கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுயுகம் பிறக்கிறது

Page 1
Iழ்ப்பாணம் - புங்குடுதீவு கிழக்கு முருகேசபிள்ளை தம்பதிகளின் மூத்த மக ஞக 20-10-35 இல் பிறந்த மு. தளேய சிங்கம் அவர்கள் இலங்கைப் பல்கலைக் சுழ கத்திற் பட்டம்பெற்று, இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரியில் ஆசிரிய ராகப் பணிபுரிகின்ருர், 1957 இல், தியா கம்" என்னுஞ் சிறு கதையைச் "சுதந்திர' னரிற் பிரசுரிப்பதன் மூலம் எழுத்துத் துறைக்குட் காவடியெடுத்து வைத்தார். இவருடைய சிறுகதைகளிலே ஒரு தனித் துவ ஓட்டமும் நயமும் உண்டு, பத்திரி கைகளுக்காக அல்லாமல், ஒரு தொகு தியை மனதில் வைத்துக்கொண்டு சிறு கதைகளே எழுதும்பொழுது, அக்கதைக ளூக்கின டயில் "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் வகையிற் சட்டென்று புவப்ப டாத ஒருமைப்பாடு கதைகளுக்கிடையில் ஊடுருவியிருக்குமென்ற நம்பிக்கை உடை யவர். 1983 ஆம் ஆண்டில் "கலேச்செல்வி" நடாத்திய அகில இலங்கை நாவல் போட் டியில் இவர் எழுதிய "ஒரு தனி வீடு" என் ணும் நாவல் முதல் இடத்தைப் பெற் றது. ஆக்க இலக்கியத் துறையில் மட்டு மன்றி, இலக்கிய விமர்சனத் துறையிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். இவர் எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - அவசரக் குறிப்புகள் என்ற கட்டுரைத் தொடர் மூலந்
கள் ஈழத்திலே  ேத ரா வின் றி வ ரு ம் ஒரு புதிய இலக்கி யப் பரம்பரை யின் முன்னுே டியாகத் திகழ் கின்ருர்,
Printed at the Rainbow Printers, 231, Wolfendhal Street, Colombu-13.
勒
 
 
 


Page 2
புதுயுகம் பிறச்
மு. தளையசிங்கம்
23互, கொ
 

சு வெளியீடு,
ஆதிருப்பள்ளித் தெரு, ழும்பு-13, (இலங்கை).

Page 3
அரசு வெளியீடு: 11
முதற் பதிப்பு: டிசம்பர், 1965.
விலை: ரூ. 2.5
Puthuyukam Pirakkirathu
(A Collection of Short-Stories)
Author: M. THALAYASINGHAM, B. A.
Publisher: ARASU. PUBLICATIONS
231, Wolfendhal Street, Colombo-l3, (Ceylon).
First Edition: 10th December, 1965.
Price. Rs 2-75

தம்பிக்கு

Page 4

பதிப்புரை
தமிழிலக்கியப் பற்றிகனயும், அதன் வளர்ச்சி குறித்து நாமும் ஏதாவது தொண்டி யற்றல் வேண்டும் என்ற ஆர்வத்தையுமே பிர தான மூலதனங்களாகக் கொண்டு, மூன்ருண் டுகளுக்கு முன்னர் அரசு வெளியீடு நிறுவப் பட்டது. ‘ஈழத்தின் தலே சிறந்த முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரும், பழைய எழுத் தாளர் கோஷ்டியுடன் எழுத ஆரம்பித்து இன்று வரை தொடர்பு அருமல் எழுதிவரும் சிறுகதை யாசிரியருமான திரு. வ. அ. இராசரத்தினம் அவர்களின் 1951 - 1954 ஆண்டுச் சிறுகதை களிற் பதினன்கை எங்களின் முதல் வெளியீ டாகத் தோணி என்னுஞ் சிறுகதைத் தொகுதி மூலம் அளித்தோம். அவ்வாண்டின் சிறந்த சிறு கதைத் தொகுதிக்கான பூரீ லங்கா சாகித்திய மண்டலப் பரிசு நமது முதலாவது வெளியீட் டிற்கே கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது.
அதைத் தொடர்ந்து கவிதை - சிறுவர் இலக்கியம் - உருவகக் கதை - பேணுச் சித்திரங்

Page 5
கள் - இலக்கிய வரலாறு - சொற்பொழிவுகள் ஆகிய பல துறைகளைச் சார்ந்த இலக்கிய நூல் களைத் தமிழன்னையின் திருவடிகளில் வைத் தோம். இப்பொழுது, அரசு வெளியீடுகளின் தசதி முடிந்து, புதுயுகம் பிறக்கிறது பதினுேரா வது நூலாக வெளிவருகின்றது. முதலாவது வெளியீடு சிறுகதைத் தொகுதியாக அமைந்து, பதினேராவது வெளியீடே நமது இரண்டா வது சிறுகதைத் தொகுதியாக வெளிவருதல் அரசு வெளியீடு இயற்றும் பரந்துபட்ட இலக் கிய சேவைக்குச் சான்ற கவே அமைகின்றது.
இத்தொகுதியில், புதியதோர் எழுத்து வேகத்துடன் சிறுகதைகள் எழுதிவரும் மு. தளையசிங்கம் அவர்கள் 1961- 1964ஆம் ஆண்டு களுக்கிடையில் எழுதிய பதிஞெரு கதைகள் இடம்பெறுகின்றன. "தோணி"யுடன் இதனை ஒப்பிட்டு வாசித்தால், இடைப்பட்ட தசாண்டு களின் கால ஓட்டத்தில், ஈழத்தின் சிறுகதைகள் உருவத்தைப் பொறுத்தும், உள்ளடக்கத்தைப் பொறுத்தும் அடைந்துள்ள மாற்றங்களை ஒரு வாறு உய்த்துணரலாம். மு. தளையசிங்கம் அவர்கள் ஈழத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி. அவசரக் குறிப்புகள் என்ற கட்டுரைத் தொடர்மூலந் தமக்குத் தனித்துவமான-நேர் மையான - பரந்துபட்ட இலக்கியப் பார்வை உண்டென்பதை நிலைநாட்டினர். இருப்பினும், அவர் நல்லதொரு சிறுகதை ஆசிரியரும் என் பதைப் பலர் அறியத் தவறிவிட்டனர். அவ ருடைய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் காரசாரமாக அமைவதாலும், அவருடைய சிறுகதைப் பரிசோதனைகளுக்குப் பெரிய" பத் திரிகைகள் களம் அமைக்க மறுத்தபடியாலும் அவரை ஒரு சிறுகதை எழுத்தாளராக ஈழம் காலந் தாழ்த்தியே உணருகின்றது. பத்திரி

கைகளுக்காக அல்லாமல், ஒரு தொகுதியை மனதில் வைத்துக்கொண்டு சிறுகதைகளை எழு தும்பொழுது, அக்கதைகளுக்கிடையில் “வேற் றுமையில் ஒற்றுமை’ என்னும் வகையிற் சட் டென்று புலப்படாத ஒருமைப்பாடு கதைகளுக் கிடையில் ஊடுருவியிருக்குமென நம்புகின்ரு ர். பத்திரிகைகளில் வெளிவராது, இத்தொகுதிக் காக எழுதப்பட்டவையே பெரும்பாலான சிறு கதைகள். இத்தொகுதி மூலம் புதிய பார்வை புடைய சிறுகதை எழுத்தாளர் ஒருவரை ஈழம் ஏறறுக்கொள்ளுகின்றது.
兴
நமது முதலாவது வெளியீட்டில், 'ஈழத்தி லும், தமிழகத்திலும் மேலுறைக்காகச் செலுத் தப்படும் அக்கறையை நாங்கள் தவிர்த்து, அட் டையிலும் அமைப்பிலும் புது முறையைக் கையாண்டுள்ளோம். இப்புது அமைப்பை எழுத்தாளர்களும் வாசகர்களும் வரவேற்பார் களென்று எண்ணுகின்ருேம்’ எனக் குறித் தோம். நாம் கருதியது காரிய சாதனையாகிவிட் டது. அரசு வெளியீட்டு நூல்கள் வகுத்த வழி யில் நூல்களைப் பிரசுரிக்கப் பலர் முன்வந் துள்ளார்கள். இதுவும் நமக்கு மன நிறைவைத்
தருகின்றது. b o
665).
எம். ஏ. ரஹ்மான் அரசு வெளியீடு,

Page 6
உள்ளே
வீழ்ச்சி .
புதுயுகம் பிறக்கிறது .
தேடல் .
கோட்டை
இரத்தம்
கோயில்கள்
பிறத்தியாள் .
தொழுகை .
சாமியாரும் பணக்காரரும் .
சபதம் .
வெளி .
7
28
53
70
83
94
08
18
125
33

வீழ்ச்சி
யன்னல் கம்பிகளுக்கூடே தெரியும் காட்சி வகைப்படுத்திக் கூறமுடியாத ஒர் பரவச உணர்ச் சியைக் கிளப்புகிறது. உயர்ந்து வளைந்து நிற்கிறது ஓர் தென்னை. பின்னல் சில கமுகுகள் . இன்னும் வேறு சில பெயர் தெரியாத மரங்கள். முன்னல் மஞ்சள் பூக்களோடு ஊசி இலைகள். பச்சை நிறத் தில் அப்படி என்ன இருக்கிறது மனதைக் கிளறு வதற்கு? யன்னல் கம்பிகளுக்கூடாய் மணிக்கணக் காகப் பார்த்துக்கொண்டிருக்கலாம் போல் தெரி கிறது.
காலையில் நித்திரை விட்டெழுந்து அப்படியே சுவரோடு சாய்ந்தவாறே படுக்கையில் உட்கார்த்த வண்ணம் அந்தக் காட்சியை அவன் பார்த்துக் கொண்டே இருக்கிருன் . நினைவுகளற்ற நிலை. நெஞ் சுக்குள் ஏதோ கிளறப்படும் ஓர் பரவச உணர்ச்சி மட்டும் நிற்கிறது.

Page 7
6 புதுயுகம் பிறக்கிறது
தலை நீட்டிநிற்கும் தென்னை மரத்தின் உச்சிக்கு அப்பால் யன்னலின் மேல்விளிம்பு போடும் எல்லை வரை நீல வானம் மெல்லப் பரவிய சூரிய ஒளியில் விரிந்து தெரிகிறது. அங்கும் சலனமற்ற நிலை. அவனது அகத்தின் பிரமாண்டமான பிம்பம்போல் அதில் ஒரு பொட்டு முகில் கூட்டங் கூட இல்லை. பச்சை மரங்களில் அவன் கண்ட அந்தப் பரவச உணர்ச்சிக்குரிய காரணம் இப்போதான் அவனுக்கு விளங்குகிறது. ஆமாம், அவற்றுக்குப் பின்னலுள்ள அந்த நீல வெளிதான் காரணம். இல்லாவிட்டால் அவை வெறும் மரங்களாகத் தான் தெரிந்திருக்கும். பின்னலுள்ள அழகு வெளியின் பிணைப்பற்ற வெறும் சின்ன மரங்கள். அவற்ருல் மட்டும் அவனுடைய அகத்துக்குள் அந்தப் பரவச உணர்ச்சியைப் பிறப் பிக்க முடியாது.
அவன் பார்த்துக்கொண்டே இருக்கிருன். ஆனல் அதே வேளையில் அடுத்த அறையில் முடுக்கிவிடப் பட்ட வானெலியும் அலறத் தொடங்குகிறது. அது அவனேடு போட்டி போடுகிறதா? ஆரம்பத்தில் அதைப்பற்றி அவன் கொஞ்சங்கூடக் கவலைப்பட வில்லை. அவனுக்கும் அவனுடைய நிலைக்கும் தொடர் பற்ற ஏதோ ஓர் தூரத்துச் சத்தம் போல் தான் அது கேட்கிறது. ஒருவேளை அந்த உணர்வுகூடக் கொஞ்சம் தாமதித்துத் தான் ஏற்பட்டிருக்கலாம். ஆனல் பின்னர் அது மெல்ல மெல்லக் கூடிக் கொண்டே வந்து தன்னை வலுக்கட்டாயமாக அவ னுக்குள் திணிக்கிறது. அதை எதிர்க்க முடியாமல் வலுவிழந்துபோன காதுகளும் அந்த ஆக்கிரமிப்பை இறுதியில் ஏற்றுக்கொள்ளவேதான் செய்கின்றன.
"வடவியட்னுமில் அமெரிக்க விமானங்கள் புதிய தோர் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. ஐம்

வீழ்ச்சி 7
பதுக்கதிகமான வியட்கொங் வீரர்கள் கொல் லப்பட்டதுடன் ஐந்து பாலங்களும் அழிக்கப் பட்டிருக்கலாம் என்று ஓர் அமெரிக்க ராணுவ அதிகாரி கருத்துத் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்தி கூறுகிறது. s
புதிதாக வந்த எரிச்சலோடு அவன் அதை உலுப்பிவிட முயல்கிருன். உலுப்பிவிட்டுத் திரும் பவும் பழைய பரவசக் கிளறலில் அவனது மனம் தன்னை இழந்துவிட முயல்கிறது. அவன் திரும்பவும் வெளியே பார்க்கிருன்.
யன்னலுக்கூடாய் நீல வெளி முன்பைப்போலவே விரிந்து கிடக்கிறது. ஆனல் எப்படியோ அங்கு முன்பு படர்ந்திருந்த சூரிய ஒளி திடீரென்று மங்கத் தொடங்குவதுபோன்ற ஒர் உணர்வு. வெறும் பிர மையா? இல்லை, அது உண்மைதான். அவன் நிச் சயப்படுத்திக்கொள்கிருன். மங்கிய ஒளியோடு மரங் கள் கூட ஆடத் தொடங்குகின்றன. கூடவே குளிர் காற்று. மழை வரப்போகிறதா? முந்தின சலன மற்ற மெளனம் பிறப்பித்த பரவசம் இப்போ கரைவதுபோன்ற அறிகுறி. அதற்குப்பதிலாக நெஞ் சில் ஒர் மெல்லிய இனந்தெரியாத வேதனைதான் கசியத்தொடங்குகிறது.
* "மரண அறிவித்தல்.”*
அவன் திடுக்கிடுகிருன். அதே வானெலியின் அறிவிப்பு. இல்லை, அலறல். அந்த நேரத்தில் அது அவனுக்கு அப்படித்தான் படுகிறது. அப்போதுள்ள நிலையில் அடுத்த அறை வானெலியை அவன் சுக்கு நுருக நொருக்கிவிடக்கூடத் தயார். ஆனல் முடிய வில்லை. அதன் மரணச்செய்தி தொடர்ந்து கேட்கவே செய்கிறது. அதைக்கூட அவனல் தடுக்கமுடியவில்லை.

Page 8
8 புதுயுகம் பிறக்கிறது
**இளைப்பாறிய முத்துத் தம்பி பொன்னையா கால மாஞர். ’
வானெலி தொடர்கிறது.
"தங்கம்மாவின் அருமைக் கணவரும் களுத் துறை சீ. ரீ. பி. அலுவலகத்தில் வேலை பார்க் கும் முத்துக்குமாரரின் தகப்பனரும் நியுசிட்டி கொம்பனியின் மனேஜர் விஸ்வநாதனின் தமை யனரும், கிங்ஸ் வுட் ஆசிரியர் பேரின்பநாயகம், ஹோலிபமிலி கொன் வென்ட் ஆசிரியை செல்வி பொன்னையா ஆகியோரின் பாட்டனருமான இளைப்பாறிய முத்துத் தம்பி பொன்னையா கால மானுர், மரணச்சடங்கு இன்று செவ்வாய்க் கிழமை மாலை கொட்டாஞ்சேனை மைதானத் தில் நடைபெறும். உறவினரும் நண்பர்களும் இதை ஏற்றுக்கொள்ளவும். மீண்டுமொரு முறை வாசிக்கிறேன். இளைப்பாறிய முத்துத் தம்பி பொன்னையா காலமானர். s
காதுகள் அவற்றைக் கேட்டு வாங்கிக் கருத்தில் பதிய வைக்க அவனுடைய மனதில் பல வகை உணர் வுகள் ஊற்றெடுக்கின்றன. பலவகையான கற்பனை கள் உருவாகின்றன. இளைப்பாறிய பொன்னையரின் உருவத்தை அவனது மனம் படம் பிடிக்க முயல் கிறது. வழுக்கைத் தலை, வீட்டு விருந்தையில் ஈசிச் செயாரில் மூக்கிலோர் கண்ணுடியுடன் அவர் சாய்ந்து கிடக்கிருர் பக்கத்தில் ஒர் பத்திரிகை கிடக்கிறது. இல்லை, ஈசிச் செயாரில் சாய்ந்துகொண்டு அதைத் தான் அவர் வாசித்துக் கொண்டிருக்கிருர், அதுதான் அவருக்கு அறிவூட்டும் ஒரே ஒரு சாதனம். அவர் கண்ட உலகம், பிரபஞ்சம் எல்லாமே அதன் பக் கங்களுக்குள்ளேதான். இப்போ அதுவும் அடங்கி விட்டது. ஈசிச்செயாரில் அவர் இனி இருக்கமாட்

வீழ்ச்சி 9
டார். இப்போ அவரைச் சுற்றி அவருடைய இளைப் பாருத மக்களும் பேரன்மாரும் சுற்றத்தாரும் அழுத முகங்களோடு காட்சியளிப்பார்கள். அல்லது ஒரு வேளை அருகு வீட்டு வானெலியில், இல்லை அவர் கள் வீட்டு வானெலியிலேயே, தாங்கள் கொடுத்த மரணச்செய்தி சரியாக வருகிறதா என்று கேட்டுக் கொண்டிருக்கிரு ர்களோ? அது சரியாகவே வந்த தில்ை பெரிய சாதனையொன்றைச் செய்துவிட்டது C3 + у т 6) திருப்தியோடு தலையாட்டிக் கொள்கிருர் களோ? இருக்கலாம் என்றே அவனுக்குப்படுகிறது. இளைப்பாறிப் பின்னர் இறந்தும்விட்ட பொன்னைய ரின் உலகம் பத்திரிகை தான் என்ருல் இளைப்பாருத அவருடைய இப்போதைய சந்ததியாரின் உலகம் வானெலியும் சினிமாவுந்தானே? இனிவரும் சந்த திக்கு டெலிவிசனுக இருக்கலாம். ஆளுல்ை இப்போதைய சந்ததிக்கு சினிமாவும் வானெலியுந் தான், ஆமாம் அவர்களும் இப்போ வானெலியில் அந்த மரணச் செய்தியைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். கேட்டுத் திருப்தியோடு தலையாட் டிக்கொண்டுதான் இருப்பார்கள். “கொட்டாஞ் சேனை மைதானத்தில் நடைபெறும்."
“இரண்டாவது மரணச் செய்தி. சுந்தரமூர்த்தி கனகரத்தினம் காலமானர். அரசாங்க மொழி அலுவலகத்தில் வேலை பார்த்த சுந்தரமூர்த்தி காலமானர்"
அதற்கு மேலும் அவனுல் அதைக் கேட்க முடிய வில்லை. கேட்க விரும்பவில்லை. அவை மரணச் செய்திகளா? பதவி பட்டங்களின் விளம்பரங்களா? அவன் திரும்பவும் யன்னலூடாக வெளியே சென் றிருந்த பார்வையோடு மனதையும் திருப்ப முயல் கிருன். ஆனல் அடுத்த அறைக்குள்ளிருந்து வரும் அறையிலிருந்து தப்புவது இப்போ அத்தனை இலே
AA-2

Page 9
O ' புதுயுகம் பிறக்கிறது
சானதாகத் தெரியவில்லை. 《“G, ரீ. ஓ வில் வேலை ப்ார்க்கும் மிஸ் சிவகாமியின் தந் தையும் யாழ்ப்பாணம் ‘’ யன்னலூடாகக் குளிர்
காற்று வீசுகிறது. நீல வெளியில் வர வரக் கருமை படர்ந்துகொண்டிருக்கிறது. அந்தக் கருமையின் மூலக் காரணமாக அடிவானத்திலிருந்து கண்ணுக் கெட்டிய தூரம் வரை விரிந்து தெரிகிறது கார்மே கத் திரள். அதிலிருந்து அங்குமிங்குமாய் ஊடுரு விச் செல்லும் முன்னணிப் படைகள் போல் தென்னை மர உச்சிவரை சில கிளை மேகங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ‘உறவினர்களும் நண்பர் களும் "இதை ஏற்றுக்கொள்ளவும். மீண்டுமொரு முறை வாசிக்கிறேன். சுந்தரமூர்த்தி கனகரத் தினம் காலமானர். '' முன்னல் தெரியும் மரங்கள் எல்லை யற்று விரிந்து கிடந்த பழைய நீல வெளியின் பின்னணி யிலிருந்து கார்மேகத்தால் பிரிக்கப்பட்டுப் பழைய அமைதியை இழந்து, பிரிவினையினுல் வந்த வேதனை யைத் தாங்கமுடியாமல் தவிப்பன போல் குளிர் காற்றில் அங்குமிங்கு மாக அசைந்து கொண்டிருக் கின்றன. அவனல் தொடர்ந்து அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. யன்னலூ டாகக் குளிர் காற்று முன் பைவிட வேகமாக வீசு கிறது. பழைய பரவசத்தின் நினைவுகூட இப்போ அவனுக்கு இல்லை. இப்போ அவனுக்கும் ஏதோ வேதனையாகத் தான் இருக்கிறது. "உறவினர்களும் நண்பர்களும் இதை ஏற்றுக்கொள்ளவும். ’
இருக்கையை விட்டிறங்கி காரணமற்று அறைக் குள் அங்குமிங்குமாக அவன் நடக்கத் தொடங்கின் முன், வெளியே வண்டிச் சில்லுகள் தெருவில் போட்டிபோட்டுக் கடகடக்கின்றன. பள்ளி மாணவி கள் போகிருர்கள்.
நடந்து சென்ற அவன், அடுத்த யன்னலோர

வீழ்ச்சி
மாக நிற்கிருன், அவ னிருந்த அறையின் அடுத்த கண் அதுதான். முன் முனல் முச்சந்தி கிளை விட்டுப் பிரிந்து கிடச் கிறது. பள்ளி மாணவிகளை ஏற்றிச் செல்லும் சின்ன மாட்டு வண்டிகள் சதங்கைச் சத் தத்துடன் தார் ருேட்டில் கடகடத்து ஓடிக்கொண் டிருக்கின்றன. பின்னல் போகும் வண்டியில் சென்ற ஒருத்தி அவனைப் பார்த்துவிடுகிருள். அவனும் பார்க் கிருன் . ஒரு கணத்துக்குள் அவளின் முழு உருவத் தையும் அவனுடைய கண்கள் எடைபோட்டு விடு கின்றன. புத்தகக் கட்டைத் தாங்கியவாறு வெள் ளைக் கவுணின் கீழ் விளிம்புக்கு வெளியே மடக்குப் பட்ட வாறே தலைநீட்டிய முழங்கால்கள், அவனு டைய யூகத்துக்கு விட்டுக் கொடுக்கும் அவற்றின் மேற்பரப்பு, பச்சைக் கழுத் தணியின் வீழ்ச்சிக்கு இரு பக்கமும் கரை எழுப்பும் குரும் பெட்டிப் பொம் மல்கள், குறுஞ்சிரிப்புத் தவழும் முகம். இல்லை, இதழ் விரித்தே அவள் சிரித்துவிடுகிருள். அவனும் சிரிக்கிருன். புதியதோர் உணர்ச்சி அவன் உடலில் பாய்கிறது. ஏதோ ஒன்றின் தேவை அரிப்பாக மாறுகிறது. வண்டி மறையும்வரை பஸ்டில் (Basile) சிறையன்னலில் பார்த்து நிற்கும் சாடைப்போல் (Sade) யன்னலோடேயே அவன் ஒட்டிக்கொண்டு நிற்கிருன்.
எவ்வளவு நேரம் அவன் அப்படி நின்றனே அவனுக்கே தெரியாது. வானெலியின் அலறல் தான் திரும்பவும் அவனைத் தட்டிவிடுகிறது.
** நேரம் ஏழு முப்பத்தியொன்று. தேர்ந்த இசை.”
திடுக்கிட்டவன்போல் அவன் திரும்புகிருன். நெஞ்சில் திடீரென்று பழைய வேதனை பாய்கிறது. வண்டியில் கண்ட சிரித்த முகக்காட்சி அவ்வளவு

Page 10
12 புதுயுகம் பிறக்கிறது
தடுத்ததாகத் தெரியவில்லை. முடுக்கிவிட்ட யந்தி ரம்போல் அதற்குப்பின் அவன் அசுர வேகத்தில் இயங்கத் தொடங்குகிருன் , '
நேரம் சரியா? மேசையில் கிடந்த கைக்கடி காரத்தை அவசரமாகத் திருகித் திருத்திக்கொள் கிருன் . இன்னும் பள்ளிச் கூடம் தொடங்குவதற்கு அரை மணித்தியாலம இருக்கிறது. அவன் கணித் துக்கொள்கிருன். அதற்குள் எத்தனையோ சடங்கு கள் செய்து தீர்க்கப்பட மவண்டும். ஆனல் அதற் குப் பிறகுந்தான் நிம்மதி வந்துவிடுமா? மனதில் புதியதோர் கசப்பு பழைய வேதனையோடு கலக் கிறது. போகும்வாக்கில் சுவரில் தொங்கிய கண் ஞடிக்கு முன்னல நின்று தன் முகத்தைப் பார்த் துக்கொள்கிருன். எப்படியோ நான்கு நாட்களாக அவன் கடத்திவந்த ஒன்று இன்று கட்டாயச் சடங் காகப் பயமுறுத்துகிறது. ஓர் வருத்தக் காரனின் தோற்றம். அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆஞல் அடுத்தவர்கள் கவலைப்படுவார்கள், கார ணங்கூடக் கேட்பார்கள். ஒ, இந்த அடுத்தவர்களும் அவர்களுடைய அபிப்பிராயங்களும்! யார் கவலைப் பட்டார்கள்? ஆனல் அதே சமயம் பற்பசையோடும் பிறவுஷோடும் துவாயோடும் சவர்க்காரப் பெட்டி யோடும் சவரக் கருவிகளையும் அவன் காவிச் செல் லத் தவறவில்லை. பாத்ரூம். ஆனல் அதற்குள் இன் னேர் சடங்கு, மலக்கூடம். முதல் சடங்குகளை முடித்துக்கொண்டு முகச்சவரம் செய்ய முயன்ற போதுதான் அதற்குரிய கண்ணுடியைக் கொண்டு வரவில்லை என்பது தெரிய வருகிறது. திரும்பவும் அறைக்கு ஓர் ஓட்டம், திரும்பி வரும்போது பாத் ரூமில் இன்னுெருவர் அவர் வெளியே வரும்வரைக் கும் ஒற்றைக்காலை மாற்றி மாற்றி வெளியே அவன் அவசரத் தவம் செய்கிருன், பின்னர் சவரம் செய்ய ஒருபடியாகச் சந்தர்ப்பம் கிடைத்த போதுதான்

வீழ்ச்சி 3
பிளேட் பழசாகிவிட்டது தெரியவருகிறது. ஆனல் புதிது வாங்க இனி எங்கே நேரம்? அங்குமிங்கும் விழும் இரத்தக் கீறல்களையும் பொருட்படுத்தா து அவன் அதைக்கொண்டே சமாளிக்கிருன் . கழுவும் போது முகம் எரிகிறது. அவன் கவலைப்படவில்லை. இந்த "அரை வட்ட வாழ்க்கையில் முழு உயிரே போகிறபோது இரத்தம் போனுல் என்ன? முகம் எரிந்தால் என்ன?
அறைக்குள் திரும்பி வரும்போது மேசையில்
கிடந்த கைக்கடிகாரம் நேரம் ஏழு ஐம்பத்திரெண்டு என்று காட்டுகிறது. இன்னும் எட்டு நிமிடங் களுக்குள் அங்கே பள்ளிக் கூடத் தலைமையாசிரியரின் மேசைக்குமுன்னுல் கிடக்கும் புத்தகத்தில் சிவப்புக் கோடு கீறப்பட்டுவிடும். வழக்கம்போல் இன்றும் அவன் அதற்குக் கீழே தான் கையெழுத் திடப் போகிருன் அந்தத் த%லமையாசிரியர் வழக்கம் போல் தலையாட்டிக் கொண்டு இன்றும் சிரிக்கத்தான் போகிருர், அந்தச் சிரிப்புத்த ன் அவனுக்குப் பிடிக் 5 mg). Let him go to hell; let the fellow go and
அவசர அவசரமாக அவன் காற்சட்டையை மாட்டிக்கொள்கிருன். நல்ல காலம் அவன் சப் பாத்துப் போடுவதில்லை. செருப்பு. ஆனல் வெளியே பழை பெய்கிறதா?
யன்னலுக்கு வெளியே சென்ற பார்வை, இருண்டு கறுத்துவிட்ட மேகத்தையும் பெய்யத் தொடங்கி விட்ட மழைத் தூறலையுமே சந்திக்கின்றது.
சினத்தோடு அவன் செருப்பை விட்டுவிட்டுச் சப்பாத்தையே மாட்டிக் கொள்கிருன், மாட்டிவிட்டு காலைச்சாப்பாடு-தேநீர் என்ற பெயரில் நாயர் அனுப்பியிருந்த கர்மக் கடனைப் பெயருக்கு அவசர

Page 11
4 புதுயுகம் பிறக்கிறது
அவசரமாக வாய்க்குள் போட்டுக் கொள் கிருன் , போட்டுக்கொள்ளும்போதே அன்றைய 60) Ltf டேபிளையும் புரட்டுகிருன்.
செவ்வாய்க்கிழமை 8.00 - 8.45, சரித்திரம் எஸ். எஸ். ஸி. 8-45 - 9-30, பூமிசா ஸ்திரம் எஸ். எஸ் ஸி. 9-30 - 10-15 , குடியியல் .
ஓய்வான பாடம் அன்று ஒன்றுமே இல்லை!
மனக் கசப்போடு கையைக் கழுவிவிட்டு புத் க கத்தைத் தூக்கிக்கொண்டு அவன் பள்ளிக்கூடம் புறப்படுகிருன் , வெளியே வானம் இருண்டு கிடக் கிறது. குளிர் காற்ருேடு மழை சீறியடித்துப் பெய்கி றது. போவதா வேண்டாமா? போகாமல் விட்டால் தான் என்ன வந்து விட்டது?
அந்த வாழ்க்கைக்கும் அதன் சின்னங்களான டைம் டேபிளும் சிவப்புக்கோடும் பிரதிபலிக்கும் அந்த அதிகார அமைப்புக்கும் எதிராக அவன் செய்யக் கூடிய ஒரே ஒரு புரட்சி அப்படி அடிக்கடி பிந்திப்போவதும் இடைக் கிடை காரணமற்றுப் போகாமல் விடுவதுந் தான். இன்று அப்படிப் போகா மல் விட்டால் என்ன? ஆனல் மனம் அதைக் கணித் துக்கொண்ட அதே சமயம் உடல் அறைக்குள்ளி ருந்த ஓர் சின்னக் குடையை எடுத்து விரித்துக் கொண்டு மழையில் ஒடுங்கி நடுங்கியவாறு வெளி யே புறப்படுகிறது. அவனுடைய சிந்தனைகளின் பலவீனத்தை அவனே உணராமலில்லை. வேதனை யோடும் ஆத்திரத்தோடும் வேறு வழியின்றித் தனக் குள்ளேயே திட்டிக்கொண்டு அவன் நடக்கின்ருன் ,
போகும்போது சந்தியடிச் சின்னக்கடையில் சினி மாப் பாட்டுக் கேட்கிறது.

வீழ்ச்சி 5
நடை யா. இது நடை யா? நாடகமன் ருே நடக்கு து இடையா, இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது. வெள்ளிக் கண்ணு மீன வீதிவலம் போன
தையத்தக்க தையத்தக்க ஹைய்ய்ய்.
அது இலங்கை வானெலியின் திரை இசை, அதாவது திரை அலறல். ஆனல் இந்த முறை அவ னுக்கு வானெலியில் வந்த பழைய ஆத்திரம் இருக்கவில்லை. மாருக அந்தப் பாட்டோ டு சேர்ந்து ஏணுே சிறிது நேரத்துக்கு முன் வண்டியில் போன அந்தப் பள்ளிக்கூட மாணவியின் தோற்றந்தான் அவனுக்குச் சுவையோடு நினைவுக்கு வருகிறது. அந்தப்பாடலுக்கும் அவளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கவில்லை என்பது அவனுக்கே தெரியாமலில்லை. இருந்தாலும் அவளைப் பற்றித்தான் அது கூறுகிறது என்று நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. அந்த நினைவு அதுவரை அவனது மன தில் நிரம்பிய கசப்பைக் கொஞ்சம் கரைக்க உதவு கிறது. அதை வேண்டுமென்றே அவன் வலிந்து இன்னும் விருத்திசெய்ய முயல்கிருன்.
வண்டியில் அந்த மாணவி போகிருள். சிரித்த முகம் , பச்சைக் கழுத்தணி, சட்டைப் பொம்மல் கள், நீட்டி மடித்துள்ள முழங்கால்களும் அவற் றின் மேற்பரப்பும். இது நடையா? இது நடை யா? ஒரு நாடக மல்லோ நடக்குது. இடையா? g) 53) - Lunt . . . . .
திடீரென்று அவனுக்கோர் சிகரட் தேவைப் படுகிறது. மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. Bristol. Filter tipped, Virginia blended Cigarette.

Page 12
6 புதுயுகம் பிறக்கிறது
அருகிலிருக்கும் சிகரட் கடையை நோக்கி அவன் அவசரமாகத் திரும்புகிருன் . வெள்ளிக் கண்ணு மீன வீதிவலம் போன தையத்தக்க  ைதயத்தக்க ஹைய்ய்ய் . அங்கும் அது கேட்கிறது. அதை ரசித்து அனுபவித்துக்கொண்டே அவன் அணுகுகி முன், எதிரே, ஏற்கனவே அழுக் கடைந்து விட்டி ருந்த அவனது காற்சட்டையில் இன்னும் சேற்றை வாரி இறைக்கும் நோக்கத்துடன் இருண்டுவிட்ட வானத்தின் இடிமுழக்கத்துக்கு ஏற்ப இரைச்சலோடு
ஒர் கறுத்தக் கார் பிசாசுபோல் ஓடி வருகிறது.
次,

புதுயுகம் பிறக்கிறது
கெளரி இன்னும் கண்ணைத் திறக்கவில்லை. ஆஸ்பத்திரிக் கட்டிலில் அசையாமல் கிடக்கிருள். பக்கத்தில் சுற்றிப்போர்த்த அந்தச் சிறு உருவம் கிடக்கிறது. அது உருவமா? உள்ளே எலும்பென் பது இருக்குமா? அந்தக் கண்கள்? அந்த வாய்? உயிர் இருக்கிறது. ஆனல் எத்தனை நாளைக்கு?
கனகரத்தினம் கல்லாய் நிற்கிருன். கெளரி இனி கண்ணைத் திறக்கும்போது அவன் என்னத் தைச் சொல்வது? எப்படிச் சொல்வது?
கனகரத்தினத்தின் நெஞ்சு கனக்கிறது. நேற்று, முந்த நாள், ஏன் இரண்டு மாதங்களுக்குமுன் கெளரி அந்தக் கதையை ஆரம்பித்ததுமுதல் அவன் என்னென்ன வெல்லாம் சொன்னன்! எப்படியெல் லாம் சொன்னன்!
கனகரத்தினத்தால் தாங்கமுடியவில்லை. அடக்க முடியாத வேதனையோடு நினைவுகள் சேர்ந்து நெஞ்சை அமுக்குகின்றன.
AA - 3

Page 13
8 புதுயுகம் பிறக்கிறது
இரண்டு மாதங்களுக்கு முன்பு.
'அரோகரா" என்று கேலியாகக் கத்திக் கொண்டு சாமி அறைக்குள் எட்டிப்பார்த்தான் கனகரத்தினம், கையில் சிகரெட் புகைந்து கொண் டிருந்தது.
ஊதுபத்தியைப் பற்றவைத்துச் சாமிப்படத் துக்கு முன்னுல் கும் பிட்டுக்கொண்டு நின்ற கெளரி ஒரு கணம் திரும் பினள். முகத்தில், மேலே ஒரு மெல்லிய புன்னகை நின்றலும் அடியிலிருந்த சினம் தெரியாமலில்லை. கனகரத்தினத்தின் கையிலிருந்து அறைக்குள் நுழைந்த சிகரட் புகையைப் பார்த்த பின் அந்த மெல்லிய புன்னகையும் மறைந்துவிட் டது. திரும்பவும் தலையைத் திருப்பிக்கொண்டு கும்பிடத் தொடங்கிஞள்.
கனகரத்தினம் கவலைப்படவில்லை. முன் விருந் தையில் இருந்த சோபாவில்போய் கெளரி வரும் வரையும் காத்திருந்தான், அவனுக்கு அதெல்லாம் பழக்கம். கெளரியின் உரிமை அது. அவனுக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ இல் லையோ அவளுக்கு இருக்கிறது. அதில் அவன் தலை யிடக்கூடாது. அது அவளின் தொழுகைச் சுதந்திரம். பேச்சுச் சுதந்திரம் , எழுத்துச் சுதந்திரம் என்று தான் இல்லாவிட்டாலும் ஒரு படித்த மனைவிக்குக் கடைசி அந்தச் சுதந்திரமாவது இருக்கவேண்டும். கெளரி அடிக்கடி எழுப்பும் வாதம் அது. அதில் அவள் உண்மையான கண்டிப்புங்கூட. இப்போ கொஞ்சம் முந்தி கனகரத்தினத்தையும் அவனது சிகரட்டையும் நோக்கிவந்த அந்தச் சுண்டிச்சிவந்த பார்வை அதற்கு ஒர் உதாரணம். சாமி அறைக் குள் போய்விட்டால் கெளரி வேறு ஒர் அவதாரம் .

