கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  அபிதான கோசம்.  
 

யாழ்ப்பாணத்து மானிப்பாய்
ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

 

அபிதான கோசம்.


THE TAMIL
CLASSICAL
DICTIONARY

இது
யாழ்ப்பாணத்து மானிப்பாய்
ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையால்


செய்து
இலங்கை இராஜமந்திர சபை
அங்கத்தவருளொருவராய் விளங்கிய பிரபு சிகாமணி


ஸ்ரீமான். பொ.குமாரசாமி தலியாரவர்களுடைய வித்தியாபிமான ஞாபகசின்னமாகச் சமர்ப்பித்து பிரகடனஞ் செய்யப்பட்டது


முதற் பதிப்பு :- 1902ம்வருடம்

-----------------------------------------------------

முகவுரை

ஆத்திதன் பாதம் பத்திசெய் வோர்க்குப்
புத்தியுஞ் சித்தியும் கைத்தலக் கனியே.
திருவளர் பொதியத் தொருமுனி பாதம்
வருக சிறியேன் சிரமிசை யுறவே.

பூவுலகத்திலுள்ள பாஷைகளுள்ளே வடமொழியும் தென்மொழியும் மிகப் பழமையும், இலக்கண வரம்பும், நூற்பெருக்கமும், அதிபுரதான இதிகாசங்களும், ஞானநூன் மலிவும், நகரிகவளமுடைய பாஷைகளென்பது ஆய்ந்தோர் துணிபாம். இரு பாஷையாளரும் வைதிக சமயிகளே யாதலின் வேதபுராணேதிகாசங்களும், தருமநூல்களும், ஏனைய சாஸ்திரங்களும் இருவர்க்கும் பொது நூல்களேயாம். ஒருநூலிலே ஒருவர் பெயர் கேட்கப்படும் போது அவர் யாரென்றாலும், எக்காலத்தவரென்றாலும், யாது செய்தா ரென்றலுமகாகிய இன்னோரன்னவினாக்கள் உதித்தல் வித்தியார்த்திகள் கண்ணும், வித்தியா விநோதர்கள் கண்ணும் இயல்பேயாம்.

ஆதலின், வேதாகமபுராணேதிகாசங்களிற் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், இருஷ~pகள், முனிவர்கள், அசுரர், யûர், கந்தருவர், கிந்நரர், அவதாரபுருஷர், பக்தர், அரசர், வள்ளல்கள், வித்துவான்கள் முதலியோர் சரித்திரங்களும், புண்ணிய Nûத்திரம், நதி, தடாகம், விருû முதலியவற்றின் வரலாறுகளும், தமிழ்நாட்டுப் பண்டைக்காலத்து அரசர், புலவர், வள்ளல்கள் முதலியோர் சரித்திரமும், நூல்களின் வரலாறுகளும், வைதிக சாஸ்திர கொள்கைகளும் ஆராய்ந்துனர்த்தல் தமிழ் கற்ப்போர்க்கும், தமிழ்க் கலா விநோதர்களுக்கும் இன்றியமையாதனவாம். அது மாத்திரமன்று; ஆசிரியர் கர்ண பரம்பரையாகப் பாடங்கேட்டவழியன்றி மற்றெவ்வகையானும் பொருள்காண்டற்கரிய செய்யுளுமோ எண்ணில. அவை பெரும்பாலும் சரித்திரமுணர்ந்தாலன்றி அர்த்தமாகா. “துந்துவெனுந்தானவானைச் சுடுதரத் தாற்றுணிந்தாலும்” என்றும் “வஞ்சம் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்டஞ்சும் பழையனூராலங்காட்டெம்மடிகளே” என்றும், வருவன வற்றுக்குச் சரித்திரவுணர்ச்சியின்றிப் பொருள் காணுதல்கூடாது. இச்சரித்திரங்கள் யாண்டுளவென்று தேடியறிதலும் எளிதன்று. இவ்வாற்றான் முட்டுறும் மாணாக்கர்க்கும் மற்றோர்க்கும் பெரும்பாலும் பயன்படுமாறு ஒரு நூலை இது காறும் தமிழிலே எவருஞ் செய்திலர். அது நோக்கியே இந்நூல் அர அடைவாகவகுத்துச் செய்யப்பட்டது. இந்நூல் தொடங்கி பதினாறுவருஷமாயின. ஆகியும் இந்நூல் நிரம்பாநூலேயாம். தமிழிலே யுள்ள நூல்கள் எத்தனை லûம்! வடமொழிNலுலயுள்ள நூல்கள் எத்தனை கோடி! அவைகளிலே கூறப்பட்ட தேவர், அசுரர், முனிவர், அரசர் முதலியோர் பெயர்கள் எத்தனை லûம் கோடி! அவற்ரையெல்லாம் ஒருங்கேயளந்தெல்லை கண்டுவிட்டேம் என்று நடிப்பாமல்லேம். எத்தனையோ பண்டிதர்கள் கூடித்தம்முள்ளே விநாயம்பண்ணிக் கொண்டு டெத்தனையேகாலமாராய்ந்து நிதானித்துத் திரட்டியெடுத் தியற்றற்பாலதாகிய நூலையாஞ் செய்யப்புகுந்துபோலாம். எமதறிவின் சிறுமையையும், அவ்வறிவுகொண்டாளப்பான் புகுந்த கலைக்கடற் பெருமையையும் நோக்குங்கால் நகைமுகமே. தோன்றுமென்னும் முண்மைபற்றியே, நிரம்பிய அறிவுடையோர்க்கும் இந்நூலின் கண்ணேயுள்ளே நிரம்பாமை உவப்பாகுமென வுள்ளத் துணிந்தோம்.

இந்நூலிலேயுள்ளனவெல்லாம் பெரும்பாலும் பலநூல்களின்றும் உள்ளவாறாகவும், சங்கிரகமாகவும், சூசனமாகவும், விரிவாகவும் வகுத்தியற்றப்பட்டனவேயாம். நமது மதமாகவும், ஊகமாகமுள்ளன. மிகச்சிலவேயாம். இந்நூலகத்தேவருங் காலகிரூவண மெல்லாம் பிரபல வேதுக்களைக்கொண்டு துணியப்பட்டனவேயன்றி வாளாகொள்ளப்பட்டன வல்ல. அவசியகாமத் தோன்றியவிடயங்கடோறுமே பிரமாணமெடுத்துக்காடினாம். ஏனையவற்றில் விரிவஞ்சிபுஞ்சாமணியநோக்கியும் அஃதொழிக்கப்பட்டது.
இந்நூலைக் கொழும்புநகரத்திலே பிரபுசிகாமணியாகவும், வித்தியாவிகோதிராகவும், ராஜ மந்திரியாகவும் விளங்குபவராகிய ஸ்ரீமான்.பொ.குமாரசுவாமிமுதலியாரவர்கள் வித்தியா பிமான ஞாபகச்சின்னமாகநின்று நிலவுமாறு சமர்ப்பித்துப்பிரகடனஞ் செய்தாம். இந்நூற்பிரகடனச் செலவிலொருபாகம் தாம்பொறுப்பதாக வாக்களித்து இந்நூலைமெச்சி காலந்தோறும் திருமுகம்விடுத் தெம்மையூக்கிவிட்ட முதலியாரவர்கள் பெருந்தகைமைக்கு க்கைம்மாறு காண்கிலேம். இந்நூலிலொருபாகத்தைக்கண்டு மெச்சித் திருமுகமனுப்பித் தமக்கு நூறு பிரதிகள் அனுப்புமாறு அநுஞ்ஞைசெய்த பாலவனத்தம் ஜமீந்தாரும், திசையெல்லாந் தன்புகழ்நிறுத்திய பொன்னுச்சாமி நரேந்திரன் தவப்புதல்வரும், மதுரைப் புதிய தமிழ்ச்சங்க ஸ்தாபகரும், வித்துவசிகாமணியும், பரம்பரையாகத் தமிழ் வளர்த்த குலத்திலகருமாகிய ம.ள.ள.ஸ்ரீ.பாண்டித்துரைத்தேவரவர்கள் வித்தியாபிமானமும், உதரணமும் நம்மனத்தைவிட்டகலா.

யாழ்ப்பணத்திலே வித்தியாபீடமாய், உத்தியோகம், உயர்குடிப்பிறப்பு, செல்வ முதலிய வற்றாலுயர்ந்து விளங்குபவராகிய ஸ்ரீமான்.கு.கதிர்வேற்பிள்ளையவர்களும், ஸ்ரீமான் அட்வகேட் அ.கனகசபைப்பிள்ளையவர்களும், ஸ்ரீமான். பிறக்டர் வி.காசிப்பிள்ளையவர் களும் இந்நூற்பிரகடணத்திற் குபகாரிகளாயினமைக்காக அவர்க்குப் பெரிதுங்கடப் பாடுடை யோம்.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை.
நவலர்கோட்டம்
யாழ்ப்பாணம்
கலியுகம்

-----------------------------------------------------------

அபிதான கோசம்

THE TAMIL CLASSICAL DICTIONARY

------------------------------------------------------------

அ - விஷ்ணு பிரணவத்து முதல் அûரம். (அகாரம் விஷ்ணு உகாரம் மகேசுவரன்; மகாரம் பிரமா)

அகசன் - கேது.

அகஜாதை - பார்வதி. (மலைமகள்.)

அகத்தி
அகஸ்தி அகஸ்தியன்.

அகத்தியசங்கிதை இஃது அகஸ்திய
அகஸ்தியசங்கிதை ரால் வடமொழியி லே செய்யப்பட்டவொரு நூல்.

அகத்தியபண்டிதன் வடமொழியிலே
அகஸ்தியபண்டிதன் பாலபாரதமென்னும் நூல் செய்தவர்.

அகத்தியப்பிராதா அகத்தியன்
அகஸ்தியப்பிராதா சகோதரன்.

அகத்தியம் அகஸ்தியர் செய்த முத்த
அகஸ்தியம் த்தமிழிலக்கண நூல். சில சூத்திரங்களன்றி ஏனையவெல்லாம் இறந் தொழிந்தன.

அகத்தியன் இவர் மகா விருஷிகளு
அகஸ்தியன் ளொருவர். மித்திரனும் வருணனும் சமுத்திரதீரத்திற்சஞ்சரித்த போது, அங்கே ஊர்வசிவர, அவளைக் கண்டு மோகதீதராகித் தமது இந்திரியங் களைக் குடத்தில்விட, அகஸ்தியரும் வசிஷ்டரு முற்பாவமாயினர். அது காரண மாக அகஸ்தியர் குடும்பமுனி கும்ப சம்பவர் முதலிய நாமங்களைப் பெறுவர். ஆரியர் விந்தமலைக்குத் தெற்கே செல் லாகாதென்ற கட்டுப்பாட்டைக் கடந்து முதன்முதல் தûணம் வந்து அந்நாட்டியல்புகளைத் திருத்தி செம்மை செய்தவர் இம்மகா முனிவரே. பர்வத ராஜபுத்திரி கல்யாணத்துக்குத் தேவர் களும் இருஷிகணங்களுஞ்சென்று திரண் டபோது, மேருத்தாழ்ந்து தெற்குயர் ந்தது. அதுகண்ட தேவரெல்லாரும், அகஸ்தி யரை நோக்கி, நீரே தென்றிசையிற் சென்று அங்கிருந்து சமஞ்செய்தல் வேண்டுமென்று விண்ணப் பஞ்செய்ய அவருடன்படுதலும், அவரோடு அரசிளங் குமரருஞ் சிலர் புறப்பட்டார்கள். அவர் தென்றிசை நோக்கிச் செல்லும் போது, கங்கையிடஞ் சென்று காவிரியை வாங் கிக்கொண்டு, ஜமதக்கினிமுனிவரிடஞ் சென்று அவர் மகன் திரணதூமாக் கினியைத் தமக்கு சீடராகத்தரும்படி கேட்டார். அவர் இசைதங்கையாகிய லோபாமுத்திரையைத் தமக்கு மணமுடித் துத்தருமாறு வேண்டி, அக்கன்னிகையை யும் பெற்றுக்கொண்டு விந்தமலையடைந் தார். அங்கே அம்மலை அவர்க்கும் பரிவாரத்தினர்க்கும் வழிவிடாது தடுப்பு, அதனை தரைமட்டமாக அழுத்திவிட்டு இப்பாற் சென்றனர். அப்போது இல்வலன் வாதாபியென்னும் அசுர சகோதரரிருவர், முனிவரைக் கண்டு மகிழ்ந்து, இல்வலன் பிராமணனாகவும் மற்றவன் ஆடாகவும் வடிவெடுத்து நின்றார்கள். முனிவர் சமீபி த்தலும், இல்வலன் சென்றுவணங்கி, அவரை விருந்துக்கமைத்து, ஆடாகி நின்ற தம்பி வாதாபியைக் கொன்று யாக கருமஞ்செய்து விருந்திட்டான். அவர் விருந்தருந்தி எழுந்தவுடனே இல்வலன் வழக்கம் போல வாதாபியை கூவியழைத் தான். வாதாபியும் அகஸ்தியர் வயிற்றை ப் போழ்ந்துகொண்டு வெளியேவர வெத்த னித்தான். அஃதுணர்ந்து அகஸ்தியர் “வாதாபேஜீர்ணோபவ” என்று தமது வயிற்றைத்தடவி அவனை சீரணம்பண்ணி மற்றவனையுஞ் சாம்பராகச் சபித்தது விட்டார். இவ்வாறே அநேக முளிவரைக் கொன்று வந்த இல்வலனும் வாதாபியும் ஈற்றில் அகஸ்தியரால் மாண்டார்கள். அப்பால் அகஸ்தியர் சையகிரி சென்று,

அங்குநின்றும் பல முகமாகப்பெருகி வணேகழிந்த நதியை கங்கைநீராற் சுத்தி செய்து, தம்மோடுடன்வந்த அரசிளங் குமாரரைத் துணைக்கொண்டு அதனை ஒருமுகமாகத்திருப்பி, நாடுவழியேபாயுமா றுவிடுத்து, அதற்குக் காவிரியெனப் பெயாPந்து, அப்பாற்சென்று வேங்கடத்திற் றங்கிக் குமரவேளருளைப் பெற்றுக் கொண்டு பொதியமலையை யடைந்து, அதனைத் தமக்கு ஆச்சிரமமாக்கி அங்கி ருப்பாராயினர். தெற்கே அதுகாறும் நாடா காது கிடந்த காடுகளையெல்லாம் நாடா க்கித் தம்மோடு வந்த அரசிளங்குமரர் களுக்கு அந்நாடுகளைக் கொடுத்து அவர்களுக்கெல்லாங் குருபீடமாயிருந்தார். அப்போது இலங்கையிலிருந்து இராûகர் அந்நாட்டிற்சென்று துன்பஞ்செய்யஎத்தனி த்தார்கள். அது கண்ட அகஸ்தியர் இரா வணனைச் சங்கீதத்தாற் சிநேகித்து அவனால் இராûசரை ஆண்டு செல்லா மற்றடுத்தனர்.

அகஸ்தியரோடுவந்த அரசிளங்குமரரே சேர சோழ பாண்டிய மண்டலங்களை அமைத்தவர்கள். அதற்கு முன்னே இந்தநாட்டில் அரசு செய்தவர்கள் குறு நிலமன்னர்கள். உத்தரத்தின்று வந்த இவ்வேந்தர்களே தென்னாட்டைத்திருத்திப் பலவகையானும் விருத்திசெய்தார்கள். என்பது நன்றாக நிச்சயிக்கப்படு;ம். அவ் வுண்மை “சுராதிராசன்முதலாகவரு சோழ னுமுனாட் சோழமண்டலமமைத்த பிறகு” என்று வரும் கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியத்துச் செய்யுட்களாலினிது பெறப்படும். அப்பால், அவர் தாம் புகுந்த நாட்டுக்குரிய பாஷையாகிய தமிழையும் செம்மைசெய்யக் கருதி அப்பாஷையில் அதற்குமுன்னரில்லாத சாஸ்திரங்கள் சில வியற்றுமாறு தொடங்கி முதலிலே தமிழுக்கு மிக்கவிரிவுடையதாகிய ஓரிலக் கண நூலைச்செய்து அதற்கு அகத்தியம் எனப் பெயரிட்டனர். அதன்பின்னர்ச் சோதிடம், தருமநூல், வைத்தியநூல், முதலியன செய்தார். இவைகளையெல்லா ங்குமரியாற்றுக்கருகேயிருந்த தென்மது ரையிலுருந்து அரசுசெய்த காய்சின வழுதியினது அவைக்கண்ணே யரங்கேற் றினர். இவைகளைக் கோட்டு மகிழ்ந்த காய்சினவழுதி இறையனாரைமுன்னிட்டு அகஸ்தியரை குருபீடமாகவைத்துச் சங்கம் அமைத்து தமிழ் ஆராய்வித்தான்.
இதுவே தலைச்சங்கமாக நெடுங்காலம் நிலைபெற்று வரும்போது அதற்கிடமாயிரு ந்த தென்மதுரை கடல்கொள்ளப்பட்டு டழிந்தது. இது மாத்திரமன்று, குமரியாற் றின் றெற்கே நாற்பத்தொன்பது நாடுகள் கடலாற்கௌ;ளப்பட்டன.

இப்பெரும்பிரளயம் வந்தகாலத்தை ஆரா யுமிடத்து அது துவாரகலியுக சந்தி யாதல் வேண்டும். யுகசந்தியாவது யுக முடிவுக்கு ஐயாயிரமாறாயிரம் வருஷமுண் டென்னுமளவிலுள்ள காலம். ஓவ்வோர் யுகசந்தியிலும் பிரளயமொன்றுண்டாகு மென்பது புராணசமடமதம். ஆகவே தென் மதுரை அழிந்தகாலம் இற்றைக்குப் பன்னீராயிரம் வருஷகளுக்கு முன்னராதல் வேண்டும்.

இற்றைக்கு 11481 வருஷங்களுக்கு முன்னர் ஒரு பிரளயம்வந்தது போயா தென்றும், அப்பிரளயத்தால் இப்பூமுகத்தி லே சமுத்திரதீரஞ் சார்ந்த நாடுக ளெல்லாம் சிதைந்தும் திரிந்தும் பூர்வ ரூபம் போதித்து தற்காலத்துள்ள ரூபம் பெற்றனவென்றும், “போசிடோனிஸ்” முதலிய தீவுகள் சமுத்திரவாய்ப்பட்டழி ந்ததும் அப்பிரளயத்தாலேயாமென்றும், “அத்திலாந்தி” சரித்திர மெழுதிய “எல்லியட்” என்னும் பண்டிதர் கூறியதும் இதற்கோராதாரமாம்.

அதுநிற்க. அகஸ்தியர் காலகேயர்பொருட் டுச் சமுத்திர நீரையெல்லாம் ஆசமனஞ் செய்து வற்றுவித்தாரென்றும், நகுஷன் தேவேந்திரபதம் பெற்றகாலத்தில் அகஸ் தியர் அவன் சிவிகையைத்தாங்கிச் செல்ல, அவன் அவரைநோக்கிச், “சர்ப்ப சர்ப்ப” என்று கூற, அவர் கோபமுற்று அவனை மலைப்பாம்பாகிப் பூமியில் விழு மாறு சபித்தனரென்றும், இராமர் இலங்கா புரிக்கு சென்றவழியில் அவருடை ஆச்சிர மத்திற்றங்கி அவர் அருள் பெற்றுப்போயி னரென்றும் இன்னோரன்ன பலகதைகளுள்
அகஸ்தியர் தமிழிலே செய்த நூல்களெ ல்லாம் அழிந்தொழிந்து போயின. அவர் பெயராலே தற்காலத்து வழங்கும் வைத்
தியநூல்கள் முற்றும் புரட்டுநூல்களாம். அகஸ்தியர் மாணாக்கராவார் திரணதூமா க்கினியென்னும் மியற்பெயரையுடைய தொல்காப்பியர், அதங்கோட்டாசான், தூராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கைபாடினியன், நற்றத் தன், வாமனன் எனப்பன்னிருவர். தொல் காப்பியர் செய்த தொல்காப்பியம் அகஸ் தியன் வழி நூல்.

அகஸ்தியர் பெயரால் ஒரு நகத்திரமு முளது. அஃது ஆகாயத்திலே தோன்றிற் சமுத்திரம் அலையொடுங்கும்.

அகண்டானந்த முனி - லû ஸ்தோத் திரம் முதலியன செய் சமஸ்கிருதகவி.
அகத்தீசுவரர் - திரு அகத்தியான் ள்ளியிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமியின் பெயர்.

அகநானூறு - உக்கிரப் பெருவழு யென்னும் பாண்டியன் தொகுப்பித்த அகப்பொருணூல். பெருந்தேவனார் முதலி யோர் பாடியது.

அகம்பன் - (ரா) சுமாலிகன் னஸ்தானத் திலே கரதுஷணாதிரை ராமர் கொன்றபொழுது அச்செய்தியை ராவணனுக்குச் சொன்னவன் பின்னர் இலங்கையை ராமர் வளைந்தபோது மேலைக் கோட்டைவாயிலிலே நின்று எதிர்த்து அநுமாராற் கொல்லப்பட்டவன்.

அகம்யாதி - (பு) சமயாதிமகன். இவன் பாரி காரத்தவீரியார்ச்சுனன் தங்கையாகிய பானுமதி.

அகலியை - முற்கலன் மகள் கௌதமர் மனைவி. இவளுடைய அழகைக்கண்ட தேவேந்திரன் வைகறைக்காலத்துக்கு முன்னர்க் கௌதமாச்சிரமத்திற்குச் சென்று சேவல்ரூபங் கொண்டு நின்று கூவ, அகலியைபொழுது புலர்ந்ததென் றெண்ணிக் கங்கைக்குச்செல்ல, இந்திரன் கௌதமரூபங்கொண்டு அவளை வஞ்சித் துக் கூடிப்போயினான். அஃதுணர்ந்த கௌதமர் அவளைக்கற்பாறையாகவும் இந்திரனைக் கேசாதிபாதம் பெண்குறி களுடையவனாகவுஞ்சபித்தார். அதுகாரண
மாக இவள் நெடுங்காலம் கற்பாறையாகி க்கிடந்து ராமர் திருவடி தீண்டியபோது முன்னுருக்கொண்டவள். இக்கதையை சிறிது விகற்ப்பித்து கூறுப.

அகனிஷ்டன் - புத்தன்.

அகன் - அஷ்டவசுக்களு ளொருவன். இவன்மகன் சோதி.

அகாசுரன் பகாசுரன் தம்பி, இவன்
அகன் மலைப்பாம்பு வடிவந் தாங்கிக் கிருஷ்ணனை விழுங்கக் கிருஷ் ணன் அப் பாம்பின் கண்டத்தளவுஞ் சென்று பேருருக்கொண்டு அதன் கண்ட த்தைக்கிழிக்க, அது காரணமாக விறந் தவன்.

அகிதேத்திரம் - உத்தர பாஞ்சாலத்து ராஜதானி.

அகிலாண்டேசுவரி - திருவானைக் காவிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

அகிலேசர் - திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

அகிலேசுவரி - திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அகீநகு - தேவானிகன் மகன், குருவினது தந்தை

அகோபிலம் - தொண்டை நாட்டிற்கு வடமேற்றிசையிலுள்ள வைஷ்ணவ மடம்.

அகோரசிவாசாரியார் - ஒரு பத்ததி செய்தவர். இவர் மிருகேந்திராகமத்து க்கும் ஓர் உரை செய்தவர். பதினெண் பத்ததிகளுள்ளு மிவருடையபத்ததியும் வாமதேவ சிவாசாரியர் செய்த பத்ததியுமே அதிகமாக வழங்குவன. பத்ததியாவது சைவக்கிரியாக்கிரமங் களை யெடுத்து விளக்கும் நூல், இவருடைய சமாதிசிதம்பரத்திலிருத்த லால் ஜன்மஸ்தானமும் அதுவேஅயன்பர்.

அக்

அக்கபாதன் நியாய சாஸ்திரஞ்
அûபாதன் செய்தவன்.

அக்கன் இராவணன் புத்திரன் அûன் அநூமாராற் கொல்லப்பட்ட வன்.

அக்கமாலை அருந்ததி
அ~மாலை

அக்காரக்கனிநச்சுமனார் - இவர் கடைச் சங்ககாலத்திலே உக்கிரப் பெருவழுதி சபையிலே விளங்கிய புலவருளொருவர்.

அ~யபாத்திரம் - சூரிய விடத்திலே தருமன்பெற்ற வற்றாத பாத்திரம். எந்து ணைஆயிரவர் வரினும் அவர்கெல்லா மன்னமளிப்பது.

அக்கி அக்கினி, அஷ்ட திக்குபாலகரு அங்கி ளொருவன். அக்கினி தேவன்.

அக்கிசூலி - குமாரசுவாமி.

அக்கிஜன்மன் - பிரமா, (அக்கிரம் முதல்: ஜன்மன் - பிறந்தவன்.)

அக்கினிக்கண்ணன் - சிவன்.

அக்கினிகர்ப்பை - பூமிதேவி.

அக்கினிகுமாரன் - குமார தெய்வம்.

அக்கினிகோத்திரபட்டர் - ஆந்தரதேசத்தி லே விளங்கிய ஒரு சமஸ்கிருதபண்டிதர்.

அக்கினிசயனம் - இஃதோர் யாககருமம், யாக கருத்;தர அடைய வேண்டிய பயனைத் தபன் என்னும் அக்கியினது புத்திரர் பதினெழுவரும் அபகரித்துச் கோடலின் பரிகரமாகச் செய்யப்படுவது.

அக்கினிஜன் குமார தெய்வம்
அக்கினிஜன்மன்

அக்கினிசுவோத்தர் - இவர்கள் ஒருபாற் பிதிர்கள்.

அக்கினிதியோதன் - கிருஷ்ணனிடம் விவாகம் பேசிப்போன ருக்குமிணி தூதனாகிய ஓரந்தணன்.



அக்

அக்கினிதேசியன் துரோணாசாரியாரு அக்கினிவேசன் க்குத்தனுர் வேதங் கற்ப்பித்த குரு

அக்கினிதேவன் பிரமாவினது புத்தி
அக்கினி ரனென்பர் ஒரு சாரர். முற்றொரு சாரர் கசியனது புத்திரனென்பர். இவனுக்கு கால் மூன்று, நா ஏழு, முகம் இரண்டு, வாகனம் ஆட்டுக்கடா, பாரி சுவாகதேவி, புத்திரர் பாவகன், பவமானன், சுசி என மூவர். இராஜதானி தேஜோவதி. அர்ச்சுனனுக்குக் காண்டீவம் கொடுத்தவன் இவ்வக்கினி தேவனே. அக்கினி திரோதாக்கினி, பாஞ்சாக்கினி என இருபாற்படும். திரேதா க்கினி ஆகவனியம், தûpணாக்கினி, காருகபத்தியம் என மூன்றுமாம், அவை முறையே கிழக்குத் தெற்கு மேற்குத் திசைகளிலே வேதியில் வளர்க்கப்படுவன பஞ்சாக்கினி முன்னைய மூன்றனோடு சவ்வியம், அபசவ்வியம் என ஐந்துமாம். இவையிரண்டும் வேதியில் ஈசானதிக்கில் வளர்க்கப்படுவன. அக்கினியானது பூதங் களுள்ளே நடுநிலையுடையது. அஃதரூப மும் ரூபமுமுடையது. மகாவிருடிகள் இவ் வக்கினியினது அநந்த சக்திகளைக் கண்டு, அதனை விண்ணுலகத்திலே சூரிய சந்திராதியரிடத்திலே சோதியாக வும், மேகத்திடையிலே மின்னலாகவும், பூமியிலே தீயாகவும், சமுத்திரத்திலே வடவையாகவும், சீவகோடிகளுடைய வுதரத்திலே ஜாடராக்கினியாகவுமிருந்து சகலலோகங்களையுமொரு சிறு கணப் பொழுதிலே தரிசித்து மீளுகின்றதூதென வேதத்திலே துதிப்பர்: இவ்வக்கினி மண் டலத்திலேயுள்ளார் அக்கினி தேவர்கள் எனப்படுவார்கள். அவர்கள் அநலர் என்னும் பெயருடையராய் நாற்பத்தொன்

பதின்மராவர். அவருட்டலைமைபெற்றவன் அபிமானாக்கினியெனப்படுவான். அவன் மைந்தரே பாவகன் பவமானக் சுசி என்னும் மூவரும். அம் மூவருக்கும் நாற் பத்தைந்து புத்திரருளர்.

அக்கினிபுராணம் - ஆக்கினேய புராணம் அது வியாசர் செய்தது.

அக்கினிபுவன் - குமாரதெய்வம்

அக்கினிமணி - சூரியகாந்திக்கல்.

அங்

அக்கினிமித்திரன் - புஷ்பமித்திரன் மகன். சிருங்கிகளொருவன்.

அக்கினிமுகன் - இவன் சூரபன்மனுக்குப் பதுமகோமளையிடத்து பிறந்த புதல்வரு ளொருவன்.

அக்கினிவர்ச்சனன் - சூதசீஷன். இவன் மகாபௌராணிகன்.

அக்கினிவர்ணன் - சுதர்சனன் மகன். இவன் இராமன் பரம்பரையில் இருபத்தா றாவது வழித்;தோன்றல். இவன் சிற்றின் பத்தின் மூழ்கினவனாயிராச்சிய முறையறி யாது அரசு புரிந்தவன். இவனுக்குப்பின் இவன் மனைவி இராச்சியத்தை செவ்வே நடத்தினாள்.

அக்கினிவேசன் - இûவாகுவினது தம்பி யாகிய அரி~pயன் வமிசத்துப் பிராமன குலம். அக்கினிவேசியாயனம் எனப்படும்.

அக்கினிஷ்டோமம் - வசந்தகாலத்தில் ஐந்து தினங்களிலே செய்து முடிக்கற் பாலதாகிய ஒரு யாகம்.

அக்கினிஷ்டோமன் - சட்சுர்மனுவினது மகன்

அக்குரூரன் - சுபபற்குனன் மூத்த மகன். விருஷ்ணிவமிசத்துச் சாத்தகியுமிவனும் சிறியபிதாப் பெரியபிதாப் பிள்ளைகள்.

அக்குரோதன் - அயுதாயுமகன்

அங்கன் - (1) உன்முகன் சே~;ட புத்திரன். இவன் பார் சுநீதி. இவன் புத்திரன் வேனன். (2) யயாதியினது நான்காம் புத்திரனாகிய அணுவமிசத்துப் பலி புத்திரன்.

அங்கசன் - மன்மதன்.

அங்கதபுரம் - இமயமலைக்குச் சமீபத்தி லேயுள்ள ஒரு பட்டணம். இலûமணன் குமாரனாகிய அங்கதனால் நிருபிக்கப் பட்டது.

அங்கதன் - (1) வாலிமகன், இவன் தாய் தாரை, இவ்வங்கதனை ராமர் தமது சேனாபதிகளுனொருவனாக்கி அவனை
அங்

ராவணனிடந் தூதுபோக்க, அவன் பேசிய தூதானது அதி சாதுரியமும் வாக்கு விலாசமும் அதி மாதுரியமும் மிகு வசீகரமுடையது. (2) (இûவாகுவமிசம்) இராமருடைய தம்பி இலûமணனுடைய புத்திரன் இவனே அங்கதபுரத்தை நிருமித்தவன்.

அங்கதேசம் - கங்கையும் சரயுவுஞ் சங்கமிக்கின்றதேசம். இது சிவபிரான் மன்மதனை எரித்து அங்கம் போக்கியவிடத்தைத் தன்னகத்தேயுடை மையால் அங்கதேசமெனப் பெயர் பெற்றது.

அங்கர் - அங்கநாட்டிலுள்ளோர்.

அங்கனை - உத்தரதிசைக்குக் காவல் பூண்ட பெண்யானை.

அங்காதிபன் - அங்கதேசத்து அரசன்.

அங்காரகன் - (1) ஏகாதசவுருத்திரரு ளொருவன். (2) செவ்வாய் நவக்கிரகங் களுள் ஒன்றாகிய இச் செவ்வாய் சிவந்த மேனியுடைமையின் செவ்வாயெனவும், அந்நிறம் போதித்துத் தோன்றுமாயின் பூமியிலே நோய், கொடிய யுத்தம் முதலிய வுற்பாதகளுண்டாதற் காரணமா மெனவும், பூமகனெவுஞ் சொல்லப்படும்.

அங்காரவர்ணன் - சோமசிரவ தீரத்திலே அர்ச்சுனனோடு யுத்தஞ் செய்து அவன் விடுத்த அக்கினி பாணத்தற்றகிக்கப்பட்;டு வேற்றுருக்கொண்டு சித்திரரதன் என்னும் பெயரோடு அந்தரத்திற் பறந்து போன ஒரு கந்தருவன். இவன் சொற்படியே பாண்டவர்கள் தௌமிய முனிவரைத் தமக்குப் புரோகிதராகக் கொண்டார்கள் இவன் பாரி கும்பீனசை

அங்கி - அக்கினிதேவர்

அங்கிரசன் (1) பிரமமானச புத்திரரு அங்கிரன் ளொருவனாகிய இவனு க்கு பிரகஸ்பதி, உதத்தியன் என இரு வர் புத்திரரும் யோகசித்தியெனவொரு புத்திரியும் பிறந்தார். யோகசித்தி பிரபாவசுவை மணந்து விசுவகர்மாவைப் பெற்றவள். முன்னொரு காலம் தேவர்கள் தாங் கொடுத்த அலிகளை அக்கினி தேவன் வகிக்காது கோபித்தேக, அவர் க்குப்பிரதியாக அங்கிரசனை வைத்துத் தமது கருமத்தை முற்றுவித்தார்கள். அக்கினி திரும்பிவர, அங்கிரசன் அவரை பிதமாக்கினியாகவைத்துத்தான் சாரூபம் பெற்று அவர்க்கும் பிரதமபுத்திரனாயி னான் இவ்வாறாகிய அங்கிரசன் சிவையை மணந்து, பிரகசோதி, பிரககீர்த்தி, பிரகமுகன், பிரகமதி, பிரகபாணன், பிரகஸ்பதி, பிரகபிரமா, என எழுவர் புத்திரரைப் பெற்றான். பின்னரும் சினீ, வாலி, குகு, அர்ச்சிஷ்மதி, மகாமதி என ஐவர் புத்திரிகளைப் பெற்றான் இவரொல் லோரும் அக்கினி ரூபமேயுடையர், (2) உன்முகன் புத்திரன்; அங்கன் தம்பி;; பாரி ஸ்மிருதி.

அகசன் - சுமந்துமகன்.

அசங்கன் - (ய) அக்குரூரன் தம்பிகளுள் ஒருவன்.

அசனை - பலியினது பாரி: வாணாசுரன் தாய்.

அசமஞ்சசன் - சகரனுக்குச்சுகேசியிடத் திற் பிறந்த புத்திரன். இவன் துஷ்ட குணத்தை நோக்கி இவனைச் சகரன் தன்னிராச்சியத்திற்கு வெளியே தள்ளி விட்டான். இவன்மகன் அம்சுமந்தன்.

அசி - காசிக்கருகேயுள்ள ஒரு நதி.

அசிக்கிளி - (1) தக்கன் இரண்டா மம்பாரி. இவள் அறுபது புத்திரிகளைப் பெற்றவள். (2) ஒரு நதி.

அசிதை - அப்சர ஸ்திhPகளுளொருத்தி.

அசிபத்திரம் - இஃது ஆயிரயோசனை வட்டமாயுள்ள ஒரு நகரம். மிகக் கொடிய சூரிய கிரணம் போன்றவும், அக்கினிக்குண்டம் போன்றவும், வாளாயு தம்போன்றவுமாகிய இலைகளையுடைய மரங்களையுடையது. அங்குள்ள மிருகங் களாலும் பû~pகளாலுந் துன்பப்பட்டோடும் பாபிகனை இம்மரங்கள் ஊறு செய்து வருத்து மியல்புடையன. ஆகவே இந் நரகம் கொடிய பாவிகளுக் கேயுரியது.

அசுமகன் - (1) (இ) கல்மாஷ பாதன் மகன். இ;வன் தாய் பிரசவவேதனையால் வருந்த வசிஷ்டர் பிரசூதிபாஷாணம் என்னும் கல்லால்; அவள் வயிற்றைத் தடவுதலும் இவன் பிறந்தானாகலின், அசுமகன் எனப்பெயர் பெற்றான், (அசுமம் - கல்) இவன் மகன் மாலகன், மாலகன் நாhPகவசனெனவும் படுவன். (2) விதேகதேசராசாவாகிய ஜனகன் தன் பந்துக்;களையிழந்து துக்கத்தால் உலக வாழ்வை வெறுத்துக் காட்டுக்கேக எத்தனித்த போது, பிரபஞ்சவியல்பை யுணர்த்தி ஞானோ உபதேசஞ் செய்து அவனை ராஜாங்கத்தைக் கை விடாமற்றடுத்த ஒரு பிராம ணோத்தமன்.

அசுரர் - தேவசத்துருக்கள், அமிர்தங் கொள்ளாதவர்கள், இவர்கள் வைத்தியர், தானவர் என இரு வம்சத்தார், இரணி யாசன், இரணி;யகசிபன், பலி, வாணா சுரன் முதலியோர் தைத்தியர், சம்பரன், தாரகன், விப்பிரசித்தி, ஈமுகி, அந்தகன், முதிலியோர் தானவர்.

அசுN;ரந்திரன் - தாரகாசுரன் மகன். வீரவாகுதேவராற்கொல்லப்பட்டவன்.

அசுவதீர்த்தம் - கங்கையிலே காலாநதி வந்து கூடுகின்றவிடத்திலுள்ள தீர்த்தம். காகி தன் புத்திரி சத்தியவதியைக் கொள்ள வந்த இருசிகனை ஆயிரங் குதிரை கேட்க, அவ்வசுவங்களை இருசி கன் இவ்விடத்திலே பெற்றமையால் இப் பெயர் பெற்றது.

அசுவத்தாமன் - துரோணன் கிருபிலிட த்துப் பெற்ற புத்திரன். இவன் சிரஞ்சீவி, பாரதயுத்தத்திலே அசுவத்தாம னென்னும் யானையொன்றிறக்க, அதனை வாய்ப்பாக க்கொண்டு பாண்டவர்கள் அசுவத்தாமன் இறந்தான் என்று துரோணன் காதில் வீழுமாறு சொல்ல, அஃதுண்மையெனக் கொண்டு துரோணன் மூர்ச்சையாகி வீழ்ந்து திட்டத்துயுமனாற் கொல்லப்பட் டான். அதனைப் பின்னர் உணர்ந்த அசுவத்தாமன் துரோபதை பெற்ற பிள்ளைகளையெல்லாம் கொன்று பழிவா ங்கி வந்து பாPûpத்துவையும் சர்ப்பத்தில் அழிக்க முயன்றான். அதனைக் கிருஷ்ணன் தடுத்துப் பாPûpத்துவைக் காத்தனர்.

அசுவசேனன் - தûகன் மகன். இவனை க் காண்டவதகனத்திலே சாகாமல் தேவேந்திரன் காத்தான். பின்னர் இவன் நாகாஸ்திரமாகிச் கன்னனிடமிருந்து, கன்னன் ஏவியபோது அர்ச்சுனன் கிhPடத் தைச் சோதித்துச் சென்றவன்.
அசுவபதி - மந்திரதேசத்தை யாண்ட வேரரசன். இவன் சந்தானவிச்சையால் பதினெண்ணாண்டு சாவித்திரியைநோக் கித் தவங்கிடந்து அவனருளால் சாவித்தி ரியைப் புத்திரியாகப் பெற்றவன். (2) கைகேயி தந்தையாகிய கேகயதேச ராஜன், இவன் மகன் யுதாசித்து.

அசுவமேதம் - ஒரு யாகம். அவ்வியாகத் தைச்செய்ய விரும்புபவன் ஒரு சிறந்த ஒரு குதிரையை அலங்கரித்து அதன் நெற்றியிலே அவ்வியாக வரலாறு வரைய ப்பட்ட ஒரு பட்டங்கட்டி அதற்குக் காப்பாக ஒரு சேனையையும் புறத்தே செல்லச் செய்து அதனைத் திக்குகள் தோறுமனுப்புவன். அதனைச் சத்துருக் கள் பற்றிக் கட்டுங்காலையில் அவர் களைவென்று அதனைமீட்டு அச்சத்துருக் கள் கொடுக்குந் திறைகளோடு தனது திரவிமுஞ் செலவிட்டுச் செய்யப்படுவதா கிய யாகம் அசுவமேதமெனப்படும். இங்ஙனநூறு அசுவமேதஞ் செய்தவன் இந்திரபதம் பெறுவன்.

அசுவினி - நûத்திரமிருபத்தேழி லொன்று.

அசுலினிதேவர் - சூரியன் பாரியாகிய வடவாருபமபெற்ற சௌஞ்ஞாதேவியினது நாசியிற் பிறந்தோர். இவர் இருவரும் அதிரூபர். இவர்கள் ஒரிடத்துவசிக்காதுல கெங்குஞ் சஞ்சரித்து ஒளûதம், சாஸ் திரம் என்னுமிரு பிரயோகமுஞ் செய்து அற்புதவைத்தியம் புரிபவர்கள். இவர்கள் திரூபியாகிய சுகன்னிகை என்பவளையும் அவளுக்கு விதிவழிவாய்த்த குருபமுந் தீரநோயுமுடையவனாகிய சியவனனை யுங் கண்டு, அவனை நோக்கி, இவனை யேன்மணந்தனை என, நுங்குற்றமாராய்த லென்னையென்றாள். அதுகேட்ட தேவமரு த்துவர் நம்குற்றம் யாதென்றனர். அவள் எனது நாயகன் குற்றகளைத் தீர்பிரேல் சொல்லுவேனென்ன, அதற்குடன்பட்டுச் சியவனனை இளங்குமரானாக்கி இனிக் கூறுகவென்றார். அதனைக் கண்டசுகன்னி கை, இன்று நம்மவங் கைகூடிற்றென்று மகிழ்ந்து அவர்களைநோக்கி, ஐயன்மீர் நீர் தேவமருத்துவராகவும் உம்மை அத்தேவர்கள் யாகங்களில் வைத்துக் கொண்டாடா தொழிவதுயாது பற்றியோ வென்றாள். அது கேட்டு வெள்கிய அசுவினிதேவர் அவனை வியந்து வாழ்த்திப் போயினர். அச்சுவினிதேவரிடம் சியவனன் தான் பெற்ற நன்றியை மறவானாகித் தனது மாமனாகிய சரயாதியை ஒரு யாகஞ்செய்யவும் அதிலே தேவர்களோடு அசுவினிதேவர் களுக்கும் அவிகொடுக்கவும் வேண்டி னான். அவ்வாறே அவன் அலிகொடுக்க இந்திரன் சினந்து தனது சக்கிராயுத்தை எடுத்தான். அசுவினிதேவரால் அவனுக்கு கையிலே சோர்வாதமுண்டாக, இந்திரன் இதனைத்தீர்ப்பிரேல் எம்மோடு சமானாக்கு வேமென்றிரப்ப, அவர்கள் அந்நோயை நீக்கி அன்று முதல் தேவர்களோடு சம நிலை பெற்றார்கள்.

அசோகவர்த்தனன் - சந்திரகுப்பதன் பௌத்திரன். இவன் மகததேச ராசா.

அசோகன் - (1) தசரதன் மந்திரிகளி ளொருவன். (2) புத்தன் (3) ஓரரசன். இவன் பௌத்தசமயத்தைப் பெரிதுமபிவிர் த்தி செய்தவன். செங்கோன்மையிலுஞ் சிறந்தவனாய் விளங்கியவன். இவன் 2192 வரு~சங்களுக்குமுன் மகததேசத் திலரசுபுரிந்தவன்.

அச்சுதன் - (1) சிவன் (2) விஷ்ணு.

அச்சுததீ~pதா - இவர் தம் பெயரால் அத்துவைதவேதாந்தா சாஸ்திரமொன்று செய்து சமஸ்கிருத பண்டிதர்.

அச்சுதரகுநாதன் - சமஸ்கிருதத்திலே ராமாயண சாரசங்கிரகஞ் செய்தவர்.

அச்சுமகன் - அசுமகன் காண்க.

அச்சோதம் - ஒரு வாலி, இஃது அச்சோ தையென்னும் நதிக்கு உற்பத்திஸ்தானம். குபேரனுடைய சயித்திர ரதமென்னும் நந்தவனம் இவ்வாவிக்கரைக்கண்ணது.

அச்சோதை - ஒரு புண்ணியநதி. அச்சோதை முந்திய ஜன்மத்திலே மாPசி புத்திரராகிய பிதிர்கணங்களுக்கு மானச கன்னிகையாக பிறந்து, அப்பிதிர்களாலே நிருபிக்கப்பட்ட அச்சோதமென்னும் சரோ வரதீரத்தில் ஆயிரந்தேவவருஷந் தபசு செய்து அவர்களை மகிழ்விக்க, அவர்கள் திவ்வியங்கார பூஷிதர்களாய்ப் பிரத்தியûமானார்கள். அவள் அப்பிதிர் களுள்ளே தனக்குத் தந்தைமுறையுடைய மாவசன் என்பவனைத் தனக்குக் கணவ னாகுமாறு வேண்டினாள். அது கேட்ட பிதிர்கள் சினந்து அவளை நோக்கி உன் தபசு குலைகவென்று சபிக்க, அவள் யோகப் பிரஷ்டையாகிச் சுவர்க்கத்தி லிருந்து கீழ்நோக்கி வீழ்ந்து பூமியிற்படி யாது அந்தரத்திலே நின்றாள். அங்கே நின்றபடியே அவள் மீண்டும் பிதிர்களை நோக்கித்தவஞ்செய்ய அன்று அமாவாசை ஆதலால் அத்தினத்திலே பிதிர்களை நோக்கிச் செய்யப்படும் அற்ப தபசுகளை யும் அப்பிதிர்கள் அûயமாகப் பாவித்து த் திருப்தியடைவதியல்பாதலின், அவள் தபசுக்கு மகிழ்ந்து, நீ தேவர் செய்யும் கரும பலத்தையெல்லாம் அனுபவித்து இருபத்தெட்டாவது துவாபரயுகத்திலே மீன் வயிற்றிலே பிறந்து சத்தியவதியெ னப் பெயர் பூண்டு விளங்கிப் பராசரரால் வியாசரைப்பெற்று, அப்பால் சந்தனுவுக்கு ப் பாரியாகி, விசித்திர வீரியன் சித்திராங் கதன் என்போரையீன்று, ஈற்றில் அச்சோ தையென்னும் புண்ண்pய நதியாகக் கடவையொன்று வரமளித்து மறைந்தார் கள்

அஜகரன் - இரகசியமான பிரமஞானத் தைப் பிரகலாதனுக்கு பதேசித்த மகா விருஷ~p. இவர் ஆச்சிரமம் சையகிரிச் சாரலின் கண்ணது.

அஜகவம் - சிவன் வில்லு.

அஜகன் - புரூரவன் வமிசத்தானாகிய ஜன்னுவினது பௌத்திரன்.

அஜமீடன் - அஸ்புத்திரன். இவன் புத்தி ரர் பிருகதிஷன். நீலன், ரிûன் என மூவர். பார்கதிஷ, பாஞ்சால, கௌரவ வமிசங்கள் இவனாலுண்டாயின.

அஜமுகி - சூரபன்மன்றங்கை. காசிபன் ஆட்டுருக்கொண்டு மறியுருக்கொண்டு நின்ற மாயையைக் கூடிப்பெற்ற புத்திரி. சூரபன்மனகுலத்துக்கு நாசாகாரணமாகப் பிறந்தவள் இவளே.

அஜன் - (1) இ. ரகுபுத்திரன். இவன் மகன் தசரதன். விதர்ப்பராஜபுத்திரியாகிய இந்துமதியினது சுயம்பரத்துக்குபோன அஜன் வழியிலெதிர்பட்ட ஒருயானை மீது பாணந்தொடுக்க, அவ்வி யானை தனது பூர்வரூபமாகிய கந்தருவனாகி, இருடிசாப த்தால் யானையுருப்பெற்றமை கூறித் தனக்கு அதனால் விமோசனமுண்டாயது பற்றி அவனுக்குத் தானுணர்ந்திருந்த அஸ்திரவித்தையின் நுண்மைகளை யுப தேசித்து அந்தரஞ்செல்ல, அஜன் அவ் வித்தியாசாமர்த்தியத்தால் சுயம்வரத்து க்கு வந்திருந்த அரசரையெல்லாம் புறங் கண்டு இந்துமதியையும் மணம்புரிந்தான். காளிதாசகவி அஜனுடைய பிரதாபத்தை யெல்லாம் மிகச்சிறப்பாக வெடுத்துக் கூறுவர். (2) திருதன் மகன் (3) பிரமன் (4) சிவன் (5) வி~;ணு (6) மன்மதன்.

அஜாதசத்துரு - (1) தருமராஜா. (2) விதிசாரன் புத்திரன் இவன் கலி இரண்டா யிரத்தைஞ்நூற்று நாற்பத்தொன்பதிலே மகததேசத்துக்கு அரசனாக முடி தரித்த வன். இவன் வமிசத்திலே சிசுநாகன் முத லிய அரசர் பிறந்தார்கள். இக்கால வரையறை “டக்டர்பூலர்” நிச்சயித்தது.

அஜாமிளன் - கன்னியாகுப்ச புரத்திலிரு ந்த மகாபாதகனாகிய ஒரு பிராமணன். இவன் மனைவி ஒரு சூத்திரப் பெண். இவன் அந்தியகாலத்திலே தன்மகன் நாராயணனைக் கூவியழைத்துக்கொண்டு தேகவியோகமாயினன். அந்நாராயநாம விசேடத்தால் காலதூதர் அவனை விடுத் துப்போக அவன் மீளவும் உயிர்பெற்று மிக்கபக்தி யுடையனாயினான்.

அஜிகர்த்தன் - சுனசேபன் தந்தை. இவன் சில வேதகீதங்களுக்கு கர்த்தன்.

அஜிதன் - (1) பிரமா (2) விஷ்ணு (3) சிவன்.

அஞ்சகன் - குனிபுத்திரன்.

அஞ்

அஞ்சலநாயகி - திருமயிலாடுதுறையிலே கோயில்கொண்டிருக்கும் தேவியர் பெயர்.

அஞ்சனபருவன் - கடோற்கசன் புத்திரன். இவன் பாரத யுத்தத்தில் அசுவத்தாம னாற் கொல்லப்பட்டவன்.

அஞ்சனம் - மேற்றிசைக்காவல் பூண்ட ஆண்யானை.

அஞ்சனாஷிஅம்மை - திருக்கற்குடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர்.

அஞ்சனை - ஓரம்சரப்பெண். இவள் ஒரு சாபத்தாற் குஞ்சரன் என்னும் வாநரனுக் குப் புத்திரியாகப் பிறந்து இச்சித்த ரூபங்களை யெடுக்கும் வண்மையுடைய வளாய் ஒருநாள் மனுஷரூபமுள்ள ஒரி ளம்பெண்ணாகி வாயுபகவானைக் கூடி அநுமானைப் புத்திரனாகப்பெற்றவள். அதன் பின்னர்கேசரியென்னும் வாநரனை மணம் புரிந்து அவனுக்கு மனைவியாயி னவள்.

அஞ்சுலன் - சணாக்கியன்.

அஞ்சைக்களத்தப்பர் - திரு அஞ்சைக் களத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

அடிதானவன் - அந்தகன் மகன். இவன் சுயரூபத்தோடிருக்குங்காறும் சாகாமலும் வேற்றுருக்கொள்ளும்போது சத்துருக்களா லிறக்கவும் வரம்பெற்றவன். ஒருநாள் பார் வதிதேவியருடைய ரூபமெடுத்துச் சிவனை வஞ்சிக்க எத்தனித்தபோது அவராற் கொல்லப்பட்டவன்.

அடியார்க்குநல்லார் - சிலப்பதிகாரவுரை யாசிரியர். இவர் நச்சினார்க்கினியர்க்கு முந்தியவர்.

அட்டாங்க விருதயம் - இது நூற்றியி ருபது அத்தியாயங்களால் ஆயுள்வேதம் முழுவதும் கிரமமாகக் கூறும் நூல். வடமொழியிலே வாக்படரால் செய்யப் பட்டது.

அணிகொண்டகோதை - திருமுல்லை வாயிலிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர்.

அணியியல் - மதுரை தமிழ்ச்சங்ககாலத் திலே இருந்து பின்னர் இறந்துபோன ஒரு அலங்கார நூல்.

அணு - யயாதி புத்திரருளொருவன்.

அணுகன் - விப்பிராஜன் மகன் இவன் சகுனி புத்திரி கீர்த்திமதியை மணம் புரிந்தவன்.

அண்ணாமலை - அருணாசலம்

அதங்கோட்டாசான் - அகத்தியர் மாணாக் கருளொருவராய்த் தொல்காப்பியர் செய்த தொல்காப்பியத்தை அரங்கேற்றக் கேட்ட வராகிய காரணிகர்.

அதசிரசு - பரிதானம் வாங்குவோர்புகும் நரகம்

அதர்மன் - வருணனுக்கு ஜேஷ்டா தேவிவயிற்றிற் பிறந்த புத்திரன். இவன் மனைவி நிருபுத்திரியாகிய இம்சை. இவன் தங்கை சுரநிந்தை, பயன், மகாபயன், மிருத்தியு என்போர் இவன் புத்திரர்.

அதர்வேதம் நான்காம் வேதம்
அதர்வணவேதம் இவ்வேதம் சத்துரு நாசத்திற்காக அநேக மந்திரங்களை யுடையதாயினும் மற்றைய வேதங்களை போலவேவைதிக கிரியாநூட்டானங்களு க்கு வேண்டற்பலானவாகிய தோத்திரங் களையும், அநேக சூக்தங்களையுமுடை யது. இதிற் கூறப்படும் சத்துருநாசமந்திர ங்கள் ஆபத்து நிவர்த்திக்காக ஓதப்படுவன. (வேதங்காண்க)

அதர்வணாசாரியன் - பாரதத்தை தெலு ங்கில் மொழி பெயர்த்தபண்டிதன்.

அதலம் - கீழுலகங்களுளொன்று. அது வெள்ளிமயமானது. அதில் வசிப்போர் நாகர்.

அதிகன் (1) இவன் தனக்கு கிடை அதிகமான் த்த அமிர்தத்தையும் கரு கொல்லிக் கனியையும் தானுண்டு உட ம்பு பெறாது ஒளவைக்கு கொடுத்த பெரு




அதி

வள்ளல். (2) ஒளவைசகோதரன். இவனே தான் பிறந்தவுடன் தன்னைவிட்டுப்போக வருந்திக்கலங்கி நின்ற தாயை நோக்கி, “கருப்பைக்குண்முட்டைக்குங் கல்லினுட் டேரைக்கும்” என்ற கவி சொல்லி யாற்றி னவன்.

அதிகாயன் - ஜராஸ ராவணனுடைய மகன். இவன் பிரமாவினிடம் அவத்தியகவசம் பெற்றவன். இலட்சுமணனால் பிராமாஸ்தி ரம் விட்டுக்கொல்லப்பட்டவன், அவத்திய கவசம் - வதம்பெறக் கவசம்.

அதிசாந்திரன் - சந்திரன்.

அதிசுந்தரமின்னாள் - திரு அச்சிறு பாக் கத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர்.

அதிசூரன் - ஏனாதி நாயனாரைக் கொன்ற பாதகன். (2) சிங்கமாசுரன் மகன்.

அதிதி - குசன் மகன்: ராமன் பௌத்திரன்.

அதிதி - (1) தûன்தாய். (திதி இல்லது அதிதி: பகலிரவற்றகாலம். என்பது பொருள்.) (2) தûன் மகள். இவள் கசி யபன் பாரி. இவள் புத்திரர் ஆதித்தியர். இந்திரன் முதலியவர்களும் இவளுடைய புத்திரரெனக் கூறப்படுவர்.

அதிபத்தநாயனார் - நாகபட்டணத்திலே பரதவர் குலத்திலே அவதரித்துச் சிவபக் தியிற் சிறந்தவராக விளங்கியவிவர். தமக்குத்தினந்தோறும் அகப்படுகின்ற முதல் மீனை விற்று அப்பொருளைச் சிவ தொண்டுக்கே விட்டு வருபவர். சில தினங்களாக ஒரு மீன் அகப்பட, நியமப் படி அவற்றை சிவதொண்டுக்காக்கிப் பட் டினியினால் வருந்திவழியும் தமது பக்தியை நிலைநிறுத்த, அஃதுணர்ந்த ருளிய சிவபெருமான் அருள்புரிந்து துன்ப ங்களையெல்லாம் நீக்கப்பெற்றவர்.

அதிரதன் - (அம்) சத்தியகர்மன் மகன். இவன் கங்கைக்கரையில் வந்தடைந்த குந்திசிசுவாகிய கர்ணனை எடுத்து வளர் த்தவன். இவன் மனைவி விராதை.


அதிருசியந்தி - (1) அருந்ததி (2) சக்தி யினது மனைவி.

அதிவீரராமபாண்டியன் - பாண்டியர் வழி யிற்றேன்றியவோரரசன். இவன் தமிழில் நைடதமுதலிய அநேக நூல்களியற்றிய வன். வரதுங்க பாண்டியன் தம்பி. இவன் விளங்பியகாலம் சாலிவாகனசகம் எழுநூ ற்றுமுப்தெட்டுஎனச் கற்சாசனங்களால் நிச்சயிக்கப்படும்.

அதிஷ்டானபுரம் - சேதி தேசத்து ராஜதானி.

அதீனன் - சஹதேவன் புத்திரன்.

அதுலகீர்த்தி - அதுலவிக்கிரமனுக்குப் பின் மதுரைக்கரசனான பாண்டியன்.

அதுலவிக்கிரமன் - இவன் சமரகோலா கல பாண்டியனுக்குப்பின் மதுரையிலரசு செய்திருந்த பாண்டியன்.

அதூர்த்தரஜசு - குசநாபன் மகன்.

அதோûஜன் - விஷ்ணு

அத்தியûரம் - ஓங்காரம் (பிரணவம்)

அத்தியான்மராமாயணம் - விசுவாமித்திர ராற் செய்யப்பட்ட வோருபதேசநூல்.

அத்தியான்மர் - அண்ட பிண்டம் இரண்டி லும் வியாபகமாவுள்ள வாயுக்கள். பதின் மூன்ம்மிப்பெயர் பெறும்..

அத்திரி - பிரமாவினுடையமானச புத்திர ருளொருவன். மனைவி அநசூயை. இவன் தனது தபோபலத்தால் சோமதுர்வாசதத் தாத்திரெயர்களைப் பெற்றவன். இவ்வத் திரி பிரஜாபதிகளுனொருவன். சந்திரன் இவ்வத்திரியினது கண்களினின்றுந் தோற் றியதென்று இரகுவம்சம் முதலிய நூல்கள் கூறும். இராமரைத் தண்டகா ரணியத்தில் இவ்விரு~pகண்டபொழுது அவரைத் தமது ஆச்சிரமத்திற்கழைத்து உபசரித்தாரென்று இராமயணங் கூறும். இவர் சப்த இரு~pகளுளொருவர்.

அத்திரிகை - ஓரப்சரப்பெண்.

அத்

அத்துவைதம் - இது பிரமமல்லது வேறி ல்லையென்பதே தனக்குச் சிந்தாந்த மாகக் கொண்ட வேதாந்த மதம். பிரமம், அவித்தை என இருபதார்த்தங்கள் இம்ம தத்தாற் பிரதிபாதிக்கப்படும். அவற்றுள் பிரமம் சத்தியம், ஞானநந்தாத்மகம், நிர்விகாரம், நிரவயம், நித்தியம், நிர்த் தோ~ம், விபு என்னும் ஏழு லûணமு டையது. அவித்தை, அபாரமார்த்திகம், சதசத்துவிலûணங்களுடையது. பஞ்ச பூதங்கள் அவித்தையினது காரியங்கள். அவற்றுணின்றும் திரிகுணக்கலவையாகிச் சந்துவகுணத்தின் கூறகிய ஞானேந்திரி யும் ஐந்தும் அந்தக்கரணம் நான்கு முண்டாகின்றன. ரசசால் கன்மேந்திரியங் கள் ஐந்தும் பிராணன் ஐந்தும் உண்டா கின்றன. இவையெல்லாம் சூக்குமதேக காரணம். தமோகுணத்தின் கூறாகிய அபஞ்சீகிருத பூதங்களினாலே பஞ்;சீகிருத பூதங்கயுண்டாம். இவையே ஸ்தூலதேக மாம் பிரபஞ்சநாசம் பிரளயமெனப்படும். மோûசாதனமாவன நித்தியா நித்திய வஸ்துவிவேகம் வி~யபலவைராக்கியம் முமூட்சுத்துவம் என்பன இவற்றாற் பிரமந் தவிர வேறில்லையெனக் கண்டல் மோûம்.

அத்துவைதாநந்தன் - வேதாந்த நூலுக்கு வியாக்கியனஞ் செய்தவர். சதாகந்தரிக் கும் குரு.

அநசூயை - (1) அத்திரிபாரி ஸ்ரீராமன் வனவாசத்துக்கண் தண்டகாரணியத்தில் அத்தரி ஆச்சிரமத்துக்கு சென்றிருந்த போது இவ்வநசூயை சீதைக்குப்பெண் களுக்குரிய ஓழுக்கங்களெல்லாம் உபதே சித்து உனக்குச் சுமங்கலியலோபமில் லாதிருக்கக்கடவதென்றாசீர்வதித்து அநே கவஸ்திராபரணங்களுங் கொடுத்தவன். (2) சகுந்தலை தோழி

அநந்தநேமி - புத்தர் காலத்திலே உச்சயினியிலே அரசு புரிந்திருந்த பிரத் தியோதன் தந்தை.

அநந்தவிஜயம் - தருமபுத்திரன் சங்கு.

அநந்தவிரதம் - இது புரட்hசிமாசத்துச் சுக்கிலபûத்துச் சதுர்த்தசியில் அநுட்டிக் கப்படுவதாகிய அநந்தபத்மநாபன் விரதம். இது பாண்டவர்கள் வனவாசஞ்செய்த போது கிருஷ்ணனாற் கூறப்பட்டது. அது மகத்தான ஐசுவரியங்களைக் கொடுக்க வல்லது.

அநந்தன் - (1) ஆதிN~ன். (2) வி~;ணு. (3) சிவன். (4) கிரு~;ணன். (5) பல தேவன். (6) வாசுகி. (7) பிரமம். (8) ஆகாயம். (9) புத்தருடைய பிரதமசீ~ரு ளொருவன். இவனே கௌசாம்பியிலரசு செய்திருந்த உதயணன் மனைவியர் ஐந் நூற்றுவருக்கும் பௌத்தமததோபதேசஞ் செய்தவன்.

அநந்தை - (1) பார்வதி. (2) பூமி.

அநந்நியஜன் - ஒரு சோழன். இவனே சேக்கிழாரைக்கொண்டு பெரியபுராணஞ் செய்வித்தவன். இவனுடைய அரசின் செம்மையும் கீர்த்தியையும் நோக்கி அக்காலத்துப் புலவரொருவர் சொல்லிய வெண்பாவருமாறு:-
“அன்னைபோலெவ்வுயிருந்தாங்கு மனபாயா - நின்னை யாரொப்பார்நிலவே ந்தரன்னதே - வாரிபுடைசூழ்ந்த வையக த்திற்கில்லையாற் சூரியனே போலுஞ் சுடர்”

அநமித்திரன் - (ய) உதாசித்து புத்திரன். இவன் புத்திரர் நிக்கினன், சினி, பிருசினி என மூவர்.

அநரணியன் - (இ) 1. அநேநசன். (இ) (2) திரசதசியன் புத்திரனாகிய வசுதன். இவன் இராவணனாலிறந்த போது எனது வமிசத்தில் வந்து பிறக்கப்போகின்ற ஸ்ரீராமனால் நீயுங் கொல்லப்படுவாயென அவனுக்கு சாபங்கூறி இறந்தவன். இவன் மகன் அரியசுவன்.

அநர்க்கராகவீயம் - முராரியாற்செய்யப் பட்ட ஒரு சமஸ்கிருத நாடகம்.

அநலப்பிரியா - சுவாகாதேவி.

அநலர் - தேவதாபேதம். இவர் நாற்ப த்தொன்பதின்மர். இவர்க்குத்தலைவன் அபிமானன். அவன் புத்திரர் பாவகன், பவமானன், சுசி என மூவர். இவர்கள் புத்திரர் நாற்பத்தைவர். அக்கினிகாண்க.

அந

அநலன் - (1) மாலிமகன். விபூஷணனது அநுசரன். (2) அக்கினி. (3) குசன் வமிசத்து நி~தன் மகன்.

அநலை - மாலியவானுக்குச் சுந்தரி வயிற்றிற் பிறந்த புத்திரி.

அநாகுலன் - இடைச் சங்கத்தார் காலத் திருந்த ஒரு பாண்டியன். சாரகுமாரன் தந்தை. இவன் தேரேறி விண்ணிடைச் செல்லும்போது திலோகத்தமையைக் கூடிச் சாராகுமாரனைப் பெற்றவன்.

அநாயு - அநுகை. கசியபன் மனைவியா கிய தûன்மகள்.

அநிருத்தன் - (1) கற்பாரம்பத்திலே நாரா யணன் பிரமாவைச்சிருட்டிக்க வெடுத்த அவதாரம். (2) பிரத்தியுமனனுக்கு உருக் குமினியினது புத்திரி வயிற்றிற் பிறந்த புத்திரன். கிருஷ்ணன் தௌகித்திரன். இவன்வாணாசுரன் மகளாகி உஷையாற் கவரப்பட்;டவனாய் அவள் தோழி சித்திர லேகை சகாயத்தால் கடினமாகிய காவலைத்தாண்டி உஷையுடைய பள்ளி யறையிற் போய்ச்சேர்ந்து இரகசியமாக அவளைக் கூடியபோது, வணாசுரர் அஃ துணர்ந்து அவனை யுத்தத்திற்கொல்ல எத்தனிதாற்றாது ஈற்றிலே தனது மாயாசா லத்தால் அவனை மயக்க, அஃதறிந்த கிரு~;ணன் அவவாணாசுரனைப் போரிலே தோற்றோடச் செய்து அநிருத்தனைக் காத்து உஷையையும் அவனுக்கு மனைவியாக்கினார்.

அநிலன் - (1) அஷ்டவசுக்களுள் ஒருவன். (2) வாயு. அவன் பாரி சைவை. புத்திரர் புரோஜவன், விஜானகதி என இருவர். (3) (ரா) மாலிமகன். இவன் விபீ ஷணன் தோழன். அநலன் தம்பி.

அநீதன் - (ய) வசுதேவன் தம்பி.

அநு - (ய) (1) குருவசன்மகன் (2) கணு போதலோமன் மகன்.

அநுகீதை - தேவாந்தகிரந்தங்களுளொ ன்று. அது பாரதத்தில் அசுவமேதபரு வத்திற் சொல்லப்பட்டுள்ளது.

அநுகை - அநாயு.
அநு

அநுதாபன் - தநு புத்திரன்.

அநுபதேவன் - (1) (ய) தேவகன் மகன். (2) அக்குரூரன் இரண்டாம் புத்திரன்.

அநுபமை - தென்மேற்றிசைப் பெண் யாணை

அநுமதி - பிரமாவினது பாரிகளொருத்தி.

அநுமதீயம் - பாவ ராக தாளமென்னும் மூன்றின் லஷணங்களையுங்குறித்து அநு மனார் செய்த பரதசாஸ்திரம்.

அநுமன் வாயு அநுக்கிரகத்தால் அநுமந்தன் அஞ்சனை வயிற்றிற் பிற ந்த ஒருவாநரவீரர். மிக்க ஆற்றலும் வலி யுமுடையவர். இவரைத் தேவ அமிச மென்ப. கல்வியறிவாலுஞ் சிறந்தவர். இவர் வாலியினது அக்கிரமங்களைச் சகிக்கலாற்றாதவராகித் தற்செயலாக ராமரையடைந்து அவரால் வாலியைக் கொல்லுவித்து அவன் தம்பிக்கு முடி சூட்டிய பின்னர், ராமருக்கு அடிமை பூண்டு அவருக்குத் தூதராகிச் சீதையை த்தேடி இலங்கைக்கு கடலைத்தாவிப் பாய்ந்துசென்று, அங்கே சீதையைக்கண்டு மீண்டு ராமரை அடைந்து, அவரைக் கொண்டு சென்று சேதுபந்தனஞ்செய்து. அவ்வழியே அவரையும் சேனையும் நடத் திப்போய், அவர் ராவணனை வதைத்துச் சீதையைச்சிறைமீட்டு வருங்காறும் அவரு க்கு சகாயஞ் செய்து பின்னரும் ராமபக்தராயிருந்தவர்.

அநுஹலாதன் - (தி) இரணியசூசிபன் மகன்.
அநுஹிராதன் - குரோதத்தால் நஷ்ட மடைந்த ஓரரசன்.

அநூரு - காசியப்பிரசாபதிக்கு விநாதை யிடத்துப்பிறந்த புத்திரன். கருடன் இவன் தம்பி. இருவரும் அண்டசம். விநதை தனது சக்களத்தி கத்துருவைக்கு முதலி லே புத்திரன் பிறந்து விட்டானென்னும் அசூயையினாலே தன்னுடைய அண்டம் பரிபக்குவமடைய நாளாயிற்றேயென்று சினந்து அவ் லண்டத்தையுடைத்துவிட, அதுகாரணமாக அநூரு தொடைமுதலிய கீழங்கங்களில்லாமற் பிறந்தான். தன் தங்கவீனத்துக்குக் காரணமாயிருந்தவள் தாயெனவுணர்ந்து அநூரு அவலைக் கத் துருவைக்கு அடிமையாகவென்று சபித்து விட்டுச் சூரியனிடஞ் சென்று அவனுக்குச் சாரயியாயினான். இவன் அருணன் என் றும் பெயர்பெறுவான். இவன் பாரி சியே னி. மக்கள் சமபாதி, சடாயு.

அநேசு (1) ஆயுபுத்திரன். இவன் அநேசன் நகுஷன் தமையன். இவன் மகன் சுதத்தன். (2) (இ) ககுத்தன் மகன் இவன் அநரணியன் சுயோதனன் என்றும் பெயர்களும் பெறுவான்.

அந்தகன் - யமன்.

அந்தசிலம் - விந்தியபர்வத்திலுள்ள ஒரு நதி.

அந்தரம் - ஆந்தரதேசம். தெலுங்குதேசம்.

அந்தரிûன் - (த) முராசுரனுடையமகன். இவன் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன்.

அந்தர்த்தானன் - விசயாசுவன். புருது சக்கரவர்த்தி மகன். இவனுக்கு பாரிகள் இருவர். முதற்பாரி சிகண்டி என்பவள். வசி~;டன் சாபத்தாற் பூமியிலே பிறந்து பாவகன், பாவமானன் சுசி என்னும் மூன்று அக்கினிகளையும் பெற்றாள். இவர்கள் தம்பாலியத்தில் இறந்தார்கள். இரண்டாம் பாரியான நபஸ்வதியிடம் அவிர்தானன் பிறந்தான்.

அந்தன் - (1) திருகியனுடைய பௌத்த்pர புத்திரன். (2) (த) விப்பிரசித்தி மகன்.
அந்திசாரன் - (1) மதிசாரன். (2) அந்தகன். (3) (ய) சாத்துவதன் மக்க ளுள் ஒருவன். இவனுக்கு பாசமானன், குங்குரன், சுசி, கம்பளபரிகி~ன் என நா ல்வர். (4) தனுமகன்.

அந்திமான் - கொடையிற் சிறந்தது வள் ளற்பெயர்கொண்ட எழுவருளொருவன்.

அபயகுலசேகரசோழன் - இச் சோழன் நம்பியாண்டார் நம்பி நிவேதித்த பழம் முதலியவற்றைப் பொல்லாப்பிள்ளையார் என்னுஞ் சிலா விக்கிரகம் உண்மையா

அபி

கத் துதிக்கைநீட்டி யேற்று திருவமுது செய்யக் கண்டவன்.

அபயன் - (1) தருமன் புத்திரருள் ஒருவன். (2) ஒரு சோழன். இவன் கலிங்கநாட்டிற் படைநடத்திப் பெரும்போர் புரிந்தந் நாட்டைத் தன்னடிப்படுத்தி மீண்டவன்.

அபாணை - பார்வதிதேவியார் சிவபெரு மானை நோக்கித் தவஞ்செய்து கொண்டி ருந்த காலமெல்லாம் தாம் இலையிற் பூசிப்பதில்லையென்று நியமஞ் செய்தமை யால் இப்பெயர்பெற்றார். (பர்ணம் - இலை)

அபிசாரர் - காசுமீரத்துக்குச் சமீபத்திலு ள்ள ஒரு நாட்டில் வசிப்பவராகிய கிரு~p கர்கள்.

அபிசித்து - (ய) (1) தவித்தியோதன். (2) ஒரு நûத்திரம்.

அபிதானசிந்தாமணி - ஏமசந்திரன செய் தசைணசித்தார்ந்த நிகண்டு.

அபிதான ரத்தினமாலை - இஃதொரு சமஸ்கிருத வைத்திய நூல்.

அபிநவகுப்தன் - சங்கரா சாரியாரலே வாதத்திலே வெல்லப்பட்ட ஒரு சமஸ் கிருத பண்டிதன்.

அபிமன்னியன் - (1) அர்ச்சுனனுக்கு சுபத்திரையிடத்திற் பிறந்த புத்திரன். இவனைச்சந்திர அமிசமாகப் பிறந்தோ னென்பர். விராடன் மகள். உத்தரையை மணம் புரிந்தவன். இவன் பாரதயுத்தத்திற் பதின்மூன்றாநாள் பதும வியூகத்தையழித் து உட்புகுந்து அசகாயனாய்த் தனித்து நின்று கொடியயுத்தஞ் செய்து ஈற்றில் உயிர் துறந்தவன். இவனிறந்தபோது இவன் புத்திரனாகிய பாPஷித்து உத்தரை கருப்பத்திலிருந்தான். பதுமவியூகமாகவது சேனைகளைச் சிலந்திவலையினது ஆகாராமாக அணிவகுத்து நிறுத்தி அதற்குள்ளே சத்துரு சேனைகளை அக ப்படத்தி யுத்தஞ்செய்யும் மோருபாயம். (2) காசுமீரதேசத்திலே ஆயிரத்தெண்ணுற் றைம்பது வருஷங்களுக்கு முன்னே அரசு செய்த அரசன்.

அபிராமி - (1) இன்றைக்கு நானூற்றம் பது வருஷங்களுக்கு முன்னே மதுரையி லரசு செய்த வீரபாண்டியராஜன் காமக் கிழத்தி. இவளுடைய புத்திரன் சுந்தரத் தோள் மாவலிவாணாதிராஜன். இவனுஞ் சிறிதுகாலமாரசு செய்தவன். (2) சப்த மாதர்களுளொருத்தி (3) பார்வதி.

அபிராமிப்பட்டர் - இவ் வந்தனர் நூற்றறு பது வருஷங்களுக்கு முன்பே திருக்கட வூரில் பிறந்து தமிழும் சமஸ்கிருதமும் நன்குகற்றுத் தமிழ்ப்புலமை நிரம்பியவ ராய்த் தேவி பூசையே அதிசிரத்தையோடு செய்பவராயொழுகு நாளிலே தஞ்சைமகா கரஞ் சென்றரசனைக் கண்டு அவன் பாற் றமது. கல்விச்சாதுரியத்தைக் காட்டி அங்கே சிலநாள் வசித்தார். ஒருநாள் அரசன் அவரைநோக்கி இற்றைத் திதியெ ன்னவென்று வினவ, அவர் அற்றை நாள் அமாவாசையாகவும் மறவிப்பற்றிப் பூர ணை நாளென்றார். அரசன் சிலே~hர்த்த மாக, “இதுமதிகெட்டதினம்” என்று கூற பட்டர் அவன் குறிப்பையுணர்ந்து, தாம் கூறியதை தாபிக்கவெண்ணி, பூரணை தான் என்று வலியுறுத்துரைத்துச் சூரியா ஸ்தமயன வேளையில் வந்து காட்டுவே னென்று விடைபெற்று பூசைக்கு சென்றார் அரசனும் அஸ்தமயன காலம் எப்போது வருமென ஆவலோடு காத்திருந்தான். பட்டர் குறித்த நேரத்திலே அரசன் சமுகஞ்செல்ல இருவரும் உப்பரிகைமேற் சென்று கீழ்த்திசை நோக்கியிருந்தார்கள். இச்சமாசாரத்தை கேள்வியுற்ற நகரத்துச் சனங்கள் எல்லோரும் அவ்விடத்திற் சென்று கூடினார்கள். மாலைக்காலமும் வந்தடுத்தது. பட்டர் சர்வாண்டங்களையு மீன்று காக்கின்ற உலகமாதா தம்மையும் காப்பாளென்னும் பேருறுதிளுடையவராய் அரசனை நோக்கி, ராஜகெம்பிரா! என் வாக்கு என் வாக்காயிற் பொய்க்கும்: என் வாக்கெல்லாம் தேவிவாக்கே யாதலின் மெய்வாக்கேயாம். காட்டுவேன் காண்பா யாவென்று கூறி, அபிராமியம்மையார் மீது அன்பு மயமாகி ஓரந்தாதி பாடத்தொட ங்கி பத்துக்கவி சொல்ல, பூரணை கலை யோடு கூடிய தண்ணிய சந்திரன் கீழ்த்தி சையிலேயுதித்து யாவருங்கண்டு கண் களிகூர மேலெழுந்து பட்டர் தாமெடுத்த அந்தாதியை அவ்வளவிலே நிறுத்தாம லும் மனம் பேதுறாமலும் உளங்கனிந்து நூறுபாவாற் பாடிமுடித்த்;னர். அதுகண்ட அரசன் அதியமும் ஆநந்தமும் பேரச்சமு முடையவனாகி அவரை வீழ்ந்து நமஸ் கரித்துத் தாமிராசாசனத்தோடு சில மானி யங்கள் கொடுத்தான். இன்றும் அவர் பரம்பரையில் வந்துளோர் அச்சாசனமும் மானியமு முடையராய்த் திருக்கடவூரில் வசிக்கிறார்கள். (இற்றைக்கு பத்து வரு ஷத்துக்குமுன் யாம் திருவிடைக்கழிக்குச் சென்றபோது அச்சாசனத்தை கண்ணாரக் கண்டேம்.) பட்டர் முறுகிய அன்போடு பூசித்து வந்த உலகமாதாவாகிய உமா தேவியார் சிலம்பே சந்திரனாகி அரசன் முதலியோர்க்குத் தரிசனங்கொடுத்துச் சிறிது நேரத்தில் மறைந்தருளிற்றென்றார்.

அபிராமியம்மை திருக்கடவூரிலே அபிராமித்தாய் கோயில் கொண்டி அபிராமவல்லி ருக்கும் தேவியார் பெயர்.

அபிஷேகபாண்டியன் - உக்கிரபாண்டியன்
மகன். உக்கிரபாண்டியன் புலிவாய்ப்பட்டி றக்க, அவனுடைய காமக்;கிழத்தி புத்தி ரன் ஆபரணமண்டபத்துட்புகுந்து பட்டத்து க்குரிய முடியை கவர்ந்து சென்றான். தேடியபோது அஃதில்லாதிருப்பக்கண்டு, கவன்று, நவரத்தினங்களுக்கு என்ன செய்வோமென்று மந்திரிகள் திகைத்தார் கள். அப்பொழுது சிவபிரான் மாணிக்கப் பொதியோடு ஒருவணிகனாகி அவர்பாற் சென்று மாணிக்கம் விற்றுத் திருவிளை யாடல் காட்டிப்போயினார். இப்பாண்டியன் காலத்திலேயே கல்லானைகரும்பருந்திய அற்புதத்திருவிளையாடல் நிகழ்ந்ததுமாம்.

அப்சரசுகள் - ஒருதேவகணம்: மேனகை, அரம்பை, கிருதாசி, திலோத்தமை முதலான தேவகன்னியர். இவ்வப்பரசுகள் பாற்கடலில் பிறந்தவர்களென்றுஞ் சொல் லப்படுவார்கள். இவர்களைக்கந்தருவப் பெண்களென்றுங் கூறுப. இவர்கள் பதி னான்கு வகைப்படுவர்.

அப்ஜன் - (1) சந்திரன். (2) தன்வந்திரி. (ஜலத்திற் பிறந்தவன் என்பது பொருள்.)

அப்பர் - திருநாவுக்கரசு நாயனார்.

அப்பிரககற்பம் - சிவபிரானருளிய ஒரு வைத்திய நூல். அஃது அப்பிரகவிஷய மேயெடுத்து விரிப்பது.

அப்பிரதிரதன் - (பு) மதிசாரனது மூன்றாம் புத்திரன். கண்ணுவன் தந்தை.

அப்பிரதிஷ்டம் - இஃது ஒரு நரகம். அந்த நரகத்தில் கொடியபாவிகள் ஆங் குள்ள எண்ணில்லாத யந்திரங்களிலிட்டு அரைக்கப்படுவார்கள்.

அப்பிரமை - கீழ்த்திசை பெண்யானை.

அப்பூதியடிகள் - இந்நாயனார் திருநாவுக் கரசுநாயனாரது மகிமைகளை கேள்வியு ற்று அவரைக்கண்டு ஆராதிக்க வேண்டு மென்று பேரவாக் கொண்டிருக்கு நாளில் ஒருநாள், திருநாவுக்கரசரங்கேவர அவரை உபசரித்து, அவர்கன்னம்படைக்கும் பொ ருட்டு ஒரிலைக்கலங்கொண்டுவரப்போன தம் மைந்தன் வாழைமரத்தடியிலிருந்த நாகங் கடித்து இறக்கவும், அதனை பொ தாகக்கொள்ளாது அப்பிரேதத்தை மறை த்து வைத்துவிட்டு திருநாவுக்கரசரக்கு திருவமுது செய்வித்தலிலே கருத்துடைய ராயிருந்தார். திருநாவுக்கரசரஃதுணர்ந்து அப்பிள்ளைக்கு விடந்தீர்த்து நாயனார் பக்தியை மெச்சி திருவமுது செய்து போயினார். அப்பூதியடிகள் திங்க@ரிலே பிராமணகுலத்திலுத்தித்தவர்.

அப்பையதீஷிதர் - இவர் காஞ்சிபுரத்து க்குச் சமீபத்திலுள்ள அடையகுலம் என்னும் அக்கிரகாரத்திற் பிறந்த அந்த ணர். வடமொழியில் மகாசாதுரர். இவராற் செய்யப்பட்ட நூல்கள் ஏறக்குறைய முந் நூறு. அவை சிவகர்ணார்மிதம் முதலி யன. தர்க்கம், வியாகரணம், வேதம், புராணம் முதலியவற்றில் மகாநிபுனர். சிவபரத்துவஞ்சாதித்தாருள் இவர் தலைத் தர வல்லுநர். இவர் கலியுகம் 4700 அளவில் விளக்கியவர்.

அமரசிங்கன் - விக்கிரமார்க்கன் காலத்தி லேவிளங்கிய ஒரு சைனவித்துவான். இவனே அமரஞ் செய்தவன்.

அமராவதி - தேவேந்திரன் இராஜதானி.

அமரி~ன் - சுசநதிமகன்.

அமர்நீதிநாயனார் - பழையாறை என்னுமூ ரிலே வணிகர்குலத்திலே யுதித்த சிவபத் தர். இவருடைய பக்தியை சோதிக்குமாறு ஒருநாள், சிவபெருமான் ஒரு முனிவரைப் போலச் சென்று ஒலு கௌபீனத்தை அவரிடத்தில் அடைக்கலமாக வைத்துவி ட்டுப்போய் மீண்டுவந்து கௌபீனத்தைக் கேட்டார். அது தெய்வச் செயலாற் காணாமற்போய்விட அமர்நீதி நாயனார் திகைத்துநின்றுண்மையைச்சொல்லி அதற் கீடாகப் புதிரென்று தருவேனென்ன, முனிவர் தம்மிடத்திருந்த மற்றொரு இணைக்கௌபீனத்தை ஒரு தராசிலிட்டு அந்நிறை கொண்டது கொடுகவென்றார். அமர்நீதியார் தம்மிடத்திருந்த வஸ்திர வகையெல்லாமிட்டும் தட்டுச் சமப்பாடதது கண்டு மனைமக்களையேற்றித் தாமுமேறி சமப்படுத்தி கடைத்தேறினார்.

அமவசு - புரூரவன் மகனாகிய விஜயன்.

அமாவாசியை - பிதிர்தினம். அச்சோதை காண்க.

அமிசு - (ய) சாத்துவன் தந்தை.

அமிதாசுவன் - பரிகிணாசுவன்.

அமிர்தகவிராயர் - இற்றைக்கு இருநூற்றி ருபது வருஷங்களுக்கு முன் இராகுநாத சேதுபதியை ஒருதுறைக்கோவையென் னும் நூலினாற் பாடினவர்.

அமிர்தசாகரம் - பிரதாப சிங்கன் செய்த வைத்தியநூல். இதில் நோயும் சிகிற்சை யும் விரிவாகக்கூறப்படும்.

அமிர்தத்துவஜன் - காண்டிக்கியன் தந்தை.

அமிர்தநாயகி - திருப்பாதாளீச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அமிர்தமதனம் - இதன் பொருள் அமிர் தம்கடைதல். தேவர்களும், அசுரர்களும் கூடி அமிர்தங்கொள்ளக் கிருதயுகத்திலே மந்தரத்தை மத்தாகவும் வாசுகியை தாம் பாகவும் கொண்டு திருப்பாற்கடல் கடைந் தனர். வி~ம், லலுமி, சந்திரன், தந்வந் திரி, உச்சைசிரவம், கவுஸ்தூம், பாரிஜா தம், ஜராவதம், கற்பகதரு, காமதேனு, அமிர்தம் இவை திருப்பாற்கடல் கடைந்த போதுதெழுந்தன. திருப்பாற்கடலென்றது
அமி

மூலப்பிரகிருதி ஆகாயரூபமாகிக்கிடந்து பின்னர் தடித்து வாயுரூபமாகிக் கிடந்தது. பின்னர்த் தடித்த வைசுவரநரமென்னும் அக்கினிரூபமாகக்கிடந்த பரிணாரூப் பிர மாண்டத்தை கண்ணுக்கு விடயமாகிய தோற்றப் பிரபஞ்சமெல்லா முண்டாயது இவ்வமிர்தமதனைத்தினாலேயாம். இவ்வுல கங் காரியப்பட்ட முறையையே அமிர்தம தனமெனப் பௌராணிகர்கள் குறிப்புரை யாற் கூறிப்போயினார்கள். கிருகயுகமென் பதன் பொருள் பிரமாண்டம் சிருட்டிக்காரி யப்பட்டயுகமென்பது. மந்தரமென்றது ஆகாய மத்தியிலே கிடந்து தான் சுழலும் போது தன்சந்நிதிபட்ட சர்வாண்டங்களையுமுடன் சுழலச் செய்வதாகிய ஒரு சக்தியை. அது கலங்காநிலைமைத் தாதலின் மலையெனப்பட்டது.

வாசுகியென்றது அண்டங்களை யெல்லாந் தத்தநிலையினிறுத்துவதாகிய ஒரு சக்தியை. இவ்விரண்டு சக்திகளும் ஒன்று தன்மாட்டுக்கவர்வதும் மற்றது தனது நிலையையே நாடுவதுமாயொன்றற் கொன்று தம்முண்மாறுகொண்டன. தேவா சுரர்களெனக் கூறப்பட்டன வீண்டு முறை யே இரசோகுணப்பிரவிருத்தி தமோகுணப் பிரவிருத்திகள். மேலே கூறப்பட்ட இரு சக்திகளையும் இவ்விருவகைப் பிரவிருத் திகளும் எழுப்பியாட்டிய செய்தியே கடைதலெனப்பட்டது. கடைதலாலுண்டாகி யகொடியவு~;ணமே விஷமெனப்பட்டது. லûமி என்றது இளமை, அழகு முதலியவற்றை தருமாற்றலை. உச்சை சிரவம் ஜராவதமென்பன. முறையே குதி ரைவடிவும் யானை வடிவுமுடையவனாய் நûத்திர மண்டலத்துக்குகப்பாலுளவா கிய இரு தாராகாகணம். கவுஸ்துபமென் றது சூரியனை. சூரியனுக்கு அண்டயோ னியென்றும், சந்திரனுக்கு அப்ஜன் என்றும் பெயருண்டாயது. இத்திருப்பாற் கடலிடைப்பிறந்தமைபற்றியேயாம். இவற் றால் இவ்வமிர்தமதன வி~ம் சிருட்டிகரு மத்தைக் குறித்ததேயாமென நிச்சயிக்கப் படும்.

அமிர்தமுகிழாம்பிகை - திருத்துருத்தியிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அமிர்தாம்சன் - சந்திரன், சந்திரதேகம் அமிர்தசொரூபமாதலினாலே தேவர்கள்
அமு

அபரபûத்திலே தினமொரு கலையாகப் பதினாறுகலைகளையுமுண்கின்றார்கள்.

அமுதகடநாதர் - திருக்கோடிக் குழகரி லே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

அமுதகலைநாதர் - திருக்கலைய நல்லூ ரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

அமுதசாகரர் - யாப்பருங்கலக் காரிகை செய்தவர். இவர் சைனர்.

அமுதவல்லியம்மை - (1) திருப்பனங் காட்டூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். (2) திருக்கலய நல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அமுதகடேசர் - திருக்கடவூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

அமோகவர்ஷன் - கலி நாலாயிரமள வில் தொண்டைமண்டலத்திலரசு புரிந்த வோரரசன். இவன் காலத்தில் அருகமதம் அபிவிருத்தி பெற்றது.

அம்சுமந்தன் (1) (இ) அசமஞ்சசன் புத் அஞ்சுமான் திரன். இவன் புத்திரன் திலீபன். (2) சூரியன்.

அம்சுமாலி சூரியன்
அஞ்சுமாலி

அம்சுலன் - சாணக்கியன்.

அம்பாஷீன் - (1) (இ) மாந்தாதா புத்திரன் மகன் யாவனாசிவன். (2) இரண்டாம் நாபாகன் மகன். நபகன் பௌத்திரன். இவன் சுத்த அரிபத்தன். இவவ்வம்பாPஷன் துவாதசிவிரதத்தை அநுஷ்டித்து வருநாளில் ஒருநாள் துர்வாசர் அவனிடஞ் சென்று இற்றை போஜனம் உன்னிடத்தி லென்று சொல்லி யமுனாநதிக்கு ஸ்நான ஞ்செய்யப் போயினார். போனவர் சற்றே வரத்தாமசமான துகண்டு அம்பாPஷன் விரதமுகூர்த்தந்தப்பப் போகின்றதேயெ ன்று ஆசமனத்தை முடித்தான். அச்சம யம் துர்வாசரும் வந்ததார். அம்பாPஷன் தம்மை மதிக்காததுபோனனெனக்கொண்டு கோபித்துத் தமது சடையிலொன்றையெடுத்து அம்பாPசனை பஸ்மமாக்குகவென்றெ றிந்தார். அது கண்ட விஷ்ணு தமது சக்கரத்தை அச்சடையை எரிக்க விடுத் தார். அதைக்கண்ட துர்வாசர் ஓட அவரையும் துதை;திக்கொண்டு அச்சக் கரம் பின்னே சென்றது. அவர் பிரமதேவ ர்களிடம் போயொளிக்க அவர்கள் அம்பாP ஷன்றான் இதைத் தடுக்கவல்லானென்ன, அம்பாPஷனிடம் சென்றார். அம்பாPஷன் சக்கரத்தை தோத்திரித்து அவரைக் காத்தான். இவ்வம்பாPஷனுக்கு விரூபன், கேதுமந்தன், சம்பன் என மூவர் புத்திரர்.

அம்பர் - (1) திவாகரநிகண்டு செய்வித்த சேந்தன் என்னும் சிற்றரசன். (2) ஓரூர்.

அம்பர்கிழன் - ஒரு வேளாளப் பிரவு.

அம்பஷ்டதேசம் - உசீநரனுடைய மகன் சுவிதரன் என்பவன் நிருபித்த ராச்சியம்.

அம்பாத்திரயம் - ஞானம்பா, பிரமராம்பா, மூகாம்பா என மூவர்.

அம்பாலிகை காசிராஜன் புத்திரிகள். அம்பிகை அம்பையினது தங்கையர். விசித்திரவீரியன் பாரிகள். இவ்விருவருள் அம்பிகைமூத்தவள். விசித்திரவீரியன் இற ந்த பின்னர் தேவரநியாயம்பற்றி இவள் சத்தியவதியினது அனுமதி கொண்டு வியாசரைக்கூடித் திருதராஷ்டிரன் பாண்டு என்பவர்ளைப் பெற்றாள்.

அமபிகாபதி - (1) சிவன் (2) தமிழ்ப்புல மையிற் சிறந்தோனாகிய கம்பன்புத்திரன். இவன் சிங்காரரசம் பாடுவதில் மகா நிபுணன்.

அம்பிகை - பார்வதி.

அம்பிகையம்மை - திரு ஆப்பனூரிலே கோயில்கொண்டிருக்குந் தேவியர் பெயர்.

அம்பை - (1) பார்வதி. (2) காசிராஜன் மகள். இவள் கன்னியாயிருக்கும் போது தந்தை சுயம்வரம்வைத்து அவளைச் சாளுவராஜனுக்குக்கொடுக்க, வீட்டுமன் பலபந்தமாக இவளையும் இவளுடைய தங்கையராகிய அம்பிகை அம்பாலிகை என்பவரையும் யுத்தத்திற் சத்துருக்களை ஒட்டிக்கைப்பற்றிக் கொண்டு போய்த் தன்னுடைய தம்பியாகிய விசித்திரவீரியனு க்கு விவாகஞ் செய்ய எத்தனித்தபோது, அம்பை என்பவள் முன்னே தந்தையால் சாளுவனுக்குத்தத்ம் பண்ணப்பட்ட வளா தலால் அவளை மீண்டு விவாகத்திற்கு கொடுப்பதுகூடாதுதென்று சாஸ்திரிகள் கூறித் தடுக்க. அப்படியே வீஷ்மன் சாளுவனிடம் அவளையனுப்ப, சாளுவன் அவளை விவாகஞ்செய்யேன் என்றுதள்ள அவள் உடனே உயிர் துறந்து துருகதன் மகளாகச் சிகண்டியென்னும் பெயரேடு பிறந்து வீ~ஷ்மரை பாரதயுத்தத்திற் கொன்றவள்.

அயவந்தீசர் - திருச் சாத்தமங்கையிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமியர் பெயர்.

அயன் - அஜன்.

அயிந்தவர் - ஐந்தவர்.

அயிராபதேசர் - திரு எதிர்கொள்பாடியி லே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமியர் பெயர்.

அயிரை - ஒருநதி.

அயுசித்து - (ய) சகஸ்திர சித்துவினு டையதம்பி.

அயுதாயு - (1) (கு) ரதிகன் மகன். (2) சிந்துத்துவீபன் மகன். இருதுபர்ணன் தந்தை. பங்காரசன் எனவும் பெயர் பெறுவான்.

அயோத்தியா சூரியவமிசத்து ராசர்களுக்
அயோத்தி குக்கோசல தேசத்தின் கணுள்ள ராஜதானி. சரயுநதி தீரத்திலுள் ளது. இந்நகரத்தரன் மிகவுயர்ந்த மதிலை யுடையது. இவ்மதில்மீது குத்தல், வெட் டல், எறிதல், எய்தல் என்னும் நான்கு ஊறுபாடுஞ் செய்யவல்ல பிரதிமைகள் அமைக்கப்பட்டிருந்தமையால் பகைவர் போய் வளைதற்கரியது. இது சப்தபுரி களுளொன்று.

அயோமுகன் - தநுபுத்திரருளொருவன்.

அயோமுகி - தண்ட காரணியத்திருந்த ஓரரக்கி இலக்குமணனால் மூக்கு, மூலை,

அர

காதுகள் கொய்யப்பெற்றவள்.

அயோனிசை - சீதாதேவி. ஜனகன் புத்திரகாமே~;~யாகஞ்செய்து பொற்கொ ழுகொண்டவ்வியாகநிலத்தை யுழுதபோது பூமியின்றெழுந்தவளாதலின் இப்பெயர் பெற்றாள். (யோனியிற் பிறவாதவளென் பது பதப்பொருள்)

அரங்கம் - ஸ்ரீ ரங்கம். இது திருவரங்கம் எனவும் வழங்கப்படும்.

அரசகேசரி - ஈழமண்டலத்திலே சாலி வாகன சகம் ஆயிரத்துநானூற்ற்pன் மேல் அரசுபுரிந்த பரராசசேகரன் மருகன். இவ்வரசகேசரியே இரகு வமிசத்தைத் தமிழிலே 2500 விருத்தப்பாவினாற் பொரு ணயம், சொன்னயம், கற்பனாலங்கார முதலிய நூல் வனப்புக்கள் அமையப் பாடித் திருவரூரிற் சென்று அரங்கேற்றிய வன்.

அரசிலிநாதர் - திரு அரசிலியிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமியர்பெயர்.

அரசை - சுக்கிரன் புத்திரி. (தண்டகார ணியம் காண்க)

அரட்டன் - பெருமனைக் கிழத்தியையும் கண்ணகிதாயையும் புத்திரிகளாகப்பெற்ற சேரநாட்டு வணிகன்.

அரதத்தாசாரியர் - ஹரதத்தாசாரியர் காண்க.

அரைத்துறைநாதர் - திருநெல்வாயிலரத் துறையின் கண்ணே கோயில் கொண்டிரு க்கும் சுவாமியர் பெயர்.

அரபத்தநாவலன் - திருப்பெருந்துறை யிலே வேளாளர் குலத்திலே விளங்கிய ஒரு தமிழ்ப் புலவன். இவனே தமிழிலே முந்நூற்றுத்தொண்ணூறு செய்யுளாற் பாரதசாஸ்திர லûணஞ் செய்தவன்.

அரம்பை - ரம்பைகாண்க.

அரசிற்கரைப்புத்தூர் - காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

அரசிற்கிழார் - அரசிலென்னுமூரிலே வேளாளர்குலத்திலே அவதரித்துத் தமிழ் ப்புலவராய்க் கடைச்சங்கத்தில் விளங் கியவர்.

அரிசத்திரம் - பாரதயுத்தத்திலே குரு சேனை தங்கியிருந்த ஸ்தானம்.

அரிச்சந்திரன் - ஹரிச்சந்திரன் காண்க.

அரிமர்த்தனபாண்டியன் - குலேசபாண்டி யன் மகன். இவனே குதிரைவாங்க மாணிக்கவாசகரைப் போக்கி நரிபரியாகக் கண்டவன்.

அரியசுவன் - திருஷ்டகேது புத்திரன்.

அரிவாட்டாயநாயனார் - திருக்கணமங்கல த்திலே, வேளாளர் மரபபிலுதித்த சிவபக்தர். இவர் கடவுளுடைய நைவேத் தியத்துக்காக கோயிலுக்குக் கொண்டு போன வெண்மையான அரிசி வழியிலே இருந்த ஒரு கமரிலே கைதவறி விழுந்து சிந்திப்போக, இனியாது செய்வேன் என் பொருட்டுப் பூசைக்காலமுந் தவறுவதாயி ற்றே என்று சொல்லிக் கொண்டு தமதூட் டியை அரிந் துயிர்போகத் தொடங்கினார். தொடங்கலும் பரமகருணாநிதியாகிய சிவ பிராணது திருக்கரம் அக்கமரினினறெழு ந்து தடுத்து அவரை ஆட்கொண்டருளி யது.

அரிஷடநேமி - (1) இவரொரு பிரஐhபதி. சகரசக்கரவர்த்திக்கு ஞானோபதேசஞ் செய்தவர். (2) (மி) குருஜித்து.

அரிஷடன் - (1) தது புத்திரன் (2) இடப ரூபமெடுத்துப்போய்க் கிருஷ்ணனோடுபோர் மூட்டியபோது கிருஷ்ணனாற் கொல்லப் பட்ட ஓரரசன். (3) மித்திரனுக்கு ரேவதி யிடத்திற் பிறந்த மூத்தமகன்.

அருகன் - இக்கடவுள், அச்சமயத்திற் கூறியபடி, ஒன்றை ஆக்கலும் அழித்தலும் செய்யாதவர்: ஆதிஅந்தமில்லாதவர்: உயிர்கள் மீது மாறாக்கிருபையும் அருளு முடையவர். அநந்தஞானம், அநந்தசக்தி அநந்தானந்தம் முதலிய குணங்களையு டையவர். மூன்று தர்மசக்கிரத்தையுடை யவர். நான்கு திருமுகங்களை உடையவ ராய் அசோகமரநிழலிருப்பவர். கன்மர
அரு

கிதர். தம்மைப்போலவே வேதமும் உலக மும், காலமும், உயிர்களும், தன்மமும் நித்தியப்பொருள்களென்று வெளியிட்;டவர். அருகனை முதற்கடவுளாகவுடைய சமயம் அருகசமயமெனப்படும். இச்சமயம் கடைச் சங்கமிருந்த காலத்துக்குப் பின்னர்ப் பெருகிச் சிலகாலத்திலே அருகியது. அச் சமயிகள் ஆரியதேசத்திலமிகச் சிலரே இப்போதுளர்.

அருக்கன் - (1) (பு) இருûன். (2) சூரியன். (3) இந்திரன்.

அருச்சுனன் - அர்ச்சுனன் கான்க.

அருநந்திசிவாசாரியார் - திருத்துறையூரிற் பிறந்து சகலாகமபண்டிதரென்னும் காரண பெயருடன் விளங்கிய ஆதிசைவர். இவர் வைசசித்தாந்த உபதேசஞ்செய்த சந்தா னாசாரியருள் ஒருவர் மெய்கண்டதேவரது மணாக்கர். சிவஞானசித்தியென்னு நூலி யற்றியவர்.

அருணன் - (1) (த) முராசுரன் மகன் கிஷ்;ணனாற் கொல்லப்பட்டவன். (2) சூரியன்.

அருணாசலம் - பஞ்ச லிங்கஸ்தலங்கங் களுளொன்று. தொண்டை நாட்டிலுள்ளது.

அருணாசுவன் - (இ) பரிகிணாசுவன் இரண்டாம் புத்திரன்.

அருணாஸ்பதம் - வருண நதிதீரத்தின் கணுள்ள ஒரு நகரம்.

அருணி - (1) வசு புத்திரன் (2) பிரம மானச புத்திரருளொருவன்.

அருண்மொழித்தேவர் - சேக்கிழார்.

அருந்ததி - (அரஞ்சோதி) கர்த்தமன் மகள். வசிஷ்டன் மனைவி. மகா பதிவிர தையாகையால் விவாகத்தில் நûத்திர ரூபமாயிருக்கும் அருந்ததியை சுட்டிக் காட்டி இவ்வருந்ததி போலிருப்பாயாக வென்று நாயகிக்கு நாயகன் காட்டுதல் உலகவியலாயிற்று. துருவநûத்திரத்திற் குச் சமீபத்திலே சப்த இருஷி ந~த்திர கணமிருக்கின்றது: இந்தச் சப்த இருஷி கணம் 2,700 வருஷங்களில் ஒருவட்டஞ் செய்யும்;. இவ்வேழுக்குக நடுவில் வசிஷ்ட ந~த்த்pரமுளது. அதனை அடுத்துள்ளது அருந்ததி.

அருந்தவநாயகி - திருப்பழுவூரிலே கோயில்கொண்டிருக்கும் தேவியார்பெயர்.

அருந்தோளம்மை - திருத்தெளிச்சேரி யிலே கோயில்கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அருமருந்துநாயகி - திருந்துதேவகுடியிற் கோயில்கொண்டிருக்கும் தேவியார்பெயர்.

அருள்நாயகியம்மை - திரு அறையணி நல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அர்ச்சி - புருது சக்கரவர்திதேவி.

அர்ச்சிகபர்வதம் - iடூரியபர்வதம்.

அர்ச்சிதாதிமார்க்கம் - இது சகுணப்பிர மோபாசகர்கள் பிரமலோகஞ் செல்லும் நெறி. சூரியசந்திரவித்தியுல்லோகங்கள். வழியாகச் செல்லும்நெறி.

அர்ச்சுனன் - (கு) பாண்டு மகரராஜவுக்கு க்குந்திதேவியிடத்திலே தெய்வேந்திரப் பிர சாதத்தாற் பிறந்த புத்திரன். பாண்டவர் களுள் மத்தியமன். வில்வித்தையிலே தனக்கு இணையில்லாதவன். இவன் பார தயுத்தத்தில் ஒரே தினத்தில் ஏழு அக்கு ரோணி சேனாவீரரையுங் கன்னனையுஞ் சங்கரித்தவன். நரன் என்னுந்தேவ இரு ஷ~p பாரதயுத்தத்தின் பொருட்டு அர்ச்சுன னாக அவதரித்தானென்று சொல்லுவர். இவனுக்கு வில் காண்டீபம். சங்கு தேவதத்தம். இவனுக்:கு பற்குனன், பார்த் தன், கிரிடி, சுவேதவாகனன், வீபற்சு, விஜயன், கிரு~;ணன், சவ்வியாசாசி, தன ஞ்சயன் என்பன நாமந்தரம். இவனுக்கு பாரியப் திரௌபதி, உலூபி, சித்திராங் கதை, சுபத்திரை என நால்வர். அர்ச்சுன ன் துரோணாசாரியாரிடத்து வில்வித்தை பயிலும் போது, துரோணன் மகன் அஸ்வ த்தாமன் அவன் சாமர்த்தியங்கண்டு பொறாமையுற்றுத் தனது பரிசாரகனை நோக்கி, அர்ச்சுனனுக்கு ஒருகாலத்திலும் விளக்கின்றி அன்னம்படையா திரு என்றான். ஒருநாட் போசனம் பண்ணும் போது தீபம் அவிந்து போக, அதைப் பெருட்படுத்தாது வழக்கம்போலப் புசிக் கும்போது வழக்கமான கருமங்களைக் கைகள் இருளிலும் செய்யுமெனக் கண்டு, வில்வித்தையும் இருளிற் பயின்று வருதல் வேண்டுமென்று நினைத்து அன்று முதல் இருளிலும் பயின்று வந் தான்.

துருபதனைப் போரில் வென்று சிறைசெய்து கொண்டு போய்த்துரோணா ச்சாரியாருக்குக் குரு தûpணையாகக் கொடுத்தவனும், பாண்டுவாலும் வெல்லப் படாத யவனராஜனை வென்றவனும், பாரதயுத்தத்திலே பெரும் பெயர் படைத் தவனும் இவனே. வில்லாளரெல்லேரையும் திகைத்து நானும்படி செய்த மீன யந்திர த்தை ஓரம்பால் வீழ்த்தி திரௌபதையை மணம்புரிந்து வில்லுக்கு விஜயனென்னும் பெயரை நாட்டினோனுமிவ்வீரனே.

இவன் பாசுபதாஸ்திரம் பெறும் பொருட்டு மகத்தானதவஞ் செய்யும் போது அவன் தவத்தைக் குலைக்கப் பன்றியுருக்கொண்டு மூகதானவன் சென் றமையுனர்ந்து சிவபெருமான் ஒரு வேட னாகி அப்பனிறியை தொடர்ந்து செல்லுத லும், பன்றி விரைந்தோடி அர்ச்சுனனைச் அது சாடவெத்தனித்தது. அச்சமயம் அர்ச்சுனனை அது சாடாவகை தடுக்கு மாறு சிவபொருமான் ஒருகணை ஏவினார். அர்ச்சுனனும் ஒரு கணைவிடுத்தான். இரு கணையாலும் பன்;றியிறந்தது. அர்ச்சுன னோடு சிவன்விளையாட்டாக நான் கொன்றேனென்ன, அவன் தான் கொன்ற தென்ன இருவரும் சிறிதுபோது மற்போ ராட அர்ச்சுனன் அவரை வில்லாலடித் தான். அவர் அவனை ஆகாயத்திலெறிந் தார். அவன் விழுமுன் தமது சுயரூபத் தைக்காட்டி அவனையுங் கையிலேந்தி னார். அதுகண்ட அர்ச்சுனன் அவரைத் தோத்திரஞ் செய்து பாசுபதம் பெற்றான். அருச்சுனன் துரோணாச்சாரியியாரிடத்தி லே வில்லித்தை மாத்திரமன்று அர்த்த சாஸ்திரம், தத்துவசாஸ்திரம் முதலியன வுங் கிரமாகக் கற்று நன்னெறிகொண் டவன். தீமையனுரையைத் தலைமேற் குடியொழுகியவன். இவன் பொருட்டே பகவற்கீதை அநுக்கிரகிக்கப்பட்டதாம்.


அர்

அர்ச்சுனி - (1) வானசுரன் மகள் (2) வாகுதையென்னும் நதி.

அர்த்தநாhPசுவரன் - (1) பாதித்திருமேனி உமாதேவியாருக்கொண்ட சிவபொருமான். மேலேகாண்க. (2) திருக்கொடிமாடச் செங்குன்றூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமியர் பெயர்.

அர்த்தநாhPசுவரி - (1) சிவபெருமானது திருமேனியிற் பாதிபெண்ணுருவாகக் கொ ண்டதேவி. முன்னொரு காலத்திலே பிருங்கி யென்னுங்கணநாதர் உமாதேவி யாரை வணங்காது சிவனுக்கு மாத்திரம் வணக்கம் புரிந்தபோது உமாதேவியார் கோபங்கொண்டு அப்பிருங்கி தேகத்துவலிமை யெல்லாவற்றையும் போக்க, பிருங்கி நிற்கமாட்டதவராகிச் சார்ந்து கீழே விழுந்தார். அதுகண்ட சிவன் அவருக்கு தமது தண்டாயுதத்தைக் கொடுத்து அவரையெழுப்பி அநுக்கிரகித்தனர். அது காரணமாக உமாதேவியார் கேதார Nûத்திரஞ் சென்று அங்கே தவங்கிடந்து அர்த்தநாhPசுவரியாயினார். (2) திருக்கொடி மாடச் செங்குன்றூரிலே கோயில்கொண்டி ருக்குந் தேவியர்பெயர். (இத்திருமேனி சக்தியுஞ் சிவமும் அபேதமென்பது விள க்குவது.)

அர்த்தாவசு - ரைப்பியன் புத்திரன்

அர்ப்புதபர்வதம் - இஃது அநர்த்ததேசங் களுக்குச் சமீபத்திலுள்ள ஒரு மலை இதன் கணுள்ள ஜனங்கள் அர்ப்புதபர்வ தரெனப்படுவார்கள்.

அலகந்தை - கங்கா நதிக்கிளைகளு ளொன்று.

அலங்காரநாயகியம்மை - திரு அரதைப் பெரும்பாழியிலே கோயில்கொண்டிருக்கும் தேவியர் பெயர்.

அலம்பசன் - (1) (ரா) பகாசுரன் தம்பி. கடோற்கசனாற் கொல்லப்பட்டவன். (2) (ரா) பகாசுரன் மகன். இவனுங் கடோற் கசனால் மாய்ந்தவன்.

அலம்பசை - இûவாகுவமிசத்தனான திருணவிந்துபாரி. விசாலனுக்கு தாய்.
அவு

அலர்க்கன் - (கா) குவலயாசுவன் மகன்: மிகப்பிரசித்தி பெற்ற அரசன். இவனுக்குத் தத்தாத்திரேயர் யோகோப தேசஞ் செய்தார். இவன் மகன் சந்;நதி.

அல்லி சித்திரவாகன் என்னும் அல்லியரசி பாண்டியன் புத்திரி. இவள் கல்வியாராய்ச்சிலும் வில்வித்தையிலும் சிறந்தவளாகிக் தந்தையினதநுமதியோடு பாண்டிநாட்டிற்றென்பாகத்துக்கு அரசியாகி இலங்கையிலுமொருபாகத்தை வென்று அவ்விலங்கைக் கடலிலே காலந்தோறும் முத்து வருவித்தவள். அருச்சுனன் றீர்த்த யாத்திரையின் பொருட்டு பாண்டிநாட்டை அடைந்தபொழுது அங்கே இவளைக் கண்டு சித்திரவாகன் அநுமதியோடு மணம் புரிந்தான். சித்திராங்கதையென் னும் பெயருடையவளுமிவளே.

அல்லியங்கோததையம்மை - திருப்புள் ளமங்கையிலே கோயில் கொண்டிருக்குந் தேவியர் பெயர்.

அவக்கிhPதன் - (ரி) பரத்துவாசன் மகன். இவன் குருமுகமாகக் கல்லாமல் தபோப லத்தால் வேதங்களையெல்லாமோதிக் கர்வமுடையனாயினான். அதுகண்டு ரைப் பிய முனிவர் கோபங்கொள்ள அக்கோபா க்கினியில் ஓரிராûசன் தோன்றி இவனைக் கர்வபங்கஞ் செய்து கொன் றான். அப்பொழுது ரைப்பிங புத்திரன் அர்த்தாவாசன் இரங்கித்தேவர்களைப் பிரார்த்திக்க அவர்களால் உயிர்பெற்ற வன்.

அவநந்தி - உச்சியினி காண்க.

அவிகாரவாதசைவன் - கொடியவெயிலே நடந்தோரால் அடையப்படுகின்ற மரநிழல் போலப்பதி விகாரமின்றிநிற்ப, ஆன்மா வானது தானே பக்குவமடைந்தபோது ஞானக்கண்பெற்றுப் பதியைச்சேருமென்ப வன். அகர்புறச்சமயிகளுளொருவன்.

அவியாசியப்பர் - கொங்குநாட்டிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

அவீ~pத்து - கரந்தமன் புத்திரன். இவன் ஜனன காலத்தில் இலக்கினத்தை தீக்கிரகங்கள் யாராமையால் அவீ~pத்து என்னும் பெயர் பெற்றான். இவன் மகன் மருத்து சக்கரவர்த்தி. (வீ~pண்யம் - பார்வை.)

அவுசீநரசிபி - யயாதி தௌகித்திரரு ளொருவன்.

அழகம்மை - (1) திருமழபாடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர். (2) திருக்களரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர்.

அழகர்மலை - இது பாண்டிநாட்டின் கண்ணதாகிய ஒரு விஷ்ணு ஸ்தலம்.

அழகாம்பிகை - (1) திருநறையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். (2) திருநறையூர்ச் சித்தீச்சரத்தி லே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அழகாலமர்ந்தநாயகி - திருமாந்துறை யிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அழகியநாயகி - திருவெண்ணியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அழகியநாயகியம்மை - திரு ஆமாத்தூ ரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

அழகுசடைமுடிநாதர் - திருங்குரங்காடு துறையிற் கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

அழும்பில் - சேர நாட்டிலுள்ளதொரு சிற்றூர்.

அழும்பில்வேள் - இவன் அழும்பிலின் கண்ணே அரசுவீற்றிருந்த குறுநில மன்னன்.

அளகாபுரி - குபோரன் ராஜதானி. இது கைலாசத்துக்கணித்தாகவுள்ளது. இங்கே வசிப்போர் யûரும் கின்னரரும். நவநிதிகளை தன்னகத்தேயுடைமையால் மிக்க சிறப்பினையுடையது. புலவர்கள் ஒரு நகரைச் சிறப்பித்துக் கூறப்புகு மிடத்து இமனையே உவமையாகவெடுத் துக் கூறுவர்.

அளர்க்கண் - அலர்கண்.

அறிவனார் - பஞ்சமரபென்னுநூல் செய்த வொரு தொல்லாசிரியர்.

அறையணிநல்லூர் - நடு நாட்டிலே பெண்ணைநதி தீரத்திலேயுள்ள ஒரு சிவ ஸ்தலம்.

அறையணிநாதர் - திரு அறையணி நல் லூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

அனந்தகுணபாண்டியன் - குலோத்துங்க பாண்டியன் புதல்வருளொருவன். இவன் காலத்திலேயே நாகமெய்ததும் மாயப்பசு வதைசெய்ததுமாகிய திருவிளையாடல் கள் நடந்தன.

அனந்தசுகபாண்டியன் - அனந்தகுண பாண்டியனுக்குப் பின்னரசுசெய்த ஒரு பாண்டியன்.

அனந்தவிதகுணபாண்டியன் - குலபூஷண பாண்டியனுக்கு முன் அரசு செய்தவன்.

அனந்ததேசுரர் - ஈசுரதத்துவத்திலிருக்கும் அஷ்டவித்தியெசுரருக்குள்ளே தலைமை பெற்றவர். இவர் மாயாதத்துவ புவனங் களையுண்டாக்குமதிகாரமூர்த்தி.

அனாசிரிதம் இருநூற்று முப்பத்தைந்து அநாசிரிதம் புவனங்களுளொன்று.

அனு - யயாதிபுத்திரருளொருவன்.

அன்னம் - ஹம்சமென்னும் வடமொழி அன்னமெனத் தமிழிலே மருவிற்று. பாலையும் நீரையுங் கலந்துவைக்கிற் பாலைப் பிரித்துண்ணுமியல்பினதாகிய தொரு தெய்வப~p. பிரமாவுக்கு வாகன மிதுவே. இதன்நடை மகச்சிறந்தாதலிற் பெண்களுடையநடைக்கு உவமையாகப் புலவராலெடுத்தாளப்படும்.

அஷ்டகணநாதர் - நந்தி, மகாகாளார், பிருங்கி, கணபதி, இடபம், கந்தர், பார்வதி, சண்டர் என வெண்மர். இவர்கள் சிவகணங்களுக்கு அதிபர்கள்.


அஷ்டகன் - விசுவாமித்திரர் புத்;திருள் ஒருவன்.

அஷ்டகாதியர் - அஷ்டகன், பிரதத்தன், வசுவன், அவுசீகரசிபி எக நால்வர். இவர் கள் யயாதிமகள் புத்திரர். யயாதியால் அநேகநீதிகள் உபதேசிக்கப் பெற்றவர் கள்.

அஷ்டதிக்கஜம் - ஐராவதம், புண்டாPகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந் தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் எனக் கிழக்காதிமுறையே எட்டு யானைகள். இவற்றின் பெண்யானைகள், அப்பிரம், கபிலை, பிங்கலை, அநுபமை, தாமிர பருணி, சுப்பிரதந்தி, அங்கனை, அஞ்சனவதி எனஎட்டு. இவற்றுள் ஆண் யானைகள் முறையே அவ்வத்திக்கு பாலகருக்கும் பெண்யானைகள் அவர்கள் தேவியருக்கும் முறையே வாகனங்களாம்.

அஷ்டதிக்குபாலகர் - கிழக்காதிமுறையே இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், என எண்மர்.

அஷ்டமூர்த்தி - பிரமாவானவர் சிருஷ்; டியை அபிவிருத்திசெய்யுமுபாயமறியாது மயங்கிச் சிவபிரானைத்துதித்துச் சிந்தை செய்தபோது சிவபிரான் அப் பிரமாவினது புருவமத்தியிலே எட்டு மூர்த்திகளாக அவதரித்து அருள்புரிந்தனர். அம்மூர்த்திக ளாவார். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, வீமன், உக்கிரன், மகாதேவன், உருத்தி ரன் எனவெண்மர். இவர்க்கு வடிவம் முறையே ஜலம், பூமி, வாயு, அக்கினி, ஆகாயம், சுகர்மன், சோமன், சூரியனென எட்டுமாம். இவர்க்குச் சக்தி, உஷை, சுகேசி, சிவை, சுவாகா, திசை, திiû, ரோகிணி, சுவர்ச்சலை என முறையே யெண்மர். எண்வடிவங்கொண்டோனெனச் சிவனும் அஷ்டமூர்த்தியெனப்படுவர்.

அஷ்டவக்கிரன் - (ரி) ஏகபாதனுக்குச் சுஜாதையிடத்துப் பிறந்தபுத்திரன். இவன் கருப்பத்திலிருக்கும் போது, எப்போதும் சீ~ரோடு வேதாத்தியயனஞ் செய்து வருகின்ற தந்தையினது அத்தியாயங் களையெல்லாம் சீ~ர் நித்திரையால் மாறாக ஓதக்கேட்டு அதனை தந்தைக்குக் கருப்பத்திலிருந்த படியேயிரு ந்து செல்ல, தந்தை அது பெறாமல் அச் சிசுவை அஷ்டவக் கிரங்களையுடைய தேகத்தோடு பிறக்கக்கடவாயென்று சபித் தான். இவன் தேககாந்தியுடையவனாகி யும் அங்ஹீனனாயிருப்பக்கண்ட அரம்பை முதலிய தேவகன்னியர் அவனைப் பழித்தார்கள். அதனால் அஷ்டவக்கிரன் அக்கன்னியரைப் பார்த்து நீங்கள் கள்வர் கையில் வருந்துவீர்களாகவென்றான். அதுகாரணமாக, கிருஷ்ணன் நிரியாண மடைந்த பின்னர் அர்ச்சுனன் பின்னாற் சென்ற கோபிகாஸ்த்திரிகளாகிய அவ்வ ரம்பை முதலியவர்கள் கள்வர்கைப்பட்டார்கள்.

அஷ்டவசுக்கள் - (பாரதத்திலுள்ளபடி) பிரஜாபதியினது பிள்ளைகள் தரன், துருவன், சோமன், அபன், அநிலன், அக் கினி, பிரத்தி, யூஷன், பிரபாசன் என எண்மர். (ஏனையபுரானப்பிரகாரம்) இவர் கள் தûப்பிரஜாபதி மக்களிலே பதின் மரான தருமன் பாரிகளிலிலே ஒருத்தி யிடத்தில் வசுவனுக்குப்ப பிறந்த புத்திரர் எண்மர். இவர்கள் ஒரு சமயம் வசிஷ்டரு டைய ஓமப்பசுவை அபகரித்துச் சென்றமையால் அவராற் சபிக்கப்பட்டு மனுஷலோகத்திலே சந்தனுவுக்கு பாரியா கிய கங்காதேவியிடத்திற் பிறந்தார்கள். அவர்களுள் அபன் மிக்க அபராதி. இவன் மற்ற எழுவரது சதுர்த்தாம் சங்க னைப்பெற்று வீ~;மனாகப்பிறந்து அதி பராக்கிரமசாலியாகவும் தருமனாகவும் விளங்கினான்.

அஷ்டவித்தியேசுரர் - அனந்தர், சூக்குமா சிவோத்மர், ஏகநேந்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டா, சிகண்டி என எண்மர்.

அஸ்தி - ஜரசாந்தன் மகள், கம்சன் முதன் மனைவி.

அஸ்திகன் - ஜரற்காரனுக்கு வாசுவாகிய சர்ப்பராஜன் தங்கை. ஜரற்காரியிடத்திற் பிறந்த முனிவன். ஜனமேஜன் சர்ப்பயா கஞ் செய்த போது தûகன் முதலிய நாகர்களை இம்முனிவன் ர~pத்தவன். தûகன் அவ்யாகாதிபன் தனது மந்திர பலத்தால் த~கனேடு இந்திரனையும் இழுத்தான்.

அஸ்திரஹிருதயம் - சகல சத்துருநாச மும் கீர்த்தியும் செய்யும் ஒருவித்தை. இது சிவன் சுவாயம்புவுக்கும், அவன் சித்திராயுதன் என்னும் கந்தருவனுக்கும், அவன் தன் மகள் மக (தௌகித்திரி) ளாகிய மனோரமைக்கும், அவள் சுவரோ சிக்கும் கொடுத்தது. இது சுவரோசிசமனு சம்பவத்திலே சொல்லப்பட்டது.

அûபாதன் - நியாய சாஸ்திரஞ் செய்த கௌதமன்.

அûயலிங்கேசுவரர் - திருக்கீழ் வே@ரி லே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

அன் - இராவணன் மகன். அநுமானாற் கொல்லப்பட்டவன்.

அ~pத்திரயம் - மீனா~p, காம~p, விசாலாட்சி.

ஆகமங்கள் - ஈசுரனாலருளிச் செய்யப்பட் டதந்திரசாஸ்திரங்கள். அவை சைவவை ஷ்ணவ ஆகமங்களென இருவகைப்படும். வைஷ்ணவாகமங்கள் பாஞ்சாரத்திரம், வைகானசம் என இரண்டு. சோமகசுரன் வேதங்களைச் சமுத்திர நடுவிற்கொண்டு போய் மறைத்தபோது, விஷ்ணு தன்னு டைய பூசார்ததமாகப் பூசாவிதையைச் சாண்டில்லியவிருஷ~pக்கு ஐந்து ராத்திரி யில் உபதேசித்தமையால் பாஞ்சராத்திர மெனப் பெயர்பெற்றது. வைகானசம் துறவற முதலியவொழுக்கங்களும் யோக ஞானசித்திகளுங் கூறுவது.

சைவாகமங்கள் - காமியம் முதல் வாதுளமீறாகிய இருபத்தெட்டுமாம். இவை சதாசிவமூர்த்தியினது ஈசான முகத்தினின்றும் தோற்றின. தத்துவ சொரூமாகிய விக்கிரகங்கள், ஆலயங்கள் பூவைகள் என்னுமிவற்றினுன்மைப் பொரு ள்கள். அவ்வாகமங்களாலுணர்த்தப்படும். இவ்வாகமங்கள் மந்திரமெனவும், தந்திர மெனவும், சித்தாந்தமெனவும் பெயர் பெறும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருகோ டியாக இருபத்தெட்டுமிருபத்தெட்டுக்கோ டிகிரந்தங்களுடையன. இவை ஞானபாதம் யோகபாதம், கிரியாபாதம், சரியாபாத மென்று தனித்தனி நான்குபாதங்கள் உடையனவாயிருக்கும். இவற்றுள் ஞான பாதம் பதி, பசு, பாசம், என்னும் திரிப தாத்தங்களின் ஸ்வரூபத்தையும், யோக பாதம் பிராணாயாமம் முதலிய அங்கங் களையுடைய சிவயோகத்தையும், கிரியா பாதம், மந்திரங்களின் உத்தாரணம், சந்திவந்தனம், பூசை, செபம், ஓமம் எனப னவற்றையும், சமீய விசேஷ நிருவாண ஈசாரியாபிN~கங்களையும், சியாபாதம் பிராயச்சித்தம், சிவலிங்கவிலக்கண முத லியவைகளையும் உபதேசிக்கும். ஆகமம் என்பது, பரமாப்தரினின்றும் வந்தது எனப் பொருள்படும். இவ்வாகமங்களுக்கு வழி நூல் நாரசிங்னம் முதல் விசுவகன்மம் ஈறாகிய உபாதகமங்கள். இருநூற்ழெற மாம். மூலகமங்கள் இருபத்தெட்டும் வேதம் போலச் சிவனாலருளிச் செய்யப் பட்டமையின் சைவர்க்கு இரண்டும் முதன் நூல்களாம்.
ஆகா - ஹாஹாகாண்க.

ஆகாசம் - சிவன் அஷ்டமூர்த்தங்களு யொன்று. அஷ்டமூர்த்திகாண்க.

ஆகாசகங்கை - தேவருலகத்திலுள்ள கங்கை.

ஆகாசவாணி - அசாPரி, கர்மசா~pயாக அந்தர லோகத்திலே நிற்கின்ற ஒரு சக்தி. ஒலிவடிவாயிருந்த ஆபத்துவேளை யிலே சான்றுரை பகர்வது. திருவள்ளு வரது நூலையரங்கேற்றிய காலத்தம் சீதையினது கற்பை இராமர் ஐயுற்ற போதும் பிறவமையங்களிலும் இவ்வசாPரி வாக்குயாவராலுங் கேட்கப்பட்டது.

ஆகுவானன் - விநாயகக் கடவுள். ஓரசுரன் இவரோடு பொருதாற்றாதோடி ஆகு ரூபங்கொண்டு மறைய அவ்வாகு வைப்பற்றித் தமக்கு என்றும் வாகனமா கக்கொண்டனர். ஆகு பெருச்சாளி.

ஆகுகன் - (ய) தேவகன் தந்தை.

ஆகுகி - தேவகன் மாதுலி.

ஆகூதி - (1) சர்வதேஜசன் பரி. சட்சுர் மனுதாய். (2) சுவயாம்புவமனுவுக்குச் சத ரூபையிடத்திற் பிறந்த புத்திரி. இவள் தமக்கையர் பிரசூதி, தேவகூதி.

ஆக்கினீத்தரன் - பிரிய விரதனுக்குச் சுகன்னியகையிடத்திற் பிறந்த பதினெரு வர் புத்திரருள்ளே மூத்தவன். இவன் பாரி பூர்வசித்தை. பிரியவிரதன் இவனுக் குச் சம்புத்தீவைக் கொடுத்தான். அதை இவன் தனது புத்திரரான நாபி, கிம்புரு ஷன், அரி, இலரவிருதன், ரம்மியன், இரணவந்தன், குரு, பத்திராகவன், கேது மாலன் என ஒன்பதின்மருக்கும் பிரித்துக் கொடுத்தான்.

பிரித்தவகை - நாபிக்கு இமயத் தின்றெற்கினுள்ள பரதகண்டமும், கிம்புரு ஷனுக்குப் பரதகண்டத்துக்கு உத்தரத்தி லுள்ள ஏம கூடபர்வதத்தின் றெற்கிலுள்ள கண்டமும், அரிக்ககு ஏமகூட்டத்தின் வடக்கிலுள்ள நிஷதபர்வதத்துக்குத் தெற் கிலுள்ள நை~தமும், இலாவிருதனுக்கு நி~த பர்வதத்துக்கு வடக்கே மேருவை நடுவே கொண்ட இலாவிருதகண்டமும், ரம்மியனுக்கு, இலாவிருதத்துக்கும் நீலா சலத்துக்கும் நடுவேயுள்ள கண்டமும் இர ணவந்தனுக்கு ரம்மியகண்டத்துக்கு வடக் கே சுவேதபர்வதத்க்கு இப்பாலுள்ள கண் டமும், குருவுக்குச் சுவேதபர்வதத்துக்கு வடக்கே சிருங்கவந்தத்தாலே சூழப்பட்ட கண்டமும், பத்திராசுவனுக்கு மேருவுக்கு கீழ்த்திசையிலுள்ள கண்டமும், கேதுமால னுக்கு மேருவுக்கு மேற்கிலுள்ள கண்ட மும் கொடுக்கப்பட்டன. இவை நவ கண்டமெனப்படும்.

ஆக்கினேயபுராணம் - உபபுராணங்களுள் ஒன்று. இது பிருகுப்புரோக்தம். இஃது எக்கியாதி அக்கினி காரியங்கள் கூறும். இது பதினையாயிரம் கிரந்தமுடையது. இப்பெயர் அக்கினிபுராணத்துக்குமாம்.

ஆங்கிரசன் - (பிரகஸ்பதி காண்க.)

ஆசவபாண்டேசுவரன் - காசியிலிருக்கும் ஓர் அற்ப தேவதை. இத்தேவதையை உபகோகித்து வந்த சான்றானுக்கும் அவன் மனைவிக்கும் அது கட்குடத்திலே தோன்றி அநுக்கிரகஞ் செய்ததென்பது ஓரைதீகம்.

ஆசாரகாண்டம் - இது விஞ்ஞானே சுவரியம் என்னும் தருமசாஸ்திரத்தில் ஓருகாண்டம். இதில் நான்கு வருணத்தா ருக்குமுரிய தருமங்களும் பிற ஆசாரங் களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆசிரிதன் - திஷ்யந்தன் பௌத்திரன். இவனுக்கு பாண்டியன், சோழன், கேரளன் என மூவர் புத்திரர். இவர்மூவரும் தனித் தனி வமிசகர்த்தராய்ப் பின்னர் பிரகாசிக் குமாறு தத்தம் பெயரால் ஜனபதங்களை யுண்டாக்கினர்.

ஆசிரியர்நல்லந்துவனார் - இவர் கடைச் சங்கப் புலவர்களுளொருவர். கலித் தொகை செய்தவர்.

ஆசுவலாயனன் - ஒரு மகாவிருஷி. இருக்குவேதலிகிதகருமங்களைக்குறித்துச் சூத்திரஞ் செய்தவர். அது ஆசுவலாயன சூத்திரமெனப்படும்.

ஆசௌசம் - ஜனனாசௌசம், மிருதா சௌமம் என இருவகைப்படும். அவற்றுள் ஜனனாசௌசம் விருத்தி ஆசௌசமென ப்படும், பிராமணர்களிலே பித்திராசிதபிண் டர் இறந்தால் ஆசௌசதினம் பத்தாம், ûத்திரியாருக்கு பன்னிரண்டு, வைசிகரு க்குப் பதினைந்து, சூத்திரருக்கு முப்பது. குடுமிவைக்க முன்னிறக்கும் சிசுக்களு க்கு ஒருதினமும் வைத்த பின்னிறந்தால் மூன்றுதினமுமாம். சனனாசௌசமும் மேற் சொன்ன முறையேயாம். இன்னும் பிறவுள

ஆச்சிரமங்கள் - வருணாச்சிரமங்கள்.

ஆஞ்சனேயன் - அநுமான்.

ஆடகமாடம் - (1) இரவிபுரம். (2) திருவ நந்தபுரம்.

ஆடகேசுரர் - பாதாலத்தைக் காக்கின்ற கோடியுருத்திரருக்குத் தலைவர்.

ஆணிமாண்டவியன் - மாண்டவியன்.

ஆதிஷேன் - கசியபப்பிரசாபதிக்குக் கத்துருவையிடத்திற் பிறந்த மூத்த புத்திரன். இவன் தாய் கத்துருவை அவள் சக்காளத்தி விநதைக்கு செய்த அக்கிரமத்தைச் சகிக்காதவனாய்த் திருக் கோகர்ணம், கந்தமாதனம், முதலிய திவ் வியN~த்திரங்களிற் சென்று மகாதவங் களைச்

ஆதிதேயர் - அதிதிவமிசத்தர். அவர்கள் தேவர்கள்.

ஆதித்ததேவர் - திருவிசைப்பாப்பாடிய கண்டராதித்தர்.

ஆதித்தன் - (1) சேரநாட்டிலிருந்த ஓர ரசன். இவன் சிதப்பரத்துக் கனகசபை யின் முகட்டைக்கொங்கிற் செம்பென்னி னால் வேய்ந்தான். (2) சூரியன்.

ஆதித்தியர் - அதிதியிடத்திலே கசியபப் பிரஜாயதிக்கு பிறந்த புத்திரர் பன்னிருவர் தாதா, மித்திரன், அரியமன், இந்திரன், வருணன், அமிசுமந்தன், பகன், விசுவந் தன், பூஷன், சவிதா, துவஷ்டா, விஷ்ணு என்னும் இவருள்ளே வி~;ணு, இந்திரன் என இருவரும் வைவசுவதமனுவந்தரத் தில் ஆதித்தியராகவிருந்து சட்சர்மனுவந் தரத்திலே துஷ~pதராயினார். கற்பாரம்பத் திலே பிரமாவினாற் சிருஷ்டிக்கப்பட்ட ஜயரென்றும் இவரைச் சொல்வார்கள். இப்பனினிருவரும் சிரு~;டியில் இச்சை யில்லாதவராய்ப் பிரமாவினது ஆஞ்ஞைக் குட்படாராயினார். அதனால் மநுவந்தரங்க டோறும் பிறப்பிக்குமாறு சபிக்கப்பட்டார் கள்.

ஆதித்தியர் அதிதிபுத்திரரெனப் பொருள்படும். இருக்கு வேதத்திலே அதிதி எண்மர்புத்திரரையீன்றாளென்றும் அவருள்ளேயொருவனைப் புறத்தேதள்ளி விட்டு மற்றையெழுவரையுமுடன் கொண்டு தேவர்கள் பாற்சென்றானென்றுங் கூறப்பட் டிருத்தலை நோக்குமிடத்து, புறத்தே தள்ளப்பட்டவனாகிய விசுவதன் என்னும் புத்திரனே இப் பூலோகத்துக்கு ஒளி தரு பவனாயினான். எனக்கொள்ளல் வேண்டும் மற்றையயெழுவரும் மேன்மேலுள்ளவுல கங்களுக்குக் கதிரவர்களாயினார்கள். ஆதித்தியர் பன்னிருவர் பெயரும் வேதத் திலுள்ளனவேயாம். ஆயினும் ஆதித்தியர் பன்னிருவரும் வேறு. உலகத்துக்குப் பிரத்தியûமாகவுள்ள சூரியனும் வேறு. ஆதித்தியர்சோதிரூபர். சூரியன் அக்கினி ரூபன்.

ஆதித்தியன் - சூரியன்.

ஆதித்தியஹிருதயம் - ஒரு தோத்திரம். இதனை ஓதிவந்தால் சூரியாநுக்கிரகமுண் டாம். இது ராவணனைக் கொல்லச்சென்ற ராமருக்கு அகஸ்தியரால் உபதேசிக்கப் பட்டது.

ஆதிநாதன் - ஒரு சைன குரு.

ஆதூர்த்தரஜன் - கசன் மூன்றாம் புத்தி ரன். தர்மராணியத்தையுண்டாக்கியவன். இவன் மகன் ராஜரி~pயாகியகயன்.

ஆத்திரேயன் - சந்திரன்.
ஆத்திரையன் - ஒரு தமிழ்ப்பேர் ஆசிரியன்

ஆநந்தகிரி - சாலிவாகனசகம் எண்ணூ ற்றின் மேலிருந்த ஒருசமஸ்கிருத வித்து வான். இவரைச் சங்கரதிக்கு விஜயம் என்னும் நூல்செய்தவர் என்றொருசாரரும், சங்கராசாரியாருக்குச் சீடராக ஆவர்காலத் திருந்தவரேயன்றி சங்கரதிக்கு விசயஞ் செய்தவரல்லரென்றும் மற்றொருசாராருங் கூறுவர்.

ஆநந்ததீர்த்தர் - மத்துவாவாரியர்கள்.

ஆநந்தநாயகி - திருநெல்வாயிலிற் கோ யில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

ஆந்தரதேசம் - கோதாவிரி கிருஷணாநதி களுக்கு மத்தியிலுள்ள தேசம். இது தெலுங்க தேசசமெனப்படும். திரிலிங்கதே சமென்பது வடமொழிவழக்கு.

ஆந்தரபிருத்தியர் - சூத்திரகன் வமிசத்தரான மகததேச வரசர். இவர்கள் சாலிவாகனசகரரம்ப முதல் 400 வரு~ம் ராச்சியம் புரிந்தேர்.

ஆந்தரம் - ஆந்தரதேச பாஷை. இதுவே தெலுங்கு என்னும், தெலிங்கு என்றும் வழங்குவது. இது கண்ணுவமகாவிருஷ~p யால் பிரவிருத்தி செய்யப்பட்டதென்பர்.

ஆந்தரர் - ஆந்தரதேசத்தார். பஞ்சதிரா விடருள் ஒருவகையர்.

ஆபத்சகாயர் - திருப்பழனத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

ஆபத்சகாயேசுவரர் - குரங்காடுதுறையி லே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

ஆபத்தம்பன் ஒரு மகாவிருஷி
ஆபஸ்தமபன் யசுர்வேத விகித சர்மங் களைககுறித்துச் சூத்திரங்கள் செய்தவர். அஃது ஆபஸ்தம் பசூத்திரமெனப்படும்.

ஆபன் - வசுக்களுளொருவன்.

ஆபீரம் - சிந்துநதிக்கு மேற்கிலே ஆரியா வர்த்தத்தோடு சேர்ந்த ஒருதேசம்.

ஆப்பனூர்க்காரணர் - திரு ஆப்பனூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

ஆமூர் - தொண்டைநாட்டின் கண்ண தோரூர்.

ஆம்பிகேயன் - திருதராஷ்டிரன்.

ஆம்பிரவனேசர் - திருமாந்துறையிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமியர்பெயர்.

ஆயதி - மேருபுத்திரி. தாதா மனைவி. மிருகண்டன் தாய்.

ஆயாதி - உத்தானபர்கி

ஆயு - புரூரவன் மகன். இவன் நகுஷன், ~த்திரவிருத்தன். ரஜி, ரம்பன், அநேநசு என ஐவர் புத்திரரைப் பெற்றவன்.

ஆயுஷ்மந்தன் - (தி) பிரகலாதன் புத்திர ருளொருவன்.

ஆயோதனபபிரவீணன் - இவன் துவிசார குலோத்துங்கனுக்குப் பின் அரசுசெய்த பாண்டியன். இவன்காலம் துவாபரயுகத்து அந்தியகாலம்.

ஆய் - இவன் அரசரால் வேளென்னும் பட்டஞ்சூட்டப்பட்ட ஒரு வேளாளன். பொதிகைமலைசார்ந்த ஆய்நாடுடையவன். பெருங்கொடையாளன். இவன் குட்டுவன் கீரனார் முதலியோராற் பாடப்பட்டவன். பயன்கருதிக்கொடுக்கு மீகையாளனல்ல னென்பது, “இம்மை செய்தது மறுமைக் காமெனு - மறவிலை வாணிகனா அயல்லன்” என்னும் புற நானூற்றுச்செய் யுட் கூற்றால் விளங்கும். தனக்குப்பாம்பு கொடுத்த நீலாம்பரத்தை ஆலின்கீழிருந்த இறைவனுக்குக் கொடுத்தவனுமிவனே.

ஆரஞ்சோதி - அருந்ததி.

ஆராத்தியர் - பிராமணருள்ளே லிங்காதா ரிகள். இவர்கள் வீரபத்திரோபாசர்கள்.

ஆரியசித்தாந்தம் - இஃது எழுநூறுவருஷ ங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட சோதிட நூல்.

ஆரியப்பட்டன் சாலிவாகன சகாப்தம் ஆரியபடன் இருநூற்றின் மேலிருந் த ஒரு மகா சோதிஷன். இவர் செய்த சோதிட சித்தாந்தத்தில் பூமி கோளவடிவி னதென்றும் பூமி தன் நாராசத்திலே தினந்தோறும் சுழன்று வருகின்றதென்றுங் கூறப்பட்டிருக்கிறது.

ஆரியர் - வேதவிதிகளைக் கைக்கொண் டொழுகுபவர்களாய்ச் சதாசாரசீலர்களாயு ள்ளவர்கள். சரஸ்வதி, திருஷத்வதி நதி களுக்கு மத்தியதேசத்திலிருந்து பின்னர் ஆரியாவர்த்தமெங்கும் வியாபித்தவர்கள்.

ஆரியாங்கனை - ஓர் இயக்கி

ஆரியாவர்த்தம் - இமயத்திற்கும் விந்திய த்திற்கும் மத்தியிலுள்ள தேசம். ஆரியர் கள் தேசம். பூர்வம் பரதகண்ட ராஜாக் கள் யாவரும் இங்கேயே வசித்தார்கள்.

ஆரியை - பார்வதி

ஆருகதன் - ஞானவர்ணியம் முதலிய பதினெண்குணத்தையும் அரசிகம் முத லிய ஆறு குணத்தையும் விடுத்து முன் னைக்கன்மம் புசித்துத்தொலைந்தவிடமே வீட்டின்பமென்பவன்.

ஆருணி - அயோதன்.

ஆலங்குடிவங்கனார் - இவர் கடைச்சங் கப்புலவர்களுளொருவர்.

ஆலந்தரித்தஈசுவரர் - திருபுன்னமங்கையி லே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

ஆலவாய் - மதுரையிலே சோமசுந்தரக் கடவுள் எழுந்தருளியிருக்கும் ஆலயம்.

ஆலாலசுந்தரர் - ஆதி காலத்திலே சிவன் தமது திருவுருவத்தை கண்ணாடி யிலே பார்த்தருளலும் அத்திருப்பிரதிவிம் பம் அதி சுந்தரவடிவு கொண்டொரு மூர் த்தியாயிற்று அம்மூர்த்தியே இவர். இவர் பின்னர் ஒரு சாபத்தாற் சுந்தரமூர்த்திநாயனாராக அவதாரஞ் செய்தவர்.

ஆவுடையநாயகர் - திருமுருகன் பூண்டியி லே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர்.

ஆளுடையநாயகியம்மை - திருப்பரங் குன்றத்திலே கோயில் கொண்டிருங்குஞ் தேவியார் பெயர்.

ஆனகதுந்துபி - வசுதேவன்.

ஆனகன் - (ய) வாசுதேவன் தம்பி.

ஆனகொந்தி - இருஷியமூகபர்வத சமீபத்திலுள்ள ஒரு நகர்.

ஆனர்த்தம் - இது யவன சமுத்திரத்தி லே துவாரகைக்குச் சமீபத்திலுள்ள நாடு. இதிற் சரியாதிமகன் ஆனர்த்தன் குசஸ் தலியென்னும் நகரத்தை நிருமித்தான். அதனால் அதனையுள்ளிட்ட நாடெல்லாம் அவன் பெயர்பெற்றது.

ஆனர்த்தன் - சரியாதிமகன். இவன் மகன் ரைவதன்.

ஆனாயநாயனார் - மழநாட்டிலே மங்கல மென்னுமூரிலே பிறந்து, பசுக்களை மேய் த்து அவைகளைக்காத்தலையே தமக்கு வந்த தொழிலாகக் கொண்டு, வேய்ங்குழ லிலே சிவஸ்தோத்திரங்களைப் பொருத்தி க்கல்லுமுருகப்பாடிச் சிவனை அக்கீதத் தோடு கூடியபத்திவலையிலே சிக்குவித்து அருள் பெற்றவர்.

ஆனிகன் - (ய) வசுதேவன் தம்பி. இவன் இரண்டாம் மைந்தனும் ஆனீகன் எனப் பெயர் பெறுவன்.

இசைஞானியர் - சடைய நாயனார் மனை வியார். இவரே சுந்தரமூர்த்தி நாயனாரை ஈன்றருளிய பாக்கியவதியார்.

இசைநுணுக்கம் - சாரகுமாரன் பொருட்டு சிகண்டி செய்த இசைத்தமிழ் நூல்.

இடங்கழிநாயனார் - கொடும்பா@ரிலே சிவனடியார்க் கன்பராயிருந்தரசியற்றிய ஓரரசர்.

இடும்பில் - ஓரூர்.
இடைக்காடனார் - இவரை ஒளவைசகோ தரரென்றுசொல்லுவர். இடைக்காடென்னு மூரிலிருந்தவர். கடைச்சங்கப்புலவர்களு ளொருவர். கிள்ளிவளவன் சிறம்பைப் பாடினார்.

இடைக்குன்றூர்கிழார் - நெடுஞ்செழியன் போர்த்திறம்பாடிய புலவர். (புறநானூறு)

இடைச்சங்கம் - இது கபாடபுரத்திலே சித்திரராத பாண்டியென்னும் வெண்டேர்ச் செழியனாலே தாபனஞ்செய்யப்பட்டு முட த்திருமாறன் காலம்வரையும் நடைபெற்று வந்த கடைச்சங்கம். இதன்வரலாற்றை மேல்வரும் ஆசிரியப்பாக் கூற்றானுணர்க.

“வடுவறுகாட்சி நடுவட் சங்கத்தகத்தியர் தொல்காப்பியத்தமிழ் முனிவ - ரிரு ந்தையூரிற் கருங்கோழிமோசியா - ரௌ; ளாப் புலமைவெள்@ர்க் காப்பிய - னிற வா விசையிற் சிறுபாண்டரங்கன்-றேசிக மது ரையாசிரியன் மாறவன் - றவரொ ப்பாய துவ ரைக்கோமான் - றேருங்கவி புனை கீரந்தை யரிவ-ரோன்பதோடடுத்த வைம்பதின்மராகுந் - தவலருங்கேள்வித் தன்மையருள்ளிட் - டிவர் மூவாயிரத் தெழுநூற்றுவரே வைய கம்பரவச்செய்த செய்யுளு-மிருங்கலிகடிந் தபெருங்கலித் தொகையொடு - குருகுவெண்டாளி தெரு ள்வியாழமாலை - யந்நாளிலக்கணமத்தி யமதனொடு - பின்னாட்செய்த பிறங்கு தொல்காப்பிய - மதிநலங்கவின்ற மாபு ராணம் - புதுநலங் கனிந்த பூதபுராணம். வல்லிதினுணர்ந்த நல்லிசை அணுக்கமுந் - தாவாக்hலந் தமிழ்பயின்றதுவு - மூவா யிரத்தோடெழுநூற்றியாண்டு - பாPஇயசங்க மிhPஇய பாண்டியர்கள் - வெண்டேர்ச்செழி யன் முதலாவிறல்கெழு - திண்டேர்க்கொ ற்ற முடத்திருமாறன் - முரசுடைத்தானை மூவாவந்த - மரசுநிலையிட்டோரைம்பத் தொன்பதின்ம - ரிவ்வகையரசரிற்கலிய ரங்கேறின. - ரைவகையரசராயிடைச் சங்கம் - விண்ணகம்பரவு மேதகுகீர்த்திக் - கண்ணகன்பரப்பிற்கபாட புரமென்ப”

இடைச்சுரநாதர் - திரு இடைச்சுரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

இட்டசித்தி - அழகர் மலையின் கண்ணதொருபொய்கை விரும்பியதெல் லாங்கொடுப்பது என்பது அதன் பொருள்.

இதிகாசம் - இராமயணமும் பாரதமும். இவைசரித்திர முகத்தாற் புருஷார்த்தங் களை யுபதேசிப்பன.

இத்துமவாகன் - (ரி) அகஸ்தியன் பௌத்திரன்.

இந்திரகாளியம் - யாமளேந்திரன்செய்த இசைநூல்.

இந்திரஜித்து (ரா) ராவணன் மகன். இந்திரசித்தன் இவன் இந்திரனைச் சிறை செய்து இலங்கைக்குக்கொணர்ந்தானாத லின் இந்திரஜித்து என்னும் பெயர்படைத் தான். இவன் பூர்வநாமம் மேகநாதன். அதிமாயாவி. பதினான்னு வருஷம் நித்தி ராகாரமில்லாதவன்யாவன். அவனால் இற த்தல் வேண்டுமென்று வரம்பெற்றவன். அப்படியே ல~Pமணனாற் கொல்லப்பட்ட வன். (மோகநாதன் காண்க)

இந்திரசேனன் - (1) நளன் மகன். (2) தருமன் சாரதி. (3) சூரியன் மகன்.

இந்திரசேனை - (1) மௌத்கல்லியமகாவி ருஷிபாரி. (2) துரோபதை. (3) நளன் மகள்.

இந்திரத்துயுமனம் - ஒருவாபி. இஃது இந்திரத்துயமனன் என்னுமரசன் தானஞ் செய்த ஆடுமாடு நின்று பள்ளமாகியதால் வாவியாயிற்று. இவன் இந்திரசதனத்தில் நெடுங்காலம் போயிருந்து விட்டமையால் அவன் கீர்த்தி உலகத்தில் இல்லாது போயிற்று. அவன் தேவர்களால் தேவ லோகம் விட்டு ஓட்டப்பட்டு பூலோகம் வந்து பார்த்தபோது, தன்னையுலகத்தறி வாரெவரையுங் காணாது ஈற்றில்யுகாந்த ரன் என்னுங்கச்சுப மாத்திரம். தன்னை யறிவதாகச் சொல்லக்கேட்டான். ஆகவே இவன் போனதற்கும், மீண்டதற்கும் இடையே அநேகசந்ததிகளாயின. இவ் வாவி ஜகநாதத்திலுள்ளது.

இந்திரத்துயுமனன் - இருஷபன் பௌத்தி ரன். பரதன் புத்திரன். தாய் சுமதி. இவன் ஒரு நாள் ஆழ்ந்தநிட்டையிலிருக்கும் போது அங்கே அகத்தியர் வந்தார். அவருக்கு இவன் உபசாரஞ்செய்யாமை யால் அவரால் மதயானையாக வென்று சபிக்கப்பட்டான். அதனால் யானையாகிச் சஞ்சரித்து வரும் போது தாகந்தணிக்கும் பொருட்டு ஒருதடாகத்திலிறங்க, ஒரு முதலை அதனைப்பிடித்திழுத்துப்போக, ஆதிமூலமே யென்றுகூவி நாராயணனை தோத்தரித்த மாத்திரத்தில் அவருடைய சக்கராயுதம் அம்முதலையை கொண்று யானைரூபம் தவிர்த்துர~pக்கப்பெற்றவன். இக்கதை கஜேந்திரமோûமெனப்படும்.

இந்திரப்பிரஸ்தம் - பாண்டவர்களுக்கு ராஜதானி. டில்லிக்கு சமீபத்திலேயுள்ளது. காண்டவப்பிரஸ்தமெனவும் பெயர்பெறும்.

இந்திரப்பிரமிதி - (ரி) வியாசீஷனாகிய பயிலவன்சீஷன். இவன் இருக்குவேத சங்கிதையை நான்கு பாகமாக்கிப் பாஷ் கலன், போத்தியன், யாஞ்ஞவற்கியன், பராசுரன், மாண்டுகேயன், அக்கினிமதி என்பவர்களுக்குபதேசம் பண்ணியவன்.

இந்திரவதி - கோதாவிரியுடன் கலக்கு மோருபநதி.

இந்திரவாகனன் - ககுத்தன்.

இந்திரன் - தேவராசன். கிழக்குத்திக்கு பாலகன். கசியப்பிசாபதிக்கு அதிதியிடத் திற் பிறந்த புத்திரன். இவன் ராசதானி அமராவதி. ஆயுதம் வச்சிரம். பாரி சசிதேவி. வாகனம் ஜராவதம். சபை சுதர்மம். குதிரை உச்சை சிரவம். சாரதி மாதலி. உத்தியாவனம் நந்தனம். மகன் ஜயந்தன். இந்திரன் துவட்டப்பிரமாவினது புத்திரன். விசுபரூபனையும், விருத்திராசுர னையும் கொன்ற தோஷமாகிய பிரம கத்திகாரணமாகத் தேவேந்திரபதத்தை இழந்தான். அப்போது நகுஷன் தனது தபோபலத்தால் இந்திரனாயினான். அது கண்டு இந்திரன் அசுவமேதயாகஞ் செய்து மீண்டம் இந்திரனாயினான். இவ்விந்திரபதம் நூறு அசுவமேதஞ்செய் தான். யாவன் அவனுக்குரியது. ஆகவே மனுஷராற் பெறத்தக்கது. இதுவரையும் இறந்துபோன இந்திரர்க்குக் கணக்கில்லை. இப்போ திருப்பவன் புரந்திரன். இந்திரன் கௌதமபத்தினியை இச்சித்தகார ணத்தாலக்கௌதமராலுடம் பெங்கும் யோனிமயமாகச் சபிக்கப்பெற்றுப் பின் கௌதமரை பன்முறைவேண்டி உடம்பெங் கும் கண்ணாகுமாறு பெற்றான். அதனால் ஆயிரங்கண்ணன், சகஸ்திராûன் என் னும் பெயர்கள் பெற்றான். பூர்வத்திலே சிறகுடையனவாயிருந்தமையாற் பறந்து பறந்து வீழ்ந்த நகரங்களை அழித்து வந்த மலைகளைச் சிறகரிந்து அவற்றது கருவத்தை அடக்கினமையால் கோத்hதிர பித்து எனவும் பெயர் பெற்றான். ஒரு காலம், சியவன விருஷ~p யாகஞ் செய்த போது அசுவினிதேவருக்கு பங்கீந்தான். அது கண்ட இந்திரன் சினந்து அவ்விருஷ~pமேலே தன் வச்சிராயுதத்தை ஓங்க, இருஷ~p அதனை ஸ்தம்பனம்பண்ணினர். அது காரணமாகத் துச்சியவனன் எனவும் பெயர் பெற்றான். இந்திரன் மேகங்களை வாகனமாக வுடையவன். இந்திரனே மழை யைக் காலந்தோறும் பெய்விப்பவன். இந் திரனை மகிழ்விக்கும் பொருட்டு ஆரியர் வருஷந்தோறும் பொங்கலிடுவதும். விழா வெடுப்பதும் பண்டைக்காலந்தொட்டின்று முள்ளவழக்கம். மகரசங்கிராந்திக்கு முத னாளிலேயே இப்போதிப்பொங்கலிட்ப்படு கின்றது. அதனைப் போகிபொங்கலென்று வழங்குவர். போகி இந்திரன், கிருஷணன் யாதவர்களிடத்திலிருக்கும் போது இப் பொங்கல்வந்தது. யாதவரெல்லோருந் திர ண்டு இந்திரனுக்கு வேள்விசெய்தார்கள். அவ்வேள்வியை இந்திரன் கொள்ளாவ கைதடுத்தக் கிருஷ்ணன் தான் கொண் டான். அது பொறாதிந்திரன் சினந்து மேகத்தை ஏவி யாதவர்களுடைய பசுநி ரையைக் கொல்லும்பொருட்டுக் கன்மழை பொழிவித்தான். கிருஷ்ணன் ஒரு மலையையிடந்து குடையாகப்பிடித்து அப் பசுநிரைகளையும் யாதவர்களையுங் காத் தான். சூரபன்மன் தேவர்களையெல்லாந் சிறைசெய்து மீன் சுமக்க வைத்தபோது. இந்திரன் அக்கொடுமைக்காற்றாதோடிச் சீர்காழியில் மறைந்திருந்து குமாரக்கட வுள் சூரனைக் கொன்றருளியபின்னர் அம ராவதி சென்றான். இவன்மகள் தெய்வ யானை.

இந்திராவரஜன் - உபேந்திரன். (இந்திர அவரஜன்: அவரஜன் - தம்பி)

இந்தீவரா~சன் - நளநாபன் என்னும் கந்தர்வ ராஜன் மகன். வரூதினி தம்பி. இவன் கபடோயாயத்தினால் ஒரிருஷ~pயை யடைந்து ஆயுள் வேதத்தை முற்றக் கற்ற பின்னர் அக்குருவை இகழ்ந்தமை யால் இராûச ரூபம் பெறுமாறு சபிக்கப் பட்டவன். பின்னர்ச் சுவாரோசியினால் அச்சாபம் விமோசனமாயிற்று.

இந்து - (1) சந்திரன். (2) அதிசாந்திரன் (3) சாசுவதன் மகன்.

இந்துமதி - விதர்ப்பராஜன் மகள் அஜன் பாரி. தசரதன் தாய்.

இமயமடக்கொடி - திரு இடைச்சுரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

இமயம் - ஹிமாலய மலை. பாரதவரு ஷத்துக்கு வடக்கெல்லையாகவுள்ளது. பூவுலகத்துள்ள மலைகளுளுயர்ந்தது வளஞ்சிறந்ததாதலின் இம்மலை பர்வதரா ஜாவெனவும் பெயர் பெறும். இம்மலையர சன் இமவானெனப்படுவன். இங்கேமகாவி ருஷிகளும் யோகிகளும் சித்தரும் வசிப் பார்கள்.
இயக்கர் - ய~ர்காண்க.

இயக்கன் - பூதப்பாண்டியன் தோழன்.

இயற்பகைநாயனார் - காவிரிப்பூம்பட்டினத் திலே வணிகர் குலத்திலே பிறந்தவர். இவர் சிவனடியார்களைச் சிவனெனப் பூசி க்கும் பக்தசிரோமணழயாயொழுகி வருநா ளிலே, சிவன் ஒரு பிராமண வேடங் கொண்டு அவர்பாற் சென்று, ஒன்று வேண்டிவந்தேன் என்றுகூற, இயற்பகை யார் அவரை நோக்கி, நம்மிடத்திலுள்ள பொருள் எல்லாம் சிவனடியார் பெருளே யாம். கூசரது கேட்கவென்ன, ஐயர் தமது மனைவியைத்தரல் வேண்டுமென்ன, இயற் பகையார் நம்மிடத்துள்ள பொருளைக் கேட்டீர் என்று கூறி முகமலர்ந்து தமது மனைவியை உடன்படுத்தி சுற்றத்தார் தடுக்கவுங் கேளாது கொடுத்துக்கொண்டு
செல்லும் என்றார். ஐயர் தமது மெய்வடி வைக்காட்டி அவருடைய பக்தித்திடத்தை வியந்து அருள்புரிந்து போயினர்.

இரகுநாதசேதுபதி - இவர் இருநூற்றுமுப் பது வருஷங்களுக்கு முன்னர் இராமநாத புரத்தில் அரசுபுரிந்தவர். இவர் தமிழ் வித் துவான்களைச் சன்மாத்துத் தமிழை வள ர்த்த மகௌதாரிய சீலர், ஒரு துறைக் கோவை என்னும் அற்புதப் பிரபந்தத்தி லே அமிர்தகவிராயராலே புகழ்ந்து பாடப் பட்ட சேதுபதி இவரே. இவர் முன்னோ ரும் இவர் பரம்பரையில் வந்தோரும் இவரைப்போலத் தமிழ்க்கரா வினோதரே.

இரகுவமிசம் - காளிதாசன் வடமொழியிற் செய்த ஒரு காவியம். இதனைத் தமிழிலே மொழிபெயர்த்தவர் அரசகேசரி.

இரட்டையர் - ஒருவர் அந்தகராகவும் மற்றவர் முடவராகவும் பிறந்த சகோதரரா கிய புலவர் இருவர் இப்பெயர்பெறுவர். இவர்கள் காஞ்சிபுரத்திற் பிறந்து தமிழ்க் கல்வியில் மிக்க வல்லவராகிய முடவரை அந்தகர் தோள்மேல் ஏற்றிக்கொண்டு முடவர் வழிகாட்ட ஊர்கடோறுஞ் சென்று கவிபாடிப் பெருங் கீர்த்தி பெற்றவர்கள். இவர்கள் செய்த நூல்கள் தைவீகவுலா முதலியன. இப்புலவர்களே நானுமறி யேன். அவளும் பொய்சொல்லாள் என் னும் பழமொழியை வெளிப்படுத்தித் தாமாராயாதவிஷயங்களையும் சரஸ்வதி அருளால் செய்யுள் வாயிலாக ஆங்கரங் கும் வெளியிட்டு வந்தவர்கள்.

இரணியகசிபன் - (தி) கசியபனுக்குத் திதிவயிற்றிலே பிறந்த புத்திரிருவருளொ ருவன். மற்றவன் இரணியாûன். இர ணியகசிபன் கொடியதவழுஞற்றிப் பிரமா விடம் தன்னைத் தேவரும் மனிதரும் விலங்கினங்களும் அசரருங் கொல்லாதிரு க்கவரம்பெற்று, அதனால் மிக்க கருவமு டையனாகித் தன்னையேயுலகங் கடவுளா கக்கொண்டு வழிபடல் வேண்டுமென்று வகுத்து, அதுசெய்தாரையொறுத்துப் பெருங்கொடுமை செய்துவந்தான். அவன் மகன் பிரகலாதன் தந்தையை பொருட்படு த்தாது விஷ்ணுவை வழிபட்டு வந்தான். அவனைப் பலவாறு துன்பஞ்செய்த அவன் மதியாமைகண்டு இரணியகசிபன் தன்கையிலே வாளையெடுத்துக்கொண்டு பிரகலாதனைப் பார்த்து, இவ்வாளை நீ வழிபடும் விஷ்ணுதடுக்கவல்லானோவென் றேங்கி அவனை வெட்டவெத்தனித்தான். உடனே விஷ்ணுமூர்த்தி ஒரு தூணி டமாக நரசிங்கரூபத்தோடு தோன்றி அவனைக்கொண்று பிரகலாதனை காத்த ருளினார்.

இரணியநாபன் - இவன் யாஞ்ஞவற்கிய முனிவரிடத்து யோகம் பெற்றவன்.

இரணியன் - (1) இரணியகசிபன் (2) சூரபன்மன் புத்திரருள் ஒருவன்.

இரணியா~ன் - (தி) திதியிடத்திற் கசியப்பனுக்குப் புத்திரனாகப் பிறந்து பூமியைப் பாயாகச் சமத்திரத்தி லொளித் தபோது வராகமாகிய விஷ்ணுவாற் கொல்லப்பட்டவன்.

இரவிபுரம் - மiநாட்டின் கண்ணதோரூர்.

இராகவன் - ராகவன்.

இராசமன்னார்கோவில் - காவிரியின் தெற் கேயுள்ள ஒரு வைஷ்ணவ ஸ்தலம்.

இராசமாபுரம் - ஜீவகன் இராசதானி. இஃது ஏமாங்கத தேசத்திலுள்ளது.

இராஜகுஞ்சரன் - பரராஜகுஞ்சர பாண்டி யன்.

இராஜகெம்பீரபாண்டியன் - இராச சூடா மணிக்குப்பின் அரசுசெய்த பாண்டியன்.

இராஜசூடாமணி - இராசமார்தாண்டனுக்கு ப்பின் அரசு செய்த பாண்டியன்.

இராஜசேகரபாண்டியன் - இவன் கரிகாற் சோழன் காலத்தவன்.

இராஜபயங்கரன் - பரராஜகுஞ்சரனுக்குப் பின் அரசுசெய்த பாண்டியன்.

இராஜமார்த்தாண்டன் - சித்திரவிக்கிரம பாண்டியனுக்குப்பின் அரசுசெய்த பாண்டி யன்.

இராஜராஜபாண்டியன் - பன்றிக்குட்டி களை மந்திகளாக்கிய திருவிளையாடல் கண்டவன்.

இராஜதிராஜபாண்டியன் - வரகுணபாண்டி யனுக்குப்பின் அரசுசெய்தவன்.

இராஜேந்திரபாண்டியன் - இரசவாதஞ் செய்த திருவிளையாடல் கண்ட பாண் டியன்

இராதை - ராதைகாண்க.

இராதாகிருஷ்ணன் - ராதா கிருஷ்ணன்.

இராமநாதர் - இராமேச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமியர் பெயர். இவ் விலிங்கம் ராமர்தாபித்தது.

இராமன் - இராமன் காண்க.

இராவணன் - ராவணன் காண்க.

இராவணீயம் - இராகங்களை சாமவேதத் திற் பொருத்திப்பாடும் முறையை அறிவி க்கும் நூல். அஃது இராவணனாற் செய்ய ப்பட்டது.

இரு - அதிதி

இருக்கன் - விஜயன் புத்திரன், விருகன் தந்தை.

இரு~ம் - மாளவதேசத்தருகேயுள்ள ஒரு மலை.

இரு~ன் - (1) அசமீடன் மூன்றாம் மகன். இவன் பௌத்திரன் குரு, (2) புரு ஜன் மகன். பருமியாசுவன் தந்தை. (3) (கு) தேவாதிதி மகன்.

இருசங்கன் - பேருசங்கன்.

இருசிகன் - ஒளவர் மகன். விசுவாமித்தி ரன் தங்கை. சத்தியவதி கணவன். ஜமதக்கினி தந்தை.

இருசுவரோமா - சவர்ணரோமாமகன்.

இருததாமன் - (ய) வசுதேவன் தம்பி. ஆனகன் மகன்.

இருதத்துவஜன் - (கா) பிரதர்த்தன்.

இருதவாக்கு - (ரி) இவன் தனக்கு வேதநûத்திரத்து நாலாம் பாதத்திற் பிற ந்த புத்திரன். துஷ்டனாகியநிமிந்தம் ரேவ தியைப் பூமியில் வீழுமாறுசபித்தவன்.

இருதன் - (மி) விஜயன் மகன்.

இருதுபர்ணன் - (இ) அயுதாயுவன் மகன். சர்வகாமன் தந்தை. இவனுக்கு நளன் அசுவஹிருதயத்தை உபதேசித்து அவனி டத்தில் அûயஹிருதயத்தைத் தான் பெற்றான்.

இருநிதிதக்கிழவன் - கோவலன் தந்தை. இறந்ததாற்றாது துறவு பூண்டவன்.

இருபன் - பிரமமானச புத்திரருளொருவன். சனகசநந்தன சனற்சுஜாதசனற்குமாரரோடு பிறந்தவன். அவர்கள் ஐவரும் சிருஷ்டி செய்யவுடன்படாது மறுத்தமையால், பிர மா மீண்டும் மாPசியாதியர் ஒன்பதின்மரைப் பெற்றான். இவனை இருஷபன் என்றுஞ் சொல்வர்.

இருபு~ன் - இந்திரன்.

இருமலர்க்கண்ணம்மை - திருச்சாத்த மங்கையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

இரும்பிடர்த்தலையார் - கரிகாற்சோழன் மாதுலனார். இவர் அச்சோழனுக்கு மந்தி ரியாவும் புலவராகவுமிருந்தவர்.

இருஷகிரி - மகத தேசத்தில் வராகபரு வதத்துக்கெதிரிலுள்ளமலை.

இருஷபம் (1) சிவன் வாகனம் (2)
இடபம் நந்திதேவர் (3) ஒரிராசி

இருஷபன் - (1) நாபிமகன். இவனுக்குப் பரதன் முதலிய நூறுபுத்திரருளர். (2) உபரிசரவசு வமிசத்தன். (3) சுக்கிரிவன் சேனையில் ஒரு வாநரன். (4) இந்திரனுக் கச் சசிதேவியிடம் பிறந்த இளையமகன். சயந்தன் தம்பி (5) இருபன்.

இருஷிகள் - (இருஷி என்பதன் பொருள் சத்தியதரிசி என்பது) இருஷிகள் பிரமவி ருஷி, தேவவிருஷி, மகாவிருஷி, பரமவி ருஷ~p, காண்டவிருஷி, சுருதவிருஷி, இராஜவிருஷி எனவெழுவகையர். அவருள்ளே பிரமவிருஷிகளாவார் நிர்க்குணப்பிரமோபா சனையையே சாதித்து நிற்போர். இவர் கள் இருஷிகளுள்ளே அக்கிரபதமுடையர் வசிஷ்டர் முதலியோர் இக்கணத்தினர். தேவவிருஷிகளாவர். உலகத்துக்கு ஆன் மஞானோபதேசஞ் செய்து காக்கும் பொ ருட்டு இருஷிகளாக அவதரித்த தேவர் கள். நாரதன் கபிலன் முதலியோர் இக்க ணத்தர். மகாவிஷிகள் புத்திதத்துவங்கட ந்து மகத்துவம் வரையுஞ்சென்றோர். வியாசகர் முதலியோர் இக்கணத்தர். பரம விருஷிகள் ஆன்மபலத்தை நாடி உலக வின்பத்தை முற்றத்துறந்தோர். பேலர் முதலியோர் இக்கணத்தினர். காண்டவிரு ஷிகள் வேதத்தில் ஒவ்வொருகாண்டத் தில் வல்லுநராய்ச் சாமானிய சனங்களுக் கதனைப் போதிப்போர். ஜைமினி முதலி யோர் இக்கணத்தினர். சுருதவிருஷ~pகள் வேதங்களைச் சிரவணஞ்செய்து ஒவ் வொரு சாஸ்திரத்தை எடுத்துப் பிரசுரஞ் செய்தவர். வைத்திய சாஸ்திரத்தை எடுத் துப் பிரசுரஞ்செய்தவர். வைத்திய சாஸ்தி ரஞ்செய்த சுசுருதர்போல்பவர். இராஜவிரு ஷ~pகள் இராச்சிய முறைகாட்டி உலகியல் நிலைநாட்ட அவதரிப்போர். மரந்தாதா ஜனகன் முதலியோர் இக்கணத்தினர்.

எக்கருவி கொண்டும் எத் தனைச்சிறந்த மதியூகிகளுக்கும் காண்ட ற்கும் உணர்தற்கும் அளவிடற்கும் அரிய னவாய் மாயாசொரூமாய்த் தூலாநிலை முதற் சூக்கும நிலைவரையும் விரிந்து கிடக்கும். சராசரங்களினதும் அண்டகோடி களினதும் தத்துவ சொரூபங்களையெல் லாமுள்ளவாறு கண்டவர்களும் அவை களையுலகுக்கு வெளியிட்டவர்களும் இம் மகா விருஷ~pகளேயாவர். இருஷ~pகள் வாக்கு வெளியிட்டவர்களும் இம்மகா விருஷ~pக ளேயாவர். இருஷ~pகள் வாக்கு ஆரிஷமெனப்படும். யாவருரை பொய்க்கினுமாரிஷம் பொய்த்தலில்லை.

இருஷ~pகுலியை - இருû பர்வத்தினின்று பெருமொரு நதி.

இருஷிகை மகேந்திர பருவத்திலிருந்து இருஷீகை யாய்வதொரு நதி.
இருஷியசிருங்கன் - விபண்டபவிருஷிம னார். கலைக்கோட்டு;மகாவிருஷி என்று தமிழில் வழங்பப்படுவர்.

அங்கதேசத்தரசன் தனது நாட்டில் நெடுங்காலம் மழையில்லாமை யால் வருந்தும் போது இவ்விருஷி கால் பட்டால் தனது நாட்டில் மழையுண்டாமெ னச்சிலர் சொல்லக்கேட்டுச் சில பெண் களை அவரிடம் அனுப்ப, அவர் இதற்கு முன்னொரு காலத்தும் பெண்களை கண் டிலாதவராவராதலால் இவர்கள் இரண்டு கொம்புடையவர்களென அதிசயித்துப் பார்த்தார். அப்பெண்கள் அவரையுபசரி த்து எங்களாச்சிரமத்துக்கு வரவேண்டு மென்று பிரார்த்திக்க, எங்குளது உமதாச் சிரமம் என்றவர் கேட்ப, இவர்கள் இதோ விதோவென வஞ்சித்து அங்கநாடு கொண்டுபோயினர். உடனே நாடு மலிய மழை பொழிந்தது. அவ்வரசன் தனது புத்திரியை மணம்புரியும்படி வேண்ட அவருமிசைந்து மணம் புரிந்தார்.

இருpயமூகம் - சுக்கிhPவன் வாலிக்கஞ்சி மறைந்திருந்த மலை. இது கிஷ்கிந்தை க்கு சமீபத்திலுள்ளது. வாலி ஒரு சாப காரணமாக அம்மலைக்குப் போவதில்லை

இலங்கை - லங்காபுரி காண்க.

இலஞ்சிமன்றம் - காவிரிப்பூம்பட்டினத்து ஐம்மன்றங்களுள் ஒன்று. எந்நோயையும் நீக்குமியல்புடையது.

இலவணன் - லவணன் காண்க.

இல~Pமணன் ல~Pமணன் காண்க.
இலக்குமணன்

இல~Pமி ல~Pமி காண்க
இலக்கமி

இலாவந்தன் - அருச்சுனனுக்கு உலூபியி டம் பிறந்த புத்திரன்.

இலிங்கபுராணம் - அக்கினி கற்பத்திறுதி யிலே ஜீவர்கள் அடையும் சீலம், ஜசுவரி யம், இன்பம், மோûம் என்பவகைளை யும், அதி இரகசிய ஞானமாகிய சிவலிங் கங்களையும் விரித்துணர்துவது. பதினோ ராயிரங் கிரந்தமுடையது.

இல்லவன் - விப்பிரசித்திக்குச் சிங்கிகை யிடம் பிறந்த தானவன். வாதாபி தம்பி. அகஸ்தியரால் பஸ்மமாக்கப்பட்டவன். கந்தபுராணம் இவ்வில்லவனை அசமுகியி டத்துத் துருவாசருக்குப் பிறந்த புத்திரரெ னக் கூறும். இவன் தன் தம்பி வாதா வியை ஆட்டுருக்கொள்ளும்படி செய்து முனிவர்களைக் காணுந்தோறும் அவனை க்கறிசெய்து அவர்க்கமுதூட்டி உண்ட பின் அவனைக் கூவி அழைக்க அவன் அம்முனிவரை உடல்கிழித்துக் கொண்டு வெளியே வரும்படி செய்பவன்.

இழிகட்பெருங்கண்ணனார் - இவர் கடைச் சங்கப்புலவர்களுளொருவர்.

இளங்குமணன் - குமணன் தம்பி.

இளங்கொம்பை - (1) திருப்பறியலூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். (2) திருக்கருப்பறியலூரிலே கோ யில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

இளங்கோசர் - கொங்கு மண்டலத்தரசர்.

இளங்கோவடினள் - துறவுபூண்டிருந்த ஒரு சேரராஜா. சிலப்பதிகார நூலாசிரியர்.

இளஞ்செழியன் - கொற்கைநகரத்திருந்த வெற்றிவேற் செழியன்.

இளமூலையம்மை - திருவொத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமியர் பெயர்.

இளாலிருதவருஷம் - சுமேருவை சூழ்ந்தி ருக்கும் வருஷம். இது நவ வருஷங்க ளுள் ஒன்று. இது நன்னீர்ச்சமுத்திரஞ் சூழ்ந்தது.

இளாவிளை திரண விந்துவுக்கு அலம் இலாவிலை யையிடம் பிறந்த புத்திரி. விச்சிரவசன் பாரி. குபேரன் தாய்.

இளிபிளி - தசரதன் மகன்.

இளை - (1) தக்கன் மகள். கசியப்பன் பாரி. (2) வைவசுவதமநு புத்திரி. புதன் பாரி, புரூரவன் தாய்: இவள் வசிட்டரு டைய பிரயத்தனத்தாணுலும், விஷ்ணு அணுகிரகத்தினாலும் புருஷரூபம் பெற்றுச் சுத்தியுமனனாயினாள். (3) வசுதேவன் பாரி.

இளையான் குடிமாறநாயனார் - இளையா ன்குடியென்னுமூரிலே வேளாளர் குலத்து தித்த இச்சிவபக்தர் வறுமையாலுணவி ன்றி வருந்தியிருந்த ஒரு மழைக்காரிரவி லே, சிவன் ஓரடியவரைப்போல் அவர் வீட்டிற்சென்று அன்னம்வேண்ட, அவர் அடியவரையுபசரித்து இருக்கச் செய்து விட்டுத் தமது வயலிற்சென்று வித்திட்டி ருந்த நெல்லை வாரிக்கொண்டு வந்து மனைவியாரிடங் கொடுத்துச் சோறாக்கி அடியவர் கன்னமிடுவித்த பெருந்தகமை யைக்கண்ட அவ்வடியவர் தமது மெய் வடிவைக் காட்டி நாயனார் வறுமைநோ யையும் நிக்கியருளிப் போயினார்.

இறையனார் - அகப்பொருள் செய்த கடைச்சங்கப் புலவர்.

இறையார்வளையம்மை - குரங்கனின் மாடத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியர் பெயர்.

இனன் - சூரியன்.

இû”மதி - ஒருநதி. குசத்துவஜன் ராஜ தானியாகிய சாங்காசியபுரி இதன்தீரத்தி லுள்ளது. கபிலருடைய ஆச்சிரமம் இதன் கரைக்கண்ணது.

இû”வாகு - வைவசுவதமநு புத்திரன். விகுûp, நிமி, தண்டகன், முதலியயோர் இவன் புத்திரர். இவன் பெரிய வமிசத்தலைவன். அஜன், ரகு, ராமன் முதலியோர் இவன் வழிவந்தோர்.

ஈசானன் - (1) சிவன். அஷ்டமூர்த்திகளு ளொருவர். (2) அஷ்டதிக்குபாலகருள் ஒருவர். இவர் திக்கு வடகிழக்கு.

ஈசுவரராஜன் - கிருஷ்ணதேவராயர் பாட் டன்.

