கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வன்னியர்

Page 1


Page 2


Page 3

இந்நூலில்
முன்னுரை ●登舜 அணிந்துரை
முதலாம் பகுதி
வன்னியர் தோற்றம் a (அ) இலக்கியத்தில் வன்னியர் . (ஆ) தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்
தென்னகத்து வன்னிமைகள் .
ஈழத்து வன்னிமைகள் 1 8 (அ) தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிமைகள் (ஆ) வன்னிநாடுகளின் தோற்றம் (இ) திருமலை வன்னிமைகள் (ஈ) முக்குவ வன்னிமைகள்
(க) மட்டக்களப்பு வன்னிமை (உ) புத்தளத்து வன்னிமை
ஈழத்து வன்னிமைகள் 11
(அ) தோற்றுவாய் a g s s * á
/ஆ) அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்
இரண்டாம் பகுதி
பரராசசேகர மகாராசாவின் திருப்பணி
கூறும் பட்டயம்
கயிலை வன்னியனுர் மட தர்மசாதனப் பட்டயம் . . . . .
நல்ல மாப்பாண வன்னியனின் ஒலை
17
7
20
25
33
33
34
38
43
43 45
53
53 55
65
SI
97
வன்னியர் மடாலய தர்மஸாஸ்னப் பட்டயம் 103

Page 4

சமர்ப்பணம்
வட இலங்கை வரலாறு பற்றிய பல மூலாதாரங்களைத் தேடி ஆராய்ந்து தர்க்கரீதியாகப் பல கட்டுரைகளையும் நூல்களேயும் எழுதி அரும்பணி புரிந்த
சுவாமி ஞானப்பிரகாசரின் நினைவிற்குக்
காணிக்கையாக இந்நூலைச் சமர்ப்பிக்கின்ருேம்,

Page 5

மு ன் னு ரை
-ra-1S gap
தென்னகத்திலும் ஈழத்திலுமிருந்த இராணுவ அமைப் புக்களில் வன்னியர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். கல்லா டஞ் சொல்வதுபோல நாற்படையிலும் வன்னியர் சேவை புரிந்து வந்தபோதும் படைகளிலிருந்த வன்னியருட் பலர் வில்லாளிகளாகவே இருந்தனர்.
வன்னியப் படைகளின் தலைவராயிருந்த, வன்னியநாயன் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்ற பிரதானிகள் சோழப் பேரரசிற் சாமந்தராகி, அப்பேரரசு தளர்வுற்ற காலத் திலே குறுநிலமன்னராக எழுச்சிபெற்றனர். பன்னிரண்டாம் நூற்ருண்டிலே தோன்றிய தென்னக வன்னிமைகள் பதின ரும் நூற்றண்டுவரை நிலைபெற்று வந்தன. விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரின் ஆட்சியிலே தொண்டை மண்டலத்திலுள்ள வன்னிமைகள் அழிந்தொழிந்தன.
பொலநறுவைக் காலத்திலும் (993-1215) அதன் பின் பும் தென்னகத்திலிருந்து வன்னியர் ஈழநாட்டிற்கு வந்தனர். ஈழத்தில் வன்னியர் வசமிருந்த படைப்பற்றுக்கள் பல வன்னிமைகள் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்தன. பொல நறுவை அரசு அழிவுற்றதும் வன்னிநாடுகள் என வழங்கிய பல குறுநில அரசுகள் எழுச்சிபெற்றுப் பல நூற்றண்டுக ளாக ஈழ வரலாற்றிலே சிறப்பிடம் பெற்றிருந்தன. இவை வடஇலங்கையிலும் மேற்கிலே சிலாபம், புத்தளம் முதலிய இடங்களிலும் கிழக்கிலே திருகோணமலை, பட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் வளர்ச்சியடைந்திருந்தன,
இச்சிறு நூல் வன்னியரது வரலாற்றையும் வன்னிநாடு களின் வரலாற்றையும் மிகச் சுருக்கமாகக் கூறுகின்றது; வன்னியரின் தோற்றம், வன்னிநாடுகளின் வரலாறு என்ப வற்றிலுள்ள பிரதான கட்டங்களே நூலில் விளக்கப்பட் டுள்ளன. இந்நூலின் இரண்டாம் பதிப்பில் வன்னிநாடுக ளின் வரலாறு, சமூக அமைப்பு. சமூக வழமைகள் என்பன விரிவான முறையிலே இடம்பெறும்,

Page 6
இந்நூலை எழுதுமாறு ஊக்குவித்து, எழுதிய பின் பல நாட்களாகப் பிரதிகளைப் பார்த்துப் பிழைகளை நீக்கி நூல் சிறப்பாக அமைய வழிகாட்டிப் பின் அணிந்துரை அளித்து நூலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளுஞ் செய்து பேராதர வளித்த தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி சு. வித்தியானந் தன் அவர்களுக்கு என் நன்றிகள் பல.
கயிலாய வன்னியனுர் தர்மசாதனப் பட்டயத்தில் வரும் கிரந்த எழுத்துக்களை இலகுவில் வாசிப்பதற்கும் அதில்வரும் வடமொழிப் பகுதிகளைப் புரிந்து கொள்வதற்கும் உதவி புரிந்த யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரையாளர் வித்துவான் இ. பாலசுப்பிரமணியம் (சிறப்புக் கலைமாணி, இலங்கை) அவர்களுக்கும், யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரையாளர் திரு. வி. சிவசாமி அவர்களுக்கும், அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபர் பண்டிதர் மு. சதா சிவம் அவர்களுக்கும், இந் நூலைச் செவ்வனே அச்சேற்றிய சைவப்பிரகாச அச்சகத்தாருக்கும் நூலாசிரியரின் நன்றி கள் பல
சி. பத்மநாதன் வரலாற்றுத்துறை 5-I I-70
இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை.

அணிந்துரை
- 4-cKSSSX-in
கலாநிதி சு. வித்தியானந்தன் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர்.
தமிழ்பேசும் மக்கள் இன்று, ஈழத்தின் பல பாகங்களிலும்
வாழ்கின்றனர். இவர்கள் ஈழத்தின் தொல்குடி மக்களாக இருநதபோதும் இவர்களது வரலாறு இதுவரை ஒழுங்கான முறையில் எழுதப்படவில்லை. தமிழர் அரசர்களாகவும் குறுநில மன்னராகவும் ஈழத்தில் ஆட்சிசெய்து வந்திருக்கின்றனர். இங்கு. ஆண்ட குறுநிலமன்னரில் வன்னியர் குறிப்பிடத்தக்கவர்.
இவ்வன்னியர்பற்றிச் சில நூல்களும் கட்டுரைகளும் வெளி வந்தபோதும் இதுவரை எவராவது ஈழத்தின் பல பாகங் களிலுமிருந்த வன்னிமைகள்பற்றி ஆராய்ச்சிநூல் ஒன்றும் எழுத வில்லை அடங்காப்பற்று வன்னியர்மட்டும் வன்னியர் அல்லர் திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் போன்ற வேறு பிர தேசங்களிலும் வன்னியர் ஆட்சி இருந்து வந்திருக்கின்றது;
மேலும், வன்னியர் தமிழகத்திலிருந்தே ஈழத்திற்கு வந்த னர் தமிழக வரலாற்றினை எழுதிய ஆசிரியர்கள் கூட அங்கி ருந்த வன்னியர் பற்றி ஆராயவில்லை. அவர்கள் அங்கு படைத் தலைவராக இருந்து, குறுநில மன்னராக விளங்கிச் சுயாட்சியும் செய்துவந்திருக்கின்றனர். இந்த வரலாறு எந்தத் தென்னிந்திய வரலாற்று நூலிலும் இடம்பெறவில்லை;
இக்குறைகளை ஒரளவு நீக்கும் முன்னேடி நூலாக வெளிவந் திருப்பதே "வன்னியர்" எனப் பெயரிய இந்நூல். இதன் ஆசிரியர் கலாநிதி சி, பத்மநாதன் அவர்கள் வன்னியரின் தோற் றத்தினையும் தமிழகத்திலும் ஈழத்திலுமுள்ள வன்னியரின் வர லாற்றையும் மிகச் சுருக்கமாக இதிலே ஆராய்ந்திருக்கின்ருர்; இதுவரை வெளியிடப்படாத பல பட்டயங்களைத் தமது ஆராய்ச் சிக்குப் புயன்படுத்தியுள்ளார். தமது கூற்றுக்களுக்குத் தக்க ஆதாரங்கள் தந்து இச்சிறு நூலை எழுதியுள்ளார்.
கலாநிதி பத்மநாதன் அவர்கள் பிறந்த தமிழ் அறிவுடைய வரலாற்று ஆசிரியர், ஈழத்துத் தமிழர் வரலாறு எழுதுவதற்கு
2

Page 7
10 வன்னியர்
மிகுந்த தகுதியுடையவர். யாழ்ப்பாண அரசுபற்றி ஆராய்ச்சி நூல் எழுதி இலண்டன் பல்கலைக் கழசக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அவர் அக்கலாநிதிப் பட்டத்திற்கு எழுதிய "யாழ்ப் பாண அரசு' என்ற நூலில் இரண்டாவது இயலில் பொலநறுவை அரசின் வீழ்ச்சியும் வன்னித் தலைவரின் எழுச்சியும் பற்றி எழுதி யுள்ளார். அதனை அடிப்படையாக வைத்தே இந் நூல் ஆக் கப்பட்டுள்ளது.
இந் நூல் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. இரண்டாம் பகுதி நூலாக்கத்திற்குதவிய பட்டயங்களையும ஆவணங்களையும் கொண்டது; முதலாம் பகுதி வன்னியர் வரலாற்றைக் கூறுவது.
தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள வன்னியர் வரலாறு நான்கு இயல்களில் அமைந்துள்ளது. இவர்களின் தோற்றம் பற்றி இலக்கியம் கொண்டும், தென்னிந்திய வரலாறுகொண் டும் ஆராய்வதே முதலாம் இயல். கல்லாடம், விலை எழுபது, வன்னியர் புராணம், வன்னியர் குல நாடகம், வன்னியர் குலக் கலியாணக்கொத்து என்னும் நூல்கள் வன்னியர் தோற்றம் பற்றிக் கூறுகின்றன, பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கல்லாடம் கூற, ஏனைய நூல்கள் வன்னி யரை அக்கினி குலச் சத்திரியர் என்றும் யாக அக்கினியிலிருந்து தோன்றினரென்றும் கூறுகின்றன.
விசய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் பின், ஒவ்வொரு சமு கத்தினரும் தத்தம் சமுகத் தொன்மையையும் சிறப்பையும் நிலை நாட்ட இதிகாச புராணக் கதைகளைக் கொண்டு நூல்கள் இயற்றினர்கள் என்றும், வன்னியர் தம் பழைய வரலாற்றை நிலைநாட்ட இயற்றிய அத்தகைய நூல்களே மேலே கூறப்பட்ட நூல்கள் என்றும் கலாநிதி பத்மநாதன் கருதுகின்ருர், எனி னும் அவற்றை ஓரளவு ஆதாரமாகக் கொண்டு வன்னியரின் தோற்றத்தை விளக்கலாமென ஆசிரியர் கொள்கிருர்,
படைக்கலப் பயிற்சியைச் சிறப்புத் தொழிலாக உடைய மக்கட் கூட்டமாகவும் குறுநில மன்னராகவும் இருந்தமையா லேயே அவர்களை இந் நூல்கள் சத்திரியரெனக் கூறின. காட வர் எனக் கருதப்படும் வன்ய என்ற வடசொல்லி லிருந்தே வன்னியர் என்ற சொல் தோன்றியிருக்கவேண்டுமென்றும், ஆதி காலத்தில் வன்னியர் காடுகள் நிறைந்த முல்லைநிலத்தில் வாழ்ந் தார்கள் என்றும் ஆசிரியர் கொள்கின்றர்.

அணிந்துரை
தமிழகத்து வன்னியர் பற்றித் தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்" என்ற பிரிவில் ஆசிரியர் கூறுகின்ருர். இவர்களின் ஆதி இருப்பிடம் தொண்டை மண்டலம் என்பது அவர்கொள்கை. இதற்கு ஆதாரமாக வன்னியர் வரலாற்றைக் கூறும் நாடோ டிக் கதைகளையும் கல்வெட்டுக்களையும் காட்டுகின்றர். காஞ்சி யிலிருந்து ஆண்ட பல்லவரின் படைகளிற் காடவராகிய வன்னி யர் தொழிலாற்றி இருக்கலாமென ஆசிரியர் ஊகிக்கின்ருர், சோழப் பெருமன்னர் காலத்திலேயே இவர்களைப்பற்றிய விரி வான சான்றுகள் கிடைத்துள்ளன.
வன்னியர் பற்றியும் வன்னியப் பற்றுக்கள் பற்றியும் பல குறிப்புக்கள் சோழப் பெரு மன்னரின் ஆவணங்களிற் காணப் படுகின்றன. இராணுவ சேவையிலிருந்த வன்னியப் படைக ளுக்குச் சீவிதமாக விடப்பட்ட நிலங்களே வன்னியப்பற்று என ஆசிரியர் கூறுகின்றர் வேளைக்காரப் படைகளின் தலைவர்களே வன்னிய நாயன் என்ற பட்டத்தைப் பெற்றனர் என்பதற்குச் சோழப் பெருமன்னர் காலத்துக் கிழியூர் மலையமான்களின் கல்வெட்டுக்களை ஆசிரியர் ஆதாரமாகத் தருகின்ருர்,
சோழப்பெருமன்னர் காலத்திற் படைத்தொழிலிற் சிறப் புற்று விளங்கியதுபோல விசயநகர மன்னர் காலத்திற் சிறப் புடன் விளங்க வன்னியரால் முடியவில்லை. காரணம், விசய நகர மன்னர் கன்னட தெலுங்குப் படைகளையே கூடுதலாகப் பயன்படுத்தினர். எனவே, சூழலுக்கு ஏற்ப வன்னியர் விவசா யத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
*தென்னகத்து வன்னிமைகள்" எனப் பெயரிய இரண்டாம் இயல், தமிழகத்திலிருந்த வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. முதலாம் இராசேந்திரன் இரண்டாம் இராசேந்திரன் ஆகி யோர் கல்வெட்டுக்களிலிருந்து வன்னியர்கள் பிரதானிகளாக இருந்தனரென அறியலாம். இரண்டாம் இராசராசன் மூன்ரும் குலோத்துங்கன் ஆகியோர் கல்வெட்டுக்களில் வன்னியர் பற்றிய குறிப்புக்கள் பல காணப்படுகின்றன. இவர்கள் வேளைக்காரரின் படைத்தலைவராக இருந்தனரென்றும் பெரிய உடையான், சேதியராயன், சற்றுக்குடா தான் போன்ற விருதுகளைப் பெற்றிருந் தனரென்றும் இக்கல்வெட்டுக்களால் அறியலாம். இவர்கள் குறு நிலமன்னராகி, முதலாம் குலோத்துங்கன் காலத்துக்குப்பின் பெருமளவு ஆதிக்கம்பெற்று விளங்கினர். சோழப்பெருமன்னர் காலத்திலே, கிழியூர் மலையமன்னர், பங்கலநாட்டுக் கங்கர், சாம்புவராயர் ஆகிய மூன்று குலந்துக் குறுநிலமன்னர் வன்னிய

Page 8
12 வன்னியர்
நாயன் என்ற விருதுடன் ஆட்சி செலுத்தினரென இக்கல்வெட் டுக்களின் துணைகொண்டு ஆசிரியர் நிறுவியுள்ளார்.
வன்னியர்களின் அதிகாரம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துவந்தது. சோழப் பேரரசு நலிவுபெற்ற காலத்தில், குறுநிலமன்னராகிய வன்னியர்கள் சுதந்திரமாக ஆளத்தொடங் கினர். சோழராட்சிக்குப்பின் இரண்டாவது பாண்டியப்பேரரசு நிலைபெற்ற காலத்தில் வன்னியர் பாண்டியராட்சிக்கு உட்பட் டிருந்தனர், பாண்டியப் பேரரசு தளர்வுற்ற காலத்தில், பாண் டியர்மேல் ஆதிக்கம் செலுத்திய மூன்ரும் வல்லாள தேவனகிய கொய்சளமன்னனின் ஆணைக்குக் கட்டுப்ப்ட்டிருந்தனர் வன்னி யர். விசயநகர மன்னர் காலத்திலே அம்மன்னர்களோடு வன் னியர் போர் நிகழ்த்தித் தோல்வியுற்றனரென ஆசிரியர் பல சான்றுகள் காட்டுகின்ருர், கிருஷ்ணதேவராயர்காலத்தையொட் டித் தமிழகத்து வன்னிமைகள் அரசியல் ஆதிக்கத்திலிருந்து அழிந்தொழிந்தன:
ஈழத்து வன்னிமைகள் இரு பகுதிகளாக இரண்டு இயல்க ளில் அமைந்துள்ளன. தமிழ், சிங்கள அரசுகளில் வன்னிகள், வன்னி நாடுகளின் தோற்றம், திருமலை வன்னிமைகள், முக் குவ வன்னிமைகள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது முதற்பகுதி. இப்பிரிவுகளில் முக்குவ வன்னிமை என்ற பிரிவு மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என்ற இரு உட்பிரிவுகளாக அமைந்துள்ளது:
ஈழத்து வன்னிமைகள் முதலாம் பகுதியில் "தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிகள்" என்ற பிரிவில் ஈழநாட்டு வரலாற்றில் பதின்மூன்ரும் நூற்ருண்டில் வன்னி நாடுகள் சிறப்பிடம் பெற் றிருந்தமையை ஆசிரியர் கூறுகிறர். பொலநறுவையைத் தலை நகராகக் கொண்டு ஈழம் முழுவதினையும் ஒரே மன்னர் ஆண்ட வரலாறு பதின்மூன்ரும் நூற்றண்டில் ஏற்பட்ட கலிங்கமாக னது படையெடுப்போடு முற்றுப்பெறுகின்றது. அதன்பின் வடக்கிலே ஓர் அரசும், தெற்கிலே ஓர் அரசும் பல குறுநில அரசுகளும் தோன்றின மாகனுக்குப் பின் வட இலங்கையிற் பாண்டியர் ஆதிக்கம் இடம்பெற்றுப் பதின்மூன்றும் நூற்ருண்டின் இறுதியில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி ஆரம்பமாகியது: அதன் விளைவாக இடம்பெற்றதே யாழ்ப்பாணப் பட்டினம் என்ற தமிழரசு இத்தமிழரசின் காலத்திலே பல வன்னிநாடுகள் இருந்தன,

அணிந்துரை 3
இதே காலத்தில், அதாவது மாகனது ஆட்சிக்குப் பின், பதின்மூன் மும் நூற்ருண்டிலிருந்து சிங்கள அரசர் முதலிலே தம்பதெனியாவிலிருந்தும்; பின் குருநாகல், கம்பளை கோட்டை முதலிய நகர்களிலிருந்தும் ஆட்சிசெய்தனர். அவ்வாட்சியிலும் வன்னி எனப்பட்ட குறுநில அரசுகள் வளர்ச்சியடைந்திருந்தன.
இவ்வ்ாறு பதின்மூன்ரும் நூற்ருண்டில் ஈழத்தில் வன்னி மைகள் பல காணப்பட்டபோதும், அந்நூற்ருண்டுக்கு முன்பே வன்னிமைகள் தோன்றியிருந்தன என்பதனை "வன்னி நாடுகளின் தோற்றம்" என்ற பிரிவு விளக்குகின்றது. ஈழத்து வன்னிமை களின் தோற்றத்தை வேளைக்காரப் படையின் வரலாற்றேடு ஆசிரியர் இணைத்துநோக்குகின்ருர், வேளைக் காரப் படைகள் ஈழத்தின் சில பகுதிகளிற் சுயாட்சி நடத்தியமையை நாம் கான லாம். வேளைக்காரருக்குக் கொடுக்கப்பட்ட படைப்பற்றுக்கள் வன்னிமைகள் உருப்பெறுவதற்குக் காலாக இருந்தன. சோழ ராட்சிக் காலத்திலும் அதற்குப் பின்பும் வன்னிப் பற்றுக்கள் பல தோன்றிப் பதின் மூன்ரும் நூற்ருண்டின் பிற் பகுதியில் வளர்ச்சி யடைந்திருந்தன என ஆசிரியர் கூற்றுக்களால் அறியக் கிடக்கின்றது.
இவ்வாறு வளர்ச்சியுற்ற வன்னிமைகளில் ஒன்றனைப்பற்றித் திருமலை வன்னிமைகள்" என்ற பிரிவு கூறுகின்றது. கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டினையும், திருமலைக் கோட்டையின் முன்பாக இருக்கும் கற்றுாணிலுள்ள மொழித் தொடர்களையும் அக் கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டினையும் ஆதார மாகக் கொண்டு குளக் கோட்டனகிய சோழ கங்கன் காலத்திலே திருமலையில் வன்னிமை இருந்தமையை ஆசிரியர் எடுத்துக் காட்டு கின்றர். கங்குவேலிக் கல்வெட்டு, திருமலை வன்னியைைரக் குறிப்பிடுகின்றது. வெருகல் கல்வெட்டிலிருந்து கயிலே வன்னி யனர் கோட்டியாரம்பத்தை ஆண்டமை புலனகின்றது. பதி னன்காம் நூற்றண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கர வர்த்திகள் திருகோணமலை வன்னியர் மேல் ஆதிக்கம் செலுத்தி யமையையும் பதினைந்தாம் பதினரும் நூற்றண்டுகளில் இம் மன் னர்கள் திருமலை வன்னியரோடு திருமணத் தொடர்பு கொண்ட மையையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். Այո փւն பாணத்தரசரும் திருமலை வன்னியரும் போத்துக்கேயரை எதிர்ப் பதில் ஒருவருக்கொருவர் துணையாயிருந்தனர். சங்கிலி அரச னின் மரணத்துக்குப் பின் கண்டியரசரின் ஆதிக்கம் திருகோண மலை வன்னியிலே இடம்பெறலாயிற்று,

Page 9
14 வன்னியர்
முக்குவ வன்னிமைகளை மட்டக்களப்பு வன்னிமை, புத்த ளத்து வன்னிமை என இரு பிரிவுகளாக ஆசிரியர் வகுத்துக் கூறுகிருர், பதின் மூன்ரும் நூற்ருண்டில் கலிங்க மன்னன் மாகன், முக்குவரை மட்டக்களப்புக்கு அழைத்து வந்து அவர்களின் படைத் தலைவருக்கு வன்னிபம் என்ற பட்டத்தை அளித்தா னென மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. சீத வாக்கை யிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று குடியேறிய இஸ்லாமிய குடும்பங்களின் வரலாற்றைக் கூறும் ஒரேட்டுப் பிரதி, மட்டக் களப்பில் அதிகாரம் செலுத்திய ஏழு வன்னியர்பற்றிக் குறிப் பிடுகின்றது. தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையையும் ஆசி iհայrՒ ஆதாரமாகக் காட்டுகின்றர். هي
புத்தளத்து வன்னிமை" என்னும் பிரிவு, ஒல்லாந்த ராட் சிக்காலம்வரை புத்தளத்திலிருந்த முக்குவ வன்னிமைபற்றிக் கூறுகின்றது. ஆரும் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலந்தொட் டுப் புத் தளத்து வன்னிமைபற்றிக் கிடைத்துள்ள குறிப்புக்களை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வரசன் (1413-1467) புத்த ளத்து வன்னிமையைக் கைப்பற்றிய வரலாறு "முக்கர ஹடன" என்ற நூலில் விவரிக்கப்படுகின்றது. பதினரும் நூற்றண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகளை ஆதாரமாகக்கொண்டு புத்தளத்தை ஆண்ட நவரத்தின வன்னியன்பற்றியும், நீதிமன்றத்தில் அங்கம் வகுத்த வன்னியர்பற்றியும் வன்னியர் பெற்றிருந்த சிறப்புரிமை கள்பற்றியும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
நான்காவது இயலாக அமைந்துள்ள ஈழத்து வன்னிமை இரண்டாம் பகுதி, யாழ்ப்பாணப் பட்டினம் என வழங்கிய தமிழரசில் அடங்கிய வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. யாழ்ப்பாண அரசு உள்ளடக்கியிருந்த வன்னிநாடு மன்னரி விருந்து திருகோணமலைவரை பரந்திருந்ததென்றும் அதன் இ2 இலாபம்வரை இருந்ததென்றும் சான்றுகள் தரப்படுகின் றன: பனங்காமம், முள்ளியவளை, கருநாவல்பத்து, கிழக்கு மூலை என்பன யாழ்ப்பாணத்து வன்னிக்குடியேற்றங்களில் முக் ஒனவையென குவேருேஸ் கூறுகின்றர். இரு வன்னிக் குடி யேற்றங்களைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இரண்டாவது வன்னிக் குடியேற்றம் பாண்டிநாட்டிலிருந்து வந்த 59 வன்னியரின் வருகையோடு ஏற்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலை கூறும் இக்குடியேற்றம் பற்றியே வையாபாடல் என்னுங் நூலும் கூறுகின்றது.
வையாபாடல் வன்னியர் குடியேற்றம்பற்றிக் கூறுவதை மேற்கோளாகக்காட்டி அமைந்ததே "அடங்காப்பற்றில் வன்னி

Mwr
அணிந்துர்ை 15
யர் குடியேற்றம்" என்னும் பிரிவு. வையாபாடல் கூறுவதை முற்ருக ஏற்காதுவிட்டாலும், வன்னியர் பலர் தென்னகத்தி லிருந்து வந்து வன்னிப் பிரதேசங்கள் பலவற்றைக் கைப்பற்றி ஆண்டதை வரலாற்று நிகழ்ச்சியாக ஆசிரியர் கொள்கின்ருர், வையா பாடலில் வரும் நிகழ்ச்சிகள் முதலாம் ஆரியச் சக்கர வர்த்தி காலத்தினை யொட்டியவையெனக் கருதுகின் ருர் இவ் வன்னியர் செயவீரசிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்ட சிங்கையாரியன், சங்கிலி போன்ற பலம்வாய்ந்த யாழ்ப்பாண மன்னருக்குத் திறைகொடுத்து ஆண்டனர். எனி னும் வன்னியர்கள் சுயாட்சி செலுத்தி, அதிகாரிகளை நிய மித்து, இறைவரிகளையும் பெற்றிருந்தனர்.
இந் நூலிற்குத் தனிச் சிறப்பும் மதிப்பும் அளிப்பது இதன் இரண்டாம் பகுதி. நூல் ஆக்கத்திற் குதவிய பட்டயங்களும் ஆவணங்களும் இப் பகுதியில் அடங்கியுள்ளன. முதலிரு பட்ட யங்களையும் முதன் முதல் வெளியிடும் பெருமை ஆசிரியருக்கே உரியது. அப் பட்டயங்கள், பரராசசேகர மகாராசாவின் பட்டய மும், கயிலாய வன்னியனர் மட தர்ம சாதனப் பட்டயமும் ஆகும்3 இவ் விரு செப்பேடுகளும் படம் பிடித்துப் பிரதி செய்து அச் சில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றை இக் கால முறையிற் குறியீடுகளுடன் பிழைகள் நீக்கிப் பதிப்பித்திருக்கின் முர். அவற்ருேடு இணைக்கப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு விளக்க வுரைகள் மிகவும் பயனுள்ளன.
அவ்விரு செப்புப் பட்டயங்களில் பரராசசேகர மகாாாசாவின் பட்டயம் யாழ்ப்பாணத்தையாண்ட பரராசசேகர மகாராசா சிதம்பரதரிசனம் செய்து, நிலம் வாங்கிப் பரராசசேகரன் மடத் தை அங்கு அமைத்து, நிவந்தங்களைக் கொடுத்து, யாழ்ப்பாணத்தி லுள்ள ஊர்களின் வருமானத்தையுங் கொடுத்து, மடதர்ம ஏற் பாடுகள் செய்தமைபற்றிக் கூறுகின்றது. கயிலாய வன்னியனுர் மடதர்மசாதனப் பட்டயம் சிதம்பரத்திலுள்ள பரராசசேகரன் மடத்திற்கு யாழ்ப்பாண வன்னியர் சென்று, தானம் கொடுத் தமைபற்றியது. பனங்காமம், கரிகட்டுமூலை மேல்பத்து, தென் னமரவடி, முள்ளியவள்ை ஆகியவற்றின் வன்னியரின் பெயர்களை இப்பட்டயம் தருகின்றது.
இரண்டாம்பகுதியில் வரும் நல்லமாப்பாண வன்னியனின் ஒலையும், வன்னியர்குல மடதர்மசாதனப் பட்டயமும் முன் வெளியானவை, இவற்றுள் நல்லமாப்பாண வன்னியனின் ஒலை முன்பு சுவாமி ஞானப்பிரகாசரால் வெளியிடப்பட்டது. இதில் ஆசிரியர் அதனை அவர் வெளியிட்டவாறு தந்து, விரித்து,

