கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முன்னீடு

Page 1


Page 2


Page 3

இரசிகமணி கதைகள் பற்றிய ஒரு கண்ணுேட்டம்
எஸ். பொன்னுத்துரை
இலக்கிய நோக்கு: முதல் நூல்
விற்பனை உரிமை
இளம்பிறை,
231 ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13.

Page 4
முதற் பதிப்பு: நவம்பர், 1967.
விலை சதம் 40
இலக்கிய நோக்கு: நூல் ஒன்று
MUNNEEDU
(A brief critical analysis of Rasikamani's Stories)
Written by:
S. PONNUTHURAI
Published on: First November 1967.
by: M. A. Rahman, 231, Wolfendhal Street, Colombo-13.
ரெயின்போ பிரிண்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13.

பதிப்புரை
இரசிகமணி கனக-செந்திநாதன் அவர்களின் ஐம்பது ஆண்டு நிறைவு விழா அண்மையிற் கொண் டாடப்பட்டது. அவ்விழாவிலேயே Je6n (56o L - il u நூலொன்றை அரசு வெளியீடுவின் சார்பாக வெளி யிட வேண்டுமென்று ஆர்வமிருந்தும், பல காரணங் களினுல் இயலாது போயிற்று. என் விருப்பம் அடுத்த ஆண்டிலாவது பூர்த்தியாக எல்லாம் வல்ல இறை வன் அருள் வானுக. இருப்பினும், நிறைவு விழா நினைவாக ஒரு சிறு நூலாவது வெளியிடல் வேண்டு மென்ற பிறிதொரு எண்ணத்தின் விளைவே இச் சிறு நூல். இரசிகமணி ஒரு கதாசிரியருமாவர். அவ ருடைய கதைகளடங்கிய "வெண் சங்கு” வெளியா கியுள்ளது. அக்கதைகளை நன்கு அறிமுகப்படுத்தி, கதாசிரியர் இரசிகமணியை உரிய முறையிலே தமிழ் வாசகர்கள் மத்தியிலே நிறுத்தும் வகையில் ஒரு முன்னிட்டினை அந்நூலுக்கு எஸ். பொன்னுத்துரை அவர்கள் வழங்கியுள்ளார். இஃது இரசிகமணியை நேர்த்தியாகத் தரிசிக்க உதவும் சாளரமாக அமை யும் என்பது என் நம்பிக்கையாகும்.
எஸ் , பொவைத் தமிழுலகம் நன்கறியும். ஈழத் தமிழிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தமது

Page 5
கை வண்ணத்தையும் தனித்துவத்தையும் நிலைநாட் டியவர். எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அத்துடன் அதுவேயாக ஐக்கியப்படுவது அவர் சுபா வம். எனவே தான், முன்னிடு வழங்குவதைக் கூட ஒரு தனித்துவ இலக்கியக் கலையாக இயற்றி வரு கின் ருர், சடங்கு, யோகம், மேடை, வீடு ஆகிய தமது கதைகளுக்கும், சதுரங்கம் போன்ற இலக்கிய பரி சோதனை முயற்சிகளுக்கும் அவர் வழங்கியுள்ள முன் னிடுகள் ஒரு வகைத்து. அவை அவருடைய சுயம்பு வான தரிசனம். விளம்பர - வியாபார நோக்கங் களுக்கு அப்பாற்பட்ட தத்துவ அலசல். ஈழத்தில் வெளியாகியுள்ள வேறு எழுத்தாளர் பலருடைய நூல்களுக்கும் அவர் முன்னீடுகள் வழங்கியுள்ளார். இவை பிறிதொரு வகைத்து. நூல்களை நன்முக வாசித்து, நூலாசிரியர்களுடைய மனே தர்மத்தை நேர்த்தியாகத் தரிசித்து, தன்னுடைய தளத்தில் மட்டுமே இருந்து நூல்களின் தரத்தை எடை போடாமல், நூலாசிரியரின் தளத்தில் அந்த நூலின் பெறுபேறென்ன என்ற விசாரணையின் நிறை அறு வடையான முன்னிடுகளை அமைத்துக் கொடுக் கிருர், காப்பியச் சொற்பொழிவுகளுக்கு அறிமுகமாக அவர் எழுதியுள்ள கட்டுரையை வாசிக்கும் பொழுது, பழந்தமிழிலக்கியத்தில் மட்டுமே திளைப் புள்ள பண் டிதராக அவர் தோன்றுகின்றர். காணிக்கை, குறும்பா ஆகிய கவிதைத் தொகுதிகளுக்கு வழங்கியுள்ள முன்னீடுகளில் அவர் கவிதையின் புதுத் தொனிப் பொருள் குறித்தும், புது உருவங் குறித்தும், வரைவிலக்கணம் வகுத்துக் கொடுத்துள்ளார். காலத்தின் குரல்கள். மரபு, யாழ்ப்பாணக் கதைகள், வெண் சங்கு ஆகிய கதைத் தொகுதிகளுக்கு, அந்தந்தத் தொகுதிகளை எந்தெந்த முறையில் வாசகன் அணுகி வாசித்தால் அவற்றின் நிறை அறுவடைகளைப் பெறலாம் என ஆற்றுப்

படுத்தும் வகையில் முன்னிடுகள் வழங்கியுள்ளார். அவர் வழங்கும் முன்னிடுகள் எவ்வகைத் தாக அமைந்தாலும், அவருக்கு இலக்கியத்திலுள்ள அழுங் குப் பிடியான பக்தியையும், எழுத்தை எவ்வாறு புனிதப் புத் தி பூர்வமாகபணியாகப் வரித்துள்ளார் என்ற நேர்மையையும் அவை புலப்படுத்தத் தவறு வதில்லை. துணிவு, திண்மை, வன்மை, கூர்மை, சிந்தனைச் செழுமை ஆகியன அவர் எழுத்து நடை யின் உயிர். அவருடைய எழுத்து நடை ஈழத் தமிழிலக்கியத்தின் ஒரு சகாப்தமாக நிலைத்தது என்பதை அவருடைய இலக்கிய விரோதிகள் கூட ஒப்புக் கொண்ட உண்மையாகும். இந்த அற்புத விந்தையைச் சாதனை யாக்கிய அவர், இலக்கிய நன் முயற்சிகளின் நாற்ரு கவும் அறுவடையாகவும் விளங் கும் அவர், முன்னிடு எழுதுவதைக் கூட தனித்த இலக்கியத் துறையாக வகுத்து மேன்மைப் படுத்தி யுள்ளார் அவருடைய முன்னீடுகள் எல்லாவற்றை யும் ஒரே நூலாகத் தொகுத்து வெளியிடல் வேண்டு மென்ற என் ஆசையின் முன்னுேடியாகவும் இம் முன்னீட்டை வெளியிடுகின்றேன். வணக்கம்,
எம். ஏ. ரஹ்மான் இளம்பிறை,
231, ஆதிருப்பள்ளித் தெரு,
கொழும்பு-13. 1-1967.

