கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: துப்பாக்கிகளின் காலம்

Page 1


Page 2

துப்பாக்கிகளின் காலம்
இளைய அப்துல்லாஹ்

Page 3
துப்பாக்கிகளின் காலம் * சிறுகதைகள் * ஆசிரியர் : இளைய அப்துல்லாஹ் * O எம்.என்.எம். அனஸ் * முதல் பதிப்பு: செப்டம்பர் 2004 *அட்டை வடிவமைப்பும் ஒளியச்சுக் கோர்வையும் சுதத் விஜேயசிங்க, வினோதினி * அச்சகம் ஈகுவாலிற்றி கிரபிக்ஸ், கொழும்பு - 13. தொலைபேசி இலக்கம் 01 -2389848
Thuppakkikalin Kalam & Short Stories & Author : llaya Abdullah * CO M.IN. MANAS * Language : Tamil * First Edition: Sep. 2004 & Cover Designed & Type setted by : Sudath Wijesinghe & R.Vinothini. & Printed at: E-Kwality Graphics, 315, Jampettah Street, Colombo - 13. Tel: 011 - 2389848
Price : Rs. 150
இலங்கையில் பிரதிகள் கிடைக்குமிடம் M.N.M. ANAS
1273/B, ANANDA Mw,
HuNUPPITIYA
WATTALA
SRI LANKA
TE NO : 077 301 5183

வடபுலத்தில் இருந்துவிரடிடப்பட்ட அப்பாவிழுஸ்லிம்களுக்கும் அப்பாவித் தமிழருக்கும் அப்பாவி2ஆடு மாடு நாய், கோழி போன்று உயிரினங்களுக்கும் துப்பாக்கிகள் சுடிருச்சாக்காடிய அப்பாவி எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களுக்கும்

Page 4
உள்ளே.
ஒரு குறுக்குச் சுவர்.
துப்பாக்கிகளின் காலம் பற்றி.
சகுனம்
துப்பாக்கியின் காலம்
ஜோர்ச் எமில்ட்றேயும் அவனது தோழி மொனோஸிலாவும்
ஏதிலிப் பறவைகளாய்
பிரசவமாய்
ஒரு பனைக்கள்
வேரும் அழிதலாகி
காலம் வரும் வரை
கென்டயினர் பயணம்
1
O
மோகன வதணி
ix
12
20
26
31
42
46
55

ஒரு குறுக்குச் சுவர்
மேனாட்டிலிருந்து அறிமுகமான சிறுகதை என்ற வடிவம் மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இலக்கியங்களை செய்யுள் வடிவில் வெளிப்படுத்தும் முறையிலிருந்து மாறுபட்ட வடிவம் கண்ட உரைநடையை மக்கள் அவாவி நின்றனர். பாரதி தொடங்கி வைத்த அடித்தளம் சிறுகதை வரலாற்றில் நல்ல ஆரோக்கிய நிலையை தோற்றுவித்தது. தாகூரின் சிறுகதைகளை பாரதி மொழி பெயர்த்து இப்பணியை தொடங்கி வைத்தார். முதலில் முஸ்லிம் சிறுகதையை எழுதியவர் என்ற சிறப்பும் பாரதிக்கு உண்டு.
1948க்குப் பின் முஸ்லிம் எழுத்தாளர் முஸ்லிம் மக்களின் வாழ்வவலங்களை பகைப்புலனாகக் கொண்டு சிறுகதை களை எழுதத் தொடங்கினர். எனினும் 48லிருந்து 90கள் வரையான காலகட்ட சிறுகதைகள்ையும் 90க்குப் பின்னரான சிறு கதைகளினையும் இங்கு ஒப்பு நோக்கல் அவசியம்.
90களின் பின் ஈழத்தில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றம், இனப் படுகொலை, இனச்சுத்திகரிப்பு போன்ற அவலநிலை ஈழத்தில் காத்திரமான சில படைப்பாளிகள் உருவாக வழியமைத்தது. சிங்களப் பேரினவாதம், தமிழ்ப் பேரினவாதம் இரண்டுக்குமிடையே நசுங்கிப் போன அப்பாவிகளின் சார்பாக குரல் கொடுக்க மனிதாபிமான பல படைப்பிலக்கியவாதிகள் தோன்றினர். போரவலங்கள் ஒப்பற்ற இலக்கியங்களாகப் பதியப்பட்டன. அவலமும், துயரமும் பொதிந்த சிறுகதைகள், கவிதைகள் ஈழத்திலிருந்து தோன்றி உலகின் கவனத்தை ஈர்த்தன.

Page 5
90களுக்குப் பின் விளைந்த முக்கிய படைப்பாளியான இளைய அப்துல்லாஹ்வின் சிறுகதைகளும் பின்னர் குறிப்பிட்ட போரவலங்களை பதிவு செய்யும் முயற்சியின் விளைவே துப்பாக்கிகளின் காலம் என்ற தொகுப்பாகும்.
இளைய அப்துல்லாஹ் வடபுலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவன். அவரின் கவிதைகளும், சிறுகதைகளும் மண்ணின் மீதான காதலை அழுத்தமாக பதிவு செய்துள்ளன.
துப்பாக்கிகளின் காலம் தொகுதிக்குள் இருக்கும் கதைகள் இருவேறு யதார்த்தங்களைப் பேசுகின்றன. சொந்த மண்ணிலிருந்த பிடுங்கியெறியப்பட்டு அந்த மண்ணிற்கு மீண்டும் செல்லமாட்டோமா என்ற ஏக்கத்தையும், அகதி முகாம் வாழ்வின் அசிங்கத்தையும் சுட்டும் கதைகள்.
போரின் மூலம் சிதையுண்டு உறவுகள், மனிதம் போன்ற பாசப்பிணைப்புகளின் கயிறுகள் தெறித்துப் போவதால் எழும் விரக்தியும் மன அவசமும் மேவும் கதைகள்.
போரவலத்தையும் அதன் வக்கிரத்தையும் பதிவு செய்யும் முயற்சியில் இளைய அப்துல்லாஹ்வின் கதை உலகம் அனுபவச் செறிவாயுள்ளது.
இவரின் "துப்பாக்கியின் காலம்" கதை இலக்கற்ற போரும், மனிதப் படுகொலைகளும் மனித மனங்களில் ஏற்படுத்தும் கொடூர வக்கிரத்தையும், மனப் பிரளயத்தையும் சுட்டும் கனதியான படைப்பு இது மிக்க ஓர்மத்துடன் வினவி நிற்கும் கேள்வி. யுத்தவெறியர்களுக்கு எட்ட வேண்டும் என்பது படைப்பாளியின் ஆதங்கமாகவும், புலப்படுகின்றது.
இத் தொகுதிக்குள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில கதைகள் தேறியுள்ளன. "கென்டயினர் பயணம்" பெயர்ந் தலைதலின் அவதியை பதிவு செய்த முக்கிய கதை, மோகனவதனி, அபசகுனம், வேரும் அழிதலாகி போன்ற கதைகள் மூலம் இளைய அப்துல்லாஹ்வின் கதை சொல்லும் ஆளு மை உள்ளடக்கம் , போன்ற வல்லமைகள் பேணப்பட்டுள்ளது இங்கு கவனிப்புக்குரியது.
ஈழப்போர் உக்கிரமடைந்த 90க்குப்பின் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் அரச - தமிழ் அமைப்புக்களால் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டன. முஸ்லிம்களின்

பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. வாழ்வாதாரங் கள் சிதைக்கப்பட்டன. இருபக்கமும் அடிபடும் மத்தளங் களாக முஸ்லிம் தேசம் நொந்து போனது. இது எல்லாம் கடந்தகால நிகழ்கால வரலாறுகள். முஸ்லிம் மக்களின் மனக் குமுறல்களை பதிவு செய்யும் நோக்கில் பல படைப்பாளிகள் தோன்றினர். அம்ரிதா ஏ. யெம், அரபாத், ஷகீப், ஸபீர் போன்றவர்கள் தமது படைப்புக்கள் மூலம் முஸ்லிம் தேசத்திற்கெதிரான வன்முறைகளை பதிவு செய்ய முனைந்தனர்.
இளைய அப்துல்லாஹ்வும் தொப்புள் கொடி அறுத்து வீழ்த்தப்பட்ட மண்ணிலிருந்து கெல்லி எறியப்பட்ட மனித நேயமுள்ள படைப்பாளி. எனினும் தனது மக்களின், இனத்தின் துயரங்களை பாட முடியாத துர்ப்பாக்கிய நிலையை அவரின் புலம் பெயர் நடவடிக்கை "குறுக்குச் சுவராக" விழுந்து விட்டது என்றே கருத முடிகிறது. இந்த நீண்ட விரிசலை ஒட்டுமொத்த கதைகளையும் படிக்கும் போது உணர முடிகிறது.
தமிழ் மக்களின் வாழ்வை பகைப்புலனாகக் கொண்டு கதைகள் எழுதிய அளவிற்கு முஸ்லிம் மக்களின் வாழ் வவலங்களை இளைய அப்துல்லாஹ் போதிய அளவு வெளிப்படுத்தவில்லை என்பதே எனது கவனிப்பு, மனிதனின் மனசாட்சியுள்ள குரலாக படைப்பாளி இருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை, எனினும் தான் வாழும் சமூகத்தின் பெருமூச்சையும், துயரங்களையும் ஆக்க இலக்கியத்தின் ஊடாக அவன் பதிவு செய்வது அந்த சமூகத்திற்கு செய்யும் நன்றிக் கடன்.
அக்கடன் இளைய அப்துல்லாஹ்வை பொறுத்தவரை ஒரு "நிலுவை'யாகவே நிற்கிறது. மானுடத்தின் மனச்சாட்சியாக ஓங்கி ஒலிக்கும் நண்பர் இளைய அப்துல்லாஹ்வின் கதைப்புலம் பெரும்பாலும் வடபகுதி தமிழ் மக்களை சுற்றியே பின்னப்பட்டுள்ளது. இது அவரின் மண் மீதான காதலின் திவ்ய வெளிப்பாடகவும் இருக்கலாம்.
அனுபவச் செறிவும், கதை சொல்வதில் உள்ள நேர்த்தியும் இளைய அப்துல்லாஹ்வுக்கு நன்றாகவே வாலாயப்பட்டிருக்கின்றது. "மோகனவதனி" கதையை உதாரணமாகக் குறிப்பிட முடியும். எனினும் இந்த அனுபச்

Page 6
செறிவு இன்னும் அடர்த்தியாக வளர்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சம்.
வடபுலத்திலிருந்து காத்திரமான முஸ்லிம் சிறுகதை யாளர் கிடைத்திருக்கின்றார் என்பது ஆறுதலான விஷயம். "துப்பாக்கிகளின் காலம்" நமது இறந்த காலத்தின் மரண அச்சம், வலிச்செறிவை பதிவுசெய்த முக்கிய ஆவணம்.
வாழ்வின் மீதான காதலின் இழப்பு, மண் மீதான ஈர்ப்பின் பிரேமை, மனித நேயமற்ற போரின் வடு, என ஒரு நீண்ட அனுபவத்தின் ஒட்டுமொத்தத் திரட்டு துப்பாக்கிகளின் காலம் எனில் மிகையல்ல.
"இலக்கியத்தின் ஆதாரம் மனித நேயம்", "மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்கள், நெருக்கடிகள், வாழ்வின் முரண்கள், இதைப்புரிந்து கொள்ள முயற்சி செய்பவன்தான் நேர்மையான இலக்கியவாதி. அவன் வாழும் காலத்தில் அவனது புரிதலை அல்லது புரிய இயலாமையை படைக்கப் பார்க்கின்றான்" என்ற நாஞ்சில் நாடனின் கருத்து எல்லோருக்கும் பொருந்திவருகிறது.
அன்புடன்
ஒட்டமாவடி - அறபாத்
27.07.2004

துப்பாக்கிகளின் காலம் பற்றி.
நான் பிறந்தது ஒட்டுசுட்டான் புளியங்குளத்தில்.
சிறுகதைகள் தொடர்பான ஆர்வம் எனக்கு 1979, 80களில் முளைவிடத் தொடங்கியது. எங்கள் வீட்டு வலப் பக்கமாக ஒரு கறுத்தக்கொழும்பான் மாமரம். அதற்குக் கீழே உடைந்து போன ஒரு கதிரையைப் போட்டுக் கொண்டு அதில் இருந்து ஏதோ எழுதுவேன். வரும்; எழுத எழுத வரும். ஆனால் அதனை இரசிக்கிறதுக்கும் ஊக்கப் படுத்துவதற்கும் அப்பொழுது யாருமில்லை. மனம் எழுதத் தூண்டும் நேரமெல்லாம் எழுதுவேன். அம்மாவிடம் காட்டுவேன். "சும்மா அங்காலை போ" என திட்டுவா.
ஊரில் யாருக்குமே நான் எழுதியவைகளை காட்ட வில்லை. அந்த நாட்களில் "முல்லைமணி" எழுதிக் கொண்டிருந்தவர். அவரின் "பண்டாரவன்னியன்" நாடகம் பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன்.
ஊரில் பிரபல்யமானவர்கள் என்று எனக்குத் தெரிந்து அருணா செல்லத்துரை, அந்தநேரம் றேடியோ சிலோனில் வேலை செய்தவர்.
Producer என்று கேள்விப்பட்டனான். அவர் RailPaSS எடுத்துக்கொண்டுபோய் வாறவர் என்று அம்மா பெருமை யாகச் சொல்லுவா. அடுத்தது 'முல்லைச் சகோதரிகள்' குடும்பமே பாட்டுக்காரக் குடும்பம். ஈழத்துப் பாடல்களை றேடியோவில் கேட்கும் போது முல்லைச் சகோதரிகளின் பாடல்கள் போகாத நாட்களில்லை. அவர்கள் பட்டுச்சாறி சரசரக்க வந்து ஒய்யாரமாய் திருவிழாக்களின் போது

Page 7
மேடையில் அமர்ந்து ஈழத்துப்பாடல்களையும் பக்திப் பாடல்களையும் பாடும் போது வலு சோக்காக இருக்கும்.
அவர்களும் றேடியோ சிலோன் போகும் போது RaiPaSS எடுத்து இலவசமாகத்தான் பயணம் போகினம் என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது.
"நிலக்கிளி" ஐ அம்மாவுக்குத் தெரியாமல் நான் வாசித்தேன்.
கதைப்புத்தகம் வாசித்தால் அம்மா அடிப்பா.
ஒருமுறை முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் 1980ம் ஆண்டு, "மாணவர் மலர்" நிகழ்ச்சிக்காக றேடியோ சிலோனில் இருந்து கனகசபாபதி நாகேஸ்வரன் வந்து நிகழ்ச்சிகள் றைக்கோட் செய்தவர். அப்பொழுது கேட்டார் உங்களின் எதிர்கால இலட்சியம் என்ன என்று?
நான் சொன்னேன், "K.S. ராஜா போல வரவேண்டும்" பின்னர் இலங்கை வானொலியில் 1996களில் "விடியலை நோக்கி" நிகழ்ச்சி செய்யும் போது அடிக்கடி இதனை நினைத்துப் பார்ப்பேன். "விடியலை நோக்கி" நிகழ்ச்சிக்கு உருத்திராபதி தான் Producer, முஸ்லிம் சேவையில் - நூரணியா ஹஸன், ஹாரிஸ்ஹாஜி ஆகியோரும் எனக்கு நிகழ்ச்சிகள் தந்தனர். சந்தோஷமாக இருந்தது.
லண்டனில் போய் "தீபம்" தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பளாராக. செய்தி வாசிப்பவராக. நிகழ்ச்சித் தயாரிப் பாளராக. என்று வளர்ந்ததை எண்ணும் போது இன்னும் பிரமித்துப் போகிறேன். இந்தநேரம் "தீபம்" தொலைக் காட்சியின் திரு. பத்மநாபன், திரு. செல்வக் குமரன் இருவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
1985 இல் மாத்தளையில் இருந்த போது தான் முதன் முதல் பத்திரிகைக்கு எழுதினேன். சிந்தாமணியில் கனக - பூரீஸ்கந்தராஜா என்ற புனைபெயர்தான் எனக்கு நான் முதலில் சூட்டிக் கொண்டது.
சிந்தாமணிதான் எனது ஆக்கங்களை முதலில் கொண்டு வந்தது. லண்டனில் விமல் - குழந்தைவேலும் நானும் அடிக்கடி சிறுகதைகள் பற்றி கதைப்போம். தனது "அசதி" வந்த பின்பு எனது தொகுதி ஒன்று வரவேண்டும் என்பதில் விமல் அக்கறையோடு இருந்தார். ஆனால் "உனது நல்ல
Χ

சிறுகதைகளை தொகுப்பாக்கு" என்று அடிக்கடி சொல்லுவார்.
நவஜோதி , ஜோகரட்ணம், மு. நித்தியானந்தன், மாலி போன்ற நல்ல நண்பர்கள் எனது தொகுதி வருவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர்.
அரபாத் எனது நல்ல நண்பன். அப்பொழுதும் இப்பொழுதும் உண்மையில் மனம் திறந்து இருவரும் உரையாடுவோம். அரபாத் எனக்கு எனது சிறுகதைகள் பற்றி எழுதித் தந்திருப்பதையிட்டு மகிழ்கிறேன்.
எனது அன்புக்குரிய பத்திரிகை நண்பர்கள் எல்லோரை யும் மனதார நினைவு கூருகின்றேன்.
துப்பாக்கிகளின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். முந்தின காலத்தில் என்றால் அடித்துத்தான் கொல்ல வேண்டும். அப்பொழுது அயல் அட்டையில் உள்ளவர்கள் கொல்லப்படுபவனின் சத்தம் கேட்டு ஓடி வந்து காப்பாற்றக் கூட அவகாசம் இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படி அல்ல. கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு கொலையாளி ஓடிவிடுகிறான். உயிர் அந்த இடத்திலேயே போய்விடுகிறது.
எனது கண்ணுக்கு முன்னால் பிரேதங்களை காணுகின் றேன். மனம் அந்தரப்பட்டுப் போகிறது. "தம்பி நீங்கள் செய்தியாளர் ஆக இருக்கிறியள் கவனம்." என்றுதான் பார்க்கின்ற எல்லோருமே சொல்கிறார்கள். என்னதான் இருந்தாலும் கத்தியைவிட துப்பாக்கிகளின் அச்சம் மிகவும் வலிமை மிகுந்ததாய் இருக்கிறது. யார் செய்கிறார்கள் என்பது அல்ல பிரச்சினை, கொலை செய்கிறார்கள் அதுதான் விடயம். இலங்கையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள் வேலை செய்கிறார்கள்.
அமைதி, சமாதானம், முன்னெடுப்பு என்று சொன்னாலும் எல்லாம் ஒரு இடத்தில் குறுகிப் போய்விட துப்பாக்கிகள் சடாரென்று முளைத்து கொலைசெய்து விடுகின்றன. கொழும் பில் வாழுவது அச்சமாகி வருகிறது. சி.ஐ.டி என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் அடையாளம், வாகனங்கள், பொருட் களை சூறையாட விவரம் திரட்டுகிறார்கள்.
மட்டக்களப்புக்கு போக வேண்டாம் என்று மனைவி தடுக்கிறாள். வடக்கு கிழக்கு தலைநகள் என்று எல்லா இடமும் அச்சம் மிகுந்ததாய் இருக்கும் ஒரு காலத்தில் வாழுகிறோம்.

Page 8
அச்சப்படுத்திவிட்டு எழுதாதேங்கோ - என்றால். யார் எழுதுவது? எப்பொழுது எழுதுவது? கருத்துக் களை கருத்துக்களால் மோதும் ஒரு பக்குவம் எமக்கு இன்னும் வரவில்லை.
அமெரிக்காவில் உப்பிடித்தான் துப் பாக்கிகளால் உடனேயே சின்னஞ் சிறுசுகள் பதில் சொல் லிவிடும். அப்படியான ஒரு காலத்தில் வாழ்ந்தோம். வாழ்கிறோம். பயந்து பயந்து பயப்படாத பொருட்களே இல்லை என்னுமளவிற்கு விசயம் கை மீறிப் போய் விட்டது.
சுடப்பட்ட காணாமல் போன தமிழ் எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள் - அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் அவர்களை வைத்தே ஒரு அற்புதமான புதிய உலகமொன்றை சிருஷ்டித்திருக்க முடியும். உடனேயே சுட்டுக் கொன்று விடுகிறார்கள். இறப்பவரின் பின்னால் உள்ளவர்கள் அவர்களது குடும்பம், பிள்ளைகள் என்ன பாடுபடுவார்கள் என்று யாருமே எண்ணுகிறார்களில்லை.
ராஜினியின் இரண்டு பிள்ளைகள், நிலமராஜனின் பிள்ளைகள், அற்புதனின் பிள்ளைகள், றிச்சட்டின் குடும்பம், நடேசனின் நாலு பிள்ளைகள் என்று அனாதைகளாக்கப்பட்டு விட்ட குழந்தைகள் எத்தனைபேர். நடேசனின் பிள்ளைகள் நால்வரும் "அப்பா அப்பா" என்று உயிரற்ற உடல் முன்னால் கதறி அழுததை என் கண் முன்னால் கண்டு நெஞ்சம் வெடித்தேன்.
வடக்கில் இருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் இன்னும் எந்தவித அக்கறையும் காட்டப்படவில்லை. அவர்களின் பூர்வீக மண், தாய் மண் தொடர்பாக எந்தவித கரிசனையும் எழவில்லை. உண்மையில் வெறும் ஒரு துன்பியல் சம்பவங்களாக மட்டும் பார்த்து விட்டு என்னால் வாழாவிருக்க முடியவில்லை. என்னால் எழுத முடியும். எனது கவிதை களிலும் சிறுகதைகளிலும் அந்த தாக்கத்தை வெளிப்படுத்தி யிருக்கிறேன்.
அப்பாவிகளை கூட்டி வைத்து கூட்டம் போட்டு விடுவதால் எல்லாம் சுபமாக முடிந்து விடாது. ஆக்கபூர்வமாக
- அந்த புத்தளத்து உப்புச் சுவாத்தியத்தில் கருவாடாகிப் போனவர்கள் தொடர்பான உண்மையான அக்கறை வேண்டும்.
xii

நேருக்கு நேர் எதனையும் மனம் திறந்து பேச வேண்டும். பின்னர் சிக்கல்கள் எழாமல் இருக்க இதுதான் வழி. ஆனால் எல்லாம் மூடி மறைப்புகளில் தான் போய் முடிகிறது. அதனால் எதனையுமே தெளிவாக செய்ய முடிவதில்லை.
கன்னை கன்னையாகப் பிரிந்து தமிழர்களை பிரிக்க இனி என்ன இருக்கிறது. லண்டனில் என்றால் ஊர் பிரித்து அடிபடுகிறார்கள் தமிழர்கள். இங்கும் அப்படித்தான்.
எனது கதைகளில் நான் கண்ட மனிதர்களைப்பற்றியே எழுதியிருக்கிறேன். அவர்கள் என்னால் நேரில் பார்க்கப்பட்ட வர்கள். உண்மைகள் பற்றி உண்மையாக மனம் திறந்து பேசுவோம்.
துப்பாக்கி வைத்திருக்கும் கைகளை நான் கெஞ்சிக் கேட்பது அப்பாவிகளை சுட்டுக் கொன்று விடாதீர்கள். அது பொதுமகனாக இருக்கட்டும். எழுத்தாளனாக இருக்கட்டும், பத்திரிகையாளானாக இருக்கட்டும்.
தயவு செய்யுங்கள்.
இளைய அப்துல்லாவற்
01-06-2004.
xiii

Page 9

శ్లోక్ట్ర్యి ܝܫܲܡ܊ ܼ ::ဒွ န္တိ
அட குமரேசு, இஞ்சாலை வாடா. உன்ரை குரு குருப்பை என்னாலை அடக்கேலாது" செல்லாச்சி கடைக்குட்டி குமரேசனை அதட்டினாள். குசினிக்குள் ஒரு குப்பிலாம்புமண்ணெண்ணையைக் கண்டு கிட்டத்தட்ட மூன்று வருடங் களைப் பூர்த்தி செய்துவிட்டிருந்த குப்பிலாம்பு, வீட்டுக் கோடியில் இருந்த ஒரு தென்னை மரத்துத் தேங்காயின் உதவியுடன் எரிந்துகொண்டிருந்தது. ஆம், இப்போது இப்படித்தான் சில வீடுகளில் தேங்காயெண்ணை விளக்கெரி யும். இன்னும் சில வீடுகளில் சூழ் எரியும். அனேகமான வீடுகள் எங்கள் மக்கள் உள்ளங்களைப் போல வெறுமை இருட்டில் மூழ்கிக் கிடக்கும்.
"எணை அம்மா ஐயோ! என்ரை அம்மா" நித்திரைப் பாயில் கிடந்த சரசு வாய்விட்டு அலறினாள். நேரம். இப்பதான் அம்புலி மாமா கொஞ்சம் கிழக்குப் பக்கமாகச் சாய்கிறது மாதிரித் தெரிந்தது. யேசுவெள்ளி வடக்காலை வாலை விட்டிருக்கு ஒரு. பன்னண்டு மணி இருக்கும் என நினைத்தபடி. "என்னடி சரசு இந்த நேரத்திலை பேய்மாதிரி அலறுறாய்"

Page 10
ჭაNovnáმჭირნს 4mბutP.....
"அம்மா. எணை அம்மா." பிதுங்கிய கண்களுடன் படுக்கைப் பாயில் இருந்து எழும்பி ஓடிவந்து தனது தாயின் காலடியில் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தாள் சரசு.
"அம்மா. இப்ப. இப்ப." விம்மினாள். கேவினாள். நல்லாப் பயந்து போனாள். "அம்மா அந்தத் தொண்டமானாத்துச் சந்நதியான் அறிய நாங்கள் எல்லோரும் வீட்டோடை எரிஞ்சு." அழுதாள் சரசு.
'சரி சரி வா பிள்ளை" என்று செல்லாச்சி தன் மகளைத் தான் பால் கொடுத்து அன்பு அமுதூட்டிய மார்புடன் இறுக அணைத்துக் கொண்டு தலையை வருடிவிட்டு ஆறுதல் சொன்னாள். "அம்மா. எனக் கென்னவோ. அந்தக் கனவு அபசகுனமாகத்தான் விளங்குதணை"
"புள்ளை எங்களுக்கு எதுதான் அபசகுனமில்லை. இண்டைக்கு இந்த யாழ்ப்பாண மண்ணிலை பிறந்தது மட்டும் என்ன நல்ல சகுனமே..? ஏதோ நான் எண்டபடியால்தான் தாங்கிக்கொண்டு இருக்கிறன் இல்லாட்டி உங்கடை ஐயா அந்தக் காலத்திலை பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமே?
அப்ப இந்த இடத்திலை இருந்த பெரிய காணி வளவிலைதான் நாங்கள் எல்லாரும் இருந்தம். அப்ப உன்ரை ஐயா பெரிய எக்கவுண்டன்ற். அந்தக் காலத்திலை இங்கிலீசுக்காரரிட்டைப் பாதிரிமாரிட்டைப் படிச்சவர். கணக்கிலை என்னண்டாலும் உன்ரை ஐயாவிட்டைத்தான் வந்து கேப்பினம். இந்த யாழ்ப்பாணத்திலை உள்ள பெரிய கடையளிலை எல்லாம் கணக்குப் பாக்கிறவர் ஐயாதான். அந்தக் காலத்திலை கடைக் கணக்குகளை எல்லாம் செய்யிறதிலை பெரிய கெட்டிக்காரர்.
அப்ப என்னைக் கலியாணம் செய்தார். ஓம், நானும் அவரோடைதான் புறாப்பொறுக்கிச் சந்தியிலை நிண்டு பஸ்ஸிலை போவம். அந்த நேரத்திலைதான் எங்கள் இரண்டு பேருக்கும் காதல் ஏற்பட்டது. நான் அப்ப யாழ்ப்பாணம் கல்விக் கந்தோரிலை ரைப்பிஸ்டா இருந்தன். நாங்க இரண்டு பேரும் ஒண்டாப் போவம். ஒண்டாத் திரும்பி வருவம். இப்படி ஒரு வருசம் மட்டிலை கழிஞ்சுபோயிருக்கும். அதுக்குப் பின்னாலைதான் உன்ரை ஐயாடை ஆக்கள் சாதியிலை உயர்ந்தவை. எண்டது தெரிஞ்சுது எங்கட ஐயா எல்லாம் பனை சீவித்தான் காலத்தைக் கடத்திறது இப்ப, இனி. இந்தக் காதல் விசயம் ஊருக்குத் தெரிஞ்சுபோக ஒம் பிள்ளை, காதலையும் கள்ப்பத்தையும் மறைக்கேலாது எண்டு சொல்லுவினமே. அப்பிடி உங்கட ஐயாவின் ரை ஆக்களுக்குத் தெரிஞ்சுபோச் சு. என் ரை குணத்தையும் தெய்வபக்தியையும் பார்த்த உங்கட ஐயா, வாழுறதெண்டா என்னோடைதான் வாழுறது. இல்லாட்டி இரண்டு பேருமா செத்தே போயிடுறது எண்டு முடி வெடுத்திட்டார்.
அப்ப வந்த சண்டையை இப்ப நினைச்சாலும் பயமாக் கிடக்கு - ஓம் பிள்ளை, வெள்ளாள சாதி ஒரு பக்கம். எங்கடை பனை சீவுற சாதியள் மறுபக்கமா. ஏதோ.