ஈசுவரன் - பகவன், சைவசமயிகள் ஈசத் துவத்தைச் சிவனுக்கும், வைஷ்ணவர்கள் விஷ்ணுவுக்குமாக்கி முறையே அம்மூர்த் திகளுக்குச் கைலாசமும் வைகுண்டமும் பதவிகளாக்குவர். ஸ்மார்த்தர் ஈசத்துவத் தைப் பிரமாவுக்காக்குவர்.

ஈழம் சோழ பாண்டிய நாடுகளுக் ஈழ தேசம் கத் தென்கீழ்த்திசையிலே சமுத்திரஞ் சூழ்ந்ததாகவுள்ள லங்கா தேசம். இதனிடத்தே திரிகோணமலை திருக்கேதீச்சரம் என்னும் தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களும், சைவரும் பௌத்தரும் குறான்மதத்தரும் தத்தம தென்று சென்று தரிசிக்கப் பெறுவதாகிய ஸ்ரீசைலமுமுள. பூர்வம், குபேரனும் பின் னர் இராவணன் முதலிய இராûசரும், பின்னர்ச் சோழரும், பின்னர்ப் பாண்டிய ரும், அவர்க்குப் பின்னர் மகததேசராஜ பரம்பரையில் வந்தோருமவர் வழி வந்த பௌத்தரும், இடையிடையே சோழபாண் டியருமரசுபுரியப்பெற்றது. இது தமிழிலே ஈழம் என்றும், வடமொழியிலே லங்காபுர மென்றும், சிங்களத்து வீபம் என்றும், சேரநாட்டாராலும் அராபியராலும் சேரத்து வீபமென்றும் வழங்கப்படும். சேரவமிச பாண்டியர் வென்றரசுபுரிந்த காலத்திலிந் நாட்டைத் தம்பெயர் விளங்கச் சேரத்து வீபமென வழங்கினர். இலங்கையிலிருந்து சிறைசெய்யப்பட்டுச் சென்று சேரநாட்டில் வசிக்கும் ஈழவர் என்றும் வழங்கப்படுகின் றது. சேரநாட்டவர் வாய்க்கேட்டு அராபி யரும் சேரத்துவீபமென்பாராயினர். சிங்கள த்துவீபமென்பதன் பொருள் பட்டைத்தீவு. (சிம்ஹளம் ஸ்ரீ பட்டை ஸ்ரீ லவங்கப்பட்டை)

ஈளினன் - (பு) ரைப்பியன்.

உக்கிரசர்மன் மேகத்தைச் சிறைசெய்த உக்கிரசன்மன் வனும், வேலெறிந்து கட லைவற்றுவித்தவனுமாய பாண்டியன். திரு விiயாடற் புராணத்திற் கூறப்பட்ட இக் கடல் வற்றுவித்த செய்தி சிலப்பதிகார மென்னுஞ் சமண நூலிலுங் கூறப்படுத லாலே அதன் நிகழ்ச்சி நன்றாக வலியுறு த்தப்பட்டதாயிற்று.

உக்கிரசிரவசன் ரோமகருஷ்ணன் புத்தி உக்கிரசிவன் ரன். சூதகுலஜன். இவன் சௌனாகதி இருஷ~pகளுக்குச் சகலபுரா ணேதிகாசங்களும் உபதேசித்தவன். ஒரு நாள் இவன் அம் முணிகணங்களுக்கு குபதேசம் பண்ணிக்கொண்டிருக்கையில் பலராமர் வந்தார். அவருக்கு இவன் உபசாரம்பண்ணாமையாற் கோபித்துத் தமது கையிலிருந்த தருப்பையினால் இவனைக் கொன்று சென்ற போது அங்கி
ருந்த முனிகணங்கள் வேண்ட அதற்கிர ங்கி மீண்டும் இவனையெழுப்பி போயினர்.

உக்கிரசேனபாண்டியன் - இராஜபயங்கர பாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன். இவன் காலம் கடைச்சங்க காலம்.

உக்கிரசேனன் - (1) (ய) மதுராபுரியரசன். தேவகன் தமையன். கம்சன் தந்தை (2) (கு) அபிமன்னியன் மகன். ஜனமேஜன் தம்பி. (3) (ய) கிருஷ்ணன் வமிசதனான சவாகுமகன்.

உக்கிரபாண்டியன் - கடல்சுவற வேல்வி ட்ட திருவிளையாடல் கண்ட பாண்டியன். இவன் சோமசுந்தர பாண்டியன் மகன்.

உக்கிரப்பெருவழுதி - கலையுணர் புல மையிற்றலைமையோனாகிய விதிமுறை வழாது முதுநிலம் புரக்கும் பெருந்தகை உக்கிரப் பெருவழுதியென்னும் தன்னிகரி ல்லா மன்னவர். பெருமானென்று முன் னோராற் புகழப்பட்ட ஒரு பாண்டியன். இவன் கடைச்சங்ககாலத்திலே விளங்கிய வன்.

உக்கிரவருமன் - இவன் மனைவி காந்தி மதி. மாமன் சூரியகுலத்துச் சோமசேக ரன். உக்கிர குமாரனென்பதுமிப் பாண்டி யன் பெயர்.

உக்கிரன் - சிவன். அஷ்டமூர்த்திகளு ளொருவர்.

உக்கிராயுதன் - (பு) கிருதி மைந்தன். சந்தனு இறந்தபின் அவன் பாரியாகிய சத்தியவதியை அபகரிக்க எத்தனித்து வீ~;மராற் கொல்லப்பட்டவன்.

உசீநரன் - மகாமநுவின் மூத்த புதல்வன் சிபிதந்தை. இவன் தேசம் உசீநரம்.

உசீரபீசம் - அவீûpத்து மகனாகிய மரு த்துமகாராஜன். யாகஞ்செய்தவிடம்.

உசேநசு - தேவசிரசு மகன்.

உச்சிவரதநாயகர் - திருக்கற்குடியிலே கோயில் கொண்டிருக்குந் சுவாமி பெயர்.

உச்சைச்சிரவம் - தேவர்கள் அமிர்தங் கடைந்தபொழுது அச்சமுத்திரத்தில் மிதந்த குதிரை. இந்திரன் அதைப்பெற்று த்தனக்கு வாகனமாகக் கொண்டான். குதிரைகளுக்கு அரசு. அமிர்தமதனங் காண்க.

உச்சயினி மாளவதேச ராஜதானி. உச்சினி அநேக அரசருகச் சயங் கொடுத்த நகரமாதலின் அப்பெயர்பெற் றது. அவந்தியெனவும்படும். இங்கே சிவன் மகாகாளேசுவரர் என்னும் மூர்த்தி யாய் அதிப் பிரசன்னராய் விளங்குகின் றார். இங்கே ஒரு மகாகாளியிருந்து வேண்டியவரங்களைப் பக்தருக்கு அருளு கின்றாரென்பது பிரசித்தி. இங்கே விக்கிர மார்க்கன் முதலிய அரசர் வழிமுறை விளக்கினார்கள்.

உஞ்சை - உச்சினி மாநகரம்.

உதக்சேனன் - விஷ{வக்சேனன் மகன்.

உதங்கன் - பைலவவிருஷ~p சீ~ஷராகிய ஓர் இருஷ~p. இவர் குரு பாரிக்காகப் பௌ~pயமாக ராஜாவினது பாரியிடத்தி லே குண்டலம் பெற்றுக்கொண்டுபோகும் போது வழியிலே அதை தûகன் என்னும் நாகராஜன் அபகரிக்க, அதனை அதிப்பிரயாசத்தோடு மீண்டுக்கொண்டு போய்க் குருபத்தினியிடம் கொடுத்தவர். தûனைக் கொல்லநினைந்து ஜனமே ஐயனை சர்ப்பயாகஞ்செய்ய ஏவியவரும் இவரே. இவர் வேதனக்கும் சீ~ர்.

உதத்தியன் - அங்கிரசன் மகன். பிருஹ ஸ்பதி சகோதரன். பாரிமமதை. மகன் தீர்க்கதமன்.

உதயகிரி - (1) இருûகிரி. (2) நெல்லூ ர்நாட்டின் கணுள்ள ஒருமலை.

உதயணன் - (1) சகஸ்திரானிகன் மகன். ஜனமேஜயன் பௌத்திரன். இவன் நகரம் கௌவுசாம்பி. இவனைச் சண்டமகாசேன ன் வஞ்சித்துச் சிறைசெய்தபோது இவன் மந்திரி இவனையும், சண்டமாகசேனன் மகன். வாசவதத்தையையும் உபாயஞ் செய்து கொண்டேகினான். (2) இவன் வமிசத்திலே வந்த சதானிகன் புத்திரன். இவனும் கௌசாம்பிக்கரசனாகிப் பின்னர் க்காலத்திலே புத்தருக்குச் சீ~ராகி முடிதுறந்து பௌத்த முனியானவன். இவ னும் பத்தரும்சற்றேறக்குறைய ஒரே கால த்தவர்கள். வயசினாலும் சமானர். (3) அகஸ்தியன்.

உதயாசுவன் - அஜாத சத்துரு பௌத்தி ரன். சைசுநாகர்களுள் ஒருவனாகிய மகதேசராசா. இவன் குசுமபுரம் என்னும் பாடலி புத்திரநகரை நிருமித்தவன்.

உதாவசு - (மி) ஜனகன் மகன்.

உத்தமன் - (1) உத்தானபாதனுக்குச் சுருசியிடம் பிறந்த புத்திரன். இவன் வேட்டம்போனபோது ஒருûனால் கொல் லப்பட்டவன். இவன் தாயும் அஃதறிந்தவு டனே இறந்தாள். (2) மூன்றாம் மநு.

உத்தமோஜன் - துருபதன் மகன். திட்ட த்தியுமனன் தம்பி. பாரதயுத்தத்திலே பதி னெட்டாநாளிரவு அசுவத்தாமனால் நித்தி ரைக் காலத்தே கொல்லப்பட்டவன்.

உத்தரகீதை - இது பாரதத்தில் ஒரு பாகம். வேதாந்தம் கூறுவது.

உத்தரகோசமங்கை - பாண்டிநாட்டின் கண்ணதாகிய ஒரு சிவஸ்தலம். மாணிக் கவாசகருக்குச் சிவபிரான் தரிசனங்கொடு த்த ஸ்தலம்.

உத்தரசுகு - போக பூமியிலொன்று.

உத்தரகௌத்தன் - வாரணாசி நகரத்தர சன்.

உத்தரமீமாம்சை - சைமினி முனிவர் செய்த வேதாந்த தரிசனம்.

உத்தரன் - விராடன் மகன். இவன் பாண்டவர்களது அஞ்ஞாதவாச காலத்தில் விராடனது பசுநிரைகளைக் கவர்ந்த கௌரவர்களை எதிர்த்தபோது ஆற்றாது பின்வாங்கிப்பின் அர்ச்சுனன் சகாயத்தால் அவர்களைவென்று நிரைமீட்டவன்.

உத்தரை - விராடன் மகன். உத்தரன் தந்கை. அபிமன்னியன் பாரி. பாPûpத்துவி னது தாய். இவளுக்கு அர்ச்சுனன் அஞ் ஞாதவாசஞ்செய்தபோது பிருகந்நளை என்னும் நாமம் பூண்டு நாட்டியங் கற்பி த்தான். அசுவத்தாமன் பாண்டவவமிசம் உலகில் எங்கிருந்தாலும் தேடிக்கொல் லென்று விடுத்தபாணம், உத்தரை கர்ப்ப த்தில் நுழைந்து பாPûpத்தும், கிருஷ் ணாநுக்கிரகத்தால் அகப்படாது போன மையால் அக்கருப்பத்திற் பிறந்த குத்திரன் பாPûpத்து எனப்பெயர்பெற்றான்.

உத்தவன் - (ய) (1) பிருகஸ்பதிசீஷன். வாசுதேவன் தம்பியாகிய தேவபாகன் மகன். இவன் கிஷ்ணணனுமதியோடு வதரிகாச்சிரமஞ்சென்று அங்கே துறவு பூண்டிருந்தவன். இவன் கிருஷ்ணனுக்கு மிக்க நண்பினன் (2) நகுஷன் மகன்.

உத்தாரகன் - (1) (ரி) உகமன்னியு. இவருடைய குருபக்தியை மெச்சி அச்சு வினி தேவர்கள் இவர் குரு தௌமியரது லோகதந்தத்தை மாற்றிச் சுவர்ணதந்தமா க்கினார்கள். இவர் மகன் சுவேதகேது. இவ்வுபமன்னியு மகாமுனிவர் வியக்கிர பாதர் குமாரர். சிவபிரானால் வருவித்தரு ளப்பட்ட பாற்கடலையுண்டவர். கிருஷ்ண ருக்குச் சிவதீiû செய்தவர்.

உத்தாலகன் - அருணன் புத்திரராகிய இவர் இருக்கு வேதத்திற் பிரஸ்தாபிக்கப் படுவர்.

உத்தானபாதன் - சுவயாம்புவ மநுவுக்குச் சதரூபையிடத்திற் பிறந்த இரண்டாவது புத்திரன். இவனுக்குச் சுநீதி சுருசியென இருவர் பாரியர். சுநீதியிடத்துத் துருவ னும் சுருசியிடத்து உத்தமனும் பிறந்தார் கள்.

உபகு - (மி) சத்தியரதன் மகன்.

உபகுப்தன் - உபகு மகன்.

உபசுருதி - ஒருவன் தான்விரும்பிய காரியத்தைச் சிந்தித்திருக்கும் போது கேட்கப்படுகின்ற திவ்வியவாக்கு. அசாPரி. ஆகாயவாணி.

உபசுருத்தியதிதேவதை - உபசுருதிக்கு அதிதேவதை. வாணி.

உபதானவி - வைசுவாநரன் மகள். இராணியாûன்பாரி.

உபதேவி - தேவகன் மகள். இவள் மக் கள் கற்பவிருஷ்டி முதலிய பதின்மர்.

உபநந்தன் - (ய) வாசுதேவனுக்கு மதிரையிடத்துப் பிறந்த மகன். நந்தன் சகோதரன்.

உபநிஷதங்கள் - பிரம வித்தையைப் பிரதிபாதிக்கின்ற தேவசிரசுகள். அவை நூற்றெட்டு. அவற்றுள் ஈசாவாசியம், கேணம், கடவல்லி, பிரசினம், முண்டகம், மாண்டூக்கியம், தைத்தீரியம், ஐதரேயம், சாந்தோக்கியம், பிருகாதாரண்ணியம் எனப்பத்தும் முக்கியம்.

உபபிலாவியம் - பாண்டவர்கள் பாரதயுத் தத்துக்காக அமைத்த பாசறை.

உபமன்னியன் - உத்தாரகன்.

உபாஜன் - இவன் கங்காதீரத்திலே வானப்பிரஸ்தாச்சிரமத்தை அனுஷ்டித்த வொரு பிராமணன். யாஜனுடன் இவன் துருபதனுடைய யாகத்தை நிறைவேற்றின வன்.

உபஸ்மிருதிகள் - அறநூல்கள். இவை கண்ணவம், கபிலம், லோகிதம், தேவலம் காத்தியாயனம், லோகாûp, பதுஸ்மிருதி, சாதாதபம், அதிஸ்மிருதி, பிரதேசம், தûம், வி~;ணு, விருத்தவிஷ்ணு, விருத் தமநு, தௌமியம், நாரதம், பௌலஸ்தி யம், உத்தராங்கிரம் எனப்பதினெட்டு.

உபேந்திரன் - கசியப்பிசாபதியும், அதிதி யும், விஷ்ணு தங்களுக்குப் புத்திரராகப் பிறத்தல் வேண்டுமென்று தவங்கிடந்தமை யால் விஷ்ணு அவர்களுக்கு வாமனன் என்னும் பெயரோடு புத்திரராகப் பிறந்தார் அவர் இந்திரனுக்குப் பின் பிறந்தமை யால் உபேந்திரன் எனவும் பெயர்பெறுவர்

உப்பூரிகுடிகிழார் - இவர் உருத்திரசன் மர்தந்தை.

உமாதேவி (1) ஞானமுமருளுமாகிய உமை சிவசக்தி. சிருஷ்டி செய்ய க்கருதுமவசரத்தில் இச்சத்தி வெளிப்படும் பரியமித்தபிரணவசொரூபமே உமாதேவி யார்க்கு வடிவம். தன்னிடத்திலே புத்திரி யாராகப் பிறத்தல் வேண்டுமென வரங்கிட ந்து தûன் இவ்வுமாதேவியாரைப் புத்தி ரியாகப் பெற்றான். உமாதேவியாருக்குத் தாûhயணியென்னும். பெயர்வந்தது இது பற்றியேயாம். (2) உருத்திரமூர்த்தி சக்தி.

உமாபதிசிவாச்சாரியார் - கொற்றவன் குடியிலே இருந்த தில்லைவாழந்தணரில் ஒருவர். மறையானசம்பந்த சிவாசாரியரது மாணாக்கர். இவருஞ் வைசசித்தாந்த சா ஸ்திரோபதேசஞ் செய்த சந்தானா சாரியரில் ஒருவர்.

உமாபதி - சிவன்.

உமாபதீசுவரர் - திரு ஊறலிலே கோயி ல் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

உமாமகேசுரநாதர் - திரு வல்லத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.
உமையம்மை - (1) திரு அஞ்சைக்கள த்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியர் பெயர். (2) திரு ஊறலிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

உருசிரவன் - சத்தியசுவன் மகன்.

உருத்திரசன்மனார் - உப்பூரி குடி கிழார் மகனார். அகநானூறு தொகுத்தவர் இவ ரே. குமாரக்கடவுளே உருத்திரசன்மராக வந்து பிறந்தாரென்பர். இறையனாரகப் பொருளைரை செய்த நற்பத்தொபதின்மரு ரையுமரங்கிற்கேட்டு நக்கீரருரையையே அப்போது ஐயாண்டுநிரம்பா மூங்கைப்பிள் ளையாகிய உருத்திரசன்மர் மெச்சினர்.

உருத்திரபசுபதிநாயனார் - தலையூரிலே பிறந்து இரவும் பகலும் தண்ணீரில் நின் று உருத்திரஞ் சொல்லிச் சிவபக்தி பண்ணியவர்.

உருத்திரன் - (1) சிவன். (2) ஸ்ரீகண்டரு த்திரர். (3) காலருத்திரர். (4) சிவனால் அதி~;டிக்கப்பட்டுள்ளஎண்ணில்லாத உரு த்திர கணங்களும் இப்பெயரால் வழங்கப் படும். வேதத்திலே “உருத்திரன் ஒருவ னே இரண்டானோனில்லை” என்பது முத லியவையாக வரும் வசனங்கள். சிவனை க்குறித்தன. சங்காலகிருத்தியம் செய்வது யாது சித்து அச்சித்து உருத்திரன் எனப் படும். இச்சங்காரம் அநந்தபேதமாதலின் அப் பேதந்தோறுமொவ்வென்றாக விளங் குஞ் சிந்துக்களும் அநந்தபேதருத்திர கணமெனப்படும். (5) கனகசிசயற்குத் துணையாயினானோரரசன்.

உருப்பசி - ஊர்வசி காண்க

உருமிளை - யமன் பாரி

உருவற்கன் - (ய) வசுதேவனுக்கு இளையிடம் பிறந்த மகன்.

உரையாசிரியர் இளம்பூரணர் - தொல்ல காப்பியத்துக்குரை செய்த ஆசிரியர்களு ள் ஒருவர். உரையாசிரியரென வழங்கப் படுபவர்.

உலகநாயகி - திருநின்றியூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

உலூகன் - (1) இந்திரன் (2) சகுனி மகன். சகாதேவனாலே கொல்லப்பட்ட வன். இவன் குருNûத்திரத்திற் கௌரவ பாண்டவர்கள் யுத்தசந்நத்தராய்ச் சேர்ந்த போது பாண்டவர்களிடத்தே துரியோதன னாலே தூதாக அனுப்பப்பட்டவன்.

உலூபி - நாககன்னிகை. வாசுகி மகள். இவளிடத்தில் அர்ச்சுனனுக்கு இலாவந் தன் பிறந்தான்.

உலோகாயதன் - ஈசன், கன்மம், ஆன்மா என்பன இலவாமென்றும், மகளிரிடத்தின்ப மொன்றுமே பொருளாமென்றுங் கூறுங்சம யவாதி.

உலோச்சனார் - இராசய சூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்னுஞ் சோழனைப் பாடிப் பரிசு பெற்ற ஒருபுலவர். அகநானு றுபாடியபுலவருள்ளுமொருவர்.

உள்ளமுடையான் - தமிழ்ச்சோதிஷ நூல் களுள்ளே இது சிறந்த நூல். இஃது இற் றைக்கு அறுநூற்றப்தாறு வரு~ங்களுக்கு முன் செய்யப்பட்டது.

உறந்தை - உறையூர்.
உறையூர் நிசுளாபுரி - காவிரியின்றென் கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.

உறையூரேணிச்சேரி - ஒரு சிற்றூர். உறையூரெல்லையிலுள்ளது.

உறையூர் - சோழருடைய பஞ்சராஜதானி களுளொன்று.

உறையூர்முது கூற்றனார் - இவர் கடைச் சங்கப் புலவர்களுளொருவர்.

உற்கசம் - இது ஒரு புண்ணிய தீர்த்தம். தவுமியரைப் பாண்டவர்கள் புரோகிதராக அவரித்தவிடம்.

உற்சலம் - பஞ்ச கௌடதேசங்களுள் ஒன்று. ஒட்டிரதேசமெனவும் படும்.

உற்கலன் - துருவன் மகன். பாலியத்தி லேதானே ஞானியாகி ராச்சியத்தைத்துறந் துபோணவன். வற்சரன் இவன் தம்பி.

உற்கன் - சயன் மகன்.

உற்பலாவதி - சுராஷ்டிரன் பாரி. தாமசம நுவுக்குத்தாய். நிர்விருதவிருஷ~p சாபத் தால் இவள் மிருகமாகி சுராஷ்டிரன் பரிசத்தால் கருப்பந் தாங்கினவள்.

உன்மத்தன் - மாலிய வந்தன மகன்.

உன்முகன் - சû”ர்மனுவுக்கு நடுவலை யிடம் பிறந்த புத்திரன். பாரி புஷ்கரிணி. மக்கள் அங்கன், சுமனுசன், கியாதி, கிருது, அங்கிரசன், சுயன்.

உஷாபதி - அநிருத்தன்.

உஷை - (1) வாணாசுரன் மகள். அநிரு த்தன் மனைவி. (2) சூரியன் பாரி.

ஊங்கனூர் - சேரநாட்டிற் கடற்கரைகண் ணதோரூர். இதன் பங்கமாகக் கடலின் வஞ்சத்தால் முளைத்துநின்ற ஒரு கடம்ப மரத்தைச் சேரனெருவன் வெட்டினான்.

ஊசிகன் - (ய) கிருதிபுத்திரன்.

ஊர்ச்சஸ்வதி - பிரியவிரதன் மகள். சுக்கிரனது மனைவி. தேவயானை.

ஊர்ச்சிதன் - (ய) கார்ந்த வீரியார்ச்சுனன் மகனாகிய சூரன்.

ஊர்ச்சை - வசிட்டன் பாரி.

ஊர்த்ததாண்டவர் - திரு ஆலங்காட்டிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

ஊர்மிளை - சகர மகாராசாவினது தத்த புத்திரி. இவள் தன்பர்த்தாவாகிய லû” மணன் ராமரோடு வனம்போய் மீண்டு வருங்காறும் நித்திரை தெளியாதிருந்தா ளென்றும், லட்û”மணன் நித்திரை சிறிதும் இல்லாதிருந்தானௌ;றும் இதிகா சம் கூறும்.

ஊர்வசி - ஒரப்சரப்பெண். நரநாராயணர் கள் பதரிகாச்சிரமத்திலே தவம் செய்து கொண்டிருக்கையில் அவர்கள் தவத்தை ப்பங்கஞ் செய்ய நினைத்துத் தேவதாசி கள் சென்றுமுயன்றும் வாய்க்கப்பெறாது நின்றபோது நாராயணன் அவர்களுடைய அழகைக்குறைக்கு நிமித்தமாக அவர்களி னுஞ் சிறந்த பெண்களைத் தமது தொடையினின்றும் தோற்றுவித்தான். தொ டையில் இவள் முதற் பிறந்தமையால் ஊர்வசி என்னும் பெயர் பெற்றாள்.

ஊர்வசன் - சுசி மகன்.

ஊர்வன் - இவன் அத்தியுக்கிரதவஞ் செய்யும்போது நாரதாதி தேவ இருஷ~p களும் வந்து ஒரு புத்திரனை உற்பத்தி செய்து தருகவென்ன ஒரு நாணற்கூச்சத் தைக் கையிலெடுத்துத் தனது தொடையை ஓமாக்கினி மேல் நிறுத்தி அக்கூர்ச்சத்தால் அத் தொடையை குடைந்தமாத்திரத்திலேவுவாலாமாலியென்னும் புத்திரன் பிறந்தான். அத்தருணத் தில் பிரமா பிரசன்னமாகி இப்புத்திரனை சமுத்திமத்தியில் வடவாமுக ரூபமாக இருக்குமாறு செய்கவென்று வேண்ட அப்படியே செய்தவன். சுவாலாமாலி ஓளர்வன எனவும்படுவன். அவனுக்கு ஆகாரம் சலம்.

எச்சதத்தன் - தண்டீசர் தந்தை.

எதிர்கொள்பாடி - சோழநாட்டிலே காவிரி க்கு வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

எயிலூர் பாண்டிய நாட்டகத்ததோரூர்.
எயில்

எல்லப்பநாவலன் - தமிழிற் சௌந்திரியல கரி செய்தவன்.

எல்லன் - குன்றத்தூரிலிருந்த ஆற்றூர்ப் பரமேசுரன் என்போன் மகன். இவன் தமிழ் வல்லோர்க்குப் பெருநிதி வழங்கி யும் தன் மீது பட்சமுடையனாயிருந்த பாணன் இறந்தபோது அவனுடலைச் சுமக்கப் புகுந்தும் பெரும் புகழ் படைத்துத் தொண்டைநாட்டில் விளங்கிய ஒரு பிரபு. இவன் பெருமை தொண்டை மண்டலசதகத்தாற் புலப்படும்.

எழினி அதிகமான் - குதிரைமலையைத் தன்னத்தேயுடைய ஒரு சிறுநாட்டுக்கதிப னாயிருந்த ஒரு வள்ளல். “ஊராதேந்திய குதிரைக்கூர்வேற் - கூவிளங் கண்ணிக் கொடும்பூணெழினியும்” எனச் சித்திரனாற் பாடப்பட்டவன்.

எழித்தறிந்தநாதர் - திரு இன்னம்பரிலே கோயில் கொண்டிருக்குந் சுவாமி பெயர்.

எறிச்சலூர்மலாடனார் - இவர் கடைச்சங்க ப்புலவர்களுளொருவர்.

எறிபத்தநாயனார் - இவர் சிவகாமியாண் டார் சுவாமிக்குச் சாத்தக் கொண்டு சென்ற புஷ்பங்களைப் புகழ்ச்சோழநாய னாருடைய யானையானது பறித்துச் சிந் தியது கண்டு ஓடிச்சென்று அதன் துதிக் கையை வாழினால் வீசினவர். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் தமது யானைசெய்த குற்றத்துக்காகத் தம்மையும் வெட்டுக வென்று தமது வாளைக் கொடுக்க எறிப த்தர்வாங்கித் தமதூட்டியை அரிய எத்த னித்தார். அப்பொழுது பரமசிவனது திரு வருளாலோர் அசாPரி உண்டாக யானையு முயிர்பெற்ழெற இருவரும் சுவாமியைத் துதித்துப் போயினர். இவர்க்கு ஊர் கருவூர்.

ஏகசக்கரபுரம் - இது பாண்டவர்களும் குந்தியும் அரக்குமாளிகை ஆபத்துக்குத் தப்பி பிராமண வேஷம் பூண்டு போய்ச் சேர்ந்த அக்கிரகாரம். இங்கிருக்கையில் பகாசுரன் வீமனால் கொல்லப்பட்டான். இப்பிராமண வே~த்தோடேயே துருபதபுர ஞ்சென்று பாண்டவர்கள் திரளெபதியை விவாகஞ்செய்தார்கள்.

ஏகசக்கரன் - தனு புத்திரருளொருவன்.

ஏகதந்தன் - விநாயகக்கடவுள்.

ஏகதன் - பிரமமானச புத்திரருளொருவன்.

ஏகபாதன் - அஷ்ட வக்கிரன் மகன்.

ஏகபிங்கன் குபேரன்.
ஏகபிங்களன்

ஏகம்பவாணன் - ஆற்றூரில் விளங்கிய ஒருவேளாண் பிரபு. சிறுவயசிலே தந்தை தாய் இறந்து போக ஏகனென்னும் பண் ணையாளால் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து கம்பரிடம் கல்வி கற்று கல்விச் செல்வங் களால் ஒப்பாரின்றிச் சேரசோழபாண்டியர் களுக்கு மிக்க நண்பினனாய்த் தமிழ்வித் வான்களுக்கும் யாசகருக்கும் கற்பகதரு வைப் போல விளங்கினவன்.

ஏகலன் - வசுதேவன் தம்பி. தேவசிரவன் மகன்.

ஏகலவ்வியன் துரோணாசாரியரிடம் போய் ஏகலவன் த்தனக்கு வில்வித்தை கற்ப்பிக்குமாறு வேண்ட, நீசனாதலின் கற்ப்பித்தல் கூடாதென்று மறுத்தபோது அவரைப்போலவோரோவியந் தீட்டி அதை க்குருவாக வைத்துத் தானேகற்றுத் தேர் ந்த ஒரு கிராதன். அவன் அவ்வித்தை யைத் தேர்ந்து கொண்டபின்னர்த் துரோ ணாசாரியரிடஞ் சென்று தான் கற்றவரலா ற்றைச் சொல்ல அவர் அதற்காகத் தûp ணைதருகவென்றார். அவன் என்ன வேண் டுமென்ன, துரோணர் வலக்கைப் பெரு விரல் தருகவென்றலும் அஃது ஈந்து போயினான்.

ஏகன் - ஏகம்பவாணனை அளவிறந்த திர வியத்தோடு தன்னிடத்து ஒப்பித்திறந்த ஏகமபவாணன் தந்தைசொல்லை அற்பமே னும் வழுவாமற்காத்த சிறுவனை முற்ப்ப டவைத்த பண்ணையாள். இவன் சாதியி லேபறையனாயினும் எசமான் பக்திற் சிறந்தவன்.

ஏகாம்பரநாதர் - திருவேகம்பத்திலே கோ யில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

ஏமாங்கதம் - சீவகன் தேசம்.

ஏயர்கோன் கலிக் காமநாயனார் - திருப் பெருமங்கலத்திலே பிறந்த வேளாளரா கிய இவர் சூலைநோயால் வருந்துகை யில் பரமசிவன் அவருக்கு கனவிலே தோன்றி, இது சுந்தரமூர்த்தியாற்றீருமென் றருளிச் சுந்தரரையும் மேவிப்போக சுவா மியைப் பரைவையிடத்துத் தூதுசெல்லக் கேட்ட சுந்தரனால் இந்நோயைப் போக்கு வதிலும் நானே அந் நோயைப்போக்கு வேன் எனச்சொல்லி வாளையெடுத்து வயிற்றைப்போழ்ந்துயிர்துறந்த வைராக்கி யபத்தர். பின்னர்ச் சுவாமியருளாலுயிர் பெற்றுச் சுந்தரோடு நட்பு கொண்டவர்.

ஏலவார் குழலியம்மை - திரு இரும்பூ ளையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

ஏனாதிநாயனார் - எயினனூரிலே சான்றார் மரபிலே பிறந்த ஒரு சிவபத்தர். நீறு பூசி யவர்களைக் கண்டால் அவர்களைச் சிவனென மதிக்குமியல்பினர். படைத்தொ ழிலிற் பேராண்மை யுடையவராயிருந்தும் தம்மை எதிர்த்த வதிசூரனென்பவன் விபூ திதரித்துவந்து சமர் புரிய அவனைக் கொல்ல மணம் பொருந்தாது அவன்கை யாலேதாமிறந்தவர்.

ஏனாதி - முன்னுள்ள தமிழ்நாட்டரசர் தம்மாலபிமானிக்கப்பட்டுத் தங்கீழ் வாழும் பிரபுக்களுக்குச் சூட்டும் பட்டங்களுளொ ன்று.

ஏனாதிதிருக்கிள்ளி - ஏனாதிப் பட்டம் பெற்றுவிளங்கிய ஒரு வள்ளல். இவன் சிறப்புப் புறநானூற்றிற் கூறப்பட்டுள்ளது.

ஐத்திரேயன் - ஜனமே ஜயனுக்குப் பட் டாபிஷேகஞ் செய்தகுரு.

ஐந்தவர் - கசியபகோத்திரத்தானாகிய இந்துவென்னும் அந்தணன், கலைதேர் புலவர் பதின்மரைத்தருகவென்று சிவன் பால் வரங்கிடந்து பெற்ற புத்திரர். இவர் பதின்மரும் பிரமபதம் பெற்றுச் சிருஷ்டி செய்தவர்.

ஐயடிகள்காடவர் கோனாயனார் - தொண் டைநாட்டிலே பல்லவராச வமிசத்துதித்து ச் செங்கோல் நடத்திய ஓரரசர். இவர் அரசாட்சி துன்பமயமெனக்கருதி அதனை வெறுத்துப் புத்திரனை அரசனாக்கிச் சிவ தொண்டையே மேற்கொண்டு ஸ்தல ங்டோறுஞ் சென்று, தரிசனம் திருப்பணி முதலியன செய்து கொண்டிருந்து சிவபத மடைந்தவர். கோயில் வெண்பாப்பாடிய வரும் இவரே.

ஐயூர் - மூலங்கிழார், முடவனரென்னும் புலவர்களைத் தந்தவூர்.

ஐயனார் ஹரிஹர புத்திரன். சிவன் ஐயன் மோகினி ரூபங்கொண்டு நின்ற விஷ்ணு வைக் கூடிப்பெற்ற புத்திரன். ஐயன் பாரி புஷ்கலை.

ஐயை - மாதரிமகள். இவள் கண்ணகி பால்மிக்க அன்புள்ளவளாயிருந்தமையால் தேவநீதியோடு சேரநாடு சென்று கண்ண கிகோயிலை அடைந்தவள்.

ஐராவதம் - கிழக்கதிக்கு யானை. அமிர் தங்கடைந்தபோது பாற்கடலிலெழுந்த யானை. அதனை இந்திரன் வாகனமாகக் கொண்டான். அமிர்தமதனங்காண்க.

ஐராவதி - இமயத்தினது தென்பாரிசத்தி லுற் பத்தியாகிச் சந்திரபாகையோடு கலக்குமநதி.

ஐலவின் - இலபிலன் மகன்.

ஒட்டக்கூத்தர் - ஆயிரத்திருபது வருஷங் களுக்கு முன்னே சமஸ்தானத்திலே விளங்கிய ஒரு தமிழ்ப் புலவர். இவர் பாடிய ராமாயணத்தில் உத்தரகாண்டம் மாத்திரமே சர்வாங்கீகாரமாகிக் சேர்க்கப் பட்டது. இவர் ஜாதியிற் கைக்கோளர்.

ஒப்பிலாநாயகி - திருநெடுக்களத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

ஒப்பிலாமுலையம்மை - திருஆவடுதுறை யிலே கோயில் கொண்டிருக்கும் தேவி யார் பெயர்.

ஒல்லையூர்கிழான் - தொடித்தலை விழுந் தண்டினாராற் பாடப்பட்ட பெருஞ்சாத்தன் தந்தை.

ஓட்டிரம் - உற்கலதேசம்.

ஓணகாந்தன் - ஓரசுரன். இவன் திருக்க ச்சி ஒணகாந்தன்றளியில் சிவனைப் பூசித் துப் பெரும்பேறு பெற்றவன்.

ஓணகாந்தேசுவரர் - திருஒணகாந்தன்றளி ளிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

ஓய்மான்நல்லியக்கோடன் - மாவிலங்கை யென்னுமூர் சிற்றரசன். நன்னாகராற் பாட ப்பட்டபிரபு. சிறுபாணாற்றுப்படைத்தலை வன். மாவிலங்கை கோதாவிரியாற்றருகே யுள்ளதென்பர்.

ஓய்மான்வில்லியாதன் - மாவிலங்கையர சன். ஒய்மான்நல்லியக்கோடனுக்குப் பின் அரசுபுரிந்த வீகையாளன்.

ஒரம்போகி - ஐங்குறு நூற்றில் முத னூறுபாடிய புலவர். ஒரேர்போகியெனவும் பாடுவர்.

ஓவியநூல் - ஓவியமுறை கூறும் நூல். இது சங்கத்தார் காலத்தது.

ஓ~தீசன் - சந்திரன்.

ஒளசனசம் - உப புராணங்களுள் ஒன்று.

ஒளதேயர் - உசீநரன் மகனாகிய நிரு கன் வமிசத்தர்.

ஒளர்வன் - (1) ஊர்வன் மகன். (2) சிய வனன் மநுகன்னிகையிடத்து பெற்ற இருஷ~p. இவனுக்கு நூற்றுவர் புத்திரர். அவருள் இருஷ~pகள் மூத்தோன்.

ஒளவையார் - சோழியப் பிராமணராகிய பகவனாரென்பவருக்கு ஆதியென்பவள் வயிற்றிலே பிறந்து, காவிரிப்பூம்பட்டினத்தி லே பாணர் சேரியிலே வளர்ந்து தமிழ்ப் புலமையுடையராய் விளங்கிய மாதுசிரோ மணியார். பகவனாரும் ஆதியும் தம்முள் செய்துகொண்ட சங்கேதப்படி, பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் அஃதது பிறக்கு மிடத்திலே வைத்துவிட்டுச் செல்வாராயி னர். ஒளவையைப் பெற்றவுடனும் தாய் “இச்சிசுவையெவ்வாறுவிடுத்துப்போவேன்”என்றிரங்கிநின்றாள். அப்பொழுது ஒளவை யாராகிய அச்சிசு தாய்முகத்தை நோக்கி “எவ்வுயிருங்காப்பதற்கோ hPசனுண்டோ வில்லையோ - அவ்வுயிரில் யானுமொன் றிங்கல்லேனே - வவ்வி - அருகு கொண் டிங்கலைவனேன்னாய் - வருகுவது தானேவரும்” என்னும் பாடலை அற்புத மகாக்கூறத் தாய் அதுகேட்டு அவ்விட த்தினின்றும் நீங்கினாள். ஒளவையாருக்கு அதிகமான், திருவள்ளுவர், கபிலர் என மூவர். சகோதரரும் உறுவை, உப்பை, வள்ளி என மூவர் சகோதரிகளுமுளர். ஒளவையார் தமிழ்ப்புலமையோடு மதிநுட் பமுடையவர். இல்லறவொழுக்கத்தை விரும்பாதுதவத்தையே பாரமார்த்திகமாக க்கொண்டொழுகினவர். சிறிது காலம் மதுரையிலும், சிலகாலம் சோழநாட்டிலும், சிறிது காலம் சேரநாட்டிலும், நெடுங் காலம் அதிகனிடத்திலும், எஞ்சியகாலம் முனிவர் வாசகங்களிலும் வசித்தவர். அரசரையும் பிரபுக்களையும் பாடி அவர் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் காலங் கழித்தவர். இவராற் பாடப்பட்டோர் அதிகன், சேரமான் வெண்கோ, தொண் டைமான், நாஞ்சில் வள்ளுவன், உக்கிரப் பெருவழுதி, இராசசூயம்வேட்ட பெருநற் கிள்ளி முதலியோர். தமது தேகமெலிவைக் கண்டிரங்கி அதிகன் கொடுத்த நெல்லிக் கனியை வாங்கியுண்டவர். இக்கரு நெல்லிக்கனி யாவர்க்கும் எளிதிற் கிடை ப்பதொன்றன்று. உண்டவர்க்கு திடகாத்தி ரமும், தீர்காயுளுந் தருமியல்பினது. அத்தகைய அற்புத நெல்லிக்கனியை தாணுண்டு நலம்பெறாது இவர்ககுக் கொ டுத்த அதிகன் வண்மையன்றோ வண்மை “பெருமலைவிடரகத் தருமிசைக்கொண்ட - சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா தாதனின்னகத்தடக்கிச் சாதனீங்கவெமக் கீத்தனையே” எனப்புறநானூற்றில் வரும் ஒளவையார் பாடலால் இவ்வுண்மை புலப் படும். இது ஒளவையார் பாடியதென்பது. “அமிழ்துவிளை தீங்கனியௌவைக் கீந்த - வுரவுச்சினங்கனலு மொளிதிகழ்நெடுவே - லரவக்கடற்றானை யதிகன்” எனச் சிறு பாணாற்றுப்படையில் வருவதாற் பெறப்ப டும். அவ்வதிகன்மாட்டுத் தாங்கொண்ட பேரன்பினால் அவனுடைய தூதாகத் தொண்டமானிடஞ் சென்றவர். தனது வலியையுணர்த்தும் பொருட்டுத் தன் ஆயுதசாலையைத் திறந்து காட்ட “இவ் வாயுதங்களொல்லாம் நெய்யிட்டு மாலை சாத்திப் பூசிக்கப்படுவனவாயக் கதிர்கான் றுவிளங்குகின்றன. அதிகனுடைய ஆயு தங்களோ பகைவரைக்குத்தித் தினந்தோ றும் பிடியும் நுதியுந்திசைந்து கொல்லனு டையகம்மியசாலையின் கண்ணவாம்” என்னுங்கருத்துற்ற பாடலைக் கூறித் தொண்டைமானை தலைகுனிவித்த மதிநு ட்பமுடையவர். இவர் உக்கிரப்பெருவழுதி காலமுதல் கம்பர் காலம்வரையும் சீவித் தரெனப்படுதலால் அவர்க்கு வயசு எண் ணூற்றின் மேற்ப்பட்டதாதல் வேண்டும். கருநெல்லிக்கனியுண்டு காயசித்தி செய் துகொண்டமையே இவ்வாயுள் நீட்டத்துக்கே துவாம். திருமூலர் தினமொன்றுக்கு இயல்பாகவெழுகின்ற 21,600 சுவாசங்க ளையும் 730 ஆகவடக்கி மூவாயிரம் வருஷ முயிரோடிருந்தாரன்றோ. இவ்விஷயம் யோகசாஸ்திரம் வல்லார்க்கன்றி மற் றோர்க்கு எளிதிலுண்மையாகமாட்டாது. அதுவுமன்றி மாந்தர்க்கு வயது நூறல்ல தில்லையென்று. வரையறுக்குந் தமிழ்ப் புலவர்கள் தாமே சிறிதும் கூசாது எதுவு ங்கூறிச் சங்ககாலத்திருந்த ஒளவையார் கம்பர்காலத்துமிருந்தாரெனக் கூறுந் துணி வொன்றே இதற்குப் போதியசான்றாம். எங்கனங் கொள்ளினும் திருவள்ளுவர் சகோதரியாராகிய ஒளவையார் கடைச்சங் ககாலத்தில் விளங்கினவர் என்பது கபில பாணர்களது பாடல்களால் நன்குநிச்சயிக் கப்படும். ஆத்திசூடி, வாக்குண்டாம், நல் வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முத லிய திவ்விய அறநூல்களும் இவர் செய் தனவேயாம். இவரைப்பற்றிய சிறுகதை கள் அநேகமுள. ஒளவையாரென்னும் பெயர் இவர்க்கு இயற்பெயயரன்றிக் கார ணத்தாலிடப்பட்டதன்று. பாரதம் பாடிய வில்லிபுத்தூராழ்வாரும் “ஒளவை பாடலு க்கு நறுநெய்பால்” என்னுஞ் செய்யுளி லே இவருடையவாக்குபலிதத்தை வியந் துபோயினர். இவருடைய வாக்குகள் சாபாநுக்கிர முடையனவாயிருந்தமை பற் றியே இவர் தமிழ்நாடெங்கும்வியாபித்து புகழும் நன்கு மதிப்புமுடையராயினார். ஆயிரத்தெண்ணூறு வருஷங்கள் கடந் தும் இன்றும் ஒளவையாரென்றால் சிறுவ ரும் பெருமதிப்புக் காட்டுவர். பண்டைக் காலத்துப் புலவ்களுள்ளே இவர் ஒருவர் பெயரேகல்லியறிவில்லாத சாமானியர் வாயிலுங் கேட்கப்படுவதாயிற்று.

ககமுகன் - சகஸ்திரபாதன் சகாத்தியா யன்.

ககுஸ்தன் - இû”வாகு பௌத்தினாகிய விகுûp மகன். இவன் விஷ்ணுவினுடைய அநுமதியால் விருஷபரூபம் பெற்றுத் தேவேந்திரன் தன்மீது ஏறி யுத்தஞ்செய்து ராûசர்களைக் கொல்லும் படியாக முது குகொடுத்துத் தாங்கினமையால் ககுஸ்த னெப்படுவன். (ககுஸ்தம் - முதுகு) புரஞ் சயன் எனவும்படுவன். (இû”வாகு மகன் குûp. அவன் மகன் விகுûp.)

ககுதிமி - (அ) ரைவதன் மகன். இவன் தன்னுடைய மகள் ரேவதிக்கு நாயகனொ ருவனைத் தேடவெண்ணிப் பிரமசபைக்கு த் தன்டீனாடவளை அழைத்துப்போய் அங்கே ஒருமுகூர்த்தகாலம் ஆடல் பாடல் களிற் பிரியனாயிருந்து பின்னர்ப் பிரமாவு க்குத் தன் கருத்தைச் சொல்ல, இங்கே நீ பொழுதுபோக்கிய முகூர்த்தகாலத்தி லே பூலோகத்தில் 27 சதுர்யுகம் கழிந்து விட்டன. உனக்குப் பழக்கமானவர்களை நீ காண்பதரிது. இப்போது பலராமர் பிறந் திருப்பதால் அவருக்;கு உன்மகளைக் கொடுக்கவென்று விடைகொடுத்தனுப்ப, அவ்வாறு செய்தான்.

ககுபுதேவி - தர்மன் பாரி தûன் மகள்.

ககுபை - ஒட்டிர தேசத்திலுள்ள ஒரு பர்வதம்.

ககுவன் - (ய) கம்சன் தம்பி.

ககேந்திரன் - புள்ளரசு.

கûதேசம் - இது தற்காலம் கச்சு என வழங்குவது.

கங்கணன் - (ய) நிம்மரோசன் தம்பி.
கங்கன் - (1) (ய) வசுதேவன் தம்பி. (2) அஞ்ஞாதவாசத்திலே தருமர் வகித்துக் கொண்ட நாமம். (3) சம்பாதிவமிசத்துப் பûpயரசன். (4) ஒர் இருஷ~p. இவர் பாரி பிரமலோசை. மகள் மரிஷை. (5) யமன். (6) நன்னூல் செய்வித்த சீயகங்கன்.

கங்காத்துவாரம் - அரித்துவாரம்.

கங்கை - உக்கிரசேனன் மகள். கங்கன் பாரி.

கங்கை - (1) தேவலோகத்திலிருந்து பகீ ரதன் தன் பிரயத்தனத்தால் இமயமலைய யில் வந்து உற்ப்பத்தியாகுமாறு பெற்ற மகா புண்ணியநதி. பனீரதன் பிதிர்களா கியசகரர், கபிலர் சாபத்தாற் கதியடை யாது பாதாளத்திலே சாம்பாராய்க்கிடப்ப, அவர் பொருட்டாக ஆகாசகங்கையை நோக்கிப் பகீரதன் தவஞ் செய்தான். அது கண்டிரங்கிக்கங்கை பிரசன்னமாகி எனது பிரவாகத்தை தாங்குவதற்கு யாவ ராயினும் உடன்பட்டால் வருவேனென, பகீரதன் சிவனை நோக்கி வரங்கிடப்ப, அவர் சடையிற் பரிப்பேன் கங்கை வரட் டுமென்ன கங்கை வருதலும் சடைக்கொ ழுந்தில் மறைந்தது. அதுகண்ட பகீரதன் பின்னரும் சிவனைநோக்கிக் கங்கையை யருள்கவென்ன, எழுதுளி ஜலத்தை இம யமலைச்சாரலில் விழும்படி விட்டார். அத் துளி ஏழும் ஏழுசரசாகி விந்துசரசெனப் பெயர்பெற்று விளங்கி ஜன்னுவ மகா விரு~pயாகஞ்செய்த சாலையைப் பெருகி யழிக்க, ஜன்னுவர் அதனைப் பானஞ் செய்தனர். அதுகண்ட பகீரதன் ஜன்னு வரை வேண்ட ஜன்னுவர் காதுவழியே செல்கவென்று கங்கையைவிட அது பகீர தனோடு பாதாளஞ்சென்று சகரர் அஸ்தி யைச் சுத்திசெய்யச்சகரர் மேற்கதி பெற்ற னர். இது பகீரதியென்றும், ஜன்னுவர் காதுவழி விடுத்தமையின் ஜானவியென் னும், ஆகாயத்தும், பூவுலகத்தும் பாதால த்தும், செல்லுகையின் திரிபதகையென் றும் பெயர்பெற்றது. இக்கங்கையினது நீரி லே அற்பமேனும் அழுக்குண்டாவதில்லை அதனால் கிருமிகளும் உற்ப்பத்தியாவதி ல்லை. (2) கங்கைநதிக்கு அதிதேவதை யாகிய தெய்வமாது. இவள் பிரமாவினது சாபத்தால் மானுஷமாதா கவந்து பிறந்து சந்தனுவுக்குப் பாரியாகி எண்மர் புத்திர ரையீன்றவள்.

கசன் - பிருகஸ்பதி மகன். இவன் தேவர் கள் பிரார்த்தனையினாற் சுக்கிரபகவானி டம் மிருதசஞ்சீவி மந்திரத்தைக்கிரகிக்கு மாறு போய்ச்சீ~னாயிருக்கும் போது சுக்கிரன் மகள் அவன்மீது காதலாயி னாள். அது கண்ட அசுரரர்கள் பொறாரா கிச் சமயம்பார்த்திருந்து கசனைக் கொன் றார்கள். தேவயானை அவனைக் காணா துகலங்கித் தந்தையை வினவ, தந்தை ஞாகதிருஷ்டியால் அவனிறந்ததுணர்ந்து அவனை மந்திரத்தால் எழுப்ப அவன் வந்துசேர்ந்தான். பின்னர் அசுரர்கள் அதி கோபங்கொண்டு சமயம்பார்த்து மீளவுங் கொன்று அவனைச் சாம்பராக்கி அச்சாம் பரைக் கள்ளிலே கலந்து சுக்கிரனுக்கு புது மதுவென்றுபசரித் தருந்தினார்கள். மீண்டும் தெய்வயானை அவனைக் காணாது வருந்தித் தந்தையை வினவ அவன் உணர்ந்து முதலிலே அம்மந்திரத் தைத் தன் வயிற்றிலிருந்த கசனுக்கு உபதேசித்துவிட்டு அவனைக் கூவ அவன் சுக்கிரன் வயிற்றைப் பீறி வெளி யேவந்து, அதனால் இறந்த சுக்கிரனை யெழுப்பி. இனி எனக்கு விடைதருகவென் றான். சுக்கிரன் விடைகொடுக்க கசன் தேவயானையிடஞ் சென்று விடைவேண்ட, உன்னை நான் மணம்புரிய நினைந்திரு க்க நீ விடைகேட்கின்றனையாவென்று தடுத்தாள். அதற்கவன் மறுக்க, நீ பெற்ற மந்திரம் பலிக்காது போவென்று அவன் சபிக்க, தருமவிரோதங் கூடாதென்று மறு க்க நீ சபித்தமையால் நான் பிறருக்குப தேசித்தால் பலிப்பதாக, நீ பிராமண குலத்தில் மணம் பெறாயாகவென்று பிரதி சாபமிட்டுப் போயினான். அது காரணமாக அவள் யயாதியை மணந்தாள். சுக்கிரனு ம் அன்றுமுதலாகப் பிராமணருக்குச் சுரா பானம் விலக்காகுகவென்றான்.

கசியபன் - (1) பிரசாபதிகளுளொருவன். இவன் மாPசிக்கு ஒருகலையாலுற்பத்தியா னவன். தûன் புத்திரிகள் பதின்மூவரை யும் வைசுவாநரன் புத்திரிகளிலே இரண்டு கன்னியரையும் விவாகஞ்செய்தான். தû ன் புத்திரிகளாகியதிதியால் தைத்தியரை யும், அதிதியால் ஆதித்தியரையும், தநு வால் தானவரையும், அநாயுவால் சித்த ரையம், பராதையால் கந்தருவரையும், முனியால் அப்சரசுகளையும், சுரசையால் யûராûசர்களையும், இளையால் விரு ûhதிகளையும், குரோதவகையால் சிங்க முதலியவற்றையும், தாமரையால் பûpக ணங்கள் அசுவகணங்களையும், கபிலை யால் பசுக்களையும், விநாதையால் அநூ ரன்கருடன் முதலியவர்களையும், கந்துரு வையால் நரகங்களும், வைசுவாந்ரன் புத் திரிகளாகிய காலையால் காலகேயரை யும், புலோமையால் பௌலோமரையும் பெற்றான். இப்புத்திரரேயன்றிப் பர்வதன், விபண்டகன் எனவும் இருவர் புத்திரருமு ளர். (2) பரசுராமர் அசுவமேதத்திற் பூமி முழுவதும் வாங்கிப் பிராமணருக்குத் தானஞ்செய்த இருஷ~p. (3) ஒரு புராணி கன். (4) வசுதேவன் புரோகிதன்.

கச்சி - காஞ்சிபுரம்.

கச்சிருமன் - விப்பிரசித்தி புத்திரன்.

கஜகர்ணன் - ஒருயûன்.

கஜன் - ஒருதானவன். இவன் தாரகயுத்த த்தில் உருத்திரராற் கொல்லப்பட்டவன். அவனுடைய தோலைச் சிவன் போர்த்துக் கொண்டமையின் கஜசர்மதாரியென்றும், ஆனையுரிபோர்த்தொன் என்றும் கூறப்படு வர்.

கஜாசியன் - விநாயகக் கடவுள் தû யாக பங்ககாலத்தில் வீரபத்திரராலே இவர் தலைகொய்யப்பட்ட போது, தேவர் கள் சிவனைநோக்கி விநாயகக் கடவுள் சர்வகாரியங்களுக்கும், விக்கினம் வராமற் காப்பவராதலால் அவரை எழுப்பித்தருதல் வேண்டுமென்று பிரார்த்திக்க, அவர் உத் தரதிசையிலே தலைவைத்து யாவர் உற ங்குகிள்றாரோ அவர் தலையைக் கொய்து கொண்டுவந்து பொருத்த எழும் புவரென்றார். அவ்வாறேதேடியவிடத்து யாவருமின்றி யானைமாத்திரம் அங்ஙனம் நித்திரை செய்யக்கண்டு அதன்றலையை க்கொய்துகொண்டு போய்ப்பொருத்த அன் றுமுதல் கஜாசியன் ஆயினார். இவர் வர லாறு வேறு பலவாறுமுண்டு.

கஜானனன் - யானை முகன் என்பது பத ப்பொருள். விநாயகக்கடவுள். இக்கஜான க்கடவுளினதுற்பத்தி புராணங்களிலே பல வாறாகக் கூறப்படும். முன்னே கஜாசியன் என்பதிற் கூறப்பட்டது அப் பல வரலாறு களுளொன்று இவர் சிவன் திருக்குமாரரு ளொருவர். பிரணவமே இவ்வடிவு கொண் டதென்பது எல்லாப்புராணங்களுக்குமொத் ததுணிவு. இவர் யானைமுகமும் துதிக் கையோடு ஐந்துகைகளும் பருத்தவயிறும் குறுகிப்பணைத்த கால்களும் ஒற்றைக் கொம்புமுடையவர். வாகனம் ஆகு. ஆயு தம் பாசாங்குசதந்தங்கள், கத்திகள், சித் தியும், புத்தியும். எக்கருமாரம்பத்துக் கண்ணும் வழிபடற்குரியவர். தம்மை மெ ய்யன்பொடு வழிபட்டுத் தொடங்கப்படுங் கருமங்களுக்கு வரத்தக்க ஊறுபாடுகளை யெல்லாம் வராமற்காத்தினிது முடிப்பவரா தலால் விக்கின விநாயகரெனப்படுவர்.

கஞ்ஜஜன் பிரமா. தாமரையிற் பிறந் கஞ்ஜன் தோன் என்பது பொருள்.

கஞ்சன் - கம்சன் காண்க.

கஞ்சி - காஞ்சீபுரம்.

கடகபுரி - கஜபதி ராஜாக்களுக்கு ராஜதானி.

கடந்தைநாயகி - திருத்தூங்கானை மாட த்தற் கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

கடியநெடுவேட்டுவன் - பெருந்தலைச்சாத் தனாராற் பாடப்பட்ட ஒரு வேட்டுவபிரபு.

கடைச்சங்கம் - இதன் வரலாற்றை மேல் வருமாசிரியப்பாவானுணர்க.
“பருங்கடைச்சங்க மிருந்தோர்யாரெனிற். சிறுமேதாவியார் சேந்தம் பூதனாரறிவுடை யானார். பெருங்குன்றூர் கிழார் - பாடல் சான்றாவிளந்திருமாறன். கூடலாசிரியர் நல்லந்துவனார் - பரவு தமிழ் மதுரை மருதனிளநாக-ரவிர்கணக்காயர். நவினக் கீரர் - கீரங்கொற்றர்கிளர் தேனூர்கிழா -ரோங்கலை மணலூராசிரியர் - நல்லூர்ப் புளியங்காய்ப்பெருஞ்சேந்தர் - செல்லூரா சிரியர். முண்டம் பெருங்குமரர் - முசிறி யாசிரியர். நீலகண்டனா - ரகைவிரிகுன்ற த்தாசிரியரன்றி - நாத்தலங்கனிக்குஞ் சீத் தலைச்சாத்தா - முப்பாலுணருமுப்பூரி குடிகிழா - ருருத்திரசன் மர் மருத்துவரா கிய - நாமநாற்கலைத்தாமோதரனார் -மாதவளனாரோடோதுமிளநாகர் -கடியுங்கா மப்படியங்கொற்றனா - ரருஞ்செயிலூர் வாழ் பெருஞ்சுவனாருடன் - புவிபுகழ் புல மைக்கபிலர்பரண - ரின்னாத்தடிந்தநன்னா கரன்றியு - மொல்காப்பெருமைத் தொல் காப்பியத்துக் - குரையிடையிட்ட விரகர் கல்லாடர்-பேர்மூலமுணருமாமூலர்தம்மொடு விச்சைகற்றிடுநச் சென்னையார் முதற் -றேனூற்றெடுப்பச் செந்தமிழ் பகர்ந்தோர் -நாணூற்றுவர்முத னாற்பத்தொன்பதின்மர் - பீடு பெறவுலகிற்பாடியசெய்யுண் - முத் தொள்ளாயிர நற்றிணைநெடுந்தொகை -யகநானூறு - கநற்தொகைசிற்றிசை பேரி சைவரியோ - டறம்புகல்பதிற்றுப்பத்தை ம்பதோடிருபான் - பெறும்பரிபாடலுங் குறு ங்கலி நூற்றைம் - பது முதலாகிய நவையறுங்கலைக - ளக்காலத் வர்க்கத் தியமதனொடு - மிக்காமிலக்கணம் விளங் குதொல்காப்பிய - மெண்ணூற் கேள் வியரிந்த தாயிரத்துத் - தொளாயிரத் தைம்பதுவருடமென்ப - விடர்ப்படாதி வர்களைச் சங்கமாPஇபினார் - முடத்தி மாறன் முதலாவுக் கிரப் - பெருவழுதியீ றாப் பிறங்குபாண்டியர்கள் - நரபதிகளாகு நாற்பத்தொன்மதின்ம - ரிவருட் கவியரங் கேறினர் மூவர் - புவியிற்சங்கம்புகழ் வட மதுரை - யாதிமுச்சங்கத்தருந் தமிழ்க் கவிஞ - ரோதியவெய்யுளுலவாப் பெரும் பொருள் - வாளாக்கேட்குந் தெரியாவோட் டை நெஞ்சினுக்கு - நுழையாவாதலினு ழைபுலன்றன்னொடும் - விழைவார்க்குரை க்கவெண்டுவர் தெரிந்தே” (விரிவு சங்க த்திற்காண்க.)

கடோற்கசன் - வீமனுக்கு இடும்பியிடத்து ப்பிறந்த புத்திரன். பாரதயுத்தத்தில்ஒரக்கி ரோணிசேனையை நாசஞ்செய்து ஈற்றில் அருச்சுனனைக் கொல்லவேண்டுமென்று இந்திரனிடம் பெற்றிருந்த ஒரு சக்தியைக் கொண்டு கர்ணனாற் கொல்லப்பட்டவன்.

ட்க கேத்திரதேவியம்மை - திரு ஆக்கூரி லே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

கட்டுவாங்கன் - (இ) விசவசகன்மகன். தீர்க்கவாகு தந்தை. இவன் தேவாசுரயத் தத்திலே தேவர்களுக்குச் சகாயஞ் செய் தபோது தேவர்கள் சந்துஷ்டியடைந்து உனக்கு வேண்டியதைக் கேளென, அவன் எனக்கு இன்னுமள்ள வயது எவ் வளவினதென்ன ஒருமுகூர்த்தமிருக்கின்ற தென்றார்கள். அது கேட்டு மோûம்புக்க ரன்.

கணதரர் - சீர்காழியிலே பிராமணகுலத்தி லே பிறந்து அடியார் பக்தி சிவபக்தி களிற் சிறந்து விளங்கி ஒரு சிவபக்தர்.

கணபதீசுவரர் - திருசெங்காட்டங்குடியி லே கோயில்கொண்டிருக்கும் சவாமி பெயர்.

கணம்புல்லநாயனார் - வடவெள்ளாற்றுக் குத் தென்கரையிலுள்ள இருக்கு வே@ரி லே இருந்து சிவாலயத்திலே திருவிளக் கிடுதலையே பெருந்தொண்டாகக் கொண் டு அதன் பொருட்டுத் தமது செல்வமெல் லாமழிந்தும் அதனை விடாது கணம்புல் லரிந்து விற்றுப் பொருளீட்டி அப்பணி புரிந்து வருகையில் ஒருநாள் நெய்போத துபோகத் தமது முடியை விளக்கிற் பொருத்தி எரிக்கப் புகுந்து சிவனருள் கொண்ட தவச்செல்வர்.

கணாதன் - (ரி) வைதிகசாஸ்திரங்கள் ஆறனுள்ளே வைசேஷ~pகசாஜ்திரஞ் செய் தவர். இவ்வைசேஷ~pகம் நியாயசாஸ்திரம் போலத் தருக்கவிஷயமே கூறுவது. கணாதருடைய பூர்வநாமம் காசியபர். அணுவையும் பிளந்து சோத்தித்த நுண்ம தியுடையவராதலினாலே கணாதரெனப் பெயர்படைத்தார். (கணம் அணு: அதம் அழிவு) அதிதிநாயனாகிய காசியபனும் வேறு இவரும் வேறு.

கணிகன் - திருதராஷ்டிரன் மந்திரிகளுள் ஒருவன். இவன் ஜாதியில் துவிஜன். அதர்மமானாராச்சிய தந்திரோபதேசம் பண்ணுவதிலும் அக்கிரமான இழி தொழி ல்களையும் புரியும்படி அரசரையுடன்படுத் துவதிலும் மிக்க வன்மையுடையவன்.

இக்கணிகணுடைய துஷ்டம ந்திரோபதேசத்தைக் கேட்டபின்னரே திரு hரா~;டிரன் தன்மைந்தனுடைய வேண்டு கோளுக்கெல்லா முடன்பட்டானாயினான். இவனே திருதராஷ்டினக்கு இராச்சிய சூழ் ச்சியுபதேசித்தபொழுது, ஒருவன்றனக்கு “மைந்தனேயாயினும், சகோதரனேயாயி னும், நட்பினனேயாயினும், தந்தையேயா யினும், குருவேயாயினும் அவர்களைத் தன்னுடைய அபிவிருத்திக்குச் சத்துருக்க ளாகக்கண்டால் அவர்களைக் கொன்றழி க்கக்கடவன்.” என்று இன்னேரன்ன துஷ்டோபதேசங்களும் நரியின் கதையும் எடுத்துரைத்தவன். அந்நரியின்கதை வரு மாறு. சுயலாபமும் தாந்திரிகமுமுள்ள ஒரு நரி தனக்கு துனைவராக ஒரு புலி யையும், ஒரு எலியையும், ஒரு செந்நா யையும், ஒரு கீரியையும் சிநேகித்துக் கொண்டு ஒரு காட்டிலிருந்தது. அக்காட்டி லேஒருமான் கூட்டமுமிருந்தது. அக்கூட்ட த்திற்கு ஒருகலை அரசாகவிருந்தது. அக் கலைமானை இந்நரியும் மற்றைய துணை மிருகங்களும் எதிர்த்தற்கு இயலாதனவா ய்ப் கலநாட்பலவாறு முயன்றும் சித்தி பெறாது ஈற்றில் அவ்வைந்து மிருகங் களும் கூடிச் சூழ்ச்சி செய்வனவாயின. புத்தியில்லாததாகிய நரி புலியைப் பார்த் து, “அக்கலைமானைக் கொல்லுதற்கு நீ பலநாள் முயன்றும் உனக்கும்முயற்சி கைகூடாமற் போயிற்றன்றோ. ஆதலால் நான் ஓர் உபாயஞ்சொல்லுகிறேன். அக் கலைமான் நித்திரை செய்யும் பொழுது நமது எலித்துணைவன் போய் அதன் காலைக்கடித்துவிடக்கடவது. அதனால் அக்கலைமான் வேகமாய்ப் பாய்வதற்கு வலியிழந்துவிடும். அப்பொழுது நீ போய் மிக எளிதாகக் கொன்றுவிடலாம். என்று கூறிற்று. இதனைக்கேட்ட புலியும் மிருகங் களும் தக்கவுபாயமென்றெண்ணி அவ்வா றே செய்தன. மற்றையநாளுதயத்தில் அவ்வைந்து மிருகங்களுஞ் சென்று அக் கலையிறந்து கிடக்குமிடத்தை அடைந் தன. அதனைக்கண்ட நரி நான் ஸ்நானம்பண்ணி விட்டு வந்து விட்டேன் நீங்களும் போய் ஸ்நானம்பண்ணி வந்தா ல் எல்லோரும் விருந்தருந்தலாமென்றது. அவ்வாறே நரி அங்கிருக்க மற்றைய மிருகங்களெல்லாம் ஸ்நானத்துக்குப் போ யின. புலி ஸ்நானம் முடித்துக்கொண்டு முன்னர் மீண்டது. அப்பொழுது நரி துக்க முகத்தோடிருந்தது. அதுகண்ட புலி நரி யைநோக்கி நம்முள்ளே புத்திசாலியாகிய நீ துக்கித்திருப்பது யாதுபற்றியென்று வினாவியது. நரி புலியைநோக்கிப் பராக் கிரமத்திற்சிறந்த புலியே! எலி எனக்கு சொன்னசொற்கள் உன்காதில் வீழ்ந்தால் நீ இதனைப் புசிக்காதெழிவையென்று யென்மனம் வருந்துகின்றது. எலி தான் சென்று மானுடைய காலை யூறு செய்யா திருந்தால் புலிக்கு இது போசனமாகுமா என்றுகூறித்தன் பெருமையை மிகப்பாராட் டிற்று. இதுவே என்னை வருத்துகின்ற தென்று கூறப், புலி நரியை நோக்கி என் மானத்தை விற்று இதனையுண்பதிலும் நான் பசியிருப்பது நன்றென்று கூறி உட னே அவ்விடத்தை விட்டு நீங்கியது. அதன் பின்னர் ஸ்நானம் முடித்துக் கொண்டு எலி மீண்டது. நரியதனை நோக்கி நான் சொல்வதை கேட்கக்கட வை, கீரி இம்மான் மாமிசத்தைப் பார்த்து இது புலியாற் கொல்லப்பட்டமையினாலே அதன் வாயிலுள்ள விஷம் இதிலே கலந் திருக்கின்றது என்றும் தானிதனை உண் பதில்லையென்றும் கூறிப்போய்விட்டது. தான் மீண்டு வரும்பொழுது உன்னைத் தனக்கு இரையாக்கித்தரும்படி என்னிடத் திலனுமதி கேட்டதென்று கூறியது அது கேட்ட எலி சிறிதுந்தாமதிக்காது அவ்விட த்தினின்று நீங்கியது. அதன்பின்னர்ச் செந்நாய் மீண்டது. நரி அதனை நோக் கி நீ நமக்கு நண்பன் மாத்திரமன்று உற வினனுமாய் இருக்கின்றாய். உன்னைக்கா த்தல் எனது கடனாகின்றது. புலி உன்னி டத்திலேதோ கோபமுடையதாகவிருக்கின் றது. இதனைப்புசிக்கும்படி புலி தன் மனைவியோடு இங்கே வரும் ஆதலால் நீ இவ்விடத்திலிருப்பது நன்றன்றென்று கூறியது. அது கேட்டு செந்நாயும் ஓடிப் போயிற்று. அதன்பின்னர் கீரி வந்தது. நரி அக்கீரியைப்பார்த்து என்னுடைய பராக்கி ரமத்தினாலே புலியையும் செந்நாயையும் எலியையும் வென்றுவிட்டேன். உனக்கு பராக்கிரமமிருக்குமாயின் என்னைவென்று இவ்விடக்கைப் புசிக்கலாமென்று கூறி யது. மகாபராக்கிரமசாலியாகிய புலியை வென்றவுன்னோடு யான்போருக்குத் துணி தலெங்கனமென்று கூறி அவ்விடத்தை விட்டுக் கீரியும் ஓடியது அதன் பின்னர் நரி அம்மாசத்தைப்யெல்லாம் வயிறாரவு ண்டு மகிழ்ந்திருந்தது.

இவ்வுபகதையினால் இவன் திருதராஷ்டிரனுக்குப் பலவுபாயங்களைக் கூறி அவன் பாண்டவகள் மீது வைத்திரு ந்த அன்னைக் கெடுத்தவன்.

கணியன்பூங்குன்றனார் - பேர்யாற்றகேயு ள்ள பூங்குன்று என்னுமூரிற்பிறந்து விளங்கிய புலவர். இவர் உக்கிரப்பெரு வழுதி காலத்துக்கு முன்னுள்ளவர். இவர் சாதியிற் கூத்தர். புறநானூற்றில் வரும் இவருடைய பாடல் இவர் ஆன்றகல்வியு ஞ் சான்றவெழுக்கமுடையாரெனக் காட்டு கின்றது. “யாதுமூரே யாவருங்கேளிர் - தீதுநன்றும் பிறர்தரவாரா - நோதலுந்தணி தலுமவற்றோரன்ன - சாதலும்புதுவதன்றே வாழ்த - லினிதெனமகிழ்ந்தன்றுமிலமே முனிவி - னின்னாதென்றலுமிலமே மின் னொடு - வானந் தண்டுளி தலை இயானாது - கல்பொருதிரங்குமலற்பேர்யா ற்று - நீர்வழிபடுஉமென்பதுதிறவோர் - காட்சியிற்றெளிந்தனமாகலின் மாட்சியிற் - பெரியோரை வியத்தலுமிலமே - சிறியோ ரையிகழ்ந்த லதனினுமிலமே”

கணேசர் - விநாயகக் கடவுள். பூர்வத்தி லே தேவர்களும், இருஷ~pகளும் தாம் செய்யுங்கருமங்களெல்லாம் இடையூற்றா ன் முடியாது போதலைக்கண்டு சிவன்பாற் சென்று , தங் கருமங்களுக்கு இடையூறு வராமற் காத்தற்பொருட்டு ஒரு புத்திரனை த்தருதல் வேண்டுமென்றிரப்ப, அவர் திரு முகத்திலே ஒரு சோதி தோன்றிற்று. அச்சோதியினின்றுமொரு புத்திரர் தோன் றினார். அவருடைய திருமேனியின்று காலும் சோதிப்பிரகாசம் உமாதேவியாரது திருநேத்திரத்தைக் கூசப்பண்ணியது. அது கண்ட உமாதேவியார், அப்புத்திர னாருடைய திருமேனி காந்தியிழந்து யானைத்தலையும் தேவகரங்களும் பூதசாP ரமும் பொருந்துவதாகவென்ன, அவ்வாறே கஜானனமும் லம்போதர முதலியவுறுப்புக் களுமுடையரானார். அதன் பின்னர்ச் சிவபிரான் அவரை கணங்களுக்குத் தொடங்கப்படுங் கருமங்களையெல்லாம் இடையூறுவராமற் காத்தினிதுமுடிக்கும் அதிகார தெய்வமாகுகவென்றாக்கினார். அவர் கணங்களுக்குத் தலைவராதலிற் கணபதி கணேசர் முதலிய நாமங்களை பெறுவாராயினார். விக்கினங்காப்பவரும் செய்பவருமாதலின் விக்கினேசுரரெனப்படு வர். இது வராகபுராணத்துள்ளது வரலாறு.

கருமம் பலித்தலும் பலியா மையும் ஊழின்வசத்தனவும் புத்தியின் வசத்தனவுமாம். ஆகவே ஊழான்வருவ தும் புத்தியான் வருவதுமென விக்கினமி ருவகைப்படும். ஊழான் வருவது வந்தே தீரும் புத்தியான் வருவருவது முன்னரே நாடித் தெளிந்து உபாயங்களாலே விலக் கத்தக்கது. புத்தி தத்துவத்துக்கு அதி தெய்வம் கணேசர். அவர் சகலசராசரங்க ளினிடத்தும் விளங்குகின்ற புத்தியெல்லா வற்றுக்கும் ஆதாரஸ்தானமாகவுள்ளவர். அவரைத் தியானியாதொழியின் புத்திவிரி தலும், உபாயந்தோன்றுதலும் இல்லை யாம். ஆகவே எடுத்தகருமமுங்கைகூடாது
கணேசருடைய தலையை யானைத்தலை யாக பாவித்தது, யானை ஞாபகசக்தியா ற்சிறந்ததும், கண்டது, கேட்டது, உற்றது யாவற்றையும் ஒருசிறிதேனும் ஒருகாலத் தும் மறவாவியல்புடையதும், மிக்க வலி மையுடையதாயினும், இதஞ்செய்வார்க்கு வசப்பட்டு பகாரஞ்செய்வதும் பிறவுமாகிய சிறந்தகுணங்களை யுடைமைபற்றியேயாம்
யானையினது தலை பழரணவவடிவாகவி ருந்தாலும் அதற்கோரேதுவாம். பாசம் வியாபகத்தையும், அங்குசம் அருளையும் ஐங்கரமுந் தனித்தனியொவ்வொரு குறிப் பினையுடையனவாயினும் அளப்பிலாற்ற லையும், பாதமிரண்டும் சித்தயையும் புத் தியையும், பரந்தசெவிகள் சர்வஞ்ஞத்து வத்தையும், ஏகதந்தம் பரஞானத்தையும், ஒடித்ததந்தம் அபயத்தையும், லம்போத ரம் பொறையடைமையையும் உணர்ததுஞ் சிற்சொரூபங்களாம்.

கண்டகி - மகததேசத்திற் பிரவாகமாகிக் கங்கையோடு சங்கமிக்கின்ற நதி.

கண்டராதித்தர் - திருவிசைப்பாபாடினா ரொன்பதின்மருளொருவர். இவர் உறையூ ரிலிருந்து அரசுபுரிந்த சோழருளொருவர்.

கண்டாகர்னன் - குபேரன் கிங்கரனாகிய ஒரு பிசாசபதி. ஸ்ரீ கிரு~;ணன் ஒரு சமயத்தில் வதரிவனத்தில் யோகத்திலிரு ந்தபோது இக்கிங்கரன் அவரைவழிபட்டுப் பிசாரூபம் நீங்கப்பெற்றவன்.

கண்டீரச்கோப்பெருநள்ளி - நள்ளிகாண்க.

கண்ணகனார் - கோப்பெருஞ் சோழனுக் குயிர்த்துணைவராயிருந்து அவன் இறந்த மையுணர்த்தப்படாது தாயுமேயுணர்ந்துடன் யிர் துறந்த பிசிராந்தையாரைப்பாடிய புலவர்.

கண்ணகி - (1) கோவலன் மனைவி. இவள் கற்பு முதலியவற்றை வெளிப்பத் தற்பொருட்டே சிலப்பதிகாரம் செய்யப்பட் டது. இவளை மறக்கற்புடையாள் என்பர். திருமாபத்தினி, பத்தினிக்கடவுள், மங்கல மடந்தை, வீரபத்தினியென்பன இவளுடை யபரியாயநாமங்கள். கோவலன் தன் காம க்கிழத்தி காரணமாகத் தன்னிடத்துள்ள செல்லமொல்லாம் போக்கி இலம்பாடுடை யனாகிப் பொருளீட்டக்கருதித் தன் பத்தி னியோடு காவிரிப்பூம்பட்டினத்தைவிட்டு மதுரையையடைந்து அங்கே தன் பத்தி னியுடைய காற்சிலம்பொன்றை விற்குமாறு முயன்றான். பாண்டிமாதேவியினது காற் சிலம்பை வாங்கிப்போய் விற்றுச் செல்ல செய்துவிட்டு அதனைக்கள்வர் கவர்தாரெ ன்று நடித்திருந்த தட்டான் இச்சிலம்பைக் கண்டு அரசனிடஞ் சென்று சிலம்புதிருடி யகள்வன் அகப்பட்டான் என்று கூறி அர சனைதன் பொய்மாயத்துக்குடன் படுத்திக் கோவலனைக் கொல்லுவித்தான். அஃதறி ந்த கண்ணகி புலம்பித் தவித்து அரசன் மாட்டுச்சென்று தன்வரலாற்றைச் சொல்லி தன்சிலம்பினுள்ளேயிருக்கும் பரல் மணி யென்றெடுத்துக்காட்டி, அரசன் தான் செய்தது குற்றமென்றெப்பும்படி செய்து, சோகாக்கினிபொங்கத் தனது முலையி லொன்றைத் திருகி மதுரைமாநகரின் மீது வீசியுயிர்விட்டாள். உடனே மதுரை எரிந் தழிந்தது. இவனுடையகற்பைமெச்சி அரச ன் அவளைப் பத்தினிக்கடவுளாக்கி அவ ளுக்கு ஊர்கள் தோறும் கோயில் அமை த்து பூசையும் விழாவுஞ் செய்வித்தான். அந்நாள் இவளுக்கு இலங்கையிற் கோயி லமைத்தவன் கயவாகு வேந்தன். (2) புற நானூறென்னு நூலிலே கூறப்பட்ட வள்ள லாகிய பேகன் பாரி. இவளைப் பிணங்கி ப்பிரிந்திருந்த பேகனோடு சந்திசெய்து வைத்தவர். கபில பரணர் முதலிய புலவ ர்கள்.

கண்ணப்பமுதலியார் - இவர் திருவெண் ணெய்நல்லூர்ச் சடையப்ப முதலியார் சகோதரர். இவரும் கம்பராற் புகழ்ந்து பாடப்பட்டவர்.

கண்ணப்பர் - உடுப்பூரிலே வேடர்குலத்தி லே திண்ணர் என்னும் பெயரோடு விளங்கிய இவர் காட்டிலே வேட்டைமேற் சென்றபோது காளாத்திநாதர் என்னும் சிவலிங்கத்தைக் கண்டு அவர்மேல் அன்புடையராகிப் பிரியமாட்டாது இரவும் பகலுமங்கிருந்து அதற்குபசாரம் புரிந்து வருநாளிலொருதினஞ் சுவாமியினது கண் ளொன்றிலிரத்தஞ் சோரக்கண்டு அதற்கு மருந்தாக தமது கண்ணையிடந்து அதன் மேலப்பிய மெய்யப்பன்புகாரணமாகச் சிவ பெருமானது பேரருள்கொண்டபக்கதசிரோ மணி. இவர்காலம் கலியுகாரம்பம்.

கண்ணாயிரநாதர் - திருக்காறாயலிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

கண்ணாயிரேசுவரர் - திருக்கண்ணார் கோயிலி லெழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர்.

கண்ணுவன் - (ரி) பூருவமிசத்து அதிசா ரன் மகன். சகந்தலையை வளர்த்த இ ருஷ~p. கண்ணுவன் வமிசத்தர் காணவியர் எனப்படுவர். (2) மகததேசராஜாவாகிய தெவபூதிமந்திரி. தேவபூதியைக் கொன்று பின் ராஜாவாயினவன்.

கதன் - (ய) பலராமன் தம்பி. ரோகிணியி டம் வசுதேவனுக்குப் பிறந்தவன்.

கதிர்காமம் - ஈமநாட்டிலுள்ள ஒரு சுப்பிர மணியஸ்தலம்.

கதையங்கண்ணனார் - புறநானூறுபாடிய புலவர்களுளொருவர். சேய்நாட்டுச் செல்க கிணைஞனைப் பாடியவர்.

கத்துருவை - கசியபன் பாரியருள் ஒருத்தி. தûன் மகள். இவளால் நாக குலம் உண்டாயிற்று. ஆதிசேஷன் கார்க் கோடகன் முதலியோர் தாய். இவளுடை ய சக்களத்தி விந்தையும் தானும் பாற் கடற்கரையிலே உச்சைச்சிரவமென்னும் குதிரையைக்கண்டு அதிசயித்துப் பேசும் போது கத்துருவை விளையாட்டாக அக் குதிரைக்குவால் கறுப்பென்றாள். மற்றவ ள் ஆதியந்தம் வெள்ளையென்றாள். கத்துருவை அது கரியதானால் நீயெனக் கடிமையாதல் வேண்டுமென்றாள். விந்தை வெண்மையானால் நீயெனக்கு அங்ஙன மென்றாள். இச்சமயத்தில் அஸ்தமயமாய து. கத்தருவை உடனே தன்மகன் ஆதி சேஷனிடம் போய்த் தனது கருத்தைச் சொல்ல, அவன் உடன்படாது மறுத்தான். அப்பால் கோட கனிடஞ்சொல்ல அவன் அவ்விரவேபோய் அக்குதிரையின் வாலை நஞ்சூட்டி கறுப் பாக்கி மீண்டான். விடிதலும் விந்தை சென்று பார்த்து மறுபேச்சின்றிக் கூறிய படிதாசியானாள். அது கண்ட ஆதிசேஷன் அவளைவிட்டு நீங்க, கோடகனொழிந்த மற்றெல்லோ ரையும் சர்ப்பயாகத்தில் மடிந்தொழிக வென்று தாய் சபித்தாள்.

கந்தபுராணம் - தற்புருஷ கற்பத்துச் சம்ப வங்களையும், அறுமுகக் கடவுளுடைய மான்மியத்தையும் விரித்துணர்த்துவது: இலûங்கிரந்தமுடையது. வடமொழியிலே செய்தவர் வியாசகர். அதிலே சங்கர சங்கிதையின் ஒரு கண்டத்தை மாத்திர மெடுத்துத் தமிழிலே மொழிபெயர்த்துப் பாடினவர் காஞ்சீபுரத்துக் குமரகோட்டத் தர்ச்சகரும் சுப்பிரமணியக்கடவுளது திரு வருள்பெற்ற புலவர்சிகாமணியுமாகிய கச் சியப்பசிவாசாரியார். இது பன்னீராயிரஞ் செய்யுளுடையது. இது பாடிய காலம் சாலிவாகனசகம் எழுநூறு. புராணவரலாற் றினோடு தத்துவோபதேசங்களையுமினிது விளக்கு நூல் தமிழிலே புராணங்களுளி துவொன்றேயாம்.

கந்தமாதனம் - (1) மேருவுக்கு கீழ்பாலி லுள்ள ஒருமலை. (2) தென்னாட்டிலுள்ள ஒருமலை.

கந்தமாதனன் - (1) இவன் சுக்கிhPவன் சேனையிலொருவன். குபேரன் புத்திரன். (2) அக்குரூரன் தம்பிகளுளொருவன்.

கந்தரவன் - சம்பாதிவமிசத்துக் கங்கன் தம்பி.

கந்தருவர் - தேவர்களுள் ஒரு பாலார். கசியபனுக்குப் பிராதையிடத்துற்பத்தியா னவர்கள்.

கந்தர்ப்பன் - மன்மதன்.

கந்தவதி - (1) வாயுவுக்கு ராஜதானி. (2) வியாசர்தாயாகிய சத்தியவதி.

கந்தவெற்பு - தேவர்கள் குமாரக்கடவுளைப் பூசித்த மலை.

கந்தன் - (1) மன்மதன். (2) குமாரக்கட வுள்.

கந்நன் - கிருஷ்ணன்.

கபாடபுரம் - இடைச்சங்கம் இருந்தவிடம். அது பின்னர்க்காலத்திற் கடல்கொண்ட ழிந்தது.

கபாலமோசனம் - ஒரு புண்ணிய Nûத் திரம். ராமரால் கொலையண்ட மகோதர னது கபால என்புத்துண்டம் ஒரு இருஷ~p காலிற்றைக்க அவ்வேதனையால் அவ்வி ருஷ~p சுக்கிரன் தபஞ்செய்தவிடத்துக்குப் போனார். அஃதங்கே வீழ்ந்தமையால் அவ்விடம் கபாலமொசனம் எனப்பட்டது.

கபாலீசர் - திருமயிலைப் பூம்பாவையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

கபிலபுரம் - கலிங்க நாட்டிலுள்ள ஒரு நகரம்.

கபிலன் - (ரி) (1) கர்த்தமப்பிரஜாபதிக் குத் தேவஹ{தியிடத்திற் பிறந்த இருஷ~p. இவரே சாங்கியயோகஞ்செய்தவர். அரிவ மிசத்திலே இவர் விதாதாபத்திரரெனப்படு வர். சகரசக்கரவர்த்தி தொண்ணூற்றொன் கது அசுவமேதஞ் செய்யத்தொடங்கிக் குதிரையை அலங்கரித்துத் திக்குவிஜயத் துக்கு விடுத்துத் தன் புத்திரர் அறுபதி யாயிரவரையும் அதற்குக் காவலாகவுடன் போக்கினான். இந்திரன் இவ்வியாகம் முற்றுப்பெற்றால் தனது பதத்துக்குத் கேடுவருமென்றெண்ணி அக்குதிரையை மாயமாகக் கவர்ந்து சென்றான். இது நிக ழ்ந்தது கபிலாச்சிரமத்துக்குச் சமீபத்திலே யாதலின் சகர புத்திரர்கள் கபிலரேயிது செய்தாரெனநிச்சயித்து அவரைச் சாட வெத்தனித்தார்கள். அவர் அது கண்டு அவர்களைச் சாபத்தாற் சாம்பராக்கினார் (2) தனு புத்திரருளொருவர். (3) திருவள் ளுவர் சகோதரருளொருவர். தம்மைப் பெற்றவுடன் தந்தை தாயரோராற்றங்கரை யில் வைத்தேக திருவாரூரந்தணரொருவர் எடுத்து வளர்க்க வளர்ந்தவர். இவர் கடைச்சங்கத்துப் புலவருளொருவராகித் தமிழாந்ததோடு தாமும் பலநூல் செய்த வர். பாரியென்னும் பெருவள்ளலுடன் மிக்கநண்பு பூண்டிருந்தவர். இவர் பாரி இறந்த பின்னர் அவன் புத்திரிகளை தமது புத்திரிகள்போலப் பாதுகாத்து அவன் சாதியர் அப்பெண்களை மணம் புரிதற்கு மறுத்தமையாற் பார்ப்பனப் பிரபு க்களுக்கு மணத்திற் கொடுத்த தரும சீலர். ஐங்குநுறூற்றிற் குறிஞ்சிப்பொருண் மேல்வரும் மூன்றாம் நூறுசெய்தவரும், சேரமான் செல்வக் கடுங்கோவாழியாத னைப் பதிற்றுப்பத்துள் எழாம்பத்தாற்பாடி மலைமீதேறிக் காணும் நாமும் பிறவும் பரிசாகப் பெற்றவருமு; குறிஞ்சிப்பாட்டும் இன்னா நாற்பதும் பாடியவரும் இப்புலவர் பெருந்தகையே. “புலனழுக்கற்றவந்தணா ளன்” எனவும், “பொய்யா நாவிற் கபிலன்” எனவும் புறநானூற்றிலே புகழப் படுபவரும் இவரே. திருத்தொண்டர் புரா ணசாரத்திலே உமாபதிசிவாசாரியராலே, “பொய்யறியாக்கபிலர்” என்னு துதிக்கப் படுபவருமிவரே. இவர் கல்வி கேள்விக ளான் மாத்திரமன்று ஒழுக்கத்தானும் தம்மின்மிக்காரின்மையினன்றே கடைச்சங் கத்திலும் அக்கிரபதம் பெற்றாராயினவர். கபிலரகவலெனப் பெயரிய அகவல் சொற்சுவை பொருட்சுவை நியாயவன்மை முதலியவற்றாற் சிறந்தது.

கபிலாச்சிரமம் - இது கங்காசங்கமசமுத் திரப்பிரதேசத்திலுள்ளது. சகரதீவிலுள் ளது. பாதாலத்திலுள்தென்றுஞ் சொல்லப் படும்.

கபிலாசவன் - (இ) குவாலயசுவன் மகன். துந்துமாரன் மகனாகிய திருடாசுவன்.

கபிலை - (1) சிந்துநதியிற் கலக்கும் ஒருபநதி. (2) தûன் மகள். கசியபன் பாரி. பசுக்களுக்குத் தாய். சுரபியெனவும் படுவாள். (3) புண்டாPகம் என்னும் திக்கு யானையினது பெண்யானை.

கபோதலோமன் - (ய) விலோமன் மகன்.
கமலபவன் - பிரமா, (தோயஜகர்ப்பன் காண்க.)

கமலாபாலிகை - இடிம்பை.

கமலாûன் - திரிபுராசுரர் காண்க.

கம்சன் உக்கிரசேனன் மகன். மதுராபுர கஞ்சன் த்தரசன். கிருஷ்ணன் மாதுலன். இவன் பூர்வஜன்மத்தில் காலநேமியென் னும் ராûசன். அந்தவாசனையால் தேவ ர்களை இமிசித்து வந்தான். தனது தங்கையான தேவகியை வசுதேவனுக்கு விவாகம பண்ணிக்கொடுத்து இரதத்திலே ஏற்றிக் கொண்டு வனம்பார்க்கப் போகை யில் “உன் தங்கை புத்திரனாற் கொல்ல ப்படுலாய்” என்றோரசாPரி பிறந்தது. அது கேட்டமாத்திரத்தில் திரும்பிவந்து இருவ ரையும் சிறையிலிட்டுப் பிள்ளைகள் பிறக் குந்தோறும் கொன்றுவந்தான். ஈற்றில கிருஷ்ணன் பிறந்து தனது யோகமாயை யால் நந்தன் சேரிபோய்ச் சேர்ந்தான். அஃதறிந்த கம்சன் அவனைக் கொல்லப் பல உபாயங்கள் தேடியும் பலியாது ஈற்றில் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டான். உக்கிரசேனன் மனைவி தோழிகளோடு காட்டிற் சென்ற போது அங்கே தோழி களைப்பிரிந்து வழிதடுமாறித் தனிக்க அச்சமயம் ஓரரக்கன் கண்டுமோகித்து அவளைக் கூடிப்பெற்ற புத்திரன் இக் கம்சன்.

கம்சாராதி - கிருஷ்ணன்.

கம்சை - உக்கிரசேனன் மூத்த மகள்.

கம்பளபருகிஷன் - (ய) அந்தகன் மகன்.

கம்பன் - சோழமண்டலத்திலே திருவழுந் தூரிலே பிறந்து சடையப்பமுதலியாராலா திரிக்கப்பட்டு விளங்கிய தமிழ்கவிசக்கர வர்த்தி. இவர் சடையப்பமுதலியார் வேண்டுகோளின்படி ராமாயணத்தை பாடி ச்சோழன் சபையில் அரங்கேற்றினவர். இவருடைய கவிகள் வெண்சொல்லும் புதைபொருளும் உடையனவாய் எத்து னை வல்லாரையும் முதல் மயக்கிப் பொருள்வெளிப்பட்டவிடத்துப் பேரானந்த முறச்செய்யுமியல்பின. இவர் காலம் இற் றைக்கு ஆயிரத்து பதினைந்து வருஷங் களுக்கு முன்னையது. கம்பர்காலத்தைச் சிலர் தக்கநியயாமின்றி நானூறுஐஞ்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாகக் கூறுவர். ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் கம்பர்காலத்தவர் என்பது தொண்டை மண்டலசதகத்தால் யாவர்க்குமுடன் பா டேயாம். புகழேந்தி வச்சிராங்கத பாண்டி யனுடைய சமஸ்தான வித்துவான். உறையூரிலிருந்து குலோத்துங்க சோழனு க்குப்பெண் கொடுத்தவன் இப்பாண்டிய னே. இவன் துலுக்கரால் வெல்லப்பட்ட பராக்கிரமபாண்டியனுக்கு முன்னர் அரசு புரிந்தவன். துலுக்கர்வென்றது இற்றைக்கு எண்ணூற்றெழுபது வருஷங்களுக்கு முன் னரென்பதும் யாவர்க்குமுடன்பாடாம். ஆக வே எண்ணூற்றெழுபதும் நாற்பத்தைந்தும் அதற்குமுன் ஓரறுபதுமாகச் சென்ற வருஷங்களைத் தொகைசெய்யுமிடத்து “எண்ணியசகாத்த மெண்ணூற்றேழின் மேல்... ... ... கவியரங்கேற்றினானே” என அரங்கேற்றுக் காலங்கூறுஞ் செய்யுள் இழுக்காகமாட்டாது. அக்காலத்தில் அவ் வரங்கிலுடனிருந்து கேட்ட வைஷ்ணவா சாரியர் ஸ்ரீமந்நாமுனிவர். அவர்க்குப்பின் ஆசாரியபரம்பரையாகவந்தோர் இப்பொழு திரப்பவரையுள்ளிட்டு நாற்பத்து மூவராவர் ஒருவர்க்கு இருபத்தைந்து வருஷங்களா குமே. எவ்வழியாயினும் எல்லாமொத்த லின் கம்பர்காலம் ஆயிரம்வருஷங்களுக் கு முன்னுள்ளதேயாம்.

கம்பை - ஓர் நதி.

கயவாகு - இவன் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்ட இலங்கை அரசன். இவனே முதன்முதல் கண்ணகிக்கு இலங்கையில் கோயில் கட்டுவித்து உற்சவங்கொண்டா டியவன்.

கயன் - (1) உன்முகன் புத்திரன். அங்கன் தம்பி. (2) ஒரு சக்கரவர்த்தி. அவன் பிரியவிரதன் வமிசத்து நந்தன் மகன். இவன் 500 அசுவமேதயாகஞ் செய்து இந்திரபதம் பெற்றவன். (3) அதூ ர்த்தரஜன் மகன். யக்கியங்கள் பலசெய் துராஜ விருஷ~pயானவன். இவன் யக்கியங்கள் செய்தவிடமே கயையெனப்பெயர் பெற்றது.

கயிலாசநாயகியம்மை - திருக்காறாயலி லே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

கயை - காசிக்கு சமீபத்திலுள்ள புண் ணியஸ்தலம். இவ்விடத்தில் அûயவடம் என்று சொல்லப்படும் ஓராலவிருûமுளது


கரதோயம் - வங்க தேயத்திலுள்ள ஒரு நதி. இது கவுரி விவாககாலத்திற் சிவன் கரங்களினின்று பெருகினமையாற் கர தோயமெனப்பட்டது.

கரந்தாமன் - (1) யயாதி புத்திரனாகிய துர்வாசன் பௌத்திர புத்திரன். பலாசு வன் எனவும் படுவன். பல பராக்கிரமவந் தனாய் ராச்சியம் செய்த போது பெறாமையால் ஏனையராஜாக்கள் திரண் டு இவனை வளைந்தார்கள். அது கண்டு அஞ்சிச்சிறிது நேரம் ஏகாந்தமாயிருந்து சித்தித்துப் பின் வெளியே சென்று யாவரையுஞ் செயித்தவன். இவன் மகன் அவீûpத்து.

கரம்பி - (1) (ய) சகுனி மகன். (2) குந்தி.

கரவீரேசுவரர் - திருக்கரவீரத்திலே கோயி ல் கொண்டிருக்கும் சுவாமியர் பெயர்.

கரன் - விச்சிரவாவுக்குச் சாகையிடத்துப் பிறந்தபுத்திரருள் மூத்தவன். ஜனஸ்தான த்தில் சேனாhதியாயிருந்தபோது ராமராற் கொல்லப்பட்டவன். சகோதரர். தூஷணன் திரிசிரன் என இருவர்.

கரிகாற்சோழன் - (1) காவிரிப்பூம்பட்டின த்திணுலே, இளஞ்சேட் சென்னியன் என்னும் சோழராஜாவுக்குப் புத்திரனா அவதரித்து உத்தரதேசத்திலே படை கொண்டு அநேகநாடுகளைத் தனதடிப்படுத்திப் பகையரசரையடக்கி மனு நெறிவழா மற் செங்கோல் செலுத்தியவனும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரென்னும் புலவர் பட்டினப் பாலையென்னும் பிரபந்தத்திலே தன்பராக்கிரமம், செங்கோல், கொடை முதலிய நற்குணங்களையெடுத்துப் பாடப்பெற்றவனும், அப்புலவர்களுக்கு அப்பிரபந்த துக்காகப் பதினாறிலûம் பொன் பரிசிறைந்தவனும் இப்பெருந்தகையே. இவன் சாலிவாகன சகாரம்பத்தில் விளங்கியவன். (2) சாரமாமுனிவரிட்ட சாபத்தால் உறையூர் மண்மாரியாலழிய அதில் அரசு செய்திருந்த பராந்தகசோழனும் மனைவி யும் அம்மண்மாரிக்குத் தப்பியோடிக் காவிரிநதியை கடந்து செல்லும் போது பராந்தகன் குதிரையினின்றுந் தவறிக் காவிரியில் வீழ்ந்திறக்க அவன் மனைவி அக்கரைபட்டு ஒரு வனத்தையடைந்தாள். பராந்தகன் இறக்கும்போது கருப்பத்திலிரு ந்த இக் கரிகாற்சோழன் சிலநாளில் பிரமமாநதி முனிவராச்சிரமத்திற் பிறந்தா ன். இம் முனிவரால் சகல கலைகளையு மோதியுணர்ந்து வருநாளில் அரசிழந்திரு ந்த சோழநாட்டிற்கு ஓரரசனை நாடுமாறு விடப்பட்ட யானையானது சென்று அச் சிறுவனைத் தூக்கவெத்தனித்தும் போதி யவலியில்லாது திகைத்து நின்றது. அப் பொழுது பிரமாநதி மனிவர் அப்புத்திரன் காலில் ஒரு கரிக்கட்டியால் வரைசெய்து விட்டார். அவ்வளவில் அப்புத்திரனை யானைதூக்கிச் சென்று முடி சூடுவித்தது. இதுவே பெயர்க்காரணம் எனவே இப் பெயருள் யார் இருவர் சோழர்.

கருடபஞ்சமி - ஆவணி சுக்கிலபûத்துப் பஞ்;சமி. இது சுமங்கலிகளக்குரிய விரத தினங்களில் ஒன்று.

கருடன் - கசியபப் பிரசாபதிக்கு விநா தையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் விஷ்ணுவுக்கு வாகனம்.

கருணிகாரவனம் - மேரு சமீபத்திலுள்ள வனம்.

கருணிகை - (1) ஆனகன் பாரி. (2) ஓரப் சரசு.

கருணைநாயகி - திருமாற்பேற்றிலே கோ யில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

கருநாடகம் - திருவிடாந்தர தேசமத்தியத் தியத்திற்கு நேரே மேற்கின் கணுள்ள தேசம்.

கரும்படுசொன்னாயகி - திருப்புறம்பாயத் திலே கோயில் கொண்டிருக்குந் தேவி யார் பெயர்.

கரும்பன் - தன் தோட்டத்தலிருந்த கரும் பையெல்லாம் எவரும் நாணாது வந்து தின்னுகவென்று யாவரையுமழைத்தபோது
சிலர் மறுக்க, அவர்க்குக் கூலிகொடுத்த ழைத்து அருத்தின தொண்டைநாட்டு வேளாளன். கரும்புதின்னக் கைக்கூலி என்ற பழமொழி இவனால் வந்தது. (தொ ண்டைமண்டலசதகம்.)

கரும்பனூர்கிழான் - வெங்கட நாட்டில் விளங்கிய கரும்பனூரன் இவன் புறத்தி ணைநன்னாகராற் பாடப்பட்டவன்.

கருவூர் - வஞ்சி. இந்நகர் சேரருக்குரிய இராஜதானி. சேரரைவென்று சோழமிங்கர சியற்றினர்.

கருசன் - வைசுவதமனுவினுடைய புத்திர ருள் ஒருவன். இû”வாகு தம்பி. காரூசர் இவன் வமிசத்தவர். இவன் தேசம் கரூசம்.

கரையேறவிட்டநல்லூர் - இது திருப்பாதி ரிப்புலியூருக்குச் சமீபத்திலே யுள்ளது. கெடிலம்பெருகி மாணிக்கவாசகரை வழி தடுக்கச் சிவன்சித்ராய்வந்து அவர்க்கு வழிவிடுத்த தலம்.

கர்க்கடேசர் - திருத்துதேவன் குடியிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கர்க்கன் - (1) யாதவர்கள் புரோகிதன். வசுதேவன் இவரை நந்தன்மனைக்கனுப் பிப்பலராமகிருஷ்ணர்களுக்கு நாமகரணா திசமஸ்காரஞ் செய்வித்தான். (2) (பு) ஹ”தமன்னியன் புத்திரன். கினி தந்தை.

கர்ணன் குந்தி கன்னிகையாயிருக்கும் கன்னன் போது தனக்கு ஓர் இருடி கொடுத்த குளிகையைப் பாPûhர்த்தமாக உட்கொண்டு சூரியனைநினைக்கச் சூரி யன் பிரசன்னமாயினான். அவனைக் கூடிப்பெற்ற புத்திரன் இவன். குந்தி தனது கற்புக்குப் பங்கம்வந்ததேயென்று நாணி உடனே அப்புத்திரனை பேழையி லிட்டு யமுனையிலே மிதந்து போம்போது ஒரு துறையிலே தனது மனைவியோடு நீராடிநின்ற அதிரதன் என்னும் இரதசாரதி அப்பேழையைப்பற்றித் திறக்க அதிலே புத்திரன் இருக்கக்கண்டானந்தித்தெடுத்து ப்போய் வளர்த்தான். அது காரணம் பற்றி அதிரபுத்திரன் எனப் பெயர் பெற்றான். அதிரதன் மனைவி பெயர் ராதையாதலா ல் ரததேயன் எனவும் படுவன். இவன் சகஜ கவசகுண்டலனாதலால் கர்ணனென் றும், வசுவர்மாரனாதலின் வசுசேனனென் றும் பெயர் பெற்றான். (வசுவர்மம் ஸ்ரீ பொற்கவசம்.) அதிரன் இவனைத் துரோ ணனிடங் கொண்டுபோய் வில்வித்தை கற்பித்தல் வேண்டுமென்று வேண்டத் துரோணன் பிராமணரும் ûத்திரியருமல் லாதார்க்குப் பயிற்றுவதில்லையென்று மறுக்க, கர்ணன் பிராமணவடிவந்தாங்கிப் பரசராமரிடஞ்சென்று கிரமமாகக் கற்று வல்லனாயினான். இங்கே துரோணரிடங் கற்ற அர்ச்சுனன்தனக்குச் சமானனாயின மைகண்ட கர்ணன் பொறாமை கொண் டொழுக, அஃதுணர்ந்து துரியோதனன் அவனைச் சிநேகித்து அங்கதேசாதிபதி யாக்கித் தன்க்குயிர்த் துணையாக்கினான் இதற்கு முன்னே பரசுராமர், தம்மை கர் ணன்வஞ்சித்தானென்பதுணர்ந்து, தாமுப தேசித்த மகாஸ்திரவித்தை ஆபத்துக்கா லத்திலுதவாதுபோவென்று சபித்தார். கர்ணன் வில்லியத்தை அப்பியாசித்துவரு ம்போது ஒருநாள் ஒரு வெளியிலே நின் று மேய்ந்த பசுக்கன்றின் மேல் அவன் கைப்பாணம்பட அஃதிறந்தது. அக் கன்று க்குரிய பிராமணன் கோபித்து, சமான னோடு யுத்தஞ் செய்யும் ரதம்புதையப் பெற்று அவனால் மடிகவென்று அவனைச் சபித்தான். கர்ணன் எதைக்கேட்பினும் மறாது கொடுக்குந் தாதாவென்பது துணர் ந்திந்திரன் தனது மகன் அர்ச்சுனன் பொருட்டு லஞ்சத்தால் அவன் கவச குண்டலங்களைக் கவர்ந்தான். கர்ணன் பாரதயுத்தத்திலே அர்ச்சுனாலே கொல்ல ப்பட்டுக் கற்றுயிராய்க்கிடக்கும் போதும் கிருஷ்ணன் ஒரு வேதியனாகி அவன்பாற் சென்றுயாசிக்க, அவன் பிராமணோத்தம ரே, என்னாவி நிலைகலங்கிப்பிரிகின்ற சமயத்தில் வந்தீர். நீர் கேட்பவற்றை யெல்லாம் முகமலர்ந்து வாரிக் கொடுக் கும் நன்னிலையிலிருக்கும் போது வந்தீரி ல்லை. இச்சமயம் யான் செய்யத்தக்கது யாதென்று வினவ, கிருஷ்ணன், நீ செய் த புண்ணியங்களையெல்லாம் எனக்குத் தத்தஞ்செய்வாயாகவென்ன, கர்ணன் என் னிடத்துள்ளதனையே கேட்டீப் அஃது யான் செய்த தவப்பயனேயாமென்று மகி ழ்ந்து தன் தேகத்திலே பாணம் பாய்ந்த கண்ணினின்று காலும் இரத்தப்புனலால் புண்ணியத்தைத் தத்தஞ்செய்தான். கிரு ஷ்ணன் அவனுடைய வண்மையை மெச்சி அவனுக்கு நற்கதியருளிப் போயி னர். கர்ணனுக்கும் துரியோதனனுக்குமி டையேயிருந்த நட்பே நட்பிலக்கணமெல் லாம் பொருந்திச் சிறந்தது. ஒரு நாள் கர்ணனும் துரியோதனன் மனைவியும் சதுரங்கமாடிக் கொண்டிருக்கையில், துரி யோதனன் அவ்விடஞ் சென்றான். அவ னைக்கண்ட மனைவி துணுக்குற்றெழுந் தோடினாள். கர்ணன் காரணமுணராது ஆட்டம் முடியுமுன் எங்கெழுந்துதோடுகி ன்றனையென்று அவளுடைய மேகலை யைப்பற்றி அவளையிழுக்க, அவள் அதனையறுத்துக்கொண்டோட மேகலை முத்துக்களெல்லாமுதிர்ந்து சிதறின. கர் ணன் அது கண்டு யாது செய்தேனென்று துன்புற்று அம்முத்துக்களைப் பொறுக்கு வானாயினான். அதுவரையிலுங் கர்ணன் துரியோதனனைகண்டிலன். நடந்தனவற் றையெல்லாங்கண்டு சென்ற துரியோத னன் அவன் முன்னே சென்று தானும் அம்முத்துக்களைப் பொறுக்குவானாகி, நண்பனே, கோக்கவா பெறுக்கவாவென்றா ன். அப்பொழுது கர்ணன் துணுக்குற்று நின்று, நின் மனைவியைப்பற்றியிழுத்தே னென்று கோபஞ் சாதியாது, கோக்கவா, பெறுக்கவாவென்று நினது கண்ணியத்துக் கடாத இச்சிறுகுற்றவேனுக்கு மாட்பட்ட யையேயென்று நாத்தழுதழுத்து நின்றான். துரியோதனன் நட்புக்குச் சிறுமையும் பெருமையும் ஐயமுமுளவாமோவெனக்கூற கர்ணன் கலக்கந்தீர்த்து அவன் தன்மேல் வைத்த கேண்மையை வியந்து அன்று முதல் முன்னையிலும் மிக்க கேண்மையு டையனாயினான்.

கர்த்தமப்பிரஜாபதி - பிரமசாயையிலுற்ப த்தியானவன். பாரி தேவஹ{தி. புத்திரன் கபிலன்.

கர்மம் - அகங்கார மமகாரங்கள் காரண மாகச் செய்யப்படுஞ் செயல்கள். ஆகாமி யம், பிராரத்தம், கஞ்சிதம் எனக் கர்மம் மூன்றாம். இக்கர்மமே சுகதுக்கங்களுக் கும் அவைகளை அநுபவிப்பதற்கருவி யாக பிறவிகளுக்கு காரணமாம். கர்மம் நசித்தவிடத்துப் பிறவியும்நசித்து முத்தி கைகூடும்.

கர்மியன் - காந்தாரி புத்திரன்.

கலககண்டகி - காலகௌசிகன் பாரி.

கலகங்காத்தவரதேசுரர் - திருமாகறலிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

கலசபவன் - (1) அகஸ்தியன் (2) வசிட்டன் (3) துரோணன். கலசம் - கும்பம்: பவன் - பிறந்தோன்.

கலாதத்துவம் - இது வித்தியாதத்துவத் துவத்துக்கு மேலுள்ள தத்துவம். அது செம்பிற் களிம்புபோல ஆன்மாவை மறை த்துநிற்கும் மலவிருளைச் சிறிது விலக்கி அவ்வான்மாவினது சுவரூபத்தை ஒரு வாறு புலப்படுத்துவது. எனவே ஆன்மாவி னது பிரகாசமாம்.

கலி - (1) கலியுகத்துக்கு அதிதேவதை. (2) சங்ககாலத்து வழங்கினதொரு தொகை நூல்.

கலிக்கம்பநாயனார் - கடந்தை நகரில் வைசியகுலத்தில் விளங்கிய ஒரு சிவபக்தர்.

கலிங்கதேசம் - இது ஒட்டிர தேசத்துக்கு தெற்கும் கருநாடகத்துக்கு வடக்குமுள்ள தேசம்.

கலிங்கத்துப்பரணி - சயங்கொண்டான் சோழனைப்பாடிய நூல். அநேகசோழரு டைய சரித்திரங்களிதிலே கூறப்பட்டுள் ளன.

கலிங்கன் - பலி மூன்றாம் பத்திரன், இவனால் கலிங்கதேசம் விளங்கியது.

கலித்தொகை - சங்கப்புலவரால் செய்ய ப்பட்ட ஒரு தொகைநூல். சொன்னயம் பொருணயங்களால் மிகச்சிறந்தது. இதற் கு நச்சினார்க்கினியர் உரை செய்தர்.

கலியநாயனார் - திருவெற்றியூரிலே செக்கார் குலத்திலே அவதரித்த இவர் சிவாலயத்துக்கு திருவிளக்கிடுதலையே பெருஞ் சிவபுண்ணியமாகக்கொண்டு தம் மிடத்துள்ள செல்வமெல்லாவற்றையும் அதன் பொருட்டுச் செலவிட்டு வறுமைய டைந்து தமது மனைவியை விற்கப்புகுந் தும் வாங்குவாரின்மையால் தமதுதூட்டி யையரிந்துகொள்ளத் துணிந்த போது சிவன்வெளிப்பட்டு அருள் புரியப் பெற்ற பக்தர்.

கலியுகம் - சதுர்யுங்களுளொன்று. 4,32,000 வருஷங் கொண்ட காலவட்டம். இது கிருஷ்ணநிரியாணம்முதற் கொண்டு கணிக்கப்படுவது. இவ்யுகத்தில் ஜனங் கள் தமோகுணம்மேலிடப் பெற்றவர்களா ய், விருப்பு வெறுப்புடையயர்களாய், தவங்களிலே மனஞ்செல்லப் பெறாதவர்க ளாய், ரோகங்களாற் பீடிக்கப்பெற்றவர்க ளாய், துராசாரபரார்களாய், பொய்ம்மை யேமேற்கொண்டவர்களாய், அற்பாயுசுடை யர்களாய் சாதியாசாரம் சமயாசாரம் தலை தடுமாறப் பெற்வர்களாய்ப் பிறந் துழல்வார்களென்பது புராணசம்மதம். இக் கலியுகத்திலிப்போது சென்றது ஐயாயிரம் ஐயாயிரத்தின் மேலதாகிய இவ்விகாரி வருஷத்திலே விருச்சிகராசியிலே கேது வெழித் தொழிந்த எட்டுக் கிரகங்களுங் கூடி நின்றன. சப்தகிரககூமமென்றும் ஷட்கிரககூடமென்றும் பஞ்சக்கிரககூடமெ ன்றும் சோதிஷர் பலமதப்பட்டனர். இக் கிரககூடத்தின் பயனாகக் கொடிய பூகம் பங்களும் கோரரோகங்களும் பெரும் பஞ்சமும் யுப்தங்களும் பிறவுமாகிய பல வுற்பாதங்கணிகழ்ந்தன.

கலை - (1) கலைஞானம்: அவை அறு பத்துநான்கு. (2) சந்திரகலை, அவை பதினாறு. பிரதமைமுதற் பூரணையீறாகிய பதினைந்தையும் தேவருண்பர். பிரதம கலையையுண்பவர். அக்கினி. துவிதிய கலையை ஆதித்தன். திருதிய கலையை விச்சுவதேவர். கதுர்த்தகலையை வருண ன். பஞ்சமகலையை வஷடகாரம். சஷ்ட கலையை வாசவன். சப்தமகலையை முனிவர். அஷ்டமகலையை ஏகபாதசிவ ம். நவமகலையை மறலி. தசமகலையை வாயு. ஏகாதசகலையை பார்ப்பதி. துவா தசகலையைப் பிதிர்கள். திரயோதசகலை யைக் குபேரன். சதுர்த்தசகலையைச் சிவன். பூரணகலையைப் பிரமதேவர். எஞ் சிய ஒரு கலையே சந்திரனுக்குரியது.

கல்மாஷ்பாதன் - கன்மாடபாதன் காண்க.

கல்யாணசுந்தரர் - திருவேள்விக்குடியிற் கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கல்லாடனார் - “தொல்காப்பியத்திற் குரையிடையிட்ட விரகர் கல்லாடர்” என ஆன்றோராற் புகழப்பட்ட புலவர் சிகா மணியாகிய இவர் கடைசங்கத்து புலவர் களுள் ஐந்தாமாசன வரிசை பெற்றவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடு ஞ்செழியனையும், அப்பர்கிழான் அரவந் தை முதலிய பிரபுக்களையும் பாடியவர். கல்லாடமென்னும் நூல் செய்தவரும் இவரே. திருவள்ளுவர் குறளுக்கு இவர் கொடுத்த சிறப்புக்கவியும், கல்லாடத்தி லே திருவள்ளுவரைக் குறித்து இவர் கூறியதும் ஒரு கருத்துடையனவேயாயம். இவர் பலவகைப்பட்ட சமயநூல்களெல் லாம் நன்காராய்ந்த பேரறிஞர் என்பது, “ஒன்றே பொருளெனின் வேறென்ப வே றெனி, னன்றென்றவாறுசமயத்தார் - நன் றென, வெப்பாலவருமியைபவே வள்ளு வனார், முப்பான்மொழிந்தமொழி” என்பத னாலும். “சமயக்கணக்கர் மதி வழிகூறா துலகியல் கூறிப் பொருளிதுவென்ற, வள் ளுவன்றனக்கு வளர்கவிப்புலவர் முன், முதற் கவிபாடிய முக்கட்பெருமான். என் னுங் கல்லாடத்தானும் துணியப்படும். இவர் சிவபக்தியிற் சிறந்தவரென்பது கல்லாடத்திலே செய்யுள் தோறும் சிவன் அருட்டிறத்தை யெடுத்துக் கூறிப்போகும் பரிவு சான்ற பரிசேகாட்டும். இவர் மாணி க்கவாசகர் காலத்துக்குப் பின்னுள்ளவ ரென்பது, சிவன் வைகையடைத்ததும் நரி யைப்பரியாக்கியது மாகிய திருவிளையா டல்கள் கல்லாடத்திலே கூறப்பட்டுள்ள தால் அநுமிக்கப்படும். இவர் ஆயிரத் தெண்ணூறு வருஷங்களுக்கு முற்ப்பட்ட கடைச்சங்க காலத்தவர்.

கவந்தன் - (1) ஓபராûசன். இவன் காலில்லாதவனாய் யோசனைதூரம் நீண் டபுஜங்களும் உதரத்திலே புதைந்தமுக முமுடையயனாய்த் தண்டகாரணியத்திலி ருந்தவன். ராமவû{மணர் சீதையைத் தேடிச்சென்றகாலத்து இவன் அவர்களை உட்கொள்ள எத்தனித்தபோது அவர்க ளால் புஜங்கள் கொய்யப்பட்டு பூர்வகந்த ருவரூபம்பெற்றவன். முற்பிறவியில் இவன் தனுவென்னும் கந்தருவன். இவன் தபோபலத்தாற் சிரசீவித்துவமும், காமரூபி த்துவமும் பெற்றுக்கோபசிரேஷ்டனாயொ ழும்போது, ஸ்தூலகேசனென்னும் இருஷ~p சாபத்தால் ராûசரூபம் பெற்றவன். பின் னர் இவன் இந்திரனேடு போர்தொடுத்த போது இந்திரன் வச்சிராயுதத்தாற் காலும் தலையும் வயிற்றிற் புதையுமாறு தாக்கப் பெற்றுக் கவந்த வடிவங்கொண்டவன். (2) வாணாசுரன்மந்திரி. கும்பாண்டன்.

கவாûன் - சுக்கிரவன் சேனையில் ஒரு வாநரன்.

கலி - (பு) இருûன் மகன். இவன் வமி சஸ்தர்பிராமணராயினர். (2) இû{வாகு தம்பி. இவன் பாலியத்திலே தானே இறந் தவன். (3) சுக்கிரன் தந்தை (4) சுக்கி ரன். (5) வான்மீகி (6) சூரியன் (7) பிரமா

கவிசாகரப்பெருந்தேவனார் - கடைச்சங்க ப்புலவர்களுளொhருவர்.

கவுணியனார் - கடைச்சங்கப் புலவர்களு ளொருவர். இவர் வள்ளுவர்க்கூறிய சிறப் புக்கவியில் அவர் கூறியவெல்லாம் முந்திய நூல்களிலே கூறப்பட்டனவெனப் பாடியவர்.

கவுந்தி - இவள் கோவலனும் கண்ண கியும் மதுரைக்குச் செல்லும்பொழுது அவர்களுக்கு வழித்துணையாகச் சென்று இடையில் அவர்களை அவமதித்துப் பே சியஇருவரை நரியாகும்படி சபித்து மது ரையையடைந்தபின் கண்ணகியை மாதரி யிடம் அடைக்கலமாகக் கொடுத்தவன்.

கவுரியம்மை - திருக்கேதாரத்திலே கோ யில் கொண்டிருக்குந் தேவியர் பெயர்.

கழற்றறிவார்நாயனார் கொடுங்
சேரமான்பெருமாணாநாயனார் கோ@ரிலே சேரர்குடியிலே பெருமாக்கோதையார் என் பவர் பிறந்து பாலிய தசையிலே தானே துறவுடையராகித் திருவஞ்சைக்களத்தை அடைந்து அங்கிருந்து சிவகைங்கரியம் புரிந்துவருகையில், சேரன் மோûத்தின் மீது பேராசைகொண்டு அரசுதுறந்து தபோவனம்புக, மந்திரிமார்கள் பெருமாக் கோதையைவேண்ட அவர்சிவாஞ்ஞைபெற் றரசராயினார். தன்மேனியிலுவர்மண்ணுறிய னாலுத்தூளனமாக வீபூதியை உடம்பெங் குச் தரித்தான்போன்றெரு வண்ணான் எதிரே வரக்கண்டு நமஸ்கரித்துவரும், சேரமான்பெருமாள்நாயனாரென்னும் பெயர் கொண்டவரும், சுந்தரமூர்த்திநாயனாருடன் குதிரைமேற்சென்று கைலாசத்தையடைந் துவரும், சிவபிரான் பாணபத்திரன்கையில் திருப்பாசுரமென்றெழுதியனுப்பப் பெற்ற வரும், திருக்கைலாச ஞானவுலாப்பாடிய வரும் இவரே. பிறர் கழறியவற்றையறியு மறிவைச் சிவன்பாற்பெற்றவராதலின் கழ ற்றறிவாரெனப்பட்டர். இவருக்கு முன் அர சியற்றிய சேரன் செங்கோற்பொறையன், புறநானூற்றிலே மாந்தரஞ்சேரவிரும் பொறையென்று வழங்கப்படுவன். இவன் இராசசூயம்வேட்டபெருநற்கிள்ளியென்னுஞ் சோழனனோடு போர் செய்தவன். இச் சோழன் ஒளவையாற் பாடப்பட்டவன். கடைச்சங்கத்து கடையரசனாகிய உக் கிரப்பெருவழுதி இவனுக்கு பெருநட்பா ளன். எனவே இந்நாயனார் காலம் ஆயிர த்தெண்னூறு வருஷங்களுக்கு முன்னுள் ளதாதல் வேண்டும். இந்நாயனார் புறநா னூற்றிலே சேரமான் மாவெண்கோவென்று வழங்கப்படுவர். இவர் குதிரைப்பிரியராத லினாலே இப்பெயரால் வழங்கப்பட்டா ரென்பது பெரியபுராணத்தாற் துணியப்ப டும். என்னை? “வயப்பரிமுன்வைத்துச் சேரர்வீரரும் சென்றனார்” என்பது பெரிய புராணக்கூற்று.

கழங்சிங்கநாயனார் - காடவர்குலத்தில் அவதரித்தரசியற்றி வருங்காலத்தில் தமது மனைவியுந் தாமும் திருவாரூரிற் சுவாமி தரிசனம் பண்ணிக்கொண்டு செல் லுகையில் மனைவியார் ஒரு புஷ்பத்தை யெடுத்துமோந்த குற்றத்துக்காக அவர் கையைவாளாற் சோத்தித்தருள்பெற்ற பக்தர்.

கழாத்தலையார் - சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலபானும், சோழன்வேற்பஃறடக் கைப் கெருவறற்கிள்ளியும்பொருது களத் தில் வீழ்ந்துகிடந்தபோது அவ்விருவார் பெருமையையும் அவர் தேவியர் துன்பத் தையும் எடுத்துப்பாடிய புலவர். இவர் பர ணர்காலத்தவர்.

கழுமலம் - சீர்காழி

கழைதின்யானையார் - வல்லேரியைப் பாடியபுலவர். இவர் தாம் ஊர்ந்துசெல்கி ன்ற யானைக்குக் கரும்பேயுணவாகக் கொடுப்பவராதலின் இப்பெயர் பெற்றார்.

களத்தூர்கிழார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவர் வள்ளுவர் குறளுக்குக் கொடுத்த சிறப்புக்கவியிலே அக்குறள் வேதசாரமெனக்கூறினவர். திரு வள்ளுவர்சமயத்தை வெளியிடும் பொரு ட்டு இவர் தாம்கூறிய அம்மாலைவெண்பா வில் “அருமறைகளைந்துஞ் சமயநு{லாறு நம்வள்ளுவனார், புந்திமொழிந்த பொரு ள்.” எனக்கூறுமுகததால் வள்ளுவரைத் தம்பக்னத்து வைதிகசமயியென்பதுகாட்டி னாயினார்.

களரியாவிரை - இது தலைச்சங்க காலத் திருந்தவொருநூல்.

களரிளமுலையீசர் - திருக்களரிலே கோயில் கொண்டிருக்குந் சுவாமி பெயர்.

களவழிநாற்பது - செங்கட் சோழன் சேர மான் கணைக்காலிரும் பொறையைச் சிறைவைத்துழி அவனைச்சிறைவிடுவித்த ற்குச் சோழனைப் பொய்கையார் பாடிய பிரபந்தம்.

களாவதி - பாரன் என்னும் இருஷ~pக்குப் புஞ்சிகஸ்தலையென்னும் அப்சரசிடத்துப் பிறந்த புத்திரி. இவள் அழகைக்கண்ட பார்வதி அதிசயித்து அவளுக்கு பதுமினி வித்தையை அருளிச்செய்ய, அவள் அது கொண்டு சுவரோசியை வசியஞ்செய்து மணம்புரிந்தாள். பதுமினிவித்தை விரும்பி யதைக்கொடுக்கும் பெருமந்திரம்.

களை கர்த்தமன் மகள். மாPசி மனைவி கலை கசியான் தாய்.

கள்ளில்ஆத்திரையனார் - ஆதனுங்கனை ப்பாடிய புலவர். அவன் மீது இவர் பேரன் புடையரென்பது. “எனது மனத்தைத் திற ந்து காணும் வன்மையுடையோருளராயின் அவர் அம்மனத்திடை உன்னையன்றி வேறுகாணார். உண்ணை யான் மறக்குங்காலமுளவாயின் அக்காலம் இர ண்டேயாம். ஒன்று என்னுயிர் பிரியுங்கா லம். மற்றது என்னையான் மறக்குங்கால ம்” என்னுங்கருத்தமையப் பாடிய அவர் பாடலால் விளங்கும்:- “எந்தை வாழி ஆதனுங்க, வென்னெஞ்சந்திறப்போர் நிற் காண்குவரே, நின்னியான்மறப்பின் மறக் குங்காலையென்னுயிர் யாக்கையிற்பிரியும் பொழுது மென்னியான்மறப்பின் மறக்கு வென் வென்வேல்”

கறுப்பன் - இவன் தொண்டைநாட்டிலே மாவையம்பதியிலே விளங்கிய மகாபிரபு. இவன் தந்தை பெயர் கஸ்தூரி. தமிழ் நாவலர்களுக்குப் பொன்மாரிபொழிந்து பெரும் புகழ்படைத்தவன். இவனே தொ ண்டைமண்டல சதகத்தைப் படிக்காசுப் புலவரால் பாடுவித்தான்.

கற்கிஅவதாரம் - விஷ்ணுவினது தசாவ தாரங்களுட் கடை அவதாரம். கலியுகாந் தத்திலே சம்பளகிராமத்திலே விஷ்ணு அம்சமாயுள்ள ஒரு பிராமணணுக்கு விஷ்ணு புத்திரராகப் பிறந்து கற்கியென்னும் பெயருடையராய் வழுவிய தருமங்களை நிலைநிறுத்துவரென்பது புராணசம்மதம்.

கற்பகஈசுவரர் - திருக்கடிக்குளத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமியர் பெயர்.

கற்பகவல்லியம்மை - திருமயிலைப் பூம் பாவையிலே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர்.

கற்பகத்தீசுவரர் - திருவலஞ்சுழியிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கற்பூரபாண்டியன் - குங்குமபாண்டியனுக் குப் பின் முடி தரித்தவன்.

கனகசடம் - ஜந்தவர் பிறந்தவூர்.

கனகசபை - சிதம்பரத்துள்ள பொன்னம் பலம். இது சிவன்றிரு நடனம்புரியும் பஞ்சசபைகளுள்ளே மிக்கசாந்நித்தியமு டையது. இது பிரண்மாடத்துப் தூலபாவ னாஸ்தலம். பிண்டத்திலே சூக்குமதத்து வஸ்தலம் இருதய ஸ்தானமாகிய ஞான சபை.

கனகமாலை - சீவகன் மனைவியருளொ ருத்தி.

கனகவிசயர் - ஆரியமன்னனாகிய பாலகு மாரன் புதல்வர். இவர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டவர்.

கனித்திரன் - (1) பிரஜானன் புத்திரன் ûபன் தந்தை. விவிம்சன் பாட்டன். இவன் தம்பிகள் இவனைக் கொல்லுமாறு ஒரு யாகத்தினிகறுமொரு பூதத்ததை யெழுப்பிவிட அஃது அவனைக்கொல்லவி யலாது திரும்பி வந்து ஏவினோரையே கொன்றது. (2) விவிம்சன் புத்திரன். இவன் மகன் கரந்தமன்.

கனிவாய்மொழியம்மை - திருவெண்பாக் கத்திலே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர்.

கன்மாடபாதன் - (இ) மித்திரசகன். இவன் வேட்டம் சென்றபோது ஓரிராûச னைக் கொன்று சென்றான். அதற்கு பழி வாங்குநிமித்தம் அவ்விராûசன் தம்பி பரிசாரகவேஷந்தரித்து இம்மித்திரசகனிட ம்போய் அவன் மடைப்பள்ளிக்கதிபதினா னான். ஒரு நாள் வசிஷ்டர் இவ்வரசன் மனைக்கு விருந்தினராய்ப்போக, அப்பரி சாரகன் ஒரு நரனைக்கொன்று அம்மாமிச த்தைப்பாகஞ்செய்து முனிவர்க்கிட, முனி வர் அதுகண்டு சினந்து அரசனை ராû; சனாகவென்று சபித்தார். அரசன் தன்மீது குற்றமில்லாதிருக்கச் சபித்தவருக்குப் பிர திசாபமிடத்த் துணிந்து கையினீரை யெடுக்க மனைவி தடுத்தாள். தடுத்தலும் அந்நீரைத் தனது பாதத்தில்விடக் கன் மா~பாதபாதனாயினான். அது கண்ட வசிஷ்டர் உண்மையுணர்ந்து ஈராண்டிற் சாபவிமோசனமாக வென்றனுக்கிரகித்தார்.

கன்னர் - செங்குட்டுவனுக்கு நட்பினராகி ய ஆரிய அரசர். இவர் நூற்றுவர்.

கன்னன் - கர்ணன் காண்க.

கன்னியாகுப்சம் - ஒரு தேசம் இது, குநசாபன் புத்திரிகள் நூற்றுவரையும் வாயுபகவான் பூப்பின்றியிருக்குமாறு சபிக் கப் பிருகதத்தன் அச்சாபத்தை நீக்கி மணம்புரிந்து வாழ்ந்த இடம்.

கன்னியாகுமரி - மலைநாட்டிலுள்ள குமரி யம்மையென்னும் தேவிNûத்திரம். சிவ சக்தியாகிய இத் தேவியை இங்கே ஸ்தாபித்துப் பூசித்தவன் பரசுராமன். இக் குமரிஸ்தலம் முன்னூழியிறுதிலே கடல் கொள்ளப்பட்டது. இப்பொழுதுள்ளஸ்தலம் பின்னரமைக்கப்பட்டது. இதுகுமரி எனவும் படும்.

கன்னியுமைமாது - திருக்கச் சூராலத்தி லே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

கன்னியை - விதர்ப்பன் மனைவி. இவ ளைச்சியாமகன்றனக்கென்று கொண்;டுபோ ய்த் தன் மகன் விதர்ப்பனுக்கு மனைவி யாக்கினான்.

காக்கைபாடினியார் நச்சென்னையார் - நாடுகோட்பாடு சேரலாதனைப்பாடி ஒன்பது காப்பென்னும் நூறாயிரங் காணமும் பரிசாகப்பெற்ற புலவர்.

காசன் - இவன் சுகோத்திரன் மகன்.

காசி - இந்நகர் கங்காதீரத்திலுள்ள திவ் வியஸ்தலம். இது சப்தபுரிகளுளொன்று. சமஸ்கிருத சங்ககமிருந்தவிடமுமிவே. பண்டுதொட்டுள்ள வைதிகராஜாதானி இதுவே. இந்நகரத்தையெடுத்துக் கூறதா புராணேதிகாசங்களில்லை. வாரணாசியெ னவும் படும்.

காசிபன் - கசியபன் காண்க.

காசியபன் - பாம்பு மந்திரம் வல்ல ஒரு பிராமணன். இவன் பாPûpத்து மகாராஜன் வி~த்தினாலிறப்பானென்பதுணர்ந்து அவ னிடஞ் சென்றபோது வழியிலே தûசன் கண்டு வேண்டியதிரவியங்களைக் கொடு த்து அங்குச் செல்லாமல் தடுத்தான்.

காசியன் - (1) சேனசித்துமகன் (2) ஆயு பௌத்திரனாகிய சுகோத்திரன் மகன்.

காசியாரண்ணியேசுவரர் - திருஇரும்பூளை யிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

காசிராசா - அம்பிகை, அம்பாலிகை என்போர் தந்தை.

காஞ்சனமாலை - மலையத்துவச பாண்டி யன் மனைவி.

காஞ்சனன் - (1) புரூரவன் புத்திரனாகிய அமவசுவினது பௌத்திரன். (2) உதயகு மாரனை வாளாற் கொன்றவன்.

காஞ்சி தொண்டைமண்டலத்தின்கண் காஞ்சீபுரம் ணுள்ள ஒரு திவ்விய ஸ்த லம். இது சோழருக்கு ராசதானியாகவுமி ருந்தது. இங்கே கோயில் கொண்டருளியி ருக்கும் சிவபெருமான் ஏகாமிரேசுரரென் றும் அம்மையார் காமாûpயென்றும் பெய ர்பெறுவர். விஷ்ணு ஆலயத்தில் எழுந்த ருளியிருக்கும் சுவாமி பெயர் வரதராஜர். காஞ்சிபுரம் காஞ்சி எனவும்படும். திருக் குறளுக்குச்சிறந்தவுரை செய்த பரிமேலழ கருக்கும். கந்தபுராணம் தமிழிலே பாடிய ருளிய கச்சியப்பருக்கும் இதுவேஜன்மஸ் தானம். சங்கராசாரியர், ராமாநுஜாசாரியர் முதலியபாஷ~pயகாரரும் வித்தியாவாதங் கள் புரிந்ததுமிவ்விடமே.

காண்டவம் - இந்திரனது வனம் அருச்சு னனால் தீயூட்டப்பட்டது.

காண்டிக்கியன் - நிமி வமிசோற்பவனா கிய தருமத்துவஜன். ஜனகமகாராஜன் பௌத்திரன். மிதத்துவசன் புத்திரன். இவன் தன் சிறிய தந்தையாகிய கிருத்து வாசனது புத்திரனாகிய கேசித்துவசனேடு முரணிக் காடுசென்றவன்.

காண்டீபம் - அருச்சுனனுக்கு அக்கினி தேவன் காண்டவதகனத்துக்குப்போகும் போது கொடுத்தவில்.

காதம்பரி - காதம்பரியைக் கதநாயகனாக வைத்து பாணகவி செய்த சமஸ்கிருத நாடகம்.

காதி - குசாம்பன் மகன். விஸ்வாமித்தி ரன் தந்தை.

காத்தஈசுவரர் - திரு ஆமாத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.
காத்தியாயனன் - (1) பாணினிவியாகர ணத்துக்கு வார்த்திகஞ் செய்தவரருசி (2) யாஞ்ஞவற்கிய முனிவர்.

காத்தியயாயனி - பார்வதி.

காந்தாரம் - காந்தாரனது தேசம். இஃது ஆரியவர்த்தத்துக்கு மேற்றிசையில் சிந்து தீரத்திலுள்ளது.

காந்தாரன் - யயாதி மகன். துருகியனு டைய பௌத்திர பௌத்திரன். இவனே காந்தாரதேசஸ்தாபகன். அந்தக் குலத்த வர்கள் குதிரையேற்றத்தில் மகாசதுரர்.

காந்தாரி - திருதராஷ்டிரன் பாரி. காந்தார தேசத்தரசனாகிய சபலன் மகள். மகாபதி விரதை. நாயகன் அந்தகனாக இருந்த மையால் தானம் கண்ணைக்கட்டிக் கொ ண்டுசஞ்சரித்தவள். இவள் புத்திரருள் மூத்தவனாகிய துரியோதனன் யுத்தத்துக் குபோகும்போது தனக்குச் சயமுண்டா குமாறு வரந்தருகவென்று தாயைவேண்ட அவள் “யதோதர்மஸ்ததோஜிய” என்று சொன்னவள். தருமம் எப்படியோ அப்படி சயம்.

காந்திமதியம்மை - (1) திருமூக்கிச்சரத்தி லே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். (2) திருநெல்வேலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர்.

காந்தினி - அக்குரூரன் தாய். சுவபற்கன் மனைவி.

காபாலிகம் - அதிமார்க்க மூன்றனுளொன் று. மூன்றாவன, பாசுபதம், மகாவிரதம், காபாலிகம் எனபன. காபாலிகம் காபாலத் திற் பிiûயேற்றுண்ணலைக் கைக்கொ ண்டொழுகுந் துறவினை வற்ப்புறுத்தும். இம்மதத்திற்குக் கடவுள் காலவுருத்திரர். இம்மதம் நெடுங்காலத்திற்கு முன்னர் அருகிவிட்டது.

காபிலம் - கபிலமதம். அது கபிலரால் செய்யப்பட்ட காபிலசூத்திரத்தை ஆதார மாகவுடையது.

காப்பியக்குடி - சோழநாட்டிலே சீர்காழிக் கு வடபாலிலேயுள்ள ஒரூர். இங்கேயே தேவந்தியின் கணவனாகிய சாத்தன் வள ர்ந்தது.

காமதேனு - சுரபி. அது பாற்கடலில் பிறந்தது. இச்சித்தவெல்லாங் கொடுக்குந் தெய்வப்பசு.

காமந்தகம் - ராஜநீதியைக் குறித்துக் கூறும் ஒரு நூல்.

காமபாலன் - பலராமன்.

காமன் - மன்மதன்.

காமாûp - காஞ்சிபுரத்திலே கோயில் கொண்டிருக்குந் உமாதேவியார்.

காமாûpயம்மை - திருவனேகதங்காவதத் திலே கோயில் கொண்டிருக்குந் தேவியா ர்பெயர்.

காமிகம் - சிவகாமமிருபத்தெட்டனுளொ ன்று. இதிலே சிவதத்துவ ரூபங்களெல் லாம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

காமியகம் - இது பாண்டவர்கள் ஆரணியவாசகாலத்து வசித்த ஒரு வனம் இது குருஜாங்காலத்தைச் சார்ந்துள்ளது.

காம்பன்னதோளி - திருப்பந்தனநல்லூரி லே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

காம்பிலியம் - பாஞ்சால தேசத்தொரு பாகம். துருபதன் தேசம்.

காம்பிலியன் - பர்மியாசுவன் மகன்.

காம்போஜம் - பரத கண்டத்துத்துக்கு வாயு திக்கிலுள்ள ஒரு தேசம்.

காயாரோகணேசவரர் - திருநாகைக்காரோ ணத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயார்.

காய்சினவழுதி - இவனே உக்கிரபாண் டியனெனப்படுவன். தலைச்சங்கம் தாபித் துத் தமிழாராய்ந்த முதற்பாண்டியன் இவ னே. இவனுக்கு இராஜதானி, தலைச்சங்க மிருந்து பின் கடல்கொண்ட தென்மதுரை குமரியாற்றினருகேயிருந்தது.

காரி - இவர் ஒளவையார் காலத்திலே மலைநாட்டிலே பழையனூரிலேயிருந்த மகௌதாரியப்பிரபு. இவர் ஒளவைப்பாடல் கொண்டு அதற்குப்பரிசாகச் சிறந்ததொரு கழைக்கோடு கொடுத்தவர். இவர் ஒரு குறுநில மன்னர். ராஜதானி கோவலூரெ ன்றும் பழையனூரென்றுஞ் சொல்லப்படும். இவர் கடைச்சங்கப் புலவருளொருவரா கிய கபிலராலே புகழ்ந்துபாடப்பட்டவர். தமமோடொத்த கொடைவள்ளலாகிய ஓரி யைப்போரில்வென்று அவன் நாட்டைச் சோழனுக்குக் கட்டிக்கொடுத்தவர். தாமும் துடிமன்னராதல் வேண்டுமெனச் செருக்கு ற்று முடிதரித்துத் திருமுடிக்காரியென்னும் பட்டங்கொண்டவர். அது கண்டு சோழன் இவரைப் போரில்வென்று விண்புகு வித் தான். இவர் மலையமான் என்னும் பெயரும்பெறுவர்.

காரிகிழார் - பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர். இவர் புறநானூறு பாடிய புலவருள்ளுமொருவர்.

காரியாறு - நெடுங்கிள்ளியென்னும் சோழ ன் போரில் மடிந்த இடம்.

காரிநாயனார் - திருக்கடவூரிலே தமிழ் மொழியிலே மிக வல்லவராய் விளங்கித் தம்பெயரினாலே தமிழ்க்கோவையொன்று, சொல்விளங்கிப் பொருள் மறைந்து கிடக் கும்படி பாடித் தமிழ்நாட்டு மூவேந்தரிடஞ் சென்று, பொருளெடுத்து பிரசங்கித்து அவர்கள் கொடுத்த பெருந்திரவியங்களை க்கொண்டு திருப்பணிகள் பல செய்து உடம்போடு கைலாசஞ் சென்ற பக்தர்.

காருடம் - கருடோற்பவம் முதலிய வி~ யங்களைக் கூறும் புராணம். 19000 கிரக ந்தமுடையது.

காருண்ணியபாண்டியன் - கற்பூரபாண்டிய னுக்குப்பின் முடிதரித்தவன். இவனுக்கும் கூன்பாண்டியனுக்குமிடையில் இருவர் அரசுபுரிந்தனர்.

காரைக்காலம்மையார் காரைக்காலிலே புனிதவதியார் தனத்தனென்னும் வைசியனுக்குப் புனிதவதியாரென்னும் பெ யருடைய புத்திரியாராகப் பிறந்து இல்ல றம் புகுந்தபோது, ஒருவன் அவர் நாயக னிடங் கொடுக்கவென்று கொடத்த மாங் கனிகளிரண்டில் ஒன்றை ஒரு சிவனடியார் க்குக் கொடுத்துவிட்டு, ஒன்றைத் தமது நாயகனுக்குக் கொடுக்க, அவன் அதை வாங்கியுண்டு மற்றதையுந் தருகவென்ன, உள்ளே சென்று சிவனை நினைந்து வேண்டியொரு மாங்கனியைப் பெற்றுப் போய்க் கொடுத்து நடந்ததையுஞ் சொல் ல, அஃதுண்மையாயின் இன்னுமொன்று பெற்றுத் தருவாயென்னப் பெற்றுக் கொடு த்த பெரும்பக்தியுடையவர். நாயகன் பரமத்தன். இவன் இரண்டாம் மனைவி வயிற்றிற் பிறந்த புத்திரியும் புனிதவதி யெனப்படுவள். இக்காரைக்காலம்மையாரே அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டை மணிமாலையும் பாடி தலையால் நடந்து கைலாசஞ் சென்று அங்கே சிவபிரானால் அம்மையேயென்று அழைக்கப் பெற்றவர்.

காரைத்திருநாதர் - திருநெறிக் காரைக் காட்டிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கார்க்கியன் - சினிமகன். பாஷ்கலன் சீ~ன். இருக்குவேதத்தில் வல்லவன். இவன் வமிசத்தர் பிராமணர்.

கார்க்கோடகன் - கத்துருவை புத்திரரு ளொருவன். வாசுகி தம்பி.

கார்த்தவீரியார்ச்சுனன் - (ய) ஹைஹைய வமிசத்தரசனாகிய கிருதவீரியன் புத்திர னாதலின் கார்த்தவீரியயார்ச்சுனனெனப்பட் டான். இவன் பெயர் அர்ச்சுனன். பாண்ட வஅர்ச்சுனனோடு மயங்காதுணருமாறு தந் தைபெயர் கூட்டிக்கார்த்த வீரியார்ச்சுனன் எனப்பட்டான். இவன் பதினாயிரம்யாகங் கள்செய்து இமயமலைநாட்டைச் செவ்வே ஆண்டவன்.

கார்த்திகேயன் - குமாரசுவாமி. கிருத்தி கை காண்க.

கார்த்திகை - (1) வார்த்திகனென்னும் அந்தணன் மனைவி. தûpணாமூர்த்தியெ ன்பவனது தாய். (2) ஒரு நûத்திரம்.

காலகண்டன் - சிவன்.

காலசவி - (தி) விரோசனன் மகன். பலி க்குச் சகோதரன். இவன் துவாபரந்தத்தி ல் தானவர்கள் சகாயார்த்தம் விஷகபித்த ரூபமாக ரேபல்லையில் உற்பத்தியாய் அந்தக்கிராமத்திற் கோபாலர் களுக்கு குரோதத்தையுண்டாக்குகிறபோது அச் செய்தியைச் சங்ககர்ணனென்கிற பூதம் ஒரு பிராமணனிடத்திலே ஆவேசித்து ஸ்ரீ கிருஷ்ணபலராமர்களுக்கு அறிவித்தது. அப்பொழுது அவர்கள் அந்தக் கபித்தவி ருûத்தை நிர்மூலஞ்செய்து கோபாலர்க ளுக்கும் பசுக்களுக்கும் சுகத்தையுண்டா க்கினார்கள். கபித்தம் - விளாமரம்.

காலகௌசிகன் - காசியிருந்த ஒரு பிராமணன். அரிச்சந்திரனுடைய மனைவி யை விலைக்குக் கொள்ளும்பொருட்டுக் கலிபகவான் விசுவாதித்திரருடைய ஏவல லால் இப்பிராமணனாகக் காசியிலே பிறந் திருந்தாரென்பது புராணசம்மதம்.

காலகவுட்சேயன் - Nûமதரிசியென்னும் கோசலதேச ராஜாவுடையமந்திரி. இவன் ராஜகருமத்தை நன்குணர்ந்தவனென்பது பிரசித்து.

காலகர்முகன் - (ரா) சுமாலி மகன்.

காலகூடம் - (1) பாரதயுத்தத்தில் சேனை கள் தங்கியவிடம். (2) வி~ம்

காலகேயர்கள் - (ரா) கசியப்பபிரஜாபதிக் குக் காலையிடதிலுற்ப்பத்தியானவர்கள். இவர்கள் மிகக் கொடிய பாதகர்கள். இவ ர்களால் மிகவருந்திய தேவர்கள் அகஸ் தியர்க்குத் தங்குறையைக்கூற, அவர், இவர்களுக்குறைவிடாமாயிருந்த சமுத்திர நீரையெல்லாம் ஆசமனஞ் செய்து வற்று வித்தனர். அது காரணமாக நிலைதளர்ந் து வலியிழந்தார்கள். இவர்களுடைய சந் ததி அர்ச்சுனனால் நிர்மூலமாக்கப்பட்டது.

காலநாபன் - (தி) இரணியாûன் மகனாகிய தாரகன்.

காலநேமி - (1) தாரக யுத்தத்தில் வி~; ணுவினால் கொல்லப்பட்ட ஒரு தானவன். (2) (ரா) ராவணன் மாதுலன்.

காலவைரவன் காசியிலுள்ள பைரவமூர் காலபைரவன் த்தி. யமன் இவ்வைர வருக்கஞ்சிக் காசியிலுள்ளாரை வருத்தா துகொண்டேகுவனென்பது ஜதிகம்.

காலயவன் - (த) இவன் நாரதன் உபதே சத்தால் மதுராபுரியைப் படைகொண்டு வளைந்தபோது, அதனை முன்னரே உ ணர்ந்த கிருஷ்ணன் சமுத்திரமத்தியிலே ஒரு பட்டணத்தைவிசுவகர்மாவினாலேயுண் டாக்கி, அங்கேதமது ஜனங்களையெல்லா ம் போக்கி விட்டுத் தாமமாத்திரம் நிராயு தராக இவன் முன்னே வெளிப்பட்டு நடந் தார். அதுகண்ட காலயவன் அவரைத் தொடர, அவர் முசுகுந்தன் நித்திரை செய்த மலைக்குகையினுள்ளே சென்றார். அவனும் அங்கே நுழைந்து கிருஷ்ண னென்று நினைத்து முசுகுந்தனையுதைத் தான். முசுகுந்தன் பெற்றிருந்த வரப்பிரசா த மகத்துவத்தால் விழித்துப்பார்க்க கால யவன் பஸ்மமானான், சாளுவன் கார்க்கி யனைப் பார்த்து நபுஞ்சகாவென்று விளித் தபோது யாதவர்கள் சிரித்தார்கள். அது காரணமாகக் கார்க்கியன் லோகபஸ்மம் புசித்துப் பன்னீராண்டு கொடுந்தவமிருந்து காலயவனைப் பெற்றான். காலயவன் காலயவனனெனவும்படுவன்.

காலா வைசுவநாரன் என்கிற தானவனு காலை டைய மகள். கசியப்பனுடைய பாரி. இவளுடைய மக்கள் காலகேயர்கள்

காலாநலன் - அனு பௌத்திரன். சபாநல ன் புத்திரன்.

காலேசுவரர் - திருவனேகதங்காவதத்தி லே கோயில் கொண்டிருங்குஞ் சுவாமி பெயர்.

காவியன் - கவிபுத்திரனாகிய சுக்கிரன்.

காவிரி - இஃது அகஸ்தியரால் சையகிரி யினின்று முற்ப்பத்திபண்ணப்பட்ட புண்ணி யநதி. தûpணத்திலுள்ளது. இந்நதிநீர் மிக்க சுவையுடையது. இதுபோலப் பயன் படுநதி உலகத்திலே மற்றில்லையெனி னும் இழுக்காகாது. இந்நதியே சோழநாட் டைப் புனனாடாக்கியது. இந்நதியினிரு கரையிலும் சமீபத்திலும் சற்றே தூரத்தி லுமாக அநேக சிவாலயங்களும் வி~;ணு வாலயங்களுமுள.

காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக் கண்ணனார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவ ர். பெருந்திருமாவளவன். வெள்ளியம் பல த்துத்துஞ்சிய பெருவழுதி, பிட்டங்கொற்ற ன் முதலியோர் இவராற் பாடப்பட்டோர். இவர் சாதியில் வணிகர். முதற்கூறிய இருவர் பாண்டியரையும் ஒருங்கேகண்ட பொழுது, இவர், “இன்னுங்கேண்மினும் மிசை வாழியவே - யொருவீரொருவீர்கள் காற்றுத்திரிருவீரு - முடனிலை திரியீராயி னிமிழ்திரைப் - பௌவ மூடுத்தலிப்பயங் கொழுமாநிலம். - கையகப்படுவது பொய் யாகாதே - அதனால், நல்லபோலவுந் - தொல்லோர்சென்று நெறியபொலவும் - காதனெஞ்சினும் மிடைபுற்கலமரு - மேதி ன்மாக்கள் பொதுமொழிகொள்ளா - தின் றேபோல்கநும்புணர்ச்சி” என இவரையு மொற்றுமையுடையராக வொழுகும்படி அவர்க்கு ஒற்றுமைப்பயனெடுத்துக் கூறி வாழ்த்தினவர்.

காவிரிப்பூம்பட்டினம் - சோழமண்டலத்தி லே கீழ்க்கடற்கரையிலே காவிரிநதி சங்க மிக்குந்துறையருகிலேயிருந்த சோழ ராஜ தானி. இந்நகரம் புகாரெனவும்படும். தமிழ் நூல்களிலே பெரிதும் பாரட்டப்படும் பழை மையுடைய நகரங்களுள் இதுவுமென்று. இதன்துறை பொன்னித்துறையெனப்படும். இத்துறையிலே சீன முதலிய அந்நிய தேசங்களிலிருந்தும், வங்கம் குடகம் கொல்லம் தென்மதுரை ஈழம் முதலிய அயல்நாடுகளிலிருந்தும் வந்து கொள்ள லும், விற்றலும் செய்கிற மரக்கலங்கள் மலிந்து பொலிந்து விளங்கும். தென்னாட் டிலே இது போல வளஞ்சிறந்தும், சித்தி ராலங்காரம் பொருந்திய மாடகூட கோபுர ங்களையுடையதும், நாகரிகம் வாய்ந்த நன்மக்களைத் தன்னகத்தேயுடையதும், சித்திரப்பொறிகளையுடைய மதில்சூழ்ந்த தும், பல்வகை நீர்ப்பூக்களும் நீர்ப்பûpக ணங்களும் நிறைந்து விளங்கும் அகழியி னையுடையதுமாகிய நகர் பிறிதில்லை. அழகிய சோலைகளும், கண்ணையும் மூக்கையும் ஒருங்கே கவருமியல்பினவா கிய நந்தவனங்களும் இந்நகருக்கு அணி செய்வன. இந்நகரின் கண்ணே ஐந்து மன்றங்களுள. அவை, மற்றெங்குமில்லா தன: இந்நகருக்கேயுரிய விசேடமாகவுள் ளன. அவை, வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கன் மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் என்பன. இந்நகரத்திலே கள்வர் புகுந்து பொருள் கவர்வாராயின் அவரை மயக்கிக் கால் கடுக்க இடையறாமல் ஊரைவலம்வரச் செய்யும் இயல்பினது வெள்ளடை மன்றம் எனவே இம்மன்றம் கள்வரை நெஞ்சங் கலங்கி நடுங்கச்செய்வதொன்றாதலால் இந்நகரிலே களவென்பது கனவிலுமில்ல தோர்செயலாம். இலஞ்சி மன்றம், தன்னி டத்திலேயுள்ள பொய்கையிலே நீராடியெ ழும் கூனர், முடவர், ஊமர், செவிடர், தொழுநோயாளர் முதலியோரை அக்குற்ற ங்களைந்து நல்லுடம்பு பெறுவிக்குமியல் பினது. நெடுங்கல் மன்றம், மருத்தூட்டி னாற்பித்தரானோரும், நஞ்சுண்டோரும், நா கத்தாற் கடியுண்டோரும், பேய்கோட்பட் டோரும் என்றிவர்கள் அந் நெடுங்கல்லை வலஞ்செய்ய அவர்க்கு அத்துன்பங்களை யெல்லாம் போக்கியருளுமியல்பினது. இராசத்துரோகியையும், கற்பு நிறை தவ றிய மனைவியரையும், போலித் துறவிக ளையும், பிறன் மனைவியைப் புணரும் துச்சாரியையும் சத்தியஞ்செய்ய தன் முன்னே கொண்டுவருமிடத்து அவரைய றைந்து கொல்லும் பூதமொன்று வசிக்கும் ஸ்தலமே பூதசதுக்கம். தருமாசனத்தாரும் அரசனும் தமது நீதி தவறுங்கால் அது குறித்துக் கண்ணீர்சொரிந்து வாய் பேசா தழும்பாவையொன்றுடையது. பாவை மன் றம். இங்கனம் அற்புதகரமான ஜந்துமன்ற ங்களையுந் தன்னகத்தேயடையதாய் விள ங்கிய காவிரிப்பூம்பட்டினத்துச் சிறப்பை முற்றாயிங்கெடுத்துக் கூறலமையாதாயி னும் இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு வருஷங்களுக்கு முன்னதாகி அக்காலத் திலிந் நகரடைந்திருந்த பெருக்கத்தை யொருவாறு புலப்படுத்துவாம். வானளாவி ய கோபுரங்களும் நிலாமுற்றங்களும், அணிகலமாடங்களும், ஆனகட் சாளரங்க ளையுடைய மாளிகைகளும், காண்போர் கண்ணைப் புறஞ்சொல்லவிடாத மிலேச்ச ர்வாசங்களும், மரக்கலவணிகராகிய பர தேசிகளுறைகின்ற அலைவாய்க்கரையிரு ப்பம், தொய்யிற்குழம்பு, வாசச்சுண்ணம், சந்தனக்கூட்டு, மூவகைப்பூ, புகைத்திரவி யம், கோட்டமுதலியவிரை என இவை களை விற்போர் திரியும் நகர வீதியும், பட்டினாலும் எலிமயிரினாலும் பருத்தியா லும் சித்திர வஸ்திரங்நெய்கின்ற சாலியர் வீதியும், சந்தனம், அகில், பட்டு, பவளம், முத்து, இரத்தினம், பொன், ஆபரணம் என இவற்றை அளவின்றி விலைக்குக் குவித்திருக்கும் வணிக வீதியும், பலசரக் குக் குவிந்துகிடக்கும் வீதியும், உப்புவிற் போர், இலைவணிகர், தக்கோல முதலிய வெற்றிலை வாசம் விற்போர், எண்ணெய் வாணிகர், வெண்கலக்கன்னார், செம்பு செய்வோர், மரவினைத்தச்சர், இரும்புக் சொல்லர் சிற்பாசாரியர், பொற்பணித்தட் டார், இரத்தினப்பணித்தட்டார், கஞ்சுகி செய்யுஞ் சிப்பியர், தோற்றுன்னர், வஸ்தி ரத்தினாலும், கிடேச்சையாலும் வாடாமா லைகளும், புஷ்பங்களும், பொய்க்கொண் டைகளும், பல்வகைப் பிரதிமைகளும், செய்தலால் தம் கைத்தொழிற்றிறமை காட்டும் வல்லோர், துளைக்கருவியாலும், யாழினாலும், ஏழிசையும் ஏழெழுத்தையும், மூவகை வங்கியதினும், நால்வகை யாழி னும் பிறக்கும் பண்களுக்கின்றியமையாத மூவேழுதிறத்தையும் குற்றமற்ற இசைத்து க்காட்டவல்ல பாணர்கள் என இம்மக்களி ருக்கின்ற வீதிகளும், குற்றேவல் செய்கி ன்ற சிறுதொழிலாளர் வசிக்கும் பாக்க மும், இராசவீதியும், கடைவீதியும், பெருங் குடிவணிகர்வசிக்கின்ற மாடமாளிகைவீதி யும், வேளாளர்வீதியும், ஆயுள்வேதியர் வீதியும், சோதிடர்வீதியும், முத்துக்கோப் பாரும், சங்கறுத்துவளையல்செய்வோரும், வாழ்கின்றவீதியும், சூதர், மாகதர், நாழிக் கைகணக்கர், விகடககூத்தர், காவற்கணி கையர், ஆடற்கூத்தியர், பூவிலைமடந் தையர், ஏவற்பெண்கள், பேரிகை முதலி யதோற்கருவியாளர், கழைக்கூத்தர், என இவர்களிருக்கின்ற வேறுவேறு வீதிகளும், குதிரைப்பாகர், யானைப்பாகர், தேர்ப்பாகர் போர்வீரர் என்றிவர்களிருக்கின்ற வீதிக ளும். வேதியர் வசிக்கின்ற அக்கிரகாரங் களும் என எண்ணில்லாத வீதிகளையும், எண்ணில்லாத தொழிற்சாலைகளையும், உடையதாய் இந்நகர் விளங்கியது என்ப து சிலப்பதிகாரத்தாற் பெறப்படும் கல்வி யாரச்சியிற் பொழுதுபோக்குவார்க்குப் பட் டிமண்டபமெனப்படும் வித்தியா மண்டபங் களும், நோயாருக்கு மருத்துவசாலைக ளும், இளங்காளையர்க்கு விளையாட்டிட ங்களும், அகதிகளுக்கு அன்னசாலைக ளும், தவஞ்செய்வார்க்குத் தவச்சாலைக ளும் என்றின்னோரன்ன அநேகபொதுக்க ளங்களுமிங்குளவாயிருந்தன. ஆதலால் இந்நகரம் பலவகைப்போகங்களுக்கும், இ டமாயிருந்ததென நிச்சயிக்கப்படும். இந் நகரம் மருவூர்ப்பாக்கத்திலே பெரும்பாலு ம் தொழிலாளரும், பட்டினப்பாக்கத்திலே பெரும்பாலும் மேன்மக்களும், பிரபுக்களு மே குடிகொண்டிருந்தார்கள். இருபக்கத் தினுமாகவிங்கேயிருந்து வாழ்ந்த குடித் தொகை அறுபதினாயிரம் என்பது. “பாலைபாடிய பரிசிலன்றெடுத்த, மாலைத் தாகியவறங்கெழுசெல்வத், தாறைந்திரட்டி யாயிரங்குடிகளும், வீறுசான்ஞாலத்து வி யலணியாகி, யுயர்ந்தோருலகிற் பயந்தரு தான, மில்லதுமிரப்புநல்லோர்குழுவுந், தெ ய்வத்தானமுந் திருந்தியபூமியு, மையரு றையுளுமற்வோர் பள்ளியும்” என்னுஞ் செய்யுட் கூற்றாற்பெறப்படும். அநேக புல வரையும் கரிகாற்சோழன் போலும் பராக்க கிரமமாதலும், கொடையாலும் ஒரு சிறிது ம்திறம்பாத செவ்வியநெறி முறையாலும், சிறந்தோங்கிய அநேக ராஜாக்களையும் பட்டினத்தடிகளையொத்த அநேக மெய்த் துறவிகளையும் தந்தருளிப் புகழ்படைத்த தும் இந்நகரமேயாம். இங்ஙனம் சிறந்து விளங்கிய இந்நகரம் பின்னர்நாளிலே அழிந்தொழிந்து போக இப்பொழுது அவ்விடத்திலேயுள்ளது. அப்பெயரையுடை யவொருகுக்கிராமமே.

காவேரி - காவிரிகாண்க. இந்நதி கவேர னாலே திருத்தப்பட்டமையின் காவேரியெ னப்படுவதாயிற்று. கவேரன் புத்திரியென் பது பசாரம்.

காளத்தி திருக்காளத்தி.
காளஹஸ்தி

காளத்தியப்பன் - தொண்டை நாட்டிலே வல்லமென்னுமூரிலே விளங்கியவனாகி இப்பிரபு தன்மீது ஒரு பிரபந்தம் பாடிப் பாற்பசு கேட்ட ஒரு புலவனுக்கு ஒவ்வொ ருகவிக்கு மொவ்வொரு பசுவும் அப்பசுவு க்கு மேய்ப்பவனும் கறவையாளும் பால் காய்ச்சுபவனுமாக மூம்மூன்றாளும் உடன் கொடுத்துப் பொன்மாரியும் வழங்கியவன்.

காளத்தீசுவரர் - திருக்காளத்தியிலே கோ யில்கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

காளமேககவி - ஸ்ரீரங்கத்திலே வைஷ்ண வப்பிராமணராக அவதரித்த இவர், சம்பு கேசுரத்திலே ஒரு தாசிவலையிலகப்பட்டு, அவள் பொருட்டாக அங்குசென்று கோயிலுனுட் பிரகாரத்திலே அவள் வர வை எதிர்நோக்கி இருக்கையில் நித்தி ரைவர அங்கேபடுத்து நித்திரைபோயினார். தாசி இவரைத்தேடிப்பார்த்துங் காணாமை யால் தன்வீடு போய்ச்சேர்ந்தாள். அதன் பின்னர்க் கோயிலும் திருக்காப்பிடப்பட் டது. அப்பொழுது அந்தப்பிரகாரத்திலொ ருபக்கத்தில் சரஸ்வதியை நோக்கி ஓரந் தணன் தவங்கிடந்தான். சரஸ்வதி அதற் கிரங்கிப்பிரசன்னராகித் தமது தம்பலத் தை அந்தணன் வாயிலுமிழப்போக அவன் அதை அநுசிதமென்று வாங்காது மறுத்தான். அது கண்ட வைஷ்ணவர் கிடந்தவிடத்தையடைந்து அவரையொழுப் பித் தம்பலத்தை நாவினாற் கொடுக்க வைஷ்ணவர் தம்தாசியே தம்பலங்கொண ர்ந்தாளென்றென்னி அதனை நாவினாலேற் றார். அவ்வளவில் சரஸ்வதி மறைந்து போக, வைஷ்ணவர் அதனையேற்றமாத்தி ரத்தில் சகலகலைகளும்வல்ல பண்டிதரா கிச் சூற்கொண்டகாளமேகம்போலத் தமிழ் கவிமாரி பொழியத்தொடங்கினார். அன்று முதல் அவருக்குக்காளமேகமென்னும் பெ யருண்டாவதாயிற்று. இவர் திருமலைராய னென்னும் அரசன் சமஸ்தான வித்துவா னாகிய அதிமதுரகவிராயனுக்குமாறாகி அவ்வரசன் சபையிலே இருந்தபுலவர்க ளெல்லோரும்பிரமிக்கும்படியாக யமகண்ட விதானப்படி ஆசுகவிகள் பொழிந்தவர். இவர் காலம் சாலிவாகனவருஷம் 1200.

காளஞ்சனம் - ஒரு தீர்த்தம்.

காளாமுகன் - சிவனைப் படிகமும் புத்திர தீபமணியும் தரித்தமூர்த்தியாகத் தியானி க்குஞ்சமயி. இவன் அகப்புறச் சமயிகளு ளொருவன்.

காளி - காலவுருத்திரருடைய சக்தி. அஃதாவது அழிவுக்குக் காரணமாகிய காலத்தை நடாத்தும் உருத்திரர் அவ்வழி வையாது சக்தியாற் செய்துமுடிப்பர். அச் சக்தியே காளியெனப்படும். உருத்திரபேத ம் பலவாதல் போல அச்சத்திபேதமும் பலவாம். காலத்துவம் கருமையாற் குறிக் கொள்ளப்படுவது போலக் காளியும் கரு நிறமுடையளாயினாள். காலத்திரர் சங்கா ரத் தொழிலைத் தமது சக்தியாகிய இக் காளியைக்கொண்டே நடாத்துவர். ஆக்க ம் உயிர்களுக்கு எப்பொழுதும் இன்பம் தருவது. அழிவு எப்பொழுதும் பயங்கரம் பயப்பது. அது பற்றியே அவ்வழிவைப் புரிவதாகிய சக்தியும் பயங்கர ரூபமுடை தாக ரூபாகாரம் பண்ணப்பட்டது. காலபத மும் காளியும் கருமைபடபொருட் சொல் லடியாகப் பிறந்தனவேயாம். காளி கரிய மேனியும், சதுர்ப்புஜமும், கபால மாலையும் சிவந்த கண்ணும் நான்ற நாவுமுடைய தேவியாகவுபாசிக்கப்படவள். யுத்தவீரர் தமக்கு வெற்றியுண்டாம்படி காளியையுபா சித்துப் பூசிப்பர். கோபம் செந்நிறச் சம்மந்தமுடையது. அது பற்றி வாமார்க்கத்தினர் அதன் உண்மையு ணராது இரத்தப் பலியிட்டுப் பூசிப்பர். இரத்தப்பிரியையென் பதற்கு சிவந்த நிறத்திற் பிரியமுடைளெனப் பொருள் கொள்ளாது உதிரப் பொருள் கொண்டேதே இத்தடுமாற்றத்துக்கு ஏதுவாம். செந்நிறமாகிய புஷ்பங்களே அப்பூசைக்கு போதியவாம். அவற்றை விடுத்து இரத்தப்பலியிடுதல் அத்துணைச் சிறந்ததன்று. அதற்கீடாக கோபம்முதலிய துர்க்குணங்களைப் பலியிடுதல் அத்தேவி க்கு உவந்ததாகம். சில புராணங்கள் கா ளிக்கு எண்கரங்கூறும். காளி சண்டமுண் டர்களாகிய அசுரரைக் கொன்று சாமுண் டியென்னும்பெயரும், தாரகனைக் கொன் று தாரகமர்த்தனியென்னும் பெயருங் கொண்டாள். (2) வியாசகர் தாயாகிய சத்தியவதி.

காளிதாசன் - இவன் விக்கிரமார்க்கன் வமிசத்தானாகிய போஜராஜன் சமஸ்தான த்துச் சமஸ்கிருத வித்துவான்கள் ஒன்ப தின்மருள் சிரேஷ்டன். சமஸ்கிருதத்திலே யுள்ள ஸ்ரீங்காரரச சுலோகங்களுள் இவன் செய்த சுலோகங்கள் அதி மாதுரியமான வை. இவன் சரஸ்வதியினது அமிசாவதா ரம். இவன் செய்த நூல்களும் தனிச் சுலோகங்களும் எண்ணில. ரகுவம்சம் குமாரசம்பவ முதலிய காவியங்கள் இவ ன் செய்தவை. காளி உபாசகனாதலின் காளிதாசனெப்பட்டான். ஜாதியில் அந்த ணன். இவன் வரலாறுவிரிப்பிற் பெருகும். இவன் தண்டி மகாகவியேடு இகலிச் சரசு வதியைப்பிரார்த்தித்து தம்முள் மிக்கார் யாரென்ன, “தண்டிமகாகவிதான், நீயோ வென்றால் நானே நீ” என்று சரஸ்வதியா ற் புகழப்பட்டவன். புலகேசியினது கல் வெட்டிலே கூறப்படலால் அவன்காலம் இற்றைக்க ஆயிரத்துநானூறு வருஷங்க ளுக்கு முன்னுள்ளதாக நிச்சயிக்கப்படும்.

காளிந்தி - (1) யமுனாநதி. களிந்தபர்வ தத்தினின்றிழியுநதி. (2) சுமதி பாரி. (3) கிரு~ஷ்ணன் அ~;டபாரிகளிளொருத்தி. சூ ரியன் மகள்.

காளிம்பன் - திருவேங்கடப்பதியிலிருந்து தமிழ்நாவலர்களுக்குப் பெருநிதி வழங்கி ய ஒருபிரபு.

காளியன் - யமுனையிலிருந்து கொடிய விஷநாகம் அது கிருஷ்ணனாற் கொல் லப்பட்டது.

காளேஸ்வரம் - பயோஷணி கோதாவரி நதிகள் சங்கமிக்மிடத்துள்ள திவ்விய Nûத்திரம்.

கானக்காளை - திருக்காப்பேரூரிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கானப்பேரெயில் - வேங்கை மார்பனுக்குரி யதாகவிருந்த ஒரு பேரரன். இவ்வரண் கடைச்சங்கத்து கடையரசனாகிய உக்கிர ப்பெருவழுதியாற் போரிற் கைக்கொள்ளப் பட்டது.

கானார்குழலம்மை - திருகானாட்டு முள் @ரிலே கோயில் கொண்டிருக்குந் தேவி யார் பெயர்.

கிஷ்கிந்தை - வாலி சுக்கிhPவர்கள் ராஜ தானி. இது மைசூருக்கு வடகிழக்கிலுள் ளது.

கிம்புருஷர் - தேவருள் ஒருபாலார். இவர் கள் அசுவகமும், நரசாPரமுடையவர்கள்.

கிம்புருஷன் - புலகன் புத்திரன்.

கிம்மீரன் - (ரா) பகாசுரன் தம்பி. காமிய கவனத்திலே வீமனாற் கொல்லப்பட்டவன்.

கியாதி - (1) தûப்பிரஜாபதிமகள். இவளுக்குத் தாதை விதாதை என இரு வர் புத்திரருமு;. லஷ{மி என்னும் புத்திரி யும் பிறந்தார்கள். (2) உன்முகன் மகன்.

கிரகபதி - ஒரு அக்கினி. இவன் இந்திரா திதேவர்களுக்கு அவ்வியத்தைச் சுமந்து கொண்டு போனமையினாலே இந்நாமம் பெற்றான். ஒரு சமயத்தில் இவன் அவிக ளைச்சுமக்க இயலாமையால் சமுத்திரத் திற் கரந்திருக்கையிலே அதிலிருக்கும் மற்சங்கள் இவனிருக்கிற இடத்தை தேவ ர்களுக்கு சென்றுசொல்லின. அதனால் மற்சங்கள் ஜனங்களுக்கு ஆகாரமாக வென்று சபித்தான்.

கிரசன் - தாரகயுத்தத்தில் விஷ்ணுவினா ற்கொல்லப்பட்ட ராûசன்.

கிராதார்ச்சுனீயம் - ஒரு சமஸ்கிருத கா யியம். அர்ச்சுனன் தவஞ்செய்தபோது சிவபெருமான் கிராதரூபந்தாங்கிவந்து அ மர்புரிந்து பாசுபதமீந்துபோன சரித்திரங் கூறுவது.

கிராமரதேவதை - கிராமங்கள்தோறுமுள் ள ஐயனார் காளி முதலிய காவற்றேவ தை.

கிரிவிரசம் - (1) மகததேச ராஜதானி. இதைச்சுற்றி மலைக்கோட்டையிருப்பதால் கிரிவரசம் எனப்பெயர் பெற்றது. (2) கோ கய ராஜதானி. அது குசன்மக்களுள் நா ன்காம் புத்திரன். வசுவினால் ஸ்தாபிக்கப் பட்டது. தருமாரணியத்துக்குச் சமீபத்திலி லுள்ளது.

கிhPடி - அர்ச்சுனன்.

கிருசன் - ஒரிருஷ~p.

கிருசாசுவன் - கிருதாசுவன்

கிருசாநு - அக்கினி

கிருசாநுரேதன் - சிவன்.

கிஷ்;ணகர்ணாமிருதம் - இது ஸ்ரீ லீலாசுகராற் செய்யப்பட்ட நூல்.

கிருஷ்ணஜயந்தி - ஆவணிக் கிருஷ்ணப ûத்தட்டமி. இது கிருஷ்ணன் பிறந்த தினமாதலின் அது விரததினமாககக் கொள்ளப்படும்.

கிருஷ்ணதேவி - கிருஷ்ணாநதி

கிருஷ்ணத்துவைபாயனன் - வேதவியா சன்.

கிருஷ்ணராயன் - ஒரு சிற்றரசன். இவன் சமுகத்தில் விகடக்கூத்தர்கள் வேளாண் மகளிரைப் போல வேடம்பூண்டு கூத்தாடி னார்கள். அப்போது தொண்டைமண்டலத் து வேளார்கள் நம்மை இக்கிரு~;ண ராயன் அவமதித்தானென்றுசினந்து அவ னுயிரைமாய்த்தார்கள்.

கிருஷ்ணன் - கமசனுடைய கொடுங்கோ ன்மைக்கஞ்சித் தேவர்கள் விஷ்ணுவை யடைந்து தம்மைக் காத்திரûpக்கவென்று வேண்ட, அவர் தமது கேசத்தைப்பற்றித் தடவ, இரண்டு ரோமங்களுதிர்ந்தன. வி~;ணு அவ்வுரோமங்களை நோக்கி, இவ்விரண்டனுள் வெண்ணிறரோமம் பல ராமனாகச்சென்றுயிறக்க, மற்றக் கரியது கிரு~;ணணாகப் பிறந்து கம்சனையழிக்க வென்றருளி அத்தேவர்க்கும் விடையீந்த னர். ரோமமென்றதை அதுவாகக்கொள்ள ற்க. விஷ்ணுவினது அம்சத்திலோரற்ப்பாக மே இங்ஙனங் கூறப்பட்டதாகக் கொள்ளு க. அது நிற்க. கம்சன் தனது தங்கை தேவகியையும் அவள் நாயகன் வசுதேவ னையுமுடன் கொண்டோரிரத்தில் ஏறி வனம்பார்க்கச் சென்றான். அப்பொழுது “கமசா! கேள்! உன்னுடன் இரதமூர்ந்து வருகின்ற உன் தங்கை தேவகிவயிற்றி லே பிறக்கப்போகும் எட்டாம் பிள்ளை யால் நீ கொல்லப்படுவாய்” என்று ஓர் அசாPரி இடிபோலொலித்துரைத்தது. அது கேட்ட கம்சன் துணுக்குற்றுத் தன் வாட் படையுறைகழித்து அவளைக் கொல்ல ஓங்கினான். வசுதேவன் உடனே எழுந்து “வீராதிவீர, இவளைக் கொல்லாதொழிக. அவள் வயிற்றிற்பிறக்கும் பிள்ளைகளை யெல்லாம் உன்கையி லொப்பிப்பேன்” என்று கூறி அவனைத் தடுத்தான். இவ்வு றுதியாற் கோபந்தணிந்த கம்சன் தேவகி யையும் வசுதேவனையும் சிறையிலிட்டு அவள் வயிற்றிற் பிள்ளைகளையெல்லாம் கொன்று வந்தான். ஏழாவது சிசுக்குறை மாசத்திற் பிறக்க அதனை வசுதேவன் எடுத்துப்போய்க் கோகுலத்திலிருந்த தன து இரண்டாம மனைவியாகிய ரோகினியி டத்திற்கொடுத்தான். அச்சிசுவே பலராமன் காவலர் கம்சனிடஞ் சென்று “ஏழாவது அழிகருப்பமாயிற்று” என்று கூற, அவன் மகிழ்ந்தான். அதன் பின்னர் உரியகாலத் தில் எட்டாஷ் சிசுப்பிறந்தது. இச்சிசுவே கிருஷ்ணன். அதனை வசுதேவன் பிறருக் குப் புலனாகாவண்ணம் அந்நள்ளிரவிற்றா னே கொண்டு சென்று யமுனைக்கு அக் கரையிலிருந்த நந்தன் மனையிலிட்டு, அங்கே அவன் மனைவி யசோதை அப்பொழுது தானேயீன்றுவைத்திருந்த சிசுவைக்கவர்ந்து கொண்டுமீண்டு, முன் போலப் பிறர் அறியாவண்ணம் தன் வாச ஸ்தானம் புகுந்தான். அச்சிசுவினது அழு குரல்கேட்ட காவலர் வைகறைக் காலத் யோடிக் கமசனுக்குணர்த்த, அவன் உட னே அவ்விடஞ்சென்று அச்சிசுவைக் கவர்ந்து ஒரு கல்லின்மேல் மோதினான். மோதலும் அஃது அந்தரத்திலெழுந்து அஷ்டகரங்களோடு கூடிய பெரியதொரற் புதவடிவாகி, அவனைப் பார்த்து நகைத் து, என்னையெடுத்து வீணே மோதிக் கொல்லமுயன்றாய். உன்னையன் பூர்வஜ ன்மத்திற்கொன்றொழித்த அம்மேலோன் பிறந்து சமீபத்திலே வேறு மனையில் வளர்க்கின்றான். அவனே உன்னைக் கொல்வான் என்று கூறி மறைந்தது. அவன் அதன் பின்னர்த்தேவகியையும் வ சுதேவனையும் சிறைவிடுத்தான். வசுதே வன் ரோகிணியிடத்திருந்த பலராமனையு ங்கொண்டு போய்த் நந்தன் மனையில் விட இரண்டு சிசுவும் அங்கேயுடனிருந்து வளர்வனவாயின. சிலநாட்கழியக் கிரு~; ணன் வளர்கின்ற இடத்தையுணர்ந்து கம் சன் பூதனையென்னுமொரு பேயைக் கிரு ஷ்ணன் மனையிற் சென்று அவனைப் பாலூட்டிக்கொன்று வருகவென்றேவினான். பூதனை சென்று அச்சிசுவையெடுத்து மடி மீதுவைத்துப் பாலூட்டினாள். கிருஷ்ணன் அவள் முலைப்பாலோடு அவள் ஆவியை யுமருந்தி அவளை அலறவலறக் கொன் றொழித்தான். இவ்வற்புதம் அச்சேரியை ஒருங்கே அங்கழைத்தது.

