கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிரைமலைப்பள்ளு

Page 1
öğleniyLDEDE
வெளி
ru Jaru 98
 
 


Page 2


Page 3

கதிரைமலைப் பள்ளு
ww.wa.
(le, வ. குமாரசுவாமி i.e.
அவர்களால் தொகுக்கப்பட்ட பழைய
பள்ளுப் பிரபந்தத்தின் மறுமதி
ാരം. ххххххххххх
வெளியீடு
இந்துசமய கலாசார அலுவ்ல்கள் திணைக்களம் 98, வோட் பிளேஸ், கொழும்பு - 07

Page 4
நூல் விளக்கக் குறிப்புகள்
நூலின் பெயர்
மறுபதிப்பு வெளியீடு
அச்சுப்பதிப்பு
பக்கங்கள்
பிரதிகள்
விலை
கதிரைமலைப் பள்ளு (முத்துலிங்க சுவாமிகளின் ஆதரவில் இயற்றப் பட்டு , வ - குமார சுவாமி அவர்களால் தொகுக்கப்பட்ட பழைய பள்ளுப் பிரபந்தத்தின் மறுபதிப்பு) மார்கழி 1996 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இல, 98, வோட்பிளேஸ், கொழும்பு - 07
யூனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
இல. 48 பி. புளூமென்டோல் ரோட்
கொழும்பு - 13. 326 +14
1000
ரூபா 80/-
Bibliographical Data
Title Re - Edition Published by
Printers
No. of Pages No. of Copies Price
Kathiramalai Pallu December 1996 Dept of Hindu Religious & Cultural Affairs 98, Ward Place, Colombo - 7. M/s Unie Arts (Pvt) Ltd. 48, B, Bloemendhal Road, Colombo - 13.
326+14
1000
RS.80/-

8th Century Jaffna Poets Bicentenary Commemoration Series
KATHIRAMALA PALLU
(A Pallu Poem composed under the patronage of
MUTHULINGASVVAMY
Founder of the Kalyana Mandapam of Kataragama)
Edited by
V.COOMARASWAMY, B.A
Proctor S.C. and Vice-President of The Jaffna Oriental Studies' Society
with
HIS CRITICAL STUDIES
of
Legends and Histories relating to the Kataragama, Thirukethiswaram and Trincomallee Temples
Printed by
C.V. JAMBULINGAM PILLA
at the Progressive Printers, Madras
1935 Price 75cc

Page 5

18ம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் புலவர் இருநூற்றாண்டு நிறைவு ஞாபகார்த்தப் பிரசுரம் கதிரைமலைப் பள்ளு (கதிர்காம க்ஷேத்திரத்துக் 35GüuT60OT LDL-- ஸ்தாபகரான முத்துலிங்க சுவாமிகளின் ஆதரவில் இயற்றப்படட பழைய பள்ளுப் பிரபந்தம்)
யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க உபதலைவர்களில் ஒருவரும் பிரபல நியாய துரந்தரரும் ஆகிய
தெல்லிப்பழை திரு.வ.குமாரசுவாமி (B.A) அவர்களால்
பல ஏடடுப் பிரதிகளைக் கொண்டு பரிசோதிக்கப்படடு மேற்படியார் எழுதிய கதிர்காம கூேடித்திர புராண இதிகாச சரித்திர ஐதீக வரலாறுகள் திருக்கேதீச்சர ஸ்தல வரலாறு திருக்கோணாமலை ஸ்தல வரலாறு
ஆதிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் அரும்பதவுரை அருந்தொடர் விளக்கத்துடனும்
திருமயிலை சே.வெ.ஐம்புலிங்கம் பிள்ளை அவர்களால்
சென்னைப் புரோகிரஸிவ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பெற்றது.
யுவ ஆண்டு 1935 விலை. சதம் 75

Page 6

அணிந்துரை
பள்ளுப் பிரபந்தங்கள் யாவும் முத்தமிழ் பொழியும் மழை போல மிளிர்வன. இயல் இசை நாடகம் மூன்றும் செறிந்து விளங்குவன. அகத்திணை புறத்தினை, கொண்ட மக்கள் காவியமாக பள்ளுப் பிரபந்தங்கள் விளங்குகின்றன.
ஈழத்தில் தோன்றிய பள்ளுகள் அநேகம். இவற்றில் அச்சு வாகனமேறியவை நான்கு தண்டிகைக் கனகராயன் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, கதிரைமலைப்பள்ளு, முக்கூடற்பள்ளு என்பன இவற்றில் அடங்கும்.
பள்ளுப் பிரபந்தங்கள், ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு, நகருக்கு நகர்தோன்றியுள்ளன. திருநீலகண்டன் பள்ளு மன்னார் மோகனப்பள்ளு என்பவைகளைக் கூறலாம். தெய்வத்தின் பெயரால் தோன்றிய பள்ளுகள் பலவுள்ளன. முக்கூடற் பள்ளு, கதிரைமலைப்பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, குருகூர்ப்பள்ளு, கோழி ப்பள்ளு, கண்ணுடையம்மன் பள்ளு என்பவற்றைக் குறிப்பிடலாம்.
1906 ஆம் ஆண்டு கதிரைமலைப் பள்ளு வெளி வந்தது. கதிரையப்பர் பள்ளு எனவும் கதிரைமலைப்பள்ளு எனவும் இதை அழைக்கலாம் என்று 1925 ஆம் ஆண்டில் கதிரைமலைப்பள்ளுவை பதிப்பித்த திரு.வ. குமார சுவாமி அவர்கள் கூறுகிறார்.
கதிரைமலைப்பள்ளு கதிர்காமத்திலே எழுந்தருளி இருக்கும் சுப்பிரமணிய சுவாமி மீது பாடப்பட்டது.

Page 7
மாவலிகங்கை நாடு, பகீரத கங்கை நாடு எனப்பாடல்கள் அமைவு பெற்றுள்ளன. மாவலிகங்கை நாடு முருகப் பெருமானையும், பகீரதகங்கை நாடு, விநாயகப் பெருமா னையும் போற்றும் வகையில் பாடல்கள் அமைவு பெற்று ள்ளன. கதிர்காமத் தலத்தின் பெருமையைக் கூறும் கதிரை மலைப்பள்ளு, கிடைத்தற்கரிய நூல்களில் ஒன்று.
கிடைத்தற்கரிய நூல்களை இனம் கண்டு, மீள் பதிப்புச் செய்வதில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மிகுந்த அக்கறை கொண்டு செயற் படுகின்றது. இச் செயற்பாட்டினால் மறைந்து அருகிப் போகும் நூல்களை வெளிக் கொணர முடிகின்றது.
இப்பணியில் கதிரைமலைப் பள்ளு நூலின் மீள்ப திப்புச் மிகவும் பயனுடைய முயற்சியாகும். இந் நூலின் பெருமைகளை உணர்ந்து அதை மீள்பதிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் நான் பாராட்டு கின்றேன். அருகிய நூல்களை இனம் கண்டு, மீள்பதிப்புச் செய்யும் பணி தொடர வேண்டும். இதற்காக, கலாசார சமய அலுவல்கள் அமைச்சு, பூரண ஆதரவினை நல்கும். தமிழ் மக்கள் மத்தியில் இம் முயற்சிக்கு பூரண ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றேன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இத்தகைய பணியில் கூடிய ஆர்வம் காட்டி கிடைத்தற்கரிய நூல்களை, மீள்பதிப்புச் செய்து வெளிக் கொணர திருவருளை வேண்டுகின்றேன்.
இராஜலெட்சுமி கைலாசநாதன்
மேலதிகச் செயலாளர் (இந்து விவகாரம்
கல7ச7ர, சமய அலுவல்கள் அமைச்சு
10

வெளியீட்டுரை
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயற்திட்டங்களில், இந்து ஆராய்ச்சிப் பகுதி மூலம் கிடைத்ததற்கு அரிதாக இருக்கும் நூல்களைத் தேடித் தெரிந்து மறுபதிப்புச் செய்தலும் ஒரு முக்கிய பணியாகும். அவ்வகையில் இவ்வருடம் கதிரைமலைப்பள்ளு, ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு என்னும் இரு நூல்கள் மறுபதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.
கதிரையப்பர் பள்ளு எனவும், கதிரைமலைப்பள்ளு எனவும் வழங்கும் இந்நூல் கதிர்காம வேலவர் மீது பாடப்பட்ட பள்ளு, அல்லது உழத்தியர் பாட்டு என்னும் பிரபந்த வகைகளில் ஒன்றாகும். இலங்கையில் எழுந்த பள்ளுப்பிரபந்தங்களுக்குள் இதுவே முதலாவது எனக் கூறுவர். கதிரைமலைப்பள்ளு கதிர்காமத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானைத் தலைவராகப் கொண்ட தேவபாணி வகுப்பிலடங்கும் பாடலாக அமைந்துள்ளது.
இந்நூல் கதிர்காம ஷேத்திர புராண இதிகாசசரித்திர ஐதிக வரலாறுகள், திருக்கேதீச்சர ஸ்தல வரலாறு, திருக்கோணமலை ஸ்தல வரலாறு முதலிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள், அரும்பதவுரை, அருந்தொடர் விளக்கம் ஆகிய விடயங்கள் அனைத்தையும் உள்ளக்கியதாக அமைவு பெற்றுள்ளது. இந்நூல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தரும் என்பது எனது நம்பிக் கையாகும் .
11

Page 8
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித்தலைவர் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பகுதிக்கான வேலைகளை நெறிப்படுத்தி வருகின்றார். அவருக்கு எமது மனமுவந்த நன்றிகள். இந்நூலுக்கான பதிப்புரை எழுதிய பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரை மனோகரன் அவர்களுக்கும், நூல் சிறப்புற அமைய உதவிய திணைக்கள உதவிப்பணிப்பாளர்களான திரு. வீ. விக்கி ரமராஜா, திரு. எஸ். தெய்வநாயகம் ஆகியோருக்கும் எழுத்துப்பிழையற அச்சிடுவதற்கு உதவிய திணைக்கள தகவல் உத்தியோகத்தர் திரு.ம.சண்முகநாதன் அவர்களு க்கும் எனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவி த்துக் கொள்ளுகின்றேன்.
திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பகுதி வேலை களில் ஊக்குவிப்பும், ஆலோசனையும் வழங்கி வழிகாட்டிய முன்னாள் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர் களை இவ்வேளை நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.
இந்நூலினை அழகுற அச்சிட்டு வழங்கிய அச்ச
கத்தாருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள் கின்றேன்.
இந்துசமய கலாசார சாந்தி நாவுக்கரசன், அலுவல்கள் திணைக்களம் Z 2722 a vao/7 z//767/7.
12

Ug it foo/7
நீண்டதோர் இலக்கியப் பாரம்பரியத்தினைக் கொண்டுள்ள தமிழ் இலக்கியப் பரப்பிலே, சமூகத்தின் அடிமட்டத்தினரைச் சித்திரிக்கும் பொதுமக்கள் லக்கியங்களாகப் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் என்பவை விளங்குகின்றன. இவற்றுட் பள்ளு இலக்கியம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பிற இலக்கியங்களைப் போன்றே இவ்விலக்கியமும் பாட்டுடைத் தலைவரைச் சிறப்பிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பினும், முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்திலே, வேளாண்மைத் தொழிலாளராகிய பள்ளர் என்னும் சமூகத்தை அது அறிமுகப்படுத்தியமை அதன் தனித்துவத்தை இனங்காட்டுவதாக உள்ளது. இவ்விலக்கியம், இலக்கியச் சுவை கொண்டு அமைந்திருப்பதோடு, மக்கள் சமூகத்தின் ஒரு பகுதியினரின் சமூகநிலை, பொருளாதார நிலை, தொழில் முறைகள், குடும்ப உறவுகள், சமய நோக்குகள், நம்பிக்கையுணர்வுகள் முதலானவை பற்றி
அறிந்துகொள்ளவும் உதவுகின்றது.
பள்ளு - பொது விளக்கம்
பள் என்பது, பள்ளர் என்னும் மக்கள் பிரிவினரையும் அம் மக்களைப் பாத்திரங்களாகக் கொண்ட நாடகத்தன்மை
வாய்ந்த சிற்றிலக்கியத்தையும், காளி முதலான
13

Page 9
தெய்வங்களுக்குப் பலி கொடுக்கும் காலத்துப் பாடப்படும் பண் வகையையும் குறிப்பதாகத் தமிழ்ப் பேரகராதி கூறுகின்றது. பள் என்னும் சொல்லே, பள்ளர் வகுப்பினரைப் பாத்திரங்களாகக் கொண்டு பாடப்பட்ட சிற்றிலக்கியத்துக்குப் பள்ளு எனப் பெயர் அமையக் காரணமாயிற்று.
பள்ளு எனப் பெயர் கொண்ட பிற ஆக்கங்கள் சிலவும் உண்டு. ஆனால், அவற்றுக்கும் பள்ளு இலக்கியத்துக்கும் இடையிலே வேறுபாடுகள் உள்ளன மலையாளத்திலே தோன்றிய தேவேந்திரப் பள்ளு என்பது பள்ளு எனப் பெயர் கொண்டு அமைந்திருப்பினும், அதன் பொருளமைதி, தமிழ்ப் பள்ளு இலக்கியத்தின் பொருளமைதியினின்றும், வேறுபட்டதாக உள்ளது. இதுபோன்றே, திருவரங்கம் கோயிலில் அரையர் பாடு பள்ளுப் பாட்டுக்களுக்கும், பள்ளு இலக்கியத்துக்கும் இடையே வேறுபாடு உண்டு. திருநீலகண்டன் பள்ளு, வைத்தியப் பள்ளு போன்றவை, பள்ளு எனப் பெயர்கொண்டு, பள்ளு இலக்கியம் அல்லாத நூல்களாக விளங்குகின்றன. ஈழத்தில் பண்டிப் பள்ளு, குருவிப் பள்ளு, கடல் நாச்சியம்மன் பள்ளு என்பன பள்ளு என்ற பெயரைக்
கொண்ட நாட்டார் பாடல்களாக வழங்கிவந்துள்ளன.
பள்ளு இலக்கியத்தின் முன்னோடிக் கூறுகள்
ஒர் இலக்கியம் தோன்றும்போது, அது தோன்றுவதற்கு முன்பிருந்த பல்வேறு
4

இலக்கியங்களினின்றும் வேண்டிய கூறுகளைப் பெற்று அது வளர்ச்சியுறுவது இலக்கிய வரலாற்றிற் காணத்தகும் அம்சமாகும். பள்ளு இலக்கியமும் அதன் தோற்றத்துக்கான பல்வேறு வித்துக்களை முற்கால இலக்கியங்களினின்றும் பெற்றுக் கொண்டுள்ளது.
பள்ளு இலக்கியத்தின் தோற்றத்துக்கான முன்னோடிக் கூறுகளைக் கருத்திற் கொள்ளும்போது, தொல்காப்பியத்தையும் நோக்கவேண்டியுள்ளது. இந்நூல் நேரடியாகப் பள்ளு இலக்கியத்தின் தோற்றத்துக்குக் காரணமாக அமையாவிடினும், இதிற் கூறப்படும் வாகைத் திணையின் துறைகளுள் அடங்குபவையான ஏரோர் களவழி, தேரோர் களவழி ஆகிய துறைகள், பள்ளு இலக்கியம் தொடர்பாக நோக்கத்தக்கவை, ஏர்க்களத்தில் உழுதொழில் செய்வோர் விளையுட் காலத்திலே செய்யும் செயல்களைக் கிணைப்பொருநர் பாராட்டுவது ஏரோர் களவழியாகும். இதற்கு மறுதலையாக, போர்க்களத்தில் மன்னனின் செயல்களை, ஏர்க்களத்தில் உழுதொழில் செய்பவரோடு உவமித்து, மன்னனைப் பாராட்டுவது தேரோர் களவழியாகும். இவையிரண்டிலும், முன்னையதைப் பாடுபவர் கிணைப் பொருநராகவும், பின்னையதைப் பாடுவோர் புலவராகவும் விளங்கினர். களம் பாடுதல் என்ற அடிப்படையில், ஏர்க்களம் பாடுவதும், போர்க்களம் பாடுவதும் மரபாக இருந்துள்ளது. ஆயினும், காலப்போக்கில் இவ்விருவகைப்பட்ட களம் பாடுதலும் ஒன்றுடனொன்று இணைந்துவிட்டதாகத் தோன்றுகின்றது. தொடக்கத்தில் ஏர்க்களத்தையும், உழவுத்தொழிலையும் புகழ்ந்து பாடும்
15

Page 10
மரபிருந்து, அம்மரபினின்றே போர்க்களத்தையும், போர்த்தொழிலையும் புகழ்ந்து பாடும் பிறிதொரு மரபு தொடர்ந்திருக்க வேண்டுமென ஊகிக்க இடமுண்டு. இதற்கு ஆதாரமாகப் புறநானூற்றில் இடம்பெறும் "வாளேருழவ", "வில்லேருழவ நின் னல்லிசை யுள்ளி” என வரும் தொடர்களைக் குறிப்பிடலாம். இவ்வாறு, ஏர்க்களம் பாடுதல் என்ற துறையினின்று கிளைத்த பிறிதொரு துறையாகப் போர்க்களம் பாடுதல் அமைந்தது எனலாம். இத்தகைய நிலையிலேயே புறநானூற்றுப் பாடல்கள் உழவினையும், போரினையும் இணைத்து உருவகித்துக்காட்ட முற்பட்டன.
கி.பி.9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலையில், தொல்காப்பியத்திற் கூறப்பட்ட ஏரோர் களவழி கிணைநிலை என்னும் பெயராற் சுட்டப்பட்டுள்ளது. வயலில் உழும் உழைப்பாளியான உழவனை, கணையொலிக்கும் கலைஞன் பாராட்டுவதாக இத்துறை அமைந்துள்ளது. உழவனது உழைப்பின் பயன் கலைஞனுக்கும் கிட்டுவதை. இத்துறை குறிப்பாகச் சுட்டுவதாகக் கொள்ளமுடியும்.
. மேற்கூறப்பட்ட செய்திகளினின்றும், ஏர்த்தொழிலைப் புகழும் நோக்கு, தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், புறப்பொருள்வெண்பாமாலையிலும் இடம்பெற்றிருந்தமையை அறிய முடிகின்றது. திருக்குறளும் இவ்வகையில் நோக்கத்தக்கது. இவை நேரடியாகப் பள்ளு இலக்கியத்தைப் பாதித்தன என்று கூறுவது கடினமாயினும், இவை காலகட்ட வளர்ச்சி பெற்று உருமாறியும் புதுப்பொலிவு பெற்றும் பள்ளு இலக்கியத்தின் தோற்றுவாய்க்கு ஊற்றுக்கண்ணாக அமைந்தன எனலாம்.
16

இவை ஒருபுறமிருக்க, பள்ளில் இடம் பெறும் நாட்டுவளம், நகர்வளம் போன்றவை காப்பியங்களில் இடம்பெறும் நாட்டு, நகர்ப் படலங்களை ᎶᏈᎠ ᎧᏈᎢ க்ககின்றன. ப்பகுதிகள் பள்
வுறுத்து ற @ ளு லக்கியத்துக்குக் காப்பியச் சாயலை அளிக்கும் நோக்குடன்
ததுக்கு கும நோகசூ புனையப்பட்டதாகத் தோன்றுகின்றது.
மேலும், சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள ஐவகை நிலப் பாகுபாடு பற்றிய செய்திகளைப் பள்ளு இலக்கியத்துடன் பொருத்தி நோக்கலாம். ஆற்றுப் படை நூல்களில் ஐவகை நில வருணனை தெளிவாக அமைந்துள்ளது. பள்ளிலும் இத்தகைய நில வருணனை பயன்படுத்தப்பட்டுள்ளமையைக் காணலாம். மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகும்போது, அவ்வாற்று வெள்ளம் ஐவகை நிலங்களினூடாகவும் பாய்வதாகப் பள்ளு நூல்கள் வருணிக்கின்றன. 'பெரும்பாலான பள்ளுகள், மழைநீர் ஆறாகப் பெருகி ஐவகை நிலத்திலும் செல்லுவதைக் காட்டும்போது ஐந்திணையின் உரிப்பொருளையும் பாடுகின்றன. * உழவுத் தொழிலுக்கு நீர் அவசியமாதலின், அதனைச் சிறப்பித்துக் கூறுவதற்காகவே ஆற்றுவெள்ளம் பாய்வதைக்
என ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுவர்.
குறிப்பிட வேண்டிய தேவை பள்ளு நூலாசிரியர்களுக்கு ஏற்பட்டதெனக் கொள்வது பொருத்தமானது. அதேவேளை, இவ்விலக்கியத்தில் இடம் பெறும் ஐவகை நில வருணனை, ஆற்றுப்படை நூல்களிற் காணத்தகும் ஐவகை நில வருணனை மரபின் தொடர்ச்சியே என்பதும் தெளிவாகின்றது. மேலும், சிலப்பதிகாரக் கானல்வரியில்
17

Page 11
இடம் பெறும் ஆற்றுவரிப் பாடல்களை, பள்ளு இலக்கியத்தில் இடம் பெறும் ஆற்றில் வெள்ளம் வருதல் என்னும் பகுதியோடு ஒப்புநோக்கலாம். இவ்வாறு ஒப்புநோக்குமிடத்து, சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற ஆற்றுவரிப் பாடல்கள் பொருள் விரிவு பெற்று, பிற்காலத்தில் பள்ளு நூல்களில் ஆற்றில் வெள்ளம் வருதல் என்னும் பகுதியாக அமைந்துள்ளதாகவும் கொள்ளமுடிகின்றது. *
அடுத்து, பழந்தமிழ் நூலாகிய பரிபாடலில் இடம்பெறும் சக்களத்திப் போராட்டம் பற்றிய செய்தியை நோக்கலாம். ? இச்செய்தி புலவரின் புனைந்துரையாக இருப்பினும், பின்தோன்றிய பள்ளு இலக்கியத்தோடு இதனைப் பொருத்திப் பார்க்கக்கூடியதாக உள்ளது. முருகனின் தேவியரான வள்ளி, தேவசேனை ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்றதாகக் குன்றம் பூதனாரால் இப்போராட்டம் புனைந்துரைக்கப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் களவில் மணந்தபோது, தேவசேனை சீற்றங் கொண்டமையும், முருகன் அவளது சீற்றத்தைத் தணிப்பதற்கு முயன்றமையும், தேவசேனையும் ஊடல் நீங்கி அவனை ஏற்றுக்கொண்டமையும், அச்செயல் வள்ளியைச் சினம் கொள்ளச் செய்தமையும், இரு தேவியருடைய தோழியர் தம்முட்பொருதிக் கொண்டமையும், அவர்களைச் சார்ந்த மயில்கள், கிளிகள், வண்டுகள் ஆகியவை போரிட்டுக்கொண்டமையும், ஈற்றில் குறிஞ்சி நிலம் சார்ந்த குறமகளிர் வெற்றி கொண்டமையும், பரிபாடலிற் கூறப்படுகின்றன. இவ்வாறு, இந்நூலில் இடம்பெற்ற வள்ளிதேவசேனை ஆகியோரின் போராட்டம், உலகியலிற்
18

காணத்தகும் சக்களத்தியரின் பிரச்சினைகளின் பிரதிபலிப்பே ஆகும். சக்களத்திகளுக்கு இடையிலான இத்தகைய போராட்ட உறவு, பள்ளு இலக்கியத்தின் முதன்மைக் கூறுகளுள் ஒன்றாகவும் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். பள்ளு நூல்களில் இடம்பெறும் மூத்த பள்ளி, இளைய பள்ளி ஆகியோருக்கிடையிலான போராட்ட உறவு பற்றிய புனைவுக்குப் பரிபாடலில் இடம்பெற்ற வள்ளி-தேவசேனை ஆகியோரின் போராட்டம் பற்றிய செய்தியும் ஒருவகையில் முன்னோடியாக அமைந்துள்ளது எனலாம்.
மேலும், பள்ளு இலக்கியத்தின் அகப்பொருட் சார்பான கூறுகள், சங்ககாலத்திலிருந்து தொடர்ந்து வந்த அகத்திணை மரபினை அடியொற்றியவை எனக் கூறலாம். ஆயினும் கோவை இலக்கியத்தின் பாதிப்பினையே பள்ளு இல்க்கியத்தில் நேரடியாகக் காணத்தக்கவாறு உள்ளது. அவ்விலக்கியத்தில் பாட்டுடைத் தலைவன் பெயர் மாத்திரமே சுட்டப்படும். கதாபாத்திரங்களின் பெயர்கள் வழங்கப்படுவதில்லை. இதனையொத்தே பள்ளு இலக்கியத்திலும் பாட்டுடைத் தலைவன் பெயர் சுட்டப்படுதலேயன்றி, கதாபாத்திரங்களின் இயற்பெயர்கள் சுட்டப்படுவதில்லை. 7 இவ்வகையில் நோக்குமிடத்து, கோவை இலக்கியத்தின் இத்தகைய கூறுகள் பள்ளு இலக்கியத்தினைப் பாதித்தமையைத் தெளிவுற விளங்கிக் கொள்ளலாம். பிற்பட்ட காலத்திலே தோன்றிய பள்ளு நூல்களில் இடையிடையே அமையப்பெற்ற அகத்திணை சார்பான செய்யுள்கள், கோவை போன்ற இடைக்கால
19

Page 12
அகத்திணை இலக்கியங்களின் பாதிப்பினால் இயற்றப்பட்டவையே என்பதும் இதனாற் புலனாகின்றது.
இச்செய்திகளை அடுத்து, பிற்காலத்துத் தோன்றிய நூல்களை நோக்கும்போது, கி.பி.10 ஆம் நூற்றாண்டின் இறுதியிலே தோன்றிய பன்னிருபாட்டியல் கவனத்துக்கு உரியதாகின்றது.இப்பாட்டியல் நூல் முதன்முதலாக "உழத்திப் பாட்டு’ எனப் பெயர்கொண்ட ஒர் இலக்கியம் பற்றிய செய்தியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதுவகை இலக்கியம் குறித்துப் பன்னிருபாட்டியல் பின்வருமாறு
வரையறை செய்துள்ளது.
"புரவலற் கூறி அவன்வ7ழியவென் நகல்வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனன்
எனவரும் ஈரைந்துழத்திப் ட/7ட்டே"
பன்னிருபாட்டியல் குறிப்பிடும் உழத்திப்பாட்டுக்குரிய இலக்கணத்தை நோக்குமிடத்து, உள்ளடக்க முறையிற் புரவலன் பற்றிய வாழ்த்து, வயற்றொழில் வருணிப்பு ஆகிய உள்ளடக்கக் கூறுகளையும், உழத்தியின் கூற்றாய் அமைதல், பத்துப் பாடல்களைக் கொண்டிருத்தல் ஆகிய வடிவக்கூறுகளையும் கொண்டிருந்தமையை அறியலாம். இவ்வாறு, உழத்திப்பாட்டின் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியலின் துணைகொண்டு மாத்திரமே இற்றை வரை அறியமுடிகின்றது. அதன் இயல்பை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இயலவில்லை.
20

பன்னிருபாட்டியல் குறிப்பிடுமாறு உழத்திப்பாட்டு உள்ளடக்கியுள்ள கூறுகளை, அதற்கு முந்திய பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களில் ஏர்த்தொழில் தொடர்பான செய்திகளோடு ஒப்பிடுவது, அவ்விலக்கியத்தின் வளர்ச்சி குறித்த தெளிவான பார்வையை ஏற்படுத்தும். மன்னனை வாழ்த்துவது, முடிமன்னர் ஆட்சி மேலோங்கியிருந்த காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்களின் பொதுவான பண்பாகும். அது உழத்திப்பாட்டிலும் பின்பற்றப்பட்டுள்ளது. தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படும் ஏர்க்களம் பாடுதல் (ஏரோர் களவழி), இவ்விலக்கியத்தில் உழவுத்தொழிலை வருணிக்கும் முயற்சிக்கு முன்னோடியாக அமைந்திருக்கும் எனக் கருதலாம். ஆகவே, உழத்திப்பாட்டில் புதியவை எனக் கூறத்தக்கவையாக அமைந்திருப்பவை, உழத்தியின் கூற்றாய் அமைவதும், பத்துப் பாடல்களைக் கொண்டிருப்பதும் ஆகிய வடிவம் தொடர்பான கூறுகளேயாகும். சுருங்கச் சொல்வதாயின், இவ்விலக்கியத்தின் உள்ளடக்கக் கூறுகள் பழையவையாகவும், வடிவக் கூறுகள் புதியவையாகவும் அமைந்துள்ளன. பன்னிருபாட்டியல் கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்ற செய்தியின் அடிப்படையில் நோக்கும்போது, இந்நூல் குறிப்பிடும் உழத்திப் பாட்டு, அந்நூற்றாண்டுக்கு முன்னரே தோன்றிவிட்டதென்பது தெளிவாகின்றது. மேலும், பன்னிருபாட்டியல் குறிப்பிடும் முறையில் உழத்திப்பாட்டின் அமைப்புக் குறித்துச் சிந்திக்குமிடத்து, ஒருவாறு இவ்விலக்கியம் தோன்றிய காலத்தை ஊகிக்க முடிகின்றது. இவ்விலக்கியம் பத்துப்
பாடல்களைக் கொண்டது எனப் பன்னிருபாட்டியல் கூறும்
21

Page 13
செய்தி முக்கியமானது. இச்செய்தியின் அடிப்படையில் நோக்குமிடத்து, பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்கள் பெருவரவினவாகத் தோற்றம் பெற்ற பல்லவர் காலப் பகுதியில் இவ்விலக்கியம் தோன்றியிருக்கலாம். ஆயினும், பல்லவர் காலத்தில் முதன்மை பெற்றிருந்த பக்தியுணர்வும், சோழர் காலத்திற் பெரிதும் போற்றப்பட்ட மன்னர் புகழ் பாடும் போக்கும் இவ்விலக்கிய வளர்ச்சிக்குத் தடையாயின எனக் கருதவேண்டியுள்ளது. புரவலனைப் புகழ்வது, உழத்திப்பாட்டின் ஒரு கூறாக அமைந்தபோதிலும், சோழர் காலத்திற் பெரு வரவேற்புப் பெற்றிருந்த, மன்னருக்கே முதன்மை அளிக்கும் போக்கு இவ்விலக்கியத்திற் காணப்படாமை கவனிக்கத்தக்கது. எனவே, இவ்விலக்கியம் வளர்ச்சி குன்றி மறைந்தமைக்கு, இதன் அமைப்பே காரணமாயிற்று எனலாம். எவ்வாறாயினும், உழத்திப்பாட்டு பள்ளு இலக்கியத்துக்கு முன்தோன்றி, அதற்கு முன்னோடியாகவும் விளங்கியது எனலாம்.
உழத்திப் பாட்டுக்கும், பள்ளு இலக்கியத்துக்கும் இடையிலான உறவைக் கலைக்களஞ்சியம் பின்வருமாறு
தெரிவிக்கின்றது.
"மேற்காட்டிய உழத்திப்பாட்டு என்ற வழக்காறுபாட்டும் கூத்துமாய் அமைந்துள்ள பள்ளுப் பிரபந்தம் பிற்காலத்தில் தோன்றுவதற்கு வழிசெய்தது எனலாம். மிகப் பழைய உழவுத் தொழிலில் ஈடுபட்ட பள்ளர்,
பள்ளியர், வாழ்க்கையையொட்டிய கூத்து
22

வகைகள் பாட்டும் தாளமும் பொருந்திப் பாமர மக்களால் விரும்பிப் பாடப்பட்டு வந்தன. இவ்வாட்டத்துக்கான பாட்டை அனுபவித்த கவிஞர்கள் இதற்கு இலக்கியநிலை தந்தபோது, இது பள்ளுப் பிரபந்தமாகிவிட்டது என்று கருதலாம். ”*
இவ்வாறு கலைக்களஞ்சியம் குறிப்பிடுவதினின்றும் சில உண்மைகள் புலனாகின்றன. பிற்காலத்திலே தோன்றிய பள்ளு இலக்கியத்துக்கு உழத்திப்பாட்டே முன்னோடியாக அமைந்தது என்பது ஒன்று; பழங்காலத்திற் பள்ளர் சமூகத்தவரின் வாழ்க்கையோடு இணைந்திருந்த கூத்துவகைகள் இலக்கிய நிலை எய்தியமை இன்னொன்று. இவ்வாறு, உழத்திப் பாட்டின் வளர்ச்சி நிலையே பள்ளு இலக்கியமாகியதோடு, பள்ளர் வாழ்க்கையமைப்போடு இணைந்தமைந்த பண்பாட்டுக் கூறுகள் அவ்விலக்கியத்தில் இலக்கியநிலை எய்தி அதனைச் சிறப்பித்தன எனக் கொள்வது பொருத்தமானது.
பள்ளு இலக்கியத்திற் சமூகத்தரத்திலே தாழ்த்தப்பட்ட பள்ளர் சமூகம் பற்றிய செய்திகள் இடம்பெறுவதற்கு முன்னோடியாகச் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அமைந்துள்ளது எனக் கருதுவதற்கிடமுண்டு. அதில் இடம்பெற்றுள்ள திருநாளைப்போவார் நாயனார் புராணம், நந்தனார் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அடியார் ஒருவரின் வரலாற்றைக் கூறுகின்றது. அப்புராணத்தில், தாழ்த்தப்பட்ட
23

Page 14
சமூகத்தவரான புலையரின் சேரி பற்றியச் சித்திரிப்பு குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது. வேளாண்மைச் செய்கைக்குரிய மருதநில வளமும், ஊர், சேரி என்ற பகுப்புக்கள் பற்றிய செய்தியும் சேக்கிழாரினாற் காட்டப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட புலையர் சமூகத்தவரின் சேரி பற்றிய வருணனை, சோழர் காலத்தில் வாழ்ந்த அத்தகைய மக்களின் நிலையைத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது. அம்மக்கள் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தமை பற்றியும் அப்புராணம் தெரிவிக்கின்றது. மேல்வரும் செய்யுள் இதனைத் தெளிவுபடுத்துகின்றது.
'மற்றவலுர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையிற் சுற்றம் விரும் பியகிழமைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றியடை/ங் கெ/டிச்சரைமேற் 60274/6OZA7 ۶ی /z AZ2/2ری 72/سبت Z/z புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதே7ர் 4/லைட்ட/7டி"
இச்செய்யுளில், ஊரின் புறம்பாகச் சேரி அமைந்துள்ளது என்பதும், நிலக்கிழாருக்குரிமையான வேளாண்மை உழைப்பாளராகப் புலையர் என்ற சமூகத்தவர் விளங்கியமையும், ஏழ்மை நிரம்பிய சிற்றில்களில் அம்மக்கள் வாழ்ந்துவந்தமையும் புலப்படுத்தப்படுகின்றன. சேக்கிழாரின் இத்தகைய சித்திரிப்பு, பின்னர் தோன்றிய பள்ளு
24

இலக்கியத்திலும் வேளாண்மை உழைப்பாளரான பள்ளர் சமூகத்தவரைப் பாத்திரங்களாகக் கொள்வதற்கும், அவர்களின் உறைவிடங்களான சேரிகளைச் சித்திரிப்பதற்கும்
உதவியுள்ள தெனலாம்.
மேலும், சோழர் காலத்திலே உழவரைச் சிறப்பிக்கும் நூல்கள் தோன்றியமையும் குறிப்பிடத்தக்கது. ஏர் எழுபது, திருக்கை விளக்கம் முதலிய நூல்கள் இத்தகையன. இவை பின்வந்த பள்ளு நூலாசிரியர்கள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம் படைப்பதற்கு ஒரளவேனும் முன்னோடியாக விளங்கினவெனக் கருதுவதற்கு இடமுண்டு.
இவை ஒருபுறமிருக்க, 3ஆம் குலோத்துங்கனின் 24ஆவது ஆட்சியாண்டிற் (கி.பி.199) பொறித்த சாசனம் ஒன்றில்" பள்ளுப்பாடல்”பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. சாசனத்திற் குறிப்பிடப்படும் பள்ளுப்பாடலுக்கும், பள்ளு இலக்கியத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பது தெளிவாகவில்லை. ஆயினும், கி.பி.12ஆம் நூற்றாண்டின் இறுதியிலே 'பள்ளு என்ற சொல்வழக்கு பயன்படுத்தப்படத் தொடங்கிவிட்டது என்பது தெளிவாகின்றது.*
பள்ளு இலக்கியமும் நாட்டார் இலக்கியத் தொடர்புகளும்
பள்ளு இலக்கியத்தின் தோற்றம் பற்றிய செய்திகளை நோக்குமிடத்து அதற்கும் நாட்டார் இலக்கியத்துக்கும்
25

Page 15
இடையிலே நெருங்கிய தொடர்புகள் இருப்பதனை அறியலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகைப் பாடல்களும் இவ்விடத்து மனங்கொள்ளத்தக்கன. அவை தாழ்நிலையிலுள்ள மாந்தரையும் பாத்திரங்களாகக் கொண்டவை மாத்திரமன்றி, நாட்டார் பாடல்களின் எளிய அமைப்பினைக் கொண்டவையாகவும், பேச்சு வழக்குச் சொற்களையும் பயன்படுத்தியவையாகவும் விளங்குகின்றன. இவை நேரடியாகப் பள்ளு இலக்கியத்துக்குத் துணை செய்தன எனக் கூற இயலாவிடினும், தாழ்நிலைப் பாத்திரங்களைப் படைக்கவும், நாட்டார் இலக்கிய அமைப்பைப் பின்பற்றவும் தம்மளவிற் பிற்கால
இலக்கியங்களுக்கு முன்னோடியாக அமைந்தன எனலாம்.
பழந்தமிழ் இலக்கியங்களில் நாட்டார் இலக்கியக் கூறுகளைப் பெருமளவு தன்னகத்தே கொண்ட இலக்கியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. இவ்விலக்கியத்திற் கலந்துள்ள நாட்டார் இலக்கியக் கூறுகள் சில, பின்னர் தோன்றிய பள்ளு இலக்கியக் கூறுகள் சிலவற்றுக்கு முன்னோடியாக விளங்கியிருக்கலாம் எனக் கருதுவதற்கு இடமுண்டு. இவ்வகையில், சிலப்பதிகார நாடுகாண் காதையிற் கூறப்படும் உழவுடன் தொடர்பான விருந்திற்பாணி, ஏர்மங்கலம், முகவைப்பாட்டு ஆகிய நாட்டார் இலக்கியக் கூறுகளைக் குறிப்பிடலாம். இவை சிலப்பதிகார காலத்தில் நாட்டில் வழங்கிய நாட்டார் பாடல் வடிவங்களே என்பதும், அவை உழவுத் தொழிலுடன் தொடர்புள்ளவையாய் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
26

இவற்றோடு, பள்ளு என்ற பெயரில் சில நாட்டார் Lu fTL l6iy d5(@5 lib வழங்கிவந்துள்ளமையும் மனங் கொள்ளத்தக்கது. இவ்வகையில், பண்டிப் பள்ளு, குருவிப்பள்ளு, கடல் நாச்சியம்மன் பள்ளு என்பவை, பள்ளு என்னும் பெயரைக் கொண்ட நாட்டார் பாடல்களாக
ஈழத்தில் வழக்கிலே இருந்துள்ளன.
இவை மாத்திரமன்றி, பல்வகை நாட்டார் பாடல்களின் அமைப்புமுறை நேரடியாகவே பள்ளு இலக்கியத்தைப் பாதித்துள்ளது. இவ்வகையில், மழை பெய்ய ஆயத்தமாகும்போது பாடப்படும் நாட்டார் பாடல்கள், நாற்று நடுகையின்போது பாடப்படும் நாட்டார் பாடல்கள் சக்களத்திப் போராட்டத்தைப் புலப்படுத்தும் நாட்டார் பாடல்களாக ஆடவரைக்கவர்வதற்கெனச் சில பெண்கள் வசிய மருந்திடுவதாக அமைந்த நாட்டார் பாடல்கள், ஆண்களைப் பெண்கள் பரிகாசம் செய்துபாடும் நாட்டார் பாடல்கள், கணவனின் குறைகளை மனைவி கூறுவதாக அமைந்த நாட்டார் பாடல்கள் முதலானவை பள்ளு இலக்கியத்திலும் பின்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டார் இலக்கியங்கள் கிராமிய அம்சங்களோடு நெருங்கிய தொடர்புகொண்டவையாக விளங்குகின்றன. பள்ளு இலக்கியமும் அவ்வாறே கிராமிய அம்சங்களோடும், வேளாண்மையோடும் தொடர்புபட்ட இலக்கியமாக விளங்குகின்றது. மேலும், மழை, வளமை, வேளாண்மை
தொடர்பாகக் கிராம மக்களின் நம்பிக்கையுணர்வுகள்,
27

Page 16
நிமித்தம் பார்த்தல், கண்ணுரறு, கனவு காணுதல், பல்லி சொல்லல், நேர்த்தி வைத்தல், சன்னதம் ஆடுதல், பேய்கள் பற்றிய நம்பிக்கை முதலியவையும் பள்ளு இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றோடு, சிறுதெய்வ வழிபாட்டு அம்சங்கள், சடங்குகள், கிராமிய மக்களின் கலையுணர்வு, பழக்கவழக்கங்கள், என்பவையும் இவ்விலக்கியத்திற் புலப்படுத்தப்பட்டுள்ளன. இவை நாட்டார் வழக்காற்றியலுடன் தொடர்பான அம்சங்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
நாட்டார் இலக்கியங்களிற் காணப்படும் இன்னொரு பண்பு, கூட்டு வாழ்க்கை, கூட்டு முயற்சிகள் பற்றிய பிரதிபலிப்பாகும். இத்தகைய அம்சத்தைப் பள்ளு இலக்கியத்திலும் காணமுடிகின்றது. பள்ளு நூல்கள், வேளாண்மையுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களிலும் பள்ளர் சமூகத்தவரின் கூட்டு முயற்சிகளையும், கூட்டுணர்வினையும் புலப்படுத்துகின்றன.
மேலும், பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் பாத்திர உரையாடல்கள் உயிரோட்டம் உடையனவாக அமைவதற்கு,
அவற்றிற் காணப்படும் பேச்சுமொழியை ஒட்டிய வழக்குச்
சொற்கள், பழமொழிகள் முதலானவையும் காரணமாகின்றன.
இவற்றோடு, பள்ளு இலக்கியத்திற்
பயன்படுத்தப்படும் யாப்பு வகைகளை நோக்குமிடத்தும், நாட்டார் இலக்கியத்தின் பாதிப்பினை உணர முடியும். இவ்விலக்கியத்திற் பயன்படுத்தப்படும் பல்வேறு சிந்து
28

வகைகள், கண்ணிகள், கப்பல் தரு, தக்கை, ஏசல் முதலான இசை தொடர்பான யாப்புகள், நாட்டார் இலக்கிய யாப்பு வகைகளினின்றும் தோன்றியவை என்பதும் நினைவுறுத்தத்தக்கது. நாட்டார் இலக்கியங்கள் பாமர மக்களின் வாழ்வியல் நிலைகளை எடுத்துக்காட்டத்தக்க வகையில், எளிமையான யாப்பமைதிகளைப் பயன்படுத்துகின்றன. அதேபோன்று, பள்ளு இலக்கியத்திலும் சமுதாயத்தின் அடிநிலை மக்களான பள்ளர் சமூகத்தின் வாழ்வியல் அம்சங்கள் புனையப்பட்டுள்ளன. அதனால், அவற்றை இயல்புடன் எடுத்துக் காட்டத்தக்க வகையில் நாட்டார் இலக்கியத்துக்குரிய யாப்பமைதிகளும் பின்பற்றப்பட்டுள்ளன. *
பள்ளு இலக்கியமும் நாடகக் கூறுகளும்
பள்ளு இலக்கியத்தின் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்தவற்றுள், பல்வேறு நாடகக் கூறுகளும் அடங்குகின்றன. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையின் உரையில் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் பழம் பாடலில் " ஐயனுக்குப் பாடும் பாட்டாடும் படுபள்ளி” என்ற தொடர் அமைந்துள்ளது. இதுபற்றி (Լp. அருணாசலம் குறிப்பிடுமிடத்து, இவற்றுள், ஆடும் படுபள்ளி என்பது பள்ளியரும் பள்ளரும் சேர்ந்து ஆடும் கூத்தெனக் கொள்ளலாம்' என்பர். " மேலும், "மிகப் பழைய காலத்தே உழவுத் தொழிலில் வாழ்க்கையையொட்டிய கூத்துவகைகள் பாட்டும் தாளமும்
ஈடுபட்ட பள்ளியர் பள்ளர்
பொருந்திப் பாமர மக்களால் விரும்பி ஆடப்பட்டு வந்தன.*
2505-B-a 29

Page 17
எனக் கலைக்களஞ்சியம் கூறுவதனையும் இவ்விடத்து நினைவுகூருவது பொருத்தமானதாகும். இத்தகைய செய்திகளினின்றும், வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருந்த பள்ளர் முற்காலத்திலே தமது உழைப்பால் ஏற்பட்ட களைப்பை நீக்குமுகமாக ஆடற்பாடற் கலைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை புலனாகின்றது. இவ்வாறு, பள்ளர் சமூகத்தவர் முன்னாளில் ஆடிய கூத்து, மேலும் நாடக அமைப்பினைப் பெற்றுப் பள்ளு இலக்கியமாக வளர்ந்தது என்று கருத இடமுண்டு.
அடுத்து, பள்ளு இலக்கியத்துக்கும் தெருக்கூத்துக்கும் இடையே சில ஒற்றுமைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பாக, பாத்திரங்கள் தம்மைத் தாமே அறிமுகப்படுத்தல், ஏசல் அமைப்பு முதலானவை இரு வடிவங்களுக்கும் இடையிலான தொடர்பினைக் காட்டுகின்றன. அ. அறிவுநம்பி இரு வடிவங்களிலும் இடம்பெறும் ஏசல் தொடர்பான கூறுகளை ஒப்பிட்டுப்
பின்வருமாறு கூறுவர்.
"தெருக்கூத்தில் தர்க்கப் பாடல்கள் இடம்பெறுவது பொதுவான கூறாகும். நடைபெறும் கதை நிகழ்ச்சிகளில் எவ்வாறேனும் இரண்டு முரண்பட்ட பாத்திரங்கள் சந்தித்துத் தங்களுக்குள்ள கருத்து மோதல்களை இவ்வாறு தர்க்கம் செய்வது கூத்திற்கு விறுவிறுப்பை உண்டுபண்ணும். இத்தகைய ஏசற் பாட்டுக்களே
30

தனியொரு நாடகமாகப் பெரிதுபடுத்தப்பட்டு
பள்ளு நாடகங்களாக வளர்ந்த்ன எனலாம்" ".
பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் மூத்தபள்ளிஇளைய பள்ளி ஏசல் அமைப்பு, இவ்வாறு அமைந்தது
எனக் கருதலாம்.
மேலும், பரதர் தமது நாட்டியம் பற்றிய நூலிற் கூறும் பத்துவகை ரூபங்களில் ஒன்றான வீதி என்பதில், இரு மாந்தரே இடம்பெறுவதுண்டு. தெலுங்கிலே தோன்றிய கோலாகலாபம் என்பதில், ஒர் அந்தணனுக்கும், இடையர் சமூகப் பெண்ணொருத்திக்கும் இடையிலான உரையாடல் அமைப்புக் காணப்படுகின்றது. தமிழிலே தத்துவராயரும் இரு மாந்தருக்கு இடையிலான உரையாடல் அமைப்பிற் புதிய சிற்றிலக்கியங்களைப் பாடியுளளமையும் குறிப்பிடத்தக்கது." இத்தகைய கூறுகளும் பள்ளு இலக்கியத்தின் நாடக அமைதிக்குத் தம் பங்களிப்பினைச் செலுத்தியிருக்கலாம்.
இவற்றுடன், மராட்டியராலே, தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இலாவணி என்ற விவாத நிகழ்ச்சியும் பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் பள்ளியர் ஏசலுக்குக் காரணமாயிருத்தல் வேண்டும். இந்நிகழ்ச்சியின்போது எரிந்த கட்சி, எரியாத கட்சி என இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்று விவாதம் செய்பவர்களில், எரிந்த கட்சியினர் சிவனைப்
புகழ்ந்து மன்மதனை இழித்துரைக்க, எரியாத கட்சியினர்
31

Page 18
மன்மதனைப் புகழ்ந்து சிவனை இகழ்ந்துரைப்பர். இலாவணியின் இந்நிகழ்ச்சியமைப்பினை நோக்கும் போது, பள்ளின் ஏசல் அமைப்புக்கு அது ஒரளவாயினும் தனது பங்களிப்பினைச் செலுத்தியிருத்தல் கூடும் எனக் கருதமுடிகின்றது. பள்ளு நூல்களில் மூத்த பள்ளி, இளைய பள்ளி ஆகிய இருவரும் தத்தமது தெய்வத்தைப் புகழுமுகமாக, மற்றவரின் தெய்வத்தைப் பழித்துக் கூறுவனவற்றோடு எரிந்த கட்சி, எரியாத கட்சி விவாதத்தைப் பொருத்தி நோக்கலாம்.
மேலும், பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் பாத்திரங்களின் உரையாடல் அமைப்பும் நாடகப்பாங்கிலேயே அமைந்துள்ளது.
இவ்வாறு, பள்ளு இலக்கியத்தில் இயல்பாகவே அமைந்துள்ள நாடகப்பாங்கு, அவ்விலக்கியத்துக்குத் தனிச்சிறப்பை நல்குகின்றது. அதனால், பின்வந்தோரும் பள்ளு இலக்கியங்களைத் தழுவி நாடகங்களை இயற்றி நடிக்க முனைந்தனர். முக்கூடற்பள்ளைத் தழுவி, என்னயினாப் புலவர் இயற்றிய முக்கூடற்பள்ளு நாடகம் இதற்குத் தகுந்த சான்றாக விளங்குகின்றது.
பள்ளு இலக்கியமும் இசைச்சார்பும்
பள்ளு இயல்பாகவே இசைச்சார்பு கொண்ட இலக்கியம் என்பதனை, அதனை இசையுடன்
தொடர்புபடுத்தி அந்நூல்களில் இடம்பெறும் கூற்றுக்களே உறுதிப்படுத்துகின்றன.
32

மேலும், சிந்து, கண்ணிகள், கும்மி முதலான இசைத்தொடர்பு கொண்ட யாப்புகளும் பள்ளு நூல்களிற் பயன்படுத்தப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சில பள்ளு நூல்களிற் கீர்த்தனங்களும் இடையிடையே விரவிவந்துள்ளன. பள்ளு இலக்கியத்தில் இசை பெற்றுள்ள சிறப்பிடம் பற்றிக் குறிப்பிடும் ஏ.என்.பெருமாள், கர்நாடக இசை எவ்வாறு அவ்விலக்கியத்தின் இசைப்பண்புக்குத் துணையாக அமைந்துள்ளது என்பதை மேல் வருமாறு விளக்குகின்றார்.
"கர்நாடக இசையமைப்பு தமிழ்நாட்டில் புகழ்பெற்றபின் இவை பாடப்பெற்றுள்ளதினால் பாடலிசையமைப்பு அதன்படி அமைந்துள்ளது. அவைகளுக்கு ஏற்ற ராகங்களைக் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. இசையின் உருவாகப் பள்ளு இயன்றுள்ளது.”*
பள்ளினோடு இணைந்துள்ள இசையமைதி, அதன் நாடக அமைப்புக்கு மேலும் மெருகேற்றுவதாக உள்ளது.
பள்ளு இலக்கியத்தின் அமைப்பு
சிற்றிலக்கியங்களை, அவற்றின் அமைப்பு முறையில் நோக்குமிடத்து, இருவகையாகப் பிரித்து நோக்கலாம். கதையமைப்பின்றி, பாட்டுடைத் தலைவரின் பெருமையைக் கூறுவனவாக அமைந்தவற்றை ஒருவகையில் அடக்கலாம்.
கோவை, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ் முதலானவற்றை,
33

Page 19
அவ்வகைக்கு உதாரணங்களாகக் காட்டலாம். கதையமைப்பினை அடிப்படையாகக் கொண்டு அமையும் சிற்றிலக்கியங்களை இன்னொரு வகைக்குள் அடக்கலாம். பள்ளு குறவஞ்சி, நொண்டி நாடகம், பரணி முதலானவற்றை இவ்வகைக்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். இவற்றுள், பள்ளு இலக்கியம் பிற சிற்றிலக்கியங்களினின்றும் கதையமைப்பில் வேறுபட்டதாக அமைந்துள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரை பள்ளர் சமூகம் தொடர்பான வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கியதாக இவ்விலக்கியம்
அமைந்துள்ளது.
பள்ளு இலக்கியத்தின் பொதுவான கதையமைப்பு பின்வருமாறு அமைந்துள்ளது. பாட்டுடைத் தலைவருக்கு உரிமையான பண்ணையில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடும் பள்ளனுக்கு இரு மனைவியர் இருப்பர். மூத்தவள் அவளது உறவினளாகவும், அதே ஊரில் வாழ்பவளாகவும் விளங்குவள். அத்தோடு, அவனது சமயத்தைச் சார்ந்தவளாகவோ, அல்லது அவன் வணங்கும் தெய்வத்தைப் போற்றுபவளாகவோ, இருப்பள். இளையவள் வேற்றுாரைச் சார்ந்தவளாகவும், வேறொரு சமயத்தைச் சேர்ந்தவளாகவோ, அல்லது பள்ளன் சார்ந்த அதே மதத்துக்குள்ளேயே பிறிதொரு தெய்வத்தை வழிபடுபவளாகவோ இருப்பள். கணவன் இளைய மனைவிமீது விருப்புக் கொண்டவனாகி, மூத்த மனைவியை வெறுப்பவனாக விளங்குவான்.
மழைபெய்து, ஆற்றில் வெள்ளம் பெருகி, வேளாண்மை
34

செய்வதற்குப் பொருத்தமான காலம் வந்துங்கூட, பள்ளன் தொழில் செய்வதில் ஆர்வமில்லாதவனாக, இளைய மனைவியின் இல்லத்திலேயே தங்கியிருப்பன். அதனால், மூத்த மனைவி அவனைப் பற்றிப் பண்ணைக்காரனிடம் முறையிடுவாள். பண்ணைக்காரன் இளைய பள்ளியிடம் சென்று, பள்ளனைப் பற்றி வினவும் போது, அவள் கணவனை வீட்டில் மறைத்து வைத்துக்கொண்டு பொய் கூறுவள். அதனை உணர்ந்த பண்ணைக்காரன் அவளைக் கோபிப்பான். அப்போது, ஒளிந்திருந்த பள்ளன் வெளியே வருவான். அவ்வேளையில், உண்மையை அறிவதற்காகப் பண்ணை வேலைகளைப் பற்றி அவனிடம் பண்ணைக்காரன் விசாரிப்பான். பள்ளன் கற்பனையாக நெல்விதை வகை, மாட்டு வகை, உழவுக்கருவிகளின் வகை முதலானவற்றைக் கூறுவான். மீண்டும் அவன் இளைய மனைவியின் இல்லத்திலேயே இன்புற்றிருந்து, பண்ணை வேலைகளில் அக்கறையின்றி நடந்து கொள்வான். இதனையறிந்த மூத்த மனைவி, மீண்டும் தன் கணவனைப் பற்றிப் பண்ணைக்காரனிடம் முறையிட்டு, அவனுக்குத் தண்டனை வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வாள். பண்ணைக்காரனும் அதற்கேற்ப அவனுக்குத் தொழுவில் மாட்டுதல் என்னும் தண்டனையை வழங்குவான். பின்னர், கணவனின் வேண்டுகோளுக்கிணங்க, மூத்த மனைவி மனமிரங்கி, தன் கணவனைத் தண்டனையினின்றும் விடுவிக்குமாறு பண்ணைக்காரனைக் கேட்டுக் கொள்வாள்.
பள்ளன் விடுதலை பெற்றபின், பண்ணை வேலைகள்
35

Page 20
தொடர்பான சரியான கணக்கை ஒப்புவிப்பான். அதன் பின்னர், நல்வேளையில் சமூகத்தவருடன் இணைந்து, வேளாண்மைத் தொழிலை ஆரம்பிப்பான். அவன் உழுதுகொண்டிருக்கும்போது அவனை ஒரு மாடு முட்ட, அவன் மயங்கி, வீழ்வான். அவனது இரு மனைவியரும் வருந்துவர். பின்னர் அவன் புத்துணர்வுடன் எழுந்து, வேளாண்மை வேலைகளைக் கவனிக்கத் தொடங்குவான். பள்ளர் சமூகத்தைச் சார்ந்த ஆண், பெண் பாலார் அனைவரும் வேளாண்மை வேலைகளில் ஈடுபடுவர். பயிர் முற்றியதும் அறுவடை செய்வர். பள்ளன் பல்வேறு செலவுகளுக்கும் நெல் அளந்துகொடுப்பதோடு, தனது சமூகத்தவர்க்கும் பகிர்ந்தளிப்பான். ஆனால் தனது மூத்த மனைவிக்கு அவன் சரியாக நெல் அளந்து கொடுப்பதில்லை. அதனால், அவள் பிற பள்ளியர் முன் அவனைப் பற்றிக் குறை கூறுவாள். அதனைத் தொடர்ந்து, அவளுக்கும், அவளது சக்களத்திக்கும் (பள்ளணின் இளைய மனைவி) இடையே வாக்குவாதம் இடம்பெறும். இறுதியில் இருவரும் சமாதானமாகி, பாட்டுடைத் தலைவரை வாழ்த்தி, தம் கணவனுடன் ஒன்றாக வாழ்வதாக உறுதிசெய்து கொள்வர். அத்தோடு பள்ளு இலக்கியத்தின் கதையம்சம் நிறைவுறும்.
பள்ளு நூல்களின் அடிப்படைக் கதையமைப்பு ஒரே வகையிலேயே அமைந்திருப்பினும், காலத்துக்கேற்பவும், அவற்றின் நூலாசிரியரின் மனப்போக்குக்கும், நோக்குக்கும் ஏற்பச் சில மாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்டுள்ளன.
பள்ளு இலக்கியத்தின் கதைக்கூறுகளை ஆதாரமாகக் கொண்டு, அதன் பொது அமைப்பினை மூன்று பிரிவுகளாகப்
36

பிரித்துநோக்க முடிகிறது. முதற் பிரிவில், காப்பு, கடவுள் வணக்கம், அவையடக்கம் முதலானவற்றையும், பள்ளன் பள்ளியர் பற்றிய அறிமுகம், தத்தம் குடிப் பெருமைகளை அவர்கள் குறிப்பிடல் ஆகியவற்றையும், பள்ளியர் இருவரும் தத்தம் நாட்டு வளம், நகர்வளம் முதலியன கூறுதல், குயில்
கூவுதல் முதலானவற்றையும் அடக்கலாம்.
இரண்டாம் பிரிவில், மழை வேண்டித் தெய்வத்தைப் போற்றல், மழை பொழிதல், ஆற்றில் வெள்ளம் பாய்தல், பண்ணைக்காரனின் அறிமுகம், பண்ணை வேலைகளிற் பள்ளன் அக்கறை செலுத்தாமை, மூத்த பள்ளியின் முறைப்பாடு, பள்ளன் தண்டனை அனுபவித்தல், விடுதலை அடைதல், பண்ணையில் வேளாண்மை தொடங்கல் முதலானவற்றை அடக்கலாம். இப்பிரிவே நூலின் பிரதான அமைப்பாக விளங்குகின்றது.
மூன்றாவது பிரிவில், பள்ளனை மாடு முட்டல், அவன் மயக்கம் தீர்ந்து எழுந்து புத்துணர்வுடன் செயலாற்றத் தொடங்கல், வேளாண்மை நிகழ்ச்சிகள், பள்ளன் நெல் அளத்தல், மூத்த பள்ளியின் கோபம், மூத்த பள்ளி, இளைய பள்ளி ஏசல் (வாக்குவாதம்), அவர்கள் சமாதானமாதல்
முதலானவற்றை அடக்கிக் கூறலாம்.
பள்ளு இலக்கியத்தின் இத்தகைய மூன்று பிரிவுகளிலும், தோற்றுவாயாக அமைந்த முதற் பகுதி, பழந்தமிழ் இலக்கியக் கூறுகளைக் கொண்டதாகவும், பெரும்பாலும் செயற்கைத்தன்மை மிகுந்ததாகவும்
37

Page 21
காணப்படுகின்றது. குறிப்பாக, நாட்டுவளம், நகர்வளம் பற்றிக் கூறுவனவற்றையும், மூத்த பள்ளி, இளைய பள்ளி பற்றிய
வருணனையையும் கூறலாம்.
இரண்டாம் பிரிவில் அடங்கி, நூலின் முக்கிய அமைப்பாக இயங்கும் கூறுகளை, அவற்றின் இயல்பு கருதி, இரு வகையாகப் பிரித்து நோக்கலாம். முதலாவது வகையில், மழையோடு தொடர்பான செய்திகள், ஆற்றில் வெள்ளம் பாய்தல் முதலானவற்றை அடக்கலாம். இரண்டாவது வகையில், பண்ணைக்காரன் பற்றிய அறிமுகம் முதல், பண்ணையில் வேளாண்மைச் செயல்களை ஆரம்பித்தல் வரையிலான செய்திகளை அடக்கலாம். இவற்றில் முதலாவது Ꭷ1 ᎧᏡ) ᏯᏠ5 , பள்ளர் சமூகத்தின் வேளாண்மைச் செயற்பாடுகளுக்குத் தோற்றுவாயாகவும், இரண்டாவது வகை, பள்ளரின் வாழ்வியல் பற்றிய உள்ளடக்கமாகவும்
விளங்குகின்றன.
மூன்றாவது பிரிவில் இடம் பெறும் பள்ளு இலக்கியத்தை நிறைவு செய்யும் கூறுகளையும் இருவகையாகப் பிரித்து நோக்கலாம். பள்ளனை மாடுமுட்டி வீழ்த்துவதும், அவன் பின்னர் புத்துணர்வுடன் எழுந்திருந்து பண்ணையில் வேளாண்மை வேலைகளைக் கவனிப்பது முதல், அவன் நெல் அளந்து கொடுத்தல் வரையிலான செய்திகளை முதல் வகையில் அடக்கலாம். இது நூலின் வேளாண்மை தொடர்பான நிகழ்ச்சிகளை
முடித்துவைப்பதாக அமைந்துள்ளது. மூத்தபள்ளி
38

பள்ளனைக் கோபித்தல், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பள்ளியர் ஏசல், அவர்கள் பின்னர் சமாதானமாதல் ஆகியவை பள்ளரின் குடும்பப் பூசல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, நூல் நிறைவு பெறுவதற்குத் துணையாக இருந்துள்ளன.
பள்ளு இலக்கியத்தின் பாட்டுடைத் தலைவர்கள்
பள்ளு நூல்களின் அமைப்பின் அடிப்படையில், அவற்றின் ஆசிரியர்களது pG நோக்கத்தைக் கவனிக்கும்போது, பள்ளர் குடும்பம் ஒன்றின் வாழ்வியற் கூறுகளைச் சித்திரிப்பதன் வாயிலாக, தாம் விழையும், பாட்டுடைத்தலைவரின் பெருமையைப் புலப்படுத்துவதே அவர்களின் கருத்தாக இருந்துள்ளமை தெளிவாகின்றது. இவ்வாறு பாட்டுடைத் தலைவர்களாகக் கொள்ளப்படுபவர்கள் கடவுளராகவோ, சமயத் தலைவராகவோ, நிலப்பிரபுக்களாகவோ, இருப்பதுண்டு. சுன்றாக முக்கூடற்பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, கதிரைமலைப்பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, திருமலை முருகன் பள்ளு கண்ணுடையம்மன் பள்ளு, செங்கோட்டுப்பள்ளு, முதலானவற்றில் கடவுளர் பாட்டுடைத் தலைவராக விளங்குகின்றனர். குருகூர்ப்பள்ளு, ஞானப்பள்ளு, திருமக்காப்பள்ளு முதலானவற்றில் சமயத்தலைவர்.
பாட்டுடைத் தலைவராகக் காணப்படுகின்றனர்.
செண்பகராமன் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு,
39

Page 22
கனகராயன் பள்ளு, பொய்கைப் பள்ளு போன்ற வற்றில் நிலப்பிரபுக்கள் பாட்டுடைத்தலைவராக விளங்குகின்றனர். சில பள்ளு நூல்களிற் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரே பாட்டுடைத் தலைமைக்குரியவராகக் கொள்ளப்படுவதுமுண்டு. மாந்தைப்பள்ளு, வைசியப் பள்ளு முதலானவற்றைச் சான்றாகக் குறிப்பிடலாம். சமய ஞான விளக்கங்களைக் கூறும் வேதாந்தப் பள்ளு, இவற்றினின்றும் வேறுபட்ட அமைப்பைக் கொண்டுள்ளது.
பள்ளு நூலாசிரியர்கள் தமது பாட்டுடைத் தலைவரின் பெருமையைக் குறிப்பிடுவதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றை மேல் வரும்
நான்கு வகைகளில் அடக்கலாம்.
அ) கதை நிகழிட வருணனையின்போது புலப்படுத்தல். ஆ) நூலின் கதைப்போக்கினூடே புலப்படுத்தல் இ) நிகழ்ச்சி விளக்கப் பாடல்களின் வாயிலாகப்
புலப்படுத்தல் ஈ) கதைப்போக்குக்குத் தொடர்பற்ற வகையிற்
புலப்படுத்தல்
இவற்றில், முதலாவது வகையிற் பாட்டுடைத் தலைவரின் பெருமை, கதை நிகழிடமான பண்ணை வயல்களைச் சுட்டும்போது, புலப்படுத்தப்படுகின்றது.
இரண்டாவது வகையில், பாட்டுடைத் தலைவரையும்,
40

அவரோடு தொடர்பான செய்திகளையும் பெரும்பாலும் கதைப்போக்கினூடே கூறிச் செல்வர். குறிப்பாக, பள்ளன் தன் குடிப்பெருமை கூறுதல், இயற்கை நிகழ்வுகள் பற்றிய வருணனைகள் (மழை பொழிதல், ஆற்றில் வெள்ளம் பாய்தல், பயிர் வளர்தல் முதலானவை), நெல்வகை, மாட்டுவகை, உழுதொழிற் கருவிகள் முதலானவற்றின் கணக்கைப் பள்ளன் ஒப்புவித்தல், பள்ளியர் ஏசல் ஆகியவற்றைக் கூறலாம். மூன்றாவது வகையிலே கதையில் அடுத்து நிகழவிருக்கும் நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் குறிப்புரையாக அமைந்த நிகழ்ச்சி விளக்கப் பாடல்களின் மூலம் பாட்டுடைத் தலைவரின் பெருமை சுட்டப்படுகின்றது. நான்காவது வகையில், கதையின் போக்குக்கு எவ்வகையிலும் தொடர்பற்ற முறையில் பாட்டுடைத் தலைவரின் பெருமை கூறப்படுகின்றது. இவ்வகையில் நூலில் இடையிடையே அமையும் துதிப் பாடல்கள், அகத்துறைப் பாடல்கள், அறிவுறுத்தற் பாடல்கள்
முதலானவை அடங்கும்.
பள்ளு இலக்கியம் -சில தனித்துவக் கூறுகள்
பள்ளு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சில தனித்துவக் கூறுகள் இடம் பெறுவதைக் காணலாம். அவற்றில் ஒன்று, குயில் கூவுதல் என்ற பகுதியாகும். இப்பகுதியில் நூலாசிரியர்கள் தமது சமயச்சார்போடு தொடர்பான கருத்துக்களை வெளிப் படுத்துகின்றனர். பாட்டுடைத்தலைவரின் பெருமை கூறப்படுவதோடு, சமய
நிறுவனங்களாகிய கோயில்கள், மடங்கள், திருச்சபைகள்
41

Page 23
முதலானவை சிறந்திருக்க வேண்டுமென்ற தமது விருப்பத்தையும் புலப்படுத்துகின்றனர். தமது சமயத்துக்குச் சார்பாகவும், தமக்குச் சார்பாகவும் நடந்து கொள்ளும் அரசினரையும் நூலாசிரியர் வாழ்த்துகின்றனர். மேலும், பல்வேறு திருப்பணிகள், அறச்செயல்கள் நடைபெறவும், மழைபொழிந்து வேளாண்மை சிறந்தோங்கிச் சமயச் சடங்குகள் நடைபெறவும், மக்கள் நல்வாழ்வு பெறவும் வேண்டுமெனவும் அவர்கள் விழைகின்றனர். சில நூலாசிரியர்கள் தமது சமயம், அல்லது சாதியைச் சார்ந்த மக்கள் சிறப்புற்று வாழ வாழ்த்தியுள்ளனர். இவ்வாறு, குயில் கூவுதல் என்ற பகுதி கதையுடன் ஒட்டாமல் அமைந்து, நூலாசிரியர்கள் 35 L D égl உள்ளக்கிடக்கைகளை வெளிப்படையாகப் புலப்படுத்துவதற்கு மாத்திரம்
வாய்ப்பளித்துள்ளது.
பள்ளு நூல்களில், பள்ளனை மாடு முட்டல் என்ற நிகழ்ச்சி சிறு செய்தியாக இடம் பெறினும், இவ்விலக்கியத்தின் நிகழ்ச்சிப்போக்கை மாற்றுவதற்கான ஒரு திருப்புமுனையாக அது அமைந்துள்ளது. மாடுமுட்டிப் பள்ளன் மயங்கி வீழ்ந்து எழுந்த பின்னர், அவன் புத்துணர்வுடன் உழைக்கப் புறப்படுவதாகக் காட்டப்படுகின்றது. இந்நிகழ்ச்சியின் பின்னரே பள்ளன் முனைப்பாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவதாகப் பள்ளு நூல்களில் உணர்த்தப்படுகின்றது. இந்நிகழ்வு முதல், பள்ளன் நெல் அளத்தல் வரை, பள்ளனுக்கும் மூத்த பள்ளிக்கும் இடையே குடும்பப் பூசல்கள் எதுவுமில்லாமை
குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து, கதைப்போக்கினைத் திசை
42

