கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தந்தை செல்வா

Page 1
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தை அங்கீகரித்த
தமிழர் தலைவர் தந்தை செல்வா
ரவூப் ஹக்கீம் M.P.
பராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பொது செயலாளர், பூந் லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Page 2

முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தை அங்கீகரித்த
தமிழர் தலைவர் தந்தை செல்வா
ரவூப் ஹக்கீம் எம்.பி. பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர், பொதுச் செயலாளர். முரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

Page 3

தலைவர் குறிப்பு
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அயராத போராட்ட வேலைகளுக்கு மத்தியில் எமக்கு கிடைக்கும் ஆறுதல்களோ மிகவும் அரிது.
அவற்றில் ஒன்றுதான் எமது கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள்.
தந்தை செல்வாவுக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நன்றி கூறி பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒழுங்கு செய்துள்ள நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் தந்தை செல்வாவும், முஸ்லிம்களும் எனும் தலைப்பில் பம்பலப்பிட்டியில் புதிய கதிரேசன் மண்டபத்தில் தமிழர் விடுதலை கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தந்தை செல்வா நூற்றாண்டு தொடக்க விழாவில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் எம்.பி அவர்கள் 31.03.97ல் ஆற்றிய உரையை வெளியிட்டு வைப் பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
நன்றி!
NNNلاس\
سمصیبی எம்.எச்.எம்.அஷ்ரப் தலைவர் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01. 06.. 97

Page 4
an S. J. V. CHELVANAYAKAM CENTENARY 亨 COMMEMORATION NATIONAL COUNCIL
* :
சா. ஜே. வே. செல்வநாயகம் நூற்றாண்டு நினைவு தேசிய அவை سمبر
Telephone : 595.192 4fil9, l'AVEL-CCK R3A), Fax . : 39S 92 COLOMO - OSOC,
(SRI LANKA)
10. O 4, 1997.
திரு. தவப் 2ற சிகிமீ பா.உ. 6 Li T9 3 &ì ở tư cụ ri (H đ , தீ லங்கா முஸ்லிமீ கா ரீகிரஸ், கொழும்பு.
அன்புடைய , வணக்கம் .
நன்றி_நவிலுல்
தந்தை செல்வா அவர்களினி து நீருண்டு விழா அன்கு ரீ பிற நீத நாளாக 3 . 03, 97 και οι αι 3 διδε 4 σ4 .
அந்நாளில் மா லேபல் பமீபலப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற தந்துத செல்வா தூ lமூண்டு விழா நிகழ்ச்சியில் தாங்கமும் பங்குகொண்டு சிறப்புரையாற்றிaர்கt.
எமது தறுகிய கால அழைப்பை ஏற்ற எல்லோரையும் கவர்நீத பொருளிபொதிநித ஒரு உரையை நல்ல தமிழில் நிகழித்தினீர்கள். அவையிலிருநீதோ நீ வெகுவாகக் கவரப்பட்டிருநீதரர் போதிமீ , தங்களி உரை நல்லாயிருந்தது என மனமுவநீது கூறினர் .
தமிழி மூலிதும் நலிவறவை மேலும் வளர்ப்பதற்கும், வப்படுத்துவதற்குமி தநீதை செல்வா நூ நீண்டு விழா அரங்கு பயனுற அமையும் என நம்புகின்பேமி.
தநீதை செல்வா நா நீருண்டு விழா ஆரமீப நிகழ்ச்சியில் பங்குகொண்டு நல்லதொரு உரையை நிகழித்தி மக்களிடம் புதிய நமீபிக்கையை கட்டிய தங்களுக்கு எமி இதய நிறைநீத நன்றியைத் தெரிவித்து கிகொள்கின்ருேமி ,
پلام منفی)در میعا
stag. G & T. Gayesortiff.
add Gha usun and .
 

