கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தியானம்

Page 1


Page 2


Page 3

வடக்கு வீதி
(சிறுகதைத் தொகுப்பு)
அ. முத்துலிங்கம்
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447,
4. தணிகாசலம் சாலை. தியாகராய நகர், சென்னை - 600 017.
தொலைபேசி : 4342926 தொலை நகல் : 044-4346082 LSeir 95&di) : e-mail: tambiGmd2.vsnil.net.in
(MANIMEKALAI) କଁ

Page 4
O)
e
நூல் விபரம்
நூல் தலைப்பு - வடக்கு வீதி
(சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர் - அ. முத்துலிங்கம் மொழி " தமிழ் பதிப்பு ஆண்டு - 1998 பதிப்பு விபரம் * முதல் பதிப்பு 2.flooLo - ஆசிரியருக்கு தாளின் தன்மை - 11.2 ..
நூலின் அளவு - கிரெளன் சைஸ்
(12% x 18% Qs.5) அச்சு எழுத்து அளவு ~ 10 புள்ளி மொத்தீ பக்கங்கள் - 216
நூலின் விலை - ரூ. 40.00
லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர் ’
நூல் கட்டுமானம்
வெளியிட்டோர்
ஆதவ் கிராபர்ஸ், சென்னை - 14. M.K.ENTERPRISES Chennai- 600 005
தையல்
மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17

சமர்ப்பணம்
இடருற்று அவதிப்படுவது மனிதர்கள் மாத்திரமல்ல; இந்தப் பூலோகத்தில் அழிவின் எல்லையில் பல விலங்கினங்கள், பறவை கள், ஏன் தாவரங்கள்கூட உண்டு.
மற்ற உயிரினங்களுக்கு தீங்கிழைப் பது வேறு யாருமில்ல; ஆறறிவு படைத்த மனிதன்தான். இந்த மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக மன்னிப்பு கேட்டு இந்நூலை இடருற்ற உயிரினங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

Page 5
என்னுரை
சமீபத்தில் நான் எதியோப்பியா நாட்டுக்கு சென்றிருந்தேன். இது பைபிளில் கூறப்படும் ஒரு பழம்பெருமை வாய்ந்த நாடு. யேசு பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இங்கே நாகரீகம் கொடிகட்டிப் பறந்தது. ஸிபா என்ற அதிரூபசுந்தரி ராணியாக ஆட்சி புரிந்தது இங்கேதான். இந்த ராணி பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்து யூதர்களின் அரசன் சொலமனை தரிசிக்க ஜெரூஸலம் சென்றதும் அவர்களுக்கிடையில் நட்புண்டாகி மெனலிக் என்ற ஆண்மகவு பிறந்ததும் சரித்திரம். மெனவிக்கில் தொடங்கிய அந்த அரச பரம்பரை 3000 வருடங்கள் சங்கிலித் தொடர் போல நீண்டு சமீபத்தில் (1974) அரசன் ஹெயிலி செலாஸியின் முடியாட்சி பறிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்த பாரம்பரியத்தில் வந்த எதியோப்பிய பெண்கள் பேரழகு படைத்தவர்கள். இங்கே ஓர் இளம் பெண்ணின் நடனம் பார்த்தேன். நடனம் முழுக்க அந்தப் பெண் தலையை ஒரு பக்கம் சாய்த்து கண் களால் நிலத்தை நோக்கியபடியே ஆடினாள். அவள் கைகளுக்கும் கால்களுக்கும் வேலை குறைவு. மார்புகளும், கழுத்தும், தலையும் மாத்திரம் நளினமாக குலுங்கிக் குலுங்கி அசைந்தன. பெண்ணின் முகத்தை மட்டும் கடைசிவரை பார்க்கவே முடியவில்லை. இது என்ன நடனம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். பரத நாட்டியம், கதக், கதகளி, ஒடிசி, மணிப்புரி போன்ற நடனங்களை பார்த்த கண்களுக்கு அப்படித்தான் தோன்றியது.
ஆனால் பிறகு சிந்தித்துப் பார்த்ததில் அந்த நடனத்திலும் ஓர் அழகு இருந்ததாக எனக்குப் பட்டது. அந்த நடனமே திருப்பி திருப்பி மனதிலே வந்தது. அதில் ஒரு நளினமும் மனதைக் கவரும் சக்தியும் இருந்தது புலப்பட்டது. ஒரு நாட்டு மக்களின் அழகுணர்ச்சி யையோ, கலை வெளிப்பாட்டையோ சரியாக எடை போடுவதற்கு எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்ற எண்ணம் வலுத்தது. மேற்கு ஆப்பிரிக்காவில் நான் இருந்த சமயம். ஒரு நாள் தமிழ் சினிமாப்படம் ஒன்றை வீடியோவில் பார்த்துக்

5
கொண்டிருந்தேன். அப்போது ஆப்பிரிக்கர் ஒருத்தர் உள்ளே வந்தார். நன்றாகப் படித்து உயர் பதவியில் இருப்பவர். வீடியோவில் கல்யாண சீன் ஒன்று நடந்துகொண்டிருந்தது. மணப்பெண் வழக்கம்போல ஒரு காலை மடித்து வைத்து மற்றக் காலை குத்துக்காலிட்டு நிலம் பார்த்து உட்கார்ந்திருந்தாள். இந்த மனுசன் கண் வெட்டாமல் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு சொல்கிறான், 'இந்தப் பெண் இருக்கும் முறை எவ்வளவு செக்ஸியாக இருக்கிறது' என்று. எனக்கு அதிர்ச்சி. அகராதிப்படி அந்தப் பெண் மிகவும் நாணமாக, ஒடுக்கமாக, பவ்யமாக அல்லவா இருந்தாள்!
இன்னும் எத்தனையோ, நாங்கள் மதித்துப் போற்றும் சில விஷயங்கள் பிற நாட்டவருக்கு விநோதமாகப் படுகின்றன, அவர்கள் செய்யும் காரியங்களோ எங்களை ஆச்சரியப்பட வைக்கின்றன. கன்னிமை என்பது எவ்வளவு பெரிய விஷயம். கன்னிமை காப்பது என்பது எங்கள் கிராமத்துப் பெண்களுக்கு ஒரு தவம் மாதிரி.
அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பதினாறு வயதுக்கு மேல் கன்னித் தன்மையோடு ஒரு பெண் இருந்துவிட்டால் அவளுக்கு எவ்வளவு அவமானம். அவள் பொய்யுக்காவது கன்னி கழிந்து விட்டது என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம்.
இது மாத்திரமா? அமெரிக்கக்காரனுக்கு எழுந்து மரியாதை செய்து சேர்' என்று அழைத்தால் பிடிப்பதில்லை. ஆங்கிலேயனுக்கு கால்களை ஒடுக்கிவைத்து மரியாதையாக முன்னே தலைகுனிந்து நிற்பது அசிங்கமாகப் படுகிறது. ஜெர்மன்காரனுக்கு கைகட்டி பவ்யமாக நின்றால் போதும், வேறு வினையே வேண்டாம். ஆனால் எங்கள் ஊர்களில் இன்றுகூட ஒரு பெரியவரைக் கண்டதும் தோளில் போட்ட சால்வையை எடுத்து கக்கத்தில் வைப்பது நடந்துகொண்டு தான் வருகிறது.
இப்படித்தான் அப்கானிஸ்தானில் ஒரு நாள் நாங்கள் பத்து பதினைந்து பேர் ஆட்டு மயிரில் செய்த கம்பளத்தில் நிரையாக உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம். பத்து அடி நீளமான ரொட்டி ஒன்று எங்கள் மடிகளில் மலைப்பாம்பு போல தவழ்ந்து கொண்டிருந்தது. நான் என் மடியில் கிடந்த ரொட்டிப் பகுதியை இழுத்து, பிய்த்து கடித்துக் கொண்டிருந்தேன்.
அங்கேயெல்லாம் மரக்கறி வசதி அரிது. கோழி, ஆடு, ஒட்டகம் என்று எல்லாம் இறைச்சி மயம்தான். தேநீரில் தோய்த்து

Page 6
6
ரொட்டியை சாப்பிட்டபடியே நான் அவர்களுக்கு எங்கள் ஊர் நடப்பு ஒன்றை சொன்னேன். அங்கே எப்படி உடும்பு பிடிப்பார்கள் என்றும், அதை உயிருடன் கட்டி தொங்கவிட்டு, தோலை உரித்து என்னமாதிரி சமைப்பார்கள் என்பதையும் விவரித்தேன். அவர்கள் ஸ்தம்பித்து போய்விட்டார்கள். பத்து 'அவ்கானி காசு கடனுக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல தயங்காதவர்கள். கல்நெஞ்சக்காரர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத ஒரு உடும்புக்காக இரக்கப் பட்டார்கள். என்னால் நம்ப முடியவில்லை. இந்தச் சிந்தனையில் பிறந்ததுதான் 'உடும்பு கதை.
அந்தக் காலத்து அரசர்கள் குற்றம் செய்தவர்களை கழுத்தளவு மணலில் புதைத்து வைத்து யானையின் காலால் இடறச் செய்வார்களாம். யானை முதல் முறை ஓடி வரும்போது அநேகமாக மிஸ் பண்ணிவிடும், பாகன் இரண்டாவது தடவையாக திருப்பிக் கொண்டு வருவான். யானை தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும். பிறகும் தவறிவிடும். இப்படியாக நாலைந்து தடவை தவறவிட்டு கடைசியில் யானையின் கால்பட்டு தலை பனங்காய்போல உருண்டோடும். இவ்வளவுக்கும் புதையுண்டவன் மனம் என்ன பாடுபடும், எவ்வளவு கொடுமையான சாவு.
சிலுவையில் அறைவதும், கழுவில் ஏற்றுவதும் கூட இப்படித்தான். பயங்கரமான சாவு, உயிர் உடனே போகாது குற்றவாளி நோவு தாங்காமல் இரவிரவாக அலறிக்கொண்டே இருப்பானாம். இரண்டு மூன்று நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரியும். இப்படி கொடூரமான தண்டனைகள் இப்பவும் சில நாடுகளில் தொடருகிறது. பிரம்படி கொடுப்பதும், தலையை துண்டிப்பதும், கல்லால் அடிப்பதும் இன்றும் சில நாடுகளில் கடைப்பிடிக்கும் தண்டனைகள்தான்.
மேல்நாடுகளில் இறைச்சிக்காக மாடுகளைக் கொல்லும்போது கூட அவைக்கு நோகாத மாதிரி பார்த்துக் கொள்ளுகிறார்கள். நான் சிறுவனாய் இருந்தபோது ஒரு பாவமும் அறியாத என்னுடைய செல்ல வளர்ப்பு நாயை, ஊரார் விசர் என்று தவறாகக் கணித்து உலக்கையால் அடித்து கொன்றதை கண்ணால் பார்த்தேன். அந்த நினைவில் பிறந்ததுதான் 'எலுமிச்சை கதை.
ஒரு கம்புயூட்டர் ஒரு குடும்பத்துக்குள் புகுந்து விடுகிறது. அந்தக்குடும்பத்தினரின் அந்நியோன்யம் சடுதியில் கூடிவிடுகிறது.

7
பேப்பர் விரயம் கம்புயூட்டரின் வரவால் எப்படி தடுக்கப்படுகிறது: எவ்வளவு மரங்கள் காப்பாற்றப்படுகின்றன. கம்புயூட்டருடன் பிணக்க மும், நட்பும் மாறி மாறி ஏற்படுகிறது. இதுதான் 'கம்புயூட்டர் கதை. விசா வாங்குவதற்காக அலைந்து அலைந்து, கால் தேய்ந்து வருடக்கணக்காக வருத்தப்பட்டு, அந்த சோகத்தில் பிறந்தது ‘விசா கதை.
அகதிகளாக புலம் பெயர்ந்தவர்கள் படும் அவதிபற்றி அநேக கதைகள் வெளிவந்துவிட்டன. அந்த அகதிகளில் சிலர் எதிர் நீச்சல் போட்டு உயர்நிலைக்கு வந்தாலும், அவர்கள் தங்கள் கலாசாரத்தில் எவ்வளவுதான் ஊறி ஊறி வளர்ந்தாலும், அந்நிய கலாசாரம் எப்படியும் அவர்கள் வாழ்க்கையில் மெதுவாக புகுந்து விடுகிறது என்பதைக்கூறுவது 'பூமாதேவி கதை.
இப்படியாக ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிக்கதை உண்டு. எல்லாவற்றையும் நான் கூறப்போவதில்லை. அநேகமாக கதைகளின் அடிநாதமாக மனிதநேயம், உயிர்நேயம் அல்லது பிரபஞ்சநேயம் இருக்கும். படிக்கும்போது வாசகர்களாகிய நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
வாழ்க்கையின் வடக்குவீதியில் நிற்கும் நான் இந்தத் தொகுதிக்கும் 'வடக்குவீதி' என்று தலைப்பிட்டது பொருத்தமே. இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் கதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியா டுடே, கிழக்கும் மேற்கும் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தவை, இன்னும் சில இந்தத் தொகுப்புக் காகவே எழுதப்பட்டவை. இந்தக்கதைகள் பற்றி வாசகர்களின் கருத்தை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.
இந்நூலுக்கு ஓர் அழகான முன்னுரை வழங்கிய பெருமதிப்புக் குரிய நண்பர் அசோக மித்திரனுக்கும், எப்போதும் எனக்கு தூண்டுத லாகவும், உதவியாகவும் இருக்கும் அன்பு நண்பர் வி. சுந்தரலிங்கம் (பிபிசி) அவர்களுக்கும், இந்தத் தொகுதியை உரிய நேரத்தில் வெளிக் கொண்ர்ந்த மணிமேகலைப் பிரசுரத்தாருக்கும், அடங்கா ஆர்வமும் அன்பும் காட்டிய நண்பர் ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் தக்க அட்டைப்படமும், உள்படங்களும் வரைந்துதவிய ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கும் என் அன்பு உரித்தாகுக.
அ. முத்துலிங்கம் 26 நவம்பர், 1997

Page 7
4
எடுத்துவிட்டு, 'இந்த உலகத்தில் உங்களால் எதைத் தெளி வாகக் கேட்க முடிகிறது?’
கமலாவுக்கு கண்ணுமூஞ்சி விளையாடுவது போலிருந்தது. அவன் கேள்வி. எனக்குப் பயமாயிருக்கிறது" என்ருள். மேலும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். " என்ன கேட்டான்" என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அவளை நினைத்து ஓர் பெருமூச்செறிந்தான். அவன் இன்னுமொரு முறை அவன் காதுகளைப் பொத்தினுன் , தன் கைகளை சிறிது நேரத் தில் அகற்றி விட்டு, f
'இப்போதாவது உங்களால் ஏதாவது கேட்க முடிகிறதா? என்ருன்
* இன்னும் ஒரு கிழமைதானே "பைனல் சோதனைக்கு இருக்கு. இப்பவும் சிறுபிள்ளை போல் விளையாடிக்கொண்டு."
அவனைச் செல்லமாகத் தள்ளிஞள் கமலா. அந்த வார்த் தைகளையும் பொறுத்துக் கொண்டான் கணேசன், 18 கமலா ஆற்றின் பேரிரைச்சல் - பிரளய ஒலம் - உங்களுக்குக் கேட்க வில்லையா? உலகமே ஒரு நிமிடத்தில் உருண் டுவிடும் போலத் தோன்றவில்லையா?"
"சரித்திரத்தில் ஹிட்லரின் எழுச்சிக்குரிய 5 Mr J 6OOT ňJ Gåsm ஆராயச் சொல்லி இந்த முறை ஒரு கேள்வி வரலாம்” - கமலா வுக்குத் தேர்வின் நினைவு.
"அதைப் பற்றி இப்ப என்ன கவலை? சோதனைக்குப் படிப்பதற்கு இரண்டொரு நாள் போதும்.”
கணேசனிடமிருந்து அசட்டையாக பதில் விழுந்தது கமலா ஆத்திரப்பட்டாள்.
* சோதனை பெயில் விட்டால். எங்கள் கல்யாணம்.?" அவனுடைய கையைப் பற்றித் தன் மார்போடு அணைத்துக்

5
கொண்டாள். கணேசனின் இதழில் லேசான ஏளன முறுவலிப் பொன்று ஊர்ந்தது.
மின்னல் வெட்டுக்கள் அடிக்கடி சிதறிப் பரந்தன. அப் போதுதான் ஆரம்பித்த மழைத் தூற்றல் மின்னல் வெள்ளத்தில் நூலிழைகளாகத் தொங்கின. பத்து யார்களுக்கு அப்பால் மகா வலி கங்கையின் கலங்கிய கூழ்நீர் தடிகள், மரங்கள் யாவற்றையும் அள்ளிக் கொண்டு இரைச்சலுடன் ஓடியது.
*கமலா ! ஆற்றுவெள்ளம் பெஃகெடுத்தால்.அதன் வேகம். மலை போன்ற மரங்களையும் யானைகளையும் அடித்துச் சென்று விடும். அது க்கு அவ்வளவு சக்தி. இதே ஆறு காய்ந்து மணலாகக் கிடக்கும் போது. எங்களால் இதன் சக்தியைப் பற்றி கற்பனை செய்யக்கூட முடியாதே!'
'மழை தூறுகிறது; நாங்கள் போவமா?.ஐந்து மணிக்கு வந்தனங்க. இப்ப ஏழு மணி இருக்கும்.’’
a o e s கமலா எழுந்த படியே கூறினுள். அடுத்து வந்த மின்னல் வெளிச்சத்தில் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.
மணி 6-50
எழுந்து நின்று தனது உடைகளைச் சரி செய்தாள். கைப் டையையும் எடுத்துக் கொண்டாள்.
கைக்குட்டையை எடுத்துக் கொண்டான் கணேசன், சிறிது நேர மெளனம். இருவரும் ஒருவரையொருவர் விளக்க முடியா த பார்வை பை நீள விட்டனர்"
உலக இச்சைகளில் உயர்ந்த இச்சையின் பேரின் ப நி3ல யின் சிறு கீற்றல்கள் அந்த உணர்வுக் கலப்பில் அமிழ்ந்து பொங்கி நிறைவுற்றது.
"ஜிம்னுசியத்திற்கு செல்லும் கீழ்-மேல் வீதிகளின் சந்திப் பில் மினுங்கிக் கொண்டிருந்த மின்சார விளக்குகள், இவர்கள்