Page 10
i 6 வன்னியர்
விளக்கவுரைகூறி, வரலாற்றுக் குறிப்புக்களும் தருகின்ருர், வன் னியர்குல மட தர்மசாதனப் பட்டயம் முன்பு வன்னியர்புரா ணம் பதிப்பிக்கப்பட்டபோது அதனேடு இணைத்துப் பதிப்பிக் கப்பட்டது. இந்நூலிலுள்ள பதிப்பில் ஆசிரியர் விளக்கவுரை கூறி, பட்டயத்தில் வரும் வரலாற்றைச் சிலை எழுபது, வன்னியர் புராணம் ஆகிய நூல்களில் வரும் வரலாற்ருேடு ஒப்புநோக்கு கின்றர்.
இந்நூல் வன்னியர் பற்றிய சிறிய நூல்; ஆயினும் சிறந்த படைப்பு: ஆசிரியரின் முதல்நூல் வரலாற்று நூல்கள் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்கு முன்மாதிரி ஈழத்துத் தமிழ ரின் வரலாற்றை அறிவதற்குரிய சிறந்த வரலாற்று நூல்கள் இல்லையே என்ற குறையை இந்நூல் ஒரளவு நீக்குகின்றது; அவ ரின் முயற்சிகள் பிறரையும் இத்துறையில் வழிகாட்டும் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.
ஈழத்து எழுத்தாளர் இன்று ஒரு விழிப்புணர்ச்சி பெற்றி ருக்கின்றனர். தமது படைப்புக்களுக்கு அரசாங்கத்தின் ஆதர வும் வாசகரின் ஒத்துழைப்பும் பெருமளவு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய சூழலிலே, முக்கியமான ஒரு துறையிலே, தேவைக்கேற்ற நூலைக் கலாநிதி பத்மநாதன் படைத்திருக்கின் ருர், இந்நூல் விரித்து எழுதப்படவேண்டியது ஈழத்து வன்னியர்பற்றிய பெரிய நூலினையும், வேறுபல வர லாற்று நூல்களையும் அவர் எமக்கு ஆக்கித்தருவதற்கு நன்மக் கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் அன் ஞருக்கு நிறைய அளிப்பார்களென எதிர்பார்க்கின்ருேம்,
இலங்கைப் பல்கலைக்கழகம், சு வித்தியானந்தன்
பேராதனை. I-I I-1970,

வன்னியர் தோற்றம் 7
முதலாம் இயல் வன்னியர் தோற்றம்
வன்னியர் எனப்படும் சமூகம் தமிழகத்தின் வட பிரிவிற் பரந்து காணப்படுகிறது. சோழப் பேரரசரின் படையமைப்பில் வன்னியர் சிறப்பிடம் பெற்றிருந்த னர். முதலாம் ராஜராஜன் ஈழநாட்டைக் கைப்பற்றி யதை அடுத்து வன்னியர் சோழப் படைகளோடு ஈழத் திற்கு வந்தனர், ܫ
(அ) இலக்கியத்தில் வன்னியர்
கல்லாடம், சிலை எழுபது, வன்னியர் புராணம், வன்னியர்குல நாடகம், வன்னியர்குல கல்யாணக் கொத்து என்னும் நூல்கள் வன்னியரின் தோற்றம் பற்றிச் சில கருத்துக்களைக் கொண்டுள்ளன. இவற்றுட் கல்லாடம் தவிர்ந்த ஏனைய நூல்கள்யாவும் வன்னி யரின் தோற்றத்தையும் குலச் சிறப்புக்களையும் உட் பொருளாகக் கொண்டுள்ளன. இந்நூல்கள் யாவும் வன்னியர் படைக்கலப் பயிற்சியைத் தந்தொழிலாகக் கொண்டிருந்தனரென்பதை எடுத்துரைக்கின்றன.
பன்னிரண்டு பன்றிகளிலிருந்து நாற்படை வன்னி
யர் தோன்றினரெனக் கல்லாடம் செப்புகின்றது ஏனைய நூல்கள் வன்னியர் அக்கினிகுலச் கூடித்திரியரென்றும்,
இவர்சள் யாகாக்கினியிலிருந்து தோன்றினரென்றும் சொல்கின்றன. வன்னியரின் தோற்றம் பற்றிக் கூறு மிடத்து. "விதிகுலத்தோர் சிறப்புறச் செய்த வேள்விக் குச் சிறந்த வன்னி, உதிகுலத்தோராதலினலுயர் குலத் தோராமிவர்க்குத், துதிகுலத்தோரொவ்வாரே'2 எனச் சிலை எழுபதும்,
* பங்குவித் திங்களுத்திரந் தன்னில் பரமன்
முக்கணழல் விழியில் துங்கமா வேர்வை தோன்றிடக் கரத்திற் தோய்ந்து
செழுங்கழுநீரின் மலரைப்

Page 11
18 வன்னியர்
பொங்கமா மகத்திலாகுதி யியற்றிட
புனிதனுக்கு வகையீந்தார் (வ)ங்கண் வீரவன்னிய பூமன்னர்
பரிமீது தோன்றினனே, 8
என வன்னியர் புராணமுங் கூறுகின்றன.
சிவனர் கொடுத்த செங்கழுநீர் மலரைச் சம்புமா முனிவன் தனது அக்கினி குண்டத்திலிட்டபொழுது வன் னியர் தோன்றினரென்பது வரலாறன்றிப் புராணக் கதையே. தென்னகத்திலுள்ள செங்கழுநீர்ப் பற்றில் வன்னியர் வாழ்ந்ததினுலும். இராச புத்திரரின் தோற் றம் பற்றிய மரபுகளைத் தமது கதைகளுக்கு ஆதாரமா கப் புலவர் கொண்டதாலும் இக்கதைகள் தோன்றி யிருக்க வேண்டும்.4
பதினரும் நூற்றண்டளவில் விஜயநசரப் பேரரசு நிலைகுலையத் தென்னிந்தியச் சமூக வழமைகளும் அமைப் புக்களும் சீர்குலையத் தொடங்கின. அமைதியையும் வழக்காறுகளையும் நிலைநாட்டக்கூடிய அரசரின்மையால், சமூகப்பிரிவுகளுக்கிடையே உரிமைகள், பணிகள் என்ப வற்றையிட்டுச் சாதிப் பூசல்கள் மலிவுறத் தொடங் கின, இவ்வாருன சூழ்நிலையில் ஒவ்வொரு சமூகத்த வரும் தத்தம் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதற் காக இதிகாச புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு தத்தங் குலங்களின் பூர்வீக வரலாற்றை விளக்க முற்பட்டனர். இதனற் செங்குந்தர் புராணம், மறப்பாளர் புராணம், வன்னியர் புராணம், போன்ற நூல்கள் எழுந்தன. எனவே வன்னியர் புராணம், சிலை எழுபது போன்ற நூல்களில் வன்னியரின் பூர்வீக வர லாறு மறைவுற்றிருக்கின்றது.
வன்னியர் அக்காலத்திற் படைக்கலப் பயிற்சியைச் சிறப்புத் தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் குறு நில மன்னராகவுமிருந்த காரணத்தினுலே வன்னியரைச்

வன்னியர் தோற்றம் 19
கூடித்திரியர்களென நூல்கள் வருணித்தன. வன்னியரின்
சிறப்பை எடுத்துரைக்குமிடத்துச் சிலை எழுபது மேல்
வருமாறு கூறும்:
"படைத்துணைத் தலைவர் குலச்சிறப்பு விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார், நடையுடையார் மிடியுடைய நாவலர் மாட்டருள் கொன டயார், குடையுடையார் மலையமன்னர் குன்றவர் பல்லவர் மும்முப் படையுடையார் வணியச் பிறரென்னுடையார் பகரிரே'5
சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பது கவனித்தற்பாலது. சோ ழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்தி லாண்ட கிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின் றது. இக்குறுநில மன்னர் வன்னியரா யிருந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் ஆதாரமா யுள்ளன.
வன்னிபற்றிக் காலத்தால் மிக முற்பட்ட குறிப்பு பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ளது. 6 அந்நூல் குறிப் பிடும் வன்னிமன்றம் என்பது வன்னிமரத்தின் கீழ்க் கூடு கின்ற மக்கள்கூட்டத்தைக் குறிக்கின்றதோ அல்லது வன் னியர் கெழுமிய மன்றத்தைக் குறிக்கின்றதோ என்பதில் ஐயப்பாடுண்டு. வன்னியர் பற்றி ஆதாரபூர்வமான குறிப்புக்கள் சோழர்காலந் தொடக்கமே கல்வெட்டுக்க ளில் வருகின்றன.
காடவன் எனப் பொருள்படும் வன்ய என்ற வட மொழிப் பதத்திலிருந்தே வன்னியர் என்ற சொல் தோன்றியிருக்கவேண்டும்.? வன்னியர் மிக முற்காலத் திற் காடடர்ந்த நிலங்களிலே வாழ்ந்த முல்லைநிலத்து மக் களாக இருந்திருத்தல் கூடும். பத்தொன்பதாம் நூற்ருண் டில் மக்கென்வியிேைல சேர்க்கப்பட்ட ஏட்டுப்பிரதி களில் வரும் பில கதைகள் இக்கருத்துக்கு ஆதாரமாயுள் ᎧrᎢ Ꭷ8Ꭲ -

Page 12
20 வன்னியர்
(ஆ) தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்
வன்னியராண்ட சிற்றரசுகள் தொண்டைமண்டலத் திலே இருந்தன. மேலும் வன்னியர் பெருந்தொகையா கத் தொண்டைமண்டலத்தைச் சேர்ந்த ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களிலே காணப்படுகின்றனர். எனவே வன்னியரின் ஆதி இருப்பிடம் தொண்டைமண் டலமே என்று ஊகிக்கலாம். வன்னியர் வரலாற்றைக் கொண்ட நாடோடிக் கதைகள் ஆதிகாலத்திலே தொண் டைமண்டலம் குறும்பர்பூமி என வழங்கியதென்றும். அங்கு குறும்பரும் வேடரும் வாழ்ந்தனர் என்றும் கூறு கின்றன.?* சோழமன்னரின் ஆட்சி ஏற்பட்ட பின்பே அங்கு நாகரிக வளர்ச்சி துரிதமடைந்த தென்றும் இவை கூறுகின்றன. சங்ககாலத்திற் கரிகாலன் தொண்டை மண்டலத்திற் பல் மக்கட்கூட்டங்களை யடக்கித் தன்னட் சியை ஏற்படுத்தினன் எனப் பட்டினப் பாலை கூறுகின் றது. 8 சங்ககாலச் சோழர் மறைந்தபின் தொண்டை மண்டலத்திற் பல்லவராட்சி ஏற்பட்டது. பல்லவ மன் னர்கள் வலிமைபொருந்திய அரசினை ஏற்படுத்தினர்கள். பல்லவராட்சியில் காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்க ளாக்கப்பட்டன. விவசாயம் செழிப்புறச் சமூகவளர்ச்சி துரிதமடைந்தது, முல்லைநில மக்களிடையிலும் பண் பாட்டு வளர்ச்சி ஏற்பட்டது.
பல்லவ அரசு நிலைத்தகாலத்தில் அதனை வடக்கி லிருந்து முதற் சாளுக்கியரும் பின் ராஷ்டிரகூடரும். தெற்கிலிருந்து பாண்டியரும் மீண்டும் மீண்டும் பல தடவை தாக்கினர். 9 இவ்வாரு ன சூழ்நிலையிற் பல்லவ மன்னர்கள் ஒரு வலிமைபொருந்திய படையை அமைக்க வேண்டி யிருந்தது. வேடர் முதலான முல்லைநிலத்த வரையும் பல்லவர் தம் படைகளிலே சேர்த்திருத்தல் கூடும் அர்த்த சாஸ்திரம் முதலான நூல்களும் அரசர்

வன்னியர் தோற்றம் 21
படைகளை அமைக்குமிடத்து வனவாசிகளையும் மலைவாசி களையுஞ் சேர்த்துப் படைக்கலப் பயிற்சியளிக்க வேண்டு மென்று கூறுகின்றன. 10 காடவரான வன்னியர் பல்ல வரின் படையிற் சேர்ந்து படைக்கலப் பயிற்சியைத் தம் சிறப்புத் தொழிலாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
சோழப்பெரு மன்னரின் ஆவணங்களில் வன்னியர் பற்றியும் வன்னிய பற்றுக்கள் பற்றியும் குறிப்புக்கள் வருகின்றன.11 இராணுவத்திற் சேவகம் புரிகின்ற வன் னியப் படைகளுக்கு ஜீவிதமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களே வன்னிய பற்றெனக் கூறப்பட்டிருத்தல் வேண்டும் 12 சோழப் பெருமன்னர் காலத்துக் கிழியூர் மலையமான்களின் கல்வெட்டுக்களிலே வன்னியநாயன் என்ற விருதினைப் பெற்றிருந்த பிரதானிகளோடு வேளைக் காரர் ஏற்படுத்திய உடன்படிக்கைகள் பற்றிப் பல குறிப்புக்கள் வருகின்றன.18 இவ்வேளைக்காரர் தமது தலைவனை எத்தருணத்திலும் பாதுகாப்பதாகவும் தம் தலைவன் இறக்குமிடத்து தாமும் உயிர்நீப்பதாகவும் பிரதிக்ஞை செய்தனர். 14 இவ்வாருண வேளைக்கார ரையே சில கல்வெட்டுக்கள் ஆபத்சகாயினரெனக் குறிப்பிடுகின்றன. ஆபத்சகாயினரென்ற பட்ைப்பிரிவி னருக்கும் பாண்டியப் படையில் இடம்பெற்ற தென்ன வன் ஆபத்துதவிகள் என்போருக்குமிடையில் ஒரு தொடர்பு காணப்படுகின்றது.15
பதின்மூன்றம் நூற்றண்டுப் பாண்டிய மன்னரின் ஆவணங்களில் வரும் பெரும்படையோர் என்ற சேனை வன்னியர் வட்டமென்ற குழுவினையுங் கொண்டிருந் மதுரைச் சுல்தான்களாண்ட காலத்தைச் 16. القوتلي சேர்ந்த கல்வெட்டுக்களிலும் வன்னியர் பற்றிய குறிப் புகளுள்ளன.17

Page 13
22 வன்னியர்
வன்னியர் நாயன் என்ற விருதினைப் பெற்றிருந்த மலையமான்களின் படைகளில் வேளைக்காரர் இடம்பெற் றிருந்தனர் எனவே வேளைக்காரப் படைகளின் தலைவர் களே வன்னிய நாயன் என்ற பட்டத்தைப் பெற்றன ரெனவும் ஊகிக்கலாம் அவ்வாருகில் வேளைக்காரப் படையில் வன்னிய சமூகத்தவரும் இடம்பெற்றிருத்தல் கூடும். வேளைக்காரருக்கும் வன்னிய நயன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த பிரதானிகளுக்குமிடையி லுள்ள தொடர்பு ஈழத்து வன்னிமைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவுகின்றது.
சோழப் பேரரசு நலிவுற்ற பின் அதன் படை அமைப்பும் அழியத் தொடங்கியது. பதினலாம் நூற் ருண்டிலிருந்து தென்னட்டை ஆட்சி புரிந்த விஜயநகர மன்னர் தமிழகத்திற் கிளர்ச்சிகளை அடக்குவதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் தமிழ்நாட்டுப் படை களையன்றிக் கன்னட, தெலுங்குப் படைகளையே கூடு தலாகப் பயன் படுத்தினர்கள். அவ்வாருன சூழ்நிலை யில் வன்னியர் முற்காலத்திற் போல படையமைப்பிற் சிறப்பிடம் பெறவில்லை. எனவே அவர்கள் விவசாயம் முதலிய தொழில்களை மேற்கொள்ளத் தொடங்கினர்.

2.
வன்னியர் தேயற்றம் 23
முதலாம் இயல்
அடிக்குறிப்பு
கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற் றரிதரு குட்டி யாயபன் னிரண்டினைச் செங்கோல் முளையிட் டருணிர் தேக்கிக் கொலைகள வென்னும் படர்களைக் கட்டுத் திக்குப் படராணை வேலி கோலித் தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கு நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்
- கல்லாடம், 37 வரிகள் 9-113
சிலே எழுபது, செய்யுள் 65
வன்னியர் புராணம், "வன்னிய ராஜாக்கள் உற்பத்திச் சருக் கம்", செய்யுள், 2,
வடநாட்டுச் சுஷத்திரியரான இராசபுத்திரர் அக்கினியில் இருந்து தோன்றினர்களென்று வடமொழியிலுள்ள அக்கினி புராணம் கூறுகின்றது. வன்னியர்புராணம் அக்கிணிபுரா ணத்தைத் தழுவியே எழுதப்பட்டுள்ளது.
சிலை எழுபது, செய்யுள் 93
"மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே."
,44 பதிற்றுப்பத்து- ع
S. Pathmanathan, The Kingdom of Jaffna,
Ph. D. Thesis, University of London, 1969, p. 117
7a. William Taylor,
8.
Analysis of the Mackenzie Manuscripts PP, 78 - 79.
பத்துப்பாட்டு உ? வே. சாமிநாதையர்
பதிப்பு பட்டினப்பாலை 'வரிகள் 275-90

Page 14
24 வன்னியர்
9. K. A. Nilakanta Sastri,
A History of South India
10. Kautilya's Arthasastra,
Edited by Shama Satry, Mysore, 1961. p 372
11. S. Pathmanathan,
The Kingdom of Jaffna P. 106
Annual Report on Epigraphy
Madras Epigraphical Reports,
Southern Circle, Madras Govern
ment ) 3)gi 9 air ARE 6TG37 augbub, 1920, 556 of 1919.
12. S. Pathmanathan,
The Kingdom of Jaffna P. 107.
13. The Kingdom of Jaffna, P. 107
A RE, 1934/1935 : Nos. 122, 126, .159 - 153 ,147 سے 144 142 ,36[
14. y ARE, 1934/35 P. 61.
15. K. A. Nilakanta Sastri,
The Pandyan kingdom, London, 1929.
16. தென்னிந்திய கோயிற் சாசனங்கள்,
தொகுதி 111, பாகம் 11, 97 17. "தேசத்திலுள்ள வன்னியரும்"
S. Krishnaswamy Ayangar,
South India and her Muhammadan Invaders, Madras, 1919.
PP. 227 - 229. .

தென்னகத்து வன்னிமைகள் 25
இரண்டாம் இயல் தென்னகத்து வன்னிமைகள்
வன்னிய நாயன் என்ற விருதினைப் பெற்ற குறுநில மன்னர்கள்பற்றிச் சோழர்காலக் கல்வெட்டுக்களிலே தக வல்கள் கிடைக்கின்றன. முதலாம் ராஜேந்திர சோழன் சாளுக்கிய மன்னனுடன் வன்னியரேவன் என்ற பிரதானியையும் தோற்கடித்ததாக அவனது கல்வெட் டொன்று கூறுகின்றது.1 இரண்டாம் ராஜேந்திர னது மெய்க்கீர்த்தியில் அம் மன்னனை எதிர்த்து வன்னி அளவன் போர்புரிந்தானென்று கூறப்பெற்றுள்ளது.2
எனினும் இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றங் குலோத்துங்கன் ஆகிய பேரரசரின் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டுக்களிலேயே வன்னியர் பற்றிப் பல குறிப்புக் கள் இடம் பெறுகின்றன. தென்னுற்காடு மாவட்டத் துத் திருக்கோயிலூர் தாலுகாவிலுள்ள அரகண்ட நல் லூர் என்னும் ஊரிற் காணப்படும் ஒப்பிலாமணிஸ் வரர் கோயிலிற் பல வேளைக்காரர் வன்னிய நாயனுக்கு அளித்த வாக்குறுதிகள் பொறிக்கப்பட்டுள்ளன. 8 இவ் வேளைக்காரர் கிழியூர் மலையமான் பெரிய உடையா னன சற்றுக்குடாதான் வன்னிய நாயனப் பாதுகாப்ப தென்றும், அவனுக்குக் கெடுதி நேருமிடத்துத் தாமும் அவனுடன் உயிர் நீப்பதென்றும் சத்தியம் செய்தார் கள். அரசனையோ, குறுநில மன்னரையேர் பாதுகாக் கும் மெய்க்காப்பாளராக வேளைக்காரர் சேவகஞ் செய் வது வழக்கம்.4 திருக்கோவலூரைச் சேர்ந்த கொள்ளு ரிலுள்ள இராமர்பாறை என வழங்கும் கல்லில் வரை யப்பட்டுள்ள கல்வெட்டொன்று கரியனுன பலவாயுத வல்லவ மலையமான் என்ற வேளைக்காரன் வன்னிய நாய னுக்களித்த வாக்குறுதியைச் சொல்கின்றது.5 இக்கல் வெட்டுக்களிலே வரும் வன்னியநாயனுக்கும் வேள்ைக்கா ரருக்குமிடையிலான தொடர்பு கவனத்திற்குரியது.
வேளைக்காரர் சோழப் பேரரசரின் மூன்றுகை மகா
சேனை முதலிய படைகளிலே சிறப்பிடம் பெற்றிருந்தனர், 6
(b)

Page 15
26 வன்னியர்
வன்னியரின் தலைவன் எனப் பொருள்படுகின்ற வன்னி ய நாயன் என்ற விருதினைக் கொண்ட பிரதானிகள் வேளைக்காரரின் படைத்தலைவர்களாக இருந்தனர் என்று கொள்வதற்கு இக்கல்வெட்டுக்கள் ஆதாரமாய் உள் ளன. மேலும் இவை, கிழியூரிலிருந்து ஆண்ட மலைய மான்கள் வன்னியநாயன் என்ற விருதுடன் பெரிய உடையான், சேதியராயன், சற்றுக்குடா தான் என்ற பட்டங்களையும் பெற்றிருந்தனர் என்பதனையும் 'அறியத் தருகின்றன.? இம் மரபைச் சேர்ந்த குறுநில மன்னர் கள் முதலாங் குலோத்துங்கன் காலத்துக்குப் பின் சிறப் பிடம் பெறத்தொடங்கினர். இரண்டாம் ராஜாதிராஜன் காலத்துக் குறுநில மன்னனுன ராஜராஜசேதியராயன் என்ற மலையமான் வாண கோப்பாடி நாடு, செங்குன்ற நாடு, மலாடு, உடைக்காட்டுநாடு என்பவை மீது அதிகாரம் பெற்றிருந்தான்.8
பங்கல நாட்டை ஆண்ட கங்க மரபில் வந்த குறு நில மன்னரும் வன்னிய நாயன் என்ற விருதினைப் பெற்றிருந்தனர்.26 மூன்ரும் குலோத்துங்க சோழனின் ஆட்சியிலே கூத்தாடுந் தேவன் பிருதுவி கங்கஞன வன்னிய மாதேவனும் அவன்பின் அவன் மகனுன அழ கிய சோழன் வரந் தரும் பெருமாள் என வழங்கிய சோழேந்திரசிங்கப் பிருதுவி கங்கனும் அதிகாரம் செலுத்தியதாகத் திருவண்ணுமலையில் உள்ள கல்வெட் டுக்கள் கூறுகின்றன.10 மேலும் கூத்தாடும் தேவன் பிருதுவி கங்கன் ஆனை கட்டி ன என்ற விருதினையும் பெற்றிருந்தான். 11 ஒரு யாஃனப் படையை எதிர்த்துப் போரில் ஈட்டிய சாதனையின் பயணுகவே இவன் மன்ன னிடமிருந்து இவ்விருதினைப் பெற்றிருக்க வேண்டும்.
செங்கேணி மரபைச் சேர்ந்த குறுநில மன்னரும் வன்னியநாயன் என்ற விருதினைப் பெற்றிருந்தார்கள். இக்குலத்தை சேர்ந்த செங்கேணி அம்மையப்பன் வன் னியநாயன் சாம்புவராயனெனவும் அழைக்கப் பெற் முன், சிலை எழுபது, வன்னிய புராணம் முதலிய நூல்

தென்னகத்து வன்னிமைகள் 27
கள் வன்னியரைச் சம்புகுலத்தவரெனக் குறிப்பிடுகின்றன வென்பதை ஈண்டு நினைவுகொள்ளவேண்டும்.12 சாம்பு வராயன் என்ற பெயர் சம்பு என்ற பெயரடியாகவே தோன்றியது. செங்கேணி மரபினர் சோழ நிர்வாகத் திலே உயர்பதவிகளைப் பெற்றிருந்தனர். இம்மரபில் வந்த பல்லவராயர் என்ற அமைச்சன் இரண்டாம் ராஜாதி ராஜன் காலத்தில் அரசகருமங்களைச் சிறப்புறக் கண்காணித்து வந்தான்.18
பராக்கிரமவாகுவின் படைகளைப் பாண்டி நாட்டி லிருந்து துரத்திய இப்பல்லவராயர் எதிரிலிச் சோழ சாம்புவராயரின் மகனென்று பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டுக் கூறுகின்றது.81 இவனது சகோதரனன அண்ணன் பல்லவராயனும் படைத் தலைவனுகவிருந்து பராக்கிரமபாகுவின் படைகளைத் தோற்கடித்தான்.
மேலே கூறப்பெற்றவற்றிலிருந்து சோழப்பேரரசர் காலத்துக் கிழியூர் மலையமன்னர், பங்கல நாட்டுக் கங் கர், சாம்புவராயர் ஆகிய மூன்று குலங்களைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் வன்னிய நாயன் என்ற விருதி னைப் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகின்றது. இம் மூன்று பிரிவினரும் ஆண்ட நிலங்கள் தொண்டை மண் டலத்தைச் சேர்ந்தவை. மேலும் இவர்கள் அதிகாரம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்தது வன்னிய நாயன் என்ற பட்டத்துடன் ஆனை கட்டின. சற்றுக் குடா தான் என்ற சிறப்புப் பெயர்களையும் பெற்றிருந் தமை இவர்கள் படைத்தலைவர்களாக இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.82
சோழப் பேரரசர் சில பிரதேசங்களில் ஆட்சி அதி காரத்தைப் படைத்தலைவர்களுக்கு அளித்திருந்தார்கள், படைத் தலைமைப் பதவியும் ஆட்சி அதிகாரமும் பரம்பரை உரிமையாக அமைந்ததால் இவர்கள் தாம் அதிகாரம் செலுத்திய பிரதேசங்களிற் குறுநில அரச ராக எழுச்சி பெற்றனர். சோழ மன்னரின் ஆற்றலும் அதிகாரமும் நலிவடையக் காலப்போக்கில் இக்குறுநில

Page 16
28 at Girafuri
மன்னர் சுதந்திரமாக ஆளத்தொடங்கினர். மூன்ரும் குலோத்துங்கனின் ஆட்சி முடிவுற்றதும் வன்னியர் தனி யாண்மை செலுத்த நாட்டம் கொண்டனர்.
பதின்மூன்ரும் நூற்றண்டிலே தமிழ் நாட்டிற் பாண் டியராட்சி நடைபெற்ற காலத்தில் வன்னியர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் மிக அரிதாகவே உள்ளன. தொண்டை மண்டலத்தில் உள்ள வன்னியர் பாண்டிய ரின் மேலாதிக்கத்துக்குட்பட்டிருத்திருக்க வேண்டும். உ.பாஸ் கஜனுலங்கார என்ற ஈழத்து நூல் கலிங்கமாக னது காலத்திற் பெளத்த சங்கத்தவரிற் பலர் நாட்டை விட்டோடித் தமிழகத்திற் பாண்டியரின் சாமந்தனன சோழகங்க தேவனின் ஆதரவில் வாழ்ந்தனர் என்று கூறுகின்றது. 16 இச் சோழகங்க தேவன் பங்கல நாட் டுக் கங்கசூலத்தவனே என்பது சிந்தனைக்குரியது.
பாண்டிய அரசு தளர்வுற்ற காலத்திற் கொய்சள மன்னனன மூன்ரும் வல்லாளதேவன் தமிழகத்தின் வட பால் தன்மேலாதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். சாம் புவராயர் முதலான வன்னி மன்னர் வல்லாளனின் மேலாணைக்குள் அடங்கி இருந்தனர். கம்பண்ண உடை யார் தென்நாட்டின்மீது படையெடுத்துவரப் புறப் பட்டபோது தெற்கிலுள்ள அரசுகளில் வன்னி நாட்ட ரசர்களையும் அடக்குமாறு புக்கராயர் பணித்ததாக மதுரா விஜயம் என வழங்கும் கம்பராய சரிதம் கூறும். விஜய நகரப் பேரரசர்களின் மெய்க் கீர்த்திகளிலே பதி னெட்டு வன்னியரைப் புறங் கண்டமைபற்றிக் கூறப்படு கின்றது. கம்பண்ண உடையார் வன்னி அரசர்கள்மீது பெற்ற வெற்றிகளே இக் கூற்றுக்களுக்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டும்.
மக்கென்ஸி என்பவர் தேடிச் சேர்த்த வரலாற்று மூலங்களிலே திருவிடைச்சுரம் கோட்டையி லிருந்து ஆட்சி புரிந்த கந்தவராயன், சேதுராயன் என்ற வன் னிய அரசர்களின் வரலாறு கூறும் பிரதியொன்று காணப்படுகின்றது. இவ் விருவரும் நுழைவதற் கரிய அரண்கள் பொருந்தி மிகப் பெரிதாய் அமைந்த திரு

தென்னகத்து வன்னிமைகள் 29
விடைச்சுரம் கோட்டையிலிருந்து ஆண்ட காலத்தில் விஜய நகர அரசன் கிருஷ்ண தேவராயர் அவ் வன்னிய ரின் நாட்டை அடக்குவதற்கென ஒரு பலம் மிக்க படையை அனுப்பி யிருந்தார். 17 பல மாதங்களாகப் போர் நிகழ்ந்தும் விஜய நகரப் படைகள் அக் கோட் டையைக் கைப்பற்ற முடியவில்லை. எனவே விஜய நகரப் படையில் வந்த பொழிகர் சூழ்ச்சியினற் கந்த வராயனைக் கைப்பற்றினர்கள். அதனை அறிந்த சேது ராயன் பல நாட்களாகக் கடும் போர் நடத்தினன். எனினும் விஜய நகரப் படைகள் கோட்டையைத் தகர்த்துச் சேதுராயனைக் கொன்றன. அதன் பின் வன்னியராண்ட திருவிடைச்சுரம் விஜயநகர மன்னர் வசமிருந்தது.
பதினைந்தாம், பதினரும் நூற்றண்டுகளில் தென் ணுட்டை ஆண்ட சில குறுநில மன்னரின் ஆவணங்களில் வன்னியர்பற்றிக் குறிப்புக்கள் வருகின்றன. சூரைக் குடியை ஆண்ட தரைக்குடி யரசு பள்ளிகொண்ட பெருமாள் என வழங்கிய அச்சுதராய விஜயாலய தேவரின் கல் வெட்டில் பதினெட்டு வன்னியரை முதுகு புறங் கண்டான் என்ற வாசகம் வருகின்றது. 18 திருவரங்குளத்தைச் சேர்ந்த ஆலங் குடியில் உள்ள கல்வெட்டொன்றில் அழுந்தூரரசு திருமலைராசப் பல்ல வராயர் 19 பதினெட்டு வன்னியர் கண்டன் 36 எனக் கூறப்பட்டுள்ளான். இராமநாதபுரத்துச் சேதுபதிகளின் பட்டயங்களிலும் இதேபோன்ற குறிப்புக்கள் வழமை யாக வருகின்றன. 20 எனினும் இக் குறுநில மன்னர்க, ளின் மெய்க் கீர்த்திகளிற் கூறப்படுவன ஆதார பூர்வ மானவையென்று கொள்ள முடியாது. விஜய நகர மன் னர்களின் மெய்க் கீர்த்திகளில் வருகின்ற வன்னியர் பற்றிய வாசகங்களை இராமநாதபுரத்துச் சேதுபதிகள், சூரைக்குடி அரசர் முதலானேர் தத்தம் ஆவணங்க ளிலே சேர்த்துக் கொண்டார்கள். கிருஷ்ண தேவரா யரின் காலமளவிலே தொண்டை மண்டலத்து வன்னி மைகள் அழிந்துபட்டன.