புதுயுகம் பிறக்கிறது 9
அவர்கள் வீட்டில் இந்த அறை மட்டும் ஒரு தனி யான கலாசார டிப்பாட்மென்ட், கெளரிதான் அதற்கு அதிகாரி. கனகரத்தினத்தின் கலாசாரம் அதற்கு முற்றிலும் மாறனது, புரட்சிகரமானது. வீட்டில் எங்குமே ஆட்சி செய்தது. ஆனல் சாமி அறை வாசலுக்கு அப்பால் மட்டும் அது போவ தில்லை. அப்பால் கெளரியின் ஆட்சி. புரட்சி பக் திக்குப் பணியவேண்டும். பணிய விரும்பாவிட்டால் அதில் தலையிடாமலே இருந்துவிடலாம். அது பய முறுத்தல் அல்ல, பரஸ்பர ஒப்பந்தம். மரியாதை. கனகரத்தினத்துக்கு அதெல்லாம் பழகிப்போய்விட் டது. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், தொழுகைச் சுதந்திரம் என்பதில் எல்லாம் நம் பிக்கை வைக்கும் பேர்வழியல்ல அவன். அவனு டைய கட்சி வேறு. ஊது பத்தி சாம்பிராணிபோட்டு மணித்தியாலக்கணக்காக நின்று ஏதாவது ஒரு படத் துக்கு முன்னுல் முணுமுணுத்துத் தான் ஆகவேண்டு மென்ரு ல் முன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மார்க்ஸ் லெனின் படங்களை அவன் சிபாரிசு செய்யத் தயார். ஆனல் கெளரியின் ரசனை வேறு ரகம். கோவணத்தோடு நிற்கும் முருகன் தரவழிகளைத் தவிர மற்றவர்களுக்கு அவள் உலகத்தில் அனுமதி இல்லை. அவள் வேறுயுகப் பேர்வழி. எப்போதோ பிறந்து, காலங்காலமாய் வளர்ந்து முதிர்ந்து இப் போது செத்துக்கொண்டிருக்கும் பழைய யுகம். பிறந்து கொண்டிருக்கும் இப்புதிய யுகத்தைச் சேராதவள் அவள். கெளரியைப்பற்றிய கனகரத் தினத்தின் அபிப்பிராயம் அது. என்ருலும் அவளு டைய விசயங்களில் அவன் தலையிடுவதில்லை. ஏதோ அவள் பட்டபாடு என்ற எண்ணம். அவனுடைய மாபெரும் இலட்சியமான உலகப்புரட்சிக்கு அவ ளின் அந்தச் சின்னஞ் சிறிய நான்கு சுவர் அறை யிலிருந்து ஆபத்து வரப்போவதில்லை. எனவே,

Page 14
20 புதுயுகம் பிறக்கிறது
அறைக்கு வெளியே நின்று கிண்டல் பண்ணுவது கூட அணுவசியம். ஆனல் அப்படிச் செய்வதில் தான் அவனுக்கு ஒர் ஆனந்தம்.
சிலநேரம் சென்று வெளியேவந்த கெளரியின் முகத்தில் பழைய சினம் இருக்கவில்லை. 'உங்க ளுக்கு எந்த நேரமும் பகிடி’ என்று சொல்லிச் சிரித் துக்கொண்டே வந்தாள். முகத்தில் நிம் மதி நிறைந்த சாந்தி நின்றது. நெற்றியில் விபூதிப் பொட்டு ஒளிவிட்டது. கூடவே தாய்மையின் பூரிப்பு.
கெளரியின் முகத்தில் அப்படி ஒரு களை சதா ஒளியிடத்தான் செய்யும். ஆனல் முக்கியமாக அவள் சாமி அறையிலிருந்து வெளிவரும்போது அந்தக் களையின் ஒளிவட்டங்களைக் கூடக் கண்டுவிடலாம் என்ற ஒரு பிரமை ஏற்படும். கனகரத்தினத்துக்கு அந்தத் தோற்றம் கெளரியின் அம்மாவை நினைவூட் டும். அவன் சின்னவனுய் இருக்கும்போதே இறந்து போன அவனின் தாயாரை நினைவூட்டும். அம்மா வின் அம்மாவை, தாயாரின் தாயாரை என்று அதற் குப்பின் ஒரு தொடர் நினைவுகள் ஒடும். எல்லோர் முகங்களிலும் அதேவித அமைதி; தெய்வீகக்களை ; ஒளிவிடும் விபூதிப் பூச்சு. அதுதான் கிழக்குப் பண் பாடு என்று ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் சொல்லும். சாமி அறைக்குள் போய்நின்று அந்தப் பழைய கலாசாரத்தோடு, அந்தப் பழைய பரம்பரைத் தொடரோடு கெளரி தொடர்பேற்படுத்திக் கொள் கிருளா? ஐக்கியப்பட்டு விடுகிருளா? ஆச்சரியத் தோடு கனகரத்தினம் தன்னையே அப்படிக் கேட் டுக்கொள்வான். அந்தக் கேள்விகளுக்கு அவனல் விடை கண்டுகொள்ள முடியாவிட்டாலும் கெளரி யின் முகத்தில் நிற்கும் அந்த அமைதி நிறைந்த களைக்கு மனத்துள் அவளுல் மரியாதை கொடுக்கா

புதுயுகம் பிறக்கிறது 2.
மல் இருக்க முடியாது. அவளின் பழக்க வழக்கங்கள் பழைய பரம்பரைப் பழக்க வழக்கங்களாய் இருக்க லாம். ஆணுல் அவற்றில் உள்ள அமைதியும் பொறு மையும் போற்றப் படக் கூடியவைதான். அவனது புரட்சி எண்ணங்களில், அவன் காணும் புதுயுகப் பெண்களில் அவர்றின் வெறுமையினுல் ஏற்படும் குறையை அப்போதுதான் அவனுல் உணரமுடியும். ஆனல் அதற்காக கெளரியில் அதிக அன்பைக் காட்டு வதைத் தவிர தன் கொள்கைகளே மாற்றிக் கொள்ள அவன் விரும்புவதில்லை. கட்சியும் கொள்கையும் அறிவை அடிப்படையாகக் கொண்டவையே ஒழிய உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவையல்ல என்ற பழக்கமான அவனின் சுலோகத்தை அதற்குக் காரணமாகவும் காட்டி விடுவான்.
'இண்டைக்கென்ன டைம் டேபிளில் ஒரு மாற் றம்? பகல் பத்துமணிக்கும் ஒரு கும் பிடு. ஞாயிற் றுக் கிழமை யெண்டும் பாராமல்?’ என்று கெளரி யைப் பார்த்து அவன் அப்போது கேட்டபோது பகிடி யோடு ஓர் இனந்தெரியாத வாஞ்சையும் சேர்ந்து நின்றது.
* உங்களுக்கென்ன ஊர் சுற்றியிற்று வருவேங்க, விடிஞ்சாப் பொழுது பட்டா கட்சி கட்சியெண்டு பீத்துவேங்க, வேறென்ன தெரியும்?”
* அடேயப்பா புதிசர் ஏதோ தெரிஞ்சு வைச் சிருக்கிற போலிருக்கே’’ என்று கனகரத்தினம் உதட் டைப் பிதுக்கிமுகத்தைக் கோணலாக்கிச் சிரித்தான். * என்ன அமெரிக்கன் காறங்கள் சந்திரனுக்குப் போயிற்றங்களா? அல்லது நூறு மெகடன் அணு குண்டை வெடிக்க வைச்சிற்ருங்களா? அல்லது கென்னடி தான் ஒரு கொம்யூனிஸ்ட்டாக மாறியிற் Gpp (t?"

Page 15
22 புதுயுகம் பிறக்கிறது
'போங்களப்பா, உங்களுக்கு எப்பவாவது நல்ல தாக ஏதாவது கதைக்க முடிகிறதா?’ என்ருள் கெளரி.
கனகரத்தினத்துக்குச் சாடையாகச் சுட்டது. எப்போதாவது அவன் நல்லதாக இல்லாத ஏதாவ தைப் பற்றிக் க ைதத்த துண்டா? நிரந்தரப் புரட்சி, தொழிலாளர் எழுச்சி, சோ ஸலிஸ் அமைப்பு, முத லாளி வர்க்க ஒழிப்பு என்பவற்றைவிட நல்லவை வேறு இருக்கிறதா ?
‘சரி நீ நல்லதாக ஏதாவது கதை பாப்பம்?" என்ருன் கெளரியைப் பார்த்து வேண்டுமென்றே.
"சுசீலா இருக்கே?' என்று ஆரம்பித்தாள் கெளரி.
ஆனல் கனகரத்தினம் விடவில்லை, "எந்தச் சுசீலா?” என்று இடைமறித்தான்.
"என்ன சுசீலா வைத் தெரியாதா?’ என்று ஆச்சரியப்பட்டாள் கெளரி.
கனகரத்தினத்துக்குச் சிரிப்பாக வந்தது. கெளரி சொல்பவை அவ்வளவு முக்கிய மற்றவை என்று காட்டிக்கொள்வதில் அவனுக்கு ஒரு சந்தோசம். ** என்ன பெரிய சரித்திரப் பிரசித்தி பெற்றவர்களைப் பற்றிச் சொல்லியிற்று ஆச்சரியப்படுறவள் போல ஆச்சரியப்படுகிருயே. சுசீலா எண்டால் என்ன, லெனின் ஸ்டாலின் எண்ட எண்ணமா?”
கெளரி அதைப் பொருட்படுத்தவில்லை. "நம் மோடு வாசிற்றியில் இருந்துதே அது’ என்ருள் அவள்.

புதுயுகம் பிறக்கிறது Σ3
கனகரத்தினம் கொஞ்சமும் அதைப் பற்றி
நினைக்க விரும்பாதவன்போல் சரி அந்தச் சுசீலா
வுக்கு என்னவாம்?” என்ருன் அசிரத்தை யாக,
‘அதுக்குப் பிறந்த முதல் குழந்தை செத்துப் பிறந்திருக்காம் . முகம் கண் மூக்கெல்லாம் அசிங்க மாக இருந்திச்சாம். என்னவோ வியாதியெண்டு இப்ப கோமளா சொல்லியிற்றுப் போகுது."
"அவளுக்கு வீ, டி. யாக்கும்" என்ருன் கனக ரத்தினம்.
‘யாருக்கு?”
"பிள்ளையைப் பெத்த சுசீலாவுக்கோ கிசீலா வுக்கோ?*
"சும்மா பைத்தியம் கதைக்காதீங்க’ என்று பதைபதைத்துச் சொன்னுள் கெளரி 'உங்க ட நாக்கல்ல அழுகிப்போகும் அப்படிச் சொன்ன. அவள் எவ்வளவோ நல்லவள். அவள் ஒரு றிலிஜி யஸ் கேஸ்,’
"அப்ப அவளின்ர புருஷனுக்காக்கும்’ என்ருன் கனகரத்தினம் எந்தளவிலும் தன் காரணம் பிழைக் காததுபோல்.
கெளரிக்கு, கனகரத்தினம் இன்னும் கூடுதலான ஒரு பாவத்தைச் செய்துவிட்டதுபோல் பட்டிருக்க வேண்டும். அவளின் பதைபதைப்பு இன்னும் கூடிற்று. 'மற்றவை யெல்லாம் தன்னைப்போல எண்ட எண்ணமாக்கும், ஏணிப்படி வீணுப் பாவத் தைத் தேடிக் கொள்றேங்க? அது ஒரு சாமிப் போக்கு. சுசீலாவை விட நல்லம். என்னுடைய aேtchmates) பற்ச்மேற்ஸைப் பற்றி எனக்குத் தெரி

Page 16
24 புதுயுகம் பிறக்கிறது
யாதா? மூண்டு வரு சத்துக்கு முந்தியிருந்த உங்களுக் கென்ன தெரியும்? நீங்கதான் முந்தி அங்கையும் இஞ்சேயும் திரிஞ்சீங்களெண்டு இப்பேயும் கதைக் கீனம்.”*
“சரி அதுக்கு இப்பவேன் ஒரு சண்டே ஸ்பெசல் கும்பிடுபோட்டனி? சுசீலாவின் ர குழந்தை உயிர்த் தெழ வேண்டுமெண்டா?” கனகரத்தினம் கதையை மாற்றினன், தன்னைப் பற்றிய புதை பொருள் ஆராய்ச்சி தோல்வியைத்தான் கொண்டு வரும் என்று அவனுக்குத் தெரியும்.
*இல்லை உங்கட பிள்ளைதான் சுகமாகப் பிறக்க வேண்டுமெண்டு. மூண்டு வருசத்துக்குப்பின் அருமை பெருமையாகக் கிடைச்சிருக்கெண்டு அக்கறை இருக்கா உங்களுக்கு?’’
கனகரத்தினம் ஓவென்று சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னன். 'அதுக்குத்தான நீ இப்ப ஸ்பெஸல் கும் பிடு போட்டாய்? பைத்தியம். நீ எரிக்கிற கற்பூரமும் ஊதுபத்தியும் நம் நாட்டுப் பணத்தை ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் அனுப்பு மேயொழிய கடவுளட்ட ஒண்டும் சொல்லாது. இந்த விசயங்களுக்கெல்லாம் கடவுளட்டக் கேட்கிறதும் காசி கதிர்காமம் போறதுவும் இந்தக் காலத்திலை செய்யிறதில்ல. அது அந்தக் காலம்; இது அணுக் குண்டுக் காலம் கெளரி, இது அணுக் குண்டுக் காலம், விஞ்ஞானம் எதையும் செய்யும். கடவு ளட்டக் கேட்கிறத விட்டிற்று டொக்டரட்டப் போகோணும்.”
*சரி சரி உங்கட லெக்ஸர் போதும்.’’ என்று சொல்லிக் கொண்டே அவன் அதை முடிக்க முன்பே கெளரி தன் பாட்டில் குசினிப்பக்கம் போய்விட்

புதுயுகம் பிறக்கிறது 25
டாள். கனகரத்தினம் தொடர்ந்து சிரித்தான். அது ஒரு வெற்றிச் சிரிப்பு.
கனகரத்தினம் ஒரு பொதுவுடமைவாதி. பல் கலைக் கழகத்தில் படிக்கும்போதே அவன் அப்படி. இப்போ கொழும்பில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிருன். அதே சமயம் ஒரு முக்கிய தொழிற் சங்கத்தின் செயலாளனுங்கூட. கட்சி விவகாரந் தான் அவனது முக்கிய வேலை. உத்தி யோகம் இரண்டாந்தர யந்திரத் தொழில், தனிப் பட்ட முன்னேற்றத்தில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. மனித குலத்தின் பொது முன்னேற்றத்தில் தான் அவனுக்கு நம்பிக்கை. அதற்குத் தடையாய் உள்ள பிற்போக்குச் சக்திகளை அகற்றும் விசயத்தில் அவனது கட்சிச் சகாக்களைவிட அவன் மிகவும் தீவிர மானவனுங்கூட. அகிம்சை பொறுமை என்பவற்றை அவன் அடியோடு வெறுத் தான். அவற்றின் மூலம் பிற்போக்குச் சக்திகளைக் களைந்தெறிய முடியாது என் பது அவனது அசையாத நம்பிக்கை. புரட்சியும் சர்வாதிகாரமுந்தான் அவனுக்குப் பிடித்த வழி. கட்சி மாருகச் சொன்னலுங்கூட பலத்தைப் பலம் தான் அழிக்கவேண்டும் என்பதுதான் அவனது தனிப்பட்ட கொள்கை. தீபெத்தைச் சீனு னகப்பற் றியபோது, இந்தியாவில் அது ஆக்கிரமிப்பு, நடத் தியபோது அவனுக்கு அவை தவிர்க்கமுடியாத உலு கப் புரட்சியின் சில கட்டங்களாகத் தான் பட்டகை, பரீட்சார்த்தமாக வெடிக்கப்பட்ட அதிக மெக.ெ டன் அணுக்குண்டுகள் அவனைப் பொறுத்த வணிர யில் அதே செய்தியைத்தான் கொடுத்தன. வழி எப்படியாய் இருப்பினும் தன் நோக்கம் தலைசிறந் தது என்பது அவனது நம்பிக்கை. அதைக் கிெ யும் உள்ளுக்குள் உணர்ந்திருந்தாள் என்பது ந்ேல் னுக்குத் தெரியும். ஆனல் கெளரி வழியைப் $ந்
AA - 4 **

Page 17
26 புதுயுகம் பிறக்கிறது
றிக் கவலைப்பட்டாள். கனகரத்தினத்துக்கு அந்தக் கவலை இருக்கவில்லை. மாருக அது ஒரு பழைய பரம்பரைப் பிற்போக்குச் சுபாவம் என்று சிரித் தான். அடுத்த இரண்டு மாதங்களாக கெளரி கவ லைப்படும்போதெல்லாம் கனகரத்தினம் அப்படித் தான் சிரித்தான். அப்படித் தான் பகிடி பண்ணி ஞன். ஆஞல் அடுத்த இரண்டு மாதம்வரைக்குந் தான். அதற்குப் பின்?
கெளரி கண்திறந்து ஐந்தாறு நிமிடங்களா கின்றன. கஷ்டப்பட்டுப் பிரசவித்தபின் கெளரி இப் போதுதான் கண் திறந்திருக்கிருள். நிதானமாக அறிவு வந்த பின் அங்குமிங்கும் அவள் கண்கள் தேடுகின்றன.
கனகரத்தினத்தின் முகத்தில் அப்படி எழுதி ஒட்டிவிட்டிருக்கிறதா?
“பிள்ளை எங்க?" என்று பயத்தோடு அவள் கேட்கிருள்.
^ பிள்ளை கிடக்கும் பக்கத்தைக் கனகரத் தினம் காட்டுகிருன். போர்வையை அகற்றிக் காட்டும்படி அவள் வேண்டுகிருள். பேசாமல் நிற்கிருன் கனக ரத்தினம். அவளால் பொறுக்கமுடியவில்லை. கஷ்டத் தோடு தானே முயல்கிருள். அதைப் பொறுக்க முடியாமல் கனகரத்தினமும் உதவுகிருன். போர்வை அகற்றப்பட்டு உருவம் தெரிகிறது. அடுத்த கணம் கெளரி கீச்சிட்டுக்கொண்டே முகத்தைத் திருப்பி விடுகிருள்."
கனகரத்தினத்துக்கு எப்படித் தேற்றுவதென்று தெரியவில் %ல. ஐந்து நிமிடங்களுக்குப் பின் கனக ரத்தினத்தின் பக்கம் அவள் பார்வை திரும்பு கிறது. அதில் நிற்கும் அந்தக் கேள்வி

தேடல் 27
"அப்போ உங்களுக்கும் வீ. டி. தானு? உங்களுக் கும் அதுதாஞ?" f
**இல்லை, கெளரி. இல்லை. இது என்ன வியாதி யெண்டு தெரியவில்லையாம். அணுக்குண்டுகளின் றேடியோ அக்டிவ் தூசுகளினல் வந்திருக்கலாம் எண்டு டொக்டர்ஸ் மார் சொல்லினம்’ என்று கனக ரத்தினம் சொல்லும்போது அவனுக்குக் கண்ணிர் வடிகிறது. 。
கெளரியின் கண்கள் விரிகின்றன. பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவள் போல் மறுபக்கம் தலையைச் சாய்த்துக் கொள்கிருள். முன்பு இருந்த விம்மல் குலுங்கல் ஒன்றும் இல்லை. ஆனல் கண்களில் நீர் ஆருகப் பெருகி ஓடுகிறது. கனகரத்தினத்தின் நெஞ்சை அந்தக் காட்சி நெருடுகிறது. என்னத்தை நினைத்து அவள் அழுகிருள்?
கடைசியில் உங்கள் விஞ்ஞானம், உங்கள் அறிவு, வழியல்ல. நோக்கமும் முடிவுந்தான் முக்கி யம் என்ற கொள்கை எல்லாம் இதைத்தான செய் தன என்ரு நினைக்கிருள்?
"அழாதே கெளரி, அழாதே, எல்லாம் கடவு ளின் செயல்.’’ என்று என்ன சொல் கிருேம் என்று தெரியாமல் உழறிஞன் கனகரத்தினம்.
"இல்லை." என்ருள் கெளரி. முனகினலும் நிதா னமாகக் குரல் வந்தது, "இல்லை இது கடவுளின் செயலல்ல. உங்கள் முன்னேற்றம் எங்கட கடவு
ளையே கொண்டு போட்டுது."

Page 18
தேடல்
காரை எடுத்துக்கொண்டு அவன் புறப்பட்டு விட்டான். பேராதனைப் பல்கலைக் கழகத்தைவிட்டு அவன் வெளியேறி நான்கு வருடங்களாக இருக்க லாம், நாற்பது வருடங்களாக இருக்கலாம், நானூறு வருடங்களாக இருக்கலாம். அவஞல் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. அப்படி ஒரு நினைவற்ற நீண்ட சூன்யத்தில் ஆழ்ந்துவிட்டு விழித்தெழுந்தது போன் றிருந்தது அவனுடைய நிலை. அப்படி ஒரு நிலையி லிருந்து எப்படி விழித்துக்கொண்டானே தெரி யாது. ஆனல் விழித்துக்கொண்ட பின்தான், அவன் அனுபவித்துக் கொண்டிருந்த பதவி, உத்தியோகம், இன்பம் எல்லாம் வெறும் பொய்யாகப்பட்டன. உயிரற்ற சூன்யமாகப்பட்டன. பழைய வாழ்க்கை யின் பசுமை, நான்கு வருடங்களாகப் பல்கலைக் கழ கத்தில் வாழ்ந்த வாழ்க்கையின் பசுமை, திடீரென்று புதிய ஒரு பரிமாணத்தில் காட்சி கொடுத்தது. அதில் துடிப்பு இருந்தது, உயிர் இருந்தது. ஒட்டம் இருந்தது, வேகம் இருந்தது, எல்லாம் இருந்தன. அங்கே செய்த செயலுக்கேற்ற பயனுக வெளியே கிடைத்த உத்தியோகத்தாலும் வாழ்க்கையாலும்

தேடல் 29
அவற்றுக்கு முன்னுல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. திடீரென்று எல்லாம் செத்துவிட்டவை போலவே தெரிந்தன. அவனல் அதற்குப் பின்பும தாங்க முடிய வில்லை. காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட் டான். பல்கலைக் கழகத்தை நோக்கிக் கார் விரைய விரைய பழைய வாழ்க்கையின் துடிப்பையும் வேகத் தையும் நோக்கி ஒடும் ஓர் விறுவிறுப்பு அவனைக் கெளவத் தொடங்கிற்று. அவனைத் தேடி அவன் ஒடும் ஒர் உணர்வு.
பல்கலைக் கழக வட்டாரத்துக்குள் கார் நுழைந்த போது அவனது பழைய உலகம் அப்படியே பச் சையாக நிதர்சனமாக நின்றது. பேராதனைக் கடை வீதியை அடுத்த பாலத்தைத் தாண்டும்போதே புதிய உலகத்துக்குள் புகும் படபடப்பு ஆரம்பித்து விட்டது. எத்தனையோ நாட்கள் அந்தப் பாலத் 'தால் அவன் போயிருக்கிறன். எத்தனையோ நாட் கள் அந்தப் பாலத்தில் நின்றுகொண்டே, அந்தப் பாலத்துக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டே கீழே சலசலத்து ஒடும் மகாவலி கங்கையை மெல்லிய ஓர் நடுக்கம் உடலில் ஏறும் உணர்ச்சியோடு அவன் பார்த்திருக்கிருன். இராமநாதன் விடுதியின் பின் பக்கத்து நீண்ட கொரிடோரில் நின்று கொண்டு பார்க்கும்போது தெரியும் மகாவலி கங்கைக்கும் பேராதனைப் பாலத்தில் நின்றுகொண்டு கைகளால் கம்பிகளைப் பற்றிக்கொண்டு கீழே எட்டிப் பார்க் கும்போது தெரியும் மகாவலி , கங்கைக்கும் எவ்வ ளவோ வித்தியாசம். முன்னைய காட்சியில் கவித்து வம் பிறக்கும், பின்னதில் அடிமனதிலிருந்து எழும் ஓர் ஆதிப் புல்லரிப்பு மெல்ல மெல்ல வரும். கீழே கீழே கீழே, விழுந்து விழுந்து, இறந்து இறந்து ஏதோ ஓர் உலகத்தில் பிறந்து பிறந்து பிறந்து . அப்படி ஒர் புல்லரிப்பு. ஓரிரவு அந்தப் பாலத்தைப்பற்றி அவன் ஒரு கனவுகூடக் கண்டி

Page 19
30 புதுயுகம் பிறக்கிறது
ருக்கிமு ன். முன்னுல் அதே பாலத்தில் பாதை திருத்தி அமைக்கும், பி. டபிள்யூ. டீ. ஸ்டீம் ருேலர் ஒன்று ஓடுகிறது. கடக டவென்ற ஒரு நடுக்கம். பின்னல் அதோடு இழுபட்டுக்கொண்டு அவன் ஒரு காரில் போகிருன். அவனது உடம்பெல்லாம் அதே நடுக்கம். கடகட கட கட. பாலம் மெல்ல மெல் லத் தாண்டப்படுகிறது. தாண்டியாகிவிட்டது. திடீ ரென்று முன்னுல்போ ன ஸ்டீம் ருேலர் எப்படியோ ஒரு ஷெல் கம்பனி எண்ணெய் வண்டியாய் மாறி ஒடுகிறது. அவன் விழித்துக்கொள்கிருன். உடலில் அதே நடுக்கம் இன்னும் நிற்கிறது. அப்படி ஒரு கனவு. அந்தக் கனவின் நினைவு இன்றும் அவ்ன் மனதில் அப்படியேதான் நின்றது. இன்று திரும்ப வும் அங்கு செல்லும் வழியில் அந்தப் பாலத்தைத் தாண்டும்போது அப்படி ஒர் உணர்வுதான் அவ னது உடலைப் படபடக்கச் செய்தது. ஒரு புது உலகுக்குள் புகும் Lان الا۔ الL4.
பாலத்தைக் கடந்து பூந்தோட்டச் சந்தியை யும் தாண்டி கலகா ருேட்டில் திரும்பி பல்கலைக் கழக வட்டாரத்துக்குள் புகுந்தவுடன் படபடப்பு நின்று பழைய உலகம் விரியத் தொடங்கிற்று. பழைய பஸ் தங்குமிடம் கலகா ருேட்டில் பழைய மாதிரியே இருந்திற்று. ஆளுனல் முன்பு அத்திவா ரங்கூட இல்லாமல் இருந்த வைத்தியப் பகுதிக் கட்டடம் இன்று அழகாக எழுந்து நின்றது. அதோடு வலது பக்கத்தில் கிட்டி முடிக்காமல் கிடந்த விஜய வர்த்தணு விடுதி, எல்லாம் முடிந்து எத்தனையோ பேர்களின் இருப்பிடமாகக் கம்பீரமாக எழுந்து நின்றது. முன்பு வெறுமனே கிடந்த ருேட்டின் அந்தப் பகுதியில் இப்போ அங்குமிங்கும் மாணவ மாணவிகளாக ஒரே கலகலப்பு. விஞ்ஞான மாண வர்கள், விஞ்ஞான மாணவர்கள், எங்குமே விஞ் ஞான மாணவர்கள் என்ற ஒரு பிரமை. அவனுக்

தேடல் 3.
குப் பழக்கமான ஒரு உலகந்தான், ஆணுல் இப்போ g எவ்வளவோ முன்னேற்றம், எவ்வளவோ புதிது. எப்படியோ ஒரு இனந்தெரியாத கவலை அவன் நெஞ்சில் மெல்லக் குத்திற்று. அவனுக்குப் பின் எவ்வளவோ நடந்துவிட்டன. எத்தனையோ பேர் வந்துவிட்டனர். அவன் போய்விட்டதால் எதுவும் நடக்காமல் போய்விடவில்லை, அவன் அங்கே இல்லை என்பதற்காக எவரும் எதையும் இழக்கவுமில்லை. அவனைப் பற்றிய கவலையோ நினைவோ எவருக்குமே இல்லை.
அது ஒரு விசித்திரமான வேதனை. ஆனல் போகப்போக அது விசித்திரமாகப்படவில்லை. மெல்ல மெல்ல அவனது முழு நினைவுகளையும் ஆக்கிரமிப் பதுபோல் அது வளரத் தொடங்கிற்று. அந்த வேதனையை வெளிக் காட்சிகள் மூலம அவன் மறக்க முயன்ருன். ஆனல் ஏனே அவை இன்னும் அதைக் கூட்டுவனபோலவே தெரிந்தன. அருளுறசலம் விடு தியையும் ஜயதிலகா விடுதியையும் தாண்டிக் கார் போய்க்கொண்டிருந்தது. எதிரே கலைக்கூடம், கலைக் கட்டடம், புதிய வாசகசாலை எல்லாம் ஓடிவந்து கொண்டிருந்தன. கலைக்கூட மதில் சுவர், மார்சலின் அறை எல்லாம் பழைய நினைவுகளைக் கிழறிக் கொண்டு வந்தன. மாலை நேரங்களில் அதில் உட் கார்ந்துகொண்டு எத்தனையோ பையன்கள் பாதை யில் போய்வரும் பெண்களைப் பார்த்துப் பாடிக் கொண்டிருப்பார்கள். நல்லசிவம், கணேசசுந்தரம், பொனிபேஸ், தில்லைநாதன், பீலகெதர. ஆனல் அவன் மட்டும் அவர்களுடன் ஒருநாளும் இருந்த தில்லை. அவர்கள் பாடிக்கொண்டிருப்பார்கள். வெள் ளிக்கிழமைகளில் **த கரங்கள்’ கூட்டுப் பிரார்த்த னைக் கோலத்தில் தலையில் பூவும் நெற்றியில் சந்த னப் பொட்டுக்களுடனும் போய்க்கொண்டிருப்பார் கள். வெள்ளைநிறச் சாரி, சிவப்புநிறச் சாரி, பச்சை

Page 20
32 புதுயுகம் பிறக்கிறது
நிறச் சாரி. ஆமாம் அவனுக்கு அவை வெறும் சாரி களாகத்தான் தெரியும். பெண்களாக, பெயர்களாக என்றுமே தெரிந்ததில்லை. அவனுக்கு அவர்களைப் பற்றி கவலையே இருந்ததில்லை. இல்லை, நான்தான் சாட்டுக் காட்டி என்னையே திருப்திப்படுத்தியிருக்கி றேன். இப்போ அவன் தனக்குள் சொல்லிக்கொண் டான். இப்போதான் அவனுக்கு எல்லாம் விளங்கு வதுபோல் த்ெரிந்தன. அவனைப்பற்றி அவர்களுக் குத்தான் கவலை இருக்கவில்லை. அவர்களுக்குத் தான் அவனைப்பற்றித் தெரியாது. ஆனல், அவன் ஏதோ தான் தான் கவலைப்படாததுபோல் நடித்திருக்கி ருன் . இரவு ஏழு மணிவரையும் வாசகசாலையில் இருந்துவிட்டு இரவுக்கும் ஒரு புத்தகத்தை எடுத் துக்கொண்டு அவன் வெளியே வருவான். படிப்பு, படிப்பு. படிப்பேதான் அவனுக்கு எல்லாம். ஒரு வேளை வேறு ஒன்றும் கிடைக்காததால் தான், வேறு எதையும் என்னுல் பெறமுடியவில்லை என்பதினுல் தான், நான் சதா படிப்பு, படிப்பு என்று செத் தேனே? அவன் இப்போ தன்னையே கேட்டுக்கொண் டான். ஆனல் அதற்குப் பதில் காண அவன் விரும்ப வில்லை. மெல்லிய ஒரு அசெளகரியத்தோடு அந் தக் கேள்வியை ஒதுக்கிவிட்டுப் பழைய நினைவுகளில் திரும்பவும் ஆழ்ந்தான். இரவு ஏழு மணிக்கு அவன் வாசகசாலையைவிட்டு வெளியே வருவான். அவர்கள் இன்னும் மதில்சுவரில் இருந்துகொண்டு பாடிக் கொண்டிருப்பார்கள். நல்லசிவம், கணேஷ், பொ னி பேஸ், தில்லைநாதன், சீவநாயகம். Y
சீவிச் சிங்காரிச்சு, பூவும் பொட்டும் வைச்சு பொண்ணு முன்னே போகுது-முல்லைப்பூ வாசம் பின்னே போகுது.
ஓ, எப்படி அவர்களை அவன் வெறுத்தான்! எப் t- வெறுத்தான்! Frustrated Cases - அவன் அவர்

தேடல் 33
களுக்குக் கொடுக்கும் பெயர். முன்னுல் போகும் பெண்கள் அவர்களைப் பற்றித்தான் கதைத்துக் கொண்டு போவார்கள். அவன் அந்தப் பெண் களைப்பற்றிக் கவலைப்படாதவன்போல் தன்பாட் டில் போய்க்கொண்டிருப்பான். ஆனல் முன்னல், பின்னல், பக்கத்தில் எல்லாம் பெண்கள் போய்க் கொண்டிருக்கிருர்கள் ஸ்ன்ற நினைவு எப்பவுமே நின்றதில்லை. அதுவே அவனுக்குப் புளகாங்கிதத் தைக் கொடுக்கப் போதுமானது. ஒருநாள் திருப் திக்கு அவ்வளவும் போதும். ஆனல் தூரத்திலி ருந்துவரும் அந்தப் பாடல்மட்டும் இன்னும் நிற் 86 lTğ5I.
கலகலவென்று வளையல் குலுங்க கை வீசி,
சீவிச் சிங்காரித்து,
பூவும் பொட்டும் வைத்து,
பொண்ணு முன்னே 'போகுது.
நல்லசிவம்! அவன், நல்லசிவத்தை அடியோடு வெறுத்தான்; வேறு எவரையும் விட அவனைத்தான் அதிகமாக வெறுத்தான்.
முன்னுல் போய்க் கொண்டிருக்கும் பெண்கள் சிரிப்பார்கள். அவர்கள் அதை ரசிக்காமலில்லை. ஆனல் அவர்கள் அந்தக் கூட்டத்தைக் கேலிசெய் கிருர்கள் என்றுதான்." அவன் வேண்டுமென்றே கற்பனை செய்துகொள்வான். அதோடு தானே அவர் களின் பங்குக்குத் திட்டிக்கொள்வான். Frustrated cases, frustrated cases v. . .
சென்ட்ரல் க்ன்டீனுக்கு முன்னல் கார் நின்று விட்டது. அவன் தன்னை அறியாமலேயே அங்கு காரை நிறுத்திவிட்டிருந்தான். அதோடு அந்த மதில் AA — 5 ° . . . .

Page 21
34 புதுயுகம் பிறக்கிறது
சுவரில் போய் உட்கார்ந்துகொண்டு மேலும் கீழும் போய் வரும் பெண்களைப் பார்த்து அவனுக்கும் இப்போ பாடவேண்டும் போல் இருந்தது. ஆணுல் அந்த நினைவின் பைத்தியத்தனம் அடுத்த கணம் தெரியாமலில்லை. காலம் பிந்திவிட்டது, காலம் பிந்திவிட்டது, காலம் பிந்திவிட்டது, இனி என்னல் அப்படிச் செய்யவே முடியாது; தனக்குத் தானே அவன் அடுத்த கணம் சொல்லிக் கொண்டான். அது அவனைத் தடுக்காமலில்லை. ஒருபடியாக தன் னைச் சமாளித்துக்கொண்டு திரும்பவும் அவன் தன் காரை ஓட்டத்தொடங்கினன். இராமநாதன் விடுதி. அதுதான் அவன் முன்பு இருந்த விடுதி. அங்கு போக வேண்டுமென்ற ஓர் ஆவல் அடுத்தகணம் அவனைத் தூண்டிற்று. அதுதான் அவனுக்கு அதிகமாகப் பழக்க மான இடம், 81 வது அறை, 235 வது அறை, கைலாஸ் மலை-அவை எல்லாம் அவனுக்குப் பழக்க மானவை. இப்போ ஓடிப்போய் அவற்றைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது அவனுக்கு.
முத்தமிடும் வளைவு எத்தனையோ நினைவு களோடு முன்னே ஓடிவந்தது. ஆனல் அதைத் தொடர்ந்து வேகமாக வந்த வெளிக்காட்சிகளின் அழுத்தம் அவனது உள் நினைவுகளை அதிகமாக வளர விடவில்லை. முத்தமிடும் வளைவு. அதற்குக் கீழே இலங்கை வடிவத்தில் இருந்த தடாகம், ஜேம்ஸ் பீரிஸுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதை, வளைவி லுள்ள பூவும் மரமும் செடியும் கொடியும்-அவை பூத்துக்கொட்டிய ஒரு வசந்தத்தில்தான் அவனது நண்பன் கதிர்காமுவுக்குக் காதல் பிறந்ததாம். ஒ, அந்தப் பைத்தியம் இப்போ எங்கே இருக்கும்? செத்துச் சிவலோகத்திலா அல்லது இன்னும் அங்கே தான் ஆவியாகக் காதல் காதல் என்று கத்தித் திரிகிறதா? - ஹில்டா விடுதி. ஹில்டா விடுதி.

