கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வித்தகம்  ச. கந்தையபிள்ளை  
 

மகாஜனக் கல்லூரி தமிழ்மன்றம்

 

வித்தகம்
ச. கந்தையபிள்ளை









வெளியீடு:
தெல்லிப்பழை மகாஜனக் கல்லு}ரி
தமிழ்மன்றம்
கல்வித்துறைச் செய்திட்டக்குழு.

+++++++++++++++++++++++++


வித்தகம்
ச. கந்தையபிள்ளை
















தமிழ் மன்றம்
கல்வித்துறைச் செய்திட்டக் குழு.







வெளியீடு - 3
1977-06-15

+++++++++++++++++++++++++

VITHTHAGAM S. KANDIAPILLAI.



A. Concise life sketch of
Pandit S. Kandiapillai (25-8-1880 – 18-11-1958)
Editor – Viththagam






Published by:
TAMIL MANTRAM
&
PROJECT WORK GROUP.





1977-06-15





Thirumakal Press,
Chunnakam.

+++++++++++++++++++++

பதிப்புரை

ஈழத் தமிழ் நிலத்தில் யாழ்ப்பாணப் பகுதி செந்தமிழ் நாடாய் மிளிர்வதை யாவரும் ஒப்புவர். பத்தொன்பதாம் நு}ற்றாண்டில் இந்நாட்டகத்தில் தோன்றிய கல்விமான்கள் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் பண்பாட்டு எழுச்சியிலும், அரசாங்க நிருவாக அமைப்பிலும் பங்குபற்றிப் பெருமையுற்றுள்ளார்கள். இவ்வகையில் இவ்வறிஞர்களை இரு வகையாகக் கணிக்கலாம். ஒன்று@ ஆளும் அந்நியர்மொழி கற்று உலகியல் பூத்த அருந்தமிழ் அறிஞர்கள். மற்றொன்று: ஆரிய மொழியான சமஸ்கிருதம் கற்று ஆன்மீக நோக்கில் அமைந்த அருந்தமிழ் அறிஞர்கள். இவ்விரு வரிசையில் தென்கோவைப் பண்டிதர் ச. கந்தையபிள்ளையவர்கள் இரண்டாவது வரிசை இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் முதலாம் மொழிகளைக் கற்றாலும் தமிழை உலகியல் நோக்கிலே தழுவாது ஆன்மீக வழியில் நோக்கிச் சிறப்புற்றார். அவரைப் பொறுத்தளவில் உலகின் பொதுவியல்பு கருதாது சிறப்பியல்பிற் சிறந்த செம்மலாவர். இதனால் அவரின் தோற்றவியல்புகள் கூடச் சைவத் திருவுருவக் கோலமாக அமைந்திட்டது எனலாம்.

மகாஜனக் கல்லு}ரியின் தமிழ் மன்றத்தாரும், கல்வித்துறைச் செய்திட்டச் குழுவினரும் தமிழ்பேணும் திருநாள்மேற் கொண்ட முனைப்பில் இது போழ்து மூன்றாவது திருநாளைக் கொண்டாடுகின்றார்கள். இதற்குப் பெரிதும் துணைநின்ற பண்டிதர் அவர்களின் மைத்துனர் திரு. த. சிவகுருநாதன் அவர்களைப் பெரிதும் பாராட்டாமல் இருக்கவியலாது. அவர்கள் பண்டிதர் அவர்களைத் தம் குடிமையியலின் குன்றா விளக்காக எண்ணுபவர், அவரின் சைவத் தமிழ் வாழ்க்கை வண்ணத்தில் மூழ்கி மகிழ்கின்றவர். நாம் நமது தமிழ் பேணும் திட்டத்தைக் கூறியதும் மிகவும் வரவேற்று புத்தெழுச்சியாய் வித்தகப் பத்திராதிபரை விளங்கச் செய்யத் துணைபுரிந்திருக்கின்றார். இதற்குக் காரணம் அவர் தம் மைத்துனர் என்பது மட்டுமல்ல@ சைவம், தமிழ் என்பனவற்றில் உள்ள பழுத்த பற்றென்றே கூறவேண்டும். இவரின் செம்மையான மனப் பண்பால் இத் திருநாள் இனிதுறுகிறது. இவருக்கு ஒரு கவலையுண்டு. அஃதென்னவெனில் பண்டிதர் அவர்கள் எழுதிய வித்தகக் கட்டுரைகளை ஒரு புத்தகவடிவில் அமைக்க வேண்டும் என்பதே. இதற்குப் பணம்படைத்த பெருமக்களோ, நிறுவனமோ முன்வரவேண்டும் என்பது அவரின் அவாவாகும். இதற்கு ஆண்டவன் அருளை வேண்டிக்கொள்வார். உண்மையின்படி இந்துமாமன்றம் போன்ற நிறுவனங்கள் பண்டிதர் அவர்களின் சைவத் தமிழ்க் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடின் சைவத் தமிழ் உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐயமில்லை.

எமது கல்லு}ரித் தமிழ்த் துறைத் தலைவரும் ஆராய்ச்சிப் பேரறிஞரும் ஆகிய புலவர். நா. சிவபாதசுந்தரனார் அவர்கள் தமிழ் பேணுந் திருநாளில் பேரறிஞர்களின் படங்களைக் கல்லு}ரியில் அமைத்துத் திரைநீக்கம் செய்துவைப்பதனை விரதமாகக் கொண்டிருப்பவர். புலவர் அவர்கள் தென்கோவைப் பண்டிதரின் உறவினர்களையும் மாணவர்களையும் அன்பர்களையும் நாடிப் பெற்ற குறிப்புக்களைக் கொண்டு இச்சிறு நு}லைப் பெரும் பயன் தரும் வகையில் எழுதியுள்ளார்கள். எமது கல்லு}ரியிலே தமிழ் எழுச்சியின் சின்னமாக விளங்கும் புலவர் அவர்களின் முயற்சிகள் வெல்க.

மேலும்: இத்திருநாளில் வித்தகம் கந்தையபிள்ளை அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்த வைக்க முன்வந்த இலங்கைப் பல்கலைக்கழகத்து யாழ். வளாக மனிதப் பண்பியற் பீடாதிபதி பேராசிரியர் க. கைலாசநாதக்குருக்கள் அவர்களுக்கும், பிள்ளையின் வரலாற்றுச் சுருக்கத்தை வெளியிட்டு வைத்த மன்றக் காப்பாளரும், கல்லு}ரித் தலைவருமாகிய திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும், சிறப்புச் சொற்பொழிவாற்றிய யாழ். வளாகத் துணைநு}லகர் திரு. நா. சுப்பிரமணியம் ஆ. யு அவர்களுக்கும் தமிழ் மன்றத்தாரும் செய்திட்ட மாணவரும் நன்றி கூறுகின்றனர்.

இங்ஙனம்
பி. நடராசன்
செய்திட்டப் பொறுப்பாசிரியர்

மகாஜனக் கல்லு}ரி,
தெல்லிப்பழை,
1977-06-15

+++++++++++++++++++++

தென்கோவை.

பண்டிதர், திரு. ச. கந்தையபிள்ளை

குலவழி:

ஈழத்துத் தமிழியல் வரலாற்றிலே குருகுலக் கல்வியில் ஒரு மரபுவழித் தன்மையுண்டு. இந்த வழிமுறை வரிசையில், தென்கோவை, வித்தகப் பத்திராதிபர் திரு. ச. கந்தையபிள்ளை அவர்களும் ஒருவராவர். வன்னிமன்னர் குலவழியிற் சுட்டி இயம்பப்படுபவர் வன்னியசிங்க முதலியார். இவரோ, இவர் சுற்றத்தாரோ தெல்லிப்பளையில் இருந்து இருபாலையில் மண்ணாடு கொண்ட முதலி மரபில் மணம் புரிந்து வாழ்ந்தனர். இதனைச் சேனாதிராயர் முதலியார் தலைமையில் அமெரிக்கன் மிசன் பகுதியார் அச்சிட்ட தமிழகராதிச் சிறப்புப் பாயிர முதற் செய்யுளில் “தெல்லியம்பதியில் வருநெல்லைநாதக் குரிசில் செய்தவம் எனாவுதித்த சேனாதிராச கலைஞானாதிராசனும்” எனவரும் செய்யுட் பகுதி காட்டும். இவ்வன்னியசிங்க முதலியார் மகனே நெல்லைநாத முதலியாராவர்.