இளைய அப்துல்லாஹ்
ராமாயணப் போருக்கு வியூகம் செய்த மாதிரி. இஞ்சாலை பாளை சீவுற கத்தியளோடை ஆம்பிளை பொம்பிளையஸ் எல்லாம். அங்காலை. பொல்லு வாளுகளோடை உயர்ந்த சாதி ஆக்கள் எண்டு சொல்லுறவை. ஐயாடை வீட்டிலை அவரை அறைக்குள்ளை அடைச்சுப் போட்டினம். அவரெண்டால் ஒருமனதோடை தான் இருந்திருக்கிறார். அவரின்ரை திடமான நம்பிக்கையைக் கண்டவுடனே அவங்கடை ஆக்களெல்லாம் - அந்தியேட்டி, கருமாதி, சாந்தி எல்லாம் செய்து, செத்துப் போனவன் எண்டு சொல்லி வீட்டைவிட்டுத் துரத்திப் போட்டினம். புறகு எங்கடை வீட்டுக்கு வந்தார் ஐயா. அப்ப நானும் ஏதோ நாலு வார்த்தையைப் படிச்சு நாலு விசயத்தை விளங்கி தெரிஞ்சிருந்ததாலை உங்கடை ஐயாவுக்குத் தைரியத்தைச் சொல்லி இந்த யாழ்ப்பாணத்திலை நாங்க ஒரு முன்மாதிரியாய் வாழுவம் எண்டு. விடாப்பிடியாச் சொன்னன். அப்பவும் சாதித் தடிப்புகள் எங்களைச் சூழத் தொடங்கிச்சு. அதுக்குப் பின்னாலை உங்கடை ஐயா கணக்கு வேலை பாத்த கடைகளிலை எல்லாம் நளப் பெட்டையைக் கலியாணம் செய்துகொண்ட கீழ்சாதியை எங்கடை கடையிலை வேண்டாம் எண்டு ஒதுக்கிப் போட்டினம். அதுக்குப் பிறகு, ஐயா வீட்டோட வந்து கொஞ்ச நாள் இருந்து பார்த்தார். அவருக்கு ஒண்டும் விளங்கேல்லை. இப்பிடித்தான் ஒருநாள் காட்டு ஐயனார் கோயிலுக்குப் போயிட்டு வரேக்குள்ளை அவரின்ரை முகமெல்லாம் ஒரு சந்தோஷமாய் இருந்தது.
எனக்கும் அண்டைக்கு ஒரு நேத்தி இருந்திச்சு. அதையும் முடிச்சுப்போட்டுப் பின்னேரம் அப்பிடியே அம்மன் கோயிலுக்கும் போயிட்டு வருவமெண்டு பூப்பூடுங்கப் போன நேரம் - உங்கட ஐயா கூப்பிட்டார். என்ன எண்டு கேக்கிறதுக்குக் கிட்டப் போனா. அவர் சொன்னார் - "இண்டையிலை இருந்து நான் சீவப்போறன்" எண்டு . அவர் அதைச் சொல்லுற நேரம் - முகத்திலை, தொழில் இல்லாமை இருந்து ஒரு தொழில் கிடைச்சால் எவ்வளவு சந்தோஷப் படுவினமோ ஆக்கள் அந்தப் பூரணமான சந்தோஷம் இருந்ததை நான் பார்த்தன். எனக்கெண்டா கொஞ்சம் கூட விருப்பமில்லை, அவரைச் சீவ விடுகிறதுக்கு, அழகான முறையிலை இருந்து செல்வமா செழிப்பா இருந்து ஃபானுக்குக் கீழே இருந்துகொண்டு இருந்த உடம்பு, பனையைக் கட்டிப் பிடிச்சு ஏறி. பாளை தட்டி, முட்டி கட்டி கள்ளு இறக்கி தவறணைக்குப் போய். எனக்கெண்டா உங்கடை ஐயா கஷ்டம் தெரியாத மனுஷன் கஷ்டப்படுறதை கண்கொண்டு பாக்க விருப்பமில்லாமை எங்கடை அண்ணன் மாரிட்டைப் பேசி வேறை ஏதும் கடையைக் கிடையைப் போட்டிட்டு இருக்கச் சொல்லத்தான் பாத்தன்.
ஆனா அவர் ஒரே புடியாச் சொல்லிப் போட்டார் "நான் பனை சீவப்போறன்" எண்டு. கடவுளே. இந்த யாழ்ப்பாணத்திலை காணேல்லை - அப்பிடி யாரும் கண்டு வந்து சொன்னாக்கூட நான் அடிமையா இருந்திட்டுப் போயிடுவன். அதுக்குப் பிறகு ஐயா வந்து எங்கடை அண்ணரிட்டை இருந்துகொண்டு மரம் சீவப் பழகினார்.
எங்கடை இந்த மண்ணிலை - நளச் சனத்தைக் காணுறதே அருவருப்பு எண்டு நினைக்கிற மக்கள் மத்தியிலே மேளம் அடிக்கிறதுக்கு ஒருத்தன், சவம் தூக்கிறதுக்கு
یہ سہہ * 's
3

Page 11
ჭაNovA#3*cfià 4ებviè....
ஒருத்தன், வெளுக்கிறதுக்கு ஒருத்தன், முடிவெட்ட ஒருத்தன் எண்டு குதறுப்பட்டுப் போய் கிடக்கிற எங்கடை பூமியிலை, என்னைக் கலியாணம் முடிச்சு. போதாததுக்கு எங்கடை வீட்டிலையே வந்து இருந்து- இண்டைக்கு கள்ளும் சீவி குடும்பத்தை நடத்திக் காட்டினார் அந்தத் தெய்வம்.
அவர் மரம் சீவுறதிலை வலு கெட்டிக்காரர். மற்ற மனிசரிலையும் பாக்க இவருக்குத்தான் கள்ளு நல்லாப் பாளையிலை ஊறும். எதிலையும் முற்போக்கு எண்ணம் அவருக்கு இருக்கு. அவர் அடிக்கடி சொல்லுற தாரக மந்திரம் - "வெள்ளாள சாதி உயர்ந்த சாதி எண்டு என்ன இருக்கு கடவுள் படைச்ச உலகத்திலை ஏதோ வாழ்ந்திட்டுப் போறதுக்கு எண்டு செய்யிற தொழிலை மதிச்சு நடந்தாப் போச்சு" இப்பிடிச் சொல்லிச் சொல்லிக் கொண்டிருப்பார். யாருக்குமே அடிபணிஞ்சு நடக்க மாட்டார். அப்பிடி வாழ்ந்து காட்டின மனிசன். புள்ளை பாவம் அந்த உசிரை எடுத்திட்டுப் போன எமன் என்ரை உசிரை மட்டும் வைச்சிருக்கிறானே.
செல்லாச்சி அழுதபடி மூக்கை உறிஞ்சித் தனது முந்தானைத் தலைப்பில் துடைத்துக் கொண்டாள்.
"அந்த இடி என்ரை தலையிலை விழுந்து ஆறமுதல்லை வவுனியாவுக்குப் போன உன்ரை மூத்த அண்ணனைப் புடிச்சுக் கொண்டுபோன ஆமிக்காரங்கள் புறகு புலி எண்டு சொல்லி ரயரிலை போட்டிட்டான்களாம். அந்தச் சேதியையும் கேள்விப்பட்ட எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும் போல இருந்த நேரத்திலைதான் உன்ரை தம்பி பிறந்தான். அப்ப நீ சின்னப்பிள்ளை, உனக்கு ஒண்டுந் தெரியாது. அப்ப இருந்தே இந்த இடிஞ்ச மண்வீடுதான் தஞ்சம். எங்கடை அண்ணன்மார்தான் எங்களைப் பாக்கிறது. அவையஞம் இப்ப என்னத்தைத்தான் செய்யிறது? இடிஞ்சுபோன உணர்வுகளோடை பாடுபட்டுப் போன எத்தினை உசிருகளை இந்த யாழ்ப்பாண மண் தாங்கிப்போய் இருக்கு.
இப்ப கொஞ்ச நாளா புலியள் ஒரு சட்டம் போட்டிருக்கினம். யாரையும் சாதியைச் சொல்லி அவமானப் படுத்தக்கூடாது. அப்பிடிக் கூப்பிட்டோ- இல்லாட்டிப் பேசியோ, இல்லாட்டி அவமானப் படுத்தினாலோ 500 ரூபா தண்டம் குடுக்க வேணும். நடுச்சந்தியிலை வைத்து மன்னிப்புக் கேக்கவேணும் எண்டெல்லாம் - அது ஒரு இடத்துக்கு ஒருமாதிரித் தண்டனை குடுத்திருக்கினம்.
அதுக்குப் பிறகு கீழ்சாதி எண்டு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திலை எல்லாம் கலியாணம் முடிச்சிருக்கினம். சட்ட முறையிலைதான் இது நடந்துபோகுமே தவிர - உள்ளத்தாலை உணர்ந்து செய்ய இதுவரையிலை யாரும் முன்வரேல்லை. சிலபேர் விரக்தியிலை - இப்பிடிக் கீழ்சாதி எண்டு முந்தின யாழ்ப்பாணத்தைப் பிளவுபடுத்தின நல்ல (?!) உள்ளங் கொண்ட தன் வாசிக்காரரின் ரை வாரிசுகள் கீழ் சாதிப் பொம்பிளையளை எடுத்தினம். ஆனா அதுவும் பழைய இரத்தம் நிறமூர்த்தக் கோளாறு எல்லாம் ஒரு புள்ளையோடை, இரண்டு பிள்ளை பெத்ததோடை சாதி சம்பிரதாயம் எல்லாம் புத்துக்குள்ள இருந்து வந்த விஷநாகம் போல படமெடுத்தாடப்
4

இளைய அப்துல்லாஹ்
போக - திரும்ப ஞானதீட்சை பெற்றுக்கொண்டு கலியாணத்தை டைவோஸ் பண்ணின புரட்சிவாதிகளும் இருக்கினம். இப்ப பழையபடி இரத்த துவேஷம் ஊறிப் போயிட்டுது.
புள்ளை இன்னும் உனக்குக் கொஞ்சம் காலம் போனாத்தான் விளங்கும். இப்ப ஊர் இருக்கிற நிலைமைகூட சாதிப் பிரச்சனை தலைதூக்காம இல்லை. தின்ன வழியில்லை - ஒழுங்கான வெளிச்சமில்லை - கால்நடையாய்ப் பயணம். எத்தினை சின்னஞ்சிறுசுகள் செத்து மாஞ்சுகொண்டு போடுதுகள். அங்காலை ஆடமிக்காரன் - இஞ்சாலை புலியள். நாங்கள் யாருக்குப் பயப்பிடுகிறது எண்டது இன்னொரு கேள்வி - ஆ. அதுவே. அது கீழ்சாதியள் இதுகளுக்கு நாங்கள் உதவி செய்ய மாட்டம் எண்ட மேல்சாதியளின் பிடிவாதமும் வக்கிரமும்.
இது என்ன. இப்பிடிப் போனா சுதந்திரத்தை எந்த முகத்தோடை கொண்டாடுறது? எந்த முகத்தோடை நாங்கள் மண்ணிலை வாழப்போறது. சாகுமட்டும் நாங்களும் எங்களுக்குள்ளை எதிரிகளா? வெள்ளாளனும் பனை சீவுறவனும் தமிழன் தானே. தமிழ்த் தாய்தானே பெத்தெடுத்தவள். தமிழ்த் தாய்தானே பாலூட்டினாள். தமிழ்த் தாய்தானே வளர்த்தாள். தமிழ்த் தாய்தானே வளர்த்தாள். வாத்திமாரும் தமிழ் - தமிழ் படிப்பிச்ச பள்ளிக்கூடம் இதெல்லாத்தையும் ஒதுக்கி வைச்சிட்டு வெறுமனே தமிழ் பேசுற மணிசர் மட்டும் என்ன? ஒடுறது உடம்புகள் எல்லாத்திலையும் சிவப்பு ரத்தம். இப்பிடி ஒரு உணர்வு வராதவரைக்கும் தமிழர்கள் பிரிஞ்சுபோய் சிதறிச் சின்னாபின்னப் பட்டுப்போய்க் கிடக்க வேண்டியதுதான் கடவுளே!"
செல்லாச்சியின் கண்கள் சமுதாயத்திற்காகக் கலங்கின.
"புள்ளை நீ கண்ட கனவிலை மிச்சத்தைச் சொல்லம்மா" செல்லாச்சி மகளைக் கேட்டாள்.
"அம்மா அது ஆமியும் போடேல்லை, புலியும் போடேல்லை. அது. அது. அப்பிடியே. ஒரு நெருப்புக் குண்டுபோல ஒரு பெரிய. பென்னாம் பெரிய நெருப்புப் பாளம் ஒண்டு விளாசி எரிஞ்சுகொண்டு வந்து. ஓம் - யாழ்ப்பாணத்துக்கு மேலை அப்பிடியே விழுந்து. சத்தியமாய் இன்னும் கண்ணுக்குள்ளை இருக்குதெணைஅப்படியே விழுந்து யாழ்ப்பாணமே. எரிஞ்சு போச்சுதம்மா . அதிலை நாங்களும், எல்லாரும்." சரசு கூறினாள்.
"கடவுளே நல்லூர்க் கந்தா, நீதான் காப்பாத்த வேணும். உனக்குத்தான் வெளிச்சம், கண்ணகி ஆச்சி மதுரையை எரிச்சதுபோல- எங்கடை ஊரிலை இருக்கிற எத்தினை சாக்கடை நாத்தங்களை எல்லாம் எரிச்சுப்போட்டுத் துப்பரவாக்குறதுக்கு கடவுள் நினைச்சுப் போட்டரோ தெரியாது. அதுதான் முழு மனிசரையும் எரிச்சுச் சாம்பலாக்கிப் போட்டு புதுசா. நல்ல மனிசர்களை உருவாக்கப் போறாரோ. அப்பனே. உனக்குத் தெரிஞ்சதை நாங்கள் அறிவமே.
ஆ. அந்தா இந்த இராவிலையும் பொம்பர் இரைஞ்சு கேக்குது. கந்தா

Page 12
துப்பாக்களின் காம்ெ.
வாங்கோ." மிஞ்சின தனது இரண்டு பிள்ளையளையும் இழுத்துக் கொண்டு செல்லாச்சி அந்த இடிஞ்சுபோன பங்கருக்குள் குனிந்து அவசரமாகப் போகவும்,
பக்கத்து மதில் வீட்டு உடையார் வீட்டுக்கு மேல் செல் ஒன்று விழுந்து வெடிக்கவும் நேரம் சரியாக இருந்தது. தீச்சுவாலையொன்று வானம் நோக்கிக் கெம்பி எழுந்தது.
கவடுகள் 1992

蠶》韋, துப் ன்
றுேவல் வந்தான். துவக்கோடு வந்தான். துவக்கின் இரண்டு குழலும் புகை கக்கியது. யாரைச் சுட்டனி' மணியம் கேட்டான். கறுவல் பேசவில்லை. கறுவல் முறைத்தான். உள்ளுக்குள் கோபம் வந்தாலும் துவக்குப் பேசும் என்பது அறிந்ததே.
யார் இயக்கத்தை பற்றி தப்பாய்ச் சொன்னாலும் இரண்டு குழலுக்குள்ளாலும் துப்பாக்கி புகையைக் கக்கிப் பார்க்கும்.
எடேய் மணியம் தட்டாரக் குணத்தைத்தான் சுட்டனான்'
'ஏனடா கறுவல் குனத்தார் என்ன செப்தவர் சொன்னவர்"
கறுவல் முன் கோபக்காரன் முன் கோபக்காரன் கையில் கொலைக்கருவியை கொடுத்தது யார்? யாராய் இருந்தால் என்ன? அருண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் தானே. மணியத்தார் குற்றுயிராய்க் கிடந்தார்.
முந்திக் கறுவல் வட்ட அவையிலை இருக்கேக்கை குணத்தார் வீட்டிலைதான் மூண்டு நேரம் சாப்பாடு. அவிச்சுப் போட்ட குனத் தாற்றை மனிசி நாகம் மான வ வெள்ளையாடையோடை பாக்கிற விருப்பத்திலை சுட்டவனே கறுவல், ஒருவன் வாயோரியாகக் கேட்டான்.
7

Page 13
ჭ,Jövnáმბირშრ ტობა(ბ.....
சடசடசடபுட, பிறகும் சத்தம். கறுவல் Camp இன் பின்பக்கம் நின்று சுட்டான். அடே உவனுக்கு என்ன நடந்தது. சும்மா தோட்டாக்களை வீணாக்குறான்.'
ஒரு வேளை உவன் மற்றவங்களின்ரை ஆளோ? மனிதனின் சந்தேகம்தானே எல்லாத்துக்கும் அடி.
'போ போய்ப் பார். கவனமெடா கறுவல் இண்டைக்கு என்னவோ ஆவேசத்திலை நிக்கிறான். கண்கள் ரத்தமாக உடம்பெல்லாம் வேர்க்க விறுவிறுக்க தோட்டா முடிஞ்சு போக உறுமலுடன் இரட்டைக்குழல் துப்பாக்கியை நிலத்தில் வீசியெறிந்தான்.
குமார் இங்கை வா! ராசனிட்டை போய்ச்சொல்லு உந்த A.K யை கொண்டு வரட்டாம் எண்டு. குமார் எதுக்கும் பயப்படாதவன். ஆனால் கட்டை கறுவலின் சன்னதத்தைக் கண்டு மிரண்டு போனான். பயந்து போனவன் Camp தலைவர் ராசனிட்டை போய் கறுவல் சொன்னதை சொன்னான். டேய் ராசன்' கறுவல் கத்தினான். ஒரு கப்டனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை ஒன்றையும் கறுவல் கொடுக்காமல் விட்டதாலை மிரண்டு போனவன் கோபப்பட்டான்.
'சிவம், பாலன், சிறி, கெளரி, ஆனந்தன் இஞ்சை ஓடி வாங்கோ. கறுவலைப் பிடியுங்கோ'
உத்தரவு நொடியாக முதல் கட்டுங்கோ' கறுவல் கருங்காலி மரத்தில் பிணைக்கப்பட்டான். டேய் டேய் கறுவல் இன்னும் கத்தியபடியே இருந்தான்.
சொட்டுச் சொட்டாய் மணியத்தாரின் உடம்பில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதங்களாய் சவுக்காரம் காணாத ஆஸ்ப்பத்திரி பெட்சீட்டின் மேல் படுத்திருந்த மணியத்தாருக்கு கட்டிலின் மூட்டைக்கடி வேறு. மயக்கம் வருவதும் போவதுமாக இருந்தது. 'மிருதங்கத்துக்கு இரண்டு பக்கமும் அடியடி நாகம்மா!'
இன்னும் சாகாமல் இருந்தவரை கொஞ்சம் பேசாமல் இருங்கோ' என்றபடி கண் கலங்கினா நாகம்மா.
'ஏன் பேசாமல் இருக்கச் சொல்லுறாய் இண்டைக்கு எங்கடை நிலமை என்ன? ம் எண்டால் ஆமிக்கு பயப்பட வேணும். புறகு உவையளுக்கு பயப்பட வேணும். கொஞ்சம் வாய் பேசினால் போச்சு. "துவக்கு வில்லு தட்டுப்பட்டிடும்."
"எணை அப்பா தயவு செய்து பேசாதையுங்கோ. இப்ப நீங்கள் இருக்கிற நிலமையிலை இது நல்லா இல்லை."
இரண்டாவது மகள் வசந்தி தனது அப்பாவ்ை அமைதிப்படுத்தினாள்.
"என்ன மகள் சொல்லுறாய். இப்ப என்ரை உயிர் போயிடும் எண்டு நான்
நினைக்கேல்லை. உவன் கறுவல் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வானெண்டு
8

இளைய அப்துல்லாஹ்
நான் கனவிலையும் நினைக்கேல்லை. ஆனால் அவன் நல்ல பொடியன் ஏன்தான் திடீரெண்டு இப்பிடி ஆயிட்டுதோ தெரியாது. நான் அவனோடை எப்பவும் போலத்தான் பேசினனான். என்னத்தைக் கண்டானோ தெரியாது திடீரெண்டு துவக்கை நீட்டி சுட்டுப்போட்டான். நான் உதுக்கு பயப்பிடேல்லை. உதுக்கு பயப் பிட்டால் எங்கடை உலகத்திலை வாழ ஏலுமே? மகள் நீ சின்னப்பிள்ளையில்லை. உனக்கும் விளங்கும். இண்டைக்கு எங்கடை நிலமையளைக் கொஞ்சம் சிந்திக்க வேனும் பிள்ளை, இயக்கம் இயக்கம் எண்டு சொன்னால் அதுக்குள்ளேயும் எத்தினை பிரச்சனைகள் எத்தினை பிளவுகள். பிறகு எங்கை நிம்மதி? மணியத்தார் இரண்டுதரம் விக்கினார். கண்ணை மூடினார் டொக்டர் ஓடி வந்து பார்த்துவிட்டு சொன்னார் "மயக்கம்தான்"
கறுவலைக் கட்டியிருந்த மரத்தை சுத்தி ஆட்கள் வந்து விட்டார்கள்.
"என்ன கூத்துப் பாக்கிறியளே? நானென்ன பாம்பாட்டியே? இல்லாட்டிப் பைத்தியக்காரனோ?"
ராசனுக்கு கேட்டது.
இல்லாட்டி பைத்தியக்காரனோ?.
"அடக்கடவுளே!"
ராசன் ஏங்கிப்போனான். ஒரு வேளை அப்படி இருக்குமோ பொறி தட்டியது. மனம் பாரமாகியது. "ச்சீ. எங்கடை ஆக்களை எத்தினையிலை இழக்கிறது. யுத்தம். மஞ்சள் காச்சல். வாந்திபேதி. மலேரியா. இப்ப இதுவுமா? ஒரு அழிவின் ஆரம்பம் போல கறுவல் கருங்காலி மரத்தில் கட்டியிருந்தபடியே நின்றிருந்தான். ராசன் யோசித்தான் இப்படியே போனால்.
அவசர வாகனம் வயர்லெஸ் இன் சொல்லுக்கு வந்து நின்றது. கறுவல் கட்டுக்கு அடங்காததால் கட்டியே ஏற்றப்பட்டான். வைத்திய பரிசோதனை முடிவில் பைத்தியம் உண்மையாக்கப்பட்டது. மற்றப் போராளிகளையும் இப்படித் தாக்கினால் பைத்தியங்களை வைத்து. ராசன் அதிர்ந்து போனான்.
குணத்தார் கண்திறந்தார். மயக்கம் தெளிந்தார். தலைமாட்டில் பார்த்தார். நாலைந்து இயக்க பெடியன்கள் துவக்குகளோடு வந்து நிற்பதைக் கண்டார்.
"குணமண்ணை உவன் கறுவலுக்கு பைத்தியமாம்."
பக்கத்திலை தான் அறையிலை போட்டிருக்கினம். இடைக்கிடை கத்துறான். உங்களுக்கு மயக்கமாயிருந்ததிலை ஒண்டும் விளங்கேல்லை.
அவருக்கு பெருமூச்சொன்று தானாய் வந்தது. குணத்தார் ராசனை பக்கத்தில் கூப்பிட்டார். அவனின் கையைப் பிடித்தார். அவனின் கையில் தன் கையை வைத்து அழுத்தினார். மீண்டும் கண் கலங்கினார். இவ்வளவு காலமும் சனத்துக்குள்ளைதான்
9

Page 14
துப்படிக்கிகளின் கAலம்.
பைத்தியக்காரர் இருந்தினம். புள்ளையைப் பறி கொடுத்தவையள், தேப்பனைத்தின்னி தாயைத்தின்னி. எண்டெல்லாம் பைத்தியம் பிடிச்ச ஆக்கள் இருந்திச்சினம். வெளிநாட்டிலை இருந்து வந்த டொக்டர்மார் சொல்லிச்சினம் எங்கடை இடத்திலை தான் அதிகமாக பைத்தியக்காரர் இருக்கினம் எண்டு.
அவையள் சொல்லாமலேயே எங்களுக்கு விளங்கிச்சு. இங்கை கிழடு கட்டையளை விட்டுப்போட்டு வெளிநாடு அது இதெண்டு புள்ளையஸ் போனாப் போலையும் இஞ்சை இருக்கிறதுகளை யுத்தத்திற்கு அனுப்பிப்போட்டு பிரேதத்தை எதிர் பாக்கிற நேரத்திலையும் பாதிக்கப்படுவது மனம் தானே. முந்தியெண்டால் பைத்தியம் ஒண்டு ரெண்டு, அதுவும் உதிலை இருக்கிற மந்திகையிலை கொண்டு போய் போட்டால் சரி. ஏதோ சுகமாயிடும்.
இப்ப மனநோய் எண்டு அங்கொடைக்கு கொண்டு போக ஏலுமே. அங்கை போனாலும் உவன் தமிழன். புலி-ஏதோ உளவு பாக்கிறதுக்குதான் பைத்தியக்காரன் போல நடிச்சு இஞ்சை வந்திருக்கிறான். தற்கொலைப்படையிலை உள்ளவன் போல எண்டு சொல்லுவினம், பைத்தியத் தோடை கொண்டு போய் பூசாவிலை போட்டிடுவாங்கள்.
இண்டைக்கு எங்கடை நிலைமை இப்படிப்போட்டுது.
குளுக்கோஸ் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டது. குணத்தார் மெதுவாய் செருமினார். குண்டு நல்லா பாஞ்சிருக்கு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஒரு நல்ல மனிசனை இழக்கப்போறம் என நினைத்தான் ராசன். குணத்தார் கண்ணை மூடித்திறந்தார்ஏதோ மின்னலடித்தது. கண்களில் வெளிச்சம் வந்து இருளும் வந்தது. நாகம்மாவும் வசந்தியும் விலகி நிற்க குணத்தார் ராசனின் கைகளையே பற்றிப்பிடித்தபடி படுத்திருந்தார். இப்போது அவரின் சிந்தனை இறப்பதற்கு முன்னால் என்பதாகவே இருந்தது.
"எங்கடை குஞ்சு குருமன்களை எல்லாம் யுத்தத்திலை தாரை வார்த்தாச்சு. இருக்கிற மிச்ச சொச்சமும் வருத்தத்திலை சாகுதுகள். இப்பிடியே போனால் இதின்ரை முடிவுதான் என்ன ஆகுமெண்டு சொல்ல ஏலாமல் இருக்கு. கடைசிலை ஆருக்கு சுதந்திரம் வாங்குறது. சொல்லப்போனால் கட்டிடங்களும் இப்ப இல்லையே. மனிசன் எங்கை இருக்கப் போறான். இருக் கறவையஞக்கும் பைத்தியம் வியாதி.இப்பிடியே எங்கடை இனமெண்டு ஒண்டு இருந்ததெண்டு வந்து குடியேறினவை சொல்லப்போகினம். அதுக்கு வாய்ப்பிருந்தால் துறந்த வீட்டிலை அது நுழைஞ்ச மாதிரி வருவினம். இல்லாட்டி ஆயதங்களோடை அதுவுமில்லாட்டி உரிமையைச் சொல்லி எங்கடை பூமி எண்டு கொண்டு.
கடவுளே உப்பிடிப்போனா. சுன்னாகம் கந்தரோடையிலை பழையதுகள் மிதக்கிற மாதிரி எங்கடை நிலமும் புதைஞ்சு மிதக்கும். அதுக்காகவெண்டாலும் நீங்கள் போங்கோ.
10

இளைய அப்துல்லாஹ்
இஞ்சை ஏதோ இரைஞ்சு கேக்குது. ஹெலிபோல. ஆஸ்பத்திரி சிவப்புக் குருசும் அவங்களுக்கு தெரியாது. "ராசன் என்ரை குஞ்சு" என்றபடி. குணத்தாரின் கை பிடி இறுகியது.
ஒரு முறைதான். கை கொஞ்சம் கொஞ்சமாகச் சோர்ந்தது.
ராசனின் கண்கள் பனித்தன. குணத்தாரின் மூச்சு நின்று போக. ஆஸ்ப்பத்திரி வார்ட் அழுகுரலால் நிரம்பியது.
தோளில் AK அழுத்த தூக்க முடியாத மனப்பாரத்துடன் ராசன் நடந்து கொண்டிருந்தான்.
சரிநிகர்-16-டிசம்பர்1993
11

Page 15
égati பில்:ே
■
வானம் நெருப்புப் புகை போல் இருண்டுபோய்க் கிடந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வந்துவிடும். கிழக்குத் திசையில் சுருள் சுருளாக முகிற்கூட்டம் அவசரமாகச் சேர்ந்து கொண்டிருந்தது. எமிறேற்ஸ் மலையடிவாரமே இன்னும் கொஞ்ச நேரத்தில் வெள்ளமாகிவிடும் போலிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் முழுக்க பச்சைப்புல்வெளி மனதை ரம்மியமாக்கியது. ஜோர்ச் எமில்ட்றே தனது ஆடுகளை பட்டியின் பக்கமாக நடத்திக் கொண்டிருந்தான் தூரத்தில் இன்னொரு ஆட்டு மந்தையை மொனோஸிலா ஒட்டி வந்து கொண்டிருந்தாள். மொனோஸிலாவின் ஆடுகள் அங் கொன்றும் இங்கொன்றுமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. மொனோஸிலா பொறுமையாக அவற்றை அனைத்து மேய்த்தாள். ஜோர்ச் எமில்ட்றே வழக்கமாக குறுக்கு வழிப் பாதையினுடாக ஆடுகளை மேய்ப்பவன் அருகருகாக வரும் சிறுமியின் சினேகத்திற்காக நேர்வழியில் இன்று தனது பட்டியை விரட்டினான். இப்போது மொனோஸிலாவின் ஆடுகளுக்குக் கிட்ட எமில்ட்றேயின் ஆடுகள் வந்து விட்டன. பக்கத்தில் வந்த எமில்ட்றேயை மொனோஸிலா நெருங்கி வந்து பார்த்தான்.
1.
 