தேடல் ” 35
ஹில்டா - வசந்தி, வசந்தி, இப்போ நீ எங்கு
இருக்கிருய்?-சீப் மார்சலின் வீடு-இப்பவும் அந்த
டுங் டுங் என்ற பியானேச் சத்தம் அங்கு கேட்
குமா?-சங்க மித்தப் 'பாதையில் பீலகெதரயின்
வளைவு. பீலகெதரையையும் அவனது பெட்டையிை
պ tb சதா அந்த வளைவில்தான் பார்க்கலாம்.
வெளியே பல்கலைக் கழகத்தைவிட்டுப்போன பின் பீல
கெதரையின் மற்றத் தோழிகள் அவனையும் அவனது பெட்டையையும் வருடத்துக்கு ஒருக்கீால் ள்ல் லாஞ் மாக ஓரிடத்தில் சந்திப்பார்கள் என்று சொல்லிக் கொள்வார்களாம்,செத்த பிறகும் அப்ப்டி எங்காவது சந்திக்கிருர்களோ?-கனி கசிவத்தின் “வீ க்திச் சுவை நனி சொட்டச்சொட்ட என்று "பல் ج، خساء، ثم " வதுபோல் சொல்லும் அந்த மனிதரின் வீடு கஸ் ருேட்டு, இராமநாத்ன் ஹிந்த கலச் யடியில் இருக்கும் பள்ளத்தாக்கிலுள்ள் அந்தக் கொட்டில் - ஆமா, இன்னும் அந்தப் ப்ெண் இருக் கிருளா? அந்தப் பெண், கண்ணைக் குத்துவதுபோல் முன்னே தள்ளிக்கொண்டு நிற்கும் தனங்களை வேண்டுமென்றே இன்னும் உயர்த்திக் கட்டிக் கொண்டு இதோ, பாருங்கள் என்று சொல்லி நீட்டு வது போல் அந்த வீட்டில் நிற்கும். அந்தப்பெண்? அவளுக்கு இப்போ என்ன நடந்திருக்கும்? எங்கே இருப்பாள்?-அந்தக் கொட்டில், அதற்குப் பின்ன லுள்ள கத்தோலிக்கக் கோயில், இராமநாதன் ஏற் றம், இராமநாதன் ஏற்றம், இராமநாதன் விடுதி, ஒ, என் இராமநாதன் விடுதி, என் இராமநாதன் விடுதி! காரை நிறுத்திவிட்டு நெஞ்சின் படபடப்போடு அவன் வெளியே இறங்கினன். முன்னல் இராம நாதன் விடுதி புதிய பூச்சில் முன்பைவிட அழகாகக் கண்ணைக் குத்திக்கொண்டு நின்றது.
உள்ளே ஒடிப்போய் தான் "இருந்த ஒவ்வொரு அறையையும் தேடிப் பார்க்கவேண்டும் போலிருந்

Page 22
36 புதுயுகம் பிறக்கிறது
தது அவனுக்கு. அவ்வளவு ஆசை. ஒவ்வொரு அறைச்சுவர், கதவு, மேசை, வோர்ட்ருே ப் எல்லா வற்றிலும் அவன் அங்கு இருந்தபோது தன் பெயரை அங்குமிங்குமாக வெட்டிவைத்திருந்தான். நல்ல தம்பி, நல்லதம்பி, நல்லதம்பி. ஆமாம் அவற்றை விட வேறு விளம்பரம் அப்போ அவனுக்கு இல்லை. ஆனல் இன்னும் அவை அப்படியே இருக்குமா? அவனல் பொறுக்கமுடியவில்லை. ஒரே பாய்ச்சலில் உள்ளே ஓடவேண்டும்போல் இருந்தது. ஆனல் முடிய வில்லை. இராமநாதன் விடுதி முன்பைப்போல் ஆண் கள் விடுதி அல்ல! அதை அவன் அறிந்திருக்கவில்லை. எப்படியோ அது அவனுக்கு அதுவரையும் தெரியா மல் போய்விட்டது. கொஞ்சங்கூட அந்த மாற் றத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. முற்றி லும் புதிய பூச்சோடு புதிய விடுதியாய் அது நின்று கொண்டிருந்தது. பெண்கள் விடுதி. அங்கும் இங்கு மாக எங்குமே பெண்கள்! ஐயோ, அத்தனை பெண் கள் எப்படி அப்படிப் பெருகினர்கள்?
வேறு வழியின்றி விடுதிக் கன் டீனை நோக்கி அவன் நடந்தான். அறைகளில் காண முயன்ற ஓர் உணர்வைக் கன்டீனில் காணத் தேடிச் சென்ருன். ஆளுல் அவன் எதிர்பார்த்ததுபோல் அவன் இருக் கும்போது இருந்த பழைய பேர்வழி அங்கே கன் டீன் கீப்பராக இருக்கவில்லை. முற்றிலும் புதிய ஒருபேர்வழி அவனைப்பற்றிக் கவலைப்படாது தானும் தன் வேலையுமாய் தன்பாட்டில் நின்றன். அவனுக்கு மனம் சோர்ந்துவிட்டது. அதை வலிந்து தடுக்க விரும்பியவன் போல் கன்டீன் கீப்பரைப் பார்த்துச் சிரித்தவண்ணம் கிட்டே சென்ருன் அவன். ஆனல் கன்டீன் கீப்பர் சிரித்ததாகத் தெரியவில்லை. வியா பாரத்துக்குரிய கேள்வியும் அவசரமும் அவனது முகத்தில் நின்றனவே ஒழிய பழக்கமான அறிமு

தேடல் 37
கத்துக்குரிய வரவேற்போ சிரிப்போ எதுவுமே இல்லை.
“என்ன வேண்டும்?" என் முன் கன் டீன் கீப்பர்
சிறிது நேரத்துக்குப்பின்.
என்ன வேண்டும்?
அவனுக்குள்ளேயே அந்தக் கேள்வி திரும்ப ஒலித்தது. எதைத் தேடி அவன் கன் டீனுக்குப் போஞன்? திடீரென்று அவனை அறியாமலேயே காரணந் தெரியாது அவனது சொந்தப் பெயர் மனதில் ஓடிற்று. நல்ல தம்பி.
‘என்ன தேடுகிறீர்?" என்ருன் கன்டீன் கீப்பர் திரும்பவும்.
‘என்னைத் தெரியுமா?’ என்று சொல்லவேண் டும்போல் ஏதோ ஒன்று அவனை உந்திற்று. ஆனல் நல்ல காலம் அந்த உந்தலைத் தடுத்துக்கொண்டு அவனை ஒர் பைத்தியமாக்கும் என்று அடுத்தவன் முடிவுகட்டிக்கொள்ள முன் 'ஒரு ரீ” என் முன் அவ éFJ LbfTé5. ኍ
ரீ கிடைத்தது. குடித்துவிட்டுக் கன் டீனைவிட்டு அவசரமாக அவன் நகர்ந்தான். ஏனே கன்டீன் கீப்பருடன் வேறு எதையும் அவளுல் பேச முடிய வில்லை அத்துடன் தொடர்ந்து அங்கு நிற்கவும் அவன் விரும்பவில்லை. காருக்குள் ஏறித் திரும்ப வும் கலைக்கூடம் நோக்கி ஓடத் தொடங்கினுன் .
கார் ஓடிக்கொண்டிருந்தது. வந்த வழியிலேயே திரும்பவும் ஓடிக்கொண்டிருந்தது. இராமநாதன் இறக்கம், அந்தக் கொட்டில், மார்க்கஸ் சந்தி, கனக சிவத்தாரின் வீடு. சங்கமித்த வளைவு, ஹில்டா,

Page 23
38 புதுயுகம் பிறக்கிறது
ஹில்டா, ஹில்டா. ஹில்டா விடுதியடியில் ஏனே இப்போ அவனுக்கு நிற்கவேண்டும்போ லிருந் தது. ஹில்டா விடுதியின் நடுவாசலுக்கு மேலுள்ள முதல்தட்டு இடைவெளியினுள்ளே நின்று கொண்டு முன் பென்ருல் அவனுக்காக ஒருத்தி பார்த்துக்கொண் டிருப்பாள். ஜேம்ஸ் பீரிஸையும் ஹில்டாவையும் இணைக்கும் தார் ருேட்டுச் சந்தியைத் தாண்டு முன்பே இல்லை, கனகசிவத்தார் வீட்டைத் தாண்டி சங்க மித்தத் திருப்பத்திலுள்ள பீலகெதர வளைவுக்கப் பால் ஓரடி வைக்குமுன்பே ஹில்டாவில் அவனுக் காகக் காத்து நிற்கும் அவளின் உருவத்தை அவனல் கண்டுகொள்ள முடியும். நான்கு வருட வாழ்க்கை யின் கடைசிப், பருவக் காலத்தில் அவன் கண்டு பிடித்த ஒருத்தி அவள். கணேஷ், நல்லசிவம், சீவ நாயகம் எல்லோரையும் திட்டித்திரிந்த அவனுக்கு அது ஓர் வரப்பிரசாதமாய் இருந்தது. அவர்களை வஞ்சம் தீர்ப்பதுபோன்ற ஒரு வெற்றியுங்கூட. வசந்தி அழகானவள். நல்ல வள். அவனைப்பற்றி அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தவள். எவரைப் பற்றியும் கவலைப்படாதவன் போல் திரிந்த னது வெறும் பாவனை எத்தனையோ பெண்க ခံ့ကြွား။ כי ஏமாற்றித்தான் இருக்கிறது. அவள் மூலம் அதை அவனல் பின்பு அறிய முடிந்தது. அவனை ஒரு சீரிய ஸான பேர் வழியாகப் பலர் கருதிவிட்டிருந்தார்கள்.
வசந்தியோடு அவன் இரண்டே இரண்டு மாதங் கள் தான் பழகினன். அவளை ஹில்டாவில் தான் போய்ச் சந்தித்துக்கொள் வான். அன்று ஒரே ஒரு நாளைத் தவிர அவளை அவன் வேறு ஒரு நாளும் வெளியே கூட்டிச் சென்றதில்லை. வெளியே மற்ற வர்கள் பார்க்கக்கூடியதாக அவன் அவளுடன் அதிக மாகக் கதைத்தது மில்லை. ஆனல் அதற்காக மற்ற வர்களுக்கு அவர்களின் உறவு தெரியாமல் போய் விடவில்லை. ܫ ,,i་རེ་
 

தேடல் 39
ஒரு நாள் நல்லசிவம் அவனை அக்கறையோடு விசாரித்தான்,
“விடுதியை விட்டு நீங்கள் வெளியே வருவதே இல்லையே! எத்தனையோ அழகான இடங்கள் இங்கு இருக்கின்றனவே, பயன்படுத்தக் கூடாதா?’ என் முன்.
உண்மையான அக்கறையோடுதான் நல்லசிவம் கேட்டான். ஆனல் அதுகூட அவனுக்குப் பிடிக்க வில்லை. r
“வெட்கமில்லாமல் மூலைமுடுக்கெல்லாம் திரி வதையோ மற்றவர்கள் சிரிக்கச் சிரிக்கச் ச்ந்தியில் காட்சிக்கு நிற்பதையோ நான் விரும்புவதில்லை’ என்று பட்டென்று அவன் பதில் சொல்லிவிட்டான்.
நல்லசிவமும் அவனது கூட்டாளிகளுந்தான் மூலை முடுக்கென்று திரி வார்கள். ஒரு நாளைக்கு ஒரு சோடி யாய்ச் சந்தி சந்தியாய் நிற்பார்கள். ஆனல் நல்ல சிவத்துக்கு அவன் சொன்னது சுடவில்லை! நல்ல இவ்ம் ஓவென்று சிரித்தான். சிரித்து விட்டு நக்க
'ዩ ጰ
லாகக் கேட்டான். in . . . . . . . , s نم. " . . . . . . :
'தம்பி, உண்மையாகக் கேட்கிறேன், நீ என் னடா மச்சான் உன் பெட்டையோடு செய்வாய்? 、魏鹤 》,' 、° ܐܳܙܶܠ ܐ݈
'சதா பிலொச பியா கதைப்பாய்?”
“ஆம் உன்னைப்போல வீனிவடிக்கும் நாய் மாதி 'ரித் திரிய எனக்குத் தெரியாது’ என்று சொல்லி விட்டு அந்த இடத்தைவிட்டு அவசரமாக அவன் நகர்ந்தான், நல்லசிவத்தை அவன் அடியோடு வெறுத்தான். கன்னத்தில் ஒன்று கொடுக்க முடிந் திருக்குமானல் எவ்வளவோ ஆத்திரம் தீர்ந்திருக்

Page 24
40 புதுயுகம் பிறக்கிறது
கும். ஆனல் அப்படிச் செய்ய என்றுமே அவனல் முடிந்ததில்லை.
ஹில்டாவையும் தாண்டி முத்தமிடும் வளைவை யும் தாண்டிக் கார் ஓடியது. செனட் கட்ட்டம் செல் லும் சந்தியை அடைந்தபோது அவனை அறியாம லேயே லவர் ஸ்லேன் பாதையில் காரைத் திருப்பி விட்டான். கரு மதில் சுவரின் மறைவில் மகாவலி கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. ୫ ଗ0) 0" எல்லாம் மூங்கில் மரங்கள் ஓவென்று மெல்லிய ஒசையை எழுப்பியவண்ணம் காற்றில் அசைந்து கொண்டு நின்றன. அடிமனத்தில் ஒதுக்கிவைக்கப் பட்ட ரகசிய இன்ப நினைவுகளைப்போல் அவை அந் தக் கரு மதில் சுவருக்குப் பின்னல் மறைந்து காட்சி கொடுத்தன, ஒரு வகைக் கனவுக் காட்சி. அந்த வழியே தான் வசந்தியை அன்று ஒரு நாள் மாலை இருளில் அவன் அழைத்துச் சென்றன். அன்று ஒரே ஒரு நாள்! அன்றுகூட ஏதோ கனவில் நடப்பது போலவே தான் எல்லாம் அவனுக்குத் தெரிந்தன. என்றுமே அவன் அவளுடன் வெளியே சென்றதில்லை. ஆணுல் அன்று அவளின் நிபந்தனையின் பேரில் இருட்டி விட்ட பின் ஓர் இருப்பிடத்தைத் தேடி அழைத்துச் சென்றன். இல்லை, அவள் தான் அவனை அழைத்துச் சென் ருள். அப்படித்தான் சொல்லவேண்டும். எத் தனையோ இரவுகள் அவளை அப்படி அழைத்துச் செல்வதுபோல் அவன் கனவு கண்டிருக்கின்றன். ஆனல் என்றுமே அழைத்துச் சென்றதில்லை. மற்ற வர்கள் பார்க்கக்கூடியதாகப் பாதைகளில் திரியும் தைரியம் அவனுக்கு என்றுமே வந்ததில்லை. நாய் களைப்போல் நாம் தெருவெல்லாம் திரியத் தேவை யில்லை என்று வசந்தியிடம் அவன் அடிக்கடி சொல் விக்கொள்வான். ஆனல் வசந்திக்கு அப்படித் திரிய வேண்டும் என்ற ஆசை இல்லாமலில்லை. அன்று அவளாகவே அவனை மிகக் கஷ்டப்படுத்தி அழைத்

தேடல் 4
துச் சென்ருள். அவனுக்கு அப்போ அது ஏதோ கனவில் நடைபெறுவதுபோலத்தான் பட்டது. எத் தனையோ இரவுகள் அவளை அப்படியெல்லாம் கூட் டித் திரிவதாக அவன் கனவு கண்டிருக்கிறன். ஒவ் வொரு தூணுக்குப் பக்கத்திலும் சுவருக்குப் பின்னலும் மூலை மறைவுகளிலும் வைத்து அவளை அணைத்து மகிழ்வதாக அடிக்கடி அவன் கண்டிருக் கிருன், அன்று அவள் அவனைக் கூட்டிச்செல்லும் போதுகூட அப்படி ஒரு நினைவுதான் அவனுக்கு.
கார் ஜிம்னுசியமடியில் வந்து நின்றது. வெளியே இறங்கி அங்குமிங்கும் அவன் நடந்தான். அதே இடந்தான், அதே இடந்தான். ஜிம்மின் மறுபக்கத்தி லுள்ள படிக்கட்டை நோக்கி நடந்தான். அதே இடந் தான். அங்குதான் அன்று அவர்கள் சென்றர்கள். எதிரே மகாவலி கங்கையும் அதற்கு அப்பாலுள்ள மறு கிளையின் பாலமும் இப்போ தெளிவாகத் தெரிந்தன. ஆனல் அன்று எந்த ஒரு தெளிவும் இல்லாத ஒரு இருளாகத் தான் அவை எதிரே நின் றன. அவனேடு முட்டிக்கொண்டு அவள் உட்கார்ந்
தாள். அவன் அவளை இறுக அணைத்தான். ஆனல்
அதேசமயம் உடலில் ஒரு நடுக்கம் சொல்லிவைத் ததுபோல் தொத்திக் கொண்டது. அந்த நடுக்கத் தைப் போக்க அவளை விட்டு அவன் நகர்ந்திருக்க முயன்ருன் . ஆனல் அவள் விடவில்லை.
“ஏன் தள்ளிப் போகிறீர்கள்?" என்ருள் அவள்.
அவனல் பதில் சொல்ல முடியவில்லை.
"என்மேல் கோபமா? என்ருள் தோளைப்
பற்றியவாறு அருகில் நெருக்கமாக நகர்ந்த வண் ணம்.
AA - 6

Page 25
புதுயுகம் பிறக்கிறது ܕܬܘܕܝ ܉
‘பைத்தியம் மாதிரிப் பேசாதே" என்ருன் அவன் . அவள் மேல் ஒரு நாளும் அவன் கோபித் ததே கிடையாது. ஆனல் அவன்தான் தன்னை அவள் அசட்டை செய்திருக்கிருள் என்று எத்தனையோ இரவுகள் படுக்கையில் கிடந்து அழாக் குறையாக உழன்றிருக்கிருன்.
*நீங்கள் ஒருநாளும் என்னைக் கொஞ்சியதே கிடையாது, ஏன்?" என்ருள் அவள் சாடையாகக் கரகரத்த குரலில். இப்போ அவள் இன்னும் அதிக மாக நெருக்கி உட்கார்ந்திருந்தாள்.
பழைய காஷ்மீர் பட்டின் தாவணியோடு அவளது தோள் அவனது தோளோடு முட்டி அழுத் தும்போது அசாதாரணமான ஓர் வழுவழுப்பு அவளது உடலைக் கிளறியது. என்றுமே அவன் அப்படி இறுக்கமாக ஒரு பெண்ணுடன் இருந்த தில்லை. எத்தனையோ பெண்களை அவன் அதற்கு முன்பு காதலித்திருக்கிறன். ஆனல் எவருடனும் அப்படிப் பழகியதில்லை. சிலருடின் அவன் கதைத் ததுகூட இல்லை. ஊரிலிருந்த சுசீலாவுடன் அவன் ஒரு நாள் கூடக் கதைத்ததில்லை. ஆனல் சுசீலாவை அவன் உயிருக்கு மேலாகக் காதலித்திருக்கிருன் அவளின் நினைவாகவே எத்தனையோ நாட்கள் சாப் பிட்டாமல் கிடந்தும் உழன்றிருக்கிருன். வேலியிலுள்ள பூவரசு மரங்களில் எல்லாம் சுசீலா சுசீலா என்று அவளின் பெயரையே செதுக்கித் திரிந்திருக் கிருன். காதல் அவனுக்கு மிக அன்னியோன்னிய மானது. காதல் அவனைப் பொறுத்தவரையில் தெய் வீகமானது. ஆனல் அதுவரை என்றுமே அப்படி அதை அருகில் வைத்து அவன் அனுபவித்ததில்லை. வசந்தியின் தோள்கள் வர வர அழுத்திக் கொண்டே இருந்தன. "ஏன் டார் லிங், ஏன் நீங்கள் என்னைக் கொஞ்சுவதே இல்லை?’ என்று அவள் இன்னும்

தேடல் 43
في 4 مدينة கேட்டுக்கொண்டே இருந்தாள். அவனல் பொறுக் கவே முடியவில்லை. திரும்பவும் பழைய நடுக்கம் அவனை உலுக்கி விடுவதுபோல் ஆரம்பித்தது, அவன் அப்படியே அவளை இறுக அணைத்துக்கொண்டர்ன். இறுக, இறுக, இறுக அணைத்துக்கொண்டான். தன் உதடுகளில் அவனது அழுத்தத்தை வரவேற்கும் விதமாக அவள் நிலத்தில் அப்படியே சாய்ந்தபோது அவனின் தலையில் ஒர் கிறக்கம் இரையத் தொடங்கி விட்டது. அப்படியே அழுத்தி முத்தமிட்ட வண்ணம் அவள் உடல்மேல் அவன் சாய்ந்தான். அதற்குப் பின் ஓர் அனுபவப்பட்ட உலகம் அவனை ஆட் கொண்டு விட்டது. கனவு, கனவு, கனவு.. திரும்பவும் தெளிவு பிறந்த போது அவனுல் அதை நம்பவே முடியவில்லை. அறையும் படுக்கையும் பழு தாகி விட்ட சாரத்தையுமே எதிர்பார்த்து எழுந்த அவனைப் பச்சையாக, யதார்த்தமாக உயிரோடு பக்கத்தில் கிடந்த படியே வசந்தி விடாமல் அழுத்தி sy2,007 5g & G5 stator (9-(515.5 T air . kiss me darling, kiss me, kiss me, . . . . . ஆனல் அதற்குப்பின் அவளுல் முடியவே இல்லை. களைத்துப்போய் வியர்த்துக் கொட்டிய அவனல் அதற்குப்பின் எதுவுமே முடிய வில்லை. விடுதியில் அவளை அன்று அதற்குப்பின் விட்டுச் சென்ற போது அவளின் கண்களில் கண்ட ஒரு வெறுப்பை என்றுமே அவனல் மறக்க முடிந்த தில்லை.
ஜிம்னசியப் படிக்கட்டை இப்போ அவன் பார்த்துக்கொண்டே நின்ருன். வசந்தியை இப்போ அதில் சாய்த்து, அணைத்து ஆயிரம் முத்தங்கள் அவளின் ஆசை தீரக் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. ஆனல் வசந்தி இப்போ அங்கு இருக்க வில்லை. அவள் இப்போ எங்கு இருப்பாள்? வாழ்க் கையையே இழந்து விட்டது போன்ற ஒரு வேதனை அவனது நெஞ்சைக் குடைந்தது. ஆனல் முன்பு

Page 26
44 புதுயுகம் பிறக்கிறது
அதிலிருந்து தப்புவதற்கு எத்தனை சாட்டுக்கள் அவன் தேடியிருக்கிருன்! அன்றைய நிகழ்ச்சிக்குப் பின் வசந்தியை அவன் வெளியே அழைத்துச் சென் றதே இல்லை. மற்றச் சாட்டுக்கள் தான் கிடைக்கா விட்டாலும் சோதனைக்குப் படிக்கவேண்டும் என்ற சாட்டு அவனுக்குத் தாராளமாக இருந்தது. ஆனல் அவளின் கண்களில் அதற்குப்பின் தெரியத் தொடங் கிய ஒரு வெறுப்பும் கேள்வியும் அவனது பேச்சுக் கள் எல்லாவற்றையுமே ஆராய்வன போல்தான் தெரிந்தன. ஆனல் அதற்காக அவனது காதல் குறைந்துவிடவில்லை. அவள் தன்னை விட்டு எட்டப் போகிருள், எட்டப்போ கிருள் என்ற உணர்வு அவனை இன்னும் அதிகமாக வாட்டத்தான் செய்தது. காத லின் வேதனையை அவன் அதற்குப்பின் அனுபவித் ததுபோல் வேறு எப்பவுமே அனுபவித்ததில்லை. ஆளுல் நல்ல காலம் சோதனை அவனது கவனத்தை வேறு வழியில் திருப்பி விட்டது. அதில் தேறி உத்தியோகம் எடுத்துக் காரும் பங்களாவும் வாங்கி யாவது அவளின் காதலைக் கவரவேண்டும் என்பது அவனது ஆசை. அதற்காக முன்பு எப்போதும் இல் லாத மாதிரி அதிகமாக அவன் படிக்கத் தொடங் கினன். அப்படியேதான் பலனும் கிடைத்தது. ஆனல் சோதனை முடிந்து மறுமொழி வரமுன்பே வசந்திக்கு வேறு ஓர் இடத்தில் அவளின் பெற் ருேர்கள் திருமணம் நிச்சயம் செய்துவிட்டார்
56Tmt bli
அவன் ஜிம்னுசியப் படிக்கட்டையே பார்த்துக் கொண்டு நின்றன். திடீரென்று ஒரு கேள்வி, முன்பு எப்பவுமே அவன் கேட்டிராத கேள்வி, அவன் மன தில் மின் வெட்டிற்று. அன்று வசந்தி அவனிடம் உண்மையைத்தான சொன்னள்? அழுது அழுது சொன்னது வெறும் நடிப்பில்லையா? பெற்றேர்கள் தான் அவளது திருமணத்தை நிச்சயித்தார்களா

தேடல் 45
அல்லது அவள்தான் அவனை வேண்டுமென்றே விட்டுச் சென்ருளா? உண்மையாகவே வசந்தி அவனைக் காதலித்தாள் தானு? படிக்கட்டு அவனைப் பார்த்துப் பயங்கரமாகச் சிரிப்பது போல் தெரிந் தது. இல்லை, இல்லை. அதற்குப்பின் தொடர்ந்து அவனல் அந்த இடத்தில் நிற்கமுடியவில்லை. ஓடாத குறையாகக் காரை நோக்கி நடக்கத்தொடங்கிஞன். கடைசியில் இராமநாதன் விடுதியைப்போல், கன் டீன் கீப்பரைப்போல் ஜிம்னசியப் படிக்கட்டும் அவனைக் கைவிட்டு விட்டதுபோன்ற ஓர் உணர்வு. காரைத் திருப்பி ஒட்டும்போது அவனுக்கு ஏனடா அங்கு வந்தோம் என்று ஆகிவிட்டது.
ஆனல் அதற்காக அவனது நம்பிக்கை முற்ரு கச் செத்து விடவில்லை. கலைக் கூடமும் கலைக்கட்டட மும் இன்னும் அவனது கடைசிக் கோட்டைகளாய் நிற்கவே செய்தன. அவற்ருேடு அவன் நான்கு வருடங்கள் பழகியிருக்கிருன். அவை கட்டாயம் அவனுக்கு ஆறுதல் ஊட்டும்போலவே தெரிந்தன.
w சிங்கமுக வாசல் பக்கமுள்ள மரத்தடியில் நிறுத்திவிட்டு நடக்கலாம் என்று நினைத்து சென்ட் ரல் கன்டீன் வளைவில் காரைத் திருப்பினன். ஆனல் கார் கீழே ஒடி மறு வளைவில் திரும்பும்போது முன் ஞல் தெரிந்த அந்த மரத்தின் காட்சி ஏனே அவ னைப் பயமுறுத்திற்று. மரத்தடியில் காரை நிறுத் தாமல் என்சைக்ளோப்பீடியாக் கொட்டகைப் பக் கம் நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி நடக்கத் தொடங் கிஞன். அது ஒதுக்கமாகவும் பாதுகாப்பாகவும் இருந்திற்று. மறுகரையில் நின்ற அந்த மரத்தின் தோற்றம் என்றுமே அவன் மனதில் ஓர் பயத்தை எழுப்பாமலில்லை. நடுவே ஒரு பெரும் ஒட்டையுடன் இடையில் திரண்டு உருண்டு காட்சிகொடுத்த அந்த உருவம் சில சமயம் கனவில்கூட அவனை வெருட்டி

Page 27
46 புதுயுகம் பிறக்கிறது
யிருக்கிறது. ஏனே அதில் அவன் ஏற முயன்று பின்பு பயந்து வெருண்டு கீழே விழுவதாக எத்த னையோ தடவைகள் அவன் கனவு கண்டு விழித்தி ருக்கிருன். அந்த மரத்தைக் கடைக் கண்ணுல் பார்த்தவண்ணம் 'பில ரிங்" செக்ஸனை நோக்கி அவன் நடக்கத் தொடங்கினன்.
ஆணுல் பிலரிங் செக்ஸன் அவன் எதிர்பார்த்த பழைய களையோடும் கலகலப்போடும் காணப்பட வில்லை. முன்பு அங்கே அவன் காலடி எடுத்து வைக் கும்போது கடைசி ஒரு பையனுவது கை காட்டி "ஹாய்!” என்று கத்தக் காத்திருப்பான். ஒருவளு வது சிரித்துத் தலையசைப்பான். இப்போ யாரும் இருக்கவில்லை. வெறிச்சென்று அது யாருமற்ற மரண அமைதியோடு காட்சிகொடுத்தது. அவன் உள்ளே புகுந்து இடது பக்கம் திரும்பி நடந்தான். பழைய வாசிகசாலை அறைகளும் வெறும் விரிவுரை அறை களாய் மாறி அதே வெறிச்சென்ற தோற்றத்தில் காய்ந்து கிடந்தன. காரணம் தெரியாத வேதனை ஒன்று நெஞ்சை நிரப்ப அவன் நடந்தான், நடந் தான். அங்கே இருந்து புதிய வாசிகசாலைக்கு ஏதோ மைல்கணக்காய் நடந்ததுபோல்பட்டது அவனுக்கு. ஒரே களைப்பு. இந்தமுறை அவன் எதிர்பார்த்த கலகலப்பு நிறைந்த ஆரவாரம் புதிய பகுதியிலிருந்து அவனை வரவேற்பதுபோல் கேட்கத் தொடங்கிற்று. ஆனல் திடீரென்று அவனது மன நிலையில் ஒரு மாற்றம். அவனுக்கு அந்த ஆரவா ரம் சந்தோசத்தை ஊட்டவில்லை. மாருக ஒரு பயம், பயம், காரணி மற்ற ஒரு பயம் அடுத்தகணம் அவன் மனதைக் கெளவத் தொடங்கிற்று.
அவன் அந்த உலகத்துக்குச் சொந்த மாகாத வன்போலவே அடியெடுத்து வைத்தான். ஒவ் வொரு தூணுக்கும் ஒரு கூட்டம். அங்குமிங்கு

தேடல் 47
மாக ஒரே போக்குவரத்து. சாரிகள், சட்டைகள், ஆரவாரம், சத்தம், கலகலப்பு, ஓவென்ற சிரிப்பு - அவனையே அவன் இழந்துவிட்டான் போன்று அடுத்தகணம் ஒரு தளர்ச்சி கால்களிலிருந்து உடம்பு முழுவதும் பரவியது. அவனுல் தொடர்ந்து நடக்க முடியவில்லை. அதோடு அவனை யாருமே அங்கு அவதானித்ததாகவும் தெரியவில்லை. இராமநாதன் விடுதி, கன்டீன் கீப்பர், ஜிம்னசிய்ப் படிக்கட்டு எல்லாம் வேண்டிக் கொள்ளாமலேயே அவன் மன தில் தங்கள் பாட்டுக்கு ஓடின.
“என்ன வேண்டும்?' என்று கன்டீன் கீப்பர் கேட்டான்.
என்ன வேண்டும்?
நல்லதம்பி, நல்லதம்பி.
அடுத்தகணம் தலையைப் பிடித்துக்கொண்டு காதுகிழியக் கத்தவேண்டும் போல் இருந்தது அவ னுக்கு. முற்றத்தில் சின்னவயதில் அவனை அவன் அம்மா தேடாமல் தனியே விட்டுவிட்டுப்போனல் அவன் தன் தலையைப் பிடித்துக்கொண்டு மயிரைப் பிசைந்த வண்ணம் அப்படித்தான் கத்துவான். அப் படி இப்பவும் ஒருக்கால் கத்தவேண்டும் போல் ஏதோ ஒன்று அவனை உந்திற்று.
ஆணுல் அவன் கத்தவில்லை. காரணம் அவனுடன் அங்கே படித்த ஒருவன் கையில் பைலுடன் சுற்றி வரப் பலபேர் சூழ்ந்துநிற்க ஓரிடத்தில் கதைத்துக் கொண்டு நிற்பதை அவன் அதேசமயத்தில் கண்டு விட்டான்.
இருவரும் ஒரே காலத்தவர்கள். அவன் அங்கு இருக்கும் போது அவனும் இருந்தான். "ப்ளேட்டேர்"

Page 28
48 புதுயுகம் பிறக்கிறது
என்று மற்ற மாணவர்கள் அந்தப் பேர் வழி யைச் செல்லமாக அழைப்பார்கள். ப்ளேட்டோ வும் அவனைப்போல் தத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெறத் தான் படித் தான். அதோடு அரசியலிலும் ப்ளேட்டோவுக்கு அதிக அக்கறை கட்டு கஸ்தொட் டைகூட அதேவிதத்தில் பரிச்சயம். அவனை விட எல்லாவகையிலும் கெட்டிக்காரன் என்பதை என் றுமே உணர்த்துபவன் போலத் தான் ப்ளேட்டோ அவனுக்குத் தெரிவான். அவன் ப்ளேட்டோவை எவ்வளவோ திட்டியிருக்கிருன். கட்டுகஸ்தொட்ட விவகாரத்தைக் காட்டி ப்ளேட்டோவை ஒரு காவாலி என்று மற்றவர்கள் ஒதுக்கவேண்டும் என்று கூட அவன் முயன்றிருக்கிருன். ஆனல் எப்படிச் செய் தாலும் ப்ளேட்டோவின் செல்வாக்குக் குறைந்த தில்லை. அந்தக் காலத்திலேயே ப்ளேட்டோவைச் சுற்றி ஐந்தாறு பேர்கள் சதா திரிவார்கள். இன்றுங் கூட அதே கூட்டந்தான். இப்போ இன்னும் அதிக மாக! இப்போ ப்ளேட்டோ அங்கு ஓர் விரிவுரை யாளனுக இருக்கவேண்டும். ப்ளேட்டோவை நோக்கி அவன் மெதுவாக நடந்தான். ஒருவேளை ப்ளேட்டோவாவது தன்னுடன் கதைப்பான் என்ற ஒரு நம்பிக்கை அவனை நடக்கத் தூண்டிற்று.
ப்ளேட்டோவின் பார்வை படக்கூடியதாகக் கிட்டேபோய் நின்றன். ஆனல் ப்ளேட்டோ அவ னேப் பார்க்கவில்லை. பார்க்கக் கூடியதாக மற்ற வர்கள் அவனை விட்டுவைக்கவில்லை. ப்ளேட்டோ வுக்கும் அவனைப் பார்ப்பதற்கு நேரமோ வசதியோ இருந்ததாகத் தெரியவில்லை. அவனுக்கு வரவர ஆத்திரந்தான் பெருகிற்று. அப்படிப் பார்த்துக் கொண்டு அதிக நேரம் அவனுல் நிற்க முடியவில்லை. அடுத்தகணம் டக்கென்று திரும்பி அவசரமாக அந்த இடத்தை விட்டு நடக்கத் தொடங்கிவிட்

தேடல் 49
டான். ஆத்திரத்தோடு அழுகையும் வந்துவிடும் போல் பயமுறுத்தவே வேகமாக நடந்தான்.
பழைய பிலரிங் செக்ஸனைத் தாண்டும் போது கலைக்கூடத்துக்குள்ளும் போகவேண்டும் என்ற ஓர் ஆசை ஏற்பட்டது. கலைக்கூடத்து மேசை மடிப்பு ஒன்றில் எழுதப்பட்டிருந்த ஒரு செய்தி அங்கிருச் கும்போதே அவனது அக்கறைக்குரிய விசயம். அதைத் தேடி அவன் அவசரமாகச் சென்ழுன். அவன் எதிர்பார்த்ததுபோலவே அது இன்னும் மறையாமல் அப்படியேதான் இருந்தது.
*ஷண்முகபாலே இங்கு ஷான் பண்ணினன்’
ஷண்முகபாவே அவன் படித்தபோது படித்த ஒரு சக மாணவன். ஒரு நாளிரவு படக்காட்சியின் போது பக்கத்திலிருந்த ஒருத்தியின் விருப்பத்துக்கு எதிராகச் சேட்டை செய்துவிட்டான். அதற்குப் பின் "ஷான்' என்பதே அங்கே அதிகமாகப் பாவிக் கப்படும் ஒரு தனிச் சொல்லாகிவிட்டது.
அந்த நிகழ்ச்சியை நினைக்கும்போது எப்பவும்
அவனுக்கு ஒரு திகில் ஏற்படும். இன்றும் அதை
வாசிக்கும்போது அதே திகில் தான் அவன் உட (லில் ஒடிற்று.
*"ஷண்முகபாவே இங்கே ஷான் பண்ணிஞன்!” திடீரென்று வந்த அந்தக் குரல் அவனைத் திடுக்கிட வைத்துவிட்டது. V
அவன் திடுக்கிட்டுத் திரும்பிஞன். மாணவன் ஒருவன் அந்த வழியே அவனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் சென்றுகொண்டிருந்தான். அவனும் சிரித்
AA – 7 VM

Page 29
50 ** புதுயுகம் பிறக்கிறது
தான் . அவனது சிரிப்பை ஆமோதிப்பது போல் "ஷண்முகபாவே இன்னும் இங்கு வாழ்கிருன்’ என் முன் வழியே போன அந்த மாணவன்.
அவனுக்கு அந்த மாணவனுடன் கதைக்கவேண் டும் போல் இருந்தது. கிட்டே சென்று ‘என்னைத் தெரியுமா?’ என்று கேட்டான்.
ஆனல் முற்ருக மாறிவிட்ட முகபாவத்தோடு " தெரியாது’ என்ருன் அந்த மாணவன். is
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"யூனியன் சங்க இதழில் என் படம் இருக்கிறதே பார்த்ததில்லையா? நான் ஒரு பருவத்தின் இதழா சிரியராக இருந்தேன், படித்ததில்லையா? பெயர் நல்லதம்பி. இப்போ டீ. ஆர். ஒ. தெரியாதா?’ என் முன் ஆவலோடு
“இல்லை’ என்று தலையசைத் தான் மாணவன். அதற்குப்பின் அந்த மாணவனேடு அவனல் கதைக்க முடியவில்லை. அவன் திரும்பி நடக்கத் தொடங்கி விட்டான். . . .
கலைக்கூட உள்வாசலைத் தாண்டும்போது பின்ன லிருந்து பெரும் சிரிப்போடு அதே குரல் திரும்ப வும் வந்தது.
அதே மாணவன் தான் கத்தினன்.
* ஹேய்! பஸ்கோலைத் தெரியுமா, பஸ்கோலை? அவனை எனக்குத் தெரியும்”
கத்திவிட்டு ஓவென்று திரும்பவும் அந்த மாண வன் சிரித்தான். முழுக் கேலி,

தேடல் 5
அவன் நிற்கவில்லை. வேகமாக நடந்தான். அவமானம் தாங்காயல் அவசரமாக நடந்தான். பஸ்கோலை அவனுக்கும் தெரியும். அவனேடு படித்த சமகாலத்தவனேதான். பஸ்கோல் ஒரு முழுக் கோமாளி. அவனது காலத்திலேயே ஒரு ஸ்தாபனமாகிவிட்டவன்.
காரை எடுத்துக்கொண்டு வேகமாகத் திரும்
பினன். வரும்போது இருந்த வேகம் கொஞ்சங்
கூட இப்போ இல்லை. அந்தக் கணமே அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும்போல் இருந்தது. ஆனல் முடியவில்லை. இன்னுமொரு காட்சி அவனுக்காகக்
காத்திருப்பதுபோல் எதிரே த்ெரிந்தது.
கலைக்கூடத்துக்கு முன்னலுள்ள கித்துள் மரநிழ லில் பலர் கூட்டமாகக் கதைத்துக்கொண்டு நின்ற
“னர். பொதுவாக எல்லோர் கையிலும் ஒரே ரக இதழ் இருந்தது. காரணம் என்னவென்று அறியக் காரை
விட்டு இறங்கிக் கூட்டத்தை நோக்கி அவன் நடக் கத்தொடங்கினன். ஆனல் விசயத்தை விசாரித் தறிந்தபோது அவனுல் அதை நம்பவே முடிய
ఐఉుడి).
நல்லசிவத்துக்கு ஒரு நினைவு மலர் வெளியிட்டி
ருக்கிருர்களாம்! நல்லசிவம் ஒரு கவிஞனும்! அந்த
நூற்றண்டின் கண்டுபிடிப்பாம்! சிங்களம், ஆங்கி லம் என்று மற்ற மொழிகளிலும் அங்கு மொழி பெயர்க்கப்பட்டு அவன் போற்றப்படுகிருளும்!
அவற்றைக் கேட்டபோது அவனுக்குச் சிரிக்க வேண்டும் போல்தான் இருந்தது. நல்லசிவத்துக்கு வேலை மேசை மடிப்புக்களில் கவிதைகள் எழுதுவது தான். எந்தப் பத்திரிகையிலுமோ புத்தகத்தி லுமோ நல்ல சிவத்தின் கவிதை ஒன்றும் வெளி