நெல்லைநாத முதலியார் ஈடிணையற்ற ஞாபக சக்தியுடையவர். இந்த அளவிறந்த நினைவாற்றலால் வண்ணை வைத்தியலிங்கச் செட்டியாரிடம் பரிசில் பெற வந்த “செந்திக்கவி” என்ற வடதேயப் புலவரின் கல்விச் செருக்கை அடக்கியாண்டவர். கல்வி கற்போர் யாவரும் நெல்லைநாதர் இல்லம் நோக்கியே கற்பர். பிரபந்தம் முதலான செய்யுள் இயற்றியோர் முதலியார் முன்னலையிற் பாடிப் பேறுபெறுவர். இதனால் யாழ்ப்பாண நாட்டுக்கு இருபாலை என்னும் ஊர் வித்தியாபீடமாய் விளங்கியது எனலாம்.

நெல்லைநாத முதலியாரின் மகனே சேனாதிராய முதலியார். இவரும் தந்தையாரைப்போல் நினைவாற்றலில் மிகுந்தவர். தன் அருமைத் தந்தையாரிடமும் தமிழ், சமஸ்கிருதம் என்னும் மொழிகளிற் புலமை மிகுந்த கனகசபாபதி யோகி என்னும் இயற்பெயர் கொண்ட கூழங்கைத் தம்பிரான் என்பவரிடமும் கல்வி கற்றுத் தேறியவர். நன்னு}ல் என்ற இலக்கணநு}லை நாற்பது நாள்களிற் தம்பிரானிடம் கற்றுத் தேறியவராவர். இவ்வாறு நினைவுச்சாதனைப் பேற்றால் சேனாதிராயரை “ஏகசந்தக்கிராகி” என்று கற்றோர் கூறுவர். இவர் பாடும் வன்மையோடு இலங்கையை ஆண்ட அந்நியர் மொழிகளிலும் ஆட்சியுடையவர். சேனாதிராயர் தென்கோவையில் இருந்த தனவந்தராகிய பஞ்சாயுத முதலியார் மகளை மணம்புரிந்து இல்லறம் நடாத்தி இராமலிங்கம்பிள்ளை என்ற ஒரு புதல்வரையும் பர்வதவர்த்தினி என்னும் புதல்வியர் ஒருவரையும் பெற்றனர்.

இராமலிங்கப்பிள்ளையோ பிரபுவும், தமிழபிமானியுமாய் விளங்கியவர். நாவலர் பெருமான் முதலிற் சைவப் பிரசங்கம் நிகழ்த்திய கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர். பர்வதவர்த்தினியும் தமிழறிவும் சைவசீலமும் சான்றவர். இம் மகளை மணந்தவர் இருபாலை மண்ணாடு கொண்ட முதலி மரபில் ஆண்வழியினரும் தனவந்தருமாகிய இராமநாதபிள்ளை என்பவர். இவ்வாறு வன்னியசிங்கமுதலி தொடங்கி சேனாதிராயமுதலி மகள் பர்வதவர்த்தினி வரையும் பண்டிதர் கந்தையபிள்ளையின் குலவழிக்கு எல்லை குறிக்கலாம்.

குடிவழி:-

வித்துவசிரோமணியாய் விளங்கிய சேனாதிராய முதலியார் மகள் பர்வதவர்த்தினி என்னும் பெண்மணியை மணந்தவராம் இராமநாத பிள்ளைக்குக் கந்தர்த்தம்பி என வழங்கும் கந்தப்பிள்ளை என்பவர் மகனாகப் பிறந்தார். தாயின் தந்தையராய் விளங்கிய சேனாதிராய முதலியாரிடம் இவர் கல்வி கற்றார். கற்ற இருவரும் முதலியாரின் அருமை பெருமைகளை அகத்தடக்கி அவர் புகழ்நினைவுகள் நிலைக்கப் பல பணிகளைப் புரிந்தார். சேனாதிராய முதலியாரின் மகளது புத்திரனாகிய கந்தப்பிள்ளைக்குக் காமாட்சியம்மையார் என்னும் பெண் மகள் பிறந்தாள். இப் பெண்களின் மகனே வித்தக ஆசிரியர். பண்டிதர் கந்தையபிள்ளை என்க. பண்டிதருக்குத் தந்தையாகவும் காமாட்சியம்மையாருக்குக் கணவனாகவும் அமைந்தவர் கந்தரோடைச் சபாபதிப்பிள்ளை என்க. பண்டிதர் இவர்களுக்குப் பிள்ளையாய்ப் பிறந்த காலம் விக்கிரம ஆண்டு ஆனித் திங்கள் பதின்மூன்றாம் நாள் (25-6-1880) வெள்ளிக்கிழமை பிற்பகல் நாலரை அடியளவு என்பர்.

கல்வி வாழ்வு:

பண்டிதரவர்கள் உரியகாலத்தில் வித்தியாரம்பஞ் செய்விக்கப் பெற்றுத் தமிழ்மொழியை நல்லாசிரியரிடஞ் சென்று கற்பாராயினர். சிறுவயதினராயிருக்கும்போது இவருக்கு நற்றமிழ் பயிற்றியவர்கள் தென்கோவை திரு. சின்னப்பாபிள்ளையும் ‘உதயபானுப்’ பத்திராதிபர் திரு. சு. சரவணமுத்துப் புலவருமாவர். புலவரவர்களிடம் நன்னு}ல், சின்னு}ல் முதலிய இலக்கணங்களையும், மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, நைடதம், பாரதம் முதலிய இலக்கியங்களையும் கற்று வந்தனர். தமிழ்மொழியைக் கற்பதுடன் நில்லாது அரசமொழியாகிய ஆங்கிலத்தையும் கற்க விரும்பி அதை ஆரம்பத்திற் கோப்பாயிலுள்ள ஸி. எம். எஸ் பாடசாலையிலும், பின்னர் சுண்டிக்குளியிலுள்ள பரி. யோவான் கல்லு}ரியிலும் சென்று பயின்றனர். அங்கு எட்டாம் வகுப்புப் பரீட்சையிற் சித்தியுமடைந்தனர். ஆங்கிலம் கற்றுவந்த காலத்தும் தமிழை இவர் பராமுகஞ் செய்ததில்லை. சனி, ஞாயிறு வாரங்களிலும் மற்றும் ஓய்வு நாட்களிலும் சரவணமுத்துப் புலவரிடஞ் சென்று கற்று வருவாராயினர். தமிழ்மொழியில் மிக்க ஆர்வமும் பேரவாவுங் கொண்டிருந்தமையால் இவருக்கு ஆங்கிலக் கல்வியில் அதிகம் நாட்டஞ் செல்லவில்லை. ஆகவே அதனை நிறுத்திவிட்டுத் தமிழ் மொழியையே மேன்மேலுந் தொடர்ந்து ஆர்வத்துடன் கற்பாராயினர். அப்போது இவருக்கு வயது இருபதாயிற்று.