ෙකාළඹ විශේචවිද්‍යාලය, ශ්‍රී ලංකාව கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்.ை UNIVERSITY OF COLOMBO, Ski ANKA
ܢܙܒܶܪ3 ܖzܢܐ*- ܚܙ:܃ ? ن?فkeه عه
14N نش... ." شاه . ثه، ت: str. )
FAculty of Education *
A.M.s 14c.c . Telephone i*i:
-t-t- ck . ه" S4 3 care نہ ہندیدہ3 P ۔ اس مہم، صید نذچ 4 ، نہ ٦* چ4
stek ke Katz ozusa-4- bepxvisment of Socia Science EdAxali ion
b --\ >ع
N A ma . **3^^24, Nino ». , ta\-si G3
at ni In- رامیک
به اند که 6۱ متر به نامه و به خم شد تا به چاکه س ه چه ه به گ A w 2 »Narra %2-ܝܝ ܝܝܟ ܘ ܟ à ܙ - ܝ ܫܝ ܬ ܘn ܪܶܐ ܕܐܟܐ ܢܶܗ .
* Mr Ms . . 6 -- r1 , 4T 4 ano 4 Ma M. % LaY & 4 را به دو ق GYیہ مہ ٦ ہجہ نہ ہم مسrS8 <ہ ﴿6 جہ– m3 raصہ ممہ م2) 3 نوع ہمہ خA”قع ہے۔ یہ خ9 منہ مبہمه نه ہم بد ند٩٦ S qAAqAAiq AAAS SLLq AA qLiAA iq qq qqqq Aiqi AAAMS
V . AV MW ثم - , a a A a st C ܬ ܟ ܘ ܘ ܘܐ ܙ ܝܚܐ FRܩ ܝܪ ( , W WYw YA محت
)Y ܘܐܝ ܟܐ ܘ ܫ wa. A C་་་་་་་་་་ ལམ་ م.م. دم مه 6٦ C. crae e ivv «D ها هاماً
لیج ہ^ <^1 - 1مہ۔ : " بر ۰ 673 )زمہ ہهنہ بد سب س مہم مع どう1・ i. - NSW vir
as a Go 9۹ܐܝܓܖ نه به \ح € v 1 •, ܟܚ ܕܬܵܐ. ة بمن 1م حي G ܕ ܘ ཨི་ཀ་༤ ) عصمہ سہی Ma به می به GV བ་༣༣ چه شمسـه معنی ہمہ \ .....................'?*.ے۔
3 حجاه ه به ۱ م نند که گ :۱ستء سه به نامه ی ۹لاقی NA 6 بس یہ خہیAس<3
Yu - TY ܟܳ-ܓܪ ܢܿܖ -ܝܧ M. Wo rW A M a - «MYRA
G* J, r c- tA**3 9قتAمسہ پ G ܪ ܪ ܇ܝܘ
نہ ہی مہم ہی آتG همه حج می \ فسمع فيه 61
C: اگر 'ی ہمہ ق> \ که Yکحه نم. م. سعی شی ی\6 .G\ a M ۱ - ک9۹
« ܘܶܐܬ݂ ܥܶ ar. v Cy ۴ . - ش ۹. دما نه.
سم^ٹا ن سہر . با طعم ده نمک ^ଋତ୍ବ । ଅy شیخ ۹ ده که
ܗܶܐ ܬ݁ܰܘ ܢܳܡܐ ܕܐ ܢ
را اع ۶ مه ۹و در سه ماه یک ۱ مه مه مہ نہ تمہ ہی ہمه 6٦ نہ ہی دی
نہ ہی نہ بد 4 7*\ܝܙ ܀ ܗܐ ܚ ܕ݁ܶܗܘ
آیه ۳۰۹ معبد ۹۰۰۰ - ه ཡ་རྩལ་པ་དང་། ن ۹۹ نه بالای ۹ م - ه ۹-هم-۹ نه بم به ۹ و نه ۹ س۱ م م به شد.
۶۰۰۰ --~\ہ منہ بد ه\ع
شمع میسہ -حسب م 3”༩ པའི་མི་འབོའ་ལy A 1- محلأ نجم درم بين
پس • بہ یہ تمہ Y \ تو مہ ཧ་༣༠་ vuN , CM 6 ^ المه صمہ (S \ ઢોર, ܪ ܝܐ ܪ مثانه شد هم به همدم به میجی o م^ہ ہم تتمہ ”چ ؟ به ܚܕܐ ܘ ༣ - ཉའང་ཟ་འ་ م-۹۱ NAs. A tert حتسب uU P. །ཐ་བུ་ ) V( جیح دی ہمہ \ い、 どy三ーユニ
سسسسسس