Page 30
52 புதுயுகம் பிறக்கிறது
வந்ததில்லை. ஏற்றுக்கொள்ளப் பட்டதுமில்லை. அவன் யூனியன் சங்க இதழில் ஆசிரியனுக இருந்த போது அவனிடமும் ஒரு பத்துக் கவிதைகளை நல்ல சிவம் நீட்டியிருக்கிறன். படித்தபோது முழுக்க ஆபாசம், அவற்றைத் தூரே வீசிவிட்டு அவற்றுக் குப் பதிலாக "இலக்கியமும் ஆபாசமும்’ என்று அப்படிப்பட்ட முயற்சிகளைக் கண்டிக்கும் முகமாக ஒரு கட்டுரையை அவனே எழுதிப் பிரசுரித்திருக் கிருன். இப்போ நல்லசிவம் ஒரு மேதாவியாம்! மேசை விரிப்புக்களிலிருந்து தேடித் தேடி எடுத்து நல்ல சிவத்தின் செல்வங்களைச் சேகரித்திருக்கிறர் களாம்! அவனுக்கு ஓவென்று சிரிக்கவேண்டும்போல் இருந்தது. ஆனல் அந்த உணர்ச்சி அதிகநேரம் நிற்கவில்லை. அவர்களைப் பார்த்துக்கொண்டு அங்கே நிற்க நிற்க சிரிப்புக்குப் பதிலாக ஆத்திரமும் அழு கையுந்தான் வருவனபோல் பட்டது. அவசரமாகக் காரை எடுத்துக்கொண்டு அவன் புறப்பட்டபோது அவன் அழுதேவிட்டான்.
கார் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆரம் பத்தில் அங்கே வர நினைத்தபோது இருந்த உற் சாகம் இப்போ கொஞ்சங்கூட இல்லை. எல்லைகடந்த ஒரு வெறுப்பு அவனை அங்கிருந்து துரத்திக்கொண் டிருந்தது. அவனுக்கு இப்போ ஒருநாளும் தான்
அங்கு வாழ்ந்ததாகவே தெரியவில்லை.
并

கோட்டை
அவனுககுத தெரியும் நிச்சயமாக அவ ளிடம் தன்னை விரும்பி வரவேற்கும் பார்வை ஒன்று இருந்தது என்று. மேலே ஒரு மெல்லிய எதிர்ப்பு இருக் கலாம். ஆனல் அது வெறும் பாவனை மட்டுந் தான். அடியில் அவள் அவனுக்காக ஏங்கிக் கிடந் தாள். 'நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நேராக, ஆனல் நிதானமாகத் தாக்கினல் கட்டா யம் கோட்டைக் கதவுகள் எல்லாம் தங்கள் பாட் டில் திறந்துவிடும். பின்னர் அவசரம் எதுவு மின்றி படிப்படியாய், கதவு கதவாய், அனுபவித்த வண்ணம் உள் நுழையலாம். அவனை வரவேற்று ஏற்றுக்கொள்ள உள்ளே அவளது உள்ளம் அவ னுக்காகக் காத்து விரிந்திருக்கும். நிச்சயம்.
ராஜியைப் பற்றிய தியாகுவின் கணக்கீடு அது தான். ராஜி சாரி உடுத்த பெண்ணல்ல. அதோடு யாரோ தூரத்துப் பெண்ணுமல்ல. தியாகுவின் மனைவி சரோஜாவின் அண்ணன் மகள் அவள். பதி னேழு அல்லது பதினெட்டு வயதை அப்போதுதான்

Page 31
5 ፋ புதுயுகம் பிறக்கிறது
எட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் அரைச் சட்டைக் காரி. அதனுல் சமூகத்தில் தானகப்பெற்ற அனுப வத்தையும் அறிவையும் விட சமூகம் அவளிடம் தாஞகத் திணித்த மரியாதை, கற்பு, பண்பு, கண் ணியம் என்பவைதான் அவளிடம் அதிகமாக இருந் தன. அவள் அவற்றைக் கிளிப்பிள்ளை போல் பாட மாக்கி வைத்திருந்தாள். அவள் படிக்கும் புத்தகங் களும் கதைகளுங்கூட அப்படித்தான். புத்தகங் களில் பெண்மை, சமூகசேவை, கற்பு என்று வரும் இடங்களிலெல்லாம் அவள் கோடிட்டுக் குறித்தும் வைத்திருந்தாள். உண்மை, அந்தளவு அசாதாரண அக்கறை அவற்றின் மேல் அவளுக்கு உள்ளேயுள்ள அக்கறையின்மையின் அறிகுறிகள்தான். ஆனல் அது அவளுக்கே தெரிந்திருக்க நியாயமில்லை. வெளியே கிளிப்பிள்ளைபோல் அவற்றை ஒப்புவிப்பதில்தான் அவள் அறிந்தளவில் சுய உணர்வு இருந்தது. அந்த நிலையில் அவளாகவே ஒரு நாளும் தாக்கியிருக்க
மாட்டாள். தியாகு தான் தாக்கவேண்டும்.
ஆனல் அவைதான் தியாகுவை மிக நிதான மாக இருக்கும்படி எச்சரித்தன. ராஜி, தியாகு வோடு படித்த அல்லது வேலை பார்த்த மற்றப் பெண்களைப்போல் பெரியவளாய் இருந்தால் அறி வில்லாவிட்டாலும் அனுபவத்திலாவது பெரியவ ளாய் இருந்திருப்பாள். அப்படிப்பட்டவர்களோடு பழகிக்கொள்வது மிக இலகு. எடுத்த எடுப்பிலேயே பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று ஒரு முடிவு கட்டிக்கொண்டு அதன் படி நடவடிக்கை எடுக்க லாம். அடுத்தவளுக்குப் பிடித்தால் இடைவிடாது தாக்கலாம். பிடிக்காவிட்டால் ஒரேயடியாய் விட்டு விடலாம், பின்னர் அவள் தானகவே வலிய வந்து தாக்கும்வரை, ஆளுல் ராஜியைப் பொறுத்தவரை யில் தியாகுவால் அப்படிச் செய்ய முடியவில்லை. தானக அவள் வந்து ஒருநாளும் தாக்கமாட்டாள்.

கோட்டை 55
அவளுக்கு அந்தளவு அனுபவமில்லை. தியாகுதான் தாக்கவேண்டும். அதோடு சீக்கிரமே தாக்கவேண் டும். இரண்டு கிழமைகளுக்குள் ராஜி திரும்பவும் தங்கள் வீட்டுக்குப் போய்விடுவாள். ராஜி உள்ளூ ரிலிருந்துவந்து வசதியாகப் பல்கலைக் கழகப் புது முகப் பரீட்சை எழுதுவதற்காக பட்டணத்தில் அவர்களோடு தங்கியிருந்தாள். இரண்டு கிழமைக் குள் திரும்பிவிடுவாள். அதுதான் தியாகுவுக்குப் பெரிய கஷ்டமாக இருந்தது. சீக்கிரம் தாக்க வேண்டும்; அவளின் படிப்புக்குப் பாதகமேற்படா மலும் தாக்கவேண்டும். உண்மை, தியாகு ஏதும் செய்யாமல் எந்த மனவேதனையும் இல்லாமல் சும்மா இருந்திருக்கலாந்தான். ஆணுல் ஒருவேளை ராஜியே அவனது தாக்குதலுக்காகக் காத்து எதிர் பார்த்திருந்தால்? அப்போ அவனது மெளனம் இயலாமையாகவும் கோழைத்தனமாகவும் தெரி Unrigs nt?
தியாகுவுக்கு அப்படித்தான் தெரிந்தது. அவ னைப்பொறுத்தவரையில் இந்த விசயங்கள் எல்லாம் வெறும் காமம் என்பதைவிட அதிகமாகக் கருத்துப் பொதிந்தவை என்பதுதான் அபிப்பிராயம். Sex ஐவிட Psych.ே சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு எவ் வளவு தூரம் நீ அடிமையாய் இருக்கிருய்? எவ் வளவுதூரம் அவற்றை எதிர்க்க உனக்குத் துணிவு இருக்கிறது? அவைதான் தியாகுவுக்கு முக்கிய மானவை. காமத்தைக் காமத்துக்காக அனுபவிப் பதில் அவனுக்கு விருப்பமில்லை என்பதல்ல அதன் அர்த்தம். ஆனல் அதற்குமுன் ஒருத்தனுக்குத் தனித்தன்மையும் விடுதலையும் தேவை. அவற்றுக் குப்பின்தான் காமத்தைக் காமமாக அனுபவிக்க லாம். காமம் மட்டுமல்ல எல்லாமே அப்படித்தான் என்பதுதான் அவனுடைய கருத்து. கடவுளைக் கட வுளாக அனுபவிப்பதுங்கூட அவனைப் பொறுத்த

Page 32
56 புதுயுகம் பிறக்கிறது
வரையில் அப்படி ஒரு விடுதலைக்குப் பின்னர்தான் முடியும் என்ற எண்ணம். தியாகு ஒரு புரட்சிவாதி. அவனது புரட்சி அவனுக்கே உரிய ஒரு தனிப் புரட்சி. அதனல் அவன் சும்மா இருக்க விரும்ப வில்லை. ஒரு வேளை ராஜி விரும்பலாம். இல்லை, உள்ளே அவள் நிச்சயமாக வி ரம்பத்தான் செய்கி ருள். அது அவனுக்கு நல்லாகத் தெரிந்தது. அந்த நிலையில் சும்மா இருப்பது கோழைத்தனந்தான். அதோடு ராஜி என்ற பாத்திரம் அவன் இதுவரை சந்திக்காத புதிய ஒரு போட்டியைத் தரும் ஒரு புதுப் பாத்திரம். அவனுக்கும் அவளுக்குமிடையே ஏறக்குறைய பத்து அல்லது பன்னிரண்டு வயது வித்தியாசமிருக்கலாம். அதோடு ராஜி அவனின் மருமகள் மனைவியின் அண்ணன் மகள்! சமூகத் தின் கட்டுப்பாடுகளும் சம்பிரதாயங்களும் ராஜியின் மூலம் விட்ட சவாலைப்போல் வேறு எப்போதும் தன்னை நோக்கி விட்டிருந்ததாகத் தியாகுவுக்குத் தெரியவில்லை. எனவே பின்னடிக்க அவன் விரும்ப வில்லை. தானகவே தாக்க விரும்பினன். ஆனல் எப்போது? எப்படி?
ஒன்றுமட்டும் தியாகுவுக்கு உதவியாக இருந் தது. ஏற்கனவே அவன் கணக்கிட்டுவிட்டதுபோல் உள்ளே அவள் அவனை விரும்பவே செய்தாள். அது மட்டும் நிச்சயம். தத்துவம், மனேவியல் எல்லாம் தாராளமாக அவன் வாசித்திருந்தான். அவனது மேசையில் அந்த வகைப் புத்தகங்கள்தான் அதிக மாகக் கிடந்தன. எனவே அதுமட்டும் அவனுக்குத் தாராளமாகத் தெரிந்திருந்தது. ராஜி உள்ளுக்குள் நிச்சயமாக அவனை விரும்பினுள். இனி, மேலேயுள்ள சம்பிரதாயத்தை உடைப்பது தான் பாக்கி. ஆனல் அது இலேசான காரியமல்ல. அது ஆழமான ஐஸ் கட்டி. கோட்டை. சமூகம் ராஜியிடம் எல்லா வழி களிலும் திணித்திருந்த, அவளும் எதிர்ப்பின்றி

கோட்டை 57
ஏற்றுக்கொண்டு கிளிப்பிள்ளை போல் ஒப்புவிக்கும் அந்தச் சம்பிரதாயங்களை, அந்த விறைத் த கோட் டையை வெகு நிதானமாக உடைக்க வேண்டும். அவசரம் அவனது நோக்கத்துக்கு உதவாது. ஒரு வேளை உதவினுலும் அவளுடைய படிப்புக்கு உத வாது. எது போனலும் தியாகு அதை மட்டும் பழு தாக்க விரும்பவில்லை. அவளின் படிப்பு. எனவே படிப்பு முடிந்தபின் தான் தாக்கவேண்டும். அதற் குப்பின் அவனுக்கும் அவளுக்கும் அது ஒரு பெரும் படிப்பாக இருக்கும். அவளைப் பற்றி அவனும் படிக்க லாம். அவனைப்பற்றி அவளும் படிக்கலாம் சோதனை முடிந்த பின் ஒரு பெரும் சோதனை. இருவருக்கும் ஒரு சோதனை. ஆமாம் தியாகுவுக்குந்தான்.
தியாகு அதுவுரையும் காத்திருந்தான். நேரங் கிடைக்கும போதெல்லாம் இப்போ அவனது நோக் கம் அந்தப் பெரிய சோதனைக்கு, அந்த பெரிய தாக்குதலுக்கு, தன்னைத் தயார் செய்வதுதான். ராஜியின் சின்னச் சோதனைக்கு இடையூறு விளைவிக் காமல் அவன் தன்னையும் அவளை யும் தயாரித்துக் கொள்ளத் தொடங்கினுன்.
அவன் வெல்லப்போகிருன் என்பது நிச்சய மாகச் சோதனை கிட்டுவதற்கு முன்பே தெரிந்தது. அதற்கு அறிகுறியாய் அன்ருெரு நாள் மாலை ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தேறியது.
ராஜி உட்கார வேண்டிய அடுத்த பாடத்துக்கு இன்னும் இரண்டு நாள் அவகாசம் இருந்தது. அதனல் ஓரளவுக்கு அவளால் இளைப்பாறவும் முடிந் தது. வெளி விருந்தையிலிருந்து அவள் கடலை கொறித்துக் கொண்டிருந்தாள், தியாகுதான்
AA-8

Page 33
58 புதுயுகம் பிறக்கிறது
வேலைமுடிந்து வந்தபோது வாங்கி வந்தான். தியாகு வின் மனைவி சரோஜா குசினிக்குள் கோப்பி தயாரித் துக் கொண்டிருந்தாள். தியாகு சாய்வு நாற்காலி யில் சாய்ந்த வண்ணம் தன் கையில் இருந்த கடலை ஒன்ருல் ராஜியை நோக்கி எறிந்தான்.
"ச்சிக், சும்மா இருங்கப்பா, உங்களுக்குப் பழக்க வழக்கமே தெரியாது” என்று கோபிப்பவள் போல் சொல்லிவிட்டு முகத்தைச் சுளித்தாள் ராஜி.
தியாகுவுக்கு அது பழகிப்போன ஒன்று தான் சொன்னவற்றுக்குரிய அர்த்தத்தில் காட்டிய அக் கறையைவிட தமிழுக்குச் சேர்த்த கொன்னையில் தான் அவளுக்கு அக்கறை அதிகம் என்பதும் அவ னுக்குத் தெரியும். அது ராஜியின் பள்ளிக்கூட பாஷன். எனவே முகச் சுளிப்புக்குப்பின் கொஞ்ச நேரம் சென்று வந்த சிரிப்பிலும் கடைக் கண் பார் வையிலுந்தான் தியாகு அக்கறை காட்டினன். கோட்டைக்குள்ளிருந்து வரும் ஒளிச் சமிக்ஞைகள் அவைதான்.
தியாகு இன்னுமோர் கடலையை எடுத்தெறிந் தான்.
அது மேற்சட்டையிற் பட்டுத்தெறித்த இடம் மிகப் பாரதூரமான இடம்.
ராஜி இந்த முறை கடுமையாகக் கோபித்தாள். ஆனல் தியாகுவை அவளால் நேராகப் பார்க்கமுடிய வில்லை. கடுமையான கோபத்துக்கிடையே அடக்க முடியாத வெட்கமும் சிரிப்பும் சேர்ந்து எப்படியோ பிய்த்துக் கொண்டு வந்து விட்டன.
தியாகு சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்ப வில்லை. தொடர்ந்து தாக்கவேண்டும், தியாகு சுய

கோட்டை 59
மனேவசியம் செய்பவன்போல் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். தொடர்ந்து தாக்கவேண் டும். அவை ஆரம்ப நடவடிக்கைகள்தான். These are only skirmishes. 2G96āv y6o 6 sm. -- Go 5 nrri jög நடைபெரு விட்டால் Uu607 Abgyli போய்விடும். மெசின் துப்பாக்கியை அழுத்துபவன் போல் பட பட வென்று தியாகு கதையை நகர்த்தினன்.
‘ராஜி, அந்தா அந்தக் கடலை அப்படியே ஒட் டிக் கொண்டிருக்கு!’
அது அடுத்தகணம் வேலை செய்யாமலில்லை.
வெட்கத்தையும் சிரிப்பையும் முகச் சுளிப்பை யும் விட்டுவிட்டு ' எங்கே?' என்று கேட்டவாறு அவளும் அங்கே பார்வையைத் திருப்பினள்,
*அந்தா, அந்தா ஒட்டிக்கொண்டிருக்கு!"
தியாகு கையை நீட்டினன்.
அவனுக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும் நிச் சயமாகக் கடலை அங்கே இல்லை என்று, அவன் கை நீட்டியது வெருென்றைக் காட்டி. அவளும் அதை உணராமலில்லை. இருந்தாலும் ஒன்றும் தெரியாத வள்போல் சட்டையைக் கையால் தட்டி விட்ட வண்ணம் ‘எங்கே, இல்லையே!" என்ருள் அவள்.
“அந்தா இருக்கு!” என்று தொடர்ந்து கை நீட்டின்ை தியாகு.
*ச்சீ. இல்லை” என்று திரும்பவும் தட்டினுள் ராஜி.

Page 34
60 புதுயுகம் பிறக்கிறது
‘நான் எடுத்துக் காட்டவா? எடுத்துக் காட்டின என்ன தருவேங்க?" w
நிச்சயமாக அது ஒரு படி முன்னேற்றம். தியாகு அந்தக்கணமே அதை உணர்ந்தான். ஆனல் எதிர்த் தாக்குதல் எப்படி வருமோ என்ற பயமும் அதேசமயம் இல்லாமலில்லை.
"ஆ, சரி காட்டுங்க பாப்பம்?’ என்று வெட் கத்தை மிக வெற்றிகரமாக அமுக்கிக் கொண்டு ஏதோ கடலையைப் பற்றித்தான் இன்னும் கதை நடப்பதுபோல் பதில் தாக்குதல் கொடுத்தாள்
ராஜி.
கடலை பட்ட இடந்தான் முக்கியமா? கதையில் தியாகு விழுத்திவிட்ட திருப்பந்தான் முக்கியமா? கட்டெல்லாம் அவிழ்ந்து மொட்டு விரிந்து அப்படி வரவேற்கிறதே!
உள்ளுக்குள் விழுந்துவிட்ட ஒர் இனந்தெரியாத படபடப்புடன் தியாகு அதைக் கணித்துக் கொண் உான். ஆணுல் அவன்தான் இப்போ தயாராய் இருக்கவில்லை. அந்தக்கணமே அவன் போய்த்தொட் டுக் காட்டியிருக்க வேண்டும். பிடித்துக் காட்டியி ருக்க வேண்டும். பின்பு சிந்தித்துப் பார்க்கும்போது அங்குதான் அவன் விட்ட ஆரம்பப் பிழை இருந்தது என்று நினைவுக்குவரும். ஆனல் அப்போது அது நினை வுக்கு வரவில்லை. அப்போது அவன் நேரடித் தாக் குதலுக்கு இன்னும் தயாராய் இருக்கவில்லை. தொடர்ந்து Skirmishes யையே நடத்தினன்.
*நான் எடுத்துக் காட்டுவன். ஆன நீங்கதான் தோத்துப்போய் எல்லாரட்டையும் அதைச் சிணுங் கிச் சிணுங்கிச் சொல்லுவேங்கள்’ என்று கேலி செய்தான்.

கோட்டை 6
"அப்படியெல்லாம் நானில் ல, ஆ?’’
ராஜி கோபிப்பவள் போல் பதில்ளித்தாள். அந்த *ஆ’ என்ற இழுப்பை தியாகுவால் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. அது ராஜியிடம் அவன் அடிக் கடி காணும் ஓர் இழுப்பு. ஆனல் ராஜிக்கு அத் தக் கவலை ஒன்றும் இருக்கவில்லை. தியாகுவின் G35 Gó) அவளை நல்லாகச் சுட்டிருக்கவேண்டும். அதைப் போக்க அவள் தானகவே தாக்குதலை நடத்தினலும் நடத்திவிடுவாள்போல் இருந்தாள்.
"சத்தியமாச் சொல்லமாட்டேங்க?" தியாகு திரும்பவும் கேட்டான். அவனுக்கு இன்னும் பாது காப்புத் தேவைப்பட்டது.
*சத்திய மென்னத்துக்கு? நான் சொன்னச் சொன்னதுதான்'
ஆஞல் தியாகுவுக்கு அதுமட்டும் தனியே கேட்க வில்லை. கூடவே மூலையில் "இச்இச்” என்று சொன்ன பல்லியும் கேட்டது. அது பல்லிதானு?
தியாகுவுக்குப் பல்லி சொன்னதில் நம்பிக்கை இருக்கவில்லை. ராஜி சொன்னதில் தான் முழு நம் பிக்கையும் இருந்தது. நேரடித் தாக்குதலுக்கு அதைவிட நல்ல சந்தர்ப்பம் வேறு கிடைக்காது என்று இப்போ அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. இருந்தாலும் ஏனே அவனல் எழுந்திருக்க முடிய வில்லை. பல்லி சொல்லிவிட்டது என்ற பயமா? தெரியாது. ஆனல் வேறு ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. வெளி விருந்தையில் நடப்பதை யாரா வது ருேட்டிலிருந்து பார்த்து விட்டால்?
தியாகு எழுந்திருக்கவில்லை.

Page 35
62. புதுயுகம் பிறக்கிறது
முதுகை மட்டும் உயர்த்தி கையை நாற்காலியின் கையில் அடித்துச் சத்தியம் மட்டும் செய்தான்.
* சத்தியமா ராஜி, நீங்க போறத்துக் கிடையில் அதை எடுத்து நான் காட்டாட்டிப் பாருங்க. சத்தி uu Lorr!**
ராஜி மேலு தடைக் கீழுதடால் அமத்திச் சிரிப் பையும் வெட்கத்தையும் அடக்கிக்கொண்டு தலை யாட்டினுள், இன்னும் ஏதோ கடலையைப்பற்றித் தான் கதை நடப்பது போல் பாவனை செய்து கொண்டு.
“Ff, ur LGLD?”
தியாகுவுக்குத் திருப்தியாகவிருந்தது. அதோடு இன்னும் அவளுக்கு இரண்டு பாடங்கள் முடியாமல் இருந்தன என்ற நினைவும் அவனது நிதானத்தை நியாயமாக்கியது. எல்லாவற்றுக்கும் முடிவாக வெகு சீக்கிரத்தில் சரோஜாவும் கோப்பியோடு அங்கு வந்து விட்டாள். எனவே எல்லாவகையிலும் கடைசி நாளுக்காகக் காத்திருப்பதே அவனுக்குச் சரியென்று
ul. L-gil.
சோதனை ஒருபடியாக முடிந்துவிட்டது. அதைக் கொண்டாடுவதற்காக இன்னும் இரண்டு நாட்கள் அங்கேயே கழித்துவிட்டு அதற்குப் பிறகு தான் ஊருக்குப் போக நினைத்திருப்பதாக ராஜியும் தன் அத்தைக்குச் சொன்னுள். தியாகுவுக்குக் கேட் கக்கூடியதாகவே சொன்னுள். தியாகுவுக்கு அவளின் நோக்கத்தை யூகிக்க முடியாமலில்லை. அவனது யூகம் சரியென்று நிரூபிப்பதுபோல் அன்று மாலை தியாகு தன்னந் தனியாய் தன் மேசையருகில்

கோட்டை 63
இருந்தபோது அவனைத் தேடி அவள் தானகவே வந்தாள்.
*"மாமா, அந்தப் புத்தகம் தாறெண்டேங்களே, எங்க இனித் தாருங்கவன்?"
புத்தகத்தைக் கேட்கிருளா கடலையைக் கேட் கிருளா?
தியாகுவும் அவளையே காத்திருந்தவன் போல் கதிரையோடு அவள் பக்கம் திரும்பி கண்களைச் செல்லமாக உயர்த்திப் பகிடியாகக் கேட்டான் ** எந்தப் புத்தகம்?"
"அந்தப் புத்தகம் . தாறெண்டங்களே ஒரு கதைப் புத்தகம்.”
ராஜி இழுத்தாள். ஆனல் அவள் முகத்தில் நின்ற வெட்கத்தையும் பதட்டத்தையும் அவன் கவனிக்காமலில்லை. பவுடர் பூசிப் பொட்டும் வைத்து நேர்வகிடு விட்டிழுத்து, பச்சைப்புள்ளி விழுந்த ஸ்கேர்ட்டோடும் அதற்கேற்ற சட்டையோடும் அவள் நின்ற தோற்றம் மிகமிக எடுப்பாக இருந் தது. ஆனல் முகத்தில் நின்ற அந்தப் பதட்டம்?
*எந்தப் புத்தகம்? புத்த கமா அல்லது கட லையா?” என்று சிரித்துக் கொண்டு கேட்டான் தியாகு.
அவளும் சிரித்தாள். ஆனல் அடுத்த கணம் அவள் முகம் சிவந்துவிட்டது.
"இல்லப் புத்த கந்தான். நீங்க ஒரு கதப்புத்த கம் தாறெண்டேங்களே, தாறெண்டாத் தாருங்க இல்லாட்டி நான் போறன் .”

Page 36
66 புதுயுகம் பிறக்கிறது
அடுத்த கணம் தான் விட்ட பிழையைத் தியாகு உணர்ந்து கொண்டான். அதைச் சொல்லிக் காட்டி யிருக்கக் கூடாது. அவளோடு சேர்ந்து அவனும் நடித்திருக்கவேண்டும். நடித்துக் கொண்டே கோட் டைக்குள் புகுந் திருக்கவேண்டும் , கோட்டை அப் படியே கோட்டையாக ஒட்டையின்றி இருப்பதா கவே அவனும் ஏற்றுக்கொண்டு, அவனும் நடித் துக் கொண்டு உள்ளே போயிருக்க வேண்டும். ஆமாம் அவனுடைய புரட்சியைவிட அவளுக்கு அதிகம் தெரிந்திருந்தது
"ஒ யேஸ், லொலிட்டாதானே?’ என்று உண் மையாகவே அவளைத் தானும் ஏற்றுக்கொள்பவன் போலவே அடுத்த கணம் மேசையிலிருந்து புத்த கங்களைக் கிளறி அவள் கேட்ட புத்தகத்தைக் கையில் எடுத்தான் தியாகு. Lolita! எவ்வளவு பொருத்தம்!
ராஜி அதைப் பறிக்க முயன்ருள். ஆனல் தியாகு விடவில்லை. கொடுக்காமலே அதைக் கையில் வைத் துக்கொண்டு கேட்டான்.
*புத்தகம் தாறன், ஆணு நீங்க எனக்கு என்ன தருவேங்க?"
அடுத்தகணம் ராஜியின் முகம் பழைய நல்ல நிலைக்கு மாறிவிட்டது. அவள் சிரித்துக்கொண்டு, 'நீங்க முதல்ல புத்தக த்தத் தாருங்க, பிறகு.” என்று செல்லமாகக் கெஞ்சினுள்.
"பிறகு?’ தியாகு கள்ளமாகச் சிரித்தான்.
ராஜியின் முகத்திலும் அதே கள்ளச் சிரிப்புத் தொற்றிக்கொண்டது.

கோட்டை 65
தியாகு அதற்குப் பின்பும் தாமதிக்க விரும்ப வில்லை. ஆனல் ஆரம்பத்தில் ராஜியின் முகத்தில் நின்ற பதட்டம் இப்போ அவனிடத்தில் தாவிவிட் டிருந்ததை அப்போதான் அவளுல் உணரமுடிந்தது, கூடவே யாரோ வெளியே வருவதுபோன்ற ஒரு காலோசை, உண்மையில் யாராவது வருகிருர்களா? தியாகு காதைக் கொடுத்துக் கேட்டான், ஒருவரு மில்லை. அடுத்த கணம் ராஜியின் கையைப் பிடித்து இடையைத் தொட்டு அவளைத் தன் பக்கம் இழுத்து விட்டான்.
“ “Spiunt si b r fr ங்க!" என்ா செல்லமாகச்
சிணுங்கினுள் அவள்.
அது சும்மா. தியாகுவுக்கு அது நல்லாகத் தெரிந்தது.
ஆனல் அதே சமயம் திடீரென்று தியாகுவுக்குப் பழைய காலடியோசை தொடர்ந்து கேட்கத் தொடங்கியது. யாரோ அறைக்குள் வருவதுபோன்ற ஒசை. அதுமட்டும் சும்மாவாகத் தெரியவில்லை.
அடுத்தகணம் ராஜியை விட்டு விட்டு மேசைப் பக்கம் திரும் பிக் கொண்டான் தியாகு. அவனல் கதைக்கக்கூட முடியவில்லை.
"தாருங்க புத்தகத்தை?’ என்ருள் ராஜி.
அதை அவள் கேட்டிருக்கத் தேவையில்லை. அது அப்படியே மேசையில் கிடந்தது. இருந்தாலும் தியாகுவால் எதுவும் கதைக்க முடியவில்லை. புத்த கத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு பேசாமல் ஏதோ படிப்பவன் போல் மேசையில் கிடந்த தன் புத்த
AA - 9

Page 37
66 புதுயுகம் பிறக்கிறது
கத்தை விரித்துப் பாசாங்கு செய்யத் தொடங்கி ஞன்.
ராஜி புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டாள். மெல்ல மெல்லத்தான் போனள், ஆனல் வெளியே இருந்து உள்ளே மட்டும் யாரும் வரவில்லை. அப்போ வெளியே கேட்ட காலடி ஓசை அவனுடைய வெறும் மனப்பிரமைதான?
தியாகுவுக்கு அடுத்தகணம் மனம் ஒடித் தொய்ந்துவிட்டது. எவ்வளவு முட்டாள்தனமாக அவன் எல்லாவற்றையும் பழுதாக்கி விட்டான்! அவன் எதிர்த்த கட்டுக்களிலிருந்து அவனே இன் னும் உண்மையாக விடுபடவில்லை, அப்படித்தானே?
சிறிதுநேரம் அப்படியே இருந்துவிட்டுத் தியாகு ராஜியைத் தேடி வெளியே போனன். அவனது நெஞ்சு ஏனே அசாதாரணமாக இடித்துக்கொண் டிருந்தது. குசினித் தூணேடு சாய்ந்த வண்ணம் ராஜி நிம்மதியாக Lolita வாசித்துக்கொண்டிருந்தாள். அவன் அங்கு போனதைக் கொஞ்சமும் கவனியா ததுபோன்ற பாவனை, தியாகு அப்போது கதைத் திருந்தால் அவளும் கதைத் திருப்பாள். நிலையும் சீக்கிரமாகவே சுமுகமாக மாறியிருக்கும். தியாகு வுக்கு அது வடிவாகத் தெரிந்தது. ஆனல் ஏனே அவனுல் கதைக்க முடியவில்லை. அவளுடைய பெய ரைக்கூட அவஞல் அப்போது உச்சரிக்க முடிய வில்லை. எதாவது கதைக்கலாம் என்று அவன் முயன்றபோது வாயில் வந்தது அவனது மனைவி யின் பெயர்தான்.
குசினிக்குள்ளிருந்து சரோஜாவின் குரல் பதி லாக வந்தது. தியாகு என்ன செய்வதென்று தெரி யாமல் உள்ளேபோனன். சரோஜா உள்ளே மீன் பொரித்துக் கொண்டிருந்தாள்.

கோட்டை 67
“என்ன கோப்பி வேண்டுமா?’ சரோஜா தான் கேட்டாள்.
‘உஹ"ம்" என்று ஊமைப் பாசையில் இழுத்து விட்டு தியாகு வெளியே வந்தான். அவனுக்கு ஒரு நிம்மதி, ராஜி எதைப்பற்றியும் அவளிடம் சொல்ல வில்லை.
இருந்தாலும் ராஜியைத் தாண்டிப் போகும் போது அவனுல் அவளைப் பார்க்கவும் முடியவில்லை. அவளருகில் நின்று தாமதிக்கவும் முடியவில்லை. வேகமாக வெளியே வந்தான். வந்த பின் பழைய ւմ էգ Այւն தன் மேசையருகில் உட்கார்ந்தவாறு ராஜிக்காகக் காத்திருந்தான். ராஜி வராவிட்டா லும் இன்னும் கொஞ்சநேரம் சென்ற பின், அவச ரத்தில் பிழையாகக் கிளறப்பட்ட மோதல்கள் அடங்கியபின், புதிய சந்தர்ப்பமொன்றை அவன கவே உருவாக்கலாம். தியாகு அதை நிச்சயப்படுத் திக் கொண்டான். இனி Skirmishes எதுவும் தேவை யில்லை. நேரடித் தாக்குதல். அதுதான் முறை. அதைத் தான் அவன் எப்போதோ செய்திருக்க வேண்டும். தியாகு அடுத்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான்.
ஆனல் அடுத்த சந்தர்ப்பம் வரவில்லை. ராஜி யும் அந்தப் பக்கம் வருவதாகத் தெரியவில்லை. தியாகு வெகு நேரம் காத்திருந்து விட்டு குசினிப் பக்கம் திரும்பவும் புறப்பட்டான். இந்த முறை ராஜி முன்பைப்போல் தூணுேடு காணப்படவில்லை, உள்ளே இருந்து யாரோ அழுவதுமட்டும் கேட் டது!
தியாகுவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. குசினி வாசலில் போய் எட்டிப் பார்த்தான். சரோஜாவின்

Page 38
68 புதுயுகம் பிறக்கிறது
மடியில் தலையைப் புதைத்த வண்ணம் ராஜி விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள்.
*" என்ன சரோ?' என் முன் தியாகு ஒன்றும் விளங்காத வணுய்.
‘சரி, சரி, நீங்க போங்க” என்று சீறி விழுந் தாள் சரோஜா.
"ஏன், என்ன சரோ?' என்ருன் தியாகு திரும் ւյ6յւք,
“என்னவா? ஒண்டும் தெரியாத மாதிரிக் கேக்கி றேங்க? ராஜி இப்பயே ஊருக்குப் போகோணுமாம்”
“6 67 ?'
“ஏஞ? எனக்கு ஆத்திரந்தான் வருகுது. சத்தி தியமா இந்த இடத்த விட்டு மட்டும் போயிருங்க"
சரோஜாவின் கோபம் அவளைப் பொறுத்த வரை யில் நியாயமானதாகவே பட்டது. கல்யாணங்கட்டி ஒரு வருடமாவதற்குள்ளேயே தியாகு கட்டை மீறி விட்டான் என்பது அவளுடைய ஆத்திரம் அதுவும் அவள் எதிர்பாராதவிதத்தில்.
தியாகு ஒன்றும் சொல்லமுடியாத வணுய் அப் படியே நின்றுவிட்டுப் பேசாமல் வெளியே நடந்தான். இனி அவனுல் ஒன்றும் செய்யமுடியாது. முற்ருக அவன் தோற்றுவிட்டான். முழுத்தோல்வி. எல்லாம் அவனுடைய குற்றம். கோட்டைக் கதவுகளை எல் லாம் காவலாளி தானகவே திறந்துவிட்டு வாவென்று வரவேற்றபோது மடைத்தனமாக அவன் தடுமாறி நடுங்கி காவலாளியிடமும் தன் குற்ற உணர்வை ஏற்றிவிட்டான். அத்தோடு வெளியே போய் தெரி

கோட்டை 69
யாத்தனமாக சரோஜாவின் பெயரைக் கூப்பிட்டு அந்தக்களவை அவனே அம்பலப்படுத்திவிடுபவன் போல் பயத்தை பூட்டும் அளவுக்கு முட்டாள்தன மாக நடந்துவிட்டான். இனிக் கதவுகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. தான் விட்ட பிழையையும் மறைப்பதற்காக வட்டியும் குட்டியுமாய் கடமை, கண்ணியம், காப்பு எல்லாவற்றையும் பற்றி இனி அத்தக் காவலாளி கட்டுக்கட்டாய்ச் சொல்லித் தீர்ப்பாள். கதவு இனி ஒரு நாளும் முன்போல் திறபடாது. ஆனல் அதற்காக மற்றவர்களிடம் தன்னை நியாயமாக்க அவன் விரும்பவில்லை. தியாகு தன்னை மட்டும் திட்டிக் கொண்டான், திருத்திக் கொண்டான். ராஜிமீது அவன் கோபிக்க விரும்ப வில்லை. அங்கே கதவடைபட்ட கோட்டைக்குள்ளே அவனுக்காகச் சிம்மாசனம் சதா விரிந்திருக்கத் தான் செய்யும் . ஆனல் அதை அடைவதற்கு முதல் தியாகு தன்னைச் சுற்றியுள்ள கோட்டையைத் தகர்க்கவேண்டும். .
தியாகு தன் மேசையை நோக்கி நடந்தான். நாளைக்கு ராஜி அங்கு நிச்சயமாக இருக்கமாட்
டாள். வெறும் புத்தகங்கள்தான் கிடக்கும்.
★