பின்னர் கொழும்புமாநகர் சென்று சிலகாலம் வசித்து வந்தனர். அங்கு வசித்துவருங் காலத்தில், மட்டக்களப்புக் கச்சேரியில் பிரதம முதலியாரும், சிறந்த தமிழ்ப் பேரறிஞரும், வெள்ளியந் திருமலைக்கிழார் என்ற புனைபெயரையுடையவரும், நல்லு}ர் சரவணமுத்துப் புலவர் வழித்தோன்றலுமாகிய திரு. சிற். கைலாயபிள்ளையவர்களின் அழைப்புக் கிணங்கிப் பண்டிதரவர்கள் மட்டக்களப்புச் சென்றனர். அங்கு வாழ்ந்துவந்த காலத்திற் புதிதாகச் சில தமிழ் நு}ல்களை முதலியாரிடங் கற்குஞ் சந்தர்ப்பத்தைப் பெற்றனர். அக்காலத்தில் முதலியாரவர்கள் நன்முயற்சியால் அநேக சைவ வித்தியாசாலைகள் மட்டக்களப்பில் அமைக்கப்படலாயின. அவைகளில் ஒரு வித்தியாசாலையைத் தலைமை வகித்து நடத்தும் கடமை பண்டிதர் மேலாயது. வயதிற் குறைந்தவராயிருந்தும் பண்டிதரவர்கள் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவதில் விசேஷ அக்கறையும் வன்மையுங் காட்டி யாவரதும் பாராட்டினையும் பெற்றனர். அங்கு கல்வி கற்பதோடமையாது சைவ சமயப் பிரசங்கங்கள், இலக்கியச் சொற்பொழிவுகள் என்பன இடைவிடாது நிகழ்த்திவந்தனர். அங்கு வசிக்கும்போதுதான், சிறந்தமுறையில் அகவற்பா இயற்றும் வன்மையையும் அதைச் சந்தத்தோடு படிக்கும் வகையினையும் முதலியாரிடம் தாம் கற்றதாக இவர் கூறுவுதுண்டு.

பண்டிதரவர்களின் விவேகத்தையும், ஞாபகசக்தியையும், தமிழ்க் கல்வியிலுள்ள நாட்டத்தையுங் கண்ட முதலியாரவர்கள், இவரைக் கல்வியில் உயர்நிலையடையச் செய்யவேண்டுமென்று கருதி, யாழ்ப்பாணஞ்சென்று தமிழை இன்னும் விசேஷமாகக் கற்கும் படியும், அதற்கேற்ற ஆசிரியர் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரே என்றுங் கூறியனுப்பினர். யாழ்ப்பாணம் திரும்பியதும் கோப்பாயிலுள்ள தமது இல்லத்தில் வசித்துக்கொண்டு மேற்படி புலவரிடஞ் சென்று கல்வி கற்பாராயினர். விவேகமும் கல்வியில் ஊக்கமுமுள்ள நன் மாணாக்கர்களுக்குக் கல்வி பயிற்றுவதில் இயல்பாகவே மிக்க சிரத்தையுடைய புலவரவர்கள், பண்டிதரின் தமிழார்வத்தை மெச்சி அவர்க்கு மிக்க அக்கறையுடன் கல்வி கற்பித்து வந்தனர். இக்காலத்தில் பண்டிதர் கல்வியிற் செலுத்திவந்த ஊக்கத்துக்கு எல்லையில்லை. அப்போது புலவரவர்கள் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராக விருந்தனர். சனி, ஞாயிறு வாரங்களிலும் மற்றும் விடுதலை நாட்களிலும் அநேக மாணவர்கள் வந்து புலவரவர்களின் இல்லத்திற் கல்வி பயில்வதுண்டு. அக்காலத்திற் பண்டிதருடன் கல்வி பயின்றவர்களிற் சிறப்பாகக் குறிப்பிடக்கூடியவர் வித்துவ சிரோமணி பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்கள். பண்டிதரவர்கள் புலவரவர்களிடத்தில் தொல்காப்பியம், அகப்பொருள் விளக்கம், தண்டியலங்காரம், கந்தபுராணம், இரகுவம்சம், தணிகைப்புராணம், இராமாயணம் முதலிய நு}ல்களை அதிசிரத்தையுடன் கற்பாராயினர். இவைகளன்றித் தருக்கம், நியாய சாஸ்திரம் முதலியனவற்றையும் கற்றுவந்தனர். இல்லத்தில் மாத்திரமன்றி யாழ்ப்பாண நகர் சென்று அங்கு புலவரவர்கள் ஆறுதலடையும் நேரங்களிலும் நு}ல்களிலே தமக்குள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவர். சாயங்காலத்தில் புலவரவர்கள் வீடு திரும்பும்போதும் அவருடன் மருதையினார்மடம் வரையிற் கூட நடந்து சென்று சந்தேக விபரீதங்களைத் தெளிந்து கொண்டு தமது சொந்தவூராகும் கோவையம்பதிக்கு மீள்வர். தமது இல்லத்திலுங்கூட வாளாவிருக்கமாட்டார். கற்றவற்றை மேன்மேலும் சிந்திப்பதிலும், தெளிவதிலும், ஞாபகப்படுத்திக் கொள்வதிலும் காலங்கழிப்பார்.

இல்லறப் பொது வாழ்வு:

கல்வி வாழ்வில் கண்ணியம் அடைந்து, கற்றோர் காமுறும் பிள்ளையவர்களுக்கு இருபத்தெட்டாவது வயதில் திருமணம் நிகழ்வுக்குரிய நியதி நேர்ந்தது. நேரவே கந்தரோடைவாசரும், உறவினரும், சிவஞானசித்தி என்ற நு}லாட்சியிலே சிறந்தவராக அமைந்த காரணத்தால் ‘சித்தியார்’ என்ற சிறந்தோராற் செப்பி அழைக்கப்படுபவருமான திரு. க. தியாகராசபிள்ளைக்கும் அக்காலத்தில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை ஆகிய கோடுகளில் சக்கடத்தாராய் இருந்த நாகநாதர் மகன் விசுவநாத முதலியாரின் மகளான விசாலாட்சி யம்மையாருக்கும் தலைப்புத்திரியாய்ப் பிறந்த செல்வி. செல்வம்மாளைத் தமது பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கத் திருமணம் செய்து கொண்டார் பண்டிதர் அவர்கள். இத் திருமணப்பேறு சுன்னைக் குமாரசுவாமிப் புலவரிடம் அடிக்கடி சென்று கல்வியறிவை மேன்மேலும் சிறந்து வளர்ப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனால் வித்தகவாசிரியர் நு}லாய்வில் மிக நுணுக்கமாகத் தோய்ந்தெழுந்தார்.

தமிழின்பத்தில் தோய்ந்த பண்டிதருக்கு மனைமாட்சியின் நன்கலனான நன்மக்கட் பேற்றின்பம் அமையவில்லை. எனவே தம் மனைவியின் சகோதரியாகிய சிவபாக்கியத்திற்குப் பிறந்த பெண்மகவாகிய விசாலாட்சியம்மையாரை ஆறாம் வயதில் எடுத்து வளர்த்து தன் மனைவியின் மகவின்பத் தாகத்தைத் தணிவித்துக்கொண்டார். அப்பெண் மகவும் இருபத்தோராவது வயதுறவே ஆசிரியத் தொழில் புரிந்துகொண்டிருந்தவரும், தற்போது சுன்னாகம் பட்டினசபை உறுப்பினராக விளங்குபவருமான தி. நடராசாவைத் திருமணம் செய்து இல்லற இன்பத்தில் இருந்து களிப்புற்றனர்.

