கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்

Page 1
தமிழ்ப் பண்ப மீள் கண்டுபிடி நவீனவாக்கமு
மேற்குலகின் பங்கும் ட
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
டொக்டர் எம். :ே . "தாயாகப் போகும் உங் ஆகிய நூல்களின் வெளிய
இக்கட்டுரை நூல் ெ
15-01

ாட்டின் դւն ւկ մ)
))
பணியும்
5. முருகானந்தனின் களுக்கு." "எ பிட்ஸ்"
பீட்டரங்கில் சிறப்பம்சமாக
வளியிடப்படுகின்றது
H.
-1989

Page 2

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்
மேற்குலகின் பங்கும் பணியும்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

Page 3
MVNVMMVMVNVMVNVMVNVMVNVMVA
நன்றிகள்
இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆராய்ச் சியாளர்களுக்கும், உயர்கல்வி மாண வர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய இக்கட்டுரையை, எனது நூல்களின் வெளியீட்டு அரங்கின்போது, வெளி யிட்டு, விநியோகிக்க இசைந்த, இக் கட்டுரையாசிரியர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கட்கு எனது மனங் கனிந்த நன்றிகள்.
எம் கே. முருகானந்தன் ஆங்கில வைத்தியசாலை,
பருத்தித்துறை, 11-1-1989
LLLcLLLLLLLLcLLcLLLLLLLLcLL

முகவ T5a. LD
டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். தாய்மைப்பேறு பற்றிய நூலை, சிறந்த மருத்துவ ருக்குரிய அறிவதிகாரத்துடனும் வன்மை மிக்க எழுத்தாளனுக் குரிய எழுத்து வசீகரத்துடனும் எழுதி வெளியிடுகின்ருர். அந்த நூலின் வெளியீட்டின் பொழுது அவ்வெளியீட்டரங்கில் வெளி யிடப்படுவதற்கென எனது கட்டுரையொன்றினை அவர் கேட்ட பொழுது, நீண்ட ஆலோசனையின் பின்னர், குறிப்பாக நண்பர் கள் சிலரின் கருத்துரைகளையறிந்து கொண்டதன் பின்னர், இக் கட்டுரையினை வெளியிடுவதே பொருத்தமாகவிருக்கும் எனத் தீர்மானித்தேன்.
இது 1984 இல் லண்டன் பி. பி.சியின் தமிழோசையில் ஒலிபரப்பப் பெற்ற நான்கு உரைகளின் கட்டுரை வடிவமாகும் இதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த திரு சங்கர் அவர்களுக்கு அன்புமிக்க நன்றி.
இப்பொழுது இதனை வெளியிடும் டாக்டர் முருகானந்தன் அவர்களுக்கு இவ்வெளியீடு காரணமாகப் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். எமது நண்பர் திரு து குலசிங்கம் அவர்கள் இவ்விடயத்தில் காட்டிய ஆர்வத்தை என்னுல் மறக்கமுடியாது
நடராஜ கோட்டம்,
வல்வெட்டித்துறை, கார்த்திே is 9 சிவத்தம் பி 23-11-1988

Page 4
The Rediscovery and the Modernization of the Tamil Culture - The Role of the West
by Karthigesu Sivathamby
MMVVVVVMVVVYVV1V1VV
Slightly revised text of the talks delivered over the Tamil Service of the B. B. C. (London) in 1984. The author, a literary critic, is Professor of Tamil and Head, Department of Fine Arts at the University of Jaffna, (Jaffna, Sri Lanka)
MVNVMVNVMVNVMMVMMVMVNVMVV VMVV MVV MVNVMVNVMVNVMVNVMVNVMVNVMVNVMVNVMVNVMVMVV

. ." 拳 மீள் கண்டுபிடிப்பும் தமிழ்ப்பண்பாட்டின் நவீனவாக்கமும்
மேற்குலகின் பங்கும் பணியும்
- கார்த்திகேசு சிவத்தம்பி
சதாதரண எழுத்து வாசிப்புப் பயிற்சியுடைய தமிழர் எவ ராயினும் அவரது அன்ருட சமூக ஊடாட்டத்தின்பொழுது நிச் சயமாகக் கேட்கும், பயன்படுத்தும் முக்கிய தொடர்களில் 'தமிழ்ப்பண்பாடு' என்பதும் ஒன்று. சினிமா, வானெலி, செய் தித்தாள்கள் ஆகிய பல்வேறுபட்ட வெகுசனத்தொடர்புச் சாத னங்களில், தமிழ்மக்களின் ஈடுபாடுகளை, விருப்பு வெறுப்புகளை, சார்பு சார்பின்மைகளைச் சுட்டுவதற்கு இத்தொடர் பெரிதும் பயன்படுகிறது. இவ்வாறு பார்க்கும், கேட்குமிடம் எங்கனும் நீக்கமற நிறைந்துள்ள இத்தொடரில் வரும் பண்பாடு என்னும் சொல் ஏறத்தாழ கடந்த 50 ஆண்டுகளாக மாத்திரமே வழக் கிலுள்ளது என்ற உண்மை பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். 1926 - 31இல் தயாரிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக லெக் சிக்கனில் அச்சொல் இல்லை. ஆங்கிலத்தில் "Culture" எனக் குறிப் பிடப்பெறும் சொல்லை "கலாசாரம்’ என்று கூறும் ஒரு மரபு இருந்தது. டி. கே. சிதம்பரநாத முதலியார்தான் Culture எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பண்பாடு என்னும் பதமே பொருத்த மானதென மொழிபெயர்ப்பு செய்தார். அது நிச்சயிப்புச் சொல் தான் என வையாபுரிப்பிள்ளை கூறுவார்.
வழக்கில் வந்து ஐம்பது வருடங்கள்தான் ஆகியுள்ளது என் முல் பண்பாட்டைக் குறிப்பிட முன்னர் நியமமான தமிழ்ச்சொல் இருக்கவில்லையா என்ற வின எழும்புகின்றது. திருக்குறளில் வரும் ‘சால்பு' எனும் சொல் ஓரளவு இக்கருத்தைத் தரக்கூடியது. இன்னுமொரு உண்மையுண்டு. 19ம் நூற்றண்டின் பிற்பகுதி, 20ம் நூற்றண்டின் முற்பகுதியில் தோன்றிய மானிடவியல், சமூக வியல் ஆகிய புலமைத் துறைகளின் வளர்ச்சியின் பின்னரே சமூக அசைவாக்கங்களை ஆராய்ந்து அவற்றின் உள்ளீடாக உள்ளவற் றைப் பிண்டப்பிரமாணமாக எடுத்துக் கூறும் மரபு வளர்ந்தது.

Page 5
- 2 --
ஆனல் இன்று தமிழ்ப்பண்பாடு என்பது நமக்குச் சீவாதார மான ஒரு தொடராகியுள்ளது. பக்தி இலக்கியம் முதல் பகுத் தறிவு இலக்கியம் வரை, பரதநாட்டியம் முதல் தெருக்கூத்து வரை, கோபுரம் முதல் கொட்டகை வரை, திருத்தக்க தேவர் முதல் வீரமாமுனிவர் வரை, சாத்தனர் முதல் உமறுப்புலவர் வரை பலவற்றையும், பலரையும் இணைத்து ஒருமை காண்பதற்கு இத்தொடர் உதவுகின்றது.
தமிழ்ப் பண்பாடு என்னும் இந்தச் சொற்ருெடரின் முக்கிய
பயன்பாடு யாது?
மதங்களையோ, தனித்தனிக் குழும வேறுபாடுகளையோ ஊட றுத்து நிற்கும் தமிழ்மொழி தரும் ஒருமைப்பாட்டினை - பண்பு நிலைப்பாட்டினைக் குறிப்பிடுவதற்கு இதுபயன்படுகின்றது. தமிழ் மக்களின் மொழித் தொகைநிலைச் சமூகத் தொழிற்பாட்டிற்கு, சமூக அசைவாக்கத்துக்கு வேண்டிய நடத்தை நியமங்களுக்கான ஒர் உரைக்கல்லாக இக்கோட்பாடு அமைகிள்றது இது உண்மை யில் கோட்பாடு, (deology) அதாவது கருத்துநிலையாகும். ஆனல் பாரம்பரியமான நடைமுறை, கண்ணுேட்ட நியமங்களை மாத்தி ரம் குறிப்பிடாது, உலகப் புதுமைகளைத் தமிழர்கள் ஏற்றுக் கொள் வதற்கான நடைமுறையைச் சுட்டுவதாகவும் தமிழ்ப்பண்பாடு அமைகிறது. மரபு சிதையாமல் புதுமையை உள்வாங்கிக் கொள் ளும் முறைமையை இது தமிழர்க்கு உணர்த்துகின்றது.
இந்தப் பண்பாட்டுப் பிரக்ஞையின் - உணர்வின் - வரலாறு யாது? இன்று நாம் தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும் இதே அமிசங்களையே முன்னரும் தமிழர்கள் கொண்டிருந்தார்களா? தமிழர் வரலாற்றின் பல்வேறு கட்டங்களிலும் தமிழ்ப்பண்பாடு இருந்த நிலைக்கும் இன்றுள்ள நிலைமைக்குமுள்ள வேறுபாடு யாது? இன்று நாம் தமிழ்ப்பண்பாடு என்று கொள்ளுவனவற்றை எப் பொழுது முதல் கொள்கின்ருேம்? அவ்வாறு கொள்ளும் முறைமை ஏன், எப்படி ஏற்பட்டது?
தமிழ்மக்கள் தம் சமூக அசைவாக்கத்தை விளங்கிக் கொள் வதற்கு இந்த வினுக்களுக்கு விடையிறுத்தல் வேண்டும்.
இந்த வினக்களுக்கு விடைகாண முனையும் பொழுது, தமி ழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் - அவர்கள் வெவ் , வேறு மதத்தினராகவிருக்கலாம், வெவ்வேறு நாட்டினராகக்கூட