Page 17
30
9.
10.
ll.
12.
13.
14.
வன்னியர்
இரண்டாம் இயல்
அடிக்குறிப்பு
ARE, 1928, P 2.
Inscriptions of the Pudukkottai State No. 112. The Kingdom of Jaffna, P. 107
ARE, 1934/35 Nos, 122, 126, 142, 144-147, 153-159, 171
ARE., 1928, P. 2.
ARE., 1937/38. No. 202. The Kingdom of Jaffna, PP. 107-108.
South Indian Inscriptions, Vol. IV. No. 1398 ARE. 1934/35 PP 61-65, ARE. No 600 of 1912
ARE., 1934/35. PP. 60-61, Nos. 122, 126, 143-147, 153-155, 157-160, 162, 170, The Kingdom of Jaffna, PP. 108-109.
The Kingdom of Jaffna, P. 109. Ibid, ARE., 1938/9. P. 77.
ARE., 1938/39. P. 77.
ARE, 1938/39. P. 77. The Kingdom of Jaffna, P. 109.
The Kingdom of Jaffna, P. 110.
ARE., 1911. P. 74. ARE. 1899-1900. P. 13 ARE., 234 of 1910,
The Kingdom of Jaffna, P. 10.
ARE, 1911, P. 74. K. A. Nilakanta Sastri, “Parakramabahu and South India” C H J., IV, 1-4, PP. 33-51,
The Kingdom of Jaffna, P. 110,

5.
16.
17.
1 R.
19.
20.
தென்னகத்து வன்னிமைகள் 31
The Kingdom of Jaffna, P. 111.
Upasaka Janalankara,
William Taylor, An Analysis of the Mackenzie Manuscripts. Section 3.
"An account of Candava rayen and Chethu rayen, the two sovereigns of the Vanniyar who ruled in the fort at Tiruvitaiccuram'. PP. 78-79.
1 P S. No. 734 திருமய்யத்தைச் சேர்ந்த நெய்வாசலிள்ள கல்வெட்டு.
I. P.S., No. 758.
A S S I. No. 4. “Setupati Copper plate grants.” Nos. Il » 3-7, 9. PP. 66, 68, 71, 73, 81. -

Page 18

ஈழத்து வன்னிமைகள் - 33
மூன்ரும் இயல் ஈழத்து வன்னிமைகள் - 1
அ. தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிகள்
ஈழவரலாற்றிற் குறிப்பிடத்தக்கவொரு மாற்றம் பதின்மூன்ரும் நூற்ருண்டில் ஏற்பட்டது. கலிங்க மாகனது படையெடுப்பின் விளைவாகப் பொலநறுவை யைத் தலைநகராகக் கொண்டு ஈழமனைத்தையும் உள்ள படக்கியிருந்த அரசு அழிவுற்றது. மன்னனை மையமாகக் கொண்ட மத்தியமயமான ஆட்சியும், பெருங்குளங்க ளையும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் ஆதாரமாகக் கொண்ட பொருளாதார முறையும் அழிந்தன. இவற் றின் அழிவில் மானிய முறையின் இயல்புகளைக்கொண்ட ஓர் அரசியலமைப்பு வளர்ச்சியடைந்தது. மாகனது படையெடுப்பின் பின் இரு அரசுகளும் பல குறுநில அரசுகளும் தோன்றி நிலைபெற்றன.1
வட இலங்கையில் மாகன் நாற்பது (கி. பி. 1215 - 1255) வருடங்களாக ஆட்சி செய்தான்.2 அவன் மறைந்த பின் அங்கு சாவகரின் ஆட்சியேற்பட்டது.8 சாவகர் ராஜரட்டையை ஆண்டகாலத்தில் பாண்டியர் ஈழம் மேற் படையெடுத்து வந்து சாவக அரசனன சந் திரபானுவை அடக்கித் தமது ஆதிக்கத்தைத் திணித்து அவனிடமிருந்து யானைகளையும் மணிகளையுந் திறையா கப் பெற்றனர்.4 சந்திரபானு வட இலங்கை யில் வலுப்பெற்றதும் பாண்டியரைப் பகைத்து எதிர்க்கத் துணிந்தான், எனவே வீரபாண்டியன் Hழத்திற்குவந்து சந்திரபானுவைப் போரிற் கொன்று அவனுடைய மகனை அரசனுக்கிவிட்டுத் திரும்பினுன். பதின்மூன்ரும் நூற்ருமண்டின் முடிவில் ஆரியச்சக்கரவர்த்தியின் தலைமை யில் நிகழ்ந்த பாண்டியப் படையெடுப்பின் விளைவாக வட இலங்கையில் ஆரியசக்கரவர்த்திகளின் ஆதிக்கம் பாண்டி நாட்டிலுள்ள செவ்விருக்கை لا ، الساسا لا 610

Page 19
34 வன்னியர்
நாட்டிலிருந்து வந்த ஆரியசக்கரவர்த்தியின் வழியில் வந்த மன்னர் சிங்கை நகரென வழங்கிய நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணப் பட்டினத்தை ஆண்டு வந்தனர்.7 யாழ்ப்பாணப் பட்டினமென வழங்
கிய தமிழரசிற் பல வன்னி நாடுகளிருந்தன.
தெற்கிற் சிங்கள அரசர் முதலிலே தம்பதெனியா விலிருந்தும் பின் குருநாகல், கம்பளை, கோட்டை முதலிய நகரங்களிலிருந்தும் ஆட்சி புரிந்தனர். 8 அவர் களின் அரசிலும் ஆங்காங்கு வன்னி எனப்பட்ட குறு நிலவரசுகள் பல காணப்பட்டன.9
இவ்வாறு ஈழநாட்டு அரசியலிற் பல நூற்ருண்டுக ளாக வன்னிநாடுகள் சிறப்பிடம் பெற்றிருந்தபோதும். ஈழவரலாற்று நூல்களில் அவற்றைப் பற்றி விரிவான விளக்கவுரைகள் இடம்பெறவில்லை. 10 வன்னி நாடுக ளின் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதற் குப் போதிய, ஆதாரபூர்வமான சான்றுகளும் கிடைக்க வில்லை. சிங்கள மொழியிலுள்ள வன்னி உபட்ட என்ற நூலும் கோணேசர் கல்வெட்டு வையாபாடல், மட்டக்களப்பு மான்மியம் 11 முதலிய தமிழ் நூல்களும் வன்னி நாடுகள் பற்றிச் சில.தகவல்களைத் தருகின்றன. இந்நூல்களிற் புனை கதைகளும் புராணக் கதைகளும் வரலாற்றுச் சார்புள்ள கதைகளோடு கலப்புற்றுள்ளன. எனவே இவற்றுட் பொதிந்திருக்கும் வரலாற்றுண்மை களை இலகுவில் விளங்கிக் கொள்ளமுடியாது.
(ஆ) வன்னி நாடுகளின் தோற்றம்
பதின்மூன்ரும் நூற்றண்டு தொடக்கம் பாளிமொழி யிலுஞ் சிங்கள மொழியிலுமுள்ள வரலாற்று நூல்கள் வன்னிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மாகன் ராஜ ரட்டையை ஆட்சிசெய்த காலத்தில் மூன்ரும் விஜய பாகு மாயரட்டையிலுள்ள ஸிகள வன்னியை அடக்கி ஆட்சி புரிந்தானென்று பூஜாவலிய கூறுகின்றது. 12

ஈழத்து வன்னிமைகள் -1 35
எனவே விஜயபாகுவின் காலத்தில் மாயரட்டையிலும் வன்னிப் பிரதேசம் பரந்திருந்ததென்பது தெளிவாகின் MDòl• விஜயபாகு வன்னிராசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் அதிகாரஞ் செலுத்தினுனெ னச் சூளவம்சமும் எடுத்துரைக்கின்றது. 13
இரண்டாம் பராக்கிரமபாகு ராஜரட்டையிலும் ரோகணத்திலுமுள்ள வன்னி மன்னர் மேலே தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தான் 14 அவ்வரசனது ஆட்சிக் காலத்தில் இளவரசனன விஜயபாகு (TW) அனு ராதபுரத்துக்குச் சென்ற பொழுது ராஜரட்டையிலி ருந்த வன்னி மன்னர் அவனைக் கண்டு கெளரவித்துத் திறைகொடுத்தனர். வன்னிராசர் படைகளை வைத்தி ருந்தனரென்றும் வெண்கொற்றக் குடை, சாமரம், ஆசனம் முதலியவற்றைத் தம் பதவிச் சின்னங்களாக இளவரசனிடமிருந்து பெற்றனரென்றும் சூளவம்சம் கூறும். 15 எனவே இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் வன்னிமை என்ற குறுநிலவரசுகள் வளர்ச்சி யடைந்த நிலையிலிருந்தனவென்று கொள்ளலாம். அர சனுக்குத் திறை செலுத்திய போதும் தத்தம் பிரதே சங்களைச் சுயமாகவே ஆளுவதற்கும் வன்னி மன்னர் உரிமை பெற்றிருந்தனர். ஆகையால் வன்னிமைகள் பதின்மூன்ரும் நூற்ருண்டுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும். பதின்மூன்ரும் நூற்ருண்டில் ஈழநாட்டின் முப்பெரும் பிரிவுகளான ராஜரட்டை, மாயரட்டை, ரோகணம் என்பவற்றில் வன்னிகள் காணப்பட்டமை யும் கவனத்திற்குரியது.16
மாகன் ஆட்சிசெய்த பிரதேசத்திலும் வன்னிகளி ருந்தன. 17 மாகன் தோப்பாவையைக் (பொலநறுவை) கைப்பற்றிப் படையாட்சி வன்னியருக்குக் கொடுத் தான் என்று மட்டக்களப்பு மான்மியங் கூறும். 18 அத் தோடு மட்டக்களப்பிலுள்ள முக்குவ வன்னிமையை மாகன் அமைத்தானென்றும் அந்நூல் சொல்லுகின் றது. 10 எனினும் மாகனுடைய காலத்திலேயே முதன்

Page 20
38 வன்னியர்
முதலாக ஈழத்தில் வன்னிமைகள் தோன்றினவென்று கொள்ளமுடியாது. மாகன் வன்னிமைகள் இடம்பெற்ற தொண்டை மண்டலத்திலிருந்தன்றிக் கலிங்க நாட்டிலி ருந்தே வந்தான். அத்துடன் முக்குவரே முதன் முதலாக வன்னிமைகளாகியிருக்க முடியாது. சேர நாட்டிலிருந்து வந்த முக்குவர் வன்னியரிலிருந்து வேறுபட்ட ஒரு சமூகப் பிரிவினரே. வன்னிமைகள் என வழங்கிய குறுநில அரசுகளோ வன்னியரென்ற சமூகத்தவரோ சேர நாட் டிலிருந்ததற்கு எந்தவிதமான சான்றுகளுமில்லை. மேலும் மாகனும் விஜயபாகுவும் ஆட்சிசெய்த பிரதே சங்களில் வன்னிமைகள் இடம்பெற்றிருந்தமையால் இவ்விரு மன்னரின் காலத்துக்கு முன்னரே ஈழத்தில் வன்னிமைகள் உருவாகியிருத்தல் வேண்டும்.20
தொண்டை மண்டலத்திலிருந்த கிழியூர் மலைய மான்களின் கல்வெட்டுக்கள் வன்னிய நாயன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த குறுநில மன்னர்க்கும் வேளைக் காரருக்குமிடையில் நிலவிய தொடர்பைத் தெளிவுப டுத்துகின்றன. வேளைக்காரர் வன்னிய பிரதானிகளின் படைகளிற் சேவகம் புரிந்து வந்தனர். எனவே ஈழத்து வன்னிமைகளின் தோற்றத்தையும் வேளைக் காரப்படை யின் வரலாற்ருேடு இணைத்து நோக்குவது சாலப்பொ ருந்தும். சோழர் ஈழத்தைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்த காலத்தில் வேளைக்காரப் படைகளும் ஈழத்துக்கு வந்தி ருத்தல் வேண்டும். ஈழமான மும்முடி சோழ மண்ட லத்தில் படைத்தலைவர்கள் நிர்வாகத்திற் பங்குகொண் டிருந்தனர். இப் படைத்தலைவர்களும் அவர் வசமுள்ள வேளைக்காரர் முதலியோரைக் கொண்ட படைப் பிரி வும் தொண்டை மண்டலத்திற் போல ஈழத்தின் சில பகுதிகளிற் காலப் போக்கிற் சுயாட்சி மாநிலங்கள் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்திருத்தல் கூடும்
முதலாம் விஜயபாகு ( கி. பி 1055 - 1111) நடாத் திய போராட்டங்களின் விளைவாக இலங்கையிற் சோழ ராட்சி அழிவுற்றபோதும் ஈழத்திலிருந்த சோழப்படை கள் அழிக்கப்பட்டனவென்றே, நாட்டிலிருந்து அகற்

ஈழத்து வன்னிமைகள் - 1 37
றப்பட்டனவென்றே கருதுவதற்கில்லை. சோழ நாட்டி லிருந்து வந்த போர் வீரருட் பலர் ஈழத்திலே தங்கியி ருந்து, சிங்கள மன்னரின் படைகளிற் சேர்ந்து சேவகம் புரிந்தனர். முதலாம் விஜயபாகு காலத்தில் வேளைக் காரப் படை சிறப்புற்றிருந்ததற்குச் சூளவம்சமும் பொலநறுவையிலுள்ள வேளைக்காரர் க ல் வெட் டு ம் சான்றளிக்கின்றன. பொலநறுவையிலுள்ள த லதா மாளிகையைப் பாதுசாக்கும் பொறுப்பை வேளைக்கா ரப்படை ஏற்றிருந்தது. இப்படை வலங்கை, இடங்கை, சிறு தனம், பிள்ளைகள்தனம், வடுகர், மலையாளர் முதலிய பல உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது.21
விஜயபாகு சோழருக்கெதிராகப் போராயத்தங் களை மேற்கொண்டபோது வேளைக்காரப்படை அரச னைத் தலைநகரிலிருந்து துர த் தி, அரண்மனையைக் கொழுத்தி அரசனது உறவினரைச் சிறைப்படுத்துமள விற்குப் பலம்பெற்றிருந்தது.2 இரண்டாம் கஜபாகு பொலநறுவையிலிருந்து ஆட்சிசெய்தபொழுது அவனைத் தாக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த மானபரன னும் தம்பிமாரும் பொலநறுவையிலிருந்த வேளைக்கா ரப் படைகளுக்குப் பல சன்மானங்களைக் கொடுத்து அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு தூண்டினர் கள்.23 முதலாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்திற் கோட்டியாரத்தில் வேளைக்காரப் படையிருந்ததென்று சூளவம்சம் கூறுகின்றது.?4 பதவியாவிற் கண்டெடுக்கப் பெற்ற பதின்மூன்ரும் நூற்ருண்டைச் சேர்ந்த ஒரு வட மொழிக் கல்வெட்டும் வேளைக்காரரைப் பற்றிக் குறிப் பிடுகின்து.25 சேது குலத்தைக் குறிப்பி ம்ெ இக்கல் வெட்டு லோகநாத தண்டநாயக்கன் என்ற தளபதி ஒரு விகாரத்தை அமைத்து அதை வேளைக்கார விகார மெனப் பெயரிட்டு அதைப் பாதுகாக்கும் பொறுப்பினை வேளைக்காரப் படையிடம் விட்டதாகக் கூறுகிறது.
எனவே இரு நாற்ருண்டுகளுக்கு மேலாக ஈழத்தில் வேளைக்காரர் செல்வாக்குப்பெற்றிருந்தனரென்று கருத

Page 21
38 வன்னியர்
லாம். வேளைக்காரருக்குக்கொடுக்கப்பட்ட படைப்பற்றுக் கள் வன்னிமைகள் உருப்பெறுவதற்கு வழியமைத்தன. வன்னியபற்று என வழங்கிய நிலப்பிரிவுகள் தென்னிந் யாவிற் காணப்பட்டதைப் போல ஈழத்திலும் வன்னப் பற்று என்ற பிரிவுகளிருந்தன.26 சோழராட்சிக் காலத் தில் ஈழத்திலிருந்த அதிகாரிகள் நிர்வாகத்தின் பொருட் டுப் பறறு என்னும் பிரிவுகளை வகுத்திருந்தனர். இப் பற்றுக்களிற் சில வன்னிய பற்றுக்களாக உருப்பெற றன. சோழராட்சி நிலவிய பிரதேசங்களிலேயே பிற்கா லத்தில் வன்னிமைகள் நிலவியதும் இங்கு நோக்கற்பா லது.
ஈழத்திலுள்ள வரலாற்றுச் சார்புள்ள தமிழ் நூல் கள் யாவும் வன்னியர் தமிழகத்திலிருந்து வந்தார்க ளென்று கூறுகின்றன. மேலும் புத்தளத்து வன்னிமை பற்றிக் கூறும் வன்னி உபட்ட என்ற சிங்கள நூலும் அவ்வன்னிமையிற் சிறப்பிடம்பெற்றிருந்த முக்குவர் இந் தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்தனரென்று கூறுகின் றது. எனவே தமிழகத்திலிருந்து வந்த வன்னியர் அதி காரம்பெற்றதன் விளைவாக ஈழத்திற் பல வன்னிமைசள் தோன்றினவென்று கொள்ளலாம். வன்னியராண்ட பிர தேசங்கிள் வன்னி நாடுகளென வழங்கி வந்தன வென்று யாழ்ப்பாண வைபவமாலையுங் கூறுகின்றது.27
(S) திருமலை வன்னிமைகள்
திருகோணமலையிலிருந்த வன்னிமைகள் பற்றிக் கவி ராசர் பாடிய கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது. மனுநீதி கண்ட சோழனுடைய மகனுகிய வரராம தேவன் கோணேஸ்வரத்தின் மகிமையைக் கேட்டறிந்து அங்கு தன் மகன் குளக் கோட்டனேடு புனித யாத் திரை வந்தானென்றும், பின் குளக்கோட்டன் சிவாலயத்தையும் பாவ நாசச் சுனையையும் அமைத்து ஆலயத் திருப்பணிகள் செவ்வனே செயற்பட ஏற்பாடு கள் செய்தானென்றும் இந் நூல் கூறும். 28

ஈழத்து வன்னிமைகள் - i 39
குளக்கோட்டனைப்பற்றி மேல் வருந் தகவல்களையும் கோணேசர் கல்வெட்டுத் தருகின்றது : குளக்கோட்டன் மருங்கூரிலிருந்து அழைத்து வந்த ஆறு சோழக் குடி களைத் திருமலையிலிருத்தி அவர்களுக்குப் பரவணியாட்சி யுரிமையோடு நிலங்களைப் பகிர்ந்தளித்தான். அத்து டன் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான பொருட் களையும் கொடுத்து நாள் தோறும் ஏற்படும் வரவு செலவுகளின் கணக்குகளைப் பதிவு செய்யுமாறு தானத் தாரைப் பணித்தான் ; குளக்கோட்டன் இருபத்தொரு வரிப் பத்தர் குடிகளைத் திருமலையிலிருத்தி மலர் கொய் தல், மாலை தொடுத்தல், கொடி, குடை பிடித்தல், விளக்கேற்றல், படிமங்களைத் துலக்குதல், நெல்லுக் குற்றுதல், மெழுகுதல், சந்தனமரைத்தல் ஆலத்தி செய்தல், நடனமாதர் ஆடுமிடத்துத் தாளத்திற்கேற் பப் பாடுதல் முதலான தொழும்புகளைச் செய்யுமாறு பணித்திருந்தான். தானத்தாருக்கும், வரிப் பத்தருக் கும் இச் சேவைகளுக்கு ஊதியமாகப் பள்ளவெளியில் வயல் நிலங்களைக் குளக்கோட்டன் கொடுத்திருந்தான். மதுரை நகரால் வந்த தனி யுண்ணுப் பூபாலனுக்குத் திருமலை நகரின் ஆட்சியதிகாரத்தைக் சொடுத்து வன் னிபம் என்ற பட்டத்தையும் வழங்கினன். மேலும் திருநெல்வேலியிலிருந்து வந்த காராளணுெருவனைக் கட் டுக் குளம் பற்றுக்கு அதிபதியாக்கி நிலா வெளியில் நிலமுங் கொடுத்து வன்னிபமென்ற பட்டத்தையும் குளக் கோட்டன் சூட்டினன். கோணேசர் கோயிலின் வரவு செலவுகளைப் பற்றிய குருகுலக் கணக்கிற்குக் கட் டுக்குளப் பற்று வன்னியணுரும் அவனது சந்ததியினரும் பொறுப்பாக விருக்க வேண்டுமென்று பணித்து அடை, ஆயம், தீர்வை முதலிய வரிகளுங் கோயிலுக்கே செல்ல வேண்டுமென்று அவன் ஆணையிட்டான்.29
கோணேசர் கல்வெட்டில் வன்னிமைகள் பற்றிவரும் ககை எ | த எா விற்கு ஆதார பூர்வமானதென்பதை அறிந்து கொள்வதற்குக் குளக்கோட்டனின் வரலாற் றைத் தெளிவுபடுத்த வேண்டும். மனுநீதி கண்ட

Page 22
40 m வன்னியர்
சோழன், வரராமதேவன் என்ற அரசர்கள் பற்றிய கதைகள் புனைந்துரைகளாகவே இருக்க வேண்டும். 30 எனினும், குளக்கோட்டனை ஒரு கற்பனையிலெழுந்த நப ரெனக் கொள்ள முடியாது. திருமலைக் கோட்டையின் முன்பாகவிருக்கும் ஒரு கற்றுாணில் முன்னே குளக் கோட்டன் மூட்டு திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே" என்ற மொழித் தொடர் காணப்படுன்றது 31 இக்கல்வெட்டு குளக்கோட்டன் கோணேசர் கோவிலின் திருப்பணிகளைச் செய்வித்திருந்தான் என்ற கருத்து அது வரையப்பெற்ற காலத்தில் வலுப்பெற்றிருந்ததென்ப தைக் காட்டுகின்றது.
குளக்கோட்டன் சோழகங்கன் என்ற பெயரைப் பெற்றிருந்தானென்று தகூSண கைலாச புராணம் கூறு கின்றது. 32 குளக்கோட்டன் என வழங்கிய சோழகங் கன் பத்தாம் நூற்ருண்டின் பின்னரே வாழ்ந்திருத்தல் வேண்டும். சோழப் பேரரசு எழுச்சி பெற்ற பின்பே சோழகங்கன் என்ற பெயர் வழக்கில் வந்தது. சோழ கங்கன் என்ற பெயரைக் கொண்டிருந்த இளவரசரும் குறுநில மன்னரும் கலிங்கத்திலும் தமிழ் நாட்டிலுமிருந் தனர். ஈழத்திலும் பொலநறுவைக் காலத்தில் சோழ கங்கனென்ற பெயரைச் சில இளவரசர் பெற்றிருந்த னர். இரண்டாம் கஜபாகுவின் ஆட்சிக் காலத்திற் சோழகங்க குமாரன் என்ற இளவரசன் பொலநறுவை யில் இருந்தான்.33 பின் நிஸங்க மல்லனுடைய மருக ஞன சோட(ழ)கங்கன் விக்கிரமபாகுவைக் கொன்றுவிட் டுப் பொலநறுவையில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி யிருந்தான். 34 திருமலைக் கோட்டையிலுள்ள ஒரு வட மொழிக் கல்வெட்டு கி. பி. 1223 இல் ஈழத்திற்குவந்த ஒரு சோடகங்கனைப் பற்றி க் குறிப்பிடுகின்றது.35 இக்கல்வெட்டிலுள்ள பல வரிகள் சிதைவுற்றிருக்கின் றன. சோடகங்கன் கோணேசர் கோயிலிற்களித்த நிவந் தங்களைக் கூறவே இக்கல்வெட்டு வரையப்பெற்றதெனத் தெரிகின்றது. கோணேசர் கல்வெட்டில் வரும் குளக்

ஈழத்து வன்னிமைகள் - 1 41
கோட்டனன சோழகங்கனையே இக்கல்வெட்டுக் குறிப் பிட்டிருத்தல் வேண்டும்.
வன்னிமைகள் திருகோணமலைப் பிர தே சத் தி ல் ஆண்டதற்கும் தானத்தாரும் வரிப்பத்தரும் அங்கி ருந்தமைக்கும் கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுகின் றன. கங்குவேலியிலுள்ள ஒரு கல்வெட்டுத் திருமலை வன்னியனரும் ஏழுர்களைச்சேர்ந்த அடப்பர்களும் கூடித் தம்பிரானர் கோணைநாதனுக்குக் கங்குவேலியில் நிலங் களையும் புற்றரைகளிலுள்ள வருமானத்தையும் விட்ட தாகக் கூறுகின்றது. 86. மேலும் தானம், வரிப்பத்து என்பனவற்றையும் இக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.
கோட்டியாரம்பத்தைச் சேர்ந்த வெருகல் என்னுமூரி லுள்ள ஒரு கல்வெட்டு ஒரு கோயிலின் தெற்கு மதிலைக் கயிலாய வன்னியனர் கட்டினரென்று கூறுகின்றது.87 ஆராய்ச்சியாளர் இக் கல்வெட்டு பதினரும் நூற்ருண் டைச் சேர்ந்ததென்று கருதுவர். இக்கருத்துப் பொருத் தமானதெனின் கயிலாய வன்னியனுர் பதினரும் நூற் ருண்டிற் கோட்டியாரம்பத்தை ஆண்டிருக்க வேண்டும்.
திருமலை, கட்டுக்குளம் ஆகிய இடங்களிற் குளக் கோட்டன் வன்னிமைகளை நியமித்தானென்று கோணே சர் கல்வெட்டுக் கூறுகின்றபோதும் இவனே அங்கிருந்த வன்னிமைகளைத் தோற்றுவித்தானென்று கொள்வதற் கில்லை. கோணேசர் கல்வெட்டு கஜபாகுமகாராசன் திருப்பணிபற்றிச் சொல்வன, குளக்கோட்டனின் காலத் திற்கு முன்பே திருமலை வன்னிமை ஏற்பாடாகியிருந்த தென்று கொள்வதற்கு ஆதாரமாயுள்ளன. பாசுபத் மறையவர் இறந்ததன் விளைவாக ஆலயத்திற் பூசை
முதலியன தடையுற்றபோது கஜபாகுபகாராசன் அங்கு
சென்று வன்னிடம், தானம், வரிப்பத்து, நாட்டவர்
என்போரை அழை, து விசாரஃண நடத்தி, வெளிநாட்டி
லிருந்து பிராமனர் சுஃாக் கொணர்வித்து மீண்டும்
ஆரா பூனேகள் வழமைபோல நடைபெற ஏற்பாடு செய்
t} .

