கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வசந்தம் '91

Page 1
நட்சத்திரன் செவ்விந்தியன் என்ற புனைபெயரில் சரிநிகர் பத்திரிகையூடாகத் தமிழிலக்கியத்துக்குள் புதுக்காற்றாக வந்திருப்பவர் அருணோதயன் வயது 20. இப்போதுதான் கல்விப் பொதுத் தராதரப் பத்திர 独 உயர்தர வகுப்பில் இருப்பவர்
90களின் ஈழங்கவிதைக்கு வளம் சேர்க்கும் நட்சத்திரனின் கவிதைகளில் ஓ துர்வின் படிமங்களும் சிந்தனையின் படிமங்களும் புத்தகால வாழ்வின் யதார்த்தத்தோடு பின்னிப் பிணைந்துள்ளன. பல கவிதைகள் புகழ்பெற்ற ஒல்லாந்து 8i Life ஓவியங்கள் போல உறைந்துபோன் வாழ்க்கைக் கோரங்களைச் சித்தரிக்கின்றன.
எல்லோருக்கும் தெரிந்த நாளாந்தத் துண்டு துண்டு வாழ்க்கை அனுபவங்களையும் நிகழ்ச்சிகளையும் கவிஞர் கோர்க்கிறபோது கிடைக்கிற அனுபவம் வித்தியாசமானது தனிமை, துர் இழப்பு அலுப்பு சன்ப்பு கடந்த காலம் எஸ்ஐாம் இயற்றகர் பின்னின் வரையப்படுகிறது.
ஜூன் மாதம் 1990 இற்குப்பின்னரே இரண்டாவது ஈழப்போர்னி விளைவுகளின் இன்னொரு வகையான கவிதைச் சித்தரிப்பு இது.
- as LIII
 
 


Page 2

演méggefogléand
I6, QIĘ ĮPIÙ

Page 3
VASANTHAM '91
(A Collection of Poems)
by NADCHATHTHIRAN
CHEVVINTHIYAN
First Edition
April 1994
Type Setting
Shyamala Navarôtnam
Design & Layout
K. Navam
Cover Picture
Kay HaSSan
Copy Right
Author
Price
Cdn S200
Second Publication
Of
Nankavathu
Parimanan
l565 Jane Street
P.O. BOX 3455
TOTOntO, OntaII lO CaIhaCda M9N lRO
 
 
 
 
 

இந்நூல்
வசந்தா அண்ராவுக்கும் சிண்ண அண்ராவுக்கும்
அத்துடன் செ. யோகராசாவுக்கும்

Page 4
வசந்தம் 91
வெறுமைக்குத் திரும்புதல்.5 மீட்சி.6
நகரத் தனிமை.7 பிரிந்து போனவர்கள்.8 குறை மாதங்கள்.10 அமுங்கிப்போன மாலை.
உயிர்த்தெழுதல்.12 இந்த வசந்தம்.14 கடக்கப்படாத எல்லை.15 பிரிவுத் துயர்.17
நகரம்.18 வேனிலிலிருந்து கூதல்வரை.19 மைம்மல்.20 மந்துபத்தின நாட்கள்.22 காடு.23 ஷெல் குத்துதல்.24 இரத்மலானை-ஜனவரி.26 கொக்கட்டிச்சோலை.27 எப்போதாவது ஒருநாள்.28 Nostalgia.31 வேட்டைக்காரண்.32
 

என் முன்னாலேயே வழுவிப்போகும் நேரங்களைப் பற்றித்தான் சித்திரை வைகாசி கெட்ட வெய்யிலைப்பற்றி தவறவிட்ட சந்தர்ப்பங்களைப் பற்றி தடுக்கமுடியாமல் அவை சீறிக்கொண்டு உள்ளிடுகின்றன.
ஒன்றும் செய்யாமல் காலம் தொடர்ந்து போவதாய் நான் கவலைப்படுகிறேன். புத்தகங்கள் கிடையாதநேரம்
இழுத்திழுத்து அடிக்கப்படும் கடகடப்பு.
- 1991