Page 8
பொருளடக்கம்
வடக்கு வீதி.
எலுமிச்சை
குந்தியின் தந்திரம் .
வசியம் .
பூமாதேவி.
யதேச்சை.
.................................................................................... ftسانالخيلالمافاة
10
13
28
45 se
76
95
114
132
149
166
182
199

们
இந்நூலாசிரியரின் பிற நூல்கள்
1. அக்கா (சிறுகதைத் தொகுப்பு)
2. திகட சக்கரம் (சிறுகதைத் தொகுப்பு) (லில்லி தேவசிகாமணி விருது பெற்றது)
3. வம்சவிருத்தி (சிறுகதைத் தொகுப்பு) (தமிழ்நாடு அரசு முதல்பரிசு பெற்றது)
J

Page 9


Page 10
14 வடக்கு வீதி
அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்டு. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஒர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ செய்யும்,
மனசை தொடுவது ஒன்று; ஆனால் துளைப்பது என்பது வேறு. இப்ப கொஞ்சக் காலமாக இந்த எண்ணம் அவர் மனசைத் துளைத்து வேதனை செய்தது. தலையிடி வந்து போவதுபோல இதுவும் விரைவில் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார். போவதற்கு பதிலாக அது நன்றாக வேரூன்றி நின்றுவிட்டது. அவருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
சோதிநாதன் மாஸ்ரர் பயத்தங்கொடிபோல நெடுநேரம் வளர்ந்திருந்தாலும் முதுகு சுடனாமல் நிமிர்ந்துதான் நடப்பார். நெற்றியிலே பளிச்சென்று திருநீறு. மார்பிலே அங்கங்கே வெள்ளி மயிர்கள் குடியிருக்கும். ஏதாவது தீவிரமாக யோசனை செய்வதென்றால் அவர் மஸாய் வீரன்போல ஒற்றைக்காலில் நின்றுதான் அதைச் செய்து முடிப்பார். நிற்கும் காலில் பச்சை முடிச்சுகள் ஆலம் விழுதுகள் போல கீழும் மேலுமாக ஒடித்திரியும்.
அவருடைய வாடகை அறையில் நாற்பது வருடத்திய பத்திரிகை நறுக்குகள் இடத்தை அடைத்துக்கிடந்தன. அவ்வப்போது வெளியாகிய அவருடைய கட்டுரைகளும் அதில் அடக்கம். இவற்றையெல்லாம் ஒருநாளைக்கு தரம் பிரித்து

அ. முத்துலிங்கம் 15
அடுக்கி வைக்கவேண்டும் என்று அவருக்கு ஆசைதான். ஆனால் அந்தச் சிறு அறையில் அது நடக்கிற காரியமா? இவ்வளவு காலமும் சிலந்தியுடனும், கரப்பான் பூச்சியுட்னும், சொடுகுடனும் வாழ்ந்து பழகிவிட்டார். அவற்றைவிட்டுப் பிரிவதும் அவருக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.
அவர் வெகு சிரத்தை எடுத்து அந்த அறையை அப்படி அழுக்குப்பட வைத்திருந்தார். என்றாலும்கூட வெளியே போகும்போது நன்றாகக் கஞ்சிபோட்டு சலவை செய்த உடுப்பை அணிந்து கைகளை 15 டிகிரி கோணத்தில் விரித்துக் கொண்டுதான் நடப்பார். பார்ப்பவர்களுக்கு உடனே மரியாதை செய்யத்தோன்றும். அப்பழுக்கில்லாத மனிதர் என்றுதான் எல்லோரும் அவரை நினைத்திருந்தார்கள்.
குறையே இல்லாத சோதிநாதன் மாஸ்ரரில் இரண்டே இரண்டு குறைகளை மட்டும் சொல்லலாம். கட்டுரை எழுதத் தொடங்கினால் அவருக்கு நிறுத்தத் தெரியாது. எழுதிக்கொண்டே போவார். பேப்பர் முடியவேண்டும் அல்லது மை முடியவேண்டும். இரண்டாவது, காலையிலே வரும் பேப்பரை யாராவது அவர் படிக்குமுன் கலைத்துவிட்டால் அவருக்கு கெட்ட கோபம் வந்துவிடும். மற்றும்படிக்கு சாந்த சொரூபமானவர்.
இப்படிப்பட்ட சோதிநாதன் மாஸ்ரர் நித்திரை கொள்ள முடியாமல் தவித்தார். காரணம் அவருடைய மனதை ஒரு சிறுபெண் ஆழமாக காலைவிட்டு கலக்கிக் கொண்டிருந்தது தான்.
பூமியின் முகத்தை மூடி அந்தகாரம் சூழ்ந்திருந்தது. அந்த அதிகாலையிலேயே அவர் எழுந்துவிட்டார். கிணற்றடியில் போய் தண்ணிர் பிடித்துவந்து கேத்திலில் சூடாக்கி தேநீர் போட்டு அருந்தினார். நேற்றுவரை மொட்டாக இருந்த

Page 11
16 வடக்கு வீதி
நந்தியாவட்டை இன்று பூத்திருந்தது. அதிலே இரண்டு பூவைப் பிடுங்கி வந்து சாமி படத்துக்கு வைத்து அரைமணி நேரம் தியானம் பண்ணினார். அப்பவும் மனம் அமைதியடையவில்லை. வெளியே வந்து பார்த்தபோது சிவசம்பு வீட்டுப்பகுதி இன்னும் தூக்கத்திலேயே இருந்தது. வழக்கமாக அவர்களும் இந்நேரம் எழும்பி தங்கள் காரியங்களை தொடங்கி யிருப்பார்கள். அலமேலுவின் பள்ளிக்கூட ஆரவாரங்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை.
அவளோ மொட்டவிழும் பிராயத்துப் பெண். ஒருவித பிரயத்தனமும் இன்றி இவர் மனத்தில் புகுந்து இவரை இம்சைப் படுத்தினாள். இந்த வெட்கக்கேட்டை யாரிடம் போய் சொல்லி அழுவார். ஒரு பக்கத்தில் பிறவிப் பயனை அடைந்து விட்டதுபோல அவருடைய உள்மனது துள்ளியது. அதே சமயத்தில் பரம்பரை பரம்பரையாக சேர்த்துவைத்த கோழைத் தனமும் வெளியே வந்து அவரை வெருட்டியது. சோதிநாதன் மாஸ்ரர் ஒரு முடிவும் எடுக்க முடியாமல் சிறு பிள்ளைபோல தத்தளித்தார்.
கோயில் வீதிகளில் இரவுக்கிரவாகவே புதுக் கடைகள் எல்லாம் முளைத்துவிடும். இந்தக் கடைகளை, பிரதானமாக மொய்ப்பது பெண்களும், குழந்தைகளும் தான். பெண்களுக்கு பாத்திரக்கடைகள், வளையல் கடைகள் என்று ஏராளமாக இருக்கும். சிறுவர்களுக்கு விளையாட்டு சாமான்கள் வைத்திருக்கும் கடைகளில் தான் மோகம் அதிகம். ஆனால் அவற்றை வாங்கும் பண வசதி எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் ஐந்து சதம், பத்து சதம் என்று கைகளிலே வைத்துக் கொண்டு இங்கும் அங்குமாக அலைவார்கள். கடலை,

அ. முத்துலிங்கம் 17
பம்பாய் மிட்டாய், ஐஸ் பழம் இதில் எதை வாங்குவது, எதை விடுவது. இதுதான் அவர்களது முக்கிய ஏக்கம். அந்த சிறுவர்கள் குழம்பிப்போய் ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் தவித்துப்போய் நிற்பார்கள்.
அந்த வீடு அதி பயங்கரமான பாதுகாப்புகளுடன் இருந்தது. அதன் சொந்தக்காரர்தான் சிவசம்பு, அவருடைய தாத்தா கள்ள யாவாரம் செய்து கட்டிய வீடு. சுற்றிலும் இருக்கும் மதில் சுவர்களில் விதம்விதமான கண்ணாடித் துண்டுகள் பதித்திருந்தன. உள்ளே இரும்புக் கிராதிகள் காரண காரியமில்லாமல் கண்ட இடத்திலும் போடப்பட்டுக் கிடந்தன. நடுநடுவே வலைக் கம்பிகள் வேறு. முழுக்க முழுக்க கள்ளனை மனத்திலே நிறுத்தி கட்டிய வீடு.
கள்ளனுக்கு அடுத்தபடி சூரியன் என்னதான் உக்கிரமாக வெய்யில் எரித்தாலும் ஒரு சின்ன ஒளிக்கீற்றுகூட உள்ளே போக முடியாதபடிக்கு ஒரு தந்திரத்துடனும், சூட்சுமத்துடனும் அது கட்டப்பட்டிருந்தது. நடுப்பகலில்கூட விளக்கை ஏற்றினால்தான் நடமாடமுடியும். இந்த வீட்டிலேதான் ஒரு அறையில் சோதிநாதன் வாடகைக்கு இருந்தார்.
சிவசம்புவுக்கு மாஸ்ரரைப் பிடிக்காது. ஏன் இந்த உலகத்திலேயே சிவசம்பு ஒரு 'கறுவம்' வைத்திருந்தார். கைகளைப் பின்னுக்குக் கட்டியபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டுதான் நடப்பார். சிறுநீர் பாயும் தூரத்துக்குகூட அவரை நம்புவதற்கு அந்த ஊரில் ஆள் கிடையாது. அவர் வேலை முடிந்து வீட்டுக்கு பத்தடி தூரத்தில் வரும்போதே சேட்டைக் கழற்றிவிடுவார். அவர் மனைவி வாசலிலே காத்திருப்பாள். கொஞ்சம் வெற்றிலை போட்டு, கொஞ்சம் பவுடர் பூசி, கொஞ்ச கர்ப்பமாக பிரசாதம் வாங்குவதுபோல மிகவும் பவ்வியமாக அந்த சேட்டைக் கையிலே வாங்கி அவரை

Page 12
18 ܚ வடக்கு வீதி
அவசரமாக உள்ளே கூட்டிக்கொண்டு போவாள். பார்ப்பவர்கள் மிகவும் அந்யோன்யமான தம்பதிகள் என்றுகூட நினைக்கலாம்.
ஆனால் உள்ளே போன சிறிது நேரத்திலேயே U6) விநோதமான ஒசைகள் கிளம்பும். சிவசம்பு தன் மனைவியின் இடுப்பிலே ஓங்கி உதைக்கும் சத்தம் கேட்கும். பிறகு அவளுடைய கர்ப்பப் பிறப்புகளின் ஒலம். அவளுடைய ஒலம். ஊமையர்களின் வருடாந்தக் கூட்டம்போல வசனமில்லாத ஒலி கள். தினம் தினம் இது தவறாமல் நடக்கும். இருந்தாலும் இந்த மனுசி ஒரு நாளாவது வாசலில் நின்று அவரை வரவேற்கத் தவறியது கிடையாது.
அவர்களுடைய மூத்த பிறப்புதான் அலமேலு. வீட்டுச் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக அடிக்கடி மாஸ்ரரின் அறைக்கு ஓடி வரத்தொடங்கினாள். அப்படித்தான் அவருக்கும் அவள்மேல் ஒரு பரிவு ஏற்பட்டது. அந்தப் பரிவுதான் இன்று வேறு உருவம் எடுத்து அவரை மிரட்டிக்கொண்டு இருந்தது.
சோதிநாதனுக்கு கணக்குத்தான் பாடம். ஆனால் தமிழிலும் நல்ல புலமை பெற்றவர். அவர் ஒய்வுபெற்ற பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் படிப்பதில் மிக்க ஆர்வமாய் இருந்தார்.
முதன்முதலில் அலமேலு அவரிடம் தமிழ்ப்பாடத்தில் சந்தேகம் கேட்டுத்தான் வந்தாள். அவர் பாடம் சொல்லிக் கொடுக்கும் விதம் அவளுக்கு நல்லாகப் பிடித்துக்கொண்டு விட்டது. எந்தப் பாடமாயிருந்தாலும் கதைகளும், உதாரணங் களுமாக உணர்ச்சி வயப்பட்டுவிடுவார். கணக்குப் பாடம் எடுக்கும்போது யாராவது கண்ணிர்விட்டு உருகுவார்களா? சோதிநாதன் செய்வார்.
அலமேலுவின் உடம்பு முழுக்க சந்தேகங்கள் பொங்கும். அவளுடைய பல சந்தேகங்களை சோதிநாதன் தீர்த்து

அ. முத்துலிங்கம் 19
வைத்தாலும் பதிலுக்கு அலமேலுவம் அவருடைய ஒரு பெரிய சந்தேகத்தை ஒருநாள் தீர்த்துவைத்தாள். ஆனால் அந்த விஷயம் அவளுக்கே தெரியாது. −
விளக்கின் ஒளியில் அவள் மேசையில் இருந்து எழுதிக்கொண்டிருந்தாள். அவளுடைய கைவிரல்கள் குவிந்து போய் பென்சிலை இறுக்கிப்பிடித்திருந்தது. "கைவழி நயனம்’ என்பதுபோல அவளுடைய வாய் கோணியபடி கைபோன பக்கம் இழுத்துக்கொண்டு போனது வெகு சிரமப்பட்டு தன்னுடைய பென்சில் இலகுவில் தர மறுத்த வார்த்தைகளை அவள் பலவந்தமாக பிடுங்கிக் கொண்டிருப்பதுபோல பட்டது.
தமிழ் பாடல்களில் 'பந்தார் விரலி' என்ற தொடர் அடிக்கடி வரும். அதற்கு அர்த்தம் 'பந்துபொருந்திய விரல்கள் என்று சொல்வார்கள். சோதிநாதனின் மனக்கண்ணில் சங்க காலத்துப் பெண்கள் நிரையாக வந்து போவார்கள். அவர்கள் கைவிரல்கள் எல்லாம் நகச்சுத்து வந்து எலுமிச்சம்பழம் சொருகியதுபோல உருண்டு திரண்டுபோய் இருக்கும்.
அலமேலு கைகளைக் குவித்து எழுதும்போதுதான் அவருக்கு உண்மையான அர்த்தம் புரிந்தது. ஒரு சிவந்த கண்ணாடிப் பந்துபோல அது இருந்தது. பல்லியின் வயிற்றில் குட்டி தெரிவதுபோல அவள் கைவிரல்களில் ஒடும் ரத்தம் கூட அவருக்கு தெரிந்தது. பந்துபோன்ற அந்த கைவிரல் குவியலை எடுத்து முத்தமிடவேண்டும் போல பட்டது.
ஆனால் அப்போதுகூட அவருக்கு அந்த வித்தியாசமான எண்ணம் தோன்றவில்லை.
அவருடைய மனைவி இறந்தபோது அவருக்கு
நாப்பத்தைந்து வயது. அந்த மரணம் இடி விழுந்ததுபோல வந்தது. இரண்டு வருடம் கழித்து அவருடைய மகளுக்கு நல்ல

Page 13
20 வடக்கு வீதி
இடத்தில் சடங்கு பேசி வந்தார்கள். அது கடவுள் செயல்தான் என்று அவருக்குப் பட்டது. இப்படியான சம்பந்தத்தை அவர் கனவிலும் நினைத்திருக்க முடியாது. பையன் அவுஸ்திரேலி யாவில் வதிவிடம் பெற்று நல்ல வேலையில் இருந்தான். இருந்த ஒரே வீட்டையும் விற்று கலியாணத்தை சிறப்பாகச் செய்து மகளை அனுப்பிவைத்தார்.
அவருடைய மகன் கதை வேறு ஒரு நாள் விடிய எழும்பிப் பார்த்தால் ஆளைக் காணவில்லை. இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். ஒரு கடிதம் கூட தனக்கு எழுதிவைக்கவில்லையே என்று அவருக்கு கவலை. ஒரு நாளைக்கு அவனைப் பார்ப்போம் என்ற நம்பிக்கை கனகாலம் இருந்தது. பிறகு அதுவும் போய்விட்டது.
அவுஸ்திரேலியா போன கையோடு மகள் அடிக்கடி கடிதம் போட்டபடி இருந்தாள். பிறகு சில காலமாக வருடத் திற்கு ஒரு கடிதம் என்று ஆகிவிட்டது. தனித்து விடப்பட்ட மரமாய் அடிமண்ணுக்குள் போய் புதைந்துகொண்டார்.
சிகாடா பூச்சிபோல. இந்தப் பூச்சி பதினேழு வருடம் மண்ணுக்கு அடியில் புதையுண்டுபோய் கிடக்குமாம். பதினேழு வருட முடிவில் இது வெளியே வந்து இனச்சேர்க்கையில் ஈடுபட்டு பிறகு இறந்துபோகும். குஞ்சுகள் மீண்டும் மண்ணுக்குள் போய் புதைந்து கொள்ளும். இப்படி பதினேழு வருடங்கள் தவம் செய்தபிறகு இந்தக் குஞ்சுகளும் பெரிசாகி வெளியே வருமாம், சாவைத் தேடி
அவர் மனைவி இறந்து பதினேழு வருடங்களாக இவர் செய்த தவம் ஒருநாள் திடீரென்று முறிவதற்கு இருந்தது. ஒளித்திருந்து எய்த பாணம்போல இவரைத் தாக்குவதற்கு அது தருணம் பார்த்திருந்தது. ஆனால் இது அவருக்கு அப்ப தெரியவில்லை.