Page 23
42 வன்னியர்
தான். அத்துடன் 1, 100 பொன் கொடுத்துக் குருகுலக் கணக்கிற் பதிப்பித்து ஆயம், தானியவரி ஆகியவற்றி லும் வாணிபத்திறகிடைக்கும் வருவாயிலும் பத்திலொரு பங்கை ஆலயத் திருப்பரிைக்குக் கொடுக்க வேண்டு மென்று அரசன் ஆணையிட்டான்.38
பதினுலாம் நூற்ருண்டில் யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச்சக்ரவர்த்திகள் திருமலை வன்னிமைமேல் ஆதிக்கம் பெற்றிருந்தனரென்று கொள்வதற்குச் சில சான்றுகளுள் ளன. அந்நூற்றண்டைச் சேர்ந்ததென்று கருதப்படும் நம்பொத்த என்ற சிங் கள நூ ல் திருகோணமலை *தெமள பட்டணத்தில் (தமிழரசில்) அடங்கியிருந்த தெனக் கூறுகின்றது 39 தகதிண கைலாச புராணம் சொல்வனவற்றிலிருந்தும் திருமலையிலே செகராசசேகர னின் ஆதிக்கம் நிலவியதென்பதை உய்த்துணர முடி கின்றது.
ஆரியச்சக்கரவர்த்தி, செகராசசேகரன், பரராச சேகரன் என்ற யாழ்ப்பாணத்து மன்னர்கள் கோணே சர் கோவிலுக்குச் சென்று அங்கு வழங்கிய தானங்க ளைப் பற்றிக் கோணேசர் கல்வெட்டுச் செப்புகின்றது. பரராசசேகரன், செகராசசேகரன் ஆகிய இருவரும் கோணைநாதரைத் தரிசனம் பண்ணி ஏழுபட்டு முத்து மாலை, பவளக் குடை, ரத்தினப் பதக்கம், முதலிய வற்றைக் கொடுத்துக் குருகுலக் கணக்கிற் பதிப்பித்து ஆலயத் திருப்பணிகளுக்குத் தேவையான துணிகளைப் பெறுவதற்குத் திரியாயூரிலுள்ள வயல்களையும் ஏழுகுளங் களையுங் கொடுத்ததாகவும் இந்நூல் கூறும். 40 இத்தக வல்கள் ஆதாரபூர்வமானவையெனிற் சில யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னிமை மீது ஆதிக்கம் பெற்றிருந்தனரென்று கொள்ளலாம். எனினும், இவ் வரசர்களை இலகுவில் அடையாளங் கண்டுகொள்ள முடி Lng).
பதினைந்தாம் பதினரும் நூற்ருண்டுகளில் ஆட்சி புரிந்த யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்

ஈழத்து வன்னிமைகள் - t 43
னியரோடு மணத்தொடர்பு கொண்டிருந்தனர். கனக சூரியசிங்கையாரியனும் புதல்வரும் வடதேசத்திலிருந்து ஈழத்திற்குத் திரும்பியபோது திருகோணமலையிலே தங்கிய பின்னரே தமது நாட்டை மீட்டனரென்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.41 செண்பகப் பெருமாள் என வழங்கிய சபுமல் குமாரன் யாழ்ப்பா ணத்தை விட்டுக் கோட்டைக்குச் சென்ற காலத்திற் கனகசூரிய சிங்கையாரியன் யாழ்ப்பாணத்திலே தன். ணுட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்குத் தன்னுறவின னகிய திருமலை வன்னியனரிடமிருந்து படைத்துணை பெற்றிருக்கக் கூடும். சங்கிலியின் ஆட்சிக் காலத்திலே யாழ்ப்பாணத்தரசனும் திருமலை வன்னியனரும் ஒருவ ருக்கொருவர் துணையாகவிருந்து போத்துக்கேயரை எதிர்த்து வந்தனர். திருமலை வன்னியனுர் இறந்தபின் அவனது மகன் இளைஞனக இருந்ததினுற் சங்கிலி வன் னியை ஆளுவதற்குத் தானே உரிமையுடையவனென்று சொல்லி அதனெரு பிரிவைக் கைப்பற்றிக் கொண் டான். சங்கிலி இறந்த பின் கண்டியரசர் திருமலை வன் னியிலே தங்களாதிக்கத்தைத் திணித்தனர்.
(ஈ) முக்குவ வன்னிமைகள்
(ச) மட்டக்களப்பு வன்னிமை
பதின் மூன்ரும் நூற்ருண்டு தொடக்கம் மட்டக்க ளப்பிலும் வன்னிமைகளிருந்தன. கலிங்க மாகன் மட் டக்சளப்பிற்கு அதிபதியா கவிருந்த தினசிங்கனென்னும் சிற்றரசனைக் கொன்றுவிட்டுச் சுகதிரனுக்குப் பட்டங் கட்டி மண்முனையிற் கோட்டையமைத்துக் கொடுத்து மட்டக்களப்பை ஆளச்செய்தானென்று மட்டக்களப்பு மான்மியம் கூறும்.42
மட்.க்களப்பு வன்னிமையை மாகனே அமைத்தா
னென்று இந்நூ ல் எத்துரைக்கின்றது. முக்குவ வன் ரிைமை பற்றி மட்டக்களப்பு மான்மியம் சொல்வன,

Page 24
44 வன்னியர்
'வன்னிபங்கள் குலவரிசை முட்டிகூற மகிழ்ச்சிகொண்டு
எழுந்திடும் மரபும் நாடுமெந்த
மன்னருன்னை வன்னிபமாய் வகுத்ததென்றும் மாநிலத்திலுங்கள் முன்னுேர் வாழ்ந்தவூரும் துன்னு புகழ் கோத்திரமும் தொன்று தொட்டுத் துணையரசன் பேரூருஞ் சொன்னுலிந்த பன்னுடபுகழ் சபையோர்கள் மகிழக் கூறிப் பங்குபெறு மறியாயானுற் பாவமாமே."
"அறியாதாணிச் சபைக்கு அகலநிற்பான் பரன்ருெழும்பர் பழிப்புரைப் பாரறை வேனெங்கள் நெறி தவறர் சுயநாடு காளிகட்டம் நீர்குலமே படையாட்சி யுழுதுாணுண்டோர் வெறிகமழும் காலிங்கவாசனெங்கள் திறத்தோரைப் படைத்துணைக்குத் தலைவனுக்கி குறியறிந்து வன்னிபங்கள் குலமே என்றும் குகப் பட்டத்தரசு கொண்டோனுனே."43
முக்குவ வன்னிமைபற்றி மட்டக்களப்பு மான்மியம் சொல்வன ஆதாரபூர்வமானவை போலத் தோன்று கின்றன. காலிங்க மன்னன் (மாகன்) காளிகட்ட்த்திலி ருந்து முக்குவரை அழைத்து வந்து அவர்களின் படைத் தலைவர்களுக்கு வன்னிபம் என்னும் பட்ட த்  ைத க் கொடுத்தானென்று நூல் கூறுகின்றது. சூளவம்சமும் மாகன் படையெடுத்து வந்தபொழுது பெருந்தொகை யான கேரளப் போர் வீரர்களை அழைத்து வந்து, ராஜ ரட்டையைக் கைப்பற்றியபின் கேரளப் போர் வீரர்க ளுக்கு நிலங்களையும் பிற சன்மானங்களையுங் கொடுத்த தாகக் கூறுகின்றது. 48
சீதவாச்கையிலிருந்து மட்டக்களப்புக்குப் போய்க் குடியேறிய இஸ்லாமிய குடும்பங்கள் சிலவற்றின் வர லாற்றைக் கூறும் ஒரேட்டுப் பிரதியில் மட்டக்களப்பில திகாரஞ் செலுத்திய ஏழு வன்னியர் பற்றிக் குறிப்

ஈழத்து வன்னிமைகள் - 1 45
புண்டு.45 பதினேழாம் நூற்றண்டிலே இளங்சிங்கன் என்ற முக்குவ வன்னியன் ஏருவூரிலே இருந்தானென்று தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையிற் கூறப்பட் டுள்ளது. 46
(உ) புத்தளத்து வன்னின்ம
மட்டக்களப்பிற் போலப் புத்தளத்திலும் ஒல்லாந்த ராட்சிக் காலம் வரை முக்குவ வன்னிமை இருந்தது. புத்தளத்து முக்குவர் எப்போது அங்கு குடியேறினர் என்பதை அறிவதற்கு எதுவித சான்றுகளுமில்லை. ஆரும் பராக்கிரமபாகு வின் ஆட்சிக் காலந்தொட்டுப் புத் தளத்து வன்னிமை பற்றிச் சில குறிப்புக்கள் கிடைக் கின்றன.
வாட்டிக அபயன் காலத்தில் முக்குவர் புத் தளத் திற்கு வந்து குடியேறினரென வன்னி உபட்ட என்ற நூல் கூறுகின்றது. எனினும் இந்நூல் துவக்கு, வெடி மருந்து முதலியவற்றைக் குறிப்பிடுவதால் பதினரும் நூற்ருண்டளவிற் காணப்பட்ட நிலைகளையே இந்நூல் திரித்துக் கூறுகின்றதெனக் கொள்ளலாம். கிழக்கிலங் கையிற்போலப் புத்தளத்திலும் மாகன் படையெடுத்து வந்த காலத்திற் புத்தளத்து வன்னிமை ஏற்பட்டிருக்கக் கூடுமென்பது ஆராய்ச்சிக்குரியது.
யாழ்ப்பாணப் பட்டினத்தைச் சேர்ந்த வன்னிநாடு கள் சிலாபம்வரை பரந்திருந்தன வென்று குவேருேஸ் சுவாமியார் கூறியுள்ளார். 47 எனவே கோட்டை அரசு எழுச்சி பெறமுன் யாழ்ப்பாண மன்னரின் ஆதிக்கம் புத் தளத்தில் ஏற்பட்டிருத்தல் கூடும். கி. பி. 1344 இல் ஈழத்திற்கு வந்த அராபிய அறிஞரான இவுன்பற்றுற்ற பட்டாள நகரிலே தான் ஆரியச்சக்கரவர்த்தியைக் கண்ட தாகவும், அந்நகரிலுள்ள துறைகளிற் கறுவா பெருந் தொகையிலே குவிக்கப்பட்டிருந்ததாகவும் செப்புகின்

Page 25
46 வன்னியர்
ருர்,48 இஷன் பற்று ற்ரு புத்தளத்தையே பட்டாள நக ரென வர்ணித்தாரென்று பல அறிஞர் கருதுவர்.
முக்கர கட்டன என்ற சிங்கள மொழியிலுள்ள நூல் புத்தளத்து முக்குவருக்கும் ஆறும் பராக்கிரம பாகு ( 14 15 - 67 ) விற்குமிடையில் நடைபெற்ற போரினைப்பற்றிக் கூறுகின்றது. புத்தளத்தைச் சேர்ந்த முக்குவர் புன்னல, நாகபட்டினம் ஆகிய இடங்களிற் பாளையமிட்டுப் பராக்கிரமபாகுவைத் தாக்கிய போது அவ்வரசன் அமைச்சர்களைக்கூட்டி அவர்களின் ஆலோ சனையைப் பெற்றுக் காஞ்சிபுரம், காவிரிப்பட்டினம், கீழக் கரை முதலிய இடங்களிலிருந்து போர் வீரர்களை அழைத் துத் தன் படையிலே சேர்த்ததாகவும் இந்நூல் கூறும்.49 இவ்வாருகப் பராக்கிரமபாகு வரவழைத்திருந்த படை கள் புத்தளத்திற்குச் சென்று மூன்று மாதங்களாக முக்குவருடன் கடும்போர் நிகழ்த்திய பின் அவ்வன்னி மையைக் கைப்பற்றின. அத்துடன் பராக்கிரமபாகு வின் ஆட்சி ஏற்பாடாகியது.50 பரக்கும்ப சிரித என்ற நூல் பராக்கிரமபாகு “முக்கர அரசனை நிர்மூலனஞ் செய்தானென்று கூறுகின்றது. 51 பராக்கிரமபாகுவிற் கும் இம்முக்கர அரசனுக்குமிடையில் நடைபெற்ற போரே முக்கர கட்டனவில் விரித்துரைக்கப்பட்டுள் ளது. பராக்கிரமபாகு புத்தளத்து வன்னிமையைக் கைப்பற்றியிருந்தும் அங்கு வன்னியரின் அ தி கா ர ம் மறையவில்லை.
பதினரும் நூற்ருண்டைச் சேர்ந்த இரு செப்பேடு கள் புத்தளத்து வன்னிமை பற்றி அரிய சான்றுகளைத் தருகின்றன. ஏழாம் புவனேகபாகு நவரத்தின வன்னி யனுக்குக் கொடுத்த செப்டேட்டில் லுணுவில என்னு மிடத்திலிருந்து அவ்வன்னியன் புத்தளத்தை ஆண்டா னென்பதை அறியமுடிகின்றது. மேலும் இவ்வாவணம் புத்தளத்திலுள்ள முத்திர கூடம் என்ற நீதிமன்றம் பற் றியும் தகவல்களைக் கொண்டுள்ளது. அம் மன்றத்திலி ருந்த பதினெட்டு உறுப்பினரும் ராஜவன்னியர் என்ற

ஈழத்து வன்னிமைகள்-1 4 ή
பட்டத்தைப் பெற்றிருந்தனர். மேலும் அவ்வன்னியர் பல சிறப்புரிமைகளையும் பெற்றிருந்தனர். தலைமுறை தலைமுறையாக அவ்வன்னியரின் சந்ததியினர் முத்திர கூடத்தின் உறுப்பினராயிருப்பதற்கு உரிமை அளிக்கப் பட்டிருந்தது. அரசனுக்குரிய வரிகளைச் செலுத்தும் பொறுப்பிலிருந்து விடுபட்டிருந்ததோடு குற்றங்களைச் செய்யினும் அவற்றிற்கான தண்டனைகளைப் பெருத வாய்ப்பினையும் அவர்கள் பெற்றர்கள். அத்துடன் அவர்களின் உறவினரும் ஊழிய சேவையிலிருந்து அவ காசம் பெற்றிருந்தனர்.53
கணையாழி, கவசம், சாமரம், பவளக் குடை வெள்ளிவாள் போன்றவற்றைத் தம் சமக்கட்டாகப் புத் தள முக்குவவன்னியர் பெற்றிருந்தனரென்பதை மாதம் பையிலிருந்த தனியவல்லபன் வழங்கிய சேப்பேட்டின் வாயிலாக அறியலாம்.54

Page 26
48
10,
வன்னியர்
மூன்றம் இயல்
அடிக்குறிப்பு
The Kingdom of Jaffna, Chapter II.
The Kingdom of Jaffna, Chapter III.
Liya nagamage,
The Decline of Polonnaruwa and the Rise of Dambadeniya
The Kingdom of Jaffna, Chapter III. . .
Ibid.
K. A. Nilakanta Sastri, The Ceylon Expedition of Jatavarman Sundara pandya”
Eigth All India Oriental Conference P. 252. The Kingdom of Jaffna, Chapters III & IV.
The Kingdom of Jaffna, Chapter IV. சி. பத்மநாதன், "யாழ்ப்பாண மன்னர் குல விருதுகளும் சின்னங்களும், தினகரன் தீபாவளி மலர், 1970.
University of Ceylon History of Ceylon, 1960. Vol. I, Pt 2.
The Kingdom of Jaffna, Chapter II.
ஒல்லாந்தர் காலத்தில் நிலவிய வன்னிமைக%ளப் பற்றிப் பேராசிரியர் அரசரத்தினம் மிகத் திறமையான கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்
S. Arasaratnam, The Vanniar of North Ceylon: a study of feudal power and Central authority, 1660 - 1760' The Ceylon Journal of Historical and Social Studies' Vol. 10. No. 2, pp 101 - 12.

11.
12.
13.
. 14.
15.
16.
7.
18.
19.
20.
21.
22.
23.
24,
ஈழத்து வன்னிமைகள் - 1 49
Guair Gof ad-LJL L- பிரித்தானிய பொருட்காட்சிச்சாலை நூல் நிலையத்திலுள்ள ஏட்டுப்பிரதி.
கோணேசர் சல்வெட்டு,
சண்முகரத்தின ஐயரின் பதிப்பு யாழ்ப்பாணம், 1909,
மட்டக்களப்பு மான்மியம்,
வித்துவான் F. X, C. நடராசாவின் பதிப்பு, கொழுப்பு, 1962
606 unt Luntled . J. W. அருட்பிரகாசத்தின் பதிப்பு,
1921
பூஜாவலிய, A. V. 5 grafut693), 60 lu Lu Sill,
கொழும்பு, 1921.
சூளவம்சம், LXXXI, செய்யுள் I.
". வன்னி ரஜாத்தம் சமுபாகத."
சூளவம்சம், LXXXLIII, GIF uiuunyair 1 0 LXXXVIII 87 - 89, LXXXIX, 53.
சூளவம்சம், LXXXVIII, 87 - 89.
The Kingdom of Jaffna, P. 163.
மட்டக்களப்பு மான்மியம், 54, 104.
மட்டக்களப்பு மான்மியம், 95.
மட்டக்களப்பு மான்மியம், 104.
The Kingdom of Jaffna, PP. 105- 106. South Indian Inscriptions. Vol. IV, No, 1396. சூளவம்சம், LX, 36-44,
6Taiúbib, LXIII, 24, 29.
சூளவம் சம், LXXIV, 44,
7

Page 27
50
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
39.
வன்னியர்
S. Paranavitana,
A Sanskrit Inscription from Padaviya', Journal of the Royal Asiatic Society (Ceylon Branch). Vol. VIII, Pt 2. (New Series), P. 261.
The Kingdom of Jaffna, p. 125.
யாழ்ப்பாண வைபவமாலை. பக்கம் 12.
கோணேசர் கல்வெட்டு, பக்கங்கள் 2 - 3, 40 - 42.
கோணேசர் கல்வெட்டு, பக்கம் 6 அடை - நிலவரி, ஆயம் - வாணிப வரி, தீர்வை - தானிய வரி.
The Kingdom of Jaffna, p 20. C. Rasanayakam,
Ancient Jaffna, PP. 377-71. பூரீ தக்ஷண கைலாச புராணம், பாயிரம், செய்யுள் 8.
சூளவம்சம் LXX, 238.
Gamranu îFth, LXXX, 29.
Epigraphia Zeylanica, Vol. V, pp. 170 — 73. Journal of the Royal Asiatic society (Ceylon Branch) Vol. VII, pt 2 (New Series) p. 179.
கா. இந்திரபாலா, *கங்குவேலிக் கல்வெட்டு
சிந்தனை, மலர் 2 இதழ் 2 - 3 ப. 40 - 42.
கா. இந்திரபாலா, * வெருகல் கல்வெட்டு ?
சிந்தனை, மலர் 2. இதழ் 2 - 3, ப. 35 - 37, கோணேசர் கல்வெட்டு, ப. 11 13.
நம்பொத ப. 4.

40.
41.
42.
43.
4.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
ஈழத்து வன்னிமைகள் - ! 5.
கோணேசர் கல்வெட்டு, ப; 21. யாழ்ப்பாண வைபவமாலை .L46 וe மட்டக்களப்பு மான்மியம், ப. 53 - 54. மட்டக்களப்பு மான்மியம், ப; 104.
(56ra i Fub, LXXX, 61 - 70, 74 - 79.
நாடு காடு பாவணிக் கல்வெட்டு, பிரித்தானிய பொருட் காட்சிச்சாலை நூல் நிலையத்திலுள்ள ஏட்டுப் பிரதி.
Memoir of Ryckloff van Goens December, 1663. P. 44.
The Temporal and Spiritual Conquest of Ceylon, Fernao De Queyroz, translated by Fr. S. G. Perera, Colombo,
1930. p. 47.
The Rehla of Ibn Battuta .
translated by Mahdi Hussain“ Gaekward's Oriental series No. LXXIIII, 1953. PP. 217 - 218.
M. D. Raghavan,
The Karava of Ceylon PP. 16 - 19.
The Kingdom of Jaffna, P. 213 - 214.
The Karava of Ceylon Colombo, 1961 PP 8 - 19.
Parakumba Sirita
edited by K. D. P.
Vikramasinha, Colombo, 1954 Verse 75.
ஆரும் பராக்கிரமபாகு கோட்டையில் அரசனுகியபின் வன்னிநாடுகளைக் கைப்பற்றினன் என்று அவனுடைய காலத்துச் சிங்கள நூல்கள் கூறுகின்றன. முன் எந்த அரசனும் அடக்கியிரா த பதினெட்டு வன்னிகளையும் பராக் கிரமபாகு கைப்பற்றினன் என்று கிராசந்தேஸய செப்புகின் ாது (பிராசர்தேஸய, செய்யுள் 128. ) பரகும்ப சிரித (47) கடன்ா) நாலு இவ்வாறு சொல்லுகின்றது. மேலும் ராஜ ப , 4) கரய, ராஜாவலிய, அளகேஸ்வர யுத்தய என்ற வர லாம்று நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன.

Page 28
52
வன்னியர்
ஈழத்திலே வேட்டுவ வன்னிமைகளும் சில பிரதேசங் களில் நிலைபெற்று வந்தன. பணிக்கிருல என்பவனைப் பராக் கிரமபாகு நான்கு வன்னிகளிலுமுள்ள வேடரின் அதிபதி யாக்கினன் என்று மலல கதாவ என்ற நூல் கூறும்.
வன்னியர் அடங்காப்பற்றுக்கு வந்தபோது அங்கு வேட
ரின் தலைவர்கள் சிலவிடங்களில் இருந்து அதிகாரஞ் செலுத் தினர்களென வையாபாடல் கூறும்.
53. Simon Casie Chitty,
54.
The Ceylon Gazetteer Cotta, 1834,
PP. 190 - 191.
The Ceylon Gazetteer PP 191 - 193,

ஈழத்து வன்னிமைகள் -1 53
நாலாம் இயல்
ஈழத்து வன்னிமைகள் - II
(அ) தோற்றுவாய்
யாழ்ப்பாணப் பட்டினம் என வழங்கிய வட இலங் கையில் நிலைபெற்ற தமிழரசிலே பல வன்னிமைகளிருந் தன. இவற்றை வன்னிபம், வன்னியணுரென்ற பட் டங்களைப் பெற்றிருந்த குறுநில மன்னர் ஆண்டு வந்த னர். யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள வலிகாமம், தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என்ற மாகாணங்களு டன் வன்னி நாட்டையும் யாழ்ப்பாண அரசு உள்ள டக்கியிருந்ததென்றும், மன்னரிலிருந்து திருகோணமலை வரை அவ்வன்னி பரந்திருந்ததென்றும் குவேறேஸ் சுவாமியார் கூறுகிருர், 1 வேறேரிடத்திலே கோட்டை அரசின் எல்லைகளை வரையறுத்துக் கூறுமிடத்து யாழ்ப் பாணப் பட்டினத்துக்குரிய வன்னிநாட்டின் எல்லை சிலா பம் வரை பரந்திருந்ததென்றும் இவர் எடுத்துரைக் கின்றர்.2 யாழ்ப்பாண அரசின் அளவினைப் பற்றிக் குவேறேஸ் சுவாமியார் சொல்வன ஒல்லாந்த தேசாதி பதி பான் கூன்ஸ் சொல்வனவற்றைப் பெரிதும் ஒத்தி ருக்கின்றன. யாழ்ப்பாணப் பட்டினத்தைப் பற்றி அத் தேசாதிபதி மேல்வருமாறு கூறுகின்றர்: "இந் நான்கு மாகாணங்களும் பதின்மூன்று தீவுகளும் யாழ்ப்பாணப் பட்டினமென்று வழங்கி வந்தன; இவற்றேடு வன்னி யும் அவ்வரசைச் சேர்ந்திருந்தது, யாழ்ப்பான மன்னர் வன்னியைக் கைப்பற்றித் திறை பெற்று வந்தனர். அதே போலப் போத்துக்கேயரும் வன்னியரிடமிருந்து திறை பெற்றனர். மேற்கிலே கற்பிட்டியிலிருந்து பூநக ரிப் பக்கமாகவுள்ள கல்முனை வரை காணப்படும் செட் டி குளம், மாதோட்டம் முதலான இடங்களை அடக் விக் கிழக்கிலே திருகோணமலை வாையும் வன்னி பரந்து காணப்படுகிறது. இவ்வரசினைப் சியங்கேரி (சங்கிலி)

Page 29
54 வன்னியர்
என்ற அரசன் நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தான்."3
பனங்காமம், முள்ளியவளை, கருநாவல்பத்து, தென்னமரவடி, மேல்பத்து, கரிக்கட்டு மூலை, செட்டி குளம் பத்து என்ற வன்னிகள் தமிழரசர் காலத்திலே யாழ்ப்பாணப் பட்டினத்திற் சிறப்பிடம் பெற்றிருந் தன. ஆரியச்சக்கரவர்த்தி பாண் டி நாட்டிலிருந்து படையெடுத்து வந்து யாழ்ப்பாணத்திலே ஆதிக்கம் பெற்ற காலத்தில் அவனேடு வந்த படைத் தலைவர் கள் பலர் வன்னியுள் நுழைந்து அங்கிருந்த பல சிற்ற ரசர்களை அகற்றிவிட்டு அவராண்ட குறுநில அரசுக ளைக் கைப்பற்றி ஆட்சிசெய்தனர்.
யாழ்ப்பாண வைபவமாலை வன்னியில் இருதடவை களாக வன் னி ய ரி ன் குடியேற்றம் ஏற்பட்டதென்று சொல்கின்றது. இவற்றுள் முதற் குடியேற்றம் குளக் கோட்டன் காலத்தில் ஏற்பட்டதெனவும், இரண் டாம் குடியேற்றம் பாண்டி நாட்டால் வந்த ஐம்பத் தொன்பது வன்னியரின் வருகையோடு ஏற்பட்டதென் றும் அந்நூல் கூறும். 4 தமிழரசர் காலத்திலேற்பட்ட இரண்டாம் குடியேற்றம் பற்றியே வையாபாடல் கூறு கின்றதெனக் கொள்ளலாம்.
வன்னியரது வீரச்செயல்களைப் பொருளாகக் கொண்ட ஒரு மான்மியம் இந்நூலுக்கு மூ ல மாக இருந்திருக்குமோ என்பது ஆராய்ச்சிக்குரியது. வையா பாடலிற் புனைகதைகள் வரலாற்றுண்மைகளோடு கலப் புற்றுள்ளன. எனினும் வன்னியர் பற்றி வையாபாடல் கூறுவனவற்றிலிருந்து அடங்காப்பற்றென வழங்கிய வன் னிப் பகுதியின் வரலாற்றை ஓரளவிற்கு அறிந்துகொள் ளலாம்,