திருப்புவதற்கான ஒரு முயற்சியாகவே பள்ளனை மாடு முட்டல் என்ற நிகழ்ச்சி பள்ளு நூலாசிரியர்களாற் புகுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள
முடிகின்றது.
பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் நாற்றுநடுகைப் பகுதி, பள்ளு நூலாசிரியர்களால் திட்டமிட்டு அமைக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. வயலில் நாற்றுநடும் பள்ளர், பள்ளியரின் உறவுகள் அப்பகுதியில் விர சமான முறையிற் கூறப்படுகின்றன. பள்ளு நூலாசிரியர்கள் அடிநிலைப் பாத்திரங்களைத் தமது இலக்கியத்திற் பயன்படுத்தியபோதிலும், சந்தர்ப்பம் ஏற்படும் வேளைகளில் அவர்களைக் கொச்சைப்படுத்த முயல்வதை அவதானிக்கலாம். கோ.கேசவன் குறிப்பிடுவது போன்று, "பள்ளுப் பாடல்களில் வரும் நாற்று நடுகைப் பகுதி பள்ளரின் பால் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் ஒன்றாகவே
இருப்பதைக் காணலாம்.”
இவ்விலக்கியத்தின் தனித்துவம் மிக்க மையக் கூறாக விளங்குவது, சக்களத்திப் போராட்டமாகும். பள்ளர் தலைவனின் (குடும்பன்) இரு மனைவியரான மூத்தபள்ளி, இளைய பள்ளி ஆகியோருக்கிடையிலான இச்சக்களத்திப் போராட்டம், பள்ளு இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இப்போராட்டம் இவ்விலக்கியத்தின் முதன்மைக் கூறாக அமைவதற்குச் சில தேவைகள் நூலாசிரியர்களுக்கு இருந்திருக்க வேண்டும். பலதார மணத்தால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை இனங்
43

Page 24
காட்டுவதும், அதன் அடிப்படையிற் சுவையாகக் கதை நிகழ்ச்சிகளைக் கூறிச் செல்வதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்கலாம். இத்தகைய சக்களத்திப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சமயரீதியான, தெய்வரீதியான பூசல்களைச் சுட்டிக்காட்டி, ஈற்றில் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவதும் பள்ளு நூலாசிரியர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
பள்ளு இலக்கியத்தில் இடம் பெறும் இன்னொரு தனித்துவக் கூறாக விளங்குவது, பெருந்தெய்வ, சிறுதெய்வ வழிபாடுகள் பற்றிய செய்தியாகும். பள்ளு நூலாசிரியர்கள் தாம் படைத்த பாத்திரங்கள் வாயிலாக, தாம் அறிவு முறையில் நம்பிக்கை கொண்ட சமய உண்மைகளையும் தெய்வங்களின் சிறப்புக்களையும் குறிப்பிடுகின்றனர். அதேவேளையில், பள்ளர் சமூகத்தவரை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டமையால், அவர்கள் கடைப்பிடிக்கும் சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும் நூலிற் பயன்படுத்த வேண்டிய தேவை அந்நூலாசிரியர்களுக்கு ஏற்பட்டது எனலாம். பெருந்தெய்வ வழிபாட்டு அம்சங்களோடு சிறுதெய்வ வழிபாட்டு அம்சங்களும் பள்ளு நூல்களில் இடம்பெறுவது, அவற்றுக்குப் புதிய பொலிவை ஏற்படுத்துகின்றன. நூலாசிரியர் போற்றும் பெருந்தெய்வங்களான சிவன், திருமால், விநாயகர், முருகன் போன்றோரும், பள்ளர் சமூகத்தவர் வழிபடும் சிறுதெய்வங்களும் இவ்விலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. தெய்வங்களுக்கு ஏற்பவே வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன.
44

பள்ளு இலக்கியத்திற் பாத்திரப் படைப்பு
பள்ளு இலக்கியத்தில், பள்ளன் (குடும்பன்), அவனின் மனைவியரான மூத்தபள்ளி, இளையபள்ளி, அவர்கள்மீது மேலாண்மை செலுத்தும் பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்கள் முதன்மை பெற்று விளங்குகின்றன. குடும்பத் தலைவனான பள்ளன் சமயப்பற்றுள்ளவனாகவும், பாட்டுத்தலைவர் மீது பற்றும், மதிப்பும் மிகுந்தவனாகவும், தனது மனைவியரில் இளையபள்ளி மீது மையல்
கொண்டவனாகவும், மூத்தபள்ளியை அலட்சியப் படுத்துவனாகவும், பண்ணை வேலைகளில் அக்கறையில்லாதவனாகவும், பண்ணைக்காரனால்
தண்டிக்கப்பட்ட பின்னர் தன் தொழிலைச் செவ்வனே
செய்பவனாகவும் வார்க்கப்பட்டுள்ளான்.
மூத்தபள்ளி குணநலன்கள், வாய்க்கப்பெற்றவளாகவும், பண்ணைக்காரனின் நம்பிக்கைக்கு உரியவளாகவும் படைக்கப்பட்டுள்ள அதேவேளை, தன் கணவனால் வஞ்சிக்கப்படும் பரிதாபத்துக்குரிய பாத்திரமாகவும் விளங்குகின்றாள். இளையபள்ளி தன் கணவனின் அன்பை முழுமையாகப் பெற்றவள் என்ற வகையிலே தற்பெருமை கொண்டவளாகவும், பள்ளன் பண்ணை வேலைகளில் அக்கறை செலுத்தாமல் இருப்பதற்குக் காரணமானவளாகவும், தன் சக்களத்தியோடு பூசல்
இடுபவளாகவும் காணப்படுகின்றாள்.
45

Page 25
பண்ணைக்காரன் இம்மூவரின் தொழில், குடும்பம் முதலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்பவனாகவும், பரிகசிப்பதற்குரிய தோற்றமும், நடத்தையும் கொண்டவனாகவும் படைக்கப்பட்டுள்ளான். பள்ளு இலக்கியத்தில் இடம்பெறும் பண்ணைக்காரன் குறிப்பிட்டவாறு பண்ணையின் மேற்பார்வை யாளனேயன்றி, அதன் உரிமையாளன் அல்லன். பண்ணை வேலைகளில் ஈடுபடும் பள்ளர் தவறு செய்தால், அவர்களைத்
தண்டிக்கும் அதிகாரமும் அவனுக்கு இருந்தது.
பொதுவாக, ஒவ்வொரு பாத்திரத்தின் குணவியல்பும் எல்லாப் பள்ளு நூல்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே இருப்பதுண்டு. ஈழத்தில் தோன்றிய ஞானப்பள்ளு, இதற்கு விதிவிலக்காக அமைந்துள்ளது. பொதுவாகப் பள்ளு இலக்கியத்திற் பாத்திரங்களின் பெயர் சுட்டுவது மரபன்று. பள்ளன் பாட்டுடைத் தலைவரின் பெயரைச் சார்ந்தோ, அல்லது அவரின் ஊரைச் சார்ந்தோ பெயர் பெறுவதுண்டு. மூத்தபள்ளி பாட்டுடைத்தலைவரின் ஊரைச் சார்ந்து பெயர் பெறுவள். சில வேளைகளில், பள்ளணின் பெயர் பாட்டுடைத் தலைவரின் பெயரோடு சார்ந்தும், மூத்தபள்ளியின் பெயர் அவரது ஊரோடு சார்ந்தும் அமைவதுண்டு. 44 இளையபள்ளியின் பெயர் எப்போதுமே பாட்டுடைத் தலைவரின் ஊரினின்றும் வேறுபட்ட ஒர் ஊரைச் சார்ந்ததாகவே அமையும். சில பள்ளு நூல்களில், பள்ளர்,
பள்ளியரின் இயற்பெயர்களும் குறிப்பிடப்படுவதுண்டு.
46

பள்ளு இலக்கியத்துக்குரிய வழமையான பாத்திரங்களுடன் சில பள்ளு நூல்களிற் புதிய சில பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இடையன், அல்லது ஆயன் என்ற பாத்திரம் முக்கூடற்பள்ளு, பொய்கைப் பள்ளு, கண்ணுடையம்மன் பள்ளு, செங்கோட்டுப் பள்ளு முதலியவற்றில் இடம்பெற்றுள்ளது. குருகூர்ப்பள்ளு, செங்கோட்டுப்பள்ளு, போன்றவற்றில் பண்ணைக்காரனுக்கு அடுத்த நிலையிற் செயற்படுபவனாக முறையே முறையம்பிள்ளை, கோலுக்காரன் என்ற பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சாங்க ஐயர் என்ற பாத்திரம் கண்ணுடையம்மன் பள்ளிலும், சோதிடன் என்ற பாத்திரம் செங்கோட்டுப் பள்ளிலும் இடம் பெற்றுள்ளன. செங்கோட்டுப் பள்ளில் மேலதிகமாக ஓடக்காரன், ஆசாரி
ஆகிய பாத்திரங்களும் காணப்படுகின்றன.
இவ்விலக்கியத்தில் இடம்பெறும் பாத்திர உரையாடல்கள் உயிரோட்டம் உடையனவாக அமைவதற்கு, அவற்றிற் காணப்படும் பேச்சுமொழியை ஒட்டிய வழக்குச் சொற்கள், பழமொழிகள் முதலானவை காரணமாகின்றன. முக்கூடற்பள்ளு, திருமலை முருகன் பள்ளு, செண்பகராமன் பள்ளு, கண்ணுடையம்மன் பள்ளு, பொய்கைப் பள்ளு, செங்கோட்டுப் பள்ளு ஆகியவை இவ்வகையில் விதந்து குறிப்பிடத்தக்கவை. குருகூர்ப்பள்ளு, திருவாரூர்ப் பள்ளு முதலானவை, வழக்குச் சொற்களைப் பயன்படுத்துவதை
ஒரளவு கட்டுப்படுத்தியுள்ளமையைக் காணலாம்.
47

Page 26
பள்ளு இலக்கியத்தின் வளர்ச்சியும் தேக்கமும்
பள்ளு நூல்களுட் காலத்தால் முந்தியது எதுவென்பது பற்றி ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள. முக்கூடற்பள்ளை முதல் நூலெனக் கருதுவோர் ஒரு சாராரும், திருவாரூர்ப்பள்ளை அவ்வாறு கருதுவோர் இன்னொரு சாராரும், ஈழத்து நூலான கதிரைமலைப்பள்ளை முதலிலே தோன்றிய நூலாகக் கூறுவோர் வேறொரு சாராருமாக உள்ளனர். எவ்வாறாயினும், பள்ளு நூல்களுள் மிகச் சுவை பொருந்தியதாக விளங்குவது, முக்கூடற்பள்ளே என்பதில் ஐயமில்லை.
பள்ளு இலக்கியத்தின் வளர்ச்சி குறித்து நோக்குமிடத்து, கிபி 17ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியே அதன் வளர்ச்சிக் கட்டத்திற் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். சிறப்பாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பும், சமய நிறுவனங்களின் வளர்ச்சியும், அதனாலேற்பட்ட சமய உணர்வும், சாதியமைப்புப் பெற்றிருந்த முக்கியத்துவமும் அக்காலத்திற் பள்ளு இலக்கியம் பெற்றிருந்த வளர்ச்சி நிலைக்கு
முதன்மையான காரணங்கள் ஆகின.
இவ்விலக்கியம் அடிப்படையில் நிலப்பிரபுத்துவ அமைப்பைச் சார்ந்த இலக்கியமாக விளங்குகின்றது. அதே வேளையில் அத்தகைய அமைப்புக்குள் இயன்றளவு மக்கள், சார்பான இலக்கியமாகவும் அது அமைந்துள்ளது.
48

ஆங்கிலேயரின் வருகையின் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சியமைப்பு மாறுதல்களும், பொருளாதார அமைப்பின் வேறுபாடுகளும், பண்பாட்டுத் தாக்கங்களும் தமிழகத்தில் வேரூன்றும் வரையிலும் பள்ளு இலக்கியம் வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புக் காணப்பட்டது. பெரும்பாலான சிற்றிலக்கியங்கள் நிலவுடைமைக்கு முழுமையாகச் சார்பானவையாக அமைய, பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் போன்றவையே இயன்றளவு பொதுமக்கள் சார்பு கொண்டவையாக அமைந்தன. ஒரளவாயினும் சீர்திருத்தத்தை அவாவியவையாக அவை விளங்கின. அதே வேளை, பாமர மக்களான பள்ளரை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டமைந்திருப்பினும், சிருங்காரரசம் கொண்டதாகவும், நாடகச் சுவை பொதிந்ததாகவும் இவ்விலக்கியம் அமைந்ததால், நிலப்பிரபுக்கள், குறுநிலத் தலைவர்கள் முதலானோரும் இதன்பாற் கவர்ச்சி கொண்டனர். இத்தகைய சிறு தலைவர்களைப் புகழ்ந்து, அவர்களின் பொருளாதார ஆதரவில் வாழும் வாய்ப்பும் கவிஞர்களுக்குக் கிட்டியது. பள்ளு இலக்கியத்தித்தின் வளர்ச்சியில், நிலப்பிரபுக்களின் பங்கும் குறிப்பிடத்தக்கதாக
உள்ளது.
இவற்றோடு, கோயில்களின் வளர்ச்சி நிலையும் பள்ளு இலக்கியத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையதாகக் காணப்பட்டது. ஏனெனில், பெரும்பாலான பள்ளு நூல்கள் கோயில்களைச் சார்ந்த பண்ணைகளைப்
பற்றியனவாயுள்ளன. 19 ஆம் நூற்றாண்டு வரையும் தமிழ்
49

Page 27
இலக்கியம் அனைத்திலும் ஏதோவொரு வகையிற் சமயச்சார்பு முக்கியத்துவம் பெற்றுக் காணப்பட்டது. சமய நிறுவனங்களின் செல்வாக்கு மிகுந்திருந்தமையும், அவற்றின் வழிப்பட்ட சமயச் சிந்தனைகள் தமிழர் சமுதாயத்தில் வேரூன்றியிருந்தமையும் அதற்கான முதன்மையான காரணங்கள் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பள்ளு இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் வாய்ப்பாக அமைந்தது.
கி.பி 19ஆம் நூற்றாண்டின் பின்னர், பள்ளு இலக்கியத்தின் வளர்ச்சியிலே தேக்க நிலை ஏற்படுவதைக் காணலாம். இதற்கான காரணங்களைக் கூறவந்த பேராசிரியர் ஆ. சதாசிவம், மக்கள் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட பெரும் மாறுதல்களின் பயனாகச் சாதிப் பிரிவினையை வலியுறுத்தும் கோட்பாடுகளைக் கொண்ட இலக்கிய வகைகளை மக்கள் எழுதுவதற்குச் சமுதாயத்தின் ஆதரவு கிட்டாமை, சமுதாயச் சீர்திருத்தத்தின் கருவியாக இலக்கியச் சிந்தனைகளை வழிப்படுத்தும் இந்நாளில், கணவன் மனைவியரிருவரின் கைப்பட்டுத் திண்டாடும் வாழ்க்கை முறையைச் சித்திரிப்பது ஒர் இலட்சிய நெறியாகாது என நூலறி புலவர் கருதியமை ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார் இவை மாத்திரமன்றி, ஆங்கிலேயரின் வருகையின் பின்னர் நிலப்பிரபுத்துவ முறையினின்றும் முதலாளித்துவ முறைமைக்குச் சமுதாயம் சிறிது சிறிதாக மாற்றமுற்று வந்தமையும், கிபி 19ஆம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெறத் தொடங்கிய விடுதலையுணர்வும், பெண்விடுதலை உட்பட,
அதனோடு இணைந்து வளர்ந்த சமுதாய முன்னேற்றக்
50

கருத்துகளும், பழைய முதன்மை நிலையினின்றும் சமயம் பின்தள்ளப்பட்டமையும் பழைய முறையிலான வேளாண்மை யமைப்பு சிறிது சிறிதாகக் கைவிடப்படத் தொடங்கியமையும் பள்ளு இலக்கியம் வளர்ச்சி குன்றித் தேக்கநிலை அடைவதற்குக் காரணங்கள் ஆகும்.
ஈழத்துப் பள்ளு நூல்கள்
ஈழத்திலே தோன்றிய கதிரைமலைப் பள்ளு ஞானப்பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, ஆகிய நான்கு பள்ளு நூல்கள் தற்போது நூலுருப் பெற்றுள்ளன. நவாலிப் பள்ளு, நவாலியூர் வன்னியசேகரன் பள்ளு போன்றவை பற்றிப் பெயரளவில் மாத்திரம் தெரியவருகின்றது. இவையிரண்டும் ஒரே பள்ளின் வெவ்வேறு பெயர்களா என்பதும் தெளிவாகவில்லை. இவை மாத்திரமன்றி, மேலும் சில பள்ளு நூல்களும் ஈழத்திலே தோன்றியிருக்க வேண்டும் என ஊகிக்கலாம்.
இப்போது கிடைக்கும் நான்கு நூல்களிலும் ஞானப்பள்ளு மாத்திரமே சிதைவின்றி முழுமையாகக் கிடைத்துள்ளது. கதிரைமலைப் பள்ளில் இடையிடையே சில செய்யுள்கள் (62,90) சிதைந்து விட்டன. பறாளை விநாயகர் பள்ளிலும், தண்டிகைக் கனகராயன் பள்ளிலும் நாற்று
நடுகைக்குப் பின்னுள்ள பகுதிகள் சிதைந்து விட்டன.
ஈழத்துப் பள்ளு நூல்களில் முதன்முதலில் தோன்றியதாகக் கருதப்படுவது, கதிரைமலைப் பள்ளாகும்.
51

Page 28
செயற்கைத் தன்மை குறைந்ததாகவும், அகப் பொருள்துறை தொடர்பான செய்யுள்கள் அற்றதாகவும் விளங்குவதால், இதுவே ஈழத்தின் முதற் பள்ளு நூல் எனத் துணிய முடிகின்றது. எனினும், இந்நூலின் காலம் பற்றிய செய்திகளிற் போதிய தெளிவு காணப்படவில்லை. 1935 இல் இந்நூலைப் பதிப்பித்த வ. குமாரசுவாமி, 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது இந்நூல் எனக் கருதுகின்றார். கதிரையப்பர் பள்ளு என்னும் பெயராலும் வழங்கப்பட்ட இந்நூல், முதன்முதலில் 1915 ஆம் ஆண்டளவில் முல்லைத்தீவுப் பகுதியில் அச்சில் வெளிவந்ததாகத் தெரிகின்றது.
இதனையடுத்து, போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தில் மேலாண்மை செலுத்திய கர்லத்தில் (கி.பி. 1621-1658) ஞானப்பள்ளு தோன்றியது. பறாளை விநாயகர் பள்ளும், தண்டிகைக் கனகராயன் பள்ளும் ஒல்லாந்தர் காலத்தைச்
(கி.பி. 1658-1796) சார்ந்தவையாகும்.
கதிரைமலைப்பள்ளு,ஞானப்பள்ளுஆகியவற்றின் ஆசிரியர்களின் பெயர்கள் தெரியவில்லை, பறாளை விநாயகர் பள்ளினை நல்லூர் சின்னத்தம்பி புலவரும், தண்டிகைக் கனகராயன் பள்ளினை மாவைச் சின்னக்குட்டிப் புலவரும் இயற்றியுள்ளனர்.
FD) li அடிப்படையில் நோக்குமிடத்து, ஞானப்பள்ளினைத் தவிர்த்து, மற்றைய அனைத்தும் சைவ
52

சமயச் சார்பான நூல்களாகும். ஞானப்பள்ளு கத்தோலிக்க சமயச் சார்பான நூலாக விளங்குகின்றது.
ஈழத்துப் பள்ளு நூல்களில், கதிரைமலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு ஆகியவற்றின் பாட்டுடைத் தலைவர்கள் கடவுளராகவும், ஞானப்பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு என்பவற்றின் பாட்டுடைத் தலைவர்கள் முறையே சமயத் தலைவராகவும், நிலப்பிரபுவாகவும் விளங்குகின்றனர்.
ஈழத்துப் பள்ளு நூல்களின் அமைப்பு, அடிப்படையிலே தமிழகத்துப் பள்ளு நூல்களின் அமைப்பையே அடியொற்றிச் செல்கின்றது. ஆயினும், நூலாசிரியர்களின் நோக்குக்கேற்பச் சில மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ஈழத்துப் பள்ளு நூல்கள் அனைத்திலும் முதன்மையாக ஆயர் வருகையும், அவரது பெருமை கூறலும் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை நூலின் அமைப்புக்குத் தேவையற்றதென நூலாசிரியர்கள் கருதியிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. மேலும், இந்நூல்களில் பள்ளியர் இருவரும் தத்தம் நாட்டுவளம் கூறும் பகுதியையடுத்து, பாட்டுடைத் தலைவரின்பெருமை கூறும் பகுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. கதிரைமலைப் பள்ளிற் பள்ளியர் இருவரும் தத்தம் ஆண்டையின் பெருமை கூறல் என்பதாக இப்பகுதி அமைந்துள்ளது. ஞானப்பள்ளில், பள்ளியர் தலைவன் பெருமை கூறல் என அமைந்த பகுதியில், இயேசு கிறிஸ்துவின் பெருமையை மூத்தபள்ளியும், இளையபள்ளியும் ஒருவருக்கொருவர் தெரிவித்துக்
53

Page 29
கொள்கின்றனர். பறாளை விநாயகர் பள்ளில் குலமுறை கிளத்தல் என்ற பகுதி, நாட்டுவளம் கூறலையடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இதில் விநாயகரின் வரலாறும், பெருமையும் எடுத்துரைக்கப்படுகின்றன. தண்டிகைக் கனகராயன் பள்ளில் இடம் பெறும் கிளைவளம் கூறல் என்ற பகுதியிற் பிரபஞ்ச உற்பத்தி, வருண உற்பத்தி, காரைக்காட்டு வேளாளர் வளம் கூறல், கனகராயன் கிளைவளம் கூறல் ஆகியன கூறப்படுகின்றன. மேலும், இந்நூலிற் குயில் கூவுதலைப் தொடர்ந்து, தெல்லிப்பழையார் வாழ்த்துக் கூறல், மயிலிட்டியார் வாழ்த்துக் கூறல், இருபாலையார் வாழ்த்துக் கூறல் என்ற பகுதிகளிற் பாட்டுடைத் தலைவரின் உறவினரும் வாழ்த்தப்படுகின்றனர். இவ்வாறு, சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஈழத்துப் பள்ளு நூல்களில் இடம் பெற்றுள்ளன. பாட்டுடைத் தலைவரின் பெருமையைப் புலப்படுத்துவதற்குப் பல்வேறு வாய்ப்புக்கள் பள்ளு இலக்கியத்திற் காணப்படுகின்றன. ஆயினும், அவர்களின் பெருமையை மேலும் சிறப்பாகப் புலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஈழத்துப் பள்ளு நூல்களில் இவ்வாறு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதமுடிகின்றது.
பாட்டுடைத் தலைவரைப் பொறுத்த வரையில், மற்றைய பள்ளு நூல்களினின்றும் தண்டிகைக் கனகராயன் பள்ளு வேறுபட்டுள்ளது. இந்நூலின் பாட்டுடைத் தலைவராக இந்நூ லினுட் குறிப்பிடப்படுபவர், கனகநாயக முதலியாராவர். ஆயினும், நூலின் பெயர் பாட்டுடைத்
S4

தலைவரின் பெயரால் அமையாது, அவரது முற்பரம்பரையைச் சேர்ந்த தண்டிகைக் கனகராயன் என்பவரின் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. நூலிற் கனகநாயக முதலி பாட்டுடைத் தலைவராகக் குறிப்பிடப்பட்டு, அவரது பெருமை பலவிடங்களிற் கூறப்படுகின்ற போதிலும், அவரது உறவினர்களையும் நூலாசிரியர் நூலிற் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர்கள் அனைவருக்கும் பொதுவாக, அவர்களது முன்னோரான தண்டிகைக்கனகராயனின் பெயரை நூலின் பெயராக இடுவது பொருத்தமானதென நூலாசிரியர் கருதியிருக்க
வேண்டும்.
ஈழத்துப் பள்ளு நூல்களிற் பாத்திர அமைப்பு
பாத்திர அமைப்பைப் பொறுத்தவரையில், குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகள் ஈழத்துப் பள்ளு நூல்களிடையே காணப்படுகின்றன. கதிரைமலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு ஆகியவற்றில், மூத்த பள்ளியும், பள்ளன், பண்ணைக்காரன் ஆகியோரும் ஈழநாட்டைச் சேர்ந்தவராகவும், இளையபள்ளி பாரதநாட்டைச் சேர்ந்தவளாகவும் குறிப்பிடப்படுகின்றனர். இதற்குக் காரணம், இவ்விரு நாடுகளுக்கும் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த தொடர்புகளேயாகும். இவ்விருபள்ளு நூல்களிலும் மூத்தபள்ளிகள் முறையே மகாவலிகங்கைவயற் பள்ளி ஈழமண்டலப் பள்ளி எனப் பெயர் பெறுகின்றனர். இளைய பள்ளிகள் முறையே பகீரதாகங்கைவயற் பள்ளி,
55

Page 30
சோழமண்டலப் பள்ளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளனர். ஞானப்பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு ஆகியவற்றிற் கதை நிகழிடங்கள் பிறநாடுகளாக அமைந்துள்ளன. அதனால், இவ்விருநூல்களிலும் இடம்பெறும் பாத்திரங்கள் அனைத்தும் பிற நாடுகளைச் சொந்தமாகக் கொண்டவையாக விளங்குகின்றன. ஞானப்பள்ளின் கதைநிகழிடம் மேலைப்புலமாகவும், தண்டிகைக் கனகராயன் பள்ளின் கதைநிகழிடம் தமிழகமாகவும் அமைந்துள்ளன. ஆயினும் இவற்றிடையேயும் வேறுபாடு காணப்படுகின்றது. ஞானப்பள்ளிற் பள்ளனும், மூத்தபள்ளியும் செருசலை (Jerusalam) நகரைச் சேர்ந்தவராகவும், இளைய பள்ளி உரோமாபுரியைச் (Rome) சார்ந்தவளாகவும் குறிப்பிடப்படுகின்றனர். இப்பள்ளில், மூத்தபள்ளி செருசலைப் பள்ளி எனவும், இளைய பள்ளி ரோமைப்பள்ளி எனவும் சூட்டப்படுகின்றனர். தண்டிகைக் கனகராயன் பள்ளிற் பள்ளன், மூத்தபள்ளி, பண்ணைக்காரன் ஆகிய மூவரும் வடகாரையைச் சார்ந்தவராகவும், இளையபள்ளி தென்காரையைச் சேர்ந்தவளாகவும் காட்டப்படுகின்றனர். மூத்தபள்ளி வடகாரைப் பள்ளி எனவும், இளைய பள்ளி தென்காரைப்பள்ளி எனவும் பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.
ஞானப்பள்ளு கதையமைப்பைப் பொறுத்தவரை, பொதுவான பள்ளு இலக்கிய மரபை ஒட்டிச் செல்லினும், இப்பள்ளின் பாத்திர அமைப்பு பள்ளின் பொது மரபினின்றும் வேறுபட்டதாகவுள்ளது. இளைய பள்ளி கத்தோலிக்கத் திருச்சபையினதும், போப்பாண்டவரினதும் தலைமைப்பீடமான உரோமாபுரியைச் சார்ந்தவளாகவும்
குறிப்பிடப்படுவதோடு, வழமையான இளையபள்ளியின்
56

பாத்திரம் போன்றதாக அன்றி, முற்றிலும் வேறுபட்ட அமைப்பில் வார்க்கப்பட்டுள்ளது. பிற பள்ளு நூல்களில், இளையபள்ளியின் நடத்தையும் பேச்சும் அவளது குணத்தின் தரத்தைக் குறைத்து விடுவதுண்டு. ஆனால், இப்பள்ளில் இளையபள்ளியே மூத்தபள்ளியை விடவும் குணநலனிற் சிறந்து விளங்குகின்றாள். மூத்தபள்ளி சமய ஒழுக்கம் குன்றிய பரிதாபத்திற்குரிய பாத்திரமாக வார்க்கப்பட்டுள்ளாள். இப்பள்ளில் இடம்பெறும் பள்ளன் உண்மையான கிறிஸ்தவ ஊழியனாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான். பண்ணைக்காரன் குறைகள் அற்றவனாகவும், பிறரின் மதிப்புக்குரியவனாகவும் காட்டப்படுகின்றான். ஒரு கிறிஸ்தவ மதகுருவுக்குரிய இயல்புகள் பொருந்தியவனாகத் தோன்றுகின்றான்.
பொது மதிப்பீடு
தமிழகமும், ஈழமும் பள்ளு இலக்கியத்தின் வளர்ச்சிக்குத் தம்மளவிலான பங்களிப்பைச் செய்துள்ளன. பொதுவாகவே ஈழத்துப்பள்ளு நூலாசிரியர்களை விடவும், தமிழகத்துப் பள்ளு நூலாசிரியர்கள் பள்ளர் சமூகத்தின் வாழ்வியல் பற்றிய அம்சங்களைப் புலப்படுத்துவதில் இயல்பாகவே ஆர்வம் கொண்டோராக விளங்குகின்றனர். ஈழத்துப் பள்ளு நூல்களைப் பொறுத்தவரை, கதிரைமலைப் பள்ளு குறிப்பிடத்தக்க அளவுக்குப் பள்ளர் சமூகத்தின் வாழ்வியல் அம்சங்களைப் புலப்படுத்த முயற்சித்துள்ளது. பள்ளரின் வாழ்வியல் அம்சங்களைப் புலப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு பள்ளு நூல்க ளுக்கிடையிலான வேறுபாடுகளுக்கான காரணத்தைப் பின்வருமாறு கருத
57

Page 31
நிலங்களில் உழைத்து வந்த பள்ளர்களதும், அவர்களை மேலாண்மை செய்து வந்த பண்ணையார்களதும் போக்குகளும், ஈழத்திலே சிறு துண்டு நிலங்களில் உழைத்துவந்த பள்ளர் சமூகத்தவரதும், அவர்கள் மீது அதிகாரம் செலுத்திவந்த சிறுவேளாள நிலப்பிரபுக்களினதும் நிலைகளும் வேறுபட்டவையாக விளங்கின. இவற்றோடு, நூலாசிரியர்களின் நேரடி அனுபவமும் வேறுபட்டவையாக, விளங்குகின்றன. தமிழகத்துப் பள்ளு நூல்களை நோக்குமிடத்து, பெரும்பாலான நூலாசிரியர்கள் L ഞTഞ ഞT வேளாண்மையோடு ஏதோவொரு வகையிலே தொடர்புபட்டவர்களாகத் தோன்று கின்றனர். ஆனால், ஈழத்துப் பள்ளு நூலாசிரியர்களிற் கதிரைமலைப்பள்ளின் ஆசிரியரே வேளாண்மையோடு ஏதாவது வகையிலேனும் தொடர்பு கொண்டவராக இருந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகின்றது.
பள்ளு நூல்களில், அனைத்து அம்சங்களைப் பொறுத்த வரையிலும் முக்கூடற்பள்ளு சிறந்து விளங்குகின்றது. சிறந்த கற்பனை வளமும், சொல்லாற்றலும், புலப்பாட்டுத் திறனும், கவித்துவமும் மிக்கவராக அப்பள்ளு நூலின் ஆசிரியரே விளங்குகின்றார். பெரும்பாலான பள்ளு நூல்களைப் பொறுத்த வரையில், ஏதோவொரு வகையில் முக்கூடற்பள்ளுக்குக் கடன்பட்டுள்ளனவாகவே விளங்குகின்றன. 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே (ஏறத்தாழ கி.பி.1640) தோன்றியதாகக் கருதப்படும் இப்பள்ளு நூலில், கலிப்பாவும், தாழிசையும் முதன்மை பெறும்
58

யாப்புகளாக அமைந்துள்ளன. பள்ளு இலக்கியத்தின் தனித்துவத்தையும், இலக்கியத் தரத்தினையும் உணர்த்தி நிற்பதில் முக்கூடற்பள்ளு சிறந்து விளங்குகின்றது.
தமிழகத்துப் பள்ளு நூல்களுடன் ஒப்பிடும் போது, கதிரைமலைப்பள்ளைத் தவிர, மற்றைய ஈழத்துப் பள்ளு நூல்களின் நடை சற்றுக் கடினமானதாகவும், செந்நெறி இலக்கியச்சாயல் கொண்டதாகவும், கற்றறிந்த உயர் குழாத்தினரால் மாத்திரமே பொருளறிந்து சுவைக்கத்தக்கதாகவும் உள்ளது. ஈழத்துப் பள்ளு நூல்களுள் கதிரைமலைப் பள்ளு, பள்ளு இலக்கியத்துக்குரிய எளிமையும் இலக்கியச் சுவையும் கொண்டதாக விளங்குகின்றது.
கதிரைமலைப் பள்ளு ஆசிரியரின் கற்பனைச் சிறப்பை மேல் வரும் பாடல்கள் ஒரு சோற்றுப் பதம் போல
உணர்த்துகின்றன
'அணியிளங்கதிர7யிர முள்ள வருக்கன் பே7ய்க்குட ட/7விடை மேவ மணி கொணர்ந்து மணிவிளக்கேற்றிடு
ம7வலி கங்கை நாடெங்கள் ந7டே"
(/z ZZZوX)) " வேணிச் சங்கரர் தெ7ண்டர்க ளென்று வீடுதே7று மிரட்டவர்க் கெல்ல7ம் ம7ணிக் கமள்ளரிப் டபிச்சை கொடுத்திடும் ம7வலி கங்கைந7டெங்கள் ந7டே"
(2)?سے%ZZ محو7)))
59

Page 32
ஆற்றில் வெள்ளம் வருதலைப் பாடும் போதும், அதனைச் சுவையாகவும், அதேவேளை இறைவனின் கருணையோடும் இணைத்தும் பாடும் திறம் சுவைக்கத்தக்கது. மருத நிலத்தில் வெள்ளம் பாய்தலைக் குறிப்பிடுகையில், “பெருகு புகழ்கொண் டுயர்தென் கதிரைப் பெருமான் தனது தொண்டர் மேல் பெருத்த கருணை வெள்ளம் போலப் பெருகி யெங்கணு மருவியே. . . . . தாழ்ந்து மிகுந்து மருதங் கடந்து தழைக்கு நெய்தல் புகுந்ததே" (செய். 46) எனக் கவிச்சுவையும், பக்தியுணர்வும் புலப்படக் கவிஞர் கூறுகின்றார். வெள்ளம் பாயும் போது, அதில் ஒடும் பலவகை மீன்களைக் குறிப்பிட்டு, பின்வருமாறு கவிஞர் பாடி முடிக்கின்றார்.
"மண்டிக் குதித்துக் கடலின் மீன்களும் வ7விக் கழியின் மீன்களும் மதத்துச் சினத்துக் குதித்துப் ப7யும் ”.67777 677 // ظ//7ئر)7//Z(// (62/67760
(Gə)#z% 562)
பள்ளு இலக்கியங்களில் பண்ணைக்காரன் பாத்திரம் பற்றிய அறிமுகம் சுவை பயப்பதாக அமைந்திருக்கும். கதிரைப்பள்ளும் சுவை பொதிய அப்பாத்திரத்தை அறிமுகப்படுத்துகின்றது.
"சுற்றித்திரித்தட்பழு தைப்பு/7பே7ல் வ/7ரும் - மிக்க தொந்திவயிறும்வளை7யற் க7விழைகும் - ۶Z zی - ضZزی)0242%z//76) Z6/777z۶نی) ضz//7627 62//727a227Zن) 7 ٪ز6242Z
வட்டப்ப7னைபே7லுள்ள மெ7ட்டத்தலையழகும்
60

உற்றுப் ப7ர்க்க வச்சம7ன கூகைமுகமும் - தெத்தல் ஒலைச்செவியூசற்//7சிப் பல்லினழகும்
சற்றப் ப7லே விட்டுப்பே7ன வெ/7ட்டற்க/தும் - பெற்ற தனிப்பண்ணைக் காரண7ருந் தே7ற்றின7ரே."
(G-77. 57)
பண்ணைக்காரனைப் u sir Gmr rit சமூகத்தவர் வணங்குவதாகக் குறிப்பிடப்படும் பாடலும்,
அப்பாத்திரத்தைக் கிண்டல் செய்யும் பாணியில் சுவையாக அமைந்துள்ளது.
‘கரித்த கழுத்தன7ரே குடம்டபிடுகிறேன் - வட்டச் சொறித்தேமற் காத7ை7ரே கும்டபிடுகிறேன் பெருத்த வயிறன7ரே குடம்டபிடுகிறேன் - வரதம்
/பிடித்த பெ7ற் காலன7ரே கும் பிடுகிறேன் திருத்தமில்ல7தவரே கும்டபிடுகிறேன் - சற்றே
திருகல் முதுக7ை7ரே கும்டபிடுகிறேன் அ7ரித்ததந்தத்தன7ரே கும் பிடுகிறேன் - பண்ணை
ஆண்டவரே ய7ண்டவரே கும்பிடுகிறேன்.”
(ിഴZ39)
பள்ளன், பள்ளியரின் உரையாடல்கள் எளிமையும், சுவையும் மிக்கனவாகக் கதிரைமலைப் பள்ளில் அமைந்துள்ளன. எடுத்துக் காட்டாகப் பின்வருவனவற்றை நோக்கலாம்.
"எ7ன்னடி பன்னி யேகாந்தக் க/7ரீ
இந்நேரம் மட்டு மென்னடி செய்த7ய்”
(ികZ6)
61

Page 33
“ஆறு பே7ந்தங்கே தண்ணரு மள்ளரி
542/ أضلاعىTله الكرتق677 602 7677 كيمياهلاوي சேறு பே7ந்த சிறுநெல்லுங் குத்தித்
திட்டி ய7க்கவும் சென்றதே7 பள்ளி”
(65 ٪zری(6))
மூத்தபள்ளி தன் கணவனைப் பற்றிப் பண்ணைக்காரனிடம் முறையிடுதலையும் சுவைபட
அமைத்துள்ளார், கதிரைமலைப்பள்ளு ஆசிரியர்
"கரவமே சென்று ட/லுங் கறந்து
கமுகம் பூட்டே/7 வரிசியுந்திட்டிக் கடுகவே வைத்துக் காய்ச்சிய ப7ற்கஞ்சி
க7ல7வேதட்டியூற்றின7 7ை7ண்டே”
(627z. 66
"இப்படிக் கொத்த ந7டங்கப் பள்ளனுக்
கெப்படிக் கஞ்சி காய்ச்சுவேன7ண்டே
‘ (ر62 ٪ZZ و2م) )
பள்ளன் இளையபள்ளிமீது கொண்ட மோகத்தால், தன்னை அலட்சியம் செய்வதாகப் பண்ணைக் காரனிடம் முறையீடு செய்வதாக அமைந்த பாடல்கள் பள்ளு நூல்களில் இடம் பெறுகின்றன. கதிரைமலைப் பள்ளில் இடம் பெறும் மூத்தபள்ளியின் முறையீடும் எளிமையும் சுவையும் கொண்டதாக விளங்குகின்றது.
"இல்லத்திலுஞ் சற்றுமிர7ன் என்னையுந் தேட7ன்-செ7ன்ன
ஏவல்செ7ன்ன7ல்ந7வைய7 வேனடி யென்/7ன்
62

ஒல்லை பெ7ழு தென்றுமவ எரில்லம் பிரிய7ன் - செந்நெல் உள்ள தெல்ல7மவளுக்கே யுண்ணக் கொடுப்பான் அல்லும் பகலென்றுமில்லை அங்கே யிருப்ப7ன் - அவட்
காசை கொண்டந7ள் முதலென் னேச மறந்தான் ബ7ബിZഒിഞഖZിഞന്നെ (ിZ്ണുക്ര7് (7ബ7ര്-ക്ട്രീമ
சூழ்ந்த பிழை யெல்ல7மென்மேற்குட்டின7ண7ண்டே'
(ിഴZ 709)
பேச்சு பழக்குச் சொற்கள் விரவிவர, எளிமையும், கவிச்சுவிையு; கொண்டதாக விளங்கும் கதிரைமலைப் பள்ளு, 129 ாடல்களைக் கொண்டது. பண்ணைக்காரன் இறுதியில் இரு சக்களத்திகளின் சண்டையையும் நிறுத்தி, கதிர்காம முருகனைக் கைதொழுது வாழ்த்துவதோடு, இப்பள்ளு நிறைவு பெறுகிறது.
மற்றைய பள்ளு நூல்களிற் காணப்படாத சில அம்சங்களும் கதிரைமலைப்பள்ளில் உண்டு. மூத்தபள்ளி பள்ளனைப் பற்றிப் பண்ணைக்காரனிடம் முறையிடும் போதே இளைய பள்ளியும் மூத்தவளை எதிர்த்துப் பேசுவதாக இப்பள்ளில் அமைந்துள்ளது. இளைய பள்ளி வசிய மருந்து கொடுத்துத் தனது கணவனை மயக்கிவிட்டாளென மூத்தபள்ளி குறிப்பிடுவது, பள்ளு நூல்களிற் பொது வழக்கு. ஆனால், கதிரை மலைப்பள்ளில், பதிலாக இளைய பள்ளியும் மூத்தபள்ளி வசிய மருந்து கொடுத்துப் பள்ளனை மயக்கிவிட்டதாகக் கூறுவாள்.
கதிரைமலைப்பள்ளு சிந்து, விருத்தம், தரு ஆகிய பா வகைகளால் அமைந்துள்ளது. இயல்பாகவே நாடகப்பாங்கு
63

Page 34
கொண்டதாக விளங்குகின்றது. கற்றோரையும் மற்றோரையும்
கவரும் முறையில் படைக்கப்பட்டுள்ளது.
ஈழத்துப் பள்ளு நூலாசிரியர்களைப் பொறுத்தவரையில், பறாளை விநாயகர் பள்ளின் ஆசிரியரான சின்னத்தம்பிப் புலவரிடத்து, பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியோடு இணைந்த புலமை மிகுதியாகக் காணப்படுகின்றது. அதனால், அவரின் நூலிற் செந்நெறி இலக்கியப் போக்கினையே மிகுதியாகக் கண்டுகொள்ள முடிகின்றது. ஞானப்பள்ளின் ஆசிரியரும், தண்டிகைக் கனகராயன்பள்ளின் ஆசிரியரான மாவை சின்னக்குட்டிப் புலவரும் தத்தம் பாட்டுடைத் தலைவர்களின் பெருமைகளை உரைப்பதற்கு எடுத்துக் கொண்ட ஆர்வம், கவித்துவத்தைப் புறக்கணிக்கும் அளவுக்கு அவர்களைத் திசைதிருப்பிவிட்டது. ஈழத்துப் பள்ளு நூலாசிரியருள், கவித்துவ ஆற்றலும், பள்ளர் சமூகம் பற்றிய புரிந்துணர்வும், வேளாண்மை தொடர்பான இயல்பான ஆர்வமும், புலப்பாட்டுத்திறனும் கொண்டவராகக் கதிரைமலைப்பள்ளின் ஆசிரியரே
விளங்குகின்றார்.
சான்றாதாரம்
1. சுப்பிரமணியன், ச. வே. (1983) திராவிடமொழி இலக்கியங்கள் - அறிமுகம், சென்னை, உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம். பக் 212.
4A

வேங்கடராமன், சு. (1981) " அரையர் சேவையில் பள்ளுப்பாட்டு பதின்மூன்றாவது கருத்தரங்கு ஆய்வுக் கோவை (தொகுதி - 3), சிதம்பரம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு. பக்
390.
சுப்பிரமணியன், ச. வே. (1984) தமிழ் இலக்கிய வகையும் வடிவும், சென்னை, தமிழ்ப் பதிப்பகம்.
Luji. 390.
மேலது. பக் 391.
ஞானப்பள்ளு (1968) ஆ. சதாசிவம் பதிப்பு, கொழும்பு, அரசு வெளியீடு. பக் XVI (பள்ளுப் பிரபந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும்)
பரிபாடல். செய் 9,
முக்கூடற்பள்ளு (1940) மு.அருணாசலம் பதிப்பு, சென்னை. (முன்னுரை) பக்.11.
பன்னிருபாட்டியல் நூற்பா 216.
கலைக்களஞ்சியம் (தொகுதி இரண்டு) (1955),
சென்னை, தமிழ் வளர்ச்சிக் கழகம் பக் 363.
65

Page 35
10.
11.
12.
13.
திருத்தொண்டர் புராணம் திருநாளைப் போவார்
நாயனார் புராணம் செய். 6.
S.I.T.I. (1955), Vol, 111, Part I, No. 1190.
பள்ளு இலக்கியத்தின் தோற்றத்துக்கான சமூக, பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் தொடர்பாக வேறொரு கட்டுரையில் விரிவாகநோக்கப்பட்டுள்ளதால்,விரிவஞ்சிஇங்கு விபரிக்கப்படவில்லை. காண்க; மனோகரன், துரை. (1993) “ தமிழ் இலக்கியத்தில் பொதுமக்கள் பற்றிய உணர்வு: பள்ளு இலக்கிய அடிப்படையில் ஒரு நோக்கு, " தமிழ் இலக்கியம் பார்வையும் பதிவும் கண்டி, நியூ கலைவாணி புத்தக நிலையம்.
Lud 9 - 37.
பள்ளு இலக்கியமும் நாட்டார் இலக்கியத் தொடர்புகளும் பற்றிய விரிவான விளக்கம் பிறிதொரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
காண்க: மனோகரன், துரை. (1995) பள்ளு
இலக்கியத்தில் நாட்டார் இலக்கியக் கூறுகள்," தமிழ்
66

14.
15.
16.
17.
18.
19.
நாட்டார் வழக்காற்றியல்; பதிப்பு க. சண்முகலிங்கம், கொழும்பு, இந்துசமய கலாசார அலுவல்கள்
திணைக்களம்.
பக் 296 - 305.
முக்கூடற்பள்ளு (மு.அருணாசலம் பதிப்பு)
பக், 8 (முன்னுரை).
கலைக்களஞ்சியம் (தொகுதி இரண்டு) பக். 363
அறிவுநம்பி, அ. (1981) " நாட்டுப்புற நாடகங்களில் தெருக்கூத்தின் செல்வாக்கு", ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு - கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி -
3, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி மன்றம். பக். 166.
வெங்கடராமன், சு. "தத்துவராயர் பாடிய புதுமைப்
பிரபந்தங்கள்” மேலது. பக்.565.
பெருமாள், ஏ. என். (1984) தமிழர் இசை, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்.589
கேசவன், கோ. (1981) பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை, சிவகங்கை, சின்னம் வெளியீடு.
Luji. 104-113
67

Page 36
20.
20.
21.
செயராமன், ந. வீ. (1980) பள்ளு இலக்கியம், சிதம்பரம்
மணிவாசகர் நூலகம். பக் 44-46,
ஞானப்பள்ளு பக் XXXII - XXXIV (பள்ளுப் பிரபந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும்).
தண்டிகைக் கனகராயன் பள்ளு (1932) சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை பதிப்பு, சென்னை பக். 5,6 (வ.
குமாரசுவாமியின் ஆராய்ச்சிக் குறிப்புக்கள்).
தமிழ்த்துறை, துரை. மனோகரன் பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை.
68

qi@ois-isố algı oặąjį Lo #10909@s@ qıfĒĻ9 Log) og i uostoję
on powrors tą 'œon sarmae wesi og taeon yor,•••r•s•soo(6 I *史wuɔŋores)'3't oorwoo ooh og i
·ợrnworejo ș•••••og i ******ɔ
•ơngko yoson ·çı
· – wɔwooaesso oyi **ærri ••æg og i
*ousan
*圆穹自清yngings害己。 图卢唱为
\s)
· }\Li "후! 」)...........•町* sŢŢ| | | 8[]
A wustwowolaevi ·圈
·șưsara asooh ! 转■S
·www.goo yoșH ·
* صے سے عے عے
3ınwowej o șosao oso ·
•ơnqakr segurerroe) ·
* ș�
·ogovog) orvonskoj ozi ***rmuosoɛi ɓoșu, voi og ご *efes ș••·ægaegrøn^* (z.\ \ gwrs • »osoɛsoof) · Ľuoestao osoɛywowe os!،
·į | 91

Page 37

முகவுரை
கதிரையப்பர் பள்ளு எனவும், கதிரைமலைப் பள்ளு எனவும் வழங்கும் இந்நூல் கதிர்காம வேலவர்மீது பாடப்பட்ட பள்ளு, அல்லது உழத்தியர் பாட்டு என்னும் 96 பிரபந்த வகைகளில் ஒன்றாகும். ஈழ மண்டலத்தெழுந்த பள்ளுப் பிரபந்தங்களுக்குள் இதுவே முதலாயது என்பர்.
இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றினையுந் தழுவிப் பள்ளு இயற்றப்படுதலினாலே, அதனைப் படிப்போர் ஆராய்வோர் கவனத்துக்குரிய நயங்கள் வியப்புக்கள் பல. புலமையுடையோர் கற்று மகிழும் பெற்றித்தாய், சொன்னயம் பொருணயம் துறுமிச் செந்தமிழ்ப் பிரபந்தமாய் விளங்கும் தன்மை ஒன்று; சந்த இன்பமும் தாள அறுதியும் வாய்ந்து வாத்திய சகிதமாய் இசைவல்லார் பாடியவிடத்து இனிமை பயப்பது இன்னொன்று; பாமர சனங்களுக்கு அறிவூட்டுவதற்கு நாடகமேடையில் நடிப்பதற்கு உபயோகமாதல் மற்றொன்று. இம்மூன்று தன்மையும் ஒருங்கு அமைந்திருத்தல் பள்ளு, குறவஞ்சி முதலிய இயல், இசை, நாடகம் விரவிய பிற்காலத் தமிழ்ப் பிரபந்தங்களின் சிறப்பாகும். இம் முத்தமிழ்ச் சிறப்பும் இதனைப் படிப்பவர்க்கு எளிதில் புலப்படத் தக்கதாக இந்நூல் யாக்கப்பட்டிருக்கிறது.
இனி நாடகம், என்ற வகையில், நெற்பயிர் விளைத்தற் பொருட்டுக் கடவுட் பராய் மழை பெய்வித்து, வெள்ளத்துக்கு வரம்பு கட்டி உழுது வித்திடுதல் முதல், பொலிதுாற்றி நெல்லளவு கண்டு பாத்தீடு செய்யும் வரையுமுள்ள எல்லாக் கிருஷிகத் தொழில்களையும் பள்ளன், மூத்த பள்ளி,
69

Page 38
இளைய பள்ளி என்ற மூன்று நடர்களையும் பண்ணைத் தலைவன் என்னும் விதூஷகனையும் கொண்டு நடித்துக் காண்பித்தலின் பள்ளு அல்லது உழத்திப்பாட்டு நாடகங்களுக்கு ஒரு சமஷ்டி யாகும். ஏனெனில், மன்னனொருவனைக் கண்ட ஒளவை அவன் கொற்றமும் விறலும் பிறவுங்கூறி வாழ்த்தாது வரம்புயர என வாழ்த்தினாளாக, அதன் காரணம் வினாவினார்க்கு,
"வரம்/மர திருமரும், நீருமர நெல்லுமரும், நெல்லுமரக் குடி 4/மரும், குடி4/மரக் கோனுமர்வான்’
என விளக்கிச்சென்றாள் அம்மூதறிவாட்டி. உண்டி முதற்றாயது நெல்லு என்னலாம்.
“நெல்லுமுமிரன்றே தீருமுயிரன்றே மன்னனுமிர்த்தே மலர்தலை யுலகம்”
என்ற புறச் செய்யுளிலும் நெற்பயிர் விளைத்தலைத் தன் காவலாணையால் தீங்குறாவண்ணம் ஒம்பலும் தீங்குறின் அதனைப் பரிகரித்தலும், மன்னர்க்கு இன்றியமையாதன என்பதை வற்புறுத்த அச்செய்யுள் எழுந்ததுமன்றி நெல்லும் அதனை விளையச் செய்யும் நீருமே உண்மையளவில் உண்டியாகிச் சீவராசிகளின் உயிரைக் காப்பாற்றும் பொருள் களென்பதும் அச்செய்யுளிற் றொனித்து நிற்கும் பொருளாகும்.
மண்டினணிஞ7லத்தில் வாழ்வோர்க்கெல்ல7ம் உண்டி கொடுத்தே7ர் உமிர் கொடுத்தே7ரே.
என்னும் மணிமேகலைத் தொடரும் இதனை வலியுறுத்தும்.
70

இனி முகம், பிரதிமுகம், கருப்பும், விளைவு, துய்த்தல் என நாடகத்துக்குப் பீடிகையாயுள்ள விஷயத்தை ஐந்து கூறாக்குவர் நாடக நூல் அறிஞர். உழத்தியர் பாட்டில் நெல் விதைக்கும் பருவம் வந்ததற்கு அறிகுறியான குயிற் கூக்கேட்டு மகிழ்ந்தும், மழைவேண்டித் தெய்வம் பராயும், மழைபெய்து ஐந்திணை வளங்களுக்கூடே வெள்ளம் பாய்ந்து ஆறு பெருகுதலிவற்றைக் கண்டு இன் புற்றும், வரம்புகட்டி ப் பரம்படித்து பஞ்சாங்ககாரரிடம் கேட்டு நாள் முகூர்த்தங் கொண்டு வித்திட்டு முகஞ் செய்தும், பயிர் தழைத்துச் சிலநாள் வளர்ந்த பின் நாற்று நடு கையால் பிரதி முகஞ் செய்தும் 'பசும்பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருவிருந்து ஈனக் கருப்பங் கண்டு களிப்பெய்தியும், ‘மேவலார் செல்வமே போற்றலை நிறுவிப் பின்னர், நூற் கல்விசேர் மாந்தர் போல இறைஞ்சிக் காய்த்த நெற்கதிர் குலைகள் தலைவணங்கும் தோற்றங்கொள்ள, கூன் அரிவாள் கொண்டறுத்துப், போர் குவித்து, அடித்துக் கடாவிட்டு, பொலிதூற்றி, விளைவினளவு கண்டு உவகை பூத்துப் பின்னர் களவேள்வி, கடவுட்பலி, தானதருமம், வாரம் முதலியனவாகப் பாத்தீடு செய்து யாவரும் துய்த்தல் செய்தும் இவ்வாறாக நாடக உறுப்பாக அமைந்தனவற்றை மலர் தலையுலகினரது உயிரோம்பும் உண்டி முதற்றாய நெல்லைப் பீடிகையாகக் கொண்டு விளக்கிக் காட்டுதலினாலே பள்ளுநூலை நாடக சமஷ்டி
யெனலாம்.
பள்ளுப் பிரபந்தங்களும் மக்களுட் சிறந்தான் ஒருவனை அல்லது சிறப்பெய்திய ஒரு குழுவினரைப் பாட்டுடைத் தலைவராய்க் கொண்டு, அவர்கள் உற்பத்தியும் நாட்டு வளனும், அவர் தம் முன்னோர்க்கும், அவர்க்கும் பரம்பரை யாயுள்ள வீரமும் உதாரமும் புகழும் பிறவும் இடையிடையே எடுத்துக் கூறி மக்களை வாழ்த்திச்
71

Page 39
செல்வனவும்; தெய்வங்களில் ஒன்றைப் பாட்டுடைத்
தலைவராகக் கொண்டு அவர்கள் பிரதாபமும் அருளும் * வெற்றியும் பிறவும் எடுத்தோதும் தேவபாணியாய்த் தெய்வ
வாழ்த்துக் கூறுவனவுமென இருவகைத்தாம்.
கதிரைமலைப் பள்ளு கதிர்காமத் தெழுந்தருளிய முருக வேள்மேலதாதலின் தெய்வத்தைத் தலைவராகக் கொண்ட
தேவபாணி வகுப்பிலடங்கும்.
இனி, முருகவேளும், ஏனைய தெய்வங்களைப் போலாகாது, இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள எப்பாஷை பேசும் சாதியாராலும், எல்லாக் குழுவினராலும், எல்லா மதத்தினராலும், எல்லா நாட்டினராலும், பண்டைக் காலந்தொட்டு இற்றைய வரை அநுதினமும் வணங்கித் துதிக்கப்படும் தெய்வம் எனலாம். வடமொழியாகிய சமஸ்கிருதத்திலும், அதனடியாப் பிறந்த பிராகிருதங்களிலும், தென் மொழியாகிய தமிழிலும், அதிலிருந்து கிளைத்துப் பிரிந்த ஏனைய திராவிட மொழிகளிலும், சுப்பிரமணியப் பெருமானின் உற்பத்தி, வெற்றி, அருள் ஆகிய இவற்றை விரித்துக் கூறும் தோத்திர, சாஸ்திர, காவிய ரூபமான நூல்களும், அளவிறந்தன. அவற்றுள்ளும் தமிழுக்கும் முருகக் கடவுளுக்குமுள்ள தொடர்பு அநாதியாயுள்ள தெனலாம். தமிழ் இலக்கணத்தில் முதனூல் செய்த அகத்திய முனிவர்க்கு முத்தமிழ் உபதேசஞ் செய்தவர் குமரக் கடவுள் என்பர். ‘குன்றமெறிந்த குமரவேள்' முதற்சங்கத்திலிருந்து தமிழாராய்ந்தாருள் ஒருவரென்று இறையனாரகப் பொருளுக்கு உரைகண்ட நக்கீரர் அவ்வுரையிற் குறிப்பிட்ட தேயன்றித் தமது திருமுருகாற்றுப்படையில் நூலறிபுலவ 'பலர் புகழ்
72

நன்மொழிப் புலவரேறே எனவும் துதிக்கின்றார். குமரவேள் செய்தநூல்'குமரம் என்றும், அது முத்தமிழிலக்கணம் என்றும், அதுவே அகத்தியத்துக்கு ஆதாரமாயிருந்த இலக்கண நூலென்றும், அது முற்றாய் இறந்தொழிந்ததென்றும் கூறுவர். சில பண்டை நூலாராய்ச்சியாளர். எட்டுத்தொகை நூல்களில் மிகப் பழைய செய்யுட்களை உடைத்தாய பரிபாடலில் 21 செய்யுள்கள் முருகவேள்மேலன என்பர். இவற்றுள் சிதைந்தொழியாமல் எஞ்சியனவாகத் தற்காலத்துக் கிடைப்பன எட்டுச் செய்யுள்களே. அவற்றுள், குன்றம் பூதனார் பாடிய பாட்டில் நிரம்பா இலக்கணத்தனவான ஏனைய மொழிகள் போலாது பொருளிலக்கண முடைமையால் தமிழ் சிறந்தவாறும், தமிழை ஆராய்ந்தமையால் முருகன் சிறந்தவாறும், கைகோளிரண்டிலும் ஒவ்வொன்றிற் சிறந்த தேவியரிருவராலும் அது அது காரணமாக முருகன் காதலிக்கப்படுமாறுங் காட்டி மிக விநோதமான ஒரு வாழ்த்துக்
கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழோடு பேதமின்றி விளங்கும் முருகன், தமிழ் நாட்டில் உக்கிர குமாரனாக அவதரித்து முடிசூடி அரசாண்டும் மேருவைச் செண்டாலடித்தும், கடல்சுவற வேல் விடுத்தும் திருவிளையாடல்கள் புரிந்ததேயன்றி, ஒவ்வோர் அமயத்து பாலக்குழந்தையாயும் கோலக் குமரனாயும் சாலக் கிழவனாயும் அடியவர்க்கு காட்சி கொடுத்தருளி, சண்முகர், சோமாஸ்கந்தர், சிவகுருநாதராகிய பல மூர்த்தமுடையராய் ஆறு படைவீட்டிலும் மாத்திர மன்றித் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலுங் கோயில்கொண்ட தெய்வம் எனலாம். தமிழில் நன்கறியப்பட்டு, தொண்டர்களால் பாராயணம் பண்ணப்பட்டு வரும் திருமுருகாற்றுப்படை,
கந்தபுராணம், திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி ஆகிய
73

Page 40
இந்நூல்களேயன்றி ஆங்காங்குப் பக்தர்களாலும் புலவர்களாலும் பாடப்பட்ட ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ் அந்தாதி, சதகம், கலிவெண்பா, உலா, ஊஞ்சல், கோவை, குறவஞ்சி என்னும் வகைகளில் முருகன் தோத்திரமாய்ப் பாடப்பட்ட நூல்கள் எண்ணிறந்தன. முருகன் புகழ் மாலை, முருகன் பனுவற்றிரட்டு’ என வெளிப்போந்த பிரசுரங்களில் இவற்றுள் பல திரட்டி வெளியிடப்பட்டன. ஆனால், பள்ளு அல்லது உழத்தியர் பாட்டு என்ற வகையில் முருகன் மீது பாடப்பட்டது கதிரைமலைப் பள்ளு ஒன்றுமே யெனத்
தெரிகிறது.
இதுகாறும், கதிரைமலைப் பள்ளு என்னுமிந்நூலுக்கு பள்ளு என்ற வகையிலுள்ள சிறப்புக்களும், பாட்டுடைத் தலைவன் மக்களாகாது தெய்வமாகிய வகையிற் சிறப்பும் தெய்வங்களுள்ளும் முருகவேள் எய்திய மகிமையும் கூறப்பட்டன. இவைகளேயன்றி, கதிர்காம கூேடித்திர மான்மியத்தாலும் இந்நூல் விசேஷச் சிறப்பு எய்தியதாகும். அக் குறிப்பை யுட்கொண்டே “தென் கதிரை வேலர் திருநாமம் பாடலால் என் கதையை யெண்ணாரிகழ்ந்து' என அவையடக்கம் கூறினார் நூலாசிரியரும் 'கதிர்' என்னும் பதம் ஒளி என்னும் பொருள்கொண்டு, 'கதிர்காமம்' "கதிரைமலை’ என்பன முருகவேள் ஒளியாய் விளங்கி வீற்றிருக்கும் கிராமம், கிரியெனப் பொருள்படும். ஒவற விமைக்கும் சேண் விளங்கவிர் ஒளி' என நக்கீரரும், “சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ எனக் கச்சியப்ப சிவாசாரியரும், ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேலளியில் விளைந்ததோரானந்தத் தேன்’ என அருணகிரிநாதரும் இன்னும் இவர்களைப் போலக்காட்சியனுபவமுள்ள வேறு மகான்களும் முருக வேள் ஒளியாய் விளங்குவதைக் கூறியுள்ளார்கள். இனி,
74

"கொடிநிலை கந்தழி வள்ளியென்ற வடுநீங்கு சிறப்டரின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
என்னுந் தொல்காப்பியப் புறத்திணையிற் சூத்திரத்து உரையில், நச்சினார்க்கினியர் கொடி நிலை வெங்கதிர் (சூரியன்) எனவும், வள்ளி தண்கதிர் (சந்திரன்) எனவும், இடை நின்ற கந்தழி , “ஒரு பற்றுக்கோடுமின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்தபொருள்” எனவும் விளக்கி உரை கூறியுள்ளார்.
இவ்வாறு, ஒளியுருவாகியும் அருவாகித் தத்துவங் கடந்த கந்தழியாகியும் நின்ற நிலையினராக முருகவேள் வணங்கப்படுவதே கதிர்காம கூேyத்திரத்திலுள்ள பெரிய அற்புதமாகும். அவ்வணக்கத்தின் தன்மையும் இத்தலத்துடன் சம்பந்தமான வேறு பல விஷயங்களும் 'கதிர்காம க்ஷேத்திரத்தின் புராண இதிகாச சரித்திர ஐதீக ஆராய்ச்சிக் குறிப்புகள்” என்ற தலையங்கத்தின்கீழ்க் குறிப்பிட்டுள்ளேன்; ஆங்குக் கண்டு கொள்க.
இவ்வாறாக அருவநிலைகொண்டு கதிரைமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளை ஹிந்துக்களும், புத்தரும், முஸ்லீம்களும், ஜாதி ஹிந்துக்கள் - ஹரிஜனர், சைவர்வைஷ்ணவர், வடநாட்டுத் தென்னாட்டு இந்தியர் -இலங்கை வாசிகள், தனவந்தர்-வறியர் என்ற சாதி, சமயம், பாஷை, அந்தஸ்து வகுப்புப் பேதங்கள் ஒன்றையும் பாராட்டாது, மந்திர தந்திர வைதிக ஆகமக்கிரியைகள் ஒன்று மின்றி, தம்முள் அன்பிற் கலந்து பத்திவழிபாடாற்றுவதற்கு வந்ததற்கு இடனாயிருப்பதற்குக் காரணம் கதிர்காம கூேஷித்திரம் கந்தழி
75

Page 41
முறையில் அமைக்கப்பட்டிருப்பதே. பண்டைக் காலத்துத் தமிழர் முருகனுக்கு அருவ வழிபாடாற்றும் முறைக்கு ஞாபகச் சின்னமாக இக்காலத்து விளங்குவது வட இமயக்கோடு முதல் தென் இலங்கைத் தேவிநுவரை பரியந்தமான பெரும் பரப்பிலுள்ள தேவாலயங்களுள் இக்கதிர்காமம் ஒன்றே.
மேற்காட்டியபடி, க்ஷேத்திரச் சிறப்பும் பாட்டுடைத் தலைவர் சிறப்பும் பள்ளுப் பிரபந்த முத்தமிழ்ச் சிறப்பும் ஆகிய இவை ஒருங்கு அமையப்பெற்ற இந்நூல் எக்காலத்தினது, யாராற் செய்யப்பட்டது என்பவற்றை நூலிருந்து தீர்மானித்தற்குப் போதிய சான்றுகளில்லை.
ஆயினும் 'ஒரு சொற்குரியன் முருகற்கன்பன்' என்னும் (106) செய்யுளில் 'அமரர்நாதன் உதவும் புதல்வனானவன் திருவிற்கிறைவன் பதத்தைப் போற்றிச் செய்யுந் தர்ம நாயகன்' என்பதிலிருந்து இதன் காலமும் இந்நூலுக்கு ஆதரவு. கொடுத்தவர் யாவர் என்பதும் ஒரு சிறிது விளங்கலாயிற்று. இவற்றின் விவரங்கள் "இந்நூல் சம்பந்தமான சில குறிப்புகள் “ என்ற தலையங்கத்தின் கீழ்க் குறிப்பிட்டுள்ளேன். அவற்றை ஆங்குக் கண்டு கொள்க. இந்நூல் செய்த காலம் கி.பி. 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலென ஒருவாறு நிச்சயிக்கலாம்.
நூலியற்றியவரெவரேயாயினும் அவர் முருகவேளிடம் மிகுந்த பத்தியும் அன்பும் உடையவரென்பது முருகக் கடவுளைக் குறிக்கும் தொடர்களெல்லாம் பத்திரசம் கனிந்தொழுகத் தொடுத்திருப்பதால் அறியலாகும்.
கத்தோலிக்க சமயத்தைப் புகழ்ந்து யேசுநாதரைப்
பாட்டுடைத் தலைவராகக் கொண்ட ஞானப் பள்ளு,
கதிரைமலைப் பள்ளு சைவராற் பாராட்டப்படுதல்
76

காரணமாக, பறங்கியர் (Portuguese) இலங்கையை யரசாண்ட காலத்தில் எழுந்ததாகத் தெரிகிறது. அதன்பின் ஒல்லாந்தர் (Dutch) அரசியல் காலத்தில் (18-ம் ஆண்டு முற்பாகத்தில்) சின்னத்தம்பிப் புலவரால் பறாளாய்ப் பள்ளு என்பது விநாயகக் கடவுளைத் தலைவராகக்கொண்டு இயற்றப்பட்டது. ஆங்கில அரசியல் ஆரம்பத்துக்குச்சிறிது முன்னாக, மாவைச் சின்னக்குட்டிப் புலவர் தண்டிகைக் கனகராயன் பள்ளு என மானுடருட் சிறந்தானொருவனைத்
தலைவனாகக்கொண்டு பிரபந்தம் பாடியுள்ளார்.
ஆகவே, இலங்கையில் முதலிற் றோன்றியது கதிரை மலைப்பள்ளாகும். மேற்சொல்லிய பின்னெழுந்த பள்ளுக்கள் கதிரைமலைப் பள்ளைப் படியெடுத்தியற்றப்பட்டன என்பது அப்பிந்திய நூல்களைப் படிப்போர்க்கு எளிதில் விளங்கக் கிடக்கின்றது. 1932ம் ஆண்டில் தண்டிகைக் கனகராயன் பள்ளு என்னும் நூலை அச்சிடுவித்து வெளிப்படுத்தியபோது, இலங்கையில் இயற்றப்பட்ட பள்ளுப் பிரபந்தங்களுக்கு முதல்நூலாய் விளங்கும் கதிரைமலைப் பள்ளு தற்காலத்தில் வயல்வேலை செய்வார்வாய்க் கேட்பதேயன்றி நூல் பார்வைக்கு அகப்பட்டிலதென்று கூறிவிட்டேன். கனகராயன் பள்ளு பிரசுரமாய் ஒரு வருடத்துக்குள்ளாக, கதிரைமலைப் பள்ளு ஏட்டு ரூபத்தில், வன்னிப் பகுதியில் பற் பல இடங்களிலுல் கிடைப்பனவாய் யிருத்தலோடு 20 வருடங்களுக்கு முன் முல்லைத்தீவுப் பகுதியில் அச்சில் வெளிவந்ததாகவும் அறிந்து இறும்பூது எய்தினேன். எனக்கு முதலில் இந்நூல் ஏடொன்று கிடைத்தவாறும், இந்நூலைப் பிரசுரிக்கக் கருதி 'இந்து சாதன ஆங்கிலப் பத்திரிகை மூலமாக வேறு ஏடுகள் வைத்திருப்பவர்களை வேண்டிக் கொண்டவாறும், அதற்குக்
77