Page 5

பிஸ்மில்லாஹிர்ரஹமானிர்ரஹிம்
"தந்தை செல்வாவும் முஸ்லிம்களும்” என்ற அணுகுமுறையிலே நான் என்னுடைய சொற்பொழிவை நிகழ்த்தவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். நான், தந்தை செல்வாவின் தலைமுறை யைச் சேர்ந்தவனல்ல. ஏற்கெனவே அண்ணன் சிவா அவர்கள் மேடையிலே இருப்பவர்களை அறிமுகப்படுத்துகின்றபொழுது, ”மேடையிலேயிருக்கின்ற அனைவரும் தந்தை செல்வாவுடன் நெருங்கிப் பழகியவர்கள்" என்று சொன்னார்கள். நான் அதற்கு விதிவிலக்கானவன்; நான் அவருடைய தலைமுறையைச் சேர்ந்தவனுமல்ல.
என்றாலும், இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை இனங்களின் தானைத் தளபதியாக நாங்கள் எல்லோரும் அடையாளம் காணும் தந்தை செல்வாவைப் பற்றிப் பேசத் தெரியாதென்று சொல்லும் எந்த முஸ்லிமும் இந்த நாட்டிலே இருக்க முடியாதென்று நான் நினைக்கின்றேன். அவருடைய நுற்றாண்டு விழாவின் இந்த ஆரம்ப நிகழ்ச்சியிலே எனக்குச் சொற்பொழிவாற்றக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை என் வாழ்க்கையிலே ஒரு பொன்னான வாய்ப்பாகவும் நான் கருதுகின்றேன். முஸ்லிம்களுக்கு சுய நிர்ணய உரிமை
"தந்தை செல்வாவும் முஸ்லிம்களும்” என்று சொல்லும் பொழுது, என் நினைவுக்கு ஆயிரமாயிரம் விஷயங்கள் வந்து போகின்றன. வரலாற்றிலே படிக்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. திரும்பத் திரும்பப் பலரும் எழுதும் விஷயங்கள் ஆயிரம் இருக்கின்றன. புத்தளத்துப் பள்ளிவாயிலிலே முஸ்லிம்கள் பொலிசாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபொழுது அவர்களுக்காக குரல் கொடுத்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் என்று அடிக்கடி நாங்கள் எல்லோரும் நினைவுபடுத்திக் கொள்ளும் ஒரு தலைவராக மட்டுமல்ல, இந்த நாட்டிலே வாழும்

Page 6
முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை தாம் தமிழரசுக் கட்சியைத் தொடங்கிவைத்து ஆற்றிய முதல் உரையிலேயே அழுத்தந் திருத்தமாகச் சொல்லிவைத்த தலைவர் தந்தை செல்வா என்பதை நாங்கள் பெருமையுடன் நினைவு கூருகின்றோம். அதுமட்டுமல்ல, தொடர்ந்து வந்த தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளின் போதெல்லாம் வட-கிழக்கிலே வாழும் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தையும், அவர்களின் அந்தத் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தையும் அடிக்கடி பேசிவந்த அரும்பெரும் தலைவராகவும் நாங்கள் அவரைக் காண்கின்றோம்.
இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்கள் தமிழர்கள்’ என்ற வரையறைக்குள் வரவேண்டுமென்று ஒரு சிலர் அடம்பிடித்துக் கொண்டிருந்தபோது, தமிழ்ப்பேசும் மக்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை உபயோகித்து முஸ்லிம்களுக்கும் தனித்துவம் இருக்கிறதென்று அடையாளங் கண்டு, இந்த நாட்டு முஸ்லிம் களையும் அரவணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டுப் பெருமை கண்ட அரும்பெரும் தலைவராக நாங்கள் தந்தை செல்வாவைக் காண்கின்றோம்.
இந்தத் தலைவரைப்பற்றி நிறையக் கதைக்க முடியும். கடந்தகால அரசியலை இன்று நினைத்துப் பார்க்கும்போது, முஸ்லிம் பெரும்பான்மைத் தேர்தல்தொகுதிகளிளெல்லாம் பல்வேறு கட்சிகளிலிருந்து இருமுனை - மும்முனை - நான்கு முனைகளிலே யெல்லாம் போட்டியாளர்கள் நிறுத்தப்பட்ட போது, கணிசமான தொகையினராக வாழும் தமிழ் வாக்காளர்களுடைய சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி, முஸ்லிம் வேட்பாளர்களைத் தோற்கடிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தபோதெல்லாம் அவ்வாறு நிகழ்வதைத் தடுத்த ஒரு பெருந்தகையாக நாங்கள் தந்தை செல்வா அவர்களைக் காண்கின்றோம். முஸ்லிம்களுக்கு இருக்கும் பாராளுமன்ற ஆசனங்களை அவர்கள் பாதுகாத்துக் கொள்ளவேண்டு மென்பதில் அக்கறையுடன் செயற்பட்ட ஒரு தனிப்பெரும் தலைவராக நாங்கள் அவறைக் காண்கிறோம்.
ஒற்றுமைப் பிணைப்பு
இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியில் இருந்த பிளவுகளையெல்லாம் நீக்கி - யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத்

