கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  போர்ப்பறை  
 

மு. தளையசிங்கம்

 

போர்ப்பறை

மு. தளையசிங்கம்

பகுதி 1

-----------------------------------------------------

போர்ப்பறை

மு. தளையசிங்கம்

------------------------------------------------------

நண்பர்களுக்கு

"இன்றைய நாகரிகத்தின் விளைவு தனி நபர்களுடைய மனதைப் பாதித்து அவர்கள் நல்ல வழியில் சிந்திக்க முடியாமல் செய்துவிட்டதாகும். கலாசாரப் பண்புகள் மறைந்து இயந்திரம்போல் இயங்கும் நிலையை மனிதன் அடைந்துவிட்டான், உடலுழைப்பும், உடற்சுகமும் பெரிதாகிவிட்டது. உள்ளத்தைப்பற்றிக் கவனிப்பார் இல்லை.

" நவீன நாகரிக மனிதன் மகிழ்ச்சியுடன் இல்லை. புதிய பாதையில் நடைபோடத் துணிவு கொண்டவனாகவும் இல்லை. உழைப்பு ஒன்றுதான் அவனுக்கு மிஞ்சியது. இதே நிலை தொடர்ந்து எவ்வளவு நாட்களுக்கு இருக்க முடியும்? சலிப்புமிக்க இந்த வாழ்வே கடைசியில் அவனது முடிவுக்கும் காரணமாகிவிடும். அவனிடம் சாந்தி குடிகொண்டிருக்கவில்லை. அதனால் மகிழ்வுடன் இருக்க இன்னும் அவன் கற்றுக்கொள்ளவில்லை. புதிய வாழ்க்கை முறைகளைக் கண்டுபிடிக்க அவனுக்குத் தெரியாது. இன்றைய நாகரிகத்தின் கடைக்கால் மகிழ்வு ததும்பும் வாழ்வுக்கு விரோதமானது. இந்த அஷ்திவாரத்தின் மீது மகிழ்ச்சி என்னும் மாளிகையை எழுப்புவது எப்படி? புதிய கலாசாரம் உருவானால்தான் இன்றைய மனிதனுடைய உள்ளம் நிறைவு பெறும். பழைய பாதையிலேயே சென்றால் வழி பிறக்காது, இதில் மற்றொரு வருந்தத்தக்க விசயம் புதிய பாதையைப்பற்றி எண்ணுவதை விட்டுவிட்டு, பழைய வழியைப்பற்றியே மனிதன் சிந்தித்துக் கொண்டிருப்பதுதான்".

உலக வரலாறு பற்றி ஆராயும் தன் 'சரித்திர சக்கரம்' என்ற புகழ்பெற்ற நூலில் டாக்டர் ராம்மனோகர் லோகியா இன்றைய மனித குல வளர்ச்சிப் போக்கை ஆராய்ந்தபின் கூறுபவை இவை.

நவீன விஞ்ஞானத்திலும், அது தனக்கு வகுத்துச் செல்லும் பாதையிலும் அபார மோகமும், நம்பிக்கையும் கொண்ட இக்கால மனிதன், அது மெத்த வளர்ந்த மேற்கிலே சீரழிவு துவங்கிவிட்டதைக் காண்கிறான். வளர்ச்சிக்கும் எல்லையுண்டு, சுற்று சூழ்நிலைக் கேடு, அணு ஆயுத ஆபத்து என்ற அலரல் நாளுக்கு நாள் உறத்துக் கேட்க துவங்கிவிட்டது.

இந்த நிலையில்தான் எங்கெங்கும் அதிருப்தியும், அதன் தொடர்பாக மோதல்களும் நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. முற்றி வெடிக்கும் நிலையை நோக்கி வேகமான வளர்ந்து வரும் இந்த நெருக்கடிக்கு நிச்சயம் ஒரு தீர்வு இருந்தே ஆக வேண்டும்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில்- அடுத்த வளர்ச்சி ஒரு புதிய கட்டத்தை, திசை திருப்பதை தருவதாகும் என்றும், சடம், உயிர், மனம் என்று உணர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது என்றும் திரு. தளையசிங்கம் கூறுகிறார்.

அந்த நிலையே, அந்த நிலையை அடைவதே மனித குலத்துக்கு சாசுவதமான விடுதலை தந்து, மனிதனுக்கு சாந்தியையையும், மகிழ்ச்சியையும் தர வல்லது என்று அறிவு பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் புதிய கருத்துக்களை திரு. தளையசிங்கம் நம்முன் வைக்கிறார்.

வரப்போகும் புதிய சகாப்தத்துக்கு பாரத நாடும், காந்தியும், காந்தி காட்டிய சர்வோதயமுமே வழி காட்டிகள் என 50 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி தீர்க்க தரிசனம் போல் பாடினான்:

பாரி லுள்ள பலநாட்டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்க
லுற்றதிங் கிந்நாள் - உலகெலாம் புகழ
இன்ப வளஞ் செறி பண்பல பயிற்றுங்
கவீந்திர னாகிய ரவீந்திர நாதன்
சொற்றது கேளீர்- "புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்,
தர்மமே உருவாம், மோஹன தாஸ
கர்ம சந்திர காந்தி" யென் றுரைத்தான்.
அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும், பிறஇய லனைத்திலுமே
வெற்றி தருமென வேதஞ் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள். இதனாற் படைஞர்தஞ்
செருக்கொழித் துலகி லறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் - விரைவிலே.
(வெற்றி கூறுமின்; வெண் சங் கூதுமின் !)

இந்த நம்பிக்கையையே திரு. தளையசிங்கம் பலபட ஆணித்தரமாக அறிவும் மிளிர தம் கதைகளிலே, கட்டுரைகளிலே கவிதைகளிலே திறம்பட நிலை நாட்டுகிறார்.

அறிவையும், அழகையும் போலவே உண்மை, நேர்மை, சத்தியம் அவர் எழுத்துக்களிலே ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது. அவரது நூலைப் படிக்கும் எவரும் இதை உணரலாம்.

மனித குலத்துக்கு சாந்தியும், மகிழ்ச்சியும் அளிக்க வல்ல ஒரு புதிய கலாசாரம் தோன்றுவதற்கான அடிப்படையைத் தெளிவாகக் காட்டும் தளையசிங்கத்தின் சிந்தனைகள் நம்பிக்கையூட்டுவதாகும்.

புதிய கலாசாரத்தை துவக்கி வளர்க்கும் இயக்கத்திற்கு இனி கலைஞர்களும், இலக்கிய கர்த்தாக்களுமே முன்னணியில் நிற்க வேண்டும். அப்பணியை ஏற்று நடக்க தோன்ற வேண்டிய படைப்பாளிகள் இயக்கத்திற்கு தமிழில் தளையசிங்கத்தின் நூல்கள் அனைத்தும் வெளி வருவது துணைபுரியும் என நம்புகிறோம். தளையசிங்கத்தின் நூல்களை வெளியிட அன்பு கூர்ந்து அனுமதி அளித்த அவரின் சகோதரர் திரு. மு.பொன்னம்பலம் அவர்களுக்கும், மற்றும் அவரது நண்பர்களுக்கும், குறிப்பாக திரு.பத்பனாப ஐயர் அவர்களுக்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.

திரு. தளையசிங்கத்தையும், அவரது முக்யத்துவம் வாய்ந்த அபூர்வமான தனிச் சிறப்புகளையும் தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தவர் திரு. சுந்தர ராமசாமி, திரு.தளையசிங்கத்தின் நூல்களை வெளியிடும் வாய்ப்புக்கு வகை செய்தவர் நண்பர் திரு. கி. ராஜநராயணன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.


சி. கோவிந்தன்,
பதிப்பாளன்.

--------------------------------------------------------

"ஓர் அடி எனக்கு, ஆனால் மனித குலத்துக்கோ
ஓர் பெரும் பாய்ச்சல்"

- நீல் ஆம்ஸ்ட்ரோங், சந்திரனில்
காலடி வைக்கும்போது.


ஓர் அடி

உலகெங்குமுள்ள மாணவர்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றன. ஆனால் யாரும் பிரச்னையின் ஆழத்தைக் கண்டதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்திவரும் மாணவர்களுக்கே அவர்களின் நடத்தைக்குரிய அர்த்தம் பூரணமாகத் தெரிந்ததாய் இல்லை. ஏதோ அவர்களே பூரணமாக அறியாத ஓர் அதிருப்தி அவர்கள் வாழும் இடங்களிலுள்ள சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் அமைப்புக்கு எதிராக அவர்களைப் போராடத் தூண்டி வருகிறது.

அமெரிக்கர் சந்திரனில் இறங்கியுள்ளனர். ஆனால் அதே நாட்டின் சமூக அமைப்பையும் வாழ்க்கைமுறையையும் துறந்து நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் "பீட்னிக்ஸ்", "ஹ’ப்பீஹ்" ஆகியோரின் துறவு சந்திர யாத்திரையைவிட மிக முக்கியமானது என்பதைப் பலரும் அறிவதில்லை. ஒரு காலத்தில் இந்தியாவெங்கும் சமண, பௌத்த, இந்து சந்நியாசிகள் எப்படிச் சமூக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு விலகி உண்மையைத் தேடி திரிந்தார்களோ அதேபோல் இன்று அமெரிக்கர் குறிப்பாக நாட்டின் ஆட்சியையே ஏற்று நடத்தக் கூடிய திறமையும் கல்வியறிவுமுள்ள அமெரிக்கச் சமூகத்தோடு ஓத்தோட மறுத்து புதுயுகத் துறவிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் அதே அதிருப்திதான்.

அதிருப்தி, அப்படிச் சொல்வதுதான் சரி. எல்லாருக்கும் பொருத்தமான பொதுக் காரணமாக அதை மட்டுந்தான் சொல்லலாம். அந்தந்த இடங்களிலுள்ள அமைப்பு ஏற்படுத்தும் அதிருப்தி. அந்த அதிருப்தி முதலாளித்துவ அமைப்புக்கும் சரி, பொதுவுடமை அமைப்புக்கும் சரி ஒத்துப் பொருந்துவதாகவே இருக்கிறது. சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சி உலகெங்கும் காணப்படும் அதே அதிருப்தியின் வெளிக்காட்டல்தான். ஆனால் அங்கு அது ஒழுங்குபடுத்தப்பட்டு அமைப்புக்கு ஏற்ற வகையிலேயே ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறது. மாசேதுங்கின் கெட்டித்தனமே அதுதான். அதிருப்திதானாக வெடித்து அமைப்புக்கு எதிராக மாறிவிடாமல் இருப்பதற்காக அமைப்பே அதை ஆற்றுப்படுத்தி அதன் தாக்குதலுக்குரிய இலக்கையும் காட்டித் தன்னைக் காப்பாற்ற முயன்றிருக்கிறது; அதே அதிருப்தியையே தன் பக்கபலமாகத் திரட்டியிருக்கின்றது: மற்றைய நாடுகளிலுள்ள சமூக பொருளாதார அமைப்புகளை விட மாசேதுங்கின் தலைமையிலுள்ள சீனாவின் பொதுவுடமை அமைப்பு அந்தளவுக்கு யதார்த்தமாக இயங்க முயன்றிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். சமூக அமைப்பின் தேக்கத்துக்கு எதிரான தீவிர வளர்ச்சி மாற்றமே மக்களிடையே இயல்பாக ஏற்படக் கூடிய அதிருப்தியை நீக்கிவிடக்கூடியது என்பதை சீன அரசாங்கம் உணர்ந்து இயங்குவதாகத் தெரியவில்லை. ஆனால் சமூக அமைப்பின் வளர்ச்சி மாற்றம் எதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்? சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் எந்த இலட்சியத்தை நோக்கி வளர்க்கப்படவேண்டும்?

அதை இன்று எந்த நாடும் சீராக உணர்ந்ததாகக் தெரியவில்லை. காந்தி காலத்து இந்தியா அதை உணர்ந்திருந்த அளவுக்கு இன்று எந்த நாடும் அதை உணர்ந்திருப்பதாய்த் தெரியவில்லை. சீனாவும் சரி வேறு பொதுவுடமையைப்பு நாடுகளும் சரி சமூக பொருளாதார மாற்றங்களை சமூக பொருளாதாரக் காணரங்களுக்காகவே கொண்டுவர விரும்புகின்றனவேயொழிய அவற்றுக்கு அப்பால்பட்ட வேறு ஒன்றின் எழுச்சிக்குரிய தளமாக அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவனவாக இல்லை. பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பால்பட்ட உண்மை என்ற ஏதாவது ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. ஆனால் அதை இன்று எந்த நாட்டு அரசாங்கமும் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டு அந்த உண்மையை வெளிக்காட்டும் வகையில் தங்களின் நிர்வாகத்தை நடத்துவதில்லை. ஏற்றுக்கொள்ளும் இரண்டொரு அரசாங்கங்களும் அந்த உண்மையைத் தங்களின் அறியாமை- ஆணவைத்துக்குரிய பூச்சாகவே பயன்படுத்த முயல்கின்றன. மற்றவையோ அப்படி ஒரு உண்மை இருப்பதாக நினைப்பதேயில்லை. ஆனால் அந்த உண்மைக்குரிய தளங்களாக சமூக, பொருளாதார, அரசியல், கலாசார அமைப்பு தீவிரமாக மாற்றியமைக்கப்படாத வரைக்கும் இன்று எங்குமுள்ள அதிருப்தி அடங்கப்போவதில்லை. இன்னும் தீவிரமாக பரவி வளர்ச்சியடையவே செய்யும். சில சமயம் திசை தப்பிப்போய் அழிவையும் ஏற்படுத்திவிடலாம். ஆனால் அந்த உண்மைக்கு அந்த அழிவும் அவசியமாகவே படும். தன்னை வெளிக்காட்ட மறுப்பதோடு தனக்குப் பூரண தடையாகவும் மாறக்கூடிய ஓர் அமைப்பை அது பூரணமாக அழித்துவிடவே செய்யும். அந்த அழிவில் தனக்குரிய சீரான அமைப்பை அதற்க உருவாக்கவும் முடியும்.அந்த உண்மை எது?

அதுதான் சத்தியம். சத்தியமே கடவுள் என்கிறார் காந்தி. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியமேதான், உண்மையேதான். கடவுளை ஏற்க விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை அந்தச் சத்திய நிலையாக எடுத்துக் கொள்ளலாம். பௌத்தர் கடவுளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கடவுளை ஏற்றுக் கொள்வோர் அந்த நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ளத்தயார். கடவுள் இல்லை என்று விவாதிக்கும் பௌத்தரிடம் கடவுளை நம்புவோர் கேட்டுக்கொள்வது இதுதான்: முதலில் நீங்கள் நிர்வாணத்தைத் தேடுங்கள். நிர்வாணத்தை அனுபவித்தபின் கடவுள் இல்லையா இருக்கிறாரா என்ற பிரச்னையே எழாது. அது தேவைப்படாது. நீங்கள் கடவுள் மயமாகவே இருப்பீர்கள், அதுவரைக்கும் உங்கள் நிர்வாணத்தையே சத்தியம் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சத்தியத்தையே, அதன் பல கோணப் பார்வையிலும், நாம் கடவுள் என்கிறோம்!

நிலையான திருப்தியை அளிக்கக்கூடிய நிலை இந்த நிர்வாண நிலைதான், இந்த சத்திய நிலைதான். அப்படி ஒரு நிலை இருக்கிறது என்று ஏற்றுக்கொள்வதுடன் அந்தச் சத்திய நிலை முழுச் சமூகத்திலும் எழுச்சியடைவதற்குத் தளம் அமைக்கும் வகையில் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்பைத் தீவிரமாக மாற்றியமைக்கவும் முயலாதவரைக்கும் அதிருப்தி என்பது பரவலாக நிலவலத்தான் செய்யும். ஆனால் அந்த நிர்வாண நிலை பரவலாக ஏற்பட பின்பும் பரிணாமம் என்பது நின்றுவிடப்போவதில்லை. அதற்குப் பின் அது எடுக்கக்கூடிய பரிணாம வகையையும் திசையையும் இப்போது சொல்லமுடியாது. அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம் ஆகிய தற்போதைய நிலைகளையும் தாண்டி விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம் ஆகிய தற்போதைய நிலைகளையும் தாண்டி விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம் ஆகிய நிலைகளுக்கு மனித குலம் பரவலாககப் பாயும்போது ஏற்படக்கூடிய உருவ, ஞான பரிணாமங்களைப் பற்றி இப்போதே சொல்லிவிடமுடியாது. அந்தவகையில் எதிர்காலப் பரிணாம வளர்ச்சி இருக்கக் கூடிய தாய்த் தெரியும்போது இக்காலப் பொதுவுடமை அமைப்பும் சரி முதலாளித்துவ அமைப்பும்சரி உடனடியாக அடுத்து வர விருக்கும் சத்திய எழுச்சிக்குரிய, பரவலான விஞ்ஞானமய கோச நிலைக்குரிய அமைப்பாக மாறாதவரைக்கும் இப்போது நிலவும் அதிருப்தி நீங்கிவிடப் போவதில்லை. முதலாளித்துவ அமைப்பைவிட பொதுவுடமை அமைப்பு சத்திய எழுச்சிக்கு எதிரான பெருந் தடையாக மாறிவரும் ஆபத்தும் தெரிகிறது. அதன் காரணமாய் சீனாவில் சமூக மாற்றத்துக்குரிய சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருவதுபோல் தெரியினும் அங்குதான் சத்திய எழுச்சிக்கு எதிரான அறியாமையும் அதிகமாக வளர்க்கப்பட்டுவரும் ஆபத்து தெரிகிறது.

எனவே சமூக பொருளாதார மாற்றங்கள் சமூக பொருளாதாரக் காணரங்களுக்காகமட்டும் ஏற்படுத்தப்படுவதால் பிரச்சனை தீரப்போவதில்லை. அவை நிரந்தர திருப்தியை அளிக்கக்கூடிய சத்திய எழுச்சிக்கான சமூக, பொருளாதார மாற்றங்களாக வளர்க்கப்படவேண்டும். ஆனால் இன்று எந்த நாட்டு அரசாங்கமும் அதைத் தெளிவாக உணர்ந்ததாய் இல்லை. இருக்கும் நிலையில் அதிருப்திபட்டு ஆர்பாட்டம் நடத்தும் மாணவர்களும் புரட்சிக்காரர்களும் அரசியல்வாதிகளும் அறிஞர்களுங் கூட பிரச்னையின் ஆழத்தைப் பூரணமாக உணராமல் ஏதோ அறிவுக்கு எட்டாத அடிமன உந்தலுக்கு உட்பட்டவர்களாய் நடந்துகொள்ளும்போது அரசாங்கங்கள் எப்படி அதைத் தெளிவாக உணர்வது?

அதிருப்தி என்பது எப்போதும் இருக்கிறதுதானே? அதை இப்போது மட்டுமேன் சத்திய எழுச்சிக்குரிய அதிருப்தியாய்க் காணவேண்டும்?

அப்படிக் கேட்பது நியாயமானதுதான். ஆனால் அதுவே உயிரினங்களின், குறிப்பாக மனித இனத்தின், பரிணாம வளர்ச்சியில் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சி உச்சத்தையும் அந்த உச்சம் ஏற்படுத்தும் திசை திருப்பத்தையும் அழுத்துவதாய் இருக்கிறது.

சடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச்செல்ல முயல்கிறது, செல்லும் நிலை வந்துவிட்டது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் நிர்வானத்தின், சத்தியத்தின் பூரண பிரவாகம் உட்புக முடியும். இதுவரை தனிப்பட்ட சில ஞானிகள்தான் அதை அனுபவித் திருக்கின்றனர். அவர்களிடம் எழுந்த அந்தச் சத்தியப்பிரவாகத்தை, சத்திய எழுச்சியை, மனிதகுலம் முழுவதும் பரவலாக, சர்வோதயமாக காணமுயலும் கட்டந்தான் இப்போதைய கட்டம். அதனால் இந்தக் கட்டத்தில் ஏற்படும் எந்தவகையான அதிருப்தியையும்-அரசியல், சமூக, கலாசார, பொருளாதார அதிருப்தியையும்- இந்தக் காலக் கட்டத்துக்குரிய பூரணப் பரிணாமத் தேவையின் ஆழம்வரை விரித்துப் பார்ப்பது அவசியமாகிறது. அப்போதுதான் அந்த அதிருப்தியை யார் அதிகமாக அனுபவிக்கிறார்களோ அவர்களே மாற்றத்தைக் கோரிப் போராடத் தயாராய் இருக்கிறார்கள். அதனால் அவர்களிடமே முதலில் இக்காலக் கட்டத்துக்குரிய சத்திய எழுச்சி தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவர்களின் ஒவ்வொரு இயக்கமும் தனக்குரிய பூரணமான அர்த்தத்தைப் பெற்று சந்திய இயக்கமாக மாறவேண்டும். அப்போதுதான் அந்த இயக்கம் இன்று பூரணமாக வெற்றிபெறவும் முடியும். உதாரணமாக நம் ஈழத்துத் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் தாங்கள் நடத்தும் போராட்டத்தையும் சீர்திருத்த முயற்சியையும் தாழ்த்தப்பட்ட தங்களின் சமூக எழுச்சிக்குரிய போராட்டமாகமட்டும் காணக்கூடாது. முழு மனிதகுலத்துக்குமுரிய "ஆலயப்பிரவேச" ப் போராட்டமாகவும் சத்திய எழுச்சிக்குரிய இயக்கமாகவும் தங்களின் தனி முயற்சியை விரித்துக் காணவேண்டும். அப்போதுதான் தன்னால் எடுக்கக்கூடிய பூரண சக்தியைப் பெறவும் தன்னால் அளிக்கக்கூடிய பூரண நற்பலனைத் தரவும் அந்த இயக்கத்தால் முடியும். ஈழத்துத் தமிழர்களின் அரசியல் போராட்டமும் அதேவகையில் தனிப்பட்ட தமிழர்களின் உரிமைப் போராட்டமாகமட்டும் குறுக்கப்பட்டுவிடாமல் தமிழர், சிங்களவர், முழு உலகத்தவர் ஆகிய எல்லாருக்குமுரிய சத்தியப் போராட்டமாகவும், சர்வோதய இயக்கமாகவும் விரித்து நடத்தப்படவேண்டும். அதேபோல் அமெரிக்க நீக்கிரோக்களின் போராட்டமும் உலகத் தொழிலாளர்களின் போராட்டமும் சுதந்திரத்தையும் ஞானத்தையும் சமாதானத்தையும் தேடும் அறிவாளிகளின், கலைஞர்களின் இயக்கங்களும் மாணவர்களின் ஆர்ப்பாட்டமும் இக்காலக் கட்டத்தின் மனிதகுலத்தின் பரிணாமத்தில் வரவிருக்கும் சத்திய எழுச்சிக்குரிய போராட்டங்களாக மாற்றி வளர்க்கப்படவேண்டும்.

காந்தி அதைத்தான் செய்தார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை இந்தியாவுக்குமட்டும் உரிய போராட்டமாகவோ அல்லது வெறும் அரசியல் சுதந்திரத்துக்குரிய போராட்டமாகவோ அவர் காணவில்லை. அவர் அதையே சத்தியத்தின் எழுச்சிக்குரிய போராட்டமாகவும் விரித்துப் பார்த்தார். அப்படியே அதை நடத்தினார். காந்திக்குப் பின்பு எந்த இயக்கமும் சத்திய எழுச்சிக்கு எதிரான இயக்கமாக இருக்கக்கூடாது என்றாகிவிட்டது. சத்திய இயக்கமே, சர்வோதயமே, முற்போக்காகவும் மற்றவை எல்லாம் பிற்போக்காகவும் மாறிவிட்டன.

இந்தப் பார்வைப் பின்னணியிலேயே எனது முயற்சியையும் பொருத்திப் பார்க்க வேண்டும். எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் சிந்தனையாளனுக்கும் இன்றுள்ள பொறுப்பும் பங்கும் பிரமாண்டமானவை. மிக நுணுக்கமான உணர்வும் அகலமான மனவிரிவும் ஆழமான சிந்தனையும் எங்கு இருக்கின்றனவோ அங்கு இக்காலக் கட்டத்குரிய பரிணாம வளர்ச்சியாகிய பரவலான சத்திய உதயத்தின் சமிக்ஞை அலைகள் சீக்கிரமே தட்டுப்படும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அலைகளைத் தெளிவுபடுத்தும் பணியும் அவற்றுக்கு உருவங் கொடுக்கக்கூடிய தனத்தைத் தங்களிடமும் சமூகத்திடமும் உருவாக்கும் பொறுப்பும் அவர்களுக்கேயுரியது. தனிப்பட்ட ஞானிகளை ஒத்த நிலைக்கு முழு மனித குலமும் உயரவேண்டுமானால் இடையில் ஒரு சிறு கூட்டம், அதையடுத்துப் பெருங்கூட்டம் என்ற படிகள் வரவேண்டியிருப்பதும் இயற்கையே தான். முதலில் ஒரு பெருமனித இனம் தோன்றும் என்று அரவிந்தர் கூறுகிறார். அந்த முதல் கட்டம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் கூட்டமாகவும் இருக்கலாம். அத்துடன் இவர்கள் பல்வேறுவகையான துளைகளில் ஈடுபடுபவர்களாய்த் தெரியினும் சத்தியத்தின் அடிப்படையில் ஒரேவிதமான தொழிலைச் செய்வபவர்களாகவும் அதனால் ஒரு துறையில் மற்றத் துறைக்குரிய வழிமுறைகளைக் கையாளுபவர்களாகவும் தெரிவர். உதாரணமாக காந்தியும் வினோபாவும் இக்காலத்துக்குரிய புதுமுறை விஞ்ஞானிகளேதான். எவ்வாறு சத்தியத்தைச் சமூகத்தில் பரவலாக எழுப்பலாம் என்று விஞ்ஞானரீதியாகச் சோதனை செய்தவர்கள் அவர்கள்தான். அதே வகையில் சந்திரனில் கால் வைத்துள்ள நீல் ஆம்ஸ்ட்ரோங், அல்ட்ரின், பீன், கொன்ராட் ஆகியோர் இக்காலத்துக்குரிய புதுமுறை யோகிகளாகவும் விளங்குகின்றனர். அதாவது அவர்கள் வெளியுலகின் ஆழத்தை அளப்பவர்கள். அதேவகையில் இன்றைய கலைஞர்களும் எழுத்தாளர்களும் சமயவாதிகளாகவும் விஞ்ஞானிகளாகவும் விளங்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். அடுத்த மரிணாமத்தைத் தங்களளவிலும் சமூகத்திலும் கொண்டுவர வேண்டியிருக்கிறது என்ற தேவையை உணர்பவர்களே அதைச் செய்துகாட்ட வேண்டியவர்களாகவும், அதற்குரிய பரிசோதனைகளைப் பல்வேறு துறைகளிலும் நடத்தவேண்டியர்வகளாகவும் இருக்கின்றனர். புது யுகப் பரிணாமத்தின் பரிமாணங்களைத் தன்னளவு அனுபவவித்த அரவிந்தர் ஓர் பெருங் கலைஞனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞானிகளும் தங்களளவில் கலைஞர்களாகவே வாழ்ந்தனர். எனவே கலைஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றோரே ஞானிகள் கூறும் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிக்கு சமூகத்தை ஞானிகளுக்கு அடுத்த படியாகத் தயார்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். மனிதகுலத்தில் பரவலாக ஏற்படவிருக்கும் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் முதல் கூட்டமாக அவர்களே இருக்கலாம். அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையெனினும் அப்படியும் இருக்கலாம் என்று நினைத்து முயல்வதே அப்படியே இருப்பதற்கு வழிவகுத்துவிடும். அப்படி நினைத்து முயலக்கூடிய தகுதி இந்த கலைஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் கூட்டத்திடம் அதிகம் இருக்கிறது. அதனால் அவர்களிடமே முழு மனித குலத்துக்கும் வழிகாட்டும் பொறுப்பும் இன்று அதிகமாக இருக்கிறது. அதனால் அவர்களிடமே முழு மனித குலத்துக்கும் வழிகாட்டும் பொறுப்பும் இன்று அதிகமான இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதற்காக அவர்கள் தங்களை ஒர் "உயர் இனம்" ("Kultur Race") என்று நினைத்துத் தங்களைச் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்ப்பவர் என்று தவறுதலாகக் கணக்கிட்டுவிடக் கூடாது. அவர்களே எல்லாரையும்விட எளிமையையும் தாழ்மையையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருப்பர். சத்தியம் எங்கும் இருப்பதால் அச்சத்திய எழுச்சியை அனுபவிப்பவன் தன்னைத் தணித்துப் பிரித்துப் பார்க்க முடியுமா? அவனிடம் தட்டுப்படும் சத்திய அலைகளே உண்மையான பொதுவுடமையினதும் சகோதரத்துவத்தினதும் அலைகளாகும். அவற்றுக்கு உருவமும் ஒலியும் கொடுத்து தன்னிலும் சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் அவற்றை வாழவைப்பதற்குத் தளம் அமைப்பவனும் அவனாகவே இருப்பான்.

இப்புதுயுகத்தின் சமிக்ஞை அலைகளை என்னளவில் வெளிப்படுத்தும் முயற்சியே "போர்பறை" யாகும். இச்சமிக்ஞை அலைகள் "பீட்னிக்ஸ்", " ஹ’ப்பீஸ்" முதல் பேராதனை மாணவர்களின் போராட்டம்வரை பல்வேறுவகையில் வெளிப்படுத்தப்படுகின்றன. அவற்றைப்பற்றிய சுய உணர்வும் எந்தளவுக்க அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு அவை முழுமையை எட்டுகின்றன. அடிப்படையில் அவை எல்லாம் அறிவுநிலைக்குரிய; அதாவது நனவுநிலைக்குரிய (consciousness), தரவித்தியாசங்கள்தான். சத்தியம் என்பது அடிப்படையில் சித்தே தான். ஆனால் இப்போ தட்டுப்படும் சமிக்ஞை அலைகள் எல்லாம், இதுவரை மனிதனக்குத் தெரிந்த அறிவின் எல்லைகளை அல்லது நனவுநிலையைத் தாண்டிய பரவலான பேரறிவை நோக்கிய (Super Consciousness) புதுயுக ஞான அலைகள் தான். அவற்றின் வெளிக்காட்டல்கள் பூரணமாகத் தங்களை உணர்ந்த வெளிக்காட்டல்களாக இருக்காமல் அடிமன உந்தல்களாக இருக்கும்போது சகோதரி நிவேதிதா கூறியதுபோல் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டுவரும் அறிவின் தரத்துக்கு ஆபாசமாகவும் அசிங்கமாகவும் படலாம். ஆனால் அடுத்து வரும் புதுயுகப் போறிவின் பிறப்புக்குக் கட்டியங் கூறுபவை அவையேதான். அசிங்கம் என்று கூறும் இப்போதைய அறிவு நிலையின் முகஞ் சுளிப்பு அநாகரிகமாகிக் கொண்டிருக்கும் ஓர் நிலைக்குரிய, தேக்கத்துக்குரிய, முகச் சுளிப்பேதான், பீட்னிக்ஸ்-ஹ’ப்பீஸ’ன் போக்கு நடைமுறையிலுள்ள அமைப்புக்கும் அதை ஏற்கும் அறிவுக்கும் அசிங்கமாகப்படலாம். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டமும் சீனாவின் கலாசாரப்புரட்சிச் செங்காவலர்களின் ஆர்ப்பாட்டமும் சீனாவின் கலாசாரப் புரட்சிச் செங்காவலர்களின் நடத்தையும் கியூபா நாட்டுப் புரட்சிவீரன் சே குவேராவின் தாசர்களினது போராட்டமும் நடைமுறையிலுள்ள அமைப்புக்கும் அதை அங்கீகரிக்கும் தற்போதைய அறிவுநிலைக்கும் ஆத்திரத்தையூட்டலாம். ஆனால் பேரறிவின் பிறப்புக்கும் அந்தப் பேரறிவுக்குரிய புதிய பௌதீக - இயற்கை-சமூக-பொருளாதார அரசியல் - கலாசாரப் பேரமைப்புக்கும் சொந்தமான ஆரம்பப் பிரக்ஞை அலைகளின் வெளிக்காட்டல் அவையேதான். அப்பேரறிவு ஓரிடத்தில் பூரணமாக முழுமையடையும் போரே (பழைய சாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களைச் சரியாக விளங்கிக் கொள்கின்றன. ஆனால் அந்தப் பேரறிவின் முழுமை பிறக்கும் வரைக்கும், இத்துளி அலைகளே - அவை ஆபாசமாகவும் அசிங்கமாகவும் தெரிந்தாலுங்கூட- அந்த முழுமையின் பிறப்புக்கு மிக அத்தியாவசியமான தேவைகளாக இருக்கின்றன. அவையே அந்த முழுமையின் பிறைப்பை கொண்டு வருகின்றன. அல்லது அந்த முழுமையே தனது வருகையை தெரிவிக்கும் வகையில் இந்த ஆரம்ப அறிகுறிகளை, முதலில் வெளிக்காட்டுகின்றது, அந்த முழுமைதான் பிறக்கவிருக்கும் புதுயுக ஞான அலையின் சிகரம் அல்லது முடி என்றால் இவையெல்லாம், அதாவது ஆரம்ப அறிகுறிகளெல்லாம் அந்த அலையேதான்.

"போர்ப்பறை" முழுமையை நோக்கிய அந்த அலையின் குரல்தான், முழுமையான அலைமுடியின் அல்லது சிகரத்தின் ஒளியேறிய ஒலியல்ல. இருப்பினும் ஏற்கனவே இப்புதுயுக அலை பிறப்பித்துள்ள அடிமன உந்தல்களுக்குரிய தெளிவைப் பெருமளவுக்கு இதில் காணக்கூடியதாய் இருப்பது போல் இனி வரவிருக்கும் முழுமையின் சிகரத்தைத் தொடும் வேகத்தையும் தரிசன வீச்சையும் இதில் காணலாம். அதனால் ஏற்கனவே வெளிவந்துள்ள எனது "புதுயுகம் பிறக்கிறது" தொகுதிக்குரிய தெளிவையும் இனி வரவிருக்கும் சிருஷ்டிகளின் திசையையும் இதுவே காட்டி நிற்கிறது. பிறக்கவிருக்கும் புதுயுக ஞான அலையை என்னளவுக்கு அனுபவித்த ஆரம்ப அடிமன உந்தல்களாக "புதுயுகம் பிறக்கிறது" சிறுகதைகள் இருக்கின்றன. நடைமுறைலுள்ள இக்கால சமூக வாழ்க்கை அமைப்பிலும் அதை அங்கீகரிக்கும் அறிவுநிலையிலும் அதிருப்தி கொண்டு அவற்றையே இக்காலத்துக்குரிய ஆத்மாவின் "வீழ்ச்சி" யாகக் கண்டு அந்த ஆத்ம வீழ்ச்சியை மீற முயலும் பல்வேறுவகைப் புரட்சிகளைப் படம் கதைகள். ஆனால் அதில் மீட்சியாக நான் கண்ட "வெளி" சமயத்துறையில் பௌத்தர், சங்கரர் ஆகியோர் புகட்டு ம துறவாகும் (சங்கரர் அத்தகைய விடுபட்ட துறவைத் தன் வாழ்க்கையில் கடைப் பிடித்ததில்லை. ஆனால் அவருடைய தத்துவம் அத்தகைய வாழ்க்கைக்குத்தான் செயலைத் துறந்த சிந்தனைவாதியாகவும் முனைப்பை மாயையாகக் கருதி, இருக்கும் நிலையோடு திருப்திப்படும் விடுபட்ட துறவியுமாகவே தெரிகிறான். கொலின் வில்சன் கண்டு பிடித்த "அவுட்சைடர்" என்பவனின் சங்கர வேதாந்த ரகம். அதுவே தொகுதியில் காணப்படும் உச்சம், புரட்சி உச்சம், அதையே அப்போது நான் மீட்சிக்குரிய வழியாகவும் கண்டேன். ஆனால் அது இப்போதைய என நிலையில் திருப்தியளிக்க முடியாது. ஆனால் தொகுதியில் யாரும் "தேடல்" கதையில் வரும் நல்லதம்பியைப்போல் இருக்க விரும்பவில்லை என்பது மட்டும் எப்பவும் எனக்கு திருப்தியளிக்கக்கூடியது. அதை நல்லதம்பியே இறுதியில் விரும்பவில்லை. ஆனால் அதை அவன் கண்டுபிடிப்தற்கு ஒருமுறையோ செத்துப்பிறக்க வேண்டியிருக்கிறது. ஆனால் "நல்லதம்பி" தான் இப்போதைய நடைமுறை அமைப்புக்குரிய பண்பாட்டு உச்சமாகவும் உருவமாகவும் இருக்கிறான். நல்லதம்பியே இறுதியில் வெறுத்துத் தப்பும் நல்லதம்பி! அத்தகைய நல்ல தம்பிகள், நடைமுறையிலுள்ள சமூக அமைப்பு பண்பாடாகவும் ஒழுக்கமாகவும் பூசிமறைத்துக் காட்டும் கோழைத் தனத்தினதும் இயலாமையினதும் வாழும் உருவங்களேதான். அந்த நல்லதம்பிகளுக்கு, "நல்ல சிவம் " (தேடல் என்ற கதையில் வரும் பாத்திரம்) போன்றோரின் முயற்சிகள் எல்லாம் ஆபாசமாகத்தான் தெரியும். புதுயுகம் பிறக்கிற கதைகள் அப்படித்தான் எங்கள் நாட்டு "நல்லதம்பிகளால்" விமர்சனம் செய்யப்பட்டன. ஆனால் உண்மையில் நிவேதிதா கூறும் புதுயுக ஞான அலையின் என்னளவுக்குரிய ஆரம்பம் அவையேதான். அந்த அலையின் உந்தலைப்பற்றி அறியாதவர்களுக்கும் உணராதவர்களுக்கும் அவை அசிங்கமானவை யாகத்தான்படும். நான் அறிந்தவரையில் தமிழ் இலக்கியத்துறையில் பாரதிக்குப்பின் அந்த அலையின் உத்தலை உணர்ந்தவர்கள் இதுவரை இரண்டொருவராகத்தான் இருக்கின்றனர். புதுமைப் பித்தனின் கதைகள் நடைமுறையிலுள்ள ஆத்ம வீழ்ச்சியைக் கேலி செய்யும் முயற்சிகள்தான். புதுயுக ஞான அலையின் ஆரம்பம் அவரிடம் இல்லை. அல்லது இருக்கிற அமைப்பைக் கேலி செய்யும் அளவுக்குத்தான் அவர் உதை உணர்ந்திருக்கிறார். மார்க்சீய முற்போக்கு எழுத்தாளர்கள் அந்த அலையை உணர்ந்தாலும் அதற்குப் பிழையான அர்த்தம் கொடுத்து இடையிலேயே அதைத் திருகிச் சாகடித்து விடுகின்றனர். அவர்கள் காட்டும் இலக்கோடு அந்த அலை நின்றுவிடக் கூடியதல்ல. அத்துடன் அவர்கள் ஆதரிக்கும் சர்வாதிகாரம் அதற்கு நேர் எதிர்மாறானது. புதுமைப் பித்தனிடம் காணப்படும் கேலி உணர்ச்சியும் இயலாமை உணர்வும் இவர்களது சர்வாதி காரத்துக்கப் பின்னால் பெருமளவுக்கு மறைந்து கிடக்கிறது. அதை இவர்கள் உணர்வதில்லை. புதுயுக ஞான அலை பிறப்பிக்கப்போகம் வீரத்துக்கும் செயல் வேகத்துக்கும் முன்னால் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் மார்க்சீயத்தின் இயலாமையும் தாழ்வுச் சிக்கலும் தெரியவரும். காந்தி பலருக்குப் பிற்போக்கு வாதியாகப்படலாம். மார்க்சீய வாதிகளுக்குப் பெரும்பாலும் அப்படித்தான் அவர் தெரிவதுன்டு. ஆனால் அவரின் முயற்சியின் உண்மையான அர்த்தப் பின்னயின் மார்க்சீயச் சர்வாதிகாரம் கோழைத்தனமாகவும் இயலாமை எழுப்பிய சிக்கலாகவுமே தெரியும்."முற்போக்கு" மார்க்சீய எழுத்தாளர்கள் புதுயுக ஞான அலையைப் பிழையாக புரிந்துகொண்டவர்கதான். அதனால் அவர்கள் "புதுயுகம் பிறக்கிறது" கதையில் வரும் கனகரத்தினத்திடம் காணப்படும் கையாலகத் தனத்தின் உருவங்களாகவே இருக்கின்றனர். புதிய அலையின் உந்தலை அதிகமாக உணர்பவர்கள் மார்க்சீயவாதிகளோடும், அவர்களது தர்க்க நியாயங்களோடும் அவர்கள் காட்டும் அமைப்போடும் திருப்திப்படமுடியாது. இதுவரை நானறிந்தவரையில் தமிழ் இலக்கியத்தில் பாரதிக்குப் பின்பு இப் புதுயுக அலையின் பிறப்பு பிரக்ஞை பூர்வமான அளவுக்க வளர்ந்திருப்பது ஜெயகாந்தனின் "பிரம்மோபதேசம்", "விழுதுகள்", "பிரளயம்" என்ற கவிதைத் தொகுதியிலுந்தான். ஜெயகாந்தனிடம் அது திரண்டு பெருத்த சத்தியாய் உருவெடுத்து வருகிறது. ஆனால் அது அவரிடம் பிரக்ஞையின் எல்லையைப் பூரணமாகத் தொடுவதற்கு முன்பே பொன்னம் பலத்தின் அக்கினிக்குஞ்சு தன் சின்னச் சொண்டுகளால் ஓட்டைக் கொத்தி உடைத்துக்கொண்டு வெளிவந்துவிட்டது.

"போர்ப்பறை" அந்தச் சின்னக்குஞ்சு, பாரதியாரின் அக்கினிக்குஞ்சு, ஞானச் சேவலாகித் தன்னை யாரென்று உணரும்போது வெளியிடும் கன்னிக்கூவல்தான். அதன் முற்றிய வெற்றிக்கூவல் இனித்தான் வரவேண்டும். எங்கிருந்து வருமோ எப்போ வருமோ எப்படி வருமோ இப்போது சொல்ல முடியாது. எங்கு புது அலையின் முழுச் சிகரமும் பூரணமாகிறதோ அங்கிருந்து அது பிறக்கும். ஆனால் அது அலையின் சிகரம் இம்முறை பலவிடங்களிலும் பூரணமாகும் கட்டம் ஆரம்பமாகிறது. அதனால் வரப்போகும் அவதாரம் பல இடங்களிலும் பூரண ஞானமாய்த் தன்னை எழுப்பப்போகும் அவதாரமாய் இருக்கும். பரவலாக மனிதகுலம் முழுதுமே பேரறிவுக்குள் இறங்கும், சத்தியகுமல்லவா இனி வரப்போகிறது? எது எப்படியாய் இருப்பினும் என்னிடமும் (புதுயுகம் பிறக்கிறது), பாரதி ஆரம்பித்துவைத்த தற்காலத் தமிழ் இலக்கியத்திடமும் கருக்கூட்டிக் கொண்டிருந்த புதுயுக நனவுநிலை நனவு அலை, தன்னை இதுவரை வந்திராத பேரறிவு நிலையாக உணரத் தொடங்கும் கட்டம் வந்துவிட்டது என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். "போர்ப்பறை" கூறும் செய்தி அதுதான். அப்படிப் பார்க்கும்போது சர்வ தேசமெங்கும் தற்காலக் கலைஞர்களும் எழுத்தாளர்களம் அனுபவித்துவரும் பிரசவவேதனைக்குங்கூட இப்போர்ப்பறையே அர்த்தம் கற்பிக்கிறது எனலாம். அமெரிக்கக் கனவை உடைக்க முயலும் நோமன் மெய்லர் (Norman Mailer) அடிக்கடி தான் எழுதப் போவதாகக் கூறும் பெரும் நாவலுக்கு அர்த்தம் கற்பிப்பதும் இதுவேதான். கொலின் வில்ஸன் (Colin wilson) எழுப்பிய "பிறத்தியான்" பிரச்சனைக்கு தீர்வுகாட்டுவதும் இதுவேதான். "பிறத்தியானைக் கடந்த கட்டம்" (Beyond the Outsider) எப்படி இருக்கும்? பிறத்தியான் உள் நுழைவதுதான் இனி வரும் புதுக்கட்டமாக இருக்கும். ஆனால் அவன் உள் நுழையும் போது அவனோடு வெளியே நின்ற, வெளியே விடுபட்டுச் சாட்சியாய் நின்ற, சத்திய ஞானசக்தியும் உள் நுழைந்து ஆட்சியை ஏற்று நடத்தும் புதுயுகம், சத்தியயுகம் பிறந்துவிடும். கிழக்கத்தைய சமயஞானம் வாழ்கையையும் சமூகத்தையும் துறக்கத்தூண்டிய மாயை என்று கேலி செய்தனர் விஞ்ஞானிகள். ஆனால் இன்று விஞ்ஞானமே மேற்கில் அதே தவறைச் செய்துவருகிறது. அமெரிக்கச் சமூக பொருளாதார அமைப்பை மாற்றியமைக்காது சந்திரனக்கப் போய்த்தான் என்ன பயன் என்று திருப்பிக் கேட்க தோன்றுகிறதல்லவா? அது விஞ்ஞான சமூகம் விடும் தவறு இன்று. நீகிரோக்களின் "சேரிகள்" இருக்கும்வரை சந்திர யாத்திரை பழைய காசி யாத்திரையாகத்தான் இருக்கும். சாதிப்பாகுபாட்டையும் சமூகத் தேக்கத்தையும் ஆதரிக்கம் சமய ஞானத்தைப்போலவே இன்றைய அமெரிக்க விஞ்ஞானமும் இருக்கிறது. அந்த விஞ்ஞான சமூகத்தை துறந்து வெளிவரும் புதுயுகத் துறவிகளாகவே பீட்னிக்ஸ், ஹ’ப்பீஸ் இருக்கின்றனர். திரும்பவும் சமயமே சமூகத்தை மட்டுமல்ல விஞ்ஞானத்தையுங்கூட ஏற்று நடத்தும் சத்தியயுகம் வந்துவிட்டது. அதற்குரிய போர்ப்பறை தான் இது. இதன் மெல்லிய குரல்களைத்தான் வில்லியம்பறோஸ், ஜக்கெரோவாக், அலன் கின்ஸ்பேக், மெய்லர் போன்ற அமெரிக்க எழுத்தாளர்கள் முதல் அலன் சிலிற்றோ, கொலின்வில்லன், ஜோன் ஓஸ்போன், பெக்கட், ஐயமெனஸ்கோ, ரொபட்கிரிலே, ஜேனே போன்ற பலதரப்பட்ட ஐரோப்பிய எழுத்தாளர்களுடாக சாத்தர் ரக இருப்புவாதிகள், மயகொவ்ஸ்கி, பஸ்ற்றர்னக், சொல்ஹென்ஸ்டைன் ஆகியோர்வரை இதுவரை பலர் அறிவிக்க முயன்றுவருகின்றனர். ஆனால் அவர்களிடம் எழும் குரல் தன்னை இன்னும் இனங்கண்டதாய் இல்லை. புதுயுக ஞான அலையின் அறிகுறிகள் மெல்லிய அடிமன உந்தல்களாகவே சர்வதேசக் கலை, இலக்கிய, தத்துவப் பரப்பெல்லாம் சிதறித்தெரிகின்றன. அந்த வகையில் பார்க்கும்போது "போர்ப்பறை" சர்வதேசக் கலை, இலக்கிய, தத்துவப் போக்குக்குமுரிய கன்னிக் கூவல்தான். இதன்மூலமே அவர்கள் எல்லாரும் தங்களை உணரத் தொடங்குகின்றன. இதுவரை அவர்களின் குரல் சீரழிந்த (decadent) குரலாகவே தெரிந்தது. சீரழிவு என்றும் ஆபாசம் என்றும் தீர்ப்பளிக்கும் அமைப்பு பிறக்கத் துடிக்கும் புதுயுகப் பேரறிவு நிலைக்கு ஏற்ற அமைப்புமல்ல; அதைத் தாங்கிக்கொள்ள கூடியதுமல்ல. இருக்கிற அமைப்பு பேரறிவின் இறக்கத்தை மூர்க்கத்தனமாக எதிர்ப்பது அதனால்தான். பேரறிவு அலை தன்னை அடிமன உந்தல்களாக வெளிக்காட்டும் ஆரம்பநிலையில் அந்த எதிர்ப்பை மூன்று விதமாகச் சந்திக்கலாம். இருக்கிற அமைப்புக்கும் தனக்கும் ஒத்துவராது என்று நினைத்து மயகொவ்ஸ்கி செய்ததுபோல் தன்னையே நசுக்கித் தற்கொலை செய்துகொள்ளலாம். அல்லது வேண்டுமென்றே இருக்கிற அமைப்புக்கு ஏற்காத விதத்தில் தன்னை ஆபாசமானதாகவும் அசிங்கமானதாகவும் சீரழிந்ததாகவும் காட்டிக்கொள்ளலாம், அல்லது கொலின் வில்சனின் "பிறத்தியான்" (Outsider) மாதிரி விலகிவிடுபட்டு வெளியே நிற்கலாம். ஆனால் இன்மூன்று நிலைகளம் பிறக்கவிருக்கும் பேரறிவைச் சிற்றறிவானது அடிமன உந்தல்களாக, உணர்ந்த, அதோடு தன்னை இணைத்து அதன்மூலம் தன் சக்தியையும் தன் பொறுப்பையும் அறிந்து நடைமுறையிலுள்ள அமைப்புக்குள் தானே உன் நுழைந்து அதைக் கைப்பற்றித் தனக்கேற்ற முறையில் தீவிரமாக மாற்றியமைப்பதற்குரிய ஆரம்ப நிலைகள்தான். ஆமாம் எல்லாவற்றையும் சித்துக்குரிய, சித்தத்துக்குரிய விளையாட்டுகளாகவே காணவேண்டும். அதுவே சத்தியமுமாகும். தற்காலச் சர்வதேசக் கலை, இலக்கியம், அரசியல், சமூகப் பரப்பெங்கும் காணப்படும் துடிப்பெல்லாம் இருக்கிற அமைப்புக்குரிய அறிவுநிலை அல்லது நனவுநிலை பேரறிவாக அல்லது ஞானமாகப் பிறப்பதற்குரிய பிரசவவேதனைதான். அந்தப் பேரறிவான சத்தியத்தை சிற்றறிவு வெறும் அர்த்தமற்ற அடிமன உந்தல்களாகக் பண்ட நிலையையும் தாண்டி ஓரளவுக்குப் பூரணமாக உணரும் நிலை இன்று வந்துள்ளது. இனி அதற்காகப் போராடவும் வேண்டியிருக்கிறது. கலை, இலக்கியத்துறையில் அந்த உணர்வின் வெளிக்காட்டலையும் அது நடத்தவேண்டி சத்தியப் போராட்டத்தையுமே "பிரபஞ்ச யதார்த்தம்" அல்லது "ஆத்ம யதார்த்தம்" என்கிறேன் நான். இனிமேல் சிருஷ்டி இலக்கியமானது அரவிந்தரையும் ஆர்த்தர் கிளாக்கையும் டோஸ்டோயொவ்ஸ்கியையும் கோர்க்கியையும் இணைத்தும் அவர்களையும் கடந்து செல்லும் புதுயுக காப்பியங்களாகவே அமையும். காலம், இடம் கடந்த பிரபஞ்ச-ஆத்ம உணர்வு ஊருடுவி நிற்கும் காப்பியங்கள், கிராமம் முதல் பிரபஞ்சம் வரையும் அவற்றுக்கு அப்பாலும் செல்லும் ஆத்ம யதார்த்த உணர்வு செறிந்த காப்பியங்கள், சிறுகதைகள், கவிதைகள் எழமுடியாதென்றில்லை. ஆனால் அவற்றிலும் அதே காப்பியப் பண்பே காணப்படும்.

கலை இலக்கியத்தில் பிறக்கும் அதே பேரறிவின், சக்தியத்தின் எழுச்சி எல்லாத் துறைகளிலும் பரவுவதையே "சர்வோதயம்" குறிக்கிறது. எல்லாவற்றுக்குமுரிய எழுச்சி எல்லாவற்றுக்கும் சுயமாகவுள்ள சத்தியத்தின் உதயமாக இருக்கும்போதுதானே உண்மையான எழுச்சியாக இருக்க முடியும்? அதுதான் சர்வோதயமாகும்.

எல்லாவற்றினதும் எழுச்சி எல்லாவற்றிலும் ஏற்படும் எல்லாவற்றுக்கும் இயல்பாயுள்ள சத்தியத்தின் எழுச்சியாக இருப்பதே சர்வோதயமாகும். அதுதான் சர்வோதயத்துக்கு நாம் கொடுக்கும் அர்த்தம், அந்தவகையில் "சர்வோதயம்" என்பது சர்வமத முழுமையையும் அதன் பூரண எழுச்சியையும் விரும்பும் நமது இலட்சியத்துக்கு ஏற்ற சரியான பெயராக இருப்பதுடன் நமது இலட்சியத்தை ஒர் விடுபட்ட தனித்த போக்காகக் காட்டாமல் அதற்குரிய சரியான பின்னணியுடன் பொருத்திக் காட்டவும் உதவுகிறது. ஆனால் அதனால் ஏற்படும் தடையும் இல்லாமலில்லை. அடுத்த பரிணாமக் கட்டத்துக்குரிய தத்துவ வாசலில் நிற்கும் நாம் இதுவரை மனிதகுலம் கண்டறிந்த அத்தனை நல்லவற்றையும் நமக்குரிய சொத்துக்களாகவும் தவறுகளை நமக்கு எரியச் சரிக்கைகளாகவும் காணகிறோம். அதனால் நமக்கு விஞ்ஞானம், சமயம், அரசியல் என்ற பாகுபாடு கிடையாது. சத்தியத்துக்கு அந்தப் பாகுபாடு கிடையாது என்பதுடன் புதுப் பாய்ச்சலை ஆரம்பிக்கும் நமக்கு எல்லாத்துறைகளிலுமிருந்து பூரணமாகச் சத்தி திரட்டப்படுவது அவசியமாகவும் இருக்கிறது. அதனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தத்துவங்கள் எல்லாவற்றையும்விட முற்போக்கானதாகவும், எல்லாச் சமயங்களையும் இணைத்த சமயமாகவும் விஞ்ஞானத்தையும் வெல்லும் விஞ்ஞானமாகவும் சிந்தனைக்கேற்ற தீவிரமான செயல்திட்டமாகவும் நமது "சர்வோதயம்" இருக்க வேண்டும். அது அப்போதைக்கப்போது ஆழமாகக் கண்டு பிடிக்க முயலும் உண்மையின் தரிசனத்துக்கு ஏற்றவிதத்தில் தனது தத்துவக் கோட்பாட்டையும் செயல் திட்டத்தையும் சதா திருத்தி வளர்க்க வேண்டியதாயும் இருக்கிறது. அதனால் சர்வோதயம் ஓர் தத்துவமென்றால் அது தத்துவங்களைக் கடந்த தத்துவமாகவே இருக்க முடியும். திட்டவட்டமான நிரந்தர சிந்தனை அமைப்பையும் தேக்கத்தையும் அது ஆதரிக்காது. ஆனால் நடைமுறையில் சர்வோதயம் என்பது அந்தளவுக்கு அர்த்த விரிவைக் காட்டக் கூடியதாகப் பின்பற்றப் படுகிறதா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்லப்பட வேண்டும். நடைமுறையிலுள்ள 'சர்வோதயம்' என்ற பெயர் நமது இலட்சியத்தைச் சீராக வெளிக்காட்டவிடாத தடையாக இருக்கிறது என்பதும் ஒருவகையில் உண்மைதான். நமது இயக்கத்தின் பெயரைக் கேட்டு முகஞ் சுளிக்கும் பலருக்க சர்வோதயம் என்பது பிற்போக்கான தேக்கமாகவேபடுகிறது. அந்தவகையான அர்த்தத்தைப் பரப்புவதற்கு காந்தியத்தையும் சர்வோதயத்தையும் பின்பற்றும் பலரின் வாழ்க்கை மிகப்புரட்சிகரமான வாழ்க்கை என்பதையும் சர்வோதயம் ஆதரிக்கும் சமயம் விஞ்ஞானத்தையும் வெல்லும் விஞ்ஞானம் என்பதையும் சர்வோதயத்தை இதுவரை அதரித்து வருபவர்களே இன்னும் பூரணமாக உணர்ந்தவர்களாய் இல்லை. அதனால் பிறரால் கூறப்பட்ட எதுவும் நாம் காணும் சர்வோதயத்தை விளக்கப்போதாது என்பதை நாம் சதா உணர்ந்தவர்களாய் இருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரையில் காந்தியும், வினோபாவும் சென்ற நூற்றாண்டின் சோஷலிஸ இயக்கத்தின் முன்னோடிகளைப் போன்ற சர்வோதய முன்னோடிகளாகவே தெரிகின்றனர். றொபட் ஓவன், சென்சிமொன் போன்றோர், சர்வோதயத்துக் குரிய சத்தி லெனினம் ட்ரொட்ஸ்கியும் சத்திய மாசேங்கும் இனித்தான் வரவேண்டியிருக்கிறார்கள் என்பதே நமது நம்பிக்கையாகும்.