- 3 -
இருக்கலாம். - ஒரே பண்பாட்டினை உடையவர்களாகக் கொள் ளப்படும் நோக்கு கடந்த 50, 60 வருடகால எல்லைக்குள்ளேயே தோன்றியது என்பது தெரியவரும்.
தமிழ்ப்பண்பாட்டை இவ்வாறு விளங்கிக் கொண்டு இனத் தனித்துவத்துக்கான அடிப்படையாகக் கொள்ளும் இப்பண்பு, மேற்குலகின் தொடர்பால், ஆட்சித் தொடர்பால் கல்வி முறை யால் கருத்துப்பரவலால் ஏற்பட்டது என்பது வரலாற்றுண்மை யாகும்.
மேற்குலகின் தொடர்பால் ஏற்பட்ட புதிய நிலைமைகளுக்கு - புதிய சவால்சளுக்கு - முகங்கொடுக்கும்பொழுது நடந்த சோத னைத் தீ வின் பொழுது, நவீன உலகில் தொடர்ந்தும் தமிழராக. நவீன வளர்ச்சிகளை உள்வாங்கிக்கொண்ட தழிழராக வாழுவதற் கான முயற்சிகளை மேற் கொண்ட பொழுது எவை எவை எமது அடிப்படைப் பண்புகள், எந்தப் பண்பு இல்லாவிட்டால் நாம் தமிழராக இருக்கமுடியாது போய்விடும் என்பதை அறிந்தபொழு துதான், நாம் எமது பாரம்பரியத்தை மீளக் கண்டு கொண் டோம். முன்னர் இலைமறைகாயாக இருந்ததை, கருத்துத் தெளி வுடன், எமது வாழ்க்கை அடிப்படையாக்கிக் கொண்டோம். புதிய தேவைகள் பாரம்பரியத்தின் தடங்களைக் காட்டின, புதிய உலகோடு இணைய முற்பட்டபொழுதுதான் பழந் தமிழின் சன நாயகப் பண்பு, சமரசம், உல கப் பொதுமை ஆகியவற்றை அறிந்து கொண்டோம்.
தமிழ்ப் பண்பாட்டின் அமிசங்கள், தன்மைகள் இவைதான் என்ற இந்தக் கண்டுபிடிப்பு - உண்மையில் மீள் கண்டுபிடிப்பு - எவ்வாறு நடைபெற்றது. மேற்குலகின் தொடர்பும் தாக்கமும் எவ்வெவற்றை மீளக்கண்டுபிடிக்க உதவின. இவ்வாறு கண்டு பிடித்ததால் தமிழும் தமிழ்மக்களும் புதுமையைளவ்வாறு ஏற்றுக் கொண்டனர், என்பனவற்றைப் பற்றி மிகச் சுருக்கமாக நோக்கு வது தான் இந்த உரைத்தொடரின் நோக்கமாகும். நவீன தொழில்நுட்ப உலகில் தமிழின் தொடர்ச்சியான இளமை எவ் வாறு நிச்சயப்படுத்தப்பட்டது என்பதை அறிவதற்கு இந்த முயற்சி அத்தியாவசியமானது
முதலில் இரண்டு ஆரம்பநிலைத் தெளிவுறுத்தல்கள் தேவைப் படுகின்றன
- தமிழுக்கு மேற்குலகத் தொடர்பு சங்க காலம் முதலே உண்டு. (யவனர் தந்த வினைமான் நன்கலம்") ஆனல் இங்கு

Page 6
- 4 -
குறிப்பிடப்படுவது மேற்குலகத் தமிழ்மக்களினது - தமிழ்நாட்டில், இலங்கையில் - சமூக அரசியல் வாழ்வில் நேரடியான தொழிற் பாட்டினைக் கொண்ட காலகட்டமேயாகும். அதாவது 19ம் நூற்ருண்டு முதலேயாகும்.
- அடுத்தது, "பண்பாடு" என்னும் பொழுது எதனைக் குறிப் பிடுகின்ருேம் என்பதாகும்.
"பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட்கூட்டம் தனது சமூக, வரலாற்று வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக்
கொண்ட பெளதீகப் பொருட்கள் ஆத்மார்த்தக் கருத்துக்
கள், மத நடைமுறைகள், சமூகப்பெறுமானங்கள் ஆகிய யாவற்றினதும் தொகுதியாகும். ஒரு கூட்டத்தினரின் தொழில் நுட்ப வளர்ச்சி உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள்,
கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியனவற்றின் தொகுதியாகும்.'
காலம், பொருள் பற்றிய வரையறையைச் செய்து கொண்ட தனையடுத்து, இந்த மேற்குலகத் தொடர்பு, - அதாவது மேற்குல கின் நேரடியான தொழிற்பாடு - ஏற்படுவதற்கு முன்னர் எவை, எவை தமிழ்ப்பண்பாடு எனக் கருதப்பட்டனவென்பதை அறிதல் வேண்டும். அப்பொழுதுதான்,மேற்குலகில் உந்துதல்களும் சவால் களும் எவ்வெவற்றை நாம் மீளக் கண்டுபிடிக்க உதவின என்ப தும், நாம் இப்பொழுது அழுத்திக் கூறுவன முன்னர் எத்தகைய அழுத்தம் பெற்றன என்பதும் தெரியவரும்.
இதனைத் தெளிவுபடுத்துவதற்குத் தமிழ் மக்களின் வரலாற் றைத் தெளிவுபடுத்தல் வேண்டும். தென்னிந்தியாவுடன் தொடங் கும் அந்த வரலாற்றின் களம் பின்னர் விரிவடைகிறது.
தமிழ் நாட்டின் பண்பாட்டு வரலாற்றை ஐந்து பெருங் கால கட்டமாக வகுத்தல் வேண்டும்.
1) ஆரம்பம் முதல் கி. பி. 250 வரை 2) கி. பி. 250 முதல் கி. பி. 600 வரை 3) கி. பி. 600 முதல் கி. பி. 1300 வரை 4) கி. பி. 1300 முதல் கி. பி. 1800 வரை 5) கி. பி. 1800 முதல் இன்று வரை

- 5 -
இதில் நமக்குரியது நான்காவது பிரிவுதான். 1800இல் திருப்ப மேற்படுவதற்கான தயார் நிலைகள் கி. பி. 1600 முதல் ஏற்படு கின்றன
மூன்ருவதன் தொடக்கம் (1300 வரை) சோழ, பாண்டியப் பேரரசு முறைமையின் சிதைவினைக் குறிப்பதால் மாத்திரமல் லாது, இஸ்லாமிய ஆட்சி நிலைநிறுத்தப்படுவதாலும் முக்கிய மாகின்றது. இந்த முக்கியத்துவத்தைச் சிறிது பின்னர் சற்று விரிவாகவே பார்ப்போம்.
முதலில் 1300 வரையுள்ள பண்பாட்டு வரலாற்றைப் பார்ப் போம்.
ஆரம்பம் முதல் கி. பி. 200 வரையுள்ள காலப்பிரிவு சங்க காலம் எனப் பரிச்சயப்படுத்தப்பட்டுள்ள காலமாகும். தமிழின் தனித்துவமான சில பாரம்பரியங்கள் வளர்த்தெடுக்கப்பட்டது இக் காலகட்டத்திலேயாகும். திணை மரபு உணர்த்தும் வாழ்க்கை முறைமைகள், அந்த வாழ்க்கை முறைகளுக்கேற்ற பண்பாட்டுநிலை மைகள், அந்தப் பண்பாட்டுப் பின்னணிக்கேற்ற இலக்கிய உரு வாக்கம் இக்காலத்திலே நிகழ்கின்றது. குடியிருப்புக்கு உள்ளே யும் வெளியேயுமிருந்த வாழ்க்கை வேறுபாடுகள் அகம் - புறம் என இருகிளைப்படுத்தப்பட்டுப் பின்னர் இலக்கிய மரபாகின்றது. இந்த அகத்தின் இலக்கிய மரபு தமிழின் தனிச்சிறப்பு ஆகிறது. ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் கற்பிப்பான் பொருட் டுக் கபிலர் பாடியதாகக் கூறப்படுவது குறிஞ்சிப்பாட்டு - அகத் திணைக்கொத்து, தமிழ் என்பது அகத்திணைதான் என்கிறது. பின்னர் களவியலுரைகர ரரும் களவியல் கூறியதை, 'தமிழ் நுதலிற்று என்பர்.
அகமரபு தமிழ்மரபு என்பது மாத்திரமல்ல முக்கியம், தமிழ் தனது இலக்கிய வெளிப்பாட்டுக்குச் சமஸ்கிருத இலக்கிய மரபை உதாரணமாகக் கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியம். தமிழின் இலக்கியத் தனித்துவம் வற்புறுத்தப்படுகிறது. இது பின்னர் மொழிநிலை வேறுபாடு வற்புறுத்தப்படும் பொழுது முக்கியமா கிறது.
250 - 600இல், சமண, பெளத்த மேலாண்மை காணப்படு கிறது. தமிழின் களம் விரிவடைகிறது. ஆனல் இந்த விரிவாக்கம் பெளத்தம், சமணத்தை அப்படியே பிரதிபலித்த ஒன்றன்று.

