்கு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. இவ்வளவுக்கும், அந்த கதையானது சிறுகதை இலக்கணத்துக்குள் மிகவும் கச்சிதமாகப் பொருந்தித்தான் இருந்தது.

இப்பவெல்லாம் அடிக்கடி அழகுப் போட்டிகள் நடப்பதைப் பார்க்கிறோம். உலக அழகுப் போட்டிகளெல்லாம் Beauty with a Purpose என்ற முறையில் நடைபெறுகின்றன. 'அழகுக்கு ஒரு குறிக்கோள்' என்று சொல்லிக் கொண்டு இந்த அழகிகள் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து மனிதவளத்தை மேம்படுத்தும் நற்பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்புபோல் உடல் அழகையோ, முக லட்சணத்தையோ ஆராதித்த சகாப்தம் போய் திருவாதபூரரடிகள் போற்றிய 'சித்தம் அழகியவரை' உலக அழகியராக தேர்ந்தெடுக்கும் காலம் வந்துவிட்டது.

'இதுபோல நாங்கள் எழுதும் கதைகளிலும் ஏன் ஒரு 'குறிக்கோள்' இருக்கக்கூடாது? அது என்ன அப்படி ஒர்அபவித்திரமான வார்த்தையா? இப்படித்தான் ஒர் எண்ணம் எனக்கு அடிக்கடி வரலாயிற்று.

இதன் காரணமாகத்தான் இந்தத் தொகுதியில் நீங்கள் படிக்கும் கதைகள் சிறிது மாறுபட்டவையாக இருப்பதைக் காண்பீர்கள், இந்தியா, இலங்கை, அமெரிக்க, கனடா ஆகிய நாடுகள் எல்லாம் கதைக் களங்களாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. கதை மாந்தர்களும் அப்படியே. கதையின் கருப்பொருளும் சிறிது வித்தியாசமானதாகவே இருக்கும். நகைச் சுவைக்காகவோ, வாசகர்களை கிச்சுகிச்சுமூட்டவோ எழுதப்பட்டவையல்ல இந்தக் கதைகள். பொழுதுபோக்கிற்காக எத்தனையோ கதைகள் வெளிவருகின்றனவே! அந்தக் கணக்கில் இவை தவறியும் சேர்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் படைக்கப்பட்டவை.

அமெரிக்காவில் ஒரு தலைசிறந்த நாவிதரிடம் ஒருவர் தலை அலங்காரம் செய்து கொள்ளப் போனாராம். அந்த நாவிதர் ஐந்து நிமிடங்களிலேயே காரியத்தை முடித்து விட்டு நூறு டொலர் கேட்டாராம். திடுக்கிட்டுப் போன அந்த வாடிக்கையாளர் 'என்ன இது? நாலு முடியை வெட்டியதற்கு நூறு டொலரா?' என்று கேட்டார். அதற்கு அந்த நாவிதர் 'ஐயா, இந்த சன்மானம் வெட்டிய தலைமுடியின் அளவை வைத்து தீர்மானிக்கப்படவில்லை; வெட்டாமல் தலையிலே விட்டுவைத்த சிகையை வைத்தல்லவோ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது' என்று கூறினாராம்.

நான் இந்தக் கதைகளை அந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன். சொல்ல வந்த விஷயத்தை தெம்பாகப் பிடித்துக்கொண்டு மீதியைத் தயவு தாட்சண்யம் இன்றி நீக்கிவிட்டிருக்கிறேன். இதன் காரணமாக, என் மனதிற்கு வெகு பிரியமாயும், இதயத்திற்கு கிட்டவுமுள்ள 'உயிர் நேயம், பிரபஞ்சநேயம்' ஆகியவை இந்தக் கதைகளில் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் அதற்கு என் பேராசை தான் காரணம். வாசகர்களுடைய மன்னிப்பை அச்சாரமாக இப்பவே கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்தில் ஒரு தமிழ்நாட்டு நண்பருடன் கதைத்த போது அவர் 'உங்கள் கதைகளை படித்தேன்; மிகவும் நன்றாக இருந்தன. யாழ்ப்பாணத் தமிழ் தொல்லை கொடுக்கவில்லை' என்று கூறினார். எனக்கு சிரிப்பாக வந்தது. யாழ்ப்பாணத் தமிழ் இப்படி தமிழ்நாட்டு வாசகர்களை 'ஆட்டி வைக்கும்' விஷயம் எனக்கு அன்றுவரை தெரியாது. இந்தத் தொகுப்பில் வரும் கதைக்களங்கள் அநேகமாக அந்நிய நாடுகளில் ஊன்றியிருந்தாலும், 'கதை சொல்லி' மாத்திரம் ஒரு யாழ்ப்பாணத்தவன் என்றபடியால் இடைக்கிடை ஓர் உண்மைத் தன்மையை நிலைநாட்ட 'அந்தத் தமிழ்' தலைகாட்டும். கதையில் உண்மைக்கும், அழகுக்கும் சத்தியத்துக்கும் அவை உதவும் என்றே நம்புகிறேன்.

சிறுகதையின் உருவம் மாறிக்கொண்டே வருகிறது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் 'இதுதான் சிறுகதையின் வடிவம்' என்று யாரால்தான் திட்டவட்டமாகக் கூற முடியும்? ஒரு 'கதைசொல்லி' தான் சொல்லவந்த கதையை வாசகனுக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப் பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப்பொருள்தான் முக்கியம். உருவத்துக்காக வில்லுக்கத்தியை மடக்குவதுபோல கதையை மடித்துப் போட்டுவிட்டால் கதையின் யோக்கியத் தன்மை கெட்டு விடும்.

இது பற்றி நான் மிகவும் மதித்து போற்றும் இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. கி.ராஜநாராயணன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். "ஒரு சம்பவத்தை (நடப்பை) அப்படியே சொகமாக வர்ணித்து முடிக்கிறீர்கள். விமர்சகர்கள் இதைச் சிறுகதை வடிவம் இல்லை என்று சொல்வார்கள். 'இப்படியும் எழுதலாம்' என்பதே என் கருத்து. சிறுகதை வடிவம் உடைந்து மறுவடிவம் எடுப்பது என்பது இப்படித்தான்; புதுக்கவிதைபோல. மரத்திலிருந்து வித்தியாசமான ஒரு கிளையை வெட்டி எடுத்து முன்னும் பின்னும் தறித்துவிட்டு அதை வரவேற்பு அறையில் நிறுத்தி வைக்கிறோம். அதில் செதுக்கல் இல்லை; சிறப்மில்லை; என்றாலும் அதில் ஒரு அபூர்வ வடிவம் தெரியும்; அதுபோல."

பூக்களைத் தொடுத்துக் கொண்டு நிற்கும் நார்போல ஓர் ஒருமைத் தன்மையுடன் கதையிருக்க வேண்டும். நானூறு வருடங்கள் நடந்த ஒரு கதையை நாலு வரியில் சொல்லலாம்; நாலு நிமிடங்களில் நேர்ந்த ஒரு சம்பவத்தை நாற்பது பக்க கதையாகவும் விரிக்கலாம். ஆனால் கதையினுடைய 'தொணி' மாத்திரம் மாறாமல் கதையை ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

காகித விரயத்தில் எனக்கு உவப்பில்லை. ஒரு காகிதத்தை கசக்கி எறியும்போது ஒரு மரத்தின் இலை கண்­ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான். இந்தத் தாள்களில் அச்சாகி வரும் கதைகளால் ஒரு வித பயனுமில்லை என்றால் இந்தக் காகிதங்களைத் தருவதற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்காக நான் கண்­ர் வடிக்கிறேன். ஓ மரங்களே! என்னை மன்னிப்பீர்களாக!

இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வருவதற்க உறுதுணையாக இருந்த அன்புள்ளங்களை நான் மறக்க முடியாது. தலைக்குமேல் இருந்த வேலைத் தொல்லைகளுக்கிடையிலும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் ஒவ்வொன்றையும் படித்து அருமையான முறையில் முன்னுரை வழங்கிய பெருமதிப்பிற்குரிய திரு.மாலன் அவர்களக்கும், நண்பனாய், வழிகாட்டியாய் என்னை உற்சாகப்படுத்தி, ஆலோசனைகள் தந்து இந்தப் புத்தகத்தை சிறப்பாக வெளியிடுவதற்க தூண்டுகோளாக இருந்த என் நெடுநாளைய நண்பர் எஸ் பொன்னுத்துரைக்கும், தக்க படங்கள் வரைந்துதவிய ஓவியர் மருதுவுக்கம், என் பளுவைத் தன் பளுபோல் சுமந்த நண்பர் வி.சுந்தரலிங்கத்துக்கும், தன்னலம் கருதாது ஓயாது உழைத்துதவிய கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுக்கும், அச்சிடும் வேலைகளை அககறையுடன் கவனித்த இளம்பிறை எம்.ஏ.ரஹ்மானுக்கும், புத்தகத்தை செம்மையாக பதிப்பித்த மித்ர நிறுவனத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

அ.முத்துலிங்கம்
19ம் நாள், தை மாதம், 1996.

House no.32
street 4
F 8/3. Islamabad
PAKISTAN.


முன்னுரை

இன்றைக்கு வந்த தபால்களை உடைத்து மேசையில் கொண்டு வந்து வைத்தார்கள்.

"இன்டர் நெட் போன்ற வசதிகள் வந்துவிட்டனவே அவை நமது கற்பனைக்குச் சமாதி கட்டிவிடுமோ, புதினம் என்பதே அழிந்து போகுமோ?" என்றொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

யோசிக்க வைத்த கேள்வி.

தமிழன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழில் நுட்ப அதிசயங்கள், புலம்பெயரும் நிர்ப்பந்தங்கள், அவனது கலையாத கல்விக்கும் குலையாத திறமைக்கும் பரிசுகளாகக் கிடைத்த அயல் கலாசார சிநேகங்கள், இவையெல்லாம் தமிழனது பழைய வாழ்க்கையை மெல்ல மெல்லத் தூர்த்து வருகின்றன. அவனது வாழ்க்கை இனி யாழ்ப்பாணத்துப் பனங்காட்டிலும், கொழும்பு திணைக்களத்துக் கதிரைகளிலும், சென்னைப் புழுதியிலும், கரிசல் காட்டு வெக்கையிலும் மட்டும் விரிந்து கிடக்கவில்லை. அது நார்வேப் பனியில் உறைந்து கிடக்கிறது; நீயு ஜெர்சி ஷாப்பிங் மால் ட்ராலிகளில் நகர்ந்து வருகிறது; ஆப்ரிக்க நுளம்புகளின் ரீங்காரத்தில் எதிரொலிக்கிறது. இனி நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை.

களங்களும், தளங்களும், மனங்களும்கூட மாறிவிட்ட இந்தப் புதுத் தமிழனைப் பதிவு செய்ய யார் இருக்கிறார்கள்?

இந்தக் கதைகளைப் படித்தபோது அலுத்துக் கொள்ள அவசியமில்லை என்றுதான் தோன்றியது.

இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் தமிழுக்குப் புதிது. தமிழனுக்குப் புதிய அனுபவம் தருபவை.

தாழ்வுற்ற வறுமை மிஞ்சிய சியாரா லியோனை வாழ்விக்க வந்த இத்தாலியனைப் பற்றி, மீந்த பழங்களை நடுச்சாமத்தில் நீரில் அலம்பித் தின்னும் ரக்கூன் என்ற மிருகத்தைப் பற்றி, இடருற்ற உயிரினம் என்ற அறிவிக்கப்பட்டு விட்ட மலை ஆட்டைப் பிடிக்க பாகிஸ்தானின் வடக்கு மலைப் பிராந்தியத்தில் அலைகிறவனின் வம்ச விருத்தியைப் பற்றித் தமிழில் எத்தனை கதை வந்திருக்கும்?

பொருள் புதிது. தமிழ்நாட்டுப் பத்திரிகை வாசகனுக்கு சொல்லும் புதிதாகத்தான் இருக்கம் ("இந்த நேரத்தில்தான் அவள் ஆத்தாமல் போய் கீழிறங்கி வந்து சங்கை கெட்ட ஹவுஸ் மெய்ட் வேலைக்க மனுப் போட்டாள்.")

எனக்கு நடை மிகவும் பிடித்திருந்தது. கடலோர வீட்டில் காற்று உலவுவது போலச் சுகமான, லகுவான நடை. ஒரு சாம்பிள் பாருங்களேன். "புதுக்கப் புதுக்க அவளைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு - இவர் அவளுடைய கண்களையே பார்த்தார். அவள் துணுக்குறவும் இல்லை. கீழே பார்க்கவும் இல்லை. திருப்பி அவர் கண்களை நிதானமாகப் பார்த்தாள். நல்லூர் சப்பரம் போல மெள்ள மெள்ள நகர்ந்து இவர் இருக்கைக்குக் கிட்டே வந்தாள்."

புதுமைப் பித்தன் தன்னுடைய நடையைத் தவளைப் பாய்ச்சல் நடை என்று சொல்லிக் கொள்வதுண்டு. முத்துலிங்கத்தின் நடையும் அப்படித்தான், மேலே உள்ள விபரணைக்கு அடுத்த பத்தி எப்படி ஆரம்பிக்கிறது தெரியுமா? "அவர்களுடைய திருமணம் ஆடம்பரமின்றி ஓரு கிராமத்துச் சர்ச்சில் நடைபெற்றது."

கிண்டலும்கூட புதுமைப்பித்தன் ஜாடையில் இருக்கிறது. குழந்தையோடு, கணவனால் கைவிடப்பட்ட பெண் மதுக் கடையில் நடனமாடும் வேலையில் சேர்கிறாள். "அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டாவது பிள்ளை பிறந்தது. இது எப்படி என்று சமத்காரமான கேள்விகள் கேட்கக்கூடாது. கற்பு பற்றித் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் மேற்கோள்கள் காட்டி வியாக்கியானங்கள் இல்லாத ஆப்ரிக்காவில் அப்படித்தான்."

இதழியலில் show. don't tell என்று ஒரு உத்தி உண்டு. இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வார்த்தைகளைக் கொட்டி அளந்து கொண்டிராமல், நடந்ததைக் காட்சியாகத் தீட்டிக் காண்பிப்பது வலுவான தாக்கம் ஏற்படுத்தும் என்பது அதன் பின்னுள்ள நம்பிக்கை. வார்த்தைகளை அளந்தெடுத்துக் கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை. சின்னச்சின்ன காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார். விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன் தவிக்கும் காட்சி, வம்சவிருத்தியில், மிர்ஸாவை இப்ராஹ’ம் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது.

இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ்சம் லேசாக அறிவேன் என்ற போதிலும், இந்த நூலாசிரியரின் பிற நூல்களைப் புதினங்களை இதற்கு முன்பு நான் படித்ததில்லை, அவரைச் சந்தித்ததோ, அவரது பொழிவு எதனையும் கேட்டதோகூட இல்லை. அவரது பெயரைத் தவிர வேறெதுவும் அறியேன். ஆனால், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள்.

சென்னை -41 மாலன்
18 மார்ச் 96


முன்னீடு

வம்ச விருத்தி, நண்பா அ.முத்துலிங்கத்தின் மூன்றாவது கதைத் தொகுதி. முதலாவது தொகுதியான 'அக்கா முப்பது ஆண்டுகளக்க முன்னர் வெளிவந்தது. யாழ்ப்பாண வாழ்க்கையின் அழகிலும் சலனங்களிலும் தோய்ந்தவாறு அவர் எபதிய பதினொரு கதைகள் அதில் அமைந்தன. உலகளாவிய வாழ்க்கை அநுபவங்களிலே மூன்று தசாப்தங்கள் முதிர்ந்தவராக, அவர் எழுதிய பதினொரு கதைகளைக் கொண்ட தொகுதி இது. இடையில், 'திகடசக்கரம்' என்கிற கதைத் தொகுதியையும், இரண்டு நூல்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார். ஆங்கில நூல்கள் தொழில் சார்ந்த நுட்பத்திலே அவர் பெற்ற ஞானப்பகிர்வின் ஆசை பற்றிய ஆக்கங்கள். இந்த 'முன்னீடு'வை எழுதும் பணியில் அமர்கையில், அவருடைய ஆங்கில நூலிலே (Getting to know visual basic proceduresan introduction to macro language) வரும் பகுதி ஒன்று மனசிலே மின்னல் சொடுக்கின்றது.

The king is seated on the golden throne. Shakuntala raises her eyes and sees her beloved. For a moment she forgets everything. The earth stands still. And then in a clear voice she says: `My son, make your obeisance to the king, your father'.
They are direct simple and precise, without waste. A good macro should be like that.

விரயமற்ற, நேரான-எளிமையான-திட்டமான சொல்திறன்! கம்புயூட்டர் பயன்பாட்டிற்கு உதவும் MACRO மொழி பற்றிய தேடலிலேகூட, சகுந்தலாவின் ஆளுமை வீச்சுக்கு முத்துலிங்கம் மசிகிறார். படைப்பாளியின் உள்ளத்திலே வாழும் சுவைத்திறன் உறங்குவதே இல்லை. அவனுடைய தேடல்களுக்கு அந்தமும் இல்லை....

தேடல் அற்புதமான அநுபவமே! தொலைந்து போன இனத்துவ கௌரவம், சுயம்புவான சுயமரபு ஆகியன தேடல்களில் ஈடுபட்டிருக்கும் பரதேசி நான். தொலைந்துபோன நினைவுப் பொருளின் தேடலும் காவியமயமானது. அல்லையேன், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது சிருஷ்டி அற்புதத்தினால் உலக மஹாகவியாக உயர்ந்த காளிதாஸனின் 'அபிஞாத சகுந்தலா' உலக இலக்கியச் சுவைப்புக்கு வாய்த்திருக்குமா? அப்சரஸ் மகளான சகுந்தலா அழகுக் கொழுந்தாய்; இயற்கையின் செப்பம்; விண்ணையும் மண்ணையும் ஒருமைப்படுத்தும் தத்துவ விளக்கம்; மன அமைதி; வாழ்க்கையின் தலையாய இலட்சியம்; - எனப் பல சுருதிகளாய் இந்நாடகக் காவியம் நம் சுவைத் தாகங்களை அசத்தும். மனிதம் பற்றிய தேடலின் ஒரு சாயலாக, மனிதன் அடையக்கூடிய இன்பங்களுக்கு ஆதாரமாய் அமைவது இயற்கையுடன் கூடிய வாழ்க்கை என்று இயற்கையின் உறவை முழுமையான உவமைப் பொருத்தங்களுடன் நிறுவும் காளிதாஸனின் சிருஷ்டி நுட்பம் ஓர் ஆதர்ஷம். சேக்ஸ்பியரின் படைப்பு ஓர்மத்துக்குத் துதி பாடுதல் வஞ்சகமற்ற இலக்கிய நயப்பு என்று ஞானப் பகிர்வினை அகலித்துக் கொண், காளிதாஸனின் கலாமேதையை ஆரிய மாயை என்று நிந்தித்தல் ஞான அறத்துக்கு ஏற்றதா? அதனை இந்திய சிருஷ்டிப் பண்பாட்டின் அடையாளமாக இனங்கண்டு, அந்தத் தனித்துவமே அதற்கு சமஸ்தத்தினையும் அமரத்துவத்தினையும் அருளின எனப் பூரித்து என் வசப்படுத்துதல் என் அறத்துக்கும் என் தேடலுக்கம் உகந்தது; இலக்கியத்தின் பரமார்த்த பக்தனான பரதேசி என்கிற என் தளத்திற்கும் ஏற்றது. விஞ்ஞானம் பற்றிய புதுப் புனைவுகள் பற்றிய தேடல்கள் நமது ஞானத்தை அகலிப்பதுடன், வாழ்க்கையின் சௌகரியங்களைப் பெருக்கித் தரத்தை உயர்த்துவன உண்மை. இருப்பினும், நியூட்டன் இல்லாவிட்டால், இன்னொருவன். அவன் தத்துவத்தைத் திருத்திச் செப்பம் உரைப்பதற்கு ஐன்ஸ்டீன் இல்லாவிட்டால், இன்னொருவன். வான் பறப்பிலே ரைட் சகோதரர்கள் முந்திக் கொண்டார்கள். அவ்வளவுதான். ஆனால் காளிதாஸனின்றி, இலக்கியத்தினைச் சதா வளப்படுத்தும் அபிஞாத சகுந்தலா தோன்றியிருத்தல் சாத்தியமே அல்ல. இலக்கிய ஞானியின் படைப்பாற்றல், பல்வேறுபட்ட சமூகக் காரணிகளுக்கும் அநுபவங்களுக்கும் உட்பட்ட போதிலும், சில வேளைகளில் அவற்றின் வனைவிலேயே ஸ்தூல வடிவம் பெற்றாலுங்கூட, படைப்பாளியின் தனித்துவ ஆளுமை என்கிற ஓர்மை அவனுக்கே உரியது. அந்த ஓர்மத்தை வாலாயப்படுத்துதலும், அதன் உபாசகனாய உழைத்தலும் இந்தப் பரதேசிக்கும் உவப்பான மதமாய் அமையும். மதத்துக்கு அநுஷ்டானங்கள் மட்டுமல்ல, வெறியும் உண்டு.

'வம்ச விருத்தி' என்னும் இக்கதைத் தொகைக்கு முன்னீடு எழுதும் யோகத்திலே ஈடுபடும்பொழுது, என் மனசு இப்படியெல்லாம் குதியன் குத்துகிறது. அடுத்த நூற்றாண்டின் கதை முயற்சிகளுக்குக் கட்டியமாக அமையும் படைப்புகள் சிலவற்றை இதில் படிக்க நேர்ந்ததினாலும், இந்த அவதி. இக்கதைகளைத் தமிழ்ச் சுவைஞர்கள், உரிய முறையிலே தரிசித்தலைத் தடுக்கும் நந்திகள், புத்திஜ“விகள் போர்வையில், தமிழ்நாட்டிலும் உண்டு. ஈசுரார்ப்பண ஈடுபாடும், தமிழ்நாட்டிலும் உண்டு. ஈசுரார்ப்பண ஈடுபாடும், பரமார்த்த பக்தியும் ஜெயிக்கணும். நந்தன் கடைத்தேறவேண்டும்! அதைத் தடுக்கும் கொடுமையிலே நந்திகள் வெற்றி சுகித்தல் கூடாது. இந்த விநோதப் புத்திஜ“விகள் நாளையைச் சென்றடைய வேண்டி இலக்கியத் தரத்தினை நிர்ணயிக்க வல்ல ஏகபோகம் தங்கள் வசத்தே என்று சாமி ஆடுதல் மகா கொடுமை. '....பாரதியார் கருத்து முதல்வாதி; இருப்பினும் இயங்கியல் பார்வை இருந்தது; பாரதி மார்க்ஸை படித்திருப்பதாகக் கருதச் சான்றுகளில்லை....' என்று பாரதியாரின் கவிதா வீரியத்தினையே உரைத்துப் பார்க்கும் இவர்கள், பாவம் காளிதாஸனை எப்படி எல்லாம் மிதித்துத் தள்ளுவார்கள்? மார்க்ஸ’ய வேதம் பேட்டை ரௌடிகளின் நாட்டு வெடிகுண்டாக்கப்பட்ட அவலம் ஒருபுறம். ரொமன்டிஸம், நச்சுரலிஸம், ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம் (இடது) ஸர்ரியலிஸம், மஜிக் ரியலிஸம், எக்ஸ’ஸ்டென்ஷ’யலிஸம், ஸ்ட்ரக்சுரலிஸம், போஸ்ட் மார்டனிஸம் என்று மேலைத் திசையிலே உருண்டோடிய பதங்களை வைத்துக்கொண்டு தமிழ் இலக்கிய விமர்சனத் துறையிலே சொக்கட்டான் ஆடும் கிலிசகேடு மறுபுறம். அந்த வார்த்தைகள் சுமக்கும் கருத்துவங்கள் பற்றிய ஞானம் வியர்த்தம் என்பதல்ல என் கட்சி. அறிவு சார்ந்த சேகரம் என்பதற்கு அப்பால், அவை தமிழ் மரபுகளுடனும் நிகழ் காலத் தமிழர்தம் அநுபவங்களுடனும் செமிபாடடைந்து படைப்பு வீரியமாக முகிழவில்லை என்பதுதான் என் வியாகூலம். அவை பிறந்த மண்ணிலேயே வலுவிழந்து நீர்த்துப்போன நிலையிலேயேஇ தமிழுக்குப் பெயர்க்கப்படுகின்றன. இலக்கியத்தின் சங்கதி-உள்ளீடு-உயிர்ப்பு இடையறாத தேடலின் விளைவு. அஃது நனுபவத்தினாலும், பக்குவத்தினாலும் வனையப்படுவது. நேர்த்தியான கலைப் படைப்பாகப் பட்டை தீட்டி எடுப்பதற்கு உபகாரமாய் அமையும் பாங்கத்திற்க-கோலத்திற்கு-உருவத்திற்கு அவை எவ்வாறு உதவலாம் என்கிற உசாவலும் முயற்சியுங்கூட இவர்களுக்குப் பூஜ்யம். menopause எய்திய கருப்பையிலே புதியனவற்றின் படைப்பு என்று வற்புறுத்துதல் வித்துவ வக்கிரஞ் சார்ந்தது என்கிற பிரக்ஞைகூட இந்தக் கோஷதாரிகளுக்குக் கிடையாது. இந்தப் புத்தி ஜ“விதத் தண்டால்களை ஒதுக்கி வைத்துவிட்டு. பெருவணிகச் சஞ்சிகைகளம் பத்திரிகைகளும் படைப்பிலக்கியத்தை அற்ப நுகர் பொருளாக்கி, எழுத்தாளர்களை 'லேபிள்' ஒட்டும் சிற்றூழியர்களாக மாற்றும் வணிகப் பணியில் ஈடுபட்டுள்ளன. அரசியலிலே லஞ்ச ஊழல்கள் கூட நியாயப்டுத்தப்படுவது போலவேஇ நலிந்து போன கோஷங்கள் இலக்கியத்திற்கான தொனிப் பொருள்களாக வற்புறுத்தப்படுகின்றன. இவற்றுக்கு 'அரோகரா' போடும் புழுக்களும் பெருகியுள்ளன. சினிமா வாய்ப்புகள் என்கிற அங்கலாய்ப்புகளும் அவர்களை அலைக்கழிக்கின்றன. உலகளாவியதாக முளைவிடும் தமிழ் இலக்கிய ஓர்மத்துக்குத் தலைமை தாங்கும் தத்துவத்தினைத் தமிழ்நாடு இவ்வாறு நிராகரிக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மகா விசனத்துக்குரியது. இப்போக்குகளினால் பொதுவாகவே தமிழ் இலக்கியம் முட்டுப்படும் என்பதும் மெய்தான்!

'இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் சர்வதேச மயப்படும். அதற்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுடைய படைப்பாற்றல் தலைமை தாங்கும்' என்கிற சுவிசேஷத்தை இரண்டு ஆண்டுகளக்கு முன்னர் நான் மேற்கொண்ட இலக்கிய யாத்ராவின்போது பிரசித்தஞ் செய்தேன். இது மண்பற்றிலும் அதீத இனமான உள்ளுணர்வு என்று பொய் செப்ப ஒப்பேன். தமிழ் நாட்டு இலக்கியக் களத்திலே உருவாகியுள்ள அவலங்கள் என்கிற பின்னணியில், 'புதிய வானம், புதிய பூமி' என்று தினமும் புதிய அநுபவங்களின் தாக்கங்களுக்கு உட்பட்டு, ஆனாலும் புதிய சூழல்களின் அசுர வசதிகளுக்கு முற்றிலும் அடிபணியாது, தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களைத் தங்களுடனும், தங்கள் வம்ச வேர்களுடனும் தக்க வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்கிற விடுதலை வெறியிலும், பக்திச் செறிவிலும் புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் ஈடுபட்டுள்ள இடையறாத தேடல்கள், இதனைச் சாத்தியப்படுத்தும் என்பதை மட்டிடுவதற்குப் புத்தி ஜ“வித மிடுக்குத் தேவையில்லை.

அந்த இலக்கிய யாத்ராவின்போது, இருபத்தியோராம் நூற்றாண்டின் புதிய கதைக் கலையின் சாங்கங்களைச் சுட்டும் வகையில், முப்பத்தொன்பது கதைகளைத் தொகுக்கும் பணியிலே ஈடுபட்டமை தற்செயலே. அந்தப் பணியிலே நண்பர் இந்திராபார்த்தசாரதியின் ஒத்துழைப்பும் துணை நின்றது. அத்தொகுதியில் இடம்பெற்ற ஆக்கங்கள் பலவற்றை வரவேற்று, மதிப்பீடு செய்து, அவற்றைப் பிரசித்தப்படுத்துவதிலே நண்பர் சுஜாதா முதன்மையான அக்கறை காட்டினார். 'பனியும் பனையும்' என்கிற அத்தொகுதியில் கதை படைத்த ஒரு சிலரேனும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்துக்கு வளமூட்டக்கூடியவர்களாகத் தேறுவார்கள் என்கிற நம்பிக்கை ஊட்டுபவர்கள். ஆனாலும், அத்தகையவர்களுடைய வகை சிறந்த ஆக்கங்கள் அதிலே இடம்பெற்றன என உரிமை பாராட்டுவதற்கில்லை. ஒரு காலக்கூறின் இடைவெளியிட்டு இப்பொழுது அதனை வாசிக்கும்பொழுது, பெரும்பாலான கதைகளிலே புகுந்துள்ள பலவீனங்கள் தெரிகின்றன. புதிய நாடுகளுக்குப் புலமபெயர்ந்து செல்லும் எத்தனங்களிலே குறுக்கிடும் இடர்கள்; புதிய நாடுகளிலே வதிவிட உரிமை கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பின் சஞ்சலங்கள்; சொந்த மண்ணிலே விட்டு வந்த கடன்கள்-கடமைகள்-உறவுகள் ஆகியன தொற்றிய சுமைகள்; புதிய தட்பவெட்பச் சூழல்களையும் தொழில் உறவுகளையும் எதிர்கொள்வதிலுள்ள சவால்கள்; இனப்படுகொலை மேலாதிக்கத்திலிருந்து எந்தத் தனித்துவத்தைப் பேணி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடியுமா என்கிற சந்தேகங்கள்; - இவை அனைத்துமே அவர்களுடைய நிகழ்கால எழுத்துக்களைப் பாதிக்கின்றன. அவலங்கள்-ஏக்கங்கள்-ஆசைகள்-இச்சாபங்கள்-இயலாமைகள் ஆகிய உணர்வுகளிலிருந்து விடுபட இயலாத ஆக்கினை! இதனால், துயர்-சோகம்-ஏலாமை ஆகிய சுருதிகளின் ஓங்காரம் மிகும். அகதி முகாம்களிலே வாழும் குறுக்கத்தின் புழுக்கம் வெளிப்படும். self-pity என்கிற பலவீனம், pessimistic பார்வையை மேலோங்கச் செய்து, நம்பிக்கை வரட்சியைத் தூலமாகத் தொனிக்கும். இந்தக் கோலங்கள் தவிர்க்க இயலாத passing phase மனித நேயத் தேடலிலே, வாழ்கையை நம்பிக்கையுடன் அணுகும் தரிசனமே ஆகுமானது. அந்த நம்பிக்கைதான் நாளையையும் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை என்பது கொதிக்கும் கொப்பரையிலிருந்து, எரி நெருப்புக்குள் வீழ்ந்து கருகுவதல்ல. புதிய நிர்ப்பந்தங்களின் அடிமையாவதல்ல. புதிய சூழலை வசப்படுத்துதல்! புதிய சூழலிலும் நாம் இழக்கத் தயாராக இல்லாத தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டே, புதிய சூழலிலே குதிரும் வாகான புதிய சுருதிகளை இனங்கண்டு, அவற்றைத் தமிழின் அனைத்து உயர்வுகளுக்கும் இசைவாக்கிப் புதிய நம்பிக்கைகளை வென்றெடுத்தல்! அவலங்களை-அக்கிரமங்களை-அட்டூழியங்களை-அவ நம்பிக்கைகளை நாணவைக்கும் தேடல்கள் நமது படைப்புகளிலே கதைப்பொருள்களாகக் கனிதல் வேண்டும். எனவே, 'பனியும் பனையும்' தொகையிலே இடம் பெற்ற கதைகள் பலவற்றை pilot-project ஆகத் தரிசித்தலே பொருந்தும். நடுங்க வைக்கும் குளிர் பணியைத் தொடர்ந்து, கோடைவெயில் எரிக்கவே செய்யும்!

புலம் பெயர்ந்த ஈழத் தமிழருடைய இருபத்தியோராம் நூற்றாண்டின் கதைக் கோலங்களுக்கு வெள்ளோட்டமாக அமையும் கதைத் தொகுதியைத் தேடுகிறீர்களா? கவலையைவிடுங்கள். இதோ, அ.முத்துலிங்கத்தின் வம்ச விருத்தி இருக்கிறது. நான் கருவியாய் அமைந்து பரம்பிய சுவிசேஷத்தின் சத்தியத்தை எண்பிக்கும் வகையில் பல கதைகளை இத்தொகுதியிலே படைத்துத் தந்து, வெள்ளோட்டத்தினை அவர் வெற்றியாக நடத்தியிருத்தல் மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகின்றது. மகிழ்ச்சியைப் பகிர்தலும் மனிதம்!

நான் தசாப்தங்களுக்கு முன்னர், 'ஊர்வலம்' என்ற சிறுகதை மூலம் 'தினகரம்' பண்ணையிலே முத்துலிங்கம் கதைஞராய் அறிமுகமானார். 1960இல் 'பக்குவம்' கதைக்கு முதல் பரிசு பெற்றார். தமிழ் விழா மலருக்கு அவருடைய 'அக்கா' மணமூட்டியது, இவ்வாறு, ஈழத்துக் கதைஞர் வரிசையிலே கௌரவம் பெற்ற அவருடைய பதினொரு கதைகள் அடங்கிய 'அக்கா' தொகுதி அறுபதுகளின் நடுப்பகுதியில் வெளிவந்தது. 'நான் கண்ட, கேட்ட, அநுபவித்த சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்' எனத் தம்மைச் சாமானியனாக அறிமுகப்படுத்திக் கொண்டாலும், 'அக்கா' மூலம் தமிழ்ச் சுவைஞர்களுடைய அபிமானத்தை மட்டுமன்றி, கைலாசபதி போன்ற விமர்சகர்களுடைய பாராட்டையும் சம்பாதித்தார். பிறகு, அவர் எழுத்தூழியத்திலே ஒதுக்கம் காட்டிய காலத்தில். அவருடைய முகவரியைத் தொலைத்து விட்டேன். விசாரித்ததில், ஆபிரிக்க நாடொன்றில், உயர் உத்தியோகம் பெற்றுச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. ஆபிரிக்கா எங்கே? மட்டக்களப்பு எங்கே? ஊழ் என்னையும் துரத்தியது. ஆபிரிக்க இலக்கியம் கற்பிக்கும் ஆசானாய் நான் ஆபிரிக்க நாடொன்றுக்குச் செல்ல நேர்ந்தது. பக்கத்து வீட்டுக்குக் குடியேறிய மனோ நிலையில் மீண்டும் முகவரியைத் தேடினேன். அவர் உலகவங்கி உத்தியோகத்திலே சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்ததும் என் தேடுதல் ஓய்ந்தது.

கடைசியாக 'பனியும் பனையும்' தொகுதி மூலம் எங்களுடைய இலக்கிய உறவு மீளுயிர்ப்புப் பெற்றது! தேடி ஓய்ந்தது, தேடாத வேளையிலே கிட்டும் அஃது ஒரு வகையில் பொசிப்பு!

தொலைபேசி, Fax போன்ற நவீன தொடர்புச் சாதனங்கள் மூலம், பாகிஸ்தானுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடைப்பட்ட தூரம் குறுகியது. இடைக்காலத்தில் அவர் வெளியிட்ட 'திகட சக்கரம்' என்ற கதைத் தொகுதியை என் சுவைப்பிற்கு அனுப்பி வைத்தார். கைவசமிருந்த என் நூல்களை அவருக்கு அனுப்பினேன். 'பனியும் பனையும்' தொகுதியிலுள்ள குறை நிறைகளைப் பற்றிப் பேசினோம். மூன்று தசாப்த இடைவெளியில் நடந்த இலக்கிய சமாசாரங்களிலே சல்லாபித்தோம். புதிய படைப்புகள் பற்றிய கனவுகளிலே ஈடுபட்டோம். அடுத்த நூற்றாண்டின் கதைக் கலையின் கோலங்கள் பற்றி உரத்துச் சிந்தித்தோம். யாழ்ப்பாண வாழ்க்கையிலும், ஆபிரிக்க அநுபவங்களிலும் நனவுகளிலும் தோய்ந்தோம். ஆபிரிக்க வாழ்க்கை அநுபவங்களைத் தமிழ் இலக்கிய மாக்குவதிலுள்ள பயன் குறித்துப் பேசினோம். தொலைந்தன கிட்டுதல் காளிதாஸனின் சகுந்தலாவுக்கு மட்டுமல்ல, மனிதனுக்குமே இனிமை தரும்.

முதலில் ஆபிரிக்கப் பின்னணியில் எழுதப்பட்ட கதைகளை என் சுவைப்புக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து ஏனையன, என் 'முன்னீடு'வுடன் இணைத்து, இவ்வாறு வெளியிடுதல், நாளைய இலக்கியப் பணிகளிலே இருவரும் இணைந்து பணியாற்றும்வோம் என்கிற சங்கையின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.

இனி, வம்ச விருத்தியில் இடம்பெறும் கதைகளுக்குள் நுழைவோம்.

முத்துலிங்கம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளிலே வாழ்ந்து தமது அநுபவங்களைப் பெருக்கிக் கொண்டவர். இந்நாடுகள் பலவற்றைக் கதைக் களங்களாகக் கொண்டு, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வாழக் கூடிய தமிழ்க் கதை மாந்தர் சிலரை அறிமுகப்படுத்தி அவர்களுடைய கதைகளை இங்கு சொல்லியுள்ளார். serious writing என்பது விளக்கெண்ணெய் சாப்பிடும் முகத்தையும் உணர்வையும் எழுத்திலே ஏற்படுத்துவதல்ல. வாழ்க்கையின் எந்த நிலையிலும் வாழ்க்கையை Positive ஆக நோக்கும் Optimism முத்துலிங்கத்தின் கதைப் பாணியிலே மிளிர்கின்றது. இடுக்கண் கண்டு நகும் ஓர் உறுதி; மனித நேய நட்புணர்வுகளை அணைக்கும் அட்டகாசமில்லாத நகைச்சுவை; கதைக் களங்களின் யதார்த்தம்; கதை நிகழ்வுகளுடன் ஒட்டிப் பயணிக்கும் அக்கறை ஆகியன அவருடைய கதை சித்தரிக்கும் உபாயத்திற்குக் கை தருகின்றன.

'துரி', 'ஒரு சாதம்' ஆகிய இரண்டும் அமேரிக்காவையும் கனடாவையும் பின்னணியாகக் கொண்டு, அந்நாடுகளின் வாழ்க்கை அநுபவங்களை இணைத்துக் கொள்ளுகின்றன. 'விழுக்காடு', 'முழுவிலக்கு', 'ஞானம்' ஆகிய மூன்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வாழ்க்கைக் கோலங்களுள் நம்மை அழைத்துச் செல்கின்றன. 'கிரகணம்', 'வம்ச விருத்தி' ஆகிய இரண்டு கதைகளும் பாகிஸ்தான் நாட்டின் முஸ்லிம் பின்னணியைக் கொண்டன. 'பருத்திப் பூ' வட ஆபிரிக்க சுடான் நாட்டின், பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் அயலுக்கு அழைத்துச் செல்கின்றது. 'பீஃனிக்ஸ் பறவை' சுவீடன் நாட்டினைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட போதிலும், சுற்றுச் சூழலை இயற்கை நிலையில் வைத்திருக்கும் பக்குவத்தினை வசப்படுத்தும் இருபத்தோராம் நூற்றாண்டின் மிக முன்னேறிய மனித சமூகத்திலே ஏற்படக்கூடிய புதிய பிரச்சினைகளே கதைக் களமோ என்கிற நிறப்பிரிகை ஜாலமும் காட்டுகிறது.

மனிதம் பற்றிய இறையறாத தேடலாகவும் இலக்கியத்தினைச் சம்பாவனை செய்தல் என் சுபாவம். மனிதனின் விடுதலை அல்லது விமுக்தி ஆநந்த. அதுவே வீடு! அறம்-பொருள்-இன்பம் ஆகியன அந்த வீட்டினை அடைவதற்கான செம்மைகள் என்கிற நம்பிக்கை நமது மரபின் முதுசொம். பழையன கழிந்து புதியன புனைதலும் மரபு. மாறாத சீர்மையும் மரபு. சுழலும் சக்கரத்தின் அசையாப் புள்ளி! பிறிது பிறிதாகி விடாது, வாழ்க்கைத் தொடர்ச்சியையும் முன்னோர் அளித்த அருஞ்செல்வங்களுக்கு நம்மையும் உரிமைக்காரராய் நியமிப்பதற்கான தகுதியையும் மரபு நமக்கு அளிக்கின்றது. இதனை ஒதுக்கும் புதுமைகள் வெறும் Fads! பித்தங்கொண்டு சந்நதமாடும் வேகத்திலே மறைந்துவிடும் போலிகள். இந்த அவதானம் இருபத்தியோராம் நூற்றாண்டின் இலக்கியப் படைப்பாளிக்கு அவசியம். இந்த அவதானம் இத்தொகுதியின் கதைகள் பலவற்றிலும் பற்றிப்படர்கின்றது. இந்தப் படர்வே ஒரு நிறைவும்.

அதே சமயம், இத்தொகுதியிலுள்ள சில கதைகளேனும் மனித நேயத்துக்குப் புதிய பரிமாணந் தேடுகின்றன. தொகுதியின் முகப்புக் கதை 'துரி' அமேரிக்க வாழ்க்கையின் கோலங்களைத் தரிசிப்பதற்கு துரி என்றழைக்கப்படும் நாய் நாயக பாத்திரமாக உயர்வு பெறுகின்றது. அமேரிக்க நாய்க்கும், மகாபாரதத்தில் வரும் துரியோதனன் பாத்திரத்திற்கம் அபூர்வ முடிச்சொன்று போடப்படுகின்றது. உயிர் நேசிப்பிலே நட்புக்கும் தோழமைக்கம் உள்ள உறவுகள் ஆராவாரமின்றி இக்கதையில் பிரஸ்தாபம் பெறுகின்றன. நாயை நண்பனாய்-தோழனாய்ப் பாராட்டுதல் எத்தகைய மானிட நேசிப்பு! 'ஞானம்'கதையிலே, Ph.D. பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிகளை நடத்துவதற்கான அமேரிக்கப் பல்கலைக் கழக மாணாக்கர் இருவர் ஆபிரிக்க நாடொன்றுக்கு வருகிறார்கள். அங்கு வாழும் கொலபஸ் குரங்குகளைப் பிடித்து ஆராய்ச்சி நடத்த வந்தவர்கள், ஆபிரிக்க மக்களுடைய மூட நம்பிக்கையினால் சாகப் போகும் ஆந்தையையும் குஞ்சுகளையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த ஆந்தைகள் ஆபிரிக்க உணவு உற்பத்திப் பெருக்கத்துக்கு உதவுகின்றன. அவை வாழவேண்டும். அவற்றை வாழவைப்பதற்காக ஏற்படும் பின்னடைவுகள் ஒரு பொருட்டல்ல. 'உயிர் நேயம்' என்கிற சங்கதி இக்கதையிலே எத்தகைய விஸ்வரூபம் பெறுகின்றது. மானிட நேசிப்பு உயிர் நேசிப்பாகவும் பிரபஞ்ச நேசிப்பாகவும் விரிவடைதல் வேண்டும் என்ற அக்கறைகளைப் பிரசாரத் தொனியின்றிச் சில கதைகள் ஏற்படுத்துகின்றன. 'வம்ச விருத்தி'யிலே பாகிஸ்தானின் வடமலைப் பிரதேசத்தில் பயணிக்கிறோம். இக்கதையில் இஸ்லாமிய மக்களுடைய ஆசாராங்களும் அநுட்டானங்களும் விரவிக்கிடக்கின்றன. இவை அனைத்துமே கதையின் பின்னணியாகப் பின் தள்ளப்பட்டு, இடருற்ற உயிரினத்தின் Endangered species) பாதுகாப்பு கதையின் இறுதியிலே ஓங்காரம் பெறுகின்றது. பிரபஞ்ச நேசிப்பின் இன்னொரு வடிவமாக இந்த அக்கறையை நாம் தரிசித்தல் தகும். மனிதனைப் பலிவாங்கும் லீ என்ஃபீல்டு துப்பாக்கி, 'ரத்தப் பணம்' என்கிற கொலை நாகரிகத்தின் உடாக அழைத்துச் சென்று, மலை ஆட்டின் மரணம் மகா அநியாயமானது என்கிற உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்துதல் சீர்மை நிறைந்த கலைத்திறன். 'இலங்கையில் தமிழன் ஓர் (Endangeed Species) என்கிற ஓர் எண்ணம் என்பிடரியைக் கடித்தது. சுவைஞனின் கற்பனை விகசிப்பு இன்னொரு பரிமாணம். ஆக்கியோனின் தயாளம் இத்தகைய சிலிர்ப்பினை அனுமதிக்கும். பாகிஸ்தானைக் களமாகக் கொண்ட இன்னொரு கதை 'கிரகணம்' இந்தக் கதையிலே வரும் பஸ்மினாவின் பாத்திர வார்ப்பு கதை முழுவதையும் அப்புகிறது. அவள் எழுப்பும் மதிநுட்பக் கேள்விகள் மலைக்க வைக்கின்றன. சாதாரண sentiments மண்டிய கதையோ என்று ஏறபடக்கூடிய ஓர் உணர்வை பஸ்மினாவின் பாத்திர வார்ப்பு விழுங்கி ஏப்பமிட்டு விடுகின்றது! இதன் வாகு இது.

'விழுக்காடு' சியரா லியோனைப் பின்னணியாகக் கொண்ட கதை. சுபீட்ச நிலையில் அடிமட்ட நாடான அங்கே, ஐக்கிய நாடுகள் நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் வியர்த்தமாகும் பின்னணியிலே, அந்நாட்டின் வாழ்க்கை அவலங்களைப் பிரசாரத் தொனியின்றிச் சித்தரித்து, அந்த அவலங்களின் மத்தியிலே, ஆண்-பெண் உறவாகக் கனியுங் காதல்கூட மனித நேசிப்பின் இன்னொரு ஸ்திதியாக இக்கதை கோலங் காட்டுகிறது. மேற்கு ஆபிரிக்க அநுபவங்களின் மிகுதியால், உருவாகியுள்ள இன்னொரு கதை 'முழுவிலக்கு'. 'பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு' இது பழமொழி ஆபிரிக்க நாடொன்றை புலம் பெயரும் நாடாக வரித்துக் கொண்டால், உணவுப் பழக்கம் எவ்வாறு அமையும் என்பது நயமான நகைச்சுவை. தொகுக்கப்படும் மலர்கள் நளினமான சிரிப்பை எழுப்புபவை. அவற்றைத் தொடுக்கும் நாரிலே சோகச் சுருதி மண்டிக் கிடக்கிறது. இஃது அசாதாரண உபாயம். Menopause ஏற்படுத்தும் உள-உடல் பாதிப்புகளை இது விசாரணை செய்கிறது. சங்கீதாவைச் சுற்றி எழும் சோக அலைகள்கூட ஒரு positive note சிலேயே முற்றுப்பெறுகின்றது. மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக சிறப்பிப்பது இந்த அழுங்குப்பிடியான நம்பிக்கைதானே? குடியேறிய நாட்டின் நன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப இசைவாக்கம்' பெறுவதை நுட்பமாகச் சித்தரிக்கின்றது 'ஒரு சாதம்' food clothing and shelter ஆகிய மூன்றிலும் ஏற்படும் இசைவாக்கம்! இந்த இசைவாக்கம் வாழ்க்கையை வசதிப்படுத்தும்; அதுவே வாழ்க்கையின் வெற்றியல்ல. அறிவாற்றலைப் பிரயோகித்து, முன்னேறும் முயற்சியில் சதா நடத்தும் தேடலே வெற்றியைச் சம்பாதித்துத் தரும் என்கிற நம்பிக்கையை இக்கதை பிரசித்தஞ் செய்கின்றது. Oru Satham என்பது ஒரு சாதமா அல்லது ஒரு சத்மா? நல்ல பசுடி!

'பருத்திப் பூ'வின் நாயக பாத்திரம் குணசிங்கம் யாழ்ப்பாணத்து உரும்பிராய் மண்ணிலே விளைந்த அசல் 'கிழங்கு'! ஆயிரம் கன்று வாழைத் தோட்டத்துக்கு பாத்தி கோலிய காலத்திலேயே, தண்­ரின் செட்டான உபயோகத்திற்கும் உயிர் வாழ்தலுக்குமுள்ள ஆத்மார்த்த தொடர்பிலே ஞானம் பெற்ற சம்பந்தரும் இன்று என்ஜினியர், நீர்வள நிபுணர், கண்டிப்பு-கடின உழைப்பு, நேர்மை-சிக்கனம் ஆகியன அவருடைய வாழ்க்கையை ஒழுங்கு செய்பவை. ஆனால், தெற்கிலிருந்து அகதியாக வடக்கே புலம் பெயர்ந்து வந்த அந்தக் குடியானவக் கிழவியை 'எஃத்திராம்' என வாஞ்சை பாராட்டி அழைக்க வைத்தது எது? அக்கிழவியின் வாழ்க்கை உயர்வுக்காக, தமது வேலையையும் கௌரவத்தையும் இழக்கத் தயாராக இருக்கும் அவருடைய செயல், மானிட நேசிப்பின் உந்நதம் அல்லவா? கதையை வாசித்து முடித்த பிறகும், குணசிங்கம் நமது நெஞ்சத்திலே உறைந்து கொள்ளுகிறார். அவரைப் பற்றிய உலகமொன்று நமது பிரக்ஞையை வசீகரித்துக் கொள்ளுகிறது. 'ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன் சிறிது நேரம் ஓடுகிறான் அல்லவா! அதுபோல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓட வேண்டும்....இது என்னுடைய சித்தாந்தம்' என்று 'திகடசக்கரம்' என்ற தமது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் முத்துலிங்கம் குறிப்பிடுகின்றார். இந்தக்கதையில் அவருடைய சித்தாந்தம் முழு வெற்றி பெறுகின்றது. நல்லதொரு கதையை வாசித்த திருப்தி பல நாள்களாக என் மனசை மகிழ்வித்தது.

'பீஃனிக்ஸ் பறவை' நாளைய இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் கழிந்த ஒரு நாளைய உலகத்திற்குள் நம்மை லாகவமாக அழைத்துச் செல்கின்றது. சுற்றாடலை மாசுபடுத்தாச் செம்மையிலே வெற்றி காணும் அந்த உலகத்திலேகூட, நிறைவேறாத மனித ஆசைகள் புதிய பரிமாணங்களையும் தேடல்களையும் கொண்டிருக்கும் என்கிற தொனிப் பொருளை இந்தக் கதை சாமர்த்தியமாகச் சித்திரிக்கின்றது. நாளைய உலகின் சித்திரிப்பிலே விஞ்ஞான ஞானம் விஸ்வரூபத்திற்குள் இந்த விஞ்ஞானம் ஞான ஒடுக்கமும் பெறுகிறது.

இவற்றிலிருந்து வேறுபட்ட களங்களை மற்றைய இரண்டு கதைகளும் கொண்டுள்ளன. கிரேக்க புராணங்களிலே பிரஸ்தாபிக்கப்படும் கோர்டியன் முடிச்சிலே துவங்கி, இடையில் 'நொடிகள்' போல, கந்தையா வாத்தியார், ஹென்றி மொஸ்லே, நமது 'தொந்தி' விநாயகர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பல முடிச்சுகளின் அறிமுகத்துடனேயே 'முடிச்சு' ஆரம்பிக்கின்றது. இந்த ஆரவாரங்களுக்குப் பிறகுதான் கதை. முடிச்சுகள் என்கிற குகையின் ஊடாக, ஒளியை நாடிய தேடல் திருவண்ணாமலை வரை நீளுகின்றது. அங்கே விசித்திரமான யோகியார். அவரிடமிருந்து அறிவுரையோ, ஆசியோ கிட்டாது. சம்பந்தா சம்பந்தம் இல்லாததுபோல பேசி, அறிவைத் தூண்டி விடுதல் யோகியாரின் speciality! இந்துதர்ம சிந்தனைகள் தீர்வுகள் அல்ல. மன ஒடுக்கத்துக்கம் ஞான விடிவுக்கும் தொடர்பு இருக்கலாம். தேடும்பொழுது ஞானம் எத்தகைய அற்பங்களிலிருந்து வெளிப்படுகின்றது! முடிச்சுகளை அவிழ்க்க நடத்தும் தேடல் ஞானமுமாம். 'சிலம்பு செல்லப்பா' 'இலங்கை மண்ணின் வாழ்க்கைக் கோலங்களுக்குள் ஆசிரியர் மீள்பிரவேசம் செய்யும் எத்தனம். பழைய சம்பவங்களை அசைபோடும் கோலமும் புகுந்து கொள்ளுகிறது. சமாந்திரமாகவே சிலப்பதிகாரம் பற்றிய உசாவல்களும். ஆனால், சுழல் பாவிப்புப் பற்றிய awarenessஐ, தயிர்ச் சட்டியுடன் தொடர்புபடுத்தி சுழல் பாவிப்புக்கு மாதவி எழுதிய ஓலையின் சுழல் பாவிப்புக்கும் அபூர்வ முடிச்சுப் போட்டு, நம்மை குலுக்கி எடுக்கிறார். சிரிப்பிலா? சிந்தனையிலா? என் பிடிமானத்துக்குள் சிக்கவில்லை. உங்களுக்கு?

அனைத்துக் கதைகளிலும், கதை நிகழ் களங்களின் வாழ்க்கை அழகுகளிலே, பிராசாரத் தொனி இல்லாமல் படைப்பாளியின் சுய விருப்பு-வெறுப்புகளைத் திணிக்காமல், நம்மையும் பயணிக்கச் செய்து, புதிய அனுபவங்களிலே தோய்த்து எடுப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம், தமது மனசுக்கு உவப்பான வாழ்க்கையையும் விழுமியங்களையும் அழுத்திச் சொல்வதற்கும் அவர் தயங்கவில்லை. அதிலே நழுவல் கிடையாது. சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு, சுழல் பாவிப்பு, மானிட நேயம், பிரபஞ்ச நேயம் ஆகியன பற்றிய ஆசிரியரின் அக்கறை சத்தியமானது என்கிற உணர்வை அவர் பதிக்கின்றார். இதனை, 'ஒரு காகிதத்தைக் கசக்கி எறியும்போது எங்கோ ஒரு மரத்தின் இலை கண்­ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான்' என்று தமது 'என்னுரை'யிலே மீள வலியுறுத்தவும் அவர் வெட்கப்பவில்லை.

இந்தக் கதைகள் அனைத்தும் சிறுகதை இலக்கண விதிகளுக்குள் அமையுமா என்பது குறித்து விவாதிக்கும் அரிப்பு சிலருக்கு ஏற்படலாம். அரை நூற்றாண்டுக்கு முன்னரே, 1940-ஆம் ஆண்டில், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவந்தது. அதற்கு ரா.ஸ்ரீ.தேசிகன் அவர்கள் காத்திரமான முன்னுரை ஒன்று எழுதியிருந்தார். 'இலக்கியம் ஓர் அகண்ட நந்தவனம்' எனத் துவங்கி, 'ஜனங்கள் சிறுகதை மலர்களின் மனத்தை அதிகமாய் விரும்பவே, இலக்கிய நந்தவனத்திலே அந்தப் பூக்கள் அதிகமாகப் பயிரிடப்பட்டன' எனக்கூறி, சிறுகதை இலக்கிய வடிவத்தின் உலகளாவிய தோற்றம் என்னும் படுதாவிலே, 'முகம்' அறியாத புதுமைப்பித்தனின் தமிழ்ச் சாதனையை அவர் சிலாகித்தார். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக் கட்டத்திலே அதற்கு ஒரு தனிக் கௌரவம் சம்பாதிப்பதிலும், மேலை நாட்டிலே பயின்ற உருவ அமைதிக்குத் தமிழ் முழுமம் வடிப்பதிலும் புதுமைப்பித்தன் அடைந்த வெற்றி, அரிய இலக்கியச் சாதனையே. சந்தேகமில்லை. ஆனால்இ அன்று சிறுகதை உருவத்துக்கு உலக அங்கீகாரம் பெற உழைத்தவர்கள் (மாபஸான் உட்பட) வாழ்ந்த நாடுகளிலேயே சிறுகதை இலக்கிய வடிவம் தனது மவுசினை இழந்துவிட்டது. 'அவசர யுகத்திலே சிறுகதை இலக்கியமே நின்று வாழும்' என முன் வைக்கப்பட்ட கருதுகோள்கூடப் பொய்த்துவிட்டது. அவசரத்திலும் அவசரயுகம் இது. இருப்பினும், நீள் கதைகளுக்கும் நாவல்களுக்குத்தான் வரவேற்பு. விஷயம் இதுதான். காளிதாஸனுக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கதை சொல்லலும் கேட்டலும் மனித ரஸனைக்கு ஏற்றதாகவே இருந்து வந்தது. கதை சொல்லும் முனைப்பும் கதை கேட்கும் (அல்லது வாசிக்கும் அல்லது பார்க்கும்) ஆர்வமும் தொடரும். வித்துவ-தத்துவக் கடைசல்களுக்கு 'டோக்கா' கொடுக்கும் என்றுமுளதான மனித ரஸனை இது.

நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். புதுமைப்பித்தனின் தோள்களிலே நின்று கதைக் கோலங்களைப் பார்க்கும் வசதி நமக்கிருக்கிறது. புதிய கதைக் கோலங்களை உருவாக்கும் நிர்ப்பந்தமும் தேவையும் இருபத்தியோராம் நூற்றாண்டின் கதைஞனுக்கும் நிச்சயம் ஏற்படும். புதிய தேவைகள் இலக்கிய சமாசார சல்லாபம் மட்டுமல்ல. வாழ்க்கையின் புதிய அநுபவ ஞானப் பகிர்வினைப் பகிர்ந்து கொள்ளும் அவதியும். கதைக் கலையிலே புதிய வடிவங்கள் உருவாக வேண்டும். உருவாகும். அவற்றை ஏற்கும் சுவை விசாலம் தமிழ்ச்சுவைஞர்களுக்குத் தேவை. 'புதுமைப் பித்தனை விட்டால் ஆளில்லை' என்று பழசிலே தொங்கிக் கொண்டு பொச்சடித்தல்கூட, தமிழ் நாட்டின் புத்திஜ“வித வித்துவ வக்கிரமாகக் கொச்சைப்படுத்தலும் சாலும். இத்தகைய வைதீக வயிற்று வலிக்கு, புதிய ஆக்கங்கள் பலியாகிவிடக்கூடாது. இந்தத் தொகுதியிலே புதிய வடிவங்கள் அறிமுகமாகவில்லை. உண்மை ஆனால், மரபு ரீதியான சிறுகதை இலக்கணம் பல இடங்களிலே நெகிழ்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நெகிழ்த்தலே, புதிய வடிவங்களுக்கு வழி சமைக்கும் என்கிற சேதநை முத்துலிங்கத்திற்கு இருக்கலாம். உருவம்-உள்ளீடு-பாணி-பாங்கம்-சித்திரிப்பு-கலைத்துவம் ஆகியன எழுத்தாளனின் சுதர்மத்திற்கும் சுயாதீனத்துக்கும் உரியன என்பது என் கட்சி. என் அறத்தைப் பறிப்பதற்கு எந்த இலக்கியக் கொம்பனும், விமர்சன வித்துவானக்கும் உரிமை இல்லை என்பதும் என் இலக்கிய மதம். இத்தகைய மதமூர்க்கம், என்னிலும் பார்க்க, அடுத்த நூற்றாண்டின் படைப்பாளிகளுக்கு அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்போமாக!

புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளுடைய இலக்கிய ஊழியத்தை உரிய முறையிலே தரிசிப்பதற்கு உதவும் இன்னொன்றையும் இங்கு பிரஸ்தாபித்தல் அவசியம்.

தொலைந்துபோன நினைவுப் பொருளின் தேடல், சகுந்தலா, படைப்புக்கு முன்னரே இருந்து வந்துள்ள ஒன்றுதான். ஆனால், இந்த நூற்றாண்டின் இறுதி கந்தாயத்திலே, தொலைத்தலும் தேடலும் ஈழத் தமிழர்களுடைய வாழ்க்கையில் புதிய அர்த்தமும் சுருதியும் கொண்டுள்ளன. இலங்கையின் புத்த ஹாமுத்ருக்கள் புத்த பகவான் போதித்த அகிம்ஸை-தயை-காருண்யம் தர்மம்-சீலம் அனைத்தையும் தொலைத்துவிட்டார்கள். ஆட்சியாளர்கள் இறைமாட்சி அறத்தையும் ஜனநாயக நாகரிகத்தையும் தொலைத்துவிட்டார்கள். சமதர்மம் பேசிய இடதுசாரிகள் மார்க்ஸ’ய வேகத்தைத் தொலைத்துவிட்டார்கள். இந்த அனைவரும் மேலாதிக்க உன்மத்தத்தில், மானிடத்தின் அடிப்படை உரிமைகள் பற்றிய நினைவையே தொலைத்துவிட்டார்கள். இவற்றால், ஈழத் தமிழர்கள் தர்ம நியாயம்-மனநிம்மதி-தாயக மண்-தமிழ்மொழி-சுய கௌரவம்-மனித வாழ்க்கை.... என நிரல்படுத்தக்கூடிய அனைத்தையும் தொலைக்க நேர்ந்தது. தொலைக்கவில்லை. கொள்ளையடிக்கப்பட்டன! சொந்த மண்ணிலும் அகதிகள்; புகுந்த நாடுகளிலும் அகதிகள். தனித்துவ அடையாளங்களை மட்டுமல்ல, முகத்தையும் இழந்த மனிதர்கள். தொலைத்தவற்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தேடலோ நெடியது; கொடியது. இத்தேடல் தொற்றிய சோகங்கள்-இழப்புகள்-சமர்கள்-அநுபவங்கள்-யாகங்கள்-தவங்கள் அனைத்துமே இன்றைய தமிழுக்குப் புதிது. இந்தப் புதிதும் இணைந்ததுதான் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம்.

ஒரு விஷயத்தில், செந்தமிழ் நாட்டினர் பாக்கியவான்களும்! 'நீலத் திரைக்கடல் ஓரத்தில் நின்று தவஞ் செய்குமரி; வடமாலவன் குன்றம்' என்று தமது தாயக மண்ணின் எல்லைகளைக் கவித்துவமாக நினைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண்ணிலே, நிலவினில்றமுதூட்டித் தழுவிய மண்ணிலே, ரா.ஸ்ரீ.தேசிகன் ஆற்றுப்படுத்தியவாறு, அகண்ட நந்தவனங்கள் அமைப்பதற்கும், அதன் பாங்கரிலே சிறுகதைத் தோட்டங்கள் அமைத்துப் பராமரிப்பதற்கும் தோதும் வசதியும் அவர்களுக்கு வந்து பொருந்தலாம். பெண்ணியத்திற்கு ஒரு புதிய பாய்ச்சல்; தலித் இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிமாணம் என்று 'கதை அளப்பத'ற்கும் ஓய்வு உண்டு. சினிமா நாயக-நாயகியரை இரட்சகர்களாயும் கடவுளர்களாயும் உயர்த்துவதற்கு 'விசில்' அடித்துக்கொண்டே, 'ஜூனியர் விகடன்' 'நக்கீரன்' ஆகியன தரும் investigative கதைகளை விழுந்து விழுந்து வாசித்துக் கொண்டே, மாதவியா-கண்ணகியா-கோப்பெருந்தேவியா கற்பிற் சிறந்தவள் என்ற மிகு ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டே, serious இலக்கியம் பற்றி ஒரு changeற்காகப் பேசுவதற்கும் அவர்களுக்கு வசதிகளும் உள. இத்தகைய சுகபோகங்கள் அவர்களுக்குக் கொள்ளையாகக் கிடைப்பதுபற்றி அழுக்காறு கொள்ளத் தானும் ஈழத் தமிழருக்கு நேரமில்லை. பாவம், அவர்கள் சபிக்கப்பட்டவர்களும்! இருப்பினும், தாங்கள் மேற்கொண்டுள்ள இரட்சண்ய யாத்திரையையும், தங்களுடைய தேடல்களையும் மனித நேயத்துடன் புரிந்துகொள்ளும் பக்குவம் or at leat அநுதாப மனோநிலை, பேசும் மொழியால் உடன்பிறப்புகளான செந்தமிழ் நாட்டினருக்கு ஏற்படுதல் வேண்டுமென்று பிரார்த்திக்கும் உரிமையாவது ஈழத் தமிழருக்குக் கிடையாதா?

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று மக்கள் voteற்குத் தூண்டில்போடும் மேடைகளிலே ஒலிப்பதுடன் தமிழ்ப்பற்று ஓய்ந்துவிடலாகாது, ஓய்தல் செய்யும் சௌகரியம் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. 'விலங்குகளாய் அடிமைகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கேட்டு வாழமாட்டோம்' என்று சினந்தெழுந்தவர்கள், ஈழத்தமிழர்கள்! போரே தர்மமாக அவர்கள்மீது திணிக்கப்பட்ட பொழுது, அதனை ஏற்றார்கள். தர்ம ஆவேசத்துடன் ஏற்றார்கள். விடுதலை அவர்கள் வெறியாகியது. தமிழின் சேவிப்பே அவர்களது மதமும் பக்தியுமாகியது. இந்த நூற்றாண்டிலே, மொழியின் நிமித்தம் இத்தகைய ஆக்கினைகளை எந்த மனித இனம் எதிர் கொண்டது? இந்த ஆக்கினைகளுக்கு அவர்கள் பணியவில்லை. பகர்களாகவில்லை. ரட்சிப்புக்காக முள்முடிதரித்து, சிலுவை சுமந்து திரிகிறார்கள். முள்முடியும் சிலுவையும் குறியீடுகளே. குறியீடுகளின் அர்த்தங்கள் பக்குவத்து ககும் ஞானத்துக்கம் ஏற்ப விரியும். ஆக்கினைகளின் சங்காரத்திலே விடுதலை வெறியானவனவன் எதற்கும் அஞ்சான். மானிடத்தின் விமுக்தி அவன் வாழ்க்கை ஊரியமாய்க் கனியும். இந்நிலையில் அவனுடைய படைப்பின் சரஸ் பிரவகிக்கும். இலக்குப் புதிது' பார்வை புதிது. இந்நிலையை ல், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும்' என்பது கோஷமல்ல; வாழ்க்கையின்-எழுத்தின்-தமிழின் பிரிக்க ஒண்ணா அம்ஸம்!

இத்தகைய எண்ணங்கள் என்னைப் பரவசப்படுத்தும் நிலையிலே, 'வம்ச விருத்தி' கதைத் தொகுதியை இன்னொரு தடவை புரட்டுகின்றேன். 'லொட்டோ' எண்ணைப் போன்று வந்த பக்கத்தில், முத்துலிங்கம் என்ன எழுதுகின்றார்? அதனை உங்களுடன் சேர்ந்து வாசிக்க ஆசை:

'அடுத்த நாள் அதிகாலையிலே சத்தம் கேட்டு விழித்துக் கொண்டோம். ஆரவாரம் காதைப் பிளக்க வெளியே வந்து பார்த்தோம். தலைக்குடி மகனை கயிற்றுப் பல்லக்கில் தூக்கியபடி பல்லக்குக் காவிகள் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தார்கள். மலையைப் போன்ற உடம்பை நிமிர்த்தி வைத்து இடமும் வலமும் பார்த்தபடி போனார் தலைக்குடி மகன்.

'சூரன்போர் திருவிழாவில் சூரன், சிங்கமுகன், பானுகோபன் என்று மாறி மாறி வரும். உடம்பு ஒன்று; தலை மாத்திரம் மாறும். சகடையில் வைத்துத் தள்ளி வரும் போது புன்னாலைக் கட்டுவன் தச்சனார் பின்னாலிருந்து சூரனுடைய காதுகளை இறுக்கிப் பிடித்து இடமும் வலமும் ஆட்டியபடியே இருப்பார். அதற்கேற்றபடி கைவாளும் மேலும் கீழும் ஆடும். நாங்கள் சூப்புத்தடியை நக்கியவாறு பயத்துடன் இந்த வைபவத்தைப் பார்த்துக்கொண்டு இருப்போம். அப்ப 'பானுகோபன், பானுகோபன்' என்று சத்தம் கேட்கும். என்று சத்தம் கேட்கும். சூரனுடைய மகன், பதுமகோமளைக்குப் பிறந்தவன், சிறுபிள்ளையாக இருந்தபோது கோபத்தில் சூரியனையே பிடித்து தொட்டில் காலுடன் கட்டியவன், தலையை இரண்டு பக்கமும் ஆட்டியபடி வருவான். நாங்கள் பயத்துடன் பெரியவர்களுடைய கையைப் பிடித்துக் கொள்ளுவோம்.

'அது போலத்தான் தலைக்குடிமகன் வந்து கொண்டிருந்தார்....'

புலம் பெயர்ந்து, அமேரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டே, ஆபிரிக்கக் காட்டிலே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழன் 'ஞானம்' என்ற கதையிலே தன் அநுபவத்தை மேற்கண்டவாறு சொல்லுகிறான். இன்றைய அநுபவத்தைச் சித்தரிக்கும் பொழுது, பிறந்த மண்ணின் நினைவுகள் இயல்பாகவே, குறுக்கிழையில் ஓட, கோலச் சித்திரம் நெசவாகின்றது. அந்த இடத்தில் கொக்குவிலானான முத்துலிங்கம் மறுஜனனம் எடுத்து விட்டான்! சூப்புத்தடி நக்கும், பொய்மை அறியாப் பாலகன். சூரன்போர், சகடை, தச்சனார் என்று காவிய மயமான ஓவிய சுகம் அவன் நெஞ்சை நிறைக்கின்றது! அந்த நேரத்தில், அவன் எழுத்து சத்தியக் கனலிலே புனிதம் கண்டு, அழகியல் காயகல்பத்தில் இளமை பூண்டு...அஃது எழுத்தின் அமரநிலை. இந்த அமர நிலை, பிறந்த மண்ணின் நினைவுகள். தாயின் மடியிலும், மண்ணின் புழுதியிலும் பயின்ற தமிழிலேதான் சாத்தியப்படும். மண்ணும், அதன் நினைவும், அந்த நினைவுகள் கூத்தாடும் மொழியும் புலம் பெயர்ந்தவனின் நித்திய தியானத்தில் மண்டிக் கிடப்பவை. அவை இன்றி அவன் வெறுமை; வெறும் பூஜ்யம். எனவே, இவ்வாறு சித்திரிப்பதே இயல்பு; அழகு; உண்மை. 'எந்த இடத்தில் அழகும் உண்மையும் தாண்டவமாடுகின்றவோ, அவ்விடத்தைக் கை கூப்பித்தொழு வேண்டும்; அதுதான் கோயில்' என்று ரா.ஸ்ரீ.தேசிகன் அரை நூற்றாண்டுக்கு முன்னரே மகிழ்ந்தார். எத்தகைய ரஸனைப் பக்குவம்! இதனை விடுத்து, புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடிவாதம் இருக்கிறது என்றும்; இதனால், சில சமயங்களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப் புரிவதில் சிரமமிருந்து அவைகளின் சர்வதேசத் தன்மையை இழந்து விடுகின்றன என்றும் முறையீடு செய்வது வடிவில்லை.