ஓரசுரன் சென்று நந்தன் மனை யிற் கிருஷ்ணனைக் கொல்லச் சமயம் பார்த்துச் சகடமாய்க்கிடக்க, நந்தன் கிரு ஷ்ணனைக் கொண்டுபோய் அச்சகடத்திரு த்திவிளையாடும்படி வைத்தான். கிருஷ் ணன் பாலுக்கழுவான் போன்றழுது கோபி த்தெழுந்து அச்சகடத்தைக் காலால் உதைக்க அச்சகடந் துளியாயிற்று. அவ் ழியே அசரனுமிறந்தான். மற்றொருநாள், கிருஷ்ணனும் பலராமனும் கட்டிவைத்த ஆண்கன்றுகளையவிழ்த்துப் பாலுண்ண விட்டுப் விளையாட்டயர்ந்தார்கள். அது கண்ட யசோதை கிருஷ்ணனை உர லோடு கட்டிவைத்தாள். கிருஷ்ணன் அவ் வுரலையிழுத்துப்போய்ச் சமீபத்திலேநின்ற இரண்டு மருதமரங்களுக்கு இடையே புகு த்திச் சிக்குவித்து அப்பால் நின்றிழுக்க, அவ்வலிய விருûமிரண்டும் வேரோடு வீழ்ந்தன. அஃது ஆய்ப்பாடியெங்கும் பேரதியத்தை விளைத்தது. இம்மரம் வீழ் த்திய அற்புதத்தின்பின்னர் நந்தன் தன் குடும்பத்தோடு பிருந்தாவனஞ் சென்று வசிப்பானாயினான். அங்கும் கம்சன் பல வுபாயங்களாற் கிஷ்;ணனைக் கொல்ல முயன்றான். அவ்வுபாயங்கள் பலவற்றுள் ளே பகாசுரன் கொக்காகிச் சென்று தன் அலகாலே கிருஷ்ணன் அக்கொக்கைப் பற்றிக் காலின்கீழிட்டு இடந்து கொன்றது மொன்று. கிருஷ்ணனுடைய பாலிய கால மெல்லாம் கன்றுகளை மேய்த்துவருதலா லும் இவ்வகை அற்புதசாமர்த்தியத்தாலும் பரோபகார சீலனாகவேயிருந்தான். ஒரு நாள் பலராமன் சிலகன்றுகளையும் அவைகளைக்காக்கும் கோபாலச் சிறுவர் களையும் விளையாட்டாகக் கொண்டு போய் மறைத்தான். அப்பொழுது ஆய்ச்சி யர் வரும்நேரமாக, அச்செய்தியை அவர் களுணராவண்ணம் அக்கன்றுகளைப் போ ல வேறுமைந்தரும் தன் மாயாவல்லபத் தாற் சிருஷ்டித்து அவர் வருமுன் வழக்க ம்போல நின்று மேயவும்மேய்க்கவும் வைத்தான். அவ்வாயப்பாடியிலுள்ள பல் லாயிரம் ஆய்ச்சியரும் கிருஷ்ணனைக் கொண்டுபோய்த் தத்தம் வீட்டில் அமுதரு ந்தி அவனுடைய மழலை விளையாட்டை ச் சிறிதுநேரங் கண்டு களிக்கவெண்டு மென்னும் பேராசையுடையராயிருந்தார்கள் அஃதுணர்ந்து கிருஷ்ணன் ஒவ்வொரு நாளிலே ஏக காலத்திலே அவர் வீடுகள் தோறுஞ் சென்றிருந்து அவரூட்டும் வெண் ணெய் பால்களையுண்டு விளையாடி அவர்ளை மகிழ்வித்து அவர்க்கொவ்வாம் அருமைப் புத்திரன் போலாயினான். ஒருத் தி இன்று மத்தியானத்திலே கிருஷ்ணன் என்வீட்டுக்குவந்திருந்தான். என்று தன் அயல்வீட்டாளுக்குச் சென்று சொல் வாள். அவள் ஏன் பொய்கூறுகின்றனை: அவன் அப்பொழுதென் வீட்டிலிருந்து வெண்ணெயுண்டானென்பாள். அவ்விரு வரும் சண்டையிட்டு அயல்வீடு சென்று சொல்லுவர். அவ்வீட்டாள், இருவீரும் ஏன் பொய்யுரைக்;கின்றீர்கள்: அவன் அந்நேரத் தில் என்வீட்டிலன்றோ வந்திருந்து பால் வாங்கியுண்டான் என்பள். இப்படியே எல் லோருங் கூறத் திருவிளையாட்டயர்வதே கிருஷ்ணனுக்கு தொழிலாகவிருந்தது. கிருஷ்ணன் தன் பிள்ளைப் பருவத்திலே செய்த அற்ப்புதங்களும் செயற்கருஞ் செய்திகள் மீண்டுக் கூளப்புகின் அடங் கா.

கம்சன் கிருஷ்ணனைக் கொல்லப் பலவாறு முயன்றதும் ஒன்றிலும் சித்தி பெறா தீற்றிலே கிருஷ்ணனாற் கொல்லப் பட்டான். கிருஷ்ணன் பிரிய மனைவியர் ருக்மிணி சத்தியபாமா என இருவர். கிரு ஷ்ணனுக்கு பாலியகாலந்தொட்டுப் பிராச கியாயிருந்தவள். ராதை. அர்ச்சுனன் கிரு ஷ்ணனுக்கு மைத்துணனும் பிராணசிநேக னுமாயுள்ளவன். அவன் பொருட்டே பாரத யுத்தத்திற் கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கஞ்சார்ந்திருந்து அவர்களுக்கு வேண் டுந் துணையெல்லாம் புரிந்தான். கிஷ் ணன் அவதாரஞ் செய்திலனேல் பாண்ட வர்கள் அரசு பெறுவதும், அசுரர்கள் மாண்டொழிவதும், இக்கலியுகத்திலே நல் லறங்கள் தலைகாட்டுவதும் இல்லையாம். கிஷ்ணனுக்கிணையான மதியூகியும் வியாசம்வல்லவனும், யோகநிலை யுணர் ந்தகன்மஞானியும், பேராற்றலுடையோனும் இம்மண்ணுலகத்தில் இன்னும் பிறந்திலன் அர்ச்சுனன் போர்க்களத்திலே புகுந்தபோ து எதிரே நிற்போர்யாவரும் இஷ்டரும் தாயத்தருமாக விருத்தலையெண்ணித் தனக்குச் சாரதியாகவிருக்கும் கிருஷ்னை ப்பார்த்து, இவர்களைக்கொன்றொழித்து விட்டுப் பின் யாரையுறவாகக்கொண்டு அரசு புரியப்போகின்றேன் என்று கூறித் தன்வில்லைக் கீழேநழுவவிட்டான். கிஷ்; ணன் அதனையே சமயமும் அவன் மன நிலையையே பக்குவமுமாகக்கண்டு அப் பக்குவத்துக்கேற்ற கன்மயோக உபதேச மாகிய பகவற்கீதையையுபதேசித்தருளி னான். பயன் விரும்பாது அவ்வவ்வாச்சிர மங்களுக்குரிய கடன்களைத் தவறாமற் செய்தல் வேண்டும். அங்ஙனஞ்செய்பவன் கன்மபந்தமடையமாட்டான். அதுவே அவ னுக்கு இசுபரசிலாக்கியங்களைக் கொடுப் பது என்பதே அவ்வுபதேசத்தான் முடிந் தபொருள். இக்கீதை வேதாந்தசாரத்தை நன்குவிளக்குமோரற்பத நூல்

கிருஷ்ணாங்கனை - நைருதன் இராஜ தானி.

கிருஷ்ணை - திரௌபதி. ஒரு நதிக்கும் பெயர்.

கிருதகன் - (ய) வசுதேவன் மகன்.

கிருதகிருத்தியன் - திருககுப்தன் மகன். இவன் விரக்தனாயிறந்தவன்.

கிருதசிரவணன் - (ரி) பரசுராமன் அநுச ரன்.

கிருநத்துயுதி - சித்திரகேதன் மூத்தபாரி. அங்கராஜபுத்தரி.

கிருதமந்தன் - (பு) யமீநரன் மகனாகிய திருதிமந்தன்.

கிருதமாலை - மலைய பர்வத்திலுற்பத் தியாகும் ஒரு நதி.

கிருதயுகம் - பதினேழிலûத்து இருபத் தெண்ணாயிரம் வருஷங்கள் கொண்ட காலவட்டம். அத்தரும நாட்டஞ் சிறிது மின்றித் தருமமேயோங்கிநடந்த காலமிது வே. அது பற்றி இந்த யுகம் புண்ணிய யுகமென்றுஞ் சத்தியயுகமென்றுங் கூறப் படும். வருணாச்சிரமத்துக்குரிய கன்மங்க ளொல்லாம் முறைப்படி யொருசிறிதும் இழுக்கமின்றிச் செய்யப்பட்ட யுகமாதலிற் கிருதயுகமெனப்பட்டது. இந்த யுகத்திலே தேவர் கந்தருவர், தானவர், யûர், கிந்ந ரர், நகர் என்போர் யாருமில்லை. கொள் ளல் விற்றல்களில்லை. மனஷர்க்கு ஒரு வகையுழப்புந் துன்பமுமில்லை. மரங்க ளும் பயிர்வர்க்கங்களும் மனு~ர்கையால் நீரும், எருவும், உழவும், காவலுங் கொள் ளாது தாமே பயன்றருவாயின. நினைத்த மாத்திரத்தே எல்லாப் போகங்களும் வந்து கூடும். பிணியும், மெலிவும், பகை யும், பெருமையும், வஞ்சமும், அச்சமும், கொடுமையும், நலிவும், பொறாமையும் இந்த யுகத்துக்குரியனவல்ல. சத்தியமே அரசு புரிந்தது. துறவே விரும்பப்படுவதா யிற்று. பரப்பிரமம் யாவர்க்குங் சாந்நித்தி யமாயிருந்தது. நாரயணன் சுவேதரூபியா யிருந்தான். எல்லாமாந்தருக்கும் நெறியு மொன்றே: கடவுளுமொன்றே: மந்திரமு மொன்றே: வேதமுமொன்றே: இது விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கிருதராதன் - மகாதிருதி புத்திரன்.

கிருதவர்மன் - (ய) ஹிருதிகன் மகன். தேவமீடன் தம்பி. பாரதயுத்தத்தில் அசுவ த்தாமனுக்குச்சகாயன். (2) கிருதவீரியன் தம்பி.

கிருதவீரியன் - (ய) தனிகன் புத்திரன். கார்த்தவீரியார்ச்சுனன் தந்தை.

கிருதவுஜசு கிருதவீரியன் தம்பி.
கிருதவுஜன்

கிருதன் - (1) கம்பிரன் மகன். இவன் வமிசத்தவர்கள் பிராமணராயினார்கள். (2) (ய) பலராமன் தம்பி.

கிருதாக்கினி - (ய) கிருதவீரியன் தம்பி.

கிருதாசி - ஓரரம்பை.

கிரதாசுவன் - (இ) பரிகிணாசுவன் மூத்த மகன். இவன் மகன் இரண்டாம் யவனாசு வன்.

கிருதாந்தன் - யமன்.

கிருதாயு - (மி) அரி~;டநேமி மகன்.

கிருதி - (1) (மி) வகுளாசுவன் மகன். (2) (பு) கந்தமந்தன் மகன். இவன் இரணியநாபனால் யோகமார்க்க முணர்ந் து சமாசங்கிதையைக் கீழைத்தேசங்களி ற் சென்றுபதேசித்தவன். (3) விபுமகன். (4) சியவனன் மகன்.

கிருது - (1) பிரமமானச புத்திருளொருவ ன். இவனுக்குத் தûப்பிரசாபதி மகளா கிய சந்நதியிடத்து அங்குஷ்டப் பிராமா ணமாக அறுபதினாயிரம் மகாவிருஷ~pகள் பிறந்தார்கள். இவர்கள் பெயர்கள் வால கில்லியவிருஷ~pகள். (2) உன்முகன். அங் கன்தம்பி.

கிருத்சிநமதன் - ûத்திர விருத்தன் பௌத்திரன். சுகோத்திரன் புத்திரன். சுனகன் தந்தை.

கிருத்திகை - மூன்றாம் நûத்திரம். அஃ து ஆறு நûத்திரங்களினது கூட்டம். ஒருசமயம் அக்கினிதேவன் சப்த இருஷ~p களினது பாரிகளைப்பார்த்து மோகித்தான் அது கண்ட அவன் பாரி சுவாகாதேவி தனது நாயகன் அந்த இருஷ~pகள் பாரிய ரால் சபிக்கப்படுவானென்றஞ்சி அருந்ததி யொழிந்த ஏனைய ஆறுபாரியாகி நாயக னைக்கூடினாள். இவ்வறுவரே கிருத்திகை யாயினர். இவர்களால் வளர்க்கப்பட்டமை யின் குமாரக்கடவுள் கார்த்திகேயரெனப்ப டுவர். அயலசலனத்தால் ஒவ்வொருகாலத் திற்கொவ்வொரு நûத்திரமாகவெண்ணப் பட்டது.

கிருத்திவாசன் - சிவன்.

கிருபன் - சத்தியதிருதி புத்திரன். துஆராணாசாரிக்கு மைத்துனன். கௌரவ ருக்கு முதலில் அஸ்திரவித்தை கற்ப்பித் தவன். இவன் சிரஞ்சீவி. இவன் பாரதயுத் தத்திலே கௌரவர் பக்கத்தில் நின்று பெருதவன்.

கிருபாநாயகி - திருக்கருவூரிலே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர்.

கிருபி - சத்தியதிருதி புத்திரி. துரோணா சாரியர் பாரி. அசுவத்தாமன் தாய். கிருபா சரரியன் தங்கை.

கிருபீடஜன்மன் - (உதகத்திலே பிறந்த வன்) சந்திரன், அக்கினி.

கிருபீடயோனி - சந்திரன் அக்கினி.

கிருமி - (அ) உசீநரன் புத்திரருள் நான் காம் புத்திரன்.

கிருமிலாபுரம் - ஒருபட்டணம். இது கிருமியால் நிருபிக்கப்பட்டது.

கிரௌஞ்சன் - மைநாகன் புத்திரன். இவன் அரசிருந்த மலை கிரௌஞ்சமென ப்படும். இவனை அம்மலையோடு சுப்பிரம ணியக்கடவுள் பிளந்தமைன் கிரௌஞ்ச தாரகனெனப்படுவர்.

கிழான் - வேழாழர்பட்டப் பெயர்.

கின்னரர் - தேவருள் ஒருபாலார். இவர் அசுவமுகமும் நரசாPரமுமுடையவர்.

கின்னரன் - புலகன் புத்திரன்.

கீசகர் - இவர்கள் நூற்றுவர் சகோதரர். விராடன் பாரியாகிய சுதேஷணையோடு பிறந்தவர்கள். இவருள் மூத்த கீசகன், பாண்டவர் விராடதெயத்திருந்த காலத்தி ல் திரௌபதியை இழுத்தான். அது கண் டவீமன் கீசர் நூற்றுவரையுங் கொன்றான்.

கிரந்தையார் - கடைச்சங்கப் புலவருளொ ருவர்.

கிரத்திபூஷணன் - இவன் இடைச்சங்க காலத்திறுதிக்கண் அரசு செய்த பாண்டி யன். அதுலகீர்த்தி பாண்டியனுடைய மகன். இப்பாண்டியன் காலத்திலேயே ஒரு பிரளயம் வந்து அநேக நாடுகளை உருத்தெரியாமலழித்து அந்நாடுகளிலுள் ள சராசரங்களையெல்லாம் கடல்வாய்ப்ப டுத்தி நிர்மூலம் பண்ணுவதாயிற்று. இது வே துவாபரகலியுக சந்தியிலுண்டாகிய பிரளம். இப் பிரளயத்தாலேயே குமரியாற் றையும் அதனைச் சார்ந்த நாற்பத்தொன் பது நாடுகளையும் கடல் கரைகடந்து பொங்கியெழுந்து தன் வயிற்றிலடக்கி அழத்தது. இவ்வுண்மை.

“எழில்புனையதுல கீர்த்தியென விருபத்திரண்டு. வழிவழி மைந்தராகி வையகங்காத்த வேந்தர். - பழிதவிர துலகீர்த்தி பாண்டியன்நன் பாலின்பம் - பொழிதர வுதித்தகீரித்தி பூடணன் புரக்கு நாளில்.” (க) “கருங்கடலேழுங் காவற் கரைகடந்தார்த்துப் பொங்கி - யொருங் கெழுந்துருத்துச் சீறியும்பரோடிம்பரெட்டுப் - பெருங்கடகரியுமெட்டுப்பொன்னொடுங்கி ரியு நேமிப் பெருங்கடிவரைய நேரப் பிரளயங்கோத்ததன்றே” என்னுந் திருவி ளையாடற் செய்யுள்களானும், சிலப்பதி காரவுரையானும், நச்சினார்க்கினியர் உ ரையானும் இனிது நாட்டப்படும்.

கீர்த்திமதி - அணுகன் பாரி. சகுனி மகன்.

கீர்த்திமாலினி - சந்திராங்கதன் மகள்.

கீர்த்திரதன் - (மி) பிரதிரதகன் மகன்.

கீர்த்திராதன் - (மி) மகாப்பிரகன் மகன்.

குகன் - (1) குமாரக் கடவுள். (2) கிருங் கிபேரபுரத்துக்குப் பிரபுவாகிய ஒரு கிராதராஜன். இராம பக்தன்

குகியர் - குபேரனுடைய நவநிகளைக் காப்பவர்கள். (இரகசியத்தை வெளியிடா தவர்கள்)

குகுதேவி - பிரமபாரியருள் ஒருவர்.

குகுரன் - (ய) அந்தகன் மகன்.

குûp - இû{வாகு மகன். விகுûp தந்தை.

குங்கிலியக்கலயநாயனார் - திருக்கட வூரிலே பிராமணகுலத்தவதரித்துச் சுவாமி க்குக் குங்கிலியத் தூபமிடுதலையே பெரும் பணியாகக் கொண்டு தம்மிடத்து ள்ளவெல்லாம் அதன்பொருட்டுச் செலவு செய்து வறுமையுற்றவர். உணவுக்கு நெல்வாங்கிவரக் கொண்டுபோன தாலி யை ஒரு பொதி குங்கிலியமெதிரே வரக் கண்டு அத்தாலியைக் கொடுத்து அத னை வாங்கிப்போய்க் கோயிலிலே வைத் துத் தூபமிட்டுக் கொண்டு நின்று தமது மனைமக்கள் பட்டினியை மறந்தவரும் அவ்வுறுதிகண்டு சிவபிரான் அவ்வீடெல் லாம் நெல்லால் நிறையச்செய்யப்பெற்ற வரும் இவரே.

குங்குமபாண்டியன் - சரதமார பாண்டிய னுக்குப்பின் அரசு செய்தவன்.

குசஸ்தலி - ரைவததுருக்கத்திலுள்ள ஒரு பட்டணம். மதுராபுரத்தை ஜராசந்தன் எரியூட்டியபின்னர்க் கிருஷ்ணனுக்கு ராச தானியாயிருந்தது. இது விந்திய கிரிமுக த்திலேயுள்ளது.

குசத்துவஜன் - ஜனகன் தம்பி. தசரதன் சம்பந்தி. பரதசத்துருத்தனர் மாமன்.

குசநாபன் - குசன் மகன். இவன் புத்தரி கள் நூறுபேரும் வாயுசாபத்தால் பெண் மை இழந்தார்கள். பிரமதத்தன் என்னு மோர் இருஷ~p இவர்களை மணத்திற்பெற் றுத் தமது தபோபலத்தால் அவர்களுக்கு அக்குப்ஜத்துவத்தைப் போக்கினார்.

குசலவர் - ஸ்ரீராமன் புத்திரர். இவர்கள் குசனும் லவனுமென இரட்டையர். இவர் கள் கருப்பத்திலுற் பத்தியாயிருக்கும் போது, அயோத்தியிலே ஒருவன் தனது நாயகியோடுமுரணி, அவள்மீது அபவாதம் சுமத்தி, அவனைச் சேர்க்கமாட்டேனென்ற போது அவன் தாய் அவனைப் பார்த்து, இராவணன் கொண்டுபோயிருந்த சீதா தேவியை இராமர் சேர்க்கவில்லையா? உனக்கு மாத்திரம் இவனைச் சேர்த்தல் கூடாதாவென்றான். அதனை ஒற்றர் இராம ன் செவியிற் சேர்க்க, அவர் நமக்கும் அபகீர்த்திவச்தாவென்று துக்கித்து கருப் பிணியாயிருந்த சீதையைக் காருண்யமின் றிக் காட்டிற் கொண்டு போய் வான்மீகி ஆச்சிரமத்தில் விட்டார். அங்கே சீதா தேவியார் இப்பிள்ளைகளை இரட்டையரா கப் பெற்று முனிவர் அநுக்கிரகத்தால் வளர்த்தார். குசன் குசஸ்தலியென்னும் பட்டணத்தை நிருமித்தவன்.

வான்மீகி ஒரு தருப்பைப்புல்லை யெடுத்து இரு கூறாக்கி நுணிக்கூற்றால் குசனுக்கும் அடிக்கூற்றால் லவனுக்கும் காப்பிட்டபடியால் குசலவர் என்னும் பெயருண்டாயின. (லவம் - கூறு)

குசன் - குசலவர் காண்க.

குசாக்கிரன் - (கு) பிருகத்திரதன் மகன். ஜராசந்தன் தம்பி.

குசாம்பன் - குசன் மகன். இவன் புத்தி ரன் காதி.

குசாவதி - குசன் ராஜதானி. இது உத் தரகோசலததுள்ளது.

குசிகன் - விசுவாமித்திரன் பிரபிதாமஹன் (பாட்டன்றந்தை) பாலாகாசுவன் மகன்.

குசீலவன் - மைத்திரெயன் தந்தை.

குசுமபுரம் - பாடலிபுத்திரம்.

குசுமேஷன் - மன்மதன். (குசுமம் - புஷ் பம். இஷ{ - பாணம். புஷ்பபாணன்.)

குசும்பன் - (கு) உபரிசரவசு மகன்.

குசேலன் - கிருஷ்ணன் சிநேகனாகிய வோரந்தணன்.

குஜம்பன் - (1) (த) தாரகயுத்தத்தில் வருணனால் கொல்லப்பட்ட ராûன். (2) வத்சந்திரலே கொல்லப்பட்ட ஓரரசன்.

குஜன் - செவ்வாய்.

குஞ்சரன் - ஒரு வாநரன். அஞ்சனை தந் தை. அநுமந்தன் மாதாமஷன். (பாட்டன்)

குடம்பன் - ஓரிருடி.

குடமலை - மேற்றிசைக் கண்ணதொரு மலை. அது வையகரியெனவம்படும்.

குடநாடுதிருப்புலியூர் - மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.

குணநூல் - சில சூத்திரங்கள் தவிர மற்றெல்லாமிறந்தொழிந்த ஒரு நாடகத் தமிழ் நூல்.

குணவாயில் - திருக்குணவாயிலென்பதோ ரூர். வஞ்சி நகரத்திற்குக் கீழ்த்திசைக் கண்ணது. இளங்கோவடிகள் துறவுபூண்டி ருந்தவூரிதுவே.

குணவீரபண்டிதன் - தமிழிலே நிகண்டு செய்த ஒரு சமணவித்துவான்.

குணாட்டியன் - உருத்திரன் சாபத்தாலே பூலோகத்தில் உற்பத்தியான மாலியவந் தன்.

குணி - (ய) யுகந்தரன் தந்தை.

குண்டலை - விந்தியவந்தன் பாரி. இவன் நாயகன் சமபாசுரனாற் கொல்லப்பட்டவன் இவள் தான்நினைத்தவிடமெல்லாம் போகு ஞ்சக்தியுடையவள்.

குண்டினபுரம் - விதர்ப்பதேச ராஜதானி. அமராவதிக்கு ஈசானியத்தில் நான்கு யோசனைதூரத்திலுள்ளது.

குண்டூர்க்கூற்றம் - சேரநாட்டின் ஒருபகுதி.

குத்சன் அங்கிரசன் சந்நதியிற்றேன்றிய குற்சன் வன். இவன் வேதங்களிலேயு ள்ள சிலகீதங்களுக்குக் கர்த்தா.

குந்தலம் - பல்லாரிப் பிராந்திய தேசத்து க்குப் புராதனப்பெயர்.

குந்தி - இந்;;தப் பெயரினையுடையயாதவர நேகர். (1) கேகயன் பௌத்திரன். தர்ம கேந்திரன் புத்திரன். (2) விதர்ப்பன் பௌ த்திரன். புருதன் மகன் இவன் சசிவிந்தன் வமிசத்தவன். (3) புருதன் மகன். (4) சா த்துவன் மகனாகிய மகாபோசன்வமிசத்த வன். பாண்டவர் தாயாகிய குந்திக்கு வளர்த்த தந்தை. இவன் குந்திபோஜன் எனவும்படுவன்.

குந்திதேவி - குந்திபோஜன் எடுத்து வளர்த்த அபிமான புத்திரி. தேவமீடனுக் கு மாரிஷையிடத்துப் பிறந்த புத்திரி. வசு தேவன் தங்கை. இவளுக்குப் பிருதையெ ன்றும் பெயர். இவள் தந்தை அநுமதிப் படிதுர்வாசவிருஷ~pயிடந்து ஏவல் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய ஏவற் பக் தியைப் பன்முறையுங் கண்டு மகிழ்ந்த இருஷ~p, ஒரு திவ்வியமந்திரத்தையுபதேசி த்து இதனை நீ யாரை நோக்கிச்செபித் தாலும் அவர்கள் பிரசன்னமாகிப் புத்தி ரோற்பத்தி செய்வார்களென்னு கூறி விடையளித்தனர். இதனைக் குந்திதேவி பாPûpக்க நினைத்துக் கங்கையாடி அக் கங்கைக்கரையிலே நின்று சூரியனை நோக்கி அம்மந்திரத்தைச் செபித்தாள். உடனே சூரியன் பிரசன்னமாகிக் கன்னி காபங்கமின்றி ஒரு புத்திரனைப் பெறுக வென்று கூறி மீண்டான். அவ்வாறே குந்தி சகஜகர்ணகுண்டலங்களோடு கூடிய கர்ணனைப் பெற்றாள். வசுசேனன் என்ப தும் கர்ணனுக்குகொருநாமதேயம். இதன் பின்னர்ப் பாண்டு ராசாவுக்கு பாரியாகித் தருமுன் முதலிய ஐவரையும் பெற்றாள். இவன் வரலாறு பாரதத்திற்காண்க. இவள் சித்திவமிசம்.

குந்திபுரி - இப்போது குவாலியூர் என்று வழங்கப்படும் நகரம்.

குபன் - தசீசிமுனிவரோடு அந்தணரோ அரசரோ சிறந்தாரென்று வாதம் பேசி ஈற்றிலே அம்முனிவரைத் தனது வச்சிரப் படையாற் கொன்று இரு கூறு செய்த வன்.

குபேரன் - திக்குபாலகர் எண்மருள் ஒருவன். இவனுக்குப் பட்டணம் உத்திர திசையில் அளகாபுரி. பாரி சித்திரரேகை. வாகனம் குதிரை. ஆயுதம் வாள். இவன் ஐசுவரியத்துக்குத் தேவதை. தேவப்பிரசி த்திபெற்றவன். யûர்களுக்கரசன். இவன் விச்சிரவசு புத்திரன். பார்வதிதேவியார் சாபத்தால் ஒற்றைக்கண்ணனாயினவன்.

குமணன் - தொண்டைநாட்டினைச்சார்ந்த முதிரமலைச் சூழலிலேயுள்ள நாட்டில் அரசு புரிந்த சிற்றரசன். இவன் தமிழ்க் கலைவினோதனாய்த் தமிழ் நாவலர்க்குப் பொன்மாரி பொழிந்த ஒரு வள்ளல். இவன் பரணர்காலத்தையடுத்த பிற்காலத் திலே விளங்கினவன். எனவே ஆயிரத்தெ ழுநூறு வருஷங்களுக்கு முன்னேயுள்ள வன். இவன் தம்பி இளங்குமணனென்ப வன். இவனுடைய நாட்டை வஞ்சனையா ற் கவர்ந்து கொண்டு இவனையுங் கொல் லவகை தேடினான். இவன் அஃதுணர்ந் தோடிக் காடு பற்றியிருந்தான். புலவர்கள் அங்குமிவனைத் தேடிப்போய்க் கண்டு வருவாராயினர். பெருந்தலைச் சாத்தனார் இவனிடம் தாம் முன்பெற்ற நன்றியை மறவாதவராய் இவனைக் காட்டிடைச் சென்று கண்டு, நீ நாடிழந்து காடு கொண்டபின் நான் அனுபவிக்குந் துன்ப ங்களைக் கேளெனத் தமது துன்பங்க ளை மேல்வரும் பாவாற் கூறினர்.

“ஆடுநனிமறந்து கோடுயரடுப்பி - னாம்பிபூப்பதி தேம்பசியுழவாப் - பாஅலி ன்மையிற் றோலொடுதிரங்கி - யில்லிதூர் ந்த பொல்லாவறுமுலை - சுவைத்தொற ழூஉந்தன் மகத்துமுகநோக்கி - நீரொடு நிறைந்து வீரிதழ்மழைக்கணென் - மனை யோளெவ்வநோக்கி நினைஇ - நிற்படர்ந் திசினே நற்ப்போர்க்குண - வென்னிலை யறிந்தனையாயினிந் நிலைத் - தொடுத்து ங்கொள்ளாதமையலெனடுக்கிய - பண் மைநரம்பின் பச்சைநல்யாழ் - மண்ணார் முழுவின்வயிரிய - ரின்மை தீர்க்குங் குடி ப்பிறந்தோயே”

இப்பாடலை கேட்ட குமணன் மனமுருகி, புலவரே, இவ்வாளைக் கைக் கொள்ளுமென்று கூறிக்கொடுத்து, என் தலையைக் கொய்து சென்று கொடுப்போ ர்க்கு பெருநிதி வழங்குவேனென என் தம்பி முரசறைவித்திருத்தலின், இவ்வாட் படையாலே என் தலையைக் கொய்து சென்று, அவன் பாற்கொடுத்து உமது வறுமையைத் தீர்த்துக்கொள்வீராகவென்று தலையுங் குனிந்தான். சாத்தனார், அம்ம ம்மவென்று இருசெவிகளையும் புதைத்து க்கொண்டு வாட்படையைக் கையிற்பிடித் தபடியே அவ்விடத்தை விட்டுப்போய் இள ங்குமணனையடைந்து, இச்சமாசாரத்தை “மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர்” என்னுஞ் செய்யுளாற் கூறிக் குமணன் வண்மையையும் பெருமையுமெடுத்துப் புக ழ்ந்து அவனுக்கு நன்மதிப்புகாட்டினர். அதுவயிலாக இளங்குமணனும் பகைமை தீர்த்தான்.

குமரகுருபரசுவாமிகள் - பத்து வயதாங் காறு மூமைப்பிள்ளையாயிருந்து திருச் செந்தூர்ச் சுப்பிரமணியக்கடவுள் ஆலயத் திலே தந்தையாராற் கொண்டுபோய் விடப்பட்டபோது ஊமைத்தன்மை நீங்கி, அற்புத கவிப்பிரபந்தங்கள் பாடுஞ் சக்தி பெற்று விளங்கின புலவர். இவரிடத்திலே புலமையோடு அற்புதங்களும் விளங்கின. இவர் காசியாத்திரைக்கெழுந்து சென்ற போது வேங்கடகரிக்குச் சமீபத்திலே வழியருகேயிருந்து துன்பஞ்செய்து வந்த புலியை அழைத்து அதனை வாகனமாக க்கொண்டு சென்று காசியையடைந்தனர். அது கேட்ட “ஆக்பர்” என்னுந் துருக்க சக்கரவர்த்தி இவரைச் சென்று கண்டு உபசரித்துத் துறவியாதலின் என் மாளி கையிலும் வந்து விருந்துகொண்டருள வேண்டுமென்னுறு விண்ணப்பஞ் செய்தா ன். சுவாமிகள் கொள்வேமென்ன, சக்கர வர்த்தி அதற்கு வேண்டுவனவெல்லாம் அமைத்துத் தன்மதாசாரியார் ஒருமருங்கி ருக்கச் சுவாமிகளைத் தன்னருகே தலை ப்பந்தியிலிருந்தினான். மாமிசபதாhடதங்க ளோடு கூடிய உணவே யாவர்க்கும் படைக்கப்பட்டன. சுவாமிகள் தமக்கு அச மாமிசமும் பன்றிமாமிசமும் சமமேயென்று கூற, சக்கரவர்த்தி முதலியோர் யாவரும் பன்றியென்னுஞ் சொற் கேட்டமாத்திரத்தி லே நிஷேதமென்று கூறி யெழுந்தார்கள். அதுகண்ட சுவாமிகள் அவர்களையிருக்கு ம்படி கையமர்த்தி உங்கள் கலங்களிலே யிருந்த அன்னங்கறிகளெல்லாம் போய் அதிரம்மியமான தீங்கனி வகைகளேயிருப் பக்கண்டு அதிசயித்துச் சுவாமிகளோடு தாமும்வயிறாரவுண்டார்கள். அவ்வற்புதத் தைக்கண்ட சக்கரவர்த்தி சுவாமிகளிடத் தில் மிக்க பக்தியும் அபிமானமுடையரா கி, அவர்கள் கேள்விப்படி வைவசமயிக ளுடையனவாயிருந்து பின்னர்த் துருக்கரா ற் கவரப்பட்ட கங்கைக்கரையின் கணுள் ளதீர்த்தத் துறைகளையும், விசுவநாத சுவாமி கோயிலுக்கும் அம்மையார் கோயிலுக்கும் அநேகமானியங்களையும், சைவத்துறவிகளுக்காக அநேக மடாலய ங்களையும் கொடுத்தான் சுவாமிகளுடை ய புலமை ஒப்புயர்வில்லதென்பது அவரி யற்றிய நூல்களால் நிச்சயிக்கப்படும் இவர்காலம் இருநூற்றெழுபத்தைந்து வரு ஷங்களுக்கு முன்னுள்ளது.

குமரன் - (1) குமாரதெய்வம். (2) கபிலபு ரத்தரசன்.

குமரி இஃது ஆரியதேசமாகிய பர குமரியாறு தகண்டத்திலே தென்பாற்க ண்ணதாகிய ஓராறு. இதனையுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாமுகள் கடையூழியிறு திக்காலத்திலே கடல்கொண்டழிந்து போ யின. அதன் வடபால் நாடு பின்னர்க் குமரி நாடு என்றும், அக்கடல் குமரிப் பௌவமென்றும் வழங்கப்படுவனவாயின்.

குமரிக்கோடு - கடல்கொண்டழிந்த குமரி நாட்டுமலை.

குமாரசுவாமி - சிவபெருமானது திருக்கு மாரருள் ஒருவர். தேவர்கள் சேனாதிபதி. வாகனம் மயில். ஆயுதம் வேல். பாரிகள் வள்ளிநாயகியும் தெய்வயானையும். சூரப ன்மன் முதலிய அசுரர்களை நாசஞ்செய் தவர். சிவபெருமானது நெற்றிக்கண்களி னின்று வீழ்ந்த அக்கினிபகவானேற்றுக் கொண்டுபோய்ச் சரவணப்பொய்கையில் விட, அப்பொறிகள் ஆறுபிள்ளைகளாயின அது கண்டு உமாதேவியார் அவைகளை எடுத்துத்தழுவ ஆறும் ஏகரூபமாகி ஆறுமுகங்களும் பன்னிரண்டு புஜங்களும் இருபதங்களுமுள்ள திருமேனியாக விள ங்கின.

குமாரி - இருûபர்வதத்திலுற்பத்தியாகும் ஒரு நதி.

குமுதம் - நிருதிதிக்குயானை.

குமுதவதி - விந்திய பர்வத்திலுற்பத்தியா கும் நதி.

குமுதன் - (1) விஷ்ணு பரிசாரகன். (2) ராமருடைய வாசரவீரருளொருவன்.

குமுதாûன் - விஷ்ணு பரிவாரகர்களு ளொருவன்.

கும்பகர்ணன் - (ரா) ராவணாசுரன் தம்பி. இவன் மகாகோரமான தவஞ்செய்து வரங் கேட்டசமயத்தில் தனது அபீ~ஷ்டத்தை மறந்து நித்திரைவேண்டுமென்று வேண்டி நித்திரையைப்பெற்றவன். அதனால் நித்தி ராபங்கம் வந்தகாலத்திறக்கவென்றும் வர ம்பெற்றவன். இவன் ராவணயுத்தத்தில் ராவணனாலெழுப்பப்பட்டு ரபமரை எதிர்த துபோராடியபோது அவரால் மடிந்தவன்.

கும்பகன் - விதேகதேசத்திலிருந்தவோரி டையன். தாரகயுத்தத்தில் மடிந்துபோன காலநேமிபுத்திரர் எழுவரும் இவன் வீட்டு பசுவினிடத்திலே காளை மாடுகளாகப் பிறந்திருந்தனர். இக்கன்றுகளை கிருஷ் ணன் கொன்று கும்பகன் மகளாகிய நீலையை மணம் புரிந்தான்.

கும்பன் - (ரா) கும்பகர்ணன் மகன். சக்கிhPவனாற் கொல்லப்பட்டவன்.

கும்பாண்டன் - வரணாசுரன் மந்திரி. கவந்தனெசும்படுவன்.

கும்பி - சம்பாதி மகனாகிய சுபார்சுவன் புத்திரன். (கருடவமிசம்)

கும்பீநசை - (ரா) (1) சுமாலி மகள். கரதுஷணாதியர் தாய். (2) அங்காரவர்ண ன்பாரி.

கும்பேசுரர் - திருக்குடமூக்கிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

குயிலமுதநாயகி - திரு;கொடுங்குன்றத்தி லே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

குயிலாலுவம் - இமயத்தின் பக்கத்திலுள் ள சிவாலயம்.

குயின்மொழியம்பிகை - திருச்சாய்க் காட் டிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

குயின்மொழியம்மை - திருஇருமாகாளத்தி லே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

குரு - (1) (பு) உருசிரவன். (2) பிருகஸ் பதி. (3) புஷ்யநûத்திரம். (4) துரோண ன். (5) பிரபாகரன்: இவன் ஒரு மீமாம்ச கன்.

குரு - (பு) அஜமீடன் மூன்றாம் புத்திரனா கிய இருûன் பௌத்திரன். சம்வருண் புத்திரன். இவன் வசித்தமையால் சமந்த பஞ்சகமென்னுமிடம் குருNûத்திரமெனப் படுவதாயிற்று. கௌரவ பாண்டவர்களுக் குப் பாட்டனாகிய விசித்திரவீரியன் இவன் வமிசத்தில் வந்தவன்.

குருகு - இடைச்சங்கத்து நூல்களுளொன் று.

குருNûத்திரம் - சமந்தபஞ்சகமென்றும் ஸ்தானேசுவரம் என்றும் வழங்கப்படுவதா கிய இடம். இது பிரமாவினது உத்தரவே தி. இது சமஸ்த தேவர்களுக்கும் ஆசிரயஸ்தானமெனப்படும். பாரதயுத்தம் நடந்த இடமும் இதுவேயாம்.

குருஜாங்கலம் - அஸ்தினாபுரிக்கு வாயுதி க்கிலும் பஞ்சாலதேசத்துக்குத் தெற்கிலு ம் உள்ளதேசம்.

குருஜித்து - (மி) அஞ்சகன் மகன்.

குருதாமன் - திஷ்யந்தன் மகன்.

குருதேசம் - அஸ்தினாபுரியைத் தனக்கு ராஜதானியாகவுடைய தேசம்.

குருவசன் - (ய) இரண்டாம் மது மகன்.

குரோ~;டு - யதுபுத்திரருள் ஒருவன் விருசின வத்தன் தந்தை.

குரோதவசை - தûப்பிரசாபதி புத்திரிக ளுள் ஒருத்தி. கசியபன் பாரி.

குலசூடாமணி - சோம சூடாமணி பாண்டி யனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்.

குலசேகரபாண்டியன் - இவன் சோழவமிச சேகரபாண்டியனெனவும் படுவன். இவன் கலியுயுகம் நாலாயிரத்து முன்னூற்றெண் பதளவில் மதுரையிரசு செய்தவன். இப் பாண்டியன் அநுலோமபாண்டியருள் ஒருவ ன்.

குலசேகரபாண்டியன் - இவன் கடம்பவன த்தை மதுரையாக்கினவன்.

குலசேகராழ்வார் - இவர் கலியுகாரம்பத்தி லே திருடவிரதராஜனுக்குப் புத்திரராகப் பிறந்தவர்.

குலைச்சிறைநாயனார் மணமேற் குடியி பெருநம்பி லே பிறந்து நெடு மாறன் என்னும் பாண்டியனுக்கு முதன் மந்திரியாராகித் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைக் கொண்டு சமண்மதத்தை நிலைகெட்டோடச் செய்வித்தவர்.

குலத்துவசபாண்டியன் - பாண்டீசுவரனுக் குப்பின் அரசு செய்த பாண்டிணன்.

குலபதிநாயனார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர்.

குலபர்வதம் - மகேந்தரம், கந்தமாதனம், மலயம், சகியம், சுத்திமந்தம், விந்தியம், பாரிஜாதமென்னுமேழுமிப் பெயர்பெறும்.

குலபூஷணபாண்டியன் - அனந்தகுண பா ண்டியனுக்குப் பின் முடிதரித்தவன். இவ னே மெய்ப்பாப்பிட்டது முதல் வளையல் லிற்றதீறாயுள்ள திருவிளையாடல் மூன்று ங்கண்டவன்.

குலேசபாண்டியன் - அரிமர்த்தன பாண்டி யனுக்குத் தந்தை. இவன் இடைக்காடர் காலத்தவன்.

குலோத்துங்கபாண்டியன் - இவன் புதல்வ ர் அறுபதினாயிரவர். இவனே மாபாதகந் தீர்த்த திருவிளையாடல்கண்ட பாண்டி யன்.

குல்லூகபட்டர் - ஒரு வியாக்கியான கர்த்தா.

குல்லூகபட்டியம் - மனு ஸ்மிருதிக்குக் குல்லூகபட்டர் செய்தவியாக்கியானம்.

குவலயநாயகி - திருக்குரங்காடு துறையி ற் கோயில்கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

குவலயாசுவன் - (1) இருதத்துவஜன். சத்துருஜித்துமகன். இவனுக்குக் காலமு னிஜலத்தினும், மலையினும், காட்டினும், நினைத்தபடி சஞ்சரிக்கின்ற ஒரு குதிரை யைக் கொடுத்தார். அது காரணமாகக் குவலயாசுவன் எனப்பெயர் பெற்றான். (2) (இ) பிருகதசுவன் மகன். இவன் துந்து என்னும் அசுரனைக் கொன்றவனாகலின் துந்துமாரன் எனவும் பெயர் பெறுவான். (3) (கா) வற்சன் மகன். அலர்கன் தந்தை. (தாளகேதன் காண்க.)

குவலயாநந்தம் - இஃது அப்பை யதீûp தர் சம்ஸ்கிருதத்திற் செய்த அலங்கார சாஸ்திரம். தமிழிலுள்ளதுமிப் பெயரே பெறும்.

குவலயாபீடம் - கம்சன் யானை. எத்து ணைப்பலவானையும் கொல்லும் வலிமை யுடையது. கம்சன் கிருஷ்ணனைக் கொல் லும் பொருட்டு அதனை ஏவ அது கிருஷ்ணானற் கொன்றொழிக்கப்பட்டது.

குறள் - திருக்குறள்.

குழல்வாய்மொழியம்மை - திருக்குற்றாள த்திலே கோயில் கொண்டிருக்குந் தேவி யார் பெயர்.

குறுந்தொகை - பாரதம் பாடிய பெருந் தேவனார் முதலிய இருநூற்றுவரால் பாட ப்பட்ட அகப்பொருட்பகுதியைப் பொருளா கவுடைய ஒரு நூல். இதற்குரை செய்த வர்கள் பேராசிரியரும் நச்சினார்க்கினிய ரும்.

குறும்பலாநாதர் - திருக்குற்றாலத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

குற்றம்பொறுத்தநாதர் - திருக்கருப்பறிய லூரிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவா மி பெயர்.

குனி - (மி) சிதத்துவஜன் புத்திரன்.

குன்றத்தூர் - சேக்கிழார் பிறந்நவூர். அது தொண்டை நாட்டிலுள்ளது.

குன்றைஎல்லப்பன் - தொண்டைநாட்டிலே குன்றத்தூரிலே தமிழ்ப் புலவர்களுக்குக் கைசலியாமற் பொன்மாரிபொழிந்து புகழ் படைத்தவனாகிய ஒரு வேளாண் பிரபு.

குஹியகர் - குகியர்: குபேரநனது நவநிதி களைக் காப்பவர்களாகிய மாணிபத்திரன் முதலியோர்.

கூத்தநூல் - ஒரு நாடகத் தமிழ் நூல்.

கூர்ச்சரர் - பஞ்சதிராவிடருளொருவர்.

கூர்மபுராணம் - கூர்பரூபம்பெற்ற இந்திரா தீசன் இந்திரத்துயமனனுக்குச் சொன்ன புராணம். இஃது ஆறாயிரங்கிரந்தமுடை யது. வர்ணாச்சிரமதர்மங்கள் சிவமாகத்மி யம் முதலியன விரிந்துரைப்பது.

கூர்மாவதாரம் - அமிர்தமதனத்தின் பொரு ட்டு மந்தரமலையைத் தாங்குமாறு வி~;ணுவெடுத்த ஆமைவடிவு.

கூவத்துநாரணன் - தொண்டைநாட்டிலுள் ள கூவமென்னுமூரில் விளங்கிய ஒரு தட்டான். இவன் பெருங் கொடையாளனா தலின் அவனூராகிய கூவமும் தியாகசமு த்திரமெனப் பெயர்பெற்றது. ஒரு ஏழை வலைறுன் அவ்வூர் சிற்றேரியில் தூண்டி லிட்டு மீன்பிடித்துக் காலக்கழிவு செய்து வந்தான். அவன் வறுமைநோயைத் தீர்க் கவெண்ணிய நாரணன் பொன்னினாலொ ரு மீன் செய்து அதகை; கொண்டுபோய் அவ்வேரியிலிட்டு வலைஞன் தூண்டலில கப்படும்படி செய்தான். இவன் தமிழ்ப்புல வர்களுக்குஞ் சலியாது கொடுத்த பிரபு. (தொண்டைமண்டலசதகம்)

கூற்றுவநாயனார் - களந்தையென்னுமூரி லே குறுநில மன்னர் குலத்தில் விளங்கி ய ஒரு சிவபக்தர் இவர் பஞ்சாûரத்தை வித்திப்படி செபித்துப் பெருஞ் செல்வமு ம் பராக்கிரமமும் பெற்றவர்.

கூனி - மாதவி தோழி. இவள் வசந்தமா லையெனவும்படுவாள். (2) மந்தாரை.

கூன்பாண்டியன் - சத்துரு சாதன பாண்டி யன் மகன். இவன் சமணசமயப் பிரவேச ஞ்செய்து அச்சமயத்தை வளர்த்து வரு நாளில் திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் அங்கெழுந்தருள, அங்கிருந்த சமணாசாரி யர்கள் அவர்மேலசூயை யடையவர்களா கி அலரெழுந்தருளியிருந்த மடத்தில் நெருப்பிட, நாயனார் அத்தீயை அரசன் மேலேவிட, அது கொடியசுரமாகிச்சென்று அவன் தேகத்தை வருத்திற்று. சமணாசா ரியார்கள் தமறிந்த மந்திர சாமர்த்தியத் க்கொண்டு அந்நோயைத் தீர்க்க வெத்த னித்தபோது அது தணியாது மேன்மே லோங்கி அதிகரித்தது. அது கண்ட பாண்டியன் நயனாரை அழைத்து, அவரா ல் தன் நோய் தீரப்பெற்றுச் சைவசமயப் பிரவேசஞ் செய்தான். இப்பாண்டியன் காலத்திலேயே சமண சமயம் பாண்டிநா ட்டை விட்டுக் குடிபோயது. இரண்டாயிரத் துதெண்ணூறு வருஷங்களுக்குப் முன்னி ருந்த சங்காராச்சாரியார் திருஞானசம்பந்த மூர்த்திநாயனாரைத் துதித்தலால் இவன் காலம் ஏறக்குறைய நலாயிரம் வரு~ங்க ளுக்கு முன்னுள்ளதாதல் வேண்டும்.

கேகடன் - சங்கடன் புத்திரன்.

கேகயம் - கேகயதேசம். சிபி புத்திரனா கிய கேகயனது தேசதமாதலின் கேகய மெனப்பட்டது. இது விபாசநதிக்கு வாயுதி க்கிலுள்ளது. கிரிவிரசம் இதன் ராசதானி.

கேகயன் - சிபிச்சக்கரவர்த்தி புத்திரர் நால்வருளொருவன். பரதக் தாயாகிய கைகேகி தந்தை.

கேசரி - ஒரு வாநரன். பிரபாசதீரத்திலே இரு~pகளுக்குத் துன்பஞ் செய்துவந்த யானையைக்கொன்றவன். இவன்பாரி அஞ்சனை. மகன் அநுமந்தன்.

கேசவன் - விஷ்ணு.

கேசி - (1) ஒரு தானவன். இவன் தேவ சேனையைப் பிடித்துச் சென்றபோது தேவேந்திரனால் ஜயிக்கப்பட்டவன். (2) அயரூபதரனாய்ச் சென்று கிருஷ்ணனை யெதிர்த்துயுத்தஞ் செய்தபோது மாண்ட அரசன். (3) (ய) வசுதேவனுக்குப் பத்தி ரையிடத்துப் பிறந்த மகன்.

கேசித்துவஜன் - நிமி வமிசத்தனாகிய ஒரரசன்.

கேசினி - தமயந்தி பாங்கி.

கேதனன் - அபிரவதண்டி யென்னும் பட் டம்பெற்ற ஆந்தரகவி.

கேதாரம் - இமாலய பர்வதத்திலுள்ள சிவNûத்திரம்.

கேதாரேசுவரவிரதம் - இஃது ஐப்பசிமாத த்துக் கிருஷ்ணபûத்துச் சதுர்த்தசியில் சுமங்கலிகளால் அநுஷ்டிக்கத்தக்க விர தம்.

கேதாரேசுவரர் - திருக் கேதாரத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கேது - விப்பிரசித்திக்குச் சிங்கிகையிடத் துப் பிறந்த புத்திரன். இவன் அக்கினிக்கு விகேசியிடத்துப் பிறந்தவன் எனறுஞ் சொல்லப்படுவன். (இராகு காண்க)

கேதுமதி - ஒரு கந்தருவஸ்திரி. சுமாலி யென்னுமிராûசன் மனைவி.

கேதுமந்தன் - (1) லோகபாலகர் நால்வ ருள் ஒருவன். (2) கலிங்கதேசத்தரசன். சுருதாயு மகன். (3) (கா) தந்வந்திரி மகன். கேதுரதன் தந்தை.

கேதுமாலம் - நவவருஷத்தொன்று.

கேதுரதன் - கேதுமந்தன் மகன். பகீரதன் தந்தை.

கேரளம் - கேரளனது தேசம். இது தûp ண மலையாளம்.

கேரளன் - துஷ்யந்தன் தம்பியாகிய தி~ஷயந்தன் பௌத்திரன். ஆசிரிதன் மகன்.

கைகசி - சுமாலி மகள். விச்சிரவசுவின் இரண்டாம்பாரி. இவள் ராவணன் கும்பகர்ணன் சூர்ப்பநகை என்னும் மூவ ரையும் பெற்றவள்.

கைகேயி - (1) கேகயதேச ராஜபுத்திரி. தசரதன் மூன்றாம் பாரி. பரதன் தாய். தசரதன் ராமருக்குப்பட்டாபிஷேகத்துக்கு முகூர்த்தம் வைத்து அதற்கு வேண்டுவன வெல்லாம் செய்து எத்தனப்பட்டிருக்கும் போது, மந்தரையென்னுங் கொடிய கிழ ப்பாங்கியினது ஏவலால் இக் கைகேகி தனக்குத் தசரதன் முன்னோரு நாளீந்த வரங்களிரண்டையும் தருமாறு அவனைக் கேட்க, அவன் இவளுடைய துரோக சிந் தையையெண்ணாது தந்தேன். என்ன, இவள் தன்மகன் பரதன் பட்டம் பெறவும் ராமர் பதினான்கு வருஷம் காடுகொள்ள வும் அருளுவென்றாள். கொடுத்ததை மறு த்தல் அரசர்க்கியல்பன்றாதலின் அவன் மறுக்க வியலாதுடன்பட்டு மனக்கவற்சி காரணமாகச் சிலநாளில் உயிர்விட்டான்.

கைடவன் - கற்பாந்தத்தில் விஷ்ணுயோ கநித்திரையிலிருந்த போது விஷ்ணுவின து இரு செவித்துவாரங்களினின்றும் மது வென்றும் கைடவன் என்றும் ஈரசுரர் பிறந் தார்கள். அவர்களுக்குப் அப்போதுண்டா யிருந்த மகாப்பிரளயம் முழந்தாள்வரைச் சலமாயிருந்ததென்றால் அவர்கள் உயர ஞ் சொல்லவேண்டியதன்று. இச்சமயம் பிரமாவும் விஷ்ணு நாபிக்கடலத்திற் பிறந் தார். அவரைக் கண்டு அவ்வசுரர் கொல் லவெழுந்தார்கள். விஷ்ணு அவர்களைச் சமாதானஞ்செய்து உங்களுக்கு வேண்டி ய வரங்களைக் கேளுகளென்ன, உன்னி டத்தில்யாம் பெறக்கிடக்கும் வரம் யாது மில்லை. உனக்கு வேண்டியதைக் கேள் யாம் தருவோம் என்றவசுரரைப்பார்த்து என் கையால் நீங்கள் மடியும் வரந் தரல் வேண்டுமென்று கூறி இருவரையுங் கொள் கிறார். அது காரணமாக விஷ்ணுவுக்குக் கைடபாரி மதுவைரி என்னும் பெயர்கள் பலித்தன.

கைலாசபர்வதம் - இமயத்தின் பின்பாகத் துள்ள வெள்ளிமயமானமலை. இது சிவ ன் விரும்பியுறையும் ஸ்தலம். கைலாசப திநாமம் சிவனுக்கு இது பற்றிவந்தது. நவரத்தினங்களாற் புனையப்பட்ட நானா விதசிகரங்களையுடைய இம்மலைநடுவேயு ள்ள செம்பொற் கோயிலிலே இருஷி கனங்களுந் தேவகணங்களும் சூழ்ந்து திக்கச் சிவன் வீற்றிருப்பார்.

கொங்கணம் - மேலைச் சமுத்திரதீரத்தி லே கேரளதேசத்துக்குத்தரத்திலேயுள்ள தேசம்.

கொங்கர் - கொங்கு மண்டிலத்தரசர்.

கொங்கு - குடநாடு.

கொடிஞாழன்மணிப்பூதனார் - இவர் கடை ச்சங்கப் புலவர்களுளொருவர்.

கொடியிடையம்மை - திருமுல்லைவாயிலி லே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

கொடுங்குன்றேசுரர் - திருக்கொடுங்குன்ற த்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கொடுங்கோ@ர் - சேரநாட்டுள்ளதோரூர். திருவஞ்சைக்களம்.

கொடுமுடிநாதர் - திருப்பாண்டிக் கொடு முடியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

கொல்லி - ஒருமலை.

கொல்லிமழவன் - சம்பந்தரால் முயலகன் என்னும் நோய்தீரப்பெற்ற கன்னிகையின து தந்தை.

கோற்கை - பாண்டியர்களின் பழைய இராசதானிகளுளொன்று. சிலப்பதிகார க தாநாயகன் காலத்திலே இந்நகரத்திருந்த அரசன். வெற்றிவேற் செழியனென்பவன். இஃது இப்பொழுது மிகச்சிறிய ஊராகவி ருக்கின்றது. இச் செழியனே வெற்றிவேற் கையென்னும் அற நூலியற்றினோன். இவன் நல்லொழுக்கஞ் சிறந்தவன்.

கோகர்ணம் - கேரள தேசத்திலிருக்கும் ஓர் பெரிய சிவNûத்திரம். ராவணன் தப சுசெய்து பிரமாவிடத்திலே வரம்வாங்கின விடம்.

கோகர்ணநாயகி - திருக் கோகர்ணத்தி லே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

கோகுலம் - யமுனாநதி தீரத்திலே விருந் தாவனத்துக்;குச் சமீபத்திலுள்ள இடைச் சேரி. கிருஷ்ணன் வளர்ந்தவிடம்.

கோகுலேசர் - திருக்கோடம்பக்கத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்.

கோசலம் - சரயுநதிப் பிராந்த்திலுள்ள தேசம். அயோத்தி இதற்கு ராஜதானி. இத்தேசம் இû{வாகு வமிசத்தரசர்க்குரி யது. இது ராமருக்குப் பின்னுள்ள காலத் திலே விந்திய பருவத்துக்குச் சமீபத்தில் இன்னுமொரு கோசலமுண்டாயினமையின் உத்தரகோசலமெனப்படுவதாயிற்று. பின் னைய கோசலத்துக்கு ராஜதானியாக ரா மர் மகன் குசன் குசஸ்தலியென ஒரு பட்டணத்தை நிருமித்தான். பிள்ளையது தûpணகோசலம்.

கோசர் - கொங்குண்மண்டலத்தரசர். இவர் தங்கள் நாட்டில் கண்ணகிக்கத் திருவிழாச் செய்தவர்.

கோசலை - கௌசல்லியை. ராமன் தாய்.

கோச்செங்கட்சோமன் - இவர் சுபதேவன் என்னும் சோழராஜன் கமலவதியிடத்துப் பெற்ற புத்திரனார். கமலவதி இவரைப் பிரசவிக்கும் சமயத்தில் அங்கே சென்று கூடியிருந்த சோதிடர்கள் இப்பிள்ளை ஒரு நாழிகைகழித்துப் பிறக்குமாயில் முப் புவனங்களையுமரசாளும் என்று சொல்லக் கேட்டு அப்பிள்ளையை அச்சமயம் பிறக் கவொட்டாமல் அடக்கியிருந்து ஒரு நாழி கைகழிந்தபின் பெற்றாள். உரியகாலத்தி ற்பிறவாது உதரத்திற் கிடந்தமையால் அப்பிள்ளையினது கண்கள் வெந்திருந்த ன. கமலவதி அப்பிள்ளையை நோக்கி “என் கோச்செங்கண்ணனோ” என்று சொல்லிக் கொண்டு உடனே இறந்து விட்டாள். அது காரணமாகவே கோச்செங் கட்சோழனெப் பெயர் கொண்டார். இவர் பூர்வஜன்மத்திலே ஜம்புகேஸ்வரத்திலிருக் கும் சிவலிங்கத்துக்கு மேற்கட்டியிட்ட சிலந்தியெனப் பெரியபுராணங் கூறும். இவர் சோழநாட்டிலே அநேக சிவாலயத் திருப்பணிகளும் சிதம்பரத்திலே தில்லை வாழந்தணர்களுக்குத் திருமாளிகைகளும் அமைப்பித்த சிவபக்தர். இவர் கோச்செங் கட்சோழநாயனார் எனப்படுவர். இவர் பார யுத்தம் முடியும்வரையும் பாண்டவர்களுக் குத் துணையாயிருந்த தென்னாட்டரசர்க ளுள்ளேயொருவனாகிய சோழனுக்குப்பின் னே சமீபகாலத்திலே முடிசூடியரசு புரிந்த வரென்பது கலிங்கத்துப்பரணியால் திரு ஞானசம்பந்தமூர்த்திநாயனாரது தேவாரத் திலே இவர் எடுத்துக் கூறப்படுதலாலும் இவர் காலம் நலாயிரத்தைஞ்நூறு வருஷ ங்களுக்கு முன்னுள்ளதாதல் வேண்டும். களவழி நாற்பதிலே பொய்கையாராற் பாடப்பட்டவருமிவரே.

கோடிசூரேசுவரர் - திருக்கோடிகாவிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கோடேந்துமுலையம்மை - திரு இலம்பய ங்கோட்டூரிலே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர்.

கோட்புலிநாயனார் - சோழநாட்டிலே நாட் டியத்தான் குடியிலே வேளாளர்குலத்திலே திருவவதாரஞ் செய்து சேனாதிபதியாகி, அரசன் கொடுக்கும் வேதனத்தைக் கொ ண்டு சிவாலய பூஷைக்கு நெல்லுவாங்கிக் கட்டிவைத்துவிட்டு அரசனேவலினாற் போர்முனையிற் சென்றிருந்த போது அந்த நெல்லை ஆணை கடந்து எடுத்துண்ட சுற்றத்தரையெல்லாம் மீண்டுவந்து தமது வாளினாலே துணித்துத் திடபக்தியை நாட்டிச் சிவானுக்கிரகம் பெற்றசிவபக்தர்.

கோணீசுவரர் - திருக்கோணமாமலையிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கோணேசுவரர் - திருக்குடவாயிலிற் கோ யில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

கோதமனார் - இவர் கடைச்சங்கப் புலவர் களுளொருவர்.

கோதமன் - சதானந்தன் தந்தையாகிய ஒரு முனிவர். அக்கிரசவமிசத்தவர்.

கோத்திரங்கள் - இவைகள் அநேகம். அவற்றுட் சில சீஷ பரம்பரையும் சிவ புத்திரபரம்பரையும் தெரிவிக்கும், இவைக ளைஇவ்வளவென்று கணிக்கமுடியாது. ஆயினுமவற்றுள் முக்கியமாகியவை ஜம் பது. அவையாவன காசிப, பாரத்துவாஜ, அரித, கவுண்டினிய, கவுசிக, வசிஷ்ட, கவுதம, கார்கேய, ஸ்ரீவத்ச, ஆத்திரேய, முத்கல, சடமருஷணாதிகள். அவற்றுள் ஒவ்வொன்றில் உட்பிரிவு அநேகம். இன னுமவைகள் ஏகாரிஷேயம்., துவாயரிஷே யம். திராயரிஷேயம், பஞ்சாரிஷேயமாகவு மிருக்கும்.
கோபதி - அங்கிரசன் வமிச்தனாகிய ஓரக்கினி.

கோபராஷ்டிரம் - கொங்கணத்துக்குத் தெற்கிலுள்ள தேசம்.

கோபர் கிருஷ்ணன் வளர்ந்த சேரியி கோபாலர் லுள்ள இடையர்கள்.

கோபானன் - யயாதி புத்திரனாகிய துருவசன் பௌத்திரன்.

கோபிகள் கிருஷ்ணன் வளர் கோபிகைகள் ந்த சேரியிலுள்ள கோபிகாஸ்திரிகள் இடைப் பெண்கள். இவர்கள் பதினாறாயிரவர் வீடுகள் தோறு ஞ்சென்று வைகி அவர்களைக் கலந்து விளையாட்டயர்ந்துபோவன். ஒரு நாள் இவர்கள் யமுனைநதியிலே நீராடி நிற்பக் கண்டு, அவர்களுலருமாறு வைத்து வஸ்திரங்களையெல்லாங் கிருஷ்ணன் கவர்ந்துபோய் ஒரு மரத்திலேறிக் கொண் டான். அது கண்ட அப்பெண்கள் நீரினுள் ளே கண்டத்தளவும் தமதுடலை மறைத் து நின்று, கைகளைச்சிரமேற்குவித்து, வஸ்த்திரங்களைத் தருமாறு அவனையிர ந்தார்கள். கிருஷ்ணன் யாவீரும் கரையே றிவந்து இரு கரங்களையும் சிரமேற் கூப்பிநின்று வேண்டினால் தருவேன் எனக்கூறி, அவ்வாறு செய்தபின் அவ்வஸ் திரங்களை மீளக்கொடுத்தான். இக்கதை அர்த்தவாதம். கிருஷ்ணன் வாக்கு வரு மாறு: “என்னை யார் எவ்வழியில் வழிப டுவார் அவர் அவ்வழியில் இரûpக்கப்படு வார். சிலர் என்னை மைந்தனாகக் கொ ண்டு வழிபட்டனர். சிலர் நண்பனாகக் கொண்டனர். சிலர் பகைவனாகக்கொண்டு தியானித்தனர். சிலர் என்னைத் தமக்கா சைநாயகனாகக் கொண்டு வழிபட்டார்கள். முடிவில் எல்லாரும் மோiûகைவல்லிய மேபெற்றார்கள்”

கோப்பெருஞ்சோழன் - உறையூரிலிருந்தர சியற்றிய சோழருள் ஒருவன். மிக்க புல மையுடையவன். பிசிராந்தையார்க்கு உயி ர்த்தோழன். தன்னோடு முரணிய புத்திரர் மீது போர்க்கெழுந்தபோது புல்லாற்றூர் உயிற்றியனாராற் பாடிக்கோபந் தணிக்கப் பட்டவன். சிலகாலஞ் சென்றபின்னர்த் துறவுபூண்டு உத்தரநாட்டிலிருந்து பிசிராந் தையாரோடு சுவர்க்கம் புகுந்தவன். (புறநானூறு.)

கோப்பெருந்தேவி - நெடுஞ் செழியன் மனைவி. தன் கணவன் கண்ணகிக்கு வழக்கில்தோற்று இறந்தமைதெரிந்து உட னே உணிர்விட்டவள். இவளை அறக்கற் புடையாளென்பர். (சிலப்பதிகாரம்)

கோமதி - ஒரு நதி. இது இமயத்திலுற் பத்தியாகிக் கோசலதேசவழியாய் ஒழுகி க் கங்கையிற் கலப்பது.

கோமுகன் - சகால்லியன் சீஷன்.

கோம்பிவிளங்கோதைநாதர் - திருவைகல் மாடத்திற் கோயில் கொண்டிருக்குஞ் சுவாமியர் பெயர்.

கோலாகலன் - இமவந்தன் புத்திரன். மை நாகன் தம்பி. இவர்கள் முறையே கோலாகலம், இமயம், மைநாகம் என்னும் மலைக்கரசர்கள். சுத்திமதிநதி இக் கோ லமலையிலுற்பத்தியாவது.

கோள்வளைநாயகி - திருக்கருப்பறியலூரி லே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

கோவர்த்தனம் - மதுராபுரத்துக்குச் சமீபத் திலுள்ள மலை. இந்திரயாகஞ் செய்து கொண்டிருந்த கோபாலர்கள் மேல் இந்தி ரனால் வருஷிக்கப்பட்டகன் மழையைத் தடுக்கக் கிருஷ்ணன் குடையாகப்பிடித்த மலை.

கோவலன் - சிலப்பதிகார கதாநாயகனா ன ஒரு வைசியன். இப் பெயர் கோபால னென்பதன் மரூஉ. குபேரனையொத்த செல்வனாகிய இவன் ஒருகணிகையின் பொருட்டுத் தன் பொருளெலாமிழந்து தன து கற்புடைத்தேவி கண்ணகியோடு காவி ரிப்பூம்பட்டினத்தைவிட்டுப் பொருளீட்டு நோக்கமாக மதுரையையடைந்தங்கே கண்ணகியின் காற்சிலம்பொன்றை விற்க வேண்டி ஒரு பொற்கொல்லன் வீட்டை, அடைந்தபோது, அக்கொல்லன் செய்த வஞ்சனையால் அரண்மனைச் சிலம்புதிரு டிய கள்வவனெனப் பாண்டிளாற் கொல்ல ப்பட்டவன். இவன் காலம் ஆயிரத்தெண் ணூறு வருஷங்களுக்கு முன்னுள்ளது.

கோவிந்தன் - (1) கிருஷ்ணன் பசுவைக் காப்போன் என்பது பதப்பொருள். (2) பிரு கஸ்பதி.
கோவிந்தயோகி - சங்கராசாரிய சுவாமி களுக்குக்ககுரு. இவர் நருமதாநதிதீரத்தி லே எழுந்தருளியிருந்தவர்.

கோவூர்க்கிழார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர்.

கோழி - உறையூர். முற்காலத்தில் இதிலிருந்த ஒரு கோழி யானையைப் போரில் வென்றமையால் இதற்கு இப்பெ யர்வந்தது.

கோளகன் - சாகல்லியன் சீஷன்.

கோளிலியப்பர் - திருக்கோனிலியிலே கோயில் கொண்டிருக்குந் சுவாமி பெயர்.

கோஷமணி - நகுலன் சங்கு.

கௌசலை (1) தசரதன் பாரி. ராம கௌசல்லியை ன் தாய். யயாதிபுத்திர னாகிய பூரு பாரி. (3) வசுதேவன் பாரியா கிய பத்திரை.

கௌசாம்பி - குசாம்பன் நிருமித்த நகரம்

கௌசிகம் - உபபுராணங்களுள் ஒன்று.

கௌசிகன் - (1) தர்மவியாதனாலே தர்ம லிநேஷங்களைத் தெரிந்துகொண்ட ஒரு பிராமணன். (2) பிரதிஷ்டானபுரத்திலிருந்த ஒரு விப்பிரன். இவன் குஷ்டரோகத்தால் தேகமெங்கும் சீநீர் பெருகப்பெற்றவனாயி ருந்தும் அவன் பாரி அருவருப்பற்றவளாய் அவனைப் பரிபாலித்துவந்தாள். ஒருநாள் அக்குஷ்டரோகி ஒரு வேசியைக்கண்டு மோகித்து அவளைச் சேரவிரும்பித் தனது அவிப்பிராயத்தைத் தனது பாரிக்கு ச் சொல்ல, அவள் அதற்கு வேண்டிய திரவியங்களை எடுத்துக்கொண்டு அவ னையுங் கட்டி முதிகின்மேற் சுமந்து கொண்டு அவ்விரவிலே தானே அவ் வேசிவீடு தேடிச்சென்றாள். செல்லும் போது கோடிய அந்தகாரமூடிற்று. அதனையும் பொருட்படுத்தாது செல்லும் போது வழியருகேயிருந்து தவஞ்செய்து கொண்டிருந்த மாண்டவ்விய இருஷி தலையிலே குஷ்டரோகிகால்தட்டியது. அதனால் மாண்டவ்வியர் சின்ந்து தமது தலையிலே காலாலே தாக்கியவன் விடியற்காலத்திலே இறக்கக்கடவனென்று சபித்தார். அது கேட்ட கௌசிகன் பாரி நடுக்கமுற்று எனது பதிவிரதமுண்மையா னால் பொழுது விடியாதெழிகவென்று பிர தி சாபமிட்டுப் போயினாள். அதனால் பொழுது விடியாதாயிற்று. இது கண்ட தேவர்கள் விஷ்ணுவைவினவ, விஷ்ணு அவர்களை அத்திரிபத்தினியாகிய அநசூ யையிடத்தேவ, அவர்கள் பத்தினையைச் சாபவிமோசனஞ்செய்கவென்றாள். அவள் என் நாயகன் இறந்திடுவானேயென்ன, அநசூயை அஞ்சாதே கௌசிகன் எவ்வன புருஷனாவானென்ன, அவள் விமோசனஞ் செய்ய பொழுதும் விடிந்தது. கௌசிகனு மிறந்து எவ்வனபுருஷனாயெழுந்தான். (3) ஒரு முனி. இவர் தமது தேகத்தை ஓரிடத்தில்வைத்துவிட்டு மற்றொரு தேகத் திற் புகுந்து சஞ்சரிப்பாராயினார். விட்ட தேகம் ஜீரணமாகி அஸ்தி மாத்திரங்கிடந் தபோது அம்மார்க்கமாக ஆகாயத்திலே சென்ற கந்தருவன் அதற்கு நேரே வந்த போது கீழே விழுந்தான். அது கண்டபால கல்லியமுனி அவனை நோக்கி, நீ இவ்வ ஸ்தியைக் கொண்டுபோய்ச் சரசுவதி நதியிலிட்டு ஆடிப்போவையேல் அந்தரஞ் செல்லாமென்ன, அவ்வாறு அவனுஞ்செய் து அந்தரஞ் சென்றான். (4) (ய) வற்சபா லகன் என்னும் வற்சவந்தன். வளர்த்த புத்திரன். வசுதேவன் மகன். (5) விசுவாமி த்திரன். அதி ரகசியதத்துவங்களையெல் லாம் ஆராய்ந்த பேரறிவுடையோன் என்ப து பதப்பொருள். (6) ஜராசந்தன் தோழ னாகிய அம்சன்.

கௌசிகி - (1) ஒரு நதி. (2) காதி புத்தி ரி. இருசிகன் பாரி. ஜமதக்கினி தாய். விசுவாமித்திரன் கோதரி. சத்தியவதியென வும்படுவாள்.

கௌசிகதேவி - கௌரிசும் பநிசும்பரைக் கொல்லுமாறு கொண்ட வடிவம. இத்தே வி சண்டமுண்டரைக் கொன்று சாமுண்டி யெனப் பெயர்புனைந்தாள்.

கௌடபாதாசாரியர் - ஸ்ரீ சுகர்சீஷர். யதி கோவிந்தபகவற்பாதருக்குக் குரு. இவர் உத்தரகீதைக்குப் பாஷியஞ்செய்தவர்.

கௌடபுரி - லû{மணபதி. வங்கதேசத்து முக்கியபட்டணம். ஜன்னுமகாவிருஷியடை ய ஆச்சிரமமிருந்தவிடம். இங்குள்ள பிரா மணர் கௌடரெனப்படுவர்.

கௌடம் - வங்கதேசம். இது பஞ்ச கௌட த்தொன்று.

கௌடர் - கௌடபுரிப் பிராமணர். இவர்க ள் கல்வி கேள்விகளாலும், ஒழுங்கத்தா லுஞ் சிறந்தவர்கள். மிக்க நாகரிகம் வாய்ந்தவர்கள்.

கௌடில்யன் - சாணக்கியன்.

கௌதமகோ கௌதம இருஷி. ராஜ கௌதமன்பசு மகேந்திரத்துக்குச் சமீபத் திற்கோதாவிரிதீரத்துக்குச் தெற்கேயுள்ள கோவூரிலிருந்து தவஞ் செய்யும் போது பன்னீராட்டைப் பஞ்சம்வந்தடுக்க அதற் கஞ்சி அநேக இருஷிகள் கௌதமரைய டைந்தார்கள். அது கண்ட கௌதமர் ஒரு பிடி நெல்லையெடுத்துத் தமதருகிலிலுள் ள மணல்மேட்டில் விதைத்து விட்டு அநுஷ்டானஞ்செய்தார். அநுட்டானஞ்செய் து எழுந்தபோது நெல்லெல்லாம் முளைத் துவளர்ந்து கதிhPன்று விளைந்திருப்பதைக் கண்டு அவற்றையெல்லாம் அறுத்தடிசிலா க்கி உண்ணுமாறு இருஷிளை ஏவினார். அவ்வாறே தினந்தோறுஞ் செய்துவர பன் னீராண்டு கழிந்து நாடு மலிந்தது. மலித லும் இருஷிகளைநோக்கி இனிதும் வாசஸ்தானம் போமின் என, அவர்கள் கௌதமரைநோக்கி நீர் எம்மோடு வருதல் வேண்டுமென்று பிரார்த்திக்க, அவர் மறுத் தார். அதனால் இருஷிகள் பொறாமையுற் று ஒரு மாயப்பசுவையுண்டாக்கி அவர் விதைக்கும் பயிரை மேய்ந்தழிக்குமாறு செய்தனர். அது கண்ட கௌதமர் தருப் பைப் புல்லால் அப்பசுவையோச்ச, பசு வீழ்ந்திறந்தது. இருஷிகள் கௌதமரை நோக்கிக் கோஹத்திசெய்தீர். அதற்காகச் சாந்திராயனவிரதமநுட்டிக்கடவீரென்று சபி த்துப்போயினார். நன்றி மறந்து இருஷி கள் செய்த செய்கையை உலகத்தார் உபமானமாகப் பேசும்போது இது கௌத மன் பசு நியாயமென்றுவழங்குவர்.

கௌதமன் - (1) பாரத்துவாஜமுனி. (2) கோதமர். (3) சதாநந்தன். (4) கிருபன். (5) கிருபன்பட்டன். (6) புத்தன். (7) கணாதன். கோதமர் எனப்படும் கௌதமர் மனைவி. அகலியை. அகலியையை வஞ் சித்துக்கூடிய இந்திரனை ஆயிரங்கண்ணா கச் சபித்தவர் இக் கௌதமரே. இவன் சதாநந்தன். இவர் இராமன் காலத்தில் விளங்கினவர். (8) பதிற்றுப் பத்துள் மூன் றாம்பத்துப்பாடிய புலவர். தருமபுத்திரன் இவராற்பாடப்பட்டோன். (புறநானூறு.)

கௌதமாச்சிரமம் - இது விசாலபுரதத்தி லிருந்து மிதிலாபுரத்துக்குப் போகிறமார்க் கத்திலுள்ளது. ஜயந்தபுரம் இதற்குச் சமீபத்திலுள்ளது.

கௌதமி - கோதாவிரி.

கௌஸ்துபம் - அமிர்தமதனகாலத்திலே திருப்பாற்கடலிலே வெழுந்த திவ்விய வஸ்துகளுளொன்றாகிய வோராற்புதமணி. அதனை விஷ்ணு தமக்கு ஆபரணமாகக் கொண்டருளினார்.

கௌரமுகன் - சமீகன் மகன்.

கௌரி - (1) பொன்மயமான திருமேனி யோடு கூடிய பார்வதிதேவியார் கௌரி எனப்படுவர். ஒரு காலத்தில் இத்திருமே னியோடு ஒரு வைஷ்ணவன் வீட்டிலே திருவவதாரஞ்செய்து எட்டாண்டு நிரம்பியி ருந்த கௌரியைச் சிவன் தமக்கு சக்தி யாக்கிக்கொண்டனர். (2) வருணன் பாரி.

கௌரிகாந்தசார்வபௌம பட்டாசாரியர் - ஆனந்தலகரிக்கு வியாக்கியானஞ்செய்த முப்பதின்மருளொருவர். இவர் பிற்காலத்த வர்.

கௌரிகங்கை - கைலாசபர்வதத்திலுள்ள
ஒரு நதி.

கௌளர் - (1) கௌடர். (2) சக்தியை வாமதந்திரப்படி பூசித்து வழிபடுஞ்சமயத் தோர்.

ûணவித்துவம்சி - உலகம் கணந்தோறு மழிந்து சிருஷ்டியெய்துமியல்பினதென்று வாதிக்குமொரு சார்நாஸ்திகன்.

ûத்திரதருமன் - புரூரவன் மகனாகிய ûத்திரவிருத்தன் வமிசத்திலே பிறந்த வன்.

ûரத்திரவிருத்தன் - புரூரவன் இரண்டாம் புத்திரன். நகுஷன் தம்பி.
ûத்திரியர் - இரண்டாம் வருணத்தோர். இவர்கள் பிரமாவினது புயத்திற் பிறந்தோ ரெனப்படுவர். இவர்களுக்கு அரசுபுரிதலும் போர்செய்தலும் படைபயிற்றலும் சிறப்புத் தொழில்களாம். வேதம்ஓதல், வேட்டல், ஈதல் மூன்றும் பொதுத்தொழில்கள். இவர் கள் ஏற்றல்செய்வராயிற் பிரஷ்டராவார் கள். இவர்கள் தம் வருணத்திலும் பொ ண்கோடற்குரியவர். பூர்வகாலத்திற் சிறந் து விறங்கிய மகாரிஷிகள் உலகியலை நெறிப்படுத்தும் பொருட்டு மக்கட்பரப்பை நான்குபாற்படுத்தி, அறிவைவளர்ப்போரைப் பிரவருணமென்றும் புஜபலத்துக்குரியோ ரைச் ûத்திரியவருணமென்றும், காருகத் துக்குரியோரைச் சூத்திர வருணமென்று முறைப்படுத்திக் கருமவிபாகஞ்செய்து வைத்துப்போயினர். இக்கருமவிபாகத்தை ஊன்றிநோக்குமிடத்தில் எத்தேசத்திலும் இந்நான்கு வருணங்களுமியல்பாகவேயுள் ளனவும் இன்றியமையாதனவுமாகவே இரு க்கின்றன. ஹ{ணதேசத்திலும் (நுரசழனந) சமயப்பிரசாரகரே முற்படியிலுள்ளவர்கள்: அரசரே அடுத்தபடியிலுள்ளவர்கள: காருக ரே நான்காம்படியிலுள்ளவர்கள். வர்மன் என்பது ûத்திரியருக்குச் சாதிப்பெயர்.

ûத்திரோபேûன் - (ய) அக்குரூரன் தம்பி.

ûபணன் - பௌத்தமுனிவன். (2) ஜைன வமுனிவன்: ஆருகதன்.

ûமை - (1) தûப்பிரசாபதி புத்திரி. புலகன் பாரி. (2) துர்க்கை. (3) பூமிதேவி.

ûpதீரம் - ஸ்ரீசைலம். கிருஷ்ணாநதி உற் ப்பத்தி ஸ்தானத்துக்குச் சமீபத்திலுள்ளது இதனைச் சூழ்ந்தவனம் மகாரண்ணியம்.

û{பன் - முதற்கனிந்திரன் மகன்.

Nûத்திரபாலன் - (1) வைரவக் கடவுள். (2) சிவன்.

Nûமகன் - அபிமன்னியன் வமிசத்தரசர் களுட் கடையரசன். இவனோடு பரதவமிச மொழிந்தது.

Nûமதன்னுவா - புண்டாPகன் மகன்.

Nûமன் - (கா) சுநீதன் மகன். சுகேதன் தந்தை.

Nûமாவி - சிருஞ்சயன் மகன்.

Nûமியன் - (பு) உக்கிராயுதன் மகன்.

சகடாசுரன் - (ரா) கம்சன் தூதருளொரு வன். இவன் கிருஷ்ணன் சிசுவாயிருக்கும் போது ஒரு சகடரூபமெடுத்துப்போய்த் தன்மீதூரவருங் கிருஷ்ணனைக் கொல்ல வெண்ணிக் கிடந்தபோது அஃதுணர்ந்து கிருஷ்ணன் அதன்மீதேறித் தகர்த்தவழி உயிர் துறந்தவன்.

சகந்தரை - ஒரு தேசம்.

சகம் - சாகர் வசிக்குந்தேசம். இது சிந் துதேசத்திற்கு மேற்றிசைக்கண்ணது.

சகரன் - சக்கரவர்த்திகள் அறுவரிலொரு வன். வாகுகன் புத்திரன். இவனுக்குப் பாரியரிருவர். மூத்தாள் கேசினி. இளையா ள் சுமதி. இவன் அசுவமேத யாகஞ் செய்தபோது அசுவத்தைப் பாதலத்தில் இந்திரன் கொண்டுபோய் மறைத்தான். சகரன் புத்திரர் அறுபதினாயிரவரும் பூமி யைத் தேடியபோது கபிலரால் நீறாக்கப் பட்டார்கள். இவர்களாலகழப்பட்டமையின் கடல் காகரமெனப்படும். சகரன் கருப்பத் திலிருக்கும்போது தாய் நஞ்சூட்டப்பட்ட காரணத்தால் சகரனென்னும்பெயர் அவனு க்காயிற்று. (கரம் - கஞ்சு)

சகஸ்வான் - அமரிஷன் புதல்வன்.

சகிதேவிநாயகி - திருச்சேஞலூரிலே கோ யில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

சகுந்தலை - விசுவாமித்திரருக்கு மேன கையிடத்துப் பிறந்த புத்திரி. துஷ்யந்தன் பாரி. பரதன் தாய். இவளைப் பெற்றவுட னே மேனகை அக்காட்டில் விட்டுப்போக அச்சிசுவைச் சகுந்தபட்சிகள் சிறகால ணைத்துக் காத்தன. அப்போது கண்ணுவ முனி அவ்வழியிற் சென்று கண்டெடுத்துப் போய் வளர்த்தனர். சகுந்த பûpகள் காத்தமையின் சகுந்தலைப்பெயர் பெற்றா ள்.

சகுனி - (1) (தி) இரணியாûன் புத்திரன் (2) (ய) தசரதன் புத்திரன். (3) காந்தார தேசத்தரசனாகிய சுபலன் புத்திரன். காந் தாரி சகோதரன். துரியோதனன் மாமன். துரியோதனனுக்காக பாண்டவரோடு சூதா டிவென்றவன். இவனே துரியோதனன் குடிக்கு நாசகாரணன்.

சகோத்திரன் - பகீரதன் புதல்வன்.

சக்கரசமேரதைத்தியன் - திரணாவர்த்தன்.

சக்கரதேவன் - கலிங்கதேச ராஜாவாகிய சுருதாயுவினது இரண்டாம் புத்திரன்.

சக்கரவாளம் - லோகாலோக பர்வதம். இது சக்கராகாரமாகப் பூமியைச் சூழ்ந்தி ருத்தலின் இப் பெயர் பெறுவதாயிற்று.

சக்கிரி - இந்திரன்.

சû{ - யயாதிபௌத்திரன். அநு புத்தி ரன்.

சû{நதி - கங்கையிற்கலக்குமொரு நதி.

சû{ர்மநு - சர்வதேசசுவினது புத்திரன். சுவாயமபுவமநுவமிசம். தாய் அஹதி. பாரி நடுவலை. புருவன், குறசன், திருதன் துய்ம்மன், சத்தியவந்தன், இருதன், விர தன், அக்கிநிஷ்டோமன், அதிராத்திரன், சுதுய்ம்மன், சிபி, உன்முகன் எனப் பன் னிருவர் புத்திரர்.

சக்தி - (1) (ரி) வசிஷ்டர் மூத்தமகன். பராசரன் தந்தை. (2) லோகமாதாவாகிய சங்கரி. (3) தெய்வத்தினது வல்லமை, அருள், ஞான முதலிய குணங்கள் சக்தி யெனப்படும்.

சத்துபிரஸ்தன் - குருதேத்திரத்திருந்த ஒரு பிராமணன். இவன் தான் செய்த அதிதிபூஜாபலத்தால் குடும்பத்தோடு பிரம லோகமடைந்தவன்.

சங்கசூடன் - இவன் பிருந்தாவனத்திருந்த கோபஸ்திரிகளை உத்தர திசைக்குக் கொண்டு போனபோது கிருஷ்ணனால் கொல்லப்பட்ட குபேரன் தூதன்.

சங்கடன் - தருமனுக்கு புதேவியிடத்துப் பிறந்த புத்திரன்.

சங்கணன் - வச்சிரநாபன் மகன்.

சங்கபாலன் - லோகபாலருளொருவன்.

சங்கமங்கை - சாக்கிய நாயனார் முத்தி யடைந்தலம். இது தொண்டை நாட்டிலுள் ளது.

சங்கமன் - ஒரு வீரணிகன். நீலிகணவன்.

சங்கம் - தமிழ்ச்சங்கம் காண்க.

சங்கரகவி - போஜன் சமஸ்தானத்துக் கவிகளுளொருவர். இவர் ஒரு சமயத்தி லே சொன்ன அற்புதசுலோகத்துக்காகப் போஜனிடத்திலே பதினோரிலûம் பொன் பரிசு பெற்றவர்.

சங்கர நமச்சிவாயப் புலவர் - நன்னூலுக் கு விருத்தியுரைசெய்தவர். இவர் திருநெ ல்வேலியிலே நூற்றுதொண்ணூறு வருஷ ங்களுக்கு முன் இருந்தவர். இவர் குரு சுவாமிநாததேசிகர்.

சங்கரன் - சிவன். (சுகத்தைச் செய்பவன் என்பது பதார்த்தம்.)

சங்கராசாரியர் - இப்பெயரால் விளங்கிய ஆசாரியர் மூவர். பிரசித்திபெற்றவர் ஆதி சங்கராசாரியார். மற்றைய இருவரும் அப் பெயரைத் தமக்கிட்டுக்கொண்டுடமையாற் பிரசித்தி பெற்றாரானவர். ஆதிசங்கராசாரி யர் சிதம்பரத்திலே விசுவசித்து என்னும் பிராமணோத்தமருக்கு அம்பிகையென்னும் அவர் மனைவிவயிற்லே புத்திரராக அவத ரித்தவர். அவதரித்தகாலம் யுதிஷ்டிhசகம் இரண்டாயிரத்து நூற்றம்பத் தெட்டாம் (உகருஅ) வருஷமாகிய இரத்தாûpயிலே மாசிமாதத்துக் கிருஷ்ணபûத்துச் சதுர்த் தசிதிதியோடு கூடிய சோமவார அர்த்தரா த்திரி. அவர் பாலசந்நியாசம் பூண்டு உத் தரஞ் சென்று அங்கே ஒரு குருவையடை ந்து வேதசாஸ்திரங்களைக் கற்று வல்ல ராகிப் பிரமசூத்திரத்திற்கும் உபநிஷதங்க ளுக்கும் பாஷியஞ் செய்து அத்துவைத மதத்தை எடுத்துத் திக்குகடோறுஞ் சென்று பிரசங்கித்து வியவஸ்தாபனம் பண்ணி ஜகத்குருவாயினர். துவாரகை, சிருங்கிரி, காஞ்சீபுரம், கும்பகோணம் முத லியவிடங்களிற் சிற்சிலநாள் வாசஞ் செய்து அத்துவைதமத ஸ்தாபனம் பண் ணினமையால் பிற்காலத்திலே ஆங்காங்கு ம் அவர்க்கு மடாலயங்களமைத்துச் சமர் ப்பிக்கப்பட்டன. அவர் முப்பதிரண்டு வய சிலே பரிபூரணதசையடைந்தனர். அவர் செய்த நூல்களிலே பௌத்தமத கண்ட னம் யாண்டுங்காணப்பட்டமையினாலே அ வர் பௌத்தமதத்தை வேரறுத்தார் என்னு ங் கொள்கை ஆதாரமுடையதன்று. புத்த ர் அவர்க்குப் பின்னுள்ளவர். அத்துவைத மதத்தைத் தடைவிடைகளாலே பிரவசன ஞ்செய்து வியஸ்தாபனம் பண்ணிப்போயி னரேயன்றி, அவர் நடுநிலைபிறழ்ந்து அக ங்கரித்து நிமிர்ந்து ஒரு மதத்தையுஞ் தூஷித்தாரல்லர். அவர் வாக்குவல்லப மும், சாதுரியமும், எடுத்த விஷயங்களை வரம்புகடவாது கடைபோக விசாரித்து நிச்சயிக்கும் நுண்ணிய விவேனமும், அழுக்காறும் பûபாதமும்பற்றி நடுநிலை பிறழாது சத்தியத்தையே அவாவும் பெருந்தகைமையுமுடையரென்பது அவரு டைய நூல்களால் நன்கு புலப்படும். அவர் இப்பரதகண்டத்திலே அந்நாளிலே அவதாரம்பண்ணிப் பாஷியங்கன் செய்யா திருப்பரேல் வேதோபநிஷதங்கள் நெடுங் காலத்துக்கு முன்னே மேகபடலத்தால் மூடப்பட்ட சந்திரனைப்போலொளியிழந்து விடும். அவர் சமாதிகொண்டவிடம் காஞ்சீ புரம். அவர் பௌத்தமதம் தமக்குப் பிற்காலத்திலேவந்து ஆரியதேசத்திலே வேரூன்றப்பாக்குமெனத் தமது தீர்க்கதிரு ஷ்டியினால் முன்னருணர்ந்து வேதாந்தசூ த்தித்துக்குப் பாஷியமுதலியன செய்து வைத்துப் போயினாரெனக் கொள்ளினுங் கொள்ளலாமேயன்றி, அவர் புத்தசமயத் தை வேரறுக்கும் பொருட்டு அவதாரஞ் செய்தாரெனக் கொள்வது அவர்பெருமை க்கீனந்தருவதாகும்.

இனி அவர் இரண்டாயிரத்தெண் ணூற்று நாற்பத்திரண்டு வருஷங்களுக்கு முன்னிருந்தவரென்பது சைனசமயநூல்க ளுளொன்றாகிய “ஜினவிஜயம்” என்னும் நூலினாலே நன்கு விளங்கும். சங்கராசாரி யருக்குப் பிரதமசீஷராகிய ஆனந்தகிரியெ ன்பவர் தாம் செய்த சங்கரவிசயம் என்னு ம் நூலிலே சங்கராசாரியர் பிறந்தவூர் சிதம்பரமென்றும், தந்தையார் அம்பிகை என்றும் கூறிப்போயினாரேயன்றி, இன்ன காலத்திலே என்று கூறினாரில்லை. அவ் விஷயத்தைக் காலத்தோடு கூறிப்பூர்த்தி செய்வது சினவிசய “இருஷி, பாணம், பூமி, அûp என்னும் எண்களை வலப்புற ந்தொட்டு இடப்புறமாக முறையே எழுதவ ரும் தொகை வருஷங்கள் கழிந்த பின்னர்” என்பது சினவிசயத்திலே கூறப்ப ட்ட சுலோகக்கூற்றின் மொழிபெயர்ப்பு. இருஷி என்பது ஏழு. பாணம் ஐந்து, பூமி ஒன்று, அûp இரண்டு இவற்றை முறை யே இடந்தொடங்கிவலமுகமாக விட்டெழு திப்படிக்க வருவது உகருஎ. யுதிஷ்டிரசக த்திலே சங்காராசாரியர் பிறக்கும்போது சென்ற வருஷத்தொகை இதுவே. விக்கிர மசகாரம்பத்துக்கு முன்னே ஆரிய தேசத் திலே வழங்கிவந்தது. யுதிஷ்டிரசகமென் பது யாவருமறிந்த விஷவம். விக்கிரமசக ம் ஆரம்பிக்கும்போது யுதிஷ்டிரசகத்தில் ங0சுசு, வருஷங்கழிந்தன. விக்கிரமசகத் தில் இக்கலி ஐயாயிரம் வரைக்கும் சென்ற வருஷம் ககூருசு. ஆகவே சங்க ராச்சாரியார் பிறந்து உஅசஉ வருஷங் கள் சென்றன. புறச்சமயவாதிகளாகிய சைனருடைய நூலே இதற்குப்பிரமாண மாய் ஆனந்தகிரியினது கூற்றை வலியுறு த்துமென்றால் அவர்காலத்தைக் குறித்து ஐயங்கொள்ளற்கிடங்காண்கிலம். சமஸ்கி ருத திராவிடநூல்களை ஆராய்ந்துணர வேண்டுமென்னும் அவாவோடு அவற்றைக் கற்கப்புகும் ஐரோப்பிய பண்டிதர்களுட் சிலர் புகுந்தும் புகாமுன்னே அந்நூல்களு க்கும் பாஷைகளுக்கும் வயசு நிச்சயிக்க த் தொடங்கி விபாPதசித்தாந்தஞ் செய்வர். அவர் போசப்பிரபந்தத்திலே சங்கரகவியெ ன்பவர் பெயரைக்கண்டவுடனே சங்கராசாh ரியரையுஞ் சங்கரகவியையுமொருவராகக் கொண்டு காலங்கற்பித்து வழக்குரைப்பர். அவர்ககுப் மேற்படாதிருத்தலே உவப்பின் பாலதாம். அதற்கு மேற்படுமாயின் அஃதவர் வெறுப்புக்கேதுவாய்விடும்.

அதுநிற்க@ சிருங்கிரி மடத்திலே சங்கராசாரியாருக்குப் பின், ஒருவர் பின் னொருவராகச் சாரதாபீடத்திலே ஆசாரியா கவீற்றிருந்து வைதிகராச்சியஞ் செய்து போயினவர்தொகை பிரமசுவரூபாசாரியர் முதல் கேசவாச்சிரமாPறாக எழுபத்திரண்டு. எழுபத்துமூன்றாம் பட்டங்கொண்டு இப் போதுள்ளவர் ஸ்ரீராஜராஜேசுவர சங்காராச் சிரம சுவாமிகள். ஒரு பட்டத்துக்கு கணக்கிட்டாலும் அவர்காலமீராயிரத்தைஞ் நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாகின் றது. கும்பகோணத்துள்ள மடத்துப்பட்டத் தொகையும் இதற்காதாரமாக நிற்கின்றது. ஆரிய கிரந்த கர்த்தாக்கள் சரித்திரமென் னும் நூல்செய்த ஸ்ரீ ஜனார்த்தன ராமச்ச ந்திரர் அவர்ளும், சங்கராசாரியர் இரண் டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளவரென்றே தமது நூலிற் கூறு வர்.

அதுவும்நிற்க, சங்கராசாரியருக்குக் குரு பதஞ்சலியென்பது வித்தியாரண்ணி யர் செய்த சங்கரவிஜயமென்னும் நூலி னால் நிச்சயிக்கப்படும். பதஞ்சலியென் பது கோவிந்தயோகிக்குப் பூர்வாச்சிரமநா மம். யோகசூத்திரம் மகாபாஷியம் முதலி யன செய்தவருமிவரே. (பதஞ்சலி மகா முனிவரல்லர்.) பதஞ்சலி இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளவ ரென்பது ஐரோப்பியபண்டிதர்க்கு மொத்த கருத்தாம். பதஞ்சலிக்குச் சீஷராகவே சங்கராசாரியர் காலமும் இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதே யாம்.
நூல்களிலே யவன சப்தம் கேட்க ப்படுமாயின் அதுகொண்டு அந்நூல்களெ ல்லாம் “மகா அலெக்சாந்தர்” படையெடு
ப்புக்குப் பின்னுள்ளனவெனக் கூறுவது சமஸ்கிருத வித்தியா விநோதர்களாகிய ஐரோப்பியபண்டிதர் வழக்கு. அப்படையெ டுப்புக்குப் பல்லாயிரம் வருஷங்களுக்கு முற்றொட்டு யவனர் ஆரியநாட்டில் வந்து சேவித்தும், வாணிகம்பண்ணியும், சாஸ்தி ரங்கற்றும் மீளும் வழக்குடையரென்பது அப்பண்டிதர்கள் அறியார் போலும்.

இனி இரண்டாஞ் சங்கராசாரியர் கேரளதேசத்திலே சாலிவாகனசகம் நானூ ற்றிருபத்தொன்றிலே மாசிமாதச்த்தபரபக்க த்துச் சதுர்த்தசியிலே சிவகுரு என்பவரு ருக்குப் புத்திரராக அவதரித்தவர். இவர் வித்தியாநரசிங்க பாரதிக்குப் பின் சாரதா பீடத்தில் வீற்றிருந்தவர். இவருந் திக்கு விஜயஞ்செய்து அத்துவைதமத ஸ்தாப னம் பண்ணிப் பெயர்படைத்தவர். இவர் சாலிவாகனசகவருஷம் நானூற்றுத் தொ ண்ணூற்றொன்றிலே கார்த்திகைமாசத்தி லேயுண்டாகிய சூரியகிரகணகாலத்திலே சமுத்திரஸ்நானஞ் செய்யும் பொருட்டு நி ர்மலமென்னும் ஊரையடந்து அது முடித் துக் கொண்டு அங்கேயிருக்குநாளிலே, அடுத்த சுக்கிலபக்கத்துத் திரயோதசியி லே சமாதி கூடினவர். இவரே சங்Nûபசா hPரக முதலிய நூல்கள் செய்தவர். இவரு ம் ஆதிசங்கராசாரியரை யொருவாறொத்து நிற்றகுரிய சர்வசாஸ்திரநிபுனர். ஆகவே இவர்காலம் ஆயிரத்து முந்நூற்று முப்பது வருஷங்களுக்கு முன்னுள்ளது. இவ்வர லாறும் சினவிசயத்திற் கூறப்பட்டுள்ளது. நிர்மலம் மேற்குச்சமுத்திரதீரத்திலே கொ ங்க தேசத்துக்கு வடதிசையிலேயுள்ளது. அங்கே சங்கராசாரியரது சமாதியும் ஆல யமுமின்றுமுள. கார்த்திகைமாசத்துச் சுக் கிலபûத்துத் திரயோதசி தோறும் பெருவிழாவொன்று நடந்துவருகின்றது. ஜினவிசயம் பிரமாணநூலென்பதற்கு அது வலிய சான்றாகும்.

மூன்றாஞ் சங்கராசாரியர் சாலிவா கனசகாப்தம் எழுநூற்:றுப்பத்திலே பிறந்து ஐம்பத்தாறாம் வயசிலே அடைந்தவர். இவரும் வித்தியாசாதுரியமுடையவர். இவருடைய வரலாறு சதானந்த சுவாமி கள் செய்த திக்குவிசய நூல்கள் செய் தோர் ஆதிசங்கராசாரியரிடத்து விளங்கிய பெருமைகள் சிலவற்றையுமெடுத்து முள் ளனவேபோல முகதனாலாரோபித்துப் போ யினர்.

ஆதிசங்கராசாரியராற் செய்யப்பட் ட நூல்கள் பிரமசூத்திரபாஷியம், ஆனந் தலகரி, சௌந்தரியலகரி, சிவபுஜங்க முதலியன. அவர் திருஞானசம்பந்தமூர்த் திநாயனாரைச் சௌந்தரிய லகரியிலும், இயற்பகையார் சிறுத்தொண்டர், சண்டேசு ரரென்னும் நாயன்மார்களைச் சிவபுசங்கத் திலும் துதித்திருத்தலால், அந்நாயன்மார் கள் காலம் அவருக்கு முந்தியதென்பது நன்றாக நிச்சயிக்கப்படும். ஆனந்தலகரிக் கு வியாக்கியானஞ்செய்தோர் இருபத்து நால்வர். அவ்வியாக்கியானங்களுள்ளே சிறந்ததாகக்கொள்ளப்படுவது அப்பையதீ ûpதர் செய்தது.

மேலே பௌத்தமதமெனச் சுட்டப் பட்டது பூர்வ பௌத்த மதமன்று.

சங்கம் - தமிழ்ச்சங்கம் காண்க.

சங்கருஷணன் - பலராமன். இவன் தேவ கியினது கருப்பத்திலிருந்தபோது யோக மாயாதேவி சங்கருஷித்துக் கொண்டு போய் ரோஹிணி கருப்பத்திற் சேர்ந்தமை யால் இப்பெயர்பெற்றான்.

சங்கவருணர் - பாண்டிய வரசராற் சூட்டப் பட்ட நாகரிகர் என்னும் பட்டமுடையோ ருள் ஒருவராகிய இவர் தந்துமாரன் என்ப வனைப் பாடிய புலவர். புறநானூற்றிலுள் ள செய்யுள்களுளொன்றாகிய இவர் பாட ல் செல்வ நிலையாமையை நன்குணர்த் தும்.

சங்கன் - (1) விராடராஜன் புத்திரன். இவன் உத்தரைதமையன். (2) கஞ்சன் தம்பி.

சங்கற்பசூரியோதயம் - நாராயனாசாரியர் விசிஷ்டாத்துவைதமத தத்துவங்களை ரூபாகாரம் பண்ணி நாடகமாகச்செய்த நூல். இது பிரபோத சந்திரோதயமென் னும் நூலை மாதைவேங்கடசுவாமிகள் செய்தருளிய பின்னர். அதற்கிணையாகக் hஞ்சீபுரத்து வைஷ்ணவராகிய இவ்வாசா ரியாராற் இயற்றப்பட்டது.

சங்கற்பன் - (1) பிரமமானச புத்திரருளொ ருவன். (2) தருமனுக்குச் சங்கற்பையிடத் துப் பிறந்த புத்திரன்.

சங்கற்பை - தருமன் பாரி.

சங்கிராந்தவாதசைவன் - விகாரமின்றி நிற்கும் ஆன்மசந்நிதியிலே அசத்தாகிய கருவிகளே சத்தாகிய சிவத்தைச் சிவகர ணமாய் நின்று அறியுமென்று சொல்பவன். இவன் அகச்சமயிகளுளொருவன்.

சங்கிருதம் - (1) சமஸ்கிருத பாஷைக்கி னமாயுள்ள சௌரசேனிமுதலிய பிராகிருத ங்களுள் ஒன்று. (2) சமஸ்கிருத பாஷை.

சங்கிருதி - (பு) மூன்றாம் நரன் புத்திரன். ரந்திதேவன், குரன் என்போர் இவனுக்குப் புத்திரர்.

சங்குசிரசு - தநுபுத்திரருளொருவன்.

சசாங்கன் - (1) சந்திரன். சசசின்னமுடை யவன் என்பது பதார்த்தம். சசம் - முயல் (2) காயாவிலிருந்த போதிவிருûத்தை வெட்டி அழித்தவன்.

சசி - புலோமன் மகன். இந்திரன் பாரி. புலோமன் மகளாதலிற் புலோமசையென வும் படுவன். இவள் நித்தியகன்னிகை. தேவராஜபதம் பெறுவோரெல்லாம் இந்திர நாமத்துக்கும் அவ்வவர்க்குப் பாரியாவோ ரெல்லாம் சசியென்னும் பெயர்க்கு முரியரென்பது நித்தியகன்னிகையென்ப தன் கருத்து.

சசிவிந்து (ய) குரோஷ்டு வமிசத்துச் சசிபிந்து சித்திரரதன் புத்திரன். இவன் அநேகமனைவியரும் புத்திரரும் உடை யோனெப்படுபவன்.

சச்சந்தன் - ஏமாங்கத தேசத்தரசன். ஜீவ கன் தந்தை. தாய்வயிற்றிலே சீவகனிருந் தபோது சச்சந்தனை மந்திரி கொன்று அரசனாகத் தாய் காட்டகத்தோடி உயிர் புழைத்தாள். இவன் வரலாறு சீவகசிந்தா மணியிற் கூறப்பட்டுள்ளது.

சஞ்சயன் - (1) திருதராஷ்டிரனுக்கு நண் பினனாகிய ஒரு சூதன் மகன். இவனே பாரதயுத்தம் நடக்கும்போது யுத்தகளத்தி ல் நடக்கும் செய்திகளையெல்லாம் அவ் வப்போதுள்ளவாறு பார்த்துத் திருதராஷ்டி ரன் பாரதயுத்தத்தைப் பார்க்க விரும்பி வியாசரைநோக்கித் தனக்புக் கண்ணோக் கந் தந்தருளவேண்டுமென்று வேண்டிப் பெற்றுலகத்தை நோக்கியபோது, பயந்து, “இப்பார்வை நமக்குவேண்டாம். என்றும் போலக் குருடனாகவிருப்பதே நமக்குப் பிரியம்” என வியாசர் சஞ்சயனுக்கு எப் பொருளையும் எத்துணைதூரத்திலுமிருந்து நோக்கி யுணருமுணர்ச்சியையும் வாய்மை யையும் அருளிப் போகச் சஞ்சயன் யுத்த கள வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந் தான். பகவற்கீதையைக் கேட்டு வெளியி ட்டானுமிவனே.

சடையநாயனார் - சுந்தரமூர்த்தி நாயனா ருடைய தந்தையார்.

சடையப்பநாதர் - திருப்பானந்தாளிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்.

சடையப்பமுதலி - இவர் கம்பரைச் சன்மானித்துவந்த மகாப்பிரபு. இவர் திரு வெண்ணெய் நல்லூரிலே சாலிவாகனசகம் எண்ணூற்றேழளவில் விளங்கிய வேளாண் முதலி. இவர் பெருமையைக் கம்பர் தாம் பாடிய இராமாயணத்தில் இடைஇடையே இசைத்துக் கவிசெய்தார்.

சண்டகௌசிகன் - இவர் கௌதம வமிச த்தில் வந்த ஒரு முனிவர். மகததேசத்தர சனாகிய பிருகத்திரதன், இக் கௌசிகர் அநுக்கிரகித்த ஒரு மாங்கனியால் ஜராசா ந்தன் என்னும் புத்திரனைப் பெற்றான்.

சண்டமார்க்கன் - சுக்கிரன் புத்திரன். தைத்திய புரோகிதன்.

சண்டமுண்டர் - (ரா) சும்பசிசும்பர்தோழர்.

சண்டேசுரநாயகனார் சேஞலூரிலே பிரா தண்டீசர் மண குலத்திலே சண்டி எச்சதத்தன் மகனா விசாரசருமர் கப் பிறந்து வேத விற்பன்னராகி அக்கிரகாரத்துப் பசுக்க ளை மேய்த்துவரப் பொருந்திக் கொண்டு போய் மண்ணியாற்றின் கரையிலே விடுத்து மணலைச் சிவலிங்கமாக்கிப் பசுக்களின் பாலைக் கறந்து அபிஷேகம் பண்ணிப் பூசை புரிந்து வருவதையுணர்ந் த தந்தை ஒருநாட்சென்று மணலினால மைத்த லிங்கத்தைக் காலாற் சிதைக்க அது கண்டு பொறாராகி வாளினாலவர் காலைச் சிதைத்த சிவபக்தர். இவருடை ய பக்திவலிமையைக் கண்டு சிவபிரான் சண்டேசுரபதத்தையீந்தருளினர். இவர் தி ருநாவுக்கரசருக்கு முந்தியவரென்பது.

“தழைத்ததோராத்தியின் கீழ்த்தாபரமண லாற்கூப்பி.
யழைத்தங்கே யாவின்பாலைக்கற ந்துகொண்டாட்டக் கண்டு
பிழைத்தான்றாதலைப்பெருங்கொடு மெழுவால்வீசக்
குழைத்ததோரமுதமீந்தார்குறுக்கை வீரட்டனாரே.” என்னுமவர் தேவாரத்தாற் துணியப்படும். ஆகவே இவர் காலம் நா லாயிரத்தைஞ்நூறு வருஷங்களுக்கு முன் னுள்ளதாதல் வேண்டும்.

சண்பகாரணியேசுவரர் - திருநாகேச்சரத்தி லே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

சதகும்பம் - பொன்விளையுமொரு மலை.

சதகோடி - (1) (ய) பசமானன் புத்திரன். இவனுக்குப் புத்திரர் நூற்றுவர். அவருள் மூத்தோன் விஷ{வசோதி. (3) (ய) சகஸ் திரஜித்து புத்திரன். இவன் புத்திரர் மகா ஹயன், வேணுஹயன், ஹேஹயன் என்போர்.

சதசிருங்கம் - ஒருமலை. துர்வாசர் உப தேசித்த மந்திரத்தாற் பாண்டவரைப் பெற்றவிடம்.

சதசுவன் - (பா) சமரன் புத்திரன்.

சதசேனன் - (ய) கிருஷ்ணன் வமிசத்து உக்கிரசேனன் மகன்.

சசதன்வன் - (ய) ஹிருதிகன் புத்திரன். தேவமீடன் தம்பி. இவன் சத்தியபாமை யைத் தான்பெறக்கருதிச் சத்திராசித்து வை நித்திரைபோம்போது கொன்றவன். அது காரணமாகக் கிருஷணனாற் கொல் லப்பட்டவன்.

சதத்திருதி - (1) பிரமன். (2) பிராசீனபரு கிபாரி. சமுத்திரன் மகன். பிரதேசுதாய்.

சதத்துரு - ஒரு நதி. இஃது இமாலயத்து வடபாலிலுற்பத்தியாகிச் சிந்துநதியிற் கூ டுவது.

சதத்துவசன் - ஊர்வஜன் புதல்வன்.

சதபருவை - சுக்கிரன் பாரி.

சதமகன் - இந்திரன். நூறுமகம்புரிந்தோ ன் என்பது பொருள்.

சதயாபன் - கேகயவமிசத்து ஓரிராசவி ருஷி.

சதரூபை - சுவாயம்பு பாரி. இவள் பிரமா வினால் முதன் முதல் சிருஷ்டிக்கப்பட்ட பெண்.

சதவலி - சுக்கீரிவன் சோதிபதிகளுள் ஒருவன். சீதையை வடதிசையிற் தோடிப் போனதூதன் இவனே.

சதாகாநந்தை பாரிபத்திரபர்வதத்திலுற்பத் சதாகீரை தியாகும் நதிகள்.

சதாûp - துர்க்கை.

சதாசிவதேசிகர் - இலக்கண விளக்கஞ் செய்த வைத்தியநாத நாவலர் குமாரர்.

சதாசிவன் - விந்ரூபமும் விநியோகவடி வும், படிகநிறமும், பிறைமுடியும், ஐந்து திருமுகமும், பத்துக்கரமும், மூன்றுதேத் திரமும், உமையொருபாகமும், இம்மூர்த்த திக்குப் பீஜாûரம் ஹகாரம்.

சதாநந்தன் - (1) பிரமா. (2) கௌதமர் அகலியையிடத்துப் பெற்ற புத்திரன். இவன் ஜனகராசர் குலகுரு

சதாநீகன் - (1) நகுலனுக்கு துரோபதியி டத்;துப் பிறந்த புத்திரன். (2) ஜனமேஜன்.

சதாமதுராம்பிகை - திருத்தருமபுரத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

சதாயு - சிராயு.

சதுரங்கன் - ரோமபாதன் மகன்.

சத்தி - பராசரர் தந்தை. வசிஷ்டர் மகன். (2) சிவசக்தி. (3) தெய்வசக்தி. தெய்வல் லமை. நிர்க்குணப்பிரமம் சிருஷ்டி முதலி யதொழில்களுக்காகச் சகுணவடிவு கொ ள்ளும்போது அதனிடத்தில் விளங்குச் சக்தி.

சத்தியநாயனார் - சோமநாட்டு வரிஞ்சியூரி ல்வியங்கிய வேளாளராகிய இச் சிவபக் தர் சிவனடியார்களை நிந்தைசெய்பவர்க ளது நாக்கையரிதலே தமது திருத்தொ ண்டாகக் கொண்டு விளங்கினவர்.

சத்திமுற்றப்புலவர் - சத்திமுற்றமென்னும் ஊரிலே விளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். இவர் தமது வறுமைநோயாற் பாண்டி நாட்டை அடைந்து பாண்டியனைத் தரிசி க்கும் பொருட்டுப் போர்த்துக்கொள்ளவும் வஸ்திரமில்லாது குளிரால் மெலிந்து மர த்தின் கீழிருந்து, தமது மனைமக்களை நினைத்து தமது மனைமக்களை நினைத் து தம் விதியை நொந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஆகாயத்திலே தெற்கிருந்து வடக்குநோக்கிச் சத்தமிட்டுக்கொண்டு பறந்து போகின்ற ஒரு நாரையைக்கண்டு “நராய் நராய் செங்கால்நாரய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன, பவளக்கூ ர்வாய்ச் செங்கால்நாராய்” என்றற்றொடக் கத்துச் செய்யுளிலே தமதுமனைமக்களது நிலைமையையும் எடுத்தமைத்துப் பாடினா ர். அச்சமயத்தில் நகர் சோதனையின் பொருட்டு அவ்வழியே சென்ற பாண்டியன் அதனைக் கேட்டு அவன் மீதிரக்கமுடை யனாகித் தான் தரித்திருந்த போர்வையை அவன் மீது வீசிப்போயினான். விடிந்தபின் னர் அரசன் தன் சேவகரை அழைத்துத் தனது போர்வை முன்னிரவிற் களவுபோயி ற்றென்று கூறி அக் கள்வனைத் தேடிக் கண்டு வருத்தாது கொண்;டு வருமாறு ஆஞ்ஞைசெய்ய. அவ்வாறவர்கள் புலவ ரைக்கொணர்ந்து அரசன் முன் விடுப்ப, அரசன் அவருக்குத் தக்கவாறு பரிசளித் து அவரை அனுப்பிவிட்டான்.

சத்தியகர்மன் - (அம்) திருடவிருதன்.

சத்தியகன் - இரண்டாம் சினி புத்திரன். சாத்தியகி தந்தை. யாதவர்களுள் விருஷ்ணி வமிசத்தவன்.

சத்தியகீர்த்தி - அரிச்சந்திரன் மந்திரி.

சத்தியகேது - சுகேதன் பௌத்திரன். விபுவினது தந்தை.

சத்தியசிரவன் - (1) இருக்குவேதாத்தியா பகனாகிய ஓரிருஷி. (2) (நரி) வீதிகோத் திரன் புத்திரன்.

சத்தியசேனன் - கர்ணன் புத்திரன்.

சத்தியஜித்து - (1) (ய) வசுதேவன் தம் பியாகிய கங்கன் இரண்டாம் புத்திரன். (2) துருபதன் தமயன்.

சத்தியதிருதி - (1) சாத்துவந்தன். சதாந ந்தன் புத்திரன். இவன் தநுர்வேத நிபுண ன். ஒரு நாள் வனத்தில் ஊர்வசியைக் கண்டு குக்கிலஸ்கலிதமுண்டாகப் பெற்று அதனை ஒரு நாணலின் மேல் விட, அதிலே ஒரு பெண்மகவும் ஆண்மகவும் உற்பத்தியாயின. சந்தநு அவ்வழியே வேட்டைமேற் சென்றபோது அச்சிசுக்க ளையெடுத்துப் போய்வளர்த்தான். பெண் மகவாகிய கிருபி துரோணனுக்கு மனை வியாயினாள். ஆண் மகன் கிருபனெனப் பெயர் கொண்டான். (2) பு. கிருதிமந்தன் புத்திரன். (3) மி. மகாவீரியன் புத்திரன்.

சத்தியபாமை - சத்திராஜித்து மகள். இவள் கிருஷ்ணனுக்குப் பிரியநாயகி. இவள் பொருட்டுக் கிருஷ்ணன் பாரிஜாத விருûத்தையும் தேவலோகத்திருந்து பெயர்த்துக் கொணர்ந்தான்.

சத்தியரதன் - பௌமரதனமகன்.

சத்தியவதி - தாசராஜன் எடுத்து வளர்த் த புத்திரி. வியாசன் தாய். சந்தனு பாரி. இவள் வயிற்றிலே சந்தனுவுக்குப் பிறந்த புத்திரர் சித்திராங்கதன் விசித்திரவீரியன் என்போர். ஒரு சாபத்தினால் யமுனையி லேமீனுருக் கொண்டு கிடந்த அந்திரிகை யென்னும் அப்சரசு உபரிசரவசு என்பவன் விட்ட வீரியத்தை உட்கொண்டு பெற்ற புத்திரி. இவள் திவ்விய சுந்தர ரூபமுடை யயாயினும் மீன் வயிற்றிற் பிறந்தமையா ல் மற்சியகந்தம் அவள் தேகத்தில் வீச அது காரணமாக மற்சியகந்தியென்று பெயர் பெற்றிருந்த இவள் பராசரைக் கூடி வியாசரையீன்றபோது பராசரர் அநுக் கிரகத்தால் யோசனைகந்தி, பரிமளகந்தி யென்னும் காரணப் பெயர்களைப் பெற்றா ள். (2) கௌசிகி, இவள் காதி ராஜன் மகள். இருஷிகன் பாரி. ஜமதக்கினி முனிவர் இவள் புத்திரர். இவள் நாயகனோடு தீப்பிரவேசஞ்செய்து கௌசி க நதியாயினவள்.

சத்தியவான் - மந்திரதேசத்தரசனான தியுமத்சேனன் புத்திரன். சித்திராசுவன் எனவும்படுவன். இவனே சாவித்திரி நாய கன்.

சத்தியவாகீசர் - திரு அன்பிலாலர்துறை யிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

சத்தியவிரதன் - (1) திரிசங்குவினது பூர் வநாமம். (2) முன் கற்ப்பத்திலே திராவிட தேசத்தரசனாகவிருந்து விஷ்ணு பக்தி பண்ணி இக்கற்பத்திலே வைசுவத மனுவாகப் பிறந்தவன்.

சத்தியஹிதன் - (கு) உபரிசரவசுவினது வமிசத்தன்.

சத்திராஜித்து - யாதவருள் விருஷ்ணி வமிசத்து நிம்முனன் புத்திரன். சத்தியபா மை தந்தை.

சத்துருக்கினன் - (1) தசரதன் கடைமகன் தாய் சுமத்திரை. குசத்துவஜன் மகள். சுருதகீர்த்தி இவனுக்குப் பாரி.

சத்துருசாதனபாண்டியன் - இவன் கூன் பாண்டியன் தந்தை. காருண்ணியபாண்டி யன் மகன்.

சத்துருசித்து - (கா) பிரதர்த்தனன்.

சத்துருஞ்சயன் - இவன் உக்கிரசே பாண்டியன் மகன்.

சநகன் பிரமமானச புத்திரர். இவர்கள் சநந்தனன் சனாதனர் சனற்குமாரரோடு சி வபிரானையடைந்து தமக்கு மனமடங்கலி ல்லையென்றும், மனமடங்கவருள் புரிய வேண்டுமென்றும் பிரார்த்திக்க, அவர் யோகசமாதியிலிருந்து சின்முத்திரைகாட்டி உண்மையுபதேசிக்கப்பெற்றவர்கள்.

சநீசுவரன் சூரியன் புத்திரன். நவக்கிரகங் சனி களுளொருவன். யமன் தம்பி.

சந்தனு - (கு) பிரதீபனுக்குச் சுநந்தையி டத்துப் பிறந்த புத்திரன். இவனுக்கு முதற் பாரி கங்காதேவி. இவளிடத்திலே விஷ்மரைப் பெற்றான். இரண்டாவது பாரி பராசரருக்கு வியாசரைப்பெற்ற சத்தியவ தி. இவளிடத்திலே சந்தநுவுக்குப் பிறந்த புத்திரர் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என இருவர். விசித்திரவீரியன் சந்ததியின் றி இறந்தான். அது கண்ட சத்தியவதி தனது மூத்தமகனாகிய வியாசனை அழைத்து நியோகநியாயத்தால் விசித்திர வீரியன் மனைவியரிருவரித்தும் திருதராஷ் டிரனையும் பாண்டுவையும் பிறப்பித்தான். வியாசரும் வீஷ்மரும் விவாகம்புரியவுடன் படாது பாலியத்திலே துறந்தார். சித்திரா ங்கதன் பாலியத்திலிறந்தான்.

சந்தனை - அங்கதேசத்து வழியே பாய்கி ன்ற ஒரு நதி.

சந்தியை - சாலகடங்கடை தாய்.

சந்திரகிரி - நரசபூபாலன் ராஜதானி. இது தெலுங்க ராஜக்களுக்கு நெடுங்காலம். ராஜதானியாகவிருந்தது.

சந்திரகுப்தன் - நந்தர்களுக்குப்பின் மகத தேசத்தையாண்ட மௌர்விய ராஜர்களுள் முதல் அரசன். இவன் தாய் முரையென் னும் பெயருடையாள். அது பற்றி அந்த வமிசத்தர் மௌர்வியரெனப்படுவர் இவர் காலம் இற்ரைக்கு 2,200 வருஷங்களுக்கு முன்னரென நிச்சயிக்கப்படுகின்றது. அஃ தாவது கலி இரண்டாயிரத்துஎழுநூற்றிருப தில் முடிதரித்தவன்.

சந்திரகேதன் - ஸ்ரீராமருடைய தம்பி லû_மணன் புத்திரருள்ளே இரண்டாம் புதல்வன்.

சந்திரசர்மன் - விஷ்ணுசர்மன் புத்திரன். விக்கிரமார்க்கன் தந்தை. இவன் நான்கு வருணத்தும் நால்வர் பாரிகளை மணம்புரி ந்து பார்ப்பனப் பெண்ணிடத்து வரருசியை யும், ûத்திரியப் பெண்ணிடத்து விக்கிர மார்க்களையும், வைசியப்பெண் வயிற்றில் பட்டியையும், சூத்திரஸ்திரியிடத்துப் பர்த் துருகரியையும் பெற்றவன். விக்கிரமார்க் கன் அரசனானபோது பட்டி மந்திரியானா ன்.

சந்திரசேகரேசுவரர் - திரு இலம்பயங்கோ ட்டூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவா மிபெயர்.

சந்திரபாகை - சிந்துநதிக்கு உபநதி.
சந்திரமதி - மதிதயன் மகள். அரிச்சந்தி ரன் பாரி. இவள் பிறக்கும்போதே மங்கலி ய சூத்திரத்தோடு பிறந்தவள். பதிவிராதா தன்மத்திலும் நற்குணநற்செய்கைகளிலும் அழகிலுஞ் சிறந்தவள். விசுவாமித்திரர் அரிச்சந்திரனுடைய சத்தியவிரதத்தைச் சோதிக்கும் பொருட்டு அவனுக்குச் செய் த வன்மைகளையும் கொடிய துன்பங்க ளையும் இம் மாது சிரோமணி தன் கண வனோடுடனிருந்து மனஞ் சிறிதுஞ் சலியா தநுபவித்தவள். தனது நாயன் கடனுக் காக ஓரந்தணனுக்கு அடிமைப்பட்டவள். காட்டகத்தேதன்மகன் பாம்புகடித்திறந்தா னென்பது கேட்டும் அந்தணனுக்குத் தான் செய்யவேண்டிய கைங்கரியமெல்லாம் செ ய்து வைத்து விட்டே நள்ளிரவிற்காட்டக ஞ்சென்று மைந்தனுடலைக் கண்டெடுத் துச் சுடலைக்குக் கொண்டுபோனவள். பறையனுக்கடிமைப்பட்டு அச்சுடலையிற் காவல்பூண்டிருந்தான். கணவனையும் அவ னுக்குற்ற விதியையுங் கண்டு கதறி நை ந்துருகிவழியும் தன் கனவனுக்கு மனந் தளரவேண்டாமென்றும் சத்தியத்தைகடை ப் பிடிக்கவேண்டுமென்;றும் புத்திகூறின உத்தமியுமிவளே. இங்ஙனம் அரிச்சந்திர னோடு படத்தகாத பாடெல்லாம்பட்டுக் கடைபோகச் சத்தியவிரதத்தை அணுத்து ணையுந் தவறாமற் காத்த மாதுரத்தினம் இவ்வுலகில் இவளொருத்தியே. ஈற்றில் விசுவாமித்திரருங்கைசலித்து இறந்துகிடந் த புத்திரனை எழுப்பி அரிச்சந்திரனையும் சந்திரமதியையுமடிமை நீக்கி அவர்க்கு முன்போல அரசரிமையுங்கொடுத்து வாழ் த்தி வரங்களும்கொடுத்துப்போhயினார். பல்லாயிரசருஷங்களுக்கு முன்னேயிருந்து விளங்கினவளேயாயினும் அவளுடைய உத்தமோத்தம குணங்களே இன்னுமவள் பெயரை விளக்குவனவாம்.

சந்திரரேகை - ஓரப்சரப்பெண்.

சந்திரலோகம் - சுவர்க்கத்திலே பிதிர்கள் வசிக்குமிடம்.

சந்திரவக்கிரன் - சந்திரகேது.

சந்திரஹாசன் - தûpணத்திலே அர்ச்சு னன் காலத்திலே இருந்தரசியற்றியவோரர சன். இவன் பாலியத்திலே தந்தையாரை யிழந்துவருந்திப் பின்னாளிலே அரசுகொ ண்டவன். கிருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக் கும் நண்பினன்.

சந்திரன் - நவக்கிரகத்தொன்று. அத்திரிக் கு அநசூயையிடத்துப் பிறந்தபுத்திரன். இச்சந்திரன் நûத்திரங்கள், பிராமணர், ஓஷதிகள், எக்கியங்கள், தபசு முதலிய வைகளுக்கதிபதி தன் புத்திரிகளாகிய இருபத்தேழு நûத்திரங்களையும் மண முடித்துக்கொடுத்தான். இருபத்தேழில் ரோ கிணி பிரியநாயகி. பிருஹஸ்பதி பாரியா கிய தாரையைச் சந்திரன் சோரமார்க்கமா கக் கூடிப்பெற்ற புத்திரன் புதன். இதுபற் றிப் புதன் மதிமகனெனப்படுவன்.

மற்றொருகாலத்திலே சமுத்திர மதனத்துக்கண் திருப்பாற்கடலிலே இச்சந் திரன் பிறந்தான்.

தûன் தன் குமாரிகள் இருப த்தேழுபெயர்களுள் ரோகினியிடத்துப் அ திப்பிhPதியும் மற்றையரிடத்துப் அற்பபிhPதி யும் வைத்தொழுகும் சந்திரன்மீது கோப முடையனாகி ûயரோகத்தால் வருந்துக வென்று சந்திரனைச் சபித்தான்.

சந்திராங்கதன் - ஓரரசன்.

சந்திராசாரியர் - இவர் காசுமீரத்திலே ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தொன்பது வருஷங்களுக்கு முன்னே அபிமன்னியன் காலத்திலே அவனுடைய சமஸ்தாகவியா கரண வித்துவானாய்ப் பதஞ்சலிசெய்த மகாபாஷியத்தை அந்நாட்டில் முதல்முத ல் கற்பித்து விளக்கிய சமஸ்கிருத பண்டிதர். பாரதத்திலே கூறப்பட்ட அபிம ன்னியனும் வேறு: இவனும் வேறு.

சந்திராசுவன் - தண்டாசுவன்.

சந்திராலோகம் - ஓரலங்கார சாஸ்திரம். இது காளிதாசன் செய்தது.

சந்தோவிசிதி - வேதத்தில் உக்தை முத லிய சந்தோ பேதங்களுக்கு அûர சங்கியை கற்ப்பிப்பதாகிய வேதாங்கநூல்.

சந்நதமந்தன் - (பு) நலாஞ் சுமதி புத்தி ரன். கிருதிதந்தை.

சந்நதி - (1) (கா) அலர்க்கன் புத்திரன்: சுநீதன் தந்தை. (2) கிருதுவின் பாரி: தûப்பிரசாபதி மகள்: வாலகில்லியர் தாய்.

சந்நிதியப்பேசுவரர் - திருச்சேறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

சபஸ்தன் - (இ) முதல் யுவனாசவன் புத் திரன். பிருகதசுவன் தந்தை. இவன் கௌடதேசத்திலே சாபத்தியென்னும் பட் டணம் நிருமித்தவன்.

சபரி பம்பாநதிதீரத்திலே மதங்காசிரமத் சவரி திலிருந்த ராமபக்தராகிய மதங்கர் சீஷர்.

சபாகலன் - யயாதீ பௌத்திரன். அணு மூத்த புத்திரன்.

சபாநாயகர் நடேசர்; சிவன் பஞ்சகிருத் சபாபதி தியங்களின் பொருட்டுக் கொண்டருளிய ஆநந்ததாண்டவ வடிவம். திருமேனி பஞ்சகிருத்தியக் குறியுடைய தென்பதற்கு:

“தோற்றந்துடியதனிற் றோயுந் திதியமைப்பிற் - சாற்றரியவங்கியிலே சங்காரம் - ஊற்றமா - யூன்று மலர்ர்ப்பத த்தே நாடு” என்னும் உண்மைவிளக்கத் து வெண்பாவே பிரமாணமாம். ஒரு கரத் திலேயுள்ள அக்கினியகல் சங்காரத் தொழிலைக்குறிக்கும்; மற்றொருகரத்திலே யுள்ள தமருகம் சிருஷ்ஷயைக் குறிக்கும் அபயகரம் திதியைக்குறிக்கும்; ஊன்றிய கால் திரோபவத்தைக்குறிக்கும்; ஏனைய வெயங்களுமிவ்வாறே ஒவ்வொரு குறிப்பி னவாம். ஆகவேமுழுதும் தத்துவ சொரூப மாம்.

சபை - சிற்சபை கனகசபையென இரண் டு. அவை புண்டாPக வீடாகிய இருதய கமலத்தினது குறிப்பாகவுள்ள சிதம்பரஸ் தலத்திலேயுள்ளன.

அச் சிற்சபையிலுள்ள ஐந்து படிகளும் பஞ்சாûரத்தின் குறிப்பு. அதிலுள்ள இருபத்தெட்டு ஸ்தம்பங்களும் இருபத்தெட்டாகமங்களையும் குறிக்கும். இத்தம்பத்தளம் பிரமபீடம். தொண்ணூற் றாறு கவாûpயும். தொண்ணூற்றாறு தத்துவங்களின் பாவனை. இது விஷ்ணு பீடம், உருத்திரபீடம், உருத்திரபீடத்திலு ள்ள ஐந்து ஸ்தம்பங்களும் பஞ்சபூதங்க ளைக் காட்டுவன. ஈசுவரபீடத்துத் தம்பம் நான்கும் வேதம் நான்கையுங் குறித்துநிற் கும். திரை மகாமாயையின் குறிப்பு. தரிசனஸ்பரிசனவேதிகளிரண்டும் மந்திர ஸ்தானங்கள், மகாபிரணவம் இரகசியமா கவிருக்கின்றது. கைமரங்கள் அறுபத்து நான்கும் கலாஞானம் அறுபத்துநான்கையு ங் குறிப்பன. பலகை இருபத்துநான்கும் புவனங்கள் இருபத்தோராயிரத்துநூறு தாமிர ஓடுகள் உச்சுவாச நிச்சுவாசங்கள். ஆணிகள் எழுபத்தீராயிரமும் நரம்புரூபம். ஒன்பது கலச முடிகளும் நவசத்திகளி னது ரூபம். இனிச் சிவன் வெளிப்படப் பஞ்சகிருத்தியத்தின் பொருட்டு ஆனந்த தாண்டவஞ் செய்யும் கனகசபை திருவருள் வடிவினது. இதனிடத்துள்ள பதினெட்டுஸ்தம்பமும் பதினெண் புராணங் களையுங் குறிக்கும். கலசமுடியொன்ப தும் நவ சக்திகளைக் குறிக்கும். இச் சபைகளைத் தேவநிருமாணமென்ப. இவற்றின் விரிவு மகாசைவதந்திர முதலி யநூல்களிற் காண்க.

சப்தகுலாசலம் - மகேந்திரம், மலயம், சையம், சுக்திமந்தம், இருûபர்வதம், விந்தியம், பாரியந்திரம் என ஏழுமலை கள். இவ்வாறன்றி வேறுவகையாகவுங் கூறுப.

சப்தசமுத்திரம் - உவர்நீர்ச்சமுத்திரம், நன்னீர்ச்சமுத்திரம், பாற்சமுத்திரம், தயிர் ச்சமுத்திரம், நெய்ச்சமுத்திரம், கருப்பஞ் சாற்றுச்சமுத்திரம், தேன்சமுத்திரம் என ஏழுமாம்.

சப்தசாரசுவதம் - இது வசிஷ்டாதியர் செய்த யாகத்திலே சரசுவதிநதி. சம்பிரபை, கனகாûp, விசாலை, சுரதந்வை, அமோகை, மாலா, சுவேணி, விமலோதகை என்னும் பெயர்களையுடை ய பெண்காக வடிவங்கொண்டு இருஷிக ளுக்கும் தேவர்களுக்கும் ஏவல் டிசய்து பேறுபெற்ற புண்ணியNûத்திரம்.

சப்ததீவுகள் - ஜம்பு, பிலû, குச, கிர ளெஞ்ச, சாக, சான்மல, புஷ்கர தீவகள், பிரியவிரதன் தன் புத்திரராகிய ஆக்கினி த்தரனுக்குச் ஜம்புவீபத்தையும், மோதிதி க்குப் பிலûத்துவீபத்தையும், வபுஷ்மந்த னுக்குச் சான்மலத்து வீபத்தையும், திதியு மந்தனுக்குக் குசத்துவீபத்தையும், தியுதி மந்தனுக்குக் கிரௌஞ்சத்துவீபத்தையும், பவியனுக்குச் சாகத்துவீபத்தையுங் கொடு த்து முடிசூட்டினான். இவர்களே சுவாயம் புவமனுவந்தரத்திலே அவ்வத்தீவுகளில் முதன்முதலரசு புரிந்தவர்கள். ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு சமுத்திரத்தாற் சூழப்பட் டுள்ளன. இத்தீவுகள் ஏழும் காலாந்தரத் திலே பூர்வரூபம் திரிந்தன.

சப்தலோகம் - பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், மகர்லோகம், ஜனலோ கம், தபோலோகம், சத்தியலோகமென்னு மேழும் மேலுலகங்கள். இவ்வேழுவோகத் துமுள்ள சீவர்கள் தத்தங் கர்மப்பயனாக அவ்வுலகத்தையடைவார்கள். பூலோகத்தி ல் மனுஷரும், புவர்லோகத்தில் யûரா ûசகந்தருவகிந்நரகிம்புருஷர்களும், சுவர் க்கத்திலே தேவர்களும் வசிப்பர். கீழுலகம் ஏழு அவை அதல, விதல, சுதல, தராதல, ரசாதல, மகாதல,டாதல மென்பன.

சப்தவிருஷிகள் - மாPசி, அங்கிரசன், புலகன், வசிஷ்டன், அந்திரி, புலஸ் தியன், கிருது என்போர் ஒருசாரர். கசியபன், அத்திரி, பரத்துவாஜன், விசுவா மித்திரன், கௌதமன், ஜமதக்கினி, வசி ஷ்டன்என்போரையும் சக்தவிருஷிகளென் னும்பெயரால் ஒருநடித்திரகணமுமுளது. அக்கணத்தில் அகஸ்தியர் பெயரு மொன்றாம்.

சமசோற்பேதம் - ஒரு தீர்த்தம்.

சமடன் - (ரி) இவ்விருஷி தருமராசனேடு தீர்த்தயாத்திரை செய்தவர்.

சமந்தகமணி - சூரியனால்சந்திரா சித்து வுக்குக் கொடுக்கப்பட்ட மணி.

சமந்தபஞ்சகம் - குருNடித்திரம். திரேதாத்துவாபரயுக சந்தியிலே பரசுராமர் கர்வங்கொண்ட கூத்திரியரையெல்லாங் கொன்று அவர்கள் இரத்தத்தை ஐந்து தடாகங்களில் நிறைத்து அதனாற் பிதிர் தர்ப்பணஞ்செய்தார். ஆதலின் அவ் விடம் ஆதியில் சமந்தபஞ்சக மென ப்படுவதாயிற்று. அந்த ஸ்தானம் பின்னர்க் கௌரவரும் பாண்டவரும் நின்று யுத்தஞ் செய்தமையால் குருடித்திர மெனப் பெயர் பெறுவதாயிற்று.

சமணர் - கூபணர். ஜைனர். அருகனை வழிபடுஞ் சமயத்தோர். ஆரகதர். இவர்கள் ஆன்மாவும் உலகமும் அநாதிநித்திய மென்றும், உலகத்துக்குக் காரணராகிய வொரு கடவுளில்லை யென்றும்;, முற்றத துறந்த ஜினனாதலே முத்தியென்றும் கூறுபவர்கள். அருகன் சமணருக்கு ஆதி குருமூர்த்தி. முகா வீரன், பரசுவன் முதலியோர் தீர்த்தங்கரருட் பிரசித்தி பெற்றோர். இவருக்கு முன்னிருந்த தீர்த்தங்கரர் இருபதின் மேற்பட்டோர். மகாவீரர் என்னுஞ் சமணாசாரியர் கௌதமபுத்தர் காலத்தவர். பார்சுவர் இரண்டாயிரத்தறு நூறு வருஷங்களுக்குமுன்னுள்ளவர். இவர்களுக்கு முதனூல் நான்கு மூலசூத்திரங்களும் நாற்பத்தைந்து ஆகமங்களுமாம். வழிநூல் கற்பசூத்திரம். அது பத்திரவாணனார் செய்தது.
இச்சமயத்தோர் மைசூர் கூர்ச்சரமுதலிய நாடுகளிலுளர். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்நாளில் இச்சமயம் மிக்கபெருக்க முற்றிருந்தது.

சமரகோலாகலன் - விக்கிரமகஞ் சுகபாண்டியன்மகன்.

சமரன் - (பா) நீபன் Nடிட்புத்திரன். இவன் காம்பிலிய தேசத்தரசனானவன். இவனுக்குப் பாரன், சுபாரன், சதசுவன் என மூவர் புத்திரர்.

சமனை - சந்திகலை பதினாறனு ளொன்று.

சமன் - தருமனுக்குச் சிரத்தையிடத்துப் பிறந்த மூத்தமகன். காமனும் ஹர்ஷனும் இவன் தம்பியர். சுமபிரீதி இவன் பாரி.

சமிஞ்ஞாதேவி - பிரபாவதி. இவள் சூரியன்பாரி.

சமீகன் - 1. (ரி) சிருங்கிமுனிவர் தந்தை. 2. போஜவமிசத்தோரரசன்.

சமீசி - ஓரப்சரப்பெண்.

சமுத்திரன் - சகரன்.

சம்சபதகர்கள் - திரிகர்த்தா தீசுரனாகிய சசர்மன் தம்பியர். சத்தியரதன் சத்தியசேனன் சத்தியகர்மன் சத்தியவர்மன் முதலியோர்.

சம்சிருதன் - மிதிலை வமிசத் தரசருளொருவன்.

சம்பந்தசரணாலயர் - கந்தபுராணச் சுருக்கமென்னுந் தமிழ் நூலாசிரியர். அடைசொல்லினால் வீணாக அலங்கரித்த லின்றி எவ்விஷயத்தையுஞ் சுருக்கி நயம்பெறப் பாடுஞ் சக்தி பெரிது முடையவரென்பது கந்தபுராணச் சுருக்கத்தால் நன்கு புலப்படும். திருஞான சம்பந்தமூர்த்திநாயனாரது அடித்தொண்டர் களது பரம்பரையிலுள்ளவர். இவர்காலம் கலி 4650.

சம்பந்தர் - சீர்காழியிலே பிராமண குலத்திலே சிவபாத விருதயருக்குப் பகவதியாரிடத்திலே புத்திரராக அவதரித்தவர். மூன்றாண்டு நிரம்பியபோது உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பட்டவர். அன்றுமுதல் வேதத்துண்மைப் பொருளையெல்லாம் திருவாய்மலர்ந்தருளும் பொருட்டு, அற்புத மயமாகிய தேவாரங்களைப் பாடத்தொடங்கினவர். அதன்பின்னர் ஒத்தறுத்துப்பாடும் பொருட்டுச் சிவபெருமானது திருமுத்திரையிடப்பட்ட ஒருபொற்றாளங்கையில் வந்திருக்கப் பெற்றவர். சர்வசாஸ்திரங்களையும் ஒதாதுணர்ந்தவர். ஸ்தலங்கள்தோறுஞ் சென்று சுவாமிதரிசனஞ்செய்யும் பொருட்டு ஏறுதற்கு முத்துச்சிவிகை பெற்றவர். பாம்புகடித்திறந்த பூம்பாவை யென்னும் பெண்ணினது எலும்பை முன்போலப் பெண்ணாக்கியது முதலிய அநேக அற்புதங்களைச் செய்தவர். கூன்பாண்டியனது கொடிய சுரந்தீர்த்து அதுவாயிலாகப்போரில்வென்று சமணசமயத்தைவேரறுத்து அப்பாண்டியனைச் சைவசமயப் பிரவேசஞ் செய்வித்தவர். இவ்வரும்பெருஞ் செயல்களையெல்லாம் பதினாறாண்டு நிரம்புமுன் செய்து தமிழ் நாட்டுக்கு உலககுருவாயினவர். பதினாறா
ண்டளவில், தந்தையாரது வேண்டு கோளுக் கிணங்கி மணம்புகுந்து, மணக்கோலத்தோடு திருப்பெருமணமென்னுஞ் சிவாலயத்திற் புகுந்து சிவசோதியிற் கலந்தவர். மணத்திற்காக அங்கே சென்றிருந்தார் யாவரும் அவருடன் சென்று அவர்பெற்ற பெரும்பேறே பெற்றார்கள்.
சம்பந்தருடைய பாடல்கள் பொருளால்மாத்திரமென்று, சந்தத்தாலும் யாப்பாலும் அற்புதமானவை. தற்காலத்துள்ள யாப்பிலக்கண நூல்களுக்கு அவருடைய பாடல்களுட் சில அதீதமானவையென்பது நுண்மையாய் நோக்குமிடத்துப் புலனாகும். சிற்சில பாடல்களுக்கு உண்மைப் பொருள் காண வல்லாரு மிந்நாளில் இலர்.
சம்பந்தரைச் சுப்பிரமணியக் கடவுளது அமிசாவதாரமெனக் கொள்வாருமுளர். அவர் இவ்வுலகில் ஞான விளக்கமின்றிருந்தகாலம் மூன்றுவருஷம். நாம்காம் வயசுமுதற் பதினாறாண்டில் பூரணமாகுங்காறும் ஒப்புயர்வில்லாச் சிவஞானச் செல்வராகவே விளங்கினர். அற்புதங்களினாலே சைவசமய ஸ்தாபனஞ் செய்தருளினமையினால் அவர் சைவசமயாசாரியருளொரு வராயினார்.
இனி அவர் இருந்தகாலத்தைப் பலரும் பலவாறாகக் கூறுவர். இன்னகாலமெனநிச்சயிப்பது எளிதன்று. ஆயினும் அவர் திருவாய் மலந்தருளிய தேவாரங்களிலே கூறப்பட்டுள்ள சில விஷயங்களைக்கொண்டும் அவர்காலத்தில் அவருடைய திருக்கூட்டத்தவருளொருவராய் விளங்கிய திருநாவுக்கரசுநாயனாரருளியச் செய்த தோவாரத்திலே கூறப்பட்ட சில ஏதுக்களைக்கொண்டும் பிறநூற்பிரமாணங் கொண்டும் நன்கு நிச்சயிக்கப்படும்.

சம்பந்தர் தேவாரத்திலே, வேயுறுதோளிப் பதிகத்திலே யுள்ள ||என்போடு கொம்பொடாமை|| என்னும் பாசுரத்திலே வரும் ||ஒன்பதொடொன் றோடேழு பதினெட்டொடாறு முடனாய நாட்களவைதாம்|| என்பதன் பொருளை நிச்சயிப்பதனால் அவருடைய காலநிச்சயத்துக்கு ஒரதிப் பிரபல எதுபெறப்படும். சோதிட நூலிலே கூறப்பட்ட பிரயாணத்துக்கு ஆகாத நடித்திரங்கள் பன்னிரண்டுமே இப்பாசுரத்திலே சுட்டப்பட்டன. அவை திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயிலியம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் என்னும் பன்னிரண்டுமாம். சம்பந்தர் காலத்திலே முதலாகக்கொண்டு எண்ணப்பட்ட நடித்திரம் கார்த்திகை. அயனசலனத்தினாலே தொளாயிரத்து எண்பத்தெட்டுவருஷமும் நான்கு மாசமுமாகிய காலவட்டந்தோறும் ஒவ்வோறுநடித்திரந் துருவம்பெறும். அஃதாவது, நடித்திரமே அத் தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷமும் நான்கு மாசமுமாம் என்க. இங்ஙனந் துருவம்பெறும் நடித்திரமே அத்தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷகாலத்துக்கும் முதல் நடித்திரமாகக் கொள்ளப்படும். சம்பந்தர்காலத்திலே துருவம்பெற்றுநின்ற நடித்திரம் கார்த்திகை. கார்த்திகை முதற்கொண்டு ஒன்பதாம் நடித்திரம் பூரம். ஓன்று ஸ்ரீகார்த்திகை. ஒன்றோ டேழுஸ்ரீஎட்டாம்நடித்திரம் ஸ்ரீமகம், ஏழுஸ்ரீஏழாம் நடித்திரம் ஆயிலியம். புதினெட்டுஸ்ரீபதினெட்டாம் நடித்திரம் பூராடம். பதினெட்டொடாறுஸ்ரீ பதிமெட்டாநடித்திரமுதல் ஆறாம் நடித்திரம் பூராட்டாதி. உடனாய நாள்கள் ஸ்ரீஇவையோடு மற்றைய ஆறும் என்றவாறு. அதுநிற்க, இப்போது துருவம் பெற்றிருக்கும் நடித்திரம் உத்தரட்டாதி. கார்த்திகைக்கும் உத்தரட்டாதிக்கு மிடையேயுள்ள பரணி அச்சுவினி ரேவதி என்னும் மூன்றும் கடக்கப்பட்டன. ஒரு நடித்திரத்துக்குத் தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷமாக மூன்றுக்குஞ் சென்றவருஷத் தொகை இரண்டாயிரத்துத் தொளாயிரத்து அறுபத்துநாலு. சம்பந்தர்காலத்திலே கார்த்திகையிலே சென்றன போக எஞ்சிநின்ற வருஷங்கள் ஐஞ்ஞூற்றுக்கு மேலாயின. ஆகவே சம்பந்தர்காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளதாக நிச்சயிக்கப்படும்.

திருநாவுக்கரசர் சம்பந்தருக்கு உத்தமநட்பினராய் விளங்கினவரென்பது பெரியபுராணமும் தேவாரமுங் கூறுமாற்றால் வெளிப்படை, இருவரும் தத்தம் தேவாரத்திலே அர்ச்சுனனுக்குச் சிவன் புரிந்த திருவருட்டிறத்தை இடையிடையே எடுத்துத் துதித்துப் போவது, அவர்கள் காலத்துக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முன்னே விளங்கிய அர்ச்சுனனுக்குச் சிவன் வேடவடிவங்கொண் டெழுந்தருளிச் சென்று அருள்புரிந்த பேரற்புத நிகழ்ச்சியை உலகம் கன்னபரம்பரையாக மறக்காமல் எடுத்துப்பாராட்டிவந்த சமீப காலமேயாதல்பற்றியாம். பாரதயுத்த முடிந்த காலம் கலியுகாரம்பம். கலியுகத்திலிப்போது சென்றது. ரு000 வருஷம். பாண்டவர்க்குத் துணையாயிருந்து போர்செய்த சோழனுக்குப் பின் முடிசூடியவன் நாகலோகஞ்சென்றசோழன். அவனுக்குப் பின் முடிசூடியரசு புரிந்தவர் கோச்செங்கட் சோழரென்பது, கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியத்துப் பதினேழாம் பதினெட்டாஞ் செய்யுள்களாற் பெறப்படும். கோச்செங்கட் சோழருடைய பெருமைகளைச் சம்பந்தரும் நாவுக்கரசரும் தத்தமது தேவாரத்திலே எடுத்துக்கூறலால் இருவருக்கும் இச்சோழர் சமீபகாலத்தவரென்பது நன்கு துணியப்படும்.

இரண்டாயிரத்தெண்ணுறு வருஷங்களுக்குமுன்னே விளங்கிய சங்கராசாரியர் தாம் செய்த சௌந்தரியலகரியிலே சம்பந்தரை எடுத்துத் துதித்தலாலே சம்பந்தர் அவருக்கு முன்னுள்ளவரென்பது பிரத்திசஷம். இதுவும் அவர் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளவரென்பதற் கோராதாரமாகும்.

சந்துசேனன், இந்துசேனன், தருமசேனன், கந்துசேனன், கனகசேனன் முதலியோர் சம்பந்தர் காலத்து விளங்கிய சமணாசாரியர்கள் என்பது அவருடைய தேவாரத்தாற் பெறப்படும். அவர்கள் பெயர்கள் இரண்டாயிரத்தைஞ் நூறுவருஷங்களுக்குட்பட்ட சமண சரித்திரங்களிலே கேட்கப்படாமையின் அவ்வாசாரியர்கள் முற்பட்டவர்களேயாதல் வேண்டும். ஆகவே சம்பந்தரும் முற்பட்டவரேயாதல் வேண்டும்.

திருமங்கையாழ்வார் தாம் பாடியருளிய பெரிய திருமொழியிலே கோச்செங்கட்சோழரைப் புகழ்ந்து கூறுதலாலும், நாலாயிரப் பிரபந்தத்திலே திருமங்கையாழ்வார் கலியுகம் நானூற்றறுபதின் மேலதாகிய துன்மதி வருஷத்துக் கார்த்திகை மாதத்திலே திருவவதாரஞ்செய்தாரெனக் கூறப்படுதலாலும், திருஞானசம்பந்தரை அவ்வாழ்வார் கண்டபோது,

||வருக்கைநறுங்கனிசிதறிச்செந்தேன் பொங்கி மடுக்கரையிற்குளக்கரையின் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலஞ் செய்யுங்காழிப் பிள்ளையார் சம்பந்தப் பெருமான் கேளீர்.
ஆருட்குலவுமயிலைதனிலனலால் வெந்த வங்கத்தைப்பூம்பாவையாக் கினோமென்.
றிருக்குமது தகவன்று நிலவால் வெந்த விவளையுமோர் பெண்ணாக் கலியல்புதானே||

என்னும் பாடலைச் சொற்றனரெனறொரு கர்ணபரம்பரைக் கதையுண்மையாலும், திருஞானசம்பந்தரைப்போலவே திருமங்கையாழ்வாரும் சமணசமயகண்டனஞ் செய்து வைதிகசமயஸ்தாபனஞ் செய்யத் திருவவதாரஞ் செய்தாரெனக் கூறப்படுவதாலும், திருமொழியிலே கூறப்படும் பல்லவன்முதலிய அரசர்கள் தேவாரத்திலுங் கூறப்படுதலாலும், இருவருமே காலத்தவர்களென்பதற் கையமில்லை. இதனாலும், திருஞானசம்பந்தர் நாலாயிரம்வருஷங்களுக்கு முன்னுள்ளவரென்பது நன்கு நாட்டப்பட்ட தாயிற்று.

இனித்திருஞானசம்பந்தராலே சுரநோய் தீர்த்தருளப்பட்ட கூன்பாண்டியன் காலத்தை நிச்சயிப்பாம். கூன்பாண்டியன் மு-த்திருமாறனெனவும்படுவன், அவன் இடைச்சங்கத்திறுதியிலும் கடைச்சங்கத்துக் தொடக்கத்திலுமிருந்தவ னென்பது ||வடுவறுகாட்சிநடுவட்சங்கத்து... ... ... ... வெண்டேர்ச்செழியன் முதலா விறல்கெழு, திண்டேர்க்கொற்ற முடத்திருமாறன|| எனவும், ||பருங்கடைச் சங்க மிருந்தோர் யாரெனில் ... ... ... ... இடர்ப்படாதிவர்களைச் சங்கமிரீஇயினார், முடத்திருமாறன் முதலாவுக்கிரப்-பெருமாவமுதியீறாப் பிறங்கு பாண்டியர்கள்|| எனவும் வரும ஆன்றோராசிரியப்பாக் கூற்றாற் பெறப்படும். கூன்பாண்டியன் முதல் உக்கிரப் பெருவழுதி யீறாகச் சென்றகாலம், “எண்ணுற்கேள் வியரிந்ததாயிரத்துத்- தொளாயிரத்தைம்பது வருடமென்ப” என மேலே கூறப்பட்ட ஆசிரியப்பாவினுள்ளே வருவதனால் ஆயிரத்து தொளாயிரத் தைம்பது வருஷங்களென்பது வெளிப்படை. உக்கிரப்பெருவழுதி முதலதுலுக்கரால் வெல்லப்பட்ட பராக்கிரமபாண்யெனீறாக நாற்பத்து நான்குபாண்டியர் வழிவழியரசுபுரிந்தனர். ஓருபாண்டியனுக்குப் முப்பது வருஷமாகும். பராக்கிரம பாண்டியனைத் துலக்கர்வென்று அரசுகைக்கொண்டது இன்றைக்கு எண்ணுறுவருஷங்களுக்கு முன்னரென்பது இந்திய சரித்திரத்தாரினிது விளங்கும். இம் மூன்றுதொகையும் நாலாயிரத்தெழுபதாம், ஆகவே கூன்பாண்டியன்காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ள தென்பது நன்றாகத் துணியப்படும்.

இனித் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய்மலர்ந்தருளிய தேவாரப் பாக்களினது இயல்பாலும் அவருடைய காலத்தை அவருடைய காலத்தை நிச்சயிப்பாம்.

இக்காலத்தில் இயற்றமிளொன்றுமே வழங்கிவருகின்றது. இரண்டாயிரம் வருஷங்களுக்குமுன்னேயுள்ள கடைச்சங்ககாலத்திலே இயல் இசை நாடகமென்னு முத்தமிழும் வழங்கி வந்தனவென்பது கடைச்சங்கத்து நூல் களால் நிச்சயிக்கப்படும். ஆயினும், இடைச்சங்ககாலத்தில் வழங்கிவந்த அத்தணையாகக் கடைச்சங்ககாலத்தில் இசைத்தமிழ்வழங்கியதன்று. இற்றைக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னிருந்த சிலப்பதிகாரவுரையாசிரியரும் தம்முடைய காலத்துக்கு முன்னே இசைநூலும் நாடகநூலும் அழிந் தொழிந்தன வென்பர்.

இசைத்தமிழிலக்கணநூல்களும் இலக்கியங்களும் இடைச்சங்க காலத்திலேயேமலிந்துகிடந்தன. அவ்விடைச்சங்கத்து இயற்றமிழ் நூல்களுள்ளே தொல்காப்பியம் ஒன்றுமே இன்றுவரையும் நின்று நிலவுகின்றது. மற்றை இயற்றமிழ் இசைத்தமிழ் நூல்களெல்லாம், சில கடைச்சங்க காலத்திலும், பல அதற்கு முன்னுமாக அழிந்தொழிந்தன.

திருஞானசம்பந்தர் செய்தருளிய தேவாரங்களுள்ளே சிலபாக்கள் இயற்றமிழ்யாப்பின் வேறுபடுவன. அவற்றுட் சிலவற்றை இயற்றமிழ்யாப்பிலே அடக்;குவதுகூடுமாயினும், யாழ்முரி முதலிய சிலவற்றை அடக்குதல் கூடாது. இலக்கண வரம்பு கடந்தனவோவெனில் அன்னவுமன்று. பின்னர் அவைகளுக்கு இலக்கண நூல் யாதெனில் அவை இசையிலக்கண நூலமைதி யுடையனவெனக் கொள்ளல்வேண்டும். அவை தேவபாணியாகவோவெனில் அவை தேவபாணிக்கினமாவதன்றி அதுவாகா. தேவபாணி இயற்றமிழுக் குரியது. தேவாரம் இசை தத்தமிழுக் குரியது என்பது சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதை யுரையிலே “இசைத் தமிழின் வருங்கால் முகநிலை கொச்சகம் முரியென்ப” என வருவதனானும் பிறவற்றாலும் பெறப்படும்.

தேவபாணியைப் பண்ணிசை யறியாதாருமோதுவர். தேவாரத்தைப் பண்ணிசையறியாதாரோதல் கூடாது. ஆதலின் தேவாரம் இசை நுணுக்க முதலிய லிசைத் தமிழிலக்கணத்துக் கியையப்பாடியருளப்பட்டதாம்.

இனி, அத்தேவாரம் எக்காலத்திற் செய்யப்பட்டதென நிதானிப்பாம். கடைச் சங்கத்தார் தமிழாராந்தது அகத்தியமும் தொல்காப்பியமுங் கொண்டேயாம். இடைச்சங்கத்தார் தமிழாராய்ந்தது அகத்தியம் தொல்காப்பியம் மாபுராணம் பூதபுராணம் இசை நுணக்கமென்னும் நூல்களைக்கொண்டேயாம். இவ்வுண்மை இறையனா ரகப்பொருளுரையாலும், மேலே சுட்டிய ஆசிரியப்பாவினுள்ளே, “அந்நாளிலக்கண மகத்தியமதனொடு பின்னாட்செய்தபிறங்கு தொல்காப்பியம் ... ... ... என வருவதனாலும், வல்லிதினுணர்ந்த நல்லிசை நுணக்கமும்” என வருவதனாலும் நன்கு வளங்கும்.

ஆகவே, இசைத்தமிழிலக்கணம் கடைச்சங்கத்தார்க்குக் கருவி நூலாக விருந்ததில்லையென்பதும் நிச்சயமாயின. இடைச்சங்கத்திறுதியிலும் கடைச்சங்கத்துத் தொடக்கத்திலுமிருந்த கூன்பாண்டியன் காலத்தைக் கூறவே, இடைச்சங்க மொழிந்த காலமும் இசைத்தமிழிலக்கணம் ஆட்சியிலிருந் தொழிந்தகாலமும் தாமேபெறப்படும். கூன்பாண்டியன் காலம் நாலாயிரம் வருஷ ங்களுக்கு முன்னுள்ளதென்பது மேலே காட்டினாம். ஆதலின் அத்தேவாரம் செய்தருளப்பட்ட காலமும் அதுவே யாமென்பது நன்றாகத் துணியப்படும். இதனாலும் திருஞானசம்பந்தர்காலம் நாலாயிரமவருஷங்களுக்கு முன்னுள்ளதென்பது நிச்சந்தேகமாம்.

இனி, சாக்கியர், புத்தர் என்னும் நாமங்கள் கபிலவஸ்துவிலேபிறந்த புத்தருடைய காலமாகிய இரண்டாயிரத்தைஞ்நூறு வருஷங்களுக்குட்பட்டனவேயாகவும், நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சம்பந்தருடைய தேவாரத்திலே எவ்வாறு வந்தனவோவெனில், கௌதமர் ஆதிநாளிலே புத்தர் என்னும் பெயரோடு நாஸ்திக மதத்தைப் போதித்தாரென்றும், விஷ்ணு சிவனுக்குப் புத்திரராகக் கலியுகாரம்பத்திலே யவதரித்துப் புத்தர் என்னும் பெயர்பூண்டு வைதிகமத விரோதமான ஒரு மதத்தை யுலகிற்பரவச் செய்வாரென்றும் முறையே ஸ்காந்தத்திலும் பாகவதத்திலுங் கூறப்படுவதலால், அப்பெயர்கள் கபிலவஸ்துவிலேபிறந்த புத்தரைச் சுட்டியவையல்லவென்க. அவை முன்னுள்ள புத்தசமயிகளைச் சுட்டியனவேயாம்.

கபிலவஸ்துவிலே பிறந்த புத்தர் கௌதமபுத்தரென்றும், சாக்கியபுத்த ரென்றும் அடைகொடுத்து வழங்கப்படுவது கௌதம கோத்திரத்திலே சாக்கியர் குடியிலே பிறந்தமை பற்றியேயாம். அப்பெயர்வழக்குள் தாமே முன்னும் புத்தர்களிருந்தார்களென்பதை நன்குவிளக்கும். இதனாலும் முன்னும் பௌத்தமதம் காலந்தோறும் தோன்றி யழிந்ததென்பது இனிதுபெறப்படும்.

இன்னும், தற்கால புத்த சமயிகளும் தமது புத்தர் முன்னும் பன்முறைகளிலே அவதாரம் பண்ணிப் பௌத்தமதத்தைப் போதித்தாரெனக் கூறுவார்கள். தேவாரத்திலே கௌதமபுத்தர் சாக்கியபுத்தர் என்னும் நாமங்கள் வருதலின்றி, வாளா சாக்கியர், புத்தரென்றே வருதலாலும், சாக்கிய புத்தநாமங்கள் பிந்திய புத்தரது கோத்திரத்தலைவர்க்கேயுரியனவாதலாலும் சம்பந்தர்காலம் கலியுகாரம்பமே யாதலாலும், சம்பந்தர்காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்டதேயாம்.

இன்னேரன்ன பிரபலநியாயங்கள் பலவுளவாகவும் சிலாசாசனங்கொண்டு சிலராற் செய்யப்பட்ட கால நிச்சயங் சிறிதும் அங்கீகார யோக்கியமுடைய தன்று. சேரசோழபாண்டியர்களுடைய பெயர்கள் அவ்வப்பரம்பரையிலுள்ளார் பலர்க்குரியனவாய் வருதலின், ஒருகாலத்திலே ஒரரசனாலே செய்யப்பட்ட சாசனத்தைக் கொண்டு, அவனுக்கு முன்னே நிகழ்ந்த சம்பங்களை அச்சாசன காலத்திலொட்டிக்கால நிச்சயம் பண்ணுதல் சிறிதும் பொருத்த முடையதன்று.

சம்பரன் - இவன் கிருஷ்ணனுக்கு ருக்குமிணியிடத்துப் பிரத்தியுமனன் பிறந்தவுடனே அச் சிசுவைத் திருடிப்போய்ச் சமுத்திரத்திலிட்டவன். இட்டவுடனே அச்சிசுவை ஒரு மகரமெடுத்து விழுங்கியது. இம்மகரம் சிலதினத்திலொருவலைஞன் கையிலகப்பட்டது. அம்மகரத்தை வலைஞன் கொண்டுபோய்ச் சம்பரனிடம் கொடுக்க அவனதையேற்றுத் தன்மனைவி மாயாவதியிடங்கொடுத்தான். அவள் அதனைக் கறிசெய்யுமாறு வகிர்ந்தபோது அதிருபமுடைய ஒரு சிசு அதனுள்ளே யிருப்பதைக் எடுத்து வளர்த்தாள். வளர்த்தபின்னர்ச் சம்பரன்தான் தன்னைக் கடலிலிட்டவனெனவுணர்ந்து அவனைக்கொன்றுமாயாவதியோடு தந்தைவீடு சேர்ந்தான். பிரத்தியுமனன் மன்மத அம்சமாதலின் மன்மதனுக்குமிவனுக்கும் சம்பராரியென்னும் பெயருண்டாவதாயிற்று.

சம்பவாசுவன் - பரிகிணாசுவன்.

சம்பன் - (1) அரிதன்புத்திரன். சுதேவன்தந்தை. (2) புருதுலாடின் புத்திரன். இவன் பம்பாநகரத்தை நிருமித்தவன்.

சம்பாதி - அநூரன் மூத்த மகன் இவன் தாய் சியேனி. இவன் தம்பி பிஜடாயு. சுபார்சுவன் இவன் மகன். சம்பாதி ஜடாயுக்களிருவரும் படிp ரூபராய்ப்பிறந்து சூரியமண்டலம்வரையும் பறந்து இறகுகரிந்துவீழ்ந்து பின்னர்ச் சம்பாதி கடலோரத்திலும் சடாயுதண்டகாரணியத்திலு மிருக்கும் போது, ராவணன் சீதையைக் கொண்டு போகக்கண்ட சடாயு ராவணனைத் தடுத்துப்போர்புரிந்துயிர்துறக்கச் சம்பாதி சீதையிருக்குமிடத்தை அநுமானுக்குணர்த்தி இமயஞ் சேர்ந்தான். (2) (ரா) மாலிபுத்திரன். விபீஷணன் மந்திரி.


சம்பாநகரம் அங்கதேசத் தரசனாகிய
சம்பை சம்பனால்நிருபிமிக்கப்பட்ட அங்கதேச ராஜதானி.

சம்பிரீதி - சமன்பாரி.

சம்பு - (1) சிவன் (2) துருவன்மனைவி

சம்புகேசுவரர் - திருஆனைக்காவிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்.

சம்பூதி (1) சுமணன். (2) திருதன்வன்

சம்மியன் - யாகத்திலே முதல் அவிப்பாகத்துக்குரியவனாகிய அக்கினி. இவன் பிருகஸ்பதி புத்திரன். இவன் பாரி சக்தியை.

சம்யமனி - யமன் ராஜாதானி.

சம்யாதி - (1) நகுஷன் புத்திரன். யயாதி தம்பி. (2) (பு) சரியாதி.

சம்வருணன் - (1) அஜமீடன் புத்திரருளொருவன். இவன் சூரியன் மகளாகியதபதியை மணம்புரிந்து குருவைப்பெற்றவன். (2) (பு) இருடின் புத்திரன்.

சம்வர்த்தன் - அங்கிராசன் புத்திரன். பிருகஸ்பதி தம்பி. உதத்தியனெனவும் படுவன்.

சம்ஹதாசுவன் - பரிகிணாசுவான்.

சம்ஹராதி - (ரா) சுமாலிபுத்திரன்.

சம்ஹலாதன் - (தி) பிரஹலாதன் தம்பி.

சம்ஸ்கிருதம் - சுத்திபண்ணப்பட்ட பூரணபாஷை என்பது தாற்பரியம். தேவ பாஷை, வடமொழி, ஆரியம், ஆதி பாஷை, கீர்வாணம் என்பன பரியாயப்பெயர்கள். சமஸ்கிருதம் ஆரியரது ஆதிபாஷை. அது இன்னகாலத்திலே தோன்றியதென்றும், இத்தனையுகங்களாக வழங்கப்பட்டுவருவதென்றும் துணிதற்கறிவு மனுஷரிடத்தில்லை. பூர்வகாலவெல்லை கூறவேண்டுமாயின் உலகந் தோன்றிய நாட்டோன்றிய தெனலே அதற்குபாயமாம். அஃது ஆதியிலே இச்சம்புத்தீவு முழுதுக்கும் பாஷையாகவிருந்ததென்பது, அதனிடத்தேயுள்ள தேசங்கடோறு மிந்நாள் வழங்கும் பாஷைகளிலே சமஸ்கிருதச் சொற்கள் விரவிக் கிடத்தலால் அநுமிக்கப்படும். காலாந்தரத்திலே அஃது உத்தரத்திலே இமயமும், தசஷிணத்திலேவிந்தமும், கிழக்கே கடலும், மேற்கேகடலோடுமிலே ச்சநாடு மெல்லையாகவுடைய ஆரியதேசத்திலே வழங்கிய பாஷையாயிற்று. பிந்திய காலாந்தரத்திலே பிராகிருதங்களே அத்தேசபாஷைகளாக அஃது அருகுவதாயிற்று. அருகியும் அதுவே நூற்பாஷையாகி அன்றுமுத லின்றுகாறும் நின்று நிலவிவருகின்றது. அது நூற்பாஷையாயின்மை பற்றியே அதற்குக் கிரந்தமென்னும் பெயருமொன் றுண்டாவதாயிற்;று. சகல வேத புராணேதிகாச சாஸ்திரங்களெல்லாம் அப்பாஷையிலேயேயுள்ளன.

சம்ஸ்கிருதபாஷைக்கு முதல் இலக்கணம் வகுத்தளியவர் சிவபெருமான். அது மகேசுர சூத்திரமெனப்படும். அம் முதனூலை ஆதாரமாகக் கொண்டு பிருகஸ்பதி பகவான் “சத்தபாராயணம்” என்னுமிலக்கணத்தைச் செய்தார். அதனைக்கொண்டு இந்திரன் “ ஐந்திரம்” என்னு மிலக்கணத்தைச் செய்தான். அவற்றை யெல்லாங்கொண்டு காச்சியபம் காலவம் கார்க்கிய முதலிய வியாகரணங்கள் இருஷிகளாற் செய்யப்பட்டன. அதன்பின்னர்ப் பாணினி முனிவர் மகேசுரசூத்திரம் பதினான்கையுங் கொண்டு “பாணினீயம்” என்னும் வியாகரணத்தைச் செய்தருளினர். அதுபோலும் பூரணமும் நுட்பமுமமைந்த வியாகரணம் உலகத்திலே மற்றெப்பாஷைக்குமில்லை. (இக் கருத்து ஐரோப்பியபண்டிதர்க்குமுடன் பாடேயாம்)

தம்மைச்சூழ்ந்து நின்ற இருஷிகணங்கள் அவரவர்கள் பக்குவத்துக்கேற்பப் பொருளைக் கிரகித்துக் கொள்ளுமாறு சிவபிரான் தமது தமருகத்தைப் பதினான்கு முறையடித்தனர். அப்பதினான்கு முறையிலுமெழுந்த வொலிகள் பதினான்கு சூத்திரங்களாயின. வியாகரணம் நாடிய விருஷிகள் அச்சூத்திரங்களை வியாகரணமூலமாகக் கொண்டார்கள். தத்துவப் பொருளைநாடினோர் தத்துவங்களாகக் கொண்டார்கள். அச் சூத்திரங்களுக்குத் தத்துவ முகமாக வியாக்கியானஞ் செய்தவர். உபமனினியுமுனிவர். அது நிற்க, “அ இ உண்” என்பது முதற்சூத்திரம். அதிலே ணகாரம் அநுபந்தம். மற்றையமூன்றும் அடிரங்கள். இப்படியே மற்றைய சூத்திரங்களுமொவ்வோரநுபந்த முடையன. தமருகமென்பது ஒலியினது புருஷருபமும் சக்திருபமுங் கூடிய வடிவு. ஓலியினது புருஷருபம் சூடி_மப் சலிக்கச் சத்திருபமாகிய விந்து. அதன் சததிருபம் ஸ்தூலப் பிரணவருபமாகிய நாதம். புருஷவடிவு@ மற்றது சக்திவடிவு. சக்திவடிவப்பக்கம் கயிற்றுப்பக்கம். மனுஷருடைய கண்டமும், செவியும் உள்ளும்புறமும் தமருகத்தினது வடிவேயுடையன. சுத்தசாஸ்திரதினது நுட்பங்களெல்லாம் நன்குணர்ந்தார்க்கு இது பேரற்புதருபமாயிருக்கும். சர்வ பூதங்களுக்கும் ஆதாரமாயும் பரையிடத்திலே தோன்றுவதாயும் எல்லா எழுத்துக்குங் காரணமாயுமிருத்தலின் அகரம் அத்துடியினிடத்து முதற்றோன்று வதாயிற்று. இவற்றின் விரிவெல்லாம் மகேசுவரசூத்திர மென்பதனுட் காண்க.

சம்ஸ்கிருதபாஷையிலுள்ள அதிப்புராதன நூல் வேதம். அஃது இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்குபாற்படும். வேதம் அநாதியென்பாரும் ஆதியென்பாருமாக ஆசிரியர் இருதிறப்படுவர். ஓருவர் பொருளையும் மற்றவர் நூலையும் நோக்;கி அங்ஙனங் கூறுபவாதலின் இருவர் கருத்தும் தம்முண் மாறுகொண்டன வல்ல. வேதபாஷையினது கதியும் மற்றைய சாஸ்திரபாஷையினது கதியும் வேறுபடுதலின் சம்ஸ்கிருதபாஷை, வைதிகபாஷையெனவும் லௌகிகபாஷை யெனவும் இருபாற்படும். பாணனீயம் இருபாஷைக்கும் இலக்கணமாம் பாணினீயம் அஷ்டாத்தியாயி என்பன வொருபொருட்கிளவி. சமஸ்கிருத பாஷையை யுற்றுநோக்குமிடத்து அஃது ஒரு தொகைப்பட்ட தாதுக்களாலாகிய பாஷையென்பது வெளிப்படையாம். ஓரு தாது எண்ணிறந்த பதங்களுக்கு மூலமாகும். தூதுக்களினது பொருளுணர்ச்சி யிருக்குமாயின் எப்பதங்களுக்கும் பொருள் எளிதிலே புலப்படும். முற்றறிவுடையோர், உலகத்திலேயுள்ள பொருளெல்லாம் குணப்பண்பும்; தொழிற்பண்புமென விருவகைச்சிறப்பியல்புடையனவாதலின் குணங்களையும் தொழில்களையுமுணர்த்தற்குப் போதிய குறியீட்டுச்சொற்களை யாக்கிக்கொள்ளுமிடத்துப் பொருளெல்லாவற்;றையும் மிகவெளிதிலே பெயரிட்டு வழங்குதல்கூடுமென்பது கருதியே சொற்களுக்கு வித்தாகிய தாதுக்களை வகுத்துவைத்துப்போயினர். எப்பாஷைக்கும் சொற்பஞ்சமுண்டு. சம்ஸ்கிருதபாஷைக்கோ உலவாக்கிழியாகிய தாதுக்களிருத்தலால் எஞ்ஞான்றும் சொற்பஞ்சம்வருவதில்லை. அதுமற்றைய பாஷைகளுக்கெல்லாம் சொல்லுதவியும் புரிந்துவருதலினால் புரிந்து வருதலினால் இரவலர்க்கீந் துவக்கும் வற்றாத செல்வப்பிரபுவை நிகர்த்து நிற்பதொரு பாஷாதிலகமாம்.
முன்னர்க்காலத்திலே ஒருவராலுங் கருதப்படாத வொருவிஷயத்தின் மேலோருநூல் செய்தேனெனக் கூறி ஒரு மகா பண்டிதன் எக்காலத்திலும் வெளிவாராவகை மாந்தர் மனதுக்குக் கோசரமாகத்தக்கவிஷயங்கள் ஒன்றுந் தவறாமலெல்லாம்மெடுத்து வியவகரித்து நூல்களிலே அமைக்கப்பட்டனவென்றால் சம்ஸ்கிருதபாஷையிலே இல்லாத நூலொன்று கூறற்கு யாதொன்றுங் காண்கிலம்.

சம்ஸ்கிருதபாதபாஷையை வளர்த்தவர்கள் பூர்வத்திலே மகாவிருஷிகளும், மத்தியகாலத்திலே அரசரும் இருஷிகளும், பின்னர்நாளிலே அரசரும் பண்டிதருமாவர்.

சம்ஸ்கிருதபாஷையிலுள்ள வித்தைகள் வேதம், வேதாங்கம், மீமாஞ்சை, தர்மசாஸ்திரம், புராணம், தருக்கம் என்பவற்றுள் ஒருவாறடங்குமாயினும், வேதபாஷியம், வியாக்கியானம், பிராமணம், ஆரணியகம், உபநிஷ்தம், சிசைஷ, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிஷம், கற்பம், பிரயோகம், பூர்வ மீமாஞ்சை, வேதாந்தம், அத்துவைதவேதாந்தம், சைவ வேதாந்தம், காணபத்தியம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சாங்கியம், யோகம், தருக்கம், ஸ்மிருதி, ஆசாரம், கால நிர்ணயம், தானம், பிரயோகம், பிராயச்சித்தம், வியவகாரம், சிராத்தம், நீதி, நிகண்டு, அலங்காரம், பரதம், சங்கீதம், இதிகாசம், சங்கிதை, ஸ்தோத்திரம், கீதை, மஹாத்மியம், காவியம், சம்பு, கதை, சரித்திரம், நாடகம், கணிதம், பூகோளசாஸ்திரம், சிற்பம், சாமுத்திகம், வைத்தியம், ரசாயனம், அர்த்தசாஸ்திரம், காம சாஸ்திரம் யுததசாஸ்திர முதலிய பாகுபாடுகளையுடையன. தர்க்க சாஸ்திரத்தில் மாத்திரம் ஆயிரத்தின் மேற்பட்ட நூல்களுளவென்றால் மற்றைய பாகுபாடுகள் ஒவ்வொன்றினுக்குந் தொகை எவ்வளவாதல்வேண்டும்! இத்துணைப் பரந்த சாஸ்திரபேதங்களை யுடைய பாஷை உலகில் மற்றியாது தானுளது. அதிலுள்ள நூற்கடலைக் கணக்கிடற்கே ஓராயுட் காலம் வேண்டப் படுமென்றால் முற்றக் கற்றல் அசாத்தியமேயாம்.

சமஸ்கிருதபாஷையிலேயுள்ள அடிரங்கள் இனிமை, வீரம், கோபம், சோகம், அச்சம், அதிசயம் முதலியவற்றைத் தரத்தக்க இசைகளை இயல்பாகவுடையன. அதிலேயுள்ள நூல்களோ சிங்கார முதலிய நவரசங்களும் பொழிவன. உலகத்துக்குச் சமயவறிவைக் கொடுத்ததும், நாகரிகத்தைத் தத்தம்பண்ணியதும், போகத்துக்கு வழிகாட்டியதும், சொல் வறுமையுறாது சொற்றானஞ் செய்து வருவதும், தன்னை விரும்பிக் கற்பவரைச் சாதிநோக்காது பெரியோராக்கிப் பெரும்புகழ் கொடுத்து உலகம் கைகூப்பிவணங்குமாறு உந்நத நிலையில் நிறுத்துவதும் சம்ஸ்கிருத பாஷையேயென்றால் அதன் பெருமை இச் சிறுநூலினுள்ளே இச் சிறிய விடத்தினுள்ளே இச்சிறியேன் கூறவடங்குவதெங்ஙனம்!

சயந்தம் - ஒருநாடகத் தமிழ்நூல். அஃது அடியார்க்கு நல்லார் காலத்திலிறந் தொழிந்தது.

