கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்
Page 1
அருணா செல்லத்தரையின் மெல்லிசைப்பாடல்கள்
எழுதியவர்: அருணா செல்லத்துரை
AWA
Page 2
அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்
முதற் பதிப்பு : டிசம்பர் -1994
(C) அருணா செல்லத்துரை
Printed by: Page Setters,
17, Hultsdorp Street, Colombo-12.
C BBLOGRAPHICAL DATA)
Title of the book
Language
Written by
Copyright of
Published by
First Edition
Number of pages
Number of Copies
Printed at
Subject
Price
: 'Aruna Sellathurai' yin Mellisai paadalkal
: Tamil
: Aruna Sellathurai
: Author
: AVA
: December 1994
: 22
: 500
: Page Setters, Colombo 12
: Light Songs
: RS, 25.00
Page 3
உடம்பினுள் உதிரமாய்
உள்ளத்துள் உரமாய் உள்நின்று ஊக்குவிக்கும்
என்தந்தை கதிரவேலு அருணாசலத்திற்கும்
என் அன்பு அன்னை
அன்னம்மாவிற்கும் பத்தாம்பளையான வற்றாப்பளை உறையும்
பெத்தாச்சி கண்ணகை அம்மனுக்கும் காணிக்கையாகும்அன்டின்ங்டைப்புகள்
அருணா செல்லத்துரை
ஆசிரியரின் ஏனைய பங்களிப்புகள்
1. "வீடு" தொலைக்காட்சி நாடகமும்/ வானொலிநாடகங்களும்
2. வேழம்படுத்த வீராங்கனை
முல்லை மோடிவட்டக்களரி நாட்டுக்கூத்து/ஒளிப்பேழை
3. "ஒலித்தென்றல்" மெல்லிசைப்பாடல்கள் ஒலிப்பேழை
முத்தமிழ் முருகன்.
முருகா . . . . . (Մ(5&n . . . . . (լp(5&T. . . . . முருகா முத்தமிழ் முருகனுக்கு மூன்று தலம் முத்தலம் சென்றுவந்தால் நீங்கும் பயம்.
(முத்தமிழ்) ஆனைமுகன் தம்பி ஆறுமுகன் - அவன் ஆணவம் அறுக்க வேலுடன் அமரும் சன்னதி முருகன் சந்நிதி நின்றால் சபலம் நீக்குவான் சன்னதியான்.
(முத்தமிழ்)
கூர்வேல்கொண்டு குறைகளை தீர்க்க குடிகொண்ட வேலவன் நல்லூரில் குமரனைக் கும்பிட்டு குறைகளை சொன்னால் குறைகளை களைவான் நல்லூரான்.
(முத்தமிழ்) வள்ளிக்குறமாதின் உளம்நிறைவேலன் வாழ்ந்து வரும் தலம் கதிர்காமம் வேதனைதீர்க்க வேலனை வேண்டினால் வேலுடன் வருவான் கதிர்காமன்.
(முத்தமிழ்)
பாடியவர் : வி. முத்தழகு இசையமைப்பு எம்.எஸ்.செல்வராஜா.
வானொலி/தொலைக்காட்ச? 8, 11. 80
Page 4
திருநீற்றுமலை.
திருநீற்று மலையிருக்கு - கதிர்காமத்தில் திருநீற்று மலையிருக்கு
திருநீற்று மலையிருக்கு தெரியுமா - அந்த திருநீற்றின் சுகமுனக்கு புரியுமா - தெரியுமா
(திருநீற்று)
மாணிக்க கங்கையிலே நீராடி திருமுருகன் கோவிலையே வலம் வந்து நெற்றியிலே பூசு மலைநீற்றை - திரு நீற்றினிலே உன்குறைகள் தீரும், தீரும்.
(திருநீற்று)
கங்கையின் அருகினிலே கதிரமலை - அங்கே வள்ளியின் அருகினிலே வடிவேலன் நீராடி விடிகாலை மலையேறு - உன் போராடும் வாழ்வினிலே வரும் பேறு.
(திருநீற்று)
பாடியவர் : எம். சத்தியமுர்த்தி.
இசையமைப்பு ஷெல்ரன் பிரேமரட்ண
வானொலி/ஒலிப்பேழை
கதிரமலைக்காற்றே.