தமிழர், மலைநாட்டுத் தமிழர், வன்னித் தமிழர் - இந்தத் தமிழர்களுக்கு மத்தியிலே அங்குமிங்குமாகச் சிதறியும், செறிந்தும் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் என்ற இந்த எல்லாச் சமயத் தவர்களையும் சமூகத்தவர்களையும், பிரிவினரையும் ஒன்றிணைத்து இந்த நாட்டுத் தமிழர்களின் அரசியல் வரலாற்றிலே ஒரு தலைசிறந்த தானைத் தளபதியாகத் திகழும் தந்தை செல்வா அவர்களுடைய இந்த நூற்றாண்டு விழாவில் அண்ணன் சிவா கூறியதுபோல எங்களுடைய கட்சி முழுப் பங்களிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றது.
அவருடைய பாசறையில் வளர்ந்த பலர் இங்கிருக்கின்றார்கள். என்னுடைய கட்சித் தலைவரும் கூட அடிக்கடி மிகவும் அன்புடனும் நெருக்கத்துடனும் தந்தை செல்வாவுடைய அரசியல் பாசறையைப் பற்றிப் பேசுவார். அந்தப் பாசறையில் வளர்ந்தவர்கள் இன்று எங்களுடைய கட்சியிலும் இருக்கின்றார்கள்; அவர்களுடைய அனுபவங்களைப்பற்றி நிறைய என்னிடத்திலே பேசியிருக்கிறார்கள்; பொதுக் கூட்டங்களில் சிறப்புரையாற்றியிருக்கிறார்கள்.
ஆனால், தலைவர் தந்தை செல்வாவைப்பற்றிப் பேசும் போது அவர் முஸ்லிம்களுக்காகச் செய்த ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், அவரை, அவருடைய தலைமுறையைச் சாராதவன் என்ற வகையிலே நான் பார்க்கும்போது - அவரைப் பற்றிக் கேள்விப்படும்போது - அவருடைய குணாதிசயங்களைப் பற்றி வாசிக்கும்போது எல்லோரும் அதிசயப்படும் எத்தனையோ விஷயங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
தலைமைத்துவத்துக்குரிய குணாம்சங்களிலே முக்கியமாக - ஒருவர் தலைவராக இருந்தால் அவர் பீரங்கிப் பிரசங்கியாக இருக்க வேண்டும் என்ற ஒரு நியதி இருந்தது. மேடையதிரப் பேசும் மேதாவிலாசம் இல்லாத பொழுதிலும், அடக்க ஒடுக்க மாக, ஆரவாரம் இன்றி அரசியல் செய்து இந்த நாட்டிலேயுள்ள சிறுபான்மையினங்களுக்குக் கெளரவத்தைத் தந்த ஒரு மாபெரும் தலைவராக நாங்கள் அவரைக் காண்கின்றோம்.
இன்று நடைபெறும் அவருடைய இந்த நினைவு விழாவில் அவருடைய உரைகளில் சிலவற்றைப் படித்து அவற்றிலிருந்து சில கருத்துக்களைச் சொல்லலாமென்று நான் விழைந்தபோது, தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்துக்கு எனது