புதுயுக ஞான அலையின் உச்சமும் சிகரமும் இனித்தான் வரவேண்டியிருக்கிறது. காந்தியும் வினோபாவும் சமூக, பொருளாதார, அரசியல், சமயத்துறையில் புதுயுக ஞான கலை, தத்துவ, இலக்கியத் துறைகளில் நாம் குறிப்பிட்ட கன்னிக் கூவலை ஒத்த கூவல். முற்றிய வெற்றிக் கூவல் இனித்தான் வரவேண்டும். அது இனி எங்கு எழும் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஆனால் எங்கு சத்திய எழுச்சியை ஏற்கும் வகையில் முழு நாடளவிலும் முழு நாட்டு மக்கள் அளவிலும் பூரண துறவும் தியாகமும், அவை எழுப்பும் செயலும் சிந்தனையும் எழுகின்றனவோ அங்கு சர்வோதயம் தனது உச்ச வலுவையும் ஞான விரிவையும் காட்டவேபோகிறது. அங்கு புதுயுக ஞான அலையின் முழுமை, அல்லது புதுயுக அவதாரம், பிறக்கவே போகிறது. அதுமட்டும் நிச்சயம், ஆனால் அதைத் தனிப்பட்டவர்களின் செயலாகக் கருதிவிடக்கூடாது. எங்கும் எழுவிருக்கும் பேரொளியே இதுவரை எல்லாவற்றையும் செய்வித்துவருகிறது. அதுவே இருக்கிற இயற்கை அமைப்பில், இருக்கிற உடல்-உள்ள அமைப்பில், இருக்கிற சர்வதேச சமூக - பொருளாதார - அரசியல் அமைப்பில் தன்னை வெளிப்படையாகப் பிறப்பிக்கப் போகிறது. அந்தந் பேரறிவான சத்தியம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் எங்கும் இருக்கிறது. அதுதான் எல்லாவற்றையும் செய்விக்கிறது. அந்த ஒருமையை எல்லாரும் உணர்வதே சர்வோதய எழுச்சியின் முதல் பண்பாகும்.

இறுதியாக இதில் அடங்கியுள்ள கதைகள், கட்டுரைகளைப்பற்றிச் சிறிது குறிப்பிடவேண்டும். இதில் அடங்கியுள்ள கதைகள் இதில் அடங்கியுள்ள கட்டுரைகளுக்கு முன்பே எழுதப்பட்டவை. "புதுயுகம் பிறக்கிறது" கதைகளின் தொடர்ச்சியாகவே இவற்றைப் பார்க்கவேண்டும். மூன்று வருடங்களுக்கு முன் இன்னோர் சிறுகதைத் தொகுதியை வெளியிட முயன்றேன். முடியவில்லை. அதிலுள்ள மூன்று கதைகள் இதில் இடம்பெறுகின்றன. மிகுதிக் கதைகள் அப்படியே இருக்கின்றன, இவற்றைத்தவிர எழுதிமுடித்து இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் "ஒரு தனி வீடு", "யாத்திரை", "கல்கி புராணம்" ஆகிய நாவல்களும் பாதியிலேயே நின்றுவிட்ட "ஒளியை நோக்கி"நாவலும் "குருþக்ஷத்திரம்" "எதிரிகள்" "ஓமாக்கினி" என்ற வேறு புது முயற்சிகளும் இருக்கின்றன. எல்லாம் "ஒளியை நோக்கியே" "சுஸ”ல்" முயற்சிகள்தான். இவற்றின் பயனாகவும் அடித்தளம்வரை தேடலை நடத்துவதற்கு எனக்குக் கிடைத்துள்ள வழிகாட்டியின் பலனாகவும் எனக்கு ஏற்பட்டுள்ள தெளிவே போர்ப்பறைக் கட்டுரைகளாக இப்போ வெளிவருகின்றன. அதனால் நான் கூறும் பிரபஞ்ச யதார்த்தத்தின் புதிய வார்ப்புகளுக்குரிய மாதிரிகளை இக் கதைகளில் காணமுயலக்கூடாது. புதிய வார்ப்புகளைப் பற்றிய பிரக்ஞையைப் பூரணமாக என்னிடம் எழுப்ப உதவிய தேடல் சிருஷ்டிகளே இவையெல்லாம். புதிய பிரக்ஞையை ஓரளவுக்கு பூரணப்படுத்த உதவியது ஏறக்குறைய நான்கு வருடங்களக்கு முன்பு நான் எழுதி முடித்துள்ள "கல்கி புராணம்" என்ற நாவலேதான். எனவே இதையடுத்து அதையே வெளியிட விரும்புகிறேன். இருப்பினும் கதைகள் காட்டியதைக் கட்டுரைகள் தெளிவுபடுத்தியது போல் கட்டுரைகள் கண்டுபிடித்தவற்றின் பூரண உதாரணங்களை இனிதான் படைக்கவேண்டும். ஆர்த்தர், சி.கிளாக்கின் "2001, அண்டவெளி ஒடிசி" யைப் படிக்கும்போது அதன் அவசியத்தை இப்போ அதிகமாக உணர்கிறேன். வரவர விஞ்ஞானமானது சமயத்திலிருந்து தன் சத்தியைப் பெறுகிறது. காலங் கடத்தாது "கல்கி புராணத்தை" வெளியிடவேண்டும் என்ற உணர்வோடு கைவிட்ட "ஓமாக்கினி" பிரபஞ்ச ஆத்ம யதார்த்தக் காவியத்தையும் திரும்பவும் எடுத்து எழுதி முடித்துவிட வேண்டுமென்ற ஆவேசமும் எழுகிறது. அத்துடன் "நாடும் வீடும்" என்ற பெயரில் பாதி திருத்தப்பட்டுக் கிடக்கும் "ஒது தனி வீடு" ம் தன்னை நினைவூட்டிக் கொள்கிறது. 56க்குப்பின் இலங்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை ஓரளவுக்கு யதார்த்த பூர்வமாகத் தொட முயன்ற முதல் நாவல் அதுதான் பின்னணியின் ஆழம் "வீடு" வரை போவது நல்லது என்று நினைக்கிறேன். ஓரளவுக்கு அதில் தீர்க்கதரிசனம் இருப்பதாகவும் ஓர் எண்ணம். காரணம் என்னைப் பொறுத்தவரையில் 56க்குப்பின் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் வெறும் சமூக, பொருளாதார, அரசியல் கலாசார மலர்ச்சியையும் சிக்கல்களையும் போராட்டங்களையும் மட்டும் எழுப்பும் நிகழ்ச்சிகளாகத் தெரியவில்லை. அவையே சர்வதேசங்களுக்கும் வழிகாட்டக் கூடியவகையில் இலங்கை மிக விரைவில் நடத்தக் கூடியதாய் இருக்கும் அடித்தளம்வரை தொடும் ஆத்மீகப் போராட்டத்தினதும் அடுத்த கட்டப் பரிணாம இயக்கத்தின் தும் அறிகுறிகளாகவும் எனக்குத் தெரிகின்றன. அதன் எல்லைகள் காட்டும் அளவுக்கும் "நாடும் வீடும்" திருத்தப்பட்டு எழுதப்பட்டால்? அப்படி ஒரு துடிப்பு. ஆனால் இவற்றையெல்லாம் இலக்கியமாக எழுதுவதா அல்லது எழுதுவதைப் பிறரிடம் அல்லது எதிர்காலத்திடம் ஒப்படைத்து விட்டு (அல்லது எழுதிக் கொண்டே) இயக்கத்தில் ஈடுபடுவதா என்ற ஓர் சந்தேகமும் இல்லாமலில்லை.

அந்தச் சந்தேகம் வளர வளர என் சுயரூபமும் அதிமாகத் தெரிவதுபோல் இருக்கிறது. என்னையே நான் கண்டு பிடிப்பது போன்ற ஓர் உணர்வு. எழுதுவது மட்டும் வரவர என் தொழிலாக இப்போ தெரியவில்லை. ஒரு காலத்தில் எழுத்தாளனாக இருப்பதற்காக எல்லாவற்றையும் துறந்துவிடக்கூடத் தயாராய் இருந்ததுமுண்டு. உண்மையான "பிறஸ்ற்றேஷன்" அல்லது விரக்தி எனக்கு வருமென்றால் அது இலக்கியத்தைத் துறந்தால்தான் வரும் என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் இலக்கியம் என்னில் வளர்த்த துறவு இலக்கியத்தையே துறக்குமளவுக்கும் வந்துவிடும் என்பதை இப்போ நான் உணர்கிறேன். சாதாரண மனிதன் எதை எதைப் பெரிதாக நினைத்து ஈடுபடுகிறானோ அவற்றிலெல்லாம் ஈடுபடாது விடுபட்டு வெளியே நின்று வேடிக்கை பார்த்துச் சிரிக்கும் "பிறத்தியான்" போக்கை என்னில் இலக்கியப்பற்று வளர்த்திருக்கிறது. இலக்கியப்பற்றால் அது ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது. ஏற்கனவே இருந்த ஓர் சுபாவத்தை இலக்கியப் பற்று தீவிரமாக வளர்த்திருக்கிறது என்பதே சரி. ஆனால் அதே இலக்கியப்பற்றையும் துறக்குமளவுக்கு அது வளர்த்த துறவு வளர்ந்திருக்கிறது இன்று. அது மட்டுமல்ல. இப்போ முந்திய விடுபட்ட உணர்வு விடுபடாமலேயே எல்லாத் துறைகளுள்ளும் விழுந்து "தலைமுழுகி" விடும் "ஈடுபாடான விடுபாடும்" வந்திருப்பதாகவும் உணர்கிறேன். சத்தியத்தின் எழுச்சிக்காக ஒருவன் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துச் செயல்படும்போது (துறவு அதற்குரிய தயாரிப்புத்தான்) உள்ளிருந்து எழும் சத்தியத்தின் சக்தியை ஒரு கோணத்துக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது என்பதையே இப்போ அதிகமாக உணர்ந்துவருகிறேன். அத்துடன் ஏற்கனவே கலைஞனாகவும் எழுத்தாளனாகவும் தன்னைக் கருதிய ஒருத்தன் சத்தியத்தனத்தைத் தொடமுயலும்போது சத்தியமே எல்லாவற்றுக்கும் அடித்தனமாய் இருப்பதால், சக்தியும், திறமையும் சகல பக்கமும் விரிந்து பரவுவதை உணர்வதோடு அவை எல்லாமே கலையாக இருப்பதையும் உணர்வான். அப்படி உணர்வதால் அவை எல்லாவற்றிலும் சமவிருப்பத்தோடும் பற்றற்ற விடுபாட்டோடும் அவள் ஈடுபடவும் தயாராய் இருப்பான். வரவர அதை அதிகமாக உணரத் தொடங்கியுள்ள எனக்கு என் எதிர்கால முயற்சி எந்தத் திசையில் இருக்கும் என்று சொல்லமுடியாதிருக்கிறது. எழுத்தை பிற வேலைகளிலிருந்தும் பிரிந்து விடுபட்டிருப்பது எனக்குப் பிடிக்காத ஒன்றாக இப்போ மாறிவருகிறது. அந்த வகை எழுத்தாளர்களையும் அதிகம் விரும்புவதாய் இப்போ இல்லை. அத்துடன் பேரறிவின் உந்தலை உணரத் தொடங்கியவுடன் தன்னுள் அதன் பூரண இறக்கத்தை வேண்டி நிற்கும் இந்தச் சிற்றறிவு தன்னையே துறக்கத் தயாராய் இருக்கிறதே ஒழிய அந்த இறக்கத்துக்கு பின்பு வரக்கூடிய நிலையைப்பற்றித் தீர்மானிக்கத் தயாராய் இல்லை. அந்தத் தீர்மானங்களைப் பேரறிவின் பொறுப்பிலேயே அது விட்டுவிடுகின்றது.

இம்முயற்சிகூட அதனிடமே ஒப்படைக்கப்படுகிறது. இறங்கி வரும் புதுயுக அவதாரமான அப்பேரறிவுக்கே இது சமர்ப்பணம். அகிலமெங்கும் அதன் வரவுக்காய்த் தயார்ப்படுத்தும் ஓர் பேரியக்கத்துக்கு ஒவ்வொரு மனிதனையும், குறிப்பாக ஒவ்வொரு படைப்பாளியையும் ஒத்துழைக்குமாறும் தன்னையே அர்பணிக்குமாறம் அதன் பெயரில் இது அழைக்கிறது.


மு. தளையசிங்கம்.



பொருளடக்கம்

பதிப்புரை - 4
முன்னுரை (ஓர் அடி) 8

புதுக்குரல்கள் (கதைகள்)

1. உள்ளும் வெளியும் 35
2. வெள்ளையானை 71
3. புதுக்குரல்கள் 82

புதிய வார்ப்புகள் (கட்டுரைகள்)

1. படைப்பாளிகள் இயக்கம் 104
2. புதிய வார்ப்புகள் 122
3. சர்வோதயம் புதுயுகப் பெருந்தத்துவம் 160
4. சமயமும் சத்தியமும் 181

புதுத்திசைகள் (கவிதைகள், கட்டுரைகள்)

1. சுயாட்சி 195
2. விஞ்ஞானமும் சமயஞானமும் 209
3. இரவுகள் 216
4. போர்ப்பறை... 220
5. கலை - ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு 230
6. நான் - அதன் பரிமாணங்கள் 278


புதுக்குரல்கள் (கதைகள்)

இன்று தேவர்களை அழைக்கிறோம்.

இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருதயுகத்தை நாட்டும் பொருட்டாக.

அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராட்சசக் கூட்டங்களையழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக.

இன்று தேவர்களை அழைக்கிறோம், எம்மை ரிஷ’களாகக் செய்து தரும் பொருட்டு எமது குற்றங்களையெல்லாம் நீக்கி கோணல்களை நிமிர்த்தி எமக்கு அமர இன்பத்தைத் தரும் பொருட்டு.

- பாரதியார்.

அவதாரத்தின் குரல் ஒர் புதுச்சமய உணர்வைப் பிறப்பிப்பதில்லை.

கீழ்த்தரமானவையாகவும் அசிங்கமானவையாகவும் தெரிபவற்றின் பொது இதயக்குரலே ஓர் புதுச்சமய உணர்வைப் பிறப்பிக்கிறது. வெறுத்து ஒதுக்கத் தூண்டும் பலாத்காரமும் ஆர்ப்பாட்டங்களும் தன்னை இன்னும் பூரணமாக உணராத ஓர் சமய உந்தலின் மெல்லிய பரிசோதனைக் குரலேதான்.

அந்த வகையில் அந்தப் புதுச் சமய உணர்வு பலரின் கற்பனைகளாலும் மனச்சாட்சியாலும் விரிந்து வளர்க்கப்பட்ட பின்பே, அதையே ஓர் உருவமாகக்கொண்ட ஓருவன் எழுகிறான். அவனே தலைவனாகவும் குருவாகவும் எல்லாராலும் போற்றப்படுகிறான். காரணம் தலைவனாகவும் குருவாகவும் எல்லாராலும் போற்றப்படுகிறான். காரணம் அவர்கள் தாழ்ந்த வாழ்க்கைக்குரிய விளக்கத்தையும் வியாக்கியானத்தையும் அவனே அளிக்கிறான். அவர்கள் பேசத் துடித்த வார்த்தைகளை அவனே பேசுகிறான். அவனே அலையின் சிகரமாவான். ஆனால் அவன் அலையின் சிகரமென்றால், அடுத்தவையெல்லாம் அந்தச் சிகரத்தை எழுப்பிய அலையேதான்.

- சகோதரி நிவேதிதா (அன்னை காளி)


உள்ளும் வெளியும்

அமைதிவழியும் சரயு நதிக்கரையில் அந்த ஆசிரிமம் இருந்தது. சாப விமோசனத்துக்குப் பின்னர் மிதிலை எல்லையை விட்டுவந்த கௌதமரும் அகலிகையும் அங்குதான் தங்கியிருந்தனர். சந்தடியற்ற சரயு நதிச்சூழல் அவர்களின் ஏகாந்த வாழ்வுக்கு மிகப் பொருத்தமான இடந்தான். ஆசிரமத்துக்குப் பின்னால் ஒடிய சரயுவின் சலசலப்பும் சூலலெங்கும் நின்ற ஆற்றங்கரை மரங்களின் சரசரப்பும் மௌனத்தின் குரல்களாகவே இருந்தன. கௌதமர் அதைத் தெரிந்துதான் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் இடத்திலேயோ எல்லாம் இருந்தன? அகத்திலே சூறாவளி வீசிக்கொண்டிருந்த அகலிகைக்கு இடத்தின் அமைதி தெரியவில்லை. எல்லாவற்றையும் அவள் மறுக்க முயன்று கொண்டிருந்தாள்; அவளைப் பொறுத்தவரையில் சாபவிமோசனத்துக்கப் பின்னர்தான் "வீழ்ச்சி" ஆரம்பித்திருந்தது. அதனால் எதிர்பார்த்ததுக்கு மாறாக எல்லாமே அவளுக்குப் பெரிதாகத்தான் தெரிந்தன. அமைதியின் உருவமாய் ஆசிரமத்துக்குப் பின்னால் ஓடிய சரயுவின் துடிப்புக் கூட அவளுக்குப் பேரிரைச்சலாகவே கேட்டது. ஆசிரமத்தைச் சூழவுள்ள மரங்களின் சரசரப்பும் ஆயிரம் பேர்கள் உள்ளே நுழையும் பயங்கரப் காலடி ஓசைகளாகவே அவளுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. ஆமாம், ஆயிரங் கண்ணானில் அவளுக்கிருந்த பயந்தான் ஆயிரம் காதுகளின் கூர்மையை அவளுக்குக் கொடுத்துவிட்டிருந்தது.

அன்றுமாலை அகலிகை தனியாகவே ஆசிரமத்தில் இருந்தாள். வழக்கம்போல் கௌதமர் அந்த நேரத்தில் வெளியே போய்விட்டிருந்தார். ஆசிரமம் இருந்தாலும், தியானம் செய்வதற்கென்று சரயு நதியோரம் தனியாகவே வேறு இடம் இருந்தது அவருக்கு. இடவித்தியாசங்களைப் பற்றி அவர் இப்போ கவலைப்படுபவரல்ல. தியானம் செய்ய வேண்டுமென்ற நிலையிலுமில்லை. இருந்தாலும் அகலிகைக்காக வேண்டி இன்னும் அந்தச் சம்பிரதாயங்களை அவர் அனுட்டித்தே வந்தார்.

தன்னந்தனியாய் அகலிகை ஆசிரம வாயிலில் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே அடங்கியிருப்பது பாதுகாப்பானதுதான். ஆனால் அவளைப் பொறுத்தவரை€யில் பயமானது. எனவே வெளி வாயிலிலேயே அவள் உட்கார்ந்திருந்தாள். ஆபத்து வந்தால் ஓடிவிடலாம் என்ற கற்பனை. ஆனால் அதே ஆபத்தை எதிர்பார்த்துக் கார்த்திருப்பதுபோலவும் அவனின் நிலை தெரியாமலில்லை.

மேற்குவானில் செவ்வரி பூத்துத் தேய்த்து கொண்டிருந்தவேளை. மரங்களுக்கிடையே வீழ்ந்துவந்து ஆசிரம வாயிலுக்குள்ளும் கோடு கிழித்த மாலை மஞ்சள் வெய்யில் மறைந்துவிட்டிருந்தது. மெல்ல மெல்ல ஒளியும் நிழலும் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில் ஆசிரம முற்றத்தின் வலது பக்கமாகத் திடீரென்று எழுந்த ஓர் அசாதரணமான அசைவு கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள் அகலிகை. அந்தப் பக்கமாக யாரும் வருவதில்லை. வராத பக்கத்தால் ய்‘ர் வருகிறார்?

நெஞ்சு படபடக்க எழுந்து நின்ற அகலிகைக்குப் பயமாகவும் இருந்தது. அடுத்தகணம் ஆச்சரியமாகவும் இருந்தது. அவள் கண்ட காட்சி அவள் அதுவரை கண்டறியாத காட்சி. ஆசிரமத்தின் வலது மூலைப்பக்கமிருந்து முற்றத்தை நோக்கி இரண்டு பாம்புகள் இடம் வலமாக ஒன்றையொன்று துரத்திப் பிணைந்தவாறு வளைந்து நழுவிக்கொண்டிருந்தன. பார்ப்பதற்குப் பயமாகவும் இருந்தது, அருவருப்பாகவும் இருந்தது, அதேசமயம்....

ச்சிக் மாயை!

முகத்தை அருவருப்போடு கோணலாக்கியவாறு அகலிகை வெடுக்கெனத் தனக்குள்ளேயே கூறிக்கொண்டாள். காறித்துப்பாத குறை.

மாயை! தொடர்ந்து அதே முணுமுணுப்பு. மாயை, மாயை, ஆனால் ஆசிரம வாயிலைவிட்டு அவளின் கால்கள் மட்டும் நகரவில்லை. கண்களும் முற்றத்துக் காட்சியையே வைத்ததில்லை வாங்காது பார்த்துக்கொண்டிருந்தன.

நழுவிவந்த பாம்புகள், வெள்ளைப்பட்டாய் விரிந்து கிடந்த ஆசிரமத்து முற்றத்து மணல்வெளியில் தொடர்ந்து பிணைந்து பிணைந்து வழுவிக்கொண்டிருந்தன. வழுவிக் தழுவி, தழுவி வழுவி, வழுவி நழுவி, நழுவி வழுவி அவை பிணைந்து கொண்டிருந்தன.

மாயை!

வாயும் மனமும் அகலிகைக்குப் போதித்தன. ஆனால் போதனைக்கேற்ப அவளால் நடந்துகொள்ள முடியவில்லை. அவள் கண்ட அந்தக் காட்சி அவளின் சுயமனோவசியத்தையும் வென்றுவிட்டது.

ஓடிப் பிணையும் பாம்புகள் அழுத்திச் செல்லும் புணர்ச்சித் தடங்கள், கூட்டிவிட்ட முற்றத்து மணல் விரிப்பில் வளைந்து வளைந்து சளிந்து தெரிந்தன. ஓடி ஏறும்போது ஒன்றையொன்று எவ்வளவு தூரம் அழுத்திக்கொள்கின்றன என்பதற்குரிய அளவுகளாய் அந்தத் தடத்தின் சளிந்த வளைவுகள் தெரிந்தன. அவளை அறியாமலேயே அகலிகையின் உடலில் முதுகுத்தண்டு நீட்டுக்கு ஏதோ ஒன்று சளித்து நெளிவது போன்ற உணர்ச்சி.

அகலிகை அதைக் கிள்ளி எறிந்துவிட முயன்றான்.

மாயை!

ஆனால் அதற்காக அந்த ஓட்டம் நின்றுவிடவில்லை.

சளிந்த தடங்கள் இன்னும் சளியச், சளிய அவை ஒன்றின் மீது ஒன்று உராய்ந்தவாறே ஏறி ஏறி நழுவிக் கொண்டிருந்தன. அந்த நழுவலோடு சேர்ந்து மெல்ல மெல்ல மாயை என்ற முணுமுணுப்பும் அகலிகையின் வாயிலே கரைந்து நழுவத் தொடங்கிற்று. அந்த முணுமுணுப்புக்குப் பதிலாக முதல்முதலாக அப்படி ஒரு காட்சியைக் காண்கிறோம் என்ற ஆச்சர்யம் நிறைந்த ஆவல் ஒன்று பெறுகத்தொங்கிற்று. அதில் எது சாரை? சளியவைத்தவாறு ஓடி ஓடி மேலே தழுவி ஏறவதா மூக்கன்?

மேலே ஏறியது வழுவிக் சறுக்கிவிட கீழே சளிந்தது முன்னால் நழுவிற்று. நழுவியதைத் தொடர்ந்து சறுக்கி விழுந்தது ஓடித் தழுவி மேலே ஏறிற்று. கீழே கிடந்தது கீழே சளிந்து நழுவ, மேலே கிடந்தது மேலே சளிந்தவாறு நழுவ மண்ணும் சளிந்தது. மற்றதும் சளிந்தது. மண்ணில் நழுவியதன்மேல் மற்றது நழுவ, இரண்டும் சதா நழுவிக்கொண்டுதான் இருந்தன. படமெடுத்துப் படமெடுத்து நழுவிக்கொண்டிருந்தன. அந்த நழுவலிலேதான் தழுவல், தழுவலிலேதான் நழுவல்.

அகலிகை அப்படியே அசையாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். முதுகுத்தண்டில் தொடர்ந்து அதே விறுவிறுப்பு.

பிணைந்த பாம்புகள் இரண்டும் பிணைந்தவாறே மெல்ல மெல்ல முற்றத்தையும் கடந்து அப்பால் போய் தூரவுள்ள மரங்களுக்குள்ளும் மறையத்தொடங்கின. தழுவி நழுவிப் பிணைந்தவாறே மறைந்தும் போயின.

அகலிகை இன்னும் பார்த்துக்கொண்டே நின்றாள். மறைந்த பின்பும் இன்னும் அவை அப்படியே முன்னலுள்ள முற்றத்தில் பிணைந்து கொண்டிருப்பன போலவே தெரிந்தது அவளுக்கு. சளிந்து சளிந்து வளைந்த தடங்கள், வளைந்து வளைந்து சளிந்த தடங்கள், பிணைந்து பிணைந்து புணர்ந்த தடங்கள்......

அகலிகை திரும்பவும் தன்னைச் சுதாரித்துக்கொண்ட போது மாயை என்று வாயும் மனமும் திரும்பவும் முணுமுணுக்கத்தொடங்கின. ஆனால், அவள் உடல் ஏனோ அதை இப்போ நம்பத் தயாராய் இல்லை. மாயைதான் மாயைதான். ஆனால்...ஆனால்...என்று ஒப்புக்கொள்வதும் ஒப்புக்கொள்ளாததுமாய் அது இப்போ தானே முற்றத்தில் தன்னந்தனியாய் நழுவித் தழுவ முயன்றுகொண்டிருந்தது.

அகலிகை தன் உடலை இப்போ தானே தடவிட்டுக்கொண்டாள். தனிமையில் இரகசிய மறைவில் தன்னையே ஒருக்கால் தனியாக ஆராய விரும்பினாள். வாயிலைவிட்டு உள்ளே நழுவின கால்கள். மனமும் உடலும் ஒத்து நழுவின.

சாபம் தீர்ந்த நாள்முதல் அகலிகை அந்த ஒன்றைத்தான் ஒப்புக்கொள்ள மறுத்துவந்தாள். கலவியல் இச்சை. கல்லான காலத்தோடு அதே இச்சையும் தீர்ந்துவிட்டது என்பது அவளுடைய கற்பனை. இனி இந்திரனுக்கும் இந்திரனானவன் இறங்கிவந்தால்கூட அந்த எண்ணம் எந்தப் பிறப்பிலும் ஏற்படப் போவதில்லை என்பது அவளுடைய எண்ணம். எண்ணம் என்பதைவிட அதை அவளின் நடிப்பு என்று சொல்வதுதான் சரி. ஆனால் அதை ஒரு நடிப்பாகக் கருதாமல், தான் அப்படி நடித்தாள் என்பதையே மறந்து அதையே தன் சுபாவமாக, தன் இயற்கையான குணமாக மாற்ற முயன்றாள் அவள். கலவியல் என்ற ஒன்று இருப்பதாகவே அவள் நினைக்க விரும்பவில்லை. கல்லாகியதற்குரிய காரணத்தையும் கல்லாகிக் கிடந்த காலத்தையும் மறப்பதற்கு, தன்னிடமிருந்தே மறைப்பதற்கு அவள் கையாண்ட முறை அது. முன்பு கல்லாகியவள் இப்போ குழந்தையாக மாற முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அது அத்தனை இலகுவில் முடியக்கூடிய காரணமா?

எதிலிருந்து அவள் தப்பமுயன்றாளோ அது சதா அவளுக்கு முன்னாலேயே நின்றுகொண்டிருந்தது. விஸ்வாமித்திரரும் இராம இலக்குவரும் அவளைக் கௌதமரோடு விட்டுச்சென்ற நாள் தொட்டு அவள் சதா அதைத்தான் கௌதமரின் உருவில் சந்தித்துக்கொண்டிருந்தாள். கௌதமரின் தோற்றம், குரல், அசைவு எல்லாம் பழைய வீழ்ச்சியைத்தான் அவளுக்கு ஞாபகமூட்டின. ஞாபகம் என்பது அவளைப் பொறுத்தவரையில் குற்றவுணர்வுதான். உடலையே கூனிக் குறகவைக்கும் குற்றவுணர்வு. தன்னையே தன்மீது அருவருக்கவைக்கும், வெறுக்கவைக்கும் குற்றச்சாட்டு. அதனால் பழைய வீழ்ச்சியை ஞாபகமூட்டும் எல்லாவற்றையும் அவள் மறுத்துவிட முயன்றாள். கலவியல் என்பதே இல்லாததுபோல் அவள் கற்பனைசெய்து கொண்டதுவும் அதனால்தான். ஆனால் கலவியல் இல்லை என்ற நம்பிக்கை கௌதமர் இல்லை என்ற நம்பிக்கையாகவும் மாற வேண்டியிருந்தது. காரணம் கௌதமரின் தோற்றமே பழையவற்றையெல்லாம் ஞாபகமூட்டிக் குற்றஞ்சாட்டுவது போலவே அவளுக்குப்பட்டது. அவரை இருப்பதாக நினைத்துக்கொண்டால் அவளுக்குப் பழைய வீழ்ச்சியும் நினைவுக்கு வந்தது. அதற்குக் காரணமான கலவியல் இச்சையும் நினைவுக்கு வந்தது. எனவே கலவியலை மறுத்தாலும் கௌதமரை எப்படி மறுப்பது? முன்மைபோல் திரும்பவும் கல்லாகிவிட்டால் கவலையில்லை என்று அவள் நினைத்த நேரங்களும் உண்டு. ஆனால் கல்லாகுவதும் கல்லாகாமல்விடுவதும் அவள் இஷ்டம்போல் நடைபெறுபவையா? வேறு வழியின்றித் தன் வாழ்க்கை முரண்பாட்டையே தன் வாழ்க்கை இலட்சியமாகவும் மாற்ற முயன்றாள் அகலிகை. கணவன் ஒருவனோடு சதா வாழ்ந்து கொண்டும் கணவனும் கலவியலும் இல்லாதது போல் நடிக்கும் பையித்தியக்காரக் குழந்தை!.

கௌதமருக்கு அவளின் சங்கடமும் மன உழைச்சல்களும் பளிங்குபோல் தெரிந்தன. அவரைப் பொறுத்தவரையில் அவை இப்போ அவரின் சொந்தப் பிரசனைகள். அவர் வேறு அவள் வேறு என்ற பேதந்தான் இப்போ அவருக்கு இல்லையே.

மிதிலையின் எல்லையைவிட்டு அகலிகையை அழைத்துக்கொண்டு அவர் வேறு இடம் சென்றதும் அதனால்தான். பழைய சூழல் அகலிகைக்கும் பழைய நினைவுகளையும் பீதியையுமே எழுப்பும் என்று அவருக்கும் தெரிந்திருந்தது. சரயு நதியோரம் அவர் ஆசிரமத்துக்கும் தேர்ந்தெடுத்த இடம் பார்த்தவர் மனதில் இயற்கையாகவே சாந்தி எழுப்பக்கூடியது. ஆனால் இடத்திலா எல்லாம் இருந்தது? போகுமிடமெல்லாம் அகலிகைக்கு பழைய கல்லும் நெஞ்சுக்குள்ளேயே காவப்பட்டுக் கனத்துக்கொண்டு வந்ததே!

இடமாற்றத்தோடு கௌதமர் காலத்தையும் மாற்ற முயன்றார். கல்லாகிய காலத்தையும் காரணத்தையும் மறப்பதற்காக அகலிகை செய்ய முயன்றதுபோல் எல்லாவற்றையும் மறந்து விட்டு எதுவுமில்லாததுபோல் கற்பனை செய்து கொள்வதை அவர் விரும்பவில்லை. அது பைத்தியகாரனின் கனவு உலகத்தையும் சித்தப் பிரமையையுமே கொண்டுவரும் என்பது அவருக்குத் தெரியும். அவர் திரும்பவும் அவளைக் கல்யாண காலத்துக்குக் கொண்டுசெல்ல விரும்பினார். அனுபவம் காட்டிய புதி கோணத்திலிருந்து வாழ்க்கையைத் திரும்பவும் ஆரம்பத்திலிருந்து வாழ்ந்து காட்ட விரும்பினார் அவர். அந்தப் புதிய வாழ்க்கை கொடுக்கும் அனுபவமும் பக்குவமும் அகலிகைக்குத் தன் பழைய வீழ்ச்சியையும் பயப்படாமல் சந்தித்துத் தீய்த்துவிடக்கூடிய பார்வைக் கோணத்தையும் ஞான முதிர்ச்சியையும் கொடுக்கும் என்று அவர் கருதினார். பார்க்கப்போனால் அவரைப் பொறுத்தவரையில் பழைய நிகழ்ச்சிகளெல்லாம் குழந்தைப்பிள்ளச் செயல்களாகவே தெரிந்தன. அகலிகையின் வீழ்ச்சியும் அதைக்கண்டு அவர் அடைந்த சீற்றமும் இட்ட சாபமும் குழந்தைப்பிள்ளைத் தனங்களேதான். குற்றவுணர்வின்றி அவற்றை அப்படியே பார்த்து அவற்றைத்தாண்டி அப்பால் நிற்கும் நிலைதான் ஞானநிலை என்று பட்டது அவருக்கு. குழந்தைப் பருவத்தில் செய்தவற்றுக்காகப் பெரியவர்களாகியபின்பு பயப்படலாமா, வெட்கப்படலாமா? அகலிகையிடம் அந்த ஞானத்தை ஏற்படுத்தத்தான் அவர் முயன்றார். ஆனால் அகலிகையோ குழந்தைப்பருவத்தில் நடந்தவற்றை மறப்பதற்காக இன்னும் பெரிய குழந்தையாக, பைத்தியக்காரக் குழந்தையாகத் தன்னை மாற்ற முயன்று கொண்டிருந்தான்.

சரயு நதிக்கரையில் அகலிகைமட்டும் குழந்தையாக மாற முயல்கையில் இயற்கை அன்னையோ எல்லாவற்றிலுமே காமத்தையும் கலவியலையுமே காட்டி நின்றான். அதாவது அப்படித்தான் அகலிகைக்குத் தெரிந்தது. பார்க்குமிடமெல்லாம் பூத்திருந்த காட்டு மலர்களில் வண்டுகள் ரீங்காரமிட்டுப் புகுந்து எழுந்தவண்ணமிருந்தன.

கலை பிணையைத் தேடி ஓடிற்று. மறி கடாவை ஏற்றிவிற்று. மரத்தில் பாயும் மந்திக்கும் ஒரு சொந்தம் இருக்கவேசெய்தது. கீச்சிட்டுகத்தும் பறவைகள் எல்லாம் போகத் திளைப்பையே பறைசாற்றின. தன்னந்தனியனாய்க் குரல்வைக்கும் குயிலுக்குக் கூட எங்கிருந்தோ ஓர் எதிரொலி வரவேசெய்தது. கூடல், கூடல், எங்குமே கூடலும் அதன் கூவலுமேதான்!

அகலிகைக்கு இயற்கை தன்னை வஞ்சிக்க முயல்வது போலவே தெரிந்திற்று. உண்மையில் அவளல்லவா இயற்கையையே வஞ்சிக்க முயன்றாள்? ஆனால் அவளுக்கு அந்த வித்தியாசம் தெரியவில்லை. தெரியாததினால், தெரிந்துகொள்ள மறுத்ததினால் அவற்றையும் அவள் மறுக்க முயன்றாள். எல்லாமே அவளுக்கு இந்திரன் எடுக்கும் மாயத் தோற்றங்களாகவே தெரிந்தன. கோழியாகவும் பூனையாகவும் வந்தவன் மறியாகவும் கிடாவாகவும் கலையாகவும் பிணையாகவும் மந்தியாகவும் பறவையாகவும் வரமுடியாதா? ஆமாம் அவனின் மாயையேதான், எல்லாம் அதே மாயை!

அகலிகைக்குத் தன் கற்பனையை நியாயமாக்கவும் தன் மறுப்பைத் தத்துவரீதியாகச் சரிக்கட்டல் செய்யவும் ஓர் வார்த்தை கிட்டிற்று. கல்லாக்கமுன் பழைய கௌதமர் கற்பித்த ஒன்றுதான் மாயை!

பாடும் பறவை மாயை, கூடு பிணை மாயை, மலரை வட்டமிடும் வண்டு மாயை, குரல் எழுப்பும் குயில் மாயை, எல்லாம் மாயை. கலவியல் என்பதே மாயைதான். கலவியல் மாயை, கணவன் மாயை, எல்லாமே மாயைதான். எல்லாம் அவளை வஞ்சிக்க முயலும் இந்திர மாயையின் ஏமாற்று!

எதை எதையெல்லாம் அவள் சந்திக்க, நினைக்க விரும்பவில்லையோ அவற்றை யெல்லாம் அவள் மாயை என்று ஒதுக்கிவிடலானாள். எல்லாம் இந்திரன் எடுத்த ஆயிரம் ஆயிரம் மாயா யோனி பேதங்கள். அது அவளுக்கு மிக நியாயமாகப்பட்டது. ஒருவகையில் திருப்தியுங்கூட உள்ளே கல்லாகக் கனத்த பழைய கதையையும் அது மறைத்துவிட உதவிற்று.

இறுதியில் அகலிகை இந்திரனால் ஏற்பட்ட வீழ்ச்சியை இந்திரனைக்கொண்டே மறைத்துவிட்டாள். இந்திர மாயை! ஆனால் அதுக்காகப் பெயர் மாறியதே ஒழிய பழைய பயம் மாறவில்லை. வீழ்ச்சியை மறைத்து அறிவின் குத்தலையும் குற்றச்சாட்டையும் மழுப்ப ஒரு தத்துவம் கிடைத்திருந்தது. ஆனால் அந்தத் தத்துவத்தால் அறிவின் குத்தலை மழுப்ப முடிந்ததே ஒழிய அறிவுக்கும் அப்பால்பட்ட பிராந்தியத்திலிருந்து சதா எழுந்து கொண்டிருந்த பயத்தைப் போக்க முடியவில்லை. எப்போதும் எல்லாவற்றிலும் மறைந்திருந்து அவளில் பாய்ந்து பற்றிக்கொள்ள அந்த மாயைதான் பார்த்துக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறு உருவங்களிலும், சின்னஞ்சிறு ஓசைகளிலும் அவள் அதைத்தான் சதா பார்த்துக் கொண்டிருந்தாள். அதைத்தான் கேட்டுக்கொண்டிருந்தாள். எதை மறுத்த மறைக்க முயன்றாளோ அதையே மாயை என்ற மறு உருவப் பீதியில் சதா அவள் சந்தித்துக்கொண்டிருந்தாள்.

விசயம் தெரிந்த கௌதமர் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். தன் பழைய நிலையையே பார்ப்பது போலிருந்தது அவருக்கு. ஆனால் அவர் அவசரப்படவில்லை. அவருக்குத் தான் இப்போ நேரம் காலம் இல்லாவிட்டாலும் அவளுக்கு இருந்தது. அந்த நேரம் காலமெல்லாம் கூடிவரும்போது எல்லாம் தங்கள் பாட்டில் நடக்கும் என்பதும் அவருக்குத் தெரிந்தது. அவர் காத்திருந்தார்.

இல்லாத காலம் இருந்துகொண்டிருந்தான் இருந்தது. வராத நேரமும் வரத்தான் செய்தது. எப்போதும், எல்லாமுமாக நிற்கும் ஒன்று பிணையும் பாம்புகளில் மட்டும் இல்லாமலா இருக்கும்? இருக்கத்தான் செய்தது.

கௌதமர் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தபோது வழக்கம் போல் முகத்தைப் பார்க்காமலேயே யந்திரம்போல் அவரின் காலைக் கழுவிவிட அகலிகை வெளியே வரவில்லை, ஆசிரமத்தின் உன் மூலையில் நெய்விட்ட தீபம் மெல்லிய சுடர் காட்டிற்று. அந்தத் துல்லிய ஒளியில் வழமைக்கு மாறாகப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்த அகலிகையின் உருவம் தெளிவற்றுத் தெரிந்தது. கௌதமர் அவளை எழுப்பவில்லை. தீபத்தை இன்னும் நெய்விட்டுத் தூண்டிவிட்டவாறே மெல்ல வந்து அவளருகில் உட்கார்ந்தார். உர்கார்ந்தபின்னர்தான் அவளின் தோளைப்பற்றி வருடியவாறு அன்பொழுக மிக இரகசியமாக அழைத்தார்.

"அகல்யா!"

கசங்கிய கண்களோடு அவள் புரண்டு திரும்பினாள். ஆனால் திரும்பியதுபோலவே அவரை ஏறிட்டுப் பார்க்க முடியாதவளாய் தலையைத் திருப்பிக்கொண்டாள். ஓர் மெல்லிய நுனி நாக்கு முணுமுணுப்பு அவளுக்குள்யேயே கேட்கத் தொடங்கிற்று. மாயை, மாயை, மாயை. அதைத் தொடர்ந்து படுக்கையைவிட்டுத் துள்ளியெழ அவள் முயன்றாள். ஆனால் கௌதமர் தடுத்துவிட்டார். அவளுக்கும் அது போதுமாகவேபட்டது, உள்ளே எழுந்த முணுமுணுப்பை அது அமுக்கிவிட்டது.

"அகல்யா!" கௌதமர் திரும்பவும் அழைத்தார். வரவர அவரின் குரல் ஓர் பெரும் இரகசியக் குசுகுசுப்பாகவே மாறத் தொடங்கிவிட்டிருந்தது. அகல்யாவின் நுனி நாக்கு முணுமுணுப்பை அடித்துச் செல்லும் அடி நாதக் குசுகுசுப்பு, உபநிஷதக் குசுகுசுப்பு.

"அகல்யா, நீ நினைக்கிறமாதிரி மாயை என்ற ஒன்றில்லை தெரியுமா?"

அகலிகை மெல்லத் தலையைத் திருப்பி வெட்கப்பட்டவளாய் விழிகளைத் திறந்தாள். ஆனால் வெட்கத்துக்குப் பதிலாக விரகதாபந்தான் அங்கு அதிகமாக வழிந்தது.

"இது மாயையல்ல. இது உடல், மிக அழகிய உடல்".

தோளைத்தொட்டு வருடியவாறே முனிவர் தொடர்ந்து குசுகுசுத்தார்.

"அந்தந்தக் காலங்களில் அதற்குரிய கடமைகளையும் கருமங்களையும் செய்யத்தான் வேண்டும். தெரியுமா அகல்யா?"

கௌதமரின் வருடல் கீழே நழுவிற்று. நழுவித் தழுவி வழுவிற்று....

"தெரியுதா அகல்யா?"

விழிகளின் ஓரத்தில் தொடர்ந்து வெட்கத்தை வென்ற அதே விரகதாபம். இதல்களில் வரவர விரியும் பிளவு.

"தெரியுதா அகல்யா?"

முற்றத்தில் சளிந்து நெளியும் சாரையில் தழுவி நழுவுகிறது மூக்கன்....

"தெரிகிறதா?"

cont..










** porpara1.mtf ன் தொடர்ச்சி **

நல்லசிவம் வக்கும்பர பக்கம் திரும்பியபோது வக்கும்பரயின் தோற்றம் அவனுக்கு ஓர் சினிமா நடிகனையே ஞாபகப்படுத்திற்று. தட்டையாக வெட்டப்பட்ட தலைமயிரிலும் சின்ன ஆட்டுத்தாடியிலும் நீர்த்திவலைகள் பனித்துளிகள்போல் மின்னிக்கொண்டிருந்தன. நல்லசிவத்தைவிட வாட்டசாட்டமான இளம் உடம்பு. அவனைவிட வக்கும்பர அழகாகத்தான் இருந்தான். ஆனால் முற்றாகத் தன்னை அர்ப்பணித்த ஒரு முதிர்ந்த ட்ரொட்ஸ் கியைட்டுக்கு அந்த அழகு பொஞ்சம் கூடித்தான் போய்விட்டது. அப்படித்தான் பகுடியாக அவன் அடிக்கடி சொல்லிக்கொள்வான். கட்சிக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரியாமலில்லை. அது பகிடி.

"இல்லையா மச்சான்?" வக்கும்பர திரும்பவும் கேட்டான் "அங்கு பார் அவன் சும்மா உட்கார்ந்திருக்கிறான். ஆள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டன."

நல்லசிவம் வக்கும்பர காட்டிய பக்கமாகத் திரும்பினான். இடது கரையிலுள்ள அதே மணல் வெளியில் சிகரட் புகைத்துக்கொண்டு பழைய தோணிக்காரன் உட்கார்ந்திருந்தான். குளிக்க வந்த பெண்கள் குறுக்கக் கட்டுகளுடன் அவனோடு கதைத்துச் சிரித்துக்கொண்டு நின்றார்கள், சிங்களப் பெண்கள். சிரிப்பதற்கும் கதைப்பதற்கும் அவர்களுக்கு யாரும் தடை போட்டிருந்ததாகத் தெரியவில்லை. அவர்களோடு பகிடிக்கதை பேசுவதுதான் தன்னுடைய ஒரே ஒரு தொழிலும் பொழுது போக்கும்போல் பழைய தோணிக்காரன் கவலையற்றுக் கதைத்துச் சிரித்துக்கொண்டிருந்தான். இறுக்கி மடித்துக் கட்டிய சாரத்தோடு முறுக்கு விழுந்த தோள்களும் கால்களும் தெரிய அந்தப் பெண்களின் மத்தியில் ஓர் ஆணழகனாய் அவன் உட்கார்ந்திருந்தவிதம் நிச்சயமாக அவனைத் தோற்கடிக்கப்பட்டவனாகக் காட்டவில்லை.

"அவன்தான் பழைய தோணிக்காரன்" என்று ஓர் விமர்சகனைப்போல் விளக்கப்படுத்தினான் வக்கும்பர. "ஆற்றங்கறைக் கடக்க ஒர் ஆளுக்கு ஐந்துசதமாக எடுத்து ஏழெட்டு வருடங்களாக ஏகபோக உரிமையோடு உழைத்தவன் இப்போ சும்மா இருக்கிறான்.

நல்லசிவத்துக்கும் அது ஏற்கனவே தெரிந்த விஷயத்தான். தலையை ஒருக்கால் தண்­ருக்குள் ஆழ்த்திட்டு எழுந்த அவன் திரும்பவும் கல்லுப்பக்கம் கண்களைத் திருப்பினான். பழைய கல்லழகி இப்போ அடுத்த காலுக்குச் சவர்க்காரம் பூசிக்கொண்டு நின்றாள். மின்வெட்டும் வேகத்தில் நல்லசிவத்தை பார்த்துவிட்டு அவன் தலையைக் குனித்துக் கொண்டாலும் நல்லசிவம் அதை கவனிக்கவே செய்தான். தன்னை அவன் அவதானிக்கிறானா என்று நிக்கயப்படுத்தும் ஓர் கண்ணோட்டம். ஆனால் அதற்காக அவளது நிலை குலையவில்லை. மாறாக அவன் பார்க்கிறான் என்பதற்காகவே தன் நலையைக் குலைக்காமல் அந்தப் பளிங்குக் கம்பத்திலும் எப்படியோ அழுக்கைக் கண்டுபிடிக்க முயன்றாள்.

நல்லசிவம் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

அது என்ன வகை ஆசையாகத்தான் இருந்தாலும் அதற்கும் துணிச்சல் வேண்டாமா? ஒரு விதத்தில் நாளாந்த வெளிவேட நடைமுறை வாழ்க்கைக்கு எதிராக அதுவும் ஒரு புரட்சிதானே? ஆனால் வக்கும்பரயின் மனோவியல் பார்வையில் அதற்கு இடமிருந்ததா? இருந்தால் அது எந்த வர்க்கத்தைச் சார்ந்தது?

ஆனால் நல்லசிவத்தால் அந்தவகை விசாரணையில் அதிக நேரம் ஒன்றி நிற்க முடியவில்லை. திடீரென்று கல்லழகிக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் மணல் வெளியின் முடிவில் ஆற்றின் ஆழமான அடிப்பகதியில் அதுவரை அவனது முடிவில் ஆற்றின் ஆழமான அடிப்பகுதியில் அதுவரை அவனது அக்கறைக்குள் அகப்படாமல் குளித்துக்கொண்டிருந்த ஓர் களுத்தயானை பிளிறிக்கொண்ட எழுந்தவிதம் நல்லசிவத்தைத் திடுக்கிடவைத்துவிட்டது. அவனைப் பொறுத்தவரையில் அது ஓர் எதிர்பாராத காட்சி.

"வக்கே, பார்த்தாயா அதை?" என்றான் அப்போதுதான் தோணிக்காரனைப்பற்றிய வர்ணனையை நிறுத்திவிட்டு தண்­ருக்குள் தலையை தலையை ஆழ்த்திஆழ்த்தி முழுகிக்கொண்டிருந்தான்.

அங்குமிங்கம் தலையை ஆட்டிய வண்ணம் யானை நீரைவிட்டு வெளியே வரமுயன்றது. ஒருவேளை அதற்கு மதம் பிடித்துவிட்டதோ? நல்லசிவம் திகைத்துப்போய் பார்த்துக் கொண்டு நின்றான். காரணத் தெரியாத ஓர் பயத்தால் அவன் நெஞ்சு படபடவென்று இடித்துக்கொண்டிருந்தது. கல்லழகியின் கால்கள் இப்போ தெரியவில்லை. அவற்றுக்குப் பதிலாக உயர்ந்து எழுந்த யானையின் துதிக்கைதான் பயங்கரமாகத் தெரிந்தது.

"வக்கே!" என்றான் நல்லசிவம் திரும்பவும் அதே அவசரம் கலந்த தொனி.

ஆனால் வக்கும்பரவுக்கு அது கேட்கவில்லை. அவன் இன்னும் தலையை ஆழ்த்தி முழுகிக்கொண்டே இருந்தான்.

"மடையன்!"

நல்லசிவம் தன்பாட்டில் திட்டிக்கொண்டான். இந்த நேரத்திலா அவன் தன்னைமறந்து முழுகிக்கொண்டிருக்க வேண்டும்? நல்லசிவத்துக்கு ஏதாவது ஓர் துணைவேண்டும் போலிருந்தது அப்போது.

ஆனால் நல்லசிவத்துக்கு தவிப்பு அதிகநேரம் நிற்கவில்லை. அவன் வக்கும்பரையை திட்டிக்கொண்டிருந்த அதே வேளையில் அதுவரை எங்கோ போயிருந்த யானைப்பாகன் கத்திக்கொண்டு ஓடிவந்தான், கையில் அங்குசத்தோடு அவன் ஓடிவந்த காட்சி அந்த நேரத்தில்கூட மிக அழகாகத்தான் இருந்தது, ஆனால் அங்குசத்தை அவன் பாவிக்கவில்லை. "மாத்தா!" "மாத்தா!" என்று ஏதோ மந்திரம் கத்துவதுபோல் அவன் கத்தினான். அதன் சக்திக்குள் முற்றாகக் கட்டுண்டதுபோல் அடுத்தகணம் யானை அடங்கிவிட்டது. எழுந்த யானை அங்குமிங்கும் அசைந்துவிட்டுத் திரும்பவும் நீருக்குள்ளேயே படுக்கத் தொடங்கியது.

நல்லசிவத்தால் அதை நம்பமுடியவில்லை. அவனுக்கு ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. அதற்குத்தானா அவன் அவ்வளவுதூரம் பயந்தான்? ஆனால் அதேசமயம் நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒன்று கெம்பி எழுந்துவிட்டு அடங்கிக் கொண்டிருந்ததை அவன் உணராமலில்லை.

எழுந்து பிளிறிய யானை தலையும் மேல்வயிறு மட்டுமே தெரியக்கூடியதாக நீருக்குள் அமுங்கிக் கிடந்தது. ஓர் பெனனம் பெரிய கரும் பாறை. அதிலிருந்து பார்வையைத்திருப்பிய நல்லசிவத்துக்கு அப்போதுதான் அதற்கும் அப்பால், வெகு தொலைவில் அடுத்த கரையில் இன்னோர் யானை குளித்துக் கொண்டு நின்றது தெரியவந்தது. மேகத்தால் மறைக்கப்படாமல் அந்தப் பக்கம் விழுந்த சூரிய ஒளியில் நீரில் நனைந்த அதன் அடல் மினுங்கித் தெரிந்த காட்சி திடீரென்று பார்த்த போது ஓர் அபூர்வக் காட்சியாகவே தெரிந்தது.

வெள்ளையானை!

திடீரென்று பளிச்சிட்ட அந்த நினைவு நல்லசிவத்துக்கு இனந்தெரியாத நினைவுகளை கிளறிக்கொண்டு வந்தது. ஒர் புல்லரிக்கும் உணர்வு. அவன் பேசாமல் பார்த்துக்கொண்டே நின்றான்.

"என்ன அப்படிப் பார்க்கிறாய்? சைக்கோவா?"

நீரைவிட்டு எழுந்துநின்ற வக்கும்பரதான் கேட்டான்.

திடீரென்று நிலைகுலைந்துபோன நல்லசிவம் வேறு வழியின்றிச் சிரித்தான். கல்லழகி இப்போ முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி நின்றாள். இன்னொருத்தி அவளுக்கு முதுகு தேய்த்துக்கொண்டு நின்றாள். அதை எப்படிச் சைக்கோ பண்ணுவது?

"இல்லை, அந்த யானையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்றான் நல்லசிவம்.

நல்லசிவத்துக்கும் தான் கண்ட எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் சொல்லவில்லை. சொன்னால் அவற்றில் அக்கறைப்படக்கூடியவன்போல் வக்கும்பர தெரியவில்லை.

"பார், மச்சான், எல்லோரும் இவனுடைய தோணியில் தான் ஏறுகிறார்கள்" என்றான் வக்கும்பர சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு. யானையைப்பற்றி அவன் அக்கறைப்பட்டது அவ்வளவுதான்.

அடுத்த கரையிலிருந்து புதிய தோணி அவர்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. நடுவே பலகைகளைப் போட்டு இரண்டு தோணிகளை ஒன்றாகப் பிணைத்த தெப்பம் அது. நான்கைந்து பேர்கள் நடுவே நின்றுகொண்டிருந்தார்கள். கடையால் பக்கமாக புதிய தோணிக்காரன் தாங்கிக் கொண்டு நின்றான். தீக்குச்சிபோல் மெலிந்த உடம்பு கண்கள் குழிவிழுந்திருந்தன. அவர்களைத் தாண்டிப் போகும்போது அவன் தோணியிலிருந்தவர்களுக்கச் சொல்லிக்கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது.

"அவனுக்கு வேலை கஞ்சா அடித்துக்கொண்டு சதா அதிலிருந்து ஊத்தை போடுவதுதான்".

அடுத்த கரையிலிருந்த பழைய தோணிக்காரனைப் பற்றித்தான் அவன் அப்படிச் சொல்லிக்கொண்டு போனான். சிங்கள்ததில் "ஊத்தை" என்றால் தமிழில் "சுழட்டல்" என்பதைப் போல. வக்கும்பர குறிப்பிட்ட "சைக்கோ". பழைய தோணிக்காரன் இன்னும் அதே கோலத்தில் வேறு சில புதிய பெண்களுடன் கதைத்துக்கொண்டிருந்தான். புதிய தோணிக்காரன் அதைப் பார்த்துக் பொறாமைப்படுபவன் போல்தான் நல்ல சிவத்துக்குப்பட்டது. ஒருவேளை தோணிப் போட்டிக்கு அதுவும் ஒரு காரணமோ?

"புரட்சிக்குப்பின் பிரச்சாரம் நடத்துகிறாராக்கும்?" என்றான் நல்லசிவம் கிண்டலாக வக்கும்பரையைப் பார்த்து.

வக்கும்பரைக்கு அதிலிருந்த கிண்டல் தெரியவில்லை. நல்லசிவமும் தன்னுடைய வியாக்கியானத்திற்கேற்பவே கதைக்கிறான் என்ற சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டு அதை இன்னும் விரித்தான். "agit-prop".

"கடதாசிப்புலி" நல்லசிவம் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான்.

வக்கும்பரையும் சிரித்தான். ஆனால் அதிக நேரம் அவனால் அப்படிச் சிரிக்க முடியவில்லை. அப்போதுதான் அதிலிருந்த கிண்டல் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். திடீரென்று சுண்டிப்போய்விட்ட முகத்துடன் அவன் தன்னை விளக்க முயன்றான்.

"இல்லை மச்சான், பகிடியல்ல. இது ஒரு முழுப் புரட்சி. ஏழெட்டு வருடங்களாக அவன் சம்பாதித்தவன். ஒரு நாள் இவன் அக்கரைக்கு விறகு கொண்டுபோக முயலும்போது அதை ஏற்றிச்செல்ல அவன் மறுத்துவிட்டான். அவ்வளவுதான். அடுத்தநாள் இவன் போட்டியாகத் தானும் ஒரு தோணியைப் போட்டுவிட்டான். அதற்கு பிறகு எல்லோரும் இவன் பக்கம்தான். காரணந் தெரியுமா? அவன் யூ.என்.பி. ஆதரவாளன், உயர்ந்த சாதி, பணக்காரன். இவன் எஸ்.எல்.எஸ்.பி. ஆதரவாளன், தாழ்ந்த சாதி, சாதாரண வறிய பேர்வழி. அடுத்த கரையில் உள்ளவர்கள் எல்லோரும் இவனைப்போல்தான். அதுதான் காரணம். அதனால்தான் இதை ஓர் முழுப்புரட்சி என்றேன்."