Page 6
இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களின் ஐம்பது ஆண்டு நிறைவு விழா நினைவாக

முன்னிடு
aararuam
g கதைத் தொகுதிக்கு முன்னுரையுஞ் சேர்த் துக் கொள்ளுதல் சம் பிரதாயமான காரியமாக நிலைத்துவிட்டது. அப்படி ஒரு முன்னுரை எழுதுப வர் அந்தத் துறையிலே தமக்குள்ள புலமையை, அன்றேல் புலமை இன்மையை ஓரளவிற்கு விண்டு காட்டி, தமது நூலின் சில பக்கங்களை நமது சுய வித்துவ 'அளப்பலுக்கும் ஒதுக்கித் தந்து விட்டாரே என்ற மனச்சாட்சியின் முள் உறுத்த, கதாசிரியரைப் பற்றி நான்கு வரிகளும், கதைகளைப்பற்றி இரண்டு வரிகளும் எழுதும் 'திருக்கூத்'தாகவே இக் கைங்கரி யம் ஈழத்தில் நிலைபெற்று வருகின்றது. இந்த முன் னிடு அத்தகைய வாய்பாட்டில் அமைய மாட்டாது; அரைத்த மாவையே அரைக்கும் விவகாரத்தில் எனக்கும் ஈடுபாடுமகிடையாது.
*வெண் சங்கு” சிறு கதைத் தொகுதியை அனுப்பி வைத்து, அதற்கு ஒரு முன்னீடு நல்கும் வண்ணம் எழுதிய கடிதத்தில் இரசிகமணி கனகசெந்திநாதன் பின்வருமாறு குறிப்பிடுகின்ருர்:
". இவ்வாண்டில் எனக்கு ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன் நினைவாக என் நூல்கள் மூன்று இவ்வாண்டில் வெளிவருமென நினைக்கின் றேன். அவற்றுள் இச்சிறுகதைத் தொகுதியும் ஒன்று. இதற்குத் தக்கார் ஒருவரிடம் முன்னுரை பெறல் வேண்டுமென நினைத்த பொழுது உங்கள் நினைவே

Page 7
8
மேலோங்கி வந்தது. என்னுடைய இலக்கிய வாழ்க் கையில் அண்மைக் கால ஐந்து ஆண்டுகளும் முக்கிய மானவை, அந்த முக்கியத்துவத்தில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. அந்த உரிமையினல் முன்னுரை கேட்கவில்லை. உங்களுடைய சிறுகதைத் தொகுதி யான விக்கு நான் முன் னுரை எழுதினேன். நன்றிக் கடனுக்காக என் நூலைப் பற்றி நான்கு வார்த்தைகள் புழுகுதல் நின் கடன்" என்ற வகை யிலும் நான் முன்னுரை கேட்கவில்லை, ஈழத்து இலக்கிய முயற்சிகளில் முக்கியமாகச் சிறு கதைத் துறையில் தங்களுடைய வெற்றியை மதிப்பவன் நான். அந்த மதிப்பின் காரணமாகத் தான் இத் தொகுதிக்கு நீங்கள் முன்னுரை எழுத வேண்டு மென்று கேட்கிறேன். சிறுகதை பற்றி உங்களு டைய பார்வையும் என்னுடைய பார்வையும் வேறு பட்டவை. என்ருலும், என்னுடைய சிறு கதைகளைப் பற்றி தங்களுடைய அபிப்பிராயங்களை முன்னுரை யாக எழுதி உதவவும்."
இவ்வாறு நெஞ்சிலே கரவு எதுவுமின்றி, தம் மன திற் படுபனவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசவும் எழுதவும் வல்ல பெற்றியரே இரசிகமணி. அவர் எதிலும் பழைமையையும், பழைமையின் தூய்மை நிலையையும் பாதுகாக்க முந்துபவர். இதில் விசேட மென்ன வென் ருல், பழைமையின் தூய்மை நிலையைப் பாதுகாக்கும் பயணமே இரசிகமணியின் புதுமை அனுபவமாகவும் பொலிவுற்று மிளிர்வது தான். பழைய எழுத்து அனுபவத்திற்கும், புதிய எழுத்து முயற்சிகளுக்கும் நேர்த்தியான பாலமாக அவர் விளங்குகின்ருர், கவிதைகளைப் பற்றி அவர் மேடைகளிலே ஆற்றும் ஒவ்வோர் இரசனைப் பிரசங் கமும் ஒவ்வொரு நூலாக வெளிவரத்தக்க தரத் தைச் சார்ந்தது. கவிஞனின் சொந்த வாழ்க்கை

9
சார்ந்த கட்சி- சேர்ந்த வட்டாரம் ஆகியவற்றை மனதிற் கொள்ளாது, அவனுடைய ஆக்கத்திற்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து, அதிலே படித்தவர் களுக்கும் பாமரர்களுக்கும் சுவைப்புத் தோன்று மாறு உண்மையான இரசனையை வளர்த்து, ஈழந் தந்த ஒரேயொரு இரசிகமணியாக அவர் உயர்ந்து நிற்கின் ருர். "இரசனையின் மூலம் வாசகர் வட்டத் தை விரிவு படுத்தலாம். அதுவே பயனுக அமைந்து விடாது. இன்னெரு வழியிற் சொல்வதானுல், பயனை அடைய அது ஒரு மார்க்கம்" என்று இரசனையைப் பற்றி அடக்கமாகக் கூறுவார். உண்மைதான். வீணை யின் தந்திகளை மீட்டி அதன் கானத்திலே இன்பம் அனுபவிக்கச் செய்வதைப் போல்வது இரசனை. "இர சனையிலே திளைத்தவர்களால் ஆழமான விமர் சனஞ் செய்ய இயலாது" என்று சிலர் எழுந்த மேனி யாகக் கூறி வருகிரு ர்கள். இந்தப் பொறுப்பற்ற கூற்றினைப் பொய்ப் பித்த வரும் இரசிகமணி அவர் களேயாவர். பல அரிய நூல்களை வாசித்தும், சேகரித் தும் "நடமாடும் வாசிக சாலை’ என்று அவர் ஈழத்து மக்களாற் கொண்டாடப்படுகின்ருர், இந்தப் பழுத்த அனுபவத்தின் தளத்திலே நின்று, பண்பான முறை யில் இலக்கிய விமர்சனஞ் செய்கின் ருர், விமர்சனம் என்று வந்து விட்டால் ஓர் இலக்கியப் படைப்புத் தோன்றிய காலம், அந்தக் காலத்திற்குரிய அரசி யல்-பொருளாதார-சமுதாயப் பகைப் புலம் ஆகியன பற்றியும் முழுமையாக விசாரணை செய்பவர்.
இப்படைப்புடன் ஒத்த சாயலுடைய வேறு இலக்கியப் படைப்புக்களைச் சுட்டிக் காட்டி, அவற் றிலிருந்து இப் படைப்பு எவ்வகையில் மாறுபட்டி ருக்கிறது, உயர்ந்திருக்கிறது, சோடை போயிருக் கிறது என்பவற்றை விளக்கும் பொழுது அவருடைய தர்க்கத் திறமையும் ஞாபக சக்தியும் நம்மைத்