Page 7
செயலாளரை அனுப்பி, அங்கிருந்து அவருடைய பழைய சொற்பொழிவுகளில் சிலவற்றின் பதிவுகளை எடுத்துப் பார்த்தேன். எல்லாவற்றையுமே வாசிக்க எனக்குச் சந்தர்ப்பம் இருக்கவில்லை. முதலாவதாக 1949இல் அவராற்றியிருந்த ஒரு சொற்பொழிவைப் பார்த்தவுடனேயே அந்த அரும்பெரும் தலைவருடைய தீர்க்க தரிசனத்தையும் எதிர்காலத்திலே நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றியெல்லாம் கட்டியம் கூறுகின்ற அளவுக்குக் காத்திரமான வகையில் தமிழரசுக் கட்சியின் ஆரம்ப விழாவில் அவர் ஆற்றியிருந்த அந்த சொற்பொழிவைப் படித்தபோது நான் வியந்தேன். அந்த உரையிலிருந்து என்னுடைய நினைவிலிருக்கும் சில விஷயங்களை மட்டும் - இந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கு அடுத்த சிறுபான்மையினமான முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதான ஒரு சில விஷயங்களைப்பற்றி இன்று தொட்டுச் செல்வது என்னுடைய கடமையென்று நான் கருதுகின்றேன். சமகால சம்பவங்கள்
1949ஆம் ஆண்டு இந்த நாட்டின் மலையகத் தமிழர்களுடைய பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபோது தமிழ்க் காங்கிரஸ் செயற்பட்ட விதம் சரியல்ல என்ற அடிப்படையிலே தந்தை செல்வா அதிணின்றும் விலகித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தபோது, அந்தச் சமகாலத்திலே நிகழ்ந்த இன்னுமொரு நிகழ்ச்சியைப்பற்றி நண்பர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய 'வீரகேசரி கட்டுரை யொன்றில் நான் படித்தேன். தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியை, எவ்வாறு தமிழ்க்காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று அமைத்தாரோ, அதே காலத்தில் தமிழ் நாட்டிலே பெரியாருடைய திராவிடர் கழகத்திலிருந்து அறிஞர் அண்ணா விலகி திராவிடர் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார் என்று நண்பர் மாவை எழுதியிருக்கிறார். தமிழரசுக் கட்சி கோரிய சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சியையும் விட - தீவிரமான தனிநாட்டுக் கோரிக்கையொன்றின் அடிப்படையில் திராவிடர் முன்னேற்றக் கழகம் அன்று செயல்பட்டுவந்தது. ஹிந்தித் திணிப்புக்கெதிரான அவர்களது போராட்டம் ஈற்றில் தமிழ்நாடு தனியான ஒர் இறைமையுள்ள நாடாகவேண்டும் என்ற அளவிற்குத் தீவிரமடைந்திருந்தது.
மொழிவாரியாக மாநிலங்களின் எல்லைகள் மீளமைக்கப்
1 O

படுவதன் மூலமே பிரிவினைப் போராட்டங்களை எதிர்கொள்ள முடியும் என இந்திய மத்திய அரசினர் அன்று அரசியல் சாணக் கியத்துடன் செயல்பட்டதன் காரணமாக, தென்னிந்தியாவில் எல்லைகள் மீளமைக்கப்பட்டு அவ்வாறமைந்த மாநிலங்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களை அனுபவிக்கும் அந்தஸ்தைக் கொடுத்து இந்திய நாட்டின் இறைமை பேணப் பட்டிருக்கிறது.
திராவிடர் முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா தோற்றுவித்து பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாக அறுபதுகளின் ஆரம்பத்திலேயே அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை தாங்களாவே கைவிடச் செய்யுமளவிற்கு இந்திய மத்திய அரசு சாணக்கியத்துடன் செயல்பட்டிருக்கிறது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. வெறுமனே பத்தாண்டு காலத்திற் குள்ளாக திராவிடர் முன்னேற்றக் கழகம் தனிநாட்டுக் கோரிக்கை யைக் கைவிடுமளவிற்கு இந்திய அரசு தூரநோக்குடன் செயற் பட்டிருப்பதைப்பற்றி நாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அதே சமகாலத்திலே தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து, தமிழர் களுக்கும் சுயாட்சி வேண்டும் என்ற போராட்டத்திலே இறங்கி இன்று அரைநூற்றாண்டு காலம் கழிந்துவிட்டபோதிலும் கூட இங்கு மேலாதிக்கம் செலுத்துகின்ற எங்களுடைய மத்திய அரசினருக்கு இந்த மனோபாவம் வரவில்லையே என்பதைப்பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.
மொழிவாரியாக மாநிலங்கள் அமைய வேண்டுமென்பதற்காக ஆரம்பத்திலே இந்தியாவிலே எந்தவிதமான ஏற்பாடுகளும் இருக்க வில்லை. இந்தியா சுதந்திரத்தின் பிறகு - பாரதத்திற்கு ஓர் அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டபோது - சமஷ்டி அடிப் படையிலான அம்சங்களை உள்ளடக்கிய ஓர் அரசியலமைப்பைத் தமக்கென அமைத்துக் கொண்டார்கள். ஆரம்ப கட்டத்தில் மாநில எல்லைகள் வகுக்கப்பட்டபொழுது, ஒரே மொழியைப் பேசுகின்ற சமூகங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் வாழ வேண்டிய. நிர்ப்பந்தம் இருந்தது. ஒரே மொழியைப் பேசினாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் சிதறி வாழவேண்டி நிர்ப்பந்திக் கப்பட்டதால் ஒரு மாநிலத்திலாவது அறுதிப் பெரும்பான்மையுடன்
11