"அது எனக்குத் தெரியாமலில்லை, வக்கே" நல்லசிவம் சிரித்துக்கொண்டு பதிலளித்தான். "எனக்கும் அது தெரியும். ஆனால் நான் செல்வது வேறு. அவன் மட்டும்தான் கஞ்சா குடிப்பதில்லை. இவனுந்தான் அபினும் கஞ்சாவும் அடிக்கிறவன். அதோடு அவன் ஊத்தை போடுகிறான் என்று இவனுக்குப் பொறாமைபோல் தெரிகிறது. அவன் தோணி ஓட்டுவதுபோல் இவனும் தோணி ஓட்டுகிறான், அவன் கஞ்சா குடிப்பதுபோல் இவனும் கஞ்சா குடிக்கிறான். ஆனால் அவன் ஊத்தை போடுவதுபோல் இவனால் முடியவில்லை. அதனால் பொறாமை."

"இவன் அபின் எடுக்கிறவன்?"

வக்கும்பர ஆச்சரியத்தோடு கேட்டான். அவனால் அதை நம்ப முடியவில்லை.

"ஓ இவனுந்தான்." என்றாள் நல்லசிவம் அழுத்தமாக. "நான் பார்த்திருக்கிறேன். இல்லாவிட்டால் இந்தளவு நோஞ்சல் பேர்வழியால் நாள் முழுதும் போட்டியாகத் தோணிதாங்க முடியுமா?"

வக்கும்பர அதை ஏற்றுக்கொள்ள விரும்பியதாகத் தெரியவில்லை. "நான் அதை நம்பவில்லை, மச்சான்" என்று சொல்லிவிட்டு அவன் மௌனமாகிவிட்டான். புதிய தோணிக்காரனைப்பற்றிக் குறைகூறுவது அவனுக்குப் பிடிக்கவில்லை போலப்பட்டது.

நல்லசிவம் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. புதிய தோணிக்காரன் அபின், கஞ்சா குடிப்பதை அவன் நேரிலேயே பார்த்திருக்கிறான். பிறகென்ன? தொடர்ந்து அதைப்பற்றிக் கதைக்க விரும்பாமல் நல்லசிவம் தண்­ருக்குள் ஆழ்ந்துவிட்டுத் தலைநிமிர்த்தினான். அவன் கவலைப்படுவதற்கு அதைவிடச் சுவையான காட்சி வேறு இருந்தது.

கல்லடியில் பழைய கல்லழகியைக் காணவில்லை. வேறு ஒருத்திதான் அழுக்குத் துணியைத் துவைத்துக்கொண்டிருந்தாள். பின்னால் அசைவற்றுக் கல்லுப் பாறைபோல் அமுங்கிப் போய்த் தெரிந்தது பழைய கறுத்த யானை. தூரத்து வெள்ளையானைமட்டும் முன்பைவிட இன்னும் அழகாய்த் துதிக்கையை மேலே உயர்த்தி நீரை அள்ளித் தெளித்து விளையாடிக்கொண்டிருந்தது. மறைக்கப்படாத சூரிய ஒளியில் அவை வெள்ளித்துளிகளாய் மினுங்கித் தெரிந்தன. வெள்ளையானை ! நல்ல சிவத்தின் உடல் திரும்பவும் புல்லரித்தது.

"நீ ஒரு பெரிய சைக்கோ, மச்சான்" என்றான் வக்கே திடீரென்று தன் மௌனத்தைக் குலைத்துக்கொண்டு.

நல்லசிவம திடுக்கிட்டுப்போய்த் திரும்பினான். நீர்த்திவலைகள் மொட்டுவிட்டிருந்த அரும்புத் தாடியுடன் வக்கும்பர வேண்டுமென்றே அவளை வம்புக்கு இழுப்பவன்போல் சாடினான். "நீ ஒரு சைக்கோ, மச்சான் சைக்கோ மன்னன்!"

நல்லசிவம் சிரித்தான். வக்கும்பரையின் மனநிலை பளிங்காக அவனுக்குத் தெரிவது போலிருந்தது.

"என்ன, உன் தோணிக்காரனைக் குறைகூறிவிட்டேன் என்று உனக்குக் கோபமாகும், அப்படித்தானே?"

"இல்லை, இப்போதான் உன்னை எனக்குத் தெரிகிறது. பழைய தோணிக்காரனைப்போல் நீயும் ஒரு சைக்கோமன்னன். அதுதான் நீயும் அவன் பக்கம்."

நல்லசிவத்துக்குச் சிரிப்பாக வந்தது. அது ஒரு அர்த்த மற்ற சுலோகம். வக்கும்பரேயைத் திருப்திப்படுத்தவும் அவனது ஆத்திரத்தைத் தீர்ப்பதற்கும் அது உதவாமலில்லை.

"வக்கே, நீங்கள் எதையும் வடிவாகப் பார்ப்பதில்லை", என்றான் நல்லசிவம் சிரித்துக்கொண்டு. "அதுதான் உங்களின் குறையும் இயலாமையும்."

ஆனால் வக்கும்பர விட்டுக்கொடுக்கவில்லை.

"சரி நீ பார்க்கிறதைச் சொல்லு பார்க்கலாம்?" என்று அவன் எதிர்க்கேள்வி போட்டான். "பெண்களைப் பார்த்துக் கொண்டு யானையைப் பார்க்கிறாயாம்! வெறும் பொய்யும் புழுகும்! வேறு என்ன? எங்கே சொல்லு பார்க்கலாம் தீ பார்க்கிறதை?"

"சொல்லிப் பிரயோசனமில்லை" என்றான் நல்லசிவம் சிறிது நேரம் யோசித்துவிட்டு. "சொன்னால் நீங்கள் இப்போ நம்பமாட்டீர்கள். ஆனால் நாங்கள் செய்யப்போகிறோம், நிச்சயமாகச் செய்யப்போகிறோம்."

"என்னத்தைச் செய்யப் போகிறீர்கள்?"

வக்கே சிரித்துக்கொண்டு கேட்டான்.

"அந்தப் பழைய தோணிக்காரனைப்போல் அப்படியிருந்து சைக்கோவா?"

"அவனை விடு ஒருபக்கம். நான் சொல்வது வேறு. நாம் செய்யப்போகிறோம். நிச்சயமாகச் செய்யப்போகிறோம்" என்று தூரத்தே நின்ற வெள்ளையானையைப் பார்த்தவாறே ஏதோ ஒரு புதுச் சத்தியாய் ஆட்கொள்ளப்பட்டவன் போல் நல்லசிவம் கத்தினான்.

வக்கும்பர தொடர்ந்து சிரித்தான். ஆனால் இந்த முறை அந்தச் சிரிப்பில் அவனுக்கே நம்பிக்கையிருக்கவில்லை. நல்ல சிவத்தின் கண்கள் கக்கிய ஒளியையும் குரல் எழுப்பிய நம்பிக்கைத் தொனியையும் அதுவரை அவன் பார்த்ததேயில்லை.


புதுக்குரல்கள்

நகரின் ஓர் புறத்தில் அந்த போடிங் ஹவுஸ் இருக்கிறது. தன்னளவில் பல இனத்தவரையும் பல வர்க்கத்தினரையும் பிரதிபலிக்கும் ஒர் தனி உலகம் அது. அங்கு இருப்பவர்களும் அங்கு வருபவர்களும் பல ரகத்தினர். முன்னால் முச்சந்தி. அந்த முச்சந்தியை ஒட்டிய பக்கமாகவுள்ள மூலைத் தனி அறையில் ஈழத்து இளம் எழுத்தாளர்களுள் ஒருவனான நல்லசிவம் குடியிருந்தான். அவனைப் பொறுத்தவரையில் அந்தத் தனி அறையே அவனுடைய கலைக்கூடம். வாசகசாலை, குடிபார், தியான மண்டபம் எல்லாம். அவன் வெளியே திரிவது இப்போ அரிது. வரவர அவன் தனக்குள்ளேயே புகுந்துகொண்டிருந்தான். வெளியே திரிந்து அவனுக்கு அலுப்புத்தட்டிவிட்டது. இனிமேல் திரிந்தால் அது திக்விஜயமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவனது திட்டம். அதனால் ஆமைபோல் அவன் அறைக்குள்ளேயே, தனக்குள்ளேயே அடங்கிகொண்டிருந்தான். ஆமைபோல் என்பது சாதாரண உவமையல்ல. அது அவனுடைய அப்போதைய சாதனைத் தந்திரமாகும். "ஆமைப்போல் உள்ளிழுத்து" என்று கீதை சொல்லுகிறது என்று அடிக்கடி அவன் தன் நாட்குறிப்பில் எழுதிக்கொள்வான். அவனுடைய நல்ல பண்பு அவற்றைப்பற்றி மற்றவர்களுடன் அவர்களின் தரத்துக்கு அதிகமாகக் கதைத்து அவர்களைப் "போர்" அடிக்கச் செய்யாததுதான். அடுத்தவர்களுக்கு அவை எல்லாம் அந்த அளவுக்கு அப்போது விளங்கும் என்று அவன் நினைப்பதில்லை. ஆனால் அதற்காக அவை எல்லாம் என்றும் விளங்காமலே நின்றுவிடும் என்று அவன் கருதுவதில்லை. அவை எல்லாம் எல்லாருக்கும் விளங்கம் காலம் வருமென்றும், அந்தக் காலத்தை அவனை ஒத்தவர்களே துரிதமாக உருவாக்க வேண்டும் என்றும் அதற்காகத் தீவிரமாகத் தன்னைத் தயாரிக்கவேண்டும் என்றும் அவன் திட்டமிட்டுத் தயாரித்துவந்தான். அதனால்தானோ என்னவோ அவனுடைய அறைக்குப் பலரும் வந்துபோவர். சில பிரபல எழுத்தாளர்தொட்டு பல்கலைக்கழகப் புரட்சிக்கார மாணவர்கள் ஊடாக அதே வீதியில் "றஸ்தியாதி" அடிக்கும் பையன்கள் வரை அங்கு பலரும் வருவர். அவர்கள் எல்லோருக்கும் அடைக்கலமாக அவனது அறை விளங்கும். அந்தப் பையன்கள் பொங்கோஸ் அடித்தும் எக்கோடியன் வாசித்தும் பழகும் அறையும் அவனுடைய அறைதான். ஒசி சிகரட் குடிக்கும் இடமும் அவனுடைய அறையேதான். "செக்ஸ்" முதல் அரசியல், சமயம் வரை அலசும் அந்தரங்கமான இடமும் அதுவேதான். இருந்தாலும் அவை எல்லாவற்றுக்குமிடையே நல்லசிவம் தன் வேலையை விட்டுவிடுவதில்லை. "நீரில் தாமரைபோல்" அவன் இயங்கிக்கொண்டே இருப்பான். அது அவனுடைய நாட்குறிப்பில் வரும் இன்னோர் சொற்றொடர், "நீரில் தாமரை."

போடிங் ஹவுசின்மூலை அறை நல்லசிவத்தினுடைய தென்றால் கதிரைகள்போட்ட விறந்தையுடன் இணைந்திருப்பவை சில முக்கியஸ்தர்களுக்குரியவை. ஒன்றில் பாங் சிறாப்பர் சுந்தரலிங்கம் இருந்தார், இன்னொன்றில் கச்சேரியில் ஓ.ஏ.யாகவிருக்கும் நடராஜர் இருந்தார். அவற்றுக்கும் அப்பார் நீர்ப்பாசன அலுவலகத்தின் சீப்கிளார்க் சீவநாயகத்தின் அறை இருந்தது. அந்த மூவரும் அவர்களைத் தேடி "காட்ஸ்" விளையாடவரும் பி.டபிள்யூ. டி. என்ஜினியரும் ஒர் தனிக்கட்சி. தனி வட்டம் அவர்களிலும் ஓ.ஏ.ஐயா ஓர் தனிப்பேர்வழி. காலை நான்கு மணிக்கு எழுந்திருந்து தேவாரப் பாராயணத்தை அவர் தொடங்கி விடுவார். பக்கத்தறையிலுள்ளவர்களுக்கு அது பெருந் தொல்லையாகப்படுவது உண்மைதான். இருந்தாலும் அவரின் வயதின் காரணத்தாலும் உத்தியோகத்தின் காரணத்தாலும் ஓ.ஏ.ஐயாவை அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. அவர் மிகப் பக்தியான பேர்வழி. அதனால்தானோ என்னவோ ஜ“.ஏ.கூட அந்த இடத்துக்கு அவரைக் காணும்பொருட்டு இடைக்கிடை தரிசனம் காட்டுவதுண்டு. உள்ளே வராமல் காரில் இருந்துகெண்டுதான் ஜ“.ஏ.காட்சியளிப்பாரானாலும் அந்தத் தனிவட்டத்துக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாகத் தெரியும். சிறாப்பர் ஐயாவைத் தேடிவரும் பாங்க் மானேஜர் அறைக்குள்ளேயே வருவார் என்றாலுங்கூட ஜ“.ஏ.யின் கார்க் காட்சி அதைவிட அந்த வட்டத்துக்குப் பெரிய காட்சிதான். ஆமாம் ஓ.ஏ.ஐயா எல்லாராலும் மதிக்கப்படுவர்தான். பெரிய பக்திமானுங்கூட. இருந்தாலும் தேவாரம் பாடாத வேளையெல்லாம் காட்ஸ் விளையாடாவிட்டால் அவருக்கு அவை பிறவாத நாளாகவே படும். அது அவருடைய "லீலை" யாக இருக்கவேண்டும். கார்ட்ஸ் விளையாட்டுத்தான் அந்தத் தனி வட்டத்தின் ஒரே ஒரு மாபெரும் இலட்சியம். இலட்சியமும் இணைப்புச் சங்கிலியும். அவர்களுக்குப் பிடிக்காதவற்றுள் முக்கியமானவை மூலை அறையிலுள்ள நல்லசிவத்தின் பழக்க வழக்கங்கள்தான்.

அவர்களுடைய அறைக்குப் பின்னால் சென்ற, அந்தனிஸ் கொலேஜில் படிப்பிக்கும் தம்பித்துரை மாஸ்ற்றரின் அறை இருந்தது. அவர் இன்னோர் வர்க்கம். அந்த அறையை அவர் மட்டுந்தான் தனியாக வாடகைக்கு எடுத்திருந்தாலும் அவர் இருக்கும்போது சதா அந்த அறையில் ஐந்தாறு பேராவது கதைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். எல்லாரும் 'மாஸ்ற்றர்கள்'. அது ஒரு விசித்திர இனம், அந்த மாஸ்ற்றர் இனம்! அவர்களும் இடைக்கிடை கார்ட்ஸ் விளையாடுவது உண்டு. ஆனால் முக்கிய தொழில் அரட்டை அடிப்பதுதான். ஓய்வு நாட்களில் காலையிலிருந்து இரவு படுக்கப்போவது வரையும் அவர்கள் கதைத்துக்கொண்டே இருப்பார்கள். கதைப்பதெல்லாம் அடுத்தவர்களைப்பற்றித்தான். அக்குவேறாக ஆணிவேறாக அடுத்தவர்களைக் "கழட்டு" வதுதான் அவர்களுடைய கதையின் முக்கிய "தீம்". தங்களைப்பற்றிய தாழ்வுணர்வால் அவர்கள் ஒரு நாளும் தங்களையே பார்ப்பதில்லை. தங்களைப்பற்றிக் கதைப்பதில்லை. எல்லாம் அடுத்தவர்களைப்பற்றித்தான், படிப்பிப்பது அவர்களுடைய "எக்ஸ்ரா கரியூலர்" வேலை. எப்போதாவது இருந்துவிட்டுச் செய்யும் தொழில். ஆனால் தம்பித்துரை மாஸ்ற்றரோ அந்த நேரத்தில்கூட அடுத்தவர்களைப்பற்றித் கழட்டிக்கொண்டிருப்பார். அல்லது தன்னைப்பற்றிப் புகழ்ந்துகொண்டிருப்பார். தம்பித்துரை மாஸ்ற்றர் தன்னை ஓர் அதிதீவிர அறிஞர் என்று எல்லாரும் கழுதைகளும் குரங்குகளும் என்பது அவருடைய அபிப்பிராயம். வெள்ளைத் தோலும் நெளிவிழுந்த தலைமயிரும் இருந்தால் ஆணழகன் என்பது அவருடைய அர்த்தம். மற்றவர்கள் கழுதைகள். எழுதைக்கும் குரங்கக்கும் எதிர்சொற்களாக அவர் கருதுபவை சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் என்ற பெயர்களே. அதனால் தன்னையும் ஓர் ஜெமினி கணேசனாகவும், சிவாஜிகணேசனாகவும் நினைப்பவர். ஆமாம் அவர் ஒர் சினிமாப் பிரியரும்கூட. இல்லை, தம்பித்துரை மாஸ்ற்றர் நினைப்பது, உடுப்பது, பேசுவதெல்லாம் சினிமாப் பாணியில்தான். அவருடைய அறையிலும் வகுப்பிலும் எம்.ஆர். ராதாவின் மூன்றாந்தர நாடகபாணிக் குரல் அதன் ஆகக்குறைந்த கீழ்த்தர நிலையில் கேட்டுக்கொண்டிருக்கும். அது சாட்சாத் தம்பித்துரை மாஸ்ற்றரின் அபிநயந்தான்.

போர்டிங்ஹவுஸ’ன் பின்பக்கம் - குசினியும் அதையடுத்த மூன்று அறைகளும் - ஐஸ்கிரீம் "கொம்பனி" நடத்தும் தேவசிக்குச் சொந்தமானவை. தேவசி ஓர் மறையாளத்தாள். நாற்பத்தைந்து ஐம்பது வயதிருக்கும். பெண்டாட்டி பிள்ளைகுட்டி இல்லாததால் தேவசிக்கு நாய்க்குட்டி பூனிக்குட்டிகளில் அதிகப்பற்று. தேவசிக்குப் பின்னால் சதா ஒரு நாய் அல்லது ஒரு பூனையாவது திரியாமல் இருக்காது. அதே வகையில் தேவசியின் அன்பும் ஆதரவும் மனித வர்க்கத்துக்கும் உரியவை. ஓசி விருந்து சாப்பிடுவதற்காகத் தேவசியைத் தேடி பலர் வந்து போவார்கள். தேவசியிடம் இரண்டு "தாம்" பலகைகள் உண்டு. அந்த வீதியிலுள்ள வேலையில்லாத் பையன்கள் எல்லாரும் முன்னாலுள்ள நல்லசிவத்தை "டிஸ்ரோப்" பண்ணாத வேளைகளில் பின்வழியாகப் போய் தேவசியின் தான் பலகைகளோடுதான் இருப்பார்கள். முன்னால் வருவதற்கம் போவதற்கும் ஓ.ஏ. ஐயா அவர்களை விடுவதில்லை. பின்வழியாகத்தான் போகவேண்டும். அதனால் ஓ.ஏ.ஐயா, அவர்களின் பாஷையில் "சரியான நஸராணி பிடிச்ச" ஒரு "பனங்கொட்ட படுவா". ஆனால் ஓ.ஏ.ஐயாவுக்குக் கேட்காமல்தான் அப்படிச் சொல்லிக்கொள்வார்கள்.

அன்று போயா நாள். அவரவர் அறைகளில் அவரவர் தங்கள் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தேவசியின் பின்பக்கத்து அறை ஒன்றில் பையன்கள் பல கூடியிருக்கின்றனர். தாசிம், சாம், அஸ“ஸ், மன்சூர் "தம்பி" எல்லாரும், தேவசியும் இருக்கிறார். "எம்ஜி" என அழைக்கப்படும் செவிட்டுச் செல்லையாவும் இருக்கின்றார். மிட்டாய்க்கார முதலாளி வேலுவும் எதிர் வீதியிலுள்ள "சொக்கட்டா ஸ்டோர்ஸ்" முதலாளி குஞ்சு நானாவும் "தாம்" இழுத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் விளையாட்டைப் பார்த்துக்கொண்டுதான் மற்றவர்கள் கூடி நிற்கின்றனர். கவனம் தாம் விளையாட்டில் இருப்பதாகத் தெரிந்தாலும் கதை வேறு விஷயம் பற்றியதாகவே இருக்கிறது.

"தாசீம், காத்திருந்த கண்கள் பார்த்தா!"

தேவசிதான் கேட்கிறார். தேவசி தன் அறைகளைவிட்டு வெளியே போவதில்லை. போனால் அது படம் பார்ப்பதற்காகத்தான் இருக்கும். அன்றும் அப்படிப் போகலாமா, வேண்டாமா என்பதற்குரிய ஆரம்பக் கேள்வி அது.

"ஓ, பாத்த (அ)" - தாசீம்.

"எப்படி?"

"ச்சிக், பள்!" - தாசிமை முந்திக்கொண்டு சாம் குறுக்கிடுகிறான்.

"போ ஒய், சும்மா பொய் அடிக்காம" - அஸ“ஸ்.

"ஏன், நான் பாக்கேல்லியா?"

"உன்னட்ட எங்க காசிருக்கு?" - நியாஸ்

மற்றவர்கள் சிரிக்கிறார்கள். சிரிப்பு முடிய தாசிம் பதில் சொல்கிறான்.

"ஜெமினிகணேசனும் சாவித்திரியும் வாறாங்க. சாவித்திரி டபிள் ஆக்ட்"

"எம் ஆர்.ராதா இருக்கானா?" - தேவசி

"ம்ம் இருக்கான். சாவித்திரிய லவ் பண்றான்.

"ஆகா ! ஆகா!!" - தேவசி.

திரும்பவும் எல்லோரும் சிரிக்கிறார்கள். சிரிப்போடு உள்ளேவரும் ஐஸ்கிரீம் மேக்கர் மீராசாய்பூ கத்திக்கொண்டு வருகிறான்.

"அட மானத்தை வாங்கிறியே. வேற என்னாத்த வாங்க? வாங்கக் காசில்லையே! மானத்தையாவது வாங்குவம்!"

தாசிம், தேவசி ஆகியோரின் கதையோடு அதற்கு எந்த விதத் தொடர்பும் இருக்கவில்லை. ஆனால் அங்கு எதற்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்பதற்காகத் தெரியவில்லை. சினிமாவா இருந்தால் போதும். திரும்பவும் எல்லோரும் சிரிக்கிறார்கள்.

"ஆ அண்ணாச்சி, என்னாச்சி!" - தம்பி

"செருப்பாலே அடிக்கோணும், செருப்பால!" - மீராசாய்பூ.

தாசிம் மட்டும் காத்திருந்த கண்களைவிடத் தயாராய் இல்லை.

"காத்திருந்த கண்கள்ளே சாவித்திரி டபிள் ஆக்ட்" அவன் விடாமல் தொடர்கிறான். ஓராளுக்கு ரெண்டு கொழந்த பிறக்கு. ரெண்டு சாவித்திரி. ஏழ சாவித்திரிக்கு ராதா ஜாதி போடுகிறான். மற்ற சாவித்திரிய ஜெமினி லவ் பண்றான். அப்படிக் கன ஜாதியெல்லாம் போடுறாங்க. ஆனாக் கடைசியில முடிவு சரியில்ல".

"ஓ, முடிவு சரியில்ல, என்ன தாசி?" - மன்சூர்.

"முடிவில ஒரு புரோசனமுமில்ல".

"லெச்சுமிக்கு பதினாறாந் தேதி ஒரு கத வருகுது" - அதுவரை பேசாமலிருந்த "எம்ஜி" செவிட்டுச் செல்லையா அதை வெளியிடுகிறார். அவர் எம்.ஜி.ஆர். பிரியன்.

"லச்சுமிக்கு? சர்வர் சுந்தரம் என்ன?" - தாசிம் சத்தம் போட்டுக் கேட்கிறான். இல்லாவிட்டால் எம்ஜிக்கு கேட்காது.

"அது சர்வர் சுந்தரமா? ங்கா? " - எம்ஜி.

"ஓ, சர்வர் சுந்தரம், சர்வர் சுந்தரம்!" தேவசி திருப்பிச் சொல்கிறார். தேவசிக்குத்தான் செவிட்டுச் செல்லையாவுடன் கதைக்கும் முறை தெரியும். "நாகேஷ் வாறான், நாகேஷ்!"

"நாகேஷ் ! சைவ கிளப்பில் சர்வர், சர்வர்!"

"ங்கா? அப்பா எம்ஜி இல்ல? "

"எமஜியுமில்ல, ஜிவாஜியுமில்ல!"

எல்லாரும் சிரிக்கிறார்கள். செல்லையாவுக்கு ஏன் என்று விளங்கவில்லை. எப்பவுமே அது அவனுக்கு விளங்குவதில்லை. சும்மா அசட்டுச் சிர்ப்பொன்று சிரிக்கிறான்.

"எமஜியில்ல எம்.ஜி. ஜிவாஜியில்ல சிவாஜி" தம்பி அதைச் சத்தம் போட்டுச் சொல்லிக் கொடுக்க முயல்கிறான்.

செவிட்டுச் செல்லையா திருப்பிச் சொல்கிறான்- "எமஜி"

திரும்பவும் சிரிப்பு. அந்தச் சிரிப்பினூடே விளையாட்டை மறந்த மிட்டாய்க்கார வேலு ஒரு காயைப் பிழையாக இழுத்துவிடுகிறார். அந்தப் பிழையான இழுப்பால் அவருடைய ஐந்து காய்களை டக்டக்கென்று ஒரே இழுப்பில் குஞ்சுநானா வெட்டிவிடுகிறார்.

"ச்சச் சச் சா! சிரிப்பிலே நான் பிழையா வச்சிற்றனே" என்று மனவருத்தப்படுகிறார் வேலு.

"வச்சிற்றனே" என்ற வார்த்தை அருகில் நின்ற அஸ“ஸ”க்கு ஓர் பாட்டை நினைவூட்டிவிடுகிறது.

"வீட்டுக்கு வந்த மச்சான்

வீதியை மாத்தி வச்சான்

கதையை மாத்தி அதையும் மாத்தி இதையும் மாத்தி

வ - ச் - சா - ன் - "

திரும்பவும் சிரிப்பு.

"இந்தக் காலத்துப் பாட்டுங்களப்பா" வேலு சொல்கிறார். அவர் சந்திரலேகா காலத்தவர். "லாலோ லலச் சந்திரோ, தரத்தந்தனோ தனத்தத்தந்தனோ" என்பவைதான் அவருக்கு அடிக்கடி வாயில் வருபவை. "இந்தக் காலத்துப் பாட்டுங்களப்பா!"

"சுதியான பாட்டுக்கள் என்ன?" - மன்சூர் கேட்டு விட்டுச் சிரிக்கிறான். கேட்டுவிட்டுக் கூடவே வேறொன்றையும் பாடியும் காட்டுகிறான். "காட்டு ராணி, - காட்டு ராணி!"

சிரிப்புக்கிடையே "ஜாதிப் பாட்டுக்கள் !" என்கிறான் தாசிம்.

"மறு மச்சான் ! மேவாதமாய் சிந்து !" என்கிறான் சிங்களத்தில் - அஸ’ஸ்.

கடைசியாக வந்த சிரிப்பும் கதையும் "எமஜி" க்கு விளங்கவில்லை. அவன் முழிக்கிறான். அதனால் தேவசி அதைத் திரும்பவும் விளக்க முயல்கிறார்.

"வீட்டுக்கு வந்த மச்சான் விதியை மாத்தி வைச்சான். அதையும் மாத்தி இதையும் மாத்தி - "

கூடவே அதற்கேற்ற வகையில் தேவசி தன் கைகளால் அபிநயம் பிடித்துக்காட்டுகிறார். காட்டிவிட்டு எல்லாருடைய சிரிப்புக்குமிடையே கேட்கிறார். - "எப்படிப் பாட்டு!"

"ஓ எமஜிதான். அதையும் மாத்தி இதையும் மாத்தி-"

திரும்பவும் சிரிப்பு. சிரிப்பு முடியும் போது தம்பித்துரை மாஸ்ற்றரிடம் டியூசன் எடுக்கவரும் மாணவன் ஒருவன் உள்ளே நுழைகிறான்.

"அடே, எம்.ஜி.ஆர்.? வா! வா!" - தேவசி அவனை வரவேற்கிறார். வரவேற்றவாறே செவிட்டுச் செல்லையாவுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைக்கிறார். "இவன் எமஜ“".

"இவன் எமஜி"- செல்லையாவுக்குச் சந்தேகமும் ஆத்திரமும்.

"ஓ, எமஜி! எமஜியின்ர கோழையா! சிஷ்யன் சிஷ்யன்!"

வந்த பையன் அதை விளக்க விரும்பியவன்போல "டீஷ். டீஷ்" என்று வாயால் ஓசை எழுப்பியவாறு வாள் சண்டை செய்வதுபோல் கையை அங்குமிங்கும் ஆட்டி ஆட்டித் துள்ளுகிறான்.

எல்லோரும் திரும்பவும் சிரிக்கிறார்கள். எமஜியுங்கூட.

தம்பித்துரை மாஸ்ற்றரின் அறையில் அவரோடு படிப்பிக்கும் வேறு மூன்று மாஸ்ற்றர்மார் இருக்கிறார்கள். வாரப் பத்திரிகை ஒன்றை நடராஜர் மாஸ்ற்றர் வாசித்துக்கொண்டிருக்கிறார். "கோரம்" இன்னும் சேராததால் கதையில் இன்னும் வேகம் விழவில்லை.

"என்ன ராமச்சந்திர மாஸ்ற்றரை இன்னும் காணேல்லியே!"- பத்திரிகையை ஒரு பக்கம் வீசிவிட்டு நடராஜர் மாஸ்ற்றர் பொறுமை இழந்தவராகக் கேட்கிறார்.

"அவரென்ன பெண்டாட்டிபிள்ளகுட்டிக்காரன், ங்ஹாய்? பிறகென்ன சொல்ல வேணுமா?"-தம்பித்துரை மாஸ்ற்றர் தனக்கேயுரிய இமிடேசன் இழுப்போடு பதிலளிக்கிறார்.

"நாங்களும் பெண்டாட்டி பிள்ளகுட்டிக்காறங்கள் தானே மாஸ்ற்றர்?" - நடராஜர்.

"நீரென்ன ராத்திரிக் காத்திருந்த கண்கள் பார்க்கப் போனீரே? அவர் போயிருப்பார். சாவித்திரியைப் பார்த்திருப்பேர். பிறகென்ன? ங்ஹாய்? ராத்திரிக் கொஞ்சம் நித்திரை முழிச்சிருப்பேர் தெரியாதே? இப்ப கொஞ்சம் எழும்பச் சுணங்கியிருக்கும். ஒரு டசினும் இன்னும் ஒண்டோ, இரண்டுதானே குறைச்சல்? அதையும் ஏன் விட்டு வைப்பான், ங்ஹாய்? அப்படித்தானே, என்ன நான் சொல்றதினே பிழையிருக்கா, ங்ஹாய்?"

மற்றவர்கள் சிரிக்கிறார்கள். கோரம் சேராததால் இப்போ கோரத்தை நிரப்பாதவரே கழட்டப்படுகிறார். ஆனால் அது கதையில் வேகத்தை விழுத்தாமலில்லை, அவர்களுடைய ஆட்களாய் இருப்பினும் முன்னால் இல்லாவிட்டால் அவர்களும் பிறத்தியார்தான். அதாவது அவர்களுடைய அர்த்தத்தில் "கழட்டலுக்கு" உரியவர்கதான். அது அந்த இனத்தின் இன்னோர் பழக்கம்.

சிரிப்பு ஓய்ந்தபின் சிறிது நேரம் மௌம் நிலவுகிறது. அந்த மௌனத்தில் நல்லசிவத்தின் மூலை அறையிலிருந்து டைப்படிக்கும் சத்தம் அங்கு மெல்ல வந்து கேட்கிறது.

தம்பித்துரை மாஸ்ற்றர் பேசாமல் அந்தத் திசையில் கண்ணைக் காட்டுகிறார். மற்றவர்களுக்கு அதன் அர்த்தம் புரிகிறது. மெல்லச் சிரிக்கிறார்கள்.

"நீங்கள் என்ன மாஸ்ற்றர், நாங்க கம்பன், காளிதாசன் கருணாநிதி, அண்ணாத்துரை எல்லாரையும் விடப் பெரியவங்கள்! நீங்க பகிடி விடுறேங்க!"

நடராஜர் மாஸ்ற்றர் நல்லசிவத்துக்காக வாதாடுவது போல் அந்தக் கேள்விக்குத் தானும் சேர்ந்து தூபம் போடுகிறார். அவருடைய அபிப்பிராயப்படி கம்பன், காளிதாசன், கருணாநிதி, அண்ணாத்துரை எல்லாரும் சமமானவர்களே.

"ஐயே கியம்பன்! கியம்பன்! கியழுதை! ச்சி அதை விடு கண்றாவி" - தம்பித்துரை மாஸ்ற்றர்தான்.

அதை ரசித்து நடராஜர் உட்பட எல்லாரும் சிரிக்கின்றனர். தம்பித்துரை தொடர்கிறார்.

"கியழுதையை விடு. தமிழ்ழ ஒரு வசனம் சரியா எழுதத்தெரியாது. பெரிய அறிஞர்! அறிஞர் அண்ணாத்துரை!"

அந்தச் சமயத்தில் ராமச்சந்திர மாஸ்ற்றர் உள்ளே வரவே கதை வேறு வழியில் திரும்புகிறது.

"ஆ, வாருங்க மாஸ்ற்றர், வாருங்க. என்ன ராத்திரிக் காத்திருந்த கண்களே?"

தம்பித்துரை நக்கலோடு கேட்கிறார். மற்றவர்கள் சிரிப்பை அடக்க முயல்கின்றனர். அவற்றின் அர்த்தத்தைப் புரியாத ராமச்சந்திரன் தன் எரிச்சலை மறைமுகமாக அவர்களை மட்டந்தட்டுவதில் தீர்க்க முயல்கிறார்.

"நீங்க என்னங்க மாஸ்ற்றர்; சும்மா இஞ்ச இருந்தண்டு பீத்தியண்டிருப்பேங்க. அதல்லவோ பார்க்கவேண்டிய படம்."

"படம் உண்மையாக நல்லாத்தான் இருந்திது."

"வேற?"

"சாவித்திரி வந்து அப்பிடி இப்பிடி ஆட்டி, ங்ஹாய், டான்ஸ் கீன்ஸ்?"

"சுதியான படம் மாஸ்ற்றர், சுதியான படம்"
"சுதியான சரக்கும், ங்ஹாய்?"

மற்றவர்கள் சிரிக்கின்றனர். தம்பித்துரையும் சிரித்துக்கொண்டே தொடர்கிறார்.

"அப்ப எங்களையும் போகச் சொல்றேங்கள்? அப்ப ஏன்விடுவான், நாங்களும் இண்டைக்குப் போவம்?"

மற்றவர்களும் ஆமோதிக்கின்றனர். "ஓ, போவம், நமக்குத்தான் என்ன வேலை? ஏன் விடுவான்?"

அதே நேரத்தில் முன் அறையில் ஓ.ஏ. ஐயாவும், சீப் கிளாக்கரும் என்ஜினியரும் அரசியல் அலசிக்கொண்டிருக்கின்றனர். காலையில் சந்தைக்குப் போன சிறப்பர் இன்னும் திரும்பி வரவில்லை. அதனால் அவர் வரும்வரைக்கும் அந்த அலசல்.

"என்ன ஜ“.ஜ“. வரப்போறாமே?" என்று அபிமானம் தொனிக்கக் கேட்கிறார் ஓ.ஏ.ஐயா. ஜ“.ஜ“. பொன்னம்பலம் ஐ.நா.வுக்குப் போய்விட்டுத் திரும்புவதைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.

"ம்ம், அவன் மனிசன், ஆயிரத்தச் சொன்னான்ன. he is a great fellow. You can't deny that" - என்ஜினியர்.

கிளாக்கருக்கு அது அவ்வளவு பிடிக்கவில்லை. அவர் சமஷ்டிக் கட்சிக்காரர். பேசிப் பேசி என்னத்தைப் புடுங்கினவர்? சும்மா ஹன்சார்ட்ட நிரப்பினதுதான் மிச்சம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் வெளியே சொல்ல விரும்பவில்லை. மற்றவர்கள் ஜ“.ஜ“. கட்சி. கிளாக்கரும் பட்டியை முறிச்சுப் பேசும் "மூட்" இல்லை. மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டார்.

"சரியான reception வைக்கப்போறாங்களாமே?" ஓ.ஏ. ஐயா.

கிளாக்கருக்குத் திடீரென்று தம் ஆத்திரத்தைத் தீர்க்க ஒரு துரும்பு கிடைத்துவிடுகிறது. "எப்பிடியெண்டான்ன எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு வந்த கூட்டமும் கொண்டாட்டமும்போல இனி யாருக்கும் வராது" என்றார் வேண்டுமென்றே.

"ஓ அதென்டா உண்மை" என்று ஆமோதித்தார் என்ஜினியர், அதன் உட்கருத்தை விளங்கிக் கொள்ளாமல்.

அது கிளாக்கருக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. அந்த உற்சாகத்தில் "நானும் பார்த்தேனே, wife எல்லாரோடேயும் போய் கோல்பேசில நிக்க இடமில்ல" என்று சொல்ல வேண்டியுதற்கு அதிகமாகவும் சொல்லிவிடுகிறார்!

*இதொ.porpara3
















***porpara2.mtfஇன் தொடர்ச்சி***

ஓ.ஏ.ஐயாவுக்கு அது போதுமாகப்படுகிறது. "என்ன கோயில் குளத்துக்குப்போகிறமாதிரி wife எல்லாரையும் கூட்டியண்டு ராமச்சந்திரனைப் பார்க்கப் போயிருக்கிறேங்களாக்கும்?" என்றார் கிண்டலாக.

என்ஜினியர் சிரிக்கிறார்.

கிளாக்கருக்கு அது மெல்லச் சுட்டுவிடுகிறது. பட்டியை உடைக்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் அந்தச் சூட்டில் மறந்துபோய்விடுகிறது. "ஓ, இருந்திற்று By Night படங்கள் பார்க்கலாமெண்டால் இதுகளப் பாத்திற்றா என்ன வந்திற்று?" என்கிறர் ஓ.ஏ. ஐயாவை பார்க்காமலேயே.

அது ஓ.ஏ. ஐயாவுக்கு ஓர் அடி. முதலாவது World by Night படத்தை அவர்களுக்கு முந்தி கொழும்பில் போய்ப் பார்த்துவிட்டு அறிமுகப்படுத்தியவர் ஓ.ஏ. ஐயாதான். அவர் ஒரு நாளும் படம் பார்ப்பதில்லை. ஆனால் அதுக்குப் பிறகு "பை நைட்" என்றால் இரகசியமாகப் பார்த்துக்கொள்வார். ஆரம்பத்தில் விட்ட பிழையை அதற்குப் பிறகு செய்ததில்லை. இருந்தாலும் முன்பு, ஒருமுறை அறிமுகப்படுத்திய ஒன்றே இப்போ அவரைச் சாடுவதற்குப் போதுமாக இருந்தது.

ஓ.ஏ.ஐயா ஒன்றும் சொல்லமுடியாதவராய்ச் சிரித்துச் சமாளிக்க முயல்கிறார். அவருடைய நல்ல காலம். சந்தைக்குப் போயிருந்த சிறாப்பர் வாழைப்பழச் சீப்போடு அப்போது வந்தது பிரச்சனையைத் தீர்த்துவைக்கப் பெரிதும் உதவுகிறது.

"அந்தாச் சிறாப்பரையா வாறேர். இனி விளையாடுவம்!" என்கிறார் என்ஜினியர்.

"ஓ, விளையாடுவம்" என்கிறார் சிறாப்பரும் வந்து கொண்டே.

சங்கடம் தீர்ந்த திருப்தியில் கடதாசிக் கூட்டத்தை எடுக்கிறார் ஓ.ஏ.ஐயா.

மூலை அறையில் தொடர்ந்து டைப்ரைட்டர் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. சூழலின் இரைச்சலை அறிந்தும் அறியாதவனாய் நல்லசிவம் அடித்துக்கொண்டிருந்தான்.

....அவிழ்ந்து தொங்கிய தலைமயிர் முகத்தை மறைக்கச் சீதை அசோக வனத்தில் வீற்றிருந்தாள். புகை படிந்த ஓவியம், அந்அந்தப் புகைப்படிவின் தடிப்பு சுற்றிவர இருந்து இரைந்து கொண்டிருந்த மாயை அரக்கியரையும் அவர்களைச் சூழ்ந்திருந்த அசோகவனக் காடுகளையும் தாண்டி அசோகவனத்துக்குப்பால் கோட்டை கொத்தளங்களுடன் கொலுவீற்றிருந்த இராவணன் வரை வியாபித்திருந்தது. பத்துத் திசையும் பரவிய வியாபிப்பு, புகைப்படிவு.

அந்தப் படிவின் குரல்களாய் அசோகவனத்து அரக்கியர் இரைந்துகொண்டிருந்தனர். அந்த இரைச்சலுக்குள் ஆழ்ந்து அமிழ்ந்து தன்னையே இழந்துவிட்டவள்போல் தூங்கிக்கொண்டிருந்த திரிசடை திடீரெனக் கண்விழித்தாள்.

"அம்மா, நான் ஒரு கனவு கண்டேன்" என்று சீதையின் காதுக்குள் மெள்ளக் குசுகுசுத்தாள் கண்விழித்தெழுந்த திரிசடை. "எம்பிரான் தன் தம்பியுடன் ஒரு பெரும்படை திரட்டி வருவதாகக் கனவு கண்டேன். நம் மீட்சிக் காலம் நெருங்கிவிட்டதம்மா."

"அப்படியா" என்று கேட்ட சீதை அதுவரை இல்லாத கோலத்தில் மெல்லச் சிரித்தான்.

புகைப்படிவைப் பீறிவந்த சிரிப்பொலி விடுதலை கிடைக்கப் போகிறது என்ற சந்தோசத்தை மட்டும் வெளிக்காட்டியதாகத் தெரியவில்லை. அவற்றையெல்லாம் ஏற்கனவே அவள் பூரணமாகத் தெரிந்திருந்தாள் போன்ற ஓர் சகஸ உணர்வையும் வெளிக்காட்டுவதாக இருந்தது.

"என்னம்மா, நீங்களும் ஏதாவது கண்டீர்களா?" என்றாள் திரிசடை ஆச்சரியத்தோடு, "அல்லது இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?"

வரவரத் திரிசடைக்கு அப்படியும் ஓர் சந்தேகம். அதாவது அப்படியும் ஓர் எண்ணம் அவளையறியாமலேயே அடிமனதில் ஊறிக்கொண்டிருந்தது, சீதைக்க எல்லாம் தெரிந்திருந்தது. அவள்பட்ட வேதனைகள்கூட அவளைத் தொடமுடியாது. அப்படி. ஆனால் இன்று தான் அதில் அவளுக்கே நம்பிக்கை எற்படுவது போலிருந்தது.

சீதைக்குச் சேதி சொன்ன திரிசடை இப்போ தானே அவளிடம் கேட்டறிபவளாக மாறிவிட்டாள்.

"கூடவரும் படை வானரப் படைபோல் இருக்கிறதே! மனிதரையும் அரக்கரையும் விட்டுவிட்டு எம்பிரான் ஏனம்மா அந்நியரான வானரரைக் கூட்டிவரவேண்டும்?"

சீதை திரும்பவும் சிரித்தாள்- சிரித்துவிட்டுச் சொன்னாள், "அந்நியர் என்போர் அவருக்கில்லை. அதனால்."

"இராவணன் கூடவா?"

"அதெப்படி" என்று திருப்பிக் கேட்டாள் சீதை, ஆனால் பழைய சிரிப்பின் சாயல் இன்னும் அழியவில்லை.

"என்னம்மா சிரிக்கிறீர்கள், இதுவரை இல்லாத விதத்தில்?" என்றாள் திரிசடை. அதுவரை தெரிந்திராத ஓர் மறைவைக் கண்டுவிடும் சந்தோசம் செறிந்த திகைப்புடன். "இராவணனில்கூட உங்களுக்குத் திடீரென்று ஆத்திரமில்லைப்போலிருக்கிறதே!"

சீதை திரும்பவும் சிரித்தாள். அசோகவனத்திற்கு வந்ததற்குப்பின் அன்றுதான் அவள் அப்படிக் காணப்பட்டாள்.

"அவர் வராதவரைக்குத்தான் ஆத்திரமும் கோபமும் பயமுமென்றால் அவர் வரப்போகிறபோதும், வந்தபிறகும் திவை வரவேண்டுமா? அவர் வந்தபிறகு யாரிலுமே ஆத்அரமும் கோபமும் வராது, இராவணனில்கூட அன்புதான் பிறக்கும்."

"என்ன, எங்கள் எதிரி இராவணனிலுமா?"

திரிசடை ஆச்சரியத்தோடு மெல்லக் குசுகுசுத்தாள்.

"இந்த அரக்கர் கூட்டத்திலுமா?"

சீதை தலையசைத்து ஆமோதித்தாள், புகை படிந்த அந்த ஓவியத்தில் புதிதாக ஏறிய ஒளி இன்னும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. "ஆமாம் அவனிலுந்தான்."

என்ன இந்தச் சீதைதானா இதுகாலவரை அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் குலைந்த கூந்தலோடு வாடியிருந்தாள்?

திரிசடைக்குத் தன்னையே நம்ப முடியாமலிருந்தது. ஒருவேளை திரிசடைதான் இவ்வளவு காலமும் தூங்கிக் கனவு கண்டிருந்தாளோ? இவ்வளவு காலமும் அந்த அசோகவனத்தையும் அழுதுவடியும் சீதையும் அவள்தான் கற்பனை செய்து கொண்டிருந்தாளோ?

"யார் எதிரி, யார் நண்பன்?" மலர்ந்த முகத்தோடு சீதை விளக்கினாள். "என்னிருக்க இடமின்றி எம்பிரான் எங்கும் துளைத்து நிற்கும்போது எதிரி யார், நண்பன் யார்? இராமன் யார்? இராவணன் யார்?"

திரிசடையின் திகைப்பு கூடியதேயொழிய தெளிவு பிறக்கவில்லை. அதற்கு இன்னும் காலம் இருந்தது. சீதை திரும்பவும் சிரித்தாள்.

(1966)


புதிய வார்ப்புகள்
(கட்டுரைகள்)


பிழையென்று சொல்வதால் மட்டும் ஒரு தத்துவத்தை ஒதுக்கிவிடமுடியாது. அதுவும் தேசத்தின் அறிவு வளர்ச்சியில் அத்தனை பெரிய செல்வாக்கை வைத்திருந்த ஹெகலியத் தத்துவத்தைப் போன்ற ஒன்றைச் சும்மா புறக்கணித்தல் மூலம் ஒதுக்கிவிட முடியாது. திறானாய்வு மூலம் புதிய உள்ளடக்கத்தைப் பேணியவாறு அதன் உருவத்தை அழிப்பதன் மூலமே அரு வெல்லப்பட வேண்டும்.

- எங்கல்ஸ் (Fuerbach and the end of Classical German Philosophy)

எமது பழைய சிந்தனைகளினதும் நம்பிக்கைகளினதும் போக்கையே வெல்லக்கூடிய ஒது புதுத் தத்துவத்தை உருவாக்கவும், மனிதனின் தற்போதைய பொதுப் பார்வையைக் கோணத்தையே முற்றாக மாற்றியமைக்கவும் கூடிய ஒரு சிந்தனைப் புரட்சியின் வாசலில் நாம் இன்று நிற்கிறோம்.

- ஜூலியன் ஹக்ஸ்லி (Essays of a Humanist)

பிரபஞ்ச மாயையை உணரும் அனுபவம் ஒன்றுதான் அற்புத அழகுவாய்ந்த உன்னத உணர்ச்சி. உண்மையான விஞ்ஞானத்தின் கருவூலம் அந்த உணர்ச்சிதான். மெய்சிலிர்க்கும் அந்த உணர்ச்சி இல்லாத மனிதன் உயிரற்றவன். மனித அறிவுக்கு அப்பாற்பட்டதொரு சக்தி உண்மையில் இருக்கிறது. அந்தச் சத்தியே இப் பிரபஞ்சத்தில் அழகு வடிவமாகவும் அறிவுச் சிகரமாகவும் பரிணமித்திருக்கின்றது. மனிதனின் மந்த புத்தி அப் பரிணாமங்களின் ஆரம்ப நிலைகளைத் தான் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த உணர்ச்சி, இந்த அனுபவம் மனிதனுக்கு ஏற்படுமானால் அதுவே அவனுடைய உண்மையான சமயக் கொள்கையின் கேந்திரமாகும். என்னுடைய சமயம் நமது அற்ப ஆற்றலைப் பெற்றிருக்கும் புலன்களால் உணரக்கூடிய சாதாரண விளக்கங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்தும் அந்த மகத்தான எல்லையற்ற சக்தியைப் பாராட்டும் அவையடக்கத்தில்தான் அடங்கியுள்ளது. அறிந்துகொள்ள முடியாத இப் பிரபஞ்சத்தின் அமானுஷ்யமானதோர் காரண சக்தியை நம்பும் ஆழ்ந்த உணர்ச்சிதான் கடவுளைப் பற்றிய எனது கொள்கையை உருவாக்குகின்றது.

- ஐன்ஸ்டீன் (லிங்கன் பானெட்டின் பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டீனும்)

காலப்போக்கில் மூளையும் தேவையற்றுப் போய் விடலாம். நனவு நிலையின் இருப்பிடமாக அதுவே இருக்கத் தேவையில்லை. யந்திர அறிவின் வளர்ச்சி அதை நிரூபித்துள்ளது.... ஆனால் அது மட்டுந்தான் முடிவாய் இருக்கவேண்டுமென்று மில்லை. ஞானப் போக்குள்ள உயிரியல் விஞ்ஞானிகள் சிலர் அதற்கு அப்பாலும் சென்றனர். பழைய சமயங்களின் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு மனமானது ஜடத்திலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எதிர்பார்த்தனர். எதிர்காலத்தில் உருவாகக்கூடிய யந்திர உடம்பும்கூட இறைச்சியாலும் இரத்தத்தாலுமான உடம்பைப் போலவே முன்போ மனிதன் "ஆன்மா" என்று கூறிய ஒன்றை நோக்கிய படிக்கல்லாகவே இருக்கலாம்.
அதற்கு அப்பாலும் ஏதாவது இருந்தால் அதன் பெயர் கடவுள் என்பதாகத்தான் இருக்கும்.

- ஆர்த்தர் சி.கிளார்க் (2001-A Space Odyssey)

நாம் ஒரு புது ஆத்மயுகத்தின் வாசலில் நிற்கிறோம்.

- எஸ்.ராதாகிருஷ்ணன் (Religion in a Changing society)


பாட்டுத் திரத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேண்டும். - பாரதி


படைப்பாளிகள் இயக்கம்

கலைஞன் தான் விரும்பினாலும்சரி விரும்பாவிட்டாலும்சரி சமூக வளர்ச்சிக்கு உதவிக்கொண்டே இருக்கிறான். தன்னைப்பற்றியும் சமூக வளர்ச்சியைப் பற்றியும் திட்டவட்டமான எந்தக் கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டிருக்காமல் தன் சுயவிச்சாப் போக்கில் கலைச் சிருஷ்டிகளைச் சிருஷ்டிக்கும் போதுகூட சமூகத்தின் பொது முன்னேற்றத்துக்கு ஏதோ ஒரு வகையில் உதவவே செய்கிறான். காரணம், கலைச் சிருஷ்டிகள் சமூகத்தின் பொதுச் சொத்துக்களாக மாறி பொது முன்னேற்றத்தைக் குறிப்பினவாகவும் துரிதப்படுத்துபவனவாகவும் இருக்கின்றன. அந்த வகையில் பெரும்பாலான மற்றத் தொழில்களை விட அதிக பொது நலங்கூடிய தொழில் கலைத் தொழிலாகும். தனிப்பட்ட சொந்த அல்லது சுயநல மன உந்தல்களினால் அவை உருவாக்கப்படும் போதுங்கூட கலைச் சிருஷ்டிகள் சுய மனதின் குறுகிய எல்லைகளைத் தாண்டிப் போய்விடுவதால் பொது நன்மைக்கு மற்றச் சுயநலத்தொழில்களை விட அதிகமாக உதவுகின்றன.

அது உண்மை. ஆனால் கலையைப் பற்றியும் கலைஞனைப் பற்றியும் அந்தளவோடு திருப்திப்பட்டுக் கொள்வது, கலை சாதிக்கக்கூடிய முழுத் தொண்டுக்கும் வழி வகுப்பதாகாது. எனவே கலைஞனது முழுத் தொண்டுக்கும் வழிவகுக்கும் ஓர் பார்வையையும் அதை அடிப்படையாகக் கொண்ட இயக்கத்தையும் தேட வேண்டியது அவசியமாகிறது. இங்கு கலையென்று குறிப்பிடும்போது அதைப் பொதுப்படையாகவே குறிப்பிடுகிறேன். அதனால் கலைஞன் என்பவன் எழுத்தாளன், சிந்தனையாளன் என்ற எல்லா வகைகளையும் குறிப்பிடுபவனாகவே இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறான்.

கலைஞனது முழுத் தொண்டுக்கும் வழி வகுக்கும் ஓர் பார்வையையும் அதை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயக்கத்தையும் தோற்றுவிப்பதற்கு முதலில் கலையின் நோக்கத்தை மட்டுமல்ல, அந்த நோக்கம் வெளிப்படுத்தப்படும் இக்கால கட்டத்துக்குரிய சமூக சூழலின் போக்கையும் தெரிய வேண்டும். அந்தந்தப் பிரதேச மக்களின் சமூக நிலையிலும் அதன் போக்கிலும் நிற்கும் தர்ம வளர்ச்சியை இனங்கண்டு அதற்கு உதவும் வகையில் பார்வையை உருவாக்க வேண்டும். அந்தப் பார்வையின் மூலமே கலைச் சிருஷ்டிகளின் பூரணத்துவத்தையும் உருவாக்க முடியும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அதை இக்காலத்தில் மார்க்சீயவாதிகள்தான் ஓரளவுக்காவது செய்ய முயல்கிறார்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூக அமைப்பும் மாற்றமுற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் அந்த அமைப்பு உருவாக்கும் மதிப்பீடுகளும் அதே வகையில் மாற்றமுற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையும் அவர்கள்தான் அதிகமாக விளங்கிக்கொண்டு அந்த மாற்றத்தைத் துரிதப்படுத்தி வளர்க்க முயல்பவர்களாய்க் காணப்படுகின்றனர். மாற்றம் பற்றி முன்பே மனிதன் அறிந்திருக்காமலில்லை. சம்சாரம் என்பதே மாற்றமுறும் நாமரூபப் பிரபஞ்ச வாழ்க்கையையே குறிக்கிறது. ஆனால் அந்தப் பின்னணியிலுங்கூட பழைய பௌத்தர்கள் மாற்றம் பற்றிய தங்கள் கருத்தை வெளியிட்டபோது மனிதனின் மனமும் பார்வையும் எவ்வாறு விரிவடைந்தனவோ அதேபோல்தான் இக்கால மார்க்சியவாதிகளின் சித்தாந்தமும் அதே மாற்றத்தை சமூக, பொருளாதாரப் பின்னணியில் வைத்து புது முறையில் காட்டும்போது மனித மனமும் பார்வையும் பெரிதும் விரிவடைந்திருக்கின்றன. அதை விசயம் தெரிந்தவர்கள் மறுக்கப் போவதில்லை. சத்தியத்தைப்பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப்படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவும் வாழ்க்கை முன்னேற்றமும் எற்படுகின்றன. இன்று நடைமுறையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே ஒரு பெருந் தத்துவம் மார்க்சீயம் ஒன்று மட்டுமேதான். சமூகத்தின் அன்றாடப் பிரச்னைகளை இன்று விளக்கவும் அந்த விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குரிய செயல்களை நிர்ணயிக்கவும் எந்தத் தத்துவம் மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அது வாழும் தத்துவமாக இருக்கிறது. உலகியல் இன்று மார்க்சீய வாதந்தான் அப்படி வாழ்கிறது. மற்றச் சிந்தனைகளும் சமயக் கருத்துக்களும் உண்மையைல் முழு சமூகத்தையும் அரசியல், பொருளாதார, கலைபோன்ற சமூகத்தின் பிற துறைகளையும் தொடமுடியாது இருக்கின்றன. சமயமானது அரசியலில் கலக்கக்கூடாது என்ற கொள்கையே நாகரிகமானதாகிவிட்டது. எனவே இன்று வாழும் தத்துவமாக மார்க்சீயம்தான் இருக்கிறது. முழு உலக அரசியலும், உலக வரலாறும் மார்க்சீய வாதத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் சமூகப் பொருளாதார இயக்கங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. ஒன்றில் அதற்குச் சார்ப்பாக அல்லது எதிராக இருக்கின்றன. ஆனால் இரண்டும் அதே தத்துவத்தின் பிரதிபலிப்பேதான்.