தமிழின்பத்திலும் இல்லறவின்பத்திலும் இணைந்து வாழ்ந்துவருங் காலத்தில் பண்டிதர் அவர்கட்குக் கொழும்பு மாநகரில் நடைபெற்று வரும் ஆங்கில ஆசிரியப் பயிற்சிக் கல்லு}ரியில் தமிழ் பயிற்றும் தலைமைத் தமிழாசானாக நியமனம் கிடைத்தது. இக்கல்லு}ரியில் ஆசிரியராக விருந்த காலத்தில் ஆசிரிய மாணவர்களுக்கு உயர்ந்த இலக்கிய இலக்கண நு}ல்களைப் பயிற்றிவந்தனர். அப்போது இவரிடங் கல்வி கற்றவர்களில் இருவர் பெயர்கள் சிறப்பாகக் குறிப்பிடவேண்டியன. ஒருவர் பிற்காலத்தில் விபுலாநந்த அடிகளாக விளங்கிய பண்டிதர் ச. மயில்வாகனனார், மற்றையவர் சகிராக் கல்லு}ரித் தமிழ்ப் பண்டிதராயிருந்த முதுதமிழ்ப்புலவர் மு. நல்லதம்பியவர்கள், நல்ல தம்பி கல்லு}ரிக் கல்வி முடிந்தும் தொடர்ந்து பண்டிதரிடம் தமிழ்க் கல்வியைக் கற்றுவந்ததுமன்றித் தமதாசிரியரிடம் என்றும் நன்றியறிதலுடையராகவும் இருந்தனர். இதனை, அரசினரின் பரிசுபெற்ற மருதன் அஞ்சல் ஓட்டக் கவிகளை அச்சிட்டு நு}லாகத் திரு. மு. நல்லதம்பி அவர்கள் வெளியிட்டபோது “எமக்குத் தமிழறிவுறுத்தருளிய அருட்பெருங்குரவர் உயர்திரு. தென்கோவை ச. கந்தையபிள்ளை அவர்கள் திருவடிக்கு இந்நு}ல் உரிமையாக்கப் பெறுகிறது” என்று எழுதினமையே நல்ல எடுத்துக் காட்டாகும். இங்ஙனமே விபுலானந்த அடிகளாரும்....... “பின்னர் ஆசிரிய கல்லு}ரியில் ஆங்கில வகுப்பிற் கல்வி கற்கும்போது தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீமத் தென்கோவை ச. கந்தையபிள்ளையவர்களிடம் இராமாயணம், இரகுவம்சம் ஆகிய இலக்கிய நு}ல்களைப் பயின்ற காலத்துக் கோதண்ட நியாயபுரிக் குமார வேணவ மணிமாலையையுங் கணேச தோத்திர பஞ்சகத்தையும் வேறு பல நு}ல்களையும் இயற்றினேன்......” என்ற அந்நு}ல்களின் பதிப்புரையிற் பண்டிதர் அவர்களிடம் கற்ற நன்றி நினைவைச் சுட்டிக் காட்டுவதாலும் தெளியலாம். நிற்க@

கொழும்பு ஆங்கில ஆசிரிய கல்லு}ரியில் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாகக் கடமைபுரிந்த பண்டிதர் அவர்கள் அக்கல்லு}ரியின் நிருவாக மாற்றுப் போக்கால் அப்பதவியை நீளவகிக்க முடியாமற் போயிற்று. போனாலும் கல்விப் பகுதியார் பண்டிதர் அவர்களின் பணியைக் கைவிடவிரும்பவில்லை. அவரைக் கல்விப் பணிமனையில் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழ்ப் பாடவிதானங்கள் வகுப்பவராகவும் தமிழ்ப் பரீட்சகராகவும் இருக்கும்படி வைத்துக் கொண்டனர். இக் கடமைக் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்ற நு}ல்கள் எழுதவேண்டும் என்ற ஊக்கம் கொண்டனர். பண்டிதர் அவர்கள் விருப்பப்படியே சுன்னைக் குமாரசுவாமிப் புலவர் அவர்கள் “இராமோதந்தம்” என்னும் செய்யுள் நு}லையும், “சிசுபாலசரிதம், இரகுவமிச சரிதாமிர்தம், இதோபதேசக் கதைகள்” என்னும் வசன நு}ல்களையும் எழுதி வெளியிட்டனர். இக்காலத்திற்றான் திரு. மு. திருவிளங்கம் எழுதிய சித்தாந்த சாத்திர நு}லுரைகளுக்கும் இடைவிடாது சென்று உதவி புரிந்துவந்தனர். மேலும் கொழும்பு விவேகானந்த சபையினர் அமைத்த தமிழ் வகுப்புக்களையும் இவரே நடத்திவந்தனர்.

இல்லறச் சிறப்பு வாழ்வு:

கொழும்பில் இவ்வாறு இருந்துவருங் காலத்தில் பண்டிதருக்கு உடல் ஆரோக்கியம் குன்றுவதாயிற்று. இதற்கிடையில் இவரது தமிழாசிரியராகும் குமாரசுவாமிப்புலவரும் காலஞ் சென்றனர். தமது உத்தியோகத்தினின்று இளைப்பாற முடிவுசெய்து 1922 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அப்படியே செய்தனர். இந்தியா சென்று மேலும் தமிழாராய்ச்சி செய்யவேண்டும் என்னும் அவா மிகுந்தமையால் அங்கு செல்லல் வேண்டுமென முடிவு செய்து 1922 ஆம் ஆண்டிற்றானே அங்கு சென்றனர். சென்னையை அடைந்து திரு. செ. வே. ஜம்புலிங்கபிள்ளையுடன் வசித்து வந்தனர். இவர் நட்பும் தொடர்பும் இவர் தொண்டுகளுக்கு மிகத் துணையாயின. சென்னைக்குச் செல்லச் சில மாதங்களுக்கு முன்னரே அங்கு வாழ்ந்துவந்த தமிழ்ப் பேரறிஞர் திரு. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களும் காலஞ்சென்றனர்.. இப் பெரியாரின் நட்பினையும், துணையையும் பெற்றுத் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடக் கருதியிருந்த பண்டிதருக்கு இச்செய்தி மிக்க துக்கத்தை விளைவித்தது. எனினும் திரு. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் புதல்வர்களான திரு. இராஜராஜன், திரு. ராஜசேகரன் முதலியோருடனும் சிறிது காலம் வாழ்ந்த அவர்களது நட்புரிமையைப் பெற்றனர். அப்போது திரு. கனகசுந்தரம்பிள்ளையின் வாழ்க்கை வரலாறொன்றை எழுதி வெளியிட்டனர். சென்னையில் வசிக்கும் காலத்தில் அநேக தமிழ்ப் பெரியார்களின் நட்பையும் பெற்றனர். திரு. கா. நமசிவாய முதலியார், திரு. உ. வே. சாமிநாதஐயர், பண்டிதர் அநந்தராமையர். திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் என்போருடன் இடைவிடாது தமிழ்க் கல்வி விஷயமாகக் கலந்துரையாடும் சந்தர்ப்பம் இவருக்குக் கிடைத்ததெனலாம்.

மெய்யுணர்தல்:

தமிழ்நு}ற் கல்வியில் மிக்க ஊக்கமும் நாட்டமுங் கொண்டிருந்தவராகிய பண்டிதர் அவர்களுக்கு இருந்தாற்போல் பெரியதொரு மனமாற்றம் ஏற்படுவதாயிற்று. இதனையே நாம் ஈண்டு மெய்யுணர்தல் என்கின்றோம். கற்பனவும் இனியமையும் என்று எண்ணி ஈசன் திருவடிப் பேற்றிலே பண்டிதர் அவர்களின் சிந்தை சடக்கென்று சென்றது. இதனால் அவர் சென்னையைவிட்டு நீங்கித் திருக்கழுக்குன்றம் சென்று சிலமாதங்கள் வசித்தார். ஞானகுருவைக் காணவேண்டும் என்ற நாட்டம் நாளுக்குநாள் மேலோங்கிற்று. சுவாமிதரிசனம் செய்வதும், மலையைச் சுற்றி வலம் வருதலும் இடைவிடாது இறைவனைத் தியானிப்பதுமாகக் காலங்கழித்து வந்தார். திருக்கழுக்குன்றத்தில் இவரிடம் தமிழ் பயின்றுவந்த சிறுவனொருவன் இரண்டு நாட்கள் அடுத்தடுத்து ஒரு சொப்பனங் கண்டான். இப்பையனுக்கு வயது பன்னிரண்டிருக்கும். கழுக்குன்றத்துக் கோயில் அம்பாள் - கோகிலாம்பிகை - கனவில் தோன்றிப் புதுச்சேரிக்குப் போகும்படி தான் பலமுறை சொல்லியும் இவர் போகவில்லையே யென்று குறைகூறியது. இச் சொப்பனத்தை மறுபடியும் கண்டு அதனைத் தமது ஆசிரியராகிய பண்டிதர் அவர்களிடம் அச்சிறுவன் தெரிவித்தான். எனவே குருதரிசனம் அங்கு பெறலாமென்று எண்ணிப் பண்டிதர் அவர்களும் புதுச்சேரிக்குப் புறப்பட்டனர்.