Page 7
سسس- 6 سسسس
பெளத்தம் சமணத்தை உள்வாங்கித் தனக்கென ஒரு சிறப்பு டைய தத்துவத்தைத் தருகிறது. திருக்குறள் வாழ்க்கை வாழப் பட வேண்டுமென்பது, அதில் வாழ்க்கை ஒரு சுமை அல்ல; அது சமூக முன்னேற்றத்துக்கான ஒரு பொறுப்பு. திருக்குறளின் இந்த நிலைப்பாடு அகில இந்திய அறநூல்களுக்குள்ளே திருக்குறளுக்கு - அதன் வழியாகத் தமிழுக்கு - ஒரு தனித்துவத்தைத் தரும் முறை மையை அல்பேட்சுவைட்ஸர் எடுத்துக் கூறுவர். இது மாத்திர மல்ல இன்னுமொரு மாற்றமும் ஏற்படுகிறது. அகம், புறம் என இரு கிளைப்படுத்தி இலக்கிய மரபு போற்றப்பட்ட தமிழ் நாட் டில் ஒரு வணிகனின் குடும்ப வாழ்க்கைக் கதை ஒரு நகரம் எரி வதற்கு, ஒரு மன்னனும், அவன் மனைவியும் இறப்பதற்குக் காரண மாக அமைவதை ஒரு புதிய இலக்கியம் - சமஸ்கிருத காவிய மரபை நம்பியிருக்காத ஒரு தொடர் நிலைச்செய்யுள் காட்டுகின் றது. தமிழிலக்கியம் அறத்தின் குரலாக ஒலிக்கின்றது.
மூன்ருவது கட்டம் (600 - 1300) மிக முக்கியமானது. வடக்
கும் தெற்கும் வைதிக மத வரலாற்றில் இணைவதைக் காட்டும் இக்காலகட்டத்திலே தான், தெற்கில் தோன்றும் பல்லவ, சோழப் பேரரசுகள் இந்தியாவின் அரசியற் பாரம்பரியத்தின் தொடர்ச் சியைத் தமக்கே உரிய வகையிலே பேணுகின்றன. தமிழ் நாட்
டின் பண்பாட்டு வரலாற்றில் இது முக்கியமான காலம். இந்தியப் பண்பாட்டின் தமிழ் ஆளுமை தெரியத் தொடங்கியது. இக்காலத் திலேயே என்பர் ரெமிலாதப்பர். பல்லவர் காலத்தில் தெரியத்
தொடங்கிய அந்த ஆளுமை சோழர் காலத்தில் சிலையெழுத்தாக
நிச்சயப்படுத்தப்பட்டது.
அரசனுடைய மேலாண்மையையும், உள்ளூராட்சியின் முக்கி யத்துவத்தையும் அரசனது இல்லமும், (கோ - இல்லம்) ஆண் டவனுடைய இருப்பிடமும் (கோவிலும்) சமூக - மத வாழ்க்கை யின் அச்சாணிகளாக அமைந்து பண்பாடு வளர்ந்த / வளர்க்கப் பெற்ற காலம் அது. Yo ',
பக்தி இலக்கியத்தின் தோற்றத்தில், தொகுப்பில், கோயில் களின் வளர்ச்சியில், பெருக்கத்தில், அரண்மனை இலக்கியங் களின் தன்மையில், புதிய இலக்கண நூல்களின் தோற்றத்தில், இந்தக் காலகட்டத்தின் சிறப்பைக் காணலாம். வேதம் ஆகமத் தோடு இணைகிறது சமஸ்கிருத நூல்களிலேயே தென்னகத்தின் சாயல் வீசும் தமிழ்நாட்டின் பக்தி இயக்கமும், இலக்கியமும் இந் தியப் பண்பாட்டின் ஆணிவேர்களாகின்றன. சைவ சித்தாந்தம்,

- 7 -
விசிஷ்டாத்துவிதம் என்பன தனித் தரிசனங்களாக எழுவதற் கான கால்கோள் இடம்பெறுகிறது.
தமிழ்ப்பண்பாடு அனைத்திந்திய பண்பாட்டை தன்னுள்ள டக்கியதாக, ஆனல் தனக்கேயுரிய சில பண்புகளை உடையதாக அமைகின்றது.
1300க்குப் பின் ஏற்படும் மாற்றம் தமிழ்ப் பண்பாட்டின் பரிமாணத்தில் ஒரு புதிய விஸ்தரிப்பை ஏற்படுத்துகின்றது
இஸ்லாம் வட இந்தியாவில் பரவிய முறைமைக்கும் தென் னிந்தியாவில் பாரிய முறைமைக்கும் வேறுபாடு உண்டு இதனைப் பண்பாட்டு வரலாற்றிற் காணலாம். இஸ்லாத்தின் வருகை தமிழில் ஏற்படுத்திய விரிவையும், அதனுலும் அதற்கு அடுத்து வரும் இன்ஞெரு முக்கிய விஸ்தரிப்பாலும் தமிழ்ப்பண்பாட்டின் வரைவிலக்கணம் விரிவடைகிறது.
தமிழ்நாட்டின் வரலாறு பற்றிய நூல்களில், இரண்டாம் பாண்டியப் பேரரசின் பின் முஸ்லிம் ஆட்சி நிறுவப்பட்ட வர லாறு சற்று மிகைப்படுத்தப்பட்டே கூறப்படுதல் மரபு. கில்ஜி மரபின் ஆட்சித் திணிப்போ ஆசன்கான் 1310இல் நிறுவிய சுல் தானுட்சியோ பொதுவான தமிழ் வாழ்க்கை மரபை மாற்று வதற்கான வலிமையுடையனவாக அமையவில்லை. அந்த ஆட்சி வட்டம் குறுகியது, அதற்குள் அது பெரும்பால் நின்றுவிட்டது. ஆனல் தமிழ்ப்பண்பாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் இஸ்லாமியப் பரம்பல், தமிழ்நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியில் ஏற்பட்டதாகும். தமிழ்நாட்டின் கிழக்குக் கரையோ ரத்தே முஸ்லீம் வணிகர்கள் குடியேறினர். முத்துக்குளிப்பு முதல் மூக்கிய ஊனுார்த் தானிய வணிகம் வரை பல துறைகளில் ஈடு பட்டனர். அவர்கள் தமிழையே பேசினர். தமிழ் - முஸ்லீங்கள் என்றே குறிப்பிடவும் பட்டனர்.
தங்கள் மதப் பண்பாட்டுத் தேவைகளுக்கு அவர்கள் தமி ழையே பயன்படுத்தியதன் காரணமாக, தமிழ் தன் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய மரபுக்குப் புறத்தே. இந்தியப் பண் பாட்டு வட்டத்துக்கு அப்பாலே தோன்றிய ஒரு மதத்தின் மொழி யாகிற்று. இது ஒரு மிக முக்கியமான மாற்றம், அறபு அந்த மதத்தின் வேதமொழி. அந்த மதத்துக்கு மறுபிறப்பில் நம்

Page 8
8
பிக்கையில்லை. தமிழை இதுவரை பயன்படுத்திய மதங்கள் யாவுமே மறுபிறப்பில் நம்பிக்கை வைத்துள்ள மதங்களே. இந்த மதத்தின் சமூக அமைப்பு இந்தியப் பாரம்பரியச் சமூக அமைப்பு முறையின் அச்சாணியான சாதியமைப்பை ஏற்காதது, இது ஏக இறைவனை மாத்திரமே பேசுவது, இறைதூதர் என்ற கோட் பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
தமிழ்மொழி அதுகாலவரை எடுத்துக் கூறியிராத சில கருத் துக்களை, கோட்பாடுகளை இப்பொழுது எடுத்துக் கூறவேண்டி யிருந்தது. இம்மதத்தின் அடிப்படைக்கோட்பாடுகள் பேசப்பட்ட பொழுது அறபுப் பதங்களே பயன்படுத்தப்பட்டன. ஆணு ல் இறை வணக்கத்துக்குரிய வெளிப்பாடுகள் - ஆத்ம வேட்கைகள் வேண்டுதல்கள் தமிழிலேயே சொல்லப்பட வேண்டியிருந்தன.
இந்த இஸ்லாமியக் குழுமத்துக்கு பின்னல் கிறிஸ்தவம் பெற்றது போன்ற அரச ஆதரவு இருக்கவில்லை. தமிழ்நாட்டில் பின்னர் வந்த நவாப் ஆட்சியில் உருது பேசுவோரின் தொகை கூடிற்று. கிழக்குக் கரையோர முஸ்லீம்களின் நிலை வேறுபட்டது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டாலும் இவர்கள் தமது மதத் தனித்துவத்தைப் பேணுவதிலும் அதில் சிதைவு ஏற்படா மல் பார்ப்பதிலும் பெருஞ் சிரத்தை கொண்டிருந்தனர். இத னல் அவர்கள் தங்கள் மார்க்க தேவைகள் சிலவற்றைப் பூர்த்தி செய்வதற்குத் தமிழை அறபு லிபியில் எழுதிப் படித்தும் பயின் றும் வந்தனர். இதுதான் அறபுத் தமிழின் தோற்றமாகும்.
தமிழ்ப்பண்பாடு என்பது இக்கட்டத்தில் இந்தியமதப் பாரம் பரியத்தைக் கடந்த ஒன்ருகச் செல்வதை நாம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் இஸ்லாத்தின் தொழிற்பாடு சில முக்கிய மான அமிசங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. இஸ்லாத் தின் மார்க்கநிலை மக்களுக்கேற்ற ஒழு க் க முறைமைக்காகப் பேணப்பட்ட அதேவேளையில், சில துறைகளில் ஒரு பண்பாட் டுப் பகிர்வும் நிகழ்வதைக் காணலாம். தர்கா வணக்கமுறை மையில் இது காணப்படுகின்றது. இன்னெரு முக்கியமான அமி சம் இலக்கிய மரபுப் பகிர்வு ஆகும். காவிய மரபு, நாட்டார் பாடல் மரபு, ஆகியனவற்றைப் பயன்படுத்திக் கொண்ட இஸ் லாமியப் புலவர்கள், படைப்போர், மசாலா நொண்டி மூலகம்