`கோவைத் தமிழ் கரும்பு. கல்லுப் போலிருந்தாலும் அத்தனையும் இனிப்பு. திட்டும்போது கூடத் தித்திப்பை விட்டுவிடாதவர்கள் அவர்கள். நடுராத்திரியில் அவித்துக் கொடுக்கும் இட்லியைப்போல மதுரைத் தமிழ் மென்மையானது. ஆனால், அவர்களது விமர்சனமோ மிளகாய்ப்பொடி. என்ன இருந்தாலும் நக்கீரன் நடமாடிய தலம் அல்லவா? நெல்லைத் தமிழ் கவிதைத் தமிழ். ஒலிநயமும் உவமையும் ஊடும் பாவுமாய் ஓடும் தமிழ். திட்டவே தெரியாது திருநெல்வேலிக்காரர்களக்கு' என்று வட்டார வழக்குச் சிலவற்றுக்குச் 'குமுத'மான பாராட்டு உண்டு. சென்னைத் தமிழ், அக்ரகாரத் தமிழ், கரிசல் காட்டுத் தமிழ், நாஞ்சில் தமிழ், தலித் தமிழ்....இவை அனைத்தும் தனித்தும், இணைந்தும் செந்தமிழ் நாட்டின் இன்றைய படைப்பிலக்கியத்தின் கருவிகளாய் உயர்ந்துள்ளன. இந்த வட்டார வழக்கினால் தேசியம் சங்கை கெட்டது என்று சொல்வாரும் உளரோ? ஈழத் தமிழை உரிய முறையிலே அங்கீகரிப்பதிலே, கலைமகள் கி.வா.ஜ.காலத்திலிருந்தே ஒருவித பஞ்சி தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் பலருக்கு இருக்கிறது. இதற்கான ஏது என் பிடிமானத்திற்குள் சிக்குப்படுவதாகவும் இல்லை. தாம்பூலந் தரித்து நாநோகாத் தமிழ் சல்லாபம் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சுகிக்க முடியாத ஒன்று. எதுகை மோனை செய்து, பட்டிமன்றங்களிலே வித்தும் ஊன்றும் 'பேறு' அவர்களுக்கு இல்லை. இலக்கியமும் அதன் படைப்பும் அவர்களுக்க சௌந்தர்ய உபாசனையல்ல. கலை ஆராதனையுமல்ல. எழுத்துக் கலை அவர்களுக்குக் கிளர்ச்சியின் வெளிப்பாடு. ஞானத்தின் பகிர்வு. சத்தியத்தின் பதிவு. சுயமானத்தை இழந்து விடாத அக்கறை. மானிட மேன்மையின் தேடல். விடுதலையின் உள்ளொளி. இவையே அவர்களுடைய எழுத்து ஊழியத்திற்கான உந்து விசைகள். பணமும் புகழும் விடுதலைக்கு ஈடு அல்ல. படைப்பு முனைப்புக்கூட விடுதலையின் இன்னொரு ஸ்திதி என்கிற சம்பாவனையே! தொழிலிலும் புறவாழ்விலும் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றவர்கள். வீட்டு மொழியாக மட்டுமே தமிழை வசப்படுத்தும் நிர்பந்தம். ஆனால், தமிழை மறப்பதினால் தமது ஆன்மாவையே இழந்து விடலாம் என்கிற அச்சத்துடன் வாழ்கிறார்கள். தாயிடம் பாலமுது அருந்திய காலத்திலே பயின்ற தமிழ், குஞ்சுப் பருவத்திலே பார்த்த காட்சிகளிலும், அநுபவித்த கோலங்களிலும் உறைந்து நின்ற மொழிதான் அவர்கள் வாலாயப்படுத்தும் தமிழ். அது வித்துவத்தினால் பழுதுபடாது. வேறு தமிழில் எழுத முனைந்தால் உண்மையின் அழகையும், சத்தியத்தின் ஒர்மையையும், ஆன்மாவின் உள்ளொளியையும் அவர்களுடைய படைப்பு இழந்துவிடும் அபாயம் உண்டு. 'பெரியவர்கள்' இதனைப் புரிந்து கொள்ள ஏன் பஞ்சிப்பட வேண்டும்?

இலக்கியத்துக்கு சுத்த சுயம்புவான சர்வதேசத்தன்மை எதுவும் கிடையாது. சர்வதேச இலக்கிய அளவுகோல்கள் வைத்துக் கொண்டா காளிதாஸன் 'அபிஞந சகுந்தலா'வைப் படைத்தான்? தாகூரின் கீதாஞ்சலி, வங்காள மொழியின் ஆள் பயிற்சிக்காகவா உலக இலக்கிய அங்கீகாரத்தைச் சம்பாதித்தது? மொழியின் செம்மையான பயன்பாட்டினால் மட்டும் சர்வதேசத் தன்மையை இலக்கியத்துக்கச் சம்பாதித்தது? மொழியின் செம்மையான பயன்பாட்டினால் மட்டும் சர்வதேசத் தன்மையை இலக்கியத்துக்குச் சம்பாதிக்கலாம் என்பது பிரமை. உலகத்தின் மிகக் குறுகலான ஒரு மூலையிலே ஒளிந்து கிடக்கும் மானிடத்தை ஒளிரச் செய்யும் இலக்கியப் படைப்பு, அது மிகச் சிறிய மக்கள் கூட்டத்திலே பயிலப்படும் மொழியிலேதான் படைக்கப்பட்டது என்றாலும், அஃது உலக இலக்கியமாக உயரும். மொழியின் வல்லபமல்ல; படைப்பின் வல்லபம், மானிடத்தின் வல்லபம்! ஒரு காலத்தில், மாட்சிமை பொருந்திய பெரிய பிரித்தானிய மன்னர் முன்னிலைப்படுத்திய ஆங்கிலமே சர்வதேச இலக்கியம் தோன்றுவதற்கான மொழி என்று நினைத்திருந்தார்கள். அந்தக் காலத்தில், அமெரிக்கக் குடியேற்றவாசிகளும் அவ்வாறே நினைத்தார்கள். பெரிய பிரித்தானியாவின் மாட்சிமை பெற்ற ஆங்கிலத்தின் இலக்கிய ஆதிக்கம் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்கவில்லை. 'புதிய வானம் புதிய பூமி' என முகிழ்ந்த தமது புதிய அநுபவங்களை, அங்கு வழக்கில் முகிழ்ந்த மொழியில், தேசிய இலக்கியமாகப் படைத்தார்கள். ஒரு விதத்தில், அந்த மொழி வட்டார வழக்கே! வட்டார வழக்கில் அவர்கள் ஊன்றிய பிடிவாதத்தினாலும் அமேரிக்கத் தேசிய இலக்கியம் உருவாயிற்று. அடிப்படையில் தேசியத் தன்மைகளை நிறைவாக உறிஞ்சிக் கொள்ளும் இலக்கியமே, கால ஓட்டத்தில் சர்வதேச இலக்கியமாக அங்கீகாரம் பெறுகின்றது! எனவே, இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பு உலகளாவியதாக அகலிக்கும் பொழுது, ஈழத் தமிழையும் இணைத்துத்தான் அதன் மொழிவளம் வீறுகொள்ளும். இதுவே நியதி. இது சமத்காரமான நியாயப்படுத்துதல் அல்ல; சத்தியம்!

மேலும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் கதைகளின் களங்கள் பனை வளராப் பனி பெய்யும் நாடுகளிலும், முத்துலிங்கம் போன்றவர்களுக்கு sub-sahara நாடுகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் மனித நேயமும் ஒளிரும். மொழி-கலாசாரம்-பண்பாடு-மதம்-நிறம் ஆகிய அனைத்து வேறுபாடுகளும் இற்று, எல்லோரும் கேளிர் - KIN - சுற்றத்தார் என முகிழ்ந்திடும் மானிடம்! யாரவன்? புலவனா? சான்றோனா? யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றல்லவா பாடினான்? ஒமோம். கணியன் பூங்குன்றன்! அந்த அற்புத DYLLஇன் கிளர்ச்சியை, உலகத் தமிழ் ஆராய்வுகளுக்கான ஒரு கோஷமாக எல்லோர் வாயிலும் மனசிலும் ஒலிக்கச் செய்தவர் தனிநாயகம் அடிகளார். புத்திஜ“வித வக்கிரங்களினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்ட ஈழத்தமிழர் அவர். அவர் தேடலிலே, பூங்குன்றன், புதிய உயிர்ப்பும் வீரியமும் சுகித்தான். கேளிரைக் கேளீராக்கி, ஆராய்வுகளை அரசியற் சிறு தெய்வங்களில் பாதசேவைக் கேளிக்கைகளாக்கும் பேதையருக்கு அந்தப் பாடலின் ஆன்மா சிக்கமாட்டாது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்தம் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ்ப் படைப்பு ஊழியம், அந்தப் பாடலின் இறுதி வரிகளையும் ஆதார சுருதிகளாக இணைத்துக் கொள்ளும்.

'.....................
காட்சியில் தெளிந்தனம்; ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!'

இது எத்தகைய vision-தரிசனம்' '....அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே, உன் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே' என்று ஒப்பாசாரத்துக்காக, எழுந்து நின்று, தமிழணங்கை வாழ்த்துவதோடு தமிழ் பற்றிய அக்கரை சம்பூர்ணம் பெற்றதா? தமிழணங்கின் சீரிளமைத் திறனை வளர்ப்பதிலும் வளப்படுத்துவதிலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இணைந்துள்ளார்கள் என்பதை மதித்து, செந்தமிழ் நாட்டினரும் அவர்களைக் கேளிராக அணைத்தல் எத்தகைய ஆனந்த நிலை!

அடுத்த நூற்றாண்டின் கதைக் களங்களும், பொருள்களும் இவற்றை இசைக்கும் பாணிகளிலும் உபாயங்களும் உத்திகளும் மாறும். மாற்றமே வளர்ச்சியுமாம். இவை பற்றிய தேடல்களின் கோலங்களை 'வம்ச விருத்தி'யிலே தரிசிக்கின்றேன். நாளைய நூற்றாண்டின், நாளைய கதைகளின் சாங்கங்களைப் பதிவுசெய்வதினாலும், 'வம்சவிருத்தி'யை வெள்ளோட்டம்-lanch எனக் குறித்தேன். நண்பர் முத்துலிங்கம் ஒரு சாமான்யனாகவே வசப்படுத்தியுள்ள சாமான்யத் தமிழிலே, கடந்த சில தசாப்தங்களா மேற்கொண்ட ஒரு வகை நாடோடி வாழ்கையிலே திரட்டிக் கொண்ட அநுபவங்களிலே காலூன்றி, இந்தத் தொகுதிக்கான கதைகளைப் படைத்துள்ளார் என்கிற சங்கதி சட்டென்று வாசகனின் பிடிமானத்திற்குள் சிக்கிக் கொள்ளும். இவற்றின் மத்தியிலே தாம் ஒரு யுகசந்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் பிரக்ஞையை அவர் துறக்கவில்லை. 'இருபது வயசிலே அறிந்த உண்மைகளின் பேர்பாதி நாற்பது வயசிலே உண்€த் தன்மையை இழந்து விடுகின்றான்; நாற்பது வயசிலே அறிந்து கொள்ளும் உண்மைகள் இருபது வயசிலே அறியப்படாதவையாக இருந்தன' என்கிற ஞான உதைப்பு கதைகள் பலவற்றிலே பூடகமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் 'சாமான்யன்' என்பதிலே அவர் பூண்டிருக்கும் தோரணை, அன்று கொக்குவில் அயலிலே சேகரஞ் செய்த அந்த இனிமைகளை இழக்காத ஓர் இயல்பையும் இணைக்கின்றது. இது யுகசந்திப் பிரக்ஞையே! இந்தப் பிரக்ஞையுடைய ஓர் எழுத்தாளனாலேதான், அடுத்த நூற்றாண்டின் கதைக்கலை உலகினை வரவேற்கும் நுழைவாயிலிலே தோரணங்கள் கட்டுதல் ஏலும். ஏலும் மட்டுமல்ல, தகுதியும் முத்துலிங்கத்திற்கு நிறைவாகவே இருக்கின்றது. எனவே, அவருடைய தமிழ் ஊழியத்தை நெஞ்சம் மண்ககப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.

நாடு-நிறம்-இனம்-மதம் ஆகிய குறுக்கங்களை எகிறிய ஒரு தேடலாய் அமைந்துள்ள 'வம்ச விருத்தி' நாம் ஊன்றவேண்டிய அக்கறைகள் சிலவற்றைச் சுட்டுகின்றது. புதிய அநுபவங்களையும் கற்பிதங்களையும் இணைக்கின்றது. புலம் பெயர்ந்த நாடுகளின் நாளைய தமிழ் எழுத்தாளர்களடைய சிரத்தைகளை நெறிப்படுத்துகின்றது. இவற்றை நாம் உரிய முறையில் தரிசித்தல் வேண்டும் என்ற ஆசியினாலும், மூன்று தலைமுறைக்கு மேலாகவும் எழுத்து ஊழியத்தைச் சேவிக்கும் தமிழ்த்தவனம் மறக்காத பரதேசி என்ற ஹேதாவிதலும், இந்த முன்னீடு இவ்வாறு சமைந்தது. தலைக்கேறிவிட்ட என் தமிழ்ப் பித்து எனக் கொண்டு, இதன் நீளத்தைப் பொறுத்தருள்க.

'ஓ மரங்களே, என்னை மன்னிப்பீர்களாக!' என்று முத்துலிங்கம் பாவமன்னிப்புக் கோரவேண்டிய அவசியமே இல்லை. அவருடைய தமிழ் ஊழியம், நாளைய நமது எழுத்தாளர்களுக்கும் பயன்படும். அவருடைய தமிழ் ஊழியம் தொடரவும், நின்று நிலவவும் என் ஆசிகள்.

எஸ்.பொ

அவுஸ்ரேலியா
16.4.1996


1. துரி

நான் வழக்கம்போல என் கதிரையிலே சாய்ந்திருந்தேன். அந்த இலையுதிர் பருவத்தின் மௌனமான மாலை வேளையில் மின்கணப்பு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது. துரி என் காலடியில் படுத்திருந்தது. அன்று முழுக்க அது சாப்பிடவில்லை. சாப்பாட்டை போய் முகர்வதும், மறுபடியும் வந்து படுப்பதுமாக இருந்தது. என்னுடைய மகன் கல்லூரிக்கு போன நாள் தொடங்கி இப்படித்தான்.

இரண்டு நாள் முன்பு நானும் என் மனைவியும் காரிலேபோய் எங்கள் மகனை அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் பேர்க்லி கல்லூரியிலே சேர்த்துவிட்டு வந்திருந்தோம். அந்தக் கல்லூரி எங்கள் வீட்டிலிருந்து 3000 மைல் தொலைவில் இருந்தது.

எங்களைப்போல இன்னும் பல பெற்றோரும் அமெரிக்காவின் பலபகுதிகளிலும் இருந்து அங்கே வந்திருந்தனர். பதினேழு வயது தாண்டிய பிள்ளைகளை இப்படி பெற்றோர் கூட்டிவந்து கல்லூரிகளில் சேர்ப்பது இங்கே ஒரு சடங்கு. பிள்ளைகளுடன் பெற்றோருடைய உறவுகள் துண்டிக்கப்படும் முக்கியமான நாள் இது. இதன் பிறகு பெற்றோர் வேறு, பிள்ளைகள் வேறு என்று தங்கள் பாதையில் பிரிந்து சென்று விடுவார்கள்.

என் மகனுடைய சாமான்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போய் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறையிலே வைத்தோம். முதன்முறையாக எங்களைப் பிரிந்து இருக்கப் போவதால் அவன் கண்கள் கலங்கிவிட்டன. அதைக் காட்டாமல் இருக்க அவன் பெரிதும் பிரயத்தனப்பட்டான். என் மனைவியோ பொங்கிவந்த அழுகையை அடக்கத் தெரியாமல் விம்மத் தொடங்கினாள். செய்வதறியாது துரியை வாரியெடுத்து திருப்பித் திருப்பி கொஞ்சினான் என் மகன். அவனுடைய பத்தாவது வயதிலே பிறந்த நாள் பரிசாக நாங்கள் கொடுத்த நாய்தான் துரி. கடந்த ஏழு வருடங்கள் அவன் துரியைவிட்டு பிரிந்திருந்ததே இல்லை. முதன் முறையாக இப்படி பிரிவது எங்கள் எல்லோருக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.

நாங்கள் வீடு வந்து சேர்ந்தபோது வீடு ஓவென்று சுடுகாடு போல காட்சியளித்தது. மனம் கேளாமல் மகனுடன் டெலிபோனில் கதைத்தோம். அவன் துரியைப் பற்றித்தான் விசாரித்தான். நாங்கள் துரியை டெலிபோன் வாய்க்கருகே கொண்டுபோய் பிடிக்க அது 'வள், வள்' என்று குரைத்து தன் ஆற்றாமையை தெரியப்படுத்தியது. என் மகனுடைய அறைக்குள் ஓடிப்போய் அவன் படுக்கையையும், புத்தகங்களையும், உடுப்புகளையும் மணந்து மணந்து பார்த்துவிட்டு மறுபடியும் திரும்பி வந்து என் காலடியில் படுத்துக்கொண்டது. நீர் தேங்கிய கண்களை உயர்த்தி முகத்தை என் மடியிலே தேய்த்து 'ங்...ங்' என்று முனகியது. அதனுடைய துக்கத்தை யார் தேற்றுவார்கள்?

அந்த நாய்க்குட்டி பிறந்து ஆறு வாரங்களிலேயே எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. கால்களைத் தூக்கி ஆண் நாய் என்று நிச்சயித்துக் கொண்டு என்ன பெயர் வைப்பது என்ற விசாரத்தில் மூழ்கினோம். பல பெயர்களை நிராகரித்த பின்பு 'துரியோதனன்' என்ற பேரை நான்தான் முன்மொழிந்தேன். என் மகன் என்னை கீழ்க்கண்ணால் ஊடுருவிப் பார்த்தான். பேர்களை 'வீட்டோ' பண்ணும் உரிமை அவனிடம் இருந்தது. 'ஆ, துரி என்று கூப்பிடுவோம்' என்று இறுதியில் சொல்லிவிட்டான். பெயரும் அப்படியே நிலைத்துவிட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ’ல் இருந்து எங்களைப் பார்க்க அடிக்கடி வரும் நண்பர் ஒருவருக்கு அந்தப் பேர் பிடிக்கவில்லை. 'ஏன், வேறு பேர் கிடைக்கவில்லையா? என்று கேட்டார். நான் 'இல்லை, முதலில் திருதராட்டினன் என்று வைப்பதாகத்தான் இருந்தோம். ஆனால் அந்தப் பேரில் நாய்க்கு அவவளவாக சம்மதமில்லை; அதுதான் 'துரியோதனன்' என்று வைத்திருக்கிறோம். இந்தப் பேர் அதற்கு நன்றாகப் பிடித்துக்கொண்டது' என்று சொல்லிவிட்டேன். பிறகு அந்த நண்பர் வாயே திறக்கவில்லை.

இடக்காக அவருக்கு பதில் கூறினாலும், துரியோதனன் என்று பேர் வைத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. மகாபாரதத்திலே சிறப்பாக பேசப்படும் நம்பு கிருஷ்ணன், அர்ஜுனன் நட்புதான். இரண்டுபேருமே ராஜவம்சம்; நெருங்கிய உறவு. இதிலே என்ன அதிசயம்? உண்மையில், எங்கள் இதிகாசங்களில் கூறியபடி மிகச்சிறந்த நம்புக்கும், விசுவாசத்திற்கம், அன்புக்கும் இலக்கணம் துரியோதனன்தான். அர்ஜுனனுடன் துவந்தயுத்தம் தொடங்க முன்பு 'உன் குலத்தை உரைப்பாயாக' என்று சபை நடுவே கேட்டதும் தலைகுனிந்த கர்ணனை கட்டித் தழுவி அந்தக்கணமே அவனை அங்கததேசத்து அரசனாக அபிஷேகம் செய்த துரியோதனனை மறக்க முடியுமா? சொக்கட்டான் விளையாட்டின் உச்சக்கட்டத்தில் பானுமதியெழுந்ததும் அவள் முந்தானையை கர்ணன் பிடித்து இழுக்க, முத்துமாலை அறுத்து திறிவிழ, உள்ளே வந்த வணங்காமுடி மன்னன் துரியோதனன் முழங்காலில் இருந்து 'பொறுக்கவா, கோக்கவா' என்று கேட்ட அவனுடைய ஆழ்ந்த நட்பின் அடையாளமாக வைத்த பெயரல்லவா இது? இந்த வியாக்கியானம் எல்லாம் கழிவுநீர் கால்வாய் திருத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் நண்பருக்கு விளங்கவா போகிறது என்று நானும் பேசாதிருந்துவிட்டேன்.

துரி சிறு வயதிலே செய்த கூத்தை இங்கே வர்ணிக்க முடியாது. அது வந்த நாளில் இருந்து எங்கள் வீட்டு நடைமுறைகள் எல்லாம் மாறிவிட்டன. எங்கள் எல்லோருடைய செயல்பாடுகளும் அதை மையமாக வைத்துத்தான் நடந்தன. அதற்கு பால் பருக்குவது, சாப்பாடு ஊட்டுவது, குளிக்க வார்ப்பது என்று எல்லாவற்றையும் போட்டி போட்டுக்கொண்டு செய்தோம். என் மகனுடன் செய்த ஒப்பந்தப்படி துரியன் கழிவு உபாதைகளை அவனே பார்த்துக்கொண்டான். படுக்கப் போகுமுன் பத்திரிகைகளையெல்லாம் பரப்பி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டோம். பனிக்குளிர் அடிக்கும் இரவு நேரங்களில் என் மகன் துரியைக் கூட்டிக்கொண்டு வெளியேவிட்டு நடுக்கத்துடன் காத்துக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி என் மனதை வெகுவாக உருக்கிவிடும்.

சில வேளைகளில் துரி தவறுதலாக விலையுயர்ந்த கார்பெட்டில் ஒன்றுக்குப் போய்விடும். நாங்கள் அதை அதட்டும்போது அது மிகவும் நொந்துபோகும். அவமானப்பட்டு போய் உடலைக் கூனிக்குறுகி ஒரு மூலையிலே அனுங்கிக்கொண்டே ஒளியப் பார்க்கும். அது புத்திசாலியான நாய் என்றாலும் சிறுபிள்ளைகளுக்கே உரிய விஷமத்தோடு அது செய்த லீலைகளுக்கு அளவில்லை.

முதலில் இருந்தே சில ரூல்ஸை நாங்கள் துரிக்காக ஏற்படுத்திக் கொண்டோம். அதிலே ஒன்று துரிக்கு நாங்கள் சாப்பிடும் உணவு கொடுப்பதில்லை என்பது தான். காலையிலே இரண்டு கப் பால்; பின்னேரம் ஐந்து மனியளவில் டின்னிலே வரும் நாய் உணவை அளவோடு எடுத்து துரியுடைய பிளேட்டில் போட்டு விடுவோம். அது பாய்ந்தடித்து சாப்பிடாது; வைத்து வைத்து வேண்டியபோது சாப்பிட்டுக் கொள்ளும். ஒரு நாய் தன் சாப்பாட்டிற்காக கெஞ்சுவதோ, வாயைப் பார்த்துக்கொண்டு நிற்பதோ அதனுடைய தன்மானத்திற்கு இழுக்கு என்பது எங்கள் கருத்து.

குட்டி நாயான துரிக்கு குழந்தைப்புத்தி சுபாவம் அதிகம். பதுங்கி பதுங்கி வந்து நாங்கள் அணியும் 'சொக்ஸை' திருடிக் கொண்டுபோய் தோட்டத்திலே புதைத்துவிடும். இப்படியாக எங்கள் சொக்ஸ் எல்லாம் அதிதீவிரமாக மறைந்துகொண்டு வந்தன. ஒருநாள் பிடிபட்டு விட்டது. 'எங்கே? என்று உறுக்கி கேட்டதும் தோட்டத்திலேபோய் பரபரப்பாகத் தோண்டியது. சுந்தரமூர்த்தி நாயனார் பரவையரை 'இம்பிரெஸ்' செய்வதற்காக ஆற்றிலே போட்ட பொற்காச திருவாரூர் தாமரைக்குளத்தில் எடுத்துக் கொடுத்தாரல்லவா? எங்களுடைய துரியும் எங்களை இம்பிரெஸ் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம் படுதோல்வியடைந்தன. அதற்குப் பிறகு நாங்கள் எல்லாரும் எங்கள் சொக்ஸை கண்ணும் கருத்துமாக காவாந்து செய்யத் தொடங்கினோம்.

ஆனால் இதை எதிர்பார்த்த துரி இன்னொருபடி முன்னேறி விட்டது. ஒருநாள் இரவு என் மகனுடைய காலணியை கடித்து வைத்திருந்தது. அன்று நாங்கள் இது எங்களுக்கு ஒப்பான விஷயம் இல்லை என்பதை மிகவும் கஷ்டப்பட்டு துரிக்கு விளங்க வைத்தோம். ஆனால், அடுத்த நாலாம் நாளே என்னுடைய நூற்றி நாற்பது டொலர் சப்பாத்தை இது கடித்து ஓட்டை போட்டுவிட்டது. இது ஒரு சீரியஸ் விஷயம் என்பதை துரிக்கு எப்படி உணர்த்துவது? அடுத்த நாள் சாப்பாட்டு நேரத்துக்கு துரியினுடைய பிளேட்டில் உபயோகத்தில் இல்லாத பழைய சப்பாத்துகள், செருப்புகள் எல்லாவற்றையும் போட்டு அதன் முன்னால் வைத்தோம். துரி திடுக்கிட்டு விட்டது. இரண்டு நாள் தொடர்ந்து இப்படியே செய்து கொண்டு வந்தோம். அதுவும் சிவபட்டினியாகக் கிடந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு துரி சப்பாத்தை கண்டால் பக்கமாக ஓடும்.

துரியை வாங்கும்போது எங்களுக்கு அதனுடைய பெடகிறி கார்டையும் தந்திருந்தார்கள். பெடிகிறி கார்டு என்பது அந்த நாயுடைய பூர்வாங்கத்தை கூறும் அட்டை. அது ஒரு ஓஸ்ட்ரேலியன் செப்பர்ட். அதனுடைய மூதாதையர் ஸ்பெயினில் இருந்து ஓஸ்ரேலியா போய் அங்கேயிருந்து நூறு வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு வந்தவை. பிறக்கும்போதே ஒட்டிய வாலுடன் பிறக்கும் இந்த நாய்கள் ஓட்ஸ்ரேலியாவில் ஆட்டு மந்தைகளை சீராக வைத்திருப்பதற்கு ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டவை. நீலநிறக் கண்களும், மடிந்த காதுகளும், மெத்தென்று பத்தையாக இருககும் மயிரும் இந்தச் சாதி நாயை சட்டென்று இனம் காட்டி விடும். அறுபது பவுண்ட் எடையும் இரண்டு அடி உயரமும் கொண்ட இது மனிதனுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட விசுவாசமான ஒரு தோழன்.

துரியுடைய மேல்முடி சொக்லேட் கலரில் அடர்த்தியாக இருக்கும். முகமும் கீழ்கால்களும் மாத்திரம் தேக்குமர நிறம்; அதன் கழுத்துக்குக் கீழே கொஞ்சம் வெள்ளைப் பிரதேசம். கண்கள் கனிந்து இருக்கும்; அண்ணாந்து பார்க்கும்போது 'என்னை அணை' என்று கெஞ்சவதுபோல தோன்றும். கண்களுக்கு மேலே இரண்டு வட்டங்கள். அது படுத்து நித்திரை கொள்ளும்போதும் கண் விழித்திருக்கிறது போன்ற பிரமையை உண்டு பண்ணும். ஆட்டு மந்தைகளை மேய்க்கும்போது ஆடுகள் இது தூங்கும்போதும் விழித்திருக்கிறது என்று நினைத்து மயங்கி பயபக்தியோடு செயல்படுமாம்.

மேய்ச்சலில் இருக்கும்போது இது மந்தையை சுற்றிச் சுற்றி வந்து ஆடுகளின் கால்களை மெல்லக் கடித்து அவற்றை ஒழுங்கு படுத்தும். அந்தப் பழக்கத்தை இது இன்னும் முற்றிலும் மறக்கவில்லை. நாலைந்து பேரோடு இது ஆட்களைச் சுற்றிச்சுற்றி வந்து குதிக்காலை மெல்லக் கடித்து ஒழுங்குபண்ணப் பார்க்கும். இன்னொரு பரம்பரை விசேஷமும் இதற்கு உண்டு. ஆட்டு மந்தையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு போக வேண்டுமென்றால் இது சுற்றி வந்து போகாது. ஒரு ஆட்டின் மேலேறி அந்தக் கரை போய் சேர்ந்து விடும். இந்தப் பழக்கம் இன்னமும் இதன் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு போவதற்கு இன்றுகூட இது தன் குலாசாரப்படி எதிர்ப்பட்ட தெல்லாவற்றையும் ஏறிப் பாய்ந்து பாய்ந்து தான் போய்ச் சேரும்.

நான் வளர்த்த நாய்களில் துரி போன்ற அறிவுக் கூர்மையுள்ள நாயை நான் கண்டது கிடையாது. ஆனாலும் அதற்கு ஒரு வயதுப் பிராயம் முடிவதற்கிடையில் தகுந்த ட்ரெயினரிடம் பயிற்சி கொடுப்பதென்று முடிவு செய்தோம். ட்ரெயினர் சொன்ன வாசகம் எனக்கு இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. 'நாய்கள் நல்ல புத்திகூர்மை உடையவை. அவைக்கு ட்ரெயினிங் தேவையில்லை. ட்ரெயினிங் எல்லாம் உங்களுக்குத்தான்' என்று அந்த மெக்ஸ’க்கோக்காரன் என்னைச் சுட்டிக்காட்டி கூறினான். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

நாலே நாலு வார்த்தைகள்தான் எங்களுக்கு கற்பித்தான். அதன் பிறகு துரியில் எவ்வளவு மாற்றம். 'கம்'வா என்பது; 'சிட்' இரு என்பது; 'ஸ்டே' நில் என்பது; இவை எல்லாவற்றையும் நானும் துரியும் வெகு சிரத்தையாகக் கற்றுக்விட்டோம். வீட்டுப்பாடம் கூட சரியாக செய்தோம். ஆனால் 'ஹ“ல்' என்பது எங்கள் இரண்டு பேரையும் வாட்டி எடுத்துவிட்டது. இடது கையிலே நாயுடைய சங்கிலியை பிடித்துக்கொண்டு நாயையும் இடது பக்கமாக நடத்திச் செல்லவேண்டும். செய்து பார்த்தால் தெரியும் வினை. நடக்கும்போது நாய் என்னுடைய குதிக்காலுடனேயே வந்து கொண்டிருக்க வேண்டும். நான் நிற்கும்போது அதுவும் நிற்க வேண்டும்; நடக்கும்போது அதுவும் நடக்கவேண்டும். கொஞ்சம் முந்தியும் போகக்கூடாது. பிந்தியும் வரக்கூடாது. நாயுடைய வேகத்துக்கு ஏற்ப நான் என்னுடைய வேகத்தை மட்டுப்படுத்த பார்ப்பேன். மெக்ஸ’கோக்காரன் கத்துவான். நாய்தான் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்; நானல்ல. காசையும் கொடுத்து இந்த மெக்ஸ’கோக்காரனிடம் இப்படி பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே என்று நான் என்னை நொந்து கொள்வேன். கடைசியில் ஒருவாறாக பரீட்சையில் இருவருமே பாஸாகி விட்டோம்.

இது தவிர மெக்ஸ’கோக்காரன் ஒரு விஸ’லும் தந்திருந்தான். அந்த விஸ’லை ஊதினால் சத்தமே கேட்காது. அந்தச் சத்தம் நாய்க்கு மாத்திரம்தான் கேட்கும். அது எங்கே இருந்தாலும் ஓடி வந்து விடும். அதற்கு பிறகு துரியுடன் வாக் போவதும், பார்க்கிற்கு போய் விளையாடுவதும் எனக்கும் என் மகனுக்கும் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டதுபோல ஆகிவிட்டது. இந்த நாலு வார்த்தைகளும் எங்களுக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்திவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

'போ' என்று சொல்வதற்கு மெக்ஸ’கோக்காரன் ட்ரெயினிங் இல்லை என்றும், நாயை அந்தவார்த்தை குழப்பும் என்றும் கூறியிருந்தான். 'போ' என்ற வார்த்தை உண்மையில் தேவையில்லை என்பதை நாங்கள் வெகுநாள் கழித்துத்தான் கண்டு கொண்டோம்.

எங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் துரி அவசரமாக வந்து அவர்களை ஒருமுறை முகர்ந்து பார்க்கும். பிறகு போய் விடும். அதனுடைய கம்ப்யூட்டர் மூளையில் விருந்தினருடைய மணம் பதிவாகி எஜமானருக்கு இவர்கள் வேண்டியவர்கள் என்ற செய்தி ஆயுளுக்கும் நிச்சயமாகிவிடும். சூப்பர் மார்க்கட் போனால் துரி எங்களுக்காக வெளியே காத்து நிற்கும். எவ்வளவுதான் அதற்கு தொந்தரவு வந்தாலும் அசையாது. ஒரேஒரு முறை மாத்திரம் அதற்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

துரி இப்படி ஒருநாள் வெளியே இருக்கும் சமயம் பார்த்து சடை வைத்து சிலுப்பிய பெண் நாய் ஒன்று அதை மயக்கி விட்டது. வேத அத்யயனத்தில் கவனமாயிருந்த ரிஷ்யசிருங்கரைப்போல விஷபானுபவங்கள் தெரியாமலே இது வளர்ந்து விட்டது. இதற்குமுன் இப்படியான உணர்ச்சிகளை அது அனுபவித்ததில்லை. அந்தச் சடை நாயைக் கண்டதும் அதன் பின்னாலேயே சுற்றிக் கொண்டு போய் விட்டது. நாங்கள் துரியைத் தேடிக் கண்டுபிடித்தபோது எங்களை அந்நியர்போல பார்த்தது. 'ங், ங்' என்று அழுதுகொண்þ எங்களுடன் வேண்டா வெறுப்பாக வந்தது. அந்தச் சடைக்கார சிறுக்கி துரியின் மனத்தை அப்படி கெடுத்துவிட்டது.

அப்போது நான் ஒரு துரோகமான காரியத்தை செய்யவேண்டி வந்தது. கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஜ“வனின் பால் உணர்ச்சியுடன் விளையாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது. சுயநலம் கருதி மிருக வைத்தியரிடம் போய் துரிக்கு 'நலம் அடித்து' (பால்நீக்கம்-neutering) வந்தோம். ஆண் நாய்கள் பெண் நாய்களுக்குப் பின் தறிகெட்டு அலையாமல் இருந்து வீட்டை நலமாகக் காப்பதற்காக யாழ்ப்பாணத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்த உபாயம். நாங்கள் செய்த துரோகம் தெரியாது என் செல்லக்கட்டி துரி எங்களை நக்கியபடியே விசுவாசமாக பின் தொடர்ந்தது என் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.

ஒருநாள் இப்படித்தான் துரியை காரிலேயே விட்டுவிட்டு கண்ணாடியையும் உயர போட்டுவிட்டு ஒரு அவசர காரியமாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ணு ஒன்றுக்குள் போய்விட்டேன். 'ஐந்து நிமிடங்களில் வந்து விடுவேன்' என்று தான் நினைத்திருந்தேன். அங்கே கனநாள் காணாத ஒரு நண்பரை கண்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்துவிட்டேன். அவருடைய வற்புறுத்தலுக்கு இணங்கி அவருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு திரும்பும்போதுதான் துரியினுடைய ஞாபகம் சடுதியாக வந்தது.

அது ஒரு கோடைகாலம். பதைத்துக்கொண்டு நான் ஓடிவந்தபோது காரைச் சுற்றி இரண்டு மூன்று பேர்; ஓரு போலீஸ்காரர். பாண் போறணை பேல வேகிக் கொண்டிருக்கும் காரிலே இப்படி வாயில்லாத பிராணியை விட்டுப்போவது எவ்வளவு பாபமான காரியம் என்பது எனக்குத் தெரியும். தவறுதலாக நடந்துவிட்டது என்று பொலீஸ்காரரிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு துரியிடம் மன்னிப்பு கேட்பேன்? துரி முகத்தை உயர்த்தி நீர் கசிந்த கண்களால் என்னைப் பார்த்துவிட்டு தலையை என் மடியில் உரசி தன் மன்னிப்பை அறிவித்தது; ஆனால் நான மாத்திரம் என்னை மன்னிக்கவே இல்லை.

இந்த சமயத்தில்தான் துரி தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்றது. நாங்களும் தான். எங்கள் வீட்டில் பின்னால் மரங்களடர்ந்த ஒரு தோப்பு இருந்தது. மரங்களென்றால் கவையாகிக் கொம்பாகி வளர்ந்த ஓக் மரங்களும், அமெரிக்கன் ஹைவே போன்று வளைவே இல்லாத சிவப்பு மரங்களும் அந்தத் தோப்பை நிறைத்து இருந்தன. நிமிர்த்தி வைத்த நாதஸ்வரம் போன்ற டக்ளஸ் மரங்களில் வண்ணக்கலர் மரங்கொத்திகள் நேர் நேராய் ஓட்டைகள் துளைத்து அவற்றிலே வரப் போகும் பனிக் காலத்துக்கு ஓக் விதைகளைச் சேமித்து வைத்திருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தேன் சிட்டுகளும், மரங்கொத்திகளும், கொண்டைக் குருவிகளும், ஹம்மிங் பறவைகளும் அங்கே நிரந்தரமாக குடியிருந்தன. அவைகளுடைய சலசலப்பு அதிகாலை வேளையிலேயே எங்களையெல்லாம் எழுப்பிவிடும்.

துரிக்கென்று ஒரு சிறிய மரக்கதவு ரப்பர் வளையம் போட்டு எங்கள் வீட்டு சுவரிலே பொருந்தியிருந்தோம். துரி வேண்டிய நேரம் போகவும் வரவும் அது வசதியாக இருந்தது. துரி அடிக்கடி வெளியே போய் தன் கீழ் பிரஜைகளாகிய அணில்களுக்கும், தேன் சிட்டுகளுக்கும், மரங்கொத்திகளுக்கும் காட்டும் முகமாக ராஜநடை நடந்து தன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்து திரும்பும். அவையும் இதைக் கண்டவுடன் 'கீ, கீ,' என்று சத்தமிட்டு மரியாதை செய்து ஒதுங்கி நிற்கும். துரி இப்படி புது லாடம் அடித்த குதிரைபோல தலையை நிமிர்த்தி நகர் வலம் வரும்போது அந்தந்த மூலைகளில் ஓரொரு சொட்டு சிறுநீர் தெளித்து தன் எல்லைகளை திரும்பவும் வலியுறுத்தி வைக்கும்.

** இதன் தொடாச்சி vamsa2.mtf.ல் வருகிறது**


சாதனைக்கு விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான். நானும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்தவாறு இருந்தோம். எங்கள் காலடியில் துரி கதகதப்பாக படுத்திருந்தது. திடீரென்று ஒரு வாடை வீசியது. நாங்கள் இதற்கு முன்பு அறிந்திராத ஒரு நெடி. நாங்க ளஆளையாள் பார்ப்தற்கிடையில் துரி விசுக்கென்று எழும்பி நாய்க்கதைவை தள்ளிக்கொண்டு வெளியே பாய்ந்தது அங்கே வேவு பார்க்க வந்த வரிபோட்ட தேவாங்கு (Stiped Skunk) ஒன்றை துரி துரத்தியபடி போய்க் கொண்டிருந்தது. ஒரு நொடிதான் அந்தக் காட்சியை பார்த்தாலும் மனதை விட்டகலாத காட்சியது. அந்த தேவாங்கு ஒன்றரை அடி உயரம் தான் இருக்கும். கறுப்பு நிறத்தில் முதுகிþ



** vamsa1.mtf ன் தொடர்ச்சி **

ஒரு நாள் இரவு பதினொரு மணியிருக்கும். என் மகன் ஹைஸ்கூல் சோதனைக்கு விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான். நானும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்தவாறு இருந்தோம். எங்கள் காலடியில் துரி கதகதப்பாக படுத்திருந்தது. திடீரென்று ஒரு வாடை வீசியது. நாங்கள் இதற்கு முன்பு அறிந்திராத ஒரு நெடி. நாங்க ளஆளையாள் பார்ப்தற்கிடையில் துரி விசுக்கென்று எழும்பி நாய்க்கதைவை தள்ளிக்கொண்டு வெளியே பாய்ந்தது அங்கே வேவு பார்க்க வந்த வரிபோட்ட தேவாங்கு (Stiped Skunk) ஒன்றை துரி துரத்தியபடி போய்க் கொண்டிருந்தது. ஒரு நொடிதான் அந்தக் காட்சியை பார்த்தாலும் மனதை விட்டகலாத காட்சியது. அந்த தேவாங்கு ஒன்றரை அடி உயரம் தான் இருக்கும். கறுப்பு நிறத்தில் முதுகிலே மட்டும் வெள்ளைக்கோடு; அத்தோடு குஞ்சம் கட்டியதுபோல அடர்த்தியான வால் அதற்கு.

'இனி ஆத்தாது' என்று தெரிந்ததும் தேவாங்கு பக்கவாட்டில் நின்று கால்களைத்தூக்கி இப்படியான ஆபத்து சமயங்களுக்கென்று கடவுளால் கொடுக்கப்பட்ட, பின்னாங்கால்களுக்கிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத இரு சுரப்பைகளில் இருந்து ஒரு திரவத்தை பீச்சியடித்தது. துரியின் கண்களை நோக்கித்தான் இந்த திரவம் வந்தது. துரி எவ்வளவு முயன்றும் அதனால் இதைத் தவிர்க்க முடியவில்லை. துரி புல்தரையிலே விழுந்து உருண்டு உருண்டு கதறியது.

நாங்கள் ஓடி அதனிடம் வந்தபோது வெளிர் மஞ்சள் கலரிலே இருந்த அந்தத் திரவம் அதன் உடம்பு பூராவும் பரவி விட்டது. 'ஓ,ஓ' என்று ஓலமிட்டு ஊரைக் கூட்டியது. நாங்கள் துரியைக் கிட்ட அணுகாதபடி அந்த நெடி எங்களையும் தாக்கியது. ரப்பரை எரிக்கும்போது வருமே அப்படியாக நாசித்துவாரத்தை அரித்துக் கொண்டு போகும்படியான துர் நெடி அது. துரியை உள்ளே கொண்டு வந்து அது ஓலமிட, ஓலமிட குளிக்க வார்த்து அதன் வேதனையை தீர்க்க முயன்றோம். முடியவில்லை. கடைசியில் தக்காளிப் பழச்சாறு பிழிந்து அதில் அதை முக்கி முக்கி எடுத்தோம். மூன்று நாள் வரை அதன் ரணம் ஆறவில்லை; வீட்டைச் சுற்றி அப்பியிருந்த மணமும் போகவில்லை. தேவாங்கு அதற்குப் பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை. துரியின் ராஜ்யத்தில் அதனடைய மணம் கமழும் படையெடுப்பு மீண்டும் நடைபெறவேயில்லை.

ஆனால் இந்த சமயத்தில்தான் துரி வேறொரு நிரந்தரமான எதிரியைத் தேடிக் கொண்டது. பின் தோட்டத்திலே பறவைகளுக்காக ஒரு தட்டிலே எப்பவும் தண்­ர் வைத்திருக்கும். பறவைகளும், அணில்களும், தேன்சிட்டுகளும் வந்து இந்த தண்­ரைக் குடித்து இளைப்பாறி செல்லும். சில வேளைகளில் இந்த தண்­ர் மண் கலந்து சேற்றுத் தண்­ர் போல கலங்கி இருக்கும்.

முதலில் நான் இது பற்றி சட்டை செய்யவில்லை. ஆனால் நாளாக நாளாக எனக்கு அதிசயமாக இருந்தது. இரவிலே தெளிந்த ஓடைபோல இருக்கும். தண்­ர் இப்படி சகதியாவது எப்படி?

ஒருநாள் தற்செயலாக இதற்கான விடை கிடைத்தது. நடுச்சாமம் போல நாங்கள் பின்னால் வைத்திருக்கும் குப்பை வாளியை அடிக்கும் சத்தம் கேட்டது. நல்ல நிலா எரியும் மோகனமான இரவு வேளை அது. ஒரு றக்கூன் (Reccoon) வந்து குப்பை வாளியை உருட்டி கையை விட்டு எதையோ தேடிக் கொண்டு இருந்தது. கையிலே கிடைத்த மிச்சம் மீதி பழவகையை கொண்டுவந்து தண்­ரிலே அலம்பி சாப்பிட்டது. ஒரு சிறிய நாய் அளவுக்கு உயரமாக அது இருந்தது. கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். வாலிலேயும், கண்களிலும் மஞ்சளும் வெள்ளையுமான வளையங்கள். இதன் கண்களுக்கு மேலே இருந்த கறுப்புவட்டம் முகமூடி போட்டது போல பார்க்க அழகாக இருந்தது.

இது ஒரு இரவுப்பட்சணி. பழங்கள், தானியங்கள், தவளை, குருவி முட்டை போன்றவற்றை தேடியெடுத்து சாப்பிடும். ஆனால் இதில் ஒரு விசேஷம். எடுப்பவற்றை தண்­ரில் கழுவித்தான் இது சாப்பிடும். மிருகங்களிலேயே றக்கூனுக்குத்தான் இப்படி சுகாதாரத்தில் இவ்வளவு ஈடுபாடு. கரடியைப்போல இந்த ரக்கூனும் எல்லாவிதமான சாப்பாடும் ஒருவித தயக்கமுமின்றி சாப்பிட வல்லது.

தானம் தன்பாடுமான இருந்த துரிக்கு இப்படியாக றக்கூன் வந்து தன்னுடைய ராஜ்யத்தில் தலையிடுவது பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அதிதீவிரமாக அது தன்னுடைய கடமைகளை கவனிக்கத் தொடங்கியது. இரவு நேரங்களில் றக்கூன் ரகசியமாக வந்து குப்பை வாளியைத் தட்டி உணவு தேடுவதும், கிடைப்பதை தண்­ரில் அலம்பி சாப்பிடுவதும், ஆற்ற முடியாத ஆவேசத்துடன் துரி துரத்திப் போவதும் இப்போது வழக்கமாகி விட்டது. அச்சவாரம் குடுத்து பிடித்த இணுவில் தவில் செட் 'டம்டம்' என்றுவிடாப்பிடியாக அடிப்பதுபோல நடு இரவு வேளைகளில் தவறாமல் குப்பை வாளி சத்தம் நீட்டுக்கு கேட்கத் தொடங்கியது. அந்த நேரங்களில் துரி பிய்த்துக் கொண்டு நாய்க் கதவு வழியாக ஓடுவதும், நாய்க் கதவு டக்கென்ற சத்தத்துடன் திறப்பதும், மூடுவதும் இப்பவெல்லாம் என் காதுகளுக்கு கேட்டுக் கேட்டு பழக்கமாகி விட்டது.

துரியோதனனுக்கும் வீமனுக்கும் நடந்தது போன்ற இந்த துவந்த யுத்தம் முடிவேயின்றி ஒவ்வொரு இரவும் நடைபெற்றது. பகல் நேரங்களில் நிர்ப்பந்தமாக ஒத்தி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் பழைய மூர்க்கத்துடன் இது தொடர்ந்தது. துரியும், றக்கூனும் அந்த ஆவேசமான இரவு நேரங்களுக்காகவே வாழ்வதுபோல எனக்குப் பட்டது. துரி பகல் நேரங்களில் மூசி மூசி நித்திரை கொண்டு இரவுநேரங்களுக்காக தன்னைத் தயார் செய்து கொண்டது.

எங்கள் வீதியில் ஆயிரம் பஸ்கள் ஓடியபடியே இருக்கும். ஆனால் என் மகன் வரும் பள்ளிக்கூட பஸ் சத்தம் மட்டும் துரிக்கு நிதர்சனமாகத் தெரிந்துவிடும். ஓடிப்போய் வாசலில் நின்று அவனைக் கூட்டி வரும். அவன் வந்த பிறகு அவனுடைய காலுக்கு பின்னலேயே போய்க்கொண்டிருக்கும். வெளியே போய் அவனுடன் விளையாடவும், பிறகு அவன் வந்து படிக்கும்போது அவன் காலின் கீழ் படுத்திருக்கவும், காலை நேரங்களில் அவன் காலை நக்கி எழுப்பவும், வாசலிலே விழும் பேப்பரை ஓடி எடுத்துக்கொண்டு வரவும் பழகியிருந்தது.

நண்பனாக, ஆசானாக,விளையாட்டுப் பிள்ளையாக எங்கள் வீட்டை துரி முழுக்க ஆக்கிரமித்த இந்த இனிமையான நேரத்தில்தான் என் மகன் இப்படி சடுதியாக எங்களையெல்லாம் விட்டு கல்லூரிக்கு படிக்கச் செல்ல வேண்டி வந்தது. அதற்குப் பிறகு துரி முற்றிலும் ஒரு புதிய துரியாக மாறிவிட்டது. நானும், மனைவியும் எவ்வளவோ முயன்று எங்கள் மகனுடைய இடத்தை ஈடுகட்ட முயன்றோம். முதலில் என் மகன் இரண்டு கிழமைக்கு ஒருமுறை வந்து போனான்; பிறகு, மாதத்திற்கு ஒருமுறை என்றானது. அதற்குப் பிறகு ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் வந்து போகத் தலைப்பட்டான்.

துரி கொஞ்சம் கொஞ்சமாக இந்த புதுச் சூழ நிலையை ஏற்று அதற்கேற்றமாதிரி தன்வாழ்க்கையை அமைத்துக் கொண்டது. என் மகன் கல்லூரியை முடித்து நல்லதொரு தனியார் கம்பெனியில் வேலையில் சேர்ந்து விட்டான். இப்பொழுது அவன் வேலை பார்க்கும் இடமோ இன்னும் தூரமானது. வீட்டிற்கு வந்து சேர்வதற்கு அரை நாள் எடுக்கும். சில வேளைகளில் டெலிபோனில் கூப்பிடும்போது துரியைப் பற்றி கேட்பான்; நாங்களும் அவ்வப்போது துரியைப் பற்றிய புதினங்களைச் சொல்லி வைப்போம்.

சூரியன் யாருடைய உத்தரவையும் எதிர்பாராமல் மாலை நேரங்களில் ஒளிவது போல சொல்லாமல் கொள்ளாமல் துரியனுடைய யௌவனப் பிராயத்து சேட்டைகளும் மறையத் தொடங்கின. முந்திய வீர்யம்போய் சில மாற்றங்கள் தென்பட்டன. விடியும்போது அதனால் முன்புபோல் துள்ளிக்கொண்டு எழும்பமுடிவதில்லை. கால்களை நிமிர்த்தி வளைத்து மெதுவாகத்தான் சோம்பல் முறித்தது. இருந்தாலும் அது தன் கடமைகளைச் சரிவர செய்வதில் குறியாகவிருந்தது. தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் மற்ற பிராணிகளோ, பறவைகளோ ஆக்கிரமிக்காமல் இருப்பதில் மிக்க கவனமாக செயல்பட்டது. ஓர் அணிலையோ, குருவியையோ துரத்தியபின் மிகக் கெப்பருடன் நடந்து தன்னுடைய ராஜ்யத்தின் மூலைகளில் போய் ஒவ்வொரு சொட்டு சிறுநீர் பாய்ச்சி சுற்றுலா வந்து கம்பீரமாக படுத்துக் கொள்ளும்.

இந்த நேரங்களில் றக்கூன் துரியை ஒரு புதுவிதமான மூர்க்கத்துடன் தாக்கத் தலைப்பட்டது. அடிக்கடி வந்து தொல்லை கொடுத்தது. துரி அடக்க முடியாத ஆங்காரத்துடன் எழும்பி அதைத் துரத்திவிட்டு மீண்டும் வந்து படுத்துக்கொள்ளும். மறுபடியும் றக்கூன் வேண்டுமென்றே வந்து இதைச் சீண்டத் தொடங்கியது. அது வேகத்துடன் மரத்திலேறும் வல்லமை படைத்ததால் துரி தொண்டை வறளக் குரைத்தும், உறுமியும் தன் பாத்தியதையை நிலை நாட்டிவிட்டே திரும்பும்.

ஒரு நாள் தருணம் பார்த்து துரியினுடைய பரம எதிரியான றக்கூன் ஒரு வஞ்சகமான சூழ்ச்சி செய்தது. அதிகாலை ஐந்து மணி இருக்கும். 'டங்டங்' என்று வாளிச் சத்தம் கேட்டது. துரி வழக்கம்போல் தன் வாசல் வழியாக பாய்ந்து ஓடியது. அது அப்படி கடக்கும்போது அதன் கதவு 'டக்' என்று சத்தத்துடன் திறந்து மூடிக்கொள்ளு. றக்கூனும் இங்கும் அங்கும் ஓடுவது போல் பாய்ச்சல் காட்டிவிட்டு வழக்கம்போல் மரத்தில் ஏறாமல் வேலியிலே அது செய்துவைத்த ஒர் ஒட்டை வழியாக பாய்ந்து போனது. யுத்தத்தின் உத்வேகத்தில் அறிவு மழுங்க துரியும் அதைத் துரத்திக்கொண்டு ரோட்டைக் கடந்து ஒடியது. அந்த நேரம் பார்த்து வேகமாக வந்த ஒரு கார் துரியின் மேல் ஏறிவிட்டது.

நான் ஓடிப்போய் துரியை அள்ளி எடுத்தபோது அதனுடைய மூச்சு இழைபோல ஓடிக்கொண்டிருந்தது. அதன் பனித்த கண்கள் என்னையே பார்த்தபடி இருந்தன. எனது நீண்டகால நண்பனான துரியினுடைய கடைசி சுவாசம் என் கைகளில் மெதுவாக ஊர்ந்து முடிந்தது. துரியோதனன் என்ற தலை வணங்கா மன்னன் அறியாயமாக இடது தொடையில் அடிபட்டு இறந்ததுபோல துரியும் தனது இடது தொடை நசுக்கப்பட்டு என் மடியில் உயிரை நீத்தது.

என் மகனுக்கு உடனேயே டெலிபோனில் அறிவித்தேன். அன்று பின்னேரமே அவன் வந்துவிட்டான். ஒரு பழைய கம்பளியில் துரியை சுற்றி பின் தோட்டத்தில் ஒரு கிடங்கு தோண்டி அங்கே புதைத்தோம். கண்களை பிறங்கையால் துடைத்தபடி துரியை புதைத்த இடத்தில் அதன் ஞாபகமாக என் மகன் ஒரு 'ஓக்' செடியை நட்டு வைத்தான்.

அன்று இரவும் குப்பை வாளிச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து தண்ணியில் சளசளவென்று அலம்பும் ஓசை வந்தது. வழக்கமாக நாய்க் கதவு 'படக்' என்று திறக்கும் ஓசையும் அதைத் தொடர்ந்து துரி சறுக்கி சறுக்கி ஓடும் சத்தமும் கேட்கும். இனிமேல் துரியின் உயிர்ப்பு என் காதுகளுக்கு கேட்கப்போவதில்லை.

ஓ! என் இனிய நண்பனே! நீயும் தொடையிலே அடிபட்டு இறக்கக்கூடும் என்கிற சிறு சமுசயமாவது எனக்கு இருந்திருந்தால் 'துரியோதனன்' என்கிற பேரை உன்மீது சுமத்த நான் பிரியப்பட்டிருக்க மாட்டேனே!

* * *

2

'ஒரு சாதம்'

பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது. கனடாவின் அன்றைய வெட்பநிலை மைனஸ் 20 டிகரி. டாக்சி மெதுவாக ஊர்ந்து 32ம் நம்பர் வீட்டு வாசலில் போய் நின்றது. வீட்டின் பெயர் 'ஒரு சாதம்' என்று போட்டிருந்தது.

ஹோட்டலில் இருந்து அங்கே வர பரமனாதனுக்கு இருபது டொலர் ஆகிவிட்டது. காசைக் கொடுத்துவிட்டு ஓவர் கோட், மப்ளர், தொப்பி, பூட்ஸ் என்ற சம்பிரமங்களுடன் கையிலே பையையும் தூக்கிக்கொண்டு டாக்சியில் இருந்து பனி சறுக்காத இடமாக காலை வைத்து சிவதாண்டவம் செய்து ஒரு மாதிரி இறங்கிவிட்டான்.

வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான். கனடாவில் வீடுகளை அந்தமாதிரிக் கட்டியிருந்தார்கள்; குளிர் அண்டவே முடியாது. பரமனாதன் 'ஸ்ரிப் ரீஸ்' போல ஒவ்வொன்றாகக் கழற்றி வாசலிலே குவித்தான்; ஓவர் கோர்ட், மப்ளர், தொப்பி, பூட்ஸ், அப்பா! அரைவாசி பாரம் குறைந்து விட்டது.

சிவலிங்கத்தின் மனைவி பூர்ணிமா வந்தாள். அவளுடைய அழகு அழிவில்லாத அழகுதான். சிவலிங்கமும் பூர்ணிமாவும் பரிமாறிய காதல் கடிதங்களை எல்லாம் அந்தக் காலத்தில் எடிட் செய்ததே பரமனாதன்தான். பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு அவர்களை பரமனாதன் முதன் முறையாக கனடாவில் பார்க்கிறான். சிவலிங்கத்துக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள்; மூத்தவளுக்கு வயது பன்னிரண்டு இருக்கலாம்; அடுத்தவளுக்கு நாலு.

பரமனாதன் கேட்டான்: "இது என்ன புது விதமான வீட்டுப் பேர்? 'ஒரு சாதம்' என்று வைத்திருக்கிறாய்?"

"அதுவா? இந்தப் பனிக் குளிரில் வீடு தேடி வாறவைக்கும் ஒரு பிடி சாதமாவது போட வேணும் என்ற பிடிவாதத்தில் வைத்த பேர்," என்றான் சிவலிங்கம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய மூத்த மகள் 'களுக்' என்று சிரித்துக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான்.

'சாதம்' என்ற வார்த்தையைக் கேட்ட பரமனாதனுக்கு கதையை மாற்றப் பிடிக்கவில்லை. கடந்த பத்து நாட்களாக ஹோட்டலில்தான் அவன் வாசம். ரொட்டியும், வெண்ணெயும், பழங்களுமாகச் சாப்பிட்டு, சாப்பிட்டு அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. கனடாவின் படுபயங்கரக் குளிருக்கு அவனுடைய வயிறு 'கொண்டா, கொண்டா' என்று கேட்டுக் கொண்டிருந்தது. சாதத்தை அவன் அங்கே கண்ணால் கூட காணவில்லை. "என்ன? சோறு கறி வகைகள் எல்லாம் இங்கே தாராளமாகக் கிடைக்குமா?" என்றான் பரமனாதன். அவன் மனமானது சம்பா அரிசிச் சோற்றையும், மீன் குழம்பு கறியையும் நினைத்துப் பறந்தது.

இதற்கு பூர்ணிமா, "இதென்ன இப்பிடிக் கேக்கிறியள்? இது ஒரு சின்ன யாழ்ப்பாணம்தான்; யாழ்ப்பாணத்தில் கிடைக்காததுகூட இங்கே கிடைக்கும். அப்ப பாருங்கோ" என்றாள். பதமனாதனுடைய வாய் அப்பவே ஊறத் தொடங்கி விட்டது.

அப்போதெல்லாம் சிலோனில் பரமனாதனும் சிவலிங்கமும் அடிக்கடி 'கிரின்லாண்ட்ஸ’ல்' சாப்பிடுவார்கள். சிவலிங்கத்தின் காதல் உச்சக் கட்டத்தில் இருந்த காலம் அது. இருவரும் சார்டர்ட் அக்கவுண்டண்ட் சோதனைக்கு படித்துக் கொண்டிருந்தார்கள். சிவலிங்கம் படிக்கவே மாட்டான்; பெட்டையின் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தான்.

படிப்பைத் தவிர மற்ற எல்லாம் செய்து வந்தான்; படிக்காத புத்தகங்கள் இல்லை; எல்லாம் அறிவு சார்ந்த புத்தகங்கள். அந்தக் காலத்திலேயே அறிவு ஜ“வி. ஒரு விஷயத்தை ஒருக்கால் சொன்னால் பிடித்துக் கொண்டு விடுவான். அபாரமான ஞாபக சக்தி. அவனோடு வாதம் செய்து வெல்வது என்பது நடக்காத காரியம்.

எல்லோரும் அதிசயிக்கும் படி ஒரே முறையில் சோதனை பாஸ் பண்ணிவிட்டான். அவன் முழு மூச்சாகப் படித்தது என்னவோ இரண்டு வாரங்களே! மிகப் பெரிய தனியார் கம்பெனி ஒன்றில் சேர்ந்து கிடுகிடுவென்று மேலுக்கு வந்து விட்டான். பூர்ணிமாவை, பெற்றோரை எதிர்த்து மணமுடித்தான். அவனுடைய வாழ்க்கையானது இப்படி அந்தரலோக சுகபோகத்தில் சென்று கொண்டிருந்த போதுதான் 1977 கலவரம் வந்தது. இவனுக்கு ஒரு பிரம்மாண்டமான வீடு கம்பெனி கொடுத்திருந்தது; அத்துடன் நாலு வேலைக்காரர்கள், தோட்டக்காரன், டிரைவர், காவல்காரன் என்று பலபேர்.

அந்தக் கம்பணியிலே பத்தாயிரத்துக்கு மேலான பேர் வேலை செய்தார்கள். அங்கே வேலை செய்த தமிழர்களை விரல்விட்டு எண்ணலாம். எல்லாம் சிங்களவர்கள். இவனுடைய பதவியோ மிகமிக உயர்ந்தது. கலவரம் வந்தபோது எல்லாவற்றையும் துறந்து விட்டு 'உயிர் தப்பினால் போதும்' என்று இந்தியாவுக்கு பூர்ணிமாவுடன் ஓடி வந்து விட்டான்.

அங்கே சிவலிங்கம் பட்ட இன்னல்களை இங்கே விவரிக்க இயலாது. ஒரு உயர்ந்த பதவியில் சகல சௌகரியங்களுடனும் வாழ்க்கை நடத்திவிட்டு அகதியாக வந்து இம்சைப் படுகிற அவதி சொல்லி விளங்காது. கடைசியில், எவ்வளவோ கஷ்டப்பட்டு, அவனும் பூர்ணிமாவும் கனடாவுக்கு அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்தார்கள். இத்தனை வருடங்களுக்கு பிறகு பரமனாதன் முதன் முறையாக அவர்களைப் பார்க்கிறான்.

பசி பிடுங்கியது பரமனாதனுக்கு. ஆனால் பூர்ணிமா அவர்களுடன் இருந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தாள். சாப்பாடு அடுக்குகள் ஒன்றையும் காணவில்லை. முதலில் பரமனாதனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது; பிறகு திகில் பிடித்துவிட்டது. 'சாப்பாட்டே ஒரு வேளை கிடைக்காதோ? என்று நெஞ்சு அடிக்கத் தொடங்கி விட்டது.

பூர்ணிமா சடுதியாகச் சொன்னாள்: "இஞ்சருங்கோ! டூ போர் ஒன்ளை (241) டெலிபோனில் கூப்பிடுவமா?" பரமனாதன் பாவம், ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். சிவலிங்கம் விளங்கப்படுத்தினான்: "டூ போர் வன் நம்பரை டயல் பண்ணி ஒரு பெரிய பீஸா ரொட்டி ஓடர் பண்ணினால், ஒரு காசுக்கு இரண்டு ரொட்டி கொண்டு வந்து கொடுப்பார்கள்; ஒன்று பெரிசு, மற்றது சிறிசு. சிறிய ரொட்டி இலவசம். டூ போர் வன் (ஒரு காசுக்கு இரண்டு). பதினைந்து நிமிடங்களுக்கிடையில் வீட்டிற்கே கொண்டு வந்து தருவார்கள். அது பிந்தினால் ரொட்டி இலவசம். அதைத் தான் பூர்ணிமா கேட்கிறா? ஓடர் பண்ணுவமா?"

பரமனாதனுக்கு இடி விழுந்தது. "என்னடா! வந்திறங்கியவுடன் ஏதோ ஒரு பிடி சாதம் என்றெல்லாம் கதைத்தாய். இப்ப மெல்ல ரொட்டிக்கு தாவப் பார்க்கிறாயே!" என்றான்.

"ஓ, ஓ மறந்து விட்டேன். சாதம்தான், சாதம் தான்" என்று கூறிவிட்டு மனைவியைப் பார்த்தான், சிவலிங்கம், பூர்ணிமாவும் புன்சிரிப்புடன் மறுபடியும் டயல் பண்ணத் தொடங்கினாள்.

சிவலிங்கம் விஸ்தாரமாக கனடாக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்த போதே சாப்பாடு வந்த விட்டது பரமனாதனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. 'ஆஹா! என்ன சாப்பாடு. சம்பா அரிசிச் சோறு, மீன்குழம்பு, கத்தரிக்காய் பொரியல், மாசுச் சம்பல், முருங்கைக்காய் கூட்டு, இது என்ன கனடாவா, அல்லது யாழ்ப்பாணமா? ருசி, மணம் எல்லாம் தூக்கி அடித்தது. இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டார்களே?"

எல்லோருமாக மேசையில் சுற்றி வர இருந்து சுடச்சுட சாப்பிட்டார்கள். பரமனாதனுக்கும் உலகமே மறந்து விட்டது. அவன் பசிக்காகச் சாப்பிடுகிறவன் அல்ல;ராக்குக்காகச் சாப்பிடும் பேர்வழி! விட்டு வைப்பானா?

பூர்ணிமா சொன்னாள்: "இங்கே புருசன் பெண் சாதி இரண்டு பேருமே அநேகமாக வேலைக்குப் போகினம். அதனாலே இஞ்ச கன குடும்பங்களில் இப்பிடித்தான் ஓடர் பண்ணிச் சாப்பிடுகினம். நல்ல சாப்பாடு, விலையும் பரவாயில்லை."

"நாங்கள் இங்கு வந்த மூட்டம் அகதிகள் உதவிப் பணத்தில்தான் மிகவும் சிக்கனமாக சீவித்தனாங்கள்; பிள்ளைகள் கனடா உணவு பழகி விட்டார்கள். இப்படி நாங்கள் ஓடர் பண்ணிச் சாப்பிடுவது இப்ப கொஞ்ச நாளாய்த்தான்" என்றான் சிவலிங்கம்.

சாப்பாடு முடியுந் தறுவாயில் பூர்ணிமா, "உங்கடை ப்ரண்டு வீட்டுப் பேரைப் பற்றி கேட்டார். நீங்கள் ஏதோ சொல்லி சமாளித்து போட்டியள். இவருக்கு நாங்கள் இஞ்ச வந்து பட்ட பாட்டைக் கட்டாயம் சொல்ல வேணும்" என்றாள சிவலிங்கத்திற்கு விஸ்தாரமாக கதை சொல்லுவது என்றால் அளவற்ற பிரியம், விடுவானா?

"இஞ்ச எல்லோருக்கும் நடக்கிறது போலத்தான் எங்களுக்கும் நடந்தது. ஆனால் எங்கடை கஷ்டம் கொஞ்சம் வித்தியாசமானது; அனுபவித்தால்தான் தெரியும்.

"இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சிலோனில் நடந்த சம்பவம் இது. அப்ப ஒரு கம்பனிக்கு கணக்காய்வு (Audit) செய்யப் போயிருந்தேன். அங்கே பொன்னுச்சாமி என்றொரு கிழவர் நாற்பது வருடமாகவே வேலை பார்த்து வந்தார். பேரேடுகளைத் தயாரித்து ரயல் பாலன்ஸ் எடுத்து கணக்காய்வாளரிடம் (Auditor) கொடுப்பது அவர் பொறுப்பு. கணக்கு எழுதுவதில் அவர் புலி. எந்தக் கஷ்டமான சிக்கல் என்றாலும் அவிழ்த்து விடுவார்.

"நாற்பது வருட காலமாக வராத ஒரு கஷ்டம் அவருக்க அப்போது வந்தது. அவருடைய ரயல் பாலன்ஸ் அந்த வருடம் பொருந்தவில்லை; ஒரு சதம் வித்தியாசத்தில் நொட்டிக் கொண்டு நின்றது.

"பொன்னுசாமிக்கு இது ஒரு பெரிய சவால். இதை எப்படி அவர் ஏற்பார்? இரவு பகலாகக் கண் விழித்து முழுக கணக்குகளையும் இன்னொரு முறை சரி பார்த்தார். அந்த ஒரு சதத்தை அவரால் கண்டு முடியவில்லை. பெரிய மானப் பிரச்சனையாக இது உருவெடுத்து விட்டது. கணக்காய்வு தள்ளிப்போய்க் கொண்டே வந்தது. ரயல் பாலன்ஸ் சரி வராமல் கணக்குகளை முடிக்க முடியாதே?

"ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய ஒரு கதை படித்திருப்பாய். ஒரு கிழவன் தன் சிறு வள்ளத்தில் மீன் பிடிக்கப் போனான். தூண்டில் போட்டு மீனைப் பிடித்து விட்டான். ஆனால் அகப்பட்டதோ ஒரு ராட்சச மீன். பலத்த போட்டி. கிழவன் மீனை விடுவதாக இல்லை; மீனும் பிடி கொடுப்பதாக இல்லை. இந்தச் சண்டை நாள் கணக்காக நீடிக்கிறது. ஒன்றில் மீன் சாக வேண்டும் அல்லது கிழவன் சாக வேண்டும். அப்படியான ஒரு நிலை.

"அது போலத்தான் பொன்னுச்சாமிக்கும் பேரேட்டுக்கும் நடந்த போராட்டம் முடிவில்லாமலே நீண்டு கொண்டு போனது. ஒரு திங்கள் காலை நான் போகிறேன். பொன்னுச்சாமி தலைவிரி கோலமாய் என் முன்னே வந்து நிற்கிறார். அவர் கண்கள் எல்லாம் சிவந்து காணப்படுகின்றன. சனி, ஞாயிறு விடுமுறைக்கு அவர் வீட்டுக்கே போகவில்லை. இரவு பகலாக பேரேடுகளை மீண்டும் மீண்டும் சரி பார்த்திருக்கிறார்.

"அவருடைய கண்கள் கீழே பார்த்தபடி இருந்தன. தன் பைக்குள் கையை விட்டு ஒரு சதக் காசை எடுத்து என் மேசை மேல் வைத்தார். 'தம்பி, இந்த ஒரு சதத்தை வைத்துக் கொள்ளுங்கள். என்னால் இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை. இது எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி. என்னை விட்டு விடுங்கள்' என்றார். பொன்னுச்சாமியுடைய கஷ்டம் எனக்கு அப்பொழுது முற்றாக விளங்கவில்லை. ஆனால் அதே போன்ற ஒரு சங்கடம் எனக்கம் இங்கே கனடாவில் ஏற்பட்டது.

"நாங்கள் அகதிகளாக வந்து சீரழிந்த கதை நீண்டு கொண்டே போகும். அதை விட்டுவிடுவோம். என்னுடைய விண்ணப்பத்தை எழுதிக் கொண்டு கம்பனி கம்பனியாக ஏறி இறங்கினேன். நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களைத் தபாலிலும் அனுப்பினேன். அகதிகள் உதவிப் பணத்தில் சிக்கனமாக வாழ்க்கை நடத்தினோம்.

"இங்கே பெண்களுக்கு வேலை கிடைப்பது வெகு சுலபம். பூர்ணிமாவுக்கு வேலை கிடைத்து விட்டது. ஆனால் அவள் அப்போது கர்ப்பம். அதனால் வேலையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"சில பேர் எனக்கு குறுக்கு மூளை சொல்லித் தந்தார்கள். கனடா அரசாங்கத்தை ஏமாற்றி உதவித்தொகை அதிகரிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன; அதில் ஒன்று மனைவியை தற்காலிகமாக நீக்கிவைப்பது. என் மனம் உடன்படவில்லை. சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்த நாட்டை இப்படி ஏமாற்றுவதா?

"கனடாவில் மீண்டும் ஒருமுறை படித்து கணக்காளர் தேர்வு எழுதி முடித்தேன். வேலை கிடைப்பது இப்போது இன்னும் கஷ்டமாகி விட்டது. விஷயம் இதுதான். என்னுடைய படிப்புக்கும், அனுபவத்துக்கும் ஏற்ற வேலை எடுத்த வீச்சே தரமாட்டார்களாம். கீழ் மட்டத்தில் சேர்ந்து படிப்படியாகத் தான் உயரவேணும். அப்படிக் கீழ்மட்டத்தில் எடுப்பதற்கும் கம்பனிகள் பயப்பட்டன.

"நீ சொன்னால் நம்ப மாட்டாய், கடைசியில் எனக்குக் கிடைத்த வேலை வாட்ச்மேன் உத்தியோகம்தான். அதற்கும்கூட எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன். தெரியுமா? ஒரு இந்தியக்காரர், சுந்தரம் என்று பேர், அவர்தான் எனக்கு அந்த வேலையை எடுத்துக் கொடுத்தார். அதற்கென்று பிரத்தியேகமான பயிற்சிகள் எல்லாம் தந்தார்கள். எங்கள் ஊரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர்களும், பேப்பர் போட்ட பெடியன்களும் BMW காரில் இங்கே உலா வந்து கொண்டிருந்தார்கள். நான் இவ்வளவு படித்துவிட்டு இப்படியாக காவல்கார வேலை செய்து வேண்டி வந்து விட்டதே! விதியே என்று நொந்து கொண்டேன்.

"எங்கள் கம்பெனி பிரெஸ’டெண்ட் போகும். போதும் வரும் போதும் நான் அவருக்கு தவறாமல் சலாம் செய்வேன். அவருடைய கவனத்தை எப்படியும் ஈர்க்க வேண்டும் என்பதில் ஆர்வமாக செயல்பட்டேன். அவருடைய கடைக்கண் பார்வைபட்டால் என் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடுமே!