மார்க்சீய சித்தாந்தத்தில் குறைகள் பல இருக்கலாம். ஏராளமாக இருக்கின்றன. எல்லாத் தத்துவங்களும் சித்தாந்தங்களும் அப்படியேதான். பூரணமான சத்தியத்தை தத்துவத்தால் அடைந்துவிட முடியாது. அதனால் தத்துவங்களில் குறைகள் இருப்பது இயல்பே. ஆனால் அதே தத்துவங்கள் தான் சத்தியத்தின் தரிசனங்களை அறிவுக்குள் இறக்கி அறிவின் எல்லைகளை விரித்து அந்த விரிபட்ட அறிவின் பார்வையில் வாழ்க்கையின் எல்லைகளை விரித்தும் ஆழமாக்கியும் மனித வளர்ச்சிக்கு உதவுகின்றன. மார்க்சீயம் அப்படித்தான் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. சார்புநிலையில் பரிணாமத்துக்குக் காரணமாயுள்ள சத்தியத்தின் தரிசனத்தை இன்று அதுதான் அதிகமாகக் காட்டும் ஒரே ஒரு தத்துவமாக இருக்கிறது. அதனால் அத்தத்துவத்தை வெல்லும் இன்னோர் பெருந்தத்துவம், வாழுந் தத்துவம் எழும் வரைக்கும் அதன் குறைகள் குறைகளாகப்படப் போவதில்லை.

அந்த நிலையில் இக்காலக் கலைஞன் தன் கலையின் தீட்சண்யத்தை இன்னும் கூர்மையாகவும் ஆழமாகவும் மாற்றவேண்டுமானால் ஒன்றில் அவன் மார்க்சீயவாதியாக இருக்கவேண்டும், அல்லது மார்க்சீயத்தையும் வெல்லும் இன்னோர் பார்வையைத் தேடுபவனாகவும் தேடிக் கண்டுபிடிப்பவனாகவும் இருக்க வேண்டும்.

மார்க்சீய வாதிகளாய்ப் பலர் இருக்கின்றனர். ஆனால் மார்க்சீயத்தையும் வென்று வளர முயல்பவராய் இன்னும் யாரும் தெளிவான சிந்தனையுடன் கலையுலகில் எழுந்ததாகத் தெரியவில்லை. அரவிந்தர், பாரதி, தாகூர் ஆகியோர் செல்லும் திசையையும் திறனையும் காட்டுகின்றார்களே ஒழிய வெல்லவில்லை. அரவிந்தரோ இனி வரவிருக்கும் யுகத்தின்முன்னோடியாகவும் தலைவராகவும் விளங்கினாலும் இன்றைய நிலைக்கும் அவர் காட்டும் யுகத்துக்குமிடையே பெரிய இடைவெளி விடுபட்டுக் கிடக்கிறது. அதை நிரப்புவதற்கு மார்க்சீயத்தையும் வென்று வளரக்கூடிய விசாலமான பார்வையும் மார்க்சீயம் தோற்குமிடத்திலிருந்து அது கொண்டுவந்த நன்மைகளை எடுத்துச் செல்லும் திறமையும் இருப்பவர்கள் வரவேண்டும். அதைக் காட்டுபவர்கள் இனித்தான் உருவாகவேண்டும். எனவே மார்க்சீய வாதிகள் பலர் இருக்கின்றனர். ஆனால் அதை வென்றவர்கள் இன்னும் எழவில்லை. இப்போது இருப்பவர்கள் மார்க்சீயத்தை மறுப்பவர்கள்தான். வெல்லும் வழியைக் காட்டுபவர்களல்ல.

இந்த "மறுப்பவர்கள்" ஒன்றில் தங்கள் தெளிவற்ற உள்ளுணர்வின் உந்தல்களக்குக் கலை உருவம் கொடுப்பவர்களாகவோ அல்லது "மரியாதை", "மரவு" என்ற பெயர்களில் சமூகத்தின் தேக்கத்தினால் ஏற்படும் பிற சுழிவுகளோடு ஒத்தோடுபவர்களாகவோதானிருக்கின்றனர். இந்த ஒத்தோடுபவர்களோ இரண்டு வகையினர். சமூகம் இதுவரை கண்டுபிடித்த உண்மைகளைக் கட்டுப்பெட்டியாகப் பேணுபவர்கள் ஒருவகையினர். மற்றவர்களோ வெறும் போலிகள். இப்போலிகளில் ஒத்தோட மறுப்பவர்களாகவும் சிலர் இருக்கின்றனர். ஆனால் போலிகளால் புரட்சி எதுவும் எற்பட்டுவிடுவதில்லை. கட்டுப்பெட்டிகளாக இருப்பவர்களுக்கு உதாரணங்களாகப் பண்டிதமணி கணபதிப் பிள்ளை முதல் மு.வ. வரை பல ரகத்தினரைக் காட்டலாம். சமூகம் இதுவரை கண்டுபிடித்துள்ள உண்மைகள் மறைத்துவிடாமல் பேணுபவர்களாய் இருக்கின்றனர் என்ற அளவுக்குத்தான் இவர்களுக்குச் சமூகம் கடமைப்பட்டுள்ளது. அந்தளவுக்கு அவர்களம் அவசியமானவர்களே. போலிகளுக்கு உதாரணமாக "அகிலன்" முதல் நா.பார்த்தசாரதி வரை பலர் இருக்கின்றனர். போலிகளிலும் ஒத்தோடமறுப்பவர்கள்தான் அண்ணா, மு.கருணாநிதி போன்றோர். கட்டுப்பெட்டிகளும் போலிகளும் மலிந்த ஒர் சமூகத்தில் இவர்கள் புரட்சிவாதிகளாகவும், வளர்ச்சியைக் காட்டுபவர்களாகவும் தெரிவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் உண்மையில் இவர்கள் காட்டும் வளர்ச்சி என்பது வெறும் மாயைதான். கட்டுப்பெட்டிகளும் சரி, போலிகளும் சரி தங்களையும் சமூகத்தையும் பூரணமாக உணராதவர்களே. அவர்கள் விற்பனையையும் பண லாபத்தையும் கருத்தில் வைத்து இயங்கும் ஆபாச வியாபாரக் "கலை" ஞர்களை விடவிசயம் தெரிந்தவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதே சமயம் அவர்களது "மரியாதைச்" சிருஷ்டிகள்தான் உண்மையில் ஆபாசங்களுக்கும், விற்பனைக்குமுரிய சமூகத் தேக்கத்தையும், அறியாமையையும், பள்ளத்துக்குருட்டுப் பார்வையையும் வளர்ப்பவையாக இருக்கின்றன. துரோணரும் சரி, பீஷ்மரும் சரி தர்ம வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாத வகையில் தேவைப்படும் மாற்றத்தையும் போராட்டத்தையும் உணராதவரைக்கும், உணர்ந்து அதற்கு ஒத்துழைக்காத வரைக்கும் அவர்களின் "மரியாதை" யும் "மரபு" ம் துரியோதனன், துச்சாதனன் ஆகியோரின் அறியாமைக்கும், ஆணவ ஆட்சிக்கும் ஊன்றுகோல்களாகவே இருக்கின்றன. அதுமட்டுமல்ல, வெளிப்படையான போராட்டம் ஆரம்பிக்கும்போது துரோணர்களும், பீஷ்மர்களும் துரியோதனன் பக்கமே கட்சி சேர்ந்து போராடவும் ஆரம்பித்துவிடுகின்றனர். எனவே மார்க்சீயத்தை மறுப்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் பிற்போக்குச் சக்திகளுக்குத் துணைபுரியமு கலைஞர்களாகவே இருக்கின்றனர். கட்டுப்பெட்டிகள், போலிகள், போலிப் புரட்சிவாதிகள்.

மறுப்பவர்களுள் தங்கள் உள்ளுணர்வின் உந்தல்களுக்கும் கலை உருவம் கொடுத்து மற்றவர்களைவிட ஆழமாகப்போக முயல்பவர்களே சிறந்தவர்களாய் இருக்கின்றனர். ஆனால் அவர்களும் திட்டவட்டமான பார்வை எதுவும் இல்லாததாலும் அதனால் வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் போராட முடியாமல் இருப்பதாலும், வில்லை முறித்தெறிந்த விதுரர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் பாண்டவர்கள் பக்கமும் இல்லை, கௌரவர்கள் பக்கமும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களால் இரண்டுக்கும் அப்பால் போகவும் முடிவதில்லை. இரண்டில் ஒன்றைத் தெரிந்தெடுக்கவும் முடிவதில்லை. புதுமைப்பித்தன், மௌனி, சி.சு.செ., க.நா.சு. போன்றோர் அந்தவகையினரே. இவர்கள் மார்க்சீயச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட எழுத்தாளர்களைவிட சிறப்பாய் எழுதக்வடியவர்களாய் இருக்கின்றனர் என்பது அவர்களும் அச்சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்பதையே காட்டுகிறது. தோல்வியடைந்திருப்பார்கள் என்று நிரூபிப்பதாக இல்லை. மார்க்சீய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தோல்வியடைந்திருக்கிறர்கள் என்றால் அவர்களின் பார்வை விரிவுக்கேற்பக் கலைத்திறமையும் இருக்க வில்லை என்றே அர்த்தமாகிறது, தமிழ்நாட்டில் மார்க்சீயத்தின் பாதிப்பு மிகக் குறைவு. அதனால் அது திறமையுள்ள கலைஞர்களைத் தன்பக்கம் இழுக்கவில்லை. அத்துடன் இந்தியப் பண்பாட்டின் ஆழம் மார்க்சீயப் பாதையின் ஆழத்தைவிட அதிகம். அதனால் இந்தியப் பண்பாட்டையே விரும்பிய திறமை மிக்க கலைஞர்கள் அதன் பழந்தோற்றத்துடனேயே திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். சமகாலச் சமூக வளர்ச்சிக்கு உதவும்வகையில் அதைப்புதுப்பிக்க முயல்பவர்களாய் இல்லை. அதனால் சமகாலச் சமூக வளர்ச்சிக்கு மார்க்சீய சித்தாந்தம் உதவுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இக்கலைஞர்கள் அதே நேரம் பழைய மரபையே புதுப்பிக்கத் தெரியாதவர்களாகவும் முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். எனவே இவர்களின் நிலை வில்லை முறித்தெறிந்த விதுரர்களின் நிலையாகவே பெரும்பாலும் இருக்கிறது. திட்டவட்டமான பார்வை எதுவுமற்று அதனால் தர்ம வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் போராடவும் தைரியமற்று தங்கள் உள்ளுணர்வின் உந்தல்களுக்குக் கலை உருவம் கொடுப்பதோடேயே திருப்திப் பட்டுக்கொள்கின்றனர்.

இவற்றைக் கொண்டு பார்க்கும்போது இன்றைய சமூகத்தில் காணப்படும் கலைஞர்களை, படைப்பாளிகளை, நான்கு வகையினராகப் பிரிக்கலாம் என்று தெரிகிறது. தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல பொதுவாக எல்லாச் சமூகங்களுக்கும் இன்று அது பொருந்துவதாகவே இருக்கிறது.

1. மார்க்சீய சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளும் படைப்பாளிகள்.

2. மார்க்சீயத்தை மறுப்பினும் அதை வெல்லக்கூடிய திட்டவட்டமான தத்துவப் பார்வையற்று தங்கள் தெளிவற்ற உள்ளுணர்வின் உந்தல்களுக்குக் கலையுருவம் கொடுப்பவர்கள்! அதனால் மார்க்சீயவாதிகளைவிட ஆழத்தைக் காட்டும்போது கூட அவர்களுடைய படைப்புகள் பெறக் கூடிய பூரணத்துவத்தைப் பெறாமலேயே இருக்கின்றன.

3. கட்டுப் பெட்டிகளும் போலிகளும்.

4. வியாபாரிகள்.

இவர்களில் சரித்திரத்தின் போக்கையும் உலக சமூகத்தின் வளர்ச்சியிலுள்ள தர்மத்தின் திசையையும் இதுவரை இனங்கொண்டு இயங்கி வந்தவனும் வருபவனும் மார்க்சீயவாதிதான். மாற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் திட்டவட்டமான தத்துவம் அவனிடமே இருந்தது. இன்னும் ஓரளவுக்கு இருக்கிறது. அது கொடுக்கும் பார்வையின் விசாலத்தில் தன் கலையின் தீட்சண்யத்தையும் கூர்மையாக்கி அதைத்தர்மத்தின் கருவியாக்க முயன்று வருபவன் அவனேதான்.

அந்தளவுக்கு சரித்திரம் அவனுக்குத் தலை சாய்க்கிறது தர்மம் அவனுக்கு நன்றி கூறுகிறது.

இன்றைய நிலையில் ஒவ்வொரு சிந்தனையாளனும் கலைஞனும் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். மார்க்சீயத்தை மறுக்கும் தெளிவற்ற கலைஞர்களும் சிந்தனையாளர்களும் முதலில் அதை உணர்ந்து ஒப்புக் கொண்டால்தான் அவர்களின் மறுப்பு வெறும் மறுப்பாகவே நின்று விடாமல் இன்று சரித்திரம் காட்டி நிற்கும் புதிய தருணத்தை இணங்கொண்டு பயன்படுத்தி, மார்க்சீயத்தையும் மீறி வளரும் வெற்றியாக மாறுவதற்கு வழி பிறக்கும். அதாவது அந்த உண்மையை ஒப்புக்கொண்டல்தால் அந்த உண்மையின் அடுத்த பக்கத்தையும் உணரலாம்.

அந்த அடுத்த பக்கம் இதுதான். மார்க்சீயவாதிக்குத் தலை சாய்த்து நன்றி தெரிவிக்கும் சரித்திரமும் தர்மமும் அவனுக்குப் பிரியா விடை கூறவும் தயாராக நிற்கின்றன. அதாவது சரித்திரக் கட்டத்தின் புதிய தேவையை மார்க்சீயவாதியாலும் தீர்க்க முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனால் அந்த தேவையை உணர்ந்த புதிய சிந்தனையாளனை சரித்திரம் எதிர்பார்த்து நிற்கிறது. ஆனால் அதை உணர்வதற்கு மார்க்சீயவாதியின் பங்கை ஒப்புக்கொள்ளாமல் முடியாது. ஒப்புக்கொள்ளாதவனால் - அப்பால் போகவும் முடியாது. ஒப்புக்கொண்டவன்தான் அப்பால் போக வேண்டிய அவசியத்தையும் உணர்கிறான். போவதற்குரிய தைரியத்தையும் திறமையையும் அதற்குரிய செயல் முறையையும் தெரிந்தவனாகவும் இருக்கிறான்.

இன்றைய கலைஞர்களும் சிந்தனையாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அதுதான். இன்றைய உலக சரித்திரப் போக்கில் ஓர் தேக்கமான கட்டம் வந்திருக்கிறது. அந்தத் தேக்கத்தில் திடீர் பாய்ச்சலுக்கும் மாற்றத்துக்கும் புரட்சிகரமான வளர்ச்சிக்குமுரிய கருக்கூட்டல் காணப்படுகிறது. ஆனால் அந்த தேக்கத்தை உடைத்து புதுப் பாய்ச்சலுக்கு உருவங் கொடுக்க ஒருவராலும் முடியாமல் இருக்கிறது. மார்க்சீயவாதிகளாலேயே முடியாமல் இருக்கிறது.

சரித்திரத்துக்கு மார்க்சீயவாதிகள் கொடுத்த வளர்ச்சியானது மார்க்சீயவாதிகளை தோற்கடித்து வளருங்காலம் வந்துவிட்டது. ஆனால் அதை மார்க்சீயவாதிகளாலேயே உணரமுடியாமல் இருக்கிறது. அதனால் அவர்கள் புதுப்புது வியாக்கியானங்களைத் திரிக்கவேண்டியவர்களாய் இருக்கின்றனர். தங்களுக்குள்ளேயே பிளவுபட்டுச் சண்டை போட வேண்டியவர்களாய் இருக்கின்றனர். இன்னும் தர்மம் அவர்கள் பக்கந்தான் அதிகம் நிற்கிறது. ஆனால் அதன் தொடர்வளர்ச்சிக்கு அவர்களின் தத்துவப் பார்வை விட்டுக்கொடுக்கக் கூடியதாய் இல்லை. சரித்திர வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இனியும் அவர்களின் தத்துவப் பார்வை வளரவேண்டுமானால் அந்தத் தத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படும் சில அம்சங்களே தகர்க்கப்பட வேண்டியனவாய் இருக்கின்றன. ஆனால் அதை மார்க்சீயவாதிகள் உணர முடியாதவர்களாய் இருக்கின்றனர். மார்க்சீயத்தை மறுப்பவர்கள் மார்க்சீயத்தின் நியாயமான நன்மைகளையும் ஒப்புக்கொள்ள மறுப்பதுபோல் இந்த மார்க்சீயவாதிகளும் தங்கள் இருக்கமான தத்துவத்தையும் மீறிக்கொண்டு புதுப் பார்வைக்குரிய காலகட்டம்வந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். சத்தியத்தின் ஒரு காலகட்டப் பரிணாம வளர்ச்சிக்கு அல்லது சரித்திர வளர்ச்சிக்கு எவ்வளவுதான் ஒர் தத்துவப் பார்வை உதவினாலும், அக் காலகட்டத்தில் எவ்வளவுதான் அப்பார்வை பூரணமாகத் தெரிந்தாலும், பரிபூரணமான சத்தியத்தின் முழுப்போக்கையும் தன்மையையும் அது அடைந்துவிடப் போவதில்லை. எல்லாத் தத்துவங்களுமே, தத்துவங்களையும் கடந்த ஒரு நிரந்தரமான சத்தியத்தின் அந்தந்தக் கால வெளிக்காட்டலை, அல்லது தர்ம வளர்ச்சியை, படம் பிடிக்க முயலும் தற்காலிகப் பார்வை அழுத்தங்களேதான். எனவே அந்தந்தக் காலத் தத்துவப் பார்வைகளை அந்தந்தக் காலத் தேவைகளுக்காக பயன்படுத்தும்போதுங்கூட அதே தத்துவங்களையும் மீறிச் சத்தியத்தின் தன்னை நிறுத்திக் கொள்வபன்தான் சார்பு நிலையின் தர்ம வளர்ச்சிக்கேற்றவாற சரியாக மாறக்கூடிவனாகவும் போராடக்கூடியவனாகவும் இருக்கிறான். வேதங்களைப் போதிக்கும்போதுகூட வேதங்களும் அப்பாற்பட்ட நிலையில் நிற்கவேண்டும். பழைய பாரத்ப் போரில் துரியோதனன் பக்கம் போராடிய பீஷ்மரும், துரோணரும் எவ்வளவுதான் நல்லவர்களாய் இருப்பினும், உண்மையில் அவர்கள் தங்களது பழைய மனப் பழக்கங்களுக்கும் அவற்றை உருவாக்கிய சமூகச் சம்பிரதாயங்களுக்கும், சக்திகளுக்குமாகவே போராடினார்கள். அவற்றையும் கடந்துசெல்ல முயன்ற தர்ம வளர்ச்சிக்காகப் போராடவில்லை. அருச்சுனன்கூட குருþக்ஷத்திரத்தில் மனமுடைந்து நின்றபோது பழைய சம்பிரதாயங்களாலும் பழக்க வழக்கங்களாலும் தோற்கடிக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டவனாகவே நின்றான். கண்ணன் காட்டிய சத்திய உணர்வும். தரிசனமுந்தான் எல்லாவற்றையும் தாண்டிய நிலையில் நின்று அடுத்த கட்டத்துத் தர்ம வளர்ச்சிக்காகப் போராட அவனைத் தூண்டிற்று, மார்க்சீயவாதிகளும் ஒரு காலத்தில் அருச்சுனன் பாகத்தைப் புரிந்து போராடியவர்கள்தான். சரித்திரமும், தர்மமும் அதற்காகத்தான் அவர்களுக்குத் தலைசாய்க்கிறது. ஆனால் இப்போ பிறக்கத் துடிக்கும் பேர் யுகத்தின் முன்னால் அவர்கள் துரோணர்களாகவும் பீஷ்மர்களாகவுமே வரவர மாறிக்கொண்டு வருகின்றனர். அவர்களின் பார்வையில் ஓர் ஸ்தம்பிதம். இன்னும் அவர்கள் பக்கமே தர்மம் நிற்கிறது, ஆனால் அந்தத் தர்மத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை உணர முடியாமல் இருப்பதால் ஸ்தம்பித்துவிட்ட அவர்களின் தத்துவப் பார்வையைத் திரித்துத் திரித்துப் பார்க்கிறார்கள். ஆனால் அது அவர்களின் பார்வையில் வேகத்தை ஏற்படுத்துவதாய் இல்லை. அதனால் அந்த வேகத்தை தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வதால் உருவாக்கிவிட முயல்கின்றனர். ஓர் தத்துவத்தின் இறுதிக் காலத்தில் அதன் தோல்வி அவ்வித உள்வட்டத்துச் சண்டையில், அத் தத்துவமானது அதன் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் என்னென்ன குறைகளை நீக்குவதற்காகப் போராடிற்றோ அதே குறைகளையே திரும்பவும் புதிய பரிமாணத்தில் உட்புகுத்தி விடுகிறது. கிறிஸ்தவ சமயம் அதன் ஆரம்பக் கட்டத்தில் எந்த அன்புக்காகப் போராடிற்றோ அந்த அன்பை பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் நடந்த அதன் உள்வட்டச் சண்டைக் காலத்தில் அடியோடு மறந்துவிட்டது. மறந்தது மட்டுமல்லாமல் பழைய குறைகளையே திரும்பவும் உட்புகுத்திற்று. அதேபோல்தான் இன்றைய மார்க்சீயவாதிகளும் திரும்பவும் இனவெறி, நாட்டுவெறி, மொழிவெறி போன்ற பழைய குறைகளையே தங்களது இயக்கத்துக்கு வேகத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்த முயல்கின்றனர். சீனாவின் பிரச்சாரங்களில் சிலசமயம் அவற்றைக் காணக்கூடியதாக இருக்கிறது. எல்லைச் சண்டை காரணமாக (யுசிறி நதி எல்லை) சீனாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே எழுந்துள்ள பிரச்சாரப் போரில் திரும்பவும் அந்த இன, மொழிப் பற்றுக்கள் இரு பக்கங்களிலும் படையாகத் திரட்டப்படுவதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

இருப்பினும் சீனாவையோ, ரஷ்யாவையோ நாம் குறை கூறமுடியாது. அவர்களுக்கும் அப்பால் சரித்திர வளர்ச்சியை இட்டுச் செல்லக்கூடிய தத்துவப் பார்வையையும், வாழ்க்கை முறையையும் தயக்கமில்லாத அர்ச்சுனப் போராட்டத்தையும் காட்டமுடியாதவர்கள், அவர்களின் குறைகூற உரிமையற்றவர்களே. அப்படித் தாங்களே செய்யாது மற்றவர்களைக் குறை கூறுபவர்கள், உண்மையில் தாங்கள், தாங்கள் அனுபவிக்கும் பதவிகளையும், அவற்றின் பற்றுகளையும், சுரண்டல்களையும் நியாயப்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். உதாரணமாக நம் நாட்டு சுருட்டு வியாபாரி ஒருவன் மாசே துங்கைப்பற்றிக் குறை கூறும்போது அவன் தன் தொழிலையும் அதற்குரிய சுரண்டலையுமே நியாயமாக்க முயல்கிறான். அவற்றுக் கெதிரான சமூக மாற்றத்தையும் வளர்ச்சியையுமே அவன் கண்டிக்கிறான். ஓர் உத்தியோகத்தன் குறை கூறும்போது அவனது உத்தியோகம் அளிக்கும் போலி மரியாதையையும் வசதிகளையும் அவை பிரதிபலிக்கும் வர்க்கத்தையுமே காப்பாற்ற விரும்புவனாய் காணப்படுகிறான். வளர்ச்சிக்குரிய வழியையும் காட்டி அந்த வழியில் தீவிரமாகப் போராடுபவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் நிலைகளையே காப்பாற்ற விரும்புவர்களாய்க் காணப்படுவார்கள். பெரும்பாலோர் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புவதாகக் கூறிக்கொள்வர். ஆனால் அமைதியும் சமாதானமும் வெறும் சமூகத் தேக்கமாக இருப்பின் அது ஒரு வர்க்கத்தின் அறியாமையையும் ஆணவத்தையும் அதன் சுரண்டலையும் நிரந்தரமாக்குவதாக முடியும். அத்தகைய தேக்கம் ஒருபோதும் அமைதியையும் சமாதானத்தையும் அளிக்காது. அமைதியும் சமாதானமும் சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் சதா இடங்கொடுத்த வண்ணம் இருக்கும்போதுதான் உண்மையான அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கும். ஆனால் அமைதியான மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அதிகாரத்தை அனுபவிப்போர் பெரும்பாலும் இடமளிப்பதில்லை. அதனால் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புவதாகக் கூறிக்கொள்வோர் அதிகாரத்தை அனுபவிப்பவர்களின் மனதை மாற்றி, சமூக வளர்ச்சிக்கும் அதிகாரப் பங்கீட்டுக்கும் அதை அடிப்படையாகக்கொண்ட பொதுவுடமைக்கும் சதா உழைப்பவர்களாய், தங்கள் வாழ்கையையே அதற்காக அர்ப்பணித்தவர்களாய் இருக்கவேண்டும். வாயளவில் சமாதானம் பேசிப் பயனில்லை. அந்த வகையில் பார்க்கப் போனால் மாசேதுங் போன்றோர்மீது குறை காண்பதற்கு சரித்திரத்தையும் சமூகத்தையும் மாசேதுங் எந்த வேகத்தில் வளர்க்க விரும்புகிறாரோ, அந்த வேகத்தில் ஆனால் அதைவிட ஆழமாகவும் அமைதியாகவும் வளர்க்க வழிகாட்டக் கூடியவர்களுக்கே உண்மையான உரிமை இருக்கிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் மாசேதுங்கில் குறைகாண்பதற்கு மகாத்மா காந்திபோன்றவர்களுக்குத்தான் உண்மையான உரிமையுண்டு.

மார்க்சீயத்தை வெல்லப் புறப்படுபவர்கள் அதைக் கவனிக்க வேண்டும். வெறும் மறுப்பு தர்மத்துக்கு எதிரான மறுப்பாகவும் அதன் வளர்ச்சிக்கு எதிரான மறுப்பாகவும் நின்றுவிடும். இடத்தினதும், மனத்தினதும், சுயத்தினதும் மாற்றம்பற்றிய பௌத்தர்களின் வியாக்கியானம் மனிதப்பார்வை வளர்ச்சிக்கு எவ்வளவு உதவிற்றோ அதேயளவு சமூகத்துக்கும் அரசுக்கும் அதன் துறைகளக்குமுரிய இயக்கம் பற்றியும் அவற்றின் மாற்றம் பற்றியும் மார்க்சீயவாதிகள் தரும் விளக்கமானது மனிதப் பார்வை வளர்ச்சிக்கு உதவியுள்ளது. அதனால் மார்க்சீயத்தைச் சும்மா புறக்கணிப்பது சரித்திரமும் தர்மமும் அதன்மூலம் இதுவரை அடைந்துள்ள வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் புறக்கணிப்பதாகும். எனவே புறக்கணிக்காமல் அதை வெல்ல முயலவேண்டும். வெல்வது எப்படி?

எகலின் தத்துவத்தை வெல்வதற்கு எங்கல்ஸ் எப்படி வழி கூறினாரோ அப்படித்தான் மார்க்சீயத்தையும் வெல்ல வேண்டும். அதன் நன்மைகளைக் கறந்துகொண்டு அதன் உருவத்தை அழிக்க வேண்டும். இன்னுமொரு பெரும் தத்துவத்தால் அதைச் சிதைக்க வேண்டும். சங்கரரின் அத்வைத வேதாந்தமும் அந்த வகையிலேயே பௌத்தத்தை இந்தியாவில் வென்றிற்று.

அத்துடன் தத்துவமொன்றைச் சிந்தனையளவில் உருவாக்கிவிடுவது உதவப்போவதில்லை. செயலற்ற சிந்தனைக் குரிய தத்துவம் மார்க்சீயத்தின் நன்மைகளை ஏற்றுக்கொண்டால்கூட பயன்தரப் போவதில்லை. மார்க்சீயத்தை வெல்லும் தத்துவம் வாழப்படக்கூடிய தத்துவமாகவும், அத்தகைய கடைப்பிடித்தலாலேயே தன் உண்மையான உருவத்தைப் பெறக்கூடிய தத்துவமாகவும் இருக்கவேண்டும் உலகத்தை தத்துவ ஞானிகள் விளக்கினார்கள். ஆனால் உலகத்தை இனி மாறற வேண்டும் என்று மார்க்ஸ் கூறினாரே, அதேபோல் மாற்ற வேண்டும். கிழக்கத்தைய தத்துவ ஞானிகளுக்கு அது மிகப் பழக்கமான ஒன்றே. அதையே நாம் திரும்பவும் தத்துவமாக்க வேண்டும். வாழ்க்கையை மாற்றி வளர்க்கும் செயல் செறிந்த சிந்தனை. அதுவே தத்துவம்.

பொருளாதார அடிப்படையில் சமூக அமைப்பையும், அரசியல் அமைப்பையும், மக்களின் வர்க்கப் போக்கையும் விளக்கிய மார்க்ஸ் அதற்கு அப்பால் ஒர் சத்தியப் பொருள் இருப்பதாக நம்பியதில்லை. அதற்காக நாம் துக்கப்படவும் தேவையில்லை. நவீன விஞ்ஞானமும் வைத்திய முறையும் உடலைப்பற்றிக் கூறுமளவுக்கு ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் அதற்காக உடலின் நோயைத் தீர்ப்பதற்கு நவீன விஞ்ஞானத்தையும் அதன் வைத்திய முறைகளையும் நாம் பயன்படுத்தாமல் விட்டதில்லை. அதேபோல் மார்க்சீயத்தின் நன்மைகளை ஏற்றுக்கொண்டு நாம் உள்ளே போக வேண்டும். அத்தகைய உள யாத்திரைக்குச் சமயங்கள் உதவுகின்றன. அவற்றின் உதவியுடன் உள்ளே போய் அங்கிருந்து பெறப்படும். தரிசன வீச்சில் நம் செயல்களைத் தீவிரமாக்க வேண்டும். அந்தத் தரிசன வீச்சில் மார்க்சீய விளக்கங்கள் உண்மைகளும் சமூக உடம்பின் நோய்களுக்கு நவீன விஞ்ஞான - வைத்திய முறைகளைப் போல் அவசியமானவை என்பதை மறந்துவிடாது அவற்றை உள்ளேயிருந்து பெறப்படும் சத்தியத்தின் தரிசன ஒளியைக் கொண்டு திருத்தி முழுமையாக்க வேண்டும். இந்தத் திருத்தம் இரண்டு பக்கத்துக்கு முரியது. மார்க்சீயம் திருத்தப்பட்டுப் புதுப்பிக்கப்படுவது போல் பழைய சமயங்களின் குறுகிய ஸ்தாபனப் பார்வையும் மூட நம்பிக்கைகளும் அகற்றப்பட்டுச் சமயங்களும் திருத்தப்படுகின்றன. அதனால் இரண்டு பக்கங்களுக்குமுரிய கட்டுப்பெட்டிப் பண்டிதர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஆனால் அது தற்காலிகமானதாகவே இருக்கும்.

எனவே நவீன விஞ்ஞானமும் மார்கசீயமும் எதிர்நோக்கியுள்ள ஸ்தம்பிதத்தை உடைப்பதற்கு இன்று தேவைப்படுவது உள்ளிருந்து பெறப்படும் ஆத்மீக தரிசனமும் அதன் ஒளி ஏறிய போராட்டமுந்தான். மார்க்சீயத்தையும் சரி. நவீன விஞ்ஞானத்தையும் சரி வெல்ல முயல்பவன் அதைப் பெறவேண்டும். உள் ஓளி! வெல்வது என்றால் வளர்ப்பதாகும். சமயத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் தங்கள் தங்கள் சமயத்தை மட்டும் நிலை நாட்ட முயன்ற பேதமையை இனிக் கைவிட்டு எல்லா மதங்களுக்குரிய சனாதன தர்மத்தை, நிரந்தர சத்தியத்தைப் பிரதிபலிக்கும் தத்துவத்தை, அழுத்தி அந்தப்பார்வையிலேயே தங்கள் மதத்தைப் போற்ற வேண்டும். அதேபோல் பழைய சமய நூல்களுடனேயே எல்லாப் பிரச்னைகளுக்குமுரிய தீர்வு நின்றுவிட்டது என்ற பேதமையையும் அகற்ற வேண்டும். ஒவ்வொரு சமயத்திலும் காணப்படும் ஆத்மீக சக்தியை மட்டும் பேணிக்காத்து அதனடிப்படையில் இன்றைய தேவைகளுக்கேற்ற புது மாற்றங்களை மலரவிடத் தயாராக வேண்டும். எல்லாச் சமயங்களுக்குமுரிய பொதுவான சத்திய ஒளியைச் சமூக மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டவருவதற்குரிய தீவிர ஆயுதமாக்க வேண்டும். காந்தியும், வினோபாவும் ஓரளவுக்கு அந்தத் திசையையும், செயல்முறையும் காட்டியுள்ளனர். ஆத்மிகத்தை ஆயுதமாக்குபவர்கள் எந்த நேரமும் அதற் கெதிரானவற்றுக் கெதிராகச் சத்தியப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வீரர்களாக இருக்க வேண்டும். காந்தி காட்டிய முக்கிய வழி அதுதான். அதை மறந்துவிடாது அதைக் கைவிட்டுவிடாது மற்றவற்றை நம் தேவைக்கேற்ற வகையில், நம் புதிய சிந்தனைக்கேற்ற வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இறுதிவரை சத்தியப் போராட்டம் தளரக்கூடாது. அந்தப் போராட்டம் தனிப்பட்ட மனிதனுக்குள் மட்டுமே நின்றுவிடாது சமூகத்துக்குள்ளும் சதா நடை பெறும் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். பையவே சென்று பாண்டியரையும் தொடும் போராட்டம்.

இன்று தேவைப்படுவது அதுதான். அந்த நிரந்தரச் சத்தியப் போராட்டத்தை இன்று கலைஞாகள், எழுத்தாளர்களுமே முதலில் ஏற்று நடத்த வேண்டும். பழைய ஞானிகளுக்குப் பதிலாக இன்றைய உலக சமூகத்தில் அதிகமாக இருப்பவர்கள் இந்தக் கலைஞர்களும், எழுத்தாளர்களுமே, அரசியல்வாதிகளிடமும், ஆணவக்காரர்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கும் தர்ம வளர்ச்சிக்குரிய போராட்டத்தைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களுமே முதலில் கண்டு கொள்ளக்கூடியவர்கள் நுண்ணுணர்வுள்ள கலைஞர்களுக்குச் சமமானவர்களாக இயங்க வேண்டும். அதனால் அவர்களே இனி ஞானிகளாக மாறவேண்டும், மாற முயலவேண்டம். இனிவரும் புதுயுகம் அந்த வகையான ஞானிகளின் யுகமாகும். குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது போல் மனிதனிலிருந்து பூரண ஞானி தோன்றும் புதுயுகம். அதற்குக் கலைஞர்களே வழிவகுக்க வேண்டும். அந்த யுகத்தில் தான் உண்மையான பொதுவுடமையும் மலர முடியும். அதைக் கொண்டுவரக்கூடிய கலைஞர்கள் ஆத்மீக அனுபவத்தை பெறத் தீவிரமான சாதனைபுரிபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களது வாழ்க்கையும், அவர்கள் சிருஷ்டிக்கும் கலையைப் போல் பூரணமானதாக இனி இருக்க வேண்டும். ஏற்கனவே திசை காட்டியுள்ள அரவிந்தரையும், பாரதியையும், தாகூரையும் பின்பற்றி இக்காலச் சரித்திர அனுபவத்திற்கேற்ப கலைஞர்களும், எழுத்தாளர்களும் பிறக்கப்போகும் ஞான யுகத்துக்காகத் தங்கள் கலையையும், வாழ்க்கையையும், உயிரையும் அர்ப்பணித்துப் போராடுபவர்களாக மாற வேண்டும். கலைஞர்களும், எழுத்தாளர்களுமே இன்றைய உலக சமூகத்தின் சந்நியாசிகள். சத்தியத்துக்காக எல்லாவற்றையும் துறக்கவும், சத்தியத்துக்காகத் தங்களையே அர்பணித்துப் போராடவும் தயாரான சந்நியாசிகள். அந்தப் பொறுப்பைப் பூரணமாக உணர்ந்து ஒவ்வொரு கணமும் அதற்கேற்ப அவர்கள் வாழவேண்டும், இயங்க வேண்டும். அந்த வாழ்க்கையும் இயக்கமுமே படைப்பாளிகளின் இயக்கமாகும். அந்த இயக்கம்தான் அவர்களின் சிருஷ்டிகளையும் ஆழமாக்கவும், பூரணமாக்கவும் உதவக்கூடியது.

***

"வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் நான் ஒதுக்கவோ துறக்கவோ போவதில்லை. சமூகம், அரசியல், வர்த்தகம், கவிதை, இலக்கியம், சிற்பம் - இவை எல்லாமே இருக்கத்தான் வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் புத்துணர்ச்சி பாய்ச்ச வேண்டும். புது உருவங்கள் கொடுக்கவேண்டும்."

- அரவிந்தர்

என் "நான்"

எனக்கு மிகவும் சிறிதென்று நான் உணர்கிறேன்.

- மயகொவ்ஸ்கி


புதிய வார்ப்புகள்


ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்றுக்கு "புதிய வார்ப்புகள்" என்று பெயர். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப வாழ்க்கையும் சிந்தனையும் மாறுகின்றன. அந்த மாற்றத்துக்கு ஏற்ப வெற்றிகரமாக விட்டுக்கொடுப்பதே கெட்டித்தனமாகும் என்பவையே கதைகூறும் கருத்துக்களாகும். அந்தக் கருத்துக்களை அவற்றின் உண்மையான அர்த்தத்தில் யாரும் மறுக்கப்போவதில்லை. தற்கால இலக்கியம் அந்தச் சிந்தனை மாற்றத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் பிரதிபலிப்பதோடு அந்த மாற்றத்தை அல்லது "முற்போக்கை" துரிதப்படுத்தவும் உதவவேண்டும் என்று பலரால் அழுத்தப்படுகிறது. குறிப்பாக மார்க்சீய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள "முற்போக்கு" எழுத்தாளர்கள் கூறும் சோஸலிஸ யதார்த்தம் என்ற இலக்கியக் கொள்கை இவற்றையே தற்கால இலக்கியத்துக்குரிய முக்கிய இலட்சணங்களாகக் கூறுகிறது. ஜெயகாந்தன் போன்றோரின் கதைகளில் அந்த இலட்சணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியைக் காணலாம். ஆனால் இவர்களின் "புதிய வார்ப்புகள்" பெரும்பாலும் உள்ளடக்கத்தின் புதுமையை அழுத்துமளவுக்கு உருவத்தின் புதுமையை அழுத்துவதாய் இல்லை. புரட்சிகரமான சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவர விரும்பும் ஒர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்குமளவுக்கு புரட்சிகரமான இலக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக இல்லை. உள்ளடக்கத்தைப் புதுமையாகவார்க்க முயன்றவர்கள் உருவத்தையும் புதிதாக வார்க்க முயன்றதில்லை. உள்ளடக்கத்தையும் உருவத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. உள்ளடக்கம் தன்னியல்பாகவே தனக்குரிய உருவத்தையும் எடுக்கிறது என்று பதில் கூறலாம். அப்படியென்றால் அடிப்படையான உருவமாற்றத்தைக் கொண்டுவராத உள்ளடக்கம் தன்னளவிலும் அடிப்படையான மாற்றத்தைக் காட்டாமல், ஏற்கனவே தொட்டு இருந்துவந்த ஓர் போக்கின் வளர்ச்சியையே காட்டுகிறது என்று அர்த்தமாகிறது. சோஸலிஸ யதார்த்தம் அந்தளவுக்கே "புதிய வார்ப்புகளை" உருவாக்கியிருக்கிறது. அதற்குப் பின்னாலுள்ள சமூக, பொருளாதார, அரசியல் கருத்துக்களும் அதே அளவுக்கே மாற்றத்தைக் காட்டுகின்றன. அடிப்படையான மாற்றத்தையல்ல. அவற்றை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமுமாகும்.

இப்படிக் கூறுவதால் இலக்கியத் துறையில் மார்க்சீய சித்தாந்தம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று யாரும் முடிவு கட்டிவிடக்கூடாது. மார்கசீய சித்தாந்தம் ஏற்படுத்தியுள்ள பார்வை மாற்றம் குறிப்பிடத்தக்கது. அதன் இலக்கியக் கோட்பாடான சோஸலிஸ யதார்த்தம் சிறு நிகழ்ச்சிகளுக்கும் பின்னாலுள்ள பொருளாதார, சமூக, சரித்திரத் தொடர் நிலைகளை மறந்துவிடாமல் சதா அழுத்திக்காட்டுவதால் அத்தகைய பார்வையற்ற பல தற்காலச்சாதாரண இலக்கியச் சிருஷ்டிகளைவிட ஆழமான சிருஷ்டிகளையும் அர்த்தமுள்ள சிருஷ்டிகளையும் உருவாக்க உதவுகிறது. சோஸலிஸ யதார்த்தப்பார்வை சமூகத்தின் கூட்டுத் தோற்றத்தையும் தொழிலாளி வர்க்க எழுச்சியின் பயனாக வரக்கூடிய பொதுவுடமையையும் அழுத்துவதால் தன்னையுணராத பிழையான தனிமனித வாதத்துக்குரிய குருட்டுத் தேடலையும் பிற்சுழிவுகளையும் இலக்கியத் துறையில் பெருமளவுக்குக் களைந்துவிடுகிறது. தற்கால மேற்கத்தைய இலக்கிய முயற்சிகள் பிரதிபலிக்கும் விரக்தியும் நம்பிக்கையின்மையும் தற்கால ரஸ்ஸ’ய இலக்கியங்களில் காணப்படுவதில்லை. வாழ்க்கையையும் மனித முயற்சியையும் ஆமோதிக்கும் போக்கும் அவற்றிலுள்ள நம்பிக்கையுமே ரஸ்ஸ’ய இலக்கியங்களில் பொதுப்படையாகக் காணப்படுகின்றன.

ஆனால் இந்த மாற்றங்கள் எல்லாம் பெரும்பாலும் உள்ளடக்க மாற்றங்களாகவே இருக்கின்றன. அதேயளவுக்கு உருவ மாற்றங்களைக் கொண்டுவந்ததாக இல்லை. இதைத் தெளிவாக்க வேண்டும். உள்ளடக்க மாற்றம் இயல்பாக எற்படுத்தும் உருவமாற்றம் இல்லாமலில்லை. சிறுகதையின் செல்வாக்குக் குறைந்து நாவலின் செல்வாக்குக் கூடுவதற்கு சமூக மாற்றங்களும் அந்த மாற்றங்களைப்பற்றி மார்க்சீய சித்தாந்தத்தின் மூலம் பெறப்பட்ட அறிவும் காரணமாகலாம் என்று பலர் கூறுவதுண்டு. ஈழத்தில் கலாநிதி க.கைலாசபதிபோன்றோர் அதையே ஒரு யந்திரச் சூத்திரமாக அழுத்துவதையும் நாம் அறிவோம். சிறுகதை செத்துவிட்டது என்றும் குறுநாவல், நாவல் இலக்கியங்களின் சகாப்தம் தொடங்கிவிட்டது என்றும் அவர்கள் கிளிப்பிள்ளை போல் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொள்வர். சமூக மாற்றங்கள் மட்டும் எல்லாவற்றையும் விளக்கிவிடப் போவதில்லை. ஆனால் அப்படி எடுத்துக் கொண்டால்கூட அவர்களின் கருத்துப்படி பொதுவுடமையை நோக்கிய ச மக மாற்றம் சிறுகதை என்ற உருவத்தைவிட நாவல். குறுநாவல் என்ற உருவங்களையே அதிகமாகக் கோரியுள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் நாவல். குறுநாவல் போன்ற உருவங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்டிருந்த உருவங்களேயாகும். எனவே மார்க்சீய சித்தாந்தமும் அது ஏற்படுத்திய சமூக மாற்றங்களும் ஏற்கனவே தெரிந்திருந்த உருவங்களின் உள்ளடக்கத்தை மாற்றியிருக்கின்றனவே ஒழிய அடிப்படையான உருவ - உள்ளடக்க மாற்றங்களைக் காட்டும் புதிய இலக்கிய வார்ப்புகளைக் கண்டுபிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது. உதாரணமாக பழைய காப்பியங்களுக்கும் புதிய நவீனங்களுக்கு மிடையேயுள்ள வித்தியாசத்தை மானியமுறை-முதலாளித்துவ அமைப்புக்குரிய நாவல்களுக்குமிடையே காணமுடியாது. பொதுவுடமை அமைப்புக்குரிய நாவல்களுக்குமிடையே காணமுடியாது. பொதுவுடமை அமைப்புக்குரிய நாவல்கள், பழைய நாவல் இலக்கியத்தில் தொடர்வளர்ச்சியாக இருக்கின்றனவே ஒழிய அடிப்படையான புதி உருவ - உள்ளடக்க மாற்றத்தைக் காட்டும் உத்தி மாற்றமாகவும் இல்லை. சங்க காலப் பாடல்கள், பல்லவ காலப்பாடல்கள். சோழர் காலக் காப்பியங்கள் என்று தமிழ் இலக்கிய மரபில் தெரியுமளவுக்கு ஐரோப்பிய சமூக வளர்ச்சியில் மானிய முறை அமைப்பின் சிதைவோடு தொடங்கிய முதலாளித்துவ மாற்றமும் அதன்பின் சில நாடுகளில் தோன்றிய பொதுவுடமை ஆட்சியும் அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங்களை இலக்கியத்துறையில் ஏற்படுத்தியதாய் இல்லை. முதலாளித்துவ அமைப்பிலும் பொதுவுடமை அமைப்பிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் நாவல் இலக்கியந்தான் புதிய உருவ மாற்றத்தைக் காட்டுகிறதென்றால் அது சமூக மாற்றங்களால் தோற்றுவிக்கப்பட்டதாக இருக்காமல் பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பித்த சிந்தனை மாற்றத்தினால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு இலக்கிய உருவமாகவே இருக்கிறது. மார்க்சீய சித்தாந்தமும் அது ஆதரிக்கும் சமூக மாற்றமும் ஏற்கனவே இருந்த அந்த இலக்கிய உருவங்களை ஒதுக்கிவிட்டுப் புதிய உருவங்களை வளர்க்காமல், ஏற்கனவேயுள்ள அதே உருவங்களையே புதிய உள்ளடக்கத்துக்கேற்ப நெகிழித்தி வளர்க்க முயன்றுள்ளன. ஆனால் அந்த முயள்சி கூடப் பூரணமாக வெற்றியளித்திருக்கிறது என்று சொல்வதற்குமில்லை. பொதுவுடமை அமைப்புக்கு முந்திய நாவல், சிறுகதைத் துறைகளின் வளர்ச்சிக்கொப்ப ரஸ்ஸ’ய நாட்டில் பொதுவுடமை அமைப்புக்குப் பிந்தியகால நாவல், சிறுகதைகளின் வளர்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை. மனித முயற்சியில் நம்பிக்கையும். வாழ்க்கை ஆமோதிப்பும் பொதுப்படையாகக் காணப்படினும் தனிப்பட்ட சிருஷ்டிகள் டோஸ்டோ யொவ்ஸ்கி. ரோல்ஸ்ரோய், செகவ், தேகனேவ் போன்றோர் காலத்து முயற்சிகளைப்போல் வாழ்க்கையைப் பற்றிய மனிதப் பார்வையை ஆழமாக்கியதாக இல்லை. பழையனவற்றோடு புதியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது புதியவை பெரும்பாலும் உயிரற்ற உருவங்களாகவே தெரிகின்றன. புதிய சொல்கொவை படிக்கும்போது பழைய டோஸ்டோயொவ்ஸ்கியின் மேதா விலாசதத்துக்காக ஏங்கவேண்டித்தான் இருக்கிறது. பஸ்ற்றர்னக், சொல்லென்ஸ்டைன் போன்ற புதியவர்கள் சிலர் நாவல் இலக்கியத்துரையில் பழைய ஆழத்தைக் காட்டாமலில்லை. ஆனால் அப்படி ஆழமாகப் புக முயல்பவர்களைத்தான் பொதுவுடமை அமைப்பு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதனால் அவர்கள் மேசை "லாச்சிக்காக" எழுதுகிறார்கள் அல்லது மௌனம் சாதிக்கிறார்கள்.

எனவே மார்க்சீய சித்தாந்தம் இலக்கியத் துறையில் புகுத்திய சோஸலிஸ யதார்த்தம் என்ற கோட்பாடும், அந்தச் சித்தாந்தம் எல்லாவற்றுக்குமுரிய அடிப்படைக் காரணங்களாகக் கருதும் பொருளாதார சமூக அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களும் அந்த மாற்றங்கள் ஏற்பட்ட நாடுகளின் இலக்கியத் துறையில் கூட அடிப்படையான இலக்கிய உருவ மாற்றங்களைக் கொண்டுவரவில்லை என்பதையும் பொதுப்படையான உள்ளடக்க வளர்ச்சிக்கேற்றவிதத்தில் தனிப்பட்ட உச்சங்கள் முந்திய காலத்து உச்சங்களுக்குச் சமமாக ஏற்படவில்லை என்பதையும் பார்க்கும் போது சில முடிவுகள் தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன.

சமூகப் பொருளாதார மாற்றங்களைவிடச் சிந்தனை மாற்றமே இலக்கியத்துறையில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது அவற்றுள் முக்கியமானது.

அது அடுத்ததோர் முக்கிய முடிவையும் தன்னோடு கொண்டு வந்துவிடுகிறது. சிந்தனை மாற்றமே இலக்கியத்துறையில் ஏற்படுத்தும் அடிப்படை மாற்றத்தைப் பிரதிபலிக்காமல், ஏற்கனவே ஆரம்பித்து வளர்ந்து வந்த ஒரு காலக்கட்டச் சிந்தனை மாற்றத்தின் இறுதி வடிவமாகவும் வளர்ச்சியாகவுமே இருக்கிறது என்று அர்த்தமாகிறது.

அதுதான் உண்மை. அதைத்தான் சோஸலிஸ யதார்த்த வாதிகள் உணரத் தவறிவிடுகின்றனர். ஐரோப்பிய அறிவு வாதத்தின் இறுதி உருவங்களில் ஒன்றுதான் மார்க்சீய சித்தாந்தம். பதினைந்தாம், பதினாராம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பௌதிக-சமூக-விஞ்ஞான அறிவை அடிப்படையாகக் கொண்டு வளரத்தொடங்கிய சிந்தனை மாற்றத்தின் இறுதி வளர்ச்சியாகவே மார்க்சீய சித்தாந்தம் இருக்கிறது. அந்தச் சித்தாந்தம் இலக்கியத் துறையிலும் அதே காலக் கட்டத்தின் ஆரம்பத்தோடு வளரத் தொடங்கிய நாவல். சிறுகதை இலக்கியங்களை உள்ளடக்க ரீதியாக மாற்ற முயல்கிறதே ஒழிய உருவ ரீதியாகவும் மாற்ற முயலவில்லை. மாற்ற வேண்டும் என்ற அவசியம் எற்படவில்லை. அடிப்படையான சிந்தனை மாற்றம் ஏற்படும்போதே அடிப்படையான இலக்கிய உருவமாற்றங்களின் அவசியம் ஏற்படுகிறது. மார்க்சீய சித்தாந்தம் ஓர் அடிப்படையான சிந்தனை மாற்றத்தைப் பிரதிபலிக்காமல் அத்தகைய ஓர் மாற்றத்தின் இறுதிக் கட்டத்தையே பிரதிபலிப்பதால் அதே காலக் கட்டத்துக்குரிய பழைய இலக்கிய உருவங்களையே தொடர்ந்து அதன் இறுதி நிலைவரை வளர்க்க முயல்வதாய்த் தெரிகிறது. அடிப்படையான உருவ மாற்றங்களோடுகூடிய உள்ளடக்க மாற்றம் இலக்கியத்துறையில் ஏற்படுவதற்கு மனித சிந்தனை வளர்ச்சியில் இன்னோர் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும்.

அத்தகைய அடிப்படை மாற்றம் பொதுவுடமை அமைப்பைக் கொண்ட நாடுகளிலேயே ஏற்பட்டிருக்கலாம். அதற்கேற்ற இலக்கியங்களும் அங்கேயே தோன்றியிருக்கலாம். ஆனால் மார்க்சீய சித்தாந்தத்தின் அடிப்படையில் பொதுவுடமையமைப்புத் தோன்றிய நாடுகளில் சிந்தனைச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் மார்க்ஸ் வாழ்ந்த காலத்துச் சிந்தனையே தொடர்ந்து பலவந்தமாக அந்த நாடுகளில் திணித்தும் திரித்தும் பேணப்படுகிறது. அதனால் ஐரோப்பிய அறிவுவாதத்தின் இறுதி உருவங்களில் ஒன்றான சிந்தனைப் போக்கே எல்லாக் காலத்துக்கும் உரிய ஒன்றாக அங்கு பேணப்படுகிறது. அதனால் பொதுவுடமையமைப்பு நாடுகளில் சிந்தனைத் தேக்கந்தான் ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தேக்கத்தின் காரணமாக மனித சிந்தனையில் ஏற்படக்கூடிய அடுத்தகட்டத்து அடிப்படை மாற்றமும் அதற்குரிய இலக்கிய உருவங்களும் மார்க்சீயக்கொள்கைகளை ஏற்றுள்ள பொதுவுடமை யமைப்பு நாடுகளில் எற்படுவது அசாத்தியமானதாகவே இன்று தெரிகிறது. ஆனால் அந்த நாடுகளில் அது அசாத்தியமானதாகத் தெரிந்தாலும் அத்தகைய அடிப்படையான சிந்தனை மாற்றம் ஏற்படும் காலம் உலகில் பிறந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. அதனால் அடிப்படையானஇலக்கிய உருவ - உள்ளடக்க மாற்றங்களைப் பற்றிய தேடலும் தொடங்குவது அவசியமாகிறது. அத்தேடல் கண்டு பிடிக்கம் புதிய உள்ளடக்க-உருவங்களே உண்மையான புதுய வார்ப்புகளாக அமையும். அப்புதிய வார்ப்புகளோடேயே புதுயுகம் பிறக்கும்: புதுயுகத்தின் பிறப்போடேயே அப்புதிய வார்ப்புகள் உருவாகும். இரண்டும் ஒன்றையொன்று தழுவிச் செல்பவை. புதிய சிந்தனை மாற்றமும் அம்மாற்றம் ஏற்படுத்தும் உடனடியான பிரதிபலிப்பும் சமூக பொருளாதார அமைப்புகளில் தெரிவதற்குமுன் கலை, இலக்கியம் தத்துவம் ஆகிய துறைகளில் தெரிய வேண்டும். தெரியும் கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகளுக்கு முதலிடம் கொடுக்கும்போதும் சிந்தனையைச் செயல் தொடர்வதாகக் கூறும்போதும் மார்க்ஸையே நாம் தலைகீழாக்குகிறோம். அதை உணரும்போதுதான் புதுயுகத்தின் முக்கியத்துவத்தை பூரணமாக உணரலாம்.

கருத்தை முதலாகக் கொண்டு சிந்தனை மாற்றத்தின் அடிப்படையில் யுகப் பிரிவை வகுக்கும்போது மார்க்ஸைத் திரும்பவும் எகலிடம் (Hegel) கொண்டுபோகிறோம். எகலின் கருத்து முதல் வாதம்! ஆனால் எகலிலிருந்து பிரிந்து மார்க்ஸ் சென்ற பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய உண்மைகளை விட்டுக் கொடுக்காமலும் இழந்துவிடாமலும் திரும்பிப் போகிறோம். பொருளாதார சமூக அடிப்படையில் மார்க்ஸ் சரித்திரத்துக்குக் கொடுத்த வியாக்கியானங்கள் மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன. அவற்றை மனிதகுலம் சதா பேணிக்காக்கவே செய்யும். ஆனால் பொருளாதார சமத்துவம் பொதுவுடமைப் பொருளாதாரமும் மிக அவசியம் எனற அளவோடேயே அவை நின்றுவிடும். அவற்றை உணர்ந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றை அடைவதில் ஓரளவுக்கு வெற்றியும் கிட்டும் சமயத்தில் மனிதனின் தேவைகள் அவற்றுக்கு அப்பாலும் போவதை உணரும் சூழலும் அந்த அப்பாலான நிலையில் நின்றே பொருளாதார சமத்துவத்தையும் பூரணமாக அடையலாம் என்ற உண்மையை உணரும் புதிய நம்பிக்கையும் சிந்தனை மாற்றமும் உருவாகி விடுகின்றன. இன்றைய உலக சூழல் அதுதான்.