Page 5
இரவில் பெய்த மழைக்கு
ாலையில் தாவரத்தில் சிந்திக்கொண்டிருப்பதைப்போல மெதுவான இடிமுழக்கங்களுடன் கொஞ்சமாகவும் தூறிக்கொண்டிருப்பதைப்போல ஆனால் இருள்கிற நேரத்தில்
ான் படுத்திருக்கிறேன்.
இரவில் தாங்கள் நனைந்ததற்காக மழைக்குப்பிறகு மாலையில் காகங்கள் கரைகின்றன
ந்த நாள் எனக்கு நெருடுகிறது னது கிராமத்து ஊருக்குப் போகவும் முடியாது இந்த நனையலில் தடம் பதிக்கவும் முடியாது.
ழுங்கைகளில் னது மழைக்கால நினைவுகள் ந்திக்கொண்டும் வதைபட்டுக்கொண்டும் மணலில் கடச்சுட நனைந்துகொண்டும்
றையத் துக்கங்களையும் னைந்து வழிந்து சந்தோஷிக்க முடிகிறது.
1991 -ܝ
 
 
 
 
 
 
 
 
 
 

ஊரில் இல்லாத
கொடிய தனிமையினை
இப்போது நான் உணருகிறேன்
ண்பர்களுக்காக அல்லது ஒருவருக்காகவேனும் அவர்களைக் கானுவேன் என்று
யணம் செய்தேன். மாலை வெய்யிலில் நடந்து திரிந்தேன்.
ரளசரோடு நடக்கக் கஷ்டமாய் இருந்தது டற்கரை ஒழுங்கைக்குள் தள்ளாடித் தள்ளாடி அறைக்குப் போனேன்.
1991 -م

Page 6

காட்டுக்காகம் உச்சிக் கிளையில் வந்திருந்தது ன்றாய்ச் சேர்ந்த துயரங்களுடன் இயக்கத்துக்குப் போனவர்களில் ஆனையிறவிலும் மணலாற்றிலும் செத்துப்போக
ான் மட்டும் ரு வலிய சாவுக்காகக் காத்திருக்கிறேன்.
- 1991

Page 7
ழுதி படர்ந்த அலைச்சலுக்குப் பிறகு மெல்லிரவில் வீட்டுக்கு வந்தேன்
தைந்து புதைந்து உழக்கினாலும் காற்று சரித்தது.
ாற்றில் பழுதான வீதி வ்வளவுதூரம் சைக்கிள் ஓடுவது டிக்கொண்டிருந்தாலும் அது கிடைக்குமா? டிக்கொண்டிருப்பதில் நிம்மதியா தோ இக்குட்டையில் கிடந்து கிடந்து ஊறுகிறேன்.
ழன்று அடித்த காற்று
த்தனை நாட்களும் பகலும் மாலையும் வ்விடத்திற்கு உழக்கி உழக்கினாலும் அவனில்லை.
ங்கால்
டல் அரித்து அரித்து ஏறுகிறது மண்ணும் கல்லும் சொரிய
ாதங்களையும் நனைக்கும் நாள் நெருங்குகிறது ருங்கின இரவில் தினமும் நித்திரை கொள்கிறேன்.
சொல்கிறதைச் செய்கிற
ரா ஆமிக்காரர்களைப் போல இப்போது மெளனமாகிவிட்டேன்.
1991 سے
 
 
 
 
 
 
 
 
 

மாலை வெய்யில் மங்கிக்கொண்டு போகிறது
ரயர் ஊரிக்கல்லில் எழுப்பும் ஒலி கேட்கிறது.
- 99.
11

Page 8
இன்று மீண்டும் புத்துயிர்த்தேன்.
இயேசு பிரானைப்போல
மப்புக்கொட்டி துக்கம் சொரிந்தது எனக்காக மழை தகரத்தில் அடித்துக்கொண்டு பெய்து என் அறையில் சில புத்தகங்களையும் நனைத்து
 
 