- 9 --
போன்ற புதிய வகைகளை அறிமுகஞ் செய்தனர். இந்த இலக் கியப் பகிர்வில் மிக முக்கியமானது மறைஞானக் கவிதையாகும். தாயுமானவர் பாடலையும், குணங்குடிமஸ்தான் பா ட லை யும் ஒருங்கு நோக்கும்பொழுது ஒருமைப்பாடுடைய இலக்கிய மர பொன்றினைக் காணக்கூடியதாகவுள்ளது. தமிழிலுள்ள சூஃபிப்
பாடல்கள் மிக முக்கியமானவையாகும்.
இஸ்லாத்தின் வருகை தமிழ்ப்பண்பாட்டின் விஸ்தீரணத்தை அகட்டிற்று.
தமிழின் பண்பாட்டு வரலாற்றில் அடுத்த நிகழ்வாக அமை வது, தெலுங்கின் மேலாண்மையாகும். ஆனல் அது இந்துப் பாரம்பரிய வட்டத்தினுள் நின்று செய்யப்பட்டதாகும். உண் மையில் தெலுங்கால் ஏற்பட்ட மாற்றம் அளவு, அல்லது அதி லும் பார்க்க முக்கியமானது இந்தத் தமிழ்த் தொடர்பு தெலுங் கில் ஏற்படுத்திய மாற்றங்களே. துரதிர்ஷ்டவசமாக அது பற் றிய திட்டவட்டமான ஆய்வுகள் இ ன் னு ம் வெளிவரவில்லை. 1370 முதல் தொடங்கும் தெலுங்குத் தொடர்பு தமிழ்நாட்டில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திற்று.
தெலுங்கு மொழியினைப் பிரதானப்படுத்திய ஓர் ஆட்சி முறைமை தமிழ்நாட்டில் தனது ஆட்சியை நியாயப்படுத்துவ தற்கு இந்துமத ஒருமைப்பாட்டை வற்புறுத்திற்று. ஆனல் அதற் குள்ளிருந்தே ஒரு தமிழுணர்வும் பீறிட்டுக் கிளம்பிற்று. அதனை முருக வணக்கத்தின் எழுச்சியிற் கண்டுகொள்ளலாம்.
தென்னகம் முழுவதற்கும் பொதுவான கலை வடிவங்கள் - கர்நாடக இசைமரபு, சதிராட்ட (பரத நாட்டிய) மரபு - ஆகி யனவும் இக்காலத்தில் உருவாக்கம் பெறுவது ஒரு முக்கிய பண் பாட்டுப் பரிமாணம்.
சமஸ்கிருத நெறிப்படுகை இக்காலத்தின் பண்பாகின்றது.
இவையாவற்றிற்கும் மேலாக - உண்மையில் அடித்தளமாக அமைவது தமிழ்நாட்டினுள் தெலுங்கர்கள் வந்து குடியேறியமை யாகும்.
தமிழின் பண்பாட்டு வரலாற்றில் அடுத்த திருப்புமுனையாக அமைவது மேற்குலகின் தொடர்பாகும்,

Page 9
- 10 -
இது முந்திய பண்பாட்டு மாற்றங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவிருந்தது. இந்த மாற்றம் மேற்கு நாட்டவர் களால் நேரடியாகத் தமிழ் மக்களிடையேயிருந்து செய்யப்பட்ட ஒரு மாற்றமாகும். இந்த மாற்றம் மொத்தமான மாற்ற முயற்சி யாகும். ஆட்சி முதல் மதம் வரை, சமூக ஒழுங்கு முதல் நிர் வாக ஒழுங்கு வரை செய்யப்பட்ட மாற்றமாகும். இந்த மாற்றங் களுக்குப் பின்னல் அரசபலம் இருந்தது. இந்த மொத்த மாற்ற முயற்சியைத் தங்கள் தேவைகளுக்கும் கண்ணுேட்டத்துக்கும் ஏற்பவே மேனுட்டார் செய்தனர்.
இந்த மாற்றம் முதலில் மதத்துறையிலே தொழிற்பட்டது. போர்த்துக்கேய வருகைக்கும் கத்தோலிக்க வருகைக்கும் தொடர் புண்டு போர்த்துக் கேயருக்கும் ஒல்லாந்தருக்கும் தமிழ்நாட்டில் நேரடி அரசியல் அதிகாரம் இல்லையெனினும் ஆரம்பத்திலும் அரசபலம் பற்றிய பிரக்ஞையில்லாதிருக்க வில்லை. முதலில் இவை பறங்கி மார்க்கமாகவே வந்தன. பறங்கி மார்க்கம் சத்திய வேத மாக வளர்ந்த வளர்ச்சியிலே கிறித்தவம் தமிழ்ப் பண்பாட்டு டன் இணைந்த வரலாற்றைக் கண்டு கொள்ளலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மேற்குலகத் தொடர்பு எனும் பொழுது பல மேனுட்டினர் சம்பந்தப்பட்டமை தெரிய வரும். (தென்மார்க்கு நாட்டவர்கள், பிரஞ்சுக்காரர், ஒல்லாந் தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர்) இவர்களுள் ஆங்கிலேயர் களே மிக முக்கியமானவர்கள். 骏
ஆங்கில ஆட்சியும் புரட்டஸ்தாந்தக் கிறித்தவமும் தமிழ்நாடு முன்னர் எக்காலத்தும் கண்டிராத மாற்றங்களை ஏற்படுத்திற்று.
W 1800 அளவில் பிரித்தானிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டதும், பிரித்தானியா வழியாக வந்த மேற்கத்திய சிந்தனையே மாற்றத் *தின் மூலமாகிற்று.
தமிழ்நாடு மேற்குலகுக்கு முற்ருகத், திறந்துவிடப்பட்டது. மூன்று முக்கிய துறைகளில் இத்திறந்த நிலை முக்கியமாகத் தெரிந் SS1.
1) மதம் 2) சமூக - அரசியல்க் களம் 3) பொருளாதாரம்

- 11
புதிய அரசியல் முறைமையோடு இணைந்து நின்ற இத்தொடர்பு காரணமாக தமிழ்நாட்டின் பாரம்பரியச் சமூக அமைப்பு பெரிய தொரு சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
பிரித்தானிய ஆட்சிகாரணமாகத் தோன்றியுள்ள பொருளா தார, தொழில்நுட்ப, கருத்து நிலைச் சவால்களுக்கு முகங்கொடுக் கத்தக்க வலு பராம்பரியச் சமூகத்துக்கு இல்லையென்பது படிப் படியாகப் புலப்படலாயிற்று.
இது தமிழ்நாட்டுக்கு மாத்திரம் உரியதொன்று அன்று. பிரித்தானிய ஆட்சியின் இந்தச் சவாலை இந்தியாவின் சகல இனங் களுமே எதிர்நோக்கின. ஆனல் தமிழ்நாட்டின் சமூக அமைப்பு இந்தச் சவாலினை எதிர்நோக்கும் முறைமையில் தனக்கேயுரிய சில தன்மைகளைக் காட்டத் தொடங்கிற்று.
புதிய அமைப்புக்குள் மக்கள் வழிநடத்தப்பட்ட இந்தச் சவால் நன்கு புலனுயிற்று.
இந்தச் சவால் இரு வழிகளில் தெரியவந்தது. முதலாவதாக கிறித்தவ மிஷனரிகளின் தேவ ஊழியப் பணியின் பொழுது தெரிய வந்தது. இரண்டாவதாக புதிய பிரித்தானிய ஆட்சியின் கருத்துநிலை அடிப்படைகளின் மூலம் தெரியவந்தது.
முதலில் கிறிஸ்தவ மிஷனரிமார் வழியாக இந்தச் சவால் புலப்பட்ட முறையினை நோக்குவோம்.
கிறித்தவத்தை அவர்கள் பரப்பும் பொழுது, கிறித்தவத்தை அவர்கள் விளங்கிக் கொண்ட முறையிலும் விளக்கிய முறை யிலும், கிறித்தவ நம்பிக்கைகள், நவீன லெளகீக முன்னேற்றத் துக்கு வேண்டிய முன்னேற்ற வழி முறைகளுக்கு முரணுனவை அல்ல என்பன நிலை நிறுத்தப்பட்டது. நாட்டின் முன்னேற்றத் துக்கு வேண்டிய கல்வியைச் சகலரும் பெறும் முறைமை, கல்வி என்பது சமூக பொருளியல் வளங்களைப் பெருக்குவதற்கான ஒரு வழிவகை என்ற கோட்பாடு ஆகியன கிறித்தவத்தினுள் இணைந்து கிடந்தன. அன்றைய இந்தச் சமூக அமைப்பு இந்த மாற்றங் களை விரும்பவில்லை.
மனிதன் தனது அறிவினல் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயலவேண்டும் என்று புரட்டஸ்தாந்தவாதம் கூறிற்று. பாரம் பரிய சாதியமைப்பு இதனை அங்கீகரிக்கவில்லை.

Page 10
一12一
இதனல், படித்தவர்களிடையே சமூகப் பெறுமானங்கள் சம் பந்தமாக ஒரு பெரு மனக்குழப்பம் ஏற்பட்டது,
புதிய ஆட்சி நிறுவிய கல்விமுறை இந்தக்குழப்பத்தை மேலும் சிக்கற்படுத்திற்று. அன்றைய நிலையில் இந்தப் புதிய கல்விமுறை தான், புதிய அமைப்பில் முன்னேற்றத்துக்கான வாயிலாகவிருந் தது. அந்தக் கல்வியை அவர்கள் பாரம்பரிய அமைப்பிலிருந்தது போல அல்லாமல் யார் யார் பெறக்கூடியவர்களாக இருந்தார் களோ அவர்கள் யாவருக்கும் கொடுக்கத் தயாராகவிருந்தார் கள். பிறப்பு படிப்புக்கான தகைமை அல்ல எனப்பட்டது. இது நமது சமூகத்துக்குப் புதியது.
ந்தக் கல்வி முறைமை மிஷனரிமார்களின் கையிலிருந்தது, நத (D ஷ
இன்னுமொரு முக்கியமான உண்மையென்னவெனில், இந்தப்
புதிய கல்விமுறை மூலம், தமது ஆட்சிக்கு வேண்டிய ஆதரவா ளர்களை அரசாங்கம் திரட்டிக்கொள்ள விரும்பிற்று.
ஆதரவாளர்களையும், விசுவாசமுள்ள ஊழியர்களையும், கல்வி வழியாக அரசாங்கம் தோற்றுவிக்க முனைந்ததன் மூலம் இச் சமூகம், அதுவரை காணுத ஒரு நவீன அசைவாக்கத்தைப் பெற்றது. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்பது இப் புதிய நிலைமையிலும் மாறவில்லை எனினும், அந்த உயர்ந்தோரை உயர்ந்த சாதியினர் என்று சொல்லப்படுபவர்களில் இருந்துதான் தெரிந்தெடுக்க வேண்டுமென்ற பாரம்பரிய நியமத்தைப் புதிய வர்கள் ஏற்கவில்லை. இது பலருக்கு உந்துதலாகவும், சிலருக்குச் சவாலாகவும் அமைந்தது.
இப்புதிய கல்விமுறை சற்று முன்னர் கூறிய லெளகீக முன் னேற்றக் கோட்பாட்டை முன்வைத்த அதே நேரத்தில், பதி னெட்டாம் நூற்ருண்டில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய அறி வலையையும் தன்னையறியாமலே அறிமுகஞ் செய்து வைத்தது.
முதலாவது கோட்பாடு மதத்துக்கும் லெளகீக முன்னேற் றத்துக்கும், முரண்பாடு இல்லையென்று கூற, இந்தப் புதிய அறி வலையோ கட்டற்ற சிந்தனை (Free thinking)க்கும் தெய்வ மறுப்பு வாதத்துக்கும் முக்கியமாகப் பகுத்தறிவு வுாதத்துக்கும் இட மளித்தது.
எனவே பாரம்பரியச் சமூகத்தின் வழியாக வந்து புதிய கல்வி யைப் பெற்ற பொழுது, தம்மையும் தமது பராம்பரியத்தையும்,
 