ஈழத்து வன்னிமைகள்-11 55
(ஆ) அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்
வன்னியர் பற்றி வையா பாடல் கூறுவனவற்றுட் சில வரலாற்றுண்மைகள் இடம்பெறுகின்றன. அடங் காப்பற்றை வன்னியர் கைப்பற்றியமையைக் குறித்து மேல் வருமாறு நூல் கூறுகின்றது: செயதுங்க வீர வரராஜசிங்கன் தன் மாமனது மகளைத் தான் மணம் முடிக்க விரும்புவதாக மதுரை மன்னனிடம் அறிவிக்கு மாறு தூதுவரை அனுப்பினன். தூதுவர்கள் சொன்ன வற்றைக் கேட்ட மதுரை மன்னன் அறுபது வாட்படை வன்னியரை அழைத்துத் தன் மகள் சமதூதியை அவர்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். செய துங்க வீரவரராஜசிங்கனும் இளவரசியை மணம்முடித்து விட்டு அவளோடு வ்ந்த வன்னியர்களை அடங்காப் பற்றுக்குச்சென்று அதைக் கைப்பற்றி ஆளுமாறும், ஆண்டுதோறும் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்த வேண்டுமென்றும் பணித்தான்.
அடங்காப் பற்றை அடைந்ததும் வன்னியர் அதைக் கைப்பற்றுவதற்குத் தம்மிடம் போதிய படையில்லை என்பதை உணர்ந்தார்கள். எனவே, இளஞ்சிங்க மாப் பாணன், நல்லவாகுதேவன், அத்திமாப்பாணன் என் போரிடம் தூதுவர்களை அனுப்பி, மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவை நாடு, தொண்டைமண்டலம், வடகிரிநாடு எனுமிடங் களிலிருந்து கூட்டிவரக் கூடியவர்கள் அனைவரையும் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினர்கள், இதனை அறிந்ததும் தில்லைமூவாயிரவர், திடவிரசிங்கன், குடை காத்தான், முடிகாத்தான், நல்லவாகு மலைநாடன், சிங்கவாகு, சோதயன், அங்கசிங்கன், கட்டைக்காலிங்கன், சொக்கநாதன், கங்கைமகன், கலைக்கோட்டுமுடியோன், வீரகச்சமணி முடியரசன், காபாலி விரன், சேது எனும் பதியை ஆளுகின்ற வீரம் செறிந்த தலைவன், இளஞ் விங்க மாப்பாணன் என்போரும் பெருமைமிக்க ஆரிய வம்சத்தாரும் படகுகளிலே ஏறி யாழ்ப்பாணம் வந்

Page 30
56 வன்னியர்
தார்கள். இவர்களிலே திடவிரசிங்கன், கரிகட்டு மூலைப் பற்றுக்கு அதிபதியானன். இளஞ்சிங்க மாப்பாணன், இராஜசிங்க மாப்பாணன், நல்லவாகு மெய்த்தேவன், கறுத் தவாகு, சிங்கமாப்பாணன் என்போர் சான்ரு ரையும் வலையரையும் துரத்தி விட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினர்கள். நீலையினர் திசையர்ண்டாரும் படை யும் மேல் பற்றுக்கு வந்து சகரன் மகரன் என்ற வேட்டு வத் தலைவர்களைக் கொன்றுவிட்டு நாட்டையாண்டனர்.
மேற்கு மூலை, கிழக்கு மூலை என்பவற்றைக் கைப் பற்றிய சிங்கவாகு பொக்கா வன்னியிலிருந்தான். சுப திட்டா என்னும் அந்தணனும் படையும் திரியாய் என்னுமிடத்திற்குச் சென்று நீலப்பணிக்கனைக் கொன்று விட்டு அந்நிலத்தை ஆண்டனர். காலிங்கன், மலையகத் தார், கன்னர் முதலியோர் கச்சாயிலே குடியிருந்தார் கள். அங்கசன் கட்டுக்குளத்திற்குச் சென்றுவாழ்ந்தான். புகழ்மிக்க சிங்கவாகு திருகோணமலைக்குச் சென்ருன், மாமுகன் வெருகல், தம்பலகாமம் என்பவற்றைக் கைப்பற்றியாளச் சென்றன். மைடன் என்போன் கோட்டியாரத்திற்கு அதிபதியானன். ஒடுக்கன், நீலன், மைலன் என்போர் முறையே துணுக்காய், இத்திமடு, நெடுங்கேணி என்னுமிடங்களுக்குச் சென்றனர். ஆற் றல் பொருந்திய சன்மன் நொச்சிமுனையில் ஆண்டான். நாகன் புல்வெளிக்குச் செல்ல நீலையினுன் வாகுதேவன் தனிக்கல்லிலிருந்தான். 5
வன்னியர்கள் வந்த பின்னர் அவர்களை அடுத்து அவர்களின் மனைவிமாரும் பரிவாரங்களும் அடங்காப் பற்றை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களுள் மதுவீர மழவராயனும் நாட்டையாண்ட மழவராய னும் மன்னனேடு யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். பூபால வன்னிமையும் கோபாலரும் கட்டுக்குளத்திலும் திரியாயிலும் இனிது வாழ்ந்தனர். வில்வராயன் நல்லூ ரிலிருந்தான். குடைகாத்தான்; கொடித்தேவன், தேவ

ஈழத்து வன்னிமைகள் - I sy
ராயன், கந்தவனத்தான் என்போர் செட்டி குளத்தின் அதிபதிகளாயினர். உத்துங்கராயன் பனங்காமத்தில் வாழ்ந்தான்.
மேலேயுள்ள வையாபாடற் பகுதியிற் பல வன்னியர் களின் பெயர்கள் வருகின்றன. அவர்கள் சென்றிருந்த இடங்களும் கைப்பற்றிய இடங்களும் கூறப்படுகின்றன. இங்கு கூறப்படும் பிரதானிகள் அனைவரும் வரலாற்று நபர்கள் என்று கொள்ள முடியாத போதிலும், இவர் களிற் பலர் தென்னகத்திலிருந்து வந்து வன்னிப் பிர தேசங்கள் பலவற்றைக் கைப்பற்றி ஆண்டதை ஒரு வர லாற்று நிகழ்ச்சியாகவே கருத வேண்டும். இவர்கள் இன்ன காலத்தில் வந்தார்கள் என்று திட்டவட்டமாக நூல் கூருமையால் ஈழநாட்டு வரலாற்றையும் தென் னிந்திய வரலாற்றையும் ஒருங்கே ஒப்புநோக்கி ஆராய் தவன் மூலமும், நூலிலுள்ள அகச்சான்றுகளே நுணுகி நோக்குவதன் மூலமும் ஓரளவிற்கு வன்னியர்கள் வந்த காலத்தை நிர்ணயிக்கலாம். வன்னியரின் வருகை பற்றி நூல்தரும் விளக்கம் ஏற்கக் கூடியதொன்ருக அமைய வில்லை. மதுரை மன்னனின் இளவரசியோடு இவர்கள் வந்தார்கள் என்பதும் பதினெண்குடிகளைச் சேர்ந்த மக்களைக் கூட்டி வந்தார்கள் என்பதும் ஓரளவிற்கு விஜ யன் மதுரை இளவரசியை மணந்தமை பற்றி மகாவம் சம் தரும் தகவலை ஒத்திருக்கின்றன. எனினும், மதுரை மன்னனின் தூண்டுதலால், வன்னியர்கள் வந்தார்கள் என்றும் செயதுங்க வீரவரராஜசிங்கன் என்ற முதல் அரசன் காலத்தில் வன்னியர் வந்தார்கள் என்றும் நூல் கூறுவன கவனத்திற்குரியவை.
கைலாயமாலையிலே கூறப்பெற்ற முதற் சிங்கையா
ரியனன செயவீரசிங்கை ஆரியன் எ ன் ற பெயரே
வையாபாடலிற் செயதுங்க வீரவரராஜசிங்கன் எனத்
திரிபடைந்து வந்துள்ளதென மயகிக்கலாம். சேதுபதி
திறலரசு புரியும் வீரன், செருக்குற்ற ஆரிய வம்சத்
8

Page 31
58 வன்னியர்
தார் என்போரும் வன்னியர்களோடு வந்தார்க ளென்று வையாபாடல் கூறுவதால், சேது நாட்டிலிருந்து வந்த ஆரியச்சக்கரவர்த்திகளோடு இவ்வன்னியர் வந்த னர் எனக் கொள்வது சாலப்பொருந்தும். மேலும் இவ்வன்னியர் படையெடுப்புக்கள் நிகழ்ந்த காலத்திலே தான் வந்திருக்க வேண்டும். எனவே, பதின்மூன்ரும் நூற்ருண்டில் நடந்த பாண்டியப் படையெடுப்பின் பின் னணியில் வைத்தே வன்னியர் பற்றி வையாபாடல் கூறு வதை நோக்கவேண்டும். இவ்வன்னியர்கள் கைப்பற் றிய இடங்களிற் பல யாழ்ப்பாண மன்னர் ஆதிக்கத்துள் அமைந்திருந்தமையும் இக் கருத்துக்கு ஆதாரம் அளிக் கின்றது. அத்தோடு முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியா, கிய சிங்கை ஆரியன் காலத்தில் அவன் அதிகாரம் பெறு வதற்குப் பாண்டி மழவன் என்ற பிரதானியும் வேறு பல மழவராயன் என வழங்கிய தலைவர்களும் துணை புரிந்த னர். எனக் கைலாய மாலை கூறுகின்றது. மழவராயன் என வழங்கிய தலைவர்கள் வன்னியரோடு வந்தார்கள் என்றும், மதுவீர மழவராயன், மழவராயன் என் போர் அரசனுேடு யாழ்ப்பாணத்தில் இருந்தனர் என் றும் வையாபாடல் கூறுகின்றது. எனவே, வையாபா டலில் இடம்பெறும் தகவல்கள் முதலாம் ஆரியச் சக் கரவர்த்தி காலத்தினை யொட்டியனவென்றே கருத GOTTLD).
பான் கூன்ஸ் தேசாதிபதி யாழ்ப்பாண மன்னர்கள் எல்லோருக்கும் வன்னியர் திறை செலுத்தி வந்தார்கள் என்று கூறுகிருர் .7 எனினும் செயவீரசிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாண்ட சிங்கையாரி யன், முதலாம் சங்கிலி போன்ற பலம்மிக்க மன்னர் களே வன்னியர்களையடக்கி, வன்னி நாட்டில் தம்மா திக்கத்தைச் சிறப்பாக ஏற்படுத்தியிருந்தார்கள். 8 வரோ தயசிங்கையாரியன் ஆட்சியில் வன்னியர்கள் கிளர்ச்சி செய்தபொழுது அவ்வரசன் வன்னிமேற் படையெடுத்து வன்னியரையடக்கி வழமையான திறயை அவர்களிடமி ருந்து பெற்றன்.9

ஈழத்து வன்னிமைகள் - 11 59
ஆரும் பராக்கிரமவாகு கோட்டையை ஆண்டபொ ழுதுஅவனது சேனதிபதி செண்பகப் பெருமாள் இரு தட வையாக யாழ்ப்பாண அரசைத் தாக்கினன். முதலா வது முறை படையெடுத்துச் சென்றபொழுது சில எல் லைப் பிரதேசங்களைத் தாக்கிவிட்டுத் திரும்பினன். இவன் யாழ்ப்பாணத்தின்மீது மீண்டும் 1450ம் ஆண்டள விற் படையெடுத்து அவ்வரசைக் கைப்பற்றினன். வன் னியைக் கைப்பற்றிய பின்னரே இவன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நுழைந்தானெனக் கருதலாம்.10 யாழ்ப் பாண வைபவமாலை கனகசூரிய சிங்கையாரியன் காலத் தில் வன்னியரின் துணையோடு சிங்களப் படையெடுப்பு நடைபெற்றதெனக் கூறுகின்றது. பின்னர் பதினைந் தாம் நூற்ருண்டிற் கனகசூரிய சிங்கையாரியனின் மகளு கிய பரராசசேகரன் வன்னியரை அடக்கியதோடு தன் ஞட்சிக்காலத்தின் இறுதியில் முள்ளியவளையிற் சில காலம் தங்கியிருந்தான். 11
யாழ்ப்பாண அரசிலிருந்த நிர்வாக அதிகாரிகளில் வன்னியரே முதன்மை பெற்றிருந்தனர். தலைமுறை தலைமுறையாகத் தம் நாடுகளை வன்னியர் ஆண்டு வந்த னர். மேலும் யாழ்ப்பாணத்தில், அரண்மனையில் வரு டத்திற்கு இருமுறை வரிசைகள் கூடியபொழுது வன்பரிய ரும் அரசனுக்கு உபகாரம் அனுப்பி வைத்தனர். எனி னும் ஆண்டுக்கு ஒருமுறை தலைநகருக்குச் சென்று, யரழ்ப்பாண மன்னரிடம் சமுகமளித்துத் திறை கொடுத்தனர். 12 அரசனின் நேரடியான ஆட்சிக்குள்ள மாகாணங்களிலே காணப்பெற்ற நிர்வாக முறையே வன்னி நாட்டிலும் காணப்பட்டது. எனினும், வன்னி யர் சுயமாக ஆண்டு, அவற்றிற் சேவை புரிந்த முதலி யார், கண்காணி, பண்டாரப்பிள்ளை, கலையாரி அடப் பனர், மொத்தக்கர் முதலிய எல்லா அதிகாரிகளையும் நியமித்து வந்தனர். 13 அத்துடன் வன்னி நாடுகளி லுள்ள வாரம், தீர்வை, காணிக்கடன், ஆள்வரி முத லிய எல்லா இறைவரிகளையும் வன்னியரேபெற்றனர்.14

Page 32
60 வன்னியர்
போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சிசெய்த காலத்தில் யாழ்ப்பாண அரசில் நிலவிய வழமைகளை ஆதாரமாகக் கொண்டு வன்னியரிடமி ருந்து திறைபெறும் உரிமையை நிலைநாட்டி வந்தனர். எனினும் போத்துக்கேயரின் ஆதிக்கம் வன்னியிற் பெரி தும் தளர்வுற்றிருந்தது. ஒல்லாந்தரும் யாழ்ப்பாணப் பட்டினத்தைக் கைப்பற்றியபோது முற்கால வழமைக ளையே தழுவி வன்னியரிடமிருந்து திறைபெற்று வந்த னர். எனினும் பல தடவைகளாக வன்னியர் யாழ்ப் பாணத்திற்குச் சென்று திறை கொடுக்க மறுத்ததுடன், ஒல்லாந்தருக்கெதிராகக் கண்டி அரசனின் உதவியையும் பெறுவதற்கு முயற்சித்தனர். ஒல்லாந்தர் காலத்தில்
தென்னமரவடி, பனங்காமம், மேல்பத்து, முள்ளிய வளை, கரிக்கட்டு மூலை, கருநாவல்பத்து ஆகிய இடங்க ளில் வன்னியரின் ஆட்சி நிலைபெற்றது. இவற்றுட்
பனங்காமத்தை ஆண்ட வன்னியர் பெருவலிபெற்றி ருந்ததோடு அயலிலுள்ள வன்னிமைகளின் பிரதேசங் களையுங் கைப்பற்றியிருந்தனர். இதுவே ஒல்லாந்தர் காலம்வரையுள்ள அடங்காப்பற்று வன்னிமைகளின் சுருக்கமான வரலாருகும்.

2.
ஈழத்து வன்னிமைகள் - 11 6f
நாலாம் இயல்
அடிக்குறிப்பு
Queyroz, trans. P. 151.
Ibid, P. 47.
சிலாபத்திலுள்ள தெமள ஹத்பத்து என்னும் பகுதியில் ராஜவன்னிபத்து, குமாரவன்னிபத்து என்ற இரு பிரிவுகள் உள்ளளன. سمه
( Frank Modder, Gazetteer of the Puttalam District, P. 101. ) வன்னிபத்து என்ற பெயர் முன்னுெரு காலத்தில் வன்னிமை நிலவியதற்குச் சான்ருயுள்ளது.
ஒரு காணியின் விற்பனைபற்றிக் கூறும் ( 15 - 3 - 1644 ) உறுதியொன்று குருகுல (கருவ ) வன்னியர் பற்றியும் குறிப்பிடுகின்றது.
(M. D. Raghavan, India in Ceylonese History, Society and Culture, 1964, P. 180. ).
Rycklof Van Goens, Instructions for the guidaace of the opperkoopman Anthony Pavilioen, Commandeur and Council of Jafnapatnam 1658, PP, 84 - 86.
யாழ்ப்பாண வைபவ மாலை, ப. 11 - 12,
60ai untuntu-du, Gar. 20 - 50.
வையாபாடல் செ 72 - 82,
Memoir of Van Goens to Laurens Pyl, Late Commandeur of Jafnapatnam, trans. Sophia Pieters, Colombo. 1910,

Page 33
62
10.
11.
12.
13.
4.
வன்னியர்
The Kingdom of Jaffna, PP. 34 - 342.
யாழ்ப்பாண வைபவமாலை ப. 38
The Kingdom of Jaffna, Chapter VIII.
GManyuurrunt Láiv, GOF. Il 02 - 1 06.
The Kingdom of Jaffna, P. 31, 355-356. Ibid., P. 355. s:
Ibid., P. 365.

இரண்டாம் பகுதி

Page 34

பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம் 85
ஐந்தாம் இயல்
பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம்
யாழ்ப்பாணப் பட்டினம் பற்றிய ஆராய்ச்சிக்குத் தேவை யான வரலாற்ருதாரங்களைச் சேர்க்க முயன்றபோது வட இலங்கை அரசர் எழுதுவித்த இரு செப்பேடுகள் இருப்பதாகச் செய்தி கிடைத்தது. அவை சிதம்பரத்திலுள்ள பரராசசேகரன் மடத்தின் முகாமையாளரும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் ஒதுவாராக முன் பணிபுரிந்த சிவஞானம் அவர்களின் மகனு மாகிய திரு. சிவக்கொழுந்து என்பவரிடமுள்ளன. இச் செப் பேடுகளைப்பற்றி இதுவரை வரலாற்று மாணவரும் ஆராய்ச்சி யாளரும் நன்கறிந்திருக்கவில்லை.
இவற்றிலொன்று யாழ்ப்பாணத்து மன்னர் பரராசசேகர மகாராசா சிதம்பர தரிசனஞ் செய்து அங்கு ஆற்றிய திருப் பணிபற்றிக் கூறுகின்றது. இச் செப்பேடு 9 அங்குல நீளமும் 12 அங்குல அகலமுங் கொண்டுள்ளது. இப்பட்டயத்தில் இலக் கண வழுக்களும் பிரதேச வழக்கிலுள்ள சொற்களின் திரிபுகளும் இடையிடையே வருகின்றன. நாடு என்பதற்குப் பதிலாக ஞ டு (வரிகள் 2-3 ) என்ற சொல்லும் தர்மம் என்பதற்குப் பதிலாக தறுமம் என்ற சொல்லும் பட்டயத்தில் வருகின்றன. சர்வமானியம் என்ற சொல் இங்கு சறுவ மானியம் என வரு கின்றது, மேலும் சில சொற்களில் பூழ கரம் வரவேண்டிய இடங்களில் 'ஸா கரம் வந்துள்ளது (22. கிளக்கும் 49. எளு தினது).
வைத்து, சம்மதித்து என்ற சொற்கள் வைச்சு (18), சம் மதிச்சு எனச் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் யாட்பாணத்திலே, இராஜ்யத்துக்குள்ளே என்ற மொழிகளின் ஈற்றில் வரும் "ஏ" காரம் ஐகாரமாகி வந்துள்ளது. மேலும் அர்த்த சாம வேளை என்ற மொழித் தொடரில் வரவேண்டிய 'ர' கர மெய் மருவியுள்ளது. ஸ்வஸ்தி g எனும் மங்கல மொழிகளில் உள்ள பூரீ என்னும் கிரந்தத்தில் வரும் பதத்திற் குப் பதிலாக சீ என்னும் எழுத்துப் பிழையாக வந்துள்ளது,
"பூரீமந் மஹா மண்டலேஸ்வரன் அரியராய விபாடன் பாஷைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட
9

Page 35
66 வ்ன்னியர்
நாடு கொண்டு கொண்டநாடு குடா தான் பூர்வ தக்ஷண பஸ்சி மோத்தர சமுத்திராதிபதி கஜவேட்டை கண்டருளிய." என்று விஜயநகர மன்னரின் மெய்க் கீர்த்திகளில் வழமையாக வரும் விருதுகள் இச் செப்பேட்டிலும் வருகின்றன. விஜயநகரப் பேர ரசு நிலைபெற்ற காலத்திற் குறு நில மன்னர்களும் இவ்வாரு ன வாசகங்களைத் தம் மெய்க்கீர்த்திகளிலே சேர்த்துக் கொண்ட னர். விஜயநகரப் பேரரசு அழிவுற்ற பின்பும் விஜயநகர மன் னரின் மெய்க்கீர்த்திகளிலுள்ள வாசகங்களைக் குறுநில மன்ன ரும் பிறரும் பயன்படுத்தி வந்தனர் போலத் தோன்றுகின்றது.
இப் பட்டயம் யாழ்ப்பாண மன்னர் பரராசசேகர மகா ராசா சிதம்பர தரிசனஞ்செய்து ஓர் அற நிலையத்தை அங்கு ஏற்படுத்தியமை பற்றிக் கூறுகின்றது. பதின்மூன்ரும் நூற்றண் டின் பிற்கூற்றில் பாண்டி நாட்டின் தென்முனையில் "சேது"வை அடுத்துள்ளதும் சேது கரையினை எல்லையாகக் கொண்டதுமான செவ்விருக்கை நாடு என்னும் பதியிலிருந்து வந்து யாழ்ப்பாண நாட்டைக் கைப்பற்றி நல்லூரில் அரசிருக்கையை அமைத்த சிங்கையாரியன் எனப்படும் பெருந்திறல் படைத்த பாண்டிய சேணுதிபதியான ஆரியச்சக்கரவர்த்தியின் மரபில் வந்தோரே பதினேழாம் நூற்ருண்டின் முற்பகுதி வரைக்கும் வட இலங் கையை ஆண்டனர்.கி அம் மன்னர்கள் தாம் முடி சூடிய பொழுது "பரராசசேகரன், செகராசசேகரன் " என மாறி வரும் பட்டப் பெயர்களைப் பெற்றனர்.
யாழ்ப்பாண அரசர்களின் கல்வெட்டுக்கள் என்று கொள் ளக் கூடியன இரண்டு மட்டுமே இதுவரை ஈழ நாட்டிற் கிடைத் துள்ளன. அவற்றுள் ஒன்று தென்னிலங்கையில் கோட்டகம எனுமிடத்திற் கண்டெடுக்கப்பட்டது. அது பதினன்காம் நூற்ருண் டில் ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன் மலைநாட்டினுள் நுழைந்து கம்பளையிலிருந்து ஆட்சிபுரிந்த தென்னிலங்கை வேந் தனத் தோற்கடித்தமையை மேல்வருமாறு கூறுகின்றது
சேது" கங்கணம் வேற்கண்ணிணையாற் காட்டினர் காமர் வளைப் பங்கையக் கைமேற்றிலதம் பாரித்தார் பொங்கொலி நீற் சிங்கை நகராரியனைச் சேராவனு ரேசர் தங்கள் மடமாதர் தாம், 5
பதவியாவிற் கண்டெடுக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களி லுள்ள வடமொழிக் கல்வெட்டு ஒன்று லோகநாதன் என்ற தண்டநாயக்கன் மணிகளாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்

L ITT IT gf சேகரன் திருப்பணி கூறும் பட்டயம் 67
பட்ட மிக ஒளிபொருந்திய முடியைக் கொண்ட விகாரம் ஒன்றை அமைத்து, அதற்கு வேளைக்கார விகாரமெனப் பெயரிட்டான் என்று கூறுகின்றது. 8 இக் கல்வெட்டின் தொடக்கத்திலே ‘சேது" குலத்தின் கீர்த்தி குறிக்கப்படுவதால் "சேது" வை இலச்சினை யாகக் கொண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சமான யாழ்ப் பாண மன்னர் குலமே ஈண்டு குறிப்பிடப்பட்டுள்ளதென ஊகிக் கலாம் எனவே அவ்விகாாையை அமைத்த லோகநாதன் ஆரி யச்சக்கரவர்த்தியின் தளபதிகளுள் ஒருவனுக இருந்திருத்தல் கூடும்.
பரராசசேகர மகாராசாவின் திருப்பணி பற்றிக் கூறும் இப் பட்டயம் 56 வரிகளைக் கொண்டுள்ளது. சாலிவாகன சகாப்தம் தொளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டிற் பரராசசேகரன் சிதம்பரத்திற்குப் போனனென்று பட்டயம் கூறுகின்றது. வருடம் 944 இல் ( கி. பி. 1022) வட இலங்கையில் ஒரு தமி ழரசு ஏற்பட்டிருக்கவில்லை, மேலும் விஜயநகர மன்னரின் மெய்க் கீர்த்தியும் பட்டயத்தில் வருகின்றது. விஜயநகரமன்னரின் ஆட்சி பதினன்காம் நூற்ருண்டிலேயே ஏற்பட்டது. எனவே பட்டயத் தில் ஆண்டு பிழையாக எழுதப்பட்டுள்ள தென்பது தெளிவாகின், றது. இப்பட்டயம் பரராசசேகரனின் ஆணைப்படி எழுதப்பட் டிருப்பின் பட்டயத்தை எழுதியவரின் அவதானக் குறைவினலும் அறியாமையினுலும் இப்பிழை ஏற்பட்டிருக்கலாம். இப்பட்ட யத்திலுள்ளவை மூலசாசனத்திலிருந்து பெயர்த் தெழுதப்பட் டிருத்தலுங் கூடும். அவ்வாருகில் மூலத்தைப் பார்த்துப் பட் டயத்தை எழுதியவர் ஆண்டினைப் பிழையாக எழுதியிருத்தல் வேண்டும். .
சிதம்பரத்திலே பரராச சேகரனின் பெயரைக் கொண்ட மடம் ஒன்று இன்றும் காணப்படுவதால் இந்தப் பட்டயத்திற் கூறப்படுவன உண்மையாகவே நடைபெற்றிருக்கவேண்டும், பட் டயத்திலே குறிப்பிடப்பெற்றுள்ள பரராசசேகர மகாராசன் சங்கிலிங்கு முன் அரசு புரிந்த மன்னனே என்று கொள்வதற்கிட முண்டு. சங்கிலியின் முன்னேணுகிய பரராசசேகரன் வடதேசம் சென்றதற்கு யாழ்ப்பாண வைபவ மாலை சான்றளிக்கின்றது.
கோட்டை அரசனகிய ஆரும் பராக்கிரமபாகுவின் (1415-67) சேனதிபதியான செண்பகப் பெருமாள் (சப்புமல் குமாரயா) யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் (1450 -67)

Page 36
68. வன்னியர்
கனகசூரியசிங்கையாரியன் வடதேசம் சென்றிருந்தான். அவனு டைய புதல்வர்கள் திருக்கோவலூர் அரச குடும்பத்தாருடன் வர்ழ்ந்து அரசு நெறியும் படைக்கலப் பயிற்சியும் கற்றனர். 7 இவ் விளவரசருள் ஒருவனே கனகசூரிய சிங்கையாரியனின் பின் முடிசூடிய பரராசசேகரன். இவனைப்பற்றி யாழ்ப்பாண வைபவ மாலை மேல் வருமாறு கூறுகின்றது:
..". சில காலத்தின் பின் இராசாவின் முதற் குமாரன் சடுதி மரண முண்டுபட்டு இறந்துபோனன். சங்கிலி நஞ்சூட்டிக் கொன்ருனென்பது ஒருவருக்கும் தெரியாதே போயிற்று. மூத்த குமாரன் இறந்து போக அரசன் தன் இளைய குமாரனுகிய பண் டாரம் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி வைத்துத் தீர்த்தமாடுவதற்குப் பரிவாரங்களுடனே கும்பகோணத்துக்கு யாத்திரை பண்ணினன். சோழ தேசத்தரசனும் மகாயக தீர்த்த மாடுவதற்குப் பரிவாரங்களுடன் அவ்விடத்தில் வந்திருந்தான். அவ்விடத்தில் அச்சங்கிலி செய்த குழப்பத்தினல் அவனையும் பரராச சேகரனையும் பரிவாரங்களையும் அவ்வரசன் பிடித்துச் சிறையில் வைத்தான். படை சேனைகளுடன் பின்னகப் போன பரநிருபசிங்கம் அதைக் கேள்விப்பட்டுப் போய்ச் சண்டை ஆரம்பித்துக் கடும் போர் பண்ணுகையிற் பரநிருபசிங்கத்துக்கு வலுவான காயங் கிடைத்தது. அப்படியிருந்தும் அவன் அந்தக் காயங்களையும் எண்ணுமல், வீராவேசங்கொண்டு Guit priTug. அவ் வரசனைப் பிடித்துச் சிறையிலிட்டு பரராச சேகரன் முத லானுேரைச் சிறையிலிருந்து நீக்கி, மூன்று மாதம் அங்கேயிருந்து தனக்குப் பட்ட காயங்களையும் மாற்றினுன். அப்பொழுது சோழ நாட்டரசன் தன் இராட்சியத்தைத் தான் ஆளும்படி விட்டால் திறை யிறுப்பதாக வேண்டிக்கொள்ள அவனிடத்தில் அதற்கேற்ற பிணை வாங்கிக்கொண்டு இராச்சியத்தை ஒப்புவித்து விட்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினன்', 8
யாழ்ப்பாண வைபவமாலை கூறுமாப் போல் பரராச சேகரன் சோழ அரசனைத் தோற்கடித்துத் திறை பெற்றனென்று கொள் வதற்கு எது விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் இக் காலத்தில் யாழ்ப்பாண மன்னர் விஜயநகர மேலாணைக்குள் அடங்கி யிருந்தனர். கிருஷ்ண தேவராயர் (1509 - 30) அச்சுத ராயர் போன்றேர் ஆரியச்சக்கரவர்த்திகளிடமிருந்து திறை பெற்றனரென்று கொள்வதற்கு விஜய நகரச் சாசனங்கள் சான் றளிக்கின்றன, தமிழ் நாடுகளில் விஜய நகர மன்னர்களின்

பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம் 69
பிரதிநிதிகளாக அதிகாரம் செலுத்திய நாயக்கர்களிடையே ஏற்பட்ட ஏதோவொரு போரிற் பரராசசேகரன் பங்கு கொண்ட மையை யாழ்ப்பாண வைபவமாலை திரிபுபடுத்திக் கூறுகின்றது. எனினும் பரராசசேகரனேடு படைத் தலைவனுகப் பரநிருபசிங்க முஞ் சோழநாட்டுக்குச் சென்றனென்று இந் நூல் குறிப்பிடுவது கவனித்தற்பாலது. செப்பேடும் பரநிருபசிங்கப் படையாண்ட வர் பற்றிக் குறிப்பிடுகின்றது.
சிங்கையூர் பற்றியும் இப் பட்டயத்திற் குறிப்புண்டு. ஆரியச் சக்கரவர்த்தியின் தலைநகராகிய யாழ்ப்பாணப் பட்டினம் சிங்கை எனவும் சிங்கை நகர் எனவும் அழைக்கப்பட்டு வந்தது.
ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கை நகரிலிருந்து ஆண் டமை uutta தக்ஷிண கைலாச புராணம், செகராசசேகரம், செகராச சேகரமாலை என்னும் நூல்களில் சிங்கையாதிபன், சிங்கைமேவும் செகராசசேகரன், சிங்கை காவல் மன்னன் என்னும் அடைமொழி களால் அவர்கள் வர்ணிக்கப்பட்டுள்ளனர்.8
படையாராட்சி என்ற சொல்லும் இங்கு காணப்படுகிறது, ஆராட்சி (ஆராச்சி) என்ற மொழி வழமையாக ஒரு படைப் பிரிவின் தலைவனைக் குறிப்பதுண்டு. தமிழ்நாடுகளின் இராணுவ முறையிலும் ஆராச்சி என்னும் படைத் கலைவர்கள் இடம்பெற் றனர்.10 மேலும குவேறேஸ் சுவாமியாரின் நூலின் படி சங்கிலி யின் படைகளிற் பல ஆராச்சிமார் இடம்பெற்றிருந்தனர்.