எழுதிக்கொண்டிருக்கிற நாவல் இந்நாட்களில் தொடர்ந்து போகாது நாவலில் 19ம் நூற்றாண்டு வீதியிலிருந்து ட்ராம் வண்டிகள் ஓடின சத்தம்
1991 س
13

Page 9
இந்தக் கடற்கரையில் இப்போ நாங்கள் முகருகின்ற சோகத்தை முகர்ந்துகொண்டுதான் போனார்கள்
ரந்த கடலில் நமது சோகம் ஒரு அலையேனும் ஆகாவிட்டாலும் இப்படிச் சொல்லச் சிரமமாயிருந்தாலும்
யுத்தத்தில் நாங்கள் வெல்லத்தானே வேனும்
மனச்சாட்சி உறுத்துகிறது
அலைமுறியும் கடற்காற்றில்
ருத்த மணல்கள் கால்களில் விழுகிறது.
1991 -س-
 
 
 
 

இருந்தது எனச் சொல்கிறார்கள்
ரு மாதத்திற்கு முன்னால் கடந்தவர்களும் இருக்கிறார்கள்
செக்கரில், தோல்வியில் விட்டு நினைவுகள் துழாவுகின்றன
ல்லாவற்றையும் எழுத முடிகிறதா என்ன
இன்றைய காலை விழிப்பில் அதிகமாய் அமுங்கிப் போனேன்
ருபது நாட்களாக இங்கு தங்கியிருந்தேன் ரு ஒற்றையடிப்பாதையைத் தானும் ண்டடையவில்லை
ஊருக்குத் திரும்பி என்னத்தைச் சொல்வேன்
ல்லறை கட்டி எழுதியும் விட்டிருப்பார்கள் ந்நாளில் அதில் பட்டி மரங்களும் மண்டி
15

Page 10
“காட்டு வழியாய் எல்லையைக் கடந்தவன்; இந்நேரம் தூரதேசத்தில் படித்துக் கொண்டிருப்பான்; கெட்டிக்காரன்; இனிதேசத்துரோகி”
இன்னமும் ஆபத்தான எல்லையைப் பற்றியே இரவில் கவலைப்படுகிறேன்
மிதிவெடிகளுக்கும் ஆட்காட்டிக் குருவிகளின் சிடுசிடுப்புக்களுக்காகவும் தேசத்துரோகிகளுக்கு விழும் அடிகளுக்காகவும் என் ஜீவனே இரவில் பயப்படுகிறது
பகலில், ஒரு பீடி இழுக்கிறதைப் போல எல்லாம் செய்யலாம் போலுள்ளது
எல்லையோரக் காடுகளில் கரிகொண்டு, பல்துலக்கி நாள் கழிகிறது சாவும் போரும் நகர்கிறது
- 1991
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொள்ளப்படாமலே போன நித்திரைத் துயருடன் இப்போது படுத்திருக்கிறேன் துரதேசப் பயணங்களின் பின்னால் நாண் பிரிந்துபோவது உறுதியாகிவிட்டது
வேற்று வீட்டுத் தலையணைக்குப் பிறகு வினி வடித்துச் சக்குப் பிடித்துக் காய்ந்த மணத்திலும் கசங்கி ஊத்தையாகிப் போன பெற்ற்றிலும் பிரிவுத் துயரில் கொஞ்சிக் கரைந்துகொண்டிருக்கிறேன்
இனியான, நித்திரைக்குப்பின் முழிப்பில்
ஒரு சரிக்கட்டின காற்று வீசாத காகம் கரையாத சோகம் அப்பியறைந்த அமைதியில் சாரத்தோடும்,
நிம்மதியோடும் புறப்பட்டுவிடலாம்.
1991 سم
17

Page 11
நகருக்குள் எனக்கு பீலிசம் வந்தது கிஞ்சித்தும் பச்சை மரங்கள் இல்லாத பாதையோரங்களில் சிவப்பு நீலம் மஞ்சள் கனலும் கடைகளில் கவிதை நசிந்து உருகி ஆவியாகிப் போயிற்று அது நடந்து கனகாலம்
எஞ்சியுள்ளவைகள் மழைநாட்களில் வழிந்தோடும் குறுக்கொழுங்கைகள். கடல் பின்னுக்கு இருக்கிறது
ஒருநாளும் வரக் கிடைக்கவில்லை
- 99
 