ஏறக்குறைய உலகின் மூன்றிலொரு பகுதியில் பொதுவுடமைச் சமூக அமைப்பின் ஆரம்பம் நிறுவப்பட்டுவிட்டது. எத்தனையோ தனிப்பட்ட நாடுகளில் இன்னும் அது நிறுவப்பட வில்லைதான். ஆனால் ஒரு சில நாடுகளில் பொதுவுடமை அமைப்பின் ஆரம்பம் உருவாகிய காரணத்தாலேயே உலக சூழல் மாறிவிட்டது. உலக சூழலின் மாற்றத்தோடு மனிதனின் மனமாற்றமும் வந்துவிட்டது. அடுத்த கட்டத்துக்குத்தாவும் மனமாற்றமும், பொதுவுடமை அமைப்புக்கு அப்பால் சிந்திக்கவும் கூடியவனாக, சிந்திக்க வேண்டியவனாக மனிதன் மாறியிருக்கிறான். இனிமேல் எல்லா நாடுகளிலும் தொழிலாளர் சர்வாதிகாரம் வந்துதான் ஆகவேண்டுமென்றில்லை. எப்படி ரஸ்ஸ’யா, சீனா போன்ற நாடுகளில் முதலாளித்துவ அமைப்பு பூரணமாக வளருவதற்கு முன்னரே பொதுவுடமை அமைப்பின் ஆரம்பமும் தொழிலாளர் சர்வாதிகாரமும் நிறுவப்பட்டு விட்டனவோ அதே வகையில் இனிமேல் பூரணமாக முதலாளித்துவ அமைப்பு அல்லது அதற்குப் பின்பு வரக்கூடிய தொழிலாளர் சர்வாதிகாரம் எதுவுமில்லாமலேயே அவற்றுக்கும் அப்பால்பட்ட ஓர் சகாப்தத்தையும் சமூக அமைப்பையும் தோற்றுவிக்கக்கூடிய சூழல் உருவாகிவிட்டது. சர்வோதய சகாப்தமும் சமுதாயமும்! உலக சூழலின் வளர்ச்சி மனித சிந்தனை வளர்ச்சியை அத்தனை வேகத்தில் துரிதப்படுத்துகிறது. தனித்தனி நாட்டின் சூழல் மாற்றம் பல கட்டங்களை ஒரேயடியாய்த் தாண்டி விடக்கூடிய நிலை இன்று நிலவுகிறது. அதைத் தற்கால விஞ்ஞான பொருளாதார - கல்வி வளர்ச்சி மிக இலகுவாக்குகிறது.

இந்த உலக சூழல்தான் மார்க்ஸையே தலைகீழாக்கிப் பார்க்கத் தூண்டுகிறது. மார்க்ஸ் தலைகீழாக்கும்போது எகல் (Hegel) தலைமேலாகிறார். காரணம் எகலைத் தலைகீழாக்கியே மார்க்ஸ் தன் தத்துவத்தை உருவாக்கினார்.

நவீன ஐரோப்பிய வரலாற்றில், சிந்தனை வரலாற்றில், எகலின் நிலை முழுமையாகவும் தனி உச்சமாகவும் இருக்கிறது. முழு உலக சரித்திரத்துக்கும் அது ஒரு தனி உச்சம் என்றே சொல்லாம். அதுவரை உலகம் பொதுப்படையாக நம்பிய கருத்து முதல்வாதம் அவரிலேயே அச்சக்கட்டத் தத்துவ நிலையை எட்டிற்று. ஆனால் அதுவல்ல முக்கியம். உபநிடத கால இமாலய ஞானத்துக்கு முன்னால் அது ஒரு சிறு மடுவேதான். ஆனால் உபநிடத ஞானமும் பௌத்த தத்துவமும் சங்கரரின் அத்வைதமும் சரித்திரத்துக்கும் நாமரூபப் பிரபஞ்சத்துக்கம் வெளியே நிற்பவை. உள்ளே நின்று சரித்திரத்தைப்பற்றி ஒரு திட்டவட்டமான பார்வையை அவை காட்டியதில்லை. எகலின் தத்துவம் அதைத் தான் செய்கிறது. கருத்துத்தான் முதலானது என்பதல்ல முக்கியம். அதுவேதான் முழுப் பிரபஞ்சமாகவும் மும்முனை இயக்கத்தைக் காட்டும் சரித்திரமாகவும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதையும் இதனால் சரித்திரத்தின் வளர்ச்சிக்கு நமது ஒத்துழைப்பை அளிப்பது அவசியம் என்பதையும் கூறியதுதான் எகலின் சிறப்பு.

ஆனால் எகல், தான் கண்டுபிடித்த முடிவுகளையே தர்க்க ரீதியாக வளர்க்க முடியாமல் நின்றுவிட்டார். அந்த நிலையில்தான் மார்க்ஸ் அதுகாலவரை மனித சிந்தனை வளர்ச்சிக்கு ஒரு பற்றுக்கோடாகவும் அதே சமயம் அதைக் கட்டுப்படுத்தும் தடையாகவும் தொந்தரவு கொடுத்து வந்த ஒர் பிரச்னையின் திசையைக் காட்டினார். பொருளாதார அமைப்பும் அதை அடிப்படையாகக் கொண்ட வர்க்க வேறுபாடுகளும் அவற்றின் அடிப்படையில் எழும் போராட்டங்களும் சமுதாய வளர்ச்சியும் எகலைத் தலைகீழாக்காமலேயே அந்தத் திசையைக் காட்டியிருக்கலாம். ஆனால் கருத்துக்கு முதலிடம் கொடுக்க விரும்பாததால் எகலைத் தலைகீழாக்க வேண்டிய நிலை மார்க்ஸ”க்குத் தவிர்க்கமுடியாததாகி விட்டது. பொருளாதார சமூகச் சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதன் மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடிப்படைத் தேவையாக அழுத்தியதால் மார்க்சீயம் மனித செயலுக்கு- புரட்சிக்கும் போராட்டத்துக்கும் அவற்றால் துரிதமாக ஏற்படக்கூடிய வளர்ச்சிக்கும் - அதிக முக்கியத்துவம் கொடுத்தது. கருத்தை முதலாக அழுத்தும்போது மனிதச் செயல் அந்தளவுக்கு துரிதப்படுத்தப்பட்டோ ஆற்றுப்படுத்தப்பட்டோ இருக்கும் என்று நம்பமுடியாத அளவுக்கு அது பொருளாதார சமூக சூழலை அழுத்துவதினால் மனித செயலுக்கும் சமூக மாற்றத்துக்கும் அத்தனை வேகத்தைப் பாய்ச்சியிருக்கிறது. மார்க்ஸ’ன் நன்கொடையே அதுதான். அத்தனை செயல் வேகத்தையும் சமூக மாற்றத்தையும் காட்டாத எந்தத் தத்துவமும் - அது கருத்து முதல்வாதமாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி - இனி வாழுந் தத்துவமாக இருக்கவிட்டாலும்சரி- இனி வாழுந் தத்துவமாக இருக்கப்போவதில்லை. தத்துவ ஞானிகள் இதுவரை உலகத்தை விளக்கவே செய்தனர், உலகத்தை விளக்கவே செய்தனர், உலகத்தை இனி மாற்றவேண்டும் என்று கூறிய மார்க்ஸ”க்கு கருத்துக்கு முதலிடம் அளிப்பதும் அத்துடன் திருப்திப்படுத்தும் வெறும் தத்துவ வாழுவாகவேபட்டிருக்கவேண்டும். கருத்துக்கு முதலிடம் கொடுத்தவர்கள் அதுவரை சரித்திரத்தை மார்க்ஸ் விரும்பிய வேகத்திலும் திசையிலும் மாற்றி வளர்க்க முனைந்ததில்லை. எனவே பொருளாதார சமூகச் சூழலுக்கும் அந்தச் சூழல் பிரதிபலித்த உற்பத்தி உறவு முறைகளுக்கும் முதலிடங்கொடுத்த மார்க்ஸ் அவற்றை அடிப்படையாகக் கொண்ட செயலுக்கும் மாற்றத்துக்குமே முதலிடங்கொடுத்தார். சிந்தனை அவற்றோடு சேர்ந்து வளரும் ஒன்றேதான் என்றும் அவற்றின் எல்லைகளைத்தாண்டிவளர அதனால் முடியாது என்றும் அப்படி வளர்வதாகக் காட்டிக்கொள்வது உண்மையையில் அவை தாண்டிய பழைய சூழலுக்குள் திரும்பிப்போகும் பிற்போக்கு வீழ்ச்சி என்றுமே மார்க்ஸ் கருதினார். பெருமளவு உண்மை அந்தப் பார்வையில் இருப்பினம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பல ஆபத்தான குறைகள் அதில் மிக நுணுக்கமாக மறைந்தும் கிடக்கின்றன.

மார்க்ஸ’ன் சிந்தனைகள் இன்று பல நாடுகளில் செயல்படத் தொடங்கிய பின்னர்தான் அதன் குறைகளும் நடைமுறையில் நம்பக்கூடிய வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரப் பொதுவுடமை மிக அவசியம் என்பதை உலகம் உணர்கிறது. ஆனால் அதைக்கொண்டு வருவதற்குரிய காரணங்களையும் விளக்கங்களையும் மார்க்ஸ் காட்டிய கோணத்தில் முற்றாக ஏற்றுக்கொள்வதும் சரியல்ல என்பதை மார்க்சீய சித்தாந்தம் நடைமுறையில் அனுட்டிக்கப்பட்டபின் தான் உலகம் பூரணமாக நம்பத்தொடங்கியிருக்கிறது. காரணம் அந்த வழிமுறைகளின்படியும் விளக்கங்களின்படியும் மார்க்ஸ் விரும்பிய உண்மையான பொதுவுடமை ஒருநாளும் வரப்போவதில்லை என்பதுதான் இப்போ நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாக இருக்கிறது. வேறு ஓர் உதாரணத்தைக்கொண்டு இதை விளக்கலாம். புத்தர் விளக்கிய நிர்வான நிலை ஒவ்வொரு மனிதனுக்குமுரிய அடிப்படை நிலையே, ஆனால் அந்த நிலையை அடையவேண்டியதற்கு அவர் காட்டிய காரணங்களும் அடைவதற்குரிய நோக்கங்களும் பிழையானவை என்பதை இன்று நாம் உணரலாம். உணரவேண்டும். வாழ்க்கை வேதனைமயமானது. அதிலிருந்து தப்புவதே முழுநோக்கமாகும் என்ற காரணங்களும் நோக்கமும் புத்தர் அனுபவித்த நிர்வாண நிலையை இன்று நியாயமாக்கப் போவதில்லை. அவற்றை நியாயமாக்க, எல்லாருக்குமுரிய அடிப்படையான நிர்வாண நிலையை அனுபவிக்க இன்று வேறு பல விளக்கங்களும் நோக்கங்களும் தேவைப்படுகின்றன. (உதாரணமாக பொதுவுடமைச் சமுதாயத்தை அந்த நிர்வாண இலட்சியத்தை அடைவதற்காக கொண்டுவரவேண்டும் என்றும் அந்த நிர்வாண நிலையின் அடிப்படையில் நின்றே உண்மையான சகோதரத்துவத்தையும் பொதுவுடமையையும் கொண்டுவரலாம் என்றும், ஒன்றை மற்றதுக்குரிய வழிகளாகவும் நோக்கங்களாகவும் மாறிமாறிக் காட்டலாம். அப்படி மனிதன் வளர வளர அவனது இலட்சியங்களும் வாழ்க்கை நிலைகளும் மாறுகின்றன.) அதேபோலவே மார்க்ஸ் கூறிய பொருளாதார சமத்துவத்தையும் பொதுவுடமையின் அவசியத்தையும் அதற்குரிய வழிமுறைகளையிம் காட்டுவதற்கு இன்று வேறு விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அவற்றின் மூலமே அவை உண்மையாகச் சாத்தியமுமாகும்.

மார்க்ஸ்விட்ட தவறுகளுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவர் விஞ்ஞானமாகக் கருதியவை பூரண விஞ்ஞான மல்ல. அவர் அறிவுப் பிறழ்வாக ஒதுக்கிய ஞான அனுபூதி நிலையும் - நிர்வாணநிலை - உண்மையான அக விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பேயாகும். மேற்கத்தைய விஞ்ஞானம் அதை இனி மேல்தான் பூரணமாக உணர வேண்டியிருக்கிறது. அதன்படி என்றுமுள்ள மாற்றமற்ற சத்தியப்பொருள் அல்லது சத்தியநிலை நாமரூபங்களுக்குப் பின்னால் நிற்கிறது என்று அர்த்தமாகிறது. ஆனால் மார்க்ஸ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தன்னிலிருந்து பிரிந்து நிற்கும் மனிதப் பிறழ்வு நிலையை (alienation) நீக்கப் பொருளாதாரப் பொதுவுடமை மட்டும் வந்தால் போதும் என்று நினைத்தார் அவர். அது மார்க்ஸ் விட்ட அடிப்படைத் தவறாகும். பிறழ்வு நிலை சத்தியநிலையோடு மனிதன் ஒன்றி நிற்கும்போது தான் நீங்கும். அதனால் பொதுவுடமை வந்தால் மட்டும் போதாது. பூரண சமூக முக்தியும் உலகமுக்தியும் வரவேண்டும் என்பதை அவர் அறியவில்லை. உலகமுக்திக்குரிய ஒரு இடைக்கால வழிதான் பொதுவுடமையாக இருக்குமே ஒழிய அதுதான் இலட்சிய மல்ல. இலட்சியம் உலகமுக்தியாக இருக்கவேண்டும். ஆனால் அதற்குப் பின்பும் வேறு பல நிலைகளில் மனித வாழ்க்கை தொடர்ந்து வளரவே செய்யும். அந்த நிலைகளுக்குரிய "பொருளாதார" விளக்கங்கள் எல்லாம் அகச்சத்தி ஆதாரங்களுக்குரிய விளக்கங்களாக மாறிவிடும். மார்க்ஸால் அவற்றை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. அறிவுக்கும் அறியாமைக்குமிடையே நடந்துவரும் தொடர் போட்டியில் அறியாமையின் பக்கம் ஆணவம் எடுக்கும் பொருளாதார பலத்தையும் வேடங்களையும் மார்க்ஸ் முழு உண்மையாகவும் எடுத்துவிட்டார். சூரனை விட்டுவிட்டு வேடத்தைப் பிடிக்க முயன்ற கதையும் புராணமுந்தான் மார்க்சீய சித்தாந்தம். அதனால் வேடம் பிடிபட்ட பின்பும் சூரன் அகப்படுவதில்லை. அவன் வேறு பல வேடங்களில் நழுவித்தப்பி தன்னையே திரும்பத் திரும்ப நிலைநாட்டி விடுகிறான். தலைவர் வழிபாடு, துரைத்தன ஆட்சி முதலியவை அவனது அவதாரங்கள்தான். இவற்றையெல்லாம் மார்க்ஸால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவற்றுக்கெல்லாம் காரணம் மார்க்ஸ் பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளிலிருந்து ஐரோப்பாவில் வளரத் தொடங்கிய ஐம்புலனுணர்வையும், புத்தியையும் (intellect) அடிப்படையாகக் கொண்ட பௌதீக - விஞ்ஞான - சமூக அறிவு வாதத்தின் இறுதி வளர்ச்சியாகவும் வடிவமாகவும் நிற்கிறார் என்பதே. (அதனால்தான் மார்க்சீயப் புரட்சி அதே காலத்துக்குரிய இலக்கிய உருவங்களின் இறுதி வளர்ச்சியையும் வடிவத்தையும் காட்டுகின்றனவே ஒழிய அடிப்படையான உள்ளடக்க உருவங்களைக் காட்டும் புதிய இலக்கிய வார்ப்புகளைக் கொண்டு வரவில்லை). அந்த அறிவு வாதம் வெளிச் சூழலையும் அந்த சூழலை அடிப்படையாகக் கொண்ட புலனுணர்வையும் புத்தியாலும் நிரூபிக்கப்படும் அறிவையுமே ஏற்றுக்கொண்டது, அதற்கு அப்பால் அதனால் போக முடியவில்லை. போவதற்குரிய வசதிகளும் அதனிடம் இல்லை. விஞ்ஞான சாதனங்களும் ஆய்வுக்கூடங்களும் புது ப பிராந்தியங்களைக் காட்ட உதவினாலும் கிழக்கத்தைய யோக முறைகள் கண்டுபிடித்துள்ள மனதையும் புத்தியையும் அறிவையும் தாண்டிய அகவெளி - அண்டவெளி பிராந்தியங்களை அவற்றால் கண்டுபிடிக்க முடியாமலிருக்கிறது. மார்கஸ’ன் குறைகளை அந்தப் பின்னணிலேயே பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்கும்போதுதான் எகல் ஐரோப்பிய அறிவுவாதத்துக்கு முரண்பட்டதன் கருத்துமுதல்வாதத்தைக் கூட அதே அறிவுவாதத்துக்குள்ளும், அறிவுக்குள்ளுமிருந்தே போட்டார் என்பது தெளிவாகிறது. ஆனால் அப்படிச் செய்யும்போது அதே அறிவுவாதத்தையே பூரணமாகப் பிய்த்துக்கொண்டு வெளியே செல்ல உதவக்கூடிய உச்சத்தையும் தொடுமளவுக்கு வந்துவிட்டிருந்தார். மார்க்ஸ் அதை விரும்பவில்லை. ஐரோப்பிய அறிவு வாதத்தின் முக்கிய இறுதி வடிவமொன்றை நிர்ணயிக்கும் அவர், அதே அறிவுவாதத்தை மீறுமளவுக்கு எகல் உணர்த்திய தத்துவ உச்சத்தைத் திரும்பவும் தலைகீழாக்கிக் கீழே கொண்டுவருவதைத் தன் கடமையாகக் கருதியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். ஐரோப்பிய அறிவுவாதம் ஐன்ஸ்டீன்வரை கண்டுபிடித்துள்ள பௌதிக, உயிரியல், விஞ்ஞான சாதனைக்குச் சமமாக சமூக, பொருளதாரத் துறைகளில் அவர் மூலம் புதிய சாதனைகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதே மார்க்ஸ’ன் மேதாவிலாசத்தைக் காட்டுவதாகும். ஆனால் ஐரோப்பிய அறிவு வாதத்தில் தவிர்க்கமுடியாதிருக்கும் குறைகள் அதன் இறுதி வளர்ச்சியான மார்க்சீயத்திலும் காணப்படுவதால் மார்க்ஸ் கண்டுபிடித்த நன்மைகளை இழக்காமல் அவற்றைப் பேணியவாறே (ஐன்ஸ்டீனக்குப்பின் நியூட்டனின் கண்டுபிடிப்புகள் பயன்படுத்தும் விதத்தில்), அவற்றுக்குப் புதிய காரணங்களையும் விளக்கங்களையும் காட்டியவாறு இன்று மனித சிந்தனை திரும்பவும் அறிவுவாதத்துக்குள்ளிருந்து வெளியேற வேண்டியிருக்கிறது. அதனால் மார்க்ஸ’லிருந்து புவர்பாச்சுக்கும் (Fuerbach) புவர்பாய்ச்சிலிருந்து எகலுக்கும் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.

திரும்பிச் செல்லும் சிந்தனை ஓர் நூற்றாண்டுக்கு மேலான புது அனுபவத்துடன் செல்கிறது. அதனால் அது மார்க்ஸ“யத்தாலும் ஐன்ஸ்டீனுக்கும் பின்பட்ட விஞ்ஞானத்தாலும் (அறிவுவாதம் பெற்ற விஞ்ஞானப்பிள்ளை, அந்த அறிவு வாதத்தை விழுங்கிவிட்டு வேறோர் உருவமெடுக்கும் அறிகுறிகள் இப்போ தெரிகின்றன. ஐன்ஸ்டீனக்குப் பின்னர் அந்த அறிகுறிகளின் வளர்ச்சியைத்தான் காணலாம்.) ஐரோப்பிய அறிவு வாதத்துக்கு வெளியேயுள்ள கிழக்கத்திய, குறிப்பாக இந்திய தரிசனத்தாலும் வலுப்பெற்றதாகவும் புது வழியைக் கண்டுபிடிக்கத் தொடங்கி விட்டதாகவும் இருக்கிறது. அதுதான் ஒரு நூற்றாண்டுக்கு மேலான அனுபவம் கொடுத்த வலு. அதனால் திரும்பவும் எகலின் கருத்து முதல் வாதத்தை ஏற்றுக்கொள்வதாய் அது இருப்பினும் எகலின் குறைகளையும் பூரணமாக உணர்ந்ததாகவும் அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய புது வழிகளைக் கண்டுபிடித்ததாகவும் நிற்கிறது.

உலகத்தை விளக்குவதுடன் உலகத்தை முற்போக்காக மாற்ற வேண்டும், வளர்க்க வேண்டும். அதுதான் முதலாவது. எகலிடம் அந்த உணர்வின் வித்திருந்தது. ஆனால் அதே சமயம் அவரோ தன்னோடும் பிரஸ்ஸ’ய அரசோடும் சரித்திரம் நின்றுவிட்டதாக நினைப்பவர்போலவே திருப்திப்பட்டுக்கொண்டார். மார்க்ஸ்தான் எகலிடம் இருந்த வித்தை வெளியிட்டுவர்த்தவர். அதற்குரிய செயலையும் இலட்சியத்தையும் அழுத்தியவர், பொதுவுடமை!

இருப்பினும் மார்க்ஸ் அழுத்திய பொருளாதார சமூகப் பொதுவுடமை மனித வளர்ச்சியின் இறுதி இலட்சியமல்ல. அதன் யாத்திரையில் ஒரு கட்டமே. அத்துடன் அந்தக் கட்டத்தை அடைவதற்கு மார்க்ஸ் காட்டிய வழியும் செயல்முறையும் எகலைத் தலைகீழாக்கிப் பெறப்பட்டதால் எகல் விட்ட இடத்திலிருந்து உண்மையான வளர்ச்சியைக் காட்டுபவையாக இல்லை. எகல் விட்ட இடத்துக்கும் அந்த இடத்திலிருந்து உண்மையாக வளரவேண்டிய வளர்ச்சிக்கும் இடைப்பட்ட ஒருவித மாற்றுவலயத் தத்துவமாகவே மார்க்சீயம் இருக்கிறது. எகலின் தத்துவத்தின் மூலம் உலகாத்மா தன்னைப் பூரணமாக அறிவுரீதியாக விளங்கிக் கொண்டதென்றால் அந்த அறிவுரீதியான விளக்கம் அனுபவரீதியாகச் செயல்படுவதற்குமுன் பழைய அறியாமைக்குரிய பழக்க வழக்கங்களும் மனச்சாய்வும் பிரிவினையுணர்வும் தெரியாத்தனமாக உட்புகுந்து செயலை நிர்ணயிக்கத் தொடங்கிவிட்டன. அத்தகைய இடைச்செருகலைத்தான் மார்க்சீயத் சித்தாந்தம் பிரதிபலிக்கிறது. உண்மையான தொடர்வளர்ச்சி, எகல்விட்ட இடத்திலிருந்து வந்திருக்க வேண்டிய தொடர்வளர்ச்சி காந்தியும், வினோபாவும் காட்டும் சர்வோதயத்தின்மூலமே வரக்கூடியதாய் இருக்கிறது. எகலின் கருத்துப்படி உலகாத்மா முதல்முதலாக அவரின் தத்துவத்தின் மூலமே தன்னை உணர்ந்திருக்கிறதென்றால் (எகலின் உலகாத்மா இந்து சமயத்தின் பரிபூரண அறிவான பிரம்மத்தின் வியவகாரிக நிலையின் ஒரு பகுதியை மட்டுமே காட்டுவதாக இருக்கிறது.) அதற்கு பின்பு வரும் சரித்திர வளர்ச்சி அந்தச் சுயவுணர்வுடன் எற்படுவதாக இருக்க வேண்டும். அதற்குப்பின் சரித்திர வளர்ச்சி தடைபட்டு நிற்காமல் தொடர்ந்து புதிய படிநிலையில் ஏறி நின்று வளரவே செய்யும். தானே எல்லாமாக நிற்கிறது என்பதை அறிவு பூர்வமாக உணரத் தொடங்கிவிட்ட உலகாத்மாவின் சுயவுணர்வு அதற்குப்பின் சரித்திரப்போக்கிலும் பிரதிபலிக்கத் தொடங்கிவிடும். எல்லாப் பொருளிடத்திலும் எல்லா உயிரிடத்திலும் எல்லா செயலிடத்திலும் அந்த அறிவுப் பூரணமான உணர்வு அனுபவ ரீதியாகவும் முழுமை பெரும் வரைக்கும், அதற்குப்பின்பும் சரித்திரம் சுயவுணர்வுடன் வளரவே செய்யும். ஒரு எகல் என்ற தத்துவ ஞானியிடம் அறிவுரீதியாக மட்டும் அந்த உணர்வு தோன்றுவததோடு சரித்திரம் நின்றுவிடும் என்று நினைப்பது தர்க்கவழுவாகும். ஆனால் அறிவாகப் பிறந்து அனுபவரீதியாகவும் முழுமைபெறும் அத்தொடர் வளர்ச்சி மார்க்ஸ் கருதியதுபோல் வர்க்கப் பிரிவினையை அழுத்தும் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலம் வராது. வரக்கூடாது. வர்க்கப் பிரிவினை என்பதே அறியாமைக்குட்பட்ட பழைய அறியாமைக்குட்பட்ட, காலத்தின் மனத் தோற்றமேதான். அதனால் ஆயுதமேந்திய வர்க்கப் போராட்டம் சரித்திரம் தன்னை உணராதவரைக்கும், உலகாத்மா தன் சுயத்தை அறிவுபூர்வமாகக் கண்டுபிடிக்காத வரைக்கும் நடைபெறும் அறியாமைக்குட்பட்ட போராட்டமாகவே இருக்கிறது. எகல் கூறியது போல தானே எல்லாமாக இருக்கிறது என்பதை உணரும் உலகாத்மா அதற்குப்பின் வர்க்கப் பிரிவினைகளையும் (அதே போல் சாதி, இன, மொழி, தேசப் பிரிவினைகளையும்) பலாத்காரத்தையும் அடிப்படையாகக் கொண்டு போராடாது. அவற்றுக்கு எதிராகவேதான் போராடும். அப்படிப் போராடும்போது அன்பையும் அகிம்சையையுமே முக்கிய ஆயுதமாக ஏந்திப் போராடும் மனித குலத்தின் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் அடிப்படையாக வைத்தே போராடும். தானே எல்லாமாக நிற்கிறது என்ற உணர்வு பலாத்காரத்தையும் பிரிவினைகளையும் எழுப்பாது. பலாத்காரத்தையும் பிரிவினைகளையும் எழுப்பினால் அது அறியாமையின் காரணமாகப் பிழையாக உலகாத்மாவை விளங்கிக்கொண்ட சூர போராட்டமாகவே இருக்கும். கந்தபுராணச் சூரன்போக்கு அதனால் மார்க்ஸ் எகலைச் சரியான வழியில், அனுபவரீதியான உணர்வின் வழியில் வளர்க்கவில்லை. எகலே தன் முடிவைத் தர்க்கரீதியாக வளர்க்காதது போல் மார்க்ஸ”ம் அந்த முடிவைப் பிழையாகவே, தலைகீழாகவே வளர்த்துள்ளார். காந்தி, வினோபா போன்றோரே மனித குல ஒற்றுமையையும், அன்பையும், அகிம்சையையும் சத்தியத்தையும் அடிப்படையாகக்கொண்டு சரித்திரத்தை வளர்க்க முயல்வதால் எகல் கண்டுபிடித்த இடத்திலிருந்து சரித்திரத்தை உண்மையாக வளர்ப்பவர்கள் அவர்களாகவே இருக்கின்றனர். அதுமட்டுமல்ல, அவர்களேதான் எகல் உலகாத்மாவைப் பூரணமாகத் தெரிந்து கொள்ளமுடியாத காரணத்தால் தவிர்க்கமுடியாமல் விட்ட தவறையும் திருத்துபவர்களாக இருக்கின்றனர். மார்க்ஸ் அல்ல.

இன்றைய மனித சிந்தனை அதை உணரும் நிலை வந்துவிட்டது. ஆனால் மேற்கூறிய விளக்கம் எகலின் முடிவை எகலின் நிலையிலிருந்தே வளர்ப்பதாகும். அறிவுக்குள் நின்றே அறிவை வளர்ப்பதாகும். அதனால் எகல்விட்ட தவறையும் வளர்ந்துவிடும் ஆபத்து ஏற்படலாம். அறிவுக்கு வெளியே நின்று பார்க்கும் ஓர் கோணமும் இருக்கிறது. அந்தக்கோணத்தையே தன் முழுவாழ்க்கையாகவும் பண்பாடாகவும் மாற்ற முயலும் ஒர் நாடும் இருக்கிறது. இந்தியா! அந்தக் கோணத்திலிருந்தே காந்தியும் வினோபாவும் எகலை வளர்ப்பதுடன் எகல் விட்ட தவறையும் திருத்துகிறார்கள்.

வேத - உபநிடத - பௌத்தகாலம் முதல் இருபதாம் நூற்றாண்டுவரை அறிவுக்குள்ளிருந்து அறிவை வளர்க்க முயலாமல் அறிவுக்கு வெளியே அங்கு நின்று அறிவை வளர்க்கவே இந்திய முயன்று வந்திருக்கிறது. அதற்குரிய வழிகளையும் திட்டவட்டமாகக் கண்டுபிடித்துக் காட்டியும் இருக்கிறது. யோகமுறைகள் அறிவையும் மனித மனத்தையும் தாண்டும் விஞ்ஞான வழிகளேயாகும். மனதுக்கு வெளியே செல்வதுடன் மனதின் முழு ஆழத்தையும் அதன் விரிவுகளையும் பூரணமாக அறிந்தவர்களாகவும் இந்திய ஞானிகள் நின்கின்றனர். யோகமுறை கூறும் குண்டலினியும் அதந் சக்கரங்களும் சாதாரண மனித மனநிலையையும் அதற்கப்பால்பட்ட விரிவுகளையும் அனுபவரீதியல் கண்டறிந்த விஞ்ஞான விளக்கங்களாகும். மேற்கத்திய விஞ்ஞானம் இன்னும் எந்தளவுக்கு வளரவேண்டியிருக்கிறது என்பதை சதா சுட்டிக் காட்டும் உச்சங்கள் அவை. பதஞ்சலியின் யோக சூத்திரங்களையும் பிராய்டின் விளக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசம் தெரியும். மனித மனத்தின் சிறுகுழி ஆழத்தை மட்டுமே கண்ட பிராய்ட் அதைப்பற்றியே புத்தகக் கணக்கில் விளக்கவேண்டியவராய் இருந்தார். காரணம் அந்தச் சிறுகுழியே அவர் வாழ்ந்த கலாசாரத்துக்கும் அது போற்றும் அறிவுவாதத்துக்கும் பொருந்தாத ஒரு புதுமையாக இருந்தது. அதனால் அந்தளவு விளக்கங்கள் இல்லாமல் அத்தகைய பின்னணியில் பிராய்டின் கண்டுபிடிப்பு தன்னை நிரூபித்திருக்க முடியாது. பதஞ்சலியோ மனித மனம் என்ற அலைபாயும் சமுத்திரத்தையும் அந்த சமுத்திரத்துக்கு அப்பாற்பட்ட சத்தியத்தையும் அனுபவ ரீதியாகக் கண்டறிந்த பின்பும் அந்த அனுபவ ஞானத்தைச் சின்னஞ்சிறு சூத்திரங்களிலேயே போட்டுள்ளார். அதுவே அச்சு வசதியற்ற அக்காலத்து முறையாகும் என்தல்ல முக்கிய காரணம். பதஞ்சலி வாழ்ந்த இந்தியப் பண்பாட்டுப் பின்னணியில் அவரின் அனுபவத்தை நியாயப்படுத்தவேண்டிய அவசியமும் அதற்குரிய பெரும் விளக்கங்களும் தேவையற்றவையாக இருந்தன என்பதே முக்கிய காரணமாகும். அதனால் சூத்திரங்களாகவே அவர் தன் அனுபவத்தை வடித்தார். அந்த அனுபவத்தையே தன் சொந்த ஆழமாகவும் கொண்டிருந்த இந்தியப் பண்பாட்டில் அதற்குரிய வாழும் விளக்கங்களாக பெரும் அனுபூதிமான்கள் இருந்த போது சூத்திரங்களே போதுமாகப்பட்டன. அப்படிப் பார்த்தால்தான் இந்தியாவின் கோணத்தைச் சீராக விளஙகி கொள்ளலாம்.

அதனால் சித்தாகவும், ஆனந்தமாகவும் அவற்றுக்கு அப்பாலாகவும் நிற்கும் சத்தியத்தை, எகல் தன்னளவில் கண்டுபிடித்த உலகாத்மாவ, மனித மனத்தின் எல்லைகளுக்குட்பட்ட சாதாரண அறிவுக்குள் நின்று அளக்க இந்திய ஒருபோதும் முயன்றதில்லை. அறிவுக்கு வெளியேதான், அதாவது மனித மனதுக்கு வெளியே நின்றுதான், சத்தியத்தை அது கண்டுபிடிக்க முயன்றிருக்கிறது, கண்டுபிடித்துமிருக்கிறது. அதனால் தனிப்ட்ட ஒரு தத்துவ ஞானியின் கண்டுபிடிப்பின் மூலந்தான் உலகாத்மா தன்னையே கண்டுபிடித்திருக்கிறது என்ற தவறான அபிப்பிராயம் இந்தியப் பண்பாட்டில் எழுதுவதற்கு இடமில்லை. எகல்விட்ட தவறு அவரது ஐரோப்பிய அறிவுவாதப் பின்னணியின் தவறாகும். சத்தியம், அதாவது உலகாத்மா, எப்போதும் பரிபூரண ஞானமாகவே இருக்கிறது என்பதுதான் இந்தியாவின் அனுபவமாகும்.

ஆனால் மனதையும் கடந்த அந்தச் சத்திய அனுபவத்தை விளக்கி அந்த விளக்கத்தைச் சமூக வாழ்க்கைக்குரிய தத்துவ வழியாக அமைக்க இந்திய முயன்றபோது சத்திய அனுபவத்துக்கு முந்திய மனநிலையையே அடிப்படையாகக் கொண்டு விளக்கவும் வழி அமைக்கவும் முயன்றிருக்கிறது. இந்தியாவின் பார்வைக் கோணத்திலுள்ள பெருந்தவறு அதுதான். இராமகிருஷ்ணர்- அரவிந்தர் காலம்வரை இந்தியத் தத்துவஞானிகளும் அனுபூதிமான்களும் அந்தத் தவறையே செய்துவந்துள்ளார்.

தன் சொந்தத் தத்தவத்தின் மூலந்தான் உலகாத்மா தன்னையே உணர்ந்திருக்கிறது என்ற நினைத்தார் எகல். அதனால் சரித்திர வளர்ச்சியே அந்த உணர்வை நோக்கிய வளர்ச்சிதான் என்று அவர் விளக்கினார், மனதுக்கப்பால் பட்ட சத்தியத்தைப்பற்றித் தெரியாததால் எகல் அப்படிக் கூறினார். ஆனால் அவரின்கத்துவத்தின்மூலம் மனித மனந்தான் என்றும். பரிபூரண ஞானமாயுள்ள சத்தியத்தையும் அந்தச் சத்தியம் சார்புநிலையில் நடத்திவரும் பரிணாம வளர்ச்சியையும் அதன் சரித்திரத்தையும் மனதுக்குட்பட்டு நின்றே உணர முயன்றிருக்கிறது. அதை விளங்கி கொள்ளாத எகல் தன் உணர்வு மூலம் உலகாத்மாவின் உணர்வும் முழுமையடைகிறதுஎன்றும் அந்த முழுமையை நோக்கிய சரித்திர வளர்ச்சியும் தனது காலத்திய பிரஸ்ஸ’ய அரசோடு முழுமையடைகிறது என்றும் தவறாக மதிப்பிட்டுவிட்டார். இதற்குச் சமமான தவறொன்றைத்தான் மனதுக்கும் அறிவுக்கும் அப்பால் சென்று சத்தியத்தை உணர்ந்த பல இந்திய அனுபூதிமான்களும் தத்துவ ஞானிகளும் தொடர்ந்து செய்துவந்துள்ளனர். கீதை அதைத் திருத்த முயல்கிறது என்பது உண்மையே. இருப்பினம் அந்தத் தவறு இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமாகவே மாறிவிட்டது.

மனதுக்கு அப்பால் சென்று சத்தியத்தைப் பூரணமாக அனுபவித்துணர்ந்த இந்தியத் தத்துவ ஞானமானது அந்த அனுபவத்துக்கு முந்திய மனநிலையே அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையையும் சரித்திரத்தையும் விளக்க முயன்றுள்ளது. அதுதான் இந்தியத் தத்துவ ஞானத்தின் பொதுப்படையான குறையாகும். அதனால் இந்தியத் தத்துவ ஞானமானது வாழ்க்கையிலிருந்தும், சமூகத்திலிருந்தும் தப்பிச் செல்லும் ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கிவிட்டது. வாழ்க்கையும் சமூகமும் வேதனைக்குரிய விளயங்களாகவும், மாயையாகவும் தெரிவது சத்தியத்தை அனுபவிக்க முன்பிருந்த மனநிலைக்குத்தான். அனுபவித்த பின்பு நிற்கும் மனநிலை வேறு. அந்த நிலையில் என்றுமுள்ள பரிபூரணமான சத்தியத்தின் நிலையிலிருந்தே வாழ்க்கையையும், சமூகப் போக்கையும் அதன் சரித்திரத்தையும் வியாக்கியானப்படுத்த வேண்டும். சத்தியமானது என்றுமுள்ள மாற்றமற்ற பரிபூரண ஞானமாக, ஞானநிலையாக இருக்கிறது என்பதையும் அது சார்புநிலையில் மாற்றங்களைத் தோற்றுவித்து லீலையை நடக்கிறது என்பதையும் அந்த நோக்கம் பரிணாம வளர்ச்சியாக வெளிக்காட்டப்படுகிறது என்பதையும் அழுத்துவதே சத்தியத்தை யுணர்ந்த மனநிலை. சத்தியத்தையும்பற்றியும் வாழ்க்கையைப்பற்றியும் கூறக்கூடிய விளக்கங்களாக இருக்கின்றன. ஆனால் மனதையும் கடந்து சத்தியத்தை அனுபவித்துணர்ந்த இந்தியத் தத்துவஞானம் அந்த அனுபவத்துக்கு முந்திய மன நிலையை அடிப்படையாகக் கொண்டே சத்தியத்தையும் அது சார்பு நிலையில் தோற்றுவிக்கும் நாமரூபப் போக்கையும் விளக்குகின்றன.

அத்தகைய தவறான போக்குக்கு பௌத்தம் ஒரு முக்கிய உதாரணமாக நிற்கிறது. நிர்வாணத்தைக் கண்டுபிடித்த புத்தர் அதை விளக்கவும் அதை அடையவேண்டிய காரணத்தைத் தெளிவாக்கவும் நிர்வாணத்தை அனுபவிப்பதற்குமுன் அவருக்கிருந்த மனநிலையையே அடிப்படையாக எடுத்தார். சம்சார வேதனையின் காரணமாக அவர் நிர்வாணத்தைத் தேடத் தொடங்கியிருக்கலாம். ஆனால் நிர்வாணத்தில் நின்று வாழும்போது வேதனை நீங்கிவிடுகிறது. எனவே வாழ்க்கை வாழப்படவேண்டிய தளத்தில் நின்று வாழப்படும்போது வேதனையானதல்ல. அந்தத் தளத்தை அடிப்படையாக வைத்தே வாழ்க்கை விளக்கப்பட வேண்டும். அந்தத் தளத்தை அறியாத வேதனை நிலையிலிருந்து அதை விளக்கக் கூடாது. அதேபோல் வாழ்க்கை வேதனையானது என்ற உணர்வு கலக்காத வேறு காரணங்களின் தூண்டுதலாலும் நிர்வாணத்தை அடையமுடியாது என்றில்லை. நிர்வாணமே உண்மையான மாற்றமுறாத தளமாக இருக்கும்போது அதை அடைவதற்குரிய காரணங்களாக மற்றவையெல்லாம் ஆளுக்காள் மாறுபடலாம். இருப்பினும் புத்தர் தன் சொந்த வேதனை அனுபவத்தைக் கொண்டே உலக வாழ்க்கையை விளக்கிவிடுகிறார். அதற்குரிய நோக்கத்தை மதிப்பிட்டுவிடுகிறார். அப்படி விளக்கும்போதும் மதிப்பிடும்போதும் நிர்வாணத்தை அனுபவிக்கும் முன் அவரது மனத்துக்குத் தெரிந்த காரணங்களையே அளவுகோல்களாக எடுத்துவிடுகிறார். உண்மையில் அவற்றை அளவுகோல்களாக எடுத்தபோதுகூட அவற்றைச் சரியாக மதிப்பிடத் தவறிவிடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மன்னர்குலத்தில் பிறந்த அவர் தன் சொந்த வாழ்க்கையில் இழையோடி நின்ற சில சம்பவங்களைக்கொண்டே தனது வாழ்கையும் பூரணத்துவமற்றது என்பதை உணர்ந்து பூரணத்துவத்தைத் தேட முயன்றார். அதை அனுபவரீதியில் காணவும் செய்தார், அதையே நிரிவாணம் என்றும் கூறினார். அந்த நிர்வாண அனுபவத்துக்குப்பின் அவரால் போதனை செய்ய முடியுமானால் அதே அனுபவத்தோடு வேறுவித வாழ்க்கையும் நடத்தலாம் என்பதும் உண்மைதானே? ஆமாம் புத்தர் தேடி அனுபவித்தது வாழ்க்கைக்குரிய பூரணத்துவ நிலையேதான். அந்த நிலையையே வாழ்க்கையின் அடித்தளமாக வைத்து வாழ்க்கையையும் அதன் எல்லாச் செயல்களையும் ஒரு புதுக் கோணத்தில் அனுபவிக்கவும் காணவும் முடியாதென்றில்லை. நிர்வாணத்தை அனுபவித்த புத்தரின் மீதிக்கால வாழ்க்கை அதையே நிரூபிக்கிறது. இருப்பினம் புத்தர் அந்த அனுபவத்தைக்கொண்டு வாழ்க்கையை அளந்ததாகவும், விளக்கியதாகவும் தெரியவில்லை. அதற்கு முந்திய அனுபவத்தைக் கொண்டும் விளக்கியதாகத் தெரியவில்லை. அதற்குமுந்திய வாழ்க்கையை என்னென்ன சம்பவங்கள் பூரணத்துவமற்றதாக மாற்றுகின்றன என்று நினைத்தாரோ அந்த நினைவை அடிப்படையாக கொண்டே வாழ்க்கையைப் பற்றியும், உலகத்தைப்பற்றியும் தீர்ப்பளித்துவிடுகிறார். நிர்வாணத்தைப்பற்றிய கேள்விகளுக்கு அவர் சாதித்த மௌனம் பூரணத்துவமான வாழ்க்கையைப்பற்றி மதிப்பிடுவதற்க மறுப்பதாகவும் வேண்டுமென்றே வாழ்க்கையை வேதனை மயமானது என்று அழுத்த உதவுவதாகவுமே இருக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை பூரணத்துவமற்றதாக இருப்பதால் அவர்களின் நிலையைக்கொண்டே அதை விளக்குவது பூரணத்துவத்தைத் தேடும்படி அவர்களைத் தூண்டும் என்பதாலேயே அவர் அப்படிக் கூறினார் என்று சொல்வது சரியாக இருக்கலாம். சத்தியத்தின் சார்புநிலைக்குரிய பரிணாமத்தின் அந்தந்தக்காலத் தேவைகளுக்கு அத்தகைய விளக்கங்கள்தான் அவசியமாக இருக்கின்றன என்பதும் சரியாக இருக்கலாம். ஆனால் அப்படியென்றால் இன்றைய வளர்ச்சி கோரும் பார்வைக்கு அவை பொருந்தாமல் இருக்கின்றன என்பதையும் அதே வேகத்தில் ஒப்புக்கொள்ளத் தயாராய் இருக்கவேண்டும். ஒப்புக்கொள்வது மட்டுமல்ல இக்காலத் தேவைக்கேற்ப பழைய விளக்கங்களையும் திருத்தி வளர்க்கவும் முயல வேண்டும். இல்லாவிட்டால் பழைய விளக்கங்கழையே எக்காலத்துக்குமுரிய சட்டங்களாகவும் ஸ்தாபனங்களாகவும் மாற்றி வளர்க்கும்போது அவையே மனித முன்னேற்றத்துக்கு எதிரான பிற்போக்குச் சக்திகளாக மாறிவிடுகின்றன. பௌத்தம் இன்று அப்படித்தான் மாறித் தெரிகிறது. பௌதத்தைத் திருத்திய சங்கரரின் அத்வைதமும் காலப்போக்கில் சங்கரரே எதிர்பாத்திராக மாயா வாதமாக மாறி சமூகத்திலிருந்தும் உலக வாழ்க்கையிலிருந்தும் தப்பும் ஓர் பிற்போக்குச் சுழியாக மாறிவிட்டது. இருப்பினும் புத்தரும் சங்கரரும் இந்தியாவின் மிகச்சிறந்த ஞானிகளில் இருவராக இருக்கின்றனர் என்பதையும் மறுக்கமுடியாது. அவர்களின் ஞான விளக்கங்களும் அதே வகையில் மனித சிந்தனை தொட்ட அரும் பெரும் உச்சங்களாகவும் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய நிலையில் அவற்றை அன்றைய அர்த்தப்படியே எடுக்க முடியாமிலிருக்கிறது. அதுதான் வேடிக்கை. ஆனால் அந்த வேடிக்கைதான் பரிபூரண ஞானமான சத்தியத்தின், பிரம்மத்தின், எல்லையற்ற விரிவையும் காட்டுவதாக இருக்கிறது. இதுவரை தோன்றிய ஞானிகளும் சமயதூதுவர்களும் அந்தச் சத்தியத்தின் சிறுதுளி அளவைத்தான் விளக்க முயன்றிருக்கிறார்கள். தெரிந்தும் அவர்கள் அவர்கள் வேண்டுமென்றே சொல்லலாம் விட்டதும் (புத்தர் கூறியதுபோல்), தெரியாத காரணத்தால் சொல்லாமல் விட்டது அனந்தம். அப்படிப் பார்க்கும்போது மனித குலம் அளவிட முடியாத தூரம் சமயக் கருத்துக்களும் காலத்துக் காலம் திருத்தி வளர்க்கபட வேண்டியிருக்கின்றன என்பதும் தெளிவாகும்.

அதை விளங்கிக்கொண்ட இக்கால நிலையிலிருந்து பார்க்கும்போது புத்தர், சங்கரர்போன்ற இந்திய ஞானிகள் சத்தியத்தை அனுபவித்து உணர்ந்த, ஞானிகளாக இருந்தாலும் வாழ்க்கையையும் உலகப்போக்கையும்பற்றி அதே சத்தியத்தின் நோக்கத்திலிருந்து கூறமுயன்றவர்களாகத் தெரியவில்லை. சத்தியத்தை உணரமுன்பிருந்த மனநிலையை அளவுகோலாக வைத்தே உலகத்தையும் வாழ்க்கையையும் சமூகப்போக்கையும்பற்றித் தீர்ப்பளிப்பவர்களாகத் தெரிகின்றனர். அதாவது அப்படிப் பார்ப்பதுதான் இன்று அவர்களைத் திருத்துவதற்குரிய சரியான கோணத்தைக் காட்டுவதாக இருக்கிறது.

சத்தியத்துக்கும் ஒரு நோக்கமிருக்கிறதா?

அப்படிச் சொல்வதே சங்கரருக்கு ஒரு பெரும் தர்க்க வழுவாகப்பட்டிருக்கும் பரிபூரணமான சத்தியத்துக்கு ஒரு நோக்கமிருக்குமானால் அதற்கு ஏதோ தேவையும் குறையும் இருப்பதாக ஒப்புக்கொள்வதாகும். அப்படியென்றால் அது எப்படிப் பரிபூரணமானதாகும்? எனவே தேவையும் குறையும் நோக்கமும் இருப்பதாகத் தெரியும் நாமரூபநிலை பரிபூரண சத்தியமான பிரம்மத்தின் தோற்றமேதான். உண்மையில் அது எப்பவுமே தேவையையும் குறைகளையும் தோற்றங்களையும் கடந்ததாய் இருக்கிறது. இருப்பினும் அப்படி நாமரூபமாகத் தெரிவது அதன் மாயையேதான். அதுதான் சங்கரர் காட்டிய வழி.

முழுப் பிரபஞ்சமும் பரிபூரண சத்தியமான பிரம்மத்தின் தோற்றமே என்பதையும் (கயிறு பாம்பாகத் தெரியும் தோற்றம்) அப்படித் தோற்றமளிக்கும் ஒவ்வொரு கணமும் அது நேரம், இடம், நாமம், ரூபம் ஆகிய தோற்றங்கள் எல்லாவற்றையும் கடந்து அது பரிபூரணமாகவே இருக்கிறது என்பதையும் அந்த விளக்கம் வலியுறுத்துகிறது. சத்தியத்தை விளங்கிக் கொள்வதற்கு அது அவசியந்தான். ஆனால் அதே சமயம் மனித மனத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டம் ஏற்றக்கொள்ளும் தர்க்க நியாயங்களுக்கு ஏற்ப மனத்தையும் அதன் தர்க்கநியாயங்களையும் கடந்த பரிபூரணத்தை அடைக்க முயல்கிறோம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. பரிபூரணத்துவத்துக்குத் தேவை இருக்க முடியாது. நோக்கம் இருக்கமுடியாது என்ற ஒரு குறிப்பிட்ட மனக்கட்டத்துக்குரிய தர்க்க நியாயங்களைக்கொண்டு பரிபூரணத்துவத்துக்கத் தத்துவரீதியாக விளக்கம் கொடுக்க முயலும்போது நாம் அதை அதன் நாமரூபங்கள் கடந்த ஒரு தனி நிலைக்குள்ளேயே அதிகமாக அடைத்துவிடுகிறோம். அதனால் அந்த தத்துவத்துக்கேற்ப ஒழுக்க விதிகளையும் வாழ்க்கை முறையையும் வகுக்க முயலும்போது ஒருபக்கச் சாய்வுக்கே அதிக இடம் கொடுத்துவிடுகிறோம். சங்கரர் காட்டிய வழி அதையே செய்கிறது. ஈஸ்வரனையும் நாமரூப நிலையையும் ஒப்புக்கொண்டு தன் தத்துவத்தை அவர் பூரணமாகவே தர முயல்கிறார். ஆனால் அந்தத் தத்துவத்தின் அழுத்தம் ஒருபக்கச் சாய்வையே காட்டுகிறது. நாமரூபத்தைக் கடந்த ஒரு பக்கத்தையே அழுத்துகிறது. அது வாழ்க்கை முறையிலும் ஒழுக்க விதிகளிலும் அதே ஒருபக்க அழுத்தத்தை அறிந்தோ அறியாமலோ கொடுத்துவிடுகிறது. நாமரூப வாழ்க்கையையும் உலகத்தையும் துறந்து பிரம்மத்தோடு ஒன்றிநிற்பதே அந்த வாழ்க்கையின் இலட்சியமாய் விடுகிறது. காலப் போக்கில் அது எல்லாவற்றையும் ஒதுக்கும் மாயா வாதமாகிவிடுகிறது.

சங்கரருக்கும் அந்தப் பிறழ்வுக்கும் சம்பந்தமில்லைதான். கீதைக்கு அவர் கொடுத்த வியாக்கியானமும் அவர் வாழ்ந்த காட்டிய வாழ்க்கையும் வாழ்கையை ஆமோதிக்கும் செயல் வீரத்தையே காட்டுகின்றன. இருப்பினும் அக்காலத் தேவைக்கேற்ப அவர் போட்ட தத்துவத்தில் அதே தத்துவத்தையே காலப்போக்கில் நடைமுறை வாழ்க்கையில் தோற்க்கடித்துவிடும் வித்துக்கள் இருக்கின்றன என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அப்படி அறிந்துகொண்டால்தான் சங்கரரை இக்காலத்துக்கேற்ற விதத்தில் விரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லாத் தத்துவங்களும் அப்படியேதான்.

** இதன் தொடர்ச்சி porpara3.mtf ல் வருகிறது. **










வெளிக்காட்ட முயன்ற அர்த்தத்தையே தோற்கடித்துவிடுகின்றன. கயிறு பாம்பாகத் தெரிவதும், சிப்பி வெள்ளியாகத் தெரிவதும் உண்மைதான், ஆனால் அவை பரிபூரணத்துவத்தின் நாமரூபத் தோற்றத்தை விளக்க உதவுபவையாய் இல்லை. கயிறு பாம்பாகத் தெ













** porpara3.mtf ன் தொடர்ச்சி**

சங்கரர் காட்டிய உதாரணங்கள் பரிபூரணத்துவத்தை விளக்கப்போதாதவை. வார்த்தைகள், அவை வெளிக்காட்ட முயன்ற அர்த்தத்தையே தோற்கடித்துவிடுகின்றன. கயிறு பாம்பாகத் தெரிவதும், சிப்பி வெள்ளியாகத் தெரிவதும் உண்மைதான், ஆனால் அவை பரிபூரணத்துவத்தின் நாமரூபத் தோற்றத்தை விளக்க உதவுபவையாய் இல்லை. கயிறு பாம்பாகத் தெரியும் நிலைமாறி கயிறாகவே தெரியத் தொடங்கியபின் அதைப் பாம்பாகவும் எடுத்து ஒழுகவேண்டிய தேவையற்றுப் போய்விடுகிறது. அப்படித் தேவை இருப்பதாகக் கூறினால் அது வெறும் பொய்யே, உவமை காட்டும் இந்த முடிவு காலப்போக்கில் தத்துவத்தின் நோக்கத்தையே தோற்கடித்துவிட்டது. நாமரூபத் தோற்றத்தை ஏற்று நடத்தும் வாழ்க்கையும் சமூக இயக்கமும் தேவையற்றவையாய், பொய்யாய் வியாக்கியானப்படுத்தப்பட்டு அவற்றிலிருந்து ஒதுங்குவதே ஞானமாகக் கற்பிக்கப்பட்டுவிட்டது. சங்கரரின் நோக்கம் அதுவல்ல, ஆனால் அந்தப் பிறழ்வுக்கு அவரின் உவமைகளே உதவுகின்றன.

பரிபூரணப்பிரம்மம் அல்லது சத்தியம் நாமரூபங்களைக் கடந்ததாய் இருப்பதோடு அப்படிக் கடந்ததாய் இருக்கும் அதே வேளையில் நாமரூபங்களைத் தோற்றுவித்து அவற்றால் கட்டுப்பட்டிருக்கும் நிலையிலும் கட்டுப்படாமல் இருப்பதாலேயே பரிபூரணமாக இருக்கிறது. அத்தகைய பரிபூரணத்தின் தோற்றத்தை கயிறு பாம்பாகத் தெரிகிறது என்ற உதாரணம் விளக்காது, கயிறு கயிறாகச் சதா இருந்துகொண்டே பாம்பாகவும் இருப்பதினால்தான் அது பரிபூரணமான கயிறாக இருக்கிறது, அப்படி இல்லாவிட்டால் அது பரிபூரணமான கயிறல்ல என்று கூற முடியுமா? ஆனால் அப்படிக் கூறினால்தான் நாமரூபத் தோற்றங்களும் பிரம்மமே என்ற பிரம்மஞானத்துடன் நாமரூப வாழ்க்கையிலும் பூரண பங்கெடுக்கத் தூண்டலாம். இல்லாவிட்டால் ஒருபக்கச் சாய்வையே அழுத்தும் தவறு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

சங்கர "மாயை" என்ற சொல்லைப்பொருத்திய இடமும் அந்த ஒருபக்கச் சாய்வையே திரும்பவும் அழுத்துகிறது. கயிறு கயிறாக இருப்பதுடன் அது பாம்பாகவும் தெரிவதால்தான் அது பரிபூரண கயிறாகிறது என்று கூறுவதே பரிபூரணப் பிரம்மத்திற்குரிய விளக்கமாகலாம் என்றால் மாயைக்குரிய அர்த்தம் வேறாகிறது. கயிறு பாம்பாகத் தெரிவதல்ல மாயை, பாம்பாகத் தெரியக்கூடாது என்று நினைப்பதுதான் மாயை. கயிற்றைக் கயிறாகக் காண்பதுடன் பாம்பாகவும் விளையாடவேண்டும் என்பதை மறுத்து அதைப்பொய் என்று கூறுவதுதான் மாயை. பிரம்மம் பிரபஞ்சத் தோற்றங்களாகவும் தெரிவது மாயையல்ல. அது அதன் பரிபூரணத்தின் தவிர்க்க முடியாத நிலை. அந்த நிலையை ஏற்றுக்கொள்ள மறுப்பது தான் மாயை. அதை ஏற்றுக்கொண்டு எல்லாம் பரிபூரணமே என்ற உணர்வுடன் அதன் எல்லா நிலைகளிலும், லீலைகளிலும் பங்குபற்ற மறுப்பதே மாயை.

இதை விளங்கிக் கொள்வதற்கு பரிபூரணமான சத்தியத்திற்கு தேவை, நோக்கம், நாமரூபத் தோற்றம் எதுவும் இருக்க முடியாது, இருக்கக் கூடாது என்று கூறும் தர்க்க நியாயங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கவேண்டும். அந்தத் தர்க்க நியாயங்கள் பரிபூரணத்துவத்துக்கு நமது அறிவும் அது செயல்படும் மனநிலையும் காட்டும் இலட்சணங்களேதான். ஆனால் அவற்றின்படிதான் பரிபூரணம் இருக்கவேண்டுமென்றில்லை. எவற்றாலும் கட்டுப்படாத எல்லையற்ற பரிபூரணத்துவத்திற்கு எந்தக் கட்டுப்பாடுதான் இருக்க முடியாது? எந்தக் கட்டுப்பாடுதான் இருக்கக் கூடாது? பிரிவினைகளையும் குறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்த பரிபூரணத்தை விளக்குவதற்கு, அதைக்காட்டுவதற்கு பிரிவினைகளும் குறைகளும் கட்டுப்பாடுகளும் அவசியந்தானே? அந்நிலையில் அவையும் பரிபூரணத்துவத்தின் தவிர்க்க முடியாத இலட்சணங்களாகத்தானே இருக்கின்றன? எனவே தேவையையும் நோக்கத்தையும் கடந்ததாய் பரிபூரணப்பிரம்மம் இருப்பினும் அதற்குத் தேவையும் நோக்கமும் இருக்கவே செய்கின்றன. அந்தத் தேவையினதும் நோக்கத்தினதும் அடிப்படையில் தான் வாழ்க்கையைப் பற்றிய ஒழுக்க முறைகள் வகுக்கப்பட வேண்டும்.