அ. முத்துலிங்கம் 21
வீட்டை விற்ற நாளில் இருந்து அவர் சிவசம்பு வீட்டில் ஒர் அறையில் வாடகைக்கு இருந்தார். பனங்கட்டிக் குட்டான் போல சின்ன வயசாக இருக்கும்போதே அலமேலு அடிக்கடி தத்திதத்தி அவருடைய அறைக்கு வருவாள். கொஞ்சம் வளர்ந்து கண்கள் மேசைக்குமேல் தெரியும் வயசில் ஒசைப்படாமல் வந்து இவர் எழுதுவதையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு இருப்பாள். இவர் கதிரையிலே ஏற்றி விடுவார். சிறிது நேரத்தில் சறுக்கி இறங்கிப் போய்விடுவாள். அவள் வளர வளர அவளில் பல மாற்றங்கள் தென்பட்டன. இவர்தான் அவற்றை கவனிக்கத் தவறிவிட்டார்.
இப்பொழுதெல்லாம் அவள் கிட்ட வரும் சமயங்களில் இரண்டு நாள் தண்ணிரில் ஊறவைத்த பயறுபோல ஒரு விதமான பச்சை வாசனை வருகிறது. அவளுடைய குரல் உடைந்து ரஹஸ்யம் பேசுவதுபோல இருக்கிறது. எவ்வளவுதான் உரத்துப் பேசினாலும் கசகசவென்றுதான் கேட்கிறது.
அவர் அறியாமல் இந்த விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன. நேற்றுப் பார்த்தபோது மொட்டாக இருந்த நந்தியா வட்டை இன்று பூத்துப்போய் கிடக்கிறது. இரவுக்கிரவாகவே சதியாக ஒரு மணமும், அழகும் அதற்கு வந்து சேர்ந்துவிட்டது. ஒர் இரவுக்குள் நடந்த இந்த அதிசயம் போலத்தான் இதுவும் இருந்தது.
சங்க காலத்து தமிழில் டீன் ஏஜ் பெண்ணை மடந்தை' என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் அலமேலுவின் அழகை பூரணமாக கொண்டுவரவில்லை என்று இவருக்குப் பட்டது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் முற்றா முகிழ்முலை' என்ற பாடல் வரிகள்தான் அவர் ஞாபகத்துக்கு வரும். ஒரு டீன் ஏஜ் பெண்ணை இந்த சொற்றொடர் முற்றிலும் வர்ணிக்கிறது என்று அவர் நினைத்தார். ஆனால் அப்போது கூட அவருக்கு அந்த எண்ணம் வந்தது கிடையாது.

Page 14
22 வடக்கு வீதி
ஒருநாள் பைதகரஸ் என்ற கிரேக்க ஞானி 2500 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடித்த சித்தாந்தத்தை அலமேலு வுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. கண்களை கையகலத்துக்கு பெரிதாக்கி அவர் சொல்லுவதையே அலமேலு கவனித்துக் கொண்டிருந்தாள்.
முதலில் அந்த மகா ஞானியின் வாழ்க்கையைப் பற்றி சொன்னார். இந்தப் பிரபஞ்சத்தின் சாகசங்கள் எல்லாம் ஓர் ஒழுங்கோடும் எண்ணங்களின் அடிப்படையிலும் நடப்பதை விளக்கினார். பிறகு அந்த ஞானி எப்படி முக்கோணங்களை யும், சதுரங்களையும் உபாசித்தார் என்பதையும், அவற்றில் இருந்து அவர் சிருஷ்டித்த சித்தாந்தத்தின் மகிமையையும் கூறினார்.
ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரண்டு பக்கங்களினதும் தனித்தனி வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமமாகும்.
அலமேலு மேற்படி சித்தாந்தத்தை வரி பிசகாமல் திருப்பித் திருப்பி மனனம் செய்தாள். இந்த பழம்பெரும் சித்தாந்தத்தின் அருமையை சோதிநாதன் உற்சாகத்துடன் விளக்கி அதை மூன்று வெவ்வேறு வழிகளில் நிரூபித்துக் காட்டினார்.
அலமேலு வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களின் ரப்பைகள் துடித்தன. இந்த சித்தாந்தத்தை இவ்வளவு எளிதாக, இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக யாரும் இதற்கு முன்பு அவளுக்கு விளக்கியது கிடையாது.

அ. முத்துலிங்கம் 23.
சோதிநாதனின் இமையோரத்தில் சில நீர்த்துளிகள் சேர்ந்திருப்பதை அவள் அப்போதுதான் கவனித்தாள்.
மேளக்கச்சேரி என்றால் இங்கே நாதஸ்வரத்துக்கு இரண்டாவது இடம்தான் சுற்றுவட்டார ஊர்களிலிருந் தெல்லாம் தவில் வித்துவான்கள் வந்திருப்பார்கள். இந்த தவில் சமாவைக் கேட்பதற்கு சனங்கள் பொறுமையோடு இடம்பிடித்து மூன்று நான்கு மணித்தியாலங்கள் கூட சலிக்காமல் காத்திருப்பார்கள்.
தனியாவர்த்தனம் வழக்கமாக மேல் வீதியில்தான் நடக்கும். ஐந்து, ஆறு கூட்டம் என்று தவில் வாத்தியக் காரர்கள் சுற்றிவர நின்றுகொண்டே வாசிக்கும்போது பக்தர்கள் தங்களை மறந்து ரஸிப்பார்கள். இந்த ஆவர்த்தனம் முதலில் பெரிசாக தொடங்கி ஒவ்வொரு சுற்றும் வரவர சிறுத்துக்கொண்டே போகும். விறுவிறுப்பும் கூடும். கடைசியில் தீர்மானம் வைக்கும்போது சில பேருக்கு ஆவேசம் வந்துவிடும்; சிலருக்கு கண்ணிர் வந்துவிடும்.
இருபத்தைந்து நூற்றாண்டுகள் கடந்து கண்கள் கலங்க, திரும்பவும் எண்கள் மயமான இந்த, உலகத்துக்கு வந்தபோதுதான் சோதிநாதன் மறுபடியும் அலமேலுவைக்
60 TT. *
நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக்கொடுத்து அவரையே பார்த்தபடி இருந்தாள், அலமேலு. சீரில்லாத பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவரைப் பற்றி இழுத்தது. பதினேழு வருடங்கள் தூங்கிய சிக்காடா பூச்சி அப்போது வெளியே வந்துவிட்டது. அவளுடைய கன்னங்கள் சதுரமாகவும், அந்த மோவாய் முக்கோணமாகவும் இருந்தது. விடியவிடிய சந்திரவதனத்தை

Page 15
24 வடக்கு வீதி
பாடிய தமிழ்ப் புலவர்கள் இந்த அழகைப்பாட மறந்துவிட்டார்கள். சதுரங்களும், முக்கோணமாகவும் பைதகரஸுக்காகவே படைக்கப்பட்ட இந்த முகம் விளக்கின் வெளிச்சத்தில் ஒரு பிரமையாக அவருக்கு தெரிந்தது.
அன்று படுக்கப் போனபோது அவருடைய நித்திரை எதிர்த்திசையில் போய்விட்டது. மறுபடியும் யெளவனமாகி விட்டார். ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பதுபோல குறுகுறுப்பாக மனம் துள்ளியது. விமான ஒடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவரைத்தாக்கின.
அவர் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங் கள் பல இருந்தன. அவர் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்கவேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பதுபோல பட்டது. அவர் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்று தான். அலமேலுவை அவரால் மறக்க முடியவில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பதுபோல அவருக்கு பட்டது.
அவள் வாயிலே எச்சில் குமிழ்கள் செய்து ஊதிய காலத்திலே இருந்து அவளை அவருக்கு தெரியும். ஆனால் இதற்குமுன் இப்படி நூதனமான அநுபவம் அவருக்கு ஏற்பட்டதில்லை. அந்தச் சிறு பெண்ணின் மனதில் என்ன இருந்ததென்றும் தெரியவில்லை. இரண்டு பேருக்கும் சேர்த்து அவரிடம் போதிய காதல் இருந்தது. இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திகைத்தார்.
மூன்று நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அழுக்குத் திரைச்சீலையும், தண்ணிப்பானையும், வட்டம் வட்டமாக நீர்பட்ட தலையணையுமாக அவர் உள்ளே அடைந்து

அ. முத்துலிங்கம் 25
கிடந்தார். அப்படியாவது அவர் அடிவயிற்றில் மூண்ட ஆசைத்தீயை அடக்கிவிடலாம் என்று எண்ணினார்.
மூன்றாம் இரவு நடுநிசியில் அவருக்கு ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. கட்டை அறுத்துக்கொண்டு ஒடித்திரியும் காளைமாட்டை அடக்கி இழுத்துக்கொண்டு வருவதுபோல் மனதை திரும்பவும் இழுத்துப் பிடித்து அடக்கிவிட்டார். வயதுக்கு ஒவ்வாத சிந்தனைகளை நினைத்து நாணமாக வந்தது. ஓவென்று ஓடிய நதி சமநிலைக்கு வந்து அவர் அடிமனதில் ஒரு நிம்மதி பிறந்தது.
சோதிநாதன் மாஸ்ரர் அன்று வைகறையிலேயே எழுந்துவிட்டார். எழும்பும்போதே உள்ளம் மகிழ்ச்சியாகவும் லேசாகவும் இருந்தது. முதல் நாளிரவு பெய்த மழை அவர் மனத்தில் இருந்த எண்ணங்களை அடிச்சுக்கொண்டு போனதுபோல மனம் வெளிச்சுப்போய் இருந்தது.
கிணற்றடியில் போய் முகம் கழுவிக்கொண்டு தேநீர் வைப்பதற்கு ஒரு வாளி தண்ணிர் பிடித்துக்கொண்டிருந்தார். துலாக்கொடி சரசரவென்று வழுக்கிக்கொண்டு வந்தது. அவர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வாளியை எடுக்கப் போகும்போதுதான் அது நடந்தது.
அலமேலு வந்துகொண்டிருந்தாள். மத்து கடைவதுபோல அசைந்து, அசைந்து. அவளுடைய தலைமயிர் கற்றைகள் கலைந்திருந்தன. அவை சூரிய ஒளிபட்டு தங்க நிறத்துடன் ஜொலித்தன. கண்கள் இன்னும் தூக்கம் கலையாமல் அரை மூடியில் இருந்தன. பாவாடையும் சட்டையும் உடுத்தியிருந்தாள். மேற்சட்டை அவசரத்தில் போட்டதுபோல ஒரு பக்கத்துக்கு தூக்கிக்கொண்டு நின்றது. பொங்கலுக்குப் பிடித்த அடுப்புக்கட்டி போல அவள் புஜங்கள் வழவழவென்றும், இறுக்க மாகவும் இருந்தன. அருகில் வந்ததும் அவளுக்கே உரிய பெண்

Page 16
26 வடக்கு வீதி
வாசனை சொட்டு நீலம் தண்ணிரில் பரவுவதுபோல மெல்ல பரவியது.
சோதிநாதன் மாஸ்ரர் கவிகள் பாட மறந்த சதுரமான முகத்தையும், முக்கோண வடிவான தாடைகளையும் பார்த்தார். இன்றுதான் முதல்முதல் பார்ப்பதுபோல அவரால் கண்களை எடுக்க முடியவில்லை. பிறந்த நாளிலிருந்து அவரில் விடுபட்டுபோன ஒரு துண்டு மீண்டும் சேர்ந்து கொண்டது போல ஒர் உணர்வு. இவ்வளவு காலமும் அவர் வாழ்ந்ததின் அர்த்தம் அவர் முன்னே நின்றுகொண்டிருந்தது. அவள் புஜத்தை எட்டி ஒரு கையால் தொட்டு தடவினார்.
அலமேலு பதறிவிட்டாள். "ஐயோ! அங்கிள், என்ன செய்யுது?’ என்று சொல்லியபடி அவரைப்பிடித்து இரண்டு கைகளாலும் அணைத்துக் கொண்டுபோய் துணி துவைக்கும் கல்லிலே உட்கார வைத்தாள். தன்னுடைய இரண்டு கைகளையும் மார்புக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் மூன்றாக மடிந்துபோய் உட்கார்ந்தார். அவருக்கு வசதியாக அவருடைய கால் பெருவிரல்கள் அவருக்கு முன்பாக இருந்தன. அவற்றை முதன்முதல் பார்ப்பதுபோல உற்று பார்த்த படியே இருந்தார். அந்த நேரத்தில் அப்படி இருப்பதுதான் அவருக்கு சரிபோல பட்டது.
சுவாமி புறப்பாடு ஆரம்பிக்கும்போது இரவு ஒரு மணி ஆகிவிடும். தெற்குவீதி தாண்டி மேல்வீதியில் நீண்ட மேளச்சமா முடித்து வடக்கு வீதிக்கு சுவாமி வரும்போது நாலுமணி ஆகிவிடும். எல்லோருக்கும் நித்திரை கண்ணுக்குள் வந்துவிடும். பக்தர்கள் எல்லாம் மெள்ள மெள்ள கழன்றுவிடுவார்கள். அப்போது எண்ணிப் பதினைந்தே பேர் இருப்பார்கள். அதில் தவில்காரர், நாயனம், பந்தம் பிடிப்பவர், எண்ணெய் ஊற்றுபவர்,

அ. முத்துலிங்கம் 27
குருக்கள் என்று எல்லோருமே அடக்கம். இப்படி சுவாமி இருப்பிடத்துக்கு போக முடியாமல் தவியாய் தவிப்பார்.
இதைத் தவிர்க்க ஒரு தந்திரம் செய்வார்கள். கோயில் முன்றலில் சதிராடிய தேவடியாள்கள் இப்ப வந்து வடக்குவீதியில் ஒரு கும்மி அடிப்பார்கள். அவர்கள் நித்திரை பாதியில் எழுந்துவந்து சுவாமிக்காக இப்படி தூக்கக் கலக்கத்தில் குனிந்து, குனிந்து உடலை வருத்தி கும்மி அடிப்பார்கள். தலைமயிர் கலைந்திருக்கும்; கண்மை கரைந் திருக்கும். நித்திரையின் மணம் அங்கே நிறைந் திருக்கும். பக்தர்கள் எல்லாம் தங்கள் தங்கள் சயனத்தை தள்ளி வைத்துவிட்டு இந்த நித்திரை கும்மியை ரசிப்பதற்காக நிற்பார்கள். கும்மி முடிந்ததும் கூட்டம் கலையப் பார்க்கும். அதற்குமுன் சுவாமியை தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் இருப்பிடத்தில் சேர்த்துவிடுவார்கள். *
திருவிழா என்றால் வடக்குவீதியைத் தாண்டிவிட்டால் நேராக இருப்பிடம் தான்.
சோதிநாதன் இப்போது வடக்குவீதியில் இருந்தார். நித்திரை கும்மியில் சிறு சபலம். இனிமேல் நேராக இருப்பிடம்தான்.
女女女

Page 17

அ. முத்துலிங்கம் 29 (கதைகளுக்கு முன்னுரை எழுதுவது எனக்குப் பிடிக்காது. அதென்ன கட்டியம் கூறுவதுபோல என்று கிண்டல் செய்வேன். கதையென்றால் சொல்ல வந்த விஷயத்தை கதையிலேயே சொல்லிவிட வேண்டியதுதானே! இது என்ன முன்னுரை? அறிவுரை?
ஆனால் இந்த முன்னுரை எழுதுவதில் ஒரு காரியமிருக்கிறது. கு. அழகிரிசாமி எழுதிய ‘குமாரபுரம் ஸ்டேஷன்” என்ற கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். அதில் ஒரு பாத்திரம் மூலமாக 'நாங்கள் ஒன்றை மனதில் நினைத்து செய்யும் செயல் எப்படி எங்களை அறியாமல் இன்னொரு காரியத்துக்கு உதவுகிறது என்று சொல்லியிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நடந்த இந்த உண்மைச் சம்பவமும் அப்படித்தான். இனி, சற்று தள்ளி நில்லுங்கள். கதை வருகிறது)
செடியாக இருந்த அந்த எலுமிச்சை இப்பொழுது மரமாக வளர்ந்துவிட்டது. அம்மா அதைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். சதிருக்கு வந்த தேவடியாள் கையைக் காலை விசுக்கி ஆடுவதுபோல அந்த மரம் கிளையெல்லாம் வீசி வளர்ந்துவிட்டது. ஆனால் பேச்சுக்கு ஒரு பூ இல்லை; ஒரு காய் கிடையாது. ஒவென்ற மலட்டு மரம்.
அம்மாவும் செய்யாத வித்தையில்லை) பார்க்காத வைத்தியமில்லை. மண்ணை வெட்டி, கொத்தி பசளையெல்லாம் போட்டு அலுத்துவிட்டது. அது அசையவில்லை. வடக்கு வீதிக்கு வந்த மஞ்சவனப்பதி தேர்போல தன்பாட்டுக்கு நின்றது.
இப்படித்தான் முன்பு ஒரு கறிவேப்பிலைச் செடி. அம்மா அதைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ஒரு சாண்

Page 18
30 எலுமிச்சை
உயரத்துக்கு வளர்ந்த பிறகு ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் செத்துவிட்டது. அம்மாவும் 'விடேன், தொடேன்’ என்று ஒன்பது தரம் ஒன்றன்பின் ஒன்றாய் செடிகளை நட்டு தன் கையால் தண்ணி ஊற்றி வளர்த்துப் பார்த்தாள். சரிவரவில்லை. கடைசியில் செல்லாச்சிக் கிழவி சொன்ன மந்திரம்தான் பலித்தது.
சூதகமாய் இருக்கிற நேரம் பார்த்து, பலபலவென்று விடியும் முன் ஒட்டுப்போடாத ஒற்றைத்துணி உடுத்தி, கிழக்குப் பார்த்து செடியை நட்டால் அது பிய்த்துக்கொண்டு வளர்ந்துவிடும் என்பதுதான் அது.
அம்மாவும் அப்படியே செய்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்! பார்த்துக் கொண்டிருக்கும்போதே மரம் வளர்ந்து விட்டது. வளர்த்தியென்றால் அப்படி ஒரு வளர்த்தி, ஊர்ச்சனம் எல்லாம் கறிவேப்பிலை கேட்டு வரத் தொடங்கி விட்டார்கள். கையாலே பறித்துக் கொடுத்தது போய் கொக்கத்தடி வைத்து ஒடித்துக் கொடுக்க வேண்டி வந்துவிட்டது. அவ்வளவு உயரம்.
காலை, பகல், இரவு என்றுகூட ஆட்கள் கறிவேப்பிலை கேட்டு வரத்தொடங்கினார்கள். அம்மாவும் சலிக்காமல் கொடுத்துவந்தாள். இது புண்ணியம் ஆச்சே!” என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.
அந்த நேரம் பார்த்துத்தான் நாங்கள் நாய் வளர்க்கத் தொடங்கினோம். 'வீட்டுக்காரர், நாயைப் பிடியுங்கோ' என்று படலையில் இருந்து கூக்குரல் அடிக்கடி கேட்கத் தொடங்கியது.
நாயென்றால் ஏதோ சந்திரகுலம், சூரியகுலத் தோன்ற லில்லை. சாதாரண ஊர் நாய்தான். நான் பள்ளிக்கூடத்திலி ருந்து வரும்போது வழியிலே பொறுக்கியது. என்னுடைய கையையும், முகத்தையும் நக்கி என்னை அது ஆட்கொண்டுவிட்டது.