Page 8
தமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு அவர்களுக்கு அவகாசம் இருக்கவில்லை. புவியியல் ரீதியாக நிலத் தொடர்புள்ள பகுதியில் வாழ்ந்தபோது அவர்களுக்குத் தமது தனித்துவமான அரசியல் அடையாளத்தை அநுபவிப் பதற்கு தனியான அலகு ஒன்று இருக்கவில்லை. தென்னிந்தியா முழுவதும் மொழி அடிப்படையில் எல்லைகள் வகுக்கப் பட்டிருக்கவில்லை. இரண்டு மதங்களை அனுட்டிக்கும் சீக்கியர் களும் இந்துக்களும் ஒரே மாநிலத்தில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தனர்.
மொழி அடிப்படையிலும் - மத அடிப்படையிலும் வெவ்வேறு மாநிலங்களில் சிதறுண்டு வாழ்ந்த வெவ்வேறு சமூகத்தவரின் அரசியல் தனித்துவத்தைப் பேணுவதின் அவசியத்தை உணர்ந்த இந்தியா தனது மாநில எல்லைகளை மீளாய்வு செய்து அதன் மூலம் தெலுங்கு மொழி பேசும் 230 இலட்சம் இந்தியர்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தையும் - தமிழர்களுக்குத் தமிழ்நாட்டையும், மலையாளிகளுக்குக் கேரளத்தையும், கன்னடம் பேசுபவர்களுக்குக் கர்நாடகத்தையும், வடக்கே குஜராத்திகளுக்கு குஜராத்தையும் இயன்றவரை சாத்தியமான, மராத்தியர்களை உள்ளடக்கி மகாராஷ்டிரத்தையும் சீக்கியர்களுக்கு பஞ்சாபையும், இந்துக் களுக்கு ஹரியானாவையும் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய மாநிலங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள்.
ஆனால் இதேமுறையிலான நியாயமான போராட்டத்தை தமிழரசுக் கட்சி தொடங்கி, தந்தை செல்வா அவர்களால் 1949ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அது முன்னெடுத்துச் செல்லப்பட்டிருந்த போதிலும் கூட இந்தக் கனவு இன்னும் நனவாகாமல் இருந்து கொண்டிருக்கின்றது. இதைப் பற்றித் தன்னுடைய ஆரம்ப உரையிலே, ஆந்திர மக்களின் அந்தப் போராட்டத்தின் பயனாக அவர்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தில் தனிமாநிலம் அமையப்போகிறது என்று தந்தை செல்வா அவர்கள் குறிப்பிட்டிருப்பதை நான் அவரது உரையிலேயே பார்க்கிறேன். கன்னடம் பேசுகின்றவர்கள் கர்நாடகம் கோருகின்றார்கள் என்று கூட அவர் அந்த உரையிலே தெரிவித் திருக்கின்றார். எனவே, மொழிவாரியாக இந்த நாட்டிலும் மாநிலங்கள் அமைய வேண்டும். சுயாட்சி தரப்பட வேண்டும்
12

என்று அன்று அவரது கோரிக்கை இருந்தது. மிகவும் தூரதிருஷ்டியுடன் அவர் கூறிய கட்டியங்கள் எல்லாம் இன்று உண்மையாக மாறிக் கொண்டிருக்கின்றன. பதவிகளுக்குப் பறிபோகாத பாரம்பரியம்
அவரிடத்தில் காணும் இன்னுமொரு சிறந்த பண்பாக, அந்த முதலுரையிலேயே பதவிகளுக்குப் பறி போகாத தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும்’ என்று அவர் சொல்லியிருப்பதை நான் பார்க்கின்றேன். பதவிகள் எங்களுடைய கொள்கைகளிலே யிருந்து எங்களை மாற்றிவிடக்கூடாது என்று மிகவும் கண்ணியத் துடனும் தீர்க்கதரிசனத்துடனும் அவர் சொல்லியிருந்ததை நான் நினைத்துப் பார்க்கின்றேன்.
1934ம் ஆண்டில் சேர் மகாதேவாவும் 1945ஆம் ஆண்டிலே நடேசனும், தியாகராஜாவும், 1949ஆம் ஆண்டில் அண்ணன் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றோரும் எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையில் தங்களுடைய கொள்கைகளிலே தடம் புரள நேர்ந்ததை தன்னுடைய உரையிலே சொல்லித்தான் அவர் தனது போராட்டத்தை ஆரம்பித் திருக்கின்றார். தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் போராட்டம் - தமிழர் விடுதலைக் கூட்டணியின் போராட்டம் - எதிரணியிலிருந்த போராட்டமாகத்தான் அமைந்திருக்கின்றது. 1965ஆம் ஆண்டிலே யிருந்து 1968ஆம் ஆண்டு வரையிலான ஒரு சிறிய காலப் பகுதியைத் தவிர; அதிலும் கூட, திருச்செல்வம் அவர்கள் அமைச்சர் பதவியை வகித்தபோது அவர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரொருவராக இருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். ஒரு செனட் சபையிலே - மூதவையிலே - உறுப்பினராக விருந்துதான் அவர் அமைச்சுப் பொறுப்பை பெற்றாரேயொழிய தெரிவு செய்யப்பட்ட எவருமே அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க மறுத்த ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஆக்கிய தந்தை செல்வா அவர்களைத்தான் நாங்கள் இங்கே காண்கின்றோம். தன்மானத்துடன் தமிழர்கள் சுதந்திரமான சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சியைப் பெறாதவரை நாங்கள் எந்தப் பதவிக்கும் சோரம் போக மாட்டோம் என்று அடம்பிடித்தவராகத்தான் தந்தை செல்வா அவர்கள் தங்களுடைய அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்தும் வழிநடத்தியிருக்கின்றார்; அவருடைய வழித்தோன்றல்களும் அதே அடிப்படையில்தான் இன்றும் அரசியலை மேற்கொண்டு
13