இளைய அப்துல்லாஹ்
'ஏய் நீ யார்?' மொனோஸிலா தான் எமில்ட்றேயைக் கேட்டாள். எமில்ட்றே சிரித்தான். மொனோஸிலா சிரிக்கவில்லை, மீண்டும் கேட்டாள்.
'நீ யார்? என் பாதையிலே உன் ஆடுகளை எப்படி ஒட்ட முடியும்? ஏதோ தான் போட்ட சொந்தப் பாதைபோல் உரிமை கொண்டாடினாள் மொனோஸிலா,
எமில்ட்றே இப்போது பேசினான்.
அம்மணி. உன் பாதையிலேயா நான் ஆடுகளை ஓட்டினேன்? உன், என். எனது. நீ. இவையெல்லாம் ஆணவத்தின் அடையாளம். ஆண்டவனிடம் இருக்கவேண்டியவை, உன்னிடம் வந்துவிட்டதே. பின்னரும் தொடர்ந்தான் ஆமாம். மஹாராசி எதற்கு நீ. ஆடு மேய்க்கிறாய். உனக்கென்ன விதி அப்படியோ? மொனோஸிலா இப்போது சிரித்து விட்டாள். விழுந்து விழுந்து சிரித்தாள். கெக்கட்டம் போட்டுச் சிரித்தாள்.
ஓ துரை அவர்களே! உங்கள் பெயர். ஊரைக் கொஞ்சம் சொல்வீர்களா?
மொனாளிலாவின் கேள்விக்கு உடனடியாக எமில்ட்றே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். மொனோஸிலா அவன் சிந்திப்பதன் அழகையே தலை சரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"முதலில் உன் பேரைச் சொல்லு" எமில்ட்றே கேட்டான்.
அவள் "மொனோஸிலா" என்று உடனே பதிலளித்தாள். மொனோஸிலா. மொனோஸிலா இரண்டு முறை கூறி பெயரைத் தன் உள்ளத்தில் பதிவு செய்து கொண்டான் எமில்ட்றே மொனோஸிலா என் பெயர் எமில்ட்றே. ஊரைப் பற்றிய தகவல் எனக்கு இன்னும் தெரியாது. என் வயது பதினொன்றும் நாலு மாதமும் என்று நினைவு வைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட சரியாக இருக்கும். இப்போது நான் பிரபு லாரன்ஸின் ஆடுகளில் ஒரு பகுதியை என் உணவுக்காகவும், உடைக்காகவும் மேய்க்கிறேன். இவ்வளவுதான். உன்னைப்பற்றிச் சொல்லேன் என்று அவன் கேட்காவிட்டாலும் மொனோஸிலா சொன்னாள். 'என் பெயரை உனக்கு ஏற்கனவே சொல்லி விட்டேன். வயது பதினொன்று பக்கத்துக் கிராமம் தான் நான் ஆனால் ஒரு முறை இராணுவம் வந்து எமது கிராமத்தை அழித்ததோடு உறவுகள் எல்லாம் பிரிந்து போய்விட்டன. பின்பு தன்னந்தனிய லாரன்ஸ் பிரபுவின் அடிமையால் களவாக வளர்க்கப்பட்டு இப்போது துரத்தப்பட்டிருக்கிறேன். இந்த ஆடுகள் கோக்கின் பிரபுவின் மந்தையிலுள்ளவை. உன் லாரன்ஸ் பிரபுவின் விட்டிற்குக் கிட்டத்தான் கோக்கின் பட்டியும் இருக்கிறது. மொனோஸிலா கூறி முடித்தாள். பெருமூச் சொன்றையும் விட்டாள்.
"மொனோலிலா நாளை சந்திப்போம் இருளாகிறது. மந்தையைக் கொண்டுபோ, நான் போகிறேன்."
சொல்லிவிட்டு எமில்ட்றே தனது ஆட்டுப்பட்டிக்குள் ஆடுகளை மேய்த்து விட்டான். அடுத்த நாள் மாலை, அதற்கடுத்த நாள் மாலை என்று எமில்ட்றே
13

Page 16
gNova&&actidh 4matë...
மொனோஸிலா சந்திப்பு வளர்ந்து கொண்டே போனது. எமில்ட்றேயும் மொனோஸி லாவும் இரண்டு பேருமே அனாதைகள் என்ற உணர்வு இருவருக்குமே வந்துவிட்டதால், மனம் ஒன்றுசேர, அந்தப்பிஞ்சு உள்ளங்கள் ஆடுகளைப்போல் ஒற்றுமையாகச் சேர்ந்து விட்டன.
"மொனோஸிலா" புல்தரையில் மேய்ப்புத் தடியை தலைக்குக் கொடுத்துச் சாய்ந்திருந்த எமில்ட்றே அவளை அழைத்தாள்.
'ஏன் எமில்ட்றே" என்றபடி அவனின் அருகில் வந்தாள் மொனோஸிலா.
மொனோஸிலா உனக்குத் துணை யாரும் இல்லை. எனக்கும் துணை யாரும் இல்லை. அந்த ஆண்டவனைத் தவிர ஆனா. இரண்டு பேருக்கும் இரண்டு பேரும் துணையா பிரியாம இருந்தா எப்படி? எமில்ட்றேயின் கண்கள் ஏதோ இனம் புரியாமல் துளிர்ந்திருந்ததை மொனோஸிலா பார்த்தாள்.
'எமில்ட்றே ஏன் அழுகிறாய்? என்மீது உனக்கு அவ்வளவு பாசமா? நானும் தான். உன்னைப் பிரிந்து என்னால் கொஞ்சங்கூட இருக்கமுடியாமல் இருக்கே. இதனை உன்னிடம் சொல்ல வெட்கமாய் இருந்தது எமில்ட்றே அதனால் சொல்ல வில்லை. இப்போது நீ சொல்வதனால்ச் சொல்கிறேன் எமில்ட்றே அந்த ஆண்டவன் மீது சத்தியமாக உன்னைப் பிரியவே மாட்டேன். ஆனால் ஒன்று நீயும் என்னை விட்டுப்பிரியவே கூடாது." என்றபடி எமில்ட்றேயின் கரங்களைப் பற்றி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் மொனோஸிலா.
"மொனோஸிலா" என்றவன் அவளின் கண்களில் முத்தாய்ச் சேர்ந்த கண்ணீர்த் துளிகளை தன் கைகளால்த் துடைத்து விட்டு அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு தலையைக் கோதி விட்டான்.
அந்த அருமையான சுகத்தில் மொனோஸிலா எமில்ட்றேயின் மார்பில் கிடந்து அழுதாள். எமில்ட்றே அவளைத் தேற்ற. அவள் அவனைப் பார்த்தபடியே எழும்பினாள்.
பொழுது கருக்கலாகிவிட்டது. ஆட்டு மந்தைகளைச் சேர்த்துக்கொண்டு இப்போது இருவரும் ஒன்றாகவே போய்க்கொண்டிருந்தார்கள். கேலியும், அன்பும், சிரிப்பும் அவர்களை மகிழ்வில் திளைக்க வைத்தது. எமிறேற்ஸ் மலையடிவாரமே இந்தப் பதினொரு வயதுப் பாலகர்களின் அன்பில் மூழ்கிப்போய்ச் செழித்திருந்தது.
எமில்ட்றே போகவோ..? அவள் கேட்டாள். மொனோஸிலா போகவோ..? அவன் கேட்டான்.
அதிகாலை வரைக்கும் கூட பிரியமுடியாத சினேகமாகி விட்டது.
ஒரு நாள். இரண்டு நாள் மூன்று நாள் என்று நாட்கள் நகர்ந்து கொண்டே போயின. மொனோஸிலா இப்போது ஆடு மேய்ப்பதற்கு வருவதில்லை. அவளைப்
14

இளைய அப்துல்லாஹ்
பற்றிய எந்தக் தகவலும் எமிட்ல்றேக்கு கிடைக்கவில்லை. மொனோஸிலா ஏன் வராமல் விட்டாள் என்று விசாரிக்கவும் முடியவில்லை. காரணம் கோக்கின் ஆட்டுமந்தைகள் ஏராளம். அதில் மொனோஸிலா மேய்க்கும் ஆட்டுப்பட்டி எந்தப்பக்கம் இருக்கிறது என்பது கண்டு பிடிக்க முடியாதிருந்தது. விசாரிக்கவும் யாரையுமே தெரியாது. எமில்ட்றே இப்போது சாப்பிடுவதில்லை. மொனோஸிலாவைப் பற்றிய தகவல் கிடைக்கும் வரை விரதம் இருப்பதாக முடிவெடுத்துக் கொண்டான். ஆண்டவனைத் தொழுதான். இறைஞ்சினான். என் மொனோஸிலா எனக்கு வேண்டும். இது தான் அவனின் முடிவாக இருந்தது. இப்போது நாட்கள் பத்தாகிவிட்டது. எமில்ட்றே மெலிந்து போனான். இப்போது அவனால் ஒன்றுமே செய்ய முடியாமல் இருந்தது. ஆடுகளைப் பராமரிக்கும் அடிமை எமில்ட்றேக்கு ஏசினான். சாப்பிடும்படி வற்புறுத்தினான். எமில்ட்றே பிடிவாதம் செய்தான். நாட்கள் பலவாகின. அவன் நினைவில் இல்லை.
கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும். தன் தோழிய்ை பிரிந்த எமில்ட்றே மெலிந்து காணப்பட்டான். கவலையில் அவன் அப்படி ஆகிவிட்டிருந்தான். எமில்ட்றே யோசனையிலும் கவலையிலும் இப்போது ஆடு மேய்க்கப் போவதில்லை. இன்று மாலை குடிலுக்குள் ஒரே இருந்து கொண்டிருக்கமுடியாமல். அலுப்பாக இருந்ததனால் அவன் கொஞ்சம் வெளியாகி கால்களில் தெம்பு இருக்குமட்டும் நடந்துபோய் அந்த இபில் மரதோட்டத்து மூலையில் நின்ற மங்குஸ் மரத்தின் வேருக்கு அடியில்போய் உட்கார்ந்து கொண்டான். தூரத்தில் இருந்த றம்புட்டான் மரத்தின் ஒரு பட்ட கொப்பில் இரண்டு வெண்புறாக்கள் வந்து உட்கார்ந்து கொண்டன. அவை ஒன்று ஆணும் மற்றையது பெண்ணுமாக இருந்திருக்க வேண்டும். ஆணின் மூக்கோடு பெண்புறா உரசிக் கொண்டது. ஏதோ பேசிக் கொண்டதாக எமில்ட்றே எண்ணிக்கொண்டான். இறைவனே! என் மொனொஸி லாவை என்னோடு சேர்த்து வைக்கமாட்டாயா? கண்ணிருடன் நினைத்துக் கொண்டான் எமில்ட்றே.
தூரத்தில் ஓர் ஆட்டுமந்தைக் கூட்டம் வருவது தெரிந்தது எமில்ட்றே கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டான். லேசாக எழுந்து நின்று பார்த்தான். தூரத்தில் ஆட்டு மந்தையை மேய்த்தபடி ஒரு பெண் வந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. Se..... لقی ویکی . . . .. ஆமாம். ஆமாம். மொனோஸிலாதான். ஆம் என். மொனோஸிலாதான். ஆம். ஆனந்தம், மகிழ்ச்சி, ஆர்வ வெளிப்பாடாய் அழுது விட்டான் எமில்ட்றே.
ஆட்டுமந்தையை ஒட்டிக்கொண்டு வந்த மொனோஸிலா எமில்ட்றேயைக் கண்டுவிட்டாள். ஆ. என். எமில்ட்றே. என்று ஓடோடி அவனுக்கு முன்னால் வந்தவள் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டாள். அவனை நேரில் கண்டவுடன் எமில்ட்றே. எமில்ட்றே. என்று மட்டும் சொல்லிவிட்டு அழுதாள் மொனோஸிலா , திடீரென எமில்ட்றேயைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவனின் தோளின் மேல் தனது நாடியை வைத்து அழுதாள். எமில்ட்றேயும் அழுதான். இரண்டு பேரும்
15

Page 17
துப்UAக்கிகளின் கAலம்.
இறுகி அணைத்தபடி நின்று கொண்டு இவ்வளவு நாள் பிரிவை எண்ணி எண்ணி அழுதனர். இப்போது அழுகை ஓரளவு குறைந்து விட்டது. தன் கைகளின் பின்புறத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மொனோஸிலா எமில்ட்றேயின் கண்களையும் துடைத்து விட்டாள். வா எமில்ட்றே அப்படி அந்தப் புற்றின் அருகில் அமர்வோம் அழைத்தாள் மொனோஸிலா எமில்ட்றே மெதுவாக நடந்துபோய் மண் நிறைந்த புற்றின் அருகில் அமர்ந்தான். மொனோஸிலாவும் அருகில் அமர்ந்து கொண்டாள்.
"மொனோஸிலா நீ ஏன் இவ்வளவு நாளும் ஆடுகளை மேய்ப்பதற்கு வரவில்லை. மொனோஸிலா நீ வராததால் நான் எவ்வளவு கவலையடைந் திருக்கிறேன் தெரியுமா? ஏன் வரவில்லை மொனோஸிலா. சொல்லு." கலங்கிய விழிகளுடன் "எமில்ட்றே உன்னையும் நான் காணாமல் சாப்பிடவே மனமில்லாமல் இருந்தேன். எங்கள் கோக்பிரபுவின் அடிமையின் தாயான அந்தக் கிழமாதுதான் என்னை வற்புறுத்தி உணவு உண்ண வைத்தாள்." "எமில்ட்றே உன்நினைவில் எனக்குத் தூக்கமே இல்லை. உன்னைப் பார்க்க ஓடோடி வருவோமென்று ஒருநாள் இரவு வீட்டுச் சுவர்மேல் ஏறிக்குதித்தேன் அப்போது எனக்கு இரத்தப்போக்கு அதிகமாகி விட்டது. நான் மயக்கமாகிவிட்டேன் எமில்ட்றே. அதன் பின்னர் என்னை
if } f
அந்தக் கிழவி ரூமில் வைத்து எங்குமேபோக முடியாதபடி செய்து விட்டாள்.
"என்ன இரத்தம் போனதா? என்ன மொனோஸிலா நீ என்ன சொல்கிறாய்?" "ஆமாம் எமில்ட்றே அன்று மாலை நான் உன்னோடு இறுதியாகப் பேசிவிட்டுப் போனேனே அன்று வழமைபோல் ஆடுகளை எல்லாம் மேய்த்து பட்டியில் சேர்த்து விட்டு வீட்டில் போய் படுத்துக்கொண்டேன். இரவு நன்றாக அசந்து தூங்கி விட்டேன். காலையில் அதோ தூரத்தில் உள்ள மலைத்தோட்டத்து இறப்பள் மரங்களினூடே ஒரு மின்னல் கீற்றுப்போல ஏதோ தெரிந்தது. பின்னர் தலை வலித்தது. உடலெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் என் பாவாடை முழுக்க இரத்த மயம். கிழவியிடம் ஓடினேன். கிழவி பார்த்து விட்டு மொனோஸிலா நீ சமைந்து விட்டாய் என்று சொன்னாள். என்ன எமில்ட்றே சமைந்தது என்றால்?" தலைசரித்து எமில்ட்றேயிடம் கேள்வியாய்க் கேட்டாள் மொனோஸிலா எனக்குத் தெரியாது மொனோஸிலா ஆ மேலே சொல்' எமில்ட்றே சொன்னான்.
"பின்னர் என்னை சமைந்த பொண்ணு என்று சொல்லி ஒரு மூலையில் உட்காரவைத்தார்கள். என்பாவாடை அடிக்கடி இரத்தத்தால் சிவப்பாகும் எமில்ட்றே. பின்னர் என்னை ஆடு மேய்யப்பதற்கு அவர்கள் விடுவதேயில்லை. அந்தக் கிழவி எனக்கு உணவுகள் தந்து கவனித்தாள். பிரவும் என்னை மூலையில் இருக்கச் சொன்னாராம். சுமார் ஒரு மாதமளவு இருக்கும் எமில்ட்றே இவ்வளவு நாளும் உன்னைக் காணாமல் நான் துடித்துப் போனேன் தெரியுமா? ஆ. எமில்ட்றே அந்தக் கிழவியும் அப்படித்தானாம். சிறுவயதில் கோக் பிரபுவின் அப்பாவின் அப்பா காலத்தில் ஆடுமேய்த்தவளாம். அப்போது அவள் சிறுமியாய் இருந்தாளாம். இப்படி என்னைப்போல் சமைந்த பின்பு அங்கிருந்த அடிமை ஒருவனுக்கு பிரபு கலியாணம் செய்து கொடுத்தாராம்."
16

இளைய அப்துல்லாஹ்
இவ்வளவையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த எமில்ட்றே பெருமூச் சொன்றை விட்டு விட்டு "எப்படியோ மொனோஸிலா நீ எனக்குத் திரும்பக் கிடைத்ததே போதும். என் உயிரே போய்விட்டு வந்தது போல" எமில்ட்றே சொன்னான். மொனோஸிலா எமில்ட்றேயின் கைகளை அன்போடு பற்றினாள்.
மொனோஸிலா- எமில்ட்றே சந்திப்பு இப்போது ஒவ்வொரு நாளும் நடக்கும். ஆடுகளை மேயவிட்டு விட்டு அல்லது ஒரேயடியாகத் தண்ணின் காட்டி விட்டு பின்னர் மேய்ச்சல் தரையின் புல் பசுமையில் பகல் பகலாக உட்கார்ந்து எதையாவது இருவரும் பேசிப் பொழுதைக் கழிப்பார்கள். மொனோஸிலா தினமும் எமில்ட்றேயைச் சந்திப்பாள். சந்தர்ப்பமும் அப்படித்தான் இருந்தது.
நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணி மொனோஸிலா இன்னும் தூங்கவில்லை. குடிலின் ஓரத்தில் ஒரு சிமினி - லாம்பு எரிந்து கொண்டிருந்தது. அவள் அண்ணாந்து வைக்கோலால் வேயப்பட்ட குடிலின் முகட்டையே உற்று நோக்கியவளாக மல்லாக்காகப்படுத்திருந்தாள். இப்போது கொஞ்ச நாளாக இப்படித்தான் இரவு தூங்க வெகுநேரமாகியும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பாள். மங்கலான சிமினி லாம்பின் ஒளியில் எதையோ யோசிப்பாள். அடிக்கடி எமில்ட்றே தான் அவள் நினைவில் நிழலாடுவான். ஏனிப்படி என்று அவள் பலமுறை நினைத்தும் பதில் கிடைக்கவில்லை.
எமில்ட்றே இப்போது தேறி வருகிறான். ஒரு கிழமைக்குப் பின் அவன் உசாராகி விட்டான். தினமும் ஆடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் புல் நிலத்திற்கு வருவான். மொனோஸிலாவோடு அளவளாவுவான். அப்போது தான் மனம் திருப்தி அடையும் அன்பாகப் பேசுவான். கிள்ளி விளையாடுவான். எமில்ட்றே இப்படிச் செய்யும் போது அவள் ஏதோ இனம் புரியாத இன்பப் பிரவாகத்தில் திளைத்துப் போவாள். அது மூளையில் இருந்து வருகிறதா? இதயத்தில் இருந்து வருகிறதா? நரம்புகளில் இருந்து வருகிறதா? என்று கூறமுடியாத இன்பப் பிரவாகமாக இருந்தது அவளுக்கு.
ஒரு நாள் எமில்ட்றே மேய்ச்சல் நிலத்திற்கு ஆடுமேய்க்க வரவில்லை. பதிலாக ஆடுகளை மேய்த்துக்கொண்டு கிழவன் மென்ஸிலோன் வந்து கொண்டிருந்தான். கிழவனை அணுகி மொனோஸிலா அழுத கண்ணிரோடு எமில்ட்றேயை விசாரித்தாள். கிழவன் சொன்னான்.
"மொனோக் குட்டி எமில்ட்றேக்கு நேற்று இரவு விஷக்காச்சல் பிடித்துப்போய் குடிலின் மூலையில் அவன் படுத்திருக்கிறான். அவனை பண்ணை வைத்தியர் வந்து பார்த்து விட்டுப் போனார். ஆனால் விஷக் காச்சல் இன்னும் குறையவே இல்லை. மாறாக ஒவ்வொரு மணித்தியாலமும் கூடிக்கொண்டே வருகிறது. பண்ணை ஆட்கள் எல்லோரும் பயப்படுகிறார்கள். எமில்ட்றே உயிர் தப்பி விடமாட்டானோ என்று கிழவன் சொல்லிவிட்டு "மொனோஸிலா. நான் போகிறேன் பொழுது ஏறுகிறது. வெயில் வரமுன்னர். எமிறேட்ஸ் மலைக்குக் கீழாகப் போகவேண்டும்." கிழவன் எமிறேட்ஸ் மலையடிவாரத்தின் போல்டன் கணவாய் வழியாக கிழக்குப் பக்கமாக
17

Page 18
துப்படிக்கிகளின் கடிலம்.
தன் ஆட்டைத்திசை திருப்புகிறான். "எமில்ட்றே. ஐயோ. எமில்ட்றே உனக்குச் சுகவீனமா? உனக்குக் காச்சலா? உனக்கு விஷக் காச்சலா? உயிர் என் உயிர் நீயல்லவா! உன் உயிர் போய்விட்டால்." மொனோஸிலா புலம்புகிறாள். ஆடுகளை அவசர அவசரமாக மேச்சல் குடிலை நோக்கி ஒட்டுகிறாள்.
எமில்ட்றே படுத்திருக்கிறான். காய்ச்சல் நெருப்பாகப்பற்றிக் கொண்டிருக்கிறது. பக்கத்தில் இருந்த அடிமை இப்பொழுதான் போயிருக்கிறான். எமில்ட்றே தனியாகப் படுத்திருக்கிறான்.
"எமில்ட்றே." கத்துகிறாள் மொனோஸிலா விஷக்காச்சலிலும் ஒரு பரம ஆறுதல் அவனுக்கு. தன் தோழியைக் கண்டு விட்ட ஆனந்தப் பிரவாகம். "மொனோஸிலா நீ எப்படிம்மா. உனக்கு எப்படித் தெரியும்" எமில்ட்றே கேட்கிறான். மொனோஸிலா அழுகிறாள். எமில்ட்றே உனக்கு என்ன நடந்தது; அழுதான். மொனோஸிலா, வாய்விட்டு அழுதாள். நல்லகாலம் அவ்விடத்தில் யாரும் இருக்கவில்லை. அதனால் அவள் மனம் விட்டு அழச்சந்தர்ப்பம் இருந்தது. "எமில்ட்றே உனக்கு விஷக் காச்சலா? எமில்ட்றே. ஐயோ கடவுளே! என் எமில்ட்றேயைக் காப்பாற்று." உனக்கு என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன். என் எமில்ட்றேயைக் காப்பாற்று அழுதாள், புரண்டாள், விம்மினாள். எமில்ட்றேயைக் கட்டிக்கொண்டு விசும்பினாள். அப்போது மொனோஸிலா மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்.
எமில்ட்றேயும் அவளின் இந்தப்பரிதாப நிலையைக் கண்டு அழுதான். என்ன செய்வது அவளைத் தேற்றுவதற்கு எழும்ப முடியாமல் படுத்திருந்தான். எமில்ட்றே இறந்து விட்டால். மொனோஸிலாவால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாமல் போய் விட்டது.
எமில்ட்றே இப்போது நிறைய நாட்களின் பின் மேய்ச்சல் நிலத்திற்கு ஆடுகளை ஒட்டிக்கொண்டு வந்திருந்தான். அவனுக்குப் பிடித்த விஷக் காய்ச்சல் அவனை விட்டுப் போனதில் அவனைவிட மொனோஸிலாதான் அதிகமாக சந்தோசத்தில் இருந்து கொண்டிருந்தாள்.
ff
ஆ. எலிம்ட்றே இன்று நான் மகிழ்ந்து போயிருக்கிறேன். உன்னோடு எவ்வளவோ பேசவேண்டும். என்று இரவில் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது எதுவுமே நினைவில் வருகின்றது இல்லையே." பசும்புல்லின் பரந்த தரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை நிறம் நிர்மலமாய் பரந்து கிடந்தது. எமில்ட்றேயை மொனோஸிலா சைகையால் அழைத்தாள். எமில்ட்றே போய் மொனோஸிலாவிற்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
"எமில்ட்றே இப்பொழுது கொஞ்சநாட்களாக என் மனமெல்லாம் ஒரு நினைப்பு அது வேறொன்றுமில்லை நீதான் எமில்ட்றே. ஆம் நீதான். நித்திரையிலும் விழிப்பிலும் உன்னை நான் நேசிக்கிறேன். அன்பாக ஆதரிக்கிறேன். ஆம் எமில்ட்றே உண்மையைச் சொன்னால் உன்னை விடடால் எனக்கு இந்த உலகத்தில் யாருமே
18

இளைய அப்துல்லாஹ்
இல்லையே. எமில்ட்றே நீயும் நானும் இப்பொழுது ஓரளவு பெரியவர்களாகி விட்டோம். சொந்தமாய் முடிவெடுக்கக் கூடிய ஆற்றலும் சிந்தனையும் வந்து விட்டது தானே. எனவே. எனவே. எமில்ட்றே. உன்னை நான் விரும்புகின்றேன். நீயும் நானும் இறக்கும் வரை இணைபிரியாமல் இருப்பதற்கு நாம் அன்பாக. காதலிப்போம். பின்பு கல்யாணமும் செய்து கொள்வோம் எமில்ட்றே. எப்பொழுதும் உன்னோடு நானாக." மொனோஸிலா சொல்லி முடித்தாள்.
எமில்ட்றேயைக் கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள். அன்பாய் அழுதாள்.
எமில் ட்றே இப்பொழுது வளர்ந்து விட்டிருந்தான். அவன் பேசத் தொடங்கினான் விஷக்காய்ச்சலின் தாக்கம் இன்னும் அவன் கண்களில் தெரிந்தது. மொனோஸிலா தலை சரித்துக்கேட்டுக் கொண்டிருந்தாள்." மொனோக்குட்டி. என் அன்பானவளே! உன்னை நான் என் உயிருக்கும் மேலாக நேசித்தேன். நேசிக்கிறேன். புனிதமாக எமதன்பு அன்று தொடக்கம் வளர்ந்து வருகிறதே. மொனோஸிலா நீயில்லாமல் நானில்லை. இதுமட்டும் பூரணமான உண்மை உன்னைப் பிரிந்து எனக்கு ஒரு வாழ்க்கை இல்லை. நேசத்திற்கும் காதலுக்கும் வித்தயாசத்தை நான் காணவில்லை மொனோஸிலா. உன் அன்பு எனக்குத் தெரியாமல் இல்லை. என் அன்பும் தூய்மை யானதும் மிகவும் உறுதியானதுமாகும். மொனோஸிலா நம் இருவரின் அன்பு வித்தியாசமானதும் பிரிக்க முடியாததுமாகும். ஆரம்பத்தில் நானும் அப்படித்தான் எண்ணியிருந்தேன். உன் அன்பை மறக்க முடியாமல் அப்படிச் செய்து கொண்டால் என்ன என்று. ஆனால் திருமணம் என்று வந்துவிட்டால் எமது நட்பின் புனிதத்தில் மாசு ஏற்பட்டு விடும். திருமணத்திற்கும் தூய்மை அன்புக்கும் மிடையில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிடும். மொனோஸிலா திருமணம் என்ற பந்தத்தின் பின் நானும் நீயும் இப்படிப்பழகமாட்டோம். பின்னர் கணவன் மனைவி என்று அந்தப் பந்தம் உன்னை எனக்கு இயல்பாகவே மனைவி என்ற ஒரு வகை பணிந்து போகிற தன்மையை உண்டாக்கி விடும். அதுமட்டுமில்லை இப்போது இருக்கின்ற பாசத்தை திருமணத்தின் பின் எதிர்பார்க்க முடியாது. மொனோஸிலா பின்னர் உள்ளத் தொடர்புள்ள யாவும் உடல் தொடர்புகளோடு கலக்கப்பட பெண் ஆணுக்கு அடிபணிந்து போயேயாக வேண்டிய ஒரு தன்மை ஏற்படுகிறது மொனோஸிலா ஆகவே அன்பாக மிளிர வேண்டும் மென்றால். இப்படியே ஒரே பாசத்தில் மட்டும் நீ எனக்கு உறவாக இருந்துவிடு மொனோஸிலா.
எல்லா நாட்களிலும் என் தோழியாக. இல்லை அண்ணனாக தங்கையாக."
கூறிவிட்டு எமில்ட்றே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான். விஷக் காய்ச்சலின் தாக்கம் போலும்.
எமில்ட்றே இறந்து விட்டான்.
19

Page 19
அந்தப் பால்நிலா பட்டுத் தெறிக்கும் வெள்ளை மணல்,
வரிசையாய் தோப்பாகி நிற்கும் பனைமரங்கள். அதில் 'சர சர' என்கின்ற தென்றல் உரசும் சத்தம், என் தாய் மண்ணில் தான் எத்தனை சிறப்புகள் கொட்டிக்கிடக்கின்றன வானளாவ உயர்ந்து நிற்கும் வல்லிபுரக் கோவில் கோபுரம், தொண்டமனாறு செல்வச்சந்நிதி தேள் பார்ப்பதற்கு எத்தனை கண்கள் வேண்டும். அப்பொழுதெல்லாம் இந்தியாவில் இருந்து வந்த மிகத் திறமையான சிற்பிகளைக் கொண்டு உருவான தேர் அது. அந்தத் தேர்முட்டியில் அமர்ந்து பூனூல் போட்ட ஆசாரிமாருடன் உட்கார்ந்து மணிக்கணக்காக உரையாடியது. வல்வெட்டித்துளறயில் கடலில் வள்ளத்தில் போய் ஒத்துக்கொள்ளாமல் கடல் காற்றுக்கு வயிறு குடல் எல்லாம் வெளியில் வருமளவிற்கு வாந்தியெடுத்து எல்லாம் எப்போதோ நடந்து போனவைகள்,
 

ஆனால் நேற்றுப்போல் கண்களின் பாவைகளுக்கடியில் சுருட்டி விவக்கப்பட்டிருக்கும் படச்சுருள்கள் போல. நினைவு வரும் போதெல்லாம் திரைப்படமாய் ஓடும் நிஜங்களிவை, எங்களுடைய அப்பா சொல்லுவார். தாத்தா ஆறுமுக நாவலர் காலத்து ஆள் என்று. நல்லுார்க் கந்தன் ஆலயம் அதற்கருகில் ஆறுமுகநாவலர் வாசம் செய்த பூமி. தமிழும் சைவமும், இஸ்லாமும், கிறிஸ்தவமும், எவ்வளவு அன்னியோன்யமான பாசப்பினைப்பில்.
ஆனால் இன்றைக்கு எல்லாமே நீர்க் குமிழிபோல ஆகிவிட்டது. இந்த அலங்கோலம் ஏற்படக் காரணமாயிருந்தது என்ன? நினைக்கும்போதே மனது பரிதவித்துப்போனது. கன்கள் முட்டியபோது நினைவுகள் தழும்ப தானாக அழுகை வந்தது. இனங்களுக்கிடையே இப்போது எவ்வளவு பிளவு? என்ன செழிப்பாய் இருந்த யாழ்ப்பாணம்
என் தாய் மன்ை ஐயகோ என்று வாய்விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது. மேரி உன் நினைவுகள் எனக்கு எவ்வளவு பசுமையானவை. உன்னில் நான் ஒன்றையும் காணவில்லை. வேற்றுமை என்று. நீ கிறிஸ்தவத்தி, நான் ஒரு முஸ்லிம். வேறென்ன. எத்தனை பாதை வளைவுகள்: எத்தனை மாலை நேரப் பூங்காக்கள் எத்தனை சர்க்களாகள்.
எத்தனை விவாத மேடைகள்
விசுவின் படங்கள்:
கவிாதப் போட்டிகள்.
மேரி என் தங்கையே மனத்தின் அடியில் நெருப்பாய் எரிகின்றது. எல்லாம் முடிந்து போய்விட்டது.
நான் ஒரு அகதி
என் பூமியை விட்டுவிட்டு வந்தவன்.
என் நந்தவனம்.
காரைநகரின் கஜுர்னா பீச். ஒற்றைப்பனை மரத்தடி, கதைகதையாய் நானும் மேரியும்-பேசியும்-ஒடியும் அளினந்து விளையாடிய மண்மேடுகள் எல்லாம் எங்கேயோ