"என் வேலையோ மிகவும் கடுமையானது. முன் பின் எனக்கு அப்படி வேலை செய்து பழக்கவில்லை. இரவு முழுவதும் ரோந்து வந்து மெஷ’னைப் பஞ்ச் பண்ணிய படியே இருக்க வேண்டும். பனியென்றால் ஓவர் கோட்டையும், பூட்சையும் மேலாடைகளையும் மீறி குளிர் உள்ளே போய் உயிரைத் தொடும்.

"ஒருநாள் என் வீட்டுக்கு போய் காலுறையைக் சுழற்றியபோது காலுறையெல்லாம் இரத்தம். பூர்ணிமா அழுது விட்டாள். அன்று இரவு வெகு நேரமாக ஒரு விண்ணப்பம் தயாரித்தேன் எங்கள் கம்பெனி பிரெஸ’டெண்டுக்கு. எப்படியும் ஒரு சின்ன வேலையாவது போட்டுத் தருமாறு என் தகுதிகளை எல்லாம் காட்டி விளக்கினேன். தருணம் பார்த்திருந்து ஒருநாள் அதை அவர் கையிலும் சேர்த்து விட்டேன்.

"அதன்பிறகு ஒவ்வொரு நாளும், அவர் போகும் போதும் வரும் போதும், அவருடைய முகத்தையே பார்த்தபடி இருப்பேன். ஏதாவது ஒருநாள் அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தை வருமா என்று பார்த்துப் பார்த்து ஏமாந்தேன்.

"அந்தச் சமயத்தில்தான் James Gleick எழுதிய Chaos என்ற புத்தகம் வெளியாகி எங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அறிவு ஜ“விகளுக்காக மட்டுமே எழுதப்பட்ட புத்தகம் அது என்று உனக்குத் தெரியும்.

"நான் சிலோனில் இருந்தபோது புத்தகங்களை வாங்கி வாங்கி குவிப்பேன். வாங்கின புத்தகங்களை இரவு பகலாக வாசித்து முடித்து விடுவேன். இங்கே புத்தகங்களின் விலையோ எக்கச்சக்கம். ஒரு புத்தகம் கூட வாங்க முடிவதில்லை. புத்தக கடைகளைப் பார்த்துப் ஏங்குவேன்.

"ஒருநாள் பிரெஸ’டெண்ட் கையில் அந்த Chaos புத்தகத்தைப் பார்த்தேன். அடுத்த நாளே புத்தகக் கடையில் போய் நானும் ஒன்று வாங்கி விட்டேன். விலையோ 12 டொலர். பூர்ணிமா என்னுடன் சண்டை போட்டாள், எங்கள் வரும்படிக்கு அது ஒரு அநாவதியமான செலவு என்று. புத்தகத்தை முதலில் இருந்து கடைசிவரை மூன்று தடவை படித்தேன்; சில பகுதிகளைக் கரைத்தும் குடித்து விட்டேன்.

"அதற்குப் பிறகு அந்தப் புத்தகத்தை வைத்துக் கொண்டு உலாவத் தொடங்கினேன். பிரஸ’டெண்ட் வரும் சமயம் பார்த்து புத்தக அட்டை தெரியக்கூடியதாக பிடித்த பிடியே அங்குமிங்கும் அலைந்தேன்.

"என்னுடைய யுக்தி ஒருநாள் பலித்தது. அவரசமாய் போன பிரெஸ’டெண்ட் நின்று உற்றுப் பார்த்துவிட்டு 'ஆஹா! James Gleick?' என்றார். அவர் வாய் மூடு முன் நான் அந்த எழுத்தாளர் கூறிய தத்துவங்கள் பற்றி என் கருத்தை எடுத்து விட்டேன். குளத்தின் நடுவே ஏற்படும் சிறு சலனம் எப்படி விரிந்து விரிந்து கரையை அடைகிறதோ அதே போன்று வளிமண்டலத்தில் ஏற்படும் அணுப்பிரமாணமான சிறு மாற்றம்கூட வானிலையை ஏன் பூதாகரமாகப் பாதிக்கிறது என்பதைப் பற்றி விளக்கினேன். அதனால்தான் கிரகணம். நீர்மட்ட ஏற்ற இறக்கம் பற்றியெல்லாம் கச்சிதமாக முன்கூட்டியே கூறிவிடும் விஞ்ஞானம், பருவ நிலையை மாத்திரம் முன்னறிவித்தல் செய்வதற்கு திக்குமுக்காடுகிறது என்பது பற்றி கூறினேன்.

"'எங்கள் நாட்டில் ஓளவையார் என்று ஒரு மிகப் படித்த பெண் புலவர் இருந்தார். அவர் ஒரு அரசனை வாழ்த்தப் போய் 'வரப்புயர' என்று மட்டும் கூறி பேசாமல் இருந்து விட்டார். அதன் தாற்பரியத்தை பின்பு அவரே விளக்கினார்.'

'வரப்புயர, நீர் யாரும்
நீர் உயர, நெல் உயரும்
நெல் உயர, குடி உயரும்
குடி உயர, கோல் உயரும்
கோல் உயர, கோன் உயர்வான்?

"'ஒரு துளி காரியம் எப்படிப் பிரம்மாண்டமான ஒரு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதற்கு இது சான்று. இது எனக்கு மிகவும் பிடித்தமானது ஒரு கருத்து' என்று மூச்சுவிடாமல் சொல்லி நிறுத்தினேன். பிரெஸ’டெண்ட் ஆடி விட்டார். 'அட! மிக நல்ல வியாக்கியானமாய் இருக்கிறதே! குட், குட்' என்று சொல்லிவிட்டு வேகமாய் போய் விட்டார்.

"அடுத்த நாள் எனக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. கணக்காளர் பிரிவில் ஒரு அடிமட்ட வேலை எனக்கு கிடைத்து விட்டது. எனக்குண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேலை என்பது பத்தாம் வகுப்பு படித்தவனை பாலர் வகுப்பில் போட்டதுபோலத்தான். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை இரண்டு நாள் வேலையை இரண்டு மணி நேரத்தில் முடித்து விடுவேன். ஒய்வு நேரங்களில் மற்றவர்களுடைய வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வேன். இரண்டு மாதத்தில் அந்தப் பிரிவு வேலையெல்லாம் எனக்கு தண்ணிபட்ட பாடு.

"என்னுடைய செக்ஷனில் எல்லோரிடமும் கம்ப்யூட்டர் இருந்தது; எனக்கு மட்டும் இல்லை. செக்ஷன் தலைவரிடம் வழவழவென்று ஒரு கம்ப்யூட்டர். அந்த வழியால் போகும்போதெல்லாம் அதைத் தொட்டுத் தடவி விட்டுத்தான் போவேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுடைய கம்ப்யூட்டரில் வரும் சிறிய பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பேன்.

"இதற்கிடையில், ஐம்பது டொலருக்கு நான் ஒரு ஓட்டை கம்ப்யூட்டர் வாங்கி விட்டேன். மற்ற கம்ப்யூட்டர்கள் பென்ஸ் கார் என்றால் இதை 'திருக்கல்வண்டி' என்று சொல்லலாம். அவ்வளவு மெதுவாகப் போகும். கம்பெனியில் சிக்கலான சில வேலைகளை வீட்டில் கொண்டு வந்து இதில் தட்டி சரி செய்து விடுவேன்.

"அப்போது ஒரு நாள் எங்கள் செக்ஷன் தலைவர் சில நாள் லீவு போட்டார். அந்தப் பகுதி வேலைகள் எல்லாத்தையும் நான் பார்க்கும்படி வந்தது. விடுவேனா? அதிலும் அந்த கம்புயூட்டரில் வேலை செய்யக் கொடுத்து வைக்க வேணுமே? அப்படி வேலை செய்யும்போதுதான் ஒரு நாள் கவனித்தேன்; கம்புயூட்டர் பிரிண்ட் பண்ணும்போது ஒரு சதம் தவறியிருந்தது.

"இது பெரிய விஷயமில்லை. ஆனால் இது திருப்பித் திருப்பி நடந்தது. என்ன செய்தும் போகவில்லை. குத்துக்கரணம் அடித்து வித்தை காட்டினாலும் அந்த ஒரு சத வித்தியாசம் போவதாகத் தெரியவில்லை.

"கம்புயூட்டர் என்பது கணக்குகளைச் சரியாகவும், வேகமாகவும் போடுவதற்கென்றே பிறவியெடுத்தது. இப்படி பிழை நடக்கலாமா? 'விடேன், தொடேன்' என்று நான் இந்த ரகஸ்யத்தை உடைக்க முற்பட்டேன்.

"ஒரு நாள் பிரெஸ’டெண்ட் தனியாக இருக்கும் சமயம் பார்த்து அவர் முன்பு போய் நின்றேன். அந்த ஆதிமூலத்துக்குள் என் போன்ற சாதாரண மனிதப் பதர்கள் காலடி எடுத்து வைக்க முடியாது என்றாலும் நான் துணிந்து போய்விட்டேன்.

"முதலிலேயே மன்னிப்பு கோரி, இப்படி அடிக்கடி வரும் ஒரு சத வித்தியாசத்தைப் பற்றி அவரிடம் விஸ்தரித்தேன். அவர் அதைப் பொறுமையாக கேட்டுவிட்டு, புன்சிரிப்புடன் 'அதை பார்த்து விட்டாயா? உண்மைதான். நாங்கள் கடந்த ஆறு வருடங்களாக முயன்றும் அந்த ஒரு சதம் உரைப்பதை நீக்க முடியவில்லை. சில வெளி இடத்து நிபுணர்கள்கூட வந்து பிழையைத் திருத்துவதற்காக எண்பதாயிரம் டாலர்வரை செலவு செய்துவிட்டோம். இது தவிர, இது என்ன, ஒரு சதம் தானே! இதை ஆர் நுணுக்கமாகப் பார்க்கப் போகிறார்கள். இது வேஸ்ட் என்று முடிவு செய்து விட்டோம். இதில் கவனத்தைத் திருப்பாதே' என்றார்."

அந்த நேரம் பார்த்து சிவலிங்கத்தின் மூத்த மகள் வந்து கணக்குப் பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்டாள். சிவலிங்கம் பொறுமையாக அவளுக்கு அந்தக் கணக்கை விளக்கப்படுத்தினான்; பிறகு மறுபடியும் தொடர்ந்தான்:

"மகாத்மாகாந்தி இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லண்டன் பயணமானார். எப்போதும்போல சாதாரண இந்தியக் குடிமகன் போல நாலு முழத்துண்டும், மேற்போர்வையும், செருப்புடனும் வெளிக்கிட்டார். அவருடைய உணவுப் பழக்கமோ உலகம் அறிந்தது. பேரிச்சம் பழம், ஆட்டுப் பால், வெண்ணெய் இப்படி வெகு எளிமையானது. இங்கிலாந்து அரசாங்கம் அவருடைய சாப்பாட்டில் அக்கறை கொண்டு ஒரு ஆட்டையும் கப்பலில் அவருடன் லண்டன் வரவழைத்திருந்தது. அப்போது லண்டன் பேப்பர்களில் இப்படி ஒருசெய்தி வந்ததாம்: 'மகாத்மா காந்தியை அவர் ஏற்றுக்கொண்ட ஏழ்மை நிலையில் வைத்திருப்பதற்கு இங்கிலாந்து அரசு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பவுண் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.'

"அது போலத்தான் இந்தக் கதையும் இருந்தது. நான் தைரியத்தையெல்லாம் வரவழைத்துக்கொண்டு. 'ஐயா, எனக்கு ஒரு முறை இதைப் பார்க்க அனுமதி கொடுப்பீர்களா?' என்று கேட்டேன்.

"அவர் சிறிது யோசித்தபடி இருந்தார். அந்த ஒரு நிமிடத்தில் என் மூச்சு ஓடாமல் நின்றது. கடைசியில் என்ன நினைத்தாரோ 'சரி' என்று கூறிவிட்டார்.

"அன்றிரவு என் போராட்டம் ஆரம்பித்தது. கிழவனுக்கும் மீனுக்கும் நடந்தது போன்ற போராட்டம்; பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் நடந்த துவந்தயுத்தம் போன்று முடிவில்லாத ஒரு யுத்தம்.

"170 பக்கங்கள் கொண்ட ப்ரோகிராம் அது. நுணுக்கமாக, வரிவரியாக அதைச் சோதித்தபடியே வரவேண்டும். மூலை முடிக்கெல்லாம் தடவித் தடவி தேடிக் கொண்டே வருகிறேன். எங்கோ ஒரு மூலையில் அந்த தவறு ஒளித்திருந்துகொண்டு என்னைப் பார்த்தபடியே இருக்கிறது.

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை
கரதலத்தில் கவர்ந்த காதல்
உள்ளிருக்கம் என நினைந்து உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!

என்ற கம்பனுடைய பாடல் ஒன்று இருக்கிறது. ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்த்திருக்கிறது என்று ராவணுனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்க்கிறோம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன். என் கண்ணுக்கு அது தென்படவே இல்லை.

"என் நண்பர்கள் என்னைப் பார்த்து பரிகசிப்பதுண்டு; கம்புயூட்டரை இயக்க முன் நான் வழக்கம்போல சொல்லும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி துதிக்கிறேன்:

மனிதனை உய்விப்பதற்காக அவதரித்த கம்புயூட்டரே!
உனக்கு அநேக கோடி வணக்கங்கள்!
உன்னுடைய விஸ்வரூபத்தின் முன்
நான் சிறுதுளி.
உன் பரிபூரண கடாட்சம்,
என் மீது பாயட்டும்!
சகல கதவுகளையும் திறந்து
உன் ரகஸ்யங்களை என் வசமாக்குவாயாக!
உன் வாசலிலே புக அநுமதி கேட்டு நிற்கிறேன்.
நமஸ்காரம்! நமஸ்காரம்!


இப்படியாக அதை வணங்கி இயக்குகிறேன். அது கிர்ரென்ற சத்தத்துடன் உயிர் பெறுகிறது. தன் பரந்த உலகத்தை என் முன்னே விரிக்கிறது. ஒவ்வொரு கதவாகத்தட்டி விடையைத் தேடிக்கொண்டே வருகிறேன். விடையும் என் கைக்குள் சிக்காமல்தப்பிக் கொண்டே போகிறது.

"ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல. பல நாட்கள் இப்படியாக பயனின்றி ஓடி விட்டன. கந்தோரிலிருந்து வந்ததும் நேராகப் போய் கம்புயூட்டரின் முன் இருந்து விடுவேன். இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை வேலை செய்வேன். களைத்துப் போய் அப்படியே படுத்து தூங்கியும் இருக்கிறேன். மறு நாளும் இது போலவே போய் விடும். ஆனால் அந்த ஒரு சதம் என் கைக்குள் அகப்படாமல் தப்பிக்கொண்டு வந்தது.

"நான் உண்பதில்லை; வடிவாக உறங்குவதில்லை. வேறு ஒன்றிலும் கவனமில்லை. என் புத்தியெல்லாம் இதிலேயே செலவழிந்தது. உன்மத்தம் என்று சொல்வார்களே, அப்படியான ஒருநிலைதான். கம்புயூட்டர் தேவதை என்னை உதாசீனப்படுத்தி அலைக்கழித்துக் கொண்டிருந்தாள்."

இந்த இடத்தில் சிவலிங்கம் கதையை நிற்பாட்டிவிட்டு மனைவி கொண்டு வந்து வைத்த காபியை சிறிது பருகினான்; பிறகு மறுபடியும் தொடர்ந்தான்:

"நாங்கள் கலாசலையில் படித்தபோது வேதியியல் பேராசிரியர் கூறியது உனக்கு ஞாபகமிருக்கிறதா? பென்சீனுடைய (Benzene) அணு அடுக்கு முறையைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பட்டபாடு. அதிலும் பிரடெரிக் கேகுலே என்ற விஞ்ஞானி ஒன்றல்ல. இரண்டல்ல ஏழு வருடங்கள் இதற்காகப் போராடினார். எப்படித்தான் படம் போட்டாலும் ஆறு கார்பன் அணுக்களையும், அறு ஹைட்ரஜன் அணுக்களையும் விகிதமுறை தவறாமல் அவரால் அடுக்க முடியவில்லை.

"கடைசியிலே ஒரு நாள் மாலை அவர் களைப்புடன் குதிரை வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது சிறிது அயர்ந்துவிட்டார். அப்போ அந்த விஞ்ஞானியின் கனவிலே பாம்புகள் தோன்றினவாம். அதிலே ஒரு பாம்பு தன் வாலைப் பிடித்துத் தானே விழுங்கத் தொடங்கியது. அந்தச் சமயம் பார்த்து இவருக்கு விழிப்பு வந்து திடீரென்று எழுந்துவிட்டார். அந்தக் கனவைத் தொடர்ந்து அணுக்களை வட்டமாக வரிசைப் படுத்தும் எண்ணம் உதித்தது. அப்படியே செய்து பார்த்தபோது அந்த அணு அமைப்பு சரியாக வந்து விட்டது.

"இது மாதிரியான சம்பவம்தான் எனக்கும் இங்கே ஏற்பட்டது. ஆறு மாத காலம் இப்படியே விரயமாகக் கழிந்தது. போராட்டத்திற்கு முடிவே இல்லை. என் மனைவிக்கும் வெறுத்து விட்டது. ஒருநாள் கம்புயூட்டரைத் தூக்கி எறிவதற்கு கூடத்துணிந்து விட்டாள். ஒரு சரஸ்வதி பூசை நாள். மனைவி மும்முரமாக பூசை அடுக்குகள் செய்கிறாள். கம்புயூட்டரில் மூழ்கி இருந்த என்னிடம் வந்து சொல்கிறாள்:

"இண்டைக்காவது இதை விடுங்கோ! மூளைக்கு கொஞ்சம் ரெஸ்ட்' கொடுத்துப் பாருங்கோ. ஒரு நாள் போனால் என்ன; நாளைக்கு வேலை செய்யலாம் தானே" என்று என்னை இழுத்துக் கொண்டு போய்விட்டாள். நானும் கம்ப்யூட்டரை தொடுவதில்லை என்று சத்தியம் செய்து மூடிவிட்டேன். ஆனாலும் என்ன பயன்?

"சாமி கும்பிடும் போதும் சரி, மனைவியுடன் பேசும்போதும் சரி, குழந்தையுடன் விளையாடும் போதும் சரி என் மனமானது கம்புயூட்டருடனேயே ரகஸ்யமாகச் சல்லாபித்துக் கொண்டு இருந்தது.

"அன்றிரவு வழக்கத்துக்கு மாறாக பத்து மணிக்கே படுக்கப் போய் விட்டேன். நித்திரையிலே எனக்கு ஒரு கனவு வந்தது. அப்போது பளீர் என்று என் மூளையிலே ஒரு மின்னலடித்தது. அந்த தப்புக்கான விடை அங்கே என் முன்னே குதித்துக் கொண்டு நின்றது. எழும்ப விட்டேன். நேரம் மூன்று மணி காட்டியது. ப்ரோகிராமை எடுத்துப் பார்த்தேன். பதினேழாவது பக்கம், நாலாவது வரியில் நான் நினைத்த மாதிரியே இருந்தது. என் கண்களை நம்பவே முடியவில்லை.

"ஸ்ரீரங்கநாதர் நீண்டு சயனிப்பதுபோல் அந்தப் பிழையானது நீளவாட்டில் படுத்துக் கொண்டிருந்தது. இதே பாதையால் முன்னூறு தடவையாவது போயிருப்பேனே! நான் பார்க்கவில்லையே! இன்று என்ன இவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது. இவ்வளவு காலமும் ஏன் என் கண்கள் இதைக் கவனிக்கவில்லை?

"என் நெஞ்சு படக்படக்கென்று வேகமாக அடிக்கத் தொடங்கியது. வெளியிலேயோ பனி கொட்டுகிறது. மனைவி, குழந்தைபோல அமைதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். மெதுவாக ஓவர் கோட்டையும், பூட்ஸையும் எடுத்துக் கொண்டு பூர்ணிமாவுக்கு ஒரு சிறு குறிப்பு எழுதி வைத்துவிட்டு ஓசைப்படாமல் நழுவுகிறேன்.

"அப்போது என்னிடம் காரில்லை. டாக்ஸ’ ஒன்றை டெலிபோனில் கூப்பிட்டு என்னுடைய கந்தோருக்கு போய் இறங்கினேன். சுந்தரம்தான் காவல் காக்கிறான். செக்கியூரிட்டி கார்ட்டை கதவிடுக்கில் சொருகி கதவைத் திறந்துகொண்டு உள்ளே போகிறேன். 'கம்ப்யூட்டர் தேவதையே! இன்று எனக்கு நீ இணங்கி விடு' என்று வேண்டிக்கொண்டே அதை இயங்குகிறேன்.

"கம்ப்யூட்டர் கிர்ரென்று உயிர்பெற்று தன் வாசல்களை எனக்குத் திறக்கிறது. ஒவ்வொரு வாசலாகத் தட்டிக்கொண்டே செல்கிறேன். அங்கே கஷ்டப்பட்ட என் அணங்கு கைகளைப் பரப்பிக்கொண்டு எனக்காகக் காத்திருந்தாள். பதினேழாவது பக்கத்திலே அந்தப் பிழையானது வியாபித்து நிற்கிறது. நிமிடத்தில் அதைச் சரி செய்துவிட்டு ஓட்டிப் பார்க்கிறேன். ஒரு சதம் போய் விட்டது; விளம்பரங்களில் சொல்வதுபோல் 'போயே போய்' விட்டது.

"என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. இன்னும் ஒரு இருபது தடவை திருப்பித் திருப்பி ஓட்டிப் பார்த்தேன். ஒரு சத வித்தியாசம் மறைந்துவிட்டது. யாரிடமாவது சொல்லிக் கதற வேண்டும் போல இருந்தது. 'சுந்தரம் சுந்தரம்' என்று ஓடினேன். அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உளறினேன். 'என்ன தம்பி, என்ன ஆச்சு? கம்ப்யூட்டரை உடைச்சுப்பிட்டியா?' என்றான். 'இல்லை, சுந்தரம் ஒரு சதம் ஒன்று இவ்வளவு நாளும் காணாமல் போச்சு. இன்று கிடைத்துவிட்டது' என்று கூறினேன். அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

"நான் அந்த ப்ரோகிராமை திருப்பித் திருப்பி ஓட வைத்து அதன் லாவண்யத்தை ரசித்தபடியே இருந்தேன். அந்த அழகு கொள்ளை அழகு; அதை எத்தனை தரம் பார்த்தாலும் ஆசை தீராது.

"அந்தச் சமயம் பார்த்து இன்னொரு அதிசயம் நடந்தது. பனி சறுக்கு விளையாட்டுக்கு எங்கள் பிரெஸ’டெண்ட் அடிக்கடி போவதுண்டு. அன்று சனிக்கிழமை. அதிகாலையிலேயே அவர் கந்தோருக்கு வந்திருந்தார், தன்னுடைய உபகரணங்களை எடுப்பதற்காக. என்னைக் கண்டதும் திகைத்து விட்டார்; என்னுடைய குழம்பிய தலையையும், சிவந்த கண்களையும் பார்த்து உண்மையாகவே அவர் அதிர்ந்துவிட்டார். 'என்ன நடந்தது?' என்று கேட்டார்.

"'அந்த ஒரு சதம், அதைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்றேன். அதைச் சொன்னபோது எனக்கு நாக்கு குழறியது; கண்களிலே பொலபொல வென்று கண்­ர். 'எங்கே பார்ப்போம்?' என்றார். ஒட்டிக் காட்டினேன். 'இன்னொரு முறை' என்றார். கம்ப்யூட்டர் மறுபடியும் ஓடி ஓய்ந்தது. 'ஆஹா!, போய்விட்டதே. ஆறு வருடமாக எங்களை அலைக்கழித்தது இன்றோடு ஒழிந்தது; எக்சலண்ட் வேர்க்; காங்கிரஜுலேசன்ஸ்' என்றார்.

"என் மனதில் ஏதோ ஒன்று நெருடியது. 'ஐயா, இதன் உண்மையான தாத்பரியம் தங்களுக்கு தெரிகிறதா?' என்றேன். 'என்ன' என்று இன்னொருமுறை கேட்டார். 'இந்தப் பிழை நீக்கத்தால் இந்த வருடம் மட்டும் 384,000 டொலர் லாபம் அதிகமாகிறது; போன வருடம் இந்தத் தவறினால் 292,000 டொலர் இழந்து விட்டோம். அது போனதுதான். அடுத்த வருட பட்ஜட்டின்படி 483,000 டொலர் லாபம் மிகையாக வரும் என்றேன்.

"தொடர்ந்து அதற்கான கணக்குகளையும் படபடவென்று போட்டுக் காட்டினேன். ஆறுதலாக அமைதியாக எல்லாவற்றையும் கேட்டார். அவர் முகத்தில் அவமானம், அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாம் ஓடியது. போய்விட்டார்.

"அடுத்த நாளே எனக்கு ஒரு ப்ரமோஷன் காத்துக் கொண்டிருந்தது. எங்கள் கம்பனியில் இருந்த எட்டு பினான்ஸ’யல் கொண்ட்ரோலர்களில் ஒருவராக நான் நியமிக்கப்பட்டேன். இதுதான் என் சரித்திரம்" என்றான்.

"மிச்சத்தையும் சொல்லுங்கோ" என்றாள் மனைவி.

"இது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம். புது வேலையில் உயர்த்தப்பட்ட உடனேயே என் வழக்கப்படி எல்ல வேலைகளையும் இழுத்துப் போட்டு கற்று விட்டேன். கம்ப்யூட்டர் மூலம் வேலைகளை எளிமையாக்கினேன்; நஷ்டத்தை குறைத்து லாபத்தை விரிவடையச் செய்தேன்.

"ஒருமுறை ஒரு சோதனையான காலம். கம்ப்யூட்டர் பிரிவு தலைமை அதிகாரி லீவிலே போய்விட்டார். சில அந்தரங்க அறிக்கைகள் தயாராக வேண்டி இருந்தது. கம்ப்யூட்டரில் ஒரு சிக்கல். ஆலோசகர்களைத் தருவிக்க நேரமில்லை. அவர்கள் ஒட்டாவாவில் இருந்து வரவேண்டும். இரண்டு நாட்களாக கம்பனி இயக்குணர்கள் ஓடிஓடி தாங்களாகவே அதை நிவர்த்தி செய்யப் பார்த்தார்கள். முடியவில்லை. கெடு நாளும் நெருங்கிக்கொண்டே வந்தது.

"பிரெஸ’டெண்ட் என்னைத் தனிமையில் அழைத்து 'இதை பார்க்க முடியுமா? இதில் ஏதோ பெரிய சிக்கல், நாளைக்கே ரிப்போர்ட் தயாராக வேண்டும், உங்கள் உதவி மிகவும் அவசியம்' என்றார்.

"அந்தரங்கமான அறிக்கைகள் அவை. என் போன்றவர்கள் அவற்றைப் பார்க்க அருகதை இல்லை. 'ஆபத்துக்கு பாவம் இல்லை' என்று என் கையில் அது வந்துவிட்டது. கடவுளாக அனுப்பிய பிரசாதம்.

"பெரும் காப்பியங்களை எழுதும்போது 'காப்பு' என்று கடவுள் வாழ்த்துப் பாடி பின்பே காப்பியத்தை தொடங்குவார்கள். அது போல இந்தக் ப்ரோகிராமிலும் காப்பு போல ஒன்று இருந்தது. அதற்கு பிறகே மு€றான ப்ரோகிராம் தொடங்கும்.

"நான் ப்ரோகிராமைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. காப்பிலேயே பிழை. கனதூரம் போகத் தேவையில்லை. 'ஆஹா!, இதோ' என்று சொல்ல வாய் திறந்துவிட்டு சடாரென்று மூடிக் கொண்டேன். 'இது கொஞ்சம் சிக்கலாக இருக்கும்போலத் தெரிகிறது. நாளைவரை ரைம் கொடுங்கள்' என்று சொல்லி ப்ரோகிராமை பெற்றுக் கொண்டேன்.

"முதல் ஒரு நிமிடத்திலேயே பிழையைத் திருத்திவிட்டேன், மீதி இரவெல்லாம் ப்ரோக்கிராமை அணு அணுவாக ஆராய்ந்து மனதில் பதித்து வைத்துக் கொண்டேன். இப்படியான சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காதல்லவா?

"அந்த சம்பவத்திற்கு பின்புதான் எனக்கு Deputy Finance Director பதவி கிடைத்தது. அதற்கு முன்பு அந்த வேலையில் இருந்தவரை நீங்கி விட்டார்கள். அவர் நல்ல மனிதர். அன்பான சுபாவம். என்னைப் போல அகதியாக வந்து உயர்ந்தவர். அவரை நீக்கி எனக்கு அந்த வேலையைக் கொடுத்தபோது மிகவும் சங்கடமாகி விட்டது."

"இப்பவும் அதே வேலைதானா? இனி எப்ப அடுத்த ப்ரோமஷன்? என்று பரமனாதன் கேட்டான்.

"சூரபத்மன் ஒரு வரம் வாங்கினான். சாகாத வரம், தெரியுமல்லவா? அவன் செய்த கொடுமைகள் பொறுக்கமுடியாமல் தேவர்கள் முறையிட்டார்கள். முருகப் பெருமானும் மனமிரங்கி வேலாயுதத்தை எறிந்து சூரனை இரு கூறாக்கினார். அவன் ஒரு பாதி சேவலும், மறு பாதி மயிலுமாக மாறினான். இறக்கவில்லை; உருவம்தான் மாறினான். முருகப்பெருமான் சேவலை கொடியாக தன் தலை மேலும், மயிலை வாகனமாக காலில் கீழும் வைத்துக் கொண்டார். சூரனுடைய தலையும் (சேவல் வாலும் (மயில்) என்றைக்கும் ஆடாமல் தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் வைத்துக் கொண்டதாக அர்த்தம். கொஞ்சம் அசந்தால் சூரன் தன் பழைய குணத்தைக் காட்டத் தொடங்கிவிடுவான் என்பது முருகனுக்குத்தான் தெரியும்.

"என் நிலையும் அதுதான். என்னை நிமிரவிடாமல் ஒரு முருகப்பெருமான் எனக்கு மேலே, அதுதான் Finance Director. என்மேல் அவருக்கு எப்பவும் ஒரு பயம். என்னால் தன்னுடைய வேலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று நித்தமும் கலங்கியபடி இருக்கிறார். நான் இதற்கு என்ன செய்யலாம்" என்றான்.

"எனக்கு உன்னைத் தெரியாதா? நான் உன்னை அடுத்த முறை பார்க்கும்போது நீ உன் மேலதிகாரியின் வேலைக்கு வெடி வைத்துவிட்டு பிரெஸ’டெண்டின் வேலையில் கண் வைத்திருப்பாய்" என்றான் பரமனாதன்.

அப்படிச் சொல்லிவிட்டு பரமனாதன் தன் நண்பனைப் பார்த்து புன்னகை செய்தான். சிவலிங்கத்தின்மேல் அவனுக்கு ஒரு அளவில்லாத மரியாதையும், அன்பும் சுரந்தது.

"வெறும் கையோடு அகதியாக ஓடி வந்த எங்களை கனடா அரவணைத்து வாழ இடம் கொடுத்தது. இந்த வீட்டை நான் அடிமட்ட வேலையில் சேர்ந்தபோது கடனுக்கு வாங்கினேன். என்னுடைய சம்பளம் பத்து மடங்கு பெருகிவிட்டது. இது என் சொந்த வீடு. நான் மிக்க சந்தோஷமாக இருக்கிறேன்" என்று சிவலிங்கம் கண்கலங்கியபடியே கூறினான்.

அப்போது அவனுடைய இளைய மகள், நாலு வயது இருக்கும்; ஒரு கரடி பொம்மையை தலைகீழாக இழுத்தபடி அரை நித்திரையில்வந்து, தகப்பனுடைய மடியில் தாவி ஏறினாள். சிவலிங்கம் அவளைத் தூக்கி அணைத்து வைத்துக் கொண்டு, "என் ஆசை மகளே, உனக்குத்தான் இந்த வீடு" என்றான்.

அப்போது அவனுடைய மூத்த மகள், மேசையில் படித்துக் கொண்டிருந்தவர், ஓடோடி வந்து தகப்பனின் மற்ற மடியில் துள்ளி ஏறி இருந்து கொண்டு "அப்ப எனக்கு, அப்ப எனக்கு" என்றாள்.

சிவலிங்கம் சொன்னான்: "உனக்கு இல்லாமலா என்ரை மகளே! புத்தம் புது வீடு ஒன்று உனக்குத் தானே வாங்கப் போறேன்."

"அப்ப என்ரை வீட்டுக்கு என்ன பேர் வைக்க போறீங்க? என்றாள் அவள்.

" 'பத்து சதம்' என்று வைச்சால் போச்சு' என்றான் சிவலிங்கம்

பரமனாதனின் மூளையில் பளீரென்று ஒரு மின்னல் அடித்தது. சிவலிங்கத்தினுடைய வீட்டின் பெயர் `ஒரு சதம்' (ORU SATHAM). பரமனாதன்தான் எப்போதும் போல முட்டாள்தனமாக அவசரப்பட்டு 'ஒரு சாதம்' என்று நினைத்து விட்டான்.

பரமனாதன் நண்பனைப் பார்த்து அர்த்தத்தோடு சிரித்தான். சிவலிங்கமும் பதிலுக்கு புன்முறுவல் பூத்தான்.

* * *

3.

கிரகணம்

நான் மணமுடித்து லண்டனுக்கு குடிவந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. அப்போதுதான் ஒரு வசந்தகாலத்து காலைப்போதில் அபூர்வமாக வரும் சூரியகிரகணத்தை பார்ப்பதற்காக என் கணவர் என்னை கூப்பிட்டார்.

நான் போகவில்லை; என் கணவர் மிகவும் வற்புறுத்தினார்; முடியவில்லை. சனங்கள் கும்பல் கும்பலாக எதிர் இருக்கும் 'பார்க்' புல்வெளியில் நின்று பாதுகாக்கப்பட்ட கறுப்பு நிற கண்ணாடியின் ஊடாக மேல்நோக்கி பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

நான் பார்க்காத கிரகணமா? ஒரு முறை பார்த்தால் போதாதா? இருபது வருடங்களாக அல்லவா பாகிஸ்தானில் நடந்த அந்த சம்பவத்தை நான் மறக்க முயன்று வருகிறேன்.

பஸ்மினாவை அப்பா முதன்முதலாக எங்கள் வீட்டுக்கு கூட்டி வந்தது ஞாபகம் வந்தது. அப்போது பஸ்மினாவுக்கு எட்டுவயது இருக்கும்; என்னிலும் ஒரு வயது குறைவு. எலும்பும் தோலுமாகத்தான் இருந்தாள். கண்கள் மாத்திரம் பச்சை நிறத்தில் பெரிதாக இருந்தன. அவள் உடுத்தியிருந்த உடையில் இருந்து ஒரு கெட்ட நாற்றம் வந்தது. தலை மயிர் சடைபிடித்துப் போய் ஒட்டிக்கொண்டு கிடந்தது.

எங்களையும் வீட்டையும் பார்த்து பிரமித்துப் போய் நின்றாள் பிஸ்மினா. நேரே பார்க்கக் கூசி கீழேயே பார்த்த வண்ணம் இருந்தாள்.

அம்மா செய்த முதல் வேலை அவளுடைய தலை மயிரை ஒட்ட வழித்து வெட்டியதுதான். அடுத்து அவளுக்கு குளிக்க வார்த்து புது சல்வார் கமிஸ்போட்டு விட்டாள். எனக்கு அவளைப் பார்க்க புதினமாக இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

அவளுக்கு புஸ்து பாஷைதான் தெரியும்; எனக்கோ தமிழும் ஆங்கிலமும். அவளிடம் கதைக்கப்போன போதெல்லாம் மற்றபக்கம் திரும்பிக்கொண்டாள்.

அப்போது அப்பா மனித உரிமைச் சங்கம் தொடர்பாக பாகிஸ்தானில் 'மர்தான்' என்னும் ஊரில் வேலை பார்த்து வந்தார். போலீசாரின் உதவியோடு நடத்திய திடீர் சோதனையில் ஆறு சிறுமிகள் மீட்கப்பட்டனர். அதில் பஸ்மினாவும் ஒருத்தி. மூன்று வருடங்களாக ஒரு வீட்டிலே பூட்டி வைக்கப்பட்டு மற்றப் பெண்களுடன் சேர்ந்து கம்பளம் நெய்து கொண்டு இருந்தாளாம் அவள்.

அந்தப் பெண்களிலே இவளுடைய கண்களைப் பார்த்து அப்பா மயங்கி எங்கள் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். அவளை மற்றப் பெண்களைப்போல் 'டாருல் அமானில்' கொண்டுபோய் விடுவதற்கு அப்பா விரும்பவில்லை. மறுபடியும் அவள் தகப்பனார் இப்ராஹ’மிடம் ஒப்படைக்கவும் தயங்கினார்கள். இப்ராஹ’மிக்கு ஒன்பது பிள்ளைகள். அவர் மறுபடியும் பணத்துக்கு ஆசைப்பட்டு பஸ்மினாவை விற்று விடுவாரோ என்று பயந்தார் எங்கள் அப்பா.

அதனால் அப்பா ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன்படி இப்ராஹ’ம் எங்கள்வீட்டு 'மாலியாக' மாறினார். மாதாமாதம் சம்பளம் அவருக்கு கிடைக்கும். தினமும் வரும்போது பஸ்மினாவைக் கூட்டி வரவேண்டும்; பின்னேரம் போகும்போது கூட்டிப் போகலாம். பஸ்மினா என் ஐந்து வயதுத் தம்பியுடன் விளையாடுவது என்றுதான் ஏற்பாடு.

இன்னுமொரு அநுகூலம். அப்பா என்னிடம் சொன்னார்: "சுகன்யா, நீ பஸ்மினாவுடன் புஸ்துவிலேயே பேசிப் பழகிக்கொள். நீயும் ஒரு புதிய பாஷை சுலபத்தில் கற்றுவிடலாம்" என்றார். இந்த ஏற்பாடு எவ்வளவு விபரீதமானது என்று பின்னாலே தான் எங்களுக்கு தெரிந்தது.

பஸ்மினா வந்த புதிதில் எங்கள் வீட்டில் சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்தாள். அச்சப்படும் கண்களை அகல விரித்து, சைகையினாலேயே பேசினாள்: மிகவும் வெட்கப்பட்டாள். எல்லாப் பொருள்களையும் ஆச்சரியத்தோடு தொட்டுத் தொட்டுப் பார்த்தாள்.

** இதன் தொடர்ச்சி vamsa3.mtf.ல் வருகிறது.** ந்தது. கண்களில் உயிர் வந்தது.


** vamsa2.mtf.ன் தொடர்ச்சி

இரண்டு வாரத்திலேயே பஸ்மினாவில் பெரிய மாற்றம் தெரிந்தது. கண்களில் உயிர் வந்தது. உடம்பின் கலர் பொன்னிறமாக மாறியது. தம்பியிடமும் என்னிமும் கூச்சத்தை விட்டு பேச முற்பட்டாள். புஸ்துவில் அல்ல ; தமிழ் அல்லது ஆங்கிலத்தில்.

அவளுடைய திடீர் கண்டுபிடிப்பு புத்தகம்தான்; அடுத்து வீடியோவில் படம் பார்ப்பது. தம்பியுடன் சேர்ந்து அவனுடைய நர்ஸரி ரைம் எல்லாம் கரைத்து பாடமாக்கி விட்டாள்; படத்தைப் பார்த்து சொல்லிக் கொண்டே இருப்பாள். புத்தகத்தில் அப்படி ஒரு மோகம். ஒருமுறை வீடியோவில் படம் பார்த்தால் அவள் நினைவில் ஒவ்வொரு ப்ரேமும் அசையாது நிற்கும். மறப்பதென்பதே கிடையாது.

ஆறு மாதத்தில் ஆங்கிலமும் தமிழும் சரளமாகப் பேசப் பழகிக் கொண்டாள். என்னுடைய புஸ்து இருப்பிடத்தை விட்டு புறப்படவே இல்லை. பஸ்மினாவின் அறிவுத்தாகம் எல்லையில்லாமல் விரிந்துகொண்டே போனது. ஓயாமல் என்னைக் கேள்விகள் கேட்டு துளைத்துக் கொண்டே இருப்பாள். ஒரு படம் பார்க்கும்போது விளங்காத சம்பவங்களையும் சொற்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வாள். தம்பிக்கு வாங்கும் புதுப் புத்தகங்களை ஆவலுடன் வாசித்து முடித்து விடுவாள். தம்பியுடன் சேர்ந்து மெள்ள மெள்ள ஆங்கிலமும் தமிழும் தானாகவே எழுதவும் கற்றுக்கொண்டு விட்டாள்.

ஒரு நாள் நான் பள்ளியில் இருந்து வந்து இவளைத் தேடிப் போனேன். இவள் என்னுடைய ஒரு ஆங்கிலக் கதைப் புத்தகத்தை தம்பிக்கு வாசித்துக் காட்டிக்கொண்டு இருந்தாள். அது மாத்திரமல்ல; அதைத் தமிழிலும் தம்பிக்கு அப்பப்ப மொழி பெயர்த்தபடியே வந்தாள். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். நான் மெதுவாக ஓடி அம்மாவைக் கூட்டி வந்து இந்த அசியத்தைக் காட்டினேன். அம்மாவும் திகைத்து நின்று விட்டாள்.

அவள் பஸ்மினாவிடம் "நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டாய்" என்று கேட்டாள். அதற்கு பஸ்மினா "தம்பியும், சுகன்யாவும் படிக்கும்போதெல்லாம் பக்கத்திலேயே நிற்பேன்; பார்த்துப் பார்த்து பழகிவிட்டது" என்றாள் சர்வ சாதாரணமாக. என்னால் நம்பவே முடியவில்லை.

இந்தச் சம்பவத்திற்கு பிறகுதான் அப்பா பஸ்மினாவை விரைவிலேயே ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. அவளை எந்த வகுப்பில் சேர்ப்பது என்பதுதான் பிரச்சனை. அவள்தான் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு கிளாஸாக மேலே ஏறிக் கொண்டிருந்தாளே!

நான் என்னுடைய புத்தகங்களை அவளுக்கு படிக்கக் கொடுத்ததோடு பள்ளிக்கூட லைப்ரரியிலிருந்தும் புத்தகங்களை அள்ளிவரலானேன். அவளும் அசுர வேகத்தோடு அவற்றை வாசித்து முடித்து விடுவாள்.

ஒரு நாள் நான் சிறுவர்களுக்கான பைபிளைக் கொண்டு வந்தேன். அதிலே வண்ணப் படங்களுடன் கதைகளை அழகாகச் சொல்லியிருந்தார்கள். அதை வாசித்துவிட்டு அவள் அப்பாவிடம் கேட்டாள்; "பைபிள் வேகத்தில் கூறியதன்படி கடவுள் ஒளியை முதன் நாள் படைத்தார்; ஆனால் சூரியனையும் சந்திரனையும் நாலாம் நாள் தானே படைத்தார், இது எப்படி சாத்தியம்?" என்றாள்.

அப்பா முதலில் கொஞ்சம் ஆடிவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் பிறகு சமாளித்துக் கொண்டே கூறினார்: "பைபிளைப் பற்றி விமர்சிக்க எங்களுக்கு என்ன தகுதி? பைபிளை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது; அதில் சொல்லியிருக்கும் தத்துவத்தைத்தான் யோசிக்க வேண்டும். ஒளிதான் ஜ“வன். அதனால்தான் ஒளி முதலில் வந்தது; சூரியனுக்கே ஒளியைக் கொடுத்தவர் கடவுள் அல்லவா? அதனால்தான் சூரியனுடைய படைப்பு பின்னால் வந்தது."

பைபிளை நான் எத்தனை தரம் படித்திருப்பேன்? எனக்கு அந்த முரண்பாடு தெரியவில்லையே! பஸ்மினா எப்படி அதை ஓரு கணத்தில் கண்டுகொண்டாள்?

பின்னேரம் ஆனதும் பஸ்மினா வழக்கம்போல் தகப்பன் இப்ராஹ’முடன் வீட்டுக்குபோய் விடுவாள். தூக்கிலிடப் போகும் கைதிபோல கால்களை இழுத்தபடியே விருப்பமின்றி போவாள். அவள் போனாலும் அவளுடைய நினைவெல்லாம் எங்கள் வீட்டைச் சுற்றியபடியே இருந்திருக்கும். அவளுடைய புத்தகங்களை விட்டு அவள் எப்படிப் பிரிவாள்?

அந்த சமயத்தில்தான் ஒரு சூரியகிரகணம் பாகிஸ்தானில் தெரியப் போவதாகப் பேப்பர்களில் செய்தி வந்தது. அதைப் பார்ப்பதற்காக நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் வெளிக்கிட்டோம். என் மனம் மட்டும் சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தது; காரணம் தெரியவில்லை. அப்பாவும், அம்மாவும் தம்பியும் முன் சீட்டில்; நானும் பஸ்மினாவும் காரின் பின் சீட்டில் உட்கார்ந்து 'ரக்ஸ்பாய்' என்னும் சிறு மலையின் உச்சியை நோக்கி போய்க் கொண்டிருந்தோம். அங்கே ஏற்கனவே சனங்கள் நிறைந்து விட்டார்கள்.

மறக்க முடியாத நிகழ்ச்சி அது. ஒளிவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பூமி கண நேரத்தில் இருண்டுவிட்டது. பஸ்மினா ஒரு குழந்தையின் ஆர்வத்துடனும் ஒரு விஞ்ஞானியின் புத்தி சாதுர்யத்துடனும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டாள். அப்பாவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு வந்தார். திரும்பி வரும்போது 'சர்சதா' என்னும் இடத்தில் ஆற்றின் கரையோரமாக இருந்து 'சப்ளி கெபாப்பும்' 'நான்' ரொட்டியும் சாப்பிட்டு பின்னேரம் ஆறுமணி போல வீடு திரும்பினோம்.

வீடு வந்து கேட் முன்னால் நின்று ஹார்ன் அடித்தும் மாலி இப்ராஹ’ம் கதவைத் திறக்கவில்லை. ஐந்து நிமிடம் கழித்து அப்பா கேட் மேல் ஏறிப் பாய்ந்து குதித்து உள்ளே போனார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எப்படி இருந்திருக்குமென்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

இப்ராஹ’ம் கொலை செய்யப்பட்டு 'சார் போயில்' குப்புறக் கிடந்தார். கத்தியால் மூன்று நான்கு இடங்களில் படு காயம். அம்மாவும் அப்பாவும் என்னையும் தம்பியையும் பஸ்மினாவையும் அதைப் பார்க்கவிடாமல் மறைத்தார்கள். பஸ்மினா கதறிக் கதறி அழுதாள்; அம்மாவும் அழுதாள்; நானும் அழுதேன், பஸ்மினா அழுவதைப் பார்த்து.

இரண்டு நாட்களாக போலீஸ் வந்த விசாரணை எல்லாம் நடந்தது. மூன்று தலைமுறையாக இப்ராஹ’ம் குடும்பத்திற்கும், இன்னொரு குடும்பத்திற்கும் இடையில் தொடரும் இரத்தப்பகைதான் (blood feud) இதற்கு காரணம். சாப்பிட வழியில்லை; ஆனால் கொலை செய்வதற்க மாத்திரம் தயங்க மாட்டார்கள். கொலை செய்த குடும்பம் பிராய்ச்சித்தமாக இரத்தக் காசு (Blood money) கொடுத்தாலொழிய இந்தச் சண்டை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்பா இதை எங்களுக்கு அப்போது விளக்கியது ஞாபகம் இருக்கிறது.

இப்பொழுது அப்பாவின் தலையில் பஸ்மினாவுக்கு ஒரு வழிசெய்ய வேண்டிய பொறுப்பு வந்துசேர்ந்தது. அப்பா இப்ராஹ’மின் தம்பியைக் கூப்பிட்டு கதைத்தார். அப்பா தொடர்ந்து மாதம் மாதம் இப்ராஹ’முக்கு கொடுத்த சம்பளத்தை இப்ராஹ’மின் குடும்பத்துக்கு கொடுப்பதாகவும் பஸ்மினா எங்களுடன் நிரந்தரமாக தங்குவதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இது எல்லோருக்கும் நல்ல தீர்வாகப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்கு பிறகுதான் பஸ்மினா அடிக்கடி மயங்கி விழத் தொடங்கினாள். அம்மா அவளை வைத்தியரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து மருந்துகள் வாங்கிக் கொடுத்தாள். பஸ்மினாவும் கிரமமாக அவற்றை சாப்பிட்டு குணமாகி வந்தாள். ஆனால் வைத்தியர் அவளுடைய இருதயத்தில் ஒரு பிசகு இருப்பது போலப் படுவதாகவும், அவள் கொஞ்சம் பெரியவளானதும் இதை இன்னொரு முறை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார். அம்மா வழக்கம்போல் இதைப் பெரிது படுத்தி கவலைப்பட ஆரம்பித்தாள். அப்பாவோ "அவளுக்குத்தான் இப்ப எல்லாம் சரியாகி விட்டதே, பயப்படுவதற்கு இனி ஒன்றுமில்லை" என்று கூறி அம்மாவை அடக்கிவிட்டார்.

இப்பொழுது பஸ்மினா எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகி விட்டாள். நல்ல வசதியும் நேரத்திற்கு சாப்பாடும் அமைதியும் சேர்த்து அவள் உடம்பில் ஒரு வனப்பை ஏற்படுத்தியது. கூந்தல் கருகருவென்று வளர்ந்து விட்டது. கண்களில் அறிவு ஒளி மின்னியது. அவள் வடிவை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

நான் பள்ளியில் இருந்து வரும் வரத்தை பார்த்த படி வாசலிலேயே நிற்பாள் பஸ்மினா. நான் வந்ததும் எங்களுக்குப் பிடித்தமான பீபள் மரத்தின்கீழ் இருந்து விளையாடுவோம். மணிக்கணக்காக விளையாடுவோம். விளையாட்டு என்பதை முதலில் அவள் அறிந்ததே எங்கள் வீட்டில்தான். "மொனபொலி" அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அதில் அவளைத் தோற்கடிக்கவே முடியாது. அப்பாகூட எத்தனையோ முறை அவளிடம் தோற்றிருக்கிறார்.

ஒரு முறை இப்படித்தான் நாங்கள் எங்கள் வழக்கப்படி பீபள் மரத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தபோது பஸ்மினா திடீரென்று என் கையிரண்டையும் பிடத்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்த்து, "சுகன்யா, நீ என்னை மறக்கமாட்டாயே?" என்று கேட்டாள்.

நான் "உன்னை எப்படி நான் மறப்பேன். உயிர்போகும்வரை மறக்க மாட்டேன்" என்றேன்.

"யாருடைய உயிர்?" என்றாள் அவள்; சொல்லி விட்டு அழத் தொடங்கினாள்.

அப்போது நான் கூறினேன், "பஸ்மி, நீ எனக்கு கூடப்பிறக்காத சகோதரி. உன்னை நான் என் உயிராகவல்லவா நினைக்கிறேன்.

பளீரென்று அவள் முகத்திலே ஒரு பிரகாசம் வந்தது. அந்த பச்சை நிறக் கண்களிலே நிரந்தரமாகக் குடியிருந்த அச்சம் கொஞ்சம் விலகியது போலத்தான் எனக்குப் பட்டது.

எங்களுடைய படுக்கை அறையில் பஸ்மினாவின் கட்டில் கிழக்குப் பார்த்து இருக்கும்; என்னுடையது எதிர்ப்புறம். பஸ்மினாவின் கட்டிலுக்கு பக்கத்தில் ஒரு சின்னப் பெட்டகம். அதிலே அவள் தன்னுடைய சாமான்களை போட்டு வைத்திருப்பாள்.

ஒருநாள் ஏதோ தேடும்போது தற்செயலாக அவளுடைய பெட்டகத்தை திறக்கவேண்டி வந்தது. திறந்த நான் அதிர்ந்து போய் சில நிமிடங்கள் நின்றேன். ஒருவிதமான துர்நாற்றம் வந்தபடியே இருந்தது. அந்தப் பெட்டகத்துக்குள் பாதி சாப்பிட்ட கொய்யாக்காய், பத்துப் பதினைந்து காய்த்து போன பாண் துண்டுகள், கடலை, முறுக்கு, பிஸ்கட் என்று பலவிதிமான உணவுப் பொருட்கள் அடைந்து கிடந்தன. நான் ஓடிப் போய் அம்மாவைக் கூட்டி வந்து காட்டினேன்.

அம்மாவும் நம்ப முடியாமல் கொஞ்ச நேரம் அதைப் பார்த்தபடியே நின்றாள். பஸ்மினா இப்படி சாப்பாட்டை யாராவது வைப்பார்களா? பஸ்மினா அப்போது எங்களுடன் நாலுமாத காலம் இருந்து விட்டாள். எதற்காக சாப்பாடு களவெடுக்க வேண்டும்? போதிய சாப்பாடு அவளுக்கு கிடைக்கவில்லையா? அல்லது சேர்த்து வைத்து வீட்டுககு களவாக அனுப்புகிறாளா? ஏன் இந்த புத்தி?

இது பற்றி அம்மா தீர யோசித்துவிட்டு பஸ்மினாவை கூப்பிட்டு விசாரித்தாள். பஸ்மினா இதை எதிர்பார்க்கவில்லை. நிலத்தையே பார்த்தபடி கொஞ்சநேரம் இருந்துவிட்டு விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டாள். எவ்வளவு கேட்டும் அழுகை தான் பதிலாக வந்தது.

கடைசியில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது அப்பாதான். "பஸ்மினா, பயப்படாதே. நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம். உனக்கு இங்கே சாப்பாடு போதியது கிடைக்கவில்லையா? சொல்" என்றார். அடுத்து பஸ்மினா சொன்ன வாசகங்கள் எங்கள் நெஞ்சை உருக்குவதாய் இருந்தது.

"எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் நினைப்பதெல்லாம் சாப்பாட்டைப் பற்றித்தான். இருட்டறையில் பூட்டி வைக்கப்பட்டு ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் வேலை செய்து வந்தேன். ஒருநாளா, இரண்டு நாளா? மூன்று நான்கு வருடங்கள். பகலும் தெரியாது, இரவும் தெரியாது. கைவிரல்கள் எல்லாம் வலியெடுத்துவிடும்; கண்கள் குத்திக்கொண்டே இருக்கும்: சாப்பிடக் கிடைப்பதுவோ உலர்ந்த ரொட்டியும் தேநீரும்தான். அதுவும் சீனி போடாத தேநீர். அதுகூட போதியது கிடைக்காது. விடிய சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மத்தியானச் சாப்பாட்டுக் கவலை வந்துவிடும். சாப்பாட்டு கிடைக்குமா என்ற கவலை. எவ்வளவு கிடைக்கும் என்ற கவலை. மத்தியானம் மனுபடியும் காய்ந்த ரொட்டித் துண்டும் பருப்பும் கொடுப்பார்கள்; வேலையில் பிழைவிட்டால் அதுவும் கிடையாது. இரவு ஒன்றுமே இல்லை; தேநீர் மாத்திரம்தான்.

"உணவைப் பற்றிய ஸ்மரணைதான் எங்களுக்கு எந்த நேரமும். இந்த ஏக்கம்தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஏக்கம் மிகவும் முக்கியமானது. அந்த நரகத்தில் இருந்து என்னை மீட்டீர்கள்; ஆனால் பசியிலிருந்து மீட்கவில்லை.

"என் தகப்பனாருடன் நான் இரவு வீட்டுக்குப் போவேன். அங்கே என் தகப்பனாரும், மூன்று அண்ணன்மாரும், காக்காவும் (தகப்பனாரின் தம்பி) இருப்பார்கள். அம்மா சமைத்த உணவை அவர்களுக்கு போட்டு ஹுஸ்ராவுக்கு அனுப்பி விடுவாள். தானும் மற்ற அக்காமாரும்-எங்களில் எல்லாமாக ஆறு பெண் குழந்தைகள்-அம்மாவைச் சுற்றி உட்கார்ந்தபடியே காத்துக்கொண்டு இருப்போம். அவர்கள் சாப்பிட்டபிறகு மிஞ்சியிருப்பதை நாங்கள் பங்குபோட்டுக் கொள்வோம். கால் வயிற்றுக்கும் காணாது.

"சில வேளைகளில் எங்கள் தகப்பனார் சாப்பிட உட்காரும்போது யாராவது விருந்தினர்கள் வந்து விடுவார்கள். அவர்களும் சாப்பிட்டால் எங்களுக்கு மீதமிருக்காது. அன்று நாங்கள் எல்லாம் பட்டினிதான். தண்­ரைக் குடித்துவிட்டு படுத்து விடுவோம். அவர்கள் சாப்பிடக் குந்தியவுடன் நானும் என் அக்காமாரும் அல்லாவைப் பிரார்த்தித்தபடியே இருப்போம், யாராவது விருந்தினர்கள் அன்று வந்து விடக் கூடாதென்று.

"முதன்முறையாக என் வாழ்க்கையில் இப்பொழுதுதான் நான் பசியில்லாமல் இருக்கிறேன்; நம்ப முடியவில்லை, என்றாலும் எனக்கு பயமாயிருக்கு. மேசையில் குவித்து சாப்பாட்டைக் காணும் போதெல்லாம் 'நாளைக்கு கிடைக்குமா?' என்ற பயம் பிடித்துவிடும். எவ்வளவுதான் துரத்தினாலும் இந்தப் பயம் போவதில்லை. எப்படியும் சாப்பாட்டைத் திருடிக் கொண்டு வந்து வைத்து விடுகிறேன். நான் என்ன செய்வேன்" என்று விக்கினாள்.

அம்மா அவளுடைய கண்களைத் துடைத்து "அதற்கென்ன, நீ செய்தது பிழையில்லை, இன்றிலிருந்து நீ மேசையிலிருந்து திருடத் தேவையில்லை. நானே நிறைய பழங்களும், பிஸ்கட்டும், கடலையும், முறுக்குமாக உன் பெட்டியை நிறைத்து விடுகிறேன்.

நீ வேண்டும்போது சாப்பிடலாம். நீயாகவே வேண்டியதை எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்; ஆனால் களவெடுக்கத் தேவையில்லை" என்று சொல்லி பஸ்மினாவைத் தேற்றினாள்.

அதன்பிறகு பஸ்மினா உணவு திருடுவதில்லை. அவளுடைய பெட்டியில் எப்பவும் சாப்பாடு இருக்கும். இருந்தாலும் பஸ்மினா இறுதிவரை அந்தப் பயத்தில் இருந்து விடுபட்டாளா என்பது ஐயம்தான்.

ஒரு நாள் இரவு நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பஸ்மினா "அப்பா" என்றாள். இப்போதெல்லாம் பஸ்மினா என்னுடைய அப்பாவை "அப்பா" என்றே அழைக்கத் தொடங்கி இருந்தாள். நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மாவும் என்னைப் பார்த்தாள். சாப்பிடும் நேரங்களில் இப்படி பஸ்மினா அழைத்தால் ஏதோ குண்டு விழப் போகிறது என்றுதான் அர்த்தம். அன்று பகல் முழுவதும் அவள் ஏதோவொரு புத்தகத்தை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தாள்.

"அப்பா, தேவர்களும் அசுரர்களம் பாற்கடலைக் கடைந்தபோது மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் இழுத்தார்கள் அல்லவா? கடைசியில் ஆலகால விஷம் தோன்றிய போது எல்லோரும் அதன் உக்கிரம் தாங்காமல் பயத்தில் ஓடிவிட்டார்கள். அப்பொழுது சிவபெருமான் தேவர்களின் கஷ்டம் நீங்குவதற்காக அந்த விஷத்தை கையிலே எடுத்து உண்டார். அந்த விஷமும் சிவபெருமானுடைய கண்டத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டது; அவரும் நீலகண்டன் என்று பெயர் பெற்றார். சகல ஜ“வராசிகளும் ரட்சிக்கப்பெற்றன."

"ஆமாம், அப்படித்தான் சொல்லியிருக்கிறது."

"சிவபெருமான் அப்படி உண்ணும்போது ஒரு சிறுதுளி விஷம் தவறி பூமியிலே வந்து விழுந்தது. அதன் பிறகுதான் பாம்புகளுக்கு வாயிலே விஷம் வந்தது, இல்லையா?"

"அதெற்கென்ன?"

"அப்படியானால் பாற்கடலை கடைந்தபோது ஆரம்பத்தில் வாசுகி வேதனை தாங்காமல் விஷம் கக்கியது என்று வருகிறதே! அது எப்படி?' என்றாள்.

எங்கள் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. அப்பா அப்படியே ஸ்தம்பித்து விட்டார். அம்மா சாப்பிட வாயைத் திறந்தவள் அப்படியே மூடாமல் பஸ்மினாவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

எனக்கு பஸ்மினா கேட்டதன் அர்த்தம் அப்போது பூரணமாக விளங்கவில்லை. அப்போது அவளுக்கு வயது பத்து இருக்கும். முறையாகப் படித்ததென்பது கிடையாது. ஆனால் அவளுடைய புத்திக் கூர்மையானது கட்டுக்கடங்காத குதிரையைப் போல திமிறிக்கொண்டு ஓடியது.

அன்றிரவு அப்பா அம்மாவுக்கு தனிமையில் சொன்னார்: "நான் என் தொழில்முறையிலும் சரி மற்றும்படியும் சரி எத்தனையோ குழந்தைகளைப் பாத்திருக்கிறேன். ஆனால் பஸ்மினா போன்ற ஒரு அறிவுத் தாகமுள்ள குழந்தையை நான் இதுவரை பார்த்ததே இல்லை.

அம்மா "இது கடவுளாகப் பார்த்து அவளுக்கு கொடுத்தது. நாங்கள் எங்களால் முடிந்தமட்டும் பஸ்மினாவை ஊக்கப்படுத்த வேண்டும்' என்றாள்.

"மேலைநாடுகளில் exceptionally gifted children என்று ஒரு பிரிவு இருக்கிறது. பஸ்மினா இதிலே அடங்குவாள். இவள் வந்து இங்கே பிறந்து இருக்கிறாளே? அதுவும் ஐந்து வயதிலேயே பெற்றோர் கேவலம் நூற்றிஐம்பது ரூபாய்க்கு கம்பளம் நெய்ய விற்று விட்டாளே! அமெரிக்கா போன்ற நாடுகளில் இதற்கென்று பிரத்தியேகமான பள்ளிகள் எல்லாம் உண்டு. ஸ்பெஷல் ஆசிரியர்களும் பயிற்சிகளும் கூட இருக்கின்றன. என்ன துரதிர்ஷ்டம்." என்றார் அப்பா.

"அப்ப நீங்கள் இவளுக்கு ஏதாவது செய்ய முடியாதா?"

"முயற்சி செய்து பார்ப்போம். அதுவரையில் எங்களால் இயன்ற வசதிகளை இங்கேயே செய்து கொடுப்போம்" என்றார் அப்பா.

இப்பொழுதெல்லாம் அப்பா புத்தகம் புத்தகமாகக் கொண்டுவந்து குவித்தார். ஆங்கிலப் புத்தகமும் தமிழ் புத்தகமுமாக பஸ்மினா வாசித்து தள்ளினாள். முழுப்பட்டினி கிடந்த ஒருத்தி ஆவலுடன் சாப்பிடுவதுபோல அவசர அவசரமாக வாசித்து முடித்தாள். படிப்பதென்றால் நுனிப்புல் மேய்வதுபோல் அல்ல. ஆழமாகக் கிரகித்துத்தான் படித்தான். அடிக்கடி அப்பாவுடன் படித்ததைப் பற்றி விவாதம் செய்வதிலிருந்து அதை நான் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

அவளுடைய ஞாபகசக்தி அசாதாரணமானது. ஒன்றைப் படித்தால் அது அவளுடைய மனத்தில் படம்போல ஒட்டிக்கொள்ளும். இயற்கை கொடுத்த வரப்பிரசாதம். ஒரு புத்தகத்தை இன்னொரு தடவை படிப்பது என்பதே கிடையாது. தேவையில்லை. எனக்குத் தெரிந்து கேக்ஸ்பியருடைய கிங் லியர் என்ற கதையை மாத்திரம் இரண்டு தரம் படித்தாள். அவளுக்கு அந்தக் கதையில் அமோகமான பிடிப்பு.

கம்புயூட்டர் விஷயமும் அப்படித்தான். அப்பாவுடைய கம்புயூட்டரில் அடிக்கடி தான் நினைப்பவற்றை டைப் பண்ணி வைத்துக் கொள்வாள். அவளுடைய கைவிரல்கள், கம்பளம் நெய்த அதே விரல்கள், கம்புயூட்டர் விரல் கட்டைகள் மீது அதீத விசையுடன் நர்த்தனமாடும். பள்ளிக்கூடத்து வாசலையே மிதிக்காத அவளுடைய மனத்திலிருந்து சிந்தனைக் கோவைகள் அழகிய ஆங்கிலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வெளியே வந்தவண்ணம் இருக்கும்.

ஒரு முறை அப்பா ஆபீஸ’ல் இருந்து வரும்போது தமிழ் கம்புயூட்டர் ப்ரோகிராம் ஒன்று கொண்டு வந்தார். அதை எங்கள் வீட்டுக் கம்புயூட்டரில் மாட்டி எப்படிச் செயல்படுத்துவது என்று எனக்கும் பஸ்மினாவுக்கும் விளக்கினார். இருபது நிமிடங்களில் எங்களுக்கு அது வேலை செய்யும் விதம் புரிந்துவிட்டது.

அப்பா என்னிடம் "எங்கே ஒரு வசனம் தமிழில் டைப் செய் பார்ப்போம்" என்றார். நானும் "இது ஒரு தமிழ் கம்புயூட்டர் ப்ரோகிராம்" என்று எழுதிக் காட்டினேன். இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து பஸ்மினாவை எழுதச்சொன்னார் அப்பா. அவள் எழுதிய வாசகம் கிட்டத்தட்ட பின் வருமாறு இருந்தது.

"மரம் மனிதனுடைய மிகச் சிறந்த நண்பன்; கடவுளுக்குச் சமானம். உலகிலேயே உயிர் வாழ்வனவற்றில் எல்லாம் மிகவும் பெரியது மரம்தான்; மிக அதிக காலம் உயிர் வாழ்வதுவும் அதுதான்; ஐயாயிரம் வருடங்கள்கூட சில மரங்கள் உயிர்வாழும். மரம் இல்லாவிட்டால் மனிதனுக்கு உணவு ஏது? மனிதனுடைய உயிர்நாடியே மரம்தான். பெய்யும் மழைகூட மரம் கொடுத்த வரம்தானே! ஒரு மரத்தை வெட்டும்போது மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். மரம் போனால் அவனும் போய்விடுவான்."

இதை ஒரு நிமிடத்தில் ஒரு பிழையுமில்லாமல் எழுதி முடித்தாள். அப்பா என்னைப் பார்த்தார். "பஸ்மினா வேறு எப்படி எழுதுவாள்?" என்பது போல இருந்தது அந்தப் பார்வை.

அப்பாவின் வேலை ஒப்பந்தம் முடிய இன்னும் ஆறே மாதங்கள்தான் இருந்தன. அப்பா முழு வேலையாக பஸ்மினாவை தத்து எடுப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலானார். இத்துடன் அமெரிக்காவில் அவளை ஒரு பிரதிதியேகமான பாடசாலையில் சேர்ப்பதற்கும் பல கடிதங்களை எழுதியபடியே இருந்தார்.

ஆனால் இது மிகவும் கடினமான வேலை. பாகிஸ்தானில் ஓர் இளம் முஸ்லிம் பெண்ணை தத்து எடுப்பதென்றால் அது அப்படி ஒன்றும் லேசான காரியமல்ல. எத்தனையோ பேரைப் போய் பார்க்க வேண்டும்; பேப்பருக்கு மேல் பேப்பராக நிரப்பிக் கொடுக்க வேண்டும் கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி நினைவூட்ட வேண்டும்.

இந்த வேலைகள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. எனக்கு பஸ்மினாவை விட்டு போக வேண்டி வந்துவிடுமோ என்ற கவலை பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது.

பஸ்மினாவுக்கு இந்தக் கவலை இல்லை. பகல் முழுக்க அவள் படித்துக் கொண்டிருப்பாள்; அல்லது கம்புயூட்டருடன் விளையாடிக் கொண்டிருப்பாள். சில வேளைகளில் தம்பிக்கு நீண்ட நீண்ட கதைகள் சொல்லி விளையாட்டுக் காட்டுவாள்.

அப்படித்தான் ஒரு நாள் சனிக்கிழமை. மஸ்பாஹ’ன் தொழுகை அழைப்பு தூரத்தில் கேட்டது. மத்தியான உணவு முடிந்து சற்று ஓய்வாக இருந்த நேரம். ஆனி மாதத்து வெய்யில் அனலாகக் கொதித்துக் கொண்டு இருந்தது. விளையாட்டுக்களைப்பு. வழக்கமாக நான் அந்த நேரம் தூங்குவதேயில்லை. படுத்தபடி என்னையறியாமல் சிறிது கண்ணயர்ந்து விட்டேன். யாரோ உலுக்குவதுபோல இருந்தது. திடுக்கிட்டு விழித்தேன். ஏதோ இனம் தெரியாத பயம் என்னைச் சூழ்ந்து கொண்டது.

"பஸ்மி, பஸ்மி" என்று கூப்பிட்டுக் கொண்டே வெளியே வந்தேன். பஸ்மினாவைக் காணவில்லை. கம்புயூட்டர் அறைக்கு ஓடினேன். அங்கே பஸ்மினா தலையை மேசைமேல் வைத்து சுருண்டு போய்கிடந்தாள். அவள அப்படித் தூங்கி நான் கண்டதேயில்லை.

"பஸ்மி" என்று மெள்ளத் தொட்டு எழுப்பினேன். அவன் தலை துவண்டு விழுந்தது. உடம்பெல்லாம் பதற "பஸ்மி" என்று கத்திக்கொண்டே அம்மாவிடம் நான் உள்ளே ஓடினேன்.

பிறகு நடந்தது எனக்கு முழுவதும் ஞாபகமில்லை. கனவுபோல் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. என் உயிருக்குயிரான பஸ்மினா சடுதியில் என்னைவிட்டுப் போய்விட்டாள். வந்த மாதிரியே போயும் விட்டாள்.

பஸ்மினாவின் உடலை இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்தார்கள். அப்பா அவளுடைய ஜனாஸாவில் எந்தவிதமான குறையும் வைக்கவில்லை. எல்லாம் முடிந்தபிறகு பிற்பாடு என் தம்பிதான் அதை எனக்கு சுட்டிக் காட்டினான்.

கம்ப்யூட்டர் ஒடிக் கொண்டிருந்தது. பஸ்மினா இறப்பதற்கு சில வினாடிகள் முன்பு எழுதிய வாசகங்கள் அதில் மின்னிக் கொண்டு இருந்தன.

"சூரிய கிரகணம் எனக்குப் பிடிப்பதில்லை. சில நிமிடங்கள் பூமியை அந்தகாரம் சூழ்ந்து கொள்கிறது. சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் புகுந்து சூரியனுடைய சக்தி வெள்ளத்தை ஏழரை நிமிடங்கள் தடுத்து விடுகிறது. இது இரவு வருவது போன்றதல்ல. எங்களுக்கு இரவு நடந்து கொண்டிருக்கும்போது இந்தப் பூமியின் இன்னொரு பகுதியை சூரியனுடைய ஒளிக் கதிர்கள் தாக்கிக் கொண்டிருக்கும். கிரகணத்தின்போதோ, அந்த ஏழரை நிமிடங்கள், சூரியனுடைய உயிரூட்டும் சக்தி பூமியை அடைவதேயில்லை! தடைபட்டு போகிறது. பூமி அந்த சக்தியை நிரந்தரமாக இழந்து விடுகிறது. அது ஈடு செய்யமுடியாத ஒரு நட்டம்.

"உஃகாப் பறவையை எனக்குப் பிடிக்கும். அதன் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதன் நீண்ட சிறகுகளம், வளைந்த மூக்கும், கம்பீரமும் வேறு எந்தப் பறவைக்கும் வரும்? ஆகாயத்தில் புள்ளிபோல வட்டமிட்டுக் கொண்டு நின்று இரையைக் கண்டதும் இறாஞ்சிக் கொண்டு சிறகைக் குவித்துக் கீழே விழுந்து, கூரிய நகங்களால் அதைப் பற்றி மேலெழும்பும் லாவகம் இதற்கு மாத்திரமே அமைந்தது. உஃகாப் பறவையும் இதற்கு மாத்திரமே அமைந்தது. உஃகாப் பறவையும் என்னைப் போலத்தால் அதற்கும் சூரியகிரகணம் பிடிப்பதில்லை. ஏனெனில்...."

நான் கம்ப்யூட்டரை பரபரப்பாகத் தட்டி மேலும் கீழும் தேடிப் பார்த்தேன். பஸ்மினா எழுதிய கடைசி வாசகங்கள் அவைதான்.