Page 39
இரத்தம்
‘இன்னும் இந்தப் பு- அவங்கட
SDGIT . . . . . . போருங்கள்!”
சோமு. ஒருக்கால் கூனிக் குறுகினன். உள்ளத் தாலும் உடலாலும் எல்லாவற்ருலும் ஒரு கணம் தடுக்கி விழுந்துவிட்டது போன்ற ஒரு நிலை. ஒரு கணத் திகைப்புக்குப்பின் அவனை அறியாமலேயே அவன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டான். வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. தூரத்திலும் யாரும் வரவில்லை. அது அவனுக்கு ஒரு வகை நிம் மதியைக் கொடுத்தது. ஆனல் அது அந்தத் தடுக்க லின் நோவை, விழுந்தெழும்பியதினுல் ஏற்பட்ட வெட்கத்தைத் தனியே அனுபவிக்கத் தான்.
கமலம் அவனைத் தாண்டி அப்பால் போய் விட்டாள். ஆனல் அவள் பேசியவை அவனைச் சுற் றியே இன்னும் நின்றன. பச்சையாக நின்றன. சோமு அவற்றை ஒருக்கால் தன் வாயில் மீட்டிப் பார்க்க முயன்றன். முடியவில்லை. வாயில் வருவதற்கு

இரத்தம் 7
முன் நினைவில் வரும்போதே நிர்வாணமாகிவிட்ட ஒரு கூச்சம் அவனைக் குறுகவைத்தது. எப்போதா வது இடுப்பிலிருந்து கழன்று விழப்போகும் சாரத் தைக் கைதுரக்கும் போது கூடவரும் உடலின், உள் ளத்தின் ஓர் குறுக்கம். அவனுல் முடியவில்லை. அவ னுக்கு அவை பழக்கமில்லை. அவன் வளர்க்கப்பட்ட விதம் அதற்கு மாரு னது. சின்ன வயதில் இரத்தின புரிக்கு அவன் படிக்கப் புறப்பட்டபோது ஆச்சி அவனுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொடுக் கும் புத் திமதிகள் அப்போது நினைவுக்கு வந்தன. அப்பு நீ மரியாதையா நடக்கோணுமப்பு. மரியா தை யாப் பேசோணும். கெட்ட பேச்சுப் ப்ேசக் கூடாது, என்னப்பு? நீங்கள் நாங்கள் எண்டுதான் எவரோடும் பேசோணும். மற்றப் பொடியளோடு சேந்து விளையாடித் திரியக்கூடாது, கெட்ட பழக் கங்கள் பழகக்கூடாது. நல்லாப் படிச்சு மரியாதையா வரோணும், என்னப்பூ?
ஒவ்வொரு சமயமும் ஊரிலிருந்து புறப்படும் போதெல்லாம் அதுதான் ஆச்சியின் வாயிலிருந்து அடிக்கடி வரும் உபதேசம். அவற்றைச் சொல்லும் போது அவனது முகத்தைத் தடவிவிட்டுக்கொண்டே தன் தலையை ஆட்டி ஆட்டி ஆச்சி சொல்லும் விதத்தை இப்போதும் அவனுல் நினைத்துப் பார்க்க முடிந்தது.
ஆச்சி ஊட்டிய பால், ஆச்சி தீத்திய சோறு என்பனபோல் ஆச்சி வகுத்த அவனுடைய வாழ்க்கை அது. அது அவனை என்றுமே கைவிட்டதில்லை. இரத்தினபுரியில் அப்பரின் கடையில் நின்று படித்த போதும் அதற்குப்பின் இப்போ கிளறிக்கலில் எடு பட்டு அதே ஊரில் வேலை பார்க்கும் போதும் அங்குள்ளவர்கள் அவனைப்பற்றிக் கூறுபவை அதற்கு அத்தாட்சிகள். தங்கமான பிள்ளை கந்தையர் முத

Page 40
72 புதுயுகம் பிறக்கிறது
லாளியற்ற மகன் இருக்குதே அதுதான் பிள்ளை! அவனே தன் சொந்தக் காதால் அவற்றைக் கேட் டிருக்கிருன். அப்படி வளர்க்கப்பட்டதினுல்தான இப்போ கமலம் சொன்னதை அவனுல் திருப்பிச் சொல்ல முடியாமல் இருந்தது?
ஆனல் அதுதான் காரணமென் ருல் கமலத்தால் கூட அப்படிப்பேச முடியாதே! சோமுவுக்கு ஆச் சரியமாய் இருந்தது. அவனைவிட வித்தியாசமாய் கமலம் வளர்க்கப்படவில்லையே! அவனைப் போலத் தானே அவளும் வளர்க்கப்பட்டாள்! அவளின் அப் பர் கார்த்திகேசரும் கொழும்பில் ஒரு முதலாளி. கந்தையரை விடப் பெரியமுதலாளி. ஏன், கமலத் தின் ஆச்சியும் அதே தங்கந்தானே? சோமுவுக்கு வேறு நினைவுகளும் தொடர்ந்தன. அவனைப்பற்றி இரத்தினபுரிச் சோற்றுக்கடையில் ஒவ்வொருவரும் புகழ் கிருர்கள் என்ரு ல் கமலத்தை ஊரில் ஒன்ப தாம் வட்டாரத்திலுள்ள ஒவ்வொருவரும் புகழ்ந் திருக்கிருர்கள். அவனே அதைக் கேட்டிருக்கிருன் , அதுமட்டுமல்ல. அப்படி க் கேட்கும்போது அவனுக் குத் தன்னைப் பற்றிய நினைவுதான் அடிக்கடி வரும். தங்கமான பிள்ளை. சோற்றுக்கடையில் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அப்போ கமலமும் அவனும் ஒரே வர்க்க மா? ஆமாம், அப்படித்தான் இருக்கவேண்டும். அப்படித்தான் அவன் நினைத்திருக் கிருன். அதே வர்க்கம், அதே கலாசாரம் .
எது யாழ்ப்பாணக் கலாசாரம் என்று சொல் லப்படுகிறதோ அதைத் தன் சொந்தக் கலாசார மாக வைத்திருக்கும் அந்த மத்தியதர வகுப்புக்கே உரிய பாணியில் எப்படி சோமு வளர்க்கப்பட் டானுே அப்படித்தான் கமலமும் வளர்க்கப்பட்டாள். சோமுவுக்கு இன்னும் அந்தக் கலாசாரத்தின் தரத் தில் சந்தேகம் ஏற்படவில்லை. சந்தேகம் ஏற்படும்

இரத்தம் t 73
என்ற நினைவே அவனுக்கு இல்லை. ஒன்பதாம் வட் டாரத்திலிருந்து பத்தாம் வட்டாரத்துக்கு பஸ்ஸுக் காக நடந்துவர முன் அடுத்தவளவில் உள்ள ஐயனுர் கோயிலில் கும்பிட்டு விட்டு ஆச்சியையும் கொஞ்சி விட்டுப் புறப்படும்போது வட்டமாய் உடைந்த தேங்காய்ப் பாதிகளைக் கையில் வைத்துக்கொண்டு *பத்திரமாய்ப் போய்வாப்பு" என்று வழியனுப்பிய அந்த உருவம் அவன் நெஞ்சைவிட்டு' என்றுமே மறையாது. அது இருக்கும் வரைக்கும் யாழ்ப் பாணக் கலாசாரத்தில் அவனுக்கிருக்கும் நம்பிக் கையும் போகாதென்றே அவனுக்குப்பட்டது. எப்படி அவனது ஆச்சி அந்தக் கலாசாரத்தின் உருவமாகத் தெரிகிறளோ அப்படித்தான் கமலமும் அவனுக்கு ஒரு காலத்தில் தெரிந்தாள். தலைகுனிந்து மண வறையில் பொன்னம்பலத்துக்குப் பக்கத்தில் அவள் இருந்த காட்சி சோமுவுக்கு இன்னும் நினைவிருக் கிறது. கழுத்தில் கிடந்த தங்கக் கொடியின் பின்ன ணியில் பொலிந்து சிரித்த முகத்தோடு அவனைக் காணும் போதெல்லாம் ‘எப்படித் தம்பி?’ என்று அவள் விசாரிப்பது இன்னும் அவனின் நினைவை விட்டு மறையவில்லை. அவளைப்போலத்தான் இள மையில் அவனது ஆச்சியும் இருந்திருப்பாள் என்று அவன் நினைத்திருக்கிருன், ஆச்சியைப்போலத்தான் கமலமும் பிற்காலத்தில் வருவாள் என்று அவன் கற்பனை செய்திருக்கிருன். ஆனல் கமலம் அப்படி வரவில்லை. அவள் இப்போ பேசிக்கொண்டு போனது போல் அவனது ஆச்சி ஒருநாளும் பேசியதேயில்லை.
கமலத்துக்குப் பைத்தியமா?
ஊர் அப்படித்தான் சொல்கிறது. பொன்னம் பலம் செத்தபின் அவள் அப்படி ஒருகோலத்தில் தான் திரிகிறளாம். வீட்டில் இருப்பதில்லை. வடி
AA-10

Page 41
74 புதுயுகம் பிறக்கிறது
வாக உடுப்பதில்லை. சரியாகச் சாப்பிடுகிருளோ தெரியாது. இப்போ எவ்வளவோ மெலிந்து விட் டாள். முன்பு பூரித்துத் தெரிந்த முகம் இப்போ எவ்வளவு கோரமாக இருக்கிறது! வைத்தியம் எது வும் பலிக்கவில்லை. கல்யாணம் செய்யவும் விரும்ப வில்லை. எங்கெல்லாம் திரிகிருளோ தெரியாது. யார் வீட்டில் படுக்கிருளோ என்னென்ன செய்கிருளோ தெரியாது. வீட்டில் அவளைக் கட்டிவைத்துக் கூடப் பார்த்திருக்கிருர்களாம். ஆணுல் முடியவில்லை. அப் படியெல்லாம் அவளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக் கிருன். பார்த்ததில்லை. எவ்வளவோ நாட்களுக் குப்பின் இன்றுதான் சோமு அவளைப் பார்த்திருக் கிருன். அதனுல்தான் தூரத்தில் வரும்போதே அவன் சிரிக்கமுயன்ருன், ஆனல் அவள் அடை யாளம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மாருக அப்படிப் பச்சையாகப் பேசிக்கொண்டு போகிருள்.
சுத்தப் பைத்தியம்! ஆனல் சுத்தப் பைத்தியம் என்ருல் அவள் அப்படிப் பேசியிருக்கமாட்டாளே! சோமுவுக்கு அது நெஞ்சை உறுத்திற்று. அவள் சொன்னதில் உண்மை இருந்தது. அதுதான்! அவ ளைப் பைத்தியம் என்று தட்டிக்கழிக்க அவனல் முடியவில்லை. ஏதோ ஒன்று பிழைப்பதுபோல் பட் டது. அவளிலும் குற்றமில்லை தன்னிலும் குற்ற மில்லை என்று அவனல் நியாயமாக்கிச் சரிக்கட்டல் செய்து தப்பமுடியவில்லை. அவள் சொன்னதில் உண்மை இருந்தது, இருக்கிறது! சோமுவுக்குத் திரும்பவும் ஒரு குறுக்கம். உண்மையில் நான் ஆரம் பத்தில் வெட்கப்பட்டது அவள் ஊத்தையாகப் பேசிவிட்டாள் என்பதற்காகவா அல்லது உண்மை யைச் சொல்லிவிட்டாள் என்பதற்காகவா? அல்லது இரண்டுக்குமாகவா?
சோமுவால் எதையுங் கண்டுபிடிக்க முடிய

இரத்தம் 75
வில்லை. பயமா? தெரியாது. ஆனல் பழைய நினை வுகள் ஏனே வேண்டாமலே ஓடிவந்தன.
கமலமும் போயிருக்கிருள். ஆமாம் இப்படித் தடபுடலாக உடுத்துக்கொண்டு பஸ் ஏறிப்போயி ருக்கிருள். பாணந்துறை அங்குதான் பொன்னம் பலம் கடை வைத்திருந்தான். புதுமுதலாளி, புது மாப்பிள்ளை. நான்கு வருடங்களுக்கு முன் தானே அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்? ஆமாம் நான்கு வருடங்களுக்கு முன்புதான். நான்கு வருடங்களால்தான் கமலம் சோமுவுக்கு மூப்புங் கூட. கல்யாணம் நடந்தபோது சோமு கிளறிக் கலில் எடுபடவும் இல்லை. ஊரில்தான் நின்றன். கல்யாண வீட்டுக்கும் போயிருக்கிருன். அவனுக்கு எல்லாம் நினைவிருக்கிறது. தலைகுனிந்து மணவறை யில் பூக்கொத்துத் தெரிய கமலம் அழகாக உட் கார்ந்திருந்தாள். அதற்குப்பின் அடுத்த மாதமே அவனைப் பொன்னம்பலம் கூட்டிக்கொண்டு போய் விட்டான். பாணந்துறையில் வீடெடுத்து வைத்தி ருப்பதற்காக. ஆணுல் பாவம் எத்தனை காலம் இருந்தார்கள்?
சோமுவுக்கு அதற்குப்பின் நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. ஒரு கஷ்டம். அவ்ன் எப்ப வுமே அப்படித்தான். அந்தக் கதை வரும்போது அவன் தட்டிக் கழித்துவிடுவான். ஆனல் இப்போ மட்டும் அது தப்பும் மனப்பான்மையாகப்பட்டது. ஒரு குறுக்கம்.
GF Typ அதை வேண்டுமென்றே வருவித்தான். இப்போ அதை வருவிப்பது ஒருவித பலப்பரீட்
சையாக அவனுக்குப்பட்டது.
அவர்கள் போனபின் ஐந்து மாதங்களுக்குள் இனக் கலகம். ‘. . .

Page 42
76 புதுயுகம் பிறக்கிறது
பொன்னம்பலத்தின் கடை தட்டப்பட்டது. கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போகமுன் அவர்கள் வந்துவிட்டார்கள். வீட்டுக்குப் போன லும் தப்பிவிடலாம் என்ற நிச்சயம் இல்லை. ஆனல் போகத்தான் வேண்டும். கமலம் அங்குதான் இருந் தாள். வேலைக்காரப் பையன் என்ன செய்வான்?
கடையை விட்டுவிட்டுப் பொன்னம்பலம் பின் பக்கத்தால் ஓடினன். ஆனல் வீட்டுக்குப் போகமுடிய வில்லை. கூட்டம் ஒன்று துரத்திற்று வேறு வழி இருக்கவில்லை. எதிரே தெரிந்த கோயிலுக்குள் புகுந்துவிட்டான். கடவுள்தான் காப்பாற்றவேண் டும். கோயிலுக்குள்ளாவது அடைக்கலம் கிடைக் காதா? s A
"
ly
ஆனல் கடவுளையே காப்பாற்ற யாரும் அங்கு இல்லை. கோயிலுக்கே அடைக்கலம் கிடைக்கவில்லை. கோயிலையே காடையர்கள் கொளுத்தத் தொடங்கி விட்டார்கள். பொன்னம்பலம் ஒடி ஒரு மரத்தில் ஏறினனம். என்ன ஏறினனும்? என்ன “னம் ?
சோமுவின் நினைவில் ஒரு குத்தல் குறுக்கிட்டது. அந்தக் கட்டத்துக்குப்பின் எப்பவுமே அவனுக்கு ஒரு நடுக் கந்தான். அந்தக் கதையை மற்றவர்கள் சொல்லும்போது அவன் வெளியே எழுந்து போய் விடுவதுமுண்டு. அதைப் பச்சையாக நினைத்துப் பார்க்க அவனல் முடிவதில்லை. ஆனல் முன்பு அதைத் தட்டிக்கழித்துவிட்டு நிம்மதியாக இருக்க முடிந்த அவனல் இன்றுமட்டும் கமலத்தைக் கண்ட பின் ஏனே அது முடியவில்லை. இன்று தான் அவனுக்கு இதுவரை அதைத் தட்டிக்கழித்திருக்கிருன் என்ற நினைவே வந்திருக்கிறது. அவன்.திரும்பவும் மீட்டிப் பார்க்க முனைந்தான். ப்ச்சையாக, பச்சையாக.

இரத்தம் ,3 77
பொன்னம்பலம் மரத்தில் ஏறினன். ஆனல் அவர்கள் விடவில்லை. துரத்திக்கொண்டு டோனர் கள். இழுத்துக் கீழே போட்டார்கள். பொன்னம் பலம் கும்பிட்டான், கையெடுத்துக் கும்பிட்டான். கத்தி அழுதான். சோமுவுக்கு அதை நினைக்கும் போது அந்தக் கட்டத்தில் தானும் அப்படித்தான் செய்திருப்பான் என்றே பட்டது. இல்லை, நான் சும் மாவே செத்திருப்பேன். நினைக்கவே பயப்பட்டால் அதை நேரடியாகச் சந்தித்திருந்தால்?
பொன்னம்பலம் கும் பிட்டான். அவர்கள் அதற்காக விடவில்லை. அடித்தார்கள், உதைத்தார் கள். அணுவணுவாய்க் கொன்றுவிட்டார்கள்.
பொன்னம்பலம் அப்போ எப்படிக் குழறியிருப்
unreizi ?
சோமுவுக்குக் கண்ணிர் வருவதுபோலிருந்தது. ஆனல் அதேசமயம் அது வேறுதிசையில் விசயத்தை வேண்டுமென்றே மறைக்கமுயல்வது போல் பட்டது.
பிறகு?
ஆமாம் அதுதான் முக்கியம். அவன் வேண்டு மென்றே திரும்பவும் முனைந்தான். பச்சையாக, பச்சையாக, 、
பொன்னம்பலம் செத்துவிட்டான். ஆனல் அவர் கள் அதற்குப்பின்பும் விடவில்லை. அவனைக் கட்டி - அவனைக் கட்டி - இம், ம், சொல்லு - கட்டி ருேட்டு ருேட்டாக இழுத்தார்கள். பின்பு? சோமு அதை வாந்தி எடுப்பதுபோல் வெளியே கக்கினன். பெற்ருே ல் ஊற்றி நெருப்புவைத்துப் பற்ற வைத்து எரிய எரிய இழுத்தார்கள், தெருத்தெருவாக இழுத் தார்கள்!

Page 43
78 புதுயுகம் பிறக்கிறது
சோமுவுக்கு வியர்த்தது. கைலேஞ்சியை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பஸ் வரு கிறதா என்று அவசரமாகப் பார்த்துக்கொண்டான். வரவில்லை. ஏதோ துன்பம் நெஞ்சை நிறைத்தது.
ஏன்?
ஆம், கமலம்?
ஆமாம் இன்னும் இருக்கிறது. சோமு திரும்ப வும் பஸ் வருகிறதா என்று பார்த்தான். வரவில்லை. ஆயிரம் வருடங்களாக அந்தப்பக்கம் பஸ் வராதது போல் அவனுக்குப்பட்டது. ஆனல் விசயம் வேறு என்றும் புரியாமலில்லை.
ஆமாம், சம லம்?
வேலைக்காரன் வீட்டைவிட்டு ஓடிவிட்டான்.
கமலம்?
அவளால் ஓடமுடியவில்லை. பிடித்துவிட்டார் கள். எட்டுப்பேர்கள். பின்பு மயங்கிய நிலையில் பொலிஸ் ஜீப் காப்பாற்றியது. கொழும்புக்கு அனுப்பி அகதிக்கப்பலில் இங்கு அனுப்பப்பட்டாள். பைத் தியம் இல்லை, பைத்தியம் மாதிரி.
ஆனல் சோமுவால் திருப்திப்பட முடியவில்லை. பஸ் வருகிறதா என்று எட்டிப்பார்த்தான். புங்குடு தீவில் பஸ் என்ற ஒன்று ஓடுகிறதா?
பஸ்ஸை விட்டுவிடு, கமலம்?. பச்சையாக, பச்சையாக . . .
எட்டுப்பேர்கள் - இம், ம், -ஒருவன், மற்றவன் . இம். அப்படி எட்டுப்பேர்களும். இம்.

இரத்தம் 79
ஐந்து . ஐந்துஸெல் டோர்ச். .
சோமுவால் அதற்குப்பின்பு முடியவில்லை. தலை ஏனுே சுற்றுவது போல்பட்டது. மயக்கம் போடு வதுபோல் வந்தவேளையில் சிவப்பாகத் தெரிந்தது.
u u... 6ñ) 1 Lu 6ñ) !
சோமு வேகமாகக் கையை உயர்த்தினன். பஸ் வந்து நின்றது.
ஆணுல் கால்கள் நகர மறுத்தன. இன்னும் அவங் 656) - 6) ......
*" தம்பி, ஏறுமன் கெதியா?*" கண்டக்டர் சினந் தான்.
சோமு கஷ்டப்பட்டு ஒருபடியாக ஏறிஞன். ஆனல் அடுத்தகணம் கால்தட்டுப்பட்டு உள்ளே விழுந்து விட்டான், பெட்டியும் கையுமாய்.
முன்னல் இருந்த சீட்டின் முனை கண்ணு மண்டையில் நல்லாக அடித்து விட்டது.
பஸ்ஸுக்குள் பரபரப்பு, சிரிப்பு எல்லாம். சோமு ஒருவாருகச் சமாளித்துக்கொண்டு ஒரு மூலை யில்போய் உட்கார்ந்தான். அடிபட்டபின் எல்லாம் தெளிந்துவிட்டது. வலதுகண் மேல் முனையில் மட் டும் வலிவலியென்று வலித்தது. sylg. Ult - இடத்தை கையால் தேய்த்துவிட்டான். கைவிர லில் மெல்லிய இரத்தக் கசிவின் அடையாளம் தெரிந்தது.
இரத்தம்!

Page 44
80 புதுயுகம் பிறக்கிறது
இரத்தம்! ஏதோ ஒரு பழைய பயம் உள்ளே ஒலித்தது:
ஆமாம், ஒரு காலத்தில் அந்தளவு இரத்தத் தைக் கண்டாலும் அவன் பயந்து அழுதுவிடுவான். சின்னப் பையனுய் இருந்த காலத்தில் அடுத்த வீட் டுப் பூச்சன், பனையிலுள்ள பெருங்குளவிக் கூட் டுக்கு வீசிய சின்னக் கல் அவனது தலையில்பட்ட தினல் மெல்லக் கசிந்த இரத்தத்தைக்கண்டு அவன் அழுது கத்தியிருக்கிருன் கருக்கில் ஒருக்கால் காலை வெட்டியபோது அவன் குழறியிருக்கிருன், ஏன், அதைக் கண்டு ஆச்சிகூடத் தலையில் அடித்து அடித் துக் குழறியிருக்கிருளே! அதுமட்டுமா? ஆஸ்பத் திரியில் யாரோ ஒருவனின் மண்டையில் ஓடிய இரத்தத்தைக் கண்டு ஆச்சி மயங்கி விழுந்திருக் கிருளாமே!
சோமுவை ஏதோ குத்திற்று.
திடீரென்று ஆச்சி காட்டிய வாழ்க்கையில், கலாசாரத்தில், ஏதோ குறையொன்று இருப்பது போல் முதன்முதலாக அவனுக்கு ஏதோ ஒன்று உணர்த்திற்று.
பச்சையாக எதையும் ஆச்சி பார்ப்பதில்லை, காட்டியதில்லை!. இரத்தத்தைக் கண்டால் மயக் கம். . நீங்கள் நாங்கள் எண்டுதான் எவரோ டும் ! பேசோணும், கெட்ட பேச்சுப் பேசக்கூடாது என்னப்பூ?. மரியாதையாப் பழகோணும் மரியா தையாப் பேசோணும், என்னப்பூ?. தங்கமான பிள்ளை கந்தையருடைய பிள்ளை இருக்குதே அது தான் பிள்ளை!
எல்லாம் ஒரு பூச்சு, பச்சையாக எதையும் அணுகாத ஒரு பூச்சு வாழ்க்கை

இரத்தம் , 8
அதனுல்தான இப்போ கமலம் பேசியது பைத் தியம் அல்ல என்றுபட்டும் அவன் பயணம் போகி ருன்? சோமு தன்னையே கேட்டுக் கொண்டான். அதனல்தான இன்னும் அவங்கடைய -இம், பயப் படாமல் சொல்லிப் பார், இன்னும் அவங்கடையை ஊ அங்கே போகிறேன்? அதனுல்தான வெட்கம் என்பது இல்லாமல் கமலம் என்ற ஒரு பெண்ணின், ஏன் கமலம்+ என்ற ஒரு இனத்தின், கமலம் என்ற ஒரு கலாசாரத்தின், கமலம் என்ற ஒரு மொழி யின் விதவைக் கோலம் என்ற முதலில், விசர்க் கோலம் என்ற முதலில், என் வாழ்க்கை வருமா னம் என்பவற்றை உழைக்கப்போகிறேன்?
அதனல்தான, அந்த மேல் பூச்சுக் கலாசாரத் தினுல் தாஞ கமலத்தின் மனநிலையும் அந்த ஒரு நிகழ்ச்சியால் முற்ருக மாறித் திருத்த முடியாத வகையில் சீர்குலைந்துபோயிற்று?
அதனுல்தான ஒவ்வொரு சமயமும் அதைப் பற்றிய நினைவிலிருந்து நான் ஒளித்து மறைய முயன் றிருக்கிறேன்? அதனுல்தான? அந்தத் தப்பும் மனப் பான்மையால் தானு? சோமுவுக்கு வேறு நினைவுகளும் தொடர்ந்தன. தேசியம், தேசிய ஒற்றுமை என்றெல் லாம் அவன் பேசியிருக்கிருன், அதுவும் பிரச்சனையைக் கடத்தித் தள்ளிப்போட்டுத் தப்பப்பார்க்கும் அதே மனப்பான்மைதான? கச்சேரியடியில் உட்கார்ந்து விட்டு, இரண்டுகிழமை தாடிவளர்த்து வழித்து விட்டு அவன் திருப்திப்பட்டிருக்கிருன். அதே தப் பும் மனப்பான்மை தானு?
'தம்பி, இரத்தம் வழியுது, லேஞ்சியால் கட்டி விடும்’ என்ருன் கொண்டக்டர்.
AA — 1 1

Page 45
82 புதுயுகம் பிறக்கிறது
கொண்டக்டர் வழிநடத்துபவர் இந்த வழி நடத்துபவர்கள் எல்லாருக்கும் பச்சையாகப் பார்க்கமுடியாதா? கட்டிமறைத்துக் கடத்தத்தான தெரியும்?
*பறுவாய் இல்லை. வழியட்டும், கொஞ்ச ரத் தம் வழிஞ்சால் செத்துவிடமாட்டன்’ என்ருன் சோமு.
கொண்டக்டர் விழித்தான். அவனுக்குப் புரிய வில்லை. As
ஆஞல் சோமுவுக்குத் தான் சொன்னதில் அர்த் தம் இருக்கிறது என்று நன்ருகப் புரிந்தது. கண்ணு மண்டையில் கசிந்த இரத்தத்தை கைவிரலால்
தொட்டு அளையத் தொடங்கினுன்.
并

கோயில்கள்
தூரத்தில் சாவீட்டு மேளம் கேட்டுக் கொண்டிருக்கிறது. வெகுதூரத்தில் இருந்துவரும் மெல்லிய சத்தம். அதனுல்தானே என்னவோ அது அவ்வளவு பயங்கரமாக இருக்கிறது. கிழக் கூரில் யாரோ இறந்து விட்டார். ஒருவேளை எனக் குத் தெரிந்த ஆளாக இருக்கக்கூடும். அதனல் தான அந்த இழவோசை என் நெஞ்சில் அப்படி ஒரு சோக உணர்ச்சியை எழுப்புகிறது? இல்லை, அப்படிச் சொல்லமுடியாது. அப்படி ஒரு உறவு எழுப்பும் சோகம் இதைவிட அதிகமாகப் பீறிக் கொண்டு வரவேண்டும். அந்தப் பீறலிலே இறந்த வரைப்பற்றிய நினைவுகள் இழுபட்டுக்கொண்டு, அதேசமயம் அந்த நினைவுகளின் இழுவலிலே பீற லும் பெரிதாக்கப்பட்டுக் கொண்டு, அப்படியே ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டு ஒன்றை யொன்று அதிகரிக்கச் செய்துகொண்டு ஓவென்று வரும் ஒர் உணர்ச்சி வரவேண்டும். அப்பர் செத்த போது, அடுத்தவீட்டுப் பெண் செத்தபோது, முன் வீட்டு மனிதர் செத்தபோது அப்படி எனக்கு வந்

Page 46
84 புதுயுகம் பிறக்கிறது
திருக்கிறது, அது தனிப்பட்ட ஒருவரின் சாவுக்காக வரும் ஒரு வேகம். இப்போ அந்த வேகம் இல்லை. இதில் வேகமே இல்லை. ஒரு மெல்லிய கசிவு. கிழக்கூரிலிருந்து வரும் மெல்லிய அந்த மேளச் சத்தத்தைப்போல ஒரு மெல்லிய கசிவு. சும்மா வெறும் சாவின் நினைவு. ஆணுல் அதன் வேதனை பெரிது. ஒருவேளை மனித வர்க்கத்தையே, ஏன் உயி ரினங்களையே பின்னணியாக வைத்து அந்த உணர்வு வருகிறதோ? தெரியாது. ஆனல் என்னை அறியாம லேயே என் நினைவுகள், காட்சிகள் எல்லாவற்றி லும் அந்த உணர்வின் மெல்லிய சாயல் படிகிறது.
கிழக்கூருக்கும் நம் வீட்டுக்குமிடையே ஒரு பெரும் வயல் வெளி. நான் எங்கள் வீட்டுக்கிணற் றடியில் இருந்து கொண்டிருக்கிறேன். எங்கள் வீடு என்பது புதிதாக நான் புகுந்துள்ள என் மனைவி வீடு, பிறந்த வீடு கிழக்கூரில்தான். கிணற்றடியில், வீடுகட்டுவதற்காக சீமந்து கலந்து அரியப்பட்ட கல்லடுக்கின் மேல், நான் உட்கார்ந்து கொண்டிருக் கிறேன். கையில் பற்பசையும் பிறவுஷ"ம் இருக் கின்றன. ஆனல் பல் தீட்ட மனமில்லை. வேலிக்கு மேலால் வயல் வெளியையும் தாண்டி கிழக்கூரின் மேற்கு எல்லையாய் நிற்கும் வேலிக்கரையையும் வீட்டுக்கூரை க்ளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். காலைச் சூரியனின் இளஞ்சிவப்பு ஒளி பிறப்பின் பூரிப்பையும் சிறப்பையும் சொல்வது போல் பிரகாச மாகத் தெரிந்தாலும் அதோடு ஏதோ மெல்லிய குளிர்ந்த வேதனையும் கூடவே வருகிறது. மாலையில் அது இறந்துவிடும் என்ற நினைவா? இடையில் கிடக்கும் வயல்வெளி கிழக்கூரையும் நம்பகுதியை யும் பிரிக்கும் ஓர் இடைவெளி. அதில் மூன்று குளங்கள். வடக்கும் தெற்கும் மேற்குமாக மூன்று கோயில்கள். மேற்குப் பக்கமாக எனக்குச் சாடை
யாகப் பின்னலுள்ள பிள்ளையார் கோயிலில் புதி'

கோயில்கள் 85
தாக ஆரம்பிக்கப்பட்ட திருவிழாவின் முதல்நாள் முடிவின் சின்னமாக களை இழந்த தோற்றம் தெரி கிறது. நேற்றிரவு வெளிச்சம், மேளம், வாகனம், ஆண்கள், பெண்கள், போக்குவரத்து என்று ஆர வாரமாக இருந்திற்று. இப்போ ஒன்றும் இல் லாத ஒரு சாக்களை! வயல்வெளியில் வாளி குடங் களோடும் உடுப்புச் சுமைகளோடும் பெண்கள் போய்க்கொண்டிருக்கிருர்கள். பாலை வனத்தில் தெரி யும் எண்ணைக்கிணற்றுக் கம்பங்கள் போல் அரசாங்க உதவிப்பணத்தில் கட்டப்பட்ட கிணறுகளின் கட் டுக்கள் எல்லாம் காய்ந்து கிடக்கும் வயல்வெளி நெடுக மிக அழகாகத் துருத்திக்கொண்டு நிற்கின் றன. அவற்றை நோக்கித்தான் ஒவ்வொரு வரும் போய்க் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ஒவ் வொரு கிணற்றிலும் ஒரு பெரும் கூட்டம்! மேற்கே யுள்ள கோயிலின் சாக்களையைப் பற்றியோ கிழக்கே கேட்கும் சாவோசையைப் பற்றியோ கொஞ்சங் கூடக் கவலைப்படாத ஆச்சரியமான உயிர் இயக்கங் கள் அவை!
‘என்னம் பிறவு பண்ணேல் லியா?’ என்றுகேட் டுக் கொண்டு என் மனைவி வருகிருள்.
உஹ"ம் என்று தலையாட்டிக்கொண்டே ‘ஆராம் செத்தது?’ என்று நான் கேட்கிறேன்.
“தெரியாது, அண்ணர் வாறேர் கேட்டுச்சொல் றன்' என்று அவள் போகிருள்.
அவளின் அண்ணர் கிழக்கூரில் தான் கல்யாணம் முடித் திருக்கிருர், நான் கிழக்கூரிலிருந்து இங்கு வந்ததுபோல. ஊரே ஒரு சிறு தீவுதான் என்ரு லும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒரு தனி உல கம்! கிழக்கூரின் கிழக்குத் தொங்கல் தூரகிழக்கு,

Page 47
86 புதுயுகம் பிறக்கிறது
அதன் மேற்கு தென்கிழக்கு ஆசியா, வயல்வெளிக் கிப்பால் நான் இருக்கும் பகுதி மத்திய கிழக்கு, ஊரின் மேற்கேயுள்ள அரசினர் மத்திய பள்ளிக்கூட முற்றவெளிக்கும் பெரும் வெளிக்கும் அப்பால் மேற்கு, தூர மேற்கு. பழக்க வழக்க, கலாசார ரீதியாகப் பெயர்கள் பொதுப்படையாகப் பொருந் தும். கிழக்கூர் பழைய கெட்டித்தனம், சண்டை, அதிகாரம் என்பவற்றைப்பற்றி வறட்டுப்பெருமை பேசும். ஆனல் விசயத்தில் பூஜ்யம் . மத்திய கிழக் கின் சைவப் பழங்கள் வெறும் வெளிப் பூச்சுக் களாய் இருந்தாலும் தீவின் மெக்காவும் ஜெரூசலே மும் அங்குதான். அதோடு வயல் வெளிக் கிணறு கள் மத்திய, கிழக்கின் எண்ணைக் கிணறுகளையும் வெள்ளர்ளர் பறையர் என்ற போட்டி யூதர் அரா பியர் சண்டையையும் நினைவூட்டும். மேற்கில்தான் புங்குடுதீவின் முன்னேற்றத்தின் உயிர் ஒட்டம். தம்பி யும் நானும் கடிதங்கள் எழுதிக் கொள்ளும்போது அந்த ரீதியில்தான் எழுதிக்கொள்வோம். அவை எங்கள் குழுகுக்குறிகள்! தூரகிழக்கின் வீனஸ் எரி மலை வெடித்துக் குழம்பு கக்குகிறது என்று பி.சி. வரும். கிழக்கூரின் தொங்கலில் நமக்குத் தெரிந்த அழகி ஒருத்தி பெரிய பிள்ளையாகிவிட்டாள் என் பது மற்றவர்களுக்குப் புரியாது. அது பகிடி, நம் வாழ்க்கையின் உயிரும் அப்படி ஒரு போக்குத் தான். ஆனல் கிழக்கூரில் இப்போ கேட்கும் சாவோ சைச் செய்தியைப்பற்றி அந்த ரீதியில் நினைக்கவோ அல்லது தம்பிக்கு எழுதவோ முடியாமல் இருக் கிறதே. ஆக, பகிடி விளையாட்டு, சந்தோசம், வாழ்க்கை எல்லாம் எப்போதும் செல்லுபடியாகா தவை, நிரந்தரமற்றவை, தற்காலிகமானவை, சாவோடு சாம்பராகிவிடுபவை என்றுதான அர்த் தம்? அப்படியென்ருல் எதற்காக இந்த வாழ்க்கை?
கோயிலில் மணி அடிக்கிறது.

கோயில்கள் 87
பிள்ளையார் கோயில் மணிதான். காலைப் பூசை ஆரம்பம் போலும், சா அமைதி நிலவிய இடத் தில் திரும்பவும் உயிர்த்துடிப்பு. ஆளுல் தூரத்தில் வரும் இழவோசையின் பின்னணியில் அதன் ஒலி வேடிக்கையாகக் கேட்கிறது. மரணதேவனின் பின்னணி இசையில் தானு வாழ்க்கைப் பாட்டின் உற்சாகமெல்லாம்? உடம்பு புல்லரிக்கிறது.
வயல்கிணறுகள் பக்கம் நான் திரும்புகிறேன்.
தப்பிக்கும் மனப்பான்மையா? இருக்கலாம். ஆனல்
எத்தனை நேரத்துக்கு அப்படித் தப்பிவிடலாம்? அதையுந்தான் பார்க்கலாமே.
எல்லாக் கிணறுகளிலும் பெண்கள் குளித்துக் கொண்டிருக்கிருர்கள். தண்ணீர் அள்ள வந்த பெண் களில் சிலர் கிணற்றுக்கட்டிலிருந்து கதைத்துச் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிருர்கள். அவர் களுக்கு அது ஒரு பொழுது போக்குக் கூட. ஒருத்தி ஏதோ சொல்லிவிட்டு ஓடுகிருள். மற்றவள் அவ ளைத் துரத்திப்பிடித்து இழுக்கிருள். தூரத்தில் எவனே, எவளோ, செத்துப்போய்விட்டான், செத்து விட்டாள் என்ற நினைவு, ஏக்கம், கவலை ஏதாவது இருக்கிறதா? உஹ"ம். நாளைக்கு நாமும் அப்படித் தான் என்ற துக்கம்? இல்லை. எல்லாரும் இளம் பெண்கள். உயிர்த்துடிப்பின் உச்சம். அங்கே சாவைப்பற்றிய கவலைக்கு இடமே இல்லையா?
என் உடலில் ஏதோ ஒரு வேகம் பற்றுகிறது. குளித்துக்கொண்டிருக்கும் பெண்களை என் கண்கள் ஆராய்கின்றன. அவர்கள் ஏன்தான் அப்படித் தேய்க்கிருர்கள்? பாவாடையைத் தூக்கி, கையை விட்டு இரவின் உழைப்பின், அழுக்குகளை அழுத்திக் கழுவுவதில் எத்தனை அக்கறை உடம்புதான் உயிரா? உடம்புதான் வாழ்க்கையா? உடம்புதான் உலகமா?