குருதரிசனமும் முத்தி விசாரமும்:

புதுச்சேரியைச் சென்றடைந்ததும் தமது பெட்டி, படுக்கை முதலியவற்றை ஓரிடத்தில் வைத்துவிட்டுத் தாம் மிக ஆறுதலாகத் தங்குவதற்கு ஏற்ற விடுதியெங்கே கிடைக்குமென அறிய வீதிவழியாகச் செல்வாராயினர். அங்கே அம்பலத்தாடுமையர் வீதியில் யாரோ ஒருவர் இவரைக் கண்டு அண்மையில் வந்து “தங்களுக்காகவே வெகுநாட்கள் காத்துக்கொண்டிருக்கிறேன்@ உள்ளே வருக” என்று வீட்டுக்குள் வரும்படி அழைக்கப் பண்டிதர் வியப்படைந்து அவருடன் அங்கு ஏகினார். இரண்டு மூன்று நாட்களாக இவருக்கு வேண்டிய உணவு பிராமணப் போசனசாலையிலிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டது. அப்போது தொடக்கம் (உண்மை) முத்தி - சிவத்தோடு சம்பந்தமுடைய - சைவசமய முத்திப் பண்பு இவருக்கு அறிவுறுத்தப்பட்டது. உடல் பிணமாக விழாது, ஊன்கெட்டு, உயிர்கெட்டு, உணர்வு கெட்டு, உள்ளமும் போய், தானுங் கெட்டுச் சோதியில் இரண்டறக் கலப்பதே - கட்டையில் வைத்துத் தகனஞ் செய்யாமலும், கள்ளக் குழியிற் புதைபடாமலும் உடல் உயிரை ஒம்ப, உயிர் உடலை ஒம்ப - உடல் உயிர் ஒன்றுபட்டு - ஊனங் கரைந்து, என்புள்ளுருகி - இருவினையும் ஈடழிந்து, துன்பங் களைந்து துவந்துவங்கள் து}ய்மைபெற்று, அழுதழுது தன்னைப் பெற்றுப் பல்லோர் முன்னிலையில் - சோதியில் அள்ளுறாக்கையுடன் கலந்து மறைவதே மீண்டு வாரா நெறி என்பது எடுத்து உரைக்கப்பட்டது.

போசனசாலையிற் பெற்ற உணவு உடம்புக்கு ஏற்காமையால் பண்டிதவரவர்கள் சிறிதுகாலம் தாமாகவே சமைத்து உணவுகொண்டனர். பண்டைச் சைவ முத்தியின் மாண்பினை, ஆராயப்புகுந்த பண்டிதரவர்களுக்குச் சமையல் வேலை சில வாரங்களுள் அலுத்துக் கசப்படைந்தது. எனவே, முன்வீட்;டில் வசித்துவந்த குடும்பத்தாரிடம் இவருக்குச் சுத்த போசனம் சமைத்துக் கொடுக்கும்படி (இவர் செலவில்) ஒழுங்கு செய்யப்பட்டது. ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு மேல் தமக்கு ஏற்ற உணவு சமைத்தளித்துவந்த திரு. ரா. நாகரத்தினம் பிள்ளையவர்களின் குடும்பத்தாருக்குத் தாம் மிகவும் நன்றியுடையரெனப் பண்டிதர் அடிக்கடி கூறுவதுண்டு. திரு. நாகரத்தினம்பிள்ளையின் சகோதரி பத்து வயதுடைய செல்வி மாரிமுத்தம்மையார் - முக்கியமாகப் பண்டிதரவர்களுக்கு வேண்டியவராயினர். இவ்வம்மை 16-3-32 இல் இறந்தபோது இவர் உடம்பு சமாதி வைக்கப்பட்டது.

ஆறு மாதம் வரையில் புதுச்சேரியில் தம் செலவிலேயே தங்கியிருந்தனர். பின்னர் தமக்கு அரிய நண்பராக வந்தவரை - பல அரிய உண்மைகளை, நெய்விளக்கெனினும் சுடர்விட்டெரிய வேண்டிய து}ண்டுகோல்போல் விளங்கிய நண்பரை - தம்மை ஈடேற்ற வந்த குருவாகக் கண்டனர்@ அவரின் திருவடிகளில் விழுந்து பாதங்களில் தம் தலைபட நமஸ்கரித்தனர். பின்பு சொர்ப்பனத்தில் ஊருக்குச் செல்லும்படி உத்தரவு ஏற்பட்டமையால் தமது அரிய நண்பரின் சம்மதத்துடன் ஊர்வந்து தமது மனைவியாருடன் வாழ்ந்து வந்தனர். புதுச்சேரியில் இருக்கும்போதே ‘வித்தகம்’ என்ற பெயர் கொண்ட ஒரு வாரவெளியீடு நடாத்தி அதில் உண்மைச் சைவ முத்தியைப் பற்றி விளக்கவேண்டுமென முடிவு செய்திருந்தனர். அவ்வாறே யாழ்ப்பாணம் திரும்பியபின் தமது ஆசான் சொற்படி 1934ஆம் ஆண்டு வரைக்கும் பல ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கட்டுரைகள் பல எழுதி ஆசானுக்குச் சமர்ப்பித்து அவரின் சம்மதத்தோடு ‘வித்தகம்’ என்னும் பத்திரிகையை வெளியிட்டுவந்தனர்.

உண்மை முத்தியும் வித்தகப் பத்திரிகையும்:

“நந்தி வெளியீட்டு மன்றத்தின் “சுத்த சாதகம் உண்மை முத்திநிலை” 10000 படிகள் அச்சிடப்பெற்றுள்ளது. விலை இரண்டணா. திருமூலர் திருமந்திரத்தை எட்டணா விலையில் 1000 படிகள் அச்சிடுவதைப் பற்றிய திருமந்திரப் பதிப்பு அறிவிப்பொன்றும் அதன் அட்டையில் இடம்பெற்றுள்ளது. நந்தி வெளியீட்டு மன்றத்தின் உரிமையாளர் திரு. ரா. நாகரத்தினம்பிள்ளை, பாரதியார், வ. வே. சு. ஐயர், அரவிந்தர் ஆகியோரிடத்தில் பழகியவர். புதுவைக்கு வந்த புதிதில் ஆங்கில நு}ல்களை ஆராய்ந்து கொண்டிருந்த அரவிந்தருக்கு ஒளவைக்குறள், திருமந்திரம் முதலிய நு}ல்களை அறிமுகப்படுத்தியவர் இவரே. சுத்த சாதகத்தை அந்தக் காலத்தில் பதினாயிரம் படிகள் அச்சிட்டுப் புதுவையில் தெருத்தெருவாக வீடு வீடாகப் பரப்பினார். தமிழகத்திலும்பல இடங்களில் பரப்பினார். இவர்செய்த அரும் பெரும் தொண்டுகள் இதுபோல் இன்னும்பல உண்டு. அமையம் நேருழி அவையிற்றை யெல்லாம் எழுதுவாம். அன்பர் திரு. நாகரத்தினம்பிள்ளை அவர்களை நண்பராகப் பெற்றதில் யாம் பெருமையடைவதுண்டு. வாழ்க நாகரத்தினனார்” என்று வெளியீட்டுச் செய்தியாக நாம் அறியக்கிடக்கின்றது.

மேலும் இப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கிடையில் ‘திருவாசக உண்மையை’யும் குமரா தேவரின் ‘சுத்த சாதகத்’தையும் சேர்த்து ‘உண்மை முத்திநிலை’ என்னும் சிறு நு}லையும் அச்சுவாகனமேற்றினார். வித்தகம் மூன்று வருடங்களாக நடைபெற்றது. நந்திபெருமான் வெளித் தோன்றி என்பில் உயிரை வைத்து எழுப்பித் தருவார் - முற்காலத்தில் திருஞானசம்பந்தர் பூம்பாவையை என்பிலிருந்து எழுப்பியவிதம் - என்னும் விஷயமும் வருடந்தோறும் பங்குனித் திருவாதிரையில் நடைபெறும். மாரிமுத்தம்மையாரின் பூசையில் பண்டிதரவர்களாற் பாடப்பெற்ற மணக்குள விநாயகர் பதிகம், மாரிமுத்தம்மையார் பதிகம் என்பனவற்றிற் காணப்பட்டுள்ளது.