Page 8
Η 0
திகைக்க வைக்கின்றன. மேஞட்டு விமர்சகர் சிலர் காட்டும் போலி மதிப்பீடுகளை உரைகல்லாகக் ஆொள்ளாமல், தமிழ் மரபு ஒன்றினையே இவர் விமர் சன உரை கல்லாகக் கொண்டுள்ளார். அத்துடன், எந்த இடத்திலும் செந்திநாதன் என்ற சுயத்தின் முக்கியத்துவத்தைப் புகுத் தாது பாதுகாத்துக் கொள்ளுதல் இவர் விமர்சனத்திலுள்ள பிறிதொரு சிறப்பம்சமாகும். இவருடைய விமர்சனப் பார் வைக்கும் என்னுடைய விமர்சனப் பார்வைக் கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் விமர்சனப் பார்வையே சரியென்பது என் கட்சி என் தர்மம். இருப்பினும், அவருடைய விமர்சனப்பார்வை தமி ழிற் காலூன்றித் தூய்மை சார்ந்து துலங்குவதினுல் அதனை மதிப்பதும் என் சுபாவம்.
பூரீலபூரீ ஆறுமுக நாவலர் காலத்திற்குப் பிற் பட்ட காலத் தமிழிலக்கிய வரலாற்றிலே இரசிக மணிக்குப் பழுத்த புலமை இருக்கின்றது. இதன் சான்ருக அவர் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற இலக்கிய வரலாற்று நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல்தான் இற்றைவரை இத் துறையில் வெளி வந்த நூல்களுள் அதிகார பூர்வமான நூலாக உயர்ந்து நிற்கின்றது.
இத்தகைய ஒர் இரசிகமணியினதும், விமர்சக ரினதும் சிறுகதைகளை மதிப்பீடு செய்யும் பொழுது, பிறிதொரு சிரமங் குறுக்கிடுகிறது. புதிய கதைக் கரு, நூதனமான தொனிப் பொருள், நவமான உத்தி, புரட்சிகரமான உருவம் ஆகியவற்றிற்கு முக்கியத் துவங் கொடுத்து எழுதுபவன் நான். என் தளம் வேறு இரசிகமணியின் தளம் வேறு. எனவே, அவ ருடைய தளமான பழைமைக் கதைக் கரு என்ற தளத்திற்குத் தாவி, இக்கதைகளைப் பல முறைகள்

வாசித்தேன். அப்பொழுது என் எண்ணத்திலே ஏற் பட்ட உணர்ச்சிகளை வாசகர்களுடன் நேர்மை யாகப் பங்கிட்டுக் கொள்ளுதல் வேண்டு மென்ற அக்கறையும் என் உள்ளத்திற் கனிந்தது.
எப்படிப் பழைமையின் தூய்மை நிலையைப் பாதுகாக்கும் பயணமே இரசிகமணியின் புதுமை அனுபவமாகவும் பொலிவுறுகின்றதோ, அப்படியே அவருடைய இரசனை.விமர்சனப் பயணமே சிருஷ்டி இலக்கிய ஆக்கமுமாகப் பொலிவு பெறுகின்றது. வெளிப்பார்வைக்கு இது முரண்பட்ட கூற்ருகப் பட லாம். இருப்பினும், இத்தொகுதியில் இடம் பெறும் அத்தனை கதைகளையும் ஊன்றிப் படிப்பவர்கள் இவை அனைத்திலும் அவர் கற்பித்திருக்கும் யாழ்ப் பாணக் கலாசாரத்தைப் பற்றிய விமர்சன விசா ரணை என்ற பொற்சரடு ஒன்று இணைந்து செல் வதைக் கண்டின் புறலாம். இந்தத் தனித்துவத்தை இன்றைய ஈழத்தின் எழுத்தாளர் வேறு எவரிட முந் தரிசிக்க முடியாது.
தனித்துவத்திற்குத் தனித்துவமான விளக்கம் ஒன்றுந் தேவை. ஈழத்திலுள்ள சிறு கதை எழுத் தாளர் சிலர் ஏதோ ஒரு கதையைச் ‘சரிக்கட்டி" விட்டு, அக்கதை தனித்துவமானது எனச் சுய முதுகு தட்டி மகிழ்கிருர்கள். ‘மண் வாசனை’த் தனித்துவம், யதார்த்தத் தனித்துவம், சோஷலிஸ் யதார்த்தத் தனித்துவம் கொச்சைத் தமிழ்த் தனித்துவம் , " விளங்கு தில்லைத் தனித்துவம் என இத்தனித்து வங்களின் தனித்துவமும் பல வகைத்து எனப் 'பம் மாத்தும் காட்டுகிருர்கள். இது தனித்துவம் பற்றிய பூரண பிடிமானம் இல்லாததினலேற்பட்ட அவலம். காலஞ் சென்ற நாதஸ்வர ச் சக்கர வர்த்தி இராஜ ரத்தினம் பிள்ளையிடங் கலையின் தனித்துவம் கண்டு