Page 20
ჭაjövAā34,ირმi énბასP.....
தொலைதூரம் போய் மறைந்து கொண்டன. என் மேரியும் கூட w
''(Supfil!"
என்னண்ணா? இன்டைக்கு எனக்கென்னவோ மனக்கவலையாய் இருக்கம்மா." 'என்னண்ணா உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?" இல்லை மேரி உடம்பிக்கில்லை: மனதுக்குத்தான். "எங்கடை இந்த பொன்னாான பூமிக்குத்தான் எத்தனை கரைச்சல், அலைக்கழிவு." "ஒ இப்படியே ஆகிக்கொண்டு போனால் என்னண்ணா? "முடிவாம்மா? கொஞ்ச காலத்திலை யாழ்ப்பாணம் எண்ட ஓர் இடம் இருந்ததென்று புதைபொருள் ஆராய்ச்சியில் தான் கண்டுபிடிக்க வேண்டி வரும் தங்கச்சி. 'எவ்வளவு செழிப்பாய் இருந்த பூமி.? பெருமூச்சோடு மனம் பாரித்துக்கொண்டது. எவ்வளவோ சுதாகரிக்க முடிந்தும் முடியாமல் போய்விட்டது. 'என்ன இருந்தாலும் எங்களை எங்கடை மண்ணிலை இருந்து புலியள் விரட்டியிருக்கக்கூடாது. மேரி பற்றிய நினைவு. அவள் என்னை விட்டுப் பிரிந்து போன, இல்லை.இல்லை பிரிக்கப்பட்டது. சிறிய வயதிலிருந்து ஒன்றாகவே படித்து. பக்கத்து வீட்டில் குடிவந்து. பின்னர் மேரியும் நானும் வளர்ந்து.
அண்ணன் தங்கையாகி. இப்போது என்மனம் நிறைய என் உடன்பிறவாத தங்கச்சி மேரிதான். என் ஆசான்-என் அன்புக்குரியவள்
என் பள்ளித்தோழி
என் விமர்சகி-என் ரசிகை, என் உயிர் எல்லாமே என்ற பின்னர் அவளுடன் சேர்த்து என் பூமியை விட்டு வந்த பிரிவு மனதைப் புண்ணாக்கி அது விகாரமாகி தினம்தினம் சீழ்படியும் ரணமாக ஆகி என்ன வேதனை செய்கிறது. மேரியின் அப்பா றோக்நாதர் ஒரு அரசாங்க பொறியியலாளர். எவ்வளவு புரிந்துணர்வுள்ளவர். அழகான அரசியல் விமர்சகள்.
அவர் கிறிஸ்தவர்.
22

இளைய அப்துல்லாஹ்
நாங்கள் முஸ்லிம்கள்.
இந்த ஒரே காரணம் மட்டும் தான்24 மணிநேர அவகாசத்தினுள் எங்கள் சொந்த பூமியில் இருந்து செத்த ஆட்டின் உண்ணியாய் கழற்றப்பட்டோம். கச்சதீவு-எத்தனையோ முறை கேள்விப்பட்டிருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் என்றால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு போகும் கைங்களியம் போல எண்ணிவிடுவார்கள். அப்படியும் போலத்தான். போக வேண்டும் என்ற முடிவெடுத்து மேரியின் அப்பாவும் எங்கள் வாப்பாவும் ஒருநாள் காலையில் நயினாதீவு போய் வள்ளம் ஒன்று வாடகைக்கு எடுத்துப் புறப்பட்டோம். என்ன அருமை! பரந்த நீலக்கடல் மாதா இரண்டு துருவங்களாய் இன்று ஆகிப்போன குடும்பங்களை என்ன அருமையாய் அன்றைக்கு சுமந்திருந்தாள். எவ்வளவு குதுாகலம் றோக்நாதரும் எங்கள் வாப்பா பாறுாக்கும் மேரியின் அம்மா கொன்செட்டாவும் எங்கள் உம்மா ஆயிஷாவும் என்ன அன்னியோன்யம். இரண்டு வீட்டுக் குழந்தைகளும் என்ன அழகாய் சேர்ந்திருந்து வீட்டில் சமைத்துக்கொண்டு வந்த பட்சணங்களை,
கடலில் விரைந்து செல்லும் படகில் இருந்துகொண்டு உண்டார்கள்! அதோ அந்தப் பக்கம்தான் குமரி முனை. என்று படகோட்டி சொல்ல எவ்வளவு ஆசையாய்த் திரும்பித் திரும்பிப் பார்த்தோம். தமிழ்நாட்டு மீனவர்களை எல்லாம் கண்டோம். எங்கள் மனம் எவ்வளவு குதுாகலித்துப் போனது அவ்வளவாக ஆழமில்லாத எங்கள் ஆதாம்பாலத்தை எப்படி எல்லாம் அனுபவித்தோம்! வங்கக் கடலினது பொறுமையின் ஆழத்தை வியந்து வியந்து மேரியும் நானும் எத்தனை கவிதைகளைப் போட்டிக்கு எழுதிக் குவித்தோம்! W, கச்சதீவின் சுண்ணாாம்புக்கற்களில் அமர்ந்து. எப்படியாய் குதுாகலம் கொண்டோம்! கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமா இந்தியாவிற்குச் சொந்தமா, கடற்கரையின்
23

Page 21
VmšācīG 4MAtš.
ஒரத்தில் மணல் மேட்டில்
அமர்ந்து கொண்டு விலாவாரியாய் புட்டுப் புட்டு மேரியும் நானும் என்னவாய் விவாதம் நடத்தினோம்! சத்தம் கேட்டு ஓடி வந்த றோக்நாதர் இலங்கையின் சார்பில் விவாதம் செய்ய என்பக்கம் நின்று. சர்வதேச கடல் எல்லைக்கோட்டைக் காட்டி அதனை வைத்து சார்பாக்க இலங்கைக்குத்தான் சொந்தம் என்று முடித்து வைத்தபோது உச்சாய்ப்பில் மேரி கத்தி, இந்திராகாந்திபூரீமாவோ ஒப்பந்தத்தை ஆதாரம் காட்டி கச்சதீவு இந்தியாவிற்கு சார்பானது என்ற விவாதத்தை உடைத்த போது.
என்ன உற்சாகம்.
என்ன குதுாகலம்.
மேரியின் அப்பா வாயடைத்துப்போக . எங்கள் வாப்பா சின்னவள் ஜெமிலாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டி பரிமாறிச் சிரித்தது. ஒடி ஒடி. தானியங்கி கமராவிற்கு வித்தியாசமான
கோணங்களில் முகம் கொடுத்தது.
மேரி நினைவுகள் மட்டும்தான்.
அடுத்தது பெருமூச்சு இந்த தென்னோலைக் குடில்களும் அடிக்கடி தீப்பற்றிக்கொள்கின்றன. அரசாங்க மானியத்தில் கால் வயிறும் அரை வயிறும் உண்டு காலம் கழிப்பதற்கும் முடியாத எத்தனை சோதனைகள்? அகதி என்பதற்கு இதுதானா வரைவிலக்கணம்? ஏதிலிப்பறவைகளாய் அங்கொரு இடம் இங்கொரு இடம். தொடரும் துன்பங்களுக்கு எத்தனை முகங்கள். எங்கள் அகதி முகாம்களைப்போல. கனவுகள் கூட கஷ்டமானதாகத்தான் இருக்கின்றன. மீண்டும் என் சொந்த தாய் மண்ணில் என் தமிழ் மண்ணில் ஒடி பின்னர் நடந்து. அந்த சலசலத்தோடும் குருவிச்சை ஆற்றில் ஆசை தீரக் குளித்து. வளர்ந்து போன என் தங்கை மேரியைக் கண்டு, அவளையும் இழுத்துக்கொண்டு பனந்தோப்புகளுக்குள்ளால் ஓடி. குதுாகலித்து. நடக்குமா?
நான் திரும்புவேனா..? சிதறிப்போன முத்துக்களாய் எங்கள் மக்கள். கண்ணிர் வருகின்றது.
மனம் கனக்கின்றது.
24

இளைய அப்துல்லாஹ்
அழவேண்டும் போல் அடிக்கடி நினைவு தட்டுகிறது. நான் ஒரு அகதி
எனக்கு இரண்டு பிரிவுகள். ஒன்று எனது தாய்த் தமிழ் மண்.
மற்றையது மேரி.
தினமுரசு - 1994

Page 22
彗
தனிமையில் உட்கார்ந்திருக்கிறேன். ஒரு எழுத்தாளன் தனிமையில் தான் உட்கார வேண்டுமாம். அப்போதுதான் அவனுக்கு விழுத்துக்கள் வருமாம். அந்த எழுத்துக்கள் தான் பூலோகத்துக்கு பிரயோசனம் தருமாம்.
கூடவே எனக்கு பால் தரும் வளர்ப்பு மாடு என்னண்டை வருகிறது. போச்சு என் தனிமை போச்சு, அதன் ஐயறிவு பற்றிய சிந்தனை பெருகிறது. சரி அப்போ ஆறறிவு தான் ஆபத்து மனம் கேள்வியாய் கேட்டது. குழந்தைகளுக்கு ஐந்தறிவு தானே அதனால் தானோ என்னவோ தெய்வத்துக்கு ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஐந்தறிவு உள்ளவைகளால் மனிதனுக்கு பிரயோசனமே தவிற வேறில்லை.
ஆடு, மாடு நாய், குதிரை இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். குழந்தை இனமும் பிரயோசனம்
தான்.
Es
 

இளைய அப்துல்லாஹ்
வெள்ளம் போட்டு விடுமோ என்ற அச்சம் வருகிறது. மழை லேசாக தூறுகிறது. முக்கி முனகி அடிமேல் அடி எடுத்து உட்கார முடியாமல் போக முடியாமல் படுக்க முடியாமல் காலை அகட்டி அகட்டி தன் வயிறை முன்னால் தள்ளி நடக்க கஷ்டப்படும் பெண்ணைப்போல, ஓடிப்போய் காலை நீட்டி தன் பூசணிக்காய் வயிற்றைத் தள்ளி ஆஸ்ப்பத்திரி வாங்கில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்ணாய் கஷ்டம், தலைப்பு போடுவதற்கே எத்தனை சிந்தனை வருகிறது? ஒன்றும் முடிவிலியாய். கன்கள் தீர ஆலோசனைக்காக ஒருமுறை சுருங்கி விரிந்தன.
அந்த நெடும்பனையின் உச்சாணியில் இருந்து கொண்டு ஒரு ஒற்றைக் குயில் சுருதி இழந்து போய் கூவுகிறது. காவோலை ஒன்று இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு "சற.சற.சற.சடார்" சத்தத்துடன் மண்ணில் விழுந்தது. பனைமர அடியில் எட்டோடு ஒன்பதாக அந்தக் காவோலையும் சேர்ந்து கொண்டது. "தொப்" என்று ஒரு பனம் பழம் விழுந்தது. எதிர்பார்த்திருந்தது போல் குரங்கிலையான்கள் படை படையாக வந்து தோல் பிரிந்து மஞ்சளாய்த் தெரிந்த பனம்பழத்தில் அமர்ந்து கொண்டு பனம் பழம் தின்றன. எனது உட்சுவாசத்திலும் பனம்பழ வாசம் மூக்ளிக விலத்தி அப்போது நுழைந்தது. மிகவும் விருப்பமாக இருந்தது அந்த மனம், பனம்பழத்தை நோக்கி பசுமாடு இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்கவாய் நடந்து போனது.
கூ. சு. குயில் கூவுகிறது. ஒற்றைக்குயில் அதன்சோடி எங்கே
ராசம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார். கடல்மடி போன கணவனைக் காணவில்ல்ை, "UேNB0AT" சுட்டுக்கொண்டிருந்ததாக நவம் சொன்னதை அவள் நினைத்துப் பார்த்தாள். மனம் அடங்கவில்லை. பரவிச் சுட்டவன்களாம். எக்கணம் என்ரை புருஷனும்.
மீண்டு வர முடியாமல் செத்து. அவளின் தொண்டை விக்கியது. மனம் கலங்கியது எனது தலைக்கு மேலால் காகம் ஒன்று கரைந்தது. யாரோ விருந்தாளி வரப் போகினமாக்கும். மனம் நினைத்தது. வயிற்றை முக்கி தொண்டை கிழியக் கத்தி விட்டு காகம் பறந்து போய்விட்டது.
பக்கத்து வீட்டு ராசம்மா சனீஸ்வரனுக்கு நேர்த்தி வைத்தாள். அந்த விருந்தாளியாய் என் கணவன் வந்தால். விதவிவகள் சுமந்த தேசமாய் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் கண்டுகொண்டிருப்பது. அழுகுரலும் அமைவுறா வமைதியும் என்று மாறும்,
அம்மாவைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் சிந்திப்பதை தவிர்த்துக் கொள்கிறேன்.
"டேய் குணம் என்ன செய்கிறாய்?"
"கதை எழுதப் பார்க்கிறேன்."
27

Page 23
துப்படிக்கிகளின் கAலம்.
"போடா போ உன்ரை கதையும் நீயும்"
அவன் என் நண்பன். ஆனால் என் ரசிகனோ என் கதைகளை ரசித்து விமர்சிப்பவனோ அல்ல. நேற்று எனக்குத் தெரிந்த ஒருவர் வந்தார். ஒரு நல்ல விமர்சகராக அவரை நான் அறிந்திருக்கிறேன். ஒரு மேடையில் ஒரு நூலை மிகக் கூர்மையாக விமர்சனம் செய்திருந்தார். அவர் நேற்று என்னை சந்தித்தபோது கூறியவைகள் என் மனதை மீள்பரிமாணம் எடுக்கவைத்தன. நான் சிந்தனை மூலமாக ஒரு சில தெளிவுகள் அடைவதற்கு அவரின் சொற்கள் உதவியளித்தன. அவரைச் சந்தித்த பிறகு இன்றுதான் சிறுகதையொன்றை எழுத முயற்சிக்கிறேன்.
"மிஸ்டர் குணம், உங்களின்ரை சிறுகதைகளை படித்தேன். அதில் சொல்ல வாற கருத்தை சில எழுத்தாளர்கள் போல மறைக்கப் பார்க்கிறீர்கள். அதிலை உங்களுக்கு என்ன திருப்தி? அதுதான் சிறப்பானது ஆரோக்கியமானது என்றும் கருதுகிறீர்கள். அது மிகவும் மட்டமான உணர்வாகும்.
அவர் ஒரு விமர்சகர் என்றளவில் நான் புலனடக்கம் செய்து அவரின் முன் கூர்மையானேன். "குணம் உங்கள் சிறுகதைகள் யாருக்கு வேண்டும். யார் படிக்க வேண்டும். ஒரு பெரிய எழுத்தாளனோ அல்லது ஒரு புத்திஜிவியோ படிப்பதற் கென்று நீங்கள் விரும்பினால் அது உங்கள் வளராமையையே காட்டுகின்றது. உங்கள் பின்னடைவையே காட்டுகிறது.
மெளனங் கொள்வதைத்தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை. "குணம் உங்கள் சிறுகதை யாரைப் பிரதிபலிக்கிறதோ யாருடைய வாழ்க்கையைப் பற்றி சொல்கிறதோ அவர்களைச் சென்றடைய வேண்டும். அவர்களுக்கு விளங்க வேண்டும். அந்த எளிமையின் ஆக்கிரமிப்பில் தான் பாரதி உயர்ந்தான். கண்ணதாசன் உயர்ந்தான்.
ஒரு தாயையும் அவள் பிரயாசத்தையும் அவளின் ஆசைக்கு அவனின் உயர்விற்காக அல்லல்படும் அந்த தாய்க்குக் கட்டுப்படாத கல்வியில் அடம் பிடிக்கும் மகனை நீ சித்தரித்திருந்தாய்,
அந்த "அம்மா" சிறுகதை போய்ச் சேர வேண்டியவர்களை போய்ச் சேர வேண்டும் என்பதே என் வாதம். இதை உணர்ந்த பின்னால்த்தான் உன்னால் சிறந்த படைப்புகளை படைக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.
அப்போது நீ ஒரு வெற்றியாளனாக அல்லது சிறுகதையாளனாக ஆக முடியும் என்று நான் கருதுகிறேன்.
அவர் எனது மனத்தை நோக்கி அறைந்து கொண்டிருந்தார்.
28

இளைய அப்துல்லாஹ்
இவன் என் நண்பன், கேட்கிறான் "உனது சிறுகதையும் நீயும்" அப்போ அவனது இதயத்தை எனது சிறுகதை சென்றடைவதில் தோல்வியைத் தழுவியுள்ளது. அதுதான் உண்மை. இந்த அரைவாசி விளக்கப்போக்கிலிருந்து நான் மீள வேண்டும். என்னளவில் ஒரு பரிமாணம் எடுப்பது அவசியமாகிறது.
"ப.ப.ப.ப." அம்மா முட்டைக்கு அடைக்க கோழியைக் கூப்பிடுகின்றா. குண்டுமணி கொடுக்கு கட்டியவனாய் தளைநாரும் நெஞ்சுப்பட்டியுமாக வந்து நிற்கிறான். தேங்காய் பிடுங்க அம்மா கூப்பிட்டனுப்பியிருக்கிறா.
"வா குண்டுமணி வா என்ன இப்பத்தானே வாறாய். அம்மா கேட்டுக்கொண்டே வருகின்றா.
"ஓம் ஆசாரியார் இப்பத்தான் உவன் பொடியனை பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போய் விட்டுட்டு வந்தனான்"
குண்டுமணி வளைந்து குழைந்து போய் நிற்கிறான்.
அம்மா முந்தானையை எடுத்து இடுப்பின் இடது புற மூலையில் செருகிக் கொண்டு குசினிக்குள் போகிறா. குண்டுமணி பவ்வியமாக வாசல் படியின் ஒரமாகப் போய் உட்கார்ந்து கொள்கிறான். கொஞ்ச நேரத்தில் "ஜாம்" போத்தல் நிறைய நல்லாச் சாயமும் சீனியும் போட்ட சுவையான தேனீர் கொண்டு வந்து கொடுத்தா அம்மா. கூடவே காலையில் வாங்கிய சுடச்சுட பாண்துண்டொன்றும். அது ஒரு கால் றாத்தல் பாண்துண்டு. அகமும் முகமும் மலர குண்டுமணி அதனை பவ்வியமாக வாங்கி வாசல்படியின் ஓரத்தில் வைத்து தேனீரில் பாண் துண்டைத் தோய்த்து தோய்த்து சுவைத்து சுவைத்து தின்கிறான். வாய் பொச்சடிக்கிறது. அவனுக்கு முன்னால் எங்களது 'ஜிம்மி வந்து நாய் இருப்பில் அமர்ந்து கொண்டு வாயைத் திறந்து நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு வீணிர் வடிக்கிறது.
ஓடிவந்த அடைக்கோழி குண்டுமணிக்கு முன்னால் வந்தது. அடக்கி வைத்திருந்த பீயையெல்லாம் பீச்சியடித்தது. நாற்றம் குப்பென்றடித்தது. அடைக் கோழி பீச்சிவிட்டு கொக்கரித்தது. குண்டுமணி ஒரு பக்கம் சரிந்து கொண்டு பாணை தேனீரில் தொட்டு தின்று கொண்டிருந்தான்.
நான் ஒருமுறை அவனைப் பார்த்தேன். பின்னர் குனிந்து கொண்டேன். "ஆ. குண்டுமணி இஞ்சாலை ஏறுபெட்டி தளைநாரை எடுத்துக்கொண்டு கிணத்தடிப் பக்கமா வாவன்." அம்மா கூப்பிட்டா. மீதமாயிருந்த தேனீரையும் அண்ணாந்து குடித்து "ஜாம்" போத்தலை படிக்கட்டின் ஓரத்தில் வைத்து விட்டு குண்டுமணி கிணத்தடிப் பக்கமாக போகிறான். அந்த "ஜாம்" போத்தல் மீண்டும் குண்டுமணி வரும் பொழுது அவனுக்கு தேத்தண்ணி கொடுப்பதற்காக பத்திரப் படுத்தப்பட்டிருக்கும். அவன் போனபின்பு அவன் உட்கார்ந்திருந்த இடம், அவனுக்கு
29

Page 24
துப்படிக்கிகளின் காலம்.
அம்மா கொடுத்த தேத்தண்ணிப் போத்தல், அடைக்கோழிப்பீ. நாய் வீணிர் வடித்த இடம் எல்லாம் என் மனதில் எத்தனையோ எண்ணங்களை வைத்து அறுத்தது.
நெஞ்சைக்குத்தி குத்தி கால்களை எம்பி தளைநாரை பொறுக்க வைத்து குண்டுமணி தென்னை மரத்தில் ஏறிக்கொண்டிருப்பது தெரிந்தது.
என் சிந்தனைகள் யாரைப்பற்றி இருக்க வேண்டும். என் சிந்தனையை அகப்பை போட்டு யாரோ வறுக்கிறார்கள். அது அம்மாவின் கைபோலக்கூட இருக்கிறது. அல்லது காலத்தின் கை. என் கண் முன்னால் சாதிய அடிப்படையில் எவ்வாறெல்லாம் வதைபட்டான்.
"மோனை சரசு." அம்மாவைக் கூப்பிட்டபடி தச்ச செல்லையாண்ணை வந்து கொண்டிருந்தார்.
"வாங்கோ செல்லையாண்ணை" அம்மா அவரை கூப்பிட்டா.
"என்ன வெளியாலை நிக்கிறியள் உள்ளாலை வாங்கோ" ஒரு கதிரையை இழுத்துக்கொண்டு வந்து செல்லையாண்ணையை அம்மா உபசரித்தா இருங்கோ செல்லையாண்ணை தேத்தண்ணி கொண்டுவாறன். அடுப்பு மூட்டி கேற்றில் வைத்து சில்வர் கோப்பை கழுவி, பேணியில் வைக்கப்பட்டிருந்த பிஸ்க்கட்டையும் எடுத்து ட்றேயில் வைத்து பவ்வியமாகத் தேனீரும், பிஸ்க்கட்டும் கொண்டு வந்து அம்மா கொடுத்தா.
அவர் கதிரையில் உட்கார அம்மா அருகிலுள்ள இன்னொரு கதிரையில் உட்காராமல் வாசல் நிலையடியில் நின்று கொண்டு குடும்ப விசயம் பேசினா,
அடைக்கோழி எங்கிருந்தோ ஓடி வந்தது.
"சூ.சூ.அங்காலை போ" துரத்தி விட்டா. ஜிம்மி பக்கத்தால் போனது கலைத்தா. என் சிந்தனை குவிகிறது. இரண்டு விதமான உபசரணை. ஆனால் மனிதர்கள்தான் இருவரும். என் இதயம் வேகமாக அடித்தது. இரண்டு காட்சிகளும் இரண்டு விதம், செயல்களில் வித்தியாசம். ஏன்? தூக்குக் காவடியின் முள்ளுக்கொக்கிகள் தொடையில் குத்தி கொழுவியதாய். என் இதயத்தை பத்து முள்ளுக்கொக்கிகள் குத்தி பத்து பக்கங்களாய் இழுத்தன. என் உணர்வுகள் வீரியம் கண்டன. 1
"குண்டுமணி." மனதில் ஒருமுறை சொல்லிக்கொண்டேன்.
அங்கும் இங்கும் பறந்த சிந்தனைகளைக் குவித்தேன்.
சிறுகதை எழுத ஆரம்பித்தேன்.
"பிரசவமாய்."
01 பெப்ரவரி 1995
30

“சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் பக்கம் நெருங்கி நெருங்கி வந்து கதை படித்தாய்." தனது கள்ளு முட்டி வண்டியைத் தடவியபடி சண்முகத்தார் பாடிக்கொண்டிருந்தார். "அட என்ன விடிய வெள்ளணை யோட சன்னதம் கண்டுட்டுதோ" பாக்கியம் புறுபுறுத்தபடி வாசலுக்கு வந்தாள் "அடி போடி. பாக்கியம் நான் என்ன உருவிலையே நிக்கிறன். ஆடி, பேந்து அடங்குறதுக்கு." சண்முகத்தார் சொல்லவும் விளக்குமாத்தை எடுத்து முன் முற்றத்தைக் கூட்டுவதற்குத் தயாரானாள் பாக்கியம்" "அடி பாக்கியம் என்ன. என்ன. விளக்கு மாத்தைத் தூக்கினியோடி.." காலமை விடிய வெள்ளணையோடை ஒவ்வொரு நாளும் ஒற்றைப் பனைக் கள்ளைக் குடிச்சால் உடம்பு பிலக்கும். நல்ல தைரியம் வரும் என்று யாரோ சொல்ல அதையே ஓங்கார மந்திரமாக்கி தினம் குண்டு மணியனிட்டைச் சொல்லி விடிஞ்சதும் கள்ளை குடிச்சிட்டு நிப்பார். விடிகிற இப்ப கொஞ்ச நாளாய் சண்முகத்தாரால பாக்கியத்திற்குப் பெரிய கரைச்சல் தான்.
31

Page 25
ტNovnáმჭარმh 4აიბაძP.....
"உந்தக் கோதாரியை நிப்பாட்ட வேணும் இவ்வளவு காலமும் என்ன உசார் இல்லாம பிரேதமாவே கிடந்தவர். சும்மாவே கம்பு மாதிரி எல்லே ஒம்பது புள்ளையளையும் பெத்துப் போட்டு அமசடக்கா இருந்தவருக்கு இப்ப மட்டும் என்ன அறளை பேருறதுக்கு அந்தா இந்தா எண்டு இருக்கிற நேரத்திலையே உந்த இழவு யோசினை வர வேணும்." பாக்கியத்தின் கை இயங்கிக் கொண்டிருந்தது. சிந்தனை இப்படி சண்முகத்தாரின் இந்த விஷயத்தை நிற்பாட்ட வேணும் என்று ஆராய்ந்தது.
சண்முகத்தார் றைக்கோட்டை மாத்தினார். "ஆணையிட்டேன் நெருங்காதே. அன்னையினம் பொறுக்காதே. ஆத்திரத்தில் துடிக்காதே. சாத்திரத்தை மறக்காதே. தீண்டாதே. தீண்டாதே. போடா போடா. போ என்னடா சாத்திரம்" தன்னால் கூறிக் கொண்டார் என்னப்பா ஆருக்கப்பா துகிலுரியுறீங்கள். வலு உசாராவெல்லே இருக்குறீங்கள்." பாக்கியம் கேட்டாள் "சும்மாவே பாக்கியம் ஒற்றைப் பனங்கள்ளைக் குடிச்சால் தேவாங்குக்கும் உசார் வருமாம்டீ." பாக்கியம் விழுந்து விழுந்து சிரித்தாள். "சரியப்பா. ஓம். ம். மெத்தச் சரியாய் சொன்னிங்கள்.
தட்டுத்தடுமாறிய நிலையில் கையை வலு உசாராகப் பிடித்துக் கொண்டு எழும்பினார் சண். அவரின் நாலு முழவேட்டி உரிந்து நிலத்தில் விழுவதற்குத் தயாராகி நின்றது, விளக்குமாத்தைப் போட்டுவிட்டு ஓடி வந்து மனிசனின் வேட்டியைக் கீழே விழாமல் பிடித்து எடுத்து உடுத்தி விட்டாள் பாக்கியம்.
"என்ன இழவுக்கப்பா ஒரு பனைக் கள் எண்டுட்டு முடாக்கணக்கிலை குடிச்சனிங்கள்"
அடி. உனக்கென்ன தெரியும் டாக்குத்தரய்யாவைவிட நீ படிச்சு வந்தனி இல்லையே' -
அவர் என்னத்துக்குக் குடிக்கச் சொன்னவர் எதுக்குக் குடிக்கச் சொன்னவர் எண்டு கேளாமை சும்மா விட்டுக் கட்டுறதே பாக்கியம் ஏசினாள்.
'எந்த டாக்குத்தர் உப்பிடிச் சொன்னவர், பாக்கியம் தேடலில் இறங்கினாள்.
அம்மா என்னணை அய்யாவை ஏந்திப் பிடிக்கிறாய். உனக்கும் என்ன அவரைப் போல ஒரு பனைக் கள்ளைக் குடிச்சு உளறல் வந்திட்டுதே.
அட சிறீ ஆரடா உவருக்கு அப்பிடிச் சொன்னது?
அம்மா உனக்குத் தெரியாதை எணை உந்த ஆலமரத்தடிச் சந்தையிலை இருக்கிற சிவப்பிரகாசம் டாக்குத்தர் தானணை.
அட சிவப்பிரகாசமோ! அவன் டாக்குத்தரோடா? அவன் ஓடலி எல்லே அவனுக்கு என்னடா தெரியும்? அவன் ஆசுப்பத்திரியிலை புண் கழுவுறவன் எல்லே.
ஒமணை அவர்தான்'
32