பருவகாலங்கள் ஒழுங்காய் வருதல்கண்டு இப்போ நினைவுகொள்ள முடிவதில்லை.
சந்த ஏற்றத்துடன் முனனைய பருவகாலங்கள ஏக்கம் தருகின்றன
ஓராண்டுக்கு முன் அதற்கும் ஓராண்டுக்கு முன் ஏப்பிரில் காலத்து வெய்யில் கருகத்தொடங்கிய புல் இறங்கிச் சென்றது கிணற்று நீர்மட்டம்
இன்றுடன் பன்னிரண்டு மாதமும் அதற்குக் கூடவும் Gil HAS GUIs L60 கடும் வெய்யிலில் காற்று அசையவில்லை அங்கிருக்கப் போவது இனிய தனிமை அல்ல.
- 99.
19

Page 12
ரீயூசன் முடிந்தது கொஞ்சநேரத்துக்குக் கதைத்தோம் Exam - 9) bl diedT 96GOGDLIT கோரமாய் அனல் தெறித்தன மதில்கள் எதிர்நின்று தொடராகக் கதைக்கிறோம் முகங்களை அடுத்து நேராய் மைம்மல் விதி
நிறம் என்னால் சொல்ல முடியவில்லை பிரச்சினைகள் பலதும் கலந்த மைம்மல் எல்லாவற்றையும் விலக்கிக்கொண்டு முன் செல்லலாம் என நினைத்தோம் வியர்வை உழல்கிற முகங்களில் மனிதர்கள் ஏன் கவலை கொண்டார்கள் என நினைத்தோம் கண் உட்சென்ற மனிதர்களும் சொக்குக் குழிந்த மனிதர்களும் குத்துமயிர்கள் அருவருக்கும் தாடைகளும்
 

இப்போது எல்லாம் புரிகிறது பிரச்சினைகளில் மைம்மல் நிம்மதி தருகிறது இனி எங்கள் முகங்களிலும் சொரியப் போகும் வியர்வை மைம்மல் காற்றும் அமைதியும் குளிரச் செய்யும்
மைம்மல் ஏதாவது சொல்கிறது நிம்மதி, திருப்தி ஓடுதல், நீந்துதல் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு
இருள் சங்கமம் ஆகிறது
- 99
21

Page 13
இன்றைய சூரியனும் அஸ்தமிக்கிறது செம்மஞ்சள் சூரியன்
காலையிலிருந்து கழுவாத எண்முகத்தில் அதன் செம்மை கவிந்தது
வீதியால் பள்ளமான ஒழுங்கைக்குள் இறங்கிப்போய் கொஞ்ச நேரம் விளக்கில் இருப்பேன் பிறகு சொற்பமாகச் சாப்பிட்டுவிட்டுப் படுப்பேன்
1991 س
 
 
 
 
 

நீண்ட நேரம் அமர்ந்தமர்ந்து தூறியது மருதமரங்கள், காயா, வஞ்சூரன், பனிச்சமரங்கள், கொய்யா இவற்றில் வெண்மை படிந்தது பழங்காலக் கோவில் மணியும் சனங்களுக்காகவும் கனகாலம் இருந்த தனிமைக்காகவும் சிணுங்கியது
தாளிலிலிருந்து பறையை இறக்கி கொஞ்சம் புக்கைக்காக பறையன் இருந்துவிட்டு றையை எடுத்துக்கொண்டு குனிந்து போனான்
மண்ணில் புதைந்து வந்தேன் நான் இக்கங்குல்காலத்தில்
ஈனஸ்வரத்தில் பூனை அழுகிறமாதிரி மயில்கள் அகவுகின்றன.
- 1991
23

Page 14
ரவில் தானே எல்லாம் களைகட்டுகிறது ன்று பகலில் ஷெல் பட்டிறந்த குடும்பத்தை
வப் பெட்டிகளில் காவிச்சென்றோம் னக்கு அழுகை வரவில்லை
ரவில் தானே எல்லாம் களைகட்டுகிறது
எல்லா
 