விஞ்ஞானிகள் பலரும் சூரியகிரகணத்தைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூட இந்த சக்தியிழப்பைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே! பஸ்மினாவுக்கு என்ன அது பற்றி அவ்வளவு கவலை, அந்த வயதில்? போகட்டும். உஃகாப் பறவைக்கும் சூரிய கிரகணத்துக்கும் என்ன சம்பந்தம்?

நானும் பின்னால் மேற்படிப்பு படித்தபோது இதுபற்றி ஆராய்ச்சிசெய்ததுண்டு. எல்லாப் புத்தகங்களையும் துருவித் துருவி படித்துவிட்டேன். பஸ்மினா விட்டுப்போன புதிர் அவிழ்க்காமலே கிடக்கிறது.

சூரிய கிரகணங்கள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தன. பஸ்மினாவை நான் மறக்கமுடியுமா? சிறுபிள்ளைத்தனமாக நானும் அவளும் அவசரமாக பீபள் மரத்தின் கீழ் செய்துகொண்ட பிரதிக்ஞையின்படி அவளை நான் மறக்காமலிருக்க பஸ்மினா செய்த சூழ்ச்சியா இது?

வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் சூரியகிரகணத்தின் நிழல் போல பக ஸ்மினா என்னுடம் சிறிது தூரம் நடந்து வந்தாள்; பிறகு மறைந்து விட்டாள். பஸ்மினா முடிக்காமல் விட்ட வாசகத்தின் தாத்பரியம் என்ன? இருபது வருடங்களாக எனக்கு நிம்மதியில்லை.

இதற்கு யார் விடை கூறுவார்கள்?

* * *

4

விழுக்காடு

முன்குறிப்பு:- நான் ஆபிரிக்காவில் ஐ.நா.வுக்காக வேலை செய்தபோது நடந்த கதை இது. ஊரும், பேரும் சம்பவங்களம் முற்றிலும் உண்மையானவை. அதற்கு நான் கொஞ்சம் உப்பு-புளியிட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து மணம் கூட்டியிருக்கிறேன். வேறொன்றுமில்லை. தயவுசெய்து கதை முடிந்தபிறகே பின்குறிப்பைப் படிக்கவும்.

அவருடைய பெர் ஹென்றிகே லோடா. இத்தாலியர். ஐ.நாவின் பிரதிநிதியாக மேற்கு ஆபிரிக்காவிலுள்ள சியராலியோனுக்கு வந்திருந்தார். நாற்பத்தெட்டு வயதுக்காரர். உயரம் ஐந்தரை அடியும், எடை நூற்றிமுப்பது கிலோவுமாக உருண்டையாக இருப்பார். கண் புருவங்கள் அடர்த்தியாகவும், வசீகரமாகவும் இருக்கும். அவர் நடந்து வருவதும் உருண்டு வருவதும் ஒன்றுபோலத்தான் தோற்றமளிக்கும்.

அநேக வருங்களுக்கு முன்பு அவர் ஓர் இத்தாலியப் பெண்ணை மணந்து பத்து வருடங்கள் வரை வாழ்க்கை நடத்தினார். பிறகு அலுத்துப்போய் அவளை விவாகரத்து செய்து கொண்டார். இப்பொழுது பதினெட்டு வயதில் மகன் ஒருத்தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அதற்கு பின்பு, அவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மாற்றல் கிடைத்த போது அங்கே அவர் ஒரு பிலிப்பினோ பெண்ணை, அவள் தேங்காய்ப்பாலில் செய்யும் கோழிக்கறியில் மோகித்து, மணந்து கொண்டார். அதுவும் இரண்டு வருடம்தான் நீடித்தது; பிறகு அவளையும் கோழியையும் ரத்து செய்து கொண்டார். இப்பொழுது 'ரீ பைண்ட்' செய்த புத்தகம்போல மறுபடியும் தன்னை பிரம்மச்சாரியாக புதுப்பித்துக் கொண்டு 'மாயப்பொய் பல கூட்டும்' பெண்களின் சகவாசத்தில் இனிமேல் எதுவரினும் 'விழுவதே' இல்லையென்ற திட சங்கல்பத்துடன் வந்திருந்தார். சிய்ராலியோனில் ஒரு பிரம்மச்சாரி தன் கற்பைக் காப்பது எவ்வளவு கடினம் என்ற விஷயத்தை அவருக்குயாரும் அப்போது உபதேசம் செய்திருக்கவில்லை.

அவர் பிரதிநிதியாக வேலை ஏற்பது இதுதான் முதல் தடவை. இதற்கு முன் பலநாடுகளில் அவர் உபபிரதிநிதியாக இருந்திருக்கிறார். நல்ல படிப்பாளி; வேலையில் உலக அளவில் பிரக்கியாதி பெற்றவர். சியரா லியோனுக்கு வரும்போது அவரிடம் ஒரு விசேஷமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த. அதில் பூரண வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் அவர் முதல் நாளிலிருந்து ஆவேசத்தோடு ஈடுபட்டார்.

உலகத்தின் நூற்றி அறுபத்தியேழு நாடுகளின் சுபிட்ச நிலையை எச்.டி.ஐ முறையில் ஐ.நா கணித்ததில், கனடா முதலாவது நாடாகவும், அமெரிக்கா இரண்டாவதாகவும், ஜப்பான் மூன்றாவதாகவும், சியரா லியோன் நூற்றி அறுபத்தியாறாவதாகவும் வந்திருந்தன. ஒரு நாட்டின் தராதரத்தை எச்.டி.ஐ என்று சொல்லப்படும் மனிதவள மேம்பாட்டு சுட்டெண் (Human Development Index) முறையில் கணிப்பது இந்தக் காலத்திய வழக்கம். இந்தக் கணிப்பில் மனிதனுடைய சராசரி வருமானம், படிப்பறிவு, வாழும் வயது எல்லாம் அடங்கும். சியரா லியோனுடைய சுபிட்ச நிலையை தனது பதவிக் காலத்தில் ஒரு புள்ளியிலும் புள்ளியளவாவது உயர்த்திவிட வேண்டும் என்ற மேலான குறிக்கோளுடன்தான் லோடா அந்த நாட்டின் லூங்கே விமான நிலையத்தில் வந்து தனது வலதுகாலை வைத்து இறங்கியிருந்தார்.

அவருக்கு ஒரு நல்ல வீடு ஓ.ஏ.யூ வில்லேஜில் அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. அது ஒரு பக்கம் 'சியரா' மலையைப் பார்த்தபடியும், மறுபக்கம் 'லம்லி' கடற்கரையை அணைத்தபடியும் ஒய்யாரமாக இருந்தது. ஒரு 'மென்டே' சமையல்காரனையும், 'புஃல்லா' காவல்காரனையும், 'ரிம்னி' தோட்டக்காரனையும் அவர் ஏற்பாடு செய்துவிட்டார். இந்த இந்த வேலைகளுக்கு இன்ன இன்ன இனத்தவரைத்தான் ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது அங்கே தொன்று தொட்டு வந்த மரபு. ஆனால் ஒரு நல்ல 'ஹவுஸ் மெய்ட்' மாத்திரம் அவருக்கு கிடைக்கவில்லை. வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும், அவருடைய ஆடையணிகளை கவனிக்கவும், வேறும் அத்தியாவசிய தேவைகளைப் பார்க்கவும் நம்பிக்கையான ஒரு பெண் வேலையாள் அவருக்கு தேவைப்பட்டது.

இத்துடன் பல பெண்களை அவர் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து பரீட்சித்துப் பார்த்து விட்டார். ஒருவராவது அதில் தேறவில்லை. சியரா லியோனில் இப்படியான வேலைகளுக்கு மிகவும் தேர்ச்சி வாய்ந்த பெண்கள் பலர் அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் விரும்பிய குணாதிசயங்கள் கொண்ட பெண் மட்டும் அவருக்கு எனோ லேசில் கிடைக்கவில்லை.

அப்பொழுதுதான் அவருடைய அலுவலக செயலதிகாரி அமீனாத்துவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அவள் தேர்வுக்கு வந்தபோது ஊழியர்கள் எல்லோருடைய கண்களும் அவளோடு போய்விட்டன. 'சலீர், சலீர்' என்று அவளுடைய பாதங்கள் கேட்காத ஒரு தாளத்துக்கு நடந்துவருவதுபோல இருந்தது. அவள் உடுத்தியிருந்தது சாதாரணமான ஏழை ஆபிரிக்கர்கள் அணியும் 'லப்பா' உடைதான். தலைமுடியை சிறுசிறு பின்னல்களாக பின்னி வளையம் வைத்துக் கட்டியிருந்தாள். முதுகை நேராக நிறுத்தி, கால்களை எட்டி வைத்து அவள் நடந்தது கறுப்பு தேவதை ஒன்று வழி தவறி வந்து விட்டது போல இருந்தது.

ஆபிரிக்கப் பெண்களின் அழகைப் பற்றி ஒன்று சொல்லவேண்டும். 'மெல்ல நட, மெல்ல நட, மேனி என்னவாகும்?' என்ற கவிதைகளுக்கெல்லாம் அங்கே வேலையில்லை. நிலத்திலே 'தாம், தாம்' என்று சத்தம் அதிரத்தான் நடப்பார்கள். சாமத்தியச்சடங்கு நேரத்தில், பூப்பெய்திய பெதும்பைக்கு சேலையுடுத்தி, சோடித்து, நகை நட்டெல்லாம் போட்டு அலங்காரம் செய்து, தலைநிறையப் பூ வைத்து 'குனியடி' என்று தாய்மார் தலையிலே குட்டி மணவறைக்கு அனுப்பி வைக்கும் கற்பின் கருவூலங்களை ஆபிரிக்காவில் காண முடியாது. தேர் வடம் போல 'உருண்டு திரண்டு' வஜ்ரமாகத்தான் அவர்களுக்கு கைகளும் கால்களும் இருக்கும். முதுகு நிமிர்ந்து, கண்கள் நேராக நோக்கும். பச்சரிசியை குத்தி வறுத்தெடுத்தது போல பொதுநிறத்துக்கும் மேலான ஒரு கறுப்பு. பார்க்கப் பார்க்க தூண்டும் அழகு. அப்படித்தான் இருந்தாள் அமீனாத்து.

ஆனால் அப்பேர்ப்பட்ட 'ஏரோபிக்ஸ்' அழகு கூட லோடாவிடம் விலை போகவில்லை. பாவம், போதிய முன் அநுபவம் இல்லையென்று அவளுக்கும் அந்த வேலையை லோடா கொடுக்க மறுத்துவிட்டார். சியரா லியோனின் ஜனத்தொகையில் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் எண்பது வீதத்தில் அமீனாத்துவின் குடும்பமும் அடங்கும். பதினொரு பேர் கொண்ட அவளுடைய குடும்பம் அவள் ஒருத்தியின் உழைப்பையே நம்பியிருந்தது. இரண்டு மாதகாலமாக அவள் இந்த வேலைக்காக அலைந்து கொண்டிருந்தாள். இந்த வேலையும் கிடைக்காவிட்டால் அவள் குடும்பம் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான்.

பிறந்தநாளிலிருந்து இன்றுவரை அவள் கண்டது கஷ்டம்தான். ஒரு மங்கிய விடிவெள்ளியை இன்னமும் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தாள். செக்பீமா என்னும் குக்கிராமத்தில்தான் அவள் பிறந்து வளர்ந்தாள். பரம ஏழையாகப் பிறந்தாலும் அவள் வனப்பில் கோடீசுவரியாக இருந்தாள். அவள் பதின்மூன்று வயதிலேயே பணமுடித்ததற்கான காரணம் அவளுடைய மயக்கும் அழகுதான்.

அறுவடை முடிந்த கையோடு அந்த வருடம் பருவமான பெண் பிள்ளைகளை காட்டில் கொண்டு போய் வைத்து தனிக் குடிசை போட்டு சில ரகஸ்ய சடங்குக செய்வது ஆபிரிக்காவில் வழக்கம். அந்த வருட சடங்குப் பெண்களில் அமீனாத்துவும் ஒருத்தி. சடங்கு முடிந்ததும் ஊர் வழமைப்படி இடுப்பில் மட்டும் லேஞ்சியளவு ஒரு துணியைக் கட்டிக் கொண்டு உடம்பு முழுக்க கசாவா மாவைப் பூசி நிர்வாணமாக ஊரைச் சுற்றியபடி இந்தப் பெண்கள் வரவேண்டும். ஊருக்கு மூத்த பெண்கள் ஆடிக்கொண்டும், அவர்கள் பிரலாபத்தை உரத்து பாடிக் கொண்டும் முன்னே செல்ல ஆண்கள் எல்லாம் ஓடி பெண்ணை யாராவது ஆண்பிள்ளை பார்த்து விட்டால் உடனேயே அந்தப் பெண்ணை அவன் மணம் முடிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம்.

அவள் ஊர்வலம் வந்த அடுத்த நாளே ம்பாயோ என்பவள் நாலு ஆடுகளை சீதனமாகக் கொடுத்து அவளை மணமுடிக்க வந்து விட்டான். அமீனாத்துவின் தகப்பனார் நாலு ஆடுகளை ஒருமிக்க சேர்த்து அவர் ஆயுசிலேயே பார்த்ததில்லை. அவருடைய மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா? அப்படித்தான் அவளுடைய இல்வாழ்க்கை திடீரென்று ஆரம்பித்து ஒரு பிள்ளையும் பிறந்தது. ஆனால், யெங்கிமா ஆற்றை கடந்து வேலை தேடிப்போன அவளுடைய புருஷன் மீண்டும் திரும்பி வரவேயில்லை. அமீனாத்துபிள்ளையையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் பெற்றோருடன் வந்து சேர்ந்து கொண்டாள்.

அதற்கு பிறகுதான் ஒரு மதுக்கடையில் நடனமாதுவாக அவள் சேர்ந்தாள். மது குடிக்க வரும் ஆடவர்களுடன் நடனமாடுவதுதான் அவள் வேலை. நடனம் அவளுடைய ரத்தத்தில் ஊறியிருந்தது கிடைக்கும் 'சம்பாவனை' அவள் குடும்பத்தை பராமரிக்க போதுமானதாக இருந்தது. அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டாவது பிள்ளை பிறந்தது. ('இது எப்படி?' என்று சமத்காரமான கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாது. 'கற்பு' பற்றி திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும் மேற்கோள் காட்டி வியாக்கியானங்கள் செய்பவர்கள் இல்லாத ஆபிரிக்காவில் அப்படித்தான். இப்படியும் நடக்கும்.)

டொங்கா வைரச் சுரங்கத்தில் வேலை செய்ய நூற்றுக் கணக்கான பேர் அவளுடைய கிராமத்தை விட்டு அள்ளுப்பட்டு போனபோது மதுக்கடை வருமானம் விழுந்தது. அமீனாத்து என்ன செய்வாள்? வறுமையின் கொடுமை தாளாமல் தனது குடும்பத்துடன் தலைநகரமான 'ப்ரீ ரௌனுக்கு வந்து சேர்ந்தாள். அப்போது அவளுக்கு வயது பத்தொன்பது தான். ஆனால் இங்கே பார்த்தால் இன்னும் மோசம். சிறு பெண்களெல்லாம் நடன மாதுக்களாக போட்டி போட்டுக்கொண்டு ஆடினர். இவளால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு நேரச் சாப்பாட்டிற்குக்கூட வழியில்லை என்று வந்துவிட்டது. இந்த நேரத்தில் அவள் ஆத்தாமல்போய் கீழிறங்கி வந்து சங்கைகெட்ட 'ஹவுஸ் மெய்ட்' வேலைக்கு மனுப்போட்டாள். இப்படியான ஒரு வேலையில் சேர்ந்தாலாவது அவளுடைய தரித்திரம் நிரந்தரமாக தன்னைவிட்டு ஓடிவிடக் கூடும் என்ற அளவில் அப்படிச் செய்து விட்டாள். பசியைத் தீர்ப்பதற்காக இந்த அவமானத்தைக்கூட அவள் தாங்குவதற்கு சித்தமாக இருந்தாள்.

காலையில் காரில் அலுவலகத்துக்கு போகும் போதும், மாலையில் திரும்பும்போதும் அந்தப் பெண் அவர் வீட்டு வாசலிலே பழியாய் கிடப்பதை லோடா அவதானித்தார். கடந்த நாலு நாட்களாக இது நடந்து வந்தது. கடைசியில் ஒருநாள் கார் சாரதியிடம் சொல்லி காரை நிறுத்தி அவளிடம் 'என்ன வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு அவள் "மாஸ்டர், எங்கள் நாட்டு வறுமையைத் தீர்ப்பதற்காக வந்த கடவுள் நீங்கள் என்று பேப்பர்கள் எழுதுகின்றன. நானோ ஒரு முறி 'கசாவாவுக்கும்' ஒரு கரண்டி 'பாம்' எண்ணெய்க்கும்கூட வழியில்லாத பரம ஏழை. என்னை நம்பி பத்துபேர் பட்டினியுடன் காத்திருக்கிறார்கள். எனக்கு வேலை கிடைத்தால் பதினொரு பேருடைய வறுமை தீரும். மாஸ்டர், எனக்கு இந்த வேலையை ஒருவாரத்திற்கு சம்பளமின்றி தந்து பாருங்கள். அதற்குப்பிறகு உங்கள் முடிவு" என்றாள்.

லோடாவுக்கு அவளுடைய நேர்மை பிடித்துக் கொண்டது. ஏழையென்றாலும் அவள் குழையாமல் நிமிர்ந்து நின்று கண்களைப் பார்த்து பேசியது பிடித்துக் கொண்டது. மிகவும் சொற்பமான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து, சிக்கனமாகத்தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை நிதானமாக நிறுத்தி நிறுத்தி சொன்னது பிடித்துக் கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய அறிவான கண்களும், ஆர்வமும் துணிச்சலும் அவருக்குமெத்தப் பிடித்துக் கொண்டது.

இப்படித்தான் அமீனாத்து அங்கே வேலைக்கு சேர்ந்தாள். ஒரு வார காலத்தில் வீட்டையே மாற்றி அமைத்து விட்டாள். வீடு எப்பவும் பளிச்சென்று இருந்தது. லோடாவுடைய பழக்க வழக்கங்களை அவதானித்து அதற்கேற்ற மாதிரி அவருடைய உடைகளைப் பேணி அந்தந்த நேரத்துக்கு அணிவதற்கு தகுந்தவற்றை தேர்ந்தெடுத்து வைத்தாள். ஒருமுறை ஒன்றை சொன்னால் ஆணியடித்ததுபோல அவளுடைய மூளையில் அது பதிந்துவிடும். லோடாவுக்கு தான் செய்த முடிவு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. அமீனாத்தும் அவளுடைய நல்லெண்ணத்தை கவர்வதில் முழுமூச்சுடன் செயல்பட்டாள்.

மனைவி இல்லாவிட்டாலும் லோடாவின் வீட்டு நிர்வாகம் இப்படி சீராகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அலுவலகத்து வேலையில் ஒழுங்கீனங்கள் மலிந்து கிடந்தன. ஒரு அடி ஏறினால் ஒன்பதடி வழுக்கியது. எச்.டி.ஐயை எப்படியும் உயர்த்தி விடவேண்டும் அவர் ஆசையில் மண் விழுந்துவிடும்போல இருந்தது. அவருடைய அபிவிருத்தித் திட்டங்களில் முதன்மையானவை பெண்கள் நலன்பேணும் திட்டங்களும், வறுமை ஒழிப்பு திட்டங்களும்தான். இவையெல்லாம் அரசாங்க ஒத்துழைப்புடன் நடக்க வேண்டியவை. ஆனால் அதிகாரிகளுக்கு இவற்றினால் ஒருவித லாபமும் இல்லையென்றபடியால் கிளித்தட்டு விளையாட்டு போல கோப்புகளை இங்குமங்கும் மாற்றி மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் ஒரு பயனும் காணவில்லை.

அதிகாரிகளுடன் ஒயாது சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தால் அங்கே நுளம்புகளுடன் இவருடைய போராட்டம் தொடரும். வீட்டைச் சுற்றி மருந்துகள் அடித்தும், நுளம்பு வலைக்குள் படுத்தும் கூட ஒன்றிரண்டு நுளம்புகள் அவரைப் பிரியமுடன் தேடி வந்துவிடும். சியரா லியோன் நுளம்புகள் மலேரியா மருந்துகளுக்கு பயப்படாதவை. மலேரியா மருந்தை மிகக் கிரமமாக சாப்பிட்டும் அவருக்கு ஒரு நாள் மலேரியா வந்துவிட்டது. இந்தக் காய்ச்சல் முந்திப்பிந்தி லோடாவுக்கு வந்ததில்லை. அங்கே அது எல்லாருக்கும் அடிக்கடி தடிமன் காய்ச்சல்போல வந்து வந்து போகும். இவரைப் போட்டு இது கண்ணும் கருத்துமாகப் பார்த்தாள். மலேரியா மருந்தை நேரம் தவறாமல் கொடுத்தாள். குவினைன் மரப்பட்டைகளையும், தோஃறா' இலையையும் போட்டு அவித்த குடிநீரை காலையும் மாலையும் அவருக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டினாள். அவளுடைய கரிசனம் லோடாவின் மனதை நெகிழவைத்தது.

உண்மையான ஊழியத்துக்கு எப்பவும் பயன் உண்டு அல்லவா? லோடா அவளுடைய சம்பளத்தை உயர்த்தினார்; சலுகைகளை அதிகரித்தார். அமீனாத்து உச்சி குளிர்ந்து போனாள். அவளுக்கு தன் எஜமானரிடம் உண்மையான பக்தியும் அசைக்க முடியாத விசுவாசமும் ஏற்பட்டுவிட்டது. 'லிம்பா' இனத்துப் பெண்களைப்போல் அவள் இனிமேல் லோடாவுக்காக தன் உயிரையும் கொடுப்பதற்கு தயங்க மாட்டாள்.

லிம்பா இனத்தவர்கள் பொதுவாக அழகுக்கும், விசுவாசத்திற்கும் பேர் போனவர்கள். அதிலும் பெண்கள் முற்றிலும் பழுக்காத நாவல் பழம் போன்ற நிறமும், செதுக்கிய சிலை போன்ற அழகும் கொண்டிருப்பார்கள். முந்திய ஜனாதிபதி பதவியேற்ற சமயம் லிம்பா இனத்தவர் எல்லாம் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு பதினாறு வயது நிரம்பாத யௌவன அழகியை பரிசாக அளித்தார்களாம். லோடாவும் இந்த லிம்பா அழகியின் உண்மையான சேவையில் மகிழ்ந்து போனார்.

நுளம்பைத் தொடர்ந்து இப்பொழுது ஒரு இலையான் அவர் வாழ்க்கையில் குறுக்கிவிட்டது. சியரா லியோனில் அம்பாரமாகக் காணப்படும் இதற்கு பேர் 'தும்பு' இலையான். பார்த்தால் மாட்டு இலையான் போன்று பெரிதாகத் தோன்றும். அது ஈரமாயிருக்கும் துணிமணியில் வந்து நைசாக முட்டை இட்டுவிட்டு போய்விடும். அந்தத் துணியை யாராவது அணிந்தால் அந்த முட்டை சருமத்துக்குள் போய் அங்கேயே பொரித்துவிடும். ஐந்தாறு நாட்களில் ஒரு கொப்புளம் தோன்றி உபாதை கொடுக்கத் தொடங்கும். கொப்புளம் சுண்டைக்காய் அளவு மருமன் ஆனதும் வலியோ தாங்க முடியாமல் போகும். சியரா லியோனுக்கு புதிதாக வருபவர்கள் இந்த தும்பு இலையானிடம் தப்பி போனது கிடையாது.

ஆனால் ஆபிரிக்கர்களுக்கு இது சர்வ சாதாரணம். அவர்கள் ஆயுள் பரியந்தமும் இந்த இலையானுடனேயே குடித்தனம் செய்து பழக்கப்பட்டவர்கள். லோடாவுக்கு இந்த தும்பு இலையான் பற்றிய சரித்திரம் ஒன்றும் தெரியாது. அது ஒருநாள் அவர் நடுமுதுகிலே குடிவந்து பெரிய கொப்புளமாகி நமைச்சல் கொடுக்கத் தொடங்கியது. இவர் ஒருநாள் கண்ணாடியை தன் பின்புறம் வைத்து முதுகைப் பார்ப்பதைக் கண்ட அமீனாத்து திடுக்கிட்டுவிட்டாள். உடனேயே இவருடைய உத்தவைக்கூட எதிர்பாராமல் வாஸ்லைன் கொண்டுவந்து மெதுவாக தடவிவிட்டாள். சிறிது நேரத்தில் நாவல்பழம் போல பழுத்த கொப்புளத்தில் புழு நெளிவது அவள் கண்களுக்கு தெரிந்தது. இரண்டு பெருவிரல்களையும் சேர்த்து நடுமுதுகில் வைத்து அமுக்கியவுடன் குண்டு மணியளவு கொழுத்த புழு ஒன்று வெளியே வந்து விழுந்தது. அவளுக்கு இது சர்வ சாதாரணம். இது போல் ஆயிரம் தடவை இதற்கு முன்பு அவள் இதைச் செய்திருக்கிறாள். லோடாதான் பாவம், கொஞ்ச நேரம் 'லொடலொடவென்று' ஆடிப் போய்விட்டார். தாங்க முடியாத முதுகு நோவு கனநேரத்தில் மறைந்துவிட்டது.

அவள் முரட்டுத்தனமாக முதுகிலே அமுக்கிய ஸ்பரிசம் இவர் நெஞ்சிலே போய் இனித்தது. இப்போதெல்லாம் லோடாவுடைய சிந்தனையை அடிக்கடி அமீனாத்து வந்து நிறைக்கத் தொடங்கினாள். ஒரு பதினேழு வயதுப் பெடியனைப்போல அவளுடைய இதயம் அல்லாடியது. இது என்னவென்று அவருக்கு வியப்பாக இருந்தது. ஒருநாள் சனிக்கிழமை பகல் நேரம். அன்று ஹமட்டான் காற்று பலமாக வீசியது. ஆகாயம் முழுவதையும் தூசிப்படலம் மறைத்துவிட்டது. பத்தடி தள்ளி நிற்பவரைக்கூட பார்க்க முடியாதபடி வானம் இருண்டுபோய் கிடந்தது. அவர் வழக்கம்போல கோல்ப் விளையாடப் போகவில்லை. மேற்கத்திய இசையை ஒலிநாடாவில் ஓடவிட்டு சுகமாக ரசித்தபடி ஏதோ எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அமீனாத்து தன் நீளமான கால்களை எட்டி வைத்துவிட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இக்கிரிப் பத்தைபோல் அடர்த்தியாய் வளர்ந்திருந்த சுருள்முடியை இரும்பினால் செய்த சிக்குவாங்கியால் ஒட்ட இழுத்து சிறுசிறு பின்னல்களாகப் பின்னி மடித்து லப்பாத் துணியினால் இறுக்கி கட்டியிருந்தாள் அவள்; தென்னம்பாளை வெடித்தது போன்ற அவள் பற்களுக்கு 'மாட்ச்சாக' கறுப்பு கழுத்திலே ஒரு வெண்சங்கு மாலை தொங்கியது. தன்னை மறந்து இசைக்கேற்ப மாலை தொங்கியது. தன்னை மறந்து இசைக்கேற்ப தன் உடலை அசைத்தபடி இயங்கிக் கொண்டிருந்தாள். நடனமாது அல்லவா? நடனம் தானாகவே அவளிடம் ஓடி வந்தது.

லோடா அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். புதுக்கப் புதுக்க அவளைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு. ஆபிரிக்க அழகையெல்லாம் மொத்தமாக குத்தகை எடுத்ததுபோல அவள் காணப்பாட்டாள். சிறு பிள்ளைபோல அவள் தன்னைமறந்து ஆடையை ஆரவாரமின்றி அசைத்தாடுவது அழகாக இருந்தது. இவர் அவளுடைய கண்களையே பார்த்தார். அவள் துணுக்குறவும் இல்லை; கீழே பார்க்கவும் இல்லை. திருப்பி இவர் கண்களை நிதானமாகப் பார்த்தாள். நல்லூர் சப்பரம் போல மெள்ள மெள்ள நகர்ந்து இவர் இருக்கைக்கு கிட்ட வந்தாள்; சாவதானமாக இவருடைய மேசையை மறுபடியும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். அப்பொழுது லோடா எட்டி அவளுடைய கையைப் பிடித்தார். அவள் அப்படியே அவர்மேல் சரிந்தாள்.

அவர்களுடைய திருமணம் ஆடம்பரமின்றி ஒரு கிராமத்து சர்ச்சில் நடைபெற்றது. வெகு நெருங்கிய சினேகிதர்களும், உறவுக்காரர்களும் மட்டுமே வந்திருந்தனர். அமீனாத்துவின் விருப்பத்திற்கிணங்க லோடா கொழுத்த மாடொன்றை அடித்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். 'ஜொலஃப் ரைஸ”ம்', புகைபோட்ட 'பொங்கா' மீனும், 'பாம்' எண்ணெய்க் குழம்பும் அந்த ஊர் முழுக்க மணத்தது. அந்த விருந்தைப் பற்றியே அவர்கள் ஒரு வார காலமாக கதைத்தார்கள். அவளுக்கு அடித்த யோகத்தை நம்ப முடியாதவர்களாக அந்த எளிய கிராமத்து மக்கள் பிரமித்துப் போய் நின்றார்கள். பரம ஏழையான அமீனாத்து தான் ஊதியத்துக்கு வேலை செய்த அதே வீட்டில் இல்லத்தரசியாக பதவியேற்றாள்.

லோடா தன் அந்தஸ்துக்கு ஏற்ப வாழ்வதற்கு அவளை வெகு சீக்கிரமே பழக்கி வைத்தார். அமீனாத்து காரோட்ட பழகிக்கொண்டாள்; இங்கிலாந்திலிருந்து விதவிதமான மேல்நாட்டு உடைகள் தருவித்து அணிந்துகொண்டாள். அவள் அவற்றைப் போட்டபோது கடைந்தெடுத்த கறுப்பு 'மாடல்' போல இருந்தாள். சீக்கிரத்திலேயே மீன்குஞ்சு நீத்தப் பழகுவதுபோல வெகு இயற்கையாக அவருடைய சமூக அந்தஸ்துக்கு ஏற்ப அவள் தன்னை உயர்த்திக்கொண்டாள். ஆனாலும் அவள் தனது இல்லத்து வேலைகளை தானே தொடர்ந்து செய்தாள்; ஒரு வேலைக்காரியை வைப்பதற்கு மட்டு ம தீர்ககமாக மறுத்துவிட்டாள்.

லோடாவினுடைய வாழ்க்கையானது இப்படியாக திடீரென்று கந்தர்வலோக வாழ்க்கையாக மாறிவிட்டது. தன் வாழ்நாளிலேயே இவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவருக்கு ஞாபகமில்லை. கிஷ்கிந்தையிலே சுக்கிரீவன் மாரிகாலம் முடிந்தபின்பும் ராமகாரியத்தை முற்றிலும் மறந்து அந்தப்புர போகத்தில் மூழ்கிக் கிடந்ததுபோல லோடாவும் தன் அலுவலக காரியங்களை அறவே மறந்தார். அவளோ வாலிபத்தின் உச்சியில் இருந்தாள்; இவருடைய 'பாட்டரியோ' கடைசி மூச்சில் இருந்தது. அவளுடைன் சுகித்திருப்பதே மோட்சம் என்ற நிலையில் 'விடுதல் அறியா விருப்பனன் ஆகி' அவள் காலடியில் உலகத்தை தரிசித்தவர் அலுவலகத்தை தரிசிக்கத் தவறிவிட்டார்.

சியரா லியோனின் எச்.டி.ஐயை அணுவளவேனம் உயர்த்தி விடவேண்டும் என்ற அவருடைய ஆரம்ப காரத்து ஆர்வமெல்லாம் போன இடம் தெரியவில்லை. இவரின் கீழ் வேலை பார்த்த அதிகாரிகள் எல்லாம் சங்கீத சீஸனில் முன்வரிசையில் உட்கார்ந்து சிரக்கம்பம் செய்யும் மகா ரஸ’கர்கள்போல இவர் சொன்னதற்கெல்லாம் தலையை 'ஆட்டு' 'ஆட்டு' என்று ஆட்டினார்களே ஒழிய காரியத்தில் தொழில்கள் மூலம் கிராமத்துப் பெண்களின் வருவாயை அதிகரிக்கும் அவருடைய சிலாக்கியமான திட்டம் படுதோல்வி அடைந்தது. மூலதனமாக அவர்கள் கொடுத்த உபகரணங்களும், பொருட்களும் கூட திருட்டுப் போயின. குதிரையை தண்­ர் காட்ட இழுத்துப் போகலாம்; குடிக்கப் பண்ண முடியுமா? இப்படியாக லோடா தன் மனதை தானே தேற்றிக் கொண்டார்.

அவருடைய பதவிக்காலம் முடிந்து வேறு நாட்டுக்கு மாற்றல் வந்தபோது லோடா திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். தான் சாதித்தது அவருக்கு பெருமை தருவதாக இல்லை. ஆனாலும், அலுவலகத்தில் செய்ய முடியாததை தன் சொந்த வாழ்க்கையில் சாதித்தது அவருக்கு கொஞ்சம் சமாதானமாக இருந்தது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் தரித்திரத்தில் உத்தரித்த ஒரு பெண்ணுக்கு அவர் வாழ்வு கொடுத்திருந்தார் அல்லவா? அவள் இன்று செல்வத்தில் திளைப்பது மட்டுமில்லாமல் அவருடைய இல்லத்துக்கும் அரசியாகிவிட்டாள். அவருக்கு புன்சிரிப்பு வந்தது. இப்படியான ஓர் அழகி அவர் வீட்டுக்கும், அவருடைய இதயத்துக்கும் ராணியானது அவருடைய அதிர்ஷ்டம்தான். இந்த ஒரு விஷயத்திலாவது சியரா லியோனின் எச்.டி.ஐ சிறிது உயர்ந்திருக்குமல்லவா?

புள்ளி விபரங்களை கரதலப் பாடமாக உய்த்திருந்த லோடா இங்கேதான் ஒரு மிகப்பெரிய தவறு செய்தார். அந்த வருடம் வெளியான எச்.டி.ஐ விபரங்களை சிறிது அவதானித்து நோக்குவாராயின் அவருக்கு தான் செய்த தவறு புரிந்திருக்கும். அவர் அமீனாத்தவை மணம் புரிந்ததினால் உள்ளபடியாக எச்.டி.ஐ. அணுப்பிரமாணமான அளவில் விழுந்துதான் போனது; கூடவில்லை.

காதல் கண்ணை மறைக்கும் என்று சொல்வார்கள் லோடா விஷயத்தில் அது அவர் மூளையையும் மறைத்து விட்டது.

பின்குறிப்ப :- உலகத்து நாடுகளில் தராதரத்தை கணிப்பதற்கு எச்.டி.ஐ முறையை ஐ.நா. கடைபிடிக்கிறது. ஒரு பெண் ஊதியத்துக்கு வேலை செய்யும் போது அவளுடைய ஊழியம் எச்.டி.ஐ கணக்கிலே சேர்க்கப்படுகிறது. அதே பெண் தனக்கு சம்பளம் கொடுக்கும் எஜமானரை மணம் முடித்து அந்த வேலையை சம்பளமின்றி செய்ய நேர்கையில் அவளுடைய உழைப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை. இதனால் எச்.டி.ஐ விழுக்காடு அடைகிறது. பெண்களுடைய ஊதியமில்லாத உழைப்பை கணக்கிலே சேர்க்காததால் ஏற்படும் முரண்பாட்டை இந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது என்று சிலம் சொல்லலாம். அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் பொறுப்பு.

* * *

5

பீஃனிக்ஸ் பறவை

நான் திருகோணமலை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிக்கிட்டு அர்லாண்டா விமான நிலையத்தில் வந்திறங்கினேன். இதற்குமுன் நான் வெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தவளல்ல. விமானக் கூடத்தில் இருந்த ஜனத்திரளில் என் மகனுடைய முகத்தைத் தேடியபோது எனக்கு பயம் பிடித்துக்கொண்டது.

ஸ்டோக்ஹோமில் நான் வந்திறங்கிய வருடம் 2018. என் மகன் என்னை விட்டு பிரிந்து ஸ்வீடனுக்கு படிக்கப்போன வரும் 1998. அப்ப அவனுகு வயது 15. என்னால் நம்பவே முடியவில்லை. இருபது வருடங்கள் என் ஒரே மகனைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறேன். இப்போது அவனுக்கு வயது 35; மணமாகி ஆறு வயதில் ஒரு மகனும் உண்டு.

நான் கண்களை நாலா பக்கமும் சுழட்டி தேடியபடியே வந்தேன் காணவில்லை. என்னைப் பிரியும் போது அவன் குழந்தைதான்; மீசை கூட அரும்பவில்லை. விடும்போது ஏர்போர்ட்டில் என்னைக் கட்டிப்பிடித்து கசக்கி அழுஅழுவென்று அழுதான். என் மனம் என்ன பாடுபட்டது! அப்போது அவர் இருந்தார். இப்ப அவரும் போய்விட்டார். நானும் வேலையிலிருந்து ஓய்வெடுத்து விட்டேன். என் மகன் எத்தனைதரம் டெலிபோனில் கதைத்தான்; எவ்வளவு கடிதங்கள். "அம்மா! நீங்கள் அங்கையிலிருந்து என்ன செய்யப் போறியாள்; இஞ்ச எங்களோடை வந்திடுங்கோ; உங்களுக்கு ஒரு குறையும் வராமல் பார்ப்போம்" என்று கெஞ்சியபடியே இருந்தான். எனக்கும் வேறு யார் இருக்கிறார்கள்? பிறந்த மண்ணைவிட்டு ஒரேயடியாக புறப்பட்டு விட்டேன்.

ஓர் இளம் கணவனும் மனைவியும் என்னை உற்றுப் பார்த்தபடியே கடந்து போனார்கள். என் மகனுடைய கண்கள் எப்படி இருக்கும்? குழந்தையாக இருந்தபோது மடியிலே கிடத்தி மணிக்கணக்காக அவன் கண்களையே பார்த்தபடி இருப்பேன். மகாபாரதத்தில் வரு ம அர்ஜுன் என்ற பேரையே அவனுக்கு வைத்திருந்தேன். என் மகன் என்னிடம் "உள்ள குப்பையெல்லாம் கொண்டு வர வேண்டாம். தேவையானதை மாத்திரம் கொண்டு வாங்கோ; இஞ்ச வைக்கவும் இடமில்லை" என்று பத்துத் தடவையாவது சொல்லியிருந்தான். அதனாலே வாழ்நாள் முழுக்க சேகரித்ததெல்லாவற்றையும் மனமின்றி துறந்துவிட்டு இரண்டேரெண்டு சூட்கேசுடன் வந்திறங்கினேன். என்னுடைய துணிமணிகள், புத்தகங்கள், இவர் ஞாபகமாக சில பொருள்கள், அவ்வளவுதான்.

தள்ளு வண்டியைத் தள்ளுவது கூட கஷ்டமாக எனக்குப் பட்டது. ஒரு சூட்கேஸ் நழுவி கீழே விழுந்தபடி இருந்தது. எங்கே போனான் இவன்? எனக்கு பதட்டமாக வந்தது. ஐந்து வருடமாக இவனும் பாவம்; என்ன கஷ்டப்பட்டு விட்டான்? ஸ்வீடன் நாடு மற்ற நாடுகள் போல அல்ல. ஜனத்தொகை விஷயத்தில் சரியான கண்டிப்பு. அவர்கள் ஜனத்தொகை 110 லட்சம். அந்தத் தொகை இந்தத்தானத்தை தாண்டாமல் வெகு கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் எனக்கு நிரந்தர குடியுரிமை கொடுத்தார்களாம்!

'அம்மா' என்ற குரல் கேட்டது. தமிழ்க் குரல்தான். தேனாக அது என் காதில் வந்து விழுந்தது. என் மகன்தான் ஓடோடி வந்து கொண்டிருந்தான். என்ன கண்கள்! ஆறடிக்கும் மேலே உயரமாக வளர்ந்து விட்டான். புதர்போல கட்டுக்கடங்காமல் இருக்கும் தலைமயிரை அடக்கி வாரி அழகாக விட்டிருந்தான். ஒரு டீ சேர்ட்டும் ஜ“ன்ஜும் அணிந்திருந்தான். அவனுக்கு குளிரே இல்லை. என்னைத் தொட்டுத் தொட்டு பார்த்துவிட்டு அப்படியே ஆகாயத்தில் தூக்கிவிட்டான். மெத்தென்று வெல்வெட் போல இருந்த அவனுடைய தேகம் இப்ப வஜ்ரமாக இருந்தது. பின்னாலேயே அவள் நின்றாள். பெயர் ஸ்வென்கா. முதன்முறையாக பார்க்கிறேன். இவனைப் போல அவளும் உயரம்தான். இயற்கையான சிரிப்பு அவளுக்கு இருந்தது. பொன் நிறத்தில் தலைமயிர். அசப்பில் பார்த்தால் சினிமாவில் நடிக்கக் கூடிய அழகோடு தென்பட்டாள். நான் அதிசயப்பட்டது அவளுடைய இடையைப் பார்த்துத்தான். ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். நீண்ட வழுவழுவென்ற கைகள் என்றாலும் உருண்டு திரண்டு வலுவாக இருந்தன.

'மொர்மோ, மொர்மோ' என்று என் பேரன் கையை இழுத்தான். அவனை ஆசையுடன் தூக்கி முகர்ந்தேன். முகத்தைச் சுழித்தான். 'ஹோர்கன்' என்று பேர் வைத்திருந்தார்கள்; வாயில் வராத பேர்.

நாங்கள் கதைத்துக்கொண்டு நிற்கும்போதே என்மருமகள் சிட்டுப்போல ஓடிப்போய் காரை எடுத்து வந்தாள். குதித்து இறங்கி கிலோ சூட்கேசுகளை பூவைத் தூக்குவதுபோல பட்பட்டென்று ஒன்றைக் கையால் தூக்கி காரிலே வைத்தாள்.

ஸ்வென்காதான் ஓட்டினாள். அர்ஜுன் ஒரு பக்கத்தில் இருந்து என் கைகளைப் பிடித்தபடி வந்தான். மற்றப் பக்கத்தில் என் பேரன். என் கண்களில் நீர் பனித்தது. முடிந்துபோன இருபது வருடங்கள் இனி திரும்பவும் வரப் போவதில்லை.

கார் சின்னதாக அடக்கமாக இருந்தது. முற்றிலும் சூரிய சக்தியிலேயே இயங்கிய அது 'குங்ஸ்காடன்' பிரதான ரோட்டிலே போய்க் கொண்டிருந்தது. ஒலி நாடாவில் உலகப் புகழ்பெற்ற 'இங்வார் கார்ல்ஸன்' பாடிய 'ஸ்வாலா, ஸ்வாலா' என்னும் பாடல் பைரவி ராகத்தின் சாயலில் ஒலித்துக் கொண்டிருந்தது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் போய் இப்ப எவ்வளவோ காலம். சாலையின் இரு மருங்கிலும் அடர்த்தியான மரங்கள். பாதையெல்லாம் வழித்துத் துடைத்ததுபோல நல்ல துப்புரவாக இருந்தது.

நான் வியந்த இன்னொரு காட்சி வழியிலே விளம்பர போர்டுகள் ஒன்றும் இல்லாததுதான். அர்ஜுனிடம் அது பற்றி விசாரித்தேன். அரசாங்கம் விளம்பரங்களையெல்லாம் பத்து வருடங்களாக ஒழித்து விட்டதாக அவன் சொன்னான். அதனால் பொருள்கள் மக்களுக்கு இருபது வீதம் மலிவாகவே கிடைக்கிறதாம். வர்த்தகத் துறை தொடர்ந்து மஞ்சள் பக்கங்கள் மூலம் விளம்பரங்களை இலவசமாக செய்வதற்கு அரசு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறதாம். 'இந்தப் புத்தி ஏன் மனுசனுக்கு முன்பே தோன்றவில்லை' என்று நான் நினைத்துக் கொண்டேன்.

வீடு வந்து சேர்ந்தோம். வீடும் மரச்கோலைகளினூடே ஆடம்பரமின்றி அடக்கமாக இருந்தது. என் மகன் தன் இடுப்பிலிருந்த 'ஐ.டீ. பெல்ட்டிலிருந்து' ஒரு மெல்லிய நீளமான பிளாஸ்டிக் குச்சியை இழுத்தான். கதவிடுக்கில் அதை உரசி கதவைத் திறந்து கொண்டான்.

நான் வந்து சேர்ந்த உடனேயே அர்ஜுன் செய்த முதல் காரியம் என் சார்பாக ஒரு ஐ.டீ.பெல்ட்டுக்கு விண்ணப்பம் செய்ததுதான். இதுதான் இங்கே எனக்கு அதிசயத்திலும் அதிசயம். இது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்; படித்துமிருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்தபோதுதான் அதன் உண்மையான தாக்கம் புரிந்தது. கர்ணனின் கவசகுண்டலம் போல இந்த ஐ.டீ. பெல்ட்டை எல்லோரும் கட்டியபடியே திரிவார்கள், படுக்கும் நேரம் தவிர. ஐந்து வயதுக் குழந்தையிலிருந்து அறுபது வயதுக் கிழவர் வரை இதைக் கட்டாமல் ஒருவரும் வெளிக்கிடுவதில்லை.

இங்கே காசு, கிரெடிட் கார்ட் எல்லாம் முற்றாக ஒழிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. காசையோ, கிரெடிட் கார்டையோ கண்டால் அதை ஆவலுடன் வாங்கித் தொட்டு தொட்டு பார்க்கிறார்கள். 'எங்கள் நாட்டில் எதற்கும் நாங்கள் கிரெடிட் கார்ட்தான் பாலிக்கிறோம்' என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். ஒரு மனித உயிர் பிறந்தவுடனேயே அதன் டீ.என்.ஏயையும், கைரேகையையும் ராட்சஸ கம்ப்யூட்டர்களில் பதிந்து ஒரு ஐ.டீ.நம்பர் கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த மனிதன் இறக்கும்வரை அவனைப் பற்றிய சகல விபரங்களும் அந்த நம்பரில் பதிவாகி விடும்.

என்னுடைய அடையாள அட்டை வந்தபோதுதான் நான் அதன் மகாத்மியத்தை உணர்ந்தேன். எங்கே போனாலும் என் அடையாளத்தை நிரூபிக்க இதைக் கொடுத்தால் போதும். அவர்கள் அதை கம்ப்யூட்டர் முனையில் சொருகினால் என்னுடைய சாதகம் பூராவும் தெரிந்துவிடும். வீட்டுக் கதவு, அலுவலகக் கதவு, கார்க் கதவு இப்படி எந்தக் கதவு திறப்பதற்கும் இதை ப்ரோகிராம் பண்ணி வைத்துக் கொள்ளலாம். ஒருவர் கார்டை இன்னொருவர் பாவிக்க முடியாது; கைரேகை காட்டி கொடுத்துவிடும். ஆனால் இதனுடைய முக்கியமான தாக்கம் என்னவென்றால் இது வந்தபிறகு அநேகமான வங்கிகளை இழுத்து மூட வேண்டி வந்ததுதான்.

பாதைக் கடையிலே ஒரு 'புல்புல்' ஐஸ் கிரீம் வாங்கினாலும் சரி, இரண்டு மாடிக் கட்டிடம் வாங்கினாலும் சரி உங்கள் அட்டையை கம்ப்யூட்டர் முனையில் சொருக வேண்டியதுதான். உங்கள் கணக்கிலிருந்து அவர்கள் கணக்குக்கு பணம் மாறிவிடும். வங்கிகள் அனேகமாக வெளிநாட்டினருக்கும், வணிகத்துக்கும் மட்டுமே பயன்பட்டன. தவணைமுறையில் பணம் கட்டுவதற்குக்கூட ஒருமுறை ஆணை கொடுத்து விட்டால் போதும் மாதாமாதம் பணம் மாறியபடியே இருக்கும்.

இதைவிட இன்னும் இரண்டு விசேஷங்கள் இந்த அடையாள பெல்ட்டில் இருந்தன. எந்தக் காடு, மலை, மேட்டிலிருந்தும் டெலிபோன் பண்ணவும், கிடைக்கவும் வசதி இருக்கிறது. ஒரு முனையில் முணு முணுத்தாலே போதும். மறுபக்கத்தில் துல்லியமாகக் கேட்டுவிடும். உலகின் எந்த மூலை முடுக்கிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம். அடுத்த விசேஷம், இந்தக் கார்டை வைத்து ஒருவர் தன் இருப்பிடத்தை கனகச்சிதமாக சட்டிலைட் மூலம் கணித்துவிடலாம். ஒரு ஐந்து வயதுக் குழந்தையை ஸ்வீடனில் கண்காணாத ஒரு பகுதியில் கொண்டு போய் விட்டாலும் அது இந்தக் கார்டை வைத்து வீடு தேடி வந்துவிடம். இங்கேயெல்லாம் தொலைந்து போவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். ட்யூசன் வைத்தால்கூட முடியாது.

இப்பொழுது எங்களுடையதும் முன்னேறிய நாடுதான். ஆனால் இவர்களைப் பார்த்தால் நாங்கள் இன்னும் இருபது வருடம் பின்தங்கிவிட்டது போலத்தான் எனக்குப் பட்டது. கண்ணால் பார்ப்பதெல்லாமே புதினமாக இருந்தது. சடுதியாக இந்தச் சூழ்நிலையை என்னால் சரிக்கட்ட முடியவில்லை. என் மகன் என்னுடைய வசதியில் மிகுந்த அக்கறையோடுதான் இருந்தான். இருந்தாலும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னைத் தடுமாற வைத்தன.

இவர்களுடைய ஆதாரசக்தி சூரியன்தான். ஒரு வீட்டிலே பிடிக்கும் சூரியசக்தி அந்த வீட்டிற்கு போதுமானதாக இருக்கிறது. தண்­ர் போதியது இருந்தாலும் சுழல் பாவிப்பு முறைதான்; மீதமான நீர் தோட்டத்துக்கு போய்விடும். சொட்டு நீர்முறையில் புல்லும், பூச்செடிகளும், மரங்களும் செழிப்பாக இருக்கின்றன. இருந்தாலும் எனக்கு ஒரே தண்ணியை திருப்பித் திருப்பி குடிக்கிறோம் என்று தெரிந்ததும் முதலில் கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருந்தது.

என்னை உண்மையில் திடுக்கிட வைத்த விஷயம் குளிக்கும் முறைதான். 'கதிற்றோன்' கதிர் அலைகளில் குளிப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. என்ன இருந்தாலும் நிறையத் தண்­ரில் சோசோவென்று குளிர்ந்து, நனைந்து, சோப் போட்டு குளிப்பதுபோல வருமா? இது குளித்ததுபோலவே இருக்காது. என் பேரன் சொல்கிறான் கதிரியக்கத்தில் குளிப்பது எங்களுக்கு மிகவும் நல்லதாம்; பக்டீரியாக் கிருமிகள் உடனுக்குடன் செத்துவிடுகின்றன; சருமம் புது ஊட்டச் சக்தி பெறுகிறது; தண்­ரும் மிச்சப்படுகிறதாம். ஆனால் குளித்தது போலவே இல்லையே?

மற்றது, சாப்பாட்டு முறைகள். சமையல் அடுப்பென்பதே கிடையாதே. எல்லாம் கதிரியக்கத்தில் சமைத்ததுதான். அதுவும் கம்ப்யூட்டரில் முதலிலேயே ப்ரோகிராம் பண்ணியபடி. சாப்பாடு சப்பென்றிருக்கிறது. ஆனால் எல்லாம் அளவுடன் செய்த சத்துள்ள உணவாம். ஆசைக்கு ஒரு கோப்பி கூடப் போட வழியில்லை. அதுவும் கம்ப்யூட்டர் போட்டதுதான். ஒருமுறை, நல்ல பாலும் சீனியும் போட்டு இஞ்சி கலந்த கடுங்கோப்பியொன்று குடிக்க ஆசையாக இருந்தது. கம்ப்யூட்டரை திருப்பித் திருப்பி நாலைந்து தடவை ப்ரோகிராம் பண்ணிப் பார்த்தேன்; சரிவரவில்லை. அலுத்துப் போய் அப்படியே விட்டுவிட்டேன்.

இது எல்லாத்துக்கும் ஈடுகட்டுவதுபோல என் பேரன் இருந்தான். அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆசை தீராது, சின்ன வயதில் என் மகன் இருந்ததுபோல அச்சாக இருப்பான். வந்த நாளில் இருந்தே என்னோடு ஒட்டிவிட்டான். எப்பவும் அவனுக்கு ஏதாவது கதை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

"மொர்மோ, மொர்மோ! சொல்லு மொர்மோ" என்றான் ஒருநாள் என் பேரன். "ஹோர்கன்" என்ற அவன் பேரை நான் எவ்வளவு முயற்சி செய்து சரியாக உச்சரித்தாலும் சிரித்துவிடுவான். ஆனபடியால் இனிமேல் நான் அவனை 'சொக்கன்' என்றே கூப்பிடுவதாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். அவனும் சம்மதித்தான். இவன் எனக்கு சொக்குப் பொடி போட்டுவிட்டதால் சொக்கன் பொருத்தமாகத்தான் இருந்தது.

அவனுடைய கண்களும் என் மகனுடையது போலவே அகன்று இருக்கும். தலைமயிர் தாயினுடையதைப்போல் தங்க நிறம். அவனுடைய சருமம் கடைந்தெடுத்த வெண்ணெய் என்பார்களே அப்படி இருக்கும். பார்க்கும்போதெல்லாம் வாரிக் கொஞ்ச வேண்டும்போல ஆசை தூண்டும். ஆனால் இடம் கொடுக்க மாட்டான். லஞ்சம் கொடுத்தால்தான் உண்டு.

இங்கே பள்ளிகள் வாரத்திற்க ஒரு முறைதான். மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் மூலமாக பாடங்களை படித்து விடுவார்கள். கம்ப்யூட்டர் மூலமாகவே ஆசிரியரும் தொடர்பு கொண்டு வீட்டுப் பாடங்களை கொடுப்பார். லெமிங் என்ற மிருகம் பற்றி ஒரு ப்ரொஜெக்ட் எழுதவேணும் என்றான் சொக்கன். என்னிடம் அதுபற்றி சொல்லும்படி தொந்தரவு செய்து கொண்டேயிருந்தான். "நீ கம்ப்யூட்டரைப் பார், பிறகு புத்தகத்தை படி. அதற்குப் பிறகு நான் சொல்லித் தருகிறேன்" என்றேன். "இல்லை, மெர்மோ! நீ சொல். கதைபோல சொல்; நான் பிறகு எழுதுகிறேன். ப்ளீஸ்" என்றான், கண்களை அகல மருட்டி, இதற்கு மறுப்பு சொல்ல என் இதயம் இடம் கொடுக்குமா?

"லெமிங் ஒரு அப்பாவிப் பிராணி. ஸ்வீடன் நோர்வே போன்ற நாடுகளில் மிகுந்து காணப்படும். ஐந்து அங்குல நீளம்தான் இருக்கும். கட்டைக்கால், உருண்டையான தலை, சாம்பல் நிறம், இப்படியாக பார்ப்பதற்கு 'ஐயோ' என்று இருக்கும். புல், பூண்டு, தாவரம் எல்லாம் சாப்பிடும். எவ்வளவு குட்டிகள் போடும், தெரியுமோ? ஒரு வருடத்திற்கு பத்து குட்டிகள் வரை ஈனும்.

"ஆனால், பாவம் அவைக்கு பெரிய சோதனை. மூன்று நாலுவருடங்களில் அவைகளுடைய பெருக்கம் நாடு தாங்காது. சாப்பாடு போதாமல் போய்விடும். அப்ப அவையெல்லாம் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்துபோய் அப்படியே கடலில் மூஷ்கிச் செத்துப்போகும்."

"ஐயோ, பாவம்! மொர்மோ, எல்லாம் செத்துப் போகுமா?" என்றான் ஹோர்கன். அவன் கண்கள் இப்ப கொஞ்சம் கலங்கி விட்டன.

"கடலுக்குப் போன எல்லாம் செத்துப் போகும். மிஞ்சியிருக்கிறவை மறுபடியும் பெருக ஆரம்பிக்கும். நாலு வருடங்களில் பழையபடி நாடு தாங்காது. அப்படியே அவையும் போய் கடலில் விழுந்து விடும். இப்படியே இது தொடரும்."

சொக்கன் கொஞ்சநேரம் யோசித்தபடியே இருந்தான். நான் கதையை மாற்ற எண்ணி சொன்னேன். "எங்கள் ஊரில் பெரும் புலவர் ஒருத்தர் இருந்தார். அவருக்கு லெமிங் என்றால் உயிர். அவர் அதைப் பற்றி பாடி இருக்கிறார். நீ அதை எழுதினால் ப்ரொஜெக்டில் உனக்குத்தான் அதிக மதிப்பெண் கிடைக்கும்" என்றேன்.

ஆர்வத்தோடு "சீக்கிரம் சொல், மொர்மோ" என்றான்.


** இதன் தொடர்ச்சி VAMSA4.MTF ல் வருகிறது.**

த்துக் குதித்து
எங்கே செல்கிறீர்கள்?
வைத்த சாமானை எடுக்க போவதுபோல்
வழிமேல் குறிவைத்து
ஓடுகிறீர்களே,
ஏன்?
போகும் வழியில் உள்ள
புல், பூண்டு தாவரம் எல்லாம்
வதம் செய்து விரைகிறீர்களே


** VAMSA3.MTFன் தொடர்ச்சி**

ஓ, என் லெமிங்குகளே,
ஆயிரக் கணக்கில்
கூட்டம் சேர்த்து
குதித்துக் குதித்து
எங்கே செல்கிறீர்கள்?
வைத்த சாமானை எடுக்க போவதுபோல்
வழிமேல் குறிவைத்து
ஓடுகிறீர்களே,
ஏன்?
போகும் வழியில் உள்ள
புல், பூண்டு தாவரம் எல்லாம்
வதம் செய்து விரைகிறீர்களே
என்ன அவசரம்?
அரைநொடியும் ஆறாமல்
வயல்வெளி தாண்டி
ஆற்றையும், குளத்தையும்
நீந்திக் கடந்து
ஓடிக் கொண்டிருக்கிறீர்களே
கொஞ்சம் உங்களை
ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூடாதா?
கடலை நீங்கள் அடைந்ததும்
கால்கள் துவள
நீந்தி நீந்தி
மாய்ந்துகொள்ளப் போகிறீர்களே!
வரும் சந்ததிகளுக்கு
வழிவிடும் தியாகிகளே!
சற்று நில்லுங்கள்
உங்கள் முகங்களை
நான்
இன்னொரு முறை
பார்த்துக் கொள்கிறேன்,
நினைவில் வைக்க.


சொக்கன் யோசித்தபடியே இருந்தான். அவனுடைய சிறிய வதனம் வாடிவிட்டது.

"மொர்மோ, ஏன் இந்த லெமிங்குகள் இப்படி சாக வேணும்?"

"இவை அபூர்வமான பிராணிகள். தங்கள் சந்ததிகளுக்கு வழிவிட தங்களையே அழித்துக் கொள்ளுகின்றன. எவ்வளவு தியாக மனப்பான்மை?"

"மொர்மோ, வேறு மிருகங்கள் அல்லது பறவைகள் இப்படி இருக்கா?

"எனக்கு தெரிந்த மட்டில் மிருகம் கிடையாது. ஆனால் கிரேக்க புராணங்களில் ஒரு கற்பனைப் பறவை உண்டு; பெயர் பீஃனிக்ஸ். அரேபியாவின் பாலைவனங்களில் இது காணப்படும். ஒரே ஒரு பறவைதான்; இதற்கு துணையும் இல்லை; முட்டையும் இல்லை. ஐந்நூறு வருடங்கள் வரை ஜ“விக்கும். அதற்குப் பிறகு தானே சுள்ளிகள் பொறுக்கி அடுக்கி சூரிய வெப்பத்தில் பற்ற வைத்து அந்த சிதையில் விழுந்து தன்னை மாய்த்து சாம்பலாகிவிடும். அதற்கு பிறகு அந்த சாம்பலில் இருந்து இன்னொரு பீஃனிக்ஸ் பறவை தோன்றி இன்னொரு ஐந்நூறு வருடங்கள் வாழுமாம்."

"என்ன மொர்மோ, எல்லாம் இப்படி செத்துப் போகிற கதை சொல்கிறாய்!" என்று அலுத்துக் கொண்டான்.

"என் குட்டிப் பேரனே, பிறக்கும் உயிர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு இறக்கத்தானே வேண்டும். அதுவும் இந்த உயிர்கள் எவ்வளவு உயர்ந்தவை. இவை தங்கள் சந்ததி வளர்வதற்காக தங்களையே மாய்த்துக் கொள்கின்றன. பழசு போனால்தான் புதியது வரும்."

என் பேரன் கொஞ்ச நேரம் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்தான். பிறகு "ஹால் காவ்ரன்! நீ பழசு, போ" என்று சொல்லி என் கன்னத்தில் தன் சின்னக் கையால் இடித்துவிட்டு ஓடிப் போனான்.

நான் சொன்ன கதையின் உண்மையை சோதிக்கும் படியான ஒரு திடுக்கிடும் சம்பவம் சீக்கிரத்திலேயே நடந்தது. உலகிலேயே மிகவும் முன்னேறிய நாடு ஸ்வீடன். அமெரிக்காவும், ஜப்பானும்கூட சில விஷயங்களில் பத்து வருடங்கள் பின் தங்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு கருணை மரணம் (Euthansia) ஒரு உதாரணம். ஆற்றொணாக் கொடுநோயினால் துன்புறுபவர்களும், தீராதவியாதி வந்தவர்களும், கருணை மரணத்துக்கு விண்ணப்பிக்க ஸ்வீடனில் சலுகை உண்டு. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உலகத்திலே எங்கும் காணாத ஒரு ஆச்சரியமான வழக்கம் கடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின் முழு ஆதரவோடும் இங்கே நடந்து கொண்டிருந்தது.

எனக்கு இந்த நாடு பிடித்துவிட்டது. என்ன மாதிரி சுற்றுச்சூழலை பேணிகிறார்கள்? எப்படி துரிதமாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை தங்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள்? ஆனாலும், சில விஷயங்களை என்னால் ஜ“ரணிக்க முடியவில்லையே! பக்கத்து வீட்டிலே ஒரு பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. முதன்முறையாக எனக்கும் சேர்த்து ஒரு அழைப்பு வந்திருந்தது. அது என்ன மாதிரி கொண்டடாட்டமென்று யாராவது முன்பே எனக்கு எச்சரிக்கைசெய்திருக்கலாம். அப்படியானால் நான் போவதைத் தவிர்த்து இருப்பேன்.

ஹென்னிங்ஸன் அவருடைய பெயர். எழுபது வயதுக் கிழவர். அவருக்குத்தான் பிறந்த தினம். இருபதுபேர் மட்டில் வந்திருந்தார்கள். பெரிய கேக்கில் ஏழு மெழுகுவர்த்திகள் கொழுத்தி வைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் பாட்டுப் பாடி, வழக்கம்போல கேக் வெட்டி சாப்பிட்டு, அதற்குப் பிறகு அதிவிசேஷமான சாம்பெய்ன் மது அருந்தி வெண்ணெய் கட்டியும் சாப்பிட்டோம். பிற்பாடு ஹென்னிங்ஸன் ஒரு சிற்றுரை ஆற்றினார். அதில் தான் எழுபது ஆண்டுப்பிராயம் அடைந்து விட்டதாகவும், பூரண ஆரோக்கியத்துடன் நிறைந்த வாழ்வு வாழ்ந்ததாகவும், இனிமேல் கருணை மரணத்தை தழுவ முடிவு செய்ததாகவும் சொன்னார். எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஒருவர் கண்களிலும் நீரில்லை. அவருடைய சொந்தப்பிள்ளைகள்கூடகவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனக்கு அந்தக் காட்சி மனசைப் பிழிந்தது.

வழக்கமாக வந்த விருந்தினர்தான் பரிசுகள் தருவது வழக்கம் இங்கே பிரியாவிடை முகமாக கிழவர்தான் பரிசுகள் கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பரிசளித்தார். முன்பின் தெரியாத எனக்குக்கூட மூன்றாம் குஸ்ராவ் மன்னர் காலத்திய நாணம் ஒன்றை தந்தார். குஸ்ராவ் மன்னர் பில்லாத நாயணம் அது என்று பின்னால் தெரிந்து கொண்டேன். விருந்தின் முடிவில் இரண்டு டாக்டர் தயாராக இருந்த ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.

அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. முழு ஆரோக்கியத்துடனும், புத்தி சுவாதீனத்துடனும் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட முடிவு எடுப்பது சரிதானா? அரசு கூட இதை ஆதரிக்கிறதே! அரசாங்கத்தின் வாதமோ ஆணித்தரமாக இருந்தது. ஸ்வீடனில் இப்போது சராசரி வயது ஐம்பதுக்கு மேல் போய்விட்டது. இளைஞர் சமுதாயம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனபடியால் அரசு எழுபது வயதிற்க மேற்பட்டவர்கள் இப்படி விண்ணப்பம் செய்வதை வரவேற்கிறது. ஒருவர் இறந்தவுடன் அவருடைய எண் கம்புயூட்டரிலிருந்து நீக்கப்படுகிறது. உடனே அந்த இடத்தை ஒரு புதிதாகப் பிறக்கும் குழந்தை நிரப்பிவிடுகிறது. ஹென்னிங்ஸன் ஒரு விஞ்ஞானி. அவர் கண்டுபிடித்த சித்தாந்தங்கள் இன்றும் பாடப்புத்தகங்களில் இருக்கிறதாம். அவர் சாகவேண்டி அப்படி என்ன அவசியம்? எனக்கு இது மிகவும் அநியாயமாகபட்டது. எங்கள் இதிகாசங்களில் பிராயோபவேசம் என்று சொல்லியிருக்கிறது. பாரதப்போர் முடிவில் வில்லுக்கு அதிபதியான விதுரன் என்ன செய்தார்? காட்டிலேபோய் தர்ப்பைமீது படுத்து பிராயோபவேசம் செய்துகொண்டார். ஏன், சந்திர வம்சத்து மன்னர் யயாதி செய்தது என்ன? எவ்வளவு சுகம் அனுபவித்தாலும் யயாதிக்கு போதவில்லை. கெஞ்சிக்கூத்தாடி மகனிடம் இளமையை கடன் வாங்கிக் கொண்டார். இன்னொரு மூச்சு அனுபவிக்க வேண்டும் என்று ஆசை. பிறகு ஒரு ஆயிரம் வருடங்கள் அனுபவித்தார். அப்படியும் போதவில்லையாம். கடைசியிலே எல்லாவற்றையும் துறந்து காட்டிற்கு போய் உயிரைவிட்டார்.

இரவு இரண்டு மணி. வெளியே பார்த்தேன். சூரியனுடைய கதிர்கள் கீழ்வானத்தில் பரவிக் கிடந்தன. அப்படியே உறங்கி விட்டேன். இந்த சம்பவம் பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டது. ஆனால் மகனோ, என் மருமகள் ஸ்வென்காவோ இதை பெரிதுபடுத்தவில்லை. என் மருமகள் போல ஒரு பெண் இந்த உலகத்தில் கிடைப்பது அபூர்வம். எப்பவும் அவளுக்கு சிரித்தபடியிருக்கும் கண்கள். ஆனால் சில சில்லறை விஷயங்கள்தான் எனக்குப் பிடிபடுவதில்லை. சொக்கன் பதியென்று ஓடிவந்து சாப்பாடு கேட்பான். ஸ்வென்கா கம்புயூட்டர் நம்பரை மட்டுமே சொல்லுவாள். பாவம், அவனே செய்து சாப்பிட வேண்டுமாம். தங்கள் வேலைகளை தாங்களே செய்யவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.

மூன்று நாள் சென்று ஹென்னிங்ஸனுடைய சாம்பலை ஒரு மரப்பேழையில் வைத்து கொண்டு வந்து பக்கத்து வீட்டில் கொடுத்தார்கள். அதை தோட்டத்திலே ஒரு நல்ல இடமாகப் பார்த்து அவர்கள் புதைத்து அதன் மேல் ஒரு 'பேர்ச்' செடியையும் நட்டார்கள். வில்லியம் கிறிஸ்ரர் ஹென்னிங்ஸன் என்ற விஞ்ஞானி தானாகவே 'பேர்ச்' செடிக்கு உரமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

எங்களுடைய வீட்டைப்பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஸ்வீடனில் தொண்ணூறு வீதம் வீடுகள் எங்கள் வீட்டைப்போலவே இருக்கின்றன. நடுவீட்டில் வரவேற்பறையும், சமையல், சாப்பாட்டு அறைகளும், ஜிம் (தேகப்பியாசம்) அறையும் இருக்கும். மேலே படுக்கை, குளியல் அறைகள். எல்லோருக்கும் கம்புயூட்டர் மூலமாகவே நடைபெறும்.

ஸ்வென்கா முகம் சுழித்தோ, மனம்வருந்தி அழுதோ நான் கண்டது கிடையாது. முன்பே கூறியபடி அவளுக்கு எப்பவும் மலர்ந்த முகம்தான். தற்செயலாக அவள் ஒருமுறை அழுததை நான் பார்க்க நேரிட்டது. எனக்கு அடிவயிற்றை என்னவோ செய்தது.

ஒருநாள் வழக்கம் போல மூன்றுபேரும் கீழேயுள்ள ஜிம்மில் எரோபிக்ஸ் ஒரு மணித்தியாலம்வரை செய்துவிட்டு வந்தார்கள். மரக்காலணிகளுடன் அவர்கள் நடந்து வந்தபோது. 'டக், டக்' என்று வடிவாகத்தான் இருந்தது. என் மகனைப் பார்த்தேன். என்ன அழகாக இருக்கிறான். அந்தக் கண்களுடைய ஒளி என்ன சுபாவமாக வீசுகிறது. ஸ்வென்கா 'லியோரார்ட்' உடுப்பில் உயராமாக தோன்றினாள். என் கண்ணே பட்டுவிடும் போல இருந்தது. சிறுதுளி வியர்வை பிரகாசிக்க அப்ஸரஸ் போலத்தான் வந்தாள். அவளுக்கு ஆறுவயதுப் பையன் இருப்பதாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? கனநீர் பற்றி ஆராய்ச்சி செய்கிறாளே என்று எண்ணுவேன்.

இவளுடைய இடை என்ன இப்படி இருக்கிறது. பதினேழு வயசுப் பெண்போல? ஒரு நாள் நான் கேட்டுவிட்டேன். அவள் சிரித்துவிட்டு சொன்னதைக் கேட்ட நான்தான் அதிர்ச்சியடைந்தேன். அர்ஜுன்கூட எனக்கு இதுவரை இதைப்பற்றி சொல்லவில்லையே!

என் மகனுக்கு 29 வயது நடக்கும்போது இவர்கள் மணம்செய்து கொண்டார்கள். முதலில் என்னமாதிரி குழந்தைவேணும் என்று தீர்மானித்துக் கொண்டார்களாம். இவள் தங்கநிறத் தலைமயில் வேண்டும் என்றாள்; அர்ஜுனோ பெரிய நீலக்கண்கள் கொண்ட ஒரு ஆண்மகவு என்றானாம். கருவங்கியிலே போய் தங்கள் கருக்களைக் கொடுத்தார்கள். அவர்கள் லபோரட்டரியில் கருக்களை இணைத்து கம்புயூட்டர் மூலம் கணித்து சிசு எதிர்காலத்தில் எப்படி பரிமளிக்கும் என்று கூறிவிடுவார்கள். இவர்கள் போய் சிசுக்களைக் காட்டினார்களாம். நோய், நொடி இல்லாத ஆரோக்கியமான நிலையில் தங்கத்தலைமயிரும், நீலக்கண்களும் கொண்ட ஒரு ஆண்சிசுவை இவர்கள் தெரிவு செய்தார்களாம்.

அதற்கு பிறகு இரண்டு மாதம் சிசு லபோரட்டரியிலேயே வளர்ந்தது. பிறகுதான் சங்கடம். செவிலித்தாயைத் தேட வேண்டும். ரஸ்யாவில் இருந்து ஏழைப்பட்டாளம் இதற்காகவே வருவார்கள். ஒரு பிள்ளையை ஐந்து மாதம் வரை சுமப்பதற்கு சுவை கூலி கேட்பார்கள். ஐந்துமாத முடிவில் பிள்ளையை சிசேரியன் முறையில் வெளியே கொண்டு வந்துவிடுவார்கள். பிறகும் இன்னொரு இரண்டு மாதம் குழந்தை சூட்டுப் பேழையில் வளரும். அதற்குப் பிறகுதான் குழந்தையை கையிலே தூக்கி கொடுப்பார்கள். அப்படித்தான் ஹோர்கன் பிறந்ததாக அவள் கூறினாள்.

"அப்ப, நீ பெறவே இல்லையா?" என்று கேட்டேன், அதிர்ந்துபோய்.