Page 9
12
வியத்தார்கள். அவர் புதிய இராகங்களைக் கற்பித்து வாசித்ததினுல் இந்தத் தனித்துவம் ஏற்பட்டு விட வில்லை. பழைய இராகங்களை, மரபு நிலை பிறழாது, ஆஞலுந் தனக்கே உரிய சுத்தமான பாணியில் வாசித்ததினுல் இத் தனித்துவம் முற்றி விளைந்தது. இத்தகைய தனித்துவம் இலக்கியத்திற்கும் பொருந் தும். கதா சம்பவ விந்தும், தொணிப் பொருளும் பழையனவாக இருக்கலாம். அவற்றைப் பரிவர்த் தனை செய்ய உபயோகிக்கப்படும் சொற்கள் எல் லோருக்கும் பொதுவானவையாக இருக்கலாம். ஆஞல், இவற்றை நேர்த்தியாக இசைக்கும் கலேப் பணியிலே தான் தனித்துவம் குதிருகின்றது. தேர்ந்த எழுத்தாளன் இத் தனித்துவத்தைப் புத்தி பூர்வ மாகவும், சலியாத முயற்சியினலும் வனைந்தெடுக் கின்றன். அத்தகையதொரு தனித்துவத்தை, "வெண் சங்கு" என்னும் இச் சிறுகதைத் தொகுதியிலே அனுபவித்து இன்புற முடிகின்றது.
ஈழத்து இலக்கிய உலகில் "மண்வாசனை’ என்ற கோஷம் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சிலரால் முன் வைக்கப்பட்டது. பிராந்தியங்களிற் பவிலப்படும் கொச்சைச் சொற்கள் சிலவற் றைக் கோவை செய்தால் அஃது இயல் பாகவே ‘மண்வாசனை" இலக்கியமாகி விடும் என்ற தப்பித எண்ணத்தைக் காமித்து, அத்தகைய கதை களை எழுதிச் சலித்தவர்களும் நம் மத்தியில் வாழ் கின்றர்கள். ஒரு பகுதியான மண்ணிற்கே உரித் தான கலாசாரத்திலே பிறக்கும் கதைக் கருவை, அந்த மண் தனித்துவமாக ஒலிக்கும் தொனிப் பொருளைப் பிரசவிக்கும் வண்ணம் கலவி நெறியிற் பொருத்துவதே "மண்வாசனை இலக்கியத்திற்கான சிறப்பம்சமாகும். இந்த உண்மையின் மூல விக்கிர கத்தைத் தரிசித்தே இரசிகமணி எழுதுகின்ருர் என்

13
பதற்கு இத்தொகுதியில் இடம் பெறும் பல கதை கள் தக்க சான்றுகளாக அமைந்துள்ளன.
புராண படனமும் பிட்டவித்துக் கொடுக்கும் திருவிழாவும்; சன்னதிக் கோவிலுக்கு எடுக்கும் ஆட்டக் காவடியும், அங்கு நடை பெறும் அன்ன தானமும் சர மகவி பாடுதலும், கொட்ட கைக் கூத் தும்; -இவை அனைத்தும் யாழ்ப்பாண வாழ்க்கையின் தனித்துவச் சடங்குகள். இவற்றை யாழ்ப்பாண மண்ணிலே பிறந்து, அதன் கலாசாரம் "கிடுகு” வேலிகளால் அமைத்துக் கொடுத்துள்ள கட்டுப் பாடுகளையும், அதனுல் ஏற்படும் அவசங்களையும் , அந்த அவசங்களிலேயே ஏற்படும் சுருதி பேதங்களை யும் கூர்ந்து அனுபவித்து, கால ஓட்டத்திலே அவை அடையும் மாற்றங்களை அவதானிக்கும் அதே வேளை யில், பழையனவற்றை அசை மீட்டிப் பார்க்க வல்ல ஒருவனுலே தான், இக்கதைத் தொகுதியிற் காணப் படும் கதைக் கருக்களை தேர்த்தியான சிறுகதை களாக்கித் தர முடியும். இக்கலைப் பணியினைச் செவ்வையாக இயற்ற ஓர் இரசிகமணியினுற்றன் முடியும் என்ற எண்ணத்தின் நிறைவே இச்சிறு கதைத் தொகுதியை வாசித்து முடிந்ததும் ஏற் படுகின்றது இருப்பினும், இக் கதைகள் யாழ்ப்பாண கலாசாரத்தைப் பற்றிய இரசிகமணியினுடைய பார்வை மட்டுந்தான். ஒரு பக்கத்தின் முழுமைக் காட்சி. இக்காட்சியைச் சித் திரிப்பதற்கு அவர் தமது சுய எழுத்து நடையை மாற்றவுமில்லை. 'தத்தல் நடை', 'மணிப் பிரவாள நடை’, ‘பிராந்திய நடை”, "ஊமைக்குழல் நடை' என்ற விவகாரங்களுக்கே அவருடைய எழுத்தில் இடமில்லை. கதைகளின் பழைமை சான்ற உள்ளடக்கத்திற்கு ஏற்ப, பழைமை சான்ற நடையையே கையாளுகின்ரு ர். பழைமை யின் பண்பினைக் காக்கும் பணியில், பிராந்தியச்

Page 10
l4
சொற்களை மிகவும் ஒறுப்பாகக் கையாளுகின்றர். இந்தப் பொதுவான எழுத்துப் பண்பிற்குப் புற நடையாக "தொந்தம்", "தரிசனம்" ஆகிய இரு கதைகள் எகிறி நிற்கின்றன. இந்தப் புறநடை கூடப் பொதுப் பண்பினை நிலை நாட்டவே உதவுகின்றது.
பழைமையையும் தூய்மையையும் பாதுகாத்துப் புதியன புனைதல் வேண்டும் என்ற இரசிகமணியின் உள்ளக் கிடக்கை “வெண் சங்கு” என்ற மகுடமே அச்சாவாக வெளிப்படுத்துகின்றது. மாதங்களில் மிகவும் புனிதமானது மார்கழி மாதம் என்பது நமது மரபு. அந்த மாதத்தில் வரும் திருவெம் பாவைக் காலத்தில், குளிரும் வைகறை இருளில், யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் "கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும் என்ற திருவாசகப் பாடலோடு வெண்சங்கும் ஊதப்படும் ஓசை நம் செவிகளிலே விழுந்ததும் நம் மெய் சிலிர்க்கின்றது. அப்படித் தான் இந்த வெண்சங்கின் ஒசைக்குத் தனித்துவ மான மகத்துவம் இருப்பதாகவே எனக்குப் படு கின்றது.
இனி, இத்தொகுதியிலே இடம் பெறுங் கதை களின் குணநலன்களைப் பார்ப்போம்.
முகப்புக் கதையான பிட்டு, தலைப்பிற்கு ஏற்ப, திருவெம்பாவை காலத்தில் வாசிக்கப்படும் திரு வாதவூரடிகள் புராணத்தோடு ஆரம்பமாகின்றது. யாழ்ப்பாணக் கலாசாரம் புராண கலாசாரம் என்று கூறுவர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் கள் அதனைக் கந்தபுராண கலாசார மென வலியுறுத் துவார். பண்டிதமணியின் நல் மாணுக்கரான இரசி கமணி புராண படனத்திற்கு இங்கு சிறுகதை அமைப்பில் உயிரூட்டியுள்ளார். இந்தக் கதையிலே