Page 37
70
வன்னியர்
செப்பேட்டிலுள்ளபடி
ஸவஸதி சீமந மஹா மணட லெசுரன ஹரீஹராய வியா
ட ந பாஷைக
குததபபுவராயர கணடன மூவரயர É. 6ððfl 6ðf é56ð: 1 -
ணுடு கொணடு கொணட னடு குடாதான பூறுவ தகFண பஸசி மோததர
சதுஸ் ஸமுதநிராதிபதி கஜ வெடடை கணடருளிய பதீ
வெங்கடபதி தெ
வ மஹாராயர பருதிவி ராஜயம பணணியருளா நினற
Frr Gaunt
கன சகாாததம தொளாயிரதது சமிச யச மெற செலலா
நினற சுபகிறு து வருஷம தை மாதம குருவாரமும சுவாதி நசசெததிரமும பறுவமும கூடின சுபதினததிலெ யாடபாணம இராசசிய ம பணணியிருநத பரராசசெகர மகராசா அவா கள சிதமப
ரததுககு வநது சிதமபரெசுர தெரிசனம பணணி சபாப
திககு குணடலமும பதககமும சாததி தில்லை மூவாயிர ருக
கும கு
ணடலம பொடதி சுவாமிககு எனறும கடடளை நடககும
படி நி
ததிய மொரு வராகனுககுப படிககடடளையும தினமொனறு
ககு ஐங்கல அரிசி நெய வெததியமும மடததிலெ பிட
சனச கல அரிசியும சுவாமிககு பரி வடடமும இபபடி எ
நத வெளை தறுமம நடககும படிககு முதலு னவசசு
g வைகசிற தறகு அங்கண ஒததியும வாங்கி ஒரு நாளை யிற திருவிளாவும நடபபிசசு வநத பரதெசிகளவநத

19
20.
21
22
25,
24.
25.
26。
27,
28.
29.
30.
31,
32.
33.
34.
35。
36
37.
引8。
39.
40.
பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம் 7
வெளை யிருககிறதறகு இராசாககள தமயிரான தெரு வீ
தி எனறு முனனுாறறறுவது மனையும வாங்கி வீடு கடபடி
நநதாவனம பொடுகிறதறகு நலல தணணிக கிணதது ககு கிளகரும தெறகும முபபதினுயிரம குளி நிலமும
வாங்கி இ(ரா)சாககள தமயிரான வெளியெனறு கொததங்
குடியிலை பாதி ஊரும வாங்கி யாடபாணததிலை தனது
இராசசியததுககுளளே அசசுவெலி புததுார அளவெட
டி இநத மூனறு ஊரும சறுவமானியமாக சிதமபர தறும
ததுககு கொடுதது இநதக கடடளை என எனறும தறுமம விசாரிககும படிககு இராசாவாசலுககு மநதிரிமாராகவும
இராச வங்கிஷமாகவும இருககிறவாகள திலலியூர
செனப (தி)யாா சிங்கையூாப படை ஆணடவா திலவியூர
குலததுங்கா பரநிருபசிங்கா குலநிருவாங்கப படையா
ராசசியாரிவாகள வங்கிஷததிலெ நாலுபேரும சமம
திசசு தங்களினததுககுளளே ஒருதரைக காவிவெ
டடித தமயிரஞராக வைதது இராசாககள தமயிரான π திருசசிறறமபல மெனறவருககு படடமுமகடடிவைத
எனஎனறைககு இநதத தறுமம விசாரிசசுகொளஞம
இரண்டாம் பக்கம்
படிககு இநத நாலு பெரையும பரராசசெகரமக
ராசா இதபபடி கடடளே பணணி தறுமம நடககு
ம படிககு கலலூ காவெரியும புலறு பூமியும முள
ள மடடுககும இவாகளே இது விசாரிசசு கொளு

Page 38
44,
4 5.
46.
47.
48.
49 50.
51.
52.
53。
54。
55。
56,
வன்னியர்
, மபடிககு கட்டளைபணணி எளுதிப பொடடது இ
. பபடிககு பரராசசெகரமகராசா அநதத தறுமதது
ககு யாதொரு சகாயம பணணினவாகள சிதமபரத
திலெ அததசாமவேளை சபாபதி தெரிசனமபண
ணின பலன பெறுவாா கள இததறுமததுககு அகிதம பணணினவாகள சிதமபரதலததிலெ தீயிட
டவாகளபொற தொஷததிலெ பொவாாகள இபப
டிச சமமதிசசு இநத படடய மெஞதினது பரர
ாசசெகர மகராசா அவா கள திலவியூா செனபதி
யாா சிங்கையூாப படை ஆணடவா திலலியூா குலத
துங்கா பரநிருபசிங்க குல நிருவாங்கப படையாரா
டசியாா உ அரிய நலலறம முறறினென நனறினு மத னை புரிதி யெனபவன காபபவன புகலிருவறகுமபெரு குமமபபயன பதின மடங்கெனறனா பெருநூலகுறி
யமாந தாகள தீவினை வளிககு மீ தொகசூம இநதபப
டடையம எளுதினது பரநிருபசிங்க படையாணடவா

O
I 2
I 3
14
5
6
பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம் 73
செப்பேட்டின் திருத்திய வாசகம்
ஸ்வஸ்தி பூரீமந் மஹா மண்டலே சுரன் ஹரிஹராய விபா டந் பாெெஷக்
குத்தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு
கொண்ட நாடு குடா தான், பூர்வ தகழி என பஸ்சிமோத்தர
சதுஸ் சமுத்திராதிபதி, சஜவேட்டை கண்டருளிய பதிவேங் கடபதி தேவ
மஹாராயர் பிருதுவி ராஜ்யம் பண்ணியருளாநின்ற சாலிவா
சன சகாப்தம் தொளாயிரத்து சம்ச மேற் செல்லா நின்ற சு கிரு
து வருஷம் தை மாதம் குரு வாரமும் சுவாதி நட்சத்திர மும்
பறுவமும் கூடின சுபதினத்தில் யாழ்ப்பாணம் இராச்சிய
ம் பண்ணியிருந்த பரராசசேசர மகாராசா அவர்கள் சிதம்ப
ரத்துக்கு வந்து சிதம்பரேசுர தரிசனம் பண்ணி, சபாப
திக்குக் குண்டலமும் 2 பதக்கமும் 18 சாத்தி, தி ல் லை மூவாயிரவருக்கும் 14 கு
ண்டலம் போட்டுச் சுவாமிக்கு என்றும் கட்ட%ா நடக்கும் படி நி
த்தியமொரு வராகனுக்குப் படி க் கட்ட விள யும் தின மொன்று
க்கு ஐங்கல அரிசி நெய்வேத்தியமும் மடத்திலே பிட்
ச்சை கல அரிசியும் சுவாமிக்குப் பரிவட்ட மும்' இப்படி எ
ந்த வேளை தர்மம் நடிக்கும்படிக்கு முதல் வைத்து, வாகனம்
O

Page 39
74
17
8
19
20
2
22
23
24
25
26
27
28
29
30
3.
32
34
35
36
வன்னியர்
வைக்கிறதற்கு அங்கண ஒத்தியும் வாங்கி, ஒரு நாளை யிற் திருவிழாவும் நடப்பித்து வந்த பரதேசிகள்17 வந்த
வேளை யிருக்கிறதற்கு இராசாக்கள் தம்பிரான் 18 தெரு வீ
தி என்று முன்னுற்றறுபது மனையும் வாங்கி வீடு கட்டி,
நந்தாவனம் போடுகிறதற்கு நல்ல தண்ணீர்க் கிணற்று
க்குக் கிழக்கும் தெற்கும் முப்பதினுயிரம் குளிநிலமும்
வாங்கி, இ(ரார்சாக்கள் தம்பிரான் வெளி யென்று கொத்தங் குடியிலே பாதி ஊரும் வாங்கி, யாட்பாணத்திலே தனது இராச்சியத்துக்குள்ளே அச்சுவேலி புத்தூர் அளவெட்டி
இந்த மூன்று ஊரும் சர்வமானியமாகச் 19 சிதம்பர தர்ம
த்துக்குக் கொடுத்து, இந்தக் கட்டளை என, என்றும் தர்மம்
விசாரிக்கும் படிக்கு இராசாவாசலுக்கு மந்திரிமா ராகவும்
இராச வம்சமாகவும் இருக்கிறவர்கள் தில்லியூர்
சேனப(தி) யார், சிங்கை யூர்ப் படை ஆண்டவர், தில் லியூர் குலத்துங்கர், பரநிருப சிங்கர் குல நிருவாங்கப் படையா
ராச்சியாரிவர்கள் வம்சத்திலே நாலு பேரும் சம்ம தித்து தங்களினத்துக்குள்ளே ஒருதரைக் காவி ெ ட்டித் தம்பிரஞராக வைத்து, இராசாக்கள் தம்பிரா ர் திருச்சிற்றம்பல மென்றவருக்குப் பட்டமும் கட்டி வைத்
து என்றென்றைக்கு இந்தத்தர்மம் விசாரித்துக் கொள்ளும்

37
፵ 8
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம் 75
இரண்டாம் பக்கம்
படிக்கு இந்த நாலு பேரையும் பாராசசேகர மகா
ராசா இதப்படி கட்டளை பண்ணித் தர்மம் நடக்கு
ம் படிக்கு கல்லு காவேரியும் புல்லு மூமியு முள்ள
மட்டுக்கும்20 இவர்களே இது விசாரித்துக் கொள்ளு
ம் படிக்கு கட்டளை பண்ணி எழுதிப் போட்டது. இ
ப்படிக்கு பரராசசேசர மகாராசா. இந்தத் தர்மத்து க்கு யாதொருவர் சகாயம் பண்ணினவர்கள் சிதம்பரத்தி
திலே அர்த்த சாமவேளை சபாபதி தரிசனம் பண்
ணின பலன் பெறுவார்கள். இத்தர்மத்துக்கு அகிதம் 21
பண்ணினவர்கள் சிதம்பரத் தலத்திலே தீயிட்ட டவர்கள் போகிற தோஷத்திலே போவார்கள். இப்ப
டிச் சம்மதித்து இந்தப் பட்டய மெழுதினது பரர
ாச சேகர மகாராசா அவர்கள், தில்லியூர் சேனதிபதி
யார், சிங்கையூர்ப் படை ஆண்டவர், தில்லியூர் குலத்
துங்கர், பரநிருப சிங்க குல நிருவாங்கப் படையாரா
ட்சியார். அரிய நல்லறம் முற்றினேன் நன்றினு மத
னைப் புரிதியென்பவன் காப்பவன் புகலிருவற்கும் பெரு
குமப்பயன் பதின் மடங்கென்றனர் பெரு நூல் கூறி22
ய மாந்தர்கள். தீவினை வழிக்கு மீதொக்கும். இந்தப் ப
ட்டயம் எழுதினது பரநிருப சிங்கப் படையாண்டவர்

Page 40
76
2.
3。
su gir6furi
ஐந்தாம் இயல்
அடிக்குறிப்பு
இவர் வசிக்குமிடம் கள்ளியங்காடு
இவ்விருதுகள் வீரவுக்கண்ண உடையார், கம்பண உடை யார் முதலாம் தேவராயர், விரூபாக்ஷ தேவர் மல்லி கார்ஜுனராயர், வீர பிரவுடதேவராயர். கிருஷ்ண தேவ TTř, அச்சுதராயர், முதலாம், வேங்கடபதி தேவர் போன்றேரின் சாசனங்களிலிடம் பெறுகின்றன,
Epigraphia Indica. Vol. XXXII No, 28; South Indian Inscripticns, Vol. IV Nos. 360, 362 ;
தென்னிந்திய கோயிற் சாசனங்கள், பாகம் 11, 549, 550, 552, 554, 574 unrasub II, I, 0, 13, 23)
S, Pathmanathan The Kingdom of Jaffna circa A. D. 12501450 இலண்டன் பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பித்த ஆய் வுரை 4ம் அத்தியாயம் (1969)
C. Rasanayagam, Ancient Jaffna, Madras, 1926 P. 364
இதன் பொருள்: ஆரவாரிக்கின்ற அலைகளையுடைய சிங்கை நகரில் வாழும் ஆரியனைச் சென்றடையாத அனுரேசரின் (அனுரை + ஈசர் அல்லது இளவரசர்) இளமாதர் தம்வேல் போன்ற கண்களில் நீர் சொரிந்த வண்ணம் வளையலனிந்த தாமரை மலர் போன்ற கைகளினலே தங்கள் நுதல்களின் திலகங்களை நீக்கினர்கள்.
Journal of the Ceylon Branch of the Royal Asiatic Scciety.
Vol. III; pt 2 (New Series) P. 262
இக்கல்வெட்டை வாசித்த பேராசிரியர் பரணவிதான இங்கு குறிக்கப்பட்ட சேதுகுலம் மலேசியாவிலிருந்து வந்த ஒரு குலத்தையே குறிக்கும் என்பர் 5ம், 8ம் நூற்ருண்டு களில் மலாய் நாட்டின் ஒரு பகுதியைச் சீனர்கள் சீ - து என்றழைத்தமையால் மலாய் நாட்டிலே சேது வெனுமோர்

10.
a 1.
12.
13.
14
16.
6.
பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம் 77
அரசு காணப்பட்டதென்று அவர் வாதிப்பார். எனினும் சீ - து என்பது "செம்மண்ணிலம்" என்று பொருள்படுவ தால் பரணவிதான கூறும் கருத்து முற்றிலும் பொருத்த மற்றது. "சேதுகுலம்" என்ற ஓர் அரசமரபோ சேது எனப் பெயர்பெற்ற இடமோ மலேசியாவிற் காணப்பட்டதென்ப தற்கு எந்தவிதமான ஆதாரமுங் கிடையாது.
யாழ்ப்பாண வைபவமாலை, ( யா. வை. மா. ) திரு. குல சபாநாதனின் பதிப்பு, சென்னை 1953, பக்கம் 46.
umr, som sau . LDT . Luš. 55 - 56.
. பொ. வைத்திலிங்கதேசிகர், தகழிண கைலாச புராணம்,
சிறப்புப்பாயிரம், செகராசசேகரம், சர்ப்பசாத்திரம், செய் պoir. 8
sahu Intif, sabal air, "Sergeant in native militia.
நாற்கடல் நாயகன் என்று பொருள் படும்; வட கீழ், தென். மேல் கடல்களில் ஆதிக்கம் பெற்றவன். இதுவும் விஜயநகர மன்னர்களின் விருதுகளுளொன்று நந்திக்கலம் கத்திலும் நந்திவர்மன் பல்லவ மல்லன "நாற்கடல் நாயகன்" என்று புலவர் வர்ணித்துள்ளமை கவனித்தற்பாலது.
ஆடவர் பூணும் காதணி.
சரடு முதலியவற்றிற் கோக்கப்படும் கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி. தொகையடியார்களுள் ஒரு சாராரான சிதம்பர கலத்திற் குரிய பிராமணர். தில்லை வாழந்தணர் தம்மடியார்க்குமடி யேன் (தேவாரம்)
பன்றி முத்திரையைக் கொண்ட விஜயநகா காலப் பொற் காசு தென்னிந்தியாவிலும் ஈழத்திலும் பதினெட்டாம் நூற்றண்டு வரை புழக்கத்திலிருந்தது.
ஆடை கோயில் மரியாதையாகக் தரிசிப்போர் தலையைச் சுற்றிக்கட்டும் கடவுளாடை, உத்தியோகத்திற்கு அடை யாளமாக அரசன் அளிக்கும் நில அங்கி,

Page 41
፳ 8
I7.
8.
.
2.
வன்னியர்
பிற நாட்டவர், பிற ஊரவர், அந்நியரையும் புதிதாகவந்து குடியேறியவர்களேயும் குறிக்கும். யாழ்ப்பான நாட்டில் "பரதேசிகன்" எனப்பட்ட, ஒரு பிரிவினர் இருந்தனரென்ப தற்குப் பறங்கிகள் கால ஆவணங்களும் நல்ல மாப் "னை வன்னியனின் ஏடும் சான்றளிக்கின்றன.
மன்னனேயும் த ஃமை அதிகாரியைார் குறிப்பதாக இச் சொற்றுெடர் பதின் மூன்றும் நூற்ருண்டுக்குப் பிந்திய தென் விந்திய கல்வெட்டுக்களில் அமைகின்றது.
எவ்வகைக் கடமை (வரி) களு மில்லாது ஆட்சியுரிமையுள்ள
நிலம்.
சந்திாாதித்தவரை என்றதற்குப் பதிலாகவுள் என மொழிகள். 18ம், 17ர் நூற்றண்டுத் தமிழகச் சர்சBarங்களில் இடம் பெறும் மொழிகள்.

பரராச சேகரன் திருப்பணி கூறும் பட்டயம் 79
டுத்
ଦଣ୍ଡ *懿 リ
ஜ்கும்
臀 நீ்ழ்

Page 42
வன்னியர்
 

கயிலே வன்னியனுர் மட தர்மசாதனப் பட்டயம் 81
ஆரும் இயல் கயிலை வன்னியனுர் மட தர்மசாதனப் பட்டயம்’ சிதம்பரம்
அடங்காப்பற்றிலே அதிகாரஞ் செலுத்திய வன்னியரின் ஆவணங்களில் இரண்டு பட்டுமே கிடைத்துள்ளன. இவற்று ளொன்று பனங்காமம் பத்து வன்னிபம் நல்ல மாப்பாணன் வழங்கிய ஒஃப் மற்றையது இதுவரை பிரசுரிக்கப்படாத சுயி வாய வன்னியனூர் மட தர்மசாதனப் பட்டயம். இப் பட்டயம் 11 அங்குல நீளமும் 10 அங்கு அகலமுங் கொண்ட செப் புத் தகட்டிலே இரு பக்கங்களிலும் எழுதப்பெற்றுள்ளது. இச் ரெப்பேடு சக வருடம் 1814 இல் (கி. பி. 1748) யாழ்ப்பானைப் பட்டினத்தைச் சேர்ந்த வன்னியர் பலர் சிதம்பரத்திலுள்ள அற நிலையமொன்றுக்குக் கொடுத்த தானங்களேப்பற்றிக் கூறு கின்றது.
வன்னியர் சிதம்பரத்திலே பரராச சேகர மகாராசனின் கட்டளே நடத்தும் சூரியமூர்த்தித் தம்பிரானிடம் தாம் விட்ட நிவந்தங்களே ஒப்படைத்தன ரென்று செப்பேடு கூறுவதால் பர ராச சேகரன் முன் சிதம்பரத்தில் அமைத்திருந்த இராசாக் கள் தம்பிரான் மடம்' எனப் பெயரிய அறநிலேயத்தை வன்னிய ரும் ஆதரித்து வந்தவரென்பது புலனுகின்றது A
"தங்கயிஃப் பிள்ஃள வன்னியனுர் மடதர்மத்துக்கு"? என்ற மொழித் தொடர் செப்பேட்டில் வருவதால் கயிலாய வன்னி பன் என்ற பிரதானியும் முன்பு இம் மடத்திற்குச் சில நிவந்தங் களே விட்டிருந்தான் என்று கருதலாம். எனவே, யாழ்ப்பாண மன்னர் குலம் அழிந்தொழிந்து நெடுங் காலஞ் சென்ற பின்பும் யாழ்ப்பான ப் பட்டினத்தைச் சேர்ந்த குறுநில மன்னர் சிதம் பரத்திலே பரராசசேகரன் அமைத்திருந்த மடத்தைப் பேளிை வந்ததோடு மட தர்ம ஏற்பாடுகள் செவ்வனே நடைபெறுவதற் கான ஆதரவையும் அளித்து வந்தனர் என்பது இச் செப்பேட் டில் வரும் தகவல்களினுற் புலணுகின்றது.
அடங்காப் பற்றைச் சேர்ந்த வன்னியர் பவர் ஒன்றுசேர்ந்து மடதர்ம ஏற்பாடுகளேச் செய்தமை கவனத்திற்குரியது, வன்னி யர் தம்மிடையே போர் புரிந்து வந்தபோதும் ஒல்லாந்த ஆட் சியாளருக்கெதிராகக் கிளர்ச்சியேற் படுத்துங் காலங்களில் ஒத் துழைத்தனர். அடங்காப்பற்றிலிருந்த வன்னியர் பதினெட்டாம்

Page 43
82 வன்னியர்
நூற்றண்டிற் சமய விவகாரங்களைப் பொறுத்தமட்டில் இணைந்து பணியாற்றத் தயங்கவில்லை என்பதற்கு இப்பட்டயத்திலுள்ளவை சான்றளிக்கின்றன
அடங்காப் பற்று வன்னிமைகளின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் தேவையான அரிய சான்றுகள் இப்பட்டயத் திலே வருகின்றன. அடங்காப் பற்றிலுள்ள வன்னிநாடுகள் பலவற்றின் பெயர்களும் அவற்றில் அதிகாரஞ் செலுத்தியிருந்த குறுநில மன்னர்களின் பெயர்களும் பட்டயத்தில் வந்துள்ளன. பனங்காமம் பத்தில் நிச்சயசேனுதிராய முதலியாரும் கரிகட்டு மூலை, தென்னமரவடி என்னும் பத்துக்களில் புவிநல்லமாப் பாண வன்னியனுர், புண்ணியபிள்ளை வன்னியனர் என்போரும் வன்னிபங்களாயிருந்தனர். மேல்பத்தில் குராண தீர வன்னிய ராய முதலியாரவர்களும் கந்தையின வன்னியணுரவர்களும், மேல் பத்து - முள்ளியவளையில் இலங்கை நாராயண முதலியா ரவர்களும் மயிலாத்தை உடையாரும் வன்னிபங்களாயிருந்தனர் என்பதைச் செப்பேட்டின் வாயிலாக அறிந்துகொள்ளலாம், 3 மே லும் பச்சிலைப்பள்ளியைச் சேர்ந்த தீலையின வன்னியனுர், மூத் தர் வன்னியனுர் ஆகியோரைப் பற்றியும் செப்பேடு குறிப்பிடு கின்றது.
வட இலங்கையில் யாழ்ப்பாண அரசு எழுச்சிபெற முன்பே வன்னிமைகள் தோன்றியிருந்தன. பாண்டிநாட்டிலிருந்து ஆரியச் சக்கரவர்த்தி படையெடுத்து வந்து வட இலங்கையைக் கைப் பற்றி நல்லூரில் இராசதானி அமைத்திருந்த நாட்களில் அவ னேடு கூடி வந்த படைத் தலைவர்கள் பலர் அடங்காப் பற்றுக் குச் சென்று அங்குள்ள குறுநில அரசுகளைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். எனவே யாழ்ப்பாண அரசின் எழுச்சியோடு வன்னி நாடுகளிற் பல புதிய குறுநில மன்னர் குலங்கள் அதிகாரம் பெற்றன. பதின் மூன்ரும் பதினன்காம் நூற்ருண்டுகளில் வன் னியிலே ஏழுக்கு மேற்பட்ட குறுநில அரசுகளிருந்தன வென்று கொள்வதற்கிடமுண்டு. காலப் போக்கில் அயல்நாடுகள் மேற் பலம்வாய்ந்த வன்னியர் ஆக்கிரமித்ததின் விளைவாக ஏழு வன்னி நாடுகள் வளர்ச்சி அடைந்தன.
செட்டிகுளம், மாதோட்டம் போன்ற இடங்களிற் (பறங்கி யர் காலத்தில் வன்னியரின் ஆட்சி அழிவுற்றது. அடங்காப் பற்றிலுள்ள வன்னியரை அடக்கித் திறை கொள்வது போத் தக் கேயருக்கு மிகச் சிரமமாக இருந்தது. கி. பி. 1645 இல் வன்னி நாடுகளிலிருந்து 37 யானைகளை யாழ்ப்பாணத்துப் பறங்கி யதிகாரிகள் திறையாகப் பெற்றனர்.4 s

கயிலை வன்னியனர் மட தர்மசாதனப் பட்டயம் 83
ஒல்லாந்தரும் வன்னியரை ஆண்டுதோறும் யாழ்ப்பாணத் துக்கு அழைத்து வழமையான திறையைப் பெற முயன்றனர். ஒல்லாந்த தேசாதிபதிகளும் ஒல்லாந்தராட்சியில் யாழ்ப்பாணப் பட்டினத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிக ளும் எழுதிய அறிக்கைகளில் வன்னியர் பற்றிய தகவல்கள் கிடைக் கின்றன. வட இலங்கையில் முள்ளியவளை, கருநாவல்பத்து, கரி கட்டுமூலை, தென்னமரவடி. மேல்பத்து, பனங்காமம் என்ற ஆறு வன்னிகளில் வன்னிபம், வன்னியனர் என்னும் பட்டங்க ளைக் கொண்ட குறுநில மன்னர் ஆட்சி செய்தனர் என்பதை இவ்வறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது.
தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் (9-11-1679) வன்னியர்பற்றி மேல் வருந் தகவல்கள் கிடைக்கின்றன.5
வன்னி வன்னிபம் திறை
1. பனங்காமம் 1. நல்லமாப்பாணன் 114 யானை
2. காசியனுர்
விளாங்குளம் நல்லமாப்பாணன் 4 ()
பரந்தன் வெளி நல்லமாப்பாணன் 2. 2. மேல்பத்து-முள்ளியவளை குட்டிப்பிள்ளை 8(4)
. கரிகட்டு மூலை சியாந்தனுர் 7 4. கருநாவல் பத்து திரிகயிலை 7
புதுக்குடியிருப்பு வன்னியனுர் 5. தென்ன மரவடி சியமாத்தை 7
யாழ்ப்பாணப் பட்டினத்திலே தலைமை யதிகாரியாக விருந்த கெந்திரிக் ஸ்வாதிக்குரூன் எழுதிய அறிக்கையில் (1697) மேல் வருந் தகவல்கள் உள்ளன.8
வன்னி வன்னிபம் திறை
1. பனங்காமம் (1) தொன்பிலிப்பு 17 - நல்ல மாப்பாணன்
(2) Ggrr6år sølvLinry
இலங்கை நாராயணன்
2. கரிகட்டுமூல (2) தொன்தியாகோ
புவிநல்ல மாப்பாணன் 7