Page 42
கிடைத்த மாறுத்தரமும், முன் அச்சிட்ட பிரதியொன்று கிடைத்தவாறும் பிறவும் இந்து சாதன த்தில் வெளியானபடி இந்நூலுக்கு அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நூலுக்கு சுமார் 150 வருஷங்களுக்குப் பின்னரெழுந்த பறாளாய் விநாயகர் பள்ளும் 200 வருஷங்களுக்குப் பிந்திய தண்டிகைக் கனகராயன் பள்ளும் சிற்சில பாகங்கள் சிதைந்தனவாகவே அச்சிடப்பட்டிருக்கின்றன. கதிரைமலைப் பள்ளு முடிவுபோக இன்றையவரையிருத்தலும் ஒரு வியப்பே. களை பறித்தல், நாற்று நடு கை, அருவிவெட்டு, சூடு மிதித்தல் முதலிய தொழில்களை நெல்விளைப்போர் அநேகர் சேர்ந்து செய்யும் வேளையில், பொழுது போக்குக்காகவும் தொழில் ஆயாசந் தோன்றாதிருப்பதற்காகவும் வருஷா வருஷந்தோறும் தாள இராகத்துடன் இசைப்பாட்டாய் படிக்கப்பட்டு வருதலும், சிற்சில இடங்களில் காலத்துக்குக் காலம் செய்யப்பட்ட மாற்றங்களோடு நாடகமாக நடிக்கப்பட்டு வருதலுமே இந்நூல் சிறிதும் சிதைவுபடாதிருத்தற்குக் காரணங்களாகும்.
நாடகம், நடித்தலும், நாடகம், நாடக வடமோடி, விலாசமெட்டு, “டிறாமா" மெட்டு என நாட்டுப் புறங்களில் கால அடைவில் மாற்றமடைந்து வந்ததற்கிணங்க, இந்நூலின் சிற்சில பாகங்களில் இடைச் செருகல்களும் கூட்டுதல்களும், செய்திருப்பதாகத் தெரிகிறது. முதலில் எனக்குக் கிடைத்த ஏட்டுப் பிரதியிலும், முன்னர், அச்சில் வெளிவந்த பிரதியிலும், “முள்ளிய வளைமூத்த நயினார்” “ செந்தூர்க் காதலி" என்னுந் தெய்வங்களுக்குத் தோத்திரமும்தியாக சூரிய நாடெங்கள் நாடே” என்று முடியுஞ் செய்யுளுங் காணப்பட்டன. தியாக சூரியன் என்றது கி.பி. 1593-1630
78

வரை கண்டியிலரசு செய்த மன்னன் பெயராகத் தெரிகிறது. ஆகவே இந்நூல் அதற்குமுன் செய்யப்பட்ட தென்பது தேற்றம். இது விஷயம் விவரமாய் வேறிடத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. மேற்சொல்லிய இடைச்செருகல் வடமோடியாக நாடகம் நடந்தகாலத்தது என ஒருவாறு யூகிக்கலாம். இந்நூல் ஏட்டுப் பிரதி வைத்திருப்பவர்களைத் தேடி உசாவித் திரிந்த காலத்தில், மாதகலில் அண்ணாவி (சூத்திரதார்) யாக நடரைப் பயிற்றும் ஒருவர் என்னைச் சந்தித்து தன்னிடமிருக்கும் ஏடே சரியான பள்ளுப் பிரபந்தமென்றும், எனக்குக் கிடைத்த நூல் அருவி வெட்டுப் பாட்டு’ என்றுஞ் சொல்லி ஒரு பிரமாண்டமான ஏட்டைக் கொண்டு வந்து காண்பித்தார். அதில் பண்ணைத் தலைவன் அரசனாய்க் கொலு வீற்றிருந்து பயிரிடுங் குடிகளின் கூேஷிமம் விசாரித்தல்; பன்றி முதலிய காட்டுமிருகங்கள் பயிரை அழிப்பதாகக் குடிகள் முறையிட, பண்ணையரசன் வேட்டைக்குப் போதல்; மூத்தபள்ளியின் பிரசவத்துக்கு மருத்துவிச்சி வருதல்; இளைய பள்ளிக்குக் குறத்தி கைபார்த்துக் குறஞ்சொல்லல் முதலிய விலாச உறுப்புகளுடன் விலாசப் பாங்கான தரு, கொச்சகம் முதலிய சேர்க்கப்பட்டு இடையிடையே இந்நூலிலுள்ள செய்யுள்களுங் காணப்பட்டன. புதிதாய்ச் சேர்ந்தவைகளுள் கதிர்காமத்து முருகவேள் துதியே விரவியிருந்தன. டிறாமா மெட்டிலே வேறு நூலிருப்பதாகவும், தன் கையிலிருந்த ஏடே உண்மையான கதிர்காமப் பள்ளு நாடகம் எனவும் வாதாடினார் அண்ணாவியார். மேற்கூறியவாற்றால் இசைப்பாட்டாகவும் நாடகமாகவும் பாமரரால் இந்நூல் இன்றைய வரையும் போற்றப்பட்டு வருதல் தேற்றம்.
இந்நூலைப் பரிசோதித்து வெளிப்படுத்தற்கு என்னைத் தூண்டிய ஏதுக்கள் பல:-
79

Page 43
(1) இந்நூலைப் படியெடுத்து பிற்காலத்தெழுந்த பறாளாய்ப் பள்ளு, கனகராயன் பள்ளு என்பன அச்சில் வெளிவந்திருத்தலினாலே அவற்றிற்குத் தாய்நூலாகிய இதனையும் அச்சு வாகனம் ஏறச்செய்து இலங்கையில் தோன்றிய "பள்ளுத் திரய' த்தைத் தமிழறிஞர் ஒருங்குபடித்து ஒன்றோடொன்று ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமை நயங்களை உய்த்துணர்வதோடு, இந்நூலிலுள்ள முருகன் புகழைப் பாமரரும் படித்து அவரருளைக் கோரி நிற்கச் செய்வதாகிய இவையிரண்டு ங் காரணமாக, வெளிவராத நூல்களை வெளிவரச் செய்து தமிழ்மாதாவுக்காற்றும் தொண்டோடு, தமிழோடு அநாதித் தொடர்புள்ள நம்குலதெய்வமாகிய முருகவேள் புகழைக் கூறும் இந்நூலை வெளிப்படுத்துவதாகிய இரு தொண்டையும் ஒருங்குசேர ஆற்றுதல்.
(2) சென்ற மூன்று நான்கு வருடங்களிற் பொருளாதார நிலை சீர்கெட்டு மேலைநாட்டினரும் கீழைத்தேசத்தினரும் வியாபார மந்தம், பணமுட்டு இவைகளால் வருந்து வாராயினர். இந்தியாவிலும் இலங்கையிலும் நகர்ப்புறங்களில் பாமரத் தொழிலாளரும், உயர்தரக் கல்விகற்ற இளைஞர்களும் வேலையும் உத்தியோகமும் கிடையாமல் திண்டாடுகின்றனர். கிருவிக முயற்சியைப் புனருத்தாரணஞ் செய்வதே பொருளாதார நிலையைச் சீர்திருத்த வழியென்று பொருளாதார நூல் நிபுணர் 96, pygi)óór p63T ir. 415) 3)(5águy6oor' (Back to the land) என்பதே எப்புறமும் பெருமுழக்கமாக எதிரொலி தந்து நிற்கின்றது. 'ஈழத்துணவும் காழகத்தாக்கமும் எனப் பட்டினப் பாலையிற் கூறியபடி இரண்டாயிர வருஷங்களுக்குமுன் இந்திய நாட்டுக்கு உணவுப் பொருள்களை அனுப்பி வந்த வன்னிநாடு, 13ம் நூற்றாண்டு
80

முதற்பகுதியில் இராஜேந்திர சோழன் வடமொழிச் சாசனமொன்றில் 'உத்தர இலங்கா ஆராமம் (வட இலங்கைச் சோபன சோலை) எனவும் அதற்குப் பின்னும் பச்சிம நாட்டாரால் ' பிராசீன தானியக் களஞ்சியம்' (Granary of the East) or GOT 6, tò Lg 5 gọ tử Lư (9 9, gồé95 இலக்காயிருந்த தன்மை நீங்கி அடர்ந்த காடாயிற்று. இலங்கை தனது நாட்டிலுள்ளாரைப் போஷிக்க நெல்லும் மற்றும் உணவுப் பொருட்களும் இந்தியா பர்மா ஆகிய பிறதேசங்களிலிருந்து இறக்குமதி செய்விப்பதாயிற்று.
யாழ்ப்பாணத்தவர், தொடு வாய் ஐக்கிய மலாய் நாடுகளில் உத்தியோகங்களில் அமர்ந்திருந்தும், மலையாளத்துக்குப் புகையிலை அனுப்பியும் பணவருவாய் செய்தகாலம் போய், வருவாய்க்குப் புது வழிகள் தேடவேண்டிய காலம் வந்துவிட்டது."சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்' என்ற பொய்யாமொழிப்படி கிருஷிகத் தொழிலே இப்பதியில் எம்மை ஆதரிக்க வல்லது
வயல் வேலை செய்பவர்க்கு ஆயாசந் தீர்த்து அவர்களை உற்சாகப்படுத்துதற்குப் பள்ளுப் பாட்டுக்கள் உபயோகப் படுத்தப்படுவது முன்னர்க் கூறினாம். முல்லைத்தீவு வன்னிப் பகுதிகளில் வேலையாட்கள் கூட்டமாகச் சேர்ந்து அருவி வெட்டும் நேரத்தில் மத்தள தாளங்களுடன் இப்பாட்டுக்கள் படிக்கப்படுகின்றன. ஒரு நிரையாயிருந்து அருவி வெட்டுபவர்களுள் ஒருவன் மற்றவர்களுடன் நிரைகொள்ளாது பிந்திவிட்டால் மத்தளம் அவன் முதுகில் வைத்து அடிக்கப்பட மற்றவர்கள் பார்த்துப் பரிகாசம் செய்து நகைப்பார்களாம். இதைத் தவிர்ப்பதற்காக எல்லாரும் அதிதீவிரமாய் வேலை செய்து 4 மணித்தியாலத்தில்
81

Page 44
முடியும் வேலையை 3 மணித்தியாலத்திற் செய்து முடிப்பார்களாம். இதனால் பள்ளுப் பிரபந்தம் கிருஷிக முயற்சிக்கு ஊக்கமளிக்க உபயோகப்படுதல் விளங்கும்.
இன்னும் இந்நூலில் (செய்-81),
மன்னிய ம7விலி கங்கைநல் மாறு பரவுதே-கட்டி
மறிக்கவும் வேறொரு பேரில்லையே பண்ணை ம7ண்டே'
என்னும் மூத்த பள்ளி பிரலாபத்தில் "முற்காலத்தில் மாவிலிகங்கை வன்னிநாடு வரையுள்ள குளங்களுடன் கால்வாய்களால் தொடு க்கப்பட்டு வன்னிநாட்டு நெல் விளைவிக்க உபயோகமாய காலம்போய்,” “தற்காலத்தில் மாவிலி கங்கையாறு பெருகிவருவதைக் கட்டி மறித்துக் குளங்களை நிரப்பிக் கால்வாய்கள் மூலம் நீர்ப்பாய்ச்சலுக்கு உபயோகிக்கவும் வேறொரு பேர் இல்லாமையால் அவமே கடலிற் பாய்கின்றது” என்னும் பொருள் தொனித்து நிற்கின்றது. இயந்திரங்களின் உதவியால் மிகத் துர்லபமான காரியங்களையும் சாதிக்கும் இக்காலத்தில் மாவிலி கங்கை நீரை வன்னி நாட்டு வயல்களுக்கேயன்றி யாழ்ப்பாணத்து வயல்கட்கும் உபயோகிக்கலாம் என்பது வெறுங் கணவன்று என்பதையும், அனுபவ சித்தமாகக்கூடிய காரியமே என்பதையும் நீர்ப்பாய்ச்சல் யந்திரசூழ்ச்சி வல்லாரும் (Irrigation Engineering Experts) GL1 it (567 fig, T J 656). Firu f5L16007(5lb (Agricultural Economic Experts) gafigos 656 a mul Lugis LDigitful T(05lb (Ceylon Minister of AgriCulture) ஒருங்குகூடி ஆலோசித்து தக்கன செய்வார்களாக,
(3) மேற்கூறிய பரபிரயோசனமன்றி இந்நூலை விரைவில் வெளியிடுவதற்கு சுவ பிரயோசனமும் ஒரு
82

ஏதுவாயது. இந்நூலை முதலிற் கண்டு பரிசீலனை செய்துவருங் காலத்தில், எனது வலக்கண்ணில் நோய்கண்டது. எனது ஜீவனோபாய முயற்சிகளுக்கும் நான் பொழுது போக்காகக் கொண்ட தமிழாராய்ச்சி 5F LO) If நூலாராய்ச்சிகளுக்கும் இன்றியமையாத கண்ணில் நோய்கண்டதிற் கவன்று மேலைத்தேசக் கண்நிபுணரையும் ஆயுள்வேத நயன வைத்தியரையும் கண்டு கலந்துபேசிய் அளவில், இக்கண் சிறிது சிறிதாகப் பழுதடைந்து வருவதுடன் மற்றக் கண்ணும் இதே மாதிரியான நிலையையடைதல் கூடுமென்றும், கண்ணுக்குக் கொஞ்சமும் வேலை கொடுக்கக் கூடாதென்றும், எழுதல் வாசித்தலை முற்றாய் நிற்பாட்ட வேண்டு மென்றும் ஒருமுடிவாகச் சொல்லிவிட்டார்கள். இதனால் மிகக்கவலை கொண்டிருந்த சமயத்தில்,
'காந்தி சேர்கண் ணிலாதவர்க் குக்கண்ணுங் காட்சியுந் தந்து குர்ட்ப்பகைச் செவ்வே வேத்தல் சேர்கதிர74/7 சேர்ந்திடும்
ஈழ மண்டல நாடெங்கள் ந7டே'
என்னும் பறாளாய் விநாயகர் பள்ளுச் செய்யுள் என் ஞாபகத்துக்கு வந்தது. ஆறுமுகங்களில் ‘கூறும் அடியார்கள் வினைதீர்க்கும் முகம்’ ஒன்றாகக்கொண்ட எம்பெருமானே கதிரா புரியிலுற்றுக் கண்ணுங் காட்சியுங் கொடுக்கும் மருந்தாக விளங்குகின்றாராதலின், அவர் திருச் சேவடி யில் 350 வருடங்களுக்கு முன் சூட்டப்பட்ட புகழ் மாலையைப் பழம்பணி புதுக்குவாரொத்துப் புதுக்கிச் சாத்தல் செய்யலாயினேன். “பொய்யற்றகீரன் முதலாம் புலவோர் புனைந்த ஐயரும்” அடியேனது இச்சிறுபணிக்கு உவந்து கிருபைக் கடைக்கண் பரிபாலிப்பாராக அறிஞரும் அடியேன் பணியால் இச்சிறு புகழ் மாலையிலுற்ற வழுக்களைப்
83

Page 45
பாராட்டாது குணங்களையே கொள்ளவேண்டுமென
அவர்களைப் போற்றி வேண்டிக் கொள்ளுகிறேன்.
இந்நூலைப் பிழையறப் பரிசோதித்தற்கு உபகாரமாயிருந்த குமிழமுனையிலிருந்த ஏட்டுப்பிரதியினையும், புதுக்குடி யிருப்பு ஏட்டுப் பிரதியினையுந் தருவித்துதவிய திருவாளர் கருகம்பானைச் சீராளர் என அழைக்கப்படும் சின்னத் தம்பி விசுவலிங்கத்துக்கும், தெல்லிப்பழை மூத்த தம்பி தம்பி ஐயாவுக்கும், இதனை அச்சிடும்படி என்னை யடிக்கடி தூண்டி அழகுற அச்சிடுவதற்குரிய சிரத்தைகளைப் புரிந்த எனது அருமை நண்பர், திருவாளர் திருமயிலாப்பூர் சே.வெ.ஜம்புலிங்கம் பிள்ளை அவர்களுக்கும், என் மனமார்ந்த
நன்றி கூறி முடிக்கின்றேன்.
அருவமே7 டுருவம7கியன7தி/7ய்ப் Z v6va/17 @zz/76özpı7ażżLý ۶ 7zی7/عرzo/7zz۶ A27a azzo Gصz J707z ட7ழம்/தே77 மேனிய/கக் கருணைகூர் முகங்கள7றுங் கரங்கள் //ன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்த7ங் குதித்தனன் உலகமுய்ய. ஒருமுருகர வென்றென்னுளங்குளிர உவத்துடனே வருமுருகா வென்று வாய்வெருவா நிற்பக் கைமிங் வனே 2002052/7 (662/672/ø/76r 4/6/////7
84

நிற்பத் தையல்முன்னே 237ھ تZ/602Z 4// G ترzpyZز7Zz/ جیتنے زبر) (ZZ) تر%مجھے வருஞ் சேவகனே. ஆறித தடத்தே7ள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய்தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அன7ங்கு வாழ்க آریایی72//62 و 72//762 zz0727a U/7 a)/a77677
ض7766/7م) Tل 12
கதிரையப்பர் திருவடிகளே சரணம்.
தெல்லிப்பழை }
வ. (கமாாசுவாமி. பவ சித்திரை 14. குமார
85

Page 46
LIGiGITT 6)IUGTIOI
பள்ளு அல்லது உழத்தியர் பாட்டு கிருஷிகத் தொழிலாளராகிய பள்ளர் அல்லது உழவர் தொழில் செய்யும் முறையையும் பள்ளணுக்கும் அவன் மனைவியராய மூத்த பள்ளி இளைய பள்ளிகளுக்கும் இடையிலுள்ள குடும்ப சச்சரவுகளையும் கூறும் நூலாம். ஆகவே, பள்ளு நூலிற் பிரதான கதாபாத்திரங்களான பள்ளவகுப்பினரது வரலாற்றைக் குறித்து ஈண்டுச் சில கூறுதல் மிகையாகாது.
கங்கைசூடிய கண்ணுதற்பெருமான் மலையரசன் மகளை மணஞ் செய்தபோது திருமணங் காணவேண்டி தேவரும் முனிவரும் பிறரும் இமயமலைச் சாரலில் ஈண்டியிருத்தலின், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து வையம்-நிலைகுலைய நிலைகுலைந்த வையத்தைச் சமநிலைப்படுத்துமாறு விமலனாணையால் தென்றிசை போந்த அகத்தியருடன் வந்து தென்னாட்டிற் குடியேறியவராகப் புராண இதிகாசங்கள் கூறும் அருவாளர் மரபினரே பள்ளர் முதலிய பண்ணைத் தொழிலாளர் என்பது பல ஆராய்ச்சியாளரது அபிப்பிராயமாகும்.
இந்த அருவாளரில் தலைவரானோர் குறுநில மன்னராகவும் ஏனையர் அவர்களது படை வீரராகவும் சில காலம் தொண்டை மண்டலப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் என்றும், தம் கீழ்ப் பயிரிடும் குடிகளை வருத்தி, ஏற இறை கொண்டும், வழிப்போக்கரை ஆறலைத்தும் இன்னல் விளைத்துவந்த இவர்களை ஆதொண்டைச் சக்கரவர்த்தி அடக்கிக் கிருஷிகத் தொழிலில் அமரச் செய்தான் என்றும் சில பழைய வரலாறுகள் கூறும்.
86

சிலகாலம் குறுநில மன்னராய் ஆதிக்கஞ் செலுத்தியமை காரணமாகக் குறும்பர் எனப்பெயர் பெற்ற அருவாளர் ஆதொண்டை மன்னனால் தோற்கடிக்கப்பட்டுத் தொண்டை மண்டலத்தில் கிருஷிகத்தொழிலில் அமர்ந்த காலத்தில், குறுநில மன்னர்கள், பிரதானிகளின் குடும்பத்தினராய தலைப்பட்ட குழுவினர், உழுவித்துண்ணும் காணியாளராய்த் துளுவ நாட்டிலிருந்து வந்து தொண்டை மண்டலத்திற் குடியேறிய வேளாண் வகுப்பினருடன் கலந்து விட்டார்கள். இடைப்பட்ட குழுவினர் ஆகாத்தோம்பி ஆப்பயனளிக்கும் கோவலர் வாழ்க்கையை மேற்கொண்டு கண் இடையர் அல்லது கண்ணடியர் என்னும் இடைய வகுப்பினர் ஆனார்கள்.
குறும்பரில் கடைப்பட்டாரே இன்றளவும் தம் சாதியியற்கை மாறுபடாது குறும்பர் என்னும் ஒரு பூர்வீக சாதியார் தமிழ் நாட்டில் இருந்தார்கள் என்பதை நினைவூட்டிக்கொண்டு கிருஷிகத் தொழிலில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களே மள்ளர் அல்லது பள்ளர் என்னும் சாதியார், பள்ளர், பள்ளியர், கடையர், கடைசியர் என்பன தமிழ் நாட்டு வயல்கள் தோட்டங்களில் தொழில்செய்யும் கடையாய வகுப்பினரில் ஆண்பாலார் பெண்பாலாரின் பெயர்களாகும். பள்ளு நூல்களில் குடும்பன் என்பதே பள்ளனைக் குறிக்கும் பெயராகக் காணப்படுகிறது. இது குறும்பன் என்னும் அவனது சாதிப்பெயரின் திரிபு எனலாம்.
குறும்ப மன்னருக்கும் பிரதானிகளுக்கும் ஏவலாளராக இருந்த இக்கடையாய வகுப்பினர் பின்னர்த் தொண்டை மண்டலத்துக் கோட்டங்களில் குடியேறிய வேளாண் பிரபுக்களுக்கும் காணியாளருக்கும் பயிரிடும் வேலைக்காரராக அமர்ந்து அவர்களுக்கு அடிமைகளானார்கள். காஞ்சிபுரத்திலிருந்து தெற்கேயுள்ள தென் ஆர்க்காடு, தஞ்சாவூர் முதலிய ஜில்லாக்களில்
87

Page 47
வந்து பிற்காலத்தில் குடியேறிய காணியாளரான மிராஸ்தார்கள், தளவாய்களுடன் பள்ளராகிய குறும்ப சாதியினரும் வந்து அவர்களது வயல் வேலைகளிலமர்ந்து வழிவழியாக இன்றும் வாரக்குடிகளாய்ப் பயிரிட்டுக் கொண்டு இருத்தலைச் சீகாழி சிதம்பரம் முதலிய இடங்களில் காணலாம். அப்படியே காரைக்காட்டுப் பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறிய வேளாண் பிரபுக்களுடன் பள்ளரும் வந்து குடியேறினர்.
ஆகவே, தென்னிந்தியாவிலும் ஈழமண்டலத்திலும் பண்ணைவேலை செய்யும் பள்ளசாதியார் அகத்தியருடன் தென்னாடு போந்த அருவாளர் மரபினர் என்பது போதரும்.
கதிரைமலைப் பள்ளு இலங்கை முழுவதற்கும் இந்தியா முழுவதற்கும் உரியதாதல்
இலங்கையில் தோன்றிய மூன்று, பள்ளுகளில், காலத்தாற் பிந்திய கனகராயன் பள்ளிற் கூறப்படும் வடகாரைப் பள்ளியும், தென் காரைப் பள்ளியும் தொண்டை மண்டலத்துக் காரைக்காடு ஒன்றற்கே உரியர். வடகாரை தென்காரை வளம்கூறும் கனகராயன் பள்ளும் காரைக்காட்டுச் சார்பும் கனகராயன் சார்பும் உடைய சிலர்க்கு மட்டுமே உரிமை பூண்டதாகும்.
பறாளாய்ப் பள்ளில் வரும் சோழமண்டலப் பள்ளியும், ஈழமண்டலப் பள்ளியும் சோழமண்டலப் பெருமையும் ஈழமண்டலப் பெருமையும் கூறுதலால், பறாளாய்ப் பள்ளு இந்தியாவில் தென்னாட்டில் சோழமண்டலத்துக்கும் இலங்கையில் தமிழர் வசிக்கும் பிரதேசமாகிய ஈழ மண்டலத்துக்கும் உரிமை பூண்டு நிற்கின்றது.

கதிரைமலைப் பள்ளில் பள்ளனும் அவனது முதல் மனைவியான மூத்த பள்ளியும் இலங்கை நாட்டினர். இவர்களை ஆசிரியர் மாவலி கங்கைப் பள்ளன், மாவலி கங்கைப் பள்ளி என வழங்குகிறார். பள்ளனது இரண்டாம் மனைவியான இளைய பள்ளிக்குத் தாயகம் இந்தியா. இவள் பகீரதா கங்கைப் பள்ளி எனப்படுகிறாள். இப்பள்ளிகள் தத்தம் நாட்டுவளம் கூறுமிடத்தும், மாவலிகங்கை நாட்டையும் (இலங்கை முழுவதையும்) பகீரதாகங்கை நாட்டையுமே (இந்தியா முழுவதையுமே) புகழ எடுத்துக் கொள்ளுகின்றனர்.
மேலும், பள்ளியர் தம் ஆண்டையர் பெருமை கூறுமிடத்தும் கனகராயன் பள்ளில் கனகராயன் புகழும், பறாளாய்ப் பள்ளில் விநாயகர் புகழும் மட்டுமே கூறப்பட, கதிரைமலைப் பள்ளிலோ, விநாயகரைக் குலதெய்வமாகக் கொண்டு அவர்க்கு வழிவழியடிமை பூண்டொழுகும் இளைய (பகீரதா கங்கைப்) பள்ளியால் விநாயக பிரபாவமும், கதிர்காமவேலரைக் குலதெய்வமாகக் கொண்டு, அவர்க்கு வழிவழி யடிமை பூண்டொழுகும் மூத்த (மாவலிகங்கைப்) பள்ளியால் சுப்பிரமணிய பிரபாவமும் கூறப்படுகின்றன.
இக்காரணங்களால் கனகராயன் பள்ளும் பறாளாய்ப் பள்ளும் சிலர்க்கு மட்டுமே உரிமை பூண்டனவாக, கதிர்காம கூேடித்திரமும் ஆங்குக் கோயில் கொண்டு விளங்கும் கந்தப்பெருமானும் இந்தியாவிலும் இலங்கையிலும் யாவராலும் சாதிமத பேதமின்றி வணங்கிக் கொண்டாடப்படும் தன்மைபோலவே கதிரைமலைப் பள்ளும் இந்தியா முழுவதற்கும் இலங்கை முழுவதற்கும் உரிமை பூண்ட பிரபந்தமாய் விளங்குகின்றது.
89

Page 48
°一
குகமயம்
கதிரைமலைப் பள்ளு
காப்பு
கார்சேருஞ்சோலைக் கதிரையில்வேலாயுதன்மேற் சீர்சேரும் பள்ளினிசை செப்பவே- கூர்சேரும்
கொம்பொருகைக் கொண்டவிறற் கும்பவயிற் றைந்துகரக் கம்பமதத்தும்பிமுகன் காப்பு.
90

அவையடக்கம்
ஒக்க வுதும்பரத்தி னொண்மணியை வைத்தாலும் மிக்கவர்க ளெல்லாம் விரும்புவார்- அக்கதைபோல் தென்கதிரை வேலர் திருநாமம் பாடலால்
என்கதையை யெண்ணா ரிகழ்ந்து.
பதிப்பாளர் குறிப்பு :
உதும்பரம் -செம்பு; ஒண்மணி- ஒளிகாலும் இரத்தினம். இவ்வவையடக்கச் செய்யுளில் முதல்வரி சில ஏடுகளில் "குக்கனுரியானாலுங் கோமுடியை வைத்தாலே”
எனக் காணப்படுகிறது.
குக்கன் உரி- நாய்த்தோல், கோ முடி அரசனது தலைக்கீரிடம். உதும்பரத்துடன் ஒண்மணியை ஒக்கவைத்துக் குயிற்றிய கலன் அணிதலும், குக்கனுரி உடுத்துக் கோமுடி தரித்தலும் ஆகிய இரண்டும் அசம்பாவிதம். பின்னையது " நாய்க்குத் தவிசிட்டு” " நாய் சிவிகை ஏற்றுவித்த" (திருவாசகம்) என்னும் ஆன்றோர் வாக்குப் பற்றி எழுந்ததெனலாம்.
செம்புலோகம் (நாயின் தோல்) இழிந்ததென ஒதுக்கப்படும் வஸ்துவாயினும், ஒளிகாலும் இரத்தின மணியுடன் (இராசகீரிடத்துடன்) அது இணைதலால்,
அணிகலனாய் (உடையாய்) மதிக்கப்படுவதுபோல்,
91

Page 49
கதிர்காம சேஷத்திரத்தில் வீறுபெற விளங்குந் தேவசிகாமணியுடன் தொடர்புடையதாய (கதிரை வேலவரது புகழ்ச்சேவடியிற் புனையப் படுவதாய) புன்கவியாகிய இக் கதிரைமலைப் பள்ளும் அறிஞரால் இகழ்ந்து ஒதுக்கப்படாது அவர்களால் மேம்படுவதென அங்கிகாரம் பெற்று நிலவுமென நூலாசிரியர்
அவையடக்கங் கூறினார்.
92

நூல்
கடவுள் வணக்கம்
சீர்கொண்டசெழுங்கம லந்தனில்
வாழ்மங்கைமா னும்புய மங்கையர் சேரும்புவி மகிழ்வொடு செறிவாகி
ஏர்கொண்டவனஞ்செறி மன்றினி லேயைந்தொழில் கொண்டுநடம்புரி
ஈசனடி யார்க்கருளும்பசு பதிபாலன் கூர்கொண்டொரு கொம்பு நலந்திகழ் மாதங்க முகன்கர மைந்துடைக் கோலந்திகழ் குரிசிலினிருபதம் மறவேனே,
கார்கொண்ட ககனம் படியுந்துரய கானந்திகழ் கதிரையில் நிகழெதிர்
காலங்களினருள்செயு முருகன் பள்ளிசை பாடவே. (1)
மூத்தபள்ளி இளையபள்ளி குடும்பன் வரவோடு அவர் பெருமை கூறல்
வாசங்கொள் மலர்சூடிக் கேசங்கொள் கருமுகிலின்
வார்கொண்டை யிடைநோக வளைபுலம்பத் தேசங்கள் விலைபேசுந் துரசெங்கு மிசைமேவச்
சீர்கொண்ட யிடைநோகச் சிலம்பலம்பப் பாசங்கள் பலபவ நாசஞ்செய் திருவேனிப்
பகீரதா கங்கைவயற் பள்ளியுடனே காசெங்குஞ் சுடர்வீசும் காசிநன் மாவலி
கங்கைவயற் பள்ளன் பள்ளி தோற்றினாரே. (2)
93

Page 50
கதிரைமலைப் பள்ளு
மூத்தபள்ளி வருதல்
கொண்டலைப் பொருவுமலர்க் குழலுங் கனதனக்
கூடம் சுமந்த யிடைக்கொடி யசையவே விண்டலத்தின் மாமதியை வென்றமுகம் வேர்வரும்ப
வெண்டரள மணிமாலை மெய் யிலங்கவே தொண்டர்களுக் கன்பருளும் தென்கதிரை வேலன் சூரனைத் தடிந்துமிக வீரமுற்ற வெம்மான் கண்டவர்க்கு நன்மைதரும் கந்தவேள் மாவலி
கங்கை வயற்பள்ளி தோற்றினாளே. (3)
இளையபள்ளி வருதல்
நஞ்செனக் கரியவிழி யஞ்சனக்குறியெழுதி
நத்துமுத் தணிந்து பொன்னி னணிதாங்கி விஞ்சுகருங் குழல்வீழ வேயைவென்ற தோளிலங்க வில்லூர்திப் பட்டினா லுல்காசஞ் சேர்த்து குஞ்சர முகன்கரமொ ரைந்துடையோ னொற்றைக்
கொம்பன் கொண்டல் வண்ணன் தனிலன்பு கொண்ட மருகோன் கஞ்சமலர்ப் பதம் போற்றிக் கணபதி பகீரதா
கங்கை வயற்பள்ளி தோற்றினாளே (4)
பள்ளன் வருதல்
வெண்டரள வர்ணத்தூசாற் கச்சையுங் கட்டி- மயில்
வில்லூர்திப் பட்டினாற் றோட்பாரஞ் சேர்த்துக் கண்டகள்ளைப் பிரியமுற்றுக் கொண்டுகுடித்துக்-களித்துக்
கண்சிவந்து மீசைகோதிக் கந்த னருளால்
94

கதிரைமலைப் பள்ளு
தொண்டரணி நீறுநெற்றி மீதிலங்கப் பொட்டும் இட்டுத்
தோகைபோல் மண்வெட்டி தோளிற் போட்டு மண்டலமெண் டிசை போற்றும் கதிரைவள-நாட்டு
வயற்பண்ணை செய்யும் பள்ளன் தோற்றினானே (5)
பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்
நஞ்சு போல்விழி மங்கையர் கூடி
நயங்கள் பேசி யிசைபாடி யாடி பஞ்சு போலடி மெல்ல நடந்து
பணைத்த கொங்கை கனத்திடை தொய்ய விஞ்சு கோதை விரித்த நறும்புனல்
மீது லாவி விளையாடக் கண்டு மஞ்சு மஞ்சி மலையிலொளிக்கின்ற
மாவலி கங்கை நாடெங்கள் நாடே (6)
வஞ்ச வஞ்சியர் கற்பழித் தோர்மறை
வாண ராருயிர் மாய்த்தவ ரேனும் செஞ்சொல் வேத விதியால் வருபுனல்
தேவ தேவன் திருக்காசி மேவித் தஞ்ச நீணதி யென்று மனத்துன்னித்
தர்ப்பணம் புரிந்தா லவர் தங்கள் பஞ்ச பாதக மெல்லாம் தொலைக்கும்
பகிர தாகங்கை நாடெங்கள் நாடே (7)
காசில் பொற்சிலம் பின்சிக ரத்தைக்
கால்பறித்தே யெறிந்திட வந்த
95

Page 51
கதிரைமலைப் பள்ளு
மாசில் தென்கோண மாமலையைச் சூழும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே (8)
வரமுடைக்கபிலன்முன்னெரிந்தநல்
வன்மைச் சாகரரின்சுவர்க் கம்பெறப்
பரம னைத்தவம் பண்ணியே பெற்ற
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே ( 9)
போத நாண்மலர் நாயகனார்நற்
புரந்த ரன்முதற் றேவர்கள் யாவர்க்கும் மாத வர்க்கு மரிய தவம்வைக்கும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே ( 10)
மாய வஞ்சக் கொடும்பவர் மாய்ந்திட வந்தே யங்க மெடுத்தவர் போடப்
பாவந்தீர்த்துப் பரகதி யேற்றும்
பகிர தாகங்கை நாடெங்கள் நாடே (11)
செய்ய கேது தலையற்ற வந்நாள்
திருந்தும் பூசைகள் செய்து முடிப்போன்
வையம் போற்றிட நற்கதியுற்றிடும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே (12)
நலம தாகவே பூசித்த பேர்க்கெந்த
நாளும் பாக்கிய மோக்ஷமி யாவும் பலவிதத்தினு மீந்திடு கின்ற
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே (13)
96

கதிரைமலைப் பள்ளு
கோவிற் றன்சொற்கீழ் மேலுல கெல்லாம்
கொள்ளும் வேலைக் கதிரையில் வேலன்
மாவிலூன்றிப் பதம்வைத்துக் காத்திடும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே (14)
அதிக பாவிகளாயினு மெஷ்வுயி
ராயினு மத்த லத்திலிறந்தாற்
கதித ருந்திருக் காசியைச் சூழும்
பகிர தாகங்கை நாடெங்கள் நாடே (15)
எங்கும் மாமணி விற்பொலி யுங்கதி
ரெங்குந் தாமரை யன்னம் படுமலர்
மங்கு றாத வளந்திக முந்திரு
மாவலி கங்கை நாடெங்கள் நாடே (16)
திங்கள் தோறுமும் மாரிகள் பெய்யச்
சிறந்த சீருடன் தேனிசை செப்பப்
பங்கயத்தைக் குளங்கள் பரிக்கும்
பகிர தாகங்கை நாடெங்கள் நாடே (17)
அணியிளங்கதி ராயிர முள்ள
வருக்கன் போய்க்குட பாலிடை மேவ மணி கொணர்ந்து மணிவிளக்கேற்றிடு
மாவலி கங்கை நாடெங்கள் நாடே ( 18)
காய்ச்சுத் தோயலுடன் சோறு மிட்டுக்
கடனுக்காகவே கைமரக் காலால்
பாய்ச்சியே செந்நெல் முத்தளக் கின்ற
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே (19)
97

Page 52
கதிரைமலைப் பள்ளு
வேணிச் சங்கரர் தொண்டர் ளென்று
வீடு தோறு மிரப்பவர்க் கெல்லாடம் மாணிக்க மள்ளிப் பிச்சை கொடுத்திடும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே (20)
ஆரேனுந் தொழு வோர்க்கன்பு கொண்டவ
ராசை யின்படி யாக வருள்வோன் பேர் புகன்றிடு வோரையுங் காத்தவன்
பேசுங் கங்கை நாடெங்கள் நாடே (21)
பொன்னு லோகம் பொருவுநன் னாட்டின்
பொழிலிற் றோகை மயில்நின்றுலாவும் வன்ன வேலன் கதிரைக் குமரேசன்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே (22)
இளையபள்ளி தன் ஆண்டையின் பெருமை கூறல் (விநாயகர் பிரபாவம்)
எங்கு மாகி யெவருக்கு மின்னதென்
றெண்ணொ னாத பராபர மாகி மங்கு றாத பரையாகி யானந்த
மான நீதிப் பரஞ்சுடராகிப் பொங்கு பூரண நற்சிவ சத்தி
பொலிவதால் நாத விந்துவு மாகி அங்கிலங்கிய சோதிச் சதாசிவ
மாகி யெல்லா வுலகமு மானோன் (23)
98

கதிரைமலைப் பள்ளு
ஆன வைந்தொழில் தன்னையும் வெவ்வே
றடைவதாக நடத்திய மூர்த்தி தான் மகிழ்ந்திட வந்தே யுதிக்கும்
தனையன் யாவையும் தானாக்க வல்லோன் மான தங்க கயமுக சூரனை
மங்க வேதடிந்தம்புவி மீது மேன்மை யானவி நாயக மூர்த்தியெம்
வேந்தன் மாவலி கங்கைவயற் பள்ளி (2-4)
மூத்த பள்ளித் தன் ஆண்டையின் பெருமை கூறல் (சுப்பிரமணியர் பிரபாவம்)
முந்தி நீயெங்க ளாண்டையென் றேசொன்ன மூர்த்தி பின்னவன் முக்கட் பெருமான் தந்த வெண்பொறிச் சண்முக மும்பொன் தயங்கு மெய்யுமீராறுதடக் கையும் எந்த நாளும் விளங்கு முலகமீ
ரேழுங் காக்கு மிறையவனாகிக் கந்த மேவு சரவணப் பொய்கையிற்
கந்த வேளென வந்தே யுதித்தோன் (25)
உதிக்கும் வெம்மைக் கொடுந்தக் கனைக்கொன்ற
வுத்த மன்வீர பத்திர னாலும் மதிக்கும் மூர்த்திகளாலுநற்றேவர்கள் மற்ற முள்ள கணநாதராலும் சதிக்கொணாவரத் தோடு நூற் றெட்டுகம்
தாங்கி யாயிரத் தெட்டண்ட மாண்ட கதிக்குஞ் சூரனைக் காய்ந்துவிண்ணோர்தமைக்
காத்தவன் சிறை கட்டற மீட்டோன். (26)
99

Page 53
கதிரைமலைப் பள்ளு
மீட்டு வானத்து மேன்மையுண் டாகவே
வெள்ளை வாரணற் கேபொன் மகுடம் சூட்டி யேயர சாக்கிய பின்னர்த்
துடியிடைப் பிடி நன்னடைச் செவ்வாய்க் கோட்டி ளம்பிறை போனுதற் கூந்தற்
குயில் நிகர்த்த தெய்வானைப் பிராட்டியை வேட்ட கந்தனெம் மாண்டையல் லோதிரு
மேவும் கங்கை வயற் பள்ளியாரே (27)
குயிற் கூக் கேட்டல்
மாதவரும் ஞானிகளும் மாமுனிவ ரானவரும் வானுலகும் வாழவே கூவாய் குயிலே
நீதியுடனே புவியை யாளுமன்ன ரானவர்கள்
நீடூழி வாழவே கூவாய் குயிலே (28),
தீதகல வேசகல பேர்க்குநிறை வாயநன்மை சேரமகிழ் வாகவே கூவாய் குயிலே
காதமெழு கீதமொடு காசிகதி ராபுரியெக்
காலமும் வாழவே கூவாய் குயிலே (29)
பொங்கரவ ணிந்தவன் நடம்புரியுமன்றுமிகு புகழ்பெற விளங்கவே கூவாய் குயிலே சங்கரிதரும் புதல்வனங்கைதிகழயில்வேலன்
சந்நிதி தழைக்கவே கூவாய் குயிலே (30)
100

கதிரைமலைப் பள்ளு
திங்கள்தொறு மெங்குமழை மும்முறைகள் பெய்யவும்
திண்புவி தழைக்கவுங் கூவாய் குயிலே
வெங்கலி யுகந்தனிற் சகலசன முந்தவம்
மிகுந்துதின முஞ்செயக் கூவாய் குயிலே
வஞ்சவெஞ்சூரன்கிளை துஞ்சவமர் செய்கந்தன் வைவேல் தழைக்கவென்று கூவாய் குயிலே
கஞ்சனஞ் சிடவினவியேசிறையில் வைத்திட்ட
கருணையுள முருகனென்று கூவாய் குயிலே
மஞ்சுமென் குழல்பூவை கொஞ்சுமென் சொல்லினிய
வள்ளிநா யகனென்று கூவாய் குயிலே
சஞ்சலந் தவிரக்கொ டுஞ்சிறையி னிக்கியருள் தந்திடுந் தீரனென்று கூவாய் குயிலே
வாரி நுகு முலையாளா மம்மைகாதலனுடைய மாணடிகள் வாழவென்று கூவாய் குயிலே
நேருடன் புவிமீதில் நன்னிதி நாதனருள்
நீடுழி வாழவென்று கூவாய் குயிலே.
மழை பெய்ய வரங் கேட்டல்
வேதியர்கள் குலவணிகர் வேளாளர் மரபிலுள்ளார் பாதிமதிச் சடையோனெம் பரமனருள் தென்கதிரை
நீதிபெறும் வேலவரை நேசமுடன் போற்றிசெய்து ஒதுமலர்ப் பதம்பணிந்துவந்துமழை கேட்டனரே
101
(31)
(32)
(33)
(3-4)
(35)

Page 54
கதிரைமலைப் பள்ளு
மழை பெய்ய வரங் கொடுத்தல்
என்றமொழிதனைக்கேட்டு யெழில்வருணன் தனை யழைத்து
வென்றியுடன் மழைபெய்ய வேணுமென விளம்பினரே நன்றெனவே மனமகிழ்ந்து நன்முகிலை வரவழைத்து
இன்று முதல் மழைபொழிகென்றெழில்வருணன் விடைகொடுத்தான் (36)
மழை பெய்தல்
சுரநதி யுருமுற்றெழுமுகில் பரவித்
தொனிதரு பரவைத் திரைபொருநீர்
பரிவொடு பருகித் திசைதிசை பரவிப்
பனிவரை தோறுந் திகழ்வுறவே
பரன்தரு குகன் மகிழ் கதிரா புரியிற்
பலமணி விஞ்சுங் கடமுறவே
நிரந்தர மதிரு முரசின் முழங்க
நிலமகளஞ்சி நடுங்கினளே .
நிலவெழ விண்மே லெங்கணு மின்னி
நெருங்கிய காலுற நின்றதிர
நலவரை நகரம் பொழில்வன மெங்கணும்
நன்மழை மாரி பொழிந்ததுவே
கானக மிருக சாதிகள் பறவைகள்
கட்புலன் மூடி நடுங்குறவே
தேனிசை பயில்கதிராபுரி யெங்கனும்
செழுமழை மாரி பொழிந்ததுவே
102
(37)
(38)
(39)
(-40)

கதிரைமலைப் பள்ளு
ஆற்றில் வெள்ளம் வருதல்
கனக மலைக்குவ டொடிய விசைப்பொடு
கலவி நிலத்திடை சுலவியநீர்
சினைகொள் மரத்துற நெரிய வகற்றிய
சிறையுட னிரைபுள்ளும் வெருவுறவே (41)
வனமதி லுறைதரு மதகரி யுலவையில்
வலிகெட நளிருட னுலைவுறவே
சினைமணிகளுமிக நிறைவுற வருவெளம்
திசைதிசை தோறு நிறைந்ததுவே (-12)
குறிஞ்சி
பாரப் பதலை யருவி பெருகிப்
பதறிக் கதறிக் கொதித்துரம்
பாய்ந்து சிலையி லோய்ந்து திகழும்
பகட்டு மருதம் பொருப்பொடே
சேரப் புரளத்தரளத் திரளைச் சிதறிக் கதறிச் சிந்துரம்
தியங்கு புனலில் மயங்கித்தியங்கிச்
செயங்கெட் டொடுங்கி நடுங்கவே,
ஆரத் தருவை யலைத்துக் குலைத்து அகிலைப் பறித்து முறித்து நீள்
ஆம்பி ரத்தொடு காம்பு மிக்குயர்
தேம்புனத்திடை மோதியே
103

Page 55
கதிரைமலைப் பள்ளு
வாரைப் பொருது குயத்தி குறத்தி வள்ளி கணவன் மலர்ப்பதம்
வழுத்திக் குறிஞ்சி நிலத்தைக் கடந்து
வந்து பாலை யடைந்ததே. (43)
T66)
பாலை நிலத்திற் புகுந்து மிகுந்து
பரவிக் குமிறி யகிலுடன்
படரை மேவி யுருண்டு புரண்டு பனித்து மிருகம் பதறவே
வேலைக் கிணைய தாகத் திரைகள்
வீசிச் சீறி மோதவே
வெருண்டங் குருண்டு பருந்து புறவு
மிதக்கும் புனலின் வெதிர்ப்பொடே
ஆலக் கவர வயிரை நகர
அழகு மணிகள் திரையொடே அலையும் பெருகிப் பரவிக் கரையில்
அதிர மீறி யார்க்கவே சீலத்துடன்மைக் காளி துணைகொள்
செய்ய பதத்தை வழுத்தியே தேறு நிலங்கடந்தோடிக் கூடிச்
செய்ய முல்லை யடைந்ததே (44)
104

கதிரைமலைப் பள்ளு
முல்லை
அடரும் புனலிற் சுடரும் சுழிகண்
டண்டர் வெருவி யோடவே
ஆவின் குலங்கள் தியங்கிப் புனலில்
அலைபுட் குடம்போ லலையவே
படலுந் தடியும் கொடியும் குடிலும் பாயும் பாதைத் தொகுதியும்
பச்சை மாதவிப் பைந்தாண் மலரும் பலவும் புனலிற் படியவே
திடரும் பெருகித் திரைகொண் டெறிந்து
சிறக்கும் கனகஞ் சிதறியே
செறியு மறியும் கொறியு முயலும்
திரையிற் கரையிற் சிதறவே
சுடரும் பஞ்சா யுதன்பொற் பதங்கள் தொழுது கலவிச் சுலவியே துய்ய முல்லை யெல்லை கடந்து
தோன்று மருதம் புகுந்ததே. (45)
மருதம்
மருத வனத்தைத் துளக்கி யுழக்கி
மணக்கு மிஞ்சி செண்பகம்
மாழை வாழை தாழை வேழம்
வருக்கை பலவும் நெருக்கியே
105

Page 56
கதிரைமலைப் பள்ளு
முருக்கித் திருக்கி யடிகள் பறிய
முறித்துக் குடிலின் மோதியே
முளரித்தடத்தை மடக்கிக் கலக்கி
முதிரும் வெள்ளம் பரந்து போய்ப்
பெருகு புகழ்கொண் டுயர்தென் கதிரைப் பெருமான் தனது தொண்டர்மேற் பெருத்த கருணை வெள்ளம் போலப்
பெருகி யெங்கணு மருவியே
தருவைந்துடைய குலிச பாக
சாதனன்றனை வழுத்தியே தாழ்ந்து மிகுந்து மருதங் கடந்து
தழைக்கு நெய்தல் புகுந்ததே (46)
நெய்தல்
புகுந்து தாழை வனத்தைக் குறுகிப்
பொடித்து மடித்து விருப்புடன்
போதை வீசித் தங்கு மறலிற்
புரியுந் திடரைச் சருவியே
பகிர்ந்து மகிழ்ந்து பரந்து நிறைந்து
பாரக் கடலிற் சேரவே
பரவிப் பரவர் வலையுங் கயிறும்
பாயும் பாதைத் தொகுதியும்
மிகுந்த கலமும் மரமும் பாயும் வீச்சு வலையும் வீசிமேல்
மிதக்கும் புணையும் தூண்டிற் கயிறும்
வேண்டும் பவளக் கொடிகளும்
106

கதிரைமலைப் பள்ளு
முகுந்த னனந்த சயனம் பயிலும் மூரிக் கடலைத் தாவியே முடுகித் திரையிற் கரையிற் படிந்து
முதிரும் வெள்ளம் பாய்ந்ததே. (47)
மாக நின்று குலவி வந்துயர்
மலையைக் கடந்து மண்ணின்மேல்
வழுத்திக் குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்த லிவையெலாம்
ஒகை கொண்டெழ வாரி மண்டி உலவி யெங்கணு மோடியே
உடைத்துப் புடைத்து நிலத்தைக் கலக்கி
உலகர்க் குதவும் படியதால் (-18)
ஏக னெம்பெரு மான்பரன்தரும்
ஏந்தல் கதிரைக் கிறைவன்நால்
எட்டறம் புரியன்னை பாலன்
இமையோர் தற்பர மானவன்
வாகன் வள்ளி மணாளன் மகிழ்ந்து
வாழும் கதிரை நாட்டிலே மாவலி கங்கை யாறது பெருகி
வருதல் பாரும் பள்ளிரே. (49)
வெள்ளத்தில் ஒடும் மீன்வகை
குண்டத் திருக்கை பறவை தாளம்
கொடுவா லுழுவை கும்பிளா குறவை பிறையன் காரை மணலை
குழு முரல்கடல் மறிமண்ணா
107

Page 57
கதிரைமலைப் பள்ளு
தொண்டை மடவை நாரை பாரை சுறவு வாளை கடல்வரால்
சுரும்பு நெத்தலி கெத்தலி கத்தலை
தும்பை யோரா வஞ்சூரன்
கெண்டை திரளி சள்ளை வெள்ளை
கீழி காலை பாலைமீன் கெளிறு மலங்கு கலங்கு புனலிற்
கீழுலாவு றால் முறால் மண்டிக் குதித்துக் கடலின் மீன்களும்
வாவிக் கழியின் மீன்களும் மதத்துச் சினத்துக் குதித்துப் பாயும்
வளமை பாரும் பள்ளிரே (50)
பண்ணைத்தலைவன் வரவு
சுற்றித் திரித்தபழு தைப்புரிபோல் வாகும்-மிக்க
தொந்திவயிறும்வளையற் காலினழகும் வற்றிப்போன வாரணம்போல் மார்பினழகும் -சுட்ட
வட்டப்பானைபோ லுள்ளமொட்டந்தலையழகும் உற்றுப் பார்க்க வச்சமான கூகைமுகமும்-தெத்தல்
ஒலைச்செவி யூசற்பாசிப் பல்லினழகும் சற்றப்பாலே விட்டுப்போன வொட்டற்காதும்-பெற்ற
தனிப்பண்ணைக் காரனாரும் தோற்றினாரே. (51)
108

கதிரைமலைப் பள்ளு
பள்ளியர் பண்ணைத்தலைவனை வணங்க வருதல்
மேகவர்ணச் சேலையுடுத்துல்காசம் பூண்டு- கையில்
விரலாழியிட்டிருகைக் கடகம்பூண்டு ஆகமீதி லாரம்புனைந்தாரம் பூண்டு- விழிக்
கஞ்சனமும் மெழுதிநுதற் சிந்துரமிட்டு நோகவஞ்சி யிடைகனத்த தனபார மசையக் -காலில்
நூபுரஞ் சிலம்பலம்ப மெல்லநடந்து பாகனைய சொல்லுடைய வன்ன நடையீர்-எங்கள்
பண்ணைக்கார னாரைத்தொழ வாரும்பள்ளிரே (52)
பண்ணைக்காரனாரை வணங்குதல்
சுரித்த கழுத்தனாரே கும்பிடுகிறேன்-வட்டச்
சொறித்தேமற் காதனாரே கும்பிடுகிறேன் பெருத்த வயிறனாரே கும்பிடுகிறேன்- வாதம்
பிடித்தபொற் காலனாரே கும்பிடுகிறேன். திருத்தமில்லாதவரே கும்பிடுகிறேன்- சற்றே திருகல் முதுகனாரே கும்பிடுகிறேன் அரித்ததந்தத்தனாரே கும்பிடுகிறேன் -பண்ணை
ஆண்டவரே யாண்டவரே கும்பிடுகிறேன் (53)
மூத்தபள்ளி பண்ணைத் தலைவனிடம் முறையிடுதல்
பண்ணைக்கார னாரைக்கண்டு மாவலி கங்கை -வயற்
பள்ளிதானு முள்ளமுறைப் பாடெல்லாஞ் சொல்வாள்
பெண்ணைப்புறஞ்சொன்னதென்று கோபங்கொள்ள வேண்டாம்-என்
பேச்சைச்சற்றே யுற்றுக்கேளும் பேதைப்பள்ளன் தனது
109

Page 58
கதிரைமலைப் பள்ளு
கண்ணைப்போலே பகிரதாகங்கைப்பள்ளி தன்னை- வைத்துக்
கன்னித்துய ராக்கியெனைக் கைவிட்டா னாண்டே எண்ணத்திலு மவளல்லா லென்னை நினையான்- அவள்
இட்டமருந்தால்மயங்கி விட்டான் காணாண்டே (54)
இளையாள் எதிர்மாற்றம் கூறுதல்
ஆண்டவர்க் கல்லாது பின்னை யாருக்குரைப்பேன்-இவள்
ஆகடியம் பேசியதை யாருடன் சொல்வேன் மூண்டசினம் தீரவென்கை தீண்டுவே னாண்டே-திரு
முன்னேயாச்சுப் பின்னேயல்ல வென்னதான் சொல்வாள் வாண்டது முண்ட துஞ்சில வளப்பங்கேளு மாண்டே-கொழு மண்வெட்டி விற்றுத்தின்ற திவனிவளொ டாண்டே வேண்டுமென்ற பண்டங்கொண்டு கள்ளுமருந்தி-என்தன்
மேலேபிழை சாட்டிவிட்ட மேன்மையோ ஆண்டே (55)
மூத்தபள்ளி கூற்று
மேன்மையெந்தன் முன்னின்று பேசாதே போடி- கரு
வேழமதமும் பிணத்தி லிட்ட ரிசிதானும் தேனும்வெள்ளைக் குன்றிமணி வேருநாரு மிலையும்-கன்னித் தென்னைமுன்ன மீன்றதொரு தேங்காயும் சேர்த்தே கானமீது நிறைகள்ளிப் பாடலுடனே வேருங்-கருங்
காக்கணங் கொவ்வை விரையுங் காக்கை நாக்கும் ஆனபடி யுண்டைகூட்டிப் பள்ளனுக் கிட்டே-பின்னும்
ஆரறிவா ரென்றுசொன்ன தாரடி பள்ளி (56)
110

கதிரைமலைப் பள்ளு
இளையபள்ளி மாற்றம்
ஆரைவெறுப் பேன்விதியை யல்லாது பின்னை- எங்கள்
ஆண்டைமுன்னென்னைப்பார்த்தில்லாதெல்லாஞ் சொன்னாள் ஊரையுலை மூடிகொண்டு மூடலாமோடி - இந்த
ஊருக்கு ளாருக்கடி யுண்டிந்த வித்தை ܫ
தேரைவிழி யுந்திரங்கற் றேவாங்கின்பித்தும்-புற்றிற்
செல்லுநச்சுப் பல்லிவாலு நெல்லிக் கொழுந்தும்
சாரை நிணமும் உருக்கிக்கூட்டி யுலர்த்தி-வீரத்
தலையோட்டில் மையுண்டாக்கிச் சாதித்தா ளாண்டே (57)
மூத்தபள்ளி கூற்று
காட்டில் வாழுங் கழுகின் தயிலமும்
கையி லூத்தையு மெய்யில் வேர்வும் கோட்டு நாகத்தின் பூவும் துடரிக்
கொழுந்துங் கூன லழுங்கின் தசையும் வேட்டை வாளியின் கூடு மடவியில்
வேடன் பாடலிச் சாற்றி லரைத்து ஊட்டியே பள்ளன் தேட்டமெல் லாம்பறித்
துண்ட கள்ளி யிவள்கானு மாண்டே (58)
இளையபள்ளி மாற்றம்
மெய்யில் நாவிச் செவியினில் மாசுடன்
வேங்கைப் பல்லுந்தே வாங்கினிற் பித்தும்
பைய ராவின் தலைதனின் மூளையும்
பன்றி முள்ளுமொருள்ளியும் கூட்டிக்
111

Page 59
கதிரைமலைப் பள்ளு
கையி னாலே யரைத் துண்டைபண் ணிவெங்
கள்ளுஞ் சுள்ளுடன் பள்ளணுக் கிட்டான்
பொய்யு மிந்திர மாசால வித்தையும்
பூரை யென்னவும் கற்றாள் காணாண்டே (59)
மூத்தபள்ளி கூற்று
கற்ற வித்தையெல்லாமிந்த வூரவர்
கண்டு கேட்டு மிருப்பவர் போலே இற்றை நாள்வரை யிதையொன்றாய் வைத்துநான் எப்படிச் சொல்லு வேனென் றிருந்தேன் சற்றே தண்ணிர் தலைக்குமே லோடினால்
சானென்னமுழம் தானென்ன சொல்லும் உற்ற வேளையிற் சொல்லா திருந்தால்
உறுதி யல்லவென் றுரைத்தேன்கா னாண்டே (60)
இளையபள்ளி மாற்றம்
மண்ணிற் பாதம்வைத் தாலிங் குயிர்பல மாயு மென்றே உறியிலிருப்பார் எண்ணிப் பேதமில்லாமற் கொலைகள்
இரவிற் செய்யும் சமணரைப் போல உண்ண வுந்தின்ன வுங்கள்ளுக்குப்பண்டம்
உள்ள பண்ணையில் மாட்டையும் விற்றுத் திண்ண மாகவென் மேல்வைத்து மாறின
செய்தி தன்னையுங் கேட்டீரோ வாண்டே (61)
112

கதிரைமலைப் பள்ளு
மூத்தபள்ளி கூற்று
அக்கரை யாற்றி லிக்கரை மண்ணும்
அழுத பாலனடிப்பட்ட மண்ணும்
திக்கெங் குந்திசை யேழுரில் மண்ணும்
திரட்டியே தெய்வப் பிள்ளையா ராக்கி
அக்கினிக் குள்ளே வைப்பாள் செபிப்பாள்
அழைப்பாள் கானு மவன்வர வாண்டே. (63)
இளையாளைப் பண்ணைத் தலைவன் உரப்பல்
அருக்குவாள் சற்றே விழிக்குமை யெழுதுவாள்
அழகான கூந்தலை யஸ்ளி முடிவாள் செருக்குவாள் சற்றே செல்லங்கொண் டாடுவாள் தேனுடன் கொஞ்சம் பாலுங் கலப்பாள் உருக்குவா ளூரில் பள்ளரெல்லோரையும்
உச்சியாம் பொழுதூணுக் கழைப்பாள் நருக்குவேன் கையில் மண்வெட்டி யாலே
நாட்டுக் காகப் பொறுத்தேன்நான் கானே. (63)
பள்ளன் மூத்தபள்ளியை நேரஞ் சென்றதற்குக் காரணம் கேட்டல்
என்னடி பள்ளி யேகாந்தக் காரிநீ
இந்நேரம் மட்டு மென்னடி செய்தாய்? (6-4)
113

Page 60
கதிரைமலைப் பள்ளு
ஆறு போந்தங்கே தண்ணிரு மள்ளி
அழுத பிள்ளைக்குப் பாலும் புகட்டி
சேறு போந்த சிறுநெல்லுக் குத்தித்
தீட்டி யாக்கவும் சென்றதோ பள்ளி (65)
அவள் ஆண்டைக்குக் கூறுதல்
காலமே சென்று பாலுங் கறந்து
கமுகம் பூப்போ லரிசியுந் தீட்டிக்
கடுகவே வைத்துக் காய்ச்சிய பாற்கஞ்சி
காலாலே தட்டி யூற்றினா னாண்டே (66)
இப்படிக் கொத்த நாடங்கப் பள்ளனுக்
கெப்படிக் கஞ்சி காய்ச்சுவே னாண்டே (67)
பள்ளனை விளித்துப் பண்ணைத்தலைவன் பண்ணைச்செயல் வினவல்
இந்நிலம் புகழ் தென்கதிரைக் கும
ரேசன் பண்ணை வயல்தனிலுள்ள செந்நெல்லும் விதை வன்னெல்லுக் கோட்டையும்
செப்பமான நுகமும்நன் மாடும் வன்ன மேழியும் மண்வெட்டி யும்பட
வாளும் பாரக் கொழுவு மேர்க்காலும் இன்ன தென்று கணக்கெனக் குச்சொல்ல
இங்கேவா மாவிலி கங்கைநற் பள்ளா. (68)
114

கதிரைமலைப் பள்ளு
பள்ளன் அவைகூறல்
அந்து தின்றதோ ராயிர கோடி
ஆவினந் தின்ற தாயிரங் கோடி சிந்தி யேவெள்ளெலியுங் குருவியும்
தின்று போனதோ ராயிரங் கோடி விந்தை மானும் மரையும் மதஞ்சொரி
வேழ முந்தின்ற தைஞ்ஞாறு கோடி இந்த நாளள வின்படி யாக
இருந்த கோட்டையி தொன்றுந்தா னாண்டே (69)
துய்ய தென்கதிரைப்பதி வேலவர்
சூரை வெல்லத் தொடங்கிய போது அய்ய மாக வெருண்டோடிக் கானில்
அடைந்து போனதோ ராயிரங் காளை வைய மீது கவிப்புல வோர்க்கும்
மறைவல் லோர்க்குமீராயிரங்காளை கையி ராறுடை யானையன் துய்யன்முக்
கண்ண னேறெனக் காளையொன் றுண்டாண்டே (70)
வெற்றி சேர்கதிரைக்கும ரேசர்க்கு
வேத நூற்படி கோவிலுண் டாக்க உற்ற போது நிலம்பரிசோதிக்க
உழுது தேய்ந்த தொராயிர கோடி மற்ற தெல்லாம் வயலுழும் போதினில்
மாணிக்கம் பட்டுத் தேய்ந்தன போக அற்பு தன்னறு மாமுகன் மாதுலன்
அண்ணன் பாலொர் கலப்பையுண் டாண்டே (71)
115

Page 61
கதிரைமலைப் பள்ளு
கன்னல் சேர்வயற் றென்கதிரைப்பதிக்
கந்தன் கோவிலில் மாமதில் செய்ய மின்னுஞ் சுண்ணமில்லாமல்வி சாரிக்கும்
வேளை யில்வந்து காட்சிகொடுத்தோன் சொன்ன தோரிடத் திற்கதை வெட்டித்
தொலைந்து போனதொ ராயிரகோடி என்னி டத்தினில் வேறொன்று மில்லை
இந்த மண்வெட்டி யொன்றுந்தா னாண்டே. (72)
மூத்த பள்ளி முறையீடு
அருமறை நூலன் -எழில் பெறும்
அசுரர்கள் காலன்- எழில் மிகும்
ஆனவை வேலன் - சங்கரி
அருளிய பாலன்
கருமுகி லொருவன்-மனமிக
மகிழ்வுறு மருகன்- பன்னிரு
கையுடைமுருகன்- மாவிலி கங்கைநல் வயலில்
அருவிகள் கொய்யான் -அதுதொழில்
அடுத்ததும் செய்யான்- அல்லும் பகலும்
அடியளை வைவான்-அவனுரை அடங்கலும் பொய்தான்
ஒருமொழி சொல்லான்-என்னுடை
அருகிலும் நில்லான்-ஒருகுடி கெடுக்கவும் வல்லான்-அதிக
ஊதாரி கானாண்டே. (73)
16

கதிரைமலைப் பள்ளு
குறமகள் பாகன்-எழில்தரு
கோலமெய் வாகன்- அரனருள்
குரிசில் குமாரன்-வெகுயுகழ் கொண்ட வுதாரன்
மறைதனக் கரியான் -வடிவுள
மஞ்ஞையிற் பிரியான்- மனமிகு
மாவிலிகங்கை- வயல் தனில்
மருவியங் கங்கே
நிறை புனல் தெளியான் -வளர்பண்ணை
நிறைகளை கழியான் -என்னை
நெருப்பெனப் படுவான்- அவள் தன்னை
விருப்புடன் தொடுவான்.
உறைபதி யங்கே -ஆண்டைக்
கொரு பொழுதிங்கே- சொன்னால் உருட்டியே யடர்த்தங்- கென்னை
வெருட்டுவா னாண்டே (74)
உம்பரை மீட்டோன்-வேதனை
ஒருமொழி கேட்டோன்-அடியவர்க்
குறுதுயர் தீர்ப்போன்-வன்ன
ஒயில்திகழ் மயிலோன்
கம்பநல் யானை - முகமுள
ஐங்கர முடையோன்-துணையெனக் களிகொளும் வேலன்- மாவிலி
கங்கைநல் வயலில்
117

Page 62
கதிரைமலைப் பள்ளு
வம்புகள் பண்ணு - வன்அவள் தன்னை
மனத்தினி லெண்னு - வன்விளை செந்நெல்
வயலையும் பாரான்-என்னுடை
வளவிலும் வாரான்
அம்பெனும் விழியாள் - கிளியினும்
அதிவித மொழியாள்-என்னுடை ஆருயிர்க் கினியாள் - என்றாங்
கறைகுவனாண்டே (75)
வாரணக் கொடியோன் - பங்கய
மலரெனும் விழியான் - சூரனை
வன்சிர மரிந்தோன் - வஞ்சகர்
நெஞ்சிடம் பிரிந்தோன்
காரணக் கந்தன் - வரமருள்
கெளரிதன் மைந்தன் - பன்னிரு
கையுடை முருகன்- மாவிலி கங்கைநல் வயலில்
ஏர்தனைப் பிடியான்- மனதினில்
எனக்கறக் கொடியான்-இல்லத்தை
எட்டியும் பாரான்- வயல்பண்ணைப்
பட்டியும் பேரான்
சூர நெட்டூரப்- பள்ளன்
துடிப்புடன் நெளிப்பும்- போகத் துச்சன னிவனைத் -தொழுவில்
தொடுத்திடு மாண்டே. (76)
118

கதிரைமலைப் பள்ளு
பள்ளன் தொழுவில் மாட்டுண்டு கிடக்க மூத்தபள்ளி வந்து கண்டு கூறுதல்
ஆகமு முயிரும் போலே யொன்றாய்
அவளிட மாசை யாகிய போது
காகமும் வில்லும் போலவே யென்னைக் கண்ட கண்ணும் கடலிற் கழுவித்
தாக மேறிப் பகீர தாகங்கைத்
தனிவயற் பள்ளி தன்குடிற் கேகிப்
போக வென்சலிப் புங்காலிலே தொழுப்
பூண்டி ரோசொல் புலைப்பள்ள னாரே. (77)
ஒன்று நான்சொல்ல வொன்பதுஞ் சொல்லி உறுக்கி யேவை துரப்பி வெருட்டிக் கன்று காலியும் விற்றுக் கள்ளுஞ்சுள்ளுங் கள்ளப் பள்ளியாரோடு குடித்து என்றும் பண்ணை வயல்தனில் வாராமல்
எடுத்துப் பேச்சில் வெருட்டி யுருட்டி நின்று மிண்டுகள் தான் பண்ணுகின்ற
நெளிப் பெங்கேசொல் புலைப்பள்ள னாரே. (78),
அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டுதல்
கன்னியாக வுணைக்கைப் பிடித்துநான்
கண்ணைப் போலக் கருதி நடந்தேன் முன்னை வல்வினை யாலே யுனைவிட்டு
மோச மாக வவளிடம் போனேன் அன்னை பின்மனை யாளென் றெவருக்கும்
அவனி யோர்சொல்லு மப்படிப் போலே என்னை நீருங்க ளாண்டைக்குச் சொல்லி
இருகை கூப்பி விடுவித்துக் கொள்ளும். (79)
119