கதிரமலைக் காற்றே கந்தனிடம் சொல்லாயோ வள்ளி வடிவேலன் வள்ளி மணவாளன் வஞ்சியை மறந்தானோ வஞ்சியை மறந்தானோ
(கதிரமலைக் காற்றே. . . . . )
மாணிக்க கங்கையிலே காணிக்கையே உனைக்கான உனைக்கான உனைக்கான மாவிளக்கேற்றினேன் மங்கையெனக்கருளாயோ மங்கையெனக்கருளாயோ
(கதிரமலைக் காற்றே: . . . .)
எத்தனை படிகளயயா ஏறிவந்தேன் உனைக்கான உனைக்காண உனைக்கான அத்தனை படிகளும் கந்தன் புகழ் பாடுதையா கந்தன் புகழ் பாடுதையா
(கதிரமலைக் காற்றே. . . . . )
பாடியவர் : ராணி பெர்னாண்டோ.
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா.
தொலைக்காட்சி/ஒலிப்பேழை.
Page 5
திருக்கேதீஸ்வரம் வாருங்கள்
திருக்கேதீஸ்வரம் வாருங்கள் - உங்கள் தீராத குறைகளை சொல்லுங்கள் சிவனோடு மனம் விட்டுப் பேசுங்கள் சீரோடு வாழ்வீர்கள் நம்புங்கள்.
(திருக்கேதீஸவரம்)
சிவனுக்கு ராத்திரி விழியுங்கள் சீரான வாழ்வுதர வேண்டுங்கள்
சிவலிங்க தரிசனம் காணுங்கள் சிந்தை கலங்கித் தெளியுங்கள்
(திருக்கேதீஸ்வரம்)
பாலாவி நீராடிப் பாடுங்கள் பாவங்கள் பறந்தோடும் பாருங்கள் கெளரிக்கு மலர் கொண்டு தூவுங்கள்
மாங்கல்யப் பிச்சை தரக்கேளுங்கள்
(திருக்கேதீஸ்வரம்)
இசையமைத்துப் பாடியவர்: எஸ். சிவானந்தராஜா
வானொலி.
பத்தாம்பளை வற்றாப்பளை.
கற்பூரம் எரியும் கண்குடத்துள்ளே கண்கள் ஆயிரம் ஒளிவிடக் கண்டேன் கண்ணகை அம்மன் கருணையினாலே நோய்நொடி நீங்கி வாழவும் கண்டேன்.
(கற்பூரம்)
செடில் குத்தி நெடில் பிடித்து ஆடிய காவடி பாதம் பணிந்தது வேப்பிலையாளை வேண்டிய பெண்கள் பால்செம்பு ஏந்திப்பாடவும் கண்டேன்
(கற்பூரம்)
உப்பு நீரில் விளக்கெரித்து ஊர் முழுதும் திரண்டிருந்து பத்தாம் பளையான வற்றாப்பளையினிலே பறையோடு பொங்கல் பொங்கவும் கண்டேன்.
(கற்பூரம்)
Page 6
மயூராபதி அம்மன் பெருமை
மயூராபதிக்கு வந்திட்டால் மனதுக்கு நிம்மதி கிடைத்திடுமே பத்திரகாளியை பணிந்திட்டால் - அவள் பாவங்கள் நீக்கி அருள்புரிவாள். - (மயூரா)
அம்மன் அருளின் வடிவமம்மா அவளுக்கு நாம்தான் அடிமையம்மா இவளின் பெருமைக்கு நிகரில்லை இதுதான் கருணையின் கண்களம்மா
(மயூரா)
கண்களின் கருணையைப் பெற்றிட காலையும் மாலையும் பக்தர்குழாம் காட்சியை கண்டிட வேண்டிடுவார் கண்டதும் கண்ணீர் சொரிந்திடுவார்
(மயூரா)
தந்தைக்கு வேதம் சொன்னவர்
முருகா a முருகா LL SLLSL SLS S SLSS SLSS S SLSS S LS S SLL முருகா a
எனக்கொரு ஆசை உன்புகழ் பாட ஏழு சுரங்களுள் உன் இசைபாட - முருகா
(எனக்கொரு)
தமிழுக்கு மூதவை ஒளவை - நீ அவளுக்கு சொன்னவை கவிதை தந்தைக்கு வேதம் சொன்னதை தரணிக்கு பாடிட என் ஆசை.
(எனக்கொரு)
அருணகிரி சொன்னதமிழ் அமுதம் அமுத தமிழுக்கு நான் சரணம் திருப்புகழ் எனும் திருவமுதம் சொல்லும் ஓம் எனும் அருளமுதம்.