- 3 -
எதிர் நோக்கிய சவாலை மூன்று வழிகளில் தீர்க்க முனைந்தனர். பிலர் மதம் மாறினர். சிலர் இந்து மதத்தினைச் சீர்திருத்தி அதனை நவீன உலகின் தேவைகளோடு இணைக்கப் பார்த்தனர். அதாவது மேற்குலகம் தந்த புது அனுபவத்தின் பின்னணியில் இந்து மதத்தை நோக்கத் தொடங்கினர். வேறு சிலர் பகுத்தறிவுப் பாதையை மேற்கொண்டு மதப் பாரம்பரியமே தமிழினத்தின் கீழ் நிலைக்குக் காரணம் என்றனர். இந்தக் குரல் சமூக சமத் துவத்தைத் தளமாகக் கொண்டிருந்தது.
கிறிஸ்தவம் இந்தப் புதிய சமூக சவாலை விடுத்துக் கொண் டிருந்த அதே வேளையில் அது தன்னை ஒரு அந்நிய மதமாக வைத் துக் கொள்ள விரும்பாமல், தமிழுடன் இணைத்துக் கொள்ள விரும்பிற்று. முஸ்லிம்கள் செய்தது போன்று அறபுத் தமிழ் என்ற தற்காப்பு முறை எதையும் வைத்துக் கொள்ளாமல் நேர டியாகப் பயன்படுத்தும் முறையில் இறங்கினர்.
மத, கல்வித்துறைகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் புதிய சவால்களைத் தோற்றுவித்த அதே வேளையில், இந்தியாவில் பிரித் தானிய ஆட்சி தனது நிர்வாகத் தேவைக்காகச் செய்த மாநில வகுப்பு: தமிழ் மக்கள் அதுவரை எதிர்நோக்காத ஒரு பெரும் பிரச்சினையை - இனத் தனித்துவம் பற்றிய ஒரு நெருக்கடி நில் யைத் தோற்றுவித்தது.
மதமாற்றம், மதச் சீர்திருத்தம், புதிய கல்வி, புதிய அதி காரம், புதிய அதிகாரிகள் எனப் பலவழிகளில் நிலைமை குழம் பியே கிடந்தது. இந்தப் புதிய சவால்களுக்குத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு முகம் கொடுத்தது என்பதை அறிவதற்கு முன், புதி தாகத் தோன்றிய பிரச்சினைகளை மிகத் தெளிவாக அறிந்து கொள்வது முக்கியமாகும்.
முதலாவது பிரச்சினை இனத் தனித்துவ உணர்வு பற்றி தாகும்.
பிரித்தானியர் தமது ஆட்சிச் செளகரியத்துக்காகச் சென்னை மாநிலம் - Madras Presidency. எனத் தோற்றுவித்தது முற்றிலும் புதிய அலகாகவே இருந்தது. கன்னடப் பகுதிகளிற் சில (தென் கன்னடப் பகுதி) ஆந்திரா, தமிழ்நாடு, கேரளம், குடகு ஆகிய

Page 11
- 4 -
பகுதிகள் ஒரு நிர்வாசப் பகுதியாக்கப்பட்டன. நிர்வாகமோ முன்னர் இருந்தது போன்று பன் முசப்பட்டுக் கிடந்ததல்ல. இந்த ஆட்சி நன்கு ஒருமுகப்படுத்தப்பட்ட ஆட்சி யா கும். இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் - 1800 க்கு முன்னர் - தமிழ்நாடு சிறுச்சிறு ஊர்களாகத் துண்டுபட்டுக் கிடந்தது. ஒவ்வொரு தலை வனும் தன்னை ராஜாதிராஜனகத் கூறிக்கொண்டிருந்தான். இப் பொழுது தப்பமுடியாத ஒருமுகப்பாடு ஏற்பட்டது. இதற்குள் தமிழ்மக்களின் நிலை என்ன? தமிழ்மக்களைப் போலவே தெலுங் கர்களும், மலையாளிகளும், தங்கள் தங்கள் தனித்துவத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர்.
இதுவே முற்றிலும் புதிய ஒரு நிலைமை. இதுபோதாதென்று, இந்தப் பல்கலவைச் சென்னை மாநிலம் இந்திய அரசின் ஒரு மாநிலமாக - பல்வேறு மாநிலங்களுள்ஒன்ருகவே - கருதப்பட்டது. உண்மையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பக் கூற்றில், சென்னை பெருங் கடலுக்குப் பக்கத்திலுள்ள உப்பங்களி போன்றுதானி ருந்தது. பிரித்தானிய ஆட்சியின் உந்துதலுடன் நடைபெற்ற ஆரம்பகால ஆராய்ச்சிகள் வட இந்தியாவின் புகழையும், சமஸ் கிருதத்தின் இந்தோ - ஆரியப் பிதுரார்ஜிதத்தையும். இந்தோ - ஆரியத்துக்கும், இந்தோ - ஐரோப்பியத்துக்குமுள்ள இரத்த உற வையும் பற்றிப் பேசிப் பேசிக் குளிர் காய்ந்தனவே தவிர, தென் னிந்தியாவைப் பற்றியோ, அதன் மக்களைப் பற்றியோ, அவர் களது கடந்தகால நாகரிகத்தைப் பற்றியோ அதிகம் பிரத்தை காட்டவில்லை. புதிதாக மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பெற்ற "ஆரிய மேன்மை பற்றியே பேச்சு மேலோங்கி நின்றது. இந்த நிலைமை போதாது என்று, தென்னுட்டிலேயே வாழ்ந்து, வசித்து வந்தவர்களிற் சிலரும் தாமும் ஆரிய பரம்பரையினரே என்றனர்.
இவ்வாருக, தமிழ்ச் சமூகம் தென்னிந்திய மட்டத்திலும், அனைத்திந்திய மட்டத்திலும், ஒரு தனித்துவ அங்கீகாரச் சிக்கலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இதுதான் முதல் பிரச்சனை.
இரண்டாவது பிரச்சினை, தமிழக அமைப்பினுள் தமிழர் என்னும் ஒருமைப்பாட்டை எந்த மட்டத்தில், எந்த அடிப்படை யிற் காண்பது என்பதாகும். மதங்களின் அடிப்படையிற் பார்ப் பதா என்ற பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இலங்கையிலும் இப் பிரச்சனை முக்கியமான ஒன்றகிற்று.
மூன்ருவது பிரச்சனை, மிக மிக முக்கியமானது. புதிய ஆட்சி முறையும், அந்த ஆட்சி முறையின், அடிப்படை எடுகோளாக

- 15 -
இருக்கும் அரசியல், சமூக சித்தாந்தங்களும், ஏற்படுத்திய தொழில் வாய்ப்புக்களும், அந்த வாய்ப்புக்களை மறுதலிக்கும் பாரம்பரியத் தடைகளும், தமிழ்ச் சமூகத்தின் ஒழுங்கமைவு உண் மையிலேயே நியாயமானதா, நியாயமற்றதா என்ற சிந்தனையைத் தோற்றுவித்தன. இதனல், அதுவரை கேள்வி, மறுப்பு இன்றிப் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் இப்பொழுது எதிர்க்கப்பட்டன; மறுதலிக்கப்பட்டன. சாதிமுறைமைக்குப் பழக்கப்பட்டிருந்த நமது சமூகம் இந்தப் புதிய தேடுதலைச் சாதிகளின் உயர்வு தாழ்வு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கத் தொடங்கிற்று. இன்னெரு மட் டத்தில், நாம் முதற் சொன்ன அறிவுவாதிகள் அந்தச் சாதி களையே மறுதலித்தனர்.
தமிழ்ப்பண்பாட்டின் இன்றைய சமூகப் பரிமாணங்கள் இந்த மூன்ருவது பிரச்சினைக்குக் காணப்பட்ட தீர்வின் / தீர்வுகளின் வழியாக வந்தவையே.
இவை தமிழ்நாட்டிற்குள் நடைபெற்றவை. அதாவது பாரம் பரியமாகத் தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் மேற்குலகுத் தொடர்பு ஏற்பட்டதால் ஏற்பட்டவை. தமிழ்நாட்டைப் போல் இலங்கை யின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் சில இனத் தனித்துவப் பிரச்சினைகள் தோன்றின.
இந்தப் பிரச்சினைகளைவிட இன்னுமொரு புதிய ஒருபிரச்சினை பும் தோன்றிற்று.
பிரித்தானிய ஆட்சி தனது பேராட்சியின் கீழ் வந்த மற்ற நாடுகளில் கூலித் தொழிலாளர் தேவைப்பட்டபொழுது, தமிழர் களையும் அவ்வந்நாடுகளுக்கு அனுப்பிற்று. பஞ்சாப் போன்ற இடங்களிலிருந்தும் மக்கள் அனுப்பப்பட்டனர். ஏற்கனவே தமி ழர்கள், பழங்குடிகளாக வாழ்ந்து வந்த இலங்கையின் மத்திய பகுதிக்குத் தோட்டத் தொழிலாளராக அனுப்பப்பட்டனர். மலாயா, பர்மா, மொரிசியஸ், தென்னபிரிக்கா, பிஜி, பிரிட்டிஸ் கயான போன்ற நாடுகளுக்குத் தமிழ்மக்கள் அனுப்பப்பட்டனர். பிரித்தானிய ஆட்சியின் பொதுமையைப் பயன்படுத்திக் கொண்டு தென்கிழக்காசிய நாடுகளுக்குத் தமிழ்நாட்டு வணிகர்கள் சென் றனர்.
சென்றமைந்த நாடுகளில் இம்மக்கள் தமது தனித் து வத்தை எவ்வாறு பேணுவது என்ற ஒரு பெரும் பிரச்சினையுமேற்"