Page 48
88 புதுயுகம் பிறக்கிறது
கோயில் மணி திரும்பவும் அடிக்கிறது. அதற்குப் பின்னணியாய் நிற்கும் சா வீட்டு மேளத்தைக் கேட்க என்னை யறியாமல் என் காது விரிகிறது. ஆனல் ஏமாற்றம். அந்த ஒரு கணத்தில் சொல்லிவைத்தது போல் எழுந்த கோயில் மேளத்தின் ஆர்ப்பரிப்பு எல்லா ஒலி அலைகளையும் ஆக்கிரமித்து எழுகிறது. சாவீட்டு மேளம் தூரத்தில் அடித்துக்கொண்டிருக் கும் என்ற நினைவு நிற்கிறதே ஒழிய சத்தம் கேட்க வில்லை. அப்படி யானுல் மரணம் நிரந்தரமானது. ஆனல் வாழ்க்கைத் துடிப்பின், அதன் வேகத்தின் அண்மையில் நின்று நோக்கும் போது மரணம் தூரத் தில் நிற்கிறது, மிக மிகத் தூரத்தில் நிற்கிறது. அப்படியா? குளிக்கும் பெண்கள் தேய்த்துத் தேய்த் துக் கழுவிக்கொண்டு நிற்கிரு ர்கள். அவர்களுக்கு மேளத்தைப்பற்றியோ மணியைப்பற்றியோ எந்த வித மன உழைச்சல்களும் இல்லை. உடம்பு, ஆமாம் உடம்பு வாளி வாளியாய் அள்ளி ஊற்றிக்கொள் கிருர்கள். பாவாடையைத் தூக்கி ஒவ்வொரு அங் கம் அங்கமாய்த் தேய்த்துக் கழுவிக்கொள்கிருர்கள். உடம்பு, ஆமாம் உடம்பு உடம்புதான் கோயிலா? அதன் உயிர்த்துடிப்புத்தான் மணியா? அதன் சதைத் துடிப்புத்தான் தலையைக் கிறு கிறுக்க வைக்கும் கோயில் மேளமா? அடுத்தநிமிடம் அங்கு நின்ற அத்தனை பெண்களையும் சட்டை பாவாடை என்ற சம்பிரதாயங்களுக்கப்பால் சென்று வெட்ட நிர் வாணமாக நிறுத்திப் பார்க்கவேண்டும் போல் ஒரு வேகம் என்னைப் பற்றுகிறது. அத்தனையும் கோயில் கள்! வாழும் கோயில்கள்! வாழ்க்கை, தெய்வீக வாழ்க்கை!
*வாழ்க்கை! வாழ்க்கை!"
யாரோ சிரிக்கிருர்கள்.

கோயில்கள் 89
நான் திடுக்கிட்டுத் திரும்புகிறேன். என் ஜ சிரித்துக்கொண்டு வருகிருள்.
‘என்ன விசரா வாழ்க்கை வாழ்க்கையெண்டு கையைப்போட்டுக் கல்லில குத்துறேங்க???
எனக்கு வெட்கமாய் இருக்கிறது. ஆனல் அந் தப்புதிய வேகம் போய்விடவில்லை. அந்த வேகம் நிறைந்த கண்களோடுதான் அவளைப் பார்க்கிறேன் !
அவள் ஒரு கோயில்!
இரவின் பாதிமுழுதும் லேடி சட்டர்லியின் பாணியில் நான் பூஜித்த என் கோயில், சாரி, ஜக்கட், பாவாடை, பிறகியர் எல்லாவற்றுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஒவ்வொரு அங்கமாய்த் தொட்டுத்தொழுது பிரதிஷ்டைபண்ணிப் பூஜித்த உட்கோயில்.
**கணகம், இஞ்ச வா” என்று அவளை என்னேடு சாய்த்து இழுக்கிறேன்.
"இஞ்சாருங்கோ" என்கிருள் அவள், சாய்ந்த படியே.
*என்ன?’ என்று கேட்கிறேன் நான்.
"செத்தது ஆரு தெரியுமா?*
என் வேகத்தில் ஒரு தடை விழுகிறது.
“ “ሀufr fi ?” “சின்னக்குட்டியாவின் தம்பிப்பிள்ள தெரியுமா,
அந்த மனுஷன்!”
AA - 2

Page 49
90 புதுயுகம் பிறக்கிறது
எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அந்த மனு ஷனை எனக்கு நல்லாகத் தெரியும். அந்த ஆள் எனக்குப்பிடித்த நாவலில் வரும் கதாநாயகன் ஒரு வனின் பிரதி. எமிங்வேயின் ஒல்ட்மான். கடலும் கிழவனும் என்ற கதையில் வரும் கதாநாயகனின் வாழும் இளமை உருவம் - இல்லை, இப்போது சொன்னுல் வாழ்ந்த இளமை உருவம். கட்டுமஸ் தான தேகம். மிகத் துணிச்சல்காரன். ஆழக் கடலில் போய் மீன் பிடிப்பதில் கெட்டிக்காரன். மரக்கோல் களில் பென்னம்பெரிய மீன்களாகக் கட்டித் தூக்கிக் கொண்டு வருவதை நான் கண்டிருக்கிறேன். அதனல் தான் எமிங்க்வேயின் கதாநாயகனேடு அவனைச் சம்பந்தப்படுத்தி நினைக்கும் பழக்கம் எனக்கு ஏற் பட்டது. இந்த மனுஷன் கிழவனல்ல. நடுத்தர வயது. ஆனல் எமிங்க்வேயின் கிழவன் நடுத்தர வயதில் இவனைப்போலத் தான் இருந்திருப்பான் என்ற ஒரு இலக்கிய நினைவு எனக்கு, துணிச்சல், முயற்சி, வாழ்க்கைக்காகக் கடைசிவரை போராட வேண்டும் என்பவற்றின் சின்னமாக மட்டும் தெரிந்த ஆளல்ல அவன். உடலின் பலத்துக்கும் ஒரு சின்ன மாக அவன் தெரிந்தான். ஆனல் அவன் செத்து விட்டான்! என் "கிழவன்' செத்துவிட்டான்!
ஏன் எமிங்க்வே கூடச் செத்துவிட்டான்தானே?
எனக்கு எல்லாவற்றிலும் சோர்வு தட்டும் ஓர் உணர்வு பிறக்கிறது. ஆனல் ஒருகணந்தான். அடுத்த கணம் ஒரு புதிய துளிர்ப்பு.
எமிங்க்வே செத்துவிட்டான? இல்லை, சாக வில்லை. இனி என்றுமே எமிங்க்வே வாழத்தான் போ கிருன்.
அப்போ சாகாத ஒன்று இருக்கிறதா?

கோயில்கள் 9
புகழ் தரும் இலட்சியம்?
ஆணுல் சாதாரண மனிதர்கள் எல்ே லாருக்கும் அது சாத்தியமா? அதோ கிணற்றடியில் கழுவிக் குளித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்களுக்கு? அவர்களைப்போல் உலகத்தின் தொண்ணுாற்றென் பது விகிதத்தினருக்கு? அதோடு உடம்பில்லாமல் இலட்சியத்தை எப்படி அடையமுடியும்? ஆமாம் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பொது இந்த உடல் தான். அதுதான் ஆரம்பம். அதுதான் முக்கியம். அதன் தேவைகள். எல்லாவற்றுக்கும் அடிப்படை யான அந்த உணர்ச்சி! பால்! பால்! உடம்பு! உடம்பு. ஆனல் அந்த உடம்புதான் செத்துவிடு கிறது. அழிந்துவிடுகிறது!
திரும்பவும் ஒரு சோர்வு,
“என்ன தெரியாதா உங்களுக்கு, கடல் லபோய் பெரிய மீன்பிடிக்குமாமே, நல்ல உடம்புமாம்?" என்று என் மனைவி என்னைக் கேட்கிருள்.
தெரியும். ஆனுல் நல்ல உடம்புதான் செத்து விட்டதே! செத்துப்போகும் உடம்பை வழிபடலாமா? அந்த வழிபாடுதான் வாழ்க்கையாய் இருக்க வேண் டுமா? தூரத்துச் சாவீட்டு மேளம் திரும்பவும் கேட் கிறது. கோயில் மணியும் மேளமும் நின்று விட்டி ருந்தன.
*அந்த ஆளுக்கு நெஞ்சில என்னவோ வருத்தம் வந்து திடீரெண்டு செத்துப்போச்சாம். இன்னும் கல்யாணங்கூட முடிக்கேல் லியாம். சாகிறவயதில்லி யாம்” என் மனைவி எனக்கு ஒன்றும் தெரியாது என்ற நினைவில் சொல்லிக்கொண்டிருக்கிருள்.
சாகிறவயதில்லையாம். ஆனல் செத்துப்

Page 50
92 புதுயுகம் பிறக்கிறது
போனன்! எனக்குத் திடீரென்று எல்லாம் தெளி வாகிறது. என் வேகத்தில் விழுந்த தடை ஒரு தடையே அல்ல. வேகத்தை இன்னும் பெருக்க உதவிய ஒரு தேக்கம். அந்தத் தேக்கத்துக்குப்பின் ஒரு வீழ்ச்சி, ஒரு பெருக்கு!
சா நிரந்தரமானது.
என்ருலும் வாழ்க்கையின் அண்மையில் நின்று பார்க்கும்போது அது மிகத்தூரத்தில் நிற்கும்.
இப்போ இன்னுமொன்று. அது தூரத்தில் நிற் கும். ஆனல் கிட்டே வருவது எப்போது என்று தெரியாது. இப்பவும் வரும், பிறகும் வரும், எப்பவும் வரும் !
சாகிற வயதில்லையாம். ஆனல் செத்து விட்
டான்!
அப்படியென்ருல் மரணம் உடம்பின் முக்கியத் துவத்தை இன்னும் அதிகரிக்கத்தான் செய்கிறது. நாம் ஒவ்வொருகணமும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருகணமும்! கிணற்றடியில் அவர் கள் தேய்த்துக் கழுவிக்கொண்டு நிற்கிருர்கள். அதைப்பேணிக் காப்பாற்றுகிறர்கள். அந்த வாழ்க் கைக்கு ஆயத்தம் செய்கிருர்கள். உடம்பு, உடம்பு, உடம்பு!
கனகத்தைக் கட்டி அணைத்துக்கொண்டு என்று மில்லாத வெறியோடு முத்தமிடுகிறேன். ஒவ்வொரு கணமும் வாழ்வதற்கு எனக்கு அவள் இருக்கிருள். அதோடு அந்த ஒவ்வொருகண அனுபவத்தையும் வைத்து எழுதுவதற்கு, உடம்பு போனபின்பும் வாழ்வதற்கு நெஞ்சில் ஐந்து நாவல்கள் இலட்சிய மாகவும் நிற்கின்றன. அந்த இலட்சியத்தின் மூல ந்

கோயில்கள் 93
தான் நான் கடவுளோடு கலப்பேன், கடவுளாகு வேன். இனிச் செய்யவேண்டியது ஒவ்வொரு கண மும் செய்யவேண்டியதைச் செய்வதுதான். தூரத் தில் கேட்கும் அந்த ஓசை கிட்டே வர முன் செய்ய வேண்டும்.
கோயில் மணியும் மேளமும் கூடி முழங்குகின் றன .
*அப்பூ சாமி!” என்று கனகம் முணுமுணுக் கிருள். அது அவளின் வழி. வாழ்க்கையையும் சாமி யையும் வித்தியாசப்படுத்துவது. எனக்கு இனி அப் படி வித்தியாசம் இல்லை. வாழ்க்கையிலேயே கோயில், வாழ்க்கையே கோயில், வாழ்க்கைக்குள்ளே துரு வித் துருவித் தேடுவதுதான் கடவுள். உடல், உடல், உடலுக்குள்ளேயே ஆமாம், யார் கண் டார்கள்? இல்லை, கண்டிருக்கிரு ர்கள்!
உபநிடதத்தில் வரும் ஒரு கூற்று நினைவுக்கு வருகிறது.
தத் த்வம் அஸி!
"வாழ்க்கை, வாழ்க்கை!" நான் முணுமுணுக் கிறேன். அப்பூ சாமீ என்ற அவளின் முணுமுணுப் போடு அது கலக்கிறது.
மரணம் வாழ்வைச் சாகடிப்பதில்லை. மாருக அது வாழ்வை வாழ்வாகக் காட்டுகிறது. வாழ்வுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. அதன் ஒவ் வொரு கணத்தின் வேகத்தையும் கூட்டுகிறது.
கனகத்தின் இதழ்களைத் துளைத்துச் சென்ற
என் நாவில் தொடர்ந்து அதே முணுமுணுப்பு, வாழ்க்கை! வாழ்க்கை! 本

Page 51
பிறத்தியாள்
இனி நல்லா வெய்யில் வந்திரும். இப்பயே மேல்படிக்கு வந்திற்று. டானப்படக் கட்டப்பட்டி ருந்த வீட்டின் மேலெழுந்த கொம்பாகக் கிழக்குப் பக்கம் நீட்டிக்கொண்டு நின்ற குசினிப்பக்கத்தின் வெளிவிருந்தையில் உட்கார்ந்திருந்த சிவக்கொ ழுந்து தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். இன் னங்கொஞ்ச நேரத்தால என்ர பக்கமா உள் சீமந் துக் குந்திலும்படத் தொடங்கியிரும். நான் எழும் பக்கூடாது, எனக்குச் சுட்டால் பறுவா இல்ல. அவை பார்த்துக் கொண்டுதானே இருப்பினம்? எழும்பச் சொன்னலும் எழும்பக்கூடாது. அப்ப என்னவிட அவைக்குத்தான் நல்லாச்சுடும்.
ஒரு முடிவுக்கு வந்துவிட்ட திருப்தி சிவக் கொழுந்துவுக்குச் சந்தோஷத்தோடு தைரியத்தை யும் கொடுத்தது. படியில் பட்டுத் தெறித்துக் காலில் விழுந்த காலைச் சூரியனின் மெல்லிய சுள்ளென்ற சூட்டை அவள் பொருட்படுத்தாமல் உட்கார்ந்தி ருந்தாள்.

பிறத்தியாள் 95
எதிர் விருந்தையில் பெரியண்ணர் அங்குமிங்கு மாக நடந்து கொண்டிருந்தார். குளித்துவிட்டு வீயூ திப்பூச்சோடு தெரிந்த கட்டுமஸ்தான கட்டையான அந்த உடலைக்கொண்டு விருந்தையின் அந்த மூலைக் கும் இந்த மூலைக்கும் அவர் நடந்தவிதம் அப்போதைய நிலையில் அவரது வயிற்றுக்குள் எழுந்த பசியையும் மனதில் எழுந்த ஆத்திரத்தையும் பிரதிபலிக்கப் போதுமாகப்பட்டது. ஆச்சியின் அந்திரட்டிக்காக அவர் விரதமிருந்தார். ஆனல் அந்திரட்டிக்கு வருவ தாகச் சொன்ன பெரிய ஐயர் பத்துமணியாகிய பின் பும் இன்னும் வரவில்லை. சிவக் கொழுந்துவுக்கு அவ ரைப் பார்க்கச் சிரிப்பாக வந்தது.
கட்டைப்புடு, ! என்னவோ தான் பெரிய ராசாவெண்ட எண்ணம்! W
அவள் தனக்குள்ளேயே கதைத்துக் கொண் டாள். அவள் அப்படித்தான். மற்றவர்களை அவ ளுக்குப் பிடிக்காது. அவர்களோடு அவள் கதைப்ப தில்லை. தன்னேடுதான் அவள் சதா கதைத்துக் கொள்வாள்.
Quihu T (T frt! இஞ்ச உள்ள வளவைக்குத் தான் அவர் ராசா. ஐயருக்கு அவர் ராசாவில்ல. ஐயர் இன்னும் வரேல்ல. திருவெம்பாக் காலத்தில இந்தளவு வெள்ளணத்தோட ஐயர் எங்க வரப் போறேர்? புக்கதட்டிப் பிராமணங்கள்தான் வந்தி ருக்கிருங்கள். ஆணுப் பெரிய ஐயர் வராமப் பிர யோசனமில்ல. அண்ணருக்கு ஆத்திரமா இருக்குது. தன் ர பணத்துக்கும் கெளரவத்துக்கும் பெரியை யர் மரியாத வைக்கேல்லையெண்ட ஆத்திரம் ஒண்டு. பெரியையர் நல்ல மனுசன். அவங்கள் ளேயும் நல்ல வங்கள் இருக்கிருங்கள்தான்.

Page 52
96 புதுயுகம் பிறக்கிறது
சிவக்கொழுந்துவுக்கு வேறு ஒரு நினைவுவந்தது. கோயிலில் அவளுக்குப் பழக்கமான ஒரு பூசாரிப் பையனின் நினைவு. அது பெரிய ஐயரின்தரத்தை அவள் மனத்தில் உயர்த்தியது.
ஒ, பெரியையர் நல்ல மனுசன்தான். அவள் சொல்லிக்கொண்டாள். கோயில்ல கள்ளுக் குடிச் சிற்று என்னட்டவாற அந்தச் சிலுப்பாவெட்டுக் காறக் கள்ளப் பிராமணனைப்போலத்தான் எல்லா ரும் எண்டு சொல்ல முடியாது. பெரியையர் நல்ல மனுசன். திருவெம்பாப் பூசை முடிச்சிற்றுத்தான் அந்திரட்டி வீட்டுக்கு வரலாம் எண்டு ஆள் அனுப்பி யிருக்கிறேர். இவருக்கு நல்லாவேண்டும். இவற்ற பணத்துக்கு பெரியையர் பயமில்ல. அதோட இவ ருக்குப் பசி பொறுக்கேலாத ஆத்திரம் வேற, முத லாளி வேளாவேளைக்கு இடியப்பம் புட்டு சோறு எண்டு சாப்பிடுகிறவரல்லவா? நான் எத்தின நாள் பட்டினி கிடந்திருக்கிறன். இவரும் அனுபவிக்கட் டுமன். பெரிய ராசா செத்திரமாட்டேர்.
அந்திரட்டிவீட்டுக்கு வந்த அயலிடத்துப் பெண் கள் சிவக்கொழுந்துவை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு போனர்கள். சிவக்கொழுந்துவின் மெல் லிய உடலும் வாரிவிடப்படாமல் முடித்திருந்த தலை மயிரும் லங்காச்சேலையும் அவர்களுக்குப் பழக்க மானவைதான். என்ருலும் ஏதோ வேடிக்கையைப் பார்ப்பதுபோல் பார்க்காமல்போக அவர்களால் முடியவில்லை. சிவக்கொழுந்துவுக்கு அது வழக்கமாக அவர்களில் வரும் சினத்தைத்தான் எழுப்பிற்று.
இப்படி அந்திரட்டி வீடுகளும் ஆட்டத்துவச வீடுகளுந்தான் இவளவையின்ர வயித்தை வளக்கி ADSl. ஆனல், அதுக்குள்ள வேசைகளின்ர திமிர் சிவக்கொழுந்துவுக்கு அவர்களின் நிலை தான்

பிறத்தியாள் 97
தன்னைவிட இன்னும் கேவலமாகப்பட்டது. அங்க பார் அவளவை என்னைப் பார்க்கிறபார்வை! உரிஞ்சு விட்டிற்று இருக்கிறன் எண்ட எண்ணமாக்கும்! ஏதர வது என்னில வாய்வைக் கட்டும் பார், சீலை உரிய உரியக் கேளாத கேள்வி கேட்டுவிடுறன்.
ஆனல் அவர்கள் எதுவும் சிவக்கொழுந்துவைப் பார்த்துச் சொல்லவில்லை. தங்களுக்குள்ளேயே ஏதோ கதைத்துக்கொண்டு போஞர்கள்.
எனக்குத் தெரியும் அவளவை என்ளுேட கதைக் காள வையெண்டு. மொலு மொலுவெண்டு தங்க ளுக்குள்ளதான் என்னே கதைக்கிருளவை அவ ளவை என்ன இப்ப கதைப்பாளவை?
சிவக்கொழுந்து தன்னையே கேட்டுக் கொண் டாள்.
பதில் அவளுக்குத் தெரியும். அவளே சொல் லிக்கொண்டாள். v.
அங்க பாரண அது இருக்கிறத! விசரியண்டு சும்மாவாண சொல்றது? வெய்யிலுக்க போய் தலையை நீட்டியெண்டு இருக்கு! நல்ல சீலையைக் கீலையை உடுத்து தலையைக்கிலைய இழுத்தண்டு இருந்தா என்னவாமென? ஏனமெண இந்த விசர்க் கோலம்?
ஒமடி அவளுக்கு விசர்! பிரியன் புடிக்கிற விசர்!
அப்படித்தான் அவளவை கதைப்பாளவ. சிவக் கொழுந்து நிச்சயப்படுத்திக் கொண்டாள் ஆளுை என்ர காது கேக்கக் கதைக்க மாட்டாளவ. அவள வையளுக்குத் தெரியும் நான் கிழியக் கிழியக் கேட்
AA-3 h

Page 53
98 புதுயுகம் பிறக்கிறது
டிருவன் எண்டு. எனக்குத் தெரியாதா இவளவை யின்ர விசயங்கள? இவளவை பிரியன் புடிக்காத வளவையா?
அதற்குப்பின் ஒரு தொடர் ஓட்டம். சிவக் கொழுந்துவுக்கு அத்தனை பேரும் தன்னைவிடக் கே வ லமான நிலையில் காட்சிகொடுத்து ஓடினர்கள்.
இவளவை பிரியன் பிடிக்காதவளவையா? இவள் செங்கமலம் கல்யாணம் முடிக்கமுந்தியே பிள்ளை விழுத்தேல்லியா? கல்யாணம் முடிச்சபிறகும் கள்ளப் பிரியன் பிடிக்கேல் லியா? முத்தற்ற கமலம் கொஞ் சம் குறைஞ்சவளா? அந்தா மொலு மொலு வெண்டு அப்படி வெட்டி இப்படி வெட்டிக் கதைக்கிருளே அந்தப் பொன்னம்மா, அவள் லேசுப் பட்டவளா? சகணச்சிமாதிரி அரக்கி அரக்கி அவள் ஆயிரம்பேரப் பதம் பாத்திருவாள். நேற்றுக் கூட வேலியால ஆரோ நாடானேடயோ நளவனுேடயோ கதைச் சுக் கொண்டு நிண்டதை நான் கண்ணுல காணேல்லியா? ஆஞ அவளவ செய்யிறதெல்லாம் சரி. இரகசிய மாச் செய்து மறச்சுப்போட்டு பிரி யன்மார் வந்தவுடன என்ர ராசா ஐயா எண்டு மறைச்சுப்போடுருளவை. அல்லது அந்தப் பொண் ணையங்களுக்கும் தெரியாமலா? தெரிஞ்சாலும் அதையெல்லாம் மறைச்சுப்போட்டிருவாங்க. அதோட அவளவையோட தனகிறதிலதான் அவங் களுக்கும் ருசி. அங்கபார் எங்கட முதலாளியாரை. என்னைமட்டும் மொட்டதட்டிக் கொண்டு பிரா மணத்திமாதிரி ஊர் ஊராகத் திரிஞ்சு ஏன் எங்கட உயிரை வாங்கிற எண்டு பிரசங்கம் வைச்சுப் பேசிற எங்கட மூத்தண்ணர் அங்க பார் படுகிறபாட்ட ! பொன்னம்மாவோட பல்லக்காட்டிக்கொண்டு தன கிறத! ஆச்சியின்ர கவலையும் போச்சு அந்திரட்டி யின்ர நினைவும் போச்சு, மூத்தண்ணர், மூ-த்த-ண்-

பிறத்தியாள் − v 99
ணர்! எல்லாருஞ் சாமியார்தான். ஆணு ரகசிய மாத் தான் செய்வினம்!
கல்யாணம் முடிச்சு ஆறு பிள்ளையும் பெத்த பிறகும் இவருக்கு அந்த ஆசைபோகேல்லயெண் டால் அப்ப எனக்கு அது இருக்காதா? நானும் மனுசப்பிறவிதானே? அல்லது எனக்கு ஈழை வருத் தம் எண்டாப்போல கல்யாணங்கட்டக் கூடாதா? ஆச்சிக்கும் ஈழ தானே? சாகும் வரைக்கும் இழுத்து இழுத்துக்கொண்டுதானே திரிஞ்சா? ஆன எண்பது வயசுவரையும் அவா இருக்கேல் லியா? கல்யாணங் கட்டி எங்களையெல்லாம் அவா பெறேல்லியா? அப்ப எனக்கும் ஒரு நல்லவனுகப் பாத்துச் செய்துவைச் சிருந்தால் என்ன? மூண்டு அண்ணன் மா ரெல்லா எனக்கு இருக்கீனம்?
நான் நாய். கடசிப்பெட்டை. ஈழைக்காறி நான் எப்படிச் செத்தாலும் பறுவாஇல்ல. தாங்கள் வாழ்ந்தால் மட்டும் போதும். தெண்டத்துக்குத் தேவையா எவனே ஒரு தெறிச்சிருவானை என்ர தலையில கட்டிவிட்டிற்று தங்கள் பாட்டில போயிற் றினம். ஒருத்தர் பெரிய சாமியார். அவர் சேதி சிதம்பரம் காசி கதிர்காமம் எண்டு போயிற்றேர். அவருக்குப் பணம் இருக்கு. ஆச்சியின்ர கடனை அங் கால செய்யிறேராம் தங்கச்சியைப் பற்றிக் கவலை இல்ல. மற்றவர் பெரியவர். அவருக்குப் பெரிய உத்தியோகம். இந்தப் பட்டிக்காடு அவருக்குப் பிடிக்காது. கொழும்பை விட்டு அவர் வரமாட் டார். ஆச்சியப்பற்றிய கவலை அவருக்கு அந்தளவு தானெண்டால் தங்கச்சியப்பற்றிய கவலை எங்க வரப்போகுது? மூத்தவர் பெரிய முதலாளி. இந்த ஊருக்கு அவர் ராசா. என்னைப்பற்றிக் கவலைப்பட அவருக்கு நேரமில்ல. கடைசி ஒருத்தராவது நான் அந்தத் தெறிச்சிருவானுேடு செத்துத் துலைச்ச

Page 54
100 புதுயுகம் பிறக்கிறது
போது ஒரு சொட்டுக் கண்ணிர் விட்டாங்களா? கவலைப்பட்டாங்களா? வேண்டுமெண்டு செய்த மாதிரி திரிஞ்சாங்கள். இப்ப ஆச்சிக்கு செத்த பிறகு அந்திரட்டி செய்யிருங்களாம்!
“ஏன் வெய்யிலுக்க இருக்கிற, இஞ்சாலவந்து உள்ளுக்க இரன்?" அடிப்பதுபோல் சொல்லியவண் ணம் மூக்குப்பேணி ஒன்றுக்குள் கோப்பி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனுள் மூத்தண்ணர் பெண் சாதி,
திடுக் கிட்டுத் திரும்பிய சிவக்கொழுந்துவுக்கு அறையொன்று விழுந்ததுபோல் அந்தக் குரல் உறைத்துக்கொண்டு காதுக்குள் சென்றது. ஏன் அடிச்சிற்றுப்போவன் என்று கேட்கவேண்டும்போல் அவளுக்கு இருந்தது. ஆனல் கேட்கவில்லை. அந்த உலகத்தோடுள்ள பேச்சுத் தொடர்பை அவள் எப் போதோ கட்டுப்படுத்தி விட்டிருந்தாள். ஏன் இப்போ அணுவசியமாக ஆரம்பிப்பான்? Lז מ )f9 לו , அவாவுக்குச் சுடுகிறதாக்கும் அதுதான் பெரிய கரி சனைப்படுகிமு என்று மூத்தண்ணர் பெண் சாதியின் அப்போதைய நிலையை ஆராயத் தொடங்கினள் அவள். நான் இப்பிடி இருக்கிறது தங்களுக்கு வெக்க மெண்டுதான் என்னை உள்ளுக்க வந்திருக் கட்டாம். எனக்கு வெய்யில் சுட்டிரும் எண்ட அக்கறையப்பாரன் ! நீர்ன் வீட்டோடு கிடந்து இவைக் கெல்லாம் அடிச்சுக் கொடுத்தபோது வராத அக்கறை. இப்ப ஆச்சி செத்தபிறகு காட்டிற அக் கறையும் த டபுடலும் ஆச்சி இருந்தபோது அண் ணர் காட்டினேரா? எல்லாம் பவருக்காக. இப்ப இவாவுக்குச் சுடுகிறதாம். நல்லாச் சுடட்டும்.
முற்றத்தில் சைக் கிளை நிறுத்திவிட்டு முன்விருந் தையில் ஏறினன் ஒருத்தன். அதற்குப் பின்தான்

பிறத்தியாள் O
வீட்டில் ஆட்கள் கூடிவிட்டார்கள் என்பதை அவ தானித்தாள் சிவக்கொழுந்து. சைக் கிளில் வந்தவனை மூத் தண்ணரும் மற்றவர்களும் வரவேற்ருர்கள். கழுத்தில் கிடந்த சங்கிலி தெரியக்கூடியதாக மார் புப் பக்கம் மெதுவாகத் திறந்துவிடப்பட்ட உள் ளுடம்பு தெரியும் சட்டை ஒன்றை அவன் அணிந் திருந்ததை அவளால் அவதானிக்க முடிந்தது. சிவக் கொழுந்துவுக்கு அது அவளின் புருஷ னின் நினைவைத் தான் எழுப்பிற்று.
ஐஞ்சு வருசத்துக்கு முந்தி அந்தத் தெறிச் சிருவானை எனக்குச் செய்துவைச்சபோது அவனும் இப்படிப் பெரிய ராசா மாதிரித்தான் நடிச்சான். கழுத்துச் சங்கிலி, கைச் சங்கிலி, பட்டுவேட்டி பட் டுச் சால்வ எண்டு அவன் போட்ட பகட்டு கல்யா ணம் முடிச்சு இரண்டு கிழ மகளுக்கு அவன் என்னுேட ஒண்டுமே செய்யேல்ல. நான் அப்பவே தெரிஞ்சி ருக்கவேண்டும். ஆனல் எனக்குத் தெரியுமா உல கத்தில இப்படிப்பட்ட வங்களும் இருக்கிருங்க ளெண்டு?
முடிச்சு மூண்டுகிழமையாக மூக்சும் விடாம இருந்தானே!
மூண்டாவது கிழம நானே முந்திக்கொண்டு போனன். பின்ன கல்யாணம் முடிச்சது அவருக் குச் சமைச்சுப் போடமட்டுமா? அவன் கொஞ்சி ஞன். அப்படிச் சுறண்டினன் இப்படிச் சுறண்டி ஞன். அதோட அங்கால பிரண்டு படுத்திற்ருன் . நான் விடேல்ல. கரைச்சல் பண்ணத் தொடங்கி னன். பிறகு வாயாலயே கேட்டிற்றன். என்னப்பா உனக்கு ஒண்டும் இல்லையா, இல்ல. ஏதாவது வருத் தமா எண்டு, அவன் அழத் தொடங்கியிற்றன். அழுது அழுது சொன்னன்.

Page 55
102 புதுயுகம் பிறக்கிறது
இப்பகூட என்னல நம்ப முடியாம இருக்குது அப்படிப்பட்ட அலிப்பிறப்புக்கள் இருக்குதெண்டு! அல்லது எந்த எந்த வேசையளட்டப் போய் என் னென்ன நோய் வாங்கினனே!
என்ர வாழ்வு போயிற்று. நானும் அழு தன். ஆஞல் அவனில எனக்கு இரக்கமாகவும் இருந்தது. ஆருக்கும் சொல்ல வேண்டாம் எண்டு என்னைக் கும்பிட்டுக் கேட்டான். நானும் ஆருக்கும் சொல் லேல்ல. எனக்குள்ள மட்டும் அழுது தீத்தன்.
ஆணு நான் சொல்லமாட்டன் எண்டு தெரிஞ்ச பிறகு அவன் முந்தியப்போல பழையபடியும் பெரிய வன் மாதிரிப் பேசினன். எனக்கு அது ஆத்திரத் தத்தான் சொடுத்தது. தன்னைப் பெரியவனுக மற்றவ நினைக்க வேண்டும் எண்டதுதான் அவரு டைய ஒரே ஒரு எண்ணம். அதை என்னுல பொறுக்க முடியேல்ல. உள்ளுக்குள்ள ஒண்டுமில்லாதவர் வெளிய அப்படி வேசம் போட்டது எனக்கு ஆத் திரத்தத்தான் கொடுத்தது. அதுக்குப்பிறகு அவ னுேட அடிக்கடி சண்டைபோட்டன். ஒரு நாள் கோபத்தில ஆச்சியிட்ட எல்லாத்தையும் சொல்லி யும் விட்டன். அதுக்குப்பிறகு முந்தியப்போல ஒரு நாளும் அவனில இரக்கப்படமுடியேல்ல.
ஆச்சி மூத்தண்ணரட்டச் சொன்னு. இளையண் ணரட்டயும் சொன்ன. நான் அழுதண்டு அவைக் குத் தெரியா மச் சிவருக்குப்பின்ஞல நிண்டன். அவை அதை நம் பேல்ல. அதோட வேற ஒருத்தரும் எனக்கு வர மாட்டினமாம்! ஏதோ தெண்டத்துக் குத் தேவையாகச் செய்து வைச்ச மாதிரிப் பேசி ஞங்கள்!
எனக்குச் சரியான ஆத்திரமா இருந்தது. கொஞ்சநாளுக்குள்ள அந்தத் தெறிச்சிருவான

பிறத்தியாள் 03
திரத்திவிட்டன். அவன் அதுக்குப் பிறகு திரும்பி வரவே இல்ல. இப்ப எங்கயோ கொழும் பில இருக் கிருஞம். அதுக்குப் பிறகு அண்ணன் மார்கள் ஏதா வது செய்வினம் எண்டு பாத்தன். அவை மூச்சும் விடாம இருந்திற்றினம். எல்லாருக்கும் செய்யிறன் வேலையெண்டு சொல்லிக் கொண்டு இரெண்டு வரு சத்தால நான் வெளிக்கிட்டிற்றன் .
அண்ணரப்போல ஆச்சியின்ர கடன் செய்யிறத் துக்குத் தானு கோயில் குளத்துக்குப் போகோணும்? எல்லாக் கடனையும் அங்க செய்யலாம். நான் செய்து போட்டன். கோயில் குளமெண்டு நான் சுத் தத் தொடங்கியிற்றன் எனக்கு விசர் பிடிச் சிற்றெண்டு ஊரில கதைச் சிற்றினம். எது பிடிக் காட்டாலும் அண்ணன் மாருக்கு வெக்கமும் அவ மானமும் பிடிச்சிருக்குமெண்டு எனக்கு நல்லாத் தெரியும். கொஞ்சக் காலம் நல்லா மொட்டையும் தட்டிக்கொண்டன். அப்ப அண்ணன் மாற்ற தலை யில சாணிதான் தப்பப்பட்டிருக்கும். ஒருவருசத் தால வீட்ட திரும்பி வந்த போது நான் ஒன்பது மாசப் பிள்ளைத்தாச்சி! அண்ணன்மாருக்கு எப்படி இருந்திருக்கும்? எப்படி இருந்தாலும் எனக்கென்ன? அவை வாழலாம். பெண்டாட்டி பிள்ளைகுட்டி யெண்டு பெரிசா இருக்கலாம். நான் மட்டும் சும்மா இழுத்து இழுத்துத் திரியவேண்டும். கல்யா ணம் முடிச்ச பிறகும் அவங்களெல்லாம் அப்படிச் செய்யேல்லியா? இந்தப் பொன்னம்மாவும் கமல மும் என்ன திறம்? ஏன் இந்த முதலாளிதான் என்ன லேசா? பணம் கல்யாணம் பதவி எண்டு மறைச்சுக்கொண்டு எல்லாத்தையும் செய்யலாம். பச்சையா செய்திற்ரு வெக்கம்!
ஆஸ்பத்திரியில எனக்குப் பிள்ள பிறந்தபோது ஊரில உள்ளவளவைக்குச் சந்தோசம். ஒருத்தி

Page 56
04 புதுயுகம் பிறக்கிறது
வெட்ட வெளியாகக் கெட்டுப் போறது அவள வைக்குப் பிடிப்பு. தாங்க நல்ல வளவ மாதிரி நடிச் சுக்கொள்ளலாம் பார்?
'ஆரு தங்கச்சி, பிள்ளையின்ர தகப்பன்?' எண்டு ஒருத்தி நல்ல பிள்ளபோல ஆஸ்பத்திரியிலே வைச்
சுக் கேட்டாள்.
எவனே ஒருவன். ஊரிலுள்ள கோயிலில் கள் ளுக் குடிச்சிற்றுவரும் ஒரு கள்ளப் பிராமணன் தான் அதிகமாக என்னேட கூட. ஆனல் அவனை யெண்டு நிச்சயமாக எப்படிச் சொல்றது? அதோட இவளவையஞக்குச் சொல் லத்தான வேண்டும்? இவளவை பெறுகின்ற பிள்ளை களெல்லாம் இவளவையின்ர பிரியன் மார்களுக்குத் தானு பிறக் குதள்? எவனுே ஒருத்தன். வேற கடவுளா பிள்ளை தரப்போருன்? அதை நினைக்கச் சிரிப்பா இருந்தது. அப்படியே வேண்டுமெண்டே சொல்லியும்விட்டன் . கடவுளின்ர பிள்ளை !
ஊரில அந்தக் கதை நல்லாப் பரவியிருக்கும். ஒரு மாசத்துக்குள்ள பிள்ள செத்துப்போன பிறகும் அந்தக் கதை செத்துப்போயிருக்காது. ஆச்சிக்கு இதெல்லாம் துச்கத்தக் கொடுத்திருக்கும். போன மாசம் அவா செத்துப்போன. இப்ப அவாவின் ர அந்திரட்டி. மூத்த ராசாவின்ர வீட்டில நடக்குது. ஆச்சியெண்ட படியால்தான் இஞ்ச நான் வந்தனன். அதோட ஆச்சிக்குப் பெரிசாச் சடங்கு செய்யிறவர் எனக்குச் செய்த வேலையையும் மற்றவ. பாக்கட்டு மன். மற்றவ பாக்கட்டுமெண்டுதான் நான் வெளிக் குத்தில வேண்டுமெண்டே இருக்கிறன் .
வெய்யில் மேல் படியைத் தாண்டி உள்ளுக்குள் ளும் வந்துவிட்டது. சிவக்கொழுந்துவின் முகத்தில்