"ஹோர்கன் உங்கள் மகனுடைய கருவும், என்னுடைய கருவும் சேர்ந்து உண்டான பிள்ளை. முழுக்க முழுக்க எங்கள் பிள்ளை; ரஸ்யாக்காரி வெறும் சுவை கூலிக்காரிதான். அவளுக்கு நாங்கள் ஒப்பந்தப்படி ஐந்து மாதங்களுக்கு 20000 யூரோடொலர் கொடுத்தோம். அவளுக்கு இது பெரிய காசு; இரண்டு வருடத்திற்கு போதுமானது" என்றாள். ஸ்வென்காவின் உடம்பின் லாவண்யம் எனக்கு அப்போதுதான் முற்றிலும் புரிந்தது.

அன்று ஜிம்மிலிருந்து வந்து கம்புயூட்டரில் அன்றைய முக்கிய செய்திகளைப் படித்தாள். இங்கே பத்திரிகைகள் வீட்டுக்கு வருவது கிடையாது. சந்தா கட்டிவிட்டால் வேண்டிய செய்திகளை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். எவ்வளவு பேப்பர் மீதமாகிறது?

அடுத்து, கம்புயூட்டரில் வந்த ஈமெயில் கடிதங்களை படித்துவிட்டு திடீரென்று அழத் தொடங்கிவிட்டாள். அர்ஜுன் ஓடிவந்தான். அவனும் பார்த்துவிட்டு திகைத்துப்போய் சிறிது நேரம் நின்றான். பிறகு ஸ்வென்காவைத் தேற்றினான். அவளுடைய அழுகை அடக்க முடியாமல் நீண்டுகொண்டே போனது.

விஷயம் இதுதான். இவர்கள் இரண்டாவது பிள்ளை பெறுவதற்கு போட்ட மனுவை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அது ஒரு பெண் குழந்தையாம்; உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம். கறுப்பு தலை மயிரும், கபிலநிறக் கண்களுமாக இருக்குமாம். கரு உற்பத்தியான நாளிலிருந்து மூன்று வருடமாகிவிட்டதாம். "எப்போ இவர்கள் அனுமதி தரப்போகிறார்கள்? இது என்ன அநியாயம்! என் சிநேகிதிகள் எல்லோருக்கும் கிடைத்துவிட்டதே! எனக்கு மட்டும் ஏன் இப்படி? இதைக் கேட்பாரில்லையா?" என்று விம்மி விம்மி அழுதாள்.

அர்ஜுன் அவளைத் தேற்றி எல்லாவற்றையும் விளக்கினாள். கம்புயூட்டரில் அவர்கள் விண்ணப்பம் இருக்கிறது. ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் அங்கே பதிவாகிறது. கம்புயூட்டர் இவற்றை கணக்குப் பண்ணிக்கொண்டே வரும், அவர்கள் முறை வந்ததும் அனுமதி தானாகவே கிடைத்துவிடுமென்று ஆறுதல் கூறினான். எனக்கு ஸ்வென்காவை பார்க்கப் பாவமாக இருந்தது. அவளுடைய நெஞ்சுக்குள் இப்படியான ஒரு தீராக கவலை இருக்கும் விஷயம் எனக்கு அன்றுவரை தெரியாது.

இது நடந்து பிறகு ஒரு குளிர் காலத்தையும் நான் முற்றிலும் பார்த்துவிட்டேன். குளிர் காலத்தையும் நான் முற்றிலும் பார்த்துவிட்டேன். குளிர்காலத்தை நினைத்து மிகவும் பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் தப்பிவிட்டேன். வீட்டை சூரிய சக்தியை பயன்படுத்தி தகுந்த வெப்பநிலையில் வைத்திருந்தார்கள். அத்துடன், நான் இப்பவெல்லாம் ஏரோபிக்ஸ”ம் செய்ய பழகிக்கொண்டேன். என்னுடைய குரு வேறு யார்? சொக்கன்தான். நல்ல ஆரோக்கியமக இருக்க முடிகிறது. சுவாமிக்கும் காற்று மிகவும் சுத்தம். காற்றுச் சூழலைப் பேணுவதற்கு அதிக முக்யத்வம் கொடுக்கிறார்கள். இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை. எனக்கு சந்தோஷமாக இருந்தது.

ஒருநாள் கம்புயூட்டரில் எனக்கு ஒரு செய்திவந்தது. நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். அதுதான் எனக்கு முதன்முறை அப்படிச் செய்தி வருவது. விட்டமின் 'டீ' சத்துக் காணாது என்றும், புரதச்சத்தைக் குறைக்கும்படியுந்தான் செய்தி. எனக்கு வியப்புத் தாங்கவில்லை. என் மகன்தான் விளக்கினான். "கம்புயூட்டர், நாங்கள் சாப்பிடுவதைக் கணித்தபடியே இருக்கிறது. அத்துடன் மாதா மாதம் எங்கள் இரத்தம், சிறுநீர், இரத்த அமுக்கம், இதயத்துடிப்பு முதலிய கணிப்புகளை கம்புயூட்டரில் பதிவு செய்து கொண்டே வருகிறோமல்லவா? இவற்றையெல்லாம் கம்புயூட்டர் கிரகித்து அப்பப்போ நோய் வருவதைத் தடுக்க குறிப்புகள் கொடுத்த வண்ணமே இருக்கும். இங்கேயெல்லாம் வருமுன் தடுப்பதில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகிறது" என்றான்.

ஒருமுறை அர்ஜுன், ஸ்வென்காவையும், என்னையும் கருவங்கிக்கு கூட்டிச் சென்றான். அங்கே சேமித்து வைத்த இவர்களுடைய 'கருநிலை சிசுக்களை' கம்புயூட்டரில் போட்டுப் பார்க்க அனுமதிகிடைத்தது. எல்லாமாக பதினேழு பெண் கருக்கள் தயார் நிலையில் இருந்தன. ஸ்வென்கா, தான் தெரிவு செய்த பெண் குழந்தைக்கு 'காமாட்சி' என்ற பேரைப் பதிவு செய்திருந்தாள். அது என்னுடைய தாயாருடைய பெயர். என் மனம் நெகிழ்ந்தது. அந்தப் பதினேழு குழந்தைகளிலும் காமாட்சிதான் கண்ணைப் பறிக்கும் அழகியாக இருந்தாள். இருபத்தொரு வயது வரைக்கும் கம்புயூட்டரில் அவளுடைய பரிணாம வளர்ச்சியை அவதானித்துக் கொண்டே வந்தோம். விதவிதமன தலை அலங்காரம் செய்து, வெவ்வேறு உடைகளில் அவளைக் கண் குளிரப் பார்த்தோம். டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் அவள் வீராங்கனையாக விளங்குவாளாம்; மனிதவியல் போன்ற பாடங்களில் அவளுக்கு இயற்கையான திறமை இருக்குமாம். அப்படியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்வென்காவின் கண்களில் நீர்த் துளி. எனக்கே அழுகையாக வந்தது.

அப்போது ஸ்வென்கா ஒரு செய்தி சொன்னாள். இப்போதெல்லாம் செவிலித் தாய்மார் மிகவும் மலிவாகக் கிடைக்கிறார்களாம். ரஸ்யா, லட்டின் அமெரிக்கா, அரபு நாடுகளில் இருந்தெல்லாம் பெண்கள் வந்து குவிந்தபடியே இருக்கிறார்கள். சூரியசக்தியின் உபயோகம் உலகத்தில் வேகமாகப் பரவி விட்டதால் அரபு நாடுகளில் எண்ணெய் விலை போகாமல் வறுமை பீடித்து விட்டதாம். அங்கேயெல்லாம் செவிலிப் பெண்களுக்கு பஞ்சமில்லை; ஸ்வீடன் அரசாங்கத்தின் அனுமதியில்தான் பஞ்சமாம்.

அப்ப என் மகன் இன்னொரு ஆச்சரியமான தகவலையும் சொன்னான். ஸ்விடனில் அநேகமாக எல்லோரும் செவிலித் தாய் முறையைத்தான் கையாளுகிறார்கள். குழந்தைகளையும் சிசேரியன் முறையில்தான் பிறக்க வைக்கிறார்கள். இதுதான் தாய்க்கும் சேய்க்கும் சிறந்த முறை என்று கருதப்படுகிறது. இப்பொழுது அமெரிக்க, ஜப்பான் போன்ற இடங்களில் இருந்துகூட சில பெண்கள் வருகிறார்கள். ஒப்பந்தம் இல்லாமல் இலவசமாகவே பிள்ளையைச் சுமக்க அவர்கள் சம்மதிக்கிறார்களாம். ஆனால், பிள்ளை இயற்கை முறையில்தான் பிறக்க வேண்டுமாம்; சிசேரியன் ஆகாதாம். அவர்களக்கு பிள்ளை பெறும் அனுபவத்தை உண்மையிலேயே அனுபவிக்க ஆசை. ஓர் அமெரிக்க பெண்மணி தான் நிஜமாகவே பிள்ளை பெற்ற அனுபவத்தை புத்தகமாக எழுதி நிறையப் பணம் சம்பாதித்து விட்டாளாம்.

"இந்தியா, சீனா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களிலிருந்து செவிலித் தாய்மார் கிடைக்க மாட்டார்களா?" என்று கேட்டேன், நான்.

"அவையெல்லாம் முன்னேறிய நாடுகள். அங்கேயிருந்தெல்லாம் மலிவாகக் கிடைக்க மாட்டார்கள்," என்றான் அர்ஜுன்.

நாங்கள் திரும்பி வரும்போது நான் இதே யோசனையாக இருந்தேன். நான் என் மகனை வயிற்றிலே பத்து மாதம் சுமந்ததை நினைத்துப் பார்த்தேன். அப்போது எனக்கு வயது முப்பது. மணமுடித்து ஐந்து வருடங்கள். கணக்கில்லாத விரதங்கள் அநுஷ்டித்து, தவமிருந்து 1983ம் ஆண்டு ஆடி மாதக் கலவரத்தில் அவனைப் பெற்றேன். அது எவ்வளவு கஷ்டமான காலம்! தெஹ’வளை ஆஸ்பத்திரியில் என்மகன் பிறந்த இரண்டாவது நாளே கலவரம் தொடங்கிவிட்டது. அந்த வார்டில் நான் ஒருத்தி மாத்திரமே தமிழ். பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தேன். மூன்றாம் நாள் இரவு நர்ஸ்மார் என்னைச் சுட்டிக்காட்டி எதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்குப் பயம் பிடித்துவிட்டது. அன்று இரவே ஒருவருக்கும் தெரியாமல் பிள்ளையையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டேன். இன்று கூட அதை நினைக்கும்போது எனக்கு குலை நடுங்கும். அன்று அதை எப்படிச் செய்தேனோ தெரியாது?

பத்து மாதம் சுமப்பது என்பது கதையாகி விட்டது. இப்போது ஐந்து மாதம் என்று ஆகிவிட்டது. விஞ்ஞானிகள் இன்னும் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். இந்த ஐந்து மாதம்கூட மேலும் சுருங்கி மூன்று மாதம்கூட ஆகலாம்; ஒரு வேளை ஒரேயடியாக பிள்ளைப் பேறே தேவையில்லாமல் போகலாம். விஞ்ஞானம் போகிற போக்கில் என்ன நடக்கும் என்று யாரால் கூற முடியும்?

கார் பல வெறுமையான கட்டிடங்களை தாண்டி போய்க் கொண்டிருந்தது. புதிதாகக் கட்டிடங்கள் கட்டுவது எப்பவோ நின்றுபோன ஒரு காரியம். ஆக, செப்பனிடும் வேலைகள்தான் இப்பவெல்லாம் செய்கிறார்கள். பழைய கட்டிடங்களை என்ன செய்வது என்று அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. முந்தின வங்கிக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் எல்லாம் சீந்துவாரின்றிக் கிடந்தன. ஆஸ்பத்திரிகள்கூட குறைந்து விட்டனவாம். எல்லோரும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைப் பார்க்கிறார்கள்; வாரத்தில் ஒரு முறைதான் போய் வருகிறார்கள்.

வங்கிகள் பத்திலே ஒன்பது மூடிவிட்டன. காலியான கட்டிடங்களை சமுதாய நலச் சங்கங்களுக்க விட்டுவிட்டார்கள். அனாதைகளே கிடையாது, ஆனபடியால் அனாதை ஆச்சிரமங்களும் இல்லை. முன்பு போல கூன், குருடு, செவிடாகவும் ஒருத்தரும் பிறப்பதில்லை; ஜனத்தொகையும் கூடப் போவதில்லை. ஒரே வழி, கட்டிடங்களையெல்லாம் இடித்துப் பூங்காக்களாக மாற்றுவதுதான்; அதுதான் அரசாங்கம் இது பற்றி தீவிரமாக சிந்தித்து கொண்டு வருகிறதாம். மனிதன் முன்னேற, முன்னேற பிரச்சினைகளும் புதிதாகத் தோன்றிய வண்ணம் இருக்கின்றன.

ஸ்வென்கா இயற்கையிலேயே ஒரு குதூகலமான பெண். ஆனபடியால் பெண் குழந்தை இல்லாத குறையைப் பெரிது படுத்தி எப்பவும் மனதைப்போட்டு வருத்திக் கொள்பவல்ல. இருந்தாலும் சில வேளைகளில் இந்த சோகம் அவளை மிகவும் பாரத்துடன் தாக்கும். அந்த சமயங்களில் ஸ்வென்கா சிறிது ஆடிவிடுவாள். மற்றும்படி தன்னுடைய ஆராய்ச்சியிலும், குடும்பத்தை பராமரிப்பதிலுமே கவனமாக இருந்தாள்.

ஆனாலும் ஸ்வென்கா தன் போராட்டத்தை தளர்த்தவில்லை; தன்னுடைய விண்ணப்பத்தைப் பற்றி அரசாங்கத்துக்கு திருப்பித் திருப்பி நினைவூட்டிக் கொண்டே இருந்தாள். ஆறு வருடங்களாக தன் கோரிக்கை கவனிப்பாரற்று கிடப்பதை வெகு தயவாக பத்து வயது நிரம்பி விட்டது. நாங்கள் எல்லோரும் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டோம்; ஆனால் ஸ்வென்கா அயரவில்லை. அப்பொழுதுதான் ஸ்வென்காவுக்கு மாத்திரமல்ல, இன்னும் எத்தனையோ இளம் தம்பதியருக்கும் விமோசனம் அளிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் பிறந்தது.

சட்டம் இதுதான்; எழுபது வயதுக்கு மேலான ஒருவர் கருணை மரணத்தை தழுவுவாராயின் அவர் தன்னால் ஏற்படும் காலி ஸ்தானத்தை தனக்கு நெருங்கிய ரத்த உறவுள்ள ஒருவருக்கு அளிக்கலாம், அவ்வளவுதான். இந்தச் செய்தி அறிக்கையை தொலைக்காட்சியில் திருப்பித் திருப்பிக் காட்டினார்கள். இளம் தம்பதியரும், இளையதலைமுறையினரும் கூட்டம் கூட்டமாக நின்று இந்தச் சட்டத்தை வரவேற்று கொண்டாடினார்கள். சில பார்களிலே இலவச சாம்பெய்ன் வழங்கி குடித்து இரவு முழுக்க ஆடி மகிழ்ந்தார்கள். இந்தச் சட்டம் இவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கூட எதிர்பார்க்கவில்லை.

இது நடந்த வருடம் 2022. இந்த வருடத்தில் இன்னொரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. இருநூறு வருடங்களாகத் தொடர்ந்த முடியாட்சி ஒழிந்து கிறிஸ்டீனா ராணி முடி துறந்ததும் இந்த வருடம்தான். சில வாரங்களில் என்னுடைய பிறந்தநாள் வந்தது. நான் இப்பவெல்லாம் சொக்கனுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வீடிஷ் மொழியில் பேசக்கற்றுக் கொண்டேன். அவன் 'ஹால் காவ்ரன்' என்றால் நானும் திருப்பி 'ஹால் காவ்ரன்' என்று சொல்லி விடுவேன். எங்களுக்குள் எவ்வளவோ ரகஸ்யங்கள். என் மகன் சிறுவயதில் எப்படி இருந்தானோ அப்படியே இவனும் அச்சாக இருந்தான். சொக்கன்தான் சொன்னான், இன்றைக்கு எனக்கு 'பெரிய விருந்து' என்று. நான்தான் முட்டாள்போல அதை முற்றிலும் கிரகிக்க தவறி விட்டேன்.

அன்று இரவு எங்கள் வீட்டில் ஓர் இருபது பேர் மட்டில் கூடிவிட்டார்கள். பெரிய வட்டமான கேக். ஏழு மெழுகுவர்த்திகள் அதை அலங்கரித்தன; ரிப்பன் கட்டியபடி பக்கத்திலே ஒரு கத்தி. நான் என்னிடம் இருந்த சேலைகளில் மிகவும் உயர்ந்ததைக் கட்டிக் கொண்டேன். கண்ணாடியில் பார்த்தேன், எழுபது வயதுபோல் தோற்றமே இல்லை. எனக்கு என் கணவருடைய ஞாபகம் வந்து கண் கலங்கியது.

நான் அறைக்குள் காலடி வைத்ததும் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்து என்னை வரவேற்றார்கள். கேக்கை வெட்டினேன். விருந்தினர்கள் ஒவ்வொரு துண்டு எடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு சாம்பெய்னும், வெண்ணெய்க் கட்டியும் பரிமாறப்பட்டது.

அப்பொழுதுதான் என் மகனுடைய கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்களின் ஆழத்தை என்னால் என்றும் காணவே முடியாது. சிறுபிள்ளையாக மடியில் கிடத்தி அவன் கண்களையே நான் பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. என் அன்பு மகனே, உன் கண்கள் என்ன சொல்கின்றன? என் கால்கள் துவண்டன.

என் சிற்றுரையை வழங்க நான் விருந்தினர்களை நோக்கி மெதுவாக நடந்தேன்.

* * *


6

முழுவிலக்கு


கணேசானந்தனுக்கு தன்னுடைய பெயரைப் பிடித்திருந்தது; ஆனால் அது ஆபிரிக்காவுக்கு வரும் வரைக்கும்தான். இங்கே அவனுடைய பெயர் செய்தகூத்தை விவரிக்க முடியாது. போகிற இடமெல்லாம் முழுப் பெயரையும் எழுதும்படி கேட்பார்கள். 'தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்' என்று விஸ்தாரமாக இவன் எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் சுருண்ட தலைமுடியை பிய்த்துக் கொண்டு நிற்பார்கள். குடும்பப் பெயர், நடுப்பெயர், கிறிஸ்டியன் பெயர், முதற்பெயர் என்று மாறி மாறி சில வேலைகளில் 'தலையா, பூவா' போட்டு ஒரு பேரை எழுதி வைப்பான். சில சமயங்களில் சண்டை போட்டும் பார்ப்பான். "நான் இந்து; எனக்கு கிறிஸ்டியன் பெயர் கிடையாது" என்று கெஞ்சினாலும் விடமாட்டார்கள். ஏதாவது ஒன்றை எழுதச்சொல்லி நிர்ப்பந்திப்பார்கள்.

ஒருமுறை உச்சக்கோபத்தில் தன்னுடைய முழுப் பெயரையும் இரண்டு வரிகளில் எழுதி "ஐயோ, என்னுடைய எல்லாப் பெயர்களும் இதற்குள்ளே அடக்கம்; உங்களுக்கு எந்தெந்தப் பெயர் தேவையோ அவற்றை இதிலிருந்து பிய்த்து எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டான். கடைசியில், வந்து பல வருடங்களுக்கு பிறகுதான் இதற்கான ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தான். 'கணேசானந்தன்' என்ற பெயரை மூன்று பகுதிகளாக பிரித்து 'கணே சா நந்தன்' என்று அமைத்துக் கொண்டான். அவர்கள் விருப்பப்படியே எல்லாப் பெயர்களும் அதனுள் அடக்கம். இவனுக்கும் தொல்லை விட்டது.

ஆபிரிக்காவிலுள்ள அந்த குடிவரவு அலுவலகத்துக்கு இத்துடன் பலமுறை அவன் வந்து விட்டான். கொடுத்த பாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாக பூர்த்தி செய்தான். பெயர்கள் இப்போது தொல்லை கொடுப்பதில்லை. பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஆபிரிக்காவிலேயே தங்கி விட்டதால் நிரந்தரக் குடியுரிமை விரைவிலேயே கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தான். மேலதிகாரியைப் பார்ப்பதற்காக அவன் காத்திருந்தான்.

அலுவலகம் இப்போது கொஞ்சம் சுறுசுறுப்பு அடையத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருவராக வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பைல்களை இழுத்து தூசு தட்டத் தொடங்கினார்கள். தோடம் பழக் கூடைக்காரி ஒருத்தி உள்ளே வந்து மேசை மேசையாகப் போய் விலைபேசி விற்றடிபயே வந்துகொண்டிருந்தாள். எல்லாமே தோல் சீவி வைத்த நேர்த்தியான பழங்கள். தடிமாடு போன்ற ஒருத்தன் வந்து இலவசமாக ஒரு பழத்தை கைவிட்டு எடுத்துவிட்டான். கையை நீட்டி அடித்து அதைப் பறித்து விட்டு இடுப்பிலே கையை வைத்து 'ஆர்த்த குரலெடுத்து' அவளுடைய குலதர்மம் பிசகாமல் அவனைவையத் தொடங்கினாள் அவள். நல்ல நல்ல அசிங்கமான வார்த்தைகளை பொறுக்கியெடுத்து திட்டினாள். ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. எல்லாரும் தங்கள் தங்கள் தோடம்பழங்களில் கருமமே கண்ணாயிருந்தனர். பழத்தில் சிறு ஓட்டை துளைத்து, ஒரே உறிஞ்சிலே முழுச்சாற்றையும் உளிளிழுத்து, கொட்டைகளை 'தூதூ' என்று காலடியில் துப்பி, நிமிடத்தில் மூன்று நான்கு பழங்களை கணக்குத் தீர்க்கும் கலையில் அவர்கள் சூரர்கள்.

சங்கீதா ஆபிரிக்காவுக்கு வந்து கணேசானந்தனை பதிவுத் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனால் இவனுடைய சங்கடம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நிச்சயமாக குடியுரிமை கிடைக்கும் வரை பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை என்று சங்கீதா பிரதிக்ஞை செய்திருந்தாள். எத்தனையோ பேர் எத்தனையோ விதமான பிரதிக்ஞை எடுக்கிறார்கள். ஆனால் இவள் மங்கம்மா செய்தது போல் அவசரப்பட்டு இப்படி ஒரு சபதம் செய்து விட்டாளே! இவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். காலை முடக்கி முரண்டு செய்யும் மாடுபோல மறுத்து விட்டாள்.

இவர்களுடைய காதல் யாழ்ப்பாணத்தில் வேம்படியில் அரும்பியது. கணேசானந்தன் அப்பொழுது சென்ட்ரல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பள்ளி விட்டதோ இல்லையோ வேம்படி பள்ளி விடும் நேரமாகப் பார்த்து துடித்துக் கொண்டு சைக்கிளிலே பாய்ந்து போய்விடுவான். மணிக்கூட்டு வீதி வழியாக அவன் வேகமாக மிதிக்கவும் அவள் வரவும் நேரம் சரியாக இருக்கும். வெள்ளை மலரை அள்ளி வீசியதுபோல வெள்ளைச் சீருடை தேவதையர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களிலே இவள்தான் உயரம். வாழைத்தார் போல திரண்டிருக்கும் கூந்தலை இரட்டைச் சடையாகப் போட்டிருப்பாள். அவளுடைய விசேஷம் கண்கள்தான். சஞ்சலப்படும் கண்கள் என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலையில் நில்லாத கண்கள். நிமர்ந்து ஒருமுறை கண்ணை வீசிவிட்டு போய்விடுவாள். அந்தக் காலத்திலேயே விடாமுயற்சிக்கு பேர் போனவன் கணேசானந்தன். ஒரு வருட காலம் இப்படித்தான் கண்ணிலேயே செலவழிந்தது.

புட்டுக்கு தேங்காய் போட்டதுபோல விட்டுவிட்டு தொடர்ந்த பெருமை கொண்டது இவர்கள் காதல். பல்கலைக் கழகத்தில் இவன் படிக்கப் போன பின்பு காதல் தொடர வழியின்றி தேங்கிவிட்டது. படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சமயம்தான் மறுபடி அவளுடைய தரிசனம் கிடைத்தது. கிடுகிடுவென்று வளர்ந்து விட்டாள். கண்கள் முகத்தில் சரிபாதியை அடைத்துக் கொண்டு கிடந்தன. முதல்முறையாக அவளுடன் பேசினான். இரண்டு முறை பல்கலைக் கழக தேர்வு எழுதியும் சரிவரவில்லையாம். பெற்றோருக்கு மாத்தறைக்கு வேலை மாற்றம் கிடைத்தபடியால் கொழும்பு விடுதி ஒன்றில் தங்கி கம்புயூட்டர் படிக்கிறாளாம். கம்புயூட்டர் ஒரு பாஷனாக இருந்த காலம் அது.

அந்த நாலு வருடங்கள் கணேசானந்தனுக்கு நிரந்தரமான வேலையில்லை. தொட்டு தொட்டு தற்காலிகமாக நிறைய வேலைகள் பார்த்தன். சங்கீதா ஒரு வங்கியிலே வேலைக்கு சேர்ந்து விட்டாள். அந்த சமயம்தான் அவனுக்கு ஒரு நண்பனின் உதவியால் ஆபிரிக்காவில் ஒரு வாத்தியார் உத்தியோகம் கிடைத்தது. மூன்று வருட ஒப்பந்தம். நல்ல சம்பளம். சங்கீதாவிடம் தன் காதலை வெளியிடமுன் நிலையான ஒரு வேலை கிடைக்கவேண்டும் என்ற அவன் பிரார்த்தனை நிறைவேறி விட்டது.

புறப்படுமுன் இவன் போய் சங்கீதாவிடம் விடை பெற்றது. ஒரு சுவையான சம்பவம். அதை எத்தனையோ தடவை தனிமையில் நினைத்து நினைத்து அனுபவித்திருக்கிறான். விடுதியிலே இவன் போய் கீழே அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். மேல் வீட்டிலிருந்து படிகளிலே குதித்து குதித்து அவள் சுபாவப்படி இறங்கி வந்தாள், தேவதை ஒன்று வானுலகில் இருந்து இறங்குவது போல. இவன் இருப்பதை அவள் காணவில்லை. கீழே இருந்த ஒரு நிலைக் கண்ணாடியின் முன் இளைக்க இளைக்க ஒரு செகண்ட் நின்று தலைமுடியை சரி செய்து கொண்டாள்; இமையை நீவி விட்டாள். திரும்பியவள் இவைனைக் கண்டு வெட்கித்துப் போனாள்.

ஒரு பெண் ஒருவனுக்காக தன்னை செம்மைப் படுத்துகிறாள் என்ற நினைவு அவனுக்கு எவ்வளவு களிப்பூட்டும்! அன்று தனிமையில் இருவரும் நெடுநேரம் கதைத்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்த நாள் அவன் வெளிநாடு போவதாக இருந்தான். அன்று எப்படியும் தன் காதல் மாளிகையின் மேல் கதவைத் தட்டுவது என்ற தீர்மானத்தோடுதான் அவன் வந்திருந்தான். மனத்தில் துணிவு இருந்த அளவுக்கு கையில் பலமில்லை. கடைசியில் பிரியும் சமயத்தில், மைமலான அந்த மழை நாளில் ஒரு மூலையில் அவளை தள்ளிக் கொண்டு போய் வைத்து, உத்தேசமாக அவள் இதழ்களை தேடி ஒரு முத்தம் பதித்துவிட்டான். பெட்டைக்கோழி செட்டைகளைப் படபடவென்று அடிப்பதுபோல் அவள் இரண்டுகைகளாலும் அவன் கழுத்தைக் கட்டி உதறினாள். அவள் தள்ளினாளா அல்லது அணைத்தாளா என்பது கடைசிவரை அவனுக்கு தெரியவில்லை.

பிளேனில் பறக்கும்போது அவளுடைய சிந்தனையாகவே இருந்தான். விமானத்தில் யோசித்து வைத்து பதில் எழுதும்படி அவள் ஒரு விடுகதையும் சொல்லியிருந்தாள். அவர்களடைய காதலுக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கிறதாம்.

'ஒரு மரம், ஆனால் இரண்டு பூ
அந்த மரம் என்ன? பூ என்ன?'

இவனும் யோசித்து, யோசித்து பார்த்தான்; புரிபடவில்லை. பன்னிரெண்டு வருடம் அவனைக் காக்க வைத்துவிட்டுத்தான் விடையைக் கூறினாள்.

'மரம்: தென்னை மரம்.
பூ: தென்னம்பூ, தேங்காய்பூ'

அவன் ஆபிரிக்கா போன பிறகு அவர்கள் காதல் வலுப்பெற்றது கடிதங்கள் மூலமாகத்தான். துணிந்து இவன் தன் காதலை பிரகடனப்படுத்தினான். மூன்று வருட ஒப்பந்தக் காலம் முடிந்து இரண்டு மாத விடுப்பில் வந்தபோது எப்படியும் அவளை மணமுடித்து தன்னுடன் அழைத்துப்போவது என்றுதான் வந்திருந்தான். அந்தச் சமயத்திலேதான் அவன் தன் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய தவறு செய்ய நேரிட்டது.

இவனுக்கென்று கலியாணம் பேச பெரிசாய் ஒருவரும் அங்கே இல்லை. சங்கீதாவின் தகப்பனார் சபாபதி நல்ல மனுஷன். தாயும், தகப்பனும் பரிபூரண சம்மதத்தை தந்துவிட்டனர். ஒரே மகளை பிரிந்திருப்பது கஷ்டம்தான்; ஆனால் அவர்கள் அதைத் தாங்குவதற்கும் சித்தமாக இருந்தனர். மடைத்தனமாக காலை இழுத்தது கணேசானந்தன்தான்.

பத்து மணியளவில் இவனை உள்ளே கூப்பிட்டார் அதிகாரி. ஜன்னல்கள் கண்டுபிடிக்கமுன் கட்டிய கட்டிடம் அது. அதைக் கட்டிய கொத்தனாருக்கும் சூரியனுக்கும் ஜென்மப் பகை. கன்னங்கரேலென்று கதிரையை நிறைத்து இருந்த அதிகாரியைப் பார்ப்பதற்கு கண்களைப் பழக்கப்படுத்த சிறிது நேரம் எடுத்தது. முரசு தெரிய பளிச்சென்று பற்களைக் காட்டி சிரித்தார். முகம் சிநேகமாக இருந்தாலும் கண்கள் தீர்க்கமாக கணக்குப் போட்டபடியே இருந்தன.

இந்த அதிகாரியை இதற்கு முன்பும் பல தடவை பார்த்திருக்கிறான்; இருவரும் தங்கள் சேம நலன்களை 'ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குஸே', 'ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குஸே' என்று திருப்பித் திருப்பி சொல்லி விசாரித்துக் கொண்டார்கள். இந்த சேம விசாரிப்பு ஐந்து நிமிடங்கள் வரை தொடர்ந்தது. 'உங்களுடைய நலம் எப்படி?', 'பெற்றோர் நலம் எப்படி?', 'மனைவி நலம் எப்படி?', 'பிள்ளைகள் நலம் எப்படி?', 'பக்கத்து வீட்டுக்காரர் எப்படி?' என்ற இந்த நலன் விசாரிப்புகள் எட்டு முழ வேட்டிபோல முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும்.

அதிகாரி கோப்பிலே ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது என்றும் அதற்கு தான் விரைவிலேயே சட்டவிலக்கு அளிப்பதாகவும் நிரந்தர குடியுரிமை இரண்டே மாதத்தில் கிடைத்துவிடும் என்றும் உறுதி கூறினார்.

கணேசானந்தன் வீட்டுக்கு வந்து நடந்த விபரத்தை மனைவியிடம் கூறினான். அவளுக்கும் சப்பென்று ஆகிவிட்டது. இந்த முறை கட்டாயம் கிடைக்கும் என்று அவள் மிக்க எதிர்பார்போடு இருந்தாள்.

அன்றிரவு சங்கீதா' வ்வூவ்வூவும், ஓக்ரா சூப்பும்' செய்திருந்தாள். இந்த இரண்டு வருடத்திலே அவள் ஆபிரிக்கச் சாப்பாட்டு முறைகளை ஒரு ஆவேசத்துடன் கற்றுத் தேர்ந்து விட்டாள். அவள் ஒரு காரணம் வைத்திருந்தாள். ஆபிரிக்காவிலேயே நிரந்தர பிரஜையாக தங்கிவிடுவது என்று முடிவெடுத்த பிறகு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளுடைய பழக்கவழக்கங்கள், சாப்பாடு, கலாச்சாரத்துடன் ஒன்றிவிட வேண்டும் என்பது அவள் வாதம். 'உங்களுடைய தேசத்து பழக்கவழக்கங்கள் அவ்வளவு உயர்ந்ததென்றால் ஏன் நாடு விட்டு நாடு வந்தீர்கள்?' என்பதுதான் அவளுடைய கேள்வி.

'வ்வூவ்வூ' என்பது யாழ்ப்பாணத்து களிமாதிரி. ஆனால் பத்து மடங்கு பவர் கூட, விஷயம் தெரியாதவர்கள் அவசரப்பட்டு ஒரு விள்ளல் எடுத்து வாயிலே போட்டால் அது தொண்டைக் குழியிலே போய் அங்கேயே தங்கிவிடும். கீழுக்கும் இறங்காது, மேலுக்கும் போகாது. அது வயிற்றில் போய் சேர்வதற்கிடையில் உயிர் பிரிந்து விடும். இதற்கென்று பிரத்தியேகமான ஒரு சூப். அதுதான் ஓக்ரா சூப்; வழுவழுவென்று இருக்கும். வ்வூவ்வை எடுத்து இந்த சூப்பில் தோய்த்து வாயில் போட்டால் அது அப்படியே நழுவிக் கொண்டு போய் வயிற்றிலே விழுந்துவிடும்.

தொடக்கத்தில் இது நல்லாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியுமா? தேவாமிர்தமென்றாலும் ஒரு நாளைக்கு அலுக்கத்தானே செய்யும். ஒரு நாள் இவன் நாக்கிலே சனி. "மெய்யே, ஒரு நாளைக்கு புட்டு செய்யுமென்; கனநாள் சாப்பிட்டு" என்று சொல்லி விட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. வெஞ்சினம் கொண்ட வேங்கைபோல சீறினாள். "உங்களுக்கு புட்டும் முசுட்டை இலை வறையும், விளைமீனும், பலாப்பழமும் வேணுமெண்டால் என்னத்துக்கு சிலோனை விட்டு வெளிக்கிட்ட நீங்கள். அங்கைபோய் அடிவாங்கிக் கொண்டு குசாலாய் இருக்க வேண்டியதுதானே? இது எங்களுக்கு தஞ்சம் கொடுத்த நாடு. இவர்களுடைய சாப்பாடுதான் இனிமேல் எங்களுடைய சாப்பாடு" என்று அடித்துக் கூறிவிட்டாள். 'அந்தச் சிவபிரானே கேவலம் உதிர்ந்த புட்டுக்காக மண் சுமந்து அரிமர்த்தன பாண்டியனிடம் பொற்பிரம்படி வாங்கினானே! இங்கே நான் கேவலம் சொற் பிரம்படி தானே பெற்றேன்? என்று மல்லாக்காக படுத்துக் மனதை தேற்றிக்கொண்டான். அதற்குப் பிறகு கணேசானந்தனுக்கு புட்டு சாப்பிடும் ஆசையே வேரோடு போய் விட்டது.

புட்டும், தேங்காய்ப்பூவும் போன்ற அவனுடைய காதல் வாழ்க்கை இப்படித்தான் எட்டு வருடங்கள் தேங்காய்ப்பூவாக தேய்ந்து போயிற்று. இரண்டாவது ஒப்பந்தத்தை ஏற்றுவிட்டு கணேசானந்தன் பயணச்சீட்டும், விசாவும் ஒழுங்கு பண்ணிய பிறகு தான் அந்த இடி வந்து விழுந்தது. இவள் தன்னை மறந்து விடும்படியும் தனக்கு கலியாணமே வேண்டாமென்றும் எழுதி விட்டாள். எண்பத்திமூன்று கலவரத்தில் சபாபதி அநியாயமாக மனைவியைப் பறிகொடுத்து விட்டார். அதிலிருந்து புத்தி பேதலித்தவர் போல புசத்திக் கொண்டு திரிந்தார். சங்கீதாவால் அவரை அந்த நிலையில் தனித்து விட்டு விட்டு வரமுடியவில்லை. எந்தப் பெண்தான் அப்படி பெற்ற தகப்பனை நிர்க்கதியாக விட்டு வர சம்மதிப்பாள்?

சங்கீதா நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்தவள் என்பதை முதல் தடவையாக கணேசானந்தன் உணர்ந்தது அப்போதுதான். அவளில் அவன் உயிரையே வைத்திருந்தான். அவளும் அப்படித்தான். ஆனால் அவளுடைய பிடிவாத குணம்தான் அவனால் நம்பமுடியாததாக இருந்தது. அந்த எட்டு வருடங்களும் அவளை அசைக்க முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளுடைய தகப்பனார் இறந்தபோதுதான் கண்­ரில் தோய்த்து ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அப்பொழுதுதான் முதன்முறையாக அவனுக்கு அவளுடைய காதலின் ஆழம் தெரிந்தது.

குடியுரிமைக்கும், பிள்ளை பெற்றுக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இப்படி பிடிவாதமாக இருக்கிறாளே? குழந்தைகள் என்றால் அவளுக்கு உயிர். நேரம் போவது தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பாள். ஆனால் குடியுரிமை கிடைப்பதற்கிடையில் கருத்தரிக்காமல் இருக்கவேண்டும் என்பதில் எதற்காக இவ்வளவு எச்சரிக்கை? 'பன்னிரெண்டு வருடங்கள் பாழாகிவிட்டதே' என்ற யோசனைகூட இல்லையா அவளுக்கு? என்ன பிடிவாதம்?

மீன்காரி ஒருத்தி அவர்கள் வீட்டுக்கு வாடிக்கையாக வந்துபோவாள். தொடை சைஸ் 'கூட்டா' மீன்களை கூடையிலே வைத்து தூக்கிக்கொண்டு ஒயிலாக நடந்து வருவாள். தலையிலே வைத்த கூடையை கையாலேயே பிடித்துக்கொண்டு வரும் பழக்கமெல்லாம் அங்கே கிடையாது. கரகாட்டக்காரனுடைய கரகம்போல கூடை தலையிலே ஒட்டிவைத்தது போல இருக்கும். இப்படி மீன்காரிகள், நாப்பது கிலோ எடையை தலையில் சுமந்தபடி, மடித்த வில்லுக்கத்தியை நிமித்தியது போன்ற முதுகிலே ஒரு குழந்தையையும் கட்டிக்கொண்டு, 'கை வீசம்மா கை வீசு' என்று இரண்டு கைகளையும் வீசிக் கொண்டு, ஆபிரிக்காவின் சிவப்பு மண் புழுதியை கிளப்பியபடி, பரந்து விரிந்த 'டம்பளா' மரங்களின் நிழலை ஆற அமர அநுபவித்தபடி வரும் இந்த அதிசயத்தை உலகத்திலேயே ஆபிரிக்காவில் மட்டும் தான் பார்க்கலாம்.

கூட்டா மீன் குழம்பு நல்ல ருசியாக இருக்கும். பெரிய பெரிய துண்டங்களாக வெட்டித்தான் அதை குழம்பு வைப்பார்கள். ஆபிரிக்காவில் ஒரு மிளகாய் இருக்கிறது. பெயர் 'ஸ்மோல்பெப்பே'. உருண்டையாக, சிவப்பாக பார்த்தால் வெக சாதுவாக இருக்கும். காரம் நாலரைக்கட்டைக்கு தூக்கும். 'பாம்' எண்ணெயோ ரத்தச் சிவப்பாக இருக்கும். பதமாக வெட்டிய மரவள்ளி இலையையும மீன் துண்டங்களையும் இந்த என்ணெயில் மிதக்கவிட்டு, மிளகாயையும் வதக்கிப்போட்டு, கொறுக்காப்புளியும் சேர்த்து, ஒரு குழம்பு வைத்தால் அந்த வாசனையே ஊரைக் கூட்டிவிடும்.

சங்கீதாவுக்கு மீன் என்றால் பிடிக்கும்; அதிலும் மீன்காரியுடன் பேரம் பேசுவது இன்னொரு சுவையான விஷயம். பேரம் என்றால் சங்கீதத்தில் வரும் நிரவல் போல் சூடுபிடித்துக் கொண்டே போகும். அடிமட்ட விலை தரைதட்டியவுடன் மீன்காரி ஆத்தாமல் "யூ லவ்மீ" என்று ஓலமிடுவாள். அவளுடைய பாஷையில் " நீ என்னைக் காதலிக்கிறாயல்லவா! இப்படி என்னை படுத்தலாமா?" என்று பொருள். அப்படி அவள் சரணாகதி அடைந்த பிறகுதான் பேரம் முடிவுபெறும்.

சங்கீதா மீன்காரிக்கு 'யூலவ்மீ' என்றே பெயர் வைத்துவிட்டாள். இவர்களுடைய மீன் பேரச் சண்டையை ஆர்வத்தோடு அவதானித்தபடி இருக்கும் அவள் முகத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் குழந்தை. அது சிணுங்கி சங்கிதா கண்டதில்லை. இரண்டு கண்களும் இரண்டு வெள்ளி மணிகள்போல மினுங்கும். சங்கீதா அந்தக் குழந்தைகைக்ம் ஒரு பெயர் வைத்திருந்தாள். கரிக்குருவி.

கணேசானந்தன் பள்ளியில் இருந்து வந்ததும் சங்கீதா படபடவென்று வாய்ப்பாடு ஒப்பிப்பது போல அன்றையச் சங்கதிகளைச் சொல்லுவாள். அதிலே கரிக்குருவியைப் பற்றியும் ஒரு அத்தியாயம் கட்டாயம் இருக்கும். அப்பொழுதெல்லாம் கணேசானந்தன், 'இப்படி குழந்தைமேலே ஆசையுள்ளவள் எப்படித்தான் இந்த விஷயத்தில் மட்டும் இவ்வளவு உஷாராக இருக்கிறாளோ!' என்று நினைத்துக் கொள்வான்.

கரிக்குருவி உண்மையிலேயே யூலவ்மீயின் குழந்தையல்ல; அவளுடைய தங்கை ஓனைஸாவின் பிள்ளை. ஓனைஸாவுக்கு வயது பதினைந்துதான்; ஓட்டு மாங்கன்று போல இருப்பாள்; இன்னும் பள்ளியிலே படிக்கிறாள். பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் 'மன்ஸாரே' என்ற மன்மதனின் மோகத்தில் விழுந்து அவனுடன் சரசமாடி செய்து கொண்டே கந்தர்வ திருமணத்தின் பெறுபேறுதான் கரிக்குருவி. கரிக்குருவி பிறந்தபோது ஓனைஸாவின் பெற்றோர்களுக்க அளவற்ற சந்தோசமாம்.

களவாய்ப் போட்ட சீட்டுக்காசைத் தைலாப் பெட்டியில் வைத்து காப்பதுபோல விரதம் காக்கும் கற்புக்கரசிகளை ஆபிரிக்காவில் காணமுடியாது. ஒரு பெண் பருவமடைந்ததும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவள் தன் கருவளத்தை உலகுக்கு காட்டிவிட வேண்டும். ஒருபிள்ளை பெற்றுவிட்டால் அவள் அந்தஸ்து உயர்ந்துவிடும். அவளை முடிப்பதற்கு ஆடர்கள் போட்டி போடுவார்கள். ஒரு பெண்ணின் உண்மையான விலைமதிப்பு அவளுடைய பிள்ளை பெறம் தகுதியை வைத்துத்தான் அங்கே நிர்ணயிக்கப்படுகிறது.

அது ஒரு பெண்வழிச் சமுதாயமானபடியால் அங்கேயெல்லாம் ஒரு ஆணைப்பார்த்து 'உனக்கு எத்தனை பிள்ளைகள்?' என்று மறந்து போயும் கேட்கக்கூடாது. அடிக்க வந்து விடுவார்கள். அவர்களுக்கே அது தெரியாது. கணேசானந்தன் படிப்பிக்கும் பள்ளியிலே இப்படித்தான் அடிக்கடி பெண் பிள்ளைகள் மூன்று, நான்கு மாசங்களுக்கு மறைந்து விடுவார்கள். கேட்டால் 'பிரசவம்' என்று வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு இவன் தலையை குனிவதைப் பார்த்து சிரிப்பார்கள்.

ஆனால் யூலவ்மீக்கு ஏற்கனவே ஏழு பிள்ளைகள். அவளுக்கு கரிக்குருவியும் வந்து சேர்ந்ததில் கொஞ்சம் கஷ்டம்தான் 'யாராவது இந்தப் பிள்ளையை கேட்டால் கொடுத்துவிடுவேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய தங்கை படிப்பை முடிக்கும்வரை கரிக்குருவியை யூலவ்மீதான் வளர்த்தெடுக்க வேண்டுமாம்.

கணேசானந்தன் தன் மனைவிக்கும் ஆசிரியையாக ஒரு சிறிய பள்ளியிலே வேலை பிடித்துக்கொடுத்திருந்தான். வங்கியிலே வேலை செய்தவள் இப்படி வந்து ஒரு ஓட்டைப் பள்ளியிலே வேலை பார்க்கவேண்டி வந்துவிட்டதே என்று இவனுக்கு ஆதங்கம்தான். ஆனால் சங்கீதா மிகவும் மகிழ்ச்சியுடனேதான் அந்த வேலையை ஏற்றுக்கொண்டாள். இவளுடைய பாடங்கள் சுகாதாரமும், ஆங்கிலமும். அந்தச் சின்னச் சின்ன முகங்களை பார்த்துக்கொண்டே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்துவிடுவாள். பள்ளி முடிந்ததும் இந்தப் பாலர்களெல்லாம் தங்கள் தங்கள் கதிரைகளைத்தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு, புத்தகங்களையும் முதுகில் கட்டியபடி, சிட்டுக்கள் போல கூவிக்கொண்டு வீட்டுக்கு பறந்து போகும்போது இவள் வயிற்றை என்னவோ செய்யும்.

கணேசானந்தன் திருநீலகண்ட நாயனாருடைய திண்டாட்டத்தில் இருந்தான். பரத்தையிடம் இவர் போய் வந்தது தெரிந்ததும் 'எம்மைத் தொடாதீர்; திருநீலகண்டம்மீது ஆணை' என்று சாபம் இட்டுவிட்டாள் மனைவி. கணேசானந்தன் என்ன நாயனாரா தொடாமல் இருக்க? பன்னிரெண்டு வருடம் காத்திருந்து அடைந்த மனைவியை பக்கத்திலே வைத்துக் கொண்டு பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பது எவ்வளவு கொடூரம்?

குடிவரவு அலுவலகத்து பதிகம் அதிகாரி கூறியது போல இரண்டு மாதத்திலேயே குடியுரிமை பத்திரம் கிடைத்து விட்டது. திருவானைக்காவில் பாடியவுடன் கோயில் கதவு திறந்து கொண்டது அல்லவா? குடியுரிமைச் சீட்டு இவன் கையிலே இருந்தது. இனிமேல் எந்தக் கதவுகள் அவனுக்கு சாத்தியிருக்கும்? இரண்டு வருடங்கள் இப்படியாக அநியாயமாகப் பலிபோய் விட்டதே! அவை எப்படிப்பட்ட மகத்தான இரண்டு வருடங்கள் என்பதை பின்னாலேதான் கணேசானந்தன் உணர்ந்து கொள்வான்.

திருவானைக்காவுக்கு டிக்கெட் கிடைத்ததும் கணேசானந்தன் முற்றிலும் மாறிவிட்டான். 'அடையா நெடுங்கதவையே' ஜபித்துக் கொண்டிருந்தான். ஒரே நினைப்புதான் மற்ற-ல்லாம் மறந்துவிட்டான். பள்ளிக்கூடத்தை மறந்தான்; பிள்ளைகளை மறந்தான்; ஹ’ஸ்டரி பாடத்தை மறந்தான். இராவணனுடைய நிலைதான் அவனுக்கும்.

'கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப்பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான்'

கம்பரைப் படிக்காத ஆபிரிக்கப் பிரின்ஸ’பாலுக்கு இது எல்லாம் எங்கே விளங்கப் போகிறது? பள்ளிக் கூடம் விட்டதும். கணேசானந்தன் கோடடித்ததுபோல நேராக வீட்டுக்கு ஓடியதன் மர்மம் அவருக்கு புரியவில்லை. ஒருமுறை அவசரமாக நேர அட்டவணை போட வேண்டியிருந்தது. இவன் கவலைப்படாமல் வீட்டுக்கு ஓடிவிட்டான். நேர அட்டவனை போடுவதில் கணேசானந்தன் அடிக்க ஆளில்லை. இந்த திறமையை வைத்துத்தான் அவன் கடகடவென்று ஆபிரிக்காவில் முன்னுக்கு வந்தவன். இவனுடைய பிரின்ஸ’பாலுக்கு இந்த ஒரு விஷயம் மாத்திரம் ஓடாது. India man has magic என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். ஒருமுறை அவர் அட்டவணை போட்ட விண்ணாணத்தை இப்பவும் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள். அந்த அட்டவணையின்படி ஒரு கிளாஸ’ல் மூன்று வாத்திமார்கள் ஒரே சமயத்தில் படிப்பிக்க வந்துவிட்டார்களாம். அதை கணேசானந்தன்தான் பிறகு ஒருமாதிரி சரிக் கட்டினானாம்.

கணேசானந்தனின் பிரயாசை கடைசியில் ஒருநாள் பலித்தது. ஆறே மாத காலத்தில் சங்கீதாவிடம் அவன் ஆவலுடன் எதிர்பார்த்த மாற்றம் தெரியத் தொடங்கியது. முன்பு விரும்பிச் சாப்பிட்டதெல்லாவற்றையும் இப்ப தூக்கி எறிந்தாள். மீன்குழம்பு என்றால் பிடிப்பதில்லை; யூலவ்மீயை தூரத்தில் பார்த்தாலே ஒடி ஒழிந்து கொள்வாள்.

ஒரு நல்ல நாளில் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு நர்ஸ’ங்ஹோமுக்கு 'செக்கப்பிற்கு' போனான் கணேசானந்தன். பிரசவத்தை அங்கேயே வைப்பதென்று நினைத்திருந்தான். ஆபிரிக்காவில் வசதிகள் அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வெளிநாடுகளில் படித்த டாக்டர்களும், நர்ஸ்மார்களும்தான் அங்கே வேலை செய்தார்கள். ஆனாலும், 'போதிய உபகரணங்களும், மருந்துகளும் இல்லாவிட்டால்?' என்ற கவலை அவனுக்கிருந்தது.

சங்கீதா இவன் பக்கத்தில் இருந்து நெளிந்தாள். இவன் திரும்பிப் பார்த்தான். இவனுக்காகப் பன்னிரெண்டு வருடங்கள் தவம் செய்தவளல்லவா? எந்தப் பெண்தான் இப்படியான தியாகத்தை செய்ய முன்வருவாள்? நினைக்கும்போதெல்லாம் இவனுக்கு அவள்மேல் அன்பு சுரந்தது.

மெய்கண்டான் கலண்டர் பொய் சொல்லாது. இப்ப அவளுக்கு மூன்று மாதம் தள்ளிப்போய்விட்டது. அடிக்கடி வாந்தி வேறு வருகிறது என்கிறாள். மாங்காய் பிஞ்சையும், 'கோலா நட்டையும்' ஆர்வத்தோடு சப்பியபடியே இருக்கிறாள். நடக்க அவளுக்குத் தெரியாது. துள்ளித்தான் திரிவாள்; இப்போது அடிக்கடி சோர்ந்துபோய் காணப்படுகிறாள்; 'தூக்கம் வருவதில்லை; தலை சுற்றி மயக்கம் வருகிறது' என்று சொல்கிறாள். பாடசாலைக்கு கூட இரண்டு நாளாக போகவில்லை.

அவளுடைய வயிற்றை பார்த்தான். அது ஆலிலை அளவுக்கு சிறுத்து வழுவழென்று இருந்தது. இந்தச் சிறிய வயிற்றிலிருந்து எப்படி இன்னொரு உயிர் வரும்? சடையைப் பார்த்தான். அது எப்போதும் போல் இப்பவும் கருநாகமாக கைப்பிடிக்குள் அடங்காமல் இருந்தது. காதோர மயிர் கற்றைகளை ஆபிரிக்கர்கள் செய்வதுபோல எலிவாலாகப் பின்னி நுனியில் நீளமாக மணிகள் கோத்து கட்டியிருந்தாள். அதுவும் பார்க்க ஒரு அழகாகத்தான் இருந்தது. குனிந்து அவள் காதருகே "உம்மைப் பார்க்க ஒரு சின்னப் பெட்டைபோல இருக்கு" என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சொன்னான். அவள் கீழ் கண்ணால் பார்த்தபடி தலையை வெடுக்கென்று திருப்ப அந்த மணிகள் கிணுகிணுவென்று ஆடின.

அந்த நேரம் பார்த்து டாக்டர் கையிலே கனரிப்போர்டுகளுடன் அவசரமாக வந்தார். கணேசானந்தன் எதிர்பார்த்ததுபோல 'கன்கிராட்ஜுலேசன்ஸ்' என்று அவர் கூறவில்லை. சிறிது நேரம் இவர்களையே பார்த்தபடி இருந்தார். பிறக மடிபடியும் ரிப்போர்டுகளை சரிபார்த்துக் கொண்டார். இன்னொரு முறை இவர்கள் முகத்தை நோக்கி யோசித்தபடியே மெதுவாக "நீங்கள் எதிர்பார்ப்பதுபோல இல்லை" என்றார். கணேசானந்தன் அதிர்ச்சியடைந்தவனாக "என்ன? கர்ப்பம் இல்லை என்றால் வேறு ஏதாவது வருத்தமா?" என்றான்.

அவர் சிறிது மௌனம் சாதித்துவிட்டு "இல்லை, இல்லை உங்கள் மனைவிக்கு மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்டது, அதாவது menopause" என்றார்.

விக்கித்துப்போய் இவர்கள் ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். "என்ன டாக்டர், உண்மையாகவா? என் மனைவிக்கு 39 வயதுதான் ஆகிறது" என்றான்.

"ஆசியப் பெண்களுக்கு பொதுவாக 40-45 வயதிலேயே முழுவிலக்கு வந்து விடுகிறது. அவர்கள் பூப்பெய்திய காலத்திலிருந்து அநேகமாக முப்பது வருடங்கள் கருவளம் தொடரும். உங்கள் மனைவி எத்தனையாவது வயதில் பருவமடைந்தார்?" என்றார்.

கணேசானந்தன் தன் மனைவியைப பார்த்தான். அவள் கண்களிலே இப்போது நீர் கட்டிவிட்டது. சன்னமான குரலில் "பத்து" என்றாள்.

"அதுதான் சொன்னேன், முப்பது வருடங்கள் உங்கள் மனைவி கருவளம் உள்ளவராக இருந்திருக்கிறார். இனிமேல் கருத்தரிக்கும் சாத்தியக் கூறு இல்லை" என்றார் டாக்டர்.

முதல் முறையாக அவன் மனைவி டாக்டரிடம் வேசினாள். "இதற்கு மருந்துகள் ஒன்றும் இல்லையா, டாக்டர்? நாங்கள் மணம்முடித்து இரண்டே வருடங்கள்தான் ஆகின்றன."

அப்பொழுது டாக்டர் சொன்னார்: "இதற்கு மருந்துகளே இல்லை. அம்மா. ஒரு பெண் பிறக்கும் போதே அவளுக்கு எத்தனை கருமுட்டைகள் என்று அவளுடைய கர்ப்பப் பையில் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. என்னதான் தலைகீழாக நின்றாலும் அதை மாற்ற முடியாது."

அவனால் தன் மனைவியின் முகத்தை பார்க்கவே முடியவில்லை. திரும்பி வரும்போது வழிநெடுக விம்மிக்கொண்டே வந்தாள். திடீரென்று அவள் அரற்றினாள்: "ஐயோ! பிரம்மா எல்லாருக்கும் தலையிலே எழுதுவான்; எனக்கு மட்டும் கர்ப்பப் பையில் எழுதிவிட்டானே!" என்று இரண்டு கைகளையும் தலையிலே வைத்துக் கோவென்று கதறினாள்.

ஒரு நாள் கணேசானந்தன் நித்திரையாய் இருந்தபோது இவள் அவனை உலுக்கி எழுப்பினாள். அவன் எழும்பி பார்த்தபோது இவள் தலைவிரி கோலமாக அழுதபடி இருந்தாள். "பன்னிரெண்டு வருடங்களாக படித்தேன்; பரீட்சை எழுதவில்லையே! பன்னிரெண்டு வருடங்களாக சமைத்தேன்; சாப்பிடவில்லையே! நான் என்ன செய்ய?" என்று தலையிலே அடிக்கத் தொடங்கி விட்டாள்.

இப்படி அடிக்கடி இவர் தலையிலே அடிக்கத் தொடங்கியதும் கணேசானந்தனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'திடீர், திடீர் என்று சன்னதம் வந்ததுபோல இவள் நடக்கிறாளே!இது படுத்தலாமா? இப்படியே கட்டுக்கடங்காமல் போனால் டாக்டரிடம் போய் யோசனை கேட்க வேண்டியதுதான்' என்று முடிவு செய்துகொண்டான்.

சில காலம் இப்படியோ போய்விட்டது. அவள் பேருக்கு மறுபடியும் பள்ளிக்கூடம் போய் வரத் தொடங்கினாள். ஆனால் சிற்சில வேளைகளில் அவளுடைய நிலைகுத்திய பார்வையும், அசாதாரணமான செய்கையும் இவனைக்கூட அச்சப்பட வைத்தன.

ஒரு நாள் அதிகாலை மூன்று மணியிருக்கும். கணேசானந்தன் திடீர் என்று விழிப்பு வந்து எழுந்தான். பக்கத்திலே தடவிப் பார்த்தான். இவளைக் காணவில்லை. தேடிப்போன இவன் கண்ட காட்சி அதிர்ச்சி தருவதாக இருந்தது. சமையலறைக்கும், வரவேற்பறைக்கும் இடையில் உள்ள ஓடையில் இவள் சுவரிலே தலையைச் சாய்த்து உட்கார்ந்திருந்தாள். இவள் உடல் எல்லாம் வேர்த்து தெப்பமாகியிருந்தது.

இவன் ஒன்றுமே பேசவில்லை. பக்கத்திலேபோய் அமர்ந்து கொண்டான். அவள் தலையை வருடினான். சடுதியாக திரும்பி அவனைப் பார்த்து நெஞ்சு சட்டையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்; "நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? பன்னிரெண்டு வருடங்கள் எனக்காக காத்திருந்தீர்களே? இதற்காகத்தானா? உங்கள் பிள்ளையை என் வயிற்றில் சுமக்கவேண்டும் என்று தவம் செய்தேனே!என் அசட்டுப் பிடிவாதத்தினால் எல்லாத்தையும் இழந்து விட்டேனே!"

"ச்சீ, கண்ணைத் துடையும். ஏதோ உலகம் கவிழ்ந்ததுபோல? இது என்ன?"

"குதிரை போனபின் லாயத்தைப் பூட்டி என்ன பயன்? நான் இப்பொழுது என்ன? பெண்ணா? இல்லை, ஆணா? அல்லது பேடியா? பெண்மை இல்லாத ஒரு பெண்ணை எப்படி அழைப்பது? இனி நான் ஒரு எண்ணிக்கைக்கு மாத்திரமே; என்னால் ஒரு பிரயோசனமும் கிடையாது."

"இது என்ன விசர்க் கதை? எல்லாருக்கும் வருகிறதுதானே! சங்ககாலக் கணக்கின்படி இது ஏழாவது வாசல்; அதாவது 'பேரிளம்பெண்'. இனிமேல்தான் வாழ்க்கையின் ருசியே தெரியப் போகிறது" என்றான் அவன், முகத்தில் வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்சிரிப்புடன்.

"உங்களுக்கு எங்கே விளங்கப் போகுது? நீங்களும் ஒரு ஆண்தானே! இது கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. எனக்கு வேணும். கடவுளுடைய வரப்பிரசாதத்தை என் ஆணவத்தினால் வேண்டமென்றே இரண்டு வருடங்கள் தள்ளி வைத்தேன். கருவளம் இருந்தபோது நான் அதை மதிக்கவில்லை. ஆபிரிக்கர்கள் அதை எப்படி போற்றுகிறார்கள்! இல்லாவிட்டால் எங்கள் நாட்டு சிறுமைகள் தாங்க முடியாமல் புகலிடம் ஓடி கேட்டு வந்த இந்த நாட்டில் எங்களுக்கு பிறக்கும் பிள்ளை முழு ஆபிரிக்கனாக இருக்க வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விட்டேனே?"

"என்ன?"

"பிள்ளை பிறந்து ஆண் என்றால் 'அரவிந்தன்' என்றும் பெண் என்றால் 'அபிராமி' என்றும் அகரவரிசையில் பேர் வைப்பதாக தீர்மானம் பண்ணினோமே? அது எவ்வளவு பிழை? நாங்கள் மனத்தளவில் மாறவில்லையென்றுதானே அர்த்தம்."

கணேசானந்தனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவள் சொல்வதில் ஞாயம் இருப்பதாகப்பட்டது.

"பெண் எவ்வளவு கேவலமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் பருவம் அடையும் தொல்லை; பிறகு மாதா மாதம் வரும் உபத்திரவம். கர்ப்பம் அடையும்போது ஒன்பது மாதம் அவள் பிள்ளையை சுமக்கிறாள். அதைத் தொடர்ந்து அவள் படும் பிரசவ வேதனை. ஆனால் இது எல்லாவற்றிலும் கேவலமானது அவளுக்கு ஏற்படும் பெண்மை நீக்கம் தான். இந்த அவஸ்தையெல்லாம் ஆணுக்கில்லையே!"

இப்படியான நேரங்களில் கணேசானந்தன் ஆறுதல் கூற முயற்சிப்பதில்லை. அது வியர்த்தம். ஆற்றோட்டத்துடன்தான் போய் அடுத்த கரையை அடைய வேண்டும் என்பது அவன் சித்தாந்தம். ஆனால் அவனுடைய மனைவி கூறியது முற்றிலும் உண்மைதான் என்று அவனுக்குப்பட்டது. ஒரு பசுஞ்சோலை கருகி அவன் கண் முன்னே பாலைவனமாகிக் கொண்டிருந்தது; பருவத் தோப்பொன்று மூப்பை நோக்கி அடியெடுத்து வைத்தது. ஓளவையார் ஒரு பெண் புலவரல்லவா? அவருக்குக் கூடவா இந்தக் கொடுமை புலவரல்லவா? அவருக்குக் கூடவா இந்தக் கொடுமை தென்படவில்லை? 'கொடிது, கொடிது வறுமை கொடிது' என்று தானே அவர் பாடினார்.

ஒரு பிராயத்திலே பெண்ணுக்கு ஏற்படும் இந்த அநீதி பற்றியல்லவா அவர் பாடியிருக்க வேண்டும்?

உள்ளிழுத்த தலையை ஆமை மெள்ள மெள்ள வெளியே விடுவதுபோல் சங்கீதாவும் மெதுவாக வெளியே வரலானாள். பள்ளிக்கு புதுத் தென்புடன் வந்து போனாள். தன் உடைகளிலும் ஒப்பனைகளிலும் முன்புபோல் கவனம் செலுத்தினாள். இடைக்கிடை அந்த வீட்டில் அவளுடைய குபீர் சிரிப்பு மறுபடியும் ஒலிக்கத் தொடங்கியது.

கோப்பி என்றால் ஐரிஷ் கோப்பி, துருக்கி கோப்பி, இந்தியா கோப்பி என்று இப்படி பலவகை உண்டு. ஆனால் 'முட்டை கோப்பி' என்பது இந்த உலகத்திலேயே யாழ்ப்பாணத்தில்தான் அகப்படும். இந்த அதிகாலை வேளையில் கடந்த ஐந்து நிமிடங்களாக சங்கீதா அதைத்தான் போட்டு 'இந்த அடி' அடித்துக் கொண்டிருந்தாள். தாய்மார்கள், சாமத்தியப்பட்ட பெண்களுக்கும், புதுமணப் பெண்கள் தங்கள் கணவன்மாருக்கும் தவறாமல் கொடுத்துவந்த பாரம்பரியமான காயகல்பம் இது. சங்கீதா இவ்வளவு கர்மசிரத்தையாக முட்டைக்கோப்பி போடுவது அவனுக்கு அதிசயமாயிருந்தது.

ஆனால் இதைவிட அதிசயம் அன்று பள்ளியிலிருந்து திரும்பி வந்தபோது அவனுக்கு அங்கே காத்திருந்தது. அவன் வீட்டிலிருந்து ஓர் ஆபிரிககப்பாடல் மெல்லிய குரலில் ஒலித்தது.

ராலம் தாங் கீ
ரா ஆ லம்
ரெல் பாபா கோட் தாங் கீ
வட் ஈ டு பாஃர் மீ
ஐகோ ரெல்
தாங் கீ

*இ. தொ.vamsa4*mtf **


** vamsa4.mtf ன் தொடர்ச்சி**

'கடவுளே நன்றி, என்னை மீட்டதற்கு நன்றி' என்ற 'கிறியோல்' பாடலை முணுமுணுத்தபடி சங்கீதா சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். அதிலே இன்னொரு விசேஷம், இவள் முதுகிலே ஒட்டிக் கொண்டு லப்பாத் துணியினால் விரிந்து கட்டப்பட்டிருந்தது ஒரு ஆபிரிக்கக் குழந்தை. அது வேறு யாருமில்லை, கரிக்குருவிதான். கறுத்த உருண்டையான கண்கள் அதற்கு. அற்தக் கண்களை மலர்த்தி தலையை இரண்டு பக்கமும் ஆட்டி அசைந்து கொண்டிருந்தது.

சங்கீதா கால்களை தரையில் தேய்த்து தேய்த்து உடம்பை அசைத்து பாட்டிற்கேற்ப ஆடிக்கொண்டிருந்தாள். பரத நாட்டியத்திற்கு பரம சத்துரு ஆபிரிக்க நடனம். பரத முனிவர் பரதநாட்டிய சாஸ்திரம் எழுதும்போது இடையின் கீழ்ப்பகுதி அசையாமல் நேராக நிற்க வேண்டும் என்பதை 'அண்டர்லைன்' பண்ணி எழுதி இருந்தார். ஆபிரிக்க நடனம் அப்படியல்ல. இடைக்குமேல் உடம்பு நேராக நிமிர்ந்து நிற்கும்; வேலையெல்லாம் பிருஷ்டத்துக்குத்தான் பெண்டுலம் போல அது இடமும் வலமும் அசைந்து மனசை அலங்கோலப்படுத்தும்.

சங்கீதா அப்படித்தான் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள். இந்த மாதிரி குதூகலத்தை கணேசானந்தன் அவளிடம் கண்டு பல மாதங்களாகிவிட்டன. அன்றிரவு அவர்கள் படுக்கைக்கு சென்றபோது 'கரிக்குருவியை' படுக்கையின் நடுவே அவள் கிடத்தியிருந்தாள், "அப்ப, என்ன பேர் வைத்திருக்கிறீர்? அபிராமியா?" என்றான் அவன், கண்களைச் சிமிட்டிக்கொண்டே. "ச்சீ, இல்லை; 'அய்சாத்து', என்ன இனிமை பாருங்கோ! அசல் ஆபிரிக்க பேர்."

"ஆஹா" இதுவும் அகர வரிசைதான்; அப்ப இன்னும் பதினொரு பேருக்க இடமிருக்கு."

"ஏன், மெய்யெழுத்தையும் சேர்ப்பதுதானே! 'அய்சாத்து' என்றால் ஆபிரிக்க பாஷையில் என்ன பொருள் தெரியுமா?" என்றாள் சங்கீதா. அவள் கண்கள் என்றுமில்லாதபடி வெட்டிக் கொண்டு இருந்தன.

"நீயே சொல்" என்றான் அவன், அவள் கண்களை அள்ளியபடியே.

"நம்பிக்கை" என்றாள் சங்கிதா, மந்தகாசமாக சிரித்தபடி.

சிறிது நேர மௌனத்திற்க பிறக அவன் சொன்னான்: "கடவுள் பெண்மைக்குத்தான் ஒர் எல்லை வைக்கமுடியும்; ஆனால் தாய்மையை எடுக்க முடியாதல்லவா?"

இப்படிச் சொல்லிக்கொண்டே அவளை மெல்ல தன் பக்கம் இழுத்தான். அவள் சிணுங்கிக்கொண்டே நெருங்கினாள்.

அவள் முகத்திலே பெண்மை வந்து கவிழ்ந்தது.

* * *

7

முடிச்சு

கிரேக்க புராணங்களில் கூறியுள்ள கோர்டியன் முடிச்சு என்பது ப்ரிகியா தேசத்து அரசன் கோர்டியஸ’னால் போடப்பட்ட முடிச்சாகும். கோர்டியஸ் அரசனாவதற்க முன்பு சாதாரண குடியானவனாக இருந்தவன். ஒருநாள் அவன் தன் வண்டியை ஒட்டிக்கொண்டு முதன் முறையாக ப்ரிகியா நகரத்துக்குள் நுழைந்தபோது தெய்வ வாய்மொழிப் பிரகாரம் அவனை அரசனாக அந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டனர். தன் நன்றிக் கடனாக சீயஸ் என்ற கடவுளுக்கு அந்த வண்டியை கோர்டியஸ் அர்ப்பணித்து வண்டியின் நுகத்தடியைச் சேர்த்து ரு முடிச்சுப் போட்டான். அந்த முடிச்சானது கடுஞ்சிக்கல்கள் கொண்ட ஒரு நூதனமான முடிச்சு. அந்த முடிச்சினை அவிழ்ப்பார் ஆசியாவுக்கு மகுடாதிபதியாவர் என்பது தொன்று தொட்டு வந்த வாக்கு. ஆண்டாண்டு காலமாக அந்த முடிச்சை அவிழ்க்க பலதும் முனைந்து தோற்றப் போயினர். மாவீரன் அலெக்சாந்தர் இதனைக் கேள்வியுற்று அந்த முடிச்சின் முன்னால் வந்து நின்றான்; நிதானமாகப் பார்த்தான்; தன் உடைவாளை உருவி ஓங்கி ஒரே வீச்சில் முடிச்சை இரு கூறாக்கினான்.

- கைக்கிரோசொப்ட் - என் காத்தா

நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கந்தையா வாத்தியார் கொடுத்த கணக்கு இதுதான்; "இரண்டு மரங்களுக்கிடையிலிருக்கும் தூரம் பத்து மைல். ஒரு மரத்திலிருந்து ஒரு மனிதன் மணிக்கு ஐந்து மைல் வேகத்தில் மற்ற மரத்தை நோக்கி நடக்கிறான். அதே நேரத்தில் மற்ற மரத்தில் இருந்து புறப்பட்ட நாய் ஒன்று மணிக்கு இருபது மைல் வேகத்தில் மனிதனை நோக்கி ஓடுகிறது. நாய் மனிதனிடம் வந்து சேர்ந்ததும் திரும்பவும் தான் புறப்பட்ட மரத்தை நோக்கி போகிறது. மரம் வந்ததும் திரும்பவும் மனிதனை நோக்கி ஓடுகிறது. இப்படியோ மாறி மாறி அது ஓடிக்கொண்டேயிருக்கிறது. கடைசியில் மனிதனும் நாயும் மற்ற மரத்தடியில் வந்து சேருகிறார்கள். நாய் ஓடிய தூரம் எவ்வளவு?"

கந்தையா வாத்தியார் இதைச் செய்பவருக்கு ஒரு ரூபா கொடுப்பதாக அறிவித்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக 'நேரமும், தூரமும்' கணக்குகளை உச்சந் தலையில் அடித்தடித்து உள்ளே இறக்கியிருந்தார். ஆனால் இந்த நாய்க் கணக்கு என்னை நாயாய் அலைத்துவிட்டது. இரண்டு நாளாக இதைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். அப்பதான் இந்த 'மண்டையன்' வந்தான். சூல்கொண்ட தேங்காய் போல அவனுக்கு பெரிய தலை. தலை முழுக்க அவனுக்கு மூளை என்று பரவலாக ஒரு பேச்சுமிருந்தது. இரண்டு கால்களையும் பரப்பிவைத்து, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு "என்ன கணக்கு?" என்றான். நான் சொன்னேன். யோசிப்பதுபோல் கொஞ்சம் கண்ணை மூடி "இன்னொருக்கால் சொல்" என்று அதிகாரம் செய்தான், நானம் 'சிவனே' என்று இன்னொரு முறை கூறினேன். அவன் "ஆ! விடை நாப்பதுமைல்" என்றான். நான் "எப்டி, எப்டி?" என்று பறந்தேன். மண்டையன் ஏளனமான ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு சொன்னான்: "பத்து மைல் தூரத்தை மனிதன் இரண்டு மணி நேரத்தில் கடக்கிறான். நாயின் வேகமோ மணிக்கு இருபது மைல்; இரண்டு மணியில் நாய் நாற்பது மைல் தூரத்தைக் கடக்கும்."