இளைய அப்துல்லாஹ்
"இருக்கட்டும் அவனுக்குக் குடுக்கிற குடுவையிலை உன்ரை கொப்பர் உந்த ஒரு பனைக் கள்ளுக் குடியை விடுறாரோ இல்லையோ பார்ப்பம்" பாக்கியத்துக்கு உரு வந்து விட்டது.
ஓடலியார் ஆஸ்பத்திரிக்குப் போவதற்குத் தயார் ஆனார் முருகனைக் கும்பிட்டு ஆணியில் கொழுவியிருந்த சைக்கிள் சாவியை எடுத்துக் கொண்டு "அப்பனே முருகா." வேண்டுதலோடு வலது காலை எடுத்து வெளியில் வைக்க
நாசமறுவானே! ஆரடா அவன் எங்கையடா ஓடலி சிவப்பிரகாசம்." ஒடலியின் முன்னால் பாக்கியம் சன்னதம் ஆடினாள் பூனை குறுக்க போனாலும் பறவாயில்லை வெறும் குடம் கொண்டு எந்த அறுதாலி போனாலும் பறவாயில்ல காகமோ நாயோ போனாலும் பரவாயில்லை உவள் பாவி வந்திட்டாளே இண்டைக்கு போறகாரியம் உருப்படுமோ" ஓடலி சிவப்பிரகாசம் நினைத்துக் கொண்டார்.
நாசமாப் போவான் கண் அவிஞ்சு போவான். ஆரடா அவன் என்ரை மனிசனுக்கு காலமை வெள்ளணைக்கு ஒரு பனைக் கள்ளைக் குடிக்கச் சொன்னவன்.' சிவப்பிரகாசத்திற்கு எல்லா விஷயமும் துல்லியமாய் விளங்கியது.
சிவப்பிரகாசம் இண்டைக்கு பெரிய டொக்டரிடம் எல்லா விசயத்திற்கும் வாங்கிக்கட்டினார்.
சண்முகத்தாரின் காலடியில் சிவப்பிரகாசம் மண்டியிட்டு மிருகசாதிபோல் உட்கார்ந்திருக்கிறார். அண்ணை என்ரை புள்ளை குட்டியள் உந்த நல்லூர், சந்நதிக் கந்தன் எல்லாார் மேலையும் ஆணையா சத்தியமா. இனிமேல் நீ அந்த ஒரு பனைக் கள்ளை மட்டும் குடிச்சிடாதை வேறை என்ன நாசமறுப்பை எண்டாலும் குடிச்சுத் துலையண்ணை சிவப்பிரகாசம் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். அண்ணை உவ பாக்கியமக்கா இண்டைக்குக் காலமை வீட்டுக்கு வந்து என்னைப் பரிசுகெடுத்துப் போட்டா ஊர்ப் பொம்பளையஸ் எல்லாம் என்னைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பெல்லோ சிரிக்கினம் தோளிலை துவாயைப் போட்டுக் கொண்டு றோட்டாலை போக ஏலாமல் கிடக்கண்ணை'
'சரி சரி சிவப்பிரகாசம் ஒழும்பு காலைப் புடிக்காதை, ஆர் சொன்ன தெண்டு கேட்டதுக்கு உன்னை டாக்குத்தள் எண்டெல்லே சொல்லிப் போட்டன் நிதானத்தோடு இருந்த சண்முகத்தார் பெரீசாச் சிரித்தார். ஓம் சிவப்பிரகாசம் உவள் பாக்கியத்துக்கும் நான் குடிச்சால் பெரிய கரைச்சல் தான் அதுக்காக வேண்டி இண்டையிலை இருந்து நான் ஒரு முடிவெடுத்திட்டன் பார் இனிமேல் ஒரு பனை இல்லை ஒரு கள்ளும் குடிக்கிறதில்லை. ஒ. இது சத்தியம்.
சண்முகத்தார் சிரிச்சது குசினியிலை இருந்து சிவப்பிரகாசம் வந்து இருந்ததைக் கண்டுவிட்டு ஒழிஞ்சு கொண்டு நிண்ட பாக்கியத்திற்கும் கேட்டது.
விடிய வெள்ளண தான் குடுத்த குடுவை உப்பிடி வேலை செய்யுதே எண்டு நினைக்கக்குள்ளை தன்னையறியாமலே பாக்கியத்துக்கும் சிரிப்பு வந்தது.
1995 ஆணி - சுவைத்திரள்.
33

Page 26
நினைவுகளின் பீஷ்ம மையத்தில் என்றுமே அறுபட முடியாத பிணைப்பு, அந்தச் செம்மணன். அந்தப் பனை மரங்கள். நீர் நிறைந்து போன புளியங்குளம். குடலைப் பருவத்து நெல் வயல்கள். அதன் மேல் பலாத்காரமாக வந்தமரும் தினையன் குருவிகள். என் கிராமம். மெது மெதுவாய் மூளையில் விறுவிறென்று ஏதோ குடைகின்றது. மூளைக் காய்ச்சலாக இருக்கு மோ? அல்லது ஏதாவது இப்பொழுது யாழ்ப்பாணத்தில் பரவும் புதுவிதமான நோய்களில் வேறு ஏதாவதாக இருக்குமோ. பின்னர் காது குடைகின்றது. கண் கலங்குகின்றது. உச்சியில் யாரோ சுத்தியலால் அடிப்பது மாதிரியும் வலிக்கின்றது. பின்னர் கணிகள் கலங்கவுமில்லை அல்லது பனிக்கவுமில்லை. வெறுமையாகிப் போன என் தேசத்தைப் போலவான நீர்ச்சுரப்பிகளை அவை கொண்டிருக்க வேண்டுமோ எனும் நினைப்பு எழுகிறது. அது இயல்பாகவே வெளிப்படுகிறது. பரமேஸ்வரக் குருக்கள் காளிக்குப் பஞ்சாராத்தி காட்டிய போது மனம் நிறைந்து போனார்.
34
 

இளைய அப்துல்லாஹ்
if (! f
"ஓம் க்ரியா தேவி யாய நமஹ" "மந்திர உச்சாடனத்தில் மெய் மறந்து போனார்.' உயிர் மூச்சு எல்லாம் அர்ப்பணமாகி ஒன்றிப் போனார். வலமிடமாக பஞ்சாராத்தி காட்டி முடிந்ததும். அது பண்டாரத்தின் கைக்கு மாறியது. பக்தர்களும், பக்தைகளும் வரிசையாக தீபாராதனை முடிந்து தரிசனத்திற்காகக் கொண்டு வரும் பஞ்சாராத்தியைத் தொட்டுக் கும்பிட்டனர். கற்பூர தீபத்தை முகத்தில் ஒற்றிக் கொண்டனர்.
பரமேஸ்வரக் குருக்களுக்கு ஊர் ஒட்டுசுட்டான் தான். சிவராசா கம விதானையாரின் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோயில்க் காணியில் ஒரு துண்டு அவருக்கு இனாமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. குருக்கள் இப்பொழுது இரண்டு கோயிலுக்குப் பொறுப்பாக இருக்கிறார். புளியங்குளம் காளி கோவிலுக்கும். ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் கோவிலுக்கும். பூசை வேலைகள் எல்லாம் குருக்கள் தான் பொறுப்பு அவருக்கு கூட மாட வேலை செய்வதற்கு என்று இரண்டு மூன்று பண்டாரங்கள் எப்பொழுதும் குருக்களுக்குப் பின்னால் நிற்பார்கள். சங்கு ஊத, மணியடிக்க, தேவாரம் பாடவென்று பண்டாரமாக கடமையாற்றுவர். குருக்கள் மனமகிழ்ந்து அந்த வேலையை அவர்களிடம் ஒப்படைத்திருந்தார்.
பரமேஸ்வரக் குருக்கள் ஆரம்பாக தீட்ஷை பெற்றதில் இருந்து ஐயராகி குருக்கள் பட்டம் வாங்கின வரைக்கும் எல்லா ஆச்சாரிய கடமைகளையும் ஒப்பேற்றியது இந்த தான்தோன்றி ஈஸ்வரர் கோயிலில் தான்.
கோயிலின் வரும்படி எல்லாம் இப்பொழுது மிகவும் குறைவாகிவிட்டது. ஆண்கள் கோயிலுக்கு வரவே பயம். துவக்கும் கையுமாக இருக்கும் வாலிபப் பொடியன்களுக்கு எங்கே கும்பிட நேரமிருக்கிறது. எப்ப பாத்தாலும் எந்தப் பக்கத்தால் பொம்பர் வரும். எந்தப் பக்கத்தால் ஷெல் வரும் என எதிர்பார்த்தபடியே அவர்களின் வாழ்க்கை கழிந்து போகிறதே. பெண்கள் என்றால் என்ன அவர்களும் அப்படித்தான். காக்கிச் சட்டையும் கையில் துவக்குமாக வாகனங்களில் ஒடித்திரியும் போது கோயில் குளமெல்லாம் எங்கை பாக்கிறது. எங்கை பக்தியாய் வாழுறது. ஒரு பக்கம் எதிரிப் பயம், மற்றப்பக்கம் சாப்பாடில்லாப் பஞ்சம். என்ன கஷ்ட காலமிது.
அப்பிடி இருந்து விட்டு அமாவாசை பறுவம் என்றால் கூட்டம் கூடும். அடுத்தது மாசத்தின் முதலாம் திகதி விஷேட பூஜை அதுவும் குலசேகரம் உடையார் தன்னுடைய செலவிலை மாசம் முதலாம் திகதி பூசையை முன்னின்று செய்வதனால் அந்த ஈஸ்வரனுக்கு சாந்தி செய்ய முடிகிறது. குலசேகரம் உடையார் முதலாம் திகதி காலை செவ்விளநீர், வாழை, பலா, மா போன்ற பழவகைகளோடு நைவேத்தியத் திற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் தனது சொந்த ட்றக்டரில் ஏற்றி எட்டு ஒன்பது மைல் தூரத்தில் இருந்து ஒட்டுசுட்டானுக்கு வந்து விடுவார். நிறைமணி போட்டு நல்ல குளிர்ச்சியான அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடும் செய்வார். -

Page 27
துப்படிக்கிக்ளின் கASம்.
பரமேஸ்வரக் குருக்கள் சுயம்புலிங்கத்திற்கு முன்னால் நின்று அழுது கொண்டிருந்தார். கைகள் இரண்டையும் சேர்த்துக் கூப்பியபடி கண்கள் ஆறாகப் பெருக ஒரு பிச்சைக்கார தோற்றத்தில் நைத்துருகிக் கொண்டிருந்தார். அவருக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் இந்த தான்தோன்றி ஈஸ்வரன் தான். கர்ப்பக்கிருகம் முழுக்க இருள் குவிந்து கிடந்தது. கோயில் மரத்தில் இருந்து கிடைத்த தேங்காயில் இருந்து பிழிந்து எண்ணெயை ஊற்றிப் பற்ற வைத்த தூண்டாமணி விளக்கின் மெல்லிய ஒளியில் கன்னங்கரேல் என்ற இலிங்கம் செக சோதியாய் காட்சி தந்தது. குருக்களின் மனம் முழுக்க அந்தரம்.
அடுத்த கட்டம் ஒட்டுசுட்டான் தான் என்று ஆமி திட்டம் போட்டுட்டாங்களாம். நேற்று இரவு நெடுங்கேணியில் தாறுமாறாய் குண்டு வீசினதிலை முப்பது பேர் ஒரேயடியா செத்தவையாம், என்று நாகலிங்கத்தார் சொல்லிப் போட்டுப் போனவர். கோயில் மணியகாரர் சிவராசரைப் பிடித்து குருக்கள் கேட்டதிலை சிவன் கோவில் காண்டாமணிக் கோபுரத்திற்கு மேலை ஒரு சிவப்புக் கொடி போட்டிருக்கு முதல் ஒருமுறை ஹெலியிலை இருந்து போட்ட துண்டொண்டிலை அடிச்சிருந்தவர்கள். கோயில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி இப்பிடியான இடங்களிண்ரை கூரையிலை சிவப்புக் கொடியை பறக்க விட்டால் விமானக் குண்டு வீச்சு நேரம் அவைகளைப் பாத்துப் போடுவம் என்று. அதனை இப்போதும் நினைவில் வைத்து குருக்கள் மணியகாரரிடம் ஞாபகப்படுத்த சிவப்புக் கொடி போட்டாயிற்று.
குருக்களுக்கு கோயில் தான் உயிர் - மூச்சு - வாழ்க்கை எல்லாம். அடுத்தது தன் தமிழ்த் தாய் மண்ணிற்கு ஏதாவது என்றால் அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஈஸ்வரா. ஈஸ்வரா. என்று அவர் நாவு எப்பொழுதும் உச்சாடனம் செய்து கொண்டே இருக்கும். மனம் மண்ணோடு ஒன்றிப் போயிருக்கும்.
பாரூக், குருக்கள் வீட்டிற்குப் பக்கத்து வீடு. குருக்கள் எப்படி மதப் பற்றுடையவரோ அதே போல பாரூக்கும் இஸ்லாம் மதத்தில் பற்றுடையவர். ஐயருக்கும் மத வெறியில்லை. பாரூக்கும் அவ்வாறே. ஆச்சார விடயத்தில் குருக்கள் மிகவும் பேணுதலுடையவர் அந்த வகையில் பாரூக் மாட்டிறைச்சி சாப்பிடும் விஷயத்தில் ஐயர் உடன்பாடில்லாதவர். எப்படி உடன்பட முடியும். நந்திக்குப் பூசை செய்பவராச்சே. அடிக்கடி பாரூக்கை அழைத்து தனது வீட்டுத் திண்ணையில் அமர வைத்து அரசியல் விடயங்களை அலசுவார் குருக்கள். சாணமும். பட்டரிக் கரியும், கிளுவைச்சாறும் கலந்து மெழுகப்பட்ட திண்ணையில் பாரூக் உட்காரமாட்டார். சாணம் இஸ்லாத்தில் நஜிஸாக்கப்பட்டிருக்கிறது. அந்தத் திண்ணைக்கு மேல் ஒரு பாயைக் கொண்டு வந்து போட்டு உட்கார வைப்பார் குருக்கள். தனது பூணுால் அணிந்த வெறும் மேலுடன் கொட்டப் பெட்டி சகிதம் திண்ணையில் உட்கார்ந்தால் சமகால அரசியல் நிலவரம் பற்றி மணிக்கணக்காகப் பேசுவார்.
"இப்பொழுது ஆமிக்காரர் கோயில் குளத்தையும் நம்புறாங்களில்லை. போன மாதம் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலிலை பொங்கல், சனம் முன்பைப்
36

இளைய அப்துல்லாஹ்
போலில்லா விட்டாலும் நேர்த்திகள் செய்யவென்று கூடிவிடும். அந்த நேரம் பார்த்து ஆமி ரவுண்டப் செய்திருக்கிறாங்கள். பொடியங்கள் பக்கத்தாலையும் ஒரு பத்து பதினைஞ்சு பேர் மட்டிலை துவக்கைத் தோளிலை வைச்சுக் கொண்டு கும்பிட: ஆமிக்காரங்கள் சூழ; கோயிலே இரண்டுபட்டுப் போட்டுது. பொடியன்கள் சுட்டுப் போட்டு ஓடீட்டான்கள். அதிலை ஒருத்தன் புடிபட்டுட்டான். அதோடை கோயில் முழுக்க உள்ளேயும் வெளியேயும் சல்லடை போட்டுத் தேடினாங்கள். புறகு குருக்களுக்கும் நல்ல அடியாம் பாரூக்."
இதென்ன அநியாயமாக் கிடக்கு. பொடியள் வந்து கும்பிட்டதுக்கு ஐயர் என்ன செய்யுறது. அவரே வாங்கோ கும்பிடுங்கோ எண்டு சொன்னவர். பாரூக்கின் பேச்சு இடையில் தடைப்பட்டது. வானத்தில் ஹெலி இரைஞ்சு கேட்டது. குருக்களுக்குப் பயம் தான் கண்கெட்டு எங்கெங்கு குண்டுகளைப் போடுகிறான் என்று யாருக்குத் தெரியும். மனதினில் எண்ணிக் கொண்டார். "யா அல்லாஹற்" எங்கள் தாய் மண்ணையும், மக்களையும் காப்பாத்து நாயனே! பாரூக் து ஆ செய்து கொண்டான். பாரூக்கும் குருக்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பங்கள் பக்கம் கண்களால் சைக்கினை செய்தபடியே இருவரும் பரபரக்க எழுந்து போனார்கள். குருக்கள் வேவஷ்டியை அவிழ்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டார். இரண்டு பேரும் ஒரே பங்கரில், குருக்களும் பாரூக்கும். வெளியே கள்ன கடூரமான சத்தம். காது செவிடுபடும்படியாக இருந்தது. எத்தனை குண்டுகள் வந்து விழுந்து வெடித்தனவோ தெரியாது. கோயில்ப் பக்கமும் குண்டுகள் விழுந்த சத்தம் கேட்டது.
"பாரூக் எங்கடை நிலமையைக் கொஞ்சம் கவனிச்சால் மிருக வாழ்க்கை தானே வாழுறம். இண்டையிடை நிலமையிலை தமிழன் எண்டு சொல்லவே பயமாயிருக்கிற எங்கடை சமுதாயத்திடை வேதனையை யாரிட்டை போய்ச் சொல்றது. மனிசன் வாழுறதுக்கான அடிப்படைத் தேவையள் என்ன இருக்குது? மண்ணெண்ணை இருக்குதே. அரிசி இருக்கு, தேங்காய், நெருப்புப் பெட்டி எங்கடை வாழ்க்கை ஒரு சீரழிஞ்ச வாழ்க்கையாய் எல்லே போட்டுது.
"ஓம் ஐயா, உந்தக் கோதாரி விழுவான்கள் கொஞ்சம் எங்களை நசுக்கத் தொடங்கினாப் புறகுதான் போராட்டமே வெடிச்சது. எங்களுக்குத் தேவையானதை தேவையான நேரத்திலை தந்திருந்தால் இப்பிடி எல்லாம் வந்திருக்குமே. யார் அரசாங்கத்திலே வந்தாலும் அவங்கள் தங்கடை தங்கடை வாசியைப் பாக்கிறதாலை தானே இவ்வளவும் நடக்குது."
கொஞ்சம் சொஞ்சமாய் இருள் கவியத் தொடங்கியது. கருக்கல்ப் பொழுது. ஹெலி அள்ளிப் போட்ட குண்டுகள் ஊர் முழுக்க கந்தக நாத்தத்தைக் கலக்க விட்டன. வெடித்துச் சிதறிய மாடுகள், இடிந்து நொறுங்கிய வீடுகள் கட்டடங்கள், செத்துப் போன மனிதர்களை காலையில்த் தான் கண்டு பிடிக்க முடியும்.
37

Page 28
துப்படிக்கிகளின் காலம்.
பாரூக்கை வீட்டிற்கு அனுப்பி விட்டு குருக்கள் வீட்டிற்குப் போக முதல் கோயிலுக்கு ஓடி வந்தார். மனம் அந்தரப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தார். ஈஸ்வரா. என்று வாய் விட்டு அலறினார்.
● 0- 0x8 ex
தான்தோன்றி ஈஸ்வரர் கோவில் கர்பக்கிருகம் நொறுங்கிப் போய் இருந்தது. பாரிய குண்டொன்று விழுந்திருக்க வேண்டும். குருக்கள் பதறிப் போனார். தலை சுற்றியது. அவர் கோயில்ப் படிகளில் மெல்ல உட்கார்ந்தார். கண்ணிர் தாரை தாரையாக வழிந்தோடியது. ஈஸ்வரா இந்தக் கொடுமையை இனி எப்பிடித் தாங்குவன். வாய் குமுறியது.
இது நடந்து இப்பொழுது மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டது. முந்த நாள்தான் இடிபாடுகளை எல்லாம் விலக்கி மூன்று வேளை பூசையையும் ஆரம்பித்தது. குருக்கள் ஒருமுறை கொழும்புக்கு போய் வர எண்ணினார். தனது மூத்த மகள் விசாலேஸ்வரியின் நினைவு வர எப்படியாவது போய் மகளையும் பிள்ளைகளையும் பார்த்து விட்டு வர எண்ணிப் புறப்பட்டார். ஒட்டுசுட்டானில் இருந்து நெடுங்கேணி வழியாகப் போய் புளியங்குளத்தாலை வவுனியா போகும் பாதை பொடியன்களால் மறிக்கப்பட்டிருந்தது. அதனால் போவது தடை இப்பவெல்லாம் கிளாலிப் பயணம் மட்டும் தான் ஒரு வழிப்பயணம் என்ன செய்வது எப்படியாகிலும் போக வேணுமே எண்ணிக் கொண்டார். பொடிநடையும் மாட்டு வண்டிலுமாய் எத்தனை மைல்களைக் கடக்க வேண்டும். குருக்கள் தனது தோல்ப் பையை எடுத்துக் கொண்டார். அதில் தனக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வைத்தார். ஒரு கட்டு ஊர் வெத்திலை - வெத்திலை பாக்கு இடிக்கும் வெண்கலச் சிமழ், காசுக்கட்டி சின்னச் சிவலிங்கம், விவூதிப் பொட்டலம், 2 வேஷடி 2 சால்வை. அந்தத் தோல்பை நிரம்பி விட்டிருந்தது. ஈஸ்வரா என்று சனிக்கிழமை காலை தனது பயணத்தை ஆரம்பித்தார்.
கிளாலிக்கரை, இதுதான் இன்று தமிழரின் வாழ்வை நிர்ணயிக்கும் ஒரு பயண மையம். மனம் முழுக்க ரணமாய் வேதனை வருகிறது. ஆற்றுப்படுத்த முடியாத அளவிற்கு அவலம். ஒருமித்த கஷ்டங்களை அள்ளிக் கொண்டு வந்து குவித்தது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தண்ணீர் கரும் விரிப்பாய் படர்ந்திருந்தது. நிலவு வந்து கொண்டிருந்தது. நேரம் இரவு ஒன்பது மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது.
எல்லாரும் வரிசையாய் நில்லுங்கோ.
ஒரு பொடியன் உத்தரவிட்டான். மனம் முழுக்க பரபரப்பு நான் முந்தி நீ முந்தியென்று அவரவர் வரிசைக்கும் போனார்கள். குருக்களும் வரிசையில் ஒருவராக நின்றார். படவேண்டிய நானாவிதக் கஷ்டங்களையும் சுமக்க ஒவ்வொருவரும் தயாரானார்கள். முன்பின் அனுபவம் இல்லாத குருக்களும்.
38

இளைய அப்துல்லாஹ்
கஷ்டம் எங்கையிருந்தது எங்கை போய் முடியுது என்ற எதுவுமே சொல்ல முடியாத நிலையில் பரந்து போய்,
ஒருவாறு இரண்டரை நாள் கழித்து இன்னல்கள் பல கடந்து கொழும்பை வந்தடைந்தார் குருக்கள்.
சிவந்து கொழுத்த பசுமையான கறுத்தக் கொழும்பான் மாமரம். நிறைகாய் வாற மாதமளவில் தனது பூரண பலனைக் கொடுத்து விடும். கொத்துக் கொத்தாய் குலை குலையாய் மாங்காய்கள். நல்ல விளைச்சல், விசாலேஸ்வரியின் வீட்டுக்கு முன்னால் விரிந்து கிளை பரப்பி நிழல் கொடுக்கும் மாமரம் ஒன்று எவ்வளவு அவசியம். அந்த இடத்தை அது நிரப்பியிருந்தது. குருக்கள் அந்த பங்களா போன்ற வீட்டின் முன் சுவரில் வலது புறமாகப் பதிந்திருந்த பெல்லை அழுத்தினார். வீட்டினுள் இரண்டு குயில்கள் ஆனந்தமாகக் கூவி ஓய்ந்தன.
விசாலேஸ்வரி கதவைத் திறந்தாள். அட. ஆரது அப்பாவே. வாங்கோ. வாங்கோ. ஓடி வந்து தந்தையை வரவேற்று குருக்களின் தோல்ப் பையை வாங்கிக் கொண்டாள். ஏனப்பா இவ்வளவு காலமும் எங்களை மறந்திருந்தனிங்களே கேள்வியாய்க் கேட்டாள். இல்லைப் புள்ளை வாறதெண்டால் சும்மாவே. குருக்கள் நிலவரம் சொன்னார். உச்சி மத்தியானம் வெயில் அகோரம். அவசர அவசரமாக ஃபிறிஜ்ஜில் இருந்து சண்குயிக் கலந்து கொடுத்தாள். குருக்களுக்கு தாக சாந்தி செய்வித்தாள்.
ஊர்ப்புதினங்களைக் கேட்க வேண்டுமே. அவசரமாய் மனது குடைந்தது. விசாலேஸ்வரி உதிலை கொஞ்சம் ஈஸிச்செயாரைப் போடு புள்ளை. கொஞ்சம் சாய்வம்' குருக்கள் மகள் வீட்டிற்கு வந்தால் வழமையாக ஈசிச் செயாரை மாமரத்தின் கீழ் போட்டுக் கொண்டு காத்து வாங்குவார். அடிக்கும் இதமான காத்துக்கு குருக்கள் கண் மயங்கினார்.
பிள்ளைகள் பாடசாலையை விட்டு வந்தவுடன் குருக்கள் வந்திருந்ததைக் கண்டு விட்டார்கள். எல்லோருக்கும் சந்தோஷம் தலை கால் புரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து புழுக்கொடியலும் பனாட்டும், பனங்கட்டிக் குட்டானும் அவர்கள் நினைவில் வந்து வாயூறின.
குருக்கள் கால் முகம் கழுவிக் கொண்டு வந்து துணிப்பையில் இருந்த சிவலிங்கம் எடுத்து பொட்டலத்தில் விபூதியைத் தொட்டு திரிபுண்டரமாகப் பூசியபடி கிழக்குப் பக்கமாக லிங்கத்தை சுவாமி அறையில் வைத்து கும்பிட்டார். ஆச்சார முறைப்படி வணக்கம் செலுத்தி விட்டு வெளியில் வந்து பயணக் களைப்பு நீங்க ஆறுதலைடைய பேரப்பிள்ளைகளை விசாரித்தார் குருக்கள். கங்காநாயகியிலிருந்து
39

Page 29
துப்படிக்கிகளின் கASம்.
பரமேஸ்வரி மட்டுமுள்ள எல்லாப் பிள்ளைகளையும் விசாரித்தார். இதற்கிடையில் சின்னதுகள் எல்லாம் அம்மய்யாவைக் கூடி வந்து நின்று கொண்டார்கள். புள்ளை மூத்தவள் கங்காநாயகி எங்ைைகயம்மா மகளைப் பற்றி விசாரிக்க விசாலேஸ்வரியின் கண்கள் பனித்தன. முந்தானையை எடுத்து கண்களை ஒற்றித் துடைத்துக் கொண்டாள்.
அதப்பா. வந்து. வந்து.'
என்ன புள்ளை என்ன நடந்தது எண்டாவது சொல்லேன்' குருக்களுக்கு எதுவுமே விளங்கவில்லை. ஆனால் விபரீதம் ஏதாவது நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்துக் கொண்டார். விசயம் தெரிந்த விசாலேஸ்வரியின் மற்றைய பிள்ளைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். விசாலேஸ்வரி இன்னும் மூக்கை உறுஞ்சிக் கொண்டிருந்தாள். 'என்ன விசயம் புள்ளை சொல்லன்.
அது வந்து அப்பா. எங்கடை மூத்தவள் ஒரு சிங்களப் பொடியனோடை. ஒடிப் போய். 'சிவ. சிவா. என்ன அநியாயம் இது அபச்சாரம். அபச்சாரம்' நெற்றி வியர்த்து உடல் தளர்ந்து விசயத்தை ஜீரணிக்க முடியாமல் குருக்கள் நடுங்கிப் போனார் அவரின் மனம் கொஞ்சங் கூட அமைதியில்லாமல் தள்ளாடியது. ஏதோ ஒவ்வாத மருந்தை உட்கொண்ட நோயாளியைப் போலானார். சிவ. சிவா. இன்னும் அவரது நாவு உச்சரித்துக் கொண்டே இருந்தது.
அடி புள்ள்ை எங்கட குடும்பத்திலை இப்பிடி ஒண்டு நடக்குமெண்டு ஆர் நினைச்சது.
தமிழ் போற்றும், தமிழ் பேணும், ஆச்சாரமான குருக்களால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை. கலாச்சாரப் பிறழ்வு - சமய மாற்றம், ஆச்சார இழப்பு மொழிப்பறிமுதல். ஆண்டவனே. ஆண்டவனே. தனது பேத்தியை நினைக்கும் போது தலையே வெடித்து விடும் போல அவருக்கிருந்தது.
குருக்கள் மனமுடைந்து போனார். "புள்ளை எனக்கு தொண்டை காஞ்ச்சு போச்சுது கொஞ்சம் பச்சைத் தண்ணி கொண்டு வா பாப்பம்." விசாலேஸ்வரி குசினிக்குள் போய் செம்பில் தண்ணீர் கொண்டு வந்தாள். தண்ணீரை அண்ணாந்து தொண்டையில் ஊற்றி மிடறு மிடறாகக் குடித்தார்.
"புள்ளை விசாலேஸ்வரி இண்டைக்கு எங்கடை மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறைகள், ஆச்சாரம் எண்டு எல்லாத்தையும் நானும் நீயும் மட்டுமில்லை, ஒவ்வொரு வரும் பறிகொடுத்திட்டு நிக்கிறம்." சொல்லும் போது குருக்களின் கண்கள் கலங்கியிருந்தன.
"இண்டைக்கு சொந்த ஊர் எண்டு ஒண்டு இருக்கேக்குள்ளை எல்லாம் எதிரியள் போல அங்கையும் இங்கையும் சிதறுப்பட்டுப் போய் எத்தினை அநியாயம்
40

இளைய அப்துல்லாஹ்
நடக்குது. ஒரு நாடு விட்டு ஒரு நாட்டுக்குப் போனா அங்கை அகதியளாப் போறவைக்குத்தான் எத்தினை கரைச்சல், ஒரு பக்கத்தாலை கிறிஸ்த்தவரா மதம் மாத்திற வேலை. இன்னொரு பக்கம் எங்கடை புள்ளையஞக்கே என்ன ஏதெண்டு விளங்காம அந்நிய கலாச்சாரத்துக்குள்ளை போய் விழுகுதுகள். அழகான உடைகள் எல்லாம் என்ன மாதிரி கழண்டு போகுதுகள். உடம்பை மறைச்சு உருப்படியா உடுக்கிறதெல்லாம் கொஞ்ச நாளையிலை அந்நிய நாட்டுக்குள்ளை புகுந்த உடனேயே என்ன மாதிரி அலைக்கழிஞ்சு போகுது.
கோயில் குளம் எண்டு ஊரோடை கிடந்ததுகள் எல்லாம் தானாவே மதம் மாறினது மாதிரி சேர்ச் எண்டும் ஜெபம் எண்டும் மாறிப்போகுதுகள். தமிழ்மொழி, தாய்மொழி வாய்க்குள்ளை நுழையாமை அந்நியப் பாஷைகள் பேசுகுதுகள். அதைத்தான் பெருமை எண்டும் நினைக்குதுகள். ஒரு அருமந்த கலாச்சாரம் வேரோடை இல்லாமலாகிற விஷயத்தை அடியோடை மறந்து போகுதுகள். அதிலை ஆம்பிளைப் புள்ளையளிலையும் பார்க்க பொம்பிளைப் புள்ளையஸ் ஏனோ தெரியாது உடனேயே இப்பிடியான தாக்கங்களுக்குள்ளை போய் விழுந்து போகுதுகள்.
புள்ளை விசாலேஸ்வரி! எங்கடை ஐயர் பரம்பரையிலை இப்பிடி ஒரு பரிசு கேடு நடந்ததில்லை. எக்கணம் ஊரிலை நாலு பேருக்கு விசயம் தெரிஞ்சா நான் எப்பிடித் தலைக்கறுப்புக் காட்டுறது புள்ளை, உவள் ஒரு சிங்களவனோடை பொனது மட்டுமில்லைப் புள்ளை எனக்கு வயித்தெரிச்சல், எங்கடை தமிழர் கலாச்சாரம் எப்பிடி எல்லாம் அழிஞ்சு கொண்டு போகுது பாத்தியே.
உப்பிடியே கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவிஸ் எண்டு உள்ள நாடு முழுக்க எங்கடை ஆக்கள் அகதியளாய் எல்லே போய்க் கிடக்கினம். அங்கை பிறக்கிற பிள்ளையஸ் அதோடை இஞ்கையிருந்து போன பிள்ளையஸ் எண்டு எங்கட இனம் அடுத்த சமுாயத்தை இழந்து போய் அநாதையாய் நிக்குது புள்ளை" குருக்கள் கண்ணிர் விட்டு அழுதார்.
"எங்கடை சொந்தப் பூமியிலை ஒரு கஞ்சியைத் தானும் காச்சிக் குடிச்சிட்டு இருந்தால் ஏதோ தமிழராய் வாழ்ந்து சாகிற நேரமும் தமிழராய் சாகலாம். இல்லாட்டி தமிழராய் புறந்து அந்நியனாய்த்தான் சாக வேண்டி". வார்த்தைகளை முடிப்பதற்குத் திராணியற்று தொண்டை இறுகி குருக்கள் ஈஸிச் செயரில் சாய்ந்தார்.
விசாலேஸ்வரி பயந்து போனாள். குருக்களுக்கு பிறஷரும் இருக்கு. சீனி
வியாதியும் இருக்கு.
1995-தமிழ் உலகம்
பொங்கல் மலர்.
41