அ. முத்துலிங்கம் 3.
வீட்டிலே அம்மா முதலில் அடிபிடியென்று சத்தம் போட்டாள். பிறகு அது பால் குடித்த வேகத்தைப் பார்த்து அவள் மனது மாறிவிட்டது. பலூன் மாதிரி ஊதிப்போன வயிற்றைத் தூக்கிக்கொண்டு அது தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது அம்மாகூடச் சிரித்துவிட்டாள். இப்படித்தான் இந்த நாய்க்குட்டி எங்கள் வீட்டுச் சங்கதியானது.
குட்டியாயிருக்கும்போது அது செய்த வீர சாகஸங்களை வைத்து வீரன் என்று பெயர் வைத்தோம். அதுவும் கறிவேப்பிலை மரம்போல கிடுகிடென்று வளரத்தொடங்கியது. சாப்பாடு என்றால் வீரனுக்கு இதுதான் என்ற வரைமுறை கிடையாது. முருங்கக்காய்ச் சக்கையிலிருந்து சோறு, பருப்பு, பனங்காய் நார் என்று சாதி வித்தியாசம் பாராமல் சாப்பிட்டு பரிபூரண சந்தோசமாக இருந்தது.
என்னுடைய வாய் அசைந்தால் என் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கும் கொடுத்தபடியே சாப்பிட வேண்டும். கடைசியில் வெறும் கையைக்காட்டி, தொடையில் தட்டினால்தான் தன் வழியில் போகும். பள்ளிக்கூடத்து பாணில் இதற்கு ஒர் அளவுகடந்த பாசம். பள்ளி மணி அடித்ததும் காதல் வயப்பட்ட கன்னிப்பெண் போல உள்ளுக்கும், வாசலுக்குமாய் பறந்து திரியும். நான் வந்தேனோ இல்லையோ என் மீது பாய்ந்து பாணையும் சம்பலையும் பறித்துக்கொண்டு போய்விடும்.
வீரனின் முதுகில் நான் சவாரி செய்யும் அளவுக்கு குதிரைபோல வளர்ந்துவிட்டது. நான் அதோடு இருக்கும்போது பெரியவர்கள் கூட பயபக்தியோடு தூரதேசமாய் செல்வார்கள். எனக்கு கர்வம் தலைக்கு மேலேறிவிடும்.
அதற்கு வயசுக்கு வந்தபோது பக்கத்து வீட்டு கண்ணகியைச் சேர்த்துக்கொண்டது. ஒரு நாள் இரவு

Page 19
32 எலுமிச்சை
களவியல் நடத்த கண்ணகி வந்துவிட்டது. கண்ணகி என்றால் கற்பின் திருவுருவம் என்று அவசரப்பட்டு நினைத்துவிடக் கூடாது. எங்கள் ஊரில் அரைவாசி ஆண்நாய்கள் அதற்கு பின்னால்தான். அதனுடைய கருநீலச் சடையையும், மதுரையை எரித்த கண்களையும் வைத்து அப்படிப்பேர் வைத்திருப்பார்கள் போலும். கண்ணகியின் பின்னாலேயே வீரன் ஒடத்தொடங்கி யது. குரைத்துக் குரைத்து துரத்தும் ஒலி. பிறகு 'பொதக் என்று ஒரு சத்தம். அதற்குப்பின் மெளனம். மெளனம் என்றால் ஆயிரம் பேருடைய மெளனம்.
அப்ப அம்மா கூவினாள், "இஞ்சருங்கோ, நாய் கிணத்துக்கை விழுந்திட்டுது போல கிடக்கு', நாங்கள் அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு அடித்துப்பிடித்து கிணற்றடிக்கு ஒடினோம். உண்மைதான். கிணற்றுக்குள்ளே இருந்து ‘சதக் புதக்' என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது. அவசரமாக ஒரு கயிற்றிலே அரிக்கன் விளக்கைக் கட்டி கீழே இறக்கிப் பார்த்தோம். ஒரு மண்ணும் தெரியவில்லை.
இந்தக் கலவரத்தில் ஊர் அரைவாசி கிணற்றடியில் கூடிவிட்டது. பக்கத்துவீட்டு சிவப்பிரகாசம் பத்து பற்றறி போட்ட ரோர்ச் லைட்டை கொண்டு வந்தார். பெரிய எழுத்து நல்லதங்காளை தினமும் பெரிய குரலில் படித்து தொண்டையை வளமாக வைத்திருப்பவர். ரோர்ச்சை அடித்துப்பார்த்தால் வீரன்தான் கிணற்றைச் சுற்றி சுற்றி ஓயாமல் நீந்திக் கொண்டிருந்தது. அவர் ஒருவரிடமே ரோர்ச் லைட் இருந்த படியாலும், உரத்த குரல் வளத்தில் அவருக்கு நிகர் எவரும் இல்லை என்றபடியாலும் நாய் மீட்பு பணிக்கு அவரே அக்கிராசனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாளியும் கயிறுமாக நாய் எடுப்பதற்கு நாங்கள் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. அடுத்ததாக, பனைநாரில்

அ. முத்துலிங்கம் 33
செய்த பட்டை கிணற்றில் இறக்கப்பட்டது. நாய் இந்த விசித்திர மான ஏற்பாட்டை ‘இந்தா, இந்தா' என்று வந்து மணந்து பார்த்துவிட்டு திரும்பிவிடும். பட்டையில் ஏறினால் உயிர் தப்பிவிடலாம் என்று ஒருமுறை அதற்குப் பட்டதுபோலும், ஏறி விட்டது. நாங்கள் எல்லாம் கூக்குரல் இட்டு அதைப் பதனமாக இழுத்தெடுக்கும்போது அது என்ன நினைத்ததோ மனதை மாற்றிக்கொண்டு மறுபடியும் பாய்ந்துவிட்டது.
கடைசியில் தொட்டில் யோசனையைச் சொன்னது பாவாடை சண்முகம்தான். இவர் படு அப்பாவி. ஒருமுறை கிணற்றடியில் மனைவியின் உள்பாவாடையை தோய்க்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டார். அன்றிலிருந்து அவர் பிரக்கியாதி இப்படி பரவிவிட்டது. இந்த ஒரு குற்றத்தைத் தவிர அவர் அவ்வப்போது அருமையான யோசனைகளை தர வல்லவர்.
எங்கள் ஊரில் எதற்கு குறைவிருந்தாலும் தொட்டிலுக்கு குறைவில்லை. மழையோ, வெய்யிலோ குழந்தை விளைச்சல் அமோகமாக இருக்கும். "நீ, நான்' என்று தொட்டில்கள் வந்துவிட்டன. நாலு மூலையிலும் கயிறு கட்டி வெகு கவனமாக தொட்டிலை இறக்கினோம். தொட்டில் தண்ணீரில் அமுங்கிய படியே இருந்தது. சிவப்பிரகாசம் ரோர்ச் லைட்டை கண் வெட்டாமல் அடித்துக் கொண்டிருந்தார். நாய் தொட்டில் பக்கம் நீந்திவந்தபோது சொல்லி வைச்சதுபோல நாலுபேரும் கயிற்றை இழுத்துவிட்டார்கள். நாய் தொட்டிலில் வசமாய் மாட்டிவிட்டது. வெளியே வந்ததுதான் தாமதம் நான் அதை ஆசை தீரக் கட்டிப்பிடித்தேன். அது ஒரு சிலுப்புச் சிலுப்பி தண்ணியைச் சிதறடித்தது. பிறகு ஒரே பாய்ச்சல்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வீரன் கண்ணகியை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. எதிர் வீட்டு வண்டார்குழலி

Page 20
34 எலுமிச்சை
யிடம் அதற்கு மையல் ஏற்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். (எங்கள் ஊரில் தமிழ்ப்பற்று கரைபுரண்டு ஓடிய காலகட்டம் இது பற்பன்கூட தன் அணில் குஞ்சுகளுக்கு பரிமேலழகர், லோபாமுத்திரை என்று பெயர் வைத்திருந்ததாக ஞாபகம்.)
எங்களுக்கு கணக்குப் பாடம் எடுப்பது கந்தையா வாத்தியார்தான். இவர் ஒரு தீவிரவாதி. இவர் பாடம் நடத்தும் போது நாங்கள் எல்லாம் கைவிரல்களை ஒன்றுகூடத் தவறாமல் மேசைமேலே வைத்திருக்கவேண்டும். மனக்கணிதம் என்றால் மனதால் சொல்லவேண்டும். கையால் சொல்லக்கூடாது என்பது இவருடைய அற்புதமான சித்தாந்தம்.
பதின் நான்கிலிருந்து ஒன்பது போனால் மிச்சம் எவ்வளவு. இதுதான் கேள்வி. நாங்கள் உயிரைக் கொடுத்து இதற்கு விடை தேடிக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் வீரன் வந்து என் காலை நக்கியது. அதுமாத்திரமல்ல. விரகதாபக் கதாநாயகியைப் போல கொஞ்சம் முக்கல், முனகலையும் சேர்த்துக்கொண்டது.
கந்தையா வாத்தியார் எவ்வளவுதான் சுத்த வீரர் என்றாலும் அவருக்கும் நாய்க்கும் ஒரு சொந்தம் இருந்தது. அவர் வேட்டியைத் தூக்கினால் கணுக்காலில் இருந்து முழங்கால்வரை எல்லாம் நாய்க்கடி தழும்புகள்தான். இது புன்னாலைக்கட்டுவன் நாய், இது பெரிய கடை நாய், இது சித்தங்கேணி என்று வகைவகையான தழும்புகளை பொறாமைப்படும்படி காட்டுவார்.
நாயைக் கண்டதும் அவர் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு, 'ஆர், ஆர் அந்த நாயைப் பிடி; கொண்டுபோ, கொண்டுபோ' என்று கத்தத் தொடங்கிவிட்டார். ஒரு கால் நிலத்திலும், மறுகால் கதிரையிலுமாக எந்தத் திசையிலும்

அ. முத்துலிங்கம் 35
பாய்வதற்கு ஏதுவாக யுத்த சன்னத்தனாக நின்றார். நானும் இதுதான் சாட்டு என்று நாயை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். வாத்தியாரைப் பயங்காட்ட என்னிடம் ஒர் அஸ்திரம் இருக்கிறது என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அமுங்கி பள்ளிக்கூடத் திற்கு திரும்பிப்போக வசதியாக மறந்துவிட்டேன்.
அதற்கு பிறகுதான் அம்மா வீரனை பள்ளிநாட்களில் நான் திரும்பி வரும்வரை கட்டி வைக்கத் தொடங்கினாள். ஆனால் இரவு நேரங்களில் வீட்டைக் காக்கும் DUTY இருப்பதால் அது சுதந்திரமாக உலாவந்து காவல் வேலைகளைக் கவனித்தது.
அன்று சனிக்கிழமை, தலை முழுக வார்க்கும் நாள். வீடு முழுக்க தடயுடல் பட்டது. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து என்னைத் தயார்நிலையில் வைத்திருந்தார்கள். அடுத்த கட்டம் அரைத்து களியாக்கிய சீயக்காயைப் பிரட்டுவதுதான்.
அம்மா எலுமிச்சை மரத்தை பார்த்தபடியே நின்றாள். அம்மாவின் முகத்துக்கு கவலை தோதுப்படாது. அவளுடைய கண்களில் என்றுமில்லாத சோகம் கப்பியிருந்தது. ஐந்து சதத்திற்கு பத்து எலுமிச்சம்பழம் சந்தையிலே விற்ற காலமது. ஆனாலும் அம்மாவுக்கு அந்த மரத்தில் அப்படி ஒரு மோகம். அதை எப்படியும் காய்க்க வைத்துவிட வேண்டும் என்ற பிடிவாதம்.
அதற்கு முதல் நாள்தான் செம்பட்டையன் வந்து மண்ணைப் பிரட்டிக் கொத்தி, தண்ணியும் பாய்ச்சி விட்டிருந் தான். மலட்டு மரங்களுக்கே உரித்தான ஒருவித அலட்டலோடு அது நின்றுகொண்டிருந்தது. அம்மாவுக்கு சலிப்பாக வந்தது. இடுப்பிலே கையை வைத்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

Page 21
36. எலுமிச்சை
அம்மாவின் நிறமே எலுமிச்சம்பழ நிறந்தான். அவள் அப்படி அண்ணாந்து பார்க்கும்போது நெற்றியில் இட்ட குங்குமத்தின் ஒரு துளி மூக்கிலே ஒட்டிக்கொண்டு இருந்தது. அது ஒரு சிவப்புக்கல் மூக்குத்திபோல அழகாகத் தெரிந்தது. அம்மா அந்தக் கணம் என்ன நினைத்தாளோ, கனத்த பெருமூச்சொன்று வெளியே வந்தது.
அம்மா அப்படி கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. அந்த மரத்தின் விதியை மாற்றப் போகும் ஒரு சம்பவம் சீக்கிரமே அங்கே நடப்பதற்கு இருந்தது. அப்போது அது அம்மாவுக்கும் தெரியவில்லை; எனக்கும் தெரியவில்லை; மரத்துக்கும் தெரியவில்லை.
எனக்கு கண்ணில் எண்ணெய் வழிந்து எரிந்துகொண்டி ருந்தது. நான் அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தபடியே இருந்தேன். அம்மா இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அந்த மரத்தைப் பார்த்தபடியே இருந்தாள்.
அப்போதுதான் அது நடந்தது. எங்கள் வேலைக்காரப் பெட்டை இளைக்க இளைக்க ஓடி வந்தாள். 'அம்மா, வாருங்கோ, வாருங்கோ, சுறுக்கா வாருங்கோ. விதானை யாரை நாய் கடிச்சிட்டுது' என்று கூக்குரலிட்டாள்.
எங்கள் ஊரில் நாய் கடிப்பது என்பது சர்வ சாதாரணம். நுளம்புக்கடி, மூட்டைக்கடி போலத்தான் இதுவும். எனக்கு எட்டு வயது முடிவதற்கிடையில் நான் மூன்றுதரம் நாயிடம் கடி வாங்கியிருக்கிறேன். ஆனால் இதை எங்கள் வகுப்பில் சொல்லுவதற்கு வெட்கம். என்னோடு படிக்கும் கூட்டாளிகள் பற்பனும், கிட்ணனும் இரணை வாழைப்பழம்போல ஒட்டிக் கொண்டு திரிவார்கள் பற்பன் கறுத்து மெலிந்துபோய் இருப்பான்; கிட்ணனோ இரண்டு ஆட்டில் ஊட்டிய குட்டிபோல தளதளவென்று இருப்பான். இந்தக் கிட்ணனுக்கு எட்டு

அ. முத்துலிங்கம் 37
தடவையும், பற்பனுக்கு பதினாலு தடவையும் நாய் கடிச்சிருக்கு. நாங்கள் எங்கள் விழுப்புண்களை ஆளுக்கு ஆள் காட்டி மகிழ்ந்திருக்கிறோம்.
நாய்க்கடிக்கு வைத்தியமும் அப்படித்தான். நவசியரிடம் தான் போவோம். அவர் மந்திரித்துக்கொண்டே பச்சிலைச் சாறை தலையிலே தேய்த்து நடு உச்சி மயிரையும் மூன்றுதரம் இழுத்துவிட்டு, பச்சிலையையும் கடிவாயில் கட்டிவிடுவார். அவ்வளவுதான்.
என்னைப்போல ஒரு மகாசாது உலகத்தைப் பிரட்டிப் போட்டாலும் கிடைக்காது. மற்றவர் சோலிக்கு போனதில்லை. அப்படிப்பட்ட என்னை மடக்க கண்ணகி ஒரு தந்திரம் செய்தது.
வழக்கம்போல மருந்துச் சிரட்டையை எடுத்துக்கொண்டு முலைப்பால் வாங்கிவர கிளம்பினேன். அழகம்மாக்கா வீட்டுக்குத்தான் முதலில் போனேன். அங்கே பால் தீர்ந்து விட்டது. உடனே வடிவக்கா வீட்டுக்குத் திரும்பினேன். அது வற்றாத ஊற்று. இருபத்து நாலு மணி நேரமும் பால் பொங்கிய படி இருக்கும். என் தலையை தூரத்தில் கண்டவுடனேயே ரவிக்கையை தளர்த்தி வாசலுக்கு வந்துவிட்டா, வடிவக்கா,
சிரட்டை நிறைய சுடு பால் தளும்ப ஏந்திக்கொண்டு மெள்ளத் திரும்பும்போது கண்ணகி கண்டுவிட்டது. ஒருவித புளகாங்கிதத்தோடு என்னைத் துரத்தத் தொடங்கியது.
கண்ணகிக்கு சிறுவர்களின் பிருட்டச் சதையில் அப்படி ஓர் ஈடுபாடு. அதுவும் எனக்காக இவ்வளவு நாளும் விரதம் காத்திருந்தது. நான் சிரட்டையைக் கடாசிவிட்டு ஒடிப்போய் வேலியில் பாய்ந்து ஏறுமுன் எட்டிக் கடித்துவிட்டது. நான் அழுதுகொண்டே அம்மாவிடம் ஒடிப்போனேன். அம்மா களிசானை இழுத்துப் பார்த்துவிட்டு "ஐயோ! மூன்று பல்லு பதிஞ்சிருக்கு' என்று ஒலமிட்டாள். நான் பட்ட

Page 22
38 W எலுமிச்சை
அவஸ்தையெல்லாம் அந்தக்கணம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது. மூன்று பல் என்றதும் பற்பனைப் பார்த்து புளுகுவதற்கு என்னிடம் ஒரு அபூர்வ விஷயம் கிடைத்ததென்பதில் என் மனம் குதிபோட்டது.
வீரன் கிராமத்து நாய்க்குரிய சகல லட்சணங்களையும் கொண்டிருந்தது. கிடைத்ததைச் சாப்பிட்டு, தானுண்டு தன் வாசலுண்டு என்று கிடக்கும். தூங்குகிற நேரத்தில் தூங்கி விழிக்கிற நேரத்தில் விழித்து காவல் கடமைகளைச் சரிவரச் செய்யும். தன் குல ஆசாரம் தவறாமல் அவ்வப்போது தெருச் சண்டைகளில் கலந்துகொள்ளும். மற்றும்படி, ஆட்களைக் கடித்ததென்பது அதன் பயோடேட்டாவில் கிடையாது.
இப்படிப்பட்ட வீரன் விதானையாரைப் போய் கடித்து விட்டது. இப்ப இரண்டு நாளாய் அது சுரத்தில்லாமல்தான் இருந்தது. சும்மாட்டுத் துணிபோல சுருண்டு சுருண்டுபோய் கிடந்தது. மயிலை நிறக் கண்கள் மஞ்சளாகிவிட்டன. பெரிய சிரமத்தோடு தன் பாரிய உடம்பை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டுதான் அது நடந்தது.
பள்ளிக்கூடத்தில் என் யோசனை முழுக்க வீரனைப் பற்றியே இருந்தது. ரத்தினேஸ்வரி அக்காவுக்கு அது தெரியாது. ஒரு சதக்காசு போல வட்டமான முகம். அவ என்றால் இடைத்தொடர் குற்றியலுகரம் பற்றி இடைவிடாது உருவேற்றிக் கொண்டிருந்தார். 'என் சொல்லை ஒருபோதும் தட்டாதே! என் வாசக்கட்டி எதற்காக விதானையாரைப் போய் கடித்தது. அதற்கு ஏதாவது நடந்துவிடுமோ? என்று ஒரே பயமாக இருந்தது. அப்பொழுதே ஒடிப்போய் வீரனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும்போல பட்டது.
நான் பயப்பட்டது சரிதான். நான் திரும்பி வந்தபோது எங்கள் வீட்டுப் படலையில் ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது.