சரசுவதி - (1) பிரமாவினது பாரி. பிரமாவினாற் சிருஷ்டிக்கப்பட்டு அவருக்கே தேவியாயினவர். இவர் வித்தைக்கதிதேவதை. ஜனங்களாலே சரற்காலத்திலே பூசிக்கப்படுவதலாலே சாரதாதேவி யெனப்படுவர். இவர் ஓரஸ்தத்திலே அடிமாலையும் ஓரஸ்தத்திலே கிளியும் ஓரஸ்தத்திலே கமலமும் ஓரஸ்தத்திலே புஸ்தகமுமாக நான்கு கைகளையுடையர். இவர்க்கு வேதம் நான்கும் கைகளென்றும், உபநிஷதம் சிரமென்றும் பிரமவித்தை முகமென்றும், இலக்கணமும் கணிதமும் கண்களென்றும், சங்கீதசாகித்தியங்கள் ஸ்தானங்களென்றும், ஸ்மிருதி வயிறென்றும், புராணேதிகாசங்கள் பாதங்களென்றும், ஓங்காரம் யாழென்றும் கூறப்படும். சரஸ்வதி காயத்திரி, சாவித்திரி முதலியநாமங்களும் பெறுவர். ஓரு யாகத்திலே சரசுவதிவரத்தாழ்த்தமை பற்றி இடைக்குலக்கன்னியாகிய காயத்திரியைப் பிரமா இரண்டாம் பாரியாகக் கொண்டனரென்றும், அதுகாரணமாகத் தேவரெல்லோரும் சரசுவதியாற் சபிக்கப்பட்டாரென்றும் ஒருவரலாறுளது. வேதசாரமாகிய காயத்திரி சூத்திரமே கன்னிகையாகரூபகாரம் பண்ணப்பட்டது. அதனை அந்தணர்கள் உதயாஸ்தமன காலங்களிலே தவறாதோதிவருங் கடப்பாடுடையவர்கள். அக்காயத்திரி யிலேயுள்ள பர்க்கநாமஞ் சிவனுக்குரிய தாயினும் விஷ்ணுவுக்குஞ் சொல்லுதலின் சைவவைஷ்ணவர் கூறுவார்கள். வேதம் பசுவாகவும், அதன் சாரத்தைப் பாலாகவும், அச்சாரத்தைக் கவர்ந்தடக்கி யிருப்பது காயத்திரி சூத்திரமாதலின் அதனை இடைக்குலக் கன்ணிகை யாகவும் உருவகித்தனர். போலும். (2) அந்திசாரன் பாரி. (3) ஒரு நதி.

சரத்துவந்தன் - சதாநந்தன் புத்திரனாகிய சத்தியதிருதி.

சரபங்கன் - தண்டகாரணியத்திருந்த ஒரு மகாவிருஷி. இந்திராதிதேவர்கள்தாமே தண்டகாரணியத்துக்கு வந்துபசரித்துச் சுவர்க்கத்துக்குக் கொண்டுபோகப் பெற்றவர். ஸ்ரீராமர் தண்டகாரணியஞ் சென்ற போது இவரைத் தரிசித்தனர்.

சரபன் - சுக்கிரீவன் சேனாநாயகரு ளொருவன் இவ்வாநரன் பர்ச்சன்னிய னுக்குப் பிறந்தவன்.

சரபோஜி - தஞ்சாவூரில் அரசுசெய்திருந்த மகாராஷ்டிர அரசருள் ஒருவன். இவ்வரசனே சோழநாட்டிலுள்ள விஷ்ணுவாலயங்கள் சிவாலயங்க ளெல்லாவற்றையும் புதுக்குவித்து நித்திய நைமித்தியங்களின் பொருட்டு விளைநிலங்கள் தானம்பண்ணினவன். சோழநாட்டிற் பலவித நாகரிகங்களுக்கும் காரணகர்த்தனிவனே. இவன்காலத்தில் கைத்தொழில்களும் பலவிதவித்தைகளும் அபிவிருத்தியாயின. இவன்காலம் இற்றைக்கு நானூற்றெழுபது வருஷங்களுக்கு முன்னுள்ளது இப்பெயர் கொண்ட அரசர் பலர்.

சரமை - விபீஷணன் பாரி. இவள் சைலூஷன் என்னும் கந்தருவன் புத்திரி. இவள்மகள் திரிசடை. இச்சரமையே ராவண ராமயுத்தத்திலே நிகழ்ந்தவை களையெல்லாம் அவ்வப்போது சீதைக்கு அறிவுறுத்தி வந்தவள்.

சரயுநதி - இந்நதி அபோத்திக்கு வடமேற்றிசையிலே பாய்வது. (இஃதிப்போது கோக்கிராவென வழங்கப்படுகின்றது)

சரராமமுதலி - சடையப்ப முதலித்தம்பி. இவரும் கம்பரால் ராமயணத்திற் புகழ்ந்து பாடப்பட்டவர். இவர் மகா அன்னதாதாவும் தமிழ்க் கலை வினோதருமாக விளங்கியவர்.

சரவணபவன் - குமாரக்கடவுள்.

சரியன் - நரிஷியந்தன் வமிசத்தோரரசன்.

சரியாதி - (1) வைவசுவதமனு புத்திரருளொருவன். இவன் இடி{வாகு தம்பி. இவனுக்கு உத்தானபருகி, அனர்த்தன், பூரிசேனன் என மூவர் புத்திரருங் சுகன்னிகையென ஒரு புத்திரியும் பிறந்தார்கள். (2) (பு) சம்யாதி.

சரை - பார்வதி.

சர்ப்பபுரேசர் - திருப் பாதளீச்சரத்திலே கோயில் கொண்டிருக்குஞ்சுவாமிபெயர்.

சர்மணவதி - விந்தியபர்வத்திலுற் பத்தியாகி உத்தரஞ் சென்று யமுனையிற் கலக்குநதி.

சர்மிஷ்டை - யயாதி யிரண்டாம் பாரி. விருஷபர்வன்மகள்.

சர்வகாமன் - (இடி_) இருதபர்னன் புத்திரன். சுதாசன் தந்தை.

சர்வங்கஷம் - மாகவியாக்கியானம்.

சர்வதேஜசு - லியுஷ்டி புத்திரன். இவன் தாய்புஷ்கரிணி. ஆகூதி இவனுக்குப் பாரி. சுடி_ர்மனு இவனுக்குப் புத்திரன்.

சர்வபதி - பட்டிகாவியத்துக்குமல்லி நாதர் செய்த வியாக்கியானம்.

சர்வர்த்தி - வற்சரன்பாரி. புஷ்பார்ணன் தாய்.

சர்வன் - (1) அஷ்டமூர்த்திகளு ளொருவன். (2) சிவன்.

சலந்தரன் இவ்வரசுரன் மனைவி மிக்க
ஜலந்தரன் ருபதி. அவளைச் சேருதல் வேண்டுமென்று சமயம் பார்த்திருந்த விஷ்ணு சலந்தரன் இறந்துவிட அவன் சரீரத்திலே பிரவேசித்து அவளைப் பலநாட் புணர்ந்து பின்பு அவளுக்கது புலனாயபோது அவளாலே சபிக்கப்பட்டு வருந்தினார். சலந்தரன் கங்கை வயிற்றிற் சமுத்திரராஜனுக்குப் பிறந்த புத்திரன். இவன்சைசவப்பருவத்திலேயே தன்கைக்ககப்பட்ட பிரமாவைக் கழுத்திற்பிடித்து வருத்திப் பின்விடுத்த பராக்கிரமசாலி. விஷ்ணு முதலிய தேவரெல்லோரும் தோற்றோடிவிடச் சிவனாற் சங்கரிக்கப்பட்டவன். மனைவி பெயர் பிருந்தை. இவளைத் தகனஞ்செய்த விடம் பிருந்தாவன மெனப்படும். அது விஷ்ணு ஸ்தலங்களுளொன்று.

சலன் - பரீசஷித்துவுக்குச் சசொபை யிடத்துப் பிறந்தபுத்திரன். இவன் வாமதேவவிருஷியினது திரையைக் கவர்ந்து கொண்டு அவர் கேட்டவிடத்துங் கொடாது மறுத்தமையால் அவர் கோபாவேசராகி இவனையும் இவன்தம்பி தலனையும் கொன்றொழித்தார். (2) பலன் புத்திரன்.

சல்லியன் - மத்திரதேசத்தரசன். நகுலசகதேவருக்குத் தாய்மாமன். மாத்திரி சகோதரன். பகையரசர்க்குச் சல்லியன் போன்றானாதலின் சல்லியனெனப் பெயர் பெற்றான். இவன் பாரதயுத்தத்திலே கன்னனுக்குச் சாரதியாயிருந்து தருமராசனாற் கொல்லப் பட்டவன். (2) சோமதத்தன் புத்திரன் (3) (த) விப்பிரசித்தி புத்திரன்.

சவனன் - பிரியவிரதன் புத்திரருள் ஒருவன். புஷ்கரதீவைத் தன் பங்காகப் பெற்றவன். இவன் புத்திரர் இருவர்.

சவுதாசன் - கன்மாஷபாதன்.

சவுந்தரநாயகி - (1) திருவியலூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். (2) திருஅன்பிலாலத்துறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். (3) திருக்கொள்ளம்பூதூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். (4) திருஅழுந்தூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். (5) திருக்கடுக் குளத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார்பெயர்.

சவுந்தரநாயகியம்மை - திரு அவணிவணல்லூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார்பெயர்.

சவுந்தரேசர் - திருப்பனை யூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சஹதேவன் (1) சுதாசன் புத்திரன்.
சஹாதேவன் சோமகன் தந்தை. (2) பாண்டுவுக்கு அசுவினிதேவர் பிரசாதத்தால் மாத்திரிவயிற்றில் பிறந்தவன். இவன் மனைவி விஜயை. சுகோத்திரன் இவன் புத்திரன். (3) ஜராசந்தன் புத்திரன்

சஹஸ்திரஜித்து - (1) யதுவினது மூத்தமகன். (2) (ப) பஜமானன் புத்திரருளொருவன்.

சஹஸ்திரபாதன் - ககமுகன் சகாத்தியாயன். இவன் பரிகாரமாகத் தனது சகாத்தியாயன்மீது ஒரு பாம்பையெறிய அவன் கோபித்து இவனை டுண்டுபமென்னுஞ் சர்ப்பாமாகும் படி சபிக்க அவ்வாறிருந்து உருரன் தரிசனத்தால் விமோசனம் பெற்றவன்.

சஹியம் கொங்கண நாட்டுக்குக் கீழ்
சையகிரி பாலிலுள்ள மலை. இதினின்றுமே காவிரியெழுவது.

சற்குணநாதர் - திரு இடும்பாவனத்திலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சனகன் - ஜனகன் காண்க.

சனற்குமாரசங்கிதை - ஒரு சங்கிதை.

சனற்குமாரம் - உபபுராணங்களுளொன்று

சனற்குமாரன் - பிரமமானச புத்திரருளொருவர். சநந்தனர் சகபாடி. உண்மையுணர் வுதிக்கவேண்டுமென நெடுங்காலந் தவனிருந்து சிவன் பாலருட் பெற்றவா.

சனியூர் - பாரதம் பாடிய வில்லிபுத்தூரர் பிறந்து விளங்கியவூர். அது திருமுனைப்பாடி நாட்டிலேயுள்ளது. ஆட்கொண்டான் என்னும் பிரபுவினது ஊரமிதுவே.

சனி சூரியன் புத்திரன். நவக்கிரகங்
சநீசுவரன் ளுளொருவன். யமன்தம்பி

சனாஜித்து - (ய) ஹேஹபன் பௌத்திரனாகிய குந்திபுத்திரன். சோபஞ்சியெனவும்படுவன்.

சனாதனர் - சனற்குமாரர் சகபாடி.

சன்மிஷ்டை - விருஷபர்வன்மகன்.

சப்தபாராயணம் - பிருகஸ்பதிபகவான் செய்த சம்ஸ்கிருதடிண நூல். அப்பெயரியநூலொன்றிருந்ததென்பது பதஞ்சலி ஆசிரியர் கூற்றால் விளங்குகின்றதன்றி, அஃது இப்போதுள தாகத் தோன்றவில்லை.

சாகடாயனர் - (ரி), இருக்குதந்திரஞ் செய்த முனிவர். இருக்குதந்திரம் சாமவேதலசஷணம்.

சாகரன் - சகரன் காண்க.

சாகர் - சிந்துநதிக்கு மேற்கேயுள்ள சகதேசத்தோர்.

சாகல்லியம் - மத்திரதேசத்திராஜசானி

சாகல்லியன் - (1) (ரி), திருதராஷடிரன் வனவாசஞ்செய்த முனி. (2) (ரி) வேதமித்திரன் சீஷனாகிய சௌபரிபுத்திரன். இவன்தான் ஓதிய இருக்குவெதசாகைகளை ஐந்து வகைப்படுத்தி வாற்சியன், மௌற் கலியன், சாலியன் கோமுகன், சிசிரன் என்னும் சீஷர் ஐவருக்கும் உபதேசித்தான். (3) இருக்குவேதத்தைச் சங்கிதையாக்கியமுனி.

சாகுந்தலம் - காளிதாசன் செய்த சமஸ்கிருத நாடகம். நாடக காவியங்களுள்ளே மிகச் சிறந்ததும் சிங்காரத்தால் மலிந்ததுமாயுள்ளது. இது சகுந்தலைசரித்திரங் கூறுவது.

சாகேதபுரி - அயோத்தி.

சாக்கையன் - பறையூரிலிருந்த வோரந்தணன்.

சாக்கியநாயனார் - திருச்சங்க மங்கையிலே பிறந்து காஞ்சி புரத்தையடைந்து பௌத்தராகி அம் மதத்தை ஆராய்ந்து அதிலே பற்றில்லாமல் சைவ சமயத்தை ஆராய்ந்து அதுவே மெய்ச்சமய மெனக்கொண்டு தாம் கொணட பௌத்தவேஷத்தைத் துறவாது ஒரு சிவலிங்கத்துக்கு நியமமாகக் கல்லெறிந்து வருதலையே அருச்சனை யாகப்பாவித்து முத்தி பெற்றவர்.

சாக்கியமுனி - இடி_வாகு வமிசத்துப் பிருகத்பலன் குலத்துதித்தோன். இவன் கோதமன் புத்திரனாதலிற் கௌதம னெனப்படுவன். இவர்மரபிலேயே புத்தர் அவதாரஞ்செய்தார். அக்காரணம் பற்றியே சாக்கியமுனி சாக்கியசிங்கம் முதலிய நாமங்கள் புத்தருக்கு வருவதாயின. புத்தர் கோதமன் வமிசத்திற் பிறந்தமையாற் கௌதமபுத்த ரெனப் படுவர்.

சாக்தேயர் - சக்தியை வழிபடுவோர். இம்மதஸ்தர்க்கு ஆதாரநூல் வாமதந்திரம். இவர்க்குச்சர்வம் சக்திமயம் என்பது கொள்கை. நான்கு புருஷார்த்தங்களையுந்தர வல்லது. சக்தியேயெனக் கொண்டு வழிபாடு புரிபவர்.

சாடிpநாயகேசுவரர் - திரு அவளிவணல் லூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சாடிpவரதர் - திருப்புறம் பயத்திலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சாடி{ஷின் - ஒருமனு. விசுகர்மாவினது புத்திரன் எனப்பாகவதங்கூறும்.

சாங்காசியபுரி - குசத்துவஜன் இராஜதானி, அஃது இடி_மத்தீரத்தி லுள்ளது.

சாங்கியம் - ஒரு யோகமார்க்கநூல். கேச்சுவரசாங்கியம் நீரீச்சுவரசாங்கியமென அஃதிருபாற்படும். அத்துவைதமதாநுஷ்டானங் கூறுவது கேச்சுவரசாங்கியமாம். கபிலமதஸ்தர்களது சாங்கியம் நிரீச்சுவரசாங்கியமெனப்படும். சண்மதங்களுள்ளே சாகியமும்ஒன்று. கபிலர்செய்தது. இம்மதம் தத்துவங்களை இருபத்தைந்தாக்கி இருபத்தைந்தாந் தத்துவமாகிய புருஷ தத்துவம் மற்றை இருபத்து நான்கையும் பிரித்துணர்ந்து மாயாபந்தத்தினின்றும் நீங்குவதே முத்தியெனச்சாதிப்பது. வேதாந்த மதத்துக்கும் சாங்கியத்துக்குமிடையே யுள்ள வேற்றுமை முன்னையது பரமான்மாவைவிட மற்றொன்றுமில்லை யென்பது, பின்னையது ஆன்மாவும் வேறு மமற்றையத்துவமும் வேறென்பது.

சாங்கியன் - புமானாகிய சுத்தபுருடன் அறியாமையுற்ற போது பிரபஞ்சமெல்லாந் தானென விரிந்து நிற்பனென்றும். வுpவேகஞானம் எய்தியபோது, அவை யெல்லாம் பிரகிருதிக்கேயன்றித் தனக்கில்லையாமென்றுஞ் சொல்பவன். இவன் புறச்சமியிகளுளொருவன்.

சாங்கியாயனன் - இருக்குவேதாத்தியாப கனாகிய ஒரிருஷி.

சாசுவதன் - (இ) இவன் விசுவநந்தன் எனவும் விசுவகன் எனவும்படுவன். பிரதன் புத்திரன்.

சாணக்கியன் - அர்த்தசாஸ்திரமென்னும் ராஜதருமத்தைக் குறித்த நூல் செய்தவொரு பிரபலமந்திரி. இவன் முத்திராராடிச நாடகத்திலே பிரபலமாகவெடுத்துப் பேசப்பட்டவன். இவன் கௌடில்லியன் விஷ்ணுகுப்த்தன் என்னும் நாமங்களும் பெறுவன். சுந்திரகுப்தன் மந்திரி.

சாணூரன் - (ரா) கம்சன் தூதனாய வொருமல்லன். இவன் கம்சன் ஏவலின் வழிக் கிருஷ்ணணைக் கொல்லக் தொடுத்த போரில் உயிர்துறந்தவன்.

சாண்டிலி - ரிடிபர்வதத்திலே தவஞ்செய்த ஒரு பார்ப்பனமாது. (2) பிரசாபதிபாரி. அக்கினிப்பெயருடைய வசுவினது தாய்.

சாண்டில்லியன் - (1) சாண்டில்லிய ஸ்மிருதி செய்த ஒரிருஷி இவர் ஒருகோத்திரத்தலைவர். (2) நந்தன் வமிசத்துச் சந்திரகுப்பதனுக்கு ராச்சியம் வருமாறு செய்த ஓரந்தணன்.

சாதகம் - மழைத்துளியையுண்ணுமொரு பசஷி.

சாத்தனார் - இவர் மணிமேகலை நூல் செய்தவரும். பிறர்செய்யும் நூலின் கணுள்ள பிழைகளைக் கேட்குமிடத்துத் தமது தலையிற்குட்டி நொந்து கொள்ளுமியல்பினாலே சீத்தலைச் சாத்தனாரென்னும் காரணப்பெயர் பெற்றவரும். திருவள்ளுவர் காலத்திலே மதுரைச்சங்கத்திலிருந்த புலவருளொரு வரும் தானியவணிகருமானவர்.

சாத்தன் - தொண்ணுற்றறுவகைச் சமயசாஸ்திரங்களையும் கற்று மகாசாத்திரனென்று பெயர்பெற்ற ஒரு மஹாத்மா.

சாத்தியகி - (ய) சத்தியகன் புத்திரனாகிய யுயதானன்.

சாத்தியர் - கணதேவதைகளுளொரு சாரார். தருமன் புத்திரர். அவர் பன்னிருவர்.

சாத்தியை - தருமன் பாரிகளுளொருத்தி. இவள் புத்திரர்சாத்தியர்.

சாத்துவதன் - (1) விஷ்ணுபரிசரருள் ஒருவன். (2) விதர்ப்பனிரண்டாம் புத்திரனாகிய கிருதன் வமிசத்தொருவன். இவனுக்கு எழுவர் புத்திரர்.

சாத்துவதி - சுரதசிரவைகாண்க.

சாந்தலிங்க சுவாமிகள் - துறையூரிலே விளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். சமயசாஸ்திரங்களில் மிக்க வன்மையுடையவர். சமயத்தால் வீரசைவர் பாலியவயசிலே துறவறம்பூண்டவர். அவிரோதவுந்தியாரென்னும் உத்தம ஞான நூல் செய்தவர். வைராக்கிய தீபம் கொலைமறுத்தல் முதலிய நூல்கள் செய்தவருமிவரே, சாலிவாகனசகம் ஆயிரத்தறுநூறளவிலிருந்தவர்.

சாந்தி - (பு) 1. அஜமீடன் பௌத்திரன். நீலன் புத்திரன். (2) தேவகன் புத்திரி, வசுதேவன்பாரி.

சாந்தோக்கியம் - வேதரகசியங்களைக் கூறும் நூற்றெட்டு உபநிஷதங்களு ளொன்று. அதிரகசியப் பொருளாகிய தகரவித்தை இவ்வுபநிஷதத்திலேயே கூறப்பட்டுள்ளது. இதற்குப்பாஷியஞ் செய்தவர் சங்கராசாரியர்.

சாந்தீபன் - பலராம கிருஷ்ணர்களுக்குக் குரு. இவருக்கு வாசஸ்தானம் அவந்தி. இவர் புத்திரன் பிரபாசதீர்த்தத்திலே ஸ்தானஞ்செய்த போது அவனை ஒருதானவன் நீருக்குள்ளேயிழுத்துப் போய்க் கொன்றான். அப்புத்திரனைப் பலராமகிருஷ்ணர்கள் யமபுரஞ்சென்று மீட்டுவந்து குருதடிpயாகக் கொடுத்தார்கள்.

சாந்தை - ரோமபாதன் வளர்த்த புத்திரி. தசரதன்மகள். இருசிய சிருங்கன்பாரி. இவளைக் காந்தையென்றுங் கூறுப.

சாபஸ்தி - கௌட தேசத்தின் பண்ணேசபஸ்தன் நிருமித்த நகரம்.

சாமிநாததேசியர் - சங்கர நமச்சி வாயப்புலவர்க்கு ஆசிரியர். இலக்கணக் கொத்துச் செய்தவர். கருவருஷத்துக்கு முன்னுள்ளவர்.

சாமுண்டி - விந்திய பர்வத வாசியாகிய பராசக்தி, காளி.

சாம்பன் - (1) கிருஷ்ணனுக்கு ஜாம்பவதி பெற்ற புத்திரன். (2) சிவன்

சாயலன் - காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஒருவணிகன். அவன் வணிகர்கள் பெறுதற்குரிய எட்டிப்பட்டம் பெற்றோன்.

சாயனாசாரியர் இவர் மாதவாசாரியர்
சாயணாசாரியர் சகோதரர். சாயணாசாரியரென்பது மாதாவாசாரிய ருக்கு ஒரு நாமாந்தரமென்று கூறுவாரு முளர். (வித்தியாரணியர் காண்க)

சாயன் - குருதேவியிடத்திற் பிறந்த புத்திரன்.

சாயாவனேசர் - திருச்சாய்க்காட்டிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்.

சாரங்கம் - விஷ்ணுவினது வில்லு. கொம்பினாற் செய்யப்பட்டது என்பது பதார்த்தம்.

சாரங்கன் - சிவன். பலவர்ணங் கொண்ட மேனியனென்பது அதன்பொருள்.

சாரசுவதம் - (1) சரசுவதிநதிதீர தேசம். (1), சமஸ்கிருத சந்திகளையுணர்த்தும் ஒரு வியாகரணசங்கிரகம்.

சாரசுவதர்கள் - சரசுவதிநதி தீரதேச வாதிகள். இவர்கள் பஞ்ச கௌடர்களு ளொருபாலார்.

சாரசுவதன் - ததீசியுடைய வீரியத்தினாற் சரசுவதி நதியிற்றோன்றியவிருஷி.

சாரணர் - தேவருட் பாடுவோர்.

சாரணன் - (1) (ய) வசுதேவன் ரோகிணியிடத்துப்பெற்ற புத்திரன். (2) ராவணன் அநுசரர்களுளொருவன்.

சாரமாமுனி - இவர், தாம் சிவபெருமானுக்குச் செய்துவந்த புஷ்பகைங்கரியத்துக்குப் பராந்தக சோழனிடையூறுசெய்ய அவன் நாட்டை மண்மாரியாலழித்தவர்.

சாரமேயன் - (ய) அக்குரூரன் தம்பி.

சாருவரன் - பு மனசியன் புத்திரன்.
சாரு

சார்ங்கம் - சாரங்கம் காண்க.

சார்ங்கிகர் - மந்தபாலன் புத்திரர். இவர் நால்வர். காண்டவதகன காலத்திலே அக்கினியினாற் காக்கப்பட்டோர்.

சார்த்தூலன் - (ரா) ராவணன் பரிவாரத்தவருளொருவன்.

சார்வபௌமம் - உத்தர திக்குக் காவல்பூண்ட பெண்யானை.

சார்வாகம் - இந்திரிய கோசமாகும் விஷயங்களேயன்றிப்பிறிதொரு பொருளில்லையென்று பிரதிபாதிக்கும் ஒரு மதம். அது நாஸ்திகமெனப்படும். இம் மதஸ்தர்கள் சைதன்னியரென்ப பெயர்பெறுவர்கள்.

சர்வாகன் - (1) துரியோதனனுக்கு நட்பினனாகியவோரசுரன். இவன் தருமராஜனுக்குப் பட்டாபிஷேக நடக்குங் காலத்திலே பங்கஞ்செய்யக் கருதி இருஷிவேஷந்தாங்கிப் போயிருந்தபோது அங்கிருந்த இருஷிகளால் சாம்பராகச் சபிக்கப்பட்டவன். (2) சார்வாகமத்தை யுண்டாக்கினோன்.

சாலகடங்கடேயர் - சாலகடங்க டை வழிவந்தோர்.

சாலகடங்கடை - வித்துற்கேசன்பாரி. சுகேசன்தாய். இவ்வமிசத்தர் சாலசடங்கடேயர் எனப்படுவர். (வித்தியுத்கேசன்)
சாலக்கிராமம் - (1) ஒரு புண்ணிய கோஷத்திரம். இது கண்டகி நதி உற்பத்தியாகுமிடம். (2) பூஜாருகமாகிய விஷ்ணுமுத்திரையுள்ள ஒருவகைச் சிலை. இச்சலாக்கிராமம் நிலத்திற்படுவது, நீரிற்படுவது என இருவகைப்படும். (ஜலஜன்னியம் ஸ்தலஜன்னியம்) இஃது இமயமலைச் சமீபத்திலே பன்னிரு யோசனை அந்தர்க்கத பூமியிலே சாலக்கிராமாதி தீர்த்தங்களிலேபடுவது.
சாலபோதகன் - இவன் ஒரு நாகராஜன். நந்தை தந்தை.
சாலிகோத்திரன் - ஒரு முனிவர். இடும்பன்வனத்துக்குச் சமீபத்தேயுள்ள தம்முடைய ஆச்சிடரமத்துக்குப் பாண்டவர் அரக்குமாளிகைக்குத் தப்பிச் சென்ற போது அவர்களையுபசரித்தவர். (2) அசுவசாஸ்திரஞ்செய்தவர். (3) சாமவேதாத்தியாயனராகிய ஓரிருஷி.
சாலிவாகனன் - விக்கிரமார்க்கனைக் கொன்று தன்பெயரால் சகவருஷம் நிலைநாட்டினோன். சுலோசனன் என்னும் பிராமணனுக்குச் சமித்திரையென்னுமொரு புத்திரி பிறந்தாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, தன்வசந்தப்பியொரு சோரநாயகனைக் கூடிக் கருப்பவதி யாயினாள். அஃது அவள் மனசை வருத்தச் சோரநாயகனைக் கண்டு, எனது ஒழுக்கத்துக்கிழுக்கு நேர்ந்தது. குலப்பழி தேடிக்கொண்டேன். இனி யாது செய்வேன் என்று கூறிக் கவன்றாள். அதுகேட்ட சோரநாயகன்யான் மனுஷனல்லேன், யான் ஆதிசேஷன், உனது கருப்பத்திலிருக்கும் புத்திரன் மகா கீர்த்திப் பிரஸ்தாபனாகிய ஒரரசனாவான். அவனாலுன்குலம் விளங்கும். அவனைச் செவ்வே பாதுகாத்துப் பெற்று வளர்க்கக்கடவை யென்றாசீர்வதித்துத் தனது நிசரூபத்தைக் காட்டி அந்தர்த்தானமாயினான். இவ்வாறு நிகழ்ந்தனவற்றை யெல்லாம் சுமித்திரை தனதுதந்தையிடஞ்சென்றுரைத்தாள். அவன் இது தெய்வசங்தற்பமெனக் கொண்டு தேறியிருக்கையில், சுமித்திரை சோரநாயகனைக் கூடிக் கர்ப்பவதியாயினாளென்று அயலார் அவ்வூரரசனுக் கறிவுறித்தினார்கள். அரசன் சுலோசனனை அழைத்தது உன் புத்திரியை இந்நகரத்துக்கு வெளியே அனுப்பிவிடக்கடவையென்று அவனுக்கு ஆஞ்ஞை செய்தான். அவ்வாறே அவள் அந்தகரத்துக்குப் புறத்தேயுள்ளதாகிய ஒரு குலாலசேரியை அடைந்து ஒரு குலாலன் வீட்டில் அடைக்கலம்புகுந்து வசிப்பாளாயினாள், உரிய காலத்திலே புத்திரனும் பிறந்தான். அவனுக்குச் சாலிவாகனன் என நாமகரணஞ்செய்து வளர்க்க, அவனும் வளர்ந்து ஐந்துவயசடைந்து குலாலசேரியிலுள்ள சிறுவரைக் கூட்டி விளையாடிவருநாளில், ஒருநாள் தான் அரசனாகவும் தனது தோழர் மந்திரி பிரதானி முதலியோராகவும் பாவித்து விளையாடினான். அதுகண்ட குலாலபதி ஐந்து வயது செவ்வே நிரம்பாத இச்சிறுவன், அரசனைக்கண்டதெங்கே, மந்திரி பரதானி முதலியோரைக் கண்ட தெங்கே, இவனுக்கு இவ்வுணர்ச்சிவந்த தெங்ஙனமென்று அதிசயித்திருந்தான். தினந்தோறும் இவ்வாறு தோழரைக்கூட்டி இராச்சியபரிபாலன விளையாட்டயர்ந்து வருநாளிலொருநாள், அவ்வழியேசென்ற ஒரு பிராமணன் இவ்விளையாட்டைக் கண்டு அரசனாகவிருந்து விளையாடும் சாலிவாகனன்முன்னே போய், விநாயபக்தியோடுநின்று சொல்வான் போல நாடகமாத்திரையாகப்பஞ்சாங்கஞ் சொன்னான். அதுகண்ட சாலிவாகனன் தன்பக்கத்து மந்திரியாகநின்றவனை அழைத்து அப்பஞ்சாங்ககாரனுக்குச் சன்மானமாக ஒரு குடங் கொடுக்குமாறு கற்பித்தான். பஞ்சாங்ககாரனும் அகப்பட்டதைக் கைவிடலாகதெனக் கொண்டுசென்று வீட்டில்வைத்து, மற்றைநாட்காலையிற் பார்த்தபோது அக்குடம் பொற்குடமாகவிருக்கக்கண்டு அதிசயித்து இச்செய்தியை நாடெங்கும் விளக்கினான். இஃதிங்ஙனமாக, குலாலன் அப்புத்திரனுக்கு மண்ணினாலே சிங்காசனம் முதலியனவும், இரதகஜதுரகபதாதிகளும் இயற்றிக் கொடுத்தான். இவையெல்லாம் விக்கிரமார்க்கன் சபைக்கும் சென்றெட்டின. அஃதுணர்ந்த விக்கிரமார்க்கனும் இச்சிறுவனைப் பார்க்கவேண்டுமென்றவாவுற்றிருந்தான்.
இவ்வாறிருக்கையில் புரந்தர புரத்திலேயிருந்த தனஞ்செயன் என்னும் வைசியன் இறக்கும்போது, தனது புத்திரர் நால்வரையும் அழைத்து. இக்கட்டிலின் கால்கள் நாலுக்கும் கீழே வைத்திருக்கும் திரவியத்தை நீங்கள் நால்வீரும் பங்கிட்டுக்கொண்டு சுகமாகவாழக்கடவீர் களென்று கூறி விட்டிறந்தான். தந்தைக்குரிய கடன்கள் யாவுஞ்செய்த பின்னர்ப் புத்திரர் நால்வரும் தந்தை கூறியநிதியை வெட்டியெடுத்துப்பார்த்த போது, ஒரு பையிலே மண்ணும். ஓருபையிலே உமியும், ஒன்றிலே பொன்னும், மற்றொன்றிலே சாணமுமிருப்பக்கண்டு, இவைதிரவியாமாவதெப்படி இவற்றைநாம் பாகித்துக்கொள்வ தெங்ஙன மென்றெண்ணி மயங்கி வல்லாரிடஞ் சென்று காட்டினர். அவருமதன் குறிப்பையுணராது அரசனிடஞ்; சென்று காட்டுமினென, அப்புத்திரர் விக்கிரமார்க்கனிடஞ் சென்று காட்டினர். அவனும் தனது மந்திரிகளோடு ஆராய்ந்தும் அதன்குறிப்புணராது புறந்தந்தான். அப்பால் அப்புத்திரர் மதூர்நோக்கிமீளும்போது சாலிவானனிருந்து விளையாடுமிடத்து வழியே சென்றார். சாலிவாகனன் அவர்களைக் கண்டு அவர்களுடைய நிலையை ஆராய்ந்து இச்சிறுகருமத்துக்காகவா இத்துணை அலைந்தீர்கள். நான் அதன் குறிப்பை கூறுனே;. ஐபகளை எடுமினென்றான். எடுத்துக் காட்டியவுடனே மண்ணிட்டிருந்த பையினால் ஒருவனுக்கு நிலங்களும் உமியிட்டிருந்தபையினால் ஒருவனுக்குத் தானியங்களும், பொன்னிட்டிருந்தபையினால் ஒருவனுக்கு ஆபரணாதிகளும். முற்றச் சாணமிட்டிருந்தபையினால் ஒருவனுக்கு ஆபரணாதிகளும், மற்றச் சாணமிட்டிருந்தபையினா லொருவனுக்கு மாடுகளுமாகவென்பது உமது தந்தை குறித்த விபாகமெனக் கூறினான். அதுகேட்டவைசியன் புத்திரர் நால்வரும் மகிழ்ந்து சிறுவனைக் கொண்டாடிப் போயினர்.அது கேட்ட விக்கிரமார்க்கன் தனது கீர்த்தி பங்கப்பட்டதே யென்றெண்ணிச் சாலிவாகனனைக் கொல்லுமாறு படை கொண்டுசென்றான். சாலிவாகனன் அவனைத் தனது சிறுபடையோடெதிர்த்து முதுகிடச் செய்து நருமதையாற்றுக்கி;ப்பாலுள்ள தேசத்தைக்கவர் தரசனானான். இவன் வமிசத்தவரே மைசூர் அரசர். நருமதைக்கிப்பால் சாலிவாகனசகமும் அப்பால் விக்கிரமார்க்கசகமும் அதுமுதல்நடை பெறுவவாயின. சிறிதுகாலத்திலே சாலிவாகனனால் விக்கிரமார்க்கனும் கொல்லப்பட்டான். சாலிவாகனசகத்திலிப்போது 1821 வருஷம் சென்றன. வைத்தியசாஸ்திரம் அசுவசாஸ்திரம் அலங்காரசாஸ்திரம் என மூன்றுநூல்கள் இவனாற் செய்யப்பட்டன.

சாலினி - வேட்டுவமகளாகிய தேவராட்டி.

சாலீயன் - சாகல்லியன் சீஷரான ஓரிருஷி

சாலுவன் - சாளுவன் காண்க.

சால்மலி சப்த தீவுகளுளொன்று. அது
சான்மலி அது சுரா சமுத்திர நடுவிலுள்ளது. அங்கே முள்ளிலவ மரங்களதிகமாதலின் அஃது இப்பெயர் பெற்றது. குமுதம், உன்னதம், பலாஹம், துரோணம், கங்கம், மகிஷம், ககுத்துமான் என ஏழு பர்வதங்கள் அத்தீவிலுள்ளன. அங்குள்ள விசேஷநதிகள் யோனி, தோயை, விதிருஷ்ணை, சந்திரை, சுக்கிலை, விமோசினி, நிவிர்த்தி என்னும் ஏழுமாம். அங்குள்ளோர் நிறத்தினாற் கபிலர், அருணர், பீதர், கிருஷ்ணர் என் நான்குபாற்படுவர். அவர்கள் கடவுளை வாயுவினிடத்திலேதியானித்து அவிகளை நிவேதித்து வழிபடுபவர்கள். அஸ்திரேலிய தீவென இந்நாள் வழங்குவது இத்தீவினது சேஷம்போலும், பூர்வத்தில் அநுமான் சஞ்சீவி கொணர்ந்தது இத் தீவிலிருந்தேயாம். (2) ஒரு நரகம். யமதூதர்கள் அங்குள்ள முள்ளிலவ மரக்காட்டிலே பாவிகளைப் புதுத்தியோட்டி யூறுபடுத்தி வருத்துவார்கள்.

சாவகம் - பதினெண் பாஷைகளுளொன்று.

சாவரி - ஓரற்பபிராகிருத பாஷை.

சாவர்ணி - எட்டாம்மநு. இவர் சூரியனுக்குச் சாவர்ணையிடத்துப் பிறந்த புத்திரனார். (2) ஒரு புராணிகன்

சாவர்ணை - சூரியன் மனைவிகளுள் ஒருத்தி.

சாவித்திரி - (1) அசுவபதி மகள். இவள் பதிவிரதையெனப் பெயர் படைத்த மாது கிரோமணிகளுளொருத்தி. இவள் மணப் பருவத்தையடைந்தபோது, அஸ்வபதி அவளை அழைத்து, நீயோ எனக்கு ஏகபுத்திரி. என்னிஷடப்படி உனக்கு ஒரு நாயகனை நாடித் தரின் அவ்விவாகமுனக்கு உவப்பாகாது போகினும்போகும். ஆதலால் நீ உன் இஷ்டநாயகனை நாடிவந்து சொல்வாயாகில் அவனுக்கு உன்னை மணமுடித்துக் கொடுப்;போன் என்று கூற, அவள் அதற்கிசைந்து எங்கும் நாடி, ஈற்றில் ஒரு காட்டிலேதன்மனைவியோடு தவஞ்செய்து கொண்டிருந்த விருத்தனான ஒரரசனுடைய மகனாகிய சத்தியவானைக் கண்டு, அவன்மீதிற் காதலுடையளாய்த் திரும்பி வந்து, தந்தையையடைந்து, தன் கருத்தை உணர்த்தினாள். அச்சமயத்தில் அங்குவந்திருந்த நாரதர் அவளைப்பார்த்து, சாவித்திரீ, யாதுசெய்தனை, மோசம் போயினையே, சத்தியவானை மணம்புரிவையேல் நீ சுகமடையமாட்டாய். அவன் இன்றுமுதல் ஒரு வருஷத்தில் இறந்துவிடுவான். அவனை விட்டு இன்னொரு வனை நாடக்கடவாயென்று தடுத்தார். பதிவிரதத்திற் சிறந்தவளாகிய சாவித்திரியினது மனசை நாரதர் உரைகள் சிறிதும் அசைத்திலவாதலின் அவளுடைய இஷ்டப்படியே தந்தை உடன்பட்டுச் சத்தியவானுக்கு அவளை மணம்முடித்துக் கொடுத்தான். சாவித்திரி சிலதினங்களில் நாயகனோடு காட்டுக்குச் சென்று அங்கே தன் அலங்கார ஆடையாபரணங்களைத் துறந்து தவத்துக்குரிய ஆடைதரித்து நாயகனுடைய ஆயுள்நாளைநினைந்து தவம் புரிவாளாயினாள். நாளும் ஒவ்வொன்றாய்க் கழிந்து வருஷவெல்லைக்கு மூன்றுநாள் உளவென வந்தடுத்தது. அம்மூன்றுநாளும் ஊணும் உறக்கமுமின்றிக் கொடுந்தவங்கிடந்தாள். மூன்றாநாளிலே தன் வழக்கம் போலச் சத்தியவான் அன்றும் மரந்தறிக்கப்போய்த் தறித்து மீண்டுவந்து மிக்க சோர்வினாற் சாவித்திரி மடிமீது சாய்ந்து நித்திரை போயினான். அச்சமயம் யமன்சென்று அவன் உயிரைக் கவர்ந்து கொண்டு தென்றிசைநோக்கிச் சென்றான். அஃதுணர்ந்தசாவித்திரியும் யமனைத் தொடர்ந்து சென்றாள். யமன் அவள் தொடர்வதைக்கண்டு என்னைத் தொடர்வதாற் பயனில்லை நீ போகவென்றான். ஏன் நாயகனைவிட்டு யான் திரும்புவதாலும் பயனில்லை. ஆதலின் என் நாயகனைத் தொடர்ந்தே செல்வேன் என்று விடாது தொடர்ந்தாள். அதுகண்ட யமன் அவள் கற்பை மெச்சி அவளுக்கிரங்கிச் சத்தியவானுடைய உயிரை உடலிற்சென்று கூடும்படிவிடுத்து வாழ்த்திப்போக, சாவித்திரி தனது நாயகனோடு தந்தை வீட்டுக்குச்சென்று ஒருயிரும் ஈருடலும் பெற்றாள்போல நெடுங்காலம் வாழ்ந்திருந்தாள். (2) இருக்குவேதத்திலுள்ள ஒரு பிரபல இருக்கு இப்பெயர்பெறும். (3) பிரமாவின் பாரிகளுளொருத்தி. சரசுவதியே இப்பெயர் பெறுவரென்பர். ஓருசாரர். (4) பார்வதி. (5) கசியபன் மனைவி.

சாவித்திரி விரதம் - ஆனி மாசத்துப் பௌரணிமையிலே சுமங்கலிகளால் வைதவ்வியம்வராமல் அனுஷ்டிக்கப்படு மொரு விரதம்.

சாளக்கிராமம் - வடநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

சாளுவம் - மத்திய தேசத்திலுள்ள ஒரு தேசம்.

சாளுவன் சிசுபாலன்தம்பி. கிருஷ்ணன்
சாலுவன் உருக்குமினியைக்கவர்ந்து போனபொழுது சிசுபாலனைக் கொன்றமை கண்டு இவன்தவங்கிடந்து சகல மாயா சத்திகளையும் சௌம்பகமென்னும் விமானத்தையும் சிவன்பாற் பெற்று ஆகாயத்திற் சஞ்சரித்து யாதவர்களை யெல்லாம் வருத்திவரும் போது கிருஷ்ணனால் எதிர்த்து போர்புரிந்து கொல்லப்பட்டவன். (2) (ய) வசுதேவன் தம்பியாகிய விருகன் மூன்றாம் புத்திரன்.

சிகண்டி - (1) அந்தர்த்தானன் முதற்பாரி. (2) துருபதராஜன் புத்திரியாகப்பிறந்து ஒரு புத்திரனைப்போல வளர்க்கப்பட்டவள். அப்பால் ஓர்யடினாலே தன்னுடைய பெண்ணுருவம் மாற்றப்பட்;டு விஷமரைக் கொல்லுநிமித்தமாக ஆணுருப்பெற்றவள். புhரதயுத்தத்திலே வீஷ்மரை யெதிர்த்தபோது அவர் பெண்ணை யெதிர்த்துப் போர்புரியலாகாதென்று மறுக்க அசுவத்தாமனாலே கொல்லப்பட்டவள்.

சிங்கபுரம் - கலிங்க நாட்டிலுள்ள ஒரு நகரம்.

சிங்களம் - சிம்ஹளத்துவீபம். இலங்கை, ஈழம், லங்காதேசம் என்பன பரியாயங்கள். இது மிக்க பழைமையும் பெரும் புகழும்வாய்ந்த தேசம். இப்போதுள்ள இலங்கை பூர்வ லங்காதேசத்தின் ஒரு சிறு கூறேயாம். எஞ்சியபாகம் காலாந்தரத்திலே கிழக்கும் தெற்கும் மேற்கும் சமுத்திவாய்ப்பட்டழிந்தது. இப்போது இலங்கையிலே வசிப்பவர்கள் ஈராயிரத்தைஞ்டிறு வருஷங்களுக்கு முன்னே மகததேசத்திலிருந்துபோய்க் குடியேறிய ஆரியரும் பூர்வ ராடிச வமிசத்தவர்களும் கலந்துற்பத்தியான வமிசத்தவர்கள். பூர்வ சிங்களவாஷையும் ஒட்டரபாஷையும் சம்ஸ்கிருதமுங்கலந்துண்டாயதே இப்போதுள்ள சிங்களபாஷை. ஓட்டரக்கலப்பு மகததேசத்தாராலாயது இலங்கைக்கு மகதநாட்டார் வருதற்கு ஈராயிரத்தைஞ்டிறு வருஷங்களுக்குமுன்னே, அஃதாவது இற்றைக்கு ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த பாண்டவர்கள் செய்த ராஜசூய யாககாலத்திலே, அவர்களுக்கு இலங்காதேசத்தரசன் வைடூரியத்தினங்களும், முத்துக்களும், மயிரகங்களும், யானைகளும், அனுப்பினானென்றும், அவைகளைக் கொண்டுசென்ற தூதர்கள் பொன்னிறமுடையோரும் கருநிறமுடையோருமாகிய மாந்தரென்றும், பாரதத்திலே கூறப்படலால் பாண்டவர்கள் காலத்திலே இலங்கைமிக்கநாகரிக முற்றிருந்ததென்பது அநுமிக்கப்படும். அதற்குப் பிந்தியகாலத்தலே தாழ்வுற்று விஜயன் அரசனாகியபின்னர் விருத்தியுற்றது போலும். விஜயன் மகதநாட்டான்.

சிங்கன் - சனகவிஜயற்குத் துணையாயினானோரரசன்.

சிங்கமுகன் சூரன் தம்பி. கசியபன்
சிங்கன் சிங்கவுருக் கொண்டுநின்ற மாயையைக் கூடிப்பெற்ற புத்திரன். இவன் மனைவி விபுதை. புத்திரர் அதிசூரன் முதலிய நூற்றுவர். இவன்தேவர்களுக்குப் பெருந் துன்பங்கள் செய்துவருங்காலத்திலே சுப்பிரமணியக் கடவுளாலே யுத்தத்திலே கொல்லப்பட்டவன்.

சிங்கேசுவரி - திருப்பத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

சிசிரன் - (ரி) சாகல்லியன் சீஷன்.

சிசுநாகன் - சைசு நாகர்களுக்குக் கோத்திரத்தலைவனாகிய மகத்தேசத்தரசன். இவனரசுசெய்த காலம் புத்தருக்குப் பின் எழுபத்திரண்டாவது வருஷம். அஃதாவது 2372 வருஷங்களுக்கு முன்னுள்ளது. கலியுகத்தாற் கூறுமிடத்து அவனிருந்தகாலம் 2628ம் வருஷம்.

சிசுபாலன் - சேதிதேசத் தரசனாகிய தமகோஷன் வசுதேவன் தங்கையாகிய சுரதசிரவையிடத்துப் பெற்ற புத்திரன். இவன் பூர்வத்திலே இரணியகசிபனாகவும். அதன்பின்னர் ராவணனாகவும் பிறந்து விஷ்ணுவாற் கொல்லப்பட்டவன். இச்சிசுபாலப் பிறப்பிலும் முற்பிறவிகளி லிருந்ததைப்பார்க்கிலும் மிக்க கொடியவனா யொழுகுநாளிலே கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன். இவனுடைய வன்மையையும் மூர்க்கத்தையும் மாகாகவி தாம்செய்த சிசுபாலவதமென்னும் நூலிலே மிகச் சிறப்பித்துரைப்பர்.

சிதத்துவஜன் - (மி) அஜன்புரத்திரன்

சிதம்பரதேசிகர் - வைராக்கிய தீபம் வைராக்கியசதக முதலியவற்றுக்கு உரைசெய்தவர். திருப்போரூர்ச் சந்நிதிமுறையும் பஞ்சாதிகாரவிளக்கமும் பாடினவரும் இவரே. பஞ்சாதிகாரம் சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களைக் கூறுவது. இவர் சாந்தலிங்கசுவாமிகள் சீஷர்.

சிதம்பரம் - பஞ்சலிங்கங்களுளொன்றாகிய ஆகாசலிங்க ஸ்தலம். இதுதொண்டை நாட்டிலுள்ளது. இத்தல மான்மியங்களை யெலலாங் கோயிற்புராணத்திற் காண்க. “பிண்டமும் பிரமாண்டமும் சமம். பிண்டமாகிய சரீரத்தில், இடப்பக்க நாடியாகிய இடைக்கும் வலப்பக்கநாடியாகிய பிங்கலைக்கும், நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள இப்பரதகண்டத்தில், இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவிலுள்ள தில்லையும், சிவபெருமான் ஆனந்தநிருத்தஞ்செய்யுந் தானமாம். சரீரம் பிரமபுரம்@ சரீரத்திலுள்ளேயிருக்கும் இருதயத்தானம் தகரமாகிய புண்டரீகவீடு@; இருதயத்தானத்தினுள்ளே இருக்கும் பிரமமாகிய சிவம் ஆகாசம். புறத்தும் இப்படியே@ பிரமாண்டம்பிரமபுரம்@ பிரமாண்டத்pதனுள்ளேயிருக்குந் தில்லைவனம் புண்டரீக வீடு@ தில்லைவனத்தில் நிருத்தஞ் செய்யுஞ்சிவம் ஆகாசம். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம்@ ஆதலாற் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எக்காலமும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், இத் தில்லையுஞ் சிதம்பரத்திலே, ஞான சபையிலே, சிவபெருமான், சிவகாமியம்மையார்காண ஆனந்தநிருத்தஞ் செய்தருளுவர். சிதம்பரத்திலெழுந்தருளியிருக்கும் திருமூல ஸ்தானமாகிய சிவலிங்கப்பெருமானுக்கு வேத சிவாகம விதிப்படி பூசை முதலியன செய்யும் பிராமணர் தில்லைவாழந்தண ரெனப்படுவர்கள். அவர்கள் மூவாயிரவர்” இப்போதுள்ளோர் முந்நூற்றுவரே, சேக்கிழார் காலத்திலே மூவாயிரவாராக விருந்தோர் இப்போதுமுந்நூற்றுவராயினது தமக்குரிய தருமங்களினின்றுமிழுக்கிய காரணத்தினாற்போலும். சிதம்பரமென்பதன் பொருள்ஞானாகாசம்.

சித்தத்தைச்சிவன்பால்வைத்தார் -இராஜயோகத்திருந்து சிவனைத் தியானித்து முத்திகூடியதொகையடியார்கள். இவர்களுடைய பெயர் ஊர் முதலியன புலப்படக் கூறப்பட்டில. சுந்தரமூர்த்தி நாயனாராற் பாடப்பட்டமையின் அவர்க்கு முன்னுள்ளவர்களென்பது வெளிப்படை.

சித்தநாதேசுவரர் - திருநறையூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சித்தபுரி - இது மேகலாரேகையிலே லங்காபுரிக்குநேரே அதோ பாகத்திலே ரோமகபுரிக்கு மேற்கே தொண்ணூறு பாகையிலேயுள்ளது. (அமெரிக்கதேசமென இந்நாள் வழங்குந் தேசத்திலிருந்ததாதல் வேண்டும்).

சித்தர்கள் - அணிமாதிகள் எல்லாம் வல்ல கணங்கள், அவர்கள் எண்ணிவர். அவருள்ளே தமிழ்நாட்டிலே விளங்கிய சித்தர்கள் பாம்பாட்டிச்சித்தர், அகப்பேய்ச்சித்தர் அந்தணரென்றும், அகப்பேய்சித்தர் வேளாளரென்றுங் கூறுவார்கள்.

இருவரும் அணிமாதிசித்திகளைப் பெற்றபின்னர் அவற்றாற் பயனில்லையெனக்கண்டு ஞானிகளாயினோர். இருவரும் அவர்கள் பாடித்திரிந்த பாடல்களிலே அகப்பேயென்றும் ஆடுபாம்பேயென்றும் வருவனவாற்றாற் பெயர்கொண்டவர்கள். இயற்பெயர் தெரியவில்லை. அவர்கள் பாடல் வெள்ளென்றிருப்பினும் ஆழ்ந்த ஞானப்பொருளுடையன. கோரர்கர் சத்தியநாதர் முதலியோர் ஒன்பதின்மரும் நவநாரித்தரெனப்படுவர். இவர்கள் பதார்த்தங்களின் பகுதிகளையும் சரீரத்தின்பகுதிகளையும் நன்றாக ஆராய்ந்து நிச்சயித்து அப்பகுதிகளின் சொரூபலடிணங்களையுணர்ந்து அவற்றை எண்ணியவாறு ஏவல்கொள்ளும் வன்மையுடையராதலிற் சித்தரெனப்படுவர்கள். ரசாயனசாஸ்திரங்களும் வைத்தியமுஞ் செய்தோர் இவர்களே. இவர்கள் செய்த நூல்களெனத் தமிழிலுள்ளன பெரும்பாலும் இக்காலத்துச் சாமானியர்பாடிய புரட்டு நூல்களேயாம். சித்தர் செய்;தன இறந்தன.

சித்தாச்சிரமம் விசுவாமித்திரன்
சித்தாசிரமம் தவமும் யாகமுஞ் செய்தவிடம். இவ்விடத்தேயே விஷ்ணு ஒரு கற்பத்திலே தவஞ் செய்ததுமாம். இதிலே தவஞ்செய்வோர் சித்திபெறுதல்நிச்சயம்.

சித்தாந்தசாஸ்திரங்கள் - “உந்திகளிறோடுயர் போதஞ் சித்தியார் பிந்திருபாவுண்மைப்பிரகாசம் - வந்தவருட் - பண்பு வினா போற்றி கொடி பாசமிலா நெஞ்சவிடு-வுண்மை நெறிசங்கற்ப முற்று” என்னும் வெண்பாவால் இவையென்பதும் இத்தனையென்பது முணர்க. திருவருட்பயன், சங்கற்பநிராகரணம், வினாவெண்பா, கொடிக்கவி, போற்றிப்பஃறொடை, சிவப்பிரகாசம், நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்க மென்னும் இவ்வெட்டும் உமாபதி சிவாசாரியர் செய்தன. உண்மைவிளக்கஞ்செய்தவர் திருவதிகைமனவாசகங்கடந்தார். சிவஞானசித்தியும் இருபாவிருபஃதும் செய்தவர் அருணந்திசிவாச்சாரியார். சிவஞானபோதஞ்செய்தவர் மெய்கண்டதேவர். திருவுந்தியார் செய்தவர் உய்யவந்த தேவநாயனார். திருக்களிற்றுப்படியார் செய்தவர் திருக்கடவூர் உய்யவந்தவேதநாயனார். இவர் திருக்களிற்றுப்படியார் செய்தவருடைய சீடருடைய சீடர். இச் சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கும் சிவாகமத்தின் ஞானகாண்டப்பொருளைச் சுருக்கி இனிது விளக்குந் தமிழ்நூல்களாம். இவை ஐஞ்டிற்றெண்பத்தைந்துவருஷங்களுக்கு முன்னே பாடியருளப்பட்டன வென்பது சங்கற்பநிராகரணஞ் செய்த உமாபதி சிவாசாரியர்தாமே அந்நூலிலே சாலிவாகன வருஷம் ஆயிரத்திருநுற்று முப்பத்தைந்தில் அதனைச் செய்ததாகக் கூறலால் நிச்சயிக்கப்படும். உமாபதி சிவாசாரியர் அருணந்தி சிவாசாரியர் சீடர். அருணந்தி மெய்கண்டசிவாசாரியரது சீடர். சுpவஞானபோதஞ் செய்யப்பட்ட காலம் சாலிவாகனசகவருஷம் ஆயிரத்திருநூறளவிலுள்ளது. உமாபதி சிவாசாரியராற் பாடப்பட்ட சேக்கிழார் எழுநூற்றெழுபது வருஷங்களுக்கு முன்னுள்ளவர். வேதத்தின் ஞானகாண்டப்பொருளையுள்ளபடி அறிவிக்குந் தமிழ்நூல்கள் தேவாரமுந்திருவாசமுமாம், இவையிரண்டுந் தமிழ் வேதமெனப்படும். இச் சித்தாந்த சாத்திரங்கள் தமிழிலேவெளிவருதற்கு முன்னுள்ளகாலத்திலே பக்குவர்கள் குருவைத்தேடியடைந்து உபதேசமுகமாகச் சமயவறிவைப் பெற்றுக்கொள்வார்கள். இக்காலத்திலோ நூல்களே யாவர்க்கும் குருவாயின. ஆகியும் உண்மையறிவு தலைப்பட்டார். மிகச் சிலரே. அக்காலத்தில் அறியாதார் பலர். இக்காலத்தில் அறிந்துமறியாதாரே பலர்.

சித்தாந்தகௌமுதி - பாணினிவியா கரணத்துக்கு வியாக்கியானம்.

சித்தாந்தசிகாமணி - சிவப்பிரகாசசுவாமிகள் செய்த இருபது நூல்களுளொன்று. அது யாப்பாலும் மிகச் சிறந்த நூல்.

சித்திரகுப்பதன் - யமன் கணிகன். இவன் மனுஷர் நல்வினை தீவினைகளைக் கிரமமாகவெழுதி யமனுக்குக் கணக்குக்காட்டுபவன்.

சித்திரகூடம் - தற்காலம் பண்டல்கண்டு என்று வழங்கு மிடத்திலுள்ள ஒரு மலை. இது வான்மீகி ஆச்சிரமம். சிருங்கிவேரபுரத்துக்கு நிருதிதிசையிலுள்ளது.

சித்திரகேதன் - (யது) வசுதேவன் தம்பியாகிய தேவபாகன் மூத்தமகன். (2) சூரசேன தேசத்துராஜா. இவன் சிலகாலம் சந்ததியின்றித் தவங்கிடந்து ஒரு புத்திரனைப் பெற்றான். அதுகண்ட சககளத்திகள் பொறாமையுற்று விஷமூட்டி அப்புத்திரனைக் கொன்றார்கள். அதுகாரணமாகச் சித்திரகேதன் புத்திரசோகத்திலாழ்ந்து வருந்தினான். அப்போது நாரதனும் அங்கிரசனும் அவனிடஞ் சென்று அவனுக்கு ஞானோபதேசஞ்செய்துபோக, அதனால் அவன் மகா ஞானியாகித் தனது தேகத்தை விட்டு வித்தியாதரவுடல் பெற்றுக் கைலாசகிரிக்குப் போய் அங்கே சிவபெருமான் சக்திசமேதராயிருப்பக்கண்டு, அவரைப்பார்த்து, ஜகத்காரணராகிய நீரும் இப்படிப் பெண்ணோடு கூடியிருக்கவேண்டுமோ வென்று உண்மையுணராதான் போன்று பரிகாசஞ்செய்தான். அதனால் ராடிசரூபம்பெற்றுப் பூமியில்வந்து பிறந்து விருத்திராசுரன் என்று விளங்கி இந்திரன் கையிலிறந்து முத்திபெற்றான்.

சித்திரசேனபாண்டியன் - சித்திரவர்மபாண்டிய னுக்குப்பின் அரசுபுரிந்தவன்.

சித்திரசேனன் - (1) ஒரு கந்தருவன். அர்ச்சுனன் தோழன். (2) துரியோதனன் தம்பிகளுளொருவன். (3) கர்ணன் மகன். (4) நரிஷியந்தன் புத்திரருளொருவன். (5) ஜராசந்தன் தோழன்.

சித்திரத்துவசன் - சித்திரபூஷண பாண்டியனுக்குப்பின் அரசுபுரிந்த பாண்டியன்.

சித்திரபூஷணன் - சித்திரவிரதனுக்குப்பின் அரசுபுரிந்தபாண்டியன்.

சித்திரரதன் - (1) முனிமகன். கந்தருவராசன். (2) (ய) பேருசங்கன் புத்திரன். சசிவிந்தன் தந்தை. (3) அதிவிரதன் புத்திரன். (4) துரியோதனன் தம்பி.

சித்திரரேகை - வாணாசுரன் மந்திரியாகிய கவந்தன் மகள். உஷா தேவிக்குத் தோழி. சித்திரத்தில் வல்லவளாதலின் இப்பெயர் பெற்றாள்.

சித்திரவர்மபாண்டியன் - சித்திரத்துவச பாண்டியனுக்குப்பின் அரசுபுரிந்தவன்.

சித்திரவாகன் மணலூர் புரத்திலா
சித்திரவாகனன் சிருந்த பாண்டியன். பப்பிருவாகன். தாயைப் பெற்ற பாட்டன். இவன் பாரதயுத்தத்திலே பாண்டவர்க்காகச் சென்று துணைபுரிந்தவன்.

சித்திரவிக்கிரமன் - சித்திரசேன பாண்டியனுக்குப்பின் அரசுசெய்த பாண்டியன்.

சித்திரவிரதன் - இவன்சுகுணசேகர பாண்டியனுக்குப் பின் அரசு புரிந்த பாண்டியன்.

சித்திரன் - கனகவிசயற்குத் துணை அரசன்.

சித்திராங்கதன் - (1) ஒரு கந்தருவன். (2) விசித்திரவீரியன் தமையன். திருதராட்டிரன் பெரிய தந்தை. சித்திராங்கதன் என்னும்பெயரோடிவன் காலத்திருந்த கந்தவனைஎதிர்த்துக் கொடிய யுத்தஞ்செய்து அக்கந்தவனாற் கொல்லப்பட்டவன். (3) துரியோதனன் தம்பியருளொருவன்.

சித்திராங்கதை - அர்ச்சுனன் பாரி. சித்திரவாகனன் மகள். இவளே பப்பிருவாகனனுக்குத் தாய். அர்ச்சுனன் தருமன்செய்த அசுவமேதயாககாலத்தில் அவ்வசுவத்தோடு சென்றபொழுது அவ்வசுவத்தைப்பப்பிருவாகனன் பிடித்துக்காட்ட, அர்ச்சுனன் அவனை இன்னானென்றறியாது அவனோடு யுத்தஞ்செய்து அவன் பாணத்தால் மூர்ச்சையாயினான். அப்பொழுது பப்பிருவாகனன் அர்ச்சுனனைத் தந்தையென்றுணர்ந்து அவன் மூர்ச்சையைத் தீர்த்து அவனைவழிபட்டுவணங்கி அக்குதிரையை ஒப்புவித்தான். அல்லியெனப்படுவளும் இச்சித்திராங்கதையேயாம்.

சித்திராங்கி - ராஜராஜ நரேந்திரன் காமக்கிழத்தி. காம லீலையில் இவளை வென்றவரில்லை. (அற்புதசரீரமுடையானென்பது பதார்த்தம்)

சித்திராதேவி - குபேரன் பாரி. இவள் சித்திரரேகையென்றும் சொல்லப்படுவள்.

சித்திராபதி - மாதவி நற்றாய்.

சித்திராயுதன் - ஒரு கந்தருவன்.

சித்திரோபலை - இருடி பர்வதத்திற் பிரவாகிக்குமொருத்தி.

சிநிவாலி - தாதைபாரி.

சிந்தாமணி - திருத்தக்க தேவரென்னும் சைனமுனிவரியற்றிய தமிழ்க்காவியம். இது சீவகன்கதையைவனப்புறக்கூறுவது. நச்சினார்க்கினியராலுரை செய்யப்பட்டது. சீவகசிந்தாமணியெனவும்படும். இது கடைச்சங்ககாலத்தையடுத்தநூல். 3145 செய்யுளும், பதின்மூன்றிலம்பகங்களுமுடையது.

சிந்துத்துவீபன் - (இ) அயுதாயுவினது தந்தை. சிந்துதேசராசா.

சிபி - (1) (அ) உசீநரன் மூத்தமகன். இவன் யாகஞ்செய்தகாலத்தில் இந்திரானும் அக்கினியும் இவன் உத்தமகுணத்தைப் பரீடிக்குமாறு இந்திரன் பருந்தாகவும் அக்கினி புறாவாகவும் ரூபந்தரித்ததுப் பருந்து புறாவைப்பற்றியுண்ணுமாறு துரத்திச்செல்ல, புறாவானது ஓடிப்போய்ச் சிபிச்சக்கரவர்த்தியிடம் அடைக்கலம்புகுந்தது. அதுகண்ட சிபி அப்புறாவுக்கு அபயஸ்தங்காட்டி அணைத்தான். பருந்துந் தொடர்ந்துள்ளேசென்று சிபியைநோக்கித் தான் துரத்திவந்த புறாவை விடுமாறுகேட்க, சிபி, என்னிடத்தடைக்கலம்புகுந்த புறாவை விடமாட்டேனென்ன, எனக்கு மாமிசம்புசித்தல் இயல்பு. மனுஷரைப்போலக் காய்கனிகளை அருந்திச் சீவித்தல் எனக்குப் பொருந்தாது. ஆகையால் என் புறாவைவிடக்கடவாயென்றது. சிபி அப்பருந்தைநோக்கிப் புறாவைவிடமாட்டேன். அப்புறாவினது எடையுள்ள மாமிசத்தை என் தேகத்திற் கொய்துதருவேன் ஏற்றுக்கொள்கவென்ன, பருந்து அதற்குடன்பட்டது. உடனே ஒருதுலையின் ஒருதட்டிலே அப்புறாவையிட்டு எதிர்த் தட்டிலே அதற்கீடாகத் தனது சரீரத்தினின்றுஞ் சதையைக் கொய்துவைத்தான். அத்தட்டுத்தாழ்ந்து புறாவிருந்த தட்டுக்குச் சமமாகாததுகண்டு மீண்டுங்கொய்துவைத்தான். அவ்வளவிலும் நிரம்பாமைகண்டு தன்சரீரத்திலே கொய்யத்தக்க சதையெல்லாங் கொய்து கொய்து வைத்தும் ஆற்றாது ஈற்றிலே தானே முழுவதும் இரையாக வேறினான். அவ்வளவிலே தட்டுச்சமப்பட்டது. உடனே இந்திராக்கினிதேவரிருவரும் தமது மெய்வடிவைக்காட்டி உனது சீவகாருணியத்தை மெச்சினோம் உன்போற் சிறந்தான் எவனுமில்லை. உனக்கு இஷ்டமாகிய வரங்களைத்தருவோமென்று அவனைப் பழைமைபோலாக்கி அநேகவரங்களைக் கொடுத்துப் போயினர். இவனுக்கு விருஷதர்ப்பன், சுவீரன், கேகயன், மந்திரன் என நால்வர் புத்திரர். (2) பிரகலாதன் புத்திரன்.

சிம்சுபாயன் - ஒரு பௌராணிகன்.

சிம்சுமாரம் - சோதிசக்கரம். இது பகோளத்தின்கண்ணேயுள்ளது. இச்சக்கரம் துருவன் இந்திரன் வருணன் கசியபன் முதலியோர் கூடிப் பிரதடிணமாகத் தினந்தோறுஞ்செல்லப்பெற்றுள்ளது. இதன் வாற்பக்கத்திலே பிரஜாபதியும் அக்கினி இந்திரன் தருமன் என்போரும், வான மூலத்திலே தாதாவும் விதாதாவும், கடிதடத்திலே சப்த இருஷிகளும், மேன்மோவாயிலே அகஸ்தியரும், கீழ்மோவாயிலே யமனும், முகத்திலே அங்காரகனும், குய்யத்திலே சனியும், பீஜத்திலே பிரகஸ்பதியும், பக்கத்திலே சூரியனும், நாபியிற்சுக்கிரனும், நெஞ்சிலே சந்திரனும், ஸ்தானங்களிலே அசுவினிதேவர்களும், பிராணவாயு அபானவாயுக்களிலே புதனும் சர்வாங்கமும் சனிகேதுக்களும், ரோமங்களிலே நடித்திரங்களுமாக அதிகரித்து நிற்பர். இச் சிஞ்சுமாரசக்கரம்மகரவடிவமாகவுள்ளது. முதலைவடிவெனினும் ஒக்கும்.

சிம்மபலன் - கீசகன்.

சிம்மமுகன் - சிங்கமுகன் காண்க.

சிம்மிகை - (1) திதிபுத்திரி. இவள் விப்பிரசித்திமனைவி. இவள் தடிதன் மகளென்றும் கசியபன்பாரி என்றும் பாரதங்கூறும். (2) இராணியகசிபன் மகள். (3) சாயாக்கிராகிணி. ஓரிராடிசி. அநுமான் இலங்கைக்குச் செல்லும் போது அவனாற் கொல்லப்பட்டவள். இலங்கணியெனவும்படுவள்.

சியவனன் - (1) பிருகுவுக்குப் புலோமையிடத்தி லுற்பத்தியான புத்திரன். (2) (கு) சுகோத்திரன் புத்திரன். (3) மித்திராயுபுத்திரன்.

சியாமகன் - (ய) வசுதேவன் தம்பி.

சியாமரஸ்மி - (ரி) கபிலன் சீஷன். இவன் வேதங்கள் அப்பிரமாணமெனக் கபிலனோடு வாதித்து முடிவில் வேதங்களே எல்லாவற்றுக்கும் பிரமாணமென அக்கபிலன் நாட்ட ஒப்பியவன்.

சியாமளாதேவி - (1) யமன் பாரி. (2) உச்சிஷ்டை.

சியேனி - அநூரன்பாரி. இவள் புத்திரர் சம்பாதி சடாயுக்கள்.

சிரகாரி - (ரா) மேதாநிதிபுத்திரன். இவன் தந்தை தன்மனைவியை (தாயை) வெட்டுமாறு இவனைஏவ அவன் சற்றே தாமதித்துச் சிந்தித்துநின்றான். அவ்வளவில் தந்தை கோபந்தணிந்து சந்தோஷித்து இவனுக்கு இப்பெயரை யிட்டான். சிரம் - தாமசம். காரி -செய்பவன்.

சிரத்தாவதி - வருணன் ராஜதானி.

சிரத்தை - தருமன் பாரி. சுமன்தாய். (2) வைவசுவதன்பாரி.

சிரவணத்துவாதசி - திருவோண நடித்திரத்தோடு கூடின துவாதசி. இத்தினத்தில் விஷ்ணுமூர்த்தி வாமனா வதாரஞ் செய்தமையால் உலகத்தி லத்தினம் விரததினமாயிற்று.

சிரவணன் - (த) முராசுரன் புத்திரன். கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன்.

சிராயு - பிரமதத்தன் தகப்பன்.

சிராத்தம் - பிதிர்கன்மம். இது பிர்தேவதைகளுடைய திருப்பதியின் பொருட்டுச் செய்யப்படும் பிண்டகருமம். இது சுபகருமத்தின் கண்ணும் அசுபகருமத்தின் கண்ணும் செய்யப்படும். சுபகருமத்தின்கட் செய்யப்படும் சிரார்த்தம் நாந்தியென்றும் அப்பியுதயமென்றும் சொல்லப்படும். அசுபசிரார்த்தங்களநேகம். அவற்றுள் பிரேதசிரார்த்தம் பிரேததிருப்;தியின் பொருட்டும் செய்யப்படுவது. இது நக்கினநலைஏகோதிஷ்ட சோடச சபிண்டீகரண சிரார்த்தங்களெனப் பல. (2) பைதிருக சிரார்த்தம் பிதிர்தேவதைகளின் பொருட்டுச் செய்யப்படும். பிதிர்தேவதைகள் வசுருத்திர ஆதித்திய பதப்பேறுடையவர்ளாயுள்ளவர்கள். காசி கயை பிரயாகை குருNடித்திரம் கோகர்ணம் குருஜாங்கலம் புஷ்கலNடித்திரம் முதலியன சிரார்த்தகருமங்களுக்குரிய சிறந்த ஸ்தலங்கள். அவற்றுள் கயாசிரார்த்தம் மிக்க விசேஷமுடையது. இறந்ததினம், அமாவாசை, மகாளயபடி முதலியன சிரார்த்தத்துக்குரிய காலம்.

சிரார்த்ததேவன் - சூரியனுக்குச் சமிஞ்ஞாதேவியிடத்துப் பிறந்த புத்திரன்.

சிராவணம் - (1;) திருவோணம் (2) ஆவணிமாசத்துச் திருவோண நடித்திரத்திலே இருபிறப்பாளர் மூவராலும் அநுஷ்டிக்கப்படுவதாகிய ஒரு வைதிககிரியை. அது பதினான்கு வித்தைகளையும் சிரவணஞ்செய்யத்தொடங்குதற்குரிய கிரியை.

சிராவிதம் - ராமன்புத்திரனாகிய லவன் ராஜதானி.

சிருகாலவாசுதேவன் - மதுராபுரத்துக்குச் சமீபத்திலேயுள்ள கரவீரபுரத்தரசன். இவன் எப்பொழுதும்கிருஷ்ணன்மீது பகை பாராட்டிவந்தமையால் கிருஷ்ணன் இவனைக்கொன்று மகனுக்குமுடிசூட்டினான்.

சிருங்ககிரி - சங்கராசாரியாராலே ஸ்தாபிக்கப்பட்ட சாரதாபீடமும் மடாலயமு மிருக்குமிடம். இம்மடத்துக்குச் சங்கராசாரியரது சீஷ பரம்பரையில் வருவோர் அதிபதியாவர். அவருஞ் சங்கராசாரிய பட்டமே பெறுவர். இம்மடாலயத்திலேயுள்ள கிரந்தமண்டபத்திலே அநேக நூல்களுள. சிருங்ககிரி மைசூர்நாட்டிலுள்ள ஒருமலைமேல்நகரம்.

சிருங்கர் - புஷ்யமித்திரன் வமிசத்தரான மகததேசத்தரசர். இவர்கள் பதின்மர். நூற்றுப்பன்னிரண்டு வருஷம் அரசியற்றினர்.

சிருங்கி - (ரி) சமீகன் புத்திரன்.

சிருங்கிபேரபுரம் - இது ஸ்ரீராமர் சிநேகனாகிய குகனுடைய பட்டணம். அது கங்கைக்கரையிலுள்ளது.

சிருஞ்ஜயன் - (1) பர்மியாசுவன் புத்திரருளொருவன். இவன் தவங்கிடந்து நாரதனுக்கிரகத்தாற் பொன்னாகவே மூத்திர புரீஷங்களைக் கழிக்கின்ற ஒரு திவ்விய புத்திரனைப் பெற்றான். அவன் வளர்ந்துவருநாளில் அவன் தேகத்திலே பொன்னிருக்கின்ற தெனக் கருதிக் கள்வர் அவனைக்கொன்று உடலைப் பரிசோதித்துப் போயினர். அப்பாலும் நாரதரனுக்கிரகத்தால் உயிர்பிழைத்தான். அவன் சுவர்ணஷ்டீவி யென்னும் பெயரினன். (2) வசுதேவன் தம்பி. (3) (அ) காலாநலன்புத்திரன்.

சிரு~;டி - மூலப் பிரகிருதியினின்றும் உலகங்களெல்லாந் தோன்றுதல் கிருஷ்டியெனப்படும். அத்துவைதிகள் பிரபஞ்சமெல்லாம் பிரமதினின்றும் தோன்றும் என்று கூறுவார்கள். துவைதிகள் சித்தும் அசித்துமென இரண்டு பொருளுண்டென்றும் சித்தினது அதிகாரத்தால் சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சந் தோன்றுமென்றும், விசிஷ்டாத்துவைதிகளும் சுத்தாத்துவைதிகளும் பிரமம், ஆன்மா, மாயை என முப்பொருளுண்டென்றும் மாயையினின்றும் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்குமென்றும் சிருஷ்டியைப் பலதிறப்படக் கூறுவர். இரண்டோரமிசமன்றி மற்றெல்லாம் எல்லா வைதிக சமயிகளுக்கும் பொதுவே.

மாயையென்று கூறப்படுவதாகிய மூலப்பிரகிருதியிலே பிரகிருதி தோன்றும். அதனிடத்தே குணதத்துவந் தோன்றும். அக்குணம் சாத்துவிகம், இராஜதம், தாமதமென மூன்றாம். அக்குணதத்தவத்திலே புத்தி தத்துவந் தோன்றும். புத்தியெனினும் மஹத்தத்துவமெனினும் பொருளொன்றே. அப்புத்தி தத்துவம் குணத்திரயத்தை யுடையதாய்ததோலினாலே மூடிக்கொள்ளப்பட்ட வித்துப்போலப் பிரகிருதியினாலே மூடப்பட்டிருக்கும். அதினின்றும் வைகாரிகம் தைஜசம் பூதாதியென்னும் அகங்காரங்கள் மூன்றும் தோன்றும். ஆவ்வகங்காரம் புத்திதத்துவத்தினாலே மூடப்பட்டிருக்கும். அம் மூன்றினுள்ளே பூதாதியாகிய தாமசாகங்காரத்தினின்றும் சத்த தன்மாத்திரை தோன்றும். அத்தன்மாத்திரையினின்றும் ஆகாசந்தோன்றும். அவ்வாகசம தாமசாகங்காரத்தினாலே மூடப்பட்டிருக்கும். அவ்வாகாசம் விகாரப்பட்டுப்பரிசதன் மாத்திரையையுண்டாக்கும். அதனின்று வாயுத் தோன்றும். அக்காரணத்தால் வாயுவின்குணம் பரிசமாயிற்று. வாயுவும் ஆகாயகவசமுடையது. வாயு விகாரப்பட்டு ரூபதன்மாத்திரையையுண்டாக்கும். அத்தன்மாத்திரையினின்றும் தேயுத் தோன்றும். அதுபற்றித் தேயுவுக்கு ரூபம் சிறப்பியல்பாயிற்று. தேயுப்பரிசதன் மாத்திரையினாலே மூடப்பட்டிருக்கும். தேயு விகாரப்பட்ட ரச மாத்திரையை யுண்டாக்கும். அதினின்றும் அப்புத் தோன்றும். அப்புவும் ரூபதன் மாத்திரையினாலே பொதியபப்ட்டிருக்கும். அப்பு விகாரப்பட்டுக் கந்ததன்மாத்திரையை யுண்டாக்கும். அதனின்றும் பிருதிவிதோன்றும். மூலப்பிரகிருதியும் மகத்ததும் அரூபம். அகங்காரமும் தம்மாத்திரையும் மகா பூதங்களும் ரூபம். சத்தத்தினின்றும் ரூபம் தோன்றும். சத்தம் சோதியிற்றோன்றும். சோதி மனத்திற்றோன்றும். மனம் புருஷனிற்றோன்றும். சத்தம் சோததியிற்றோன்றுமென்பது யோக சூத்திரத்திலே “அநாஹதஸ்யசப்தஸ்ய” என்னுஞ் சூத்திரத்தினாலறிக. மேலே கூறப்பட்ட பஞ்சபூதங்களும் தம்மிற் கூடிச் சிருஷ்டியை விருத்திபண்ணும் ஆற்றலில்லாதனவாக, ஈசுரசக்தி அவற்றுட் கலந்து நின்றூக்கும். ஊக்கவே அவைபஞ்சீகரணப்பட்டுப் பிரமாண்டத்தைத் தோற்றுவிக்கும்.

பிரபஞ்சமனைத்தும் சித்தும் சடமும்ஆகிய இருகூற்றில் அடங்கும். சித்தின்றிச் சடம் இயங்காது. ஆகவே தோற்றந் திதி நாசமென அவ்வியக்கமும் மூன்றாய்த் தோன்றும், தோற்றுவிக்குஞ் சக்தி பிரமாவெனப்படும். திதி செய்யுஞ் சக்தியாகிய காலவடிவம் விஷ்ணுவெனப்படும். நாசஞ் செய்யுஞ் சக்தி உருத்திரன் எனப்படும். ஒவ்வோரணுவையும் இம்மூன்றுசக்திகளும் பற்றிநின்று தத்தம் முறையிலே தமது தொழிலைச்செய்யும். இவற்றை ஐரோப்பிய பண்டிதர்கள் ஆற்றலென்பர். ஆரியர் தனித்தனிக் கடவுள் ரென்பர். மேலே தாமசாகங்காரத்தின்றோற்றங் கூறினாம்.

இனிச் சாத்துவிகஅங்காரமாகிய வைகாரிகத்தினின்றும் மனமும் சோத்திரமுதலிய பஞ்சஞானேந்திரியமும் தோன்றும். ராசதாகங்காரமாகிய தைஜசத்தினின்றும் வாக்குமதலிய கன்மேந்திரியம் ஐந்துந் தோன்றும்.

பூதங்கள் பஞ்சீகரணப்படும் முறை வருமாறு ; -
ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிலி
ஆகாயம் ½ “ 1ஃ8 1ஃ8 1ஃ8 1ஃ8
வாயு ½ 1ஃ8 “ 1ஃ8 1ஃ8 1ஃ8
தேயு ½ 1ஃ8 1ஃ8 “ 1ஃ8 1ஃ8
அப்பு ½ 1ஃ8 1ஃ8 1ஃ8 “ 1ஃ8
பிருதிலி ½ 1ஃ8 1ஃ8 1ஃ8 1ஃ8 “
ஒவ்வொருபூதமும் இருகூறாகி, ஒருகூற்றை நிறுத்தி மற்றைக்கூற்றைநான்குகூறாக்கி, ஏனையநான்கு பூதங்கட்கு மொவ்வொன்றாகக் கொடுத்தும் வாங்கியும் தம்பிற் கலப்பதே பஞ்சீகரணமாம். அஃதாவது பிருதிவியிலே பிருதிவிதன்மாத்திரை அரை@ அப்புதன்மாத்திரை அரைக்கால்@ வாயு தன்மாத்திரை அரைக்கால்@ ஆகாயதன்மாத்திரை அரைக்கால்@ இப்படியே மற்றவையுமாமெனக் கொள்ளுக. தூலபூதங்களைச்சோதித்தால் இக்கூறுகள் புலனாகும்.


மூலப்பிரகிருதியிலினிடத்திலேயுள்ள கூறுகளையெல்லாமடக்கியிருக்கும்மயின் முட்டை போலப் பிரபஞ்சத்துக்கு வித்தாயுள்ளது.

இவ்விருபத்துக்குநான்கிற்கும் மேலாய் வேறாயுள்ள தத்துவம் புருஷதத்துவம். இத்துணையுஞ் சாங்கியமதக்கொள்கை. சைவசித்தாந்திகள் தத்துவம் முப்பத்தாறென்பர். அவர்கொள்கைவருமாறு@-

பூதம் ஐந்து. தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து. கன்மேந்திரியம் ஐந்து. மனம் அகங்காரம் புத்தி குணம் பிரகிருதி என்னும் ஐந்து, ஆகத் தத்துவம் இருபத்தைந்தும் அசுத்தாத்துவா. இருபத்தாறாந் தத்துவம் அராகம். அதற்குமேலே வித்தியாதத்துவம். அதற்குமேலே கலாதத்துவம். அதற்குமேலே நியதிதத்துவம். அதற்குமேலே காலதத்துவம். ஆராகம் முதற் காலதத்துவ மீறாகிய வைந்தும் மிச்சிராத்துவா. இவைமுப்பதும் ஆன்மாக்களுக்குத் தனித்தனிசூக்குமதேகங்களாம். அதற்குமேல் மாயாதத்துவம். அதற்குமேலே சுத்தவித்தியாதத்துவம். அதற்குமேல் ஈசுரதத்துவம். அதற்குமேலே சதாசிவதத்துவம். அதற்கு மேலே சத்திதத்துவம். அதற்கு மேலே சிவதத்துவம். இவையே முப்பத்தாறுமாம். சிவதத்துவம்நாதம் என்றும் சத்திதத்துவம் விந்து என்றும் சொல்லப்படும். சொல்லொற்றுமைநோக்கிச் சிவதத்துவமும் பரமசிவமுமொன்றெனக் கொள்ளாதொழிக.
அச்சிரு~;டிக் கிரமம் வருமாறு:


இது சிவாத்துவ தீபிகையிலே கூறப்பட்ட தோற்றக்கிரமம்.

இனி அதிகாரதேவர்களிருக்கும் முறை கூறுவாம். சுத்த வித்தியாதத்துவத்திலே சத்தகோடிமகாமந்திரங்களும் நந்தி முதலிய கணநாதர் எண்மரும், இந்திரன் முதலிய உலகபாலகரும், ஈசுரதத்துவத்தில் அநந்தர் முதலிய வித்தியேசுரருமிருப்பர். அநந்தர் மாயாதத்துவபுவனங்களையுண்டாக்குபவர். ஸ்ரீகண்டருத்திரர் குணதத்துவத்திலிருந்து ஒடுக்கக்காலத்தில் அராகத்திலிருப்பர். பிரகிருதி மத்தகத்திலே எட்டுருத்திரர் இருப்பர். பிரமவிஷ்ணுக்கள் ஸ்ரீகண்டருத்திரரோடு குணதத்துவத்திலிருப்பர். பிரணவம் ஈசுரதத்துவத்திலிருக்கும். ருத்திரகணங்களுக்குச் சங்கையில்லை.

ஆகாயம் துவாரமாகி ஏனைப்பூதங்களுக் கிடங்கொடுக்கு மியல்பினது. வாயு சலித்து மற்றைப்பூதங்களைத் திரட்டுமியல்பினது. தேயுச் சுட்டொன்றுவிக்கும். அப்புக் குளிர்ந்து பதஞ்செய்யுமியல்பினது. பிருதிவி கடினமாய் மற்றெவற்றையுந் தரிக்குமியல்பினது. ஆகாயம் வட்டவடிவினது. வாயு அறுகோணம். தேயு முக்கோணம். அப்புப்பிறை. பிருதிவி சதுரம். ஹ-ய-ர-வ-ல ஆகாயாதி ஐந்திற்கும் முறையே அடிரங்களாம். மாயையின் வேறாகியும் அதனுள்ளே பந்திக்கப்பட்டு மூழ்கிக்கிடந்த ஆன்மாவுக்குக் கலாதத்துவம் மின்னற்கதிர்போல அந்தகாரத்தைச் சிறிது விலக்கித் தெருட்ட அக்கலையினின்றும் அறிவுக்கு உபகரணமாயுள்ள வித்தியாதத்துவமும் அதினின்றும் போகத்துக்குக் கருவியாகிய அராகமும் தோன்றும். அந்தஅவதாரத்திலே ஆன்மாப் போகாதிகாரத்தைப் பொருந்தும். அவ்வதிகாரமே புருஷன்என மேலே கூறப்பட்டது. அஃதுள்ளவாறு தத்துவமாகாமையின் தத்துவங்களோடுசேர்த் தெண்ணப்படாதாயிற்று. ஆன்மாவுக்குப் போக்கியமாயுள்ள இருபத்தைந்துமாம். சுpத்தஞ்சேர்த்தெண்ணப்படாமைக்கு நியாயமும் இது போன்றதேயாம்.

சைவசித்தாந்திகள் சுத்த சிவமாகிய பிரமமும் ஆன்மாவும் மாயையும் நித்தியப் பொருள்களென்பர்கள். சுத்த சிவத்துக்குச் சிவதத்துவமும், சுத்தியும், சதாசிவமும் திருமேனியாகும். சிவதத்துவத்திலே சுத்தசிவகலை ஸ்தூலமாகச் சத்திகலை சூக்குமமாய் நிற்கும், சத்திதத்துவத்திலே சிவகலை பாதியும் சத்திகலை பாதியுமாகும். ஆதிலே சதாசிவம் சூக்குமமாகும். சுதாசிவத்திலே சிவகலை காலும் சத்திகலை முக்காலுமாக விளங்கும். சிவதத்துவத்திலே ஆன்மாவும் சத்திதத்துவத்திலே மாயையும் அந்தர்க்கதமாய் நிற்கும். ஈசுர தத்துவத்திலே சிவகலை சைதன்னிய ரூபமாகச் சத்திகலை மேம்பட்டுநிற்கும். சுத்த வித்தியா தத்துவத்திலே சைதன்னியமும், மாயையும் சமப்பட்டு நிற்கச் சத்;தி யோங்கிநிற்கும். அச் சுத்த வித்தையிலே அதோபாகத்திலுள்ள மாயையைச் சத்திநோக்கிநிற்க, மாயை வேறாகப் பிரியும். சிவதத்துவமுதலிய ஐந்தும் பிரேரகமாக மாயைமுதலிய ஏழும் ஆன்மாவுக்குப் போககாண்டமாம். அவற்றின் கீழுள்ள இருபத்துநான்கும் போக்கியமாம். இவற்றின் உள்ளுறையெல்லம் சிவாத்துவ விருத்தியிற் காண்க.

இப்போதுள்ள சிருஷ்டி தொடங்கி இருபத்தேழு சதுர்யுகங்கடந்து இருபத்தெட்டாஞ் சதுர்யுகம் நடக்கின்றது. இச் சிருஷ்டியிலே ஆறு மனுக்களிறந்து ஏழாம்மனுவாகிய வைவசுவத மனுவின் காலம் நடக்கின்றது. மனுவந்தரங்கள் தோறும் சோபானக்கிரமமாக மனுஷரது வடிவமும் குணமும் வேறுபட்டுயர்ந்துவரும். முன்னிருந்த மனுவினது காலத்து மாந்தர் நம்மினும் வடிவு குணங்களாற் குறைந்தவராயிருப்பர். இனிவரும் சாவர்ணி மனுவினது காலத்துமாந்தர் நம்மிலுஞ் சிறந்தோராவர். முனுவென்றது மனுஷ கணத்தை. அவ்வக் கணத்துக்கு ஆதிதலைவனெனினும் பொருந்தும்.

ஆன்மாக்கள் ஆணவத்தால் உடலெடுத்துக் கன்மத்துக்கீடாக மேல்கீழ்ப்பிறவிகளிற் செல்லும். சிருஷ்டியும் ஆன்மாக்களின் பொருட்டாக நிகழ்வது.

வாயுவுலகம் சனி, தேயுவுலகம் சூரியன், அப்புவுலகம் சுக்கிரன். பிருதிவியுலகம்பூமி. ஓவ்வொரு பூதத்திலும் மற்றைய நான்கு பூதங்களுங் கூடியிருக்கும். தனிப்பூதங்கள் தன் மாத்திரைகள். தன்மாத்திரைகளது சையோகத்தாலே பூதங்களும் உலகங்களுந் தோன்றும். உலகம் தோன்றிநின்று ஒடுங்குமியல்பினதாதலின் நித்தியாமாயுள்ளது. ஊன்றி நோக்குமிடத்துக்கணந்தோறும் சிருஷ்டி திதி சங்காரமாகிய முததொழிலும் நிகழ்வது பிரத்தியடிமாம். நிலைதிரிதலேயன்றி அழிவென்பதொன்றில்லை.

சிருஷ்டியாதிபத்தியம் - பூமிக்குப் பிருதுசக்கிரவர்த்தியும், ஒஷதிகள், யாகம், விரதம், நடித்திரங்கள் முதலியவைகளுக்குச் சந்திரனும், ஜலத்துக்கு வருணனும், தனத்துக்கும் யடிர்களுக்கு குபேரனும், துவாதசாதித்தியர்களுக்கு விஷ்ணுவும், வசுக்களுக்கு அக்கினியும், பிரஜாபதிகளுக்குத் தடினும், தேவர்களுக்கு இந்திரனும், தைத்தியர் தானவர்களுக்குப் பிரஹலாதனும், பிதிர்களுக்கு யமனும், பசுபூதாதிகளுக்குச் சிவனும், மலைகளுக்கு இமயமும், நதிகளுக்குச் சமுத்திரமும், கந்தருவ வித்தியாதரகிந்நர கிம்புருஷர்களுக்குச் சித்திர ரதனும், சர்பப்ங்களுக்கு வாசுகியும், திக்கஜங்களுக்குஐராவதமும், படிpகளுக்குக் கருடனும், குதிரைகளுக்கு உச்சைச்சிரவமும், மிருகங்களுக்குச் சிங்கமும், சிருஷ்டிகாலத்திலாதிபத்தியம் பெற்றார்கள்.

சிலம்பாறு - அழகர் மலைக்கணுள்ள ஓராறு. நூபுரகங்கையெனவும் பெயர்பெறும்.

சிலாதன் - (ரி) நந்தீசுவரன் தந்தை.

சிவகங்கை - (1) கைலாசத்தின் கண்ணதாகிய ஒரு நதி. (2) சிதம்பரத்திலுள்ள ஒரு தீர்த்தம். இத்தீர்த்தத்திலே இரணியவன்மன் மூழ்கித் தனதுடற்குற்றம் நீங்கப்பெற்று அரசனாயினான்.

சிவகலை - பட்டணத்தடிகள் மனைவி.

சிவகாமி - சிதம்பரத்தி லெழுந்தருளியிருக்கும் சிவசத்திபெயர்.

சிவகாமித்தாயம்மை - திருப்புத்துரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்.

சிவகோசரியார் - கண்ணப்பர்காலத்திலே திருக்காளத்தியிலே விளங்கிய அருச்சகர்.

சிவஞானசித்தி - அருணந்திசிவாசாரியர்செய்த பதிசாஸ்திரம். அது சைவசித்தாந்தசாஸ்திரங்கள் பதினான்கனுளொன்று. அது சிவஞானபோதத்திற்கு வழிநூல். அது பரபடிம் சுபடிம் என் இரு படிங்களையுடையது. பதி பசு பாச வியல்புகளை ஐயந்திரிபறத் தடைவிடைகளால் விளக்குவது. இது பௌத்தம் லோகாயதமுதலிய சமயங்களைக்கண்டித்துச் சுவபக்கம்நாட்டுவது. ஆன்மவிசாரணை செய்யப் புகுவார்க்கு இது போலச் சிறந்தநூல் மற்றில்லை. அதற்கு மறைஞானசம்பந்தர் சிவாக்கிரயோகிகள் முதலியோர் உரைசெய்தார்கள்.

சிவசன்மா - வடமதுரையிலிருந்த வோரந்தணன். இவனை விஷ்ணுவினது கணநாதர் உபசரித்தழைத்துப் போய்ச் சந்திராதியுலகங்களை யெல்லாங் காட்டினார்கள்.

சிவஞானமுனிவர் - நூற்றுமுப்பது வருஷங்களுக்கு முன்னர்த்; திருவாவடுதுறைமடத்திலிருந்த ஒரு தம்பிரான். இவர் வடமொழி தெனமொழியிரண்டிலும் வல்லவர். சிவஞானபோதத்திற்குத் திராவிடமகாபாஷியமும் சிவஞானசித்தியார்க்குப் பொழிப்புரையும், சிவஞானபோதத்திற்குச் சிற்றுரையும், தொல்காப்பியமுதற் சூத்திரவிருத்தியும் செய்தவர். சம்ஸ்கிருதநூல்களைத் தமிழிலே வசனரூபமாகவும், செய்யுள்ரூபமாகவும், மொழிபெயர்ப்பதில் இவர்க்கிணையாயினார் பிறரில்லை. அன்னம்பட்டியம் சிவதத்துவ விவேகமுதலியன இவர் செய்த மொழி பெயர்ப்புக்கள், தமிழ் இலக்கணவுணர்ச்சியும் தர்க்கசாஸ்திரவாராய்ச்சியும் நிரம்பியவராதலால் சிரோரத்தினங்களாக விளங்குகின்றன. பிறர் நூல்களிலே குற்றங்தெரித்தலில் நக்கீரரும் அவர்க்கிணையாகார். பாஷியமொன்றேனுமில்லாத பாஷையென்று வடமொழியுடையோர் தமிழை இகழ்ந்துவந்த குற்றத்தை நீக்கினது அவர்செய்த திராவிடபாஷியமே. அதற்குமுன்னே நாலாயிரபபிரபந்தபாஷியம் உண்டென்றாலும் அஃது இத் திராவிடபாஷியம் போலச்சிறந்ததன்று.

சிவதத்தம் - விஷ்ணுவினது சக்கரம்

சிவதருமம் - உபபுராணங்களுள் ஒன்று.

சிவதருமோத்தரம் - பரமதருமாதயியல், சிவஞானதானவியல், ஐவகையாகமவியல், பல விசிட்டகாரணவியல், சிவதருமவியல், பாவவியல், சுவர்க்க நரகவியல், சனனமரணவியல், சுவர்க்கநரகசேடவியல், ஞான யோகவியலெனப் பன்னிரண்டியல்களையுடைய இந்நூல் மறைஞானசம்பந்தர் செய்தது.

சிவநேசர் - மயிலாப்பூரிலிருந்த இவர் பாம்புகடித்திறந்த தமது புத்திரியினது எலும்பை ஒரு குடத்திலிட்டுவைத்துத் திருஞானசம்பந்த ரங்கெழுந்தருளிய போது அவர் முன்வைத்து அவரருளால் முன்போலப் பெண்ணுருவாக எழும்பப்பெற்ற வொருபக்தர்.

சிவஞானபோதம் - இது வடமொழியிலே நந்திபகவானாலும், தமிழிலே மெய்கண்ட தேவராலுஞ் செய்யப்பட்டது. தமிழ்ச் சைவசித்தாந்தசாத்திரம் பதினான்கிற்கும் முதனூலாகவுள்ளது. பண்னிரண்டு சூத்திரங்களையுடையது. இதற்குச் சிவஞானமுனிவர் பாஷியமுஞ் சிற்றுரையுஞ் செய்தனர். சிவஞானமுனிவர்வடமொழியிலே சிவாக்கிரயோகிகள் செய்த பாஷியத்தையே மொழிபெயர்த்தனர். “வேதம்பசுவதன்பான் மெய்யாகமநால்வ - ரோதுந்தமிழ்வேதமுள்ளுநெய் - போதமிகு - நெய்யினுறுசுவையா நீள்வெண்ணெய் மெய்கண்டான் - செய்த தமிழ்நூலின் நிறம்” என்னும் ஆன்றோர்வாக்கே சிவஞானபோதத்தின் மாட்சிமையைத் தெரிவிக்கும்.

சிவபுரம்
சிவபுரி காசி.
சிவராஜதானி

சிவப்பிரகாசசுவாமிகள் - பிரபுவிங்கலீலை, திருக்கூவப்புராணம், சித்தாந்தசிந்தாமணி, வேதாந்த சூடாமணி, சிவப்பிரகாசவியாசம், சிவநாமமகிமை, தர்க்கபாஷை, சோணசைல மாலை,நன்னெறி, நால்வர் நாண்மணிமாலை, வேங்கையுலா, வேங்கைக்கோவை முதலிய நூல்கள் செய்தவர். காஞ்சீபுரத்திலே பிறந்து சிந்துபூந்துறையிலே வெள்ளியம்பலத்தம்பி ரானிடம் பாடங்கேட்டவர். இலக்கண இலக்கியங்களில் மகா சதுரர். குற்பனைக்களஞ்சியம். சாதியில் வீரசைவர். இவர் இற்றைக்கு இருநூற்றிருபதுவருஷங்களுக்கு முன்னர் வியங்கியவர்.

சிவபுராணம் - பதினெண்புராணத்தொன்று.

சிவமலை - கொங்கு நாட்டின்கணுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம்.

சிவயோகநாயகி - திருக்கானூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

சிவராத்திரி - மாசிமாசத்திலே அபரபடி சதுர்த்தசியோடு கூடிய அர்த்தராத்திரிகாலமாகிய புண்ணிய முகூர்த்தம். அது லிங்கோற்பவருக்குப்பிரிய முகூர்த்தம்.

சிவராத்திரிவிரதம் - மாசிமாதத்துக் கிருஷ்ணபடி சதுர்த்தசியிலே சிவபெருமானைக்குறித்து அநுஷ்டிக்கும் விரதம். அத்தினத்திலே உபவாசஞ்செய்து நான்குயாமமும் நித்திரையின்றிச் சிவபூசைசெய்தல் வேண்டும். சிவபூசையில்லாதவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாடிர செபமும் சிவபுராணசிரவணஞ்செய்து நான்கு யாமமும் சிவாலயதரிசனஞ் செய்தல்வேண்டும். இது சைவ சமயிகள் யாவராலும் அவசியம் அநுஷ்டிக்கத்தக்கது.

சிவலிங்கம் - லிங்கம் காண்க.

சிவலோகநாயகர் - திருப்புன்கூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சிவன் - திரிமூர்த்திகளுளொருவரென்று விஷ்ணு புராணங்களும் அம்மூவரையும் அதிஷ்டித்துநிற்கும் பரப்பிரமமென்று சைவ புராணங்களுங் கூறும். சிவன் என்னுஞ்சொல்லுக்கு மங்களரூபி என்பது பொருள். சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவோர் சைவரெனப்படுவர். அவர்கள்சமயம் சைவசமயமெனப்படும். பதினெண் புராணங்களுள்ளே சிவபரமாகவுள்ள புராணங்கள் பத்து. சிவனைவழிபடுவோர்க்காதார நூல்கள் ஆகமங்களாம். அவை இருபத்தெட்டு. சிவன் ரூபமும் அரூபமும் ரூபாரூபமும் ஆகிய மூன்றுதிருமேனிகளுடையர். ஆரூபத் திருமேனியோடுகூடியவிடத்துச் சிவனென்றும், ரூபாரூபத் திருமேனியிற் சதாசிவமூர்த்தியென்றும், ரூபத் திருமேனியில் மகேசுவரரென்றும் சொல்லப்படும். பிரமாவைச் சிருஷ்டிகர்ததாவென்றும், விஷ்ணுவைக்காவற்காரகர்த்தாவென்றும், சிவனைச்சங்காரகர்த்தாவென்றும் வைதிகர்யாவருங் கூறுவர். சங்காரகிருத்தியம் சிருஷ்டிதிதிகளுக்கு ஏதுவாகச் செய்யப்படுவதல்லது நாஸ்தியாக்கும் பொருட்டன்று. ஆதலால் சங்காரகிருத்தியத்pல் மற்றையிருகிருத்தியங்களுமடங்கும். அடங்கவே சங்காரகர்த்தாவே மற்றையிருவரையு மிதிஷ்டித்துநின்று நடாத்து முழுமுதற் கடவுளென்பர்கள். விருஷபத்து வஜன், உமாபதி, சர்மவாசன், நந்திவாகனன், சூலி, கபாலமாலாதரன், சர்ப்ப குண்டலன், காலகாலன், நீலகண்டன், கங்காதரன், திரிநேத்திரன், சந்திரசேகரன், திரிபுராந்தகன் முதலிய அநந்தநாமங்கள் பெறுவர். ஊலோககண்டகராகிய திரிபுராசுரரை சங்காரஞ் செய்தருளியமையின், திரிபுராந்தகன் எனப்படுவர். திரிபுராந்தகனஞ் செய்யப் புறப்பட்;ட போது, பூமியை இரதமாகவும், சூரியசந்திரர்களை இரதசக்கரமாகவும், வேதங்களைக்குதிரைகளாகவும், பிரமாவைச் சாரதியாகவும், மேருவை வில்லாகவும், சாகரத்தை அம்புக்கூடாகவும், விஷ்ணுவைப் பாணமாகவும் கொண்டு சென்றார். இவ்விஷயத்திலே அத்தியற்புத தத்துவார்த்தமடங்கியிருக்கின்றது. அதனை ஈண்டுவிரிப்பிற் பெருகும். புpரம விஷ்ணுக்களது கபாலத்தை மகா கற்பாந்தரங்களிலேதரித்துத் தனித்து நின்று ஆனந்ததாண்டவஞ்செய்தலின் கபால மாலாதரனென்னும் நாமம்பெறுவர். சிவன் மூன்று கண்களுடையர். ஓன்று நெற்றியிலுள்ளது. அதனாற் கண்ணுதலெனப்படுவர். இக் கண்ணினாலேயே காமதகனஞ் சேர்க்கும் பொருட்டுப் பெற்ற கங்கையினது பிரவாகவேகத்தைச் சடைக்கொழுந்ததொன்றினாலடக்கிய காரணம்பற்றிக் கங்காதரன்கங்கை வேணியன் முதலிய நாமங்களைப்பெறுவர். அமிர்தமதன காலத்து எழுந்த விஷத்தைக் கண்டத்தடக்கித் தேவரைக் காத்தருளினமையின் நீலகண்டன் காளகண்டன் முதலிய நாமங்களைப் பெறுவர். அக்காலத்திற்றானே யெழுந்த சந்திரனைச் சடையிற்றரித்தமையின் சந்திரசேகரன் சந்திரமெனலி முதலிய நாமம் பெறுவர். மார்க்கண்டனைக்காக்குமாறு காலனை உதைத்தருளினமையாலும் காலவரையறைக்ககப்படாத அநாதிநித்தியாராதலினாலும் காலகாலன் காலாந்தகன் முதலியநாமங்கள் பெறுவர். இச்சிவபிரானை மகாலிங்கம் அர்த்தநாரீஸ்வரர் நடேசர் முதலிய இருபத்தைந்து மூர்த்தத்திடத்தே தியானித்து வழிபடுவர். சிவனுக்குச் சத்தி உமாதேவியாரெனப்படுவர்.
இருபத்தைந்து மூர்த்திகளாவார். லிங்கமூர்த்தி, சுகாசனமூர்த்தி, உமாசகமூர்த்தி, கல்யாணசுந்தரமூர்த்தி, சோமஸ்கந்தமூர்த்தி, சக்கரப்பிரதானமூர்த்தி, திரிமூர்த்தி, அர் தாங்க விஷ்ணுமூர்த்தி, தடிpணமூர்த்தி, பிடிhடனமூர்த்தி, கங்காளமூர்த்தி, காமசமஹாரமூர்த்தி, காலாரி, ஜலந்தாரி, திரிபுரதம்ஹாரமூர்த்தி, சரபமூர்த்தி, நீலகண்டமூர்த்தி, திரிபாதமூர்த்தி, எகபாதமூர்த்தி, வைரவமூர்த்தி, விருஷபாரூடமூர்த்தி, நடராஜமூர்த்தி, கங்காதரமூர்த்தி. (2) (ய) அக்குரூரன்தம்பி.

சிவாக்கிரயோகி - இவர் தஞ்சாவூரிலே சரபோஜி மகராஜாவுடைய சரபோஜி மகராஜாவுடைய சபையிலே மணவாளமாமுனியென்னும் வைஷ்ணவசிரேஷ்டரோடு பதினேழுநாள் வரையில் அவர் கடாவிய வினாக்களுக்கெல்லாம் ஏற்றவாறு விடையளித்துச் சிவபரத்துவம்நாட்டி வரும்போது பதினேழாநாளிரவு மணவாளமாமுனிவர் படித்தார் சிவாக்கிரயோகி எழுந்தருளியிருந்த மடத்திற் றீக்கொளுவினார்கள். அம்மடம் முழுவதுஞ் சாமபராகியும் சிவாக்கிரயோகி சிறிதும் வருந்தாது நிஷ்டையிலிருந்தனர். அதனைக் கேள்வியுற்ற சரபோஜி அம்மடத்திற்குத் தீயிட்டவர்களையெல்லாம் ஒரறையிற்சேர்த்து அக்கினிக்கிரையாக்கினான். சிவாக்கிரயோகிகள் செய்தநூல்கள் சிவஞானபோதபாஷியம், சித்தாந்ததீபிகை, தத்துவதரிசனம், பாஞ்சராத்திசபேடிகை என்பவைகளாம்.

சிவாலயமுனிவர் - சபாநாதர் அருளால் அகஸ்தியரை அடைந்து அகஸ்தியத்திரட்டு என்னும் தேவாரப்பதிகமிருபத்தைந்து பெற்று அவற்றைக் கிரமமாகப் பாராயணம்பண்ணித் திருவருள் பெற்றவர்.

சிவானந்தலகரி - சங்கராசாரிய சுவாமிகள் செய்தவொருநூல்.

சிவானந்தவல்லியம்மை - திருக்கோவலூர் வீரட்டத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

சிவானீ - பார்வதி, சிவசக்தி.

சிவேதன் - சனகவிஜயற்குநண்பன்.

சிவை - (1) அங்கிரசன்பாரி. (2) உமாதேவியார்.

சிறப்புலிநாயனார் - சிவனடியார்களைச் சிவனெனக்கொண்டு அவர்களை அன்போடு திருவமுது செய்வித்து அவர்களுக்கு வேண்டுந்திரவியங்கொடுத்தது வழிபட்டு வந்த திருவாக்கூர்ப்பிராமணராகிய பக்தர்.

சிறுத்ததொண்டநாயனார் சிவபிரான்
பரஞ்சோதியார் வைரவவேடங்கொண்டு சென்று நம்மை அமுதுசெய்விப்பீரோவென்று கேட்க, செய்விப்பேன் என்றுகூறி வைரவர் கேட்டபடி தமது ஒரேபிள்ளையாகிய சீராளனை வெட்டிக் கறியாகப் பாகம்பண்ணி விருந்திடத் துணிந்தபோது வைரவர் உமது புத்திரனை அழையுமென, இப்போதுதவான் எனச்சொல்லியும் கேளா வைரவரைத்த திருப்திசெய்யும்படி வாளாவழைக்க, அப்புத்திரன் உண்மையாகவே வரப்பெற்ற பக்தர். இவர் திருச்செங்காட்டங் குடியில் விளங்கிய பிராமணர். மனைவிபெயர் திருவெண்காட்டுநங்கை. சிறுத்தொண்டர் திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் காலத்தவரென்பது பெரியபுராணத்தாற்றுணியப்படுதலின் நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்டவர்.

சிறுபாணாற்றுப்படை - இதுகடைச்சங்க நூல்களுளொன்று. பத்துப்பாட்டுள் மூன்றாவது பிரபந்தமாகிய இஃதுஏறுமாநாட்டு நல்லியக்கோடன் மீது கடைச்சங்கப்புலவருள் ஒருவராகிய நல்லூர் நத்தத்தனார் பாடியது. தன் யாழ்வன்மைகாட்டிப் பரிசுபெறவிரும்பியபாணனை நல்லியக்கோடன் மாட்டுச் செலவிடுத்தமையின் ஆற்றுப்படையாறிற்று.

சிறுபுலியூர் - காவிரியின் தென்கரையிலுள்ள விஷ்ணுஸ்தலம்.

சிறுமலை - பாண்டிநாட்டுள்ளதோர்மலை.

சிறுமேதாவியர் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

சிற்றம்பலம் - சிதம்பரம் காண்க.

சினி - (1) பு. கர்க்கன் புத்திரன். கார்க்கியன்தந்;தை. (2) ய. யுதாசித்துபுத்திரன். (3) ய. அநமித்திரன் புத்திரன். (4) ய. விரேதன் புத்திரன்.

சிஷ்டி - துருவன் புத்திரன். பவியன் இவன் சகோதரன். சுகச்சாயை இவன் மனைவி.

சுPகாளத்தி - இது தொண்டைநாட்டிலுள்ள சிவஸ்தலம். இது திருக்காளத்தியெனவும்படும். சிலந்தியும் பாம்பும் யானையும் பூசித்து முத்திபெற்ற தலமாதலின் இது முத்திபெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது. கண்ணப்பரும் நக்கீரரும் முத்திபெற்றதும் இத்தலத்திலேயே. இது வேங்கடத்துக்குக் கிழக்கேயுள்ளது.

சீதை - ஜனகன் யாகஞ்செய்து பெற்ற புத்திரி. ராமன் பாரி. வேதவதி காண்க.

சீத்தலைச்சாத்தனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர். இவரே மணிமேகலையென்னும் நூல் செய்தவர். இவர் பிறர் நூல்களிலே குற்றங்காணுந்தோறும் தமது தலையிலே குட்டிக்கொள்ளுதலினாலே அதுகாரணமாக வுண்டாகிய புண் ஆறப்பெறாத தலையையுடையவர். அதுபற்றியே சீத்தலைச்சாத்தனார் என்னும் பெயர்கொண்டார். கண்ணகியால் மதுரையெரிந்து நிலைகெட்டபோது இவர் பொருளீட்டும் பொருட்டுச் சேர ராசாவாகிய செங்குட்டுவன் பாற்சென்று மதுரையினிகழந்தது கூற, செங்குட்டுவன் தம்பி இளங்கோவடிகள் அதனைச் சிலப்பதிகாரமென்னும் பெயராற் பாடினார். சாத்தனார் காண்க.

சீரத்துவஜன் - ஜனகன்.

சீராளன் - சிறுத்தொண்டநாயனார் மகன்.

சுகச்சாயை - சிஷ்டிமனைவி.

சுகந்தநாயகி - திருவேட்டககுடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்.

சுதந்தவனநாயகி - திருச்செம்பொன்பள்ளியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார்பெயர்.

சுகர்மன் - (ரி) ஜைமினி முனிவர் புத்திரனாகியசுமந்தன் புத்திரன்.

சுகவாஞ்சிநாயகர் - திருவாஞ்சியத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சுகன் - இவ்விருஷி வியாசருக்குக் கிருதாசியென்னும் அப்சர ஸ்திரியிடத்துப் பிறந்த புத்திரனார். கிளிரூபத்தோடிருந்த கிருதாகியிடத்தே பிறந்தமையின் இவர் சுகரெனப்பட்டார். இவர் பிறந்தவுடனே தத்தவஞானியாயினார். இவர் அரம்பையென்னும் தெய்வப்பெண் தன்னோடு சேருமாறு தன்னாலியன்றவாறெல்லாம் காதல்காட்டியும் சித்தஞ் சலியாத சுத்தவைராக்கியமுடையவர். முனிவருள் இவர் ஒருவரே பெண்போகத்திலே மயங்காதவர். (2) ராவணன் சாரணர்களுளொருவன்.

சுகன்னியை வைவசுதமனு புத்திரனாகிய சரியாதிபுத்திரி. சியவனமகாவிருஷிபாரி. பிரமதிக்குத் தாய். இவள் சரியாதியோடு தபோவனத்திலிருக்கும் மலமூத்திர பந்தனரோகத்தால் வருந்த அவளைச் சரியாதிகொண்டு போய் ஒரு புற்றினிடமாகவிருந்துதவஞ்செய்த சியவனனைக்கண்டு வணங்கிக்கூறி அவளை அவனிடத்தொப்பித்து அவனையுமுடன் கொண்டு தன்நகரஞ்சார்ந்து அங்கே அசுவினிதேவரால் அவளுடைய ரோகத்தை நீக்குவித்தான்.

சுகிருதி (பா) பிருதுபுத்திரன்.

சுகுணகுணபாண்டியன் - இராஜாதிராஜபாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன். இவன் காலத்திலேயே கரிக்கரீஇக்கு உபதேசஞ்செய்த திருவிளையாடல் நடந்தது.

சுகுணபாண்டியன் - இராஜராஜபாண்டியனுக் குப்பின் அரசு செய்தவன்.

சுகுணசேகரபாண்டியன் - சுகுண பாண்டியனுக்குப்பின் அரசு செய்தவன்.

சுகுணன் - பாண்டு புத்திரனாகிய வீமசேனனுக்கு ஜலதரையென்பவளிடத்துப் பிறந்தபுத்திரன்.

சுகுமாரன் - (கா) சுவிபுபுத்திரன். திருஷ்டகேதன் தந்தை.

சுகேசன் - வித்தியுற்கேசன்புத்திரன். மாலியவந்தன முதலியோர் தந்தை. இவன் பாரி தேவவதி.

சுகேசினி - சகரன் முதன்மனைவி அசமஞ்சசன்தாய்.

சுகேதனன் - (1) தாடகை தந்தையாகிய ஓரியடின். (2) (நவராத்திரிகாண்க)

சுகேதன் - (1) மிதிலன்புத்திரனுக்குப் பௌத்திரன். (2) (கா) Nடிமன்புத்திரன்.

சுக்கிரவிரதம் - இது உமாதேவியாரைக்குறித்து அநுஷ்டிக்கப்படுவதும், சுப்பிரமணியரைக்குறித்து அநுஷ்டிக்கப்படுவதும்என் மூன்றாம். தேவியைக்குறித்தது சித்திரைமாசத்துச் சுக்கிலபடித்து முதற்சுக்கிரவாரந் தொடங்கியும், விநாயகரைக்குறித்தது வைகாசிமாசத்;துச்சுக்கிலபடித்து முதற்சுக்கிரவாரந்தொடங்கியும், மற்றது ஐப்பசி மாசத்து முதற்சுக்கிரவாரந் தொடங்கியுமனுஷ்டிக்கத்தக்கன.

சுக்கிரன் - பிரமமானச புத்திரருளொருவனாகிய பிருகுவினது பௌத்திரன். இவன் அசுரகுரு. இவன்மகள் தெய்வயானை. இவன்தாய் தேவலோகத்திலே தவஞ்செய்திருந்தபோது விஷ்ணுவாற் கொல்லப்பட்டவள். இவன் அசுரமந்திரியெனவும்படுவன். இவன் மகாபலி சக்கரவர்த்தியிடத்திலே மந்திரியாகவிருந்தகாலத்திலே விஷ்ணு வாமனாவதாரமெடுத்து மகாபலியிடஞ்சென்று மூன்றடிமண்வேண்டியபோது சுக்கிரன் “இது விஷ்ணுவினது வஞ்சச்சூது நம்பாமொழி” யென்று மகாபலியைத்தடுத்தகாரணத்தால் விஷ்ணு அச்சுக்கிரன் கண்களிலொன்றைக் கெடுத்தார். சுக்கிரன் இறந்தவுயிரை யெழுப்பும் வன்மையுடையவன். இவனிருக்கும் மண்டலம் அப்புமண்டலம். (2) நவக்கிரகங்களுளொன்று. சுக்கிரன் சுபஸ்தானங்களில் நிற்கப்பிறப்போர் திரிகாலவுணர்ச்சியும் ராஜயோகங்களுமுடையராய் விளங்குவர். சுக்கிரன் மழைக்கதிபதியாதலின் மழைக்கோளெனப்படும்.

சுக்கிரிநகன் - பார்ஹச்திரத வமிசத்து ரிபுஞ்சயன் மந்திரி.

சுக்கிரீவன் - வாலி தம்பி. இருடிவிரஜன் புத்திரன். இவன் மனைவி உருமை. இவன், வாலி தன் மனைவியையும் அரசுரிமையையுங் கவர்ந்து கொண்டு தனக்குச் செய்த துன்பங்களையெல்லாம் ராமனிடத்திலே முறையிட்டு அத் துன்பத்தை நீக்கித்தந்தால் அவ் வுபகாரத்துக்கீடாகத் தானும் தன் சேனையும் சீதையைச் சிறை மீட்டற்கு வேண்டிய துணைச்செய்வதாகக் கூறி ராமரால் வாலியைக் கொல்வித்துடன் சென்று இலங்கையிற் சீதையைச் சிறைமீட்டவன்.
விஷ்ணு ராவண சங்காரத்தின் பொருட்டுத் தமதுலகத்தைவிட்டுப்புறப்படும் போது அத்வேதருட்சிலரைத் தம்மோடுசென்று பூமியிற் பிறக்குமாறு பணித்தருளினர். அவருட் சூரியனது அமிசமாகப் பிறந்தவன்; இச் சுக்கிரீவன். அவனைத்த துணையாகக்கொள்ளும்படி ராமருக்குச் சூழ்ச்சி கூறியவன் கவர்ந்தன். சுக்கிரீவனுடைய வாசஸ்தானம் பம்பைக் கரையிலுள்ளது. ராமரது வில்லாண்மையைப் பரீடிpக்கும் பொருட்டுச் சர்ப்பகோணமாக மாறிமாறிநின்ற ஏழுமராமரங்கயையுமோரம்பாலே துளைசெய்யும்படிகேட்டு அவர் அது செய்தபின்னர் அவர்மீது நம்பிக்கைவைத்தவன். ராமரால் அரசுபெற்ற சுக்கிரீவன் குறித்த அவதியிலே சேனையோடு புறப்படாது ராஜபோகத்திலே மயங்கிக் கிடந்து, ராமர் அச்சுறுத்தித் தூதுபோக்கியபின்னர்ப் படை திரட்டிக்கொண்டு போய் வணங்கித் தான்செய்த குறையைப் பொறுத்தருளுமாறு செய்தவிண்ணப்பம் மிகவியக்கற்பாலது. சுக்கிரீவனும் ராவணனும் செய்த கொடும்போரிலே சுக்கிரீவன் ஒரு மலையைப் பெயர்த்து ராவணன் மார்பிலே மோத, அவன்வெகுண்டு ஒருகொடியவேலை விட்டெறிந்தான். அவ்வேலை அனுமான்பற்றி முழந்தாளிற் பூட்டித் தகர்த்தான். அதுகண்டுராவணன் ஒரு மலையையிடந்து சுக்கிரீவன் சிரசில் மோத அவன் வீழ்ந்து மூர்ச்சையாயினான். இராவணன் உடனே யவனைத்தூக்கியிடுக்கிக்கொண்டு செல்லச் பல்லாலும் நகங்களாலும் அவனுடைய விலாவைக் கடித்துக் கிழிக்க, அவன் அத்துன்பத்தாற் கையை நெகிழ்ந்தான். உடனே சுக்கிரீவன் குதித்தந்தரத்திலெழுந்து ராமர்பக்கஞ்சார்ந்தான. இவ்வாறே சுக்கிரீவன், ராமர் ராவணனைக்கொன்று சீதையைச் சிறைமிட்குங்காறும் தன் வாக்குத் தவறாமல் மிக்கபக்தியோடு போர்புரிந்து அவருக்குப்பெருந் துணைபுரிந்து அவருக்குப்பெருந் துணைபுரிந்தான்.

சுக்திமதி - கடகபுரிக்குச் சமீபதிலேயுள்ள ஒரு புண்ணிய நதி.

சுசர்மா (1) திரிகர்த்ததேசத்தரசன்.
சுசர்மன் சுதன்வன் புத்திரன். (2) தன்பாரியைப் பலாகன் என்னுமிராடிசன் அபகரித்துப்போனபோது உத்தானபாதன் மனனாகிய உத்தமன் கண்டு அவளை மீட்டுக் கொடுக்கப்பெற்ற ஓரந்தணன். (3) கர்ணன் புத்திரன். நகுலனாற் கொல்லப்பட்டவன். (4) மகததேசத்தரசரான காண்வாயருள்ளே கடையரசன். ஆந்தரவிருத்தியனென்னுஞ் சூத்திரனாற் கொல்லப்பட்டவன்.

சுசாந்தி - அஜமீடன் இரண்டாம் புத்திரனாகிய நீலன் பௌத்திரன்.

சுசி - (1) மிதிலைவமிசத்துஒரரசன் (2) ய. அந்தகன் புத்திரன். (3) சுத்தன் புத்திரன்.

சுசுருதன் - (1) மிதிலாதிபதிகளுள் ஒருவன். ஜயன் தந்தை. (2) காசிராஜன் புத்திரருளொருவர். இவர் சுசுருதம் என்னும் பெயராற் சிறந்த வைத்தியநூலென்று சம்ஸ்கிருத்திலே செய்தவர். அந்நூல் ஆவசியகம் தமிழிலே மொழிபெயர்க்கப்படுதல் வேண்டும். அதிலே சஸ்திரவைத்தியமுங் கூறப்பட்டுள்ளது. பூர்வ ஆரியர் சஸ்திரவைத்தியமெனப்படும் சல்லியத்திலே எத்துணையாகக் கைதேர்ந்தவர்களென்பது அந்நூலிலே கூறப்பட்டுள்ள நூற்றிருபத்துநான்கு யந்திரசஸ்திரங்களால் அநுமிக்கப்படும். நோய் நிதானமும் சிகிற்சையும் வியந்;து பாராட்டப்படத்தக்கன.

சுசொயை - சூரியவமிசத்துப் பரீடித்து பாரி. இவள் மண்டூகராஜன் மகள்.

சுஜன்மகிருது - (பா) சோமன் புத்திரன்.

சுஜாதை - அஷடவக்கிரன்தாய். ஏகபாதன் பாரி.

சுடாக்கொழுந்தீசர் - திருத்தூங்கானைமாடத்திற் கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சுதடிpணன் - பௌண்டரக வாசுதேவன்புத்திரன். தந்தையைக் கிருஷ்ணன் கொன்ற காரணத்தால் அப்பழிவாங்கவேண்டிச் சிவனை நோக்கித் தவங்கிடந்து ஒரபிசாரவோமஞ்செய்து அதினின்றும் பெற்ற ஒரு பூதத்தைத் துவாரகைக்கனுப்பினான். கிருஷ்ணன் அதனைக்கொண்டே சுதடிpணனைக் கொன்று அவன்நகரத்தையு மெரியூட்டுவித்தான்.

சுதடிpணை - தலீபன் மனைவி. இவள் அதிரூபவதி. திலீபன் நெடுங்காலம் புத்திரப்பேறின்றி வருந்தி வசிஷ்டரையடைந்து விண்ணப்பஞ்செய்ய அவர் நீயும் உன்மனைவியும் தேனுவைக் கிரமமாக வழிபடுவீர்களாயின் புத்திரப்பேறு சித்திக்குமென்றனர். அச்சொற்கொண்டு இவளும் தலீபனும் கிரமமாகத் தேனுவை வழிபட்டு ரகுவைப் பெற்றார்கள்.

சுதபன் - (அ) ஹேமன் புத்திரன். பலி தந்தை.

சுதர்சனம் - விஷ்ணுசக்கரம்.

சுதர்சனன் - (1) அங்கிரசனைப்பார்த்துச் சிரித்துச் சர்ப்பமாகச் சபிக்கப்பட்டுக் கிடந்;து பின்னர்க் கிருஷ்ணன் திருவடிதீண்டப் பெற்றுத் தொல்லுரப்பெற்ற வித்தியாதரன். (2) சுதர்சனை புத்தரன். இவன் தன் கிருகத்துக்குத் தருமதேவதை அதிதியாகிச் சென்று விருந்தருந்தப்பெற்றவன்.

சுதர்சனை - மநுவமிசத்துத் துரியோதனன் நருமதையிடத்துப் பெற்றபுத்திரி. இவன் தன் கிருகத்துக்குத் தருமதேவதை அதிதியாகிச் சென்று விருந்தருந்தப்பெற்றவன்.

சுதலம் - கீழுலகங்களுளொன்று. பச்சைவர்ணமுடையது.

சுதனுசு - குருபுத்திரருளொருவன்.

சுதன்வன் - (1) லோகபாலகர் நால்வருளொருவன். (2) திரிகர்த்ததேசாதீசனாகிய ஓரரசன். சுசர்மன் தந்தை.

சுதன்வானன் - (ய) வசுதேவனுக்கு ஸ்ரீதேவியிடத்துதித்த புத்திரருளொருவன்.

சுதன்வானன் - (பா) மூன்றாஞ்சியவனன் புத்ததிரன். சஹாதேவன் தந்தை.

சுதாமனி - வசுதேவன் தம்பியாகிய அநீகன் பாரி.

சுதீடிpணன் - (ரி) அகஸ்தியரது ஆச்சிரமத்தை நாடிச்சென்ற ராமரைக்கண்டு உபசரித்து விருந்திட்ட முனிவர். இவருடைய ஆச்சிரமம் அகஸ்தியருடைய ஆச்சிரமத்துக்கு உத்தரதிசையிலே சிறிது தூரத்திலுள்ளது.

சுதேவன் - (1) (ய) தேவகன் புத்திரன். (2) சம்பன்புத்திரன். விஜயன் தந்தை.

சுதேஷ்ணை (1)அநுவமிசத்துப்பலி பாரி.
சுதேட்டிணை (2) விராடன் பாரி. கேகயராஜன் மகள். கீசகன் சகோதரி. பாண்டவர்கள் விராடனுடைய நகரத்திலிருந்தபோது திரௌபதி இச்சுதேஷ்ணையிடத்திலே வண்ணஞ்செய்யும் தோழியாகவிருந்தாள். அக்காலத்திலேயே கீசகன் திரௌபதியைக் கண்டு காதல்கூர்ந்து அவளை வலிதிற் கூடவெத்தனித்துயிர் மாண்டது.

சுத்தசைவன் - ஆன்மாவுஞ் சிவமுங்கூடியவிடத்து, ஆன்மா சிவானுபவத்துக்கு உரியதாகாதென்று சொல்பவன். இவன் அகச் சமயிகளுளொருவன்.

சுத்தன் - ஆயு பௌத்திரன். அநேநசன் புத்திரன். மூன்றாம் சுசிதந்தை.

சுத்தியுமனன் - இவர் வைவசுவதமனுவுக்கு யாகத்திலே முன்னர்ப் பெண்ணாகத்தோன்றிப் பின்னர் வசிஷ்டர் பிரயத்தனத்தாற் புருஷரூபம் பெற்றவர். பெண்ரூபத்தோடிருந்தகாலத்தில் இளையென்னும் பெயரோடு புதனைக்கூடிப் புரூரவனைப் பெற்றுப் பின்னர்ப் புருஷரூபம் பெற்றபோது உற்கலன், கயன், விஹவலன் என மூவர் புத்திரரைப் பெற்றவர்.

சுத்தியுவு - (பு) சாரூபுத்திரன்.

சுத்திராமன் - இந்திரன்.

சுநகன் - (1) கிருற்சினமதன் புத்திரன். தபோநியமத்திற் சிறந்தவராகிய சௌநகர் தந்தை. (2) (ரி) ருரன் பிரமத்துவரையிடத்துப் பெற்ற புத்திரன்.

சுநசேபன் - இருசிகன் இரண்டாம்புத்திரன். இவனுக்குத் தேவராதனெனவுமொருபெயருளது. அஜிகர்த்தன்மக னென்பாருமுளர். அரிச்சந்திரன் தன் புத்திரனாகிய ரோகிதனை வருணனுக்குத் தத்தஞ்செய்வதாக நியமஞ்செய்துவிட்டுப் பின்னர் அவனுக்கு ஈடாக இவ்வஜிகர்த்தன் புத்திரனாகிய சுநசேபனை விலைக்குவாங்கித் தத்தஞ்செய்ய, அவன் வருணனையிரந்து தப்பிப்போய்த் தன் தந்தையிடஞ் செல்லாமல் விசுவாமித்திரனையடைந்து அவனுக்குத் தத்தபுத்திரனானான் எனவுமொரு கதையுளது.

சுநசை - பாரிபத்திரபர்வதத்திலே உற்பத்தியாகிய ஒரு நதி.

சுநந்தன் - விஷ்ணுபரிசரருளொருவன்.

சுநந்தை - (1) துஷ்யந்தன் புத்திரனாகிய பரதன் பாரி. (2) இந்துமதிதோழிகளுளொருத்தி.

சுநாபன் - (ர) வச்சிரநாபன்தம்பி.

சுநாமன் - (ய) கம்சன்தம்பி.

சுநீதன் - (கா) சந்நதிபுத்திரன். அலர்க்கன் பௌத்திரன். Nடிமன்தந்தை.

சுநீதன் - சிசுபாலன் சேனாபதி.

சுநீதி - உத்தானபாதன் பாரி

சுநீதை - அங்கன்பாரி. மிருத்தியு மூத்தபுத்திரி. வேனன் தாய்.

சுந்தரகுசாம்பிகை - திருவீழிமிழலையிலே கோயில் கொண்டிருக்கந்தேவியார்பெயர்.

சுந்தரமூர்த்திநாயனார் - சைவ சமயகுரவர் நால்வருள் ஒருவர். கைலாசத்திலே சிவபெருமானது அடியார்களுளொருவராய் ஆலாலசுந்தரரென்னும் பெயரோடிருந்து உமாதேவியாரது சேடியர்கள்மீது மோகித்த காரணத்தாற் பூலோகத்திலே, திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரிலே, சடையனாருக்கு இசைஞானியார் வயிற்றிலே அவதரித்தவர். அச்சேடியர்களும் பரவையார் சங்கிலியார் என்னும் பெயரோடு முறையே திருவாரூரிலும் திருவொற்றியூரிலும் அவதரித்தார்கள். ஆலாலசுந்தரர் கைலாசத்தை விட்டுநீங்கு முன் மனம் பரிதபித்தழக்கண்ட சிவபெருமான் கருணைகூர்ந்து, “பூலோகத்திலுன்னைவந்தாட்கொள்வோம்” என்ற நுக்கிரகித்தபடியே, சுந்தரமூர்த்திநாயனார் மணப்பருவத்தையடைந்து மணக்கோலத்துடன் மணப்பந்தலின் கீழிருக்குஞ்சமயத்தில் அச்சிவபிரான் ஒரு கிழப் பிராமண வடிவங்கொண்டு ஒரு முறியோலையோடவ்விடத்தையடைந்து நாயனாரைத் தமக்கு அடிமையென அச்சபையிலுள்ளோர் ஒப்புமாறுநாட்டி, மணம்புகவொட்டாமற்றடுத்து அழைத்துப்போய்த் தம்மை இன்னரென்றுணருமாறு மறைந்தருளினார். ஆப்பொழுது நாயனார் பூர்வவாசனையாற் சிவபக்திமேலிடப்பெற்று அன்றுமதல் அன்புமயமான அற்புதஞானப் பாடல்களைப் பாடிச் சிவஸ்தலங்கள் தோறுஞ் சென்று வணங்கி வருவாராயினர். தமது பிறவிக்குக் காரணமாகிய பெண்ணவாவின் பயன் வந்து கூடுங்காலம் வந்தடுக்க, திருவாரூரிலே சுவாமிதரிசனஞ்செய்து மீள்பவர் ஊழ்வலியாலே பரவையாரைக் கண்டு மயங்கி அவர்பாற் சிவபிரானைத் தூதுபோக்கி அவரை இசைவித்து அவர் மெய்ந்நலநுகர்ந்தங்கிருந்தார். பின்னர்த் திருவொற்றியூரிற் சென்று அங்கு மூழ்கூட்டச் சங்கிலியாரையுங்கூடி அவ்வூரையும் புசித்தனர். அச்சங்கிலியார்பொருட்டுச் செய்த பொய்ச்சத்தியத்தின் பயனாகப் பார்வையிழந்து சிலநாள் வருந்திப்பதிகம் பாடிப் பார்வைபெற்றார். சிவபிரானுக்குத் தோழர் என்னும் பெயர் பெற்றவராயிருந்தும் செய்தபிழையை அக்கடவுள் பொறுத்தருளாது அதற்காகச்சுந்தரமூர்த்தியைத் தண்டித்தலின் சிவபிரான் நடுநிலை தவறாத நீதியுடையரென்பதும், எவ்வினையும் அனுபவித்தன்றித் தீராதென்பதும், டிமித்துப் பாவங்களைத் தீர்க்கும் அதிகாரங் கடவுளுக்கில்லையென்பதும் பெறப்படும்.

சுந்தரமூர்த்திநாயனாரது பெருமைகளையெல்லாம் கேள்வியுற்ற சேரராஜாவாகிய சேரமான்பெருமாணாயனார் அவரை யழைத்துப்போய்த் தமதரமனையிலே விருந்திட்டுபசரித்து வைத்திருந்து அவரிடத்திலே பேரன்பும் பெருநட்பு முடையராயிருந்தார்.

சுந்தரமூர்த்திநாயனார் பதினெட்டாம் வயசிலே திருவஞ்சைக்களத்திற் சுவாமி தரிசனஞ் செய்து மீண்டு கோபுரவாயிலையடைந்த போது கைலாசகிரியினின்று சிவகணங்களோடு மொரு வெள்ளையானையானது சிவாஞ்ஞையினாலே அவர்முன்னே சென்று நின்று சிவாநுக்கிரகத்தையுணர்த்த, ஆனந்தபரவசராய் அதன் முதுகின் மேற்கொண்டுசென்றார். சேரமான் பெருமாளும் அதனையுணர்ந்து தமது குதிரை மேற்கொண்டு அதன் செவியிலே ஸ்ரீபஞ்சாடிரத்தை யோத அஃது அந்தரத்தெழுந்து பாய்ந்து சென்று சுந்தரருடைய யானையை வலம்வந்து முன்னே சென்றது. இருவரும் கைலாசத்தையடைந்து சிவகணபதப் பேறுபெற்றார்கள்.
சுந்தருமூர்த்தியிடத்திலே விளங்கிய அற்புதங்கள் முதலை விழுங்கிய புதல்வனை அம்முதலையை அழைத்து உமிழச்செய்து பிழைப்பித்தது, நென்மலைபெற்றது, அம்மலையைப் பூதங்கள் வாரிப்போய்ப் பரவையார் வீட்டிலும் திருவாரூரிலுள்ளார் வீடுகள் தோறும் குவைசெய்யப்பெற்றது, தலைக்கணையாக அடுக்கிப் படுத்திருந்த செங்கற்கள் உதயத்திலே பொன்னாயிருக்கப்பெற்றது, மணிமுத்தாநதியிலேயிட்ட பொன்னைத் திருவாரூர்க் கமலாலயக்குளத்திலே யெடுத்தது முதலியனவாம்.

சுந்தரமூர்த்திநாயனார் பொன்னை ஆற்றிலிட்டுவந்து திருவாரூரிலே பரவையார்முன்பாகக் குளத்திலே தேடியபோது பரவையார் அவரைப்பார்த்து ஆற்றிலேயிட்டுக் குளத்திலேதேடினால் அகப்படுமாவென்று அவருடைய ஆற்றலையுணராமற் பரிகசித்தவாக்கியம் இந்நாளிலும் “ஆற்றிலிட்டுக் குளத்திலேதேடல்” என்னும் பழமொழியாய் வழங்கவதாயிற்று.

சேரமான் பெருமாணாயனார்காலம் கடைச்சங்கத் திறுதிக்காலம் என்பது கல்லாடத்தாலும் திருவிளையாடல் முதலிய நூற்களாலும் நன்கு நிச்சயிக்கப்படும். இச்சேரமான் புறநானூற்றிலே சேரமான்மாவெண்கோ வெனப்படுவர். அந் நூலிலே தானே சேரமான்மாவெண்கோவும் உக்கிரப்பெருவழுதியும் நட்புடையாரெனப்படுவர். சுந்தரமூர்த்திநாயனார் புராணத்திலே சேர சோழ பாண்டியர் மூவரும் சுந்தரரோடுமதுரையிலே ஒருசமய மொருங்கிருந்தார்களென்பது கூறப்பட்டிருத்தலால், அவர்கள், புறநானூற்றிலே ஒருங்கிருந்தாரெனக்கூறப்பட்ட சேரமான் மாவெண்கோவும் உக்கிரப்பெருவழுதியும் இராசசூயம் வேட்டசோழன் பெருநற்கிள்ளியுமேயாவர்.சேரமான் மாவெண்கோவெனப்படும் சேரமான்பெருமானாயனாரை ஒளவையார் பாடினாரென்பது, புறநானூற்றால் பாடினாரென்பது, புறநானூற்றால் மாத்திரமன்று, அவர் கைலாசத்துக்குக்
குதிரை மேற்சென்றபோது ஒளவையாரும் தாம்பூசித்துவந்த விநாயகர் அருளாலே குதிரைமேற்சென்றாரோடொக்கச் சென்றாரென்றொருகதையும் “குதிரையுங்காதம் கிழவியுங்காதம்” என்ற பாடலு முண்மையாலும் நிச்சயிக்கப்படும். படவே சேரமான்பெருமாணாயனாரும் கடைச்சங்கத்து இறுதிக்கண்ணிருந்த உக்கிரப்பெருவழுதியும், சுந்தரமூர்த்திநாயனாரும், அவருடையதேவாரத்திலும் புராணத்திலுஞ் சுட்டப்பட்ட சோழனாகிய இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியும், கல்லாடர், கபிலர், பரணர் முதலியயோரும் ஓரேகாலத்தவர்களென்பது சித்தாந்தமாம். ஆகவே அவர்கள் காலம் ஆயிரத்தெண்ணூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாம். கடைச்சங்க கால நிச்சயம் சம்பந்தர் வரலாற்றினுட்கூறினாம். ஆண்டுக் காண்க.

சுந்தரி - மாலியவந்தன்பாரி நர்மதையென்னும் கந்தருவப்பெண்ணினது புத்திரி.

சுந்தன் - ஓரியடின். தாடகை மகன். மாரீசன் சுபாகு என்போர்க்குத் தந்தை.

சுந்தோபசுந்தர்கள் - (தி) இரணியகசிபன் வமிசத்து நிசுந்தன் புத்திரர். இச்;சகோதரரிருவரும் பெருந்தவங்கள் செய்து பிரமாவினிடத்திலே இச்சித்த் ரூபம் பெறவும் இச்சித்தவிடத்துக்குப் போகவும் அந்நியாராற் கொல்லப்படாமலிருக்கவும் மாயாஜாலங்களையறியவும் வரம்பெற்று ஜனங்களை மிக வருத்தி வருங்காலத்தில், விஷ்ணு விசுவகர்மாவினால் ஒரு கன்னிகையை அதிரூபவதியாகச் சிருஷ்டிபபித்து அவளை இவர்களிடத்தனுப்பிவிட்டார். அவளைக்கண்ட இருவரும் அதிமோகராய் அவளைநோக்கி நீ நம்மில் யாருக்கு மனைவியாக விரும்புகின்றாயென்ன, அவள் நும்முள்யார் ஜயவீரனோ அவனுக்கே மனைவியாவேன் என்றாள். அதுகேட்டுப் போர்தொடுத்து ஒருவரையொருவர் வெட்டி இருவருமுயிர்துறந்தார்கள். இவர்கள் புத்திரர் சும்பநிசும்பர்கள்.

சுபதந்தி - புஷ்பதந்தம் என்னும் திக்கியானையினது பெண்.

சுபத்திரன் - (ய) வசுதேவன் புத்திரன். தாய் பௌரவி.

சுபத்திரை - கிருஷ்ணன் தங்கை. அர்ச்சுணன் பாரி. அபிமன்னியன் தாய்.

சுபந்தன் - விக்கிரமார்க்கன்காலத்தில் விளங்கிய ஒரு சம்ஸ்கிருதகவி. வாசவதத்தையென்னும் நூல்செய்தவர் இவரே.

சுபலன் - காந்தாரதேசத் தரசன். இவன் புத்திரன் சகுனி. புத்திரி காந்தாரி.

சுபாகு (1) சேதிதேசத் தரசனாகிய
சுவாகு வீரவாகு புத்திரன். சுநந்தை இவன் சகோதரி. (2) இராமன்தம்பியாகிய சத்துரக்கினன் மூத்தபுத்திரன். (3) (ய) கிருஷ்ணன்வமிசத்துப் பிரதிவாகுபுத்திரன். (4) (ரா) தாடகைபுத்திரன். மாரீசன் தம்பி. இவன் விசுவாமித்திரன் யாககாலத்திலே ராமராற் கொல்லப்பட்டவன்.

சுபார்சுவன் - (1) சம்பாதி புத்திரன். (2) (ரா) சுமாலிபுத்திரன். (3) (பு) துலமீடன் வமிசத்தனாகிய திருடநேமி புத்திரன். சுமதி தந்தை.

சுபு - (ய) கஞ்சன் தம்பி.

சுப்தக்கினன் - ஈசானியதிக்குக் காவல்பூண்ட பெண்யானை.

சுப்பிரதீகன் - தன்பிதாவினது திரவியங்களைத் தமையனைவஞ்சிக்கும் பொருட்டுக் கவர்ந்தமைக்காகத் தமையனால் யானையாகச் சபிக்கப்பட்ட பிராமணன்.

சுப்பிரயை - (1) முதல் நாபாகன் பாரி. இவள் ஜாதியில வைசிய ஸ்திரி.

சுப்பிரமணியர் - குமாரக்கடவுள்.

சுப்பிரமன் - சும்ஹன்

சுப்பிரயோகை - சையகிரியிலுற்பத்தியாகித் தடிணவாகினியாகப் பாய்கின்ற வொருநதி.

சுமதன் - விசுவாமித்திரன் புத்திரன்.

சுமதி - (1) இடி{வாகுதம்பியாகி நிருகன்புத்திரன். (2) (பு) மதிசாந்திரன் புத்திரன். (2) இருஷபன் புத்திரனாகிய பரதன்புத்திரன். (3) (பு) மதிசாந்திரன் புத்திரன்.ரைப்பியன் தந்தை. (4) (பு) துவிமீடன் வமிசத்துச் சபார்சுவன் புத்திரன். சந்நதமந்தன் தந்தை. (5) சகல வேதசாஸ்திரபாரகனாகிய பாரன் புத்திரன். (6) அரிஷ்டநேமி புத்திரி. சகரன்பாரிகளுளொருத்தி. இவளிடத்திலே பிறந்த அறுபதினாயிரம் புத்திரரும் கபிலரால் நீறாக்கப்பட்டார்கள்.

சுமநசன் - (1) உன்முகன் புத்திரன். அங்கன் தம்பி. (2) (இ) சம்பூதி. இவன் தந்தை டிரியசுவன். புத்திரன் திரிதன்வன்.

சுமந்தன் - (1) (ரி) வியாசர்சீஷனாய அதர்வண வேதாத்தியாயனன். (2) (ரி) சாம வேதாத்தியாயராகிய ஜைமினி புத்திரன்.

சுமந்திரன் - (1) புரூரவன்வமிசத்து ஜன்னு புத்திரன். (2) தசரதன் சாரதியும் மந்திரியுமானவன்.

சுமந்து - ஜன்னுமகாவிருஷியினது புத்திரன்.

சுமாலி - (1) (ர) சுகேசன் புத்திரன், மாலியவந்தன் தம்பி. ராவணன் மாதாமஹன். (2) கம்சன் தம்பி. பலராமனாற் கொல்லப்பட்டவன்.

சுமத்திரன் - (1) (ய)பஜமானன் பௌத்திரன். விருஷ்ணி புத்திரன். (2) (ய) வசுதேவன் தம்பியாகிய அநீகன் புத்திரன். (3) இடி_வாகு வமிசத்துக் கடையரசன். இவன் பாரதயுத்தத்திலே அபிமன்னியனாலே கொல்லப்பட்டபிருகத்பலன் மரபிலேமுப்பதாம் வழித்தோன்றலாகிய அரசன்.

சுமித்திரை - தசரதன் இரண்டாம் பாரி. லடி_மணசத்துருக்கினர்களுக்குத் தாய்.

சுமெரு - இது வடக்கின் கண்ணேதுருவ நடித்திரத்தை நோக்கி நிற்கும் மேருவினது சிகரம். மேருவின் வாற்பக்கம் குமெருவெனப்படும். அது தெற்கேநோக்கியிருக்கும். அது வடவாமுகமெனவும்படும். மேருவானது பூமிக்கு நாராசம் போலத் தெற்கிற்ருந்து வடக்கேயுருவியோடிநிற்பது. ஆரியர் பூகோளத்தை ஊர்த்துவகபாலம் அதக்கபாலம்என இருகூறாக்கி ஊர்த்துவகபாலம் முழுதும் நிலமென்றும். அதகபாலத்தை முழுதுநீரென்றும் கூறுவர். ஐரோப்பிய பண்டிதர் பூமியின் கர்ப்பத்திலேயிருக்கும்; கருஷணாசக்திக்கு அளவில்லையென்று கூறுவது போலப் புராணங்களும் இம்மேருவை அநேக தேவதாகணங்களுக்கு வாசஸ்தானமாகக் கூறும். சுமெரு இளாவிருது வருஷநடுவிலேயுள்ளது. இச்சுமெருவை மனுஷர் சென்றடைவது கூடாதென்பது புராணக்கருத்து. அவ்விடத்தையடைதற்கு ஐரோப்பியர் பலர் பலவாறாகப் பலகாலத்திலும் பன்முறை முயன்றும் சித்தியுற்றார் ஒருவருமில்லை. அத்தேசலியற்கை மனுஷர் சஞ்சரித்தற் கொவ்வாததாதலின் அங்குச்செல்வது யார்க்கும் கூடாதுகருமமாம். இதனால் இக்கால ஐரோப்பியர் துருவியாராய்ந்துணராத துருவநாட்டைப் பூர்வ ஆரியர் துருவியாராய்ந்தவர்களென்பது நன்றாகப் புலப்படும்.

சும்பநிசும்பர் - சுந்தோபசுந்தரரது புத்திரர். இவர்கள் இரணிய கசிபன் வமிசத்தர். இவர்கள் புஷ்கரத்தலத்திலே பிரமாவை நோக்கித் தவங்கிடந்து இந்திராதிதேவர்களை அடக்குஞ் சக்திபெற்று மூர்க்கராய்த்திரிந்த காலத்திலே காளியினாற் கொல்லப்பட்டவர்கள்.

சும்ஹன் - சுப்பிரமன். புலியினது கடைமகன். இவன் சௌம்ஹநகரம் நிருமித்தவன்.

சுயஞ்ஞன் - (1) தசரதன் புத்திரகாமேஷ்டியாகத்தை நடாத்திய கர்த்தாக்களுளொருவர். (2) உசீநரதேசத்தரசன். இவன் சத்துருக்களால் யுத்தத்திலே வீழ்த்தப்பட்டபோதுபந்துக்களது துக்கத்தில் மூழ்கிக்கிடக்க யமன் ஒரு பாலப்பருவமுடையனாகிச் சென்று தத்துவோபதேசஞ் செய்து போகப்பெற்றவன்.

சுயம்புநாதர் - திருஆக்கூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சுரசை - (1) தடின் மகள். குhசிபன் பாரி. மாயையில் வல்லவனாதலின் மாயையெனவும் படுவள். இவளே சூரன் தாரகன் முதலிய அசுரர்களைப் பெற்றவள். (2) நாகர்கள் தாய். அநுமான் சீதையைத் தேடி இலங்கைக்குப் போகும்போது வழியிலே சமுத்திரமத்தியிலே நின்று வழியடைத்துநின்ற இவளைக் கர்ப்பத்திற்பிரவேசித்து வயிற்றைப் போழ்ந்து கொன்றுபோயினான்.

சுரதமாரபாண்டியன் - பராக்கிரமபாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன்.

சுரதன் - (கு) ஜன்னுபுத்திரன்

சுரதன் - சுவேதன்தம்பி. சுவேதனுக்குப்பின் வதர்ப்பதேசத்திற்கு அரசனாயினவன்.

சுரநிந்தனை - ஜேஷ்டாதேவியிடத்து வருணனுக்குப்பிறந்த புத்திரி. அதாமன் தங்கை.

சுரபி - கபிலை.

சுரபு - உக்கிரசேனன் மகள். சியாமகன் பாரி.

சுரமஞ்சரி - ஒரு சங்கீத சாஸ்திரம், (2) ஆடவரைச் சேர்வதில்லையென்று விரதம்பூண்டிருந்து பின்னர்ச் சீவகன் சங்கீதத்தால் மயங்கி அவனுக்கு மனைவியாயினவள். (சீவகசிந்தாமணி)

சுராதிராஜன் - இவனே சோழமண்டலமமைத்த முதற் சோழன் என்பது கலிங்கத்துப் பரணியிற் கூறப்பட்டுள்ளது.

சுராஷ்டிரன் - (1) தாமசமநு தந்தை. (2) காசியன் புத்திரன். தீர்க்கதமன் தந்தை.

சுருசி - உத்தானபாதன் இளைய மனைவி, உத்தமன் தாய்.

சுருதகீர்த்தி - அர்ச்சுனனுக்குத் திரௌபதியிடத்துப் பிறந்த புத்திரன். (2) வசுதேவன் தங்கை. கேகயராஜாவாகிய திருஷ்டகேது பாரி. (3) விக்கிரமார்க்கன்பாட்டன். இவன் தனக்குப் புத்திரனின்மையாற் புத்திரிபுத்திரனாகிய விக்கிரமார்க்கனுக்கு அரசுகொடுத்தான். (4) சத்துரக்கினன் பாரி. குஜந்துவசன் மகள்.

சுருதசிரவன் - (ரி) சோமசிரவன்தந்தை. இவன் ஜனமேஜயன் காலத்திலிருந்தவன்.

சுருதசிரவை - வசுதேவன் தங்கை. சிசுபாலன்தாய். துமகோஷன் பாரி. சாத்துவதியென்றம் பெயர்பெறுவள்.

சுருதசேனன் - (1) சகதேவனுக்குத் திரௌபதியிடத்துப் பிறந்த புத்திரன். (2) ஜனமேஜயன்.

சுருதசோமன் - வீமனுக்குத் திரௌபதியிடத்துப் பிறந்த புத்திரன்.

சுருததேவன் - (1) மிதிலையிலிருந்த ஒருவிஷ்ணுபக்தன். (2) விஷ்ணு பரிவாரத்தவரு ளொருவன்.

சுருததேவி - வசுதேவன் தங்கை. இவள் விருத்தசர்மன்பாரி. தந்தவத்திரன் தாய்.

சுருதமுக்கியன் - வசுதேவன் புத்திரருளொருவன். இவன் தாய் சகதேவி.

சுருதவர்மன் - துரியோதனன் தம்பி.

சுருதன் - (இ) சுஹோத்திரன். பகீரதன் புத்திரன்.

சுருதாயு - (1) புரூரவன் புத்திரனாகிய வசுமந்தன். (2) கலிங்கதேசத்தரசன். இவன் சகோதர புத்திரர்களோடு வீமனால் பாரதயுத்தத்திலே கொல்லப்பட்டவன். (3) (மி) அரிஷ்டநேமிபுத்திரன்.

சுருதாயுதன் - வருணன் புத்திரனாகிய ஓரரசன். இவன் தான் வருணனிடத்துப் பெற்ற கதாயுதங்கொண்டு கருஷ்ணனைச் சாடியபோது அக்கதை மாலையாகி விழுந்து மீண்டுவந்து தன்னையேகொல்லப்பெற்றவன்.

சுருதிகள் - வேதங்கள்.

சுருதிகீதைகள் - சகம் ஒடுங்கியவிடத்து யோக நித்திரையிலிருந்த பரமேசுவரனை வேதங்கள் செய்த தோத்திரங்கள். இவை பரமதத்துவார்த்தமுடையன.

சுலபை - பரமதத்துவார்த்த முணர்ந்தாளொரு பெண். இவள் மகாத்துமாவான பின்னர் ஒருநாள் மகாஞானியாகிய ஜனகமகாராஜாவினது மனநிலையை ஆராயும் பொருட்டுச் சம்வாதம் புரிந்தவள்.

சுவசை - பிரஜாபதிபாரி. ஆநிலன் தாய்

சுவபற்கன் - (ய) பிரசினன் மூத்தபுத்திரன். இவனுக்குக் காந்தினியிடத்துப் பன்னிருவர் புத்திரர் பிறந்தார்கள். அவருள்மூத்தோன் அக்குரூபரன்.

சுவர்ணரோமன் - (மி) மகாரோமன் புத்திரன். ஹிருசுவரோமன் தந்தை.

சுவர்ணஷ்டீவி - சிருஞ்சயன் புத்திரன்.

சுவர்ப்பானலி - ஆயவின்பாரி. நகுஷன் தாய்.

சுவர்ப்பானன் - (1) தனுபுத்திரன் (2) விப்பிரசித்திபுத்திரன் ராகு.

சுவாகாதேவி - அக்கினிதேவன்பாரி.

சுவாகிதன் - (ய) விருஜினவந்தன் புத்திரன்.

சுவாகு - சுபாகு காண்க.

சுவாமை - வாமையென்னும் நதி.

சுவாயம்புவமனு - பிரம மானசபுத்திரனாகிய ஒரு மனு. இவன் பாரி சதரூபை. பிரியவிரதன் உத்தானபாதன் என்போர் புத்திரர். பிரசூதி, ஆகூதி, தேவகூதி என்போர் புத்திரிகள்.

சுவாரோசிஷன் - சுவரோசி புத்திரனாகிய ஒரு மனு. தூய்பெயர் மனோரமை. இவன் நெடுங்காலந் தவங்கிடந்து மனுவாயினவன்.

சுவிந்திரம் - மலைநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

சுவீரதன் - (அ) ஊசீநரன் ஐந்தாம் புத்திரன்.

சுவீரன் - (1) (அ) சிபியினது இரண்டாம்புத்திரன். இவன் தேசம்சவ்வீரம். (2) (ய). வசுதேவன் தம்பியாகிய தேவசிரவசன்புத்திரன்.

சுவேதகி - ஓரிராஜவிருஷி. இவருடைய பக்திவைராக்கியத்தைப் பிரமா மெச்சி இவர் செய்யப்புகுந்த யாகத்தை நடாத்தும்படி தூவாசரை அனுப்பினார். இவ்வியாகம் நடந்த பன்னீராண்டு காறும் அவன் நெய்யேயிடையறாமற் சொரிந்து அக்கினிதிருப்தி செய்தமையால் அக்கினி தேவருக்குத்தீபனாக்கினிமாந்தமுண்டாயது. அதுகாரணமாகவே அக்கினிதேவர்காண்டவ வனத்தை யுண்ணற் கொருப்பட்டனர்.

சுவேதகேதன் - (1) (ரி) அஷ்டவக்கிரன் தாய்மாமன். இவன்கோபத்தாற் றனது மகனை யமபுரத்துக்கு அனுப்ப அவன் அவ்வாறு சென்று மீண்டான். (2) உத்தாலகன் புத்திரன்.

சுவேதன் - (1) விராடராஜன் புத்திரன். உத்தரன்தமையன். (2) காளாஞ்சன தீர்த்தக் கரையிலே சிவனை நோக்கித் தவங்கிடந்த பொழுது யமன் சென்று பிடித்துப்போகச் சிவன் தோன்றி விடுவிக்கப்பெற்ற ஓரிராஜவிருஷி. (3) விதர்ப்பதேசத்தரசன். சுதேவன்மகன். (4) சுக்கிரன்.

சுவேதவராகம் - பாத்ம கற்பாந்தத்திலே ஜலத்திலே மூழ்கிய ப10மியையெடுத்து நாட்ட விஷ்ணு வெடுத்த வெண்பன்றி வடிவம். இப்போது நடப்பது சுவேதவராககற்பம்.

சுவேலம் - இலங்கையில் ராமர் வானரசேனையை நிறுத்திவைத்த மலை.

சுஷேணன் - (1) கர்ணன் புத்திரன். இவன் சாததகியினாற் கொல்லப்பட்டவன். (2) கிருஷ்ணன் உருக்குமிணியிடத்துப் பெற்ற புத்திரன். (3) உருமைதந்தை. சுக்கிரீவன மாமன். இவன் வருணனாற் பிறந்தவன். (4) கஞ்சனாற் கொல்லப்பட்ட வசுதேவன்மக்களுளொருவன்.

சுஹோத்திரன் - (1) டித்திரவிருத்தன் மகன். இவனுக்குக் காசியன், குகன், கிருத்சினமதன் என மூவர்புத்திரர். (2) (பு) பிருஹதடித்திரன் புத்திரன். ஹஸ்திகன் தந்தை. (3) (கு) சுமநசு புத்திரன். (4) (இ) பகீரதன் புத்திரன். சுரதன் எனவும்படுவன். (5) புரூரவன் பௌத்திரனான வீமன் பௌத்திரன். ஜனஹன் தந்தை. இவன்சோடசமகாரஜாக்களுள் ஒருவன். இவன் அரசுபரிந்துவருநாளில் இந்திரன் தனது மேகங்களைக்கொண்டு நண்டு மீன் தகப் பொன்மழையை இவன் நாட்டிற் பொழிவித்தான். அப்பொன்னையெல்லாமெடுத்து அநேக யாகங்களைச்செய்து அவற்றை நடாத்திய ஆசாரியர்களுக்கும் மற்றைப்பண்டிதர் ஏழைகளுக்கும் வாரிவழங்கினான். (6) சஹதேவனுக்கு விஜயையிடத்துப்பிறந்த புத்திரன்.

சூடிக்கொடுத்தாள் - இம் மாதுசிரோமணியார் பெரியாழ்வாருக்குப் புத்திரியாகத் துளசியிலே பிறந்த விஷ்ணு கைங்கரிய பக்தியிற் சிறந்து விளங்கினவர்.

சூதசங்கிதை - வியாசர்சூதர்கொருட்டுச செய்த சங்கிதை. இது ஸ்கந்தபுராணத் தாறுசங்கிதைகளுளொன்று. ஆறாயிரங்கிரந்தமுடையது.

சூதபுத்திரன் - கர்ணன். குகன் வளர்த்தமையால்வந்;தபெயர். (சூதன் - தேர்ப்பாகன்)

சூதமாகதர் - இவர்களேவந்தியரென்றும் சூதரென்றும் தமிழ்நூல்களிலே வழங்கப்படுபவர்கள். அரசர்களுக்கு உற்சாகம் முதலியன உண்டாதற் பொருட்டுப் பாடுபவர்களாகிய இவர்கள் பிருது பிறந்தயாகசுத்திகாலத்திலே உற்பவித்தவர்களது வமிசத்தவர்கள்.

சூதர் - (ரி) வியாசர் சீஷருள்ளே ஒருவராகிய இவ்விருஷியே நைமிசாரணியவனத்திலேயிருந்த முனிவர்களுக்குப் புராணங்களையெல்லா முபதேசித்தவர்.

சூத்திரகன் - மகததேசத் தரசனாகிய சுசர்மனுக்கு மந்திரியாயிருந்த பின்னரவனைக் கொன்றுஇராச்சியங்கவர்ந்து கொண்டவன்.

சூத்திரங்கள் - சுபாசுப கர்மங்களைக் குறித்துச் செய்யப்பட்டவிதிகள். அவை, போதாயனம், ஆபஸ்தம்பம், சத்தியாஷாடம், திராஹியாயனம், அகஸ்தியம், சாகல்லியம், ஆசவலாயனம், சாம்பவீயம், காத்தியாயணம், வைகானசம், சௌனகீயம், பாரத்துவாசம், அக்கினிவைசியம், ஜைமினீயம், கௌண்டின்னியம், கௌஷீதகம், ஹிரணியகேசி எனப்பதினெட்டு நூல்களாம்.

சூத்திரர் - நான்காம் வருணத்தோர். இவர்கள் பிரமன் பாதத்திற்பிறந்தோர். இவர்கள் ஏனைவருணத்தாரைப் போல மோதற் கதிகாரிகளல்லர். இவர்களுக்குப் நயனம் விவாகம். சூத்திரராவார் வேளாளரேயென்பது தொல்காப்பியம் அகத்திணையியலில் வரும் “மன்னர்பாங்கில்” என்னுஞ் சூத்திரத்தானுணரப்படும். அவ்வேளாளர் உழுவித்துண்போரும் உழுதுண்போரும்மென இருதிறப்படுவர். உழவித்துண்போர் மண்டிலமாக்களும், தண்டத்தலைவருமாய்ச் சோழனாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாருமென்றிவை முதலியவூர்களிற்றோன்றி வேள் எனவும் அரசு எனவும் உரிமைபெற்றோரும் பாண்டிநாட்டுக் காவிதிப்பட்டங்கொண்டோரும் குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளர். ஊழுதுண்போர் பலவகைப்பட்ட தொழலினரேனும் உழவொன்றையுமே யுரியதொழிலாகவுடையோர். இவ்விருவகை வேளாளரும் தம்மினுயர்ந்த வைசியர் டித்திரியர் பிராமணர் மூவரையும் வழிபடற்குரியர். இனி ஆகமங்களிலே சூத்திரர் சற்சூத்திரர் அசற்சூத்திரரென இருபாலாகக்கூறப்படுவர். மேலாகியவொழுக்கமுங் குடிப்பிறப்புடையோர்சற்சூத்திரர்.

சூரசூதன் - அருணன்.

சூரசேனம் - மதுராபுரியை ராஜதானியாகப் பெற்றிருந்த தேசம். சத்துருக்கன் புத்;திரனாகிய சூரசேனன் ஆண்டமையின் அப்பெயர்பெற்றது.

சூரசேனன் - (1) (ய) கார்த்தவீரியார்ச்சுனன் இரண்டாம் புத்திரன். (2) (இ) சத்துருக்கினன் புத்திரன்.

சூரபன்மன் கசியபனுக்கு மாயையிடத்துப்
சூரன் பிறந்த புத்திரருள்ளே மூத்தோனும் மகா வரப்பிரசாதங்கள் பெற்றுஅயிரத்தெட்டண்டங்களையும் நூற்றெட்டுயகமாண்டவனும் இந்திராதிதேவரைச்சிறையிட்டவனும் ஈற்றிலே குமாரக்கடவுளாற் சங்கரிக்கப்பட்டழிந்து ஒரு பாதி மயிலாகி அக்கடவுட்கு வாகனமாகவும் ஒருபாதி குக்குடக்கொடியாகவும் பெற்றவனுமாகிய ஓரசுரன். இவன் பிறந்ததும் தவத்தாலிணையற்றுயர்ந்ததும் செல்வம் அதிகாரம் புஜ பலமுதலியவற்றைஅளவின்றிப் பெற்றும் மயங்கித் தீநெறியிற் சென்றுலகங்களுக்கெல்லாம் பயங்கரகாரணனாயிருந்ததும், தெய்வசிந்தை சிறிதுமின்றி அகங்கரித்திரந்ததும், ஈற்றிலே எல்லாமிழந்துகதியற்றதும், பின்னர்ப் பூர்வஜன்ம புண்ணியவசத்தினாற் சுப்பிரமணியக்கடவுளுக்குச் சேவலும்மயிலுமாயதுமாகிய சரித்திரங்களையெல்லாம் சாங்கோபாங்கமாகவிரித்துத் தீநெறிப்பயன் காட்டி அதனை விலக்கி முத்திநெறி விதிப்பது கந்தபுராணம்மாம்.

சூரன் - (1) கார்த்தவீரியார்ச்சுனன் ஐந்தாம் புத்திரன். (2) யாதவர் அநேகர் இப்பெயரால் விளங்கினர். (3) விரோதன் புத்திரன். சிநி தந்தை. (4) தேவமீடன்புத்திரன். வசுதேவன் தந்தை. (5) வசுதேவன் மதிரை வயிற்றிற்பெற்ற புத்திரன்.

சூரி - ஜைநூலாசிரியர்கள் மேற்கொள்ளும் பட்டப்பெயர்.

சூரியகுண்டம் - காவிரியின் சங்கமுகத்துக்கு அயலதாகிய ஒரு தடாகம்.

சூரியசாவர்ணி - எட்டாம் மனு. சூரியனுக்குச் சாயாதேவியிடத்துப் பிறந்த புத்திரன். இம் மனுவே இனி வரப்போகும் மனு. இவன் முன்பிறந்தமனுவுக்குச் சமானனாயினமையின் சாவர்ணியெனப்படுவன். இவன் காலத்திலே சுதபர், அமிதாபர், முக்கியர் எனத் தேவகணங்கள் முத்திறத்தராவர். அக்காலத்திலே தீப்திமான், காலவன், ராமன், கிருபன். ஆசுவத்தாமன், வியாசன், சிருங்கன் என்பவரே சப்த ரிஷிகளாவார்கள். பாதலத்திலே தவங்செய்திருப்பவனாகிய பலி சக்கரவர்த்தியே தேவேந்திர பதம்பெறுவான். வீரஜன் சர்வசீவான் நிர்மோகன் முதலியோர் பூலோகத்து மானுஷியவர்க்காதிபராவார்கள்.

சூரியன் - கசியபனுக்கு அதிதிவயிற்றிலே பிறந்த புத்திரன். மனைவி துவஷ்டடாபுத்திரியாகிய சஞ்ஞாதேவி. இவளிடத்திலே பிறந்தபுத்திரர் வைவசுவதமனுவும் யமனுமென இருவர்புத்திரி யமுனை. ஊதயகாலசூரியன் பிரமாவினது சொரூபமென்றும் மத்தியானகால சூரியன் சிவசொரூபமென்றும் அஸ்தமயனகாலசூரியன் விஷ்ணுசொரூபமென்றும் கொண்டு ஜபத்திலே தியானிக்கப்படுவன். சூரியன் ஏழு குதிரைபூண்டவோராழித்தேரிலே சஞ்சரிப்பன். தினத்தைச் செய்தலால் தினகரனென்றும், பிரபையைச் செய்தலாற் பிரபாகரனென்றும் பிறவுமாக அநந்த நாமங்களைப் பெறுவன். இவ்வண்டம்சூரியனை ஆதாரமாகவுடையது. சூரியன் துரவனையாதாரமாகவுடையது.

சூரியனைக்குறித்து விஷ்ணு புராணத்திற் கூறப்பட்டனவற்றை இங்கே சங்கிரகித்துக் கூறுவாம். அதிற் கூறப்பட்டன ஐரோப்பிய சித்தாந்தத்திந்குப் பெரும்பாலுமொத்தன. முற்றுமுருவகமாதலின் நுண்மையானுணரப்படும்.

துருவனை யாதாரமாகக் கொண்டு அவனாலே ஆட்டப்பட்டு அவனையே வலஞ்செய்துவருதலைத் தொழிலாகவுடைய சூரியனுக்கு ஒரிரதமுண்டு. அவ்விரதத்திற்கு ஓரச்சும், அவ்வச்சிலே ஒருருளும், அவ்வுருளினிருமருங்கிலும் அச்சிலே கோக்கப்பட்ட பூட்டுக் கோலாகிய கொடிஞ்சிகளும் அவற்றின் மீதேபாரும், அதன் மீதே தட்டும், உறுப்புக்காளகவுள்ளன. கொடிஞ்சிகளிNலு ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். காயத்திரி, பிருகதி, உஷ்ணிக்கு, ஜக்தி, திருஷ்டுப்பு, அநுஷ்டுப்பு, பந்தி என்னும் பெயர்களையுடைய சந்தங்கள் ஏழுமே அவ்வேழுகுதிரைகளுமாம். அவ்வுரளினொருபக்கத்தச்சு மிக நீண்டிருக்கும். மற்றப்பக்கத்தச்சு மிக்க குறுகியிருக்கும். அவ்வுருளினது பண்டிகாலை நண்பகல் மாலை என்னும் பிரிவுகளாலாயது. சம்வற்சரம், பிரிவற்சரம் இடாவற்சரம் அநுவற்சரம் இத்துவற்சரம் என்னும் ஐந்தும் உருளாரங்களாம். இருதுகள் ஆறும் உருள் வலயங்களாம். குறுகிய அச்சுப்பக்கம் துருவபக்கத்தை நோக்கி நிற்கும். அவ்வச்சுத் துருவ நடித்திரத்திலிருந்து வரும் வாயுவடிவினவாகிய கயிறுகளிலே தொடுக்கப்பட்டிருக்கும். உருளை மானசோத்தரபர்வத்தின் மீதே சஞ்சாரித்துவரும். அப்பர்வதத்தின் மீது கிழக்கில் இந்திரனுக்குரிய வசுவோகசாரா நகரமும், தெற்கில் யனனுக்குரிய சம்யமனிநகரமும், மேற்கில் வருணனுக்குரிய சுகாநகரமும், வடக்கிலே சோமனுக்குரிய லிபாவரீ நகரமுமென நான்கு நகரங்களுள. சூரியன் இவ்விரதத்திலே சஞ்சரித்து வருதலால் உதயாஸ்தமயங்களுளவாகின்றன. உதயாஸ்தமயங்களுண்மைபோல நமக்குத் தோன்றினும் சூரியன் உண்மையளவில் உதிப்பதும் அஸ்தமிப்பதுமில்லை. சூரியன் மேலே கூறப்பட்ட நான்குகோணத்து நகரங்கள் நான்கனுள் எதிலாயினும் இடையிலாயினும் இருக்கும்போதே இரண்டு கோணங்களுக்கும இரண்டு நகரங்களுக்குந் தரிசனமாவான். சூரிபகிரணங்கள் செல்லாதவிடமமேருப்பக்க மொன்று மேயாம். அப்பக்கஞ் செல்லும் சூரியகிரணங்கள் மேருவினது கிரணங்களாலே திரஸ்கரிகரிக்கப்பட்டு மீளும்.

சூரியரதஞ் சஞ்சரிக்கிற கிராந்திவிருத்தங்கள் நூற்றெண்பத்துமூன்று. அவை தடிpணாயன உத்தராயண வெல்லைகளுக்கிடையேயுள்ளன. இரதம் அக்கிராந்தி விருத்தங்களிலேயே உத்தராயணத்திலேறுவதும் தடிpணாயனத்தி லிறங்குவதுமாயிருக்கும். அதனால் ஒரு கிராந்திலிருத்தத்தி;ற்கு இரண்டாக முந்நூற்றறுபத்தாறு கதிகளினாலே ஒரு வருஷமுண்டாகும். மாசந்தோறுஞ் சூரியன் தன் இயல்பு வேறுபடலால் பன்னிரண்டு பெயர்களைப் பெறுவான். அதுபற்றிச் சூரியர் பன்னிருவராகக் கொள்ளப்படுவர். சூரியரதத்திலே சூரிய ரிஷிகந்தருவ அப்சர யடி சர்ப்ப ராடிசகணங்கள் ஏழும் ஏறியிருக்கும். சித்திரைமாசத்திலே தாதவென்னுஞ் சூரியனும், கிருதஸ்தலையென்னும் அப்சரப் பெண்ணும், புலஸ்தியவிருஷியும். வாசுகி சர்ப்பமும், ரதபிருத்துவென்னும் யடினும். ஹேதிராடிசனும், தும்புருவென்னும் கந்தருவனும், அவ்விரதத்திலே வசிப்பார்கள். வைகாசியிலே சூரியன் அரியமா@ இருஷிபுலகர்@ அப்சரசு புஞ்சிகஸ்தலை@ யடின் ரதௌஜா@ சர்ப்பம் கச்சவீரன்@ கந்தரூவன் நாரதன்@ ராடிசன் பிரஹேகி. இவ்வாறே ஏனைய மாதங்களிலும் வேறுவேறு பெயர்களைப் பெறுவர்.

சூரியரதத்திலுள்ள இவ்வேழுகணங்களும் இப்பூமியிலே மழைபனி வெயில் சுகம விருத்தி பஞ்சம் நோய் முதலியவற்றிற்குக் காரணராய்க காலபேதங்களை யுண்டாக்குவர். சூரியனை அவ்விரதத்திலிருக்கும் இருஷிகள் தோத்திரஞ் செய்துகொண்டிருப்பார்கள்@ அரம்பையர் ஆடிக் களிப்பிப்பர்@ ராடிசர் பின்றொடந்து நிற்பர்@ சர்ப்பகணங்கள் தாங்குவர்@ யடிர் கடிவாளம் பிடித்து நிற்பர்@ கந்தரூவர் பாடிக் கிளிப்பிப்பர். சூரியன் அண்டத்தைக் காப்பன்.

மேலும் ஏழுகணமென ரூபகம் பண்ணப்பட்டன சூரியனிடத்திலேயுள்ளனவாய் விளங்குகின்ற ஆற்றல்களேயாம். இருஷிகளென்பது ஒளியைக்கொடுத் துலகத்தை அதற்குரிய வியாபாரத்தக் கேலிவிடும் சக்தியைப்போலும். அரம்பையரென்றது உலகவியர் பாரத்திலுயிர்களையாட்டுவிக்கும் சக்தியை. இராடிர்பின்றொடர்ந்து நிற்பரென்பது இருளை. சர்ப்பகணமென்றது சூரிய வீதியெனப் பெயர்வந்ததுமாமென்க. யடிர் கடிவாளம்பற்றி நிற்பரென்றது. சூரியனை உரியகதியிற் பிறழாதுகாக்குஞ் சக்தியை. கந்தருவர் பாடிக் களிப்பிப்பர் என்றது அணுக்களைக் கவரும் சக்தியை. சூரியன் அண்டத்தைக் காப்பன் என்றது. அண்டங்களெல்லாந் தன்னை வலம்வருமாறு செய்து அவைக்கெல்லாம் தான் காரணமாய்நிற்கும் ஆற்றலை. இனி மான சோத்தரபர்வதமென்றது சூரியன் சஞ்சரிக்கும் வீதியினது நிலையை. சூரியன் அவ்வுயர்ந்தநிலையிற் கீழே பூமியைநோக்கி யிறங்காமலும் அந்நிலையினின்றும் மேலேயுயராமலும் சமமாகிய ஒருமலை போன்ற மதிற்சுவரின் மீதே சஞ்சரிப்பது போலச் செல்லுதலின் அந்நிலை மலையெனப்பட்டது. மனசுக்கு மெட்டாதுயர்ந்தமலையென்பது அதன் பொருள். நான்கு நகரமென்றது. உதயம், உச்சி, அஸ்தமயம், அதோபாகம் என்னும் நான்கு கோணங்களையுமாம். உதயகோணத்தை இந்திடரனுக்குரிய வசுவோக சாராநகரமென்றது பொன்மயமாகிய வெளியும் புள்ளொலியும் முதலிலே புலப்படுமிடமாதல் பற்றியாம். வேளிக்கிறைவ னிந்திரனாதலின் இந்திரனுக்குரிய தெனப்பட்டது. (வசு-பொன், ஒகம, புள்) உச்சிக்கோணநகரம் யமனுக்குரிய தெனப்பட்டது. வெயில் மிகக் கொடிதாதலும் உயிர்களுக்குப் பசிதாகங்க ளுளவாதலும் பற்றியாம். அஸ்தமயகோணத்தை வருணனுக்குரிய தென்றது சூரியன் அவ்விடத்தையடையும் போது பூமி குளிர்ச்சியும் சோகநீக்கமும் பெறுதலால், தண்ணென்ற சுபாவத்தையுடைய நீருக் கிறைவன் வருணனேயன்றோ. வடக்கென்றது அதோபாகத்தி லிருக்கும் போது ஊர்த்துவபாகத்திலுள்ள வுயிர்களுக்குக் களிப்பையும் நித்திரையையுங் கொடுத்தல் பற்றி அக்கோண்ம் சோமனுக்குரிய தெனப்பட்டது. ஏழ்பரியை ஏழ்நிறமென்பாருமுளர்.

இவை ஒருவாறு விரிக்கப்பட்டவுள்ளுறை. அவ்வுருவகங்களை முற்ற நிதானித்துத் தத்துவங்காட்டல் மகாபண்டிதர்க்கன்றி மற்றோர்க்கசாத்தியமாம்.

சூரியாரண்ணியன் - (இ) திரிதன்வன் புத்திரன். சத்தியவிரதன் என்னும் திரிசங்குதந்தை. திரயாரண்ணியன் எனவும் படுவன்.

சூர்ப்பகன் - (ரா) இவன் மன்மதனாற் கொல்லப்பட்டராடிசன்.

சூர்ப்பணகை - ராவணன் தங்கை. (முறம் போன்ற நகங்களையுடையாள் என்பது பதப்பொருள்). இவள் புத்திரன் ஜம்புகமாரன் ஸ்ரீராமர் ஆரணியஞ் சென்றிருந்தபோது அவரைக்கண்ட சூர்ப்பனகை மோகாதீதையாகி அவர்பாற் செல்ல அவர் மறுத்து லடி{மணனிடத் மவளையனுப்ப, லடி{மணன் அவளுடைய முறைகேட்டையுஞ் சீதையை எடுத்து விழுங்க எத்தனித்தமையை யுங்கண்டு அவளுடைய நாசியைச்சேதித்து அவளை அவ்விடத்தினின்று மோட்டிவிட்டான். அவள் கரதூஷணாதியரிடத்துச் சென்று அதனை முறையிட, அவர்கள் ராமலடி{மணரை யெதிர்த்துப் போர்செய்து மாண்டார்கள். இச்செய்திகளையெல்லாஞ் சூர்ப்பணகை இராவணனிடஞ் சென்று முறையிட அவன் ராமர் வசித்த ஆரணியஞ் சென்று வஞ்சச் சூதாற்சீதையைக் கவர்ந்துசென்றான். இராவணனுக்கு இவ்வழியே நாசத்துக்குக் காரணியாயிருந்தவள் இவளே.

சூலினி - பார்வதி

சூளாமணி - தோலாமொழித் தேவர் செய்த ஒரு சைன காவியம். காவியநாயகன் பயாபதி. அந்நூல் பயாபதி புத்திரரைப் பெற்று அவராற் பகையரசரை வென்று அரசபோகம் துய்த்துப் புத்திரனுக்கு முடிசூட்டித் துறவுபூண்டு அருகசரணம்பெற்ற வரலாறுகளை மிகவெடுத்துரைக்கும்.