உண்மை முத்தியை அடையும் ஆன்மா து}லதேகத்தை அப்படியே வழிவிட்டுச் செல்லாதென்றும், உடம்பு பொன்மயமடைந்து சோதி மயமாய் விடுமென்றும் இவர் தெளிவாக எடுத்துக்காட்டி வந்தனர். மணிவாசகப்பெருமான், சேந்தனார், முத்துத்தாண்டவர், அறுபத்துமூவர் முதலிய மகான்கள் அடைந்த கடைசி நிலையை உதாரணமாக எடுத்துக்காட்டுவர். திருவாசகம், திருமந்திரம், தேவாரம் முதலிய அருட்பாக்களிலிருந்து தாம் கூறும் விஷயங்களுக்கு ஆதாரமும் காட்டினர்.

உண்மை முத்தியின் தத்துவத்தை உலகறிய எடுத்துக்காட்டுவதற்கு இவர் ஆதாரமாகக் கொண்ட நு}ல்களில் குமாரதேவர் இயற்றிய சுத்த சாதகமும் ஒன்று. இந்நு}லினை விளக்கத்துடன் இவர் பதிப்பித்து வெளிப்படுத்தியுள்ளார். இடைக்காட்டுச் சித்தர் அருளிய மூவடி முப்பது என்னும் நு}லிலும் ஒளவையார் செய்த ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்னும் நு}லிலும் வரும் சில பாகங்களுக்கும் உரை யெழுதி வித்தகத்தில் வெளியிட்டதுண்டு.

பண்டிதரவர்கள் உண்மை முத்தியைக் குறித்தும் சித்தர்களைப் பற்றியும் காலத்துக்காலம் எழுதி வெளியிட்ட நு}ல்களையுங் கட்டுரைகளையும் வாசித்த அநேகர் மிக்க வியப்படைந்து இவர் கொள்கைகளை ஆதரிப்பராயினர். சிலர் இவர் கொள்கைகளை ஏற்காதவராய் மறுப்புரைகள் வெளியிட்டனர். அவைகளுக்கெல்லாம் ஆதாரத்துடன் தக்க பதில் கூறித் தமது மதத்தை நிலைநாட்டப் பண்டிதர் பின்னின்றாரில்லை. உண்மை முத்தி விஷயமாகப் புதிதாகத் தாம் எதனையுங் கூறவில்லையென்றும், நீண்டகாலமாக மறைந்திருந்த உண்மைகளையே தாம் உலகறிய வெளியிட்டதாகவும் பண்டிதரவர்கள் கூறுவதுண்டு. இவரின் உண்மை முத்தி விளக்கங்களைக் கிரமமாக வாசித்துணாந்த சித்தாந்தம், சோதிடம் முதலிய சாஸ்திரங்களில் மிக்க விற்பன்னராக விளங்கிய வேதாரணியம் டாக்டர் ஏ. ஏ இரமணசாஸ்திரியார், ஆ. யு. Ph. னு. அவர்கள் பண்டிதருடன் நீடித்து இவ்விஷயமாகக் கடிதமூலம் கலந்து கொள்வதுண்டு. பண்டிதரின் உண்மை முத்தியைப் பற்றிய கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து வந்தனர். இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் இராமகிருஷ்ண மடத்தாரால் பரமஹம்சரின் நு}ற்றாண்டு வைபவ விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவரின் ஞாபகார்த்த வெளியீடாக, உலகின் பல நாடுகளிலும் இந்தியாவின் கண்ணும் வாழ்ந்த தத்வசாஸ்திர விற்பன்னர்களால் மிக்க ஆராய்வுடன் திறம்பட எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய மூன்று பெரிய பிரசுரங்கள் (சுயஅயமசiளாயெ ஊநவெநயெசல ஏழடரஅநள ஐஇ ஐஐஇ ஐஐஐ) வெளியிடப்பட்டன. அவைகளில் ஒன்றில் மேற்படி சாஸ்திரியாரவர்கள் உண்மை முத்தியைப்பற்றியும் சித்தர்களைப்பற்றியும் விளக்கும் நீண்டதேர் கட்டுரையைத் திறம்பட எழுதியுள்ளார். இவ்விஷயத்தைப் பற்றித் தாம் எழுதுவதற்கு மிக்க உறுதுணையாகவிருந்தவர் தென்கோவைப் பண்டிதர். ச. கந்தையபிள்ளையே என்றும், உண்மை முத்தியைப் பற்றிய நல்லறிவும் அதனை எடுத்து விளக்கும் உண்மையும் நன்கு கைவரப் பெற்றவரும் அவரேயென்றும் அதிற் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய பாண்டித்தியம் பெற்ற பண்டிதர் அவர்கள் அரிய பெரிய பலநு}ல்களைப் புதிதாக வெளியிட்டதில்லை. ஆனால் அவ்வாறு எழுதுவோருக்கு அரியபெரிய உதவிகளைச் செய்து நு}ல் எழுதாத நு}ல் ஆசிரியனாக இவரைக் கூறிவிடலாம். இவர் செய்யுள் இயற்றுவதில் வன்மைபடைத்திருந்ததுபோல உரைநடையும் ‘செந்தமிழ்’ என்னும் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. சேனாதிராச முதலியார் இயற்றிய ‘நல்லை வெண்பா’ என்னும் நு}ல் புலோலி பண்டிதர் திரு. க. முருகேசம்பிள்ளையின் உரைக் குறிப்புக்களுடன் 1942ஆம் வருடம் வெளியிடப்பட்டமைக்கும் இவரின் முயற்சியே காரணமாகும். மகாவித்துவான் கணேசையர் எழுதிய தொல்காப்பிய உரைவிளக்கக் குறிப்புக்களுக்குப் பெரிதும் உதவிசெய்து அதற்குச் சிறப்புரை வழங்கியமையும் ஈண்டு நினைவுறற்பாலதாகும்.

குருநாதன் சமாதி அடைதல்:

இவ்வாறு உலகியல் அறிவிலும் ஆத்மீக அறிவிலும் அயராது உழைத்து வருங்கால் 1938 ஆம் வருடம் ஆனி உத்தரத்தன்று பண்டிதர் அவர்களின் குருநாதனாகும் மகானும் சிவபதமடைந்தனர். அவர் உடலும் சமாதி வைக்கப்பட்டது. இச் சமாதி மாரிமுத்தம்மையார் சமாதிக்குப் பக்கத்திலேயுள்ளது. அதன்பின்னர் மாரி முத்தம்மையாரின் மூத்த சகோதரி அம்புஜம்மாளும் தமது 35ஆவது வயதில் மறைந்தனர். இவருடலும் சமாதி வைக்கப்பட்டது. இம் மூவரின் சமாதிகளையும் புதுச்சேரியிற் கடற்கரைக் கணித்தாகப் பாப்பம்மையார் கோவில் என்று கூறப்படும் இடத்தில் இன்றும் காணலாம்.