Page 63
கதிரைமலைப் பள்ளு
அவள், அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்
கான வேடரைக் கண்டு நின்றாங்கே
கனகம் போல மலர்ந்தொரு வேங்கை தான தாய்நின்ற தென்கதிரைப்பதிச்
சண்மு கன்குகன் தன்பண்ணை தன்னில் போன மாடுங் கலப்பை நுகமும்
பொதுக்கில் லாமலே நானொப்புத் தாறேன் ஆன செந்நெல் பயிர்செய்து தாறேன்
அடியேற்காக விடும்பள்ள னாரை. (80)
வேறு
பொன்னகர் மேவிய மன்னவனே யென்றனாண்டே
பள்ளன் பொல்லாத கள்ளுக்குடித்த மதியினாற் போனான்
மன்னிய மாவிலி கங்கைநல்யாறு பரவுதே-கட்டி
மறிக்கவும் வேறொரு பேரில்லையேபண்ணை யாண்டே (81)
வேளை முகூர்த்தமும் வேளாண்மை நேரமுமாகுதே-பள்ளன்
வேலை தன்னை பிங்கேயார் விடுவார்கா னாண்டே
ஏழையெனக் காகப்பிழை பொறும் பண்ணை யாண்டே- பள்ளன்
இருகாலிற் பூண்ட தொழுக் கழற்றுமெ னாண்டே (82)
தொழுவிலிருந்து விடுபட்ட பள்ளன் விதை முதலிய வளம் கூறல்
சின்னக் கொம்பன்வெள்ளை வாலன் புள்ளிச்சிவப்பன் -காலிற்
சிலம்பன் குடச்செவியன் செங்காலன் கூழை
வன்னத் தேமற்காதன் தோகை வாலன்கறுப்பன்- சற்றே
வளைந்தகொம் பன்மயிலை யணில்முது கன்நல்ல
120

கதிரைமலைப் பள்ளு
கன்னத்திற் சுட்டியன்வட்டக்கட்டைக் குளம்பன்- துய்ய
காயாமலர் போனிறத்தன் கருங்கழுத்த னென்றே
செந்நெல்தர ளஞ்சொரியு மாவிலிகங்கை- வயற்
சேரும் பண்ணை மாட்டின்வகை செப்பினேனாண்டே (83)
சுத்தமர கதத்தாலே படவாளும் துய்ய
சோதிவயிடூரியத்தா லேர்க்கா னுகமும் நித்தமிலங்கும்புருட ராகமேழியும் மணி
நிலவெறிக்கும்வயிரத்தாலே கொழுவும் பத்தரைமாற் றுத்தங்கப் பூட்டாங் கயிறும்
பளிங்கினா லேசமைத் திட்டவுழு கோலும் கத்தன்கதிரைக்கிறைவன் மாவிலிகங்கை- வயற்
கலப்பைக் கணக்கின் வகை காணுமென்னாண்டே (84)
நெல்லு வகை
பச்சைப்பெருமாள்கறுப்பன் பாளைமுகரன்-செழும்
பன்றிக்கூரன் வெள்ளைவாலன்பவளச் சம்பா அச்சடியன் கார்குருவை யானை முகரன் -குண்டை
ஆனதொரு பெருநெல் லழகிய வாணன் மெச்சிப்பல ரும்விரும்பு மலையழகன் துய்ய- கதிர் வேற்பெருமான் மாவிலி கங்கை வயலில் இச்சையுடனே நெல்லின் கணக்குச் சொன்னேன்
இன்னமுள நெல்லின்பேர் சொல்லொணா தாண்டே (85)
நெல் விதைக்கும்படி கூறுதல்
அருக்க னென்றால்நல்ல ரேவதி யென்றால்
ஆனமிர்த யோகமென்றாற் பஞ்சமி யென்றால்
பெருத்த முகூர்த்தமுச்சி மிதுனமா மென்றாற் பேரான கரணமுஞ் சிங்கமா மென்றால்
21

Page 64
கதிரைமலைப் பள்ளு
கருத்துள் நினைப்பவரைக் காப்பவனா மெங்கள்
கந்தவேள் மாவிலி கங்கை வயலில்
திருத்தி வரம்புகட்டிப் பரம்படித்து நல்ல
செந்நெல்விரை தெளித்திடச் செல்லடா பள்ளா. (86)
வயலுழும்போது பள்ளனைக் காளைமுட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்த செய்தி பண்ணைத்தலைவர்க் கறிவித்தல்
மாறில் லாத புகழுடை யோனரன்
மைந்தன் மாவிலி கங்கை வயலில் ஏரும் பூட்டி யிணைக்கிணை சால்விட்
டிணங்க வேநின்றுழுகின்ற நேரம் ஆறு பாயக் கயல்குதிக் கொள்ள
அஞ்சி யேயுள்ளிக் காளை வெருண்டு சீறியே யெங்கள் பள்ளன்மேற் பாயத்
தியங்கிச் சேற்றில் விழுந்தான்கா னாண்டே (87)
பள்ளிகள் புலம்பல்
மாலைப் பொழுதிலே- மருதடி வயலில்
மாணிக்கச் சிலம்பனை- வலக்கையிற் பிடித்து கோலக்குதிரைக் குடலன்- கூரிய கொம்பால்
குத்தி யெடுத்துக்-கோட்டிலே வைத்து ஏலக்குழலாள் -எழுவியுன் புருஷனை
எருதுபாய்ந்த சேதி- இன்னுமறிந்திலையோ பாயுமெரு தென்றுசொன்- னாருமிலையையோ
பாவிப்பண்ணைக் காரனாரும் பள்ளனுக்குமுன்னே (88)
மாவிலி கங்கை வயலுழையிலே- உனைச்சீறி
மதக்காளை யுறப்பாயவே
பாவியேன் செய்த வினையோ- எங்கை
பள்ளிகண்ணுாறு பட்டதோ வறியேன்
122

கதிரைமலைப் பள்ளு
சேவின் கழுத்தில் நுகம்முதல் வைத்திட்ட- அந்தச்
சீரில்லாதபொல்லா முகூர்த்தமோ
ஆவிமயங்கியிங் கேகிடக்கின்றாய்நீ எழுந்திராய்
அலங்கார வீரப்பள்ளனே. (89)
கஞ்சமுகப்பள்ளி யிளையாள் கள்ளில் இட்ட
கற்ற வித்தை சித்தி பெற்றதோ
கொஞ்சி யவள் தனைச் சேராமலிருந்த-வெங்
குறையாலே மையல் கொண்டதோ
வஞ்சநெஞ்சி செய்திட்ட சூதோ -நீ எழுந்திராய்
வடிவின் மிகுந்த பள்ளனே. (90)
துஷ்ட நிஷ்டூரப் புலைச்சி- அவள் சண்டி துரோகி யிலை யாளவ ளன்பால் பட்டி மாட்டைக் கொள்ளையாய் விற்று-உனக்கும்
பரிவினா லூட்டிய கள்ளில் இட்டமருந்தாலுனக்கு வந்தபொல்லாப்போ- ஐயோ
இரண்டு கண்ணும் மேற்சொருகி மட்டில்லாத மூர்ச்சை பொருந்தி-மெத்த
வருந்துகின்றாயென் பள்ளனே (91)
மார்பின்முலை யரும்பு முனம்- என்னை மற்றொருவர் விரும்பு முன்னம்
தூரி யெழுதற்கரிய -எந்தன்
துய்ய விடை சோரு முன்னம்
123

Page 65
கதிரைமலைப் பள்ளு
சீரியதோர் புயந்தழுவி-என்னைச்
சேர்ந்து மதன்ரதியெனவே
ஒர் பொழுதும் பிரியாமல் இருந்தாய்
உகந்தென்னைப் பாராயோ. (92)
பன்னுதமிழோரெவரும் -நின்று பரவுகதிரையில் வேலன் மன்னியமா விலிகங்கை-வயல்
வளமைகளைப் பார்ப்பவரார் கொன்னுலவு மென்மார்பின் -வாசக் குரும்பை முலை பார்க்கிலையோ பன்னியவென் சோகமெலாம்- இங்குப்
பார்ப்பவரார் தீர்ப்பவரார் (93)
பள்ளனெழுந்திருத்தல்
ஆருமறியாததோ ரடவிதனின் -மத
ஆனைகா னாததோ ராலங்கன்று ஆருமறியாமலே சென்று - அந்த
அரிய மூலிகைதனைக் கண்டு ஆருமறியாம லேபிடுங்கி வந்து- அதை
அரைத்துக் கரைத்துப்பள்ளன் வாயில்வார்க்க சோரும யக்கமெல்லாமுடன் தெளிந்தே அங்குத்
துடித்துப் பதைத்துப் பள்ள னெழுந்தனனே. (9-)
124

கதிரைமலைப் பள்ளு
பண்ணைச்செயல் காணவருமாறு
பண்ணைத்தலைவனை வேண்டுதல்
மண்டல மெண்கதிரை வேலர்மகிழ் கின்ற
மாவிலி கங்கைவயல் தன்னி லுழுதே எண்டிசை யுந்திருக் கறவரம் பெடுத்தே
இட்டசிறு கட்டிதட்டிப் பரம் படித்தே தண்டமிழி தென்னவே செந்நெல் முளைத்திடவே
தழைதானே யெடுத்துவயல் தன்னில் நடவே கண்டிருகண் களிக்கவெங்கள் பணிவிடைக ளெல்லாம்
காணவர வேணுமிப் போபண்ணை யாண்டே ( 95)
நாற்று நடுதல்
(தரு)
அண்டர் பணியத் தவமும் பயனும்
அருளி வினைகளறுப்பவன் அருள் விளங்கிய கரிமு கற்கிளைய அறுமுகன் குகன் குருபரன் எண்டலம் புகழ் கதிரைக் கிறைவன்
என்றும் நினைப்பார்க் குரியவன் இருட்டு வஞ்சகத் திருடருக் கொளித்
திருப்பவ னெமைப் புரப்பவன் கொண்டல் வண்ணனுக்குரிய மருகன்
குமரனமர குஞ்சரி கொழுநன் மாவிலி கங்கை வயலில்
கூடி யாடிப் பாடியே
125

Page 66
கதிரைமலைப் பள்ளு
தண்டை புலம்ப விடைகள் நோவத்
தரளவடங்கள சையவே
தாவித் திரிந்து தூவி நாற்றுத்
தன்னை நடவாரும் பள்ளிரே. (96)
மயிலி லேறி வருமுதாரன்
மாரனுக்கு நல் மைத்துனன்
வாசக் கதிரை மலையில் வேலன்
மாவிலி கங்கை வயலிலே
கயிலி மயிலி குயிலி தையலி
கருவி திருவி யொருவியும்
காரி வாரி வீரி சூரி
கறுப்பி காத்தி கட்டைச்சி அயிலை நிகரும் விழிகள் புரள
அழகு பொன்முடி யசையவே அவர வர்க்கொரு பிடிவகுத் துவைத் ததிதீவிரத்துடன் நடுகையில் செயலின் மருவிக் கயல்கள் வெருண்டு
சேற்றிற் குதித்துப் பாயவும் சிறைப்புள் ளெடுத்துத் திரும்பிப் போகும்
சித்திரம் பாரும் பள்ளிரே (97)
மாலுக் கிளைய வல்லி முலையை
வருந்தி யருந்தி வளர்ந்தவன்
மாசி லாத கதிரை வேலன்
மாவிலி கங்கை வயலிலே
காலுக் கிசைந்த சிலம்பு புலம்ப
கனத்த தனங்களசையவே
126

கதிரைமலைப் பள்ளு
கனகப் பணிகளிலங்கக் கிரணக்
காது வடங்க ளாடவே
பாலுக் கிசைந்த தேனுக் குவமை பகரு மிரண்டு பாங்கியர்
பணிந்து குனிந்து நெளிந்து வளைந்து
பாடி யாடி நடுகையில்
வேலிக் கருகில் வேழத் திரளில்
விளைந்து பரந்த முத்தெலாம்
வெள்ளை யெகினம் கருவென் றயிர்க்கும்
விரகு பாரும் பள்ளிரே. (98)
மனத்திற் றவமுற் றிருந்த தொண்டரை
வளர்த்துப் பொருள்கள் கொடுப்பவன் வான்றென் கதிரை மலையில் வேலன்
மாவிலி கங்கை வயலிலே கனத்த தனத்தியனத்தின் நடைச்சி
கந்தி சந்தி சுந்திசிர் கன்னி பொன்னி யன்ன மென்னி
கமலி யுலகி கமலத்தி அனத்தி னினங்கள் என்னக் கூடி
அருகிப் பெருகிப் புருவத்தை அசைத்து நெளித்து நகைத்துக் களித்து
ஆடிப் பாடி நடுகையில் சினத்து மலங்கு கலங்க புனலிற்
சிறுத்த கெண்டைகள் சிதறியே தேரை பாய நாரை பறக்கும்
சித்திரம் பாரும் பள்ளிரே. (99)
127

Page 67
கதிரைமலைப் பள்ளு
காரைப் பொருந்துங் குவடு புடைசூழ்
கதிரைப் பதியில் கந்தவேள்
கானக் குறத்தி கணவன் கலக்கக்
கலங்கு மவுணர் குலங்களின்
மார்பைப் பிளந்தமாலின் மருகன்
மஞ்ஞைப் பரியிற் வருகுகன் மதுரைக் கவிஞர் புகழும் வேலன்
மாவிலி கங்கை வயலிலே சேரத் திரண்டு நிரைத்துப் பரந்து
சிரித்துப் புருவம் நெரித்துக்காற் சிலம்பு புலம்ப வோடிக் கூடிச்
செவ்வை யாக நடுகையில் தாரைப் பொருந்து மார்பிலே யிரு தனத்தி லேகுழைக் கனத்திலே தகைப் பிலேசின்னச் சிரிப்பிலே பள்ளன்
தயங்கிறானடி பள்ளிரே ( 100)
பொற்பு மிகுத்திடு நற்றவ முற்றிடு
புற்றுமுனிக் கருள் புரிந்தவன் புட்ப மெடுத்திரு பூம்பத மர்ச்சித்துப்
பூசைசெய் வார்களி லாசையான் மற்றவர் முப்புர முற்றெரியச் சினம்
வைத்துநகைத்தவன் மனமகிழ் மைந்தன் கதிரை மலையில் வேலன் மாவிலி கங்கை வயலிலே சற்கரை யொத்திடு சொற்களுரைத்திடு
சற்குண மங்கையர் கூடியே சற்றுமோர் குற்றமில் நெற்பயிருற்றிடு தன்மைய ராயங்கு நடுகையில்
128

கதிரைமலைப் பள்ளு
அற்புதச் சிற்றிடை வெற்பு முலைக்கணத்
தற்றிடு மற்றிடு மென்னவே
அக்குழ லிற்கரு விற்பொலி வண்டுகள்
ஆர்ப்பது பாரும் பள்ளிரே. (101)
கலைக்கு கந்தவர் மிகுத்துக் கற்றவர்
கருத்து றத்தொழுங் கந்தவேள் கருத்து மகிழுங் கந்தன் மாவிலி கங்கை திகழுநல் வயலிலே சிலைக்குக் கைத்தொயிலிழைத்துக் கட்பொத்து
கைக்கூ டைத ரித்துத்தாள் தெரித்துத் திக்கெங்கும் மதிக்க வெண்டு ய்ய திங்கட் குடையோன் முடியென்ன முலைக்குப் பொற்கச்சிட்டிறுக்கிச் சிற்றிடை
முறுக்கிப் பட்டுடை திருத்தித்தான் முதிர்ச்சி கொண்டு திமிதித் தொம்மென
முடுகிக் கடுகி நடுகையில் வலைக்குத்தப்பி வயலிற் கிடந்த
வண்சங் கோடுறு வாளையை வணக்கொக் குக்கொத்தியெடுத்தொக்கக்கக்கும்
வளமை பாரும் பள்ளிரே ( 102)
நெல் விளைதல்
மருமத்திலங்குங் கடம்பனுயர்ந்த
வானவர்க் கரு ளானவன்
வளருங் கதிரை மலையில் வேலன் மாவிலி கங்கை வயலிலே
129

Page 68
கதிரைமலைப் பள்ளு
ஒருசொற்குரியன் முருகற் கன்பன்
உயாகு லததவ னுததமன உலகம் புகழு மமரர் நாதன்
உதவும் புதல்வ னானவன் திருவுக் கிறைவன் சரணம் போற்றிச்
செய்யுந் தர்ம நாயகன் சிந்தை மகிழ்ந்து தினமும் புவியிற்
செய்யுந் தருமம் போலவே பெருகிப் பயிர்கள் வளர்ந்து கதிர்கள்
பேத மின்றியுண் டாகியே பெருமையான தொண்டர் மேல்வைத்த
கருணை போல விளைந்ததே ( 103)
அருவி வெட்டுதல்
தேனவிழ் பூந்தொடை மார்பன் குகன் தென்கதிரைப்பதிக் கிறைவன் வானவர் போற்றிடு முருகன் மகிழ்
மாவிலி கங்கை வயலில் கூனரி வாள்கை யெடுத்தே செந்நெல்
கூட்டமிட்டே கொய்யத் தொடுத்தே தானருவி விரைந்து வெட்டு மந்தத்
தன்மை பாரும் பள்ளிரே (10.-4)
தொண்டர்களுக் கருள் கொடுப்போன்- அன்பர்
தொல்வினை பற்றறக் கெடுப்போன்
மண்டலம் புகழ் முருகன்- குகன்
மாவிலி கங்கை வயலிலே
130

கதிரைமலைப் பள்ளு
கண்டவர் களெட்டிப் பார்க்கப் -பண்ணைக்
காரனார் கண்ணுக்கு மேற்கத்
திண்டிற மாய்வெட்டித் திரும்பிப்-போகுஞ்
சித்திரம் பாரும் பள்ளிரே. (I05)
கந்தமிகுந்ததார் மார்பன்-கறைக்
கண்டனு கந்தகு மாரன் - வைவேற்
கையன்- அன்பன்- மெய்யன் -மிகு துய்யன் -செய்ய-மெய்யன்
சிந்தைநினைந்தவர்க் கன்பன்-உற்றுத்
தேடாத வர்க்கொரு வம்பன் -செங்கை வேலன் -உமை- பாலன்- அசுரர்ச்
செற்றிடு காலன்நல் வயலில் இந்தெனு மென்னுதல் மானார்- மத
லீலைக்கிசைந்த செந் தேனார்-கயல் விழியார்- குழல் - மொழியார்- கூந்தல்
நெளியார்-பசுங் -கிளியார் தெந்தன தெந்தன வென்றே வெட்டிச்
சின்ன நெடுங்குர லொசியச் சிந்தை மகிழ்ந்து கொண்டாடி -வயற்
செந்நெலருவிகொய் தாரே. ( 106)
பொலிகுவித்துப் பொலிகாணப் பண்ணைத்தலைவனை அழைத்தல்
மன்னுடிகழ்த் தென்கதிரை வேலர்மகிழ்கின்றதுய்ய
மாவிலிகங் கைவயல் - தன்னில்விளைந்த
செந்நெலறுத் தேனவைகள் சேரமலை போலச் செப்பமுடனாயிரம்போர் கட்டி மிதித்தேன்
13

Page 69
கதிரைமலைப் பள்ளு
கொன்னுலவு நாகமெனத் தூற்றிக்குவித்தேன்-அதில்
கோவில்விரைக் கைஞ்ஞாறுகோட்டைகட்டிவைத்தேன்
இன்னதள வென்றுகண்டு கண்களிக்க-இப்போ
நீருமங்கெழுந்தருளவேணும் பண்ணையாண்டே (107)
பள்ளன் மூத்த பள்ளியைக் குறித்து முறையிடுதல்
மூத்தபள்ளி யென்னைமெத்த மோசடிகள் சொன்னாள்- அவள்
மோசம்பண்ணியேபசிக்கு மோருந்தாராளாம் வார்த்தை யொன்று சொன்னவுடனொன்பதுஞ் சொல்வாள் -எதிர்
வரும்பொழுது நீட்டிய கால்மடக்காமலிருப்பாள் பார்த்தபொழுதெல்லாமெனைப் பழுது சொல்வாள்- சின்னப்
பள்ளியைக் கண்டவுடன் துள்ளிவிழுவாள் கோத்திரத்திலில்லாத குணம்படைத்து வந்தாள்-இவள்
குற்றமெல்லாம் ஆருடன் கூறுவேனாண்டே (108)
மூத்தபள்ளி முறையீடு
இல்லத்திலுஞ் சற்றுமிரான் என்னையுந் தேடான்-சொன்ன
ஏவல்சொன்னால் நாவையரி வேனடியென்பான் ஒல்லைபொழு தென்றுமவளில்லம்பிரியான் -செந்நெல்
உள்ளதெல்லா மவளுக்கே யுண்ணக்கொடுப்பான் அல்லும்பக லென்றுமில்லை அங்கே யிருப்பான்-அவட் காசைகொண்ட நாள் முதலென் னேசமறந்தான் சொல்லிப்பயனில்லைப் பின்னை யென்னதான் சொல்லான்-தன்மேற்
சூழ்ந்த பிழை யெல்லா மென்மேற்குட்டினானாண்டே (109)
132

கதிரைமலைப் பள்ளு
பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல் இளையபள்ளி
ஆமோடியி தெல்லாமிவ் வூரறியா தோடி- சொன்னால்
அத்தனையும் வெட்டவெளி யாக்குவே னடி
ஒமெடி யுன்னோ டுரைக்கலா மோடி- வெள்ளை
உப்புங் கர்ப்பூர மொக்குமோ போடி (110)
மூத்தபள்ளி
ஒக்குமோ தோகையுடன் வாரணமு மாடிப்-பொல்லா
உவர்நீரில் வேமோ பருப்பிங்கே போடி
வெட்கமில்லாதமுழு நீலிமழு மாறி- பாரில்
வேழங்கண் டாளியஞ்சி வெருளுமோ போடி- (111)
இளையபள்ளி
வெருட் டாதேபூனை யுடனேயெலியெதிர்த்தால் தப்பி
மீளுமோடி மாவலி கங்கையிற் பள்ளி பொருட் டாகவுனை வைப்பனோ போடி
உன்புத்தி யெல்லாமிங்கே சித்தியா தேடி. (112)
மூத்த பள்ளி
உரைத்த வுரைசொலி யெனக்குமுன் வர
உனக்குவீறோடி "
பரத்தை யுனதிரு தனத்தை யுயிரொடு
பறித்திடுவனேடி. (113)

Page 70
கதிரைமலைப் பள்ளு
பறியெடி திருவிலி யறிவிலி படு நீலி
பறிதனை நிகர் வயிறி
அறியெடி நாயே யெனதிரு கையின்
வலிமையை யறியா முழுமூடி.
மூத்தபள்ளி
மாறுரைபேசவு மேசவு மாச்சுதோ
மழுமாறியா முழுமூடி பேறிலாநீலி துரோகி யென்னோடுரை
பேசவுமா மோடி
இளையபள்ளி
பேசியுமென்னெதிராகவுநின்று பிழைக்கவும் வல்லாயோ
தேசம றிந்திடு மென்னுடை யாண்டவன்
செய்கை யறியாயோ.
மூத்தபள்ளி
எவ்வுலகு மெஷ்வுயிரு மெப்பொருளை யும்படைத்த
இறையவனைக் காலில் விலங் கிட்டுவைத்தவன் நவ்விதரித் தங்கையத்தன் வந்தினிய சொன்னதனால்
(114)
(115)
(116)
நான்முகனை விட்டவனம் மாண்டையல்ல வோடி(117)
இளையபள்ளி
அன்றமரர் சபைதன்னி லம்புலியைச் சபித்தே
அன்றுமுத லென்றுநல்லோ ராண்டிலொருநாள் இன்றளவு மங்கவனை நோக்காம லேயிருக்க
எதிராய்ச் சபித்தவனெம் மாண்டையல்ல வோடி. (118)
134

கதிரைமலைப் பள்ளு
மூத்தபள்ளி
சங்கரி கதவடைத்துத் தாழ்பூட்டத் தாழ்திறக்கச்
சங்கரன் தன்னாலும் முடியாத படியால் அங்கவணு மாங்கிவனை யேநினைக்கப் பூட்டுவிட
அப்போ திறந்தவனெம் மாண்டையல்ல வோடி. (119)
இளையபள்ளி
நித்தமும் மிவனையே நினைத்துப் பூசை செய்யாமல்
நிந்தித்த பேர்க்கொன்றுஞ் சித்திப்பதிலையால் அத்தனை பேருமுன் நினைப்பதுந் தொழுவதும்
அர்ச்சனை புரிவதும் நம் மாண்டைக்கல்ல வோடி (120)
மூத்தபள்ளி
என்றும் அவனிதனிலிருந்தக்கார முதலான
பண்டமெடுத் துண்டவனுன் னாண்டையல்ல வோடி.
இளையபள்ளி
அன்றுலவியேவலையில் மீனாகவே கிடந்து
அகப்பட்டுக் கொண்டவனுன்னாண்டையல்ல வோடி. (121)
மூத்தபள்ளி
அவனியறியத்தக்கன் வேள்விதனிற் றின்னப்போய்
அகப்பட்டுக் கொண்டவனுன் னாண்டையல்ல வோடி.
இளையபள்ளி
தவனமென வேசொல்லித் தேனுந் தினைமாவும்
சாதித்துத் தின்றவனுன் னாண்டையல்ல வோடி (132)
135

Page 71
கதிரைமலைப் பள்ளு
மூத்தபள்ளி
ஆங்கவனுக் கொருபெண்வே றெங்குங் கிடையாமல்
அசுரர்பெண் கொண்டவனுன் னாண்டையல்ல வோடி.
இளையபள்ளி
வேங்கைமர மாகிநின்று மின்னிடைக் குறமகளை
விரும்பி யணைந்தவனுன் னாண்டையல்ல வோடி. (133)
மூத்தபள்ளி
அம்புயத்தினால்மலையை யன்றெடுத்த ராவணன்றன்
அங்கையாற்குட் டுண்டவனுன் னாண்டையல்ல வோடி.
இளையபள்ளி
அம்புவியிற் றேவமின்னா ரானசொர்க்க மின்றிமிக
ஆரல்முலை யுண்டதுமுன் னாண்டையல்ல வோடி. (124)
மூத்தபள்ளி
அல்லவெடி நானும் நீயும் சொன்னதெல்லா மிருக்கட்டும்
ஆண்டையை யிழுக்கச் சொன்ன தாரடிபள்ளி.
இளையபள்ளி
வல்லமையாய் நீயுரைத்தால் நானுமதற் கானபடி
மாறுரையா தேயிருக்க மதிப்பாயோடி கள்ளி (125)
136

கதிரைமலைப் பள்ளு
மூத்தபள்ளி
மதியாதிரு கண்ணால் மருட்டியே காசுவாங்கி
வயிறு வளர்ப்பதுவும் நாங்களோ பள்ளி
இளையபள்ளி
கொதியுற்ற பிட்டுத்தின்று கொண்டகன வன்வயிற்றைக்
குறைத்துத் துரத்தினதும் நாங்களோ பள்ளி (126)
மூத்தபள்ளி
பல்லெல்லாஞ் சுரையின் விதைபோலவே யுதிரப்
பாதத்தினாலுதைப்பேன் பார்த்திரு பள்ளி
இளையபள்ளி
வல்லமையால் மாயவஞ்சப் புள்ளின்வாய் கிழித்தது போல்
வார்த்தைசொன்னவாய் பிளப்பேன் பார்த்திரு பள்ளி (127)
பண்ணைக்காரன் சண்டையை விலக்குதல்
பாரறிய வுங்களாண்டை இருவோருமோர் பிதாவின் பிள்ளை பண்பிதென்ன வென் றுறுக்கிப் பண்ணைக்காரனாரும்
போராயெழுந்த சண்டை தன்னையும் விலக்கிப்
பொலியளவு கண்டுமிகப் புத்தியுஞ் சொல்லி. ( 138)
புத்தமிர்த மன்னவிரு பேரையுநட் பாக்கிப்
போற்றி புகழ் தென்கதிரைப் புங்கவர் பிரானெங்
137

Page 72
கதிரைமலைப் பள்ளு
கத்தனெமை யாள்முருகன் கந்தவே ளருளைக்
கைதொழுது வாழிவாழி யென்றுவாழ்த்தினனே. (199)
வாழ்த்து
(இது நூலுக்குரியதன்று)
அருணவிக சிதகமல மலரைநிகர் தருவதனம்
ஆறுமனு தினமும் வாழி அமரர்தொழு கனகசபை நடனமிடு பரமசிவன்
அருண்முருகர் சரணம் வாழி கருணைமழை பொழிபனிரு நயனமதி னொடு வலிய
கவினுலவு தோள்கள் வாழி கனகிரியை யிருபிளவு படவுருவு நெடியவயில்
கரதலத்தினிது வாழி வருணமர கதவழகு திகழவரு மவுணனெனும்
மயிலினொடு சேவல் வாழி வனசரர்த மிறையுதவு குறமினொடு கடவுள்மயில்
எனுமிவர்கள் தினமும் வாழி தருணமிது வெணவமரர் பணிகதிரை யமர்கந்தர்
தமதடியர் நிதமும் வாழி சகசநிரு மலபரம சுகிர்த பரிபூரண
சடாக்ஷரம் வாழி வாழி (130)
இடைச் செருகல்கள், பாடபேதங்கள்
1. குமிழமுனை ஏட்டுப்பிரதியிலும் முல்லைத்தீவு அச்சுப் பிரசுரத்திலும் மேலதிகமாக நாடகமேடையில் நடிப்போர்
138

கதிரைமலைப் பள்ளு
உபயோகிப்பதற்காகப் பின் எழுந்தனவாகக் காணப்பட்ட
செய்யுட்கள்
முன்புபோலெனை அன்புவைத் தாள்வாய்
முள்ளியவளை மூத்த நயிந்தை (1)
முழுகிவந்து பகவானைக் கும்பிட்டு
மூத்தநாதனை முன்தண்டம் பண்ணி
களரிதன்னை வலமாகவே வந்து
காத்தருள் செந்தூர்க்காதலி யம்மை ( 2)
செந்தூர்க் காதலியம்மைசீர் பாதத்தைத்
திக்கெங்கும் பணிந்தாடுவோமே (3)
ஆடினாலும் இடையே அசையும்
அசைந்தாலுங் கண்ணிலிமையோ அசையா
பாடினாலும் மிடறே தொனிக்கும்
பறைந்தாலும் பல்லுக்காவி தெரியும்
தேடினாலும் தியாகம் விளங்கும்
தியாகசூரிய நாடெங்கள் நாடே (4)
11. புதுக்குடியிருப்பு ஏட்டிற்கண்ட மேலதிகச் செய்யுட்கள்
(நாட்டு வளங் கூறல்)
செஞ்சொற்கிளி வஞ்சிப் பைங்கொடி தன்னினும்
சின்ன நூலிடை தொய்யவரு மின்னார்
பஞ்சின் மெல்லடியார் மொழிக் கஞ்சும் பகீரதா கங்கைநா டெங்கள் நாடே
139

Page 73
கதிரைமலைப் பள்ளு
வயலில் வெள்ளம் பெருகுதல்
("வெள்ளத்திலோடும் மீன்வகை” என்பதற்கு அடுக்கக் காணப்பட்டது)
காவிசை பயில்தென் கதிரைக் கிறைவன் -கந்தன் கஞ்சனை அன்றுகாற் றளையிட்டோன் சேவில் ஏறும் சிவனருள் மைந்தன் -செவ்வேள்
தெய்வயானை மனமகிழ் மெய்யன் நாவில் மறைசேர் திருவருள் வழுத்தும் வள்ளி
நாச்சி யருள் போல் நன்மழை பெய்தே - வெள்ளம் மாவிலி கங்கையின் வளர் புகழ் போலே
வயலிற் பெருகும் வளமை பாரும் பள்ளிரே.
11. புதுக்குடியிருப்பு ஏட்டிற் கண்ட பாடபேதங்கள் :
செய்யுள் 19
காய்ச்சித் தோய்த்த வெண்டயிருண்ட கடனுக்காகவே கைமரக் காலால்
அருவி வெட்டுதல்
(“கந்தமிகுந்த தார்மார்பன்” என்று தொடங்கும் 106-ம் செய்யுள்)
மனதுக் கிசைந்திடு தேனார்
வந்திதமாகப் பதம் நோக இலைபாக்குத் தரவொண் ணாதோ
140

கதிரைமலைப் பள்ளு
தெந்தன தெந்தன வென்றே வெட்டும் சின்ன நெடுங் குரலோசை
செய்கையைப் பாரும் கையைத் தாரும்
நொவ்வைத் தீரும் பள்ளிரே
141

Page 74
2.
கதிரைமலைப் பள்ளு
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
செழுங் கமலந்தனில் வாழ்மங்கை மான், அம்புய மங்கையர் -இலக்குமியும் சரஸ்வதியும்
ஏர் கொண்ட வனம் -அழகு பொருந்திய (தில்லை வனம் மாதங்கம் - யானை ககனம் - ஆகாயம்
கானம் - கீதம் நிகழ் எதிர் காலங்களின் - நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும்
கேசம் கொள் முகிலின் வார் - முகில்போன்ற தொங்குகின்ற கொண்டை இடைநோக - கூந்தலின் பாரத்தால் இடை நோவ சிலம்பு அலம்ப - சிலம்பு சப்திக்க பாசங்கள் பலபவம் நாசம்செய் - மலங்களையும் பல பிறப்புகளையும் அழிக்கின்ற.
திருவேனிப் பகீரதாகங்கை - (சிவபெருமானது) திருச்சடையில் இருக்கும் பகீரதாகங்கை
காசு எங்கும் சுடர்வீசும் - எங்கும் பொன்கிடந்து ஒளி வீசுகின்ற. காசிநன் மாவலிகங்கை - ஈழத்துக் காசியாகிய கதிர் காமத்தைச் சேர்ந்த மாவலிகங்கை,
கொண்டலைப் பொருவு- மேகத்தை ஒத்த
கனதனக் கூடம்- பாரமாகிய ஸ்தனம் என்னும் மலை விண்டலம் - விண்தலம் - ஆகாயம்
142

கதிரைமலைப் பள்ளு
வெண்டரளம் - வெண்தரளம் - வெண்முத்து தடிந்து - கொன்று எம்மான் - எம்பெருமான்
அஞ்சனம் - மை
நத்தும் - விரும்பும் பொன்னின் அணி - பொன்னாபரணம் விஞ்சும் மைக்குழல் - மிகுந்த கருமையுடைய கூந்தல் வேய் - மூங்கில் வில்லுறுதிப் பட்டு- இந்திரதனுசு போன்ற பலநிறம் வாய்ந்த உறுதியான பட்டு. ஒளியும் உறுதியும் உடையபட்டு எனலுமாம்.
கல்காசம் - உத்தரியம் குஞ்சரமுகன் - யானை முகமுடைய விநாயகர்
கஞ்சமலர்ப் பதம்- தாமரை மலரையொத்த திருவடி
வெண்டரள வர்ணத் தூசால் - வெள்ளிய முத்தின் நிறத்தை உடைய துகிலால்,
தோட்பாரம் - சால்வை தோகைபோல் மண்வெட்டி - மயிலின் கலாபம் விரித்தாற்போன்ற வடிவத்தையுடைய மண்வெட்டி மண்டலம் - பூமி
இடை தொய்ய-இடை ஒசிய விஞ்சு கோதை -மிகுந்த அடர்ந்த கூந்தல்
மிஞ்சு - மேகம்.
143

Page 75
10
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
பெண்களது கூந்தலின் அழகுக்குத் தோற்று அஞ்சி மஞ்சுகள் மலையில் ஒளிக்கின்றன என்க.
வஞ்சியர்-கொடி போன்ற இடையினையுடைய பெண்கள் மறைவாணர் ஆருயிர் மாய் வித்தவர் - பிரமஹத்தி புரிந்தோர் செஞ்சொல்- செம்மையாகிய சொல் வேத நன்னாகம் -நல்ல வேத ஒலி தேவதேவன் - தேவரெல்லாம் வணங்கும் தெய்வமாகிய சிவபெருமான்.
"தஞ்சம் நீணதி"-"நமக்குப் புகலிடமாவது இந்ந தியே” என்று சொல்லி. தர்ப்பணம் - எள்ளும் நீரும் கொண்டு செய்யுங் கிரியை
காசுப் பொற்சிலம்பு -ஒளியுடைய பொன் மலையாகிய மேரு.
கால் - வாயு
மாசில் - குற்றமற்ற கோணமாமலை - திருக்கோணாமலை
வரமுடை-மேன்மை பொருந்திய சாகரர் -சகபுத்திரர்
போத நாண்மலர் - அரும்புகளையுடைய அன்றலர்ந்த தாமரை மலர்
அயன் - பிரமன்
புரந்தரன் - இந்திரன்
மாதவர் - முனிவர்
144

11.
13.
1-4.
15.
16.
17.
கதிரைமலைப் பள்ளு
பவர் - பாவஞ் செய்தவர் அங்கம் - எலும்பு செய்யகேது - செந்நிறப் பாம்பாகிய கேது
தலை அற்ற - தலை வெட்டப்பட்ட
பாக்கியம் - உலக இன்பம்
மோக்ஷம் - முத்தி
கோவில் - அரசனைப்போல மாவிலூன்றப் பதம்வைத்து - மயிற்பரிமீதிவர்ந்து வந்து இரட்சித்து.
காசியில் இறக்கும் உயிர்களது தலையை உமாதேவியார் தம்மடிமேல் வைத்துக் கொள்ளச் சிவபெருமான் அவர்களது செவியில் பஞ்சாக்ஷர உபதேசம் செய்து அவர்களுக்கு முத்தி கொடுத்தருளுவர் என்பது புராணக் கொள்கை.
எங்கும் மாமணிவில் பொலியும் கதிர்- எங்கும் சிறந்த இரத்தினங்களது ஒளி விளங்கும் கிரணங்கள் நிறைந்துள்ளன.
எங்கும் அன்னம் படும்மலர்- அன்னங்கள் பொருந்தி இருக்கும் பூக்கள் எங்கும் உள்ளன.
மங்குறாத - குறைதல் இல்லாத திகழும் விளங்கும்.
திங்கள் தோறும் - மாதந்தோறும்
தேன் இசைசெப்ப - வண்டுகள் இசைபாட
145

Page 76
18.
19.
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
பங்கயத்தை - தாமரையை பரிக்கும் - தாங்கு நிற்கும்
அணி - அழகிய
அருக்கன் - சூரியன்
குடபாலிடை- மேற்குத் திக்கிலே
மேவ - சேர மணி கொணர்ந்து - இரத்தினங்களைக் கொண்டு மணிவிளக்கு ஏற்றிடும்- மாணிக்கக் கற்களை விளக்காக ஏற்றுகின்ற.
காய்ச்சுத் தோயல் - காய்ச்சித் தோய்த்த தயிர்.
மரக்கால் - படி செந்நெல் முத்து- செந்நெல்லில் விளைந்த முத்து (நெற்பயிர் முத்து விளையுமிடங்களில் ஒன்று. "தழைத்துக் கழுத்து வளைந்த மணிக் கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக் குளிர் முத்தினுக்கு விலை யுண்டு” - திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்)
வேணிச் சங்கரர் -சடை முடியையுடைய சிவபெருமான் மாணிக்கப் பிச்சை பெறுதற்குப் பாத்திர முடையார் சிவதொண்டரே.
ஆரெனுந் தொழுவோர்க் கன்பு கொண்டவர் ஆசையின் படியாக அருள்வோன் -வேண்டுவோர் வேண்டுவதே ஈயும் விமலராகிய சிவன். பேர் புகன்றிடுவோர் -சிவநாமத்தை உச்சரிப்போர்.
பொழில் - சோலை வன்னம் - அழகு பிரபாவம் - புகழ்
146

கதிரைமலைப் பள்ளு
எங்குமாகி எவருக்கும் இன்னதென்று எண்ணொணாத பரா பரம் -மனம் வாக்கிறந்த பரம்பொருள் -சிவம் மங்குறாத பரை- அழிவு இல்லாத பராசத்தி இலங்கிய - ஒளியைப் பரப்பும்
ஆன ஐந்தொழில் தன்னையும் பொருந்திய படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும்
வெவ்வேறு தனித்தனி
அடைவதாக -முறைமுறையாக
நடத்திய மூர்த்தி-சிவன் தனையன் -மூத்த புதல்வனாகிய விநாயகக் கடவுள் ஆக்க -உண்டாக்க மானதுங்க-மதிப்பும் பெருமையுமுடைய கயமுகசூரனை -யானை முகமுடைய கயமுகன் என்னும் அசுர வீரனை.
மங்க - அழிய தடிந்து - கொன்று எம் வேந்தன் - எங்கள் ஆண்டை.
பின்னவன் - தம்பி பொன்தயங்கு மெய்யும் -பொன்போல் விளங்கும் திருமேனியும். ஈராறு தடக்கையும் -பன்னிரு புயங்களும் உடையவராய் கந்தம்மேவு - (நீர்ப்பூக்களின்) வாசனை பொருந்திய.
மூர்த்திகள் - பிரமா விஷ்ணு உருத்திரன் என்னும் மும்மூர்த்திகள்.
147

Page 77
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
சதிக்கொணா -கொல்ல முடியாத கதிக்கும் -வலிமை மிகுந்த விண்ணோர்தமை- தேவர்களை சிறைகட்டற மீட்டோன் - விலங்கினை அறுத்துச் சிறையிலிருந்து விடுவித்தவன்.
வெள்ளை வாரணற்கே - ஐராவதம் என்னும் வெள்ளை யானையையுடைய இந்திரனுக்கே. துடியிடை - உடுக்கைபோன்ற இடையையும் பிடிநல் நடை - பெண் யானையின் நடையொத்த அழகிய நடையையும்
செவ்வாய் - சிவந்த இதழ்களையும் கோட்டு - இளம்பிறை போல் நுதல் - வளைந்த பிறை போன்ற நெற்றியையும்
கூந்தல் - கரிய கூந்தலையும் உடைய குயில் நிகர்த்த - குயிலை யொத்த தெய்வானைப் பிராட்டியை -தெய்வானை நாச்சியாரை வேட்ட- மணம் முடித்த திருமேவுங் கங்கை-பகிரதா கங்கை
மாதவர் - பெரிய தவத்தை யுடையவர்
சகலபேர்க்கும் - எல்லாருக்கும் காதமெழு கீதமொடு - ஒரு காததுாரம் கேட்கும் இனிய
குரலோடு காதமெழு கீதமொடு கூவாய் எனக் கூட்டுக
148

30.
31.
33.
34.
கதிரைமலைப் பள்ளு
பொங்கு அரவு - பொலிவுள்ள சர்ப்பம் மன்று - சிற்றம்பலம் -சிதம்பரம் அங்கை திகழ் - கையில் விளங்குகின்ற அயில்வேலன் - கூரிய வேலாயுதத்தை உடையவன்
திங்கள்தோறும் -மாதந்தோறும் திண்புவி - உறுதியான மண்ணாலாகிய பூமி தழைக்க செழிக்க
சூரன்கிளை - சூரனது சுற்றமான அசுரர் துஞ்ச- இறக்க
அமர்செய்- போர் செய்யும்
தழைக்க-வாழ்க கஞ்சன் - தாமரை மலரிலிருக்கும் பிரமன் அஞ்சிட - பயப்படுமாறு வினவி - பிரணவத்திற்குப் பொருள் கேட்டு
மஞ்சு மென்குழல் - முகில்போன்ற கூந்தலையும்
பூவை-நாகணவாய்ப் பறவையின் சொற்களை யொத்த
கொஞ்சும் மென்சொல் - இனிய மென் சொற்களையும்
a 6S)
சஞ்சலம் தவிர - துன்பம் நீங்க.
கொடும் சிறையின் நீக்கி- கொடிய சிறையினின்று
(நக்கீரரை) விடுவித்து
தீரன் - சமர்த்தன்
வார்இறுகு முலையாளாம் அம்மை - கச்சணிந்த
தனங்களையுடைய தெய்வயானை யம்மை.
மாணடிகள் -சிறந்த திருவடிகள்
149

Page 78
35.
36.
37.
38.
39.
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
ஒதும் மலர்ப்பதம் - வேதங்கள் புகழும் தாமரை மலரையொத்த திருவடிகள்
வருணன் - மழைக்குத் தெய்வம்
சுரநதி - ஆகாய கங்கையிலே உருமுற்று- முகில்கள் படிந்து தொனிதரு - ஒலிக்கின்ற பரவை - கடலிலே திரைபொருநீர் - அலைவீசுகின்ற நீரை பரிவொடு பருகி - விருப்புடன் குடித்து திசை திசை - எல்லாத்திக்கிலும் பனிவரை - குளிர்ச்சி பொருந்திய மலைகள்
பரன்தரு குகன்- சிவபெருமான் அருளிய முருகப்பிரான் மணி - இரத்தினங்கள்
விஞ்சும் - மிகுந்துள்ள கடம் உறவே - காட்டிலே பொருந்தி நிரந்தரம் இடைவிடாமல்
அதிரும் - ஒலிக்கும்
முரசின் முழங்க - முரசுபோல முழங்க
நிலவு எழ- ஒளி உண்டாகும்படி எங்ங்ணும் - எல்லா இடங்களிலும் காலுற - மழைக்கால் இருட்டாக
அதிர - முழங்க
நலவரை - நலலமலை நகரம்-பட்டினம்; கதிரைமலையிலும், கதிர்காமநகரிலும், பொழில் - சோலை
வனம் - காடு
எங்ங்ணும் - எங்கும்
150

40.
I.
43.
கதிரைமலைப் பள்ளு
கானகம் - காட்டிலுள்ள கட்புலன் - கண்ணாகிய பொறியை (கண்களை) தேன் இசைபயில் - வண்டுகள் கீதம் பாடுகின்ற
கனக மலைக்குவடு -பொன் விளையும் மலைச்சிகரம் ஒடிய - முறிந்துவிழ
விசைப்பொடு - வேகத்துடன் கலவி- ஒசையுடன் விழுந்து
சுலவிய - பரந்த
சினை- கொப்பு மரத்துற நெரிய அகற்றிய - மரத்திலே பொருந்தும்படி நெருக்கப்பட்ட
சிறையுடன் - செட்டைகளுடையனவாய் நிரையுள்ளும்- வரிசையாக உட்கார்ந்திருந்த பறவைகளும் வெருவுற - பயப்பட
மதகரி- யானை
உலவையில் - குளிர்காற்றினால் நளிர் - குளிரால் உண்டான நடுக்கம் சினைமணிகளும் - செழுமையுடைய இரத்தினங்களும்
பதலை~ சிறுமலை உரம் பாய்ந்து - வலிமையுடன் பாய்ந்து சிலையில் ஒய்ந்து - மலைப்பாறையில் சிறிது தங்கி பகட்டு மருப்பும் - யானைக் கொம்பும் பொருப்பொடு- பெரிய பாறாங்கற்களுடன் சேரப் புரள- சேர்ந்து உருளும்படி உருட்டி தரளத்திரளைச்சிதறி - முத்துக் குவியலைச் சிந்தி கதறி - பிளிறிக்கொண்டு
151

Page 79
4.
一塁5.
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
சிந்துTரம் - யானைகள் தியங்கு - தேங்குகின்ற புனலில் - நீரில் அகப்பட்டு தியங்கி - சோர்ந்து செயம் கெட்டு- வலிமை இழந்து ஆரத்தருவை - சந்தன மரத்தை ஆம்பிரத்தொடு - மாமரங்களோடு காம்பும் - மூங்கில்களையும்
தேம்புனத்திடை - தேனடைகள் மரங்களில் தொங்கும்
புன்செய்களிலே
வாரைப் பொருந்து குயத்தி -கச்சணிந்த தனங்களையுடையவளாகிய
வழுத்தி - வணங்கி
படரைமேவி- மேட்டு நிலத்தைச் சேர்ந்து பனித்து - நடுங்கி
புறவு - புறாக்களும் ஆலக்கவர - ஆலா என்னும் பட்சி பிடித்துத்தின்னும்படி அயிரை நகர - அயிரை மீன்கள் ஒட அதிர- பெரிய ஒலியுடன் மைக்காளி - கருநிறத்தையுடைய காளியின் துணை கொள் செய்ய பதத்தை - இரண்டு சிவந்த திருவடிகளை
தேறு நிலம் - வலிய பாலைநிலம்
அடரும்- நெருங்கி வரும் சுடரும் - விளங்குகின்ற அண்டர் - இடையர் ஆவின் குலங்கள் - பசுக்கூட்டங்கள்
152

46.
.47ی۔
கதிரைமலைப் பள்ளு
புட்குலம்- பறவைக் கூட்டம் படல்- பட்டி அடைக்கும் படல் பாதைத் தொகுதி - ஆற்றிலே செல்லும் தோணிகளின் ஈட்டம்
மாதவி - குருக்கத்தி திடரும் பெருகி - மேட்டு நிலத்திலும் பெருகி செறியும் -நெருங்கிய
மறி - வெள்ளாடு
கொறி - கடா
சுடரும் - ஒளிவீசும் பஞ்சாயுதன் - பஞ்சாயுதங்களைத் தாங்கிய விஷ்ணு.
துளக்கி உழக்கி - அசைத்துக் கலக்கி
மாழை - மாமரம்
வருக்கை - பலா
வேழம் - கரும்பு
முளரித்தடம் - தாமரைக்குளம் தரு ஐந்து - சந்தானம், அரிசந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம் என்னும் ஐந்து தெய்வவிருட்சங்கள் குலிசம்- வச்சிராயுதம் பாகசாதனன் - பாகன் என்னும் அசுரனைக்கொன்ற
இந்திரன்
பொடித்து மடித்து - துகளாக்கி அழித்து போது - அரும்பு
அறல் - கருமணல்
திடர் - மேடு
பரவர்- வலைஞர்
கலம்- வள்ளம்
மரம்- பாய்மரம்
புணை - கட்டுமரம்
153

Page 80
-8.
19.
50.
5I.
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
முகுந்தன் - விஷ்ணுமூர்த்தி அனந்த சயனம் பயிலும் - பாம்பணையில் பள்ளிகொள்ளும்.
மூரிக்கடல் - வலிய கடல்
மாகம் - ஆகாயம் ஒகை - மகிழ்ச்சி வாரிமண்டி - கடலில் நிறைந்து.
நால்எட்டு அறம்- 32 தருமங்கள் புரிஅன்னை- செய்யும் காமாட்சி அம்மையார் வாகன் -அழகிற் சிறந்தவன் மதத்து - கொழுத்து
பழுதைப் புரி - வைக்கோற்புரி
வாகு - தோள் வற்றிப்போன வாரணம்- உணவின்றி உடல்காய்ந்த கோழி
ஒரிச் செவி - நரியின் காது
ஊசல் - நாற்றமெடுத்த பாசிப் பல் - அழுக்கடைந்த பல்
விரலாழி - கைவிரல் மோதிரம் கடகம் - கையணிகளில் ஒன்று ஆகமீதில் - மார்பிலே ஆரம் புனைந்து - சந்தனம் பூசி ஆரம் பூண்டு - மாலைகளை அணிந்து விழிக்கு அஞ்சனமும் எழுதி- கண்ணுக்கும் மைதீட்டி நுதல் - நெற்றியில் சிந்துாரம் இட்டு - குங்குமப் பொட்டு அணிந்து
154

53.
5-4.
55.
கதிரைமலைப் பள்ளு
நோக வஞ்சி இடை - கொடிபோன்று இடைநோக தனபாரம் - கொங்கைகள்
நூபுரம்- சிலம்புகள்
சிலம்பலம்ப - மிகவும் சப்திக்க பாகு அனைய சொல் உடைய-சர்க்கரைக்கட்டி போன்ற இனிய சொற்களையுடைய அன்னநடையீர் - அன்ன நடைபோலும் அழகிய
நடையை உடையவர்களே.
சுரித்த - சங்குபோலச் சுழித்த திருத்தமில்லாதவர் - நாகரிகம் அற்றவர் திருகல் முதுகு - வளைந்த முதுகு அரித்த தந்தம் - சொத்தைப் பல்
புறஞ் சொன்னதென்று - பின் புறணி சொன்னதென்று பேதைப் பள்ளன் - அறிவில்லாத பள்ளன்
ஆகடியம் - கொடுமை , அநியாயப் பேச்சு (கிராமியம்) கை தீண்டுவேன் - அடிப்பேன் திருமுன்னே ஆச்சு - ஆண்டையின் திருச்சமூகத்தில் அவ்வாறு செய்யலாகாது என்று பொறுத்திருக்கிறேன். பின்னே அல்ல - நான் இப்படிப் பொறுக்க வேண்டாத இடத்தில் அல்ல. வாண்டதும் - வாழ்ந்ததும் என்பதன் போலி கொழு மண்வெட்டி விற்று - கொழுவையும் மண்வெட்டியையும் விற்று.
இது முதல் நான்கு செய்யுள்கள் மருத்தீடு, வசியம், மாந்திரீகம் முதலியன செய்யும் முறைகளையும்
155

Page 81
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
இவைகளில் கிராமவாசிகளின் மூடநம்பிக்கைகளையும் விளக்குவன.
56. கருவேழ மதமும்- கரியயானையின் மதமும் பிணத்திலிட்ட அரிசி - வாய்க்கரிசி விரை - கொட்டை உண்டை - உருண்டை
57. தேரைவிழி - தேரையின்கண்
திரங்கல் தேவாங்கு-சுருங்கிய தோலையுடைய தேவாங்கு பித்து - ஈரல் நிணம் - கொழுப்பு
58. கழுகின் தைலம் - கழுகின் நிணம்
கோட்டு நாகத்தின் பூவும்- கிளைகளையுடைய நாகமரத்தின் பூவும்
துடரிக் கொழுந்தும் - தொடரிச் செடியின் இளந்துளிர்களும், தொடலி - தொடரி, தொட்டாற் சிணுங்கி
(Touch - me - not) வேட்டை வாளி - ஒர் குளவி (வேட்டுவன்) அடவியில் - காட்டிலே பாடலி - பாதிரிக் கொடி ஊட்டி - உண்ணச் செய்து (மருந்திட்டு)
56-59 செய்யுள்களிற் சொல்லிய மருத்தீடு வசியச் சரக்குகள் மூலிகைகளுடன் - ஆங்கில நாடகக் கவி சகப்பிரியர் (Shakespeare) udit do Lugi (Macbeth) is T L-5ggp சொல்லிய கீழ்க் குறிக்கப்பட்டவற்றோடு ஒப்பிடுக
156

53.
கதிரைமலைப் பள்ளு
மெய்யில் - உண்மையாகவே நாவி - புழுகுபூனை செவியினில் மாசு - காதில் அழுக்கு வேங்கைப்பல் - புலிப்பல் பையரா - படத்தையுடைய பாம்பு பூரையென்ன - குறைவில்லை என்னும்படி
1 st WITCH
Round about the cauldron go In the poison'd entrails throw Toad, that under cold stone Days and nights hast thirty- one Sweltered venom sleeping got Boil thou first in the charmed pot
2nd WITCH
Eye of newt and toe of frog
Wool of bat and tongue of dog
Adder's fork and blind worm's sting Lizard's leg and howlet's wing For a charm of poweful trouble, Like - a hell-broth boil and bubble
3rd WTCH
Scale of dragon, tooth of wolf Witches' mummy, maw and gulf Of the ravined salt-sea shark Root of hemlock, digged in the dark Liver of blaspheming jew, Gall of goat, and slips of yew Silvered in the moon's eclipse, Nose of Turk and Tartar's lips, Finger of birth-Strangled babe Ditch-delivered by a drab Make the gruel thick and slab Add thereto a tiger's chauldron For the ingredients of our cauldron.
157

Page 82
60.
61.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
"தலைக்குமிஞ்சிய தண்ணீர் சாணேறியென்ன முழமேறி என்ன?" என்பது பழமொழி.
பகலில், நிலத்தில் அடிவைத்தாலே பல உயிர்கள் இறக்கு மென்று உறியிலேயே இருந்து இரவில் கொலை முதலிய பாதகங்களையெல்லாம் கூசாமல் செய்யும் ஆஷாட பூதிகளான உறியிற் சமணரையொப்பப் பிறரறியாமல் மாட்டைவிற்றுக் கள்ளும் கண்டபண்டமும் வாங்கித் தின்றுவிட்டு என்மேலே பிழையை ஏற்றப் பார்க்கிறாள் இவள் என்பது கருத்து.
அக்கரை ஆற்றில் இக்கரை மண்ணும் - ஆற்றின் அக்கரை மண்ணும் இக்கரை மண்ணும்
உச்சியாம் பொழுது - மத்தியான நேரத்தில்
ஏகாந்தக்காரி - இறுமாப்புக்காரி
ஆறுபோந்து-ஆற்றுக்குப் போய் சேறு போந்த சேறு நீக்கிய
கடுகவே - விரைவாகவே
நாடங்கன் - மனம் வாக்குச் செயல்-அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நிலையற்ற தன்மையுடையவன்
வன்னமேழி அழகிய மேழி
விந்தை மான் - அதிசயமான தோற்றமுடைய மான்.
துய்ய- பரிசுத்தமான புலவர்க்கும் பிராமணர்க்கும் தானம் செய்யப்பட்டவை இரண்டாயிரங் காளைகள்.
158

71.
73.
7.
கதரைமலைப் பள்ளு
s ஈராறுடையான் ஐயன் பன்னிரு திருக்கரங்களையுடைய முருகப்பிரானது தந்தை முக்கண்ணன் ஏறு - சிவபிரானது இடபம்
அறுமாமுகன் மாதுலன் - அறுமுகப் பெருமானது மாமனாகிய கிருஷ்ணன் மாதுலன் அண்ணன் - கிருஷ்ணரது தமயனான பலராமர் பலராமர் கலப்பைப் படை உடையவர்
கன்னல் - கரும்பு சுதை - சுண்ணம்
வைவேலன் - கூரிய வேலாயுதத்தை உடையவன் அல்லும் பகலும் - இரவும் பகலும்
வைவான் - ஏசுவான்
ஊதாரில் வீண் செலவு செய்பவன்
குறமகள் பாகன்- குறவர் மகளாகிய வள்ளிநாயகியைப் பாகத்தில் உடையவன்
ஈழில் தரு - அழகு பொருந்திய கோலமெய் வாகன் -அழகிய உருவையும் தோளையும் உடையவன்
குரிசில் - பெருமையிற் சிறந்தவன் உதாரன் - கொடையாளி
மஞ்ஞை -மயில்
நிறைபுனல் - நிறைந்த நீர் பண்ணை நிறை - வயலிலே நிறைந்த
量59

Page 83
75.
76.
77.
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
களை கழியான் - களைகளையும் பிடுங்கான் உறைபதி அங்கே - அவன் வாழ்வதெல்லாம் இளைய பள்ளி வீட்டிலே,
உம்பரை - தேவரை • மீட்டோன் - சிறையிலிருந்து மீட்டவன் வேதன் - பிரமன்
ஒருமொழி -பிரணவம்
அடியவர்க்கு - அடியார்க்கு உறுதுயர் - உற்ற துன்பத்தை வன்ன ஒயில் - அழகிய சாயல் கம்ப நல்யானை - தறியிற் கட்டப்படும் நல்லயானை துணையென - சகோதரன் என்று களி கொளும் - சந்தோஷப்படும்
அம்பெனும் விழியாள்- அம்பு போன்ற கண்ணுடையவள். அதிவித மொழியாள்-அதிக விநோதமான இனிய மொழியுடையாள்
வாரணக் கொடியான் - கோழிக்கொடியை உடையவன் பங்கயமலர் - தாமரைப் பூ
வன்சிரம் - வலிய தலை காரணக் கநதன் - மூலகாரணமான முதற் பொருளாகிய கந்தன்
கெளரி - உமாதேவி
ஏர் - கலப்பை
துச்சனன் - கெட்ட ஒழுக்க முடையவன்
ஆகம் - உடல் என் சலிப்புப் போக உம் காலிலே தொழுப் பூண்டீரோ?
160

78.
79.
80.
81.
83.
8 .
85.
86.
கதிரைமலைப் பள்ளு
கன்றுகாலி-கன்றுகளும் பசுக்களும் சுள்ளு - கருவாடு மிண்டு - மிடுக்கு
அன்னை பின் மனையாள் - "தாய்க்குப் பின் தாரம்" என்பது பழமொழி
கானவேடர் - காட்டில் வாழும் குறவர் கனகம் போல மலர்ந்து - பொன் போலப் பூத்து சண்முகன் - அறுமுகன் பொதுக்கு - ஒளிப்பு மறைப்பு பொன்னகர் - அழகிய கதிர்காமநகர் மன்னிய - பொருந்திய
வேளை முகூர்த்தம் - நெல் விதைக்க நல்ல முகூர்த்தம்
செந்நெல் தரளம் சொரியும் - நெல் முத்துக்களைச் சொரிகின்ற
துய்ய சோதி - பரிசுத்தமான ஒளியுடைய. நித்தம் - எப்போதும்
கத்தன் - தலைவன்
கதிர்வேல் - ஒளிவீசும் வேல்
அருக்கன் - ஞாயிற்றுக்கிழமை ஆன அமிர்தயோகம் - பொருந்திய அமிர்தயோகம்
பரம்படித்தல் - கட்டிதட்டி மட்டப்படுத்தல்
161

Page 84
87.
88.
89.
90.
9 II.
93.
9去
95.
96.
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
இணைக்கிணை சால்விட்டு- ஈரிணை எருதுகளைக் கொண்டு உழுது சால்விட்டு
குதிக் கொள்ள - குதிக்க
தியங்கி - மயங்கி
ஏலக்குழல்- வாசனை பொருந்திய கூந்தல்
மதக்காளை - கொழுத்த எருது எங்கை - என்தங்கை (மாற்றவள்)
சேவின் - எருதினது
கஞ்சமுகம் - தாமரை போன்ற முகம் வஞ்ச நெஞ்சி - வஞ்ச மனமுடைய இளையபள்ளி.
நிஷ்டுரம் - கொடுமை சண்டி - நீலி பரிவினால் - அன்பாக.
தூரி எழுதுகோல் (Brush)
பன்னு தமிழோர் - சிறப்பித்துக் கூறப்படும் தமிழ்ப் புலவர் சோகம் - துக்கம்
அடவி- காடு
மண்டலம் எண்- பூமியிலுள்ளார் தியானித்து வணங்கும். திருக்கற - கோணல் இல்லாதபடி.
கரிமுகன் - விநாயகர் எண்தலம் - எட்டுத் திசைகளும்
162

97.
98.
99.
கதிரைமலைப் பள்ளு
புரப்பவன் - காப்பவன் அமர குஞ்சரி - தெய்வயானையம்மை புலம்ப - ஒலிக்க தரளவடங்கள் - முத்து மாலைகள்
தாவித்திரிந்து - எட்டி மிதித்து உலாவி
மாரன் - மன்மதன் வாசக் கதிரை - நல்ல வாசனை பொருந்திய பொழில் நிறைந்த கதிர்காமம்
அயிலை நிகரும் - வேலை யொத்த செயலை மருவி - அசோகிற் பாயந்து சிறைப் புள் - சிறகுகளை யுடைய பறவைகள்.
மாலுக்கிளைய வல்லி- விஷ்ணுவின் தங்கையாகிய உமாதேவி கனகப் பணிகள் - பொன் ஆபரணங்கள்
கிரணம் - ஒளி பாலுக்கு இசைந்த தேனுக்கு உவமை பகரும் இரண்டு பாங்கியர் - பாலுந் தேனும்போல நட்புடைய இருதோழியர்
வேழம் - கரும்பு
எகினம் - அன்னம் கரு வென்று அயிர்க்கும் - (தன்) முட்டை என்று சந்தேகிக்கும்
விரகு - தன்மை
வான் - சிறந்த கனத்த தனத்தி - பெரிய தனபார முடையவள் அனத்தின் நடைச்சி - அன்ன நடையுடையாள் அன்ன மென்னி- அன்னம் எனப்படுபவள்
63

Page 85
100.
101.
102.
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
அனத்தின் இனங்கள் - அன்னக் கூட்டங்கள் மலங்கு - விலாங்கு
காரைப் பொருந்தும் குவடு புடைசூழ் - முகில் படியும் மலைச்சிகரங்கள் சூழ்ந்த மஞ்ஞைப்பரி - மயில் ஆகிய குதிரை ( = வாகனம்) நிரைத்து - வரிசையாக நின்று
தார் - மாலை
குழை - தோடு தகைப்பு - கண்ணைக் கவர்ந்து தடுக்குந் தன்மை.
புற்றுமுனி - வான்மீகி முனிவர் பூம்பதம் - அழகிய திருவடிகள் மற்றவர் - மாற்றவர் - பகைவர் சற்கரை - சர்க்கரை என்பதன் போலி சற்குண மங்கையர் - நல்லகுணமுள்ள பெண்கள் அற்புதம் - அதிசயமான கனத்து - பாரத்தால் அற்றிடும் அற்றிடும் - முறிந்துவிடும் அற்குழலில் - கரிய கூந்தலில் கருவில் - கரிய ஒளி- நீலநிறம் பொலி - விளங்கும் ஆர்ப்பது - ஒலிப்பது
கலைக்கு உகந்தவர்- சாஸ்திரங்களை - விரும்பிக் கற்பவர் சிலைக்கு - விற்போன்ற புருவத்துக்கு தொய்யில் - கொடி
இழைத்து - எழுதி
முடுகிக்கடுகி- நெருக்கி விரைவாக வண்சங்கு - கொழுத்த சங்கு
164

103.
丑0±
I 05.
106.
107.
கதிரைமலைப் பள்ளு
சங்கோடுறு - சங்கோடு கிடக்கும் வாளையை - வாளைமீனை வனக் கொக்கு - காட்டுக் கொக்கு கொத்தியெடுத்து ஒக்கக் கக்கும் - சங்கோடு வாளையையும் கக்கும்
மருமம் - மார்பு திருவுக்கிறைவன் - இலக்குமியின் கணவனான திருமால்
தேன் அவிழ் -தேன் சொரிகின்ற தொடை - மாலை கூன் அரிவாள் - வளைந்த அரிவாள்
பற்றற - முற்றாக ஒழிய மண்டலம் - பூமி
திண்டிறமாய் - மிகுந்த திறமையுடன்
கந்தம் - வாசம் கறைக் கண்டன் - திருநீல கண்டத்தையுடைய சிவன்
வைவேற்கையன் - கூரிய வேல் ஏந்திய கையையுடையவன் அசுரர்ச் செற்றிடு - அசுரரை அழிக்கும் இந்தெனும் மென்னுதல் - சந்திரன் போலும்
மென்மையுடைய நெற்றி
கூந்தல் நெளியார் - சுருண்ட கூந்தலையுடையார்
செப்பமுடன் - செம்மையாக
நாகம் - மலை
விரை - விதை (நெல்)
165

Page 86
108.
109.
110.
111.
12.
113.
11-1.
115.
I 16.
II 7.
18.
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
மோசடி சொல்லல்- குற்றஞ் சொல்லுதல்
சொன்ன ஏவல் - ஆண்டை சொல்லிய ஏவல்
“கர்ப்பூரம் போலக் கடலுப்பிருந்தாலும் கர்ப்பூரமாமோ கடலுப்பு ?"
தோகை -மயில் வாரணம் - கான் கோழி வேழம் - யானை ஆளி - சிங்கம் பொருட்டாக - ஒரு பொருளாக சித்தியாது - பலியாது
வீறு- பெருமை
திருவிலி- நன்மை இல்லாதவளே
KK yy KR y
மழுமாறி' - மழக்குலுக்கி' என்பன உண்மையான
ஒன்றை முற்றாய் இல்லையென்று சாதிப்பவர்களுக்குச்
சொல்லப்படும் கிராமிய வழக்குச் சொற்கள்
பேறிலா நீலி- அதிர்ஷ்டங் கெட்ட கொடியவள்.
பிழைக்கவும் - உயிருடன் தப்பிப்போகவும்
எப்பொருளையும் படைத்த இறையவன் - பிரமன்
நவ்வி தரித்த அங்கை அத்தன் - மானைத் தரித்த
கையையுடைய தந்தையாகிய சிவபெருமான்.
அமரர் - தேவர் அம்புலி -சந்திரன்
166

123.
丑24,
கதிரைமலைப் பள்ளு
சங்கரி - உமாதேவி
நித்தமும் - எப்போதும் சித்திப்பதும் - கைகூடுவது
அக்காரம் - கற்கண்டு
அவனியறிய - உலகம் அறிய தவனம் - தாகம்
மின்னிடை - மின்னல் போலத் தோற்றி மறையும் அத்துணை மெல்லிய இடை.
அம்புயம் - அழகியதோள்
அம்புவி - உலகம்
சொர்க்கம் - முலைப்பால் ஆரல் - கார்த்திகை (ப் பெண்கள்); சிலேடையாக ஆரல் மீனைக் குறித்து நின்றது.
மாறுரையாதே இருக்க மதிப்பாயோடி- பதில் சொல்லா திருந்தேனானால் என்னை நீ எப்படி மதிப்பாய்?
மதியாது-உலக அபவாதத்துக்கு அஞ்சாமல்
சுரையின் விதை - சுரைக் கொட்டை,
உதிர- சிந்த
மாயன் - கிருஷ்ணன் வஞ்சப்புள் - ஒரு அசுரன் வஞ்சனையாற் கொண்ட கொக்கு வடிவம்.
பண்பு இதென்ன - நீங்கள் இப்படிச் சண்டையிடும் தன்மையென்ன?
167