(எனக்கொரு)
Page 7
ஆடிடுவோம் ஊஞ்சல்
தெந்தனத் தெனா தெனா தெந்தனானே தெனனா தெந்தனா தெந்தனானே
(தெந்)
அளவான கயிறாலே அழகான ஊஞ்சல்கட்டி ஆனைமுகக்கடவுளையும் அருள்புரிய வேண்டி ஆறுமுகக் கந்தனையும் அன்புடனேநினைந்து ஆடிடுவோம் ஊஞ்சல் ஆனந்தமாக
(அளவான)
கோணமாமலை வாழும் கோணேசர் பெருமான் மன்னாரம் பதியுறையும் கேதீஸ்வரத்தான் முத்தாடுகரைபதியும் முன்னேஸ் வரத்தானே முன்னின்று காக்க ஈஸ்வரனே வருவாய்
(அளவான)
கதிர்காமம் தனில் வாழும் கந்தக்கடவுளே கதிரான சன்னதிவாழ் மயிலேறுமுருகா நல்லையம் பதியுறை நல்முருகா வருவாய் நல்வாழ்வு தன்னை வேண்டி ஆடுகின்றோம்
(அளவான)
தெந்தனத் தெனா தெனா தெந்தனானே தெனனா தெந்தனா தெந்தனானே
முத்துத்தமிழ்
எட்டி எட்டி அடிவைக்கும் என் செல்வமகளே - உன் சுட்டித்தனமெல்லாம் என்ன மகளே கட்டிக் கரும்பான முத்துத் தமிழாலே எத்தனை சொல்வேன் எத்தனை சொல்வேன்
(எட்டி எட்டி. . . . . . . . )
ஒர் அடி தன்னில் தமிழ் மகள் சொன்ன ஓர் நெறி இங்கு கொள்ள வா ஈர் அடி தன்னில் வள்ளுவன் தந்த குறள் வழி இங்கு வாழ வா மூவடி தன்னில் மூவுலகளந்த மூத்தவன் கதை மெள்ளவா நாலடி தன்னில் நாலடி தந்த நல்லெண்ணம் அதைக் கொள்ள வா
(எட்டி எட்டி . . . . . . . . )
பஞ்சவடி தன்னில் ஜானகி நடந்த அந்தக் கதை இங்கு சொல்ல வா ஆறடி கூந்தல் அள்ளி முடிந்த ஆனந்தக் கதை மெல்ல வா ஏழடி பிறப்பு என்றவன் சொன்ன கீதை வழி வாழ வா எட்டடி லகூழ்மி இன்பத் தமிழ்போல் என்றென்றும் நீ வாழ வா
(எட்டி எட்டி . . . . . . . . )
இசையமைப்பு எம்.எஸ். செல்வராஜா பாடியவர் : இரா. நீதிராஜசர்மா / சத்தியமுர்த்தி தொலைக்காட்சி / ஒலிப்பேழை / வானொலி
9
Page 8
தம்பிதங்கையே பாதம்பணிவோம்
அன்புத்தம்பி அன்புத்தங்கை
ஆடிப்பாடி விளையாடுங்கள்
அன்னை தந்தை தெய்வமென்று
சொல்லிப் பாடுங்கள்
அன்புத்தம்பி. . . . . . . . . . .
பாலூட்டி தாலாட்டி வளர்த்தாள் உன் அன்னை பாராட்டி சீராட்டி வளர்த்தார் உன் தந்தை பாராள வந்தீர் ஏராளம் உண்டு அன்போடு வாழ்வோம் பண்போடு உயர்வோம் பாதம் பணிவோம் பாதம் பணிவோம்
அன்புத்தம்பி. . . . . . . . . . .
எண்ணோடு எழுத்தூட்டி பண்பாட வைத்தார் எழுத்தாணிதான் பிடித்து அறிவூட்டி நின்றார் எண்ணோடு எழுத்தும் கண்ணே ஆகும் ஈரேழு பிறப்பும் இறைவன் ஆவான் பாதம் பணிவோம் பாதம் பணிவோம்
அன்புத்தம்பி. . . . . . . . . . .