Page 9
வருகின்றார்கள்.
அவர் அவ்வாறு சொன்னதற்கான அந்தச் சாணக்கியத்தையும் அந்தச் சொல்லிலே இருக்கின்ற தூரதிருஷ்டியையும் தீர்க்க தரிசனத்தையும் இன்று நாங்கள் கண்கூடாகக் காண்கின்றோம். தந்தை செல்வா மறைந்த வருடத்திலேயே உருவான அரசு 1977ஆம் ஆண்டு ஆட்சியமைத்த பொழுது கிழக்கு மாகாணத்தை மட்டும் உற்றுநோக்கினால், அந்த மாகாணத்திலே, நாடாளுமன்றத் திலே ஐந்து தமிழ் உறுப்பினர்களும் ஐந்து முஸ்லிம் உறுப்பினர் களும் இருந்தார்கள். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள உறுப்பினர்கள் இருவர் மட்டும்தான் இருந்தனர். இருந்த தமிழ் உறுப்பினர்கள் ஐவரில் இருவர் அமைச்சர் பதவிகளைப் பெற்றார்கள். ஒருவர் மாவட்ட அமைச்சராகவிருந்தார். இருந்த முஸ்லிம்களிலே ஒருவர் பிரதியமைச்சராகவிருந்தார். இரண்டு முஸ்லிம் மாவட்ட அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால், இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவருக்கு வெறுமனே அம்பாறை மாவட்டத்திலேயிருந்து ஒரு மாவட்ட அமைச்சர் பதவி மட்டுந்தான் கிடைத்தது. ஆனால், 1977ஆம் ஆண்டிலேயிருந்து 1989ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டு காலப் பகுதியில் அந்த அரசு இந்த நாட்டின் கிழக்கு மாகாணத்திலே செய்த பலவந்தமான குடியேற்றங்கள் எதையுமே அந்த அமைச்சுப் பதவிகளிலேயிருந்த தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
1976ஆம் ஆண்டு எல்லை நிர்ணயக் கமிஷனின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட சேருவில தேர்தல் தொகுதியும் அம்பாறை தேர்தல் தொகுதியும் அன்று இரண்டு மாவட்டங்களிலும் குறிப்பாக திருமலை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் வெறுமனே 30 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த பெரும்பான்மை இனத்தவருக்கு 70 சதவீதத்திற்கும் மேலாக நிலப்பரப்பைப் பெற்றுக்கொடுத்திருந்தது. இவ்வாறு மாறுவதைத் தடுப்பதற்கு அமைச்சுப் பொறுப்புக்களிலேயிருந்த எந்தச் சிறுபான்மை உறுப்பினர்களுக்கும் எதையும் செய்ய முடியாத அளவுக்கு, ஒரு சிங்கள மாவட்ட அமைச்சர் செய்த கைங்கரியத்தைப் பல அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் எத்தனையோ மாவட்ட அமைச்சர்களும் தடுக்க முடியாமல் போனதையிட்டு நாங்கள்
14