Page 87
அரும்பத உரையும் அருந்தொடர் விளக்கமும்
129. புத்தமிர்தம் - புதிய அமிர்தம்
130.
புங்கவர் பிரான் - தேவர் வணங்கும் தெய்வம்.
வாழி
அருண விகச்சித - சூரியனைக் கண்டு மலர்ந்த கமல மலரை நிகர்தரு - தாமரை மலரை ஒத்த வதனம் ஆறும் - திருமுகங்கள் ஆறும்
அனுதினமும் வாழி- என்றும் வாழ்க!
அமரர் தொழு தேவர்கள் சேவிக்கும் கனகசபை - பொன் மன்றிலே
நடனமிடு - நடிக்கின்ற பரமசிவன் அருள் - சிவபிரான் தந்தபுதல்வராகிய முருகர்சரணம் வாழி- கந்தப் பெருமானது திருவடிகளும் வாழ்க.
கருணை மழை பொழி- திருவருள் மழையைச் சொரியும் பனிரு நயனமதினொடு- பன்னிரண்டு திருக்கண்களுடன் வலிய கவின் உலவு- வலிய அழகு உலாவப்பெற்ற தோள்கள் வாழி - தோள்களும் வாழ்க கனகிரியை - வலிய கிரெளஞ்ச மலையை இருபிளவுபட - இரண்டாகப் பிளக்கும்படி உருவும் - ஊடுருவிச் சென்ற நெடிய அயில் - நீண்ட வேலாயுதமும் கரதலத்தின் -பெருமானது திருக்கையிலே இனிது வாழி- இனிது வாழ்க! வருண மரகத அழகு திகழவரும் - சாதி மரகத ரத்தினத்தின் பச்சை நிறம் பொருந்தி அழகு விளங்க வருகின்ற
168

கதிரைமலைப் பள்ளு
அவுணன் எனும் - சூரனது கூறாகிய மயிலினொடு - மயில்வாகனமும் சேவல் வாழி - சேவற்கொடியும் வாழ்க! வனசரர் தம் - வேடர்களது இறையுதவு - அரசனாகிய நம்பிராசன் பெற்ற குறமி(ன்) னொடு - குறப்பெண்ணாகிய வள்ளி நாச்சியாரும்.
கடவுள் மயில் எனும் இவர்கள் - தெய்வநாயகி அம்மையாரும் ஆகிய இருவரும்
நிதமும் வாழி- என்றும் வாழ்க தருணம் இது - அருள் பெறுதற்குரிய சமயம் இதுவே. என அமரர் பணி கதிரை- என்று தேவர்கள் கருதிவந்து தொழும் கதிர்காம தலத்தில் அமர் கந்தர் தமதடியார்-எழுந்தருளிய கந்தப்பெருமானது அடியவர்களும்
நிதமும் வாழி- என்றும் வாழ்க! சகச நிருமல - இயல்பாகவே மலங்கள் இல்லாத பரம சுகிர்த -பேரின்பத்தையுடைய பரிபூரண -குறைவிலா நிறைவுற்ற சடாக்ஷரம் வாழி வாழி- சடாக்ஷர மந்திரமும் வாழ்க வாழ்க!
சுபமஸ்து
geasogeceas
169

Page 88

-----ae ) +- + - .--+ * * * ---------- - - - - -*』=-壘--「帽--** =|-= = = ... - - -|-量。|-1 + h) + '.to|----- - - -*;) ---+---+ją■■■ 妊学社*門|-----にしsă-.*¿.*)',-義:■■! ! ! . . i) + ': **--> s--------- F -, ';+ →■■È.心--叶L--*-, , lasae』 ---1
"= - ܒ
---I ris 一、二置 - - - - - - - - - - H - I
L=ـــــــــــــ-==
---. " " .
I.
திருக்கேதீஸ்வரம்
--அருடா" r.
. .
;ェリー
s
ܕܩܧ-ܒܪ -:
|- = -* ... • • • • • • •--------... * *-----------|- -吡* 的) 나라:「和시もに젊村다.:;:|-影响--, '!', 's.'s'.sử+, - - - 1;: -|-.■■■_-... !+, -

Page 89
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
1. திருக்கேதீச்சரம்
செய்ய கேது தலையற்ற வந்நாள் திருந்தும் பூசைகள் செய்து முடிப்போன் வையம் போற்றிட நற்கதியுற்றிடும் மாவலி கங்கை நாடெங்கள் நாடே"
செய்யுள் 12
(பக்கம்-6)
Fழ நாட்டிலுள்ள சிவஸ்தலங்களுள் பாடல் பெற்றவை திரிகோணமலை, திருக்கேதீச்சரம் என்னும் இரண்டுமாம். இவை இரண்டுமே கதிரைமலைப் பள்ளிலும் மாவலிகங்கைப் பள்ளிலும் இலங்கை நாட்டில் விசேஷ முள்ளனவாகக் காட்டப்பட்டன.
இராகுவுங் கேதுவும் நவக்கிரகங்களுள் வைத்து எண்ணப்படுவன. "மதியுணுமி ராகு நாமம் மற்றது தமங்கறுப்பாம்- அதிகமாங்கேதுச் செம்மை சிகிகதிர்ப் பகையுமாமே" எனச் சூடாமணி நிகண்டாசிரியர் கூறியபடி, சூரியசந்திர கிரகணங்கள் நிகழ்தற்குக் காரணம் சூரியனைப் செம்பாம்பாகிய கேது விழுங்குவதும் சந்திரனைக் கரும்பாம்பாகிய இராகு விழுங்குவதுமேயாகும் என்று புராண இதிகாசங்களில் வானசாஸ்திர கிரகண சம்பவ உண்மைகளைப் பாமரர்களும் எளிதில் விளங்குமாறு பாம்பின் தலையும் வாலுமெனப் பூமியின் சாயையை
170

விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
உருவகித்துக் கூறியவாறாம்.
(1) பாலாவி மண்டலம்
இனிக் கேதீச்சரம் இலங்கையிலுள்ள மிகப் புராதன நகர் என்பது கி.பி. முதலாம் நூற்றாண்டினரான GprT Gvó) (Ptolemy), Sè fòsof (Pliny) 6T 6ð7 goljub ரோமசாஸ்திர நிபுணர்கள் இந்நகரத்தைப் பாலாவி LOGðoT LGU [555Tb (Palavi Mundi Oppidum) 6 TGOTj 3tta póluu போந்தவாற்றால் விளங்கும்."பாலாவியின் கரைமேல்' எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது பதிகச் செய்யுள் ஒவ்வொன்றிலும் கூறியிருத்தலானும், "மாதோட்டத்தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம்” எனத் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளும் தமது பதிகத்தில் ஒரிடத்திற் கூறியிருத்தலானும், ரோம நிபுணர் குறித்தது இக்கேதீச்சர நகரையே என்பது போதரும்.
பாலாசி மண்டலம்) Palasi mundi) என்பதில் உள்ள 'சி (si) என்ற ஒரு அட்சரத்தை "வி” (w) என மாற்றிப் பாலாவிமண்டலம் எனச் சரியான இடத்தை யூகித்து அறிய மாட்டாதவராய்ப் பச்சிம நாட்டு மேதாவிகள் "பாலிசி மன்தா” என்னும் சமஸ்கிருத பதமாகக் கொண்டு " பாலிநூல்கள் சேகரித்து வைத்த நகரம்” என்றும், " பரசமுத்திர" என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு
171

Page 90
கதிரைமலைப் பள்ளு
எனக்கொண்டு "ஆழங்குறைந்த சமுத்திரக்கரையில் உள்ள நகர்” எனப்பொருள் கொண்டும், தமிழ்நாட்டுமேதாவியர் சிலர் "பலாசி மண்டலம் ” எனக் கொண்டு இத்தொடர் பழைய " சிஹல (சிங்கள) மண்டலம்” என்னும் தமிழ்ச் சொற்றொடரின் சிதைவாகும் எனக்கொண்டும் பலரும்
பலபடக்கூறி இடர்ப்பட்டனர்.
இனி, "பாலாவியின் கரைமேல்” என்ற தொடரைப் பதிகச்செய்யுட்கள் ஒவ்வொன்றிலும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிரயோகித்ததுபோல், "மாதோட்ட நன்னகர்" என்ற தொடரைச் சம்பந்தமூர்த்தி சுவாமிகள் தமது பதிகச் செய்யுள்தோறும் பிரயோகித்திருப்பது காணலாம். மாதோட்டத்திலுள்ள திருக்கேதீச்சரம் என்பதே தற்கால வழக்குமாகும்.
(2) காந்தக் கோட்டை
"மாந்தை” என்பது மாதோட்டத்தின் சுருங்கிய பெயர் என்பர். இம்மாந்தோட்டப் பிரதேசத்தில் விசுவகர்மாவாற் செய்யப்பட்ட காந்தக்கோட்டை அல்லது காந்தமலை என்னும் பெயருடைய இரும்பாலாகிய கோட்டையொன்று இருந்தது எனப்பழைய நூல்களால் தெரியவருகிறது. வியாபார நோக்கமாகவோ அன்றித் தேச இயற்கையறிவு சமயஅறிவு விருத்தி நோக்கமாகவோ கடற்பிரயாணஞ் செய்த யாத்திரிகர்கள்
172

விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
சொல்லுகிறபடிக்கும், இந்தக் காந்தக் கோட்டையிலுள்ளார் அக்கோட்டையின் அருகில் செல்லும் கப்பல்களை ஏதோ ஒரு சூழ்ச்சியால் கரைக்குக் கிட்டுமானமாக வரச்செய்து கப்பலிலுள்ள பொருட்களைக் கொள்ளையடித்து யாத்திரிகரையும் தொந்தரவு செய்து அனுப்புவது வழக்கமென்று அறியக்கிடக்கின்றது.
பஞ்ச கம்மாளராற் பெரிதும் போற்றப்படும் நூல்களில் ஒன்றாகி விளங்குவதும் யாழ்ப்பாணத்துப் புலவருள் ஒருவரான இராமசுந்தரம் என்பவரால் இயற்றப்பட்டதுமான விசுவகர்ம நாடகத்தில்,
“செங்கமல மாலையணி தேவனே! மாந்தை நகர்ப் புங்கவனே காந்தமலைப் பூரணகெம்பீர மன்னா!"
என விசுவகர்மா துதிக்கப்படுதலாலும், “காந்தலைக் கோட்டை மேவிய காவன் மன்னவன் புகழ் கூறவே" என மேற்படி நூலிற் பிறிதோரிடத்திற் சொல்லப்படுவதாலும், இற்றைக்கு நானுாறு வருடங்களுக்கு முன் பின்னாகச் சிதம்பரதாண்டவ மதுரகவிராயர் என்னும் தென்னிந்தியத் தமிழ்ப்புலவர் ஒருவராற் செய்யப்பட்ட"மாந்தைப் பள்ளு” என்ற நூலில் காந்தமுறுந் தடமதிலும் கமழுமலர்ப் பொழிலுமுற்ற மாந்தை நகர்” என்று கூறப்படுதலாலும், இற்றைக்கு இருநூறு வருடங்கட்குமுன், தென்னிந்திய
173

Page 91
கதிரைமலைப் பள்ளு
தமிழ்ப்புலவராகிய சிதம்பர கவிராயரால் இயற்றப்பட்ட
44
விசுவ புராணம்" என்னும் நூலில் “ பஞ்சகிருத்திய
காண்ட”த்தில்
"உத்தர திக்கினமிக்க ஊசிக்காந்தத்தினாலே சுற்றிலுமகல நாலைந்தோசனை தூரமுள்ள முத்திரை மிகுந்த கோட்டை சிருட்டித்தார் முத்தினத்தில்"
என்று கூறப்படுதலானும், காந்தக்கோட்டை மாதோட்டம் அல்லது மாந்தைப் பிரதேசத்திலுள்ளது என்பதும், அது உண்டாயவாறும் பிறவும் கூறப்பட்டிருத்தல் காணலாம்.
இனி, இக்காந்தக் கோட்டையிலுள்ளார் கப்பல்களையும் அவற்றிலுள்ள நிதியங்களையும் சரக்குகளையும் கேடு செய்து கொள்ளையடித்தலை,
"நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார் பணிதிறை கொணர்ந்த பாடுசெய் நன்கலம்
நிலந்தினத் துறந்த நிதியத்தன்ன”
என்னும் மாமூலனார் அகப்பட்டானும் அறியலாகும்.
ஹ்யூயென்ஸாங் (Hiuen Tsang) என்னும் சீனதேசக் கலைவிநோதர் காந்தக் கோட்டையிலுள்ள பெண்களே
174

விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
இவ்வாறு கப்பல்களைத் துறைமுகத்துக்கு வரச்செய்து மாலுமி முதலியோரை அழைத்துச் சென்று ஆடல் பாடல் விருந்துகளாற் பொழுதுபோக்க ஆடவர்களாகிய இராட்சதர்கள் கப்பலிற் போய்க் கொள்ளையடித்துக் கொள்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் வர்த்தகரும் இவ்விஷயம் அறிந்தவர்களாதலாலே காந்தக் கோட்டை வைபவம் "அரேபிய இராத்திரி காலகூேடிபம்" (Arabian Night's Entertainment) 6Taigilb-g|TLS Lustgogy நூலிலும் சொல்லப்படுகிறது.
“பெரிப்பிளஸ்” என்னும் கி.பி. 1-ம் நூற்றாண்டுச் சரிதையாளன் காந்தக்கோட்டையைச் "சோப்பட்டம்” (Sopatama) என்பர். "சோப்பட்டினம்" என்பது மதில் அல்லது எயில் விசேஷம் பெற்று அரணாக்கப்பட்ட கோட்டையையுடைய பட்டினம் எனப் பொருள்பட்டுக் காந்த மதிலரண்களை யுடையதென இம்மாந்தை நகர்க்கோட்டையையே குறிப்பிடும். இது இலங்கையில் உள்ளதென்பது " சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்” என இராமாவதார விஷ்ணுவைச் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையிற் பரவுதலாலும் அறியலாம்.
(3) திரிபுரங்கள்
லங்கையில் வசித்த தானவர், அசுரர், இராக்கதர்
西 முதலிய சாதியார் இவ்வித கோட்டைகளும் மதில் சூழ்ந்த
175

Page 92
கதிரைமலைப் பள்ளு
அரண்களும் உடையராய் இருந்தார்களென்பது பண்டைப்புராண வரலாறுகளானும் தமிழ் நூற் சரிதக் குறிப்புகளானும் அறியலாம். திரிபுரம் எரியத்தேவர் வேண்டிய காலத்துச் சிவபிரான் அழற்கண்ணால் அவ்வெயில் மூன்றையும் ஒருங்கே அட்டு நீறாக்கினர். அதன்பின் அவ்விடத்து எழுந்த அரணைப்போலும் இராமபிரான் சீதாபிராட்டியாரைச் சிறைமீட்க இலங்கைக்குட் புகுந்த காலத்துத் தவிடு பொடியாக்கினர். அத்துடன் மாயம் இழைக்குங் காந்தக் கோட்டைகள் நின்றுபோகவில்லை. இதன் பின்னரும் பூர்வீக காலச் சோழமன்னன் ஒருவன் இலங்கைக் கரையிலுள்ள தூங்கெயிலொன்றை அழித்ததனாலே "தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்” எனத் தமிழ்ச்சங்க இலக்கியங்களிலே புகழப்படுகிறான். சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில், "தூங்கெயில் மூன்றெறிந்த சோழன் காண் அம்மானை' எனக் கூறப்படுதலினாலே, இக்கோட்டைகள் பண்டைக்காலத்தில் அழிக்கப் பட்டனவே மீட்டும் மீட்டும் முன்போல மூன்றாக இயற்றப்பட்டு வந்தன என்பது தெரிகிறது.
இம்மூன்று கோட்டைகளும் மூன்று வேறு வேறான சாதியார்களின் கோட்டைகளாகவும் இருக்கலாம். விசுவகர்மாவையும் அவரிடத்தில் தோன்றியவர்களாகக் கருதப்படும் பஞ்ச கம்மாளரையும் புகழ்வதற்கு எழுந்த மாந்தைப் பள்ளில்,
176

விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
(1) "சூரபன் மன்மைைனவி பதுமகோ மளைதந்தை
சுரர்புனை வற்பணிந்து கூவாய்குயிலே"
எனப்பதுமகோமளையின் தந்தையாகிய தேவகம்மியனும்,
(2) "இருபது கையுடையான் றனக்குமண் டோதரியை
ஈந்தருள் மயனார் பண்ணைப் பள்ளியராண்டே"
என இராவணன் மனைவி மண்டோதரியின் பிதாவாகிய மயனும்,
(3) "சித்திர ரேகையெனுந்தனதன் மகிர்தேவியே
தெய்வகம்மியன்பெண்ணென்றே கூவாய்குயிலே"
எனக் குபேரன் மனைவி சித்திரரேகையின் தந்தையும் ஆகிய மூவர் குறிக்கப்படுகின்றனர். இதனாலே நாக சாதியாராகக் கருதப்படும் கம்மாளவர்க்கத்தாருக்கும் அசுர இராக்கத இயக்க வகுப்பினர்க்கும் பெண்கொடுத்தல் கொள்ளலால் ஏற்பட்ட சம்பந்த உறவும் காந்தக் கோட்டை மாந்தை நகருரிமை அசுரர், இராக்கதர், இயக்கர் என்னும் மூவகையினர்க்கும் வந்தவாறும் தெரியவருகிறது.இலங்கை யாழ்ப்பாண இந்திய சரித்திரக் கடல்களில் ஆழ்ந்து நுண்பொருள் கொண்டு ஆராய்ச்சித் துறைபோகிய திரு C இராசநாயக முதலியார் இவ்விஷயத்தைத் தமது " பூர்வீக யாழ்ப்பாணம்" (Ancient Jaffna) என்னும் நூலில்
177

Page 93
கதிரைமலைப் பள்ளு
நன்றாக ஆராய்ந்திருக்கிறார். அதிலிருந்தே மேற்கூறிய சில குறிப்புகள் இங்கு எடுத்தாளப்பட்டன. இனி விசுவகர்மாவின் தந்தையாகிய துவட்டா' என்பவன் பெயரால் திருக்கேதீச்சரப்பதி பண்டைக்காலத்தில் துவட்டா நகரம் என்னும் பெயர்பெற்று விளங்கியதெனத் தகூரிண கைலாய மான்மியம் முதலிய நூல்கள் கூறுவதும், மாதோட்டமே மாந்தை என்பதற்கும் இங்கே காந்தக்கோட்டைகள் இருந்தமைக்கும் போதிய சான்றாகும்.
(4) மண்டோதரியுந் திருவாசகமும்
ஆனால் எனது ஆராய்ச்சி திருக்கேதீச்சரத்தின் பழமையையும் தேவாரப்பதிகம் பெற்ற சிறப்பையும், சைவசமயத்துக்கு இத்தலத்துடனுள்ள பண்டைத் தொடர்பையும் விளக்குவதற்கு எழுந்ததாதலாலே அவற்றை மாத்திரம் காட்டி முடிப்பது தகுதியாகும். மேற்காட்டியபடி மாந்தை அல்லது மாதோட்டத்திலுள்ள திருக்கேதீச்சரத்து நாகரோடு சம்பந்த உரிமை பூண்ட மூவகையினரும் சிவவழிபாடு உடையவராய்க் காணப்படுகிறார்கள். குபேரன் அரனது தோழனென அழைக்கப்படும் பெருவாழ்வு பெற்றவன். சூரபன்மனும் சிவனிடம் வரம்பெற்று ஆயிரத்தெட்டு அண்டங்கிளை நூற்றெட்டு யுகங்கள் ஆண்டு, ஈற்றில் சுப்பிரமணியப் பெருமானது ஊர்தியாகவும் கொடியாவும் விளங்கும்
178

விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
பேறுபெற்றான். இராவணனும் அவன் மனைவி மண்டோதரியும் ஆகிய இருவரும் சிவன் மாட்டு ஆழ்ந்த பத்தியுடையவராய்ப் பஞ்சாட்சர செபஞ் செய்தவர்களாதலினாலே, திருஞானசம்பந்த சுவாமிகளும்
" வண்டமரோதி மடந்தை பேணின பண்டை இராவணன் பாடியுய்ந்தன”
என மனைவியாகிய மண்டோதரியின் இயல்பாகவே கசிந்துருகும் சிவபக்தியும், வழிபாடாற்றும் முறைகளும் அவள் பர்த்தாவாகிய இராவணன் இடர்வந்த காலத்துக் கடைப்பிடித்த பத்தி வழிபாட்டினுஞ் சிறந்தனவெனக் காட்டுவான் வேண்டி மண்டோதரியை முற்கூறி, அவள் நாயகனைப் பின்னர்க் கூறினார். அதுவுமன்றி, இப்புராதன சிவஸ்தலமாகிய திருக்கேதீச்சரத்தில் மண்டோதரியின் பொருட்டு நிகழ்த்தப்பட்ட திருவிளையாடலொன்று இங்கு குறிப்பிடத்தக்கது. இவள் தந்தையாகிய மயன் இருப்பிடம் மாந்தை அல்லது மாதோட்ட நகர் என்பது மேலே காட்டப்பட்டது. இவளையுங்கொண்டு இந்நகர்க்கு அணித்தான காட்டிற் செல்லும்போது மயன் இராவணனைச் சந்தித்து அவனை வரனாக்கி மாந்தை சென்று இராவணனுக்கும் மண்டோதரிக்கும் மணம் முடிததமை உத்தர இராமாயணத்திற் கூறப்பட்டுள்ளது. மண்டோதரி கன்னிப் பிராயத்திற்றானே சிவபத்தி முதிர்ந்தவளாய்ச் சிவபிரானை தியானித்து நோற்றாளாக, சிவபிரான் LSLJ F657607 U Tu விடத்துத் தான்
179

Page 94
கதிரைமலைப் பள்ளு
விரும்பியபோதெல்லாம் அவர் தன் முன் வந்து தனக்குக் காட்சிதரல் வேண்டும் என்ற வரத்தை இவள் பெற்றுக்கொண்டனள் என்பர். இவள் மணமுடித்தபின் ஒருநாள் தனது பள்ளியறையில் சயனத்தில் இருந்துகொண்டே சிவதரிசனம் பெற விரும்பி மனதில் தியானித்தாளாகக் கருணையங்கடலாகிய கடவுளும் மண்டோதரியின் பள்ளியறையில் தாமும் ஒரு பள்ளிக்குப்பாயம் அணிந்தவராய்க் காட்சி கொடுத்தனர். மண்டோதரி அவரைக் கண்டவுடன் அளவிறந்த ஆனந்த மேலீட்டினால் தான் இருக்குமிடம் தன் நாயகன் பள்ளியறையின் பாங்கரிலுள்ளது என்பதையும், காலம் சயனத்துக்குரிய இராக்காலம் என்பதையும் மறந்து, பிரசன்னமாய சிவமூர்த்தத்துடன் வார்த்தையாடவும் உரத்த சத்தத்துடன் ஸ்தோத்திரிக்கவும் தொடங்கிக் கொண்டனள். இதனால் பாங்கரிலுள்ள பள்ளியறையிற் சயனித்திருந்த இலங்கேசனது நித்திரைக்குப் பங்கம் விளைய, அவனும் மனைவியினறையில் ஏதோ ஆரவாரமாயிருக்கிறதேயென அதிசயித்து, மனைவியைக் கூவியழைத்து, என்ன ஆரவாரமென்று வினாவிக்கொண்டு இவளறைக்கு வருவானாயினான். சிவபிரானும் பள்ளிக்குப் பாயந்தரித்த ஆடவன் உருவம் நீத்துக் குழந்தை யுருக்கொண்டு அங்கு வதிந்தனர். இராவணனும் மண்டோதரியின் சயன அறையில் வந்து "இங்கு இக்குழந்தை கிடக்குங் காரணமென்ன? இவ்வறையிற் ஆரவாரத்துக்கு இக்குழந்தைதான் காரணமோ?" என வினாவினான். மண்டோதரியும் தனது சேடியொருத்தி மறுநாட்காலையில் வருவதாகச் சொல்லி
180

விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
இக்குழந்தையைத் தன்னிடம் அடைக்கலமாக விட்டுச் சென்றதாகக் கூற, இலங்கேசன் தன் பள்ளியறைக்கு மீண்டான். உடனே குழந்தையும் மாயமாக மறைந்து விட்டது.
மணிவாசகப்பிரான் தமது திருவாசகத்தில் மண்டோதரி கன்னியாயிருந்து நோற்று வரம்பெற்ற வரலாற்றை,
" ஏர்தரும் ஏழுலகேத்த எவ்வுருவுந்தன்னுருவாய் ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரானை"
எனக் குயிற்பத்திலும், மண்டோதரி மனதிற் றியானித்த மாத்திரையில் சிவபிரான் அவளுக்குக் காட்சி கொடுத்ததை,
"...mmu. பெருந்தறை யாதி அந்நாள் உந்து திரைக் கடலைக் கடந்தன்றோங்குமதில் இலங்கையதனில்
பந்தனை மெல்விரலாட்கருளும் பரிசறிவார் எம்பிரானாவாரே"
எனத் திருவார்த்தையிலும், பள்ளிக் குப்பாயம்தரித்த ஆடவனாகக் காட்சி கொடுத்தமையை,
" வெள்ளைக் கலிங்கத்தார் வெண்டிருமுண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் அன்னே யென்னும்
181

Page 95
கதிரைமலைப் பள்ளு
பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேற் கொண்டேன் உள்ளங்- கவர்வரால் அன்னே யென்னும் ”
என அன்னைப் பத்திலும், பிள்ளையாய்க் கிடந்தமையை
" உங்கையிற் பிள்ளை உனக்கே யடைக்கலமென்றங்
கப்பழங்சொற் புதுக்குமெம் மச்சத்தால்"
எனத் திருவெம்பாவையிலும் குறிப்பிட்டுள்ளார் என்பது.
மேலே காட்டிய திருவாக்கியங்களில் "ஆர்கலிசூழ் தென்னிலங்கை”, “உந்து திரைக் கடலைக் கடந்து" என்னுந் தொடர்களாலும், மண்டோதரி, பதுமகோமளை, சித்திரரேகை ஆகிய மூவரது தந்தையாரின் இருப்பிடம் மாந்தையிலுள்ள காந்தக்கோட்டை எனக் காட்டியவாற்றாலும், அசுரர் இராக்கதர் இயக்கர் இலங்கையில் அரசாண்ட காலந்தொட்டு" வங்கமலி கடல் மாதோட்ட நன்னகர்” எனச் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பதிகத்தில் ஒதிய காலம் வரை, திருக்கேதீச்சரம் ஒரு பிரபல்ய துறைமுகப் பட்டினமாயும் சிவஸ்தலமாகவும் விளங்கிய தென்பது தெளிவாகின்றது.
இனித் தலப்பெயர் “திருக்கேதீச்சரம்” எனக் கேது
என்னும் நாகராசன் பெயரால் வழங்கி வருதலாலும், மயன் விசுவகர்மா முதலியோர் நாகசாதியார் என்று
182

விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
சொல்லப்படுதலாலும், திருக்கேதீச்சரம் பண்டைக்காலந் தொட்டு நாகசாதியாரின் வணக்கத்துக்குரிய தலமாக இருந்ததென்பது போதரும்.
(5) கேது பூசித்து வரம்பெற்ற வரலாறு
இத்தலத்தின் பூர்வீக வரலாற்றை நவக்கிரகங்களுள் ஒன்றாகியகேதுவின் மேலேற்றிப்புராணங்கள் கூறும். அது 6)d(15L DfTAŬOJ
“தேவர்கள் அமிர்தம் வேண்டித் திருப்பாற்கடல் கடைந்த காலத்து அமிர்தத்தை எடுத்துக்கொண்டு அசுரர்களை விலக்கி அமிர்தம் பருகும்படி தேவர்களை ஓரிடத்துப் புகுந்தார்களாக அவுணனெருவனும் மாறுவேஷம் பூண்டு அவ்விடத்திற் புகுந்து கொண்டான். மோகினி வடிவங்கொண்ட திருமால் அமிர்தத்தைப் பகிர்ந்து கொண்டு வரும்போது சூரிய சந்திரர்க்கு இடையிற் கரந்து நின்ற அவுணனும் தன் கரங்களை நீட்டி, அமிர்தம் பெற்றுப் பருகியவளவிலே, பக்கத்திருந்த சந்திர சூரியர்கள் இவன் அவுணனென்பதை அயிர்த்து, திருமாலுக்குக் காட்டினார்களாக, அவரும் தன் கையிலிருந்த சட்டுவத்தால் அவன் தலை வேறு உடல் வேறாம் படி வெட்டினார். அவனும் அமிர்தம் பருகியதாலே சாவா மூவாத் திறத்தனாய்த் தலைவேறு உடல் வேறாகியும் சிரத்துண்டம் பாம்பின் உடலும் அவுணத் தலையும் உடைய ஒருருவாகவும், உடற்றுண்டம் பாம்பின் தலையும் அவுண உடலும் உடைய
183

Page 96
கதிரைமலைப் பள்ளு
மற்றோருவாகவும் ஈர்உரு உடையனாய் விளங்கினான். இவ்விரண்டு உருவங்களே இராகுவும் கேதுவுமாம். இவர்களிருவரும் கேதீச்சரத்தையடைந்து கடுந்தவஞ் செய்து தங்களைச் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரரை இடையிடையே விழுங்கி வருந்தும் வரம்பெற்றனர்” என்பதாம்.
மேற்குறித்த கதிரைமலைப் பள்ளுச் செய்யுளிலும், "அங்கம் மொழியன்னார்” என்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்திலும், மேற்காட்டிய புராண வரலாறே குறிக்கப்பட்டுள்ளது. அடங்கன்முறைப் பதிப்பாளரும் ஸ்தலமுறைப் பதிப்பாளரும் கொண்ட பாடத்தில் ஒரு சிறு திருத்தம் செய்துகொண்டாள் பள்ளுச் செய்யுளின் கருத்தும் மேற்படி தேவாரத்தின் கருத்தும் ஒரே தன்மைத்தாய் அமைந்திருத்தல் காணலாம். திருத்தமான பாடம் வருமாறு:
"அங்கம் ஒழி அந்நாள் அரவமரர் தொழுதேத்த வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில் பங்கஞ் செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல் செங்கண் ணரவசைத்தான்திருக் கேதீச்சரத்தானே.”
"அங்கம் ஒழி அந்நாள் - திருமாலால் புடைக்கப்பட்டு உடம்பு இருகூறாகி அந்நாளில், அரவமரர் தொழுதேத்தஉடல் இறுகூறுபட்டும் சாவாமருந்துண்டதனால் பாம்பின்
184

விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
உடலும் மனிதத் தலையும் ஒருகூறும் பாம்பின் தலையும் மனிதவுடலும் ஒரு கூறுமாகிச் சாவா மருந்து புசித்தலினாலே அரவங்களாகவும் அமரர்களாகவும் விளங்கிய இராகு கேதுக்கள் தவஞ்செய்து தொழுது நிற்க" என்பது கூடி திருப்பாசுரம் முதலடியின் பொருள். (அரவமரர் -அரவு + அமரர்- அரவின் வடிவு தாங்கி அமரராய் நின்ற அவுணன்)
இத்தேவாரத் தொடரைத் தழுவியே கதிரைமலைப் பள்ளு ஆசிரியரும்,
"செய்ய கேது தலையற்ற அந்நாள் திருந்தும் பூசைகள் செய்து முடிப்போன்”
என்னுந் தொடரை அமைத்திருத்தல் ஈண்டு நோக்கத் தக்கது.
(6) பண்டைப் பெருமையும் அழிவும்
இத்திருக்கேதீச்சரத் தலம் கடற்பெருக்கினாலோ அன்றி வேறு எக்காரணத்தாலோ பறங்கியர் இலங்கைக்கு வருமுன்னர்த்தானே, (அதாவது 15-ம் நூற்றாண்டின் முன்னரே, அழிந்து திடராயிற்று. அங்கு அழிந்து கிடக்கும் மாளிகைகளும், காலத்துக்குக் காலம் கண்டெடுக்கப்பட்ட
185

Page 97
கதிரைமலைப் பள்ளு
நாணயங்கள் முதலியனவும், இது தற்காலத்தில் கொழும்புநகர்போல பண்டைக்காலத்தில் இலங்கைத்தீவின் இராசதானியாயும் வியாபார ஏற்றுமதி இறக்குமதிவசதிகள் மிகுதியுமுடைய துறைமுகப் பட்டினமாயும் கீழ்நாட்டு மேல்நாட்டு நாவாய்கட்கும் வர்த்தகர்க்கும் ஒர் சந்திப்பு ஸ்தானமாயும் விளங்கியது என்பதைக் காட்டுகின்றன.
வடநாட்டு வைதிகப் பிராமண நைஷ்டிகர் ஒருவர் இங்குத் தரிசனைக்கு வந்த காலத்தில், தாம் தமது வைதிகக் கிரியைகளைச் செய்யுங்கால், தமது வழக்கம் போலச் சூரியபகவானுக்கு வேள்வி ஆகுதி செய்து, அவரை அழைக்கச் சூரியபகவான் அங்குப் பிரசன்னமாகி, “இந்நாட்டிற்கு அடாத கிரியைகளைச் செய்து என்னை இங்கு அழைத்தலினாலே நீயும் நீசனாகக் கடவை. இத்தலமும் அழிந்து போகக்கடவது" எனச் சபித்ததனாலே திருக்கேதீச்சரம் அழிந்ததென ஒரு ஐதிகம் கூறுவர். ஆனால் இவ்வைதிகத்துக்கு நூலாதாரம் கிடைத்திலது.
கிலமாய்க்கிடந்த இத்தலத்தைக் குறித்துப் பறங்கியர் கால இலங்கைச் சரித்திர ஆசிரியர் “டி கோற்றோ" (De Cauto) என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார் :
"And in addition to all these proofs, we find today in
Ceilao vestiges of Roman buildings which show that they formerly had communication with that island. And we
186

விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
may even say more that in it were found the same coins that the freedman (Annius Plocamus) took, when Jeao de Mello de sao Payo was captain in Manar in Ceilao in the year of our Lord 1574 or 1575 (mistake for 1585) in excavating some buildings that stand on the other side in the territories they call Mantota where even today there appear here and there very large ruins of roman masonry work; and whilst some workmen were engaged in taking out stones they came upon the lowest part of a piece of foundation and on turning it over; they found and iron chain of such strange fashion that there was not in the whole of India a Craftsman who would undertake to make another like it." T.C.B.R.A.S.Vol.20 P83.
"இந்த அத்தாட்சிகளோடு இலங்கையில் முற்காலத்தில் உரோமரால் நிருமிக்கப்பட்ட கட்டிடங்கள் இருந்த அடையாளங்கள் இன்றுங் காணப்படுதல் முற்காலத்தில் உரோமர்கள் இலங்கைத் தீவுடன் போக்குவரத்து முதலிய தொடர்புகள் உடையவர்களாக இருந்தனர் என்பதற்கு இன்னும் ஒரு அத்தாட்சியாகும். மேலும் கி.பி.1585 என்பது பிழையாக 1575 என எழுதப்பட்டது. ஜோவா டெ மெல்லோ டெ சா பாயோ இலங்கையில் மன்னார்ப் பிரதேசத்தில் தளபதியாக இருந்த காலத்தில், தன் அடிமைத்தனத்தை நீக்கிக் கொண்ட அன்னியஸ் பிளக்காமஸ் என்பவன் கண்டெடுத்த நாணயங்கள்
மாந்தோட்டம் என்னும் பிரதேசத்தில் சில கட்டிடங்களை
187

Page 98
கதிரைமலைப் பள்ளு
வெட்டிப் பரிசோதித்த போது அங்குக் கிடைத்தவையேயாம். அந்தப் பிரதேசத்தில் இன்றும் இங்குமங்கும் உரோமர்கள் செய்த சுண்ணாம்புக் கட்டிடங்கள் அழிந்து கிடப்பதைக் காணலாம். சில சிப்பந்திகள் கற்களை நிலத்திலிருந்து தோண்டியெடுத்துக்கொண்டிருக்கையில், ஒரு கட்டிடத்தின் அடியத்திபாரப் பாகம் ஒன்று தட்டுப்பட்டது. அதைப் புரட்டியபோது விசித்திரமாகச் செய்யப்பட்ட இரும்புச் சங்கிலி ஒன்று அகப்பட்டது. இந்த இரும்புச் சங்கிலி போன்ற இன்னொன்று செய்து தருவதாக ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு தொழில் நிபுணனாவது இந்தியா முழுதும் தேடியும் அகப்படவில்லை"
(7) கோயில் புதுப்பிக்கப்பட்டமை
அழிந்து கிலமாயிருந்த திருக்கேதீச்சர சிவாலயத்தை மீட்டும் பண்டை ஸ்தானத்தில் அமைக்கக்கருதி நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களும் பிறரும் பெருந் தொகையான பணஞ் செலவிட்டுக்கோயில் எடுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்து நித்திய நைமித்திக பூசை முதலியவற்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். சென்ற பதினைந்து இருபது வருடங்களாகத் திருக்கேதீச்சரக் கோயில் கிரமங்கள் முட்டின்றி நடைபெற்று வருவது சிவதொண்டர் மனங்களிக்கச் செய்வதொன்றாம்.
188

西
.....
{
s
ରା
e)e)elet))e)e)ei
grFD5D
1必 *幻、
|×
*
」も
'sa'a'','o','!'ısı)'ısı)n}\!\!\!\!\!\!1/n}-1}-1}-1}-1;-1;-1;-1;-1;-1;-1;-1)!}\,,,,,,,,,,,,,,,,JJJP」もJJ)」Japaェs)な
asooduselepoog
*
*ッ“gggsrgrrfrrrrsrrrrrrurrFFFにょ“frrェrryfrェェrrrrpF Frc
多
3-4-3-(-g
ダ *
C
awa
w
(-3-((---(--
å

Page 99

11. திரிகோண மலை
காசில் பொற்சிலம் பின்சிகரத்தைக் கால்பறித்தே யெறிந்திட வந்த
மாசில் தென்கோண மாமலையைச் சூழும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே
(Zബ് 6
(1) புராண வரலாறு
அத்திசேடனும் வாயு பகவானும் தம்முள் மாறுபட்டு இகலிய நாளில், இருவரும் தத்தம் வலிமையைக் காட்ட முயன்று மகாமேருவின் கொடிமுடிகளை ஆதிசேடன் தன் பணாமுடிகளால் மூடிக்கொள்ள, வாயுபகவான் தன்வலிமேம்பாடுற மேருவின் சிகரங்களில் மூன்றைப் பலவந்தமாகப் பிடுங்கிக் கடலில் வீசிவிட, அவைகளில் ஒன்று இலங்கையில் வீழ்ந்து திரிகோண மலையாகவும், மற்றைய இரண்டும் தென்னிந்தியப் பிரதேசத்தில் வீழ்ந்து திரிசிரகிரியாகவும், கந்தமாதன வெற்பாகவும் விளங்கின என்பது புராண் வரலாறு. இவை மூன்றினுள் திரிகோணமலையே மிக விசேடமுடைத்தாய் விளங்கிற்று.
189

Page 100
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
(2) தகூரிணகைலாயம் என்னும் பெயர்
மகா மேருவின் சிகரமாதலாலே, இங்குத் தேவர் முனிவர்கள் மிகுந்த பிரீதியுடன் வாசஞ் செய்வதாகக் கூறப்படுகிறது. கயிலாய பர்வதத்தில் சிவனும் அம்மையும் அடியவர்க்கு இகபர போக முத்திகள் அளித்துக் கொண்டிருத்தல் போல, இத்திரிகோண மலையிலும் அடியவர்க்கு அருள்புரிந்து கொண்டு எழுந்தருளியிருத்தலாலே இம்மலைக்குத் தகூSண கைலாயம் என்னும் பெயர் புராண நூல்களில் வழங்கலாயிற்று
தசுஷிணகைலை எனப்படும் திரிகோண மலையைக் குறித்து, தகூதிண கைலாய மான்மியம் என்னும் வடமொழி நூல் பின்வருமாறு கூறுகிறது.
"சங்கர சிவனாய், விந்துநாத வடிவினராய், தேவராய், தாரகப் பிரமமாய், நித்தியராய், கோணேசப்பெருமான் இவ்வாறாகத் தக்ஷண கைலாச கிரியில் அம்பிகை யாரோடு எழுந்தருளியிருப்பர். சிதம்பரத்திலேயுள்ள பொற்சபையும், மதுரையிலுள்ள வெள்ளிச்சபையும், திருநெல்வேலியிலுள்ள தாமிரசபையும், தென்காசியிலுள்ள இரத்தின சபையும், இத் தகூதிணகைலாயத்திலுள்ள சூடாமணி சபையும் ஆகிய
190

கதிரைமலைப் பள்ளு
இவ்வைந்தையும் தனது சென்ம மத்தியில் தரிசிக்கும் எவர்களும் சகல பாவங்களிலும் நின்று நீங்கிச் சீவன் முத்தராவர்” “மாவலிகங்கை, காவேரி கங்கை, மாணிக்க கங்கை, கன்னியா கங்கை, பாவநாச தீர்த்தம் என்னும் சுபகரமாகிய ஐந்து தீர்த்தங்களையும் தினமும் நினைப்பவன் தனது கோடி குலங்களை மேம்படுத்துவான்.”
இவை மேற்படி தலம், ஆங்குள்ள சபை, தீர்த்தம் ஆகியவற்றின் சிறப்பைக் கூறியனவாகும்.
இத்தலத்தைக் குறித்து எழுந்த நூல்கள் பல.
கந்தபுராணத்தின் ஒர் பாகமாகக் கருதப்படும் தகூழின கைலாய மான்மியம் என்னும் வடமொழி நூல் ஒன்று; காப்பிய ரூபமாகத் தமிழில் பண்டிதராசர் என்னும் புலவராற் செய்யப்பட்ட தகூSண கைலாயபுராணம் என்னும் நூல் மற்றொன்று. இது யாழ்ப்பாணத்து நல்லூரில் அரசுபுரிந்த ஆரிய மன்னருள் கீர்த்தி வாய்ந்தவனான ஐந்தாம் செகராஜசேகரன் அல்லது ஐய வீரசிங்கை ஆரியன் அவைக்களத்து அரங்கேறிய நூல் என்ப. ஜயவீர சிங்கை ஆரியன் காலம் கி.பி.1380-1414என்பர் சரித்திர ஆராய்ச்சியாளர்.
இம்மன்னன் மதுரை ஆலவாயைப் படியெடுத்துத் தனது நகரியாகிய யாழ்ப்பாணத்து நல்லூரில் சொக்கநாதர்
மீனாட்சியம்மை கோயில் அமைக்கப் பிரயத்தனஞ் செய்த
191.

Page 101
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
காலத்தில் கைலாய நாதர் அவ்வரசன் முன் கனவில் தோன்றி "நான் கயிலாயநாதன்; என்னை மறந்தனையோ?” என்று கூறியது அவன் மனதிற்பதிந்து கொண்டமையால், தான் தன் நகரியில் எடுப்பித்த கோயிலைக் கைலாயநாதர் கோயிலாகப் பிரதிஷ்டை செய்தானென முத்துராச கவிராசர் இயற்றிய கைலாயமாலை என்னும் நூல் கூறும்.
(3) முக்கயிலை
யாழ்ப்பாணத்து நல்லூர்க் கைலாச நாதர் கோயிலை எழுமுன்னர் வடகயிலை (திருக்கயிலாயம்) தென்கயிலை (திரிகோணமலை ) என இரண்டு கயிலை உண்டு என்று நூல்கள் கூறும்.
வைட்ட7ன வடகயிலை என்றிரண்டு வரைக்கு மிசன் செப்பாதி வடமொழியின் புராண நடை தென்மொழியாற்
செப்பு/கென்ற7ன்”
என்று மேற்குறித்த தகூரிண கைலாய புராணம் என்னும் தமிழ்க் காப்பிய நூலாசிரியர் இருகயிலைக்கும் வடமொழியிலுள்ள மச்சேந்திர புராணத்தைத் தமிழ் நடையிற் செய்யும்படி தன்குரு தனக்கு ஆஞ்ஞாபித்ததைக் குறிப்பிடுகிறார்.
நல்லூர்க் கைலாசநாதர் கோயில் எழுந்த சமகாலத்திற்றானே கயிலாயமாலை என்னும் நூலைக் "கலிவெண்பாச் செய்யுளாக இயற்றிய முத்துராச கவிராயர்,
192

கதிரைமலைப் பள்ளு
நந்தி திருமுகத்தின7ட்ட மிட்டு-நந்தமிர்தச் சித்திர கைல7சமெ7டு தென்கயிலை மிவிவிரண்டு நித்தமுள7ம் ஒர்ந்துறையும் நேயடத்தி அத்துடனே முக்க/பிவை ம/7கநல்லை முது/7னெ77ன்றமைந்த தக்கம்பிவை மிதின் அமர்ந்துறைய”
ଶTର୍ତt go தொடரில் சித்திர கைலாயமெனக் குறிப்பிடப்பட்ட வடகயிலாயத்துடன் கோணநாதர் உவந்துறையும் தென்கைலாசமாகிய திரிகோண மலையை இரண்டாவதாகக் காட்டி, பின் யாழ்ப்பாணத்தில் நல்லை மூதூரில் ஜயவீர சிங்கையாரியன் எடுப்பித்த கைலாசநாதர் கோயிலை மூன்றாவது கயிலாயமாகப் புகழ்ந்தவாற்றானும், இக்கவிராயர் இயற்றிய கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலும் "திரிகயிலை” என்னும் பதப்பிரயோகம் பல இடத்திலும் காணப்படுதலானும், திரிகோணமலை தென்கயிலாசமாகப் பண்டுதொட்டு எண்ணப்பட்டு வந்தமை நன்கு விளங்கும்.
(4) இராவணனும் திரிகோணமலையும்
இராவணன் மனைவி மண்டோதரிக்கும் அவள் தாய் தந்தையர்க்கும் குலமுறை வழிபாடாற்றும் சிவஸ்தலமாகத் திருக்கேதீச்சரம் திகழ்ந்த்து போலத் திருக்கோணாசலம் இராவணன்பிறப்பு, ܀- இளமைப்பிராயம் முதலியவைகளோடு சம்பந்தப்பட்ட ஸ்தலமாகக்
காணப்படுகின்றது.
193

Page 102
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
தமிழ்க் காப்பியமென மேலே காட்டிய தகூரிணகைலாய புராணத்தில் இராவணனது தாய்தந்தையரின் விவாகம், இராவணன் அவன் தம்பியர் தங்கை முதலியோரது பிறப்பு ஆகியவைகளை வடமொழி தென்மொழி இராமாயணங்களிலுள்ள வரலாறுகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக் கூறும் பாகங்கள் பலவுள. இனி, இராவணன் கைலாயமலையை எடுத்த சம்பவம் இக்கோணேசகிரியில் நடந்ததாக அந்நூல் கூறும். இதற்கு அத்தாட்சியாக ஆழமான சமுத்திரத்துக்கு மேலாகச் சிறிது தூரஞ் சென்று கீழே அலை மோதும் இம்மலையின் ஒர் புறத்தை இது இராவணன் வெட்டுஅதாவது, மலையைத் தூக்கிச் செல்வதற்குத் தன் இருபது தோளும் இடம் பெறும்படி மலையின் அடிப்பாகத்தை இராவணன் அகழ்ந்த இடம் இது- எனக் காட்டப்படும் ஒர் இடம் இக்காலத்திலும் காணலாகும். இதுவுமல்லாமல், இராவணன் கைலாசநாதன் காற்பெருவிரலால் ஏற்றப்பட்டு அலைமோதும் கடலிற் கிடந்துகொண்டே தனது சிரமொன்றை அரிந்து தன் நாடிநரம்புகளையே தந்திகளாக்கிச் சாமகீதம் பாடிச் சிவகடாக்ஷம் பெற்றான் எனவும் இந்நூல் கூறும்.
இவன் கடலில் திரைகளால் ஏற்றுண்டு கடலில் அமிழ்ந்தி இறந்தானென்றெண்ணி இவன் தாயும் புத்திர சோகத்தால் இறந்து விட்டதாகவும், இராவணன் கீதம்பாடி மீண்டும் கோணேசர் கோயிலுட் பிரவேசித்துச் சுவாமி தரிசனஞ்செய்ய எத்தனித்த வேளையில் பூரீமந் நாராயணன்
194

கதிரைமலைப் பள்ளு
அவன் மாதாவின் மரணத்தை அவனுக்கு அறிவித்து, கோயிலுக்குள் செல்லவிடாது தடுத்துத் திரிகோண மலைக்கு அணித்தாய கன்னியா தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்வித்து, மாதாவின் அபரக் கிரியைகளையும் விதிப்படி முடிப்பித்து, பின் சுவாமி தரிசனம் செய்யவிடுத்து அவனுக்கு ஒரு இலிங்கமுங் கொடுத்து இலங்காபுரிக்குச் செல்ல விடுத்தனரென மேற்படி புராணம் கூறும்.
(5) குளக்கோட்டன் திருப்பணி
மனுநீதிகண்ட சோழன் மகனாகிய குளக்கோட்டr மகாராசன். பெயர், ஐதிகவழக்கில் திரிகோணமலையுடன் பெரிதும் தொடர்புடையதாக வழங்கி வருகின்றது. குளமும் கோட்டமும் நிருமித்த காரணத்தால் இவன் குளக்கோட்டன் எனப்பட்டான் போலும். தகூFண கைலாச புராணப்படி வரராமதேவன் என்னும் பட்டப்பெயருடைய இவனது தந்தை சோழநாட்டில் அரசு வீற்றிருந்த காலத்தில் மச்சேந்திர புராணத்தில் தகூSண கைலாயப் பெருமை கூறிய பாகத்தை ஆவலுடன் கேட்டு, இலங்கைக்கு வந்து திரிகோண மலைச்சிகரத்தில் கோணேசர் கோயில் எடுப்பித்துத் தமனியத்தால் வேய்ந்து, பூசை விழா முதலியன நடப்பித்து, அங்குச் சிறிது காலம் இருந்து, பின் தனது அந்திய காலம் சமீபிக்க, திருப்பணிக்குக் கொண்டுவந்த பொன்னை ஒரு கிணற்றில் அடைத்துக் காவல் வைத்து, தனது மரணத்தை மகனுக்கு அறிவிக்கும்படி தூது அனுப்பவும், அவன் இவன் வரும்பொழுது திரவியமிருக்கும் இடத்தைக் காட்டவும்
195

Page 103
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
ஒழுங்குகள் செய்தபின் மரித்துவிட்டான். குளக்கோட்டனும் தந்தை மரணம் அறிந்து, இவன் வந்து, திரவியம் புதைத்து வைத்த கிணறு கண்டு, அது கொண்டு திருப்பணி முற்றுவித்தான். தந்தையாற் கட்டப்பட்ட மலைச்சிகரக் கோயில் சிறிது பழுதுற்றிருந்தமையால் அதைப் புதுக்கி, கோபுரங்களைத் திருத்தி அற்புதாலங்காரமான ஆலயமாக்கினான். அவ்வாலயம் நித்திய நைமித்தியங்களுக்கு முட்டுற்றிருந்தமையால் அதற்கு வேண்டிய விளைநிலங்களை அமைத்து அந்நிலங்கள் நீர்வளம் பொருந்தி எக்காலமும் விளைவுகொடுக்குமாறு மகத்தான ஒர் ஏரியையும் கட்டினான். அவ்வேரியாற் பாயும்நிலம் பதினேழாயிரம் அவண விதைப்பாடு. இத்துணைப் பெரிய கிராமத்தை விளைவிக்க மருங்கூர் முதலிய இடங்களிலிருந்து, வன்னிய ஜாதிக் குடும்பத்தவர்களையும் அழைத்து அங்குக் குடியேற்றினான். இது நிகழ்ந்த ஆண்டு மாதம் தேதி முதலியன,
'திருந்துகவிடபிறந்தைஞ்ஞற்றிருபதுடன் இரண்ட7ண்டுசென்ற பின்னர்ப் 4/ரிந்திடப் மாத மதில் ஈரைந்தார் தேதி திங்கள் புணர்ந்தநாளில் தெரிந்த புகழ் ஆலயம7ஞ்சினகரமும் கோபுரமும் தேரூர்வீதி பரிந்துரத்ன மணிமதிலும் பாடந7 சகச்சுனையும் பகுத்தான் மேலே7ன்”
என்னுங் கோணேசர் கல்வெட்டுச் செய்யுளாற் குறிக்கப்படுவனவாம். இதுவுமன்றி, கோயில் அபிடேகங்கள் நிவேதனங்களுக்கு நெய்க்கிணறும் எண்ணெய்க் கிணறுகளும், எண்ணெய் வருவாய்க்குத்
196

கதிரைமலைப் பள்ளு
தென்னை இருப்பை புன்னை ஏரண்டம் செறிந்து நிற்கும் மரச்சோலைகளும், அடைக்காய்க்காகக் கமுகஞ் சோலைகளும், முக்கணிக்காகப் பலா மா வாழைச் சோலைகளும் அமைக்கப்பட்டன. இவையன்றிக் கணக்கெழுதல், கோயில் அலகிடல், மெழுக்கிடல், முதலிய கோயிற்றொழும்புகள் செய்ய மருங்கூர் காரைக்காடு முதலிய இடங்களிலிருந்து குடிகளைக் கொண்டு வந்து, அங்கு இருத்தி, அவர்களுக்கு நிலங்களும் மானியமாகக் கொடுத்து, ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமைகளைக் கனகசுந்தரப் பெருமாள் வழமைப் பத்ததி முதலிய ஏடுகளில் வரைவித்தான். இதன் விவரம் கோணேசர் கல்வெட்டு என்னும் நூலில் பின்வருமாறு குறிக்கப்பட்டிருக்கிறது.
இத்தலத்தில் அரன் கைலை ஆலயத்தில் இயன்றதெ7ரு
தனிமுதலின் இருப்பு/ந7ட்டி நித்தம்வரும் வரவ7கும் பெ7ருள்களே7டுநிதம்பூசைச் செலவெழுததியமஞ் செய்து அத்தர்மு7ைம் நடன7Zமிடல் பன்றி குற்றல் ஆல7த்தி அதிகப்பட்டரசுற்கிதல் இத்தனையுந்த7னத்த7ர் செய்வீரென்ன எழுகுடிக்கு மிர7யப்பட்ட மிந்த7ன் வேந்தன்
(பன்றி குற்றல் - சூகரவேட்டையென அக்கோயிலில் நடக்கும் ஒர் விழா)
197

Page 104
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
சன்னிதியினவிர்செய்யுந் தொழும்புமக்கு ந7ன் உரைக்கத்த7ன்நீர் கேளும்
6ـ 5ى 56%75/7Zم - 7600لسل الله للعو7م)6076 668 நல்லட்/ஷ்ட/பத்திரங்க ளெடுத்தல்தூர்த்தல் முன்னதிரை விளக்கேற்றல்தணிகைதட்டு முட்டிவைகள் விளக்கல்கொடி குடைகள் நித்தம்
உன்னதzம/7 யெடுத்தல்அல கிடுதல்ச7ணி
ിഥബ്രുക്സി, ബഥമ
றெ7கரும்பும் உகந்தே ஈதல் செய்ய நடன ஸ்திரிக்கு முட்டுவகை கொட்டலெ7டு சிறக்கப் ப7டல் ஐயமற நற்பவிக்குப் ட/7வ/டை மயிடுவதுவும் அதுவேயன்றித் துப்ய சுண்ணங் கொடியேற்ற விறக்கலெ7டு சுமத்தலுஞ்சாந்தரைத்தேயிதல்
மெய்யெனவே ஆலயத்துட் பணிகளைத்துப் 426/7& 62%.72%af G2//aff
கோயிற் றொழும்புகள் கிரமமாக நடைபெறுவத்ற்கும்
தொழும்பாளர்கட்கும் இடையில் விவகாரங்கள்
தீர்ப்பதற்கும் மதுரையிலிருந்து தனியுண்ணாப் பூபாலனை அழைத்து அதிகாரஞ் செலுத்துமாறு வன்னிமையாக நியமித்தான்.
198

கதிரைமலைப் பள்ளு
குளக்கோட்டன் ஆடகசவுந்தரி என்னும் இலங்கை அரசகுமாரியை மணஞ்செய்தானென்றும், அவளால் அனுப்பப்பட்ட பூதங்களே திரிகோணமலையிலுள்ள மிகப் பெரிய குளமாகிய கந்தளாய்க் குளத்தைக் கட்டி முடித்தன என்றும் திருக்கோணாசல புராணங் கூறும். அப்புராணத்தின்படி ஆடகசவுந்தரியின் வரலாறு கீழே தரப்படுகின்றது.
(6) ஆடக சவுந்தரி
குளக்கோட்டன் கோட்டம் நிருமித்து, சிவாலய பூசை விதிமுறையாக நடக்கவேண்டித் தான் மானியமாகவிட்ட நிலங்கட்கு நீர்ப்பாய்ச்சல் முட்டுறாதபடி ஏற்பாடு செய்ய எண்ணி வெகு குளங்கள் கட்டுவித்தும் ஒன்றினாலும் திருப்தியடையாதவனாய் வருஷம் பன்னிரண்டு மாதமும் மாறாமடையாய் ஒருகுளம் கட்டுதற்கு ஏற்ற இடம் தேடிக்கொண்டிருந்தான்.
இவ்வாறிருக்கையில் கலிங்கநாட்டரசனது தேவிவயிற்றில் பிறக்கும் போதே கூந்தலும் எயிறும், கொங்கையும் பேச்சும் உடையவளாகப் பிறந்து, சோதிடர் சொற்படி அரசனால் பேழையில் அடைக்கப்பட்டுப் பெருங்கடலில் விடப்பட்டுப் பேழையுடன் இலங்கைக் கடற்கரையை அடைந்து இலங்கையரசனால் சுவீகாரப்புத்திரியாக எடுத்து வளர்க்கப்பட்டுத் தன்னை
199

Page 105
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
வளர்த்த தந்தை இறந்தபின் அவனது அரசுரிமையை அடைந்து இலங்கையை ஆண்டுவந்த ஆடகசவுந்தரி என்னும் அரசி, குளக்கோட்டன் திரிகோணமலையில் கோயில் கட்டும் செய்தி கேட்டுத் தன் முதன்மந்திரியை அழைத்து, "வட கரையிலிருந்து ஒரு சைவன் வந்து கீழ்க் கரையில் ஒரு மலையின் மேல் ஆலயங் கட்டுகிறான் என்ற செய்தி கேட்டேன். நீ போய் அந்த ஆலயத்தை இடித்துக் கடலிலே தள்ளி அவர்களையும் ஒடத்திலேற்றி அனுப்பி விட்டு வா" என்று உத்தரவிட்டனுப்பினாள்.
மந்திரியும் படையுடன் புறப்பட்டுத் திரிகோணமலையை யடைந்து ஆலயங் கோபுரம் மண்டபம் முதலிய சிறப்பைக் கண்டு அதிசயித்து நிற்கக் குளக்கோட்டன் அவனைத் தன் சமுகத்திற்கு அழைப்பித்தான். மந்திரியும் கொலுமண்டபத்தை யடைந்து அரசனது தெய்விகத் தோற்றத்தைக் கண்டு அவனை வணங்கக் குளக்கோட்டனும் மந்திரியை உபசரித்து, " வந்த காரியம் என்ன” என்று கேட்டான். மந்திரி, "எமது அரசியாகிய ஆடகசவுந்தரி தேவரீர் இங்குச் சிவாலயம் அமைக்கும் செய்தி கேட்டு, இவ்விடத்து ஏதொரு காரியம் முட்டாயின் எங்களால் இயன்ற காரியத்திற்குக் கேட்டுவரச் சொல்லி அடியேனுக்குக் கட்டளையளித்த படியால் இவ்விடம் வந்தேன்” என்றான். அரசனும் புன்னகையுடன் "ஆலயத்தையும் இடித்து எங்களையும் ஒடத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு
200

கதிரைமலைப் பள்ளு
வரும்படியல்லவா உனக்கு அரசி உத்தரவிட்டாள்" என, மந்திரியும் நடுங்கி அது உண்மையென ஒப்புக்கொண்டான். குளக்கோட்டன் "நுமது அரசி எமது வமிசத்தாள்; எம்மை அறியாமற் சொன்னதற்கு நீ அஞ்ச வேண்டாம்” என்று அவனைத் தேற்றி தன் நினைவின் படி வருஷ முழுதும் மாறாமடை பாய ஒரு குளங்கட்டுதற்கு எவ்விடம் நல்ல தென்று கேட்க, மந்திரி "அறுபத்துநாலுகுளமும் வயலும் இரண்டு மலைக்கு மேல் பாலாக உண்டு. அந்த இரண்டு மலையையும் பொருத்திக் கட்ட ஒரு பெருங்குளமாம் "என்று பதிலளித்தான். மன்னன் "இவ்வளவு பெரிய வேலை யாரால் முடியும்? " என்று சோர்வுற, மந்திரி " அடியேன் நினைத்தபடி தேவரீர் செய்வீராகில் நான் ஒன்பது நாளைக்குள் குளங்கட்டுவித்துத் தருவேன் ’ என்று வணங்க, மன்னனும் அவன் குறிப்பறிந்து தான் அணிந்திருந்த மாணிக்க மாலையையும் கணையாழியையும் கொடுத்து மணவார்த்தைப்பாடும் சொல்லி அவனுக்கு விடை கொடுத் தனுப்பினான்.
மந்திரி தன் அரசியிடம் மீண்டு, குளக்கோட்டனது பெருமையைக் கூறி மாலையும் கணையாழியுங் கொடுத்து மணவார்த்தையுங் கூறினான். ஆடக சவுந்தரி மணத்திற்கு இசைந்த பின், அவள் அனுமதி பெற்று, குளங்கட்டுதற்குக் குறட்பூதம் ஆறையும் ஒரு பூதராசாவையும் கூட்டிப்போய் மலையோடு மலை பொருத்திக் குளம், கால்வாய், மதகு முதலிய யாவும் ஒன்பது நாளில் குறைவற முடித்துப்
201

Page 106
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
பூதங்களையும் அவர்களிருக்குமிடத்திற்கு அனுப்பிவிட்டு மந்திரி குளக்கோட்டனையும் அழைத்துக் கொண்டு ஆடக சவுந்தரியின் தலைநகராகிய உண்ணாச கிரிக்கு மீண்டாள். உண்ணாச கிரியில் குளக்கோட்டன் இராசகுமாரியை விவாகம் செய்து சில நாள் அங்கிருந்து பின் இராசாத்தியுடன் திரிகோணமலைக்குச் சென்று திருக்குளத்தைப் பார்வையிட்டபொழுது வடபுறத்தில் ஒரு பணிவிருக்கக் கண்டு, அரசி தன்னோடு வந்த தோழியர் பணிப்பெண்களைப் பார்த்து " இந்தப் பணிவைக் கட்டுங்கள் ” என்று சொல்லி முடியுமுன் ஆளுக்கொரு கல்லாய் வைத்துக் கட்டி முடித்தார்கள். அவ்விடத்திற்குப் " பெண்டுகள் கட்டு” என்று பெயராயிற்று. இவ்வண்ணம் கட்டி முடிக்கப்பட்ட குளமே பிரசித்தி பெற்ற கந்தளாய்க் குளமாகும். இப்பெயர்க் காரணமும் குளக்கோட்டன் சிவபதமடைந்த வரலாறும் பின்னர்க் கூறப்படும்.
(7) கஜபாகு திருப்பணி
கோணேசர் கல்வெட்டு என்னும் நூற்படி கோணைநாதர் திருப்பணி சேமநிதிக்குப் பொன்னும் ஆபரணங்களும் அளித்ததாகக் கருவூலக் கணக்கில் மூன்றாவதாகப் பெயர்பதியப் பெற்றவன் கயவாகு மன்னனாம். இவனுக்கு முன்னதாகப் பெயர் எழுதப்பட்டிருக்கும் இருவரும் மனுநீதிகண்டசோழனான வரராமதேவனும் அவன் மகன் குளக்கோட்டனுமேயாவர்.
202

கதிரைமலைப் பள்ளு
சேரன் செங்குட்டுவன் வஞ்சிநகரில் பத்தினிப் பிரதிஷ்டை செய்த காலத்து வஞ்சிநகரில் பத்தினி விழாவணி கண்டவனாகச் சிலப்பதிகாரம் கூறும் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனே கோணேசர் கருவூலக் கணக்கு ஏட்டில் மூன்றாவதாகப் பெயர் பதியப் பெற்ற கயவாகு மன்னனாவன். இவன் காலம் கி.பி.13-125 என்பர். இவன் கோணநாதர் தமனிய மூலஸ்தானத்தை இடித்து அங்கு ஒரு புத்த விகாரை கட்டுவதாக மனதிலெண்ணித் திரிகோணமலைக்கு வழிக்கொண்டு தன் சேனையுடன் குளக்கோட்டனால் கட்டப்பட்ட பெரிய ஏரியண்டை வந்து சேர்தலும் கோணநாதர் ஒரு திருவிளை யாடலாக அவன் கண்களை ஒளிமழுங்கச் செய்தாரென்றும், அவன் அப்பாற்செல்ல முடியாது திகைத்து நின்ற அளவில் கோணநாதர் ஒரு வேதியர் வடிவங்கொண்டு வந்து அவனுக்குத் திருநீறு அளித்தருளினரென்றும், அதனை அணிந்த மாத்திரத்தில் அரசன் மீட்டும் கண்ணொளி பெற்று வியப்படைந்தானென்றும், அரசனுக்கு கண்தழைத்த குளக்கரையாதலின் அக்குளம் " கண்தழை ” அல்லது " கண்டழை" என்னும் பெயர் பெறுவதாயிற்று என்றும் ஐதிகம் கூறும்." கண்டழை குளம்” என்னும் பெயர் மருவி இக்காலத்தில் “ கந்தளாய்க் குளம்” என வழங்கி வருகிறது.
அரசன் திரிகோணமலை அடையும் முன்னரே புத்த குருமார் கோணேசர் ஆலயத்தை அடைந்து கலகம் விளைத்து அங்குப் பூசகராக இருந்த பாசுபதக்
203

Page 107
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
குருக்கள்மாரையும் கடலுள் தள்ளி வீழ்த்தி விட்டனர் என்றும் பாசுபதர்கள் இறந்து விட்டனர் என்று ஒரு வதந்தி பரவும் தருணத்தில் கயவாகு மன்னனும் கோணேசர் சந்நிதியை அடைந்தான்.
அடைந்து சந்நிதி அலங்காரச் சிறப்பைக் கண்டதும் அரசன் மனங்கசிந்துருகி ஆனந்த பரவசனாகிக் கோணநாதர் ஆலயத்தைப் புத்தவிகாரையாக்க எண்ணியதன் நினைவால் புத்த குருமார் ஆலயத்துள் நுழைந்து பாசுபதர்களைக் கொலைசெய்த கொடுமையையும் பூசைகள் காலக்கிரமந்தவறிச் சைவர் வணக்கத்துக்கு வந்து அல்லோல கல்லோலப் படுவதையும் நினைக்கவும் பார்க்கவும் சகிக்காதவனாய் மூர்ச்சித்துத் தரையில் வீழ்ந்தான்.
இச்சமயத்தில், பாசுபத வேதியர் இருவர் கடல் அலையில் எற்றுண்டு கரையேற இயலாது தத்தளிக்குஞ் செய்தி அரசன் காதில் வீழ்ந்தது. உடனே அரசன் மூர்ச்சை தெளிந்து எழுந்து கடற்கரைக்குச் சென்றான். அதன்பின் நிகழ்ந்த செய்திகள் கோணேசர் கல்வெட்டில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன:-
"கடன்/மிசை மறையே/77 கமண்டலம் புத்தகத் திடமெ7டு கொண்டிவண் சேர்கின் 27ரென அடலுடை யரசனும் அகமிக மகிழ்ந்து திடமுடன் அரன் திருச் சேவடி வணங்கி மன்னனும் அந்த மலைக்கிழ் இறங்கி
204

கதிரைமலைப் பள்ளு
முன்வந் தவற்கு முதன்மைகை கொடுத்து டபின்வந்தவற்குப் டபின்கை கொடுத்து அன்னர் இருவரையும் முன்னே விட்டு அரசனும் பிறகே அன்பெ7டு வந்து உரக ஆபரணன் ஒனிதிகழ்பூசை திரமெ7டு செப்கெனச் சீருடன் உரைக்க ”
இவ்வாறு கஜபாகு மன்னன் கைகொடுத்துதவிக் கடலிலிருந்து கரையேற்றிய பாசுபதர்கள் இருவரும் அவர்கள் சந்ததியாரும் முற்பாகையாளர் பிற்பாகையாளர் என்னும் நாமம் பூண்டு பாரம்பரியமாகப் பூசை நடத்திவந்தார்கள். இவ்விரு பகுதியார்க்குந் தலைமைபூண்டு விழாக் காலங்களிலும் விசேஷ தினங்களிலும் குரு-த்துவம் நடத்துபவர் " இருபாகை முதன்மை " என்னும் பட்டத்துடன் விசேஷ சன்மானமும் அதிகாரமும் உடையவராய் விளங்குவர்.
கயவாகு மன்னன் புத்தர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் மேற்கூறியவாறு நடந்த கலகத்தால் கோயிற்பூசை தடைப்பட்டி ருந்ததற்குப் பிராயச்சித்த செலவுக்குப் பொன் கொடுத்துப் பிராயச்சித்தஞ் செய்வித்துப் பின்னர் குளக்கோட்டன் காலத்தில் நாளொன்றுக்கு இரண்டவண அரிசித் திட்டம் பண்ணி இருந்ததற்கு மேலதிகமாக நாளொன்றுக்கு ஒரவண அரிசியும் அதற்கடுத்த செலவுங் கட்டளை பண்ணி, நாளொன்றுக்கு மூன்றவண அரிசி நைவேத்தியம் வைத்துப்
20S