சூளி - (ரி) பிரமதத்தன் தந்தை.

செகராஜசேகரன் - செகராஜசெகரமென்னும் சோதிடநூல் செய்த ஈழநாட்டரசன். அந்நாட்;டிலே தமிழ்வளர்த்த அரசருளொருவன். இற்றைக்கு நானூற்றுப்பத்துவருஷங்களுக்கு முன்னுள்ளவன்.

செங்குட்டுவன் - இளங்கோவடிகட்கு மூத்தோனாகிய சேரன். இவன் கண்ணகி தன்னாட்டையடைந்து தன் கணவனோடு சுவர்க்கம் புகுந்தாளென்பதைக் கேட்டு இமயமலையிலிருந்து சிலைகொணர்ந்து அவள் வடிவமைப்பித்துப் பிரதிஷ்டை செய்வித்துப் பூசையுந் திருவிழாவும் நடத்தினவன்.

செங்குன்று - கொடுங்கோடிருக்கு அயலதாகிய ஒரு மலை. குண்ணகி இம்மலையில் ஒரு வேங்கை மரத்துநிழலிலே நிற்கும்போது அங்கே தெய்வவடிவத்தோடுவந்த கோவலனைக்கண்டு அவனோடு சுவர்க்கம் புகுந்தாள்.

செங்கோடு - திருச் செங்கோடென்னும் மலை. இதனை முருகக்கடவுளுக்குரியவிடமாக இளங்கோவடிகளுங் கூறியிருக்கின்றனர்.

செந்தில் - அநேக பிரபந்தங்களாற் புகழப்படுவதாகிய இது முருகக்கடவுளது படைவீடுகளுள் ஒன்று. இக்காலத்திலே திருச்செந்தூரென்று வழங்கப்படுகின்றது. குமரகுருபரர் தமது ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற ஸ்தலமிதுவே.

செம்மேனிநாயகர் - திருக்கானூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

செயலூர்க்கொடுஞ்செங்கண்ணனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

செயிர்க்காவிரியார்மகனார்சாத்தனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

செயிற்றியம் - செயிற்றியனார் செய்த நாடகத்தமிழ்நூல்.

செருத்தணி இது சூரனோடு சுப்பிர
திருத்தணி மணியர் செய்த செரு
திருத்தணிகை த்தணிந்தவிடமாதலின் இப்பெயர் பெற்றது. இத்தலத்தில் உதயகாலத்திலொருபூவும் உச்சிக்காலத்தொரு பூவும் மாலையிலொரு பூவும் மலருகின்ற நீலோற்பலத்தையுடைய ஒரு திவ்வியசுனையுளது. அது அற்புத தீர்த்தமெனப்படும். இத்தலம் வேய்கடத்துக்குத் தென்றிசையிலேயுள்ளது.


செருத்துணைநாயனார் - தஞ்சாவூரிலே வேளாளர்குலத்திலே அவதரித்துத் திருவாரூரையடைந்து அங்கே சுவாமிக்குத் திருத்தொண்டு செய்து கொண்டிருக்கையில் புஷ்பமண்டபத்தின் பக்கத்திலே விழுந்துகிடந்த ஒரு பூவை எடுத்து மோந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியை மூச்சரிந்த சிவபக்தர்.

சென்னிமலை - கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம்.

சேக்கிழார் தொண்டை நாட்டிலே குன்றத்தூரிலே சேக்கிழார் மரபில் அவதரித்த அருண்மொழித்தேவர். அவருக்குச் சேக்கிழார் ரென்பது அம்மரபை விளக்கினமையாலுண்டாயபெயர். அவருடைய கல்வியறிவொழுக்கங்களை அறிந்த அநபாய சோழமகாராஜா அவரைத் தமக்கு மந்திரியாராக்கி அவருக்கு உத்தமசோழப்பல்லவரென்னும் வரிசைப்பெயரையுங் கொடுத்தான். அவர் சைவசமயிகள் புறச்சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியைச் சொற்சுவை பொருட்சுவைகளை மாத்திரம் விரும்பிக் கற்றுத் தங்கள் வாணாளை வீணாளாகக்கழிப்பதுகண்டு மனங்கசிந்து இம்மை மறுமை யி;ன்பங்களை ஒருங்கேதந்து முத்திக்குச் சாதனமாயுள்ள சிவனடியார் சரித்திரமாகிய பெரியபுராணத்தைப் பாடியருளினார். அப் பெரியபுராணம் சிதம்பரத்திலே சபாநாயகர் சந்நிதியிலே திருவருளாலெழுந்த அசரீரி வாக்காகிய “உலகெலாமுணர்ந்தோதற்கரியவன்” என்னும்மடியை முதலாகக்கொண்டு ஆயிரக்கால்மண்டபத்திற் பாடிமுடிக்கப்பட்டது. பக்திரசம்பெருகப் பாடுஞ்சக்தி இவரிடத்திலே பெரிதுமுண்டு, கர்ணபாரம்பரியத்திலே கி;டந்த அடியாருடைய சரித்திரங்களைச் சேக்கிழார் உள்ளவுள்ளவாறு கேட்டாராய்ந்து பாடி முடித்துச் சபாநாயகர் சபையிலேயே அரங்கேற்றினர். அநபாயசோழமகாராஜா அவருக்குக் கனகாபிஷேகம் பண்ணி அவரையும் பெரியபுராணத்தையும் யானைமேலேற்றித் தானுமேறியிருந்து அவருக்குச் சாமாம் வீசிக்கொண்டு வீதி வலஞ்செய்வித்தான். அரசன் அதன்பின்னர்ப் பெரிய புராணத்தைச் செப்பேட்டிலெழுதுவித்து அவ்வாலயத்திலே வைத்தான். சேக்கிழார் அதுநிகழ்ந்தபின்னர் ஞானமுடி சூடி அத்தலத்தி;றறானேயிருந்து சிலகாலஞ்சென்ற பின்னர்ச் சிவபதமடைந்தனர். அநபாய சோழமகாராஜாவினது காலம் சாலிவாகனசகம ஆயிரத்து நாற்பதுவரையிலுள்ளது. ஆதலின் சேக்கிழார் காலம் எழுநூற்றெழுபதுக்கு முன்னுள்ளதாதல் வேண்டும்.

சேடக்குடும்பியன் - திருவனந்தபுரத்துள்ளளானோரந்தணன். துன்பால் அடைக்கலமாகவிருந்த கண்ணகிக்கு நேர்ந்த துன்பங்களைக் கேட்டுத் தீயில் விழுந்திறந்தமாதரி மறுமையில் இவனுக்கு மகளாயினள்.

சேடி - ஒரு வித்தியாநகரம்

சேதன் - துருஹியன் பௌத்திரன்.

சேதி - (ய) விதர்ப்பன் மூன்றாம் புத்திரனாகிய ரோமபாதன் வமிசத்தவனாகிய உசிகன் புத்திரன். இவன் வமிசம் சேதிவமிசம் என்றும், இவனுளுந் தேசம் சேதி தேசமென்றுஞ் சொல்லப்படும்.

சேதிராயர் - திருவிசைப்பாப்பாடினோர் ஒன்பதின் மருளொருவர்.

சேது - ஸ்ரீராமர் ராவணசங்காரம் முடித்து மீண்டகாலத்தில் பிரமஹத்திநீங்கும் பொருட்டு ஆடியதீர்த்தத்துறை. இது சேதுபந்தனத்துக்கருகே ராமேசுவரத்தைச் சார்ந்த சமுத்திரத்திலுள்ளது. இது மகா விரேஷமுடைய தீர்த்தமென இமயகிரிப்பிரதேச முதலாயுள்ள தேசங்களினின்றும் ஆரியர் வருஷந்தோறுஞ் சென்று படியப்பெறுவது.

சேதுபந்தனம் - திருவணை. அது பாண்டிநாட்டினின்று கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லவேண்டிய ராமனும் வாநர சேனையும் கடலைத் தூர்த்திட்ட அணைப்பாதை. இதனை வல்லிபுத்தூரர் தமது பாரதத்திலே தென்கடலும் வடகடலுமாகிய இரண்டு யானைகளும் முட்டிக்கொள்ளாவண்ணம் இடையேயிடப்பட்ட கணையமரமென வர்ணிப்பர்.

சேதுபுராணம் - ராமேச்சரதலபுராணம். ஆது நிரம்பவழகிய தேசிகராலே பாடப்பட்டது. அது மூர்த்தி தலம் தீர்த்தமென்னும் மூன்றன்மான்னியங்களையுஞ் செவ்வே கூறுவது. சொற் பொருசிறப்புக்களாற் சிறந்து கற்போர் க்கினிமை பயப்பது.

சேந்தனார் - (1) திருவாகர நிகண்டு செய்வித்த ஒரு சிற்றரசர். இவர் அருகசமயத்தவர். (2) பட்டணத்துப்பிள்ளையாருக்கு மந்திரியுந் தோழருமாயிருந்த ஒருவைசியர் இவரைக் குற்றமின்றி அரசன் விலங்கிட்டுவைத்த போது அவர்மகன் பட்டணத்துப்பிள்ளையாருக்கு விண்ணப்பஞ்செய்ய, பிள்ளையார் ஒரு பாடலைப்பாடிச் சிவனைவேண்ட அவரருலால் விலங்கைத் தவிர்த்துக் காக்கப்பட்டவர். (3) திருவிசைப்பாப்பாடினோருளொருவர். இவர் தஞ்சைமாநகரத்திருந்து விளங்கியவர். சிவபக்திமேலீட்டாற் றமது மந்திரிவிருத்தியை விடுவித்துச் சிவன்மீது இசைப்பாக்களைப் பாடித் தோத்திரஞ்செய்து சிவதொண்டு புரிவதையே பரம விருத்தியாகக்கொண்டவர். இவரையும் பட்டணத்தடிகளுடைய தோழராகிய சேந்தனாரையுமொருவராகக் கொள்வாருமுளர்.

சேரமான் சடலோட்டிய வேல் கெழுகுட்டுவன் - பரணராற் பாடப்பட்ட வொரு சேரன். இவன் போர்வன்மையை நோக்கி யானைப்படையை மேகமாகவும், னோவீரர் கையிலுள்ள வாட்படைகளை மின்னலாகவும், போர்ப்பறையை முழக்கமாகவும், குதிரைகளினது கதியைக் காற்றாகவும், வில்லினாற் செலுத்தப்படும் பாணங்களை மழை வருஷமாகவும் பூமியை வயலாகவும், தேரை ஏராகவும், எறியப்படும் வேலாயுதங்களை வித்தாகவும், சாய்ந்துகிடக்குந் தலைகளை நெற்போராகவுங் கொண்டு வேளாண்மைசெய்பவனென அவனைப் பரணர் புற நானூற்றிலே புகழ்ந்து பாடுவர்.

சேரமான் கடுங் கோவாழியாதன் - கபிலராலும், குண்டுகட்பாலியாதனாராலும், குண்டுகட்பாலியாதனாராலும் பாடப்பட்டவொருசேரன். தன்னைப் பதிற்றுப்பத்தினுள்ளே ஏழாம்பத்தென்னும் பாடலாலே பாடிய கபிலருக்கு நூறாயிரங்காணமும் மலைமீதேறிக்கண்ட நாடும் பரிசாகக் கொடுத்த வள்ளல் இவ்வரசனே, இவன் போராண்டையிலுஞ்சிறந்தவன். இவன் இறந்த விடம் சிக்கற்பள்ளி. காணம் - ஒரு பொற்காசு. அது காணம்போலும் வடிவினதாதலின் காண மெனப்படுவதாயிற்று. (காணம் - கொள்ளு)

சேரமான் கணைக்கா லிரும்பொறை - கோச்செங்கட்சோழனாலே சிறைசெய்யப்பட்டுக் காராக்கிருகத்திலே கிடந்து தாகத்தாற் சோகித்தவழியும் தண்ணீரும் வாங்கியுண்ணாதுயிர் துறந்தவன். அரசர் மரபிலே கருப்பத்தனுள்ளேயிறந்து பிறக்கின்ற சிசுவையும் பிண்டத்தையும் வாளாற் போழ்ந்து புதைப்பது மரபாகவும் அம்மாத்திரையும் பெறாது சங்கிலியிற் பணிக்கப்பட்ட நாய்போற் சிறையிடைக்கிடப்பேனாயினும், பகைவன் கையிலே தண்ணீர்வாங்கியருந்துவேனல்லேன். அவ்வாறுண்ணும் புத்திரரை அரசர் ஈன்றுவப்பவராகார் என்னுங் கருத்தினையுடைய “குழவியிறப்பினு மூன்றடிபிறப்பினும் - ஆளன்றென்று வாளிற்றப்பார் - தொடர்படுஞமலயினிடர்ப்படுத்திரீஇய - கேளல்கேளீர் வேளாண் சிறபத - மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத் - தாமிரந்துண்ணுமளவை - யீன்மரோ விவ்வுலகத்தானே” என்னும் இப்பாட்டு உயிர் துறக்கும் போது அவனாற் பாடப்பட்டது. (புறநானூறு)

சேரமான் கருவூரேறியவொள்வாட்கோப் பெருஞ்சேரலிரும் பொறை - இச்சேரன் நரி வெரூஉத்தலையராற் பாடப்பட்டவன். அப்புலவர் நல்லுடம்பு பெறுவதற்குக் காரணனாயிருந்தவனும் இவ்வரசனே (புறநானூறு)

சேரமான் குட்டுவன்கோதை - சோணாட்டு எறிச்சிலூர்மாடலன் மதுரைக்குமரனாராற் பாடப்பட்ட வீகையாளன்.

சேரமான்குடச்கோச் சேரலிரும்பொறை
சேரமான்குடக்கோவிளஞ் சேரலிரும்
போறை
பேருங்குன்றூர் கிழாராற் பாடப்பட்ட சேரன். புதிற்றுப்பத்தினுள்ளே ஒன்பதாம்பத்திற்குத் தலைவனு மிவனே.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் - இவனும் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி யென்னுஞ் சோழனும் போரிலிறந்த போது கழாத்தலையராலும் பரணராலும் அச்சோழனோடு சேர்த்துப்பாடப்பட்டவன்.

சேரமான் கோக்கோதைமார்பன் - இவன் கோச்செங்கட் சோழன் காலத்துச் சேரன். இவன் பொய்கையாராற் பாடப்பட்டவன். இவன் வண்மையிற்சிறந்தோனென்பது புறநானூற்றால் விளங்கும்.

சேரமான் கோட்டம் பலத்துத்துஞ்சியமாக்கோதை - புறநானூற்றினுள்வருமொருபாடலால் புலமைநிறைந்த சேரருளொருவ னென்பது துணியப்படும்.

சேரமான் செல்வக்கடுங்கோவாவாழியாதன் - (1) சிக்கற்பள்ளியிலிறந்த பெருங் கொடையாளனாகிய சேரன். இவன் குண்டுகட்பாலியாதனாராற் பாடப்பட்டவன். (2) கபிலா துகையைப்பற்றி, நுங்கை மெல்லியவென, அவராற்பாடப்பட்டசேரன். (புறநானூறு)

சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை - தனது முரசுகட்டிலிலறியாதேறி நித்திரை செய்த மோசிகீரனாரைத் தண்டியாது அவர் துயிலொழிந்தெழுந துணையுங் கவரிவீசிநின்ற பெருந்தகையாகிய சேரன். அவ்வரும் பெருஞ்செயல் புறநானூற்றினுள்ளே வரும் மோசிகீரனார் பாடலிலே விரித்துப் புகழப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்தினுள் எட்டாம் பத்தாலே தன்னைப் பாடிய அரிசில்கிழாருக்கு ஒன்ப திலடிம் பொன் பரிசில் கொடுத்தோனும் தகடூரை வென்றவனுமிவனே.

சேரமான் பாமுடிரெறிந்த நெய்தலங்கானலிளஞ்சேட் சென்னி - சேரமானுடைய பாமுடிரைவென்று கைக்கொண்ட சோழன். இவன் ஊர் பொதிபசுங்குடையராற் பாடப்பட்டவன். ஒருநாள் ஊனை வாங்கிக்குடையினுள் மறைத்துச் சென்றமையால் அப்புலவர்க்கு இப்பெயர்வருவதாயிற்று.

சேரமான்பாலைபாடிய பெருங்கடுங்கோ - இவ்ன் கொடையாலும் வீரத்தாலும் புகழ் படைத்த வொரு சேரன். பேய்மகள் இளவெயினியாற் பாடப்பட்டவன். பாட்டிலும் வல்லவன்.

சேரமான் பெருஞ்சேரலாதன் - இவன் கரிகாற்சோழனுக்குத் தோற்று நாணி வடநாட்டிற் சென்றிருந்த சேரன். இவன் கழாத்தலையார் வெண்ணிக்குயத்தியார் என்னும் இருவராலும் பாடப்பட்டவன். (புறநானூறு)

சேரமான் பெருஞ்சொற்று உதியன் சேரலாதன் - இவன் பாண்டவர்களும் கௌரவர்களும் செய்த யுத்தகாலத்திலே அவர்கள் சேனைகளுக்கு அந்தயுத்தமுடியுங்காறும் நல்லுணவளித்த பெருஞ்செல்வனாகிய சேரன். இவன் முரிஞ்சியூர் முடிநாகராயராற் பாடப்பட்டவன். புறநானூற்றிற் காண்க. முதற்சங்கத்திருந்த முடிநாகராயரும்வேறு. இவரும் வேறு. இவர் இடைச்சங்கத்திலிருந்தாருள் ஒருவரால் வேண்டும். புறநானூற்றுச் செய்யுட்களெல்லாம் இடைச்சங்கத்தும் கடைச்சங்கத்துமிருந்த புலவர்கள் பலராற் பாடப்பட்டனவேயாதலின் அது நன்குதுணியப்படும்.

சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை - இவன் சோழன் ராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியோடு போர்செய்த சேரன். இவன் பொருந்திலிளங்கீரனாராலும் வட்வண்ணக்கன் பெருஞ்சாத்தனாராலும் பாடப்பட்டவன். (புறநானூறு)

சேரமான் மாவெண்கோ - கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளியும் இச்சேரன் காலத்தவர்கள். மூவரும் நட்பினர்கள். இச்சேரமானே சேரமான்பெருமாணாயனாரெனப் பெயர் கொண்டவர். இவரைப் பாடிய புலவர் ஒளவையார் (புறநானூறு)

சேரமான் யானைக்கட் சேரலிரும்பொறை - “மாந்தரஞ்சேர லிரும் பொறை பாதுகாத்தநாடு தேவருலகத்தை யொக்கும்” என்றுலகம் போற்ற அரசுபுரிந்த சேரன். இவன் தன்னைப்பாடும் புலவர்க்குப் பிறரிடத்தே சென்று பாடியிரந்து நில்லாவண்ணம் அளவின்றிப் பெரும்பொருள் வழங்கும் பெருங் கொடைவள்ளல். இவனைப் பாடியபுலவர் குறுங்கோழியூ கிழார். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் சிறைசெய்யப்பட்டிருந்த ஞான்றும் குறுங்கோழியூர்கிழார் தாம் முன்னர் அவன் பாற் பெற்ற நன்றியை மறவாது போய்க்கண்டு அவன் புகழை மிகவெடுத்துப்பாடினர். (புறநானூறு)

சேரமான் வஞ்சன் - இவன் திருத்தாமனாராற் பாடப்பட்ட சேரன்

சேரமான் பெருமாணாயனார் - கழறிற்றறிவார் நாயனார் காண்க்.

சேரமான் பெருமாள் - ஆயிரத்து அறுபது வருஷங்களுக்கு முன்னே சேரநாட்டிலே (மலைநாட்டிலே) அரசுபுரியுநாளில் துருக்கரோடு யுத்தஞ்செய்து தோற்று அவர்களுடைய சமயத்திலே பிரவேசித்துத் துருக்கனாகிப் பின்னருஞ்சிலநாளரசுபுரிந்து ஈற்றிலே தனது நாட்டைவிட்டோடித் துருக்கருடைய தெய்வஸ்தலமாகிய மக்கபுரியை அடைந்து அங்கே இறந்தவன். அவன் சமாதி இன்றுமங்குளது. அவன் இறந்தகாலம் அச்சமாதியிலே வரையப்பட்டிருக்கி;ன்றது.

சேரலாதன் - செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகட்கும் தந்தை

சேரவமிசாந்சக பாண்டியன் - சோழவமிசாந்தகபாண்டியன் மகன்.

சேரன் - சேரநாட்டரசன் சேரன் எனப்படுவன். அவன் தமிழ்நாட்டு மூவேந்தருளொருவன். இவ்வமிசத்தரசர் இன்றுமுளர். முற்றிருவமிசமுமழிந்தொழிந்தன. சேரன் தேசம் மலைநாடு. அஃதிப்போது மலையாளமெனப்படும் சேரன்தேசத்துத் துறை பொருளைத்துறை. சேரராஜாக்களுக்குரிய மாலை போந்தின்றார். அவர்களுக்குரிய சிறந்தமலை கொல்லி.

சேனஜித்து - (1) (இ) கிருதாசுவன்புத்திரனென்றும் இரண்டாம் யுவநாசுவன் தந்தையென்றும் சொல்லப்படுவன. (2) (பா) விசுவஜித்து புத்திரன். ருசிராசுவன், திருடஹனு, காசியன, வற்சஹனு என நால்வர் இவன் புத்திரர்.

சேஷன் - ஆதிசேஷன்.

சேனாவரையர் - தொல்காப்பியஞ் சொல்லதகாரத்திற்குச் சேனாவரையம் என்னுமுரைசெய்த ஆசிரியர். வடமொழி தென்மொழியிரண்டிலும் மிக்க வல்லுநர். குசாக்கிரவிவேகமுடையவர். அவர்க்கிணையான வுரையாசிரியர் அவர்க்குப்பின் இன்றளவும் பிறந்திலர். அவர் நச்சினார்க்கினியர்க்கு முந்தியகாலத்திலுள்ளவர் என்பது நச்சினார்க்கினியர் தாமியற்றிய வுரையினுள்ளே ஒரோவிடத்துச் சேனாவரையர் மதத்தை மறுத்துத் தம்மதங் காட்டலாலினிது புலப்படும். அவருடைய ஜன்மநாடு பாண்டிநாடென்றும் ஜாதியினால் அந்தணர் என்றுங் கூறுவார்கள். அவர் இளம்பூரணருரையை இடையிடை மறுத்தலால் இளம்பூரணர் முந்தியவர். ஆதலாற் சேனாவரையர் இற்றைக்கு ஆயிரத்திருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னுள்ளவராதல் வேண்டும்.

சைசுநாகர் - சிசுநாகன் வமிசத்தோர். இவர்கள் பதின்மர். பிரத்தியோதர்களுக்குப் பின்னர் மகததேசத்திலே முந்நூற்று அறுபத்திரண்டுவருஷம் அரசுபுரிந்தோர்.

சைதன்னியர் - இவர்கள் இலிங்கதாரிகளைப்போல வருணாச்சிரமதருமங்களை நிராகரித்திருப்பவர்கள். இவர்களுக்குப் பத்தியே விசிட்டமுள்ளது. விஷ்ணுவையே பூசிப்பவர்கள். இவர்கள் உத்தரத்திலே பெருக்கமாயுள்ளவர்கள்.

சைத்தியர் - யாதவபேதம். விதரியன் புத்திரனாகிய ரோமபாதம் வமிசத்தனாகிய சேதிவழிவந்தவராதலின் இப்பெயர் பெற்றார்.

சைத்திராதம் - குபேரன் உத்தியானவனம்

சைந்தவன் - ஜயத்திரதன். இவன் சிந்துதேசத்தரசன். துரியோதனன் தங்கையாகிய துற்பலையை மணம்புரிந்தவன். இவன் தந்தை விருத்தடித்திரன். இச்சைந்தவன் பாண்டவர்கள் வனவாசஞ் செய்து கொண்டிருந்த காலத்திற் காட்டிலே ஒருநாள் தனியிருந்த திரௌபதியைப் பலபந்தமாகக் கவர்ந்து போக, அஃதுணர்ந்த பாண்டவர்கள் உடனே தொடர்ந்து சென்று இடைவழியிலே தடுத்து அவனை மானபங்கஞ்செய்து திரௌபதியை மீட்டுச் சென்றார்கள். பின்னர் பாரதயுத்தத்திலே அர்ச்சுனனாற் கொல்லப்பட்டவன்.

சைப்பியர் - உசீநரன் புத்திரனாகிய சிபிவமிசத்தோர்.

சைப்பியை - (1) ஒரு புராணம். இது வாயுவினாற்கூறப்பட்டது. சுவெதவராககற்பசம்பந்தமாகிய சிவமான்மியங்களை எடுத்துரைப்பது. அதன் கிரந்தசங்கியை பன்னீராயிரம். (2) சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்;ட சமயம்;. இச்சமயத்தோர் சைவரெனப்படுவர். பதி பசு பாசம் என மூன்றும் நித்தியப் பொருள்கள் என்றும், பசுக்களாகிய ஆன்மாக்கள் புண்ணியமேலீட்டினாலே பதிஞானம் பெற்றுப் பாசத்தடை நீங்கிச்சிவத்தோடிரண்டறக் கலத்தலே முத்தியென்றும், இச்சையே பிறவிக்குக்காரணமென்றும், பற்றொழிதலே முத்திக்குக்காரணமென்றும், சிவன் சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகமென்னும் பஞ்சகிருத்தியங்களையும் ஆன்மாக்களை யீடெற்றும் பொருட்டுச் செய்பவரென்றும், செய்யினும் நிர்விகாரியென்றும், சச்சிதாநந்தப் பொருளென்றும் அச்சமயம் தர்க்கவாயிலாக ஸ்தாபிக்கும்.

சைவசமயகுரவர் - மாணிக்கவாசகசுவாமிகள், திருஞானசம்பந்தமூர்த்திகள், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார் என்னும் இந்நால்வரும் இப்பெயர் பெறுவர்.

சைவாகமங்கள் - இவை இவையென ஆகமங்கள் என்பதனுட் கூறினாம். இருபத்தெட்டாகமங்களும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக்கோடி கிரந்தங்களையுடையன. ஞானம், யோகம், கிரியை, சரியை யென நான்கு பாதங்களையும், ஒவ்வொன்றுங் கூறவன. ஞானபாதம் திரிபதார்த்த சொரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமமுதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் பூசைஓமம் முதலியவற்றையும், சரியாபாதம் சமயாசாரங்களையு மெடுத்துக்கூறும். இவ்வாகமங்கள் சிவன் மேன்முகத்திற் பிறந்தன வெனப்படும்.

சைவை - அநிலன்பாரி.

சொக்கநாதர் - திருஆலவாயிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சொக்கநாயகி - திருப்புன்கூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்.

சொர்ணபுரிசுவரர் - திருச்செம்பொன்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சொர்ணபுரீசர் - திருப்புத்தூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

சோணபுரம் - வாணாசுரன் ராஜதானி.

சோணாட்டு;ப்பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன்விண்ணந்தாயன் - அந்தணர்க்குரிய அறுதொழிலுஞ் சிரத்தையோடு புரியும் ஒரு பிராமணோத்தமர். கோடையாலும் பெரும்புகழ்படைத்தவர். ஆவூர்மூலங்கிழாராற் பாடப்பட்டவர். (புறநானூறு)

சோணை - மைநாகபர்வதத்திலே லுற்பத்தியாகிக் கங்கையிற் சங்கமிக்கும் நதி. சித்தாச்சிரமத்திலிருந்து மிதிலைக்குப் போகும் மார்க்கத்திலே இப்பெயரையுடைய நதியுமொன்றுளது. அது மகததேசத்திற்பாய்தலால் மாகதியெனவும்படும். இதிலிருந்தே சோணபத்திரவிநாயக மூர்த்தங்கள் எடுப்பார்கள்.

சோதிடம் - ஜியோதிஷம் காண்க.

சோமகன் - (1) (பா) சஹதேவன் புத்திரன். சுஜன்மகிருதுதந்தை. விருஷதன் தந்தை தந்தை. (2) ஜந்தன்தந்தையாகிய ஓரிராஜவிருஷி. (3) பிரமா நித்திரைபோயிருந்தகாலத்தில் வேதங்களைத் திருடிப்போய்ச் சமுத்திரத்தில் ஒளித்தவசுரன். விஷ்ணு மற்சாவதாரமெடுத்து அச்சமுத்திரத்திலாராய்ந்து வேதங்களைக் கைப்பற்றிப் போய்ப்பிரமாவுக்கீந்தனர்.

சோமகுண்டம் - சிரவுதாக்கினியிலே செய்யப்படுகின்ற யாகபேதங்கள். அவை அக்கினிஷ்டோமம். ஆத்தியக்கிமனிஷ்டோமம், உக்தியம், சோடசி, அதிராத்திரம், அப்தோரயாமம், வாஜபேயம் என ஏழாம்.

சோமசிரவசு சுரதசிரவன் புத்திரன். ஜனமேஜயன் புரொகிதன்.

சோமசிரவம் - பாஞ்சாலத்துக்குச் சமீபத்திலுள்ள புண்ணியதீர்த்தம். அத்தீர்த்தக் கரையிலேயே அங்காரவர்ணன் அர்ச்சுனனோடுயுத்தஞ்செய்து சாபவுடல் போக்கிப் பூர்வரூபமாகிய சித்திராதன் என்னும் பெயரோடு தனதுலகஞ்சென்றனன்.

சோமசுந்தரபாண்டியன் - இவர்மலையத்துவசபாண்டியன் மருகனார். தடாதகைப்பிராட்டியாரை மணம்புரிந்தவர்.

சோமசுந்தரபாதசேகரன் - இவன் வங்கியபாத பாண்டியனுக்குப்பின் அரசுசெய்த பாண்டியன். சோமசுந்தரக் கடவுளது அருள் கொண்டு சோழனை மடுவில் வீழ்த்தியவன் இவனே.

சோமசூடாமணி - வமிச பூஷணபாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்.

சோமதத்தன் - சந்தனு சகோதரனாகிய பாகிலகன் புத்திரன். இவன் பாரதயுத்தத்திலிறந்தவன். பூரி, பூரிசிரவன், சலன் என்னுமூவரும் இவன் புத்திரர்.

சோமதீர்த்தம் - பிரபாச தீர்த்தம். சோமநாதபுரத்துக்குச் சமீபத்திலுள்ளது. சந்திரன் தடின்சாபத்தாற் பெற்ற டியரோகத்தை இத்தீர்த்தத்திலாடித் தீர்த்துக்கொண்டமையால் இஃது இப்பெயர் பெற்றது.

சோமநாதம் - கூர்ச்சர தேசத்திலுள்ள ஒரு திவ்விய சிவஸ்தலமும் நகரமுமாம். சுந்திரன் தவஞ்செய்து டியரோகம் நீங்கப்பெற்றஸ்தலம்.

சோமாஸ்கந்தர் - மகேசுரவடிவம் இருபத்தைந்தனுளொன்று. சிவனும் உமாதேவியாரும் முருகக்கடவுளைத்தழுவிய அவசரம்.

சோமன் - (1) அத்திரிக்கு அநசூயையிடத்துப் பிறந்தவனாகிய சந்திரன். இச்சந்திரனே மண்ணுலகத்துக்குத் தோன்றுபவன். சிவன் முடியிருப்பவன் கடலிற் பிறந்தவன். சந்திரனை அத்திரிபுத்திரனென்று சிலபுராணங்களும் பாற்கடலிற்பிறந்தவனென்று சில புராணங்களும் கூறுதல்கற்பபேதம். (2) சிவன். (3) வசுக்களுளொருவன். இவன் பிரஜாபதி புத்திரன். இவன்மனைவி மனோஹரை புரொஜபன் வரியன் பிராணன் கரணன்ரமணன் என ஐவர் புத்தரரையும் பிரதையென்னும் புத்திரரையும் பெற்றவன். இப்பிரதை பதின்மாhகந்தருவர்களுக்குப் பொதுமனைவி. (4) யமன். (5) குபெரன்.

சோமாசிமாறநாயனார் - அந்தணர்குலத்திலே பிறந்து அடியார்களுக்குத் திருத்தொண்டு செய்தலே பெருஞ் சிவபுண்ணியமெனக்கொண்டு சுந்தரமூர்த்திநாயனாரை அடைந்து அவரேவலின் வழிநின்றொழுகிச் சிவபக்தி சாதித்தவர்.

சோமி - ஆற்றூரிலே பிறந்து தமிழ்க்கல்வியிலே மிக்க புலமையுடையளாய்ச் சிறந்து புலவர்களுக்குப் பொன்மாரிவழங்கிக் காளமேகப்புலவராலும் பாடப்பட்ட ஒரு தாசி.

சோரன் - ஒரு சம்ஸ்கிருதகவி. வில்கணனெனவும்படுவன்

சோழதேசம் - சோழகுலத்தரசர்க்குரிய தேசம். கிழக்குந் தெற்குந் கடலும், வடக்கு வெள்ளாறும், மேற்குப் பாண்டிநாடும். எல்லையாகவுடைய தேசம். அது விரிநதிபாயநாடாதலின் நீர்மலிவான் என்றும் புனனாடென்றும் காரண விடுகுறிப் பெயர்கள் கொண்ட நீர்வளம் நிலவளம் வாய்ந்த நாடு. பழைமையும் நாகரிகமும் வாய்ந்தநன்மக்களையுடையது. காவிரி;ப்பூம்பட்டினம் கருவூர் திருவாரூர் முதலிய சிறந்த ராஜமாநகரங்களைப் பண்டைநாளுடையது. பின்னர்நாள் அதிப்பிரபல்லியமுடையதாகிய தஞ்சைமாநகரம் திருக்குடந்தைநகரென்நு மிரு மகா நகரங்களைத் தன்னகத்தேயுடையது. எண்ணில்லாத சிவஸ்தலங்களும் விஷ்ணுஸ்தலங்களுமுடையது செல்வமுங்கல்வியுமநாகரகமும் சதாசாரமும் வாசஞ்செய்யுந்தேசமிதுவொன்றேயாம். காருகமுங் கம்மியமுங்குறைவற நிகழப்பெறுவது மிந்நாட்டின்கண்ணேயாம்.

சோழவமிசாந்தக பாண்டியம் - ரிபுமர்த்தன பாண்டியனுக்குப்பின் அரசுசெய்த பாண்டியன்.

சோழன் - திஷ்யந்தபௌத்திரனாகிய ஆசிரதன் புத்திரன். இவனே சோழதேச ஸ்தாபகன்.

சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி -சேரமானமாந்தரஞ் சேரலிரும்பொறையனைப் போரிடைவென்றவன். சேரமான்மா வெண்கோவுக்கும் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதிக்கும் நட்பினன். பாண்டராங்கண்ணனாராலும் ஒளவையாராலும் உலோச்சனாராலும் பாடப்பட்டவன்.

சோழன் நலங்கிள்ளி சேட்சென்னி - இவன் இலவந்திகைப் பள்ளியிலே பிறந்த சோழன். ஏறிச்சிலூர்மாடலன் மதுரைக் குமரனாராற் பாடப்பட்டவன்.

சோழன் உருவப் பஃறேரிளஞ் சேட்சென்னி - இளஞ்சேட்சென்னி உருவப்பஃறேரிளையோன் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவன். இவன் வீரங் கொடைகளாற் சிறந்தோன். ஆழுந்தூர்வேளிடத்துப் பெண் கொண்டோன் என நச்சினார்க்கினியர் கூறுவர். இவன் கரிகாற்சோழன் தந்தை. அவனைப் பரணரும் பெருங்குன்றூர்கிழாரும் பாடினர்.

சோழன்கரிகாற் பெருவளத்தோன் உருவ
சோழன்கரிகாலன் ப் பஃறேரிளஞ் சேட்சென்னிபுதல்வன். இவன் நாங்கூர் வேளாளனிடத்துப் பெண் கொண்டவன் என நச்சினார்க்கினியர் கூறுவர். “கரிகாற்சோழன’’காண்க.

சோழன்கிள்ளிவளவன் - (1) குராப்பள்ளியி லிறந்தவனாதலின் குராப்பள்ளித் துஞ்சியகிள்ளிவளவனெனவும்படுவான். குருவூரையழித்தவனும் கோவூர்க்கிழாராற் பாடப்பட்டவனும் இவனே. (2) குளமுற்ற மென்னுமூரிலே இறந்தசோழன். கோடை வீரம் கல்விகளாற் பெரும்பெயர்படைத்தவன். உழையூரிலிருந்தரசுபுரிந்தவன். ஆலத்தூர் கிழார், கோவூர்க்கிழார், மாறொக்கத்து நப்பசலையார் இடைக்காடனார் முதலிய புலவர் அநேகராற்பாடப்பட்டவன். (புறநானூறு)

சோழன்பெருந்திருமாவளவன் - இவன் குராப்பள்ளியிலே யிறந்தவன். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணானாராலுமு; மருந்து வன்றாமோதரனாராலும் பாடப்பட்டவன் (புறநானூறு)

சோழன்செங்கணான் - கோச்செங்கடசோழநாயனார் காண்க.

சோழன்நல்லூருத்திரன் - இவன் புலமைமிக்கோன் என்பது புறநானூற்றினுள்வரும் அவன் பாடலாலினிது புலப்படும்.

சோழன்மாவளத்தான் - இவன் சோழன் நலங்கிள்ளிதம்பி. தாமப்பல்கண்ணனாராற் பாடப்பட்டவன் (புறநானூறு)

சோழன்நலங்கிள்ளி - சோழன் மாவளத்தான் தமையன். பாடும்புலமையுடையவன். போரிற்பேரூக்கமும் அவாவுமுடையவன். பாண்டி நாட்டை வென்று புலிக்கொடிநாட்டியவன். பின்னர் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரால் அறநெறியில் நிறுத்தப்பட்டிருந்து புண்ணியங்களியற்றி வந்தவன். உறையூர் முதுகண்ணன் சாத்தனார். கோவூர்க்கிழார், ஆத்தூர் கிழாரென்னு மூவராலும் பாடப்பட்டவன்.

சோழன்நெய்தலங்கான லிளஞ்சேட்சென்னி - ஊன்பொதிபசுங்குடையாரென்பவராற் பாடப்பட்டவன். இளவரசாய் நெய்தலங்கான லென்னுமூரிலிருந்து உரியகாலத்தில் அரசு கொண்டவனாதலின் அப்பெயர் பெற்றான்.

சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி - தித்தன் என்னுஞ் சோழன்மகன். தந்தையைப் பகைத்து நாடிழந்து நல்குரவாற் புல்லரிசியுமுண்டு சிலகாலமிருந்து பின்னர் நாடுகொண்டரசுபுரிந்தவன் (புறநானூறு)

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி - சேரமான் அந்துவஞ்சேரலிரும் பொறைக்குப்பகைவன். இவனைப் பாடியபுலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். (புறநானூறு)

சோழன் வேற்பஃறடக்கைப்பெருநற்கிள்ளி - சேரமான் குடக்கோநெடுஞ்சேரலாதனாற் போரிற் கொல்லப்பட்டவன். பரணராலும் கழாத்தலையராலும் பாமாலைசூட்டப்பட்வன். (புறநானூறு)

சோழநாட்டுப் பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தன் - வேளாளில் உழுவித்துண் போன். அரசர் பெண் கொள்ளுங்குடியிலுள்ளேரன் மதுரை நக்கீரனாற் பாடப்பட்டவன். பின்னர் நச்சினார்க்கினியராலும் பொருளதிகாரவுரையினுள்ளே எடுத்துக்கூறப்பட்டவன்.

சோழியவேனாதி திருக்குட்டுவன் - மிக்ககொடையாளன். ஏறிச்சிலூர்மாடலன் மதுரைக்குமரனாராற் பாடப்பட்டவன்.

சோனகம் - ஆரியதேசத்துக்குமேற்கின்கணுள்ள ஒரு தேசம்.

சோனை - வச்சிரநாட்டைச் சார்ந்த ஓராறு.

சௌகந்திகம் - சௌகந்திக புஷ்பங்கள் நிறைந்துள்ளதாகிய ஒரு தாடகம். இது குபெரன் நந்தனவனத்திலுள்ளது. இத்தடாகத்திலிருந்தொரு சௌகந்திக புஷ்பம் வாயுவினாற் பறித்து வீசப்பட்டுத் துரொபதை முன்னே வந்து வீழ்ந்தது. அதனைக் கண்ணுற்ற துரௌபதை அப்புஷ்பமுள்ள தடாகத்தைத் தேடிச் சென்று தனக்கொருபுஷ்பங் கொண்டுவந்து தரல் வேண்டுமென்று வீமனை வேண்ட வீமன் அவ்வாறே சென்று எடுத்து வந்து கொடுத்தான். வீமன் தனது தமையன் முறையிலுள்ள அநுமனைக்கண்டது அங்குச் சென்ற வழியிலேயேயாம்.

சௌநகன் - (ரி) சுநகன் புத்திரன். கிருத்சினமதன் பௌத்திரன். இம்மகாத்துமா தபோநியதியோடும் பிறந்தவர்.

சௌநந்தை - முதாவதி.

சௌந்தரநாயகி - திருப்பெரும்புலியூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்.

சௌந்தரநாயகியம்மை - திருக்கோளம்பத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

சௌந்தரபாண்டியன் - இவர் தடாதகைப்பிராட்டிநாயகனார்.

சௌந்தரேசர் - திரநாரையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர்.

சௌபரி - (1) மாந்தாதா மருமகனாகிய ஒரிருஷி. இவர் யமுனாநதிஜலத்தினுள்ளே பன்னிரண்டு வருஷந் தவங்கிடந்து பின்னர் மாந்தாதாவிடஞ்சென்று தமக்கொருகன்னிகையைத் தருமாறு வேண்டமாந்தாதா தனது புத்திரிகளுள் யார் உம்மை மணம்புரிதற்கு விரும்புகின்றாளோ அவளை மணத்திற் கொள்ளுவீராகவென்று அவரைக்கன்னிகாமாடத்து க்கனுப்பத் தமது தபோபலத்தினால் மன்மதனைப் போல நல்லவடிவங்கொண்டங்கே செல்ல, அங்கிருந்த கன்னிகைகள் எல்லோரும் தனித்தனி தனக்கென்று மோகிக்க அவரையெல்லாம் மணம் புரிந்துகொண்டு சென்று நெடுங்காலம் காமவின் பஞ்சுகித்திருந்தவர். (2) (ரி) வேதமித்திரன் சீஷன். சாகல்லியன் தந்தை.

சௌம்பகம் - சாளுவன் விமானம். சிவன் ஆஞ்சையால் மயன் இயற்றிக்கொடுத்தவிரதம்.

சௌரசேனி - சூரசேனதேசத்துப் பிரகிருதபாஷை.

சௌரபேயி - ஓரப்சரப்பெண்.

சௌரம் - ஒரு புராணம்.

சௌராஷ்டிரம் - சூராட்டு என்னும் நகரத்தையுடையதேசம்.

சௌரி - கிருஷ்ணன், சூரன்மகனாகிய வசுதேவன் புத்திரனாதலின் கிருஷணனுக்கு இப்பெயர் வந்தது.

சௌவீரம் - சிபி புத்திரனாகிய சுவீரனால் நிருமிக்கப்பட்டதாகிய ஒரு பட்டணம்

சௌன்னம் - பலி புத்திரனாகிய சுன்ஹனால் நிரூபிக்கப்பட்ட நகரம்.

ஜகநாதபாண்டியன் - அரிமர்த்தன பாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன்.

ஜகநாதம் - ஒட்டர தேசத்திலுள்ள விஷ்ணுஸ்தலம். கிருஷ்ணன் நிரியாணம் பெற்ற பின்னர்த் தேகம்தகனமாகும் போது சமுத்திரம் பொங்கித் துவாரகைவரையிற் சென்று மூடியது. அப்போது காஷ்டத்துமீது கிடந்த எரிந்து குறைந்த தேகத்தைச் சமுத்திரம் வாரிக்கொண்டு போய் ஜகநாதத்திற் சேர்ந்தது. அத் தேசத்தைக் கிருஷ்ண தேகமென்றுணர்ந்த சில பக்தர் அதனை ஒரு மரத்திற் சபுடீகரணம்பண்ணிப் பின்னர் அம்மரத்தை விக்கிரகமாக்கி அங்கே ஸ்தாபித்தார்கள்.

ஜகராசசேகரன் - ஈழநாட்டிலரசு செய்திருந்த சோழகுலத் தரசன். இவன் காலம் சாலிவாகனசகம் ஆயிரத்து நானூற்றைம்பது. (செகராசசேகரன் காண்க)

ஜடபரதர் - தாகந்தணித்துகச்கரையேறும்போது சிங்கநாதங் கேட்டஞ்சிக் கருவுயிர்த்த மானினது கன்று கங்கையிலெ மிதந்துபோக, அதனைக்கருணையா லெடுத்துவளர்த்து இறக்கும் போது கண்ணெதிரே நின்று நைந்துரகிய அக்கன்றின் மேல்வைத்த கருத்தோடு உயிர்விட்டமையால் மானாகப்பிறந்து அச்சரீரம் நீங்கியபின்னர் அந்தணனாகப்பிறந்து எல்லாமுணர்;ந்;து மொன்று முணராத ஜடன்போல நடித்திருந்த பரதராஜா. (ஜடன் - மூடன்) அரசும்சுற்றமுமொருங்கே துறந்து வனத்திலே தவஞ்செய்திருந்த பரதராஜாவுக்கு மிளவும் பிறவிவந்தது. அம்மான் கன்றின் மீது வைத்தபற்றோடிறந்தமையின் பயனேயாம். “இறக்கும்பொழுது ஈசன்கழல்மேலவைத்தகருத்ததோடிறக்க” வென்றெழுந்த விதியும் நற்கதியுய்க்குமபாயமானம். ஜட பரதரைச் சவ்வீரராஜரவினது சேவகர்கள் பற்றிப் போய்க்காளிக்குப்பலியாகச் சந்நிதியில் நிறுத்திவைத்தசமயத்தில், காளி வெளிப்பட்டு அச்சேவகரை யெல்லாம் கொன்றொழித்துப் பரதரைக் காத்தருளினள். பின்னொருநாளில் ரகூகணன் என்னும் அச்சவ்வீரராஜாவினது சேவர்கள் பரதரைப்பற்றிப்போய் அரசன் சிவிகையைச் சுமக்குமாறு செய்தார்கள். அரசன் அவருடைய குணங்களையுணர்ந்து அவர் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்துத் தான் செய்த அபராதத்தைப் பொறுத்துக் கொண்டு தனக்கு ஞானோபதேசம் பண்ணியருளுமாறிரந்து அவரைக் குருவாகக் கொண்டான்.

ஜடரபர்வதங்கள் - நீல நிஷத பர்வதங்களுக்கு நடுவேயுள்ள மலைகள்.

ஜடாசுரன் - (ரா) கந்தமாதனத்திலே அனுமனாற் கொல்லப்பட்டவன்.

ஜடாயு - அநூரன் இரண்டாவது புத்திரன். தாய் சியேனி. குசியபன் பௌத்திரன். சம்பாதி தம்பி. பஞ்சவடியில் ராவணன் சீதாபகரணம் பண்ணிப் போகும் போது அவனைத் தடுத்துயத்தஞ்செயது அவன் கைவாளால் மாண்டவன். ஜடாயுபடிpரூபமுடையவன்.

ஜடிலன் - கோதமன்வமிசஸ்தன்.

ஜடிலை - ஜடிலன்மகள். இவள் எழுவருக்கு மனைவி.

ஜடர் - ஜடரபர்வத வாசிகள்

ஜந்தன் - (1) சோமகன்மகன். (2) விருஷதன் தமையன்.

ஜபேசுவரம் - நைமிசாரணியத்திலுள்ள ஒரு Nடித்திரம்.

ஜமதக்கினி - ரிசிகனுக்குச் சத்தியவதியிடத்துப்பிறந்த புத்திரர். இவர் மகாவிருஷி. அரிய தவங்களைச்செய்து நான்கு வேதங்களையும் பெற்றவர். கந்தருவராசனாகிய சித்திரரதன் தனது பாரியோடு உல்லாசமாக வனத்தில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் இம்மகாவிருஷி பாரி ரேணுகை கண்டு அதிசயித்து மனசைப் போக்கி அச்சிந்தையோடு திரும்பி வந்தபோது, அவர் அவள் வேற்றுமையையுணர்ந்து இவள் பதிவிரதாதன்மங் குன்றினாளெனச்சினந்து தன்மக்களை நோக்கி, இவளைக் கொல்லுங்களென் றொருவர் பின்னொருவராக ஏவினர். மற்றெல்லோரும் மறுத்துநிற்க, பரசுராமர் உடனே முற்பட்டு வாளால் தாய் தலையைச்சோதித்துவிட்டுத்தந்தையை நோக்கி, ஆரியா, உன் ஏவலை மறாதுசெய்தேன் என் வேண்டுமென, ஜமதக்கினி சந்தோஷித்து அவனைப்பார்த்து, உன் வேண்டுகோள் யாதென்ன. தாயை எழுப்பித்தருகவென்றான், உடனே அவரும் ரேணுகையை எழுப்பிவிட்டார். புத்திரர் உறுமதி, உற்சாகன். விசுவாசன், பரசுராமன் என நால்வர்.

ஜம்பன் தாரகாயுத்தத்திலே இந்திரன்
ஜம்பாசுரன் கொன்ற அசுரன்

ஜம்பாரி - இந்திரன், ஜம்பாசுரனைக் கொன்றகாரணம்பற்றி இப்பெயர் அவற்குண்டாயது.

ஜம்புகுமாரன் - (ரா) சூர்ப்பநகைபுத்திரன். வித்தியுத்ஜிஹவன் மகன்.

ஜம்புகேசுவரம் - காவிரி தீரத்திலுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது அப்புலிங்க ஸ்தலம். இங்குள்ள சிவாலயம் கோச்செங்கட்சோழனெடுத்தது.

ஜம்புமாலி - பிரஹஸ்தன் மகன். ருhவண சேனாபதிகளு ளொருவன், ஹநுமனால் அசோகவனபங்ககாலத்தில் கொல்லப்பட்டவன்.

ஜயசேனன் (1) கு. சார்வபௌமன்
ஜயத்சேனன் மகன். (2) அஞ்ஞாதவாசத்தில் நகுலன்புனைந்து கொண்டபெயர்.

ஜயத்திரதன் - (1) எட்டாம் பிருகத்திரதன்மகன். இவன்பாரி சூதவமிசத்தவள். இவள் வயிற்றிற்பிறந்தமையால் விஜயனும், அவன் வமிசத்தவரும் சூதரெனப்படுவர். (2) திருதராட்டிரன் மருகன். (3) (அ) திதிடி{மகன். (4) (பா) பிருகத்காயன்மகன். விசுவசித்துதந்தை.

ஜயத்துவசன் - (ய) கார்த்தவீரியார்ச்சுனன் மூத்தமகன். தாலசங்கன் தந்தை.



ஜயபலன் அஞ்ஞாதவாச காலத்
ஜயத்பலன் திலே சகதேவன் கொண்ட பெயர்.

ஜயந்தபுரம் - கௌதமன் ஆச்சிரமத்துக்கடுத்த தொருநகரம். இது நிமி நிருமித்தது.

ஜயந்தன் - (2) இந்திர குமாரன். இவனும் குபெரன்மகனாகிய நளகூபரனும் மன்மதனும் அழகிற்றலைமைபூண்டோ ரெனப்படுவர். (2) தருமனுக்கு மருத்துவதியிடத்துப் பிறந்த இரண்டாம் புத்திரன். (3)விஷ்ணு பரிசாரகருளொருவன். (4) விஸ்வாமித்திரன் மகன். (5) அஞ்ஞாதவாசத்தில் வீமன் கொண்ட பெயர்.

ஜயர்கள் - கற்பாதியிற் சிருஷ்டிக்கப்பட்ட பன்னிருதேவரிஷிகள்.

ஜயவிஜயர் - வைகுண்ட துவாரபாலகர். ஓரு சமயம் சனக சனந்தனர் சிறார் உருவந்தாங்கித் துவாரபாலகர் அனுமதியின்றி வைகுண்டத்திற் பிரவேசித்தனர். அதுகண்ட துவாரபாலகர் அவர்களை இராடிசராம்படி சபிக்க, அவர்கள் முதலில் இரணியன் இராணியாடின் எனவும், இரண்டாம் முறை இராவண கும்பகர்ணர்களாகவும், மூன்றாம்முறை சிசுபாலன் தந்தவக்திரனாகவும் பிறந்து விஷ்ணு அவதாரங்களால் மடிந்து பின்வைகுண்டம் பெற்றனர்.

ஜயன் - (1) (ய) சாத்தகி மகன். (2) ய, வசுதேவன் தம்பி. அநகன் மகன். (3) மி. சுருதன்மகன். (4) தருமன் அஞ்ஞாதவாசத்திலே தரித்துக்கொண்ட பெயர்.

ஜரற்காரி - கத்துருவை புத்திரி. வாசுகி தங்கை.

ஜரற்காரன் - யாயாவர வமிசத்தில் ஜனித்த ஒருபிரமவிருஷி. இவர்பாரி வாசுகி தங்கையாகிய ஜரற்காரி. இவர் பாரிமடிமீது படுத்துறங்கும் போது சந்தியாவந்தன காலமாயினதுகண்டு அவள் எழுப்ப அவரெழுந்து கோபித்துச் சபித்து அவளைப்பிரிந்தனர்.

ஜராசந்தன் - உபரிசரவசு மகனாகியபிருகத்திரன்புத்திரன். இவன் புத்திரன் சகதேவன். நகரம் கிரிவிரசம்.

பிருகத்திரதன் புத்திரப்பேறு வேண்டித் தவஞ்செய்யக்கருதித் தன் ராச்சியத்தை மந்திரியிடத் தொப்பித்துவனஞ் சென்று சண்டகௌசிகமுனியை ஆசரித்துத் தவஞ்செய்திருந்த போது, முனிவர் இரங்கி ஒரு மாங்கனியை அவனுக்குக் கொடுத்து இதைக்கொடுண்டுபோ யுன் பாரிக்குக் கொடு@ புத்திரனுண்டாமென்று அவனையனுப்பினர். அவன் கொண்டுபொய்ப் பாரிகையிற் கொடுக்க, அவள் அதை இருகூறாக்கி யொன்றைத் தானருந்தி மற்றதைச் சககளத்தி கையிற் கொடுத்தாள். அதனால் இருவரும் கருப்பமுடையராய்ப் பாதிரூபமுடைய இரு பிள்ளைகளைப் பெற்றார்கள். அச்சமையத்தில் ஜரையென்னும் ராடிசிமாயஞ் செய்து அப்பிள்ளைகளைக் கவர்ந்து சென்று போய் வைக்க இரண்டும் ஏகரூபமாயின. அது கண்டு அவள்திசயித்துப் பிருகத்திரதனிடங் கொண்டு சென்று கொடுத்தாள். ஜராசந்தி செய்தமையால் ஜராசந்தனென்றும் பெயர்பெற்றான். சந்தி என்பது கூட்டக்கூடுதல். இச்சராசந்தன் தன் மருகன் கஞ்சனைக் கிருஷ்ணன் கொன்ற கோபத்தாற் கிருஷ்ணனுடைய மதுராபுரியிற் பதினெட்டுமறை படையேற்றிடக் கிருஷ்ணனைச் சயித்தவன். தருமர் ராசசூயஞ் செய்தபோது இவன் வீமனாற் கொல்லப்பட்டவன்.

ஜரிதை - மந்தபாலன் பாரி. இவள் சாரங்கஜாதிப்பெண்.

ஜரை - ஜராராடிசி. இவளே இருகூறாய்ப்பிறந்துகிடந்த சிசுக்களை ஒருகூறாக்கி அச்சிசுவுக்கு ஜராசந்தன் என்னும் பெயருக்குக் காரணமாகவிருந்தவள்.

ஜர்ச்சரன் - இரணியாடின்மகன்.

ஜலந்தரன் - சிவனாற் சங்கரிக்கப்பட்ட ஓரசுரன்.

ஜலபதை - ஓரப்சரஸ்தரி.

ஜனகன் - (1) மிதிலாபுரியரசன். ஹரஸ்வரரோமன் புத்திரன். சீதாதேவி தந்தை. இவன் மகாஞானி. இவனுக்குத் தர்மத்துவஜன் என்பது சிறப்புப்பெயர். ஜனகன் தனது அரமனை அக்கினிவாய்ப்பட்டழியவும் அதன் பொருட்டுக்கவலாது அவ்வரமனைப் புறத்திலே காயவைத்த கௌபீனத்துக்காக க்கவன்றோடிய சுக முனிவரைப் பார்த்து உமது துறவுநன்றாயிருக்கின்றதெனப் பரிசித்து அவர்க்கு அநுபவத்தில் ஜயமறுத்தவன்.

ஜனஸ்தானம் - தண்டகாரணியத்திலே, பஞ்சவடிக்குச் சமீபத்திலுள்ள ஓரிடம். ராவணன் மூலபலசேனையில் ஒரு தொகுதிக்கு இதுஸ்தானம்.

ஜனமேஜன் - (1) (அ) புரஞ்சயன் புத்திரன். (2) பூருவன் புத்திரன். (3) (கு) பரிடிpத்துபுத்திரன். இவன் உதங்கன் உபதேசத்தால் சர்ப்பாயகஞ் செய்தவன்.

ஜனார்த்தனன் - விஷ்ணு.

ஜன்னு (1) சுகோத்திரன் மகன். இவர்
ஜஹ்நு மகாரிஷி. பகீரதப்பிரயத்தனத்தால் கங்கை பெருகி வந்து இவர் தமது யாகசாலையை யழித்தபோது அதைமுற்றாய்ப்பானஞ் செய்துவிட்டவர். அப்பால் பகீரதன் வேண்டக் காது வழியே விடுத்தவர். அதுபற்றிக் கங்கைக்குச் ஜானவியென்னும் பெயர்வந்தது. இவர் மகன் சுமந்திரன். (2) குருபுத்திரருள் மூன்றாம் புத்திரன்.

ஜாஜிலி - (ரி) இவ்விருஷி தபோநிஷ்டையிலிருக்கும் போது சடையில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வசித்தனவாம். (துலாதரன் காண்க).

ஜாதகர்ணி - இவன் சாகல்லியனம் சீஷன்.

ஜாதவேதன் - ஆகவனியாதிரூபனாகிய அக்கினி. (புரூரவன் காண்க)

ஜாதி - இதன் வரலாறு டித்திரியர் என்பதனுட் கூறப்பட்டுள்ளது. வேதத்திலே பிரம டித்திரியர் என்பதனுட் கூறப்பட்டுள்ளது. வேதத்திலே பிரம டித்திரியவைசியசூத்திரர் என நான்கு ஜாதியுமே கூறப்படுதலின் பூர்வத்தில் அவற்றின் மேற் ஜாதிபேதம் வேறில்லை யென்பது நன்றாகத் துணியப்படும். அந் நான்கு பேதமும் உலகியலுக்கு எத்தேசத்திலும் இன்றியமையாதனவாதலின் மகாரிஷிகளால் அவை வகுக்கப்படுவனவாயின. ஓரு தேசத்துமாந்தர் தாமொருமையுடையராய் உலகியல் நடாத்திச் சிறக்க வேண்டுவராயின், தமக்கு ஞானங்களையெடுத்துரைத்து நல்வழிப்படுத்துந் தொழிற்குரியராக ஒருபாலாரை நியோகித்துக் கொள்ளுதலும். பிறதேசத்தாராலும் கள்வராலும் தீயவராலும் தமக்குத்துன்பம் வராவண்ணம் காத்துக்கொள்ளுதலும், உயிர்வாழ்க்கைக்கு வேண்டப்படும் பலவகைப் பண்டங்களையும் பலவிடயங்களினின்றும் திரட்டிவைத்து வேண்டுவார்க்குக் கொடுத்துப் பண்டமாற்றுந் தொழிற்குரியராக ஒருபாலரை நியோகித்தலும், பயிர்வளர்த்தல் முதலிய மற்றைத்தொழிற் கெல்லாமுரியராகமற்றொரு பாலரை நியோகித்தலும் அத்தியாவசியகமாம். இந்நான்கு பாகுபாடும் ஒருவராற் செய்யப்படாது இயல்பாகவே யுளவாகுமாதலால் மகாரிஷிகள் அப்பாகுபாட்டின் படிக்கிரமத்தை நோக்கிப் பிரமாவினது சிரசிலே பிராமணரும், புஜத்திலே டித்திரியரும், தொடையிலே வைசியரும், பாதத்திலே சூத்திரரும் தோன்றினரென்றுபசரித் துரைத்தனர் போலும். அது, பிராமணர் ஞானத்துக்குரியனவெல்லாஞ் செய்தற்குரியராதலின் அவரை ஞானத்துக்கிருப்பிடமாகிய சிரசிற்றோன்றினாரெனவும், டித்திரியர் புஜபலங்கொண்டு காத்தற்குரியராதலின் அவரைப் பலத்துக் கிருப்பிடமாகிய புஜத்தில் றோன்றினோரெனவும், வைசியர் பலவிடத்துப் பொருளை யுந்திரட்டி வைத்துப் பண்டமாற்றுக்குரியராதலின் அவரைப் பலவிடயங்களுக்கும் மாந்;தரைக் கொண்டு செல்லுங்கருவியாகிய தொடையிற்றோன்றினோரெனவும், இவர்மூவரையும் அவர்க்கு வேண்டும் உபகாரம்புரிந்து தாங்குதற்குரியராகிய சூத்திரரை உடல்முழுவதையுந் தாங்குவதாகிய பாதத்திற்றோன்றினோரெனவுங் கூறிய படியாம். பிரமா, “உலகவிருத்தியின் பொருட்டுத் தனது முகம், புஜம், தொடை, கால் என்னுமிவற்றினின்றும் பிரம டித்திரிய வைசியசூத்திரர் என்னுமிவர்களைக் கிரமமாகத் தோற்றுவித்தார்.” என்பது மனுஸ்மிருதி வாக்கியம்.

சுர்மன் என்பது பிராமணனுக்கும் வர்மன் என்பது டித்திரியனுக்கும், பூதியும் தத்தனும் வைசியனுக்கும். தாசன் என்பது சூத்திரனுக்கும் ஜாதிப்பெயர்கள். விஷ்ணுசர்மன். இரணியவர்மன், பவபூதி தனதத்தன், ராமதாசன் எனத் தத்தமது ஜாதிப்பெயரையிட்டுக் கொள்ளுதல் வேண்டுமென்பது மனுஸ்மிருதி விதி. இந்நால்வருள்ளே ஒழுக்கத்தினின்றிழுக்கிய ஆணும் பெண்ணும் தம்மிற்கூடிப் பெற்ற புத்திரரும் அவ்வழிவந்தோரும் பஞ்சமஜாதியெனப்படுவர். அவருள்ளும் கொடிய பாதகங்களைப் புரிவோர் சண்டாளரெனப்படுவர். இவையே பூர்வஜாதிக்கிரமம்.

பூர்வத்திலே மேல் வருணத்தோர் கீழ்வருணத்தோரிடத்துப் பெண்கொள்ளும் வழக்கமுடையராதலால் நான்குவருணத்தோரும் போசனத்திலும் சமபந்தியுடையர்களாகவே யிருந்தார்கள். முனுஸ்மிருதியிலே சற்சூத்திரரே இவ்வகைச் சம்பந்தமுடையவர்கள். இவவாசாராம் பாண்டவர்கள் காலம்வரையும் நடைபெற்று வந்தமைக்கு நூற்சான்றுளது.

கலியுகம் பிறந்தபின்னர் வருணாச்சமிரமதருமங்களெல்லாம் தலைதடுமாறத் தலைப்பட்டன. அவ்வளவிலே டித்திரியரும் வலிதளர்ந்து நிலைகெட்டனர். அநுலோமப் பிரதிலோமர்கள் வலியினாலே மேற்பட்டார்கள். அதனால் அநேக குலங்களுங் குடிகளுங் தோன்றுவவாயின.
இக்காலத்திலே பிராமணர்கள் உத்தரத்திலும், தடிpணத்திலும் அநேக குலங்களாகப் பிரிந்திருக்கின்றார்கள். தடிpணத்திலே பிராமணருள் வடமன் பிருகசரணம், சோழியன் முதலிய அநேக குலங்களுள. டித்திரியர் அருகிவிட்டனர். வைசியர் சுருங்கினா சூத்திரகுலங்களுக்களவில்லை.

சூத்திரருள்ளே வேளாளர் தலையியினர். அவருள்ளே முதலிகள் தலையாயினார். அம்முதலிகளும் கீழ்நாட்டார் மேனாட்டாரென இருவகையர். இவர்கள் பரம்பரைச்சைவர். (சைவர் என்பதற்கு மாமிசம் புசியாதவர் என்பது ஈண்டுக்கருத்தாகக்கொள்க) தொண்டைநாட்டிலே இக்காலத்திலே ஒருவகை வேளாண்முதலிகளுளர். அவர்கள் மாமிச போசனமுடையோர். சைவ வேளாண்முதலிகளுக்கு அடுத்தவரிசையினுள்ளோரெனச் சொல்லப்படுவோர் சைவ வேளாண்செட்டிகள். அவர்களும் சோழபுரத்தார்சித்தக்காட்டார் பஞ்சுக்காரர் முதலாகப் பலதிறப்படுவர். இவர்க்கடுத்தபடியினுள்ளோர் சைவவேளாளராகிய கார்காத்தார். இவர்கள் ஒரு காலத்தில் இம்முத்திறத்தாருள் முதன்மை பெற்றிருந்தவர்களென்பது சில நூல்களாற்றுணியப்படும். அது நிற்க@ அடுத்த வரிசையிலுள்ளோர் சைவச்சோழியவேளாளர். இச் சைவரெல்லோரும் போசனசமபந்திக்கு அருகர். பெண் கொள்;ளல் கொடுத்தல்களுக்குரியரல்லர்.

இவர்க்கடுத்தபடியிலுள்ளோர் மாமிசபோசனமுடைய வேளாளர். அவரும் சோழியவேளாளர் துளுவவேளாளர் கொடிக்கால் வேளாளர் எனப் பலவகைப்படுவர். இவரிற்றுழ்ந்தோர் அகம்படியர். அவரும் பலதிறப்படுவர். அவரிற்றாழ்ந்தோர்கள்ளர். அவரிற்றாழ்;ந்தோர் இடையர். இடையரை வேளாளர்க்கடுத்தவரிசையில் வைப்பாருமுளர். இவர்க்கடுத்தபடியிலுள்ளோர் கவறைகள் கம்மவர்கள். இக்கம்மவர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து வந்து தமிழ்நாட்டிலே குடிகொண்டவர்கள். இவர்கள் தமது நாட்டிலே வேளாண்பதமுடையவர்கள். தெலுங்குநாட்டினின்றும் கரிகாற்சோழன் காலத்திலே பிராமணர் முதல் அநேகஜாதிகள் சோழபாண்டி தொண்டைநாடுகளிலே குடிகொண்டார்கள். அவர்களுட் சிலர் ஈழநாட்டிலும் சென்று குடிகொண்டார்கள். தென்னாட்டிலுள்ள கவறைகளுள்ளே பலிசவர்களே உயர்ந்தோர். இக்கவறைகளுட்பெரும்பாலார் சேனைத்தலைவராகவும் சேனாவீரராகவும் அரசசேவையிலிருந்தவர்கள். அதுபற்றியே அவர்கள் தமிழ்நாட்டிலே நாயகரென்று வழங்கப்படுவாராயினர்கள். இவர்கள் முன்னர்நாளிNலு ராஜாதிகாரம் பூண்டிருந்து பெருமையுற்றிருந்தவர்கள் பரம்பரையில் வந்தோர்கள்.

தெலுங்கருட் கோபிகர் சிலர் ஈழநாட்டிலே சென்று குடிகொண்டார்கள். அவர்க்குப் பின்னர்க்கம்மவார் என்னுங் கவறைகள் சிலர் தொண்டைமானால் ஈழதேசத்தரசனுக்கு ஏவற் பரிசங்களாகவும் உப்பமைப்பவர்களாகவு மனுப்பப்பட்டார்கள். அவர்களெல்லோரும் விஷ்ணுசமயிகள். அப்பரிசனங்களுட் சிலர் சிவிகாகஞ்சுகிகளாக அரசனுக்குப் பணிசெய்து வந்தமையின் சிவிகையர் என்னும் பெயரால் வழங்கப்படுவாராயினர். சிவிகையர் என்பது பின்னர்நாளிலே சிவியார் என மருவிற்று. அது நிற்க:

இத்தெலுங்குநாட்டுச் சூத்திரருக்கு அடுத்தபடியிலுள்ளோர் குயவர். அவர்க்கு அடுத்தபடியிலுள்ளோh பாணா. மேளகாரா இவ்வரிசையிலுள்ளவர். அவர்க்கு அடுத்த வரிசையிலுள்ளோர் பரதவர், செம்படகர், வலையர், திமிலர், கரையார் முதலியோர் இவ்வகுப்பிலடங்குவர். இவர்க்குப்பின்னுள்ளோர் சாலயர். இவர்க்குப்பின்னவர் எண்ணெய்வாணிகர். இவர்க்குப்பின்னவர் வண்ணார். இவர்க்குப்பின்னவர் புலையர். இவர்க்குப்பின்னவர் தோல்வினைமாக்கள். “சாக்கிலயர்’’

இவ்வாரேயன்றித் தொம்பர் குறவர் முதலிய பஞ்சமகுலத்துமாக்களும் அநேகருளர். விரிப்பிற்பெருகும்.

கோமுட்டிகளும் பேரிச்செட்டிகளும் தம்மைப் பூர்வவைசியப்ரம்பரையாரெனக் கூறுவார்கள.; இன்னும். மேலே கூறப்படாத அநேகஜாதியாருளர். கும்மாளரெவ்வரிசையிலுள்ளவரென்பது தற்காலத்தவரால் நன்கு நிச்சயிக்கப்படவில்லை. முயன் வமிசத்தவராதலின் நான்குவருணங்களுட் சோர்க்கப்பட்டிலர் போலும், மயன் ரோமகபுரியிலிருந்து ஆரியதேசத்தில் வந்து வாழ்ந்தவன் என்பது பண்டிதர்கள் கொள்கை. முனுஸ்மிருதி வேறுபடக் கூறுகின்றது.

(இச்சாதிக்கிரமங் கூறுமாற்றால் இவர் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோரென்பது எமதும்தமன்று)

ஜாபாலி - (ரி) ஒரு நையாயிகன். ருhமர்காத்தவன். (2) (ரி) ஜாதகர்ணி சீஷன்.

ஜாமதக்கினி - பரசுராமன்.

ஜாம்பவந்தன் - (1) சுக்கிரீவன் மந்திரியாகிய கரடியரசன். (2) சியாமந்தகமணிகவருமாறு கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன்.

ஜாம்பவதி - ஜாம்வந்தன் புத்திரி. கிருஷ்ணன் அஷ்ட பாரிகளுளொருத்தி. இவள் மகன் சாம்பன்.

ஜியாமகன் - (ய) ரிசிகன் மகன். விதர்ப்பன்தந்தை.

ஜியேஷ்டதேவி - வருணன் பாரிகளுள் ஒருத்தி. இவள் தாதுருவிதாதா என்பவர்களோடு பிறந்த பிரமமானசபுத்திரி. இவள் சமுத்திரமதனத்துக்கண் பிறந்தவளென்றும் சொல்லுவர். இவளுக்குவாகனம் கழுதை. கோடி காகத்துவசம்.

ஜியோதிஷம் - வேதத்திலே விதிக்கப்பட்ட கருமங்களைச் செய்தற்குரிய காலவிசேஷங்களை அறிவிக்குஞ் சாஸ்திரம். அது வேதாங்கங்கள் ஆறினுளொன்று. வேதபுருஷனுக்கு நேத்திரமாயுள்ளது. அது கணிதஸ்கந்தம், ஜாதகஸ்கந்தமென இரு வகைப்படும். அவற்றிற்கு நூல்செய்தோர் பிரமா, சூரியன், பிருகஸ்பதி, சுக்கிரன், வியாசர், ரோமசர், நாரதர், பராசுரர், வாராஹமிஹிரர் முதலியோர். சோதிடசாஸ்திரம் முதன்முதல் ஆரியராலே செய்யப்பட்டதென்பதும். முற்றைத் தேசத்தார்கள் சோதிடசாஸ்திரம் ஆரியரிடத்திலேயே பெற்றார்களென்பதும், ஐயாயிரம் வருஷங்களுக்குமுன்னே ஆரியராற் செய்யப்பட்ட கணித சித்தாந்தம் இன்றுமுளதென்பதும், அக்காலத்துள்ள ஆரியர் கிரகணங்களையும் சூரிய சந்திர குரு சனி சுக்கிராதி கிரகசாரங்களையும் சூரியனுடைய அயனசலனத்தையும், நிச்சயித்து முன்னர் அறிவித்துவந்தார்களென்பதும் “காசினி” “போயிலி” “பிளேபயர்” முதலிய ஐரோப்பிய சோதிடபண்டிதர்கள் கருத்தாகுமாயின் சோதிடத்தில் ஆரியரே முதன்மையும் பழைமையு முடையோரென்பதற்கு வேறு சான்று வேண்டா. (ஊயளளini - டீயடைநல - Pடயலகயசை)

இன்னும் இலங்கை மேகலாரேகையி லிருந்தகாலத்திலே சோதிடசாஸ்திரம் ஆரியரால் அபிவிருத்தி பண்ணப்பட்ட தென்பது சூரியசித்தாந்தத்தாற் றுணியப்படும். இலங்கை அவ்விரேகையி லிருந்தகாலம் பன்னீராயிரம் வருஷங்களுக்கு முன்னராதல் வேண்டும். இத்தொகையைக் குறைத்தல் ஐரோப்பியபண்டிதர்க்குமாகாது.

ஜியோதி;ஷ்மந்தன் - சுவாயம்பு மனுபுத்திரர்களுளொருவன். குசத்தீவுக்கரசன். இவனுக்குப் புத்திரரெழுவர்.

ஜீமூதவாகனன் - இவன் தன் தேசத்தைக் கருடனுக்குத் கொடுத்து ஒரு நாககுமாரனை இரடிpத்த ஒரு வித்தியாதரன்.

ஜீமூதன் - (ய) வியோமன் மகன்.

ஜீவலன் - ரிதுபர்ணன்சாரதி.

ஜைமினி - (ரி) வியாசர் சீஷர்களுள் ஓரிருஷி. இவர்க்கு வேதம்சாமம். மார்க்கண்டேயரையடைந்து தர்மபடிpகள் மூலமாக உபதேசம் பெற்றவர். இத்தர்மபடிpகள் கூறிய உபதேசமே மார்க்கண்டேயபுராணம்.

ஜைனர் - இவர்கள் வேதங்களை ஈசுவரப்புரொக்தமென்றும் அவ்வேதங்கள் கூறுவதெல்லாம் சத்தியமென்றும் நம்பாதவர்கள். இவர்கள் கைக்கொண்டனுஷ்டிக்கும் முக்கியசீலம் ஜீவகோடிகளுக்கு இமிசை செய்யலாகாதென்னும் கொல்லாவிரதம். இவர்கள் பகலிலன்றி இரவிலுண்ணாதவர்கள். திகம்பரரென்றும் சுவேததாம்பரரென்றும் இருபாற்படுவர். இவர்க்குக் கடவுள் அருகதேவர். இவர்கள் தற்காலம் மைசூர் காஞ்சீபுரம் சிற்றூர் மன்னார்கோயில் முதலியவிடங்களில் வசிக்கின்றார்கள்.

ஞானப்பிரகாசசுவாமிகள் - ஈழநாட்டிலே திருநெல்வேலியிலே வேளாளர்குலத்திலே பிறந்து உரியகாலத்திலே பிறந்து உரியகாலத்திலே கௌடதேசஞ் சென்று சம்ஸ்கிருதங்கற்று வல்லராகி மீண்டு திருவண்ணாமலையையடைந்து அங்கு மடாதிபதிபாற் காஷாயம் பெற்று அங்கிருந்து பௌஷ்கராகமத்துக்குச் சம்ஸ்கிருதத்திலே சிறந்த வியாக்கியானமும், சித்தாந்தசிகாமணி, பிரமாணதீபிகைமுதலிய அநேக நூல்களுஞ்செய்து பிரசித்தியுற்றவர். இவர் சித்தியாருக்குத் தமிழிலுமோருரை யியற்றினவர். இவர் தம்முரையிலே சிவசமவாதம் நாட்டுவர். முந்நூற்றிருபது வருஷங்களுக்கு முன்னுள்ளவர். இவர் பரம்பரையிலுள்ளோர் இன்றுமுளர்.

ஞானப்பூங்கோதை - திருக்காளத்தியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

ஞானவல்லியம்மை - திருச்சேறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

ஞானவாசிஷ்டம் - வசிட்டர் வடமொழியிற் செய்த யோகநூல். அதனைத் தமிழில் ஈராயிரத்தைம்பது கவிகளாற் செய்தவர். வீரை ஆளவந்தார்.

ஞானாமிர்தம் - எழுபது அகவற்பாக்களால் வாகீசராற்செய்யப்பட்ட ஒரு சைவசமயசாஸ்திரம். துர்க்கமுறையாகப் பதிபசுபாசம் உணர்த்துவது.

டிசிகன் - சித்திரசேனன். சுராசந்தனுக்கும் கஞ்சனுக்கும் சிநேகன். இவனும் கஞ்சனும் தவத்தினாற்சிவபெருமானிடத்துத் தமக்கு அயுதங்களால் மரணம் நேரிடாவகை வரம்பெற்றுச் சராசந்தனுக்குச் சகாயனாயிருந்து மற்றைய தேசங்களிலுள்ள அரசரையெல்லாம் துன்புறுத்திவருங்காலத்டதிற் கிருஷ்ணன் டிசிகனிடத்துச் சென்று கஞ்சனிறந்தானென்று கூறிப்போய்க் கஞ்சனிடத்தும்டிசிகனிறந்தானென்று சொற்றனர். அது கேட்டமாத்திரத்திற் பாரஸ்பரசிநேகாதிசயத்தால் இருவரும் உயிர் துறந்தார்கள்.

தக்கிணன் - தடிpணாமூர்த்தி. இவன் பாண்டியநாட்டுள்ள திருத்தங்காலிலிருந்த வார்த்திகன் என்னும் ஓரந்தணன் புதல்வன். (சிலப்)

தடிகன் - (1) வாசுகிதம்பி. குத்துரவைமகன். பரீடிpத்துவைப் பாம்புகடித்துக் கொல்ல அவன் மகன் ஜனமேஜயன் அவ்வைராக்கியத்தாற் சர்ப்பயாகஞ்செய்து சர்ப்பங்களையெல்லாம் நாசஞ் செய்தபோது ஆஸ்திகனாற் காக்கப்பட்டவன். (2) பரதன்மகன்.

தடின் - (1) (ய) வசுதேவன் தம்பியாகிய விருகன்மகன்.

தடிப்பிரஜாபதி நவப் பிரஜாபதகளு
தடின் ளொருவன். பிரமமானச
தக்கன் புத்திரருளொருவன். இவன் பாரி பிரசூதி. விஷ்ணுபராணப்பிரகாரம் இவனுக்குப் புத்திரிகள் இருபத்துநால்வர். அவருட் சிரத்தை, லடி{மி, திருதி, துஷ்டி, புஷ்டி, மேதை, பிரியை, புத்தி, லச்சை, வபு, சாந்தி, சித்தி, கீர்த்தி என்னும் பதின்மூவரும் தருமன் பாரிகள். தடிப்பிரஜாபதியைப் பிரமா தனது அங்குஷ்ட விரலினின்றும் தோற்றுவித்தானென்றும் சில புராணங்கூறும். அவன் அக்கினியை மணம்புரிந்து அசுவினியாதி நடித்திரங்கன்னிகைகளைப் பெற்றுச் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தவன். அவன் சிவனருளால் உமையைத் தன் புத்திரியாகப்பெற்று அவரைச் சிவனுக்கு விவாகஞ் செய்து கொடுத்தவன். அவன்யாகஞ்செய்த போது தன்மகள் உமையையுஞ் சிவனையும் யாகத்துக்குவரிக்காது மற்றுள்ளார் யாவரையும் வரித்தான். வரியாதிருந்தும் உமை அங்கே செல்ல அவரைத்தடின் மதியாததுகண்டு அவர் அவ்வியாகக்கினியில் வீழ்ந்திறந்தார். அஃதுணர்ந்து சிவன் அவ்விடஞ் சென்று தமது சடையில் ஒரு ரோமத்தை யெடுத்து யாகத்திலேறிய அதனின்றும் வீரபத்திரர் தோற்றியாகத்தை அழித்துத் தடின்தலையையுங் கொய்தார். பிரசூதிவேதவல்லி யெனவும்படுவாள். தடின் தலையிழந்த பின்னர்த் தேவர்கள் வேண்டுகோளாற் கொய்ததலைக்குப்பிரதியாக ஆட்டுத்தலை பெற்றெழுப்பப்பட்டான்.

தடிpணாமூர்த்தி - சிவன் சனகாதியர்க்குத் தத்துவோபதேசஞ்செய்யக் கொண்ட வடிவம்.

தடிpணை - ருசிப்பிரஜாபதிக்குச் சுவாயம்புமனுமகளாகிய ஆகூதியிடத்திற் பிறந்த கன்னிகை. இவள் தனது தமயன் யஞ்ஞனைமணம் புரிந்தவள்.

தசக்கிரீவன் ராவணன்.
தசகணடன்

தசரதன் - (1) (இடி{) கன்மாஷபாதன் பௌத்திரனாகிய மூலகன்புத்திரன். விருத்தசர்மன் தந்தை. (2) (இடி{) அஜமகாராஜன் புத்திரன். இவன்பாரியர் கௌசலை, சுமித்திரை, கைகேயி என மூவர். தசரதன் புத்திரனில்;;லாமையால் புத்திரகாமேஷ்டி யாகஞ்செய்து கௌசலையிடத்து ராமனையும், சுமித்திரையிடத்து லடி{மணனையும், சத்துரக்கனையும், கைகேயியிடத்துப் பரதனையும் பெற்றான். தசரதன் தன் புத்திரரிடத்து அதிப் பிரீதியுடையனாகையால் கைகேயிக்குப் பூர்வத்தில் நீ கேட்கும் வரங்களை எப்போது கேட்பினும் தருவேனென்று சொல்லியிருந்த வாக்கைக் கைகேயிநினைத்துத் தனக்கொருவரந்தரகவென்ன, தருவன்கேட்கவென்று தசரதன் கூற, கைகேயி, ராமனைக் காட்டுக்குப்போக்கிப் பரதனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்ய வேண்டுமென்ன, அவன் மறுக்கமாட்டாதுடன் பட்டுப் புத்திரசோகத்தாலிறந்தவன். (3) (ய) நவரதன்மகன். (4) (அ) ரோமபாதன்.

தசாரகன் - (ய) நிர்விருதிமகன்

தசாரணம் - காசிக்குத் தென்மேற்கிலுள்ளதேசம்.

தஞ்சைமாமணிக்கோயில் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.

தடாகைப்பிராட்டியா - உமாதேவியாரமிசமாக மலையத்துவஜ பாண்டியனுக்கு மகளாய்ப் பிறந்து மதுரையை யாண்டவர்.

தண்டகாரணியம் - இ டி{வாகுபுத்திரனாகிய தண்டன். தந்தைக்குமாறாயொழுகிவருநாளில் அவனைத் தந்தை விந்;தியகிரிப்பக்ககத்திற் போயிருக்குமாறு ஒட்டிவிட்டான். அவன் அங்கே மதுமந்தமென்னுமொரு பட்டணத்தையுண்டாக்கி அங்கே சுக்கிரனுக்குச் சீஷனாயினான். ஒருநாள் சுக்கிரனுடைய மகள் அரசையைக் கண்டுமோதித்து அவளைப்பலபந்தமாய்க் கூடினான். அதுகேட்டசுக்கிரன் அவனும் அவன்பட்டணமும் மண்மாரியாலழிகவென்று சபித்தான். அங்ஙனமழிந்தவிடமும் அதன் தெற்கின்கணுள்ள பிரதேசமும் தண்டகாரணியமெனப்படும். அதுவே தடிpணதேசம்.

தண்டபாணி - (1) காசியிலுள்ள ஒரு தேவதை. (2) (ரா) சுமாலிமகன்.

தண்டன் - (1) இ டி{வாகு புத்திரன். தண்டகன எனவும்படுவன். (2) (ரா) சுமாலிமகன்.

தண்டாசுவன் - திருடாசுவன் துந்துமாரன் மகன். இவன் மகன் ஹரியசுவன்.

தண்டி - காளிதாசன் நண்பராகிய ஒரு சம்ஸ்கிருதகவீச்சுரர். போஜராஜன் சபையில் விளங்கிய ஒன்பது கவிரத்தினங்களுள் ஒருவர். காவிய தரிசமும் தசகுமார சரித்திரமுஞ் செய்தவர்.

தண்டியலங்காரம் - தமிழிலேயுள்ள ஓரலங்கார நூல். அது வடமொழியிலுள்;ள காவியதரிசமென்னும் அலங்காரசாஸ்திரத்தினது மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தார்யாரென்பது புலப்படவில்லை. வடமொழியிற் செய்தவர்தண்டி. தண்டியலங்காரம் பொதுவணி, பொருளணி. சோல்லணியென மூன்றியலையும் நூற்றிருபத்துமூன்று சூத்திரங்களையுமுடையது. இந்நூல் நச்சினார்க்கினியர் அடியார்க்கு நல்லார் என்னுமாசிரியரால் எடுத்துக்கூறப்படுதலின் ஆயிரத்துமந்நூறு வருஷங்களுக்கு முன்னியற்றப்பட்டதாதல் வேண்டும்.

தண்டியடிகணாயனார் - பிறவிக்குருடராகப்பிறந்து சிவபக்தியிற்சிறந்து திருக்குளத்து மண்ணைக்கல்லிக்கூடையிலெடுத்துக் கொண்டு தடவிப் போய்க் கரையிலே கொட்டுகின்ற திருத்தொண்டை மேற்கொண்ட பொழுதுசமணர்கள் தடுத்துக் கண்கெட்டவனேயென்று பழிக்கச்சுவாமி சந்நிதானத்தையடைந்து தமது வருத்தததை விண்ணப்பஞ்செய்து, கண்பெற்று அச்சமணர்களைக் கண்ணிழந்து அவ்வூரினின்றும் நீங்கும் படி செய்து சோழராசாவினால் அச்சமணர்களுடைய பாழிகளைப்பறித்து அக்கற்களால் திருக்குளத்துக் கரையைக் கட்டுவித்துத் திருவாரூரிலே விளங்கிய ஒரு சிவபக்தர்.

தண்டீசர் - சண்டேசுரநாயனார் காண்க.

ததிமுகன் - சுக்கிரீவன் மாதுலன்

ததிவாகனன் - (அ) அங்கன்மகன்.

ததீசி - இம்முனிவர் தமதுமுதுகென்பை இந்திரனுக்குக் கொடுத்து இதையுன் வச்சிராயுதத்துக்கு முகமாக்கிக் கொள்ளுக என்று அருளியவர்.

தத்தாத்திரேயன் - அத்திரிக்கு அநசூயையிடத்தில் விஷ்ணுஅமிசமாகப் பிறந்த புத்திரன். (துருவாசர் காண்க)

தத்துவராயர் - எண்ணூற்றறுபது வருஷங்களுக்குமுன்னே வீரை யென்னும் பதியிலே பிராமணகுலத்திலே பிறந்து வடமொழி தென்மொழியிரண்டிலும் வல்லுநராகி ஞானகுருவைத் தேடித்தமது சகாத்தியாராகிய சொரூபாநந்தரோடு புறப்பட்டவர். புறப்பட்டபோது இருவரும தம்முள்யார் முதலிலே குருவையடைவாரோ அவரே மற்றவர்களுக்குக் குருவாகக் கடவரெனப் பொருந்திக் கொண்டு ஒருவர் வடநாட்டிலும் மற்றவர் தென்னாட்டிலுஞ் சென்றனர். தேற்கினிற்சென்ற சொரூபாநந்தர் ஒருகுருவையடைந்து ஞானநூல்களையோதி மெய்யுணர்ந்தார். முன்செய்துகொண்ட பொருத்தப்பிரகாரம் தத்துவராயர் சொரூபாநந்தரைக் குருவாகக் கொண்டு ஞானசாஸ்திரங்களைக் கேட்டுத் தமக்கியல்பாயுள்ள பாடும் வன்மையினாலே உலோகோபகாரமாகச் சசிவர்ணபோதம், பாடுதுறை, சிவப்பிரகாசர்வெண்பா, தத்துவாமிர்தம், ஞானவிநோதன்கலம்பகம், தசாங்கம். நெஞ்சுவிடுதூது, கலிமடல், கலித்துறையந்தாதி. அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி முதலிய பல நூல்களைச் செஞ்சொலாற் பாடியருளினர். அஞ்ஞவதைப்பரணி பாடிய சாதுரியம் மிகவும் அதிசயிக்கத்தக்கது. இவர் மெய்ஞ்ஞானிகளுளொருவரென்பது அவருடைய நூல்களால் மாத்திரமன்று கர்ணபாரம்பரியமாய் வருங் கதைகாளலும் நிச்சயிக்கப்படும்.

தத்தை - ஜம்பன்மகள். இரணிய கசிபன்பாரி.

தநுர்வேதம் - உபவேதம் நான்கனுள்ஒன்று. அது யசுர்வேதச் சார்புடையத. உபவேதம் நான்காவன. ஆயுர்வேதம். தநுர்வேதம். காந்தருவவேதம், சஸ்திரசாஸ்திரம்

தந்தகாதகன் - அரிச்சந்திரனை மாயஞ்செய்வதற்காக விசுவாமித்திரன் சிருஷ்டித்த ராடிசன்.

தந்தவக்திரன் - விருத்தசர்மனுக்கு வசுதேவன் தங்கையாகிய சுருததேவியிடத்துப் பிறந்த புத்திரன். இவனும் சிசுபாலனும் சனகசனந்தனர் சாபம் பெற்ற ஜயவிஜயர்களது அவதாரம். இவன் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன.

தந்திரிபாலன் - அஞ்ஞாத வாசத்திற் சாகாதேவன் கொண்ட பெயர்.

தந்துமாரன் - சங்கருவணரென்னும் நாகரிகராலே பாடப்பட்ட ஒரு பிரபு. (புறநானூறு)

தபதி - சம்வருணன் பாரி. குருவினது தாய். சூரியன்புத்திரி.

தபன் - அங்கிரசன் சந்ததியினராகிய காசிபன், வாசிஷ்டன், பிராணன், அங்கிரசன், சியவனன் என்னும் ஐவருக்கும் பறந்த பாஞ்சசன்னிடயன் என்னும் அக்கினி;.

தப்தகும்பம் - ஒருநரகம். இஃது அழல் ரூபமாகக் காய்ச்சிய எண்ணெய்க் குடங்களால் நிறைந்துள்ளது. பாவிகள் இக்குடங்களில் தலைகீழாக அமிழ்த்தி யெடுக்கப்படுவோர்கள்.

தமசு - ஒரு நகரம். இஃது அந்தகராமயமாயுள்ளது.

தமசை - இருடிபர்வதத்திலுள்ள ஒருநதி.

தமயந்தி - நளன்பாரி. விதர்ப்பராஜனாகிய வீமன்மகள்.

தமலிப்தர் - கங்கைக்கு மேற்கின்கணுள்ள தேசவாதிகள்.

தமனிகை - மேனகைமகள். படிpவரன் பாரி. தாரிடிpதாய்.

தமிழ் - குணகடல் குமரி குடகம் வேங்கடமென்னும் நான்கெல்லையினையுடையதாகிய நாட்டிலே அதிதொட்டு வழங்கி வருகின்ற பாஷை தமிழெனப்படும். தமிழ் என்னுஞ்சொல் திரமிளம் என்னும் வடமொழிச் சிதைவென்று கூறிப்போயினார் ஆசிரியர் சிலர். அது பொருத்தமுடைய தன்று. பெயரிட்டு வழங்காத பொருளாட்சி எக்காலத்தும். எவ்விடத்தும். எச்சாதியாளரிடத்தும் இல்ல தோராட்சியாம். அவ்வந்நாட்டிலுள்ளார் தாம் வழங்கும் பாஷைக்குத்தாமொரு பெயரிடாது வழங்கார். தமது நாட்டிலில்லாத ஒன்றை அது பிறந்தநாட்டில் வழங்கும் பெயரினாலேயே வழங்குவர். அதலின் திரமிளம் என்னுஞ் சொல் தமிழெனச் சிதைந்த தாகாது. தெலுங்குஎன்னும் பாஷைப் பெயரைத் திரிலிங்கமென்பது வடமொழிவழக்கு. வெண்ணெய்நல்லூரை வெண்ணாநல்லூரென்பது வடமொழிவழக்கு என்பது ஸ்கந்தபுராணத்திற் காண்க. தெலுங்கு, வெண்ணெய்நல்லூர் என்னுஞ் சொற்களை உள்ளவாறு எழுதுதலும் வழங்கலும் வடமொழி உச்சாரணரீதிக்கு அமையா. அதுபற்றியே வடமொழியில் அவை திரிலிங்கமெனவும் வேண்ணாநல்லூரமெனவும் வழங்கப்பட்டன. அவ்வாறே தமிழென்னுஞ் சொல்லும் வடமொழியில் உள்ளளவாறு வழங்கலமையாமைகண்டுதிரமிள மென்றாக்கி வழங்கப்படுவதாயிற்று. வடமொழியிலிருந்தெடுத்தாளப்படும் சொற்கள் தமிழிலே வடமொழியாக்கமென்னும் விதிபெற்று வழங்கப்படுதல் போலத் தென்மொழியிலிருந்து தேசிகமாய் வடமொழிக்கட்சென்று வழங்குஞ் சொற்களும் தென்மொழியாக்கவிதிபெற்றே வழங்கப்படுவனவாதல் வேண்டும்.

அகத்தியர் பொதமியமலைக்கு வருதற்குமுன்னும் தமிழ்ப்பாஷை வழங்கிற்றாதலின் அது மிகப் பழையதொரு பாஷையாம்.

தமிழ்மொழிக்குரிய வெழுத்துக்கள் முதலென்றும் சார்பென்றும் இருவகைப்படும். முதலெழுத்து முப்பது. அவற்றுள் உயிர்பன்னிரண்டு. மெய் பதினெட்டு வடமொழியிலே முதலெழுத்து ஐம்பத்தொன்று. அவற்றுள் உயிர் பதினாறு. வடமொழியிலிருந்து தமிழ்மொழிவந்த துண்மையானால், தமிழிலேயுள்ள வெழுத்துக்களாலே வடமொழிப்பதங்களையெல்லாம் திரிபின்றி அமைத்துக் கோடற்குமுட்டுறது. தெலுங்கு மொழிக்கு இலக்கணஞ்செய்தோர் வடமொழிப் பதங்களையெடுத்தாளுங்கால் முட்டுறாதவகை எழுத்துக்களை அமைத்துக் கொண்டார்கள். தமிழுக்கிலக்கணஞ் செய்தோர் வடமொழிப்பதங்கள் தமக்கநாவசியகமெனக் கொண்டே அவ்வடமொழி எழுத்துக்களைப் பாரமுகஞ் செய்து விட்டார்கள். வடமொழியிலிருந்து தமிழ்மொழி வந்ததாயின் வடமொழிப்பதங்களை எடுத்துப்பிரயோகித்தற் கனுகூலமாக எல்லாவெழுத்துக்களையும் எடுத்தாளாலிடார். தற்பவம் தற்சமம் என்னும் வேறுபாடுகளும்வாரா.
தமிழ்நூல்களுள்ளே மிகப் பழையதாகிய தொல்காப்பியத்திலே விதந்தெடுத்து விதிகூறப்பட்ட ழகாரவீற்றுப்பதங்களுள்ளே வடமொழிப்பதம் ஒன்றாயினும் வந்ததில்லை. அவையெல்லாம் செந்தமிழ்ச்சொற்களேயாக அவற்றுளொன்றாகிய தமிழென்னுஞ் சொல் மாத்திரம் வடமொழியினின்றும் எடுத்தாக்கி அமைத்துக்கொள்ளப்பட்ட தென்பது ஒரு சிறிதும் பொருத்தமுடையதன்று.
சொற்பஞ்சம் சம்ஸ்கிருதத்திற்கில்லையாயினும் தேசிகச்சொற்கள் அதற்கும் இன்றியமையாதனவேயாம். ஸ்காந்தத்திலே வெண்ணாநல்லூரம் மாத்திரமன்று. கருவூர், குற்றாலம் என்னும் பெயர்களும், பாரதத்திலேமணலூர் என்பதும் வருதல் காண்க. சோதிடத்திலே ஆபோக்கிலிமம் பணபரமென்னும் யவனபாஷைமொழி களும்பயின்று வருதல் காண்க. இன்னும், திரமிளம், திராவிடம், திரவிடம் என்னுஞ் சொற்களுக்கு உண்மையானதாதுவும் நிச்சயிக்கப்படவில்லை. ஆதலின் திரமிளம் தமிழ் எனத்திரிந்ததென்னாது தமிழ் என்பதே வடமொழியிலே திரமிளம் எனத் திரிந்ததாகக் கொள்க.

தமிழ்மொழி அகஸ்தியர் தென்னாட்டிலே வருதற்கு முன்னுள்ள தென்பதும். அதனைஅந்நாளிலே வழங்கினார். பெரும்பாலும் ராடிசரும் அநாரியரான வேறுஜாதிகளுமாமென்பதும் ராமாயணத்திலே அகஸ்தியர் ஸ்ரீராமருக்குக்கூறிய தடிpணவரலாற்றினாலும் ஸ்காந்தத்தினாலும் பெறப்படும். அகஸ்தியர் வந்த பின்னரே இந்நாடு நாடாகிச் சிறந்தது. முன்னர்க் கொடுந்தமிழாய்க் கிடந்ததமிழுக்கு வடமொழி யடைவுப்படி இலக்கணஞ்செய்து அதனைச் செம்மைசெய்து செந்தமிழாக்கினவர் அவரே. தமிழிலே சம்ஸ்கிருதச்சொற்கள் வந்து கலப்புற்றதும் அவர் காலத்திலேயே. அவர் தமது வைதிகசமயத்தைத் தமிழ்நாட்டிலே பிரசாரணஞ் செய்யப்புகந்தமைபற்றியே அவ்வடமொழிச் சொற்கள், தமிழிலே சங்கமிப்பனவாயின. தமிழ் நாட்டிலே வந்த அகஸ்தியரும் அவரைப் பின்றொடர்ந்து வந்து குடிகோலிய ஆரியரும் அந்நாட்டுக்குரிய பாஷையாகிய தமிழையே வழங்கவேண்டியவர்களாயினார்கள். சம்ஸ்கிருதச்சொற்கள் சமயவறிவுக் கத்தியாவசியகம் வேண்டப்படும். அத்துணையுமேயன்றி இந்நாளிலே வழங்கும் பெருக்கமாக ஆதிநாளிலே கலப்புற்றதில்லை. சம்ஸ்கிருதப்பிரவாகத்தினாலே காலவடைவிலே பல தமிழ்ச்சொற்கள் வழக்கிறந்தன.

இலக்கணஞ்செய்வது இலக்கியங்கண்டேயாதலின் அகஸ்தியர் இலக்கணஞ் செய்தது தமக்கு முற்பட்டுகிடந்த இலக்கியங்களைக் கண்டேயாம். ஆதலின் அகஸ்தியரே தமிழைத் தோற்றுவித்தாரெனக் கோடல்அமையாது. “அகஸ்தியன் பயந்த செஞ்சொல்லாரணங்கு” என்னும் வில்லிபுத்தூரன் வாக்கினாலே. அகஸ்தியர் செய்த செந்தமிழிலக் கணத்தை யுடைய தமிழ் எனக்கொள்வதன்றி அவரே தமிழைத் தோற்றுவித்தாரெனக் கொள்ளல் பொருந்தாது.

அகஸ்தியர் வருதற்குமுன்னே தடிpணத்திலும், இலங்கையிலும், பூர்வம் இலங்கையின் கூறாய்க்கிடந்து காலாந்தரத்திலே கடலாற் றுண்டிக்கப்பட்டு வேறாகிக்கிடக்கும் யவNதுசத்திலும் (ஜாவா - துயஎய) வழங்கிவந்தது. ஆகஸ்தியர் வந்தபின்னர் ஸ்ரீராமராலே இலங்கையிலிருந்த அரக்கர்பரிநாசப்பட்டொழிய அங்கே தமிழும் வழங்காதொழிந்தது. காலாந்தரத்திலே தமிழ் ஈழநாட்டிலுஞ்சென்று வழங்கிவருகின்றது. இப்போது தமிழ் சற்றேறக்குறைய இரண்டு கோடி சனங்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ் நாட்டுக்குபகாரமாக அகஸ்தியர் தாமியற்றிய இலக்கணத்தையும் தமது வைதிக சமயத்தையும் அந்நாட்டிலே இனிதுநாட்டும் பொருட்டுத் தமிழ்ச்சங்கம் நாட்டினர். அச்சங்கத்திலே ஆசனங்கொள்ளற்குரியார்க்கு இது சங்கேதம் எனவும், நூல்செய்வோரெல்லாம் அச் சங்கத்திலே சென்று அரங்கேற்றல் வேண்டும் எனவும், அங்கீகாரமாயின் அவர்க்கு அளவின்றிப் பரிசில் கொடுக்கப்படுமெனவும் அரசனாலே நாடெங்கும் ஆணைபோக்குவித்தனர். அதுகேட்டு அச்சங்கப்பலகைக்குரியராயினர். நூலியற்றி அரங்கேற்றிப் பரிசிலும் பெற்றார்கள். அவ்வாறே தமிழும் வைதிகசமயமும் ஆரிய நாகரிகமும் அச்சங்கம்வாயிலாக வளர்ந் தோங்குவனவாயின.

அகஸ்தியருடைய இலக்கணம் பரந்து வழங்கியவிடம் செந்தமிழ்நாடென்னும் பெயர்பெறுவதாயிற்று. அதனைச் சூழ்ந்த நாடுகள் பன்னிரண்டிலும் கொடுந்தமிழே வழங்கிவந்தது. அதுபற்றி அவை கொடுந் தமிழ்நாடெனத்தமிழாசிரியர்களாலே குறியிட்டு வழங்கப்பட்டன. கொடுந்தமிழ் நாடுகளாவன. சிங்களமும், பழந்தீவும், கொலலமும், கொங்கணமும். துளுவமும், கூபமும், குடகமும், கருநடமும், குட்டமும், வடுகும், தெலுங்கும், கலிங்கமும் எனப் பன்னிரண்டுமாம்.

அகஸ்தியர் நாட்டிய இச்சங்கம் பின்னரும் இருசங்க மிருந்தமையாலே தலைச்சங்கமெனப்படுவதாயிற்று. அத்தலைச்சங்கத்திலே தலைமைபெற்றிருந்தோர் அகஸ்தியரும், இறையனாரும், குமரவேளும், முரிஞ்சியூர் முடிநாகராயரும், முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியினகிழவனும். முhர்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கௌதமனாரும் என்போர் தலைச்சங்கம் நிலையுற்றிருந்தகாலம் நாலாயிரத்து நாநூற்றுநாற்பது வருஷம். அதிலேயிருந்து விளங்கினபுலவர் நாலாயிரத்து நானூற்று நாற்பது வருஷம். அதிலேயிருந்து விளங்கினபுலவர் நாலாயிரத்துநானூற்று நாற்பத்தொன்பதின்மர். அவருள்ளே சங்கப்பலகையேறிய பாண்டியர் எழுவர்.

இறையனாரும் குமரவேளும் தெய்வ சாடிpகள். இவ்வொன்பதின் மரும்போக எஞ்சினோர் ஒவ்வொரு வரும் ஒவ்வோராண்டு தலைமை பெற்றிருந்தவர் போலும். தலைச்சங்கத்திலே அரங்கேறிய நூல்கள் பல்லாயிரவராலே தனித்தனிசெய்து வௌ;வேறு பெயர் சூடப்பட்ட எண்ணிறந்த பரிபாடல்கள், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், தொல்காப்பியம், இசைநுணுக்கம், பூதபுராணம் என அநேகமாம். இவை யெல்லாம் அகத்தியங் கொண்டே ஆராயப்பட்டன. தலைச்சங்கமிருந்தவிடம் தென்மதுரை. அது பின்னர்நாளிலே கடல்கொண்டழிந்து போயிற்று. அஃதழிந்தகாலம் முதலூழியினிறுதிக்காலமென்பர் சிலப்பதிகாரவுரையாசிரியர். முதலூழியென்பதற்கு முந்தியயுகமெனப் பொருள் கொள்ளுக. இறுதிக்காலமென்பது யுகசந்தி. யுகசந்தியாவதின்னதென அகஸ்தியர் என்பதனுட்கூறினாம். தலைச்சங்கம்காய் சினவழுதிமுதற்கடுங்கோனீறாகவுள்ள எண்பத்தொன்பது பாண்டியராலே வழிவழி வளர்க்கப்பட்டுவந்தது.

தலைச்சங்கத்திலே முன்னுள்ள இயல் இசை நாடகமென்னு முத்தமிழுமே ஆராய்ந்து வளர்க்கப்பட்டன. சங்கத்தார்கள், திருமால் குமாரவேள் சிவன் முதலிய கடவுளர் மேலே தோத்திரங்களும் அகப்பொருட் பகுதியாகிய காமப்பாலும், புறப்பொருட்பகுதியாகிய யுத்தம் வெற்றி முதலியனவும், சோதிடம், வைத்தியம், சிற்பம் முதலியனவும் அக்காலத்துப் புராணங்களுமே விஷயமாகக்கொண்டு நூல்கள் செய்து தமிழாராங்ந்து வந்தார்களென்பது பழையநூல்களால் நிச்சயிக்கப்படும். பரிபாடல்கள் பெரும்பாலும் தோத்திர ரூபமாகவுள்ளன. களரியாவிரையை வைத்தியநூலென்பர் சிலர். தலைச்சங்கமிருந்த காலத்திலே இப்போதுள்ள பதினெண்புராணங்களும் வடமொழியிலும் வகுக்கப்பட்டில. இடைச்சங்க காலத்தின் கடைக்கூற்றிலேயே அவை விடயாசராலே வடமொழியிலே வகுக்கப்பட்டன.

“வடமொழியைப்பாணினிக்கு வகுத்தருளியதற்கிணையாத்-தொடர்புடைய தென்மொழியை குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகா” என்னுங் காஞ்சிப்புராணத்துக்கூற்றுப் பாணிடனி வியாகரணத்துக்கூற்றுப்பாணினி வியாகரணஞ் செய்தகாலத்துக்குப் பின்னாகவே அகஸ்தியர் தமிழுக்கிலக்கணஞ் செய்தாரெனத்துணிதற்கு ஏதுவாகின்றது. பாணினி வியாகரணத்திலே பாண்டவர் பெயர்கள் கேட்கப்படுதலாலே அவ்வியாகரணம் பாண்டவர்கள் காலத்துக்குப் பின்னர்த் தோன்றியதென்பது நன்கு துணியப்படும். முதலிடை கடைச்சங்களிருந்து நடைபெற்ற காலமோ பதினாயிரம் வருஷம். பாண்டவர்கள் இற்றைக்கு ஐயாயிரம் வருஷத்துக்குமுன்னர் விளங்கிளவர்கள். இதுகாஞ்சிப்புராணத்துக்கு மாறுகொள்ளுகின்றதேயென்றால் அங்ஙனமன்று. மாகேசுவரசூத்திரம் பதினான்கும் சிருஷ்டிகாலத்திலே சிவபிரானாலே துடியொலிமூலமாக அநுக்கிரகிக்கப்பட்டன. அவைகளை ஆதாரமாகக்கொண்டு பிருகஸ்பதி இந்திரன் முதலியோர் பூர்வத்திலே வியாகரணஞ்செய்தார்கள். அவையெல்லாஞ் சுரங்கியிருத்தல் கண்டு பாணினி அம்மாகேசுரசூத்திரங்களையெடுத்துக் கடைபோகவாராய்ந்து விரித்துப் பரந்தநூலாகவியற்றினர்.

“வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி” என்பதற்குப் பின்னர்க்காலத்திலே அவதரிக்கப்போகும் பாணினியெடுத்து முற்ற விசாரித் துண்மைப்பொருள் கண்டு விரித்து வியாகரணஞ் செய்யும் பொருட்டுச் சிவபிரான் சிருட்டிகாலத்திலே மாகேசுரசூத்திரத்தைச் செய்தருளியபின்னர் எனப் பொருள்கொள்ளுக. வடமொழி என்பது அம்மொழியிலுள்ள அச்சூத்திரத்திற்கு ஆகபெயர். அகஸ்தியர் ஐந்திரவியாகரணவடைவையே அடைவாகக் கொண்டு அகத்தியஞ்செய்தாரென்பது. “இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்” என ஐந்திரமதமெடுத்துத் தமது நூலிலே காட்டுமாற்றாலினது புலப்படும். ஆதலால். அகஸ்தியர்காலத்திலே வடமொழியிலே வழங்கிவந்தநூல் இந்திரன் செய்த ஐந்திரவியாகரணமேயாம். ஆகவே “வடமொழியைப்பாணினிக்கு” என்னுங் காஞ்சிப்புராணத்துச் செய்யுள்; புனைந்துரைவகையாற கூறப்பட்ட தாமெனக்கொள்ளுக.

மேற்கூறிய செய்யுளிலே வரும் “அதற்கிணையாத தொடர்புடைய தென் மொழியை.....குடமுனிக்குவலியுறுத்தார்” என்பதற்கு அம்மகேசுர சூத்திரத்திற்கு இணையாகப் பழைமையினையுடைய தமிழ் இசை நுணக்கத்தை யெடுத்துப தேசித்தருளினார் எனப் பொருள் கொள்ளுக. அங்ஙனம் பொருள் கொள்ளாக்கால் அகஸ்தியர்க்குச் சிவபிரான் றாம் உபதேசித்தது யாது? பாஷையா? முதனூலா? என்னும் வினாவெழும். பாஷையை உபதேசித்தல் கூடாது. ஆதலால் முதனூலையேயுபதேசித்தாரெனக் கொள்ளல் வேண்டும். அவ்வுண்மை,....”தனிநடங்குயிற்றுஞ் சம்புநம் பெருமான். றுமருகப்பறைக்கண் அஇஉணுவென், றமர் தருசூத்திரமாதியீரேழ்பெற, வடமொழிக்கியல்பா ணினிமாமுனிக்குத்@ திடமுறநன்கு தெரிந்தமைபோல. விந்தமும் வெலையும் வீறுபோய்க்குன்றக், கந்தமென்கமலக்கரத்தினை விதிர்த்த, வருந்தவக்கொள்ளையகத்தியமுனிக்குத் திருந்திசை நுணக்கச்செந்தமிழியலினைச் செப்பினன்” என்னுந் தாண்டவராயசுவாமிகள் வாக்கால் வலியுறுத்தப்படும். சிவபிரானுக்குபதேசித்த நூலை அதாரமாகக் கொண்டு செய்யப்பட்டமையின் அகஸ்தியர் செய்த இலக்கணத்தை அவர்பாற் பன்னிருவர் மாணாக்கர் சென்று கேட்டனர். அப்பன்னிருவரும் தந்தமது பெயரா லொவ்வொரு வழிநூலும் வேறுநூல்களுஞ் செய்தனர். அவருள்ளே முதன்மாணாக்கராகிய தொல்காப்பியர் இயற்றமிழ் இலக்கணமொன்று தம்பெயராற் சுருக்கி நெறிப்படச் செய்தனர். அது தொல்காப்பியம் எனப்படும். அஃது இயற்றமிழாராய்ச்சிக்கு வாய்ப்புடைத்தாதிய நூலாயிருப்பக்கண்டு அகஸ்தியம்பரந்த நூலென்றொதுக்கிப் பெரும்பாலாரும் அது தொல்காப்பியத்தையே விரும்பிக் கற்று வருவாராயினர். இவ்வாறே இசைத் தமிழும் நாடகத் தமிழும் ஏனைய மாணாக்கர்களாலே வேறு பிரித்து அவற்றுக்குவேறு வேறு நூல்கள் செய்யப்பட்டன. இவையெல்லாம் கிரமமாக வோதப்படும் நூல்களாக அதஸ்தியம் மலைவுவந்தவிடத்துமாத்திரம் எடுத்து ஆராயப்படும் நூலாயிற்று. பூதபுராணம் இறந்து போன கற்பத்துப் புராண மொழிபெயர்ப்பு. இங்ஙனம் நடந்தது வருங்காலத்திலே குமரியாற்றருகேயிருந்த தென்மதுரை கடல் கொண்டழிந்தது.

அதன்பின்னர்ப் பாண்டியர்க்கு இராஜதானி கபாடபுரமாயிற்று. அங்கே சங்கம் ஸ்தாபித்தவன வெண்டேர்ச்செழியன. அச்சங்கம் இடைச்சங்கத்திலிருந்த புலவர்கள், அகஸ்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழிமோசியார், வெள்ளுர்க் காப்பியனார். சிறுபாண்டரங்கனார், மதுரையாசிரியன்மாறனார், துவரைக்கோமானார், கீரந்தையார் முதலிய மூவாயிரத்தெழுநூறு வருஷம். இச்சங்கத்தை வழிவழிவளர்த்த பாண்டியர்கள் வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறனீருக ஐம்பத்தொன்பதின்மர் அவருள்ளே புலமையுடையோராய்ச் சங்கப்பலகை யேறினார் ஐவர். அரசரேயாயினும் வித்துவ யோக்கியதை யில்லாதவர் அச்சங்கமேறுதற்கருகரலலர் என்பது சங்கநெறிமுறைகளுளொன்றென இதனால் அனுமிக்கப்படும். சங்கங்கூடுங்காலத்டpல் உத்தியோகிக்கும் புலவர் ஐம்பத்தொன்பதின்மரென்பதும், வருஷந்தோறும் அக்கிராசனம் பெறுபவர் ஒருவரென்பதும் சங்கத்துக்குரிய நெறிமுறைகள் போலும்.

இடைச்சங்கத்துக்குப் பிரமாணநூல்கள் அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம் இசைநுணுக்கம், பூதபுராணம் என்பன. அவர்களாற் பாடப்பட்டன. பெருங்கலித்தொகை, குருகு, வெண்டாளி, வியாழமாலை முதலியன. சுpவபிரான் அகஸ்தியர்க்குபதேசித்த இசைநுணுக்கமும் வேறே மாபுராணம் வடமொழியிலே வியாசர் வகுத்த பதினெண்புராணங்களுக்கு மூலபுராணமாய் அவர்காலத்துக்கு முன்னர் வழங்கிவந்த மகாபுராண மொழிபெயர்ப்புப் போதும். தலைச்சங்ககாலத்திலும இடைச்சங்ககாலத்திலும் வழங்கிவந்த நான்குவேதங்களும் பின்னர்க்காலத்திலே வியாசரால் வகுக்கப்பட்ட இருக்காதிநான்குமல்ல. அவை தைத்திரீயமும், பௌடியமும், தலவகாரமும், சாமமுமாம்;. ஆதனைத் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்தில் நச்சினார்க்கினியர் உரையிற் காண்க.

கலியும் குருகும், வெண்டாளியும் செய்யுளிலக்கியங்கள் என்பது சிலப்பதிகாரவுரையிற் கூறப்பட்டுள்ளது. வியாழமாலை சோதிடநூல்போலும்.

கடல்கொண்டு தென்மதுரை அழிந்தது தொல்காப்பியம் புலப்படுத்திய பாண்டியன் மாகீர்த்திகாலத்தில். அவன் அவ்விடம் விட்டோடிக் கபாடபுரத்தை ராஜதானியாக்கி அங்கிருந்தரசியற்றியிறந்தான். அவன் கீர்த்தி பூஷணபாண்டியனெனவும் படுவன். தென்மதுரை கடல்கொண்டழிந்தது இற்றைக்கு ஏழாயிரத்தெழுநூறு வருஷங்களுக்கு முன்னர் பாடபுரத்திலே சங்கம் நடை பெற்றகாலம் மூவாயிரத்தெழுநூறு வருஷம். அதுவுங் கடல் கொண்டழிந்தது. அஃதழிந்த போதங்கிருந்த சுபரிந்தவன் முடத்திருமாறனென்னுங் கூன்பாண்டியன். அவன் அவ்விடத்தை விட்டோடிப்போய் வடமதுரையை இராஜதானியாக்கி அங்கிருந்தரசியற்றினான். கபாடபுரம் அழிந்தது. இற்றைக்கு நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னர் என்பது கூன்பாண்டியன் காலத்தாற் றுணியப்படும். ஆகவே தமிழ்ச்சங்கமிருந்தகாலத்திலே இரண்டு பெரும் பிரளயம் வந்தூறு செய்து போயின. முதற்பிரளயம் கலியுகம் பிறக்குமுன்னர் இரண்டாயிரத்தொழுநூறு வருஷங்களுக்கு முன்னரும் மற்றது கலியுகம் பிறந்தபின்னரும் வந்தன. முதற்சங்கம் அழிந்து நாலாயிரம் வருஷங்கள் சென்ற பின்னரே இடைச்சங்கம் தொடங்கிற் றென்பாருமுளர். அது பற்றியே முன்னே அகஸ்தியர் என்பதனுள்ளே தென்மதுரை அழிந்தது இற்றைக்குப் பன்னீராயிடரம் வருஷங்களுக்கு முன்னராதல் வேண்டுமெனக் கூறினாம். நூற்பிரமாணங்கொண்டு நிச்சயிக்கப்புகின் அஃதழிந்தகாலம் மேலே கூறியவாறு ஏழாயிரத் தெழுநூற்றுக்கு முன்னர் என்பதே ஏற்புடைத்தாம். இங்கேகூறிய இரண்டு பிரளயத்திலேயே, குமரியாறும் ஏழ்தெங்கநாடுமுதலிய நாற்பத்தொன்பது நாடுகளும் கடல்வாய்ப்பட்டன. இரண்டாம் பிரளயத்திலே கபாடபுரமாத்திரமேயழிந்தது.

இங்ஙனம் கபாடபுரம் அழிந்த போது இடைச்சங்கத்திற்கு உரிய புஸ்தகாலயங்களும் கடல் வாய்ப்பட்டழிந்தன. அரசனுமிருக்கையிழந்து வடக்கின் கட்சென்றிருந்து இப்போதுள்ள மதுரைநகரை அமைத்து, ஆலவாயிலவிர்சடைக்கடவுளுக்கு மோராலயமெடுப்பித்து. அந்நகரிலேயிருந்தாசியற்றி வந்தான். தேற்கின் கண்ணேயிருந்தழிந்த போய மதுரையை நோக்கி இம்மதுரை வடமதுரை வடமதுரை எனவும் வழங்கப்படும்.

முடத்திருமாறன் இம்மதுரையிலே கடைச்சங்கம் ஸ்தாபித்துத் தமிழாராய்வித்துவந்தான். அதனை அவன் முதல் நாற்பத்தொன்பதின்மர் பாண்டியர் வழிவழிவளர்த்து வருவாராயினர். அது நிலையுற்றிருந்தகாலம் ஆயிரத்துத்தொளாயிரத்தைம்பது வருஷம் கடைச்சங்கத்திலிருந்த புலவர்கள் இளந்திடருமாறன், நல்லந்துவனார், மருமனிளநாகர், கணக்காயர். நக்கீரர், கீரங்கொற்றர். தேனூர்கிழார், மணலூராசிரியர், நல்லூர்ப் புளியங்காய்ப்பெருஞ்சேந்தனார், செல்லூர் ஆசிரியர்முண்டம்பெருங்குமரர், நீலகண்டனார், சீத்தலைச்சாத்தனார். உப்பூரிகுடிகிழார், உருத்திரசன்மர், மருத்துவன்றாமோதரனார், கபிலர், பரணர், கல்லாடர் முதலிய நானூற்றுநாற்பத்தொன்பதின்மர். அவர்களாற் செய்யப்பட்ட நூல்கள் முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, சிற்றிசை, பேரிசை, வரி, பதிற்றுப்பத்து, எழுபதுபரிபாடல், குறுங்கலி, இறையனாரகப்பொருள், வள்ளுவர்குறள், பாரதவெண்பா முதலியன. அவர்களுக்கு இலக்கணப்பிரமாணநூல்கள் அகத்தியமுந் தொல்காப்பியமுமாம். இடைச்சங்கத்தில் வழங்கிய நூல்களுள்ளே இவையிரண்டுமே கடைச்சங்கத்தார்க்கு அகப்பட்டன. மற்றைய நூலகளெல்லாம் சமுத்திரவாய்ப்பட்டழிந்த துண்மையேயாமென்பது அவை கடைச்சங்கத்தார்க்குப் பிரமாண நூலாகாமையினாலும் வலியுறுத்தப்படும்.

இங்ஙனம் நடைபெற்று வந்த கடைச்சங்கம், உக்கிரப்பெருவழுதியென்னும் பாண்டியன் இறத்தலோடும் நிலைதளர்ந்தொடுங்கிற்று. அச்சங்கத்திலே சமணர்களும் சைவர்களும் வைஷ்ணவர்களுமிருந்து விளங்கினரென்பது அக்காலத்து நூல்களாலினிது விளங்கும். பலசமயிகள் மாத்திரமன்று நான்கு வருணத்தாருமே சங்கப்புலவர்களாய் விளங்கின ரென்பதும் நன்கு புலப்படுகின்றது. கடைச்சங்கமொழிந்த பிற்றைஞான்றும். சிலகாலமாகப் பாண்டியர்கள் தமிழை அபிமானித்துப் புலவர்களுக்குப் பரிசில் கொடுத்துவந்தார்கள். அதன்பின்னர் ஆரகதசமயத்துப் புலவர்களும் அவர்கள் சமயமும் மேலோங்குங்காலமாயிற்று. முன்னர்ச் சம்பந்தமூர்த்தி நாயனார் காலத்திலொடுங்கிய ஆரகதர் கடைச்சங்கமொடுங்கிய பின்னர் மெல்லமெல்லத் தலைநிமிர்வாராகி வடமொழியிலிருந்து தஞ்சமயநூலும் பொதுநூலாக அநேக நூல்களை மொழிபெயர்த்தார்கள். அவை சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூடாமணி நிகண்டு முதலியன அவர்க்குமாறா கச்சைவவித்துவான்களும் வைஷ்ணவவித்துவான்களும் தலைநிமிர்ந்து, வடமொழியிலிருந்து புராணங்களும், இதிகாசங்களும். சுமயசாஸ்திரங்களும் மொழிபெயர்த்துத் தமிழ்மாதுக்கு அணிகலன்களாக்கினார்கள். ஐசனவித்துவான்களுள்ளே பிரபலமுற்றோர் திருத்தக்கதேவர் முதலியோர். சைவவித்துவான்களுள்ளே பிரசித்திபெற்றோர் கச்சியப்பர், நச்சினார்க்கினியர் முதலியோர்@ வைஷ்ணவவித்துவான்களுள்ளே கம்பர்பரிமேழலகர் முதலியோர்.

இப்படியிருக்குங் காலத்திலே துருக்கர் அரசுகைக்கொண்டார்கள். தமிழ்மாதும், சைவ வைஷ்ணவ சமண சமயங்களும், ஆலயங்களும், வித்தியாமண்டபங்களும் அவர்கள் சந்நிதியிலே உயிர்ப்பிச்சை வேண்டுங் கதியிற்புகுந்தன. அரும்பெரும் நூல்களெல்லாம் அம்மிலேச்சராலே அக்கினிக்கூட்டப்பட்டன. அவ்வக்கினிக்கத்தப்பின நூல்கள் கிராமாந்தரங்களிற்பதுங்கிக்கிடந்தன சிலவேயாகும். துருக்கரைக்கர்வபங்கம் செய்த மகாராஷ்டிர அரசர் காலத்திலும் தமிழ்வித்துவான்கள் சிறிது தழைத்து அநேகநூல்கள் செய்தார்கள்.

அகஸ்தியர்க்குமுன்னே குமரவேளும் ஒரிலக்கணஞ் செய்தாரேன்றும், அது குமரம் எனப்படுமென்றும் கூறுவாருமுளர்.

அதன்பின்னர்ச் சிற்றரசராலும் மடாதிபதிகளாலும் தமிழ்பரிபாலிக்கப்பட்டு வருவதாயிற்று. அதுவும் பின்னர்நாளிலே தளர்ந்தது. அதன்பின்னர்க்காலமாகிய இக்காலத்திலே தமிழ்நாட்டார்தாமே ஒருவாறு அபிமானித்து வளர்த்துவருகின்றார்கள். அரசினருஞ் சிறிது கடைக்கணித்துவருகின்றார்கள்.

தமிழிலே வேதாந்த நூல்களும், சித்தாந்தநூல்களும், தர்க்கநூல்களும், ஸ்மிருதிகளும், புராணங்களும், இதிகாசங்களும், சோதிடநூல்களும், வைத்தியநூல்களும், இலக்கணநூல்களும், சிறந்த இலக்கியங்களும், காமநூல்களும், அறநூல்களும், நிகண்டுகளும், சிற்பநூல்களும், கணதநூல்களும், மந்திரசாடஸ்திரங்களும், தோத்திரநூல்களும் பிறவுமாக எண்ணிறந்ததுறைகக்லைகளுள. இறந்து போனநூல்களும் துறைகளுக்கும் வரையறையில்லை. ஓவ்வொரு துறைக்கலையிலும்; அநேக நூல்களுள. இலக்கணத்தில் அகஸ்தியம் அடியோ டழிந்து போயிற்று. தொல்காப்பியமே இப்போதுள்ள அதி புராதனநூல். நன்னூல், வீரசோழியம், நேமிநாதம், இலக்கணவிளக்கம் முதலியன பிற்காலத்தாராற் செய்யப்பட்டன. இப்படியே ஒவ்வொரு துறையிலும் பலநூல்கள் சுருக்கியும் விரித்துங் காலந்தோறுஞ் செய்யப்பட்டுள்ளன. தமிழ்;, தன்னைக் கற்பவர்க்கு இகபரசுமிரண்டைநய் தரத்தக்க எண்ணில்லாத நூல்களையுடைடமையினாலும், இனிமையாகிய ஓசையினையுடைமையினாலும், உத்தமபாஷைகளென ஆன்றோரா லெடுத்துக்கொள்;ளப்பட்டனவற்றுளே தானுமொன்றாக விளங்குகின்றது.

தமுஷ்டிரி - சுக்கிரன்மகள்.

தயாளமலர்க்குழல்;நாயகி - திருக்கடவூர் மயானத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

தரணி - பரசுராமன் மனைவி.

தரன் - (ய) அணுமகன். அந்தகனம் எனவும்படுவன்.

தரிசன் - தாதாவுக்குச் சிநிவாலியிடத்துப் பிறந்தபுத்திரன்.

தருமபுரேசர் - திருநள்ளாற்றிலே கோயில்கொண்டிருக்குஞ் சிவன்.

தர்க்கசங்கிரகம் - அன்னம்பட்டர் வடமொழியிற்செய்த நியாயநூல். சிவஞானமுனிவர் அதனைத் தமிழிலே வனப்பும் நுட்பமும் பொருந்த மொழிபெயர்த்தது அதற்குத் தர்க்கசங்கிரகமென்னும் பெயரேசூட்டினர்.

தர்மஷணன் - சிருஞ்சயன் இரண்டாம் புத்திரன்.

தர்மநேந்திரன் - ஹேகயன் புத்திரன்

தர்ம்படிpகள் - பிங்காடின். விபோதன், சுபுத்திரன், சுமுகி என நான்குபடிpகள்;. பூர்வம் விபுலன் என்னும் முனிக்குச்சுகுருசன், தும்புரன் என இருவர் புத்திரர் பிறந்தார்கள். இந்திரன் படிpரூபமெடுத்துச்சுகுருசனிடஞ் சென்று நரகமாமிசந் தருகவென்று கேட்டான். சுகுருசன் தன்மைந்தர் நால்வரையும் நோக்கி உங்களில் ஒருவர் இவருக்கு இரையாகுகவென்றான். அதற்கு ஒரு வருமுடன்பாததுகண்டு நால்வரையும் படிpகளாம்படி சபித்தான். அதுகாரணமாகப் படிpகளாகி ஜைமினி முனிவருக்குச் சந்தேகந்தீர்த்துச் சாப நிவிர்த்தி பெற்றார்கள். மார்க்கண்டேய புராணங் காண்க.

தர்மரதன் - சித்திராதன் புத்திரன்.

தர்மராஜன் - பாண்டுமக்களுள் மூத்தோன். தாய் குந்தி. இவன் யமன் பிரசாதிக்கப் பிறந்தவன். இவன் இயற்பெயர் யுதிஷ்டிரன். திரௌபதியிடத்தில் இவனுக்குப்பிறந்த புத்திரன் பிரதிவிந்தியன. இவன் வரலாறு பாரதமென்பதனுட் காண்க.

தர்மவியாதன் - மிதிலா நகரத்திற் பிறந்த ஒரு குறவன். இவன் குருபக்திமுதலிய சன்மார்க்கசீலங்களுடையவன். இவன் பூர்வத்திற் பிராமணனாயிருந்து சாபத்தால் இச்சென்மமெடுத்துக் கவுசிகனெனனும் பிராமணனால் ஞானோபதேசம் பெற்றவன்.

தர்மவிரதன் - தண்டகாரணியத்திலிருந்து ஒரிருஷி. இவர் ராமனுக்குப் பஞ்சாப்சரசரசினது வரலாறு கூறினவர்.

தர்மன் - (1) பிரமகன் பெற்ற ஒரு தேவதை. இத்தேவதைக்குச் சமன், காமன், ஹர்ஷன் என மூவர்குமாரர். (2) (ய) பிருது சிரவன்மகன். (3) தர்மராஜன்.

தர்மாரணியம் - இது குசன்மக்களுள்ளொருவனாகிய ஆர்த்தரஜன் என்பவனால் உண்டாக்கப்பட்;ட நகரம்

தலன் - சலன்தம்பி. (சலன்காண்க)

தலாதலம் - ஓரதோலோகம். இதற்பரற் கல்லுகளேயுள்ளன. இங்கேகாலநேமி முதலிய அசுரர்கள் இராச்சியம் பண்ணுவார்கள்.

தலைச்சங்கநாண்மதியம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.

தலைச்சேங்காடு - சோழநாட்டுள்ள ஓரூர். தலைச்செங்கானமெனவும் வழங்கும். இது மாடலனென்னும் அந்தணனூர். காவிரிப்பூம்பட்டினத்தருகிலுள்ளது.

தலையாலங்கானம் - இது நெடுஞ்செழியன் பகையரசரைப் பெரும்போரில் வென்றவிடம். திருவாலங்காட்டோடு மயங்காவண்ணம் தலையாலங்கான மெனப்படுவதாயிற்று.

தவித்தியோதன் - (ய) துந்துபிமகன். அபிஜித்தன்.

தனஞ்சயன் - (1) அர்ச்சுனன். (2) அக்கினி. (3) தனஞ்சயம் என்னம் நிகண்டு செய்த சமஸ்கிருதகவி.(4) மணவூரிலிருந்தவொருவணிகன். இவனே கடம்பவனத்திற் சொக்கலிங்க மூர்த்தியைக் கண்டுவந்து குலசேகரபாண்டியனுக்குத் தெரிவித்ததனை நகராக்குவதற்குக் காரணகர்த்தனாயிருந்தவன்.

தனிகன் - (ய) துர்த்தமன் புத்திரன். கார்த்தவீரியார்ச்சுனன் பாட்டன்.

தனு - கசியபன்பாரி. தடிப்பிரசாபதி மகள். இவள் வழி வந்தோர் தானவரெனபப்டுவர்.

தனுத்தரன் - கனகவிசயர்க்கு நட்பாளனாகிய ஓர் அரசன்.

தன்வந்தரி - தீர்க்கதன்மன் புத்திரன். பூர்வம் சமுத்திரமதனகாலத்திற் பாற்கடலிற் பிறந்த தன்வந்தரியே ஆயுர்வேதத்தை வெளிப்படுத்த வேண்டி இத் தீர்க்கதமன் புத்திரனாக அவதரித்தார். (2) ஆயிரத்துத்தொளாயிரத்தைம்பத்தேழு வருஷங்களுக்குமுன்னே விக்கிரமார்க்கன் சபையில் விளங்கியவன். துன்வந்தரி என்னும் பட்டங்கொண்டவன். இவனே தன்வந்தரிநிகண்டு செய்தவன்.

தாடிhயணி - தடிப்பிரஜாபதி மகளாகிய உமாதேவி. (2) அதீதி

தாடகை - மாரீசன் தாய்;. இவ்விராடிசியை இராமன் விசுவாமத்திரரோடு யாகங் காக்கச்சென்றபோது வழியிலே கொன்றொழித்தான். இவள் சுகேதனென்னும் யடின்மகள். ஆயிரம் யானைப்பல முடையவள். இவள் ஒரு காலத்தில் அயஸ்தியர் ஆச்சிரமத்திற் சென்று அவரைப் பயமுறுத்த, அவர்,சினந்து நீயும் உண்புத்திரரும் இராடிசாமிசம் பெறுகவென்று சபிக்கப்பட்டவள்.

தாண்டவராயசுவாமிகள் - சோழதேசத்திலே நன்னில நகரிலே அந்தணர் குலத்திலே அவதரி;த்து விளங்கிய இவர் வேதாந்தசாஸ்திரவுண்மை நிலைகண்ட கைவல்லியநவநீதம் என்னுந் திவ்விய நூல் செய்தவர்.

தாதாசாரியர் - இவர் அப்பைய தீடிpதர் காலத்திலே காஞ்சிபுரத்திலேயிருந்தபண்டிதர்.வைஷ்ணவப்பிராமணர். அப்பபையதீடிpதர்மீது பொறாமை யுடையராய்த் தமக்கு நட்பினனாகிய அவ்வூரரசனை வசியம்பண்ணிக் கொண்டு அவரை அவன் சமுகத்தில் வரவழைப்பித்து அவரோடு வாதம் புரிந்தும்நிருவகிக்கமாட்டாது தோற்றவர். தீடிpதருக்குமத்தியான காலத்திலே வயிற்றுவலிவந்து தணிவதியல்பு அவ்வேளையில அவரோடு வாதம் புரிந்து வெல்லக் கருதித் தாதாசாரியர் அரசன்சபையிலவரைவரவழைத்து வாதம் புரியத் தலைப்பட்டபோது தீடிpதர் தமது உத்தரீயததை யெடுத்து அரசன் முன்னே வைத்துவிட்டு வாதம்புரிந்தனர். வயிற்றுவலி அவ்வுத்தரீயததைப்பற்றி நின்று அதனை முடக்கி யலைத்தது. அதுகண்ட வரசன் அதிசயித்துக் காரணம்வினவ, தீடிpதர் பழைய வினைப்பயனைத் தாம் மனம்பொருந்தி யநபவித்துவருவதாகவும் அங்ஙனஞ் செய்யாதிருந்தால் மேலைப்பிறவியிலுஞ் சென்று வருத்துமென்றும், அதுபற்றியே தாம்தன்னைத் தடுத்து நீக்கிக் கொள்ளாதிருப்பதென்றும் கூறினர். அரசன் அதுகேட்டு அவர்மாட்டுப் பேரன்பும் பேரச்சமுமுடையனாகித் தாதாசாரியருடைய வஞ்சக்கருத்தை யெடுத்துக்கூறி அவரைக்கண்டித்து நட்பையுந்துறந்தான்.

தாதை - இவனும் விதாதையும் சுவாயம்புவமனுவுக்குத் துணைவர்களாகப் பிரமாவினாற் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். இவர்களோடு வருணன் பாரியாகிய ஜியேஷ்டா தேவியும் விஷ்ணு தேவியாகிய லடி{மியும் சிருஷ்டிக்கப்பட்டார்கள். இது ஓரு கற்பத்துவரலாறு. முற்றொரு கற்பகாலத்தில் பிருகுவுக்குக் கியாதியிடத்திலே தாதை விதாதை லடி{மி இம்மூவரும் பிறந்தார்களென்பது பாகவதக்கூற்று.

தாத்திரிகை - திரௌபதியினது பரிசாரகி.

தாபத்தியர் - தபதிவமிசத்துப் பிறந்த கௌரவபாண்டவர்கள்.

தாம்க்கிரந்தி- அஞ்ஞாத வாசத்திற் குதிரைப்பாகனாக வேஷம்பூண்ட நகுலன் பெயர்.

தாமசன் - நான்காம் மனு. இவன் றநதை சுராஷ்டிரன். தூய் உற்பலாவதி.

தாமத்தர் - திருவள்ளுவருக் குரை செய்த பதின்மருளொருவர்.

தாமிரபருணி - (1) அஞ்சனம் என்னும் திக்கியானையினது பெண், (2) தடிpணத்திலுள்ள வொருநதி, இதில் முத்துச்சிப்பிகள் அகப்படும்.

தாமிரலிப்தி - கங்காநதி சங்கமத்;துக்குச் சமீபத்திலுள்ள ஒரு நகரம்.

தாமிரன் - (த) முராசுரன் மகன். கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன.

தாமிரை - தடிப்பிரஜாபதி மகள். தாய் உற்பலாவதி.

தாமோதரன் - அசோதையால் உரலோடு கட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு அது காரணமாக வநதபெயர். தாமம் - கயிறு, உதரம் - வயிறு.

தாயுமானேச்சுரர் - திருச்சிராப்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

தாயுமானவர் - இற்றைக்கு நூற்றெழுபது வருஷங்களுக்குமுன்னே திருச்சிராப்பள்ளியிலே அரசு செய்த விஜயரங்கசொக்கநாதநாயகர்க்குச் சம்பிரதியாக விருந்த கேடிலியப்பபிள்ளைக்கு அருந்தவப்புதலவராக அவதரித்த இவர், சிவயோகியாகி அற்புதபததிட ரங்கச்கான் றெழுகுவதாகிய அநேக பாக்களைப் பாடியவர். அப்பாக்கள் தாயுமானவர் பாடலெனப்படும். அந்நூலிலே சம்ஸ்கிருதச்சொற்கள் மிக மலிந்து கிடத்தலின் அவர் வடமொழியிலும்வல்லுநரென்பது நன்கு துணியப்படும்.

தாரகஜித்து - குமாரக்கடவுள்.

தாரகன் - (1) (தி) வச்சிராங்கனுக்கு வச்சிராங்கி வயிற்றிற் பிறந்த ராடிசன். இவன் பிரமாவை நோக்கித் தவஞ்செய்து எவராலுஞ் சாகாதவரம் வேண்ட பிரமா அவனுக்குப் பிரசன்னாராகி ஏழநாட்பிள்ளையன்றி மற்றொருவருங் கொல்லாவரங் கொடுத்தார். (2) தநுபுத்திரன். (3) இரணியாடின்மகன். இவன் காலநாபன் எனவும்படுவன். (4) கசியபனுக்கு மாயையிடத்துப்பிறந்த புத்திரன். சூரபன்மன்றம்பி. சுப்பிரமணியராற் கொல்லப்பட்டவன். (5) கிருஷ்ணன் சாரதி.

தாரகேதன் - பாதாளகேதன் றம்பி. இவன்றமையனைக் குவலயாசுவன் கொன்றான்.

தாரன் - தாரை தந்தை. இவன் பிருகஸ்பதி குமாரன். இவன் வாநரருள்ளே மகா புத்திமான்.

தாராபுரம் - போஜன் ராசதானி.

தாரிடிp - கந்தரனுக்குத் தமனகையிடத்துப்பிறந்த பெண். இவள் படிpரூபமுடையவள். வபுசு என்னும் அப்சரசை துர்வாசர்சாபத்தால் படிpயாகித் தருமபடிpகளுக்குத் தாயாயினாள்.

தாரிடிpயன் - (1) கசியபன். (2) ஒரிருஷி. இவர் ஆச்சிரமத்தில் இவர்மகன் மான்றோல் போர்த்திருந்தபோது அவரை மானெனநினைந்து கைகயவமிசத்துத்ட துந்துமாரன் அம்பினாற் கொன்றான். ஆறியாது செய்தானென்பதனைப் பொறுத்துத் தமது தபோபலத்தால் மகளை உயிர்பெற்றெழுப்புமாறு செய்தவர். (3) கருடன். (4) விஷ்ணு பரிசாரகருளொருவன்.

தாரஷ்டவமிசம் - வைவசுவத மனுபுத்திரனாகிய திருஷ்டனால் வந்தவமிசம்.

தாருகவனம் - தேவதாரு வனம் காண்க.

தாரை - (1) ஒரப்சரசை. (2) பிருகஸ்பதி பாரி. இவள் சந்திரனைச் சோரமார்க்கத்திற்கூடிப் புதனைப்பெற்றவள். (3) தாரன்புத்திரி. வாலி பாரி. ஆங்கதன் தாய்.

தார்க்கிகன் - வித்தியா கற்பனை, தோஷம், பிரவிருத்தி, சனனம், துக்கமென்பவைகளைத் தனித்தனி நீக்கிச் செல்ல, முடிவினின்ற துக்கம் ஒழியுமென்றும், இதுவே முத்தியென்றுங் கூறும் சமயி.

தாளவகையோத்து - பழைய தமிழ் நூல்களுளொன்று. அதிற்கூறப்படும் பொருள் தாளவிலக்கணம். கடைச்சங்கத்தார் காலத்தாற் செய்யப்பட்டது போலும்.

தாளஜங்கன் - கார்த்தவீரியார்ச்சுனன் பௌத்திரன். இவன் ராஜதானி மாகிஷ்மதிபுரம்.

தானவர் - கசியபனுக்குத்தனுவினிடத்துப் பிறந்த புத்திரர். இச்சந்ததியிலே பெயர்படைத்தோராவார், அயோமுகன், ஏதசக்கரன், புலோமன், கபிலன், அந்தகன், அடிதானவன், அரிஷ்டன், தாரகன், துவிமூர்த்தன், சம்பரன், ஹயக்கிரீவன், விபாலசன், சங்குசிரசு, சுவர்ப்பானன், விருஷபர்வன், விப்பிரசித்தி, ராகு, கேது, வாதாபி, இல்வலன், நமுசி, காலநாபன்ன, வக்திரயோதி, திரியம்சன், சல்லியன், நபன், நரகன், புலோமன், கசிறுமன், அந்தகன், த}மிரகேது, விருபாடின், துர்ச்சயன். ஐவசுவாநரன், தாபகன் முதலியோர்.

தானியமாலினி - இராவணனைக் கூடி அதிகாயன் என்னும் புத்திரனைப் பெற்ற அப்சரப்பெண்.

திக்குபாலகர் - அஷ்டதிக்குபாலகர்

திதி - கசியபன் மூத்தபாரி. தடின்மகள்.இவள் வயிற்றிற் பிறந்தோர் தைத்தியர்.

திதிடின் - மகாமநுவினது இரண்டாம் புத்திரன்.

தித்தன் - சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியினது தந்தை. இவன் உறையூரிலிருந்தரசு புரிந்தவன். (அகநானூறு)

திபோதரசன் - திவோதாசன் காண்க.

திமித்துவஜன் - தசரதனைத் துணைக்கொண்டு இந்திரனாற் கொல்லப்பட்ட அசுரன். அந்த யுத்தத்திலே தசரதன் மூர்ச்சையடைந்த போது கைகேசி அவன் மூர்ச்சையைத் தீர்த்து அவனை ரடிpத்தாள். அது கண்டு தசரதன்மகிழ்ந்து அவளை நோக்கி யாதுவேண்டுமென்ன, அவள் நான் இனிமேல் எக்காலத்திலாயினும் இரண்டு வரம் வேண்டுவேன். அப்போது அவைகளை மறாத தருதல் வேண்டுமென்ன, அங்ஙனமே யாகுகவென்று அவளுக்கு வாக்குத்தசரதஞ் செய்தான். அதனை வாய்ப்பாகக் கொண்டே கைகேயி இராமபட்டாபிஷேககாலத்திலே அவனைக் காடு செல்லவும் தன்மகன் பரதனை அரசுகொள்ளவும், இருவரங்கள் தசரதன் பாற் பெற்றனள்.

தியுதிமந்தன் - சுவாயம்புவமநுபுத்திரருள் ஒருவன். கிரௌஞ்சத்துவீபத்தை மனு இவனுக்குக் கொடுத்தான்.

தியுமத்சேனன் - சாளுவராஜன். சத்தியவந்தனுக்குத் தந்;தை. சாவித்திரிக்குமாமன்.

தியுமந்தன் - திவோதாசன்.

திரசதஸ்யன் - (இ) புருகுத்சன்மகன். அநரண்ணியன் தந்தை. வசுதன் எனவும் படுவன்.

திரயாரணன் - சூரியரணியன்.

திரயாருணி - (பு) ரிடியன் மகன்.

திரவிடம் - ஆந்திர கருநாடக தேசங்களுக்குத் தெற்கேயுள்ள தேசம். அது தமிழர்நாடென்பது.

திராடிhராமம் - இது மகாராஷ்டிரகர் நாடாந்தர தேசங்களுக்கு மத்தியிலுள்ள பர்வதத்தின் கணுள்ள சிவஸ்தலம்.

திராவிடம் - (1) தமிழ்;. (2) தமிழ் நாடு. (3) பஞ்ச திராவிடம்.அவை திராவிடகர்னாட கூர்ச்சர மகாராஷ்டிர தைலங்கமென்பன. இவ்வைந்து நாட்டுப் பிராமணரும் திராவிடரெனப்படுவர். தைலங்கம் தரிலிங்கம்மெனவும் படும்.

திராவிடாசாரியர் - வடமொழியிலே வேதாந்தசூத்திரத்திற்கு ஒருபாஷியஞ் செய்தவர். ராமாநுஜாசாரியர் செய்த பாஷியத்துள் இவர் மதமெடுத்துக் கூறப்படுதலின் இவர் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் விளங்கினவராதல் வேண்டும். தமிழ்நாட்டாராதலின் இப்பெயர் பெற்றார்.

திரிகர்த்தம் - ஆரியாவர்த்தத்துக்கு வாயுதிக்கிலுள்ள தேசம்.

திரிசங்கு - (இடி{) அரிச்சந்திரன் தந்தை. இத்திரிசங்கு தான் தேகத்தோடு சுவர்க்கம்புகவேண்டித் தனது குலகுருவாகிய வசிஷ்டரையடைந்து பிரார்த்தித்தான். அது கூடாதென்றவர்மறுக்க, அவர் புத்திரரிடஞ் சென்றான். அவர்கள் குருவாக்கைத் தடுத்தனையென்று நீசனாமாறு சபிக்க. அவன் விசுவாமித்திரரிடஞ் சென்றான். அவர் அவனுக்காக ஒரந்தரசுவர்க்கத்தையுண்டாக்கி அவனை அங்கே வைத்தார்.

திரிசடை - (ர) விபீசணன் புத்திரி. இவள் சீதாதேவி ராவணன் சிறையிலிருந்தபோது அவருக்கு நற்றுணையாயிருந்தவள்.

தரிசிரன் - இப்பெயரையுடைய இராடிசர் அநேகர். (1) விச்சிரவாவுபுத்திரன். இவன் ஜனஸ்தானத்திற் கரனோடிருந்தவன். (2) ராவணன்புத்திரன்

திரிதன் - பிரமமானசபுத்திரர்களுளொருவன்.

திரிதன்னுவன் - (இ) சுமனன் மகன். சூரியாரண்ணியன் தந்;தை.

திரிதிவை - பாரிபததிரபர்வதத்திலுள்ள நதி.

திரிபுரசுந்தரி - திருநாரை யூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். (2) திருவான்மியூலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

திரிபுரசுந்தரியம்மை - திருநல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

திரிபுராசுரர் - தாரகாசுரன் புத்திரராகிய கமலாடின், வித்தியுன்மாலி, தாரகாடின் என்னும் முவரும் இப்பெயர் பெறுவர். இவர்கள் சிவபெருமானை நோக்கித் தவங்கிடந்து இரும்பு வெள்ளி பொன் என்னும் மூன்று லோகத்தாலும் அமைந்த கோட்டைகளையுடைய மூன்றுஜங்கமபுரங்களைப் பெற்று அப்பட்டணங்களோடு அந்தரத்தெழுந்து தமக்கிஷ்டமாகிய விடங்களுக்குச் சென்று ஆங்காங்கு முள்ள பட்டணங்கள் மீதும். ஊர்கள் மீதும் உட்கார்ந்து அவைகளை நாசஞ்செய்துவந்தார்கள். அதுகண்ட விஷ்ணு நாரதரை ஏவித் திரிபுராசரருக்குப் பாஷண்டமதத்தை உபதேசிடத்தச் சிவன்மீது அவர் வைத்த பத்திக்கு ஊறசெய்வித்தார். அதனால் சிவபொருமான் இவர்களை அழிக்கநினைந்து யுத்தஞ் செய்து மூவரையுங் கொன்று தமது கணங்களோடு சேர்த்தருளினர்.

திருபுராந்தகேசுரர் - திருவிற் கோலத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

திரிபுருஷ்டன் - (ய) வசுதேவனுக்குத் திருத்தேவியிடத்துப் பிறந்த புத்திரன்.

திரிபுவனம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திரிமூர்த்திகள் - சுத்தப்பிரமம் சிருஷ்டி ஸ்திதி சங்காரமென்னும் முத்தொழிற்காகச் சகளீகரித்த பிரமா விஷ்ணு உருத்திரன் என்னும் மூன்று திருமேனிகள்.

திரியம்பகம் - வீரபத்திரர்கன் யாகத்தை அழிக்க எடுத்த வில்லு. அது பின்னர்ச் சீதையோடு நிலத்திற்றோன்றிக் கிடந்து அவர் கல்யாணகாலத்தில் ராமரால் முறிக்கப்பட்டது.

திரியம்பகன் - உருத்திரன். (முக்கண்ணனென்பது பொருள்)

திருஅகத்தியான்பள்ளி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். வேதாரணியத்துக்குத் தெற்கேயுள்ளது. சுவாமி பெயர் அகஸ்தியேசுரர். அம்மையார் பெயர் மையார்தடங்கண்ணி. சம்பந்தமூர்த்திநாயனார் திருவாய்மலர்ந்தருளிய தேவாரம் பெற்றது.

திருஅச்சிறுபாக்கம் - திருக்கழுக்குன்றத்துக்குத் தென்மேற்றிசையிலேயுள்ள சிவஸ்தலம். சுவாமி பெயர் பாக்கரரேசர். அம்மையார் ஆதிசுந்தர மின்னமையார். திருபுராசுரரையழிக்கும் பொருட்டெழுந்த சிவபிரானுக்குத் தேவர்கள் தேராகிகத் தம் உதவியின்றித் திரிபுரஜயங் கூடாதென்று நின்ற அத் தேவர் கருவத்தைப் பங்கஞ்செய்யுமாறு தேரச்சைச் சிவபிரான் திருவடிவைத் தொடித்ததலமாதலின் அச்சிறுபாக்கம் எனப்பட்டது. சம்பந்தர் தேவாரம் பெற்றது.

திருஅச்சோபுரம் - நடுநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருஅண்ணாமலை - பிரம விஷ்ணுக்களுக்குச் சோதிப் பிழம்பாக நின்று சிவன்தரிசனங் கொடுத்த தலம் இதுவே. இங்குள்ளது வேயுலிங்கம். இது நடுநாட்டிலுள்ள அதிப் பிரபலசிவஸ்தலம். மாணிக்கவாசகர் திருவெம்பாவையும் திருவம்மானையும் பாடியது இத்தலத்திலேயே. இது சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்க்கு ஜன்மஸ்தானமுமிதுவே.

திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிபிரமபுரநாதேச்சரர். அம்மையார் பவளவண்ணப்பூங்குழல் நாயகி. இவ்வாலயம் கோச்செங்கட்சோழராற் செய்விக்கப்பட்ட திருப்பணி. சம்பந்தராற்பாடப்பட்டது. இது சோமாசிமாறநாயனார் திருவவதாரஞ்;செய்தருளியதலம்.

திருஅம்பர்மாகாளம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். மாகாளர் காவலிலிருந்த இந்திராணியை அஜமுகி யிழுத்துக் கரங்கொய்யப்பட்ட ஸ்தலம். சம்பந்தராற்பாடப்பட்டது.

திருஅம்பிலாலந்துறை - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சத்தியவாகேசுரர். அம்மை சௌந்தரநாயகி. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது.

திருஅரசிலி - திரு அச்சிறுபாக்கத்திற்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம். சுவாமி அரசிலிநாதர். அம்மை பெரியநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருஅரதைப் பெரும்பாழில் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பாதாளேச்சுரர். அம்மை அலங்காரநாயகி. இரணிடயாடினைக் கொன்றும் மத்தங்கொண்ட வராகத்தினது கொம்பைச் சிவன் ஒடித்துத் தமது மார்பிலணிந்து கொண்ட ஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருஅரிசிற்கரைப்புத்தூர் - புகழ்த்தணைநாயனாரவதரித்த சிவஸ்தலம். அரிசில் நதிதீரத்திலுள்ளது. மூவராலும் பாடப்பட்டது.

திருஅரிமேயவிண்ணகரம் - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பெயர் குடமாடியகூத்தன். சத்தி விழியமுதவல்லி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பெற்றது.

திருஅவணிடவணல்லூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி காட்சிநாயகேசுரர். அம்மை சவுந்தரநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருஅழுந்தூர் - (1) காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வேதபுரேசுரர். அம்மை சௌந்தராம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது. (2) சோழநாட்டிலே காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பெயர் ஆமருவியப்பன். சத்தி செங்கமலவல்லி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்.

திருஅன்பில் - காவிரியின் வடகரையிலேயுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வடிவழகியநம்பி. சத்தி சௌந்தரியவல்லி. திருமங்கைஆழ்வார் மங்களாசாசனம்

திருஅன்னியூர் - சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆபத்சகாயேசுரர். அம்;மை பெரியநாயகி. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது.

திருஆய்ப்பாடி - காவிரியின் வடகரையிலுள்ள சிவஸ்தலம். சுவாமி பாலுகந்தார். அம்மை பெரிய நாயகி. நாவுக்கரசராலும் ஜயடிகள் காடவர்கோனாலும் பாடப்பட்டது.

திருஆலம்பொழில் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆத்மநாதேசுரர். அம்மை ஞானாம்பிகை. நாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருஆவூர்ப்பசுபதீச்சுரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பசுபதீச்சுரர். அம்மை மங்களநாயகி. சம்பந்தராற்பாடப்பட்டது.

திருஇடும்பாவனம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சற்குணநாதேச்சுரர். அம்மை மங்களநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருஇடைச்சுரம் - திருக்கச்சூராலக் கோயிலுக்குத் தெற்கே கழுக்குன்றுக்கு வடக்கேயுள்ள சிவஸ்தலம். சுவாமி இடைச்சுரநாதர். அம்மை இமயமடக்கொடி.சம்பந்தராற் பாடப்பட்டது.

திருஇந்தðர் - காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி சுகந்தவனநாதர். சக்தி புண்டரீகவல்லி. குலசேகராழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடப்பெற்றது.

திருஇராதாபுரம் - மறந்து மாலைக்காலங்காறும் வேட்டையாடித் தனது நகரஞ்சென்று சுவாமி தரிசனஞ் செய்யவியலாது காட்டிற்றங்கி அதுவேகவற்சியாக விருந்த வரகுண பாண்டியனுக்குச் சிவன் தரிசனமருளியதலம். அது பாண்டிநாட்டிலே தென்பாலிலுள்ளது. சுவாமி வரகுணபாண்டியேச்சுரர்.அம்மை நித்தியகல்யாணி.

திருஇராமனதீச்சரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி இராமநாதேச்சுரர். அம்மை கருவார்குழலி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருஇராமசநல்லூர் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி இராமநாதேச்சரர். அம்மை குணக்குன்றுநாயகி. இத்தலம் தாமிரவருணிநதி தீரத்திலுள்ளது.

திருஇராமேச்சரம் - பாண்டிநாட்டிலே சேதுதீர்த்தத்தை யடுத்துள்ள சிவஸ்தலம். ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து பூசித்த லிங்க மூர்த்தியையுடைமையின் இத்தலம் இராமேச்சரம் எனப்படுவதாயிற்று. சுவாமி இராமநாதர்@ அம்மை பர்வதவர்த்தனி. இதுமிக்க பிரசித்திபெற்ற சிவஸ்தலங்களுளொன்று. இமயமலைச்சாரலிலுள்ளாரும் வந்து தரிசிக்கும் பெருமைவாய்ந்தது. பக்தர்கள் இவ்விலிங்கத்துக்குக் கங்காதீர்த்தந் தினந்தினதோறும் காவடியிற் கொணர்ந்து அபிஷேகம் பண்ணுவார்கள். இத்தலம் வான்மீகியாலும் ராமாயணத்திலே எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

திருஇரும்பூளை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது ஆலங்குடியெனவும் படும். சுவாமி காசியாரணியேசர். அம்மை ஏலவார்குழலி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருஇரும்பைமாகாளம் - தொண்டைநாட்டிலே திருஅரசிலிக்குத் தென்கீழ்த்திசையிலேயுள்ள சிவஸ்தலம். மாகாளர்பூசித்ததலமாதலின் இப்பெயர்த்தாயிற்று. சுவாமி மாகாளேச்சுரர். அம்மை குயின்மொழி.

திருஇலம்பையங்கோட்டூர் - காஞ்சீபுரத்துக்கு வடகீழ்த்திசையிலுள்ள சிவஸ்தலம். சுவாமி சந்திரசேகரேச்சுரர். அம்மை கோடேந்துமலையன்மை. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருஇளையான்குடி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இளையான் குடிமாறந்hயனார் அவதரித்தருள் பெற்ற தலம்.

திருஈய்ங்கோய்மலை - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மரகதாசலேச்சரர். அம்மைமரகதவல்லிஇ. மாணிக்கவாசகரால் “ஈங்கோய்மலையிலெழிலது காட்டியும்” என்றெடுத்துக் கூறப்பட்டதலமிதுவே. சம்பந்தருமிதனைப்பாடினர். அகஸ்தியர் ஈவடிவங்கொண்;டு சென்று பூசித்தமையினிப் பெயர்த்தாயிறறு.

திருஉத்தரகோசமங்கை - பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். அது சிவன் மாணிக்கவாசகருக்குத் தரிசனங்கொடுத்து நீத்தல் விண்ணப்பம் பெற்றருளியதலம்.

திருஉரோமேச்சுரம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். ஊரோமரிஷி பூசித்தருள் பெற்ற தலமாதலின் அஃதிப்பெர்பெறவதாயிற்று.

திருஎயினனூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். ஏனாதிநாயனார் பிறந்தருள் பெற்றதலமிதுவே.

திருஎருக்கத்தம்புலியூர் - நடு நாட்டிலே மணிமுத்தாநதிதீரத்திலுள்ள ஒரு சிவஸ்தலம். நாகேந்திரபட்டணமெனவும் படும். சம்பந்தராற் பாடப்பட்டது. சுவாமி நீலகண்டநாயகர்@ அம்மை நீலமலர்க்கண்ணி

திருஎறும்பியூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அஃது எறும்பு பூசித்தருள் பெற்றதலமாதலின் இப்பெயர்த்தாயிற்று. நாவுக்கரசராற் பாடப்பட்டது. சுவாமி எறும்பீசர்@ அம்மை நறுங்குழல்நாயகி.

திருஏகம்பம் - சமயாசாரியா மூவராலும் பாடப்பட்ட காஞ்சீபுரத்துச் சிவஸ்தலம். மிக்க பிரபலமுடையது. சோழர்களுக்கு ராஜதானியாகவுமிருந்தது. சுவாமி ஏகாமபரநாதர், அம்மை காமாடிp. உமாதேவியார் மண்ணினாற் சிவலிங்கம் ஸ்தாபித்துப் ப10சிக்க, அதனைப் பரீடிpக்குமாறு சிவன் கம்பாநதியைப் பெருகச் செய்து அவ்விலிங்கத்தை மூழ்குவிக்க, தேவியார் மார்போடதனை யெடுத்தணைக்க, அவர் முலைத்தழும்பு பதிந்தபடியே சிவலிங்கப்பெருமானாகிய அற்புதநிகழ்ந்தஸ்தலம். அங்குள்ள மாமரம் வேதங்களின் வடிவம்.

திருஓமாம்புலியூர் - இது காவிரியின வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். புலியினாலே தொடரப்பட்ட ஒரு வேடன் இத்தலத்து வில்வமரத்திலேறியிருந்து அஸ்தமயனகாலமுதல் விடியுங்காறும் அம்மரத்துப் பத்திரங்களைப் பறித்தொவ்வொன்றாக அதன் கீழிருக்குஞ் சிவலிங்கப்பெருமானுக்கர்ச்சித்து விடியற்காலத்திலே அருள்பெற்று அப்புலியோடு நற்கதிபெற்றமையிடன் இப்பெயர்த்தாயிற்று. சுவாமி துயர்தீர்த்த செல்வர்@ அம்மை பூங்கொடியம்பிகை.

திருக்கங்கைகொண்டான் - பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருக்கச்சிஅத்திகிரி - இது தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வரதராஜப்பெருமாள். சக்தி பெருந்தேவியார்.

திருக்கச்சிஅனேகதங்காவதம் - காஞ்சீபுரத்திலே திருவேகம்பதைச் சார்ந்த சிவஸ்தலம்.

திருக்சச்சிஒணகாந்தன்றளி - இதுவும் திருவேகம்பத்தைச்சார்ந்த சிவஸ்தலம். இஃது ஒணகார்நதனென்னும் அசுரன் பூசித்தது.

திருக்கச்சிநெறிக் காரைக்காடு - இது தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருக்கச்சூராலக்கோயில் - திருப்போரூருக்கு மேற்றிசையிலுள்ள சிவஸ்தலம். சுந்தரமூர்த்திக்குத் திருவமுது அளித்ததலம்.

திருக்கஞ்சனூர் - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். மணக்கோலஞ்செய்து மணப்பந்தரின் கீழ் வந்திருந்த கன்னிகையினது கூந்தலை மாவிரதிவேடங் கொண்டு சென்று சிவபெருமான்கேட்க அதனை அக்கன்னியையின் தந்தையாகிய மானக்கஞ்சாறநாயனார் மறாது கொய்து கொடுத்ததஸ்தலமிதுவே. புழுக்கக்காய்ச்சிய இருப்புப்படி யேறிச் சிவபரஞ்சாதித்தஹரதத்தாசாரியர் திருவவதாரஞ்செய்த ஸ்தலமுமிதுவே. இங்குள்ள சிவமூர்த்தி அக்கினீச்சுரர்@ அம்மை கற்பகநாயகி.

திருக்கடம்பந்துறை - காவிரியின் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கடம்பவனநாதர்@ அம்மை முற்றிலா முலையம்மை. நாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருக்கடம்பூர்க்கரகோயில் - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி அமிர்தகடேசுவரர்@ அம்மை சோதிமின்னம்மை. இது நாவுக்கரசரும் சம்பந்தரும் பாடியதலம்.

திருக்கடவூர் - காவிரியின் தென்பாலிலே சோழநாட்டிலே கீழ்கடலோரத்திலேயுள்ள சிவஸ்தலம். முவராலும் பாடப்பட்டது. அது யமசம்மார மூர்த்தியாய்ச் சிவனெழுந்தருளியிருக்கும் ஸ்தலம். சுவாமி அமிர்தகடேசுரர்@ அம்மை அபிராமித்தாய். இஃது அட்டவீரட்டத்துள்ளுமொன்று. யமசங்காரம் காசியில் நடந்தது. குங்கிலியக்கலயநாயனார்க்கும் அபிராமிப்பட்டர்க்கும் ஜம்மஸ்தலமுமிதுவே.

திருக்கடவூர்மயானம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இதுவும் மூவராலும் பாடப்பட்டது.

திருக்கடிகை - தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். இது சோழங்கிபுரமென வழங்கப்படுவது. சுவாமி நரசிங்கமூர்த்தி. சத்தி அமிர்தவல்லி. பேயாழ்வார்,திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் என்னும் மூவராலும் பாடப்பட்டது.

திருக்கடிக்குளம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கற்பகேச்சுரர். அம்மை சௌந்தரநாயகி. இது கற்பகவிநாயகர் சிவன்பால் மாங்கனிபெற்ற ஸ்தலம். சம்பந்தர் பாடல் கொண்டது.

திருக்டித்தானம் - மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். திருவஞ்சைக்களத்துக்குத் தென்கீழ்த்திரையிலுள்ளது.

திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சொர்ணபுரேச்சுரர். அம்மை சிவாம்பிகை. நாவுக்கரசர் பாடல்கொண்டது.

திருக்கடைமுடி - இது சோழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தர் பாடல் கொண்டது.

திருக்கண்ணங்குடி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருக்கணமங்கலம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருக்கண்டியூர் - (1) பிரமனதுசிரங்கொய்த சிவஸ்தலம். காவிரியின்தென்கரையிலுள்ளது. சுவாமி வீரட்டானேச்சுரர். அம்மை மங்கைநாயகி. சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது. (2) காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி அருஞ்சாபந்தீர்த்த பெருமாள். சத்தி கமலமடந்தை.

திருக்கண்ணபுரம் - காவியின் தென்கரையிலுள்ள விஷ்ணுஸ்தலம். காளமேகப்புலவர். இங்குள்ள விஷ்ணுமூர்த்தியைப் பாடீராயின் கபாடந்திறவேனென்றூடி நின்ற காமக்கிழத்தியினது ஊடலைத் தீர்ப்பான்கருதி, “கண்ணபுரமாலே கடவுளிலும் நீயதிகம் - என்று முதலடியைக்கூறி அவளை மகிழ்வித்துக் கதவு திறப்பித்துபின்னர், உன்னிலுNமுh நானதிகமொன்றுகேள் - முன்னமே - உன்பிறப்போபத்தா முயர்சிவனுக் கொன்றுமில்லை, என்பிறப்பெண்ணப்பபோகாதே” என்று மற்றைய அடிகளையும் கூறி நிந்தாஸ்ததி செய்யப்பெற்றத மித்தலமே.

திருக்கண்ணப்பதேவர் மறம் - நக்கீரர் பாடிய பிரபந்தம். கல்லாடரும் இப்பெயரால் ஒரு பிரபந்தம் பாடினர்.

திருக்கண்ணமங்கை - காவிரியின் தென்கரையிலுள்ள விஷ்ணுஸ்தலம். சுவாமி சௌந்தரராஜப்பெருமாள்@ சத்தி கண்ணபுரநாயகி. குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மூவராலும் பாடப்பட்டது.

திருக்கண்ணார்கோவில் - இது சோழநாட்டிலேயுள்ள ஒரு சிவஸ்தலம். இது சிந்துபூந்துறை யெனவும் படும். சுவாமி கைலாயநாதேச்சுரர். அம்மை சிவகாமி. இஃது அகஸ்தியருக்குச் சிவன் திருமணக்கோலங்காட்டியருளிய தலம்.

திருக்கரம்பனூர் - காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி புருஷோத்தமன். சக்தி பூர்வாதேவி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருக்கரவீரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் சுவாமி கரவீரேச்சுரர்@ அம்மை பரத்தியடிமின்னாள். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கரிவலம்வந்தநல்லூர் - இது பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பால்வண்ணநாதர்@ அம்மை ஒப்பிலம்பிகை. குலசேகரபாண்டியன் வேட்டையாடும் போது எதிர்ப்பட்ட ஒரு யானையைத் துரத்த, அஃதோடிப்போய் இம்மூர்த்தியிருந்த புதரை வலம்போய்ச் சிவகணமாகப் பெற்றமையால் அத்தலம் இப்பெயர்பெற்றது.

திருக்கருகாவூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி முல்லைவனநாதர், அம்மை கரும்பனையாள், சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கருக்குடி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது வலங்கைமான் எனவும் படும். சுவாமி சற்குணலிங்கேச்சுரர்@ அம்மை சர்வாலங்கிருதமின்னம்மை. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கருப்பறியலூர் - இது ஞாயிறு என வழங்குஞ் சிவஸ்தலம். சோழநாட்டிலே காவிரியின் வடகரையிலுள்ளது. சுவாமி குற்றம் பொறுத்தநாதர்@ அம்மை கோல்வளைநாயகி. பூதவடிவுகொண்டு நின்ற தம்மையுணராமற் குலிசத்தாற்றாக்க வெத்தனித்த இந்திரன் மீது நாடகமாத்திரையாகக் காட்டிய கோபாக்கினியைத் தணித்துப் பிழை பொறுத்துஅவனுக்குச் சிவபிரான் அருள்புரிந்த தலமihதலின் இங்கே கோயில் கொண்டிருக்கும்மூர்த்தி கோபம் பொறுத்தநாதர் எனப்படுவர். சுந்தரர் சம்பந்தர்களாற்பாடப்பட்டது. துணித்த கோபாக்கினியை மேலைச்சமுத்திரத்திற் சிவன் வீச அது ஜலந்தராசுரனாயிற்று.

திருக்கருவிலி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிசற்குணேச்சுரர்@ அம்மை சர்வாங்கநாயகி. நாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருக்கருவூர்த்திருவாநிலை - கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். குருவூரெனவும்படும். பிரமா சிருஷ்டியின்றியிருந்த காலத்திற் காமதேனு சிவனை வழிபட்டுச் சிருஷ்டி அதிகாரம் பெற்றதலமாதலின் ஆநிலையெனப்பட்டது. சிவயோகமும் அணிமாதிசித்திகளும் வல்லவராய், மழைபொழிவித்தல், நினைத்தபோது வெயிலைநீக்கல், அரங்கநாதரை அழைத்தது முதலிய அற்புதங்களைச் செய்து விளங்கியவரும். திருவிசைப்பாப்பாடியவருமாகிய கருவூர்த்தேவர்க்கு அவதாரஸ்தலமுமிதுவே. சுவாமி பசுபதிச்சுரர். அம்மை கிருபாநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது. இத்தலசம்பந்தமான சரித்திரங்களுக்கு அளவில்லை.

திருக்கலிக்காமூர் - சோழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலமi;. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கலையநல்லூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுந்தராற் பாடப்பட்டது.

திருக்கவித்தலம் - இது காவிரியின் வடகரையின்கணுள்ள ஒருவிஷ்ணுஸ்தலம். சுவாமி கஜேந்திரவரதர். சுத்திரமாமணி வல்லி. திருமழிசையாழ்வாராற் பாடப்பட்டது.

திருக்கழிப்பாலை - சோழ நாட்டிலே காவிரியின் வடபாலிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது.

திருக்கழுக்குன்றம் - இது திருவிடைச்சுரத்துக்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம். சுpவபெருமான் றிருவாக்கிற்கு எதிர்வாக்குரைத்த துறவிகளிருவரும் கழுகுரூபம் பெற்று அங்கே வழிபட்டுக்கொண்டின்றுமிருக்கப் பெற்ற ஸ்தலம். மாணிக்கவாசகருக்குக் குரு வடிவுகாட்டியதலமிதுவே. “காட்டினாய் கழுக்குன்றிலே” எனத் திருவாசகத்திலே வருதல் காண்க. சுவாமி வேதகிரீச்சுரர்@ அம்மை பெண்ணினல்லாள். சமயாசாரியர் மூவராலும் தேவாரஞ் சூட்டப்பட்டது.

திருக்கழுமலமும்மணிக்கோவை - பட்டினத்தடிகள் பாடிய பிரபந்தங்களுளொன்று.

திருக்களக்காடு - பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சகலபுவனேச்சுரர்@ அம்மைஉமாதேவி.

திருக்களர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கள்ளில் - திருவொற்றியூருக்கு வடமேற்கிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கள்வனூர் - தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஆதிவராகன்@ சத்தி அபய நாயகி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருக்கற்குடிமலை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி முத்தீச்சுரர்@ அம்மை அஞ்சனாட்சி. மூவராலும் பாடப்பட்டது.

திருக்கன்றாப்பூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். பசுக்கன்றுத் தறியிலே வெளிப்பட்டு ஒரு பெண்ணுக்குச் சிவன் தரிசனங் கொடுத்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. நாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருக்காசிபேச்சுரம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம்;;. இது அம்பாசமுத்திர மெனவும்படும். சுவாமிபெயர் எரித்தாள்வுடையார்@ அம்மைசிவகாமி. சிவசர்மனது பொருளைக் கவர்ந்து கொண்டு பொய்ச்சத்தியஞ் செய்யப்புகந்த அர்ச்சனை எரித்துச் சிவசர்மாவை ஆட்கொண்டமையால் இம்மூர்த்தி எரித்தாள்வுடையார்என்னும் பெயர் பெற்றார்.

திருக்காட்கரை - மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். நம்மாழ்வாராற் பாடப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி - சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையின்கணுள்ள சிவஸ்;தலம். சுவாமி ஆரணியசுந்தரேச்சரர்@ அம்மை அகிலாண்டநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்காந்தீச்சுரம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது ஆழ்வார் திருநகரி எனவும் படும்.

திருக்காம்பிலி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருக்காரகம் - தொண்டைநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி கருணாகரன். சுத்தி பத்மாமணி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருக்காராயில் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம், இது சப்த விடங்கஸ்தலங்களுளொன்று. சம்பந்தராற்பாடப்பட்டது.

திருக்கார்வானம் - தொண்டை நாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமிநவநீதசோரன் சத்திகமலவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருக்சாவளம்பாடி - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி கோபாலன். சத்தி மடவரல்மங்கை. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருக்காழிச்சிராமவிண்ணகரம் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஸ்ரீநிவாசன்@ சத்தி உலகநாயகி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருக்காளத்தி - தொண்டைநாட்டுச் சிவஸ்தலங்களுளொன்று. இது சிலந்தியும் பாம்பும் யானையும் பூசித்து முத்திபெற்ற தலமாதலின் காளத்தியெனப்படும். இந்த ஸ்தலத்திலேயே கண்ணப்பர் முதிர்ந்த திடபத்தியினால ஆறு நாளுக்குள் முத்திபெற்றனர்.

திருக்கானப்பேர் - பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கானக்காளையீச்சுரர்@ அம்மை மகமாயி. சுந்தர சம்பந்தர்களாற் பாடப்பட்டது.

திருக்கானாட்டுமுள்ðர் - இது காவிரியின் வடகரையிலுள்ள வொரு சிவஸ்தலம். சுவாமி பதஞ்சலிநாதேச்சுரர். அம்மைதிரிபுரசுந்தரி. சுந்தரராற் பாடப்பட்டது.

திருக்கானூர் - காவிரியின் வடகரையிலுள்ளவொரு சிவஸ்தலம். சுவாமி செம்மேனிநாயகர், அம்மை சிவயோகநாயகி. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப்பட்டது.

திருக்கீழ்வேðர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி அடியலிங்கேசுவரர். அம்மை வனமுலைநாயகி. திருநாவுக்கரசர் சம்பந்தரென்னுமிருவராலும்பாடப்பட்டது.

திருக்குடந்தாபுரி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி ஆராவமுது. சத்தி கோமளவல்லி. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை யாழ்வாரென்னுமிவர்களாற் பாடப்பட்டது.

திருக்குடந்தைக்காரோணம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சோமநாதர். அம்மை தேனார்மொழி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மடந்தைபாகர். அம்மை பெரியநாயகி. திருநாவுக்கரசராற் பாடப்பட்டது. குடந்தை - கும்பகோணம்.

திருக்குடமூக்கு - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். கும்பகோணமெனவும் பெயர்பெறும். இங்கேயுள்ள தீர்த்தம் மாமகதீர்த்தமெனப்படும். ஒரு முனிவர் தமது தாயினது அஸ்தியை எடுத்துக் கொண்டு தீர்த்தங்கடோறுஞ் சென்று நீராடிச் சுவர்ணபுஷ்கரிணியென்னும் மாகமதீர்த்தத்திலும் ஆடிக் கரையேறி அவ்வென்புப்பொதியை அவிழ்த்துப்பார்க்க அது பொற்றாமரைப் பூவாயிற்று. சுவாமி கும்பேச்சுரர்@ அம்மை மங்களநாயகி. மூவராலும் பாடப்பட்டது.

திருக்குடவாயில் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கோணேசர். அம்மை பெரியநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்குரக்குக்கா - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கொந்தளேசர். அம்மை கொந்தளநாயகி. திருநாவுக்கரசராற் பாடப்பட்டது. அனுமார் பூசித்தது.

திருக்குரங்கணின்முட்டம் - தொண்டை நாட்டிலே வாலி பூசித்த சிவஸ்தலம். இது திருமாகறலுக்கு வடக்கேயுள்ளது. சுவாமி வாலீச்சுரர். அம்மை இறையார்வளையம்மை. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்குருகாவூர் - சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையின் கணுள்ள ஒரு சிவஸ்தலம. சுவாமி திருமேனிவெள்ளடையீச்சரர்@ அம்மை காவியங்கண்ணி. சுந்தரர் அப்பர் என்னுமிருவராலும் பாடப்பட்டது.

திருக்குருகூர் - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஆதிநாதப் பெருமாள். சத்தி ஆதிநாதவல்;லி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது. இதுவே பிரயோகவிவேகஞ்செய்த சுப்பிரமணிய தீடிதர் பிறந்த ஸ்தலம்.

திருக்குலசேகரன்பட்டினம் - இச்சிவஸ்தலத்திலுள்ள ஒரற்புதமாமரம் எக்காலத்தினும் பூவும் காயு மறாமல் விளங்கியிருப்பது. இத்தலம் திருச்செந்தூருக்குத் தென்மேற்கிலுள்ளது.

திருக்குழல்நாயகி - திருச்செங்காட்டங்குடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

திருக்குழந்தை - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி மாயக்கூத்தன. சத்தி குழந்தைவல்லி.

திருக்குறள் - தமிழ்ப்பாஷைக்குச் சிரோரத்தினமாக விளங்கும் இத்திவ்வியநூல் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாராற் செய்யப்பட்டது. அறம் பொருள் இன்பம் என்னும் முப்பாற் பொருளையும் எஞ்சாமல் எப்பாற்சமயத்தோர்க்கும் ஒப்பக்கூறும் அற்புதநூல். இதற்கிணையான நூல் உலகத்தில் மற்றெப்பாஷையிலும் இல்லை. இதற்குரை செய்தவர் தருமர் முதற் காளிங்கரீறாகிய பதின்மர். அவருட் பரிமேலழகருரையே வள்ளுவர் கருத்தை உள்ளவாறுரைப்பது. திருக்குறள் நூற்றுமுப்பத்துமூன்று அதிகாரமும் ஆயிரத்துமுந்நூற்றுமுப்பது திருக்குறளுமுடையது. சங்கப்புலவர்களாலே அந்நூலைப் பாராட்டிச் செய்யப்பட்ட பாமாலை திருவள்ளுவமாலையெனப்படும். அதற்குரை செய்தவர் திருத்தணிகைச் சரவணப்பெருமாளையர். திருவள்ளுவமாலையுரையோடு பரிமேலழகர் உரையை முதன்முதல் அச்சிட்டு வெளியிட்டவர் செந்தமிழ்க்கடலாகிய நல்லூர் ஆறுமுகநாவலர் “திருவள்ளுவர்” காண்க.