Page 30
அந்த மரத்திலிருந்து யார் பனம்பழத்தை தட்டி விட்டது ஏன் இந்த சப்தம்? தொப்பென்ற சத்தம் கேட்டாலே நரம்புகள் புடைக்கின்றனவே, என் மன்ைமீது கறுப்பு பனம் பழம் விழும்போதும் இதே சத்தம்தானே. ஏன் நான் என் மண்ணி லிருந்து விரட்டப்பட்டேன்?
என் தாய்மண்ணில் வயல் வரம்புகளில் ஏகாந்தமாய் நடக்கின்றேன். என்னோடு யாருமில்லை. யாருமேயில்லை. பயமில்லை சத்தியமாய் பயம் இருக்கவில்லை, தோளில் மண்வெட்டி சுமந்து குளத்தடிப்பக்கமாய் போகிறேன். ஒற்றை வரம்பில் என்ன துணிச்சலான பயனம், புடையன் பாம்பு ஓடி வந்து என் கால்களில் தீண்டும். பயமில்லை, வெங்கினாந்தி என் வெறும் கால்களில் சுற்றிக்கொள்ளும் என் எலும்பை முறிக்கும். ம் ஹ9ம் பயமில்லை.சறார். சறார். தொட்டாச்சுருங்கி என் கால்களைப் பதம் பார்க்கும். பயமில்லை.
ஒரு நாள் இப்படித்தான் முற்றிக் கறுத்து திரண்டு போன எங்கள் நெற்பயிர் களுக்கு மத்தியிலே போகும் போது பன்றிக்குட்டியொன்று முட்களைச் சிலிர்ப்பிக் கொண்டு
 

இளைய அப்துல்லாஹ்
ஓடிவந்து என் கால்களை ரணமாக்கியது. ஒரே அடி புற மண்வெட்டி அதன் தலையில் பட்டுவிட்டது. செத்துப்போன முள்ளம் பன்றிக்குட்டியை பக்கத்து வீட்டுச் செல்லையாவின் மனிசி வந்து தூக்கி கடகத்தில் வைத்து கொண்டு போனா,
நான் யாருக்கு பயப்பட்டேன், ஏன் பயம் வந்தது. என் வீரியமான புடைத்தெழும் உணர்வுகளெல்லாம் ஏன் அடங்கிப்போயின? என் கண்ணெதிரே என் குழந்தைகளும் பேரப்பிள்ளைகளும் என் வயதான மனைவியும் வரிசையில் நிற்பாட்டப்பட்டார்களே! அப்போதேனும் ஒரு வார்த்தையைக்கூட என்னால் சொல்ல முடியவில்லை. ஏன் நான் கோழையாய்ப்போனது? எப்போது?
அகதிமுகாமின் இரண்டடிச் சுவரைத் தாண்டி படு வேகமாக ஒரு சுண்டெலி ஓடி வந்தது. அது கண்களை அங்கும் இங்குமாய் உருட்டியது. கண்கள் வெளிறிப்போய் விட்டிருந்தன. எனக்கு முன்னால் வந்ததும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன் சிறிய வாலும் சிறிய மீசையும் முகமும் சாம்பல் நிற வயிறும் துடித்தது. மரணத்தின் அச்சம் அதன் முகத்தில் துல்லியமாய்த் தெரிந்தது. இனி தன்னால் இயலாது என்ற களைப்பும் அதற்கிருந்தது எங்கேயோ தூரத்தில் இருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறது.
எனது எண்ணம் முடியவில்லை. கண்மூடி முழிக்க முன்னமே ஒரு கறுப்பு பூனை பக்கத்து முகாமில் உள்ளது. என்ன துணிச்சல் எனது முகாமிற்குள் அத்து மீறிய பிரவேசம், கொலை வெறி அல்லது அந்த எலிக்குஞ்சை அனுபவிக்க வேண்டும் என்ற பேரெனன்னம் எலிக்குஞ்சு நிலத்தோடு படுத்திருந்தது. பூனைக்குத் தெரியவில்லை. அதன் கண்கள் இரண்டும் உருண்டு திரண்டிருந்தன. சிவப்பு நிறமாக மாறிவிட்டிருந்தன. உண்மையில் இதென்ன"அடாவடித்தனம். சிறியதைக் கைப்பற்ற, கைக்கெட்டியது இன்னும் வாய்க்கெட்டாமல் போக கோபம் கலந்த வெறியுணர்வு பீறிட்டுப் போனதாய் கறுப்புப்பூனை என்னைக் கண்டதும் அதற்கு அச்சம், நான் பெரியவன். அதனால் பூனைக்கு பயம் பிடித்து விட்டது. எலிக்குஞ்சின் சின்னஞ்சிறிய எலும்புகள் அதன் தோல், இளம்ரத்தம், சிறிய தலை இவையெல்லாம் மீண்டும் மீண்டும் அதன் மூளையில் ஓடியிருக்க வேண்டும். என்னையும் தாண்டி ஒரே தாவல் ஒரே எக்களிப்பு எனக்கு கொஞ்சம் தூரத்தில் முகாமின் வலது பக்க மூலையில் பூனை வெகு சாவகாசமாய் முன்னங்கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டது. அதன்பிடியில் பலவீனமான எலிக்குஞ்சு, வெற்றிப்பெருமிதம் பூனைக்கு சரசர.என்று சத்தம் கேட்டது. பூனையின் வால் மகிழ்ச்சியில் ஆடியது. கொஞ்சம் கொஞ்சமாய் எலிக்குஞ்சு கறுப்புப்பூஎனயின் வயிற்றினுள் பிரவேசித்தது.
"லொக்.லொக்." உம்மா இருமும் சத்தம் கேட்டது. அவவுக்கு ஊரில் இருக்கும்போது வருத்தம் என்றால் என்ன என்று கேட்பா. ஆனால் அவர்கள் விரட்டி எப்போது முகாமிற்குள் காலடி எடுத்து வைத்தாவோ அன்றிலிருந்து பிடித்த இருமலும் சளியும் இழுப்பும் இப்ப பதின்நாலு வருஷமாயும் இன்னும் குறைய வில்லை. "மவன், மவன், உந்த துப்பல் சிரட்டையை கொஞ்சம் கொண்டு வா
43

Page 31
bjůvná33.cích anetě....
மவன்" சிரட்டையில் மண்ணெடுத்து என் தாயின் அண்டையில் கொண்டு போய் வைக்கக்கூட முடியாமல் எனக்கு வாதம் பிடித்துப்போய் விட்டதை நினைத்து கவலையுடன் சேர்ந்து கண்ணிர் வருகிறது. ஒருவாறு எனது கைத்தடித்துணையுடன் நான்கு கால்களில் எழும்ப முடிகிறது. "உம்மா இந்தா."
துப்பல் சிரட்டையை நடுங்கும் கைகளால் வாங்கி வாயில் இருந்த சளியை "கொழக்" என்று சிரட்டை மண்ணின் மேல் துப்பினா. கூடவே மஞ்சள் கட்டிச் சளியுடன் இரத்தமும் கலந்து வந்தது. "மவன் இப்பிடி வா இதிலை கொஞ்சம் உட்காரு புள்ளை." எனக்கு அறுபது தாண்டி விட்டது. ஆனாலும் உம்மாவுக்கு நான் புள்ளைதான். "எங்கை மேனை உவள் ஹரீரா. அவள் இருந்தா நான் இருமினா கிட்ட ஓடி வந்திடுவாள்." எனது கடைக்குட்டியோடு அவ்வளவு இரக்கம். ஹரீராவும் வாப்பம்மா என்றால் உயிர். "மேனை உனக்குச் சொன்னா என்ன எனக்கெண்டால் இந்தக் கோதாரி முகாமுக்குள்ளை இருக்க கொஞ்சம்கூட விருப்பமில்லை. ஒ. ஊரோடையே என்ரை ரூஹ9 போக வேணுமெண்டுதான் ஆசையாய் கிடக்கு. பாரூக்கு உவனுகள் கொஞ்சம் பேர் ஊரோடை போனானுவள்தானே அவனுகளின்ரை சேதி என்ன மேனை." உம்மா அர்த்தபுஷ்டியாய் இருக்கின்றா. தாய்மண் பற்றிய பிடிப்பின் அலைகள் இன்னும் அவவின் மனதில் ஓயவில்லை. மீண்டும் தன் மண்ணில் அமரக் கிடைக்காதா என்றொரு ஆதங்கம்.
அமருதல், அடக்கம் என்றொரு போக்கில் இன்னும் எத்தனை காலங்கள் தான் அவதிப்படுவது. சிங்களவன்களுக்கும் குடிவெறியை ஆசுவாசப்படுத்த அகதி முகாம்கள் தான் கிடைத்தனவோ?. அவர்களும் தீயிட்டு கொழுத்த அகதி முகாம் தான். யாரிடம் போய் சொல்லலாம் இதை.
எனக்குள்ளும் ஒரு அவதி, ஊரோடு போய்ச் சேர வேண்டும் அகதி அவஸ்த்தை முற்றாக நீங்க வேண்டும்.
"என்ன ஸம்ஸ் இவ்வளவு அவசரமாய் ஓடி வாறாய்?" சுபஹ9ம் காலையுமாய் ஓடிவரும் ஸம்ஸை நான் ஆச்சரியமாய் பார்த்தேன். அவனின் முகத்தில் சந்தோசக்களை கட்டியிருந்தது. "உனக்குச் சேதி தெரியுமா? இப்ப திருக்கணாமலையிலை இருந்து ஊருக்கு கப்பலிலை எங்களையும் கொண்டு போகப்போகினமெல்லே." "என்னது ஊருக்கோ!" என் நாடி நரம்புகளெல்லாம் ஒருவகை உணர்ச்சிப் பிரவாகம். என்னது எனதுாருக்கு மீண்டும் போவேனா? இரண்டே இரண்டு மணி நேர அவகாசத்தினுள் என் வீடு, சொத்துசுகம், படித்த பாடசாலை, வயல்வெளி எல்லாம் துறந்து மக்காவில் இருந்து மதீனாவுக்கு கிளம்பிப்போன அந்த நபித்தோழர்களாயும் தோழிகளாயும். ஆமாம் தன்னந்தனிய இந்தக்கலிமாவை பாதுகாக்க வேணும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஊர் துறந்து வந்தோம். கலிமா பாதுகாக்கப்பட்டது நிம்மதி!
எங்கள் அருமையான மண்?.
அந்தக்காலம் வருமென்று யார் கண்டது? வந்துவிட்டது.
44

இளைய அப்துல்லாஹ்
இங்கையிருந்து கிராம சேவகரிடம் பதிந்து. பின்னர் கொழும்பு போய் எங்களின் ஊர் அடையாளங்களை அடையாளப்படுத்தி அலைக் கழிந்து. மூட்டை முடிச்சுகளோடு ஊர் போய்ச் சேருவது என்பது. ஆனால் ஊரில் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும் என்பதற்கும் யாரும் உத்தரவாதம் தருகினNல்லை.
"எல்லாம் போங்கோ எல்லாரும் போங்கோ அங்கே ஒண்டுமில்லை எல்லாம் சரி வானொலியும் பத்திரிகைகள் சிலவும் ஏதோ எல்லாம் தெரிந்தமாதிரி சொல்லிச்சுதுகள். அங்கத்தை நிலமை எங்களுக்கெல்லே தெரியும்.
"இஞ்சைருங்கோ உவன் அமீன் சொன்னதை கேட்டீங்களே!." எனது மனைவியின் காதுகளில் விழுந்து விட்டது ஊர் போகும் விசயம். "உவன் அமீனும் ஜூனைட் காக்காவும் கொழும்பிலை போய் பதியப்போகினமாம். எக்கணம் ஊருக்கு போக ஏலுமாம். அப்பிடி எண்டால் எங்கடை வீடு வளவையும் ஒருக்கா பாத்திட்டு வரலாம் தானே."
"ஆமினா உனக்கென்ன விசரே. உந்த நிலமையிலே உவங்கள் சொல்லுறதுக் கெல்லாம் எங்களாலை ஆட முடியுமே. எக்கணம் எல்லாம் முடிஞ்சு சனமும் போனால் அதுக்கு பின்னாலை சாப்பாட்டுச் சாமான் எல்லாம் சரியாப் போகத் துவங்கினாப்பிறகு எண்டால் கொஞ்சம் யோசிக்கலாம். அதை விட்டுட்டு அங்கை என்னத்துக்கு முஸ்லிம் சனம் போகுதுகள். எல்லாத்தையும் கொலைக்கு குடுக்கவே அவசரப்படுறான்கள். எனக்கெண்டால் உந்த முடிவிலை எந்த சந்தோசமும் இல்லை. ஒ. அப்ப பின்னை எந்த தையிரியத்திலை உவன்கள் போறான்கள்? எனக்கெண்டால் ஒண்டிலையும் நம்பிக்கையில்லை. ஆரை நம்பிறது. அவங்கள் ஷணம் பித்தம் ஷணம் வாதம். கொஞ்சமிரு உவங்களை சந்திச்சு உந்த முடிவை மாத்தச்சொல்ல வேணும்."
"எனக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்லை." சொல்லிக்கொண்டு ஆமினா குசினிக்குள் போனா.
மகனிடம் சொன்னேன். "மகன் உதிலை போய் ஜூனைட்டைக் கொஞ்சம் வந்திட்டுப்போகச்சொல்லு." மகன் சைக்கிள் எடுத்துக்கொண்டு போனான்.
நான் ஜூனைட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். வந்தவுடன் சொல்லத்தானிருக்கிறேன்.
"ஜூனைட் இப்ப உந்த நினைப்பை கைவிட்டு விடு. எக்கணம் எங்களுக்கு காலம் வரும். அப்ப எல்லாரும் போவம்.
கடைக்குட்டி ஹரீரா எனது காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கேட்டாள். "வாப்பா.வாப்பா.எப்ப நாங்கள் எல்லாம் யாழ்ப்பாணம் போறது"
மீள்பார்வை. டிசம்பர் 1996
45

Page 32
திெலிருந்து ஆரம்பிப்பது? எங்கே தொடங்குவது? யாரிடம் சொல்ல முடியு மிதை? யார் ஆற்றுவார். பரவாயில்லை இது எழுத்திலாவது பதியப்படட்டும். குமுறிக் கொண்டிருக்கும் நெஞ்சங்கள் வெளியே சொல்ல முடியாத கதை. அல்லது வெளியே சொல்லத் தெரியாத கதை. அல்லது எழுதத் தெரியாத கதை.
இங்கே வித்தியாசமான அனுபவம் ஒன்றுக்குள் உங்களை அழைத்துச் செல்லப்போகிறேன். உங்களில் ஒருவர் அகதியாக இருக்கலாம். அது அரசியல் அகதியா? அல்லது பொருளாதார அகதியா என்று நான் கேட்கப்போவதில்லை.
அது எனக்குத் தேவையுமில்லை. ஆனால் கென்டயினர் பயணம்' அல்லது ஆட்கடத்தல் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே, ஒவ்வொரு தமிழனும் எப்படி யெல்லாம் பணம் கொடுத்து ஏஜன்டுகளிடம் அள்ளிக்கொடுத்து.
ஐரோப்பாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் போகிறார்கள் என்ற விடயத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு நான் சொல்லப்
46
 

இளைய அப்துல்லாஹ்
போகிறேன். உயிரைக்கொடுத்து வாழ்க்கையைக் கொடுத்து செத்துப்போய் வருகிறான். உண்மையில் அரை உயிராகத்தான் அவன் வருகிறான். கண்ணால் கண்டேன். தமிழரைக் கண்டேன். நான் இதை எழுதுவது கட்டாயமானதாகும். எனக்கும் இந்த அனுபவம் வாய்த்தது. ஒல்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் வைத்து சொன்னார்கள்-இந்த நாடுகளில் என்றால் மொழி படிக்க வேண்டும். இங்கிலாந்து போங்கள். மொழி லேசு. அகதிகளை ஏற்கிறார்கள். வேலையும் செய்யலாம்.
ஒரு ஏஜன்டைப் பிடித்து 3500 மார்க் கொடுத்து போக வேண்டும். இலங்கையில் இருந்து காசை வரவழைத்தாயிற்று. அனுப்புகிறோம். வாருங்கள், அழைப்பு வந்தது? எதுவுமே தெரியாது. வரச்சொன்னார்கள், போனோம். நானும் எனது நண்பனும்.
எப்படிக் கொண்டு போகிறார்கள்? யார் கொண்டு போகிறார்கள். ஹொலன்டில் என் நண்பன் எனக்கென்றவனாய் கிடைத்தான். நண்பனாய் ஹாமீம், முன்பின் அறிமுகமாகாமல் இப்படி அன்பாய் இருப்பதற்கும் பழகுவதற்கும் அவனைத்தான் முதன் முதலில் பார்த்தேன். நெக்குருகிப்போகிறது. அவனால் எப்படி முடிந்தது. இன்னும் எனக்குள்ளே எழும் கேள்வி.
அவனைக் காணும் போதெல்லாம் அவனின் அந்த நல்ல மனம் என்னை உருகப்பண்ணிவிடும். இப்பொழுதும்.
ஏஜன்ட் தொடர்பான விடயங்களில் நண்பன் வலு சூரன். அவர்கள் தொடர்பான விடயங்களை வலு திறமாக அறிந்து வைத்திருக்கிறான். அவர்கள் தொடர்பான எல்லா விடயங்களும் அத்துப்படி
எதுவுமே எனக்குத் தெரியாது. வரச்சொன்னார்கள் போனோம். காரில் நண்பன் கொண்டு போனான். ஹொலன்டில் இருந்து பெல்ஜியம். கார்ப்பயணம் நன்றாக இருந்தது. இடையில் BODER தாண்டும் போது யாரும் எதுவுமே கேட்கவில்லை. என்னிடமும் விசா இல்லை.
பெல்ஜியத்தில் ஒரு வீட்டில் விட்டுவிட்டு நண்பன் பயணம் சொல்லி விட்டு போய் விட்டான். அந்த வீட்டில் இருக்கச் சொன்னார்கள் இருந்தேன். என்னோடு சேர்த்து நான்கு பேர் ஏற்கனவே இருந்தார்கள். தமிழர்கள்தானே. பாஷை புரிகிறதே. அது போதும். சமைத்தார்கள். சாப்பிட்டோம்.
அன்றிரவு பதினொரு மணிபோல ஒருவன் வந்து சொன்னான். வெளிக் கிடுங்கோ' காரில் ஏற்றினான். கார் போகிறது புகை போல. ஒன்றரை மணித்தியாலம் மட்டில் கார்ப்பயணம். ஓரிடத்தில் நிப்பாட்டி இறங்கச் சொன்னான் இறங்கியாயிற்று. இறங்கி ஒடுங்கோ' ஓடினோம். 'பற்றைக்குள் படுங்கோ' படுத்தோம்.
அவன் போய் கென்டயினர் நிற்கும் இடங்களை அவதானித்தான். ஏதோ ARMY CAMPஐ தகர்க்கும் பாணியில்- எல்லாம் சுழண்டு படுத்து அனுகூலம் பார்த்து ஒருவாறாக ஒரு றெக்ஸின் கென்டயினரை அவிழ்த்து "ஒவ்வொருத்தராய்
47

Page 33
... شنامه اتمه قشونلو
வந்து ஏறுங்கே" உத்தரவுப்பிரகாரம் வந்து ஏறினோம். இங்கிலாந்து போவியள். இனி உங்கடை பாடுதான். சத்தம் போடாமல் இருக்க வேணும் இருங்கோ. பக்குவமாய் வெளியில் கட்டினான். போய் விட்டான்.
நடுச்சாமம். படுக்கவேண்டும். நித்திரை வருகிறது.
என்னைப் படுக்க மற்றவர்கள் விடுகிறார்களில்லை. நான் ஒரு குறட்டை
ஆசாமி. எல்லோருமாய் என்னைத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்கள். கென்டயினர் அரைவாசி வெறுமையாய்க் கிடக்கிறது. குளிருகிறது. பேய்க் குளிர்.
என் மனைவியே! நான் ஐரோப்பா வரும் பொழுது ஏன் அப்படியெல்லாம் அழுதாய்?. இரண்டு கிழமைகளாக என்னைக் கட்டிக்கொண்டு அழுதாயே?. என்ன உனக்கெல்லாம் சகுனம் தெரிந்ததா என்ன?. இப்படியெல்லாம் அகதிகள் அலைக் கழிக்கப்படுகிறார்கள் என்று.
பலகைத் தட்டு. ஊத்தைக் கென்டயினர். படுக்க முடியவில்லை. முதுகெலும்பு வலியெடுத்தது. போக வேண்டும். ஆம். போகத்தான் வேண்டும். இங்கிலாந்துக் காவது,
காலையில் கென்டயினரை எடுக்கிறான் சாரதி, ஓடுகிறது அது. ஒடிக்கொண்டே இருக்கிறது. ஒரு மூன்று மணித்தியால ஓட்டம். திடீரென்று நிற்கிறது. றெக்ஸின் சீற்றுக்குள்ளால் ஒட்டை போட்டு வெளியே பார்த்தான் வந்தவனில் ஒருத்தன்.
அதற்கிடையில் திடீரென்று நிற்பாட்டி விட்டு வந்து பின் கதவைத் திறந்தான் கென்டயினர் சாரதி. அதிர்ச்சி அடைந்தான். இறங்கி ஒடுங்கோ' ஆங்கிலத்தில் திட்டினான். ஒடினோம். எங்கே என்று தெரியாமல் ஓடினோம். HIGHWAY ஓடினால் பொலிஸ் பிடிப்பார்கள். சேர்ந்து ஓடினாலும் பிரச்சனை. பிரிந்து பிரிந்து இவ்விரண்டு பேராக ஒடி ஒரு மாதிரி ஒரு சிறிய வங்கியைக் கண்டு பிடித்து காசு மாற்றினோம். கையிலிருந்தது பவுண்ட். கை நிறையத் தந்தார்கள் பெல்ஜியம் பணத்தை, சுத்தி சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள்ளைதான். ஆம் பெல்ஜியத்துக்குள்ளேதான். மனது சலித்தது.
பொலிஸ9க்கு பயந்தோம். பிடித்தானென்றால் அந்த நாட்டுக்குள்ளேயே அகதியாய் அலைக்களிப்பானே. பயம்தான். ரயில் பிடித்து மீண்டும் முதல் நாள் நின்ற அதே வீட்டுக்கு ஏஜன்டிடம் வந்து சேர்ந்தோம். இது ஒன்றும் புதினமில்லை ஏஜன்டுக்கு. எனக்கு ஏதோ பெரிய பாடாக இருந்தது.
சமைக்கச் சொன்னான். சமைத்தோம். சாப்பிடச் சொன்னான். சாப்பிட்டோம். அசதி மிகுதியால் படுத்துக் கிடந்தோம். நித்திரை வந்தது.
முதல் நாள் செவ்வாய்க்கிழமை. அன்றைக்கு புதன் நித்திரையில் வந்து எழுப்பி னார்கள். அவசரமாய் கழிசானைப் போடுங்கோ என்ன இழவு இது கழிசானுக்கு மேலால் கழிசான். ஷேட்டுக்கு மேலால் இன்னும் மூன்று ஷேட்டுகள் போட வேண்டாமா? அதுதான் பை ஒன்றும் கொண்டு போக விடமாட்டார்களே. வேறென்ன
48

இளைய அப்துல்லாஹ்
செய்கிறது அங்கை போய் வேறென்னத்தை போடுறது. நான் இதனை எல்லாம் போடமுதல் நாலு பேரைக்கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் இங்கிலாந்து போய்ச்சேர்ந்து குறைடன் அகதி முகாமில் அல்லல்படும் கதை தனி. பயணம் என்பது நரகத்தின் ஒரு துண்டு என ஒரு நபிமொழி சொல்கிறது. அனுப வத்தால் உணர்ந்தேன்.
எங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள். என்னோடு காரில் இன்னும் மூன்று தமிழர்கள். தமிழர்களைத் தமிழர்கள் ஏமாற்றும் தமிழர் கதை இது. அவசரமாய் வரச் சொன்னார்கள். போனோம். கொண்டு போனார்கள் காரில் இரண்டு மணித்தி யாலங்கள்வரை. காரின் பின் ஆசனத்தில் நான்கு பேரை அடைத்து ஏற்றி இருந்தார்கள். கொஞ்சத்தூரம் போனதன் பின்பு ஒருவன் எங்கள் நான்கு பேரையும் இறக்கினான் கற்கள், முட்கள், செடிகள் ஊடாக சுமார் ஒரு மைல் தூரமளவிற்கு நடத்திக் கூட்டிக்கொண்டு போனான்.
ஒரு துறைமுகம் வந்தது. கென்டயினர்கள்' நிறைய நின்றன. ஆசுவாசமாய்ப் போய் ஒரு கென்டயினர் நாடாவை அவிழ்த்துவிட்டு உள்ளே ஏறும்படி சொன்னான். ஏறினோம். அப்பாடா இதுவாவது லண்டன் போகுமா? அல்லது இங்கிலாந்தின் ஏதாவது ஒரு கரையையாவது தொட்டுப் பார்க்குமா? மனவலி, முதுகுவலி அப்பாடா! ஏறினால் உள்ளே எல்லாம் எழுதும் காகிதங்கள். அல்லது அச்சடிக்கும் வெள்ளைக் காகிதங்களின் பெரிய பெரிய கட்டுக்கள். எங்களில் வந்த ஒரு புத்திசாலி? சொன்னானாக்கும் இது லண்டன்தான் போகிறது. இது லண்டன்தான் போகிறது. சந்தேகமேயில்லை. எழுதும் காகிதம், அச்சடிக்கும் காகிதம் என்றால் லண்டனுக்குத் தானே போக வேண்டும். அட பாவி உனக்கு எங்கே இருந்து இந்த மூளை வந்ததடா? எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. படுத்தேன். சுகமாக இருந்தது. இலக்கியக்காரனுக்கு காகிதம் என்றால் அதன் மேல் படுத்தாலும் சுகம் வருமாக்கும். எனக்கு நித்திரை வரப்பார்க்கிறது. விடுகிறான்களில்லை. மற்றவன்கள் எழும்பு உன்ரை குறட்டை எங்களையும் சேர்த்து காட்டிக்கொடுத்து விடுமே பயப்பட்டார்கள்.
குந்திக்கொண்டு கோழித்தூக்கம் போடக்கூட விடுகிறார்களில்லை.
அடேய் நான் ஒரு எழுத்தாளனடா! என்ரை கவிதைகளை, கதைகளை போட்டு அல்லது படித்து மற்றவர்கள் என்னை மதிக்கிறார்களடா! நான் ஒரு அறிவிப்பாளரும்
கூட எடா என்னை எப்படியெல்லாம் எல்லா இடங்களிலும் கவனித்தார்களடா!
எழுத்தாளரும் மயிரும் இப்ப நீ குறட்டை விடக்கூடாது. சத்தம் போட்டுப் பேசக்கூடாது. என்னண்டாலும் நீ எங்களின்ரை கென்ரயினர் கூட்டாளி, நாங்கள் சொல்லுறதை மட்டும் நீ இப்ப கேட்க வேண்டும்.
கென்டயினரில் போறதுக்கெண்டு சில வழிமுறைகள் இருக்கு. சத்தம் போடக்கூடாது. மூத்திரம் பெய்யக்கூடாது. கக்கூசுக்கு-போகக்கூடாது. குறட்டை விடக்கூடாது. இப்படி இப்படி.
49