Page 12
- 16 -
பட்டது. இது பத்தொன்பதாம் நூற்றண்டிலோ, அல்லது இரு பதாம் நூற்றண்டின் முன்னரைக் காலத்திலோ கூட அதிகம் உணரப்படவில்லை. இப்பொழுதான் - கடந்த இருபத்தாண்டுக் காலமாக இது பெரிதும் உணரப்படுகிறது.
மேற்குலகின் நேரடித் தொழிற்பாட்டால் தமிழ்ச் சமூகத்தை முப்பெரும் பிரச்சினைகள் எதிர்நோக்கின.
- அனைத்திந்திய மட்டத்தில் தனித்துவம் - தமிழர் சகலரையும் ஒருங்கிணைக்கும் ஒரு "கூறு' - பாரம்பரிய தமிழ்ச் சமூக ஒழுங்கமைப்புப் பற்றிய விமர்
சனமும் மீளமைப்பும்.
இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் நமது சமூகம் கண்ட விடை யினுள் இன்று த மி பூழ் ப் பண்பா டு எனக் கொள்ளப்படுவன பொதிந்து கிடக்கின்றன.
இனி ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்ப்போம்.
அனைத்திந்திய அமைப்பினுள் தெற்கின் தனித்துவமும், தெற் கினுள் தமிழின் தனித்துவமும், அன்றைய முக்கிய புலமைவாத மான ஆரியக் கோட்பாட்டின் விஸ்தரிப்பால் பேணப்பட்டன.
வடஇந்தியா, சமஸ்கிருதம் ஆகியன பற்றிய புலமை ஆய்வு கள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தோ - ஆரியக் குழுவினுள் வராத இந்திய மொழிக்ள், மொழிக் கூட்டங்கள் பற்றிய புலமைச் சிரத்தை அதிகரிக்கத் தொடங்கியது. தென்னகத்து மொழிகள் இந்தோ ஐரோப்பியத் தொடர்பற்றவை என்பதும், தெரியப் படத் தொடங்க அவற்றினை ஒன்ருகத் தொகுத்து நோக்குவதற் கான முயற்சி கிளம்பிற்று. தென்னத்திலிருந்த ஒரு பாதிரியார் - கால்டுவெல் - அப்பணியைச் செய்தார். தென்னகத்து மொழி களைத் தனியேயும், தொகுத்தும் வடமொழியோடு ஒப்பு நோக்கி யும் ஆராய்ந்த கால்டுவெல் இவற்றின் ஒருமைப் பாட்டைக் கண்டு இவற்றை ஒரு மொழிக் குடும்பம் என எடுத்துக் கூறினர். இந்த மொழிக்குடும்பத்துக்கு என்ன பெயரடை கொடுப்பது GT irgi Sjö555 gyaif G Fitair(a)ii. Tne word I have chosen is Dravidiam from Dravida, the adjectival Dravida”” p5rrašir . தெரிந்தெடுத்துள்ள சொல் Dravidam என்பதாகும். இது 'திரா விட' என்னும் சொல்வழி வருவது. அச்சொல்லின் அடைமொழி வடிவம் என்ருர்,

- 17 -
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துணு, குடகு, ராஜ்மசானி ஆகிய மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவாக நிறுவப்பட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குடகு, துணுவை ஒருமொழிக் குடும்பம் என நிறுவிய தன் மூலம், அனைத்திந்திய மட்டத்தில் தென்னகத்தின் தனித் துவம் நிறுவப்பட்ட அதே வேளையில், புதிய நிர்வாக மாநில மான சென்னை மாநிலத்துக்கு ஒர் அடிப்படையான சித்தாந்த அத்திவாரமும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அடிப்படையிலே தான் திராவிட நாட்டு இயக்கம் ஓர் அரசியல் இயக்கமாக மாறிப் பின்னர் மொழிவாரி மாகாண அமைப்புடன் தமிழ்நாட் டோடு அமைந்து கொண்டது.
அடுத்து, சென்னை மாநிலத்துள் தமிழின் தனித்துவத்தை நிறுவுவதற்கு, 'தமிழ் - திராவிட மொழிக் குடும்பங்களுள் மிகப் பழமையானது - சமஸ்கிருதத்திலிருந்து தனித்து நிற்கக்கூடியது' என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்ட்து.
ஆரியத்தின் மேலாண்மை அதிகம் வற்புறுத்தப்பட்டதால், தவிர்க்க முடியாத வகையில் தோன்றிய திராவிடக் கோட்பாடு தமிழ் சமூக அமைப்புப் பற்றிய விமரிசனத்துக்கும் ஆய்வுக்கும் கருவியாகிற்று. தமிழ்நாட்டில் பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற சமூகப் பிரிவும் பிரக்ஞையும் வலுவான இடம் பெறு வதற்கு இந்தக் கோட்பாடு அடிப்படையாகிற்று.
திராவிடம் ஆரியத்திலிருந்து தனியானது, புறம்பானது என்ற கொள்கை நிலைப்பட்டதும், திராவிடத்தின் தனித்துவத்தைக் காண்பதற்கு, ஆரியச் செல்வாக்குக்கு முற்பட்ட திராவிடத்தைப் பற்றி அறிய முற்பட்டனர். இருபதாம் நூற்றண்டின் தொடக் கத்தில் கண்டுபிடிக்கப்பெற்ற சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாக ரீகம், திராவிட உணர்வைப் பெரிதும் வளர்த்தது. ஆரியச் செல் வாக்கற்ற திராவிடச் சிந்தனையின் வெளிப்பாடாகச் சங்க இலக் கியம் போற்றப்பட்டது.
இவ்வாருக மேற்குலகின் தாக்கம் தமிழ்ப்பண்பாட்டின் அடிப் படை அமிசங்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துவதற்கு உதவிற்று இவற்றைத் தனித்தனியே நோக்குவது பயன்தரும்.
V மேனுட்டு ஆராய்ச்சி கண்டுபிடித்துக் கொடுத்த ஆரிய மேன் மைக் கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டு தமிழைச் சமஸ்

Page 13
-س- 18 -س--
கிருதம் 'சப்பி உமிழ்ந்த சக்கை • என்று கூறியவர்களுக்கெதி ராகக் கொதித்தெழுந்தவர்கள் தமிழின் தனித்துவத்தை அதன் சுயாதீனத்தை நிலைநிறுத்தும் வகையில் தனித் தமிழியக்கத்தை நடத்தினர்.
தமிழ் மொழியின் தூய்மையையும் வடமொழியின் உதவி யின்றி தனித்தியங்கும் ஆற்றலையும் எடுத்துக்காட்ட விரும்பிய அதே நேரத்தில், தமிழர் சிந்தனையின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுவதற்கு - இந்துமதக் கோட்பாட்டுக்கு உள்ளேயே நின்று கொண்டு - சைவசித்தாந்தத்தை, அதன் சிறப்பை எடுத்துக் காட் டினா,
இத்தகைய ஆய்வுகள் காரணமாக இந்திய நாகரிகத்தில் தமிழ் ஆளுமையை இனங்கண்டு கொள்ளும் புலமை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலக்கியத் துறையில் மாத்திரமல்லாது, கலைத்துறையிலும், தமிழின் பங்களிப்புப் பற்றி ஆராயத் தொடங் கினர். இத்துறையில் ஆனந்தக்குமாரசுவாமி 6T(p5)u Dance of Shiva சிவநடனம் மிக முக்கியமானதாகும். சிவநடனத்தை தமிழ் மூலங்களின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளலாமென்ற உண்மை நிலைநிறுத்தப்பட்டது.
நடராஜர் சிலையும் கோபுரமும் இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழின் பங்களிப்பாகப் போற்றப்படத் தொடங்க அந்தப் பாரம் பரியத்தின் தொடர்ச்சியான பரத நாட்டியமும் அடிப்படையில் தமிழகத்தின் தொல்சீர் நடனமே என்ற உணர்வு வளரத்தொடங்
கிற்று.
ஆனல் ஆரிய திராவிடக் கோட்பாட்டின் மேலாண்மை dתש"חמ ணமாக, தமிழின் தனித்துவத்தை இந்துமதம் சாராத பண் பாட்டு அமிசங்களிலே கண்டு கொள்வதற்கான மனப்போக்கே அதிகமாகக் காணப்பட்டது. இந்துமதத்தைச் சாராத தமிழர் களும் - தமிழ்க் கிறிஸ்தவர்களும், தமிழ் முஸ்லீம்களும் . அத் தகைய ஒரு பண்பாட்டுக் கோலத்தையே காண விழைந்தனர். அத்துடன் சமயச் சார்பற்ற பகுத்தறிவுச் சிந்தனேயாளரும் அத் தகைய் ஒரு நிலைப்பாட்டையே விரும்பினர். இதஞல் தமிழ்ப் பண்பாட்டின் ஆண்வேர்களை இலக்கியப் பாரம்பரியத்திலே காணும் தன்மையே முனைப்புப் பெற்றது. இதனல் சங்க இலக் கியத்தின் சமயச் சார்பின்மையும், திருக்குறளின் சமயப் பொது மையும், சிலப்பதிகாரத்தின் தமிழகப் பொதுமையும் வற்புறுத்