ஓ பார்த்தா, மூவுலகங்களிலும் நான் செய்வதற்கும் தேடுவதற்கும் எதுவுமில்லை. இருப்பினும் நான் வேலையில் ஈடுபட்டுள்ளேன்.

சிரமம் பாராது நான் வேலையில் ஈடுபடாவிட்டால் மக்களும் என்னைப் பின்பற்றிவிடுவர்.

நான் வேலைசெய்யாவிட்டால் இந்த உலகங்கள் விழுத்தழியும், நான் ஒழுங்கற்ற வாழ்க்கையை உருவாக்கி இம்மக்களை அழித்தவனாகி விடுவேன்.

அறிவற்றவர்கள் பற்றோடு வேலை செய்வதுபோல் ஓ, பார்த்தா ஞானி உலக ஒழுங்கை நிலைநாட்ட பற்றில்லாமல் வேலை செய்யட்டும்.

தேவையையும் நோக்கத்தையும் கடந்த பரிபூரண சத்தியத்தின் தேவைக்கும் நோக்கத்துக்கும் இவ்வாறு குரல் கொடுக்கிறான் கீதையில் கிருஷ்ணன். மனதுக்கும் அறிவுக்கும் அப்பாலுள்ள சத்தியம் (தானே உருவாக்கிய) மனதுக்கும் அறிவுக்கும் தன் நோக்கத்தை வெளிப்படுத்தும் நிலை அது. ஆனால் அந்த நிலையில் நின்றுபார்க்கும்போது, அதாவது கிருஷ்ணனின் கண்களுக்கு, வாழ்க்கை வேதனையாகப்படப் போகிறதா? அல்லது தானே உருவாக்கி, தானாகவேயுள்ள நாமரூபப் பிரபஞ்ச சத்தியமாகவே காணாது கயிற்றைக் கண்டு பாம்பாக நினைத்துப் பயப்படும் கோணத்தில் கிருஷ்ணன் பார்ப்பானா? வாழ்க்கையே வேதனையானது என்றால் நிர்வாணத்தில் நின்று புத்தர் செய்த போதனையும் அந்தப் போதனைக் காலத்துக்குரிய வாழ்க்கையும் வேதனையோடுதான் நடத்தப்பட்டனவா?

புத்தர், சங்கரர் போன்ற இந்திய ஞானிகள் மனதையும் அதன் அறிவையும் கடந்து சத்தியத்தை அனுபவித்த பின்பும் அந்த அனுபவத்துக்கு முந்திய மனநிலையில் வைத்தே சத்தியத்தை விளக்க முயன்றனர். அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே வாழ்க்கையையும் சமூகத்தையும் காட்டினர்.

அப்படி அவர்கள் விளக்கியதற்கு இரண்டுவிதமான காரணங்களைக் காட்டலாம். அவர்கள் யாருக்கு போதிக்க விரும்பினார்களோ அவர்களுக்கும் அவர்களது அப்போதைய மனநிலைக்கும் அப்படிக் கூறுவதே சரியாகப் பொருந்தக் கூடியதாக இருந்தது என்பது முதற்காரணம். இரண்டாவது காரணம், அதுவே வாழ்க்கையின் நோக்கமும் பூரண உண்மையும் என்று அவர்களே நம்பியிருக்கலாம். (எது எப்படியாய் இருந்தாலும் அவர்கள் மூலம் சத்தியம் அந்தந்தக் காலங்களில் அப்படியே தன்னை வெளிக்காட்ட விரும்பியிருக்கிறது என்பது வேறுவித உண்மை).

மனதுக்கும் அறிவுக்கும் அப்பால் சென்று சத்தியத்தைக் கண்ட அனுபவித்த இந்திய தத்துவ ஞானம் ராமகிருஷ்னர்- விவேகாநந்தர் காலத்துக்குப் பின்பே உலக வாழ்க்கையையும் சமூக வளர்ச்சியையும் அந்தச் சத்திய அனுபவத்துக்கு முந்திய மனநிலையிலிருந்து அணுகாமல் சத்திய நிலையிலிருந்தே (கிருஷ்ணனின் நிலை) அணுகத் தொடங்குகிறது. கீதையின் குரல் உண்மையான அழுத்தம்பெற்றுக் கேட்பது அதற்குப் பின்புதான். விவேகானந்தருக்கும் அவருடைய சக துறவிகளுக்குமிடையே எற்பட்ட கொள்கைப் பிரச்னை இந்தியத் தத்துவ ஞானத்தின் அடிப்படைக் கோணத்தை நிர்ணயிக்கும் பிரச்னையாகவே இருந்தது. வாழ்க்கை வேதனை மயமானது. மாயை பொய் என்று ஒதுக்குவதா அல்லது நிர்விகல்ப சமாதியையுந் துறந்து வாழ்க்கையை ஆமோதிப்பதா? துறவு என்பது தனிப்பட்ட மோட்சத்துக்காகவா அல்லது முழு உலகத்தின் நன்மைக்காகவுமா? அந்தப் பிரச்னை உலக வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் கிருஷ்ணனின் மனநிலையிலிருந்து விளக்குவதா அல்லது சத்தியத்தை உணராத அருச்சுனனின் தடுமாற்ற நிலையிலிருந்து விளக்குவதா என்ற இந்தியத் தத்துவ ஞானத்தின் நெடுங்காலப் பிரச்னைக்கு முடிவு கட்டுவதாக இருந்தது. இறுதியில் கிருஷ்ணனின் கோணமே வென்றது. அந்தக் கோணப் பார்வை இதுவரை அடைந்த வளர்ச்சி உச்சத்தைக் காட்டும் விதத்தில் அரவிந்தரின் தத்துவ விளக்கம் நிற்கிறது. அறிவுக்கும் மனதுக்கும் வெளியேயுள்ள சத்தியம் அல்லது பேரறிவு, அறிவுக்குள் இறங்கும் கட்டம் அது. அந்தக் கட்டத்தில்தான் அறிவுக்குள் நின்றே பேரறிவைத் தொடமுயன்ற எகலின் முயற்சி முழுமை அடைகிறது. எகல்காணத் தவறிய மனதையும், அறிவையும் கடந்த சத்தியத்தின் அடுத்த பகுதியையும், எகலின் தத்துவத்தின் தர்க்கரீதியான தொடர் வளர்ச்சியையும் காட்டுபவர் அரவிந்தர்தான். அறிவுதன் எல்லைக்குள் நின்றவாறே சத்தியத்தை, பேரறிவை தொடமுயன்ற தத்துவ முயற்சியின் ஓர் உச்சமாக எகல் நிற்கிறார் என்றால் பேரறிவு அறிவுக்குள் இறங்கித் தன்னை வெளிக்காட்டிய தரிசனநிலையின் பேர் உச்சமாக நிற்கிறார் அரவிந்தர். அதனால்தான் இருவரினது விளக்கங்களும் நிற்கின்றன. ஆனால் அவ்விரண்டுக்குமிடையே மனித செயலையும் சரித்திரத்தையும் பொறுத்தளவில் பேர் இடைவெளியொன்று நிற்கிறது. இனிவரும் தத்துவ ஞானியின் பங்கு அவ்விரண்டுக்கு மிடைப்பட்ட இடைவெளியை நிரப்புவதுதான். இனிவரும் தத்துவ ஞானி, மார்க்ஸ் கூறியதுபோல், உலகத்தை விளக்குவதோடு நின்றுவிடாமல் உலகத்தை மாற்ற வேண்டியவனாய் இருக்கிறான். ஆனால் எகல் விட்ட இடத்திலிருந்து அரவிந்தர் காட்டும் திசையை நோக்கி மார்க்ஸாலேயே சீராகக் செல்லமுடியவில்லை. காந்தியும் வினோபாவுமே சீரான செயல்முறையைக் காட்டியுள்ளனர். அந்தச் சீரான செயல்முறையை சொந்த அனுபவத்தாலேயே வளப்படுத்தி வளர்த்து விளக்குவதுதான் இனிவரும் தத்துவஞானிகளினதும் செயல் வீரர்களினதும் வேலையாகும். அதை உணர்ந்த நிலைதான் புதுயுகம் பிறக்கும் நிலை. அறிவுக்கும் மனதுக்கும் வெளியேயுள்ள பேரறிவு சத்தியம், அறிவுக்குள் பூரணமாக இறங்கிச் செயல்படும் சத்திய யுகம். அது பிறக்கத் தொடங்கிவிட்டது, (வசதிக்காக வேண்டுமானால் ஆகஸ்ட் 15, 1947ஐ அதன் ஊதயகாலமாகக் கொள்ளலாம். இந்தியா சுதந்திரம் பெற்ற காலமும் அரவிந்தரின் தினமும் அதுவே.)

இத்தகைய பேரறிவின் பிறப்பை ஆமோதிக்கும் வகையிலேயே விஞ்ஞானமும் இன்று வளர்ந்து செல்கிறது. ஜடம், மனம் என்ற வித்தியாசங்கள் மார்க்ஸ் காலத்தில் இருந்த விதத்தில் இன்று இல்லை. ஜடம் என்பது உருவெடுத்த சக்தியாக இன்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இத்தகைய விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்கள் பழைய வேதகாலக் கண்டுபிடிப்புகளுக்கே வலுவேற்றுகின்றன. இருப்பதெல்லாம் பிரம்மமே. ஜடத்தைச் சக்தியாகவும் சக்தியை மனமாகவும், மனத்தையும் மற்றவற்றையும் மனதுக்கும் அப்பாற்பட்ட பிரம்மமாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் பேரறிவின் இயக்கங்களாகக் காணும் திசையை நோக்கியே விஞ்ஞானமும் இன்று வளர்கிறது. ஜடத்தை உறைந்த, குறைந்த அறிவாகவும் அறிவை சூட்சும ஜடமாகவும், சத்தியத்தை அத்தகைய மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட நிலையாகவும் காணும் காலமும் நிலையும் முழு மனித குலத்துக்குமுரியதாக வரவே போகிறது. வந்து கொண்டே இருக்கிறது. விஞ்ஞானமும் பேரறிவின் எல்லைக்குள் இறங்கிவிட்டது என்பதைப் புலப்படுத்த எங்கள் விஞ்ஞானக் கதாசிரியான ஆத்தர் கிளாக்கின் கருத்துக்களே போதுமானவை. மார்க்ஸ”க்கும் எங்கல்ஸ”க்கும் அவை வெறும் புராணக் கருத்துக்களாகவும் கதைகளாகவுமே தொனித்திருக்கும். ஆனால் உண்மையில் இன்றைய காலங்கடந்த புராணங்கள் மார்க்ஸ’ன் கருத்துக்களே. அவற்றை விஞ்ஞானக் கருத்துக்கள் என்று நம்பிய காலம் விரைவாக ராக்கெட் வேகத்தில் மறைந்துகொண்டிருக்கிறது.

பிறந்து கொண்டிருக்கும் இப்புதுயுகத்துக்குரிய இலக்கிய வார்ப்புகள் எப்படி இருக்கும்?

புதுயுக உணர்வு பிறப்பிக்கும் இலக்கியங்கள் உருவாகத் தொடங்கியபின்பே படிப்படியாக அவற்றைப் பற்றிய கோட்பாட்டையும் பூரணமாக வளர்க்கலாம். ஆனால் அவை அடிப்படையான உருவ - உள்ளடக்க மாற்றங்களைக் காட்டும் என்பதை இப்போதே நிச்சயமாகச் சொல்லிவிடலாம்.

ஐரோப்பிய அறிவுவாதத்துக்கு முந்திய இலக்கியப் படைப்புக்கள் செறிந்த கற்பனைக் காவியங்களாய் இருந்ததுபோல அறிவுவாதத்துக்குப் பிந்திய படைப்புகள் ஐம்புல உணர்வும் அறிவும் செறிந்த யதார்த்த இலக்கியங்களாக இருக்கின்றன. முந்தினவற்றில் பிரபஞ்ச உணர்வு இருந்தது. பிந்தியவற்றில் இந்த உலகத்து உணர்வும், குறிப்பாகப் பிரதேச, சமூக, பொருளாதார நிலைகளுக்குரிய உணர்வும் அதிகமாக இருக்கின்றன. இவையே பொதுப்பண்புகளும் பொது வித்தியாசங்களுமென்றால் இனிவரும் இலக்கியப் படைப்புகளில் திரும்பவும் பிரபஞ்ச உணர்வு தலைதூக்கும். ஆனால் அறிவுவாதத்தாலும் அதற்குரிய விஞ்ஞானத்தாலும் பெறப்பட்ட யதார்த்த உணர்வும் கூடவே நிற்கும். இனி வரவேண்டிய கோட்பாட்டை "பிரபஞ்ச யதார்த்தம்" என்று கூறலாம் விஞ்ஞானமும் ஆத்மஞானம் கலந்த பேரறிவு செறிந்த பிரபஞ்ச யதார்த்தம்.

பிரபஞ்ச யதார்த்தம் பயன்படுத்தத் தொடங்கும் பேரறிவு மொழியிலும் பெரும் மாற்றத்தைக் காட்டும். பேச்சுமொழியின் வலு பேணப்படவே செய்யும். ஆனால் இனிவரும் யுகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவரே இருக்கப் போவதில்லையாதலால் பேச்சுமொழியின் கூட்டோடு பேரறிவைச் சிறைப்பிடிக்கும் மிகத் தெளிந்த, ஆனால் அதேசமயம் மிகமிகக் கூர்மையான சொல்லாக்கமும் எழுத்தாட்சியும் நடைபோடத் தொடங்கும். அறிவும் அநுபவமும் இதுவரை காட்டாத புதுப்பிராந்தியங்களுக்குள் நாம் புகப்போகிறோம். சந்திரமண்டலத்தில் மனிதன் வெளிப்படையாகக் கால்வைக்கும் அதேகாலத்தில் ஒவ்வொருவனும் தனக்குள்ளேயே அக்கினி மண்டலத்தையும் சூரிய மண்டலத்தையும் துளைத்துச் சென்று சிரசிலுள்ள சந்திர மண்டல சகஸ்ராரத்திலும் அடிவைக்கும்காலம் ஆரம்பிக்கிறது. ஆரம்பமாகவேண்டும். அப்போதுதான் சந்திரமண்டலப்பிரயாணத்தினால் வரும் வெளி வளர்ச்சியைக் சமப்படுத்தலாம். வெளியே ராக்கெட் பீறிப் பாய்ந்து பிரபஞ்சவெளியில் சஞ்சரிக்கும் காலத்தில் உள்ளே குண்டலினியானது சக்கரங்களைப் பிய்த்துத் துளைத்துச் சென்று பேர்மனப் பெருவெளியிலும் அதற்கப்பாலும் ஒவ்வொருவனையும் சஞ்சரிக்கக் செய்விக்கும் காலம் ஆரம்பமாகிறது. வீட்டுக்குள்ளேயே டெலிவிசன்; தியானத்தில்மூடிய கண்களுக்குள்ளேயே பிரபஞ்சக் காட்சிகள்.

ஆமாம் மொழியின் வலு மிக வேகமாக முன்னேறவேண்டியிருக்கிறது. சொல்லமுடியாது என்ற காலம்போய் சொல்லும் திறனும் செய்யும் திறனும் கூடிவரும் காலம் இது. காலப்போக்கில் இரண்டொரு எழுத்து வடிவத்திலேயே எல்லா மொழிகளும் எழுதப்படலாம். சொல்லும் திறமற்ற மொழி மெல்லச் சாகவேண்டியதுதான். எனவே அவற்றைச் சொல்லுமளவுக்குத் தமிழும் இனி வளரவேண்டும். தானே பல துறைகளிலும் முன்னேறி மற்றவற்றுக்கு முன்னோடியாய் பலவற்றைக் கண்டுபிடிக்கவும் வேண்டும். அந்தளவுக்குத் தமிழும் வளரவேண்டும் என்று பாரதி ஏற்கனவே பாடித்தான் இருக்கிறான். பாரதி அரவிந்தரோடு பழகியவன். ஆனால் பாரதிகூட நினைத்திராத அளவுக்கு இனித் தமிழின் வளர்ச்சி துரிதமடைய வேண்டியிருக்கிறது. பாரதி பாடிய அந்தக் கறுத்தப்பெண்ணான காளியின் தற்காலத் தாசனான தமிழ்க் கவிஞன் ஒருவன் பிரபஞ்சமான அன்னை பராசக்தியின் இருளில் தன்னை இறக்கித் தேடலில் ஈடுபடும்போது தமிழ் அன்னையின் அணுங்கலைத்தான் கேட்கிறானாம். சோர்ந்துபோன அந்தச் சிணுங்கல் நடையிலேயே அவன் கூறுகிறான். அவளால் அவனுடன் ஒத்துழைக்க முடியவில்லையாம். அவள் அழுகிறாளாம், அவனோடு ஓடி கூடி ஓட, அவளுடைய "கற்பு" ம் ஞானமற்ற பக்தியும் அறியாமைக் கூச்சமும் அவளைத் தடுக்கின்றனவாம். ஆனால் அதே சமயம் தமிழ்க்கவிஞன் ஒருவன் இன்றைய புதுயுகத் தேவைகளை உணர்ந்துவிட்டான் என்பதே இப்போதைக்குப் போதுமானது. அந்தக் கவிஞனுக்கும் இப்போ ஆரம்பத் தடுமாற்றம் இருக்கலாம். ஆனால் வெகு சீக்கிரம் துணிச்சலோடும் அனுபவ ஒளியோடும் அன்னை பராசக்தி என்ற பிரபஞ்ச இருளின் மூலை முடுக்களிலெல்லாம், அறிவுக்குத் தெரியாத சத்தியத்தின் வியாபிப்பெங்கும், அதன் மறைவுவளைவுகளுக்குக் கெல்லாம் தமிழிச்சியையும் கைப்பிடித்து இழுத்துச் சென்று அவளின் 'கற்பை' அழிக்கப் போகிறான். அவளின் வெட்கத்தையும் இயலாமையையும் அறியாமையையும் அழித்துவிடப் போகிறான். அவற்றைத்தான் அவள் தன் "கற்பு" என்று பூசி மெழுகிப் போற்றி வருகிறாள். அதைத்தான் அவனும் அழித்துவிடப் போகிறான். அவளும் சீக்கிரமே சிரித்துக் கலவியவாறு தன் போலிக்கற்பையும் ஞானமற்ற பொய்யான பூச்சுப் பக்தியையும் நாணத்தையும் உதறி எறிந்துவிட்டு நிர்வாணமாய் நடைபோடப் போகிறாள். எல்லையற்ற சத்தியத்தின் நிர்வாண வியாபிப்பை அவள் தன்னில் பிரதிபலிக்கப் போகிறாள். அவர்களின் கூடலில் பிறக்கும் பிரசவங்கள் பெருந் தத்துவங்களாகவும் பேருண்மை விளக்கங்களாகவும் பெரும் பெரும் புதுயுகக் காவியங்களாகவும் புதுக் கவிதைகளாகவும் புதுப்புதுப் பரிமாணங்களில் எழுந்து வளரப்போகின்றன.

எழுத்தாளனும் கலைஞனும், அவர்கள் எந்த மொழியில் எழுதினாலும்சரி, எந்த நாட்டில் வாழ்ந்தாலும்சரி, இனி இத்தகைய இலட்சியங்களுடனேயே இயங்கவேண்டியவர்களாய் இருக்கின்றனர். புதுயுகத்துக்குரிய புதியவார்ப்புகளின் தேவையை உணர்வதுமட்டுமல்ல, அதற்கேற்பத் தன்னையே வார்த்து வளர்க்கத் தெரியாத எந்தக் கவிஞனம் எழுத்தாளனும் கலைஞனம் இனிக் கவிஞனாகவும் கலைஞனாகவும் எழுத்தாளனாகவும் கணிக்கப்படமாட்டான். ஆமாம் இனிவரும் புதுயுகத்துக்குரிய கலைஞனின் இன்னோர் தேவை அதுதான். அவனேதான் ஞானியாகவும் விஞ்ஞானியாகவும் கணிதமேதையாகவும் சமூக சீர்த்திருத்த வாதியாகவும் புதுமுறை அரசியல் வாதியாகவும் இருக்கவேண்டியவனாய் இருக்கிறான். அதற்காகத் தன் வாழ்க்கையையே ஒரு கலையாகவும் விஞ்ஞான கூட ஆராய்ச்சியாகவும் ஆத்மஞானச் சாதனையாகவும் சமூகத் தொண்டாகவும் சதா சத்தியத்தையே அழுத்தும் சத்தியாக்கிரகக் காவியமாகவும் அவன் மாற்றவேண்டியவனாய் இருக்கிறான். அவனால்தான் சத்திய யுகத்துக்குரிய புதிய வார்ப்புகளைவார்க்க முடியும். அவனால்தான் அடுத்த கோளங்களை நோக்கி இன்றைய விஞ்ஞானிகள் நடத்த முயலும் பேர் உலாவுக்குச் சமமாக (grand tour) அகத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் பிரபஞ்சத்துக்குள்ளும் புகும் பிரபஞ்ச யதார்த்தத்தை வளர்க்க முடியும்.

அவனும் பிறந்துகொண்டேதான் இருக்கிறான். "என், 'நான்' எனக்கு மிகவும் சிறிதாக இருக்கிறது" என்று பாடிய மயகொவ்ஸ்கி மார்க்சீயம் பொதுவுடமையமைப்பில் தன் பெரிய பிறப்பைக் காணமுடியாமலேயே தற்கொலைசெய்திருக்கலாம். ஆனால் மார்க்சீயச் சித்தாந்தம் செத்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அவனது பெரிய பிறப்பு சர்வத்திலும் உதயமாகிக்கொண்டிருக்கிறது. அவனது பெரும் பிறப்பை இனி யாரும் நசுக்கிவிட முடியாது.

அவ்வப்போதைய தேவைகளைத் துர்ப்பதற்காக உருவாக்கப்படும் சிறு சிறு கொள்கைகளின் குவியல்களாக விஞ்ஞானம் வீழ்ச்சியடைந்து விடாமல் இருப்பதற்கு அது தத்துப் போக்காக மாறித் தனது சொந்த அடித்தளங்களையே பூரணமாக ஆராய வேண்டும்.

- வைற்ஹெட்


சர்வோதயம்:
புதுயுகப் பெருந்தத்துவம்

தத்துவங்களும் சிந்தனை அமைப்புகளும் நிரந்தரமானவையல்ல. ஒரே உருவில் அவை எக்காலமும் நிரந்தரமாய் நிற்பதில்லை. சமயத் தத்துவங்களும் அப்படியேதான்.

பேருண்மையை விளங்கிக்கொள்ள மனிதமனம் எடுக்கும் படிப்படியான முயற்சிகளையே தத்தவங்களும் சிந்தனை அமைப்புகளும் பிரதிபலிக்கின்றன.

பேருண்மை என்பது பிரபஞ்சத்தின் அடிப்படைத் தன்மையாகும், அடிப்படை உண்மையாகும். அதைக் கடவுள் என்கின்றன சமயங்கள். 'உலகப் பொருள்' (World Stuff - Julian Huxley) என்கிறது விஞ்ஞானம். அந்தப் பேருண்மை எப்படிப்பட்டது? ஏன் இந்த வாழ்க்கை? இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தின் மூலம் பேருண்மை எதைச் சாதிக்க விரும்புகிறது? இவையே தத்துவங்களும் சிந்தனை அமைப்புகளும் அறிய முயலும் விடயங்களாகும். அப்போதைக்கப்போது அவை அறிந்தவற்றைக் கொண்டு வாழ்க்கை ஒழுக்கமும் சமூக அமைப்பும் வளர்க்கப்படுகின்றன. எனவே மனித வளர்ச்சிக்கு தத்துவங்களும் சிந்தனை அமைப்புகளும் அவசியமானவை. ஆனால் மனித சிந்தனையும் வாழ்க்கையும் எடுக்கும் ஒவ்வொரு படிவளர்ச்சியிலும் அவை திருத்தி அமைக்கப்படுகின்றன. அல்லது புதியவை கண்டுபிடிக்கப்படுகின்றன.

இந்தப் பண்பை உயிரினங்கள் படிப்படியாய் பரிணாம ரீதியில் வளர்ந்துள்ளன என்ற உண்மையில் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது பூரணமாக விளங்கிகொள்ளலாம். இன்றைய மனிதனின் பரிணாமம் மனதையும் சமூக, கலாச்சார, பொருளாதார மரபையும் அடிப்படையாகக் கொண்ட பரிணாமமாக நிற்கிறது. ஜுலியஸ் கூறும் psychometabolism.

2

மனதையும் சமூக கலாசார மரபையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்படக்கூடிய, ஏற்பட்டு வரும் தற்காலப் பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டத்தில் இன்றைய மனிதன் நிற்கிறான். அதாவது இன்று அவனுக்கு ஒரு புதுத் தத்துவம் அல்லது சிந்தனை அமைப்பு (அல்லது சமயம்) தேவைப்படுகிறது, அதற்படி அவனது வாழ்க்கையும் சமூக அமைப்பும் திருத்தியமைக்கப்படவேண்டியதாய் இருக்கிறது.

"மனிதனின் பொதுப் பார்வைத் திட்டத்தையே மிகத் தீவிரமாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு சிந்தனைப் புரட்சியின் வாசலில் நாம் இப்போ நிற்கிறோம். நமது பழைய நம்பிக்கை முறைகளும் சிந்தனை முறைகளும் ஒரு புதிய பலம் வாய்ந்த சிந்தனை அமைப்பால் வெல்லப்படப் போகின்றன" (Julian Huxley)

இதற்குக் காரணமாய் இருப்பது வளர்ச்சியடைந்துள்ள மனித அறிவுதான். மனித அறிவு மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் தவிர்க்கமுடியாதவகையில் அது அதேயளவு தீவிரமாக வேறு பல வாழ்க்கைப் பிரச்னைகளையும் உருவாக்கியிருக்கிறது.

இன்று நிலவும் சமயங்களும் சமயச்சார்பற்ற தத்துவங்களும் வளர்ச்சியடைந்த இந்த அறிவுக்குப் பொருந்தாதவையாகவும் அந்த அறிவு உருவாக்கியுள்ள வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்க முடியாதவையாகவும் நிற்கின்றன. சமயங்களும் சரி சமயச்சார்பற்ற வேறு தத்துவங்களும்சரி விஞ்ஞானமும்சரி தனித்தனியே இன்றைய மனிதனின் வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியாதவையாய் நிற்கின்றன. அவற்றின் தேவைகள் தீர்ந்துபோய் காலத்தால் தோற்கடிக்கப்பட்ட வெறும் போலி உருவங்களாகவே நிற்கின்றன. தனித்தனியாய் அவை வைத்திருக்கும் குறை உயிர்களை ஒரு புதுத்தத்துவத்திடம் பறிகொடுத்துவிட்டுத் தங்கள் தனி உருவங்களை இழப்பதற்கே அவை காத்து நிற்கின்றன.

3

விஞ்ஞானம் மட்டும் விமோசனம் அளித்துவிடும் என்று நம்பிய காலம்போய்விட்டது. அது இன்று உருவாக்கிய பிரச்னைகளை அதனாலேயே தீர்க்கமுடியாமல் இருக்கிறது. அதனால் விஞ்ஞானம் இதுவரை வளர்க்கப்பட்டு வந்துள்ள அடிப்படையையே ஆராயவேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது.

"அவ்வப்போதைய தேவைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்படும் சிறு சிறு கொள்கைகளின் குவியலாக விஞ்ஞானம் வீழ்ச்சியடைந்து விடாமல் இருக்க வேண்டுமானால் அது தத்துவப்போக்காக மாறித் தனது சொந்த அடித்தளங்களையே பூரணமாகத் திறனாய்வு செய்யவேண்டும். "(Alfred North White head : Science and the Modern World)

அத்தகைய திறனாய்வு அதன் போக்கிலுள்ள அடிப்ப€க் குறைபாடுகளைக் காட்டும். முக்கியமானவற்றுள் ஒன்றை இங்கு கவனிக்கலாம். விஞ்ஞானம் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை அழுத்துகிறது. அதன்படி இப்பூமியில் இதுவரை அடையப்பட்டுள்ள உயிரின வளர்ச்சியில் மனித வளர்ச்சியே அச்சமாக இருக்கிறது. அப்படியென்றால் மனிதனையும் அவனது அக ஆழத்தையும் ஆராய்வது "உலகப்பொருளை" அறிவதற்கு மிகவும் அவசியமாகிறது. ஆனால் வெளிப்பொருட்களை ஆராயும் விஞ்ஞானம் மனிதனின் அக ஆ‘த்தை முக்கியத்துவ மற்றதாக "சப்ஜெக்டிவ்" என்று ஒதுக்கிவிடுகிறது. ESP விடயத்தில் விஞ்ஞானிகள் காட்டும் தயக்கத்தை உதாரணமாக காட்டலாம்.

இதன்மூலம் (1) விஞ்ஞானம் தன்னிடம் அகவிடயங்களை ஆராயக்கூடிய சக்தியும் போதிய வழிமுறைகளும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறது. மறைக்கிறது. அதனால் அந்த அக விடயங்கள் உண்மையற்றவை என்ற அபிப்பிராயத்தையே தனது அடிப்படைக் கொள்கையாகவும் ஆக்கிவருகிறது. அக விடயங்களை ஆராயக்கூடிய விஞ்ஞானரீதியான யோகமுறைகள் இந்து பௌத்த மரபில் தாராளமாக இருக்கின்றன. அவற்றை நிரூபிக்கும் வகையில் அண்மைக் காலம்வரை ரமணர், அரவிந்தர், ராமதாஸ் போன்றோர் வாழ்ந்திருக்கின்றர். விஞ்ஞானம் தனக்குரிய சொந்த வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும்வரை இந்த யோகமுறைகளையும் அதை விளக்கும் அனுபூதிமான்களையும் (2) உண்மையை ஆராய்ந்துபார்க்க விரும்புவதாகக் கூறிக்கொள்ளும் விஞ்ஞானம் அதைச் செய்யமுயலாததால் அது இந்து, பௌத்த சமயங்களை ஏற்க மறுக்கம் பழைய கிறிஸ்தவ சமயத்தின் மனச்சாய்வையே (விஞ்ஞானம் வளர்ந்த கலாசாரப் பின்னணி அதுதான்) விஞ்ஞானத்துக்குமுரிய மனச்சாய்வாகப் பூசி மறைக்கிறது. (3) அக விடயங்களை நம்பமுடியாதென்றால் அதே அகத்தின், மனத்தின் ஆட்சிக்குட்பட்ட மனிதர்களான விஞ்ஞானிகளின் விளக்கங்களை எந்தளவுக்கு நம்பலாம்? அத்துடன் இந்த விஞ்ஞானிகள் தங்களை அறியாமலேயே அரசில்வாதிகளின் கருவிகளாகவும் இருப்பதால் விஞ்ஞானம் இன்று ஸ்தாபனங்களாக வளர்க்கப்பட்டுவரும் பழைய மதங்களைப்போல் (பாதுகாப்பு விடயங்கள் என்ற பெயரில்) இருட்டடிப்பையும் பல மூடநட்பிக்கைகளையும் வளர்த்துவருகிறது. அரசுகளின் ஆணவத் தேவைகளுக்கே அதிகமாக இரையாகி வருகிறது.

இவை திருத்தப்படவேண்டும், திருத்தப்பட்டு விஞ்ஞானம் ஒரு பெருந் தத்துவத்துக் கிணங்க ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதே தத்துவம் விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்புகளால் திருத்தப்பட்டு வளர்க்கப்படுவதாகவும் இருக்க வேண்டும்.

4

பழைய சமயங்கள் கண்டுபிடித்த உண்மையின் அடிப்படையில்தான் விஞ்ஞானம் திருத்தி வளர்க்கப்படலாம். ஆனால் அப்படிச் செய்யும்போது விஞ்ஞானப் பார்வையால் பழைய சமயங்களும் பூரணமாகத் திருத்தியமைக்க வேண்டும்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இதுகாலவரை அடையப்பட்டுள்ள உச்சமாய் இருப்பது எல்லாச் சமயங்களிலுமுள்ள அனுபூதிமான்களின் அனுபவநிலைதான். ஆனால் அதை ஒரு சிலரே அனுபவித்துள்ளனர். அத்துடன் அந்த அனுபவநிலையே அந்தந்தச் சமயங்களின் கோட்பாட்டுக்குள் போடமுயன்றுள்ளனர். இனி அந்த அனுபவநிலை எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். அத்துடன் அந்த அனுபவ நிலையை எல்லாருக்குமுரிய விதத்தில் பொதுவாக விளக்க வேண்டும். விஞ்ஞானம் அதற்குப் பெரிதும் உதவும்.

முதலில் அனுபூதிமான்களையும் அவர்களுக்கேயுரிய விதத்தில் பெரும் விஞ்ஞானிகளாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம் ஆகியவற்றைக் கடந்த அவர்களின் அனுபூதிநிலையை - நிர்வாண நிலை - சிவமான நிலை - சச்சிதானந்த நிலை - இப்போது தெரிந்த உச்ச வாழ்க்கை நிலையாக எடுக்க வேண்டும். அதுவே இப்போதைய சத்தியநிலை. அதை இப்போது தெரிந்த அளவுக்கு அறிவுரீதியாக விளக்கவேண்டும். விளக்க முயலும்போது பழைய அனுபூதிமான்கள் - பழைய விஞ்ஞானிகள்-கூறியவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

மனித வளர்ச்சியும் அனுபூதிமான்கள் அனுபவித்த உச்சமும் ஐந்து முக்கிய நிலைகளையும் அவற்றுக்கும் அப்பால் பட்ட ஒரு பொதுவான சத்தியத்தையும் காட்டுவதாக இருக்கின்றன என்பதே அவர்களின் கருத்தாகும். இன்றைய விஞ்ஞானப் பார்வையை முன்புகூறிய விதத்தில் திருத்தி விரித்துப் பார்க்கும்போது அது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகவே இருக்கிறது.

மனித வளர்ச்சி ஜடநிலையான அன்னமயகோசத்தையும் உயிர்நிலையான பிராணமயகோசத்தையும் மனநிலையான மனோமயகோசதத்தையும் பேரறிவு நிலையான விஞ்ஞானமயகோசத்தையும் பேரானந்த நிலையான ஆனந்தமயகோசத்தையும் காட்டுவதாக இருக்கின்றன என்பதே யோகிகளின் கருத்தாகும். அத்துடன் இவை மாற்றங்களுக்குரிய சார்பு நிலைக்குரியவை என்றும் இவற்றையும் கடந்து இவற்றுக்குப் பொதுவாயுள்ள மாற்றமற்ற நிலையும் இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். நிர்வாண நிலை. அதை இப்போது விளக்க முடியாது. அல்லது வேதாந்திகள் கூறுவது "இதுவல்ல, இதுவல்ல" என்றுதான் விளக்கலாம்.

விஞ்ஞானத்தால் இதை மறுக்கமுடியாது. மாறாக அது அடையக்கூடிய உச்சங்களைத்தான் இதில் காணவேண்டும். ஜடநிலை, உயிர்நிலை, மனநிலை ஆகிய மூன்றும் பரிணாம வளர்ச்சியில் வந்துவிட்டன என்பதையும் அவை அடிப்படையில் வேறுபட்டனவையல்ல என்பதையும் இன்று விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அத்துடன் இன்னும் வளர வேண்டும் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. அந்த வளர்ச்சியின் திசையைத்தான் பேரறிவுநிலை (விஞ்ஞான மயகோசம்) பேரானந்தநிலை (ஆனந்தமயகோசம்) நிர்வாணநிலை (நிர்குணபிரம்மம் அல்லது சத்தியம்) என்று அனுபூதிமான்களும் கூறுகின்றனர்.

இதை விஞ்ஞானம் மறுக்கமுடியாது. இப்போதைக்கு அதற் கொள்கைத்திட்டமாக இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதை ஏற்றுக்கொள்ளும்போது இதன் தர்க்கரீதியான முடிவையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஜடநிலையிலிருந்து நிர்வாணநிலைக்குப் போகமுடியுமானால் நிர்வாணநிலையானது எப்போதும் எல்லா நிலையிலும் அடிப்படையாக நிற்கவே செய்கிறது. 'நிர்வாணமே சம்சாரம். சம்சாரமே நிர்வாணம் (நாகார்ஜுனா). பிரம்மமே பராசக்தி, பராசக்தியே பிரம்மம். அப்படியானால் ஜடத்தையே ஆரம்பநிலையாககொள்ளாமல் நிர்வாணத்தையே, பிரம்மத்தையே, கடவுளையே அல்லாவையே, சிவத்தையே (இவையெல்லாம் ஒன்றை விளக்கும் பல பெயர்கள்தான்) ஆரம்பநிலையாகக் கொள்வது தர்க்கரீதியானதுமட்டுமல்ல, வசதியானதும் நன்மை பயக்கவல்லதுந்தானே?

ஆமாம். உண்மையான சமயத்துக்கும் உண்மையாண விஞ்ஞானத்துக்குமிடையே எந்தவிதப் பகையும் வேற்றுமையும் இருக்கமுடியாதுதான். அவை இரண்டும் எப்போதோ இணைந்திருக்கவேண்டியவை. சத்தியத்தை வெளியே இருந்து தேடும் வழியும் சத்தியத்தை அகத்துக்குள்ளேயிருந்து தேடும் வழியும் தேவையானவையே. இரண்டும் இணைக்கப்படவேண்டியவையே. ஆனால் அவற்றின் இணைப்புக்கு விஞ்ஞானிகளும் சமயவாதிகளுமே இதுகாலவரை தடைபோட்டு வந்துள்ளனர். ஆனால் இனி அவற்றின் இணைப்பு தவிர்க்கமுடியாததாகி விட்டது இருசாரரும் அதை உணரத்தொடங்கிவிட்டனர்.

பிரபஞ்சப் பொருள் அடிப்படையில் அறிவற்ற வெறும் இயற்கைச் சத்தியா? அல்லது அறிவையும் கடந்த பேர்ஞானத்தின் சொரூபமா? பின்னதுதான் என்று விஞ்ஞானம் சொல்ல இப்போ தயங்கலாம். ஆனால் அது தர்க்கரீதியானது மட்டுமல்ல தவிர்க்கமுடியாததுங்கூட. மனிதனானவன் சிறிய உயிரணுவாகக் கருப்பையில் ஆரம்பமாகிறான் என்றால் அவனது பிற்கால அறிவு வளர்ச்சியெல்லாம் அந்த அணுவிலும் ஏதோ ஒரு அளவுக்காவது உள்ளடங்கியிருக்கிறதுதானே? ஆமாம் விவேகானந்தர் கூறியதுபோல் பரிணாமம் என்பது உள்ளடக்கத்தையும் (involution) ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படியென்றால் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி இறுதியில் மனிதனின் தற்போதைய நிலையையும் தாண்டி வளரக்கூடியதாய் இருக்கிறதென்றால் பிரபஞ்சப் பொருளின் அடிப்படையாக அந்த உச்சத்தையே எடுக்கவேண்டும். அது என்றும் உள்ளடங்கியிருக்கிறது, உள்ளோடி நிற்கிறது. அப்பால்பட்டும் நிற்கிறது. அப்பால்பட்ட நிலையும், நிர்வாணநிலையும், தவிர்க்கமுடியாததுதான். இத்தகைய பரிணாமத்தை அனுபவரீதியாக அரவிந்தர் இன்று விளக்கியும் இருக்கிறார். உண்மையான சமயமானது முன்னணிப்படையாக முன்னேறித் திசைகாட்ட அதன் பின்னணிப்படையாக அதோடு இணைந்து வந்து முன்னணிப்படை கைப்பற்றிய பிரதேசங்களை மனிதனின் பூரண ஆட்சிக்குள்ளாக்குவதுதான் விஞ்ஞானத்தின் வேலையாகும். இரண்டும் இணைந்தே செல்ல வேண்டும். பிரிந்துவிட்டால் இரண்டுக்கும் ஆபத்துதான்.

அத்தகைய இணைப்பின் தீர்ப்பு இதுதான்: - மனமும் உடலும், மனிதனும் உயிரினங்களும் பிரபஞ்சத்தின் எல்லாத் தோற்றங்களும் ஒரு பொருளான சத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டவை. அப்படியென்றால் பிரிவினைத் தோற்றங்கள் எல்லாம் மேலோட்டமானவையே. அடிப்படை உண்மையல்ல. அணுவும் தேவர்களும் (அவர்களும் பிரபஞ்சத்தில் இருக்கலாம். அணு இருக்கமுடியுமானால் தேவநிலை ஏன் முடியாது?) அடிப்படையான இறுதிப் பிரபஞ்சப் பொருளும் அல்லது சத்தியமும் (சமயங்களின் கடவுள் சத்தியத்துக்குத் தனிப்பட்ட ஒரு உருவமும் இருக்கலாம் என்பது தர்க்கரீதியானதே. ஆனால் அதன் தன்மை உருவங்களை கடந்ததே) எல்லாம் அடிப்படையில் ஒன்றேதான். பலவல்ல. அதனால் இவ்வுலக வாழ்க்கை அடுத்தவுலக மோட்சத்துக்கான தயாரிப்பாக இருக்கத் தேவையில்லை. இங்கேயே, இப்போதேயே பூரணத்துவத்தைத்தேடி நடத்தப்படவேண்டும். எல்லாம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டவையானபடியால் பிரிவினை பாராட்டாத பேரன்பும் ஒற்றுமையும் எல்லாச் செயல்களிலும் தெரியவேண்டும். அந்தப் பேரண்பையும் ஒற்றுமையையும் பெருக்கும் விதத்தில் வாழ்க்கையின் எல்லாத் துறைகளும் வளர்க்கப்படவேண்டும். மொத்தமான பொருளாதார சமுத்துவமும் சமூக சமத்துவமும் உருவாக்கப்பட வேண்டும். சாதிப் பிரிவுகளும் சமயப் பிரிவுகளும் அறியாமையின் விளைவுகளே. எல்லாரையும் எல்லாத் துறைகளையும் சத்தியத்தின் அடிப்படையில் இணைத்து வளர்ப்பதே இனி வரும் முயற்சியாக இருக்க வேண்டும்.

5

விஞ்ஞானமும் சமயமும் இணையும்போது தனிப்பட்ட சமயங்கள் எப்படித் தங்களுக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொள்ளலாம்? சமயச் சண்டைகளும் சமயப்பாகுபாடுகளும் சத்தியத்தின் ஒருமையை உணராத அறியாமையின் விளைவுகளே.

இன்று தேவைப்படுவது எல்லாச் சமயங்களும் ஒன்றாக இணைந்த ஒரு தனிச் சமயமே, சர்வ மதங்களின் உண்மை ஆராய்ச்சியும் சர்வ மதங்களின் சங்கமுமே புதுயுகப் போக்காக இருக்கமுடியும். வினோபா அதையே முழு மதம் அல்லது மொத்த மதம் என்கிறார் (Total Religion) இத்தகைய பரந்த பார்வையை சில சமயங்கள் ஏற்கனவே ஓரளவுக்காவது ஏற்றுக் கொள்ளாமலில்லை. அல்டஸ் ஹக்ஸ்லி கூறியதுபோல் இந்து சமயத்தில் அத்தகைய பரந்துபட்ட நிரந்தரத் தத்துவமொன்றுக்குரிய (Perennial Philosophy) பண்புகள் அதிகமாகக் காணப்டுகின்றன. குறிப்பாக வேதாந்தம் எல்லா மதங்களம் இணைந்த ஒரு முழு மதத்தின் வித்தாகவே அன்று முதல் இன்றுவரை இருந்து வருகிறது. ராமகிருஷ்ணர் அதையே வாழ்ந்து காட்டியுள்ளார். அவர் இஸ்லாம், கிறிஸ்தவம், சாக்தம், வேதாந்தம் ஆகிய எல்லா வழிகளிலும் இறைவனை வழிபட்டு எல்லாம் ஒன்றையே அடைகின்றன என்று அனுபவத்தில் உணர்ந்தவர். ராமகிருஷ்ணரின் பிறப்புக்குப் பின்பு தனிப்பட்ட மதங்களை மட்டும் அழுத்தும் போக்கு முடிவடைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ராமகிருஷ்ணரின் சீடரான விவேகானந்தர் மேற்கையும் கிழக்கையும் விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் சமயத்தையும் சமூகத்தையும் இணைத்தவராக நிற்கிறார்.

புதிய முழு மதம் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இணைப்பதுடன் விஞ்ஞானத்தையும் அணைத்து வளர்ப்பதாகவும் விஞ்ஞானத்தால் தானம் திருத்தப்பட்டு விஞ்ஞான ரீதியாகத் தொடர்ந்து வளர்வதாகவும் சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் செயல்படும் சக்தியாகவும் எல்லாவற்றையும் அணைத்து ஆற்றுப்படுத்தும் தத்துவமாகவும் இருக்கும்.

புதிய முழு மதம் அத்வைதப்பார்வையையே அழுத்தும். பிரபஞ்சத்தில் காணப்படும் எல்லாத் தோற்றங்களும் உயிரினங்களும் ஒரு சத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறபடியால் அந்த அடிப்படை ஒருமையை, இரண்டற்ற ஒருமையான அத்வைதத்தை, அழுத்தும் வேதாந்தமே அந்த முழு மதத்தை வளர்க்ககூடிய அடித்தளமாக இன்று நிற்கிறது. விஞ்ஞானிகள் மனிதனை மட்டுமல்ல தேவர்களையே ஆய்வு கூடங்களில் உருவாக்கினாலுங்கூட அதுவே தோற்கடிக்கப்பட முடியாத சமயப்பார்வையாக இருக்கிறது.

புதிய முழு மதப்பார்வையில் துவைதப் பார்வை உதிர்ந்து போவதால் இஸ்லாம், கிறிஸ்தவம், சைவசித்தாந்தம் ஆகியவை அவற்றின் பூரண வளர்ச்சியை அடைகின்றன. இறைவனுக்கும் உயிரினங்களுக்குமுரிய அடிப்படை ஒருமையை ஒப்புக்கொள்வதாலேயே எல்லாவற்றினதும் இயல்பான வளர்ச்சியை, சர்வத்தினதும் உதயத்தை, ஆமோதிக்கக்கூடியதாய் இருப்பதால் எல்லா மதங்களும் அந்தப் பார்வையை ஏற்றுக்கொள்ளும். அதனால் தேவையற்ற சில கொள்கைகள் தங்கள் பாட்டிலேயே காலப்போக்கில் எல்லாச் சமயங்களிலுமிருந்து களையப்படவேண்டும். பௌத்தம் முழு மதத்தின் விஞ்ஞானரீதியான வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியதாய் இருப்பது போல் அதுவே பூரணமாக மாற்றியமைக்கப்படக்கூடியதாயும் இருக்கிறது.

புதிய முழு மதத்தில் எல்லாச் சமய நூல்களுக்கும் இடம் உண்டு. ஆனால் தேவதூதுவர்களும் ஞானிகளும் இனியும் வரப்போவதில்லை என்ற கொள்கைக்கும், சமயக் கொள்கைகளும் தொடர்ந்து திருத்தப்பட்டு வளர்க்கப்பட வேண்டியவையே என்பதை ஒப்புக்கொள்ளாத குறுக்கத்துக்கும் பிற்போக்குக்கும் இடமிருக்காது. இதுவரை வந்திராத மாபெரும் தேவதூதுவர்கள் இனித்தான் வரவேண்டியிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல எல்லாருமே தேவர்களாக, இல்லை அவர்களையும் கடந்த ஞானிகளாக வளரவேண்டியவர்களாயும் இருக்கிறார்கள் என்பதே முழு மதத்தின் கொள்கையாக இருக்கும்.

முழு மதத்தின் நோக்கமும் முழு மனித குலத்தையும், அரவிந்தர் கூறுவதுபோல், அடுத்த பரிணாமப்படிகளான விஞ்ஞானமயகோசத்துக்குள்ளும் ஆனந்தமயகோசத்துக்குள்ளும் எற்றுவிப்பதாகவே இருக்கும். அதற்குரிய சமூக, பொருளாதார, கலாசார, கல்வித் தளங்களை அது தீவிரமாகத் தயாரிக்கும்.

6

இந்தப்பார்வையின் மார்க்சீய சித்தாந்தம் உருக்குலைந்த போகிறது. சமயங்களும் விஞ்ஞானமும் இதுகாலவரை பேணிவந்த தனிப்பட்ட உருவங்களும் போக்கும் அழிக்கப்படுவதுபோல் மார்க்சீய சித்தாந்தத்தின் உருவமும் அழிக்கப்படுகிறது. அதன் உள்ளடக்கம் பேணப்படுகிறது. பழைய எகலிய தத்துவத்தை அப்படித்தான் உருவத்தை அழித்து உள்ளடக்த்தை கறந்துகொண்டு மார்க்சீய சித்தாந்தம் சாகடித்தது, (Engels Fuerbach)

சத்தியத்தின் ஒருமையை அழுத்தும்போது வர்க்கப் பரிவினைகள் முக்கியமற்றவையாய் மாறிவிடுகின்றன. வர்க்கப் பிரிவினைகளை அழுத்தும்போது உண்மையான பொதுவுடமையும் ஏற்படாது. சமூக முக்தியை இலட்சியமாகக் காட்டும் போதுதான் சமூக சமத்துவமும் பொருளாதார சமத்துவமும் அடையப்படக் கூடியவையாய் இருக்கின்றன.

பொருளாதாரப் பொதுவுடமைதான் மார்க்சீயம் காட்டிய முக்கிய உண்மையும் நன்மையுமாகும். ஆனால் அதற்குரிய வியாக்கியானங்களும் வழிமுறைகளும் சத்தியத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மாறுபடுகின்றன.

சொத்தும் தனியுடமையுந்தான் சமயங்களை இதுவரை தோற்கடித்து வந்துள்ளன. முழு மனித குலமு ம பேரறிவை நோக்கி ஏறவேண்டியிருப்பதால் பொதுவுடமைப் பொருளாதாரமும் சமூக சமத்துவமும் மிகவும் அவசியமானவையாகின்றன. தனிப்பட்ட அறியாமையினதும் ஆணவத்தினதும் வலு அதன்மூலம் குறைக்கப்படுகிறது. முழுச் சமூகமும் ஞானியின் நிலைக்கு முன்னேற இலகுவான சமூகத்தளம் அதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

7

இத்தகைய கணக்கெடுப்புக்குப் பின்பே புதுயுகத் தத்துவத்திற்கு ஒரு உருவங்கொடுக்கலாம்.

புதுயுகத் தத்துவம் சத்தியத்தின் அடிப்படையில் எழுப்பப் படவேண்டியதாய் இருக்கிறது. அதனால் சர்வத்தினதும் இயல்பான பரிணாம வளர்ச்சியை, சர்வோதயத்தை, மறக்காத மனித வளர்ச்சிக்கு வழிவகக்கவேண்டிய தத்துவமாக அது இருக்கிறது. சமயங்களை ஒரு முழு மதமாக இணைத்து அதனுடன் விஞ்ஞானத்தையும் அணைத்துக்கொண்டு வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்காக ஆற்றுப்படுத்தி வளர்க்கும் தத்துவமாகவும் அதற்காகத் தன்னையே சதா திருத்தி விரித்து வளர்க்கும் தத்துவமாகவும் அது இருக்கவேண்டும்.

எல்லாரிடத்தும் சத்திய ஞானம் எழுச்சி பெற்றுச் செயல்படுவதன் மூலம் எல்லாரும் எல்லாத் துறைகளும் எழுச்சியடையும் சத்திய யுகத்துக்குரிய தத்துவம் அது.

அதன் பெயர் என்ன? ஏற்கனவே அந்தத் திசையில் கால் வைத்துவிட்ட காந்தியும் வினோபாவும் சூட்டிய பெயர் மிகப் பொருத்தமானது: சர்வோதயம். ஆனால் அவர்கள் கண்டதைவிட நாம் அதற்குக் காணும் அர்த்தவிரிவு பெரியது. அப்படியே அது தொடர்ந்து விரித்து வளர்க்கப்படும்.

சர்வோதய தத்துவத்தை திட்டவட்டமாக எல்லைவகுத்துக் கூறக்கூடாது. திட்டவட்டமான எல்லைகளை மீறுவதுதான் சர்வோதய தத்துவத்தின் நோக்கமாகும். திட்டவட்டமாக எல்லை வகுப்பது சத்தியத்தையே மறுப்பதாகும். ஆனால் இயன்றளவு தொடர் மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் விட்டுக் கொடுக்கும் வகையில் திட்டவட்டமான ஓர் பார்வையும் மனி வளர்ச்சிக்குத் தேவையானபடியால் இரண்டுக்கும் விட்டுக்கொடுக்கும் வகையில் சர்வோதயத்தின் சில முக்கிய அடிப்படை அம்சங்களை இங்கு கணித்துக்கொள்வது அவசியமாகிறது. இப்போதைக்கு அவற்றை நான்காக கணித்துக் கொள்ளலாம்:

(1) பேரறிவாகவும் ஆனந்தமாகவும் அவற்றுக்கு அப்பாற்பட்டதாகவுமுள்ள சத்தியம் என்றுமுள்ளது. எல்லையற்று, இரண்டற்றது.

(2) அடிப்படையில் அது மாற்றமற்றது, ஆனால் சார்பு நிலையில் நாமரூபங்களாய் மாற்றத்தைக் காட்டுவது. அந்த மாற்ற நிலையை ஏறுபடியான பரிணாமமாகக்கொள்வதே சத்தியத்தை அணுகும் உலக சார்புநிலைக்குரிய சீரான வழியாகும்.

(3) அந்த ஏறுபடிப் பரிணாமத்தையும் வசதிக்காகச் சதுர்யுகச் சுழலாகவும் ஒவ்வொரு சுழலையும் ஏறுபடி வளர்ச்சியாகவும் கணிக்கலாம்.

(4) ஒவ்வொரு யுகத்திலும் யுகத்துக்குட்பட்ட காலப் பிரிவுகளிலும் பிரதேசப்பிரிவுகளிலும் நடைபெறும் பரிணாம வளர்ச்சியை எகலிய மும்முனை இயக்கமாகக் கணித்துக் கொள்ளலாம்.

இந்த நான்கு அம்சங்களே புதுயுகத் தத்துவம் அழுத்தும் சதுர்மறைகளாக இருக்கும்.

8

இந்த நான்கு அம்சங்களையும் மறவாத வாழ்க்கையை ஒரு வார்த்தையில் "சத்தியாக்கிரகம்" எனலாம். சத்தியத்தையே அழுத்துதல் ! அப்படிக் கூறும்போது காந்தி தன் அகிம்சைப் போராட்டக் காலங்களில் கடைபிடித்த ஒர் செயல் முறையை முழு வாழ்க்கையையுமே அடைக்குமளவுக்கு விரித்துவிடுகிறோம். உண்மையில் காந்தியின் முழு வாழ்க்கையுமே ஒரு பெரும் சத்தியாக்கிரகக் காவியமேதான். எனவே இதன் மூலம் சத்தியாக்கிரகம் என்பதற்குப் பொதுவாகக் கொடுக்கப்பட்ட அர்த்தம் உதிர்ந்துபோய் அதன் பூரண விரிவு ஏற்படுகிறது. அதனால் ஒவ்வொரு மனிதனின் முழு வாழ்க்கையும், அதன் ஒவ்வொரு கண அனுபவமும் ஏற்கனவே குறிப்பிட்ட "சதுர்மறை" களையும் அழுத்தி விரித்து விளக்குவதாகவும் அவற்றுக்கு முரணான ஆணவ அறியாமை மறுப்புக்கும் மறைப்புக்கும் தேக்கத்துக்கும் எதிரான நிரந்தரச் சத்தியப்போராட்டமாகவும் அமையவேண்டும். அதுவே சத்தியாக்கிரகத்தின் பூரண விரிவான விளக்கமாகும். சத்தியாக்கிரகம் என்பது "அமைதி" "சமாதான" "மரபு" என்ற போலிச் சாட்டுகளைக் காட்டிப் பேணப்படும் ச மகத் தேக்கத்துக்கு உடந்தையாய் இருக்கமுடியாது. அது தனிப்பட்ட ஒருவனது வீட்டு வாழ்க்கையோடு மட்டும் நின்றுவிடவும் முடியாது. வீட்டைவிட்டு வெளியே வந்து, மனித சிந்தனையினதும் முழு உலக சமூகத்தினதும் சத்தியத்தை அடிப்படையாகக்கொண்ட தொடர் வளர்ச்சிமாற்றத்துக்காகத் தன்னையே பூரணமாக அர்ப்பணித்து விட்ட ஜ“வதானந்தான் உண்மையான சத்தியாகக்கிரகமாகும். அதுவே உண்மையான சர்வோதய வாழ்க்கையுமாகும். வீட்டுக்குள் அடங்கிவிடும் வாழ்க்கை வெளித் தேக்கமாகும். வீட்டுக்குள் அடங்கிவிடும் வாழ்க்கை வெளித் தேக்கத்துக்கும் அறியாமைக்கும் உடந்தையாகிவிடுவதால் அந்த வாழ்க்கை தனிப்பட்ட அளவில் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் சத்தியாக்கிரகமாகாது. சர்வோதயப் பார்வையில் அது தற்கொலைக்குச் சமானமானதாகும்.