Page 34
ჭx/&vaჭმაჭაიföl 4აებასბ.....
அப்படியா! கட்டுண்டேன். வழிப்படத்தானே வேண்டும். வழிப்பட்டேன். காலையில் கென்டயினரை பூட்டிக்கொண்டு துறைமுகத்தை விட்டு வெளியில் எடுக்கிறான் சாரதி இதாவது போகட்டுமே இங்கிலாந்துக்கு ஒருவன் நெஞ்சை இடப்புறம் வலப்புறமாகத் தொட்டு சிலுவை யேசுவை பிரார்த்தித்துக்கொண்டான். மற்றைய இருவரும் கைகளைத் தலைக்குமேல் தூக்கி கும்பிட்டுக் கொண்டார்கள். எனக்கென்னவோ லண்டன் போகும்வரை யோசனைதான். உயிருக்கும் கூட என்னாகுமோ, எத்தனை நாளாகுமோ? கென்டயினர் துறைமுக செக்கிங் எல்லாம் முடிந்து வெளியே ஓடுவது தெரிகிறது. எண்ணி அரை மணித்தியாலத்துக்குள் கென்டயினரை நிப்பாட்டி விட்டு சாரதி வந்து பின் கதவைத் திறக்கிறான். திறப்பது தெரிந்தது. ஏறி எட்டிப் பார்த்தான். நாங்கள் நால்வரும் படுத்துக்கொண்டிருந்தோம். சாரதி எங்களைக் கண்டுவிட்டான். எங்களில் ஒருவன் எழும்பி சாரதியைக் கும்பிட்டான். அவனுக்கெங்கே 'கும்பிடு' விளங்கப்போகிறது? எழும்பி மெதுவாக நடந்து வந்தோம். கென்டயினர் அவ்வளவு நீளம்.
சாரதி சிரித்தான். அவனை இப்பூவுலகில் நல்லவனாகப் படைத்தவன் எவனோ அவனுக்கு நயம் மிகு நன்றிகள். 'எங்கே போகிறீர்கள்' கேட்டான் சாரதி. 'a)60ir L-g)565." O MY GOD"
எல்லோரும் அப்படியே இருங்கள் என்று விட்டு பின்பக்கம் காகிதக்கட்டில்
வைக்கப்பட்டிருந்த அவனுக்கான கடிதத்தை எடுத்து தான் போகவேண்டிய விலாசத்தை பார்த்தான். "நான் பிரான்ஸ் போகிறேன் தேவையென்றால் அங்கு கொண்டுபோய் விடட்டுமா?" ஆங்கிலத்தில் கேட்டான் அவன்.
"எங்களை இந்த இடத்தில் இறக்கி விடு ராசா" நான் சொன்னேன்.
"இந்த இடம் ஆபத்து. உங்களை பொலிஸ் பிடிக்கும். அப்படியே இருங்கள். பாதுகாப்பான இடத்தில் விடுகிறேன். யார் கண்ணிலும் படாமல் போய்த் தப்புங்கள்."
என்ன ராசி இது? இவனும் மகா நல்லவன். உலகத்திலே உள்ள நல்ல கென்டயினர் சாரதிகளில் இவனும் ஒருவனே! நல்ல சாரதிகளே நீவிர் வாழ்க!
ஒரு நிலக்கரிச் சுரங்கம் அல்லது நிலக்கரி உலை. அதனண்மையில் எங்களை இறக்கிவிட்டு கைலாகு கொடுத்து போகச் சொன்னான். தேடிப்போய் நடையாய் நடந்து, ஒரு கடை கண்டுபிடித்து கடைக்காரனிடம் அடிமாட்டு விலைக்கு ஸ்ரேலிங் பவுண் மாத்தி பசிக்கும் தாகத்திற்குமாய் கோலா குடித்துவிட்டு ரயில் நிலையம் தேடி பணம் மாற்றி பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு அந்த ஏஜன்டின் வீட்டுக்கு வந்தடைந்தோம். இரண்டாவது பயணமும் பாழ்.
"எனைத் துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன் இல் புகல்?"
வள்ளுவனே! நீ என்னத்தை நினைத்துக்கொண்டு சொன்னாயோ? இந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறதே இது. மீண்டும் பெல்ஜியத்துக் குள்ளேதான்.
50

இளைய அப்துல்லாஹ்
எல்லாக் கனவுகளுக்கும் மண். பேசாமல் ஊரில் இருந்திருக்கலாம். ஏனிந்த இங்கிலாந்து? அகதிகளுக்கு அங்கு என்ன சொர்க்கமா தரப்போகிறார்கள்? முதுகு வலிக்கிறது. ஒவ்வொரு எலும்பு மூட்டுகளுக்குள்ளாலும் வேதனை பீறிடுகிறது. பசியாலும் தாகத்தாலும் வலுவிழந்து போனேன். கென்டயினர் பயணம் என்றால் என்ன லேசானதா? இருபத்தொருபேர் ஒரு முறை மாதக்கணக்காக பயணம் செய்யும் கப்பல் கென்டயினர்' ஒன்றிலிருந்து ஒன்றாகவே செத்துப்போனார்கள். கேள்விப்பட்டோம். எனக்குத் தெரிந்த ஒருபெண்ணின் கணவர் கென்டயினரில் போய் இன்னும் வரவேயில்லை. செத்துப்போனாரா இருக்கிறாரா-இன்னும் தெரியாமல் பன்னிரண்டு ஆண்டுகள் என் கண் முன்னாலேயே காத்திருக்கிறாள். அவளுக்கு யார் ஆறுதல் சொல்லித் தேற்றுவார். பாவம் அவள். இரண்டு பிள்ளைகளோடு. இது எல்லாம் கதைகளில்லை. தினம் நடைபெறும் உண்மையான கண்ணிர் அவலங்கள்.
ஓ கவிஞர்களே! சர்வதேசப் பிரபலங்களே! ஒரு முறையாவது அனுபவித்துப் பாருங்கள். "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்பீர்கள். ஒவ்வொரு தமிழனும் இப்படித்தான் அனுபவிக்கிறானா? என்னரிய தாய் நாடே ஏனெம்மை விரட்டிவைத்து வேதனைப்படுத்துகிறாய். சமாதானத்தின் காவலர்களே சொல்லுங்கள்! இன்னும் சில காலங்களுக்குள் இலங்கையை குட்டி சோமாலியாவாக்க பிரயத்தனப்படும் யுத்தப் பிசாசுகளே! உங்களுக்கெங்கே தெரியும் இந்த வேதனைகள்?
பெல்ஜியம் ஏஜென்ட் வீட்டில் வைத்து வழமையான சாப்பாடு. பின் அசதி மிகுந்த தூக்கம். 24 மணித்திலாத்துக்கொரு தடவையாவது சோறு தின்னக் கிடைத்த பாக்கியத்தை எண்ணினேன்.
வியாழன் மூன்றாவது நாளிது. வழமைமாதிரி இரவு 11 மணிபோல் வந்து எழுப்பினார்கள். நாங்கள் நான்கு பேரும் உடுப்புகள் போட்டு தயாராக இருந்தோம். வாரிச் சுருட்டிக்கொண்டு எழும்பி ஓடினோம். வழமையாக அல்லாமல் கார் ஒடிக்கொண்டே இருக்கிறது. எங்கே போகிறதோ? அட எனக்கு பரிச்சயமான இடம் வருகிறதே! அம்ஸ்ரடம். பின்னர் றொட்டடம். ஆ. இது ஒல்லாந்து ஓடிய காரிலிருந்து வேறொரு காருக்கு மாற்றப்படுகிறோம். ஒடி. ஓடி. உலகப் பிரசித்தி பெற்ற துறைமுகத்துக்கு அருகில் கொண்டு வந்துவிட்டார்கள். ஏதோ ஒரு பெரிய அதிரடிப்பாணியில் எங்களுக்கு பயிற்சி தரப்பட்டது. தமிழ் ஏஜன்ட் ஒரு துருக்கி காரனுக்கு பொறுப்பு கொடுத்திருந்தான்.
கீழே மாகடல். கப்பல்கள் நிற்கின்றன. மேலே கம்பிவேலி. அப்பால் கென்டயினர்கள் அடுக்கி நிற்கின்றன.
சரிவாய்க் கட்டிய சீமெந்துப்பாதையில் குனிந்து கொண்டு அரை மைல் தூரம் நடக்க வேண்டும். பின்னர் மேலேயும் ஒரு கம்பி கீழேயும் ஒரு கம்பி. சுமார் 20 மீட்டர் வரையில் கம்பியில் நடக்க வேண்டும். தவறி விழுந்தால் கீழே ஆழ்கடல். அவ்வளவுதான் யாரும் காப்பாற்றமாட்டார்கள். கடலில் மூழ்கி செத்துப்போக
51

Page 35
துப்பAக்கிகளின் கAலம்.
வேண்டும். இப்படி ஆபத்துக்கள் தாண்டி வந்தால், ஒருபுறம் எங்களுக்கு நல்ல காலம். மறுபுறம் ஏஜண்டுக்கு இலங்கை பணப் பெறுமதிப்படி தலைக்கு ஒரு லட்சத்து பதினேளாயிரத்து ஐநூறு ரூபாய் தேறுகிறது. இது 1998 ஆம் ஆண்டுக் கணக்கு.
எட்டிப் பார்த்தான். எங்களை அழைத்து வந்தவன். துறைமுக செக்கியூரிட்டி எங்கே போனான்?. அவனின் அறை மட்டும் திறந்திருக்கிறது. ஆளில்லை.
ஒண்டுக்கு இரண்டுக்கு போயிருப்பானாக்கும். வெள்ளைக்காரனே! உன் கண்ணில்கூட விரலைவிட்டு ஆட்ட எப்படிப் பழகிக்கொண்டான் என்னவன்.
வேலி ஏறிக் குதித்து ஒரு கென்டயினர் அருகில் உயிரைக் கொடுத்து வந்து சேர்ந்தாயிற்று. கூட்டி வந்தவன் எல்லோரையும் அதன் கீழே படுக்கச் சொன்னான். பின்னர் கென்டயினரை சுற்றிக் கட்டியிருந்த பெரிய நாடாவை கழட்டி ஏறச் சொன்னான். ஏறினோம். அப்படி ஏறுவது மற்றும் ஏற்றுவது சட்டப்படி குற்றமாமே. எங்கள் நால்வரோடு சேர்த்து ஒரு அல்பானியன். இன்னுமொரு பாகிஸ்தானியன். மொத்தமாக ஆறு பேர். உள்ளே ஏறினால் கென்டயினரில் கொக்கோகோலா" ரின்களை பெட்டி பெட்டியாக நிரப்பி அடுக்கி இருந்தார்கள். ஒரு மணித்தியால மளவில் லண்டன் போவீர்கள். சொல்லி விட்டு கென்டயினரை முதல் இருந்தது போல கட்டிவிட்டு அவன் போய்விட்டான். இருக்க இடமில்லை. கிடைத்த சில இடைவெளிகளைப் பகிர்ந்து கொண்டு இடுப்பெலும்பு நோக நோக இருந்தோம். பசித்தது, உணவில்லை. தாகித்தது. கொக்கோ கோலாவை ஏற்றியனுப்பிய முதலாளியே அல்லது நிறுவனமே! எங்களை மன்னித்து விடுங்கள். குடித்து குடித்தே தாகம் தீர்த்தோம். இரவும் பின்னரொரு பகலும்.
அடுத்த நாள் பகல் 12 மணியளவில் கென்டயினரை எடுத்து கப்பலில் ஏற்றுவது தெரிந்தது. அதென்ன அப்படிச் சத்தம். இடி இடியென. கப்பல் எப்படி இருக்கும். எங்களுக்கெல்லாம் இருட்டு மட்டும் தான் துணை என்னது ஒரு மணித்தியாலமா? கப்பலே எங்கு போகிறாய். எண்ணிக்கை தவறாமல் 13 மணித்தியாலங்கள் போகிறது கப்பல். w
இதென்ன இங்கிலாந்தைச் சுற்றி கடல் ஊர்வலமா? அதில் ஒருவன் சொன்னான். கொக்கோகோலா'வை ஏற்றிக்கொண்டு கப்பல் என்ன சவூதிக்கா போகிறது.? ஆருக்கு தெரியும் மாலுமிகளே! உங்களுக்கு தெரியுமா! இங்கு ஆறு உயிர்கள் ஆலாய்ப் பறப்பதை?.
ஒருவாறாக கப்பல் ஒரு துறைமுகத்தை அருகணைப்பது விளங்குகிறது. நங்கூரம் இறக்கப்படுகிறதோ என்னவோ! சத்தம் கர்ணகடுரமாக. எங்கே நிற்கிறோம். தெரியவேயில்லை. கென்டயினரை ஒருவாறாகக்கொண்டு வந்து துறைமுகக் கரையில் நிப்பாட்டினார்கள். நேரம் அதிகாலை 315.
காத்திருந்தோம் வெளியில் எடுக்கும் வரை. பகலாச்சு. மற்றக் கென்டயினர் களை வாகனம் வந்து கொண்டு போகிறது தெரிகிறது. நாங்கள் இருக்கிறோம்,
52

இளைய அப்துல்லாஹ்
இருக்கிறோம், இருந்து கொண்டே இருக்கிறோம். எடுக்கிறார்களில்லை. மனம் சலித்து விட்டது. பசியைப் போக்க எந்தக் கோலாவால் முடியும்? பொறுமையிழந்து அந்தப் புத்தி அல்பானியனுக்கு வந்தது. றெக்ஸின் சீலையை வெட்டி இறங்குவோம். சரியென்றோம்.
அல்பானியனும் பாகிஸ்தானியனும் முதலில் இறங்கிப் போய் விட்டார்கள். தமிழர்கள் நாம் நால்வரும் இறங்குகிறோம். முதலில் போனவர்கள் இரண்டு பேர் பொலிஸில் மாட்டுப்பட்டுவிட்டார்கள். துறைமுக கமரா எங்களைக் காட்டிக்கொடுத்து விட்டது. அல்பானியன் பிடிபட்டது. பின்னர் தெரியவந்தது. பாகிஸ்த்தானியன் எங்கேயோ வெளியில் ஒடித் தப்பிவிட்டான். பிடிபடவேயில்லை. சரி, கமராக் கண்ணில் மண்ணைத் தூவி விட்ட பாகிஸ்த்தானியனே! நீயாவது எங்காவது போ! போய் நல்லாய் இரு.
அட, இங்கிலாந்தின் ஒரு மூலைக்கு வந்து விட்டோமையா! இன்று திகதி O7-08-1998
வெள்ளைக்காரனுக்கு வணக்கம்!
இன்முகத்துடன் வரவேற்க உனக்குத் தெரிகிறது. அதென்ன துறைமுகத்தை சுற்றி ஜீப்பில் எங்களை வைத்து ஊர்வலமா போகிறாய்!
"வாருங்கள்!" ஆஹா என்ன வரவேற்பு?
"என்ன வேண்டும் உங்களுக்கு?"
"அகதி அந்தஸ்த்து தா!"
"அதனை தீர்மானிக்க வேண்டியது அதிகாரிகள்"
"உங்களுக்கு பசிக்கிறதா?"
"ஆமாம் கடும் பசி, கொண்டு வா! வெள்ளைக்காரனே!
மணக்க மணக்க கோழித்தொடை உருளைக்கிழங்கு துண்டுகள், இன்னும் சிப்ஸ். அட சனியனே மீண்டும் 'கோலா'வா! சரி தா!
மிளகுப்பொடி, உப்புப்பொடி யார் பெத்த மகனோ?
யார் வீட்டுப் பணமோ? நன்றியடா! நன்றி. எங்கள் தாய் பூமியை வைத்து 150 வருடங்களாக வளங்களை சுரண்டி எடுத்து நாசமாக்கினாயே! அதற்கான நன்றிக்கடனா? அல்லது வேறென்ன? அட எங்கள் அயல்தேசத்து விலைமதிக்க முடியா கோகினூர்' வைரத்தை வைத்திருக்கின்றாயே அதற்காகவா?
புகைப்படம், கைவிரலடையாளம், கேள்விகள் முடிந்தாயிற்று. போங்கள் எங்காவது இங்கிலாந்தில் வாழுங்கள். பின்னரழைப்போம் அகதிகளே!
53

Page 36
துப்புசுக்கிகளின் ஆடிம்.
அனுபவ வேதனைகளிள பகிர்ந்தாயிற்று. போக்கிடம் தேடி இப்படித்தானே எம்மக்கள் அலைகின்றனர். வாழ்வின் அந்திமங்களிலாவது தாயகமே அமைதி பெற மாட்டாயா? எங்கே அந்த ஆயுத வியாபாரிகள்? தீர்வுப்பொதிக்காரர்கள்! யுத்தப் பிரியர்கள். இவர்களைத் தாண்டிக்கொண்டு எந்த ஆண்டில் எம்தாயகம் நோக்கிய பயனப்பாடு அமையப் போகிறது?
டிசம்பர் 1998
37042
5.

0ே9 உதவி
னெண்டனில் இப்பொழுது குளிர் காலம். எல்லோரும் தொப்பி போட்டு கையுறை தரித்து குளிர் சட்டை போட்டு தடித்த சொக்ஸ் போட்டுப் போகும் காலம், ஒக்ரோபர் மாதம் தொடக்கம் ஏப்ரல் ஆரம்பம் வரை இப்படித் தான் உடுப்புப் போடுவார்கள், ஒருவளர ஒருவர் அனைத்துக் கொண்டு போவார்கள் காதலர்கள்.
ஆண் நண்பர்கள் பெண் நண்பர்களோடு கையிறுக்கிக்கொண்டு போவார்கள். அநேக மாக குளிர் காலங்களில் இப்படித்தான் நடக்கும், பஸ் தரிப்பிடங்களில் ஆண்களும் பெண்களும் அவரவர் துணையுடன் இறுகக் கட்டிப்பிடித்த படி நின்று கொண்டிருப்பார்கள். பஸ் எல்லாம் சூடு போட்டு கதகதப்பாக இருக்கும். சுரங்க ரயில்கள் எல்லாம் சூடாக இருக்கும். குளிர் காலங்களில் மரங்களில் ஒரு இலை கூட இருக்காது. பனக்காரர் வாழும் ஒரு பகுதிக்கு போயிருந்த போது குளிர் காலத்தில் இலையுள்ள மரங்களை பார்க்க முடிந்தது.
55

Page 37
&rvv/\&&&ର୍ବାଞ୍ଜି & navis •
என்னை கூட்டிக் கொண்டு போன பணக்காரர் தனது இருபது லட்சம் ஸ்ரேலிங் பவுண்கள் பெறுமதியான வீட்டு வராந்தாவில் சோபாவில் வைத்துச் சொன்னார். இது எவர் கிறீன் மரங்கள் எப்பவும் அவை இலைகள் உதிராது. பச்சையாகவே இருக்கும். குளிர் காலங்கள் இன்னும் வெயில் காலங்களிலும்.
என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்லுவான். எங்கள் முதலாளி KFC இல் கோழி வாங்கி சாப்பிடுகிறார். அவர் பணக்காறர், நாங்களும் சாப்பிடுகிறோம். ஆனால் ஏழைகள் என்பது வேறு விதமாக இருக்கும். மாதம் ஆயிரம் பவுண் சம்பளம் எடுக்கும் ஒரு தனி மனிதன் தனது தேவைகளைப் பூர்த்திசெய்ய கிரடிட்காட்டுகளின் உதவியையும் நாடவேண்டிய நிலமைதான் அதிகம். குடும்பம் வாழ குறைந்தது இரண்டாயிரம் பவுண்கள் தேவை இங்கிலாந்தில், அதுவும் ஒரு தாய் தந்தை அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்துக்கு மட்டும் குத்து மதிப்பாக இந்தக்கணக்கு.
காலையும் மால்ையும் எனது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பஸ் ஹோல்ட்
சின்னப்பிள்ளைகளால் நிறைந்திருக்கும். சின்னப்பிள்ளைகள் என்றால் பன்னிரண்டாம் வகுப்பிற்கு உட்பட்ட பிள்ளைகள். நல்ல பருவமான ஆண் பெண் பிள்ளைகள். ஒரே கூத்தும் கும்மாளமும் தான். உந்தப்பிள்ளைகள் யாருக்கும் அடங்காத பிள்ளைகள். * ~
வீட்டிலையும் அடங்கமாட்டுதுகள். பள்ளிக்கூடம் விட்டாப்பிறகு வீட்டுக்குப் போயும் அம்மா அப்பாவோடை சண்டைதான். அங்கை போக வேணும் அது வேணும் உது வேணும் எண்டு. சின்னப்பிள்ளைகளிலேயே சிகரட் குடிக்க தானாகவே பழகி விடுவினம். இங்கே பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவைதான் சிகரட், பியர் வாங்க முடியும். ஆனால் பெரிய வளர்ந்த பிள்ளைகளைப் பிடித்து சிகரட், பியர் வாங்கி சின்ன பொம்பிளைப்பிள்ளைகளும் ஆம்பிளைப்பிள்ளைகளும் குடிப்பினம். எல்லோரும் இல்லை. இங்கை சின்னப்பிள்ளை பருவம் எண்டு சொல்லுறது ஒரு அர்த்தம் சொல்ல முடியாத பருவம். ரீச்சர் அடிக்க முடியாது. பெற்றார் அடிக்க முடியாது. பொலிசுக்கு சொல்லிப்போடுவினம். அவ்வளவு சுதந்திரம். அந்தச் சுதந்திரம் பெரியவர்களுக்கு நல்லது. ஆனால் சின்னப் பிள்ளைகளுக்கு அதிகம் போல எனக்குப்படுகிறது.
ஒருநாள் எங்களின் ஊரில் நானும் மணிவண்ணனும் சேர்ந்து ஒரு சிகரட்டை பத்த வைச்சதுக்கு, அதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரத் தருமண்ணை மணி வண்ணனின் காதைத் திருகி பிடரிைையப்பொத்தி அடிச்சது நினைவுக்கு வருகிறது. ஆனால் இங்கை அப்படி செய்ய முடியாது. அடுத்தாக்களின்ரை பிள்ளையும் எங்கடை பிள்ளை போல கிராமத்திலை இருக்கும். ஆனால் அந்த விளையாட் டெல்லாம் இங்கை விட முடியாது. 999 கோல் பண்ணினால் பொலிஸ் வந்து நிக்கும் கூவிக்கொண்டு.
56

இளைய அப்துல்லாஹ்
பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே Girl friend இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு. "Boy friend" இருக்கும் பொம்பிளைப்பிள்ளையஞக்கு அனேக மாக, நுாற்றுக்கு நுாறு என்று சொல்ல முடியாவிட்டாலும், இருக்கும். இருக்க வேண்டும் என்பது ஸ்ரைல், அப்படிஇல்லாவிட்டால் சில பெற்றோர்களே கவலைப்பட்டுப் போய்விடுகிறார்கள். லெஸ்பியனாகவோ அல்லது Gay ஆகவோ போய்விடும் பிள்ளைகள் என்று. ஒருமுறை என்னோடு வேலை செய்யும் நவமணி அக்கா வந்து சொன்னா ரஹானா, கேட்டவள். அம்மா அம்மா லெஸ்ப்பியன் எண்டால் என்னம்மா?' எண்டு. அதை எப்படி எட்டு வயது ரஹானாவுக்கு விளங்கப் படுத்துவது. நவமணி அக்காவுக்கு தெரிய வேணுமே அதைப்பற்றி விளங்கப் படுத்துவதற்கு அவர்கள் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள். அவர்களுக்கென்று கொள்கைகள் இருக்கிறது. அவர்களுக்கென்று உடலுறவு செய்யும் முறைகள் இருக்கிறது. அவர்கள் உடலுறவு கொள்வதற்கு இலக்ரோனிக் சாதனங்கள் இருக்கின்றன.
அவர்கள் தனித்துவமாக இருக்க விரும்புவார்கள். அடுத்த பாலாருக்குஅடுத்த பாலார் உணர்வுகளை விளக்க முடியாது என்ற கொள்கைகளை உடைய வர்கள்.
பொது இடங்களில் ஒருபெண் தனது பெண் துணைக்கு அழகான சிவந்த உதடுகளில் உதடு வைத்து கெளவி முத்தம் கொடுப்பது பற்றி எந்தக் கவலையும் இல்லாத சுதந்திரமானவர்கள் அவர்கள். இது ஒரு முக்கியமான விடயம் இங்கு.
லெஸ்ப்பியன் மற்றும் Gay இவர்களைப்பற்றி விவாதங்கள் அடிக்கடி நடக்கும். அவர்களைப் பற்றிய மகாநாடு களியாட்டங்களில் அவர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் முடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது அமெரிக்காவில். ஒரு ஓரினச் சேர்க்கையாளர் அவள் பெண்ணாக இருந்தால் அவளோடு ஒரு ஆண் கட்டிப் பிடித்துப் படுத்தால் கூட செக்ஸ் வைக்கும் எண்ணமே வராது என்று எனக்குத் தெரிந்த ஓரினச் சேர்க்கையாளினி சொன்னாள். அதே போல ஆண் Gay இற்களும் அப்படித்தான். ஆனால் ஒரு லெஸ்ப்பியன் ஒரு அழகான பெண்ணைக் கண்டால் உடலுறவுக்காக ஆசைப்படுவாள். இது சகஜம். எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் ஒரு Gay இன் நண்பி. அவள் பல சூசகமான விடயங்களை சொல்லும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் எல்லோரின் மன உணர்வுகளும் ஒவ்வொரு பவித்திரமானவை. எனவே அவர்களின் உணர்வுகள் அவரவர்களுக்கு பவித்திரமான உணர்வுகளின் ஒடுக்கத்தை தரும்.
ரஹானாவுக்கு நவமணி அக்கா எப்படி விளங்கப்படுத்துவா? பிறகு புருஷன் எட்டு வயது ரஹானாவுக்கு கொஞ்சம் விளங்கப்படுத்தியிருக்கிறார். இங்கு உறவுகள் பற்றிய தெளிவில் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள். ஆண் பெண் உறவு பற்றிய ஒரு தீர்க்கத்தில் இருக்கிறார்கள். எனது நல்ல நண்பி ஒருநாள் வெளியில் பயணத்தில் இருந்த என்னை செல்' போனில் கூப்பிட்டு எனக்கு ஒரு பக்கட் வாங்கி வா
57

Page 38
ტNovAჭმაჭირål 4აaeviè.....
அதுவும் Relex Bulu பக்கட் பார்க்காமல் வாங்கி வந்தால் நீ தான் கொண்டு போய் கட்ட வேணும். என்று சொல்லி வாங்கிவித்தாள். எனக்கு அது ஒன்றும் பெரிதாகப்படவில்லை. அதிலென்ன? அவ்வளவிற்கு நட்பு, காதல், அன்பு எல்லாம் வெளிப்படை தொட்டுப் பேசும் நட்பும் கொஞ்சிப் பேசும் காதலும் மிகவும் நன்றாக இருக்கும். அவளுக்கு சரியான பக்கட்டை வாங்கிக் கொடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி. பண விசயத்தில் என் நண்பர்களும் சரி நானும் சரி மிகவும் சுத்தமாக நடந்து கொள்ளுவோம். அது மனதுக்கு எந்தப் பிரச்சனையையும் தோற்றுவிக்காது. நாம் மிகவும் அன்னியோன்யமாகப் பழகுவோம். எதுவுமே மறைவில்லாமல் பேசுவோம். எம்மிடையே உடல்ரீதியான மறைவுகளோ உள்ள ரீதியான மறைவுகளோ பேச்சில் வருவதில்லை.
'உனக்கு ஏதாவது செய்கிறதா இப்ப?
போடா நாயே.
நீ எப்படியெடி அடக்குகிறாய்"
எங்களுக்கென்றால் கை இருக்கு."
'எங்களுக்கும் அது இருக்குத்தானேயடா. பண்டி.
நல்ல நட்பில் திளைத்திருப்போம். நாங்கள் ஐந்து பேர் கிளரன்ஸ், நாட்டியப் பேரொளி வின்ஸ், நான், சேகர் எல்லாம் கதைப்போம். எல்லாமே. அது எங்களுக்குள் எந்தக் கூச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒன்றாய் சாப்பிடுவோம். ஒன்றாய்
பருகுவோம். ஒன்றாய் இருப்போம். சனி, ஞாயிறு மட்டும் தனித்தனிய எங்கள் எங்கள் வேலைகளைப் பார்ப்போம்.
இரவு முழுக்க சரியான பனிப் பெய்தது. ஊரில் மாதிரி நுனிப்புல் பனி அல்ல. கட்டி கட்டியாய் வெண்மையாய் பஞ்சு மாதிரி படர்ந்து போயிருந்தது பனி. காரில் றோட்டில் வீட்டில் பனி. எங்கும் நீக்கமற. இங்கு பனிக்காலம் சில நேரம் இன்பமாக இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இழுத்துப் போர்த்துக்கொண்டு துாங்கலாம். வெள்ளைக் காரருக்கு பனிக்காலம் என்றால் குளிருக்கு பியர் குடிப்பார்கள். வெயில்காலம் என்றால் தாகத்துக்கு குடிப்பார்கள். Bar எப்பொழுதும் நிரம்பியிருக்கும். அது ஒரு கலாச்சாரமாக ஊறிப்போன விசயம். எங்கடை ஆட்களும் அப்படி பழகி விட்டிருந் தார்கள்.
நான் பஸ் ஹோல்ட்டில் நின்று கொண்டிருக்கிறேன். ஹவுன்ஸ்லோ சென்றல் போக. 111 பஸ் எங்கள் ரூட்டில் போகும். இரட்டைத் தட்டு பஸ்களில் பயணம் செய்வது மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் இரண்டு அல்லது ஐந்து ஹோல்ட்டுகள்தான் பயணம் செய்வோம்.
ஊரிலை மாதிரி இங்கு கண்டி கொழும்பு, திருகோணமலை என்று நீண்ட துாரம் பஸ் இருக்கும் சொகுசாக.
58

இளைய அப்துல்லாஹ்
அப்படியெண்டாலும் ட்றெயின் அல்லது சுரங்க றெயில் என்றுதான் பயணம். நெருக்கடி இல்லை. ஒருவரை ஒருவர் இடிக்க மாட்டார்கள். இடித்தாலும் ஒன்றுக்கு பத்து தரம் சொறி கேட்டுக்கொள்வார்கள். துாசி துப்புரவான வாழ்க்கை.
இரண்டு பேர் ஈரானிய சகோதரர்கள் லாடன் பிஜானி- லாலே பிஜானி இரணைப் பிறவிகள், ஒட்டிப் பிறந்தவர்கள் போல இரண்டு தலைகளையும் முட்டிக்கொண்டு வருகிறார்கள். ஒன்று ஆண், அழகானவன் வயது, பதினெட்டு மதிக்கலாம். மற்றது பெண், அழகானவள், வயது பதினாறு மதிக்கலாம். அப்படியேதான் இருக்கிறார்கள் ஒட்டிப் பிறந்தே விட்டார்களோ? உண்மையாய் நான் ஒருகணம் திகைத்து விட்டேன். திடீரென்று பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் இருக்கும். இப்படியே பேசிப்பேசி இருந்தவர்கள் திடீரென அவளின் அழகான ஈரமான உதடுகளை அவனின் அழகான உதடுகளால் இலேசாக கெளவி ஈரப்படுத்தி ஒற்றியெடுத்து ஒரு முத்தம் ஆழ்ந்து கொடுத்தான். தலைகள் ஒட்டியிருக்கவில்லை.
மனம் நிம்மதியாகி விட்டிருந்தது. அவர்கள் காதலர்கள். அடிக்கடி முத்த மிட்டார்கள். அடிக்கடி சிரித்தார்கள். இடது கையை அவன் அவளின் குளிர் சட்டைக்குள் செலுத்தி இடையை வளைத்துப்போட்ட கைகளை இன்னும் இறுக்கமாக்கி தலையை தலையோடு ஒட்டியபடியே இருவரும் நடப்பார்கள். ஒவ்வொருநாளும் இப்படித்தான். இரவில் எப்படி பிரிந்திருப்பார்கள். வீட்டுக்கு போவதில்லையா?. எவ்வளவு காதல் இருவரும். கட்டிப் பிடித்தபடியே தமது பாடசாலை நண்பர்களுடன் வீதியில் பேசுகிறார்கள். அவர்களோடு கைகுலுக்கு கிறார்கள். ஆனால் பிடி விலகுவதேயில்லை. ஒட்டியபடியே தலை இருக்கும் அற்புதம் பார்க்க நன்றாகவே இருக்கும். பெற்றோர் எப்படி அனுமதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெள்ளைக்காரரில்லை.
வட இந்தியர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள், இங்கே,
இள வயதினர் மிகவும் நேர்த்தியாக முடி வெட்டி அழகுபடுத்தி துப்புரவாக எப்பொழுதும் கவர்ச்சியாக இருப்பார்கள். இங்கு பிறந்த எங்களுடையவர்களும் அப்படியே அழகாக இருக்க பழகிவிட்டார்கள். அவர்கள் பிரிட்டிஷ் வாசிகள் போல அழகாக இருப்பார்கள். பிரிட்டிஷ் வாசிகள் தானே.
ஊரில் சுந்தரலிங்கத்தின் காதல் தான் பள்ளிக்கூடத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படத்திய காதல். கேதீஸ்வரி கறுப்பாக வடிவாக இருப்பாள். சுந்தரலிங்கம் கேதீஸ்வரி இருவரும் காதல் வயப்பட்டது எப்படி என்று தெரியாது. ஆனால் கடிதம் எழுதிக் கொடுத்து நன்றாகவே காதலித்தார்கள். கேதீஸுக்கு நீளமான முடி முடியும் நல்ல வடிவு பள்ளிக்கூடத்தில்தான் தெரியும் இந்தக் காதல் விவகாரம். பெரியவர்கள் மத்தியில் இந்த விவகாரம் அவ்வளவு தெரியாது. அப்பொழுது இருவரும் சந்திப்பது எங்களது ஊர் அரசாங்க ஆஸ்ப்பத்திரியில்.
அரசாங்க ஆஸ்ப்பத்திரி ஒடலியைக் கண்டால் புண்ணுள்ள பொடியன்கள்
எல்லாருக்கும் பயம். சவலோனில் பஞ்சை கத்தரிக்கோலால் தொட்டு புண்ணிலுள்ள
59