நான் வாயைப் பிளந்து கொண்டு சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றேன். இந்தச் சிறிய கணக்கை என்னாலே செய்ய முடியவில்லையே? அந்த நேரம் கந்தையா வாத்தியார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. "எந்தவொரு சிக்கலான கணக்குக்கும் இலகுவான ஒரு பாதை இருக்கிறது; உன் விவேகத்தால் அந்தப் பாதையை நீ கண்டு பிடிக்க வேண்டும்."

கணக்கிலே நான் படு புலியென்றாலும் இப்படி பலதரம் புல்லை சாப்பிட வேண்டி வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் எனக்கு நானே தேறுதல் கூறிக்கொள்வேன். கலாசாலையில் முதல் வருடம் படிக்கும்போது இப்படித்தான் ஒரு கணக்கு என் காலை வாரி விட்டது.

"ஒரு காதலன் தன் காதலியோடு ஆற்றின் ஓட்டத்துக்கு எதிராக படகிலே போகிறான். ஆற்றின் வேகம் மணிக்கு பத்து மைல்; படகின் வேகமோ மணிக்கு ஐந்து மைல். காதலரை வருடிய தென்றல் காற்று காதலன் போட்டிருந்த தொப்பியை நீரிலே தள்ளி விடுகிறது. (ஏன் இவன் காதல் செய்வதற்கு தொப்பி போட்டுக்கொண்டு போனான், முட்டாள்) காதல் வேகத்தில் நேரம் கழித்து பதைபதைத்து தொப்பியைத் தேடுகிறான். காணவில்லை. படாரென்று படகைத் திருப்பிக்கொண்டு (கருமி, கருமி) வந்த வழியோ போகிறான். எவ்வளவு மணி நேரத்தில் அவன் தொப்பியை மீட்பான்?"

இந்தக் கணக்கிலேயும் நான் அதே தவறைத்தான் செய்தேன். மூளையைக் கசக்கி விடையைத் தேடினேன். ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடினால் விடை கிடைத்து விடுமா? அடுத்த நாள் எங்கள் பேராசிரியர் கணக்கை விளக்கிய போது தான் 'அடே' என்று எனக்குப் பட்டது; அவமானமாகப் போய்விட்டது. விடை: அரை மணிநேரம் [ இந்த விடை காரணத்தை இங்கே விளக்கினால் இதுவே ஒரு கணக்குப் புத்தகமாகிவிடும். மேலே தொடருவோம்.]

சாதாரண மனிதர்களுக்குத்தான் இப்படியென்றில்லை. ஒரு விஞ்ஞானிக்கு நடந்ததைப் பார்ப்போம்... பாரிஸ் நகரில் ஜோர்ஜ் உர்பெய்ன் என்று ஒரு தலைசிறந்த விஞ்ஞானி இருந்தார். இவர் பல வருடங்களாக மூளையைச் செலவழித்தும், பணத்தை இறைத்தும் மிக அரிதான நாலு தனிமங்களை பொடிசெய்து குழம்பாக்கி பிறகு அவற்றை விஞ்ஞான முறைப்படி வேறுபடுத்தி தனிமங்களை கண்டுபிடிக்கும் அபூர்வ வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார். இவர் இந்தக் குழம்பைத் தூக்கி நளாயினி போல தலையிலே வைத்துக்கொண்டு ஒவ்வொரு விஞ்ஞானியாகத் தேடிச்சென்றார். இந்தக் குழம்பைத் தனிப்படுத்தி தனிமங்களின் பெயரைச் சொல்லும்படி இவர் மற்ற விஞ்ஞானிகளுக்கு சவால் விட்டார்.

ஹென்றி க்வியின் மொஸ்லே என்ற ஆங்கிலேய விஞ்ஞானி மாத்திரம் யாருமே எதிர்பாராத விதமாக ஒரு காரியம் செய்தார். அந்தக் குழம்பின் எலக்ட்ரான்களைப் பாய்ச்சி அதிலிருந்து புறப்பட்ட எக்ஸ்ரே அலைகளின் நீளத்தை கணித்து அந்த நாலு தனிமங்களின் பெயர்களையும் கடகடவென்று இரண்டே நிமிடத்தில் கூறிவிட்டாராம். இருபத்தியாறு வயதுகூட நிரம்பாத இளைஞர் மொஸ்லே. உர்பெய்ன் ஆடி விட்டார்; இத்தனை வருடத்து ஆராய்ச்சிகள் எல்லாம் வியர்த்தமானதில் அவருக்கு தாங்கமுடியாத வருத்தம்தான். எனினும் விஞ்ஞானத்துக்கு ஒரு புது வழி கிடைத்து விட்டதே என்று மகிழ்ந்து போனாராம்.

சாதாரண விஞ்ஞானிகளை விடுவோம்; கடவுளருக்கு வருவோம். நாதருடைய கையிலே ஒரு அழகிய மாம்பழம் இருந்தது. விநாயகர் அந்தப் பழம் வேணுமென்று 'தாம் தாம்' என்று குதித்தார்; முருகன் தனக்குத்தான் வேணுமென்று அடம் பிடித்தார். நாரதர் சொன்னார்: "யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பழம்." முருகன் யோசிக்கவில்லை. அந்தக்கணமே மயில் வாகனத்தை உலகத்தை வலம்பர புறப்பட்டார். பிள்ளையார் 'டொங்கு, டொங்கு' என்று எலியிடம் ஓடினார். எலி அவரை ஏற்றிக் கொண்டு இரண்டு அடி வைப்பதற்கிடையில் 'மூசுமூசு' என்று மூச்சு வாங்கியது. அப்படியே நசுங்கி நிலத்தோடு படுத்து விட்டது. "என்ன நின்று விட்டாயா? இப்ப முருகன் ஆபிரிக்காவின் மேல் போய்க் கொண்டிரு கிறானே! நான் இங்கே வாசற்படி கூடத் தாண்டவில்லை" என்று பெருமூச்சு விட்டார். "ஸ்வாமி, நீங்கள் கொஞ்சம் ஓவர் வெயிட்; காரட் ஜுஸ் மட்டும் இனி சாப்பிட்டு பாருங்கள்" என்றது எலி. விநாயகருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே வேறு ஒரு யுக்தி பண்ணினார். "அம்மையும், அப்பனுமல்லவோ உலகம்; நான் அவர்களை வலம் வந்தாலே போதுமானது" என்று நினைத்து அம்மையப்பனை வலம்வந்து மாம்பழத்தை கையிலே வாங்கும் தருணம் முருகன் மயிலிலே வீச்சாக வந்து 'சடன் பிரேக்' போட்டு நின்றார். விநாயகர் அவ்வளவுக்கும் நிற்பாரா, என்ன? தும்பிக்கையை எட்டிப் பழத்தைப் பறித்துக் கொண்டு மெள்ள நகர்ந்து விட்டார்.

நான் இப்படியான ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு பெரும் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தேன். நான் ஹாவார்டில் படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பேராசிரியர் அடிக்கடி கூறுவார். 'பூட்டுச் செய்தவன் சாவியும் செய்திருப்பான்" என்று சாவியைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். மனக்கண்ணினால் ஐந்தாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை நான் படித்தது எல்லாவற்றையும் அலசிப் பார்த்து விட்டேன். இதிகாசங்களையும், புராணங்களையும் தேடியாகிவிட்டது. கணிதவியலையும், பொருளியலையும் ஆராயவும் தவறவில்லை.

மனிதர்கள் இரண்டுவிதமானவர்கள். முதலாவது ரகம், சாதாரணமான நேரங்களில் சாதாரண வேலை செய்வார்கள், கழுத்தைப் பிடிக்கும் நெருக்கடி சமயம் சுடர்விட்டு பிரகாசிப்பார்கள். இரண்டாவது ரகம், சாதாரண நேரங்களில் அசாதாரண திறமையுடன் செயல் படுவார்கள். ஆனால் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு செய்வதறியாமல் திகைப்பார்கள்.

இதில் இரண்டாவது ரகம் இதிகாசத்தில் கர்ணன். வில் வித்தையில் கர்ணன் அர்ஜுனனைவிட ஒரு இழைமேல் என்றே சொல்லலாம். ஆனால் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில், பாவம் கர்ணன் செய்வதறியாது தடுமாறி நின்று போய் விடுவான். இந்தக் கால உதாரணம் வேண்டுமென்றால் டென்னிஸ் வீரன் கோரன் இவானி ஸேவிக்கை சொல்லலாம். இவனுடைய சர்வீஸ் 135 மைல் வேகத்தில் போகும். கண் வெட்டுவதற்கிடையில் மளமளவென்று புள்ளிகளைக் குவித்து விடுவான். ஆனாலும் என்ன பயன்? வெற்றித் தேவதை அணைக்கவரும் நேரத்தில், பாவம் இவனுக்கு கைகால்கள் சோர்ந்துவிடும். சர்வீஸ் 'பொத், பொத்' என்று விழும் எதிராளி தட்டிக்கொண்டு போய்விடுவான். இவன் விளையாட்டைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வரும்.

நான் முதலாவது ரகம். அசாதாரண நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதுதான் என் விசேஷத் திறமை. அதற்காகவே படித்துப் பட்டம் பெற்றவன். சூறாவளி என்றால் அதற்கு ஒரு மையம் இருக்கும்; மகாவிருட்சகம் என்றால் அதற்கு ஒரு ஆணி வேர் இருக்கும். எந்தவிதமான சங்கடத்துக்கும் ஒரு உயிர் மையம் இருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.

மறுபடியும் பேராசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெரிய பாழடைந்த பத்து மாடிக் கட்டிடம். இதை உடைத்தெறிய உத்தரவு வந்து விட்டது. நாங்கள் தகர்ப்பு விற்பன்னர்களைக் கூட்டி இந்தக் காரியத்தை ஒப்படைக்கிறோம். இது சாதாரண காரியமில்லை. ஒரு கட்டிடத்தைக் கட்டுவதிலும் பார்க்க மிகவும் சிரமமானது. அவர்கள் இந்தக் கட்டிட வரைபடத்தை முதலில் ஆராய்ச்சி செய்து கட்டிடத்தைத் தாங்கம் ஆதார மையங்களில் வெடி மருந்துகளைப் பொருத்துவார்கள். அது வெடித்ததும் கட்டிடம் ஆடாமல், அசங்காமல் சொன்னபடி கேட்டு அதே இடத்தில் வேறு சேதம் விளைவிக்காமல் பொத்தென்று வந்து விழும். உன்னுடைய வில்லங்கங்களை ஒட்டுமொத்தமாக தீர்க்க வேண்டுமானால் பிரச்சனையின் உயிர்நாடியைக் கண்டுபிடிக்க வேணும். அல்லாவிடின் மலேரியாக் காய்ச்சல்காரனுக்கு மாதவிடாய் நிற்க மருந்து கொடுத்தது போல அனர்த்தம்தான் விழையும்.

விஷயம் இதுதான். மிகவும் பெரிய ஒரு கம்பனியின் மானேஜிங் டைரக்டராக நான் இரண்டு வருட காலத்திற்கு முன்பாக பதவி உயர்வு பெற்றிருந்தேன். எனக்கு வயது முப்பத்தைந்து; எனக்கு முன்பு இருந்தவர் வயதானவர்; திடீரென்று மாரடைப்பில் இறந்து போனார். கம்பெனி இயக்குனர்கள் என் பேரில் முழு நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தனர். எல்லாம் நல்லாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று சனிதிசை பிடித்து ஆட்டத் தொடங்கியது.

விற்பனைகள் சரியத் தொடங்கின. தொழிலாளர்கள் அதிருப்தி காட்டி முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். முன்பிருந்த மானேஜிங் டைரக்டரின் மருமகன், ஜெயந்தன் என்பவன் கம்பெனிக்கு எதிராக நாசகார வேலைகள் பார்க்கிறானாம். இவன் என்னுடைய பதவியில் கண்வைத்து ஆவலாக எதிர்பார்த்து இருந்தவன் சில இயக்குணர்களையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறானாம். பங்கு மார்க்கெட்டில் கம்பெனியின் பங்குகள் சரியத் தொடங்கின. ஆனால் இது எல்லாத்தையும் விட மோசம் கிட்டடியில் வந்த செய்திதான்.

கம்பனியின் முழுமூச்சு ஏற்றுமதிதான். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்கு மாத்திரம் எழுபது வீதம். சமீப காலங்களில் வந்த ஓடர்களை முற்றிலும் நிறைவேற்ற முடியாமல் கம்பனி தத்தளித்தது. எதிராளிக் கம்பனி ஒன்று இந்த ஓடரில் ஒருபகுதியை தன் வசமாக முயற்சிகள் செய்து வந்தது. இது அவர்களுக்கு போனால் வேறுவினையே வேண்டாம்; கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான்.

தலைக்குமேலே தண்ணி போய்விட்டது. இனி என்ன செய்யலாம் என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு யோசித்த போதுதான் திருவண்ணாமலை ஞாபகம் வந்தது. அங்கே மகாயோகி இருக்கிறார். எனக்கு இப்டியான இக்கட்டுகள் வரும்போது அவரிடம்தான் ஓடுவேன். இதே மாதிரி இரண்டு முறை முன்பு போயிருக்கிறேன். அவர் அறிவுரை, ஆசியென்றொல்லாம் வழங்க மாட்டார்; உங்கள் சிந்திக்கும் திறனைத் தூண்டி விடுவார்.

அடுத்த நாளே திருவண்ணாமலை போய் விட்டேன். இரண்டு நாளாக யோகியாரை எங்குதேடியும் காணக் கிடைக்கவில்லை. கடைசியில் யாரோ சொன்னார்கள் யோகியார் பதினாறு கால் மண்டபத்தில் இருப்பதாக, யோகியாரிடம் ஓடினேன். அவர் சிரித்தபடியே இருந்தார். அந்தச் சிரிப்பிலே எத்தனையோ அர்த்தங்கள் எனக்கு தெரிந்தன. ஸ்வாமியைப் பார்த்தவுடன் எனக்கு வந்த காரியம் எல்லாம் மறந்துவிட்டது; அது மாத்திரமல்ல, என் கஷ்டமெல்லாம் அர்த்தம் இல்லாததாகவும் பட்டது. என் கண்கள் பனித்துவிட்டன. ஸ்வாமி என்னையே பார்த்தபடி இருந்தார்.

"ஆதிமூலத்தை அறிந்து விட்டாயா?" என்றார்.

"ஸ்வாமி, அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்; நீங்கள்தான் காட்டவேணும்" என்றேன்.

"மடையா, நான் என்னத்தைக் காட்டுவது? நீதான் தேடிப் பிடிக்க வேணும்" என்றார்.

"ஸ்வாமி, எனக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்தது...."

"என்ன, சாயுஜ்யபதவியா?" என்றார், ஸ்வாமி சிரித்தபடி.

"இல்லை, இது சாதாரண பதவிதான். மிக நல்லாக முன்னேறி வந்த கம்பனி காரணமின்றி படபடவென்று சரியத் தொடங்கி விட்டது. நாலா பக்கத்திலும் இருந்து எனக்கு தொல்லைகள். தலை நிமிர்த்தவே முடியவில்லை; மீழும் வழியும் தெரியவில்லை" என்றேன்.

"நாலா பக்கமும் பிரச்சனைகள் இல்லை; பிரச்சனையின் மூலம் ஒன்றுதான். நீதான் நாலு பக்கமும் பார்க்கிறாய். ஸ்பெய்ன் நாட்டில் நடக்கும் மாட்டுச் சண்டை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"சொல்லுங்கள், ஸ்வாமி"

"மேரடோர் என்பவன் எருதுடன் சண்டை போட்டு அதைக் கொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட வீரன். எருதுக்கும் இவனுக்கும் ஒரு நீண்ட போர் நடக்கும். இறுதியில் எருது களைத்து, தலையைத் தாழ்த்தி சோர்ந்துபோய், ஆனால் கடைசி மூச்சின் ஆங்காரத்தோடு சண்டைபோடும். எருது தலை குனிந்திருக்கும் அந்தக் கணத்தில் மேரடோர் என்பவன் தன் நீண்ட வாளை உருவி மாட்டின் தோள் பட்டைகளில் இடையே உள்ள ஒரு நுண்ணிய துவாரத்தில் வாளை நுழைத்து அதன் ஆதார நாடியை சேதித்து விடுவான். இந்த நேரம்தான் மகத்தான உண்மையான நேரம். எருது அந்தக் கணமே விழுந்து இறந்து விடும்."

"ஸ்வாமி, எனக்கு எல்லாம் புரிகிறது. ஆனால் அந்த ஆதாரநாடி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே? திசை தெரியாத பறவைபோல அல்லவா சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றேன்! ஒரு வழி காட்ட முடியாதா?"

ஸ்வாமி யாரோ பக்தர்கள் கொடுத்துவிட்டுப் போன ஒரு சீப்பு வாழைப்பழத்தில் இருந்து இரண்டு பழங்களைப் பிய்த்தார். "இந்தா, இதைக் கொண்டுபோ. இரண்டு நாளைக்கு இதுதான் உனக்கு சாப்பாடு. கொஞ்சம் பால் வேண்டுமானால் மட்டும் பருகலாம். மூன்றாம் நாள் காலை இங்கிருந்து போய் விடு" என்றார். நானும் பழத்தை எடுத்துக்கொண்டு என்னுடைய மடத்தை நோக்கி புறப்பட்டேன்.

அடுத்த நாள் காலை. ஒரு பழமும் ஒரு அண்டா பாலும் சாப்பிட்ட பிறகும் பசியும் ஆறவில்லை; பிரச்சனையும் தீரவில்லை. நான் படித்ததெல்லாவற்றையும் மறுபடி அசைபோட்டு பார்த்தேன். பீட்டர் ட்ரக்கர் கூறியதையும், கென்னத் கல்பிரெய்த் சொன்ன சித்தாந்தங்களையும், பிரடெரிக் டெய்லர் எழுதி வைத்ததையும் நினைவுகூர்ந்து பார்த்தேன். மனமானது சுழன்று சுழன்று வந்ததே ஒழிய ஒரு பிடியும் கிடைக்கவில்லை.

சிந்திப்பது மூன்று வகைப்படும். ஒன்று செக்கு மாட்டு வகை; ஒன்றையே திருப்பித் திருப்பி அசைபோடுவது. இது பிரயோசனமில்லாமல் நீன்று கொண்டே போகும். இரண்டாவது தொடர் சங்கிலி சிந்தனை முறை. இது ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்றாக தர்க்க ரீதியாக வருவது. மூன்றாவது பரவல் சிந்தனை. அறிவியலுக்கு ஆதாரமான பல சித்தாந்தங்களை பரவல் சிந்தனை மூலம்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். ஆகாய விமானத்தை கண்டுபிடத்த ரைட் சகோதரர்களாகட்டும், பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாந்தர் பிளெமிங் ஆகட்டும் பரவல் சிந்தனை மூலம்தான் தங்கள் மகா கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு அளித்தார்கள்.

இத்தாலி மகாவிஞ்ஞானி கலீலியோ ஒரு நல்ல கிறிஸ்துவர். அவர் தன் சித்தாந்தங்களை வெளியிட்டபோது அவை அன்றைய கிறிஸ்துவ நம்பிக்கைகளுக்கு முரணாக இருந்தன. இருந்தும் அவர் கருத்துக்களை அவசரமாக பகிரங்கப் படுத்திவிட்டார். தேவாலயத்து மதகுருக்களுக்கு அவர் கூறியது சங்கடமாக இருந்தது. வேறு என்ன? அவர் 'பூமி சூரியனைச் சுற்றி வருகிறது' என்று அபத்தமான உளறினால் அவர்களுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்? அவருக்கு அறுபத்தொன்பது வயது நடக்கும் போது தேவாலயத்தினர் அவரைக் சிறையில் இட்டனர்; சொன்னதை மறுதலிக்கும்படி வற்புறுத்தினர். கலீலியோ "பூமி சூரியனை சுற்றவில்லை, பூமி சூரியனை சுற்றவில்லை" என்று உரத்துச் சொல்லிவிட்டு மனத்திற்குள், தனக்குள் பூமிக்கும் மட்டுமே கேட்கும்படி, "என்றாலும் சுற்றுகிறது" என்று கூறினாராம்.

உலகத்தின் இன்றைய முன்னேற்றத்திற்க காரணம் கலீலியோ போன்ற விஞ்ஞானிகளின் பரவல் சிந்தனைகள் மூலம் பிறந்த அருமையான கண்டுபிடிப்புகள்தான். நான் தேடிக்கொண்டிருக்கும் விடையும் இப்படியான சிந்தனைகளில்தான் தங்கியிருக்கிறது என்று எனக்குப்பட்டது. மனதைக் குவித்து 'ஏகாக்கிரக சிந்தனை' என்று சொல்வார்களே அப்படி நேர்ப்படுத்தினேன்.

மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். தொழிற்சாலையில் போதிய ஓடர்கள் வந்து குவிந்தன; உற்பத்தி வேகமும் குறைந்ததாகத் தெரியவில்லை. விற்பனைகள் சரிவதின் காரணமென்ன? ஜெயந்தன் செய்யும் நாச வே€லைகளாக இருக்குமா? அவன் இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் கம்பெனியிலிருந்து ஒரு பெண்ணாக கூட்டிக்கொண்டு திரிகிறானே, இதற்கு நேரம் இருக்குமா?

ஜெயந்தனுடன் நேர் மோதலை நான் தவிர்த்துவந்தேன். ஒருமுறை கேட்டுவிட்டேன்: "ஜெயந்தன், நீ என்ன இப்படி ஒரு நாளைக்கு ஒரு பெண்ணுடன் சுற்றுகிறாயே! இது உனக்கும் நல்லதல்ல. பெண்ணுக்கும் நல்லதல்ல; கம்பெனிக்கும் நல்லதல்ல?"

அதற்கு அவன் கூறிய பதில் விசித்திரமாக இருந்தது. "எனக்கு பதின்மூன்று வயதாகியதிலிருந்து நான் இப்படி ஒரு விரதம் காத்து வருகிறேன். எப்பவும் கன்னிப் பெண்கள் பாதுகாப்பில் இருக்கவேண்டுமென்பதுதான் அது. எனக்கு கிடைக்கம் அந்தப் பாதுகாப்பை இப்படி சடுதியாக துறக்கச் சொல்கிறாயே. இது நியாயமா? நீ அதற்குப் பொறுப்பேற்பாயா?" என்றான். நான் அவனுக்கு பைத்தியம் முற்றிப் போய்விட்டது என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன்.

உண்மையிலேயே இவன் பைத்தியக்காரத்தனமான வேலைகள் செய்வானோ? தொழிலாளர்களுக்கு வேண்டிய சலுகைகளெல்லாம் செய்து கொடுத்திருக்கிறோமே! சக தொழிலாளருடன் ஒப்பிடும்போது இவர்களடைய சம்பளமும் வருமானமும் மிகக் கூடுதலாகவல்லவா இருக்கிறது! இருந்தும் அவர்களுடைய அதிருப்தியை தூண்டிவிடுவதற்கு இவன் காரணமாக இருப்பானோ?

திருப்பித் திருப்பி செக்குமாடு போலத்தான் சிந்தனை சுழன்று கொண்டே வந்தது. இரண்டு நான் இரண்டு யுகம் போல சென்றது. மிஞ்சியது பசியும் களைப்பும்தான். மூன்றாம் நாள் அதிகாலையே எழுப்பிவிட்டேன். நான் வந்தது வியர்த்தம் போலத்தான் பட்டது. பிரச்சனை அப்படியே கொழுக்கட்டைபோல் முழுசாக இருந்தது. நல்ல பசி. சாப்பிட்டுவிட்டு திரும்புவோம் என்ற முடிவோடு புறப்பட்டேன்.

பாதையோரத்தில் அந்தக் கிழவி சுடச்சுட தோசை வார்த்து விற்றுக் கொண்டிருந்தாள். நான் போனபோது அங்கே ஒரு சிறுமி மாத்திரம் தோசையை ஒரு பெட்டியில் அடுக்கிவிட்டு அதை மூல முயற்சி செய்து பார்த்தாள். வாழை இல் நேராக நட்டுக்கொண்டு நின்றது. அப்போ அந்த சிறுபெண் "பாட்டி, வாழை இலையை மடித்துவீடு, மடித்துவிடு" என்று மணியடிப்பது போல சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மூளையிலே ஒரு மின்பொறி தட்டியது "அப்படியும் இருக்குமா?" என்று மனசு போட்டு அடித்துக்கொண்டது.

அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு உடனேயே புறப்பட்டேன். வழிநெடுக சிந்தனை தொடர்ந்தது. ஒரு பெரிய கேள்விக்கு சிறிய விடை கொடு பபதும் ஒரு சிறிய கேள்விக்கு பெரிய விடையொன்று தருவதும் சில வேளைகளில் நடப்பதுதான். மிகவும்படித்து இறுமாந்த ஓளவைக் கிழவி ஒரு மாடுமேய்க்கும் சிறுவனிடம் தோற்கவில்லையா? கிழவி, சிறுவன்தானே என்று பாராமல் அவனுடைய கேள்விக்கு ஆழ்ந்து யோசித்திருந்தால் சரியான விடை கூறியிருப்பாள் அல்லவோ? ஓளவையார் பழத்தை எடுத்து "பூ, பூ" என்று ஊதியபோது சிறுவன், "என்ன பாட்டி! பழம் சுடுகிறதா?" என்று கேட்டு சிரித்த அந்தத் தருணத்தில் ஒளவையாருடைய மனம் என்ன பாடு பட்டிருக்கும்? ஒரு கணத்திலும் கணம் சிந்திக்கத் தவறியதன் விளைவல்லவா இது?

தொழிற்சாலையை வந்து அடைந்ததும் முதல் வேலையாக கணக்கு வழக்குகளைச் சரி பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். ஓடர்கள் எல்லாம் உரிய காலத்தில் தொழில்சாலையில் முடிக்கப்பட்டு விட்டன. ஏற்றுமதியில் தான் பிரச்சனை. துறைமுகத்திலே தேக்கம்; துறைமுகத்துக்கு எடுத்துப் போகும் வாகனங்களின் பற்றாக்குறை; ஆனபடியால் தொழிற்சாலை கிடங்கிலும் ஏற்றுமதிப் பொருட்கள் குவிந்து கிடந்தன.

எங்கள் தொழிற்சாலையில் நாங்கள் உற்பத்தி செய்தது உயர்ந்த ரச சமையல் பாத்திரங்கள். சமையல் பாத்திரங்கள் என்றால் சாதாரண வீட்டு சமையல் பாத்திரங்கள் அல்ல. இவையோ மிகப்பெரிய ஹோட்டல்களிலும் சமையல் விடுதிகளிலும் பாவிக்கும் உறுதியான எஃகுப் பாத்திரங்கள்; செப்பு அடித்தகடுவைத்த பென்னம்பெரிய பாத்திரங்கள். நாலு பருமன்களின் ஒன்பது ரக பாத்திரங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். இதற்காக தயாரித்த விசேஷமான பெரிய அட்டைப் பெட்டிகளில் அவற்றைப் போட்டு அடைத்து ஏற்றுமதி செய்வதுதான் வழக்கம்.

இந்தப் பாத்திரங்களின் கைபிடிகள் பெரிதாக மேலே நீட்டிக்கொண்டு நிற்கும் முதல் வேலையாக கம்பனி வரைபட வல்லுனரைக் கூப்பிட்டு இந்தப் பாத்திரங்களின் கைபிடிகளை மடித்துவிடக் கூடியதாக செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசித்தார். அவருடைய சிந்தனையும் என்னுடையதுபோல ஒரே நேர்க்கோட்டில் போயிருக்கவேணும். ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு ஒன்றும் பேசாமலே போய்விட்டார். அடுத்த நாள் அவர் கொண்டு வந்த புது டிசைனில் ஒரு பாத்திரத்தை செய்து பார்த்தோம். அது நல்லாகவே வந்திருந்தது.

அதிர்ஷ்டவசமாக 'பக்கிங்' பெட்டிகளில் ஒரு சிறு மாற்றம்தான் செய்ய வேண்டியதாக இருந்தது. அறுநூறு கன அடியில் முன்பெல்லாம் நூறு பாத்திரங்கள் அடைத்து அனுப்ப முடிந்தது. இந்தப் புது டிசைன்படி நூற்றி நாற்பத்திமூன்று பாத்திரங்கள் அடைக்கக் கூடியதாக இருந்தது. எங்கள் வாடிக்கைக்காரர்கள் இந்தப் புது டிசைனை வரவேற்றார்கள்.

என்னுடைய ஊகம் சரிதான். உற்பத்தி குறையவில்லையென்றாலும் ஏற்றுமதியில்தான் பிரச்சினை. தொழில்சாலையில் இருந்து கப்பலுக்கு போவதில் சுணக்கம்; துறைமுகத்தில் கப்பலில் ஏற்றுமதி செய்வதில் தடங்கள். பாத்திரங்களின் கைபிடியை மடக்குவதால் இப்போது முந்திய கனஅளவில் கூடிய பாத்திரங்களை அனுப்பக்கூடியதாக இருந்தது.

எங்கள் புது டிசைனை நடைமுறைக்கு கொண்டு வந்தேன். கிடுகிடென்று துறைமுகத்தில் தேங்கியிருந்த பெட்டிகள் குறையத் தொடங்கின. தொழில் சாலை சூடு பிடித்தது. ஆறே மாதத்தில் தேங்கி நின்ற பொருட்கள் எல்லாம் கப்பலேறிவிட்டன. ஓடர்கள் வரவர அவை உற்பத்தியாக்கப்பட்டு அதே வேகத்துடன் 'பக்' செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. ஏற்றுமதியின் வேகம் பார்த்து புது ஓடர்களும் வந்து குவிந்தன.

இதற்கிடையில் தொழிற்சாலை போனஸ் முறையிலும் சிறு மாற்றம் கொண்டு வரப்பட்டது. முன்பெல்லாம் உற்பத்தியில் போனஸ் கொடுக்கப்பட்டது. இப்போதோ ஏற்றுமதி அல்லது விற்பனை என்ற அடிப்படையில் கூடிய விகிதத்தில் போனஸ் வழங்கப்பட்டது. விளைவு? தொழிலாளரிடம் கூடிய ஒற்றுமை இருந்தது; எல்லோரும் ஒரே நோக்கத்தோடு பாடுபட்டார்கள்; தேக்கம் என்பதே அரிதாகிவிட்டது.

எங்கள் வரைபட வல்லுனரின் பெயர் சின்னபாரதி. அவருடைய தகப்பனார் பாரதியின் ரஸ’கனாக இருந்திருக்கக் கூடும் அவர் அதிசயித்துப் போனார். அவர் முப்பது வருடமாக அங்கே வேலை பார்த்து வருகிறார். அவர் கேட்டார்: "இத்தனை வருட காலமும் ஏன் ஒருவரும் இது பற்றி சிந்திக்கவில்லை?"

அதற்கு நான், "சில பேர் சில விஷயங்களை ஓர் இக்கட்டான சமயம் வரும்போதுதான் கண்டு கொள்கிறார்கள். இப்படியான கஷ்டம் எங்களுக்கு முன்பு வந்ததில்லையோ" என்றேன்.

ஆனால் எனக்கு இன்னுமொரு வேலை இருந்தது. இழந்துபோன ஓடர்களை மீட்பதற்கும், புது ஓடர்களைத் தொடர்ந்து ஸ்திரப்படுத்துவதற்கம்: வாடிக்கைக்காரர்களின் நன்மதிப்பை பெறுவதற்கும் ஒது புதுவித அணுகுமறை தேவைப்பட்டது. ஜெயந்தன் அதற்கு மிகவும் தகுந்த ஆளாகப் பட்டார். அமெரிக்க, ஐரோப்பா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கம்பனிக்கு ஒரு புதுமுகத்தை தயார் பண்ணவேண்டிய பொறுப்பை அவரிடம் கொடுக்க முடிவு செய்தேன்.

சின்னபாரதி இதைக் கேள்விபட்டதும் அசந்துவிட்டார். அவர் அனுபவஸ்தர்; நம்பகமானவர். அவருடைய அறிவுரைகளை நான் அவ்வப்போது கேட்பதுண்டு. அவர் சொன்னார்: "ஜெயந்தனுடைய அசைந்தாடும் நெஞ்சில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அவனிடம் இப்படியொரு பொறுப்பை ஒப்படைக்கலாமா? அரபுக் குதிரைபோல் நிமிர்ந்து திரியும் வெள்ளைக்கார மோகினிகளின் கண் வீச்சிலே இவனுடைய புத்தி சிதறிவிடுமே! இது இன்னும் சீரழிவையல்லவோ கொண்டு வரும்."

ஆனால் என்னுடைய உள்மனதுக்கு நான் செய்வது சரிபோல பட்டது. துணிந்து இந்தக் காரியத்தை ஜெயந்தனிடம் ஒப்படைத்தேன். ஜெயந்தனுக்கு அளவற்ற மகழ்ச்சி. அவருக்கு இப்படியாக கம்பனி செலவில் உலகம் சுற்றுவது மிகவும் பிடித்த காரியமாகப் போய்விட்டது. இதுதவிர இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்தது.

அவருடைய மாதச் சம்பளத்தை தவிர அவர்பிடிக்கும் ஓடர்களின் பிரகாரம் அவருக்கு ஒரு ஸ்பெஷல் போனஸ் இப்போதெல்லாம் வழங்கப்பட்டது. ஜெயந்தன் ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் வெளியே தங்கினார். ஓடர்கள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வெகுமும்முரமாக வேலையில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு வேறு விஷயங்களுக்கு நேரமே இல்லை. ஏற்றுமதி போனஸ் மூலம் அவர்கள் வரும்படி நல்லாக விரிவடைந்திருந்தது.

என்னுடைய கல்யாண குணங்களில் சிரேட்டமானது அடக்கம். என் எதிரிகள் எத்தனை 'மகா மேதாவி' என்றும் 'அறிவுஜ“வி' என்றும் திட்டும்போதெல்லாம் நான் மறுப்பதில்லை; பேசாமல் இருந்துவிடுவேன். ஆனபடியால் என்னுடைய தனித்திறமையால் கம்பனியை அதலபாதாளத்தில் இருந்து மீட்டு விட்டேன் என்று நான் சொல்லிக்கொள்ளமாட்டேன். அது தற்பெருமைபோல் தோன்றும்.

ஆறு மாதத்தில் கம்பனி இழந்த விற்பனைகளை எல்லாம் மீட்டுவிட்டது. நடப்பு வருடத்து விற்பனை முந்திய வருடத்து அதிகரித்து விட்டது. மூன்று வருடங்களில் கம்பனியின் விற்பனை இரண்டு மடங்காகி விட்டது; லாபம் எழுபது வீதம் கூடிவிட்டது. பங்கு விலைகள் கிறுகிறென்று ஏறிவிட்டன. இயக்குனர்கள் எல்லாம் ஒன்றுகூடி என் திறமையை சிலாகித்தார்கள். கம்பனியை இன்னும் தொழிற்சாலையை விரிவு செய்யவும், புது மெசின்கள் வாங்கவும் ஆலோசனைகள் தர வெளிநாட்டு நிபுணர்கள் தருவிக்கப்பட்டார்கள்.

இப்படியாக என்னுடைய வாழ்க்கைத் தேர் அந்தரலோகத்தில் பவனி வந்தது. அரம்பையர் சாமரம் வீசி பன்னீர் தெளித்தனர். தேவதூதர்கள் துந்துபி முழங்கினார்கள்; தேவதூதிகள் தும்புரு (அது என்ன தும்புரு?) வாசித்தார்கள். இந்த மயக்கத்தில் வெள்ளை முயல் போன்ற மேகக்கூடட்டங்களில் சங்சரித்துக் கொண்டிருந்த போதுதான் நான் எதிர் பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.

அரசாங்கம் திடீர் என்று கொண்டுவந்த ஒரு புதிய சட்டத்தினால் கம்பனியின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. எங்களுக்கு கிடைத்த சில சலுகைகள் நீக்கப்பட்டன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே கம்பனி கடகடவென்று கவிழத் தொடங்கியது. இந்த சமயத்தில் நான் கற்ற வித்தை ஒன்றும் பயன் தரவில்லை. தலைக்குமேல் தண்ணி போனபின் எனக்கு மறுபடியும் திருவண்ணாமலை ஞாபகம்தான் வந்தது. ஓடோடியும் சென்றேன்.

அங்கே யோகியார் என்னை எதிர்பார்த்து இருந்தது போல புன்சிரிப்புடன் வரவேற்றார். இந்த முறை எனக்கு வாழைப்பழம்கூட இல்லை; வெறும் தண்ணி தான். யோகியார் நான் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டார். பிறகு என் கண்களைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்.

அது இன்னொரு கதை


கடிதத்திலே ஆர்வமுள்ள வாசகர்களக்கு மாத்திரம்: பிரஸ்தாபிக்கப்பட்ட கணக்குக்கு விடை

ஆற்றை உறைய வைக்க வேண்டும் அதன்பிறகு படகின் வேகம் மணிக்கு பதினைந்து மைல். தொப்பி விழுந்தபோது அது ஆற்றில் அப்படியே இருக்கும். அரைமணியில் ஏழரை மைல் போனபடகு திரும்பவும் அதே தூரத்தை கடக்க அரை மணி ஆகும்.

* * *

ஞானம்


அமெரிக்காவின் நாஷனல் சயன்ஸ் பவுண்டேஷனின் ஆதரவில் நாங்கள் இருவரும் மேற்க ஆபிரிக்காவின் சியாரா லியோனுக்கு வந்திருந்தோம். எங்கள் பி.எச்.டி படிப்பில் இது ஒரு முக்கியமான கட்டம். அபூர்வ குரங்கு ஜாதியான கொலபஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக கடந்த ஐந்துவருடங்களாக பி.எச்.டி மாணவர்கள் ஆபிரிக்காவுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இம்முறை நானம் டேமியனும் இந்த ஆராய்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தோம். டார்வினில் சித்தாந்தப்படி குரங்குகள் எங்கள் மூதாதையரல்லவா? அந்த கோட்பாட்டில் உள்ள ஓட்டைகள் சிலவற்றை இந்த ஆராய்ச்சி நிரப்பும் என்று நாங்கள் நம்பினோம். இது என்னுடைய இரண்டாவது வருடம்; டேமியனுக்கு இதுதான் முதல் தடவை.

கலவரத்தின் உச்சத்தில் மடியைப் பிடித்தபடி ஐரோப்பா, அமெரிக்காவென்று அகதிகளாக தெறித்து ஓடி, நிலைமை சீரடைந்த சமயங்களில் திரும்பவும் யாழ்ப்பாண மண்ணில் மிதித்து, தமது மூத்த தலைமுறையினரை பார்த்து அதிசயித்து, ஆராய்ந்து, மூக்கின்மேல் விரலை வைத்து வியந்து 'இது என்ன கோணாக் கோணாக் காய்?' என்று கேட்டு, 'இதுதான் கோத்தை வித்த புளியங்காய்' என்று பதிலடிபட்டு, மூக்கின்மேல் வைத்த விரலை எடுத்து, ஆராய்ச்சிக்கான குறிப்புகளை மூட்டைகட்டிக் கொண்டு சலியாது திரும்புபவர்கள்போல, நாங்களும் எங்களுக்கு கிடைத்த நிதியுதவியில் சகல ஆராய்ச்சிகளையும் இரண்டே மாதங்களிலே பூர்த்தி செய்து எங்கள் பூரிவீக கடியினரின் மூலஸ்தானத்து ரகஸ்யங்களை உலகத்துக்கு 'ஆசை பற்றிய அறைய' வந்திருந்தோம்.

டேமியன் அமெரிக்கனாக இருந்தாலும் உயரத்தில் சராசரிதான். மெலிந்த தேகம். புத்திக் கூர்மையான கண்கள். எதையும் ஆராய்ந்து அறியும் வேட்கை இயல்பாகவே அவனுக்கு இருந்தது. கால்கள் ஒரு இடத்தில் நிற்காது. எப்பவும் சாகசமாக எதையும் சாதிப்பதற்கு தருணம் பார்த்திருப்பான். கற்பாறைகளை வெறும் கையால் பிடித்து ஏறும் வித்தையில் கெட்டிக்காரன். அதற்கேற்ற உடல்வாகு அவனுக்கு இருந்தது. பெண்களும், ஆண்களும் சமமாக பங்கேற்கும் விளையாட்டு இந்த உலகத்திலேயே இது ஒன்றுதான். இதற்கு உடல் அமைப்பு சிறியதாகவும், கைவலிமை பெரியதாகவும் இருக்க வேண்டும். இந்த தகுதி டேமியனுக்கு இருந்தது. செங்குத்தான பாறைகளில் வெறும் கைகளை மூலாதாரமாகப் பற்றி இவன் கிறுகிறுவென்று ஏறும்போது பார்ப்பவர்கள் நெஞ்சம் துணுக்குறும். இரண்டு மாதகாலம் ஆபிரிக்கக் காட்டில் வேலை செய்வதற்க அளவில்லாத ஆர்வத்தை அள்ளிக்கொண்டு இவன் என்னோடு வந்திருந்தான்.

இந்த இரண்டு மாத காலமும் நாங்கள் நடுக்காட்டில் கடைபரப்பி கொலபஸ் குரங்குகளின் பூர்வீகத்தையும், சமுதாய வாழ்க்கை விபரங்களையும் அவதானித்து குறிப்புகள் சேகரிக்க வேண்டும். புலம்பெயர்வு, உணவுமுறை, குடும்பம், குட்டிகளைப் பராமரித்தல் எல்லாம் இவற்றில் இடங்கும். இறுதியில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள கொலபஸ் குருங்குகளைக் கைபற்றி PIT முறையில் அடையாள எண்ணிட்டு அவைகளைப் பற்றிய குறிப்புகளை கம்புயூட்டரில் பதிந்துகொண்டு காட்டிலேயே அவைகளை திருப்பி விட்டுவிட வேண்டும். அடுத்த வருட தொடர் ஆராய்ச்சியில் இந்தக் குரங்குகளின் புலம் பெயர்வு, பழக்கவழக்க மாற்றங்கள் எல்லாம் இலகுவில் தெளிவாகி விடும்.

PIT என்றால் Passive Integrated Transponders. குரங்குகளைப் பிடித்ததும் இஞ்செக்ஷன் மூலம் குண்டூசி தலையளவு பருமனுள்ள துகளை அந்தக் குரங்குகளின் தோலின் கீழே செலுத்திவிடவேண்டும். எங்கள் ஊர்களில் மாடுகளை சாய்த்துப் போட்டு, கொல்லனுடைய உலையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் நாமம் சுடுவதுபோல இதுவும் ஒரு அடையாள நம்பர் முறைதான். ஆனால் இந்த முறையில் குரங்கு சூடுபட்டு துடிக்கத் தேவையில்லை. அந்தக் குரங்கின் நம்பர் அந்தத் துகளில் இருக்கும். இதற்கென்று இருக்கும் எலக்ட்ரோனிக் கருவியை அந்த குரங்குக்கு கிட்ட கொண்டு வந்ததும் அந்த நம்பர் பளிச்சென்று தெரியும். குரங்குக்கு ஒரு நோவும் இல்லாமல் அந்தத் துகள் அதன் உடம்பில் ஆயுள் பரியந்தமும் இருக்கும். அந்த நம்பரில் குரங்கு பற்றிய விபரங்களெல்லாம் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கல்லூரி கம்புயூட்டரில் பதிவாகிக் கொண்டிருக்கும்.

நாங்கள் காட்டிலேயே வாழ்ந்து எங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக பல வாரங்கள் தொடர்ந்தோம். ஒரு விக்கினமும் இன்றி ஆராய்ச்சிகள் நன்றாக நடைபெற்று முடியுந் தறுவாயில் இருந்தன. எங்கள் குடிசையிலே எங்கே பார்த்தாலும் கத்தை கத்தையாக குறிப்புகளும், டயரிகளும், புத்தகங்களம், கோப்புகளுமாக கிடந்தன. இனிமேல் எல்லாக்குறிப்புகளையும் சீர்படுத்தி கலிபோர்னியாவில் போய ஆய்வைத் தொடர வேண்டியதுதான். குரங்குகளைப் பிடிக்கவேண்டி தருணம் இறுதியில் வந்தது. தலைக் குடிமகனிடம் போய் முந்திய வருடம்போல குரங்குகளைப் பிடிக்க வேண்டிய உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொள்வதென்று தீர்மானித்தோம். அங்கேதான் எங்களுக்கு ஒரு வில்லங்கள் காத்திருந்தது.

நாங்கள் அவரைப் பார்க்கப் போனபோது அவர் முன் விறாந்தையில் இருந்த ஒரு 'வலை ஏணையில்' (Hammock) ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு இருந்தார். கறுப்பு மலையை உருட்டிவிட்டது போல இருந்தது அந்தக் காட்சி. வண்ணப்பூக்கள் போட்ட நீண்ட வெள்ளை அங்கியும், அதே கலர் தொப்பியும் அணிந்திருந்தார். அவருடைய வாய் ஓயாது 'கோலாநட்டை' சப்பியபடியே இருந்தது. மேலே கூரையில் இரண்டு கோழிகள் காலில் கட்டப்பட்டு தலை கீழாக தொங்கிக்கொண்டு இருந்தன. அவை அடிக்கடி செட்டைகளை அடிக்கும்போது மெல்லிய காற்று வந்து அவருடைய பிரும்மாண்டமான உடம்பை ஆற்றியது. கோழிகள் களைப்படைந்து ஓய்வெடுக்கும்போது இவர் தன் கையிலிருக்கும் 'பாம்' ஓலைவிசிறியால் விசிறிக் கொண்டார். அப்போது அவர் முகத்திலே அப்பிக் கொண்டிருந்த இலையான்கள் எல்லாம் ஒன்றுகூடி எழுந்து ஒரு வட்டம் அடித்துவிட்டு திரும்பவும் வந்து தங்கள் தங்கள் 'சீட்களில்' உட்கார்ந்து கொண்டன.

ஆரவாரத்துடன் எங்களை வரவேற்றவர் முன்பென்றும் இல்லாத மாதிரி பற்கள் தெரிய அட்டகாசமாக சிரித்தபடியே குரங்குகள் பிடிக்கும் செலவிற்கும் பேரம் பேசத் தொடங்கினார். அந்தக் கால அரசர்களிடம் அஸ்வசாஸ்திரம் தெரிந்த விற்பன்னர்கள் பக்கத்திலேயே இருப்பார்களாம். அதுபோல இவரிடமும் குரங்கு சாஸ்திர நிபுணா ஒருவர் நீண்ட நெடுமரமாக ஒரு பக்கத்திலே நின்றுகொண்டு அவ்வப்போதுதன் ஞானக்கண்ணைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். கத்தி படாத தாடையை சொறிந்து சொறிந்து ஒன்றிரண்டு ஞானமுத்துக்களை உதிர்த்தார். மற்றப் பக்கத்திலே அடைப்பைக்காரன் போல வண்ணம் அவ்வப்போது கோலாநட் சப்ளை செய்தவண்ணம் இருந்தார். இவர் முகத்திலே, காவடி எடுப்பவர்கள் செடில் குத்தியதுபோல கன்னங்களிலும், நெற்றியிலும், கண்களுக்குக் கீழேயும், உதட்டின் மேலேயும், நாடியிலும் மீன் செதிள் போன்ற 'மென்டே' இனத்து சின்னங்கள் விழுப்புண்களாக பரவிக் கிடந்து அழகூட்டின.

ஒரு குரங்கு பிடிப்பதற்கு காசு இருநூறு லியோன்வரை தயங்காமல் கேட்டார் தலைக்குடிமகன். இவர்கள் இருவரும் ஒரே 'கரண்டில்' வேலை செய்வது போல் வேகமாக ஆமோதித்து தலையாட்டினார்கள். இது போன வருடத்திலும் பார்க்க பத்து மடங்கு அதிகம். நாங்கள் என்ன, குரங்கைப் பிடித்துமூட்டை கட்டி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறோமோ? பிடிப்பதற்குத்தானே பணம்; மறுபடியும் காட்டிலே விட்டுடத்தானே போகிறோம்!

கடைசி விலை நாற்பது லியோன் என்று நான் சொன்னதும் தலைக்குடிமகன் ஆவென்று வாயைப் பிளந்தார். அங்கே முப்பத்திரண்டு பற்களும், அறுபத்திநாலு சானல்களும் தெரிந்தன, நீண்ட நேர மந்திராலோசனைக்குப் பிறகு ஒருவாறு தலைக்குடிமகன் இறங்கி வந்தார். நூறு லியொனுக்கு பேரம் பூர்த்தியானது. பட்ஜெட் இடிக்கத் தொடங்கிவிட்டது; என்றாலும் வேறு வழியென்ன? பாதி சவாரியில் இறங்க முடியுமா? நாங்கள் அவர் கேட்ட அக்கிரமமான விலையை கொடுப்பதற்கு சம்மதித்தோம்.

ஆபிரிக்கக் காட்டில் இரண்டு மாங்கள் ஓடிவிட்டன. ஆரம்பகாலத்து ஆர்வமெல்லாம் மறைந்து எங்கள் முகங்கள் களையிழந்து காணப்பட்டன. நுளம்புகள் கடித்து பண்பட்ட எங்கள் உடம்பு திட்டுத் திட்டாகத் தடித்து தடுக்குப் பாய்போல ஆகியிருந்தது. பசளையில்லாமல் பயிரிட்ட பாவக்காய் போல முறுகி, 'புஃல்லாபிரட்' என்று சிறப்பு நாமதேயம் பெற்ற ரொட்டியையும், அவித்த கடலையையும், வறுத்த சோளத்தையும் சாப்பிட்டு, சாப்பிட்டு வாய் மரத்துவிட்டது. கடைசி மாவிலே பிடித்த கொழுக்கட்டைபோல 'மொக்கட்டி, நெக்கட்டியான' படுக்கையிலே ஒரு கண் நித்திரைகூட வரமறுத்தது. 'படுக்கை நொந்தபடி' என்ற பாடல் வரிகளின் அர்த்தம் மூளையில் இறங்கியது. குலையீனா வாழைக் குருத்துகள் போன்ற இளம் ஆபிரிக்கப் பெண்கள் காலையும், மாலையும் தண்­ருக்கும், விறகுக்குமாக அலைந்து திரிந்து தலைச்சுமையோடு அசைந்து நடந்து வரும் அழகை காத்திருந்து பார்ப்பதுகூட எங்களுக்கு இப்பவெல்லாம் அலுத்துவிட்டது.

இப்படியாக மனமுடைந்திருந்த சமயத்தில்தான் ஒரு நாள் அதிகாலை தலைக் குடிமகனிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்த செய்தி வந்தது. சிறுவர்களும் பெரியவர்களுமாக தாரை தப்பட்டைகளை தட்டிய படியே குரங்கு கூட்டத்தை துரத்தி வந்து ஒரு பெரும் மரத்திலே ஏற்றி விட்டார்கள். நாங்கள் அங்கே ஓடிவந்தபோது பக்கத்திலே வளர்ந்திருந்த சிறுமரங்களையும் செடிகளையும் தறித்துவெறுமையாக்கி கொண்டிருந்தார்கள். குரங்குகள் பாவம் 'கீயாமாயா' என்று கத்தியபடி கீழேயும் மேலேயும் போய் அலறத் தொடங்கின. பேச வழியில்லை என்று தெரிந்ததும் அலறல் அழுகையாக மாறத் தொடங்கியது. மரத்தின் கீழே வலைப்பரப்பி தயார் நிலையில் இருந்தது. குரங்கு சாஸ்திர விற்பன்னரும், அடைப்பைக்காரரும் ஓடியாடி மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சி ஓர் அபூர்வமான காட்சி. வாழ்நாளிலே காணக் கிடைக்காத காட்சி. சின்னதும் பெரிதுமாக எத்தனை நிறத்தில் எத்தனை விதமான குரங்குகள். திகிலுடன் கிளைக்கு கிளை பாய்ந்து 'கீகீ' என்று கோஷமிட்டு அவை செய்த கூத்தை விவரிக்க ஏலாது. தவ்வல் குட்டிகள் தாயின் மடியை இறுக்கிப் பிடிக்க தாய் குரங்குகள் தடுமாறியபடி கிளைக்கு கிளை தாவி தப்புவதற்கு வழி தேடின. சின்ன விரல் சைஸ் கிளைகளில் நுனியில் குரங்குகள் தொங்கியபடி ஊஞ்சல் ஆடின. மனம் 'என்ன ஆகுமோ?' என்று பயந்து துணுக்குற்றது. 'என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத கொம்பு?' என்ற கம்பர் கூற்றின் உட்கருத்து எனக்கு புலனாகியது.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி குரங்குகள் பொத் பொத்தென்று எங்கள் கைகளில் வந்து குதிப்பதாய் தெரியவில்லை. அப்பொழுது அடைப்பைக்காரர் பெரிய கோடாரியொன்றை எடுத்து மரத்தை 'டம், டம்' என்று அடிக்கத் தொடங்கினார். அனுபவமில்லாத ஒரு குரங்கு மரத்தை யாரோ வெட்டுகிறார்களென்று பயந்து அவசரமாக குதித்தது. அதைத் தொடர்ந்து வெள்ளையும் சிவப்புமாக குரங்குகள் குதிக்கத் தொடங்கின. அந்தக் காட்சி வெள்ளை மலர்களையும் சிவப்பு மலர்களையும் தேவர்கள் ஆகாயத்திலிருந்து கொட்டுவது போல இருந்தது. 'ஸ்வீட் ஜ“சஸ்' என்று கத்தியபடி டேமியன் செய்வதறியாது அங்குமிங்கம் ஓடினான். அளவுக்கு மீறிய பரபரப்பான சமயங்களில் டேமியன் இப்படி கத்துவது வழக்கம். குரங்குகள் குதிக்க குதிக்க ஆபிரிக்க சிறுவர்கள் 'பொக்கு பிளென்டி! லெவ்வாம், லெவ்வாம்!' என்று கூவியபடி கோழிக்குஞ்சை அமுக்குவது போல் பக்கென்று அவற்றைப் பிடித்துக்கொண்டு ஓடியோடிப்போய் மூங்கில் கூட்டிலே அடைத்துவிட்டு வந்தார்கள்.

கொலபஸ் குரங்குகளில் இரண்டு விதம் இருந்தது. ஒன்று சிவப்பு வரை; மற்றது கழுத்திலே வெள்ளை வளையம் போட்டது. தவறுதலாக வலையில் பிடிபட்ட சாதாரண குரங்குகளை நாங்கள் திரும்பவும் கொண்டு போய் காட்டிலே விட்டுவிட்டோம். ஒன்றிரண்டு கொழுத்த குரங்குகளை அவர்கள் சாப்பாட்டுக்காக வைத்துக்கொண்டார்கள். குரங்கு இறைச்சியை ஆபிரிக்காவின் மென்டே இனம் விரும்பிச் சாப்பிடும். நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான வெற்றி. ஆஹா, என்ன நிம்மதி! இனி எங்கள் வேலைகள் இரண்டு நாளிலேயே சுலபமாக முடிந்துவிடும்.

டேமியனுக்கு சந்தோஷம் தலைகால் புரியவில்லை. அதைக்காட்டும் முகமாக 'பாம்' மரங்களில் ஏறி ஏறி இறங்கினான். அவனுக்கு பாம் மரங்களில் ஏறுவதும் எஸ்கலேட்டரில் மேலே போவதும் ஒன்றுதான். மரத்தின் உச்சிக்குப் போனதும் முட்டிகளில் வடிந்திருக்கும் பாம் வைனை ஒரு மிடறு குடித்து ருசி பார்த்துவிட்டு போன வீச்சில் இறங்கிவிடுவான். கற்பாறைகளை வெறும் கையால் பிடித்து ஏறுபவனுக்கு பாம் மரம் ஏறுவது ஒரு காரியமா? வேலைகள் தலைக்குமேல் இருக்கும்போது இவன் இப்படி சிறு பிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தது, எனக்க எரிச்சலாக இருந்தது. அவனுடைய மரம் ஏறும் வித்தைக்கு விரைவிலேயே ஒர் உபயோகம் வரப்போகும் விஷயம் எனக்கு அப்போது தெரியவில்லை.

ஆபிரிக்கக் காடுகளின் உட்பகதிகளில் கட்டியிருக்கும் சில குடிசைகளின் பக்கம் அந்நிய மனிதர்கள் அணுக முடியாது. களி மண்ணும் வைக்கோலும் சேர்த்து பிசைந்த ஒரு கலவையால் கட்டிய குடிசைகள் அவை. வைக்கோல் கூரை. இந்தக் குடிசைகளில் தான் ஆபிரிக்க சிறுவர்களுக்கான சில ரகஸ்ய சடங்குகள் நடைபெறும். மிகவும் ரகஸ்யமாக நடக்கும் இந்த சடங்கின் பின்தான் ஒரு சிறுவன் மனிதன் ஆகிறான் என்பது இங்கே ஐதீகம். அந்த சடங்கிற்காக போடப்பட்ட பழைய குடிசை ஒன்றிலே பெரியவர்கள் ஓர் ஆந்தையையும் இரண்டு குஞ்சுகளையும் கண்டு விட்டார்கள். ஆந்தை என்றால் ஆபிரிக்காவில் பேய் பறவை என்று பேர். அங்கே கண்டாலும் அதை அந்தக் கணமே கொண்டுவிட வேண்டும். துப்பும் பாம்பைக்கூட சட்டை செய்யாமல் கிட்டப்போய் வெறும் கையால் பிடித்துவிடும். ஆபிரிக்கர்கள் ஆந்தையைக் கண்டால் ஒரு கட்டை தூரம் ஓடிவிடுவார்கள்.

ஆந்தை அவர்களுக்கு கெடுதல் விளைவிக்கிறது என்று முழு மூச்சுடன் நம்பினார்கள். ஒருமுறை ஆந்தையினால் அந்த கிராமத்தில் பேதி வந்து அரைவாசிப் பேர் இறந்து போனார்களாம். இன்னொரு தடவை உரிய நேரத்துக்கு மழை வராமல் பயிர்கள் எல்லாம் அழித்து விட்டனவாம். முழு கிராமமும் ஒன்றுகூடி இது பற்றி நீண்ட நேரம் விவாதம் செய்தது. முடிவாக குடிசையுடனேயே சேர்த்து ஆந்தையையும் குஞ்சுகளையும் கொளுத்தி விடுவது என்று தீர்மானமாகியது.

இந்த செய்திகள் அவ்வப்போது எங்களுக்கு மெண்டே சிறுவர்கள் மூலம் வந்து கொண்டிருந்தன. எனக்கு தெரிந்த கொஞ்சம் மெண்டே பாஷையை வைத்து அவர்கள் கூறுவதை புரிந்து கொண்டேன். இதை நான் டேமியனுக்குச் சொன்னதும் அவன் 'ஸ்வீட் ஜ“ஸஸ்' என்று தலையிலே கைவைத்து கத்தினான். ஆந்தைகளைப் பற்றி அவனுடைய ஞானம் அபாரமானது. தீவிர ஆராய்ச்சிகள் செய்து சயன்ஸ் பத்திரிகைகளில் கட்டுரைகள் எல்லாம் எழுதியிருக்கிறான். அவனால் இந்த அநீதியை ஜ“ரணிக்க முடியாமல் இருந்தது. எப்படியும் அந்த ஆந்தைகளை காப்பாற்றுவது என்று அவன் மனதிலே தீர்மானித்துக் கொண்டான்; இதற்கு அவன் என் தயவையோ, கட்டளையையோ எதிர்பார்க்கவில்லை.

கடவுளால் படைக்கப்பட்ட அத்தனை ஜ“வராசிகளிலும் மிகவும் அற்புதமானது ஆந்தை என்பது அவன் கருத்து. முதலாவதாக, பறவை இனத்திலே அது ஒன்றுதான் இரவு பட்சிணி. வெளவால் பறவையல்ல, மிருகம். ஆகவே அதைக் கணக்கிலே சேர்க்கக்கூடாது. இரண்டாவதாக கண்களை திருப்பாமல் கழுத்தை மட்டும் நூற்றியம்பது டிகிரி திருப்பி தன் இரையைத் தேடும் வல்லமை படைத்தது. வேறொரு மிருகத்துக்கோ பறவைக்கோ இந்த சலுகை கிடையாது. கண்கள் பெரிதாக இரவிலே பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். காதுகள் இரண்டும் ஒன்று மேல் பார்த்தும் மற்றது கீழ் பார்த்தும் இருட்டிலே திறையறிவதற்கு ஏற்றமாதிரி அமைந்திருந்தன. அது மாத்திரமல்ல, உடம்பின் ஒவ்வொரு பகுதியும் ஒலியை வாங்கி திசையறிவதற்கு தகுந்தமாதிரி இதற்கு அமைக்கப்பட்டிருந்தது.

இது பறக்கும் விசித்திரத்தை விஞ்ஞானிகள் இன்னும் முற்றிலும் கற்றுத் தேறவில்லை. மற்றப் பறவைகள் பறக்கும்போது சடசடவென்று செட்டைகளை அடித்து பறக்கும். இரவு வேளைகளில் இப்படி ஆரவாரம் செய்து பறந்தால் இதனுடைய இரை ஓடி மறைந்து கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவோ, இது பட்டம் பறப்பதுபோல் ஒருவித சத்தமும் போடாமுல் விசுக்கென்று இறாஞ்சி விழுந்து இரையைப் பிடித்துவிடும். கும்மிருட்டிலே காதுகளின் ஒலியை மட்டுமே வைத்து எங்கோ புதருக்குள் ஓடும் எலியை வந்து லபக்கென்று பிடித்துவிடும் அற்புதம் வேறு எந்த பறவையிடமும் கிடையாது.

ஆனால் இதனிலும் விசித்திரம் அது சாப்பிடும் முறைதான். பிடிக்கும் இரையை அது அப்படியே முழுசாக விழுங்கிவிடும். மற்றப் பறவையினம்பேல இரையை கால நகங்களிலே கௌவிப் பிடித்து அலகினால் கொத்தித் கிழித்து சாப்பிட இதற்குத் தெரியாது. சில பெரிய ஆந்தைகள் ஒரு சிறிய முயற்குட்டியைக்கூட அப்படியே முழுசாக தூக்கி விழுங்கி விடுமாம். உண்ட சிறிது நேரத்தில் உணவு செரித்தபின் வேண்டாத எலும்புகளையும் கழிவுகளையும் அப்படியே துப்பிவிடும்.

இதிலே அதிசயம் என்னவென்றால் ஆபிரிக்க ஆந்தைகள் விவசாயத்திற்க செய்யும் தொண்டு அளப்பரியது. மனிதன் பாடுபட்டு விளைவித்த தானியங்களைச் சேதமாக்கும் சுண்டெலிகள், எலிகள், பெருச்சாளிகள் போன்ற எல்லாவற்றையும் ஆந்தைகள் தேடிப்பிடித்து சாப்பிட்டுவிடும். ஆந்தைகளினால் மனிதனுக்கு நன்மையே ஒழிய ஒருவித தீங்கும் கிடையாது. டேமியன் செய்த ஆராய்ச்சியின் பிரகாரம் ஆந்தைகள் இல்லாவிட்டால் ஆபிரிக்காவின் உணவுப் பற்றாக்குறை இருபதுவீதம் அதிகரித்து விடுமாம்.

இதுதான் டேமியனுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. அவனை என்னால் தடுக்க முடியாது. ஆகவே உதவி செய்வதாகத் தீர்மானித்தேன். இந்தக் காரியத்தில் அவன் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் எங்களுடைய ஐந்து வருட கொலபஸ் ஆராய்ச்சி மட்டும் தொடர முடியாமல் ஸ்தம்பித்து போகும் என்பதில் எனக்கு ஒருவித சந்தேகமும் இல்லை.

அன்றிரவு நடுநிசியளவில் டேமியன் கையுறைகளையும், முதுகுப் பையையும் மாட்டி, வளையம் வைத்த லைட்டையும் தலையிலே பொருந்திக் கொண்டு துணிச்சலுடன் புறப்பட்டான். நான் வேவுபார்த்துக்கொண்டு வெளியிலேயே காவல் இருந்தேன். ரகஸ்ய சடங்கு குடிசையை அடைந்ததும் டேமியன் தலையில் மாட்டிய லைட்டை இயக்கினான். அதிர்ஷ்ட வசமாக தாய் ஆந்தையையும், குஞ்சுகளும் அங்கேயே இருந்தன. திடீரென லைட்டைக் கண்டு திகைத்திருந்த தாய் ஆந்தையை முதலில் பிடிப்பதில் டேமியனுக்கு ஒருவித சிரமமும் இருக்கவில்லை. பிறக இரண்டு குஞ்சுகளையும் பிடித்து முதுகுப் பையிலே மரம் ஒன்று சிறிது தூரத்திலேயே இருந்தது. டேமியன் அந்த மரத்தில் சறுசறுவென்று ஏறி ஆந்தையையும் குஞ்சுகளையும் வெகு கவனமாக ஒரு மரங்கொத்திப் பொந்தில் தெரியாமல் இருவரும் வெகு வாதுவாக திரும்பி வந்து படுத்து விட்டோம்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே சத்தம் கேட்டு விழித்துக்கொண்டோம். ஆரவாரம் காதைப் பிளக்க வெளியே வந்து பார்த்தோம். தலைக்குடிமகனை கயிற்றுப் பல்லக்கில் தூக்கியபடி பல்லக்கு காவிகள் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். மலைபோன்ற உடம்பை நிமிர்த்தி வைத்து இடமும் வலமும் பார்த்தபடி போனார் தலைக்குடிமகன்.

சூரன்போர் திருவிழாவில் சூரன், சிங்கமுகன் பானுகோபன் என்று மாறிமாறி வரும். உடம்பு ஒன்று; தலைமாத்திரம்தான் மாறும். சகடையில் வைத்து தள்ளிவரும்போது புன்னாலைக்கட்டுவன் தச்சனார் பின்னாலிருந்து சூரனுடைய காதுகளை இறுக்கிப் பிடித்து இடமும் வலமும் ஆட்டியபடியே இருப்பார். அதற்கேற்றபடி கைவாளும் மேலும் கீழும் ஆடும். நாங்கள் சூப்புத்தடியை நக்கியவாறு பயத்துடன் இந்த வைபவத்தை பார்த்துக்கொண்டு இருப்போம். அப்ப 'பானுகோபன், பானுகோபன்' என்று சத்தம் கேட்கும். சூரனுடைய மகன் பதுமகோமளைக்கு பிறந்தவன். சிறுபிள்ளையாக இருந்தபோது கோபத்தில் சூரியனையே பிடித்து தொட்டில் காலுடன் கட்டியவன். தலையை இரண்டு பக்கமும் ஆட்டியபடி வருவான். நாங்கள் பயத்துடன் பெரியவர்கள் கையைப் பிடித்துக் கொள்வோம்.

அதுபோலத்தான் தலைக்குடிமகன் வந்து கொண்டிருந்தார். அறுத்துக்கொண்டோடிய மாடுகள்போல முன்னுக்கும் பின்னுக்குமாக சனங்கள் தலைதறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆரவாரம் காதைப் பிறந்தது. பெரியவர்களும், சிறுவர்களும், பெண்களுமாக கூட்டம். எங்கள் ஊரில் சொக்கப்பானை எரிப்பதுபோல் அந்தக் குடிசை எரிந்து கொண்டிருந்தது. தலைக் குடிமகன் இந்தச் சொக்கப்பானை வைபவத்தை நேரிலே மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் அடைப்பைக்காரரும, பல்லக்கு காவிகளும் மிகவும் பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். நாங்களும் ஒன்றும் அறியாத பூனைகள்போல போய் அந்த ஆரவாரத்தல் கலந்து கொண்டோம்.

திரும்பி வரும்போது இந்த மூட நம்பிகைக்யைப் பற்றி டேமியன் தாங்கியபடியே வந்தான். முழுக்க முழுக்க மனிதனுக்கு நன்மையே செய்யும் ஒரு பறவையை கெட்ட சகுனமாக கருதுவது எவ்வளவு மடமை என்றெல்லாம் உரத்து பேசியபடியே எங்கள் குடிசைக்கு கிட்ட வந்தான். அப்படி வந்தவன் சடுதியில் வாயை திறந்தபடியே மூடாது 'ஆ'வென்று சிறிதுநேரம் வைத்துக் கொண்டிருந்தான். கண்கன் நிலைகுத்தி நின்றன, பிறகு ஸ்வீட் ஜ“ஸஸ்' என்றான். நாங்கள் பாடுபட்டு கட்டிய மூங்கில் கூடு திறந்து கிடந்தது. கொலபஸ் குரங்குகள் எல்லாம் மாயமாய் மறைந்து விட்டன.

நான் மாடக்கூடலில் நரியைப் பரியாக்கிய அற்புதம் இங்கேயும் நடக்கிறதா? கூட்டிலே அடைத்து வைத்த குரங்குகளை மறைந்த மாயம் என்ன? ஒன்றையொன்று சாப்பிட்டு விட்டனவா? பூமியிலே புதைந்து விட்டனவா? காற்றிலே கரைந்து விட்டனவா? 'கறையான் தின்றதோ, கள்வன் கவர்ந்து சென்றானோ?' என்று தர்பார் ராகத்தில் வாய்விட்டு அழுதோம். குரங்குகளைக் காணவில்லை; காரணமும் தெரியவில்லை. டேமியன் கூட்டுக் கதவை சரியாக கட்டவில்லை என்பது என் வாதம். குரங்குகளே கதவைத் திறந்து விட்டன என்பது அவனுடைய கட்சி.

குனிந்த தலையுடன் இருவருமாக தலைக்குடிமகனிடம் போய் எங்களுக்கு நேர்ந்த கதியை முறையிட்டோம். அவருடைய உதட்டிலே புன்சிரிப்பு. குரங்கு சாஸ்திர விற்பன்னரை நோக்கி அவர் பார்வை திரும்பியது. அவர் ஓடோடி வந்து தலைக்குடிமகன் பக்கத்திலே நின்று கொண்டார். இப்போது இரண்டாவது 'எபிஸோட்' தொடங்கியது. அவருடைய கவலையெல்லாம் இன்னொரு தடவை குரங்கு பிடிக்கும்போது எவ்வளவு வருமானம் அதிகரிக்கும் என்று கணிப்பதிலேயே இருந்தது. முந்திப் பேசிய விலைப்படி இன்னொரு முறை குரங்கு கூட்டத்தை பிடிப்பதற்கு சம்மதம் தந்தார். எவ்வளவு கெஞ்சியும் அவர் விலையை குறைக்கவில்லை. பட்டம் பிய்த்துக் கொண்டு போவதுபோல எங்கள் பட்ஜெட் தறிகெட்டு போவதை செய்வதறியயாது பார்த்துக் கொண்டு நின்றோம்.

டேமியன் உலகம் கவிழ்ந்ததுபோல இருந்தான். ஆந்தையினால் கிராமத்துக்கு ஏற்பட வேண்டிய கெடுதல் எங்களுக்கு வந்துவிட்டது என்று அவன் நினைத்தான். எனக்கு இது அதிசயமாக இருந்தது. நான் "எங்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஆந்தை என்ன செய்யும்? ஆந்தை இறக்கவில்லை; ஆனால் அது இறந்து விட்டதென்று கிராம மக்கள் நம்புகிறார்கள். அவர்களுக்க நஷ்டத்திற்குப் பதிலாக இப்போது இரட்டிப்பு லாபம் அல்லவா கிடைக்கிறது? அவர்களைப் பொறுத்த மட்டில் ஆந்தை அவர்களுக்கு ஒரு அதிர்ஸ்ட தேவதைதான்" என்றேன். டேமியன் ஒன்றுமே பேசவில்லை. துண்டுவிழும் கணக்கை எப்படி சமாளிப்பது என்ற விசாரத்தில் மூழ்கிக் கிடந்தான். அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

அன்றிரவு பாதுகாப்பான மரப்பொந்திலிருந்து ஆந்தையுடைய அற்புதமான கூவல் 'க்கூம், க்கூம்' என்று டேமியனுக்கு நன்றி கூறுகூதுபோல கேட்டது. அப்படியான ஒரு சோகமான இனிமையான நான் என் வாழ்நாளில் கேட்டதேயில்லை. மனிதர்களின் அறியாமையை நினைத்து அதனுடைய சோக கீதம் இருந்திருக்கலாம்; அல்லது ஆபிரிக்காவின் உணவு உற்பத்தியில் தனக்கிருக்கும் பங்கை பறை சாற்றுவதாகவும் இருந்திருக்கலாம். அந்த தாலாட்டில் எப்பொழுது தூங்கினேன் என்பது எனக்கு நினைவு இல்லை.