I 5
வரும் பொன்னம்மாக் கிழவி மறக்க முடியாத பாத்திரமாகும். அவள் செம்மனச் செல்வியின் யாழ்ப்பாண அவதாரம்"! 'நேற்று இரண்டு மூன்று பேர் தான் கேட்டார்கள். இன்று பத்துப் பதினைந்து பெரியவர்களும், பதினெட்டு இருபது குழந்தை களும் இருக்கிருர்கள். ’ (பக் 19) என்று கூறுமிடத் தில், மறைந்து கொண்டு வரும் புராணப் படிப்பு இன்னும் எத்தனை காலத்திற்கு இருக்கப் போகி றது?" எனக் கேட்காமற் கேட்கிரு ர். அவருடைய கருத்துப்படி யாழ்ப்பாணக் கலாசாரத்தின் அடி நாதமான புராணமும் அதன் வாசிப்பும் அருகி வருகின்றது என்ற மன அவசத்திலே போலும், புராண படனக் காட்சியை மிக விரிவாக எழுதியுள் ளார். இலங்கை வானெலி நிலையத்தார் 1965 ஆம் ஆண்டில் சிறுகதைப் போட்டி ஒன்று நடாத்தினர். அப்போட்டியிலே தெரிவு செய்யப்பட்ட கதைகளுள் முதலாவது ஒலிபரப்பான பெருமை பிட்டு என்ற கதைக்கு உண்டு. வானெலி நேயர்களை மனதிற் கொண்டுதான் அதிகமான பாடல்கள் இக்கதையிற் சேர்க்கப் பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. செம் மனச் செல்வி சிவபெருமானுக்குப் பிட்ட வித்துக் கொடுத்த புராணக் கதை பொன்னம்மாக் கிழவி வெள்ளையனுக்குப் பிட்டவித்துக் கொடுத்த பழைய நிகழ்ச்சி: இன்று அவள் குழந்தைக்குப் பிட்டவித் துக் கொடுக்கும் சம்பவம் :- இம் மூன்று இழைகளை யும் பிரிகள் சிலிம்பாமல் ஒரே முழுமையான கதை யாக முறுக்கியுள்ளார். செம்மனச்செல்வி சிவபெரு மானுக்குப் பிட்டவித்துக் கொடுத்துவிட்டு, 'அந்தி வா அளிப்பன் நின் கூலி’ என்ருள். ஆனல் பொன் னம்மாக் கிழவி, "காசை ஆர டா கேட்டா ? . நீ என்ருல் வேலை செய்தாய். நானே பிட்டுத் தத்தேன். காசைப் பத்தி இரண்டு பேருமே பேசக் கூடாது.” (பக்.25) என்று வெள்ளையனுக்குக் கூறுகிருள். இந்த

Page 11
6
அன்பு தொழிலாளி-முதலாளி பிரச்சினைகளுக்கு அப் பால், கிராமத்தின் செழுமையிலே வளர்ந் தோங்கி நிற்கின்றது! இந்த அன்புப் பிணைப்பினுல் இவ்விரு பாத்திரங்களும் புராணிகப் பாத்திரங்களுக்குச் சம தையான தெய்வீகம் பெறுகின்றன.
*கலைகளெல்லாம் கடவுளுக்காகச் சமர்ப்பிக்கப் படல் வேண்டும்" என்ற ஒரு கொள்கைக்கும், ‘கலைகள் பொதுமக்களின் இரசனைக் குத் தான்" என்ற பிறி தொரு கொள்கைக்கு மிடையில் நடைபெறும் மோதலை சமர்ப்பணம் என்ற கதையிலே காண முடிகி றது. முன்னைய கொள்கையை மனமார ஆதரிக்கும் ஆசிரியர், பின்னேயதைப் பிரசாரத் தொனி மீற எதிர்க்கவுமில்லை. இக்கருத்துக்களைப் பாத்திரங்களின் இயல்புகளோடு இணைத்து விட்டு, இரசிகமணி ஒதுங்கி நிற்கிருர் . காவடித் தாளத்திற்கு ஏற்றதாக அவர் சேர்த்துள்ள பாடல்கள் அவருடைய இரசனை வளத் திற்குச் சான்று. 'ஏராஞ் சலாபமும் .' தொடங்கும் பொழுது, மெளனமாக வாசித்துக் கொண்டிருக்கும் நமக்கு வாய் விட்டுப் பாடவேண் டும் என்ற உணர்வு மேலிடுகிறது. ஆயிரம் கட்டு ரைகளால் நிலைநாட்டப் பட வேண்டிய தாளக் காவடிக் கலையின் மகத்துவத்தை ஒரு கதை மூலஞ் சித்திரித்து, இரசிகமணி வெற்றியும் பெறுகின் ருர்,
என்று
"அறத்தாற்றின் இல் வாழ்க்கையாற்றின் புறத் தாற்றில் போய்ப் பெறுவதெவன்.” என்பது வள்ளு வர் வாக்கு குடும்ப பாரத்தைக் கண்டு பயந்து துறவு தேடி ஓடுபவனை வள்ளுவர் நிறுத்தி, ‘போய்ப் பெறுவது எவன்?" என்று கேட்கிருர் . இந்தக் கருத் தைத் தொனிப் பொருளாகக் கொண்டது தொந்தம். 'ஊழிற் பெருவலியாவுள என்ற குறளின் கருத் தும் அந்தச் சுருதியிலே தொற்றிக் கொள்ளுகிறது.