ー 19ー
தப்படத் தொடங்கின. இவற்றைத் தமிழ்ப் பண்பாட்டின் அடி வேராகக் காட்டும் பண்பு வளரத் தொடங்கிற்று.
இவ்வாறு அனைத்திந்திய அமைப்பினுள் தமிழின் தனித்து வத்தைக் காட்டுவதற்கான மீள்கண்டுபிடிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், மேற்குலகத் தொடர்பினுல் ஏற்பட்ட, வளர்ந்த ஒரு சிந்தனை நெறி தமிழ்நாட்டின் பாரம் பரியச் சமுதாய அமைப்பின் அதிகார வரன்முறையை முற்ருக மறுதலித்து, தமிழின் சிறப்பு தமிழரின் பகுத்தறிவிலேயே உண்டு என்ற கருத்தை முன் வைத்தது. தமிழரின் சுயமரியாதை அவர் கள் பகுத்தறிவுவாதத்தை மேற்கொள்வதிலும், சமூக சமத்து வத்தை மேற்கொள்வதிலும், சமூக சமத்துவத்தை ஏற்பதிலும், மூடநம்பிக்கைகளை விட்டொழிப்பதிலுமே தங்கியுள்ளது என்ற கோட்பாடு முன் வைக்கப்பட்டது. மேனுட்டுப் பகுத்தறிவாள ரான ருெபேட் இங்கர்சாவின் கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்
60”,
இத்தாக்கம் காரணமாக, தமிழ்ப்பண்பாட்டினுள் சனநாய கக் கோட்பாடு உண்டா, சமூக சமத்துவம் உண்டா, மதச் சார்பற்ற சிந்தனையுண்டா என்ற உசாவல்கள் செய்யப்பட்டன. தமிழர் பண்பாட்டின் அடிப்படை மனிதாயுதப் பண்பும், சமத் துவமும் இதன் காரணமாக வெளிக் கொணரப்பட்டன.
தனிப்பகுத்தறிவு - சைவமும் தமிழும் என்ற இந்த இருகிளைப் பாட்டை ஒழித்துச் சகல தமிழர்களையும் ஒன்றிணைக்கும் தனித் துவம் ஒன்று "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மந்திர வரியின் மீள் கண்டுபிடிப்புடன் வற்புறுத்தப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டின் இன்றைய முக்கிய அடிப்படைகளில் இது முக்கியமான ஒன்ருகும்.
மேற்குலகத்தொடர்பின் சவால்களுக்கு நாம் கண்ட பதில்
கள் இவை, இவை நம்மையும் நமது சமூகத்தையும் மாற்றி புள்ளன.

Page 14
- 20 -
V
மேற்குலகுத் தொடர்பு காரணமாகத் தமிழ் சர்வதேசிய நிலைப்படுத்தப்பட்டது. முதலில் மேற்குலகினர் அதனைச் செய் தனர். இப்பொழுது அப்பணியைச் செய்யும் மேனுட்டவர்களுடன் கீழைத்தேயத்தவர்களும் குறிப்பாக தமிழர்களும் சேர்ந்துள் ளனர். மறைவாக நமக்குள்ளே நமது புகழை, நமது பண்புகளை நாம் பேசிக்கொள்ளாமல், தழிழை, தமிழ்ப் பண்பாட்டை உல கப் பொதுமேடையில் வைத்து அதனை மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சியாளர் சங்கங்களும், ஆய் வுக் கழகங்களும் நிறுவப்பட்டுள்ளன. இந்தப் பணியில் தனி நாயக அடிகளார் தொடங்கிய அனைத்துலகத் தமிழராய்ச்சி மன்றம் முன்னணியில் நிற்கின்றது.
தமிழைச் சர்வதேச மட்டத்தில் வைத்து நோக்குவதன் காரண மாக இரு முனைப்பட்ட நடவடிக்கைகள் முக்கியம் பெற்றுள்ளன.
1) தமிழை உலகின் பிறமொழிகளுடனும், தமிழ்ப்பண் பாட்டை உலகின் பிறமொழிப் பண்பாடுகளுடனும் ஒப்பு நோக்கித் தமிழின் பொதுமையையும், தனித் துவத்தை அறிவதற்கான புலமை முயற்சிகள்.
2) தமிழினுள் - அதன் சமூக அமைப்பில், கலை இலக் கியத்தில் உள்ள, சர்வதேச முக்கியத்துவமுடைய, உலகப் பொதுமைவாதப் பண்புடைய அமிசங்கள் அறிந்து கொள்வதற்கான முயற்சிகள்.
3. தமிழ்ப் பண்பாட்டின் அமிசங்களை இனங்கண்டறிந்து கொள் வதிலும், தமிழ்ப்பண்பாட்டின் உலக முக்கியத்துவத்தை எடுத்து விளக்குவதிலும் இரண்டாவது நடவடிக்கைகளே முக்கியமானவை யாகும். இவைதான் மீள் கண்டுபிடிப்புக்கள். அதாவது ஏற் கனவே இருந்தவை; ஆனல் தேவையின்மை காரணமாக வற் புறுத்தப்படாதவை; இப்பொழுது தேவை காரணமாக விதந் தோதப்படுபவை. அவற்றைப் பற்றிச் சற்று விரிவாக நோக்கு வதற்கு முன்னர் முதலாவது கூறப்பட்ட நடவடிக்கைகள் பற்றிச் சிறிது பார்ப்போம். அதாவது தமிழையும் தமிழ்ப்பண்பாட்டை யும் உலகின் பிறமொழிகளுடனும் பிறமொழிப் பண்பாடுகளுட ணும் ஒப்பு நோக்கும் புலமை முயற்சிகள் பற்றிப் பார்ப்போம்.

இவற்றுள் மிக முக்கியமானது மொழியியல் ஆய்வுகளாகும். தமிழ் மொழியின், தமிழ் இலக்கண அமைதிகளின் உலகப் பெரு முக்கியத்துவமுள்ள பல சிறப்புகளை இந்த ஆய்வுகள் நிலைநிறுத்தி யுள்ளன. உதாரணமாக தொல்காப்பியத்தில் விவரிக்கப் படும் கிளவியாக்க, வாக்கிய ஆக்க அமைதிகள் இக்காலத்தில் நெr ஆம் கொம்ஸ்கியால் எடுத்துக்கூறப்படும் Generative grammer முறை மையுடன் எத்துணை ஒத்திருக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர் களுக்கு வியப்பைத் தந்துள்ளது. −
இந்தியப் பண்பாட்டு ஆய்வில், தமிழுக்கு வடமொழிக்கில் லாத ஒரு பெருமை இப்பொழுது வற்புறுத்தப்படுகின்றது. இந் திய வரலாற்றில் நீண்ட தொடர்ச்சியுடைய மொழி தமிழே. எனவே தமிழின் தொடர்ச்சியில் இந்தியப் பண்பாட்டின் தொடர்ச்சி நெறிகளைக் கண்டுகொள்ளலாம்.
பிற பண்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்பொழுது தமிழ்ச் சமுதாய அமைப்பின் அடிச்சரடான தாயமுறைமை முக்கியமாக ஆராயப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், உலகப் பண் பாட்டு வட்டங்களுள் திராவிட உறவுமுறை மிக முக்கியமான ஒன்ருகக் கருதப்படுகின்றது. ஏங்கெல்ஸ் முதல் றெனற்மான் (Trantmann) வரை பலர் திராவிட உறவுமுறை பற்றி ஆராய்ந் துள்ளனர். - :
மேலும் ஒருமொழிப் பண்பாட்டு வட்டத்தினுள் பல்வேறு மதப்பண்பாடுகள் தத்தம் மதத் தனித்துவத்தைப் பேணுகின்ற அதேவேளையில், எவ்வாறு ஒரு பொதுவான பண்பாட்டுக் கோலத் தைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது பற்றிய ஆய்வுகளுக்குத் தமிழும் தமிழ்ப் பண்பாடும் களமாக அமைந்துள்ளன. மானிட வியலாரும், சமூகவியலாரும் இவ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுள் ளனர். சமயவியல் அறிஞர்கள் கூடத் தமிழ் வெவ்வேறுபட்ட கோட்பாடுகளே யுடைய மதங்களுக்குப் பொதுமொழியாக அமைந் g5 6iraMT (yp6O puộ&T eratuivgög6iraMT Gorff. (Bror Teliander Christian & Hindu Terminclogy. A Study in their mutual relations with Sp. ref., to the Todamil area. Uppsala 1974) gigs 3 பியல் ஆய்வு தமிழ் இலக்கியத்தையும் பரந்த ஒரு வட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளதென்ருலும், இத்துறையில் முயற்சிகள் போதாதென்றே கூறவேண்டும். இந்தப் போதாமை காரணமாக இளங்கோ, கம்பன், பாரதி ஆகிய மூவரும் குடத்து விளக்காகவே உள்ளனர். இந்தவகையில் திருவள்ளுவர் “சற்று அதிர்ஷ்டம்

Page 15
一22一
செய்தவர் என்றே கொள்ள வேண்டியுள்ளது. அல்பேட் சுவைட் சரின் ஆய்வு திருக்குறளை உலகின் முக்கிய சிந்தனைக் கருவூலங் களில் ஒன்ருக்கியுள்ளது.
இது தமிழை உலக அரங்கில் வைத்துப் பார்க்கும்பொழுது காணப்படுவன பற்றியது. தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை அறி வதற்கு இவை உதவும் என்பது உண்மைதான். ஆனல் இவற் றிலும் முக்கியமானது தமிழின் சர்வ தேசியத் தன்மையை, அதாவது தமிழ்ப் பண்பாட்டின் உலகப் பெருநோக்கை அறிவது தான.
மேற்குலகத் தொடர்பின் காரணமாகத் தமிழ்ப்பண்பாட்டை நாம் உற்று நோக்கத் தொடங்கிய பொழுது, நாம் மீளக்கண்டு பிடித்துக் கொண்டவற்றுள் மிக மிக முக்கியமானவை, தமிழ் இலக்கியத்திலுள்ள சர்வதேசியப் பொதுமை, சனநாயகப் பண்பு, மானுடப் பண்பு ஆகியனவையாகும்.
வேறுபடும் வரலாற்றுச் சூழல்களிற் கூறப்பட்டிருந்தாலும், கணியன் பூங்குன்றனின் ‘யாதுமூரே யாவரும் கேளிர்", திருக் குறளின் அரச இலக்கணங்கள், கம்பனின் நாட்டு வருணனை ஆதியன சர்வதேசியப் பொதுமையை ஏதோ ஒரு வகையில் வற் புறுத்துவனவாகவே உள்ளன.
அடுத்தது, தமிழிலக்கியத்தின் சனநாயகப் பண்பாகும். இந் தத் தேடுதலில் பல்லவர்காலத்துக்கு முந்தியனவும், சோழர் காலத் துக்குப் பிந்தியனவுமான இலக்கியங்கள் முனைப்புறுத்தப்படுவது இயற்கையே. ஏனெனில் இவற்றில்தான் முறையே இயல்பான தமிழ் நிலைப்பாட்டையும், பேரரச அதிகாரத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் தன்மையையும் காணலாம். தமிழிலக்கிய மரபின் சனநாயக அடிப்படையை எடுத்துக் காட்டுவதில் காலஞ்சென்ற திரு. வி. க., பேராசிரியர் தெ. பொ. மீனட்சிசுந்தரம், ஜீவா னந்தம் ஆகியோர் முன்னணியில் நின்றனர். சிலப்பதிகாரத்தை தெ. பொ. மீ. குடிமக்கள் காப்பியம் என்ருர். தமிழின் தொல் சீர் இலக்கியங்கள் (பல்லவருக்கு முன்னும் சோழருக்குப் பின்னும் இடையில் பக்தி இலக்கியங்களிலும்) நாட்டார் இலக்கிய அமைப் பினைப் பெரிதும் அடியொற்றிச் சென்றுள்ளமை தழிழிலக்கியத் தின் சனநாயக வேர்களை இனங்கண்டு கொள்வதற்கு உதவு இன்றன என்பன இப்பொழுது பெரிதும் வற்புறுத்தப்படுகின்றது.