புதிய தத்துவத்தின் நான்கு அம்சங்களையும் அழுத்தும் சத்தியாக்கிரக வாழ்க்கைக் காவியத்தின் சில முக்கிய இலட்சணங்களையும் குறிப்பிடலாம்.

சத்தியம் இரண்டற்றதாய் இருப்பதால் வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் ஒருமையையும் ஒருமை பிறப்பிக்கும் ஒற்றுமையையும் பற்றிய உணர்வும் இருக்கும். மனிதனுக்கும் மனிதனுக்குமிடையேயும், மனிதருக்கும் மற்ற உயிர்களுக்கிடையேயும், மனிதருக்கும் முழுப் பிரபஞ்சத்துக்கிடையேயும் அந்த ஒருமையும் ஒற்றுமையும் இழையோடி நிற்கிறது என்ற உணர்வு. தன்னில பிரபஞ்சத்தைக் காணும், பிரபஞ்சத்தில் தன்னைக் காணும் பேரொற்றுமை.

அது பேரன்பாகவும் இருக்கும். அதனால் அகிம்சையே அதன் இலட்சியமாகும். இருப்பினும் அகிம்சைக்கு கொடுக்கப்பட்டுள்ள சாதாரண அர்த்தம் சரியானதல்ல. பேரன்பு பிறப்பிக்கும் அகிம்சை பேர் ஞானத்தின் தோற்றமாகவும் இருக்கும்போது அகிம்சையின் அர்த்தம் வேறாகிவிடுகிறது. அது முக்கியம் இரண்டாம் உலகமகாயுத்த காலத்தில் காந்திக்கு ஏற்பட்ட பிரச்னையும் சீன- இந்திய எல்லைப்போர் காலத்தில் வினோபாவுக்கு ஏற்பட்ட பிரச்னையும் அகிம்சையைப் பற்றித் தெளிவுபடுத்துவரை அவசியமாக்குகிறது. நாஸ’ப் படையனிரின் ஒரு தலைப்பட்சமான அசுரத்தாக்குதலுக்கு முன்னால் அகிம்சை எந்தக் கோலத்தை எடுக்கலாம்? தனிமனிதரும் சமூகமும் தங்களுக்குள்ளேயும் அரசாங்கத்துக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தாது அகிம்சைப் போரை நடத்தக் கூடியதாய் இருப்பதுபோல் ஒர் தனி அரசு தன்னை ஆக்கிரமிக்கும் இன்னோர் அரசுக்கெதிராக இன்று ஆயுதம் ஏந்தாத அகிம்சைப் போராட்டத்தை நடத்தக்கூடிய நிலை வந்துவிட்டதா?

ஆயுதம் ஏந்தாத அகிம்சைப்போராட்டத்துடனேயே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒர் உன்னத நிலை ஏற்படலாயிற்று என்பது உண்மைதான். உண்மையான மனிதன் அதனுடைன்தான் பிறக்கத் தொடங்கியிருக்கிறான் என்றும் சொல்லலாம். ஆனால் ஆயுதம் எந்தாப் போராட்டமே ஓரே ஒரு போராட்டமாக மாறுவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்பதனையும் மறந்துவிடக்கூடாது. முழு மனித குலமும் சத்தியத்தில் நிற்கும்போதுதான் அதுவே தனிப்போர் முறையாக மாறலாம். குறைந்தது ஒரு தனி உலக அரசு தோன்றிய பின்னர்தான் ஆயுதப்போராட்டமே அனாவசியமாகலாம். அதற்குமுன் அதற்கும் தயாராகவே இருக்கவேண்டும். ஓர் அரசின் கடமை அது. ஆனால் ஆயுதம் ஏந்தினாலும்சரி ஏந்தாவிட்டாலும்சரி போராட்டம் அகிம்சைப் போராட்டமாகவும் அன்பு நிறைந்த போராட்டமாகவுமே இருக்கவேண்டும். குருஷேத்திரத்தில் சத்தியத்தின் பூரண உணர்வுடன் அருச்சுனன் நடத்திய போராட்டமும் அகிம்சைப் போராட்டமேதான்.

எனவே சத்தியத்தைப்பற்றிய பூரண உணர்வையே அகிம்சைக்குரிய அடிப்படையாகக் காணவேண்டும். அந்த அர்த்தம் உணவைப்பற்றிய கட்டுப்பாட்டிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பேரன்பு பேர்ஞானமாகவும் இருக்கும்போது யார் யாரைக் கொல்வது, எதை எது சாப்பிடுவது? பழைய வேதகால ரிஷ’கள் முதல் அண்மைக்கால விவேகானந்தர், அரவிந்தர் போன்றோர்வரை சாப்பாட்டில் இறுக்கான கட்டுப்பாட்டைக் கடைபிடிக்காதது அதனால்தான். சர்வோதயம் எல்லா நாடுகளுக்கும் எல்லாக் கால நிலைகளுக்கும் உரிய சத்தியத் தரிசனமாக இருப்பதால் வெளித் தோற்றங்களான உடை, உணவு ஆகியவற்றில் ஒழுக்கத்தைக் கண்டு ஏமாறத்தயாராய் இல்லை. அது மனதையுங் கடந்த அகத்தின் பூரண விரிவையே பூரண ஒழுக்கமாகக் கொள்கிறது. அதனால் சத்தியாக்கிரகம் என்ற வாழ்க்கைக் காவியத்தின் முக்கிய இலட்சணமாக மனிதகுலத்திடம் அது பிறப்பிக்கப்போகும் அத்தகைய அக விரிவே இருக்கும். தன்னில் பிரபஞ்சத்தைக் காணும், பிரபஞ்சத்தில் தன்னைக் காணும் பேர் விரிவு.

9

சமுதாயத்தின் ஒவ்வொரு துறையும் இப்புதிய பார்வைக்கேற்ப முற்றாக மாற்றியமைத்து வளர்க்கப்பட வேண்டும். கல்வித்துறையில் விஞ்ஞானம், கலை என்ற பேதம் இயன்றளவு குறைக்கப்பட வேண்டும். சமய பாடமாக ஒப்பியல் சமயம் மட்டுமே படிப்பிக்கப்படவேண்டும். வேலையனுபவத்தோடு கல்வி கலக்க வேண்டும். வாழ்க்கையின் நோக்கம் பற்றிய ஆராய்ச்சியாகவே ஆரம்பத்திலிருந்து கல்வி புகட்டப்பட வேண்டும். அரசியல் துறையில் பூரண கருத்துச் சுதந்திரமும் கட்சிச்சுதந்திரமும் நிலவுதல் அவசியம், சர்வோதயமே இலட்சியமாய் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் சங்கமும் அதை அடைவதற்கரிய செயல் திறமையையும் வியாக்கியானத் திறமையையும் அடிப்படையாகக் கொண்டே இயங்கும். கிராம, நகர சுயராச்சியத்தை அடிப்படையாகக் கொண்ட பூரண ஜனநாயகம் தோன்றவேண்டும். பொருளாதாரத் துறையில் திட்டமிட்ட வளர்ச்சியும் படிப்படியான பொதுவுடமைப் போக்கும் வளர்க்கப்படவேண்டும். கலை, இலக்கியம் ஆகிய துறைகள் சர்வோதயத்தின் இயல்பான மலர்ச்சியையும் இணைப்பையும் காட்டும் விதத்தில் சத்தியத்தைத் தேடி ஒத்துழைக்கும் பிரபஞ்ச யதார்த்தப்போக்கில் வளர்க்கப்பட வேண்டும்.

ஆனால் மொழி அமைப்பில் ஏற்படும் வளர்ச்சியே மனிதனின் பார்வையிலும் அனுபவத்திலும் ஏற்படும் வளர்ச்சி மாற்றத்தைப் பிரதிபலிப்பதால் அதன் வளர்ச்சி அடிப்படையான மாற்றத்தைக் காட்டும். மொழி அலசல் (Linguistic Analysis) புதிய தத்துவத்தின் முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக இருக்கும். ஆனால் இன்று மேற்கத்தைய தத்துவ ஞானிகள் போடும் எல்லையுடன் அது நின்றுவிடாது. ஞானிகளின் அனுபூதிநிலை காட்டும் சத்தியத்தின் தூரத்துப் பிராந்தியங்களை சாதாரண மனிதனின் பார்வை அனுபவ எல்லைக்குள் புகுத்துமளவுக்கு மொழி அலசல் வளர்க்கப்பட வேண்டும்.

10

இறுதியாக, சர்வோதயம் ஒரு தனி வர்க்கத்தின் எழுச்சியைக் குறிக்காமல் முழு மனித குலத்தினதும் எழுச்சியைக் காட்டும் சத்திய யுகத்தின் பிறப்பையே தெளிவுபடுத்த முயல்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். அத்தகைய நினைவையும் அந்த நினைவை எழுப்பும் புதுயுகத்தின் பிறப்பையும் தன்னில் அனுபவிக்கும் ஓர் புதுயுகமனிதனின், சர்வோதயத்துக்காகத் தன்னையே ஜ“வதானம் செய்துவிட்ட ஓர் வீரனின், நாட்குறிப்பிலிருந்து சில வரிகளை இங்கு சாட்சிக்கு விடலாம்.

"நான் இதுவரை வாழ்ந்து வந்த உலக தத்துவ - கலாச்சார-சமய-சமூக அமைப்புக்குள்ளிருந்து திடீரென்று நானே எதிர்பாத்திராதவகையில் வெளியேறி நிற்பதையும் பழையனவற்றின் நீர்த்திவலைகளாக என் பார்வை மேனியில் ஒட்டியிருக்கும் எச்சங்களைச் சிலுப்பி உதறிவிட்டு இள ஞாயிற்றின் ஒளியில் நிர்வாணமாய் நிற்பதையும் உணர்கிறேன். அந்த ஞாயிற்றின் ஒளியே சிலுப்பலோடு போகாது மேனியில் தொடர்ந்து ஒட்டியிருக்கும் எச்சங்களைப் போக்குவதாயும் மேனியைப் போர்க்கும் புது ஆடையாக அமைவதாகவும் இருக்கிறது.

"புதுயுகத்தின் பிரசவவேதனையை நான் அனுபவிக்கிறேன். அதே சமயம் ஒரு பெரும் திளைப்பின் ஊற்றும் திறபடுவதுபோன்ற உணர்வு. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் நீரைவிட்டு வெளியேறித் தரையில் நிற்கும் கட்டத்தில் அவை எப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருக்குமோ அத்தகைய அனுபவத்தை அந்தக் கட்டத்தில் அவை அனுபவிக்காத அறிவின் துணையுடன் இப்போ ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக உணர்ந்து அனுபவிப்பதுபோல் ஓர் பெருந்திளைப்பின் அருட்டல் உள்ளிருந்து பிறந்துகொண்டிருக்கிறது. கண்டுபிடிப்பு! நீரைவிட்டு வெளியேறி உடம்பைச் சிலுப்பி உதறியவாறு, பிறக்கும் பேரறிவான இளஞாயிற்றின் ஒளியில் காய்ந்து கொண்டு அதையே உடலைப் போர்க்கும் ஆடையாகவும் தரித்துக்கொண்டு நிற்கிறேன்! எதிர்பாராத கோலத்தில் திடீரென்று காண்பதுபோல் அந்த நிலையில் நான் என்னைக் காண்கிறேன். எனக்கே ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஆனால் இத்தனை காலமும் இதற்காகவே போராடியிருக்கிறேன் என்பதையும் உணர்கிறேன். அந்தப் போராட்டத்தையும் பயத்தையும் வென்றுகொண்டு படிப்படியாக வளரும் பிரசவ வேதனையாகவும் அதுவே எதிர்பாரத கோலத்தில் திடீரென்று காண்பதுபோல் அந்த நிலையில் நான் என்னைக் காண்கிறேன். எனக்கே ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஆனால் இத்தனை காலமும் இதற்காகவே போராடியிருக்கிறேன் என்பதையும் உணர்கிறேன். அந்தப் போராட்டத்தையும் பயத்தையும் வென்றுகொண்டு படிப்படியாக வளரும் பிரசவ வேதனையாகவும் அதுவே எதிர்பாராத கண்டுபிடிப்பின் திளைப்பாகவும் அது இருக்கிறது, இரண்டு நிலையும் சரிதான்.

"பழைய நாஸ்திகத்தையும் ஆஸ்திகத்தையும் கடந்து வளரும் புதுநிலை. நன்மை-தீமை என்பவற்றைக் கடந்த ஞானியின் நிலையில் ஒரு சமூகமே வாழ முயலும் போது அது அந்த நிலையில் உருவாக்கும் புது ஒழுக்கமுறை எப்படி இருக்கவேண்டுமோ அதுவே என் தணிப்பட்ட வாழ்விலும் நான் இனிக் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கமுறையாகும். சிந்தனைப் போக்கும் அதுவேதான். முக்குணங்களைக் கடந்த வாழ்க்கைப் போக்கும் சிந்தனைப்போக்கும் புதுயுகத்தின் அடிப்படை இலட்சணங்களாக இருக்கவேண்டும். சாத்வீக குணத்துக்கும் இனி மரியாதை அதிகம் இல்லை. கொஞ்சமும் கிடையாது. அப்படித்தான் சொல்லவேண்டும். புதுயுக மனிதன் முக்குணங்களைத் தாண்டிய ஒரு புதுக் குணத்துக்குரியவனாக நிற்கிறான். நிர்க்குணமல்ல. இது சத்திய குணம்."


ஆற்றைக் கடந்தபின்பு தோணியைக் காவவேண்டுமா?
சமயப்பற்றையும் (தர்மப்பற்று) கடந்தபின்பே
நிர்வாணம் கிட்டும்.

- பௌத்தம்.


சமயங்களும் சத்தியமும்

சர்வோதயம் என்பது சர்வத்தினதும் உதயமாகும். எல்லாவற்றினதும் எழுச்சியாகும். எல்லாவற்றினதும் எழுச்சி எல்‘வற்றுக்கும் இயல்பாயுள்ளதின் எழுச்சியாகவும் வெளிக்காட்டலாகவுமே இருக்கும். எல்லாவற்றுக்கும் எது உண்மையான அடிப்படை இயல்பாக, எது உண்மையான சுயமாக இருக்கிறதோ அந்த அடிப்படை இயல்பினதும் சுயத்தினதும் உதயமே சர்வோதயமாகும்.

எது எல்லாவற்றுக்குமுரிய உண்மையான அடிப்படை இயல்பு? எது எல்லாவற்றுக்குமுரிய காலம்?

எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அதைச் சத்தியம் எனலாம். அந்தச் சத்தியம் மாற்றமற்றது. இரண்டற்றது. சமயங்கள் கூறும், கடவுள் தன்மை அதுதான். வேதாந்திகளின் ஆத்மா, பரப்பிரம்மம். பௌத்தர்களின் நிர்வாணம், சைவர்களின் சித்தமலம் அறிவித்துச் சிவமான நிலை கடவுள் இல்லை என்று மறுக்கம் எந்த நாஸ்திகனும் பௌத்தத்தின் நிர்வாணநிலையை மறுக்க முடியாது. விஞ்ஞான ரீதியான மறுப்பின் தர்க்கரீதியான முடிவுதான் நிர்வாணம். ஆனால் அந்த நிர்வாண நிலையை ஏற்றுக்கொள்ளும்போது சிவமான நிலையையும் ஏற்றுக்கொள்வதாய் முடிகிறது. காரணம் நிர்வாண நிலைக்கும் நிர்குண பிரம்மநிலையான சிவமான நிலைக்கும் வார்த்தை வித்தியாசங்களைத் தவிர வேறு அடிப்படை வித்தியாசங்கள் எதுவுமில்லை. நாமரூபங்களைக் கடந்த நிர்வாணநிலை, ஆத்மநிலை, எதுவோ அதுவே சத்தியமாகும். அது மாற்றமற்றது, இரண்டற்றது. அதுவே எல்லாவற்றுக்குமுரிய அடிப்படைச் சுயமாக விளங்குகிறது. அந்தச் சத்தியம் அல்லது நிர்வாணம் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பினும் வசதிக்காக அதைச் சித்தாகவும், பூரண ஞானமாகவும் ஆனந்தமாகவும் காணலாம். அடைமொழி போட்டுச் சொல்லவேண்டுமானால் அந்தச் சத்தியத்தை அப்படித்தான் சொல்லவேண்டும். சத்-சித்-ஆனந்தம். சர்வோதயம் என்பது அரசியல், கலை, கல்வி, விஞ்ஞானம், சமூகம், பொருளாதாரம் போன்ற எல்லாத்துறைகளிலும் ஏற்படும் சத்-சித்-ஆனந்தத்தின் உதயமேதான்.

முழுப் பிரபஞ்சமும் அந்தச் சத்-சித்-ஆனந்தமேதான். ஆனால் சார்பு நிலைக்குரிய நாமரூப நிகழ்ச்சி ஒவ்வொன்றிலும் அந்தச் சச்சிதானந்த உணர்வு பூரணமாக வெளிப்பட்டு நிற்பதில்லை. நமக்குத் தெரிந்த வரையில் அதிக அறிவு வளர்ச்சியடைந்துள்ள மனித இனத்திடங்கூட இன்னும் அந்தச் சச்சிதானந்த உணர்வு பொதுப்படையாய் வெளிப்பட்டு நிற்பதாய் இல்லை. தனிப்பட்ட ஒரு சில ஞானிகளிடந்தான் அந்தச் சச்சிதானந்த உணர்வு பூரணம் பெற்றிருக்கிறது. அதுதான் இதுவரை மனிதவரலாறு கண்ட உச்ச வளர்ச்சியாகும். ஆனால் அந்தச் சத்திய உணர்வு அல்லது சச்சிதானந்த உணர்வு, அல்லது நிர்வாண உணர்வு முழு மனிதகுலத்திடமும் பரவலாக எழுச்சியடையும் காலக் கட்டம் இன்று வந்துள்ளது.

உயிர்கள் இறைவனை நோக்கு எழும்போது உயிர்களில் இறைவன் எழுகிறான். சமயங்கள் எல்லாம் இதுவரை அதைத்தான் போதித்துள்ளன. ஆனால் அது மட்டும் சர்வோதயமாகாது.

ஒரு சில தனிப்பட்ட ஞானிகளிடம் ஏற்பட்டுள்ள சத்தியத்தின் எழுச்சி முழுச் சமூகத்திலும், முழு மனித குலத்திலும் ஏற்படும் எழுச்சியாக மாறவேண்டும். அப்படி ஏற்படும்போது தான் சர்வத்திலும் சத்தியத்தின் உதயம் ஏற்படக்கூடியதாய் இருக்கும். அதுதான் சர்வோதயமாகும்.

இதுவரை ஏற்பட்டுள்ள சமய வளர்ச்சி சர்வோதய வளர்ச்சியாக மலர்ந்ததில்லை, காரணம் அதற்குரிய காலமும் சூழலும் மனித மனப்பக்குவமும், சுருங்கக்கூறின் பரிணாமக் கட்டம், அண்மைக்காலம்வரை உருவாகவில்லை. அதனால் சத்தியத்தின் எழுச்சி தனிப்பட்ட சில ஞானிகளிடம் ஏற்பட்டதுபோல் எல்லாரிடமும் பரவலாக ஏற்படவில்லை. தனிப்பட்ட ஞானிகளிடம் ஏற்பட்ட சத்திய எழுச்சிக்குச் சமமாகச் சமூகத்திலும் பரவலாக ஏதாவது ஏற்பட்டது என்றால் அந்த எழுச்சி சமய எழுச்சியாகவே இருந்தது. ஆனால் சமூகத்தின் சமய எழுச்சியை ஞானிகளிடம் ஏற்படும் சத்திய எழுச்சியாக மாறாட்டம் செய்து விடக்கூடாது. சத்திய எழுச்சி கைவந்த அனுபூதிமான்கள் அல்லது ஞானிகள் அந்த எழுச்சிக்குரிய ஆரம்பமாக எந்தக் கொள்கைகளையும் ஒழுக்க முறைகளையும் ஆசாரங்களையும் பின்பற்றினார்களோ அந்த ஆரம்ப ஒழுக்கமுறைகளையும் கொள்கைகளையும் ஆசாரங்களையும் பரவலாகச் சமூகமும் பின்பற்றுவது தான் சமய வளர்ச்சியாக இதுவரை இருந்துவந்திருக்கிறது. அந்த ஆரம்ப ஒழுக்கமுறைகளின் காரணமாக ஞானிகளிடம் ஏற்படும் சத்திய எழுச்சி அதே அளவுக்குப் பரவலாக முழுச் சமூகத்திடமும் ஏற்பட்டதில்லை. எனவே சத்திய எழுச்சி வேறு, சமய வளர்ச்சி வேறு.

முழுச் சமூகத்திலும் ஏற்பட்ட சமய வளர்ச்சி ஏன் முழுச் சமூகத்துக்குரிய சத்திய எழுச்சியாக, சர்வோதயமாக, இதுவரை மலர்ந்ததில்லை?

சத்திய எழுச்சிக்கு எதிரான முக்கிய தடைகளைச் சமய வளர்ச்சியே போட்டிருக்கிறது என்பது முதலில் கவனிக்கத்தக்கது. சத்திய வளர்ச்சிக்குச் சமய வளாச்சி அத்திவாரமிட்டிருப்பதுபோல் அதுவே அதைத் தடைப்படுத்தியுமிருக்கிறது என்பது முன்னுக்குப்பின் முரணாகப்படலாம். ஆனால் பரிணாம இயக்கத்தைப் புரிந்து கொள்பவர்களுக்க அது இயற்கையாகவே தெரியும். எது ஒரு காலக்கட்டத்தின் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகிறதே அதுவே அடுத்த காலக்கட்ட வளர்ச்சி உடைத்தெரியவேண்டிய தடையாக மாறிவிடுகிறது. தனிப்பட்ட ஞானிகளிடம் சத்திய எழுச்சிக்கு வழிவகுத்த சமயங்கள் முழுச் சமூகத்திலும் அதே சத்திய எழுச்சி பரவலாக ஏற்படவிடாமல் பலவிதங்களில் தடைபோட்டுள்ளன.

சமூக வாழ்க்கையும் அதன் பல்வேறு துறைகளும் இவ்வுலகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் ஆரம்பத்தில் சமயமானது தன்னை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஓர் சக்தியாகக் காட்டிக்கொள்ளாமல் அடுத்த உலகத்துக்குரிய, மோட்சவுலகுக்குரிய, வாழ்க்கை முறையாகக் காட்டிக் கொண்டபோது அது சாதாரண சமூக வாழ்க்கைக்கு உதவாத ஒன்றாகத் தன்னைக் காட்டிக்கொண்டது. சத்திய எழுச்சிக்குச் சமயம் போட்ட முதல் தடை அதுவேயாகும். இன்று கூட சத்தியத்தைத் தேடுவதைச் "சாமிப்போக்கு" என்று சமூகம் பயத்தோடும் கேலியோடும் ஒதுக்கிவிடுவது அதனால்தான்.

உடம்பையும் சமூக வாழ்க்கையையும் வேதனைமயமானது, மாயை, போலி என்று காண்பது சத்தியத் தேட்டத்துக்குத் தூண்டுகோலாக அமையலாம். ஆனால் அந்தக் காட்சியே முழு உண்மையுமல்ல. அதையே முழு உண்மையாக அழுத்தும்போது சத்தியத்தின் வெளிக்காட்டலுக்கு எதிராகவே சமயம் வளர்ந்து வருகிறது. முழுப்பிரபஞ்சத்தின் தோற்றமும் பரிணாமமும் இந்த உலகத்தையும் வாழ்க்கையையும் துறக்கவேண்டுமென்று கூறுவதாய் இல்லை. அவற்றை ஆமோதிக்கவேண்டுமென்பதை விளக்குபவையாகவே நிற்கின்றன. புத்தரின் நிர்வாண உச்சம் வாழ்க்கையை வேதனைமயமானதாகக் காட்டும் போது தன்னையே தோற்கடித்துவிடுகிறது. அவருடைய உச்சமளவுக்குச் சாதாரண மக்கள் வாழ்க்கையை கொண்டுபோகப் போவதில்லை. ஆரம்ப காலத்துக்குப் பின்னர் புத்த சமயத்தில் பெரும் ஞானிகள் தோன்றாமல் போனதற்கு அதுதான் முக்கிய காரணமாகம். வேதனை வியாக்கியானம் முழுப் பிரபஞ்சப் பரிணாமத்துக்கும் எதிரானது. அதனால் சத்தியத்தின் வெளிக்காட்டலுக்குப் பொருந்தாதது. புத்தரின் ஞான அலசல் அதன் உண்மையான ஆழத்தைக் காட்டும் வகையில் இனித்தான் வளர்க்கப்படவேண்டியிருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் பக்குவம் ஏற்படும்போது புத்தர் சாதித்த மௌனம் பேசத் தொடங்கும். அதுவரைக்கும் பௌத்தம் அடிப்படையில் வாழ்க்கையை மறுக்கும் ஓர் போக்காகவே இருக்கும்.

இரண்டாவது தடை இன்னம் ஆழமானது. சமயவளர்ச்சி அடுத்த உலகுக்குயி தயாரிப்பாக அல்லது பௌத்தத்தைப் போல் வாழ்க்கையிலிருந்து தப்பிவிடும் தயாரிப்பாகத் தன்னைக் காட்டிக்கொண்டதால் சமூக வாழ்க்கையின் தேவைகளுக்கும் அதன் பலதுறைகளின் வளர்ச்சிக்கும் வழிகாட்ட முனைந்ததில்லை. சீகருக்குரியதை சீசருக்கும் இறைவனுக்கரியதை இறைவனுக்கும் கொடுக்கும்படி யேசு கிருஸ்து கூறிய கூற்றில் அக்காலத்தில் உண்மையான சமயம் தன்னை சமூகத்தின் பிற துறைகளிலிருந்து பிரித்துத்தான் வளர்க்க முயன்றிருக்கிறது என்ற உண்மைதான் தொனிக்கிறது. சமயம் வேறு அரசியல் வேறு. சமயம் வேறு சமூகத்தின் பிறதுறைகள் வேறு என்ற பாகுபாடு! சத்திய எழுச்சி பரவலாக ஏற்படாததற்கு சமயம் புகுத்திய அத்தகைய பாகுபாடும் ஓர் காரணமாகும். ஏற்கனவே என்னென்ன வகையான சமூக பொருளாதார அமைப்புகள் இருந்தனவோ அவற்றின் அடிப்படையை மாற்றாமலேயே சமயம் வளரமுயன்றிருக்கிறது. அதனால் அரசியல், பொருளாதாரம் போன்ற சமூக வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்குத் தீர்வு காட்டக்கூடியதாய் சமயம் தெரிந்ததில்லை. அவற்றைப்பற்றி அக்கறைப்பட்டதுமில்லை. அத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வுகாட்டமுடியாதிருந்த சமயம் சமூகத்துக்குள் பூரணமாக இறங்காதுவிடுபட்டே நின்றது. அதனால் அத்தகைய விடுபட்ட சமய இயக்கத்தின் வளர்ச்சி வரவலான சத்திய வளர்ச்சிக்குத்தடையாகவே ஆரம்பத்திலிருந்து வளர்ந்து வந்துள்ளது.

மூன்றாவதாக சமூக வாழ்க்கையின் பிற துறைகளிலிருந்து விடுபட்ட ஓர் இயக்கமாக வளர்ந்த சமயம், தானே சமூக வாழ்க்கை முழுவதையும் ஆற்றுப்படுத்தும் இயக்கமாகத் தலைமை தாங்கவேண்டி ஏற்பட்ட கட்டங்களில் தனக்குரிய அடித்தளமான சத்தியத்தை தொடும் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தாமல் ஏற்கனவே இருந்த சமூக பொருளாதார அரசியல் அமைப்பையே தனக்குமுரிய அமைப்பாக மாறாட்டம் செய்தகொண்டது. அதனால் அவற்றின் ஊழல்களும் காலத்துக்கொவ்வாத பிறழ்வுகளும் சயமத்திலும் தொற்றிக் கொண்டன. சமயம் தனது தளமான சத்தியத்தைப் பிற துறைகளுக்குள் புகுத்தாமல் பிற துறைகளுக்குரிய ஆசாபாசங்கள் சமயத்துக்குள் புகுந்து சமயப் போர்வையை மாட்டிக்கொண்டன. உதாரணமாக இக்காலச் சமூபப் பாகுபாடான சாதிப்பிரிவு சமயத்துக்குள் புகுந்து கோயிலை அடைத்துவைத்துப் பூசை செய்யத் தூண்டுகிறது! அத்தகைய ஊழல்களுக்கும் காலத்துக்கொவ்வாத பிறழ்வுகளுக்கும் எதிரான போராட்டங்களையும் சீர்திருத்த முயற்சிகளையும் சமயம் தனக்கெதிரான போராட்டங்களாக காணத் தொடங்கியது. ஐரோப்பாவின் மத்திய காலச் சரித்திரம் அந்தப் போக்கின் வளர்ச்சியையே காட்டுகிறது. இறுதியில் சமயமே எல்லா ஊழல்களக்குமுறிய இருப்பிடமாகத் தெரியத் தொடங்கி விட்டது. அதனால் நவின கால ஐரோப்பியர் சரித்திரத்தில் ஏற்பட்ட விஞ்ஞான, சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சியெல்லாம் சமயத்துக்கு எதிராக ஏற்பட்ட வளர்ச்சியாகவே இதுவரை கருதப்படுகின்றன. அந்த நிலையில் சமயம் சத்திய எழுச்சிக்கு வழிவகுக்காமல் விட்டதுடன் தன்னையும் தோற்கடித்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் சமய வளர்ச்சி சமயத்தையே கொன்றுவிட்ட வளர்ச்சியாகவே இன்று முடிவடைந்துள்ளது.

ஆசிய நாடுகளில் சமய வளர்ச்சியானது மேற்கத்தைய நாடுகளில் காணப்படுமளவுக்கு முறியடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக ஆசிய நாடுகளிலுள்ள சமய வளர்ச்சியைப் பரவலாக ஏற்பட்ட சத்திய எழுச்சியாக அல்லது சர்வோதயமாகக் காணலாம் என்று சொல்லிவிட முடியாது, ஆசிய நாடுகளில் சமய வளர்ச்சியானது பரவலான சத்திய எழுச்சிக்குப் பதிலாக சமூகத் தேக்கத்துக்குப் பொறுப்புக் கொடுக்கும் ஆசார வளர்ச்சியாகவே நிற்கிறது. சத்திய வளர்ச்சிக்குச் சமயமே தடையாக நிற்கிறது என்ற உண்மையை இந்த ஆசார வழிபாட்டில்தான் பார்க்கவேண்டும். சமயம் என்பது வெறும் உணவு, உடை, தொழுகைமுறை சம்பந்தப்பட்ட உருவங்கள், சின்னங்கள், ஒழுக்கங்கள் ஆகியவற்றோடு நின்றுவிட்டால் சக்திய எழுச்சி தடைபட்டுவிடுகிறது. கோயில்களைவிட்டு வெளியே வந்து சமூகத்தின் ஒவ்வொரு துறைக்குள்ளும் வாழும் சக்தியாக, ஒவ்வொரு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் சத்தியப் பிரவாகமாக மாறாதவரைக்கும் சமயமானது தேக்கத்தின் சின்னமாகவே மாறிவிடுகிறது. ஆசார வழிபாடு அந்தத் தேக்கத்தை நியாயப்படுத்துகிறது. சத்தியப்பிரவாகம் இந்த ஆசாரங்களைக் கடந்த பின்பே ஏற்பட முடியும். தனிப்பட்ட ஞானிகளிடம் ஏற்பட்ட சத்திய எழுச்சி ஆசாரங்களைக் கடந்த நிலையையே காட்டுகிறது. ஆனால் ஆசாரங்களையே முடிநதமுடிவாகக் கொண்டுள்ள சமய ஸ்தாபனங்கள் தங்களின் அடித்தளமான சத்தியத்தையே மறைத்து விடுகின்றன. சமூகத்தில் அச் சத்தியத்தின் பிரவாகத்துக்குத் தங்களின் ஆசாரங்களே தடையாக நிற்கின்றன என்பதையும் மறந்துவிடுகின்றன.

எனவே இதுகாலவரை ஏற்பட்டுள்ள சமயவளர்ச்சியானது சத்தியமே எங்கும் பரவலாக எழுச்சியடையும் சர்வோதயமல்ல. தனிப்பட்ட ஞானிகளிடம் ஏற்பட்ட சத்திய எழுச்சியை முழுச்சமூகத்துக்கும், முழு உலகத்துக்கும் உரிய ஓர் எழுச்சியாக வளர்ப்பதும் முழுச் சமூக வாழ்க்கையின் எல்லாத்துறைகளையும் அந்தச் சத்திய எழுச்சியில் நிறுவுவதுவே சர்வோதயமென்றால் அது இனித்தான் நிறைவேற்றப்படவேண்டியிருக்கிறது. இது காலவரை ஏற்பட்டுள்ள சமய வளர்ச்சியானது இனிவரவிருக்கம் சத்திய எழுச்சிக்குரிய, சர்வோதயத்துக்குரிய, அத்திவாரத்திலேயே சத்திய எழுச்சிக்கு எதிரான தடைகளும் தவிர்க்கமுடியாத வகையில் புகுந்துள்ளன. இவற்றை நீக்குவதற்கும் சமய வளர்ச்சி உருவாக்கிய அத்திவாரத்தை இக்கால அறிவைக் கொண்டு இன்னும் இருக்கமாக்கி அதில் சத்திய எழுச்சியை நிறுவுவதற்குமுறிய காலக்கட்டம் இப்போது வந்துள்ளது.

சமய வளர்ச்சி தன்னோடு கொண்டுவந்துவிட்ட தடைகளை நீக்குவது சர்வோதயத்துக்கு வழிவகுக்கும் முதல்வேலையாகும்.

அடுத்த உலகுக்குரிய தயாரிப்பாக ஆத்மீக முயற்சியை இனி அழத்துவது கூடாது. இவ்வுலக வாழ்க்கை பூரணமாவதற்குரிய முக்கிய தேவைதான் ஆத்மீக ஞானம்.

சமயம் வேறு சமூக வாழ்க்கையின் பிற துறைகள் வேறு என்ற பாகுபாடும் பழைய காலத்துக்குரியது. எல்லாத்துறைகளின் இயக்கமும் சத்தியத்தில் நிறுவப்படவேண்டும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்துக்குமுரிய பிரச்னையை சத்தியத்தின் வெளிக்காட்டலுக்குரிய பிரச்னையாகக்கொள்ள வேண்டும். எல்லாத்துறைகளுக்குள்ளும் சத்தியம் புகக்கூடிய விதத்தில் எல்லாத்துறைகளும் மாற்றியமைக்கப்படவேண்டும். ஐரோப்பிய வரலாற்றில் சமயத்துக் கெதிராக வளர்க்கப்பட்டவையாகக் கருதப்படும் புதிய விஞ்ஞான, சமூக, பொருளாதார, அரசியல் கண்டுபிடிப்புகள் எல்லாம சத்தியத்துக் குரியவையாக மீட்கப்படவேண்டும்.

ஆசார வழிபாடும் சத்தியத்தை மறந்த வழிபாட்டின் காரணமாக ஏற்படும் சமயச் சண்டைகளும் பகையும் போட்டியும் பாகபாடுகளும் அகற்றப்படவேண்டும்.

இவற்றையெல்லாம் செய்வதற்குச் சர்வ மதங்களும் ஐக்கியப்படுத்துவது முதலில் அவசியமாகிறது. சர்வ மதங்களையும் இணைத்த ஓர் முழுமதப் பார்வை முதலில் தேவை. அந்தப் பார்வையோடு இயங்கும்போதுதான் சத்தியத்தைச் சமூக வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்குள்ளும் புகுத்தக்கூடிய பக்குவமும் துறவும் ஏற்படும். ஆனால் அதுதான் மிகக்கஷ்டமானதுங்கூட, காந்தியின் சுதந்திரப் போராட்டம் சமயப் பிரிவுகளைக் கடந்த சத்தியத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோர் ஆரம்பித்த சத்திய யுகத்தை உண்மையாகச் சமூகத்துக்குள் இறக்கியவர் காந்திதான். சத்தியத்தைச் சமூக வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்குமுரிய தளமாக்குவதில் சோதனை செய்த பெருமை காந்திக்கே உரியது. இருப்பினும் காந்தி ஒரு சமயவாதியாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தியத்தின் எழுச்சிக்குச் சமய ஆசாரமே பெருந்தடையாய் இருக்கலாம் என்பதைக் காந்திக்கு ஏற்பட்ட முடிவே நிரூபிக்கிறது. அதனால் இனிமேல் சத்தியத்தை வெளிக்காட்ட முயன்ற சமயங்களின் வழிபாடு முடிந்து சத்தியத்தையே நேரடியாகக் கண்டு வழிபடத் தொடங்கும் காலம் வந்துவிட்டது என்பதை ஒவ்வொரு சமயவாதியும் உணர்ந்து தன்னை ஒரு தனிப்பட்ட சமயவாதியாக நினைத்துச் செயல்படாமல் சத்தியவாதியாக நினைத்துச் செயல்பட முன்வரவேண்டும். சத்தியத்தின் எழுச்சிக்காக எல்லாச் சமயங்களும் முற்றாக அழிக்கப்பட வேண்டியிருந்தாலுங்கூட அதைத் தயங்காது செய்ய தயாராக இருக்க வேண்டும்.

சத்தியம் எப்போதும் ஒன்றேதான். ஆனால் அதை வெளிக்காட்டும் சமய தத்துவங்கள் பரிணாம வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உரியவை. வேத, உபநிடத காலப் பின்னணியில் தோன்றிய புத்தர் முதல் ராமகிருஷ்ணர் வரையுள்ள சமய வளர்ச்சியைப் பார்க்கும்போது சமய தத்துவங்களின் பரிணாம வளர்ச்சி எடுத்துள்ள தர்க்க ரீதியான முடிவைக் காணலாம், தனிப்பட்ட சமயப் பிரிவுகளின் காலம் இனிப் போய்விட்டது. அதையே ராமகிருஷ்ணர் ஆரம்பித்த யுகம் தெரிவிக்கிறது. சர்வ மதங்களம் இணைக்கப்பட்ட ஒரு முழு மதப் பார்வைத்தளம் உருவாகியபின் சத்தியத்தின் ஒளி சமூக வாழ்க்கைக்குள்ளும் சமூகத்தின் ஒவ்வொரு துறைக்கும் புகுத்தப்படுவதுதான் அடுத்துவரும் வளர்ச்சி என்பதை விவேகானந்தர் நிரூபித்துள்ளார். காந்தி நடத்திய அரசியல் சமூக பொருளாதாரத் துறைகளுக்குள்ளும் உருவாகுவதற்குரிய போராட்டந்தான். இனிவரும் ஆத்மீக வளர்ச்சியைப் பழைய முறைப்படி சமய வளர்ச்சியாகக் காணக்கூடாது. எல்லாரிடத்தும், எல்லாத் துறைகளிடத்தும் எழும் சத்திய எழுச்சியாகவே, சர்வோதயமாகவே, இனிவரும் ஆத்மீக வளர்ச்சியைப் பார்க்க வேண்டும். ஆற்றுப்படுத்த வேண்டும். அதற்குரிய அரசியல், கலை, கல்வி, விஞ்ஞான, சமூக, பொருளாதாரத் தளங்களை உருவாக்குவதற்காக அந்தந்தத் துறைகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாய் இருப்பதுபோல் சமயத்தில் அதற்குரிய சூழலை அல்லது மாற்றத்தை உருவாக்குவதும் மிக அவசியமானதே. ஆற்றைக் கடப்பதற்குரிய தோணியை ஆற்றைக் கடந்தபின் கரையிலேயே விட்டுச் செல்வதுபோல் (புத்த) தர்மத்தையும் (சமயத்தையும்) நிர்வாணத்துக்காகக் கைவிட்டுச் செல்லத் தயாராக இருக்கவேண்டும் என்ற புத்தரின் கூற்று இப்போ முழு மனித குலத்துக்கும் பொதுப்படையாகப் பொருத்திப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு தனிப்பட்ட ஞானி ஆசாரங்களைப் கடப்பதுபோல் முழு மனித குலமும் இதுவரையுள்ள சமய ஆசாரங்களைக் கடந்து சத்தியத்தை நேரடியாக காண முயலும் கட்டம் இப்போது வந்துள்ளது. முழு மனித குலமும் சத்தியத்தை நோக்கி, நிர்வாணத்தை நோக்கி, இன்னு முன்னேறும்போது அது இதுவரை ஏற்றுக்கொண்டு வந்துள்ள தனிப்பட்ட சமயப் பிரிவுகளையும் கைவிட்டுச் செல்ல வேண்டியது அவசியமாகிறது.

சர்வோதயத்துக்கு எதிராகத் தனிப்பட்ட சமய ஆசாரம் தடையால் நிற்குமானால் அந்தச் சமய ஆசாரம் அர்த்தமற்றதாகிறது. சமயங்கள் இதுவரை போதித்துவந்த துறவை தங்களின் தனிப்பட்ட ஆசாரங்களையே, பாகுபாடுகளையே, கைவிடுமளவுக்கு வளர்க்கவேண்டிய நிலை இன்று வந்துள்ளது. அதனால் இன்று ஏற்பட்டுள்ள முக்கிய சோதனை சமயங்களுக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது.

துறவைப்பற்றி இது காலவரை கூறிவந்துள்ள சமயங்கள் எந்தளவுக்குத் தாங்களே உண்மையாகத் துறக்கத் தயாராய் இருக்கின்றன? சமயங்கள் தங்களை இழந்து, தங்கள் தனிப்பட்ட பாகுபாடுகளை இழந்து ஓர் முழு மதமாக இணைந்து சத்தியத்தை நிலைநாட்ட விரும்புகின்றனவா அல்லது தங்கள் தனிப்பட்ட உடமைகளுக்கும் பாகுபாடுகளுக்கும் ஆசாரங்களுக்குமாகச் சத்தியத்தையே இழந்துவிட விரும்புகின்றனவா? தன் கொள்கைதான் பெரியது, பிறமதங்கள் எல்லாம் பிழையானவை என்று பேசுவதும் எங்கும் பரந்துள்ள சத்தியத்தைத் தன் தனிப்பட்ட கொள்கைக்குள்ளேயே அடைந்துவிடலாம் என்று நினைப்பதுவும் அறியாமை செறிந்த ஆணவமாகாதா? துறவைப்பற்றியும் சரணாகதியைப்பற்றியும் கூறும் சமயங்கள் முதலில் தங்களின் ஆணவ அறியாமையைத் துறக்க வேண்டாமா?

சமயவாதிகள்தான் இதற்குப் பதிலளிக்கவேண்டும். ஆனால் தன்னை இழக்கும் ஞானிதான் சத்திய எழுச்சியின் இருப்பிடமாகவும் சத்தியத்தின் உண்மையான கருவியாகவும் விளங்குவதுபோல் ஒரு முழுமதப் போக்குக்குள் தன்னையே இழக்கத் தயாராகும் சமயந்தான் சத்திய எழுச்சியின் இருப்பிடமாகவுத் சத்தியம் செயல்படும் உண்மையான கருவியாகவும் விளங்கும் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.


புதுத்திசைகள்


கிருத யுகத்தை கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன்
- பாரதி

உருவங்களும் சடங்குகளும் உருவங்களுக்கும்
சடங்குகளுக்கும் அப்பால்பட்ட ஒன்றோடு
இணைய உதவுவதற்குத்தானே? அவையே
முடிந்த முடிவாக மாறிவிடுவதற்கல்லவே?
- மு.த.(புதுயுகம் பிறக்கிறது)

நல்லார் குறைந்திங்கு அல்லார் மலியின்
நானே பலமுறையும்
பல்லோர் உருவில் வருவேன் - கீதைப்
பொருளை உணர்கின்றேன்.
- மு.பொ. (அது)

நீ யார்? யார் இந்த "நான்"?
அதை முதலில் அறி.
- ரமணர்

சு ய ‘ ட் சி

சத்தியமே எல்லாவற்றுக்குமுரிய சுயம் பரப்பிரம்மம், சிவம், அல்லாஹ், ஆண்டவன், நிர்வாணம் என்று சமயங்கள் அந்தச் சத்தியத்தைப் பலவாறாகக் கூறுகின்றன.

எனவே உண்மையான சுயாட்சி என்பது அந்தச் சத்தியத்தின் ஆட்சியாகவே இருக்கவேண்டும். அந்தச் சத்தியத்தின் ஆட்சி நடைபெறும்போதுதான் உண்மையான சுதந்திரமும் நிலவும்.

அந்நியரின் ஆட்சியிலிருந்து ஓர் நாடு விடுதலைபெற்றவிட்டால்மட்டும் அந்நாடு சுதந்திரமடைந்து விடுவதில்லை. வெங்காயத் தோல்களில் ஒன்று விடுபட்டுப் போவதால் எல்லாம் விடுபட்டுவிடுவதில்லை, வெளியிலிருந்து வந்த அதிகாரத் திணிப்பு அகலும்போது அகத்திலுள்ள அறியாமைத் திரைகளின் ஆட்சிதான் மேலெழும். அவைதான் சுயத்தை மறைப்பவை. அதேபோல் ஒர் நாடு வெளிநாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின் தன் சொந்த அறியாமையையும் ஆணவத்தையும் கொலுவேற்றுமானால் அங்கு சுயாட்சியும் நிலவப் போவதில்லை சுதந்திரமும் நிலவப் போவதில்லை. உண்மையான சுயாட்சியும் சுதந்திரமும் சத்தியத்தின் வெளிக்காட்டலோடுதான் எழுச்சியுறும்.

*இதன் தொடர்ச்சி PORPARA5.MTF வருகிறது











** PORPARA4.mtf ன் தொடர்ச்சி **

இதுகாலவரை அரசுகள் எதுவும் இந்தவகையான சுயாட்சியையும் சுதந்திரத்தையும் நாடிப் போராடியதில்லை - ஒரு நாட்டைத் தவிர. அதுதான் இந்தியா.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் ஒரு புதுயுகத்தையே பிறப்பிப்பதற்குரிய ஆரம்பப் போராட்டமேதான். 1857 லிருந்து 1947 வரை நடந்த இந்திய போராட்டத்தின் முக்கியத்துவத்தை இனித்தான் உலகம் பூரணமாக அறியவரும். இன்னும் இந்திய அரசாங்கமே அதைப் பூரணமாக உணர்ந்ததாய் இல்லை.

சமயங்கள் இதுவரை போதித்த துறவை ஒரு தனிமனித வாழ்க்கையளவோடு நிறுத்திவிடாமல் ஒரு முழு நாட்டினது வாழ்க்கையளவுக்கும், அந்த நாட்டில் வாழ்ந்த அத்தனை இனத்தவர்களினதும் சமயத்தவர்ளினதும் வாழ்க்கையளவுக்கும் உயர்த்தி நடத்தப்பட்ட போராட்டந்தான் இந்திய சுதந்திரப்போராட்டமாகும். சுதந்திரம் என்பது சத்தியமான சுயத்தில் நிர்வாணத்தில் நிற்பதாகும். அதனால் இந்திய சுதந்திரப்போராட்டந்தான் உண்மையான சுதந்திரத்தை நோக்கிய ஒரு நாட்டின் போராட்டமாகும். அது வெறும் அரசியல் சுதந்திரத்தைமட்டும் எதிர்பார்த்த போராட்டமல்ல. அரவிந்தர் கூறியதுபோல் சனாதன தர்மத்தையே தனது தேசியமாகக்கொண்டு முழு நாட்டளவில் ஆணவத்தைத் துறக்கமுயன்று சத்திய எழுச்சியை இலட்சியமாகக் கொண்டு சத்திய அகிம்சை மூலம் நடத்தப்பட்ட போர்தான் அது.

தனிமனிதனிடம் சத்திய எழுச்சிக்கத் தடையாய் இருப்பவை அவனுடைய ஆணவமும் அறியாமையுந்தான். அவற்றை எதிர்த்துப் போராடி அவன் வெல்லும்போது அவனிடம் சத்தியம் எழுச்சியுறுகிறது. உண்மையான ஒரே ஒரு சுயமான இறைவனின் ஆட்சி எழுகிறது.

அவன் ஞானி ஆகிறான்.

தனிமனிதனளவு ஞானியாகம் இந்த நிலையை ஒரு சமூகத்தின் அளவுக்கும் ஒரு இனத்தின் அளவுக்கும் ஒரு நாட்டின் அளவுக்கும் முழு உலகத்தின் அளவுக்கும் உணர்ந்த முடியாத.

முடியும் என்பதுதான் இந்தியப் போராட்டம் கூறும் பதிலாகும். காந்தியின் சத்திய சோதனையானது ஒரு தனிமனிதன் தன்னளவில்மட்டும் தெய்வராச்சியத்தை நிறுவ நடத்திய போராட்டமல்ல. முழு நாட்டளவுக்கும் ஓர் ராமராச்சியத்தை நிறுவும் சோதனைதான் காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டம்.

இதுகாலவரை ஒரு சில தனிப்பட்ட மனிதர்கள் மட்டும் அங்குமிங்குமாகச் சத்திய எழுச்சிபெற்ற ஞானிகளாயிருந்தனர். இனி ஒரு முழு சமூகமுமே ஞான சமூகமாகவேண்டும்? ஒரு முழு இனமுமே ஞான இனமாக வேண்டும். ஒரு முழு நாடுமே ஞான நாடாக வேண்டும். முழு உலகமுமே ஞான பூமியாக வேண்டும். அதுதான் இந்தியா இயம்பும் போதனைகளாகும்.

போர்முறைகள் என்ன?

தனிப்பட்ட ஞானி தன்னளவில் சத்திய எழுச்சியாக எதை எதைச் செய்வானோ அதை ஒரு முழு நாடும், முழுச் சமூகமும், முழு இனமும், முழு உலகமும் செய்ய வேண்டும். அதுதான் வழி. அந்த வழியைத்தான் துறவு என்பர் அனுபூதிமான்கள். ஆனால் அந்தத் துறவு இப்போ புதிய பரிணாமத்துக்கேற்ற புதிய பரிமாணங்களில் பின்பற்றப்படவேண்டும்.

துறவு என்பது உணவிலும் உடையிலும் காணப்படும் ஒன்றல்ல. ஆணவத்தையும் அறியாமையையையும் துறப்பதே உண்மையான துறவாகும். "நான்", "எனக்கு", "என்னுடையவை" என்ற சிறு சுயநலமே எல்லாத் துன்பங்களுக்கும் போர்களுக்கும் தேக்கத்துக்கும் காரணமாகும். அந்த "நான்" னைத் துறந்து சத்தியத்தில் நின்றவாறு முழுப் பிரபஞ்சத்தோடும் இணைந்தவாறு எல்லாவகையிலும் வாழ்க்கையைப் பூரணமாக ஏற்று ஆமோதித்து வாழ்வதே துறவாகும். காதலனாய், மந்திரியாய், சேவகனாய், மன்னனாய், தூதுவனாய், தேர்ச்சாரதியாய் வாழ்ந்து காட்டிய கிருஷ்ணன், சத்தியத்தின் உருவாகவும் வாழ்ந்தான். அதனால் அவனே பூரண துறவின் உருவாகவும் இருந்தான். அந்தத் துறவை சமூகமும் நாடும் உலகமும் இனி ஏற்று வாழவேண்டும்.

ஒரு தனிமனிதன் தன்னளவில் ஆணவத்தையும் அறியாமையையும் துறந்து பொதுநல சேவைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும்போது அவனது துறவு அவனளவில் சுயாட்சியாகவும் சுதந்திரமாகவும் ஜ“வன் முக்தியாகவும் வளரக்கூடியதாய் இருக்கிறது.

ஒரு முழுக் கிராமமுமே தனிப்பட்ட சிறு சுய நலவாழ்க்கை எல்லைகளை மீறி கிராமப் பொதுவுடமையின் அடிப்படையில் கிராம சுயாட்சியொன்றை உருவாக்கும்போது கிராம அளவில் துறவு கைகூடுகிறது. கிராம அளவில் சத்திய எழுச்சி ஏற்படுகிறது.

ஒரு இனம், ஒரு மொழி, ஒரு மதம், அதே வகையில் தங்கள் கூட்டு அறியாமையையும் ஆணவத்தையும் துறக்கும் போது சத்திய எழுச்சி அந்த அளவுக்கு விரிகிறது.

ஒரு நாடே சத்தியத்தைத் தழுவும்போது, சமூகத்தில் ஒரு தனிப்பட்ட ஞானியைப்போல் ஒரு நாடு சர்வதேச விவகாரங்களில் இயங்கத் தொடங்கும்போது, அந்த நாட்டளவில் சுயராச்சியமும் சத்திய எழுச்சியும் கைகூடுகிறது.

அதே போக்கில் முழு உலகமும் சத்தியத்தைத் தழுவும் போது உலக முக்தியும் சத்திய யுகமும் மலர்கின்றன. மனிதன் புதியதோர் வாழ்க்கை நிலையிலிருந்து வாழ ஆரம்பிக்கிறான்.

ஒரு இனம் அல்லது மதம் அல்லது மொழி அல்லது வர்க்கம் பின்பற்றக்கூடிய துறவு எப்படி இருக்கும்?

அதற்கு விடை காண்பதற்கு முதல் இனம், மதம், மொழி, சாதி, வர்க்கம் என்பவை தங்கள் தங்களுக்கேயுரிய அறியாமை, ஆணவம், அகங்காரம் ஆகியவற்றைக் கொண்ட பெருங்கூட்டு உயிர்-உடல்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறு தனிப்பட்ட ஒரு சாதாரண மனிதன் மற்றவர்களைச் சுரண்டிக்கூடத் தன் சொந்த நலனையே அதிக மாகப்பேண விரும்புகிறானோ அவ்வாறே இனம், மதம், மொழி. சாதி, வர்க்கம், நாடு என்ற இப்பெருங் கூட்டங்களும் தங்கள் தங்கள் சொந்த நலனையே அதிகமாகப் பேண விரும்புகின்றன. இந்தக் கூட்டங்களுக்குரிய சுயநலத்தின் காரணமாகவும் அந்தச் சுயநலத்தை அடிப்படையாகக்கொண்ட அவற்றின் கூட்டு அறியாமை, ஆணவத்தின் காரணமாகவும் அடுத்தவர்களக்கு விட்டுக்கொடுக்கும் எண்ணமும் அடுத்தவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும் பழக்கமும் சமரசமும் இல்லாமல் போய்விடுகின்றன. அதுமட்டுமல்ல அடுத்தவர்களை நசுக்கியாவது தங்களை உயர்த்தி விடவேண்டும் என்ற போட்டியும் அதே தொடரில் எழுந்துவிடுகிறது. எல்லா இனவெறியும் சமயவெறியும் மொழி வெறியும் அவற்றின் காரணமாக ஏற்படும் கலவரங்களும் இந்த வகையான கூட்டு அறியாமை, ஆணவத்தினாலேயே ஏற்படுகின்றன. ஒரு தனி மனிதன் தன் தனிப்பட்ட சிறு ஆணவத்தையும் அறியாமையையும் துறந்து சத்தியத்தில் தன்னை நிறுவிய ஞானியாவதுபோல் சமயம், மொழி, இனம், வர்க்கம், சாதி ஆகிய பெருங் கூட்டங்களும் தங்கள் கூட்டு ஆணவத்தைக் களைந்து சத்தியத்தில் தங்களை நிறுவுவதன் மூலமே தங்களை வளர்க்க முயலவேண்டும்.

அதனால் சமயங்கள் இனித் தனிப்பட்ட மனிதனின் துறவுக்குமட்டும் வழிவகுத்தால் போதாது, இனம், மொழி, மதம், சாதி, நாடு என்ற கூட்டுக்களின் அறியாமையையும் ஆணவத்தையும் களைந்து அவற்றின் கூட்டுத் துறவுக்கும் வழிவகுக்கவேண்டும். அதற்காக மதங்கள் முதலில் தங்களின் தனிப்பட்ட கூட்டு ஆணவத்தைக் களையவேண்டும். ஒவ்வொரு மதமும் தானே சிறந்தது என்றும் பிற மதங்கள் தரமற்றவை, அழிக்கப்படவேண்டியவை என்றும் நினைக்கும் போக்கு கூட்டு அறியாமையினதும் ஆணவத்தினதும் போக்கேதான். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கொடுக்க வேண்டும் என்று தனிப்பட்ட மனிதனுக்கு போதித்துவிட்டு தன் கூட்டு ஆணவத்தைத் திணிப்பதற்காக ஆயுதப் போராட்டமும் செய்யத் தயாராய் இருப்பது எந்தளவுக்குச் சமயமாகும்? எந்தளவுக்குச் சத்தியமாகும்?

தன்னை அழிக்கவும் தயாராக இருக்கும் மதமே இனிவெல்லக்கூடிய மதமாக இருக்கும். தன் அழிவில்தான் சத்தியம் வெல்லக்கூடியதாய் இருப்பதால் தன்னை அழிக்கும் மதமே சத்தியத்தைப் பரப்பும் மதமாக விளங்கும். தன்னை அழிக்கும் மதமே பிற மதங்களையும் இணைத்த ஒரு முழு மதத்தை உருவாக்கும் தளமாக அமையும். விவேகானந்தர் அறிமுகப்படுத்திய வேதாந்தம் மேற்கில் அடைந்துவரும் வெற்றி அதையே நிரூபிக்கிறது.