7
இக் கதையின் பிரகரணம் "உலக மளாவியது". முற்றி லும் வேறுபட்ட, உவமைகள் விரவிய நடையைத் “தொந்த'த்திலே காம்பீர்யமுடன் கையாளுகிருர், 'குலைநெரி தேங்கா’யாகக் கஷ்டப்பட்ட சாம்பசிவம் துறவியாகிச் சாரங்களுக வாழ்ந்து, மீண்டும் உலகத் திற்குள் பிரவேசிக்கும் பொழுது, அவனுக்கு அகப் படும் பெண் குழந்தையோடு ஆச்சிரமத்திற்குத் திரும்புகின்றன். தான் தூக்கி வந்திருக்காவிட்டால் குழந்தை இறந்திருக்கும் என்பது சாரங்கனின் விளக் கம். ". குழந்தை சாவதும் பிழைப்பதும் உன் கையிலா இருக்கிறது? அப்படியானல் அந்தத் தாயைப் பிழைக்க வைத்திருப்பாயே. நீ இந்தக் குழந்தை யைத் தூக்கி வராதிருந்தால், அந்த வழியால் வரும் ஒரு செல்வச் சீமானின் கண்ணிற் பட்டு இராச போகத்தை இது அனுபவித்திருக்குமல்லவா?’ குரு நாதரின் விஞக்களைக் கேட்டுச் சாரங்கன் அதிர்ச்சி யுற்ரு?ன். சாத்திரங்களில் படித்தும் விளங்காத எத் தனையோ விடயங்களின் பொருள் அப்பொழுதுதான் புலப்படுவது போல் இருந்தது." (பக் 54) இந்த அதிர்ச்சிக்கு விடைபோல மேதை டால்ஸ்டாயின் ஒரு செருப்புக் கட்டியின் கதை அமைந்திருக்கிறது. நல் லார்வம் என்பது என்ன? தர்மம் என்ருல் என்ன? புரை தீர்ந்த நன்மையின் பொருள் என்ன? -இவை போன்ற பல பிரச்சினைகளை இக்கதை உள்ள டக்கியுள்ளது. பிரச்சினைக் கதைகளைத் தமிழ் நாட் டிலே தான் எழுதுகிருரர்கள் என்று மன மயக்கத்தில் உள்ளவர்களை, இக்கதை எழுப்பும் பிரச்சினையின் புதிரைக் கட்டவிழ்த்துப் பார்க்கும்படி சிபார்சு செய்கின்றேன்.
இத்தொகுதியிலே இடம்பெறும் மிகச் சிறிய
கதையான தரிசனம் ஆழமான கருத்தொன்றினைப் பரிவர்த்தனை செய்கின்றது. உள்ளக்கோயில்” என்ற

Page 12
18
நல்லிலக்கியத்திற்கும், "பருவ மங்கையின் படுகொலை” என்ற போலியிலக்கியத்துக்குமிடையிற் போர். எது காலத்தை வெல்ல வல்லது? பூசலார் கட்டிய உள்ளக் கோவிலா, காடவர் கோன் கட்டிய சிற்பக்கோவிலா மேன்மை மிக்கது என்றெழுந்த மோதல்! இதனைத் தீர்க்க நடராசப் பெருமானே கனவிலே தோன்ற வேண்டியவரானுர் . தரமறிந்து தமிழ் த் தொண்டி யற்றும் பதிப்பாளருக்கும், நூற்பிரசுரத்தை வணிக மாக்கிக் கொண்ட பிறிதொருவனுக்கும் போட்டி! போட்டியைத் தீர்த்துவைக்கின் ருர் சிவப்பிரகாச ஞர், போலிக்கும் உண்மைக்கும் நடக்கும் சத்திய யுத்தம் என்ற பிரகரண ஒலியே மேலோங்கி நிற்க வேண்டுமென்ற அவாவிலே, இக் கதையில் உருவகக் கதை அமைப்பும் புகுந்து கொள்ள இரசிகமணி அனுமதிக்கின்ரு ர், அத்துடன், அவர் "பதினெட்டுப் பாடல்களினற் சேக் கிழார் . " எனத் தொடங்கி, ". . . . . . எனப் பல கோணங்களிலே, பல விமர்சகர்கள் உள்ளக் கோவிலின் சிறப்பை மக்கள் முன் வைத்தார் கள்’ (பக்:59-61) என்ற பந்தியை எழுதும் பொழுது இரசிகமணி இரசிகமணியேயாகி விட்டார்."பழைமை விற் காலூன்றிப் புதுமையைச் செய்து பார்த்தேன். புதுமை விரும்பிகள் புராணக் குப்பை என்கிருர்கள். வைதீகங்கள் "சேக் கிழார் பாடிய தெய்வ மாக் கதையைப் பாட இவனுக்கு அருகதை உண்டா' என்று கேட்கிரு ர்கள்.”(பக் 58) என்ற இடத்திலே, இரண்டு வேறுபட்ட சக்திகள் எவ்வாறு ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தடை கற்களாக இருக்கின்றன எனச் சுட்டிக்காட்டும் வகை அற்புதம். இந்தக் கதையை வாசிக்கும் பொழுது சிவப்பிரகா சனுர் என்ற பாத்திரத்தில் இரசிகமணி அவர் களுடைய உள்ளத்தையும், மனுேதைரியத்தையும் என்னுல் தரிசிக்க முடிந்தது

9
தரிசனத்தில் இலக்கியப் போலியை நம்முன் நிறுத்திய இரசிகமணி, சமுதாயத்தில் வெள்ளை வேட்டிக்காரராக வாழும் போலிகளை இனங்கண்டு அலை ஓய்ந்ததுவில் அறிமுகப்படுத்துகின் ருர், சிவ சுந் தரம் பிள்ளையின் எரியும் உள்ளத்திற்கு, வேலைக் காரச் சொக்கன் நாகுக்காக எண்ணெய் ஊற்றும் பகுதிகள் கலைத்துவமாக அமைந்துள்ளன. இக் கதை யில் இரசிகமணியின் நகைச் சுவையும் இலேசாகப் புரையோடிக் கிடக்கிறது, சிவசுந்தரத்தின் உள்ளத் தில் அலை ஒய்ந்ததோ என்னவோ, போலியான இயந்திர வாழ்க்கைக்குள் கிராமங்களின் புனித பண்புகள் நசுக்கப்படுகின்றன என்று அங்க லாய்க் கும்
இரசிகமணியின் உள்ளத்தின் அலைகள் ஒயவேயில்லை.
கூத்து என்னுங் கதை நனவோடை உத்தி முறையில் எழுதப்பட்டிருக்கிறது. பழைய கதை ஒன்றை புதிய உத்தியிலே எழுதுவதிற் கணிசமான வெற்றியும் பெற்றுள்ளார். கொட்டகைக் கூத்தின் ஆசாரம் முழுவதையும் இக்கதை விரிவாக அறி முகப்படுத்துகின்றது. கலை ஆர்வம் பாராட்டத்தக்க தேயாயினும், வாழ்க்கையின் செழுமைக்குத் தேவை யான முயற்சியை அந்த ஆர்வம் விழுங்கி விடக் கூடாது என்பது இரசிகமணியின் கருத்தாகும். இதனை அடுத்த கதையான செம்மண்ணிலும் வலி யுறுத்துகின் ருர், உழுதுண்டு வாழும் க மக்காரனைக் கனம் பண்ணும் இரசிகமணியின் பண்பு இக்கதை களிலே துலங்குகின்றது. செம்மண் என்னும் படு தாவிலே பசுபதிக் கிழவன் என்ற அற்புத ஒவியத் தைத் தீட்டியுள்ளார். இக்கதை ‘ஈழநாட்டின் இன் றைய சிறுகதைகள்" என ஒப்சேவர்’ பத்திரிகை அறிமுகப்படுத்திய கதைகளுள் ஒன்ருக ஆங்கிலத்தி லும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.". எனக்கு அது (பூவக்கல்லி என்னும் செம்மண் நிலத்துண்டு: எஸ்.