திருக்குறிப்புத்தொண்டர் - காஞ்சீபுரத்தில் ஏகாலியர்குலத்திலே அவதரித்த ஒரு சிவபக்தர். இவர் சிவபெருமான் ஒரு முனிவரைப்போல வேடங்கொண்டு சென்று ஒலித்துத் தரும்படி தம்மிடத்துக்கொடுத்த வஸ்திரத்தை மழையினால் ஒலித்துக் கொடுப்பதற்குக் கூடாதிருந்த காரணம்பற்றி, “வாக்குத்தவறியதே@ குளிரினாற் சிவபக்தர் வருந்துவாரே” யெறெண்ணித் தமது தலையைக்கல்லின்மீது மோதப்புகந்து சிவனுடைய திருக்கரத்தாலே தடுத்தாளப் பெற்ற பெரும்பேறு பெற்றவர்.

திருக்குறுக்கை - மன்மதனை யெரித்தசிவஸ்தலம். சுவாமி வீரட்டான ஈச்சரர்@ அம்மைஞானாம்பிகை திருநாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருக்குறுங்குடி - (1) பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். (2) பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருக்குற்றாலம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். அஃது அகஸ்தியமுனிவர் பொதிகைக்கு எழுந்தருளும் பொழுது அதனை விஷ்ணுதலமென்றுணராது அதன் வழியே செல்ல அங்கிருந்த வைஷ்ணவர்கள் அகஸ்தியர் தரித்திருந்த சிவசின்னங்களைக் கண்டு பொறாராகி வெளியேதுரத்த, அகஸ்தியர் புறத்தேபோய் அவ்வைஷ்ணவர்களைப் போல வடிவு தாங்கி மீண்டுசென்று அவர்களனுமதிப்படி ஆலயத்துட் பிரவேசித்து விஷ்ணுமூர்த்தியைத் தமது திருக்கரத்தாற் குழைவித்துச் சிவலிங்கப் பெருமானாகச் செய்து பூசித்து வைஷ்ணவர்களைக் கருவபங்கஞ் செய்தருளிய தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கூடலூர் - இது காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருக்கூடலையாற்றூர் - நடுநாட்டிலே மணிடமுத்தாநதிதீரத்திலேயுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருக்கூடல்தென்மதுரை - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி கூடலாழகர்@ சத்திவகுளவல்லி. திருமாழிசையாழ்வார் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் என்னு மூவராலும் பாடப்பட்டது.

திருக்கேதீச்சரம் - ஈழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது சம்பந்த சுந்தரர்களாற் பாடப்பட்டது. சிவாலயம் அழிந்து போயிற்று. முன்போற் சிவாலயத்திருப்பணி செய்யக் கருதி நாட்டுக்கோட்டை வணிகர் பெருமுயற்சி செய்துவருகின்றனர்.

திருக்கைச்சின்னம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கைலாயஞானவுலா - சேரமான் பெருமாணாயனார் செய்த பிரபந்தம்.

திருக்கொடுங்குன்றம் - பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சோலைமலைக்குக் கிழக்கேயுள்ளது.

திருக்கொடும்பாðர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருக்கோட்டையூர்க்கோடீச்சரம் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கோடீச்சுரர். அம்மை பந்தாடுநாயகி. திருநாவுக்கரசராலே பாடப்பட்டது.

திருக்கோண்டீச்சரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பசுபதிச்சுரர். அம்மை சாந்தநாயகி திருநாவுக்கரசராற் பாடப்பட்;டது.

திருக்கொள்ளம்பூதூர் - சோழநாட்டிலே குடமுருட்டி நதிக்கரையிலுள்ளஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது. சுவாமி வில்வவனநாதர். அம்மை சௌந்தரநாயகி.

திருக்கொள்ளிக்காடு - காவிரியின் தென்கரையதிலுள்ள ஒரு சிவஸ்தலம். சும்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கோகர்ணம் - திருக்கைலாசத்திலே சிவன்பால் ராவணன் இரந்து பெற்ற சிவலிங்கத்தை இவ்விடத்திலே ஓரந்தணச் சிறவராகத் தன்முன்னே தோன்றிய விநாயகர்கையிலே கொடுத்துச் சலமோசனம் பண்ணியபொழுது, விநாயகர் அதனைக் கீழே வைத்துவிட,அவன் தன் இருபது கரங்களாலும் பற்றி இழுப்பவும் அதுவராது பசுவின்காது போலக்குழைந்து வேர் கொண்டமையினால் “இதுமகாபலம்” என்று கூறிவணங்கி விடுத்துப்ட போயினான். அது பற்றி இத்தலம் கோகர்ணம் என்னும் பெயர்பெறுவதாயிற்று. இது துளுவநாட்டிலேயுள்ளது. திருநாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது.

திருக்கோடிக்கா - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருக்கோடிக்குழகர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது ஐயடிகள் காடவர்கோன் Nடித்திர வெண்பாவாலும், சம்பந்தரும் நாவுக்கரசரும் தேவாரத்தாலும் பாடியது.

திருக்கோட்டீச்சுரம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். அகஸ்தியர் மணலால் அமைக்க அமைக்க அமையாது நின்ற இலிங்கத்தைப்பார்த்து “இஃதென்ன கோட்டி” என்று கூறித்தியானித்தவளவில், அமைந்த விலிங்கத்தையுடைமையின் திருக்கோட்டியீச்சுரம் எனப்பெயர்பெற்றது.

திருக்கோட்டாறு - இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கோட்டியூர் - பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி சௌமிய நாராயணன். சத்தி திருமாமகள். பூதத்தாழ்வார் முதலிய ஐவராழ்வாராற் பாடப்பட்டது.

திருக்கோட்டூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருக்கோணமலை - ஈழ நாட்டிலேயுள்ள ஒரு சிவஸ்தலம். இது திருஞானசம்பந்தசுவாமிகளாற் பாடப்பட்டது. இது தடிpணகைலாசமூன்றனுளொன்று. வில்லிபுத்தூரர் பாரதத்திலே பாண்டிநாட்டையும் ஈழநாட்டையும இருதட்டாக்கிக் கோணமலையையும் பொதியமலையையும் அத்தட்டுகளிலெ யிட்டுச் சீர்தூக்கிநிறுப்பதற்காகப் பிரமதேவன் சேதுபந்தனத்தைத் துலாக்கோலாக்கினா னென்னுங்கருத்தினையுடைய “வன்றிரை வெங்களிற்றினம்” என்னுஞ் செய்யுளிற் கூறப்பட்டதுமிதுவே.

திருக்கோயில் இது சிவபிரான் ஆகா
சிதம்பரம் யலிங்கமூர்த்தியாக
புலியூர் எழுந்தருளியிருக்கும் சிவஸ்தலம். இங்கேயுள்ள கனகசபையிலே சிவபெருமான் பஞ்சகிருத்தியத்தின் பொருட்டு ஆநந்த தாண்டவஞ் செய்தருளுவர். இங்கே அருச்சகராகவுள்ளவர்கள். தில்லைமூவாயிரவர் எனப்படுவர். இது மிகப் பிரபலசிவஸ்தலம். மாணிக்கவாசகசுவாமிகளும் திருநாளைப்போவாரும் இன்னுமெண்ணிறந்த சிவபத்தர்களும் முத்திபெற்றதலமிதுவே. இச்சிவஸ்தலத் திருப்பணி பிரமம்முதற் பிருதுவியீறாகவுள்ள தத்துவங்களையெல்லாம் குறிப்பாகக் காட்டுவது. திருக்கோயில் என்னும் பெயர் தலைமை பற்றி வந்தகாரணவிடுகுறி.

திருக்கோலக்கா - சம்பந்தருக்குப்பொற்றாளம் அருளிய சிவஸ்தலம். இது சோழநாட்டிலுள்ளது. சுந்தரர் சம்பந்தர் இருவராலும பாடப்பட்டது.

திருக்கோவலூர்வீரட்டானம் - யுத்தசன்னத்தனாய்க்கைலாசகிரி நோக்கிச்சென்ற அந்தகாசுரனை வென்றருளிய சிவஸ்தலம். இஃது அட்டவிரட்டானத்தளொன்று. பெண்ணை நதி தீரத்திலுள்ளது. அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது.

திருக்கோவையார் - இது திருச்சிற்றம்பலக் கோவையாரெனவும்படும். இ;வ்வினிய நூல்செய்தவர் மாணிக்கவாசக சுவாமிகள். அது நானூறு கட்டளைக் கலித்துறைகளையுடையது. அது சிற்றின்பத்தின் மேல்வைத்துக் கூறப்பட்ட பேரின்பப்பொருளை யுடையது. அதற்கு அகப்பொருட்பகுதிகாக வைத்து உரை செய்தவர் நச்சினார்க்கினியர். அவ்வுரையைப் பேராசிரியர் உரை யென்பர் ஒரு சிலர். திருக்கோவையார் உண்மை ஞானப்பொருளைத் திருக்கோவை யாருண்மையென்னும் பெயராற் செய்தவர் திருவாரூர்ச் சுந்தரதேசிகர். கடவுட்பத்தியிலழுந்தி ஆனந்த பரவசப்பட்டு நிற்போர் அன்மாவையும் பதியையும் நாககநாயகி பாவனைபண்ணிப்பாடுதல் இயல் பென்பது அப்பர் திருமூலர் பாடல்களாலும் பெறப்படுதலின், சிவயோகஞ்சாதித்த மாணிக்கவாசகசுவாமிகள் செய்த திருக்கோவையாரும் பேரின்பப்பொருள் மேலதேயாம்.

திருக்கோழம்பம் - காவிரியின் தென்கரையிலுள்ளதொரு சிவஸ்தலம் சுவாமி கோகிலேச்சுரர்@ அம்மை சௌந்தரநாயகி. அப்பர் சம்பந்தர்களாலே பாடப்பட்டது.

திருக்கோளிலி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கோளிலிநாதர்@ அம்மை வண்டமர்பூங்குழல். மூவராலுந் தேவாரஞ்சூட்டப்பட்டது. சப்தவிடங்கஸ்தலத்தளொன்று. சுந்தரமூர்த்தி தாம் குண்டையூர்க்கிழவர் பாற்பெற்ற நென்மலையைக் கொண்ட போதற்கு ஆளின்மையால் வருந்திக்கருணாமூர்த்தியை நோக்கி “ஆளில்லையெம்பெருமான்” என்று பாடிப்பூத கணங்களை ஆளாகப் பெற்றதலமிதுவே.

திருக்கோளுர் - பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். இது நம்மாழ்வாராற் பாமாலை பெற்றது.

திருச்சக்கரப்பள்ளி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருச்சங்கநாரயணார்கோவில் - பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருச்சத்திமுற்றம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுத்திமுற்றப்புலவர் விளங்கியஸ்தலமுமிதுவே. சுவாமி சிவக்கொழுந்தீச்சரர்@ அம்மை பெரிய நாயகி. நாவுக்கரசர், “கோவாய்முடுகி யடுதிறற்கூற்றங்குமைப்பதன்முன், பூவாரடிச் சுவடென்மேற் பொறித்துவை” என்று தமது தேவாரத்தில் விண்ணப்பஞ் செய்தஸ்தலமுமிதுவே.

திருச்சாத்தமங்கைஅயவந்தி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் இது சிவனடியார் வேண்டும் எதனையும் மறாது கொடுக்கும் இயல்புடையராகிய இயற்பகைநாயனாரிடத்திலே சிவபிரான் ஒரு விடபுருடனாகிச் சென்று அவர் மனைவியை வேண்ட,மறாது கொடுக்கத் துணிந்த அந்நாயனாருடைய பத்தியை மெச்சி அவருக்கு முத்தியளித்ததலம்.

திருச்சிக்கல் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். திருஞானசம்பந்தராற் பாடப்பட்டது.

திருச்சிங்கவேள்குன்றம் - வடநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.

திருச்சித்திரகூடம் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். இது சிதம்பரத்துக்கு வைஷ்ணவர்கள் இட்டுக்கொண்டபெயர். சுவாமி கோவிந்தராசன். சத்தி புண்டரீகவல்லி. குலசேசராழ்வார் முதலியோராற் பாடப்பட்டது.

திருச்சிராப்பள்ளி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் தனகுப்தன் மனைவி சிவபக்தியிற் சிறந்தவளாயொழுகி வருநாளிற் கருப்பவதியாகிப் பிரசவித்தாள். அச்சமயம் அவள் தாய் காவிரிப்பெருக்கால் அக்கரையில் நின்றுவிடச் சிவபிரான் அத்தாயைப்போல உருவங்கொண்டு சென்று போய் அப்பெண்ணுக்குப் பிரசவஅறையில் உதவி புரிந்திருந்தார். அதுபற்றி இத்தலத்திலெழுந்தருளியிருக்கும் சுவாமிக்குத் தாயுமானார் என்னும் பெயருண்டாவதாயிற்று.

திருச்சிவபுரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மங்களேச்சுரர். அம்மை மங்களநாயகி.

திருச்சிறுகுடி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மங்களேச்சுரர். அம்மை மங்களநாயகி.

திருச்சிற்றேமம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி பொன்வைத்தநாதேச்சரர். அம்மை அகிலாண்டேசுவரி. திருஞானசம்பந்தராற் பாடப்பட்டது.

திருச்சுழியல் - பாண்டியன் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருமேனிநாதேச்சுரர்@ அம்மை துணைமாலை. சுந்தரமூர்த்தி சுவாமிகளாற் பாடப்பட்டது.

திருச்செங்காட்டங்குடிக்கணபதீச்சரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சிறுத்தொண்டநாயனார் விளங்கிய ஸ்தலமுமிதுவே, சுவாமி கணபதீச்சுரர்@ அம்மை திருக்குழனாயகி.

திருச்செங்குன்றூர் - (1) கொங்கு நாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி அர்த்தநாரீஸ்வரர்@ அம்மை பாகாம்பிரியாள். திருஞானசம்பந்தராற் பாடப்பட்டது. (2) மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருச்செந்தூர் - சீரலைவாயெனப்படும் சுப்பிரமணியஸ்தலம் பாண்டிநாட்டிலே சமுத்திரதீரத்துள்ளது. சுவாமி சுப்பிரமணியர்@ அம்மை தெய்வானை.

திருச்செப்பறை - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி தியாகேச்சுரர்@ அம்மை சிவகாமிஅம்மை. இத்தலம் திருநெல்வேலிக்கு வடகீழ்த்திசையிலுள்ளது.

திருச்செம்பொன்செய்கோவில் - காவிரியின் வடகரையிலுள்ள ஒருவிஷ்ணுஸ்தலம். சுவாமி கிருபாகரன்@ சத்தி அல்லிமலர்மங்கை. திருமங்கையாழ்வாராற்பாடப்பட்டது.

திருச்செம்பொன்பள்ளி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சொர்ணபுரேச்சுரர்@ அம்மைசுகந்தவனநாயகி. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது.

திருச்சேய்ஞலூர் - குமாரக்கடவுளுக்காக விசுவகர்மாவினா லமைக்கப்பட்ட நகரம். இது சோழநாட்டிலுள்ளது. இது வடமொழியிலுஞ் சேஞலூரென்றே வழங்கப்பட்டுள்ளது. குமாரக்கடவுள் சூரசங்காரத்தின் பொருட்டுச் செல்லும் வழியில் ஒருநாள் தங்கிச் சிவபூசைசெய்து ஆயதங்கள் பெற்றதலமிதுவே. இங்கெழுந்தருளியிருக்குஞ் சிவமூர்த்தி சத்தகிரீசர்@ அம்மை சகிதேவி. சுண்டீசர் அவதரித்ததலமுமிதுவே. சம்பந்தராற்பாடப்பட்டது.

திருச்சேரன்மாதேவி - பாண்டிநாட்டிலுள்ள ஒரு ஒரு சிவஸ்தலம்.

திருச்சேர்ந்தமங்கலம் - பாண்டிநாட்டின் கணுள்ள சிவஸ்தலம்.

திருச்சேறை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி செந்நெறியப்பர்@ அம்மை ஞானவல்லி. நாவுக்கரசர்சம்பந்தர் என்னுமிருவராலும் பாடப்பட்டது. (2) காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருச்சோமேச்சுரம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது ஆற்றூர் எனவும்படும்.

திருச்சேற்றுத்துறை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி தொலையாச்செல்வீச்சுரர்@ அம்மை ஒப்பிலாம்பிகை. மூவராலும் பாடப்பட்டது.

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் - “சம்பந்தர்” காண்க.

திருடநேமி - (பு) சத்தியதிருதன் மகன்.

திருடவிரதன் - (அம்) விஜயன் மகன்.

திருடஹனு - (பா) சேனசித்தன்மகன்.

திருடாசுவன் - (இடி{) தண்டாசுவன்.

திருணவிந்து - மனுச்சக்கரவர்த்தி வமிசத்தில் வந்த புதன்மகன். விசாலன்தந்தை.

திருணாவர்த்தன் - (1) சுழல்காற்று ரூபத்தோடு சென்றுரெபல்லையிலே சிசுவாகவிருந்த கிருஷ்ணனை வாரிக்கொண்டந்தரத்தெழந்த போது, அங்கே அக்கிருஷ்ணனாற் கொன்றெரிக்கப்பட்டவன்.

திருததேவி - தேவகன்மகன். வசுதேவன் பாரி.

திருதராஷ்டிரன் - (1) விசித்திரவீரியன் மனைவியாகிய அம்பிகை நியோகநியாயம் பற்றி வியாசரைக்கூடிப்பெற்ற புத்திரன். அம்பரிகை நாணத்தாற் கண்ணை மூடிக்;கொண்டு வியாசரைக்கூடினமையின் இவன் அந்தகனாகப்பிறந்தான். இவன் காந்தாரியை மணம்புரிந்து துரியோதனன் முதலிய நூற்றுவர் புத்திரரைப் பெற்றான். திருதராஷ்டிரன் மூத்ததோனாயினும் அந்தகனாதலின் அவனுக்குரிய அரசு அவன் தம்பி பாண்டுவுக்காயிற்று. பாண்டு பரமபதம் அடைந்தபின்னர் அவன் புத்திரராகிய பாண்டவர்க்குரிய அரசைத் திருதராஷ்டிரனும் அவன் மக்களும் வஞ்சனையாற் கவர்ந்து கொண்டு அப்பாண்டவர்க்கு ஆற்றொணாப் பெருந்துன்பங்கள் செய்து வந்தார்கள். அது காரணமாக மூண்ட செரும்போரிலே துரியோதனனை வீமன் கொன்று தொலைத்தான். திரதராஷ்டிரன் தன்மகனைக் கொன்றபழிக்குப் பழிவாங்குங் கருத்துடையனாய்த் தன்மேலிட்டிருந்த கவசத்தினுள்ளே முள்வேற்படைக்கலங்களை மறைத்துத் தரித்துக் கொண்டு அசையால் வீமனைத் தழுவுவான் போன்று தழுவச் சமயம் பார்த்திருந்தான். அஃதுணர்ந்து கிருஷ்ணன் திருதராஷ்டிரனுக்கு ஒரு சிலாவிககிரகத்தைக் காட்ட, அவன் அதனை வீமனெனக்கொண்டு தழுவிப்புரண்டு ஆயுதங்களை முரித்துத் தான்உள்ளத்துக் கொண்டவஞ்சத்தையும் வெளியாக்கி வெள்கி மானங்குலைந்தான். இங்ஙனமெல்லாஞ் செய்தானாயினும் அவைகளைப் பொருட்படுத்தாது யுதிஷ்டிரன் அவனைச் சாங்காறும் தந்தைக்குச் சமானமாகவே வைத்துப் பரிபாலித்து வந்தான்.

திருதன் - காந்தாரன் பௌத்திரன். (2) கங்காபுத்திரன்.

திருத்தங்கால் - பாண்டி நாட்டுள்ளதோரூர். இவ்வூர்வார்த்திகனுக்கு ஒரு பாண்டியனால் பிரமதாயமாகக் கொடுக்கப்பட்டது. ஸ்ரீ வில்லிபுத்தூருக்குச் சமீபமாகவுள்ளது (சிலப்)

திருத்தஞ்சைநகர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். தஞ்சாவூரெனவும் வழங்கப்படும். சரபோஜி முதலிய அரசர் அரசுசெய்திருந்த ராஜதானி. இவ்வாலயத்துக் கர்ப்பக்கிருகத்துச் சிலாசாசனங்களால் அநேக பூர்வசரித்திரங்கள் விளங்கும். சுவாமி பிருகதீசுரர்@ அம்மை உமாமகேசுவரி. கருவூர்த்தேவரால் திருவிசைப்பாவும் அஷ்டபந்தனமும் பெற்றதலம்.

திருத்தண்கலூர் - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருத்தண்கா - தொண்டைநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி தீபப்பிரகாசன்@ சத்தி மரகதவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருத்தண்டலைநீணெறி - இதுகாவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி நீணெறிநாதேச்சுரர்@ அம்மை ஞானநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருத்தக்கதேவர் - சீவக சிந்தாமணிசெய்த தமிழ்ப்புலவர். இவர் சோணாட்டிலே விளங்கிய சமண சமயி. தமிழ்ப்புலமையில் மிக்க சாதுரியமுடையவர். இவர் செய்த சீவகசிந்தாமணி சிறந்த காவிய நூல்களுளொன்றாக விளங்குகின்றது. இவர் பொருணுட்பமும் சொற்சுருக்கமும் சிருங்காரமும் பெறக் கவிபாடுந்திறமையுடையவர். கும்பர் பொருளாழமும் செஞ்சொற் சிறப்பும் சந்தமும் பெறப் பாடுந்திறமையுடையவர். இருவர்க்கும் முந்தினவராகிய திருவள்ளுவர் பலபாக்களாற் கூறத்தக்க பரந்த பொருளைச் சிலசொற்களால் அழகெல்லாம் பொருந்தப் பாடுந்திறமையும் பரந்தஞானமுமுடையவர். இவையே அவர் தம்முள் வேற்றுமை. திருத்தக்கதேவர் கடைச்சங்ககாலத்தவரெனக் கொள்ளப்படுவர்.

திருத்தருமபுரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி யாழ்முரிநாதேச்சுரர்@ அம்மை சதாமதுராம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருத்தலைச்சங்காடு - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சங்கநாயகேச்சுரர்@ செங்குரநாதேச்சுரர்@ அம்மை சௌந்தரி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருத்தலையாலங்காடு - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆடவல்லவீச்சுரர்@ அம்மை திருமடந்தை. நாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருத்தலையூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். ஊருத்திரபசுபதிநாயனார். திருவவதாரஞ் செய்தருளியதலம்.

திருத்திலதைப்பதி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மதிமுத்தநாதேச்சரர்@ அம்மை பொற்கொடி.

திருத்தனைநகர் - கெடிலநதி தீரத்துள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருநந்தீச்சுரர்@ அம்மை ஒப்பில்லாநாயகி. சுந்தரராற் பாடப்பட்டது.

திருத்துரத்தி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது குற்றாலமெனவும்படும். சுவாமிவேதேச்சுரர்@ அம்மை அமிர்தமுகிளாம்பிகை. மூவராலும் பாடப்பட்டது.

திருத்துரவாசநல்லூர் - பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி காளத்தியீச்சரர்@ அம்மை பூங்கோதை.

திருத்துறையூர் - சகலாகமபண்டிதரென்னும் அருணந்திசிவாச்சாரியார் திருவவதாரஞ் செய்யப்பெற்ற சிவஸ்தலம். இது நடுநாட்டிலுள்ளது சுவாமி துறையூரப்பேச்சுரர்@ அம்மை பூங்கோதை. சுந்தரராற் பாடப்பட்டது.

திருத்தூங்கானைமாடம் - கெடிலநதிதீரத்திலேயுள்ள ஒரு சிவஸ்தலம். திருநாவுக்கரசர் தமது தோள்களிலே சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பெற்றதலம். சுவாமி சுடர்க்கொழந்தீச்சுரர்@ அம்மை மடந்தைநாயகி. சம்பந்தரராற் பாடப்பட்டது.

திருத்தெங்கூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வெள்ளிமலைநாதேச்சுரர் அம்மை பெரியநாயகி. சம்பந்தராற்பாடப்பட்டது.

திருத்தெளிச்சேரி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பாதளேச்சுரர். அம்மை சத்தியம்பாhள். சம்பந்தராற்பாடப்பட்டது. சம்பந்தர் புத்தசமயியாகியநந்தி செய்த தீமைக்காக அவன் தலையிலே இடிவீழும்படி செய்து தம்மோடு வாதம் புரியவெழுந்த சாரியையும் அவன் குழாத்தினரையும் வாதிலே வென்று அவர்களை நிறணிவித்த தலமிதுவே.

திருத்தெற்றியம்பலம் - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி செங்கண்மால். சத்தி செங்கமலை. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருத்தென்குடித்திட்டை - காவிரியின் தென்கரையிலுள்ள சிவஸ்தலம். சுவாமி பசுபதீச்சுரர்@ அம்மை உலகநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருத்ததென்முல்லைவாயில் - சோழநாட்டிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி முல்லைவனநாதேச்சுரர்@ அம்மை அணிகொண்ட கோதை. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருத்தேவனார்தொகை - காவிரியின் வடகரையிலுன்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி மாதவப்பெருமாள்@ சத்தி டிPராப்பிவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருத்தேவூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி தேவகுருநாதேச்சுரர்@ அம்மை மதுரபாஷிணி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருத்தொண்டரந்தாதி - நாயன்மார்களது சரித்திரத்தை நம்மபியாண்டார் நம்பி சுருக்கி அந்தாதியாகச் செய்த நூல்.

திருத்தொண்டர் - கலியுகாரம்பத்திலே சைவசமயத்தினையும் பத்திமார்க்கத்தையும்நிலைநாட்டும் பொருட்டுத் தமிழ்நாட்டிலே அவதரித்த கண்ணப்பர். கோச்செங்கட்சோழர். சண்டீசர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலிய நாயன்மார்கள் திருத்தொண்டர்களெனப்படுவார்கள். இவர்கள் வரலாறு கூறுவன. திருத்தொண்டர் புராணசாரம், பெரியபுராணம் முதலியன.

திருத்தொலைவில்லிமங்கலம் - இது பாண்டி நாட்டிலுள்ள விஷ்ணுஸ்தலம். சுவாமிஅரவிந்தலோசனன். அம்மை கருந்தடங்கண்ணி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது.

திருநணா - கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமசங்கமேச்சுரர்@ அம்மை வேதாம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது. இதுபாவானியெனவும் படும்.

திருநந்திபுரவிண்ணகரம் - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஜகநாதன். அம்மை செங்கமலமடந்தை. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருநல்லம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது கோனேரிராயபுரமெனவும்படும். சுவாமி உமாமகேசர்@ அம்மை மங்களநாயகி. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது.

திருநல்லூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிபெரிய பாண்டவேச்சுவார். அம்மை திருபுரசுந்தரி. திருநாவுக்கரசர் திருவடிசூட்டப்பெற்றதலம். சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது.

திருநல்லூர்ப்பெருமணம் - கொள்ளிடக்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது ஆச்சாபுரமெனவும்படும். சுவாமி சிவலோகத்தியாகேசர். அம்மை நங்கைஉமைநாயகி. திருஞானசம்பந்தர் சிவசோதியுட் கலந்ததலம். அவராற் பாடப்பட்டது.

திருநவலிங்கபுரம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி தெர்ப்பாரணியேச்சுரர். அம்மை போகமார்த்த பூண்முலை. மூவராலும் பாடப்பட்டது.

திருநறையூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வடிவழகியநம்பி. சத்தி நம்பிக்கைநாய்ச்சியார்.

திருநறையூர்ச்சித்தீச்சரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது திருநறையூர் எனவும்படும். சுவாமி சௌந்தரேச்சுரர். அம்மை அழகம்பிகை. சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பட்டது.

திருநனிபள்ளி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருநன்னிலத்துப்பெருங்கோயில் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். கோச்செங்கட்சோழரால் எடுப்பிக்கப்பட்ட ஆலயத்திருப்பணியையுடையது. சுந்தரராற் பாடப்பட்டது.

திருநாகேச்சுரம் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருநாகைக்காரோணம் - காவிரியின் தென்பாலிலே கடற்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி காயாரோகணர்@ அம்மை நீலாயதாடிp. மூவராலும் பாடப்பட்டது. இத்தலபுராணம் மகாவித்துவான் மீனாடிpசுந்தரம்பிள்ளையாற் பாடப்பட்டது. அது சொற்பொலிவும் பொருட்சிறப்புமுடையது.

திருநாட்டியத்தான்குடி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருநாராயணபுரம் - துளுவநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருநாரையூர் - காவிரியின் வடகரையிலுள்;ள ஒரு சிவஸ்தலம். முரத்திலேறிக் கனிபறித்தெறிந்து துருவாசமுனிவரது நிஷ்டைக்கிடையூறு செய்து அவர் சாபத்தால் நாரையுருப்பெற்ற கந்தருவன் சிவனைப்பூசித்து முத்திபெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது. நம்பியாண்டார்நம்பிக்கு ஜனனஸ்தலம்.

திருநாவலூர் - சுந்தரமூர்த்திநாயனார் அவதாரஞ்செய்த சிவஸ்தலம். திருவதிகைக்கு மேற்கே நடுநாட்டிலுள்ளது.

திருநாவுக்கரசுநாயனார் -திருமுனைபாடிநாட்டிலே திருவாமூரிலே வேளாளர்குலத்திலே புகழனாரென்பவர்க்கு மாதினியார் வயிற்றிலே பிறந்தவர். அவர் பிள்ளைத் திருநாமம் மருணீக்கியார். அவர் பல கலைகளையுங்கற்று நல்லொழுக்கமும் தருமப்பிரியமுமுடையராகி ஒழுகிவருநாளிற் பிரபஞ்சவாழ்வு அநித்தியமெனக்கண்டு துறவறத்தையடைந்து, சமணசமயத்திற் பிரவேசித்து, அச்சமய நூல்களெல்லாவற்றையுங் கிரமமாகக்கற்று, அவைகளிலும் மகாபண்டிதராகிச் சமணசாரியராற் தருமசேனரென்னும் பெயர் பெற்று அவருள்ளே அதிசிரேஷ்டராய் விளங்கிவருநாளில்,அவர் வயிற்றிலே கொடிய சூலைநோயுண்டாகி வருத்த, சமணாசாரியர்கள்தமது மந்திர வித்தைகளை யெல்லாம் பிரயோகித்தும் அதனால் அந்நோய் சிறிதுந்தணியாது முன்னையிலுமதிகப்பட, அதனைக்கேள்வியுற்ற அவர் சகோதரியாராகிய திலகவதியார், அவரைத் தம்மிடம் வருமாறு செய்து, அவருக்குப் பஞ்சாடிரோபதேசஞ் செய்து, அவருடைய சூலைநோயைநீக்க, அவர் இது பரமசிவனுடைய திருவருளெனக்கொண்டு, சைவசமயப்பிரவேசஞ் செய்து, சிவபக்தியிற் சிறந்தவராகி வீரட்டானேசுவரரையடைந்து, அவர் சந்நிதானத்திலே விழுந்து நமஸ்தரித்து எழுந்து நின்று, அன்புமயமாகிய தமிழ்ச்செய்யுள் பாடுஞ் சத்தியுடையராகி, அத்தியற்புதமாகிய தேவாரங்களைப் பாடித் திருநாவுக்கரசு என்னும் பெயர் சிவனாலளிக்கப் பெற்றவர். அதனை அறிந்து சமணர்கள் அரசனாணை கொண்டு அவரைக் கல்லோடுசேர்த்துக் கட்டிக் கடலிலிட்ட போது அக்கல்லைத் தெப்பமாகக்கொண்டு கரையேறியதும், நீற்றறையிலிட்டபோது சாவாது பிழைத்திருந்தும், விஷமூட்டியபோது அதனாலிறவாதிருந்தும், பிறவுமாகிய அநேக அற்புதங்கள் தம்மிடத்திலே விளங்கப்பெற்றவர். பெரியபுராணத்தி லெடுத்துக் கூறப்பட்டுள்ள அவருடைய சரித்திரம் முற்றும் உண்மையென்பது “கல்லினோடென்னைப் பூட்டி அமண்கையர், ஒல்லைநீர்புகநூக்கவென் வாக்கினால், நெல்லுநீள்வயல் நீலக்குடியரன், நல்ல நாமநவிற்றியுய்ந் தேனனறே” என்னுந் தேவாரத்திலே சமணர் செய்த துன்பத்தைத் தமது திருவாயாற் கூறியதால் வியவஸ்தாபனமாம்.

அவர் சாயுச்சியப்பேறு பெற்ற போது அவர்க்கு வயசு எண்பத்தொன்றென்பது “அப்பருக்கெண்பத்தொன் றருள்வாதவூரருக்குச், செப்பிய நாலெட்டினிற் றெய்வீகம் - இப்புவியிற - சுந்தரர்க்கு மூவாறுதொல்ஞானசம்வந்ர்க், கந்தம்பதினாற்றி” என்னும் வெண்பாவால் நிச்சயிக்கப்படும். அவர்காலம் சம்பந்தர்காகலமென்பது சம்பந்தர் என்பதனுட்கூறினாம். ஆண்டுக்காண்க.

அஃதாவது அவர் இற்றைக்கு நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னர் விளங்கினவர் என்பது ஆண்டுக்கூறிய நியாயங்களான மாத்திரமன்று இடைச்சங்கத்திறுதிக் காலத்திலே நிகழ்ந்த பிரளயத்தைக் குறித்துக் கேள்வியுற்றபோது அவர் திருவாய்மலர்ந்தருளிய, “வாமந்துளங்கிலென் மண்சம்பமாகிலென் மால்வரையுந், தானந்துளங்கித் தலைதடுமாறிலென் தண்கடலும், மீனம்படிலென் விரிசுடர் வீழி லென்வேலைநஞ்சுண், டூனமொன்றில்லா வொருவனுக்காட்பட்டவுத்தமர்க்கே” என்னுந் தேவாரத்தாலும் நிச்சயிக்கப்படும். இடைச்சங்கத்திறுதிக்காலத்தில் வந்துற்ற பிரளயத்தைக்குறித்துத் தமிழ் என்பதனுட்; கூறினாம்.
திருநாவுக்கரசு நாயனார் திருவாய்மலர்ந்தருளிய தேவாரங்கள் பத்திச்சுவைகால்வதோடு வேதோபநிஷதசாரங்களும், வித்தியாசாதுரிய கற்பனாலங்காரங்களும் பொழிவனவாதலின், அவருடைய செந்தமிழ்ப்புலமையின் அந்தமிலாற்றலெல்லாம் பிறவழியிலே செல்லாது சிவபத்தியிடலும் சிவஞானத்திலுமே சென்றன. உலகியல் நெறி நிற்கும் சாமானியவித்துவான்கள் போல, நிலையில்லாதவுலகவின்பத்தைப் பெரிதென மதித்து மயங்கிப் பெண்கள் முகத்தைச் சந்திரனுக்கும், கூந்தலை மேகத்துக்கும் பல்லை முத்துக்கும் நுதலைப் பிறைக்கும்மாக வின்னோரன்னவுப மானங்களாலே புனைந்த மகிழ்கூராது. சிவத்தியானமும் சிவதரிசனமுமன்றி மற்றொன்று முள்ளத்திற் கொள்ளாராய், ஞானக்குறிப்பினையுடைய சிவன் திருமேனியையும், அம்மேனியினுள்ள ஞான பூஷணங்களையுமெடுத்து அவைகளுக்கே உவமைகற்பித்து மகிழ்கூர்வர். அவ்வுண்மை, “செற்றுக்களிற்றுரி கொள்கின்றஞான்று செருவெண்கொம்பொன், றிற்றுக்கிடந்தது போலுமிளம்பிறை பாம்பதனைச் சுற்றுக்கிடந்தது கிம்புரிபோலச் சுடரிமைக்கு, நெற்றிக்கண்மற்றதன் முத்தொக்குமா லொற்றியூரனுக்கே” என்பது முதலிய பாடல்களாலுணரப்படும்.

திருநாவுக்கரசுநாயனார் தீவிரதரசத்திநிபாதமுடையராய்ச் சிவானந்தமேலிட்டுச் சீவன் முத்தராயிருந்தவர். சுpவானந்தமேலிட்டப் பெற்றோர் ஆனந்தபரவசமும் ஆடலும் அதிசயாநந்த ஞானப்பாடலுமுடையராதல் இயல்பன்றோ. அதுபற்றியே அவருடைய பாமாலை யெல்லாம், செந்தமிழ்த்தேன் பிலிற்றியச் சிவஞான நறுமணங் கமழ்ந்து, பத்தியழகெறித்துக் கேட்டோரைப்புறம் பெயரவிடாது கவருமியல்பினவாய்க், காட்சிக்கரியராகிய பரம கருணாநிதியையும் எளியராக்கும் வலியுடையனவாயின. விரகமீதூரப் பெற்ற நாயகி தன் நெஞ்;சத்திடையே கழிபேரன்பு காரணமாக நிகழும் பரவசத்தினாலே தனது நாயகன்புகழை யெடுத்துப் பாடலும் இரங்கலும் தூதுபோக்கலும கண்டாமன்றோ. அவ்வாறே சிவன் மேல்வைத்த வேட்கையினாலே அவரைப் பாடலும் இரங்கலும் எதிர்ப்பட்ட பொருள்களை நோக்கித் தூது போக்கலும் பிறவும் பரவசப்பட்ட பத்தர்க்கியல்பேயாம். அதுபற்றியே திருநாவுக்கரசுநாயனாரும் காமச்சுவைபடவும்,

“முன்ன மவனுடைய நாமங் கேட்டாண் மூர்த்தியவனிருக்கும் வண்ணங்கேட்டாள், பின்னையவனுடையவாரூர் கேட்டாள். பெயர்த்துமவனுக்கே பிச்சியானாள், அன்னையுமத்தனையு மன்றே நீத்தாளகன்றாளகலிடத்தாராசாரத்தைத், தன்னைமறந்தாடன்னாமங்கெட்டாடலைப்பட்டாணங்கை தலைவன்றாளே” என்பது முதலிய சில பாடல்களைப் பாடினர். இங்ஙனங்கற்பித்துப் பாவனைபண்ணிப் பாடல் மாணிக்கவாசகர் திருமூலர் முதலிய சீவன்முத்தர்க்கியல்பென்பது, திருச்சிற்றம்பலக்கோவையாராலும்,

“இருட்டறைமூலையிலிருந்தகுமரி, குருட்டுக் கிழவனைக் கூடநினைந்து, குருட்டினை நீக்கிக் குணம்பலகாட்டி, மருட்டியவனைமணம்புணர்ந்தாளே” என்னும் திருமந்திரத்தாலும் காண்க. திருநாவுக்கரசுநாயனார் அருளிச்செய்த பாடல்களிலே வரும் வருணனைகளெல்லாம் அவ்வத்தலங்களுக்கியல்பாகவுள்ள சிறப்புக்களையே உள்ள உள்ளவாறெடுத்துரைக்கு மன்றிக் கற்பித்துரையா. உள்ளவுள்ளவாறுரைப்பதிலும் ஒவ்வோரதிசயமும் தத்துவக்குறிப்பும் ஆராமையுந் தோன்றுமாறே கூடும். இன்னும் அவ்வருட்பாடல்கள், தத்துவஞானமும் பிரபஞ்சவைராக்கியமும் எடுத்துக்காட்டி, முத்திமேலிச்சையைக் கொளுத்துமாற்றல் பெரிதுமுடையன வென்பது எடுத்துக்காட்டவேண்டா. அவற்றை ஒதுந்தோறுங் கோட்துந் தோறும், பிரபஞ்ச வெறுப்பும் சிவத்தின் மேல் விருப்புமே தலைப்படுமன்றி அவை ஏனைய புராணோதிகாசங்கள் போல நுண்பொருளைப் புதைத்துப் பருப்பொருளை வெளிப்படக்காட்டி உலகத்தை மயங்கவைப்பனவல்ல. ஆனந்தம் அரும்பி அருள்மலர்ந்து முத்திக்கனிபழுக்கும் பெற்றியினையுடையன. கோடியரிற்கொடியனாகிய கூற்றுவன் சந்நிதிப்பட்டோர்க்கும் உறுதியும் அஞ்சாநிலையுந்தரத்தக்கது தேவாரமொன்றுமெயாம். அச்சிறப்பு மூவர்தேவாரத்துக்குமொக்கு மேயாயினும் திருநாவுக்கரசுநாயனார் தேவாரம் வாக்குப் பொலிவினானுஞ் சிறந்து விளங்குவது.

திருநாவுக்கரசுநாயனார் திருவாய்மலர்ந்தருளிய தேவாரப்பாடல்கள் ஐந்துலடித்து முப்பத்தேழாயிரம். அவற்றுள் அழிந்தனபோக எஞ்சியுள்ளன மூவாயிரத்து நானூற்றெழுபத்தாறு.

திருநாளைப்போவார் - ஆதனூரிலே புலைத்திருமேனியிலே அவதரித்தருளினவர். முற்பவத்தீட்டிய பெருஞ்சிவபுண்ணியத்தான் முறுகிய பக்திமேலீட்டினால் நாடராஜப்பெருமானைத் தரிசிக்குங் காதலுடையராய் “நாளைப்போவென்” என்று சொல்லித்திரிந்தகாரணத்தால் இப்பெயர் பெற்றனர். இவர் சிதம்பரத்தையடைந்த புறத்தே நின்ற பொழுது சிவாஞ்ஞையினால் வளர்க்கப்பெற்ற அக்கினியில் மூழ்கிநடராஜப் பெருமானைத்தரிசித்து முத்திபெற்றவர்.

திருநிலாத்திங்கட்டுண்டம் - தொண்டைநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருநின்றவூர் - இது சோழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். (2) தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருநீடூர் - சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருநீரகம் - தொண்டை நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருநீர்மலை - தொண்டை நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருநீலகண்டநாயனார் - வேசிகமனங்காரணமாக, தம்மனைவியார் “திருநீலகண்டமறிய எமைத் தீண்டற்க” வென்று சொன்ன ஆணையால் அம்மனைவியையே யன்றிப் பிறரையுந் தீண்டாது துறந்து இருந்து மூப்புவந்தகாலத்துச் சிவபிரான் ஒடொன்றைக் கொடுத்து மறைத்தமையின் சத்தியஞ்செய்யப்புகந்தும் மனைவியைத்தீண்டாது கோலினொருதலைபற்றி வாவியின் மூழ்கி இளமையைப்பெற்று முத்தியடைந்தவராகிய இவர் சிதம்பரத்திலே குயவர் குலத்திலே அவதரித்து விளங்கியவர்.

திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார் - சிவபெருமானுடைய திருப்புகழை யாழிலிட்டுப் பாடுபவராய் மதுரைச் சோமசுந்தரக் கடவுளினாலே கொடுக்கப்பெற்ற பொற்பலகையை யுடையவராய்த் திருஞானசம்பந்தநாயனார் படியருளும் திருப்பதிகங்களை யாழிலிட்டு வாசிக்கும் பெரும்பேறுடையவலாய்த் திருநல்லூர்ப்பெருமணத்திலே அவரோடு முத்தியடையப் பெற்றவராகிய இவர் திருஎருக்கத்தம்புலியூரிலே அவதரித்தவர்.

திருநீலக்குடி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம்.

திருநீலநக்கநாயனார் - அடியார்பூசையுஞ் சிவபூசையுஞ் செய்பவராய், அயவந்தியிலுள்ள சிடவலிங்கப்பெருமானைப் பூசிக்கையில், அவ்விலிங்கத்தின் மீது விழுந்த சிலம்பியை மனைவியார் வாயாலூதியமையினால் அநுசிதமென்று அவரைத்துறந்து நித்திரை செய்தபொழுது சிவபிரான் வெயிப்பட்டு,உன்மனைவியூதிய விடமொழிய ஏனைய விடங்களெல்லாம் கொப்புளம் மிகுத்திருத்தலைக் காணென்று காட்டியருள. மகிழ்ந்து மனைவியாரோடு திருத்தொண்டு செய்திருக்கப் பெற்றவராய்த் திருஞானசம்பந்தசுவாமிகளிடத்தே அன்புபூண்டவராய், உள்ள இவர் பிராமணகுலத்திலே சாத்தமங்கையிலே அவதரித்தவர்.

திருநெடுங்களம் - வங்கிய சோழன் நாடோறும் தரிசித்துப் பேறு பெற்ற சிவஸ்தலம். இது காவிரியின் தென்கரையிலுள்ளது.

திருநெய்த்தானம் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்;தலம்.

திருநெல்வாயிலரத்துறை கெடிலநதி
திருஅரத்துறை தீர்த்திலே யுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது அரத்துறையெனவும் பெயர்பெறும்.

திருநெல்வாயில் - சோழநாட்டிலே காவிரிக்கு வடபாலிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது சிவபுரியென்று வழங்கப்படும்.

திருநெல்வெண்ணை - பெண்ணைநதி தீரத்திலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருநெல்வேலி - வேதசர்மா பஞ்சகாலத்தில் நைவேத்தியத்திற்கென இரந்து கொணர்ந்து உலர்த்தியநெல்லை, அப்பொழுது பெய்த பெருமழைநனைத்து வாரிப்போகாவண்ணம் சிவபிரான்காத்தருளினமையின் திருநெல்வேலியெனப் பெயர் பெறுவதாயிற்று. சுவாமி நெல்வேலிநாதர்@ அம்மை காந்திமதி. சம்பந்தராற் பாடப்பட்டது. சபை தாமிரசபை

திருந்துதேவன்குடி - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பட்டீச்சுரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம்.

திருப்பதி - வேங்கடாசலம். இது விஷ்ணுஸ்தலம். சுவாமி பெயர் வேங்கடேசுரர். மகா முக்கிய மானஸ்தலம். இங்கேயுள்ள தீர்த்தங்கள் அநேக ரோகங்களைத் தீர்ப்பன. இத்தலம் பூர்வத்திற் சுப்பிரமணியாலயமென்று சைவர் கூறுவர். அதற்குச் சில ஆதாரங்களுமுள. இம்மலை தமிழ்நாட்டுக்கு வடவெல்லையென்பது தொல்காப்பியம் பழைய நூல்களாற் கூறப்படும்.

திருப்பந்தணைநல்லூர் - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒர சிவஸ்தலம்.

திருப்பயற்றூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருப்பரங்கிரி மதுரைக்குத் தெற்கே
திருப்பரங்குன்றம் யுள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம்.

திருப்பரமேச்சுவரவிண்ணகரம் - இது தொண்டைநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வைகுந்தநாதன். சத்தி வைகுந்தவல்லி;.

திருப்பராய்த்துறை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பராய்த்துறைநாதர். அம்மை பொன்மயிலம்பிகை. முhணிக்கவாசகரால்; எடுத்துக்கூறப்பட்டுள்ளது சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது.

திருப்பருதிநியமம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பருத்தியப்பேசர். அம்மை மங்களநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பல்லவனீச்சரம் - இது காவிரிப்பூம்பட்டினம். பல்லவராயன் பூசித்து அநேகவரங்களைப் பெற்றதலமாதலின் இப்பெயர் பெற்றது. புட்டினத்தடிகளும் இயற்பகைநாயனாரும் திருவவதாரஞ் செய்ததலம். சம்பந்தராற் பாடப்பட்டது. இது பட்டினமெனவும் படும்.

திருப்பவளவண்ணம் - தொண்டைநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பவளவண்ணன். சுக்திபவளவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருப்பழனிமலை - பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம். பழத்துக்காகப் பிணங்கிடயிருந்த குமாரக்கடவுளைச் சிவபிரான் பழம் நீயன்றேவென்று சாந்திசெய்தருளியதலம். ஆது பற்றி வந்த பெயராகிய பழநீயெனற்பாலது பழனியென மருவிற்று.

திருப்பழமண்ணிப்படிக்கரை - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி நீலகண்டேசர். அம்மை அமிர்தகரவல்லி. சுந்தரராற் பாடப்பட்டது.

திருப்பழனம் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆபத்துசகாயர். ஆம்மை பெரியநாயகி. அப்பூதியடிகள் அவதரித்ததலம். சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது.

திருப்பழுவூர் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சோமேச்சுரர். அம்மை சோமகலாநாயகி.

திருப்பறியலூர்வீரட்டானம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வீரட்டாணேச்சுரர். அம்மை இளங்கொம்பன்னை. இது தடின் சிரம்பறித்ததலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பனங்காடடூர் - இது திருவல்லத்துக்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம். கண்ணுவர் நிவேதனத்துக்கு வேறியாதுங் கிடையாது. ஓரு பனம்பழத்தை நிவேதித்தனுக்கிரகம் பெற்ற தலமாதலின் அன்று தொட்டு பனங்கனியும் அங்கு நைவேத்தியப் பொருளாயிற்று. (2) நடுநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பனந்தாள் - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சிவபக்தியிற் சிறந்த ஒரு மாதுசிரோமணியார் தாம் கொடுத்த மாலையை இங்குள்ள சிவபெருமானுக்குச் சாத்தச்சென்ற பொழுது தமது உடைநெகிழ அதனை இரு முழங்கைகளாலும் இடுக்கிக்கொண்டு திருமாலைந்கைங்கரியத்துக்கு இடையூறு வந்ததேயென்று கவன்றதையுணர்ந்த சிவபிரான் தமது திருமுடியைச் சாய்த்து மாலையேற்றருளிய தலம். குங்குலியக்கலயநாயனார் தமது கழுதிற் கயிறு பூட்டியிழுக்க நிமிர்ந்தது இவ்விலிங்கமே. இத்தலத்திலே புராதன மடாலயமுமொன்றுளது.

திருப்பனையூர் - இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சௌந்தரேச்சுரர். அம்மை பெரியநாயகி. சப்தவிடங்கஸ்தலங்களு ளொன்று. சம்பந்த சுந்தரர்களாற் பாடப்பட்டது.

திருப்பாசூர் - இது சோழனுக்குச் சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து தரிசனங்கொடுத்த தலம். இது திருவொற்றியூருக்கு மேற்றிசையில் திருவெண்பாக்கத்துக்குத் தெற்கேயுள்ளது. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது.

திருப்பாச்சிலாச்சிராமம் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். கோல்லிமளவன் தன்மகளுக்குண்டாய குமரகண்டவலியைத் திருஞானசம்சந்தமூர்த்திநாயனாரால் நீக்குவித்த சிவஸ்தலம். சுவாமி நீலகண்டேச்சுரர்@ அம்மை விசாலாடிp. சுந்தர சம்பந்தர்களாற் பாடப்பட்டது. சுந்தரர் “நச்சிலராகிலிவரல்லாற் பிரானில்லையோ” என்று பாடிப் பொன்பெற்ற தலமுமிதுவே.

திருப்பாடகம் - தொண்டைநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பாண்டவர்தூதன். சக்தி உருக்குமிணி. பேரியாழ்வார் திருமழிசையாழ்வார் திருமங்கை யாழ்வாரென்னு மூவாலும் பாடப்பட்டது.

திருப்பாணாழ்வார் - கலியுகம் முந்நூற்றின் மேல் சோழதேசத்திலே உறையூரிலே அவதரித்தவர். இவர் வீணையிலே மகாசதுரராகி அதனாற் பகவநாமத்தைப் பாடிப்பக்தியிற் சிறந்து விளங்கியவர். (நாலாயிரப்பிரபந்தங்காண்க)

திருப்பாண்டிக்கொடுமுடி - கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கொடுமுடிநாதேச்சுரர். அம்மை பண்மொழியம்மை. இது நொய்யலுங் காவிரியுங்கூடுமிடத்தே யுள்ள தலம். இது மூவராலும் பாடப்பட்டது. இங்குள்ள லிங்கம் அகஸ்தியருடைய கமண்டலத்தைக் கவிழ்த்த விநாயகராற் றாபித்துப் பூசிக்கப்பட்டது.

திருப்பாதாளேச்சரம் - இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது பாமணியெனவும்படும். சுவாமி சர்ப்பபுரேச்சுரர்@ அம்மை அமிர்தநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பாதிரிப்புலியூர் - இது சமணர்களாற் கற்றூணிற் சேர்த்துக்கட்டிக்கடலிலிடப்பட்ட திருநாவுக்கரசர் “சொற்றுணைவேதியம்” என்னுந் தேவாரம் பாடிக் கரைசேர்ந்த சிவஸ்தலம். இது பெண்ணை நதிதீரத்திலுள்ளது. சுவாமிதோன்றாத் துணையீசர். அம்மை தோகையம்பிகை, அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது.

திருப்பாம்புரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பாம்புரேச்சுரர். அம்மை வண்டமர் பூங்குழல்நாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பார்த்தம்பள்ளி - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பார்த்தசாரதி சக்தி மலர்மாது. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருப்பாலைத்துறை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் சுவாமி பாலைவனநாதர். அம்மை தவளவெண்ணகையம்மை. அப்பராற் பாடப்பட்டது.

திருப்பாற்றுறை - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருமூலநாதேச்சுரர். அம்மை மேகலாம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பாவநாசம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பாவநாசேச்சுரர். அம்மை உலகம்மை. இங்கேளுள்ள தீர்த்தம் மிக்க விசேடமுடையது.

திருப்பிரமபுரம் - இது சீர்காழி என வழங்கப்படும் சிவஸ்தலம். மாணிக்கவாசகர் சிவபெருமானது திருவடியைத் தமதுகையினாற் பிடித்துக் கொண்டு திருப்பாசுரம் பாடப்பெற்றதும். விஷ்ணுகொண்ட நரசிங்கவடிவத்தைக் கருவபங்கம் செய்யும் பொருட்டுச் சிவபெருமான் சரபமாகிப்பின் சட்டைநாதவடிவங்கொள்ளப் பெற்றதுமாகிய சிவஸ்தலம். திருஞானசம்பந்தமூர்த்திகளுக்கு அவதாரஸ்தலமுமிதுவே. இத்தலம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, கொச்சைவயம், கழுமலம், காழி, பிரமபுரம் என்னும் பன்னிரண்டு திருநாமங்களையுடையது. சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது. எழுபத்தொருதிருப்பதிகங்கள் பெற்றுள்ளது.

திருப்பிரமேச்சுரம் - பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருப்பிரீதி - வடநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பரமபுருஷன். சக்தி பரிமளவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருப்புகலூர் - திருநாவுக்கரசு சுவாமிகள் முத்தியடைந்த சிவஸ்தலம். இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுந்தரமூர்த்திநாயனார் பொன் வேண்டிப்பாடிய பொழுது செங்கற்கள் பொன்கற்களாகப் பெற்றஸ்தலமுமிதுவே. இது மூவராலும் பாடப்பட்ட எட்டுத் திருப்பதிகங்களையுடையது. சுவாமி அக்கினீச்சுரர். அம்மைகொந்தார்குழலி.

திருப்புகலூர்வர்த்தமானேச்சரம் - இது காவிரியன் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வர்த்தமானேச்சுரர். அம்மை கருந்தார்குழலி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்புகழ் - அருணகிரிநாதர் குமாரக்கடவுளினது புகழையெடுத்துத் திருவாய்மலர்ந்தருளிய தோத்திரரூபமான பாடல்கள், இப்பாடல்கள் தம்மையோதுபவர்களது நெஞ்சினுள்ள அச்சம் துன்பங்களைநீக்கித் தைரியத்தையும் குமாரக்கடவுள் மேலே நம்பிக்கையையும் விரைந்தபத்தியையுந் தருமியல்பின. திருப்புகழ்ப் பாடற்றொகை பதினாயிரத்திலிறந்தன போக எஞ்சியுள்ளன. சிலவே. இந்நூல் வில்லிபுத்தூரர் காலத்தது.

திருப்புக்கொளியூர்அவிநாசி - கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது அவிநாசியெனவும்படும். சுவாமி அவிநாசீச்சுரர். அம்மை பெருங்கருணைநாயகி. சுந்தரமூர்த்திநாயனார். “புரைக்காடு சோலைப் புக்கொளியூரவிநாசியே, கரைக்கான் முதலையைப் பிரள்ளை தரச் சொல்ல காலனையே”என்று பாடி முதலையுண்ட பிள்ளையை மீட்டதலம்.

திருப்புடார்ச்சுனபுரம் - பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருப்புட்குழி - தொண்டை நாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி விஜயராகவன். சக்தி மரகதவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருப்புத்தீசர் - தருப்புத்தூரிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்.

திருப்புத்தூர் - பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது திருக்கோட்டியூருக்குத் தென்கீழ்த் திசையிலுள்ளது.

திருப்புல்லாணி - பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி கல்யாணஜகநாதன். சக்தி கல்யாணவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்;பட்டது.

திருப்புளிங்குடி - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்த்லம்.

திருப்புள்ளமங்கை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருவாலந்தரித்த ஈச்சுரர். அம்மை அல்லியங்கோதை. சம்பந்தராற்பாடப்பட்டது.

திருப்புள்ளம்பூதங்குடி - காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணஸ்தலம்.

திருப்புள்ளிருக்கும்வேðர் - இது சோழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுடாயுப்புள் பூசித்தமையால் இப்பெயர் பெற்றது. திருப்புள்ளிருக்கு வேðர் எனக் கொண்டு புள்ளும் இருக்குவேதமும் பூசித்த தலமென்று பொருள் பண்ணுவாருமுளர். சுவாமி வைத்தியநாதர். அம்மை தையல்நாயகி. அப்பர் சம்பந்தர்களாற்பாடப்பட்டது. இத்தலத்துமுத்துக்குமாரசுவாமி மேலுள்ள பாமாலைகள் அநேகம். புள்ளிருக்கு வேðர்க்கலம்பகஞ் செய்தவர் படிக்காசுப்புலவர். தரிசனார்த்தமாக நாற்றிசையிலிருந்தும் சனங்கள் சென்று பெருந்திரளாகக் கூடுவார்கள். இத்தலத்தை மிதித்தவர்களும் நோய்தீரப் பெறுவரென்பது ஐதிகம்.

திருப்புறம்பயம் - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி காட்சிநாதர், அம்மை கரும்பன்ன சொல் நாயகி, அராலிறந்த வணிகனைச் சம்பந்தர் பதிகம் பாடி யுயிர்ப்பித்த தலம். சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது.

திருப்புனவாயில் - பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பழம்பதிநாதர்@ அம்மை பரங்கருணைநாயகி. சுந்தரர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது.

திருப்புன்கூர் - நந்தனார் பொருட்டு நந்தி தேவரை விலகும் படி செய்து அவர்க்குத் தரிசனங்கொடுத்தருளிய சிவஸ்தலம். சோழ நாட்டிலே காவிரிக்கு வடகரையிலுள்ளது. சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது.

திருப்பூந்துருத்தி - காவேரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி புஷ்பவனநாதர்@ அம்மை அழகாலமர்ந்த நாயகி. நாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருப்பூவனம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருப்பூவனூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருப்பெருந்துறை - சோழ நாட்டிலே தென்பாலிலுள்ள ஒரு சிவஸ்தலம். பாண்டியற்காகக் குதிரை கொள்ளச் சென்ற மாணிக்கவாசகரைத் தடுத்தாட்கொண்ட சிவஸ்தலம். இங்குள்ள ஆலயம் திவ்வியமான சிற்ப வேலைகளையுடையது. சுவாமி ஆன்மநாதன்@ அம்மை உமாதேவி.

திருப்பெருமிழலையூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருப்பெரும்புலியூர் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வியாக்கிரபுரேச்சுரர். அம்மை சவுந்தரநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பெருவேðர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி பிரியாதநாயகர்@ அம்மை மின்னனையாள். அப்பர் சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பேணுபெருந்துறை - இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சிவானந்தேசர். அம்மை மலையரசி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருப்பேரநகர் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி அப்பக்குடத்தான். சத்தி கமலவல்லி. மிருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் என்னும் நால்வராலும் பாடப்பட்டுள்ளது.

திருப்பேரூர் - கொங்கு நாட்டின் கணுள்ள ஒருசிவஸ்தலம். இஃது மேலைச்சிதம்பரமெனவும் படும். சுவாமி பட்டீச்சுரர். அம்மை பச்சைநாயகி. ஸ்தல விருடிங்கள் பிறவாப்புளியும்,அரசம், இறவாப்பனையும், முசுகுந்தன் குரங்குமுகம் நீங்கி மனிதர் முகம் பெற்ற தலம். சுந்தரராற் பிற பதிகங்களிலே வைத்துப்பாடப்பட்ட தலம்.

திருப்பேரெயில் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி சகலபவனேசுவரர் அம்மை மேகலாம்பாள். அப்பராற் பாடப்பட்டது.

திருப்பைஞ்ஞலி - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்சுவாமி மாற்றறிவரதேச்சுரர். அம்மை வாலசவுந்தரி. இங்குள்ள இரத்தினசபையிலாடியருளும் நடேசர் இரத்தினசபாபதமி யெனப்படுவர்.மூவராலும் பாடப்பட்டுள்ளது.

திருப்போரூர் - திருவான்மியூருக்குத் தெற்கே சமுத்திரதீரத்திலுள்ள சுப்பிரமணியஸ்தலம்.

திருமங்கலக்குடி - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அம்மை மங்களநாயகி. அரசிறைப்பொருளை ஆலயத்திருப்பணிக்குச் செலவுசெய்து விட்டு அரசனுக்கஞ்சி உயிர்துறந்த ஒரு சிவபக்தர்க்கு உயிர்கொடுத்த சிவஸ்தலம். அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது.

திருமங்கைபுரம் - பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது கோவிற்பட்டி எனவும்படும். சுவாமி பூவணலிங்கேச்சுரர். அம்மை செண்பகவல்லி. சுந்தரராற் பாடப்பட்டது.

திருமங்கையாழ்வார் - இவா கலியுகம் நானூற்றறுபதின் மேல்திருநகரிலே நீலனென்னுமொரு சூத்திரனுக்குப் புத்திரராகப் பிறந்தவர். இவரே ஸ்ரீரங்கத்துக் கோபுரத்திருப்பணிசெய்த விஷ்ணுபத்தர். இவர் பத்தினியார்குமுதவல்லி. இவர் விஷ்ணு பத்தராவதற்கு முன் ஆறலைக்குங்கள்வர். துறவுபூண்ட பின் ஆழ்வார் பன்னிருவருள் இவரே சிறந்தவர். நாலாயிரப்பிரபந்தத்துட் பெரிய திருமொழி இவர் திருவாய்மலர்ந்த தேன்பாமாலை.

திருமணஞ்சேரி - இது சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையிலுள்ளது. சுவாமி அருள்வள்ளனாயகேச்சுரர். அம்மை யாழின்மென்மொழியம்மை. திருநாவுக்கரசர் திருஞானசம்பந்த ரென்னுமிருவராலும் பாடப்பட்டது.

திருமணவைமாநகரம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மங்களேச்சுரர். அம்மை மங்களாம்பிகை.

திருமணிக்கூடம் - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி மணிக்கூடநாயகர். சத்தி திருமாமகள். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருமந்திரம் - திருமூலர் செய்தருளிய நூல். அது சரியை கிரியை யோகம் ஞானமென்னு நான்கு பாதங்களையுமெடுத்துக் கூறுவது. வேதாகமப் பொருளை யாராய்ந்தவர்க்கே அந்நூல் நன்கு புலப்படும். அது மூவாயிரம் மந்திரங்களையுடையது. திருமூலர் காண்க.

திருமந்திரேச்சுரம் - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருமயிலை - சிவநேசர் இறந்து போன தமது பெண்ணடனுடைய எலும்புச்சாம்பரைச் சம்பந்தமூர்த்திமுன்வைக்க, அவர், பூம்பாவைத் திருப்பதிகம் பாடி அதனை உருப்பெற்றெழும்பச் செய்த சிவஸ்தலம். இது திருவொற்றியூருக்குத் தெற்கே சமுத்திரதீரத்துக்குச் சமீபத்திலேயுள்ளது. துpருவள்ளுவர் பிறக்கப்பெற்ற ஸ்தலமுமிதுவே. சுவாமி கபாலீச்சுரர்.அம்மை கற்பகவல்லி. இது திருஞானசம்பந்தசுவாமிகளாலே பாடப்பட்ட ஸ்தலம்.

திருமயேந்திரப்பள்ளி - சோழநாட்டிலே கொள்ளிடநதிதீரத்திலுள்ள சிவஸ்தலம். இது திருக்கோயிலினுள்ளேயிருந்த தீபத்தைத் தூண்டிய எலிக்குச் சிவபெருமான் நரப்பிறப்பருளிய சிவஸ்தலம். சுவாமி திருமேனி அழகேச்சுரர். அம்மை முல்லைநகைவடிவம்மை. இது திருஞானசம்பந்தசுவாமிகளாற் பாடப்பட்ட ஸ்தலம்.

திருமருகல் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மாணிக்கவணணஈச்சுரர். அம்மை வண்டுவார்குழலி. திருநாவுக்கரசராலும் திருஞானசம்பந்தராலும் பாடப்பட்டுள்ளது.

திருமலை - (1) கைலாசம். (2) திருவேங்கடமலை. இது வடநாட்டு விஷ்ணுஸ்தலங்களுளொன்று.

திருமழபரடி - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வச்சிரத்தம்பநாதேச்சுரர். அம்மை அழகம்பிகை. சமயகுரவர் மூவராலும் பாடப்பட்டுள்ளது.

திருமழிசையாழ்வார் - திருமழிசையிலே பிருகுவுக்கு ஒரப்சரஸ்திரியிடத்திற் பிறந்தவர். இக்குழந்தையைத் தாய் அவ்விடத்தில் விட்டேக, அதனை யிழிகுலத்தானொரு பக்தன் கண்டெடுத்துப் போய்வளர்த்தான். இவர் துவாபரயுகாந்தத்திலே பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்னு மூவரும் பிறந்து மூன்றுமாசஞ் சென்ற பின்னர்ப் பிறந்தவர். இவர் பாடிய பாமாலை நாலாயிரப்பிரபந்தத்திற் சேர்க்கப்பட்டுள்ளது.

திருமறம் - கல்லாடர் கண்ணப்பதேவர் மீது செய்த நூல். (2) நக்கீரர் செய்தது.

திருமறைக்காடு - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். வேதாரணியமெனப்படுவ மிதுவே. சுவாமி மறைக்காட்டீச்சுரர். அம்மை யாழைப்பழித்த மொழியம்மை. சுமயகுரவர் மூவராலும் பாடப்பட்ட ஸ்தலம்.

திருமாகறல் - காஞ்சிபுரத்துக்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம்.சுவாமி அடைக்கலங்காத்தவர். அம்மை புவனநாயகி. திருஞானசம்பந்தராற் பாடப்பட்டஸ்தலம்.

திருமாணிகுழி - திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம். சுவாமி மாணிக்கமேனிவரதேச்சுரர். திருஞானசம்பந்தராற் பாடப்பட்டதலம்.

திருமாந்துறை - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆம்பிரவனேச்சுரர். அம்மை அழகாலுயர்ந்தஅம்மை. திருஞானசம்பந்த சுவாமிகளாற் பாடப்பட்டுள்ளது.

திருமாலிருஞ்சோலை - பாண்டிநாட்டிலுள்ள விஷ்ணு ஸ்தலம் சுவாமி மாலலங்காரர்.சத்தி சௌந்தரியவல்லி. நம்மாழ்வார். குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என்னுமிவர்களாற் பாடப்பட்டுள்ளது.

திருமாற்போறு - விஷ்ணு பூசித்துச் சக்கிரம் பெற்ற சிவஸ்தலம். இது காஞ்சீபுரத்துக்கு வடபாலில் உள்ளது. சுவாமி மால்வணங்கீச்சுரர்.அம்மை கருணைநாயகி. திருநாவுக்கரசராலும் திருஞானசம்பந்தராலும் பாடப்பட்டஸ்தலம்.

திருமீயச்சூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது பேராளமெனவும்படுமம். சுவாமி திருமுயற்சிநாதேச்சரர்@ அம்மை சௌந்தரநாயகி. திருஞானசம்பந்தராற் பாடப்பட்டஸ்தலம்.

திருமீயச்சூரிளங்கோயில் - இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி சகலபுவனேச்சுரர். அம்மை மேகலாம்பாள். திருநாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருமுண்டீச்சுரம் - நடுநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி முண்டீச்சுரர்@ அம்மை கானார்குழலி. திருநாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருமுதுகுன்றம் - நடு நாட்டிலே மணிமுத்தாநதி தீரத்திலேயுள்ள ஒரு சிவஸ்;தலம். சுந்தரமூர்த்தி நாயனார் மணிமுத்தாநதியிலிட்டுத் திருவாரூர்க்குளத்திலே எடுத்த பன்னீராயிரம் பொன்னையும் சிவபெருமானிடத்திற் பெற்றது இத்தலத்திலேயே. சுவாமிபெயர் பழமலைநாதர்@ அம்மை பெரியநாயகி இத்தலம் விருத்தாசலம் எனவும்படும். மூவராலும் பாடப்பட்டது. கற்பனாலங்கார பண்டாரமாகிய துறைமங்கலம் சிவப்பிரகாசரும் நான்மணிமாலை பெரியநாயகி விருத்தமுதலியவற்றாலித்தலத்தைப் பாடினர். “வானோர்தொழுநின் பலிப்பாத்திரத்தைவனைந்தநீ, தானோவெனச் சக்கரந்தான் சுழற்றத் தகுங்குயத்தி, யானோர்குயவன் மெய்யென்றேமுது குன்றிறையியம்ப, நானோவொருசிற்றிடைச்சி யென்றாளந்நறுநுதலே” என்பது நவமணிமாலையுள் ஒன்று.

திருமுருகன்பூண்டி - கொங்கு நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிமுருகநாதர்@ அம்மை முயங்குபூண்முலை. சுந்தரராற் பாடப்பட்டது.

திருமுருகாற்றுப்படை - நக்கீரர் சுப்பிரமணியக்கடவுளினது பாரக்கிரமங்களையும் பெருமைகளையும் அமைத்துப்பாடி அவர் அருள் பெற்ற நூல். பத்துப்பாட்டு என்னும் நூலினுள்ளே முதற்பாட்டு. முந்நூற்றுப் பதினெழடிகளை யுடையது. நச்சினார்க்கினியரா லுரையிடப்பட்டது. இந்நூலைப் பந்தியோடு வட்டம் பண்ணிவந்தால் சுப்பிரமணியக்கடவுள் விரைந்து அநுக்கிரகம் புரிவரெனக் கொண்டு அநேகர் அங்ஙனஞ் செய்வது பண்டுதொட்டின்று முள்ளவழக்கம்.

திருமுறப்பநாடு - பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்;தலம்.

திருமூக்கீச்சுரம் - சோழநாட்டிலே குடமுருட்டிநதிதீரத்திலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பஞ்சவர்ணநாதேச்சுரர்@ அம்மை காந்திமதியம்மை. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருமூலநகரம் - பாண்டிநாட்டின் கணுள்ள ஓரு சிவஸ்தலம்.

திருமூலநாதேசுவரர் - திருப்பாற்றுறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

திருமூலநாயனார் - நந்திதேவர்மாணாக்கராகிய சிவயோகியாரென்பவர், அகஸ்தியரைக் காணும் பொருட்டுத் தெற்கு நோக்கிச் செல்லும் வழியிலே திருவாவடுதுறையில் மூலனென்னுமொரிடையன் இறந்துகிடக்க. அவன் மேய்த்த பசுக்கள் நின்று கதறி அழுதலைக்கண்டு பரிவுற்று அவன் காயத்திற் பிரவேசித்து, அவனைப் போல அவைகளை மேய்த்து ஆற்றிவிட்டுத் திரும்பிவந்து தமது சரீரத்தைத்தேடி அதனைக் காணாமையால் அம்மூலன்சரீரத்தோடு தானே அங்கிருந்து மூவாயிரம் வருடம் யோகஞ்சாதித்த இவர் வருடத்துக்கு ஒருமந்திரமாக மூவாயிரம் மந்திரங்களை அருளிச்செய்தவர். அவற்றின்றொகுதி திருமந்திரமெனப்படும். அண்டபிண்டங்களின் தத்துவ சொரூபத்தை அநுபவப்பிரத்தி யடிமாகவுணர்ந்து உலகத்துக்கு வெளியிட்ட மகாஞானிகளுள்ளே இவர் தலைமை பெற்றவர்அவருடைய உபதேசமெல்லாம் பெரும்பாலும் ரூபகமும் பரிபாஷையுமாகவே யிருக்கும். சித்தின்றிச் சடமும் சடமின்றிச் சித்துமில்லையென்பது அவர் சித்தாந்தமாம். “அணுவுளவனுமவனுளணுவுங் - கணுவற நின்றகலப்பஃ துணரா-இணையிலியீசனவனெங்குமாகித்-தணிடவற நின்ற சாராசரந்தானே” சீவனுக்கு வடிவுகூறிய திருமந்திரம் வருமாறு:- “மேவிய சீவன் வடிவது சொல்லிடிற்-கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு-மேவிய கூறதுவாயிர மாயினா-லாவியின் கூறு நூறாயிரத் தொன்றே” பஞ்சேந்திரியங்களையும் அடக்குதல் கூடாதென்பதும், அடக்குங்கால் அறிவில்லாத சடத்தின் கதியாமென்பதும் அவைதாnமுயடங்குமபாயமறிவதே அறிவு என்பதும் அவர் கூறிய, “அஞ்சுமடக்கடக்கென்பரறிவிலா-ரஞ்சுமடக்கும மரமிங்கில்லை-யஞ்சுமடக்கி லசேதனமாமென்றிட்-டஞ்சுமடக்காவறிவறிந்தேனே” என்னுந் திருமந்திரத்தானறிக. அவர் கூறும் ஞானபூசைவருமாறு :- “உள்ளம் பெருங்கோயிலூமுடம் பாலயம்-வள்ளற்பிரானார்க்கு பாய் கோபுரவாயில்-தௌ;ளத்தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்மங்-கள்ளப்புலனைந்துந் காளாமணிவிளக்கே” இன்னோரன்ன திவ்வியோபதேசங்கள் திருமந்திரத்தினுள்ளே அளவில்வாதலின் அவற்றைச் சமுத்திரகலசநியமாக வெடுத்துக்காட்டல் எனிதன்றாம்.

திருமூழிக்களம் - மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி திருமூழிக்களநாதன்@ சத்தி மதுரநாரணி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது.

திருமெய்யம் - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி சத்தியகிரிநாதன்@ சத்தி அத்திவல்லி. இது திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருமேனியழகர் - திருமயேந்திரப்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர். (2) திருவேட்டக்குடியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

திருமோகூர் - பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருவக்கரை - திரு அச்சிறுபாக்கத்துக்குத் தென்மேற்றிசையிலேயுள்ள ஒரு சிவஸ்தலம். இங்கே ஒரு மடாதீனமுமுளது.

திருவஞ்சைக்களம் - மலைநாட்டிலுள்ள ஒருசிவஸ்தலம். பரசுராமன் தாயைக்கொன்ற பழிதீர்த்ததும் சுந்தரமூர்த்திகள் வெள்ளையானை பெற்றது மித்தலத்மேயாம் சுவாமி அஞ்சைக்களத்தீசர்@ அம்மை உமை. சேரமான்பெருமாணாயனார் திருத்தொண்டு செய்த திருந்ததலமிதுவே.

திருவடதளி - காவிரியின் தென்கரையிலுள்ள சிவஸ்தலம். சுவாமி வடதளிநாயகர்@ அம்மை கௌரியம்பிகை திருநாவுக்கரசர் சுவாமி தரிசனஞ் செய்யப்புக்கபோது அதற்கிடையூறு செய்த சமணரை அரசனாற்றண்டிப்பித்த தலம்.

திருவடமுல்லைவாயில் - இது திருவொற்றியூருக்குத் தென்மேள்றிசையிலே திருப்பாசூருக்குத் தெற்கே சமீபத்துள்ள சிவஸ்தலம். சுந்தரமூர்த்திநாயனார் சங்கிலியார் பொருட்டுக் கணணிழந்து கவன்று பதிகம் பாடியதலம். சுவாமி பாசுபதேச்சுரர்@ அம்மை கொடியிடையாள். முல்லைக்கொடியினுள்ளே மறைந்துகிடந்து, தொண்டைமான் தன் யானையின் காலைச்சிக்கிய அக்கொடியை வெட்டியபோது வெளிப்பட்ட சிவலிங்கமாதலின் அதனையுடையதலம இப்பெயர் பெறுவதாயிற்று. தென்றிசையிலு மொருமுல்லைவாயிலுண்மையின் வடவென்னு மடை பெற்றது.

திருவடவாலவாய் - இது மதுரையின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது இடைக்காடன் பொருட்டு ஆலவாயினின்றும் சிவபெருமான் நீங்கி எழுந்தருளி இருந்ததலம். இது வைகையின் தென்கரையிலுள்ளது.

திருவடுகூர் - திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கேயுள்ள சிவஸ்தலம். சுவாமி வடுகேச்சுரர்@ அம்மை வடுவகிர்க்கண்ணி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருவட்டபுயங்கம் - தொண்டை நாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி சக்கரராஜன்: சத்தி பதுமவல்லி. பேரியாழ்வார் திருமங்கையாழ்வார் என்னுமிருவராலும் பாடப்பட்டது.

திருவட்டாலு - மலை நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஆதிகேசவன்@ சத்தி மரகதவல்லி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது.

திருவண்டாம்பாலை - வந்தோமிப்பாலே யென்பது வண்டாம் பாலையென மருவிற்று. திருவாரூருக்குச் சமீபத்தேயுள்ள ஒரு சிவஸ்தலம். சுந்தரர் சிவபிரானை ஏவல் கொண்டமைக்காக அவரிருக்குந்திருவாதிரை மிதிப்பதில்லையென்னும் விரதம்பூண்டு எல்லைகடந்திருந்தவிறன்மிண்ட நாயனாரைச் சிவபிரான் சோதிக்குமாறு வேற்றுரக் கொண்டு சென்று அவர் முன்னே நின்று திருவாரூரென்ன, அவர் சினந்து துரத்தச் சிவபிரான் புறங்கொடுத்தோடித் திருவாரூரெல்லைக்குள் வந்து “வந்தோமிப்பாலே” யென்றமையிடன் அத்தலம் இப்பெயர்த்தாயிற்று.

திருவண்புருஷோத்தமம் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி புருஷோத்தமன்@ சத்தி புருஷோத்தமவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருவண்வண்டூர் - மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பாம்பணையப்பன்@ சத்தி கமலநாயகி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது.

திருவநந்தபுரம் - மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி அநந்தபதுமநாபன்@ சத்திஹரிலடி{மி. நம்மாழ்வார் பெரியாழ்வாரிருவராலும் பாடப்பட்டது. இத்தலம் மலைநாட்டரசர்க்கு இன்று மிராஜதானியாக வுள்ளது. இக்காலத்திலே சுதேசராஜாக்களது ஆதீனத்திலுள்ள ஆலயங்களுள் இது மிக்க செல்வத்தோடு நித்தியநைமித்திகங்கள் குறைவுறாது நடக்கப் பெற்றுள்ளது.

திருவதிகைவீரட்டானம் - வித்துன்மாலி முதலிய திரிபுராசுரர்களைச் சிவபெருமான் நகைத்தெரித்த சிவஸ்தலம். இது கெடிலநதி தீரத்திலுள்ளது. இத் தலத்திலேயே திருநாவுக்கரசு சுவாமிகள் சூலைநோய் தீரப்பெற்றுச் சைவத்திற் பிரவேசித்தது. சுமயாசாரியர் மூவரானும் பாடப்பட்டது.

திருவயிந்திரபுரம் - நடுநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி தெய்வநாயகர்@ சத்தி வiகுந்தநாயகி. இது சிவபத்தியிலே முதிர்;ந்த வொரு சோழன். இவ்வாலயத்தைச் சிவாலயமாக்க வெத்தனித்தமையையுணர்ந்த தெய்வநாயகப் பெருமான் தாம் தியானித்தார் தியான ரூபமாக நிற்கும் அகண்டாகாரப் பொருளாயுள்ள வரென்பதும் தாம் வெறு சிவம் வேறாகாத அபேதமூர்த்தியென்பதுங் காட்டுமாற அச்சோழனுக்குத் திரிநேத்திரமும் திரிசூலமுமுடையராய்த் தரிசமங் கொடுத்து அவனைப் பணிவித்தருளியதலம். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர்க்கு மேல்பாலிலுள்ளது.

திருவரகுணமங்கை - பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். நம்மாழ்வாராற் பாடப்பட்டது.

திருவரங்கம்பெரியகோயில் - இஃது எட்டுச் சுயம்புத் தலங்களுளொன்று. தென்னாட்டிலுள்ள விஷ்ணுஸ்தலங்களுள்ளே முக்கியமானது, சீரங்கமென்றும் ஸ்ரீரங்கமென்றும் வழங்கப்படுவது. இதுகாவிரியாற்றிடைக் குறையின் கண்ணே யிருத்தலின் இப்பெயர்த்தாயிற்று. ஏழமதில்களாற் சூழப்பட்டுள்ளது. திரிசிரபுரத்துக் கணித்தாகவுள்ளது. மிக்க அலங்காரம் பொருந்திய பெரிய கோபுரங்களையுடையது. குளிர்ந்தடர்ந்த சோலைகளையுடையது. முகோற்சவ காலங்களிலே நாற்றிசையினின்றும் பெருந்திரட்சனங்கள் சென்று தரிசிக்கப் பெறுவது. திருவரங்கத்தந்தாதி முதலிய அநேகபிரபந்தங்களைப் பெற்று விளங்குவது. பத்துஅழ்வாராற் பாடப்பட்டது.

திருவரிஞ்சையூர் - இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம்.

திருவலஞ்சுழி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிசித்தீச்சுவரர்@ அம்மை நித்தியநாயகி. சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது.

திருவலம்புரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி வலம்புரிநாதேச்சுரர்@ அம்மை வடுவகீர்க்கண்ணி.

திருவலிதாயம் - இது தொண்டை நாட்டிலுள்ள சிவஸ்தலங்களுள் ஒன்று. இது திருவொற்றியூருக்குத் தென்மேற்றிசையிலுள்ளது. சுவாமி திருவலிதாயநாதேச்சுரர். அம்மை தாயம்மை. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருவல்லம் - இது பனங்காட்டூருக்கு வடக்கே துளவநாட்டோரத்திலே வல்லாளனென்று மரசனால் பூசிக்கப்பட்டதாயுள்ள சிவஸ்தலம்.

திருவல்லவாழ் - மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி கோலப்பிரான்@ சத்தி செல்வத்திருக்கொழுந்துவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருவல்லிக்கேணி - இது தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பார்த்தசாரதி. சத்தி வேதவல்லி.

திருவழுந்தூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இங்கே சோழராசாக்களுக்குச் சம்பந்திகளான வேளாளர்களிருந்தார்கள். சுவாமி வேதபரேக்சரர்@ அம்மை சௌந்தராம்பிகை.

திருவழுவூர் - (1) யானையையுரித்த சிவஸ்தலம். (2) காவிரியின் வடகரையிலுள்ளது. சுவாமி மரவுரிநாதேச்சுரர்@ அம்மை வனமுலையம்மை.

திருவள்ளக்குளம் - காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி கண்ணன்@ சக்தி நன்மலராள். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருவள்ளியூர் - பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிமுருகக்கடவுள்@ சத்தி வள்ளிநாயகி.

திருவள்ளுவர் - இவர் பிரமதேவருடைய அமிசாவதாரமாகப் பகவனாரென்பவருக்கு ஆதியென்பவல் வயிற்றிலே பிறந்து. மைலாப்பூரிலே ஒருவள்ளுவன் மனையில் வளர்ந்து, வேதசாஸ்திர நிபுணராகி அவற்றின் சாரமாய திருக்குறளைப்பாடிச் சங்கப்பலகையேறி அரங்கேற்றினவர். குபிலரகவலின்படி, கபிலர் ஒளவை முதலாயினோர் இவர்க்குச் சகோதரர். இவ்வள்ளுவருக்குச் சங்கத்தார் சமாசனங்கொடுக்கப் பின்வாங்கின ரென்பதும் பின்னர் அசரீரிவாக்காலுடன் பட்டனரென்பதும் “திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோ, டுரத்தகு நற்பலகையொக்க விருக்க வுத்திரசன்மர்” என்னும் வெண்பாவாற் கொள்ளப்படும். திருவள்ளுவர், தாமேயெல்லா மேதியுணர்ந்தவர்.அவர் பிறரெவரிடத்துங் கல்லாதவர். இவ்வுண்மை நக்கீரர் கூறிய “தானேமுழுதுணர்ந்து” என்னும் வெண்பாவாற் பெறப்படும். இவர் திருக்குறளைக் கொண்டுபொய்ச் சங்கத்திலரங்கேற்றிய காலத்தில் அரசுவீற்றிருந்த பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. திருக்குறளுக்குப்பாமாலை சூட்டினோர் ஐம்பதோடைவருள் உக்கிரப் பெருவழுதியு மொருவன். திருவள்ளுவர் செய்த நூல் வைதிகசமயத்தினரால் மாத்திரமன்று. உலகத்துச் சமயிகள் யாவராலும் மெய்நூலெனக்கொண்டு மெச்சித்தலை வணங்கப்படும். நூலென்பது, கல்;லாடர் “எப்பாலவருமியைபவெ வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி” எனக் கூறியிருத்தலின் அக்காலத்தவர்க்கு மொத்ததுணிபாம். வள்ளுவர் நூலிலே யாவர்க்கும் மங்கீகாரமாகிய பொருட்சிறப்பும் இலக்கிய விலக்கண வனப்புமமைந்து கிடத்தலினால் வள்ளுவர் காலத்திலேயே அது பிரமாணநூலாகத் தொடங்கிவிட்டது. மலிவுவருமிடங்கடோறும் இது வள்ளுவன் மொழியென்றால் அவ்வளவில் மலைவுநீங்கிவிடும். கண்ணுதல் கலியிலுங் குற்றங்கற்பித்த நக்கீரரே தமது இறையனாரகப்பொருளுரையிலே குறளைப் பிரமாணமாக எடுத்தாண்டுபொயினரென்றால் மற்றோர் கொள்வது புதுமையாகாது. சேரமான்பெரமாணாயனாh வள்ளுவர் திருக்குறளைத் தமது நூலிலெடுத்ததோதியிருத்தலால் வள்ளுவர் சேரமானபெருமாணாயனாருக்கு முன்னுள்ளவரென்பது நிச்சயிக்கப்படும். சிலர் ஒளவை சேரமான்பெருமாணாயனார் காலத்திருந்தமையால் திருவள்ளுவரும் சேரமான் காலத்தவரேயாதல் வேண்டுமென்பர். ஓளவையார் அதிகமான் கொடுத்த அற்புதநெல்லிக்கனியுண்டு ஆயுள்நீட்டம் பெற்றுப் பன்னூறாண்டுயிர் வாழ்ந்திருந்தவர். அவருடைய ஆயுட்காலத்திலொருவர் பின்னொருவராயெத்தனையோவரச ரிருந்து போயினர். ஆதலால் ஒளவையாருடைய வார்த்திகதசையிலிருந்தவர்களுடைய காலத்தைக் கொண்டு வள்ளுவர்காலத்தை நிச்சயித்தல் கூடாது. ஊக்கிரப்பெருவழுதி கடைச்சங்கத்துக் கடையரசன். கடைச் சங்கம் ஆயிரத்தெண்ணூறு வருஷங்களுக்கு முன்னிருந்தது.

இற்றைக்கு ஆயிரத்தெழுநூற்றறு பத்தைந்து வருஷங்களுக்கு முன்னே விளங்கிய கரிகாற்சோழன் காலத்து நூல்களாகிய மணிமேகலையினுள்ளுஞ் சிலப்பதிகாரத்தினுள்ளும் மேற்கொள்ளப்பட்ட திருக்குறள் அவ்விருநூல்களுக்கு முன்னர்த் தோன்றிய தென்பது தானேபோதரும். சுpலப்பதிகார நூற்காலம் ஆயிரத்தெழுநூற்றறுபத்தைந்து வருஷங்களுக்கு முற்பட்டதென்பது மகாவமிசமென்னு நூலினுள்ளே வருங் கயவாது காலத்தாற் றுணியப்படும். ஆகவே திருவள்ளுவர்காலம் ஆயிரத்தெண்ணூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னுள்ளதென்பது நன்றாக நிச்சயிக்கப்படும்.

இன்னும், இலங்கையை வெற்றிகொண்டு இற்றைக்கு இரண்டாயிரத்தறுபது வருஷங்களுக்கு முன்னர் அரசுபுரிந்த சோழ மண்டலத்தானாகிய ஏலெலசிங்கனுடைய பௌத்திர பௌ;திரனுக்குப் பௌத்திரனாகிய ஏலெலசிங்கன் என்னும் பிரபுவுக்குத் திருவள்ளுவர் நண்பினரென்றும், அப்பிரபுவினது கலமொன்று கடலோடி மீண்டுவந்து பாரிற் பொறுத்துமிதவாது கிடந்தபோது திருவள்ளுவர், “ஏலெலையா” வென்று கூறித் தொட்டபோது மிதந்ததென்றும், பாரமிழுப்போர் இன்றும் “ஏலெலையா” வென்று சொல்லியிழுப்பது அன்று தொட்டவழக்கென்றும் வரும் கன்னபரம்பரையாலும் மேலே செய்த காலநிச்சயம் வியவஸ்தாபனமாம். இரண்டாயிரத்தறுபதில ஏலெலசிங்கனுடைய பிறசந்ததி ஆறினுக்கும் இருநூறு வருஷம் வாங்க எஞ்சுவது ஆயிரத்தெண்ணூற்றறுபது. ஏலெலசிங்கன் இலங்கையை வெற்றி கொண்டணகாலம் இரண்டாயிரத்தறுபது வருஷங்களுக்கு முன்னரென்பது மகாவமிசத்திற்காண்க. சிங்கன் என்னும் பட்டப்பெயர் சோழமண்டலத்திலுள்ள இவனுக்கு வந்தது தன்மரபினர் இலங்கையரசு பெற்ற காலத்தப்பெயரோடு விளங்கினமையாற் போலும்.

யேசுசமயிகள் தமது சமயத்தவராகிய “தாமசு” முனிவர் மைலாப்பூரில் வந்திருந்தபோது திருவள்ளுவரென்னும் பெயரோடு விளங்கினரென்றும், அவர்காலம் யேசுவுக்குப்பின் ஐம்பதாம் வருஷமென்றுங்கூறும் வெளி;ற்றதுமானவுரையு மிந்நிண்ணயத்துக் கொருசான்றாம். இனித் திருவள்ளுவமாலையிற் கல்லாடராற் கூறப்பட்ட வெண்பாவும், கல்லாடமென்னும் நூலிலே அவர் கூறிய அகவற்கூறும் ஒத்தகருத்தினவாதலின், திருவள்ளுவமாலை பிற்காலத்தவராற் படியொட்டப்பட்டதென்பது அறியாமையின் பாலது. அவவை வருமாறு :- திருவள்ளுவமாலையிற் கல்லாடந் கூறியது :- “......எப்பாலவருமியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்தமொழி” கல்லாடம் “....சமயக்கணக்கர்மதிவழிகூறா துலகியல்கூறிப் பொருளிதுவென்ற வள்ளுவன்றனக்கு வளர்கவிப்புலவர்முன்.....”

திருவள்ளுவர் உலகியல் நெறி வீட்டியல் நெறி இரண்டும் நன்றாகவிசாரித் துண்மையுணர்ந்தவர். மாந்தர்க்கு இல்லறம் துறவறமென்னும் இருவகையறங்களுமே உரியனவென்பதும், அவற்றுள் துறவறத்தை நோக்கியே இல்லறம் சாதிக்கத்தக்க தென்பதும், வீடுதேடுவார்க்குத் துறவறமும். ஊலகந்தேடுவார்க்கு இல்லறமுமுரியன வென்பதும் அவர் சித்தாந்தம். இல்லறவியல்பு கூறப்புகந்த திருவள்ளுவர் “அன்பிலாரெல்லாந் தமக்குரிய ரன்புடையா, ரென்புமரியர் பிறர்க்கு” என்னுந் திருக்குறளால் அன்பே அதற்குச் சிறந்த விலக்கணமென்றும். துறவுக்கிலக்கணங் கூறுமிடத்து, “அவாவென்ப வெல்லாவுயிர்க்கு மெஞ்ஞான்றுந், தவர அப்பிறப்பீனும் வித்து” என்னுங்குறளால் அதற்கு அவாவின்மையே சிறப்பிலக்கணமென்றும், சித்தாந்தஞ் செய்திருத்தலை உன்றிநோக்கினால் அவருடைய அற்புததெய்வப்புலமையினாற்றல் நன்கு புலப்படும். திருவள்ளுவர் நூற்று முப்பத்துமூன்று விஷயங்களெடுத்து நூல்யாத்தனர். ஓவ்வொரு விஷயங்களும் எஞ்சாமற் கடைபோக அவரால் விசாரித்து நிச்சயம் பண்ணப்பட்டிருத்தலின், எத்துணைப் புத்திநுண்மையுடையாரும் ஒரு விஷயத்திலாயினும் ஒன்றைக் கூட்டவேனுங் குறைக்க வேனும் இடங்காணமாட்டார். திருவள்ளுவர் எடுத்துக் கொண்ட விஷயங்களுட் சிலவற்றைத் தாமாக விசாரித்த பிறபாஷைப் புலவருட்டலையானோர் அவ்விஷயங்கள் மேற்கூறியவற்றையு மொப்புநொக்குமிடத்துத் திருவள்ளுவர் கருத்துக்களே விஞ்சிநிற்றலின்,அவரின் விஞ்சினோர் பிறரில்லை எனலே சித்தாந்தமாம். அதுபற்றியே திருக்குறள் கிரேக்க பிராஞ்சிய லத்தீன் ஆங்கில முதலிய பாஷைகளிலே மொழிபெயர்க்கப்பட்டு அத்தேயங்களிலே சென்று வழங்குவதாயிற்று. திருவள்ளுவர்க்கு முன்னும், முனிவரும், புலவரும் அறம்பொருளின்பமென்னு முப்பாற்பொருளு மொருவாறெடுத்துக் கூறினாரேனும் அவரெல்லாம், திருவள்ளுவரைப் போலக் கேட்டார் நெஞ்சினுட் பாய்ந்து பதிகொள்ளுமாறு சொல்லுஞ் சொல்வன்மையும் சாதுரியமுடையரல்லர். “எழுத்து முதலாயவிலக்கண மெல்லாம்-பழுத்தினி துறங்கும் பள்ளி .....” என்ற புகழப்பட்ட திருக்குறட்சிறப்பு எழுத்தலடங்குவதன்று.

திருவள்ளுவரை ஆரகதசமயியென்று சிலரும், சைவசமயியென்று பலரும் வாதிப்பர். ஆயினும் வைதிகாசாரங்களை மேற்கொண்டு நிற்குந்திருக்குறட் கருத்தை நோக்க அவரை ஆரகதரென்று சாதிக்கப் போந்தநியாயங்காண்கிலம்.

திருவலிவலம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுமயாசிரியர் மூவராலும் பாடப்பட்டது.
திருவன்னியூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். நாவுக்கரசராற் பாடப்பட்டது.

திருவாக்கூர்த்தான்றோன்றிமாடம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது.

திருவாஞ்சயம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருவாடனை - பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருவாசகம் - மாணிக்கவாசக சுவாமிகளென்றுஞ் சிறப்புப் பெயர்பூண்ட திருவாதவூரடிகள் வேதத்தின் ஞானகாண்டப் பொருளைத் தோத்திரரூபமாகத் திருவாயமலர்;ந்தருளிய தமிழ்வேதம். அது “நமச்சிவாயவாழ்க” என்றற்றொடக்கத்து அகவல் முதலிய நான்கும் முதலாக அச்சோப்பதிகமீறாகவுள்ள நாற்பத்தொன்பது ஒத்தினையுடையது. “மாணிக்கவாசகர்” காண்க.

திருவாதவூர் - பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது மாணிக்கவாசகசுவாமிக்கு ஜனனஸ்தானமாகவுள்ளது. சுவாமி வாதவூரீச்சுரர்@ அம்மை உமாதேவி

திருவாதனூர் - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஆண்டளக்குமையன். சத்தி ஸ்ரீரங்கநாயகி. திருமங்கையாழ்வார் பாடியது.

திருவாமாத்தூர் - நடுநாட்டி லுள்ள ஒரு சிவஸ்தலம். திருஅண்ணாமலைக்குக் கீழ்த்திசையிலுள்ளது. சுவாமி காமார்த்தேச்சுரர்@ அம்மை அழகியநாயகி. சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது.

திருவாப்பனூர் - இது பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆப்பனூர்க்காரணர். அம்மை அம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருவாய்ப்பாடி - வடநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி நவமோகன கிருஷ்ணன். சத்தி சத்தியபாமை. குலசேகராழ்வார், பெரியாழ்வார் , ஆண்டாள் என்னும் மூவராலும் பாடப்பட்டது.

திருவாய்மூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.சுவாமி ஆத்மாநாதேச்சுரர்@ அம்மை உமாதேவி.

திருவாரூர் - திருவாரூர் மூலட்டானங் காண்க.

திருவாரூர் அறநெறி - திருவாரூரிலுள்ள சிவஸ்தலங்களுளொன்று. சுவாமி அகிலேச்சுரர்@ அம்மை அல்லியங்கோதை.

திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - திருவாரூர் மூலட்டானத்துக்குச் சமீபத்திலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பரவையண்மண்டளீச்சுரர்@ அம்மை பஞ்சின் மெல்லடியம்மை. சுந்தரராற் பாடப்பட்டது.

திருவாரூர்மும்மணிக்கோவை - சேரமான் பெருமாணாயனார் திருவாரூர் மீது செய்த நூல்.

திருவாரூர்மூலட்டானம் - இது சுந்தரராலே “திருவாரூர்ப்பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்’’ என்று துதிக்கப்பட்ட பரபல சிவஸ்தலம். இது தியாகப்பெருமானை முசுகுந்தசக்கரவர்த்தி இந்திரன் பாற்பெற்று ஸ்தாபித்த சிவஸ்தலம். இது சப்த விடங்க ஸ்தலங்களுள் மிகச் சிறந்தது. இத்திருவாரூர் சோழராஜாக்களுக்கு நெடுங்காலம் ராஜதானியாக விருந்தது. மநுநீதிகண்ட சோழன் அரசுசெய்யுங்காலத்திலே தன்மகன் தேர்ஊர்ந்து ஒரு பசுவின் கன்றைத் தேர்க்காலி லரைத்துக் கொன்றான் என்பதுணர்ந்து. அவ்வரசகுமாரனைத் தன்றேர்க்காலிலிட்டு அரைத்துக்கொன்று தாய்ப்பசுவின்றுயர்தீர்க்க முயன்று சிவாநுக்கிரகத்தால் கன்றும்மைந்தனு முயிர்பெற் றெழப்பெற்ற பெருங்கீர்த்தி வாய்ந்த தலமுமிதுவே. பரவையார்க்கும் இலக்கண விளக்கஞ்செய்த வைத்தியநாத நாவலர்க்கும் ஜன்மஸ்தலமுமிதுவே. இத்தலசம்பந்தமான சரித்திரங்கள் எண்ணில. சுவாமி வன்மீகநாதர்@ அம்மை அல்லியங்கோதை. மூவராலும் பாடப்பட்டது.

திருவாலங்காடு - இதுவே பழையனூர். இங்கே ரத்தினசபையிலே சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவஞ்செய்தருளுவர். காரைக்காலம்மையார் தொண்டு புரிந்திருந்த தலமும் இது. பழையனூர் நீலியால் வேளாளர் தீய்ப்பாய்ந்து புகழ் பெற்றதும் இவ்விடத்தேயாம். இது திருத்தணிகைக்குத் தென்கீழ்;த்திசையிலுள்ளது. பட்டணத்தடிகள் “வீடுநமக்குத் திருவாலங்காடு” என்று துதித்ததும் இத்தலத்தையே. இச் சிவதலத்திலெழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தி ஊர்த்துவதாண்டவேச்சுரர்@ அம்மை வண்டார்குழலி. இது மூவராலும் பாடப்பட்டது.

திருவாலங்காட்டுமூத்ததிருப்பதிகம் - காரைக்காலம்மையார் செய்த பிரபந்தங்கள் மூன்றனுளொன்று. தன்னை ஓதுபவர்க்கு மிக்க வைராக்கியமும் பிரபஞ்சவெறுப்புந்தருமியல்பினது. முற்றையவிரண்டும் திருவிரட்டை மணிமாலையும் அற்புதத் திருவந்தாதியுமாம்.

திருவாலவாயடையார் - சொக்கநாதமூர்த்தி.

திருவாலவாய் - மதுரைச் சிவஸ்தலம். இது சிவபெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் செய்தருளியதலம். ஐவகைநதிக் கரையிலுள்ளது. சுவாமிசொக்கநாதர்@ அம்மை மீனாஷி. சர்ப்பம் வளைந்தெல்லையிட்ட நகரமாதலின் ஆலவாயெனப்பட்டது. அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது. இத்தலமான்மியம் பரஞ்சோதிமுனிவராலே தமிழிலே திருவிளையாடற் புராணமென்னும் பெயரினாலே ஆலாசியமெனப்படும். இங்குள்ள சிவாலயம் பாண்டியர்களாலே செய்யப்பட்ட திருப்பணி மிக்க பழைமையினையுடையது. துலக்கர் காலத்திலே பங்கமுற்றுப் பின்னர்த் திருத்தப்பட்டது.

திருவாலிதிருநசரி - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒருவிஷ்ணுஸ்தலம். சுவாமி வயலாலிமணவாளன். சுக்தி குமுதவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருவாவடுதுறை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மாசிலாமணீச்சுரர்@ அம்மை ஒப்பிலாமுலையம்மை. திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் சிவபெருமானிடத்து உலவாக்கிழி பெற்றருளிடயதலமுமிதுவே. திருநந்ததேவர் மாணாக்கராகிய சிவயோகியாரென்பவர் அகஸ்தியரைக் காணும் பொருட்டுத் தெற்கு நோக்கிச் செல்லும் வழியிலே இத்தலத்தில் மூலனென்னுமொரிடையனிறந்து கிடக்க, அவன் மேய்த்த பசுக்கள் நின்று கதறி அழுதலைக்கண்டு, அவன் காயத்திற்பிரவேசித்து அவனைப்போல் அவைகளை மேய்த்து ஆற்றிவிட்டுத் திரும்பிவந்து தமது சரீரத்திற் புகஎத்தனித்த பொழுது, அதனைக்காணாமையால் அச்சரீரத்தோடுதானே இங்கிருந்து மூவாயிரம் வருடம் யோகஞ் சாதித்தாh. இவரே திருமூலநாயனாரெனப்படுவர். வருடத்திற்கு ஒருமந்திரமாக மூவாயிரமம் மந்திரங்களை அருளிச்செய்தவருமிவரே. அவற்றின் றொததிதருமந்திர மெனப்படும். கைலாசபரம்பரையிலே அவதரித்தவராகிய நமச்சிவாயமூர்த்திகள் மடாலயங்கொண்டதம் இத்தலமே. அவ்வாசாரியபரம்பரை இன்றுமுளது. நமச்சிவாயமூர்த்திகள் காலம் இற்றைக்கு அறுநூறுவருடங்களுக்கு முன்னுள்ளத. திருவாவடுதுறையாதீன பரம்பரையில் இப்போது ஞானமுடிபுனைந்திருப்பவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர். இப்பெயரால் முன்னும் பலர் விளங்கினர். திராவிடமாபாடியஞ் செய்த சிவஞானமுனிவர் இம்மடாதீனத்தைச் சேர்ந்தவர். இத்தலம் சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது.

திருவாவினன்குடி - பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம்.

திருவாள்கொளிபுத்தூர் - திருமால் மாணிக்கத்தைவைத்துப் பூஜித்த சிவஸ்தலம். காவிரியின் வடகரையிலுள்ளது. சுவாமிமாணிக்க வண்ணேச்சரர்@ அம்மை வண்டமர்பூங்குழனாயகி. சுந்தரராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது.

திருவாறன்விளை - மலைநாட்டிலள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ததிவாமனன். சத்தி பத்மாசனநாய்ச்சியார்.

திருவானைக்கா - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். ஜம்புகெசுபர மெனவும்படும். சுவாமி ஜம்புநாயகர்@ அம்மை அகிலாண்டநாயகி. ஸ்தலவிருடிம் நாவல். அப்புலிங்கம். இத்தலம் நாவற்காடாயிருந்த பூர்வத்திலே ஒருமுனிவர் நாவற்கனியொன்றை எடுத்துப்போய்க் கைலையிற் சிவனுக்கு நிவேதித்தும் தாமுமுண்டபொழுது அக்கினியின் வித்து முளைத்தெழுந்து அவர் சிரசைத்துளைத்துக் கொண்டேங்க, முனிவர், சிவபிரான் அவ்விருடித்தின் கீழே என்றும் எழுந்தருளியிருக்குமாறு வேண்டி அவரை உடன்படுவித்துக் கொண்டு மீண்டிவ்வனத்தை யடைந்திருந்தார். அது பற்றி ஜம்புகேச்சுவரமெனப்பட்டது. ஆனை பூசித்தப் பேறு பெற்றமையின் ஆனைக்காவெனப் பட்டது. ஆனை சிவகணமாக, ஆனையோடு மாறாகிநின்று பூசித்த சிலந்தி கோச்செங்கட்சோழனாகப் பிறந்தது. இத்தலம் மூவராலும் பாடப்பட்டது. இது சீரங்கத்துக்கு அணித்தாகவுள்ளது.

திருவான்மியூர் - மயிலாப்பூருக்குச் சமீபத்திலே தென்றிசையிலுள்ள சிவஸ்தலம். இங்;குள்ளது வெள்ளைலிங்கம். வான்மீகர் பூசித்தமையால் வான்மீயூரெனப் பெயர் பெற்றது. அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது.

திருவிசைப்பா - திருமாளிகைத்தேவர், சேந்தனார், கண்டராதித்தர், கருவூர்த்தேவர், பூந்துரத்தி நம்பிகாடவநம்பி, வேணாப்படிகள், திருவாலியமுதனார். புருடோத்தமநம்பி, சேதிராயர் என்னுமொன்பதின்மாராலுஞ் செய்யப்பட்ட பாடற்றொகுதி. சிவன்புகழை எடுத்துரைக்கும் பாக்களையுடையது என்றும், திவ்விய இசையினையுடைய பாக்களையுடையது என்றும் இருவகையாகப் பெயர்ப்பொருள் விரிப்ப.

திருவிஜயமங்கை - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது அருச்சுனன் பூசித்தமையின் இப்பெயர்த்தாயிற்று. அப்பர் சுந்தரர்களாற் பாடப்பட்டது.

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - பட்டணத்துப் பிள்ளையாரருளிச் செய்த ஒரு நூல்.

திருவிடவேந்தை - தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். இது திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருவிடைமருதூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மருதப்பேச்சுரர்@ அம்மை நன்முலைநாயகி. இத்தலத்தைப்பற்றிய சரித்திரம் அநேகம். வரகுணதேவர் தம்மைப்பற்றி நின்ற கொலைப்பழிதீரப் பெற்ற தலமிதுவாதலின் இத்தலத்தின் கணுள்ள சாராசரமெல்லாம் சிவசொரூபமாகக்கண்டு சிவயோகியாகித் தமது அளப்பருஞ் செல்வங்களையும் மனைவியையஞ் சிவதொண்டுக்காக்கியிருந்தனர். சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது.

திருவிடையாறு - நடுநாட்டிலே பெண்ணைந்திதீரத்திலேயுள்ள சிவஸ்தலம். சுவாமி இடையாற்றீச்சுரர்@ அம்மை சிற்றிடைநாயகி. சுந்தரராற் பாடப்பட்டது.

திருவிண்ணகரம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்த்லம். சுவாமி உப்பிலியப்பன். அம்மை பூமிதேவி. நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடியது.

திருவியலூர் - இது காவிரியின் வடகரையிலுள்ள ஒருசிவஸ்தலம் சுவாமி யோகாநந்தேச்சுரர்@ அம்மை சௌந்தரநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது.

திருவிரட்டைமணிமாலை - காரைக்காலம்மையார் செய்த பிரபந்தங்கள் மூன்றனுளொன்று.

திருவிராமேச்சுரம் - பாண்டிநாட்டிலே சமுத்திரதீரத்திலேயுள்ள ஒரு திவ்விய சிவஸ்தலம். ராமனால் ஸ்தாபித்துப் பூஜிக்கப்பட்ட சிவலிங்கப்பெருமானை உடையமையால் ராமேச்சுரமெனப் பெயர் பெற்றது. இங்குள்ள தீர்த்தம் தனுக்கோடி தீர்த்தமெனப்பெயர் பெறும். இச்சிவஸ்தலம் பிரமஹத்தி முதலிய பாவங்களை நிக்கியருளுதலின்காசி முதலிய தூரதேசங்களினின்றும் நானாவருணத்தர்களும் வந்துதரிசித்துப் போகப்பெறுவது. இது ராமயணத்திலுங் கூறப்பட்டதலம். சுவமி ராமநாதர்@ அம்மை பர்வதவர்த்தனி. இத்தலம் சேதுபந்தனத்தலையிலுள்ளது. இது சேதுவெனவும் படும். இத்தலமான்மியத்தை நிரம்பவழகியதேசிகர் சேதுபுராண மென்னும் பெயராற் பாடினர்.

திருவிரிஞ்சிபுரம் - இது பனங்காட்டூருக்கத் தென்மேற்றிசையிலேயுள்ள சிவஸ்தலம். மிளகுப்பொதிகொண்டு தனிமையிற் சென்ற ஒருவணிகன் அவ்விரவிலே தனக்கு வழி துணை வருவானுக்கு அப்பொதியிற் பாதி கூலியாகக்கொடுப்பதாக எண்ணியபோது சிவபெருமானே வழி துணையாகச்சென்று அவ்வணிகனிடம் மிளகுகைக்கொண்ட தலமிதுவாதலின் அங்கெழுந்தருளியிருக்கும் மூர்த்தி மார்க்கசகாயரெனப்படுவர். அருச்சகனிறந்து போக அவன் மகன் சிவசர்மனென்னும் மிகச்சிறுவன் சென்றருச்சிக்கச் சிவபெருமான் அதனை உவந்து திருமுடிசாய்த்த சிவஸ்தலம் இதுவே. இச்செய்தியைப் பட்டினத்தடிகளும் “சரன்சாயு” மென்னும் திருப்பாடலிலே அமைத்துப்பாடினர்.

திருவினநகர் - இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருவிளமர் - இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது முசுகுந்தன்பூசித்த சப்தவிடங்கஸ் தலங்களுளொன்று. சுந்தரராற் பாடப்பட்டது.

திருவிளையாடல் - சிவன் செயல்எல்லாம் பொதுப்படத் திருவிளையாடலேயாமாயினும், மதுரைசிலே சிவன் வெளிடப்படச் செய்தருளிய அற்புதச்செயல்கள் அறுபத்துநான்கும் திருவிளையாடல் என வழங்கும். அவைவருமாறு:
(1) தன்மகனைக்கொன்ற பழிகொள்ளும் பொருட்டுத்துவஷ்டாவினாலே யாகத்திலே தோற்றுவித்து இந்திரனைக் கொல்லுமாறு ஏவிவிடப்பட்ட விருத்திராசுரனைக் கொன்ற இந்திரன், அப்பிரமஹத்தியால் ஒளியிழந்து தெளிவின்றித் திகைத்து ததிரிந்து கடம்பவதை;தையடைந்த போது, அப்பழியினீங்கியுயயுமாறு அவனுக்குச் சிவபிரான் அநுக்கிரகம் புரிந்ததும், அவன் அர்ச்சித்தற்குப் புஷ்பந்தேடிய போது ஒரு வாயிலே பொற்றாமரைகளைத் தோற்றுவித்ததுமாகிய செயல் முதலாந் திருவிளையாடல் இந்திரன் வருத்திராசுரனோடு பொருது அவனை வெல்லவியலாது முதுகிட்டோடி விஷ்ணுவையடைந்து வேண்ட, அவரனுக்கிரகித்தவாறு இந்திரன் பாற் கடற்புறத்திருந்தததிசிமுனிவரையடுத்து அவருடைய முதுகென்பை வேண்டிய போது, அம்முனிவர்பிரான்

“நாய்நமதென நரிநமதெனப் பிதா தாய்நமதென பேய்நமதென மனமதிக்கும் வெற்றிபோ லாய்நமதெனப்படும். யாக்கையாரதே” உறவினரின்றித் தனியே காட்டிலே நோயுற்று வலியற்று நிநைவற்றுக் கிடக்குங் காலத்திலே நாயும் நரியுங் கண்டு இவ்வுடலைத் தமதென்னும். வீட்டிலிருந்தால் தாயும் தந்தையும் தமதென்பர். மனமெவ்வாறு சென்றதோ அவ்வாறெல்லாம் நமது நமதெனப்படும். இவ்வுடல் யார்க்குரியதாகும்! துன்பத்தால் வருந்துவோரது துன்பங்களைத்துடைத்து அவர்க்குநல்வாழ்வுதருமாறு எடுத்த இந்தவுடலைப் பயன்படுத்துவேன்” என்று கூறித் தமதுயிரை விடுத்தனர். அவ்வுடலின் முதுகெலும்பை இந்திரனெடுத்து விசுவகர்மாவினாலே வச்சிராயுதத்தை இயற்றுவித்து அதனைக் கொண்டே விருத்திராசுரனைக் கொன்றொழித்தான்.

(2) சிவபிரான் திருமுடிமீதிருந்து வீழ்ந்த திருமாலையைத்துருவாசர் ஏந்திக்கொடுபோய் இந்திரனுக்குநீட்ட, அவன் அதை ஒருகையால் வாங்கி யானையின் சிரசிலிட, அந்தயானை அதனையெடுத்துக் காலின் கீழிட்டுச் சிதைத்தது. அதுகண்டு துரவாசர் சினங் கொண்ட இந்திரனைப் பாண்டியன் வளையாற் சிரசுசிதறிப் பெறுக வென்று சபித்து அவனுடைய ஐராவதத்தையுங் காட்டானையாகவென்று சபித்தார். இந்திரன் நடுங்கி முனிவரையிரப்ப, முனிவர் இரங்கி “தலைமட்டாக வந்தது முடிமட்டாக” வென்று இந்திரனுக்கு அச்சாபத்தைக் குறைத்த பின்னர் ஐராவதத்தையும் பார்த்து, நீ இருபத்தைந்து வருடங் காட்டானையாகத் திரிந்து அவ்வெல்லையில் முன்போலகவென்று பிறிது வகுத்தனர். அவ்யானை அக்கால வெல்லை வருங்காறுங் காட்டானையாகத்திரிந்து, ஈற்றிலே கடம்பவனத்தையடைந்து பொற்றாமரை வாவியிற்படிந்து முன்னுரக்கொண்டு சிவபிரானனுக்கிரகமும் பெற்று அவரைப் பிரியமாட்டாது முன்போல் இந்திரனுக்கு வாகனமாயிற்று. இத்துருவாசசரித்திரம் இராமாணத்திலும் சிறிது மாறுபடக்கூறப்பட்டுள்ளது. தலைக்குவந்தது முடியோடு போயிற்றென்ற பழமொழி அதுமுதலாக வழங்கிவருவதாயிற்று.

(3) திருநகரங்கண்ட திருவிளையாடல் குலசேகர பாண்டியன் காலத்திலே அவன் ராஜதானியாகிய மணவூரிலே வசிக்குந் தனஞ்சயன் என்னும் வணிகன் மேற்றிசையிலுள்ள ஊர்களிற் சென்று வணிகஞ்செய்து மீளும் வழியிலே கடம்பவனத்தில் இராத்தங்கினபோது அங்கே ஒரு திவ்விய விமானமும் அதன்கீழே சிவலிங்கப்பெருமானும் அங்கே தேவர்கள் வந்ததும் அன்றிரவெல்லாம் அருச்சனைபுரிந்ததுங்கண்டு அதிசயித்துத் தானுந் துதித்து வணங்கிக்கொண்ட விடியற்காலத்திலே அவ்விடத்தினின்றும் நீங்கி அரசனையடைந்து தான் கண்டதைக்கூற, அரசன் உடனே சென்று அவ்வனத்தை வெட்டிச் சவபிரான் கனவிடைச்சென்று தனக்குக் கூறியபிரகாரம் ஆலயமும்,தனக்கு அரமனையும், நானாவருணத்தினர்க்கும் வீடுகளும், வீதிகளும், மதில்களும். பிறவும் வகுத்து நகரமாக்கினான்.

(4) குலசேகரபாண்டியன் மகன் மலயத்துவசபாண்டியனுக்கு அவன்மனைவி காஞ்சனமாலை வயிற்றிலே புத்திரொற்பத்தி யில்லாமற்போக,அவன் யாகஞ்செய்து அவ்யாகத்தினிடமாக உமாதேவியாரைத் தடாதகைப்பிராட்டியாரென்னும் பெயரோடு மூன்றுவயது நிறைந்த மகவாகப் பெற்றது. நான்காந் திருவிளையாடல். காஞ்சனமாலை முற்பிறப்பிலே உமாதேவியாரைத் தனக்குப் புத்திரியாராகவருதல் வேண்டுமென வேண்டித்தவங்கிடந்த விச்சாவதியென்னுங் கந்தருவமாது.

(5) மலயத்துவசன் தடாதகைப் பிராட்டியாருக்கு முடிசூட்டிச் சிவபதமடைந்த பின்னர். துடாதகைப் பிராட்டியர் திக்குவிஜயத்துக்கெழுந்து திசைதோறும் அரசர்களை வென்று வடதிசையிற் கைலாயஞ் சென்று அங்கும் படையேற்றினர். அப்பொழுது சிவபிரான் வெளிப்பட மும்முலைகளுள் ஒன்று மறைந்தது. அதுகண்டு நாணிச் செயல்மறந்து நின்ற தடாதகைப்பிராட்டியாரைச் சிவபிரான் நோக்கி, “உன்னை நாம் மதுரையில்வந்துமணம்புரலிவாம்: மீண்டேகுக” என்றருளிச் செய்தனர். அவ்வாறு மீண்டு மதுரையையடைந்த போது சிவபிரான் சோமசுந்தரபாண்டியனார் என்னும் பெயரோடு சென்று உலகறியத் திருமணம் புரிந்து மதுரையையாண்டனர். இது ஐந்தாந் திருவிளையாடல்

(6) திருமணத்தின் பொருட்டு மதுரைக்கு வந்திருந்த பதஞ்சவி வியாக்கிரபாதர்கள் திருநடங்கண்டன்றி யுண்ணேமென்ன, சிவபிரான் திருவுளமிரங்கி, மதுரையின் ஒருபாலிலே வெள்ளியம்பலத்தைத் தோற்றுவித்து அதன் மேல் மாணிக்கப் பீடிகையின் மீது திருநடங்காட்டியருளியது ஆறாந்த திருவிளையாடல்.

(7) திருமணத்தின் பொருட்டு அமைக்கப்பட்ட சோற்றுமலையெல்லாவற்றையும் சிவகணத்தொருவனாகிய குண்டோதரன் நொடிப் பொழுதில் உண்டுவிட்டுத்தன்பசி தணிந்திலதென் றழுதலைத் தடாதகைப்பிராட்டியர் கண்டு யாது செய்வேனென்று அதிசயித்து நாணிநிற்கச் சிவன் செய்தருளியது ஏழாந்திருவிளையாடல்.

(8) அதுகண்ட சிவபிரான் குண்டோதரனுடைய தணிப்பரும் பெரும்பசியைத் தீர்க்கும் பொருட்டு அன்னக்குழியையும் அவன் தாகத்தைத் தீர்த்தற்பொருட்டு வைகைநதியையும் வரவழைத்தருளிய திருவிளையாடல் எட்டாவது. இவ்வன்னக்குழி எடுக்கு நாதோறுங் குறையா வியல்பினது.

(9) தடாதகைப் பிராட்டியாரது தாயார் காஞ்சனமாலையார் நீராடும் பொருட்டுச் சிவபிரான் சத்த சமுத்திரங்களையும் வரவழைத்தருளியது ஒன்பதாந் திருவிளையாடல்.

(10) கடலாடவேண்டி ஏழுகடலும் பெற்ற காஞ்சனமாலை தனது நாயகனிறந்து போயினமையாலே கன்றின்வாலைப் பற்றிக் கொண்டு கடலாடவந்ததேயேன்று கவன்றதைத் தடாதகைப் பிராட்டியாராலுணர்ந்த சிவபிரான் அவ்விருவர் மனக்குறிப்பையுமுணர்ந்து, இறந்து சுவர்க்கத்திலிருந்த மலயத்துவசபாண்டியனை வரவழைத்து அவனைக் காஞ்சனமாலையோடு கரம்பற்றிக் கடலாடச்செய்தது பத்தாந்திருவிளையாடல்.

(11) சோமசுந்தர பாண்டியராயுலகாண்ட சிவபிரான் தடாதகைப்பிராட்டியா வயிற்றிலே உக்கிரவருமன் என்னுங் குமாரனைத் திருவவதாரஞ் செய்வித்தருளியது பதினொராந் திருவிளையாடல்.

(12) உக்கிரவருமபாண்டியன் சோமசேகரனென்னும் அரசனது புத்திரி காந்திமதியை மணம் புணர்ந்தபின்னர் அவனைச் சிவபிரான் நோக்கி,மைந்தனே, கேள், இந்திரனும் கடலும் உனக்குப் பெரும்பகைகளாம்@ மேருவானது தருக்குற்றுநிற்கும்@ இந்திரன் முடியைச் சிதைக்கும் பொருட்டு இவ்வளையை வைத்துக்கொள்@ கடலுக்கு இவ்வேற்படையை விடு@ மேருவை இச்செண்டாலடியென்று மூன்று படைக்கலங்களையும் கொடுத்தாசீர்வதித்தருளியது பன்னிரண்டாந்திருவிளையாடல்.

(13) உக்கிரவருமபாண்டியன் அரசுபுரிந்து வருநாளிலே அசுவமேதயாகந் தொண்ணூற்றாறு செய்து முடித்த போது இந்திரன் பொறாமையுற்று வருணனை ஏவிக் கடல்பொங்கிப் பாண்டிநாட்டை அழிக்கும்படி செய்ய ஒரிரவினுள்ளே கடல் சினங்கொண்டேழுந்து நாட்டை மூடி நகரவாயிலை யடுத்தது. ஆதனைச் சிவபிரானாலுணர்ந்த உக்கிரவருமன் தான் முன்னே சிவன்பாற்பெற்ற வேலையெறிந்து சுவறும்படி செய்தான். இது பதின்மூன்றாந் திருவிளையாடல்.

(14) பாண்டிநாட்டிலும், அயல்நாடுகளிலும் மழைப்பெயல் இல்;லாது போகச் சேர சோழ பாண்டியர் மூவரும் தேவலோகஞ் சென்று இந்திரனை வணங்க அவன் மற்றிருவருக்கும் மழைவர மீந்து பாண்டியனை மதியா திகழ்ந்தனுப்பிவிட்டான். பாண்டியன் மேகங்களைப் பிடித்துக்கட்டிச் சிறையிலிட்டான். இந்திரன் பாண்டியனோடு போருக்கெழுந்து பொருத போது பாண்டியன்வளையை விட்டு இந்திரன் முடியைத் தகர்த்துவிட்டான். அவ்வளவில் இந்திரனடங்கிச் சமாதானங் கேட்க, பாண்டியன் மறுத்தான். வேளாளர் தாம் பிணையாகி மேகங்களைச் சிறைவிடுவித்தார்கள். இது பதின்னான்காந் திருவிளையாடல்.

(15) உக்கிரவரும் பாண்டியன் காந்திமதியிடத்திலே வீரபாண்டியனென்னுங்; குமாரனையின்ற பின்னர்த் தனது நாடு மழையின்றி வருந்துதலைக்கண்டு சகிக்கொணாத் துன்பக்கடலிலாழ்ந்து கிடந்தான். “சோமசுந்தரக் கடவுளவனுக்குக்கனவிலே தோன்றி நீ மேருமலையையடைந்து அம்மேருவரசனைச் செண்டாலடித்து அவனை வணங்கச்செய்து அம்மலையிலுள்ள பொன்னறையைத் திறந்து வேண்டுமளவுபொன்னை வாரிக் கொணர்ந்து வழங்கி மழை பெய்து நாடு மலியுங்காறும் நினது நாட்டைக் காக்கக்கடவை” என்று அநுக்கிரகித்தனர். அவ்வாறே அவன் தன் சேனைகளோடு புறப்பட்டுப் பாரதவருஷம். கிம்புருஷவருஷம், ஹரிவருஷம் என்னும் மூன்றுநாடுகளையுந்தாண்டி இளாவிருத வருஷ மத்தியிலுள்ள மேருவையடைந்து மேருவரசனுக்குப் பல முகமன் கூறி யழைக்க அவன் வரத் தாழ்த்தமைபற்றித் தனது செண்டைப்பிரயோகித்துநிற்ப அவன்வெளிடப்பட்டு எதிர்முகமன் கூறிவேண்டிய மட்டும் பொன்னைப் பொதிசெய்து போகவென்ன, அவ்வாறு செய்து மீண்டு தன்நாட்டைக் காத்தது பதினைந்தாந் திருவிளையாடல்.

(16) கண்ணுவராதி முனிவர்களுக்குச் சிவபிரான் ஒரந்தணச் சிறுவனாகி வெளிப்பட்டு வேதப்பொருளை உபதேசித்தருளியது பதினாறாம் திருவிளையாடல்.

(17) வீரபாண்டியன் வேங்கை வாய்ப்பட்டிறக்க,அவன் மகன் அபிஷேகபாண்டியனுக்கு முடி சூட்டுவதற்கு முகூர்த்தம் வைத்து மந்திரிகள் முடியைத் தேடிப் பார்த்தபோது அதனை வீரபாண்டியன் காமக்கிழத்திமக்கள் களவிற் கவர்ந்து போயின ரென்றுணர்ந்து கவன்றிருப்ப, சிவபிரான் வணிகனாகி மாணிக்கப் பொதியோடுசென்று அவர்க்கு வேண்டியஅளவு மாணிக்கம் விற்றது பதினேழாந்திருவிளையாடல். திருவிளையாடற் புராணத்திலே மாணிக்கம்விற்றபடலத்தில் இரத்தினபரீiடிக்குரியன வெல்லாம் விரித்துக் கூறப்பட்டுள்ளன.

(18) வருணன் தன் வயிற்றுநோயைச் சிவபிரானாலே தீர்ப்பிக்கும் பொருட்டுக் கடலைப் பொங்கியெழுந்து மதுரையைச் சூழும்படி செய்த போது அவன் கருத்துணராத அபிஷேகபாண்டியன் ஒலமிட்டழ அதற்கிரங்கிச் சிவபிரான் அக்கடலை வற்றுவித்து அதுவாயிலாக வருணனுக்கு அநுக்கிரகித்தது பதினெட்டாவது திருவிளையாடல்.

(19) மீண்டும் வருணன் மேகங்களை ஏவி மதுரைநகரம் மூழ்கும்படி யுகாந்தகாலத்து மழை போல வருஷிக்குமாறு செய்ய, பாண்டியன் சிவபிரானைத் துதித்துத் தனது நகரத்தையுஞ் ஜனங்களையுங் காத்தருளுமாறு வேண்ட, கிருபாமூர்த்தி மேகங்களை நான்குபக்கமும் நான்கு மாடமாகிநின்று காக்கவென்றேவியருள, மேகங்கள் அங்ஙனஞ் செய்ய, மேலேநின்ற மேகங்கள் மழையை வருஷிதது நீர் வற்றி வறப் பெய்தின.இது பத்தொன்பதாந் திருவிளையாடல்.

(20) சிவபெருமான், எல்;லாம் வல்ல ஒருசித்தவேடங்கொண்டு, மதுராபுரியையடைந்த, ஆணைப் பெண்ணுருவாக்கியும் பெண்ணை ஆணுருவாக்கியும், தம் மாத்திரைக்கோலினாலே தடவி விருத்தரைக் காளையராக்கியும், கூன் முதுகினையுடைய விருத்தஸ்திரிகளை இளமங்கையராக்கிக் கருத்தரிக்கச்செய்தும், மிக்க தூரத்தேயுள்ள மலைகளை மிக்க சமீபத்துள்ளனவாக்கியும், சமீபத்துள்ள மாடமாளிகைகளைச் சேய்மைக் கண்ணவாக்கியும்,வறிஞரைச் செல்வராக்கியும் செல்வரை வறிஞராக்கியும்;, இன்னோரன்ன செயற்கருஞ் செயல்களைச் செய்வாராகி, வீதிகளிலே சஞ்சரித்தலைக் கேள்வியுற்ற அபிஷேக பாண்டியன் அச்சித்தரை அழைத்துவரும்படி அமைச்சரை ஏவியும் வாராது இறுமாந்திருந்தது இருபதாந் திருவிளையாடல்.

(21) பின்னர் அப்பாண்டியன் சித்தரது ஆற்றலை அளந்தறியும் பொருட்டு அவர் முன்னே சென்று நின்று அவர் வரலாற்றை வினாவிநிற்கும் பொழுது, அவ்வழியே சென்ற ஓர் உழவன் கையிலிருந்தகரும் பொன்றைவாங்கி, “நீர் எல்லாமவல்ல் சித்தா என்பது உண்மையேயாயின் இதனை இம் மண்டபத்திலேயுள்ள கல்லானைக்கு அருத்தி நுமதாற்றலை விளக்குக” என, சித்தர் அவ்வியானையைக் கடைக்கணித்தருள,அஃது உயிர்பெற்றுக் கண்விழித்து மதம் பொழிந்து துதிக்கையை நீட்டிப் பாண்டியன் கையிலிருந்த கருப்பங்கோலைப் பறித்துக் கறித்துக்குதட்டிற்று. இஃது இருபத்தொராந் திருவிளையாடல்.

(22) அபிஷேகபாண்டியன் சிவபதமடைந்தபின்னர், அவன் மகன், விக்கமிரமபாண்டியன் அரசுபுரிந்துவருநாளிலே, சமணசமயப்பிரவேசஞ்செய்திருந்த சோழராசன், அஞ்சனம், கிரவுஞ்சம், அத்திகிரி, எமகூடம், விந்தம் என்னும் எட்டு மலைகளினுமுள்ள சமணகுரவர் எண்ணாயிரவரையுமழைத்து, அபிசார வேள்வியொன்றை இயற்றுவித்து, ஒரு யானையை எழுப்பி, பாண்டியனைக் கொல்லுமாறுஏவ, அதனையறிந்த பாண்டியன் சோமசுந்தரப்பெருமானை வேண்ட,ஒரு வேட்டுவவடிவங்கொண்டு அவ்வியானையைக் கொன்று பாண்டியனைக் காத்தருளியது இருபத்திரண்டாந் திருவிளையாடல்.

(23) பின்னரும் அப் பாண்டியன் காலத்திலே, விரூபாடின் என்னும் வேதியனெருவன் புரிந்த பெருந்தவப்பயனால் அருந்ததிநிகர்த்த அவன் மனைவியாகிய சுவவிரதையின் வயிற்றிலே பெற்ற கௌரி என்பாள் ஐந்துவயதிலே கௌரிமந்திரத்தைத் தந்தையினால் உபதேசிக்கப்பெற்று ஞானவொழுக்கத்திலே சிறந்து வருங் காலத்திலே பிச்சைபுக்குண்பானாகிய ஒரு வைஷ்ணவப்பிரமசாரி அங்கே வரத் தந்தை அக்கன்னிகையை அவனுக்கு மணஞ்செய்து கொடுக்க, அவ் வைஷ்ணவன் அவளைத் தன்மனைவிக்குக் கொண்டு செல்லக் கொடிய வைஷ்ணவர்களாகிய தாய்தந்தையர்கள் அவளுடைய சிவசின்னங்களை நோக்கிக் குற்சிதமுற்று அவளை ஒதுக்கிவைத்து ஒழுகிவருபவர்கள். ஓருநாள், அவளைத் தனியிருத்திக கதவுபூட்டி ஒரு மணத்தின் பொருட்டு அயலூர் செல்ல, கௌரி, தான் மணம்புகந்த காலமுதல ஒருசிவனடியாரையாவதுர் காணப்பெற்றிலனேயென்று கவன்றிருக்க, சிவபெருமான் அவளை ஆட்கொள்ளும் பருவகாலநோக்கி ஒரு விருத்தவேதிய வடிவந்தாங்கி அங்கே சென்று தமது பசிக்குறி;ப்பையணர்த்த, கௌரி அவர்க்குத் திருவமுதூட்ட உண்ட அவர் பதினாறுவயசுக் குமாரப்பருவத்தையடைந்து விளங்க, அதுகண்டு கற்பிற்சிறந்த கௌரி நடுங்கி நாணி ஒதுங்கிநிற்க, அச்சமயத்திலே அயலூர்ரினின்றும் மாமன் மாமியர் மீண்டுவர,அதுநோக்கி அவ்வதிதியார் ஒரு பசுங் குழவியாய்க் கிடந்தழுதார். அதனை மாமி கண்ட கௌரியை நோக்கி, இம்மகவு ஏதெனச் சினந்து வினவ, கௌரி தேவதத்தன் மனைவி இதனைப்பார்த்துக் கொள் எனக் கிடத்திப்போயினாள் என், மயானப் பொடிபூசம் ருத்திரனுக்கன்பனான தேவதத்தன் சிசுவுக்கு அன்புடையையாதலின் நீ எமக்குதவாய் என்று இரக்கஞ்சிறிதுமின்றி அவளை வெளியே துரத்தி விட்டாள். கௌரி தன் கைமீது கிடந்த குழந்தை அந்தரத்தெழுந்து இடபாரூடராகித் தோற்றக்கண்டு தோத்திரித்துப் பலருங்காண அந்தரத்தெழுந்து அவ்விடபத்தின் மேற்கொண்டு அவருடைய இடப்பாகத்தையடைந்தாள். கௌரி பார்வதிதேவியாரது அமிசாவதாரம். இஃது இருபத்துமூன்றாந் திருவிளையாடல்.

(24) விக்கிரமபாண்டியனுக்குப்பின்னர் அவன் மகன் ராஜரேகரன் அரசுபுரிந்து வருநாளிலே கரிகாற்சோழன் சமஸ்தானத்துவித்துவான் ஒருவன் மதுரையையடைந்து அரசன் பாற்சென்று அளவளாவிக் கொண்டிருக்கையில். கரிகாற்சோழனுக்கு அறுபத்துநான்குகலையும் வரும், உனக்கோ பரதமொழித்தொழிந்த அறுபத்துமூன்றுமே வருமென்ன, பாண்டியன் அதுகேட்டு மானத்தாற்றுண்டப்பட்டவனாய்க் கவன்று உடனேதானே நாடகநூல்வல்லாரை வரவழைத்து அவர்பால் அதனைக் கற்கும்போதுண்டாகிய மெய்வருத்தத்தை நோக்கி, “இடையறாத பஞ்சகிருத்தியத்தின் பொருட்டு ஆனந்தத்திரத்தாண்டவஞ்;;;;;;;; செய்தருளும் நங்கருணாமூர்த்தியினது திருமேனி எத்துணையாக வருந்தும்” என்று பரவசப்பட்டு அந்நிலையிற் கவற்சியுடையனாய்த் திருக்கோயிலையடைந்து, “கால்மாறி ஆடிராயின் உயிர்விடுவேன்” என்று கூறித் தவங்கிடக்க, சிவன் அவன் பத்திக்கிரங்கி இடக்காலூன்றி வலக்கால வீசி ஆடியருறியது இருபத்துநான்காந் திருவிளையாடல். இக்கரிகாற்சோழனும் வேறு@ இவனுக்குப் பின்னர் விளங்கிய பட்டினப்பாலை கொண்டவனும், பொருநராற்றுப்படையிலே கூறப்பட்டவனுமாயகிய இருவேறுகரிகாற் சோழரும் வேறு.

(25) ராஜசேகரனுக்குப் பின்னர் அவன்மகன் குலோத்துங்க பாண்டியன் அரசுபுரியுங் காலத்திலே, திருப்புத்தூரிலிருந்து மதுரைக்கு வழிக்கொண்டு சென்ற ஒருவேதியன் தன்னுடன் சென்ற மனைவியையும் மகவையும் ஓராலின்கீழிருத்தி, அவளுக்காகத் தண்ணீர்தேடிச்சென்ற மீண்ட போது ஆலின்மீது கிளைகளிலே சிக்குண்டிருந்த அம்பொன்று காற்றால் அலைப்புண்டு வீழ்ந்து கீழே படுத்திருந்த பார்ப்பனி வயிற்றிலே தைத்து உயிர்துறந்து கிடக்கக்கண்டு, உண்மையுணராது பதைபதைத்தேடி இப் பாதகஞ் செய்தான் யாவனெனத் தேடிப் பார்க்க,அவ்வாலின் சமீபத்திலே ஒரு வேடன் நிற்ப, அவனே கொன்றானென்றெண்ணி அவனைக்கைப்பற்றிக் கொண்டு இறந்த மனைவியைத் தூக்கித் தன் முதுகிற் கட்டிப் பிள்ளையை ஒக்கலிலே தாங்கி முலைவேட்டழுகின்ற அப்பிள்ளையைப் பார்த்துப் பார்த்துப் பொழிந்த கண்ணீரோடு சென்று பாண்டியன் சபையையடைந்து, முறையோ முறையோவென்று வீழ்ந்து புலம்பினான். பாண்டியன் பார்ப்பானவாய்மொழியைக் கேட்டுவேடனைப்பார்த்து, யாது கூறுகின்றாயென்ன, வேடன் இக்கொடும்பழியான் செய்தன்று, செய்தாரையும் அறியேன், இது சத்தியம்@ இப்பழியை யான் யாது குறித்துச் செய்யப்புகந்தேன், என்றுண்மையை மிக்க பரிவோடு கூறினான். அது கேட்ட பாண்டியன் உண்மை தேறமாட்டாதவனாய்ச் சோமசுந்தரக் கடவுளுடைய சந்நிதியையடைந்து விண்ணப்பஞ்செய்ய, “நாளை வணிகதெருவிற்சென்று அங்கே மணப்பந்தரில் நடக்குஞ் செய்தியைக் காண்” என்று ஓரசரீரிகேட்டது. அவ்வாறே பாண்டியன் அப்பார்ப்பனோடு மற்றைநாள் வணிகவீதியிற் சென்று மணவீட்டருகே நிற்க, யமதூதர் நேற்றுப் பார்ப்பனியுயிரை ஆலமரக்கிளைளையிற் சிக்கியிருந்த அம்பைவீழ்த்தி எவ்வாறு கொன்றோமோ அவ்வாறே இம்மணமக னுயிரையு மோர பாயத்தாற் கவர்வேமென்ற சொற்கேட்டு இருவரும் ஐயத்தினீங்கினர். இஃதிருபத்தை ந்தாந்தாந் திருவிளையாடல்.

(26) மாதுரு கமனஞ் செய்து தந்தையைக் கொன்ற மகாபாதகனாகிய ஒரந்தன்னை நல்வழிப்படுத்திய திருவிளையாடல் இருபத்தாறாவது.

(27) குலோத்துங்கபாண்டியன் காலத்திலே வேற்றூரிலிருந்து போய் மதுரையைத் தனக்குவாழ்பதியாக்கி வாள்வித்தை கற்பித்துக் காலக்கழிவு செய்யுமோராசிரியனுடைய மாணாக்கனாகிய சித்தன் என்பவன், அவ்வாசிரியனில்லாத சமயம் பார்த்து அவனுடைய மனைவியை வலிதிற்புணரவெத்தனித்த போது, அம்மாது, ஆலவாய்க் கடவுளைத் தியானிக்க, அக்கடவுள் அவ்வாளாசிரியனைப் போல் வடிவங்கொண்டு அங்கேசென்று வெளிப்பட்டு, “காளையே நாளைவா இருவருங் கலந்து வாட்போர் செய்வோம்” என்று கூற, அதுகேட்டு மகிழ்ந்து மீண்ட சித்தன் அடுத்தநாளிலே குறித்த விடத்திலே அறைகூவி எதிர்க்க, ஆலவாய்க்கடவுள் ஆசிரியனைப் போல் நின்று அமராடி அவன் அங்கத்தை வெட்டியது இருபத்தேழாந் திருவிளையாடல்.

(28) குலோத்தூங்க பாண்டியனுக்குப்பின் அவன் மகன் அனந்தகுண பாண்டியன் செங்கோலோச்சுங்க காலத்திலே, பாண்டிநாட்டிலே சைவப்பயிரன்றிச் சமணப்பயிர் வேர்கொள்ளாதிருத்தலை நோக்கிய சமணகுரவர்கள் எண்ணாயிரவாராலும் பாண்டியனைக் கொல்லுமாறு யாகத்திலெழுப்பிவிடப்பட்ட அசுரன் ஒரு மகாசர்ப்பமாகி மதுரையையடைந்து அந்நகரைக் கலக்க, பாண்டியன் அந்நாகத்தைப் பாணத்தாற் கொன்றொழிக்கும்படி சிவன் அநுக்கிரகஞ்செய்தது இருபத்தெட்டாந் திருவிளையாடல்;.

(29) மீளவுஞ் சமணரால் ஏவப்பட்ட மாயப்பசுவானது, சிவனேவலால் நந்திதேவர் அழகிற் சிறந்த அற்புத ரிஷபமாகிச் சென்று தன் முன்னே தோன்றிநிற்ப, அதனைக் கண்ட மாத்திரத்தே காமநோய் தலைக்கேறி வீரிய மெல்லாவற்றையும் விடுத்து வலிகுன்றி வீழ்ந்து பாறையாம்படி சிவன்செய்தது இருபத்தொன்பதாம் திருவிளையாடல்.

(30) அனந்தகுண பாண்டியனுக்குப்பின் அவன் மகன் குலபூஷணன் பூமிநாயகனா யிருக்குங் காலத்திலே, சேதிராயன் மதுரைமீது படை நடத்தப் போகின்றான் எனக் கேள்வியுற்றுத் தனதுயிர்த் துணைவனும் சிவபக்தியிற் சிறந்தவனும் சேனைத்தலைவனுமாகிய சௌந்தரசாமந்தன் என்பவனிடம் அளவிறந்த திரவியங்களைக் கொடுத்துப் புதுச்சேனைதிரட்டமாறு ஆஞ்ஞாபிக்க, அவன் அத்திரவியத்தைச் சிவாலயத்திருப்பணிக்கும் சிவபக்தர்க்கும் வாரி வழங்கிட்டு ஆறுமாசகாலத்தைச் சிவகைங்கரியத்திற் போக்கினான். அதுகண்ட பாண்டியன் சவுந்தர சாமந்தனை ஒருதினத்தினுள்ளாகச் சேனை தருதல் வேண்டுமென்ன, அவன் சோமசுந்தரக்கடவுள் சந்நிதியில் வீழ்ந்து வேண்ட, “நாம் சேனையோடு நாளை வருவோம்” என்று ஓரசரீரி கேட்டது. அவ்வாறே சோமசுந்தரக்கடவுள் மற்றை நாளிலே தாமோரு குதிரை வீPரராகவும் கணங்கள் சேனாவீரராகவும் வடிவு கொண்டு வெளிப்பட்டுச் சாமந்தன். இவர் இன்னதேயத்தர், இவர் இன்னதேயத்தவர் என்று பாண்டியனுக்கு மெய்காட்டியறிவிக்க நின்றருளியது முப்பதாந்திருவிளையாடல்.

(31) பஞ்சத்தாலே தனது நாட பெரிதுந் துன்புறதலைக் கண்டு சோமசுந்தரக் கடவுள் சந்நிதியில் வரங்கிடந்த குலபூஷண பாண்டியனுக்கு அவர், எடுக்குந் தோறங் குறையாததாகிய உலவாக்கிழி ஈந்தருளியது முப்பத்தொராந்திருவிளையாடல்.

(32) தங்கணவர்களது சாபத்தாலே தாருகவனத்திருஷிபன்னியர்கள் மதுரையிலே வணிக கன்னியராகப் பிறந்திருந்தபோது, அவர் சாபத்தை நீக்கியருளும் பொருட்டுச் சிவபிரான் வளையல் விற்கும் நாயகராகிச் சென்று அவர் கையைப்பற்றி வளையலிட்டுப் போனது முப்பத்திரண்டாம் திருவிளையாடல்.

(33) குமாரக்கடவுளுக்குப்பாலூட்டித் தம் பழவினைப்பற்றறுத்த தேவகன்னிகையர் அறுவரும் சிவரஞ்ஞையை மறந்த குற்றத்தாலே பட்டமங்கையிலே ஆலின் கீழே பாறையாகிக்கிடக்க, அவர் சாபத்தை நீக்கியருளும் பொருட்டுச் சிவன் திருக்கடைக்கண்சாத்தி எழுப்பி அவர் விரும்பிய அஷ்டமாசித்திகளையும் அளித்தருளியது முப்பத்துமூன்றாந் திருவிளையாடல்.

(34) காடு வெட்டிய சோழன் சோமசுந்தரக் கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்னுங் கழிபேரன்புடையனா யொழுகி வருநாளிலே, ஒருநாள், அக்கடவுள் அவனைத் தமியனாய்க் கொண்டேகி வடக்கு வாயிற்கதவை மீனமுத்திரையையழித்துத் திறந்து உள்ளேபோக்கிப் பொற்றாமரைத் தடாகத்திற் படிவித்துச் சுவர்ண விமானத்தின் கீழே தாமெழுந்தருளியிருக்குந் திருக்கோலத்தையும், உலகமாதாவினது திவ்விய தரிசனத்தையுங்காட்டி, விடியமுன் அவனை நகர்ப்புறத்திற் கொண்டு போய் விடுத்து விடையீந்து மீண்டுமவ்வாயில் வழியே புகுந்து அக்கதவிலிடப்;படும் மீனலச்சினைக்குப் பிரதியாக ரிஷிய முத்திரையிட்டுத் தமது கோயிலிற் புகுந்தருளியது முப்பத்துநான்காந் திருவிளையாடல்.

(35) குலபூஷணனுக்குப் பின் அவன்மகன் இராசேந்திரபாண்டியன் அரசுபுரியுநாளிலே காடு வெட்டிய சோழன் மதுரைச் சோமசுந்தரக்கடவை வெளிப்படையாகப் போய் வழிபடக்கருதிப் பாண்டியனை நண்பனாக்கிக் கொள்ளும் பொருட்டுப் பொன்னணி முதலியவற்றை வரிசையாயனுப்ப அவற்றைக் கண்டு மகிழ்ந்த பாண்டியனும் சில வரிசைகளையனுப்ப அதனால் உவந்து தனது மகளை அப்பாண்டியனுக்கு மணஞ் செய்த கொடுப்பக் கருதியிருத்தலைப் பாண்டியனுக்குத் தம்பி முறையிலுள்ள அரசசிங்கன் என்பவன் உணர்ந்து காஞ்சிநகரை யடையக் காடுவெட்டிய சோழன் தன்புத்திரியை அவனுக்கு மணஞ் செய்து பாண்டி நாட்டைக் கைப்பற்றக்கருதிச் சேனைகள் சூழத்தன் மருகனோடு புறப்பட்டு இரண்டு யேசனை தூரத்தே வந்து சேந்ததனைக் கேட்ட பாண்டியன் மருதுரைச் சோமசுந்தரக்கடவுளை வேண்ட, நீ அஞ்சாது எதிர்த்துப் பொருங்காலத்து வெற்றி உனக்கேயாகுமென்று அசரீரி எழும்ப, அது கேட்ட பாண்டியன் சேனைகள் புடைசூழச்சென்று கொடிய உச்சிக்காலம் வருங்காறுங் கொடுஞ்சமர் புரிதலினாலே நீர் வேட்கை மீதூரப்பட்ட பாண்டியனுடைய சேனைகளின் நடுவே சிவபெருமான் ஒரு தண்ணீர்ப்பந்தரையமைத்துப் பருகுமாறு செய்து நீர்வேட்கையை நீக்க, அச்சேனைகள் தெளிவடைந்த பின்னரும் பொருது வெற்றிச்சங்க மொலித்துச் சோழனை மருகனோடு பிணித்துவந்து பாண்டியன் முன்னர் உய்க்க, பாண்டியன், அவ்விருவரையும் சோமசுந்தரக்கடவுள் சந்நிதியினிறுத்தி இவர்க்குப்புரியுந் தண்டம் யாதென வேண்ட, அவர்,நீ நீதிகோடாதவனாதலின் உன் எண்ணப்படிபுரிக என்றருளச், சோழனுக்கு வேண்டிய உபகாரங்களைக் கொடுத்தனுப்பித் தனது தம்பிக்கும் தனது செல்லத்துட் சிலவற்றைக் கொடுத்து மகிழ்ந்து வாழ்ந்திருந்தனன். இது முப்பத்தைந்தாந் திருவிளையாடல்.

(36) பின்னர்த் திருப்பூவணமென்னுஞ் சிறந்த ஸ்தலத்திலே ஆடல்பாடல்களிலும் அழகிலுஞ் சிறந்த பொன்னையாளென்பவள், சிவபக்தகியிற் சிறந்தவளாய்ச் சிவனடியார்க்கு அமுது செய்வித்துவருங்காலத்திலே சிவபெருமானது திருவுருவையமைத்துப் பிரதிட்டைசெய்யக்கருதிக் கருக்கட்டி வைத்ததும் நாடோறுஞ் செய்வதாகிய மாகேசுர பூசையின் பொருட்டுப் பொருளெல்லாஞ் செலவழிதலினாலே அதனைநிறைவேற்ற இயலாதவளாய்ப் பொற்கிழி கொடுத்த சிவபெருமானைச் சிந்தித்திருக்க, அதனையுணர்ந்த அவர் சிவனடியார் வேடங்கொண்டு வந்து ஏனைய அடியரெல்லாம் அமுதருந்தத் தாம் மாத்திரம் அமுது செய்யாது மாளமிகையின் புறங்கடையின் கண்ணே வீற்றிருக்க அவரை அமுது செய்தருளுமாறு வேண்ட, அவர் பொன்னையானை நோக்கி உன்இடைபோல உடம்பெல்லாம் மெலிந் கவலையடைந்திருத்தற்குக் காரணமென்னையென, அன்னவள்தன்குறையை முறையிட, அதனைக்கேட்ட சிவபெருமான் அவளிடத்துள்ள வெண்கலம் பித்தளை முதலியவற்றை வாங்கி இரசவாதஞ்செய்து பொன்னாக்கக் கொடுத்து மறைந்தருளக்கண்ட அவள். தோத்திரஞ் செய்து, பின்னர் அப்பொன்னைக்கொண்டு திருவுருவை அமைத்துப் பிரதிட்டை செய்து, பூசித்திருந்து சிவபெருமானது திருவடியையடைந்தாள். இது முப்பத்தாறாந் திருவிளையாடல்.

(37) இராசேந்திர பாண்டியனுக்குப்பின்னர் அவன் மகன் இராசேசனும், அவனுக்குப்பின் அவன் மகன் இராசகம்பீரனும், அவனுக்குப்பின் அவன்மகன் பாண்டியவமிசதீபனும். அவனுக்குப்பின் அவன் மகன் பரந்தரசித்துவும், அவனுக்குப்பின் அவன் மகன் பாண்டிவமிசபதாகனும். முறைமுறை அரசுசெய்து போனபின்னர், அவன் மகன் சுந்தரேசபாதசேகர பாண்டியன் அரசு செய்து வருங்காலத்திலே, அவன் படைவலிக் குறைவை நோக்கிச் சோழரசன் பாண்டிநாட்டைக் கைக்கொள்ளக்கருதிப் படையெடுத்துச் சென்ற பொழுது, பாண்டியன் சிவபெருமானமிடத்து முறையிட்டு அவர் அனுக்கிரகம் பெற்று எதிர்த்துப் போர்புரிந்து ஆற்றாது முதுகிட்டோட, அவனைத் துரத்திச் சென்ற சோமனை மடுவில் வீழ்த்திக் கொன்றருளியது முப்பத்தேழாந் திருவிளையாடல்.

(38) பின்னர் மதுராபுரியிலே வேளாண்குலத்திலே அவதரித்த அடியார்க்கு நல்லான், கற்பிற்சிறந்த தன் மனைவியாகிய தருமசீலையோடுங்கூடி வேளாண்டொழிலினாலே வரும் பொருள் கொண்டு சிவனடியார்க்கு அமுதூட்டி வருங்காலத்திலே, வருவாய்சுருங்கியதனாலே அடியார்க்கமுதூட்ட வழியின்றி வருந்தித் தானுந் தன் மனைவியாளும் உயிர்விடக்கருதிச் சிவபெருமானிடம் முறையிட, அவர் மகேசுரபூசை முதலியன என்றுங் குறைவறநடாத்தும் பொருட்டு அவர்க்கு எடுக்குந்தோறுங் குறையாவியல்பினமாகிய உலவாக்கோட்டையை யீந்தருளியது முப்பத்தொட்டாந் திருவிளையாடல்.

(39) புத்திரனில்லாமையாற் சகோதரிபுத்திரனைத் தத்தபுத்திரனாக்கிக் கொண்ட தனபதியென்னும் வணிகன் தன்னிடத்துள்ள பொருளையெல்லாம் அவனிடத்தொப்பித்து அவனை யீன்றதாயோடிருத்திவிட்டத் தன் மனைவியோடு காட்டிற்சென்று தவமிருயற்றங்காலத்திலே. அவன் தாயத்தார் அச்சிறுவன் பொருளையெல்லாங் கவர்ந்து கொண்டு அவனையுந் துரத்திவிட, அவள் திக்கற்றவளாய்த் தன் புத்திரனோடு சோமசுந்தரக் கடவுளுடைய சந்நிதியிற் சென்று முறையிட, கருணாநிதி அவளுக்கிரங்கி, “தருமாசனத்தார் முன்பசென்ற சொல்@ நாம் நாளை அங்குவந்து உன் வழக்கைத் தீர்ப்பாம்” என்றருளிச்செய்து@ மற்றை நாள் அச்சிறுவன் மாமனாகிய துனபதியைப்போல் வடிவங்கொண்டு சென்று சபையார் முன்னே தோன்றி வழக்கறுத்தருளியது முப்பத்தொன்பதாந் திருவிளையாடல்.

(40) சுந்தரேச பாதசேகரபாண்டியனுக்குப்பின்னர்ச் சிங்காரனங் கொண்ட வரகுணபாண்டியன் சிவலோகத்தைத்தானெடுத்த மானுடசரீரத்தோடு காண வேண்டிடுமென்று வரங்கிடக்க, அவன் பத்திவலையிற்பட்ட சோமசுந்தரக் கடவுள் அவனுக்கதனை அவ்விடத்திற் காட்டியருளியது நாற்பதாந் திருவிளையாடல்.

(41) எமநாதனென்னும் யாழ்வல்லோன் மதுரையிற் சென்று தனக்கு இணையான யாழ்வல்லோன் உளனோவென்று பாண்டியன் முன்னேநின்று தருக்கிக்கூற, பாண்டியனது சபைப்பாணனாகிய பாணபத்திரன் நானை அவ்வியாழ்மகனை வென்று அவன் விருதையுங் கவர்வேனென்று கூறிப்போய்ச் சோமசுந்தரக் கடவுளைவேண்ட, அவர் ஒரு விறகுவிற்கு மேழைபோலச் சென்று ஏமநாதக் வீட்டுவாயிலிலிருந்து படுமரமுந்தழைக்கப் பாட, ஏமநாதன் வெளியேவந்து “நீயாவன்” என்று வினாவ, அவர் பாணபத்திரனடிமையென்று கூற, ஏமநாதன் அதிசயித்துப் பாணபத்திரன் ஆற்றலையளந்து கொண்டேன். இனி யான் இங்கிருத்தலாகாதென்றெண்ணி, அவ்விரவிற்றானே அவ்விடத்தைவிட்டோடி மறையும் படி செய்தருளியது நாற்பத்தோராந் திருவிளையாடல்.

(42) வறுமையுற்று வருந்திய பாணபத்திரன் மிடியைநீக்குமாறு சோமசுந்தரக்கடவுள், சேரமான்பெருமாளுக்கு ஒரு திருமுகமெழுதிப் பாணபத்திரன்கையிற கொடுத்து அவனை அவர்பாற்படுத்தியது நாற்பத்திரண்டாந் திருவிளையாடல். சோமசுந்தரக்கடவுள் கொடுத்தருளிய திருமுகப்பாசுரம் வருமாறு :-
“மதிமலிபுரிசை மாடக்கூடற் பதிமிசைநிலவபானிறவரிச் சிறையன்னம் பயில்பொழி லாலவாயின் மன்னியசிவன்யா மொழிதருமாற்றம்- பருவக்கொண்மூப் படியெனப்பாவலர்க் -குரிமையினுரிமையினுதவி யொளிதிகழ்- குருமாமதியுரை நிலவிய குடைக்கீழ்ச்-செருமாவுகைக்குஞ் சேரலன்காண்க:- பண்பால் யாழ்பயில் பாணபத்திரன். காண்பது கருதிப் போந்தனன் தன்போ - லென்பாலன் பன்றன்பான் மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” இச்சரித்திரம் பெரியபுராணத்தின்படி கூன்பாண்டியனுக்குப் பின்னே நெடுங்காலங்கழிந்த பின்னர் அரசுபுரிந்த வரகுணபாண்டடியனொருவன் காலத்திலே நிகழ்ந்ததாகக் கொள்ளத்தக்கது.

(43) பாணபத்திரனுடைய யாழானது மழையீரந்தாக்கி யிசை குன்றாவண்ணம் அவனிருந்து பாடும்பொருட்டு அவனுக்குச் சோமசுந்தரக்கடவுள் பொற்பலகை கொடுத்தருளியது நாற்பத்தமூன்றாந் திருவிளையாடல்.

(44) வரகுணபாண்டியனுக்குப்பின் ராஜ ராஜ பாண்டியன் அரசுபுரியுங்காலத்தில். அவன் தன் காமக்கிழத்தி ஏவலாலே பாணபத்திரன் பத்தினியை இசையிலே வெல்விக்குமாறு ஈழநாட்டிலிருந்து ஒரு பாண்மகளை அழைப்பித்து இசை வாது புரிவித்தபோது, பாண்டியன் நடுநிலை பிறழ்வானென்றுணர்ந்து சோமசுந்தரக்கடவுள் ஓரிசைப்புலவராகத் தோன்றிப் பாணபத்திரன் பத்தினி புலமையை மெச்சி “அற்புதம் அற்புதம்” என்றுகூறி மறைந்தருளியது நாற்பத்துநான்காந் திருவிளையாடல்.

(45) தாயிழந்து தவித்த பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தருளியது.

(46) அப்பன்றிக்குட்டிகளை மானிடராக்கிப் பாண்டியனுக்கு மந்திரிகளாக்கியருளியது.

(47) கரிக்குருவிக்குபதேசஞ் செய்தருளியது.

(48) நாரைக்கு முத்திகொடுத்தருளியது.

(49) பிரளயத்தில் மறைந்த இந்நகர எல்லையை அரவகங்கணத்தாற் காட்டித் திருவாலவாயாகச் செய்தருளியது.

(50) பாண்டியனுக்குப் படைத்துணைவராகச் சென்ற “சுந்தரம்” என்று பெயர்தீட்டி அம்பெய்தருளியது.

(51) சங்கப்பலகை தந்தருளிய திருவிளையாடல்.

(52) பாண்டியன் ஆசங்கைநீங்கக் கவிபாடித்தருமியெனும் ஆதிசைவனுக்குக் கிழியறுத்துக் கொடுத்தருளியது.

(53) அக்கவிக்குக் குற்றங்கூறிய நற்கீரனைப் பொற்றாமரைக் குளத்திலாழ்த்தி, பின் கரையேற்றியருளியது.

(54) அந்நக்கீரனுக்கு அகஸ்தியர்பால் இலக்கணமுபதேசித்தருளியது.

(55) சங்கத்தார்கலகத்தை ஊமைப்பிள்ளை யாற்றீர்த்தருளியது.

(56) தமிழையவமதித்த பாண்டியனோடு பிணங்கிய இடைக்காடன் பிணக்குத்தீர்த்தருளியது.

(57) மின்வலைச்சியாகவந்த மீனலோசனையை வலைவீசி மணம்புரிந்தருளியது.

(58) மாணிக்கவாசகசுவாமிகளாகிய வாதவூரடிகள் அரசன் அனுமதிப்படி குதிரைவாங்கக்கொண்டு போன பொருளையெல்லாம் சிவன் திருப்பணிக்குதவும்படி செய்து அவருக்கு ஞானோபதேசஞ் செய்தருளியது.

(59) அப்பொருளை வாங்கும் பொருட்டு, அரசன் வாதவூரடிகளுக்குச் செய்தவன் செய்கைக்கிரங்கி வனநரிகளை வாமபரிகளாக்கித்தருளியது.

(60) அப்பரிகளையே மீட்டும் நரிகளாகச் செய்தருளியது.

(61) பின்னும் வாதவூரடிகளை அரசன் வருத்தியதற் கிரங்கி வைகை நதியைப்பெருகச் செய்தும், நகரத்தார் கரையடைக்கத் தொடங்க வந்தியென்னும் அடியவள் பொருட்டுக் கூலியாளாய்ச் சென்ற பிட்டுண்டு மண்சுமந்தும், கரையடையா திருந்தமையால் அரசன் பிரம்பாலடித்த அடி சராசரமனைத்தும் பெறுமாறு செய்தும், தாமே யெல்லாவற்றுள்ளும் அந்தரியாமியென் றறிவித் தருளியது.

(62) திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளும் திருநாவுக்கரசசுவாமிகளும் திருமுறைக்காட்டி லெழுந்தருளியிருக்கும் பொழுது அமண்சமயமிக்குச் சிவசமயந் தாழ்ந்ததைக்குறித்துக் கூன்பாண்டியனது மனைவி மங்கையர்க்கரசியாரும், மந்திரி குலச்சிறையாரும் அறிவிப்ப, அவ்வமண் களையும் பொருட்டுப் புறப்பட்டருளிய பிள்ளையாரை அரசுகள் தடுப்பவும், கேளாது சென்று மதுரையையடைந்து ஒருமடத்திலமணர் தீக்கொளுவ, அத்தீயைப் “பையச்சென்ற பாண்டியற்காக” என்ற பதிகமோத, அது அரசனைச்சுடசுரமாய்ப் பற்றிய அளவில். அதனைப் பிள்ளையார் தீர்த்தருளுமாறு செய்தருளியது.

(63) சமணர் அக்கினியிலிட்ட ஏடு கரிந்த போகச் சம்பந்தரிட்டது வேவாதிருக்கச் செய்தருளியது.

(64) வன்னியுங் கிணறுமிலிங்கமுஞ் சாட்சியாகமணஞ் செய்யப்பெற்ற வணிகப் பெண்ணுக்கும் அவள் சககளத்திக்கும் வந்தபூசலில் அவ்வணிகப்பெண் பொருட்டு அக்கரிகள் மூன்றையும் மதுரைக்கு வரவழைத்தருளியது.

திருவிற்குடிவீரட்டானம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது சலந்தரனைச்சிரங் கொய்த விடம்.

திருவிற்கோலம் - இது சிவசத்தி பூசித்த ஒரு சிவஸ்தலம்.

திருவிற்றுவக்கோடு - மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருவின்னம்பர் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருவீங்கோய்மலை - ஒரு சிவஸ்தலம். துpரு ஈங்கோய்மலை காண்க.

திருவீழிமிழலை - காவரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருவுசாத்தானம் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருவூரகம் - தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருவூறல் - காஞ்சீபுரத்துக்கு வடக்கேயுள்ள சிவஸ்தலம். நந்திவாயினின்றும் நீர் ஊறிக்கொண்டிருத்தலால் இப்பெயர் பெற்றது.

திருவெஃகா - தொண்டை நாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருவெஞ்சமாக்கூடல் - கொங்கு நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்.

திருவெண்காடு - சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருவெண்காட்டுநங்கை - சிறுத்தொண்டநாயனார் மனைவி.

திருவெண்டுறை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருவெண்ணியூர் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது.

திருவெண்ணெய்மலை - கொங்கு நாட்டிலுள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம்.

திருவெண்ணெய்நல்லூர் - சுந்தரமூர்த்தி நாயனாரை மணம்புகாவண்ணம் தடுத்தடிமைகொண்ட சிவஸ்தலம். இது பெண்ணைநதிதீரத்திலுள்ளது. கம்பருக்கு உபகாரப்பிரபுக்களாகவிருந்து ராமாயணத்தை அவரைக் கொண்டு பாடுவித்த சடையப்பமுதலிக்கும் அவன்றம்பி சரராமமுதலிக்கும் ஜம்மஸ்தலமுமிதுவே. மெய்கண்டதேவர் திருவவதாரஞ் செய்தருளிய தலமுமிதுவே. சுவாமிபெயர் தடுத்தாட் கொண்டவர்@ அம்மை வேற்கண்ணி. சுந்தரராற் பாடப்பட்டது.

திருவெண்பரிசாரம் - மலை நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருவெண்பாக்கம் - இது சுந்தரமூர்த்திநாயனார் சங்கிலியார் பொருட்டுச் செய்த பொய்ச்சத்தியத்தாற் கண்ணிழந்து சிவபெருமானிடம் ஊன்றுகொல் பெற்றதலம். இது திருவொற்றியூருக்கு மேற்றிசையிலுள்ளது.

திருவெண்பா - ஐயடிகள்காடவர்கோன் செய்த வொருபிரபந்தம்.

திருவௌ;வுðர் - தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வீரராகவன். சத்தி வல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருவெழுகூற்றிருக்கை - நக்கீரர் செய்தவொரு பிரபந்தம்.

திருவெள்ளாறை - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

திருவெள்ளியங்கிரி - கொங்குநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாய லிங்கங்களையுடையது.

திருவெள்ளியங்குடி - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருவேகம்பமுடையார்திருவந்தாதி - பட்டணத்துப்பிள்ளையாரருளிச் செய்த ஞானப்பொருள் மேலதாகிய வொருநூல்.

திருவேகம்பம் - இதுவே காஞ்சிபரசிவஸ்தலம். இது தொண்டை நாட்டினுள் முதன்மையும் மிக்க பிரசித்தியும் பெற்றது. உமாதேவியார் மணலாற் சிவலிங்கம் ஸ்தாபித்துப் பூஜித்தபொழுது கம்பாநதிளைப் பெருகும்படி சிவபிரான் செய்ய அம்மையார் அதனைக்கட்டிக்கொள்ளச் சிவபிரான் றிருமேனியில் முலைத்தழும்பும் வளைத்தழும்பும் உண்டாகப்பெற்றது. இத்தலத்திலேயாம். குமரகோட்டமும் இவ்வாலயத்துக்குச் சமீபத்திலுள்ளன. இத்தலத்தின் மேலதாகிய காஞ்சிப்புராணம் பாடியவர் இற்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னிருந்த கச்சியப்பதம்பிரான்.

திருவேடகம் - பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்;தலம். இதுசோலைகலைக்குத் தென் கீழ்;த்திசையிலுள்ளது.

திருவேட்களம் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிபாசுபதேச்சுரர்@ அம்மை நல்லநாயகி. அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது.

திருவேட்டக்குடி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அர்ச்சுனன் பொருட்டுச் சிவபிரான் வேட்டஞ்செய்தருளிய கோலத்தோ டெழுந்தருளியிருக்கும் ஸ்தலமாதலின் இஃதிப் பெயர்த்தாயிற்று. சம்பந்தராற் பாடப்பட்டது. சுவாமி திருமேனி அழகர்@ அம்மை சுகந்தவன நாயகி.

திருவேதிகுடி - இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது.

திருவேரகம் - சுவாமி மலையென வழங்கும சுப்பிரமணியஸ்தலம். கும்பகோணத்துக்குச் சமீபத்திலுள்ளது.

திருவேளுக்கை - தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். பேயாழ்வார் திருமங்கையாழ்வார் இருவராலும் பாடப்பட்டது.

திருவேள்விகுடி - தந்தை தாயரையிழந்த ஒரு பெண்ணை ஓரிராசகுமாரனுக்குச் சிவபெருமான் தானே யாசாரியராக வெழுந்தருளியிருந்து மணவேள்ளி செய்து கொடுத்த சிவஸ்தலம். இது காவிரியின் வடகரையிலுள்ளது. சம்பந்த சுந்தரர்களாற் பாடப்பட்டது.

திருவேற்காடு - மூர்க்கநாயனார் முத்திபெற்ற தலம். இது திருவலிதாயத்துக்கு மேற்கேயுள்ளது.

திருவைகன்மாடக்கோயில் - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது.

திருவைகாவூர் - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் சம்பந்தராற் பாடப்பட்டது.

திருவைகுந்த விண்ணகரம் - காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது.

திருவையாறு - காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். காவிரியின் தென்கரையிலிருந்து சுந்தரமூர்த்திநாயனார் அவ்வாற்றைத்தாண்டி இத்தலத்திற்குச் செல்ல வெத்தனித்தபோது அவ்வாறு மிகப்பெருகி வழிமறிக்க நாயனார் அக்கரையினின்று பதிகம் பாடப் பெருகிவந்த நீர் பளிங்கு போல் உறைந்துநிற்க, எஞ்சிய நீர் வற்றி வழிவிடச் சென்று தரிசித்தஸ்தலம். சுவாமி செம்பொற்சோதி@ அம்மை அறம்வளர்த்தாள். சிவபிரான் அப்பருக்குக் கiலாயக்காட்சி கொடுத்தருளிய தலமுமிதுவே. மூவராலும் பாடப்பட்டது.

திருவொற்றியூர் - சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலியாரைச் சிவானுஞ்ஞையால் மணம் பொருந்திய சிவஸ்தலம். அவ்விருவரும் சத்தியஞ் செய்து கொண்ட மகிழவிருடிம் இன்றுமங்குளது. பட்டினத்தடிகளும் கலயநாயனாரும் முத்திகூடியது இத்தலத்திலேயாம். இது மயிலாப்பூருக்கு வடக்கே சமுத்திரதிரத்துள்ளது. மூவராலும் பாடப்பட்டது.

திருவோத்தூர் - பனங்காட்டூருக்குத் தென்கீழ்த்திசையிலே உள்ள சிவஸ்தலம். சம்பந்தமூர்த்திநாயனார் ஆண்பனைகளைப் பெண்பனைகளாக்கிய அற்புதம் நிகழப்பெற்ற ஸ்தலமிதுவே.

திருஷத்வதி - யமுனைக்கு மேற்கிற் பிரவேசித்துக் கௌசிகநதியோடு சங்கமிக்கின்ற நதி.

திருஷியன் - அகஸ்தியன் புத்திரன்.

திருஷ்டகேது - (1) (மி) சத்தியதிருதன் புத்திரன். (2) (பா) திருஷ்டத்துயமன் மகன். (3) (கா) சுகமாரன் மகன்.

திருஷ்டத்துயமனன் - துருபதன்மகன். திரௌபதிசகோதரன்.

திருஷ்டவர்மன் - அக்குரூரன் மகன்.

திருஷ்டன் - (1) வைவசுதமனு புத்திரருளொருவன். இடி{வாகுதம்பி. தூர்ஷ்டம் என்பது இவன் வமிசப்பெயர். நாபாகன் இவன் புத்திரன். (2) குகரன் மனன். (விஷ்ணுபராணம் நாலாம் அமிசம்)

திருஷ்டி - (ய) இரண்டாவது குந்திமகன்.

திருஹியன் யவாதி புத்திரரு
துருஹியன் ளொருவன்.

திNருதாக்கினி - (1) அபமிமானாக்pகனி மைந்தராகிய பாவகன் பவமானன் சுகி என்னு மூன்றக்கினி (2) ஆகவனீயம், காருகபத்தியம் தக்கிணிக்கினி எனக் கிருகஸ்தன் ஆராதனாக்கினிகளுமாம்.

திரேதாயுகம் - மூன்றாவது யுகம். இது 1296000 வருஷங் கொண்டது.பலி இந்தயுகத்தவன்.

திரௌபதி - துரபதன்மகள். பாண்டவர்பாரி. இவள் பூர்வத்தில் நளாயனன் என்னும் இருஷி புத்திரி. இந்திரசேனையென்னும் பெயரோடு மௌத்கல்லியன் என்னும் இருஷிக்குப் பாரியாயிருந்த போது அவள் பதிவிரதாதர்மத்தைப் பரீடிpக்க விரும்பிய குஷ்டரோகியாகிய மௌத்கல்லியன் அவளுக்கு அசூயையுண்டாம் படி தன் தேகத்தை அழுகுபுண்ணாற் குரூரமாக்கியவழியும் அவள் மனங்கோணாது பாதுகாத்து வந்தாள். அது கண்ட மௌத்தகல்லியன் அவளை மெச்சி உனக்கு யாது வேண்டுமென்ன அவள் உம்மீது காமாதிகாரமுண்டாவதால் சுந்தரரூபத்தோடு நீர் என்னை ஐந்துவகை கலத்தல் வேண்டுமென்ன, அன்று முதல் இருவரும் அவ்வாறே கலந்து போகந் துய்த்துவந்தார்கள். மேளத்கல்லியன்சிறிது காலத்திலிறந்து போக அவளுமிறந்து மறுஜன்மத்தில் காரொசனுக்குப் புத்திரியாகப் பிறந்து பசுபதியை நோக்கித் தவங்கிடந்தபோது பசுபதி பிரசன்னாராகி யாது வேண்டுமென்ன, அவள், பதிந்தேகி, பதிந்தேகி, பதிந்தேகி, பதிந்தேகி, பதிந்தேகி என ஐந்து பதி தருகவென்று வேண்டினாள். அது காரணத்தால் பசுபதி நீ மறுஜன்மத்தில் ஐவருக்குப் பாரியாவையென்றருளி மறைந்தார். இவள் யாகத்திற் பிறந்தமையால் யாக்கியசேனை யென்றும் துருபதன் மகளாதலின் திரௌபதியென்னும் பாஞ்சாலராஜன் மகளாதலின் பாஞ்சாலி யென்றும் பெயர் பெறுவள். தந்தையிட்ட பெயர் கிருஷ்ணை.

திரௌபதியைத் துரியோதனன் தன்சபையிலெ பாண்டவர்கள் முன்னே ஆடைகளைவித்து மானபங்கஞ்செய்விக்கத் துணிந்த போது அவள் தன்னுடைய தெய்வபக்தியினால் உரிய வுரிய ஆடை வளரப் பெற்றவள். அதுகண்டு துரியோதனன் ஆற்றாது விடுத்தான். திரௌபதி பாண்டவர் ஐவருக்கும் பொதுமனைவியேயாயினும் அருந்ததியொத்தகற்பினாள். சத்தியந்தவறாதவள். ஐவருக்கும் முறைமுறை யொவ்வொராண்டு மனையறம் புரிபவன்.

திரௌபதி யுதிஷ்டிரனுக்குப் பெற்ற புத்திரன் பிரதிவி;ந்தியன்@ வீமனுக்குப் பெற்ற புத்திரன் சுரதசேனன்@ அர்ச்சுனனுக்குச் சுரதகீர்த்தி@ நகுலனுக்குச் சதானீகன்@ சகதேவனுக்குச் சுரதகன்மன். கிருஷ்ணனுக்கு ஐவரோடு, திரௌபதி தானும் தனது மனக்கிடக்கையச் சொல்ல நேர்ந்த போது, “ஐம்புலன்களும் போலைவரும்பதிகளாகவு மின்னம் வேறொருவ.... னெம் பெருங்கொழுனனாவதற்குருகு மிறைவனே யெனது பேரிதய... மம்புவிதனிற் பெண் பிறந்தவர்க் காடவரிலாமையில்லா... னம்புதற்குளதோ வென்றனள் வசிட்ட மல்லறமனைவியேயனையாள்”

திலீபன் - (1) (இடி{) விருத்தசர் பகீரதன் தந்தை. இத்திலீபன் கல்வியும் ஆண்மையும் செங்கோன்னைமயுஞ் சிறந்தவன். இவன் பாரி சுதடிpணை. திலீபசரித்திர சம்பந்தமாக சகுவமிசத்திற் கூறிய வமிசவரிசையும் புராணங்களிலே கூறிய வமிசவரிசையும் சிறிது மாறுபடுகின்றன. புராணேதிகாசங்களுகந்தம் முண்மாறு கொள்ளுகின்றன. ரகுவமிசம் திலிபன் ரகுவைப் பெற்றானென்று கூற, விஷ்ணுபுராணமுதலியன திலிபன் பகீரதனைப் பெற்றானெனக் கூறும். தசரதன் அஜன் புத்திரனென்பதும் அஜன் ரகுபுத்திரனென்பதும் ரசுவமிசம் விஷ்ணுபுராணம் இரண்டுக்குஞ் சம்மதம். ரகு தீர்க்கவாகு புத்திரனென்பது விஷ்ணுபுராணத்துணிபு. தீர்க்கவாகுவுக்குத் திலீபன் என்பது நாமாந்தரமாயின், ரகுவமிசம் மாறுபடுவதாகாது.

திலோத்தமை - ஓரப்சரப்பெண். புpரமா ஏனைப்பெண்களைச் சிருஷ்டிக்குந் தோறும் வாய்ந்த ஒழுகினுள்ளே திலப் (எட்) பிரமாணம் எடுத்துச் சேர்த்து வைத்திருந்து பின்னர்ச் சிருஷ்டித்த பெண்ணாதலின் திலோத்தமையெனப் பட்டாள். பாற்கடலிற் பிறந்தவள். ஆநாகுலபாண்டியனுக்குச் சாரகுமாரனையீன்றவள்.

தில்லைவாழந்தணர்கள் - சிதம்பரத்திலே ஆனந்ததாண்டவஞ் செய்தருளுகின்ற நடராஜப் பெருமானுக்கு அர்ச்சகராகவுள்ள அந்தணர்கள். அந்நடராஜப் பெருமானிடத்திலே எல்லையில்லாதபக்தியுடையவர்கள். சிவபிரான் அவ்வந்தணர்களுள்ளே தாமுமொருவரென்று கூறப்பெற்ற பெருமை வாய்ந்தவர்கள். இவ்வந்தணர் மூவாயிரவரும் இரணியவன் மச்சக்கிரவர்த்தியாலே கங்கைக்கரையிலே பிரமாவினது அந்தர்வேதியினின்றும் கொண்டு வந்து சிதம்பரத்திலே சேர்க்கப்பட்டவர்கள். இவர்கள் மகிமை கோயிற் புராணத்திலே கூறப்பட்டு;ள்ளது.