பிறத்திவாள் 05
சுள்ளென்று விழுந்தது. ஆனல் அவள் எழுந்திருக்க வில்லை. அவை பாக்கட்டுமன் என்று தனக்குள் ளேயே சொல்லிக்கொண்டு வேண்டுமென்றே விடாப் பிடியாக இருந்தாள்.
"இஞ்சால வந்திரன் பெட்ட!” என்று யாரோ ஒருத்தி சத்தம் போட்டாள்.
சிவக்கொழுந்து அவள் பக்கம் திரும்பவில்லை. ஆனல் தன் பக்கந்தான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதை அவளால் உணர முடிந்தது. அவர்களது முகபாவங்கள் எப்படியிருக் கும், அவர்கள் என்னென்ன கதைப்பார்கள், எப்படிச் சிரிப்பார்கள் என்பதையெல்லாம் அவளால் கற்பனை பண்ணிப் பார்க்கமுடிந்தது. திடீரென்று எழுந்து போய் எவளாவது ஒருத்தியை கீழே இழுத்துப் போட்டு ஏறிமிதித்து உழக்கவேண்டும்போல் ஏதோ ஒன்று அவளை உந்திற்று. ஆனல் எதுவும் செய்யா மல் பேசாமல் இருந்தாள். ஆனல் அதேசமயம் அதிக நேரம் அப்படி அவளால் இருக்க முடியவில்லை.
எங்கிருந்தோ வந்த ஒரு கிழவன், ‘என்ன இப்படிக் குந்தியிருக்கிற, ஐயரல்லா வந்திற்றேர் எழும்பிப்போய் தேவாரம் படியன்!”* என்று சொல்லிக்கொண்டு அவளின் கையைப் பிடித்து இழுக்கத் தொடங்கினன்.
சிவக்கொழுந்து அதை எதிர்பார்த்திருக்கவே இல்லை, பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் கலகல வென்று சிரித்தது அவளைச் சாகடிப்பதுபோலிருந் தது. அந்தக் கிழவனின் முகத்தில் ஓங்கி ஓர் அறை விடவேண்டும்போல் அவளுக்கு ஆத்திரம் கெம்பிக் கொண்டு வந்தது. ஆளுல் கை எழவில்லை; ஒரே
AA - 14

Page 57
06 புதுயுகம் பிறக்கிறது
யடியாய் அசைய மறுத்துவிட்டது. அப்போதுதான் சிவக்கொழுந்து வால் முதல்முதலாக அவர்களின் வலிமையை உணரமுடிந்தது. அவர்கள் பெரியவர் கள். அவளைவிட என்னதான் கேவலமாக நடந்து கொண்டாலும் அவர்கள் எல்லோரும் ஓர் உலகம். அவள் மட்டும் தனியவள். அவளால் அவர்களை எதிர்க்க முடியாது!
ஒரு கணத்துக்குள் வந்துபோன அந்த உணர்வு அவளை ஒருக்கால் ஸ்தம்பிக்கச் செய்தது. ஆனல் ஒருகணந்தான். அடுத்தகணம் பழிவாங்க ஒரு வழி கிடைத்துவிட்டது. செய்யிறன் வேலை என்று உள் ளுக்குள் கத்திக்கொண்டே முற்றத்தில் உருண்டு செத்தவள் போல் வெய்யிலில் கிடந்தாள். எனி அவளவை சிரிக்கட்டு. ஆச்சிக்கு முதலாளி அந்தி ரட்டி செய்யட்டு. ན་
சிறிதுநேரம் ஒருவரும் ஒன்றும் செய்யவில்லை. ஆனல் சீக்கிரம் ஒருத்தி கிட்டே வந்தாள்.
* அங்கார் அதின் ர வேலைய!”
கிட்டே வந்தவனின் 'குர%லக் கண்ணைமூடிக் கொண்டு கிடந்த சிவக்கொழுந்து வால் மட்டுக்கட்ட முடிந்தது. அவள் பொன்ன்ம் மா. பெரிய இரக்கப் படுறவள்போல வாருள்! கிட்டேவந்து கையைப் பிடித்துத் தூக்கினள் அவள். வேறு ஒரு ஆளின் பிடியையும் சிவக்கொழுந்துவால் உணரமுடிந்தது. அந்தக் கிழவனுக்கும். ஆனல் அவள் வேண்டு மென்றே முழுப்பலத்தையும் கூட்டி எழ மறுத்து இழுத்துப் பிடித்தாள்.
*இஞ்சார் அதின்ர கிறுவ! நீயும் வா!" என்று பொன்னம்மா வேறு ஒருத்தியைக் கூப்பிட்டது சிவக்கொழுந்துவுக்குக் கேட்டது. அதைத்

பிறத்தியாள் O7
தொடர்ந்து இன்னும் பலர் அவளைச் சுற்றி வட்ட மிட்டுத் துரக்க முயன்றனர். "ஈழக் காறி வெய்யி லுக்க கிடக்கிருளே!” என்று யாரோ சொன்னர்கள். அது முழுத்தாளம். அந்தக் குரலில் பச்சை யாக வந்த போலி அன்பு சிவக்கொழுந்துவின் உடலை ஒருக்கால் குறுகவைத்துவிட்டது. அடுத்த கணம் அத்தனைபேரும் ஏதோ தொண்டு செய்வது போல் நடிக்கிருர்கள் என்ற உணர்ச்சியை அவளால் தடுக்கமுடியவில்லை. கண்களைத் திறந்து ஒருக்கால் அவர்களைப் பார்த்துக்கொண்டாள். மெல்லிய ஒரு கேலிச்சிரிப்பும் ஒருவகைக் குள்ளச் சந்தோசமும் அவர்கள் ஒவ்வொருவரது முகத்திலும் எழுதி ஒட்டி விட்டதுபோல் நிற்பதை அவளால் காணமுடிந்தது, அதற்குப்பின் அவர்களின் ஸ்பரிஸத்தை அவளால் தாங்கவே முடியவில்லை. ஏதோ பாவத்தைத் தீண்டு வதுபோல் அவள் துள்ளிக்குதித்தாள். மற்றப் பெண்கள் ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தனர். ஆனல் சிவக்கொழுந்துவிடம் ஆத்திரந்தான் நின் றது, ‘என்னைத் தொடாதேங்க, என்னைத் தொடா தேங்க!" என்று கத்திக்கொண்டே அவர்களை உதறி விட்டு நடக்கத் தொடங்கினுள்.
நீங்க எல்லாம் பசப்பல்காறியள். உங்களைத் தொட்டாலே பாவம். ஆச்சி செத்தபிறகு ஆச்சி யில பெரிய அன்புவைச்சவர் மாதிரி அவர் இப்ப நடிக்கிறேர். நீங்க இப்ப என்னில இரக்கம் மாதிரிப் பசப்பிறேங்க. நடிப்பு, பசப்பல், பாவனை, எல்லாம் களவும் பொய்யும். முழுத்தாளம். முழு நடிப்பு. உங்கள்ள முழிச்சாலே பாவம் !
சிவக்கொழுந்து விறுவிறுவென்று நடந்தாள். அவர்களைப் பழிவாங்குவதைவிட அந்த இடத்தில் இருந்து தப்பிவிட்டாலே போதும் என்ற ஓர் உந் தல் அவளை வேகமாக ஒட்டிற்று. *

Page 58
தொழுகை
*ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும். y,
மார்கழிக் குளிர் இருளின் நிசப்தத்தில் அது நல்லாகக் கேட்கிறது. செல்லம்மா ஆவலோடு கேட் டுக்கொண்டிருக்கிருள். அவளுக்கு நிச்சயமாகிறது அவர்தான் படிக்கிருர். "வாள் தடங்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின்செவிதான்."
நல்லாகக் கேட்கிறது. முத்துவுக்கும் கேட்கும். இனி அவன் வந்துவிடுவான். செல்லம்மாவின் உட லில் ஒரு துடிப்புப் பற்றுகிறது. அவள் எட்டிப் பார்க் கிருள். முன்னுலுள்ள சீமால் வேலிக்குப் பின்ன லுள்ள வேலியில் கிடக்கும் பொட்டால்தான் அவன் வருவான். ‘வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து. 9
வேலிப்பக்கம் ஒரே இருளாய்க் கிட்க்கிறது. ஐந்து மணிகூட ஆகியிருக்காது. அதோடு மழை மூடம். அந்த இருட்டில் முத்து முன்னல் நின்ரு ல்

தொழுகை 09
கூடத் தெரியாது. அவனுடைய கன்னங்கரேர் என்ற உடம்புக்கும் இருட்டுக்கும் எந்தவித வித்தியாசமும் இருக்காது. செல்லம்மா லாந்தரை எடுக்க நடுவறைக் குள் போகிருள். அவளைக் கேட்காமலேயே அவளின் காது கோயிலிருந்து வரும் ஓசையைக் கிரகிக்கிறது. அவளுக்கு அவை தளர் பாடம்.
*ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதோ எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்." சேமக் கல ஓசையோடு சங்கூதல் தொடர்கிறது.
லாந்தரை எடுத்துக்கொண்டு அடுத்தறைக்குள் எட்டிப்பார்க்கிருள். பெரியபெட்டை, சின்னப் பெட்டை எல்லோருக்கும் நல்ல நித்திரை. ஓசைப் படாமல் கதவைப் பூட்டிக் கொண்டு திரும்புகிருள்.
பாடலுக்கு உரை சொல்லப்படுகிறது. அது அவருடைய குரல் அல்ல. பண்டிதர் நல்லதம்பி யரின் குரல். திடீரென்று அவளின் கண்களை ஏதோ அமத்திப் பொத்துகிறது.
செல்லம்மா ஒரு கணம் பயந்துபோகிருள். ஆனல் ஒரு கணந்தான். அடுத்தகணம் 'தூப்” பென்று மெல்லத் துப்பிக்கொண்டு தன்னைச் சமாளித்துக் கொள்கிருள். கண்களை மறைத்த கைகளை இழுத்து விலக்கிக்கொண்டு திரும்பியபோது திரும்பவும் உட லில் பழைய துடிப்புக் கூடுகிறது.
'பயந்திற்றியா?*
லாம்பு வெளிச்சத்தில் முத்துவின் வெள்ளைப் பற்கள் பளிச்சிடுகின்றன.
"தெறிச்சிருவ இளிக்கிறியா பேய்மாதிரி அமத் தியிற்று?’ என்று கோபிப்பவள்போல் பாவனை

Page 59
O புதுயுகம் பிறக்கிறது
காட்டிக்கொண்டு லாந்தர் இருந்தெடுத்த நடு வறைக்குள் போகமுயல் கிருள் செல்லம்மா. முத் துவை வேண்டுமென்றே அப்படித் திட்டுவது அவ ளுக்கு சுவைத்தது.
நடுவறைக் கதவடியில் வைத்து முத்து அவ ளைப் பிடித்துக்கொள்கிறன். உள்ளே அவனுக்குப் பழக்கமான அந்த மெத்தைபோட்ட கட்டிலில் இரண்டு தலையணை கள் அடுக்கிவைத்த மாதிரியே கிடக்கின்றன. இரவுப் படுக்கையின் அடையாள மாக அழுத்தம் ஒன்றும் அவ்வளவு இருக்கவில்லை. முத்துவால் செல்லம்மாவின் அப்போதைய நிலையை உணரமுடிகிறது. அவருக்குத் திருவெம்பாவை விர தம்! முத்து தன் பிடியை இறுக்குகிருன்.
"பனையில் ஏர்ற பழக்கம் போகாது, விடு விளக்க
வைக்க **
செல்லம்மா வேண்டுமென்றே அவனைத் திட்டு கிருள். அப்படிப் பேசும்போதே அவளுக்குத் தலை யில் கிறுக்கம் ஏற்படுவதுபோல் ஆரம்பித்து விடு கிறது. ஆனல் அப்படி ஒரு பேச்சைத் தான் அவ ரோடு - அவள் புருஷன் ஆறுமுகத்தோடு -அவளால் பேசமுடிவதில்லை. பேசுவதற்கு அவர் என்றுமே விட்டுவைத்ததில்லை. அவரில் அவளுக்குக் கொள்ளை விருப்பம். அவரிடம் இருக்கும் நல்ல குணங்களை யாரிடமுமே அவள் இன்னும் காணவில்லை. ஆனல் அதனுல்தானே என்னவோ அவரிடம் ஏதோ குறை இருப்பதுபோல் செல்லம் மாவுக்கு இப்போ படத் தொடங்கியிருக்கிறது. அவரில் அவளுக்கு அன்பு உண்டு, அருகதை உண்டு. அவருக்காக வேண்டி அவள் எதையும் செய்யத் தயார். ஆனல் முத்து வில் அவளுக்கு ஏற்படும் இப்படியான ஒரு பைத் திய வேகத்தோடுவரும் வெறிகலந்த ஆசை மட்

தொழுகை
டும் அவர்மேல் அவளுக்கு ஏற்படுவதில்லை. ஏற்பட அவர் இடம்வைப்பதில்லை.
பத்து நாட்களுக்கு முன்புதான் முத்துவுடன் செல்லம்மா முதல்முதலாகக் கதைத்தாள். முத்து கள்ளிறக்குபவன், நாடான். முன் வளவில் பனை சீவு பவன் . ஆனல் அன்று அவனேடு கதைத் தற்குப் பின் என்றுமே இல்லாதவகையில் உடலில் ஏதோ ஒன்று முதல் முதலாகக் கிளறப்பட்டதைச் செல்லம் வாவால் உணரமுடிந்தது. அதற்குப் பின் ஒரு தடு மாற்ற நிலை. காலையில் எழுந்து குளிப்பது, படத் துக்குப் பூசைசெய்து கும்பிடுவது, அவர் பள்ளிக் கூடத்துக்குப் போகமுன் சைவச்சாப்பாடு ஆக்கு வது, பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு விடுவது என்று பதினறு வருடங்களாகப் போன வாழ்க்கை யில் - கல்யாணங்கட்டிப் பதினறு வருடங்களும் ஆகி விட்டதே, பெரிய கமலத்துக்குப் பதினன்கு, சின்ன யோகத்துக்குப் பன்னிரெண்டு-பதினறு வருடங்கள் நிதானமாகப் போன வாழ்க்கையில் திடீரென்று ஒரு சலனம் ஏற்படத்தொடங்கிற்று. ஆரம்பத்தில் வைரவர் கலையாக்கும் என்றுதான் அவள் நினைத் தாள். அப்படியும் அவளுக்கு வருவதுண்டு. பக்கத் தில் இப்போ அவர் பாடிக்கொண்டிருக்கும் சிவன் கோவிலில் திருவிழா ஏற்படும் காலங்களில் அப்படி அவளுக்குக் கலை வருவது வழக்கம். அப்படி ஒரு விறுவிறுப்பு முத்துவைக் கண்டபின் அவளின் மன நிலையில் விழுந்துவிட்டிருந்தது. ஆனல் அந்த விறு விறுப்போடு அது நின்றுவிடவில்லை. அதற்குப்பின் அவளுக்கு ஏதோவெல்லாம் கதைக்கவேண்டும்போல் இருந்தது. ஏதோவெல்லாம் செய்யவேண்டும்போல் இருந்தது. மூன்ரும்நாள் அவர் பள்ளிக்கூடம் போன பின் விறகெடுக்கப்போகும் சாட்டில் முத்துவரும் நேரம் பார்த்து முன்வளவுக்கு அவள் போய்விட் டாள்! அவளுக்கே தெரியாமல் நடந்த நிகழ்ச்சி

Page 60
2 புதுயுகம் பிறக்கிறது
போல் அது பின்புபட்டது. கலையில் வரும் ஒரு மயக்கவேகம்! அதே வேகத்தில் தான் ஐந்தாம்நாள் முத்துவின் யோசனைப்படி திருவெம்பாவைக் காலம் தொடங்கியபின் விடியக் காலையில் அவர் கோயிலுக் குப் போன பின் அவனை வரவேற்கும் துணிவுகூட அவளுக்கு வந்திற்று, அதற்குப்பின் தான் அவரின் குறைகள் அவளுக்குத் தெரிய ஆரம்பித்தன. அப் படிச் செய்யக்கூடிய சக்தி அவளிடங்கூட இருந்தி ருக்கிறது என்பதை நினைக்க அவளுக்கே பயமாக வும் ஆச்சரியமாகவும் இருந்திற்று. ஆனல் அவர் கொடுக்காதவற்றேடு ஒப்பிடும்போது அவற்றைத் தாங்கிக்கொள்ள அவளால் முடிந்தது. அவர் மிகமிக நல்லவர். மிகமிகக் கடவுள் பக்தி. ஆனல் அது தான் எப்படியோ இப்போ அவரின் குறையாகவும் பட்டது. பச்சையாக அவரிடம் எதுவுமே இல்லை. கழுவித் துடைத்து பூசிக்கீசி மறைத்து மரியாதை பார்த்துத்தான் அவர் எதையும் கொடுப்பார். முன்பு அவை எவையும் குறையாகப்பட்டதில்லை. ஆனல் இப்போதான் அவளுக்கு வித்தியாசம் தெரி கிறது. அதோடு அவருக்கு முன்னுல் அவளின் நிலை இரந்து வாங்கும் ஒரு பிச்சைக்கார நிலையேதான். கொடுத்துவாங்கும் ஒரு சமத்துவ வியாபாரம் இருப்பதில்லை. விளக்கு ஒருநாளும் எரிவதில்லை. களைந்து எதுவும் நடப்பதில்லை. பச்சையான பேச்சு, இப்படி ஒரு தலைக்கிறுக்கம் எதுவும் இல்லை.
செல்லம்மாவுக்கு முத்துவில் பிறந்த ஆசைவேகம் பிய்த்துக்கொண்டு ஒடுகிறது. “விடு மூதேசி விளக் கைவைக்க!” என்று திரும்பவும் கோபித்த பாணியில் பேசுகிருள்.
பிடியைத் தளர்த்தி, அறைக்குள் கட்டிலுக் கெதிரே இருந்த மேசையில் லாந்தரை வைப்பதற் குச் செல்லம்மாவை விட்டுவிட்டுப் பின்னல் வந்து

தொழுகை 3
முட்டியும் முட்டாமலும் நிற்கிருன் முத்து. கோயி லில் இருந்துவரும் குரல் கேட்டுக்கொண்டே இருக் கிறது. தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத் துள் ஈசனுர்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்." டிங்டிங், பும்பூம். நேரம் எவ்வளவோ இருக்கிற தென்ற நிதானத்தால் செல்லம்மாவுக்குத் தைரியம் ஏற்படுகிறது. தொடர்ந்து லாந்தரைத் தொட்டுக் கொண்டு ஏதோ செய்பவள்போலவே அவள் நிற்கி ருள். வெறும் பாவனை. வியாபாரத்தில் அவளுக் குரிய பேரம் பேசும் உரிமை, அவரோடு அனுப விக்காத ஒன்று.
"அம்மாவுக்குக் கோபமாக்கும்?*
அவள் பேசவில்லை . லாந்தரில் இன்னும் ஏதோ வேலையிருக்கிறது.
முத்து ஒவ்வொன்முக உடைகளைக் களை கிருன். அவனது கைகளிலும் ஒரு துடிப்பு, நடராசர் கடை யில் கள்ளுக்குடிக்கவரும் ஒவ்வொருவரும் செல்லம் மாவைப்பற்றிப் புகழ்ந்திருக்கிருர்கள். ஆறுமுக மாஸ்றற்ற பெண் சாதி ஒரு தங்கப்பவுண்’ ‘கட வுள் பக்தியான மனுஷி" முத்துவுக்கு உலகத்தையே வென்ற ஒரு திளைப்பு நெஞ்சை நிரப்புகிறது. சமத்துவம் பெற்ற களிப்பு வெறி. தாவணி, சேலை,
உட்சட்டை, பாவாடை. .
பதினறு வருடவாழ்க்கையில் அப்படி விளக்கு வெளிச்சத்தில் ஒவ்வொன்முக விழுவதை அந்த ஆறே ஆறு நாட்களாகத்தான் செல்லம்மா காண்கி ருள். முத்துவின் முழு உடலும் பச்சையாக முட்டு வதை அவளால் உணரமுடிகிறது. அடுத்தகணம் நேராகத் திரும்பி அவனை ஒரே அணைப்பாக அணைத் துக்கொள்கிருள். -
AA - 15

Page 61
4 புதுயுகம் பிறக்கிறது
'முத்து, உன்னிலதான் எனக்கு ஆசை'
அவனுக்கு ஒரு வெற்றிப் பெருமிதம். ஆனல் இன்னும் அதை விளக்கவேண்டும்போல் படாமலு மில்லை. "அப்ப அவரில?”
செல்லம் மாவுக்கு கோயிலிருந்து வரும் அவர் குரல் கேட்கிறது: "கண்ணைத் துயின்றவமே காலத் தைப்போக்காதே விண்ணுக்கொரு மருந்தை, வேத விழுப்பொருளை. 'i
*அவரில எனக்கு அன்புதான். அவர் செத்தால் நானும் செத்திருவன்’ அவள் சொல் கிருள். ஏதோ குழந்தைப்பிள்ளையைத் தடவி விடுவது போல் அவரைத் தடவி விடவேண்டும் என்ற ஓர் உணர்ச்சி அவள் மனதில் எழுகிறது. "அவரில எனக்கு உயிர். ஆன உன்னிலதான் எனக்கு ஆசை.”
முத்துவுக்கு அவள் என்ன கருதுகிருள் என்று பூரணமாக விளங்கவில்லை. ஓரளவுக்குத்தான் விளங் கிற்று. ஆனல் பேரம் பேசும் உரிமை மட்டும் இப் போ தன்னுடையது என்பதை மட்டும் அவளுல்ை முற்றக உணரமுடிகிறது. அதோடு அவரைப்பற்றி இன்னமும் அப்படிச் சொல்கிருளே என்ற ஒரு மெல்லிய கசப்பும் இல்லாமலில்லை. அதன் காரண மாய்த் தன் முக்கியத்துவத்தின் தன்மையை முற் முக அறிந்து விட வேண்டும் என்ற துடிப்பு இன் னுங் கூடுகிறது. அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் வளர்த்திவிட்டு கொஞ்சமும் கவ லைப் படாதவன் போல் எட்டிப்போய் தூரத்தில் நிற்கிருன் , "நான்மாட்டன், அவரட்டான் போ’
செல்லம்மா படுக்கையில் கிடந்தபடியே அவன் பக்கம் பார்வையைத் திருப்புகிருள். வாழ்க்கையில்

தொழுகை 5
முதன்முதலாக நிதர்சனமாக அப்படி ஒரு காட்சி. சென்ற ஐந்துநாட்கள் கூடக் காளுத ஒரு பரி மாணம். கன்னங் கரேரென்ற நிறம். கறுப்பு, கறுப்பு. .
அவரைப்போல் அவன் தொகதொகவென்று கொழுப்பாய் இருக்கவில்லை. மெல்லிய உடம்புதான். ஆனல் அத்தனையும் ஒரு வேகத்தை அடைத்துப் பிடிக்கும் ஒரு இறுக்கத்தோடு அமைந்திருக்கிறது. கறுப்பு, கறுப்பு.
Triato a மெல்லக் கீழே இறங்குகிறது. அதோடு செல்லம்மாவின் தலையில் ஒரு கிறுகிறுப் பும்கூடத் தொடங்குகிறது. அவளால் அதைதி தடுக்க முடியாமல் இருக்கிறது வைத்த கண் வாங் காமல் பார்த்துக்கொண்டே கிடக்கிருள். தலையில் அந்தக் கிறுகிறுப்பு விறுவிறென்று ஏறுகிறது.
பக்கத்துச் சிவன்கோயில் .
மூலஸ்தானத்தில் இருபெரும் தூண்களுக்கிடை யில் தொங்கிக்கொண்டிருக்கும் பென்னம்பெரிய தூண்டாமணி விளக்கின் பின்னணியில் எண்ணெயின் வழுவழுப்போ டு கன்னங்கரேரென்று எழுந்து நிற் கிறது லிங்கம் . . ஐயர் கற்பூர விளக்கைக் காட்டு கிருர். சிவப்புத் தீபம் மேலே செல்கிறது, மேலே செல்கிறது, லிங்கத்தின் நுனிக்குச் செல்கி
நிறது . . . . .
அரோகரா ! அரோகரா! சுற்றிநிற்பவர்கள் கத்துகிருர்கள், கத்துகிருர்கள்.
செல்லம்மாவுக்குக் கோயிலில் கலைவரும் காட்சி நினைவுக்கு வருகிறது. உடலில் ஒரு பயங்கரவேகம்.

Page 62
6. புதுயுகம் பிறக்கிறது
அரோகரா என்ற ஒசைப் பெருக்கத்துக்கு ஏற்ப உள்ளே ஏதோ ஒன்று பெருகிறது.
எண்ணெயின் வழுவழுப்போ டு கன்னங்கரேர் என்று எழுந்து நிற்கிறது லிங்கம். சிவப்புத் தீபம் மேலே செல்கிறது, மேலே செல்கிறது. லிங்கத்தின் நுனிக்குச் செல்கிறது. -
செல்லம்மா கட்டிலைவிட்டு மூசிக்கொண்டு பாய் கிருள். முத்துவைக் கட்டிப்பிடித்து இறுக அணைத்த வண்ணம் கட்டிலில் சாய்த்து அமத்துகிருள். முத்து வின் அணைப்பு அவளின் வேகத்தைக் கூட்டுகிறது. உடல்களின் பிணைப்போடு வாய்க்குள் புகுந்த முத்து வின் நாக்கு எங்கோ போய்த் தொடுகிறது, எங்கோ போய்த் தொடுகிறது. முதுகிலிருந்து ஆரம்பித்து எலும்பு நீட்டுக்கு ஓடிக் கீழே கீழே வெளியே வெளியே எங்கோ எங்கோ. கீழே கீழே எங்கோ
எங்கோ .
செல்லம்மா சோர்ந்துபோகிருள். அவளின் பிடி தளர்கிறது.
சிறிது நேரத்துக்குப் பின் முத்து எழுகிருன். பிடிதளர்ந்து மட்டமல்லாக்காய்ச் சாய்ந்த செல்லம் மாவின் தோற்றம் அவனைப் பிரமிக்க வைக்கிறது. உடலில் ஒவ்வொரு மயிர்க்காலிலும் துளிர்த்து மினுங்கிய வியர்வை ஒளியோடு போட்டிபோட்டுப் பூரித்துப் பிரகாசித்த அவளின் முகம் அவனைப் புல்லரிக்க வைக்கிறது. எங்கோ பார்த்த தோற் றம். கோயில் சாத்துப்படி - ஸ்தான மூலையில் தங் கத்தால் செய்து நிற்கும் அம்மன் சிலையின் அருள் செறிந்த தோற்றம்! ஆறுமுக மாஸ்றற்ற பெண் சாதி தங்கப்பவுண் என்று ஊரார் சொன்னது அவ னுக்கு நினைவு வருகிறது. இல்ல, தங்கப்பவுணில்ல. தங்கச்சில, தெய்வச்சில, தெய்வம்!

தொழுகை 7
கோயிலிலிருந்து குரல் கேட்கிறது.
தங்கள் மலங்கழுவுவார் வந்து சார்தலினல் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடை யும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோர் எம்பாவாய்". டிங்டீங், ւյմ։ Էեմ.......
முத்துவின் உடல் புல்லரிக்கிறது. சோர்வை மறந்து அவனையறியாமலேயே செல்லம்மாவைப் பார்த்தவண்ணம் தானும் ஏதோ அப்படி முணு
முணுக்கிருன்.
兴

Page 63
சாமியாரும் பணக்காரரும்
அவர் பணக்காரர். ஓர் இலட்சாதிபதி. உயர்ந்த நெற்றியோடு தலையில் ஒரு குடும்பிதொங்கு கிறது. உடம்பில் நான்கு முள வேட்டியைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதுகூடக் கட்டுத் தளர்ந்து கழன்று விழுந்து விடுவதுபோல் ஒட்டாமல் இடை யில் தொடுக்கப்பட்டிருக்கிறது. பார்த்தால் அவரை ஒர் பணக்காரர் என்று சொல்லவே முடியாது.
பணக்காரரைத் தேடி ஓர் சாமியார் வருகிரு ர். பணக்காரருக்குப் பழக்கமான சாமியார். அரையில் சிவப்பேறிய காவி உடை தரித்திருக்கிருர், அதற் குள்ளே இன்னுமோர் அழுக்கேறிய உடை இருக்கு மோ என்று அஞ்சும்படியாகச் சிவப்புக்காவி பொம் மித் தெரிகிறது. ஒருவேளை அப்படியே இருக்கலாம். மடிப்பக்கமாக இரு பைகள் தொங்குகின்றன. ஒன்று வீயூதிப்பை, மற்றது கொஞ்சம் பொம் மலாகவே இருக்கிறது. அதற்குள் என்ன இருக்குமோ இறை வனுக்குத்தான் தெரியும். இரண்டு பைகளையும் செருகியிருக்கும் கோலத்தைப் பார்க்கும்போது

சாமியாரும் பணக்காரரும் 9
உள்ளே ஏதோ பெரிய கயிருே சங்கிலியோ அரை நாண்கொடியாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதன் பிடியில்தான் பைகள் செருகப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரம் தாங்காமல் பைகள் கீழே விழுந்துவிடும்; பைகள் விழாவிடில் அரையில் கட்டியுள்ள காவி யாவது பாரம் தாங்காமல் கழன்று விழுந்துவிடும். அரைக்குமேலே உடம்பின் மேற்பகுதியை இன்னேர் காவித்துணி சுற்றிப் போர்த்து மறைத்திருக்கிறது. அரையிலுள்ள காவியைவிட அது சாயம் குறை வானது. எல்லாவற்ருேடும் சேர்த்து ஆளைக் கூன வைத்த வண்ணம் தோளில் ஓர் பொட்டலம் தொங் குகிறது. தண்டல் பொருட்களைத் தாங்கும் பொட் டலம் அது.
சாமியார் வருவதைப் பணக்காரர் பார்த்து விடுகிறர். 'அப்பூ, முருகா! வாருங்க சாமி, வாருங்க!” என்று வரவேற்கிழுர்,
* அப்பாடா! என்ன வெய்யில்! நெருப்புமாதிரிக் கொளுத்துது!” என்று சலித்துக் கொண்டே சாமி யார் படியேறி உள்நுழைகிருர் . மூட்டையைக் கீழேவைத்து, போர்வையைத் தளர்த்தி பெரு மூச்சு விடுகிருர் சாமியார். 'ஊ! ஊ உ!’
“ஏதோ இறைவன் செயல், மழையைக் காணேல்ல" என்று சமாதானம் செய்கிழுர் பணக் iqis firri .
சாமியாருக்குச் சலிப்புத் தீரவில்லை. அவர் சபித் துக் கொள்கிரு ர்.
"பாழ் பட்ட வெய்யில், மனிசனப் பொசுக்கிப் போட்டுது. , எங்க கொஞ்சம் தண்ணி தாருங்க

Page 64
20 புதுயுகம் பிறக்கிறது
பாப்பம், நாக்கு வறண்டுபோச்சு. தண்ணிய விடக் கஞ்சியெண் டா நல்லம். கஞ்சி கிஞ்சி ஏதா வது இருக்குமா?’
*கமலம்!' பணக்காரர் தன் மகளைக் கூப்பிடு கிருர். **கமலம்!"
கமலம் குசினிக்குள்ளிருந்து ஓடிவருகிருள். ** என்ன, கூப்பிட்டேங்கள்?’’
‘கஞ்சி இருக்கா? சாமியாருக்குக் கஞ்சியிருந்
தாக் கொண்டுவா பாப்பம்?”
*ம்ம், இருக்குது’’ கமலம் சொல்லிவிட்டுச் சிரித்தவாறு போகிருள். அவளுக்கும் சாமியாரைப் பற்றித் தெரியும்.
'ஏதோ முருகன் செயல்” என்று நன்றி கூறு கிருர் பணக்காரர்.
*இந்த வெய்யிலுக்கு ஊரரிசிக் கஞ்சிதான் சரி” சாமியார் கஞ்சி வரமுன்பே அதை ரசிக்கத் தொடங்கிருர் . 'ஊரரிசிக் கஞ்சிக்கக் கொஞ்சத் தேங்காப்பாலும் புழிஞ்சுபோட்டுக் குடிச்சா இந்த வெய்யிலுக்கு அமிர்தம்போல இருக்கும்.’’
*ஏதோ முருகன் செயல்” பணக்காரர் ஆமோ திக்கிருர்,
சாமியாருக்கு அப்போதுதான் நினைவு வந்தது போல் மடியில் செருகியிருந்த வீயூதிப்பையை எடுத்து வீயூதி கிள்ளிக் கொடுக்கிருர், பக்தியோடு அதை வாங்கிய பணக்காரர் தலையை நிமிர்த்தி முகட்டைப் பார்த்தவண்ணம் நெற்றியில் பூசுகிருர் . "அப்பூ, முருகா! ஏதோ உன் செயல்!”