Page 13
20
பொ.) என் பிள்ளையளிலும் பெரிசடா. அது என்ரை உயிரடா. என்ரை சாம்பலைக்கூட அதுக்குள்ளை தான் புதைக்க வேணும்” (பக் 95) என்று பசுபதிக் கிழவன் வேலுவிடம் கூறுகின்றன் . இந்தக் கதை பத்திரிகை யிலே பிரசுரமான காலத்தில், “இந்தப் பகுதி யதார்த் தத்திற்கு முரணுனது ரசக் குறைவானது' என்று சில "முற்போக்கு விமர்சகர்கள் எதிர்ப்புத் தெரிவித் ததை நான் அறிவேன். இரசிகமணியின் சிந்தனைச் செழுமையையும், பிறந்த இடமான செம்மண் மீது அழுங்குப்பிடியான பற்றுதலையும் அறிவதற்கு அந்த விமர்சகர்களுக்குப் பல்லாண்டு காலம் எடுத்தது, “செம்மண்” பிரசுரமாகிப் பல்லாண்டு காலத்திற்குப் பின்னரே பாரத ரத்தினம் ஜவஹர்லால் நேரு கால மாஞர். அவர் தமது சாம்பல் வயல் வெளிகளிலே தூவப்பட வேண் மென்ற விருப்பத்தைத் தெரிவித் திருந்தார். நேருவின் விருப்பத்தை முற்கூட்டியே தன் பாத்திரமான பசுபதிக் கிழவனிடம் புகுத்தி, தன் மேதைமையை இரசிகமணி நிலைநாட்டியுள்ளார். வெறுந் தொழிலாளர் பிரச்சினைகளைப் பிரசாரஞ் செய்வதிலும் பார்க்க, மனிதத்தன்மை-மனித முயற்சி முதலியவற்றிற்கு உரிய மதிப்புக் கொடுத்து எழுதப் படுவதுதான் ‘மக்கள் இலக்கியம்" என்ற புதிய விளக் கம் ஒன்று கூத்து, செம்மண் ஆகிய கதைகளிலே படர்ந்து கிடப்பதைக் காணமுடிகிறது.
கண் திறந்தது போன்ற கதையை இரசிகமணி யைப் போன்று வேறு எழுத்தாளர் எவராலும் எழுத முடியாது என்பது என் கெட்டியான அபிப்பிராய மாகும். காலை எட்டு மணியளவில் தொடங்கி மத்தி யானம் இரண்டு மணிக்குள் கதையை முடிக்கும் அழகே தனி, அந்தியேட்டிக் காட்சியை "மிக நுட்ப மாக வர்ணித்துள்ளார். பத்தொன்பதாம் நூற்ருண் டிலும், இருபதாம் நூற்றண்டின் தொடக்கத்திலும்

92
யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் செலுத்திய ‘புலவர்" களை இக்கதையில் நேர்த்தியாக நையாண்டி செய் கிருர், பழைய சரமகவி ஒன்றை வைத்துப் பெயர் மாற்றஞ் செய்யத் தெரிந்ததுதான் இவர்களுடைய வித்துவம், ஆசிரியத் தொழில் பார்க்கும் இரசிக மணி, ஆசிரியர் வர்க்கத்தின் அவலங்களையும் இக்கதை யிலே சித்திரித்துள்ளார்.
ஒரு பிடி சோறு ஈழத்துச் சிறுகதைத் தொகுதி யில் இடம் பெற்றது; பின்னர் ருஷிய மொழியில் வெளி வந்த இலங்கைச் சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றது. இப்பொழுது இந்தக் கதையை வாசிக்கும் பொழுது, பூரீல பூgரீ ஆறுமுக நாவலர் நான்காம் பால பாடத்தில் எழுதிய பகுதி ஒன்று என் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப் பகுதி வருமாறு:
"தொழில் செய்து சீவனஞ் செய்யச் சக்தியில் லாதவர்களாகிய குருடர் முடவர் சிறு குழந்தைகள் வியாதியாளர்கள் வயோதிகர்கள் என்னும் இவர் களுக்கும், ஆபத்துக்காலத்தில் வந்த அதிதிகளுக்கும் கஞ்சியாயினும் காய்ச்சி வார்ப்பியாது, அவர்களைத் துர்வார்த்தைகளினலே வைதும், கழுத்தைப் பிடித் துத் தள்ளியும், அடித்தும் ஒட்டிவிடும் வன்கண் னர்கள் சிலர், தொழில் செய்து சீவனஞ் செய்ய வல் லவர்களாகியும், சரீர புஷ் டியுடையவர்களாகியும் வியபிசாரம் பொய்ச்சான்று சொல்லல் குது முத லிய பாதகங்களிலே காலம் போக்குபவர்களாயும் உள்ள சோம்பேறிகளுக்கு முக மலர்ச்சி காட்டிக் கும் பிட்டு, இன் சொற்சொல்லி, நெய், வடை, பாயசம், தயிர் முதலியவற்றேடு அன்னங் கொடுத்துப் பண முங் கொடுக்கின்றர்கள்.”