பாடியவர் : ஜே.எம். சகாயம் பெர்னாண்டோ
இசையமைப்பு எம்.எஸ். செல்வராஜா
தொலைக்காட்சி
10
வாழ்வின் தத்துவம்
ஒன்று இரண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது ஒன்பதும் ஒன்றும் பத்து
(ஒன்று. . . . . . . . . )
ஒன்றும் இரண்டும் மூன்று இரண்டும் மூன்றும் ஐந்து மூன்றும் நாலும் ஏழு நாலும் ஆறும் பத்து பத்தும் வந்திடும் வாழ்வினிலே
(ஒன்று. . . . . . . . . )
பத்தில் ஐந்து போனால் ஐந்து ஐந்தில் மூன்று போனால் இரண்டு இரண்டில் ஒன்று போனால் ஒன்று ஒன்றில் ஒன்று போனால் பூஜ்யம் இதுதான் வாழ்வின் தத்துவம்
(ஒன்று. . . . . . . )
இசையமைப்பு எம்.எஸ். செல்வராஜா
பாடியவர் : நிலாமதி பிச்சையப்பா
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
11
Page 9
வெள்ளி நிலாவே.
வானில் உலாவரும் வெள்ளிநிலாவே தண்ணொளி தந்திடும் பிள்ளை நிலாவே
(வானில்)
கவிஞர்கள் கண்டால் தேவதைஆவாய் கானத்தில் எல்லாம் சுரங்களுமானாய் காவியம் பாடிடும் வேதருக்கெல்லாம் காதலியாகி பாரினில் நின்றாய்
(வானில்)
சிவனவன் தலையில் சூடிடும் நிலாவே சிந்திடும் தென்றலில் குளிர்தருநிலாவே பாரினில் வாழும் பெண்களுக்கெல்லாம் உவமையில்நின்று பொருள்தருநிலாவே
(வானில்)
12
வசந்தம் வந்ததே.
இளவேனில் கால மேகம் வானில் வரையும் கோலங்கள் ஊர்வலம் போகும் மேகங்கள் யாவும் இசையினில் சேரும் ஸ்வரங்கள் பாடும் எந்தன் இசையும் சேர்ந்தே ஒலிக்கும்
(இளவேனில் . . . . . . )
தூறல் போடும் வானம் தென்றல் பாடும் கானம் வானில் தோன்றும் மின்னலே வந்து போகும் வானவில் வசந்தம் வந்தே இதமும் சேர்க்கும்
(இளவேனில். . . . . . )
புல்லின் நுனியில் பணியும் புணர்ந்து பசுமை சேர்க்கும் மழையில் நனையும் மண்மகள் முல்லைபோல மணக்கின்றாள் வசந்தம் வந்தே இதமும் சேர்க்கும் ۔۔۔۔۔۔۔۔
(இளவேனில் . . . . . . )
இசையமைப்பு எம்.எஸ். செல்வராஜா
பாடியவர் : தங்கராஜா தங்கரத்தினம்
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
13
Page 10
நாளெல்லாம் இசைபாடும் மலைமகள்
சலசலக்கும் ஒசையிலே
சங்கீத சுரங்கள் பிறக்குது சந்தங்கள் இனிமை சேர்க்குது
சரி.கம.பத.நிசநி.தநித.மதம.கமத இளந்தென்றல் காற்று இலையோடு மோதி
இதமான சுதி சேர்க்கும்
(சல சலக்கும். . . . . . . . )
மலையினில் பிறந்த மகள் அலையோடு சேர்வதற்கு கல்யாணப் பெண்போலே கரையோடு உரசி இவள் பாய்ந்தோடிச் செல்லுகின்றாள் பாய்ந்தோடிச் செல்லுகின்றாள் பசுஞ்சோலையெங்கும் பாராமல் அன்பை பொழிகிறாள் - மலைமகள்
(சல சலக்கும். . . . . . . )
அழகிய அருவியக்கா அசைந்தோடும் ஒசையிலே நாலும் தெரிந்துவிடும் நாணம் எனைவாட்டும் நாளெல்லாம் இசைபாடும் நாளெல்லாம் இசைபாடும்
வயலெங்கும் வசந்தம் தந்தாலே இன்பம் தருகிறாள் - மலைமகள்
(சல சலக்கும். . . . . . . . )
இசையமைப்பு எம்.எஸ். செல்வராஜா
பாடியவர் : டவீனா சிறீனிவாசன்
தொலைக்காட்சி
14
குளிராதோ மழை வந்தால்.