திவாகரம் - திவாகரமுனிவர் செய்த நிகண்டு. இஃது அம்பர்நகரத்துச் சேந்தன் செய்வித்தமையினால் சேந்தன் திவாகரமெனப் பெயர் பெறும். பன்னிரண்டு தொகுதிகளையுடையது. இந்நூல் சிற்றளவினவாகிய சூத்திரங்களால் யாக்கப்பட்டிருத்தலிற் கற்போர்க்குப் பெரிதும் பயன்படத்தக்கது. “கற்றநாவினன் கேட்டசெவியினன். முற்றவுணர்ந்த மூதறிவாளன், நாகரிகநாட்டத்தாரியனருவந்தை, தேருங்காட்சிச் சேந்தன்” எனத் திவாகரத்தள்ளே வருங்கூற்றாற் சேந்தன் செய்வித்தோனென்பதும், “செங்கதிர்வரத்திற்றோன்றுந் திவாகரர்” எனவரும் வீரைமண்டலவன் நிகண்டுப்பாயிரத்தாலே திவாகரர் சூரியகுலவேந்தர் பரம்பரையில் வந்தோரென்பதும் நன்றாக நிச்சயிக்கப்படும். சேந்தன் கல்லாடராற் புறநானூற்றினுள்ளே பாடப்படுதலின் திவாகரர் கடைச் சங்ககாலத்தவரென்பது நன்கு துணியப்படும்.

திவாகரன் - (1) திவாகரமென்பதனுட்காண்க. (2) இடி{வாகுவமிசத்துப் பிரதிவியோமன் மகன்.

திவியன் - (ய) சாத்தவதன் மகன்.

திவிரதன் - ததிவாகனன் மகன்

திவோதாசன் - (1) காசிராஜ வமிசத்துத் தன்வந்தரியினது பௌத்திரனாகிய பீமரதன் புத்திரன். இவனிடத்திலே தன்வந்தரியினது குணவிசேஷங்களெல்லாம் விளங்கினமையின் தன்வந்தரி என்னும் பெயராலும் வழங்கப்பட்டான். திவோதாசன் அரசியற்றுங் காலத்திலே விசுவாமித்திரர் புத்திரராகிய சுசுருதர் முதலிய எண்மரும் அவன்பாற் சென்று வைத்தியசாஸ்திரத்தைக் கிரமமாகக்கற்று வல்லாராகி எண்மருந் தனித்தனி நூல் செய்தார்கள். அவருள்ளே சுசுருதர் செய்த சுசுருதம் தலைமைபெற்ற வைத்தியசாஸ்திரங்களுளொன்றாய் விளங்குவது, ஆரியவைத்திய நூல்களுள்ளே அதுவொன்றே சஸ்திரசிகிற்சை முறையைத் திட்பநுட்பமாக விரித்துரைப்பது. சுசுருதம் இற்றைக்கு ஆயிரத்துநூறு வருஷங்களுக்கு முன்னே பர்ப்பரபாஷை (அரபி) யிலே மொழி பெயர்க்கப்பட்டது. லத்தீன் பாஷையிலும் பின்னர்க்காலத்திலே (ர்நிடநச) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்;டது. திவோதாசன் காசியிலே நெடுங்காலம் தருமராச்சியம் புரிந்து வந்தானென்றும், அவனே சிவாலயத்தை ஸ்தாபித்து முறைப்படி நித்தியநைமித்தியங்களை நடாத்திவந்தவனென்றும் ஸ்காந்தங்கூறும். (2) பகீரதன்மகன். (3) முற்கலன்மகன். அகலியை தமையன்.

திஷ்டன் - இடி{வாகு தம்பி. இவன் மகன் நாபாகன்.

திஷ்யந்தன் - துரியசித்தன் சுவீகாரபுத்திரன் துஷ்யந்தன் தம்பி.

தீடிpதன் - சோதிட்டோமம் புரிந்தோரது பரம்பரையில் வந்தோர்க்குரிய பட்டப்பெயர். ஆப்பை யதீடிpதன் என்றாற் போலவரும்

தீபகன் - மன்மதன்.

தீமந்தன் - (1) புரூரவன்மன். (2) விரூஹணன்மகன்.

தீயாடியப்பர் - மேலைத்திருக்காட்டுப் பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

தீரன் - பலியரசன்.

தீர்க்கமதமசு - (1) தீர்க்கமன். (2) அகலியைநாயகனாகிய கௌதமன்.

தீர்க்கதமன் - (1) உதத்தியன்மகன். இவன் பாரி பரத்துவேஷிணி. புத்திரர் கௌதமாதியர். இத்தீர்க்கதமன் பிறவிக்குரடன். (2) சுராஷ்டிரன்மகன். தன்வந்திரிக்குத்தந்தை.

தீர்க்கவாகு கட்டுவாங்கன் மகன்.
தீர்க்கபாகு இரகுவுக்குத் தந்தை.

தீர்க்காதேவி - திருதிபாரி.

தீர்த்தகாரர் ஜைனமதாசாரியர்.
தீர்த்ததங்கரர் அவர் ஆதிநாதன் முதலிய இருபத்துநால்வர்.

துங்கப்பிரஸ்தம் - ராமகிரிக்குக் கிழக்கின் கணுள்ள மலை.

துச்சலை - திருதராஷ்டிரன் மகள். தூய் காந்தாரி. ஜேயத்திரதன் மனைவி.

துச்சாசனன் - துரியோதனன்றம்பி. ஆண்மையிலும் துர்க்கிருத்தியத்கிலும்மிக்கவன். திரௌபதியைக் கூந்தலிற்பற்றி யிழுத்துப் போய்த் துரியோதனன் சபையிலே பாண்டவர்கள் பார்த்திருக்க அவளுடைய ஆடையையுரிந்து மானபங்கஞ் செய்யத்துணிந்த மகாபாவி இவனே. தருமனுடைய ஆணையென்னும் அங்குசத்தாலே தடுக்கப்பட்டிருந்த வீமசெனன் மற்றொன்றுஞ்செய்ய வியலாது சபை நடுவே எழுந்து நின்று “இத்தீச்செயல்புரிந்த துச்சாசனனைக் கொன்று இரத்தபானம்பண்ணுவென்” என்று சபதஞ் செய்தபடியே பின்னர்ச் சிலநாளில் நேர்த்த யுத்தத்திலே அவனைக் கொன்று வஞ்சினமுடித்தான்.

துண்டி காசியிலுள்ள
துண்டிவிநாயகர் விநாயகர்.

துந்து - உதங்கமகாரிஷிக்குப் பகைவனாயிருந்த வொரு கொடிய அசுரன். குவலயாசுவன் தன் புத்திரர் இருபத்தோராயிரவரோடுஞ் சென்று இவ்வசுரனை எதிர்த்து யுத்தஞ்செய்து கொன்று துந்து மாரனென்னும் பெயர் கொண்டான். குவலயாசுவன் புத்திரருள் திருடாசுவன் என்னும் மூவரொழிய, ஒழிந்தோர் யாவரும் துந்துவினது அக்கினிசுவாசத்திலகப்பட்டு மடிந்தனர். இச்சரித்திரத்தைக் கம்பர் “துந்துவெனுந்தானவனைச் சுடசரத்தாற் றொலைத்தானும்” என்பதாற் சுட்டினர். (கம்பராமாயணம் குலமுறைகிளத்துபடலம்)

துந்துபி - (ய) நரன்மகன் (2) மயன்புத்திரன். (3) மாயாதேவியினது இரண்டாம்மகன். வாலியாற் கொலையுண்டவன். மதங்கமுனிவர் வாசஞ்செய்த இருஷிய மூகபர்வதத்திலே துந்துபியினது இரத்தம் தெறித்து வீழ்ந்து அதனை அநுசிதம்பண்ண,மதங்கர் “இவ்வநுசித்ததுக்குக் காரணனாகிய வாலி இம்மலையை மிதிப்பனேல் அவன் தலை ஆயிரங்கூறாகுக” என்ற சபித்தனர். அன்று தொட்டு வாலி அங்கே செல்லா தொழுகினான்.

துந்துமாரன் - (இடி{) குவலயாசுவன். துந்து என்னும் இராடிசனைக் கொன்றவனாதலின் இப்பெயர் பெற்றான். துந்து காண்க.

தும்புரு - கந்தருவகுரு. இவரும் நாரதரும் பிரசித்திபெற்ற சங்கீதவித்துவான்கள்.

தும்புரீயம் - ராகதாள லடிணங்களைக் குறித்துத் தும்புரு செய்த நூல்.

துயர்தீர்த்தசெல்வர் - திரு ஒமாம் புலியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

துரியசித்தன் - யயாதிபுத்திரனாகிய துர்வாசன் பௌத்திர பௌத்திரன். இவனுக்குச் சந்ததியில்லாமையால் பரதன் சிற்றப்பனாகிய திஷ்யந்தனைத் தத்தபுத்திரனாக வெடுத்து வளர்த்தான்.

துரியோதனன் - திருதராஷ்டிரனுக்குக் காந்தாரிவயிற்றிற் பிறந்த நூறுபுத்திரருள் மூத்தோன். இவன் துச்சாதனன்கன்னன் சகுனி இவர்கள் போதனையால் பாண்டவர்கள் மீது பொறாமையுடையனாகித் திருதராஷ்டிரனைத் தனது எண்ணங்களுக்கு இயைவித்துக் கொண்டு அவர்களைச் சூதில் வென்று அவர்கள் இராச்சியபாகத்தைக் கவர்ந்து கொண்டு பதினான்குவருஷங்காட்டுக்குப் போய் மீண்டவருமிடத்து இராச்சியபாகந் தருவேனென்றுகூற, அவர்கள் அவ்வாறு போய் மீண்டவந்தபோது இராச்சியங் கொடெனென்று மறத்தமையால் அவர்கள் யுத்தஞ் செய்து பதினெட்டாநாள் இவனையும் இவன் கிளைஞரையுங் கொன்று வாகை சூடினர். (2) மநுவமிசத்தரசனாகிய சுதரிசனன் தந்தை.

துரகியு - யதாதிபுத்திரன்

துருபதன் - பாஞ்சாலதேசத்தரசன். காம்பில்லியநகரம் இவன்ராஜதானி. விரஷதன் இவனுக்கு தந்தை. திருஷ்டத்தியுமன் சிகண்டி இருவரும் புத்திரர். திரௌபதி புத்திரி. துருபதனும் துரோணனும் சகாத்தியாயர். (உடன் கற்றோர்)
துருபதன் பட்டாபிஷேகம் பெற்ற பின்னர் ஒருநாள் துரோணன் துருபதனிடஞ்சென்று தனக்குப் பொருளுதவி செய்யுமாறு வேண்டத்த துருபதன் துரோணனை நோக்கி “நீ யாவன் யாதுன்தேசம்” என்று முன் அறியான் போன்று வினாவி அவமானஞ் செய்தனுப்பினான். இதனை மனத்திடை வைத்துத் துரோணன் கௌரவ பாண்டவர்களிடம் போய் அவர்களுக்கு அஸ்திரவித்தை கற்பித்து வரும்போது, அர்ச்சுனன் வில்வித்தையில் அதி சதுரனாயினமைகண்டு, நீ எனக்குக் குருதடிpணையாகத் துருபதனைத் தருதல் வேண்டுமென்ன, அவன் அதற்குடன்பட்டு அவனைப் பிடித்து வந்து கொடுத்தான். துரோணன் சந்தோஷமடைந்து துருபதனை நோக்கி இப்போதுன்கதியாதாயிற்று என்று பலவாறு பரிகசித்தவமானம்பண்ணி அவனைப் போம்படி விடுத்தான். அவ்வன்மத்தாற் துருபதன் ஓருயாகஞ் செய்து அவ்வியாகத்திடைத் துரோணனைக் கொல்லும் பொருட்டுத் திருஷ்டத்துயமனையும் அர்ச்;சுணனுக்குப்பாரியாகத் திரௌபதியையும் பெற்று வளர்த்தான்.

துருவன் - உத்தானபாதனுக்குச் சுநீதிடத்துப் பிறந்தவன். (2) துஷ்டவசுக்களுளொருவன். (3) (பு) மதசாரன் இரண்டாம் புத்திரன். (4) (ய) பலராமன் தம்பி. (5) துருவநடித்திரம். (6) பிரமா. (7) விஷ்ணு.

துரோணன் - ஒரு படிp. இது தர்மபடிpகளுக்குத் தந்தை. முந்தபாலன் மகவு.

துரோணாசாரியன் - பரத்துவாசமுனி புத்திரன். ஆசுவத்தாமன் தந்தை. பாரதயுத்தத்தில் திருஷ்டத்தியுமனாற் கொல்லப்பட்டவன். இவனுக்குக் கம்பன் என்றும் பெயர். (துரோணம் ஓரளவினதாகிய கும்பம்) பரத்துவாசருடைய தவத்தையழிக்கும் பொருட்டு இந்திரன் ஏவலிற்சென்றமேனகை அவருக்கு விகாரத்தையுண்டாக்க, அவர் தமது வீரியத்தையுண்டாக்க, அவர் தமது வீரியத்தை ஒரு துரோணத்திலே விட்டார். ஆதிற் பிறந்தமையாலே துரோணனெனப்பட்டான். இவன் கௌரவபாண்டவரென்னு மிருதிறத்தார்க்கும் வில்வித்தை கற்பித்த ஆசிரியன்.

துர்க்கை - (1) விந்தியத்திலுள்ள ஒரு நதி. (2) துர்க்காதேவி. திரிலோக பயங்கரனாய்த் திரிந்த உருவென்னும் அசுரன் மகனாயிய துர்க்காசரனைக் கொன்றகாரணம் பற்றி இத்தேவிக்குத் துர்க்கை யென்னும் பெயருண்டாயிற்று@ துர்க்காசுரனாலே இந்திரன் முதலிய தேவர்கள் தம்பதங்களையிழந்து சிவன்பாற் சென்று குறையிரந்தனர். சிவன் அவர்க்கிரங்கி பார்வதியை நோக்க, பார்வதி தேவியார் தாமே அவ்வசுரனைக் கொன்று தேவர்களைக் காப்பதாகக் கூறிக் காலராத்திரியென்னும் பாங்கியை ஏவ, அப்பாங்கியார் அவ்வசுரனுடைய சேனாசமுத்திரத்தைக் கண்டஞ்சி மீண்டு பார்வதிதேவிhர்க் குரைக்க, தேவியார் சென்று அவன் சேனைகளையெல்லாம் பரிநாசம் பண்ணி அசுரனைச்சாட, அசுரன் மகா பர்வதப்பிரமாணமான ஒரு யானையாகி எதிர்த்தான். அவ்வடிவத்தைத்தேவியார் தமது நகங்களாலே கிழித்துத் துண்டஞ்செய்ய, அசுரன் ஒரு மகிஷமாகித் தேவியை எதிர்த்தான். அதுவுஞ்சிதைபட்டொழிய அசுரன் பழையவடிவு கொண்டு கொடிய ஆயதங்களையோச்சினான். தேவி ஒரு கடுங்கணையை விட்டு, மார்பைப் பிளந்து அவனைக்கொன்று தேவர்களுக்கு அச்சந்தீர்த்தருளினார். எனவே பார்வதிதேவியார் துர்க்கனைக் கொல்லுமாறு கொண்டருளிய வடிவமே துர்க்காதேவியாம். துர்க்காதேவியினது வரலாறு புராணங்களிலே பலபடக் கூறப்பட்டுள்ளது. துர்க்கை உருத்திரசக்திகளுள் ஒருபேதம். ஏண்டோருடையவரென்றும், பத்துக்கரங்களுடையவரென்றும், பதினெட்டுக்கரங்களுடையரென்றும், சூலம் வாள் சக்கரம் கரக முதலிய ஆயதங்களுடையரென்றும், சிங்கவாகினியென்றும், கலையூர்தியென்றும். புலவர்ணங்களை யுடையவரென்றும், துர்க்கங்களிலே சஞ்சரிப்பவரென்றும், போர்த்தொழிலுக்கு அதிதேவதையென்றும் கன்னியென்றும் பலவாறாகக் கொண்டு உபாசிக்கப்படுவர். காளிகாதேவிக்குரிய லட்சணங்களுமேற்றிக் கூறப்படுவர்.

துர்ச்சேயன் - தநுபுத்திரன்

துர்த்தமன் - (1) காந்தாரன் பௌத்திர புத்திரன். (2) (ய) பத்திரசேனன் புத்திரன்.

துர்மதன் - வசுதேவன் புத்திரன்.

துர்மருஷணன் - துரியோதனன் தம்பி.

துர்முகன் - (1) துரியோதனன் தம்பி. (2) மாலியவந்தன்மகன்.

துர்யோதனன் - துரியோதனன் காண்க.

துர்வசன் யயாதிக்குத் தெய்வயானை
துர்வசு யிடத்தப் பிறந்த புத்திரன்.

துர்வாசன் - அத்திரிக்கு அநசூயையிடத்துப் பிறந்த புத்திரனார். அவர் சகோதரர் சோமதத்தாத்திரேயர். அவர் மகா கோபியாதலின் அவர் கோபம் உலகத்தாருக்கு உவமானப்பிரமாணமாய் விட்டது. கோபியாயினும் அவர் தவத்திற் சிறந்த மகா ரிஷி. தாம் நீட்டிய திருமாலையைத் தோட்டி யாலேற்று. யானையினது மத்தகத்திற் சேர்த்த இந்திரனது செல்வமெல்லாம் போய்த் திருப்பாற்கடலிற் புக்கொளிக்குமாறு சபித்தவர் இவரே.

துலாதாரன் - வாரணாசியிலிருந்த ஒரு வணிகசிரேஷ்டன். இவன் ஜாஜிலி யென்னும் இருடிக்குப் பிரமசீதையையுபதேசஞ்செய்த புருஷோத்தமன்.

துலவமிசம் - யயாதிமகனாகிய துர்வசு வமிசத்தில் சந்திரகுப்தன் வழிவந்த சூத்திரகுலம் மூன்றனுளொன்றாகிய அந்தர சூத்திரகுலம். இக்குலத்துவந்து தமிழ் நாட்டிற் குடியேறினோர் துளுவவேளாளர் எனப்படுவர்.

துவரை - கண்ணன் பசுமேய்த்து விளையாடியதோரூர்.

துவஷ்டா - (பிரி) (1) யாவனன்மகன். (2) துவாதசாதித்தியருளொருவன். (3) சுக்கிரபுத்திரனாகிய தைத்தியகுரு. (4) பிரமமாசை புத்திரருளொருவன். இவன் குமாரன் விசுவரூபனை இந்திரன் கொன்று பிரகத்திபெற்றான்.

துவஷ்ரா - சூரியன் பாரியாகிய சௌஞ்ஞாதேவி. இவள் சூரியனது உஷ்ணத்துக்காற்றாது தனக்கு ஈடாகச் சாயாதேவியை நியமித்துவிட்டத் தந்தைவீடு சென்றாள். துவஷ்டா தன்மகள் செய்தது குற்றமெனக்கண்டு அவளைச் சூரியனிடம் போகச் சொன்னான். அவள் அதற்குடன் படாது அங்கு நின்று நீங்கி ஒரு பெண்குதிரைரூபங் கொண்ட மேருச்சாரலிற் சென்றங்கிருந்தாள். சூரியன் அவனைத்தேடித் தந்தை வீடு சென்று வினாயினான். துவஷ்டா சூரியனைநோக்கி உன் உஷ்ணத்துக் காற்றாது வடவைரூபந்தாங்கி மேருச்சாரலிலுள்ளாள் என்றான். அது கேட்டுச் சூரியன் தன் சோதியிற் சிறிது பாகத்தையுதறிவிட்டு ஆண்குதிரையாகி மேருபக்கஞ் சென்று அவளைக்கூடி அஸ்வினி தேவரைப் பெற்றான். துவஷ்டா அங்கு விழுந்த சோதியைச் சக்கராயுதமும் சூலமும் வச்சிராயுதமுமாக்கி முறையே விஷ்ணு சிவன் இந்திரர்களுக்குக் கொடுத்தான்.

துவாதசாந்தஸ்தலம் - மதுரை.

துவாபரம் - மூன்றாவது யுகம். 364000 வருஷங்கொண்டது.

துவாரகை - கிருஷ்ணன் ராஜாதானி. அஸ்தினாபுரத்துக்கும் இந்நகருக்கும் 70 காததூரம். ஆங்காங்கே அநேக துவாரங்களையுடைய கோட்டையை யுடையதாதலால் துவாரகை யென்னும் பெயர்த்தாயிற்று. துவாரம் - வாயில்.

துவிசராசகுலோத்துங்கன் - ராஜசார்த்தூல பாண்டியனுக்குப் பின் அரசு செய்தபாண்டியன்.

துவிதன் - பிரமமானச புத்திரருளொருவன்.

துவிமீடன் - (பு) ஹஸ்திகன் இரண்டாம் புத்திரன். இவன் வமிசத்தர் பௌரவரெனப்படுவர்.

துவிமூர்த்தனன் - தநுபுத்திரருளொருவன்.

துவிவிதன் - மைந்தன் சகோதரனாகிய ஒரு வாநரன். இவன் நாகாசுரன் சினேகன். நுரகாசுரனைக் கிருஷ்ணன் கொன்ற கோபத்தால் அக்கிருஷ்ணன் நகரத்தில் இவ்வாநரன் சென்று அழிவு செய்த பொது பலராமனாற் கொல்லப்பட்டவன்.

துவைதம் - ஒரு மதம். ஜீவாத்மா பரமாத்மாவென விரண்டும் வேறென்றும், ஜீவாத்மா பஞ்சபேதஞானத்தால் மோடிம்புகு மென்றும் பிரதிபாதிப்பது. இது மத்துவாசாரியாராகிய ஆநந்ததீர்த்தராலே ஸ்தாபிக்கப்பட்டது. (2) பாண்டவர்கள் காமியகவனத்தை விட்டுப்போய் வசித்த வனம் துவைதவனமென்று பெயர் பெறும்.

துவைபாயனம் - இது குருNடித்திரத்துக்குச்சமீபத்திலுள்ள ஒருதடாகம். துரியோதனன் தன்சேனைகள் மாண்டொழிந்தபின்னர் இத்தடாகத்தில் ஜலஸ்தம்பனம் பண்ணிக் கொண்டு மறைந்திருந்தான்.

துஷிதர் - தேவர்களுள் ஒரு பாலார். துஷிதர் என்பதற்குச் சந்தோஷமுடையர் என்பது பொருள்.

துஷ்டிமந்தன் - (ய) கம்சன் தம்பி.

துஷ்யந்தன் - (பு) ஈளினனுக்கு ரதந்தையிரடத்துப் பிறந்த புத்திரன். சகுந்தலை கணவன். பரதன் தந்தை.

தூமாதிமார்க்கம் - பிதிர் கர்மங்களைத் தவறாது செய்தவர்கள். பிதிர்லோகஞ் செல்;லும் மார்க்கம். பிதிர்கள் பொருட்டு வளர்க்கப்பட்ட அக்கினி ஹோத்திரத்தினது தூமகாரணம்பற்றி வந்து பெயர்.

தூமிரகேது - தனுபுத்திரன்.

தூமிராடின் - சுமாலி புத்திரன்.

தூமிரை - பிரஜாபதி பாரி. துரன் என்னும் வசுவுக்குத் தாய்

தூமோர்ணை - யமன்மனைவி.

துருவாடிp - வசுதேவன் தம்பியாகிய விருகன் பாரி.

தூவலகன் - (ர) மல்லயுத்தத்திற் கிருஷ்ணனாற் கொல்லப்பட்ட ஓரசுரன்.

தூஷணன் - (ரா) விச்சிரவசுமகன். குரன் சகோதரன் ஜனஸ்தானம் இவனுக்குஸ்தானம்.

தேர்ப்பாரண்ணியேசுவரர் - திருநள்ளாற்றிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

தெலுங்கு - ஆந்தரதேசத்து மொழி. ஆது வடமொழி தென்மொழியிரண்டுங் கலந்துண்டாய தொருமொழி. அதனை ஆதிலே இலக்கணஞ் செய்து செம்மைசெய்தவர் கண்ணுவமுனிவர் என்ப. அது ஒன்றே முக்காற்கோடி. சுனங்களாலே வழங்கப்படுகின்றது. பிற்காலத்திலே அப்பாஷையைச் சிறப்பித்த வித்துவ ரத்தினங்கள் நன்னயபட்டர். அப்பகவிதிக்கன்ன சோமயாஜி. வேமனன் முதலியோர். சுங்கீதத்துக்கு அதிமதுரமானமொழி.

தென்காசி - பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம்.

தென்குரங்காடுதுறை - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

தென்திருப்பேரை - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

தென்னாலுராமன் - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். தென்னாலுராமன் - சந்திரகிரியிலே பிறந்து விளங்கிய அற்புதவி வேகியாகிய ஒருஹசிய வித்துவான். ஜாதியிலே தெலுங்கன். இற்றைக்கு முந்நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர் விளங்கினவனென்பது ராயர்கள் சரித்திரத்தாலே துணியப்படும்.

தேஜஸ்வி - அகஸ்தின் பௌத்திரன். திருசியன் புத்திரன்.

தேஜோவதி -அக்கினிதேவனது நகரம். அது சோதிமயமாயிருக்கும்.

தேநவர் - சுசுருதரோடு ஆயுள்வேதங்கற்றவர்.

தேரையர் தமிழிலே அகஸ்தியர் பால்
தேரனார் வைத்தியங்கற்ற மாணாக்கருள்ளே முதன்மை பெற்றவர். வைத்தியத்திலே தமக்கு ஒப்பாருமிக்காருமில்லாதவர். சாரீரம், நிதானம், சிகிற்சை முதலிய துறைகளிலெல்லாம் மிக்க வல்லுநர். பதார்த்தகுணமெல்லாம் கடைபோகவா ராய்ந்தவர். பதார்த்தகுணமென்னும் அற்புதநூல் செய்தவருமிவரே. தமிழிலே இறந்தனபோக எஞ்சியுள்ள உண்மைப் புராதனவைத்திய நூல்கள் இவர் செய்தன சிலவே. ஏனையவெல்லாம் கற்பித நூல்களேயாம். நீர்நிறக்குறி நெய்க்குறி, தைலவருக்கச்சுருக்கம், கஷாயம் நூறு, பதார்த்தகுணம் சிகிற்சை ஆயிரம் முதலியன இவராற் செய்யப்பட்டன. சிகிற்சை ஆயிரமும் அச்சிடுவோரால் ஆராய்வின்றி இடையிடையே பிறழ்விக்கப்பட்டது. தேரையர் கூறும் சிகிற்சைகள் உள்ளவாறு செய்யப்படுமாயின் தவறுவதரிது. சஸ்திரவைத்தியத்திலுள்ளுஞ் சிறந்ததாகமிய கபாலசல்லியத்திலே பெயர்படைத்தவரென்றால் அத்துறையில் அவர் வன்மை கூறவேண்டா. ஓருவாற்றானும் நீங்காத தலைக்குத்தினால் வருந்திய ஒரரசனுக்கு அந்நோயின் காரணத்தை நிதானித்துச் சம்மோகினியைப் பிரயோகித்து அவனை மயங்கி அவன் கபாலத்தைத் திறந்து அமிர்தத்திலிருந்த தேரையை ஒரு நீர்க்கிண்ணத்திலுள்ளே பாய்வித்துப் பின்னர்ச் சந்தானகரணியினாலே அக்கபாலத்தை முன்போலப்பொருத்தி அந்நோயை நீக்கினாரென்பது கன்னபரம்பரை. இதற்கிணையான சரித்திரமொன்று போஜப்பிரபந்தமென்னும் வடமொழி நூலிலுங் கூறப்பட்டுள்ளது. ஆஷ்டவிதபரீiடியினாலேயன்றி நோயினது சாத்தியாசாத்தியங்களை ஆடிக் கலசத்திற்பெய்த மூத்திர நடுவேயிட்ட ஒரு துளி எண்ணெய்க் கொண்டு பண்டிதரல்லாதாரு முணர்ந்து கொள்ளுமாறு நெய்க்குறி நூல் செய்தவர் தேரையர். சூத்திரங்களுட் சில வருமாறு :-
“விடுதுளிசிதறி வௌ;வேறொன்மற் - கடுகெனப்பரவிற் கைவிடன் முறையே”
“அவியுமூத்திரமு மணைந்தொன்றினாவி - யவியுமென்றல் கவுதமரறையே”
“முல்லையரும்பு முளிரிப்பூவுஞ் சொல்லியதுளியுட் டோற்றிடுமாயின்- இல்லையில்லைநோ யென்பது சாரமே”

தேர்வண்மலையன் - வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனாராற் புறநானூற்றிலே வைத்துப் பாடப்பட்டவன். இவன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணையாகிச் சேரமான்ழாந்தரஞ்சேரலிரும் பொறையைப் போரில் வென்றவன். (புறநானூறு)

தேவகன் - (ய) உக்கிரசேனன் தம்பி. தேவகிக்குத் தந்தை.

தேவகி - வசுதேவன் பாரி. கிருஷ்ணன்தாய். (2) கோசலதேசத்திற் பிரவாகித்துக் கங்கையிற் சங்கமிக்கின்ற நதி.

தேவகிரி - சத்துரு நதிக்கும் யமுனைக்குமிடையேயுள்ள நதி.

தேவடித்திரன் - தேவராதன்மகன்

தேவசிரவசு - (ய) வசுதேவன் தம்பி.

தேவசேனை - அரிஷ்டநேமிமகன். இவளைக் கேசியென்னும் அசுரன் எடுத்துப் போகும் போது இந்திரன் மீட்டுவளர்த்தான். இத் தேவசேனையே குமரக்கடவுள்தேவி.

தேவதத்தம் - அர்ச்சுனன் சங்கு. இந்திரன் கொடுத்தமையின் தேவதத்தம் என்னும் பெயர் பெற்றது.

தேவதாருவனம் - பிருகு முதலிய மகாரிஷிகள் தவஞ்செய்த மகாவனம். ஆம்மகாரிஷிகளுடைய தவத்தைச் சோதிக்கும் பொருட்டும். மீமாஞ்சை நூலே உண்மை நூலெனவும், அந்நூலிலே கூறப்பட்டயாகங்களே இருமைப்பயன்களையும் பயப்பனவெனவும் கொண்ட மயக்கத்தைத் தீர்த்தாட் கொள்ளும் பொருட்டும் சிவன் பிடிhடன மூர்த்தியாகி விஷ்ணுவை மோகினியாக்கித் தம்முடன் கொண்டு இவ்வனத்திற் புகந்தனர். மோகினி வடிவைக்கண்ட முனிவர்கள் காமத்தாற் கலங்கி நியமமிழந்தார்கள். இருஷிபத்தினிகள் பிடிhடன மூர்த்தயுடைய சுந்தரரூபத்தைக்கண்டு கற்புநிலைகலங்கித்தம்மை மறந்து அவர் பின்னேசென்றுழன்றார்கள். முனிவர்கள் தம்மனைவியரது கற்பைக்கலக்கிய சிவபிரானைக் கொல்லும் பொருட்டு அபிசாரவேள்வி செய்து அதினின்றும பூதங்களையும் புலியையுஞ் சர்ப்பத்தையும முயலகனையுமெழுப்பி விட்டார்கள். பூதங்களைச் சிவன் தம்க்குப்பரிசனமாக்கினர். புலியையுரித்து அவ்வுரியை யாடையாக்கினர். சர்ப்பத்தை ஆபரணமாகக் கொண்டனர். முயலகனைக் காலின் கீழிட்டுக் கொண்டனர். அவற்றைக் கண்ட முனிவர்கள் தம்மயக்கந்திர்ந்து சிவனைவழிபட்டுய்ந்தார்கள். இருஷி பத்தினிகளும் சிவன் கடைக்கண்ணோக்கத்தால் சிவஞானம் பெற்றுய்ந்தார்கள் . இச்சரித்திரத்திலே சிவன் ஆன்மாக்களை ஆணவமலத்தைக் கெடுத்து ஆட்கொள்ளுஞ்செயல் கூறப்பட்டது. பிடிhடனவடிவம் சிவம். மோகினிவடிவம் சத்தி. இருஷிகள் மெய்யுணர்வு தலைப்படாத பக்குவான்மாக்கள். இருஷிபத்தினிகள் அகங்காரம் இச்சரித்திரம் சிவபுராணங்களிலே சிறிது மாறுபடக் கூறப்பட்டுள்ளது.

தேவந்தி - கண்ணகியின் பார்ப்பனத்தோழியாப் மாநாய்கன்மனையில் வளர்ந்தவள். மானிடவடிவங் கொண்ட சாத்தனென்னும் தெய்வத்தின் மனைவி தான் கண்ட தீக்கனாவைக் கண்ணகி சொல்லிய பொழுது தேற்றியவள். கண்ணகிக்கும் கோவலனுக்கும் நோர்ந்த துன்பத்தைக்கேட்டு மதுரையையடைந்து பின்பு வஞ்சிநகரஞ் சென்று அங்குப் பிரதிட்டிக்கப்பட்டிருந்த கண்ணகி வடிவத்தைப் பூசித்தவள்.

தேவபாகன் - (ய) வசுதேவன் தம்பி. ஊத்தமனுக்குத் தந்தை.

தேவபூதி - மகததேஜராசாக்களாகிய சிருங்கிகளுள்ளே கடைஅரசன். (கண்ணுவன்காண்க)

தேவப்பிரயாகை - இது அலகநந்தை கங்கையோடு சங்கமிக்குமிடத்துள்ள நகரம். இங்கே 900 அடியுயரமுள்ள ஒரு விஷ்ணு ஆலயமிருக்கின்றது.

தேவமித்திரன் - மாண்டூகேயன் சீஷன்.

தேவமீடன் - ஹிருதிகன் மகன். வசுதேவன் பாட்டன்.

தேவயானை - (1) சுக்கிராசாரி மகள். யுயாதி பாரி. (2) தேவேந்திரன் வளர்த்தமகள். (தேவசேனை காண்க)

தேவரடிpதி - வசுதேவன் பாரி. தேவகன்மகள்.

தேவராதன் - (மி) சுகேதன் மகன். (2) (ய) கரம்பியாகியகுந்திமகன். (3) சனசேபன்.

தேவர் - ஜன்மதேவர் கர்மதேவர் என இருதிறத்தினர் தேவர், அக்கினி, இந்திரன்ன. யமன், சூரியன். வுhயு, வருணன் முதலியோர் ஜன்மதேவதைகள் இவர்கள் லொகோபகாரார்த்தமாக ஒவ்வோரதிகாரத்தோடு சிருஷ்டி காலத்திலே சிருஷ்டிக்கப்பட்டுத் தத்தம் அதிகாரத்தைச்சங்காரகாலம்வரைக்குஞ் செலுத்தி நின்று அழிபவர்கள். இனிக் கர்மதேவதைகள் மனுஷருள்ளே புண்ணிய விசேஷத்தாற் சுவர்க்கம் போய்த் தேவகதியடைந்து மீள்பவர்கள். இவர்கள் நகுஷன் முதலியோர்@ இன்னும் பிதிர் தேவதைகளெனவும் ஒருபாலாருளர். அவர்கள் பிரஜாபதிபுத்திரர்கள். இவர்களே மனுஷ கணங்களுக்கு ஆதிபிதாக்கள். இன்னும் இறந்து போகின்றவாகளெல்லாரும் தத்தம் குடும்பத்தனர்க்குப் பிதிரராகின்றார்கள். ஓரு காலத்தில் இந்திராதிதேவர்களும் பிதிர்களும் அசுரபீடைக்கஞ்சிக் காகரூபந்தாங்கிப் பூமியிற் சஞ்சரித்தார்கள். அதுபற்றியே காதங்களுக்குப் பிண்டமிட்டுண்ணும் வழக்கம் உலகத்துண்டாயது. இதுவாயசபிண்டமெனப்படும்.

ஜன்மதேவர் முப்பத்துமூவர். புpரமா 1. இந்திரன். 1. வசுக்கள். 8. ருத்திரர் 11. ஆதித்தர் 12.ஆக 33 பிரமேந்திரரை நீக்கி அசுவினிதேவர் இருவரையுங் கூட்டி எண்ணுவாருமுளர்.

தேவலன் - (1) (ரி) அஷ்டவசுக்களு ளொருவனாகிய பிரததியுஷ்ன் மகன். இவனுக்கு டிமாவர்த்தன், மனஸ்வி என இருவர் புத்திரர். (2) (ய) அக்குரூரன் சேட்டபுத்திரன் (3) (ய) தேவகன்மகன்.

தேவவதி - (ரா) சுகேசன்பாரி. கிராமணியென்னும் கந்தருவன் மகள் தேவமணி.

தேவவர்த்தனன் - (ய) தேவகன் மகன்.

தேவவிரதன் - வீஷ்மன்

தேவஸ்தாணன் - (ரி) பாரதயுத்தத்தின் பின்னர் கிருஷ்ணன் நிரியாணமடைந்தமையால் துக்கித்திருந்த தருமருக்கு உபதேசஞ் செய்தவிருஷி.

தேவஹ10தி - சுவாயம்புவமனுமகள். கர்த்தமப்பிரஜாபதி பாரி. கபிலமகாவிருஷிதாய்.

தேவாதிதி - (கு) அக்குரோதன் மகன்.

தேவாந்தகன் - (ரா) இராணவன் மகன். ஹனுமந்தனாற் கொல்லப்பட்டவன்.

தேவாபி - (கு) பிரதீபன் சேட்ட புத்திரன். இவன் தன் தம்பியாகிய சந்தனுவுக்கு ராச்சியத்தைக் கொடுத்து விட்டுக் காட்டக்குத் தபசுக்குப் போனவன்.

தேவாபிருதன் - (ய) சாத்துவதன் புத்திரருளொருவன். இவனுக்குப் பப்பிருவென்னும் புத்;திரனொருவன் பிறந்தான்.

தேவாரணியம் - லோகித்தியநதி தீரத்திலுள்ள ஒரு வனம். இங்கே மாணிதரன் என்னும் யடின் வசித்தான்.

தேவாரம் - தேவ ஆரம் - தேவாரம். ஆரம் - மாலை. கடவுளுக்கு நாரினாலே தொடுத்துச் சாத்தப்படும் மலர்மாலை போலப் பத்தியாகிய நாரினாலே தொடுத்தச் சாத்தப்படும் அன்பு மணக்குஞ் சொன்மாலையாதலின் தேவாரமெனப்பட்டது. அப்பர் சம்பந்தர் சுந்தரர் என்னும் மூவர் பாடலுமே தேவாரமெனப்படும். அவையனைத்துமாகத் தொண்ணுற்றாறாயிரம் பதிகம். அவற்றுள் அழிந்தனபோக எஞ்சியுள்ள எழுநூற்றுத் தொண்ணூற்றைந்து. இதன் சிறப்பைத் திருநாவுக்கரசுநாயனார் என்பதனுட் கூறினாம். தேவாரந் தோன்றிநின்று நிலவுங்காலத்திலே தமிழ்நாட்டிற் பகையரசர் படைநடத்தி எரியூட்டியும் சூறையாடியும் நாட்டைக் கலக்கியபோது தேவாரத்திருமுறைகளெல்லாம் அக்கினி வாய்ப்பட்டனவும் பிறநாட்டிற் சென்றனவுமாயருகின. அதன் பின்னர் அபயகுலசேகர சோழன் தன் சபையிற் போந்த புலவர் வாயிலே ஒரோரு தேவாரப்பாக்களைக்கேட்டு அவற்றின் பெருமையையும் இனிமையையும் அளந்து பேராசையுற்று அத் திருமுறையை எங்குந்தேடியும் பெறானாய் நம்பியாண்டார் நம்பியாற் சென்று இப்போதுள்ள எழுநூற்றுத் தொண்ணூற்றைந்து பதிகங்களையுமே பெற்றான். அது பெற்றகாலம் இற்றைக்கு எழுநூறு வருஷங்களுக்கு முன்னுள்ளது.

தேவானீகன் - Nடிமதன்னுவாமகன்.

தேனார்மொழியம்மை - குடந்தைக்கா ரோணத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

தேனீக்குடிக்கீரனார் - இவர்கடைச் சங்கப்புலவர்களு ளொருவர்.

தேனுகாசுரன் - விருந்தாவனத்திலிருந்த ஜனங்களைக் கர்த்தபரூபங் கொண்டு கொன்று வந்த அசுரன். பலராமனாற் கொல்லப்பட்டவன் கர்த்தபம் - கழுதை.

தைத்தியசேனை - தேவசேனை தமக்கை. ஆரிஷ்டநேமிமகள்.

தைத்திரியம் - இஃதோருபநிஷதம் இதுயசுர் வேதத்தைச் சேர்ந்தது. இதற்குச் சங்கராசாரியரும் சாயணரும் பாஷியஞ்செய்திருக்கின்றார்கள். (யாஞ்ஞவற்கியர் காண்க)

தைத்தியர் - திதிபுத்திரர்.திதி காமாதிகாரத்தார் சந்தியாகாலத்திலே கசியபனைப் பலாத்காரமாகச் சேர்த்து இரணியாடின் இரணிடயகசிபன் என்னும் இருவர் புத்திரரைப் பெற்றாள். சந்தியாகாலத்திற் பிறந்தமையால் இருவரும் குரூர ராடிசர்களானார்கள். இவர்களுள் இரணிடயாடினை விஷ்ணு வராகாவதாரத்தாலும், இரணியகசிபனை நரசிங்காவதாரத்தாலுங் கொன்றார்;. திதி வியிற்றில் சிங்கிகை யென்றொருபுத்திரியும் பிறந்தாள். இவர் வழிவந்தோரும் தைத்திய ரெனப்படுவர்.

தைத்தியவனம் - சரசுவதிக் கரையின் கண்ணதாகிய காமியகவனத்துக்குப் போகுமுன்னர்ப் பாண்டவர்கள் வசித்தவனம். வேதவியாசர் பாண்டவர்க்கு வெளிப்பட்டு உபதேசம் பண்ணியவனம்.

தொடித்தலைவிழுத்தண்டினார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவராற் பாடப்பட்டவன் பெருஞ்சாத்தனென்னும் வேளாளன். பூணிட்ட தலையையுடைய பெருந்தண்டூன்றி நடக்கும் மிக்க முதுமையுடையவர் என்பது பெயர்ப்பொருள்.

தொண்டரடிப்பொடியாழ்வார் - இவா கலியுகம் 200ல் சோழதேசத்திலே மண்டங்குடியிலே பரசூடன் என்னும்; வைஷ்ணவனுக்குப் புத்திரனாராகப் பிறந்த விளங்கிய விஷ்ணுபக்தர்.

தொண்டி - சோழகுலத்தோர் ருறையும்; ஒரு நகரம்.

தொண்டைமண்டலம் - “வேழமுடைந்து மலைநாடு மேதக்க - சோழவளநாடு சோறுடைத்த பூமியர்கோன் - தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றாண்டை - நன்னாடு சான்றோருடைத்து” என்ற ஒளவையாராற் புகழப்பட்;ட இந்நாடு, கிழக்கே கடலும், மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும், தெற்கே பினாகிநதியு மெல்லையாகவுடையது. இதற்கு இராஜதானி காஞ்சீபுரம். இந்நாடு பூர்வத்திலே சோழ நாட்டைச் சேர்;ந்தது. நாகபட்டினத்துச் சோழன் நாகலோகஞ் சென்ற காலத்திலே நாககன்னிகையை மணம்புரிந்து அவள் வயிற்றிலே பிறக்கும் புத்திரனுக்குத் தனது நாட்டிற் பாதிகொடுப்பதாக வாக்களித்து மீண்டான். மீளும்போது நாககன்னிகை தன் புத்திரனை அனுப்புவது எவ்வாறென்று வினவ, அவன் தொண்டைக் கொடியை அடையாளமாகக்கட்டித் தெப்பத்திலிட்டனுப்பக் கடவை யென்றான். அவ்வாறே அப்புதல்வன் தொண்டைத்தழை சூடிக்கொண்டு திரையாற் செலுத்தப்பட்டு நாகபட்டினக் கரையையடைந்தான். சோழன் அவனை வளர்த்து இந்நாட்டைப் பிரித்து அவனுக்குக் கொடுத்துத்தொண்டைமான் என்னும் பெயரும் முடியுஞ் சூட்டினான். தொண்டைமான் ஆண்டமையின் அது தொண்டைமண்டலமென்னும் பெயர்த்தாயிற்று. இது நெடுங்காலம் உபநாடகவுஞ் சிலகாலந் தனிநாடாகவுமிருந்து பெரும்புகழ்படைத்தது. இந்நாட்டிலே திருவள்ளுவர், கச்சியப்பர், கம்பர், பரிமேலழகர், ஒட்டக்கூத்தர், ராமாநுஜாசாரியர், சேக்கிழார், இரட்டையர், அருணகிரிநாதர், பவணந்தி, படிக்காசுப்புலவர், அப்பையதீடிpதா முதலியவித்துவ சிகாமணிகளும். அதிகமான், கறுப்பன், சடையப்பமுதலி முதலிய மகௌதாரியப் பிரபுக்களும், உத்தமகுண அரசர்களும் விளங்கின ரென்றால் அதன்பெருமை எடுத்துக் கூறுவேண்டா. இத்தொண்டை நாட்டுப் பெருமையைப் படிக்காசுப்புலவர் தொண்டைமண்டலசதக மென்னும் நூலாற் பாடினர்.

தொண்டைமான் இளந்திரையன் - கடியலூர் உருத்திரங்கண்ணனாராலே பெரும்பாணாற்றுப்படையிலே வைத்துப் பாடப்பட்டவன்.

தொல்காப்பியம் - அகத்தியமுனிவர் மாணாக்கருள் ஒருவரும், இடைச்சங்கப்புலவரு ளொருவருமாகிய தொல்காப்பிய முனிவர் செய்த இயற்றமிழிலக்கணநூல். இஃது எடுத்து, சொல், பொருள் என்னும் மூன்ற அதிகாரங்களையுடையது. இதற்குரை செய்தோர் கல்லாடர், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியரென ஐவர்.

தொல்காப்பியனார் - இவர் சமதக்கினிமுனிவர் புத்திரராகிய திரணதூமாக்கினி என்பவர். இவர் வடநாட்டினின்று தென்னாட்டிற்கு அகஸ்தியமுனிவரோடு சென்று அவர் பாற்றமிழ்கற்று மிக்கவல்லுநராகித் தம்பெயராலே தமிழிற்கு இலக்கண நூல் செய்தவர். இவர் தொல்காப்பியக்குடியை உடையராதலின் தொல்காப்பியரென வழங்கப்படுவாராயினார். இவரோடொருங்கு கற்றவராகிய பணம்பாரனார் இவர்மேற் கூறிய சிறப்புக்கவி வருமாறு:-
“வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி- னெழுத்துஞ் சொல்லும் பொருளுநாடிச்- செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு -முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணிப் - புலந்தொகுத் தோனெ போக்கறுபனுவ - னில்ந்தருவிற் பாண்டியனவையத் - தறங்கோட்டாசாற் கரிறபத்தெரித்து - மயங்காமரபி னெழுத்து முறை காட்டி - மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த - தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றிப் - பல்புகழ் நிறுத்தபடிமையோனே” இவர் நிலந்தருவிற் பாண்டியன் சயமாகீர்த்திகாலத்தவர். எனவே இவர் காலம் முதற் சங்கத்தறுதியும் இடைச்சங்கத்து முதலுமாம். இவ்வுண்மை தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் “பொய்யும் வழுவும்” என்னுஞ் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையினுள்ளே “இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின்” என வருவதனாற் பெறப்படும்.

தோயஜகர்ப்பன் - பிரமன். (தோயஜம் - தாமரை)

தோலாமொழித்தேவர் - சூளாமணியென்னும் தமிழ்க்காவியஞ் செய்த சைனமுனிவர்.

தோஷை - புஷ்பாரணன் இரண்டாம் பாரி.

தௌமியன் - பாண்டவர்கள் புரோகிதன்.

தௌர்வாசம் - துர்வாசப்புரோக்தமாகிய ஒருப்புராணம்.

நகுலன் - பாண்டுவுக்கு மாத்திரியிடத்திலே அசுவினிதேவர் பிரசாதத்தாற் பிறந்தவன். இவனுக்குத் திரௌபதியிடத்தில் சதானிகனும் ரேணுமதியிடத்தில் நிரமித்திரனும் பிறந்தார்கள்.

நகுஷன் - சந்திரவமிசத்த ஆயுவுக்குச் சுவர்ப்பாநவியிடத்துப் பிறந்தவன். புரூரவன் பௌத்திரன். இவன் பாரிபிரியம்வதை, புத்திரர்கள், யதி,யயாதி. சம்யாதி, ஆயாதி, உத்தமன் என ஐவர். இந்திரன் பிரமஹத்திர கோஷத்தினால் அப்பதத்தைவிட்டு நீங்கிப்போக, அப்பதத்துக்கு நகுஷனே தக்கனெனத்; தேவர்களுணர்ந்த, அவனைப் பிரார்த்தித்து இந்திரனாக்கினபார்கள். அதனாற் கர்வமுற்ற நகுஷனை இருஷிகள் சிவகையிற்றாங்கிச் சென்ற ஒரு சமயத்தில், நகுஷன் அவர்களை விரைந்து செல்லுகவென்று எவுவான் “சர்ப்ப சர்ப்ப”என்றான். அது சகிக்காத அகஸ்தியா அஜகரம் என்னும் சர்ப்பமாகப் பூமியிற்பிறக்குமாறு அவனைச் சபித்தார். அவ்வாறே அவன் இந்திரபதத்தினின்றுமிழிந்த மலைப்பாம்பாகச் சஞ்சரிக்கும்போது, பாண்டவர்களை வனவாசகாலத்திலே இரையாகக் கவ்விவிழுங்க, வீமன் அதன் வயிற்றையிடந்து, வெளியேவந்து மற்றவர்களை இரடிpத்தான். அப்போது தருமர் அவற்குச் சில உபதேசங்களைச் சொல்ல அவன் சாபம் நீங்கினான்.

நாகோற்பேதம் - ஒரு தீர்த்தம்

நக்கீரர் - இவர் கடைச்சங்கத்திலே அதனிறுதிக்காலத்திலே தலைமை பெற்றிருந்த தெய்வப் புலவர். சிவபெருமான் அருளிச் செய்த ஒருகவியிலும் குற்றம் கற்பிக்கப்புகுந்த அஞ்சாச்சதுரர். இறையனாரகப் பொருளுக்கு நக்கீரர் செயதவுரையால் அவருடைய அளப்பருங்கல்வித்திறமும், அக்காலத்திலே. தமிழ்ப்பாஷைக் குண்டாயிருந்த அபிவிருத்தியும் ஆற்றலும் இத்துணையவென்பது நன்கு புலப்படுகின்றது.நக்கீரர் தமக்கொரு காலத்திலுண்டாகிய குஷ்டரோகத்தைக்கைலைபாதி காளத்திபாதி என்னும் பிரபந்தம் பாடி நீக்கினார். திருமுருகாற்றுப்படை கண்ணப்பதேவர் மறம் முதலியனவு மிவராற் பாடப்பட்;டன வேயாம். இவர் மதுரைக் கணக்காயனார் மகனார். கடவுட்பூசையிலே வைத்த மனஞ் சிறிது திறம்பினோர் ஒருவரொழிந்த ஆயிரவரை மலைமுழையிலெ கூட்டிவைத்தவிட்டு அவ்வியல்புடைய இன்னுமொருவரைத் தேடித் திரிந்த பூதமொன்று நக்கீரர் ஒரு தடாகத்தருகே பூசை செய்திருத்தலைக்கண்ட அவர் முன்னே வீழ்ந்த ஆலிலையைப் பாதிமீனாகவும் மற்றப்பாதியைப் பறவையாகவுமாக்கி அவர் மனத்தைக் கவரும் படி செய்து அவரையுங் கொண்டு போய்ச்சிறை செய்து நீராடிவந்தண்போமென்று போயிற்று. அதுகண்டநக்கீரர் திருமுருகாற்றுப்படையைப்பாடி ஆறுமுருகனருளாலே தம்மையும் மற்றையோரையும் காத்தனரென்பது அந்நூல்வரலாறு.

நடித்திரகன் - விசுவாமித்திரன் சீஷருளொருவன். இவன் அரிச்சந்திரனைத் தொடர்ந்து அவனிடம் விசுவாமித்திரன் ஆஞ்ஞையிட்ட தனங் கவர்ந்தவன்

நச்சினார்க்கினியர் - மதுரையிலே பாரத்துவாச கோத்திரத்திலவதரித்த அந்தணர். சிவபக்தியிற் சிறந்தவர். தமிழாராய்ச்சியிலே தமக்கு ஒப்பாருமிக்காருமில்லாதவர். தொல்காப்;பியமென்னு மிலக்கணக்கடலைக் கரைகாண்பது இவர் செய்தருளிய உரைத் தெப்பமில்லையாயின் எத்துணைவல்லார்க்குமரிதாம். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிந்தாமணி, கலித்தொகை, நற்தொகை யிருபது என்னும் பழையநூல்களை இறந்தொழியாமற் காத்து நிலைநிற்கச்செய்தது அந்நூல்களுக்கு இப்பெருந்தகை செய்தருளியவுரையேயாம். இவர் பிறந்திலராயின் அகத்தியமுதலிய நூல்களைப் போலவே இந்நூல்களும் கற்றற்கமையாவாய்க் காலன்வாய்ப்பட்டேவிடும். இவர் இந்நூல்களுக்குரையியற்றினாரென்பது “பாரத்தொல்காப்பியமும் பத்துப்பாட்டுங்கலியும், ஆரக்கநற்தொகையுடைளஞ்ஞான்குஞ் சாரக் - திருத்தகுமாமுனிசெய் சிந்தாமணியும் - விருத்திநச்சினார்க்கினியமே” என்பதனாலுணர்க. இவர் முத்தமிழ் நூல்களினும் வித்தகரென்பது அவர் உரைகளால் நன்கு புலப்படுகின்றது. இவர் காலமும் பரிமேலழகர் காலமுமொன்று. கந்தபுராணம் பாடிய கச்சியப்பசிவாசாரியர் காலத்துக்கும் கம்பர்காலத்துக்கும் முன்னுள்ளவரென்பது அவர் நூல்களினுதாரணங் கொள்ளாமையானும் வேறுசில வேதுக்களானும் நன்றாகத் துணியப்படும். ஆதலின் இவர் ஆயிரத்திருநூறு வருஷங்களுக்கு முன்னுள்ளவர். இவர் கலித்தொகைக்குச் செய்தவரை மிகவும் அற்புதமானது.

நச்சுமனார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர்.

நட்டுவலை - சடி_ர்மனுபாரி. உன்முகன்தாய்.

நத்தத்தனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

நந்தர் - நந்தன் காண்க.

நந்தனம் - இந்திரன்வனம்.

நந்தன் - (1) கிருஷ்ணனை வளர்த்ததந்தை. இவன் பாரி யசோதை. (2) (ய) வசுதேவனுக்கு மதிரையிடத்துப் பிறந்த புத்திரன். (3) கலியுகம் ஆயிரத்திலே ரிபுஞ்சயன் அரசுசெய்திறந்தான். அவனுக்குப்பின்னே மகததேசத்துக்கு அரசனானவன் அவன் மந்திரி சுனகன்மகன் பிரத்தியோதனன்.அவன் பரம்பரையில் நந்திவர்த்தனானீறாக ஐவர் அரசுபுரிந்தகாலம் நூற்றுமுப்பத்தெட்டு வருஷம். இந்நந்தவர்த்தனனும் நந்தனெனப்படுவன். இவன் வமிசத்திலே எட்டாஞ்சந்ததியாகவந்தவனும் நந்திவர்த்தனன் என்னும் பெயரொடு விளங்கினான். அவன் மைந்தன் மகாநந்தி. மகாநந்தி ஒரு சூத்திரப்பெண் வயிற்றிலே நந்தனென்பவனைப் பெற்றான். இந்நந்தன் மகாபதுமன் எனவும் படுவன். இவன் டித்திரியமணஞ் சிறிதுமில்லாமல் வேரறுத்து ஆரியதேசம் முழுவதையு மொரு குடைக்கீழாண்டவன். இவன் வழி வந்தோர் ஒன்பதின்மர் நவநந்தரெனப்படுவர். இவர்களை நரசஞ்செய்தவர் விஷ்ணுகுப்தரென்னும் பிராமணர். இந் நந்தர்களுடைய இராச்சியகால மெல்லாம் கலியுகம் ஆயிரத்தைஞ்நூற்றுக்குள்ளாகவே முடிந்தன. ரிபுஞ்சயனுக்குப்பின்னர். அஃதாவது கலியுகத்தில் ஆயிரம் வருஷஞ்சென்றதன் மேல் அரசுகைக்கொண்ட நானூறுவருஷகாலமாக வழிமுறை அரசுபுரிந்தோர்களெல்லோருக்கும் நந்தர் என்பது பொதுப் பெயர். பரிடிpத்த காலத்திலே சப்தரிஷிகள் மக நடித்திரத்திலேயிருந்தனவென்றும், சப்தரிஷிகள் பூர்வாஷடநடித்திரத்திலே யிருக்குங் காலத்திலே நந்தர்கள் அரசு தொடங்குவார்களென்றும் விஷ்ணுபுராணங் கூறுதலின் இஃதுண்மையாகும். சப்தரிஷிகள் ஒரு நடித்திரத்திலே நூறு வருஷத்துக்கிருக்கும். மகமுதல் பூர்வாஷாடமீறாகப் பதினொரு நடித்திரமாகும். ஆகவே பத்துநடித்திரங்களுக்கும் சென்ற வருஷம் ஆயிரம். அதன் மேற் பூர்வாஷாடகாலம். அது கலியுகம் ஆயிரத்தின் மேற் றொடங்கியது. அக்காலத்திலே தமிழ் நாட்டிலே திருவவதாரஞ் செய்து விளக்கமுற்றிருந்த திருஞான சம்பந்த மூர்த்திநாயனாரும் நந்தனுடைய அரசியலைக்குறித்து. கட்டார்துழாயன் தாமரையானென்றிவர் காண்பரிய, சிட்டார்பலி தேர்ந்தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே, நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த, கொட்டாறுடுத்த தண்வயல் சூழ்கொச்சையமர்ந்தவனே” என்னுந்தேவாரத்திலெடுத்துரைத்தனர். (4) திருநாளைப்போவார்நாயனார்.

நந்திதேவர் - சிலாதரன்புத்திரர். இவர் கோடிவருஷமாக உக்கிரதவஞ் செய்து சிவனுக்கு வாகனமும் துவாரபாலகருமாயினவர். சக்தானகுரவர்களுக்கு முதற்குருவும் சிவனுக்குப்பிரதமமாணாக்கருமாயுள்ளவர் இவரே.

நந்திக்கிராமம் - அயோத்திக்குச் சமீபத்திலுள்ள ஒரு சிறுகிராமம். ராமன் காட்டுக்குப்போய் மீண்டுவருங்காறும் பரதன் வசித்த இடமிதுவே.

நந்திதுர்க்கம் - ஒரு மலை. இது மைசூர்த்தேசத்திலுள்ளது. இதில் பாலாறும் உத்தரபிநாகினி நதியும் உற்பத்தி.

நந்திவர்த்தனன் - (1) டித்தரியவமிசத்து ரிபுஞ்சயன் என்னுங்கடையரசனைக் கொன்று தன்மகன் பிரத்தியோதனனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்த சுனகன் என்னும் மந்திரிவமிசத்து ஆறாம் வழித் தோன்றலாகிய ஓரரசன். (2) உதயணன் என்னுமரசன் புத்திரன். மகாநதசிதந்தை. (விஷ்ணுபுரா)

நந்தினி - வசிஷ்டர் வளர்த்தகாமதேனுவின் கன்று.

நந்தை - சாலபோதன் என்னும் நாகராஜன்மகள். தந்தைசாபத்தால் ஊமையாகிச் சுசர்மனால் அச்சாபம் நீங்கப் பெற்றவள்.

நபகன் - வைவசுவத மனு புத்திரன். இவன் மகன் நாபாகன்.

நபசுவதி - அந்தர்த்தானன் இரண்டாம்பாரி. ஹலிர்த்தானன் தாய்.

நபசநவ்தன் - (த) முராசுரன் மகன். கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன்.

நபன் - விப்பிரசித்திமகன்.

நப்பாலத்தனார் - இவர் கடைச் சங்கப்புலவர்களுளொருவர்.

நமிநந்தியடிகணாயனார் - தாம் செய்துவந்த திருவிளக்குத் தொண்டுக்கு நெய்யகப்படாமையா லிடையூறுண்டாக அந்நெய்க்கீடாகக் குளத்துநீரை முகந்து திருவாரூர் ஆலயமெங்கும் திருவிளக்கெரித்த சிவபக்தராகிய இவர், சோழமண்டலத்திலே ஏமப்பேறூரிலே பிராமணகுலத்திலே அவதரித்தவர்.

நமுசி - விப்பிரசித்திமகன். சுவர்ப்பானன் மகள் பிரபை இவன் பாரி. இவன் இந்திரனாற் கொல்லப்பட்டவன.

நம்பியாண்டார்நம்பி - திருநாரையூரிலே அவதரித்த ஆதிசைவப்பிராமணர். இவர் சிறுவராகவிருக்கும் போது ஒருநாள் இவருடைய தந்தையார் இவரையழைத்து, இன்றைக்கு நானோரூருக்குப் போகவேண்டியிருத்தலால் பொல்லாப்பிள்ளையார் கோவிற்பூசையை நான் நடத்துவது போற் சென்று நடாத்தி வருவாயாகவென்று கட்டளையிடப் போயினார். அவ்வாறே நம்பியாண்டார் விதிப்படி பூசைசெய்து, நைவேத்தியத்தைப் பிள்ளையார் திருமுன்னே வைத்துத் தந்தையார் வைக்கும் நைவேத்தியத்தைப் பிள்ளையார் திருவமுது செய்துவருபவரென நினைந்து, எம்பெருமானே திருவமுது செய்தருளுமென வேண்டினர். பிள்ளையார் திருவமுது செய்யாதிருப்பக்கண்டு நம்பியாண்டார் மனம் வெம்பி, எம்பெருமானே அடியேன் யாது தவறுசெய்தேனென்று அழுது கொண்டு தமது தலையைக் கல்லிலே மோதப்புகுந்தார். உடனே பிள்ளையார் “நம்பிபொறு” என்ற தடுத்து அந்நைவேத்தியத்தைத் திருவமுத செய்தருளினார். பின்னருமொரு நாள் சோழராஜன் முன்னிலையிலே இவ்வற்புதம் நிகழ்ந்தது. இந்நம்பியாண்டாரே திருத்தொண்டர் சரித்திரமாகிய திருவந்தாதி பாடியவர். தேவாரத்திருமுறை கண்டவருமிவரே.

நம்மாழ்வார் - கலியுகாரம்பத்திலே திருக்குருகையிலே காரியென்னும் சூத்திரனுக்குப் புத்திரராக அவதரித்தவர். ஏனைய ஆழ்வார்களைப் போலவே இவரும் விஷ்ணுபத்தராகி அம்மூர்த்திமேற் சூட்டிய தோத்திரப்பாடல்கள் ஆயிரத்தின் மேற்பட்டன.

நரகம் - பாபலோகம். அஃது இருபத்தெட்டுப்போதம். அவை :- தமம், அந்ததமம், ரௌரவம், மகாரௌவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்திரவனம், கிருமிபடிணம், அந்தகூபம், சந்தஞ்சம், சன்மலி, சூர்மி, வைதரணி, பிராணரோதம், வைசசம், லாலாபடிணம், வீசி, சாரபடிணம், வச்சிரகண்டம், காரம்,பிசிதபடிணம், சூலப்பிராந்தம், விதோதகம், தந்தசூகம், பரியாவருத்தம், திரோதானம், சூசிமுகம், பீடனம் என்பனவாம்.

நரகன் - (1) விஷ்ணுவுக்கு வராகவதாரத்திலே பூமியிற் பிறந்த புத்திரன். இவன் அசுரன். இவன் ராஜதானி பிராக்சோதிஷம்.இவன் வாகனம் சுப்பிரதீகம் என்னும் யானை. இவன் புத்திரன் பகதத்தன. இந்நரகாசுரன் அதிதியினதுகர்ணகுண்டலங்களையும் வருணுடைய சத்திரத்தையும் கவர்ந்து கொண்டு தேவலோகஞ் சென்ற இந்திரன் சிங்காசமத்தையுங் கவர்ந்தான். அதுகண்டு இந்திரன் விஷ்ணுவிடஞ்சென்றுமுறையிட, அவர் இவனையும் அவன் தமையன் முராசுரனையுங் கொன்ற அவன் சிறையிலிருந்த பதினாறாயிரங் கன்னியரையஞ் சிறையிவிடுத்து மணஞ்செ;யத தேவலோகஞ் சென்றனர். இத்தினம் நரகசதுர்தி யெனப் பெயர் பெற்றது. (2) (த) விப்பிரசித்திமகன்.

நரசிங்கமுனையரையநாயனார் - சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தலும் விபூதியுமே பெருஞ்செல்வப் பேறெனக் கொண்டு ஒழுகிய சிவபக்தராகிய இவர் திருமுனைப்பாடிநாட்டிலே குறுநில மன்னர் குலத்திலே விளங்கியவர்.

நரசிங்காவதாரம் விஷ்ணுதசாவதாரங்
நரசிம்ஹாவதாரம் களுளாறாவது அவதாரம்@ விஷ்ணு இரணியகசிபனைக் கொன்ற பிரகலாதனை ரடிpக்க ஸ்தம்பத்திற் பிறந்த அவதாரமிதுவே.கண்டத்தின்கீழ் நரவடிவமும் அதன் மேற் சிங்கவடிவமுமாகத் திருமேனி கொண்ட அவதாரம்.

நரநாராணர் - இவரிருவரும் விஷ்ணு அபிசமாகப் பிறந்த முனிவர்கள். இவர்கள் வதரீவனத்திற் பல்லாயிரவருஷம் தவஞ்செய்தவர்கள். இவர்களுடைய தவத்தைக்கெடுக்குமாறு இந்திரன் அரம்பையரையனுப்ப, நாராயணன் தனது தொடையினின்றும் ஒரு கன்னிகையைத் தோற்றுவித்தார். அவளுடைய ரூபலாவண்ணியங்களைக் கண்ட தெய்வமாதர் நாணி அவ்விடம்விட்டு நிங்கினர். நரநாராயணர் என்னும் பெயர் கிருஷ்ணார்ச்சுனர் களுக்கும் வழங்கும்.

நரன் - ஒருதேவஇருஷி. இவனும் நாராயணன் என்னும் இருஷியும் நரநாராயணரெனப்படுவர். இவ்விருவருமே அருச்சுனனுமக் கிருஷ்ணனுமாகப் பின்னர்ப்பிறந்தார்கள். (2) பிரியவிரதன் வமிசஸ்தனாகிய கயன்மகன். (3) புமன்னியன்மகன். சங்கிருதிதந்தை.

நராந்தகன் - (ரா) ராவணன் மகன். இவனைக் கொன்றவன் அங்கதன்.

நரிவெரூஉத்தலையார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவர் தம்முடம்பிலுளதாகிய வேறுபாடு காரணமாக இப்பெயர் பெற்றவர். சேரலிரும்பொறையைக் கண்ட மாத்திரத்தே அவ்வேறுபாடு நீங்கி நல்லுடம்பு பெற்றவர். (புறநா)

நரிஷியந்தன் - வைவசுவத மநுபுத்திரருளொருவன். மநுசக்கரவர்த் திரருளொருவன். மநுசக்கரவர்த்திமகனு மிப்பெயர் பெறுவன்.

நர்மதை - மேகலாபர்வதத்திலுற்பத்தியாகிச் செல்லும் நதி.

நலை - நளை காண்க.

நல்கூர்வேள்வியார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

நல்லந்துவனார் - கலித்தொகை நூலாசிரியர். இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர். சமயத்தாற் சைவரென்பது கடவுள் வாழ்த்து முதலியவற்றாற் புலப்படும்.

நல்லாதனார் - திரிகடுக நூலாசிரியர். இவர் கடைச்சங்ககாலத்தவர். கல்வியாலும் அறத்தாற்றினாலும் மிகச்சிறந்தவர். இவர் வைஷ்ணவர்.

நல்லாப்பிள்ளை - தொண்டை நாட்டிலே மகாதலம்பேட்டையிnலு கர்ணிகவேளாளர்மரபிலே நூற்றெழுபது வருஷங்களுக்குமுன்னே அவதரித்தவர். வடமொழி தென்மொழியிரண்டும் வல்லவர். இவர் வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தை வடமொழிப்பாரதம் போல விரிக்கவெண்ணி இடையிடையே தந்துவிரித்துப் பதினாலாயிரத்தெழு நூற்றிருபத்தெட்டு வருத்தங்களாற் பூர்த்தி செய்தவர். அவற்றுள் வில்லிபுத்தூராழ்வார் பாடல் நாலாயிரத்து முந்நூற்றைம்பது. நல்லாப்பிள்ளை செய்த பாரதம் நல்லாப்பிள்ளைபாரத மெனவழங்கும். தமிழிலே பாரதம் முதலிற் செய்தவர் வில்லிபுத்தூரர். கடையிற் செய்தவர் இவர். இதனைப் பாடும் போது இவர்க்கு வயசு இருபது.

நல்வழி - ஒளவையாராற் செய்யப்பட்ட ஒரு சிறிய நீதிநூல்.

நவகண்டங்கள் - நவவர்ஷங்கள்

நவக்கமிரகங்கள் - சூரியாதி ஒன்பது கிரகங்கள். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது.

நவநதி - கங்கை, யமுனை, நருமதை, சரசுவதி, கோதாவரி, காவிரி, பயோஷ்ணி, சரயு, குமரி என்னுமிவ்வொன்பதம் நவநதி யெனப்படும். தம்மிற் படிவோர் பாவமனைத்தையும் தாங்கவர்ந்து சுமந்தலாற்றாது ஒருங்குகூடிப் பெண்ணுருக் கொண்டு கைலை சென்றுசிவனை வழிபட்டுத் தமது குறையைத் தீர்த்தருளும்படி வேண்டச் சிவன் அந்நதிகளை நோக்கிக் கும்பகோணத்திலே அக்கினிதிக்கிலே ஒரு தீர்த்தமுளது. வியாழன் சிங்கராசியில் வரும் பொழுது மகநடித்திரத்திலே நீங்கள் அத்தீர்த்ததிற் சென்று படிந்துஉங்கள் பாவத்தைப் போக்கக் கடவீரென்றனுக் கிரகித்தார்.

நவரதன் - (ய) வீமரதன் புத்திரன்.

நவராத்திரி - ஆஸ்வயுஜ மாசத்தில் (ஐப்பசி) சுக்கிலப் பிரதமைமுதலாக ஒன்பது ராத்திரி. கிருதயுகத்திலே பக்தியிற் சிறந்த சுகேதன் என்னு மோரரசன் தனது இராச்சியத்தையிழந்து பாரியோடுவனஞ் சென்ற போது அங்கிரசன் என்னும் இருஷி நவராத்திரிபூஜாமான்மியத்தையும் அதன்முறையையும் உபதேசித்தார். அவன் அவ்வாறே நவராத்திரிபூசையைப் பக்தியோடு செய்து தனது ராச்சியத்தை மீளவும் பெற்று வாழ்ந்திருந்தான். அதனால் உலகத்தல் அதுமுதலாக வருஷந்தோறும் அக்காலத்திலே துர்க்கை லடி{மி சரசுவதி இம்மூவரையும் முறையே ஒருவர்க்கு மூன்று தினமாக ஒன்பதுநாளும் பூசித்து ஒன்பதாம்நாள் ஆயுதங்களையும் புஸ்தகங்களையும் வைத்து ஆராதித்து வருவார்கள். அடுத்த தஜமி திதி விஜயதசமி யெனப்படும்.

நலவடிவிறந்தோன் - பரமசிவன் நவவடிவமாவன. பிரமன், விஷ்ணு,உருத்திரன், மகேசுவன், சதாசிவம். விந்து, நாதன், சத்தி, சிவம் என்பன. இவற்றுள் பரமாதிநான்கும் உருவம். விந்தாதி நான்கும் அருவம். இடை நின்ற சதாசிவம் அருவுருவம்.

நவவர்ஷங்கள் - பாரதம், கிந்நரம், ஹரி, இளாவிருதம், ரம்மியகம், இரண்மயம், குரு, பத்திராசுவம், கேதுமாலம் என ஒன்பது வர்ஷங்கள். ஆரியர் இப்பூகோளத்தை ஊர்த்துவகபாலம் அதகபாலம் என இருகூறாக்குவர். அவற்றுள் ஊர்த்துவபாலமம் நீருமாம். நில முழுதும் மழைப்பெயல் வேறுபட்டால் ஒன்பது வர்ஷங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது. சுமேருவை அஃதாவது துருவத்தை மத்தியிலுடையது இருளாவிருதவருஷம். அதற்குத் தெற்கேயுள்ளது ஹரிவருஷம். அதற்குத்தெற்கேயுள்ளது கிந்நரம்@ அதற்குத் தெற்கேயுள்ளது பாரதம். ரம்மியகம்ஹிரண்மயம் குருஎன்னும் மூன்றும் இளாவிருதத்திற்கு வடக்கேயுள்ளன. மற்றைய விரண்டும் இருபாரிசத்திலுமுள்ளன.

நளன் - (1) யதுவினது மூன்றாம் புத்திரன் (2)யயாதிபௌத்திரனாகிய அணுவினது இரண்டாம் புத்திரன். (3) நிஷததேச ராசனாகிய வீரசேனன்மகன். இவன் பாரி தமயந்தி. இவன் மகன் இந்திரசேனன். மகள் இந்திரசேனை. நளன் கொடையாலும் கல்வியாலும் நடையாலும் படையாலும் அழகாலும் ஆண்மையாலும் தன்னினமிக்காரும் ஒப்பாரும் இல்லாத சக்கரவர்த்தி. இவன் கீர்த்தியை ஓரன்னப்பட்சி கொல்லக் கேட்ட தமயந்தி தன் சுயம்பரத்துக்கு இந்திரன் முதலிய தேவர்கள் வந்திருப்பவும் அவரை விரும்பாது நளனைவிரும்பி அவனுக்கு மாலையிட்டுச் சிறிதுகாலம் காமனுமிருதியும் போல் வாழ்ந்திருந்து வருநாளிலே கலிபுருஷன் பொறாமை கொண்டவனாகிப் புஷ்கரராசனை ஏவி, நீ, நளனோடு சூதாடுவையேல் அவனைவென்று அவன் இராச்சியத்தை நீ கவர்ந்துகொள்ளுமாறு அனுகூலஞ் செய்வேனென்றான். அவ்வாறே அவன் போய்த் தமையனாகிய நளனோடு சூதாடி, அவன் ராச்சியத்தைக் கவர்;ந்து நளனையுந் தமயந்தியையும் உடுத்தஆடையோடு மாத்திரங் காட்டுக்கேகும் படி செய்தான். அங்கே மெல்லியலாகிய தமயந்தி, பஞ்சணையையும், வஸ்திராபரணங்களையும், களபகஸ்தூரகளையும், பாங்கியரையும், மற்றைய போக்கியங்களையும்மறந்து, கல்லும் முள்ளும் வெயிலும் வருத்தும் வருத்தினையுமம் நேரக்காது, நாயகன் மீது கொண்ட பேரன்பால், அவன்படுந்துன்பங்களுக்கிரங்கி, நிழலென அவனோடு சஞ்சரிக்கும் போது, ஒருநாளிரவு, நளன், அவள்படுந்துன்பங்களைச் சகயாதவனாய், நடச்சாமத்தில் அவளைத் தனிவிடுத்தகன்றான். அவள் தமியளாய்த் தேடிப் புலம்பி அலைந்து பலவிடையூறுகளுக் கெல்லாந்தப்பித் தந்தை வீடு சேர்ந்த பின்னர், நளன் தமயந்தியைத் தேடிக் கண்டு அவளை அழைத்துச் செனறு, புஷ்கரனை வென்று பழமைபோலிராச்சியம் பெற்று வாழ்ந்திருந்தான். இவன் சரித்திரத்தை விரித்துரைக்கும் நூல் நைஷதம்: அது தமிழிலும் அப்பெயராலேயே நடக்கும். (4) விசுவகர்மாவுக்குப்பிறந்த ஒருவாநரன். சேது பந்தனங்கட்டினவன் இவனே.

நளகூபரன் - குபேரன் புத்திரன். அழகுக்கிலக்கியமானவன். மணிக்கிரீவன் தமையன். இவ்விருவரும் கைலாசத்திற்கலக்கிரீடை செய்து கொண்டிருக்கையில் நாரதர் கண்டு, நீங்கள் நிருவாணிகளாக நீராடி நிற்கும் தோஷத்தற்காக மருதவதிருடிங்களாகக் கடவீர்களென்று சபித்தார். அவர்கள் அவ்வாறே பூமியில் நந்தன் வீட்டருகே இரண்டு மருதமரங்களாகப் பிறந்து நின்று, கிருஷ்ணன் தான் கட்டுண்ட வரலையிழுத்துப் போகும் போது அவ்வுரலால் இடறப்பெற்று வேரோடு சாய்ந்து பழைய வடிவம் பெற்றுச் சாபநீங்கினார்கள்.

நளினி - ஹஸ்திகன் புத்திரனாகிய அஜமீடன் இளையபாரி.

நளை கங்கையிற் சங்கமிக்கும்
நலை ஒரு நதி.

நள்ளி - கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவனாகிய இவன் மலைநாட்டரசரு ளொருவன். “ஆர்வமுற் றுள்ளிவருந ருலைவுநனிதீரத் தள்ளாதீயுந் தகைசால் வண்மைக் கொள்ளாரோட்டிய நள்ளியும்” எனப் புறநானூற்றினுள்ளே பெருஞ்சாத்தனாரால் எடுத்துப் புகழப்பட்டவன்.

நறுந்தொகை - உலகநீதி கூறும் ஒரு சிறிய நூல். அதிவீரராமபாண்டியன் செய்தது.

நற்றிணை - சங்கப்புலவர் செய்த எட்டுத் தொகை நூல்களுளொன்று. பெருந்தேவனாராற் பாடப்பட்ட கடவுள் வாழ்த்தும் கபிலர் முதலியோராற் பாடப்படட ஏனைய நூறு பாக்களுமுடையது. இந்நூலைத் தொகுப்பித்தோன் பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி. இது அகப்பொருளையே பொருளாகவுடையது. (புறநா)

நற்றுணையப்பர் - திருநன்னிபள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

நன்னன் - இவன் விச்சிக்தோவினது பூர்வ மரபிலுதித்தவன். பல்குன்றக்கோட்ட மென்னுமூரை ஆண்டவன். மலைபடுகடா மென்னும் பிரபந்தம் பெற்ற நன்னன். இவன் மகன் (அகநானூறு)

நன்னயபட்டர் - ஒராந்தரமாக கவி. ராஜராஜேந்திரன் சமஸ்தானகவி.

நன்னாகனார் - இவர் புறநானூற்றினுள்ளே கரும்பனூர் கிழானைப்பாடியவர்.

நன்னூல் - சனகாபுரத்துப் பவணந்தி முனிவர் செய்த தமிழ் இலக்கணநூல். இதிலே எழுத்துஞ் சொல்லுமே ஆராயப்படுவன. சுருக்கமுறையாதலின் இது கற்றோர்க்குப் பெரிதும் பயன்படுவது. இந்நூல்யாத்தகிரமம் அத்தியற்புதகரமானது. இது சுருங்கச் சொல்லல் முதலிய பத்தழகுஞ் சிறந்தது. வடநூன்முறையாகப் பகுபதம் பகாப்பதம் என்னும் முறைகளை வகுத்துக் காட்டுவது இந்நூலே. இது இற்;றைக்கு எண்ணூற்றறுபது வருஷங்களுக்கு முன்னர்ச் செய்யப்பட்டது என்பது சமணசரித்திரங்களாற்றுணியப்படும். இந்நூலுக்க முதலுரையியற்றினவர் ஒரு சமணமுனிவர். அதன் பின்னர்ச் சங்கரநமச்சிவாயப் புலவரால் ஒரு விருத்தியுரை செய்யப்பட்டது. அதனைத்தழுவிச் சரவணப் பெருமாளையரால் ஒருரை செய்யப்பட்டது.

நாகதன்னுவம் - வாசுகி நாகராஜனாக அபிஷேகம் பண்ணப்பட்டவிடம்.

நாகமுக்கியர் - கத்துருவை கசியபனுக்குப் பெற்ற புத்திரர். இவர் நாகராயினர். சேஷன், வாசுகி, ஐராவதன், தடிகன். கார்க்கோடகன், தனஞ்சயன், காளியன், மணிநாகன், அபூரணன், பிஞ்சரன், ஏலாபுத்திரன், வாமனன், நீலன், அநீலன், கலமாஷன், சபலன், ஆரியகன். ஆர்த்தரகன், கலசபோதகன், சுராமுகன், ததிமுகன், விமலபிண்டகன், டிhரிதன், சங்கன், வாலசிகன், நிஷ்டானகன், ஹோமநேத்திரன், நஹ_ஷன், பிங்கலன், வாகியகர்ணன், ஹஸ்திகர்ணன், முத்கரபிண்டகன், கம்பலன், அசுவதரன், காளியகவிருத்தன், சாம்விருத்தகன். சங்கமுகன், கூஷ்மாண்டகன், Nடிமகன், பிண்டாரகன், கரவீரன், புஷ்ப தமுஷ்டிரன், வில்வகன், வில்வபாண்டரன், மூஷிகாதன், சங்கசிரன், பூரணதமுஷ்டிரன், ஹரித்திரகன், அபராஜிதன், ஜியோதிகன், ஸ்ரீதகன், கௌரவியன், திருதராஷ்டிரன், சங்கபிண்டன், புஷ்கரன், சல்லியகன், விரஜன், சுபாகு, சாலிபிண்டன். ஹஸ்திபிண்டன், பிடகரன், முகரன், கோணநாசிகன், குடரன், குஞ்சரன், நபாகரன், குமுதன், குமுதாடின், தீத்திரி, ஹரிகன், விகன், கர்த்தமன், வெகுமூலகன், கர்க்கரன், அகர்க்கரன், குண்டோதரன்,மகோதரன் என்னுமிவர்கள் அந்நாக முக்கியருள்ளே தலைமை பெற்றவர்கள்.

நாகவீதி - தருமன் புத்திரி. இவள் தாய் யாமி. இவள் நடித்திரவீதியினத உத்தரபாகத்துக்கு அபிமான தேவதை.

நாகன்றேவனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

நாகாம்பிகை - கிருஷ்ணதேவராயன் தாய்.

நாடிக்கிரந்தம் - பதினைந்த நாடிக்கிரந்தங்களுள. அவை சூரியநாடி, சந்திரநாடி, குசநாடி, புதநாடி, சுக்கிரநாடி, குருநாடி, சாமிநாடி, ராகுநாடி, கேதுநாடி, சர்வசங்கிரகநாடி, பாவநாடி, துருவநாடி, சாவநாடி, சுகநாடி, தேவிநாடி என்பன. இந்நாடிக்கிரந்தங்களிலே உலகத்திலேயுள்ள மாந்தர் பெரும்பாலார்க்கும் ஜாதகங்களும் பலன்களுங் கூறப்பட்டுள்ளன.

நாபாகன் - (1) இடி{வாகு தம்பியாகிய திஷ்டன்புத்திரன். இவன் தனது டிச்திரியத் தொழிலைவிடுத்து. வைசியத் தொழிலை மேற்கொண்டோழுகி வைசியனாகிச் சுப்பிரபையென்னும் வைசியப் பெண்ணையே மணம்புரிந்தவன். இவன் புத்திரன் ஜலந்தனன். (2) இடி{வாகுதம்பிகளுள் மற்றொருவனாகிய நபகன்புத்திரன். இவன் அம்பரீஷன் தந்தை. (3) சுகோத்திரன் புத்திரன்.

நாபி - ஆக்கினீத்திரன் புத்திரர் ஒன்பதின்மருளொருவன். இவன் பங்காக ஜம்புத்துவீபங் கிடைத்தது. இவன் பாரி மேருதேவி. புத்திரன் ரிஷபன். (பரதகண்டங்காண்க)

நாமகள் - சரஸ்வதி

நாரசிங்கம் - இஃது உபபுராணத்தொன்று

நாரதன் - இவர் முந்திய மகாகற்பத்தில் உபவருகன் என்னும் கந்தருவனாகவிருந்து பிரமசிரேஷ்டர் என்னும் பிராமணர் செய்த பாயத்துக்குப்போய் அங்கே வீணாகானஞ் செய்துஅங்கு வந்திருந்தஒரு கன்னிகையை வசியஞ் சயெ;த அவளைப் புணர்ந்து போயினர். அஃதுணர்ந்த பிராமணர் இவரைச் சூத்திரவருணத்திற் பிறக்க வென்று சபிக்க, அவ்வாறே சூத்திரனாகப்பிறந்து மகாதவஞ்செய்து பிரமமானசபுத்திரராகப் பிந்தியகற்பத்திற் பிறந்தவர். இவர் கலகப்பிரியர். இவர் தடிப்பிரஜாபதிபிள்ளைகள் யாவருக்கும் ஞானோபதேசஞ் செய்து சிருஷ்டிக்குப் பிரதிகூலஞ் செய்ய, அதுகண்ட தடின் சந்ததியில்லாதவராய் நிலையற்றலைகவென்ற இவரைச் சபித்தான். அதனாலே இவர் திரிலோகங்களிலுஞ் செல்பவராயினர். இவர் தாங் காதினாற் கேட்டவற்றைப் பிறர்க்குரையாமலிருப்பதில்லை. தேவசபை இராஜசபை வேள்விச்சாலை முதலிய வௌ;விடத்துந் தடையின்றிச் செல்லும் சவாதீமமுடையவர். தனியிடங்களிலகப்பட்டுத் திக்கற்றிருப்பவர்களுக்கு வெளிப்பட்டு உபாயங்களும் பின் நிகழ்வதுங் கூறுபவர். தூது போய்ச் சாதுரியமாகப் பேசுவதிலும் வல்லவர். தரமநூலிலும் சிறந்தவர். வீணையிலே ஒப்பாரும் மிக்காருமில்லாதவர். கிருஷ்ணனது அவதாரத்தைக் கஞ்சனுக் குணர்த்தினவரும், ராமாயணத்தை வான்மீகியாருக் குரைத்தவரும் இத்தேவவிருடியே. இவர் சம்பந்தப்படாதவை திகசரித்திரங்கள் மிகச் சில.

நாரதீயம் - (1) பதினெண்புராணங்களுளொன்று. இது நாதரப்புரோக்தம். பெரிய கற்பதர்மங்களைக் கூறுவது. இஃது 25000 கிரந்தமுடையது. உபபுராணங்களுள்ளும் இப்பெயரயதொன்றுளது. (2) ராக தாளலடிணங்களைக் குறித்து நாரதர் செய்தநூல்.

நாராயணகவசம் - ஒரு மந்திர். இதனைக் கிரமமாகச் செபிப்போர்க்கு நாராயணன் விரைந்து அருள்புரிவர்.

நாராயணகோபாலர் - பல பராக்கிரமங்களிற் கிருஷ்ணனுக்குச் சமானமாயினவர். இவர்கள் ஜாதியில் யாதவர். இவர்கள் பதினாயிரவரும் துரியோதனனுக்குத் துணையாகச் சென்ற போது அர்ச்சுனனாற் கொல்லப்பட்டவர்கள்.

நாராயணன் - விஷ்ணு, நாரம் - ஜாலம். அதிற்போந்தமையின் நாராயணன். மகாப்பிரளயத்தில் சமஸ்தமும் அப்புரூவமா யொடுங்கிய பொழுது அதன் கண் விஷ்ணு தோன்றி உலகனைத்தையுந் தோற்றுவித்தாரென்பது வேதபுராணங்களின் கருத்து. இந்நாராயணபதம் விஷ்ணுவுக்கு மாத்திரமன்று சிவனுக்கும் பெயராகச்சொல்லுமென்பர். ஜகம் அப்புவிலொடுங்கிய கற்பத்திலே அதனை மீளவும் அத்தத்துவத்தினின்றுந் தோற்றுவித்த பரப்பிரமத்தினது புருஷாமிசமே நாராயணனெனப்பட்டது. நாரமென்பது அப்புவினத மூலப்பதி. அதுமண்லமிட்டெழுந்தாடும் சர்ப்பவடிவினையுடையதாயிருக்கும். அதன் சக்திபாகம் சங்கினது வடிவினையுடையது. அப்புவினிடத்து விளங்கும் புருஷாமிசம் ஆதிசேஷன் என்னுஞ்சர்ப்பத்தைப் பாயலாகக் கொண்டு அறிதுயில் செய்யும் நாராயணனாகக் கூறப்படும். ஒடுங்கா தெஞ்சி நின்று மீளவும் சகத்துக்கு ஆதிகாரணமாய்க்கிடந்தது அப்புவினது மூலப்பகுதியாதலின் அஃது ஆதிசேஷன் எனப்பட்டது. (சோஷம் - எஞ்சியது) அப்புவினது மூலப்பகுதிமண்டலமிட்டெழுந்தாடுஞ் சர்ப்பவடிவினதென்பது அப்புவினது அணுவையெடுத்துச் சோதித்தால்; இனிதுபுலப்படும். அவ்வணுவானது ஸ்தூலநிலைவிட்டுச் சூக்குமித்துச் சூக்குமித்துப் போய் ஏழாவது நிலையையடையும் அவதரத்தில் இவ்வடிவைப் பெறும். அதற்குக்கீழே அடுத்த ஆறாவது நிலையிலே கமலவடிவம் பெறும் கமலவடிவுடைய அப்புவினிடத்தே பிரமாவாகிய சிருஷ்டிபுருஷன் தோன்றுவன். அது நிற்க அப்புவின் மூலப்பகுதியை ஆதிசேஷன் என்றும், அப்புவுக்குக் குறி கமலமென்றுங் கூறிய நமது பூர்வ வேதாந்த சித்தாந்;த நூலாசிரியர்களது பூத பௌதிக ஞானமும்புத்திநுண்மையும் அநுபவமும் பெரிதும் பாராட்டப்படத்தக்கனவென்பது இக்காலத்து ஐரோப்பிய ரசாயனபரீடிகர்கள் வெளியிட்ட பரீடிhவிஞ்ஞாபனங்களை ஊன்றிவிசாரிக்கு மிடத்து நன்கு துணியப்படும். (டுரஉகைநசஇ ஏழுடு : ஓஏஐஐ ழே 99) விஷ்ணு காண்க.

நாரீகவசன் - (இடி{) மூலகன்.

நாரீசங்கன் - ஒரு கொக்கரசன்.

நாரீதீர்த்தங்கள் - சௌபத்திரம், பௌலோமம்@ காரண்டவம், பிரசன்னம், பாரத்தவாஜம் எனத் தடிணத்திலுள்ள ஐந்துதீர்த்தங்கள், நந்தை, சௌரபேபி, சமீசி, வசை, வதையென்னும் ஐந்து அப்சரஸ்திரிகள், ஒரிருஷி சாபத்தினால் இத்தீர்த்தங்களிலே முதலைகளாகிக்கிடந்து, அத்தீர்த்தங்களிற்படிவோரைப்பற்றி விழுங்கிவந்து, அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை சென்றபோது அவன் காலைத்தீண்டிச்சாபவிமோசனம் பெற்றார்.

நாலடியார் - இது பதினெண் கீழ்க்கணக்கதினுள் முதலாவது நூல். சைனமுனிவர்களாற் பாடப்பட்டது. பதுமனாராற் தொகுக்கப்பட்டது. நாற்பது அதிகாரமும் நானூறு செய்யுட்களுமுடையது. அறம் பொருள் இன்பம் என்னுமுப்பாற் பொருண்மேலது. உரை செய்தாரும் பதுமனாரே.

நால்வர் - அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர். இவர்கள் சமயகுரவர்களெனப்படுவர். “சொற்கோவுந் தோணிபுரத்தோன்றலுமென் சுந்தரனும் சிற்கோலவாதவூர்த் தேசிகனும் - முற்கோலி வந்திலரேனீறெங்கே மாமறை நூறானெங்கே எந்தைபிரானைந் தெழுத்தெங்கே” இதனால் தென்னாட்டிலே சமணரால் மங்கிய சைவத்தை மீளவும் விளக்கினோர் இந்நால்வரேயென்பதுணரப்படும்.


நாளாயணி நளாயணன் என்னும் ஒரிருஷி
நாளாயனி புத்திரி. இவன் இயற்பெயர் இந்திரசேனை@ மௌத்கல்லிய இருஷி என்னும் குஷ்டரோகிக்குப் பாரியாகி மறுஜன்மத்தில் திரௌபதியாகப் பிறந்தவள்.

நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார் செய்த நூல். இதுபதினெண் கீழ்க்கணக்கினுள் இரண்டாவது.

நிகிருந்தனம் - இது நிகுந்தனம் என்னும் ஒரு நரகம்.

நிகுந்தனம் - ஒருநரகம். இது குயவன் திகிரிபோல்விடாது சுழன்று திரிந்து பாவிகளுடலைத் துண்டிக்கும் சக்கரங்களையுடையது.

நிகும்பன் - (இடி{) ஹரியசுவன் மகன். இவன் மகன் பரிஹிணாசுவன். பரிஹிணாசுவன் அமிதாசுவன் சம்ஹதாசுவன் என்பன ஏகநாமம். (2) (ரா) கும்பகர்ணன் புத்திரன். இவன் அநுமனாற் கொல்லப்பட்டவன். (3) சிவகணங்களுள் ஒருவர்.

நிகும்பலை - இந்திரசித்து யாகஞ்செய்தவிடம்.

நிக்கனன் - (ய) அநமித்திரன் சேஷ்டபுத்திரன். சத்திராசித்து பிரசேனன் என்போர் இவன் புத்திரர்.

நிசகன் - அபிமன்னியன் ஏழாஞ்சந்ததி. இவன் காலத்திலேயே அஸ்தினாபுரியைக் கங்கை கொண்டது. அதன் பின்னர்க் கவுசாம் பிராஜதானியாயிற்று.

நிசாகரன் - ஒரிருஷி. இவா ஆச்சிரமத்திலே வசிப்பவனவாகிய ஜடாயு சம்பாதி யென்னும் படிpகள் சூரியமண்டலததைக் காண்போமென்று அங்கே சென்றபோது சிறகு தீயப்பெற்றுக் கீழே விழுந்து அவ்வாச்சிரமத்திற்றானே வசித்துக் கொண்டிருந்தன. இவ்வாச்சிரமம் விந்தியபர்வதத்திலுள்ளது. சீதையை ராவணன் கொண்டு சென்ற போது தடுத்த படிpகள் இவைகளே. (2) சந்திரன்.

நிசுந்தன் - சந்தோபசுந்தர்தந்தை

நிசும்பன் - (திதிவமிசம்) சும்பநிசும்பர் காண்க.

நித்தியசுந்தரேசுவரர் - திருநெடுங்களத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

நித்தியயௌவனை - திரௌபதி

நிபந்தனகாரர் - சுருதி மிருதிகளும் சூத்திரங்களுங்கூறும் ஆசாரவிதிகளைத்திரட்டி நூலாக்கினவர்கள். அந்நூல்கள் பராசரமாதவீயம் வைத்தியநாததீடிpதம் முதலியன.

நிமி - இடி{வாகு புத்திரருளொருவன். தம்மைக்கொண்டு யாகஞ் செய்விக்காது கௌதமரைக் கொண்டு செய்வித்தமைக்காக வசிஷ்டராலே சபிக்கப்பட்டு அங்கஹீனனாயினவன். இவன் விதேவதேசத்துக்கு அரசன்.

நியக்குரோதன் - (ய) கஞ்சன் தம்பி.

நியதி - மேருமகள், விததன்பாரி.

நியாயசாஸ்திரம் - பிரத்தியடிhநுமானாதிப் பிரமாணங்களைக் கொண்டு பொருளை ஆராய்ந்து நியாயித்தற்குரிய நூல். இது கௌதமமுனிவராலே செய்யப்பட்டது. இதுவும் கணாகாசெய்த வைசேடிகமும் தருக்கநூலெனப்படும். இவையிரண்டும் வடமொழியிலுள்ளன.

நியாயபோதினி - இது கௌடரும் தருக்கபாடாப்பிரகாசஞ்; செய்தவருமாகிய கோவர்த்தனமிசிரராலே செய்யப்பட்ட தருக்கசங்கிரகவியாக்கியானம். இது நானூறு கிரந்தமுடையது. இது வடமொழியிலுள்ளது. (தமிழ் - தருகசங்கிரக வரலாற்றினின்றும் எடுத்துரைக்கப்பட்டது)

நிராகன் - புலஸ்தியன் புத்திரன் இருபன்சீஷன்.

நிருதன் - வைவசுவதமனு இரண்டாம் புத்திரன். இடி{வாகு தம்பி. இவன் மகா பிரசித்திபெற்ற அரசன். (2) (அ) உசிநரன் இரண்டாம் புத்திரன்.

நிருதி - அஷ்டதிக்கு பாலகருளொருவன். தென்மேற்றிசைக் கதிபதி. பாரி தீர்க்காதேவி. வாகனம்நரன். நகரம் கிருஷ்ணாங்கனை. ஆயுதம் குந்தம்.

நிருத்தி - இது தமிழ்நாட்டிலிருந்த தெலுங்கராகிய பட்டாபிராமசாத்திரியாராலே தமது புத்திரியின் பொருட்டுச் செய்யப்பட்ட சம்ஸ்கிருத தருக்கசங்கிரகவியாக்கியானம். மற்றைய வியாக்கியானங்களுள் இது மிகஎளிதினுணர்தற்பாலது. இது அறுநூறு கிரந்தமுடைத்து. இந்நூலாசிரியர் அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன்னே விளங்கினவர்.

நிலாதகவசர் - தைத்திரியர்களுளொருசாரார். பிரகலாதன் வமிசத்தவர். இவர் தொகை முப்பது கோடி. இவர்கள் சமுத்திரமத்தியிலே வசிப்பவராயத் தேவர்களை வருத்தும் போது தேவேந்திர்ன வேண்டுகோளின்படி அர்ச்சுனனாற் கொல்லப்பட்டவர்கள்.

நிவாதகவசம் - காற்றும்புகாத கவசம் எனவே பாணத்துக்கு அறாதகவசம் என்பது பொருள். அதனையுடையவர் நிவாதகவார்.

நிஷதம் - (2) விந்தியாபர்வத சமீபத்திலே பயோஷ்ணிநதி தீரத்திலுள்ள தேசம். இதுநளன்தேசம். (2) ஒருமலை.

நிஷதன் - குருநான்காம் புத்திரன். (2) ராமர் புத்திரனாகிய குசன் பௌத்திரன்

நீணெறிநாதேசுவரர் - திருத்தண்டலை நீணெறியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

நீபன் - (பா) பாரன்புத்திரன் இவனுக்கு நூறுபுத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் மூத்தோனாகிய சமரன் காம்பிலியதேசத்தரசனாயினான்.

நீலகண்டசிவாசாரியார் - இவர் வேதாந்தசூத்திரத்திற்குச் சிவாத்துவித பக்கமாகப் பாஷியஞ் செய்தவர். இவர் திருக்கோகர்ணஸ்தலத்திலே பிறந்து விளங்கியவர்@ தெலுங்கர். இவர்செய்த பாஷியம் நீலகண்டபாஷிய மெனப்படும். மாதவாசாரியர்செய்த சங்கரவிஜயத்திலே சங்கராசாரிய சுவாமிகள் நீலகண்ட சிவாசாரியரை வாதத்திலே வென்றனரென்று கூறப்படுதலாலும், நீலகண்டவிஜயத்திலே சங்கராசாரிய சுவாமிகள் நீலகண்ட சிவாசாரியர் வினாவியவைகளுக்கு உத்தரங் கூறவியலாது திகைத்தனரென்றுங் கூறப்படுதலாலும், இருவரும் எக்காலத்தவர்களென்பது பெறப்படுகின்றது. சரித்திரம் மாறுகொள்வனவாயினும் இருவரும் ஒருவரையொருவர் கண்டனரென்பதுண்மையாதலின் ஒரேகாலத்தவர்களென்பது நன்குதுணியப்படும். இருவிஜயங்களுங் கற்பிதநூல்களாகுமிடத்து எக்காலத்தவர்களென்பதும் பொய்மையின் பாலதாம். நீலகண்டர் ராமானுஜாசாரியரது கொள்கைகளையெடுத்துக் கண்டித்தலாலே நீலகண்டர் ராமானுஜருக்குப் பிந்தியவரென்பதும் அவர்காலம் எண்ணூறாவருஷங்களுக்கு முன்னரென்பதும் சங்கராசாரியர் காலநிரூபணஞ் செய்த பாஷியாசாரியபண்டிதர்கருத்து. (ஏனைந வுhந யுபந ழுக ளுசiளுயமெயசய நாயசலயஇ வுhந யுனலயச டுiடிசயசல ளுநசநைள) அஃதுண்மையாயின், நீலகண்டருக்கு இருநூறுவருஷங்களுக்கு முன்னே யுள்ளவரென்று பாஷியாசாரியபண்டிதராலே கூறப்பட்ட ஹரதத்தாசாரியர் நீலகண்ட பாஷியத்துக்குச் “சமர்த்தனம்”எனப் பெயரியவியாக்கமியானஞ் செய்தமை பொருந்தாதன்றோ. ஆதலின் ஹரதத்தாசாரியர் நீலகண்டருக்குப் பின்னர்க்காலத்திலாயினும் எக்காலத்திலாயினு முள்ளவராவர். ஆகவே பாஷியாசாரியபண்டிதர் கருத்துப் பொருத்தமுடையதன்று. அற்றேல் முன்னிருந்த நீலகண்டர் தமக்குபின்னர் விளங்கிய ராமானுஜரது கொள்கைகளை எடுத்துக்கண்டித்தல் எங்ஙனங் கூடுமென்றாலோ, அக்கொள்கைகள் முன்னரு முள்ளனவேயாமாதலாலும் அந்நூலிலே ராமானுஜர் பெயர் கேட்கப்படாமையாலும் அது வினாவாகாதென்க.
நீலகண்டசிவாசாரியர் வேதாந்தகமபுராணேதிகாசங்களிலே மிக்கவல்லுநரென்பது எடுத்துக்கூறவேண்டா. சங்கராசாரியரை வேதாந்திகள் எத்துணையாகத்தழுவுகின்றார்களோ அத்துணையாகச் சைவர்களும் நீலகண்டசிவாசாரியரைத் தழுவுகின்றார்கள். சிவபரஞ்சாதித்த பிரபல ஆசாரியர்கள் நீலகண்டர் ஹரதத்தர் அப்பையதீடிpதர் என்னும் மூவருள்ளே நீலகண்டர் எல்லாவகையானும் முதன்மையுற்றவர். இம்மூவரும் வடமொழிப்புலவர்களாக அவதாரஞ் செய்திலரேல் சைவசமயம் நிலைகலங்கிவிடுமென்றாலும் தோஷமன்று. நீலகண்டர் சுவேதாசாரியர் மாணாக்கர். நீலகண்டர் ஸ்ரீகண்டரெனவும் படுவர்.

நீலகண்டசாத்திரியார் - தருக்கசங்கிரகதீபிகைக்கு நீலகண்டீயம் என்னும் வியாக்கியானஞ் செய்தவர். இவர் அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன்னே பல்லாரியிலிருந்த ஒரு தெலுங்கர்.

நீலகண்டNடித்திரம் - இமாலயத்துக்குச் சமீபத்திலே கௌசிகிநதியுற்பத்திஸ்தானம்.

நீலகண்டநாயனார் - திருஎருக்கத்தம்புலியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

நீலகண்டேசர் - திருமண்ணிப்படிக்கரையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

நீலகண்டேசுவரர் - திருப்பாச்சிலாச்சிரமத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

நீலகிரி - செங்குட்டுவன் வஞ்சிநகரத்திலிருந்து இமயமலைக்குச் செல்லும் பொழுது ஒருநாள் தங்கியிருந்தமலை. அது சேரநாட்டிலுள்ளது. (2)இளாவிருதவிருஷத்துக்க வடக்கெல்லையாகவுள்ள மலை.

நீலமலர்க்கண்ணி - திருஎருக்கத்தம்புலியூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

நீலன் - 1 பு. அசமீடன் புத்திரன். 2 ராஜசூயகாலத்திலே சகாதேவனோடு யுத்தஞ் செய்த மாகிஷ்மதிபுரிராசா. 3 அக்கினிக்குப்பிறந்த வாநரன். அவன் சுக்கிரீவன் படைத்தலைவன்.

நீலாசலநாதர் - திரு இந்திரநீலப்பருப்பதத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

நீலாம்பிகை - திரு இந்திரநீலப் பருப்பதத்தலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

நீலாயதாடிp - திருநாகைக்காரோணத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

நீலி - சங்கமனென்னும் வைசியன் மனைவி. கோவலன் கொலையுண்டிறக்கும்படி அவனுடைய முற்பிறப்பில் அவனைச் சபித்தவள்.

நீலி - பழையனூர் வணிகன் மனைவி. இவள் விவாகமாகிச் சிறிதுகாலத்தில் இறந்து திருவாலங்காட்டிலே பேயாய்த் திரிவாளயினாள். ஒருநாள் அவளுடைய நாயகன் அக்காட்டுவழியே தனித்துச் சென்றபோது. இந்நீலிப்பேய் அவனுடைய இரண்டாம் மனைவியைப் போல வடிவங்கொண்டு ஒரு கள்ளிக்கட்டையைப் பிள்ளையாக்கி மருங்கிலே தாங்கிக் கொண்டு அவனைத்தொடர, அவன் அவ்வடிவத்தைப் பேயென நிச்சயித்து அப்பேயினது வஞ்சமொழிகளுக்கிணங்கா தோடினான். பேயும் இதுமுறையோ இதுமுறையோ என்னைக் காட்டில் விடுத்து அகலக்கருதினீரே என்று அழுது கொண்டு தொடர்ந்து காஞ்சீபுரத்தையடைந்து அங்கே அம்பலத்திற் கூடியிருந்த வேளாளரிடத்துச் சென்று தன்வழக்கைச்சொல்லிற்று. அம்பலத்து வேளாளர் இருவர் வழக்கையுங்கேட்டுப் பேயைப்பார்த்து. நீ கூறுவதற்குச் சாடியாதென்றுவினாவ பேய், இப்பிள்ளையை விடுகின்றேன். அஃது அப்பாவென்றழைத்துத் தந்தை மடிமீதேறாதோபாருங்கள் என்று கூறிவிடுப்ப, அப்பிள்ளை அவ்வாறுசெய்ய, வணிகன் இதுபேய்க்கூத்தென்றான். அது கேட்ட வேளாளர் அஃதுண்மையானால் நாங்கள் பிணையாவோம். நீயும் இவளுமாக இவ்வறையினுட்போய்ச் சிறிதுநேரம் பேசிவாருங்கள் என்று சொல்ல, வணிகன் அவ்வுரைமறுக்கவியலாதவனாய் அறையினுட் செல்லப் பேயுந் தொடர்ந்துள்ளே புகுந்து கதவடைத்து அவனுயிரைப் பருகி மறைந்தது. வேளாளர் எழுபதின்மரும் கதவைத்திறந்து பார்த்துத் தம்மாலிறந்த வணிகன் பொருட்டுத் தாமுந் தீப்பாய்ந்துயிர் விடுத்தார்கள். சிவபிரான் அவர்களுடைய சத்திய நெறிக்கிரங்கி எல்லோரையும்ட எழுப்பி வேளாளர் வாக்கைக்காத்தருளினார். இவ்விஷயம் தொண்டைமண்டலசதகத்திலும், சேக்கிழார் புராணத்தினுங் கூறப்பட்டது.

நூல் - நாடகத்தமிழ் நூல்களுளொன்று

நெடியோன்குன்றம் - வேங்கடமலை. இது தமிழ்வழங்கு நிலத்திற்கு வடவெல்லையாயுள்ளது.

நெடுங்கல்நின்றமன்றம் - காவிரிப்பூம்பட்டினத்துள்ள ஐவகைமன்றத்தளொன்று. இது பித்தேறினோர் நஞ்சுண்டொர் பேய்பிடிக்கப்பட்டோராகிய இவர்கள் துயரத்தை நீக்குவது.

நெடுங்கிள்ளி - கோவூர்கிழாராற் பாடப்பட்டவன். ஆவூர் உறையூர்களில் அரசுபுரிந்திருந்தவன். சோழ பரம்பரையி லுள்ளவன் (புறநா)

நெடுங்குளம் - பாண்டிநாட்டுள்ள ஓரூர். இஃது அக்காலத்தில் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியிலுள்ளது.

நெடுஞ்செழியன் - மதுரையிலிருந்த ஒரு பாண்டியன். இவன் ஆராயாத கோவலனைக் கொலைபுரிவித்துக் கண்ணகிக்கு வழக்கிற்றோறறுத் தனக்குண்டான பழியை நினைந்து உயிரைவிட்டவன்.

நெடுநல்வாடை - நெடுஞ் செழியனை நக்கீரர் பாடியது. இது பத்துப்பாட்டுள் ஏழாவது.

நெடுமாறநாயனார் - திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரால் சுரநோயும் கூனுந்தீரப் பெற்றுச் சமணசமயம் விடுத்துச் சைவஞ் சார்ந்த கூன்பாண்டியனார். இவரே வடபுலத்தரசரைத் திருநெல்வேலிப் போர்க்களத்தில் வென்ற சைவசமயம் அபிவிர்த்தியாகும் படி நெடுங்காலமரசியற்றினவர்.

நெடுவேளாதன் - குன்றூர்கிழார் மகனாராற் பாடப்பட்டவன்.

நெடுவேள்குன்றம் - திருச் செங்குன்றென்னுமலை. இது சோழநாட்டிலுள்ளது.

நெட்டிமையார் - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர். (புற)

நெய்க்குறி - தேரையர் செய்த மூத்திரபரீiடி கூறு நூல்.

நேசநாயனார் - சாதியிற சாலியராகிய இச்சிவபக்தர் சிவனடியார்க்கு உடையுங் கீளு நெய்து கொடுக்குந் திருத்தொண்டு பூண்டு காம்பீலிநகரத்திலிருந்தவர்.

நேமிநாதம் - தொண்டை நாட்டுக்களத்தூரில் விளங்கிய குணவீரபண்டிதர் என்னும் ஆருகதர் செய்த தமிழிலக்கணம். எழுத்ததிகாரம் சொல்லதிகாரமென்னும் மிருபாற்றாய்த் தொண்ணூற்றாறு வெண்பாக்களால் முடிந்துள்ளது.

நேரிவாயில் - உறையூரின் தெற்கு வாயிலின் கண்ணதோரூர்.

நைமிசம் - மரீசி. அத்திரி, பிருகு, வசிஷ்டன், கிருது, அங்கிரசன் என்னு மிவர்கள் வமிசத்தவர்கள் தவஞ் செய்த ஆரணியம்

நைமிசாரணியம் - வட நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

நையாயிகர் - கௌதமகணாத மதவாதிகள் நையாயிக ரெனப்படுவார்கள். அவர்கள் சித்துஞ் சடமுமாகிய விரண்டுமே நித்தியப் பொருள்களென்பவர்கள். சடமாகியலிவ்வுலகம் பீஜத்தினி என்று தோற்றுவிக்கப்பட்டதென்றும், தோற்றுவிப்பது சித்துப் பொருளென்றும், தோன்றும் போது பிஜம் ஏக அணுவாய்ப் பின்னர்த் திரியணுவாய் வடிவுடைப் பொருளாகும் என்றும, ஒடுங்கும் போதும் அவ்வாறே ஒடுங்கிச் சென்று பீஜமாய் நிற்குமென்றும். அந்நிலைக்கண் அது நித்தியமென்றும், வடிவுடையதாய் நிற்கும் நிலைக்கண் அழிதன்மாலையதென்றும். சித்தின்றிச் சடங்காரியப்பாடாதென்றும், ஆன்ம கோடிகள் எல்லாம் ஜகத்காரணமாகிய சித்துப்பொருளின் அமிசங்களேயாமென்றும், அமிசங்களாதலின் சிற்றறிவும் சிறுதொழிலுமுடையனவென்றும் ஜகத்காரணமாகிய சித்து முழுமுதலாதலின் முற்றறிவும் முற்றுத்தொழிலுமுடைதென்றும் ஆன்மாக்கள் சரீரத்தோடு கூடியிருக்கும்போது அஞ்ஞானமுடையதா யிருக்குமென்றும், இடையறாத முயற்சியினால் ஞானத்தை யடைந்தவிடத்து அவ்வான்மாக்கள் முழுமுதலோடு சேர்ந் பேரானந்தத்தை அநுபவிக்குமென்றும் கூறுபவர்கள். இவையே நையாயிக மதக் கொள்கைகளாம்.

நைஷதம் - சம்ஸ்கிருதத்தில் பஞ்சகாவியங்களுளொன்று. ஸ்ரீ கர்ஷன் செய்தது. நிஷதராசனாகிய நளன் சரித்திரங்கூறலின் அஃது இப்பெயர்த்தாயிற்று. தமிழில் இப்பெயரால் அதனை மொழிபெயர்த்தவன் அதிவீரராமபாண்டியன்.

நொச்சிநியமங்கிழார் - புறநானூற்றனுள்ளே ஒரு பாடல் பாடியபுலவர்.

நோயணுகாவிதி - தேரையர் செய்த ஆரோக்கிய நூல்.

பததத்தன் - நரகாசுரன் புத்திரன்.

பகவற்கீதை - கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குபதேசித்த யோகநூல். இது பாரதத்தின் ஒரு கூறாகுமாயினும் தனி நூலாகவே வழங்கப்பட்டு வருகின்றது. இதிலே பேரின் பத்துக்குச் சாதனமாகிய நிஷ்காமகன்மமும் ஞானசாதனமாகிய யோகமுமே கூறப்பட்டுள்ளன. வேதாந்தமாகிய உபநிஷதங்களினது உண்மைப்பொருளையுணரும்பக்குவம் இக்கலியுகத்து மாநதர்க்குக் கைகூடாதென்பது கருதியே, கலியுகாரம்பத்திற்குச் சிறிது காலத்துக்கு முன்னரே லோகரiடியின் பொருட்டுத் திருவவதாரஞ் செய்தருளிய கிருஷ்ணபகவான் அவ்வுபநிஷதங்களின் சாரமாகிய இந்நூலை அர்ச்சுனனை வாயிலாகக் கொண்டு சர்வான்ம வீடேற்றத்திற் குபகாரமாகவுபதேசித் தருளினார். பலாபேiடியின்றிக் கன்மங்களைச் செய்து கொண்டும் ஒருவன் ஞானியாகவிருக்கலாமென்பதே இந்நூற்சித்தாந்தம். இவ்வுபசே நூலைக்கேட்டிருந்து வெளியிட்டவர் சஞ்சயனார். இந்நூலுக்குச் சங்கராசாரியர் அத்துவைதபடிமாகவும், பாஷியங்கள் செய்திருக்கின்றனர். இந்நூல் பாரதத்தினுள்ளே கூறப்பட்ட நூலின்றென்றும். அதுபின்னர்க் காலத்திலெ யாரோ ஒருவராற் செய்து பாரதத்திலே யொட்டப்பட்ட தென்றும் பழிநாணாதுகூறும் அந்நியசமயிகளுஞ் சிலருளர். அவர் கூற்று ஆதாரமின்றி அழுக்காறு காரணமாக எழுந்ததென்று தள்ளப்படும். இந்நூலை ஐரோப்பியபண்டிதர்களும் பலர் புகழ்ந்து கொண்டாடி உச்சிமேற் கொள்வரென்றால் மற்றதன் பெருமை கூறவேண்டா.

பகன் - (ரா) 1 ஏகசக்கரபுரத்துப் பிராமணருக்குத் துன்பஞ் செய்து கொண்டிருந்த ராடிசன். அப்பிராமணர் தத்தம் முறைப்படி தினந்தோறும் ஒருவண்டி சாதமும், இரண்டு எருமைக்கடாவும், ஒரு பிராமணப்பிள்ளையும் உணவாகக் கொடுக்க வுடன்பாடுபண்ணிக் கொண்டு கொடுத்துவருநாளில், அக்கிரகாரத்தில் வீமன் தங்கியிருந்தவீட்டுக்காரன் முறை வந்தது. சாதத்தை மாத்திரம் வண்டியிலேற்றிக் கொண்டு வீமன்றானே சென்று பகனைக்கண்டு சாதம் வந்தது ஒப்புக்கொள்ளுகவென்றான். சாதத்தோhடு எருமைக்கடா முதலியன வராதது கண்டு அவன் சினந்து வீமனைச்சாட, வீமன் அவனைக் கொன்றொழித்து மீண்டான். (2) பிருந்தாவனத்தில் கஞ்சன் ஏவலினால் கிருஷ்ணனைக் கொல்ல எத்தனித்துக் கிருஷ்ணனாற் கொலையுண்ட ராடிசன். (3) (ய) கங்கன் மூத்தமகன். (4) துவாதசாதித்தியருளொருவன். தடின் யாகத்திலே வீரபத்திரராலொறுக்கப்பட்ட சூரியன்.

பகீரதன் - (இடி{) திலீபன் புத்திரன். இவன் சகரன் புத்திரரும் தனது
பாட்டன்மாருமாகிய சகரரைக் கபிலர் சாபத்தினின்று நீக்கி ரடிpக்குமாறு கங்கையைக் கொண்டு வந்துலகில் விடுத்தவன். (கங்கைகாண்க)

பகுகந்தன் (பு) சுத்தியுவன் புத்திரன்
பகுகவன்

பகுரதன் (பு) புரஞ்சயன் புத்திரன்
வெகுரதன்

பகுளாசுவன் - இவன் கிருஷ்ணனால் மோடிம்புகுந்தவன்.

பகுளை - உத்தானபாதன் புத்திரனாகிய உத்தமன்பாரி.

பங்காசுவன் - இவன் நூறு புத்திரரையும் நூறு புத்திரிகளையும் பெற்றபின் இந்திரன் வரத்தாற் பெண்ரூபங்கொண்ட ஓரரசன்.

பசுபதிநாயகி - திருப்பாசூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பசுபதிநாயகேசுவரர் - திருச் சக்கரப்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பசுபதி - (1) சிவன் (2) அஷ்டமூர்த்திகளுளொருவன்.

பசுபதீசா - திருப்பந்தண நல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பசுபதீசுரர் - திருஆவூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பசுபதீசுவரர் - திருக் கருவூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பஜமானன் - (1) (ய) சாத்துவதன் புத்திரன். (2) (ய) அந்தகன் சேஷ்டபுத்திரன்.

பஜி - (ய) சாத்துவதன் புத்திரன்.

பஞ்சகௌடர் - சாரஸ்வதம், கன்னியாகுப்சம். மிதிலம். கௌடம், உதகலம் என்னும் இவ்வைந்து தேசத்துப் பிராமணரும் பஞ்சகௌட ரெனப்படுவர்.

பஞ்சசாயகன் - மன்மதன். பஞ்சபாணன் என்பது பொருள்.

பஞ்சசிகன் - மிதிலாபுரி ராஜாவாகிய ஜனகனுக்கு உபதேசஞ் செய்த மகாத்தமா.

பஞ்சசூடை - ஓரப்சரசை. நாரதருக்குப் பெண்கள் சுபாவம் இதுவென்று எடுத்தோதினவன்.

பஞ்சஜனன் - (1) (தி) சம்ஹலாதன் புத்திரன். (2) (த) நாந்தீபன் புத்திரனைப் பிரபாசதீர்த்தத்துக்குள்ளே கொண்டு போன ராடிசன். கிருஷ்ணன் தன் குருபுத்திரனை அவன் மோசஞ் செய்தானென்றுணர்ந்து அவனைக் கொன்று அவன் கழுத்தெலும்பை எடுத்துப் பாஞ்சசன்னிய மென்னுஞ் சங்காக்கினார்.

பஞ்சதிராவிடர் - தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர் கூhச்சரர் என்னும் இவ்வைந்து பாஷையாளரும் பஞ்சதிராவிடர் எனப்படுவர்.

பஞ்சபாரதீயம் - நாரதன் செய்த இசைத்தமிழ்நூல்.

பஞ்சமரபு - அறிவனார் செய்த இசைத்தமிழ்.

பஞ்சலிங்கம் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமென்னும் ஐந்து பூதங்களினாலும் தனித்தனியுண்டாய லிங்கங்கள். பிருதிவிலிங்கம் காஞ்சியிலும் அப்புலிங்கம் ஜம்புகேசுவரத்திலும் தேஜோலிங்கம் அருணாசலத்திலும், வாயுலிங்கம் காளத்தியிலும். ஆகாயலிங்கம் சிதம்பரத்திலுமுள்ளன.

பஞ்சவடி - ராமன் வனவாசத்துக்கண் ஆச்சிரமம் அமைத்துக் கொண்டவிடம். அது கோதாவிரிதீரத்துள்ளது. ஐந்து ஆலமரங்கள் கூடி நிற்றலின் அது பஞ்சவடி எனப்பட்டது. (வடம் - ஆல்)

பஞ்சவனநாதர் - திருமுக்கீச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பஞ்சாப்சரசம் - மந்தகர்ணன் தண்டகாரணியத்தி லுண்டாக்கிய குளம்.

பஞ்சினுமெல்லடியம்மை - திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பட்டினத்தடிகள் சோழநாட்டிலே
பட்டணத்துப்பிள்ளையார் காவிரிம்பூம் பட்டினத்திலே வைசியர்குலத்திலே ஆயிரத் திருநூறு வருஷங்களுக்கு முன்னே அவதாரஞ் செய்து திருவெண்காட்டீசனாரிடத்திற் பேரன்புடையராகி யொழுகிய காரணத்தால் திருவெண்காடரெனக் காரணப்பெயர் பெற்ற ஒரு புருஷரத்தினம். இவர் மரக்கலவாணிகத்தாற் பெரும்பொருள் படைத்து குபேரனெனவும் சிவனடியாரைச் சிவனெனக்கொண்டு பசரகக்கும் பத்தியிற்சிறுத்தொண்டரனவும் வாழ்ந் தில்லறநாடாத்திவருநாளிலே விவாகஞ் செய்து கொள்ளற்குப் பொருளின்றி வருந்தியிருந்த ஒராதிசைவரிடம் சிவபிரான் ஒரு மானிடவுருக்கொண்டு சென்று “உமதடிமையாகப்பாவித்த என்னைக்கொண்டு சென்று விற்றுக்கலி தீர்த்துக்கொள்ளுவீராக” வென்றுகூற ஆதசைவரவ்வாறே அவரைக் கொண்டு சென்று பட்டணத்தடிகளிடம் விற்றுப்பொருள் பெற்றுப் போயினார். பட்டணத்தடிகள் அவ்வடிமையை அடிமையாக நினையாது புத்திரனைப் போல வைத்து வணிகமுறை பயிற்றி மரக்கலத்தில் ஊர்தோறுமனுப்பிப் பொருளீட்டு வித்துமகிழ்ந்து வருநாளில், அவ்வடிமையானார் ஒருமுறை தாம் மரக்கலத்திற் கொண்டு போன பண்டங்களையெல்லாம் விற்றுப் பெற்ற பெருநிதியை ஒருதீவிலே ஆலயத்திருப்பணிக்கும் தருமத்துக்கும் செலவுசெய்து விட்டு மீளும்போது மரக்கலநிரப்ப எருமுட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்து பண்டாரத்திற் சேர்த்துப்பொன்மணலையெரு முட்டைகளிற் செறித்து வந்தேனெனக் கூறி, ஒன்றைப் பிட்டுக் கரைத்துக் காட்டினர். பின்னர் அவரோடு சென்ற சிலர் பட்டணத்தடிகளிடம் போய் இவர் உம்மை வஞ்சித்தாரென்று கூற அவர்அவ்வடிமையைச் சிறையிலிட்டு வைத்தார். அங்கே அவரிடத்தில் விளங்கிய அற்புதங்களை அறிந்த பிள்ளையார் அவரைச் சிறைநீக்கிவிட, அவர் பிள்ளையாருக்கு ஞானோபதேசஞ் செய்தருளினர். அவ்வளவிற் பிள்ளையார் துறவாமைகண்ட பரமசிவன், ஒரு காதற்றவூசியால் அவருக்கு ஞானமுதிக்கச் செய்து மறைந்தருளினார். பிள்ளையார் முற்றத்துறந்த துறவியாகித் தலங்கடோறுஞ் சென்று அற்புதஞானப்பாக்களைப்பாடி அநேக அற்புதங்களைச் செய்து ஈற்றிலே திருவொற்றியுரையடைந்து சமாதி கூடினர். திருவேகமபத் திருவந்தாதி, ஒருபாவொருபது முதலிய அநேகதோத்திரப் பிரபந்தங்கள் இவராற் பாடியருளப்பட்டன.

பட்டி - சந்திரசர்மன் புத்திரன் விக்கிரமார்க்கன் தம்பி.

பட்டினப்பாக்கம் - காவிரிம்பூம் பட்டினத்தின் உண்ணகர்.

பட்டினப்பாலை - பத்துப்பாட்டுள் ஒன்பதாவது, கரிகாற்சேழைகைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.

பட்டீசுவரர் - திருப்படடீச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

பட்டோதிடிpதன் - பாணினி வியநகரசூத்திரங்களைச் சித்தாந்த கௌமுதி யென்னும் பெயராற் பிரகரணஞ் செய்த பண்டிதர். இவர் கௌடப்பிராமணர். இவர் காலம் இற்றைக்கு 800 வருஷத்துக்கு முந்தியது.

பண்மொழியம்மை - திருப்பாண்டிக்கொடு முடியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

பதஞ்சலி - யோகசூத்திரம் செய்தவராகிய இவர் இளாவிருதவருஷத்தில் அங்கிரனுக்குச் சதியிடத்திற் பிறந்தவர். இவர் பிறந்தவுடன் திரிகாலஞானமுடையராய் எல்லா முணர்ந்தவர். இவர் லோலுபையைச் சுமேருவிலிருந்த ஒராலமரத்துப் பொந்திலே கண்டு மணம்புரிந்தனர். பாணினி வியாகரணத்துக்கு மகாபாஷியஞ் செய்த பதஞ்சலியும் இவரே. பாணினி வியாகரணத்துக்கு மகாபாஷியஞ்செய்த பதஞ்சலியும் இவரே. பாணினிவியாகரணத்துக்கு மகா பாஷியஞ்செய்த பதஞ்சலி இரண்டாயிரத்தெண்ணூறு வருஷங்களுக்குமுன்ன ரிருந்தவரென்பது சங்கராசாரிய காலநிரூபணத்தால் நன்றாக நிச்சயிக்கப்படும். இக்காலநிரூபணம் ஐரோப்பிய பண்டிதருக்கு மொத்த துணிபாம். இப்பதஞ்சலிக்குப் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்தவர் பதஞ்சலிமுனிவர். அவர் ஆதி சேஷனுடைய அவதாரம். ஆதிசேஷன் சிவபிரானது திவ்வியநடனங் காணவேண்டிப் பதஞ்சலி முனிவராக அவதரித்துத் தில்லைவனத்திலே ஆனந்த தாண்டவ தரிசனம் பண்ணிக்கொண்டிருந்தவரென்பது கோயிற்புராணம். மகாபாஷியஞ் செய்தவரும் யோகசூத்திரஞ் செய்தவரும் யோகசூத்திரஞ் செய்தவரும் இருவேறு பதஞ்சலி என்பாருமுளர்.

பதரி சரஸ்வதிநதி;க்குச் சமீபத்துள்
வதரி ளஒரு புண்ணியவனம்.

பதரீபாசனம் - ஒரு புண்ணிய தீர்த்தம். பிரபாவதி காண்க.

பதிற்றுப்பத்து - கடைச்சங்கப் புலவரியற்றிய எட்டுத் தொகையுள் நான்காவது. இந்நூல் கேரர்புகழை யெடுத்துக் கூறுவது.

பதுமகோமளை - சூரபத்மன்மனைவி. இவளிடத்திற் பிறந்தபுத்திரன் பானுகோபன்.

பதுமபுராணம் - பாத்துமபுராணங்காண்க.

பத்மாவதி - விந்தியதுக்குக் சமீபத்துள்ள ஒருநகரம். ஓரிராசகுமாரிக்கும் பெயர்.

பத்திரகர்மன் - சுக்கிரன் மகன். தைத்தியகுரு.

பத்திரகாளி - பார்வதி அமிசமாகிய ஒருதேவி.

பத்திரகிரியார் - பட்டணத்தடிகள் பால்ஞானோபதேசம் பெற்ற ஒரு துறவி. இவர் பாடிய புலம்பல் ஞானாமிர்தம் பொழிந்து எவர் மனத்தையு முருக்குமியல்பினது. இவர் ஓர் அரசர். பட்டணத்தடிகளது உபதேசத்தாலே அரசு துறந்து ஞானமுடிசூடினவர்.

பத்திரசேனன் - (ய) மகிஷம்நதன் புத்திரன்.

பத்திரதன் - (அம்) சம்பன் பௌத்திரன் பிருகதகர்ணன் தந்தை.

பத்திரவாகு - (ய)வசுதேவன் புத்திரன். சுபத்திரன் சகோதரன்.
பத்திரன் - வசுதேவன் புத்திரன். சுபத்திரன் சகோதரன்.

பத்திராவதி - அஸ்திணாபுரத்துக்கு ஐந்துகாதத்திலுள்ள ஒரு நகரம்.

பத்திரை - (1) துர்க்காதேவி. (2) வசுதேவன்பாரி. (3) கிருஷ்ணன் பாரிகளுளொருத்தி. கேகயன் மகள்.

பத்தினிக்கடவுள் - கண்ணகி. இவளுக்கு இப்பெயர் கோவலனோடு சுவர்க்கஞ் சென்ற பின்பு வந்தது.

பந்தன் திரணவிந்து தந்தை. புதன்
வந்தன் எனவும் படுவன் இவன் மனுவமிசத்தோன்.

பப்பிரு - 1 ய. விதர்ப்பன். பௌத்திரன். 2 ய. சாத்துவதன் பௌத்திரன். 3 திருஹியன்புத்திரன்.

பப்பிருவாகனன் - அருச்சுனன் மதன். இவன் தாய் மணலூர் இராஜாவாகிய சித்திரவாகனன் மகளாகிய சித்திராங்கதை. தருமன் அசுவமேதஞ் செய்த போது அசுவத்தைத் தடுத்தபப் பிருவாகனனோடு அருச்சுனன் யுத்தஞ் செய்திறக்க, நாககன்னடகையாகிய உலூபி அருச்சுனை மீளவும் உயிர் பெறும்படி எழுப்பிக் காத்தாள்.

பம்பை - கிஷ்கிந்தைக்குச் சமீபத்திலுள்ள ஒருவாவி.

பயை - ஹேதபாரி. வித்தியுத்தகேசன்தாய்.

பயோஷ்ணி - விதர்ப்பதேசத்தில் பிரவாகமாகி வரதநதியிற் கலப்பதாகிய ஒருநதி.

பரங்கருணையம்மை - திருப்புனவாயிலிலே கோயில் கொண்டிருக்குந்தேவியார் பெயர்.

பரங்கிரிநாயகர் - திருப்பரங்குன்றத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

பரசுராமன் - ஜமதக்கினிக்கு ரேணுகையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் விஷ்ணுவினது ஆறாமவதாரம் கார்த்தவீரியார்ச்சுனன் புத்திரர்யாகப் பசவை நாடிச் சென்ற போது ஜமதக்கினியினுடைய ஆச்சிரமத்தில் அதுநிற்கக்கண்டு ஜமதக்கினியைக் கொன்று பசுவைக் கவர்ந்து சென்றனர். அச்சமயம் வெயியே போயிருந்த பரசுராமன் மீண்டு வந்து தந்தை கொல்லப்பட்டதைக் கண்டு, “டித்திரியரை வேரறுத்து இப்பழிதீர்ப்பேன்” என்று விரதம் பூண்டுடித்திரியரை யெல்லாம் கருவறுத்து அவ்விரத்தத்தாற் பிதிர்கருமஞ் செய்தான். இவன் உக்கிரதவஞ் செய்து சிவனிடத்து அநேக திவ்வியாஸ்திரங்களைப் பெற்று வில்வித்தையிலே தனக்கிணையில்லா திருந்தான். இவன் சிறுபிள்ளையாயிருந்த போது தந்தை சொற்படி தாயைக்கூசாது கொன்றவன். இவன் ராமர் காலத்திலே ராமரால் அபஜயமடைந்து மகேந்திரமலைக்குச் சென்று அங்கே இன்றும் சிரஞ்சீவியாகத் தவஞ் செய்கின்றானென்பர். (ஜமதக்கினி காண்க)

பரஞ்சோதிமுனிவர் - திருவிளையாடற் புராணஞ் செய்தவர்.

பரணர் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவருங்கபிலரும் மிக நண்பினர்கள். இவர் கோச்செங்குட்டுவன் மேல் ஒருபிரபந்தம் பாடிப் பரிசிலாக உம்பறகாட்டுவாரி கொண்டவர். இவர் ஒளவையாராலும் தாம்பாடிய “அமரர்ப்பேணியும்” என்னும் பாடலிலே சென்றமர்கடந்து நின்னாற்றறோற்றிய வன்றும் பாடுநர்க்கரியையின்றும் பரணன் பாடினன் என்றெடுத்துச் சுட்டப்பட்டவர் இவர் தெய்வப்புலமையடைவர்.

பரதகண்டம் - பாரதவருஷமானது விதேகம், ரேபதம், மத்தியம், பரதமென நான்குகண்டங்களையுடையது.விதேகம் மேல்பாலிலுள்ளது. மத்தியம் இமயத்துக்கும் விந்தியத்துக்கு மிடையேயுள்ளது. பரதம் விந்தியத்துக்குத் தெற்கேயுள்ளது. இவை நான்கையும் நவகண்டமாக்கிக் கூறுவாருமுளர்.

பரதசேனாபதீயம் -ஆதிவாயிலார் செய்த நாடகத் தமிழ் நூல்.

பரதம் - ஒரு நாடகத் தமிழ் நூல். அஃது இறந்தது.

பரதன் - (1) தசரதன் புத்திரன். ஸ்ரீராமன்றம்பி. இவன் அதிக நற்குணவான். இவன்ஸ்ரீராமன் பெறவேண்டிய அரசியலைத் தனக்குவஞ்சனையாலே தாய்பெற்றுக் கொடுத்தாளென்றறிந்து, அதனை வேண்டாமென்று மறுத்து ராமனுக்குரைக்க, ராமன் தந்தை சொல்லைக் கடக்கலாகாதென்று கூறிச் சமாதானஞ் செய்ய. அது கேட்டொருவாறு ஸ்ரீராமன் வரும் வரைக்கும் அரசியலைக் கைக்கொண்டவன். (2) சகுந்தலைவயிற்றிலே துஷ்யந்தனுக்குப் பிறந்தபுத்திரன். இவன் ஆரியதேசம் முழுவதையும் கட்டியாண்டமையால் பாரதவருஷப்பெயர் அத்தேசத்தற்காயிற்று. இவனுடைய ஒன்பதாஞ்சந்ததிகுரு. குருவினது பதினான்காஞ்சந்ததி சந்தனு. சந்தனுவுக்கு நான்காஞ்சந்ததிபாண்டவர்.

பரத்துவாஜன் - (ரி) உதத்தியன் புத்திரன். மமதை இவன் தாய். இவன் பிரஹஸ்பதி பிரசாதத்தால் உற்பத்தியானவன்.

பரத்துவாஜி - மாளவ தேசத்திற்பிரவாகிக்கும் ஒரு நதி.

பரமசிவன் - ஸ்ரீ கைலாசத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். (2) மும்மூர்த்திகளையும் படைத்தருளும் தனிமுதற்கடவுள். இக்கருத்து அதர்வசிகையிற் கூறப்பட்டுள்ளது.

பரமேஷ்டி - (1) பிரமா (2) இந்திரத்துய்மன் புத்திரன்.

பராக்கிரமவாகு பாண்டியன் - விக்கிமவாகு பாண்டியனுக்குப் பின் அரசுசெய்தவன்.

பராசரஸ்மிருதி - கலியுகத்துக்கு ஏற்ற தருமங்களைக் கூறும் தருமசாஸ்திரம். பராசரர் செய்தது.

பராசரன் - விசிஷ்டன் பௌத்தரன். சக்தி புத்திரன். வியாசன் தந்தை. சுகன் பாட்டன். இவன் தந்தையாகிய சக்தியை இராடிசன் கொன்று தின்றானென்றுணர்ந்து அவனையும் ஏனைய ராடிசர்களையுங் கொல்வதற்காக ஒருயாகஞ் செய்தவன். அது முடிந்தபின்னர் இவன் யமுனையைத் தாண்டவேண்டி ஓரோடத்தேறிச் செல்லும் போது சரதியவதி யென்னும் பெண் அவ்வோடத்தைத்தனியே தாங்கிச் செல்லக்கண்டு அவளைப் புணர்ந்து வியாசரைப் பெற்றான். இவன் அவள் மீது இயல்பாக வீசிக் கொண்டிருந்த புலான்மணத்தை மாற்றித் திவ்வியபரிமளம் வீசும்படி செய்து அவளுக்கு யோசனகந்தி யென்னும் பெயரைக் கொடுத்தாள்.

பாரந்தகன் - இவன் சாரமுனிவர் சாபத்தார் தன் உறையூர் மண்மாரியாலழியப் பெற்ற சோழன்.

பரரஜகுஞ்சரன் - ஆயோதன வீரபாண்டியனுக்குப்பின் அரச செய்த பாண்டியன்.

பராவசு - (ரி) ரைப்பியன் புத்திரன். அர்த்தாவசன் சகோதரன்.

பரிடிpத்து - (1) குருவினது புத்திரருளொருவன். இவன் ஜன்னுவினது தம்பி. (2) அபிமன்னியு புத்திரன். அருச்சுனன் பௌத்திரன். இவன் கலியுகாரம்பத்தில் அஸ்தினாபுரத்தில் அரசு செய்தவன். இவன் தாய் உத்தரை இவன் மகன் ஜனமேஜயன்.

பரிணாமவாதசைவன் - உயிர்கெட்டுக் கூடி அரனடியில் ஒன்றாகிப் போமென்று சொல்லுமோர் அகச்சமயி.

பரிபாடல் - தலைச்சங்கப்புலவர் செய்த பரிபாடலென்னும் நூல் இறந்தொழிந்தது. கடைச்சங்கப் புலவர் செய்ததுவே இப்போதுள்ளது. அஃது எழுபது பாடல்களையுடையது. “திருமாற்கிருநான்கு செவ்வேட்குமுப்பத் தொருபாட்டுக்கார் கோளுக்கொன்ற மருவினிய வையை யிருபத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரிபாடற் றிறம்” என்னும் பாவால் அவ்வெழுபதின் வியாகமுணர்க. அவ்வப்பாடல்களின்கீழ் ஆசிரியர்கள் பெயர் கூறப்பட்டுள்ளன.

பரிமளகந்தி - மந்சகந்தி வேதவியாசன்றாய்.

பரிமளசுகந்தநாயகி - திருவேள்விக்குடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பரிமேலழகர் - இவர் காஞ்சீபுரத்திலே வைஷ்ணவப் பிராமணகுலத்திலே அவதரித்து வடமொழி தென்மொழியிரண்டிலும் வல்லுநராய் விளங்கித் திருவள்ளுவர் குறளுக்குரையியற்றிய ஆசிரியர். இவரைப் பாண்டிநாட்டிற் பிறந்தவ ரென்பாருமுளர். அது பொருந்தாமை “வள்ளுவர்சிலைப் பெருமihணச்சர்சாத்தர் வழுதி முதற் - றள்ளுவ னார்க்குந் தலையானபேரையுந தன்னுரையை - விள்ளுவனார்க்குந் திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் - வள்ளுவனார்க்கு வழிகாட்டினான்ட றொண்டைமண்டலமே” என்னுந் தொண்டைமண்டல சதகததானுணர்க. வள்ளுவர்குறளுக்கு உரை செய்தவர்கள் பதின்மர் அவருள்ளே சிறந்தவர்கள் நச்சினார்க்கினியரும் இவருமே யாவர்கள். இவ்விருவருள்ளும் இவரே தம்முரையாற் சிறந்தார். பதின்மர் உரையையு மொருங்குகற்று ஒப்புநோக்கிய ஆன்றோர் ஒருவர் கூறிய:- “பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள - நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ - நுலிற் - பரித்தவுரை யெல்லாமi; பரிமேலழகன் - றெரித்தவுரை யாமோ தெளி” என்பதனால் அவ்வுண்மை பெறப்படும். நச்சினார்க்கினியர் இவர்காலத்தவரேயாயினும் அவர் வயசால் முதிர்ந்தவர். இவர் வைஷ்ணவரென்பது “அரிமேலன்புறூஉமன் பமையந்தணன்” என்னும் ஆன்றோருரையாற்றுணியப்படும். இவர் வைஷ்ணவரேயாயினும் சைவாகமவுணர்ச்சியு முடையவரென்பது வள்ளுவருரையிலிடையிடையெடுத்துரைக்குமாற்றால் விளங்குகின்றது. வள்ளுவருக் குரை செய்த பதின்மருள் முற்பட்டவராகிய தருமர் ஆருகதர். அவரை ஆருகதர்கள் தருமசேனர் என்பர். அவரைத்தவுரையிலே பெரும்பாலும் ஆருகதமதக்கொள்கைகளே பிரசங்கிக்கப்பட்டன. இவ்வாறே மற்றையோரும் தத்தஞ்சார்பு பற்றியுரைத்தார்கள். அவருள்ளே நச்சினார்க்கினியர் ஒருவரே திருவள்ளவரைப் பொதுநூலெனக் கொண்டு நடுநிலைகலங்கா துரை செய்தார். ஆயினும் அவ்வொன்பதின்மர் உரையும் மெய்யுரையல்லவெனக் கண்டே பரிமேலழகர் தாம் உரை செய்யப்புகுந்தார். பரிமேலழகர் யோகப்பயிற்சி புடையரென்றும, ஒவ்வொரு சொல்லுக்குஞ் சமாதியிருந்தே மெய்ப்பொருள் கண்டாரென்றும், பூர்வம் வைஷ்ணவராயிருந்து பின்னர்ச் சுப்பிரமணியோபசகராயினரென்றும் ஒரு கர்ணபரம்பரையுளது. மற்றைய சரித்திரம் எவ்வாறாயினும் ஒவ்வொரு சொற்குஞ்சமாதியிருந்தே மெய்ப்பொருள் கண்டாரென்பது அவருரையை யூன்றி நோக்குந்தோறும் நம்பத்தக்கதாகின்றது.
இவர் உரையிலே பொருள் வன்மையும், செஞ்சொற்சிறப்பும், இலக்கணங்கூறும் சாதுரியமும், விசேடவுரை தெரிக்கு மாற்றலும், மேற்கோளெடுத்துச் சித்தாந்தஞ் செய்யுமுபாயமும், பிறர்க்கெல்லாம் பலவசனங்களானன்றிய மையாத விஷயங்களைச் சிலசொற்கொண்டு தெற்றெனக்காட்டும் போராண்மையும், வடமொழிப்பதங்களைச் செந்தமிழ்மொழியாக்கும் அற்புதசாமர்த்தியமும், சொன்முட்டுற்றுவடமொழிப்பதங்களை யெடுத்தாளும் நல்குரவுடையார் போலாது செந்தமிழ்ச் சொற்செல்வமுடைமையும், வேதாகமவியாகரண சாஸ்திர புராணேதிகாசஸ்மிருதி காவியா லங்காராதி வடநூற்பயிற்சியோடு முத்தமி;ழ்ப் பரப்பெலா முற்றவுணர்ந்த நுண்புலமையும் நன்கு பெறப்படுகின்றன.
இவர் வைதிகசமய வுணர்ச்சியிற் றமக்கிணiயில்லாதவ ரென்பது, “யாது மெய்யென நிகழுமையத்தினை யோகமுதிர்ச்சியுடையார் தம்மநுபவத்தானீக்கி மெய்யுணர்வார்” என்றும், “நிலமுதலுயிரீறாகிய தத்துவங்களின் றொகுதியெனவுணர்ந்து, அவற்றை நிலமுதலாகத் தத்தங்காரணங்களிலொடுக்கிக் கொண்டு சென்றாற் காரணகாரியங்களிரண்டு மின்றி முடிவாய் நிற்பதை யுணர்த்தலாம்” என்றும், “வீடாவது நிரதிசயவின்பம்” என்றும், “தோற்றக்கேடுகளின் மையின் நித்தமாய் நோன்மையாற் றன்மையொன்றுங் கலத்தலின்மையிற்றூய்தாய், தானெல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற் பொருள் விகாரமின்றி யெஞ்ஞான்ற மொருதன்மைத்து” என்றும் “…....துன்பங்களாவன பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி யீட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்தவுடம்புகளான் அநுபவித்தனவும் பிறந்தவுடம்பான் முகந்துநின்றனவு மொழியப் பின்னும் அநுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன்னிருள் போல் ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான்” என்றும், “பரம் பொருளையுணரப் பிறப்பறும்” என்றும் வரும் விசேடவுரைகளாற்றுணியப்படும்.
இவர் தம்முரையிலே தமக்குடன் பாடாயுள்ள உரையா சிரியர்களுடைய மதங்களை யெடுத்துக் காட்டித்தழுவுவதோடு தமக்குடன் பாடில்லாத மதங்களை மெடுத்துக்காட்டி ஏதுக்கூறி மறுத்தலுஞ் செய்வர்.
நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும் ஒரே காலத்தவரென மேலே கூறினாமன்றோ. பரிமேலழகர் திருவள்ளுவருக்கு உரையொன்றியற்றி, அதிலே தமதுரையைச் சிற்சிலவிடங்களிலெடுத்து மறுத்திருக்கின்றாரென்று கேள்வியுற்ற நச்சினார்க்கினியர் பரிமேலழகர்பாற் சென்று அவ்வுரையைத் தமக்குக் காட்டுமாறு வேண்டினர் பரிமேலழகர் அவரை உபசரித்து அவ்வுரையைக் காட்டினார். அதனை நச்சினார்க்கினியர் இருகையாலும்மேற்றுத் தமக்குள் சிலவற்றை எடுத்துநோக்கிச் சென்றனர். நோக்கிச் சென்ற போது “குடம்பைதனித்தொழிய” வென்னுந் திருக்குறளிலே, “குடம்பை” என்பதற்குத் தாங்கூடென்றுரைத்திருக்கப் பரிமேலழகர் அதற்கு “முட்டை” யென்றுபதவுரையும், “கருவந்தானு மொன்றாய்ப்பிறந்து வேறாந்துணையும் அதற்காதாரமாய் நிற்றலா லஃதுடம்பிற்குவமையாயிற்று” என்றும் “அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமற்போகலின் புள் உயிர்க்குவமையாயிற்று” என்றும் விசேடமுரைத்து, “கூடுபுள்ளுடன்றோன்றாமையானும், அதன்கண் அதுமீண்டு புகுதலுடைமையானும் உடம்பிற்கு உவமையாகாது” என்று மறுத்திருக்கக்கண்டு தாமுரைத்ததைக் கண்டித்தாரென்று வெகுளாமலும் நாணாமலும் “மெய்ப்பொருள்மெய்ப்பொருள்” என்று பாராட்டி உச்சிமேலேற்றிக் கொண்டாடின ரென்பது ஆசிரியகன்ன பரம்பரை. இவ்வாறே தருமர் முதலியோரதுரைகளையு மோரோ விடங்களிலெடுத்துமறுப்பர். அவையெல்லாமெடுத்து விரிப்பிற் பெருகும்.
இனி இவர்காலம், கந்தபுராணம் கம்பராமாணமுதலிய நூல்களினின்றும் உதாரணமெடுத்துக் காட்டாமையால் அந்நூலாசிரியர்களுக்கு முற்பட்டதென்பதும், போசராசன் பெயர் இவர் செய்தவுரையிலே வருதலால், அவனுக்குப் பிற்பட்டது என்பதும் நன்றாக நிச்சயிக்கப்படுதலின் ஆயிரத்திருநூறுவருஷங்களுக்கு முற்பட்டதாக துணியப்படும்.

பரிஹிணாசுவன் - (இடி{) அமிதாசுவன். கிருசாசுவன் தந்தை.

பரிஹிஷதர் - பிதிரர்களுளொருவகுப்பார்.

பரிஹஷதன் - பிராசீனபரிஹி.

பரிஹிஷ்மதி - விசுவகர்மன் புத்திரி. பிரியவிரதன் பாரி.

பருப்பதமங்கை - திருப் பருப்பதத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்.

பருப்பதேசுவரர் - திருப் பருப்பதத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பருதிப்பேசுரர் - திருப் பருதிநியமத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பர்க்கன் - (க) சிவன் (உ) பிரமன்.

பர்ஜன்னியன் - மேகங்களுக்கு அதிதேவதை. சூரியன் வருணன் இந்திரன் இவர்களுக்குப் பரியாயப் பெயர்.

பர்த்துருஹரி - வடமொழியிலக்கணமொன்று செய்த ஒரு பிரபலபண்டிதர்.

பர்மியாசுவன் - பூருவமிசத்து அஜமீடன் புத்திரன்.

பர்யந்ததேசங்கள் - ஆரியாவர்த்தத்துக்கு அயலிலேயுள்ள மிலேச்ச துருக்கதேசங்களுக்கு குறிப்புப் பெயர்.

பரீவதராஜபுத்திரி - க. திருநன்னி பள்ளியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர். (உ) பார்வதி.

பர்வதராஜன் - (க) இமயமலை. (உ) இமயராஜன்.

பர்வதன் - நாரதன் சகோதரி புத்திரன்.

பலசூதனன் - இந்திரன் (பலாசுரனைக் கொன்றமையால் இந்திரன் இப்பெயர் பெற்றான்.)

பலந்தனன் - நாபாகன் புத்திரன்


பலபத்திரர் ஆதிசேஷன் அமிசமாக
பலராமர் வசுதேவனுக்கு ரோகிணியிடத்துப் பிறந்த புத்திரனார். இவர் கிருஷ்ணனோடு வளர்ந்து விளையாடிக் கிருஷ்ணனுக்கு எக்கருமத்திலுந் துணையாயிருந்தவர். துரியோதனனுக்குக் கதாயுதப்பிரயோக வித்தை பயிற்றினவர் இவரே. இவர்க்குக் கொடி பனைக்க்கொடி. ஆயுதம் கலப்பைப்படை. இவரும் கிருஷ்ணரும் ஒருங்கு கூடியே விஷ்ணுவினது எட்டாம் அவதாரமாவர் தேனுகாசுரனையும் பிரலம்பனையும கொன்றவரும் பலராமரே. யமுனாநதியைத் தாமிருக்குமிடத்துக்குத் தமது கலப்பைப்படையினாலே யிழுத்துப்பாயும்படி செய்தவரும் இவரே. இவர் ரைவதராஜன் புத்திரியாகிய ரேவதியை மணம்புரிந்தவர்.

பலன் திதிவமிசத்துப் பாணாசுரன்
வலன் புத்திரன். (உ) பலராமன் (ந)பரயாத்திரன் என்பவன் மகன். இவன் மகன் சலன்

பாலகன் - சுசர்மன் பாரியைக்கவர்ந்த அசுரன். (ரி) ஜாதகர்ணிசீஷன்.

பாலகாசுவன் - புரூரவன் மகனாய அமவசுமிசத்து அஜகன் மகன். குசிகன் தந்தை.

பலாசினி - ஒருநதி. இதுசுக்திமந்தத்திலுற் பத்தியாகி மகாநதியிற் கலப்பது.

பலாசவனேசுரர் - திருநாவலூர் மயானத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பலாசுவன் - இரண்டாங் கனித்திரன் பௌத்திரன்

பலி - (க) சுதபன் என்னும் அசுரன் புத்திரன். (உ) பிரகலாதன் புத்திரனாகிய விரோசனன் மகன். இவன் மகாபராக்கிரமசாலி. விஷ்ணு இவனைக் கொல்வதற்காக வாமனாவதாரமாகி அவனிடஞ் சென்று மூன்றடி நிலந் தருகவென்றிரக்க, அவனுடன்படுதலும், அவர் விசுவரூபங் கொண்டு பூமியை ஓரடி நீளமாக அளந்து, ஆகாயத்தை மற்றடியாக வளந்து, மூன்றா மடிக்கிடமின்மையால் அவன் மீதடிவைத்து அவனைப் பாதலத் தமிழ்த்திக் கொன்றான்.

பல்லாதன் - (வா) உதக்சேனன் புத்திரன்.

பல்லவன் - (ரா) இல்வலன் புத்திரன். இவன் பலராமரோடு யுத்தஞ் செய்தபோது அவராற் கொல்லப்பட்டவன்.

பவகாரணி - அழகர்மலையிலுள்ள ஒரு பொய்கை. இது நீராடுவோர்க்கு அவர் பழம்பிறப்பிற் செய்தவற்றையுணர்த்துவது.

பவணந்தி - இவர் தொண்டை நாட்டிலே சனகாபுரியிலே சன்மதிமுனிவருக்குப் புத்திரரா யவதரித்துத் தமிழ்ப் புலவராய் விளங்கிய ஒருசமண முனிவர். சீயகங்கன்கேள்விப்படி தொல்காப்பியத்தைச்சுருக்கி;ப் பாணினீய வியாகரண அடைவுப்படி நன்னூல் என்னும் இலக்கணஞ் செய்தவர். அந்நூற்சூத்திரங்கள் மிக்க திட்பமுநுட்பமுமுடையன வென்பது சர்வாங்கீகாரம். “மொழிமுதற் காரண மாமணுத்திரளொலி யெழுத்து” என்று ஒலியெழுத்திற் கிலக்கணங் கூறிய அவர் சாதுரியம்பெரிதும் வியக்கற்பாலது. குற்றெழுத்து வல்லெழுத்து மெல்லெழுத்திடையெழுத்துக் களுக்கெல்லாம எண் கூறிவரையறுத்தவர் ஐயும் ஒளவும் எல்லாவிடத்தும் நெட்டெழுத்தாகாவென்பது உய்த்துணரவைக்கும் பொருட்டு நெட்டெழுத்திற்குமாத்திரம் “ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள நெடில்” என்ற வாளாசூத்திரஞ் செய்த குசாக்கிரபுத்தியினது ஆற்றல் அத்தியற்புதம். இவ்வாறே ஒவ்வொரு சூத்திரமுமொவ்வோராதிசயமுடையனவாம். இவ்வகை நுட்பமுஞ் சுருக்கமுமுடைய இலக்கணநூல் மற்றெப் பாஷையிலு மில்லை. இன்னும் “முன்னூலொழியப் பின்னூல் பலவினு - ணன்னூலார்தமக் கெந்நூலாரு - மிணையோ வென்னுந்துணிவே மன்னுக” என்றார் இலக்கணக்கொத்துச் செய்த ஈசான தேசிகரென்னும் சுவாமிநாத தேசிகரும் அதுநிற்க, இவர் இற்றைக்குத் தொளாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்தவரென்பது சில ஏதுக்களாற் றுணியப்படும்.

பவபூதி - ஒருசம்ஸ்கிருதகவி. இவர் காசிபகோத்திரத்தார். இவர் தேசம் விதர்ப்பம். (விதர்ப்பம் தற்காலம்டுண்டூர் என்று வழங்கப்படும்) இவர் போஜராசாவுடைய சனஸ்தானகவீச்சுரருள் ஒருவர்.

பவளக்கைநாயகி - தருவைகாவிலே கோவில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

பவளக்கொடியம்மை - குரங்காடு துறையிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

பவளவன்னப் பூங்குழலம்மை - திரு அம்பர்ப்பெருந்திருவிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

பவன் - அட்டமூர்த்தகளிலொருவர். (உ) சிவன்

பவானி - பார்வதி. (உ) ஒருநதி.

பவித்திரை - தண்டீசர் தாய்.

பவிஷியபுராணம் - பிரமாவானவர் சூரியனுடைய மான்மியத்தை மனுவுக்குரைத்தபின்னர், அவர் அம்மனுவுக்கு அகோரகற்பத்திலே உலகமுளதா முறையையும் சிருஷ்டிபேதமுதலியவைகளையும் உரைத்ததாக வுணர்த்துவது. முப்பத்தோராயிரங் கிரந்தமுடையது.

பவ்வியன் - சுவாயம்புமனு புத்திருளொருவன்

பழமலையந்தாதி - சிவப்பிரகாசர் செய்த ஒரு பிரபந்தம். அது கற்பனாலங்காரமலிந்துள்ளது. (பழமலை - விருத்தாசலம்)

பழமொழி - பதினெண்கீழ்க் கணக்கினுளொன்று. முன்னுறை யரசர் செய்தது. அது நானூறு வெண்பாக்களையுடையது. அது முற்றும் நீதியே கூறுவது.

பழம்பதிநாயகர் - திருப்புனவாயிலிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

பழையனூர்நீலி - பழையனூர் வணிகன் மனைவி. நீலி காண்க.

பழையன் - பாண்டியநாட்டுமோகூர்க் குறுநிலமன்னன். (மதுரைக்காஞ்சி)

பறையூர் - சேரநாட்டுள்ள தோரூர்

பற்குனன் - அருச்சுனன். (பங்குனி உத்தரத்திலே பிறந்தமையின் அவன் இப்பெயர் பெற்றான்)

பனங்காட்டீசர் - திருப்பனங்காட்டூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பஃறுளி - குமரியாற்றிற்குத் தெற்கேயுள்ள தோராறு. இஃது ஆதிகாலத்தே கடல்கொள்ளப்பட்டது. இதனையுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாடுகள் கடல் கொண்டழிந்தகாலத்தே தலைச் சங்கமிருந்த தென்மதுரையு மவற்றோடழிந்த தென்பது சிலப்பதிகாரவுரையாற் பெறப்படும். அதுவருமாறு :- “முதலூழியிலுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற்பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்தரீ இயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னுமாற்றிற்கும் குமரியென்னுமாற்றிற்குமிடையே யெழுநூற்றுக்காவதவாறும், இவற்றின் நீர்மலிவானெனமலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ் பின்பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ்குறும்பனைநாடும், என்னும் இந்தநாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலை நாடும், காடும் நதியும், பதியும், தடநீர்க்கமரி வடபெருங்கோட்டின் காறும் கடல்கொண்ழிதலால்.....” என்பது “வடிவேலெறிந்த வான்பகைபொறாது, பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடுகொடுங்கடல் கொள்” என்பதனாலும் அது வலியுறுத்தப்படும்.

பனம்பாரனார் - அகஸ்தியர்மாணாக்கர் பன்னிருவரு ளொருவராகிய இவரே தொல்காப்பித்துக்குப் பாயிரஞ் செய்தவர். பம்பாரமென்னும் சூத்திரஞ் செய்தாருமிவரே. புறப்பொருட் பன்னிருபடலஞ் செய்த ஆசிரியர் பன்னிருவருள் இவருமொருவர். இவர் தொல்காப்பியரைப் போலவே தலைச்சங்கத் திறுதிக்காலத்திலிருந்தவர்.

பன்னிருபடலம் - அகத்தியர் மாணாக்கர். பன்னிருவராலும் செய்யப்பட்ட புறப்பொருணூல். இஃது அழிந்தது போலும்.

பாகஎக்கியம் - அஷ்டகம், பார்வணம், ஸ்தாலிபாகம். சிரார்த்தம்மாசிகம் சர்ப்பபலி, ஈசானபலி, ஆக்கிரஹயண முதலிய எக்கியங்கள்.

பாகசாசனன் - இந்திரன் ( பாகனைத் தண்டித்தவன் என்பது. அதன் பொருள்)

பாகவதம் - பதினெண்புராணங்களுளொன்று இதில் காயத்திரிதேவி விஷயம், பரமாத்மாவிசார முதலியன சொல்லப்படும். இது பதினெண்ணா யிரங்கிரந்தமுடையது. பொப்டண்ணபட்டர் செய்தது தேவிபாகவதம்

பாகன் - விருத்திராசுரன் தம்பி. இவன் இந்திரனாற் கொல்லப்பட்டவன்.

பாக்கபுரேசர் - திரு அச்சிறுபாக்த்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பாசகர்ணன் - (ராடி) சுமாலி புத்திரன்

பாசகண்டம் - சமயங்கள் தொண்ணூற்றினதும் சாஸ்திரக்கோவை. வைதிகக்கொள்கையோடு அவைதிகக் கொள்கையுமெடுத்து விதிப்பது பாசண்ட சமயமாம்.


பாசுபதன் - சிவன் வீபூதியும் சடையுந் தரித்த மூர்த்தியாய் அருள்வர் என்பவன். இவன் அகப்புறச்சமயிகளுளொருவன்.

பாசுபதேசுவரர் - திருவேட்களத்திலும் திருமுல்லைவாயிலிலும் கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். அருச்சுனனுக்குப் பாசுபதங் கொடுக்கச் சிவன் கொண்ட வடிவம்.

பாசூர்நரதர் - திருப்பாசூரிலே கோயில் கொண்ட சுவாமி பெயர்.

பாஸ்கரராமாயணம் - பாஸ்கரராலே செய்யப்பட்டது.

பாஸ்கரரசாரியர் - இவர்காலம் இற்றைக்கு எழுநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னதென்பர். இவர் ஒரு பிரபல சோதிடகிரந்தகர்த்தா. இவரே பீஜகணிதஞ் செய்தவர். இப்பிஜகணிதத்தில் வருக்கசங்கரணவிதி என்று கூறப்படுவதாகிய ஒரரிய கணித விதிகூறப்பட்டிருக்கின்றது.

பாஸ்வரர் - ஒருதேவகணம். இவர் அறுபத்து நால்வர்.

பாஞ்சசன்னியம் - விஷ்ணுசங்கம் பஞ்சசன் என்பவன் எலும்பினாலாயது என்பது அதன் பொருள்.

பாஞ்சராத்திரி - நாராயணன் தன்னை வழிபட்டவர்களுடைய பந்தத்தை நீக்கி அவர்களை விரசாநதியில் மூழ்குவித்துச் சுத்தர்களாக்கி, வைகுண்டத்திலே சாபரூபத்தைக் கொடுப்பவனென்பவன். இவன் புறச் சமயிகளுளொருவன்.

பாஞ்சாலம் - அஸ்தினாபுரிக்கு வாயுதிக்கில் இமயத்துக்கும் சர்வ நதிக்கும் நடுவிலுள்ள தேசம்.

பாடலாவதி - இருடிபர்வதத்திலு ற்பத்தியாகிப் பாயும் நதி.

பாடலிபுத்திரம் - பிரதிஷ்டானபுரம். உதயாசுவன் அமைத்த நகரம். அது குசுமபுரியெனவும்படும். சோணைநதி கங்கையோடு சங்கமிக்குமிடத்துக்குச் சமீபத்திலே இருந்ததாகிய இப்பழையநகரத்தை ஆயிரத்து நூற்றைம்பது வருஷங்களுக்குமுன்னே, அஃதாவது கலிய்பதம் மூவாயிரத்து எண்ணூற்றைம்பதாம் வருஷமளவில் கங்கைநீர் பெருகி அழித்தது. இங்கே பௌத்தமுனிவர் மடங்களும் நூறு சிவாலயங்களுமிருந்தனவென்றும், அம்மடங்களைந்திலும் ஐயாயிரம் பௌத்தமுனிவர்கள் இருந்தார்களென்றும், மற்றைய வைதிக சமயிகள் தொகை அளப்பரிதென்றும் சீனாதேசத்திலிருந்து ஆரியதேசத்திற்கு வந்துபோன ஹயூன்சங்கன் என்பவன் கூறுவன். எனவே இந்நகரம் நெடுங்காலம் கீர்த்திபெற்றிருந்த ஓர் ராஜதானி என்பதற்கையமில்லை.

பாடலிபுரம் - பாடலிபுத்திரம்.

பாடாணவாதசைவன் - ஆன்மா முத்தியிலும் சகசமலம் நீங்காது கல்லுப்போலக் கிடக்குமென்பவன். இவன் அகச்சமயிகளுளொருவன்.

பட்டியல் - இப்பெரிய நூல்கள் பலவுள.அவற்றுள் வச்சணந்தி செய்தது வச்சணந்திமாலை யெனவழங்கும். குணவீரபண்டிதர் செய்து வெண்பாப்பாட்டிய லெனப்படும். அது “பண்பார்கவிஞர் வியந்தெடுத்த பாட்டியலை - வெண்பாவந்தாதி விளம்பினான். மண்பாவும் - கோடாதசீர்த்திக் குணவீரபண்டிதனாம் - பீடார்களந்தைப்பிரான்” என்னும் வெண்பாவால் நிச்சயமாம். இனி எஞ்சியபலவற்றுள் ஒன்று தியாகராஜ தேசிகர் செய்த நூல். இது மங்கலப்பொருத்த முதலியன கூறுவது. தியாகராஜNசிகர் இலக்கணவிளக்கஞ் செய்த வைத்தியநாதநாவலர் மகனார். இவர்காலம் இருநூறு வருஷங்களுக்கு முற்பட்டது.

பாணபத்திரன் - இவன் வரகுணபான்டியன் சபையிலே விளங்கிய ஒரு யாழ்வல்N;லான். சிவபிரானை இசைப்பாட்டினாலே தன்வசப்படுத்தி அவரிடம் ஒரு பாசுரம்வரைந்த திருமுகமொன்று பெற்றுக்கொண்டு போய்ச் சேரமான் பொருமாணாயனாரிடங் கொடுத்து அளவிறந்த திரவியம் பெற்றுத் திரவியசம்பன்னனாக விளங்கியவன். அப்பாசுரம் “மதிமலிபுரிசை மாடக்கூடற் - பதிமிசைநிலவும் பானிறவரிச்சிற - கன்னம்பயில் பொழிலாலவாயின் - மன்னியசிவன்யான் மொழிதருமாற்றம் - பருவக்கொண்மூப்படி யெனப்பாவலர்க் - குரிமையினுரிமையினுதவி யொளி திகழ் - குரு மாமதிபுரை குலவிய குடைக்கீழ்ச் - செருமாவுகைக்குஞ் சேரலன்காண்க - டண்பாலியாழ் பயில் பாணபத்திரன் - றன்பொலென்பாலன் பன்றன்பாற் - காண்பதுக ருதிப்போந்தனன் - மாண்பொருள் கொடுத்துவர விடுப்பதுவே” என்பது. இவ்வரகுணபாண்டியன் கூன்பாண்டியன் காலத்துக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின்னர் விளங்கியவன். இவன் காலத்தையும் பரம்பரைக்கிரமத்தையும் திருவிளையாடற் புராணமுடையார் பிறழ வைத்தனர்.

பாணன் - (திதி) (க) பலியினுடைய மூத்தமகன். இவன் ஆயிரங்கையுடையவன். (உ) (ய) அநீகன் புத்திரன்.

பாணினி - இவர் நாலாயிரம் வருஷங்களுக்குமுன்னே, காந்தாரதேசத்திலே சலாதுரநகரத்திலே பிறந்து உரியகாலத்தே வித்தியாப்பியாசஞ் செய்து வரும்போது, மந்த மதியுடையராயிருத்தலைக் கண்டு குருவாலும் சகபாடிகளாலும் அவமதித்துத் தள்ளப்பட்டு, மனம் வருந்தித் தமது வீடுநோக்கிச் செல்லாது, இமயமலையை நோக்கி நடந்து அங்கே சிவனைநோக்கித் தவங் கிடந்து, அவர்பாற் சகலசாஸ்திரங்களுக்கும் மூலசாஸ்திரமாகிய மாகேசுவர சூத்திரோடதேசம் பெற்றுக் கலையெல்லாம் வல்லவராயினவர். இவர் தந்தையார் பெயர் டணினி என்பர். தாயார் பெயர் தாடிp யென்பது தாடிpபுத்திரரெனவும் இவர் வழங்கப்படுதலால் நன்குதுணியப்படும். இவர் அம்மா கேசுவர சூத்திரங்களை ஆதாரமாக்கொண்டு செய்த சம்ஸ்கிருதயாகரணம் பாணினீயம் எனப்படும். அஃது எட்டு அத்தியாயங்களையுடையதாதலின் அஷ்டாத்தியாயி எனவும்படும். இவரும் வரருசியும் ஒரே காலத்தவர்கள். பாணினிபகவான் வியாகரணஞ் செய்யுமுன்னே வரருசி காதந்திர மெனப்;பெயரிய ஓரிலக்கணம் வகுத்தாரேனும், பாணினிபகவான் செய்தருளிய நூலே சிறந்ததெனக் கண்டு அதற்குத் தாம் ஒருரையியற்றினர். அவரே பாணினீயத்துக்கு முதலுரையாசிரியர்.

பாணினீயத்துக்கு மிக விரிந்த தோருரை செய்தவர் பதஞ்சலி பகவான். விரிவுநோக்கி அதற்குமஹாபாஷியம் என்னும் பெயருளதாயிற்று. பதஞ்சலிபகவான் தாமியற்றிய பாஷியத்திலே, “இச்சூத்திரத்திரங்களின் பெருமையை நோக்குமிடத்துப் பொருளில்லாத வோரெழுத்தையேனும் அவற்;;;றினுள்ளே யான் காண்கின்றிலேன்” எனக்கூறிப் போவரேல், பாணினீய சூத்திரங்களின் வன்மையும் நுட்பமும் வனப்பும் எடுத்துரைக்கவேண்டா. ஐரோப்பிய பண்டிதர்களும் தாங்கண்ட பாஷைகளில் பாணினீயத்திற்கிணையான இலக்கணமொன்றில்லையென்ற கூறி உச்சிமேற்கொண்டு பாராட்டுவார்கள். பாணினீயத்துக்கு முன்னரும் ஐந்திர முதலிய வியாகரணங்கள் பல தோன்றி நடைபெற்றனவேனும் அவையெல்லாம் அது தோன்றிய பின்னர்க் கற்றற்கெளிதல வென்று மாந்தராற் கைவிடப்பட்டனவாயின. ஆகவே பாணினீயமே நின்று நிலவுவதாயிற்று. அது வேதமொழிக்கும் சாமானியமொழிக்கும் இலக்கணங் கூறுவது. பூர்வவியாகரணங்கள் எல்லாம் வேதமொழிக்கே இலக்கணங்கூறுவன. பாணினீயம் இரண்டிற்குமாதலின் மிகச் சிறப்பதாயிற்று. அதுவுமன்றி அதுபூர்வ வியாகரணங்களைப்போல வேதத்திற்கும் அங்கமாயிற்று.

இத்துணைச் சிறப்புவாய்ப்ப வியாகரணஞ் செ;யத பாணினியாரது அவதாரகாலம் இரண்டாயிரம் வருஷங்களுக்குமுன்ன தென்பர் சிலர். பாணினீயத்தினுள்ளே வரும்யவனபதம் கிரேக்கரைக் குறிப்பதென்பது அச்சிலர் கருத்து. அது கிரேக்கரைக்குறிப்பதன்றென்பது கௌதம தருமசூத்திரம், மனு, ராமாயணன், பாரதம், காசிகாவிருத்தி முதலியவற்றினுள்ளே கூறப்படும் யவன வரலாற்றாற் பெறப்படும். ராமாயணம், “யவனராவார் சகரனாலே விசுவாமித்திரரது ஆணைப்படிமுண்டிதஞ் செய்து ஒட்டிவிடப்பட்ட டித்திரியர்” என்று கூறும. காசிகாவிருத்தியும் விஷ்ணு புராணமும் “யவனர் தமது தலையை முண்டிதஞ் செய்துகொள்பவர்” என்று கூறும். கிரேக்கரோ தமது தலையைமழித்துக் கொள்பவரல்லர். அது கிரேக்கனாகிய “தெமொஸ்தெனை” (னுநஅழளவாநநௌ) என்பவன் தான் வெளியேசெல்லாவகை தன்தலையை முண்டிதஞ் செய்து கொண்டு ஒரறையினுள்ளே மறைந்திருந்து நூலோதி வந்தான் என்பதனால் நன்கு துணியப்படும். ஆதலின் பாணினி குறித்தயவினரும் வேறு@ ஐரோப்பிய பண்டிதர் குறிக்கும் யனவரம் வேறென்பது நாட்டப்பட்டதாயிற்று. ஆதலின் கிரேக்கர் படையெடுத்து ஆரியாவர்த்தத்தைத் தாக்கியபின்னர்ப்பாணினி விளங்கினாரென்னுங் கொள்கை எற்புடையதன்று. நிர்வாணபதத்திற்குப் பாணினியார் கொண்ட பொருளும் வேறு@ பௌத்தர் கொள்ளும் பொருளும் வேறென்பதும் பாணினி பாஷியத்தினுள்ளே பதஞ்சலியாரெடுத்துக் கூறும் “தீபங்காற்றினால் நிர்வாண முற்றது” என்பது முதலிய உதாரணங்களால் நாட்டப்படும். ஆதலின் அது கொண்ட அவர்காலம் புத்தர் காலத்துக்குப் பிற்பட்டது என்று சாதிப்பாரது கொள்கையும் பிரமாணமாகாது.

அது நிற்க@ பாணினிதாம் செய்தவியாகரணத்தைக் காஸ்மீரNதுசத்தரசனாகிய காநிஷ்கமகாராஜன் சபையிலே அரங்கேற்றித், தம்மை முன்னர் அவமதித்த புலவர்களை யெல்லாம் வாதத்தில் வெற்றிகொ கொண்டு கலையெல்லாம் முற்றவுணர்ந்த பெரும்பண்டிதரென்று திசையெல்லாம் போற்ற விளங்கினர். இவர் திருவுருவத்தைச் சிலையில் அமைத்துப் பிரதிஷ்டை செய்து பூசித்துவந்தவனாகிய காநிஷ்டிகராஜன் சந்திரகுப்பதனுக்கு நெடுங்காலத்துக்கு முன்னே அரசு செய்தவன். இதனாலும் பாணினி முனிவர்காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முந்தியதென்பது நன்கு துணியப்படும்.
பாணினி முனிவர் சரித்திரம் கதாசரித்சாகரம் என்னும் நூலிலும் அதற்கு முதனூலாகிய பிருகத் கதையிலும் கூறப்பட்டுள்ளது.

பாணினீயம் - பாணினி செய்த சம்ஸ்கிருத வியாகரணம். மூவாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றாறு சூத்திரங்களையுடையது.

பாண்டவர் - பாண்டவர் ஐவர்@ தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன். இவருள் முதல் மூவரும் குந்திவயிற்றிற் பிறந்தவராதலின் கௌந்தேயர் எனவும் மற்ற இருவரும் மாத்திரிவயிற்றிற் பிறந்தமையின் மாத்திரேயர் எனவும் பெயர் பெறுவர்.

பாண்டரங்கண்ணனார் - சோழன் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடியபுலவர்.

பாண்டிதேசம் - சோழதேசத்துக்குத் தென்மேற்கிலே கன்னியாகுமரி வரையுமுள்ளதேசம். இதற்கு ராஜதானியுமுள்ள தேசம். இதற்கு ராஜதானிமதுரை. பாண்டியர் அரசு செய்தமையின் இஃது இப்பெயர் பெற்றது. இதுவே தமிழ்பிறந்தநாடு. இதுமிக்க பழமையும் பெருங்கீர்த்தியும் அநேகசரித்திரங்களும் புண்யNடித்திரங்களும், நதிகளும் மலைகளுமுடையநாடு முச்சங்கமிருந்ததும் அநேகபுலவர்களைத் தந்தது மிந்நாடே.

பாண்டியவமிசேசன் - சேரவமிசாந்தக பாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்.

பாண்டியன் - துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தனது பௌத்திரனாகிய ஆசிரிதன் புத்திரன். இவனே பாண்டிதேசஸ்தாபகன். இவன் வமிசத்து வந்தோர் பல்லாயிரம் பாண்டியர். இவனே குலசேகரபாண்டியன்போலும். இவன் தென்மதுரைசஸ்ரீயை நகராக்கி நான்குவருணத்துச் சனங்களையும் ஸ்தாபனஞ் செய்து காசியிலிருந்து ஆதிசைவர்களையும் கோயிற்பூசைக்காகக் கொண்ர்ந்து இருத்தி அகஸ்தியர் அநுமதிப்படி அரசு புரிந்தவன். இவன் மகன் மலையத்துவசபாண்டியன். மலயமலையைத் தனது கொடியில் தீட்டிக் கொண்டமையால் மலயத்துவசனென்னும் பெயர் அவனுக்கண்டாயிற்று. இவன் அகஸ்தியரை உசாவியே எக்கருமமுங் செய்பவன் என்பது அக்கொடியின் குறிப்புப்பொருள் இப்பாண்டியன்காலம் துவாபரயுகம்.

பாண்டீச்சுரன் - வமிச சிரோமணி பாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்.

பாண்டு - விசித்திரவீரியன் மனைவியிடத்து வியாசருக்குப் பிறந்த இரண்டாம் புத்திரன்;. தாய் அம்பாலிகை. திருதராஷ்டிரன் தம்பி. இவனுக்குக் குந்தியும் மாத்திரியும் பாரியர். இவன் காட்டில் வேட்டையாடி வரும் போது அதிதுரத்தே ஒரு முனிவர் தமது பத்தினியோடு மானுருக்கொண்டு கலந்திருத்;தலை நோக்காது தனியனெனக்கருதிப் பாணத்தை விடுத்து இருவரையுங் கொன்றான். முனிவர் பாண்டுவை நோக்கி, நீயும் கல்விக்காலத்துச் சிரப்பிளந்திறக்கவென்று சபித்திறந்தார். அச்சாப காரணமாக நெடுநாட்கலவியின்றியிருந்து ஒரு நாட் காமாதிகாரத்தால் மாத்திரியைப்புணர்ந்து துயிர் துறந்தான். இவன் வெண்ணிறமுடையனாதலிற் பாண்டு வென்னும் பெயர் பெற்றான். இவன் புத்திரர் பாண்டவரெனப்படுவர். இவன் இறந்தபின்னர்ப் பாண்டவருள் மூத்தோனாகிய தருமன் அரசனாயனான். கண்ணில்லாமையால் அரசுரிமை யிழந்த திருந்த திருதராஷ்டிரன் தன் மகனாகிய துரியோதனன் சூழ்;சியினாலே பாண்டவர்களைக்காடு கொள்வித்தான். பாண்டவர்கள் பதின்மூன்று வருஷங் காடு கொண்டிருந்து பின்னர்ப் போரிலே துரியோதனாதியரைக் கொன்று அரசு கொண்டார்கள்.