அ. முத்துலிங்கம் 39 எனக்கு துணுக்கென்றது. எங்களுடைய ஐயா, நவசியர், சிவப்பிரகாசம், வல்லியர், சிவக்கொழுந்து என்று முக்கியமான வர்கள் எல்லாம் சேர்ந்துவிட்டார்கள். அம்மா காத்திருந்து என்னுடைய கையைப் பிடித்து திண்ணைக் குந்தில் தூக்கிவிட்டாள்.
நாய்க்கு விசர் பிடித்துவிட்டதாம். அது கடித்தால் ஆட்கள் சாவது நிச்சயமாம். என்னைக் கிட்டப் போக வேண்டாம் என்று அச்சுறுத்தி வைத்தார்கள்.
அப்போதுதான் நான் வீரனைப் பார்த்தேன். அது வேலி யோரத்தில் நின்றுகொண்டிருந்தது. தலை தோளுக்குக் கீழே தொங்கியது. இரைத்து, இரைத்து குலைத்தது. வால் கால்களுக்கிடையில் சுருண்டுவிட்டது. நாக்கைத் தொங்கப் போட்டபடி நிலை குத்தாமல் பார்த்தது. வீரன் போலவே. இல்லை. நாலு நாளில் குருக்கடித்த வாழைபோல உருத்தெரியாமல் மாறிவிட்டது.
ஊர் முழுக்க இந்தப் புதினம் பரவிவிட்டது. அப்பொழுது பறவைக்காவடி எடுத்ததுபோல பறந்துவந்தார் பற்பனின் அப்பா. இவர் பாட்டு வாத்தியார். சங்கீத ஞானம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் வீட்டுக்கு வீடு 'வரவீணாவை' பிரபலப் படுத்தி வரலாறு படைத்தவர். ஆரபி ராகத்தில் அளவில்லாத பக்தி. எப்பவும் அதை வெளியே விடாமல் வாய்க்குள் வைத்து முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். ஏகப்பட்ட குஷி பிறந்துவிட்டால் மட்டும் வாயால் பாடுவார். சொல்லாமல் கொள்ளாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் அங்கேயே நின்று அவஸ்தைப் படுவார். கீழே இறங்கமாட்டார்.
இவ்வளவு கீர்த்தி இருந்தாலும் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர். 'நாய்க்கு விசரில்லை; பாவம், ஏதோ வருத்தம்' என்று முதன்முதலாக துணிந்து நாயின் கட்சியைப் பேசியவர் இவர்தான்.

Page 23
40 எலுமிச்சை
இப்ப கூட்டம் இரண்டாகப் பிரிந்துவிட்டது. வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்தன. நாயைக் கொன்றுவிட வேண்டுமென்பது ஒரு கட்சி. இன்னும் கொஞ்சநாள் வைத்துப் பார்க்க வேண்டுமென்பது அடுத்த கட்சி. ஒருவரும் விட்டுக் கொடுப்பதாயில்லை. அந்தக்காலத்தில் நாங்கள் மூன்றாவது அம்பயருக்கு எங்கே போவது?
அப்பொழுதுதான் எடுப்பான குரலில் நவசியர் பேசத் தொடங்கினார். இப்படியான சங்கதிகளில் எங்கள் ஊருக்கு அவர்தான் "வேதநூலறிந்த மேதகு முனிவர். திருப்பித் திருப்பி ஒத்திக்கை பார்த்த பட்டாளத்து வீரர் நடைபோல அவருடைய சொற்கள் ஒரு நிதானத்துடன் தாளம் தவறாமல் வந்து விழுந்து கொண்டிருந்தன.
இஞ்ச கேளுங்கோ! நான் சொல்லுறதை வடிவாய்க் கேளுங்கோ! நாய் தண்ணியைக் காட்டினால் குலைத்தபடியே இருக்கு; குடிக்குதில்லை. நாக்கு தொங்கிப்போயிருக்கு, தண்ணி கொட்டினபடியே கிடக்கு. நாய்க்கு விசர்தான்; ஐமிச்சமே இல்லை!" என்று அடித்துக் கூறிவிட்டார். விசாரணைக் கூட்டம் முடிவு பெற்றது. மன்னர் பேச்சுக்கு மறு பேச்சுண்டோ?
இப்படியாக எங்கள் வீட்டு நாயின் எதிர்காலத்தை நாயை ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தீர்மானித்தது எனக்கு தர்மமாகப் படவில்லை.
வேலைக்காரப் பெட்டை தோன்றினாள். அவள் அப்படித்தான் சாமி வரம் தர வருவதுபோல திடுதிப்பென்று தோன்றுவாள். தன் கன்னத்தில் விரலை வைத்து தலையை சிறு அசைப்பு அசைத்து என்னைப் பார்த்தாள். நாயை அடிக்க செல்லத்தம்பி வரப்போறான்' என்று மொய் அறிவிப்பு செய்வது போலச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள். பாதகத்தி. w

அ. முத்துலிங்கம் 41
கிராமங்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பேர் வந்துவிடுகிறது. இது எப்படி என்ற பூர்வீகம் யாருக்கும் தெரியாது. மாட்டுக்குச் சரி, குதிரைக்குச் சரி லாடம் அடிப்பதென்றால் சின்னையன்தான்; தென்னை மரத்திலேறி பருவம் தாண்டாத ஆட்டுச்செவிப் பதம் இளநீர் வெட்டுவதென்றால் அதற்கு மாணிக்கன்தான். அந்தக் கலையில் அவனை மிஞ்ச ஆள் இல்லை. விசர் நாயை அடிப்பது என்றால் அது செல்லத்தம்பிதான். அவனுக்கு அப்படி ஒரு கீர்த்தி.
இவர்கள் எல்லாம் எந்தப் பயிற்சி மையத்தில் கற்றுத் தேர்ந்தார்கள். நாய் அடிப்பதில் ஒருவன் கியாதி பெறுவதென்றால் எத்தனை நாயைக் கொன்றிருக்கவேண்டும்? செல்லத்தம்பி பின்னுக்கு கைகளைக் கட்டியபடி நிலம் அதிராமல் நடந்துவந்தான். அவன் புஜத்தின் தசைகள் திரண்டு திரண்டு கிடந்தன. தோளிலே போட்ட துண்டு முதுகிலே இருந்த வாள் வெட்டுக் காயத்தை முற்றிலும் மறைக்க முடியாமல் கிடந்தது.
வீரனை இப்ப பிடித்துக் கட்டிவிட்டார்கள். கழுத்திலே இரண்டு சுருக்கு கயிறு, ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டி ருந்தது. மற்றது ஒரு வ்ேலிக் கதியாலில். வீரன் கால்களைப் பரப்பிக்கொண்டு நடுவிலே அசையமுடியாமல் நின்றது. ஏதோ அனர்த்தம் நடக்கப் போகிறது என்று அதன் உள்ளுணர்வுக்கு தெரிந்திருக்கவேண்டும். ஒரு சத்தம் இல்லை; முனகல் இல்லை. சுற்றியிருந்த அந்த முகங்களில் ஒரு சிநேகமான முகத்தை அது தேடியிருக்கவேண்டும். மஞ்சள் பழுத்த அந்தக் கண்கள் பரிதாபகரமாக என்னை ஒரு கணம் பார்த்து மீண்டன.
சுயம்வரத்துக்கு ஆள்விட்டு அழைத்ததுபோல கூட்டம் சேர்ந்துவிட்டது. ஊர் இளந்தாரிகள் எல்லாம் நெருக்கி

Page 24
42 எலுமிச்சை
அடித்தார்கள். நாய் அடி என்பது ஒவ்வொரு நாளும் பார்க்கக் கிடைக்கிற சங்கதியா? செல்லத்தம்பி மேல் துண்டை ஒரு மரக்கிளையில் மாட்டிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டினான். இரும்புப் பூண்போட்ட உலக்கையை யாரோ அவன் கையில் கொடுத்தார்கள். அதை ஒற்றைக் கையால் பின்னால் பிடித்தபடி வியூகத்தை உடைத்துக்கொண்டு நாய் இருந்த திக்கில் பராக்குப் பார்த்தபடி மெள்ள அடிவைத்து நடந்தான்.
எனக்கு அந்த நேரம் பச்சாத்தாப உணர்விலும் பார்க்க இந்த நாய் அடி எப்படி இருக்கும் என்ற ஆவல் ஒரு கணம் தோன்றியதை நினைத்து வெட்கமாக இருந்தது.
கிட்டவந்த செல்லத்தம்பி காலை அகட்டி வைத்து வாகாக நின்றுகொண்டு கண் இமைக்கும் நேரத்தில் உலக்கையைச் சுழற்றி நாயின் மண்டையில் ஒரு போடு போட்டான். 'ங்கா’ என்ற ஈனமான கதறல் ஊர் முழுவதும் கேட்டது. நாய் சுருண்டுபோய் விழுந்தது.
நான் கொஞ்சம் கிட்டவந்து பார்த்தபோது அதன் தலையிலே ஒரு சொட்டு ரத்தம் சிந்தியிருந்தது. கபாலம் வெடித்து வெள்ளைக் களிபோல மூளை ஒடிக்கொண்டிருந்தது. கண்கள் அகலமாகத் திறந்துபோய் கிடந்தன. நாயின் பற்கள் ஆவென்று என்னைப்பார்த்து சிரித்தன. என்னுடைய இருதயம் மெதுவாகக் கிளம்பி தொண்டைக் குழியை வந்து அடைத்துக் கொண்டது.
செல்லத்தம்பி நாய் அடித்த கதை அட்ட திக்குகளிலும் பரவிவிட்டது. அந்தப் பரிதாபத்தையே எல்லோரும் கதைத்தார் கள். அவன் உலக்கையை எடுத்த விதத்தையும், விசுக்கியதை யும், ஒரேயடியில் நாயை வீழ்த்தியதையும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார்கள்.
ஆட்கள் எல்லாம் போன பிறகு அம்மாவைப் பார்த்து ஐயா என்ன செய்வம்? என்று கேட்டார். அம்மா கண்ணைத்

அ. முத்துலிங்கம் 43
துடைத்தபடி, அந்த எலுமிச்சை மரத்தடியில் தாட்டு விடுங்கோ' என்றாள்.
நாயை அடித்துக் கொன்றுவிட்டாலும் ஊரில் விதானை யாருக்கு என்ன நடக்குமோ என்ற பயம் இருந்துகொண்டு தானிருந்தது. ஊர்ச்சனங்கள் எல்லாம் அடிக்கடி போய் இன்னும் இருக்கிறாரா' என்று நோட்டம் பார்த்து வந்தார்கள். விசர் பிடிக்க பதினாலு நாள் ஆகும் என்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். விதானையார் என்னவென்றால் பச்சிலையைக் கட்டிக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டார். வண்டி கட்டி பெரியா ஸ்பத்திரிக்கு போகும்படி சிலர் வற்புறுத்தியும் அவர் தலையைப் பலமாக ஆட்டிவிட்டார்.
சனியோட சனியெட்டு, ஞாயிறு ஒன்பது என்று பதினாலு நாள் கழிந்துவிட்டது. ஒன்றுமே நடக்கவில்லை. விதானையார் என்றால் மழைக்கு வெடித்த மரவள்ளிபோல விளைந்துபோய் இருந்தார். காயம் ஆறின இடம்கூடத் தெரிய வில்லை. முன்புபோல அவர்தன் காரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.
இப்படித்தான் நான் எனது பால்ய காலத்து அத்தியந்த நண்பனை மூடசனங்களின் அறியாமையால் இழக்கவேண்டி நேர்ந்தது. அதனுடைய ஓவென்ற அவலக்குரல் எனக்கு பல இரவுகள் தொடர்ந்து கேட்டன. அதை இழுத்துக்கொண்டு போனபோது மஞ்சள் பூத்த கண்களால் அது என்னை இரந்து பார்த்தது திருப்பித் திருப்பி ஞாபகத்துக்கு வரும். இனி என்ன? அது திரும்பவா போகிறது?
இந்த அநியாயக் கதையில் சொல்லுவதற்கு இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது.
அந்த வருடம் அம்மாவின் எலுமிச்சை மரம் இலை தெரியாமல் பூத்துக் குலுங்கியது. கொத்துக் கொத்தாய்க்

Page 25
44 எலுமிச்சை
காய்த்தது. காலை நேரங்களில் நிலம் முழுவதும் வெளிர் மஞ்சள் பந்துகளாக எலுமிச்சம் பழங்கள் பரவிக் கிடந்தன. பேய்க் காய்ச்சல் என்று சொல்வார்களே, அப்படி அம்மா விழுந்து விழுந்து பொறுக்கினாள். அள்ள அள்ள வந்து கொண்டே இருந்தது. ஆசைதீர ஒரு பெரியசாடி நிறைய ஊறுகாய் போட்டாள், அம்மா.
எல்லோரும் வட்டமாக இருந்து சாப்பிடும்போது அம்மா ஊறுகாயைப் பரிமாறினாள். கையில் எடுக்கும்போதே மணம் தூக்கியது. நடு நாக்கில் புளித்து உள்ளே செல்லும்போது காரமாக தொண்டையில் உரசியது. ஐயாவுக்கு, அம்மாவை லேசிலே பாராட்ட மனம் வராது. அன்று என்னவோ ஐயா, 'ஊறுகாய் அருமையாய் விழுந்திருக்கு' என்றார். எல்லோரும் சப்புக்கொட்டி அதை ரசித்து சாப்பிட்டார்கள்.
ஒருவருக்காவது வீரனுடைய ஞாபகம் வரவில்லை.
女女女

குந்தியின் தந்திரம்

Page 26
46 குந்தியின் தந்திரம்
Tெனத்திலே இருந்து மின்னல் ஒன்று ஒசையில்லாமல் இறங்கியதுபோல குந்திதேவியின் சிந்தனையிலே இந்த யோசனை பளிச் சென்று பூத்தது. இது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த அபூர்வமான யோசனை ஏன் அவளுக்கு முன்பே உதிக்கவில்லை. இத்தனை காலமும் அவளை ஆட்டிவைத்த சிக்கலுக்கு இவ்வளவு இலகுவான தீர்வா என்று அதிசயமாக இருந்தது.
சாலிவாகன தடாகத்தின் அருகில் குந்தி தன் குமாரர்களோடு ஒரு வருடம்வரை தங்கியிருந்தாள். இங்கே தான் பீமன் இடும்பனைக் கொன்றான். அவனுடைய தங்கை இடும்பியோ பீமனுடைய யெளவன உடல்வாகைக் கண்டு மயங்கி காதல் கொண்டுவிட்டாள். குந்தியிடமே வந்து தன் காதலை பிரகடனம்செய்து பீமனை யாசித்தாள். பீமன் என்றால் தரையைப்பார்த்து காலால் கற்களை உருட்டியவாறிருந்தான். யுதிஷ்டிரனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. தடை சொல்லாமல் அவர்களுடைய விவாகத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டான். அப்போதுகூட குந்திதேவிக்கு இந்த உபாயம் தோன்ற வில்லையே!
இந்த ஏகசக்கிரபுரத்து வாழ்க்கையும் அவர்களுக்கு அலுத்துவிட்டது. அதிலும், மறைவாக வாசம் செய்யும்போது ஒரே இடத்தில் இருப்பது புத்திசாலித்தனமாகாது. ராஜ குமாரர்களாகப் பிறந்துவிட்டு பிராமண வேஷம் தரித்து, பிகூைடி பாத்திரம் ஏந்தி எவ்வளவு காலத்துக்குத்தான் அவர்கள் நகரத்தை சுற்றி வலம் வருவார்கள். குந்தியின் குமாரர்கள் எல்லாம் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.
அதிலும் பீமனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பகாசுரன் இருக்குமட்டும் பீமன் அவனை வதம் செய்வதிலேயே குறியாய் இருந்தான். இப்போது பகாசுரனும் இறந்துவிட்டான்;

அ. முத்துலிங்கம் 47
பிகூைடியும் குறைந்துகொண்டே வந்தது. உணவு பற்றாமல் பீமன் மெலிந்து வருவதைப் பார்க்க குந்திக்கு வருத்தமாக இருந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த சமயத்தில் பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் தன் மகள் திரெளபதிக்கு சுயம்வரம் நிச்சயித்துவிட்டதால் பிராமணர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அங்கே போய்க் கொண்டிருந்தார்கள். ஐந்து தூண்களைப்போல இருந்த குந்தியின் குமாரர்களும் இந்த சுயம்வரத்தில் கலந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். ஆனால் இதை எப்படி குந்தியிடம் சொல்வார்கள்?
லெளகீகம் அறிந்த குந்திதேவி தன் நுண்ணிய மதியினால் இதை உணர்ந்து கொண்டாள். காம்பிலிய நகரத்துக்கு செல்லுவதற்கு அனுமதி தந்துவிட்டாள். பாண்டு குமாரர்களுக்கு உற்சாகம் கரைகொள்ளவில்லை. எல்லோரு மாக பலநாள் பயணித்து சுயம்வர நகரத்துக்கு வந்து சேர்ந்தார் கள். அங்கே ஒரு குயவனுடைய யாகையில் இடம் செய்து கொண்டு தங்கினார்கள்.
சுயம்வரம் நாளன்று பாஞ்சால தேசம் கோலாகலமான அலங்காரங்களுடன் காட்சியளித்தது. ஆடவரும், பெண்டிரும் பட்டாடைகள் புனைந்து தங்கள் தங்கள் வீட்டு பண்டிகைபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். குந்தியினுடைய ஐந்து குமாரர்களும் பிராமண வேடம் பூண்டு சுயம்வர மண்டபத் துக்கு சென்றுவிட்டார்கள். குயவனும், மனைவியும் கூட போய்விட்டார்கள். குந்திமாத்திரம் வீட்டிலே தனியனாக இருந்தாள்.
அவள் மனம் சஞ்சலத்தில் மீண்டும் உழன்றது. வெகுகாலமாக மனதிலே கனன்று கொண்டிருந்த தீ இப்பொழுது சுவாலைவிட்டு எழும்பியது. அவளுடைய தீராத