பார்க்கின்ற பொழுது தந்தை செல்வா அவர்கள், அமைச்சுப் பொறுப்புக்கள் வெறுமனே அலங்காரங்கள் மட்டுமே என்று அன்று எவ்வளவு தீர்க்கதரிசமானச் சொல்லியிருக்கின்றார் என்பதை நாங்கள் பார்க்கின்றோம்.
இவ்வாறு அந்த உரையிலிருந்து அவர் சொல்லியிருக்கின்ற எத்தனையோ தீர்க்கதரிசனமான விடயங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் நீண்ட நேரமாக உங்கள் மத்தியிலே கதைக்கின்ற ஒரு வேளையல்ல இது.
தந்தை செல்வா அவர்கள் 1956ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டபோது நாங்கள் கண்ணுாடாகக் கண்ட உண்மை எவ்வளவு தூரம் இந்த நாட்டிலே தமிழர்களும் சிங்களவர்களும் துருவப்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்பதாகும். தனிச் சிங்கள சட்டத்தைக் கொண்டுவரப் போகின்றோம் என்று கூறி பிரச்சாரம் செய்த அன்றைய எம்.ஈ.பி.யைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க அவர்கள் சிங்களப் பிரதேசங்களிலே ஈட்டிய அமோக வெற்றியும், அதற்கு நேர்மாறான அடிப்படையிலே தமிழர்களுக்குச் சுயாட்சி கோருவோம் என்ற தோரணையிலே பிரச்சாரம் செய்த தமிழரசுக் கட்சி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களிலே தமிழ்க் காங்கிரஸைப் படுதோல்வியடைச் செய்த சங்கதியும் எவ்வளவு தூரத்துக்குத் துருவப்பட்ட நிலையிலே தமிழர்களும் சிங்கள வர்களும் இந்த நாட்டிலே 1956 இல் இருந்து தொடர்ந்து வாழ்ந்து வந்து இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டடுகிறது. இன்றைய நிலை
இந்தப் பிரிவினை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. போராட்டம் வேறு திக்கிலே போய்க் கொண்டிருக்கிறது. தந்தை செல்வா ஆரம்பித்த சாத்வீகப் போராட்டம் - அஹிம்சைப் போராட்டம் - இன்று ஆயுதப் போராட்டமாக மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்களாக மாறியிருக்கிறார்கள். இந்த நாட்டிலேயிருக்கின்ற சிங்கள இளைஞர்கள் பலர் இன்று உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் பலர் அவர்கள் இருந்த இடங்களிலேயிருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். எவர்களை அரவணைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்று
15

Page 10
தந்தை செல்வா அன்று கனவு கண்டாரோ அந்த இனத்துக்கெதிராக தன்னுடைய சகோதர இனம் துப்பாக்கிகளை நீட்டி விரட்டிய அசிங்கமான சம்பவத்தையும் நாங்கள் 1990களிலே கண்டோம்.
இன்று வடக்கிலே ஒரு முஸ்லிம் கூட உயிர்வாழ முடியாத அளவுக்கு தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக மாறியிருக்கின்ற அசிங்கத்தைப் பார்க்கின்றோம்.
ஆனால், இவற்றுக்கெல்லாம் காத்திரமான ஒரு முடிவைக் காணவேண்டும் என்பதற்காக தந்தை செல்வாவின் நினைவாக அவருடைய நூற்றாண்டாகிய இந்த ஆண்டிலே நாங்கள் எல்லோரும் கட்டியம் கூற வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்துவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இனப்பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வைக் காணவேண்டும் என்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்போதைய அரசியல் தலைமைத்துவத்துடன் எங்களுடைய கட்சி நீண்ட நெடிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது.
எனவே, தந்தை செல்வா அவர்களுக்கு நாங்கள் அனைவரும் அளிக்கும் மிகப்பெரும் அஞ்சலி இந்த இனப்பிரச்சினைக்கு அவருடைய அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் - அன்று எவ்வாறு அவர் கிழக்கிலே இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அரசியல் அலகுகள் அமைய வேண்டும் - அதில் முஸ்லிம்களுக்கெனவும் ஒரு தனியான அரசியல் அலகு அமைய வேண்டும் என்று சொன்னாரோ அந்த அடிப்படையிலே, சகோதரத்துவத்துடன் ஒரு சுமுகமான முடிவைக் காண்பதற்கு நாங்கள் எல்லோரும் கங்கணம் கட்டுவோமாக எனக் கூறி விடை பெறுகின்றேன்.
நன்றி.
வ ஆகிறு த.வானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்
Typeset and printed by Crescent Publications (Pvt) Ltd., 119, Justice Akbar Mawatha, Colombo - 2 Tel : 565012