Page 44
84 வன்னியர்
3. மேல்பத்து தொன் தியோகோ
புவிநல்ல மாப்பாணன் 4. கருநாவல்பத்து தொன் அம்பலவாணர் 4. 5. தென்னமரவடி சேதுகாவலமாப்பாணன் 6, முள்ளியவளை தொன் பெருமையினர் 3 ()
பதினெட்டாம் நூற்றண்டிலே தேசாதிபதியாக விரு ந் த சுரோய்டரின் அறிக்கையிலும் (1762) மேல் வரும் விவரங்கள்
கிடைக்கின்றன.7
வன்னி வன்னிபம் திறை 1. தென்னமரவடி சேதுகாவலமாப்பாணன் 1. 2. Laoră ar pub 16 3. மேல்பத்து அமரக்கோன்முதலியார் 4. முள்ளியவளை அமரக்கோன்முதலியார் 5. கரிகட்டுமூலை அழகேசன் புவிநல்லமாப்பாணன் 7 6. கருநாவல்பத்து அழகேசன் புவிநல்லமாப்பாணன் 4
இதுவரை குறிப்பிடப்பெற்ற ஒல்லாந்தர் காலத்து ஆவணங் கள் வாயிலாகச் சில வன்னிகளிலே இரு வன்னிபங்கள் இருந் தனரென்பதையும் சில கால கட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வன்னிமைகளை ஒரே வன்னியனர் ஆண்டாரென்பதையும் அறிய முடிகின்றது. பனங்காமம், மேல்பத்து, மேல்பத்து-முள்ளியவளை ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் இவ்விரு வன்னிபங்கள் இருந்து ஆட்சி புரிந்தமைக்குக் கயிலாய வன்னியன் தர்ம சாத னப் பட்டயம் சான்றளிக்கின்றது,
பரராச சேகர மகாராசாவின் திருப்பணி கூறும் பட்டயத் திற் போல இப் பட்டயத்திலும் விஜய நகர மன்னரின் மெய்க் கீர்த்தி வருகின்றது. அத்துடன் வேங்கடபதி தேவரின் பெய ரும் குறிப்பிடப்பெற்றுள்ளது. எனினும் செப்பேடு மன்னனு டைய ஆட்சியாண்டைக் கூருது சக வருஷத்தையே குறிப்பிடு கின்றது. (1644) பட்டயம் எழுதப்பெற்ற காலத்தில் விஜய நகரப் பேரரசு அழிவுற்றுத் தொண்டை மண்டலத்தில் இஸ்லா மியரின் ஆட்சி ஏற்பட்டிருந்தது. எனினும் பட்டயங்களை எழுது மிடத்து விஜய நகர மன்னரின் மெய்க் கீர்த்தியைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் தொடர்ந்து வந்ததெனத் தோன்றுகிறது,

கயிலாய வன்னியன் மடதர்மசாதனப் பட்டயம் 85
பரராச சேகரனின் திருப்பணி பற்றிய பட்டயத்திற் போல இதிலும் கிரந்த எழுத்துக்கள் ஆங்காங்கு வந்துள்ளன. அத்து டன் பேச்சு வழக்கிலுள்ள மொழி நடையிலேயே பட்டயம் எழு தப்பட்டுளளது. பட்டயம் தமிழ் நாட்டில் எழுதப்பட்டபோதும் அங்கு பேச்சு வழக்கிலும் “ள" கர, ழ கர வேறுபாடுகள் அவ தானிக்கப்பெற்று வருகின்றபோதும் பட்டயத்தில் 'ழ'கரம் வர வேண்டிய இடங்களில் “ள கரம் வருவது கவனித்தற்பாலது. "ர" கர மெய் வரவேண்டிய இடங்களில் *று கரம் (பூர்வபூறுவ, 2-3 தர்மம் - தறுமம் 25-26) வந்துள்ளது. மேலும் மூர்த்தி என்பது "மூற்த்தி" (9) என எழுதப்பட்டுள்ளது. இக் காலப் பேச்சு வழக்கிற் போலப் பதினெட்டாம் நூற்ருண்டிலும் *ற" கர "ர கர மயக்கம் தொண்டை மண்டலத்திலிடம் பெற்ற தென்பதற்குச் செப்பேடு சான்றளிக்கின்றது. நாடு, சம்மதித்து என்ற சொற்களும் முறையே "ஞ" டு, சம்மதிச்சு எனப் பிழையாக எழுதப் பெற்றுள்ளன.
பட்டயத்தின் 39ம் வரி முதல் 43ம் வரி வரை கிரந்த எழுத்துக்களில் இரு வட மொழிச் சுலோகங்கள் எழுதப்பட்டுள் ளன. இவ்வாருன சுலோகங்கள் கிருஷ்ண தேவராயர், அச்சுத ராயர் முதலிய விஜய நகரப் பேரரசர் கால ஆவணங்களிலே வருகின்றன. இச் சுலோகங்களின் பொருள் மேல் வருமாறு:
தானம் செய்வது, அளித்த தானத்தைப் பரிபாலிப்பது, இவ்விரண்டினுள், தானத்தைக் காட்டிலும் பரிபாலனமே மேன் மையானது. தானம் செய்வதாற் சொர்க்கம் கிட்டுகிறது, பரி பாலனத்தால் அழியாத நிலையே (வைகுந்தப் பதவி) கிட்டுகின் ADğ576
தானம் அளிப்பதைக் காட்டிலும் பிறர் கொடுத்ததைப் பரி பாலனம் செய்வது இரு மடங்கு புண்ணியத்தைக் கொடுக்கும். பிறர் கொடுத்ததை அபகரிப்பதாலே தான் கொடுத்ததும் பலனற்றதாகிவிடும்.9

Page 45
8.
0
*事
வன்னியர்
செப்பேட்டிலுள்ளபடி கயிலை வனனியனுா
மட தாமசாதனப படடயம
சிதமபரம
t.
ஸ்வஸதி சீமன மஹா மணடலெசுரன ஹரி ஹராய
விபாடன பாஷைககு
த தபடவராயா கணடன மூவராயா கணடன é6ðð 1„
ணுடு கொணடு
கொணட ஞடு குடாதான பூறுவ தகதிண பஸ்சி மோததர
சதுஸ்ஸமு
தராதிபதி கஜ வெடடை கணடருளியபதி வெங்கடபதி
தெவ மகாரா
யா பரிதிவி ராஜயம பணணி யருளா நினற ஸகாபதம
கசு சபிச இதன
மேற செலலா நினற சுபகிறுது டு) சிததிரை மீ உம்உ க.
u{ LD gi, gQj6)I Lu ğfişi
ததில பறுவமும சுவாதி நக்ஷததிரமும குரு வாரமும கூடி ன சுபதினததிலே சிதமபரம பரராசசெகர மகாராசாவின கடடளை நடததும சூரிய முறததித தமயிரானவாகளுககுப ப இனங் காமப பத்து வனனிபம நிசசெய செணுதிராய முதலியாரவாகளும குலசெகர முதலியாரவாகளும கரிககடடை மூலைபததுத தெனன மரவடிப பதது anaw aus un aspisavav Drt LuLurT GOOT வனனியனாவாக
மும் புணணிய பிளளை வனனியனாவாகளும மெலப

6
17
8
19
20
2.
22
23
24
25
26
27
28
29
30
3.
32
33
34
35
36
கயிலை வன்னியனூர் மட தர்மசாதனப் பட்டயம் 87
முதலியாரவாசளும கநதையின வனனியனரவாக ளும மெலபதது முளளியவளை வனணிபம இலங்கைன
ராயண முதலியாரவரகளும மயிலாததை உ டையாரவாகளும பசசிலைபபளளி இறைசுவ
தொர இலங்கை நாராயண முதலியாரவா
களும நீலயின வனனியனுரவாகளும மூ
ததா வண்ணியஞரவாகளும இவ
ாகளைச சொநத ஊரிலககுடியானவர
களும தங்கள கயிலைப பிளளை வனனியஞர
மடதறமத துககுத தறம சாதனப
படடையது குடுதத படி கமக துககு மூனறு மர
க கால நெலனு மட தற11:ததுககுச சநதராதிதய வ
ரைககும புததிர பவுத திர பாரமபரிய மும கொடுதது வ
ரக கட வொமாகவும இபபடி சமமதிததுச சூரிய மூறததித
தமயிரான வாகளுககு நாங்களெலலாருந தறமசாத
னப படடையங் கொடுததொந தாங்களெனறென
றும தறமததைப பரிபாலனம பணணி நடபபிததுக
கொளளக கடவராகவும இநதத தறமததுககு யாதாமொ
ருவர சகாயம பணணிஞரகள அவரகள யூலொக கயிலா
சமாகிய சிதமபரததிலே அறதத சாம வெளையிலே சபா
பதி தெரிசனம பணணின புண3ணியம பெறக சுடவராகவும

Page 46
88
37
38
39
40
41
42
43
44
45
全7
48
49
50
51
52
54
55
வன்னியர்
இநதத தறமததுககு அகிதம பணனினவாகள சிதமபரத
தலததிலே தீயிடடவரகள போகிற தோஷததிலே பொகக
கடவொராகவும உஸ"பமஸ்து 1 தாந பாலநயொற
மதயெ
தாநா ஸ்ரயொ நுபாலநம 1 தாநாஸ்வறகமவாப
நொதி பா
லநாத அசயுதம பதம 1 ஸவ ததததா தவிகுணம
புணயம பர
தததாநூ பாலநாத பரதததாபஹா ரெண
ஸ் வதததம
நிஷபலம வவெத 1 அரிய நலலற முறறினென
றணனினு
மதனைபபுரிதியெனபவன காபபவன புகலிருவாககு
ம பெருகுமப பயன பதின மடங் கெனறனர பெருநூ
ற குரிய மாநதாகள தீ வினை வளிககு மீதொகசூம உ. ம
னை மடததிடை யெலலையின மணறுக ளொனறு க சு
னைய செயதவா சிவ பதத தாயிரங் கறபமுனைவர
பொறறிட வீறறிணி திருபபரிம முறை பொயினைய நற
tuu GGOTso
றுக விசைக குமாறெனஞெ உ ஸ்பைமஸ்து இபடிச சிதமபர புராணததிற சிவபுணணிய
மகிமையுரைத தலின இநதச சாதன மெழுதின
நனமைகசூக கங்காணி தாணடவ ராயன
கை எழுதது இபபடிககு நிசசயச செயனதி
ராய முதலியார

0.
11
12
13
2
கயிலை வன்னியனர் மட தர்மசாதனப் பட்டயம் 89
கயிலை வன்னியனுர் மட தர்மசாதனப் பட்டயம் சிதம்பரம்
ஸ்வஸ்தியூரீ பூரீமன் மஹா மண்டலேசுரன் ஹரி ஹராய
& விபாடன் பாஷைக்கு
த் தப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்டநாடு
கொண்டு
கொண்ட நாடு கொடாதான் பூர்வ தகழிண பஸ்சி மோத்
தர சதுஸ் ஸ்மு
த்திராதிபதி 9 கஜ வேட்டை கண்டருளியபதி வேங்கடபதி
தேவ மகாரா
யர் பிருது வி ராஜ்யம் பண்ணியருளா நின்ற சகாப்தம்
ககூசம்ச இதன்
மேற் செல்லா நின்ற சுபகிருது வருஷம் சித்திரை மாதம் உயஉ திகதியும் பூர்வ பக்ஷ
த்தில் பறுவமும் சுவாதி நட்சத்திரமும் குரு வாரமுங் கூடி தினத்திலே சிதம்பரம் பரராச சேகர மகாராசாவின்
கட்டளை நடத்தும் சூரியமூர்த்தித் தம்பிரானவர்களுக்குப்0ே ப
னங் காமம் பத்து வன்னிபம் நிச்சய சேணுதிராய
முதலியா ரவர்களும் குலசேகர முதலியாரவர்களும்
கரிக்கட்டு மூலைப் பத்துத் தென்ன மரவடிப் பத்து
வன்னிபம் புவி நல்ல மாப்பாண வன்னியணுரவர்க
ளும் புண்ணியபிள்ளை வன்னியனுரவர்களும் மேல்பு
12

Page 47
90
5
6
17
ᏐᎦ
19
20
21
22
23.
24
25
26
27
23
29
30
31
32
33
34
86
வன்னியர்
த்து வன்னியமான குராண தீரரான வன்னியராய
முதலியா ரவர்களும் கந்தையின வன்னியன ரவர்க
ளும் மேல்பத்து முள்ளியவளை வன்னிபம் இலங்கை நா
ராயண முதலியாரவர்களும் மயிலாத்தை உ
டையா ரவர்களும் பச்சிலைப் பள்ளி இறை சுவ
தோர்11 இலங்கை நாராயண முதலியாரவர் களும் நீலயின வன்னியஞரவர்களும் typ
த்தர் வன்னியனுரவர்களும் இவ
ர்களைச் சேர்ந்த ஊர்களிற் குடியானவர் களும் தங்கள் கயிலைப்பிள்ளை வன்னியனர
வர்கள் மட தர்மத்துக்குத் தர்ம சாதனப்
பட்டயம் கொடுத்த படி கமத்துக்கு மூன்று மர
க்கால் நெல்லு மட தர்மத்துக்குச் சந்திராதித்திய வ
ரைக்கும்? புத்திர பவுத்திர பாரம்பரியமும் கொடுத்து 16 வ
ரக் கடவோ மாகவும். இப்படிச் சம்மதித்துச் சூரிய மூர்த்தித்
தம்பிரானவர்களுக்கு நாங்களெல்லாருந் தர்ம சாத
னப் பட்டயம் கொடுத்தோம். தாங்களென்றென்
றும் தர்மத்தைப் பரிபாலனம் பண்ணி நடப்பித்துக்
கொள்ளக் கடவராகவும். இந்தத் தர்மத்துக்கு யாதா மொ
ருவர் சகாயம் பண்ணினர்கள் அவர்கள் பூலோக கயிலா
ச மாகிய சிதம்பரத்திலே அர்த்த சரம வேளையிலே | 3FLIFT

36
37
38
39
40 41
42
43
44
45
46
47
48
49
50
5.
52
53
54
55
கயிலை வன்னியனர் மட தர்மசாதனப் பட்டயம் 91
பதி தரிசனம் பண்ணின புண்ணியம் பெறக்கடவராகவும்.
இந்தத் தர்மத்துக்கு அகிதம் 14 பண்ணினவர்கள் சிதம்பரத்
தலத்திலே தீயிட்டவர்கள் போகின்ற தோஷத்திலே போகக்
கடவோராகவும்: ஸ"பமஸ்து 1 தாந பால நயோர் மத்யே
தாநா ஸ்ரயோ நு பாலநம் தாநாஸ்வர்கம வாப்நோதி பா
லநாத் அச்சுதம் பதம் 1 ஸ்வ தத்தா த்வி குணம் புண்யம் பர தத்தாநூ பாலநாத் 1 பரதத்தா பஹாரெண ஸ்வதத்தம் நிஷ்பலம் வவேத்' அரிய நல்லற முற்றினேன் றன்னினு மதனைப் புரிதியென்பவன் காப்பவன் புகலிருவர்க்கு
ம் பெருகுமப்பயன் மதின் மடங் கென்றனர் பெரு நூற் ற் குரிய மாந்தர்கள். தீவினை வழிக்கு மீ தொக்கும். ம னை மடத்திடை யெல்லையின் மண்று களொன்றுக்க
னைய செய்தவர் சிவபதத்தாயிரங் கற்ப முனைவர்
போற்றிட வீற்றினி திருப்பரிம்முறை போயினைய நற்
பயனேற்
றுக விசைக் குமாறென்னே. ஸ"பமஸ்து இப்படிச் சிதம்பர புராணத்திற் சிவபுண்ணிய மகிமையுரைத்தலின் இந்தச் சாதன மெழுதின
நன்மைக்குக் கண்காணி தாண்டவராயன். கை எழுத்து இப்படிக்கு நிச்சயச்சேனதி
urmruiu psaluuntrif

Page 48
92 வன்னியர்
ஆரும் இயல்
அடிக்குறிப்பு
1 கயிலாயவன்னியன் என்ற பெயருள்ள பிரதானிகள் பலர் இருந்தனர். பதினேழாம் நூற்ருண்டின் நடுவில் வாழ்ந்த கயி லாயவன்னியனைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடு கின்றது: (ப. 88, 90) கயிலாயவன்னியனின் சகோதரியைப் பூதத் தம்பிமுதலி மணம்முடித்திருந்தான். தேசாதிபதி பான் கூன் ஸின் அறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ள கைல வன்னியனைப்
பற்றியே யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றதெனக் கருத Gonth,
பனங்காமத்து வன்னியர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலா கத் திறை அனுப்பவில்லை எனவும் அதிக எதிர்ப்புக் காட்டிவந்த கைல வன்னியனுர் இறந்த பின் வன்னிபமாகிய அவனுடைய பேரன் காசியனர் ஒல்லாந்த அதிகாரிகளின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டதாகவும் தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கை கூறுகின்றது.
தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் வரும் கைலாய (கைல) வன்னியனரே சிதம்பரத்தில் மட தர்ம ஏற்பாடுகளைச் செய்திருத்தல் கூடும்.
(S. Gnanapragasar, "Nallamappana Vanniyan and the grant of a Mudaliyarship', Journal of the Royal Asiatic Society (C. B.), Vol. XXXIII, No. 89, 1936, PP. 221 - 222 )
1 A பரராசசேகரன் சிதம்பரத்துக்குப் போய் நிலங்களை வாங்கிப் பரதேசிகளின் வசதிக்காக இராசாக்கள் தம்பி ரான் மடம் என்னும் அற நிலையத்தை அமைத்தான் என அவனுடைய திருப்பணி பற்றிக் கூறும் பட்டய்ம் சொல்லு கின்றது.

10.
1.
12.
3.
14.
15,
கயிலை வன்னியனர் மட தர்மசாதனப் பட்டயம் 93
வரிகள், 10 - 18
The Kingdom of Jaffna, Chapter IX,
Memoir of Van Goens ( 1675 - 79 ) to Laurens Pyl, late Commandeur of Jaffnapatnam, translated by Sophia Pieters, Colombo, 1910.
Memoir of Hendrick Zwaardecroon P, 97
Memoir of Jan Schreuder, translated by E. Reimers, Colombo 1946, PP 56 - 58.
தென்னிந்திய கோயிற் சாசனங்கள் III, பிற்சேர்க்கை Iv
ஐந்தாம் இயல், அடிக்குறிப்புகள் 3, 11 ஆகியவற்றைப் பார்க்க
தம்பிரான் - மடாதிபதி
ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்தில் ஒர் அதிகாரியே பச் ஒஜலப்பள்ளிக்குப் பொறுப்பாக விருந்தான். பதினெட்டாம் நூற்றண்டில் இரு வன்னியர் ஏதோவிதத்தில் இப்பகுதியின் மேல் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். இறைசுவதோர் என்பது "ரெசீபதோர்’ என்ற போத்துக்கேயச் சொல்லின் வழியாக வந்தது இச்சொல் வரிகளைச் சேர்க்கும் பண்டா
ரப்பிள்ளை என்னும் சேவையாளரைக் குறிக்கும்.
பரராசசேகர மகாராசன் திருப்பணி கூறும் பட்டயத்தில் இம்மொழித் தொடருக்குப் பதிலாக 'கல்லுக் காவேரியும் புல்லுப் பூமியுமுள்ள வரைக்கும்" என்ற சொற்கள் வர் துள்ளன.
தலைமுறை தலைமுறையாக
அகிதம் - இடையூறு
‘நன்மை உண்டாகட்டும்" எனப் பொருள் படும் மங்கள
மொழி

Page 49
9d.
6,
7.
வன்னியர்
பட்டயத்தின் விரும் வடமொழிச் சுலோகங்கள் விஜயநகர காலக் கல்வெட்டுக்களிலே வழமையாக வருகின்றன. மல்லி கார்ஜுன தேவர். ரே எட தேவராயர், கிான்ன தேவ ராயர் முதலியோரின் கல்வெட்டுக் களில் முதலாவது சுலோ
கம் மட்டுமே வருகின்றது. வேறு சிஐ ஆவணங்களில் இரண் டாம் கவோ +ம் முன்பாகவும் முதலாம் சுலோகம் பின்பா சவும் முறை மாறி வருகின்றன. தென்னிந்திய கோயிற் சாச
னங்கள்.
அரிதான நல்லறத்தைச் சேப்தவன் அடையும் பயனிலும் பதின் மடங்கு பயனே அவ்வறத்தைச் செய்யுமாறு ஆண் டியவர்களும் காப்பவர்களும் பெறுவார்களென்று சிறந்த நூல் வல்லோர் கூறியுள்ளனர். அற நிஃபங்களுக்குத் நீங்கு செய்தவர்களுக்கு இம் மடங்கா ப் நீப பiன்கள் கிடைக் கும். பொது ! r *ğı37 - J D l L'f . மன்று போன்றவற்றிற்கு தர் மஞ் செப்பவர்கள் மோ:ோர் போற்றும் வண்ணம் சிவ பதத்தில் ஆயிரம் கீறபங்களுக்கு வாழ்வார்கள்.

கயிலே வன்னியனூர் மட தர்மசாதனப் பட்டயம் 93

Page 50
ց 6
 

நல்லமாப்பாண வன்னியனின் ஒலை 97
ஏழாம் இயல்
நல்லமாபபாண வன்னியனின் ஒலை
கபிலாய வன்னியனுர் மட தர்ம சாதனப் பட்டயம் அடங் காப்பற்று வன்னிகளினதும் வன்னிபங்களினதும் பெயர்களேத் தருகின்று போதும் வன் ஒளிகளின் நிர்வாக முறைபற்றிய தகவல்க ஃளத் தர வில்லே, நல்ல மாப்பான வன்னியனின் ஒலே வன்னி நாடுகளில் நிலவிய நிர்வாக முறையைப் பற்றி அறிந்து கொள் வதற்குப் பெரிதும் துனே புரிகின்றது.
பனங்காமம் பற்று வன்னிபம் நல்ல மாப்பாணன் கிழக்கு மூஃயைச் சேர்ந்த ஆள்வயினுர் கந்த உடையானுக்கு முதலி யார்ப் பட்டமும் கிழக்கு மூஃப் போல் அதிகாரமும் வழங்கியமை பற்றி இந்த ஆவணம் கூறுகின்றது.
யாழ்ப்பான மன்னர் போத்துக்கேயரோடு போராடி இறுதி மன்னணுவ இரண்டாம் சங்கிலி கைதியாகும்வரை பனங் காமத்து வன்னியர் யாழ்ப்பாண மன்னருக்குப் பெரிதும் 一垩岳虾 வாயிருந்தனர். பறங்கியரும் பின் ஒல்லாந்தரும் வட இலங் கையை ஆட்சி புரிந்த காலத்திலே பனங்காமம்பற்று வன்னிய சின் ஆதிக்கம் வளர்ச்சியடைந்தது. பரந்தன்வெளி, புதுக்குடியி ருப்பு, பூநகரி முதலிய பகுதிகளில், அவ்வன்னியரின் செல்வாக் குப் பரந்திருந்தது. அத்துடன் பள்ளங்காமப்பற்று வன்னியர் அடங்காப்பற்றிலுள்ள ஒரனேய வன்னியர்களிலும் மிகக் கூடிய பலத்தையுஞ் செல்வாக்கையும் பெற்றிருந்தனர்.
ஒல்லாந்தர் காலத்திற் பனங்காமத்து வன்னியர் யாழ்ப்பா ணத்திற்குச் சென்று பதினுறுக்கு மேற்பட்ட யாஃனகளே ஆண்டு தோறும் திறையாகக் கொடுத்தனர். எனினும் ஒல்லாந்த அதி காரிகள் பயமுறுத்தல், சூழ்ச்சி முதவிய உபாயங்களக் கை பாண்டு அதிக சிரமத்துடனேயே வன்னியரிடமிருந்து திறை பெற்றனர். வன்னி நாட்டை வன்னியர் சுதந்திரமாகவே ஆண்டு வந்ததுடன், வன்னியிலுள்ள மற்றைய எல்லா நிர்வாக அதிகாரி களின் மேல் ஆதிக்கம் பெற்றிருந்ததோடு அவர்களே நியமிக் கும் உரிமையையுங் கொண்டிருந்தனர். நல்ல மாப்பான வன் னியனின் ஒஃலயும் இதனே நிரூபிக்கின்றது.