Page 27
48 குந்தியின் தந்திரம்
விசனத்துக்கு விரைவிலேயே விமோசனம் கிடைக்கக்கூடும்! தன் குமாரர்களின் பெளருஷத்தில் வைத்த நம்பிக்கை வீண் போகாமல் அவர்கள் வெற்றி வீரர்களாகத் திரும்புவார்க ளென்று காத்திருந்தாள்.
என்னதான் பிராமண வேடம் போட்டாலும் கூடித்திரிய சின்னங்களை முற்றாக மறைக்க முடியுமா! சிங்கம் போன்ற நடையும், நிமிர்ந்த நெஞ்சும், தரை பார்க்காத தலையும் அவர்கள் ராஜவம்சத்தை சேர்ந்தவர்கள் என்று கட்டியம் கூறிவிடுமே! தோள்களில் நாண் உறைந்த காய்ப்புகளையும், பெரு விரல்களின் தடிப்புகளையும் எங்கே கொண்டுபோய் மறைப்பது? குந்தி மறுபடியும் விசாரத்தில் ஆழ்ந்தாள்.
அர்ஜூனனுடைய வீர்யம் உலகப் பிரசித்தமானது. மன்மதன் கரும்பு வில்லை எடுப்பதுபோல் அர்ஜூனன் தனுசை அநாயாசமாக வளைத்து, நாண் ஏற்றி, ஐந்து சரங்களையும் செலுத்தி மத்சயத்தை வெட்டி விடுவான் என்பதில் அவளுக்கு ஐயமேயில்லை. சுயம்வரத்திற்கு காத்திருக்கும் திரெளபதி நெருப்பிலே பிறந்தவள். துருபதராஜன் செய்த பெரும் தவத்தினால் அர்ஜூனனை மணப்பதற்கென்றே அவதரித்தவள். தேவர்களுடைய அந்த வாக்கு பொய்யாகிப் போய்விடுமா? அங்கே வந்து கூடியிருக்கும் அரசர்கள் ஒரு பிராமணன் திரெளபதியை அபகரிப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பார் களா? பீமன் தன் தோள் வலிமையைக் காட்டாமல் வரமாட்டானே!
இப்பொழுதெல்லாம் பீமனை நேரிலே பார்க்க அவள் கண்கள் கூசுகின்றன. நாணம் வந்து விடுகிறது. ஏதோ பெரும் குற்றம் புரிந்தது போல அவள் மனம் படபடக்கிறது.
அரக்கு மாளிகையில் இருந்து அவர்கள் தப்பி சுரங்க வழியாக வெளியேறி விட்டார்கள். பீமன் குந்தியை முதுகிலும்,

அ. முத்துலிங்கம் 49
நகுல சகாதேவர்களை இடையிலும், யுதிஷ்டிரனையும், அர்ஜூனனையும் தோளிலும் வைத்துக்கொண்டு புயல்போல வேகமாக நடக்கிறான். எங்கே துரியோதனனுடைய ஒற்றர்கள் பார்த்து விடுவார்களோ என்ற கவலை வேறு. விதுரன் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்திருந்த படகுக்காரன் மூலம் கங்கையைக் கடந்து தென்திசையாக செல்கிறான். எண்பது யோசனை தூரம் கடந்தாகிவிட்டது. பயங்கரமான காடு. களைப்பே அறியாத பீமனுக்கு அப்போது களைப்பு மேலிட்டுவிடுகிறது. சிறிது இளைப்பாறலாம் என்று பார்க்கிறான். பீமனுடைய வலிமையில் நம்பிக்கை வைத்து அவனுடைய தாயும், சகோதரர்களும் நிச்சிந்தனையாக உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்
பீமன் தன் பிதாவை மனத்தினால் தியானித்தான். வாயுதேவன் அப்போது மென்தென்றலாக உருவெடுத்து வந்து பீமனை ஒரு குழந்தையை அணைப்பதுபோல வாஞ்சையுடன் அனைத்துக்கொண்டான். பீமனுடைய தேகம் பரவசமானது. ஒருவித புத்துணர்ச்சி வந்து புதுப்பலத்துடன் பிரகாசித்தான்.
வாயுதேவன் தான் வந்தகாரியம் முடிந்து திரும்பும்போது குந்திதேவியைப் பார்த்தான். அவள் அழகுற ஒரு மரத்தடியில் தன்னை மறந்து சயணித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குறையாத செளந்தர்பத்தில் தடுமாறிய வாயு அடக்கம் இழந்து அவளை இறுக்கத் தழுவிவிட்டான். எல்லாம் ஒரு கணம்தான். குந்திக்கும் பழைய ஞாபகம் வந்து ஒரு நொடிப்பொழுது அந்த ஸ்பரிச இன்டத்தில் தன்னை இழந்துவிட்டாள். வாயுதேவன் மறைந்துவிட்டான்.
கண்களைத் திறந்தபோது அவள் முன்னால் பீமன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் என்று கில்லாத ஓர் அருவருப்பு. குந்திதேவிக்கு அவன் முகத்தை

Page 28
50 குந்தியின் தந்திரம்
நிமிர்ந்து பார்க்கக்கூட கூச்சமாக இருந்தது. தலையைக் குனிந்து ரகஸ்யமாக தன்னைக் கடிந்துகொண்டாள்.
சொந்த மகனையே நேருக்கு நேர் பார்க்க முடியாத படிக்கு அவமானமாக இருந்தது. மனத்திலே பெரும் சுமை யொன்று எறி உட்கார்ந்து கொண்டது. துரியோதனாதியரும், சிசுபாலனும் மற்ற அரசர்களும் அவளைத் தூற்றுவதை அவள் அறியமாட்டாளா? முறையற்ற முறையிலே கர்ப்பம் சுமந்தவள் என்று அவளை தூஷிக்கிறார்களே! முறைகேடாக பிறந்த குமாரர்களுக்கு எப்படி ராஜ்யம் சித்திக்கும் என்று குதர்க்கம் பேசுகிறார்களே! திருதராட்டினன் பிறந்த முறையை மறந்து விட்டார்களா?
இந்த அற்புதமான யோசனையை பரீட்சித்துப் பார்க்கும் நேரம் நெருங்கிவிட்டது. சிறு பெண்ணாயிருந்த போது துர்வாச முனிவர் உபதேசித்த மந்திரத்தை பரீட்சித்து சூரியனிடம் ஒரு மகவைப் பெற்றவள். நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு கவச குண்டலத்தோடு ஜொலித்த அந்தக் குழந்தையை ஒரு பேழையிலே வைத்து ஆற்றிலே அனுப்பியவள். அந்த ரகஸ்யம் அவள் மனத்தின் அடியிலே மிகவும் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டுக் கிடந்தது. அப்படித்தான் இந்த சோதனையும் அவள் மனத்தின் ஆழத்தில் புதைந்துபோய்விடும்.
பாண்டுவுடன் குந்தியும், மாத்ரியும் வனத்திலே வாழ்ந்த காலம். ஒரு ரிஷியும் அவர் பத்தினியும் காட்டிலே மான் உருவம் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதை அறியாத பாண்டு அம்பை எய்து ரிஷியைக் கொன்றுவிட்டார். அந்த ரிஷி இறக்குமுன் பாண்டு தன் மனைவியுடன் சேர்ந்தால் தட்சணமே அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று சபித்துவிட்டார்.
பாண்டு மனம் உடைந்துபோனார். திரும்பவும் நகரத்துக்கு போகாமல் வனத்திலேயே மீதி நாட்களையும்

அ. முத்துலிங்கம் 51
தவத்திலே கழிப்பது என்று தீர்மானிக்கிறார். இப்படியே காலம் போகிறது. மூன்று வருடங்கள் ஓடி விடுகின்றன.
திடீரென்று பாண்டுவுக்கு தான் புத்திரபாக்கியம் இல்லாமல் இறந்துவிடுவோமென்று வருத்தம் ஏற்படுகிறது. சந்ததியைச் சிருஷ்டிக்காமல் இறப்பவன் நரகத்துக்கு போவான் என்ற வாக்கு பாண்டுவை இரவும் பகலுமாக வதைக்கிறது. இந்த வேதனையில் பாண்டு பலநாட்களாக வருந்துகிறான். இறுதியில் ஒரு நாள் குந்தியிடம் தன் யோசனையை வைக்கிறான். ஒரு ரிஷி மூலம் தனக்கு ஒரு மகவைப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறான். குந்தி நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுகிறாள். பாண்டு திரும்பத் திரும்ப யாசிக்கிறான். அப்படியும் குந்தியின் மனத்தை அவனால் தளர்த்த முடிய வில்லை. м
ஒருநாள் பாண்டு படும் வேதனையை குந்தி பார்த்தாள். அவனுடைய துயரத்தை அவளால் தாங்க முடியவில்லை. இறுகியிருந்த அவளுடைய மனது இளகிவிட்டது. பல வருடங் களுக்கு முன்பு துர்வாசர் தனக்கு உபதேசித்த மந்திரத்தைப் பற்றி பாண்டுவிடம் கூறினாள். பாண்டுவின் மனம் மீண்டும் துளிர்த்தது.
பாண்டுவின் ஆலோசனைப்படி தர்மதேவனை வேண்டி குந்தி ஒரு மகவைப் பெற்றாள். தர்மம் மறு உருவம் எடுத்து வந்ததுபோல வந்து பிறந்தவன்தான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகிழ்ச்சியை சொல்ல முடியாது.
ஒரு வருடம் கழிந்தது; பாண்டுவுக்கு மீண்டும் ஆசை. குந்தியினால் மறுக்க முடியவில்லை. இம்முறை வாயு பகவானை வேண்டினாள். வலிமைக்கு ஒர் எல்லையல்லவா வாயு? அப்படிப் பிறந்தவன்தான் பீமன், தர்மதேவனிடம் குந்தி பக்தியுடன் நடந்து கொண்டாள் என்றால் வாயுவின் பலம் காரணமாக அவனை பயத்துடன்தான் சேர்ந்து கொண்டாள்.

Page 29
52 குந்தியின் தந்திரம்
ஆனால் பாண்டுவுக்கு இன்னும் ஆசை அடங்கவில்லை. இந்தமுறை குந்தி இந்திரனை நினைத்துக்கொண்டாள். அகலி கை மேல் காதல் கொண்டவன் இந்திரன்! தேவர்களுக் கெல்லாம் அரசன், குந்திக்கு பெருமையாக இருந்தது. அவனிடம் அளவில்லாத காதலுடன் நெருங்கினாள். அப்படிப் பிறந்தவன்தான் அர்ஜூனன். கண்ணைப் பறிக்கும் வனப்புடன் ஜொலித்தான் அவன்.
கண்டவர்கள் எல்லாம் காதல் கொள்ளும் லட்சணம் கொண்டவன் அர்ஜூனன். அதற்கு சமமான வீரமும் பராக்கிரமும் படைத்தவன். யுதிஷ்டிரனுக்கு வலது கரம் பீமன் என்றால் அவனுடைய இடது கரம் அர்ஜூனன். வஞ்சகமாக இழந்த ராஜ்யத்தை மீட்பதற்கு யுதிஷ்டிரன் இவர்களுடைய
பராக்கிரமத்தைதான் நம்பியிருந்தான்.
அர்ஜூனன் பிறந்த பிறகுகூட பாண்டுவின் ஆசை தணியவில்லை. மீண்டும் குந்தியை வற்புறுத்தினான். ஆனால் குந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டாள். தேவேந்திரனுடன் கூடிய பிறகு அவளுக்கு வேறு தேவர்களை வரிப்பதில் நாட்டமில்லை. அவளே வலிந்து சென்று துர்வாசருடைய மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசித்தாள். அந்த மந்திரத்தின் மகிமையில் மாத்ரிக்கும், அஸ்வினி குமாரர்களுக்கும் பிறந்தவர்கள்தான் இந்த நகுலனும், சகாதேவனும்
அழகு என்று பார்த்தால் சகாதேவனுடைய அழகு யாருக்கு வரும்? எல்லோருக்கும் இளையவன். அவன் நிறமும், தாமரை போன்ற கண்களும் எவரையும் மயக்கிவிடும். அதிலும் மகாபுத்திசாலி. வாக்குவல்லவன். உண்மையைச் சொல்வதற்கு அஞ்சமாட்டான்.
இந்த சகாதேவன் சிறுவனாக இருந்தபோது என்ன கேள்வி கேட்டுவிட்டான்?

அ. முத்துலிங்கம் 53
சதஸ்சிருங்க வனத்தில் குந்தியும் மாத்ரியும் ஐந்து புதல்வர்களுடன் கழித்த அந்த மகிழ்ச்சியான காலம். சிறுவர்கள் ரிஷிகளிடம் பாடம் கற்று வந்தார்கள். அப்பொழுது ஒரு நாள் சகாதேவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். குந்தி அவனை அள்ளி மடியில் இருத்தி 'குழந்தாய்! என்ன நடந்தது? என்று கேட்கிறாள்.
அதற்கு சிறுவன் சகாதேவன் சொல்கிறான்: 'தாயே! என்னால் இந்த ரிஷி குமாரர்களின் பரிகாசத்தை இனிமேலும் தாங்க முடியாது. என் தந்தை யார்? என் உடன் பிறந்தவர்களின் தந்தையார் யார்? யுதிஷ்டிரனுடைய பிதா தர்மதேவன் என்று சொல்கிறார்கள். பீமனுக்கு வாயுதேவனாம், அர்ஜூனனுக்கு இந்திரனாம். எங்கள் பிதாவோ அஸ்வினி குமாரர்கள். ரிஷி குமாரர்களுக்கோ ஒரேயொரு தந்தைதான். எங்களுக்கோ பல தந்தைகள்! என்னால் இந்த அவமானத்தை எப்படி தாங்கமுடியும்? எப்பொழுது பார்த்தாலும் அவர்கள் என்னை இம்சித்தபடியே இருக்கிறார்கள்.
குந்தியினால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் முகம் தரை பார்த்தது. கண்களில் நீர் கோத்துவிட்டது. அன்று தொடங்கிய இழுக்கு இன்றுவரை இழுத்துக்கொண்டே போகிறது. ரிஷி குமாரர்கள் மாத்திரமா? எல்லோரும்தான் அவளைத் தூற்றுகிறார்கள்.
அவளுடைய துயரம் எல்லாம் இந்த சுயம்வரத்தில் நிச்சயமாக தீர்ந்துவிடும். அதற்குப் பிறகு குந்தியை யாரும் நூதனப் பிறவி போலப் பார்க்க மாட்டார்கள். இழித்துக் கூறார்கள், பாண்டு இருக்கும்போதே பிற புருஷர்களை வரித்தவள் என்று வசைபாட மாட்டார்கள்.
தூரத்திலே கேட்ட அந்த சத்தம் ஒங்கி வளர்ந்து வாசல் வரைக்கும் வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து பெரிய ஆரவாரமும், சனங்களின் சிரிப்பொலியும் கேட்டது. குந்தி

Page 30
54 குந்தியின் தந்திரம்
தான் செய்ய வேண்டியதை இன்னொருமுறை மனதிலே நன்கு தீர்மானித்துக்கொண்டாள். சோதனைக்கான சமயம் வந்துவிட்டது. வாசல் பக்கம் போகாமல் குந்தி நன்றாக உள்ளேபோய் உட்கார்ந்துகொண்டாள்.
வாசலில் இப்போது காலடிச்சத்தம் வெகு துல்லியமாகக் கேட்டது. காதுகளைக் கூர்மையாக்கி கவனித்தபோது வளையல் குலுங்கும் ஒசையும் கேட்டதுபோல இருந்தது.
யுதிஷ்டிரன்தான் பேசினான். வாசலில் இருந்து கொண்டே மகிழ்ச்சி பொங்க உரத்த குரலில் கூறினான். தாயே! பிகூைடி கொண்டு வந்திருக்கிறோம்' குந்திதேவி உடனேயே பதில் கூறவில்லை. இந்தத் தருணத்திற்காக அவள் எவ்வளவு வருடங்கள் காத்திருந்தாள்! சிறு பெண்ணாக இருந்த போது குந்தி சூரியனை வேண்டி கர்ப்பம் திறந்து கர்ணனை பெற்றாள். உலகறிய சுயம்வர மண்டபத்தில் பாண்டுவுக்கு மாலையிட்டாள். சதஸ்சிருங்க வனத்தில் பாண்டுவின் ஆணைப்படி மூன்று தேவர்களை வரித்து பிள்ளைகளைப் பெற்றாள்; எல்லாமாக அவளுக்கு ஐந்து புருஷர்கள்.
மனதைத் திடப்படுத்திக்கொண்டு குந்தி யுதிஷ்டிரனுக்கு பதில் கூறினாள்.
'என் குமாரர்களே! பிகூைடி கொண்டு வந்திருக்கிறீர் களா? வழக்கம்போல ஐவரும் பங்கு போட்டுக்கொள்ளுங்கள். தாயாருடைய வாக்கை தேவவாக்காக எடுத்துக் கொள்ளும் பாண்டவர் ஐவரும் திரெளபதியை தங்கள் மனைவியாக ஏற்றுக்கொண்டனர்.
குந்தி தன் மனத்திற்குள்ளே மெல்ல நகைத்துக் கொண்டாள். இனிமேல் யாரும் அவளை ஓர் அவச்சொல்