Page 108
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
பூசை நடக்கும்படி திட்டம் பண்ணி கனகசுந்தரப்
பெருமாள் கணக்கிலும் பதிவித்துச் செப்பேடு வரைந்து
கொடுத்தான். மேலும்,
"ட்டவர வசைக்கும் பரமர் கே7ணேசர்க் கடன்/மிகுபூசைக் க/டகம் பே747 தரமுறு ந7டுந் த7ன்டே/7 த7தெனத் திடமெ7டு கொடுக்கச் சிந்தையுணிணைந்து வரவுறு வடக்கு வருகரம் //கம7ர் திரமுறு மேற்குச் சிறந்த முனிச்சுரந் தரை புகழ் தெற்குச் சங்கமக் கண்டி உரமிகு கிழக்கு உகந்த வங்காளம் ஏற்றுகைக் கே7ணைஇறைவனுக்காமென ந7ற்றிசைச்குலமுத7லுக7ல் ந7ட்டிக் கூற்றினை உதைத்த கே7ம7ன்பூசனைக் கிவைகாப் கணியூ இரணியம் நெல்முதல் விலைபெறு சரக்கின் மிகுத்த ஆத7யம் பலடெ/7ருள் எதுவும் உத்தினுக் கொன்று நிலைபெறக் கே7ணைநி/மலற்கணிப் /fரென"
என்று கோணேசர் கல்வெட்டில் கூறியபடி மேற்குறித்த எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் ஜனங்களின் வருமான ஆதாயங்களில் பத்திலொன்று கோணேசர் கோயிலுக்கு இறுக்கும்படி கயவாகு ஏற்பாடு செய்தான். இந்தக் கட்டளைப்படி, அவனுக்குப் பின்னும் அநேக நூற்றாண்டுகளாகச் சனங்கள் பத்திலொன்று கடமை கோயிலுக்கே செலுத்தி வந்தார்களென்று தெரிகிறது.
206

கதிரைமலைப் பள்ளு
(8) திருஞானசம்பந்தர் திருக்கோணமலைத் திருப்பதிகம்
கயவாகு மன்னனுக்குப் பின் அவன் சந்ததியாரான புவனேக கயவாகு, மனுநேய கயவாகு என்னும் இரு அரசர்கள் மேற்படி கருவூலக் கணக்கில் பொன்னும் ஆபரணாதிகளும் கோணேசர் கோயில் சேமநிதிக்கு உதவியதாகக் கோணேசர் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்கள். இவர்கள் யார் என்பது ஆராய்ச்சிக்கு எட்டவில்லை. கயவாகுவுக்குப் பின் சிறிது காலத்தில் இலங்கையை அரசாண்டவர்கள் மகாவம்சம் முதலிய சரித்திர நூல்களின் படி நாகசாதி அரசர்களாயிருப்பதால், லம்பகன்ன வகுப்பைச் சேர்ந்த கயவாகுவின் சந்ததியார் சிற்றரசராகித் திரிகோணமலைப் பிரதேசத்தில் நாக அரசரின் கீழோ, அன்றிச் சுயவரசினராயோ அரசு செலுத்தியிருத்தல் கூடும். ஆனால், இதைக் குறித்து ஒன்றும் நிச்சயமாகக் கூற முடியவில்லை. காலக்கிரம வரிசையில் வைத்துப் பார்க்குமிடத்து, மேற்குறித்த கயவாகுமன்னனுக்குப் பின் திரிகோணமலை சம்பந்தமாகக் குறிப்பிடுதற்குரியது திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரத்திருப்பதிகமாகும். அத்திருப்பதிகத்தில் மகாவலி கங்கையின் பெருக்கையும், அது கடலுடன்
சங்கமமாகும் சிறப்பையும்,
207

Page 109
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
"கரைகெழு சந்துங் காரகிற் பிள7வும் அள7ட்/பருங் கனடமணிவரன்றிக்
குரைகடல் ஒதம் நித்திவங் கொழிக்கும்
கே7ணம7மலையமர்ந்த7ரே”?
என முதற் பாட்டிலும், குளக்கோட்டன் காலந்தொட்டுத் தேவாரகாலம் வரையிலும் கோயிற் றொழும்புக்காகவும் வியாபாரம் விவசாயம் முதலிய பிறதொழிற்காகவும் அங்குக் காலத்துக்கு காலம் குடியேறிய ஜனங்கள் கோணேசர் கோயிலைச் சூழ நெருக்கமாகக் குடியிருத்தலை,
"குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்
கோணமாமலையமர்ந்தாரே”
என்று இரண்டாம் பாட்டிலும், இளமரக்காவும் நந்தனவனச் சோலைகளும் மிகுந்திருந்ததை,
"விரிந்து/ர் மெனவல் ம7தவி புன்னை
வேங்கை வண்செருந்தி செண்பகத்தின்
குருந்தெ7டு முல்லை கெ/டிவிடும் டெ/7ழில்குல்
கே7ணம7 மலையமர்ந்த7ரே?
என்று ஆறாம் திருப்பாசுரத்திலும்,
208

கதிரைமலைப் பள்ளு
"துன்று மெ7ண்பெளவம் மெளவலுஞ் சூழ்ந்து
தாழ்த்துறு திரைபல மே7திக்
குன்றும் ஒண்காணல் வ/7சம்வந்துலவுங்
Ga/76007zo/7 Zoé06 Z/a/22/7G7?
என்று பத்தாம் திருப்பாசுரத்திலும், இன்னும் இராவணனுக்கும் தகூரிண கைலாசமென வழங்கும் இம்மலைக்கு முள்ள தொடர்பை,
"எடுத்தவன்தருக்கை இழித்தவர் விரல7ல்
ஏத்திட வ/த்தம7ம் பேறு தெ7டுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும்
இறப்பறியாதவர் வேள்வி தடுத்தவர் வனப்ப7ல் வைத்ததோர் கருணை
ضayZضی7//62 ضZ/(Z6622ZZ2ZZZ(ص) 27627CZ2Z 6 زیر கொடுத்தவர் விரும்பும் பெரும்பு/ கழ7ள7ர்
கே7ணம7/மலையமர்ந் த7ரே?
என எட்டாந் திருப்பாசுரத்திலும், இந்தத் தலத்தின் விசேஷ தீர்த்தமாகிய பாவநாசச் சுனையை,
"கே7யிலுஞ் சனை74/ங் கடலுடன் குழ்ந்த
கே7ணம7 மலையமர்ந்தாரே?
என ஐந்தாவது திருப்பாசுரத்திலும், இத்தலச் சிறப்புகளெல்லாம் குறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொள்க.
209

Page 110
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
சம்பந்தமூர்த்தி சுவாமிகள் காலத்துக்குச் சிறிது பின்னாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்துக்கு முன்னாக இலங்கையில் புத்தசமயம் தலையெடுத்துச் சைவங்குன்றிப் போயினமையால், திருக்கேதீச்சரத்திற்குத் திருப்பதிகம் பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திரிகோணமலைக்குத் திருப்பதிகம் பாடாது விட்டமையும் ஈண்டுக் கவனிக்கத் தக்கது.
(9) புவனேகவீர பாண்டியன் கயல் பொறித்தது
பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பாகத்தில் அதிவிஸ் தீரணமாகவும் மிகவுன்னத நிலையிலுமிருந்த சோழ இராஜ்யம் நிலைகுலைய, பிரான்ஸ் நாட்டில் புரட்சியை (French Revolution) யடுத்து நெப்போலியன் தோன்றி ஐரோப்பா முழுவதும் தன்னடிப் படுத்தி ஆங்காங்குப் புது இராச்சியங்களையும் அரசியல்களையும் நிலைநாட்டியது போலத் தமிழ் நாட்டிலும் ஆந்திர மலையாள கன்னட தேசங்களிலும் வெற்றிமேல் வெற்றியடைந்து கி.பி. 1251 - 1262 வரை, சக்கராதிபத்தியம் செலுத்திப் புது அரசியல்களை நாட்டியவன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனாவன். இவனுடன் சக அரசனாக இருந்தவன் புவனேக வீர பாண்டியன். இவனுக்கு இப்பெயர் வந்த காரணம், இக்காலத்துச் சிங்கள அரசனாயிருந்த முதலாம் புவனேகவாகுவை வெற்றிகொண்டதற்கு அறிகுறியாக பூரீ சங்கபோதி
210

கதிரைமலைப் பள்ளு
புவனேகவாகு என்னும் பட்டத்தையும் வகித்துக் கொண்டதேயாம். இதன் உண்மை வீர பாண்டியன் மெய்க்கீர்த்தி கூறும் குடுமியமலைச் சாசனத்தில் (A. R. No. 356 of 1906)
”........................................................ முழங்கு கனிறே2ப் //77முழுதநரிய ஊர்வலஞ் செய்வித் தந்தைய7ண்ட தடங்கடலிழ மைந்தன் /ெ/7ே மரபெனநினைட்/பிட்
டரசிட மகிழ்ந்து அவனு/ரனிச்சு விரையச் செல்கென விடைகொடுத்தருளி”
என்ற தொடராலும், மகாவம்சத்தில் முதலாம் புவனேகவாகு என்ற அரசனைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களோடு தொடரை ஒப்புநோக்குதலாலும், சிதம்பர மேலைக்கோபுரவாசற் சாசனத்தில் " புவனேக, சிதம்பர மேலைக்கோபுரவாசற் சாசனத்திலும் புவனேக வீர!...கொற்கை காவல்" என்று வீர பாண்டியன் விளிக்கப்படுதலாலும், புவனேக வீரன் சாந்தியென ஒரு விழாத் தமிழ் நாட்டில் சில இடங்களில் நடந்ததாகச் சில சாசனங்கள் கூறுதலாலும் யூகித்தறியக்கிடக்கின்றது. அது நிற்க, இவ்வீர பாண்டியனும் முந்திய அரசர்கள் போலக் கோணேசர் கோயிலுக்குரிய நிலங்களை இறை L6). O இல்லாதனவாக்கினான் என்பது மேற்படி குடுமிய
மலைச்சாசனத்தில்,
211

Page 111
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
", , , ,,,,,,,,,,,,་ திருக்கோண அலைவரப் ப7டன் கழித்து வழங்கியருளி"
என்ற தொடராலும், அம்மலையில் தனது கயல் இலச்சி னையைப் பொறித்தான் என்பது,
"கான7மன்னவர் கண்டு கண்டெ7டுங்க
கே7ண7மலையினுந்திரிகூட கிரியினும் உருகெழு கொடி மிசை இருகயலெழுதி”
என்ற தொடராலும் தெரியக்கிடக்கின்றன.
(10) செகராச சேகரன்
மேற்காட்டிய வீரபாண்டியனாலும் அவனுக்குப் பின்வந்த மாறவர்மன் குலசேகர பாண்டியனாலும் புதிதாக நாட்டப்பட்ட அரசியல்களுள் கி. பி. 1260 - 1620 ஆரியச்சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த யாழ்ப்பாண இராச்சியமும் ஒன்றாகும். இவ்வாரிய மன்னர்கள் செகராச சேகரன் பரராசசேகரன் என்னும் பட்டப் பெயர்களை மாறி மாறி வகித்து, முடிசூடி, அரசு கட்டிலேறியதாகத் தெரிகிறது, இவர்களுள் ஐந்தாம் செகராச சேகரனாகப் பட்டத்துக்கு வந்த ஜயவீர சிங்கையாரியன் என்பவன் காலத்தில், யாழ்ப்பாண இராஜ்யம் அதியுன்னத நிலையில் இருந்தது. இவன் காலம் கி. பி. 1380 - 1414 என்பர். சிங்கள அரசரை வெற்றி கொண்டு அவர்களைச் சிற்றரசராக்கி
212

கதிரைமலைப் பள்ளு
வன்னியர்களையுந் தன்னடிப்படுத்தி இலங்கை முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்டான். அக்காலத்தில் பாண்டிய இராஜ்யத்தின் ஒரு பாகமாக இருந்த இராமநாதபுரம் ஜில்லாவும் மன்னார்க் கடலில் முத்துக் குளிக்கும் உரிமையும் யாழ்ப்பாண இராஜ்யத்தின் ஆணைக்கு உட்பட்டிருந்தன. அது காரணமாக ஆரிய மன்னர் சேதுகாவலர் எனப்பட்டனர். ஆரிய மன்னர் வம்சத்தவர்களே சேதுபதிகளாகவும் இருந்தார்களெனத் தெரிகிறது. தகூSணகைலாச புராணம் இயற்றிய பண்டிதராசர் தமது நூற்பாயிரத்தில்,
தேவையின் மன்செக ர7ச சேகரக் கோவயின் உதித்தசிர்க்கும7ரகுரியன் ஆவியும் உடலுமெ7த் தனித்த கல்வியின் மேவிய காட்டபி/ம் விமலற் காட்/தே"
என்று கூறுதலால், சேதுகாவலனாகிய ஐந்தாம் செகராச சேகரன் காலத்தில் அவன் புதல்வனாகிய குமாரசூரியனே இராம நாதபுரத்தில் சேதுபதியாகவும் செகராச சேகரன் பிரதிநிதியாகவும் இருந்தானென்பதும், குறித்த குமார சூரியனே தகூSண கைலாச புராண ஆசிரியரின் வித்தியா குரு என்பதும் தெரிய வருகின்றன. ஐந்தாம் செகராச சேகரன் வெற்றி வேந்தனாய் இராஜ்ய பரிபாலனம் பண்ணியதுமன்றிச் சைவசமயப் பற்றுடையவனாய்ச் சமயத்தை விருத்தி செய்வதற்கும் முயற்சிகள் செய்தான். தக்ஷண கைலாச புராணம், புத்தர்களால் கோணேசர்
213

Page 112
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
கோயில் பூசைக்கு நேர்ந்த ஆபத்தைக் கயவாகு மன்னன் நீக்கி, பாசுபதர்களை மீட்டும் பூசகர்களாக நியமித்து வருவாய்களுக்குத் திட்டம் பண்ணிய விஷயங்களைக் கூறிய பின்னர், புத்தசமயம் மறுபடியும் தலையெடுத்ததால் சில பூசைகளும் செகராச சேகரன் காலம் வரையில் தாழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிடுகிறது. அதன் பின்னர்,
அம்பு/யத் துதரத் தண்ணல் அமைத்தவ/7 /7/ர்தங்கே7ம7ன்
உடம்பர்வத் திறைஞ்சுஞ் சேது 2 Z//ýez629/7 až க7வல்வேந்தன்
செம்/ெ/7ன்ம7மவுவிச் சென்னிச் செகர7சசேகரேசன் தும்பையஞ் சடைம/7ன் சைவத் தோன்றிடத்
தே7ன்றின7ன77ல்
என்ற செய்யுளில், சைவசமயம் மீண்டும் இலங்கையில் விருத்தி யடைந்து ஓங்குமாறு இவ்வரசன் தோன்றினானென இவனைப் புகழ்கின்றது. இவ்வரசனும் இவனுக்குப் பின்வந்த பரராசசேகரனும் கோணநாயகரைத் தரிசித்து, ஏழுபட்டு முத்து மாலையும், வயிர இரத்தினம் பதித்த தங்கப் பதக்கமுஞ் சாத்துவித்து, முத்துக்குடை பவளக்குடை கொடுத்து, வெகுதிரவியமும், அறைமுதல் இருப்பாக வைத்து, கருவூலக் கணக்கிலும் எழுதுவித்து நாட்டில் நூல்வாங்கிக் கோயிலுக்கு ஒப்புவிக்கிறதற்கு ஒர்
24

கதிரைமலைப் பள்ளு
இறைகடமையில்லாத திரியாயூரும் அதற்கு ஏழு குளமும் ஏழு வெளியுங் கொடுத்து எந்தக் காலத்துக்கும் நூல்வாங்கிக் கொடுக்கச் சொல்லித் திட்டம் பண்ணியதாகக் கோணேசர் கல்வெட்டினால் தெரியவருகிறது. இன்னும் இவ்வரசன், கோணேசர் கோயிலுக்குப் போலத் தான் நல்லூரில் கட்டுவித்த கோயிலுக்கும் பாசுபத மறையோரை இராமேசுவரத்தினின்றும் அழைப்பித்து மேற்படி தனது கோயிலிற் பூசகர்களாக நியமித்து, பூசையும் விழாவும் குறைவுபடாமல் நடத்தினானென அவன் காலத்தில் இயற்றப்பட்ட கயிலாயமலை என்னும் நூல் கூறும். நல்லூர்க் கைலாசநாதர் கோயிற் பிரதிஷ்டை நிறைவேறியபின் முன்னர்க் காட்டியபடி, “ திரிகைலை” என்னும் பெயரும் திரிகோண மலைக்குச் சிறப்பாக வழங்கலாயிற்று.
(11) பரராச சேகரன்
கனகசுந்தரப் பெருமாள் பத்ததியின்படி, கோயிலில் இருப்புத்திட்டமாக வைக்கும்படி GLIT T கொடுத்தவர்களில் பரராசசேகரன் ஒருவன். இவன் யாழ்ப்பாண ஆரிய அரசரில் இப்பெயருடன் பட்டத்துக்கு வந்த ஆறாவது மன்னனாக இருத்தல் கூடுமென ஒருவாறு நிச்சயிக்கலாம். ஆறாவது பரராசசேகரன் காலம் கி.பி.1467 - 1519 என்பர். தகூSண கைலாச புராணம் கயவாகு சரிதத்தின் பின் செகராச சேகரனைக் கூறி முடிக்க, இந்நூலுக்குப்
215

Page 113
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
பிற்காலத்ததாகிய திருக்கோணாசல புராணம் கயவாகுவுக்குப் பின் பரராசசேகரனையும் கண்டியரசனாகிய வரராசசிங்கனையும் கூறி முடிக்கின்றது. கோணேசர் கல்வெட்டோ பரராசசேகரன் செகராச சேகரனென இருவரையும் ஒருங்கு கூறிச் செல்கிறது. திருக்கோணாசல புராணம் பரராச சேகரனைப் பின் வருமாறு குறிப்பிடுகின்றது:-
அன்னத7ளரிடைய7ழகு ழகன்ட்/வி முழுதுத் தன்னத7கவே தனிக்குடைநிழலிற்ற7ங்கும் மன்னன7ம்டர ர7சசேகர னெனும் வன்னல் பெ7ன்னு/ வாந்திரிகே7ணம7ல் வரைதணிற்பெ7ருந்தி சிந்தையன் டபினே7 டரனுமை தனைத்தரிசித்த7ங் கந்தமின்னிதிபூண்மணி நிபந்தங்கள் அமைத்து முந்துசீர் விழ7த் தேர்த்திருந7ண்முறை பே7ற்றிச் செ7ந்த மாநகர் ச7ர்ந்தனன் தொல்குவத்தரசன்
இப்பரராச சேகரன் கதையையடுத்து நளச்சக்கரவர்த்தியும் கோணேசர் கோயிலைத் தரிசித்து அறை முதலிருப்புக்குப் பொன்னுங் கொடுத்ததாகத் திருகோணாசல புராணங் கூறுகிறது. கோணேசர் கல்வெட்டில் அறைமுதல் இருப்புக்குப் பொன் கொடுத்ததாகச் சொல்லப்படுங் கடைசியரசன் ஆரியராயன். இவன் யார் என்பது நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை. சங்கிலியரசன் காலத்தில் வீரமாகாளியம்மன் கோயில் முன்பாகப் பறங்கியருக்கு
216

கதிரைமலைப் பள்ளு
விரோதமாகச் சங்கிலிக்கு உதவிசெய்யவந்த சிங்கள தளகர்த்த னென்று சொல்லப்படும் வீதிராயன் அல்லது வீதிபண்டாரமே இவ்வாரியராயனென ஊகித்தற்கு இடமுண்டு. ஏனெனில் பறங்கியருடைய நெருக்கடியினால் ஆரிய குலத்தவராகிய இராஜ குருவம்ச மடப்பளியாரும் திருக்கோணமலை வன்னிமைப் பிரதானிகளும் சிங்கள அரசர்களும் ஒற்றுமைப்பட்டுச் சம்பந்தம் செய்து கொண்டகாலத்தில் கோணேசர் கல்வெட்டில் இராய பண்டாரத்தாரென்று சொல்லப்படும் வகுப்பினரில் ஒருவர் இராஜமடப்பளியார் சம்பந்தத்தினாலே தனக்கு ஆரியராயனெனப் பட்டம் சூட்டியிருக்கலாம். சிங்கள மகாவம்சத்தில் கோணப்ப பண்டார என்னும் பெயர்தரித்த அரசனுக்கு அப்பெயர் கோணேசர் கோயில் தொடர்பினால் வந்த பண்டாரப் பட்டமாயிருக்கலாம். இது இன்னும் முடிவுபோக ஆராய வேண்டிய விஷயமாகும்.நளச்சக்கரவர்த்தியின் கதைக்கு அடுத்து முன் பின்னாக, கீரிமலைச் சாரலில் தீர்த்தமாடி குதிரைமுகம் நீங்கப்பெற்று மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலை ஸ்தாபனஞ் செய்த மாருதப்புரவல்லியும் கோணேசகிரிக்கு வந்து, பாவநாச தீர்த்தத்திற் படிந்து, கோணேசரைத் தரிசித்து, பட்டாடையும் தானங்களும் பூசகர்க்கு நல்கி, அறையிருப்பு முதலுக்குப் பொன்னும் ஆபரணாதிகளும் கொடுத்து, அதன் பின்னரே கீரிமலைச்சாரலுக்குச் சென்றாளெனத் திருக்கோணாசல புராணம் கூறுகின்றது.
217

Page 114
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
(12) பறங்கியர் திரிகோணமலைக் கோயிலை அழித்தல்
கி. பி. 1624 - 27 போர்த்துக்கீய தேசாதிபதியாயிருந்த கொன்ஸ்தந்தீனு தெசா என்பவன் போர்த்துக்கீய தேச அரசனுக்கு விடுத்த நிரூபம் ஒன்றில் கோணேசர் கோயிலைக் குறித்துப் பின் வருமாறு எழுதியுள்ளான் :- " The land of the Pagoda is 600 fathoms long and 80 feet at its broadest narrowing to thirty feet which is the place where the fort stands. The place is impregnable owing to the high cliffs and the village which lies therein could with very few fortifications be made one of the strongest places of India. When I went there to make this fort, I found engraved on the Pagoda among many other inscriptions one which ran thus: "This Pagoda has been built by (Manu Raja). Nevertheless, shall the time come that a nation of the Frangis will desrtoy it and thereafter shall no king of the Island of Ceylon rebuild it."
" கோயில் இருக்கும் நிலம் 1200 யார் நீளமும் மிக அகன்ற பாகத்தில் 80 அடி அகலமும் 30 அடி ஒடுக்கமும் உடையது. இங்கேயே கோட்டை உள்ளது. உயர்ந்த கொடுமுடிகள் பலவற்றால் சூழப்பட்டிருத்தலால் இவ்விடம் பகைவர் அடைதற்கருமையுடையது. அங்குள்ள சிறு கிராமத்தை இந்தியாவிலுள்ள பலம்மிகுந்த அரண்களுள் ஒன்றாக்குவதற்குச் செய்ய வேண்டிய
218

கதிரைமலைப் பள்ளு
பாதுகாப்புகள் மிகச் சொற்பமே. இந்தக் கோட்டையை அமைக்கும் பொருட்டு நான் அங்குச் சென்றிருந்த போது கோயிற்சுவரில் வேறு பல சிலாசாசனங்களிடையே பின்வரும் கருத்தமைந்த சாசனம் ஒன்று வரையப்பட்டிருக்கக் கண்டேன். மேற்படி சாசனத்தின் கருத்து வருமாறு: "இக்கோயில் கட்டியவன் - (மனுராஜா). இக்கோயில் பறங்கிச் சாதியரால் அழிக்கப்படவும் காலம் வரும். அதன் பின் இக்கோயிலைப் புனர் நிர்மாணம் செய்ய இலங்கையரசர்கள் எவராலும் இயலாது”
இதனால் கொன்ஸ்தந்தீனு தெசா என்பவன் கோணேசர் கோயிலை இடித்தழித்து அதன் திருப்பணிக் கற்களால் பறங்கியரின் திருக்கோணமலைக் கோட்டையைக்கட்டினான் என்பதும் அக்கோயிலில் அநேக கல்வெட்டுகள் இருந்தமையும் தெரிகிறது. பறங்கியர் சரித்திராசிரியராகிய பாதர் குவிரோஸ் (Father Queiroz) தமது இலங்கைச் சரித்திரத்தில் கொன்ஸ் தந்தீனு தெசா என்பவன் கோணேசர் கோயிலை இடித்து அதன் கற்களைக்கொண்டு ஒர் கோட்டை கட்டிய போது ஒரு கல்வெட்டுக் கண்டெடுத்தானென்றும் அக்கல்வெட்டில் "இவ்விலங்கையின் சக்கிரவர்த்தியாக மனுராச இவ்வாலயத்தை வீதியா மேல் மண்டா என்னும் தெய்வத்திற்கு (கி.மு.1300 ஆண்டுக்குச் சரியான) வருடத்தில் கட்டுவித்தான். பறங்கி என்றழைக்கப்படும் ஜாதியார் வந்து இதனை இடிப்பர். பின் இதனைக்கட்டி எழுப்புதற்கு
219

Page 115
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
இத்தீவில் அரசனுளனாகான்” என்று எழுதப்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேற்குறித்த சரித்திரநூலிற் கண்டபடி, வண்க்கச் சுவாமி ஞானப்பிரகாசரால் மேற்படி கல்வெட்டு மீண்டுந் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
மேற்குறித்த கல்வெட்டில் LDg9/TITaffT என்றழைக்கப்படுபவன் குளக்கோட்டனின் தந்தையாகிய மனுநீதி கண்ட சோழன் அல்லது தகூதிண கைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு என்னும் நூல்களால் வரராமதேவன் என்றழைக்கப்படுபவனே. இவன் தனது புரோகிதனிடம் வடமொழி மச்சேந்திர புராணத்தில் கூறப்பட்டிருக்கும் தகூSண கைலாச மகிமை கேட்டு இவன் வந்து மலைச்சிகரத்தில் கோயிலும் மண்டபமும் வீதியும் இயற்றியவாறு முன்னர்ச் சொல்லப்பட்டது. குவிறோஸ் பாதிரியார் குறிப்பிடும் கல்வெட்டில் வீதியாமேல் மண்டா என்பது வீதியும் மண்டபமும் மேற்றளியும் என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபாகப் பறங்கிப் பாஷையிற் குறிப்பிடப் பட்டிருக்கலாம். மேற்றளி என்பது வரராம தேவன் கட்டிய தமனிய ஆலயமும், மண்டா என்பது பிற்காலத்தில் அரசனும் வன்னிபமும் இருபாகை முதன்மையும் இராய பண்டாரத்தாரும் குறைவறக் கூட்டங் கூடியிருந்து கோயில் விஷயங்களைத் திட்டஞ்செய்து கணக்குப் பரிசோதித்து, அரசன் கட்டளைகளையும் பிரசித்தி செய்யும் இரத்தின மாமணி மண்டபமெனக்
220

கதிரைமலைப் பள்ளு
கோணேசர் கல்வெட்டில் கூறப்படும் மண்டபமுமாகலாம். வீதியா மேல்மண்டா என்றொரு தெய்வமில்லை; வீதியையும் மேற்றளியையும் தெய்வத்திற்கு அர்ப்பணஞ் செய்தான் என்பதே பொருளாகக் கொள்ள வேண்டும்.
இனி, கொன்ஸ்தந்தீனுதெசா கட்டிய கோட்டைக்குப் பிற்காலத்ததாகிய (Fort Frederick) போட் பிரெடரிக் எனப்படும் தற்காலக் கோட்டை வாசலில் எதிர்முகமாய்ச் செதுக்கப்பட்ட இணைக்கயல்களும் அதன் கீழ் ஒரு வெண்பாவும் கொண்ட கற்கள் காணப்படுகின்றன. குறித்த இணைக்கயல்கள், "கோணா மலையினும் திரிகூட கிரியினும் இருகயல் எழுதி” யவனென முன்னர்க் கூறிய வீரபாண்டியனால் பொறிக்கப்பட்டவை என்பது சில ஆராய்ச்சியாளர் துணிபு. அவற்றின் கீழ்ச் செதுக்கப் பட்டிருக்கும் வெண்பா பின்வருமாறு
(மு) ன்னே குள (க்) ()ேகாடன் மூட்டு(ந்) (தி)ருப்பணியை (ப்) (பி)ன்னே பறங்கி (பி) (ரி)க்கவே - மன்ன(வ) (பி)ன் பொண்ணா (த) (த)னையியற்ற (வழி) (த்) தேவைத் (து) (எண்) னா (ரேபின்) (னரசர்) கள்
221

Page 116
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
கொன்ஸ்தந்தீனு தெசா, குவிறோஸ் பாதிரியார் என்பவர்கள் சொல்லிய குறிப்புகளைக் கொண்டு மேற்படி வெண்பாவின் அழிந்த அக்ஷரங்களை நிரப்பினால்,
முன்னே குள7க்கே7டன் மூட்டுந்திருப்பணியைப்
4பின்னே உறங்கி/பிரிக்கவே- மன்னவன்டபின் பெ7ண்ண7ததனை இயற்ற அழித்தே வைத்து
67øbó7øðØ777 GZ7 Z %ð76ø77 #7ý56ý,
என்றாகும்.
(மேற்குறித்த எழுத்துக்கள் அழிந்த கல்வெட்டும் அதன் இடையெழுத்துகள் நிரப்பிய வெண்பாவும் திரு.செ.இராசநாயக முதலியார் அவர்களின் பூர்வீக யாழ்ப்பாணம் என்னும் நூலிற் கண்டபடி
குறிக்கப்பட்டன).
இவ்வெண்பா எழுதப்பட்ட கல்லையே கொன்ஸ்தந்தீனு தெசாவும் குவிரோஸ் பாதிரியாரும் குறிப்பிட்டார்களென்றும், இது கோணேசர் கோயிலிலுள்ள பழையகல், என்றும் அதில் எழுதப்பட்ட வெண்பா உண்மையான தீர்க்கதரிசனமென்றும் ஒருசார் ஆராய்ச்சியாளர் சாதிக்க, இன்னொருசாரார் பறங்கியர் இலங்கைக்கு வந்த காலத்துக்கும் கோணேசர் கோயில்
அழிக்கப்பட்ட காலத்துக்குமிடையில் எழுதிச் செருகிய
222

கதிரைமலைப் பள்ளு
இடைச் செருகலென வாதாடுவர். ஆனால் இவ்விஷயம் அவ்வச் சாராரின் சமயக்கொள்கை, மதப்பற்று ஆகிய இவை பற்றுக் கோடாக எழும் சச்சரவுகளென்பதை மாத்திரம் குறிப்பிட்டு அப்பாற் செல்வாம்.
(13) கழனிமலையும் தம்பை நகரும்
வடகயிலைக்கு முக்காதவழிதூரத்தில் கழனிமாமலை என்றொரு மலையுண்டு. அங்கு அகத்தியர், பார்வதி பரமேசுவரர்களது திருமணக்கோலத்தைத் தரிசித்தனர் என்பர் புராணிகர். அதுபோலவே தென்கைலையாகிய திரிகோணமலைக்கு முக்காததுாரத்தில் கழனிமலையொன்று உண்டு. இம்மலையினும் அகத்தியர் சிவபூஜை செய்து சிலகாலந் தங்கினாரென்ற ஐதிகத்தால் இதுவும் விசேஷ தலமாய் விளங்கிற்று. பறங்கியர் திரிகோணமலை ஆலயத்தை அழிக்கத் தொடங்குமுன்னரே திரிகோணநாதர் தம்மையும், தமது பரிவார தேவர்களையும், ஆபரணங்களையும் பொக்கிஷ திரவியங்களையும் கழனிமலைக்குக் கொண்டு செல்லும்படி கோயிலதிகாரிகளுக்குத் g5 DgBl திருவருளாணையைத் தெரிவித்ததினாலே, கோயிலதிகாரிகள் அவ்வாறே கோணநாதர் முதலியோரைக் கழனிமலைக்கு எழுந்தருளச் செய்தார்கள். இதைக்குறித்துக் கோணசர் கல்வெட்டு பின்வருமாறு கூறுகின்றது.
223

Page 117
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
"சேர்ந்த பின்னர் மறை/ே7ர்கள் கே7ணைந7தர் திருட்பூசை வெகுக/7லஞ் செய்யுமந்த7ன் ம7ந்தவிர்பே7ல் மேனியுடைப் பறங்கிவந்து
மகாகே7னைப் பதியழிக்க வருமந்த7னின் ஏட்ந்ததென்ப7ற் கழனிமலை என்றெ7ன்றுண்ட7ங்
கீசனுக்கும் ஆலயமங்கியற்றிப்பின்னர்க் கே7ந்தறைசேர் ஒல்லாந்தர் டபிடிக்குமந்ந7ட்
குவவுசிங்க இரவிகுலங் குறைந்துபே7மே”
இவ்வாறாகச் சிலகாலம் திருக்கோண நாதரையும் பரிவார தேவர்களையும் கழனிமலையில் வைத்துப் பூசை செய்து சிலகாலம் செல்ல, வரராசசிங்கனெனப் புராணங்கள் கூறும் முதலாம் இராஜசிங்கனால் கழனிமலைக்கு அணித்தாகத் தம்பைநகர் எனப்படும் ஒரு நகரமும் திருக்கோணநாதருக்குக் கோயிலும் புதிதாக இயற்றப்பட்டன. இவ்விஷயங்கள் திருக்கோணாசல புராணத்தில் தம்பை நகர்ப் படலத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. முதலாம் இராஜசிங்கன் வரலாறும், அவன் காலமும், அவன் புத்த சமயத்தை வெறுத்துச் சைவசமயத்தில் ஈடுபட்டுப் புத்த குருமாரை விகாரைகளில் இருக்கவொட்டாது துரத்தியவாறும், கதிர்காமக்ஷேத்திரத்துத் தற்கால மூலஸ்தானமும் மதில்களும் கட்டியவாறும் பிறவும் முன்னுரையிற்
224

கதிரைமலைப் பள்ளு
குறிக்கப்பட்டுள்ளன. தம்பைநகரில் இவன் கோணேசருக்குத் திருக்கோயில் அமைத்தவிஷயம் திருக்கோணாசல புராணத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது.
zo/7Z5%//54/4(4/bav 6/7/777& 4725/46i/ 676ಶg/b மேன்மைகெ/7ன் வேந்தன் தன் ட/7ல் விழிதும்பின் கனவின்மேவி ഖ/7ഞ7ബ/് ഗുഞ്ഞിഖ/് ക7ഞ7 Zബ്രുzz74/ഞ്ഞിഴഞ്ഞ7 (മമ് கே7னருள்நீர்மை தன்ன77ல் இணையன கூறலுற்ற7ன்.
உலகமதனிற் சைவநெறி ஒழுக்கம்ரீங்கிப் Gy/7Zazoa.07/f
கலகம்/மிகுந்து வெவ்வினை செம் கடியரீசர் 4/லைத்தொழில்கள்
அலகிலாது செய்யுமனு சிதங்கள் அதிக ம74றவ/7ல்
இலகுவடிவான் வேந்தேய7ம் இரவியே7டும் உறைந்தரு7ை
கன்னல்வேலிவரம்புடுத்த கழனிகுமும் தம்டைநகர் என்னும்நாட்டின் அன்பினே7டும் இலங்கும்மணிப்பொன் 7ை7லயமும் செ7ன்னமுறையிற்ற7ணமைத்துத் தூயபூசைத் தேர்த்திருந7ள் மன்னஅவண் செய்கென அருளி மறைந்த7ன்கோண Zഞ്ഞഖഗ്ഗ/ക്രങ്
225

Page 118
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
இவ்வாறு கனவில் தனக்கு உரைக்கப்பட்ட கோணநாதரின் அருள்வாக்கை மேற்கொண்டு வேண்டிய திரவியங்களையும் திருப்பணிக்குரிய பணிமுட்டுகளையும் சேகரித்துத் தம்பைநகர்த் திருக்கோணேசர் ஆலயத்தைச் சிறப்பாகக் கட்டுவித்து முடித்த வரராஜசிங்கன், பின்னர் தகூSணகைலாச நாதரையும் தேவியையும் அங்குப் பிரதிஷ்டை செய்து குளக்கோட்டன் காலந்தொட்டுப் பறங்கியர்காலம் வரைக்கும் மலையிலுள்ள சிவாலயத்தில் நடந்தபடியே தம்பைநகர் ஆலயத்திலும் நித்திய நைமித்திகங்களும் விழாக்களும் பங்குனித் தேர்த்திருநாளும் கிரமந்தவறாது நடக்கும்படி நிதியமும் நல்கி, வரராச சிங்கமன்னன் தனது தலைநகராகிய கண்டிக்குச் சென்றனன். மலைக்கோயிலிற் போலவே தம்பைநகர் ஆலயத்திலும்,
"வேதஞ்சிறக்க மனுநீதிவிள7ங்கத்தருமடம் மிகவே/7ங்க ந7தனடிய7ர் தெ7ண்டுநெறிநன்மைபெருகிந7டே7றும் ஏதம்நீங்கப் 44 762967/ل மரபின் இறைமைத் தொழில்//7ந்து //துக/த்தங் கனைவரையும் பரிவ/7ற்றெ/7ழும்பு/ பண்ணுவித்தே
மங்கை//7கன் த7ைக்க/7க மன்னன் முன்ன7ள் இயற்றுமத்தப் பெ7ங்குட்/னற்கண் டழைக்குளத்திற் பு/ரியும்வேள்வி பூசைகளும் அங்கங்குரிய முறைப்படியே அடைவின் ஆற்றிக் குறைவின்றி எங்கும்செல்வம் மிகப்பெருக எவரும்துதிக்க விற்றிருந்த7ன்.
226

கதிரைமலைப் பள்ளு
சீரிற்சிறந்த இருப7கை முதன்மைக்குரிய தேசிகர்கள் த77ற்சிறந்த செங்குவளை ász-zo/7/j/ /60274/5 தரப்பெரும7ள் ஏ7ற்சிறந்த சித்திரவித்தாரப்புலவன் இவர்மரபே7ர் Z//7/72567.2/22 2/7607/ba//7/7, 7 A za/7/7/da G2/7/ பண்டபினெ7டும்
கரியகுவளை மலர்மேய்ந்து கடைவாய்குதட்டித்
தேனெ7முக எ7ருமைகிடந்து மூச்செறியும் எழில77 தம்பை வள7ந7ட்டின் உரியகே7ணை ஈசனுக்காங் குற்றதெ7மும்/முறைபூசை விண்ணவர்டே/7ற் /5يZ//7/7/Bق77%D//7A/لZ Z/7/faiva/74a6Azizzasé27G7.
எனக் கோணாசல புராணத்திற் காட்டியபடி, மேற்படி கோயிற் பூசைகளையும், கந்தளாய்க் குளக்கரையிற் செய்யப்படும் பூசை முதலியவைகளையும் குளக்கோட்டனால் நியமிக்கப்பட்ட தனியுண்ணாப் பூபால வன்னிபத்தின் சந்ததியினரான வன்னிபங்களும், இருபாகைப் பாசுபத மறையோர் சந்ததியினரான இருபாகை முதன்மையோரும், சுந்தரப் பெருமாள் சித்திர வித்தாரப் புலவன் மரபினரான புலவர்களும், இராய பண்டாரத்தார், தானம் வரிப்பற்றார் ஆகிய இவர்கள் சந்ததியாரும் தத்தம் தொழும்புகளைக் கிரமமாகச் செய்து, வழிவழியாக நடத்திவந்தார்கள். மேற்குறித்தவர்களுக்குக்
227

Page 119
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
கோயிலிலுள்ள உரிமைகளும், கடமைகளும் அக்கடமைகளைச் சரிவர நடத்தாதொழியின் அவர்கள் பெறுந் தண்டனையும் கோணேசர் கல்வெட்டு என்னும் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
14. தஞ்சாவூர் நாயக்க அரசரின் மரபினரான கண்டி வடுக அரசர்
வரராசசிங்கன் அல்லது முதலாம் இராஜசிங்கனுக்குப் பின்வந்த கண்டியரசர்கள் கோணேசர் கல்வெட்டில் "வடுகர்’ எனச் சொல்லப்படுகிறார்கள்.
"பே7ணடபின்னர் இலங்கை முற்றும் வடுகர7ள்வர்
புகழிலங்கைதனிபுரக்கும் உல7ந்த7 மன்னன்
தான்இலங்கும் அரசினுக்குத் தடையென் றெண்ணித்
தரியவனைக் கடலிடையே தன்னி விட்டுத்
தேனமரும் அலங்கல்புனை வடுகன்றானுஞ்
செப்டபிம7ற் றரசுமகிழ் கொண்ட கே7ணை
ம7ணடரனகமகிழ்பெ7ற் கே7யிலுக்குள்
ம7தனத்து மிதுவைத்து வணங்கு வார7ல்”
- கோணேசர் கல்வெட்டு
மகாவம்சம் என்னும் சிங்கள நூற்படி, முதலாம் இராஜசிங்கன் காலந்தொட்டுக் கண்டி நகரத்தை அரசாண்ட அரசரின் நாமாவளியும், அவர்களாண்ட
காலமும் கீழே தரப்படுகின்றன.
228

கதிரைமலைப் பள்ளு
அரசன் பெயர் அரசுகட்டிலேறிய
காலம். கி.பி முதலாவது இராஜசிங்கன் 1581 முதலாவது விமலதர்மசூரிய 1592 சேனாரத்ன 1620 இரண்டாம் இராஜசிங்கன் 7627 விமலதர்ம சூரிய I 1679 பூனரீ வீரபராக்கிரம நரேந்திரசிங்க 1701 பூரீ விஜயராஜசிங்க 1734 கீர்த்தி பூணி இராஜசிங்க 747 பூரீ இராஜாதி இராஜசிங்க 1780 பூரீ விக்கிரம இராஜசிங்க 1798
இவர்கள் காலமே ஒல்லாந்த கீழைஇந்திய af(upg5ITLugg, Tiff (Dutch East India Company) gauig,05d கரைப் பிரதேசங்களில் அரசுசெய்த காலமாதலால் வடுகரும் ஒல்லாந்தரும் ஒருங்கு கூறப்பட்டார்கள். முதலாம் இராஜசிங்கனும் அவனுக்குப்பின் வந்த நான்கு அரசர்களும் தஞ்சாவூர்த் தெலுங்கு நாயக்க அரச குடும்பத்திலிருந்தே தமது பட்டத்துத் தேவியை வரிப்பாராயினர். இதில் நான்காவதாகச் சொல்லப்பட்ட இரண்டாவது இராஜசிங்கன் காலத்தில் அவன் ஒல்லாந்தர் ஆதிக்கத்திலிருந்த கடற்கரைப் பிரதேசங்கள் தவிர இலங்கையின் ஏனைய பாகங்களைத் தன் ஒரு குடைக் கிழக்கினனென மகாவம்சநூல் கூறும். யாழ்ப்பாணத்துப் பெரும்புலவரென மதிக்கப்படும் சின்னத்தம்பிப் புலவரும்
229

Page 120
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
"கயல் வரைந்த துவஜன் பணிநவ கண்டி மன்னன் வரர7சசிங்கன்"
என இவனைப் புகழ்தலினாலே இவன் அக்காலத்திலிருந்த மதுரைநாயக்க அரசனை வெற்றிகொண்டானென்று தெரிகிறது. இவனது வீரபராக்கிரமச் செயல்களால் ஒல்லாந்தர் தமது வியாபாரம் முதலியவற்றிற்குப் பங்கம் வாராதபடி இவனுக்கு வெகுமதிகள் அனுப்பி இவனுடன் உடன்படிக்கைகள் செய்து இவனைச் சமாதானப் படுத்தி நடந்து கொண்டார்கள். அதனால், கோணநாதர்க்கு ஆதியில் அமைக்கப்பட்ட மலைச்சிகரக் கோயிலில் மறுபடியும் சைவர்கள் போய் வணங்குதற்கு இடமுண்டாயிற்று. மேற்காட்டியபடி ஒல்லாந்தருடன் உடன்படிக்கை செய்வதன் முன் அவர்களுக்கு இரண்டாம் இராஜசிங்கன் விளைத்த இடர்களும் சைவர்களுக்கு மலைச்சிகரத்தில் கோணைநாதரை வழிபாடுசெய்ய இடம் வாய்த்ததுமே மேலே குறிக்கப்பட்டுள்ள கோணேசர்
கல்வெட்டுச் செய்யுளில் “ தரியலனைக் கடலிடையே தள்ளி. மாதனத்துமீது வைத்து வணங்குவாரால்" என்னுந் தொடரிற் குறிக்கப்பட்ட விஷயங்களாகும். இரண்டாம் இராஜசிங்கன் காலத்தில் தம்பைநகர்க் கோணேசர் கோயில் பூசை விழாச்சிறப்புகள் கிரமந்தவறாது நடந்து வந்தமையும் மழைவளம் குன்றாது மாதம் மும்மாரி பெய்யப் பிழையா விளையுளோடு பிரஜைகள் சிறப்புற்றிருந்தமையும் மேற்படி நூலிற் குறிக்கப்பட்டுள்ளன.
230

கதிரைமலைப் பள்ளு
"வணங்குமரன்பூசைமுன்பே7ல் நடக்குங் காலம்
மஹ7விலங்கைப் பதிம/7ள7 வரும7ண் சிங்கம் இணங்குமணிரத்தினத்த7ற் பெ7ன்ன7ல் முத்தால் ஈசனுக்கும் ஆலயமங்கியற்றுங் காலஞ் சணங்கவில்லை ம7னிடர்க்குத்துக்க மில்லைச்
சே7ம்பவில்லைநிதம்பே7க சுகமே வாழ்வ7ர் மணங்கமழுந்திரிகைலைப் பெரும7ன் //தம்
மனத்திருத்தியருத்தியெ7டு வ/7ழு ம7க்கள்”
"மாதமதில் மும்ம77 பெப்யச் செந்நெல் வள7ர7ைழிற் சைவநெறிமனுநூ லே7ங்க ஒத7ய முற்கதையுஞ் செ7ன்னே7ம்”
மதுரை நாயக்க அரசருக்கும் தஞ்சாவூர் நாயக்க அரசருக்கும் மதுரை திருமலை நாயக்கன் காலந்தொட்டு மூண்டுவந்த பகை காரணமாக, கி.பி.1762 அளவில் தஞ்சாவூர் நாயக்க அரசகுடும்பம் அழிந்துபோக, அழிவுக்குத் தப்பிய கடைசித் தஞ்சாவூர் நாயக்க அரசனாகிய செங்கமல தாஸின் இராஜ்யத்தை மராட்டிய அரசர் அபகரித்துக் கொள்ள, அவன் இராணியும் பிள்ளைகளும் இரண்டாம் இராஜசிங்கனின் பேரனாகிய பூரீவீரபராக்கிரம நரேந்திரசிங்கன் காலத்தில் கண்டிய ராஜ்யத்திற்குக் கொண்டு வரப்பட்டுக் கண்டிராஜ குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். பூரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கனுக்குப்பின் கண்டியில் அரசுகட்டிலேறியவன் அவனுக்கு மைத்துன முறையினனென்றும் கண்டி அரச குடும்பத்துடன் கலந்த
231

Page 121
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
தஞ்சாவூர் நாயக்க இராஜகுடும்பத்தினனெனவுந் தெரிகிறது. "தரியலர்கள் மெளலி குனி விஜயரகுநாயகன்" எனப் பறாளாய் விநாயகர் பள்ளில் புகழப்படும் இவன் தனக்குமுன் இராஜசிங்கன் என்னும் பெயருடன் புகழ்படைத்திருந்த முதலாம் இரண்டாம் இராஜசிங்க மன்னர்கள் பெயரைத் தானும் வகித்துப் பட்டத்துக்கு வந்தானெனத் தெரிகிறது. விஜயராஜசிங்கன் காலம் முதல் கி.பி.1814 வரை கண்டியில் இராஜ்யம் நடத்திய அரசர்கள் தெலுங்க நாயக்கர் அல்லது வடுகராதலின் முதலாம் இராஜசிங்கன் முதல் மதுரை தஞ்சாவூர்த் தெலுங்க நாயக்கருடன் சம்பந்தம் கலந்து கொண்ட எல்லா அரசரையும் வடுக அரசரெனக் கோணேசர் கல்வெட்டு என்னும் நூல் கூறுகிறது.
(15) ஆங்கிலேயர் காலம்
மேற்குறித்த பூgவிஜயராஜசிங்கன் காலத்திலும் அவனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த மூன்று நாயக்க அரசர்கள் காலத்திலும், சமய வழிபாட்டில் சில மாறுதல்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இவ்வரசர்களுந் தேவியர்களும் தாம் சைவவைஷ்ணவ சமயத்தினராதலாலே, அம்மத வழிபாடுகளைக் கைக்கொண்ட போதினும், தம் பிரஜைகளாகிய சிங்களவரின் ஆதரவைப் பெற வேண்டி அவர்களிற் பெரும்பாலார் அனுஷ்டித்து வந் த புத்த சமய வழி LITT GOLË சிறிது சிறிதாகக் கைக்கொள்ள ஆரம்பித்தார்கள். மகாவம்சநூல் பூணூரீவிஜய ராஜசிங்கன்
232

கதிரைமலைப் பள்ளு
தேவியர் புத்தசமயத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்ததாகக் கூறுகிறது. இதுகாரணமாகச் சைவசமயக் கோயில்களுக்கு முன்னிருந்த அரசர்களால் செய்யப்பட்ட சன்மானம் இவ்வரசர்களால் செய்யப்படவில்லை. அதுவுமன்றி அக்காலத்து வழங்கிய விழாக் கொண்டாட்டம் முதலியவற்றில் சைவம் புத்தம் ஆகிய இருசமயக் கலப்புள்ள ஒருவித வழிபாடு அரசரின் ஆதரவு பெற்றது. இராஜதானியாகிய கண்டி தேவ ஆலயப்பிரகார (Perahera) விழாவில் பிள்ளையாரது விக்கிரகமும் கதிர்காம தெய்யோ எனப்படும் முருகன் கைவேலும், நாததெய்யோ எனப்படும் விஷ்ணு கைச்சக்கரமும், பத்தினி தெய்யோ எனப்படும் கண்ணகி காற்சிலம்பும், புத்ததெய்யோவின் தந்ததாதுவும் ஒருங்கே எழுந்தருளுவிக்கப்பட்டன. சமயவழிபாடுகள் பிறவும் இன்னதன்மையவேயாயின. மலைச்சிகரத்துக் கோணேசர் கோயிலும் தம்பைநகர்க் கோணேசர் கோயிலும் பிந்திய நாயக்க அரசர்களால் ஆதரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கோணேசர் கல்வெட்டின் படி,
- - - - - டபின்னர் உற்றுவருங் கதையனைத்தும் உரைவழ7மல்
ஆதரவ/7 மறுபத்து ந7வ7 ம7ண்டில் அடைவுடைய சே7திடர்கள் எழுதி வைத்த நீதிமொழிப் படிசெ7ல்வோம் கோணநாதர் நித்தியமாம் அருள்சுருங்கும் நியமம் போமே
போனபின்னர் இங்கிலிசர் இலங்கையாள்வர்
233

Page 122
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
புகழாருங் கோணவரை நாதர் பூசை மானதமாம் விதிமுறையே நடக்கும் பின்னாள் மணம்குலவு மழைபொழியும் வரிசை யுண்டாம் தானமதில் நல்விளைவு மிகவுண்டாகும் சனங்களுக்குத் துன்பமில்லை இன்பமாகும் மானமுடன் பின்னிகழ்ச்சி யாவுங் கற்றோர் மதித்தபடி வுரைத்திட்டே னியமந்தானே.
மேற்கூறியவாறு கடைசியாகக் கண்டியில் அரசு புரிந்த நாயக்க மன்னர்கள் காலத்தில் நடந்த அரசியற் குழப்பங்களினாலும் ஊர்க் கலகங்களினாலும் சமய அனுசரணைகள் தேவ வழிபாடுகளெல்லாம் குன்றியிருந்தன. கி.பி. 1798ல் ஒல்லாந்தர் கையிலிருந்து இலங்கை அரசியல் பிரிட்டிஷார் கைக்கு மாறியது. கி.பி.1814ல் கண்டிராஜ்யத்துக் கடைசி மன்னனான பூரீ விக்ரமராஜ சிங்கனும் கொடுங்கோன்மை காரணமாகப் பிரிட்டிஷாராற் சிறைப்படுத்தப்பட்டு வேலூர்ச் சிறைக்கு அனுப்பப்பட்டான். பிரிட்டிஷாரும் தமது அரசியல் ஆரம்ப காலந்தொட்டுப் பிரஜைகள் யாவரும் தத்தம் சமய வழிபாடுகளை ஆற்றுதற்கு அரசாங்கத்தால் யாதொரு தடையும் இருக்கமாட்டாதென்றும் மதவிஷயத்தில் யாவருக்கும் சுவாதீனம் அளிப்பதே தமது அரசியல் கொள்கை என்றும் பிரசித்தம் செய்து அரசியல் நடாத்தத் தொடங்கினதாலே, கோணேசர் கோயிலும் பறங்கியர் ஒல்லாந்தர் காலத்தில் பூசையில்லாமல் கிடந்த ஏனைய
234

கதிரைமலைப் பள்ளு
சைவ வைஷ்ணவ கோயில்களும் புதுக்கப்பட்டுப் பூசைகளும் விழாக்களும் முன்போலச் சிறப்பாக நடைபெற்று வரலாயின.
தக்ஷண கைலாசம் எனப்படும் கோணேசர் கோயிலைப் போல் இலங்கையிலுள்ள வேறெந்த ஆலயமாவது அது ஸ்தாபனமான காலந் தொடக்கம் காலக்கிரமமான வரலாறுடையதாக இருக்கவில்லை. இவ்வாராய்ச்சிக்கு ஆதாரமாக இடையிடையே எடுத்துக் காட்டப்பட்ட மூன்று தமிழ் நூல்களில் தகூFண கைலாசபுராணம் ஐந்தாம் செகராச சேகரன் காலத்துச்செய்யப்பட்டதாதலின் அது அவன் "சைவந்தோன்றிடத் தோன்றினான்” என்று அவனது புகழையும் அவனுக்கும் கோணேசர் கோயிலுக்கும் இருந்த தொடர்பையும் கூறி அந்நூல் முடிகிறது. இதற்குப் பிந்திய நூலாகிய திருக்கோணாசல புராணம் பறங்கியர் மலைச்சிகரக் கோயிலை இடித்துத் தங்கள் கோட்டையைக் கட்டுதலினாலே தம்பை நகரில் முதலாம் இராஜசிங்கன் கோயில் இயற்றுவித்து அங்குக் கோணேசரையும் பரிவார தேவர்களையும் பிரதிஷ்டை செய்து பங்குனி உத்தரத் தேர்த்திருநாள் கண்டு இராஜதானிக்குத் திரும்பிய அளவில் முடிகிறது. கோணேசர் கல்வெட்டு ஒன்றுமே குளக்கோட்டன் தந்தையாகிய வரராமதேவன் காலந்தொட்டு ஆங்கிலேயர் காலம் வரைக்கும் திரிகைலை சம்பந்தமான சகல சம்பவங்களையும் ஒருங்குசேரத் திரட்டிக் கூறுகிறது. ஆனால் குளக்கோட்டன் காலத்து
235

Page 123
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
நிமித்திகன் ஒருவன் அவ்வரசனுக்கு வருங்கால் சோதிடங்கூறும் முறையாக இந்நூல்செய்யப்பட்டிருத்தல் அதிசயகரமாக இருக்கிறது. போர்த்துக்கேய அரசனுக்கு கி.பி.1625 அளவில் கொன்ஸ்தந்தீனு தெசா என்னும் தேசாதிபதி அனுப்பிய நிரூபத்தில் குறிக்கப்பட்டதாக மேலே காட்டப்பட்ட சாசனமும், அதைக்குறித்துக் குவிறோஸ் பாதிரியார் திLDது சரித்திரத்தில் எழுதியிருப்பவைகளும், தற்காலக் கோட்டைவாயிலில் கல்லொன்றில் செதுக்கப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனமும் இக்கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிற்
சொல்லப்பட்ட வருங்கால சோதிட முறையும் ஒன்றுக்கொன்று ஆதரவாகி நிற்பது நமது ஆச்சரியத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.
(16) குளக்கோட்டன் பெற்ற பெரும்பேறு
தனது காலம் முதல் ஆங்கிலேயர் காலம்வரை கோணேசர் கோயில் சம்பந்தமாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் சோதிடன் கூறக்கேட்டு மகிழ்ந்த குளக்கோட்டன் கூறியவைகளையும், அவன் நெடுங்காலமாக நின்று நிலவும் தகூSண கைலாசத்திருப்பணியை முற்றுவித்தலால் பெற்ற பெருவாழ்வையும் கூறும் கோணேசர் கல்வெட்டுப் பாக்கள் சிலவற்றை இங்கு வரைந்து இவ்வாராய்ச்சியை முடிப்போம்.
236

கதிரைமலைப் பள்ளு
ம7ற7த புனல்ப7யுந்திருக்குளமும்
வயல்வெளரியும் வருந்திச் செப்தே 62/74, 676i/ZoZG //7/faiéz/7Zaa)
്6/7ഞ07/0ബൈ ഖിമബy) %9ങ് பேற7ன பெரியோரே இதற்கழிவு தினைந்தவர்கள் பெட்ட/நீங்கி நிற7கப் பே7வர்இது நிச்சயம்திச் சz/ங்கோணதிமலர் ஆணை
ம7தயவ7ம் வன்னிமையே த7ன7ம்வரிப்
பற்றவரே மற்றுள் ளே77ரே ஆதரவ/74/7லயமுங் கே7/ரமும் அணிமதிலும் அழகு வ/7ய்ந்த சேதமில7ப் பூங்காவுந்தினநடத்திக்
கொள்ளுமெனத் திட்டஞ் செய்து காதலுடன் திரிகயிலைப் பெருமைதனைக்
கண்டிதயங் கருணை பூத்த7ன்.
த7னதிக //வந7சந்தன்னின்மூழ்கிச்
ச7ரசுத்தி பண்ணித்தர்ப் பணமுஞ்செய்தே ஆணதிரு மணிநிறும் தரித்துக்கொண்டே
அதிகபட்ட7 டையுடுத்த7ங் கவர்பூவேந்தி Z//76077/767/762/3602, 62/62/O/7//a2/22/
777/۵۶a2a7z و ۶/Z2Z//762/ ۶ (4262%/z Gz//7Z۶ 62/6227A)/62 /ே7ணவரசன்திரும்பிவ7ர7த்தன்மை
Gy//7ZZZ //7(5/b Z/747 as/f 4/62G256/6ia/77.
237

Page 124
விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புகள்
என்றுசெ7லப் ப7சுபதர் எங்கும்//7ர்த்த7ங்
627.g6ø7zo6Øof7 6/77azý%%øfað7 @22pz "4g. z Ž///77ż-żgs/77ř
டெ/7ன் தயங்கு பதத்தருகே77 சிவக்கெ/7ழுத்து
புஷ்டபித்தே அவர்ந்துதிற்கும் புதுமைகண்டு
மன்றல்மல 7ே7ன் முதல7ம் அமரர்க்கெட்ட7 வண்டதவி கிடைத்ததுவே/7 அரசர்கே7வே என்றவர்கள் வெளியில்வந்தே எவர்க்குங்கூற
இருகண்ணர் மழைபெ7ழிந்த/7 /faG2/7(62.76bé2/7Zb
தசுவிணகைலாச வாழ்த்துப்பா
வழிதென் கைலையம் டெ/7ருப்பும் வையமும் ض62/62676ozz04/Z ضzصی) 6027 ۶ /2ی7//zzoz۶ zz/adzz(ص) 7467//62
வாழியஞ் செழுத்தினில் வளமும் நீதியும்
வாழிசீர்த் தெ7ண்டர்சீர் வாழி வாழியே
திருக்கோணாசல புராண வாழ்த்துப்பா
ப7ர்வழி மன்னவர்தஞ் செங்கே77ல் வாழி பழமறைஅந்தணர்வழி பசுக்கள் வழி
ஏர்வழிமங்கை/ர்கள் கற்பு/ வாழி
எ7ங்கே7ம7 னடி4/77ர்கள் வ/7ழிகே7ணை
238

கதிரைமலைப் பள்ளு
ஊர்வழிதிருத்தம்பை நகரம் வாழி
ஒதரும்இப் புர7ணமுறை வாழி ஒவில்
747//zz//76۶ a2س Z۶٪z z/627Ca7zzoad7 a27622z ۶7ی7//7762ی
திரிகே7ணந7தனருள் வாழித7னே
திருச்சிற்றம்பலம்
239

Page 125


Page 126
கதிர்காம கூேடித்திரச் சிறப்பு
புராண இதிகாச சரித்திர ஐதிக ஆராய்ச்சிக் குறிப்புகள்
1. கதிர்காமமும் புராண இதிகாசங்களும்
கதிர்காமம் என்பது கார்த்திகேய கிராமம் என்பதன் சிதைவு எனக் காலஞ்சென்ற சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் கூறியுள்ளார்கள். " காம” “கம” என்பவை அநேக குறிச்சிகளின் பெயராகக் காணப்படுகின்றன. அவை கிராமமென்னும் சொல்லின் சிதைவு என்பதே மொழிநூல் வல்லுநர் முடிபு. ஆனால் "கதிர்" என்பது "கார்த்தி கேய” என்பதன் சிதைவு ஆகாது. "கதிர்” என்பதைச் சிதையாத சொரூபமாகக் கொண்டு"ஒளி" என்ற நேரான பொருள் கொள்வதே பொருத்தமாகும். வடமொழி ஸ்காந்த புராணத்தின் ஓர் பாகமாக எண்ணப்படும் தகூSணகைலாய மான்மியத்தில் கதிர் காமகிரிக்கு “ஜோதிஷ் காமகிரி” என்னும் பெயர் காணப்படுதலும் ஒளி என்னும் கருத்தே பொருத்தமான தென்பதைக் காட்டும். நக்கீரர் அருணகிரிநாதர் முதலிய அனுபூதித் தொண்டர்களும் முருகவேள் அடியார்க்கு ஒளியாய்க் காட்சிதரும் அருட்சிறப்பை விசேடித்துக் கூறுவர். ஆகவே பண்டைக் காலந் தொட்டு முருகன் குன்றாய் விளங்கும் கதிர்காமகிரி ஜோதிஷ்காமகிரி என்னும் பேரால் பண்டை நூல்களில் கூறப்பட்டது. இதனாலே தான் புறச்சமயத்தவரும் இக்குன்றில் முருகன்
240

ஒளிப் பிழம்பாய் விளங்கும் காட்சியைத் தத்தம் சமயக் கடவுளர் மேற் ஏற்றிக் கூறுவர். புத்த தேவர் போதிஞானம் அடைந்தபின் இலங்கைக்கு வந்து தியானத்திலிருந்த பத்து இடங்களில் கதிர்காமமும் ஒன்று எனச் சிங்களவரது புத்த சமய நூல்கள் கூறும். இஸ்லாம் மதத்தினர் தங்கள் "நபி காண்டற்கு இனிய பச்சை ஒளியாய்க் கதிர்காமத்திற் காட்சி கொடுப்பதாகிய ஓர் அனுபவத்தைச் சொல்லி அங்கு வணங்குவர்.
இத்தகைய மகிமை பெற்ற கதிர்காம கூேடித்திரம் தற்கால அரசியல் பிரிவின்படி வதுளை நகரைத் தலைப்பட்டினமாகக் கொண்ட யூவா (உப) மாகாணத்திலுள்ளது. பண்டைக் காலத்தில் “உபநுவரை” அல்லது உபராசதானி எனப்பட்ட பிரதேசமே தற்காலத்தில் யூவாமாகாணம் என வழங்கும். அரசன் இருக்கும் இடத்தை இராசதானி என்பதும் இளவரசன் அல்லது யுவராஜா இருக்கும் இடத்தை யூவராசதானி என்பதும் பண்டை வழக்கு தகூதிணகைலாசம் எனப்படும் திரிகோண கிரி (திரிகோணமலை) குளக்கோட்டு மகாராசன் காலத்தில் இலங்கை மன்னர் இராசதானியாகவும் விசேஷமான சிவஸ்தலமாகவும் விளங்கியது போலக் கதிர்காமகிரியும் உபமன்னர் உறைவிடமாயும் சிவ குமாரராகிய முருகவேளின் சிறந்த ஸ்தலமாகவும் விளங்கிற்று. அசோகன்மகள் சங்கமித்திரை புத்ததேவர் பரிநிர்வாணம் அடைந்த போதிவிருட்ச (வெள்ளரசு)க் கொம்பர் கொண்டு இலங்கைக் கரையை அடைந்த காலத்தில் அவளை எதிர்கொள்ளச் சென்றவர்களில் இலங்கை அரசன் முதலாவதாகவும்
241

Page 127
கதிர்காமத்து வதிந்த அரசகுமரரும் பரதகுமாரும் அடுத்த படியினராகவும் மகாவம்ச நூலிற் கூறப்படுகின்றனர். இன்னும் வெள்ளரசின் கிளைகளில் ஒன்று கதிர்காமத்திலும் நாட்டப்பட்டதென அந்நூல் குறிப்பிடுகின்றது. இவற்றால் யூவா மாகாணம் அக்காலத்தில் அரசிளங் குமரர் உறைவிடமாயும், அதிலுள்ள கதிர்காமகிரி திவ்ய கூேடித்திரமாயும் உபராஜதானியாயும் இருந்ததென்பது விளங்கும்.
இது எவ்வாறு முருகக் கடவுள் க்ஷேத்திரமாயிற்று என்பது இதன் அருகாமையில் மேற்கேயுள்ள சப்பிரகாம மாகாணத்தின் பெயர் ஆராய்ச்சியால் விளங்கும். சப்பிரகாமம் என்பது “ சபரர் கிராமம்’ என்பதன் திரிபாகும். சபரர் அல்லது சவரர் என்பார் வேடசாதி வகுப்பைச் சேர்ந்த ஒரு கிளையினர்.
** */மணிமலைச் ச7ரல் அடக்கருஞ் சிறு7ர் அரணக உறையுளர்
af s“ F.
க7ட்டுயிர் காண7ர் கைப்ட/வில் குறியெ7டு வேட்டன செம்பும் வேட்டுவினைக் கருந்தொழிற் கவர்கணை வாழ்க்கைச்சவரர் புளிஞர்
என உதயணன் கதை- உஞ்சைக் காண்டம் -55 சவரர் புளிஞர் வளைந்தது வரி 44-68 ல் சொல்லியவாற்றால் சபரரது இயல்பும் அவர்கள் மலைச்சாரலில் அரண்களை உறைவிடமாகக் கொண்டு ஆறலைத்தும் சூறைகொண்டும் உயிர்வாழும் வேட்டுவ சாதிக் கிளையினர் என்பதும்
242

அறியலாகும். கதிர்காமம் தற்கால மாகாணப் பிரிவின்படி யூவா மாகாணத்தைச் சேர்ந்ததாய் இருந்தபோதிலும் மலைத்தொடர்கள் அடர்ந்திருக்கும் பான்மையில் சப்பிரகாமத்தைச் சேர்ந்த மலைநாட்டுப் பிரதேசம்
எனலாம்.
கந்த புராணத்தில் வள்ளியம்மை திருமணப் படலத்தில் “வெள்ளியங்கிரியின் ஒர்சார் விளங்கிய கந்தவெற்பு" என்பது முதலாகக் கூறப்பட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு தொண்டை நாட்டு வள்ளிமலையில் வள்ளிநாயகியார் பிறந்து வளர்ந்ததாக இந்திய ஐதிகங்கள் கூறுதல்போல இலங்கையிலும் கதிர்காம கிரியில் வள்ளி நாச்சியார் பிறந்து வளர்ந்ததாக ஐதிகம் உண்டு. வள்ளி நாச்சியார் தினைப்புனங் காத்த இடம் இது, வேலர் வேங்கை மரமாய் நின்ற இடம் இது எனப் பல இடங்களைச் சுற்றி ஐதிகங்கள் வளர்ந்துள்ளன. சபரகாமம் வேடர் சாதிப் பெயரொன்றால் பண்டு தொட்டு வழங்கி வருவதும் இந்த ஐதிகத்துக்கு ஆதாரம் அளிக்கின்றது. சவரர் புளிஞர் என்று உதயணன் காதையிற் சொல்லப்பட்ட வேட்டுவ சாதியார் தண்டகாரணிய மலைச்சாரல்களில் வாழுங் குழுவினராவர். இவர்கள் g). Guuff (Sabaras and Pulindas - Hill tribes)
உடையவர்களாயே தற்காலத்திலும் வாழ்கின்றனர்.
243