தன்னை அழிக்கும் மதம், அதாவது தன் ஆணவத்தையும் அறியாமையையும் அழிக்கும் மதம், பிற மதங்களை இணைக்கும் தளமாக அமைவதுடன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்குள்ளும் சத்தியத்தைப் புகுத்தும் சத்தியமாகவும் மாறிவிடும். அதனால் இனி தனிப்பட்ட ஞானிகள் பெறும் முக்தியை ஒவ்வொரு மதமும் அடையவேண்டும். முக்தி அல்லது நிர்வாணம் மதங்களுக்கும் இருக்க முடியயுமா? முடியும் என்பது மட்டுமல்ல அதுதான் இன்னு முக்கியமாகத் தேவைப்படுகிறது என்பதுந்தான் உண்மை. சமய வளர்ச்சி என்பது படிப்படியாகச் சத்திய எழுச்சிக்கே எலகெங்கும் இடம் விட்டுக் கொடுக்கும் கட்டம் வரும்போது முதலில் ஒவ்வொரு தனிப்பட்ட மதமும் "முக்தி" அடையவேண்டும், "நிர்வாணம்" அடைய வேண்டும். மதங்கள் எல்லாம் தங்கள் தனித்தனி "நான்" னை இழந்து ஒன்றாக இணைந்து ஒரு முழு மதமாக மாறுவதுதான் அவைக்குரிய முக்தியாகும், நிர்வாணமாகும். இப்போது முக்தியடைந்துள்ள ஒரே மதம் வேதாந்தமேதான்.

இனம், மொழி, மதம் ஆகிய பெருங்கூட்டுக்கள் சத்தியத்தின் அடிப்படையில் தங்கள் அறியாமையையும் கூட்டு ஆணவத்தையும் துறப்பது எப்படி என்பதை விளக்க இலங்கைச் சூழலையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். சிங்களம் மட்டும் சட்டம், பெருபான்மை மதம் என்ற காரணத்தால் பௌத்தத்துக்கு அளிக்கப்படும் அரச மரியாதை ஆகிய இலங்கையில் சனநாயக முறைகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் சத்தியத்தின் அடிப்படையில் அவை பெருந் தவறுகளேயாகும். அத்தவறுகளைச் சரியானவையாகக் காட்டும் நடைமுறையிலுள்ள சனநாயக அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய அரசியல் தளமாகாது என்பதும் கவனிக்கத்தக்கது.

சிங்களம் மட்டும் சட்டம் ஒரு மொழிக்கும் இனத்துக்கு முரிய கூட்டு ஆணவத்தின் திணிப்பு சட்டமாக்கப்பட்டிருப்பதையே வெளிக்காட்டுகிறது. அமைப்பில் அது அவசியமாகலாம். அப்படியென்றால் நடைமுறையிலுள்ள சனநாயக அமைப்பும் தீவிரமாக மாற்றியமைக்கப்பட வேண்டியிருக்கிறது என்றுதான் அர்த்தமாகிறது. சிங்களம் மட்டும் சட்டத்தைப்போல் பௌத்தத்துக்கு அளிக்கப்படும் அரசமரியதையும் பெரும்பான்மைச் சனநாயக முறைக்குப் பொருந்துவதாய் இருப்பினும் புதுயுகத்தின் சத்திய எழுச்சிக்குத் தடையான மரபாக இருக்கிறது. சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையில் அளிக்கப்படும் விசேஷ அரசு மரியாதைக்குப் பின்னால் ஓர் இனத்தினதும் மொழியினதும் மதத்தினதும் கூட்டு அறியாமையும் ஆணவமும் அகங்காரமும் மறைந்து நிற்கின்றன என்பதை அவதானிக்க வேண்டும். அந்தக் கூட்டு அறியாமைக்கும் ஆணவத்துக்கும் "சிங்கள பௌத்தம்" என்று நாம் நாமம் சூட்டலாம். ("சைவத்தமிழ்" என்பது இன்னோர் உதாரணம். மதத்துக்குள் மதத்தின் அறியாமையுடன் மொழி, இனம் ஆகியவற்றின் அறியாமையும் அகங்காரமும் புதுந்துள்ளதற்கு உதாரணம் "சிங்கள பௌத்தம்" என்றால் மொழி என்ற கூட்டு "நான்" னின் அறியாமைக்குள் இனம் மதம் ஆகிய கூட்டங்களின் பற்றுப் புகுந்துள்ளதற்கு உதாரணமாக "சைவத்தமிழ்" விளங்குகிறது.)

"சிங்கள பௌத்தம்" உண்மையான பௌத்தத்துக்கு முரணானது. நிரந்தரமில்லாது. தொடரான மாற்றங்களுக்குரிய ஓர் தனிப்பட்ட மனிதனின் உடலையும் எண்ணங்களையும் கூட்டாகக்கொண்ட "நான்" என்ற உணர்வினதும் ஆணவத்தினதும் போலித்தன்மையை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துக் காட்டுவதில் பௌத்தத்துக்கு நிகர்பௌத்தமேதான் என்று கூடச் சொல்லாம். அதனால்தான் அது வேதாந்தத்தைப்போல் பரப்பிரம்மம் என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்ளாது "நிர்வாணம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. அந்தவிதத்தில் தீவிரமாக சிறு "நான்" என்ற அறியாமையையும் ஆணவத்தையும் மறுக்கும் பௌத்தந்தான் தனிப்பட்ட ஞானிகளைக்கூட உருவாக்காமல் தோற்றுப்போயிருப்பதுடன் பணமும் அதிகாரமுமுடைய ஆலய அமைப்புகளையும் புத்தரக்கித்த போன்ற சிறு சர்வாதிகாரிகளையும் உருவாக்கும் மதமாகவும் சிங்கள இனத்தினதும் மொழியினதும் கூட்டு ஆணவத்தையும் அறியாமையையும் நாடெங்கும் திணிப்பதை நியாயமாக்கும் மதமாகவும் இலங்கையில் மாற்றப்பட்டுவருகிறது! அதைப் பார்க்கும்போது சமயம் சத்திய எழுச்சியை மட்டுமல்ல சமயம் சமயத்தையே சாகடிக்கும் நிலையைத்தான் இலங்கையில் காணமுடிகிறது. சிங்களப் பெரும்பாண்மையினத்தின் எண்ணங்களைச் சிறுபான்மையினர் மீது திணிப்பதற்காகவும் சிங்கள மொழியை மட்டுமே உத்தியோக மொழியாக நடைமுறையில் கொண்டு வருவதற்காகவும் காவி தரித்த பிக்குகள் பௌத்தத்தின் பெயரில் "சத்தியாக்கிரகம்" நடத்தும்போது அவர்கள் சத்திய எழுச்சிக்குத் தடையாக மட்டும் நிற்பதில்லை. நிர்வாணத்துக்கு எதிரான தனிப்பட்ட ஆணவத்தையே ஒர் இனத்தினளவுக்கும் நாட்டின் அளவுக்கும் மதத்தின் அளவுக்கும் கூட்டாக எழுப்பிவிடுகின்றனர்.

எனவே பௌத்தமானது உண்மையான நிர்வாணத்தை அடிப்படையாக வைத்துச் செயல்பட வேண்டுமானால் அது தன்னளவில் முக்தி அடையவேண்டும். இனம், மொழி ஆகிய கூட்டுக்களின் ஆணவத்துக்குரிய ஆயுதமாக மாறாமல் இருப்பதுடன் மதமென்ற அளவில் தனக்குரிய சிறு சுயபற்றையும்-தன்னைக் காப்பாற்றவேண்டும், தான் அழிந்து விடாது வளரவேண்டும், தானே மற்றமதங்களைவிடச் சிறந்தது என்ற அற்ப உணர்வுகளைக் கூட்டாகக் கொண்ட ஒரு மதத்துக்குரிய "நான்" என்ற ஆணவத்தையும் பற்றையும் - அது களைந்து விடவேண்டும். நிர்வாணம் முதலில் பௌத்தம் என்ற மதத்துக்கு வரவேண்டும். அந்த நிர்வாணம் கிட்டிவிட்டால் அது சமூக வாழ்க்கையின் பிற துறைகளுக்குள்ளும் அதே நிர்வாணத்தை, அதே சத்தியத்தைப் புகுத்தக்கூடிய சக்தியாய் மாறிவிடும். தன்னை அறியாமலேயே தன்னைச் சிங்கள பௌத்தமாகக் காணும் இலங்கையிலுள்ள பௌத்தமதம் தன் சிங்கள "நான்"னையும் "பௌத்த நான்" னையும் துறந்துவிட்டு நிர்வாணத்தையே தளமாக்கிக் கொண்டால் அரசியல், மொழி, கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகிய பிற துறைகளிலும் மிகப்பிரம்மாண்டமான சத்திய எழுச்சியும் முற்போக்கான அமைப்பு வளர்ச்சியும் தோன்றிவிடும். நிர்வாண சத்தியப் பார்வையில் பாரபட்சமான மனச்சாய்வுக்கு இடமிருக்காதபடியால் மொழித்திணிப்பு, வர்க்கப் பாகுபாடு போன்றவை சனநாயகத்தின் பெயரில்கூட தலைகாட்ட முடியாதவையாய் வலுவிழந்துவிடும். சனநாயகம் உண்மையான நிர்வாணத்துக்குத் தடையாகவிருக்குமானால் சனநாயகத்தையே நிர்வாணத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்க முயல வேண்டாமா? பெரும்பான்மையினரின் மதமாய் இருப்பதால் பௌத்தத்தில் ஏற்படும் நிர்வாணமாற்றம் சீக்கிரமே எல்லாத் துளைகளையும் தொட்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது. சத்திய எழுச்சிக்குப் பௌத்தம் தன்னையே அர்ப்பணிக்குமா?

மொழி, இனம், மதம் ஆகியவற்றின் கூட்டுத்துறவை வேறு ஓர் கோணத்திலிருந்து ஆராயலாம். இலங்கைச் சைவத் தமிழரின் கோணம்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றி மூத்த குடியினராம் இந்தத் தமிழர்கள்! இப்படிக் கூறுவது வெறுங் கற்பனாவாதந்தான். ஆனால் அவர்களுடைய பண்நெடுங்கால வரலாற்றையுடையது என்றளவுக்காவது எடுத்துக் கொண்டல்கூட இந்த மூத்த குடியினரின் பண்பாடு நாம் எதிர்பார்க்குமளவுக்கு சத்தியத்தை வெளிக்காட்டுவதாய் இல்லை. மூத்த பண்பாடுதான் சத்தியத்தை அதிகமாக வெளிக்காட்டக் கூடியதாய்ப் பண்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்றைய தமிழர்களோ பெரும்பாலும் சத்தியத்தைப் பற்றித் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். சைவம் அவர்களுடைய பார்வையை வளர்த்த அளவுக்குக் குறுக்கியும் விட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தேவார திருமுறைகளைக் கோயிலில் ஓதுவதுடனும் மரக்கறிச் சாப்பாட்டுடனும் இவர்களின் சைவம் நின்றுவிடுகிறது. ஆனால் அதே தேவார திருமுறைகளைப் பாடிய பழைய நாயன்மார்கள் தங்களது காலத்தில் சத்தியத்தின் அடிப்படையில் பெரும் சமூக அரசியல் மாற்றங்களைச் செய்துள்ளனர் என்பதை இவர்கள் அறிவதில்லை. பையவே சென்று பாண்டியரையும் சாடுமளவுக்குப் பாடிய சம்பந்தர் அரசனின் மனமாற்றத்தின் மூலம் அரசியல் போக்கையே மாற்றியவர் என்பதையும், சமூகத்தில் பிற தத்துவங்களின் ஆட்சியை அகற்றுவதன்மூலம் பெரும் சமூகமாற்றத்தையே ஏற்படுத்தியவர் என்பதையும் இவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் சமயத்தை அந்தளவுக்கு முற்போக்காக வளர்க்கலாம் என்று நம்புவதுமில்லை. ஆறுமுக நாவலரைப் புகழும் நம் தற்கால ஈழத்துச் சைவர்கள் நாவலர்விட்ட குறைகளை ஆராயும் துணிச்சலற்றவர்களாகவே இருக்கின்றனர். தமிழ் நாட்டில் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த ரமணரையும் அரவிந்தரையும்பற்றி இவர்கள் தெரிய வேண்டிய அளவுக்குத் தெரியாதிருப்பதைக் கொண்டே இவர்களின் சைவத்தின் குறுக்கத்தைக் கண்டு கொள்ளலாம். சமயத்தை தேவாரங்கள் ஓதுவதுடன் நிறுத்திவிடும் இவர்கள் ஆலயங்களைத் திருக்குலத்தாருக்கு எதிராக அடைத்து மூடீவிட்டுத் திருவிழாச்செய்யவும் தயாராய் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு உரிமை கொடுக்க விரும்பாதவர்கள் சிங்களவர் மீது எவ்வாறு குறைப்பட்டுக் கொள்ளலாம்? யாழ்ப்பாணத்தில் நாவலரும் நாவலர் பரம்பரையும் விட்டுவரும் குறையைப் போக்கும் விதத்தில் கடைச்சாமியார் பரம்பரை வளர்ந்து யோகரின் சிவதொண்டனாகப் பரிணமித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் சிவதொண்டன் திரும்பவும் மேல் வர்க்கச் சைவமாகக் குறுகிவிடுவதுபோல் தெரிகிறதே ஒழிய சமூகத்தின் கீழ் வர்க்கத்தையும் தொடுமளவுக்கோ இலங்கியை ல் பிற மதத்தினரையும் தொடுமளவுக்கோ ஆழ அகலப் போவதாய் இன்னும் தெரியவில்லை. இனித்தான் வளரவேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் சத்திய இயக்கம் ஒன்று ஈழத்தமிழர்களிடையே ஏற்படுவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். சைவமே சத்தியத்தைக் காட்டமுடியாத தேக்கமாகவும் குறுக்கமாகவும் மாறியுள்ள நேரத்தில் உத்தியோகப்பற்றும் வியாபாரச் சுரண்டலுமே யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறையாக மாறிவிட்டிருக்கிறது. இருப்பினும் ஈழத்தமிழர்களின் கலாசாரத்தில் சத்தியத்தின் ஊற்றுக்கள் திறபடமாட்ட என்று சொல்வதற்குமில்லை. கடைச்சாமியார், செல்லப்பா சாமியார், யோகர் ஆகியோரின் வாரிசுகளிடம் அந்தச் சத்தியத்தின் ஊற்றுக்கள் தட்டுப்படாமலில்லை. ஆனால் அவர்கள் அவற்றுக்குரிய அர்த்தத்தை வெறும் குருபூசைகளுடன் நிறுத்திவிடுகின்றனர். யோகரின் முக்கியத்துவத்தை யோகரின் சீடர்களே இன்னும் பூரணமாக உணர்ந்தவர்களாய் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

பிற மதங்களுடன் இணைந்து ஒரு தனி முழுமதமாகும் முக்தி நிலையை ஈழத்துச் சைவத்துக்கு இந்த கடைச்சாமியார் - செல்லப்பா சாமியார்-யோகர் பரம்பரையினர் காட்டலாம். முழுமதம் வழிவகுக்கும் சத்திய எழுச்சியை ஏற்கனவே சோல்பரி பிரபுவின் மகனார் விவசாயத்துறைக்குள் புகுத்தியிருப்பதுபோல் நாட்டின் எல்லாப் பாகத்துக்குள்ளும் எல்லாத் துறைகளுக்குள்ளும் வீறுபெற்று எழச் செய்யலாம். சாதி, மொழி, இனம், வர்க்கம் என்று குறுகிய பற்றுக்களைத் தாண்டிச் செல்லும் சத்திய எழுச்சிக்கும் அந்தச் சத்திய எழுச்சி ஏற்படுத்தும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கும் தங்களைப் பூரணமாக அர்ப்பணித்துப் போராட இவர்கள் புறப்படலாம். தாங்களாகவேதான் இவர்களால் செய்யமுடியாவிட்டாலும் செய்யப் புறப்படுவோருக்குத் தங்களின் பூரண ஒத்துழைப்பைக் கொடுக்கலாம். ஞானமற்ற பக்தியால் நாவலரும் நாவலர் பரம்பரையும் கண்மூடிக் கடித்துவரும் சீர்கேடுகளை அகற்றுவது இவர்களே முன்வரவேண்டும். ஞானமற்றோர் வளர்த்துவரும் இனத்துக்கும் கலாசாரத்துக்கும் சமயத்துக்கும் முக்தியைக் கொடுக்கும் தொண்டு யாழ்ப்பாணத்து ஞானப் பரம்பரையினருக்கு உரியது என்பதை இவர்கள் உணரவேண்டும்.

சைவத்துக்கு அந்த முக்தியைக் காட்ட முடியுமானால் அது ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் அரசியல்வாதிகளுக்கு மிகவும் தேவைப்படும் சத்தியத் தனத்தைக் கொடுக்கக்கூடியதாய் மாறிவிடும், வெளிநாட்டுச் சித்தாந்தங்களை அவர்கள் நம்பியிருக்கத் தேவையில்லை. சைவம் தன் சுயபற்றைத் துறக்கத் தயாராகும்போது அது அடுத்த மதங்களக்குரிய சத்தியத்தையும் ஏற்றுக்கொண்டு தன்னையே சத்தியமாய் விரிக்கும். சிங்களப் பௌத்தத்துக்குரிய நிர்வாணத்தைச் சிங்களப் பௌத்தமே தேட விரும்பாது மறுக்கும்போதுகூட முக்திபெற்ற சைவம் முழுமதத்துடன் இணைந்து சத்திய இயக்கத்துக்கும் இலங்கை காட்டக்கூடிய உண்மையான தேசியத்துக்கும் சர்வதேசிய சர்வோதயத்துக்கும் தானே தலைமை தாங்கி நடத்தக்கூடியதாகவும் அது பக்குவப்பட்டுவிடும். சமயத்தோடு சம்பந்தப்பட்ட யாழ்ப்பாணத்து நாவலர் பரம்பரையினரும் ஞானபரம்பரையினரும் இதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவேண்டும்.

இருப்பினும் வெறும் சமயமுக்திகூட சர்வோதயத்தையும் சுயாட்சியையும் தந்துவிடப்போவதில்லை என்பதையும் மறந்து விடக்கூடாது. சமய ஐக்கியம் காட்டக்கூடிய சத்திய நெறிக்கேற்ற வகையில் நாட்டின் எல்லாத் துறைகளும் திருத்தி அமைக்கப்படும் போதுதான் சத்திய எழுச்சியும் உண்மையான சர்வோதய சுயாட்சியும் மலரும். முதலில் திருத்தி அமைக்கப்படவேண்டியவற்றுள் நடைமுறையிலுள்ள சமநாயக அமைப்பு முக்கியமானதாகும். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாட்டை நியாயமானதாக்கி அதன் மூலம் இனம், மொழி, மதம் வர்க்கம் ஆகியவற்றின் கூட்டு ஆணவத்தையும் அறியாமையையும் - கூட்டு "நான்" னை - வளர்க்க நடைமுறையிலுள்ள சனநாயக அமைப்பு உதவுகிறது. இதை மாற்றுவதற்கு கிராமங்கள், நகரங்களுக்குரிய சர்வோதய சத்தியக் களங்களை உருவாக்க வேண்டும். கிராம சுயராச்சியம், நகர சுயராச்சியம், மாவட்ட சுயராச்சியம் என்பவற்றின் அடிப்படையிலேயே தேச சுயராச்சியம் நிறுவப்பட வேண்டும். அதே நேரத்தில் கிராமத்தினதும் நாட்டினதும் பொருளாதார, கல்வி, கலை, விஞ்ஞானம் ஆகிய பிற துறைகளையும் சத்திய எழுச்சிக்கேற்ற வகையில் அடிப்படையான மாற்றங்களைக் காட்டும் விதத்தில் திருத்தி வளர்க்க வேண்டும்.

இவற்றைச் செய்ய முயலும் ஒவ்வொரு தனிப்பட்ட தொண்டனும் தன் முழு வாழ்க்கையையும் இச் சத்திய எழுச்சிக்காகத் தானம் செய்துவிடவும் வேண்டும். தன்னிடத்தே சத்தியத்தை எழுப்பச் சதா முயலவேண்டும். அவனது சமூகத் தொண்டு அவனது ஆத்மீக சாதனையுடன் இரண்டறக் கலக்க வேண்டும்.

நம்நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் முதலில் சுயாட்சி என்பதின் உண்மையான சத்திய அர்த்தத்தையும் அதைக் கொண்டுவரக்கூடிய சத்திய வழிமுறைகளையும் மேற்கூறிய போக்கில் ஆராய முன்வரவேண்டும். அதைச் செய்ய அவர்கள் முன்வருவார்களானால் அவர்களது சுயாட்சி என்பது இலங்கை முழுதுக்குமுரிய சுயாட்சியாகவும் தேசியமாகவும் தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள், பறங்கியர் என்ற சிறு வித்தியாசங்களைக் கடந்த தேசிய ஐக்கியமாகவும் மலரும். அதனால் உலக முக்திக்கும் இலங்கை வழி காட்டுவதாயும் அமையும்.

*****

எதையும் நம்ப மறுப்பதல்ல விஞ்ஞானம்,
நிரூபித்துக் காட்டக்கூடிய வகையில்
நம்பிக்கையை வெளிப்படுத்துவதே விஞ்ஞானமாகும்.

விஞ்ஞானமும் சமயஞானமும்

இன்று விஞ்ஞானம் பழைய சமயங்கள் கூறிய பேர்ஞான எல்லைகளுக்குள் இறங்கவேண்டிய காலம் வந்துள்ளது.

சாதாரண மனிதன் அறிந்துள்ள மனநிலைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட ஒர் உண்மை உண்மையாகவே இருக்கிறதானா?

அதுதான் தற்போதைய உயிரியல்-பௌதிக விஞ்ஞானம் எழுப்பும் கேள்வியாக இருக்கிறதென்று வைத்துக்கொண்டால் அதை மறுத்து விடையளிக்க அதனிடம் ஆதாரங்கள் இல்லை என்பதே முதலில் நாம் கவனிக்கவேண்டிய உண்மையாகும். மாறாக அதை ஏற்றுக்கொள்ளத் தூண்டும் அறிகுறிகள்தான் அதிகமாக இருக்கின்றன, ஆனால் அவற்றைக்கொண்டு மட்டும் மனித அகநிலையைப்பற்றியும் பிரபஞ்சத்தைப்பற்றியும் திட்டவட்டமாகக் கூறமுடியாது என்று விஞ்ஞானம் கருதுமானால் அப்படித் திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கும் வரைக்கும் (சரி அல்லது பிழை என்று திட்டவட்டமாக நிரூபிக்க வரைக்கும்) அதையே எதிர்காலக் கண்டுபிடிப்புக்கும் நிச்சயத்துக்குமுரிய ஓர் ஆரம்பக்கோட்பாடாக (hypothesis) எடுத்துக்கொள்வதை விஞ்ஞானம் மறுக்கமுடியாது. ஏனெனில் அது விஞ்ஞானரீதியாக இருப்பதுடன் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டியாகவும் அதுவே இருக்கிறது. அதை மறுப்பது விஞ்ஞானப்போக்குக்கு முரணானது. ஆனால் இதுவரை விஞ்ஞானம் அத்தகைய முரணான மறுப்பையே விஞ்ஞானப் பார்வையாக கருதிவந்துள்ளது. அண்மையில்தான் மெல்லிய திசைத் திருப்பங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

சடம், சக்தி என்ற பாகுபாடற்ற அடிப்படை ஒருமையை இன்று விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது.

அதே திசையில் அந்தக் கொள்கையை வளர்த்தால் நனவு நிலை (eonciousness) என்பதற்கும் சடம், சக்தி என்ற நிலைகளுக்கும் அடிப்படையில் வித்தியாசமில்லை என்ற நிலையும் உருவாகிவிடும். ஜுலியன் ஹக்ஸ்லி நினைவுகளையும் சக்தி என்று சொல்லலாம் என்றும் அதற்கு (psychergy) மனோசக்தி என்று கூறலாம் என்றும் கருதுகிறார். எல்லாவற்றினதும் இரண்டற்ற ஒருமையை, அத்வைதத்தை அழுத்தும் பழைய வேதாந்தப்போக்கை நோக்கிய பார்வை அது. அப்படியென்றால் நனவுநிலையே பல நாமரூப நிலைகளாக மாறித்தெரிகிறது என்பதும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. இன்னும் தொடர்ந்து அதே திசையில் சென்றால் நாமரூபங்களையும் கடந்த மாற்றமற்ற ஓர் நிலை, நிர்குணநிலை, இருக்கிறது என்பதும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. அதாவது அதை அனபவித்ததாகக் கூறும் அனுபூதிமான்கள் இருக்கும் வரைக்கும் விஞ்ஞானத்தால் அதை மறுக்கமுடியாது. அந்த நிர்குணநிலையே, தானே இன்னும் அனுபவிக்க முடியாதிருக்கும் வரைக்கும், அதற்குரிய வழிமுறைகளைத் தானே இன்னும் கண்டுபிடிக்க முடியாதிருக்கும் வரைக்கும் விஞ்ஞானத்தால் மறுக்க முடியாது. மாறாக இதுகால வரை அது அடைந்துள்ள வளர்ச்சி அந்தத் திசையையே ஆமோதிப்பதாகவிருப்பதால் அதன் எதிர்கால வளர்ச்சிக்குரிய கோட்பாடாகவும் அதையே அது எடுக்கவேண்டியிருக்கிறது.

யாரைத்தான் நம்ப மறுத்தாலும் விஞ்ஞானம் புத்தரை நம்பத்தான் வேண்டும். அவரையும் நம்ப மறுத்தால் அது "விஞ்ஞானப் பார்வை" என்பதையே மறுப்பதாகும். இன்று விஞ்ஞானம் எப்படி எதையும் எடித்த எடுப்பிலேயே நம்பிவிடாமல், எல்லாவற்றையும் ஆராய்ந்து தொகுத்தறிந்து செல்ல முயல்கிறதோ அந்தப் போக்கின் தர்க்கரீதியான வளர்ச்சியையே புத்தர் காட்டுகிறார். மூட நம்பிக்கைகளையும் காலங்கடந்த சடங்குகளையும் ஆதரிக்கும் பண்பு சமயத்தின் உண்மையான பண்பல்ல. அது சாதாரண மக்கள் சமயத்தில் காணும் பண்பாகும். சமயத்தில் உண்மையான பண்பு விஞ்ஞானத்தையும் வெல்லக்கூடிய அதன் பற்றற்ற பார்வையாகும். அது நம்பும் கடவுள் நிலை எல்லாப் பற்றுக்களையும் கடந்தநிலையாகும், வேதங்களையும் தாண்டிச் செல்வதே, தர்மப்பற்றையும் தாண்டிச் செல்வதே, அனுபூதிமான்களின் இறுதி இலட்சியமாகும். எனவே சமயத்தின உண்மையான போக்கைக் கண்டுபிடித்து வளர்த்தால் அதுவே மிக ஆழமான விஞ்ஞானப் போக்காகவும் இதுவரை விஞ்ஞானம் வளர்த்துவரும் மூட நம்பிக்கைகளையும் தீக்கோழிப் பார்வையையும் அனாவசியத் தடைகளையும் உடைத்துச் செல்லும் "பேர்விஞ்ஞானப் போக்காக"வும் மாறிவிடும். சமயத்தின் அத்தகைய பேர் விஞ்ஞானப் போக்கைக் காட்டுபவராகவே புத்தர் நிற்கிறார். கடவுளையும் வேதங்களையும் காரணமாகக் காட்டாமல் ஆராய்ந்தறியக்கூடியவற்றை மட்டும் ஆராய்ந்து தொடுத்தறிந்து அந்த அறிவை அடிப்படையாகக்கொண்டு உய்த்துணர்ந்து, அந்த உணர்வை ஆராய்ச்சிமூலம் நிரூபித்துச் செல்லும் விஞ்ஞானமுறை அகரீதியாகவும் புறரீதியாகவும் வளர்க்கப்படாமல் அது புத்தரின் முடிவையே வந்தடையும். பிரபஞ்சமும் மனமும் சதா மாற்றமடைந்து கொண்டிருக்கும் ஓர் போக்கென்பதையும் (பொருளல்ல) "நான்" என்ற ஒன்று இல்லை என்பதையும் உணர்ந்த விடுதலையாகவே அந்த பேர்விஞ்ஞான ஆராய்ச்சி முடியும். புத்தர் அந்த விடுதலை நிலையையே "நிர்வாணம்" என்றார்.

இன்றைய விஞ்ஞானிகள் எவரும் அந்த நிலையை தங்களளவு அடைந்ததுமில்லை, அடையக்கூடிய மருந்துகளையோ, கருவிகளையே, வழிமுறைகளையோ காட்டியதுமில்லை. (யோக முறைகளுடன் LSD, Mescalin ஆகியவை அந்த நிலையை நோக்கிய வளர்ச்சிக்கு ஒருவேளை காலப்போக்கில் பயன்படுத்தப்படலாம்.)

இன்றைய விஞ்ஞானிகள் எந்தவகையான பார்வையோடு தங்கள் ஆராய்ச்சியை நடத்துகிறார்களோ அதே வகையான விஞ்ஞானப் பார்வையையே தனது கண்டுபிடிப்புக்கும் தேடலுக்குமுரிய பார்வையாக புத்தர் எடுத்திருந்தார். எனவே எதிர்கால விஞ்ஞானம் செல்லவேண்டிய திசையை புத்தர் ஏற்கனவே காட்டி நிற்கிறார். விஞ்ஞானம் தனது எதிர்காலக் கண்டுபிடிப்புக்குரிய ஆரம்பக்கோட்பாடாக நிர்வாணத்தை நோக்கிய ஒர் பார்வையையே எடுக்க வேண்டும். ஆனால் விஞ்ஞானரீதியான பௌத்த நிர்வாணத்தைத் தன் எதிர்பால இலட்சியக் கோட்பாடாக எடுக்கும்போது அந்த "நிர்வாணம்" என்பதன் தர்க்கரீதியான விளைவுகளை அல்லது தொடர் வியாக்கியானங்களை விஞ்ஞானம் தானும் எடுக்கவேண்டி வந்துவிடும். நிர்வாணம் என்பதின் தொடர் வியாக்கியானங்களை புத்தரே ஒப்புக்கொள்ள விரும்பாதவராய், பேசவிரும்பாதவராய், மௌனம் சாதித்தார். ஆனால் அந்த மௌனத்துக்குரிய விளக்கங்களை அவருக்குப் பின்பு வந்த வேறு அனுபூதிமான்கள் தொடர்ந்து தர்க்கரீதியாக, விஞ்ஞானரீதியாக, விளக்கியுள்ளனர். இன்று நிர்வாணம் என்ற கோட்பாட்டை விஞ்ஞானமும் எடுக்கும்போது அந்தக் கோட்பாட்டின் தர்க்கரீதியான விளைவுகளை அல்லது வியாக்கியானங்களையும் அது ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நிர்வாணம் என்றால் என்ன?

அது சூன்யமல்ல. அதைச் சொல்லி விளக்கமுடியாது. மாற்றங்களைக் கடந்த, போக்கும் வரத்துமற்ற, பேர்ஞானநிலை என்றுமட்டும் வசதிக்காகச் சொல்லலாம். வேதாந்தத்தின் விளக்கமுடியாத நிர்குணபிரம்ம நிலை எப்படியோ அப்படியே தான் புத்தரின் "நிர்வாண" நிலையும். ஆனால் வசதிக்காக பிரம்மத்தை சத்-சித் ஆனந்தம் என்று சொல்வது போல் நிர்வாணத்தையும் அவ்வாறு பேர்ஞானநிலை என்று சொல்லிக் கொள்ளலாம்.

அப்படியென்றால் பௌத்தத்திற்கும் அத்வைத வேதாந்தத்துக்கும் வித்தியாசமில்லை என்பதுதான் அர்த்தம். ஒரே உண்மையையே அவை வெவ்வேறு வார்த்தைகளிலும் வெவ்வேறான வழிமுறைகளிலும் விளக்கியிருக்கின்றன.

நிர்வாணம் என்பதை பேர்ஞான நிலையாகக் காணும் போது அதன் தர்க்கரீதியான முடிவுகளை மறுக்கமுடியாதிருக்கிறது. புத்தர் அவற்றை மறுத்ததில்லை. மாறாக அவர் வேண்டுமென்றே அவற்றைப்பற்றி மௌனம் சாதித்துள்ளார். அப்போதைக்கு அது தேவையில்லை என்று அவர் கருதியிருக்கலாம். ஆனால் சங்கரர், நாகர்ஜுனா முதல் கிறிஸ்து, முகம்மது ஊடாக ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர், அரவிந்தர்வரை அந்த மௌனத்துக்குரிய பேச்சுக்குரலைத்தான் காட்டுகின்றனர். இன்று விஞ்ஞானமும் அந்தக் குரல்களைத் தனக்குரிய குரல்களாக எடுத்துக்கொள்ளும் கட்டம் வந்துள்ளது.

எல்லாம் மாற்றமுற்றுக் கொண்டிருக்கும் ஓர் தொடர்ப்போக்கு என்றால் மாற்றமுறாத, போக்கும் வரவுமற்ற, நிர்வாணநிலை எப்படி வரும்?

சங்கரர் பௌத்தத்துக்கு எதிராக எழுப்பிய முக்கிய கேள்வி அது. புத்தரின் மௌனம், குரல் எடுத்துப் பேசவேண்டி ஏற்பட்ட முக்கிய கட்டமும் அதுவேதான்.

மாற்றமுறுபவை மாற்றமுறாத ஓர் நிலையை, நிர்வாணத்தை, பெற்றுத்தரலாம் என்பது தர்க்க வழுவாகும். எனவே மாற்றமுறும் சம்சார ஓட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றமுறாத நிர்வாணநிலை பொதிந்துள்ளது. அதுவே அடித்தளமாகவுள்ளது. அப்படியென்றால் சம்சாரம் எது?

நிர்வாணம் எது? சம்சாரமாய்த் தெரிவது மாயை என்றார் சங்கரர். அவரது கருத்துப்படி இருப்பதெல்லாம் நிர்குணபிரம்மம்தான். நிர்வாணந்தான். இருப்பதெல்லாம் பிரம்மக் கயிறுதான். பாம்பாகத் தெரிவது அதன் மாயை என்றார் அவர்.

சம்சாரமே நிர்வாணம், நிர்வாணமே சம்சாரம் என்றார் நாகர்ஜுனா என்ற பௌத்த தத்துவஞானி. அது புத்தரின் மௌனம் எடுத்த அடுத்த பேச்சுக்குரல். "இதுவல்ல" "இதுவல்ல" என்று ஏறிப்போனால் "இதுவுந்தான்" "இதுவுந்தான்" என்று இறங்கி வரவும் வேண்டும் என்றார் ராமகிருஷ்ணர். மாற்றமுறுவதும் மாற்றமுறாமல் இருப்பதும் எல்லாம் அதுவே தான். பிரம்மமே சக்தி, சக்தியே பிரம்மம். அப்படி இருப்பதே அதன் முழுமையை நிரூபிப்பதாகும் என்றார் அரவிந்தர். எல்லாம் அந்த மௌனத்தின் பேச்சுக்குரல்கள்.

விஞ்ஞானமும் இன்று எல்லாவற்றையும் மாற்றமுறும் சக்தியாகக் காணும் - பேசும் - நிலைக்கு வந்துவிட்டது. பழைய பௌத்தத்தின் புதிய பேச்சுக்குரல் அது இனிமேல் எல்லாவற்றையும், முழுப் பிரபஞ்சத்தையும், பிரம்மமாக - அதாவது நாமரூபங்களையும் கடந்த பேர்ஞானமாக - காணும் பார்வையை அது தனது எதிர்கால வளர்ச்சிக்குரிய கோட்பாடாக எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதுதான் அடுத்த கட்டம், பழைய பௌத்தமே நாஸ்திகத்தையும் ஆஸ்திகத்தையும் கடந்த ஆழமான வேதாந்தமாக மாறும்போது இன்றைய விஞ்ஞானத்தால் அதை எதிர்த்து நிற்கமுடியுமா? எல்லாமே பேர்ஞானந்தான் என்ற கோட்பாட்டை விஞ்ஞானமும் இனிமேல் எடுக்கவேண்டிய கட்டம் இன்று வந்துவிட்டது.

அந்தக் கோட்பாடுகூட ஏற்கனவே போடப்பட்டுவிட்டது என்றும் சொல்லாம். ஆர்த்தர் சி.கிளார்க்கின் "2001, ஒரு விண்வெளி ஒடிஸ’" என்ற நூல் உண்மையில் அந்தக் கோட்பாட்டின் கதையேதான். ஆனால் புத்தர் எவ்வாறு முழுமையின் ஒரு பகுதியைப்பற்றி மௌனம் சாதித்தாரோ அவ்வாறே ஆர்த்தர் சி.கிளார்க்கின் விஞ்ஞானமும் முழுமையின் ஒரு பகுதியை நம்ப மறுக்கிறது. கிளார்க்கின் கதையில் பிரபஞ்ச சக்தி பேர்ஞானமாக பரிணாமமடையும் கட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் பேர் ஞானம்தான் பிரபஞ்ச சக்தியாகவும் பரிணமித்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்வதாய் இல்லை. அது உண்மையான விஞ்ஞானப் பார்வையை இருக்கமுடியாது. பிரபஞ்சசக்தி பேர்ஞானமாகப் பரிணாமமடையலாம் என்றால் பேர்ஞானந்தான் பிரபஞ்ச சக்தியாகவும் மாறி பரிணாமத்தைக் காட்டுகிறது என்றும் நினைக்கலாந்தானே? நிச்சயமாக நினைக்கலாம். நினைப்பது மட்டுமல்ல நிரூபித்தும் காட்டலாம். அனுபூதிமான்கள் அதையே நிரூபிக்கின்றனர். மாற்றமுறும் சம்சாரத்தில் போக்கும்வரத்துமற்ற நிர்வாணம் வரமுடியுமானால் அந்த நிர்வாணந்தான் முழுச்சம்சாரமும், முழுச்சம்சாரமும் அந்த நிர்வாணத்தின் சார்புநிலைத் தோற்றந்தான் என்று பௌத்தமே இன்று ஒப்புக்கொள்ளவேண்டியிருப்பதுபோல் விஞ்ஞானமும் அதை ஒப்புக்கொண்டு அதற்கேற்ப ஒரு கோட்பாட்டை வகுக்கவேண்டியிருக்கிறது. பிரபஞ்சசக்தி பேர்ஞானமாக மாறக்வடியதாய் இருப்பதுபோல் பேர்ஞானந்தான் பிரபஞ்சமாகவும் மாறிப் பரிணாமத்தையும் காட்டிவருகிறத என்ற கோட்பாடு.

அந்தத் திசையில் விஞ்ஞானத்தை இட்டுச் செல்வதே நமது நோக்கமுமாகம். நமக்குரிய ஆதாரங்களாக அனுபூதிமான்கள் விட்டுச் சென்ற அனுபவங்கள் இருக்கிறன்றன. எதையும் நம்ப மறுப்பதல்ல விஞ்ஞானம். நிரூபித்துக் காட்டக் கூடியவகையில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதே விஞ்ஞானமாகும்.


இரவுகள்

ஓ, கண்ணா,
என் தனிமை இரவுகள்
உனக்குச் சமர்ப்பணம்
துணையற்று
உன்னில் நான்
சரண் அடைகின்றேன்.
நெஞ்சை,
என் நினைவுகளை
நீ நிரப்பாய்

உடலின் உபவாதைகள்
இரவின் என்னை வருத்துகையில்
கண்ணா,
உன்னை நான்
சரணடைகிறேன்.

கடலின் அலைகள்
காற்றின் வீச்சு
மலையின் அழகு
நதியின் பெருக்கு
வயலின் கதிர்கள்
எங்குமே நீயென்றால்
எனைவிட்டு
நீ ஓடியதேன்?

இரவின் தனிமையில்
எவருமற்ற நேரத்தில்
சாத்தான் வருகின்றான்
நெளியும் துகில் களைந்து
ஒயில்மேனி அழகு காட்டி
கோலப் பெண்களை
எனைச் சுற்றிக்
கூத்தாட விடுகிறான்.

ஓ, கண்ணா,
திரௌபதை காவலா
திரை விழுத்துகின்றான்
துச்சாதனன்
கண் சிமிட்டும்
மின் விளக்குகள்
கலர் காட்டும்
விளம்பரங்கள்
பழைய பாம்பின்
புதிய தீநாக்கு
பழம் பழத்தின்
புதுத் தோற்றங்கள்
ஓ கண்ணா
எனைவிட்டு ஓடாதே.

மோனத்தில் நிற்கும் மரங்களில்
முகில் விழுந்த வானத்தில்
எங்குமே நீ
என் நெஞ்சைமட்டும் நீக்கிவிட்டு,
என்னில் வெறும் இரவு
இரவில் தனிமை
தனிமையின் பேய் நினைவுகள்
ஓ கண்ணா
எனைவிட்டு ஓடாதே.

காசுக்குக் கோயில்கட்டி
நேரத்தின் கோல்கொண்டு
மேளம் கொட்டுகிறான் அசுரன்
அரக்கு மாளிகை நாகரிகம்
அவனியெல்லாம் அதன் சின்னங்கள்
இருளில்
எனைச்சுற்றி நெருப்பூட்ட
எடுத்து மெதுவாய் அடிவைத்து
பதுங்கி -
பதுங்கி -
அதே வருகின்றான்
புரோசனன்.
ஓ கண்ணா
எனைவிட்டு ஓடாதே.

விசுவகர்மன் வீழ்ந்துவிட்டான்
வெறும்திரை நோக்கி நான் ஓடுகின்றேன்
மாரீசன் மாளிகை
குளிரூட்டி நான் குந்துகின்றேன்
நீள்முடிக் கோபுரங்கள்
நியோன் வெளிச்சங்கள்
நிமிடத்துக்கோர் கோலங்கள்
குலுங்குகின்றன
மினுங்குகின்றன
குலைவெடித்துச் சிதறுகின்றன
நீள் உடல் உழகிகள்
நெஞ்சைத் திருப்பும் சேட்டைகள்
கை காட்டிக்
கால் காட்டி
மெய்சிலிர்க்க வைக்கின்றார்

ஐயோ
நேரம் பார்த்து இராவணனும்
நசுங்காமல் வருகின்றான்
இலக்குவனைக் காணவில்லை
ஓ கண்ணா
என்னைவிட்டு ஓடாதே

துயில்கொள்ள முடியவில்லை
திரிசடையும் செத்துவிட்டான்
இரவின் தனிமையில்
என்னைச்சுற்றி அரக்கியர்கள்
கொல்ல வருகின்றார்
கூக்குரல் போடுகின்றார்
தின்ன வருகின்றார்
தீவிழி காட்டுகின்றார்
சுற்றி சுற்றி என்னையே
தொடை தட்டித்
தோள் கொட்டி
இரையாகி விட்டேனென்று
நெருங்கி வளைக்கின்றார்
ஓ கண்ணா
எனை விட்டு ஓடாதே.

ஓ கண்ணா
துணையற்ற என் இரவுகள்
உனக்குச் சமர்ப்பணம்
உன்னை நான்
உன்னை நான்
சரணடைந்தேன்
நெஞ்சை
என் நினைவுகளை
நீ நிரப்பாய்.


போர்ப்பறை

எனக்குள்ளே
விபீஷணனின் குரல் கேட்கிறது.
இப்போ முன்பைவிட அதிகமாகக் கேட்கிறது.

அனுமனின் தீப்பற்றிய வால்
தென்னகரில் கொழுந்தேற்றிய போதே
"ஆபத்து" என்றேன் நான், ஆத்திரத்துடன்
"யாருக்கு"? என்றான் நான், ஆத்திரத்துடன்
மெல்லத்தான் கேட்டான் வெளியே தெரியாமல்
"யாருக்கா? தென்னிலங்கைக்குத்தான்"-என்றான்
நான் சினந்து விழுந்தேன்,
அவன் சிரித்தான் "தென்னிலங்கைக்கு ஆபத்தில்லை,
அது வாழப்போகிறது
வருகிற ஆபத்து இராவணனுக்குத்தான்
இராவணனுக்கும் அவனைச் சார்ந்தாக்கும்"

"நீ அவனைச் சாராதவனா?"

"நான் அடுத்த பக்கம்" என்றான் அவன்
"அசோகவனத்தில் அழுவள் பக்கம்"

"துரோகி! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்!
காட்டிக் கொடுப்பவன்! "கயவன்" - நான் கத்தினேன்.

"இரவல் குரல்களில் ஏன் இரைகிறாய்?
இந்திரசித்தனும் இராவணனும்
விழுங்கிவிட்டார்கள் உன்னை
கோட்டை கொத்தளங்களுக்கும்
மாடமனைகளுக்கும் பட்டம் பதவிகளுக்கும்
விட்டுக்கொடுத்து நீ உன்னை விற்றுவிட்டாய்
உன்னை வாங்கியவர்கள் இப்போ உன் குரலில்
என்னை வைகின்றார், நீயல்ல.
விட்டெறி இவர்களை
ஆழப்போ, அசோகவனத்துக் குள்ளேபோ
இவர்களைத் தாண்டி அவளைக் காண்பாய்
அப்போ உன்னையும் காண்பாய்.

அப்போது, அதை நான் நம்பவில்லை
அவனும் என்னுடன் அதற்குப்பின் கதைக்கவில்லை.

நான் விற்கப்பட்ட பொருளாகும்
என்னை விட்டவன்
என்னை வாங்கியவனுடன் சண்டையிட்டான்

என்ன துணிசசல்!
முன்பு என்னிடம் சொல்ல மனமற்றவன் போல்
மெல்லக் குசுகுசுத்தவன்
இப்போ துணிந்துவிட்டானே!

மந்திரலோசனை மண்டபத்தில் மந்திரியாரும் வீற்றிருக்க
சேனைத்தலைவர்முதல் சிறிய ஏவல் வீரர்வரை
பார்த்திருந்தோர் திகைகப் பகிரங்கமாப் பேசினானோ!

ஆபத்து ஐயா உனக்கு
உன் அரசும் இனிப்போச்சு
விட்டுவிடும் அவளை
வீரத்துக்கும் அதுவழகு
கெட்டீர் மறுத்தால் கிளையோடு
வரப்போறான் அவன், நான் அவன்பக்கம்
உண்மை எதுவோ, அதன் உருவே அவன்
அதன் பாங்கே நான்
சோற்றுக்கும் சீலைக்கும் சரண் அடைபவன் நானல்ல
சொல்லிவட்டேன், குறைவேண்டாம் பின்பு
தீப்பட்ட அனுமன்வால் தீண்டியது அப்போதா?
கூட்டமாய் எழுந்து அவர்கள் கத்தினர்.

"துரோகி! உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்பவள்! காட்டிக் கொடுப்பவன் ! கயவன்!"

இராவணன் மட்டும் வீற்றிருந்தான் விலாப்புடைக்கச் சிரித்தவாறு.

விபீஷணன் கூறியது எவ்வளவு உண்மை
நான் எடுத்த குரல் அவர்களுடையது
அவர்கள் எடுத்த குரல் அவனுடையது
அவன் ஏக முதலாளி
இராவணன் வாங்கிவிற்கும் பொம்மைகள் நாம்
பத்துத்திசையும் அவன் தலைகள்
எங்கும் அவன் குரல்கள், இயக்கும் அவன் கரங்கள்
வாங்கியவன் சிரிக்கிறான்
விற்கப்பட்டவர்கள் வீரம் பேசுகின்றனர்.

"துரோகி! காட்டிக்கொடுத்தவன்!"
அவர்கள் தொடர்ந்து கத்தினர்
மன்னனின் மரியதைக்கு இலக்காகுவதே அவர்கள் இலட்சியம்
சோற்றுப் பிண்டங்கள்
பிண்டங்கள் வளர்த்த பற்றுக்கள்

நானும் நகர்ந்தேன்.
அவைக்களத்து ஆசாபாசங்களும்
முதுகுசொறிதலும் முகஸ்துதிப்பேச்சுக்களும்
வீரப்பிரதாபங்களும் வீம்புச்சண்டைகளும்.
அசோகவனத்தின் அழுகையை மறைக்கவில்லை
பூச்சைக் கிழித்த விபீஷணன்
என் போக்கையும் மாற்றிவிட்டான்
நானும் நகர்ந்தேன்
எனக்குள்ளே இடமாற்றம்.

2

விபீஷணனின் குரல்!
திரும்பவும் அவன் என்னோடு தொடர்புகொண்டான்.

நகர்வு நல்லது
ஆனால் அது இடையிலும் நிற்கலாம்
அரைகுறை யாத்திரையால் ஆபத்து அதிகம்
கவனம்,
சொற்றொடர்கள் ஏமாற்றும்
சுலோகங்கள் வழிமறைக்கும்
பற்றுக்கள் வழிமுறைக்கும்
பற்றுக்கள் ஏமாற்றும்
பாசங்கள் திசைதிருப்பும்
பத்துத் தலைகளும் இருபது கரங்களும்
திக்கெல்லாம் தேடிவரும்
ஒளிக்கமுயன்றால், அது அவர்கள் அணைப்பில்
ஒத்தோடுவதாய் முடியும்
மறுப்பும் நடிப்பாகும்
அமைப்பும் அங்கீகரிக்கும் அழகுப்பொருளாகும்
இருபதுகரங்களில் அதுவும் ஒன்றாகும்
கவனம்
எடுத்த பயணம் ஸ்தலத்தில் முழுமைபெற
இடைத்தரிப்புக் கூடாது
எதிர்ப்பு ஓங்கட்டும், புரட்சி மலரட்டும்
தூரத்து ஓசைக்குக் காதைக் கொடுத்து
கடுக நடக்கவேண்டும்
கடலுக்கு அப்பால் படைதிரட்டி வருகிறான்
கடலையும் கடக்கிறான்
எதிர்சென்று அழைக்க
நகர்வு நடக்கட்டும்
இடைத்தரிப்புக் கூடாது.

3

தூரத்து ஓசை என் காதுக்குக் கேட்கவில்லை
ஆரம்ப நம்பிக்கையும் அரைகுறையாய் வற்றிற்று
அசோகவனத்திலும் அரக்கியர்தான் இருந்தார்கள்
அவளை நான் காணவில்லை
அழகு இடைகள், அழைப்புவிடுக்கும் அசைவுகள்
கொங்கை தாங்கிகளுக்குள்
தொங்கிவிழும் கோபுரங்கள்
வெளிறியதோலை மறைக்க எழும் பூச்சுக்கள்
ஊனின் உயிர்வாழும் ஒட்டுண்ணி ஆசைகள்
மனதை மறைக்கும் மாயப்படைகள்
அத்தனைக்கு அப்பாலும்
ஊடுருவ முடிந்தும்
அவளை நான் காணவில்லை
திரிசடைமட்டும் தெரியக்கண்டேன்
அவளுங்கூட விபீஷணனின் உருவே!
ஒருவேளை, அழுகுரலும் அவள்குரலோ!
விபீஷணன்தான் விளையாடுகின்றானோ?
இல்லாத ஒன்றை இருப்பதாக ஏய்க்கிறானோ?
மாரீசனைவென்ற மாயக்காரன் அவனோ?
காத்திருந்து எழுந்தது ஓர்குரல்
காதுக்கு அது மிக, லேசாகவும் கேட்டது
எதுக்கு இந்தக்கனவு என்றிற்று அது
அசோகவனத்தில் அழுங்குரல் மாயை
நமக்கு அப்பால் யாரும் இல்லை
பார் அரக்கரின் பெருமையை
போர்க்கருவிகள், போகவசதிகள்
அடுக்குமாளிகைகள், அழகுசுந்தரின்!
வாழத்தெரியாதவர்கள் போடும் தத்துவத்தில்
வாழ்க்கையின் சுகங்களை தீய்ப்பது பேதமை
போகத்தை வெறுத்தாலும் வீரத்தை மறக்காதே
மாயைக்குரலுக்கு மானத்தை விற்காதே
விடு கனவை, எடு வில்லை
பத்துத்திக்கும் பரந்துநிற்கும் யதார்த்தத்தில்
காலைவைத்து வில்லை வளை
கடலுக்கு அப்பால் வெறும் "கடதாசிப்புலி"

நான் தத்தளித்தேன்
திக்குத் தெரிந்தும்
செல்லத்துணிவின்றி, செய்யத் தெரியாது தத்தளித்தேன்.

தண்­ரைவிட்டுத் தரைக்குப்போவது
ஒருயுக வளர்ச்சியாம்
விபீஷணன்தான் தூண்டினான்
ஆனால் தனியே செல்வதென்றால்?
ஒத்தோடுவதின் ஓராயிரம் சுகத்தை
நான் விரும்பிச் சுவைத்தேன்
ஆனால் விபீஷணனும் விடவில்லை.

கோழைத்தனத்துக்கு மானம் பெயராமோ?
அவன் நேரம்பார்த்துச் சிரித்தான்
ஈயின் போக்குக்கு வீரமா பெயர்?
மலத்திலும் குந்தும் மலரிலும் குந்தும்
இலையான்போக்கு எதையும் சேராது
நீ அரக்கனுமல்ல மனிதனுமல்ல
சொன்னேன் ஏற்கனவே
ஸ்தலத்தைக் காணா இடைத்தரிப்பு
எதிர்ப்புமல்ல, ஏற்புமல்ல!
கவனம்,
சுலோகங்கள் ஏமாற்றும்
ஒத்தோடும் போக்கு உனக்குப் பிடிப்பென்றால்
உன்மையும் அழிந்திடுமா?
அவள் இருக்கிறாள், அது உண்மை
அவனும் வருகிறான், அதுவும் உண்மை
பார் எங்கும் அவன் பேர் எழுப்போகுது
நீயும் அவனை ஏற்கத்தான் போகிறாய்
தவிப்பு வெறும் தாமதமே
தவிப்பைவிட்டுத் தயார்ப்படுத்து.

4

நான் சாட்டுக் காட்டினேன்
சாட்டுக்காட்டித் தப்பிவிட முயன்றேன்

மலத்தைவிட மலரில்தான் எனக்கு விருப்பம்
ஆனால் மானம்?
இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து
இருப்பதை இழப்பது வீரமா?
எதிர்ப்புச் சரியென்பது என்ன நிசம்?
சரியென்று நிரூபி
நான் உனக்காய்ச் சாகவும் தயார்!

அவன் சிரித்தான்
சரியும் பிழையும்!
தம்பி, இது தர்க்கத்துக்கு அப்பால்பட்டது
கேள் சரித்திரத்தை-
மூக்கும் மார்பும்
சூர்ப்பனகை இழந்தபோதே
உன் ஆசையும் அறுந்தது
அப்போதே அவன் நாமமும் எட்டிற்று
அது உனக்கு விளங்கவில்லை

சின்னத்தோற்றத்தில் சென்ற மாரீசனம்
செத்துக் குழறினானோ
அதுவும் உன் எஞ்சிய ஆசையின்
ஈனக்குரலேதான்
அப்போதே அவன் அம்பு
உன்னுள்ளும் பாய்ந்திற்று
நீதான் பார்க்கவில்லை

ஆனால் பார்த்த நேரமும் ஒன்றுண்டு
கேள் அதையும் சொல்கிறேன்

வகையாக எய்த அம்பை
வாலி பார்த்தானே
அப்போது நீ பார்த்தாய்
அவன் நாமம், அவன் தோற்றம்
அத்தனையும் கண்டாய்
ஆனால் மறந்திற்றாய்
ஆசை அறுந்திற்று, ஆணவம் விடவில்லை

ஆனால் அதை அவனும் விடவில்லை
தீப்பற்றிய அனுமன்வால் தென்னகரிலும் பட்டிற்றே,
அப்போதே அதன் அழிவும் தொடங்கிற்று.
அன்று உனக்கு ஆத்திரந்தான்
அதேவேளை அன்றுதான் என்குரலும்
எழுந்திற்று, நினைவிருக்கா?

நான் யார்?
அவள் தொண்டன், அவன் தாசன்!

சரி, நீ நம்பவேண்டாம்
சரியும் பிழையும் தர்க்கநியாயங்களும்
மானமும் வீரமும் உண்மையை நிரூபிக்கா
அவை ஊன் அறுத்த சூர்ப்பனகை
உருவாக்கிய தோற்றங்கள்
ஈரைந்து தலைகளும் இருபது கரங்களும்
ஏந்திநிற்கும் சுலோகங்கள்!
சுலோகங்கள் அழிவதற்கும் சுலோகங்கள் உண்டு
மேலெழுந்து வருகின்றன இராமனின் படைகள்
கூக்குரல்போடும் குரங்கொலி கேட்கிறதா?
சுலோகங்கள் தீய்க்கும் சுலோகங்கள் அவை
அரக்கரை அழிக்கும் அகத்தியர் அவை
மூங்கில்திரை மறைக்கும் வேங்கைப்புலிகள்
கடதாசிப்புலி கிழித்த அவதாரக் குரங்குகள்
எள்ளிருக்க இடமின்றி எய்துகொல்லும் நாளன்று
தர்க்கநியாயங்களும் தகர்ந்து எறிபடும்
அவற்றின் தகனமோனத்தில்
அண்ணல் தரிசனமும் அவளோடு ஆகும்

அதுவரைக்கும் தயார்ப்படுத்து!
உம், அதற்காகத் தயார்ப்படுத்து!


** இதன் தொடர்ச்சி PORPARA6.MTF ல் வருகிறது**