; சிதறிப்போன அந்த உடல்கள் வந்து போகின்றன
மாலை முகம் கழுவும்போது சவங்களின் விதைகளும் யோனிமடல்களும் நள்ளிரவில் சவங்கள் எண்முன்
எழுந்து நின்றன கால்கள் இல்லாது குறியில் தாங்கி நடந்தன தன் துயரத்தையும் வேதனையையும் வாய்திறந்து காட்டியது ரத்தத்தைப் பற்றி நீ கனவு காண்கிறாய் என்றது
பகலுக்கு என்ன தெரியும்.
| 99 -س
25

Page 15
ழிதவறிப்போன
ஆளைத் தவறவிட்ட அலைச்சலோடும் வெறுப்போடும் வந்தேன் சதுக்கம் மாறியும் தண்டவாளத்திலும் கால்களை வைப்பதில் தடுமாறினேன்
துங்குகிற கையிலிருக்கிற ஒரு துண்டு பானுக்காக
இரவில் சிங்கள விட்டுவாசலில் நாய் ஒருபோதும் குலைக்காத -எலும்பு தெரிகிற பார்த்துவிட்டது மற்ற கறுப்பு நாயை பையைக் கிட்டவந்து முகர்ந்துவிட அனுமதித்தது ஒரு துண்டு எறிந்தேன் பாணை அது மணந்ததை என்னைப் பார்ப்பதை கொஞ்ச நேரம் பார்த்தேன்.
- 1992
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய தலைப்புச் செய்தி ; 166*தமிழர் கொக்கட்டிச்சோலையில்
அகோரக் கொலை
என்னை ஒன்றுமே செய்யவில்லை. நாளைக்கும் பரீட்சை நடக்கும் இன்றிரவுக்கு நான் படிப்பேன்
எத்தனை மோசமான காரியம் நடந்து விட்டது மனம் விக்கிக் கரைந்திருக்க வேண்டும் அந்த நேரம் எந்தப் பின் கதவைப் பற்றிச் சிந்தித்திருப்பீர்கள்.
உங்கள் வீட்டில் இப்படி நடந்தாலும் வெய்யிலில் நிழலில் நின்றாலும் அனல் வீசும் உங்கள் தெருவில் நாய்ப்பீ கரைந்து ஓடும் மழை நாளில் உங்கள் தெருவில் இப்படி நடந்தால்
எந்தப் பின் கதவு திறந்திருக்கிறது? அந்தப் பெரிய ஆண்களும் சிரிக்கிறதைப் போல விக்கி விக்கி அழுதார்கள். மார்பு மயிரிலும் கள்ளுமண்டி வெண் கறுப்பு மீசையிலும் கண்ணிர் படிய அழுதார்கள்.
- 1992
27

Page 16
அறையில்
நான் மட்டும் தனித்து மைம்மலைக் கலைத்து லைற் போட்டிருக்கிற நாட்களில் காட்டு ஊரின் விதிகளில் நடக்கிறேன்.
கல்லொழுங்கை, மதகுகள் அலம்பல், வெற்று மாட்டுவண்டில்கள் ஆட்டிக்கொண்டு போகும்
சிமியா
தார் றோட்டிலிருந்து இறங்கிவந்து கொஞ்சம் கொஞ்சமாக குரங்குகளைப் பார்த்துக் கடத்தல் பிஞ்சில் சப்பிக் கெடுத்த கொய்யாமரங்கள் உழுதுபோட்டிருக்கிற வயல் - அதற்கூடாக ஒற்றையடிப்பாதை வளைந்து போகும் வீதியோரத்தில் பட்ட தென்னம் வட்டுக்கள் வயல்பாலத்தில் வளர்ந்திருக்கிற அலரி, பக்கத்தில் மணல் பாதை புதைந்து ஓங்குகிறது கார்காலத்தில் ஆறு ஓடும் கிளுவையும் ஈச்சையும்தான் எனக்குப் பெயர் தெரிந்த மரங்கள்
 