அ. முத்துலிங்கம் 55
சொல்லப்போவதில்லை. நிம்மதியான, பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியே வந்தது.
பி.கு. நான் காலையில் எழுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பே என் மனமானது எழுந்துவிடும். எழுந்து எனக்காகக் காத்திருக்கும். இந்த மனம் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இது அன்றாடம் நடக்கும் சங்கதி
இப்படியான ஒரு காலை வேளையில் என் மனம் கேட்ட கேள்விகளில் எனது கற்பனை விரிந்தது. அதில் பிறந்ததுதான் இந்தக் கதை. பாரதம் அறிந்த பெரியவர்கள் மன்னிப்பார்
56ts
大大女

Page 31

அ. முத்துலிங்கம் 57
சிவசம்புவை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கொழும்பு வீட்டுக்கு அப்பாவைப் பார்க்க அடிக்கடி வருவார். மெலிந்த உயரமான உருவம்; முன்னத்தம் பல்லிலே கதியால் போட மறந்ததுபோல ஒரு பெரிய ஒட்டை. கரைபோட்ட வேட் டிதான் எப்பவும் கட்டிக் கொண்டிருப்பார். தலைமுடி கோரைப்புல் போல நட்டுக் கொண்டு நிற்கும். முகம் என்றால் பார்க்க வெகு சாதாரணம் தான.
ஆனால் அவர் கதைக்கத் தொடங்கினால் அந்த முகத்திலே ஏற்படும் மாறுதல் அதிசயிக்க வைக்கும். ஒரு ரோஜா மலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பூப்பதுபோல அவருடைய முகம் விகச்சித்துக்கொண்டே வரும். அபூர்வமான ஒரு புது மனிதராக அவர் மாறிவிடுவார். அவர் குரல் வளமும், சொற்களை உச்சரிக்கும் விதமும் எவரையும் வசீகரித்துவிடும். இப்படியாக ஒரு பரிணாம அழகை நான் வேறு யாரிடமும் பார்த்ததில்லை.
எங்கள் வீட்டின் முன் வளவில் வீதியை ஒட்டியபடி ஒரு வேப்பமரம் இருந்தது. நான் எப்பவும் அந்த மரத்தின் கீழ் இருந்து விளையாடிக் கொண்டிருப்பேன், ஐந்து தலைமுறையாக அந்த மரம் அங்கே இருப்பதாக அம்மா சொல்லுவாள். அவ்வளவு பிரம்மாண்டமான மரம். அதன் கொப்புகளெல்லாம் வளைந்து நாலாபக்கமும் கிளை பரப்பி அடர்ந்து ஆகாயத்தை நிறைத்துக் கொண்டிருக்கும். நான் அண்ணாந்து பார்க்கும் சமயங்களில் சூரியகிரணங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த இலைகளைத் துளைத்து பொட்டுப் பொட்டாக கீழே விழுந்து கண்களைக் கூசச்செய்யும்.
சிவசம்பு என்னைப் பார்க்காமல் ஒருபோதும் திரும்ப மாட்டார். 'சண்டைக்கு வாறியா? திறப்பு தாறியா?" என்று

Page 32
58 வசியம்
சொல்லிக்கொண்டே வந்து என் விளையாட்டிலேயே கலந்து கொள்வார். என்னுடைய மந்திரசக்தியின் மகிமையில் அவர் ஒருவருக்கே பூரண நம்பிக்கை இருந்தது. நான் வேப்பமரப் பொந்திலே ஒளித்து வைத்திருக்கும் என்னுடைய மந்திரக் கோலினால் உயிர் கொடுத்த கிளிகளும், குயில்களும், காக்கைகளும், கருக்குரிவிகளும், நாகணவாய்களும் அந்த மரத்தை நிறைத் திருந்தன. இதை நான் அவரிடம் கூறும்போதெல்லாம் அவர் என்னிடம் மிகுந்த பயபக்தியுடன் நடந்துகொள்வார்.
அவகாசமான சமயங்களில் எனக்கு அவர் கதைகள் சொல்லுவதுமுண்டு. எல்லாம் மந்திர தந்திரக் கதைகள்தான். ஏழு கடல் தாண்டி ராஜகுமாரியை ஒளித்து வைத்திருக்கும் ராட்சசனைப்பற்றியும், ஆயிரம் தலைநாகத்தைப் பற்றியும், ஒரு பனை உயரமான ஒற்றைக்கண் அசுரனைப்பற்றியும் நிறையக் கதைகள் வைத்திருக்கிறார். அமாவாசை இருட்டிலே தனியாகப் போகும்போது பேய்கள் செய்யும் சேஷ்டைகளை தான் எப்படித் தந்திரோபாயங்கள் செய்து முறியடிப்பார் என்றெல்லாம் சொல்லுவார்.
அநேக மந்திரவாதிகளையும், பேயோட்டிகளையும் அவர் நேருக்கு நேர் பார்த்திருக்கிறாராம். மந்திரவாதிகள் இவரை மதிப்பதற்கு காரணம் இவர் ஒரு சக்தி வாய்ந்த பேயை வாலாயம் செய்து வைத்திருப்பதுதான் என்றும் சொல்லுவார். கடும் வெய்யிலில் சைக்கிளில் செல்லும்போது அவர் குடையே பிடிப்பதில்லை. அவர் வாலாயம் செய்த பேய்கள் இவர் சால்வையை தலைக்குமேல் செவ்வடிவமாகப் பிடித்தபடியே வருமாம். இவற்றையெல்லாம் அவர் சொல்லும்போது நான் அடக்கமுடியாத ஆவலுடனும், திகைப்புடனும் வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்.

அ. முத்துலிங்கம் 59
சுருதியை விட்டு விலகிச் செல்லும் பாடகர் திரும்பத் திரும்ப வந்து சுருதியில் சேர்ந்து கொள்வதுபோல சிவசம்புவும் அடிக்கடி வந்து அப்பாவை சந்தித்தார். கடைசியில் ஒருநாள் அப்பாவிடம் நிரந்தரமாக வேலைக்கு சேர்ந்துவிட்டார். தன்னுடைய வாக்கு சாதுர்யத்தினால் அவர் அம்மாவையும் சீக்கிரமே வளைத்துப் போட்டுக்கொண்டார். சமையல் கட்டு வரைக்கும் தங்கு தடையின்றி போய்வருவார். அப்பா வழக்கறிஞர் என்றபடியால் அவருடைய கட்சிக்காரர்களின் கேஸ் விஷயங்களை இவர் கவனித்துக் கொண்டார். அவர் செய்த வேலை என்னவென்று திட்டவட்டமாக எனக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் ஒர் எழுத்தருக்கும், வேலைக்காரனுக்கும் இடைப்பட்ட இடத்தை அவர் நிரப்பினார் என்றே நினைக்கிறேன். அப்பாவின் கட்சிக்காரர்கள் செருப்புடன் உள்ளே நுழைவார்கள். ஆனால் இவருடைய செருப்பு எப்பவும் வெளியேதான் காட்சியளிக்கும்.
நாலுமணிப்பூ இரண்டு மணிக்கே பூத்ததுபோல் ஒருநாள் அதிகாலை எங்கள் வீடு ஒர் அவசரத்துடன் விடிந்தது. ஏதோ கல்யாண வீட்டு ஆரவாரம்போல அது திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. என் நாலு வயதுத் தங்கை கண்கள் பொங்க புன்சிரிப்போடு இருந்தாள். அவள்தான் நாயகி, சந்தோஷம் தாங்க முடியாமல் நெளிந்தாள்.
அவள் கழுத்திலே போட்டிருந்த தங்கச் சங்கிலியைக் காணவில்லை. இரவோடு இரவாக யாரோ திருடன் வந்து களவாடிவிட்டான் என்று அம்மா சத்தமாகக் கூவிக் கொண்டி ருந்தாள். சன்னல்களும், கதவுகளும், கூரை முகடுகளும் அப்படி அப்படியேதான் இருந்தன. கள்ளன் எப்படி வந்து போயிருப்பான் என்ற விடை தெரியாமல் எல்லோரும் தவியாய்த் தவித்தார்கள்.

Page 33
60 வசியம்
என் தங்கை போட்டிருந்தது சின்ன விரல் சைஸில் மொத்தமான சங்கிலி. அதில் ஒரு குண்டுப் பதக்கம் வேறு, மாட்டுக்குச் சங்கிலி போட்டு மணி கட்டியதுபோல இவள் இந்தப் பெரிய சங்கிலியின் பாரம் தாங்காமல் குனிந்து கொண்டுதான் நடப்பாள். சங்கிலி இல்லாமல் அவள் கழுத்து லேசாகவும் வடிவாகவும் இருந்தது. அவளுடைய கடைக்கண் புன்சிரிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தான் ஒரு பிரபல வழக்கறிஞரின் மனைவி என்பது ஞாபகம் வந்தவுடன் அம்மா என் தங்கையை முறையாக குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தாள். என் தங்கையோ கமுக்கமாக இருந்தாள். அம்மா அவளை உலுக்கியதும் இது விளையாட்டில்லை என்ற விஷயம் முதன் முறையாக உறைத்தது. ஒற்றைக் கையால் கண்ணைக் கசக்கிக்கொண்டே என்னைப் பார்த்துப் பார்த்து பதில் சொல்ல ஆரம்பித்தாள். அவளுடைய புன்சிரிப்பு இப்போது போய்விட்டது. பதில்கள் ஒன்றுக்கொன்று முரணாக வந்தன.
அந்த நேரம் பார்த்து அப்பா அவள் சகாயத்திற்கு வந்தார். அம்மாவின் குறுக்கு விசாரணை குறுக்காலே தறிக்கப்பட்டது. என் தங்கையோ ஓவென்று அழுதுகொண்டு அப்பாவிடம் ஓடினாள். அம்மா அவளைப் படுக்கையில் போட்டபோது கழுத்திலே சங்கிலி இருந்ததைத் தன் கண்ணாலே பார்த்ததாகக் கூறினாள். சிறிது நேரம் கழித்து அம்மாவுக்கும் தான் சொல்வதில் கொஞ்சம் ஐமிச்சம் வந்துவிட்டது.
அம்மாவின் சந்தேகம் இப்பொழுது வேலைக்காரர்களின் மேல் திரும்பியது. அப்பாவோ வீட்டையும் தோட்டத்தையும் மூலை முடுக்கு விடாமல் தேடும்படி உத்தரவு போட்டிருந்தார். வேலைக்காரர்கள் தங்கள் பேர்களைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டைத் தலைகீழாகக் குலுக்கித் தேடினார்கள். ஒர் இளவும்

அ. முத்துலிங்கம் 6
கிடைக்கவில்லை; நான் எப்பவோ தொலைத்த பொன்வண்டு நெருப்புப் பெட்டிதான் கிடைத்தது.
அப்பொழுதுதான் சிவசம்பு மந்திரவாதியைக் கூப்பிட வேண்டும் என்ற சிலாக்கியமான யோசனையை முன் வைத்தார். அப்பாவுக்கு இப்படியான விஷயங்களில் நம்பிக்கை இல்லை. தீர்க்கமாக மறுத்துவிட்டார். பொங்கல் பானையை சுண்டிப் பார்த்தும், முட்டைய தூக்கிப் பார்த்தும் வாங்கும் அம்மாவோ சிவசம்புவின் மகுடியில் மயங்கி இருந்தார். இந்த மந்திரவாதி இதற்குமுன் செய்த மகத்தான காரியங்கள் எல்லாவற்றையும் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல சிவசம்: விஸ்தரித்தார். மந்திரவாதியின் updated biodata-6ை சமர்பித்தும் அப்பாவிடம் பருப்பு வேகவில்லை.
விரதம் இருந்து பூஜை முடித்து குத்து விளக்கின் ஒளியில் வெற்றிலையில் மைதடவி பார்க்கும்போது இஷ்ட தெய்வம் வந்து களவெடுத்த ஆளைக் காட்டிக் கொடுத்து விடும் என்ற சங்கதியை சிவசம்பு எனக்கு ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் மந்திரவாதியை வீட்டுக்குத் தருவிக்கும் இப்படியான ஒர் அருமையான சந்தர்ப்பம் அப்பா வுடைய முரட்டுப் பிடிவாதத்தால் முடங்கிப் போனது.
அடுத்த நாள். எங்கள் வீட்டில்தான் அவசரத்துக்கு வெற்றிலை கிடைக்காதே! நான் வேப்பமரத்தின் கீழ் இருந்து, பூவரசம் இலையில் அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டுவந்த தங்கச்சியின் பொட்டுச்சிரட்டை மையைப் பூசி, சங்கிலியை மீட்பதற்கு தகுந்த மந்திரங்களை ஒதியபடி இருந்தேன். அந்த நேரம் பார்த்து அம்மா வந்து சலவைக் கூடையில் தங்கச்சியின் உடுப்போடு சங்கிலி மாட்டியிருந்த விவகாரத்தை பறையடித்து சொல்லிவிட்டார். சிவசம்புக்கு நான் வாலாயம் செய்து வைத்த தேவதையின் சக்தியைக்

Page 34
62 வசியம்
காட்டவேண்டிய அருமையான சந்தர்ப்பம் இப்படித்தான் ஒர் இழையில் தவறிப்போனது.
அப்பா ஒரு பேர்போன வழக்கறிஞர். இந்த இந்த வழக்குகளைத்தான் எடுப்பதென்ற கொள்கையில்லை. எல்லாவிதமான வழக்குகளையும் எடுத்து திறமையாக வாதாடி வென்றுவிடுவார். கூர்மையான அறிவும், சாதுர்யமான குறுக்கு விசாரணையும்தான் காரணமென்று அம்மா சொல்லுவாள்.
ஒரு ஒடிப்போன (etopement) கேஸ். அந்தப்பெண் வழக்காட வந்தபோது கோர்ட்டே ஸ்தம்பித்துவிட்டதாம். அவ்வளவு அழகு. அவள் நடந்து வந்தபோது வழக்கு மண்டபமே ஒளிவிட்டு பிரகாசித்ததாம். அவளுடைய சிரிப்பு இதயத்திலே இருந்து முளைத்து வெளியே வந்து விரியும் பூப்போல இருக்கும் என்று அப்பா வர்ணித்தார். நீதிபதி அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில் வழக்கை கவனிக்க வில்லையாம். அந்த வழக்கிலும் அப்பாவுக்கே வெற்றி. அம்மா எரிச்சலுடன் இந்தக் கதையை "சரி, சரி காணும்' என்று அரைவாசியில் நிறுத்தியதாக ஞாபகம்.
அப்பாவுடைய உண்மையான திறமைக்கு சவாலாக ஒரு வழக்கு விரைவிலேயே வந்தது. அது சிவசம்பு மூலமாகவே வரும் என்பதைமட்டும் யாரும் அப்போது கனவிலே கூட நினைத்திருக்கவில்லை.
என் அப்பா எப்பவும் சிரித்தபடியே இருப்பார். அது அவர் சுபாவம். சோகமாக அவர் இருந்த நேரங்கள் மிகவும் குறைவு. அவரைச் சுற்றிவர ஆட்கள் இருக்க வேண்டும். சவடலாகப் பேசி முசுப்பாத்தி கதைகள் சொல்லி ஆனந்தமாகப் பொழுது போக்குவது அவருக்கு நிறையப் பிடித்த கலை,
அம்மா அப்படியல்ல. சூட்சுமமான புத்தி கொண்டள். ஒருவர் பேசும்போதே அவர் அடுத்து என்ன சொல்லப்

அ முத்துலிங்கம் 63
போகிறார் என்பதை ஊகித்துவிடுவாள். அங்கசாஸ்திரம் (body language) என்பது என்னவென்று தெரியாமலே அதைப்பற்றிய எல்லா விபரங்களும் அறிந்து வைத்திருந்தாள். சிவசம்புவுடைய வாக்கு சாதுர்யத்தில் மயங்கியிருந்தாலும் தொடக்கத்திலிருந்து அம்மாவுக்கு அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அவர் கால்களை ஒடுக்கிக்கொண்டு நிற்கும் விதம், நிலம் படாமல் எல்வி நடக்கும் தோரணை, முழங்கால்களை முட்டிக்கொண்டு உட்காருவது எல்லாம் அம்மா அவர் மேல் கொண்டிருந்த எண்ணத்தை வலுவாக்கின.
வேப்பம்பூ உதிர்ந்து நிலம் எல்லாம் மெத்தைபோல ஆகியிருந்தது. நாங்கள் நடக்கும்போது அந்தச் சின்னச் சின்னப் பூக்களெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்ளும். அம்மா நாலு இடங்களில் பாய் விரித்து வேப்பம் பூக்களைச் சேகரித்துக்கொண்டு இருந்தாள் வடகம் செய்வதற்கு. பூ மணம் காற்றிலே பரவி இனிய போதை தந்து கொண்டிருந்தது.
என் தங்கைக்கு மந்திரவித்தை காட்டிக்கொண்டு இருந்தேன். பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது எப்பவும் என் பெட்டியில் சிறு உணவு மிச்சம் வைத்து கொண்டு வருவேன். என் குருவிகளுக்கும் அணில்களுக்கும் போட அணில்களுக்கு சாப்பாடு கொடுத்தபோது அவை என் கைகளுக்கு அருகிலேயே வந்து சாப்பிட்டன; சில சமயம் என் கைகளிலே ஏறிக்கூட விளையாடும்.
பால் காவடியில் கட்டிய மணிகள் கினுங்குவதுபோல பறவைகளின் சப்த ஜாலங்கள் மரத்தை நிறைத்திருந்தன. சிட்டுக்களும், குயில்களும், குக் குறுப்பான்களும், மைனாக்களும் கலகலவென்று தங்கள் தங்களுக்கு விதித்த ஸ்வரங்களை எழுப்பின. இந்தப் பறவைகள் தங்களுக்குள்ளே மட்டும் கதைக்கின்றனவா, அல்லது மற்றப் பறவைகளுடனும் பேசிக்கொள்கின்றனவா? இவைகளுக்கும் மனிதனுக்கும்