Page 51
98 வன்னியர்
யாழ்ப்பாணத்திற்போல முதலியார், உடையார், பண்டாரப் பிள்ளை, கண்காணி, தலையாரி என்ற பட்டங்களைப் பெற்றிருந்த பல தரப்பிலுமுள்ள அதிகாரிகள் வன்னிமைகளின் நிர்வாகத்தி லும் இருந்தனரென்பதை இவ்வோலை மூலம் அறிய முடிகின்றது. முதலியார் என்ற பட்டத்தைக் கொண்டிருந்த பிரதானிகளின் அதிகாரம், கடமை என்பனவற்றைப்பற்றி இவ் வாவணம் பல சான்றுகளைத் தருகின்றது. ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத் திலும் அதன் பின்பும் யாழ்ப்பாணத்திலிருந்த நிர்வாகமுறையில் முதலியார் என வழங்கிய தலைவர்கள் சிறப்பிடம் பெற்றிருந் தனர்.4 மாகாணங்களுக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிக வின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கித் தேச வழமைகளைப் பேணி, மக்களிடையே ஏற்படுந் தகராறுகளைத் தீர்த்து வந்ததோடு பண்டாரப் பிள்ளைகள் இறைவரி முதலியவற்றை மக்களிடமிருந்து பெறுவதற்கும் முதலியார்கள் உதவியளித்தனர்."
பனங்காமத்தில் முதலியார்கள் இக் கடமைகளை நிறைவேற் றியதோடு அந்த வன்னிமையின் உட் பிரிவுகளுக்கும் அதிபதிக ளாயிருந்தனர் என்பதை நல்லமாப்பாணனின் ஓலை மூலம் அறிய முடிகின்றது. ஆள்வயினர் கந்த உடையானைக் கிழக்கு மூலையின் முதலியாராக நியமித்த பின் அப் பகுதியிலுள்ள உடையார், கண்காணி முதலிய எல்லோரும் அவனுடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமென்று நல்ல மாப்பாணன் ஆணை பிறப்பித்தான்
முதலியார்கள் வழக்குகளை விசாரித்துக் குற்றங் கண்ட விடத்து குற்றவாளிகளிடமிருந்து ஐந்து பொன்னுக்கு மேற்ப டாது தண்டனை விதிப்பதற்கும் குற்றங் கொடுக்க முடியாதவர் களை அடிப்பிப்பதற்கும் உரிமைபெற்றிருந்தனர். இவற்றேடு முதலியாருக்குப் பல சிறப்புரிமைகளும் கொடுக்கப்பட்டன. பதவிச் சின்னங்களாகப் பல்லக்கு, வெள்ளைக் கதிரை, வில் லுக்குஞ்சம், ஒட்டு விளக்கு, பாவாடை, கொடி, நாகசுரம், தாரை, மேளம் முதலிய வரிசைகளையும், கார்த்திகை, வரு ஷப் பிறப்பு தைப்பொங்கல் முதலிய தினங்களிலே குடிமைக ளின் சேவைகளைப் பெறுவதற்கும் முதலியார்கள் உரிமைபெற்றி ருந்தனர்.
யாழ்ப்பாணத்திற்போல வன்னியிலும் முதலியார்போன்றேர் தம் சேவைக்கு ஊதியமாகப் பணத்தையன்றி நிலங்களையே பெற்றனர்.8
நல்ல மாப்பாணன் என்ற பெயரைக் கொண்ட பலர் பனங் காமத்தில் வன்னிபங்களாயிருந்தனர்." பதினேழாம் நூற்றண்

நல்லமாப்பான வன்னியனின் ஒலை 99
டின் இறுதியிலே கயிலை வன்னியனரின் ஆட்சி முடிந்த பின் நல்ல மாப்பாணன் என்ற ஒரு பிரதானி பனங்காமத்திற்கு வன் னிபமாகியிருந்தான். 8 தொன் கஸ்பாறு நல்ல மாப்பாணன் தமக்கு மாருன பல செயல்களைப் புரிந்ததால் 1762ம் ஆண்டள வில் ஒல்லாந்த அதிகாரிகள் அவனை நீக்கிவிட்டுக் கருநாவல் பத்து, கரிகட்டுமூல என்பவற்றின் வன்னிபமான அழகே சன் புவிநல்ல மாப்பாணனின் மேற்பார்வையிற் பனங்காமத்தை விட்டிருந்தனர். அதன் பின்பே தொஞ்சுவாங் குலசேகர நல்ல மாப்பாணன் வன்னிபமாகியிருக்க வேண்டும். கி. பி. 1782ம் ஆண்டில் வன்னியர் மீண்டும் ஒல்லாந்தருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். கி. பி. 1790ம் ஆண்டளவில் துரோகச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி பனங்காமத்து நல்லமாப்பாண வன்னியனை ஒல்லாந்தர் சிறைப்படுத்தினர் அதன்பின் பனங் காமத்து வன்னிமை அழிவுற்றது.
நல்ல மாப்பாண வன்னியனின் ஒலை
1. 1781 ஆண்டு சித்திரை மீ" அ திகதி பனங்காமப்பற்று
அயுதாந்தி9 வன்னிபந்
2. தொஞ்சுவாங்குலசெகர ந ல் ல மாப்பாண வன்னியனுர்
அவர்கள் கற்பித்தபடியாவது :)
3. பனங்காமப் பற்றுக்குச் சேர்ந்த கிளமு)க்கு மூலைக்குச்
சேர்ந்த விளாங்குளம்
4. சாதி வெள்ளாழ(ள)ன் ஆள்வயினர் கந்த உடையான் வந்து
கிழக்கு மூலைக்குத் தொளி(ழி)லும்
5. முதலியாரென்கிற பட்டப்பேருங் கிடைக்க வேணுமென்று
மிகுந்த எளிதாவுடனே 19 மன்ருடிக் கேட்
8. டபடியால் நாமுஞ் சம்மதித்துச் சொல்லப்பட்ட கந் த
உடையானுக்கு திசைவிளங்க நாயக
7. முதலியென்கிற பட்டமுங்கட்டிக் கிள(ழ)க்கு elpat 915(f)
வுக்குத் தொளி(ழி)ரு(லு)ங் கற்பித்திருக்கி (ற)
8. படியால் கிள(ழ)க்கு மூலைக்குச் சேர்ந்த உடையார், 12 அயு
தாந்தி, மொத்தக்கர்,18

Page 52
100
0.
ll.
2.
3.
14.
15.
16
17.
18.
19.
20.
1.
6nu 6öy Gorfflurf
. பணிக்கமார் 14, போதியகமக்காற(ர)ர், மற்றுங் குடியான
வர்கள், வரத்தர், போக்க(ர்), கச்ச வடகாற(ர)ர், இனிமேல் வரப்பட்ட குடியானவர் கள். தலையர், பட்டங் கட்டிமார் சகலரும்
இவனைத் தங்கள் முதலியாரென்கிறநறிந்து அடுத்த சங்கை பண்ணி முதலியாரென்(ற)
பேர் சொ ல் லி அழைக்கவும் (1 இன்னமுமந்த ஊருக் குள்ளே வரப்பட்ட நீதி ஞாயங்கெட் (டு)
பிளை (ழை) கண்ட இடத்து அஞ்சு பொன்னுக்குள்ளே குற் றம்போட்டு வாங்கவும் (.) குற்றங் (கொடுக்க1
இடமில்லாத தாள் (ழ்)ந்த சாதியின் மனுஷருக்கு மரத்திலே கட்டி இருபத்தஞ் (சடி)
அரைக்குப் பணிய அடிப்பிக்கவும் (*) இவன் சொல்லப்
பட்ட யானைத்தீவு முதலாக மற்றுஞ் சகல பண்டார பணி
விடை சகலமும் w இவன்சொற் கீள(ழ)மைச்சலுடனே கேட்டு நடந்துகொள் ளவும் (.1 இன்னமுமிந்தத் திசை விளங்க நாயக முதலியு டைய நயத்துக்குவேண்டி இவனுக்கு ܚ
வெள்ளாண்மை(ச்) செய்விக்கப்பட்ட இடத்திலே கமம் ஒன்
றுக்கும் ஆள் அஞ்சுபேருக்கும் குரக்கன் புலோ ஒன்றுக்கும்
அடையிறை சுவந்திர (?1
உள்ளியமுங் (ஊழியம்) களித்துக் கொடுத்து உத்தாரமாக வும் கற்பித்து இவனுக்கு வரப்பட்ட சுபசோபனங்களுக்கு வீட்டுக்கு வெள்ளை மேற் சட்டி கூரைமுடி
சேருடி இருபத்துநாலு பந்தற் காலுக்கும் பந்தலுக்கும் வெள்ளை மேற்கட்டி இருக்கிற இடத்துக்கும் கலத்துக்கும் வெள்ளை பலகைக்கு வெள்ளைக
திரை, வில்லுக்குஞ்சம், ஒட்டுவிளக்கு, பகற்பந்தமேலாப்பு, பாவாடை, கொடி, வெடி, நாகசுரம், காரை, மேளம், இப்படிக் குறித்த வரிசைகள் செய்(வித்துக் கொள்ளவும் I.) கோயிற் சபை கொண்டச் சபை கலியா ணச் சபைகளிலே போன இடங்களுக்கும் இருக்கிற இடத் துக்கும் சாப்பிடுகிற இடத்துக்கும் வெள்ளை (,) ஆடி

22。
23.
நல்லமாப்பான வன்னியனின் ஒலை 101
கார்த்திகை வருஷப் பிறப்பு தைப் பொங்கலுக்கு வண் ணன் வந்து வெள்ளை கட்டவும். பறையன் வந்து மேளஞ் சேவிக்கவும் (.) கொல்லன், தச்சன், அம்பட்டன்
வண்ணன் பறையன் என்று சொல்லப்பட்ட அஞ்சு குடிமை யும் அழைத்த நேரம் அவரவர் தொழிலுடனே போய் அடுத்த
வரிசைகள் செய்து உள்ள சுவந்திரம் பெற்றுக் கொள்ள
வும் (.) கற்பித்த கட்டளைப் படிக்கு எழுதினது 1 பர நிருப சிங்க முதலி (.)
ஏழாம் இயல்
அடிக்குறிப்பு
Memoir of Van Goens to Laurens Pyl. (9-11-1679), translated by Sophia Pieters, Colombo, 1910.
Memoir of Hendrick Zwaardecroon for the guidance of the Council of Jaffnapatnam (1697) translated by Sophia Pieters, 1911, p 97.
bid.
Kingdom of Jaffna, PP. 365-366.
lbid, p. 355 - 359.
Ibib.
bid 377.
மாப்பாணன் என்ற பெயரைப் பெற்றிருந்த பல வன்னி யரைப்பற்றி வையாபாடல் குறிப்பிடுகின்றது நல்ல மாப் பாணன் என்ற பெயரைக் கொண்ட பல வன்னிபங்கள் அடங்காப்பற்றி லிருந்தனர். தேசாதிபதி பான் கூன்ஸின் அறிக்கையில் (1879) பனங்காமம் பத்து வன்னிபம் நல்ல மாப்பாணன் பற்றிக் குறிப்புண்டு பதினேழாம் நூற்ருண் டின் இறுதியில் (1897) தொன் பிலிப்பு நல்ல மாப்பா ணன் பனங்காமம் பத்தில் வன்னிபமாய் இருந்தான். பதி
னெட்டாம் நூற்ருண்டின் நடுவில் தமக்குப் பணிந்து திறை

Page 53
102
10.
11.
12.
13.
l5。
16.
வன்னியர்
கொடுக்காமையால் தொன் கஸ்பாறு நல்ல மாப்பாணனை வன்னிபம் என்னும் பதவியிலிருந்து ஒல்லாந்த அதிகாரிகள் நீக்கி யிருந்தனர்.
கி. பி. 1658ம் ஆண்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகள்வரை பனங்காமத்து வன்னியர் திறை கொடுக்கவில்லையென்றும் கைல வன்னியனர் இறந்த பின் வன்னிபமாகிய காசியனுர் ஒல்லாந்தருக்கு அடங்கியிருந்தான் என்றும் ஒல்லாந்த அதி காரிகளின் அறிக்கைகள் கூறுகின்றன.
S. Gnanaprakasar,
Nallamappana Vanniyan and the grant of a Mudaliyarship' Journal of the Royal Asiatic Society (C.B). Vol. XXXIII, No. 89. PP. 221–222.
கண்காணிகளுக்குத் துணையாகவிருந்த நிர்வாக சேவையா ளர். அயுதாந்தி என்னுஞ் சொல் போத்துக்கேயர் காலத் தில் வழக்கில் வந்தது போத்துக்கேயர் வன்னிபங்களையும்
அயுதாந்திகளென்று குறிப்பிட்டனர்.
மிகவுந் தாழ்மையாக,
உடையார் என வழங்கிய பிரதானிகள் ஊர்களின் நிர்வா கத்திற்குப் பொறுப்பாகவிருந்தனர்,
கண்காணி என வழங்கிய சேவையாளர் நிலங்களை அளவிடு தல், வரிமதிப்பீடு முதலிய கடமைகளைச்செய்து வந்தனர்.
யானைகளைக் கைப்பற்றுவித்ததோடு மொத்தக்கர் என் போர் பணிக்கர்களின் அதிபர்களாயுமிருந்தனர்.
பணிக்கர் யானைகளைக் கைப்பற்றிப் பழக்குவதைத் தம்மு டைய தொழிலாகக் கொண்டிருந்தனர்.
தலையர் (தலையாரி) என்போர் ஊர்த்தலைவர்களாயிருந்தனர்.
மீனவர் வாழும் ஊர்களின் தலைவர்.

வன்னியர் மடாலய தர்மஸாஸனப் பட்டயம் 103
எட்டாம் இயல்
வன்னியர் மடாலய தர்மஸாஸனப் பட்டயம்
தமிழ்நாட்டின் பல்வேறிடங்களிலுமுள்ள வன்னியர் விருத் தாசலத்திலுள்ள மடம் ஒன்றுக்குக் கொடுத்த தானங்களைப் பற்றிக் கூறும் இப் பட்டயம் முன் வன்னியர் புராணம் பதிப்பிக் கப்பெற்றபோது அதோடு அச்சேற்றப்பட்டது. இது வரை கிடைத்த, வன்னியர் பற்றிக் குறிப்பிடும் பட்டயங்களில் இது ஒன்றுமே வன்னியரின் தோற்றம் பற்றிய கதைகளைக் கொண் டுள்ளது.
விஜய நகர மன்னரின் விருதுகள் பட்டயத்தின் தொடக்கத் தில் வருகின்றன. "இருபத்து நாலு கோஷ்டத்து வன்னியரா யர் கண்டன்" என்பதும் விஜய நகர மன்னரின் விருதுகளுள் ஒன்றென்பதை இப் பட்டயம் அறியத் தருகின்றது. தொண்டை மண்டலம் முற் காலத்தில் இருபத்துநாலு கோட்டங்களைக் கொண்டிருந்தது. தொண்டை மண்டலமே வன்னியரின் அதி இருப்பிடம் என்ற கருத்துக்கு இப் பட்டயத்தில் வரும் மொழித் தொடர் ஒரளவுக்கு ஆதாரமாயுள்ளது.
பட்டயம் வன்னியரை வீரபண்ணுடர் என வர்ணிக்கின்றமை குறிப்பிடத் தக்கது. சிலை எழுபதும் "நாடு பலவினுக்கரசு பண் ணுடு’2 எனவும், "மேவரு மேருவொத்த வீரபண்ணுடர் வில் லைத் தேவரே கூறல் வேண்டும் திசை முகனதியாய மூவருங் கூறல் வேண்டும்.' எனவும் "பண்ணுடர் திண்ணமுறு வன்னி மன்னர் . "4 எனவும் வன்னியர் பற்றிக் குடுப்பிடுகின்றது. பண்ணுடு என்னும் பிரதேசத்தை வன்னியர் என்ற குறுநில மன்னர் ஆண்டிருத்தல் கூடும்
இப்பட்டயத்தின்படி இராக்கதரின் கொடுமைகளைப் பொறுக்க முடியாது தேவர்களும், முனிவர்களும் மகேஸ்வரனி டஞ் சென்று முறையிட்டபோது மகேஸ்வரன் சம்பு, அகத்தி யர், வசிட்டர் ஆகிய மூவரையுங் கொண்டு விஸ்வயாகத்தைச் செய்வித்தான். பார்வதி கழுத்திலிருந்த செங்கழுநீர் மாலையை சம்புமாமுனிவன் சிவனரிடமிருந்து பெற்று அதை யாக அக்கினி யிலே போட்டதும் வில் வாள் முதலிய ஆயுதங்களைத் தாங்கிய

Page 54
104 வன்னியர்
வண்ணம் எழில்மிக்க சம்பு வன்னியர், கிருஷ்ண வன்னியர், உருத்திர வன்னியர் முதலானுேர் தோன்றி இராக்கதரை அடக் கியதாக இப்பட்டயம் கூறுகின்றது.
வன்னியரின் தோற்றம் பற்றி இப்பட்டயம் கூறுவன புரா ணக் கதைகளையே தழுவியுள்ளன. சிலை எழுபது, வன்னியர் புராணம் முதலிய நூல்களும் இவ்வாறன கதைகளை ஆதாரமா கக் கொண்டே வன்னியரின் தோற்றத்தைப் பற்றிக் கூறுகின் றன.
வன்னியர் சம்புகுலத்தவர் என்ற கருத்து காலப்போக்கில் வலுப்பெற்று சமூகத்திற் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந் தமையைச் சிலை எழுபது முதலிய நூல்கள் உணர்த்தும் . - வன்னி யர் சம்புமாமுனிவன் வேட்ட வேள்வியினலே வன்னியர் தோன் றினர் எனப் பொருள்படுமாறு ‘வீரசம்பு முனி வேள்வி விளங்க வரு முடி வேந்தர்" எனச் சிலை எழுபது கூறுகின்றது, அதே போல,
"பங்குனித் திங்களுத் திரந் தன்னில்
பரமன் முக்கணழல் விழியில் துங்கமா வேர்வை தோன்றிடக் கரத்திற் தோய்ந்து செங்கழுநீரின் மலரைப் பொங்கமா மகத்திலா குதியியற்றிப்
புனிதனுக்குப் வகையீந்தார் (வ)ங்கண வீர வன்னிய பூமன்னர் பரி
மீது தோன்றினனே"
எனவும், . 'gitւլ மாதவஞ் செய்வேள்வி தன்னிலுதித் தாயிந்த
அம்புவி தனிலே வேத சம்புவின் மரபுமானுய் உம்பரர் களிக்கமான வுதித்த வாதாவி சூரன் கம்பித மடக்கவென்று கதிரொளி முடியாயென்றர்;
எனவும் வன்னியர் புராணமும் கூறுகின்றது,

வன்னியர் மடாலய தர்மஸாஸனப் பட்டயம் 105
வன்னியர் மடலாய தர்மஸாஸனப் பட்டயம்
வன்னியர் புராணத்திலுள்ளபடி)
ஸ்வஸ்தி பூg பூரீமன் மகாமண்டலேசுரன் அரியராய விபா டன் பாஷைக்குத் தப்புராய கண்டன் மூவராயகண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் இருபத்து நாலு கோஷ்டத்து வன்னிராய கண்டன் கொங்குதேசம் குரும்பறுத்து அழியாப் பிரபுடன் கெடி வன்னிய மிண்டன் நவகோஷ்டத்து வன் னியராய கோலாகல பிரபுடன் வடவாசற் காவலன் இளவரசு மணவாளன் கண்டியப் பிரதாபன் கட்டாரி வல்லபன் தானகுல சீலன் காளிகணங்கன் கைகூப்பு மணவாளன் திங்கள் மும்மாரி பெய்து தேன் பாயும் வள நாடன் கங்காகுலதீபன் பூலோக தேவேந்திரன் வேந்தர்குல பஞ்சாக்ஷர தீபன் சிவசமய விஷ்ணு சமய பரிபாலன் சிவபூஜா துரந்திரன் இராஜமன்னிய இராஜபூரீ ஆனகொந்தி திருவேங்கடபதி தேவமகாராயர் இவர்கள் பிரிதி விராஜிய பரிபாலன ம பண்ணியருளா நின்ற சாலிவாகன சகாப் தம் ... 07 இதின் மேல் செல்லா நின்ற பிலவ வருஷம் தை மீ" இருபதாந்தேதி சோம வாரம் பூச நகூர்த்திரம் பாலவ கரணம பூர்வ பக்ஷமும் கூடிய சுபதினத்தில் இராஜாதிராஜ வள நாடு வெண்ணபூர் நாடு பருவூர் சுத்தத் தனியூர் காசிக்கு மேலாய் விளங்கும் விருத்தகாசி விதர்க்கணன் விபசித்து கலிங் கன் அஞ்சுவர்ணன் முதலான பேருக்கு திருநடனம் புரிந்தரு ளிய தேவஸ்தலம் பூருவ கர்ப்பக வன்னி மரத்தில் செங்கழுநீர் புஷ்பித்த திவ்விய கூேடித்திரம், சகல லோகங்களும் வெள்ளங் கொண்டபோது பிரம்மதேவன் சில மலைகளைப் படைத்தான்; அந்த மலைக்கு இடமில்லாமல் எங்கும் பழ மலையாகத் தானே நிரம்பி நிற்க நான் சிருஷ்டித்த மலைக்கு இடமில்லாமல் போன தேதென்று கொபங்கொண்டான். அந்தக் கோபாக்கினி அவ னையும் சுட்டு வீட்டையும் சுட்டது. அவன் தேவ வருஷத்தில் ஒன்பது வருஷம் விருத்தாசல ஈஸ்வரனை நோக்கித் தபசு பண்ணை அவர் பிரசன்னமாகி நீ விஷ்ணுவுடைய பிள்ளையான படியி ஞலே பொறுத்தோமென்று பிரமன் அதிகாரத்தைக் கொடுத் தார். ஐந்து லிங்கத்துக்கு முதன்மையான விருத்த கிரி லிங்கம் ஒரு நாழிகை விருத்த காசியில் வாசம் பண்ணின பேர்கள் சதா சிவ சொரூபம் அடைவார்களென்று வேதத்தில் முறையிடுகின் றது. அப்படிக்கு விசேஷம் பொருந்திய கேஷத்திரத்தில் சகல மான ஜாதிக்கு மடமும் நந்தவனமும் தருமம் விளங்கி வருகிற
4.

Page 55
106 வன்னியர்
படியினலே நம்முடைய மரபு வன்னிய வீரபண்ணுடர் வம்சம் விளங்க வேணுமென்று கொள்காணியாக கோவில் நிலத்தில் கீழ்வீதியில் மேல்சரகில் ஐபணுர் கோ வி லுக்கு த் தெற்கு - தெற்கு வீதிக்கு வடக்கு - அடி - 75 கிழக்கு மேற்கு 99. ... ... அடிக்குப் பணம் ரூபா வீதம் 1402 பணம் ரூபா கொடுத்து இரண்டு சிலாசாதனம் நிறைத்து தாம்பிரசாத்னம் உண்டுபண்ணி சேந்தமங்கலம் அண்ணுமலைக் குருக்களுக்கு தத்தம் பண்ணிக் கொடுத்தபடியினலே வன்னியர் பிற பு வளப்பு எப்படியென் ரு ல் ஆதியில் பிரம்மாவும் விஷ்ணுவும் ருத்திரனும் தேவர்களும் ரிஷிகளும்கூடி கைலாசத்துக்குப் போன இடத்தில் சுவாமீ நீங்கள் நம்மிடத்தில்வந்த காரியம் யாதென்றுகேட்க சர்வரக்ஷகர் ராக்ஷத உபத்திரவம் பொறுக்க முடியவில்லையென்று தேவரீர் பாதத்துக்கு விண்ணப்பம் செய்ய வந்தோமென்ன நல்லது அவனை ஜெயிக்க வேணுமென்று பொதியமாமுனி சம்புமாமுனி விதிஷ்டமாமுனி மூன்று பேரையும் அழைப்பித்து விசுவயாகம் பண்ணுமளவில் அதிற் பார்வதி கழுத்திலிருந்த செங்கழுநீர் மாலையை வாங்கி அக்கினியில் ஒமம் பண்ணுமளவில் சிலையும் அம்பும் உத்தண்ட வார்த்தையும் வாராம ரிஷபக் கொடியும் புலிக் கொடியும் பஞ்ச வர்ணக் கொடியும் சாம்பிராணிக் கலசமும் பகல் தீவட்டியும் ப்ச்சைப் புரவியும் 18 விருதுடனே சம்பு மாமுனி யாகத்தில் ருத் திர வன்னியர் தோன்ற அவர் வயிற்றில் ஐவர் தோன்ற அவ ருடனே 35.4 9 வில்லாளிகள் தோன்ற இவர்களுக்குப் பேருங் கொடுத்து ராக்ஷதரைச் சங்கரித்து வந்தவரான படியினலே ஏகாம்பர் நாட்டுக்குடையவர் பாண்டியன் பரி பிடிக்க பரியே றும் பெருமாளென்று வாதாவியைச் செயித்தவர் கோத்திரமா கிய கிருஷ்ண வன்னியர், சம்புவன்னியர், பிரம வன்னியர், இந்திர வன்னியர், கெங்கா வன்னிய ரென்றும் பேருங்கொடுத்து கொன்றை மாலையுந் தரிந்து புலிக் கொடி வேந்தன் வன்னிய முரசு 39 - தில் ஒருவராக தேவர் ரிஷிகளுக்கும் சத்துருவை ஜயம்பண்ணின படியினலேயும் துர்க்கை பாளையம் போட்ட போது பாலமுதில்லாமல் ஈஸ்பரி பஞ்சலோகத்தையும் ஒரு தாழி யாக்கி பாலமுதம் விருந்து பண்ணின சமுத்திர்ாதேவி, இந்திராணி, கோபால தேவி மூன்று பேரும் சந்தோஷித்து வீர சிங்காசனங் கொடுத்து இந்திரன் பெண் மந்திர மாலையை ருத்திர வன்னியருக்கு விவாகம் டண்ணிப் பட்டத் தரித்து மந்திர வாளும் பிடித்து இயமன வென்றவர். சோழன் சினேகிதர் பார் வதி புத்திரன் சிங்கக் கொடித் தலைவன் ஜனங்களை ரகழிக்கும் உத்தம தேவர் எங்கள் நல்லப்பகாலாக்க தோழனர் உடையார் பண்டாரத்தார். அவர்களும் அரியலூர் மானங் காத்த மழவ ராய நயினர் அவர்களும் அரசு நிலை பெற்றவர்கள், சேரன்

வன்னியர் மடாலய தர்மஸாஸனப் பட்டயம் 107
சோழன், பாண்டியன் தேசத்திலுள்ள வன்னியரானவர்கள் வரு ஷந்திரம் மடதருமத்திற்கு கட்டளையிட்டது என்னவென்றல் பல்ல(ா)க்கு குதிரை யுடையவர்களுக்கு பணம் 10 - நாட்டுத் தினத்துக்குப் பணம் 5 - சேர்வை மணியத்துக்கு பணம் 3, தலக் கட்டுக்கு பணம் 1 - குரு தெக்ஷணை பணம் t - கலியா ணத்துக்கு மாப்பிளை வீடு பணம் 1 - பெண் வீடு பணம் 1 - குற்ரு குற்றம் தீர்த்த அபராத பண மும் சுப சுபங்களுக்கும் கொடுத்து வருமோகவும்,
இந்தத் தருமத்துக்கு வாக்குச் சகாயம் சரீர சகாயம் அர்த்த சகாயம் பண்ணின பேர்கள் குபேர செல்வமும் இந்திர பதவி யும் விபசித்து ரிஷி பதவியும் அடைவார்கள். இதற்கு விகா தம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையில் பஞ்ச பாதகமும் காராம் பசுவையும் மாதா பிதா குருவையும் கொன்ற தோஷத் திற் போவார்கள் - பழமலையார் பெரிய நாயகி அம்மன்றுணை.
எட்டாம் இயல்
அடிக்குறிப்பு
l. வன்னியர் புராணம், திருப்பதி ரத்தின முதலியாரின்
பதிப்பு, சென்னை, 1905
3. ගිබ් எழுபது, செய்யுள் 66
3. சிலை எழுபது, செய்யுள் 67
4. சிலை எழுபது செய்யுள் 23 5, G&n) எழுபது. செய்யுள் 39
6. வன்னியர் புராணம், வன்னியராஜாக்கள் உற்பத்திச்
சருக்கம்" செய்யுள் 2
7. வன்னியர் புராணம், பாயிரம், செய்யுள் 2

Page 56

நூலெழுதுவதற்கு உதவியவை 09
நூலெழுதுவதற்கு உதவியவை
தமிழ் துரல்கள்:
கல்லாடம் P. W. சோமசுந்தரனுரின் பதிப்பு, சென்னை, 1963
கோணேசர் கல்வெட்டு - சண்முகரத்தின ஐயரின் பதிப்பு,
யாழ்ப்பாணம, 1909
சிலை எழுபது  ைஆ. சுப்பிரமணிய காயக்கரின் பதிப்பு
சென்னே, 1915
தகூSணகைலாச புராணம் கP P. வைத்தியலிங்கதேசிகன்
பதிப்பு, பருத்தித்துறை, 1916
தென்னிந்திய கோயிற் சாசனங்கள் - தொகுதி 1-III, சென்னை,
1953, 1954, 1955, 1957
நாடுகாடு பாவணிக் கல்வெட்டு - பிரித்தானிய பொருட்காட்சிச்
சாலை நூல்நிலையத்திலுள்ள ஏட்டுப்பிரதி
பத்துப்பாட்டு - உ. வே. சாமிகாதையரின் பதிப்பு.
சென்னை, 1918 r
பட்டக்களப்பு மான்மியம் - F. K. C. நடராசாவின் பதிப்பு,
6ഗ്രd L, 1962
யாழ்ப்பாண வைபவமாலை குல, சபாநாதனின் பதிப்பு,
கொழும்பு, 1963
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் ம ஆக்கியோன் சுவாமி ஞானப்
பிரகாசர், அச்ச்வேலி, 1928

Page 57
10 வன்னியர்
வன்னியர்குல கலியாணக்கொத்து - ப வை. க. முத்துச்சாமி
கவுண்டர், சேலம், 1894
வன்னியர் (குல) நாடகம் - சிறுமணவூர் முனிசாமி முதலியாரின்
பதிப்பு, சென்னை, 1902
வன்னியர் புராணம் - திருப்பதி, ரத்தினமுதலியாரின் பதிப்பு
சென்னை, 1905
வையாபாடல் - T. W. அருட்பிரகாசத்தின் பதிப்பு 1921 பாளி, சிங்கள நூல்கள்
Cula Wamsa,
edited by William Geiger, 2 Vols, P. T. S., London, 1925, 1927, translated by W. Geiger, translated from German into English C. Mabel Rickmers, 2 pts, Colombo, 1953. Gira Sandesaya
edited by Sugathapala, Aliutgama, 1924. Parakumba Sirita,
edited by K. D. P. Vikrama Sinha, Colombo,
954,
Pujavaliya,
edited by A. V. Suravira, Colombo, 1907.
Rajavahiya,
edited by B. Gunasekara, Colombo, 1911, translated by B. Gunasekara, Colombo, 1900.
ஏனைய நூல்கள் The Temporal & Spiritual Conquest of Ceylon,
by Fernao de Queyroz, translated by Fr. S. G. Perera Colombo, 1930.

நூலெழுதுவதற்கு உதவியவை 1 ii
instructions from the Governor General and Council of India to the Governor of Ceylon ( 1656 - 1665)
translated by Sophia Pieters, Colombo, 1908. Memoir lert by Ryclor Van Goens, Jun,
Governor of Ceylon (1675 - 1679) to his successor Laurens Pyll.,
translated by Sophia Pieters, Colombo, 1910.
Mabhalingam, T. V.
Administration and Social Life under Vijayanagara, Madras, 1940.
South Indian Polity, Madras, 1955.
Modder, F ,
Manual of the Puttalam District, Colombo, 1908. Gazetteer of the Puttalam District, Colombo, 1908
----

Page 58


Page 59


Page 60