Page 39
ტაNovAჭმაჭირō ტაგაutê.....
அழுக்குப்பட்டை உரியும் வரைக்கும் உரஞ்சி தேய்த்து புண் சிவப்பாய் ரத்த நிறமாய் தெரியும் வரைக்கும் தேய்த்து பின்தான் மருந்தைப் போட்டுக் கட்டுவார். 'செகட்ரின் பவுடரை கொட்டிப்போட்டு பெரிய ஒட்டையான புண்களுக்கும் கட்டுவார். புதுசாக புண்ணுக்கு மருந்து கட்டுவதென்பது ஒரு மகிழ்ச்சியான விசயமாக இருக்கும் கட்டி முடிந்த பிறகு, வெள்ளை பண்டேஜ் பார்க்க அழகாக இருக்கும். மருந்து கட்டும் போது இருந்த வலி பிறகு கட்டிய பின்பு மாறி விடும்.
ஊரில் இருக்கும் போது அடிக்கடி புண் வரும். தொட்டாச்சிணுங்கி கீறும். மண்வெட்டி வெட்டும். கோடாலி வெட்டும். குப்பை விறாண்டி கீறும்.
வாச்சி வெட்டும். சுத்தியல் கையிலடிக்கும்.
மரவேர் குத்தும். வேலிக்கம்பி கிழிக்கும். ஒன்றுமில்லாவிட்டால் றோட்டால் சும்மா நடந்து போக கல்லடித்து பெருவிரல் நகம் கழண்டு போகும்.
டாக்குத்தர் பெயர் ஞாபகமில்லை. ஊரில் அவர் என்றால் தெய்வம். வாத்திமார் தெய்வம். டாக்குத்தர்மார் தெய்வம். பிரின்ஸிப்பல் பெரிய தெய்வம். றோட்டால் வாத்தியார் வந்தால் சைக்கிளில் போகும் நாங்களும் இறங்கி மரியாதை செய்து போட்டுத்தான் போவம். அவருக்கும் அது பெரு விருப்பம்.
இங்கே சேர்' என்று கூப்பிடுவதே அபூர்வம். மிஸ்ட்டர் என்று தான் பிள்ளைகள் கூப்பிடுவது. அதுவே பெரிய மரியாதை, சிகரட் பியர் எல்லாம் வாத்திமாருக்கு முன்னாலை குடிக்கலாம். ஆனால் எல்லா இடமும் இல்லை.
அரசாங்க ஆஸ்ப்பத்திரியில் ஒருநாள் சுந்தரலிங்கமும் கேதீஸ்வரியும் போய் பக்கத்தில் இருந்து கொண்டு கட்டிப்பிடித்து கொஞ்சி காதல் வயப்பட்டு மயங்கி, சுந்தாவின் மடியில் கேதீஸ் படுத்திருந்திருக்கிறாள். சுந்தா கேதீஸின் தலையில் பேன் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான். காதல். காதல். உணர்வுச் சுரப்பிகள் சுரந்து நிறைந்து தீர்க்கும் நேரம். ஒன்றும் செய்ய முடியாமல்-பயந்து அப்படி எதுவும் செய்ய அந்தக்காலத்தில் துணிவு வராது. சிறிய பருவம். பிள்ளை ஏதும் வந்து விடுமோ என்கின்ற பயம். பயக்கெடுதிதான் அதிகம். கலியாணம் செய்தால் பிள்ளை தானாக வரும் என்பது தான் அந்தக்காலத்தில் பலர் நம்பியிருந்ததாக அறிகிறோம்.
ஆனந்தன். உந்த விசயங்களில் விண்ணன். அவன் அந்தக் காலத்தில் 'கம்பியடிமன்னன்' என்றுதான் கேள்விப்பட்டிருந்தேன். பெடியன்களை விடமாட்டான். பெட்டைகள் என்னும் பொழுது எனக்குத் தெரியும். மனோகரா அதுக்குப்பிறகு இரண்டு மூன்று பொம்பிளைப் பிள்ளைகள். ஆனால் என்ன செய்தான் என்பது சமுசியம் தான். அதுக்குப்பிறகு அவனோடு இருந்த சங்கர் Gay' ஆகிவிட்டான் என்று கேள்வி. எனக்கு பரிபூரணமாகத் தெரியாது.
சுந்தாவையும் கேதீஸையும் ஆனந்தன் கண்டுவிட்டான். அந்தக் காதலை, அவர்களைப்பற்றி அதிபரிடம் சொல்லிவிட்டான். அதிபர் கூப்பிட்டு விசாரணை, அடிக்கவில்லை. உபதேசம், காதல் பற்றி. படிப்பு பற்றி. வாழ்க்கை பற்றி. ஆனந்தன்
60

இளைய அப்துல்லாஹ்
ஒரு வெறுவாய்க்கிலை கெட்டவன். பிறகு ஆமி சுட்டுச் செத்துப் போனான். அதற்குப் பிறகு சுந்தாவின் காதல் பலருக்கும், வாத்திமாருக்கும் தெரிந்து விட்டது.
பஸ் ஹோல்ட்டில் ஒட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அவர்களை அப்படியே எனது கமராவில் படம் பிடிக்க ஆசை கேட்டுப் பார்க்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் வருபவர்கள்தானே பார்ப்போம். ஊரில் காதலிக்க சுதந்திரமே இல்லை. ஆனால் ஒளித்துக் காதலிப்பதிலும் என்ன அற்புதமான சுகம். இன்பக் கிளர்ச்சி.
மோகன வதனி, அழகாக இருப்பாள். கறுத்தக்கொழும்பான் மாம்பழம் போல நன்றாகப் பழுத்த பழமாக வடிவெண்டால் நல்ல வடிவு பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு வடிவு காதல் எப்படி ஏற்பட்டது. ஒருநாள் சும்மா பார்த்துக்கொண்டு இருந்த போது பார்வை நீளமாகி கனிந்து இனம் புரியாமல் ஒரு அர்த்தமாகி மனதும் மனதும் கலந்து ஒருவகை கிளர்ச்சியில் திளைத்த அந்த நாள்.
நினைக்கிறேன் அன்று தான் காதல் வந்திருக்க வேண்டும். அப்படித்தான் நான் நினைக்கிறேன். அதுதான் காதலாக இருக்க வேண்டும். ஒருநாள் மோகனவதனி மில்க்வைற் நீலசோப் போட்டு களுவி சிரட்டைக்கரி அயன் பொக்ஸில் அயன் பண்ணிய அழகிய வெள்ளை நிற சட்டை போட்டு பள்ளிக்கூடம் வந்திருந்தாள். பாடசாலைக்கு வரும் பெண் பிள்ளைகள் எல்லோரும் வெள்ளை கவுண் போட்டுத் தான் வருவார்கள், உயர்தர வகுப்பு மாணவிகள் அழகாக உடுத்துக்கொண்டு வருவார்கள். எல்லோரும் வெள்ளை சட்டைதான். ஆனால் மோகனவதனி மிகவும் அழகாக இருப்பாள். வகுப்பு எட்டு, ஆண்டு ஒன்பது. பதின்மூன்று வயது எனக்கு மோகனவதனிக்கு பதின்நாலு ஒரு வருஷம் கூட அதைப்பற்றி பரவாயில்லை. மோகனவதனி எனது காதலியாகி விட்டிருந்தாள். அப்பொழுதுதான் பார்வை பட்டதும் காதல். கண்டதும் காதல் என்று சொல்வது வேறு. இது வேறு பள்ளிக் கூடத்தில் எட்டு ஹோல்கள். நான்கு நான்காக இருக்கும். வரிசையாக இடையில் ஒரு நீண்ட நடை
அந்த நடையில் நடந்து போகும் போது இரண்டு பக்கமும் இருக்கும் ஹோல்களில் இருக்கும் வகுப்புகளை பார்க்கமுடியும். A,B என்று இரண்டு வகுப்புகளிலும் இரண்டு பிரிவு நல்லா படிக்கக்கூடியவர்களையும் படிக்க முடியாத வர்களையும் கலந்து வருஷா வருஷம் பிரித்து போடுவார்கள். எங்களின் வகுப்பு 'B' பிரிவு ரமேஷ்தான் அனேகமாக முதலாம் பிள்ளையாக வருவான். பொம்பிளைப் பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆண்களில் ரமேஷ். மகேந்திரன் சரியான குளப்படிதான். ஆனால் படிப்பான். ரமேஷ் அவனை நினைக்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கும். உடம்பில் அவ்வளவு பலமில்லாதவன். ஆனால் நன்றாகப் படிப்பான். அப்பா இரிகேஷன் டிப்பாட்மெண்டில் வேலை செய்தவர். அம்மா படித்த மனிசி. அவர்களின் வீட்டுக்கு போனாலும் அப்பா அம்மாவோடு அவ்வளவாகப் பேசுவதில்லை நாங்கள். அவர்கள் தனி அவ்வளவாக எங்களோடு புளங்குவ தில்லை.
61

Page 40
துப்பAக்கிகளின் கம்ெ.
படிச்ச ஆக்கள் தானே.
மோகனவதனி எங்களின் வகுப்புக்கு முன்னாலுள்ள நடையில் நடந்து போகிறாள். தலை முடி அழகு கொஞ்சம் அடர்த்தி. ஆனால் நீளமில்லை. தலை முடி ஒரு கண்ணை மறைத்திருக்கிறது. நான் சும்மா இருக்க மாட்டாமல் சொன்னேன் அதை எடுத்து விடுங்கோ'
அழகான முகத்தை மறைத்ததனால் அல்ல. அது விழுந்து கிடப்பது அழகுதான். ஆனால் சும்மா சொன்னேன். அதை எடுத்து விடுங்கோ' சும்மாதான் சொன்னேன் அது காதலாகும் என்று ஆருக்குத் தெரியும். அதற்குப்பிறகு அன்றைக்கு மட்டும் மோகனவதனி அந்த நடையால் ஒரு பதினைந்து இருபது தரம் அப்படி தலையை முடியை முன்னால் இடது கண்ணை மறைக்கவிட்டு தளைய தளைய நடந்திருப்பாள். நான் பார்க்க வேண்டும் என்பதற்காக, என்னைக் கவர வேண்டும் என்பதற்காக, அவள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, மனதுக்கு சந்தோச மாக இருந்தது. காதல். பின்னர் என்ன என்று தெரியாத மனக் குழப்பம். பின்னர் என்ன?
எனக்கு தோட்டம் செய்ய இயலாது. அம்மா சொல்லுவா போய் புல்லை செருக்கச்சொல்லி,
பஞ்சி, எல்லாத்துக்கும் பஞ்சி. ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒரு பாய் விரிக்கிற இடம் புல்லைச் செருக்க வேண்டும். அய்யா ஏழு வயதிலை செத்தாப்பிறகு அம்மய்யாதான் எங்களை வளர்த்தவர்.
நானும் தங்கச்சியும். எந்தக் குறையும் எங்களுக்கு விளங்காமல் வளர்த்தது அவர்தான்.
மோகனவதனியை காதலிச்சாச்சு. ஆனால் கலியாணம் கட்டி வாழ முடியுமா? கலியாணம் கட்டினால் காசுக்கு எங்கை போவது. ஊரில் நிறையப்பேர் கலியாணம் கட்டி பிள்ளைகுட்டி பெத்து வாழுகின்றார்கள். ஆனால் என்னால் முடியுமா? அப்படி அந்த வாழ்வின் பாரம் எனக்கு பயமாக இருந்தது. அந்தப் பயம் காதலின்போது ஏனோ தானோவென்றிருந்தது. ஆனால் மனம் முழுக்க காதல் இருந்தது. சந்தோஷம் இருந்தது. பதினாலாம் கட்டை மணியத்தாரைக் கண்டால் பயம். அவரின் மகள்தான் மோகனவதனி.
ஆனந்தன் கலியாணம் முடித்து விட்டார்.
யோகா அக்கா படிக்கிறா. தவமணி அக்கா பெரிய குண்டு. ஆனால் வடிவாக இருந்தா. கலியாணம் முடித்தவர் ஒரு கட்டை மனிசன். பகலிலும் கலியாணம் கட்டிய புதிதில் தங்கராசண்ணை வீட்டில் பாயில் இரண்டு பேரும் குப்புறப் படுத்திருந்து காதுக்குள் குசுகுசுத்து கதைத்துச் சிரிப்பினம். அதை பார்க்கும் போது எனக்கு உணர்ச்சிகள் வரும். அதுதான் காம உணர்ச்சிகள் என்று பூரணமாக அப்பொழுது
62

இளைய அப்துல்லாஹ்
தெரியாது. பிறகு அவர்களுக்கு பிள்ளைகள் கிடைத்திருக்கும், ஒரே படுத்திருந்தவை தானே.
மிளகாய் கன்றுகள் செழித்து வளர்ந்திருக்கும் தோட்டம் எங்களுடையது. ஒரு போகம் நிலக்கடலை. ஒரு போகம் மிளகாய் கன்று. ஒரு போகம் நெல் போதாததுக்கு குத்தகைக்கு வேறை குடுக்கிறது. நல்ல விளைச்சல் பூமி. குளத்துக்கு பக்கத்தில் இருக்கும் தரை. எனக்கு மிளகாய் கன்றுக்கு தண்ணீர் பாய்ச்ச பஞ்சி. புல்லுச் செருக்க பஞ்சி.
பாத்தி கட்ட பஞ்சி. சேத்துக்குள் மிளகாய் கன்று நட பஞ்சி வெறும் காலோடை அந்தப் பொன்விளையும் பூமியில் நிற்க வெறுப்பு வெயில் கூடாது மழை கூடாது. வெயில் என்றால் வெறும் முதுகில் சுள்ளென்று எறிக்கும். சுடும். என்னால் அதைத் தாங்க முடியாது. வேலைக்கு நான் மிகவும் கள்ளம் இருந்தும் அம்மா அணைப்பா.
எப்படி? மோகனவதனியை காதலித்து கலியாணம் பண்ணி குடும்பம் நடத்தும் அளவுக்கு துணிவு வரவேயில்லை. ஆனால் காதல் நிறைய இருந்தது. காதல் என்றால் நிறையக் காதல். அவளை நினைக்கும் போது சுகம். கத்தாழை மரத்தில், தூசு படிந்த காரில் எல்லாம் மோகனவதனி என்று அவளின் பெயரை எழுதிப் படித்து ஆனந்தப்பட்டேன். மோகனவதனி நன்றாகப் படித்தாள். அவள் பாடசாலை மாறி வித்தியானந்தாவிற்கு போனதன் பின்பு காதலில் ஒரு தேக்கம். ஆனால் மனம் மாறவில்லை. மிகவும் சிறிய வயது தானே. அதுதான் முதற் காதல்,
இங்குள்ளது போல் சுதந்திரம் அங்கும் வேண்டும். மறக்காமல் மறைக்காமல் காதல் செய்வதற்கு சுதந்திரமாய் கையில் பிடித்துக்கொண்டு காதலர்கள் திரிவதற்கு, யாருக்கும் பயம் கொள்ளாமல்.
நான் நிற்கும் இடங்களில் இருந்தெல்லாம் காதல் கடிதங்கள் எழுதுவேன் மோகனவதனிக்கு. அவளுக்கு பதில் போடப் பயம். ஒருமுறை எனது கடிதத்தை அவளது அம்மா எடுத்து ஏசினது என்று கேள்விப்பட்டேன். ஒரே ஒரு முறைதான் மோகனவதனியைத் தொட்டேன். அது பள்ளிக் கூடத்தில் ஒருநாள் ஒரு பேனாவை வாங்கும் பொழுது அவள் தான் என்னைத் தொட்டாள். அது மின்சார உணர்ச்சி. இன்னும் ஞாபகமாய் அந்தத் தொடுதல் இருக்கிறது.
எனக்கு உழவு மெசின் ஓடுவதற்கு மிகவும் ஆசை. தியாகலிங்கம். உழவு மெசின் பழக்கினார் எனக்கு, அவர் ஊர்ச்சண்டியர் மாதிரி.
என்னை உதறிய, என் நினைவுகளை உதறிய ஒரு நபராக அவர் இருந்தார். எனக்கு அவரைப் பற்றியெல்லாம் அறிய ஆவலாக இருக்கிறது. அவர் ஒரு ஜீவனின் உணர்வுகளின் ஊற்றாக இருந்தார். உண்மையில் காமம் என்பது பெரியது. அடங்க மறுத்து வீறு கொண்டு எழும் அதனை இப்படித்தான் பிரயோகிக்க வேண்டுமென்று எந்த வரையறைக்குள்ளும் அமிழ்த்த முடியாது. அப்படி அமிழ்த்திவிடில் அது அர்த்தமற்றதாகிவிடும். மனம் அடங்க மறுத்த காலங்கள் அபத்தமானதாகிவிடும். ஆனால் எவ்வளவு காலங்களுக்கென்று.
63

Page 41
ტjšvnáმაშაირში ტაობა(ბ.....
ஊரில் பாலசிங்கம் இருந்தார். காதல் மன்னன். அப்பிடி ஒரு துணிவு அவருக்கு. அந்தக் காலத்தில் சின்னப்பொடியன். ஆனால் காதல் செய்வதில் பேர் போனவர். அந்தக் கண்ணனுக்கு எனக்குத் தெரிய பல கோபியர் இருந்தனர். நான் சின்னப்
பட்டேன்.
காதல் ஒரு ஆழ்மனக் கிளர்ச்சி. எனக்குத் தெரிந்த ஒருவர் இருந்தார். அவருக்கு எலும்பு முறிவு நோய். அதன் விஞ்ஞானப் பெயர் Osteo Prosis என்பது. அந்த நோய் மிகவும் கொடுமையானது. திடீரென்று எலும்புகள் முறிந்து விடும். சில நேரம் நொருங்கி விடும். அதனை அவர் தானாகவே உணருவார். மனம் என்ன பாடுபடும். அவர் உணரும் போதே எலும்புகள் முறிந்து விடுவதென்பது பெரும் கொடுமை வேதனை. அவருக்கு மனத் துணிவு என்பது கொஞ்சம்கூட இல்லை. தன்னைப் பற்றியே கவலை கொண்டிருப்பார். மனத்தால் மிகவும் பலவீனமான மனிதர் அவர். அவருக்கு இந்த நோய் வந்திருந்தது. தன்னை நினைத்து அழுது கொண்டிருப்பார் அவர்.
ஆழ்மனக் கிளர்ச்சி, ஆழ்மன வேகம் அல்லது ஆழ்மன அமைதி பற்றி அவரோடு பேசவே முடியாது. உண்மையிலேயே நோய் என்பது பாவங்களின் பிரதிபலன்களினால் மனிதருக்கு வருவது என்று சொல்வார்கள். அது என்னவோ பலருக்கு மிகவும் கொடூரமானதாக வரும். அவருக்கு ஒரு காதலி இருந்தவள். நோயின்போது அவள் அவரைப் பார்ப்பதை தவிர்த்திருந்தாள். காதல் அப்படியும் இருக்கும். சுகதேகியானவரை மட்டும் அது காதலிக்கும். மற்றும்படி கவனிக்காதா? அது உண்மையில் காதல் அல்லவா? பல கேள்விகள் என் ஆழ் மனதில் தொக்கி நிற்கும். அவர் தனது எலும்பு முறிவு நோய் பற்றியும் காதல் பற்றியும் அடிக்கடி அழுவார்.
அழகு அனுபவிக்கக்கூடியதொன்று. அந்த அழகை இரசித்து அனுபவிக்கத் தெரியாதவர்கள் மிகவும் பலவீனமானவர்கள். அதே போலத்தான் காமமும், அதனையும் ஆழமாய் அழகுற அனுபவிக்கத் தெரியாத பலரை நாம் காண்கின்றோம். வாழ்வியல் பிரச்சனைகளில் மிகப் பெரிய பிரச்சனையாக வருவது இது. அழகுற அமையாத பகிர்ந்து கொள்ளாத காமம் அனேகமான குடும்பப் பிளவுகள்- பிரச்சனை கள்- விசனங்கள்- எல்லாவற்றின் ஆரம்பமும் முடிவும். சரிவரப் பகிர்ந்து கொள்ளாத காமம் பெரிய முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. அப்படித்தான் அமைந்திருக்கிறது. காமம் மனதின் ஒற்றுமையை உருவாக்கும். மனதின் கிளர்ச்சியை சமப்படுத்தும். பல அற்புதங்களை சிருஷ்டிக்கும். கணவன் மனைவி - காதலன் காதலியிடையே பரஸ்ப்பர எல்லா நோக்கங்களையும் நிறைவேற்றும். அவசரக் காமம் பிரிவில் கொண்டு போய்விட்ட எத்தனையோ பேரை கண்டிருக்கிறேன். ஒரு நபி மொழி இருக்கிறது- தனது மனைவியை ஆசையோடு கொஞ்சி குலாவி அவளை உணர்ச்சிப் பிழம்பாக்கி அவள் ஆசை தீரும்வரை உடலுறவு கொள்ளாதவன் மனிதர்களிலே நீசன். மிகவும் கெட்டவன். இந்த இடத்தில் இன்னுமொரு நபிமொழி
64

இளைய அப்துல்லாஹ்
ஞாபகம் கொள்கிறது- ஒருவனை அவனது மனைவி நல்லவன் என்று சொல்லு கிறாளோ அவன் முழு உலகத்தாருக்கும் நல்லவனான். ஆகவே மனிதர்களே காதல் கொள்ளுங்கள். உங்கள் காதலர்களை மிகவும் நேசியுங்கள். உங்கள் இருவருக்கும் இடையில் சந்தேகங்களை வளர்க்காதீர்கள். காமத்தையும் சரி சமமாக பகிர்ந்து கொள்ளுங்கள். படுக்கையறை ஒரு அற்புதமான மனச்சிருஷ்டியின் பங்காளி.
ஒருமுறை ஒரு ஷொப்பிங் சென்டரில் நான் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் ஒடி ஒடி எனக்குப் பின்னால் வந்தாள். மூச்சு வாங்கியது. உங்களை நான் ஒருமணி நேரமாக பின்தொடர்ந்து வருகிறேன். ஏன்? அவளின் கண்களில் மலர்ச்சி. ஆர்வம் - அன்பு- காதல்- கிளர்ச்சி அவளது ஆழ்மன பிரவாகத்தை கண்களில் கண்டேன். உங்கள் கையை பிடிக்கவா? 'ஓம்' உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை நான் நேசிக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எனக்கு என் மனதுக்கு ஆறுதல். உங்களது பேச்சு உங்களது சிரிப்பு எல்லாமே எனக்கு ஆறுதலைத் தருகிறது. உங்களின் தோற்றம் என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. கண்களை மூடும் போதும் கண்களை திறக்கும் போதும்.
அழகான மோகனவதனியை முத்தமிடக்கூட இல்லை. அழகான அவளைத் தொடவே இல்லை. அழகான அவளின் முடியை எனது கைகளால் கோதிவிடவே இல்லை. ஏன்? அப்பொழுது ஆழ் மனத்தில் காதல் பக்குவப்படவில்லை. அந்தக்காலம் பக்குவப்படாத காலம்.
பாராட்டுதல் கட்டாயம் வேண்டும். உனது மனதை நீ பாராட்ட வேண்டும். நான் அப்படி சில நேரங்களில் செய்வேன். கட்டாயம் பாராட்ட வேண்டும். சில மனிதர்கள் பாராட்டுவதே இல்லை. முதலாளிமார் வேலை கொள்வோரை சொல்கிறேன். அந்தப் பாராட்டுதல் இல்லாமல் பக்குவம் இல்லாமல் ஒருவர் திறமையை ஒருவர் மதிக்காமல் ஒரு குடும்பம் என் கண்முன்னால் சுக்கு நூறாகிப்போனது. கணவன் என்ற மனிதனுக்கு தன்னை விட மனைவி பிரபல்யமாகி விடுவாளோ என்ற பயம் மட்டுமே குடும்பம் உடைந்து போறதுக்கு அத்திவாரம்.
மன அன்பு மேலிட வேண்டும். ஒருவரை ஒருவர் நீக்கமற நேசிக்க வேண்டும். அந்த நேசம் உன்னை உன் உணர்வுகளை பக்குவப்படுத்தும். உன் கண்கள் நேசத்தால் மிளிர வேண்டும்.அவளுக்காய் அவனும் அவனுக்காய் அவளும் அழ வேண்டும். அப்பொழுது உன்னில் இருந்து பல அற்புதங்கள் வெளியாகும். பதட்டம் அடையாமல் ஆழ் மனத்தை அமைதியாக்க வேண்டும். அது கைவரப்படுவதற்கு ஒரு நீண்ட பயிற்சி தேவை. ஒன்றை பார்க்கும் போது அது உன் மனதில் பதிய வேண்டும். அது மட்டும் தெரிய வேண்டும். அது வாசிப்பாக இருந்தாலும் பார்வையாக இருந்தாலும் கேள்வியாக இருந்தாலும் வயது-சூழல்-சில நிகழ்வுகள்உணவு- யோகாசனம்-தியானம்-எல்லாமே உனக்குள் ஒரு வித அற்புதங்களை தோற்றுவிக்கும்.
65

Page 42
துப்படிக்கிக்ளின் கAலம்.
மற்றவர்களை நோகச் செய்யாமல் துன்புறுத்தாமல் பழக வேண்டும். அது
ஒருவகை ஆழ்மனத்தியானம்தான்.
எல்லா அழகுகளும் கிளர்ச்சியூட்ட வல்லனவல்ல.
அது பார்வை நோக்கம் தேவை இதற்கும் அப்பால். ஒன்றுணர்வது. அது உன்னை ஆட்கொள்ள வேண்டும்.
அவர்கள் இருவரும் இணைந்து கொண்டே போகிறார்கள். மனதில் கிளர்ச்சி மேலிட, ஒரு பஸ் நிற்காமல் போகிறது. பாடசாலைப் பிள்ளைகளைக் கண்டாலே சில பஸ் ட்றைவர்களுக்கு பிடிக்காது. அப்படி ஒருவர்தான் இவரும்.
இங்கு காதலில் ஒரு வகை நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஊரில் இளவயதுக் காதலில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது போலத் தெரிகிறது. இந்தச் சுதந்திரமான காதலர்களை படம் பிடிக்க வேண்டும் - அப்படியே ஒட்டியபடிக்கு விருப்பமாய் இருக்கிறது. அவர்களிடம் கேட்க வேண்டும். சுதந்திரமாய் இந்தக் காதல் வாழ வேண்டும் நீண்ட நெடுங்காலமாய். . .
மோகனவதனி நல்லாய் இருக்க வேண்டும்.
01.03.2004 இலண்டன்.
66


Page 43
1988 இல் "சிந்தாமணி"யில் இளைய அப்துல்லாஹற். இலக்கி கவிதை என தொடர்ந்து அப்துல்லாஹற்ஐரோப்பியசஞ்சின இலக்கியத்துடனும் நன்கு பf ஆண்டு காலம் முதல் 30 இற்கு தமிழ் சஞ்சிகைகளை பத்தி
1997, 98 && $କ୍ଷomáଶୟ୍ଯ& qum। நோக்கி" எனும் சமாதான சஞ்சிை வழங்கியவர்.
இளைய அப்துல்லாஹற்வின் 6 சமாதான யாசிப்பும் விரவி நி
வடபுலத்தில் இருந்து பி0
* பல்லாயிரக்கனக்கான மக்க
கவிதைகளும் சிறுகதைகளு காதலை அழுத்தமாகப் பு
அனுபவச்செறிவும் கதைசொல் இளைய அப்துல்லாஹற்
வாாையப்பட்டிருக்கிறது.
வாழ்வின்மீதான காதலின் இழப் பிரேமை மனிதநேயமற்ற போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுதத் தொடங்கியவர் யக் கட்டுரை, சிறுகதை, எழுதிவரும் இளைய ககளுடனும் புலம்பெயர் läafLILDTSOTEuri. 199OLE ம் மேற்பட்ட புலம் பெயர் ரப்படுத்தி வருகிறார்.
னொலியில் "விடியலை *கநிகழ்ச்சியை தொகுத்து
Tழுத்தில் போரவலமும் ற்பதை உணர்கிறேன்.
நீங்கி எறியப்பட்ட ஊரில் ஒருவர். அவரின் ம் மண்ணின் மீதான பதிவு செய்துள்ளன.
வதில் உள்ள நேர்த்தியும்
வுக்கு நன்றாகவே
புமண்மீ חנחlă ரின் வடு என ஒருநீண்ட திரட்டு துப்பாக்கிகளின்
ஓம்பமாவடி அரபாத்