Page 35
64 வசியம்
ஏற்பட்ட சாபம் போல் மொழிப் பிரச்சனை உண்டா? இந்த மைனாக்கருக்குத்தான் எத்தனை வார்த்தைகள்! சற்று உன்னிப்பாகக் கேட்டால் அவை கதைப்பது புரிவது போலவே இருக்கும்.
அப்பாவின் அலுவலக அறையின் முன்பு வழக்கமாக காணப்படும் சிவசம் புவின் செருப்பு அன்றைக்கு இருக்கவில்லை. நான் அதைப்பற்றி யோசித்த அந்தக்கணமே வாசல் கதவைத் திறந்து கொண்டு அவர் விறுக்கென்று வெளிப்பட்டார். அவருக்குப் பின்னால் ஒரு வயதான சிங்கள மனுசியும், இளம் பெண்ணும் வந்தார்கள். அந்தப் பெண்ணுடைய சடை மேகத்தைப்போல கறுத்து விரிந்துபோய் அவள் தோள்களைத் தொட்டபடி இருந்தது. செக்கச் சிவப்பாக இருந்தாள். மாமிச பட்சணியா, தாவர பட்சணியா என்று தீர்மானிக்க முடியாதபடி கழுத்தில் கிடந்த சங்கிலியை மென்றLடி காணப்பட்டாள். சிவசம்பு என்னை சட்டை செய்யாமல் அவர்களுக்கு முன்னாலே அடியழித்துக் கொண்டு போனார் இவர் 'வாசலிலே செருப்பைக் கழற்றி விட்டபோது அவர்களும் கழற்றினார்கள்
அன்றிரவு அப்பா அந்த வழக்கு விஷயமாக அம்மாவிடம் சொன்னார். அந்த மனுசியின் கணவன் இறந்து விட்டானாம். அவர்களுடைய சொத்தில் பங்கு கேட்டு எல்லோரும் சண்டை போடுகிறார்களாம். அதை மீட்பதற்குத்தான் அவள் தன் மகளுடன் வந்திருந்தாள். சொத்தை எப்படியும் மீட்காவிட்டால் அவர்கள் நடுத்தெருவில்தானாம்.
இப்படி அவர்கள் அடுத்தடுத்து கேஸ் விஷயமாக வந்தார்கள். சிவசம்புவும் நிலபாவாடை விரித்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தார்; போனார். அம்பாவுக்கு இந்த விஷபம் நெருடியது. இவர் ஏன் இந்த வழக்கில் இவ்வளவு

அ. முத்துலிங்கம் 65
கரிசனை எடுக்கிறார். அவை சொந்த பந்தமும் இல்லை; இவர் தமிழ்; அவர்கள் சுத்தமான சிங்களம். சமயலறை வரைக்கும் படையெடுத்து அம்மாவிடம் தேநீர் வாங்கிவந்து அவர்களுக்கு தன் கையால் கொடுக்கிறாரே!
வெகு சீக்கிரத்திலேயே இந்த மர்மத்துக்கு விடை கிடைத்தது. ஒருநாள் சிவசம்புவின் மனைவி அம்மாவைத் தேடி வந்தார். கறுப்பு உருவம். மூக்கிற்குப் பொருத்தமில்லாமல் பெரிய மூக்குத்தி. அந்த மூக்குத்தியிலும், அதைச் சுற்றியிருந்த தோல் பிரதேசத்திலும் அழுக்கு கணிசமான் அளவுக்கு சேர்ந்திருந்தது. புழுதி படிந்த செருப்பை போட்டுகொண்டு எனக்கு முன்னாலே அவர் உயரமாக நின்று கொண்டிருந்தார்.
நான் என்னுடைய மந்திர வித்தையை அரைகுறையாக நிறுத்தி மந்திரக்கோலை அவர் அறியாதவாறு மரப்பொந்தில் ஒளித்துவிட்டு அவரைப் பின்பக்கமாக அம்மாவிடம் அழைத்துப் போனேன். மந்திரக்கோலை ஒரு நாளைக்கு ஒருமுறைதான் பாவிக்கலாம். மரப்பொந்தில் திருப்பி வைத்துவிட்டால் அதனுடைய சக்தி போய்விடும். இனி அடுத்த நாள்வரை நான் காத்திருக்க வேண்டும்.
அந்த மூக்குத்தி மாமி அழுதழுது கதைகள் சொல்லிக் கொண்டிருந்தபோது அம்மாவும் அது தனக்கு ஏற்கனவே தெரியும் என்ற தோரணையில் கேட்டுக்கொண்டிருந்தாள் மாமிக்கு கண் எல்லாம் சிவந்து முகம் வீங்கியிருந்தது. அம்மா மாமியைத் தேற்றி அப்பாவிடம் கதைப்பதாக உறுதிமொழி கூறி அனுப்பி வைத்தாள். நான் திரும்பவும் கேட் வரைக்கும் கூட்டிக்கொண்டுபோய் விட்டேன். மாமி என் தலையைத் தடவிவிட்டு வீச்சாக நடந்து போனார் அப்படிப் போகும்போது அந்த உடம்பில் இருந்து புறப்பட்ட ஒரு மண்ணெண்ணெய் வாசனையும் கூ வே போனது.

Page 36
66 வசியம்
அப்பா வந்ததும் வராததுமாக அம்மா இந்த விஷயத்தை சாங்கோபாங்கமாக விவரித்தாள். இந்த உரையாடல்களில் மூக்குத்தி மாமி சொல்லாத பல விஷயங்களும் அம்மாவின் ஞானக்கண்ணால் விரிவுபடுத்தி அலசப்பட்டன. அப்பா அதிர்ந்து விட்டார். இருந்தாலும் அவருடைய முகம் அதைக் காட்டவில்லை.
அம்மா சொன்னதின் சாராம்சம் இதுதான். சிவசம்ப இப்போது வீட்டுக்கே போவதில்லை; காசும் கொடுப்பதில்லை யாம். அந்த சிங்கள மனுசியின் வீட்டிலேயே பழியாய் கிடக்கிறாராம். அந்த மனுசியின் மகளோடு சிநேகமாம். அந்தப் பெண்ணுக்கோ இவருடைய வயதில் அரைவாசிதான் இருக்கும் ஆனால் இந்த மன்மதனிடத்தில் மனதைப் பறிகொடுத்து விட்டாளாம்.
அம்மா இந்த விஷயத்தில் பல ஆராய்ச்சிகளை ஏற்கனவே செய்து முடித்திருந்தாள். இந்தப் பெட்டைக்கும் அந்த மனுசனுக்கும் எப்படி இவ்வளவு தீவிரமான காதல் முளைத்தது. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அவர் சமயலறை யில் வந்து அவர்களுக்காக தேநீர் எடுத்து போகும்போது வசியமருந்து போட்டிருப்பார் என்பது அம்மாவுடைய அசைக்க முடியாத ஊகம். மந்திரம், மாந்தரீகத்தில் சிவசம்புவுக்கு உள்ள ஈடுபாடு பற்றி அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும். அப்பா வழக்கம்போல் ஒரு சிரிப்புடன் அந்த விஷயத்தை dismiss u6dorsoof LIT i.
அம்மாவின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகு சிவசம்புவுடன் இந்த விஷயத்தையெல்லாம் கதைப்பதற்கு அப்பா ஒப்புக்கொண்டார். இன்னொருவருடைய சொந்த விவகாரத்தில் தலையிட அப்பாவுக்கு ஒரு தயக்கம் இருந்தது. அம்மாவுக்காக வேண்டா வெறுப்பாக சம்மதித்தார் என்றே நினைக்கிறேன். அப்பா இப்படிப் பயப்பட்டிருக்கத் தேவை இல்லை. அவர் கதைக்க வேண்டிய அவசியம் வரவேயில்லை!

அ. முத்துலிங்கம் 67
வேப்பம்பழக் காலம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். விதம் விதமான பறவைகளும், அணில்களும், குருவிகளும் மரத்தை வந்து மொய்த்துவிடும். இருப்புப் பறவைகள் தவிர வரத்துப் பறவைகளும் உரிமை கொண்டாடி எங்கிருந்தோ எல்லாம் வந்துவிடும். அவற்றில்தான் எத்தனை ஜாதிகள், எத்தனை வண்ணங்கள், எத்தனை உருவங்கள், எத்தனை ஒலிகள். கலவன் பாடசாலைக் குழந்தைகள் போல அந்தப் பறவைகளின் கலகலவென்ற ஆரவாரத்தில் அந்த மரம் ஒரு தொனிக்கூடமாக மாறிவிடும்.
இந்தக்காலங்களில் வரும் விடுமுறை நாட்களை நிறைய அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையில் நான் அதிகாலையி லேயே எழும்பிவிடுவேன். கட்டிப் பிடிக்கலாம் போன்று ஆர்வத்தைத் தூண்டும் மோகனமான வைகறையில் பறவை களுக்கு தப்பிய வேப்பம்பழங்கள் கீழே விழுந்தபடியே இருக்கும். அந்தக் கீச்சல்களுக்கிடையிலும் நான் ஒருநாள் என்னுடைய மந்திரக்கோல் தியானத்தில் இருந்தபோது தோட்டக்காரன் வந்ததையோ, அவனுடைய முகம் பேயைக்கண்டதுபோல வெளுத்துப்போய் இருந்ததையோ கவனிக்கவில்லை.
தோட்டக்காரன் சொன்ன சேதியைக் கேட்டதும் அப்பா அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒன்றுமே பேசவில்லை. அவர் கையிலே இருந்த பத்திரிகை கீழே பொத்தென்று விழுந்தது. முழுசாக ஒருநிமிடம் கழிந்த பிறகுதான் தோட்டக்காரனை இன்னொருமுறை நடந்ததைக் கூறும்படி சொன்னார். அம்மா வார்த்தைகள் இல்லாத ஒரு ஒலியில் ஒவென்று சத்தமிட்டு கண்ணிர் விட்டபடி இருந்தாள். சிவசம்பு முதல்நாள் இரவு தன்னுடைய மனைவி அம்மாவிடம் வந்து புலம்பியதை அறிந்துவிட்டார். அதிலேயிருந்து சண்டைதொடங்கி கடுமையாகி விட்டது.

Page 37
68 வசியம்
உச்சக்கட்டத்தில் ஆத்திரத்தில் கண்தெரியாமல் கைக்கெட்டிய பாண்வெட்டும் கத்தியை எடுத்து மனைவியைக் குத்திவிட்டார். படாத இடத்தில் பட்டு மனைவி இறந்துவிட்டார். சிவசம்பு இப்போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறாராம்.
இந்த வழக்கை அப்பா எடுக்கக் கூடாதென்று அம்மா பிடிவாதமாக இருந்தாள். சிவசம்பு தன்னுடைய மனைவிக்கு செய்த துரோகம் அம்மாவினால் பொறுக்க முடியாததாக இருந்தது. அப்பாவின் கணிப்பு வேறுமாதிரி, ஆத்திரத்தில் அறிவிழந்து செய்துவிட்டார்; வேண்டுமென்று செய்யவில்லை. தூக்கு நிச்சயம். தன்னிடம் விசுவாசமாக வேலை செய்தவரை இப்படிச் சடாரென்று கைவிடுவது மகா பாபம் என்று எண்ணியிருக்கக்கூடும்.
ஆனால் நான் இதுவெல்லாம் அவசியமில்லை என்றே நினைத்தேன். சிவசம்பு வாலாயம் செய்து வைத்திருக்கும் பேய்களின் வல்லமை பற்றி என்னைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்தப் பேய்கள் பெரும் சக்தி வாய்ந்தவை. விரைவிலேயே சிறைக் கதவுகளைத் தகர்த்து அவரை வெளியே கொண்டு வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன்.
இந்த வழக்கு யாரும் எதிர்பாராத ஒரு பரபரப்பை சனங்களிடையே ஏற்படுத்தியது. இனக்கலவரம் முதலாம் ஆட்டம் முடிந்து கொஞ்சம் ஒய்ந்திருந்த நேரம். ஒரு நடுத்தர வயது ஆம்பிளை இருபது வயது சிங்களப் பெண்ணை காதலிப்பதும், அவளுக்காக சொந்த மனைவியையே கொல்வதும் நாளாந்தம் நடக்கிற காரியமா? பத்திரிகைகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கொட்டை எழுத்துக்களில் தலைப்புகள் எழுதின.
அப்பா இதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு புதிசாக புகழ் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்

அ. முத்துலிங்கம் 69
பேப்பர்கள் இப்படி எழுதியதும் வேறு வழி இல்லை என்று ஆகிவிட்டது. எப்படியும் வழக்கை வென்று தன் புகழைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். அரசாங்க தரப்பிற்கு இது ஒரு Open and shut case. ஏதாவது ஒர் அற்புதம் நிகழ்ந்தால் ஒழிய அப்பா இந்த வழக்கில் வெற்றிபெறும் சாத்தியமே இல்லை.
இந்த அவலங்கள் போதாதென்று தோட்டக்காரன் இன்னொரு கெட்டசேதி கொண்டுவந்தான். இவன் தோட்ட வேலை செய்வதிலும் பார்க்க கெட்ட சேதிகள் சேகரிப்பதிலேயே காலத்தை செலவு செய்தான். நான் சமயம் வரும்போது அம்மாவை கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
அன்று நான் படுத்தபோது இந்தக் கவலையே என்னைப் பிடித்து ஆட்டியது. நித்திரை வராமல் நெடுநேரம் உழன்றேன். எப்போது உறங்கினேனோ தெரியாது. ஆழ்கடலின் நிசப்தம் போல் கனவுகள் இல்லாத அற்புதமான துயில். திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. நடுச்சாமம் இருக்கும். அப்பா இன்னும் கண்விழித்து வழக்கு சம்பந்தமாக படித்துக் கொண்டிருந்தார். அம்மா, பாவம்! அவளும் விழித்திருந்தாள், அப்பாவையே பார்த்தபடி
'அம்மா! எங்கடை ரோட்டை அகலமாக்க வேப்பமரத்தை வெட்டப்போகினமாம், உண்மையா?’ என்றேன்.
என்னுடைய குரல் கம்மிப்போய் இருந்தது. அம்மா கொஞ்ச நேரம் பதிலே பேசவில்லை. என் முதுகைத் தடவியபடியே இருந்தாள். பிறகு அம்மா சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது.
'தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான். மரம் வைத்தவன் மரத்தையும் வெட்டுவான்' என்றாள். இந்தப் பதில் எனக்கு சொன்னது

Page 38
70 வசியம்
போலப் படவில்லை. சிவசம்பு மாமாவுக்கு கூறியதுபோலவே நான் உணர்ந்தேன்.
சிவசம்புவின் பேய்களுக்கு சிறைக்கம்பியை உடைக்கும் வல்லமை இல்லையென்ற உண்மை எனக்கு மெதுவாக உறைக்கத் தொடங்கியது. வேப்பம் பொந்துக்குள் மறைத்து வைத்த என் மந்திரக் கோலின் மகிமைகளை இப்போதெல்லாம் என் தங்கச்சிகூட நம்புவதாகத் தெரியவில்லை. சிவசம்பு வெளியே வந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொண்டேன்.
வழக்கு முடிவு நெருங்கிக்கொண்டு வந்தது. எங்கள் வீடு என்றுமில்லாத ஒருவித இறுக்கத்தில் இருந்தது. அப்பா அடிக்கடி இந்த வழக்கை எடுத்த முட்டாள்தனத்தை நினைத்து நொந்து கொண்டார். இதை எடுத்த நாளிலிருந்து மற்ற வழக்குகளெல்லாம் தள்ளி வைக்கப்பட்டன. வருமானம் சரிந்துவிட்டது. இதில் தோற்றால் அவர் இனி தலை நிமிர்த்தவே முடியாது. அப்பாவுடைய எதிரிகள் இந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.
இந்த நாட்களில் அம்மாவைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அப்பா படும் கஷ்டத்தை அம்மாவால் தாங்க முடியவில்லை. அதே சமயம் அழுக்கு மூக்குத்தியுடன் ஆடை குலைந்த அவசரத்தில் வந்த சிவசம்புவின் மனைவியையும் அம்மா அடிக்கடி நினைத்துக் கொள்வாள். அப்போதெல்லாம் அம்மா தன் உள்மனத்தில் என்ன பிரார்த்தித்துக் கொண்டாளோ! யார் அறிவார்?
ஆனால் கோர்ட்டில் நடந்தது எல்லோரையும் அதிசயிக்க வைத்தது. இதை அப்பாவோ, அம்மாவோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அப்பா இதை அம்மாவிடம் விவரித்தபோது எனக்கு சிவசம்புவில் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை மீண்டும் வலுத்தது.

அ. முத்துலிங்கம் 7
அன்று தீர்ப்புக் கூறும் நாள். சிவசம்பு என்றுமில்லாத விதமாக தன்னை விசேஷமாக அலங்கரித்து வந்திருந்தார். மாப்பிள்ளைக் கோலம்; பட்டு வேட்டி, உத்தரீயம். நெற்றியிலே திருநீறு, குங்குமப்பொட்டு என்று கலாதியாக இருந்தார். பார்த்தால் பத்து வயது குறைந்தே காணப்பட்டார். கண்களில் நம்பிக்கையும், முகத்திலே மாறாத புன்னகையுமாக தோற்றமளித்தார். W
அப்பாவுக்கு அவரைப் பார்த்ததும் கதி கலங்கிவிட்டது. இவ்வளவு நம்பிக்கையுடன் இந்த மனுசர் வந்திருக்கிறாரே! ஆயிரம் ஒட்டைகள் உள்ள கேஸ் இது. இவர் என்ன மண்ணுக்கு இப்படி கோயிலில் சதிர் கச்சேரிபார்க்கப் போவது போல வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார்.
அரசாங்கத் தரப்பு வக்கீல் தன் வாதங்களை ஒவ்வொன் றாக வைத்துக் கொண்டு வந்தார். கடற்கரையில் தேடிப் பொறுக்கி ஒவ்வொரு சங்காகக் கோத்து இறுக்கிக் கட்டிய மாலையாக அது இருந்தது. அவ்வளவு நெருக்கமாகவும், இடைவெளியே இல்லாமலும் நேர்த்தியாக வாய்த்திருந்தது.
அப்பா வாதாடும்போது ஒவ்வொரு சாட்சியாக உடைத்துக்கொண்டே வந்தார். எல்லா வாதமும் கடைசியில் வந்து கொலை செய்ய பயன்பட்ட கத்தியிலேயே தொங்கி நின்றது. அங்கேதான் அப்பாவின் வாதம் எதிர்பாராத வகையில் திசை திரும்பியது. எதிர்க் கட்சிக்காரர்கள் திகைத்துப் போய்விட்டார்கள்.
கத்தியிலேயே சிவசம்புவின் மனைவியின் ரத்த வகை இருந்தது; சிவசம்புவின் ரத்த வகையும் இருந்தது. இது தவிர ஒரு மூன்றாவது குரூப் ரத்தமும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சி தெரிந்திருந்தும் சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. அப்பா இந்த ஓட்டையை குரங்குப் பிடியாகப் பிடித்து