2
நடந்து வருகிற கிழவன் கொப்பாவைப் போல கனகாலத்துக்குப் பிறகு சொல்லிக்கொண்டு போகிறான் பாதையை மறித்துக்கொண்டு நிற்கும் ஒரு ஊர்மாடு
உதிரி உதிரியாய் பெருமணல் முற்றத்தில் வீடுகள்
29

Page 17
3
இங்கிருந்து நினைத்துக்கொண்டு நான்போக அங்கிருந்த எல்லா சனங்களும் செத்தோ காணாமலோ போயிருக்கிறார்கள்
ஒரு பட்டிமாட்டில் பால் எடுக்க கன்றைத் தனியே கட்டியுள்ளனர். வாஞ்சையோடு பார்க்கிறது பசு
முட்டி கொள்ளாது வெடிக்காதா என்னைச் சந்தோசப்படுத்த யாரும் ஒழித்த மாதிரி தெரியவில்லை செத்தோ காணாமலோ போயிருக்கிறார்கள்
4.
அழக்கூட முடியாமல் நான் நடக்கிறேன்
- 1992
 
 
 
 

ஒரு மாரிப்பணிக்கால
விடியலில் நான் எழும்புகிறேன் அப்படியொரு, யாழ்ப்பாணத்தில் படுத்த நினைவு முருங்கைமர இலைகளும் பூக்களும் கிளைகளுக்குத் தாவுகிற அணில்களும் புல் நுனிகளில் பணித்துளி நான் இரைச்சல் சத்தம்வர புல்லில் சலம் அடித்தேன்
ச்சா ச்சா த்சோ
அது என்ன காலமப்பா விடுமுழுக்க பூவரசமரம் நிற்கிறது எங்கள் வீட்டுப்பின்பக்கத்துக் குளம் இப்போது அது ஒரு நதி செத்துப்போன அப்பா, வெளிநாடுகளில் இருக்கிற மாமாக்கள் எல்லாம் நதியில் ஒருக்கா படகோட்டிவிட்டு வந்து இறங்குகிறார்கள்
நதியோரம் நமது வீடு படகுகூட ஒரு பூவரசில் கட்டி வருகிறார்கள் வெய்யில் ஏறுகிறது; அவர்கள் தங்களுக்குள் கணக்கக் கதைத்து கள்ளுக்குடித்தார்கள்
பறந்துவிட்ட வசந்த காலங்கள்
நிலாமுன்றில் கால்கழுவி ஒழுங்கையால் போன சைக்கிளையும் மனிதனையும் பார்த்து பனங்காய் விழுகிற சத்தம் கேட்டு
துயிலுக்குப் போனோம்
1993 س
31

Page 18
நகர கட்டட கொத்தளங்களுக்குள்ளும் இரவில் நான் கண்டேன்
வட்டைக்காரனின் பட்டி மூன்று நட்சத்திரங்கள் நாங்கள் வானத்தைப் பார்த்து வெள்ளிகளை அனுபவித்து எவ்வளவு காலம்
நாண் எங்கள் வீட்டில் நிற்கிறேன் இப்போது எனக்கு அது ஒரு கோட்டை அமாவாசை அண்டிவரும் இரவில் வேலிகளையும் மதில்களையும் வானம் வளைத்துத் தொடும் இராச்சாப்பாட்டுக்குப்பிறகு வானத்தைப் பார்த்து உலாவுவேன் அன்ரி சொல்லுவா அதிக நட்சத்திரங்களைக் காண்கிறநாட்களில் கனவில் இனிய நண்பர்கள் பலர் வருவர் எரிவெள்ளி விழும் வாழைக்குள் தங்கம் விளையும்
வைகறையில் நாங்கள் எழும்பி முகம் கழுவ முத்தத்துக்கு இறங்க துருவக் கரடியும் அருந்ததியும் நித்திரை அசதி தீர்க்கும்
எல்லாம் காலம்தானே அங்கலாய்த்து எழுதவைக்கிறது இங்கு
- 1993