Page 128
இவற்றால், வடக்கே விந்தியகிரி முதல் தெற்கே மடகஸ்கர் தீவு வரை ஒரே கரையாயிருந்த இளமுரியா (Lemuria)எனக் கூறப்படும் ஓங்கிரும் பரப்பில் பூர்வீகக் குடிகளாயிருந்தவர்கள் இவ்வேட சாதியினர் எனலாம். இவர்களுக்கும் மாயையில் வல்ல அசுர இராட்சதக் குழுவினருக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிவு போகவில்லை. கந்தபுராணத்தில் அசுர மன்னனான சூரபத்மனது இராஜதானியாகச் சொல்லப்படும் மகேந்திரபுரி இலங்கைக்குத் தெற்கே உள்ளதென்பர். அசுர கிளைகள் அழிந்தொழிந்த பின்னர் இராட்சதக் குழுவினர்க்கரசனான இராவணேசனது இலங்காபுரி நகரும், இலங்கையின் பெரும் பாகமும் கடல் கொள்ளப்பட்டன என்பர். கந்தபுராண வரலாறும், இராமாயண வரலாறும் சரித்திர உண்மைகளை அடிப்படையாய்க் கொண்டவை என்பதற்கு ஐயமில்லை. இடப்பெயர் ஐதிகங்களிலும் இவற்றிற்குச் சான்று இல்லாமற்போகவும் இல்லை. சப்பிரகாமத்தில் ஊற்றெடுத்து மேலைக் கடலில் விழும் காலு கங்கையாற்றின் தென்கரையில் கடலோரமாக இருக்கும் கழுத்துறை என்னும் நகரம் “வேலர்புரம்” என்னும் பெயரால் புராதன காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. ஆற்றுக்கு வடகரையில் உள்ள பிரதேசம் " தேசேஸ்திர களுத்துறை” என்னும் பெயரால் வழங்கியதும் தேசேஸ்திர என்பது தேவ சத்துருக்கள். அதாவது, ஆற்றின்
244

தென்கரையில் வசிப்பவர்களது குலதெய்வம் ஆகிய கதிரைவேலருக்குப் பகையுள்ளவர்கள் வசிக்குமிடம் என்பதாம். அசோக சக்கரவர்த்தி காலத்தில் இலங்கையில் காலுகங்கையின் வடகரை வரையும் புத்தசமயம் பரவிய காலத்திலும் அவ்வாற்றின் தென்கரையிலுள்ளோர் புத்தசமயத்தைத் தழுவாது, நாஸ்திகராய்ப் புத்தசமயத்தை அனுசரித்தவர்களைத் தேவசத்துருக்கள் எனக் குறிப்பிட்டபடியால் காலுகங்கையின் வடகரைப்
பிரதேசத்துக்கு "தேசேஸ்திர” என்னும் பெயர் ஏற்பட்டது.
இது நிற்க, கதிர்காம கிரியில் கோயில் உற்பத்தியான காலம் முதலியவற்றை விவரமாகக் கூறும் நூல் ஒன்றுளது. அது வடமொழிச் சுலோகத்தில் யாக்கப்பட்ட தகூதிணகைலாய மான்மியம்' என்னும் நூல் ஆகும். அது வடமொழி ஸ்காந்த புராணத்தின் ஒர் பாகமாகவும், சூதபுராணிகரால் நைமிசாரணிய முனிவர்களுக்கு எடுத்தோதப்பட்டதாகவும் இயற்றப்பட்டிருந்த போதிலும் ஸ்காந்த புராண காலத்தினதாக அல்லது ஸ்காந்த புராணத்தின் பாகமாக ஆராய்ச்சியாளர் அதனை மதிப்பதில்லை. அது எவ்வாறாயினும் அதன் மொழிபெயர்ப்பாக வதிரி வித்துவான்திரு.சி.நாகலிங்கம்பிள்ளை அவர்கள் கி.பி.1928 ம் வருடத்தில் வெளியிட்ட பிரசுரத்தில் காணப்படுவதன் சாரத்தை ஈண்டுக் குறிப்பிடுகிறேன்:-
2.
4
S

Page 129
“முருகக் கடவுள் கிரவுஞ்ச கிரியையும், தாருகனையும் வேற்படையை ஏவி விளையாட்டாகப் பிளந்து சங்காரஞ்செய்த பின்னர்த் தேவகிரிக்குச் சென்று பின்னர்த் திருச்சேய்ஞலூர் முதலிய புண்ணிய ஸ்தலங்கள் எல்லாவற்றையும் தரிசனம் செய்துகொண்டு திருந்செந்தூரை அடைந்தார். பின் அசுரர் தேவருக்கு இடுக்கண் விளைத்தலும் சூரபன்மனும் அவன் தம்பியர்களும் விரும்பிய வரங்கள் பெற்று அரசியல் செலுத்துவதும் பிறவுமாகிய விருந்தாந்தங்களெல்லாம் வியாழ பகவான் விரிவாகச் சொல்ல அறிந்துகொண்டு, வீரவாகுதேவர் முதலிய வீரர்களும் பூத சைனிய வெள்ளமும் புடைசூழப் புறப்பட்டுக் கதிர்காம கிரியை அடைந்தார்”
"கதிர்காமத்தில் தேவசிற்பியால் அமைக்கப்பட்ட ஏமகூட ஆலயத்தில் சுப்பிரமணியப் பெருமான் வீற்றிருந்தருள, அவருடன் வந்த சைனியங்களுக்கும் பாசறை வீடு அமைக்கப்பட்டது. அப்பாடி வீட்டிலிருந்தே வீரவாகு தேவர் மகேந்திரபுரிக்குச் சூரபன்மனிடம் தூதுசென்று மீண்டார். பின் நடந்த தேவ அசுர யுத்தம் முடியும் வரை கதிர்காமமே தேவசேனாதிபதியாகிய குமரப் பெருமானுக்கும் அவரது படைத் தலைவர்கட்கும் பூத சைனியங்களுக்கும் பாடி வீடாய் விளங்கியது. சூரசங்காரம் முடிந்தபின் முருகவேள் மீண்டும் கதிர்காமத்துக்கு எழுந்தருளி தேவசிற்பியாகிய விசுவகர்மாவை நோக்கி, " இங்கே நாம் வசித்தற் பொருட்டுச் சிறந்த நகரத்தையும் அழகிய கோயிலையும் அமைப்பாயாக’ எனக் கட்டளையிட்டருளினார்."
246

" விசுவகர்மாவும் அவ்வாணையைச் சிரமேற்கொண்டு அதிவிசித்திர அலங்காரம் பொருந்திய மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் மண்டபங்கள் வாய்ந்ததும், மாடங்கள் தோறும் அழகிய கொடிகள் அசைந்தாடவும், இரத்தின தோரணங்கள் தொங்கவும், நிலவுப் பயன் கொள்ளும் சாளரங்கள் சிறப்புற விளங்கும் பல வீதிகளை உடையதும், குளிர்ந்த சோலைகள் தடாகங்கள் அமையப் பெற்றதுமான ஒரு நகரத்தைச் சிற்ப நூல் விதிப்படி இயற்றி அந்நகரின் நடுவில் சகல சித்தியையும் அருளவல்லதும், கோடி சூரியப் பிரகாசம் உள்ளதும் நவரத்தினங்களாலே குயிற்றப்பட்டதும் மங்களம் வாய்ந்ததுமாகிய சிந்தாமணி என்னும் ஆலயத்தை அமைத்து இந்திர நீலத்தினால் ஒரு சிங்காதனமும் ஆக்கினான். இவ்வாறு கதிர்காம மலையில் தேவ கம்மியனால் அமைக்கப்பட்ட நகர் ஆலயம் முதலியவற்றின் சிறப்புகளைச் சூதபுராணிகர் நைமிசாரணியத்து முனிபுங்கவர்களுக்குப் பின் வருமாறு எடுத்து ஒதியதாகத் தகூதிண கைலாய மான்மியம் கூறும் "
மலைச் சிறப்பு
" பிள்ளையார் மலை, வீரவாகுமலை தெய்வ யானையம்மை மலை, வள்ளியம்மை மலை முதலிய பல மலைகளின் நடுவிலே சோமன் சூரியன் அக்கினி என்னும் முச்சுடர்களின் சோதி - பெற்று உலகுக்கெல்லாம் பேரொளியாய் விளங்குவது கதிர்காமமலை என்று அறிக.
247

Page 130
தென் திசையில் அகத்தியர் வாழும் பொதிய மலைபோல அக்கினி திக்கில் “ஜோதிஷ் காமகிரி பிரகாசிக்கும். சமுத்திர நடுவில் இருந்த சுப்பிரமணியப் பெருமான் விண்ணவர் இன்னலை வீட்டுதற்கு ஆதாரமான பாசறை வீடாய் விளங்கினமை காரணமாகத் தேவர்க்கு மிக்க பயன்களை அளித்தலால் கதிர்காமகிரி மந்தர மலையை நிகர்க்கும். அசுரர் நுழைவதற்கு அரியதாயும், தேவர் வாழ்தற்குரியதாயும் பொன் போன்றிலங்குவதாயும் இருந்தலால் மேரு மலையை நிகர்க்கும்."
ஆலயச் சிறப்பு
"கதிர்காம மலைச்சிகர நடுவில், கோடி சூரியப்பிரகாசம் பொருந்தி விளங்குஞ் சிந்தாமணி ஆலயத்தில், நவரத்தின மயமான சிம்மாசனத்திலே வள்ளிநாயகி தெய்வநாயகி சமேதரராய் அநேக கோடி சூரியப் பிரகாசத்தோடு கதிர்காம இரிசர் எழுந்தருளியிருக்கிறார். அம்மலைபோல மேன்மையுள்ள மலை உலகத்தில் வேறெங்கும் இல்லை. அம்மலை சுப்பிரமணியக் கடவுள் வடிவமாய் மங்கலமாய் விளங்கா
நிற்கும்."
248

நகரச் சிறப்பு
* கதிர்காம நகரம் முக்கோணவடிவான வீதியை உடையது. அந்நகரத்தின் நடுவிலே பவளத் தூண்கள் நிறுத்திப் பொன்னால் இயற்றி இரத்தினங்கள் இழைத்த திவ்வியமான சோதி மண்டபம் ஒன்று இருக்கிறது. அம் மண்டபத்தின் நடுவில், இந்திரநீல மணியினாற் செய்த சிம்மாசனத்தில் தெய்வயானை யம்மையார் வள்ளி நாச்சியார் என்னும் இரு சத்திமாரோடும் ஞானசத்தி வடிவாகிய வேற்படையைக் கையில் தாங்கியவராய்க் கிருபாசமுத்திரமாகிய கதிர்காமநாதர் விளங்குகிறார். அச்சோதி மண்டபத்தின் எதிரிலே எல்லா இலக்கணமும் வாய்ந்த வள்ளிநாச்சி மண்டபம் இருக்கிறது. அதனருகிலே மேன்மை பொருந்திய சமாதியோகமண்டபம் இருக்கிறது. விநாயகருக்கும் பரமசிவனுக்கும் உரியவேறு மண்டபங்களும் அங்குள்ளன. வீரவாகு முதலான வீரர்களுக்குரிய மண்டபங்களும் இருக்கின்றன. கந்தர் ஆலயத்திற்குத் தென்திசையிலே அந்தணர்களுக்குரிய இருக்கைகள் உள்ளன. மேற்குத் திசையிலே சைவர்களுக்கு உரிய சித்திர மண்டபங்கள் இருக்கின்றன. வடதிசையிலே திருக்கல்யாண மண்டபம் ஒன்று உள்ளது. கோவிற்பணி செய்யும் அந்தணருக்கும் உருத்திர கணிகையருக்கும் ஏனைய வருணத்தாருக்கும் உரிய இருக்கைகளும் அங்குள்ளன. அடியார்களால் வீதிகள் தோறும் அமைக்கப்பட்ட பல மண்டபங்களும் உள்ளன."
249

Page 131
மேலே சுருக்கமாகக் குறிப்பிடப்பட்ட தகூCண கைலாய மான்மிய வரலாற்றில் கதிர்காமகிரி முச்சுடரின் சோதிபெற்று உலகுக்கெல்லாம் பேரொளியாய் விளங்குவதெனவும், ஜோதிஷ் காமகிரி என்னும் பேருடைய தெனவும், கூறிய பின்னும் சிந்தாமணி ஆலயத்துக்கும் கதிரையப்பருக்கும் அநேக கோடி சூரியப் பிரகாசமுடைமை கூறப்படுதலாலும், நகரத்தில் கதிரையப்பர் வீற்றிருக்கும் மண்டபம் சோதி மண்டபம் எனப்படுதலாலும் கதிர்காமம் என்னும் பதத்தில் 'கதிர் என்பதற்கு "ஒளி"ன்ன்பதே உண்மைப் பொருள் என்பது அறியலாகும். கதிகாம புராணத்தைச் செய்யுள் நடையில்
இயற்றியவர்,
திங்களுமங்கித் தேவும் தினகர னோடு மூன்றும் துங்கநற் சுடர்கள் வீசும் சே7தியைத் தன் ட/7ற் கொண்டு /ெ7ங்குபே ரெ7வரிமை/விசிப் ப7ரினிற் சோதி /7கி எங்கனும் 4/கழ்ந்து பே/7ற்ற விவகுறும் கதிரை ”زl///T/BJE6i@
என ஒரு செய்யுளால் இவற்றை விளக்கினார்.
மலையின் மேல் உள்ளனவாகக் கூறப்படும்
கோயில்கள் இன்னும் மேல் விவரப்படியே பெயர் உள்ளனவாக இருந்து பூசிக்கப்பட்டு வருதலும் நகரத்தில்
250

உள்ளனவாகச் சொல்லப்படும் சோதி மண்டபம் (சுவாமி சந்நிதி), அதற்கு எதிரில் வள்ளி நாச்சியார் சந்நிதி, சுவாமி சந்நிதிக்கு வடக்கே கல்யாண மண்டபம் (தெய்வயானை அம்மன் சந்நிதி), மற்றும் சொல்லப்பட்ட மண்டபங்கள் (மடங்கள்) யாவும் அதே நிலையங்களில் பூசித்துப் போற்றப்பட்டு வருதல் கதிர்காம யாத்திரை செய்தவர்களுக்கு நன்கு புலப்படும்
தகூதிணகைலாச மான்மியப்படி கதிர்காம க்ஷேத்திரம் தேவ அசுர யுத்தத்தில் தேவ சைனியங்களுக்கும் முருக வேளுக்கும் பாசறை வீடாய் இருந்தவாறும், சூரசங்காரத்தின் பின் அங்குக் கோவிலும் நகரியும் அமைக்கப்பட்டவாறும் மேலே காட்டப்பட்டன. இனி, கதிர்காமத்தில் கோயிலும் நகரும் அமைக்கப்பட்ட பின்னர் நடந்ததாக மேற்படி நூலிற் சொல்லப்பட்டனவும் கந்தபுராணத்திற் சொல்லப்படாதனவுமாய சில சில சம்பவங்களையும் குறிப்பிட்டு அப்பாற் செல்வாம்.
கோயிலும், நகரமும் அமைந்த பின்னரே, கந்தவேள், மால், அயன், இந்திரன் முதலிய தேவர்களோடும், வீரவாகு முதலிய வீரர்களோடும், பூதர்களோடும் நகரத்தினுள்ளே புகுந்து, வீதிகள்தோறும் உலாப்போந்து அவ்வீதிகளின் அழகைக் கண்டு மகிழ்ந்து சிந்தாமணி ஆலயத்தினது கோபுரவாயிலைக் கடந்து உள்ளே சென்று மண்டபங்களையும், வீதிகளையும்
251

Page 132
கண்ணுற்று, அக்கோயிலின் நடுவில் அமைந்துள்ள இந்திரநீல சிம்மாசனத்தின்மேல் ஏறி வீற்றிருந்து, பெருங்கருணையோடு ஆனந்தமான திருக்கோலங்காட்டி, தேவர்க்கும், முனிவர்க்கும் பூதர்க்கும் அற்புத தரிசனம் கொடுத்தருளினார். அப்பொழுது இந்திரன் முதலிய தேவர்கள் அவரைத் துதித்து வணங்கி “எம்பெருமானே! தேவரீரை இங்கே பூசித்து வழிபட இம்மலையின் மேலே ஒரு சிறந்த தீர்த்தத்தை உண்டாக்கித்தரல் வேண்டும்" என வேண்டிக் கொண்டார்கள். அவரும் வீரவாகுவை அழைத்து, " எல்லா உலகங்களும் உய்யும்பொருட்டு இம்மலையின் மேலே புனிதமாகிய தீர்த்தமொன்றை உண்டாக்குவாய்” என ஆஞ்ஞாபித்தார். வீரவாகு அவ்வாணையைச் சிரமேற்கொண்டு தன் கரத்திலிருந்த கதையினால் மோதினார். அவ்வாறு மோதிய இடத்து ஒன்பது குண்டங்கள் உண்டாயின. அக்குண்டங்களினின்றும் கங்கை பிரவாகித்து எழ, அவை ஒன்பது புண்ணிய தீர்த்தங்களாயின. தேவர் முனிவர்கள் அத்தீர்த்த நீரைச் சிரசில் புரோட்சித்துப் புனிதராகி முருகவேளுக்கு மஞ்சனமாட்டிப் பொன்னாடை புனைந்து சோடச உபசார ஆராதனை செய்து வழிபட்டுச் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்துநின்று சிரமேற் குவித்த கையராய்க் கண்களில் ஆனந்தவருவி பொழிய அசுரரால் வந்த இடுக்கண் களைந்தவாற்றைக் குறித்துப் பலபடச் சொல்லித் துதிப்பாராயினர். முருகவேளும் அகமகிழ்ந்து " நீங்கள் விரும்பிய வரத்தைக் கேண்மின்”
252

என, அவர்களும் " எம்பெருமானே! யாவரும் தரிசித்து வணங்குமாறு இந்த மலையின் மேல் தேவரீர் எப்பொழுதும் எழுந்தருளியிருந்து எல்லாவுயிர்கட்கும் சர்வசம்பத்துக்களையும் ஈந்தருளல் வேண்டும்” எனப்
பிரார்த்தித்தார்கள்.
கதிரை நாயகரும் பரிவுற்று, "நீங்கள் விரும்பிய வண்ணமே வரமளித்தோம். இந்த மலையை விட்டு நீங்காது என்றும் ஆனந்தமாக இங்கு எழுந்தருளி இருப்போம். எவர் இந்தக் கங்காதீரத்தில் ஸ்நானஞ் செய்து நம்மைப் பூசித்து வணங்குகிறார்களோ அவர்களுக்கு இம்மையில் வேண்டிய போகங்கள் எல்லாவற்றையும் அளித்து மறுமையிலே நித்தியானந்த வாழ்வாகிய முத்தியையும் நல்குவோம்” எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
இவ்வாறாகத் தேவர் முனிவர்களால் பூசிக்கப்பட்டு, கதிர்காமத்தில் சில காலம் கழிந்த பின்னர், இந்திரன், தன்னையும், தேவர்களையும் வாழ்வித்ததற்குக் கைம்மாறாக தனது மகளை முருகவேளுக்குமணம்செய்யக் கருதியதனால், முருகவேள் சேனைகள் புடைசூழ்ந்து சேவிக்கக் கதிர்காமத்தினின்றும் புறப்பட்டுத் திருச்செந்தூரை அடைந்து அங்கு நின்றும் புறப்பட்டுத் திருப்பரங்குன்றத்தை அடைந்து அங்குத் தெய்வயானை அம்மையாரைத் திருமணஞ் செய்தருளினார். பின் அங்கு நின்றும் வெளிப்போந்து செருத்தணி வெற்பில் சிலபகல் தங்கி நாரத முனிவர் சூழ்ச்சியால் வள்ளிமலை அடைந்து

Page 133
சில திருவிளையாடல்கள் புரிந்து வேடர்கள் கோண்டுகோளின்படி வள்ளிநாயகியைத் திருமணஞ் செய்து கந்தமலையில் சில காலம் கழித்தார்.
கந்த மலையில் எழுந்தருளியிருந்த சண்முகக் கடவுள் தெய்வயானை யம்மையார் வள்ளிநாயகியார் என்னும் தேவியர் இருவருக்கும் கதிர் காமத்தின் பெருமையை எடுத்தோதி அத்தலம் தமக்கு உவந்ததாதலையும் எடுத்தோதினார். அம்மையர் இருவரும் "சுவாமீ! யாங்களும் அத்தலத்தைக் கண்டு அங்கு வசிக்க விரும்புகிறோம், ஆதலால் தேவரீர் எங்களோடு அங்கு எழுந்தருள இசைதல் வேண்டும்" என்றனர்.
சுப்பிரமணியக் கடவுள் "அதுவே எமக்கும் விருப்பமாகும்” என்று மகிழ்ந்து அத்தேவிமார் இருவரோடும் தேவர், பூதர், வீரர் முதலானவர்களோடும் புறப்பட்டு வழிக்கொண்டு தேவகிரியை அடைந்து, பின் பல தலங்களையும் கடந்து சமுத்திர தீரத்தை யடைந்து மரக்கலத்தில் பிரயாணஞ் செய்ய விருப்பமுடையவராய் ஒரு விளையாட்டாக விசுவகன்மனை நோக்கி " நாம் அனைவரும் ஏறி இக்கடலைக் கடந்து செல்வதற்கு ஏற்ற ஒரு மரக்கலத்தை இயற்றக் கடவாய்”, என்றனர். விசுவ கன்மனும் அக்கணமே மனத்தாற் சங்கற்பித்து மிகப் பெரியதும் அழகுடையதுமான மரக்கலமொன்றை இயற்றினான். சுப்பிரமணியக் கடவுள் பிரகாசம் பொருந்திய திருமுக முடையவராய் மகிழ்வுற்று யாவரோடும் அம்மரக்கலத்தில் ஏறிச் சமுத்திரத்தைக் கடந்து சிங்கள தேசத்தை அடைபவராய் அச்சிங்கள
254

தேசமாகிய இலங்கையின் வடபாகத்தில் இருக்கும் கடற்கரையை அடைந்து அதில் இறங்கினார். காங்கேயன் இறங்கிய காரணத்தால் அத்துறை எல்லா உலகங்களிலும் எப்பொழுதும் காங்கேயன் துறை என்று சொல்லப்பட்டுவருகிறது.
காங்கேயப் பெருமான் விசுவகன்மனை நோக்கி “இங்கே நாம் தங்குவதற்கு இயைந்த ஓர் ஆலயத்தை இயற்றுக” என்று கூறுதலும் விசுவகன்மனும் அப்படியே. ஒர் fஆலயத்தை இயற்றினான். சுப்பிரமணிய கடவுள் எழுந்தருளுதலும் தேவர்கள் அவரை அங்கே பூசித்து வழிபட்டனர்.
பின்பு கந்தக்கடவுள் அங்கிருந்து மரக்கல மேறிக் * கந்தவனத்தை அடைந்து அங்கே விசுவகன்மாவினால் ஆக்கப்பட்ட அழகிய கோவிலில் எழுந்தருளியிருந்து தேவர்கள் பூசிக்க ஏற்று அருள்புரிந்து ஞானசக்தியாய வேற் படைதரித்த பெருமான் அவ்விடத்தை விட்டு மரக்கலமேறிச் சென்று, மகிமை வாய்ந்த தகூSண கைலாசத்திலுள்ள, கந்தமலை, சமனாசலம், கண்டகீ
* யாழ்ப்பாணத்தில் பிற்காலத்தெழுந்த சரித்திர நூல்களாகிய கைலாயமாலை, வையாபாடல், வைபவமாலை முதலிய நூல்களில் மாவிட்டபுரம் கோவிற்கடவைக் கந்தசுவாமி கோவிலைக் கீரிமலையில் தீர்த்தமாடிக் குதிரைமுகம் நீங்கப்பெற்றமாருதப்புரவீகவல்லிகட்டுவித்தபோதுமூலவிக்கிரகம் கொண்டு வந்து இறக்கியதனால் இவ்விடம் இப்பெயர் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
f இவ்வாலயம் கதிரைமலை ஆண்டவர் கோயில் என வழங்குகின்றது.
*இது கந்தவனக் கடவை என வழங்கும் ஆலயம்
255

Page 134
வடகாந்தாரம், சம்மோதகிரி (உகந்த மலை) இவை முதலான பருவத தேசஷத்திரங்களை அடைந்து அவைகளில் இறங்கியிருந்து அங்கங்கே உலகம் உய்யும்படி சில சில காலம் வைகித் தேவர்களால் வழிபடப் பெற்றுப் பரிவாரங்களுடன் கூடினவராய்க் கதிர்காம கிரியை அடைந்து அங்குள்ள சிந்தாமணி ஆலயத்தில், உலகம் உய்யும்படி, வள்ளி, தெய்வயானை என்னும் இருவரோடும், தேவர் முனிவர் வீரர் முதலிய எல்லாரும் போற்றிசைப்ப எந்தநாளும் எழுந்தருளி யிருக்கின்றனர்.
கந்தப்பெருமான் ஏறிச்சென்ற மரக்கலம் உகந்த மலைக் கணித்தாய ஒரிடத்தில் நிறுத்தப்பட்டு இப்பொழுதும் சிலைவடிவமாய்க் காணப்படுகின்றது. இவை தகூSணகைலாச மான்மியத்தில் கதிர்காம க்ஷேத்திரத்தைக் குறித்துக் கூறிய வைபவங்களாகும்.
மாணிக்க கங்கை தீர்த்தம்
கதிர்காம சேஷத்திரத்திற்குக் தீர்த்தமாய் உள்ளது மாணிக்க கங்கை. இந்நதி நமுனகுல கந்த மலையில் உற்பத்தியாகிக் கதிர்காமத்திற்குக் தெற்குப் புறமாக ஊவா மாகாணத்தூடாகவும் பின் தென்மாகாணத்தூடாகவும் 55 மைல் தூரம் கிழக்கு நோக்கிச் சென்று இந்து சமுத்திரத்தில் சங்கமமாகிறது. இந்த நதியைக் குறித்து, தக்ஷண கைலாச மான்மியத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.
"கதிர்காம நகரத்தருகில் புண்ணிய நதியாகிய
மாணிக்க கங்கை பாய்ந்து கொண்டிருக்கும். அந்நதி கிழக்குக் கடலை நோக்கிச் செல்லா நிற்கும். தெளிந்த
256

நீருள்ளதாயும் மனமகிழ்ச்சி அளிப்பதாயும் இருக்கும் மிகவேகமின்றி மெல்லெனச் செல்லும் இயல்பினது. பாண்டிநாடு , சேரநாடு, மாளவதேசம், சோழநாடு, கொங்கணதேசம், குடகு, பப்பரம், தெலுங்கு, வங்கம், கலிங்கம் என்னும் தேசங்களிலும் வேறு தேசங்களிலுமிருந்து நான்மறை வேதியர் முதலாயினோர் தங்கள் மனைவியரோடு வந்து கதிர்காம தலத்தில் வசித்து இப்புண்ணிய நதியில் நியமமாய் முழுகி நித்திய கன்மம் முடித்துக் காமேசன் என்னும் பெயருள்ள கந்தப் பெருமானை வணங்கித் துதித்துப் பல விரதங்களை அனுஷ்டித்து இஷ்ட சித்திகளை இப்போதும் பெற்று வருகின்றனர். சண்முகக் கடவுளின் மகிமையினால் இந்த மாணிக்க கங்கையில் மூழ்கி தலவாசமும் மூர்த்தி தரிசனமும் செய்தவர்கள் விரும்பிய பேறுகளெல்லாம் பெற்று ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருப்பர்"
வடநாட்டு மறையவர் இங்கு வாசமாய் இருந்து வந்தமையும் " கல்யாண மண்டபம்" என மேற்படி நூலிற் கூறப்பட்ட சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் இங்கு அமைக்கப்பட்டிகாலமும் பிறவும் பின்னர் விளக்கப்படும்.
இப்படியாக மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும்
மூன்று விசேடமும் ஒருங்கு அமையப்பெற்ற கதிர்காம க்ஷேத்திரத்தில் கதிரையப்பர் அருளினாலே பாவவழிகளில்
257

Page 135
நின்றும் நீங்கி நன்னெறிப் பட்டார் பலருடைய சரித்திரங்கள் அந்நூலிற் சொல்லப்பட்டுள்ளன. அவைகளை இங்கெடுத்து விளக்கின் மிகவிரியுமாதலின் கதிர்காமத்தைப்பற்றிய புராண இதிகாச ஆராய்ச்சி இவ்வளவில் முடிகிறது.
258

2. கதிர்காம கூேடித்திரமும் சரித்திர நூல்களும்
(இப்பாகம் சிறுபான்மை சேர்.பொன்னம்பலம் அருணாசலம் அவர்களது 'கதிர்காம தெய்யோ அல்லது முருக வணக்கம்” என்ற வியாசக் குறிப்பைத் தழுவி எழுதப்பட்டது)
(1) கதிர்காமத்து வெள்ளரசு
சிங்களவரின் சரித்திரநூலாகிய மகாவம்சத்தில், இற்றைக்கு இருபத்துநான்கு நூற்றாண்டுகட்கு முன், அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்தை புத்தகயாவிலுள்ள வெள்ளரசுடன் வந்த காலத்தில், அவளையும் வெள்ளரசையும் இராசதானியில் வரவேற்பதற்குச் சென்றவர்களில், அரசனுக்கு அடுத்த படியினராகக் கதிர்காமத்துப் பிரபுக்கள் சொல்லப்படுகிறார்கள். இப்பிரபுக்களுக்குக் காயா வெள்ளரசில் ஒரு கொம்பர் கிடைத்ததாகவும் அதனை அவர்கள் கொணர்ந்து கதிர்காம ஆலயத்தில் நாட்டியதாகவும் அந்நூல் கூறும். அவ்வெள்ளரசின் அடியாகத் தோன்றியதெனக் கருதப்படும் அரசொன்று கோயில் பிராகாரத்தில் இன்றும் உளது.
259

Page 136
(2) துடாகமினி அரசன்
இந்த அரசடிக்குச் சிறிது தூரத்தில் மகாநாகன் என்ற அரசனால் கி.மு. 300-ம் ஆண்டு அளவில் அமைக்கப்பட்ட புத்தவிகாரம் ஒன்றுளது. இது கிரிவிகாரை என்ற நாமத்தால் வழங்கியது. மகாநாகன் என்பவன் புத்தசமயத்தை ஆதரித்து அச்சமயத்திற் பிரவேசித்த முதற்சிங்கள அரசனாகிய தேவநம்பி தீசனின் சகோதரனாவன். மகாநாகன் “ காலத்தில் அவன் இராச்சியத்தைத் தமிழர் கவர்ந்து கொண்டமையாலே மகாநாகன் அநுராதபுரத்திலிருந்து துரத்தப்பட்டு, இலங்கையின் தென் கீழ்ப்பாகத்தையடைந்து அரசு தொடங்கியமையாலே, இப்பாகம் உவமாகாணம் அல்லது உபஅரசர் இருப்பிடம் எனப்பெயர் பெற்றமை முன்னரே விளக்கப்பட்டது.
மகாநாகனுக்குப் பின் ஐந்தாந்தலை முறையினனான துட்டகெமுனு காலம் வரையும் மகாநாகன் சந்ததியார் உவமாகாணத்திலேயே தங்கிவிட்டதாகத் தெரிகிறது. துட்டகெமுனு என்னும் இளவரசன் இளமைப் பிராயத்திற்றானே தமிழரை வென்று இராச்சியத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தான். " கந்த உபாதை ” (கந்தன் உற்பத்தி) என்னும் சிங்கள நூலில், துட்டகெமுனு தான் தமிழரைத் தோற்கடித்து இராச்சியம் பெற்றால், கதிரையப்பருக்குச் செய்யும் கோயிற்றிருப்பணியும் பிற நேர்கடன்களும் நேர்ந்தவாறும்,
260

இலங்கையில் அரசுபுரிந்த தமிழரசருள் பராக்கிரமம் முதலியவற்றால் சிறந்த ஏலேலா என்னும் மன்னனைக் கதிர்காமத்தையன் உதவியாற்கொன்று, துட்டகெமுனு அரசிலமர்ந்தவாறும், அவன் கதிர்காமக் கோயிற் றிருப்பணிசெய்து, அக்கோயிலில் நித்திய நைமித்திகங்கள் நடந்துவர நிதியும் நிலமும் கதிர்காமக் கோயிலுக்கு மானியங்கொடுத்ததும் ஆகிய வரலாறுகளெல்லாம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இவனுக்குப் பின்வந்த சிங்கள அரசர்களும் கதிர்காமக் கடவுளில் பத்தி பூண்டொழுகுபவராய் இருந்தனர். கதிர்காம தேவாலயம் அரசர் பரிபாலனத்தின் கீழ் இருந்து வந்தது.
சிங்களரிற் பொதுஜனங்களுடைய சமயம் புத்தசமயமாயிருந்ததும், அரசர்களும் விவாக சம்பந்தமாகத் தமிழ் நாட்டிலிருந்து வந்த இராசமா தேவியரும் அனுசரித்து வந்தது பெரும்பாலும் சைவசமயமாதலினாலே, அரச சன்மானம்பெற்ற புத்தகோயில்களிலும் புத்த தந்தம் முதலிய தாது வணக்கத்துடன் பிள்ளையார் ,கந்தசுவாமி, விஷ்ணு, பத்தினிக்கடவுள் ஆதிய தெய்வங்களின் வணக்கமும் நடந்து வந்தது. விழாக்காலங்களில் புத்த தந்தங்களுடன் பிள்ளையாரும், வேல், பத்தினி காற்சிலம்பு, விஷ்ணுவின் சக்கரம் முதலியனவும் பிரகாரத்திற் பவனி வருதலும் அநுரசணையில் வந்துவிட்டன.
இவ்வாறாகத் துட்டகெமினி காலமும் முதல் ஐந்தாம் மகிந்தன் காலம் வரை (கி.மு. 161 முதல் கி.பி.1025
261

Page 137
வரை) சுமார் 1200 வருஷங்களாகச் சிங்கள அரசரால் கதிர்காம க்ஷேத்திரம் ஆதரிக்கப்பட்டு வந்தது.
(3) மாணவர்ம அரசன்
தென் இந்தியாவில் தஞ்சாவூரை இராஜதானியாகக் கொண்டு தமிழகம் முழுவதையும், இன்னும் சென்னை இராஜதானி முழுவதையும், பம்பாய் வங்காள இராஜதானிகளிலும் மத்திய மாகாணத்திலும் சிற்சில பாகங்களையும் தன்னுளடக்கி விளங்கிய பிற்றைச் சோழமன்னர் சாம்ராச்சியத்தில் இலங்கையும் ஒரு பகுதியாய்ச் சிறிது காலம் இருந்தமை சரித்திர ஆராய்ச்சியாளர் யாவர்க்கும் ஒத்த முடிபாகும்.
முதலாம் இராஜராஜன், அவன் மகன் இராஜேந்திர சோழன் இவர்கள் மெய்க்கீர்த்திகளில், அக்காலச் சிங்கள மன்னனாகிய ஐந்தாம் மகிந்தனும் அவன் தேவியர் இருவரும் சோழர் கையிற் சிறைப்பட்டவாறும், சோழரது பிரதிநிதிகளால் இலங்கை அரசியல் நடத்தப்பட்டவாறும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. சிங்கள சரித்திர நூல்களில் இவ்விஷயங்கள் தெளிவாகக் கூறப்படாவிட்டாலும், மகாவம்சம் முதலிய நூல்களில் சோழசாசனங்களிற் கூறப்பட்டவற்றின் உண்மையைக் காட்டும் குறிப்புகள் இல்லாமற் போகவுமில்லை.
சோழரால் வலியிழந்து மறுபடியும் உவ மாகாணப் பிரதேசத்தில் மகிந்தன் சந்ததியார்
262

நெருக்கிடையான நிலைமையில் வாழும்நாளில், அவர்கள் மறுபடியும் தமிழரை வென்று இராச்சியத்தைப் பெறுமாறு கதிர்காமவேலர் திருவருள் பாலித்த அற்புதமான கதையொன்று மகாவம்சம் 57-ம் அத்தியாயத்திற் கூறப்பட்டுள்ளது.
சிறைப்பட்ட சிங்கள அரசன் மரபில் வந்த மாணவர்மன் என்பவன் கல்வி கேள்விகளில் துறை போகியவனாகிப் பதிசாஸ்திரங்களிலும் மாந்திரீக தாந்திரீக முறைகளிலும் வல்லுநனாய் இருந்தான். இவன் கதிகாமத்தை உறைவிடமாகக் கொண்டு சுப்பிரமணிய உபாசனை செய்துவந்தான்.
ஒருநாள் இவன் குமாரதந்திர முறைப்படி சட்கோண இயந்திரம் ஸ்தாபித்து மந்திர ஜபத்தால் சுப்பிரமணியப் பெருமானை நேரில் தரிசித்து வேண்டிய வரப்பிரசாதங்களை அடைய எண்ணிக் கதிர்காம க்ஷேத்திரத்திற்குத் தெற்குப் பக்கத்திற் சென்று கடலுடன் சங்கமமாகும் மாணிக்க கங்கைநதிக் கரையும் கடலோரமும் ஆகிய கோகனகத்தில் இடச்சுத்திசெய்து, இயந்திரம் ஸ்தாபித்து, மடைபரவி, கதிர்காம க்ஷேத்திரம் இருக்குந் திக்கை நோக்கியிருந்து தன் செபமாலையைக் கையில் எடுத்துச் சடாக்ஷர மந்திரத்தை 1008உருச்செபித்து முடித்த அளவில் கதிர்காம வேலவர் மஞ்ஞைப் பரிமேல் இவர்ந்துவந்து மாணவன்ம இளவரசனுக்குக் காட்சி கொடுத்தனர்.
263

Page 138
அவனும் வேலவருக்குச் சோடச உபசாரங்கள் செய்து ஸ்தோத்திரித்துப் பின்னர் மயூரதேவருக்கும் சோடச உபசாரம் செய்கையில் மயூரதேவருக்குத் தாக நிவேதனத்துக்கும் மடையில் வைத்திருந்த இளநீர் முகிழைத் திறந்து பார்த்தபோது கீழேயிருந்த ஒரு சிறு பொத்தலால் இளநீர் முழுவதும் ஒழுகி வெறிதாய் இருக்கக்கண்டு திகைத்தான். மயூரமும் அவன்முன் கலாபம் விரித்தாடித் தாகந்தணியாதிருக்கும் நிலைமையைக் காட்டிற்று. இளவரசனும் சிறிது நேரம் யோசித்து, பாவனாசித்தி முறைகளைப் பயிலக் கற்றவனாதலால் திடீரெனத் தன் கண்களில் ஒன்றை இளநீராகப் பாவனை செய்து, கண்ணிற் கருமணியை இளநீர் வெட்டுவாயாக்கி, கருமணியிலுள்ள நீரை மயூரதேவருக்குத் தாகசாந்திக்கு இளநீராகக் கொடுத்து, மஞ்ஞையின் தாகத்தைத் தீர்த்து, உபசரணைகளையும் தோத்திர நமஸ்காரங்களையும் பூர்த்தி செய்தான்.
குமாரக்கடவுளும் அரசிளங் குமரன் தன் கண்களிலொன்றை நிவேதனஞ் செய்த திறனை வியந்து, அவன் சந்ததியினர் சோழ மன்னரால் அடைந்த இன்னல்கள் நீங்கி, மீட்டும் இராச்சியத்தைப் பெறல் வேண்டும் என்று அவன் கேட்ட வண்ணமே வரங்கொடுத்து மறைந்தருளினர்.
இவன் சுற்ற மித்திரரும் மற்றும் பிரபுக்களும் சேனைத்தலைவரும் கண்ணொன்றை இவன் இழந்து
264

விட்டதற்காகப் பிரலாபித்தபின் அரசியலை ஏற்று நடத்தும் படி பலமுறை வேண்டியும் அவன் உடன்படவில்லை. ஒருகண் இழந்து ஊனமடைந்த தனக்கு அரசியலை வகிக்கும் தகுதியில்லையென மறுத்துத் தன்தம்பியையே அரசனாக்கும்படி அவன் வேண்டிக்கொண்டான். அப்படியே தம்பியே அரசு வகித்தான்.
இவனும் சோழ மன்னரது சேனைகளால் உபத்திரவப்பட்டு கதிர்காமத்திற் சிலகாலம் தங்கியதும் சோழ சைனியங்கள் இங்கும் அவனைத் தொடர்ந்து சென்றமையும் பிறவும் மகாவம்சநூலிற் கூறப்பட்டுள்ளன. கண்னைப் பலிகொடுத்த இளவரசனுக்கு வரமளித்தபடியே சுப்பிரமணியப் பெருமானருளால், சோழராற் சிறைப்பட்ட மகிந்தனுக்குப்பின் நாலாந் தலைமுறையினனான முதல் விஜயபாகு காலத்திற் சோழரின் உபத்திரவங்கள் நீங்கப்பெற்று இலங்கை சிறிதுசிறிதாகச் சுவாதீனமடையத் தொடங்கி, ஏழாந் தலைமுறை அரசனான பெரிய பராக்கிரமவாகு காலத்தில் முற்றாய்ச் சுவாதீனமடைந்து தன்னரசு நாடாகி விட்டது.
(4) முதல் இராஜசிங்க அரசன்
பெரிய பராக்கிரமவாகு அரசுவீற்றிருந்த காலம்
12ம் நூற்றாண்டின் பிற்பாகம் (கி.பி. 1164-1197) ஆகும். இக்காலத்துக்குப் பின் கதிர்காம சேஷத்திரத்தின்
265

Page 139
சரித்திரத்தோடு தொடர்புள்ள சிங்கள அரசன் முதலாம் இராசசிங்கன். இவன் கி.பி.1581-ல் தனது தந்தையைக் கொலைசெய்து இராச்சியத்துக்கு வந்தவனாதலாலே, பிதாகத்தி அவனைச் சதாகாலம் பீடித்து வருத்தியது. இதற்காக அவன் பச்சாத்தாபப் பட்டு, புத்தபிக்குகளை யடைந்து உங்கள் சமயநூல்களிலே இப்பிதாகத்திற்கு நிவிர்த்தி மார்க்கம் உளதாவென்று உசாவியபோது அவர்கள், "பேதைமை செய்கை உணர்வே அருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்” ஆகிய பன்னிரண்டும் ஒன்றுக்கொன்று சங்கிலிக்கோவை போல் தொடர்பாய் இருப்பதும் மண்டிலமாய்ச் சுற்றிவருதலுமாகிய தம் பெளத்த மதக்கொள்கையை எடுத்து விளக்கி, "கர்மங்கள் அனுபவித்தேயாக வேண்டும். அவற்றிற்கு நிவிர்த்தி மார்க்கமே கிடையாது” எனப் பிடிவாதமாய்க் கூறுதலினாலே, அரசன் மனஞ் சலித்தவனாகச் சைவமதக் குருமாரையடைந்து நிவிர்த்தி மார்க்கம் கேட்டபோது பாவநிவிர்த்தி மார்க்கங்கள் எங்கள் சமயத்திற் பூரணமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன; மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கி, ஒரு வார்த்தை சொல்லி வாழ்விக்கும், சற்குருநாதனைத் தேடியடைந்து தீட்சை பெற்றுப் பாவநிவிர்த்தி அடையும்முறை எங்கள் மார்க்கத்திற் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.” என்று தங்கள் சமயக் கொள்கையை விளக்குவாராயினர். புத்த சமயத்தினர் கொள்கையை கேட்டபொழுது தடியினால்
266

அடிக்கப்பட்ட சர்ப்பம்போற் சீற்றமெய்திய அரசன் பின் சைவர் கூற்றைக் கேட்ட மாத்திரத்தில் அமிர்தம் பருகினவனைப் போலக் குளிர்ச்சியடைந்து அவர்கள் மார்க்கத்திற் பிரவேசிக்க உடன்பட்டு அவர்களிடம் பெற்ற விபூதியையணிந்து அன்று முதல் புத்தசமய குருமாரையும் அவர்கள் விகாரங்கள் ஆலயங்களையும் அலட்சியஞ் செய்யவும் சிவாலயத் திருப்பணி செய்யவும் சிவ தொண்டாற்றவும் தொடங்கினானென்றும் சிங்களரின் சரித்திர நூலாகிய மகாவம்சம் கூறும். (அத்தியாயம் 93 சுலோகம் 7-16)
இவனே தற்காலத்திலுள்ள கதிர்காம கூேடித்திர மூலத்திருப்பணியைத் தொடங்கினானென்பது ஐதிகத் தாலும் சரித்திரத்தாலும் வெளியாகியது. கதிரைமலைப்பள்ளு 16ம் நூற்றாண்டின் அந்தத்தில் இயற்றப்பட்ட தென்பது முகவுரையிற் காட்டப்பட்டது. மேற்படி நூலின் செய்யுள் 71-ல் “ வெற்றிசேர் கதிரைக் குமரேசர்க்கு வேத நூற்படி கோயிலுண்டாக்க - உற்றபோது நிலம்பரி சோதிக்க" என்ற தொடர் இவன் காலத்தில் தற்காலத்திலுள்ள கோயிற்கட்டிடத் திருப்பணிகள் தொடங்கினமையைக் குறிப்பதாகும். அடுத்த செய்யுளில்"கன்னல் சேர்வயற்றென்கதிரைப் பதிக் கந்தன் கோயிலில் மாமதில் செய்ய, மின்னுஞ் சுண்ண மில்லாமல் விசாரிக்கும் வேளைக்கு வந்து காட்சி கொடுத்தோன் சொன்னதோரிடத்திற் சுதை வெட்டி”
267

Page 140
என்றது கோயில் மதில் கட்டுதற்குச் சுண்ணாம்பு எங்கிருந்து கொண்டு வரலாம் என்னும் ஆழ்ந்த யோசனையுடன் மன்னன் சயனித்த காலை அவன் சொப்பனத்திற்றோன்றிக் கதிரைமலைக்கு அணித்தான ஓரிடத்திற் சுண்ணம் நிலப்பாறையிலிருப்பதாகவும் அதனை வெட்டிச் சுண்ணாம்பாக உபயோகிக்கும் படியும் முருகப்பிரான் அவனுக்குக் கற்பித்த ஒர் அற்புத கதையைக் குறிப்பதாகும்.இக்காலத்திற்றானே தெய்வயானை அம்மன் சந்நிதியில் கலியான ஒமமண்டபமும் சுற்றுப் பிரகாரத்திலுள்ள வேறு சில கோயில்களும் புதிகாக அமைக்கப்பட்டன எனத் தெரியவருகிறது.
(5) முத்துலிங்க சுவாமியும் தெய்வநாயகி அம்மன் சந்நிதி மடமும்
இவ்வரசன் புத்த சமயத்தில் வெறுப்படைந்து சைவ வைஷ்ணவ மதத்தினரையும் அவர்கள் கோயில்களையும் ஆதரித்து வருவதை யறிந்து சிருங்கேரி பூg சங்கராசாரிய சுவாமிகள் மடத்திலிருந்து தசநாமிகள் வகுப்பினராய ஒரு பிராமண சந்நியாசி இவ்வரசன் காலத்தில் கதிர்காம சேஷத்திரத்தை அடைந்தார். தசநாமிகளாவார் கிரி, புரி, பாரதி, சரஸ்வதி வன, ஆரண்ய பர்வத, ஆச்ரம, தீர்த்த, பாரதி தீர்த்த என்னும் பத்து உட்பிரிவுகளை அடக்கிய வைஷ்ணவ வகுப்பினராவர். இவ்வகுப்பினரில் முதலாம் இராஜசிங்க மன்னன் காலத்திற் கதிர்காம சேஷத்திரத்தை யடைந்து அரசனுடைய
268

அனுமதிப்படி கோயிற்றிருப்பணி தொடங்கியவர் கல்யாணகிரியாவர். இவர் தற்காலத்தில் முத்துலிங்கசுவாமி என்னும் பேருடன் சமாதியடைந்து கோயில்கொண்டிருக்கும் கலியான நாதன் அல்லது கலியாணகிரி என்னும் வைஷ்ணவ பிராமண குலத்தினர். இவர் பெயர் "கிரி கொண்டு முடிதலால் இவர் மேற்குறித்த தசநாமிகள் உட்பிரிவிற் கிரி வகுப்பினைச் சேர்ந்தவராவர். இவர் கதிர்காமத்தையடைந்து கோயிற்றிருப்பணி தொடங்கிய வரலாறு மிக அற்புதமானது.
இந்திய நாட்டை விட்டு முருகவேள் கதிர்காம கிரியை அடைந்து இங்கேயே விருப்போடு வீற்றிருத்தலைச் சகியாராய் முருகவேளை மீட்டும் வடநாட்டுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் இவர் இங்கு வந்ததாக ஐதிகம் கூறும். முருகவேளை நேரிற்கண்டு தனது கோரிக்கையைக் கூறும் நோக்கமாகப் பன்னிரண்டு வருஷம் அல்லும் பகலும் அவர் நாமத்தை இடைவிடாமல் உச்சரித்துக் கதிர்காமஷேத்திரத்திற் கொடுந்தபசுபுரிந்தார். அவர் தபசு தொடங்கிய சில நாட்களில் வேடுவச் சிறுவனும் சிறுமியுமாக ஆங்கு இருவர் தோற்றி அவருக்குக் குற்றேவல் புரிந்து அவருடன் உறைந்து வருவாராயினர். பன்னிராண்டும் பூர்த்தியானவுடன் தான் விரும்பியவாறு தனக்குத் தரிசனம் கிடைக்க வில்லையே என்று மனச்சோர்வடைந்த மாத்திரத்தில் இப்பன்னிரண்டு வருடமும் இல்லாக்களைப்பும் நித்திரையும் அவரை யடைந்தன.

Page 141
அவர் உறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அருகில் நின்ற வேட்டுவச் சிறுவன் இவரைத் தட்டி விழிக்கச் செய்தான். விழித்தெழுந்த கலியாணகிரியும் "பன்னிரண்டு வருஷம் இல்லாது இன்றுவந்த நித்திரையை ஏன் பங்கப்படுத்தினாய்”? என்று சீற்றங்கொள்ள வேட்டுவச் சிறுவனும் இன்னும் அவர் கோபத்தை அதிகரிக்கச் செய்யும் சில பரிகாச வார்த்தைகளைக் கூறிக்கொண்டு ஒட ஆரம்பித்தான். வேட்டுவச் சிறுமியும் சிறுவன் பின் ஒடத் தொடங்கி இருவரும் தன்னை விட்டு ஒடிப்போவதைக்கண்ட கலியாணகிரியும் அவர்களைப் பிடிக்கும் நோக்கமாக அவர்கள் பின் வேகமாகச் சென்றார். முன்னர்ச் சென்ற வேட்டுவச் சிறுவனும் சிறுமியும் மாணிக்கங்கை ஆற்றிடைக் குறை ஒன்றையடைந்து அங்கு மணங்கமழ் தெய்வத்தின் நலங்காட்டி முருகனும் வள்ளியுமாகக் கலியாணகிரிக்குக் காட்சி கொடுத்தனர். கலியாணகிரியும் அடியற்ற மரம் போற் கீழே விழுந்து பன்முறை அவர்களைப் பணிந்து தனது கோரிக்கையைக் கூறினார். கூறலும் வள்ளி நாச்சியார் தனது மாங்கல்யத்தைத் தொட்டு முருகவேளைத் தன்னை விட்டுப் பிரித்துக்கொண்டு போக எண்ணிய நினைவு கலியாணகிரிக்குத் தகாது என்று கூறித்தனக்கு மாங்கலியப் பிச்சை தரல்வேண்டும் எனக் கலியாணகிரியை வேண்டிக்கொள்ள, கலியாண கிரியும் இதற்குப் பதில் சொல்ல முடியாதவராய்க் கதிர்காமத்திலிருந்தே அவர்களைச் சேவை செய்யவும் தெய்வயானையம்மையாரையும் இங்கு அழைத்து
270

இவர்களுடன் வீற்றிருக்கச் செய்யவும் மனம் ஒருப்பட்டனர். கலியாண கிரிக்கு ஆற்றிடைக் குறையிற் காட்சிகொடுத்த முருகவேளும் வள்ளிநாச்சியாரும் அந்தர்த்தானமாயினர்.
அதன்பின் கலியாணகிரி தெய்வயானையம்மன் சந்நிதியையும் அங்கமைத்து விழாக்காலத்தில் பவனி வரும்போது யானைமேல் ஏற்றிக்கொண்டு செல்லும் பெட்டியிலுள்ள இயந்திரத்தையும் அமைத்து முருகவேளுக்கும் தேவியர் இருவருக்கும் வேறு வேறு சந்நிதிகளும் அமைத்துக் கோயிற்றிருப்பணிகளை முதலாம் இராஜசிங்கன் காலத்தில் தொடங்கி இரண்டாம் இராஜசிங்கன் காலத்தில் (கி.பி. 1627- 79) முடித்தாரென ஐதிகம் கூறும். தெய்வயானை யம்மன் சந்நிதியில் அமைக்கப்பெற்றிருக்கும் கலியாண மடமும் ஒமகுண்ட மண்டபமும் கலியாணகிரியின் பேரால் இன்றும் வழங்கி வருகின்றன. இவர் அம்மடத்திற்றானே இருந்து க்ஷேத்திர சேவை செய்து தனது யோக சாதனைகளால் நீடிய ஆயுளுடையவராய் இருக்கப் பெற்று அந்த க்ஷேத்திரத்திற்றானே சமாதியடைந்தார். சமாதியடைந்த காலத்தில் ஒர் முத்துமயமான இலிங்க வடிவாய் இவர் தேகம் தோற்றினமையின் இந்த க்ஷேத்திரத்தின் சுற்றுப்பிரகாரத்தில் முத்துலிங்கசுவாமி ஆலயம் எனத் தமக்கு ஒரு ஆலயம் அமைக்கப் பெற்று அடியார்களால் வழிபாடு பெறுவாராயினர். தகூSணகைலாச மான்மியம் கலியாண மண்டபத்தைப் பற்றிக் கூறுதலால், இந்நூல்
271

Page 142
இம்மண்டபம் அமைக்கப் பெற்ற பின் உண்டாய தென்பது தேற்றம். கலியாணநாதர் அல்லது முத்து லிங்க சுவாமிக்குப் பின் அவருடைய இடத்துக்கு கலியாணமட அதிபதியாக வந்தவர் ஜயசிங்ககிரி எனப்படுவர். இவரே கி.பி. 1814-ல் கண்டியரசருட் கடைசியாய் ஆண்ட பூரீ விக்கிரமராஜ சிங்கன் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பின் சேர், றொபேட் பிறெளன்றிக் (Sir Robert Brownrigg) என்னும் தேசாதிபதி கதிர்காமம் வந்தபொழுது அவரை வரவேற்றவர். இவருடைய சரித்திரத்தையும் இவருக்குப்பின் மடாதிபதிகளாக வந்தவர்களின் வரலாறுகளையுங் கூறு முன் இரண்டாம் இராஜசிங்கன் காலத்திலும் அவனுக்குப் பின் இருந்த கண்டியரசர் காலத்திலும் கதிர்காம கூேடித்திரத்துடன் தொடர்புடையனவாக சரித்திர ஆராய்ச்சியால் அறியப்படும் இரண்டொரு விஷயங்களைக் குறிப்பிட்டு
அப்பாற் செல்வாம்.
கதிரைமலைப்பள்ளு முதலாம் இராஜசிங்கன் காலத்தினது என்பதற்கு, க்ஷேத்திரத் திருப்பணி தொடங்கிய காலத்தில் பூமியை உழுது ஸ்தல சுத்திக் கிரியை செய்த வரலாறும் கோயில் மதிற்றிருப்பணிக்கு வேண்டிய சுதைக்கு சொப்பனத்தில் அரசனுக்குக் காட்சி கொடுத்து நிலப்பாறையில் சுண்ணமிருக்கும்
272

இடங்காட்டிய திருவிளையாடலும் மேலே குறிப்பிட்டாம். இன்னொரு செய்யுளில் முத்துலிங்க சுவாமியாகிச் சமாதியடைந்த கலியாணகிரியே இந்நூலுக்கு ஆதரவளித்த
தர (Patron) என்பதற்குரிய குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.
செய்யுள் 103-ல் " ஒரு சொற் கிரியின் முருகற்கன்பன் உயர்குலத்தவன் உத்தமன், உலகம் புகழும் அமரர் நாதன் உதவும் புதல்வனானவன்” என்ற தொடர் முத்துலிங்கசுவாமி அல்லது கலியாண கிரியையே குறிப்பதாகத் தெரிகிறது. ஒரு சொற் "கிரி” யின் என்பது எனக்குக் கிடைத்த ஏட்டுப்பிரதி ஒன்றில் காணப்படும் பாடம். ஆதலினாலே இதைச் சரியான பாடம் என்று கொண்டு பொருள் கூறுங்கால், மேலே காட்டப்பட்ட கிரி, புரி முதலிய தசநாமிகள் வர்க்கத்தவர்களின் உட் பிரிவில் ஒன்றாகிய "கிரி” வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் "உயர் குலத்தவன்” என்றதால் பிராமண வருணத்தவர் என்பதும், " அமரநாதன் உதவும் புதல்வன் என்றமையால், இந்நூல் செய்த காலத்தில் உள்ளோர்க்கு எளிதிற் புலப்படும்படி கலியாண நாதரின் பிதாவின் பெயராகிய அமரநாதன் பெயரைக் கூறி அவர் மகன் எனக் குறிக்கப்பட்டார் என்பதும் விளங்கும். இனி மேற்படி செய்யுளில் திருவுக்கிறைவன் சரணம்போற்றி செய்யுந் தர்ம நாயகன்" என்ற தொடரில் சிருங்கேரி சங்கராசாரிய சுவாமிகளின்
6.
சிஷ்யராகிய தசநாம வைஷ்ணவ மதத்தினர் என்பதும்
273.

Page 143
கதிர்காமம் தெய்வநாயகியம்மையின் சந்நிதானத்திலே கலியான ஒமகுண்ட மடத்தைத் தாபித்து, அதற்குத் தர்மநாயகனாகக் கிரிகலியாணநாதர் நியமனம் பெற்றமையும் குறிக்கப்பட்டன. " சிந்தை மகிழ்ந்து தினமும் புவியிற் செய்யுந் தருமம் போல” என்றமையால், மேற்படி மடத்தின் தர்மகர்த்தராக இருந்து கொண்டே சிங்கள அரசனின் கேள்விப்படி இவர் கதிர்காம சேஷத்திரத் திருப்பணியை முற்றுவித்த வரலாறு குறிப்பாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.
மேற்குறித்த கதிரைமலைப் பள்ளுச் செய்யுள் ஆராய்ச்சியாலும், இந்நூலில், கதிர்காம சேஷத்திரத் திருப்பணி மதில் கட்டுதலைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் செய்யுட்களாலும், இந்நூல் முகவுரையிற் கூறியபடி 16-ம் நூற்றாண்டின் அந்தத்தில் இயற்றப்பட்டதென்பதும், முத்துலிங்க சுவாமிகள், ஆதரவில் இந்நூல் இயற்றப்பட்டது என்பதும் வெளியாகின்றன. நாடகமாய இந்நூல் பிரபலியம் பெற்று நடிக்கப்பட்டதனாலே, முதலாம் இராசசிங்கனுக்குப்பின் பட்டத்துக்குவந்த தியாகசூரியன் அல்லது முதல் விமலதர்ம சூரியன் காலத்தில் 46-ம் பக்கத்திற் காட்டியபடி, தேடினாலுந் தியாகம் விளங்குந்தியாக சூரியநாடெங்கள் நாடே" என்ற செய்யுள் எழுதிச் சேர்க்கப்பட்டது என்பதும் வெளிப்படை திருப்புகழ் வேந்து எனச் சொல்லப்படும் அருணகிரிநாதரும் முத்துலிங்கசுவாமி காலத்தவர் என்றே. கூறுதற்கு இடமுண்டு.அருணகிரிநாதர் கதிர்காமக்ஷேத்திர தரிசனஞ் செய்து கதிரையப்பர் மீது சில பதிகங்கள் பாடினார்.
274

இனி, இரண்டாம் இராசசிங்கன் காலத்து இலங்கையிற் சிறைப்பட்டிருந்த "றொபேட் நொக்க" (Robert Knox) என்பவன் இயற்றிய "இலங்கைத் தீவின் சரித்திர 606il 1615 Gogist Lil 1356it (Historical Relations of Ceylon) என்னும் நூலிற் கதிர்காம சேஷத்திரத்தைப்பற்றிய சில குறிப்புகள் உள்ளன. அவர் கூறுவது
"இலங்கைத்தீவின் கிழக்குக்கரை, தெற்கே செல்லச் செல்லக் கப்பல்களிற் போய் இறங்குதற்கு மோசடியானதும் தரையால் வருதற்குச் செங்குத்தான மலைச்சார்வுகள் உடையதுமாய் இருக்கின்றது. இந்தப் பிரதேசம் மனுஷ சஞ்சாரத்துக்கும் சுகசிவியத்துக்கும் உரிய இடமன்று. இது இவ்வாறு இருத்தற்கு நியாயம் இங்குள்ள கதிர்காமம் என்ற இடத்திற் கோயில் கொண்டிருக்கும் தெய்வத்தின் ஆணையென்று பாமரசனங்கள் கூறுவர். உப்பளத்தில் உப்புத்திரட்ட இவ்வழியாய்ச் செல்வோர் யாவரும் இத்தெய்வத்துக்குக் கடன்செலுத்த வேண்டுமாம். இராசத் துரோகிகளாய்ப் பறங்கியருக்கோ அன்றி ஒல்லாந்தருக்கோ தங்கள் சொந்த அரசனுக்கு விரோதமாய்த் துணைசெய்யும் சிங்களவர் கதிர்காம சுவாமி விஷயத்தில் மிகச் சாவதானமாக நடந்து கொள்ளுகிறார்கள். படையெடுத்து செல்வதற்குக் கதிர்காமத்துக்குப் போகும் வழியைத்தானும் காட்டும்படி கேட்டால், அது முடியாது என்று மறுத்துவிடுகிறார்கள்."
275

Page 144
கண்டிநகர்ப் பிராகார விழாவில் (Perahera) ஒருங்கு வெளிவீதி வரும் தெய்வங்கள், அளுத்து நுவரை தெய்யோவிஷ்ணுவும், கதிர்காம தெய்யோவும், பத்தினி தெய்யோ (கண்ணகி யம்மன்) வுமே எனச் சொல்லப்படுகிறது.
(6) பாலசுந்தரி கதை
கண்டியில் அரசாண்ட கடைசியரசனாகிய பூரீ விக்கிரமராஜ சிங்கன் காலத்தில், முத்துலிங்க சுவாமியின் சிஷ்யராகிய ஜயசிங்ககிரி என்பவர் கல்யாண மண்டபத்தில் வதிந்து கொண்டு கதிர்காம சேஷத்திர பரிபாலனஞ் செய்து கொண்டிருந்தார். இவர் காலத்தில் இந்திய நாட்டு அரசன் ஒருவன் புத்திரசந்தானம் வேண்டிக் கதிர்காமக்ஷேத்திர தரிசனஞ்செய்து, தனக்கு முதலிற் பிறக்கும் பிள்ளையைக் கதிர்காமக்ஷேத்திரத்தில் தொண்டு புரிய விடுவதாக நேர்கடன் செய்து சென்றான். சிறிது காலத்தில் இவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இவன் தனது நேர்கடனை முற்றாய் மறந்து அக்குழந்தைக்கு அதன் அழகு காரணமாகப் பாலசுந்தரி என்ற பெயருமிட்டு அருமைபாராட்டி வளர்த்துவரும் நாளிற் கதிர்காம வேலவர் கனவிற் றோன்றி ' உன் நேர்கடனை மறந்தனையோ? என, அதனை நினைவுகூரச் செய்ததனால் அவனும் அக்குழந்தையை இளமைப் பிராயத்திற்றானே கதிர்காமத்திற் கொண்டு வந்து
276

அவளுக்கு உணவு உடைக்குப் போதிய உண்டியலும் குற்றேவல் செய்யத் தோழியரும் ஏற்படுத்தி பாலசுந்தரியைக் கதிர்காம வேலருக்குத்
தொண்டாற்றும்படி விடுத்துச் சென்றனன்.
இப்படியே பாலசுந்தரி தொண்டாற்றி வரும்நாளில் கண்டியரசன் பூரீ விக்கிரம ராஜசிங்கன் கதிர்காம தரிசனத்துக்கு வந்த இடத்தில் இவளைக்கண்டு காமுற்று அரண்மனைக்குத் திரும்பியவுடனே அவளைத் தன் அரண்மனைக்குக் கொண்டுவரும்படி பரிவாரங்களை அனுப்பினான். இவள் அதற்குச் சிறிதும் இடங்கொடாது மறுத்துத் தூதுவரை அலட்சியம்பண்ணி அனுப்பிவிட்டுக் கதிர்காமத்திற்றானே தொண்டாற்றி இருந்து, கல்யாண மடத்திற்கு மூன்றாவது பட்டத்துக்கு வந்த மங்களகிரி சுவாமி காலத்திலும் நரை மூதாட்டியாக வாழ்ந்திருந்து கி.பி.1876-ல் குமாரக்கடவுளது திருவடிகளை அடைந்தாள் என்றும், இவளை அடாத்தாகக் கதிரையப்பர் தொண்டால்
விலக்கிப் பெண்டாள எண்ணிய அரசன் இப்பழிகாரணமாக ஆங்கில அரசராற் சிறைப்படுத்தப் பட்டானென்று கலியாண மடத்தில் இவள் ஐதிகங் கூறுவர்.
277

Page 145
(7) ஜயசிங்ககிரி சுவாமி
கண்டி அரசனைக் சிறைப்படுத்திக் கண்டிக் கலகத்தையும் அடக்கிய பின்னர், இலங்கைத் தேசாதிபதியும் தளகர்த்தருமான பிறெளன்றிக் (General Robert Brownrigg) கதிர்காமத்துக்கு வந்தபொழுது அவரை வரவேற்றவர் முத்துலிங்க சுவாமிக்குப்பின் கலியான மட அதிபதியாயிருந்த ஜயசிங்ககிரி சுவாமிகள். தேசாதிபதியுடன் வந்த பட்டாள வைத்திய முதல்வர் டேவிஸ் பண்டிதர் (Dr. Diviz FPS) அக்கால இலங்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடும் ( Accounts of Ceylon) நூலிற் கலியாண மண்டபத்தைப் பற்றியும் ஜயசிங்ககிரி சுவாமிகளைக் குறித்தும் சொல்லப்படுபவை படிப்போர். மனதைக் கவருந் தகையனவாதலால் அவற்றை ஆங்கிலத்திற் காண்கிறபடி குறிப்பிட்டு அவற்றின் மொழி பெயர்ப்பையும் கீழே தருவாம்:-
The Kalyana Madam is greatly respected and certainly is the chief curiosity at Kataragama; it is a large seat made of clay raised on a platform with high sides and back like an easy-chair with out legs it is covered with leopard's skins and contains several instruments used in the performance of temple rites; a large fire was burning by the side of it. The room in the middle of which it is erected, is the abode of the resident Brahmin. Kalyana Madam the Brahmin said, belonged to Kalyana Natha,
278

the first priest of the temple, who on account of his great piety passed immediately to heaven without experiencing death and left the seat as a sacred inheritance to his successors in the priestly office, who may use it instead of a dying bed; and it is his fervent hope that like him he may have the happiness of occupying it at once and of breathing his last in it. He said this with an air of solemnity and enthusiasm that seemed to mark sincerity, and combined with his peculiar appearance was not a little impressive. He was a tall spare figure of a man whom a painter would choose out of a thousand for his vocation. His beard was long and white; but his large dark eyes which animated a thin regular visage were still full of fire and he stood erect and firm with out any of the feebleness of old age."
"கல்யாணமடம் மிக மதிக்கப்படுவதும் நிச்சியமாகவே கதிர்காமத்துக்குச் செல்வோர் முக்கியமாகத் தரிசிக்கவேண்டிய அதிசயமுமாகும். அது உயர்ந்த பக்கங்களையும் பின்புறத்தையு முடையதாய்க் கால்கள் இல்லாத சாய்வுநாற்காலி போல ஒரு மேடை மீது களி மண்ணால் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஆசனமாகும் ; அது புலித்தோல்களால் மூடப்பட்டுள்ளது; கோயிற் கிரியைக்கு உபயோகமாகும் பல உபகரணங்கள் அதில் வைக்கப்பட்டிருந்தன; அதன் அருகில் அக்கினி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இது ஒரு மண்டபத்தின்
279

Page 146
மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இம் மண்டபம் கோயிற் பரிபாலன பிராமணருக்கு வாசஸ்தானமாக இருக்கிறது. அந்தப் பிராமணர், கலியாணமடமானது கலியாணநாதருக்குரியது என்றும், அக்கலியாணநாதர் தம் அத்தியந்த பக்திகாரணமாக மரணத்தை அநுபவிக்காமலே முத்தியடைந்தபோது அவ்வாசனத்தைத் தமக்குப் பின் தொண்டாற்ற வரும் சிஷ்ய பரம்பரைக்குப் பரிசுத்தமானதொரு ஆசாரியார்ச்சிதமாக விட்டுச்சென்றன ரென்றும், அவருக்குப் பின் அவரது ஸ்தானத்தை வகிப்பவர் அவரைப்போலவே அந்திய காலத்தில் அவ்வாசனத்தின் மீது கிடந்தே உலக வாழ்வை ஒருவவேண்டி அவ்வாசனம் அமைக்கப்பட்டதென்றும் கூறினார். இதனைக் கூறியவர், தாமும் அவரைப் போலவே அவ்வாசனத்தின் மீதே உயிர் துறக்கும் பெரும்பேறு சமீப காலத்திலேயே தமக்குக் கிட்ட வேண்டுமென்று ஆவலுடன் நம்பிக் கொண்டிருக்கின்றார். இதை ஆழ்ந்த உறுதியுடனும் பக்தி மிகுதியுடனும் அவர் கூறியது அவர் வார்த்தைகள் வெறும் பேச்சல்ல என்பதைக் காட்டியது. அவரது தோற்றமும் உறுதி தொனிக்கும் வார்த்தைகளும் மனதில் நன்கு பதியும் தகையனவாயிருந்தன. ஒவியத்துறை போகிய ஒருவன் தன் தொழிலுக்கு உகந்தவரென ஆயிரத்தில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கும்படியான உயர்ந்த மெல்லிய உருவமுடையவராக அவர் காணப்பட்டார். அவரது தாடி நீண்டு வளர்ந்து வெண்ணிறம் வாய்ந்திருந்தது. ஆனால் மெலிந்த உருவலகூடிணம் அமைந்த அவரது வதனத்துக்குக் களைகொடுத்த அவரது
280