தன்னையறிவித்தல்:

“உண்மை முத்தி - அதாவது உடல் பிணமாகாது கற்பூர தீபம் போற் கனசகபையிற் சோதியில் இரண்டறக் கலக்கும் நிலைமை தங்களுக்கு முண்டாமோ? என்று பண்டிதரவர்களைக் கேட்டபோது “எனது ஆசானும் நானும் எங்களுக்கு அது நிச்சயங் கிடைக்குமென்று சொல்லவில்லையே! மீளாநெறி - பிறவியற்றுப்போகும் நெறி - உண்மை முத்தி இன்னதெனத் திருவருட்டுணை, சைவ சமய குரவர்கள், ஒளவை, திருமூலர், வள்ளுவர், முத்துத்தாண்டவர், இன்னோரன்ன உண்மை முத்தியடைந்த உண்மைப் பெரியார்களின் அனுபவ வாக்குகளைக் கொண்டு விளக்கினதேயொழியச் ச. கந்தையபிள்ளை, தென்கோவை கந்தையபிள்ளை என்று அழைக்கப்படும்யான், அந்நிலையை அடைவேனென்று கூறவில்லையே” என்று வற்புறுத்துவர். “உலகம் உண்மையை அறியட்டும். நடிநொடிபாவனைகளால் உண்மை முத்தியை அடையலாம் என்பது வாய்ப் பேச்சே - சோம்பேறிகளின் பேச்சே. பெரியோர்கள் படாதபாடுபட்டுள்ளார்கள் அல்லவா? நாயினும் கடையேன் ஆகிய எனக்கும் உன்னத நிலையை அடைந்த பெரியோர்களுக்கும் இடையீடு சொல்லவோ அளக்கவோ முடியுமா? ‘அழுதால் உன்னைப் பெறலாமே’ என்று மணிவாசகன் திருவாய் மலர்ந்தானே. உடல் உயிரில் உள்ள அழுக்கை இன்னதென அறியமுயலாமலிருக்கும் நாம் - ஆசான் அருளின்றி இருக்கும் யாம் - நீலிக்கண்ணீர் வடித்தோ, கடவுளே! கடவுளே!! என்று கூப்பாடு போட்டோ, சத்துப் போய்ச் செத்துப் போனால், ‘அவர் பதவியடைந்துவிட்டார், ஒடுங்கிவிட்டார்’ என்று கூறுவது உலகப் போலி வழக்கேயன்றி வேறு யாது?” எனக் கூறுவர். இவ்வாறு கூறி@

ஸ்ரீ சாந்தீசிவ சண்முகா நம:

நந்தி உபதேச பஞ்சகம்

அறுசீர் சந்த விருத்தம்

முன்னிலை வேதந் தன்னிலை யானது முனைசுழி நடுமய்யம்
தன்னிலை வேதம் அமலம் ஐகாரம் தழைத்தது தண்டின்மேல்
நன்னிலை யீதென நவின்றனன் நந்தி நாடின னவனடியைச்
சென்னியில் வைத்தான் சீர்மையு முற்றேன் சிவசிவ வெங்கோவே.

கண்ட வழிதனைக் காணாக் கயவர்கள் கதறியே மாய்ந்திடுவார்
துண்ட நுனிதனைத் து}ண்டிடுந் துரைகள் துஞ்சுவ ரோதுஞ்சார்
கொண்ட கணவனைக் கூரைமே லேற்றிக் கூவிடுங் கூத்தியரைக்
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் கதிர்வேலா முருகையா.

மாடும் மக்களு மற்றுள சுற்றமு மாயா மாயமெனத்
தேடும் பொருணஞ் சிவனடி யென்று தேர்ந்திடு நல்லோர்கள்
கூடுங் கலையாக் குருநெறி யதனைக் குறுகுவர் குறிப்பறிந்து
கேடுங் கெடுமே பாடும் படுமே கஜமுக னிளையோனே.

மலந்தனை மலத்தால் மாய்த்திடு மாநெறி மாதவர் மாநெறிகாண்
சலந்தனைப் பூவோடு சமரசஞ் செய்பவர் சற்சனர் சாகார்காண்
குலம்பல பேசிக் கூவிடு மாக்கள் கூரைமே லேறுவரோ
சிலம்பொலி கேட்குஞ் செல்லர்தங் கோனே திருச்சென்னி மலைநாதா.

இனமதை யினத்தி லிசைத்திட வேத மியம்பிடும் பலகட்டம்
மனமதை மதிதனி லொன்றுறச் செய்தல் மாமல பரிபாகம்
சினமதைத் தாண்டிச் சீரங்க நாதர் சேவடி சேர்ந்துநின்றால்
கனமுள பாறை காட்டுவ ரென்றான் கடையூரெம் பெருமானே.

என்று வரும் பாடல்களையும் பாடியுள்ளார்.

பண்டிதரவர்கள் தம் ஆசானின் பெயரை ஒரு காலத்திலும் வெளியிட்டவரல்லர். வித்தகத்தில் மறையினுள் மறையாய் ஆசான் பெயர் காணப்படும் என அவர் கூறுவர். ஆசானும் தம் பெயர் வெளிவரக்கூடாதென்று கேட்டுக்கொண்டமையாலும் பதி, பசு என்ற ஒழுங்கின் பண்பின்படியும் ஆசான் பெயர் மறைபொருளாக இருக்கவேண்டியதாயிற்று@ இப்படியான வாழ்க்கை நிலையில் வாழ்ந்து நின்ற பண்டிதரின் கடைச்சிக் காலம் சாமானியமானதன்று. நோய் வாய்ப்பட்டு மிக்க சிரமத்தை அடைந்தாராயினும் சமய விஷயமாகத் தமது இயம நியமங்களைக் கைவிட்டாரில்லை. தியானங்கள், ஓமங்கள், பூசைகள் என்பன நிகழ்ந்துகொண்டே வந்தன. இடைக்கிடை பத்திரிகைகளுக்கும் உண்மை முத்தி விஷயமாக அவசியம் தேவைப்படும் கட்டுரைகளும் எழுதி வந்தனர். மொழி விஷயமாகவும் சமய விஷயமாகவும் இவரிடம் வந்த சந்தேகந் தெளிந்து கொண்டவரும் பலர் உளர்.

கடைசிக் காலம்:

வித்தகப் பத்திரிகையில் எழுதி வந்த சைவசமய தத்துவக் கருத்துக்களால் ஈர்ப்புண்ட தமிழ் மக்களில் சிலர் இவரை அடைந்து மேலும் மேலும் சமயப்பொருள் உண்மைகளை இவரிடம் கற்றுவந்தனர். அவர்களுள் இருவரை இங்கு விசேடமாகக் குறிப்பிடலாம். ஒருவர் இலங்கை அரசாங்க வித்தியாபகுதிக்கு கணக்குப் பகுதித் தலைவராக இருந்து இளைப்பாறிய திரு. தா. ஜி. இராசதுரை, டீ. யு (டுழனெ) அவர்கள், இவர்கள் பண்டிதர் அவர்களிடம் மட்டுமல்ல அவர் குடும்பத்தாரிடமும் உற்ற அன்பும் மதிப்பும் உடையவராய் உடல், பொருள், ஆவி மூன்றினாலும் அன்புப் பணி செய்தவர். பண்டிதர் அவர்களின் வித்தகப் பத்திரிகையின் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுவதில் பெரும் ஆர்வம் காட்டிவரும் நாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார். மற்றையவர் தபால்நிலைய அதிகாரியாகக் கடமையாற்றி இளைப்பாறிய சுன்னாகம் திரு. சு. சண்முகம் அவர்கள். இவர் பண்டிதர் அவர்களுடன் நெருங்கி ஊடாடி வந்தமையால் அவர்களின் சமயக் கொள்கைகள் மற்றைய வரலாறுகள் என்பனவற்றைச் சிறப்பாக அறியும் பேறு உடையவராகவுள்ளார்கள்.