- 23
மேற்குலகத்தின் நவீன கருத்தியற் பெறுமானங்களில் முக்கிய மானது Humanism எனப்படும் மானுடவாதமாகும். தமிழ்ப் பண்பாட்டில், தமிழ்ச் சிந்தனையில், தமிழ் இலக்கியத்தில் இப் பண்பு பெரிதும் வற்புறுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கிய மர பிலும், தொடர்நிலைச் செய்யுள் மரபிலும், பக்தி இலக்கிய மர பிலும் (சிறப்பாக ஆழ்வார் பாடல்களில்) சுட்டப்பெறும் மணி தாபப் பெறுமானங்கள் இன்றைய இலக்கிய விமரிசகர்களால் வற்புறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்வது உண்மையில் வியாக்கியானத்தின் பாற் பட்ட ஒரு முயற்சியேயாகும். அதாவது பண்டைய சிந்தனை களுக்கு இன்றைய தேவைகளுக்கேற்ற விளக்கத்தை - வியாக்கி யானத்தைக் கொடுக்கின்ருேம் என்பது உண்மையே. ஆனல் இதனை ஏன் சொல்கின்ருேம் என்பதுதான் முக்கியமானதாகும்.
இரண்டு வழிகளில் இவ்வகை விளக்கங்கள் முக்கியமாகின்றன.
முதலாவது நவீன உலகின் தொடர்ச்சியான முன்னேற்றத் துக்குத் தமிழ் பயன்படத்தக்கது என்பதாகும். அதாவது நவீன முன்னேற்றத்துக்குத் தமிழ்பயன்படாது என்ற கருத்தை விடுத்து. தமிழ்பண்பாட்டைச் சரியாக விளங்கிக் கொண்டால், அது நமது நவீன முன்னேற்றத்துக்கு தடையாக இருக்காது என்பதாகும்.
இரண்டாவது, முதலாவதனடியாக வருவது. தமிழ், நவீன முன்னேற்றத்துக்குத் தடையாக அமையாது என்ருல், அந்த மரபில் நின்றுகொண்டே நாம் புதுமைகளை மேற்கொள்ளலாம். புதுமையின் அத்தியாவசியம் காரணமாக நமது பாரம்பரியத்தை நமது அடிவேர்களைக் கல்வி அறிய வேண்டுவது அவசியமில்லை என்பதை இத்தகைய விளக்கங்கள் காட்டுகின்றன.
இந்தக் கட்டத்திலேதான் நாம் தமிழ்ப் பண்பாட்டினைக் *கண்டு பிடிக்கும்" அல்லது "மீளக் கண்டுபிடிக்கும் நிலையிலிருந்து மேற் சென்று அது நவீனவாக்கத்துக்கு எவ்வாறு உதவுகின்றது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாகின்றேம்.
தமிழ்ப் பண்பாட்டின் அமிசங்கள் என இன்று நாம் எடுத் துக் கூறுபவை, தமிழர்களைப் பின்தங்கியவர்களாக வைக்கவிடாது அவர்களை முற்போக்குப் பாதையில் இட்டுச் செல்வதற்கு உதவு பவை உந்துதல் தருபவை எனக் கருதப்படுபவையே.

Page 16
- 24
இதனலே தான் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை அமிசங் களாகக் கருத்து நிலைகளை முன்வைத்துள்ளோம். நடத்தைகளை, சடங்குகளைப் பண்பாட்டின் அமிசங்களாகக் கூறது. பெறு மானங்களை கருத்துக்களைப் பண்பாட்டின் அமிசங்களாக எடுத் துக் கூறுவது இதனலேயே.
தமிழ்ப் பண்பாட்டின் கருத்துநிலை அமிசங்கள் தமிழ் மக் களின் நவீன மயப்பாட்டைத் தடுக்காது, அதற்கு உதவும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பின், அந்த நவீன மயப்பாட் டுக்குத் தமிழ்மொழி எவ்வாறு தயராக்கப்பட்டுள்ளது என்பதை யும், அந்தப் பணியில் மேற்குலகின் பங்கு யாது என்பதையும் மிகச் சுருக்கமாகப் பார்த்தல் பயன்தரும்.
இன்றைய உலகில் அச்சுமுறைமையை நவீனத்துவத்தின் முதற்படியாகக் கருதுவர். தமிழை அச்சு உலகுக்கு அறிமுகஞ் செய்வதற்கு வேண்டிய தயார் நிலையை ஏற்படுத்தியவர்கள் கிறித் தவ ஊழியர்களே. அவர்கள் காட்டிய வழியிலே சென்று, அவர் கள் அச்சிடாத பழந்தமிழ் நூல்களைத் தமிழ்மக்கள் 1835க்குப் பின்னர் அச்சிட்டுக் கொண்டனர். எழுத்துச் சீர்திருத்தம் என்பது உண்மையில் எளிமையான நவீனமயப்பாட்டுக்கான ஒரு கோரிக் கையேயாகும். பகுத்தறிவு வாதத்தைச் சமூக சீர்திருத்தத்துக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்ற ஈ. வே. ராமசாமி நாயக்கர் எழுத்துச் சீர்திருத்தத்தையும் வற்புறுத்தியது இயை பான நடவடிக்கையேயாகும்.
தமிழின் நவீனமயப்பாட்டுக்கான முயற்சிகள் விஞ்ஞானத் தைத் தமிழிற் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் வைத்தியம் மூலம் தேவ ஊழியம் செய்த ஈ. கிறீன் முதல் பலர் இதனைச் செய்து வருகின்றனர். மொழிபெயர்ப்பினல் மாத்திரம் ஒரு மொழியில் ஒன்றைச் சேர்த்து விடமுடியாது. அவ்வாறு சேர்க்கப்படவேண்டியது அந்த மொழி யின் மண்ணிலிருந்து கிளம்பவேண்டும் தமிழ்நாடு தொழிநுட்ப மயப்படுத்தப்படாது தமிழை விஞ்ஞானத் தமிழாக்கி விடமுடி Lfgl. -
தமிழ்நாட்டின் பன்முகப்பட்ட தொழிநுட்ப வளர்ச்சி தமிழை நவீனமயப்படுத்துவதை இன்று காணலாம்.

இந்த நவீன மயப்பாட்டுக்கு ஒரு முக்கியமான உள்ளீடு ஒன்று உண்டு. இந்த நவீன மயப்பாடு சனநாயக அடிப்படை யில் செல்லுதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் நவீன மயப்பாடு நிச்சயப்படுத்தப்படும். மொழி பொது உரிமையான தால் அடிப்படைப் பொதுமை வலுக்கும்பொழுதுதான், மொழி யின் வளமும் பெருகும்.
இந்தப் பேருண்மையைப் பாரதி உணர்ந்திருந்தான். தமிழும் தமிழ்ப்பண்பாடும் அடிப்படையான சனநாயகத்துக்கு, மக்கள் ஈடுபாட்டுக்கு இடம் கொடுக்கும்பொழுதுதான் தமிழும், தமிழ ரும் முன்னேற முடியுமென்பதைப் பாரதி, தனது பாஞ்சாலி சப தத்தின் முன்னுரையிற் கூறுகிருன்.
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதிலே அறிந்து கொள் ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் தாய்மொழிக்கு புதிய உயிர்தருவோணுகின்றன் ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல் லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுடவதுன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் * வேண்டும்" என்கிறன்.
இதிலே வரும் "பொது ஜனங்கள்" "தாய்மொழிக்குப் புதிய உயிர்' 'ஒரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள்" என்ற தொடர்களை ஊன்றிக் கவனிக்க வேண்டும், இவை தமிழை நவீன மயப்படுத்துவதன், சனநாயகப்படுத்துவதன் குரல்கள். தமிழ் நவீனமயப்பாட்டின் தேவையையும், சனநாயகப்படுத்து வதன் அத்தியாவசியத்தையும் உணர்த்தியது மேற்குலகத் தொடர்புதான்.
ஆங்கிலக் கல்வியையும், ஆங்கில முறைமைகள் பலவற்றை யும் கண்டித்த பாரதியே, இதனைக் கூறுகிறன். மேற்குலகின் தாக்கத்தால் தமிழ் அமிழ்ந்துவிடாது காப்பற்றப்படுவதற்கு மேற் குலகத்தொடர்பின் வழிவந்த சவால்களுக்கு நாம் முகம் கொடுத்த முறையே காரணமாகும்.
மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட தமிழ்ப்பண்பாடு தமிழின் தொடர்ச்சியை நிச்சயப்படுத்துகின்றது. இந்தப் பணியில் மேற்
குலகின் பங்கு கணிசமானது.
O

Page 17

tamgoogie) - mae uoso