* * *

9

'சிலம்பு' செல்லப்பா

'சிலம்பு' செல்லப்பா என்று முகத்துக்கு முன்னாலும், 'அலம்பல்' செல்லப்பா என்று முதுகுக்குப் பின்னாலும் அழைக்கப்படும் செல்லப்பாவை நான் முதன் முதலில் நாலு வருடங்களுக்கு முன்புதான் சந்தித்தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. பல வருடங்களாக வெளிநாடுகளிலேயே உத்தியோகம் பார்த்துவந்த நான், ஒரு ப்ரொஜெக்ட் விஷயமாக ஓர் ஆறுமாத காலம் கொழும்பில் வேலை பார்க்க வேண்டிவந்தது. அந்த சமயத்தில்தான் என் பழைய நண்பர் சண்முகத்தின் தரிசனமும் அவர் மூலம் செல்லப்பாவின் நட்பும் எனக்கு கிட்டின.

ஆறு மாதங்களுக்கு ஒரு தன்வீடு எடுத்து இருப்பது எனக்கு தோதுப்படவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் ஹோட்டல் சாப்பாடும் தாங்காது. காலிரோடும், சென்ற ரோரன்ஸ் வீதியும் சேரும் சந்திப்பில் நின்றபடி ஒரு மாலை நேரம் இதுபற்றி நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என் குருகுலவாச நண்பரான சண்முகம் தென்பட்டார். அந்தக் காலத்திலேயே என்னைத் 'தம்பி' என்று பாசத்தோடு அழைத்தவர்; இருபது வருடம் ஆகியும் வெகு சுலபமாக என்னை அடையாளம் கண்டுகொண்டு விட்டார்.

அதன் விளைவுதான் என்னுடைய 'சமறி' வாழ்க்கை. விடாப்பிடியாக கையைப் பிடித்து அழைத்து வந்துவிட்டார் சண்முகம். அவருடைய உடம்பைப் போலவே அவருக்கு தாராளமான மனசு. அவர்தான் எனக்கு 'சிலம்பு' செல்லப்பாவை அறிமுகம் செய்து வைத்தவர். 'சிலம்பு' என்ற அடைமொழி வந்த விருத்தாந்தத்தை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அந்த மகத்தான காரியத்தை நீங்களே ஏற்கனவே செய்து முடித்திருப்பீர்கள். சிலப்பதிகாரத்திற்கு நடமாடும் authority செல்லப்பா தான். இளங்கோ அடிகள் உயிரோடு இருந்திருந்தால் அவரே வந்து இவரிடம் சில ஐயங்களை தீர்த்துக் கொண்டிருப்பார்.

செல்லப்பாவுக்கு வயது 45க்கு மேலே இருக்கும். நித்தமும் ஏகாசி விரதம் அநுட்டிப்பார் போன்ற மெலிந்த தோற்றம். நாலு நாள் தாடி. வெள்ளை மயிரும் கறுப்பு மயிரும் சரிசமமாக பங்குபோட்டு அவர் தாடையிலே படர்ந்திருக்கும். உணர்ச்சிவசப்படும் மெல்லிய நீண்ட மூக்கு; ஆழ்ந்து யோசிக்கும் கண்கள். வெற்றிலைப் பிரியர். நாறப்பாக்கு, பிஞ்சுப்பாக்கு, களிப்பாக்கு என்று அலங்காரமாக அடுக்கி வைத்து, தன் கையால் சீவி, வாய்க்கு ஒய்வு கொடுக்காமல் மென்று கொண்டேயிருப்பார். பேசத் தொடங்கினார் என்றால் பாத்திரம் அலம்புவது போல நீட்டுக்கு பேசிக்கொண்டே போவார். அவருக்கு வேண்டாதவர்களை 'பிரேக் இல்லாத சைக்கிள்' என்று அவரை வர்ணித்தால் அதை நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது.

தமிழ் தினசரி ஒன்றில் கடந்த பதினைந்து வருடங்களாக வேலை பார்த்து வந்தார். அவர் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிய 'சிலம்பின் சிறப்பு' கட்டுரைகள் புத்தகமாக வந்திருந்தது. இலக்கியத்தில் இடைவிடாத ஆர்வம். தானும் தன் வெற்றிலையுமென்று இருப்பார். சிலப்பதிகாரத்தில் அவருடைய ஈடுபாட்டை கேள்விப்பட்ட உடனேயே பள்ளி நாட்கள் தொட்டு எனக்கு இருந்து வந்த ஒரு சந்தேகத்தை கேட்டுவிடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன். சாப்பிடும்போதுதான் இதற்கு சரியான வசதி. பல விவாதங்களும், போர்களும், சிரிப்புகளும் அதே சாப்பாட்டு மேசையை சுற்றியே அங்கே நடைபெற்றன. நான் உண்மையில் என்னுடைய ஐயத்தை கிளப்பிய தன் காரணம் அவருடைய ஆழ்ந்த புலமையை சோதிப்பதற்காகவும் இருக்கலாம்.

"சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல், 'திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!' என்று தொடங்குகிறது. அதற்குப் பிறகுதான் 'ஞாயிறு போற்றுதும்' என்று வருகிறது. இது என்ன நியாயம்? உயிர்களுக்கெல்லாம் ஆதாரம் சூரியன் அல்லவா? சூரியன் இல்லாவிடில் சந்திரன் ஏது? சந்திரனை முன் வைத்து, சூரியனை பின் வைத்தது சரியா? என்பதுதான் என் ஐயம்.

செல்லப்பா சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். அவர் என்னுடைய கேள்விக்கு அவகாசம் வேண்டி நேரத்தை கடத்தவில்லை. 'இவர் என்னைச் சோதிக்கிறாரோ?' என்பது போலத்தான் அந்த பார்வை இருந்தது. அதை நிச்சயம் செய்துகொண்டு செல்லப்பா கதைக்கத் தொடங்கினார்.

"சிலப்பதிகாரத்தை படிக்கும்போது அவசரம் கூடாது. அதில் சொல்லாத விஷயங்களே இல்லை. இந்தக் கேள்விக்குப் பதில் பின்னால் 'அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் வருகிறது.

"நீங்கள் ஒரு நண்பர் வீட்டுக்கு போகும்போது அவர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி போகிறீர்கள் அல்லவா? குழந்தைக்கு செய்வது பெற்றோர்க்கு செய்வதுபோல. பெருங்காப்பியங்கள் பாடும்போது விநாயகருக்குத்தானே முதல் வணக்கம்; மற்றக் கடவுளருக்கு பின்னால்தான். பிள்ளையை வணங்கினால் பெற்றோரை வணங்கியதற்கு சமம்.

"சூரியன் கடலிலே மறைந்து விட்டான். பூமாதேவி தன் ஆசைநாயகனை காணாது வருந்துகிறாள். 'கதிர்கள் எல்லாம் பரப்பி என்னை ஆள்பவனை திடீரென்று காணவில்லையே! நிலவுக்கதிர்களை விரித்து ஒளிசெய்யும் என் செல்வன் சந்திரனையும் காண்கிலேனே!' என்று நிலமடந்தை புலம்புகிறாள்.

"பூமியை அரசியாகவும், சூரியனை அரசனாகவும், சந்திரனை அவர்கள் செல்வனாகவும் கண்ட புலவருடைய கற்பனை இது.

விரிகதிர் பரப்பி, உலகம் முழுதாண்ட
ஒருதனித் திகிரி உரவோன் காணேன்;
அங்கண் வானத்து, அணிநிலா விரிக்கும்
திங்கள் அம் செல்வன் யாண்டுளன் கொல்?

"இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் 'திங்களைப் போற்றுதல்?' முதலடியாக வந்தது பெரிய குற்றமாகத் தெரியாது. எமக்கு முன் வந்துபாடி வைத்துப் போன முனிவர்கள். தியானத்தில் இருந்துவிட்டு பாடியவை இவை. ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ்ந்து சிந்தித்த பின்தான் அவர்கள் பாடலை இயற்றினார்கள்" என்றார்.

செல்லப்பாவின் புலமையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கு நான் எனக்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

'சமறி' வாழ்க்கை எனக்கு புதுமையாகவும், வசதியாகவும் இருந்தது. சமைத்துப் போட ஒரு நல்ல சமையல்காரர் இருந்தார்; வீட்டைக் கூட்டி சுத்தமாக வைப்பதற்கு ஒரு மனுசி வந்து போகும்; ஞாயிறு தோறும் சலவைக்காரர் வருவார். எல்லாமாக அந்த சமறியில் எட்டுப் பேர் குடியிருந்தார்கள். மாதமுடிவில் கணக்குப்பண்ணி செலவை எட்டில் ஒரு பங்காக பிரித்துக் கொள்வோம். எல்லோருமே மணமுடித்த பேர்வழிகள். சிலர் மனைவியை இழந்தவர்கள்; சிலர் ஓய்வெடுத்தவர்கள்; சிலர் பிள்ளைகளின் படிப்புக்காக குடும்பத்தை பிரிந்து வந்தவர்கள்.

அங்கே பிரதானமாக மூன்று 'குரூப்கள்' இருந்தன. கடுதாசி சிளையாடி. தண்ணி அடிப்பதை தலையாய பொழுதுபோக்காகக் கொண்டது ஒன்று; அடுத்து, அலுவலகத்தில் ஓவர் டைம் செய்து வீட்டிலே வந்து நித்திரை கொண்டு தீர்க்கும் கும்பல். இது தொல்லையில்லாத, சத்தமேயில்லாத குரூப். மூன்றாவது குழுவில்தான் செல்லப்பாவும், சண்முகமும் நானும் அடங்குவோம். படங்கள் பார்ப்பது, சஞ்சிகைகள், புத்தகங்கள் படிப்பது, இலக்கிய சர்ச்சை இப்படியாக எங்கள் பொழுது போகும்.

அடுத்து வந்த ஞாயிறு ஒன்றில் சமையலறை அல்லோல கல்லோலப்பட்டது. சண்முகம் சமையற்காரனை அனுப்பிவிட்டு தானே கருவாட்டுக்கறி சமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இப்படி அடிக்கடி அங்கே சமையலறை ஆட்சி மாறும். சுதுமலையாருடைய முறைப்படி கருவாட்டுக்கறி வைப்பதில் இவர் ஒரு விண்ணர். கருவாட்டை நீளநீளமாக வெட்டி எண்ணெய்ச் சட்டியில் போட்டு 'தீய்ச்சுக்' கொண்டிருந்தார்.

கல்லோயா சாராயம் ஒரு 'பெக்' அடித்திருந்ததினால் ஒரு சாண் உயரத்தில் மிதந்து கொண்டிருந்தார். எனக்கு கனநாளாக கேட்கவேணும் என்றிருந்த 'அந்த விஷயத்தை' கேட்பதற்கு இது நல்ல சந்தர்ப்பம் போல பட்டது.

நாங்கள் படிக்கும்போது நாகலிங்க மாஸ்டர் தான் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தவர். நேற்றுத்தான் சிவதனுசை முறித்தவர் போன்ற தோற்றம். விலத்தி, விலதிதிதான் நடப்பார். எங்கள் கிளாஸ’ல் தங்கரத்தினம் என்று ஒரு பெட்டை. நெருப்பில் சுட்ட ராசவள்ளிக் கிழங்குபோல் சிவப்பாய் இருப்பாள். எந்த நேரமும் பசலை நோய் வாட்டும் கண்கள். சண்முகத்துக்கு அப்ப காதல் செய்யும் வயசு. சும்மா இருப்பாரா? இரவும் பகலும் கண்விழித்து அவளுக்கு ஒரு காதல் வாசகம் எழுதினார். சமயம் வரும்போது கொடுப்பதற்காக 'Tale of Two Cities` புத்தகத்தின் கடைசி ஒற்றையில் ஒளித்துவைத்திருந்தார். அன்றைக்கென்று பார்த்து இவருடைய புத்தகத்தை வாங்கி பரடம் எடுத்தார் நாகலிங்க மாஸ்டர். இவருடைய காதலின் ஆழத்தையும் ஆங்கில விசாலத்தையும் காட்டுவதற்காக தீட்டப்பட்ட அந்தக் கடிதம் சமய சந்தர்ப்பம் தெரியாமல் மாஸ்டரின் காலடியில் விழுந்தது.

My dear Thangaratinam,
When your father and mother went to see saparam (சப்பரம்)
tonight I will come to your house.

இவ்வளவுதான் கடிதத்தின் வாசகம். மாஸ்டருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தவிட்டது. நுனியிலே சுட்டு பதப்படுத்தப்பட்ட துவரந்தடியை எடுத்து விளாசத் தொடங்கினார். அவர் அடிக்கும் போது "இங்கலீஸ’ல் எழுதுவியா? இங்கிலீஸ’ல் எழுதுவியா?" என்று சொல்லிச் சொல்லித்தான் அடித்தார். பார்க்க பாவமாயிருந்தது. பெட்டைக்கு முன்னால் அடி வாங்குவது எவ்வளவு அவமானம்! அந்தப் பள்ளிக்கூடத்தில் இந்த Tale of Two Lovers கொஞ்ச காலமாக மூலை முடுக்கெல்லாம் இழுபறிப்பட்டது.

அந்த விவகாரத்தின் முடிவு என்ன? அதைப்பற்றித்தான் கேட்பதற்கு நான் 'சுழன்று, சுழன்று' வந்து கொண்டிருந்தேன். நான் துணிவை வரவழைத்து அவரைக் கேட்டபோது, "தம்பி, சிவப்பு பெட்டையளை நம்பக்கூடாது; அவள் சும்மா எனக்கு போக்கு காட்டினவள். பிறகு ஒரு சப்இன்ஸ்பெக்டரை முடிச்சுக்கொண்டு ஓடிப் போட்டாள்" என்று கதைக்கு முத்தாய்ப்பு வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் சமையலறையை ஆண் பிள்ளைகள் அண்ட முடியாது. சண்முகம் என்னவென்றால் கை தேர்ந்த பரிசாரகனைப்போல சமைத்து வைத்திருந்தார். அந்த மணத்துடன் அரைப்பானை சோறு சாப்பிடலாம். கருவாட்டை பல்லிலே கடித்து இழுத்து ரசித்தபோது நாலாவது பரிமாணத்துக்கு ஆளைத் தூக்கிப் போனது. 'எங்கே இப்படி வைக்கக்கற்றுக் கொண்டார்?' என்று கேட்கத் தோன்றியது. சித்திரகூட மலையில் இலக்குமணன் தன்னந்தனியாக கட்டிய பர்ணசாலையை பார்த்த ராமன் 'என்று கற்றனை நீ இதுபோல்? என்று கட்டி அணைத்து அழுதார் அல்லவா? அதுபோல் சண்முகத்தை கட்டி அணைக்கத்தான் தோன்றியது. அவர் பலூன்போல மிதந்து கொண்டிருந்த படியால் அந்த எண்ணத்தை நான் கைவிட வேண்டி வந்தது.

சாப்பிடும்போது வழக்கம்போல செல்லப்பா வந்து கலந்து கொண்டார். சாப்பாடோ நல்ல உறைப்பு. சண்முகம் சிறிது தலையை ஆட்டியபடி, கண்களிலே நீர் ஓட, சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தங்கரத்தினத்தன் ஞாபகம் வந்ததோ? என்னவோ? அப்படிச் சாப்பிட்டவர் சடுதியாக செல்லப்பாவின் பக்கம் திரும்பினார்.

சண்முகத்துக்கு சிலப்பதிகாரப் புத்தகத்தின் அட்டைகூட எப்படி இருக்கும் என்று தெரியாது; ஆனால் எங்கள் வாக்குவாதங்களில் உற்சாகமாக ஆலவட்டம் பிடித்து, 'சிரித்துக் கொடுத்து' கதைக்கு சுவை சேர்ப்பதுதான் அவருடைய பங்கு. சண்முகம் வாய் திறந்தால் அநேகமாக அது செல்லப்பாவை சீண்டுவதற்காகத்தான் இருக்கும். கருவாட்டைக் கடிச்சு இழுத்துக்கொண்டு செல்லப்பாவை நோக்கி ஒரு கேள்விக் கணை தொடுத்தார். சண்முகம், நான் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"ஏன் ஐஸே! சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியெல்லாம் கருவாடு சாப்பிட்டிருப்பினமோ?" என்று துருவினார்.

செல்லப்பா சிரித்துவிட்டு பேசாமல் இருந்துவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் வாயிலிருந்து கடைசி கருவாட்டுத்துண்டை சப்பி விழுங்கிவிட்டு, தாடையைத் தடவி, புருவத்தை நெரித்து, சண்முகம் கேட்ட கேள்விக்கு சீரியஸாக பதில் சொல்லத் தொடங்கினார். கதை கேட்பதற்கு அவருக்கு முன்னால் ஆட்கள் இருந்தால் அவர் அவ்வளவு சுலபத்தில் அந்த சான்ஸை இழக்க சம்மதிப்பாரா?

"அரச வம்சத்தினர் முறையாக வேட்டையாடியதை உண்பது தர்மம் என்று வாழ்மீகியே கூறியிருக்கிறார். சிலப்பதிகாரம், வணிக குலத்தின் சிறப்பை சிதிதரிக்க எழுந்த முதல் நூல். இதிலே கானல் வரியிலே கடற்கரையில் காயப்போட்ட கருவாட்டை பறவைகள் கொத்தாமல் அழகிய பெண்கள் காத்துக்கொண்டு நின்றார்கள் என்று வருகிறது. கருவாட்டை விருப்பமுடன் தின்பவர்கள் அப்போது நிறைய இருந்திருக்கிறார்கள். ஆனால் கோவலன் உண்டானா என்பது தெரியவில்லை? அவன் மதுரைக்கு போய் கொலை படுமுன் கண்ணகி கையால் உண்ட கடைசி உணவைப் பற்றி சிலப்பதிகாரம் அழகுடன் வர்ணிக்கிறது.

"'குமரி வாழையின் குருத்தகம் விரித்து' கண்ணகியானவள் கோவலனுக்கு உணவு பரிமாறுகிறாள். என்ன சாப்பாடு?

கோளிப் பாகல், கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய், மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு, வாழைத் தீங்கனி

இவற்றுடன் சோறும் சமைத்து, பால் நெய் மோருடன் கோவலனுக்கு கடைசி முறையாக உணவு பரிமாறுகிறாள், கண்ணகி. அந்த சாப்பாடு செரிக்குமுன்பே அவன் இறக்கப்போவது அவளுக்கு அப்போது தெரியாது."

உருக்கமாக செல்லப்பா வர்ணித்ததைக் கேட்டபோது அவர் புலமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. அத்துடன் நின்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஆனால் அதற்கு அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் தெரியாமல் போய் ஒரு கேள்வியை கேட்டு நான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன்.

சண்முகம் என்னோடு ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரு வருடம் படித்தவர். 'கற்க கசடறக் கற்க' என்பதற்கிணங்க ஆறஅமரப் படிக்கவேண்டும் என்ற அசைக்க முடியாத ஆசையுள்ளவர். அந்த லட்சியத்தை சாதிப்பதற்காக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடம் தங்கி தன் அறிவை விருத்தி செய்தவர். அவர் எட்டாம் வகுப்பில் 'வாங்கு தேய்ச்சுக்' கொண்டிருந்தபோது நான் அவரை எட்டிப் பிடித்துவிட்டேன். அப்பவோ அவர் இளந்தாரி; என்னைத் 'தம்பி' என்றுதான் அழைப்பார். வஞ்சகமில்லாத அவருடைய உடம்பு வத்தகப்பழம் போல 'பொதுக், பொதுக்' என்று இருக்கும். எந்தக் கிளாஸ”க்கு போனாலும் கடைசி வாங்கு ஆட்சியுரிமை அவருக்குத்தான்.

அவருடைய முகம் 'பக்கீஸ்' பெட்டி வடிவத்தில் சதுரமாக இருந்தால் 'சப்பட்டை' சண்முகம் என்று ஆசையாக அழைக்கப்பட்டார். இலவசமாகக் கிடைக்கும் கோயில் தளிசைக்கு உயிரையும் கொடுப்பார். சின்னப்பெடியன் கூட சேட்டைவிடும் அளவுக்கு நல்ல மனிதர்.

அவருடைய உயரத்தையும், அகலத்தையும் பார்த்து உதைபந்தாட்ட அணியில் அவரை சேர்த்துக் கொண்டார்கள். எங்களுக்கு பெருமை. எட்டாம் வகுப்பில் இருந்து எடுபட்டவர் இவர் ஒருவரே. Right full back ஆக பதவியேற்றார். பந்து வரும் போதெல்லாம் ஓங்கி, ஓங்கி அடிப்பார். காலில் பந்து பட்டுதோ எட்டுமூலைக் கொடிபோல விண் கூவிக் கொண்டு பறந்து அடுத்த கோல் போஸ்டுக்கு கிட்டப் போய் விழும். ஆனால் பத்துக்கு ஒன்பது தடவை மிஸ் பண்ணிவிடுவார்.

அந்தக் காலத்தில் இப்படி தவறி விடுவதை 'ஓலம் விடுதல்' என்று சொல்லுவார்கள். அது 'தமிழ் வார்த்தையா, ஆங்கில வார்த்தையா' என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஒருநாள் முற்றவெளியில் நடந்த ஒரு முக்கிய மாட்ச்சில் இப்படி இவர் 'காலைத் தூக்கி ஆடி' அளவுக்கு அதிகமாக 'ஓலம் விட்டு' எங்களுக்கு தோல்வியைத் தேடித் தந்தார்.

அடுத்த நாள் காலை எங்கள் தமிழ் மாஸ்டர் வகுப்புக்குள் நுழைந்தார். அவருடைய சொண்டுகள் சிறியவை; அவருடைய எடுப்பான பற்களை மூட தைரியமில்லாதவை. அறமிஞ்சி கோபம் வந்தாலொழிய அடிக்க மாட்டார். அவர் வந்ததுமே என்றுமில்லாத வழக்கமாக பின்வரும் கந்தப்புராணப் பாடலை கரும்பலகையில் எழுதினார்:

** இ.தொ.vamsa6.mtf*




** vamsa5.mtf ன் தொடர்ச்சி**

நண்ணுதற் கினியாய் ஓலம்
ஞான நாயகனே ஓலம்
பண்ணவற் கிறையே ஓலம்
பரஞ்சுடர் முதலே ஓலம்

இதை எழுதிவிட்டு 'என்ன, சண்முகம் சரிதானே?' என்று கேட்டார். கிளாஸ் முழுக்க 'கொல்' என்று சிரித்தது. கொஞ்ச நாளாக அவர் 'ஓலம் சண்முகம்' என்று அழைக்கப்படாத ஞாபகம். காலப்போக்கில் இந்த சங்கதி மறந்து அவர் பழையபடி 'சப்பட்டை' சண்முகமானார்.

இது தவிர, மறக்கமுடியாத உற்ற நண்பராக நான் அவரை கருதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர்தான் முதன்முதலாக எனக்கு 'எப்படி சோதனைக்கு படிப்பது?' என்ற தேவரகஸ்யத்தை உபதேசித்தவர். ஒரு பெரிய அண்டாவில் சுடுநீர் நிரப்பி அதற்குள்ளே காலை வைத்து இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று படிப்பாராம். இந்த சூட்சுமத்தை எனக்கு மட்டுமே கூறியிருந்தார். ஆனால் இந்த வழியைப் பின்பற்றி அவர் அடைந்த வெற்றி வாகைகளை கணக்கெடுத்த நான் அதிக நாள் தொடர்ந்து இந்த முறையை அநுசரிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

இப்படியாக பல விதங்களில் குருவாகவும், நண்பனாகவும் இரு நத சண்முகம் எனக்கு சமறி வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை நுணுக்கமாக கற்றுத் தந்தார். சமறி வாழ்க்கையின் அநுகூலங்கள் தெரியாமல் 'இவ்வளவு நாளும் என் வாழ்க்கையை வீணாக்கிவிட்டேன்' என்று வருத்தப்பட்டேன். அது சொர்க்கத்துக்கு அடுத்தபடி தின்னவேலி சூத்திரக்கிணறு சுத்துவதுபோல எல்லாம் ஒரு கிரமத்துடன்தான் அங்கே நடக்கும். பிச்சுப்பிடுங்கல் இல்லை; அதிகாலைகளில் மனைவியின் சுப்ரபாதம் போன்ற நச்சரிப்பு கிடையாது. 'தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னம் சிறுக்தைகள் பேசி' சோம்பலை வளர்ப்பதற்கு இதைவிட சொர்க்கம் பூலோகத்திலே இல்லையென்று அடித்துச் சொல்லலாம்.

இந்த மாதிரி அமைதியாகப் போகும் வாழ்க்கை, சனிக்கிழமை காலை வேளைகளில் திறை மாறிவிடும். 'சனி நீராடு' என்று ஓளவையார் எழுதிவைத்தது யாழ்ப்பாணத்து கோழிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். சைக்கிள் கரியரில் உமலைக் கட்டியபடி பெரியகடைக்கு கணவாய் வாங்கப் போகும் ஜனக்கூடங்களும் இந்த நாட்களில்தான். சமறி குடும்பத்தினர் எல்லாம் வழிய, வழிய எண்ணெய் வைத்து முழுகி தங்கள் பாரம்பரிய தர்மத்தை நிலைநாட்டுவதும் இந்தச் சனிக்கிழமைகளில்தான்.

எல்லோரும் இப்படி எண்ணெய் தேய்த்து, சுவறவிட்டு 'தப்பு தப்பு' என்று தப்பி நிற்கும்போது பார்த்தால் ஏதோ மல்யுத்த விளையாட்டுக்கு தயார் செய்வதுபோலத் தோன்றும். அதிலும் சண்முகம் சப்பாத்திக்கு தட்டுவதுபோல 'தப்தப்' என்று தப்பாமல் தட்டியவாறே இருப்பார். செல்லப்பா தப்பல் பிரியல் அல்ல; அவருடைய சித்தாந்தம் சூடுபறக்கத் தேய்ப்பது. ஆகவே அவர் இந்த நாட்களில் தேய்த்து தேய்த்து கால் இஞ்சி கட்டையாகிவிடுவார்.

சண்முகம், அச்சரக்கூட்டை அரக்கிவிட்டு, வயிற்றிலுள்ள சுருக்கங்களை இழுத்து நெளிவெடுத்து எண்ணெய் தேய்ப்பது பார்க்க அம்சமாக இருக்கும். முன்னொரு காலத்தில் ஒரு பிரம்மாண்டமான யாவாரி நல்லூரில் இருந்தாராம். அவருடைய வயிற்று மடிப்புகளை கலைத்து எண்ணெய் பூச இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தாராம். ஒருமுறை அவருடைய வயிற்று மடிப்பை குலைத்த போது தேரை ஒன்று துள்ளிப் பாய்ந்ததாம், அப்படித்தான், சண்முகம் மடிப்புகளை விரித்து விடும்போது நான் கண்களை ஆவலோடு மேயவிட்டு காத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த அற்புதமான மத்தியான ஆர்ப்பாட்டங்கள் என்னுடைய ஒரு மடைத்தனமான கேள்வியால் ஒருநாள் சரிந்து வீழ்ந்தன.

சாலிவாகனன் என்று ஒரு பிராம்மணச் சிறுவன். சிக்கலான வழக்குகளுக்கு தீர்ப்புக் கூறுவதில் வெகு சமர்த்தன். அரசன் கைவிட்ட ஒரு கேஸை எடுத்து அதிசாமர்த்தியமாக தீர்ப்பு வழங்கி அரசனுடைய கோபத்துக்கு ஆளாகியவன்.

சாகக் கிடந்த ஒரு வைசியன் தன் நாலு பிள்ளைகளையும் அழைத்து தான் இறந்த பிறகு தன் திரவியம் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டில் காலின் கீழ்வைத்திருக்கும் குறிப்பின்படி பகிர்ந்து கொள்ளும்படி கூறி இறந்துவிட்டான். ஒரு கட்டில் காலின் கீழ் உமியும், ஒரு காலின் கீழ் மண்ணும், மற்றதின் கீழ் சாணமும், கடைசிக் காலின் கீழ் ஒரு பொற்காசும் இருந்ததை கண்டார்கள். இந்த குறிப்பின்படி மன்னன்வடத் தீர்ப்பு கூறு முடியவில்லை. ஆனால் சாலிவாகனன் அந்தக் குறிப்புகளை சரியாக உணர்ந்து முதல் பிள்ளைக்கு நெல்தானியமும், மற்றவனுக்கு நிலமும், அடுத்தவனுக்கு மாடுகளும், கடைசிப் பிள்ளைக்கு தங்க நகைகளுமாகப் பிரித்து கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கினானாம். இப்படி நீதி வழுவாத மூதாதையரைக் கொண்ட நாட்டின் வழிவந்த பாண்டியன் நெடுஞ்செழியன் செய்த காரியம் அட்டூழியமாகப் பட்டது. இதைச் சொல்லப் போய் தான் எனக்கு ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது.

"பாண்டியன் மன்னன் ஊடலில் இருக்கும் தேவியைத் தணிப்பதற்காக அவளுடைய அந்தப்புரம் நோக்கி வேகமாகப் போகிறான். அந்த நேரம் பார்த்து பொற்கொல்லன் வந்து சிலம்பு திருடிய கள்வனைப் பற்றிய விபரம் சொல்கிறான். அதற்கு அரசன், தன் அவசரத்தில் நிதானம் இழந்து 'கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு' என்று கூறி விடுகிறான். ஓர் அரசனுடைய தலையாய கடமை நீதிவழுவாது ஆட்சி புரிவது. இங்கே அந்த நீதித்துறை அமைச்சையே வெறும் ஊர்க்காவலரிடம் கொடுத்து விடுகிறான்.

"இரண்டாவதாக, கோவலனிடமிருந்து ஊர்க்காவலர் பிடுங்கி வந்த சிலம்பை அரசியாருடைய சிலம்புடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம்; அரசன் செய்யவில்லை. ஓசையை ஒத்துப் பார்த்திருக்கலாம், அதுவுமில்லை. சிலம்பின் மூட்டுவாயை திறந்து உள்ளிருக்கும் பரல்கள் முத்தா? மாணிக்கமா? என்றாவது ஆராய்ந்திருக்கலாம்; அதையும் செய்யவில்லை.

"சரி கடைசியில் நடந்ததைப் பார்ப்போம். விரித்த குழலும் கையில் தனிச்சிலம்புமாக பாண்டியன் சபையில் நுழைகிறான், கண்ணகி. அந்தச் சமயத்திலாவது அரசன் நிதானமாக கோபலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பை தன் அதிகாரிகளிடம் கொடுத்து விசாரித்திருக்கலாம், இல்லையா? மாறாக இந்த ஒரே evidence ஐயும் கண்ணகியிடம் கொடுக்க அவள் சபை நடுவே அதை உடைத்து வீசுகிறாள். இதுதான் நீதி வழுவா நெறிமுறையா?" என்று நான் மூச்சு விடாமல் ஆவேசத்துடன் சொல்லி நிறுத்தினேன்.

செல்லப்பாவுக்கு கோபம் வந்து நான் இதற்கு முன்பு கண்டதில்லை. சண்முகம் எவ்வளவு சீண்டினாலும் சிரித்துவிட்டு போகும் அவர் என்மீது எரிகொள்ளிபோல் பாய்ந்தார். "என்ன, நான் கடந்த இருபது வருடங்களாக இதைத்தான் படிக்கிறேன்; எழுதுகிறேன்; சிந்திக்கிறேன். நேற்று வந்த உமக்கு அவ்வளவு தெரியுமா? அரையும், குறையுமாய் படித்துவிட்டு ஆகாயத்தில் குதிக்கிறீரே? சிலப்பதிகாரத்தின் சாரம் ஒருவர் தன் ஆயுளில் படித்து அறியக் கூடியதோ?

"வழக்குரை காதையில் சொல்லியுள்ள கடைசி செய்யுளை படித்துப் பாரும். தீர விசாரிக்காம அவசரத்தில் செய்த காரியம் பாண்டியன் மனதை நெருடிக் கொண்டே இருந்தது. தான் செய்தது பெருங்குற்றம் என்பதை அவன் ஏற்கனவே உள்ளூர உணர்ந்திருந்தான். காதல் மயக்கத்தில் ஒரு கணம் அறிவிழந்து விட்டான். அது எவ்வளவு பாரதூரமான நிகழ்ச்சியாக உருவெடுத்துவிட்டது. 'ஒரு பெண் விரித்த கூந்தலும், நீர்வழிந்த கண்களுமாக, கையில் தனிச் சிலம்புடன் வந்திருக்கிறாள்' என்றதுமே பாண்டியனுக்கு தான் நீதி தவறியதும், தன் முடிவுகாலம் நெருங்கியதும் தெரிந்து விடுகிறது. அவன் பிராயச்சித்தமாக தன் உயிரைக் கொடுத்தான்; கோப்பெருந்தேவியை பலி கொடுத்தான்; மதுரை மாநகரத்தையே தீக்கிரையாகக் கொடுத்தான்.

"மெய்யிற் பொடியும், விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்­ரும் - வையக்கோன்
கண்டனவே தோற்றான், அக்காரிகைதான் சொற் செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்."

"இன்ன குற்றத்திற்க இன்ன தண்டனை என்று வரைமுறை உண்டு. பாண்டியன் அநுபவித்த தண்டனையோ மகா கொடியது. இதிலும் பார்க்க வேறு என்ன ஐயா வேண்டும்?" இப்படிக் கோபாவேசமாகச் சொல்லிக் கொண்டே கையை துவாலையில் வேகமாகத் துடைத்து கொண்டார். பிறகு துணியை மேசைமீது விசுக்கென்று வீசிவிட்டு போய்விட்டார்.

எனக்கு நாதாளி முள் குத்தியபோல சுருக்கென்றது. 'ஏன்டா இப்படிக் கேட்டோம்? சாதுவான இந்த மனுசன் சாரைப் பாம்புபோல என்மேல் சீறி விட்டாரே!' என்று வருத்தப்பட்டேன்.

சண்முகத்துக்கு தெரியாத பூர்வாங்கமே கிடையாது. மனைவியையும், மகளையும் பிரிந்து செல்லப்பா சமறியில் வாழும் காரணத்தை அவர் ஒருநாள் எனக்கு விளக்கினார்.

அப்ப செல்லப்பாவின் மகளுக்கு பதினான்கு வயதிருக்குமாம். ஒரே மகள். சில்லறைக் காசைக் கிலுக்கியதுபோல எப்பவும் சிரித்தபடியே இருப்பாள். இவரை எட்டியெட்டி கொஞ்சுவாள். அவள்மேல் இவரும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒருமுறை கொபம்பிலிருந்து விடுப்பில்போய் இவர் நின்றபோதுதான் அது நடந்தது. அவர்கள் வீட்டு வேலியில் 'ஓஸோன்' ஒட்டை போல ஓர் ஒட்டை. அந்தப் பொட்டு வழியாக அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்த இவருடைய மகள் பக்கத்து வீட்டுப் பெடியனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டாள். ஆத்திரத்தில் மதிகெட்டுப்போன செல்லப்பா அவள் கன்னத்தில அஞ்சு விரலும் பதிய அறைந்துவிட்டார். அவள் திடுக்கிட்டுவிட்டாள். பிறந்த நாளிலிலிருந்து அவளை அணைப்பதற்கு மட்டுமே தொட்ட கை அது. அவளால் நம்பவே முடியவில்லை. 'பட்சமுள்ள அப்பா, பட்சமுள்ள அப்பா' என்று கிழமை தவறாமல் கடிதம் எழுதியவள் பிறகு எழுதவேயில்லை; கதைக்கவுமில்லை. அவர் கொழும்பில் வீடு பார்த்த பிறகும் வர மறுத்து விட்டாள். தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு ஒரு குழந்தையின் நட்பை விகாரப்படுத்தியதற்காக செல்லப்பா தன்னை பெரிதும் வருத்திக் கொண்டார்.

சிலப்பதிகாரத்தை மட்டுமே நெங்சிலே சுமக்கிறார் என்று நான் நினைத்திருந்த செல்லப்பா இப்படி ஒரு பாரத்தையும் தாங்குகிறார் என்ற விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கன்னத்திலே ஒரு தட்டு தட்டியதற்காக ஐந்து வருடங்களாகியும் அவள் கதைக்கவில்லை. எவ்வளவு பெரிய தண்டனை! அப்போதுதான் இனிமேல் எங்கள் சம்பாஷணைகளில் 'சிலப்பதிகாரம்' தவறியும் புகுந்துவிடாமல் பார்க்க வேண்டுமென்று நான் சங்கல்பம் செய்துகொண்டேன்.

யேசு ஆணவர் கடைசி உணவு அருந்தியபின் தன் பிரதம சீடரான பீட்டரைப் பார்த்து "என் அன்புக்குரியவனே, இன்றிரவு சேவல் கூவுமுன் நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்" என்று கூறினார். பீட்டர் "அது நடக்காத காரியம்" என்று சங்கல்பம் செய்து கொண்டார். ஆனால் யேசுபிரான் உரைத்த பிரகாரம் பீட்டர் மூன்றுதரம் மறுதலிக்க வேண்டி வந்தது அல்லவா?

அதுமாதிரி இந்த விஷயத்திலும் நான் எடுத்த சங்கல்பம் விரைவிலேயே தவிடு பொடியாகியது. ஆனால் குற்றவாளி நான் அல்ல.

இந்த சொற்ப காலத்தில் கிடைத்த அற்புதமான சிநேகிதத்தை அநியாயமாக இழப்பது எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு கிடைத்த தண்டனை அதீதமானதுதான். ஆனால் நான் செய்த மகாபாபம் என்ன? என்னை அறியாமல் ஒரு மெல்லிய நரம்பை உரசிவிட்டேன் போலத் தோன்றியது. அந்தச் சம்பவத்திற்கு பிறகு செல்லப்பா திண்ணையில் காயப் போட்ட தேங்காய் மூடிபோல எட்டிப் போய்விட்டார். என்னுடன் முகம் கொடுத்து பேசவுமில்லை; பழகவுமில்லை. முன்புபோல் சத்தம்போட்டு எங்களோடு கதைப்பதற்கும், சிரிப்பதற்கும் எதோவொன்று அவரைத்தடுத்து வந்தது.

என்னுடைய பயணச்சீட்டு வந்துவிட்டது, இன்னும் சில நாட்களே இருந்தன. ஒரு மத்தியான வேளை நாங்கள் மூவரும் மேசையில் வந்து அமர்ந்தோம். மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு சிறு தூக்கம் போட போய்விட்டார்கள். நாங்கள் சாப்பிட்டு முடியுந்தறுவாயில் சமையல்காரன் தயிர் கொண்டுவந்து வைத்தான். தயிர் இல்லாவிட்டால் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது. எல்லோருக்கும் அது தெரிந்த விஷயம். செல்லப்பா ஒரு சிறங்கை தயிர் அள்ளி சாப்பிட்டுவிட்டு 'ஆஹ்' என்றார்.

வழக்கமாக சட்டியில்தான் தயிர் வரும். ஆனால் அன்று சூப்பர்மார்க்கெட்டில் வாங்கிய பிளாஸ்டிக் பெட்டியில் வந்திருந்தது. "என்ன இண்டைக்கு இப்பிடி தயிர்?" என்றேன். அதற்கு வேலைக்காரன் "இல்லை ஐயா, இது ரண்டுரூவாதான் கூட. பிளாஸ்டிக் பெட்டி பார்க்க வடிவாயிருக்கு; இப்ப எல்லாரும் இதுதான் வாங்கினம்" என்றான்.

நான் அன்று தயிரைத் தொடவில்லை. பிளாஸ்டிக் பெட்டிகளில் வரும் உணவை நான் தொடுவதில்லை என்ற விஷயம் சண்முகத்துக்கு தெரியாது. அவருக்கு மனசு வருத்தமாகிவிட்டது. "என்ன தம்பி, இதில ஏதாவது கெடுதலா?" என்றார்.

"இல்லை, முன்னேற வேண்டிய நாங்கள் இப்படி பின்னாலே போய்க் கொண்டிருக்கிறோமே! சட்டியில வாற தயிர் என்ன வடிவு? எவ்வளவு ருசி? இப்ப என்ன அவசரத்துக்கு பிளாஸ்டிக்குக்கு மாற வேண்டும்? சட்டியென்றால் தயிரிலே மிதக்கும் உபரித்தண்ணியை அது உறிஞ்சுவிடும். அதைச் செய்யும் ஏழைக் குயவனுக்கு வேலை கிடைக்கிறது. அதே சட்டியை திருப்பித் திருப்பி பாவிக்கலாம்; உடைந்து போனால் மண்ணுடன் சேர்ந்துபோகும்; சுற்றுச் சூழலுக்கு ஒருவித கெடுதலும் இல்லை.

"ஆனால், பிளாஸ்டிக் என்று வரும்போது விலை கூடுகிறது. பாவித்து விட்டு எறிந்து விடுகிறோம்; திருப்பி பாவிக்க முடியாது. இதனால் எவ்வளவு கெடுதல் தெரியுமா? இந்த பிளாஸ்டிக் சாகாவரம் பெற்றது. நூறு வருடங்கள் வரை உயிர் வாழும். இதை அழிப்பது மகா கஷ்டம் மண்ணோடு முற்றும் கலக்க நானூறு வருடங்கள் வரை பிடிக்குமாம். இதை எரித்தால் வரும் நச்சுப் புகை காற்றுமண்டலத்தில் சேர்ந்து நாசம் விளைவிக்கும். எங்களுக்கு ஏனப்பா இந்த அவசரம்?"

"பிளாஸ்டிக்கில் இவ்வளவு கெடுதலா? எனக்கு தெரியவே இல்லை, தம்பி?" என்றார் சண்முகம்.

"பூமாதேவி பொறுமையானவள். பிறந்த நாளிலிருந்து அவளுக்கு நாங்கள் ஏதாவது ஆக்கினைகள் செய்துகொண்டே இருக்கிறோம். நாம் போகுமுன் ஏதாவதொரு நல்ல காரியம் திருப்பி செய்ய வேண்டாமா? அவன் 'செமிக்க முடியாதபடி' நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பைகளையும், பெட்டிகளையும் அவள்மீது திணித்தபடியே இருக்கிறோமே! எவ்வளவு நாளைக்குத்தான் அவள் பொறுக்க முடியும்?"

"அப்ப கடலில் போடமுடியாதா?"

"அங்கேதான் வந்தது வினை. இந்த பிளாஸ்டிக் சாமான்களின் முக்கால்வாசி கடைசியில் போய்ச்சேருவது கடலில்தான். சூரிய வெளிச்சத்துக்கு மின்னும் இந்த பிளாஸ்டிக் பைகளை கணவாய் என்று நினைத்து கடல் ஆமைகள் விழுங்கிவிடும். அது தொண்டையில் சிக்கி எத்தனையோ கடல் ஆமைகள் மரணம். அதைச் சாப்பிடும் மீண்களும் அதே கதிதான். நாரை, பெலிகன் போன்ற பறவைகளம் இதிலிருந்து தப்புவதில்லை.

"முந்தியெல்லாம் நாங்கள் சாக்கு, உமல், கடகப்பெட்டி என்று பயன்படுத்துவோம். திருப்பி திருப்பி அவற்றை பாவித்து முடிந்தவுடன் தூக்கி எறிந்துவிடுவோம். இவையெல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஒருவித கெடுதலுமின்றி மண்ணோடு கலந்துவிடும். ஐம்பது வருடத்துக்கு முன்பு இந்த பிளாஸ்டிக் அரக்கனின் கொடுமையில்லையே?"

"அப்ப பிளாஸ்டிக்கே தேவையில்லையென்று சொல்லுறீரோ?"

"அப்படியில்லை. ஆனால் தவிர்க்க முடியாதென்றால் சுழல்பாவிப்பு (recycline) முறையையாவது கடைப்பிடிக்கலாமே? அதாவது, ஒருமுறை பாவித்துவிட்டு தூக்கி எறியாமல் நாலு முறையாவது திருப்பித் திருப்பி பாவிக்கலாமே? பூமாதேவியின் பாரம் நாலு மடங்கு குறைந்து விடுமே?"

நாங்கள் இப்படி காரசாரமாக கதைத்துக் கொண்டிருந்தபோது, செல்லப்பா ஒன்றுமே சொல்லாமல் வெற்றிலையைக் குதப்பியவாறு அவதானித்த படியே வந்தார். அவர் சம்பாஷணையில் தலையை நுழைக்கவில்லை. அப்ப பார்த்து இந்த வம்பு, சண்முகம், அவரை எங்கள் சண்டையில் இழுக்கும் முயற்சியாக, "ஏன் செல்லப்பா, சிலப்பதிகாரத்தில் இந்த சுழல்பாவிப்பு முறை சொல்லியிருக்கோ?" என்று நோண்டினார்.

உடனே செல்லப்பா தியானத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்து "சிலப்பதிகாரத்தில் சொல்லாததே இல்லை; என்ன சுழல்பாவிப்பு முறைதானே? அதாவது ஒரே பொருளை திருப்பித் திருப்பி பாவிப்பது, அப்படித்தானே!" என்றார்.

"ஓமோம்" என்றார் சண்முகம்.

நான் அப்ப மூன்றாம் வகுப்பு என்று ஞாபகம். எங்கள் கணக்கு வாத்தியாரை எல்லாரும் K P என்று தான் கூப்பிடுவார்கள். அவருடைய பெயர் ஒருவருக்கம் தெரியாது. கிட்ணன் அவருடைய பெயர் 'குறுக்கால போவான்' என்று சொன்னதை நான் கனகாலம் நம்பிக்கொண்டு இருந்தேன். 'கேப்பி' கணக்கு கேட்கும்போதே ஆரவாரத்துடன் மோதிரத்தை சுழட்டி மற்றக் கை விரலில் போட்டு ஆயத்தங்கள் செய்வார். எங்கள் கண்கள் அவருடைய கைகளில் அசைவையே ஆராய்ந்து கொண்டிருக்கும். அவர் குட்டினால் 'ஓரு பட்டை தண்ணி நிக்கும்' என்று அந்தக் காலத்திலேயே புகழ்கொடி நாட்டினவர்.

'எட்டும் அஞ்சும் எவ்வளவு?' என்று கேட்டுவிட்டு மோதிரத்தை தடவிக்கொண்டு நிற்பார். எங்கள் கண்கள் அலைபாயும். 'எட்டும் அஞ்சோ? எட்டும் அஞ்சோ?' என்று மூச்சு விடுவதற்கு அவகாசம் எடுத்துக்கொண்டு, கைவிரல்களை ரகஸ்யமாக விரித்து, 'விடை பத்துக்குமேல் வரும் போலிருக்கே' என்று விசனப்பட்டு, கால்விரல்களையும் துணைக்கு கூப்பிட்டு, ஒரு கண்ணை விரல்களிலேயும், மறு கண்ணை வாத்தியாரின் மோதிரத்திலேயும் அலைய விட்டு, தவித்து....

ஆனால் மூச்சு விடுவதற்குகூட அவகாசம் எடுக்காமல், இமைவெட்டும் நேரத்தில் சாவதானமாக கதையை சொல்ல ஆரம்பித்தார் செல்லப்பா. அதுதான் அவருடைய விசேஷம். யோசிப்பதற்கு என்று நேரம் எடுப்பதே கிடையாது.

"கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் சூரியனுடைய வெப்பத்தைத் தவிர்க்க இரவு நேரத்தில் மதுரையை நோக்கி நடக்கிறார்கள். விடிந்ததும், கோவலன் மட்டும் தண்­ர் வேண்டி ஒரு நீர் நிலையை தேடிச் செல்கிறான். அப்போது மாதவியிடமிருந்து ஓர் ஓலை€யை கொண்டுவந்து கோவலனிடம் தருகின்றான், கௌசிகன். மாதவியிடமிருந்து வந்த அந்த ஒலையை தவிப்புடன் வாங்குகிறான் கோவலன்:

"அடிகளே, உம்முன்னே நான் பணிகின்றேன், என் சொற்கள் தெளிவற்றதாயினும் என்னில் மனமிரங்க வேண்டும். முதுமைப் பிராயம் அடைந்த இருவரு ககு தொண்டு செய்ய மறந்தது பிழையன்றோ? உயர்கடிப் பிறந்த மனையாட்டியுடன் நள்ளிரவில் ஊரைவிட்டுப் போயினதும் பிழையன்றோ? என் தவறு யாதென்று தெரியாது நெஞ்சம் செயலிழந்தேன்; பொய்மையின்றி உண்மை காண்பவரே, உம்மை போற்றுகின்றேன்.

"அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக்கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது;
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய்தீர் காட்சிப் புரையோய், போற்றி!

"கோவலன் ஒலையைப் படிக்கின்றான்; மாதவியிடம் அவனுடைய மனம் அலைக்கழிக்கின்றது. பெற்றோர்களை நினைந்து வருந்துகிறான். பிறகு கௌசிகனைப் பார்த்து "இந்த ஓலையில் உள்ள வாசகம் என் பெற்றோருக்கு நான் எழுதியது போலவும் பொருந்துகிறது; ஆகவே இதை எடுத்துப்போய் என் பெற்றோரிடம் சேர்த்து அவர்கள் துயரை தீர்ப்பாயாக" என்று கூறி அதே ஓலையை திருப்பி கௌசிகனிடமே கொடுக்கின்றான்."

"அப்ப பார்த்தீரா, 1800 வருடங்களுக்கு முன்னாலேயே 'சுழல்பாவிப்பு' முறை வழக்கத்தில் இருந்திருக்கிறது" என்று சொல்லிவிட்டு செல்லப்பா கெக்கட்டம் விட்டு சிரிக்கத் தொடங்கினார். அதை தொடர்ந்து நானும் பலமாகச் சிரித்தேன். சிறிது நேரம் திகைத்தபடி இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு சண்முகமும் எங்கள் சிரிப்பில் கலந்துகொண்டார்.

ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக சிரித்தோம்.

அப்படித்தான் எனக்குத் தோன்றியது.

* * *

10

வம்ச விருத்தி

பாகிஸ்தானின் வடமலைப் பிராந்தியத்தில் அவர்கள் வெகு நேரமாக பயணம் செய்தார்கள். அஸ்காரி முன்னாலே சென்றார்; அவரைத் தொடர்ந்து அவருடைய ஒரே மகன் அலி, பன்னிரெண்டு வயதுகூட நிரம்பாதவன், வந்து கொண்டிருந்தான். மூன்று துப்பாக்கிகளும், ஒரு கைத்துப்பாக்கியும் அவர்களிடம் இருந்தன. இவர்களுடன் முபாஸர் என்ற வேலைக்காரன் அவர்கள் குடிப்பதற்கு தண்­ரும், சாப்விடுவதற்கு ரொட்டியும், பழங்களும் ஒரு கூடையில் வைத்து காவியபடியே பின்னாலே வந்தான்.

அந்த வேட்டைக்கு அன்று விடிகாலை மூன்று மணிக்கே அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். பன்னிரெண்டு மணி நேரம் அவர்கள் நடக்க வேண்டும். வெயில் தலைமேல் வருமுன்னரே அவர்கள் மலையடி வாரத்திற்கு வந்து விட்டார்கள். பாறைகள் குத்துக்குத்தாக இருந்தன. செங்குத்தான அந்தப் பாறைகளில் துவக்குகளையும் மாட்டிக் கொண்டு ஏறுவதென்பது எல்லோராலும் இயலாத காரியம்.

அஸ்காரி நிதானமாகவும் லாவகமாகவும் பாறைகளில் கால்வைத்து ஏறினார். அலி ஆர்வத்தோடு வேகமாகப் பின் தொடர்ந்தான். அஸ்காரியின் பார்வை மாத்திரம் அங்குமிங்கும் அலை பாய்ந்தபடியே இருந்தது. இது அலியினுடைய முதல் வேட்டை. அவனுடைய எதிர்காலமே அந்த வேட்டையில் அடங்கியிருந்தது. அல்லாவின் கடாட்சம் இருந்தால் அலி திரும்பும்போது ஆண் மகனாகத் திரும்புவான். ஓர் அணிலையோ, முயலையோ காட்டுக் கோழியையோகூட சுடலாம்; பிழையில்லை. ஆனால் அஸ்காரியின் பேராசை அலி ஒரு மலை ஆட்டை வேட்டையாட வேண்டுமென்பது தான்.

அஸ்காரி ஆசையுடன் ஒருமுறை தன் மகனைப் பார்த்துக் கொண்டார். சிறுவனாக இருந்தாலும் அவன் புஜங்கள் என்ன திடகாத்திரமாக இருக்கின்றன. இவனை தவம் செய்தல்லவோ அவர் பெற்றுக் கொண்டார். எத்தனை கஸ்டங்களை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது. அவருடைய முதல் மனைவி நூர்ஜஹான் பிழியப் பிழிய அழுதுவிட்டாள். பன்னிரெண்டு வருட காலம் அவருடன் வாழ்ந்தவள் ஆயிற்றே! அவளைத்துறந்துவிட்டு அவ்வளவு சுலபத்தில் இரண்டாவது மனைவியை எடுத்துவிட முடியுமா?

தனிமையில் இருக்கும்போது நூர்ஜஹானிடம் "நீ ஏன் கலங்குகிறாய்? நான் உன்மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம் உனக்கு தெரியாதா? ஆண் வாரிசு வேண்டுமென்றல்லவோ இந்தக் காரியத்தை செய்யத் துணிந்தேன்" என்று அவள் மோவாயைப்பிடித்து கூறினார். பதிலாக நூர்ஜஹானுடைய கண்களில் மெல்லிய நீர்ப்படலம் கோத்து நின்றது.

முந்திய காலம் போல வேண்டியபோது இருக்கும் மனைவியைத் தள்ளி வைத்துவிட்டு புது மனைவியை இப்போதெல்லாம் தேடிக்கொள்ள இயலாது. முதல் மனைவியின் சம்மதத்தை பெறவேண்டும். அஸ்காரி வேறு வழியின்றிதான் இப்படி நூர்ஜஹானிடம் கெஞ்சவேண்டி இருந்தது.

அஸ்காரியின் தகப்பனாருக்கு இறக்கும்வரை அந்தப் பயம் இருந்தது, தனக்கு பிறகு தன்னுடைய வம்சம் அழிந்துவிடுமோ என்று. ஏனெனில் அவருடைய தகப்பனாருக்கு அவர் ஒரே ஆண் பிள்ளை. பாட்டனாருக்கும் அப்படித்தான். அவர்கள் வம்சத்தில் பல பெண்கள் பிறந்தாலும் ஆண் வாரிசு ஒன்றுதான். இப்ப மூன்று தலைமுறைகளாக, எத்தனை பெண்கள் இருந்தாலும் ஓர் ஆண் பிள்ளைக்கு ஈடுவருமா?

அஸ்காரிக்கு இருபது வயது இருக்கும்போதே நிக்காஹ் ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. பக்கத்து ஊரிலே நல்ல வசதியான இடத்தில் இருந்துதான் நூர்ஜஹான் வந்தாள். அவள் மயக்கும் அழகியில்லை. ஆனால் யௌவனப் பிராயத்தில் எந்தப் பெண்தான் கண்ணுக்கு அழகாக தெரிய மாட்டாள்.

பஃராத் அன்று அவளை பல்லக்கில் கொண்டு வந்து இறக்கினார்கள். ஊர் முழுக்க அங்கே கூடி நின்றது. பின்னாலேயே நாலு வண்டிகளில் அவள் வீட்டு சீதனமும் வந்தது. பதினைந்து சால்வார் கமிஸ், தங்க நகைகள், வெள்ளிக் கொலுசுகள், சமையல் பாத்திரங்கள், கட்டில், மெத்தை, வீட்டு தளபாடங்கள் இதுவெல்லாம் தவிர இன்னுமொரு விசேஷமான சாமானும் இருந்தது. அது ஒரு ட்ரான்ஸ’ஸ்டர் ரேடியோதான். அந்தக் காலத்தில் அது ஒருவரிடமும் கிடையாது. அவள் கொண்டுவந்த சாமான்கள் எல்லாவற்றையும் பரப்பி வைத்தபோது ஊரில் எல்லாரும் வந்து அதிசயமாகப் பார்த்துப் பார்த்து அது பற்றியே பேசிக்கொண்டு போனார்கள். நூர்ஜஹானுக்கு எவ்வளவு பெருமை இருந்தது.

முதல் வருடமே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அஸ்காரிக்கு பெரிய ஏமாற்றம்; ஆனால் அவர் அதைக்காட்டவில்லை. இரண்டாவது பெண். அடுத்தடுத்து நாலு பெண் குழந்தைகள் பிறந்தன. ஊரிலே எல்லாரும் ஒரு மாதிரி இவரை இளப்பமாக பார்ப்பதுபோல பட்டது. அப்பொழுதுதான் அஸ்காரி ஹக்கீமை தேடி ஓடினார். மருந்துகள் பொட்டலம் பொட்டலமாக வாங்கி மனைவிக்கு கொடுத்துப் பார்த்தார். சரிப்படவில்லை. ஐந்தாவது பெண்ணும் பொட்டலம்போல பிறந்தபோது இவர் நூர்ஜஹானை பிரசவ அறை என்றுகூட பார்க்காமல் அடித்து விட்டார்.

அஸ்காரியின் தகப்பனார் பயந்தது போலவே நடந்தது. அவர் ஆண் வாரிசுவைப் பார்க்காமலே இறந்து போனார். அஸ்காரி தன்னுடைய சந்ததி தனக்கு அஸ்தமனமாகி விடுமோ என்று நிறைய கவலைப்படத் தொடங்கினார்.

அந்த நேரம் பார்த்துத்தான் ஜிர்காவில் தன்னுடைய பிரச்சினையை கிளப்பினார் அஸ்காரி. இரண்டாவது மனைவியை எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. நூர்ஜஹான், பாவம் அவள், கண்களில் நீருடன் தன்னுடைய கையெழுத்தைப் போட்டு தந்தாள். ஆனால் சம்மதம் வாங்கிய பிறகு பார்த்தால் இவள் இன்னுமொரு முறை கர்ப்பம். நாள் தவறினாலும் வருடாவருடம் இவள் கர்ப்பமாவது மட்டும் தவறியது கிடையாது. அஸ்காரி அவசரப்படாமல் பொறுத்திருந்து பார்த்தார். ஆனால் ஆறாவதும் பெண் குழந்தையாகத்தான் பிறந்தது.

முஸ்லா இமானுல்ல பரம ஏழை. ஆனால் அல்லாவின் பரிபூரண அருளால் குழந்தை செல்வத்துக்கு மட்டும் குறைவில்லை. அவருக்கு பதினொரு குழந்தைகள். இரண்டு நேரம் சாப்பிடுவதற்கும், உடுப்பதற்கும் வசதி இருந்தது. அவருடைய மூத்த பெண்ணை ஒருநாள் அவர் தலைநிமிர்ந்து பார்த்த போது திடுக்கிட்டு விட்டார். அவள் இப்படி கிடுகிடென்று வளர்ந்து விடுவாள் என்று யார் எதிர்பார்த்தார்கள்?

முல்லா நேரம் தவறாமல் தொழுகை செய்வார். அதற்கு சாட்சியாக அவருடைய நெற்றியிலே கொட்டைப் பாக்கு அளவில் ஒரு பொட்டணம் இருக்கும். அதைப் பார்த்தவர்கள் அவருக்கு அதிமரியாதை செலுத்தி தள்ளிப் போவார்கள். குரல் வளம் அவருக்கு இந்த வயதிலும் க­ரென்றுதான் இருந்தது. அவருடைய தொழுகை அழைப்பு அடுத்த கிராமம்வரை கேட்கும்.

முல்லாவினுடைய மூத்த மகள் மெஸ்ருன்னிஸாவுக்கு பதினேழு வயது நடக்கும்போது அஸ்காரி வந்து இரண்டாந்தாரமாக பெண் கேட்டார். இமானுல்லா மெய்மறந்து விட்டார். அல்லாவின் கருணையை நினைத்து நினைத்து வியந்தார். இம்முறை பல்லக்கில் மெஹ்ருன்னிஸா வந்து இறங்கிய போது அவள் பின்னால் வந்த டொங்காவில் ஓட்டை சட்டி பானைகளும், உடைந்த கட்டிலும்தான் வந்தது. ஏழை முல்லாவிடம் வேறு என்ன இருக்கும்; திமுதிமுவென்று பார்க்கவந்த ஊர்சனங்கள் எல்லாம் ஏமாந்து போய் திரும்பி விட்டார்கள்.

ஆனால் அஸ்காரி ஏமாறவில்லை. அளக்கமுடியாத சௌந்தர்யத்தை மெஹ்ருன்னிஸா அள்ளிக் கொண்டு வந்திருந்தாள். அஸ்காரி ஆசை மேலிட்டு அணுகியபோது அவளுடைய அழகு இன்னும் பிரகாசித்தது. முதல் நாளிலிருந்தே அவருக்கு அவளிடம் மையல் ஏற்பட்டு விட்டது. அவருக்கோ வயது முப்பத்தைந்து தாண்டிவிட்டது. மெஹ்ருன்னிஸாவுக்கு இன்னும் பதினேழு முடியவில்லை. மையல்வராமல் என்ன செய்யும்?

முல்லாவின் மகள் என்றாலும் மெஹ்ருன்னிஸாவுக்கு, இயற்கை அளித்த அழகை கணவனை அடிமை கொள்ள எப்படியெல்லாம் பிரயோகிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது. அஸ்காரியை முதல் நாள், முதல் கணத்திலிருந்தே தன்வகமாக்கி விட்டாள். அவருடைய முதல் மனைவி இவ்வளவு காலமாக அறியாத நுணுக்கங்களெல்லாம் மெஹ்ருன்னிஸாவுக்கு அத்துபடி. ஒது பெண்ணிடம் இத்தனை விசேஷங்கள் இருப்பது அஸ்காரிக்கு தெரியாமல் போய்விட்டது. நூர்ஜஹான் இவ்வளவு காலமும் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்துக் கொண்டார்.

அஸ்காரிக்கு மெஹ்ருன்னிஸாவிடம் பிடித்தது அவளுடைய சூட்சுமமான குறிப்பறியும் தன்மையும், குக்கிராமத்துப் பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள புத்தி சாதுர்யமும்தான். பிரியமுடன் அஸ்காரி வரும்போதெல்லாம் அவள் எதேச்சையாக தன் தலைத்திரையை நழுவ விடுவாள். அதை அவள் எப்படிச் செய்கிறாள் என்பது கடைசிவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகஸ்யமாக போய்விட்டது.

அவள் கர்ப்பமானவுடன் அவளுக்கு விருப்பமான அல்வாவை ரஹ்மான் கடையில் வாங்கி ரகஸ்யமாக ஓடோடி வருவார். தனிமையில் இருக்கும்போது அதை விள்ளி அவள் வாயில் ஊட்டுவார். அவள் காதுகளில் செல்லமாக காதல் வார்த்தைகளில் கொஞ்சுவார்.

அந்தக் கொஞ்சல்கள் கனகாலம் நீடிக்கவில்லை. அவளுக்கும் பெண் குழந்தைதான் பிறந்தது. மரியம் என்று பேர் வைத்தார்கள், அஸ்காரி பேயறைந்தவர் போல நடந்துகொண்டார். யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. அடிக்கடி ஆற்றங்கரையிலே போய் விசராந்தியாக உட்கார்ந்து கொண்டு தீவிரமாக யோசித்தார்.

அஸ்காரி தன்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்துக்கொண்டார். திடீரென்று ஒற்றையடிப் பாதை மறைந்து இப்போது காட்டுப் பாதையாக மாறிவிட்டது. அலி ஒரு பாறையில் ஏறி நின்று சுற்றிவரவும் பார்த்தான். அவன் சிறுவன்தானே! அவன் நினைத்ததுபோல் மலை ஆடுகள் கூட்டம் கூட்டமாக அந்தப் பிராந்தியத்தை நிறைத்து திரியவில்லை. இதுவரை அவர்கள் கண்டதெல்லாம் ஒரு காட்டுக் கோழியும், முயலும்தான். மலை ஆடு எப்படி இருக்கும் என்றுகூட அலிக்குத் தெரியாது.

சாம்பலும் பழுப்பும் கலந்த நிறமாக பாறைகளுடன் கரைந்துதான் அவை காணப்படும். கூட்டம் கூட்டமாக ஒரு காலத்தில் திரிந்த அந்த ஆடுகளின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. உயரம் இரண்டரை அடிதான் இருந்தாலும் நேரான கொம்புகளுடன் அவை கம்பீரமாக இருக்கும்.

அவைகளின் கால் அமைப்பு ஒரு பாறையில் இருந்து இன்னொரு பாறைக்கு தாவுவதற்க ஏற்றமாதிரி அமைந்திருக்கும். ஒவ்வொரு பாறையாக அவை அனாயசமாகத் தாண்டுபோது பார்த்தால் பறப்பது போலவே இருக்கும்; கீழே நிலத்தை அடையும்போது முன்னங் கால்களை ஒருங்கே குவித்துவைத்துத்தான் விழும்; சறுக்கி விழுந்ததென்பது அவைகளில் ஜாதகத்திலேயே கிடையாது. கண்களை அலைய விட்டபடியே மேயும்; ஒரு சிறிய அசுகை அவற்றைக் காற்றிலே தூக்கி எழுப்பிவிடும். அந்தரத்திலேயே செங்குத்தாக திரும்பும் வல்லமை படைத்தவை. மனிதனுடைய விவேகத்துக்கும், சக்திக்கும் சவாலாக கடவுளால் படைக்கப்பட்ட ஜ“வன் அவை.

மலை ஆடுகள் பாகிஸ்தானின் வடமலைப் பிரதேசங்களில் பல்லாயிரம் ஆண்டு காலமாக உயிர் வாழ்ந்தவை. வரவர அவைகளுடைய இனம் இயற்சையின் சீற்றத்தாலும் மனிதனுடைய ஆக்கிரமிப்பாலும் குறுகி விட்டது. இந்த மாதிரி மலை ஆடுகள் உலகின் வேறெந்தப் பரப்பிலும் கிடையாது. இவை வேரோடு மறைந்துவிடும் அபாயத்தை உணர்ந்த பாகிஸ்தானின் அரசு இந்த ஆடுகளை இடருற்ற உயிரினம் (endangered species) என்று அறிவித்திருந்தது. இவற்றை பிடிப்பதோ, வேட்டையாடுவதோ சட்டத்திற்கு புறம்பானது.

ஆனால் இப்படியான அறிவிப்புகள் மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கு வடிகட்டி வர கனகாலம் ஆகும். அப்படியே தெரிய வந்தாலும் கிராமத்து மக்கள் அதை சட்டை செய்யப் போவதில்லை. அந்த ஆடுகளோ, தம்மை பாதுகாக்க விசேஷமான சட்டம் போட்ட விஷயம் தெரியாதபடியால், இன்னமும் பயந்தபடியே அந்த மலைப் பிராந்தியங்களின் செடிகளை மென்றபடி திரிந்து கொண்டிருந்தன.

அஸ்காரி ஆசையுடன் மெஹ்ருனை இன்னொரு முறை நினைத்துக் கொண்டார். இவளுடைய நினைவே அவருக்கு உற்சாகமூட்டியது. இவளை மணமுடித்து முதல் பிரசவம் பெண் குழந்தையாக இருக்கக் கண்டு அவர் மனம் என்ன பாடுபட்டது. இவளை தள்ளி வைக்கக் கூட நினைத்தாரே! அப்போதுதான் ஹஜ் யாத்திரை போவதென்ற தீர்மானத்துக்கு அவர் வந்தார்.

அந்த வருடம் ஹஜ் யாத்திரையாக 60,000 பேருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்க முடிவு செய்திருந்தது. அஸ்காரியின் பெயரும் அந்தப் பட்டியலில் இருந்தது. அவருடைய பிரார்த்தனை எல்லாம் ஒர் ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்பதுதான். அவர் உயிராக நேசிக்கும் மெஹ்ருன்னிஸாவும் இப்படி தன்னை ஏமாற்றுவாள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. இப்ப மொலுமொலுவென்று ஏழு பெண் குழந்தைகள் அவர் வீட்டை அடைத்துக் கிடந்தனர். முதல் மனைவியிடம் பிறந்த மூத்த மகள் ரஸ“மா பூப்பெய்தி விட்டாள். தலையில் முக்காடு போட்டுத்தான் அவள் இப்போதெல்லாம் காணப்படுகிறாள். தன் சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் மண் விழுந்துவிடுமோ என்று அவர் பெருமூச்சு விட்டார்.

மெஹ்ருன்னிடம் இவருக்கு அளவு கடந்த மோகம். கடைசல் உடம்பு என்பார்களே, அப்படி அவளுக்கு. வழவழவென்றிருப்பாள். ஒரு வீச்சில் என்னவெல்லாமோ சொல்கிற கண். இவர் காதல் மேலிட்டு நிற்கும் வேளைகளில் என்ன மாதிரி ஊகமாக இவரிடம் வந்து சேர்ந்து கொள்வாள். முல்லாவின் மகளாக இருந்துகொண்டு இந்த செப்படி வித்தையெல்லாம் எங்கே கற்றாள்? அவளை எப்படி தள்ளி வைக்க முடியும்! மூன்றாவது மனைவி ஆண் மகவு தருவாள் என்பது என்ன நிச்சயம்?

ஹஜ்யாத்திரை மேற்கொண்ட போது அல்லாவின் அளப்பரிய கருணையால் தனக்கு ஒரு விடிவு காலம் கிட்டும் என்று எதிர்பார்த்தார். தையல் போடாத இரண்டு ஒற்றைத் துணிகளை உடுத்திக்கொண்டு அல்லாவின் சன்னிதியில் நின்றபோது அந்த ஜனவெள்ளத்தில் இவர் தன்னை ஒரு துளியாகத்தான் உணர்ந்தார். இடது தோளை மூடிக்கொண்டு வலதுகையின் துணியை இடுக்கிக் கொண்டு தல்பியாவை ஓதியபடி இடம்வரத் தொடங்கினார்:

லப்பய்க்க அல்லாஹும்மா லப்பய்க்க
லப்பய்க்க லா ஸரிக்க
லக லப்பய்க்க

ஓ அல்லாவே சரணம்
உன் அடிமை நான் இங்கே
உனக்கு சமானம் யார்
அல்லாவே
நான் இங்கே

அஸ்காரியின் கண்களில் நீர் பனித்தது. சஃபா மலைக்கும் மர்வா மலைக்கும் இடையில் 'சாய்' செய்யத் தொடங்கியபோது அவர் கண்களில் கண்­ர் கொட்டியது. ஏழுதரம் மாறி மாறி ஓடினார். 'பச்சை குழந்தை இஸ்மாயில் தன் சின்னக் கால்களை உதைத்துக்கொண்டு தண்­ருக்காக கதறியபோது நடுப் பாலைவனத்தில் தண்­ர் ஊற்றை தோற்றுவித்தாய் அல்லவா? என் கண்­ர் உனக்குத் தெரியவில்லையா? குழந்தை இஸ்மாயிலின் சந்ததி பெருகியது போல என் வம்சம் விருத்தியாக ஒரு வழி செய்ய மாட்டாயா?'

குர்பானை முடித்து தலைமயிரையும் ஒட்டமழித்த பிறகு அவர் மனதிலே இத்தனை காலமும் அழுத்திய பாரம் இறங்கியதுபோல இருந்தது. திரும்ப ஊருக்கு வந்தபோது வழக்கம்போல ஹஜ்விருந்துகள் பல நாட்கள் தொடர்ந்தன. அவர் கொண்டுவந்த பவித்திரமான 'ஸம் ஸம்' தண்­ரை வடக்குப் பார்த்தபடி எல்லோரும் ஓரொரு சொட்டு வாயிலே விட்டுக் கொண்டார்கள்.

மெஹ்ருன்னிஸாவை தயிமையில் அணுகுவதற்கு அவருக்க மூன்று நாள் பிடித்தது. என்ன வசீகரமாக இருந்தாள். அவளுடைய புன்னகை ஒரு புதுவிதமான அர்த்தத்தோடு விகஸ’த்தது. இவர் அவளுக்காக கொண்டுவந்த தங்கச் சங்கிலியை அவள் கழுத்திலே கட்டிவிட்டார். 'மரியமின் அம்மாவே, மரியமின் அம்மாவே' என்று கூப்பிடும் இவர் தனிமையில் இருக்கும்போது 'மெ...ஹ்...ரூ...ன்' என்று செல்லமாக அவள் காதுகளில் கூவினார். இம்முறை நிச்சயமாக பையன்தான் என்று இவர் உள்ளுணர்வுக்கு பட்டது.

'வாழ்ந்தால் அலிபோல் வாழ், இறந்தால் ஹுசைன் போல் இற' என்ற வாசகம் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனபடியால் பிறக்கும் குழந்தைக்கு அலி என்று பெயர் வைப்பதாகவே தன் மனத்திற்குள்ளே முடிவு செய்தார். அவருடைய மனைவியின் விருப்பம் வேறுவிதமாக இருக்குமென்பது அப்போது அவருக்குத் தெரியாது.

இரண்டுநாளாக அவர் மனைவி பிரசவ வலியிலே துடித்தாள். மூன்றாம் நாள் இரவு ஓர் ஆண்மகவைப் பெற்றாள். பொன்னாங்காணி தண்டுபோல சிவப்பு நிறம்; கருநீலக் கண்கள்; தலை நிறைய சுருள் மயிர். அப்படியான ஒரு அழகை அவர் ஆயுசிலேயே பார்த்ததில்லை.