மழைவா வெயில்போ மழைவா வெயில்போ மழைவா வெயில்போ மழைவா வெயில்போ ,
படகினிலே போனமச்சான் பாய்விரிக்க மழைவா படகினிலே போனமச்சான் பாய்விரிக்க மழைவா
(மழைவா. . . . . . )
கடலுக்குப் போன மச்சான் கடும் மழைக்கு வந்திடுவார் கொந்தளிக்கும் என்னுள்ளம் குளிராதோ மழை வந்தால்
(LD6096) It . . . . . )
பொழுது மேலே கிளம்பி பூமி இந்த சூடுசுட்டால்
கடலினிலே வலை வீசும் கைகள் என்ன பாடுபடும்
(மழைவா. . . . . . . )
இசையமைப்பு : எம்.எஸ். செல்வராஜா
பாடியவர் : ராணி ஜோசப்
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
15
Page 11
என் நினைவுகள் பறந்தோடுது
குழை மறைவினிலே சில பறவைகள் சிற கோதுது குழல் நடுவிலே கோதிய விரல்களை மனம் தேடுது
(குழை)
வயல் நடுவிலே அளை நீரிலே
கயல் ஓடுது இதழ் நடுவிலே ஊறிய தேனிலே
சுவை போகுது
(குழை)
குளிர் நிலவிலே பலநினைவுகள்
அலை மோதுது அவர் நினைவிலே என் நினைவுகள்
பறந்தோடுது
(குழை)
இசையமைப்பு : மோகன் - ரங்கள்
பாடியவர் : ஜெகதேவி விக்னேஸ்வரன்
வானொலி
16
வாட்டும் மனசே நீ வாய்திறந்து சொல்லாயோ
ஆட்காட்டி கத்துகுது ஆளரவம் கேட்டு காட்டுக்குறைக்கு விடிவெள்ளி வருகுது வீட்டுக் கதவுக்கு வெளியிலை பூட்டு பூட்டிய கதவு வாட்டுது என் மனசை
(ஆடகாட்டி . . . . . . )
சாளரத்தின் ஊடே வந்து விழும் வான் நிலவே ஆரணங்கு வாடுவதை சொல்லாயோ போய் நீயும் ஆளரவம் கேட்டு ஆட்காட்டி கத்துகுதே ஆதாரம் ஏதுமின்றி ஆரணங்கு ஏங்குதே
(ஆட்காட்டி . . . . . . )
பெத்தபிள்ளை வாடுவதை பெற்றார் அறியாரோ அத்தசாமப் பூசைகள் அவர்களறியாரோ பூட்ட மறந்து விட்டார் பூவை என் மனசை வாட்டும் மனசே நீ வாய்திறந்து சொல்லாயோ
(ஆட்காட்டி . . . . . . )
இசையமைப்பு எம்.எஸ். செல்வராஜா
*
LunT ,qutu Gnuff : ராணி ஜோசப்
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
17
Page 12
அழியாத நினைவினிக்கும்.
இந்த பனிக்கும் இனிவாற கூதலுக்கும் அந்தப் பணிக்கும் அழியாத நினைவினிக்கும் சொல்லத் தெரியாது சொல்லிப் புரியாது சொந்தம் பழிக்கும் அதுவும் இனிக்கும்
(இந்தப் பணி)
கண்கள் வெளுக்கும் கருமை ஒடும் கைகள் நடுங்கும் வளையல் களரும் வளையல் நொருங்க நடந்த கதைகள் மூடா இமைக்கும் சொல்லத் தெரியா
(இந்தப் பணி)
நடுங்கும் உடலும் இரவில் விழிக்கும் நெஞ்சம் துடித்து நினைவில் பறக்கும் அஞ்சும் விழிக்கு மிஞ்சும் உறக்கம் வஞ்சம் தெரியா உதடும் துடிக்கும்
(இந்தப் பணி . . . .
இசையமைப்பு : எம்.எஸ். செல்வராஜா
பாடியவர் : கே. கமலேஸ்வரி
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
18
குழல் போர்த்த என்நினைவு.
முகில் போர்த்த வெண்ணிலவு வானில் வருகுது குழல் போர்த்த என் நிலவு நினைவில் வருகுது
(முகில்)
நிலவு வந்து நினைவு தந்து மறைந்து போகுது நினைவு தந்த நனவுகளை எண்ணி வாடுது வசந்த காலம் வந்ததென தூறல் போடுது வந்த தூக்கம் என்னைவிட்டு பறந்து ஓடுது
(முகில்)
முழுநிலவில் விண்மீன்கள் துள்ளி ஆடுது இருகண்கள் இமை மூட மறந்து பாடுது முகில் போர்த்த நிலவே நீ தூது சென்றிடு குழல் போர்த்த நிலவே நீ கோபம் மறந்திடு
(முகில்)
இசையமைப்பு : எம்.எஸ். செல்வராஜா பாடியவர் : எஸ்.வி.ஆர். கணபதிப்பிள்ளை
வானொலி
19
Page 13
எல்லோரும் சமமாக வாழ்ந்திடவே.