சாமியாரும் பணக்காரரும் 2
சாமியாருக்குக் கஞ்சி வருகிறது. அதை ஆவ லோடு வாங்கிச் சொட்டுச் சொட்டாய் ரசித்துக் குடிக்கிருர். குடித்துக்கொண்டே கூறுகிருர். "பெட் டைக்கு என்னைப்பற்றித் தெரியும். தேங்காப்பா லெல்லாம் செவ்வையாப் போட்டண்டுதான் வந் ருக்கு” Y
'ஏதோ எல்லாம் இறைவன் செயல்" பணக் காரர். ஏதோ தான் செய்வதெல்லாம் தான் செய் வதல்ல என்பவர் போல் மேலே பார்த்துச் சொல்லி விட்டு தன்பாட்டுக்கு ஒர் பாடலின் அடியைத் திருப்பித் திருப்பி முணுமுணுத்துக் கொள்கிருரர்.
கஞ்சி குடித்துமுடித்த சாமியார் களைப்புத் தீர போர்வையை நிலத்தில் விரித்துவிட்டுக் கீழே சாய் கிருர், தலைவாசல் சீமெந்துத் தரையும் வெளியே யுள்ள தென்னங் கீற்றுக்களில் பட்டுச் சலசலத்து வரும் காற்றும் சாமியாருக்கு மிக இதமாக இருக் கின்றன. பணக்காரரின் வீடு மிகச் சிறிய வீடு. வீட்டைவிடத் தலைவாசல் பெரிது. குசினி தனியே ஒர் பக்கமாக இருக்கிறது. எல்லாம் ஒலைகளால் வேயப்பட்டு வெய்யிலுக்கு ஏற்றவையாய் இருக் கின்றன. நிலத்தில் தவிர வேறு எங்கும் சீமந்து போடப்படவில்லை. சுவர் கூட மண்ணுல்தான் கட்டப் பட்டு பழைய கால முறைப்படி இன்னும் இருக் கிறது.
"அப்பாடா!' என்று திருப்தியோடு நெடுமூச் செறிகிறர் சாமியார். 'உன்ர வீட்டு நிலத்தில் சாய்ஞ்சால் தான் சாய்ஞ்சதுமாதிரி இருக்கும், வெய் யிலுக்கு இதுதான் சரி"
'ஏதோ முருகன் துணை'
AA - 6

Page 65
22 புதுயுகம் பிறக்கிறது
என்ருலும் சாமியாருக்கு இன்னேர் குறை இருந்ததாகவே படுகிறது.
"எண்டாலும் இதை உடைச்சுப்போட்டு வேற யொரு புதிய கல்வீடாகக் கட்டினல் தான் இந்தக் காலத் துக்குச் சரி.' என்கிருர் சிறிது யோசிப்பவர் போல், 'ஏன் உனக்கென்ன குறை, ஒரு கல் வீட்டக் கட்டன்?' "
‘என்னத்துக்குக் கல் வீடும் மண் வீடும்?' என் கிருர் பணக்காரர். "எல்லாம் ஒண்டு தான். பாப் பம், ஏதோ முருகன் எப்படி விடுகிருனுே அப்படி வரட்டு.”
சாமியார் அதற்குப்பின் அதைப்பற்றித் தொடர வில்லை. படுத்துக் கிடந்தபடியே அவர் சுய விசாரணை யில் ஈடுபடுகிறார். ܖ
"நேற்று முழுக்க ஒரே அலச்சல் தான்!” பணக்கா ரருக்குக் கேட்கக்கூடியதாகவே தன்பாட்டில் சொல் லிக் கொள்கிருர், “அதோட ரா வெல் லாம் கொசுக் கடி, ஒருகண் நித்திரைகூட இல்ல. விடியப்புறம் கடையப்பம் தின்னப்போனல் கண்ணும்போல இரண்டு இடியப்பத்தத் தந்திற்று அம்பசேம் எண் டிருங்கள் ! உன்னட்ட வந்தாத்தான் வயிருரக் கஞ் சியாவது குடிக்கலாம். இனிப் பின்னேரம்போல அவள் பொன்னச்சியட்டப் போனச்சரி, இல்லாட்டி எங்க? . . கொஞ்ச ஒடியல் கிடக்குது, அவளெண் டால் நல்ல கூழக்கீழ ஆக்கித் தருவாள்.'
"இன்னம் பொன்ஞச்சியட்டப் போகாமலா வாறேங்க?' பணக்காரர் ஆச்சரியத்தோடு கேட் கிருர். அவரால் நம்பமுடியவில்லை. "நான் என்ன வோ நேற்றே அங்கநிண்டு வாறேங்க எண்டுதான்

சாமியாரும் பணக்காாரும் 23
நினைச்சன். அப்பச் சரி கொஞ்சம் படுங்க. சோருக் கியிருவினம் சாப்பிட்டிற்றுப் போகலாம்."
சாமியாரும் அதை ஒத்துக்கொள்பவர்போல் பேசர் மல் கண்ணை மூடிக் கொள்கிருர், சிறிது நேரத் துக்குள் கமலம் தண்ணிர்ச் செம்பு வாழை இலை சகித மாக வந்து சாமியாரை எழுப்புகிருள். சாமியார் எழுந்து கை முகம் கழுவிவிட்டு சாப்பிட உட்காரு கிருர் . வாழை போட்டுச் சோறும் பரிமாறப்படு கிறது. சாமியார் மிக ஆறுதலாகச் சுவைத்துச் சுவைத்துச் சாப்பிடுகிருர் சாப்பிட்டுவிட்டுப் படிக் கட்டில் உட்கார்ந்து இளைப்பாறியவண்ணம் பக்கத் துச் செத்தையில் எதையோ கைவிட்டுத் தேடு &მცyri.
“என்ன சாமி தேடுறேங்க, என்ன போயி லையா?’ என்று வினவிய படியே பணக்காரர் புகையிலை ஒன்றை எடுத்து நீட்டுகிருர், v . . .
'ஒ, இல்லிப்பேல போயில இருந்தாச் சுருட் டொண்டு பத் கலாம் எண்டு நினைச்சன்’ என்று விளக்கிக்கொண்டே பணக்காரர் கொடுத்த புகை யிலையைப் பிய்த்துச் சுருட்டொன்று உருட்டத் தொடங்கிருர் சாமியார். உருட்டிய பின் நெருப் புப்பெட்டியையும் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு மூட்டையைத் தூக்கியவாறு புறப்படத் தயாரா Scipii. S. 8
"அப்பாடா!' எழுந்திருப்பது கொஞ்சம் கஷ் டமாகவே இருக்கிறது. அப்ப நான் வாறனப்பு, என்ன? உன்ர வீடும் இல்லாட்டி என்ர பாடும் கஷ் டந்தான். அப்ப நான் வாறன், என்ன?’
“ஒஞ்சாமி, ஏதோ முருகன் துணையால சுகமா

Page 66
24 புதுயுகம் பிறக்கிறது
யிருக்கோணும், அப்பப் போயிற்று வாருங்க’ என்று விடையளிக்கிருர் பணக்காரர்.
"அப்ப நான் வாறன்’ படலையைத் திறத்த வண்ணம் சாமியார் திரும்பவும் விடை பெறுகிருர்,
*ஒஞ்சாமி, போயிற்றுவாருங்க. ஏதோ முருகன் துணை’
படலையைத் திறந்து கொண்டு வெளியே போகி முர் சாமியார். ‘ஏப்பம்" என்று போகும்போது அவர் சத்தம்போட்டு விடும் ஏவறை வீட்டுக்குள் போனபின்பும் பணக்காரருக்குத் தெளிவாகக் கேட் கிறது. "முருகா!” என்கிருர் அவர், மறைவாக மூலையிலுள்ள இரும்புப் பெட்டியை மறைத்துப் போர்த்திருந்த திரைச்சீலையை விலகிவிடாமல் இழுத்துவிட்டவாறே. 兴

பொழுதுபட்ட நேரத்தில் வளவு மூல யிலிருந்த பனையடியில் கந்தையர் முதலாளியார் மலங்கழித்துக்கொண்டிருந்தார். கொழும்பில் காசு கொடுத்து வாங்கிய நோய்க்கு அன்றுதான் வைத் தியம் செய்ய ஆஸ்பத்திரிக்குப் போய்வந்திருந்தார். “என்ன வைச்சு வைச்சுச் சரக்குப் பறிக்கிறியள்? போய் ஆஸ்பத்திரியில காட்டுங்கவன்” என்று அவர் மனைவி கண்ணம்மாதான் அவரை அன்று ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தாள். ஆமாம் அவளுக்கும் விசயம் விளங்கிவிட்டதுபோல் தான் தெரிந்தது. இனி அவளிடமிருந்தும் அதை மறைக்க முடியாது தான். நாளைக்கு அவளையும் கூட்டிக்கொண்டு திரும் பவும் ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும். அவளையும் கூட்டிக்கொண்டு வரும்படி ஆஸ்பத்திரியில் சொல் லியிருந்தார்கள். கந்தையர் முதலாளியாருக்கு அது தான் பெரிய சங்கடமாயிருந்தது. ஆஸ்பத்திரியை அவர் அடியோடு வெறுத்தார். அன்று அவருக்கு நேர்ந்த அனுபவங்களையும் கண்ட காட்சிகளையும் நினைத்துப் பார்க்கத் தாங்கமுடியாத அவமானமாக

Page 67
26 புதுயுகம் பிறக்கிறது
வும் வெட்கமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. "இப்படி வருமெண்டு தெரிஞ்சா நான் போயிருக் கவே மாட்டன்’ என்று நினைத்துக்கொண்டவர், **ச்சீ, நரகம்!” என்று வெளிப்படையாகவே முணு முணுத்துக்கொண்டார். தொட்டுப்பார்த்து, தூக் கிப் பார்த்து, பிதுக்கிப் பார்த்து. அவரால் அதற்குமேல் நினைக்க முடியவில்லை. அவமான மாக இருந்தது. அவர்களின் முகத்தில் எப்படித்தான் அவரால் விழிக்க முடிந்ததோ என்று தெரியவில்லை. 'ச்சீ, நரகம்’ என்று திரும்பவும் முணுமுணுத்துக் கொண்டார். ‘முழு நரகமே இஞ்சான் இருக்கு. வேற இடத்துக்குப் போகத்தேவையில்ல. '
நரகத்தைப் பற்றிய எண்ணம் அன்று ஆஸ்பத் திரிக்கு வந்திருந்த பெண்களையும் ஏனே அவருக்கு நினைவூட்டிற்று.
"குமரியள் கூட வெக்க மில்லாம வாருள வயே! வெளியால சோடிச்சண்டு குலுக்கித் திரியிற கவி யாணம் முடிக்காத குமரியளுக்குக்கூட உள்ளுக்க நச ல்ெ ண்டா ஆர இந்தக் காலத்தில நம்பிறது?
கொழும்பில் அவர் போன அந்தக் கறுப்பியைக் கந்தையர் முதலாளியார் நினைத்துப் பார்த்துக் கொண்டார். கடைசியாக அவர் போனது அவளி ட்ந்தான். அவள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று முடிவு கட்டியிருந்தார். 'ஆளைப் பாத்தால் நசல்காறியெண்டு செர்ல்லுவின மா?"
கடைசியில் அவருக்கு எல்லாமே வேண்டாம் என்று போய்விட்டன. "கர்ம்ம் எண்டு சொல்றது இதத் தான். கர்மம், மாய, நரகம் எல்லாம் இது க்ள்தான். அப்பூ முருகா இனிமேல் தான் இது கள நினைச்சுக்கூடப் பாக்கமாட்டன். என்னைக் காப்

சபதம் 27
பாற்றியிரு. இனியெல்லாம் போதும், போதும் அப் பனே போதும். அன்னம்போல வீட்டுக்க ஒருத்திய வைச்சண்டு ஊரெல்லாம் மேய்ஞ்சனே, இப்ப அவ ளட்டக்கூடப் போகேலாம இருக்கே. அப்பூ முருகா ஒரு கரைச்சலுமில்லாமச் சுறுக்கா என்னக் காப் பாற்றியிரு. நான் இனிமேல் என்ர பெண் சாதியத் தவிர வேற ஒருத்திய ட்டையும் போக மாட்டன், என்ர கடைசிப் பிள்ள யாணப் போகமாட்டன். என்னக் காப்பாற்றியிரு, முருகா, என்னக் காப்
பாற்றியிரு!"
கந்தையர் முதலாளியார் வளவுக்கிருந்தபடியே கையெடுத்துத் தன் பாட்டில் கும்பிட்டுக்கொண்டிருந் தார். அவரை அறியாமலேயே கண்களிலிருந்து கண் னிர் வழிந்துகொண்டிருந்தது. நேரத்தோடு வந்து விட்ட நிலவின் ஒளியில் அவருடைய அப்போதைய காட்சி வேடிக்கையாகவும் இருந்தது, ஒருவிதத்தில் அழகாகவும் இருந்தது.
கும் பிட்டு முடித்த அடுத்த கணம், தான் ஏதோ பிழை செய்துவிட்டதுபோல் பட்டது கந்தையருக்கு. அவரால் அது செய்யக்கூடிய காரியமா? 'தச்சேலா இனியும் போயிற்றணுச்சி?"
கந்தையர் முதலாளியின் மனம் குறுகுறுத்தது. நாற்பது வயது வந்த பின்புங்கூட அவரின் ஆசை கள் இன்னும் தீரவில்லை. அவற்றை இதுவரை அவர் பிழையாகக் கூடக் கருதியதில்லை. முருகனில் அவ ருக்கு அபார பக்தி இருந்தது. ஆனல் அந்தப் பக்தி யோடு இந்த ஆசைகளை அவர் ஒருநாளும் மோத விட்டுப் பார்த்ததில்லை. அவை வேருக, இவற்றை வேருக வைத்துத்தான் அவர் இதுவரை வாழ்க்கை நடத்திவந்திருக்கிருர், எப்போதாவது ஒருகாலத்தில் தங்கள் பாட்டில் இவை தீர்ந்துவிடும், அதற்குப்பின்

Page 68
28 புதுயுகம் பிறக்கிறது
முழுக்க முழுக்க முருகன் பக்கம் திரும்பிவிடலாம் என்று அவர் சமாதானம் செய்த நேரங்களும் உண்டு. அதுதான் அவருடைய தத்துவமுங்கூட. ஆனல் இப்போதுதான் முதன் முதலாக அவர் அவற்றை மோதவிட்டிருக்கிருர். ஒன்றை அழித்து விட்டு மற்ற துக்கு முற்ருகப் போய் விடுவதற்கு இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்பதும் அவருக்குத் தெரிந்தது. அத்தோடு ஓர் முடிவுக்கு வந்த பின் முருகனை ஏமாற்றவும் அவர் விரும்பவில்லை. அவருடைய பக்தி அதற்கு இடங்கொடுக்காது. ஆனல் அதே சமயம் மோதவிடு வதற்கும் முடிவு கட்டுவதற்கும் நேரம் வந்துவிட் டதா என்றும் நிச்சயமாக அவரால் சொல்லமுடிய வில்லை.
*தச்சேலா இனியும் போயிற்றணுச்சி? அவர் தன்னையே கேட்டுக்கொண்டார்.
*அந்தக் கறுப்பியில புதிசா ஒரு ஆசைவந்திற்று. அதால நல்ல தா கூடாதா எண்டு பாக்காமல் அவ சரப்பட்டிற்றன். இனியும் அப்படி அவசரப்படப் போறன? இவ்வளவு நாளைக்கெல்லாம் நான் போகேல் லியா? நல்லதாப் பாத்துப் போயிற்ற ஒண்டுமில்ல. அவள் சின்னம்மா தரவழியட்டப் போன என்ன வந்திற்றுது? அதோட அவள் தானுக வலிய வந்தா நான் இனிப் போகாமலா இருக்கப்போறன்?"
கந்தையர் முதலாளியார் ஒரு கணத்துக்குள் திரி சங்கு நிலையில் வீழ்ந்துவிட்டிருந்தார். அவருடைய வருத்தமும் அதனல் வரப்போகும் விளைவுகளும் ஆஸ் பத்திரி நினைவுகளும் அவரை ஒருபக்கம் இழுத்தன. பிராயச்சித்தம் எதுவுமின்றி அவற்றைத் தீர்க்கச் சொல்லி முருகனைச் சும்மா கேட்பது நியாயமான

சபதம் 29
தாக அவருக்குப் படவில்லை. அதற்கு அவருடைய பக்தி இடங்கொடுக்கவில்லை. தான் எடுக்க நினைத்த சபத க் தைவிட அதற்கு வேறு எதுவும் சரியானதா கத் தெரியவில்லை. ஆணுல் அதே சமயம் அப்படி ஒர் சபதம் செய்வது சரியா என்ற வே நீருர் பிரச் சனையும் அவரை எதிர்ப்பக்கமிருந்து இழுத்தது. *தச்சேலா இனியும் போயிற்றணுச்சி?
போ வார் என்றுதான் உள்ளுக்குள் ஏதோ கூறிற்று. சின்னம்மா வைப்போல் வேறு சிலரும் இன்னும் அடையவேண்டிய இலட்சியங்களாய் அவ ருடைய கணக்கீட்டில் இருந்தார்கள். அவர்களை அடைவதற்கு வசதிகளும் இருந்தன. அறிகுறிகளும் தெரிந்தன. கற்தையர் முதலாளியார் ஊரில் டேர் போன பணக்காரர். பணம் எதுவும் செய்யும் என்ற அனுபவமும் அவருக்குத் துணையாக இருந் தது. எனவே மீதியுள்ள அந்த இலட்சியங்களை யும் அடைவதற்கு முன் அப்படிச் சபதம் செய்வது சரியானதாக அவருக்குத் தெரியவில்லை.
"அப்பூ முருகா, நீ விட்ட வழி. எப்படியாவது முதல்ல என்ர வருத்தத்த மாத்தியிரு. அதுக்குப் பிறகு நீ எப்பிடி விடுருயோ அப்படி வரட்டும்’ என்று பிரச்சனையைத் தீர்க்க ஒரு புது வழியைக் கண்டுபிடித்தவராய்த் திரும்பவும் முணுமுணுத்துக் கும் பிட்டுவிட்டுப் பனையடியில் கிடந்த காய்ந்த ஊமல் கொட்டை ஒன்றை எடுத்துத் துடைத்து விட்டு எழும்பி நடந்தார். அதற்குமேல் அதை வளர்த்துக்கொண்டிருக்க அவர் விரும்பவில்லை.
கிணற்றடிக்கு அடிக்கழுவப் போகு முன் வீட்
டுக் கோடிப்பக்கமிருந்து கந்தையரின் மனைவி கண்
ணம்மா அவரை மிக அவசரமாகக் கூப்பிட்டாள்.
AA — l 7

Page 69
30 புதுயுகம் பிறக்கிறது ‘ண்ணுேய், இஞ்ச வாருங்க!இஞ்ச ஒடிவாருங்க!”
கந்தையர் அடிக் கழுவாமலே கோடிப் பக்கம் ஓடினர்.
‘என்னப்பா குழர்ற?”
*இஞ்ச பாருங்க பென்னம் பெரிய புடையன் பாம்ப, சுறுக்கெண்டு ஒடமுந்தி அடியுங்க"
கிடைசிப்பிள்ளையை இடுப்பில் வைத்துச் சோறு தீததிக்கொண்டு நின்ற கண்ணம்மா எட்ட நின்ற வண்ண்ம் சுட்டிக் காட்டினள்.
நிலவின் ஒளியில் புல்படர்ந்த கோடி மணலில் ஒர் புடையன் பாம்பு கருமையாய் நெளிந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. கந்தையருக்கு ஏனே அதை அடிக்க மனம் வரவில்லை. அது நெளிந்து நெளிந்து ஓடியவிதம் ஓர் ரசனைக்குரிய காட்சியாகவே தான் அவருக்குத் தெரிந்தது.
* என்ன விளையாட்டுப் பிள்ளமா கிரிப் பாத் தண்டு நிக் கிறியள். அந்த மம் பெட்டிப் புடிய எடுத்து ஒடமுந்தி அடியுங்கவன்!” என்று கண்ணம்மா அவ தியும் ஆத்திரமும் நிறைந்த குரலில் கந்தையரைத்
அவள் காட்டிய் கோடி மூலையில் ஓர் மண்வெட் டிப் பிடி அதற்கென்றே தயார் செய்து போட்டது போல் கிடக்கத்தான் செய்தது. ஆனல் அதைக் கையில் எடுத்த கந்தையருக்குப் புடையன் பாம்பு மீது இரக்கந்தான் பிறந்தது. "பா வமெண, கொல் லக்கூடாது. நான் கொண்டுபோய் வேலியால எறிஞ் சிற்று வாறன்” என்று சொல்லிக்கொண்டு அடிக்

சபதம் 3.
காமல் அதை மெல்ல மெல் லத் தட்டி விட முயன் ரூர். -
கண்ணம்மாவால் அதைப் பொறுக்க (4p) L9- tLu வில்லை. "அது விளைஞசிருக்கிற விளைச்சலுக்குப் பாவம் பாக்கிறேங்க. பிள்ள குட்டியள் இருக்கிற இடத்தில விளையாடா மச் சுறுக்கா அடிச்சுப்போட்டு வேலியால கொண்டுபோய் எறியுங்க” என்று சீறி
*அடிக் காம வேலியால கொண்டுபோய் எறிஞ்சா அது தன் பாட்டில, போகுது, ஏன் பிள்ள குட்டியட்ட வரப்போகுது?’ என்ருர் கந்தையர், அதை இன்னும் வேலிப்பக்கமாகத் தட்டிக் கொண்டே. ஏதோ அதனுடைய சுதந்திரத்திலும் உரிமையிலும் தாங்கள் இரக்க மற்று அனுவசியுமா கக் குறுக்கிடுவதுபோலிருந்தது. அவருக்கு, "பாவம் அது தன் டாட்டில திரியட்டன், நமக்கென்ன? என் னத்துக்குக் கொல்லுவான்?”
"ஆக நாங்களான மணிசர்?' என்று கோபித்து விழுந்தாள் கண்ணம்மா. 'வேலியால போட்டா மற்றவையளக் கடிக்காதா? உங்களுக்கே லாட்டி இஞ்ச குடுங்க நான் அடிக்கிறன்'
கண்ணமா கிட்டே நெருங்கினள். கந்தைய ரால் அதற்குப் பின்பும் எதிர்க்க முடியவில்லை. அடுத்த கணம் அதுவரை தட்டிக்கொண்டிருந்த மண் வெட்டிப் பிடியால் அவராகவே அதன் தலையில் ஓங்கி ஓர் அடி அடித்துவிட்ட்ார். நச்சென்ற சத் தத்துடன் அடி விழுந்தது. பாம்பு துடித்துத் துடித் துச் சுழன்றது. கந்தையருக்கு அதைப் பார்க்கப் பரிதாபமாகத் தான் இருந்தது. ஆனல் இனிப் பரி தாம் பார்த்துப் பிரயோசனம்ல்லை என்றும் அவ

Page 70
32 புதுயுகம் பிறக்கிறது
ருக்குத் தெரியாமலில்லை. கண்ணை முடிக் கொண்டு ஓங்கி ஓங்கி அடிக்கத் தொடங்கினர்.
ogi) 3)Go?j கொண்டுபோய் வீசுங்க" என்ருள் கண்ணம்மா. “அது செத்துப் போச் சு'
மண்வெட்டிப் பிடியால் கோலித் தூக்கிக் கொண்டு வேலிப்பக்கமாக நடக்கத் தொடங்கினர் கந்தையர் ஆனல் தூக்கிக்கொண்டு போகும் போதுதான் அது முற்ரு கச் செத்துவிடவில்லை என் பது அவருக்குத் தெரிய வந்தது. வால் பக்கம இன் னும் குற உயிரோடு சுழன்றுகொண்டே இருந்தது.
திடீரென்று கந்தையருக்கு ஓர் சபலம் தட் டிற்று. அவர் மிக ஆவலோடும் நம்பிக்கையோடும் அதை உற்றுப் பார்த்தார். ‘ஒருவே ள உசித்திற்ரு?"
திரும்பவும் அதைக் கீழேபோட்டு அடிக் காம லும் தூர எறிந்து அதை நோக வைக்க விரும்பாமலும் மெதுவாக வேலிப் பொட்டுக்குள்ள டல் நுழைத்து விட்டுத் திருப்தியோ டு திரும் பினர்.
ஆனல் அந்தச் சபலம் அதிக நேரம் நிற்கவில்லை. கிணற்றடியில் அடிக் கழுவும் போது அது அவருக் குத் தெளிவாகத் தெரிந்தது அதில் இப்போ ஒர் வைராக்கியமுங்கூட. ‘அது இனிச் செத்துப்போயி ரும். புதிதாக வந்துவிட்ட ஓர் விடுபட்ட நிலையில் அவர் தனக்குள்ளேயே முடிவுகட்டிக் கொண்டார். "அந்த மம்பட்டிப் புடி யால அடிச்சா அது சாகா மலா இருக்கும்? அது இனிச் செத்துப்போ
அன்று ஆஸ்பத்திரிக்குப் போனதைப் பற்றியோ தனக்கு வந்த வருத்தத்தைப்பற்றியோ கந்தை
ய ருக்கு இப்போ கொஞ்சங்கூட நினைவில்லை.
普

மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாட ஐ. நா. சபை ஏற் ாடுசெய்கிறது. இலங்கை இந்தியர் பிரச்சனைக்குச் சிறிமாவும் சாஸ்திரியும் ஓர் முடிவு கண்டிருக்கின்றனர். ஐந்தேகால் இலட் சம் பேர்களை இந்தியா ஏற்றுக்கொள்ளும். மூன்றரை இலட்சம் பேரை இலங்கை ஏற்றுக்கொள்ளும். மிகுதி ஒன்றரை இலட்சம் பேர்களின் தலைவிதி பின்னர் நிர்ணயிக்கப்படும். கொங்கோவில் அமெரிக்காவும் பிரிட்டனும் பெல்ஜியமும் ஆக்கிரமிப்புச் செல் வதாக ஒர் பிரஞ்சு அதிகாரி புகார் செய்கிறர். யீமனில் குடி யரசு வீரர்களுக்கும் முடியரசு வீரர்களுக்குமிடையே தொடர்ந்து போர் நடந்து கொண்டிருக்கிறது. போரில் ஈடுபட்ட எகிப்திய வீரன் ஒருவனின் உடல் யாரும் தேடுவாரற்று அரபிய பாலை வனத்தில் தலைவேறு முண்டம் வேருகச் சிதைந்து கிடக்கிறது. கொங்கோவில் புரட்சிக்காரர்கள் எழுபதினுயிரம் பேரைக் கொன்று விட்டதாகக் கூறப்ப்டுகிறது. மத்திய வியட்னுமில் அர் சாங்கத் துருப்புகளுக்கும் வியட்கொங் துருப்புகளுக்குமிடைய்ே நடந்த போரில் எழுபது வியட்கொங்குகளும் ஒரு அமெரிக்க இராணுவ ஆலோசகர் உட்பட பதினைந்து அரசாங்க வீரர்களும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது எல்லையில் சீனு திரும்பவும் படை குவிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டுகிறது.
வெளி
சச்சி கம்மா உட்கார்ந்திருந்தான். கிணற்றடி யில் வீடு கட்டுவதற்கர்க் வெட்டி அரிந்து அடுக் கப்பட்டிருந்த அரிகல்லுக் கட்டின் மேல் பேசாமல் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் ஒரு குறிப்புக் கொப்பி, காற்றில் பட படத்த் வண்ணம் அதற்குள் சில புல்ஸ் கப் தாள்கள். எல்லாவற்றுக்கும் மேலே ஒரு புத்தகம். ஏர்ன்ஸ்ட் பிஷரின் “கலை பற்றிய மார்க்ஸ்பீயக் கண்ண்ேட்டம்." ஆனல் சச்சிக்கு எது வும் செய்ய மனமில்ல்ை. படிக்கவும் மனமில்லை, எழுதவும் மனமில்லை. அவ்ன் பேசாமல் உட்கார்ந் திருந்தான். வெளியே கிண்ற்றடி வேலிக்குமேலால் வயல் வெளி விரிந்து கிடந்தது. ஒரே வெய்யில், கூடவே மழையில்லாத் வ்ாடைக்காற்றின் குளிர். பயிர்கள் வாடிக் கருகிப்போய் கதிர்வராமலேயே

Page 71
34 புதுயுகம் பிறக்கிறது
வைக்கோலாகிக் கொண்டிருந்தன. வெய்யிலின் கோரத்தைக் காட்டுவது போல் கானல் கீற்றுகள் நெளிந்து நெளிந்து தூரத்தில் நிழலாட்டம் காட் டின "சச்சிக்குச் சங்கரரின் நினைவு வந்தது, கயிறு பாம்பாகத் தெரிகிறது, கானல் நீராகத் தெரிகிறது. ஆனல் அந்த நினைவை அவன் வளர விட விரும்ப வில்லை. வளர்க்க அவனுல் முடியவில்லை. அவை எல் லாம் அப்போது அவனுக்குத் தேவையற்ற அணுவ சியங்களாகத்தான் நின்றன. அப்படியே பேசாமல் செயலற்றுச் சிந்தனையற்றுச் சும்மாகவே இருந்தான். அந்த நிலையை வேறு எந்தச் சிந்தனையாலும் அவன் குழப்ப விரும்பவில்லை, அவனல் குழப்ப முடிய வில்லை. அப்படியே கல்லுக்கட்டில் இருந்து பார்க் கும்போது வேலிக்குமேலால் தெரிந்த வயல் வெளி மிக இதமாக இருந்தது. அதுவே அவனுக்கு அப் போது போதுமாகப்பட்டது. பொதுவாக அந்தக் கல்லுக்கட்டில் ஏறி வயல்வெளியைப் பார்க்கத் தொடங்கிவிட்டால் அந்த இடத்தைவிட்டு அவனை எழுப்புவது கஷ்டந்தான். இப்போதும் அப்படித் தான் இருந்தது.
சச்சிக்கு வேறு எந்தக் கவலையும் இல்லை என்று கூடச் சொல்லமுடியாது. நேற்றுத்தான் அவனுடைய ஒரே ஒரு அக்காவுக்கு காசம் என்று கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தார்கள். அதுவே போதும் மற்றவர்களை மாதக்கணக்காகக் கவலைப் படச் செய்வதற்கு. சச்சிக்கும் கவலைதான். ஆனல் அந்தநேரத்தில் ஏனே அவனுல் அதைப்பற்றி நினைத் துப்பார்க்கக்கூட முடியாமலிருந்தது.அவனுக்குக்கூட அப்போது சுகமில்லை. ப்ரொங்கைட்டி ஸ். கரட்டுக் கரட்டென்று நெஞ்சுக்குள் சளி இழுபட்டுக்கொண்டு தான் இருந்தது. இரவு முழுதும் ஒரே கொக்கல். இப்போ மூச்சையடைக்கும் வாடைக்காற்றுச் சேர்ந்த அந்த வெய்யிலில் இருப்பதுகூட மிகக் கஷ்டமா

ഖങി 35
கத் தான் இருந்தது. அதோடு அதற்கு வட்டியாக இரவு முழுதும் இழுத்துத் துலைக்க வேண்டும் என் பதும் அவனுக்குத் தெரியாமலில்லை. இருந்தும் அவன் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் அப் படியே இருந் தான். எல்லாவற்றுக்கும் ஈடுசட்டுவது போல் வெளியே வயல் வெளி விரிந்து கிடந்தது. வாடைக் குளிர்காற்று, கூடவே கொமுத்தும் வெய் யில், கருகிப்போகும் பயிர்கள், கானல் திரை, வற் றிப்போகும் குளம், வரட்சி காட்டத் தொட்ங்கி விட்ட வயல் வெளி-இவை எல்லாம் அழகுக் காட்சி களா அப்படி மெய்மறந்து உட்கார்ந்திருப்பதற்கு?
சச்சிக்கு அந்தச் சந்தேகம் எழுவதில்லை. அவன் தன்னை மறந் திருந்தான். தூரத்துக் குளத்து * 5ir அலை எழுப்ப பச்சைப் பசேலென்று வயல்வெளி பயிர்களோடு காட்சியளித்தாலும் சரி, எல்லாமே வரண்டு கருகிப்போய் கானல் எழுப்பிலுைம் gë tî சச்சிக்கு எல்லாம் ஒன்று தான். அது அழகு இது அழகில்லை என்று அவன் ஒதுக்குவதில்லை. அழகி லும் சரி எதிலும் சரி முரண்பாடுகளுக்கும் வித்தி யாசங்களுக்கும் இடம் இருப்பதாக அவன் நினைப்ப தில்லை. முரண்பாடு இருந்து தான் ஆகவேண்டும் என்று யாராவது அழுத் தினல் அப்படி அழுத்துப வர்களைத் திணறடிக்க விரும்புபவன்போல் முன்ன தைவிடப் பின்னதைத் தான் அவன் தேர்ந்தெடுப் பான். பச்சைப் பசேலென்று பயிர்களோடு தெரி யும் வயல் வெளியைவிடக் காய்ந்து கருகிப்போய் வரண்டு தெரியும் வயல்வெளிதான் நீடித்த அழகு டையது, நிரந்தரமானது என்று அவன் வற்புறுத் துவான். அவன் என்ன ஓர் அஞகிஸ்ட்டா? ஒர் சூன்யவாதியா? சச்சிக்கு அந்த விசாரணை கிடை யாது. லேபல் ஒட்டுவது அவனுக்குப் பிடிக்காத வேலை. அது அறிவாளிகள் என்று கூறப்படுபவர் களின் தொண்டு. அவனுக்குப் பிடித்தது சும்ம்ா

Page 72
36 புதுயுகம் பிறக்கிறது
இருப்பதுதான். சும்மா பார்த்துக்கொண்டிருக்க வயல் வெளி இருந்தது. ப்ரொங் கைட்டிஸ் இல்லாதிருந்தால் பக்கத்தில் 97 – )له ق ஒரு கள்ளுப்போத்தலும் இருந்திருக்கும். கள்ளுக் குடிப் பது இன்றைய போலி மரியாதை மரபை உடைக் கும் ஓர் செயல் என்று சில புரட்சிவாதிகள் கருத லாம். ஆனல் சச்சிக்கு அதன் அர்த்தம் அதைவிடப் பெரியது. அவனுக்கும் அந்த வயல்வெளிக்கு மிடையே இருந்த நேர, இட, உருவ வித்தியாசங் களை எல்லாம் முற்ருக அழித்து வெளியோடு வெளி யாக ஒன்றிவிடக் கள்ளு உதவியிருக்கும். இருந் தாலும் கவலை இல்லை. கள்ளு இல்லாமலேயே அதோடு ஒன்றிவிட அவனுல் முடியாது என்றில்லை. இப்போ அப்படி ஒன்றிப்போய்த்தான் அவன் உட் கார்ந்திருந்தான் .
திடீரென்று கேட்ட கோயில் மணி ஓசை சச்சியைத் திடுக்கிட வைத்தது. ஆனல் அதற்குப்பின் அதோடு ஒட்டி வந்த ஓர் பரவச உணர்வு அவனது உடலைப் புல்லரிக்க வைத்தது. வயல்வெளியில் அவன் நடந்து வரும் வேளைகளில் எங்கிருந்தாவது வரும் கோயில் மணி ஓசை அவனுல் மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய ஒரு புள காங்கிதத்தை வழக்கமாகக் கொடுப் பதுண்டு. ஆனல் இப்போதைய நிலையில் அதை அனுபவிப்பது உடலைப் புல்லரிக்க வைத்தது. அந்த நேரத்துக்கும் நிலைக்கும் மிகப் பொருத்தமான ஓர் ஒசை அது. யாரோ அவனது நிலையை உணர்ந்து, ஆமோதித்துச் செய்வித்ததுபோல் வந்தது அந்த ஒசை,
y சச்சி வடகிழக்காக இருந்த தன் பார்வையை வலதுபக்கமாகத் திருப்பினன். அங்கே அவன் இருந்த வளவுக்குரிய கிணற்று வேலியை அடுத்து ஊர்மனைக்குள் ஓர் ஓடைபோல் உட்புகுந்திருந்த

வெளி − 137
வயல் வெளியின் ஓர் கிளையில் மணிக்கூட்டுக் கோபு ரத்துடனும் நான்கு பக்க மதில் சுவருடனும் காட்சி கொடுத்தது பிள்ளை யார் G3 g5 T u Gav. யாரும் அங்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஐயர் வந்துவிட்டார் என்பதற்கு அறிகுறியாக வெளியே மதில் சுவரோடு சைக்கிள் மட்டும் சார்த்தப்பட்டு நின்றது. ஆட்கள் இன்றி ஆரவாரமற்றுத் தெரிந்த அந்தக் காட்சி வயல் வெளிக்கும் கோயிலுக்குமிடையேயுள்ள ஒற்று மையை அதிகரிக்கச் செய்து அதன் அழகை இன் னும் கூட்டுவதுபோல்தான் சச்சிக்குத் தெரிந்தது. பிள்ளை யார் கோயிலிலிருந்து சச்சியின் பார்வை திரும்பவும் வடகிழக்காகத் திரும்பி தூரத்தேகுளத் துக்கும் அப்பால் சிவப்பு ஒட்டுக்கூரையோடும் கோபு ரத்தோடும் தெரிந்த நாச்சியார் கோயிலை நோக் கிச் சென்றது. அது அந்த வயல்வெளிக்குரிய இர்ண் டாவது கோயில், மூன்ருவது கோயில் அவனுக்குப் பின்னல் பார்வைக்குத் தெரியாமல் வயல்வெளியின் தெற்கு மூலையில் இருந்தது. சிவன் கோயில்.சச்சி அந்த நேரத்தில் அதையும் நின்ைத்துப் பார்த்துக்கொண் டான். அங்குமிங்குமாக அவை மூன்றும் நட்டுக் கொண்டு நின்றன. அவற்றுக்கிட்ையே வயல்வெளி நீண்டு விரிந்து விசாலித்துக் கிடந்தது. ஒரு பெரிய குளம். கருகிப்போகும் பயிர்கள். கானல் தூரத்தே எல்லைவைப்பதுபோல் வடக்கூர் வேலி.
‘என்ன அழகு!”
சச்சி தன்பாட்டில் முணுமுணுத்துக் கொண்
6.
ஆனல் அதிகநேரம் அவனல் ஆப்படி இருக்க முடியவில்லை. வெளியோடு வெளியாய் அவன் ஒன்றி விட்டிருந்த அந்த வேளையில் தூரத்தே வடக்கூர் வேலியோடு ஏதோ ஓர் உருவம் மிக வேகமாக அசைந்துகொண்டிருந்த காட்சி அவனை வேறு திசை

Page 73
38
யில் இழுத்துவிட்ட்து. அசை வெளியில் அந்த அசைவு ெ டாகத் தெரியாவிட்டாலும் தைக் கிளறக்கூடியதாய் இ
*அது என்ன, அப்படி ே
சச்சிக்கு ஆரம்பத்தில் அ மாகவே தான் தெரிந்தது. ஆ காருமல்ல யந்திரமுமல்ல உருவந்தான் என்பது கொஞ் வாகிவிட்டது. தூரத்தே ே கால்களின் அசைவு தெரிய பறப்பதுபோன்ற காட்கி. அ ஏன் அந்த அவசரம்?
சச்சிக்கு ஆச்சரியம்போ ககையாக த்தான் இருந்தது.
*அதோ அப்படி வேக சீவனைப்பற்றி, அதன் இப்ே பற்றி இந்தப் பென்னம்பெ வது இப்போது அக்கறைப்ப அத்தனை வேகத்தில் போகுப் தான் தன்னைப்பற்றியும் தன் யானதோர் உணர்வு சா குமா?
இரண்டும் சச்சிக்கு இல்ஃ கேன் அந்த அவசரம்? அது சரமாகப் போகிறது?"
சச்சி பார்த்துக் கொண் போய்க்கொண்டே இருந்தது.

புதுயுகம் பிறக்கிறது
Fவற்ற அந்த மோன பரியதோர் முரண்பா
சச்சியின் ஆச்சரியத் ருந்தது.
வகமாகப் போகு து?
அது ஏதோ ஒர் யந்திர ஞல் கடைசியில் அது சாதாரண ஒரு மனித ச நேரத்துக்குள் தெளி வகமாகப் போவதால் ாமல் ஏதோ யந்திரம் புவ்வளவுந்தான். ஆணுல்
ய் இப்போ அது வேடிக்
மாகப்போகும் அந்த போதைய நிலையைப் ரிய உலகத்தில் யாரா ாடுகிருர்களா? அல்லது b அந்தச் சீவனுக்குத் நிலையை ப்பற்றியும் சரி
டையாகவாவது இருக்
ஸ் என்றேபட்டது. "பிற எங்கே அப்படி அவ
டே இருந்தான். அது போகப் போக தூரத்

Page 74
്ഖണി
தில் நிழலாட்டம் போட் அந்த உருவம் கரைந்துகெ சியில் அதோடு இரண்டற முற்ருக மறைந்துவிட்டது.
திரும்பவும் சச்சி வய போய் சும்மா இருந்தான். பதில் ஒரு புதிய திளைப்பு. திப்பதுபோல் டாங், டாங் வும் வந்தது மணியோசை லிருந்த சிவன் கோயிலின்

39
ட கானல் திரையோடு
ாண்டே இருந்தது. கடை க் கலந்துவிட்டதுபோல்
பல் வெளியோடு ஒன்றிப் இப்போ அப்படி இருப் அவனது நிலையை ஆமோ 1, டாங் என்று திரும்ப இப்போது அது பின்னு
பெரிய மணியோசை.
寄

Page 75
குற
இத்தொகுதியில் இட கதை சங்கப் பாடல்களின் சிறுகதைகளின் உருவ அ யாக் எடுத்து இரண்டைய முயற்சி. ‘வீழ்ச்சி’யும் நோக்கத்துக்கு அந்த s பெர்ருந்துகிறது என்று என்ற கதை யதார்த்தத் பிடிபடாமல் நிற்கும் ஒ1 கதை. காஃப்காவின் கதை பொருந்துகிறதென்று சிெ வேண்டுமென்று எழுதப்ட் கருத்தும் வேரு னதே. களின் வசதிக்காக, வேறு அதை ஒர் காஃப்கா’ ர லாம். *வெளி”யில் எமி வாக்கிய உத்தியைப் பின் gari anti-short story a”u p கேற்ற வகையில் வெற். என்று நினைக்கிறேன். க முழுதும் ஓர் anti-மரபு. புத் தொனி அடிநாதமf சரியப்படத் தேவையில் களும் உருவங்களுக்கும் பட்ட ஒன்றேடு இணை அவையே முடிந்த கல்லவே?
இறுதியாக இத்தொ கப்போது ஆலோசனை எம். ஏ. ரஹ்மானுக்கும் என் நன்றி உரியது.

றிப்பு
ம்பெறும் "சபதம்” என்ற அன்மப்பை இக்காலச் மைப்புக்கு ஓர் பின்னணி ம் இணைக்க முயலும் ஓர் அப்படியே. கதைக்ளின் அமைப்பு அருமையாகப் நினைக்கிற்ேன். *தேடல்” துக்குள்ளும் சனவுக்குள்ளும் * விதக் காஃப்கா ரக்க் அமைப்புக்குத் "தேடல்’ Fால்லமுடியாது. பொருந்த டவும் இல்லை. கதை கூறும் இருந்தாலும் படிப்பவர் பெயர் இல்லாதபடியால், கக் கதை என்று சொல்ல ங்க்வே சில கதைகளில் உரு ன்பற்றி இக்காலத்துக்குரிய 3ம் வேதாந்தப் பின்னணிக் றிகரமாக எழுதியுள்ளேன் டைசியில் கதைத்தொகுதி anti-உருவம் , anti-gyao) in ாக நிற்கிறது என்ருல் ஆச் லை. உருவங்களும் சடங்கு சடங்குகளுக்கும் அப்பால் ய உதவுவதற்குத் தானே? முடிவாக மாறிவிடுவதற்
ாகுதி பற்றி அப்போதைக் கூறி உதவிய நண்பர்கள் எஸ். பொன்னுத்துரைக்கும்
一dp... 列·