இன்னும் இவருடைய அன்புக்கும் ஆசிக்கும் இறுதிவரையில் உறைவிடமாய் இருந்தவர் இவருடைய பெறாமகளாகிய ஸ்ரீமதி ந. விசாலாட்சியம்மையாராவர். இவரே இவர்க்கு வேண்டிய வேண்டிய போதெல்லாம் ஏற்ற உணவும் வேறு உதவிகளும் குறைவின்றி அளித்துப் பல வழியிலும் இவரைப் பாதுகாத்து வந்தவராவர். கடைசிவரையும் இவ்வம்மையாரை இவர் மறவாது நன்றியுடன் வாழ்ந்து வந்தார். பண்டிதரின் வாழ்க்கைத் துணைவியார் பல்லாண்டுகளுக்கு முன்னரே காலஞ்சென்று விட்டனர். பண்டிதருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியுமுண்டு. சகோதரியார் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டனர். சகோதரர் திரு. ச. வேலுப்பிள்ளை அவர்கள் மலாயாவில் உத்தியோகம் வகித்து இப்போது இளைப்பாறியுள்ளார். இவர் சுன்னாகத்தில் தமது உறவினருக்குள் மணம்புரிந்து குடும்ப சகிதராய் வாழ்ந்து வருகின்றனர். சென்ற பத்து வருடங்களுக்கு மேலாக இருவரும் பண்டிதரவர்களுக்கு உறுதுணையாக விருந்து செய்துவந்த உதவிகள் பல. பண்டிதர் மைத்துனர் திரு. சிவகுருநாதன் அவர்களும் இவருடன் வாழ்ந்து பலவழியாலும் மிக்க உபகாரியாக இருந்துவந்தனர். இவர் இன்றும் பண்டிதர் அவர்களின் சுற்றத்தார்மீது அன்புபூண்டு வேண்டிய உதவி செய்வதில் பின் தங்காத பெருந்தன்மையினராக விளங்குகின்றார்.

பண்டிதர் அவர்களிடம் சிவகதி அடைய மூன்றுநாட்களுக்கு முன் சில புதிய மாற்றங்கள் தென்பட்டன. முகம் பிரபை அடைந்து மிகத் தெளிவாகத் தோன்றிற்று. தியானத்திலேயே மனம் சென்றது. தமது இறுதிக்காலம் வந்துவிட்டதை உணர்ந்து மற்றையோருக்கு குறிப்பாகத் தெரிவித்தனர். 18-11-58 செவ்வாய்க்கிழமை காலை உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்துக் கைகூப்பி அறுபத்துமூவர் என்னை வந்து அழைக்கின்றனர். நான் அவர்களுடன் செல்லப்போகிறேன் என்று கூறி வணங்கினர். உடன் நின்றோரும் அவ்வாறே கைகூப்பி வணங்கினர். பின் தாமாகவே கண்களை மூடித் தியானத்தில் சென்றனர். எவ்வித இன்னலும் இன்றி, ஆன்மா அன்று காலை பத்துமணியளவில் சிவகதி பெற்றுச் சாந்தி அடைந்தது. அவர் விருப்பப்படியே அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

சீர்விளம்பி கார்த்திகைசேர் செவ்வாய்மூன் றட்டமியிற்
பார்புகழுங் கந்தைய பண்டிதன்காண் - ஏர்திகழும்
மண்ணுலகை விட்டேகி மாநிலத்தோர் போற்றிசெயும்
விண்ணுலகஞ் சென்றான் விரும்பி.

என்ற வெண்பா அவர் இறந்தஞான்று பாடப்பட்டுள்ளது.

நு}லாக்கம்
புலவர் நா. சிவபாதசுந்தரனார்.

வித்தகம் கந்தையர் பண்டிதர் ஏறு

நெல்லைநாதன் நேர்மகன் சேனாதி ராயமகள்
எல்லையாய் ஏற்கும் குலவழியில் - சொல்புகழ்
வித்தகம் ஆசிரியன் விள்ளுஞ்சீர்ப் பண்டிதன்
உத்தமன் கந்தையர் உன்.

கோப்பாய் உயர்குடியாய்க் கொள்ளும் சபாபதிக்கே
நாப்புலவோர் நாவூறும் நன்மகனாய்க் - காப்புறவே
கந்தைய பிள்ளையெனக் காணும் பெயர்பெற்றார்
எந்தையர் பண்டிதர் ஏறு.

காமாட்சி அம்மையே காமுறுந் தாயாகி
ஏமாட்சி கொள்கந்தை யாபிள்ளை - பாமாட்சிப்
பண்டிதராய் நின்றே பகர்தமிழ் பொற்பினில்
மண்டிய மெய்யுணர்ந்தார் மன்.

அரசுமொழி ஆங்கிலமும் அன்னைத் தமிழும்
வரன்முறையாய்க் கற்றுவளர்ந் தோங்கி - உரன்பெறவே
சுன்னைக் குமார சுவாமிப் புலவரிடம்
மன்னுதமிழ் மேல்கற்றார் மாண்பு.

இருபதோ டெட்டும் இணையும் வயதில்
விரும்பும் விவாகம் விளைய - அரும்பேறாய்ச்
செல்லம்மாள் என்ற செழும் பெயராள் சேர்ந்துநின்றாள்
இல்லறப் பேறாக இட்டு.
ஆள்கொழும்பு ஆங்கில ஆசிரியர் கல்லு}ரி
நாள்புகழும் நற்றமிழ் ஆசானாய்த் - தாள் பெறவே
நன்குழைத்தார் நாடிய மாற்றப் பகுதியிலும்
உன்னுந் தமிழ்ப்பணி உற்று.

ஈழத் தமிழ்ப்பணி ஈறுறவே தண்டமிழில்
ஆழ அறிவாய்வு அள்@ரத் - தாழாத
செந்தமிழ் ஆன்றோரைச் சேர்ந்தே உரைசெய்தார்.
முந்துநகர்ச் சென்னை முனைந்து

முந்துதமிழ்ச் சென்னை முனைந்த தமிழமையும்
உந்தும் மனம்தான் உறுத்தவே - நந்துதலில்
நற்குருவை நாடுவேன் நல்லருள் தான் பெறுவேன்
உற்ற திருக்கழுகில் உண்டு.

உற்ற கழுக்குன்றம் ஊட்டும் உணர்வினால்
பெற்ற புதுவைக்குப் போயங்கே - உற்றதவம்
வந்தெதிர்கொள் நண்பனால் நண்ணுஞ் சிவமுத்தி
முந்துணர்வில் தேர்ந்தார் முயன்று

தேர்ந்தறிந்த உண்மைமுத்தி உள்ளும் உயர்பொருளைச்
சேர்ந்தோர் அறிந்துணருஞ் செம்மைக்கே - நேர்ந்துவரும்
வித்தகப் பத்திரிகை விள்ளும் பசுந்தமிழில்
சித்தியுறச் செய்தார் சிறந்து

ஆத்திகொன்றை வேந்தன் அரிய சிலசெய்யுள்
ஏத்தும் விரிபொருள் ஏடான - வித்தகத்தில்
ஒண்மை பெறவைத்தார்@ ஓதிடும் உண்மைமுத்தி
நுண்மை நுகர்செய்யும் நு}ல்.

முத்தியின் உள்ளாய்வு முன்திரு வாசகம்
தத்தசீர் உண்மை தருநு}ல்கள் - மெத்தவே
அச்சேற்றி நின்றார் அவைதரும் வேறுபொருள்
மெச்சவே கட்டுரைத்தார் மெய்.

செய்யுள் இயற்றலில் சேர்ந்திடும் வன்மைபோல்
உய்யும் உரைநடை ஊனிலாதே - எய்வர்காண்
பண்டிதர் கந்தையர் பால்இமயம் காண்நியமம்
கண்ணெனவே கைக்கொள்வர் காப்பு.

சுன்னைகு - அம்பல வாணர்சு - சண்முகமும்
உன்னும் இராசதுரை உற்றார்கள் - என்றேசொல்
வித்தகம் விண்ட விதை முதல் தத்துவத்தால்
சுத்தபர சீடர் சிறப்பு.

பெறாமக ளாம்விசா லாட்சியொடு பேணல்
மறாத சிவகுரு நாதன் - பொறாமல்
உறுதொண்டு காணவே உற்றவுடல் நீத்தார்
அறுபத்து மூவர் அழைத்து.

எல்லோரும் கைகூப்பத் தானும்தன் கைகூப்பி
நல்ல தியானம் நலக்கவே - மல்குகண்
மூடியே விட்டார் முயங்கும் உலகத்தில்
நாடியே நற்குருவின் தாள்.

ஆக்கம்
புலவர் நா. சிவபாதசுந்தரனார்.