Page 14
22
ஆறுமுகநாவலர் வழி வந்த தமிழ் மரபில் நின்று, போலிச் சமயாசாரங்களைச் சாடுகிருர், ஏழ்மை நிலையிலும் தன் மான உணர்ச்சி மரிப்பது கிடையாது; அந்த உணர்ச்சியிலே தான் மானுஷி கம் வாழ்கின்றது. அதனை இந்தக் கதையிலே காட்டுகிருர்,
இக்கதைத் தொகுதியின் மகுடக்கதை வெண் சங்கு. என்னை மிகவும் கவர்ந்த கதையும் இதுவே தான். எனவே, அந்தக் கதையின் சிறப்பினை அறி யும் அலுவலை வாசகரின் சுய விசாரணைக்கு விட்டு விடுகின்றேன்.
இரசிகமணியின் வசன நடைக்கும், என் வசன நடைக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டென் பதைத் தமிழ் அன்பர்கள் அறிவார்கள். அவருடைய வசன நடை பற்றிய என் விமர்சனத்தைப் புத்தி பூர்வமாகத் தவிர்த்துள்ளேன். இருப்பினும், அவரு டைய வசன நடைபற்றி "தீபம்’ ஆசிரியர் நா. பார்த்தசாரதி 1963 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையின் பகுதியை வாசகர் அறிந்து கொள் வது நல்லது. அது வருமாறு:
"கனக. செந்திநாதன் அலட்சியமாகவும்-இணை யில்லாத தைரியத்துடனும் ஒரு கதையை எடுப் பாகத் தொடங்கும் முறை எனக்கு மிகவும் பிடிக் கும். அவருடைய அந்த Audacity போற்றத் தகுந்த முரட்டுத் தனத்தை நான் மிகவும் இரசித் துப் படிப்பேன். புதுமைப்பித்தன், அழகிரிசாமி, இரகுநாதன், ஜெயகாந்தன் போன்ற தமிழகத்து எழுத்தாளர்களிடம் இந்த Audacity எப்படி இலக் கியத்துக்கு வலுவளிக்கிறதோ, அநுகுணமாக இருக் கிறதோ அப்படியே கனக செந்திநாதனிடமும்

2岛
வாய்த் ருக்கிறது. "ஒரு பிடி சோறு’ என்ற தமது சிறந்த கதையை அவர் தொடங்குகிற அழகைப்
utrh i s 67 :
*யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல்-சத்திர சிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமானறு. கடலிலே பிருந்து வெட்டப்பட்ட அந்த உப்புக் கழிக்கு 'ஆறு' 6ான்று பெரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித் திரம் அந்தக் கழிக் கரையிலே முருகப் பெருமான் இருக்க எண்ணங் கொண்டது” என்று ஆசிரியர் க ைதயைத் தொடங்குகிரு ர். ஆசிரியர் தொண்டை மான் ஆற்றைப்பற்றி வருணிக்கும் இடத்தில் ஆசி ரியருடைய குத்தலும் - குறும் புத்தனமும் - நகைச் சுவையும் - துணிவும் மிக நன்ருக வாய்த்திருக்கின் றன."
* இரசிகமணி கனக-செந்திநாதன் இத்தொகுதி யின் மூலம் ஈழத்துச் சிறுகதை முயற்சிகளில் மரபு நி?லயில் ஒலிக்கும் இனிய நாதத்தை - வரவேற்கத் ச, , க்க நாதத்தை-சேர்க்கிருர், ஈழத்தில் இதுவரை வெளிவந்துள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைத் ,ொகுதிகளுள் நம் நாட்டின் நல் முயற்சிகளைப் பிரதி 1 க்கும் ஐந்து சிறந்த சிறுகதைத் தொகுதிகளைத் தெரிவு செய்வதானல், அவற்றுள் * வெண் சங்கும் நீ சயமாக ஓர் இடத்தைப் பெறும்.
எஸ். பொன்னுத்துரை
ரிட்டக்களப்பு (). 0, 1967.

Page 15
தோணி வி. அ. இராசரத்தி மண்டலப் 山而品 புெ சிறுகதைத் தொகுதி yn UTFEE)) Lugh. Gall TGC 49 555. ଜfdଭିନ୍ନ வாழ்க்கை வரலாறு பகவத்கீதை வெண்பா புலவர்
- சாதித்திய மண்ட
கவிதை நூல்' இளமைப் பருவத்திலே எம். ஏ துக்குரிய சான்றிதழ் (இரண்டாம் பதிப்பு L{ எம். ஏ. ரஹ்மான்חום nਜ ਸਨ। ஈழத்து இலக்கிய வளர்ச்சி இர! - ஈழத்தின் தற்கால
வரலாற்று நூல் அண்ணல் கவிதைகள் - கவிஞ - கவிதிைத் தொகுதி
பரிபாரி பாமர் "சானு'
- பேணுச் சித்திரம் இலக்கிய உலகம் - வி. சுந்தவ
கவிதை நூல் காபிப்யச் சொற்பொழிவுகள் - பு ஆராய்ச்சிச் சொற்ெ புதுகுறிபிறக்கிறது - முதளே
நிறுசுதைத் மஹாகவியின் குறும்பா-100
50 சித்திரங்களுடன் ரசிகர் குழு போட்டிக் கதைகள் சிறுகதைகளின் தெ எஸ். பொன்னுத்துன் சிறுகதைத் தொகுதி
231 ஆதிருப்பள்ளித் தெரு
-

,
st uபீடுகள் =
னம் - து வங்கா சாகித்திய
11 1 விலே ரூ 2
த்தினம்
sial, தி 星、一
வப் பரிசு பெற்ற
U 350 ரஹ்மான் - நூல் நியேத்
பெற்ற சிறுவர் இலக்கியம் விவே. ரூ. 1/35 உருவகக்கதைகள்
சிக்மணி கனக. B இலக்கிய வரலாறு கூறும்
ர் அண்ணல்
விலே ரூ. 325
விவேரு 19 FIF, F,
விலே, ரூ. 10 த்துக் காப்பியங்கள் பற்றிய பாழிவு விலே ரூ. 350 齿) 弼 . . 7 குறும்பாக்கள், செளவின் an Ital, is au. I. I./85 போட்டி மூலத் தேர்ந்த ாகுப்பு ఐడి, లై, 1/30
IT
440
அரசு வெளியிடு --L-- கொழும்பு-13, இலங்கை
,
பனரி ஏ. பெரியது El litar
ளுடன் வில் ரூ. 2
விலே ரூ. 350