தெந்தன தெனா தெனதெனா தெந்தனானே தெந்தனா தெந்தனா தெந்தனா தெந்தனானே
நல் வாழ்வு நாம் வாழ நல்லருள் வேண்டும் நல்லருள் வேண்டியே நாம் பாட வேண்டும்,
(தெந்தன. . . . . . . )
வரப்புயர நெல் மணிகள் குவிந்திடவே வேண்டும் வழமுடனே வாழ்வில் உயர்ந்திடவே வேண்டும்
(தெந்தன. . . . . . )
பாடுபடும் தொழிலாளி உயர்ந்திடவே வேண்டும் பண்புடனே பார் போற்ற வாழ்ந்திடவும் வேண்டும்
(தெந்தன. . . . . . )
எல்லோரும் சமமாக வாழ்ந்திடவே வேண்டும் நாடுயர நாம் தினமும் பாடுபட வேண்டும்
(தெந்தன. . . . . )
இசையமைப்பு எம்.எஸ். செல்வராஜா
பாடியவர்கள் : எஸ். கனேஸ்வரன்
கே. விஜயரத்தினம்
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
20
சொன்னதை கிளி சொல்லும்
சொன்னதை கிளி சொல்லும் சொல்லாததை கிளி சொல்லாது சொன்னதை உலகம் சொல்லாது சொல்லாததை உலகம் சொல்லும்
(சொன்னதை)
நல்லதை மானிடர் செய்வார் செய்ததை மனிதர் சொல்லார் நல்லதை செய்தவர் வாழ்வார் செய்ததை சொல்லாதவர் மாள்வார் .
(சொன்னதை)
நல்லதும் தீயதும் நமக்குள் ஆயிரம் ஆயிரம் இருந்தும் ஆனது செய்யார் பாரினில் இருந்து நமக்கென்னலாபம்
மானிடராவது நம் உயர்கடமை
(சொன்னதை)
இசையமைப்பு ஷெல்ரன் பிரேமரட்ண
பாடியவர் : எம். சத்தியமுர்த்தி
தொலைக்காட்சி
21
Page 14
அமைதிக்கு தூது விடுவோமே.
விண்ணில் மனிதன் பறக்கின்றான் விந்தை பலவும் புரிகின்றான் பறக்கத் தெரிந்த மனிதனுக்கு இறப்பைத் தடுக்கத் தெரியவில்லை
(விண்ணில்)
செய்மதி விதம் விதம் செய்துள்ளான் தன் மதி இழந்து தவிக்கின்றான் உயிரை அணுவினால் அழிக்கின்றான் உயிரூட்ட முடியாமல் நிற்கின்றான்
(விண்ணில்)
விஞ்ஞானம் வளருது மேற்கினிலே அஞ்ஞானம் போவது அழிவினிலே
அமைதிக்குத் தூது விடுவோமா ஆண்டவன் பாதம் பணிவோமே
(விண்ணில்)
இசையமைப்பு எம்.எஸ். செல்வராஜா
பாடியவர் : எஸ். குலசேகரம்
தொலுக்காசிலுப்பேழை
Page 15
T
EET
Ա. 51 5TML)
1970 தொடக்கம் பல நூற்றுக்
|LTL பரப்புக்கூட்டுத் தாபனத்தில் ஒலிப்பதிவு iPքlisi tրեն լյլն,
1978ல் உள்நாட்டுக் கலைஞர்களை குவிக்கும் அரங்கேற்றம் நிகழ்ச்சியை ங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்காக ரித்து ஒலிபரப்பியமையாலும்,
தொலைக்காட்சியில் "உதயகிதம் விசைக் கலைஞர் அறிமுக நிகழ்ச்சியை குத்தளித்ததின் பன்னாகம்,
ரூபவாஹினியில் "ஒளித்தென்றல்” է եք բլբճմլէ 55 3լիոն հնհiյքլ ԼյTլ են: 551511 ப்பதிவு செய்து தொலைக்காட்சி ச்சியாகத் தயாரித்து நேறியாழ்கை ததின் பன்னாகம்
ஏற்பட்ட அனுபவங்களின் வெளிப்பாடே மேல்விசைப் பாடல்களாகும்.
இத்தொகுப்பில் உள்ள மெல்லிசைப் ஸ்கள் அனைத்தும்போனோனி, தோன்
Tਸੁਤ ॥ LLTL தப்பட்டவையாகும்