பிள்ளையினுடைய அழகைப் பார்த்து அவர் மனைவி. யூசுப் என்று பேர் வைக்கலாம் என்று யோசனை சொன்னாள். யூசுப்பையும் மிஞ்சிய ஒர் அழகான ஆண்மகனை இந்த மண்ணுலகம் பார்த்திருக்க முடியுமா; யூசுப் என்ற அடிசை ஸ”லைகாவுடைய விருந்து மண்டபத்திற்குள் காலடி எடுத்துவைத்தபோது ஸ”லைகாவினுடைய அரசவைத் தோழியர் பழங்கள் நறுக்கிக் கொண்டிருந்தனராம். அவனுடைய பேரழகைப் பார்த்த தோழியர் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் மயங்கி கைவிரல்களை வெட்டிக் கொண்டார்களாம். அப்படியான ஒரு பேரழகுடன் பிறந்த பிள்ளைக்கு யூசுப் என்று பேர் வைப்பதுதான் பொருத்தம். அதனால் இருவரும் யோசித்து யூசுப் என்று பேர் வைப்பதாக முடிவு செய்தனர்.

அஸ்காரியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஹுஜ்ராவில் சனம் நிறைந்துவிட்டது. துப்பாக்கியை நூறு ரவுண்டு, இருநூறு ரவுண்டு என்று சுட்டு ஊர் முழுக்க பிரகடனம் செய்தார்கள். வண்ணக் கலர் ரவைத் துப்பாக்கிகளை வெடித்து வானத்தை மத்தாப்புபோல அலங்கரித்து ஆரவாரித்தார்கள். ஒரு கொழுத்த எருமை மாட்டை வெட்டி விருந்து போர்ட்டார் அஸ்காரி. அவர் இனிமேல் ஜிர்கா கூட்டங்களுக்க தலைநிமிர்ந்து போகலாம்.

அலி பிறந்த அன்று முன்கூட்டியே 'டாராவில்' சொல்லி வைத்து வாங்கிய பளபளவென்று மின்னு புதிய கைத்துப்பாக்கி ஒன்று அலியினுடைய சின்னஞ் சிறு தலையணையின் கீழ் வைக்கப்பட்டது. இனிமேல் அவன் தலையணையின் கீழ் அந்த துப்பாக்கி அவன் இறக்கும்வரை இருக்கும்.

அலி கிடுகிடென்று வளர்ந்துவந்தான். 'கண்ணை இமை காப்பது' என்று சொல்வார்களே அதுமாதிரித்தான் அவனைப் பார்த்தார்கள். ஏழு பெண் குழந்தைகள் பிறந்த வீட்டில் ஒரே ஆண் பிள்ளை வேறு எப்படி வளரும்? வீடு முழுக்க அவனிடம் உயிரையே வைத்திருந்தது. இரண்டு வயது வரையில் அவனுடைய கால்கள் நிலத்தில் படவேஇல்லை. ஒருத்தியின் இடுப்பிலிருந்து மற்றவளின் இடுப்புக்கு மாறியபடியே இருப்பான். அவனுடைய தளிர் ஸ்பரிசம் பட எல்லோரும் தவம் கிடந்தார்கள். சொந்த தாய்க்குக் கூட அவனை வைத்து கொஞ்ச முடியவில்லை.

இவனுடைய ராஜ்யம்தான் நடந்து கொண்டிருந்தது. இவன் பேச்சுக்கு மறு பேச்சில்லை. எல்லோரும் தனக்கு சேவகம் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தான். அழகும் ஆணவமும் சேர்ந்த ஒரு பையனாக வளர்ந்து வந்தான். ஏழு வயது வரையில் தாய் தமக்கையருடன் வீட்டிலேயே இருந்தான். பிறகு அவர்கள் வழக்கப்படி ஹுஜ்ராவுக்கு தகப்பனுடன் மாறிவிட்டான். அன்றிலிருந்து தாயையும் தமக்கையரையும் உதாசீனம் செய்துவிட்டு தகப்பனுடனேயே சுற்றத் தொடங்கினான்.

பள்ளிக்கூடம் என்று பேருக்குத்தான் போனான். அவன் கவனம் முழுக்க ஆற்றில் மீன் பிடிப்பதிலும், சிறு பிராணிகளுக்கு பொறி வைப்பதிலுமாக போய்க்கொண்டிருந்தது. அஸ்காரியுடன் சேர்ந்து துவக்குகளையும், பிஸ்டல்களையும் சுத்தப்படுத்துவதும், வேட்டைக்கு போவதும் அவனுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.

இவனுடைய அதிகாரத்திற்கு தாய்மாரும் தமக்கையரும் நடுங்குவார்கள். இப்படித்தான் ஒரு நாள் ஹுஜ்ராவில் விருந்தினர் வந்திருந்தார்கள். ஷெனானா வீட்டிற்குப் போய் சீக்கிரம் சாப்பாடு அனுப்பும்படி அதிகாரம் செய்துவிட்டு வந்தான். அப்படியும் சாப்பாடு வரவில்லை. இன்னொரு முறை போய் அதட்டிப் பார்த்தான். அப்ப இவனுடைய பெரியம்மாவின் இரண்டாவது மகள் நுஸ்ரத், அவளுக்கு பதினாறு வயதிருக்கும், எரிச்சல் தாங்காமல் "நீ சும்மா போய் உன் வேலையைப் பார், சாப்பாடு ரெடியானதும் தானே வரும்" என்று சொல்லி விட்டாள். இவனுக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. அப்படி யாரும் இதற்கு முன்பு இவனிடம் கதைத்ததில்லை. தன்னுடைய சின்னக் காலைத் தூக்கி அவளுடைய முழங்காலைப் பார்த்து ஓர் அதைவிட்டான். அவள் 'உஃப் மோஃரே' என்று காலைப் பிடித்தபடியே இருந்து விட்டாள். இவனுடைய தாயார் துப்பட்டாவை எடுத்து வாய்க்கள்ளே திணித்து சிரிப்பை அடக்கி கொண்டாள். பெரிய தாயார் மட்டும் தன்னுடைய தலைச் சீலையை நன்றாக முன்னுக்கு இழுத்துவீட்டு மற்றப்பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அதற்குப்பிறகு அலிக்கு வேண்டிய மரியாதை கிடைத்தது. எட்டு, ஒன்பது வயதிலிலேயே எல்லாவிதமான துப்பாக்கிகளையும் கழட்டி சுத்தம் செய்து திருப்பியும் பூட்டி விடுவான். பத்து வயதிலேயே துப்பாக்கியை தூக்கி பிடித்து குறி பார்த்து சடப் பழகிக்கொணடான். துப்பாக்கி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அவனுக்கு தண்ணிபட்ட பாடு. ஒரு புதுத் துப்பாக்கி பற்றி பெரியவர்களுக்கிடையில் சர்ச்சை வந்தால் அதைத் தீர்த்து வைப்பது அலிதான்.

அந்தக் கிராமமும் மற்றக் கிராமங்கள் போல ஒரு வழக்கம் வைத்திருந்தது. சிறுவர்களக்கு உபநயனம் செய்து பூணூல் அனிவிப்பது போல இங்கேயும் ஒரு சடங்க இருந்தது. இதன் பிறகுதான் ஒரு சிறுவன் உண்மையான ஆண் மகன் ஆவான். அது முதல்முறையாக காட்டுக்குப் போய் ஒரு மிருகத்தையோ பறவையையோ வேட்டையாடி வருவதுதான். இந்த வேட்டையை வைத்து அவரவரின் தகுதியை ஊர் கணித்துவிடும்.

அஸ்காரி அவருடைய வாழ்நாளில் அறுபது, எழுபது வேட்டைகளுக்கு போயிருப்பார். காட்டுக்கோழி, வாத்து, மான், முயல், காட்டுப்பன்றி என்றுதான் வழக்கமான வேட்டை. ஆனால் இவை எல்லாத்திற்கும் சிகரம் வைத்தது போலத்தான் மலை ஆட்டு வேட்டை இருக்கும். அஸ்காரி இரண்டே இரண்டு முறைதான் மலை ஆட்டு வேட்டையில் வெற்றி பெற்றிருக்கிறார். அதைக் கொல்லுவதென்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. யாராவது வெற்றியுடன் திரும்புவார்களாகில் அன்று கிராமம் முழுக்க திமிலோகப்படும். வேட்டை பிரதாபத்தை எல்லாரும் சுற்றி இருந்து கேட்பார்கள். அந்த இறைச்சியின் ருசியே ஒரு தனி ரகம்தான்.

அஸ்காரி தன் கையிலே இருந்த இரண்டு துப்பாக்கிகளில் ஒன்றை அலியிடம் கொடுத்தார். அது பரம்பரையாக அவருடைய பாட்டனார் காலத்தில் இருந்து வந்த துப்பாக்கி. அதற்கு பின்னே ஒரு பெரிய கதை இருந்தது. அந்தத் துப்பாக்கி தொண்ணூறு வயசு. அது 'டாராவில்' குடிசைக் கைத்தொழில் போல் ஒரிஜினல் லீ என்ஃபீல்டு துப்பாக்கியைப் பார்த்து செய்தது. ஒருமுறை ஒரு வெள்ளைக்காரன் கூட அதன் செய்கையைப் பார்த்து அது ஒரிஜினல்தான் என்று ஏமாந்து விட்டான். அவர்கள் வம்சத்தை அது காப்பாற்றுகிறது என்று நம்பினார்கள்.

அவருடைய பாட்டனார் 'பட்டான்கிளர்ச்சியில்' பங்கு பெற்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக சண்டை போட்டவர். அப்போது அவருக்கு வயது பதினெட்டுத்தான். கர்ஸன் துரை 35,000 துருப்புகளை அனுப்பி அவர்கள் புரட்சியை முறியடித்த போது அப்கானிஸ்தானுக்கு தப்பியோடி பத்து வருட காலம் தலைமறைவாக இருந்தவர். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து 'டாராவில்' இதை வாங்கினாராம்.

பாட்டனார் காலத்திலே பல வேட்டைகளுக்க இந்தத் துப்பாக்கி போயிருக்கிறது. அவருக்குப் பிறகு அஸ்காரியின் தகப்பனார் அஸ்துல்லா இப்ராஹ’மிடம் இது வந்து சேர்ந்தது. அஸ்காரியுடைய காலம்முடிந்த பிறகு அலிக்க போய் சேரும். இது ஒரு அதிர்ஸ்டமான துப்பாக்கி. இதில் குறி வைத்தால் அது தப்பாது. இது பல உயிரைக் குடித்திருந்தாலும் ஒரே ஒரு மனித உயிரைத்தான் இன்று வரை எடுத்திருக்கிறது.

இந்த சம்பவம் அஸ்காரி பிறக்க வெகு நாள் முன்பே நடந்தது. மற்றவர்கள் சொல்லித்தான் இவருக்கு தெரியும். இவருடைய தகப்பனார் இப்ராஹ’ம் பல தடவை ஹஜ் யாத்திரை போனவர். நல்ல உயரமாய் மீசையுடன் கம்பீரமாய் இருப்பார். அவருடைய உடம்பு ஈரத் துணியை முறுக்கி எடுத்ததுபோல இறுகிப்போய் இருக்கும்.

இப்ராஹ’மின் நிக்காஹ் ஓர் அதிசயமான முறையில் நடந்தது. சிறு வயது முதல் கொண்டே ஜமால் அகமதின் மகள் டுரிஷாவரையே இப்ராஹ’ம் நிக்காஹ் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு நாள் இவர் வீட்டுக்கு ஒரு கிழட்டு விருந்தாளி ஜமால் அகமதின் இரண்டாவது மகள் ஸபுன்னிஸாவை வர்ணிக்கக் கேட்டார். அன்றிலிருந்து இவருக்குள் அவள் மேல் மோகம் ஏற்பட்டுவிட்டது. இவர் எவ்வளவு முயற்சி செய்தும் இவரால் அவளை மறக்க முடியவில்லை. கண்ணாலேயே பார்க்காத ஒரு பெண்ணிடம் காதல் எற்படக் கூடுமா?

அக்பர் பாதுஷாவுடைய அந்தப்புரத்தல் எத்தனையோ ராணிகள் காத்துக் கிடந்தனர். ஒருமுறை வழிப்போக்கன் ஒருவன் ரூபமதி என்னும் பெண்ணின் லாவண்யத்தை வர்ணித்து பாடிய பாட்டொன்றைக் கேட்டார். அப்படியே அவளுடைய அழகின் வர்ணனையில் மதி மயங்கி உருகிவிட்டார். அதற் பிறகு அக்பர் அவளுடைய சிந்தனையாகவே இருந்தார். ராஜ்யபாரத்தில் கவனம் செல்லவே இல்லை. நேரே பார்க்காமல் ஒரு பாட்டு வர்ணனையைக் கேட்டு உன் மத்தமாவது சாத்தியம்தான். அக்பர் பிறகு அந்தப் பெண்ணுக்காக சைன்யத்தையெல்லாம் திரட்டிபடையெடுத்துப் போனது சரித்திரம்.

இப்ராஹ’ம் படை எடுக்காவிட்டாலும் மனத்தினாலே பலமுறை படை எடுத்துவிட்டார். ஆனால் ஸபுன்னிஸாவை வர்ணித்தவன் ஒரு கடைந்தெடுத்த முட்டாள். அவள் அழகு வர்ணனைக்கு அப்பாற்பட்டது. இவர் அவளை மணமுடிக்க பட்ட கஷ்டமெல்லாம் அவளை மணமுடிக்க அன்று இரவு அவள் முகத்திரையை நீக்கியபோது பஞ்சாய்ப் பறந்து விட்டது. இவர் வாயிலிருந்து 'ஆ' என்று ஒரு சன்னமான ஒலி இவரையும் அறியாமல் எழும்பியது. ஒரு அக்பர் பாதுஷா இன்று இருந்திருந்தால் இவளுக்காக ஒன்பது மடங்கு சைன்யத்தையெல்லாம் திரட்டியிருப்பாரே என்று இப்ராஹ’ம் நினைத்தார்.

இவர் மனைவியின் அழகு மதியை மயக்கி ஆளை கிறங்க வைக்கும் அழகு. மணமுடித்த நாளில் இருந்து இவருக்கு அவள் மேல் அளவு கடந்த பிரேமை. இந்த அழகு ஏற்படுத்திய விபரீதம் ஒருநாள் அந்த ஊரிலே கொலையாகப் போய் விழுந்தது.

ஸபுன்னிஸாவின் பிரசித்தமான அழகை ஊர் முழுக்க கேள்விப்பட்டிருந்தது. ஆனால் பெண்களைத் தவிர வேறொருவர் பார்த்தது கிடையாது. அதற்கும் ஒரு நாள் சந்தர்ப்பம் வந்தது.

அந்த குக்கிராமத்தில் இருந்த ஒரேயொரு பால்கடை அஹமத் மிர்ஸாவுடையதுதான். அவனிடம் எட்டு எருமை மாடுகளும் பத்து பதினைந்து ஆடுகளும் இருந்தன. பால் சப்ளை தட்டுப்படும் சமயத்தில் மற்றவர்களிடம் பால் வாங்கி சமாளித்து வந்தான். அப்படித்தான் ஒருநாள் பால் சப்பை அவசரமாகத் தேவைப்பட்டதால் ஒரு மத்தியானம் போல இப்ராஹ’ம் வீடு தேடிப் போனான். அந்த சமயத்தில் ஒருவரும் அப்படி வீடு தேடி வருவது கிடையாது. இப்ராஹ’ம் அந்த நேரங்களில் கரும்புத் தோட்டத்திலே இருப்பார் என்பது ஊர் அறிந்த சேதி.

அஹமத் மிர்ஸா வீடு தேடி வந்தபோது ஸபுன்னிஸா எருமை மாட்டடியில் வேலையாக இருந்தாள். வேலையில் கண்ணாயிருந்தவள் தலைத்திரை நழுவியதை கவனிக்கவில்லை. அஹமத் மிர்ஸா பிழையான வழியில் போறவன் அல்ல. ஐந்து நேரத் தொழுகை தவறாமல் செய்து வருபவன். அப்படிப்பட்டவன் மாபெரும் தவறு ஒன்றை அன்று செய்துவிட்டான்.

அவளைப் பார்த்த கண்களை அவனால் அகற்ற முடியவில்லை. வைத்த கண் வாங்காமல் அப்படியோ கொஞ்ச நேரம் நின்றான். கொக்கி போட்டது போல ஏதோ ஒன்று அவனைப் பிடித்து இழுத்து நிறுத்தி வைத்தது; புத்தி அடியோடு மழுங்கிவிட்டது. வெற்றிக்களிப்பில் துரியோதனன் மதி மயங்கி ஒற்றை ஆடையோடு இருந்த திரௌபதியை சபைக்கு இழுத்துவரச் சொல்லி அவள் பார்க்க தனது இடது தொடையை கையினால் தட்டவில்லையா? அது மாதி ஒரு கணம் உன்மத்தனாகி விட்டான்.

அதற்கு பிறகு மகா பாபமான ஒரு காரியத்தை செய்தான் மிர்ஸா. கண்வெட்டாமல் அவளையே பார்த்தபடி சீப்பை எடுத்து தன் தலையை வாரினான். இது கிராமங்களில் பாரதூரமான ஒரு அசிங்கமான சைகை. இப்படியான நடத்தைக்கு மன்னிப்பே கிடையாது. இதுபோல கீழ்த்தரமாக நடக்கும் ஆணுக்கு கிடைக்கும் தண்டனையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

சிறிது நேரம் சென்றது. ஸபுன்னிஸாவுக்கு இது ஒன்றும் தெரியாது. அவள் பாட்டுக்கு தன் வேலையிலேயே கண்ணாயிருந்தாள். திடுக்கிட்டு நிமிர்ந்தவள் இவனைப் பார்த்துவிட்டு அரண்டு போய் வீட்டுக்க உள்ளேஓடிவிட்டாள்.

அன்று பின்னேரம் இப்ராஹ’ம் இதைக் கேள்விப்பட்டார். அவர் இருதயத்தை யாரோ திருகிப் பிழிஞ்சதுபோல ஆகிவிட்டது. அவர் செய்யவேண்டியதைச் செய்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.

இப்ராஹ’ம், மிர்ஸாவைத் தேடிப் போனபோது மிர்ஸா கடையில்தான் இருந்தான். கடையிலே இன்னும் இரண்டு வாடிக்கைக்காரர்களும் இருந்தார்கள். இப்ராஹ’மின் கைகளில் துப்பாக்கியைக் கண்டதும் மிர்ஸாவின் கண்கள் மிரண்டன. இப்ராஹ’ம் அவர்களது வம்சத்து சொத்தாகிய லீ என்ஃபீல்டு துப்பாக்கியைத் தூக்கி பிடித்து குறிபார்த்து சுட்டார். குறி தவறவில்லை. மிர்ஸா அந்த இடத்திலேயே இப்ராஹ’ம் திரும்பி வந்து துப்பாக்கியை சுவரில் சாத்திவிட்டு ஒன்றுமே நடக்காதது போல சும்மா இருந்தபோது ஸபுன்னிஸா விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

அன்றிரவே ஜிர்கா அவசர அவசரமாகக் கூடியது. இப்ராஹ’ம் சுட்டதை ஒருத்தரும் ஆட்சேபிக்கவே முடியாது; அது செய்ய வேண்டியதுதான். ஆனால் இது ஒரு பெரிய 'பரம்பரை ரத்தச் சண்டையாக' மாறி விடக்கூடாது என்றுதான் பயப்பட்டார்கள். மிஸ்ராவுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும். அவள் எங்கே போவாள்? மிர்ஸா பகுதியினர் 'ரத்தப்பணம்' கேட்டார்கள். ஜிர்காவில், மிர்ஸாவுடைய குடும்பத்துக்கு, இப்ராஹ’ம் நாலு எருமை மாடுகளும் அந்த வருடத்திய கரும்பு சாகுபடியில் பாதியும் கொடுக்கவேண்டும் என்று துர்ப்பாகியது.

அஸ்காரியின் நிக்காஹ் கன காலம் தள்ளிப் போனதுக்கும் காரணம் அவருடைய தாயார் ஸபுன்னிஸாதான். தன் தாயைப் போன்ற அழகான பெண்தான் தனக்கு மனைவியாக வேண்டும் என்று அஸ்காரி கேட்டுக் கொண்டிருந்தார். அது அவ்வளவு இலகுவான காரியமா என்ன? அஸ்காரியின் தாயார் இப்போது இல்லையென்றாலும் அந்த மாதிரி ஒரு அழகை அஸ்காரி பிறகு இந்தப் பிரபஞ்சத்தில் காணவேயில்லை.

அஸ்காரி திரும்பிப் பார்த்தார். அலியும் முபாரும் கொஞ்சம் தளர்ந்து விட்டார்கள். விரைந்து வருமாறு சைகை காட்டிவிட்டு மேலும் தொடர்ந்தார். இப்போதெல்லாம் மலை ஆட்டைக் காண்பதுவே அரிதாகி விட்டது. மலையின் உச்சியில் ஒன்றோ, இரண்டோ தனித்து காணப்படும். மனிதவாடை பட்டதும் மாயமாய் மறைந்துவிடும். ராமாயணத்தில் மாய மானைப்போல அது துரிதமாக பறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே காற்றிலே ஐக்கியமாகிவிடும்.

அதிர்ஷ்டம் இருந்தால் இன்று அலியின் முதல் வேட்டை ஒரு மலை ஆடாக இருக்கும். அலி பன்னிரண்டு வயதுப் பையனாக இருந்தாலும் அவனுடைய தோள்கள் துப்பாக்கியைத் தாங்கும் வலுவுடன்தான் இருந்தன. நெற்றியில் சிறிது வியர்வை அரும்ப தடுமாற்றமில்லாமல் ஒவ்வொரு பாறையாக லாவகமாகப் பாய்ந்து குருவிபோல வந்து கொண்டிருந்தான் அலி. மலை ஆட்டுக்கு இவன் பெரிய சவாலாகத்தான் இருப்பான்.

வேட்டைக்காரர்களுக்கு கண்களில் சக்தி வெகுதூரம் வரை இருக்கும். நாலாபக்கமும் கண்களை துழாவியபடியே வந்து கொண்டிருந்தார்கள். முயல், காட்டுக் கோழி எல்லாம் சுடும் தூரத்தில் இருந்தும் அவர்கள் அவற்றைத் தாண்டி வந்து விட்டார்கள். பாறைகளின் உச்சியில் தனிமையில் நின்று வேவுபார்க்கும் மலை ஆடு மட்டும் அவர்களுக்கு தென்படவே இல்லை.

நேரம் பதினோரு மணியாகிக் கொண்டு வந்தது. இவர்கள் மூவருக்கும் களைப்பு மேலிட்டு விட்டது. பாறைகளில் இருந்து சூடு மெதுவாக மேலே எழும்பிக் கொண்டிருந்தது. 'கொஞ்சம் இளைப்பாறலாமா?' என்று அஸ்காரி நினைத்த போதுதான் வெகுதூரத்தில் பாறையின் உச்சியில் நிழலாக பாறையோடு ஒர் ஆடு தன் சாதகத்தை முடிக்க வந்தவர்கள் எதிரில் வருவது தெரியாமல் செடியொன்றை நிமிண்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது.

அஸ்காரியின் இதயம் 'படக், படக்' என்று அடிக்கத் தொடங்கியது. அவருடைய வாழ்நாளிலேயே அந்த இதயம் இப்படி வீசோடு துடித்ததில்லை. மலை ஆடு நிமிர்ந்து இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மறுபடியும் தன் வேலைக்குத் திரும்பி நிமிண்டத் தொடங்கியது.

அஸ்காரி காற்றின் திசை பார்த்து அலியையும், முபாஸரையும் தன் பின்னால் வேகமாக வரும்படி சைகை காட்டினார், அலியும் முபாஸரும் நிலத்தோடு அமுங்கிப் போய் மெதுவாக முன்னேறினார்கள். மலை ஆட்டை நோக்கி சாவு ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடு அந்தச் சிறிய செடியில் மனதைப் பறிகொடுத்து அதைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது.

அலி ஒரு புதல் மறைவில் குந்தி முழங்காலில் உட்கார்ந்து கொண்டான். நிதானமாக துப்பாக்கியை நிமிர்த்தி தோள்மீது தாங்க கொடுத்து குறி வைத்தான். சிறு பையன் ஆனாலும் வேட்டைக்காரன் பிள்ளையாதலால் அவன் கைகள் கன்கிரீட் போல ஆடாமல் அசையாமல் நின்றன.

கடைசி முறையாக அந்த ஆடு செடியைவிட்டு நிமிர்ந்து தன்னைச் சுற்றியுள்ள இந்த உலகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டது. அஸ்காரி கண் சாடை காட்டினார். அலி ஆற அமர அவசரப்படாமல் விசையை நிதானமாக அமுக்கினான். படீரென்ற ஒலி காடு முழுக்க பதவியது. 'டும், டும்' என்று பாறைகள் எதிரொலித்தன. மலை ஆடு ஆறடி உயரத்துக்கு எவ்விப்போய் தூர விழுந்தது.

அஸ்காரி மகனைப் பார்த்தார். மகன் தகப்பனைப் பார்த்தான் இரண்டு பேரும் கையை உயர்த்தி 'கூஹாய்' என்று கத்திக் கொண்டே ஆட்டை நோக்கி ஓடினார்கள். முபாஸரும் கூடையை புதரடியில் போட்டுவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தான்.

அன்று அவர்கள் கிராமத்தில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். இந்தச் செய்தி மற்றக் கிராமங்களுக்கும் பரவிவிடும். அலியின் பிரதாபத்தை கேட்பதற்கு எல்லோரும் வந்து கூடுவார்கள். மலை ஆட்டு விருந்து இரவு முழுக்க தொடரும். அந்த இறைச்சியின் ருசீ பற்றி எல்லோரும் சிலாகிப்பார்கள். அவன் ஒரு முழு ஆண்மகனாகி விட்டான். அல்லாவின் கருணையால் அவர்கள் வம்சம் இனி இடையூறின்றி தொடரும்.

அவர்கள் கிராமத்தை நோக்கி வேகமாக நடந்தார்கள். மைமலாவதற்கு முன்பே அவர்கள் போய்ச் சேர்ந்துவிடவேண்டும். அலியின் முகத்தில் பெருமிதம். முபாஸர் ஆட்டைத் தூக்கியபடி பின்னாலே இளைக்க இளைக்க வந்து கொண்டிருந்தான்.

இந்த உலகின் பரப்பிலே, பாகிஸ்தானின் வடமலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மலை ஆடுகள் உலவி வந்தன. அவற்றின் உலக எண்ணிக்கை நேற்று வரை 84 ஆக இருந்தது இன்று அது 83ஆக சுருங்கிவிட்டது.

அலியும் தகப்பனும் தங்கள் வெற்றியைக் கொண்டாட கிராமத்தை நோக்கி எட்டி நடை போட்டனர்.

* * *

11

பருத்திப் பூ

"என் ராஜ்யத்திலுள்ள நாடு அநேக மலைகளாலும் அடர்ந்த காடுகளாலும், நீர்த்தேக்கங்களாலும் சூழப்பட்டு கவலைதரும் நெருக்கத்திலிருக்கிறது. இப்படியான நாட்டில் பெய்யும் மழையில் ஒரு துளியேனும் ஆற்றின் வழியேகி மனிதனுக்கு பயன்தராத வகையில் சமுத்திரத்தை அடைவது மகாபாபமாகும்."

- இலங்கை அரசன் பராக்கிரமபாகு (கி.பி.1153-1186) சூளவம்சம்: அதிகாரம் LXVIII, செய்யுள் II.


அவருடைய நித்திரை திடீரென்று கலைந்தது. குழாயிலிருந்து தண்­ர் சொட்டும் சத்தம் நிதர்சனமாகக் கேட்டது. தண்­ர்க் குழாயைத் திறந்தால் வடிவாகப் பூட்டும்படி ஆயிரம் தடவை சொல்லியிருப்பார் யார் கேட்கிறார்கள்? அவர் ஆழ்ந்த நித்திரையாக இருக்கும்போது 'புக்காறா' விமானத்திலிருந்து குண்டு விழுந்தாலும் அவருக்க கேட்காது ஆனால் ஒரு சொட்டு தண்­ர் அநாதையாக விழும் சத்தத்தை மாத்திரம் அவரால் தாங்கமுடியாது. அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் இதுதான் பெரிய ஆச்சரியம்.

இதில் என்ன ஆச்சரியம்! தண்­ர்தான் அவருடைய உயிர்மூச்சு. தண்­ரென்றாலும் பொன்னென்றாலும் குணசிங்கத்துக்கு ஒன்றுதான். சுடானிலுள்ள கெஸ“ரா நீர்ப்பாசனத் துறையில் நீர்வள நிபுணராக அவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக வேலை பார்க்கிறார். உயர்ந்த பதவி, ஒவ்வொரு சொட்டு நீர்க்கும் ஆலாய்ப் பறக்கும் அந்த நாட்டில் தண்­ர் பங்கீட்டைக் கவனிப்பது என்ன சாதாரண காரியமா?

பொறுப்பான அந்த வேலையை சரிவரச் செய்யும் யோக்கியதை அவரைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது? ஆறேயில்லாத யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். உரும்பிராய் வாழைத் தோட்டத்தில் தான் அவருடைய ஆரம்ப தீட்சை. ஆயிரம் கன்று தோட்டம் அது. அவருடைய அப்பா பட்டையைப் பிடிக்க, சித்தப்பா துலா மிதிக்க, இவர் படபடவென்று பாத்தி கட்டிக்கொண்டே வருவார். தண்ணி வரவர வேகமாக ஈடுகொடுத்துக் கொண்டு வரவேண்டும். கொஞ்சம் சுணங்கினாலும் கிணற்று நீர் வற்றிவிடும்; நூறு வாழைக் கன்றுகள் அன்று தண்ணியில்லாமலே போக வேண்டியிருக்கும்.

அப்பா பாத்திபிடித்த கைகளில் இன்று சுடானின் பொருளாதார ஏற்ற இறக்கம் இருந்தது. எகிப்து நாட்டுடன் செய்த ஒப்பந்தப் பிரகாரம் நைல் நதியில் பிரவகித்து வரும் நீரில் 20,000 கோடி கன மீட்டர் தண்­ரை மட்டும் வைத்துக்கொண்டு மிகுதியை எகிப்து நாட்டுக்கு விட்டுவிட வேண்டும். சேமித்த நீரை சாதுர்யமாக அந்தந்தப் பகுதியிலுள்ள விவசாயிகளக்கு பருத்தி, கோதுமை, சோளம் என்று பயிருக்கு தக்கபடி தரவேண்டும். உயிர் நாடியான இந்த வேலையை குணசிங்கம் சூட்சுமமான விதிமுறைகளை வகுத்து வெற்றிகரமாகச் செய்துவந்தார். சிறுகக் கொடுத்து பெரிய வளம் சேர்க்கும் கலையில் குணசிங்கத்தை அடிக்க ஆளில்லை.

ஐந்துமணி அடித்தபோது படுக்கையை விட்டு எழுந்தார். மனைவியும் மகளும் இன்னும் ஆழ்ந்த தூக்கத்திலேயே இருந்தார்கள். சோம்பலை ஆராதிப்பவர்கள் அவர்கள். எனவே ஆச்சரியப்படுவதற்கில்லை. பரபரவென்று குளியல் வேலைகளை கவனிக்க முற்பட்டார். அந்த அதிகாலையிலேயே வெய்யில் சூடு ஏறத் தொடங்கி விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் பைப்பில் சூடு தண்­ர் மட்டும்தான் வரும். வீட்டின் மேலேயுள்ள தண்ணித்தொட்டி சூடாகத் தொடங்கி விட்டால் பிறகு பச்சைத் தண்­ரை காணவே முடியாது.

காலைநேரத்து அநுட்டானாதிகள் என்றால் அவருக்கு ஒரு ஒழுங்கின்படிதான் நடக்க வேண்டும். வழக்கம்போல ஷேவ் எடுக்கும்போது ஒரு பேணியில் தண்ணிபிடித்து வைத்து செய்வார். பைப்பை திறந்து போட்டு அது பாட்டுக்க தண்ணி ஓட ஷேவ்செய்ய மாட்டார். இந்த முறையில் தண்­ர் எவ்வளவு மிச்சப்படுகிறது என்பதற்கு கணக்கெல்லாம் வைத்திருக்கிறார். பூவிசிறல் குளியல் மிகவும் பிரியம் என்றாலும் தவிர்த்துவிடுவார். இரண்டு வாளியிலே தண்ணியை செய்டடாகப் பிடித்து வைத்து குளியலை முடித்துக் கொள்வார். அவருடைய மனைவிக்கு இது ஒரு வெட்கக் கேடு. இவருடைய முகத்துக்க முன்னாலேகூட சில சமயங்களில் சிரித்திருக்கிறாள்.

* இ.தொ.vamsa7.mtf வருகிறது**

** vamsa6.mtf ன் தொடர்ச்சி**

சுடான் வழக்கப்படி அவர் காலைவேளையில் வீட்டில் ஒன்றுமே சாப்பிடுவதில்லை. ஏழுமணிக்கெல்லாம் அலுவலகத்துக்கு போய் சேர்ந்துவிடும் முதல் ஆள் அவர்தான். பத்துமணிக்குத்தான் காலை உணவு. அப்துல்லாய் அவருடைய பஃத்தூரை எடுத்து வருவான். இப்ப பல வருடங்களாக அவருக்க ஃபூல்தான் காலை உணவு. இட்லியும், வடையும் போல இதுவும் ஒரு இன்றியமையாத தேவையாகிவிட்டது. இரண்டு கப் சாயும், ஃபூலும் சாப்பிட்ட பிறக மறுபடியும் அவர் தன்னுடைய வேலைகளில் மூழ்கி விடுவார்.

இப்ப சில காலமாக அவருக்கு ஒரு சமுசயம். உலோபி-கருமி என்றெல்லாம் மற்றவர்கள் நினைப்பதை அவர் பெரிதும் பொருட்படுத்தவில்லை. முதுகுக்கு பின்னால் அவர்கள் உள்ளூர நகைப்பதைத்தான் அவரால் தாங்க முடியவில்லை. சிக்கனமாக இருப்பதற்கும் கருமித்தனத்துக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா? பொதுச் சொத்தை சீரழியாமல் பார்ப்பதுகூட கருமித்தனமா? கோடிக்கணக்கான கன மீட்டர் தண்­ரை அவர் பங்கீடு செய்கிறார், ஆனால் ஓர் ஏழைக் கிழவிக்கு கொஞ்சம் தண்­ர் விட்டதற்க அவரை விசாரணை வரைக்கும் இழுத்து விட்டார்களே!

இங்கிலாந்திலிருந்து சுடானுக்கு வேலை பார்க்க வந்த இருபத்திநாலு என்ஜினியர்களில் குணசிங்கமும் ஒருவர். அவர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் வெள்ளைக்காரர்கள். ஒப்பந்தம் பிரகாரம் ஒவ்வொருவராக கெஸஸ“ராத் திட்டத்தில் தங்கள் வேலைகளை முடித்து திரும்பவும் இங்கிலாந்து போய்விட்டார்கள். குணசிங்கம் மாத்திரம் எஞ்சிநின்றார். அவர் அவசரப்பட்டு திரும்பி போகாததற்கு இரண்டு காரணங்கள். முதலாவதாக, இந்த தண்­ர்ப் பங்கீட்டு வேலை அவருக்கு நிறைய ஆத்ம திருப்தியைக் கொடுத்தது. இரண்டாவது, அவருடைய ஒரே மகள் காய்த்திரி ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இப்ப பதினாலு வயது; அடுத்த வருடம் அவள் இறுதியாண்டு சோதனை எடுத்து முடித்ததும் அவளுடைய மேற்படிப்பு விஷயமாக சுடானைவிட்டு ஓரேயடியாகப் போய்விடுவது என்று தீர்மானித்திருந்தார்.

உலகத்திலேயே மிகவும் பிரம்மாண்டமான நீர்ப்பாசனத் திட்டம் அது. நீல நைல் நதியும் வெள்ளை நைல் நதியும் சந்திக்கும் அந்த முக்கோணப் பிரதேசத்தில் 25 லட்சம் ஏக்கர் பரப்புகளைக் கொண்டது அந்தத் திட்டம். ஓர் எல்லையில் இருந்து மறு எல்லைக்கு ஜ“ப்பில் போவதற்கு அவருக்கு ஒருமுறை இரண்டு நாள் பிடித்தது. அன்னியச் செலாவணி கொண்டு வருவதில் முன்னிற்கும் கெஸ“ராவில் எண்பது வீதம் உற்பத்தி பருத்திதான்; மீதியில் சோளமும், கோதுமையும், வேர்க்கடலையும், காய்கறிவகையும் பயிரிடப்பட்டன.

சுடான் போன்ற பாலைவனப் பிரதேசத்தில் மழையை நம்பி பிரயோசனமில்லை. நைல் அவர்களுடைய ஜவ நதி. ஓர் இளங்கோ அடிகள் இங்கே இருந்திருந்தால் 'உழவருடைய ஏரியின் ஓசையும், மதகிலே நீர் வடியும் ஒலியும், வரப்புகளை மீறிப் பாயும் நீரின் சலசலப்பும், மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் பின்னணியாகக் கொண்டு நடந்தாய் வாழி, நைல் நதி' என்றல்லவோ பாடியிருப்பார்? ஆஹா! அதுதான் எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். லைல் நதியில்லாவிட்டால் சர்வதேச அரங்கில் அவர்களை நிமிர்த்தி உட்கார வைத்திருக்கும் இந்த நீர்ப்பாசனத்திட்டமும் இல்லை; குணசிங்கம் போன்ற உலக அளவில் புகழ்பெற்ற நிபுணர்களும் இருந்திருக்க மாட்டார்கள்.

அலுவலகத்துக்க அணியும் ஆடையை அணிந்து வெளியே வந்தார் குணசிங்கம். வெய்யில் சுள்ளெனப் பாயத் தொடங்கி விட்டது! சுடானியர்கள் அணியும் ஜிலேபியா என்னும் நீண்ட வெள்ளை அங்கியைத்தான் இப்போதெல்லாம் அவர் அணிந்துகொள்வார். அது அவருக்கு வசதியாக இருந்தாலும் அவருடைய குள்ளமான உருவத்துக்கு பொருத்தமாக இல்லை. அவருடைய குரல் வேறு கீச்சென்று இருக்கும். உரத்துக் கத்தக்கூட அவருக்கு யாரும் பயிற்சி கொடுத்ததில்லை. கத்தினாலும் குருவி கத்தியது போலிருக்கும். மற்றவர்களுக்கு கைவராத இப்படியான அதிமுக்கிய வேலையை அவர் திறம்பட செய்தபோதிலும் அலுவலகத்தில் யாரும் அவரை மதிக்காததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

வெளியே வந்து பார்த்தபோது கஃபீர் வாசலிலே குர்ஆர் ஒதியபடி இருந்தான். வழக்கம்போல இவர் குளித்த தண்­ரைப் பிடித்து பூமரங்களுக்கும், செடிகளுக்கும் பாய்ச்சியிருந்தான். ரோஜாச் செடிகளுடன் போட்டி போட்டு பருத்திச் செடி வைத்தது இவர் ஒருவர்தான். மண்ணில் மலரும் பூக்களிலேயே மிகவும் உன்னதமானதும், எளிமையானதும், ஆரவாரமில்லாததும் இந்தப் பருத்திதான் என்பது இவர் கருத்து. சிறுவனாக இருந்தபோது கத்தரித்தோட்டத்து வெருளியைக் கண்டால் அதைவிட்டு போகவே மனம்வராது அவருக்கு. அதுபோல இந்தப் பருத்தி எங்கே பூத்திருந்தாலும் அவர் அதன் அழகைப் பார்த்துக் கொண்டே மணிக்கணக்‘க இருப்பார்.

அவருக்கு பருத்தியை பிடித்ததற்கான காரணம் அதுவும் அவரைப்போல மிகவும் சிக்கனமான ஒரு செடி. குறைய எடுத்து நிறையத் தருவது அது. அளவோடு பருகும் தண்­ர் அவ்வளவையும் வெண்ணிறப் பூக்களாக மாற்றிவிடும். சூரியனுக்கும், மண்ணுக்கும் ஏற்பட்ட முப்பரிமாண ஒப்பந்தத்தில் பிறந்த இந்தப் பருத்திப்பூ ஐயாயிரம் வருடங்களாக அல்லவா மனிதனுடைய மானத்தைக் காத்துவந்திருக்கிறது!

மற்றவர்கள் இவரை அபூர்வப் பிறவி என்று கருதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இவர் வேலைக்குப் போய் வருவது ஒரு 'லோக்ஸ் வாகன்' காரில். அதுவும் இருபது வயதுப் பராயம் கடந்த கார். சுடானில் டொயோரா, நிஸான், ஹொண்டா போன்ற ஜப்பான் கார்கள் வண்ண வண்ணக் கலர்களில் ரோட்டுக்களை அடைத்துக் கொண்டு ஓடும். மிகவும் உயர் அதிகாரிகள் என்றால் பென்ஸ் கார்தான். அப்படிப்பட்ட நாட்டிலே இவர் ஒருத்தர்தான் இப்படியாக ஒரு குருவிக்கூட்டு காலை வைத்திருந்தார். இவருக்கு பின்னால் வந்த இளம் என்ஜினியர்கள்கூட விதம் விதமான புது கார்களில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பணம் எல்லாம் நேர்வழியில் வந்ததுதான் என்று நினைக்கும் அளவுக்கு இவர் ஓர் அப்பாவி.

இவருடைய கார் என்ஜினில் எண்ணெய் வெகு தீவிரமாக ஓரிடத்தில் ஒழுகிக் கொண்டிருக்கும். வரையாது கொடுக்கும் வள்ளல்போல இந்த என்ஜின் குறையாது ஒழுகும் வரம் பெற்றது. கஃபீர் கீழே குனிந்து மிகவும் லாவகமாக ஒழுக்குக்கு வைத்திருந்த டின்னை எடுத்தான். இவர் காலை பின்னுக்கு எடுத்து திருப்பினார். ஜெட்டா வீதியில் உள்ள எல்லோருக்கும் இவருடைய கார் 'டுப், டுப்' என்று கட்டியம் கூறிக் கொண்டு புறப்பட்டது கேட்டது. அவர்கள் தங்கள் கடிகாரங்களைச் சரி பார்த்துக் கொண்டார்கள்.

கல்லுக்கட்டி வளர்த்த புடலங்காய்போல நெடுஞ்சாலை வளைவே இல்லாமல் நேராகப் போய்க் கொண்டிருந்தது. ஒட்டகங்கள் வரிசை வரிசையாக 'ஓம்டுர்மான்' சந்தையை நோக்கி நடை போட்டன. பாதையோரங்களில் குவித்துக் குவித்து வெள்ளரிப் பழங்களை அடுக்கிவைத்து 'தஹ்திர், தஹ்திர்' என்று வியாபாரிகள் கத்திக்கொண்டு இருந்தார்கள். இவ்வளவு வெள்ளரிப் பழங்கள் சாப்பிடுவதற்கு இங்கே ஜனத்தொகை இருக்கிறதா? அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.

நீல உடையும், தாவணி போன்ற வெள்ளைத் 'தோஃப்பும்'அணிந்த யுவதிகள் கூட்டமாகக் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். தாவணியின் ஒரு முனையை இடது அக்குளிலே சொருகிமீதியை சுற்றிக்கொண்டு வந்து தலையை மூடி தொங்க விட்டிருந்தனர். அசப்பிலே பார்த்தால் அவருடைய ஊர்ப்பெண்களைப்போலவே இருந்தார்கள். இதுவும் ஒரு அழகாகத்தான் இருந்தது. அவருடைய மகளும் இப்ப எழும்பி சோம்பல்முறித்து கொட்டாவி கொண்டாடி பள்ளிக்கு ஆயத்தம் செய்து கொண்டிருப்பாள். இவருடைய விசாரணை பாதகமாக முடிந்தால் அவளுடைய படிப்பு இந்நாட்டிலே தடைபட்டு போகும். இன்னும் ஒரே வருடம்தான் அவளுக்கு இருந்தது.

அவருடைய மனைவியைப்பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. அது பேசி வைத்த கல்யாணம்தான். ஆனபடியால் காதல் பிரவாகமாகக் கொட்டும் என்று எதிர்பார்க்க இயலாது. போன ஆனி மாசத்து பௌர்ணமியில் இருந்து சாவித்திரி விரதம் அநுஷ்டிக்கத் தொடங்கியிருக்கிறாள். வைதவ்யம் வராதிருக்க அவள் கண்டுபிடித்த சுருக்கு வழி. எதற்காக இந்த திடீர் மாற்றம்? வாரத்தில் இரண்டு நாள் 'ஓம்டுர்மான்' கடைகளை சேத்திராடனம் செய்து ஒன்றுக்கும் உதவாத பித்தளைப் பாத்திரங்களையும், வெள்ளிக் கொலுசுக்களையும் வாங்கிக் குவிப்பதை மட்டும் அவள் நிறுத்தவில்லை.

அவருடைய காரைப்பற்றி கூறும்போது 'ஓட்டைக்கார்' என்ற அடைமொழியையும் சேர்த்தே சொல்கிறாள். பொடி வைத்து பேசுவதை ஸ்பெஷல் சப்ஜெக்டாக எடுத்திருப்பாள் போலும். இப்பவெல்லாம் அவருடன் சேர்ந்து வெளியே வருவதற்குக்கூட கூசுகிறாள் போல பட்டது. அவளுக்கு அவமானமாக இருக்கிறதோ?

அலுவலகம் அமைதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தது. இவரைக் கண்டதும் வழக்கம்போல ஓடிப்போய் சாய் கொண்டுவந்து வைத்துவிட்டான் அப்துல்லாய். அவருக்காக ஏற்படுத்தப்பட்ட 'மெர்ஸால்', விசுவாசமான ஒரே வேலைக்காரன். உபயோகித்த கடித உறைகளை பின்பக்கமாகத் திருப்பி அளவான துண்டுகளாக வெட்டி அவர் மேசையிலே வைத்திருந்தான். அவருடைய சிறு குறிப்புகளுக்கு அவற்றை அவர் விருப்பத்தோடு பயன்படுத்துவார். ஒரு சிறு காகிதம்கூட விரயமாவதை அவர் சகிக்க மாட்டார். அப்துல்லாய்கூட இப்பவெல்லாம் அவரை அலட்சியப்படுத்துவது போல பட்டது. எல்லாம் அந்த விசாரணை வந்த பிறகுதான். ஒரு சின்ன விஷயம். அதை இப்படி ஈவுளியில் ஈர்பிடித்ததுபோல் கெட்டியாகப் பிடித்து கொண்டார்களே! விசாரணைக் குழுவினருடைய அறிக்கை அன்றுதான் போர்ட் மீட்டிங்கில் விவாதிக்கப்படப் போகிறதாம்.

தண்­ர் பக்கீட்டைச் சரியாகச் செய்தாலும் கடந்த நாலு வருடங்களாக அவருக்கு ஓர் ஆசை. தன்னுடைய சொட்டுநீர் பிரயோக முறையை எப்படியும் அறிமுகப்படுத்திவிட வேண்டுமென்று முயன்றார். சுடான் போன்ற தண்­ர் பற்றாக்குறை நாட்டில் சொட்டுநீர் பிரயோகம் எவ்வளவு அவசியம் என்று வாதாடினார். அவருடைய கரைச்சல் தாங்காமல் ஓர் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை சொட்டுநீர் முறைக்கு மாற்றினார்கள். பத்தில் ஒரு பங்கு தண்­ரில் இரட்டிப்பு மடங்கு விளைச்சல் காட்ட முடியும் என்று நிரூபித்தார். எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை போய்விடும் என்று இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள்.

சொட்டுநீர் முறையில் சிலாக்கியத்தை இவர் உணர்த்தியது உண்மைதான். ஆனால் அதே ஸ்மரணையாக, பிடாப்பிடியாக, அதை நிமிண்டிக் கொண்டிருப்பது சேர்மனுக்கு பிடிக்கவில்லை. தண்­ர் விநியோகம் பற்றி தலையிலே தூக்கிவைத்து காவடி ஆடுவதும் அவருக்கு வெறுப்பைக் கூட்டியது. இதன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தண்­ர் விநியோகப் பிரிவில் இவருடைய பங்கு வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. அந்த அவமானத்தை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டார். புதிதாக வாய்க்கால் போடும் பிரிவுக்கு குணசிங்கத்தை மாற்றினார்கள். அந்த வருடத்து வாய்க்கால் ஐம்பது மைலும் அவர் பொறுப்பில் விடப்பட்டது. அப்போதுதான் இவ்வளவு காலமும் மிகவும் கவனமாகவும் பொறுப்பாகவும் வேலை பார்த்த குணசிங்கம் ஒரு பெரிய தவறு செய்ய நேர்ந்தது. கருமமே கண்ணான அவருக்கு இப்படியான ஒரு சோதனை ஏற்பட்டிருக்கவே கூடாது.

புதிய வாய்க்கால் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது இவர் கண்ட ஒரு காட்சி இவரை பெரிதும் நெகிழ வைத்தது. பொட்டல் காட்டில் அந்தக் கிழவி ஒரு குடிசையில் தரித்திரத்தை மட்டும் துணையாக வைத்து வாழ்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் இரண்டு மைல் தூரம் நடந்துபோய் தண்­ர் பிடித்து வந்தாள். அந்தத் தள்ளாத வயதில் தன்னந்தனியாக அந்தக் கிழவி தண்­ருக்காகப் படும் இன்னல் இவர் மனதைத் தாக்கியது.

தெற்கே நடக்கும் போரின் உக்கிரம் தாங்காமல் குடி பெயர்ந்தவள் இந்தக் கிழவி. எல்லாவற்றையும் இழந்து நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகவே நடந்து வந்தவள். சொந்தபந்தம் எல்லோரையும் சண்டைக்கு பலிகொடுத்த இந்த ஜூபா இனத்துக் கிழவி இப்படி தனித்துப் போய் சாவோடு போராடிக் கொண்டு இருந்தாள்.

சுடான் கடைகளில் அமோக விற்பனையாவது 'பாமியா' என்ற வெய்யிலில் உலர்த்திய வெண்டைக்காய். அதைப் பொடிசெய்து கூழ்போலக் காய்ச்சி குடிப்பார்கள். அப்படியாக இந்த உலர்ந்த வெண்டைக்காய்போல இருந்தாள். இந்தக் கிழவி. கறுத்து மெலிந்த தேகம்; நெடிய உருவம். வயது ஐம்பதும் இருக்கலாம்; ஐந்நூறும் இருக்கலாம், அவள் முகம் எல்லாம் கெஸ“ரா ரயில்பாதை வரை படம்போல கோடுகள். அவளைப் பார்த்ததுமே குணசிங்கத்தின் மனசை என்னவோ செய்தது. அவருக்க தன்னுடைய ஊர் ஞாபகம் வந்திருக்கலாம். கிழவியை எடுத்த வீச்சே 'எஃத்திராம்' (பாட்டி) என்று அழைக்கத் தொடங்கினார்.

அவளுடைய கதையைக் கேட்டதும் அவர் உருகிவிட்டார். அப்பொழுதுதான் அவர் ஒரு முடிவு எடுத்தார். அது அவருடைய மனச்சாட்சிக்கு சரியான முடிவு என்று பட்டது. அவர்கள் போட்டு வந்த புதிய கால்வாயை வரைபடத்திலிருந்து சிறிது மாறுபடுத்தி கிழவியினுடைய குடிசைக்கு அண்மையாகப் போகுமாறு பண்ணினார். இந்த மாற்றத்தினால் கிழவிக்கு தண்­ர் வேண்டிய அளவு சுலபமாகக் கிடைத்தது.

கால்வாய் வேலைகள் முடிந்த பிற்பாடு அவர் கையைப் பிடித்துக்கொண்டு நன்றி கூறியது இன்னொரு மறக்கமுடியாத நிகழ்ச்சி. அவர் மனதை அது தொட்டுவிட்டது. கிழவியின் கண்களிலே இப்படி அருவிபோல தண்­ர் கொட்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பூர்வஜென்மக் கணக்கை தீர்த்து போன்ற ஒரு நிம்மதி அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் அப்பொழுதுதான் ஒரு புதுப்பிரச்சினை முளைத்தது. இவருடைய கால்வாய் வெட்டும் பட்ஜெட் பதினாறு வீதம் கூரையை பிய்த்துக் கொண்டு மேலே போய்விட்டது. அதற்கான காரணத்தை காட்டும்படி இவருக்கு கடிதம் வந்தது. இப்படி அடிக்கடி கடிதம் வருவதும் பதில் எழுதுவதும் சாதாரணம்தான். ஆனால் இவர் எழுதிய பதில்தான் அசாதாரணம். இவர் நேர்மையாக விளக்கம் கொடுத்து பதிலை எழுதினார். அதிகாரிகள் திகைத்துவிட்டார்கள். கெஸ“ரா நிர்வாகத்தில் சரித்திரத்திலேயே காணாத விசாரணைக் குழு ஒன்று அப்போது அமைக்கப்பட்டது. இவருடைய அத்துமீறிய செயலை தீர்க்கமாக விசாரித்து அறிக்கை கொடுப்பதென்று தீர்மானமாகியது.

இவருடன் வேலை செய்த மற்ற என்ஜினீயர்கள் இவருக்கு ஆலோசனை வழங்கினார்கள். வரைபடத்திலுள்ள சில பிழைகளால் மேற்படி தவறு ஏற்பட்டதென்று காட்டும்படி சிலர் சொன்னார்கள். இன்னும் சிலர், பாதையிலே எதிர்பாராதவிதமாக குறுக்கிட்ட கற்பாறைகளின் விளைவாக கால்வாயை நகர்த்த வேண்டி வந்ததென்று எழுதும்படி கூறினார்கள். இவர் மறுத்துவிட்டார்.

விசாரணையில் கேட்டார்கள். இவர் நெஞ்சை நிமிர்த்தி, கண்களை நேராகப் பார்த்து சொன்னார்.

'ஐயா, தண்­ருக்காக இரண்டு மைல் போகும் கொடுமையை என் கண்களாலே பார்த்தேன். தள்ளாத வயதுக் கிழவி, உங்கள் அம்மாவாகக்கூட இருக்கலாம். என்னால் அந்தக் கிழவி படும் கஷ்டத்தை பார்க்க முடியவில்லை. அதுதான் நான் கால்வாய் பாதையை சிறிது மாற்றி அமைக்கவேண்டி வந்தது. இது பாரதூரமான குற்றமா? இன்று அந்தக் கிழவி போட்டிருக்கம் பருத்தித் தோட்டத்தை பார்க்கும்போது என் கண்கள் குளிருகின்றன. கிழவியுடைய புன்னகை போல பருத்தி பூத்து நிறைந்திருக்கின்றது. கடவுளால் கைவிடப்பட்ட கதியில்லாத ஏழைக்கு இந்தக் கால்வாய் வாழ்வு கொடுத்துவிட்டது.'

அவருடைய தலைவிதியை நிரிணயிக்கு நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. மணி ஒன்பது. சபை அங்கத்தினர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். எல்லோருமே அவருக்கு தெரிந்தவர்கள்தான். இன்று அவரைக் கண்டுகொள்ளாத மாதிரி பரபரப்பாக போய்க்கொண்டிருந்தனர். அவருக்கு 'எஃதிராமை' பார்க்கவேண்டும் போல் தோன்றியது. இனிமேல் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதென்று அவர் உள்ளுணர்வு கூறியது.

குணசிங்கம் காரில் ஏறியதை யாரும் பார்க்கவில்லை. அவர் நடக்கும்போது நடப்பதுபோலவே தெரியாது. காரில் ஏறியதும் அதை ஸ்டார்ட் பண்ணியதும் கன வேகத்தில் நடந்தன. ஆனால் அது ஒரு அமைதியான வேகம். 'டுப்,டுப்' என்று அவருடைய கார் உயிர்பெற்றதும்தான் பல கண்கள் தன்னை பார்ப்பதை அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில் குணசிங்கம் காரை எடுத்துக்கொண்டு போவது அவர்களுக்கு அதிசயமாக இருந்தது, காரை நேராக எஃதிராமின் குடிசையை நோக்கிவிட்டார். அவளைப் பார்ப்பதினால் சிலவேளை அவருடைய மனப்பாரம் சிறிது குறையக்கூடும்.

எஃத்திராம் குணசிங்கத்தை கண்டவுடன் மகிழ்ச்சியால் பூரித்துப் போனாள். பருத்திச் செடி வளர்ந்து கொத்துக் கொத்தாக வெடித்து நின்றது. ஆயிரம் யுவதிகள் தலை நிறைய வெள்ளைப் பூ வைத்து குனிந்து நிற்பதுபோல் பருத்திச் செடிகள் மொலு மொலுவென்று பார்த்த இடமெங்கும் நிறைந்துகிடந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு அது பொட்டல் காடாக இருந்தது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா! காற்றுச் சுழன்று வீசியபோது அங்கு நிலவிய வெப்பம் தணிய பருத்திச் செடிகள் சிறிது ஆடின. வெள்ளிக்கிழமை காலை வேளையில் தலையில் முழுகிவிட்டு குமரிகள் தலையைச் சிலுப்பியது போன்ற அந்த காட்சியை பார்ப்பதற்கு குணசிங்கம் ஆயிரம் மைல்கள்கூட நடந்து போவதற்கு தயாராக இருந்தார்.

கிழவியின் முகம் ஒரு யௌவனப் பெண்ணின் குதூகலத்துடன் காட்சியளித்தது. "என்ன வால்டிஹ்! உன் முகம் இப்படி சோர்ந்துபோய் இருக்கிறதே?" என்றபடி எஃத்திராம், கெனானா சர்க்கரை நிறையப் போட்ட 'கெக்கடே' பானத்தை கொண்டு வந்து தந்தாள். கிழவி அவரை அதற்கு முன்பு 'வால்டிஹ்' (அருமை மகனே) என்று அழைத்து கிடையாது. அந்த வார்த்தை அவரை என்னவோ செய்துவிட்டது. பாரவண்டி இழுக்கிற மாடு வாயிலே நுரை தள்ளும்போது அந்த நுரையை வழித்து மாட்டின் முதுகிலே தேய்த்து விடுவார்கள். மாடு அப்போது ஒரு சிரிர்ப்புச் சிலிர்க்கும். அந்த மாதிரி குணசிங்கத்தின் உடம்பெல்லாம் சிலிர்த்தது. நிறைய அழவேண்டும்போல பட்டது. மறுபடியும் தனிமையை நாடியது அவருடைய மனம். அவசரமாக கிழவியிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினார்.

அவர்கள் பதினாறு வீதம் பட்ஜெட்டில் இடிக்கிறது என்று கூறியது அவருக்கு சிரிப்பாக வந்தது. அது என்ன அவ்வளவு பெரிய நஷ்டமா? நாலு வருடங்களுக்க முன்பு என்ன நடந்தது?

உலகம் எங்கணும் பகிஷ்கரிக்கப்பட்ட கிருமி நாசினியை இவர்கள் தவறுதலாக ஓடர் பண்ணிவிட்டார்கள். ஒரு வருடத்துக்கு தேவையான கிருமி நாசினி. ஆனால் கப்பலில் வந்து இறங்கிய பிற்பாடுதான் அவை உலக முழுவதிலும் புறக்கணிக்கப்பட்ட விஷயம் இவர்களுக்கு தெரிய வந்தது. சுற்றுச் சூழலை மிகவும் கொடூரமாகத் தாக்கம் விஷம் கொண்ட நாசினி அது இரண்டு லட்சம் டொலர் பெறுமதியான சரக்கு. அவ்வளவையும் தள்ளி வைக்க வேண்டி வந்து விட்டது. அதுமாத்திரமல்ல, அவற்றை அப்படியே அழிக்கவும் உத்தரவு வந்துவிட்டது. எப்படி அழிப்பது?

பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த விஷத்தை தக்க வைப்பதற்கும் இடமில்லை; அழிப்பதற்கும் வழியில்லை அப்பொழுது சிவபெருமான் கருணை கூர்ந்து அந்த விஷத்தை எடுத்து விழுங்கி சகல ஜ“வராசிகளையும் இரட்சித்தார் அல்லவா? அதுபோலத்தான் இதுவும். இக்கட்டான நிலை. மேலும் எவ்வளவோ பணம் செலவு செய்து அந்த விஷத்தை அப்புறப்படுத்தினார்கள். அந்த நஷ்டத்தை எந்தக் கணக்கில் கட்டினார்கள்.

அதுதான் போகட்டும். சென்ற வருடம் விமானமூலம் கிருமிநாசினி அடிக்கும் ஒப்பந்தம் ஒரு பெல்ஜியம் கம்பனிக்குக் கிடைத்தது. அந்தக் கம்பனி ஒப்பந்தப்படி நாளுக்கு நாலு விமானங்களில் கிருமி நாசினியைத் தெளித்தபடியே வந்தார்கள். ஆனால் ஒருநாள் ஒரு விபரீதம் நடந்துவிட்டது. அன்று போட்ட முறைப்படி ஹவாஷா 189க்கு மருந்து தெளிக்கவேண்டும். தவறுதலாக விமானிக்கு ஹவாஷா 198 என்று செய்தி போய்விட்டது. ஹவாஷா 198ல் பயிர் செய்த விவசாயிகளுக்கு இந்த விஷயம் தெரியாது. அவர்கள் பாட்டுக்கு வழக்கம்போல தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். விமானி பத்தடி உயரத்துக்கு விமானத்தை இறக்கி மருந்தை அடித்துக்கொண்டு வந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது. சும்மா பருத்திக் காட்டுக்குள் படுத்துக் கொண்டிருந்த ஒட்டகம் ஒன்று சத்தம் கேட்டு அவசரமாய் எழும்பியது. இதை விமானி எதிர்பார்க்கவில்லை. விமானம் ஒட்டகத்தில் மோதி தீப்பிடித்தது. விமானியும் ஒட்டகமும் ஸ்தலத்திலேயே மரணம். இழப்பீடாக லட்சக்கணக்கில் அல்லவா கொடுக்கவேண்டி வந்தது? விசாரணை எங்கே நடந்தது? அந்த தவறான செய்தி அனுப்பிய அதிகாரிக்கு ஒன்றுமே நடக்கவில்லையே!

இவர் அலுவலகத்துக்கு திரும்பி வந்தபோது எல்லோருடைய கண்களும் இவரைத் தேடியபடியே இருந்தன. இவருக்கு முடிவு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது என்றாலும் மனதை ஏதோ செய்தது. வயிறு எம்பிவந்து தொண்டைக் குழியை அடைத்துக்கொண்டது. சபை இவரைப் கூப்பிட்டனுப்பியது. உடல் சகலமும் சுருங்கிவிட்டது. துவண்டுபோன கால்களை நிமிர்த்தி வைத்து இவர் உள்ளே போனபோது சேர்மன் இவரைப் பார்த்து பேசினார்:

"போர்டின் முடிவை அறிவிக்கும் வருத்தமான பணியை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்" என்று தொடங்கினார். அவருடைய வாய் அசைவு மாத்திரம் இவருக்கு தெரிந்தது. உதடுகள் விரிந்து விரிந்து பெருத்துப்போய் முழு அறையையும் அடைத்தது. ஒரு சத்தமும் கேட்கவில்லை. சிறிது நேரம் சென்றது. எல்லோரும் இவரையே பார்த்தார்கள். இறுக்கமான மௌனம் நிலவியது. சேர்மன் இன்னொரு முறை கேட்டார். "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?"

"ஐயா, நான் சொல்ல என்ன இருக்கிறது? என்னுடைய வாழ்வில் பெரும்பகுதியை இந்த கூட்டுத் தாபனத்துக்காக அர்ப்பணித்தேன். நீங்கள் பதினொரு பேர் சேர்ந்து ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள். அந்த முடிவு சரியானதாகத்தான் இருக்கும். இதே வேலையை என்னிடம் இன்னொருமுறை ஒப்படைத்தால்கூட நான் எடுத்த முடிவில் ஒருவித மாற்றமும் செய்யமாட்டேன். நான் என் பணியை கடந்த பலவருடங்களாக திறம்படவே செய்துவந்திருக்கிறேன். நான் ஏமாற்றவில்லை; கையாடவில்லை; பொய் பேசவில்லை. நான் செய்ததெல்லாம் ஓர் ஏழைக் கிழவிக்கு தண்­ர் வழங்கியதுதான். தண்­ரை வகுத்துக் கொடுப்பதுதான் என் வேலையென்று நம்பினேன். அது மகா குற்றம் என்றால் அந்த மகத்தான குற்றத்தை நான் தொடர்ந்து செய்யவே விரும்புகிறேன். நான் கொடுத்த ஒவ்வொரு சொட்டு நீரும் இன்று பருத்திப்பூவாக வெடித்திருப்பதை காணும்போது என் கஷ்டமெல்லாம்...." என்று சொல்லும்போதே அவர் நா தழுதழுத்தது. குரல் கம்பியது. அப்படியே சபையை விட்டு வெளியேறினார்.

வெய்யில் அகோரமாக அடித்தது. அவருடைய மனத்தின் வெப்பமும் உக்கிரமாக அவரை வாட்டியது. அலுவலகத்தில் பாதியில் நின்றுபோன வேலைகளை முடித்துவிட்டு குணசிங்கம் தன் மேசையை துப்புரவு செய்தார். ஒன்றிரண்டு பேர் அவரிடம் வந்து அநுதாபம் தெரிவித்தார்கள். தன்னுடைய சொந்தப் பொருள்களையெல்லாம் சேகரித்து அவர் கயிறு கொண்டு கட்டியபோது அப்துல்லாய் ஒரு விசுவாசமான நாய்க்குட்டி போல அவற்றை அவற்றை தூக்கிக்கொண்டு அவர் பின்னே வந்தான். அவன் பக்குவமாக வெட்டிவைத்த கடித உறைத் துண்டுகளையும் மறக்காமல் காரில் வைத்தான். 'மா ஸலாமா' என்று விடைகூறியபோது அவன் கண்கள்கலங்கியிருந்தன. குணசிங்கம் தலையை பார்த்தபடி காரிலே ஏறி உட்கார்ந்து வீட்டை நோக்கி புறப்பட்டார்.

நாஸாவில் (NASA) ஏவுகணை ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தபோது ஆந்தையொன்று அங்கே கூடு கட்டியிருப்பதை விஞ்ஞானிகள் தற்செயலாகக் கண்டார்கள். ஆந்தையை அப்புறப்படுத்தி இன்னொரு முறை ஏவுகணையை தயார் செய்வதென்றால் இன்னும் பல நாட்கள் ஆகலாம்; லட்ச்சக்கணக்கான டாலர்கள் நட்டமேற்படும். ஆந்தையை பாராட்டாமல் ஏவுகனையை ஏவினாலோ ஒரு பாபமும் அறியாத ஆந்தை உயிர் இழக்க நேரிடும். ஆனால் அந்த விஞ்ஞானிகள் தயக்கமில்லாமல் அவ்வளவு பெரிய நட்டத்தை ஏற்று அந்த ஆந்தையின் உயிரை காப்பாற்றினார்களாம். இங்கே என்னவென்றால் ஓர் ஏழைக்கிழவிக்கு தண்­ர் வழங்கியதை பாபச் செயல் என்று தீர்மானித்து விட்டார்களே!

அர்ஜுனன் சரக்கூடம் போட்டதுபோல புழுதிப் படலம் எழும்பி சூரியனை மறைத்து ரத்தச் சிவப்பாக்கி விட்டது. புயல் வரும்போன்ற அறிகுறி தென்பட்டது. காரை வேகமாக இயக்கினார். ஆமையை விரட்டியடித்து அறுபது மைல் வேகம் ஓடவைக்க முடியுமா? இவருடைய கார் என்னவோ அதற்கு வசதியான ஸ்பீடிலேயே போய்க் கொண்டிருந்தது. அகோரமான மண்புயல் உருவாகியது. சுழன்று சுழன்று ஆக்ரோஷத்துடன் வீசிய காற்று கெட்டியான மண் படலம் ஒன்றை ஆகாயத்திலே தூக்கி எறிந்து முழு உலகத்தையுமே கண நேரத்தில் மூடிவிட்டது. வாகனங்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஊர்ந்து இறுதியில் ஒரேயடியாக ஸ்தம்பித்து நின்று விட்டன. அவருடைய வாய் கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுக்கத் தொடங்கியது.

இதற்கு முன்பு எத்தனையோ தடவை மணற்புயல் பார்த்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவருடைய மனத்தை பயம் வந்து கவ்விக்கொள்ளும். குணசிங்கம் லைட்டை போட்டுவிட்டு காரை ஒரு ஓரத்திலே நிற்பாட்டினார். இவருக்குப் பக்கத்தில் ஒரு ஒட்டக ஒட்டியும் ஒட்டகத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய தலையிலே சுற்றியிருந்த ஈமாஹ் துணியை எடுத்து வாயையும் மூக்கையும் காதுகளையும் மூடிக்கொண்டு ஒட்டகத்தின் கீழே குந்திக் கொண்டான். ஒட்டகத்திற்க அந்தக்கவலை இல்லை. வசந்த மண்டபத்தில் இருப்பதுபோல் சாவதானமாக இளைப்பாறியது. நீண்ட தடித்த இமைகளால் கண்களை இறுக்கிக் கொண்டும், மூக்குத்துவாரங்களை சவ்வுகளினால் மூடிக்கொண்டும் மணற்புயலை நன்றாக அநுபவித்தது.

குணசிங்கத்தின் மனதிலே அடித்த சூறாவளி போல புயல் நீண்ட நேரம் தொடர்ந்தது. பன்னிரெண்டு வருடத்து விசுவாசமான சேவைக்கு ஒரு முடிவு வந்துவிட்டது. அவருடைய மனதிலே கொந்தளிக்கும் புயலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இது சாதாரண புயல்தான். பருத்தியில் அவர் கொண்ட மோகத்துக்கும் தண்­ரில் அவர் வைத்திருக்கம் பக்திக்கும் இப்படியாக ஒரு புயல் வந்து முற்றுப்புள்ளி வைப்பதும் நியாயம்தான்.

கார் முழுக்க புழுதி மயமாக மாறிவிட்டது. ஒன்றுமே தெரியவில்லை. கந்தசஷ்டி கவசத்தில் 'மெத்த மெத்தாக வேலாயுதனார்' சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க' என்ற அடிகள் வந்ததும் புயல் ஒரு சீற்றம் குறைந்தது. வாகனங்கள் ஒவ்வொன்றாக மறுபடியும் ஊரைத் தொடங்கின. இவர் வெளியே இறங்கி கார்க் கண்ணாடிகளைத் துடைத்துவிட்டு காரை மறுபடியும் எடுத்தார். கச்சான் காற்றில் சிக்கிய கிடுகு வேலிபோல ஒரு சில நிமிடங்களில் மரக்கிளைகள், கொப்புகள், கூரைகள், குப்பைகள் என்று வீதியெல்லாம் மாறிய விந்தையை நினைத்துப் பார்த்தார்.

அன்று வழக்கத்திலும் பார்க்க ஒரு மணி நேரம் முன்பாகவே வீட்டுக்கு வந்துவிட்டார். கஃபீரை காண வில்லை. தானே கேட்டை திறந்து காரை உள்ளே செலுத்தி பார்க் பண்ணிவிட்டு தகரப் பேணியை எடுத்து காரின் கீழே எண்ணெய் சொட்டும் இடத்தில் சரி பார்த்து வைத்தார்.

வீட்டுக் கதவைத் திறப்புபோட்டு திறந்து உள்ளே தள்ளினார். புயலுக்காக வைக்கும் மண் நிரப்பிய சாக்கு கதவு நீக்கலை அடைத்துக் கொண்டு கிடந்தது. மெதுவாக காலை நு€‘த்து அதை நகர்த்தி உள்ளே வந்து கதிரையில் அமர்ந்தார். கைகளை முழங்காலில் வைத்து நாரியை நிமிர்த்தி அண்ணாந்து பார்த்தார். மனைவியையும் மகளையும் காணவில்லை.

பாத்ரூமில் சத்தம் கேட்டது; தண்­ர் ஓடும் சப்தம். தாய் மகளுக்கு தலையில் ஹென்னா போட்டுக் கொண்டிருக்க வேண்டும். தலை கழுவும் ஆரவாரம் தொடர்ந்தது.

"தெதியாய் கழுவடி" அப்பா வந்து கத்தப் போறார்."

"எரியுது அம்மா! மெள்ளப் போடுங்கோ."

தண்­ர் சளசளவென்று கொட்டிக் கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தை அவரால் தாங்க முடியவில்லை.

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். புயலினுடைய அக்கிரமத்தினால் மணல் குளித்து அவருடைய பருத்திச் செடிகள் சோர்ந்துபோய் நின்றன. அதிலே ஒரே ஒரு செடி மாத்திரம் அவசரப்பட்டு பூத்திருந்தது. அவர் பார்க்கும்போதே பஞ்சுத் துகள் ஒன்று காற்றுக்கு பிய்த்துக்கொண்டு மேலே மேலே போய்க்கொண்டிருந்தது.

* * *