கரிய பெரிய கண்கள் இன்றும் ஒளி நிறைந்திருந்தன. அவர் விருந்தாப்பியத்தின் பலவீனம் சிறிதுமின்றிக் கூனாது உறுதியாக நிமிர்ந்த தேகமுடையவராயிருந்தார்"
மேற்காட்டிய டேவிஸ் பண்டிதர் குறிப்புகளால் கல்யாண மண்டபம் ஸ்தாபனமாய காலந்தொட்டு அங்குள்ள ஒமகுண்டத்தில் அக்கினி இடையறவின்றி வளர்ந்து வந்ததென்பதும் முத்துலிங்க சுவாமியாகிய கல்யாண கிரி முருகனருளாற் பெற்ற வீடுபேறு முகவுரையில் விளக்கப்பட்ட "கந்தழி”ப் பேறு என்பதும்
விளங்கக் கிடக்கின்றன.
(8) பால்குடி பாவா சுவாமிகள் சரித்திரம்
மேற்குறித்த ஜயசிங்ககிரி சுவாமி தெய்வயானை அம்மன் சந்நிதிக் கலியாண மண்டப அதிபதியாய் இருந்த காலத்தில் (கி.பி. 1820-25 வரையில்) இம்மடத்திலே தன் காலத்தைக் கழிக்கக் கருதியவராய்ப் பிரயாகை (தற்கால Allahabad) யிலிருந்து கேசோபுரி என்னும் பெயர் பூண்ட ஓர் வாலிபர் கதிர்காம சேஷத்திரத்தை அடைந்தனர். சிறிது காலம் மேற்படி மடத்திலிருந்து யோக சாதனைக்குரிய மார்க்கங்களைக் கற்றுக்கொண்டு காட்டிற் சென்று உண்டி யொழித்து, கதிரையப்பர் கிருபாகடாக்ஷம் பெறுதற்கு 50 வருஷ காலமாகத் தவஞ் செய்து கொண்டிருந்தார்.
281

Page 147
ஜயசிங்ககிரி சுவாமிக்குப் பின் கலியான ஒமகுண்ட மடத்துக்கு அதிபதியாக இருந்தவர் மங்களகிரி சுவாமி. மங்களகிரி சுவாமி காலத்தில் கேசோபுரி சுவாமி மீட்டும் கதிர்காமத்துக்கு வந்து மங்களகிரி சுவாமி சமாதியடைய, மடாதிபத்தியத்தில் கேசோபுரி சுவாமி அமர்ந்த வரலாறு வெகு அதிசயமானது. சுமார் கி.பி.1870 வரையில் சுரராஜபுரிசுவாமி என்பவர் கதிர் காமத்தை அடைந்தனர். இவர் முதலில் காஷ்மீர் மகாராஜாவின் துரகப்படைக்கு அதிபராயிருந்தார். இளமையில் ஈசுரபக்தியிலும் நல்லொழுக்கத்திலும், ஈடுபட்டுச் சமுசார வாழ்க்கைக்கு உடன்படாது துறவறம் பூண்டனர். மன்னரைச் சார்ந்து வாழும் பெருங்குடிமரபினராதலாலே இவரை இல்லற வாழ்க்கையில் புகுத்த மீட்டும் மீட்டும் அரசன் மூலமாக நெருக்கிடை நேர்ந்ததாகத் தீர்த்த ஸ்தல யாத்திரிகராக வெளிப்பட்டார் சுரராஜர். அவர் இராமேசுவரத்தைக் தரிசித்து அங்குவதியும் நாளில் சிவனொளிபாதத்துக்குப் போகும் படி இவருக்கு அருள்வசமான ஒரு உத்தரவு உண்டானது காரணமாக, அவர் இலங்கைக்குவந்து சிவனொளிபாதத்தை அடைந்தார். அங்கு உறையும் நாளில் கதிர்காமநாதர் அவருக்குக் கனவில் தோன்றி, " நீ இம்மலைச் சாரலில் அன்னாகாரமின்றி நெடுங்காலமாகத் தபசு புரிந்து கொண்டிருக்கும் தொண்டனைத் தேடிக்கண்டு அவனைக் கொண்டுவந்து கதிர்காமத்தில் சேர்த்து, அன்னாகாரம் ஊட்டி வருவாயாக; அதனால் உனக்கும் அவனுக்கும் பெரும் நன்மை உண்டாகும்” என்று அருளிச்
282

செய்தமையினாலே சுரராஜரும் சமனொளிச் சாரலில் தவஞ் செய்து கொண்டிருந்த கேசோபுரி சுவாமியை அடைந்தார் சுரராஜர் தனக்குக் கனவிற் கிடைத்த உத்தரவைக் கேசோபுரிக்கு விண்ணபித்து நின்றவளவில், கேசோபுரியும் அருளின் வண்ணத்தையும் பணியையும் வியந்து நைந்துருகி இருவருமாகக் கதிர்காமத்தை அடைந்தார்கள்.
சில நாளாகக் கேசோபுரி, முருகன் ஆணையைக் கடவாது அன்னம் புசித்து வந்தார். 50 வருஷம் அன்ன விசாரத்தை ஒழித்துத் தவம் புரிந்தவரானபடியால் அன்னம் சாப்பிடுதல் அவர் தேகநிலைக்கு ஒவ்வாததாயிருந்தது. அன்னாகாரத்தை முற்றிலும் நிறுத்திப் பசும் பாலைமாத்திரம் தம் உணவாகக் கொண்டமையினாலே இவர் மடத்தினுள்ளோராலும் பிறராலும் " அழைக்கப்பட்டார்.
பால்குடி வாப்பா” என்னும் பெயரால்
மங்களகிரி சுவாமி சமாதியடைந்ததும் கேசோபுரி சுவாமியாகிய பால்குடி வாப்பாவே மேற்படி மடத்துக்கு அதிபதியாகிச் சுரராஜபுரி சுவாமியுடன் கதிர்காமக்ஷேத்திரத் தொண்டுகளை நடத்திவந்து 1898-ல் சமாதி அடைந்தர். அந்தியகாலத்தில், கூடி மடமும், மடத்தைச் சேர்ந்த கோயில்களும், ஆஸ்திகளும், சதாகாலமும் நன்கு பராமரிக்கப்படத்தக்கதாகவும், நித்திய நைமித்திய கிரியைகளும் மட கைங்கரியங்களும் முட்டின்றி
283

Page 148
நடத்திவரத்தக்கதாகவும், மடாதிபதியின் கடமைகளும், இப்பட்டத்திற்கு வருதற்குரிய சிஷ்ய பரம்பரை யோக்கியதையும், ஒழுங்குகளும், மடத்தில் நடந்துவந்த வரன் முறையும் பிறவும் சாதனத்தில் வரையறுத்து வைத்தல் வேண்டும் என்ற நோக்கத்துடுன் கொழும்பில் வந்திருந்து, அக்காலத்தில் பதிவுக் கந்தோர் முதல்வர் (Registrar General) gyá5 g)(5/55 கெளரவ சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் உதவியால் பிரசித்த நொத்தாரிஸ்). கதிர்காமர் முன்னிலையில், 1898ம் ஆண்டு பங்குனி மாதம் 9-ந் தேதி 2317-ம் இலக்கத்தில் தர்ம சாதன உறுதியொன்றை நிறைவேற்றி வைத்தார். இத்தர்ம சாதன உறுதியே இன்னும் மேற்படி மட தர்மத்துக்கு மூல சாதனமாகக் கைக்கொள்ளப்படுகிறது.
இந்த உறுதி நிறைவேறிய சிறிது நாட்களின்பின் பால்குடி வாப்பா சுவாமி அவர்கள் கொழும்பிலிருந்தே அடக்கம் எய்தினர். அங்கிருந்து அவருடைய தேகம் கதிர்காமத்துக்குக் கொண்டுபோகப்பட்டு அங்குக் கோயில் பிராகாரத்தில் சமாதியில் வைக்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால்குடிவாப்பா, பிராகார தெய்வங்களுள் ஒன்றாகப் பூசிக்கப்பட்டு வருகிறார். பால்குடி பாவா சமாதியடைந்த சில மாதங்களுக்குள் அவருடன் மட கைங்கரியங்களை நடத்திவந்த சுரராஜபுரி சுவாமிகளும் தேகம் விட்டதாகச் சொல்லப்படுகிறது.
284

இதுவரை கூறப்பட்ட கல்யாணமட வரலாறும், அதில் மடாதிபதிகளாக இருந்த நால்வர் சரித்திரமும் பால்குடி பாவா வாய்க் கேட்டதாக சேர்.பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் “முருகன் வணக்கம்” என்னும் அரிய கட்டுரையில் எழுதிய வரலாற்றைத் தழுவியே எழுதப்பட்டுள்ளன. கல்யாண மண்டபத்தைத் தாபித்த முத்துலிங்க சுவாமி இரண்டாம் இராசசிங்கன் காலத்தவர். என்பது சேர்.பொன் அருணாசலம் அவர்களது அபிப்பிராயம். இவர்தம் சரித்திரத்தால் நான் மேற்காட்டியபடி கதிரைமலைப்பள்ளிலும் மகாவம்சம் என்னும் சிங்கள சரித்திர நூலிலும் காணப்படும் சில குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு இரண்டாம் இராஜசிங்கன் காலத்துக்கு 40 வருஷங்களுக்கு முன் அரசனாக இருந்த முதலாம் இராஜசிங்கன் காலமே முத்துலிங்க சுவாமி காலமும் மடஸ்தாபன காலமுமாமென முடிவு கொண்டேன். இது ஒன்றேயன்றி வேறொரு மாற்றமுமில்லை. சேர்.அருணாசலம் அவர்கள் கூறியபடியே இப்பகுதி எழுதப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் மேற்குறித்த " முருகன் வணக்கம்” என்னும் அரிய கட்டுரையில் இவ்வரலாற்றைக் குறிக்கும் பாகத்தைப் பார்வையிடும்படி எனக்கு உதவியவரும், சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களது மருகரும், அவரைப் போல் வாழையடி வாழையாக இலங்கை அமைச்சியற் சபையிற் எங்கள் பிரதிநிதியாக விளங்குபவருமாகிய திருவாளர் சு.நடேச பிள்ளையவர்களுக்கு எனது நன்றிக் கடப்பாட்டைக் கூறிவிடுவது அவசியம்,
285

Page 149
எனது கால வரையறைப்படி, இந்த நாலு மடசந்தானிகளுக்கு இடைப்பட்ட காலம் (1598-1898), 300 வருஷமாகிறது. சராசரி ஒவ்வொருவருக்கும் 75 ஆண்டு ஆகிறது. இது மனுஷ ஆயுள் வாழ்க்கை இயற்கைக்கு ஒத்தமுடிபல்லவென ஆட்சேபம் நிகழ்தல்கூடும். அதற்குச் சமாதானம் பால்குடிபாவா அவர்களிலேயே திருஷ்டாந்தமாகிறது. இவர் வாலிபனாக 1823 வரையில் இலங்கைக்கு வந்தார் என்றும் 50 வருஷம் வரை மலைச்சாரலில் தவஞ்செய்து பின்னர்க் கதிர்காமத்தில் மடாதிபதியாய் 25 வருஷம் இருந்தார் என்றும் சமாதி அடையும் போது இவருக்கு வயது 96 என்றும் சொல்லப்படுகிறது. மடஸ்தாபனம் செய்த முத்துலிங்க சுவாமிகள் இவரிலும் காயசித்தி யோகப்பயிற்சிகளில் மேம்பட்டவராதலாலே அவரும் அவருக்குப் பின் வந்த ஜயசிங்ககிரியும் பால்குடிபாவா சுவாமிகளிலும் பார்க்க நீடித்த ஆயுளுடையவர்களாய் இருந்தார்கள் என்பது நம்பத்தக்கதே. ஆகவே 300 வருஷத்துக்கு நால்வரே மடசந்தானிகளாகக் கதிர்காமத்திலிருந்தார்களென்பது அசம்பாவிதமன்று எனத்துணிக.
(9) கதிர்காம கூேடித்திர விவகாரங்கள்
பால்குடி பாவா சுவாமி சமாதியடைந்த சில தினங்களுக்குள்ளாக அவருடன் மடபரிபாலகராக இருந்த சுரராஜபுரி சுவாமிகளும் சமாதியடைந்தனர். இதற்குப் பின் மேற்படி தெய்வயானை அம்மன் சந்நிதி மடத்துக்குத் தர்மகர்த்தாக்களாய் இருந்தவர்களைக் குறித்து
286

வெவ்வேறாக எடுத்துக் கூறுவது அனாவசியம். மேலே காட்டியபடி, 1898-ல் பால்குடி பாவா சுவாமிகளால் நிறைவேற்றப்பட்ட தர்மசாசன உறுதியிற் செய்த ஒழுங்கின்படி, மடதர்மமும் மடத்தைச் சேர்ந்த கோயில்களின் நித்திய நைமித்திகங்களும் 1922-ம் ஆண்டு வரையும் நடைபெற்று வந்தன.
குருசிஷ்ய பரம்பரையில் பகவான் தத்தாத்திரேய சுவாமி சம்பிரதாயம் அனுஷ்டிப்பவர்களாயும் தசநாமிவர்க்கத்தில் ஒன்றைச் சேர்ந்தவர்களாயும் பிரமசரியம் அனுஷ்டிக்கும் துறவிகளே மடாதிபதிகளாதற்கு யோக்கியதை உடையவர்களென்று மேற்படி தருமசாசனத்தில் பிரமாணம் விதிக்கப்பட்டது. சிஷ்ய வர்க்கத்தாருள் கலகமுண்டாகி சமாதானமாக ஒருவர் தர்மகர்த்தாவாக நியமனமாதல் சாலாதாயின் கதிர்காமத்தில் வழிபாடாற்றும் தொண்டரில் இருவர் டிஸ்திறிக் கோட்டுக்கு மனுச்செய்து அந்நியமனத்தை முற்றுவித்தலும் மேற்படி தர்மசாதனத்தில் விதிக்கப்பட்ட முறையாகும். 1922-ல் இம்முறையைக் கையாள நேர்ந்தது. கோட்டின் அனுமதிப்படி, சுகிர்தபுரிசுவாமி மடத்துக்கும் அதைச் சேர்ந்த ஆலயங்களுக்கும் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டார்.
இவர் 1933-ம் ஆண்டு மகர சங்கிராத்தியன்று தேகவியோகமாயினர். மறுபடியும் தர்மகர்த்தா நியமன விஷயமாக வாக்குவாதங்கள் தொடங்கின. சுகிர்தபுரி சுவாமியின் தொண்டில் அமர்ந்திருந்த பூரீமதி நந்தவதி என்னும் பெண்மணி, காலஞ்சென்ற சுகிர்தபுரியின்
287

Page 150
சிஷ்யவர்க்கத்தவருள் சிரேஷ்டமுடைமை பற்றித் தனக்கே மடாதிபதியாக ஏற்படும் உரிமை வலிமை உடையதென வாதாட, அதனை அநுசரித்துநின்ற தொண்டர்கள் சிலரே. பெண்கள் சந்நியாசினிகளாயினும் கன்னியாவிரதம் அனுட்டித்துவரினும் கல்யாண ஒமகுண்ட மட தர்மபரிபாலனத்துக்குப் பால்குடிபாவா சுவாமிகள் ஏற்படுத்திய பிரமாணப்படி யோக்கியதை உடையவரல்லரெனச் சாதித்து நின்ற தொண்டர் பலர்.
இவ்வாறாகக் கலகப்பட்டுத் தர்மசாதன உறுதி ஒழுங்கிலுள்ள ஆதரவைக் கொண்டு கதிர்காம சேஷத்திர வணக்கம் உடையரான இருவர் 1933ம் மாசி மாதத்தில் வதுளை டிஸ்திறிக் கோட்டில், 5719-ம் இலக்க வழக்கில் பூனிமதி நந்தவதி அம்மாளையே மேற்படி மட தர்ம பரிபாலினியாக நியமனஞ்செய்து தரல் வேண்டும் என்று மனுச்செய்தார்கள். இப்படியே நியமனஞ் செய்வதற்குத் தடை சொல்பவர்கள் ஒர் குறித்த நாளில் கோட்டில் வெளிப்பட்டு நியாயம் காட்டல் வேண்டும் என்ற கோட்டு உத்தரவு பிரசித்தப் படுத்தப்பட்ட அளவிலே, எதிர்க்கட்சியாளரில் அறுவர் வெளிப்பட்டு பூரீமதி நந்தவதி பகவான் தத்தாத்திரேய சுவாமி சிஷ்ய பரம்பரையினளல்லளென்றும், புரகிரி, முதலிய தசநாமி
கோத்திரங்களில் தோன்றியவளல்லளென்றும் பெண்ணாயிருப்பதனாலும் நல்லொழுக்கத்திற் குறைந் தளாதலாலும் LDL .-g5ff LD பரிபாலனத்துக்குத்
தர்மசாதனத்தில் விதிக்கப்பட்ட யோக்கியதையும் ஆசாரமும் இல்லாதவள் என்றும் தத்தாத்திரேய சுவாமி
288

குருபரம்பரையினரும், தசநாமி வர்க்கங்களில் ஒன்றான கிரிவர்க்கத்தினரான கணேசகிரி சுவாமியும் ஹரியும் துவாரபுரி சுவாமி ஆகிய இவர்கள் இருவரும் அல்லது இருவரில் ஒருவர் மடதர்ம பரிபாலனத்துக்கு ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் மறுமனுக் கொடுத்துப் பிரார்த்தித்தார்கள். இவ்வழக்கில் 1934-ம் ஆண்டு ஆனிமீ 27-ம் திகதியன்று இருதிறத்தவர்கள் தம்முள் மனமொத்து இணங்கி இணக்கத் தீர்வையொன்று எழுதுவித்தார்கள்.
இத்தீர்வைப்படி கணேசகிரி சுவாமி கல்யாண ஒமகுண்டம் மடத்துக்கும் அதைச் சேர்ந்த ஆலயங்கள் சொத்துக்களுக்கும் தர்மபரிபாலன கர்த்தராக நியமனம் பெற்றார். பூணூரீமதி நந்தவதி முன்போல மடத்திலிருந்து தொண்டாற்றவும், தர்மபரிபாலகரிடம் தமது ஜீவனோபாயத்துக்காக மாதம் ஒன்றுக்கு ரூபா 25 வீதம் பெற்று வரவும் தீர்க்கப்பட்டது. இந்த இணக்கத் தீர்வையில்- இன்றும் ஒரு விசேஷமான ஒழுங்கு அமைக்கப்பட்டது.
மடந்தோன்றிய நாள் தொடக்கம், மடத்துக்கு அதைச் சேர்ந்த கோயில்கள் ஆஸ்திகளால் வரும் ஊதியங்கள் வருமானங்களை தர்ம மட பரிபாலகர் தமது சுயேச்சைப்படி செலவு செய்யத் தக்கதாக இருந்தன. மேற்படி தீர்வையில் மேற்குறித்த மடம் கோயில்களின் வரவு செலவுக் கணக்குகளை மடாதிபதியுடன் சேர்ந்து பரிசீலனை செய்ய அறுவர் கூடிய ஒருசபை (Bpard of Management) நியமிக்கப்பட்டது. ஆனால் மடத்திலும்
289

Page 151
அதைச் சேர்ந்த கோயில்களிலும் நடந்துவரும் நித்திய நைமித்திகங்கள் பூசைகள் உற்சவங்களாகிய இவற்றில் ஆற்றப்படும் கிரியைகளிலும் வழிபாடாற்றும் ஒழுங்குகளிலும் இச்சபையாருக்கும் அதிகாரமில்லை. மடம்கோயில்களின் ஆஸ்திகளிலிருந்து கிடைக்கும் வருவாய்களைப் பேறாக்கி, 1934 -ம் ஆடிமீ 10-ம் திகதி தொடக்கம் அடுத்துவரும் ஐந்து வருடங்கட்கு மடஸ்தாபனச் செலவுகளுக்கு வருமானத்தில் அரைவாசியை விட்டு, மற்ற அரைவாசியை மடதர்ம உண்டியலில் சேர்க்க வேண்டியது. 5 வருடத்தின் பின் உண்டியலில் சேரும் பணத்தின் வீதத்தை அதிகரிக்கப் பரிசீலனை சபையாருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் மடாதிபதிக்கு மடஸ்தாபனச் செலவுக்காக விடப்படும் வருமான பாகம் கோட்டின் அனுமதியின்றி 100க்கு 25 விகிதத்துக்குக் கீழ்க் குறைக்கப்படுதல் கூடாது. இந்த ஒழுங்குகளின்படியே மேற்படி மடமும் ஆலயங்களும் இப்போது நடந்து வருகின்றன. பரிபாலன சபையாராய் அமர்ந்துள்ளவர்களின் பெயர் முதலிய விவரங்கள் இந்நூலின் ஈற்றில் அநுபந்தமாகச் சேர்த்திருக்கும் வதுளை மாகாண மன்றத் தீர்வையிற் காணலாகும்.
இவ்வளவில் கதிர்காம சேஷத்திர சரித்திர ஆராய்ச்சி முடிகிறது.
(10) மூலஸ்தான பரிபாலனம்
தற்காலத்திலிருக்கும் மூலஸ்தானத் திருப்பணி முதலாம் இராஜசிங்கன் காலத்தில் நிறைவேறிய விவரம்
290

மேலே காட்டப்பட்டுள்ளது. முக்கோண வீதியும் சட்கோண இயந்திரமுமே கதிர்காமத்தில் விசேடமாகச் சொல்லப்படுவன. சட்கோண இயந்திரம், மூலஸ்தானத்தை மறைத்து இடப்பட்டிருக்கும் திரைக்குட்பட்ட பாகத்திலே இருப்பது. சட்கோண இயந்திரப் பெட்டியைத் திரையிட்டுக்கொணர்ந்து யானைமேலேற்றி முக்கோண வீதியை வலம்வருதலே கதிர்காமத்தில் நடத்தப்படும் விழாக்காட்சி.
சிவபிரானாரது முக்கண்களாகிய சூரியன் சந்திரன் அக்கினி என்னும் முச்சுடருமே வீதியின் முக்கோணங்களாகும். முருகப்பிரான் தமது தந்தையாரது நெற்றிக் கண்ணினின்று ஆறு பொறிகளாய்த் தோன்றிக் கார்த்திகை அறுமீன்செவிலியர் உலகீன்ற அன்னை கைக்கொடுப்ப ஆறு பொறிகளும் ஒன்றாகி ஒரு சோதிப் பிழம்பாய்த் தோற்றிய அவசரத்தை விளக்குவது மூலஸ்தானத்தில் விளங்கும் சட்கோண இயந்திரம். கதிர்காமம், ஜோதிஷ்காமம் என்னும் இச்கூேடித்திரப் பெயர்களும் சோதிப்பிழம்பாய் விளங்கும் முருகக்கடவுளின் அருஉருவத் தோற்றத்தைக் குறிப்பன என்பது முன்னரே விளக்கப்பட்டது.
ஆதலினாலே, மூலஸ்தானத்தில் எக்காலத் திலாவது சிவாவிக்கிரகம் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த உண்மையை அறியாது இரண்டாம் இராஜசிங்கன் காலத்தில் இலங்கைக்கு வந்து 12 வருஷம் இருந்த இறபேட்நொக்சு (Robert Knox) என்பவர் “சிங்கள
291

Page 152
ஜாதியார் கதிர்காமத் தெய்வத்தின் உருவத்தைச் சித்திரத்தில் எழுதிக்காட்டவும் அஞ்சுவர். தங்கள் அரசர்களுக்கு விரோதமாய் மேல்நாட்டவரோடு கூடிச் சதியாலோசனை செய்தும் அவ்வரசர்களது கோட்டை கொத்தளச் சூழ்ச்சிகளைச் சொல்லிக் கொடுத்தும் இராஜத்துரோகம் செய்யச் சற்றும் பின்வாங்காத இவர்கள் கதிர்காம சேஷத்திரத்துக்குப் போகும் மார்க்கத்தையாவது காட்ட வேண்டுமென்று எவ்வளவு தண்டித்துக் கேட்டபோதிலும் கைச்சமிக்ஞையாலாவது காட்ட மாட்டார்கள்" என்கிறார்.
அப்படியே ஆங்கிலேயர் கண்டியரசனைச் சிறைப்படுத்திக் கண்டிக் கலகத்தையும் அடக்கியபின் கதிர்காமத்துக்கு வந்த டேவிஸ் பண்டிதரும் (Dr.Davis) “மூலவிக்கிரகம் விலையுயர்ந்த தானபடியால் காட்டிலே எங்கோ கொண்டுபோய் ஒளித்துவிட்டார்” என்று தனது தினசரி சம்பவக்குறிப்பில் காட்டியுள்ளார். ஆனால் உண்மையில் இக்கூற்றுகள், நொக்ஸ் காலத்திலாவது டேவிஸ் காலத்திலாவது மூலவிக்கிரகம் இருந்ததில்லை என்பதையே நிச்சயப்படுத்தும்.
இனி, முருகவேளை அழைத்துச் செல்லவந்த முத்துலிங்க சுவாமியை வள்ளிநாச்சியார் மாங்கலியப் பிச்சை கேட்டதும், முத்துலிங்கசுவாமி அதற்கிசைந்து தெய்வயானை அம்மன் சந்நிதியும் கல்யாண ஒமகுண்டமும் எடுப்பித்து மூலஸ்தானத்தில் சட்கோண இயந்திரமும்
292

ஸ்தாபித்து விழாச்சிறப்பு நடத்தியதும், கச்சியப்ப சிவாசாரியார் கூறியபடி, " பல்லுயிர்க்கருளைப் பூத்துப் பவநெறிகாய்த் திட்டன்பர் எல்லவர் தமக்கும் முத்தி இருங்கனியுதவு” மாறு, “கல்லகங் குடைந்த செவ்வேற் கந்தனை”ச் சட்கோண இயந்திரத்தில் 'தரு' வாக மூலஸ்தானத்தில் நிறுத்தி, "வல்லியர்கிரியை ஞானவல்லியின் கிளையாய்ச் சூழ’ இருமருங்கும் முக்கோண வீதியின் உட்பிராகாரத்தில் நாட்டியவாறாம்.
பரிவர தேவர்களாகக் கதிர்காமத்தில் ஸ்தாபனமாகயிருக்கும் கோயில்களின் விவரங்கள் 1898-ம் ஆண்டு தர்ம சாதனத்திலும் 1933-ம் ஆண்டு வழக்கிலும் காட்டியபடி, கீழே காட்டப்பட்டிருக்கின்றன. அச்சாதனப்படி, மூலஸ்தானமும் மடபரிபாலனத்துக்கு அமைந்த தொன்றாகத் தெரிகிறது. ஆனால் தற்காலத்தில் அது மடபரிபாலனத்துக்குச் சேர்ந்ததாயிருக்கவில்லை.
முதலாம் இராஜசிங்கன் காலம் தொட்டுக் கண்டி இராச்சியமிருந்தவரையில் மடபரிபாலனத்தில் கோயில்க ளெல்லாம் அடங்கியிருந்தன. முத்துலிங்கசுவாமி மடஸ்தாபனமும் மூலஸ்தான சட்கோண ஸ்தாபனமும் ஒருங்கு செய்ததனாலே அவரும் அவருக்குப் பின் மட அதிபதியாயிருந்த ஐயசிங்ககிரி சுவாமியும் ஆதிமூலமுட்பட கதிர்காமத்திலிருந்த எல்லாக் கோயில்களையும் பராமரித்து வந்ததாகத் தெரிகிறது.
293

Page 153
ஏனெனில் கண்டியரசன் பிடிபட்ட பின்பு ஆங்கிலேயருக்கு விரோதமாக நடந்த கலகத்தில் கப்புறாளை (சிங்களப்பூசாரி) களும் கலந்து கொண்டார்கள். அது மாத்திரமல்ல; கதிர்காமக்ஷேத்திரத்திலுள்ள கோயில்களின் பூசை உரிமையையும கைப்பற்றிக்கொண்டார்கள். 1815-ல் ஆங்கில தேசாதிபதி கதிர்காமம் வந்தபொழுது கப்புறாளைகள் கோயிற் பூசைகளால் விலக்கப்பட்டு, ஐயசிங்ககிரி சுவாமிகளுக்கே கோயிற் பராபத்தியம் ஒப்புவிக்கப்பட்டது. வள்ளி நாச்சியார் சந்நிதி யாராதனை ஒன்றுமட்டுமே கப்புறாளைகளுக்கு விடப்பட்டது. ஆனால் நாளடைவில் தாங்கள் வள்ளிநாச்சியாரின் சந்ததியாரென்று உரிமை பாராட்டும் கப்புறாளைமார் " அக்காளு” கோயிற் பூசை செய்யும் எங்களுக்கு “ அத்தார்" கோயிலில் பூசை செய்ய உரிமை இல்லையா?” என்று சொல்லிக்கொண்டு மூலஸ்தான ஆராதனையிலும் பங்குப்பற்றி ஈற்றில் முற்றாக மூலஸ்தான ஆராதனை உரிமையைக் கைப்பற்றிகொண்டனர். சிங்கள நாடானதாலே புத்தசமயக் கோயில்களுக்குரிய சட்டமே இவ் விந்துசமயக் கோயிலுக்கும் உரியதென்று கருதப்பட்டு வாசநிலைமை தேவநிலைமை என்னும் உத்தியோகங்கள் வகிப்பவர் பொறுப்பில் கதிர்காம மூலஸ்தான பரிபாலனம் நடந்து வருகிறது. கண்டி அரசர்கள் பிரதானிகளால் தேவமானியமாக இக்கோயிலுக்கு விடப்பட்ட தோட்டங்கள் வயல்நிலங்கள் தருமச் சொத்துக்களெல்லாம் " ஆங்காங்கு எல்லைக் காணியாளரால் அபகரிக்கப்பபட்டனவும் பிறருக்கு விற்கப்பட்டனவுமாயின. அன்றியும் வருடந்தோறும் ஆடி
294

மாசத்தில் பூர்ணிமையோடு முடியும் பத்துநாள் உற்சவத்திலும் கார்த்திகை மாசத்தில் திருக்கார்த்திகையன்றும் மகர சங்கிராந்தி, சித்திரைச் சங்கிராந்தி முதலிய விசேஷ தினங்களிலும் மூலஸ்தானத்துக்குச் செலுத்தப்படும் காணிக்கையின் மொத்தக் தொகை குறைந்தபட்சம் 15,000 ரூபா என்று கணக்கிடலாம். இந்தத்தொகைக்கு வரவு செலவுத்திட்டம் எதுவும் கிடையாது. கேட்பார் விசாரிப்பார் இல்லாது, கப்புறாளைமாரும் வாசநிலைமையும் தமது எண்ணப்படி செலவு செய்வதற்கு இடமாயிருக்கிறது. மூலஸ்தானமும் சுற்றுப் பிராகாரத்தில் இருக்கும் ᎧᎫ ᎧᏡᎧᏡᎢᏓᏞᎥ கோயில்களைப்போல் சைவ ஸ்தானமாயிருக்கவும் புத்தமத ஸ்தானம்போல் கதிர்காம மூலஸ்தானத்தை நடத்தி வருதற்கு நியாயமில்லை.
காயாபுரியிலுள்ள புத்த கோயிலைப் புத்தசமயத்தவர் காயாபுரித் கோயில் முகாமையாளர் கையிலிருந்து எடுத்துக் தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று அபேட்சித்து எவ்வளவாக முயலுகிறார்களோ அவ்வளவு அபேட்சை சிரத்தையுடன் சைவசமயிகளும் முருகன் தொண்டர்களும், கதிர்காம மூலஸ்தான ஆலய பரிபாலனத்தை இந்து மதத்தினர் பொறுப்பில் ஆக்கிக்கொள்ள முயலவேண்டியது. அது அநுகூலமாகும் வரையில் வருடந்தோறும் மூலஆலயத்துக்கு வணக்கத்திற்காகவரும் அன்பர்கள் தொண்டர்கள் செலுத்தும் காணிக்கைகள் திரவியப்பொருட்கள் முதலியன அவமே போகாதபடி,

Page 154
தெய்வயானை அம்மன் மடத்துக்கும் அதைச் சேர்ந்த ஆலயங்களுக்கும் கிடைக்கும் வருவாய் விஷயமாக மேற்காட்டிய வதுளைக் கோட்டு இணக்கத் தீர்வையில் செய்யப்பட்டது போல வருமானத்தில் நூற்றுக்கு 50 வீதத்துக்குக் குறையாத ஒரு பாகத்தைத் தரும உண்டியலிற் சேர்த்துக் கோயிற்றிருப்பணி முதலிய செலவுக்கு உபயோகமாகும்படியான ஒழுங்கு ஏற்படத் தக்கதாக முயலல் வேண்டும். இம்முயற்சி சைவசமய விருத்தி ஸ்தாபனங்கட்கே உரியது. யாழ்ப்பாணத்துச் சைவபரிபாலன சபையாரும் இந்தியாவிலுள்ள இந்துமகாஜன சபையாருமே இவ்விஷயத்தில் முன்னின்று முயற்சி செய்யத் தக்கவர்கள். இந்நன்முயற்சி பலிக்கும்படி கதிரைவேல் முருகர் கருணையைக் கோரி அப்பெருமானது பாதகமலங்களில் சாஷ்டாங்க தண்டஞ் சமர்ப்பித்து இதனை முடிக்கின்றேன். சுபமஸ்து.
--OO----- கதிர்காம கூேடித்திரத்திலுள்ள
கோயில்கள்
(1) கதிர்காம கூேடித்திரத்திலுள்ளவை.
1. கந்தசாமி மூலஸ்தானம் 2. தெய்வயானை அம்மன் கோயில் 3. ஒமகுண்ட கல்யாண மண்டபம்
296

0.
11.
2.
13
14.
15.
6.
17.
18.
சிவன் கோயில்
வயிரவர் கோயில். இலக்குமணப் பெருமாள் கோயில் ஐயனார் கோயில்
பத்தினியம்மன் கோயில்
(2) தெய்வயானை அம்மன் சந்நிதிக்குள் அடங்கியவை
மாணிக்கப் பிள்ளையார் அல்லது கணேசர் கோயில் முத்துலிங்க சுவாமி கோயில் வள்ளியம்மன் கோயில்
பால்குடிபாவா சமாதி கோயில்
(3) கதிர்காம நகரிலுள்ளன.
மாணிக்கப் பிள்ளையார் கோயில் கதிரைமலைக் கந்தசுவாமி கோயில் விஷ்ணு கோயில்
(4) கதிரைமலையிலுள்ளன.
மாணிக்கப் பிள்ளையார் கோயில்
விஷ்ணு கோயில் முத்துலிங்க சுவாமி கோயில்

Page 155
19. பத்தினியம்மன் கோயில் 20. அனுமார் கோயில் 2. வள்ளியம்மன் கோயில்
(5) செல்லக் கதிர்காமத்திலுள்ளன
22. காதர் சமாதி
(இது கதிர்காம சேஷத்திரப் பிராகாரத்தில் வள்ளியம்மன் சந்நிதிக்கு அருகாமையிலுள்ளது. முஸ்லிம் பக்கிரி ஒருவர் முத்துலிங்க சுவாமியின் தொண்டராயிருந்து இங்கு அடங்கினர் என்ப)
23. வெள்ளரசுக் கோயில்
(சங்கமித்தை புத்த காயாவிலிருந்து கொணர்ந்து அனுராசபுரத்தில் நாட்டிய வெள்ளரசின் கொம்பில் ஒன்று கதிர்காமத்திலும் நாட்டப்பட்டதென்று முன்னர்க் காட்டினாம்.தற்காலத்தில் வெள்ளரசுக் கோயில் வணக்கம் செய்யுமிடத்திலுள்ள மரத்தை அக்காலத்ததென்பர். ஆகவே, இலங்கையிலுள்ள எல்லா மதத்தினர்க்கும் கதிர்காம சேஷத்திரம் வணக்கத்துக்குரியதாயிற்று)
இவற்றில் விசேடம்பெற்ற கோயில்களைப்பற்றிக் கதிர்காமத்தில் வணக்கஞ் செய்பவர்கள் தாள இராகசகிதமாய்ப்பாடும் கீர்த்தனமொன்று மாவிட்டபுரம் போலிசு விதானையாகத் தொழில்செய்துவரும்
298

சுப்பிரமணிய தொண்டர், திரு. பூ இராசநாயகம் பிள்ளை அவர்கள் வாய்க்கேட்டபடி, கீழே குறிப்பிடப் பட்டிருக்கின்றது;
காணக் காணக் கண்கள் குளிருமே- கதிரேசன் திருநகர்
(1)
(2)
(3)
(4)
காணக் காணக் கண்கள் குளிருமே
மாணிக்கப் பிள்ளையார் மேவுறு கோயிலை வானள வோங்கிய வெள்ளிய வில்வத்தை ஏணுறும் வெள்ளை யரசின் பொலிவினை இன் பொடுகானவர் தங்கிய சாலையை
(கானக்)
வெண்ணெயருந்திய கண்ணன்தன் கோயிலை வீரத்ரி சூலங்கொள் காரிதன் கோயிலை அண்ணல் பரனமை நண்ணிடு கோயிலை அங்கதன் பாங்க ரடியவர் சாலையை
(காணக்)
தெய்வத யானை யிருந்தருள் செய்திடும் சீருறு *** நேருறு மண்டபம் எய்தரு முத்துலிங் கேசர்தன் மண்டபம் ஏவுறு காணவர் மாமக ளாலயம்
(கானக்)
அண்டரோ டிந்திர ரெண்டிசைக் காவலா கண்டு நிதம்துதி கொண்டு வணங்கிடுந் தொண்ட ரேத்தொலி யெங்கும் முழங்கிடும் சோதிசுப் பிரமணிய ராலய மதனையே
(காணக்)
299

Page 156
(5) பத்தர் நிதந்தரி சித்தருள் பெற்றிடும்
அத்தன் கதிலை மலையினுயர்ச்சியை உத்தமமாகிய வோங்கும் புனத்தினை உண்மைசேர் செல்லக் கதிர்காமத் தன்னையே
காணக் காணக் கண்கள் குளிருமே- கதிரேசன் திருநகர் காணக் காணக் கண்கள் குளிருமே
இவை முதலிய தோத்திரப் பாக்களைப் பாராயணம் பண்ணி முருகன் அருள் வழிப்பட்டுக் கதிரையப்பரை மெய்யன்போடு வணங்கிக் கந்தழிப் பேறடைந்து உய்வோமாக.
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய்தனிவேல் வாழ்க குக்குடம வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீரடியா ரெல்லாம்
கதிர்காம கூேடித்திர ஆராய்ச்சி முற்றுப்பெற்றது
வேலுமயிலுந் துணை
300

APPENDIX I (a)
Extract from the Hindu Organ dated 23-1-1933
A VALUABLE LITERARY FIND
" KATHRAMALA PALLU'
BY. V. COOMARASWAMY B.A. PROCTOR
Some introductory stanzas are found in the manuscript which indicated that this particular manuscript is from Vanni as I said earlier.
“முன்பு போலெனை யன்புவைத்தாள்வாய்முள்ளியவளை ழத்த நயிந்தை", முழுகிவந்து பகவானைக் கும்பிட்டு மூத்த நாதனை முன்தண்டம் பண்ணி, களரிதன்னை வலமாகவே வந்து காத்தருள் செந்தூர்க் காதலி யம்மை", “செந்தூர்க் காதலியம்மை சீர்பாதத்தைத் திக்கெங்கும் பணிந்தாடிடுவோமே"
The reference to Moothanainar Temple of Mulliavalai and Senthurkkathaliamman Temple both in the Vanni Districts may at first blush seem to indicate a Vanni origin to the poem. But the style and meter of the above verses are so different from those of the poem that I have hesitation in arriving at the
301

Page 157
safe conclusion that those were subsequent interpolations, incorporated in the course of an adaptation of the poem to the State.
On Interpolation
The next stanza running,
ஆடினாலும் மிடையே யசையும் அழுதாலுங் கண்ணிலிமையே யசையா பாடினாலு மிடறே தொனிக்கும் பறைந்தாலும் பல்லுக் காவிதெரியும் தேடினாலும் தியாகம் விளங்கும் தியாக சூரிய நாடெங்கள் நாடெ
also seems to be an interpolation, but deserves careful consideration. This stanza, perhaps, was interpolated in order to introduce the patron of the Pallu Nadagam, who was probably a Vannia Prince by the name of Thiaga Sooriya Vannianar. It this conjecture of mine is correct, the date of the Pallu Nadagam, may be tentatively put down to the beginning of the Portuguese rule in Ceylon, when the Vanni Principalities which formed a chain of buffer states between the Yalpanam Kingdom of the North and the Sinhalese Kingdom of the South, alternating in their allegiance to the North or South according to the paramountcy and efficiency of control of the one or the other became independent of foreign control, which was confined to the maritime provinces, a position which the Vanni Districts maintained almost to the beginning of the British
30

rule. As Tamils, the Vannia Princes naturally fostered Tamil and patronised Tamil poets.
The Patron
The Pallu poem itself must be at least a few decades earlier than the Nadagam. We are on firm grounds, I believe, in looking for the patron of the poem in the following stanza, which to all intents and purposes, appears to be a genuine part of the text of the poem:
மருமத்திலங்குங் கடம்பனுயர்ந்த வானவர்க் கருளானவன் மாசிலாத கதிரை வேலன் மாவிலிகங்கை வயலிலே ஒருசொற் கிரியில் முருகற் கன்பனுயர் குலத்தவனுத்தமன் உலகம் புகழு மமரர் நாகனூதவும் புதல்வனானவன் திருவுக்கிறைவன் பதத்தைப் போற்றி செய்யுந்தன்மை நாயகன் சிந்தைமகிழ்ந்து தினமும் புவியிற் செய்யுந் தன்மை போலவே பெருகும் புவியிற் பயிர்கள் வளர்ந்து பேதமின்றி யுண்டாகவே பெருமையான தொண்டர்மேல் வைத்த கருணை போல விளைந்ததே
Historical Potentialities
The person here described is said to be of a high family (9 Life,6b556)isit) and of good manners (9 55Logir). His father's name is given as Amara Naga (9 Dijff SITs, gir) possibly, miswritten for Amara Nathan (gLDITEIT56öT). Similarly, the son's name is given in the manuscripts as 56öTGOLD BITL), siT. probably
303

Page 158
misspelt for situngsstus, it (56iTLopSitusoir). The full name of the patron, of whom I have nothing more to say at present, would be Amara Nathan Dharmanayaga. These stanzas are given publicity before hand to elicit criticism and information on these matters before the poem could be published. Those of my readers who have closely followed my review of the Paralai poem in this journal would remember how the history of the Naiks of Madura and Tanjore and their connections with the last Kandyan Kings came in to aid in solving the mystery of the person mentioned as SSSLuyg|E|TussóT in Paralai Pallu. Who knows what historical potentialities lie concealed in the womb of the Words (அமர(ர்) நாகன் புதல்வன் தன்()ைம நாயகன் possibly Amara Naga Dhamma Naga of the Naga tribe found in the Kathiramalai Pallu? 1.
Merits of the Poem
Turning two to the merits of the Poem, I must confess that Kathiramalai Pallu is lacking in the classical finish and literary polish of Paralai Pallu or even of the Kanagarayan Pallu. But, whoever my be the author or patron and whatever the time of its composition or its defects of style and lack of literary merits, there is no gainsaying the fact that Kathiramalai Pallu has been more popular than any of its classical successors. By its popularity, it has survived intact (I quote the last and valedictory stanza below:) defying the ravages of time and is in the lips of the Harijan even in the present day.
304

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . பண்ணைக்காரனாரும் பெண்ணாலெழுந்த சண்டை தன்னையும் விலக்கிப் பொலியளவு கண்டு மிகப் புத்தியுஞ் சொல்லிப் புத்தமிர்த மன்ன இருபேரையு நண்பாக்கிப் போற்றிபுகழ் தென்கதிரைப் புங்கவர்பிரா னெங் கத்த னெமையாள் முருகன் கந்தவே ளருளைக்
கைதொழுது வாழிவாழி யென்று வாழ்த்தினனே"
Its Two- fold Aspect
A Pallu poem has a twofold aspect as a literary composition. One lies in its being a classical product as one of the ninety-six varieties of Tamil poetry known as Prabhandams conforming to a standard both in meter and matter prescribed in prosody on that behalf. The other is the dramatic aspect of the Pallu. Now it is wonderful to observe that Kathiramalai Pallu had both these aspects developed in Ceylon. In its classical side, it has been the parental stock of two or three other Pallu poems, e.g. the Gnana Pallu of the Catholics and the Paralai and Kanagarayan Pallus of the Hindus for the edification of the learned few, and on its dramatic side it had developed, as shown earlier in this contribution, into a Nadagam and later on into a Vilasam with alterations and additions Suited to the stage of either in their days, for the delectation of the unlearned masses, especially of the Harijans.
305

Page 159
Universal Popularity
The author himself strikes the true keynote of this universal popularity in the (960L.LUL55th) stanza of Kathiramalai Pallu. Avai- adakkam is the apologetic part of the literary work wherein an author apologises for blemishes and defects in his work and exports the public to accept his work in good part and not in a cavilling spirit. The Avai- adakkam stanza of Kathiramalai Pallu runs thus:
குக்கனுரியானாலும் கேதமுடியை வைத்தாலே மிக்கவர்களெல்லாம் விரும்புவார்- அக்கதைபோல் தென்கதிரைவேலர் திருநாமம் பாடுதற்கு என்கதையை யிந்நாளிசைந்து.
"No one despise even a dog's skin, when the crown of a monarch has been placed on it. Similarly, my verses thought defective, would be acceptable to the great, because they sing of the glory of Kathirgama God".
In other words, the sacred name of the Divine Hero of his poem is enough to cover a multitude of blemishes in the poem. This accounts for the popularity and survival of Kathiramalai Pallu

The Intrinsic Value of the Poem
The " Younger and Kindlier God" Muruga with 6 faces and 12 hands, each face with its corresponding hands being assigned distinctly correlated functions in the Cosmic Evolution, is perhaps the grandest conception of Divine Manifestation in the saivite Pantheon. He is found closely associated with the Tamil land and Tamil poetry from the very beginning, and a whole range of literature in praise of Him can be traced from the Sangam Age downwards. He is a favourite Deity of caste Hindus and Harijans alike, of the learned as well as of the untutored, and in the far-famed temple of Kathirgama, caste - Hindus, Harijans, Buddhists and even Muslims, all commingle in a worship of Devotion and Love, not of Agamic rites. This universality of worship at Kathirgama is what has given an intrinsic value and permanency to this Tamil poem having the universally popular Deity of Kathiramalai as its hero.
An Appeal
I have so far narrated the story of my labours to bring to light a lost treasure, and my success in securing one palm leaf manuscript if Kathiramalai Pallu. But the poem could not be properly published with this one manuscripts alone any
307

Page 160
more than one swallow could be depended upoñ to usher in a summer. I shall therefore conclude with an appeal to such of the readers of this journal, as are interested in the publication of the semi-religious agricultural poem, to try and procure for me other manuscripts of the this work, which I feel sure, may be traced in some parts of the Mullaithivu, Batticaloa and Trincomalle Districts.
APPENDIX I (b)
EXTRACT FROMHINDUORGANDATED 13.2-33
"THE KATHIRAMALAI PALLU'
(BY REV. S. GANAPRAKASAR O.M.I)
Through the Kindness of the Editor of the Hindu Organ, I have had the privilege of seeing the two articles on the Kathriamimalai Pallu by my learned friend, Mr. V. Coomaraswamy B.A. appearing in two recent issues of the same journal. The scholarly notes of the writer on this ancient pastoral poem are thought-provoking and I am anxiously looking forward to the day when the work will be given to the public in a critical edition which I am glad to learn, Mr.Coomaraswamy is about to prepare.
308

It may not be exactly detracting from the credit due to Mr. Coomaraswamy in having made " valuable literary find" to mention that the Kathiraimalai Pallu has already appeared in print under the name of "Kathiraiyappar Pallu", it perhaps in a less perfect form than Mr. Coomaraswamy will be able to give us. Here is the title page of the edition, I speak of:
கணபதி துணை
கதிரையப்பர் பள்ளு என்று வழங்கும் உழத்திப்பாட்டு, இது கதிர்காமத்திலே எழுந்தருளி இருக்கும் சுப்பிரமணிய சுவாமி மேலது. முல்லைதீவு ரேகு, என்றிக் கிழாார்க்கு த. கைலாச பிள்ளையால் பரிசோதித்து யாழ்ப்பாணம் வச்சிர யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. பிரபவஹ கார்த்திகை மீ
The booklet consists of 43 pages, demi quarto, and has the apologetic verse and the concluding lines quoted by Mr.Coomaraswamy with some variants. This printed edition seems to give a better reading of the first line of the apologetic stanza asfollows.
ஒக்கவுதும்பரத்தி னொண்மணியை வைத்தாலும்
மிக்கவர்கள் யாரும் விரும்புவார்.
On the other hand, several sections which represent the conventional themes of the ulattip paddu seem to be miss
309

Page 161
ing and others full of lacunae in the printed edition. Those who have seen the great care with which Mr. Coomaraswamy has edited the " Kanagarayan Pallu" will have no doubt that the will produce an excellent edition of the Pallu under notice, provided he succeeds in securing a number of copies of it for collation.
I think, it was I who made mention of the existence of Kathiraimalai Pallu for the first time in one of the meetings of the Oriental Studies" Society, of which Mr. Coomaraswamy was for some time Vice - President. I then stated that this must have been the exemplar from which the Gnana Pallu of 1642 or thereabouts was imitated. In doing so, I was under the impression that popular strophe, which have outlived the Gnana Pallu among Catholics to the present day, were part of the Kathiraimalai Pallu. Such are for instance.
பள்ளத்தி பள்ளன் எங்கேடி போட்டான் பள்ளம் பார்த்துப் பயிர்செய்யப் போட்டான்
உப்பிலாக்கஞ்சி காய்ச்சச் சொன்னேனோடி ஊரெல்லாங் கொண்டு லாத்தச் சொன்னேனோடி
But the printed edition of the Kathiraimalai Pallu does not contain verses of a similar import, Does Mr. Coomaraswamy's MS. contain them? It these and similar popular strophes are not part of the Kathiraimalai Pallu, we have to look for another Pallu which antedated the Catholic pastoral poem and
310

the age of Kathiramalai Pallu has to be determined from other date.
With all deference to Mr.Coomaraswamy's ripe scholarship, I have my doubts as regards the place from where this Pallu was composed. The fact that the Mahaveli Ganga is introduced in the flood seenes does not seem to clinch in favour of Katragam. For the Paralai and Kanagarayan Pallus too introduce the same river- Jaffna has no river to speak of - without for that being composed outside Jaffna. River seene is part of Ulattip paddu and the most natural thing for a poet in Jaffna would be to speak of the river best known in the North owing to its mouths being in the Tamil country. Likewise, the employment of the characters Pakiratha Kankaip Palli and Mavali Kankaip Palli in the poem does not necessarily postulate an Indian author. In the Gnana Pallu we have the Pallu from Jerusalem and the Palli from Rome, although the author of the poem is certainly a Jaffna man. I say these things because it appears to me that, after all. Kathiramalai might refer to our won ancient royal site in Chunnakam railway station and the market is still called Kathriaimalai. The northern portion of this slight elevation is still known as Koddaikkadu and it is on the Southern end of it that Dr. P.E. Pieris unearthed the remains of an ancient Vihara, some years ago. I am inclined to hold that the Kathiraimalai, referred to in the Yalppana Vaipava Malai as the seat of ancient royalty, is to be identified with this site. If so, was there a Subrahmanya temple at Kathiraimalai before the Portuguese times? If there was one, and if our Pallu was composed before the Portu
311

Page 162
guese conquest of Jaffna, could in not have been in praise of a Deity worshipped in Jaffna itself? Of course, I am only throwing out a suggestion here and nothing more. If this view be ever proved, the expression then- Kathirai found in the Pallu will have to be interpreted as we do then-Ilankai when it refers to the Tamil-speaking portion of Ceylon.
APPENDIX
IN THE DISTRICT COURT OF BADULLA
In the Matter of the appointment of a Trustee to the Theivanai Amman Kovil and other Temples, Shrines, Matams and other properties in the Trust Deed No.2317 and belonging to the said Temples.
ツ 1. Saravanamuttu Saba Ratnam of Colombo presently of
Badulla,
2. Ambalavanar Thilliambalam of Badulla,
Petitioners
No. 5719 And
1. R.T.M. Sivasamy
2. P.L.R.M.K.M.Kadiresan Chettiyar, 3. R.M.S.N.S.M. Chinniah Seruvai,
312

4. A. Perambalam 5. S.M.Canniah, and, 6. P.Gnanapandithen of Badulla
Opponents.
This action coming on for final disposal before R.M.Gybben Monypenny Esquire, Additional District Judge of Badulla on the 27 the day of June 1934 in the presence of Mr. Adv.K.Balasingham, instructed by Mr. K.P.Nadarajah, Proctor on the part of the Petitioners, and of Messrs. Advocates N.K.Chokay and A. Thalaivasingham instructed by Messers. Potger and Keyt, Proctors on the part of the Opponents, and the parties having filed a paper of settlement, it is ordered and decreed that Swami Ganesh Giri be and he is hereby appointed Trustee of the temples, shrines and the properties referred to in Deed No. 2317 dated 9th March 1898 and attested by John Caderaman, Notary Public, and of all other lands, properties, effects and things whatsoever belonging or other wise appertaining to any of the said temples or propertleS.
2. And it is further ordered that Board of Management consisting of six other be associated with the said Ganesh Giri.
3. And it is further ordered that all the expenses of the temples, shrines and madams or dharmashalas and other prop
313

Page 163
erty belonging or appertaining thereto and in connection with the performance of the ceremonies, poojas and other performance of the ceremonies, poojas and other customary religious processions, as hither to made, done observed or performed by the previous Trustees, shall be a first charge on the income, profits of and upon the said temples, shrines madams
and dharmashalas and upon the lands properties, effects and things whatsoever belonging or appertaining thereto.
4. And it is further ordered that the said Board shall have no voice or power in respect of the performance of poojas, ceremonies or other customary religious rites or observances or in respect of the processions or of the holding of the festivals as done or performed hitherto by the previous trustees whether during any festivals or ad any other times or occasions whatsoever.
5. And it is further ordered that a percentage of the total net rents, collections or other income whatsoever from the temples, shrines, madams, dharmashals, lands properties, premises, effects or things whatsoever shall be expended at the discretion of the Trustees for the time being free of the control of the said Board. For the first five years from 1st July 1934, the percentage so under the unfettered control of the Trustee shall be fifty percentime. Thereafter, the percentage shall be refixed by the Board for the next five years, and
314

so on from time to time, according to the amount of the total nett income and other circumstances existing at the time of revision, provided that the Board shall at no time fix the above percentage at less than 25% without the sanction of the District Court of Badulla upon the application of the Board of the majority of the members thereof.
6. And it is further ordered that in the event of any vacancy occurring amongst the Members of the Board of Management (other than any vacancy of the office of the trustee for the time being) such vacancy shall be filled by the District Court of Badulla.
7. And it is further ordered that all the remaining income of the temples, shrines, madams, dharmasalas, lands, properties and premises, effects and things whatsoever shall be invested by the Board in the name of the Trustee.
8. And it is further ordered that the first six Members of the Board shall be:
(a) R.T.M.Sivasamy of Badulla (b) V. Somasundaram of Badulla (c) A.Thillaiambalam of Badulla (d) A.Sabaratnam of Colombo'
315

Page 164
(e) K.V. Markandan of Batticaloa, and (f) A. Sellamuttu, M.B.E. of Colombo
9. And it is further ordered that Srimathie Nandavathie shall hand over the properties, Temples, etc. to the New Trustee and Board of Management
10. And it is further ordered of consent that the Board of
Management shall make provision for the maintenance of Srimathie Nandavathie out of the temple funds and that she shall continue to reside at Meenadena temple
11. And it is finally ordered that the said Srimathie Nandavathie shall get Rs. 25/ per mensem and shall not be entitle to take any temple revenues or the produce of any of the lands.
The 27th day JAMES JOSEPH, of June 1934. District Judge.

கதிர்காம ஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கதிர்வேற் பெருமான்மீது பாடப்பட்ட நூல்கள்
கதிர்காமத் திருப்புகழ்
கதிரைமலைப் பள்ளு கதிரைமலைப் பேரின்பக்காதல். (இலங்காபிமானி யந்திரசாலைப் பதிப்பு) கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு, ஏசல் & கும்மி. (மதுரை புத்தக வியாபாரம் பி.நா. சிதம்பரநாத முதலியார் பிரதர்ஸ் பதிப்பு) கதிர்காம சேஷத்திர மான்மியம் (பூனரீமத் சி. தாமோதரம்பிள்ளை அவர்கள் இயற்றியது. கதிர்காம சேஷத்திர தருமபரிபாலன சபையாரால் கொழும்பு நடராஜ அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.) கதிர்காம மாலை (திருப்போரூர் டி.கோபால் நாயகர் அவர்களால் தமது மதராஸ் என்.சி.கோள்டன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. கதிரைமலைக் கந்தப் பதிகம். (நா.தாமோதரம் பிள்ளை அவர்கள் இயற்றியது. கொழும்பு மெய்கண்டான் அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப்பட்டது.) கதிர்காம மாலை, (இது வைத்தியர் பூரீசி.ஆறுமுகம் பிள்ளை அவர்கள் இயற்றியது. திரிகோணமலை
317

Page 165
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
பரமேஸ்வரி அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.) கதிர்காமக் கடவுள் பதிகம், தாண்டகம் முதலியன. (உயர் திரு. சண்முகானந்த சுவாமிகள் இயற்றியது. மேற்படி மெய் கண்டான் பதிப்பு) கதிர்காம சுவாமி பேரில் பேரின்பச் சிந்து, தோத்திர விருத்தம், கீர்த்தனம் ஆதியன. (ப. வயிரமுத்து அவர்கள் இயற்றியது. பருத்தித்துறை கலாநிதி யந்திர சாலைப்பதிப்பு) கதிரைமலைப் பதிகம். (வைத்தியர் பூரீ.சி.ஆறுமுகம் பிள்ளை அவர்கள் இயற்றியது. திரிகோணமலை பரமேஸ்வரி யந்திரசாலைப் பதிப்பு) கதிர்காமம் குமாரக்கடவுள் மீது பாடிய தோத்திரப்பாமலை. (மேற்படி மெய்கண்டான் பதிப்பு)
கதிர்காமசுவாமி மெய்ஞ்ஞானமாலை கதிர்காமத்துச் சிவசுப்பிரமணியர் பேரில் பக்தியானந்த பஜனாமிர்தம் (PS கந்தசாமி அவர்கள் இயற்றியது) கதிர்காமவேலவர் (சைவப்பிரகாச அச்சுக்கூடம்) கதிர்காமக் கலம்பகம் (நா. கதிரைவேற் பிள்ளை அவர்கள் அச்சிட்டது) கதிர்காம யாத்திரை.
-----OO ---
318

இந்நூலின் ஆராய்ச்சிக் குறிப்புகள் முதலியவற்றுக்கு
ஆதாரமான நூல்கள், சாசனங்கள் (BIBLIOGRAPHY)
அகநானூறு
(5GL15u Logoguda (T60T b (A.R.No.356 of 1906)
கோணேசர் கல்வெட்டு, (பருத்தித்துறை கலாநிதி யந்திரசாலை)
சிலப்பதிகாரம், (சாமிநாதையர் பதிப்பு)
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்
தகூரிண கைலாசபுராணம் (பருத்தித்துறை கலாநிதியந்திரசாலை) தக்ஷண கைலாச மான்மியம் (வதிரி சி.நாகலிங்கம் பிள்ளை மொழிபெயர்ப்பு) வதிரிவிநாயக சுந்தரவிலாச யந்திரசாலை) திருக்கோணசால புராணம் (யாழ், திருஞானசம்பந்தர் அச்சுக்கூடம் 1909) திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்
திருவாசகம் மாந்தைப் பள்ளு (சிதம்பர தாண்டவமதுரகவிராயர் இயற்றியது) யாழ்ப்பாணச் சரித்திரம் (ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை இயற்றியது)
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (நல்லூர் வண. சுவாமி
319

Page 166
ஞானப்பிரகாசர் O.M.I எழுதியது) விசுவகர்மநாடகம் (வண்ணை, சிதம்பர உடையார் மகன் இராமசுந்தரம் எழுதியது. அச்சில் வெளி வராதது) விசுவபுராணம் (கிளியனூர் சிதம்பர கவிராயர் எழுதியது. அச்சில் வெளிவராதது) Ancient Jaffna (By Mudaliar C. Rasanayagam) Mahawamso Worship of Muruga (By Sir. P. Arunachalam) Cauto- Portuguese Histroy of Ceylon by De Cauto (Translated by J. Ferguson and Published in the Journal of the Ceylon Branch of the R.A.S. Vol. XX) Dr. Davis- Accounts of Ceylon Hiouen. Histroy of the Travels of Hiouen Thsang (Translation of S. Beal) Queiroz -Conquista Temporal e Espiritual de Ceylon Rebert Knox Historical Relations of Ceylon
320

பின்னிணைப்பு
ஈழத்துப் பழந்தமிழ் நூல்களுள் ஒன்றாகவும், சிறந்த பள்ளு நூல்களுள் ஒன்றாகவும் கதிரை மலைப்பள்ளு விளங்குகின்றது. இந்நூல் ஏற்கனவே இரண்டு பதிப்புகளைப் பெற்றுள்ளது அவற்றுள், 1935 ஆம் ஆண்டில் வெளிவந்த வ.குமாரசுவாமியின் பதிப்பு குறிப்பிடத்தக்கது. அந்நூலை இப்போது ஆராய்ச்சி முன்னுரையுடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட முன்வந்திருப்பது வரவேற்புக்குரியதொன்றாகும்.
இத்திணைக்களம் இப்போது வெளியிடும் கதிரைமலைப்பள்ளு நூலுக்கு ஒர் ஆராய்ச்சி முன்னுரை எழுதும் பொறுப்பையும்,இதுவரை தெரியவந்துள்ள பள்ளு நூல்கள் பற்றிய விபரம் அடங்கிய பின்னிணைப்பு ஒன்றை அமைக்கும் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்த எனது பெருமதிப்புக்குரிய ஆசான் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கட்கும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் க. சண்முகலிங்கம் அவர்கட்கும் எனது உளங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்நூல் இயன்றவரை பல வாசகர்களைச் சென்றடையும் என நம்புகிறேன். இது போன்று, ஈழத்தின்
321

Page 167
பழந்தமிழ் நூல்கள் பலவும் நூல்வடிவம் பெறவேண்டும். அதற்கு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தொடர்ந்து முயற்சியெடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
தமிழ்த்துறை, துரை.மனோகரன் பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
27/10/96
322

1,
12.
13.
15,
16,
8.
19,
20.
ஆகவராமன் பள்ளு
இராசநகர்ப் பள்ளு கவிகுஞ்சரப் பாரதியார்
இருப்புலிப் பள்ளு உரிமைநகர்ப்பள்ளு .
ஈரோடை ஐயனாரப்பன் பள்ளு .
ஈரோடைப் பள்ளு எழுநகர் வணிகர்பேரில் மோகனப் பள்ளு . ஏழுநகரத்தார் பேரில்
பள்ளு நாடகம் கடிகைப்புலவர்
கங்கநாயகர் பள்ளு .
கஞ்சமி செட்டியார் சின்னத்தம்பி பள்ளு வாத்தியார் கட்டிமகிபன் பள்ளு நயினாசலவரதன்
கண்ணுடையம்மன் பள்ளு முத்துக்குட்டிப் புலவர்
கதிரைமலைப்பள்ளு
குருகூர்ப்பள்ளு ஆழ்வார் திருநகரி (பராங்குசப் பள்ளு) சடகோபப் புலவர் குற்றாலப் பள்ளு . கூடற்பள்ளு முதுகுளத்தூர் கொடுமஞர்ப்பள்ளு நல்லவீரப்பபிள்ளை கோட்டூர்ப்பள்ளு வெள்ளையப்புலவர்
FITLOğöğTĨ LOTOUT 6UOTIȚIITILL
சுப்பேந்திரன் பள்ளு
சிங்காபுரிப்பள்ளு அரிகரபுத்திரக்
கவிராயர்
323
இதுவரை தெரியவந்துள்ள பள்ளு நூல்கள்
1775
16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி?
1700
18 ஆம் நூற்றாண்டு
书9 ஆம் நூற்றாண்டு
2505-Ᏼ-a ,

Page 168
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
31.
32.
33.
34.
35.
37.
38.
39.
40.
சிவசயிலப்பள்ளு ஆழ்வார் குறிச்சி
இராமநாதன் கவிராயர்
சீகாழிப்பள்ளு சீகாழி சிதம்பரநாத
முனிவர், அருணாசலக் கவிராயர் சீரங்கராயன்
........ u5ܘLJ6ir சுவாமிநாதபூபதி பள்ளு செங்கோட்டுப் பொன்னுச்செல்லைய
செண்பகராமன் பள்ளு .
சேமூர்ப்பள்ளு முருகதாசர் சேற்றுார்ப்பள்ளு இராஜபாளையம்
சங்கரமூர்த்திக் கவிராயர் ஞானசித்தர்பள்ளு வேலாயுதசாமி ஞானப்பள்ளு . தஞ்சைப்பள்ளு . தண்டிகைக் கனகராயன் பள்ளு மாவை சின்னக்குட்டிப்
புலவர் தருமசாத்தாப் கவிகுஞ்சரபாரதி பள்ளு திருக்குற்றாலப் பள்ளு -- திருக்கோட்டியூர்ப் பள்ளு திருச்சுழியல் துணைமாலையம்மை பள்ளு. திருச்செந்திற் பள்ளு . திருநீலகண்டன் பள்ளு M திருப்புடைமருதூர் பள்ளு . திருப்புனவாயிற் சர்க்கரைப்
324
1720
1745
1900
17 ஆம் நூற்றாண்டு
18 ஆம் நூற்றாண்டு
19ഴ്ച நூற்றாண்டு
1780
 

41.
42
43.
44.
45.
46.
47.
48.
49.
SO.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
பள்ளு புலவர்
திருமக்காப்பள்ளு . 19ஆம் நூற்றாண்டு திருமலைமுருகன் பெரியவன் 1730
பள்ளு கவிராயர்
திருவாரூர்ப்பள்ளு கமலை ஞானப்பிரகாசர் . திருவிடைமருதூர்ப் பிரான்மலை {820
பள்ளு வெறிமங்கைபாகக் கவிராயர்
திருவேட்டை ஐயன்பள்ளு மீனாட்சிதாசன் 18ஆம் நூற்றாண்டு
தில்லைப்பள்ளு தில்லைவிடங்கன் 1760
மாரிமுத்தாபிள்ளை
தென்காசைப்பள்ளு இராமநாதகவிராயர் 19ஆம் நூற்றாண்டு
நல்லபுள்ளியம்மன் பள்ளு . .
நல்லாநாங்கூர் ས་སམ་ཡས་སམ་ས་
சின்னண்ணன்
நல்லண்ணன் பள்ளு
நவாலிப்பள்ளு கதிர்காமர் . நவாலியூர் நவாலியூர் 19മൃ வன்னிய சேகரன் க.சோமசுந்தரப் நூற்றாண்டு, அல்லது பள்ளு புலவர் 20ஆம் நூற்றாண்டின்
ዶ முற்பகுதி பழனிப்பட்டிச் செட்டிப் பள்ளு 1875 பழனி வடிவேலர் பள்ளு . . பறாளை விநாயகர் பள்ளு சின்னத்தம்பிப் புலவர் 1780 புதுவைப்பள்ளு புதுவை 19ஆம் நூற்றாண்டு
பொன்னுச்செட்டியார் பொய்கைப்பள்ளு கடிகை அங்குமுத்துப் 19ஆம் நூற்றாண்டு
புலவர் ܫܚ போரூர்ப்பள்ளு . 19 ஆம் நூற்றாண்டு மன்னார் மோகனப் பள்ளு Isaaaaanna 17 ஆம் நூற்றாண்டு
325

Page 169
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
மாந்தைப் பள்ளு சிதம்பரதாண்டவ
மதுரகவிராயர் மாவைப் பள்ளு பாலசுப்பிரமணியக்
கவிராயர் முக்கூட்டுப்பள்ளு பழனிசாமிப்பிள்ளை முக்கூடற்பள்ளு . முதலிக்காமிண்டன் பள்ளு . மோரூர்ப்பள்ளு . வடகரைத்துரையவர்கள் கடிகைமுத்துப் புலவர் பேரில் பட்பிரபந்தம் வேதாந்தப்பள்ளு ஆலிடை அம்மாள் வைசிகப் பள்ளு சங்கரமூர்த்திப்
புலவர் வையாபுரிப்பள்ளு வேலச்சின்னோ (பழநிப்பள்ளு) வையன்
19 ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19 ஆம் நூற்றாண்டு
1640
1896
18 ஆம் நூற்றாண்டு
1770
நூல் இயற்றப்பட்ட ஆண்டு, அல்லது நூற்றாண்டே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளு இலக்கிய அமைப்பில் அமையாத பள்ளு என்ற
பெயர்களைக் கொண்ட நூல்கள் இப்பட்டியலிற் சேர்த்துக்
கொள்ளப்படவில்லை.
326


Page 170


Page 171
:-( ... |- ...
•
• ~ , ... ... ...
 

in Illini