பாண்டியன்அறிவடைநம்பி - இவன் தமிழ்ப்புலமையிற் சிறந்தவோர் அரசன். படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலருடனே யுண்ணும் மிக்க செல்வத்தையுடையோராயினும் காலம் இடையேயுண்டாகக் குறுகக்குறுக நடந்து சென்று சிறியகையை நீட்டிக் கலத்தின் கட்கிடந்ததனைத் தரையிலே யிட்டும், கூடப் பிசைந்து தோண்டியும், வாயாற் கல்வியும், கையினாலே துழாவியும். நெய்ச்சோற்றை உடம்பிற்படச் சிதறியும் இவ்வாறாக அறிவை இன்பத்தால் மயக்கும் புதல்வரை இல்லாதார்க்குத் தம் வாழ்நாளிலுளதாம் பெரும்பயன் பிறிதில்லையென்னுங் கருத்தினையுடைய :-
“படைப்புட்பலட்டைத்துப் பலரோடுண்ணு - முடைப்பெருஞ் செல்வராயினு மிடைப்படக் - குறுகுறு நடந்து சிறுகை நீட்டி - யிட்டுந் தொட்டு;ங் கல்வியுந் துழந்து - நெய்யுடையடிசின் மெய்படவிதிர்த்து - மயக்குறு மக்களை யில்லோர்க்குப் - டயக்குறையில்லை தாம்வாழுநாளே- என்னுஞ் செய்யுள் செய்த பெருந்தகையிவனே. இவனைப் பாடிய புலவர் பிசிராந்தையார். இவன் தன் பெயருக்கியைய அறிவிற் சிறந்தவனேயாம். இவன்; கடைச் சங்க காலத்தவன்.

பாண்டியன் ஆரியப்படைதந்த நெடுஞ் செழியன் - இவனே கோவலனைக் கொல்வித்த பாண்டியன் என்பது சிலப்பதிகாரத்தால் விளங்குகின்றது. இவன் கல்வியைப் பொருளாகவும், கற்றோரைத் தனக்குறுதிச் சுற்றமாகவுங் கொள்பவன். கோவலன் ஊழிவினைவலியே இத்துணைச் சிறந்த இவ்வரசனைப் புத்திமயக்கி அவனைக் கொலிவிக்குமாறுடன் படுத்தியது போலும். இவ்வரசனுடைய கல்வியறிவும் உலகியலுணர்ச்சியும் பெரிதும் வியக்கற்பாலன வென்பதற்கு :- “உற்றுழியுதவியு முறுபொருள் கொடுத்தும் - பிற்றைநிலை முனியர்து கற்றனன்றே - பிறப்போரன்ன வுடன்வயிற்றுள்ளுஞ் - சிறப்பின்பாலாற் றாயுமனந்திரியு - மொருகுடிப் பிறந்த பல்லோருள்ளு - மூத்தோன் வருகவென்னாதவரு - ளறிவுடையோனாறரசுஞ் செல்லும் - வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளுங் - கீழ்ப்பாலொருவனுமவன் கட்படுமே” என்னும் இவ்வற்புத அநுபவப் பொருளை யுடைய செய்யுளே சான்றாம். இச்செய்யுள் இவனாற் பாடப்பட்டதென்பது புறநானூற்றினுட் காண்க. சோழநாட்டிற் படையேற்றி வெற்றி புனைந்து மீண்டகயவாகு ஆங்குப்புகுந்ததும் மீண்டதும் பாண்டிநாட்டு வழியேயாமாதலின். இவன் இலங்காபுரத்து அரசனாகிய அக்கயாவாவுக்கு நட்பினன் போலும். இவனும் கரிகாற் சோழனும் கயவாகுவும் ஒருகாலத்தவர்கள். இவன் தனது நாட்டைச் செவ்வேகாக்கும் பொருட்டு உத்தரதேசத்திலிருந்து படைவீரரைக் கொணர்ந்திருத்தினவனாதலின் ஆரியப்;படை தந்தவனென்னும் பெயர் பெற்றான்.

பாண்டியன்தலையாலங்கானத்துச் செருவென்று நெடுஞ்செழியன் - இவன் புலமையிற் சிறந்தஓர் அரசன் என்பது புறநானூற்றினுள்ளேவரும் எழுபத்திரண்டாஞ் செய்யுளாற் புலப்படும். இவன் தான் புலமையிற் சிறந்தது மாத்திரமன்ற புலமையிற் சிறந்த புலவரைக்காத்தலிலும், அவராற் பாடப்படுதலிலும் மிக்கவிருப்புடையவனென்பது மாங்குடிமருதனாரால் மதுரைக்காஞ்சிக்குத் தலைவனாக்கப்பட்டமையாலம், கல்லாடர் இடைக்குன்றூர்கிழார் முதலியோராற் பாடப்பட்ட மையாலும் இனிது விளங்கும். இவன் தலையாலங்கானத்திலே கோச்சேரமான் யானைக்கட்சேய்மாந்தரஞ்சேர லிரும்பொறையைப் பெரும்போரிலேவென்றா னாதலின் இப் பெயர் கொண்டான்.

பாண்டியன்குலவந்திகைப்பள்ளித் துஞ்சியநன்மாறன் - இவ்வரசன் நக்கீரனாராலும் மதுரை மருதனிளநாகனார் முதலியோராலும் பாடப்ட்டவன். கடிய சினத்தையுடைய யானைப்படையும். கடிய வேகமுஞ் செருக்குமுடைய குதிரைப்படையும், நெடிய கொடியினையுடைய நெடுந்தேர்ப்படையும், வலியுநெஞ்சும் போர்விருப்புமுடைய காலாட்படையுமாகிய நான்காலுமரசு சிறந்ததாயினும். சிறந்த அறநெறியே அரசரது வெற்றிக்குக் காரணமாம். அதனால் இவர் நம்மவரெனக்; கொண்டு அவர் செய்யும் கொடுஞ்செயல்களைப் பொறுத்து நின் செங்கோலுக்குக்குற்றததை விளைவியாமலும், இவர் பிறரெனக் கொண்டு அவர் செய்யும் நற்செய்களைக் கெடாமலும் சூரியனைப் போற் காய்ந்தும், சந்திரனைப் போற் குளிர்ந்தும். மழையைப்போல் வழங்கியும் நீடூழி வாழ்கவென்னும் பொருளினையுடைய. “கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரியகலிமாவு
நெடுங்கொடிய நிமிர்தேரு
நெஞ்சுடையபுகன்மறவருமென
நான்குடன் மாண்டதாயினுமாண்ட
வறநெறிமுதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல் கொடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிறன்ன வெந்திறலாண்மையுந்
திங்களன்ன தண்பெருஞ் சாயலும்
வானத்தன்னவண்மையுமூன்று
முடையையாகி.... நீடூவாழிய.....” என்னும் இச்செவியறிவுறூ உச்செய்யுள் மதுரை மருதனின் நாகரால் இவனுக் குரைக்கப்பட்டது. இக்காலத்துப் புலவர் போலாவது அக்காலத்துப்புலவர் அரசருக்கு அறமுறையெடுத்து இடித்துரைக்கும் ஆண்மையும் அறிவுஞ் சிறந்தோரென்பதும், அவருரையை அரசரும் விரும்பி யேற்றொழுகு மியல்பினரென்பதும் இச்செய்யுளால் ஊகிக்கக் கிடக்கின்றன.

பாண்டியன்கருங்கைஒள்வாட்பெரும் பெயர்வழுதி - இவன் இரும்பிடர்த்தலையாராற் பாடப்பட்ட வீகையாளன்.

பாண்டியன் கானப்பேர்தந்த வுக்கிரப்பெருவழுதி - “இரவலக்கருங்கல மருகாதுவீசி வாழ்தல் வேண்டு மிவண்வரைந்த வைகல் - வாழச்செய்த நல்வினையல்ல - தாழுங்காலைப்புணைபிறிதில்லை உயர்ந்துமேந்தோன்றிப் பொலிக நந்நாளே” என்ற ஒளவையாராற் பாடப்பட்டவன். இவனே வேங்கைமார்பனை வென்று கானப்பேரென்னு மரண் கொண்டவன். (புறநா) இவனே திருவள்ளுவருக்குச் சிறப்புப்பாயிரஞ் சொன்ன பாண்டியன்.

பாண்டியன்கிரஞ்சாத்தன் - இவன் ஆவூர்மூலக்கிழாராற் பாடப்பட்டவன். இவன் தன் வாயிலை யடைந்த பெரியாரை “என்மேலாணை உண்மின்” என்ற குளுற்றிரந்துண்பிப்பவன் என்பதும், போரிற் பிறர்க்குடைந்து முதுகிட்டோடும் வீரர்க்கு முன்னே சென்று அபயங்கொடுத்துப் போரிற்றுணைபுரிந்து அவர்க்கு வெற்றிகொடுப்போன் என்பதும், “மணம்மலி முற்றம் புக்கசான்றோர் - உண்ணாராயினுந் தன்னொடுகுளுற் - றுண்மெனவிரக்கும் பெரும் பெயர்ச்சாத்தன். நெடுமொழிமறந்த சிறுபோராள ரஞ்சிநீங்குங்காலை யேமமாகத்தான் முந்துறுமே” என்னுஞ் செய்யுளாற் பெறப்படும்.

பாண்டியன்கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி - ஐயூர் முடவனாராலும் மருதனிளநாகனாராலும் பாடப்;பட்ட ஒரு பாண்டியன். இவன் கூடகாரமென்னும் புதியிலிறந்தவன். இவனுடைய பேராண்மையை ஐயூர்முடவனார், “நீர்மிகிற் சிறையுமில்லைத்தீமிகின் - மன்னுயிர்நிழற்று நிழலுமில்லை - வளிமிகின் வலியுமில்லையொளிமிக் - கவற்றோரன்னசினப்போர்வழுதி - தண்டமிழ் பொது வெனப்பொறான் டோரெதிர்ந்து - கொண்டிவேண்டுவனாயிற் கொள்கெனக் - கொடக்க மன்னர் நடுக்கற் றனரே” என்னுஞ் செய்யுளா லெடுத்துரைத்தனர்.

பாண்டியன்சித்திரமாடத்துத் துஞ்சியநன்மாறன் - இவன் சீத்தலைச்சாத்தனாராலே, “காய்சினந்தவிராது கடலூர் பெழுதரு - ஞாயிறனையை நின் பகைவர்க்குத் - திங்க ளனையை யெம்மனோர்க்கே” என்று பாடப் பட்டவன். பகைவரிடத்தே பேரருளுமுடையவன் என்பது அதன் பொருள்

பாதாளகேதன் - மதாலசனையெடுத்துப் போய்க்காலவனுக்குத் தபோபங்கஞ் செய்த ஓரிராடிசன்.

பாதாளேசுவரர் - திரு அரதைப் பெரும்பாழியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பாத்துமகற்பம் - பிரமாவினது ஆயுட்காலத்தில் முற்பாதி. வராககற்பமென்பது மது.

பாத்துமபுராணம் - பாத்தும கற்பவரலாறு கூறும் புராணம். இது 55000கிரந்தமுடையது.

பாம்புரேசர் - திருப்பாம் புரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பாம்பாட்டிச்சித்தர் - இவர் திருக்கோகர்ணத்தைத் தமக்குச் சன்மஸ்தானமாகவுடைய ஒரு சித்தர். இவர் காலம் நன்கு புலப்படுவதன்றாயினும் சமீபகாலத்தவரல்ல ரென்பது எளிதிற் றுணியப்படும். இவர் “ஆடுபாம்பே எழுந்தாடுபாம்பே” என்று பாம்பை முன்னிலைப்படுத்தி ஒரு பாடல் செய்திருத்தலின் பாம்பாட்டிச்சித்தர் ரென்னும் பெயர் கொண்டார். இவர்பாடல் கூத்தர் பாடல் போல வெள்ளையாயிருப்பினும் அது தத்துவார்த்தங்களின் மேலதாகிய அற்புத ஞானப் பாடலாம். பாம்பென்று அவர்கூறுவது பாம்பு வடிவாக மண்டலமிட்டுக் கிடக்கும் குண்டலிசத்தியை சொரூபதரிசனத்துக்குக் குண்டலியை எழுப்புதல் அத்தியாவசிய மாதலின் இவர் அதனைப் பிரரேரிப்பாராயினார்.

பாரத சம்பு - அநந்தபட்டர் செய்த வொரு காவியம்.

பாரதம் - பரதவமிசராஜாக்கள் சரித்திரம். இஃது இதிகாச ரூபமாயுள்ளது. இதில் சிருஷ்டியாதி வரலாறும் தருமசாஸ்திரங்களும் உபநிஷதப் பொருள்களும் சரித்திரமுகத்தாலொட்டிக் கூறப்படும். இது வியாசர் சொல்ல விக்கினேசுவரர் எழுதியது. இஃது ஓரிலடித்தையாயிரங் கிரந்தமுடையது.
இதனைத்தமிழிலே வெண்பாவாற்பாடியவர் பெருந்தேவனார். அவர்க்குப்பின் விருத்தப்பாவாற் பாடியவர் வில்லிபுத்தூரர். அதன்பின்னர் அதனை எண்ணாயிரம் விருத்தப்பாக்களை யிடையிடை யிட்டு விரித்துப் பாடியவர் நல்லப்பிள்ளை.
இற்றைக்கு ஐயாயிரம் வருஷங்களுக்குமுன்னே சந்திர வமிசத்திலேயுதித்த திரதராஷ்டிரன் பிறவிக்குருடனாயிருந்தமையால் அவன் தம்பி பாண்டு அரசனாகித்தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்னும் ஐவரைப் புத்திரராக்கியிறக்க, திருதராஷ்டிரன் அப்புத்திரர்க்கு அவ்வரசிற்பாதி கொடுத்து இந்திரப்பிரஸ்தமென்னும் நகரத்திலிருத்தியதும், திருதராஷ்டிரன் புத்திரர் நூற்றுவருள் மூத்தோனாகிய துரியோதனன் பாண்டவர்களுடைய அரசைச் சூதினாலே கவர்ந்து கொண்டு அவர்களைக் காட்டுக்கேகுமாறு செய்ததோடு அவர்கள் மனைவியாகிய திரௌபதியையும் துகிலுரிந் மானபங்கஞ் செய்ததும், அதுகண்ட வீஷ்மாசாரியர் முதலியபெரியோர், “பாண்டவருடைய அரசைக்கவர்வது தகாதகரும” மென்று துரியோதனனுக்கு எடுத்துரைத்த போது, அவன், “பாண்டவர் பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒருவருஷம் அஞ்ஞாதவாசமும் செய்து மீள்வரேல் அவர்க்குப்பாதியரசு கொடுப்பேன்” என்றுடன் பட்டதும், அவ்வாறே பாண்டவர்கள் பதின்மூன்றுவருஷங்முங் கடந்து மீண்டு கண்ணபிரானைத் தூது போக்கித்தமது பாகத்தைக் கேட்டதும், அவன் மறுத்ததும், பின்னர்க் குரு Nடித்திரத்திலே பதினெட்டு நாட்பெருங் கொடும் போர் புரிந்ததும் துரியோதனாதியர் நீர்மூலப்பட்டதும் பாண்டவர் வெற்றிபுனைந்து அரசு பெற்றுச் செங்கோலோச்சியது மாகியசரித்திரமோ பாரதமாம். சம்ஸ்கிருபாரதத்தைப் போலும் போகமோடித்துக்குபகாரமாகிய நூல் உலகத்தில் வேறில்லை. சம்ஸ்கிருத பாரதத்தின் அத்தியற்புத சிறப்பை நோக்கியே ஐரோப்பியரும் தத்தம் பாஷைகளிலே அதனைப் பெரும் பொருள் செலவிட்டு மொழிபெயர்த்துக் கொண்டார்கள். அந்நூலை யுள்ளவாறு தமிழிலே வசனரூபமாக மொழிபெயர்த் துலகத்துக் குபகரித்தல் தமிழ்நாட்டுப் பிரபுதிலகர்கள் கடனாம்.

பாரதம் பாடிய பெருந்தேவனார் - இவர் தமிழிலே பாரத கதையை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றிய ஆசிரியர். இவர் நாடு தொண்டைநாடு. இவர் ஜாதியில் வேளாளர். நற்றிணை, கலித்தொகை, புறநானூறு முதலிய நூல்களிலுள்ள கடவுள் வாழ்த்துக்களும் இவராற் பாடப்பட்டன. கடைச்சங்கப்புலவர்களுள்ளே பெயர்படைத்தவர்களுள் இவருமொருவர். இவர் சைவசமயி என்பது இவர் பாடிய கடவுள் வாழ்த்துக்களா லினிது புலப்படுகின்றது. புறநானூற்றுக்கடவுள் வாழ்த்தாக இவர் செய்த, “திருமுடிமேற் சூட்டப்படுங் கண்ணிகார் காலத்து மலரும் நறியகொன்றைப்பூ,@ அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ@ அழகிய ஏறப்படுவது தூயவெளியஆனேறு@ மிக்க பெருமைபொருந்தியகொடியும் அவ்வானேறென்னு சொல்லுவர். நஞ்சினது கறுப்புத்தடமிருமிடற்றை அழகு செய்தலுஞ் செய்தது@ அக்கறுப்புத்தான் மறவாயு, வானோரை உய்யக் கொண்டமையின், வேதத்தைப்பயிலும் அந்தணராற் புகழவும்படும். பெண்வடிவு ஒரு பக்கமாயிற்று@ ஆய அவ்வடிவுதான் தன்னுள்ளே யொடுக்க மறைக்கினும் மறைக்கப்படும். பிறைதிருநுதற்கு அழகாயது@ அப்பிறைதான்: பெரியோன் சூடுதலால் பதினெண்கணங்காளாலும் புகழவும்படும். எவ்வகைப்பட்ட வுயிர்களுக்குங் காவலாகிய நீர் தொலைவறியாக்குண்டிகையானும், தாழ்ந்த திருச்சடையானுஞ் சிறந்த செய்தற்கரிய தவத்தையுடயோனுக்கு” என்னும் பொருளினையுடைய செய்யுள்வருமாறு:-
“கண்ணிகார்நறுங் கொன்றைகாமர் வண்ணமார்பிற்றாருங் கொன்றை யூர்தி வால்வெள் ளேறேசிறந்த சீர்கெழுகொடியும் வேறேன்ப கறைமி - றணியலு மணிந்தன்றக்கறை - மறைநடுவிலந்தணர் நுவலவும்படுமே - பெண்ணுருவொரு திறனாகின்றவ்வுருத் - தன்னுளடக்கிக் கரக்கினுங் கரக்கும் - பிறை நுதல் வண்ண மாகின் றப்பிறை - பதினெண்கணனு மேத்தவும் படுமே யெல்லாவுயிர்க்கு மேமமாகிய நீரறவறியாக்கரகத்துத் - தாழ்சடை பொலிந்தவருந்தவத்தோற்கே”, என்பது. இச்செய்யுளிலே சிவனுக்குரிய பூவும்; மாலையும் வாகனமும் கொடியும், அவர் நஞ்சுண்டருளிய பெருங்கருணையும், ஆன்மாக்களின் பெருங்கருணையும், ஆன்மாக்களின் பொருட்டுக் கொண்டருளிய வடிவும், தலையிலே கங்கையையுஞ் சந்திரனையுமணிந்தமையும், அவர் எல்லாவுயிர்க்குங் காவல் பூண்டமையும் எடுத்தோதப்பட்டன.
இச்செய்யுளிலே “பெண்ணுருவொரு திறனாகின்றவ்வுருத், தன்னுளடக்கிக்கரக்கினுங்கரக்கும்” எனவரும் அடிகளால் சிருஷ்டியின் பொருட்டுத் தமது சக்தியை ஒருபாலாகத் தோற்றுவித்துப்பின்னர் உலகை ஒடுக்குங்காலத்திலே தமது சக்தியைத் தம்முள்ளே மறைத்துக் கொள்வ ரென்பது தோன்ற விளக்கலின், இவர் சைவசமயத்துள்ளுறைப் பொருளெல்லாம் நன்குணர்ந்தவரென்பது அநுமானிக்கக் கிடக்கின்றது. இவர் மதுரைச் சங்கத்திறுதிக்காலத்திலே யிருந்த புலவர்களுள்ளே மிகமுதியவர்.

பாரவி - கிராதார்ச்சுனீயஞ் செய்த சம்ஸ்கிருத கவி.

பாரன் - (பா) பிருதுசேனன் புத்திரன். இவன் மகன் நீபன்.

பாராசரி - சுக்கிரன்.

பாராசரம் - இஃதோருபபுராணம்.

பாரி - இவன் பறம்பு என்னுமூரிலிருந்த ஒரு சிற்றரசன். இவன் கொடையாற் சிறந்தோனாதலின் வள்ளல்களுளொருவனாயினான். இவன் கொடைச்சிறப்பு நோக்கிக் கொடையாளரைப் புகழ்வோ ரெல்லோரும் பாரியேயென்று புகழ்வார்கள். சுந்தரமூர்த்தி நாயனாரும் இவனுடைய வள்ளற்றன்மையைக் கேள்வியுற்றே இவனைக் கொடைக்கிலக்கியமாக்கிக் கூறின ரென்பது “கொடுக்கிலாதானைப் பாரியேயென்றுகூறினும்” என்னுந் திருப்புகலூர்ப்பதிகத்துத் தேவாரத்தாற் பெறப்படும். இவன் தன் காலத்திருந்த சேரசோழபாண்டியர்களது கீர்த்திப் பிரகாசத்தையெல்லாம் தன் கொடைக்கீர்த்திப் பிரகாசத்தால் மங்குவித்தவன். அதுகண்டு அவ்வேந்தர் மூவரும் போர் தொடுத்து இவனைக் கொன்றொழித்தார்கள்.இவனோடு இவன் கிளைஞரும் போரில் மடிந்தொழிய, இவனை யடுத்துவசித்த புலவர்களும் நிலைகெட்டார்கள். இவனுடைய புத்திரிகள் தம்மைக்காப்பா ரெவருமின்றிக் கபிலரையடைய, அவர் தாம் பாரியிடத்துப் பெற்ற நன்றியை மறவாது அவர்களை வளர்த்துக் கோமக்களுக்குமணம் பொருத்தமுயன்றும் பயன் படாமையால் அந்தணர்களுக்கு மணம்முடித்துக் கொடுத்தார். கபிலர் கடைச்சங்கத்துப் புலவர்.

பாரிஜாதம் - அமிர்தமதனத்துக்கண்ணே யெழுந்த பஞ்சதருக்களிலொன்று. வீமன் திரௌபதிக்காகத் தேவலோகஞ் சென்று இதன் புஷ்பமொன்று எடுத்துக்கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தான்.

பாரிபத்திரம் - சரூசதேசத்து முக்கியபட்டணம். விந்தியத்துக்குச் சமீபத்துள்ளது.

பாரியாத்திரம் - குருபுத்திரன். இவன் குசன் வமிசம்.

பார்க்கபூமி - (கா) பார்க்கவன் புத்திரன்.

பார்க்கவம் - ஓர் உபபுராணம்.

பார்க்கவன் - (க) சுக்கிரன் (உ) பரசுராமன். (ந) சிவன். (ச) வீதிஹோத்திரன் மகன்.

பார்சரஸ்வதி - சன்னயபட்டர்சிஷன்

பாலசவுந்தரியம்மை - திருப்பைஞ்ஞீலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பாலவற்சை - தியுமற் சேனன்பாரி. சத்தியவந்தன் தாய்.

பாலி - கௌதமர் காலத்திலும் அதற்குப்பூர்வாபரகாலங்கிளிலும் ஆரியா வர்த்தத்திலே வழங்கியபாஷை. இப்பாஷையிலேயே பௌத்தசமயசாஸ்திரங்களெல்லாம் முள்ளன. இப்பாஷை சம்ஸ்கிருத பிராகிருதம்.

பால்வண்ணநாதர் - திருக்கழிப் பாலையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பால்வளை - திருப்பட்டீச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பால்வளைநாயகி - காவிரிப்பூம்பட்டினத்துள்ள ஐவகை மன்றத்து ளொன்று. இஃது அரசனுடைய செங்கோல் கோடுதல் முதலியகுற்றங்கழின் அவற்றைப் பாவைதெரிவிப்பதற் கிடமாகவுள்ளது.

பானு - வசுதேவன்தம்பி. 2 சூரியன். 3தடிப்பிரஜாதிபதிமகன்

பானுகோபன் - இவன் சூரபன்மனுக்குப் பதுமகோமளையிடத்துப் பிறந்த புதல்வன். இவன் தொட்டிலின் கண்ணே மகவாய்க் கிடக்கு நாளிலொருநாள் தன்கண்கூசும்படி சூரியன் பிரகாசித்தானென்று கோபித்து அவனைப் பிடித்துவந்து தொட்டிலிற் றளைசெய்தவனாதலாலே பானுகோபினென்னும் பெயர் பெற்றான். (பானு - சூரியன் -கோபன் - காய்ந்தவன்) இவன் சுப்பிரமணிய யுத்தத்தலுயிர் துறந்தவன்.

பானுமதி - 1 கார்த்தவீரியார்கச்சுனன் தங்கை. அகம்யாதிபாரி. 2 துரியோதனன் பாரி. 3 சகதேவன் பாரி.

பானுமந்தன் (மி) சீதாதேவி சகோதரன்.
பானுமரன்

பாஷ்கலி - (ரி) பாஷ்கலன் புத்திரன்

பாஹிலிகம் - சிந்துநதிக்குச் சமீபத்துள்ள தேசம்.

பாஹிலிகன் - (குருவமிசம்) பிரதீபன் புத்திரன். சோமதத்தன் தந்தை. பூரிசிரவன் பாட்டன். இவன் பாரதயுத்தத்தி லிறந்தவன்.

பாஹ{கன் - (இடி{) சகரன் தந்தை. விருகன்புத்திரன். 2 நளன் இருதுபர்னனிடம் சென்றிருந்தகாலத்துத் தான்பூண்டபெயர்.

பாஹ{தை - சரசுவதிநதியோடு சேருகின்ற ஒரு நதி. 2. மகாநதியிற்கலக்கின்ற சிறுநதி.

பிங்கலமுனிவர் - திவாகரநிகண்டு செய்த திவாகரர் புத்திரனார். இவர் சோழவமிசத்தி லுதித்தவரேயாயினும் துறவு பூண்டு தமிழ் நூலாராய்ச்சியிலே தமது காலத்தைப் போக்கியவர். இவர் செய்த நூல் பிங்கலநிகண்டு. இவர்காலம் நச்சினார்க்கினியர் காலத்துக்கு முந்தியது.

பிங்களை - தடிpணதி;க்குக் காவல்;பூண்ட பெண் யானை

பிசாசகை - ரிடிபாவதத்திலுற்பத்தியாகு மொருநதி.

பிசர்சர் - தேவயோனியிற் பிறந்த தோரிழிகுண சிருஷ்டிகள்.

பிண்டம் - விளாங்கனிப் பிரமாணமாகப் பிதிர் தேவதைகளுக்கு இடப்படும்பலி.

பிண்டாரம் - ஒருபுண்ணிய Nடித்திரம். இது துவாரகாபுர சமீபத்துள்ளது.

பிதிர்கணம் - அங்கிரசப் பிரசாபதிக்குச் சுவதையிடத்துப் பிறந்தவர்கள். இவர்களே உலகத்துப் பிரஜாவிருத்திக்கு வித்தாயிருப்பவர்கள். இவர்களே பிதிர் தேவதைகள். வசுருத்திரர் ஆதித்தயர் என்னுமிவர்களுடைய ரூபங்களை யுடையராய்ச் சந்திரலோகத் திருப்பவர்கள். பிதிர்லோகத்தை அடைபவர்கள் மீளும்போது, சந்திரனை விட்டு ஆகாசம், காற்று,புகை, மேகம், மழை, வித்து இவற்றின் வழியாக ஸ்திரீபுருஷர்களை யடைந்து பிறப்பார்கள். (“தேவர்” காண்க)

பிதிர்குலியை - மலயத்தி லுற்பத்தியாகுமொரு நதி.

பிதிர்தீர்த்தம் - கயை

பிந்துசாரன் - சந்திரகுப்தன் புத்திரன். மகததேசாதிபதி.

பிந்துமதி - சசிபிந்தன் மகள். மாந்தாதாபாரி

பிப்பலன் - (ரா) இவ்வலன் புத்;திரன். 2 அரிஷ்டன்தம்பி.

பிப்பபாச்சையர் - கொப்பூரில் விளங்கிய ஒரு சிவனடியார். இவர் சிவனடியாருடைய பரிகல்சேஷத்தை வாரிக்கொண்டு ஒரு வைஷ்ணவ அக்கிரகாரவழியே செல்லும் பொது அவ்வக்கிரகாரத்தார் தடுக்கச் சினங்கொண்டு அப்பரிகல சேஷத்தை வாரிவீசினர். அது பட்ட வீடுகள் எல்லாம் எரிந்து சாம்பராயின. வைஷ்ணவர்கள் அதுகண்டு அவரைச்சரணடைந்து அநுக்கிரகம் பெற்றார்கள்.

பிரகஸ்பதி பிரமமானசபுத்திரருள்
பிருஹஸ்பதி அங்கிரசன் புத்திரனாகிய வியாழன். இவன் தேவகுரு. மகாபுத்திமான். வாசஸ்பதியெனவும் படுவன். இவன் பாரிதாரை. இவன் சகோதரி யோகசித்தி. இவன் பாரியாகிய தாரையைச்சந்திரன் கவர்ந்தான். அதனால்த பிருகஸ்பதிக்கும் சந்திரனுக்கும் பெரும்போர் மூண்டது. பிரமதேவர் சந்திரன்பாற் சென்று தாரையை விட்டுவிடும்படி செய்தார். தாரை பிருஹஸ்பதிக்கு மீண்டும் மனைவியானாள். சந்திரனுக்குத் தாரைவயிற்றிற் பிறந்த புத்திரன் புதன். அவனே சந்திர வமிசஸ்தாபகன். பிருகஹஸ்பதி மண்டலமும் பிருஹஸ்பதியெனப்படும். அது பொன்மயமாயிருத்தலின் பிருகஸ்பதிபீதகன், பொன் என்னும் பெயர்களைப் பெறுவன். இம் மண்டலத்தைச் சூழ்ந்துள்ள மண்டலங்களிலே மனுஷரிற் சிறந்த அறிவுடையோர்கள் வசிக்கின்றார்களென்பது ஐரோப்பிய வானசாஸ்திரிகள் துணிபு. அது பிருஹஸ்பதியைத் தேவகுரு என்று கூறும் நமது ஆரியசித்தாந்தத்திற்கு மொத்தமாகும். பிருகஸ்பதி மண்டலம் நமது பூமண்டலத்திலும் பதின்மடங்கு பெரியதாயினும் மிக்கலேசான கோளாரும் அந்தரத்திற் சஞ்சரிக்கும் லகுதேகிகளாயிருப்பார். அவர்களைத் தேவகணத்தினர் என்பது புராணமதம். பிருஹஸ்பதி மண்டலம் புராணங்களிலே ரதமெனப்படும். அதனைச் சூழ்ந்துள்ள மண்டலங்களைப் புராணங்கள் வெண்ணிறக் குதிரைகளாக ரூபகாரம் பண்ணும். ஐரோப்பியவானசாஸ்திரிகள் அவைகளைச் சந்திரரென்பர்கள். அம்மண்டலங்களின் றொகையைப் புராணங்கள் எட்டிடன ஐரோப்பியர் ஐந்தென்பர்.

பிரகணன் - சுமாலிபுத்திரன்

பிரகேசுவரர் - திருநன்னிலத்துட் பெருங் கோயிலிலே எழுந்தருளியிருக்குஞ்சுவாமி பெயர்.

பிரசேசுவரி - திருநன்னிலத்துட் பெருங்கோயிலிலே எழுந்தருளியிருக்குந் தேவியார் பெயர்.

பிரசாதகன் - இந்திரத்துய்மன் வமிசத்தரசன்.

பிரசிரன் (ய) வசுதேவனுக்குச் சாந்தியி
பிரசிரிதன் டத்துப் பிறந்த புத்திரன்.

பிரசூதி - சுhவயம்பவமனு மகன்

பிரசேதசர் - பிராசீனவருகிக்குச் சமுத்திரன் மகளாகிய சத்திருதியிடத்துப் பிறந்தவர்கள். இவர்கள் பதின்மர்சகோதரர். மகாதபோதனர்கள் இவர்கள் பாரி மரீஷை

பிரசேதச - காந்தாரன் பௌத்திரடௌத்திரன். இவன் புத்திரர் யாவரும் மிலேச்சராயினர்.

பிரசேதன் வருணன்
பிரசேதசன்

பிரசேனசித்தன் - ரேணுகை தந்தை. ஜமதக்கினிமாமன்.

பிரசேனன் - (ய) சத்தராசித்துதம்பி.

பிரஜாபதி - பிரமன்

பிரஜாபதிNடித்திரம் - பிரயாகை, பிரதிஷ்டானபுரம், வாசுகிஹிரதம், வெகுமூலபர்வதம் என்னும் இந்நான் கிடத்துக்கு மிடையேயுள்ள ஒரு புண்ணியNடித்திரம். இதில் ஸ்தானஞ் செய்வோர் வெகுபுண்ணியங்களைப் பெறுவர்.

பிரஜானி - பிராம்சமகன்

பிரணவம் - ஓங்காரம். ஆதி அடிரம். பிரணவமானது சிருஷ்டிக்கு முன்னுள்ள அவசரத்திலே பிறமத்தின் வேறாகாத சிற் சோதியாகவுள்ளது. அது சிருஷ்டியின் பொருட்டு விகாரப்படுமிடத்து விந்து ரூபமாகக் கிடக்கும். விந்துரூபமாகக் கிடக்கும் அவசரத்திலே அதனிடத்துளதாகிய வைந்தவசக்தியினாலே புருஷாமிசமாகிய நாதங் கம்பிதமாகும். அஃதாவது வட்டவடிவினதாகிய விந்து விஷமப்பட்டு அண்டவடிவுபெறும். எனவே பிரணவம் விஷமப்பட்டவிடத்து விந்துவென்றும் அது விஷமப்பட்டவிடத்து நாதமென்றும் பெயர் கொள்ளும். காரணத்திலொடுங்கிய வுலகத்தை மீளவும் எழுப்புவது சைதன்னிய சேஷ்டையேயாம். சைதன்னிய சேஷ்டையி;ன்றி உலகமயங்காது. ஐரோப்பிய பௌதிக தத்துவபண்டிதர்களும் சேஷ்டையே (“வைப்ரேஷன்”) சிருஷ்டிக்குக் காரணமென்பார்கள்.

அச்சேஷ்டைபுரிபோலச் சுழன்று சுழன்ற செல்வதென்பது ஐரோப்பியமதம். (ளுpசையட அழவழைn) ஆரிய சாஸ்திரங்களும் பிரணவம் சங்குவடிவினது என்பனவாதலின் இரண்டற்கும் பேதங்காண்கிலம். சங்கு தன்னிடத்தே ஆகாயவெளியும் புரியுமுடையதாதலின் பிரணவத்துக்குக் குறியாயிற்று.
பிரணவம் ஸ்தூலப்பிரணவம் சூக்கமப்பிரணவமென இருபாற் படும் ஹ்ரீம் என்பது ஸ்தூலமும் ஓம் என்பது சூக்குமமுமாம். பிரணவம் பதினாறு உறுப்புக்களாலாயது. அவ்வுறுப்புக்கள் மாத்திரை யெனப்படும். அப்பதினாறுமாத்திரைகளும் வருமாறு :-
(1) அ., (2) உ., (3)., (4)அர்த்தம்., (5) நாதம்., (6) விந்து., (7) கலை, (8) கலாதீதை (9) சாந்த, (10) சாந்தியாதீதை, (11) உன்மணி, (12) மனோன்மணி, (13) புரி, (14) மத்தியமை, (15) பசியயந்தி, (16) பரை, இப்பதினாறும் நூற்றைம்பத்தாறாகவும் வகுக்கப்படும். அவையெல்லாம் அப்பையதீடிpதர் செய்தருளிய அநுபூதி மீமாஞ்சை பாஷியத்திலே விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன.
அகரம் பிரமாவையும், உகரம் விஷ்ணுவையும், மகரம் அரனையுங்குறிக்குமென்பாரும், அகரம் விஷ்ணுவையும் உகரம் சிவத்தையும், மகரம் பிரமாவையுங் குறிக்கு மென்பாருமாகச் சைவ வைஷ்ணவசமயிகள் இப்பிரணவப் பொருளிலே தம்முண் மாறுபடுவார்கள். அகரம் பிரமத்தைக் குறித்து நிற்றலாலே அந்தப்பிரமத்தை விஷ்ணுவென்றும் சிவமென்றும் தத்தமக்கிஷ்ட நாமத்தால் வழங்குமிருவர் குறிக்கோளுமொன்றேயாம்.
பிரணவசொரூபததை இது வென்றெடுத் துரைத்தல் கூடாதென்று சாஸ்திரங்களெல்லாங் கூறுதலின் உண்மையணர்ந்த ஞானிகளுக்கே அதன்பரப்பெல்லாம் புலனாமென்க. மந்திரங்களுள்ளே பிரணவமே சிறந்ததும் மோடிசாதனமாயுள்ளதுமாம். முண்டகேபநிஷத்தில் இப்பிரணவமாகிய வோங்காரத்தைக் குறித்துச் சொல்லப்பட்ட ஒருவாக்கியம் வருமாறு:-

“ஓம்” என்பது வில்லு@ ஆன்மாவே பாணம்@ பிரமமேகுறி. இடையறாத் தியானத்தினாலேயே குறியை எய்தல்கூடும். குறியிற்புதைந்த பாணம் போல ஆன்மாபிரமத்திற் புதையக்கடவது. “பிரணவம் என்பதன் பொருள் அழியாதது. கழிந்ததும் நிகழ்வதும், வருவதுமாகிய முக்கூற்றுப் பிரபஞ்சமெல்லாம் ஓமெனும் பொருளே” “அகரம் ஜாக்கிரவலகமாய் யாவரும் வசித்தற் கிடமாகவுள்ளது. இதனையுணர்பவன் இஷ்டபோகத்தை யடைகிறான்” “உகரம் சொப்பனமாய்ப் பிரகாசமாகவுள்ளது. மகரம் சுஷ{ப்தியாய் முடிவிடமாகவுள்ளது.” (மாண்டூக்கியம்)

பிரதர்த்தன் - திவோதாசன் புத்திரன்.

பிரதாப சூரியன் - சம்பகபாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்.

பிரதாபமார்த்தாண்டன் - வீமரதபாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்.

பிரதாபருத்திரீயம் - வித்தியாநாதகவி செய்த அலங்கார சாஸ்திரம்.

பிரதிவாகு - 1 (ய) கிருஷ்ணன் வமிசத்து வச்சிரன்புத்திரன். 2. (ய) அக்குரூரன் தம்பி.

பிரதிவிந்தியன் - தர்மராஜாவுக்குத் திரௌபதியிடத்துப் பிறந்த புத்திரன்.

பிரதிஷ்டானபுரம் - இது கங்கையும் யமுனையும் சங்கமிக்குமிடத்துக்குக் கிழக்கேயுள்ள நகரம்.

பிரதீபன் - (குரு) வீமன் புத்திரன்.இ பாரி சுநந்தை. புத்திரர் தேவாபிசந்தனு.

பிரத்தியக்கிரன் - (குரு) உபரிசரவசு புத்திரன்

பிரத்தியடிநாயகியம்மை - திருக்கரவீரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பிரத்தயுமனன் - கிருஷ்ணனுக்கு ருக்மிணியிடத்துப் பிறந்த புத்திரன். பாரி ரதி.

பிரத்தியூஷன் - அஷ்ட வசுக்களுளொருவன்

பிரத்தியோதனன் - சூரியன்

பிரபலோற்பலன் - விஷ்ணுபரிசார கருளொருவன்.

பிரபாசம் - ஒரு புண்ணியதீர்த்தம்

பிரபாசன் - வசுக்களுளொருவன்.

பிரபாசை - பிரஜாபதி பாரி

பிரபாவதி - சூரியன் பாரி

பிரபுலிங்கலீலை - துறைமங்கலத்துச் சிவப்பிரகாசசுவாமிகள் செய்த தமிழ்க் காவியம். கன்னலையுங் கைப்பிக்கும் சொன்னலமும் பொருணலமுஞ் சிறந்தது. இஃது ஐக்கிய வாதசைவ நூல்களுள் ஒன்று

பிரபை - புஷ்பாரணன் பாரி. மக்கள் பிராதக்காலம், மத்தியானம், சாயங்காலம்.

பிரபோதசந்திரோதயம் - வடமொழியிலே கிருஷ்ணமிசிரபண்டிதராற் செய்யப்பட்ட ஓர் அற்புத வேதாந்த நாடகம். இதனைத்தமிழிலே விருத்தப்பாவான் மொழி பெயர்த்தவர் மாதை வேங்கடேசபண்டிதர் ஆன்மாக்கிடத்துளவாகிய காமக் குரோதாதிகளையும் விவேகம் சாந்தம் முதலியவைகளையும் ரூபகாரம் பண்ணிப் பாரத கதையைப் போல நாடுகவர்தல் காட்டுக் கோட்டல் தூது போக்கல் போர்புரிதல் வகைசூடல் ஞானமுடிசூட்டு எனக் கட்டியமைத் துரைப்பது.1250 வருஷங்களுக்கு முன் வடமொழியிற் செய்யப்பட்டது.

பிரமகைவர்த்தம் - ஒரு புராணம். இதுவசிட்டர் செய்தது. இது கஅ000 கிரந்தமுடையது.

பிரமகீதை - இஃதுபநிஷதப் பொருளெடுத்துக்கூறுவது. இதனை அருளிச் செய்தவர் பிரமதேவர். இதனைத் தமிழிலே பாடியவர் தத்துவராயர்.

பிரமசூத்தரம் - வேதாந்த சூத்திரம்.

பிரமதகணம் - கைலாசத்தலிருக்கும் பக்தர் சமூகம்.

பிரமத்தன் - (ரி) சூளிபுத்திரன். இவன் குசநாபன்புத்திரிகளை மணம் புரிந்தவன்.

பிரமதி - (ரி) சியவனனுக்குச் சுகன்னிகையிடத்துப் பிறந்த புத்திரன். உரூரன் இவன் மகன். பாரி கிருதாசி.

பிரமத்துவரை - விசுவாவசு என்னும் கந்தருவராஜன் மகள். தாய் மேனகை.

பிரமபுரநாதர் - திருஅம்பர்ப் பெருந்திருவிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்.

பிரமபுரிநாயகர் - திருச் சிவபுரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

பிரமபுரீசர் - திருக்கடவூர் மயானத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பிரமம் - ஏகமாய்க் சச்சிதாநந்தமாய் ஜகமனைத்துந் தோன்றி யொடுக்குதற்கிடமாயுள்ள கடவுள். (2) ஒரு புராணம். அது பதினாயிரங்கிரந்தமுடையது. உலக சிருஷ்டியையும் மநுவந்தரங்களையும், கிருஷ்ணர்வரைக்குமிருந்த சூரிய சந்திர குலத்து அரசர்களையும், சூரியன் பொருட்டும் சிவபெருமான் பொருட்டும் சகநாகர் பொருட்டும் உள்ள திருக்கோயில்களையும், திருநந்தனவனங்களையும் ஜகநாத மான்மியத்தையு முணர்த்துவது.

பிரமராம்மை - ஸ்ரீசைலத்திலுள்ள பராசக்தி பெயர்.

பிரமரிஷேதேசம் - குருNடித்திர மற்சியபாஞ்சால கன்னியாகுப்த சூரசேன மதுராதேசங்கள் இப்பெயர் பெறும்.

பிரமலோசை - ஓரப்சரசை.

பிரமவித்தை - (பாரதம்படி) பிரஜாபதிபாரி. 2. பிரமா அதர்வனுக்கு ரைத்த ஞானநூல்.

பிரமா - சிருஷ்டி கிருத்தியத்தை நடாத்தும் அதிகாரமூர்த்தி. இவர் விஷ்ணுவினது நாபிக்கமலத்திலுதித்தவர். இவர் சக்தி சரசுவதி தேவி. இவர்க்கு வாகனம் அன்னம். இவர் தாம் சர்வலோகங்ளையுஞ் சிருஷ்டிக்கு மாற்றலுடையரெனக் கர்வித்துச் சிவனை மதியாயிருந்து சிவன் கோபாக்கினியிற் றோன்றிய வைரவக்கடவுளாலே ஒரு தலைகொய்யப்பட்டு நான்கு முகங்களையுடையராயினமையின் நான்முகன் சதுர்முகன் என்னும் நாமங்களைப் பெறுவர். இவர் சிருஷ்டிமுறையறியாது மயங்கிச் சிவனை வழிபட்டு அவரைத் தமக்குப்புத்திரராகப் பெற்றாரெனச் சில புராணங்கூறும். சிவன் தாமே இவருக்குப் புத்திரராகவந்தமையின் இவருக்குப் பிதாமகன் என்னும் பெயருளதாகுக வென்றார். பிரமாவைச் சுப்பிரமணியக்கடவுள் சிறையிலிட்டுச் சிருஷ்டிகிருத்தியத்தை ஒருகாலத்தில் நடாத்தினர் என்பதுகந்தபுராணம் இங்ஙனம் புராண சரித்திரம் பலவுள. பிரமாவானவர் மகாப்பிரளய காலத்திலொடுங்கிச் சிருஷ்டிகாலத்திலே தோன்றுதலின் அக்காலந்தோறும் மழிகின்ற பிரமாக்களினது கபாலங்களைச் சிவன் மாலையாக அணிவர் என்பதினால் தேவரெல்லோரு மழியவும் அழியாது எஞ்சி நிற்பவர் சிவனொருவரே என்பது பெறப்படும்.

பிரமாண்டம் - சிருஷ்டி காண்க. 2 பதினெண்புராணத்தொன்று. இது பிரமப்புரோக்தம். இத பன்னீhயிரங் கிரந்தமுடையது.

பிரமாவர்த்தம் - சரசுவதி திருஷத்வதி நதிகளுக்கு நடுவிலுள்ள தேசம்

பிரழகன் - ரேவதி தந்தை

பிரமோத்தரகாண்டம் - வரதுங்கராமபாண்டியன் பாடியவொரு தமிழ் நூல். அது சைவ புராணங்களின் சாரமாகவுள்ளது.

பிரயாகன் - இந்திரன்

பிரயாகை - பிரஜாபதிNடித்திரம் இது கங்கையும் யமுனையும் கூடுமிடத்திலுள்ளது. இஃது ஒருபிரபலபுண்ணிய Nடித்திரம்.

பிரயோகவிவேகம் - குருகூர்ச் சுப்பிரமணிய தீடிpதர் செய்த இலக்கணம். இந்நூற் குரையும் அவரே செய்தார். இந்நூல் வடமொழி தமிழ்மொழியிலக்கண நூல்களின் கண்ணேயுள்ள பிரயோக வொற்றுமைகளை எடுத்து விளக்குவது. இது காரகசமாசதத்திததிங்நு என்னு நான்கு படலங்களும் ஐம்பத்தொரு கலித்துறைகளுமுடையது. இந்நூல் செய்யப்பட்ட கால மிற்றைக்கு இருநூறு வருஷங்களுக்கு முன்னுள்ளது.

பிரலம்பன் - பலராமராற் கொல்லப்பட்ட ஓரசுரன்.

பிரவரன் - ஒரு விப்பிரன்

பிரவர்ஷணம் - மதுராபுரிக்குச் சமீபத்துள்ள மலை. கிருஷ்ணனும் பலராமனும் ஜராசந்தனுக்கஞ்சி ஒளித்திருந்தமலை. இது ஜராசந்தனால் தீயூட்டப்பட்டது.

பிரவீரன் - பு. பிராசிவன்வானன் புத்திரன்

பிரஹஸ்தன் - (ரா) சுமாலி மகன்.

பிரஹேதி - (ரா) (ஹேதிகாண்க)

பிரஹலாதன் - திதிவமிசம். இரணியகசிபன் புத்திரன். தாய் லீலாவதி. இப்பிரஹலாதனை ரடிpப்பதும் இரணியகசிபனைக் கொல்வதும் காரணார்த்தமாக விஷ்ணுதூணிடை நரசிங்கமாக அவதரித்தார். இவன் அரிபக்தியிற் சிறந்தவன்.

பிரகாமியம் - நினைத்த போகமெல்லாம் பெறுதல். இஃது அஷ்டசித்திகளுளொன்று.

பிராக்ஜோதிஷம் - நரகாசுரன் பட்டணம். கிராதர் வசிக்கும் காமரூப தேசத்துள்ளது.

பிராசின்னவானன் - முதல் ஜனமே ஜயன் மகன். பிராசீசனெனவும் படுவன்.

பிராசீசன் - (பு) பிராசின்னவானன்.

பிராசீனவருகி - ஹவிர்த்தானன் புத்திரன். வருகிஷிதன் எனவும்படுவன். இவன் தாய் திஷணை. சத்திருதியிடத்து இவனுக்குப் பதின்மர்புத்திரர் பிறந்தார்கள்.

பிராஜாபத்தியன் - ஓரக்கினி. புரந்தரன் புத்திரன்.

பிராஞ்ஞன் - (பு) ஓரக்கினி. புரந்தரன் புத்திரன்.

பிராணபதேசுரர் - திருமங்கலக்குடியியலெழுந்தருளி யிருக்கும் சுவாமி பெயர்.

பிராணன் - விதாதைக்கு நியதியிடத்துப்பிறந்த புத்திரன். வேதசிரசு தந்தை.

பிராதை - தடிப்பிரஜாபதி புத்திரி. கசியபன் பாரிகளுளொருத்தி.

பிராப்தி - ஜராசந்தன் புத்திரி. அஸ்திதங்கை. கஞ்சன் இரண்டாம் பாரி (2) அஷ்டசித்திகளுளொன்று அஃது இஷ்டலோகஞ் சென்று மீளுதல்.

பிராமம் - பிரமபுராணம். இது பதினாயிரங்கி ரந்தமுடையது.

பிராம்சு - பிரஜானி தந்தை.

பிராயச்சித்தம் - பாபபரிகாராத்த மாகச் செய்யப்படும் கிரியை.

பிராயோபவேசம் - தேகத்தியாகநிமித்தம் தர்ப்பை மீது சயனித்தல்

பிரியம்வதை - (க) நகுஷன்பாரி. (உ) சகுந்தலைதோழிகளு ளொருத்தி.

பிரியவிரதன் - சுவாயம்புவமனுவுக்குச் சதரூபியிடத்துப் பிறந்த புத்திரன். உத்தானபாதன் தமையன்.

பிரியாதநாயகர் - திருப்பெருவே@ரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பிரீதி - புலஸ்தியன் பாரியாகிய அவிர்ப்புக்குவுக்குப் பெயர்.

பிருகதசுவன் - (இடி{) சபஸ்தன் புத்திரன். குவலயாசுவன் தந்தை.

பிருகதிஷன் - (க) அஜமீடன் புத்திரன். பிருகத்தனு இவன் மகன். (உ) (பு) பர்மியாசுவன் மூன்றாம் புத்திரன்.

பிருகத்கரன் - (அங்) பத்திரரதன் புத்திரன்.

பிருகத்கர்ணன் - (அங்) பிருகத்திரதன் தந்தை.

பிருகத்காயன் - பிருகத்கர்மன். பிருகத்தனு புத்திரன்.

பிருகத்டித்திரன் - பு. புமன்னியன் புத்திரன். ஹஸ்திகன பாட்டன்.

பிருகத்சங்கிதை - வராகமிஹிரர் செய்த வொருநூல். அதிலே சூரியசந்திர கிரகண விவரண பலாபலன்கன் தூமகேதுக்கள் வரலாறு இரத்தன குணாதியங்கள் சகுனங்கள் முதலியன கூறப்படும்.

பிருகத்சேனன் - மத்திரதேசத்தரசன்.

பிருகத்ஜாதகம் - வராகமிஹிராசாரியர் செய்த சோதிடசாஸ்திரம்.

பிருகத்தனு - (பா) பிருகதிஷன் புத்திரன்.

பிருகத்திரதன் - (க) குருவமிசத்து உபரிசரவசுமூத்தமகன். இவன் புத்திரர் ஜராசந்தன், குசாக்கிரன் (உ) (மி) தேவராதன் மகன் மகன் (ந) (அங்) பிருகத்கர்ணன் புத்திரன்.

பிருகத்பலன் - (க) (ய) வசுதேவன் தம்பியாகிய தேவபாகன் இரண்டாம்புத்திரன். (உ) சகுனி தம்பி. (ந) ராமன் புத்திரன்.

பிருகத்பானன் - (அங்) பிருகத்திரதன் புத்திரன்.

பிருகந்தளை - அருச்சுனன் அஞ்ஞாதவாசத்துக்கண் பேடிரூபங் கொண்டபோது பூண்ட பெயர்.

பிருகன்மனசன் - (அங்) பிருகத்பானன் புத்திரன்.

பிருகு - பிரமமாசை புத்திரருளொருவன். (உ) ஒருமகா இருஷி. இவர் வமிசத்தில் பரசுராமர் பிறந்தார். பிருகுரிஷி ஒரு காலத்திற் சிவனைத் தரிசிக்குமாறு சென்ற போது அவர் தரிசனங் கொடாமையாற் கோபித்துச் சிவனை லிங்காகார மாகவென்று சபித்துவிட்டுப் பிரமாவைக் காணச்சென்றார். அவரும் இவரை மதிக்காதிருந்ததுகண்டு அவர்க்கு ஆலயமும் பூசையுமில்லாது போகவென்றுசபித்து விஷ்ணுவிடஞ் செல்ல, அவரும் நித்திரை செய்திருந்தார். அதுகண்டு மார்பிலே காலாலுதைத்தார். விஷ்ணு விழித்துக் கோபஞ் செய்யாது உமது திருவடி என்மார்பிற்பட நான் செய்த புண்ணியமே புண்ணியமென்றுபசரிக்க, விஷ்ணுவே யாவராலும் வழிபடத்தக்க கடவுளென்று அநுக்கிரகித்துப் போனார்.
அடி முடி தேடப்புகுந்த போது பிரமா சொன்ன பொய்யுரைக்காகச் சிவன் அவருக்கு ஆலயமில்லாது போகவெனச்சபித்தாரெனக் கந்தபுராணங்கூறும்.

பிருகுNடித்திரம் - ஆனர்த்த தேசங்களுக்குச் சமீபத்திலே மேலைச்சமுத்திர தீரத்திலுள்ள புண்ணிய ஸ்தலம்.

பிருகுசிரவணம் - இமயகிரியிலே சகரன் தவஞ் செய்த ஸ்தலம்.

பிருசினி - (ய) அனமித்திரன் புத்திரன். சுவபற்கன் தந்தை. சத்தியகன்சிற்றப்பன்.

பிருதிவி - பூதேவி. இவள் விஷ்ணுபாரி. இவளைப் பலர்க்கும் நாயகியாமாறு பார்வதி சபித்தார்.

பிருது - (இடி{வாகுவமிசம்) அநேநசுபுத்திரன். விசுவகாந்தன் தந்தை. இவனுக்குச் சாசுவதன் விசிவகனென்னும் நாமங்களுமுள. (உ) பிரசாதகன் மகன். (ந) பா. பாரன்மகன். (ச) சுவாயம்புவமனுவமிசத்துவேநன் புத்திரன். இவன் சக்கரவர்த்தி பாரி அர்ச்சி. புத்திரர் விஜயாசவன். தூமிரகேது, ஹரியசுவன். தீரவிணன், விருகன் என்போர் இவன்சனற்குமாரரால் உபதேசக்கப்பட்டவன். இவன் தனது பிரசைகளைச் செவ்வேகாத்தர சாண்டவன். இவன் காலத்திலொருமுறை பஞ்சம் வந்து புல்பூண்டின்றிப் பூமிவறப்பெய்தியபோது இவன் தனது திவ்வியாஸ்திரத்தை யெடுத்துப் பூமியை அழிக்கவெழ, அதுகண்டு பூதேவி ஒருபசுவாகிச் சுவாயம்புவ மனுவைக் கன்றாகக் கொண்டு வெளிப்பட்டுச் சராசரங்களுக்குணவுட்டிப்பிருது கோபத்தை ஆற்றினாள் இவ்வுபாயத்தைத் தேவர்களும் இருஷிகளும் மற்றோரும் பின்னர்க்காலத்திலே பின்பற்றினார்கள். (ரு) (ய) ருசிகன் புத்திரன். தர்மன் தந்தை.

பிருதுகர்மன்
பிருதுகீர்த்தி
பிருதஜயன் (ய) சசிபிந்துபுத்திரர்.
பிருதுசாதன்
பிருதுயசன்

பிருதுசேனன் - (பா) பிராஞ்ஞன்புத்திரன். பௌரன்தந்தை.

பிருதுலாடின் - சதுரங்கன்மகன்.

பிருதை - குந்திதேவி.

பிருஷதன் - (பா) சுசன்மகிருத்துமகன். துருபதன் தந்தை.

பிருந்தாவனம் - யமுனாநதிக்கு மேற்கில் மதுராபுரிக்குச் சமீபத்திலுள்ள துளசிவனம். கிருஷ்ணன் தமது பக்தர்களுக்குப் பிரசன்னமாகி நின்று அருள் புரியும் மகாNடித்திரம்.

பிர்ம்மவித்;யாநாயகி - திருவெண்காட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பிள்ளைப்பெருமாள்ஐங்கார் - வேங், கடமாலைமுதலிய அநேக வைஷ்ணவப்பிரபந்தம் பாடிய தமிழ்ப்புலவர். விஷ்ணுஸ்தலங்கள் நூற்றெட்டின்மேலும் அந்தாதிபாடினோருமிவரே. இவர் நானூறு வருஷங்களுக்குமுன்னே சீரங்கத்திலே திருத்தொண்டு புரிந்து விளங்கினவர்.

பிள்ளைலோகாசாரியர் - திரவரங்கத்தந்தாதி, திருவரங்கக்கலம்பகம் அர்த்தபஞ்சகமுதலிய நூல்களையியற்றிய வைஷ்ணவராகிய தமிழ்ப் புலவர். இவர் நூல்கள் சொல்லிரசம் பொருளிரசம் பக்திரசம் கால்வனவாதலின்யாவராலும் சிரமிசைக் கொள்ளப்படுவன. இவர்காலம் சற்றேறக்குறைய நானூறு வருஷங்களுக்கு முற்பட்டது.

பீபற்சன் அருச்சுனன்.
வீபற்சு

பீமசேனன் மூன்றாம் ரடின் புத்திரன்.
வீமசேனன்

பீமரதன் - (யதுகுலம்) விகிர்புத்திரன்.

பீமரதி - ஒருநதி. பீமநதியென்றும் பெயர்.

பீமன் க. விதர்ப்பதேச ராஜா. இவன் மகள்
வீமன் தமயந்தி. உ. அஷ்டமூர்த்திகளுளொருளவர். ந. பாண்டுபுத்திரனாகிய வீமசேனன். வீமன் காண்க.

பீஷணன் - காசி ராஜாவுடைய கிங்கரன்.

பீஷ்மகன் - விதர்ப்பதேச ராஜா. ருக்குமிணிதந்தை.

புகழேந்தி - ஒட்டக்கூத்தன் காலத்திலே பாண்டியன் சமஸ்தானத்து வித்துவானாக விளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். இவர் செய்த நூல்கள் நளவெண்பா முதலியன. வெண்பாப்பாடுவதில் இவருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை. இவருடைய கவித்திறமையைக் கண்ட ஒட்டக்கூத்தன் அவருக்குப்பல துன்பங்கள் செய்யப் புகுந்தும் ஈற்றில் அவருடைய இனியகுணங்களினால் அவரோடுகலந்து நண்பனாயினான்.

புகழ்ச்சோழநாயனார் - சோழநாட்டிலே உறையூரிலே செங்கோன்முறை வழுவாமல் அரசியற்றிய ஒரு சிவபக்தர். இவர் சிவகாமியாண்டார் கொண்டு சென்ற புஷ்பங்களைச் சிதறிய தம்முடைய யானையையும் பாகர்களையும் கொன்ற எறிபத்தநாயனாரை அணைந்து இத்தீமைக்கக் காரணனாகிய என்னையுங்கொன்றருளுமென்று தமதுடைவாளைக் கொடுத்துக் தமது பக்தியை விளக்கிய அரசராகிய பெருந்தகை. இவர் 1800 வருஷங்களுக்கு முன்னுள்ளவர்.

புகழ்த்துணைநாயனார் - செருவிலிபுத்தூரிலே ஆதிசைவர் குலத்திற் பிறந்து சிவாகமவிதிப்படி பரமசிவனை அர்ச்சனைசெய்து வருங் காலத்திலே, பஞ்சத்தினால் பசிமிகப் பெற்று மெய்சோர்ந்த வழியும் கைசோராத உறுதிப்பாட்டைக்கண்ட சிவபெருமான் பஞ்சம் நீங்கும் வரைக்க உனக்குத் தினந்தோறு மிங்கே ஒவொருகாசு வைப்போம் என்றருளிச் செய்து அவ்வாறு செய்யப் பெற்ற சிவபக்தர்.

புஞ்சிகஸ்தலை - வருணன் புத்திரியாகிய ஓரப்சரஸ்திரி.

புட்கரம் - வடநாட்டின் கண்ணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

புண்டரம் - ஒருதேசம். இது வங்காளத்துக்கு மேற்கிலுள்ளது.

புண்டரன் - பலியினது நான்காவது புத்திரன்.

புண்டரீகம் - அக்கினித்திக்குக் காவல் பூண்ட ஆண்யானை உ. ஒரு தீர்த்தம்.

புண்டரீகன் - நபசுபுத்திரன்.

புண்டரீகாடின் - விஷ்ணு. கமலக் கண்ணன் என்பது பதார்த்தம்.

புண்ணியசரவணம் - அழகர்மலைக்கணுள்ள தோர் பொய்கை. இது தன்பால் நீராடவோர்க்கு ஐந்திர வியாகரணத்தைத் தெரிவிப்பது. (புறநானூறு)

புதன் - சந்திரன் புத்திரன். தாய்பிருஹஸ்பதி பாரியாகிய தாரை நவக்கிரகங்களுளொன்று.

புத்தரிற்சௌத்திராந்திகன் - உருவம், ஞானம், வேதனை. குறிப்பு, வானை என்பன தொடர்ச்சியாய் அழிவதுபந்தமென்றும், அவை முற்றும் ஒழிதலே முத்தியென்றுஞ் சொல்பவன்.

புத்தர் - பௌத்தமதம் ஸ்தாபித்த கௌதமனார். இவர் கங்கைக்கு வடதிசையிலே ரோகிணிநதி தீரத்திலே கபிலவாஸ்து என்னுநகரத்திலே சுத்தோதனன் என்னுமரசனுக்கு மாயாதேவி வயிற்றிலே புத்திரராக அவதரித்தவர். இவர் அவதரித்திருந்தபோது அசிதர் என்னு மகாமுனிவர் அங்கேசெல்ல, சுத்தோதனன் அக்குழந்தையைக் கொண்டுபோய் அவர் பாதங்களில் வைத்தாசீர்வதிக்குமாறு வேண்டினான். அசிதர் அக்குழந்தையை வாங்கி அதன்பாதங்களைத் தன்னிரு கண்களிலுமொற்றி, “பாலகிருபா மூர்த்தியே, உனக்கு நமஸ்காரம். நீயே அவன். உன்சரீரத்திலே ஞானிகளுக்குரிய முப்பத்திரண்டு இலக்கணங்களும் எண்பது உபலக்கணங்களும் விளங்குகின்றன. நீ உலகத்துக்கு ஆன்மபோதம் புகட்ட அவதரித்திருக்கிறாய். உனதுதிவ்விய போதத்தை என்காதாற்பருகி யானந்தமடையும் பேறபெறாமற் சின்னாளில் இச்சரீரத்தை விட்டகலப் போகின்றேன். ஓ! சுத்தோதன மகாராஜனே! இச்சிசுரத்தினம் மானுஷகணமாகிய பொற்றாமரை வாவியிலே பல்லாயிரவருஷங்களுக் கொருமுறை பூத்தலர்வதாகிய ஏகபுஷ்பமேயாம். இவ்வற்புதமலர் உலகமெங்கும் கமழ்ந்து நறுந்தேன் பிலிற்றும். இம்மலரைக் கொடியாகிய நின்குடும்பம் பெற்ற பாக்கியமே பாக்கியம். ஆயினும் இத்தெய்வக்குழந்தையாலே சுகத்தை யடையமாட்டாய்” என்றுகூறிப் பின்னரும் பலவாறு வாழ்த்திப்போயினர்.
புத்தர் பிள்ளைத்திருநாமம் சித்தார்தனார். அவர் கௌதமகோத்திரத்திலே சாக்கியர்குடியிலே பிறந்தமையாற் கௌதமரென்றும் சாக்கியர் என்றும் இருவேறுபெயர்கொண்டனர். புத்தர் என்னும் பெயர்பின்னர்ப் பெற்ற ஆச்சிரமப்பெயர். இவர் தமக்குக் கல்விகற்பிக்க வந்த ஆசிரியர் சொல்லவெடுக்கும் பாடங்களை அவர் சொல்லுமுன்னே தாமே யோதியும், அவர்வழுவிய விடத்து அவ்வழூஉக்களைத் திருத்தியும் வருவாராயினார். அதுகண்டு அவ்வாசிரியர் நீங்கினார். அதன்பின்னர்ப்புத்தர் தாமாகவே சர்வசாஸ்திரங்களையும் பழம்பாடம்படிப்பார் போலப்பூர்வஜன்ம வாசனைபற்றி ஒதியுணர்ந்தார். உரியகாலத்திலே விவாகமுமாயிற்று. அவர் இயல்பிலே துறவுடைய ராதலின் அவரை விவாகாதி போகங்களெல்லாம் பிணிப்பனவாகாவாயின. ஒருநாள் அவர் தமது மனைவியோடு நந்தவனம் பார்க்குமாறு தேரேறி வீதியிற் செல்லும் போது, ஒருயௌவன புருஷன் எதிரேவரக் கண்டு அவன் அழகைப்பாத்து வியந்துசென்றார். அவர் சாயங்காலத்திலே மீண்டு செல்லும்போது அப்புருஷன் மிக்கநோயால் வருந்தி மெலிந்து வீதியிலே வீழ்ந்துகிடப்பக்கண்டு சென்றார். அங்ஙனஞ் சென்றார்க்கு ஊண்மேலும் நித்திரைமேலும் மற்றைய சுகங்களின் மேலும் மற்றைய சுகங்களின் மேலும்மனஞ் செல்லாமையால் அவர் அவ்விரவிற்றானே உலகப் பற்றையெல்லாம் முற்றத் துறந்து “ஆன்மாக்கள் பிறவிப் பெருங்கடலாகிய துக்கராகரத்தைக் கடந்துய்யும்வழி யாதென்று நாடியுணரக்கடவேன்” என்று கூறித் துணிந்து தமது அரமனையை விட்ட கன்று காட்டகஞ்சென்று யோகசித்தியடைந்தபின்னர் அவர் தேசங்கடோறுஞ் சென்று தமது கொள்கைகளை எடுத்துப் பிரசங்கி;த்து வந்தார். அவரைப் பல்லாயிரவர் ஞானாசாரியராகக் கொண்டார்கள். அவருக்கு அநேக அரசரும் சீஷரானார்கள். அவராலும் ஏனைய மாணாக்கர்களாலும் அவருடையமதம் உலகெங்கும் வியாபிப்பதாயிற்று. கடவுள் அவாங்மனோகோசரமாதலின் கடவை இம்மானுடநிலையிற்கண்டு தெளிவது கூடாதென்றும், புத்தநிலையை யடையமுயல்வதே முத்தியுபாயமென்றும், அலாவறுத்து, உலகம் கணந்தோறும் விகாரப்பட்டுத் தோற்றக்கேடுகளுக் கிடனாய் நிற்றலின் பொய்யென்றுணர்ந்து ஆன்மதரிசனஞ் செய்தவழியன்றி அந்நிலைசித்தியா தென்றுங் கூறுவது அவர்மதவுள்ளுறை. உயிர்களிடத்து அன்பும் ஞானமுமே அவர்மதத்துக்கு ஆதாரபீடமாம். அவர்கூறிய அறநெறிகள் அத்தியற்புதமானவை. அவருடைய பிரமசீஷர் ஆநந்தர் என்பவர். அவர்காலத்தரசர் விம்பிசாரன் அஜாதசத்துரு முதலியோர். அடைந்தபோது அவர்க்கு வயசு எண்பது.
அவர்காலம் இற்றைக்கு இரண்டாயிரத்துஐஞ்äற்றறுபது வருஷங்களுக்கு முன்னுள்ளது. முன்னுள்ள காலாந்தரங்களிலே புத்தர்பலர் அவதரித்துப் பௌத்தமத ஸ்தாபனம் பண்ணிப்போயினரேனும், அவர்கள் பெயரெல்லாம் இக்கௌதம புத்தரால் ஒளியிழந்து போயின. முன்னும் பலபுத்தருண்மைபற்றியே அவரோடு மயங்காவண்ணம் இவர் கௌதமபுத்தரென்றும் சாக்கியபுத்தர் சாக்கியமுனிவரென்றும் பலபெயரால் வழங்கப்பட்டனர்.

புத்தி - விநாயகக்கடவுளது உபயசக்திகளுளொருவர். மற்றவர் சித்தி.

புத்து - புத்திரரில்லாதோர் சென்றடையும் ஒருநரகம். தந்தைக்குப் புத்தென்னும் நரகத்தைத் தவிர்ப்போன் மகனாதலின் மகனுக்குப் புத்திரனென்னும் பெயருண்டாயிற்று.

புமன்னியன் - துஷ்யந்தன் புத்திரன்.

புரஞ்சயன் - (க) (இடி{) விகுடிpபுத்திரன். இவன் பூர்வாநமம் ககுத்சன். (உ) (பு) சுவீரன்மகன். (ந) (அ) சிருஞ்சயன் புத்திரன்.

புரந்தரன் - (க) வைவசுவதமனுகாலத்துள்ள இந்திரன். ஓரக்கினி.

புராணம் - உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும், மனுவந்தரங்களும், பாரம்பரியகதைகளும் ஆகிய இவ்வைந்தையுங் கூறலால் பஞ்சலடிணமெனப்படுவது. புராணம் பதினெட்டு. அவை வேதங்களுக்கு வியாக்கியாரூபமாயுள்ளன. அவை, பிரமம், பத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பவிஷியம், பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்கலாந்தம்,வாமனம், கூர்மம், மற்சம், கருடபுராணம், பிரமாண்டம் எனப் பதிணெண் புராணங்களாம். புராணம் என்பதன் பொருள் பண்டைவரலாறு. அவற்றைவகுத்தவர் வியாசர். அவற்றுட் சிவபுராணம் பத்து விஷ்ணுபுராணம் ஆறு, பிரமபுராணம் ஒன்று, சூரியபுராணம் ஒன்று, விஷ்ணுபுராணநான்கென்றும், பிரமபுராண மிரண்டென்றும். அக்கினி புராணமொன்றென்றுங் கூறுவாருமுளர்.

இனி, புராணமானது சாஸ்திரங்களுள்ளே தலைமைபெற்றது. அதுகிருயுகத்திலே நூறுகோடி கிரந்தங்களினாலே பிரமாவினாற் செய்யப்பட்டமையின் பிராமம் என்னும் பெயரினையுடையதாய் ஒன்றாயிருந்தது. திரேதத்திலே கோடி கிரந்தங்களால் நூற்றுப்பதினெட்டுச் சங்கிதைகளையுடைய பதினெட்டுப் பாகங்களாக அது மகாரிஷிகளால் வகுக்கப்பட்டது. அதனைத் துவரபரத்திறுதியிலே வியாசர் நான்கிலடிங்கிரந்தங்களால் பதிணெண் புராணமாக்கினர். அப்பதினெட்டையும் ரோமகர்ஷணர் என்னும் முனிவர் வியாசர்பாற் கேட்டார். அவர் சுமதி அக்கினிவர்ச்சன் முதலியோர்க் குபதேசித்தார். இப்படிக் குருசீஷபரம்பரையாக வெளிவந்தன. இறந்துபோன பலகற்பத்துச் செய்திகளே யெடுத்துக் கூறப்படுதலாலும் இறந்துபோன சிருஷ்டிகளும் ஒருவாறின்றிப் பேதப்படுதலாலும், கற்பந்தோறும் அநுக்கிரக மூர்த்திகளும் வேறாகலாலும், அவ்வக்கற்பத்துவரலாற்றைக் கூறும்போது அவ்வக்கற்பத்ததிகார மூர்த்தியே விசேடித்துத்துதிக்கப்படுதலாலும் புராணங்கள் ஒன்றற்கொன்று மாறுகொள்வனபோற் றோன்றினும் உண்மையானோக்குமிடத்து ஒற்றுமையுடையனவேயாம்.

புராந்தகியம்மை - திருவிற்கோலத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்.

புரிகுழலாள் - திருபாண்டிக்கொடுமுடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்.

புரிகுற்சன் - மாந்தாதாசக்கரவர்த்தி மகன்.

புருகோத்திரன் - அணுபுத்திரன்.

புருஜன் - (பு) சுசாந்திமகன்.

புருஜித்து - (க) (ய) ரிசிகன் புத்திரன். (உ) (ய) வசுதேவன் தம்பியாகிய கங்கன் மகன்.

புருமீடன் - (பு) ஹஸ்திகன்மகன். அஜமீடன் தம்பி.

புருஷோத்தமபாண்டியன் - அநுலோகம பாண்டியருளொருவன்.

புரூடன் - (ய) வசுதேவனுக்குச் சகதேவியிடத்துப் பிறந்த புத்திரன்.

புரூரவன் - வைவசுவதமனு புத்திரியாகிய இளையிடத்துப் புதனுக்குப்பிறந்த புத்திரன். இவன் பிரசித்தி பெற்ற ஒரு சக்கரவர்த்தி. இவன் ஈகையிலும் தெய்வபக்தியிலும் அழகிலும் சிறந்தவன். இவன் ஒரு நாள் ஊர்வசியைக் கண்டு மோகித்து அவளைத் தனக்கு மனைவியாம்படிகேட்க, நீர் என்னை ஒருநாளும் பிரிந்திருப்பதில்லையென்று வாக்குத்தானஞ் செய்தால் உம்மோடு கூடியிருப்பேனென்று அவள்கூற, அதற்குடன்பட்டு அவளோடுகூடிச் சுகித்திருந்தவன். இவ்விஷயம் இருக்குவேதத்திலே குறிக்கப்பட்;டிருக்கின்றது.

புரோசனன் - துரியோதனன் நண்பனாகிய ஒருசிற்பி. இவன் துரியோதனன் ஏவலின்படி பாண்டவர்களைக் கொல்லும் பொருட்டு அரக்குமாளிகை அமைத்தவன்.

புலகர் - புலத்தியரது தமையனார். இவா தடிபுத்திரிகளுளொருத்தியாகிய டிமையை மணம்புரிந்து மூவர் புத்திரரைப் பெற்றவர்.

புலஸ்தியர் - பிரமமானச புத்திரருளொருவர். இவனுக்கு அவிர்ப்புக்கு விடத்திலே அகஸ்திய னென்றொருவனும் விச்சிரவசுவும் பிறந்தார்கள். (இந்த அகஸ்தியரும் வேறு@ கும்பமுனியும் வேறு) இப்புலஸ்தியரே புராணங்களை முதன்முதல் மனுஷருக்கு வெளியிட்டவர்.

புலி - வியாக்கிரபாதர்

புலியூர் - சிதம்பரம். வியாக்கிரபாதர் பூசித்த ஸ்தலமாதலின் சிதம்பரத்துக்கு இப்பெயர் வந்தது.

புல்லாற்றூர் எயிற்றியனார் - தன்மக்கண் மேற்போருக்கெழுந்த கோப்பெருஞ்சோழனைப்பாடி அது செய்யாவகை தடுத்தவர். “போர்வலியிற்சிறந்த வேந்தேதேகேள்@ உன்னைப்பகைத்திருப்பவர் யார்? உன்புதலவரன்றோ? நீ அவரைப்போரில் வென்றிருந்து விண்ணுலகாளப் புகும் போது இம்மண்ணுலகை யாருக்கு வைத்தேகுவை? ஒருகால் அவர்க்குநீதோற்பின் உனக்குண்மைப் பகைவர் கொண்டாடப் பேரிழிவை நிலைநிறுத்துவையன்றோ. ஆதலின் நின்சினம் ஒழிவதாக” என்னுங் கருத்தையடக்கி இவர் கூறியபாட்டு அதிசாதுரியமானது. (புறுநானூறு உகந)

புலோமசை - இந்திரன் மனைவியாகிய சசிதேவி. புலோமன் மகள். இந்திரன் புலோமனைக் கொன்று புலோமசையைக் கொண்டேகினான்.

புவனேகவாகு - விஜய கூழங்கசை;சக்கரவர்த்தி யாழ்ப்பாணத்திலரசு புரிந்தகாலத்தில் அவனுக்கு மந்திரியாயிருந்தவர். இவர் தமிழ்ப்புலமை நிரம்பியவர். இவராலெடுக்கப்பட்ட சுப்பிரமணியாலயம் இன்னும் நல்லூரில் நின்று நிலவுவது. இவர் ஆயிரத்தெண்ணூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னேயிருந்தவர். இவர் ஊர்தோறும் தரும பாடசாலைகள் அமைத்துத் தமிழ்க் கலாவிருத்தி செய்தவர். இவர் காலம் ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய தென்பாருமுளர்.

புவனநாயகியம்மை - திருமாகறலிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

புவNசுவரி - க. பார்வதி. உ. ஒட்டரதேசத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

புளிந்தர் - விதர்ப்பானர்த்த தேசங்களிலுள்ள ஒருசாதியாளர்.

புள்ளிலூர் - தொண்டைநாட்டகத் தோரூர்.

புள்ளிருக்கும்வேðர் - திருப்புள்ளிருக்கும் வேðர் காண்க.

புறநானூறு - எட்டுத்தொகையுள் எட்டாவது. முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கோவூர்க்கிழாரெல்லையாகவுள்ள புலவர்களால் இயற்றப்பட்டது. இந்நூல் கடைச்சங்கத்தார் காலத்தது. இந்நூலினால் பூர்வகாலத்தரசர் பலருடைய வரலாறும் பூர்வகாலத்துப்புலவர் ஆற்றலும் நன்கு புலப்படும்.

புறப்பொருள் வெண்பாமாலை - ஐயனாரிதனார் செய்தது. புறப்பொருளையே பொருளாகவுடையது.

புனர்வசு - (க) (ய) தவித்தியோதன் தம்பி. துந்துபிமகன். (உ) ஒருநடித்திரம்.

புனிதவதியார் - காரைக்காலம்மையார் காண்க.

புஷ்கரம் - (க) மாளவதேசத்திலுள்ள ஒரு தீர்த்தம். (உ) ஏழுதீவுகளுளொன்று.

புஷ்கரவதி - ராமன்தம்பி. பரதனது இரண்டாவது புஷ்கரனாலமைக்கப்பட்ட ஒருநகரம்.

புஷ்கரன் - (க) (ய) வசுதேவன் தம்பியாகிய விருகன் இரண்டாம் புத்திரன். (உ) நளன் சிறயதந்தை புத்திரன். (ந) ராமன் தம்பி பரதனது புத்திரன். (ச ) சிவன் (ரு) விஷ்ணு.

புஷ்கராடின் - விஷ்ணு. (புஷ்காரம் - தாமரை, அடின் - கண்ணன்)

புஷ்கராணியம் - புஷ்கரதீர்த்தத்துக்குச் சமீபத்துள்ளவனம்.

புஷ்கராருணி - (பு) ருiடியன் புத்திரன். இவன் வமிசம் பிராமண வமிசமாயிற்று.

புஷ்கரிணி - (க) உல்முகன் பாரி. அங்கன்தாய். (உ) வியுஷ்டிபாரி. சர்வதேசசுதாய்.

புஷ்பகம் - குபேரன் பிரமாவைநோக்கி தவஞ்செய்து பெற்றுக் கொண்டவிமானம். இது மணிமயமுடைய தாய் இச்சித்தவிடத்துக்குக் கொண்டேகுவது. இதனை ராவணன் குபேரனோடு போர்செய்து கவர்ந்து கொண்டான். ராவணயுத்தம் முடிந்த பின்னர் இராமர் அவ்விமானத்தைக் குபேரனுக் கீந்தனர்.

புஷ்பதந்தம் - வாயுதிக்குக்காவல் யானை

புஷ்பதந்தன் - (க) சிவகணங்களுளொருவன். இவனேமகிமாஸ்தோத்திரஞ் செய்தவன். (உ) விஷ்ணு பரிவாரத்தவருளொருவன்.

புஷ்பவந்தன் - உபரிசரவசு வமிசத்தரசன்.

புஷ்பாரணன் - துருவன்மகனாயிய வற்சரனுக்குச் சருவசித்தியிடத்தப் பிறந்த புத்திரன்.

புஷ்போற்படை - சுமாலிபுத்திரி. விச்சிரவசுபாரிகளிளொருத்தி. ராவணாகும்பகர்ணன் தாய்.

புஷ்யம் - (க) பூசநடித்திரம். (உ) கலியுகம். (க) தைமாசம்.

புஷ்யமித்திரன் - மகாதேசராஜாக்களுள் கடையரசனாகிய பெரிய ரதன்சேனாபதி. இவன் ராஜாவைக் கொன்று தான்பின்னர் அரசனாயினவன்.

பூகோளம் - ஆரிய சாஸ்திரம் பூமத்தியிலேசுமேருவும் சமுத்திரமத்தியிலே வடவாமுகமுமாயிருக்கின்றனவென்று கூறும். இவை முறையே வடதுருவமென்றும் தென்துருவமென்றும் கூறப்படும். பூமத்தியென்று ஆரியசாஸ்திரத்திலே சொல்லப்பட்ட விடம் வடதுருவமுனை. ஆரியசாஸ்திரம் பூமியை மேகலாரேகையை எல்லையாகவைத்து வடகோளார்த்தம், தென்கோளார்த்தமென இருகூறாகப் பிரித்து வடகோளார்த்தம் முழுதும் நிலமென்றும் தென்கோளார்த்தம் சலமென்றும் கூறும். வடகோளார்த்தம் முழுதும் நிலமெனவே அதன் மத்தியஸ்தானம் வடதுருவத்தின் கணுள்ள சுமேருவாகின்றது. இனிச்சமுத்திரமத்தியெனவே தென்கோளார்த்த முழுதும் சலமாக அதன் கணுள்ள வடவாமுகமாகின்றது. வடகோளார்த்தம் முழுதையும் ஜம்புத்தீவென்னும் பெயரால் வழங்குவர். இச் சம்புத்தீவென்னும் வடகோளார்த்தம் நவ வர்ஷங்களாக கவகுக்கப்பட்டன. அவைவருமாறு :-

மேருவைச் சூழ்ந்திருப்பது இளாவிருதவர்ஷம்@ அதற்குத் தெற்கேயுள்ளது ஹரிவர்ஷம்@ அதற்குத் தெற்கேயுள்ளது கிம்புருஷ வர்ஷம்@ அதற்குத் தெற்கேயுள்ளது பாரதவர்ஷம். இனி இளாவிருதவர்ஷத்துக்கு வடக்கே இரண்மயவர்ஷத்துக்கு வடக்கே இரண்மயவர்ஷம். அதற்கு வடக்கே ரம்மியக வர்ஷம். அதற்கு வடக்கே குருவர்ஷம். இவ்விளாவிருதத்துக்குத் தெற்கேயும் வடக்கேயுமுள்ள ஆறு வருஷங்களுக்குமிடையே இளாவிருத வருஷத்துக்குத் கிழக்கினும் மேற்கினும் முறையே பத்திராசுவவருஷம் கேதுமாலவருஷம் என்னுமிரு வருஷங்களுள்ளன. பாரத வருஷம் கேதுமால வருஷம் குருவருஷம் பத்திராசுவ வருஷம் என்னும் நான்கும் மேகலாரேகையை அடுத்துள்ள வருஷங்கள். இந்நான்கு வருஷங்களிலும் மேகலா ரேகையிலே ஒன்றுக்கொன்று சமதூரத்திலே நான்கு பட்டணங்கள் உள்ளன. அவை இலங்காபுரி, ரோமபுரி, சித்தபுரி, யவகோடி என்பன வருஷம் என்பது மழைப்பெயல் வேறுபாட்டால் வந்த பெயர். இலங்காபுரிக்கு நேர்கீழே அஃதாவது அதோபாகத்தில் சித்தபுரி யிருக்கின்றதென்றும், இலங்காபுரிக்கு சித்தபுரிக்குமிடையே சமதூரத்திலே கிழக்கே யவகோடி இருக்கின்ற தென்றும், இலங்காபுரிக்கும் சித்தபுரிக்குமிடையே சமதூரத்திலே மேற்கே ரோமபுரியிருக்கின்ற தென்றும் ஆரிய சாஸ்திரங்கள் கூறும்.

இலங்காபுரிமுதல் தொண்ணூறு பாகையில் கிழக்கே யவகோடியிருக்கின்றது. அதிலிருந்து தொண்ணூறுபாகையில் சித்தபுரி, அதிலிருந்து தொண்ணூறு பாகையில் ரோமகபுரி.

மற்றைய ஆறுதீவுகளும் மேகலாரேகைக்குத் தெற்கே சமுத்திரத்தி லாங்காங்குமுள்ளன. அவை தனித்தனி ஒவ்வொரு சமுத்திரஞ் சூழ்ந்தன. டிPரமுதலிய சமுத்திரப்பயெர்கள் சுவைதோற்றமுதலிய வேறுபாட்டான் வந்தன போலும்.

இதனால் ஆரியர்பூகோள சாஸ்திரஞ் செய்த காலத்திலே மேகலாரேகையிலே இலங்காபுரி முதலிய நான்கு பட்டணங்களு மிருந்தன வென்பது நிச்சயமாகின்றது.

பூங்கொடிநாயகி - திருவோமாம்புலியூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.
பூங்கொம்பனை - திருஇன்னம்பரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பூங்கோதை - மதுரையிலே இற்றைக்கு இருநூற்றெழுபது வருஷங்களுக்கு முன்னேயிருந்த ஒரு தாசி. இவள் சீதக்காதியென்னுஞ் சோனகப்பிரபுவுக்குக் காமக்கிழத்தியாயினமையால் தன்னினத்தினராலே நீக்கப்பட்டவள். தமிழ்ப்புலமையிற் சிறந்தவள். இவள் காயற்பட்டினத்திலே சீதக்காதி கொடுத்த பெருநிதியைக் கொண்டு தன்னூருக்கு மீளும் வழியிலே கள்வர் கவர்ந்து கொள்ளக். கதியற்றவளாய் நின்று, “தினங்கொடுக்குங் கொடையானே தென்காயற்பதியானேசீதக்காதி இனங்கொடுத்தவுடைமையல்ல தாய்கொடுத்தவுடைமையல்லவெள
யாளாசை
மனங்கொடுத்துமிதழ்கொடுத்துமபிமானந் தனைக்கொடுத்துமருவிரண்டு தனங்கொடுத்தவுடைமையெல்லாங்கள் வர்க்கையிற் பறிகொடுத்துத்தவிக்கின்றேனே”

பூதமகிபாலன் - ஒளவைக்கு விருந்திட்டு அவளாற் பாடப்பட்டவனாகிய புள்ளலூரி லிருந்த வேளாண் பிரபு.

பூதனை - கிருஷ்ணன் சிசுவாகவிருந்தபோது கம்சன் எவலினால் தன்முலைகளிலே நஞ்சைப்பாய்ச்சி அப்பாலைக் கிருஷ்ணனுக்கு ஊட்டியபோ தம்முலைவழியே பாலோ டவளுயிரும் அவனாலுடன் கவரப் பெற்றுயிர் துறந்த பூதகி.

பூதன் - வசுதேவன் புத்திரன்.

பூரணவர்ணன் - ஆயிரத்துநானூறு வருஷங்களுக்குமுன்னே மகததேசத்திலரசு புரிந்தவன். இவன்பௌத்தசமயி. கயாவிலே இருந்த போதிவிருடித்தைச்சசாங்கன் அழித்தானென்பது கேள்வியுற்று ஆற்றுதற்கரிய துக்கமுடையனாய்ப் பூமியின் மீது விழுந்து புரண்டு அழுது ஈற்றில் தெளிந்து ஆயிரம் பாற் பசுக்களைக் கொண்டு சென்று அவற்றின் பாலையெல்லாங்கநற்து அடிமரத்திற்கு அபிஷேகஞ் செய்விக்க அவ்வடிமரம் ஓரிரவில் ஏழுமுழும்வளர்ந்து ஓங்க, அதுகண்டு பேரானந்தமுடையனாகி அதனை மீளவும் ஒருவரும் வெட்டாவண்ணம் அதனைச்சுற்றிப் பதினாறுமுழவுயரமுடைய ஒருமதிலை யெழுப்பியவனிவனே.

பூரி - (குரு) சோமதத்தன் மூத்தமகன்.

பூரிக்கோ - குறுந்தொகை தொகுத்தவன்.

பூரிசிரவன் - (குரு) சோமதத்தன் இரண்டாம் புத்திரன்.

பூரிசேனன் - சரியாதிபுத்திரருளொருவன்.

பூரு - யயாதிக்குச் சன்மிஷ்டையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் தந்தைக்குத் தனது எவ்வன ரூபத்தைக் கொடுத்துத் தந்தையினது வார்த்திகத்தைப் பெற்றுஅவனை மகிழ்வித்தவன். இவன் மகன் ஜனகமேஜயன். இச்சனமேஜயன் பாண்டவர்க்கு முன்னிருந்தவனாதலின் பாண்டவர்க்குப் பின்னிருந்த பரிடிpத்துமகன் ஜனமேஜயனும் வேறு.

பூர்ணிமை - தாதாவுக்கு அநுமதியிடத்துப்பிறந்த புத்திரி.

பூதுவசித்தி - ஆக்கினீத்திரன் பாரியாகிய ஓரப்சரசை.

பூவணநாதர் - திருப்பூவணத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

பூஷன் - தூவாதசாதித்தியருளொருவன். தடியாகத்தில்வீரபத்திரரால் பல்சேதிக்கப்பெற்றவன்.

பெண்ணினல்லாள் - திருக்கழுக்குன்றத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பெரியநாயகி - திருஅரசிலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். உ. திருப்பனையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.ந. திருமுதுகுன்றத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ச.திருப்பனந்தாளிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ரு. திருப்பழனத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பெரியநாயகியம்மை - திருவலஞ்சுழியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர். உ. திருக்குடவாயிலிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ந. திருச்சிவபுரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ச. திருத்தெங்கூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ரு. திருப்பனையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். சு. திரு உசாத்தானத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பெரியபாண்டேசுவரர் - திருநல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பெரியாம்பிகை - திருநாலூர்மயானத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பெரியாழ்வார் - இவர் ஸ்ரீவில்லிபுத்தூரிலே புரசூடனென்னும் வைஷ்ணவருக்குப் புத்திரராகப் பிறந்து வேதங்களில் வல்லராகிய ஒரு மகாபக்தர்.

பெருங்கோழிநாய்கன்மகன் கண்ணனார் - சோழன் போர்வைக்கோப்பெரு நற்கிள்ளியைப் பாடியஒரு தமிழ்ப்புலவர். இவர் வைசியர். இவர் கைக்கிளைப் பொருண்மேற் செய்யுள் செய்தலில் மிக்கவன்னையுடையவர். “சிறந்தவீரக் கழலினையும், மை போன்ற தாடியினையுமுடைய காளையை எண்ணுந்தோறும் என் கைவளை என்னைக் கைவிடுகின்றமையை என்தாய் காண்பளாயிற் கடிவளேயென்று அவட் கென்மனமேங்குகின்றது. இஃதொரு பக்கமாக, அவட்குப் புலனாகாமற்றான் அவனைக்கூடுவேனென்று துணிகினும் அவனைச் சூழ்ந்திருக்கும் சபைக்கென் செய்வதென்று நாணமீதூருகின்றது மற்றொருபக்கம். இவ்வாறு மயங்கின்றேன்” என்னுங் கருத்தினையுடைய “ அடிபுனைதொடுகழல்” என்னுஞ் செய்யுளைப் பாடினோர் இவரே. (புறநா)

பெருங்கருணைநாயகி - கொங்குநாட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பெருங்குன்றூர்கிழார் - பதற்றுப்பத்துள் ஒன்பதாம்பத்துப்பாடிச் சேரமான்குடக்கோ இளஞ்சேரலிரும்பொறைபால் முப்பத்தீராயிரங் காணமுதலியன பெற்றவர். வையாவிக் கோப்பெரும்பேகனால் நீக்கப்பட்ட கண்ணகியென்னு முத்தமியை அவனோடுசந்தி செய்யும் பொருட்டு, “நேற்றுமுதலாக ஒரு பக்கத்திலே தனியிருந்த நீருமாடாள் பூவுஞ் சூடாள் ஊணும் விரும்பவளாய்ப் புலம்பிக் கொண்டிருப்பவள் பால் என்னோடு செல்லுவையாயின் அதுவே எனக்குத்தரும் பரிசிலாக” வென்னுங்கருத்தினையுடைய ழூ ழூ ழூ “நெருநலொருசிறைப்புலம்பு கொண்டுறையு - மரிமதர்மழைக்கணம்மாவரிவை - நெய்யோடு துறந்த மையிருங்கூந்தன் - மண்ணுறுமணியின் மாசறமண்ணிப் - புதுமலர்கஞலவின்று பெயரி - னதுமனெம் பரிசிலா வியர்கோவே” என்னுஞ் செய்யுளைப்பாடியவருமிவரே. இவர் ஊர் பெருங்குன்றூரென்பதும் ஜாதியால் வேளாளர் என்பதும் இவர் பெயராற் பெறப்படும்.

பெருங்கிள்ளி - கோவலன் காலத்து உறையூரிலிருந்த சோழன். இப்பெயர் பெருநற்கிள்ளியெனவும் வழங்கும்.

பெருங்குருகு - இது தலைச்சங்கப் புலவருள் ஒருவர் செய்தது.

பெருங்குறிஞ்சி - இது சங்கத்துநூல்களுளொன்று. இஃது இறந்தொழிந்தது.

பெருஞ்சித்திரனார் - இவர் ஓரற்புத கவிஞர். இவர் மிக்க வறுமையுற்றவராயொரு காலத்திலே குமணன் வண்மையைப் புலவர்வாய்க் கேட்டு அவன்பாற் சென்று தமது வறுமையினது நிலையை யுள்ளவாறு ரைத்து அவன் பாற் பெற்ற பெருஞ் செல்வத்தாற் குபேரனைப்போல வாழ்ந்தவர். இவர் தமது வறுமைநிலையை யெடுத்துரைத்த சித்திரம் கேட்போர் மனத்தை யுருக்காமற்போகாது. அது “ பெரும்புகழ்படைத்தகுமணகேள்@ நின்வண்மைiயும் அளப்பில் செல்வத்தினையும புலவர் வாய்க் கேட்டு விரைந்துன்னை யடைந்தேன். உணவுப் பொருள் யாதுமில்லாத மனையே யாயினும் அதனை யிகழ்ந்து நீங்காது அங்கே தானே யுறைகின்ற என்பாலன் குடுமியோ நெற் காணாமையாற் குதிரைப்பிடர்மயிர்போற் பறக்குமியல்பினையுடையதாயிற்று. அத்தன்மையன்பாலின் றித்திரங்கிய தாய் முலையைப் பலகாலுஞ் சுவைத்துப் பார்ப்பன். பால் வாயில் வீழப் பெறாமல் அதனை விடுத்துவறிதே மூடிக்கிடக்கும் சோறிடுகலத்தைத் திறந்து பார்ப்பன். அங்குந்தன் பசிக்கு யாதுங் காணானாய்த் தாயை யடைந்தழுதழுது வாடுவன். தாய் புலிவருகின்றதென்று அச்சுறுத்துவள் தணியாமைகண்டு அப் புலியைக் காட்டுவள்.

உன்தந்தையைக் காணாதுகுன்றிய உன்மேனியினது அழகையெனக் குக்காட்டுவாய் என்று வினாவுவன். இத் துன்பத்துக் கிறுதிகாணுமாறு நின்னை யடைந்தேனாதலின் பரிசில் தந்து என்னைக்கடிது விடுப்பாயாக” என்னுங்கருத்தினையுடைய “ உருகெழுஞாயிற் றொண்கதிர்” என்னுஞ் செய்யுளாற் பெறப்படும்.

பெருஞ்சீத்தனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

பெருநாரை - இது தலைச்சங்கத்து இசைத்தமிழ் நூல்களுளொன்று. இஃதிறந் தொழிந்தது.

பெருநம்பி - குலச்சிறைநாயனார் காண்க.

பெருந்தலைச்சாத்தனார் - தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் காடு கொண்டிருந்த குமணனைப் பாடியபோது அவன் தனது தலையைக் கொண்டுபோய்த் தம்பிகையில் கொடுப்பீராயின் பெரு நிதி பெறுவீரென்று தன் வாளைக் கொடுத்துக் கொய்யுமென்ன, அவ்வாளைப் பெற்றுக் கொண்டோடிப்போய் அவன் தம்பிக்குக்காட்டி அவன் மனப்பகையை மாற்றியபுலவர் பெருந்தகை இவரே (“ குமணன் காண்க”)

பெருந்தேவனார் - (க) தொண்டைநாட்டிற் பிறந்து தமிழில் மிக்கவல்லுனராகிப் பாரதத்தைத் தமிழிலேபன்னீராயிரம் வெண்பாவாற் பாடிக் கொண்டுபோய் மதுரைச் சங்கத்தில் அரங்கேற்றியவர்.இவர் சாதியிலே வேளாளர். “சீரூறும்பாடல் பன்னீராயிரமுஞ் செழுந் தமிழ்க்கு. வீரர்தஞ் சங்கப்பலகையி லேற்றிய வித்தகனார், பாரதம் பாடும் பெரு;நதேவர் வாழும்பழம் பதிகாண்மாருதம்பூவின் மணம் வீசிடுந் தொண்டை மண்டலமே” என்பது மேற்கோள். (உ) வீரசோழியத்துக்குரை செய்த ஆசிரியர்.

பெருமகள் - கோவலன் மாதா, இவளைப் பெருமனைக்கிழத்தியென்றும் பேரிற் கிழத்தியென்றும் வழங்குவர். இவள் மதுரையிற் கோவலன் கொலையுண்டிறந்ததை மாடலனாற் றெரிந்து வருந்தித் தன்னுயிரைவிட்டவள்.

பெருமலை - சேரநாட்டிலுள்ள தொரு மலை.

பெருமிழலைக்குறும்பநாயனார் - பெருமிழலையென்னுமூரிலே விளங்கியவராகிய ஒரு சிவபக்தர். இவர் சுந்தரமூர்த்திநாயனார் கைலாசமடைவதைத் தமது யோகப் பிரத்தியடித்தாலறிந்து யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்துகைலாசமடைந்தவர்.

பெரும்பதுமனார் - இவர் புறநானூற்றுட் கூறப்பட்ட புலவருளொருவர்.

பெரும்பாணாற்றுப்படை - இது பத்துப்பாட்டுளொன்று. கச்சிநகரத்திருந்த தொண்டைமானிளந் திரையனைக் கடியலூருருத்திரங்கண்ணனார் பாடியது.

பேகன் - கடையெழுவள்ளல்களுளொருவன். இவன் கபிலபரணர்களுக்குப் பேருபகாரியாய் விளங்கிய வொருமலைநாட்டரசன் இவன் ராஜதானி நல்லூர். இவன் மனைவி பெயர் கண்ணகி. அவளைத் துறந்திருந்த இவனைத் கைக்கிளைவகைப்பாடாண் பாட்டாற் பரணர் பாடினர்.

பேயாழ்வார் - பூதத்தாழ்வார் அவதரித்தமற்றைநாள் மயூரபுரியில் ஒரு வாவியிலே செங்குவளை மலரிலே அவதரித்தவர். இவர் விஷ்ணுபத்தியிற் சிறந்தவர். “திருக்கண்டேன்”என்னுமந்தாதி பாடினவர் இவரே.

பேய்மகள்இளவெயினி - சேரமான்பாலைபாடிய பெருங்கடுங் கோவைப்பாடிய புலமையள். இவளை நரவடிவெடுத்துவந்த வொரு பேய் என்பாருமுளர்.

பேராவூரான் - இவன் தொண்டைநாட்டுப் பேராவூரில் விளங்கிய ஒரு வேளாளப் பிரபு. புலவர்களுக்குப் பொன்மாரி பொழிபவன். நந்தனாரைத் தன்னருகிருத்திப் புலையரென் றநுசித மடையாதவருடன் போசனஞ்செய்த பெருந்தகையிவனே. இதனைக் கம்பரும் தமது ஏரெழுபதினுட் கூறினார். “நந்தனுடனமுதுண்டான் பேராவூரான்” என்பதனாலும் தெண்டைமண்டலசதகத்தானுமுணர்க.

பேராறு - சேரநாட்டுள்ள தோராறு.

பேருசங்கன் - (ய) இருசங்கன்.

பேரெயின்முறுவலார் - நம்பிநெடுஞ் செழியனைப்பாடியபுலவர்.

பைசாசி - பிராகிருதபாiடிகளுளொன்று. இது பைசாசி குளிகையென்றும் பைசாசி யென்றும் இரண்டுவகைப்படும். இது பிசாசதேசங்களிற் பேசபடுவது. கேகயம் நேபாளம் பாகிலிய முதலிய தேசங்கள் பிசாசதேசங்களெனப்படும்.

பைரவன் சிவமூர்த்தங்களுளொன்று.
வைரவன் பகாரம்படிpத்தல் மேலும், ரகாரம் ரடிpத்தல் மேலும், வகாரம் வமனத்தின் மேலும் பொருள் செல்லுதலால் அழித்தல் காத்தல் சிருஷ்டித்தல் என்னும் மூன்றும் வல்லார் என்பது பதப்பொருள்.

பைலன் - க, (ரி) வியாசசீஷர்களுளொருவன். இருக்குவேதாத்தியாபகன். உ. (ரி) ஜாதகர்ணிசீஷன்.

பொதியில் - பாண்டிநாட்டிலுள்ள தொருமலை. இது தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பொது விடமாயிருத்தலின் இப்பெயர் பெற்றது.

பொய்கையார் - இவர் கோச்செங்கட்சோழனாராற் சிறையிலிடப்பட்ட சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறைவிடும் பொருட்டு அச்சோழனாரைக் களவழிநாற்பதென்னும் நூலாற்பாடிய புலவர். இவர்க்கு ஜன்மநகரம் தொண்டி, சேரமான்கோத்கோதையும் இவராற் பாடப்பட்டவன்.

பொய்யடிமையில்லாதபுலவர் - மதுரைத்தமிழ்ச்சங்கத்திலிருந்த கபிலபரணர் முதலியோர்.

பொய்யாமொழிப்புலவர் - துறையூரிலே வேளாளர் குலத்திலே அவதரித்துத் தமிழ்ப்புலமையும் சாபானுக்கிரகமும் பெரிதுமுடையராய் விளங்கியவர். அழிந்துபோன தமிழ்ச்சங்கத்தை மீளவும் அமைத்து வளர்த்தல் வேண்டுமென்னும் பேரவாவடையராய் வணங்காமுடிப் பாண்டியன்பாற் சென்றனர். அவன் இவர் கருத்தையுசாவி யுணர்ந்து சங்கங்கூட்டுங்கருமத்தைப் பின்னர்யோசிப்பாம், இப்போது நமது சிவாலயத்தினுள்ளே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் சங்கப்புலவர்களது விக்கிரகங்களெல்லாம் மலை துளக்கும்படி பாடும் பார்ப்போ மென்றான். உடனே இவர், “உங்களிலேயானெருவனெவ்வெனோ
வல்லேனோ, திங்கட்குலவறியச் செப்புங்கள் - சங்கத்துப் பாடுகின்ற முத்தமிழ்க் கென்பைந்தமிழுமொக்குமோ - ஏடவீழ்தாரேழெழுவீரே” என்னும் வெண்பாவைக் கூறுதலும் அவ்விக்கிரகங்களெல்லாம் சிரக்கம்பஞ் செய்தன. இவ்வற்புதத்தைக் கண்டும் பாண்டியன் இவர் விண்ணப்பத்தைப் பொருட்படுத்தானாயினான். அது கண்டு புலவர் தமது சோணாட்டை நோக்கிப்பல்லக்கேறி மீண்டார். அப்பொழுது பாண்டியன் மனைவியார் தமது பல்லக்கேறித் தொடர்ந்து போயிறங்கி இவருடைய பல்லக்குச்சுமப் போருளொருவராயினர். அஃதுணாந்தபுலவர், நீ நமக்குப் பல்லக்குத்தாங்கப் புகுந்தகருத்தை யுணர்ந்தோம். நாம் வெகுண்டு அரசனைமுனிவாமல்லேம்@ அஞ்சற்கவென்று அவ்வுத்தமியைத்தடுத்து, “உமையாளுநீயுமொருங்கொப்பே யொப்பே, உமையாளாளுக்கங்குண்டோரூனம் - உமையாடன் - பாகந்தோய்ந்தாண்டான் பலிக்குழன்றான் பாண்டியனின், ஆகந்தோய்ந்தாண்டானரசு” என்று வாழ்த்திப்போயினர்.

இவர் சோழராஜவினது மந்திரியாகிய சீநக்கராயனுக்குப் பிரியாநட்பினர். ஒருநாள் சீநக்கராயன் சயனிக்குங் கட்டிலிலே அவனும் புலவருமாகவிருந்து பொழுது போயபின்னர் நெடுநேரம் அளவளாவிக் கொண்டிருக்கையில் புலவர் தமக்கு நித்திரைவந்ததென்று கூறி ராயனைப் போசனத்துக்குப் போகுமாறு செய்து அக்கட்டிலிற்றானே ஒரு பக்கமாக நித்திரை போயினர்.

ராயன் போசன முடித்துக் கொண்டு நிலாமணி மேடையிற் சென்று மீளுமுன்னே ராயன் மனைவியும் அக்கட்டிலிற்படுத்துறங்குகின்றவரைத் தன் கணவனென்றெண்ணி ஒருபக்கத்திற் படுத்து நித்திரை போயினான். அதன்பின்னர் ராயனும் போய்ப் படுத்துறங்கினான். வைகறையிலே புலவர் முதலிலே யெழுந்தார். அவ்வரங்கேட்;டு அரசனும் எழுந்தான். புலவர் தம்மருகே ராயன்மனைவிபடுத்து நித்திரை போதலைக் கண்டு துணுக்குற்று ராயனைநோக்கி என் செய்தாய்! என்செய்தாய்! என்றனர். ராயன் அவரைநோக்கி “அஞ்சாதீர், இப்போ தெழுந்திருக்கவேண்டாம், செல்லக்கிடமின்” என்றான். மனைவி அவ்வொலிகேட்டுப் பதைத்தெழுந் தோடி அந்தப்புரஞ்சென்றாள்.

ராயன் புலவரை நோக்கி என்மனையாளை மாத்திரமன்று உலகத்துப் பெண்களெல்லோரையும் மாதாவெனக் கொண்டு போற்றுகின்ற உம்பக்கத்திலே என்மனையாள் படுத்துறங்கியதைப் பெரும் பாக்கியமாகக் கொண்டேன் என்றான். அன்றுமுதலாகப் புலவரும் ராயனும் ஈருடலு மோருயிரும்போன் றொழுகினர். இவர் சினக்கராயன் இறந்த பொழுது சோழன் தடுக்கவுங் கேளாமல் மேல்வருங் கவிகளைக் கூறி உடன்கட்டையேறினார்.

“வாழிசோழவென்வாய் மொழி கேண்மோ
ஊழிநிலவெறிமாளிகையின் வயிற் என்றறிமனைவிநெடிது துயில்கொளச் செல்லக்கிடமினெனக் கிடந்தரு கெனைச்
சொல்லியநண்பன் பன்றனிச் செல்பவனோ
நானுமேகுவனற்றுணையவற்கே” “அன்றுநீ செல்லக்கிடவென்றா யியிழையோ, டின்று நீவானுலகமேறினாய் - மன்றல்கமழ், மானொக்கும் வேல்வழியார் மாரனேகண்டியூர்ச் - சீநக்காசெல்லக்கிட”

இப்புலவர் பெருந்தகையே தஞ்சைவாணன் கோவை யென்னும் பிரபந்தம் பாடியவர். அக்கோவையினது சொல்லாற்றல் பொருளாற்றல்கள் தமிழ்ப்புலவர்களைப் பிரமிக்கச் செய்வனவென்றால் மற்றினிக் கூறுவதென்னை.
இவர் தொண்டைநாட்டிலுஞ் சிறிது காலம் வசித்தவரென்பதும், அக்காலத்திலேயே முருகக்கடவுள் வாயால், “விழுந்ததுளியந்தரத்தே வெமென்றும்” என்னும் வெண்பாப்பாடப் பெற்றவரென்பதும் தொண்டைமண்டலசதகத்தால் விளங்குகின்றது. இவர் அதிவிரராம பாண்டியன் காலத்துக்குச் சற்று முன்னேயிருந்த வணங்காமுடிப் பாண்டியன் காலத்தவராதலின் இவர் காலம் சற்றேறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது.

பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார் பாடிய பிரபந்தம்.

பொருனை - தாம்பிரபன்னிநதி. இது பாண்டி நாடுள்ளது. இவ்வாறு சேரநாட்டுக்குரிய தென்பாருமுளர்.

பொல்லாப்பிள்ளையார் - அபயகுலசேகர சோழராஜன் கொண்டு போய்க்கொடுக்க நம்பியாண்டார் நம்பியென்னும் ஆதிசைவப் பிராமணர் வாங்கி நிவேதித்த பழம் அவல் எள்ளுண்டை முதலியவைகளைத் தமது துதிக்கையை யுண்மையாக நீட்டி யெடுத்துத் திருவமுது செய்த விநாயகமூர்த்;தி விக்கிரகம். இம்மூர்த்தி திருநாரையூரிலுள்ளது.

பொன்பற்றியூர்ப்புத்தமித்திரனார் - வீரசோழன் காலத்திலேயிருந்து அவன் பெயரால் வீரசோழிய மென்னுமிலக்கணநூல் செய்தவர்.

பொன்மயிலம்பிகை - திருப்பராய்த்துறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

பொன்முடியார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

பொன்னுச்சாமித்தேவர் - புதுக்கோட்டைச் சிவஞானத் தேவர் புத்திரராகிய இவர் சேதுபதிசமஸ்தானத்துச்சர்வாதிகாரியாகி அவ் விராஜாங்கத்தைச் சீரிட்டு நன்னிலைக்குய்த்தவர். முன்னாளிலே தாராநகரத்திலிருந்து சம்ஸ்கிருத பாஷையை வளர்த்த போஜராஜனே பின்னாளிலே தமிழையும் வளர்க்குமாறு இப்பொன்னுச்சாமி நரேந்திரனாக அவதரித்தான் என்று புலவர் நாவினும்பாவினும் போற்றற்குரிராய் விளங்கிய ராஜபண்டிதர் இவர் ஒருவரே. தமிழ்ப் புலமையுஞ் சிவபக்தியும் ராஜதந்திரமும்ம கௌதாரியமும் இவர் பாற் குடிகொண்ட சிறப்புக்கள்.

புலவர் திலகர்களாகிய ஆறுமுகநாவலரும் மீனாடிpசுந்தரகவிச்சக்கரவர்த்தியும் இவர் காலத்துப் புலவர்கள். ஆறுமுகநாவலரைக் கொண்டு திருக்குறளையும் திருக்கோவையாரையும் கரலிகிதவமூஉக் களைந்து அச்சிடுவித்துலகுக்குபகதித்த பெருந்தகையு மிவரே. இவரைப் போலவே இவர்க்கு அருந்தவப் புதல்வராக வந்தவதரித்திருக்கும் பாலயவனத்தத்து ஜமீந்தாராகிய பாண்டித்துரைச்சாமித் தேவரும் தமிழ்க் கலாவினோதரும் வித்துவசிகாமணியுமாகி விளங்கு கின்றார். அவரே இப்போது மதுரையிலே தமிழ்ச்சங்கம் ஸ்தாபித்து நடாத்தி வருகின்றவர்.

போகமார்த்த பூண்ழலைநாயகி - திருநள்ளாற்றிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

போகர் இவர் ஜாதியிற் சினர். சமயத்
போகி தாற் புத்தசமயி. ஆச்சிரமத்தாற்றுறவி. இவர் இற்றைக்கு ஆயிரத்தறுநூறுவருஷங்களுக்கு முன்னே சீனதேயத்திலிருந்து பாரதவருஷத்துக்கு வந்து பாடலிபரம் கயா முதலிய விடங்களைத் தரிசித்துக்கொண்டு, தடிpண தேசத்திலும் சோழபாண்டிநாடுகளுக்குச் சென்று அங்கே நெடுங்காலம் வசித்து ஆங்காங்குமுள்ள பண்டிதர்கள் பால் தாமறியாதவைகளைக் கற்றும் அவரறியாதவைகளை அவர்களுக்குக் கற்பித்தும் மீண்டு சீனதேசத்தையடைந்தவர். இவர்பால் வைத்தியங்கற்ற மாணாக்கர் ஒருவர் அவர் கூறிய முறைகளைச் செய்யுள்ரூபமாகப் பாடிப் போகர்நூலெனப் பெயரிட்டனர். பிற்காலத்து வைத்தியபண்டிதர்களுஞ் சிலர் தாமநுபவத்தாலறிந்த முறைகளைப்பாடிக் காலந்தோறும் அந்நூலினுட் புகுத்தியும் விட்டார்கள். பின்னர் அச்சிடப்புகுந்தோரும் கூட்டியும் திருத்தியும் மாற்றியும் அதனை அடியோடு பிறழவைத்தனர்.

இவர் சீனதேசத்துக்கு மீண்டு சென்றபோது சீஷராகத் தமிழருஞ் சிலர் சென்றார்கள். அப்பொழுது தஞ்சாவூர்ப்பிருகதீசுரன் கோயில் விமானத்துக் கபாலக்கல்லுச், சிற்பவேலை முடிந்தும் அச்சிற்பி யிறந்தமையால், நெடுங்காலமாக விமான வேலையிற் பழுதுறாவண்ணமேற்றுமுபாயந்தேர்ந்து கொள்ளப்படாமற் கிடந்தது. அதுமாத்திரமன்று@ நாகபட்டணத்துப் புதுவெள்ளிச் கோபுரத்துள்ளே வைக்கப்பட்டு நெடுங்காலமாகக் கிடந்த பொற்குவையுமெடுக்கும்வகை தேர்ந்து கொள்ளப்படா திருந்தது. இவ்விஷயங்களைப் போகியோடு சென்றசீடர்வாய்க கேட்ட சீனதேயத்துச் சிற்பிகளுளொருவன், “அப்பெரிய கபாலத்தை யேற்றுவதற்கு அவ்வூரிற் பஞ்சுப்பொதி யில்லையாவென்றும், அச்சக்கரத்தைத் தடுக்க வாழைத்தண்டில்லா தொழிந்ததா வென்றுஞ் சொல்ல, அதனைக்கேட்டிருந்த தமிழருளொருவனாகிய ஒருகைக்கோளன் மற்றோரை யறியாது மீண்டு சோழநாட்டையடைந்து அரசனுக்குணர்த்த, அரசன் பஞ்சை விமானப்பிரமாணமாகக் குவித்து அக்கல்லை யேற்றுவித்தானென்றும், வாழைத்தண்டையிட்டுச் சக்கரத்தை நிறுத்திப் பொற்குவையைக் கவர்ந்து சீரங்கத்து ஏழ்மதிற் றிருப்பணியை முற்றுவித்தா னென்றும் ஒருகர்ணபாரம்பரியமுளது.

புலிப்பாணி யென்பவர் போகரோடு சீனதேசத்திலிருந்து வந்து அவர்மீளும் போது அவருடன் செல்லாது தமிழ்நாட்டிலே தங்கியவர். அவர் பாடலென்றுள்ளன வெல்லாம் அவராற் பாடப்பட்டனவன்று. அதுவும் புரட்டு நூலேயாம். இவர் வைத்தியமுஞ்;சாலவித்தையுமுணர்ந்தவர். தமிழ்நாட்டுக்கு ஆதியிலே வைத்தியநூல்கள் தந்தருளியவர்கள் அகஸ்தியரும் தேரையர்முதலியோருமேயாவர். அவர் நூலினுள்ளே பெரும்பாலான அழிந்தனவேனும் எஞ்சிய சின்னூல்களை நோக்குமிடத்து அவையெல்லாம் வடமொழிக்கிணங்குவனவாயிருத்தல் பிரத்தியடிமாம். போகர் புலிப்பாணி நூல்களேசிறிதும் ஒவ்வா,

போகவதி - வாசுகிராஜதானி.

போக்கியார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

போஜகடகம் - நர்மதாநதியோரத்துள்ள பட்டணம்.

போஜசம்பு - ஒரு சம்ஸ்கிருதகாவியம். அது போஜன் செய்த இராமசரித்திரம்.

போஜப்பிரபந்தம் - இதிலே போஜசரித்திரமும் காளிதாசன்தண்டி முதலிய வித்துவ ரத்தினங்களினது வரலாறுங் கூறப்படும்.

போஜர் - யாதவருள் ஒரு சாரார்.

போஜன் - (க) (ய) சாத்துவதன்புத்திரன். குந்தியைவளர்த்த தந்தை. இவன் குந்திபோஜன் மகாபோஜன் என்னும் நாமங்களாலும் விளங்குவன்.

2. மாளவதேசத்தரசனாகத்தாரா நகரத்திலிருந்தரசு புரிந்தவோர் அதிப்பிரபல அரசன். இவன் இற்றைக்கு ஆயிரத்திருநூறு வருஷங்களுக்கு முன்னே அரசுபுரிந்தவன்.

இப்போஜன் காலத்திலே வித்தியா விஷயம் அபிவிருத்தியானது போல் முன்னுமில்லை@ பின்னுமில்லையெனலாம். பூர்வத்திலே பூரணசந்திரோதயம் போல் விளங்கிப்பின்னர் அபரபடிம் பெற்ற கலைஞானமெல்லாம் இவ்வரசன் காலத்திலேயே மீளவும் பூர்வபக்கத்துச் சந்திரனானமையால் இப்போஜனைக் கலைமகள் தந்தையெனினும் குற்றமாகாது. போஜன் மகாபண்டிதனா யிருந்தமையால் கலைஞானங்க ளெல்லாவற்றையும் ஆராய்விப்பானாயினான். போஜனாலே செய்யப்பட்ட வைத்தியநூலுமொன்றுளது. அவனுடையகாலத்திலே வேதம் முதல்சிற்பமீறாகிய சாஸ்திரங்களோடு பண்டிதர்களுந் தழைத்து விளங்கினார்கள்.

காளிதாசன் முதலிய கவிரத்தினங்கள் விளங்கியதும் இவன் சமஸ்தானத்திலேயேயாம். இவன் காலத்திலே மானுஷவைத்தியமாகிய சத்திரவைத்தியமும் அதி உந்நதமாக ஓங்கிவிளங்கிய தென்பது வல்லாளன் செய்த போஜப் பிரபந்தத்திற் கூறப்பட்ட ஒரு சரித்திரத்தால் அநுமிக்கப்படும். போஜப்பிரபந்தம் போஜனைப்பற்றிய சிறு சரித்திரங்களை யெடுத்துக் கோத்துக் கூறுவது. போஜன் ஒருகாலத்தில் கொடிய தலைவலியால் வருந்துவானாயினான். வைத்திய பண்டிதர்களுட் சிரோமணிகளாக அக்காலத்தில் விளங்கியமருத்துவர்க ளொருவர்பின் னொருவராக யாவருஞ்செய்த ஒளஷதப்பிரயோக மெல்லாவற்றையும் பொருட்படுத்தாது மேன்மேலும் தலைக்குத்து இருப்புப்பாரை இடிபோலோங்குவதாயிற்று. இது மரணத்திற்கு ஏதுவாகவந்த தலைவலி யென்றுகூறி மருத்துவரும் கைசலித்து நீங்கினர். அச் சமயத்திலே சல்லியசாஸ்திரத்திலே (ளுரசபநசல) கைபோய பண்டிதராகிய சகோதரரிருவர் அரசன் சமஸ்தானத்துக்கு வந்தணைந்தார்கள். அவர்கள் உள்ளே சென்று அரசனுடைய நோயை நிதானித்து இது சத்திர சிகிற்சையாலன்றி மற்றை ஒளஷத சிகிற்சையால்; தீராதென்றார்கள். அதுகேட்ட அரசன் அதற்குடன்படுதலும், அரசனுக்கு மூர்ச்சையுண்டாகுமாறு சம்மோகனி யென்னுமோரவுஷதம் பிரயோகித்தார்கள். உடனே அரசன் மூர்ச்சையாயினான். பண்டிதர்கள் அரசன் கபாலத்தை ஆயுதத்தாற் றிறந்து மூளையின்கண்ணேயிருந்தவிஷாமிசத்தை நீக்கிக் சுத்திசெய்து களபாலத்தைப் பழைமைபோலப் பொருந்திச் சந்தைத் தைத்துச் சந்தானகரணியிட்டுச் சஞ்சீவியென்னும் மருந்தை யுள்ளுக்குப் பிரயோகித்து உயிர்ப்பும் அறிவு முதிக்கும்படி செய்ய, அரசன் நித்திரை தெளிந்தான் போன்று விழித்துப் பூரணசுகம் பெற்றான். இதன்விரிவைப் போஜப்பிரபந்தத்திற் காண்க.

சம்மோகினி யென்பது தற்கால ஐரோப்பிய பண்டிதர் பிரயோகிக்கும் “குளோரபாம்” (ஊhழடழசழகழசஅ) போல்வதொரு மூர்ச்சையுண்டாக்கும் மருந்து. அது குளோரபாம் என்பதிலும் மிகச் சிறந்தது. குளோரபாம் அபாயமுள்ளது. சம்மோகனி ஒருபகற்காலம் வரைக்கும் அபாயஞ் செய்யாது. வேண்டிய போது சஞ்சீவினிப் பிரயோகத்தால் அதன் அதிகாரம் முற்றும் நீங்கி அறிவுதயமாகும். அக்காலத்தாரிய பண்டிதர் சஞ்சீவினிகையிலிருப்பினன்றிச் சம்மோகனிப் பிரயோகஞ் செய்யார். (சஞ்சீவினி - ய சநளவழசயவiஎந) குளோரபாமைக் கொடுத்துவிட்டுக் கைமிஞ்சியதே யென்று விழிக்கம் ஐரோப்பிய பண்டிதரைப்போல விழித்துத் திகைக்கமாட்டார். அதுநிற்க, மேற்கூறிய சரித்திரத்தால், ஐரோப்பியபண்டிதர் (வுசரைஅph ழக ஆழனநசn ளுரசபநசல) தற்காலத்திலே தாம் நூதனமாகக் கண்ட சத்திர சிகிற்சை யென்றுச்சிமேல் வைத்துக் கொண்டாடும். (ஊரயnயைட ளுரசபநசல) கபாலசல்லியும் (கபாலத்தைத் திறந்து சிதைவு சோதித்தல் முதலியன) ஆரிய பண்டிதர் பல்லாயிரவருஷங்களுக்கு முன்னே சிறிதும் அபாயமின்றிப் பயின்றுவந்த அரிய சிகிற்சைகளுளொன்றேயா மென்பது நன்கு புலப்படுகின்றது. இக்கபால சல்லிய சம்பவம் இஃதொன்றுமாத்திரமன்று கௌதம புத்திரருடைய வைத்தியபண்டிதனாக விளங்கிய ஜீவகனும், அநேக கபால கல்லிய சிகிற்சைகள் செய்து புகழ்படைத்தானெனப் பௌத்த நூல்கள் கூறுகின்றன. சம்மோகனிகட் கீவாகடத்தி லுளதென்றாதலும் சஞ்சீவினிக்கீடாக அவ்வைரோப்பிய வாகடத்தில் யாதுமில்லை யென்பது இனாற் புலப்படும்.

போதனை - ராமகிரிக்குக்கிழக்கிலுள்ள ஒரு மலை.

பௌண்டரம் - (க) வீமசேனன் சங்கு. (உ) ஓட்டரதேசத்துக்கு ஆந்தரதேசத்துக்கும் உத்தரத்திலுள்ள நாட்டுக்குப் பெயர்.

பௌத்தர் - பௌத்தமதத்தை அவலம்பித் திருப்பவர்கள். இம்மதம் சத்திய சீலங்களையும் யோகவித்தையையும் செல்வே போதிப்பது.

பௌமன் - செவ்வாய்.

பௌரவர் - பூருவமிசத்தோர்.

பௌரவி - பாகிலிகன் புத்திரி. வசுதேவன் பாரி.

பௌலோமர் - வைசுவாநரன் என்னும் தானவன் மகளாகிய புலோமையிடத்து மரீசிக்கு உற்பத்தியான ராடிகள். அருச்சுணனாற் கொல்லப்பட்டவர்கள்.

பௌலோமி - சசிதேவி. புலோமன் புத்திரி. இந்திரன் பாரி.

பௌஷியன் - உதங்கனுக்குக் குண்டலங்கொடுத்த ராஜா.

மகதம் - வங்கத்துக்கு மேற்றிசைக்கணுள்ள தேசம். இத்தேசம் அதிப்பழமையானது. உத்தமகுல ராசாக்களாற் பரம்பரையாக ஆளப்பட்டது. இத்தேசம் புராணேதிகாசங்கள் எல்லாவற்றிலும் எடுத்துக் கூறுப்பட்டுள்ளது. இதன் ராஜதானியும் மகதமெனவேபடும். இத்தேசத்துமாக்கள் மாகதர் எனப்படுவர்.

மகமாயியம்மை - திருக்கானப்பேரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மகாடிசன் - (ராடி) கரன் புத்திரன்.

மகாபரதம் - (க) வடமொழியிலே சாரங்கதேவமுனிர்செய்த பரதசாஸ்திரம். அது லடிங்கிரந்த முடையது. சோமராய மகாராசாவினாற் செய்விக்கப்பட்டது. (உ) செந்தமிழ்ப்பரமாசாரியராகிய அகஸ்தியமுவரால் தமிழிலே ஆறாயிரஞ் சூத்திரமுடையதாகச் செய்யப்பட்டபரத நூல்.

மாகாபலலிங்கநாதர் - திருக்கோகரணத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

மகாவிரதன் - சிவன்என்புமாலை தரித்த மூர்த்தியாய் அருள்வர் என்று சொல்பவன். இவன் அகப்புறச் சமயிகளுளொருவன்.

மகேந்திரபுரி - இது தென்சமுத்திர மத்தியிலேயிருந்த சூரபத்மன்ராசதானி.

மகேந்திரம் - மஹேந்திரங் காண்க.

மங்கணன் - தபோ மகிமையினாலே சாரசுவதத்தில் நடனஞ் செய்தவன்.

மங்கலகிரி - நரசிங்கமூர்த்தியாய் விஷ்ணு வெழுந்தருளியிருக்கும் மூன்றுஸ்தலங்களிலொன்று. மூன்றாவன அகோபலம், மங்கலகிரி, சுவாலை.

மங்கலநாயகியம்மை - திருக்குடமூக்கிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மங்கலமடந்தை - ஒரு பெண் தெய்வம். மங்கலாதேவியென்பர். இத்தெய்வத்திற்கு ஆலயம் மலைநாட்டிலும் அதைச்சார்ந்த நாடுகளிலும் உண்டு. மங்க@ரென்பதை இதுபற்றிவந்த மங்கலபுரமென்னும் பெயரின் மரூஉவென்று கூறுவர்.

மங்கலன் - அங்காரகன்.

மங்களநாயகி - திருமங்கலக் குடியிலே கோயில்கொண்டிருக்கும் வேதியார் பெயர். உ. திருக்கண்டியூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். ந. திருநல்லத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ச. திரு இடும்பாவனத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மங்களநாயகி அம்மை - திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மங்கைநாயகி - திரு அகத்தியான் பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும்தேவியார் பெயர். உ. திருவிசயமங்கையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மங்கையர்க்கரசி அம்மை - திருவேதிகுடியிலே கோயில் கொண்டிருக்முக் தேவியார் பெயர்.

மங்கையர்க்கரசியார் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வரவழைத்துத் தமது நாயகனாகிய கூன்பாண்டியனுக்குச் சுரந்தீர்ப்பித்தவராகிய மாதுசிரோமணியார். இவர் சோழராஜபுத்திரியார்.

மச்சதேசம் - மற்சதேசங்காண்க.

மச்சாவதாரம் - விஷ்ணுதசாவதாரத்துள்ளே முதல் அவதாரம். இவ்வவதாரம் வேதங்களை அபகரித்தோடிச் சமுத்திரத்தில் ஒளித்திருந்த சோமகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்குமாறு எடுக்கப்பட்டது. இவ் வவதாரத்திலேயே மகாப்பிரளயம்வர ஏழாவதுமனுவும் சப்தரிஷிகளும் மீன்ரூபந்தாங்கித் தம்முயிர்பிழைத்திருப்பச் சமஸ்தபூமியும் மற்றியாவும் அழிந்தொழிந்தன.

மஞ்சிதேவர் - காசியிலுள்ள பெருமாள் விக்கிரகத்தை எழுந்து சென்று எல்லாருங்காண விசுவலிங்கத்தை வணங்கச் செய்தவர். அதுகாரணமாக அங்கிருந்த வைஷ்ணவர்கள் சிவதூஷணஞ் செய்யா தடங்கினர்.

மஞ்சுகோசர் - வச்சரசூசிசெய்த அசுவகோசர் குரு.

மஞ்சுவந்தம் - இமயத்துக்கு உத்தரதிசையிலுள்ள ஒருமலை. இதிலே மிகப் பெரியதாகிய ஒருதடாக முளது. அதில் பஞ்சவர்ணங்களோடு கூடியதாமரைகள் வளர்வன.

மட்டுவார்குழலி - திருச்சிராப்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மணலிழத்துக்கிருஷ்ண முதலியார் - இவர் இற்றைக்கு நூற்றைம்பதுவருஷங்களுக்கு முன்னே சென்னையில் விளங்கிய ஒரு வேளாளப்பிரபு கல்வி, செல்வம், ஈகை, குலம், ஒழுக்கமென்னுஞ் சிறப்பெல்லாம் பொருந்தி வாழ்ந்தவர். இவரே ராமாயணகீர்த்தனையைப்பாடிய அருணாசலக்கவிராயருக்குப் பொன்மாரி வழங்கிய வள்ளல்.
ஆயிரம் வருஷங்களுக்கு முன்னே செய்யப்பட்ட கம்பராமாயணத்திற்கும் இவர் மரபினரே அபிமானப் பிரபுக்களாயினர்.

மணலூர்புரம் - (க) மணிபுரம். (உ) பாண்டிநாட்டகத்தே சித்திராங்கத பாண்டியனுக்கு ராஜதானியாக விருந்த நகரம். (ந) சோழநாட்டிலுள்ள ஒரு சிற்றூர்.

மணவாளதாசர் - திருவரங்கலம் பகம்பாடிய வைஷ்ணவராகிய வோருத்தமதமிழ்ப்புலவர். இவருடைய கலம்பகம் மிக்க சொன்னபயமும் பொருளாழமு முடையது. இவ்வந்தணர் இற்றைக்கு ஐஞ்äறுவருஷங்களுக்கு முன்னே யுள்ளவர்.

மணவாளமாழனி - இவரும் சிவாக்கிரயோகியாரு மொருகாலத் தவர்கள். தஞ்சாவூரிலே சரபோஜிமகாராஜாவினது சமுகத்திலே பதினெழுநாளாகச் செய்த சமயவாதப் போரிலே சிவாக்கிரயோகிக்குத் தோற்றவராயினும் தமிழ்ப்புலமைசான்ற விஷ்ணுபத்தரேயாவர். உபதேசரத்தினமாலை. நூற்றந்தாதி முதலியன பாடினாருமிவரே.

மணிகர்ணிகை - கங்கைக்கணுள்ள ஒரு கட்டடம். (கட்டம் - தீர்த்தத்துறை)

மணிக்கிரீவன் - குபேரன்புத்திரன்.



மணிதீபம் பாற்கடல் மத்தியிலுள்ள
மணித்துவீபம் ஒரு தீவு.

மணிபுரம் - கலிங்கதேசத்துள்ள ஒரு பட்டணம்.

மணிபுஷ்பகம் - சகதேவன் காண்க.

மண்டலபுருடன் - தொண்டைநாட்டிலே வீரையென்னுமூரிலிருந்த ஆருகதராகிய ஒரு தமிழ் வித்துவான். இவரே சூடாமணிநிகண்டு செய்தவர். இவர் குன்றையூரிலிருந்த குணபத்திரருக்கு மாணாக்கர். இவர் கிருஷ்ணராயன் என்னும் அரசன் காலத்தவரென்பது அவர் செய்த சூடாமணிநிகண்டினுள்வரு மொருசெய்யுளாற் றுணியப்படும். கிருஷ்ணராயன் சாலிவாகனவருஷம் ஆயிரத் திருநூற்றைம்பஃதளவி லிருந்தவன். இவர் அடைமொழிகளால் தமதுசெய்யுளைப் புனைபவரல்லர். பிரயோகிக்கு மடையெல்லாம் பொருள் குறித்தனவே.

மணிமதி - இல்வலன் வாதாபி என்போர் இருந்த பட்டணம்.

மணிமந்தன் - குபேரன் தோழனாகிய ஓர்யடின்.

மணிமேகலை - ஒரு பெண் தெய்வத்திற்கும், கோவலனுக்கு மாதவிபாற்பிறந்த மகளுக்கும் ஒரு தமிழ்நூலுக்கும் பெயர்.
அத்தமிழ்நூல் கோவலன் காமக்கிழத்தியாகிய மாதவியிளது மகள் மணிமேகலை யென்பவள் வரலாறு கூறுதலால் இப்பெயர் பெற்றது. சாத்தனார் செய்தது. “கொந்தார்குழன்மணிமேகலைநூனுட்பங் கொள்வதெங்ஙன்” எனத் துறைமங்கலத்துச் சிவப்பிரகாசசுவாமிகளே இந்நூலினது வன்னையைப்புகழுவரென்றால் வேறு கூறவேண்டா. இந்நூல் பௌத்தமதச் சார்புடையது.

மணிவண்ணன் - காவிரிம்பூம் பட்டினத்திற்கு மேற்கே கோயில் கொண்ட திருமாலின் பெயர்.

மண்டலேசுவரர் - திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

மதங்கன் - (க) ஒரு பார்ப்பனப்பெண் வயிற்றிலே ஒரழிகுலத்தானுக்குப் பிறந்த புத்திரன். இவன் பார்ப்பானாதற்கு முயன்றும் வாய்க்காது இந்திரனைப் பூசித்துச் சண்டதேவனெனப் பட்டம் பெற்றிருந்தவன்.
உ. ஒரிருஷி. இவர் ததேபாசக்தியினாலே பராசக்தியைத் தன் புத்திரியாகப் பிறக்கப் பெற்றவர். அதுகாரணமாகப் பார்வதிதேவிக்கு மாதங்கியெனப் பெயர் வந்தது. ந. துந்துபிக்கும் பெயர்.

மதயந்தி - மித்திரசகன் மனைவி. (கல்மாஷபாதன் காண்க)

மதன் (க) ஓரசுரன். கைடவன் காண்க. (உ)
மது ராமபத்திரனாகிய குசன்வமிசத் தரசன். ந. ராவணன் மைத்துனன். இவன் மகன் லவணாசுரன். ச. வைடூரியபர்வதத்தில் அசுவினி தேவர்களை இந்திரன் சோமபானஞ் செய்வித்தபோது சியவனன் அவ்விந்திரனைக் கொல்லும் பொருட்டுப் பெற்ற புத்திரன். ரு. கார்த்தவீரியார்க்சுனன் புத்திரருளொருவன். சு. (ய) தேவடித்திரன் புத்திரன்.

மதலாசை - (க) ஓரப்சரசை. (உ) வறசன் மகனாகிய குவலயாசுவன் மனைவி. இவன் தன்புத்திரராகிய விக்கிராந்தன், சுபாகு, சத்துருமர்த்தனன், அலர்க்கண் என்னும் நால்வர்க்கும் நீதிமார்க்கங்களையுபதேசித்து வளர்த்த மகாபுத்திசாலியாகிய மாதுசிரோமணி.

மதிசாரன் - (பு) அந்திசாரன். இவன் இருசேயன் புத்திரன்.

மதிரை - வசுதேவன் பாரிகளுளொருத்தி.

மதிவாணர்நாடகத்தமிழ்நூல் - மதிவாணன் என்னும் பாண்டியன் செய்த நாடகத் தமிழ்நூல்.

மது - மதன் காண்க.

மதுச்சந்தன் - விஸ்வாமித்திரன் புத்திரன்.

மதுமந்தம் - ஜனஸ்தானங் காண்க.

மதுரகவியாழ்வார் - இவர் துவாபரயுகாந்தத்திலே பாண்டிதேசத்திலே திருக்கோ@ரிலே முக்காணிப் பிராமணருக்குப் புத்திரராகப்பிறந்து வளாந்து அயோத்திக்குச் சென்று மீண்டுவந்து நம்மாழ்வாரையடைந்து தத்துவஞானதீiடி பெற்றவர்.

மதுரவசனியம்மை - திருக்காட்டூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மதுராந்தகம் - தொண்டைநாட்டின் கண்ணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.

மதுரை - (க) யமுனைக்கரையிலுள்ள நகரம். இந் நகரம் கிருஷ்ணனுக்குரியது. கிருஷ்ணன் பகைவனாகிய ஜராசந்தன் இந்நகரத்தைப் பதினெண்முறை வளைந்தான்.

(உ) பாண்டிதேசத்துக்கு ராஜதானி. இது வைகைக் கரையின்கணுள்ளது. இது முன் கடம்பவனமாக விருந்தது. அதனை நகரமாக்கிச் சிவபெருமானைக் கொண்டு அவர் சடைக்கங்கைநீரால் சுத்தி செய்வித்தபோது அந்நீர்த் திவலைகள் மதுரமாயிருந்தமையால் அந்நகரம் மதுரையெனப் பெயர் பெற்றது.

“சந்தனப்பொதியச் செந்தமிழ் முனிவனுஞ் - சௌந்தரபாண்டியனெநன் தமிழ்நாடனுஞ் - சங்கப்பலகையுந்தழைத்தினிதோங்கு - மங்கலப்பாண்டிவளநாடென்ப” வென்று புகழப்பட்டதாகிய இந்நகரம் மிக்க பழமையும், மிக்க செல்லமும், மிக்ககீர்த்தியும், மிக்க தெய்வத்தன்மையும். மிக்கஅலங்காரமுமுடையதாய்ப் பாண்டியர்களுக்கு இராஜதானியாக நெடுங்காலம் விளங்கியது. உமாதேவியாரது அவதாரமாகிய தடாதகைப்பிராட்டியாரும், சோமசுந்தர மூர்த்தியும், உக்கிரப்பெருவழுதியாகிய குமாரக் கடவுளும் உண்மையாகத் திருமுடிசூடியரசாண்ட நகரமாகிய இம் மதுரையினது பெருமை எழுத்திலடங்குவதன்று.

பல்லாயிரம் வருஷங்களாகப் பல்லாயிரம் புலவர் சிகாமணிகளிருந்து பல்லாயிரம் நூல்களை இயற்றியும் ஆராய்ந்தும் தமிழை வளர்த்தது மித்திவ்விய நகமேயாம். இந் நகரத்துக்குக் காவலாகப்பூர்வத்திலமைக்கப்பட்டு கிடந்த மதிலினது சிறப்புக்களைப் பௌராணிகர்களெடுத்துக் கூறியிருக்கின்றபடி கூற வீண்டமையாதாயினும் அவற்றுட் சிலகூறுவாம். வேற்றரசர்வந்து புகுங்காலத்தில் அவரைப் புகவொட்டாமலெதிர்த்து யுத்தஞ் செய்யுமாயுறு அம்மதின்மேலே யமைக்கப்பட்டுக்கிடக்கும் பொறிகளும் பாவைகளும்எண்ணிலவாம். அவற்றுட் சிலபாவைகள் அக்கினியைவாரி வீசும்@ சில மணலைவாரிப் பொழியும்@ சில வாளைவீசி வெட்டும்@ சில கயிறுகளைவீசிக்கட்டும்@ சில வல்லுவளைத்தப்பாணங்களை யிடையறாமற் செலுத்தும்@ சில பாம்புப் பொறிகளுள் சீறி யெழுந்து மேல் விழுந்து பகைவரைக் கடித்துக் கொல்லும்@ பகைவர் விடுகின்றபாணங்களை யெட்டிப்பிடித்து அப்பகைவர்மேற் செலுத்துவனசிலபொறிகள்@ சில மல்லயுத்தஞ் செய்யும்@ சில வெந்நீரையூற்றும்@ இவ்வகைச்சிறப்புக்களும் சிற்பசாதுரியங்களும் மலிந்து விளங்கிய இந்நகரம் பின்னர்க் காலத்திலே வேற்றரசர் கைப்பட்டுப் பூர்வமாண்பெல்லா மிழந்து பிரசண்டமாருதத்திற் பட்ட மரம்போலிந்நாள் நின்று நிலவுவதாயிற்று.

மதுரைக்காஞ்சி - மாங்குடிமருதனார் பாடிய நூல். இதற்குரை செய்தவர் நச்சினார்க்கனியர்.

மதுரைத்தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார் - இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர்.

மதுரைத்தமிழ்நாயகனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

மதுரைப்பாலாசிரியனார் - இவர்கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

மதுரைப்பெருமருதனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

மதுரைமாதெய்வம் - மதுரைநகரத்தின் அதிதேவதையாகிய ஒரு பெண் தெய்வம். இந்தத் தெய்வத்தாலேயே கண்ணகி கோவலனுடைய முற்பிறப்பின் வரலாறு முதலியவற்றைத் தெரிந்துகொண்டாள்.

மதுரையறுவைவாணிகர்இளவேட்டனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர். இவர் வஸ்திரவணிகர்.

மதுவனம் - (க) யமுனைக் கரைக்கணுள்ள வனம் (உ) கிஷ்கிந்தைக்குச் சமீபத்துள்ள வனம். இது சுக்கிரிவனுக்குரியது.

மதுரையாசிரியர் - இவரே பேராசிரியர் எனப்படுவர். இவர் இளம்பூரணருக்கு வித்தியாகுரு. நச்சினார்க்கினியர்க்கு இளம்பூரணர் வித்தியாகுரு. நச்சினார்க்கினியர் தமது குருவாகிய இடம்பூரணரை ஆசிரியர் என்றும் தமது குருவுக்குக்குருவாகிய மதுரையாசிரியரைப் பேராசிரியரென்றும் வழங்கவாராயினர். அவ்வழக்குப்பற்றி இவர்க்குப்பேராசிரியர் என்னும் பெயர் நிலைப்பதாயிற்று. இவரது இயற் பெயர் புலப்படவில்லை. இவரே கநற்தொயிலேயுள்ள நானூற்றிரண்டு செய்யுளுள்ளே முன்னூற்றெண்பத்திரண்டு செய்யுட்களுக்கு முரை செய்தவர். எஞ்சிய இருபதுக்குமுரை செய்யுமுன்னே இவர் தென்புலஞ்சென்றனர். அவ் விருபதுக்கும் நச்சினார்க்கினியர் உரை செய்தனர். இப்பேராசிரியரே திருக்கோவையாருக்கு முரை செய்தாரென்பாருஞ்சிலருளர்.

மதுரை அளக்கர்ஞாழலார்மகனார் மள்ளனார் - பாண்டியன் மருகனாகியசிறுகுடிகிழான் பண்ணனைப்பாடியபுலவர். இவர் பாடிய செய்யுளிலே வெள்ளிதென்புலத் துறைய உலகில் விளைவுகுன்றும் என்னும் சோதிடவுண்மை விளக்கமாகின்றது. (புறநா)

மதுரைஇளங்கண்ணிக்கௌசிகனார் - புறநானூறு பாடினோருளொருவர். போரிலே வெற்றிபெறுதல் எளிது. கொடிய சர்ப்பமுறைகின்ற புற்றைப் போலவும், கொல்லுகின்றவலிய இடபந்தரிகின்றசாலையைப் போலவும் வலிய காவலையுடைய பகைவரது பாசறைக்கண்ணே புகுந்திட்டானென்னும் புகழே பெறுதற்கரியதொன்றாம் என்னுங் கருத்தினைக் கொண்ட “இரும்புமுகஞ்சிதைய” வென்னுமிவர் பாடல் வீரர்க்கு ஊக்கந் தருதலின் மிகச் சிறந்தது.

மதுரை ஓலைக்கடைக்கண்ணம்புகுந்தாராயத்தனார் - புறநானூறு பாடினோருளொருவர்.

மதுரைக்கணக்காயனார் - தமிழ்க்கலைமுற்றும் பருகிய ஒப்பிலாப்புலவர்சிகாமணியாகிய நக்கீரருக்குத்தந்தையார். இவரும் புலமையிற் சிறந்தவரே.

மதுரைக்கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் - புறநானூறு பாடினோருளொருவர்.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் - (“சாத்தனார் காண்க”) பாண்டியன் சித்திரமாடத்துஞ்சிய நன்மாறனது அபிமானப்புலவர்.

மதுரைத்தமிழ்க்கூத்தனார் - புறநானூறு பாடினோருளொருவர்.

மதுரைநக்கீரனார் - புறநானூறு பாடினோருளொருவர். பிடவூர்க்கிழார் மகன் பெருஞ்சாத்தன்மகனுக்கு இவர் அபிமானப் புலவர்.

மதுரைப்படைமங்கமன்னியர் - புறநானூறு பாடிய புலவருளொருவர்.

மதுரைப்பூதனிளநாகனார் - புறநானூறு பாடினோருளொருவர்.

மதுரைப்பேராலவாயர் - பூதபாண்டியன்தேவி தன்நாயகனோடு உடன்கட்டை யேறியது கண்டு வியந்து பாடியவர். (புறநா)

மதுரைமருதனிளநாகனார் - இறையனாரகப் பொருளுக் குரை செய்த நாற்பத்தொன்பதின்மருளொருவர் இவருரை நக்கீரரொழித் தொழிந்தோருரையினுஞ் சிறந்தது. புறநானூறு பாடினோருள்ளு மொருவர்.
இவராற் பாடப்பட்டோன் நாஞ்சில்வள்ளுவன் முதலியோர்.

மதுரைவீரன் - அரசுக் காகாதவரென்று காட்டகத்தே கொண்டுபோய் விடுக்கப்பட்ட காசிராஜாவினது புத்திரன். இவன் ஒருசக்கிலியன் மனையாள் கண்டெடுத்துப் போய் வளர்க்க வளர்ந்து, வளர்த்த தந்தை தாயார் தென்னாட்டிற்சென்றபோது அங்கே மதுரையிலே பொம்மணன் சேவையிலிருந்து அவன் மகளைக்கவர்ந்து கொண்டு சீரங்கத்தையடைந்து சோழனுக்குப் படைத்துணைவனாகி மதுரையை வெற்றி கொண்ட பராக்கிரசாலி.

இவன் தொட்டியர்க்கும் வேறு சில ஜாதியாளர்க்கும் குலதெய்வமானான். இவன் தெய்வபத்தியிற் சிறந்தவன்.

மத்தன் - (ராடி) மாலியவந்தன் புத்திரன்.

மத்திமம் - மத்தியதேசம்.

மத்தியதேசம் - விபாசைக்குக்கிழக்கேயும் பிரயாகைக்கு மேற்கேயும் இமயத்துக்குத் தெற்கேயும் விந்தியத்துக்கு வடக்கேயுமுள்ள தேசம். இங்கே வசிப்போர் மாத்தியமிகரெனப்படுவர்.

மத்தியந்தினமுனிவர் - இவர் வியாக்கிரபாத முனிவருடைய தந்தையார்.

மத்திரம் - சிபிபுத்திரனாகிய மத்திரனாலே இமயமலைச் சாரலிலேநிருபிக்கப்பட்ட தேசம்.

மத்திரன் - சிபியுடைய நான்காம் புத்திரன்.

மத்துவாசாரியர் - இவர் துவைத மதஸ்தாபகர். இவர் Nடித்திரம் பாசகNடித்திரம். இவர் ஜன்ம நாள் தைமாசத்துச் சுக்கிலபடிநவமி.

மனுநீதிகண்டசோழன் - இச் சோழன் திருவாரூரை ராஜதானியாக்கி அரசுசெலுத்திவருநாளில், தன்மகன் தேரூர்ந்து சென்ற போது தற்செயலாக ஒரு ஆன்கன்றோடி அத்தேர்க்காலிலகப்பட்டரையுண்டிறக்க. அதன் தாயோடி யாராய்ச்சி மணியை அசைத்துக் கதறிது கண்டு பொறாது அம்மகனைத் தன் தேர்க்காலிலிட்டரைத்ததன் றுயர்தீர்க்க முயன்றவிடத்துச் சிவபெருமானது திருவருளால் அக்கன்று உயிர் பெற்றெழப் பெற்ற பேரருட் பெருந்தகை.

மந்தபாலன் - (ரி) ஒரு பிரமசாரி.

மந்தரபுரேசர் - திருஉசாத் தானத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

மந்தரை - கைகேயினுடைய தோழி.

மந்தவாகினி - சுத்திமந்தத்திலுற்பத்தியாகின்ற ஒரு நதி.

மந்தாகினி - கங்கை, ஆரவாரமனறிப்பாய்வ தென்பது அதன் பொருள்.

மந்தாரன் - ஒரு வித்தியாதரன்.

மந்தோதரி - ராவணன்பாரி. திதி பத்திரனாகிய மயன்மகள்.

மமதை - உதத்தியன் பாரி. தீர்க்கதமன் தாய். இவள் பிருகஸ்பதி அநுக்கிரகத்தால் பரத்துவாசரைப் பெற்றவள்.

மயன் - கசியபனுக்குத் திதி வயிற்றிற் பிறந்த புத்திரன். தானவர்க்குத்தச்சன். சிற்பசாஸ்திரஞ் செய்தவன் இவனே. மாளிகைகளும் அரண்களும் சமைப்பதில் மிக்க வல்லவன். அவ்வாற்றல் மாத்திரமன்றுநினைத்த மாத்திரத்தே நிருமிக்குமாற்றலுடையவன். இவனுக்கு மாயாவி துந்துபி புத்திரர்கள்@ மண்டோதரிபுத்திரி. இவனுக்க ராவணன் மருமகன். இவனுக்குப்பின் வந்தோரும் இப் பெயரினாலேயே விளங்கினர் என்பது அர்ச்சுனன் மயனுயிரைக் காத்தானென்றும், அவ்வுபகாரத்துக்காக மயன் ஓரலங்கார மண்டபமொன்றியற்றிப் பாண்டவர்க் களித்தானென்றும் வரும் பாரத கதையாற் பெறப்படும். மயன் வமிசத்தோர், தெய்வகம்மியராகிய துவஷ்டாவெனப்படும். விசுவகன்மாவினது வமிசத்தோர்க்கஞ்சி ரோமபுரியை யடைந்து அசுரர்க்குக் கம்மியராகி அவர்க்குப்படைக்கலங்களும் ரதங்களும் மாடமாளிகைகளும் ஏனையபலவகைக்காருகம்மியங்களும் பயிற்றி விளங்ககுவாராயினர். ரோமகபுரிகடல் கொள்ளப்பட்டழிந்தபோது அவ்வமிசத்தோர் பலர் அப்பிரளயத்துக்குத் தப்பி மீண்டும் ஆரிய நாட்டையடைந்தனர். அங்ஙனம் வந்தடைந்தோர் பெருக மற்றைத் துவஷ்டாவினது மரபினர் அருகினர் போலும். ஆலயசிற்பமானங்கள் ஆகமத்திலொன்றும் மயன் விதியிற் மற்றொன்றுமாக இந்நாளிலும் முரணுதல் காண்க.

மயிலாடுதுறை - இது காவிரியின் தென்கரையிலுள்ள வொரு சிவஸ்தலம்.

மயேச்சுரர் - இவர் ஒரு யாப்பிலக்கண நூலாசிரியர் என்பது குணசாகரர் காரிகையால் விளங்குகின்றது. எனவே அவர்க்கு முன்னுள்ளவரென்பதும் அந்நூலிறந்த தென்பதும் அநுமானமாம்.

மரகதவல்லியம்மை - திருஈங்கோய்மலையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மரகதாசலேசுவரர் - திருஈங்கோய் மலையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

மரீசி - பிரமமானசபுத்திரருளொருவன். இவன் புத்திரன் கசியபன்@ புத்திரி பூர்ணிமை.

மருதப்பேசுரர் - திரு இடைமருதிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

மருதமலை - கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம்.

மருதேசம் - குருசைனியம் பாரதயத்தகாலத்திலே தங்கியவிடம்.

மருத்து - அவீடிpத்து புத்திரனாகிய ஒரு சக்கரவர்த்தி. இவனைப் போல் யாகஞ் செய்தார் ஒருவருமில்லை. இவன் காமாதிகளைமுனிந்த சீலன். அந்த யாககாலத்தில் ராவணன் சென்று மருந்து மகா ராஜனைப் போருக்கழைக்க அவன்யாக நிறைவேறாதென்றெண்ணி ராவணனோடு சமாதானம் போயினான். அங்கு வந்திருந்த ராவணனுக்கஞ்சி இந்திரன் மயிலாகவும் யமன் காகமாகவும் குபேரன் ஓந்தியாகவும் மாறி யொளித்து மீண்டுபோயினார்.

மருதுவதி - தடின் மகள். தர்மன்பாரி. ஜயந்தனும் மருத்துவந்தனும் புத்திரர்.

மருத்துவன்றாமோதரனார் - இவர்கடைச்சங்கப்புலவர்களு ளொருவர். இவர் திருவள்ளுவர் குறளுக்குக் கூறிய சிறப்புப்பாயிரக்கவி, பாயிரமாதலோடு உலகத்தார்க்குத் தலைக்குத்து மருந்தாகவுமிருக்கின்றது. அது “சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய் - மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தி - மலைக்குத்துமால்யானை வள்ளுவர் முப்பாலாற்றலைக்குத்துத் தீர்வுசாத்தற்கு” என்பது.

மருத்துவந்தன் - தர்மனுக்கு மருத்துவதியிடத்துப் பிறந்த மூத்தமகன்.

மருந்தீசுவரர் - திருவான்மி யூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

மருபூமிகள் - சிந்துதேசத்துள்ள மலைநாடுகள்.

மருவூர்ப்பாக்கம் - காவிரிப்பூம்பட்டினத்தின் புறநகர்.

மலயம் - பொதியமலை.

மலர்மங்கை - திருநாட்டியத்தான் குடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மலைபடுகடாம் - பெருங்குன்றூர்ப் பெருங்கவுசினார் பாடிய நூல்.

மலைவளர்காதலியம்மை - இராமேச்சுரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மலையத்துவஜன் - (க) குலசேகரபாண்டியன்மகன். இவன் மகள் தடாதகைப்பிராட்டி. இவன் மனைவி காஞ்சனமாலை. இவள் விச்சாவதி என்பவளது அவதாரம். (உ) அசுவத்தாமாவினாற் கொல்லப்பட்ட பாண்டியன்.

மலையமான்திருமுடிக்காரி - கடையெழுவள்ளல்களுளொருவனாகிய காரி யெனப்படுவன்இவனே. தொண்டை நாட்டுக்குஞ் சேரநாட்டுக்குமிடையேயுள்ள மலைநாட்டைக் கோவலூரிலிருந்த தாண்ட சிற்றரசன் இவனே. இவன் கொடையாலும் புஜபலத்தாலுஞ் சிறந்தவன். புலவர்க்குப் பேருபகாரி. இவன் குதிரையும் காரியெனப்படும்
போரிற் புறங்கொடுத் தோடும் வேந்தர்க்குத்துணைபுரிந்து வெற்றி மாலை சூடுவித்தலைத் தொழிலாகவுடையவன் காரி யென்றும். குளிர் காலத்திலே காட்டகத்திலே ஒருமயிலைக்கண்டு அதுகுளிரால் வாடுமேயென்றிரங்கித்தான் போர்த்திருந்த போர்வையை அதற்குக் கொடுத்தவன் பேக னென்றும், முல்லைக்கொடியிற் சிக்கியதேரை அக்கொடியைச் சிதைத்து மீட்காது அக்கொடி படர்ந்துலகுக்குப் பயன்படும்படி அத்தேரை அதற்குக் கொடுத்தவன் பறம்பு நாட்டுவேந்தனாகிய பாரியென்றுஞ் சிறுபாணாற்றுப்படையிற் கூறப்பட்ட முவர்கடைவள்ளல்களுள்ளே இவன் விசேடித்துக் கூறப்பட்டவன்.

மல்லிநாதன் - இவன் ரகுவமிசம் நைஷதம் மாகம் இவைகளுக்கு வியாக்கியான கர்த்தா.

மறைக்காட்டீசுவரர் - திருமறைக்காட்டிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

மறைஞானசம்பந்தர் - திருக்களாஞ்சேரியிலே விளங்கிய சைவசமயாசாரியராகிய இவர் உமாபதிசிவாசாரியருக்கு குரு மூர்த்திகள். இவர் சற்றேறக்குறைய அறுநூறு வருஷங்களுக்கு முன்னேயுள்ளவர். இவர் மெய்கண்டதேவருக்கு மாணாக்கர். சிவதருமோத்தரத்தை வடமொழியிலிருந்து தமிழான் மொழிபெயர்த்துப் பாடியவர் இவரே.

மற்சியதேசம் இப்பெயரினால் இரண்டுதேசங்
மற்சதேசம் களுள. ஒன்று கூர்ச்சரதேசத்துக்குமேற்றிசைக்கணுள்ளது. மற்றது தற்காலம் தினாசபுரமென்று வழங்கும் இடத்துக்குச் சமீபத்துள்ளது.

மற்சபுராணம் - விஷ்ணுவினது மீனவதாரமான்மியமும் அவ்விஷ்ணுசலப்பிரளயதாலத்திலே மனுவையும், பிறவற்றையும் ஓர் பேழையினுள்ளே வைத்து இரடிpத்தமையும், பிரமசிருஷ்டியும், திரிபுராசுரர் சங்காரமும், தாராகாசுரனுக்கும் தேவர்களுக்கும் இடையினிகழ்ந்த யுத்தமும், பார்பதியம்மையார் திருக்கல்யாணமும், முருகக்கடவுள் திருவவதாரமும், விஷ்ணு அவதாரமுமாகிய காதைகளை யுணர்த்துவது. பதினாலாயிரங் கிரந்தமுடையது.

மனசியன் - பிரவீரன் புத்திரன்.

மனத்துணைநாதேசுவரர் - திருவலிவலத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

மனஸ்வி - (ரி) தேவலன் இரண்டாம் புத்திரன்.

மனஸ்வினி - (க) பிரஜாபதிபாரி. ( உ) மிருகண்டன்பாரி.

மனன் - மி. ஹரியசுவன் புத்திரன்.

மனவாசகங்கடந்தார் - சித்தாந்தசாத்திரம் பதினான்கனுளொன்றுகிய உண்மையிளக்கமென்னு நூலாசிரியராகிய இவர் மெய்கண்டதேவர்மாணாக்கரு ளொருவர். இவர்க்கு ஜன்மநகரம் திருவதிகை.

மனு - சிருஷ்டி ஆரம்பகாலத்திலே பூமிபரிபாலனஞ் செய்யுமாறு தெய்வஆஞ்ஞையாற் பிறந்தவர். மனுக்கள் பதினால்வர். சுவாயம்புவன், சுவாரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாடி{சன், வைவசுவதன், சூரியசாவர்ணி, தடிசாவர்ணி, பிரம்மசாவர்ணி, ருத்திரசாவர்ணி, தர்மசாவர்ணி, ரௌசியன், பௌசியன் என்போர்.

இம்மனுக்களே அவ்வச் சிருஷ்டிதோறும் மனுஷவர்க்கத்தைத் தோற்றுவிப்பவர்களாதலின் அவரே மனுஷருக்கு மூலபிதாக்களாவார். இப்போதுள்ள சிருஷ்டிக்கு மூலபிதா வைவசுவதமனு. இஃது ஏழாவது மனுவந்தரம. ஒருமனுவந்தரகாலம் 4320000 மானுஷியவருஷம். இப்படி மனுவந்தரம் ஆறு சென்றன. இப்போது செல்லாநிற்பது ஏழாவது மனுவந்தரம். (சிருஷ்டி காண்க)

மனுத்தேவன் - பிரமபுத்திரருளொருவன்.

மனுஸ்மிருதி - அஷ்டாதசஸ்மிருதிகளிலே சிரேஷ்டமானது.

மனுமசித்தி - பூர்வம் நெல்லூரிலரசு செய்தராஜா.

மனோரமை - மேருபுத்திரி. இவள் இமவானைப் பெற்றுக் கங்கையையும் பார்வதியையும் பெற்றவன்.

மன்மதன் - விஷ்ணுமானசபுத்திரன் இவன்பாரி ரதி. கொடிகாமரம். பாணம். புஷ்பம்.
மன்மதன் என்பதன் பொருள் மனத்துக்குக் கிளர்ச்சியைக்கொடுப்பவன் என்பது. மன்மதனைப் பிரமபுத்திரனென்று கூறுவாருமுளர். இருக்குவேதம் பிரமசைதன்னியத்திலே முதற்கணெழுந்தது இச்சையென்றுகூறும். அது நிற்க@ காமவிச்சைக் கதிதேவதையாகிய மன்மதனே பெரும்பாலும் புராணங்களிலே பேசப்படுபவன். மன்மதன் அழகோடுகூடிய யவ்வனத்தை அதிகரித்துநின்று ஆண் பெண்ணைக்கூட்டிப் பிரஜாவிருத்திக்குபகாரஞ் செய்யும் அதிகாரமூர்த்தி. மன்மதன் அரூபியாய் வசந்தகாலம் நிலாமணி மேடை மணற்குன்று பூஞ்சோலை சந்திரோதயகாலம் புஷ்பம் வாசைன அழகு முதலியவைகளைத் தனக்குப் பரிவாரமாகக் கொண்டிருப்பவன்.

தாரகாதி அசுரரால்வருந்திய தேவர் வேண்டுகோளுக்கிரங்கி மன்மதன் சிவபிரான்மீது தனது காமபாணங்களைச் செலுத்தி அவர் நெற்றிக்கண்ணுக்கிரையாகி அங்கமிழந்து அநங்கன் என்னும் பெயர் கொண்டான். மன்மதன்பாரியாகிய ரதிதேவி பார்வதயைப் பன்முறையிரந்து தன் குறையைக் கூற, பார்வதி, ரதியைத்தேற்றி, “உன்கணவன் கிருஷ்ணனுக்குப் பிரத்தியுமனன் என்னும் பெயரோடு புத்திரனாகப்பிறப்பான். அச்சிசுவைச்சம்பராசுரன் கவர்ந்து போய்க்கடலிலிடுவான். அதனை மீன்கவர்ந்துவிழுங்கும். அம்மீனை வலைஞர் பிடித்து சம்பரனுக்குக்கொடுப்பார்கள். நீ அவன்வீட்டு ஏவற் பெண்ணாகி அம்மீனை வாங்கி அறுத்து அச்சிசுவைக்கவர்ந்தேகி அவனோடு வாழ்வை” என்றார். அவ்வாறே ரதிசம்பரன் மனையில் ஏவற்பெண்ணாகியிருந்து பிரத்தியுமனனை நாயகனாகப் பெற்றாள்.

இச்சரித்திரம் வாமன பாகவத விஷ்ணுபுராணங்களில் கூறப்பட்டுள்ளன. ஸ்கந்த புராணத்திலே கூறப்பட்ட சரித்திரம் சற்றேவிகற்பமாம்.

மன்வந்தராதிபர் - சுவாரோசிஷமனுவந்தரத்திலே விபஸ்சித்து என்னும் நிலிம்பபதியும், உத்தம மனுவந்தரத்தில் சுசாந்த னென்னும் அமரபதியும், தாமச மனுவந்தரத்தில் சிபி என்னுமிந்திரனும், ரைவதமனுவந்தரத்தில் வாசவனும், சாடி{சமனவந்தரத்தில் மனோச்சவசன் என்னுந்தேவபதியும், வைவசுவதமன வந்தரத்தில் புரந்தரன் என்னும் பிருந்தாரகேந்திரனும், சூரியாதி தேவர்களையும் வசிஷ்டாதி இருஷிகளையும் நடாத்துவார்கள்.

மஹதி - நாரதன்வீணை.

மஹாகாலம் - ஒரு புண்ணியNடித்திரம். அஃதுச்சயினியிலுள்ளது.

மஹாகாலன் - சர்வசங்காரமூர்த்தியாகிய சிவன்.

மஹாசுவாலை - ஒருநரகம். அது வியபிசாரம் புரிவோர் அடைதற்குரியது.

மஹாதேவன் - (க) அஷ்டமூர்த்திகளுளொருவர். (உ) சிவன்.

மஹாநந்தி - மகததேசது ராஜாக்களாகிய சைசுநாகருளீற்றரசன்.

மஹாநாபன் - ஹிரணியாடின்மகன்.

மஹாபலன் - சுமாலிபுத்திரன்.

மஹாபலி - பலிச்சக்கரவர்த்தி.

மஹாபார்சுவன் - ராவணன் சிறிய தாய் புத்திரருளொருவன்.

மஹாபிஷன் - பிரதீபன் காண்க.

மஹாபோஜன் - (ய) சாத்துவதன் புத்திரன். இவன் வமிசத்தார் போஜரெனப்படுவர். இவன் மிக்கதருமசீலன்.

மஹாப்பிரகன் - மிதிலன் வமிசத்தோரரசன். கீர்த்திராதன் தந்தை.

மஹாமகம் - சிங்கராசியில் பிருஹஸ்பதி பிரவேசமாயிருக்கும் வருஷத்தில் மாசி மாசத்துப் பௌர்ணிமை. அது கும்பகோணத்திலே யுள்ள மகாமகதீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்தற்குரிய விசேஷபுண்ணியநாள்.

மஹாமனன் - (அ) மகாகாலன் புத்திரன். இவன் புத்திரர் உசீநரன். திதிடின் என்போர்.

மஹாமாயன் - கீழ்லோகங்களில் ஒன்றாகிய அதலலோகத்ததிபதி.

மஹாயுகம் - சதுர்யுகம். இது 4320000 கொண்டது.

மஹாராஜிகர் - கணதேவதைகளுளொரு பேதம். இவர்கள் இருநூற்றிருபதின்மர்.

மஹாராஷ்டிரம் - கூர்ச்சரதேசத்துக்குத் தெற்கின்கணுள்ள தேசம். இத்தேசத்தில் வழங்கும் பாஷையும் இப்பெயரேபெறும். இது பஞ்சதிராவிடத்தொன்று. இத்சேதத்தார் மகாராஷ்டிரர் எனப்படுவர்.

மஹாரோமன் - (மி) கீர்த்திராதன் புத்திரன்.

மஹாரௌரவம் - அக்கினிமயமான ஒருநரகம். இது கொடிய பாபிகள் போய் வருந்துமிடம்.

மஹாவர்மன் - நந்தன்

மஹாவாகு - இரணியாடின் புத்திரன்.

மஹாவீரன் - ஜைனகுருக்களுளொருவன். இவன் கடைத்தீர்த்தங்கரன்.

மஹாவீரியன் - (க) (பு) புமன்னியன் புத்திரன். இருடியன்தந்தை. (உ) (மி) பிருகத்திரதன் புத்திரன்.

மஹாஹயன் - (ய) சதஜித்து சேட்டபுத்திரன்.

மஹிஷன் - (க) தேவரும் அசுரரும் யுத்தஞ் செய்தபோது அசுரரெல்லோரும் இறந்துபோக, திதியென்பவள் தவஞ்செய்து பிரமாவினது அநுக்கிரகத்தினாலே இம் மஹிஷனைப் பெற்றாள். இவன் கண்டத்தின்மேல் மஹிஷரூபமும் அதன்கீழ் மனுஷரூபமுடையவன். இவன் மிக்க கொடுமையினையுடையவன். இவனைத்துர்க்காதேவியார் கொன்று மஹிடஷாசுரமர்த்தனியென்னும் பெயர் பெற்றார்.

மஹிஷாசுரமர்த்தனி - துர்க்காதேவி.

மஹிஷ்மந்தன் - சனாஜித்துபுத்திரன். நர்மதாநதிதீரத்தில் மாஹிஷ்மதிபுரத்தை நிர்மாணஞ் செய்தவன் இவனே.

மஹேந்திரம் - (க) இது உற்கலம் முதல் காண்டவநாடுவரையும் வியாபித்திருக்கும்மலை. (உ) குலபர்வதங்களுளொன்று.

மஹோதயம் - (க) மகதநாட்டிலுள்ள ஒரு பட்டணம். இது விசுவாமித்திரன் ராஜதானி. குசிகன் மகன் குசநாடனாலே நிருமிக்கப்பட்டத. (உ) தைமாசமும் அமாவாசையும் திருவோணநடித்திரமுங் கூடிய சுபதினம் மஹோதய புண்ணியகால மெனப்படும். இப்புண்ணியகாலத்திலே செய்யப்படுந் தான தர்ப்பண முதலியன நற்பலன் தரும்.

மஹோதரன் - ராவணன் சிறிய தாய் புத்திரன். நீலனாற் கொல்லப்பட்டவன் இவனே.

மாகதி - மகததேசத்துப் பாஷை. இது பிராகிருதங்களுளொன்று. சோணநதிக்கும் பெயர்.

மாகந்தி - தடிpணபாஞ்சாலத்துராஜதானி.

மாகம் - மாகன் செய்த சமஸ்கிருதகாவியம். இக்காவியம் கிருஷ்ணன் சிசுபாலனை வதஞ்செய்தவரலாறு கூறுவது.

மாகன் - மாகஞ்செய்த சமஸ்கிருதகவி. இவன் தத்தகன் மகன்.

மகாளேசுவரர் - திருஇரும்பை மாகாளத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

மாங்காடு - குடமலைப் பக்கத்துள்ளதோரூர். இஃது இக்காலத்துமாங்காவென்று வழங்கப்படுகின்றது.

மாங்குடிமருதனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

மாசாத்தர் - திருக்கைலாசஞான வுலாவை அங்கே கேட்டுவந்து திருப்பிடவூரிலே வெளியிட்டவர்.

மாசாத்துவான் - கோவலன் தந்தையின் இயற்பெயர். இவன் கோவலன் இறந்ததை மாடலன் சொல்லக் கேட்டுத் தன்கையிலுள்ள பொருள் அனைத்தையும் தானஞ் செய்து விட்டுத் துறவு பூண்டவன்.

மாசிலாமணியீசுவரர் - திருஆவடுதுறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

மாடலன் - தலைச்செங்கானத் துள்ள ஒரந்தணன். கோவலனுடைய நட்பாளன். கோவலன் மதுரையில் கொலையுண்டது முதலியவற்றைக் காவிரிப்பூம்பட்டினத்தார்க்குச் சொல்லித் தன்சொல்லால் அவர்களிற் சிலரிறந்தமை தெரிந்து அப்பாவத்தைப் போக்குதற் பொருட்டுப் போய்க்கங்கையாடி மீளுகையில் இடையே செய்குட்டுவனைக்கண்டு அளவளாவி, வஞ்சிநகரஞ் சார்ந்து, அவனை யாகஞ் செய்யும்படி தூண்டி, அத செய்வித்து அவனை நல்வழிப்படுத்தினவன்.

மாணிக்கத்தியாகர் - திருவொற்றி யூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

மாணிக்கவண்ணஈச்சுவரர் - திருமருகலிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

மாணிக்கவண்ணர் - திருவாழ்கொளிபுத்தூ ரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

மாணிக்கவரதேசுரர் - திருமாணிகுழியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

மாணிக்கவல்லியம்மை - திருமாணிகுழியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மாணிக்கவாசகசுவாமிகள் - அரிமர்த்தன பாண்டியற்காகக் குதிரை கொள்ளச்சென்ற வழியில் சிவபெருமான் ஞானாசாரியராக வெழுந்தருளிவந்து உபதேசஞ்செய் தாட்கொண்டருளப்பட்டவரும், குதிரைவாங்கும் பொருட்டுக் கொண்டு சென்ற திரவியங்களையெல்லாம் சிவாலயத் திருப்பணிக்காக்கிய துணர்ந்து பாண்டியனாலொறுக்கப்பட்டு நின்றபோது சிவபிரான் நரிகளைப்பரிகளாக்கிக் கொண்டு போய்க் கொடுத்தவழி அவராற் காத்தருளப்பட்டவரும், பரிகளெல்லாம் நரிகளாக மீளுதலும் பின்னரும் பாண்டியனொறுக்க, சிவன்வைகையைப் பெருகச்செய்து அதன் கரையை அடைக்கக் கூலியாளாகிச் செல்லப் பெற்றவரும் அதுவாயிலாகப் பாண்டியன் பணியினின்றும்நீங்கிச் சீவன்முத்தராய் விளங்கினவரும், கேட்டோரை மனமுருக்கி முத்திநெறியிற் செலத்துமியல்பினதாகிய திருவாசகமும் திருக்கோவையாரும் பாடியருளியவரும், புத்தரை வாதில் வென்று சைவசமய ஸ்தாபனஞ் செய்தவருமாகிய சைவசமயாசாரியர். இவர் பூர்வாச்சிரம நாமம் வாதவூரர். இவர்க்குப் பாண்டியனால் சூட்டப்பட்ட பட்டப் பெயர் தென்னவன் பிரமராயன். கல்லாடத்திலே,

“வெடிவாற்பைங்கட்குறுநரியினத்தினை யேழிடந்தோன்றியினனூற்கியைந்து வீதிபோகிய வாலுளைப்புரவி யாக்கியவிஞ்சைப் பிறைமுடியந்தணன்,” என்றும்,
“மண்ணகழ்ந்தெடுத்து வருபுனல்வையைக் கூலஞ்சுமக்கக்கொற்றாளாகி நரைத்தலைமுதியோளிடித்தடு கூலிகொண் டடைப்பதுபோலவுடைப்பது நோக்கிக் கோமகனடிக்க வவனடிவாங்கி”
என்றும் வருதலாலே, கடைச்சங்கப் புலவராகிய கல்லாடருக்கு முன்னுள்ளவரென்பது நிச்சயிக்கப்படும்.

சிவன் வலைவீசிய திருவிளையாடலை இவர் பன்முறையெடுத்தெடுத்துத் திருவாசகத்தி லோதுதலால் வலைவீசிய திருவிளையாடல் நிகழ்ந்தகாலத்தை யடுத்திருளந்தவ ரென்பதும. எந்து, அச்சன், அச்சோ, பப்பு என்பன முதலிய மலையாளச் சொற்களை அத் திருவாசகத்திலே பிரயோகித்தலால் மலையாளத்திருந்து வந்து பாண்டி நாட்டிலே குடிகொண்டவரென்பதும் அனுமிக்கக்கிடக்கின்றன.

இச்சிவஞானச்செல்வர், சண்டீசரையும் கண்ணப்பரையும் தமக்கு முந்தினோராக வெடுத்துக்கூறி, அவர் பெருமையைப்புகழுவர். கன்றால்விளவெறிந்த கிருஷணன் செயலும் திருவாசகத்தி லெடுத்துக் கூறப்படுதலின், இவர் கிருஷ்ணன் காலத்துக்குப் பிற்பட்டவ ரென்பதுற்கையஞ் சிறிதுமில்லை. திருநாவுக்கரசுநாயனாராலே, தமது தேவாரத்திலே, நரியைக் குதிரைசெய்த அற்புத மெடுத்துக் கூறப்படுதலால் அவர் காலத்துக்கு இவர் முன்னுள்ளவரென்பதற்கும் ஆNடிபஞ் சிறிதுமில்லை. திருநாவுக்கரசுநாயனார் காலம், முன்னே சம்பந்தர் என்பதனுட் கூறப்பட்டபடி நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளது. அவர்க்கு இவர் முன்னுள்ளவராதலின் இவர் காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளதென்பது நன்கு துணியப்படும். அதுமாத்திரமன்று@ திருவாசகத்தினுள்ளே பிற்காலத்திலே அறியப்படாத அநேக சரித்திரங்களும், Nடித்திரங்களும் எடுத் தோதப்படலாலும், கண்ணப்பர் சண்டீசர்களைத்திப்பவர் திருஞானசம்பந்தர் முதலியோரைத்துதிக்காமையாலும், “சிரிப்பார் களிப்பார்தேனிப்பார்” என்னுந் திருவாசகத்திலே தேனித்தல் என்னுஞ் சொல்வழக்கும், உவலைமுதலிய அரிய சொற்களும் பிற்காலத்து வழக்கன்மையாலும், திருவாசகம், தேவாரத்துக்கும் கடைச்சங்கத்து நூல்களுக்கும் முந்திய தென்பதுநன்றாகத் துணியப்படும்.

இனித் திருத்தொண்டத் தொகையினுள்ளே எடுத் தோதப்படாமையின், மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பிற்பட்டவரெனச் சாதிப்பாருஞ்சிலருளர். அஃதறியாமையின் பாலதாம். அகஸ்தியர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலியோரெல்லாம் சிவ பக்தியிலும் சிவயோகத்திலுஞ் சிறந்த மெய்யடியார்களாகவும் அவரையெல்லாந் திருத்தொண்டத்தொகையினுட் கூறாமையாது காரணமாமோ, அதுவேமாணிக்கவாசகரைச் சேர்த்தோதாமைக்குங் காரணமாம். முன்னர் வெளிப்படாத அடியார் வரலாறுகளே சேக்கிழாருக்கு அருளிச் செய்யப்பட்டன. வன்றி முன்னே வெளிப்பட்ட சரித்திரங்களல்ல. மாணிக்கவாசக சரித்திரம் முன்னே ஆலாசியத்திற் கூறப்பட்டது. அதுபற்றியே அவர் சரித்திரம் திருத்தொண்டத் தொகையிலும் பெரியபுராணத்திலும் கூறப்படா தொழிக்கப்பட்டது. அவ்வாறே அகஸ்தியர், பதஞ்சலி, வியாக்கிரபாதர்கள் சரித்திரங்கள் சிதம்பர மான்மியத்திலும் பிறவற்றிலுங் கூறப்பட்டுக்கிடந்தமையின் அவையுமொழிக்கப்பட்டன. அற்றேல் சம்பந்தமூர்த்திநாயனார் சரித்திரம் ஆலாசியத்திற் கூறப்பட்டிருக்கவும் மீளவும் பெரிய புராணத்திலும் திருத்தொண்டர் தொகையிலும் கூறப்பட்டது யாது பற்றியோ வெனின், ஆலாசியத்துள் அச் சரித்திரம் விரித்துரைக்கப்படாமையி னென்க. இதுவே திருத்தொண்டத் தொகையிலும் மாணிக்கவாசகர் எடுத்துக் கூறப்படாமைக்குக் காரணமாமெனக் கொள்ளுக.

அதுநிற்க, மாணிக்கவாசகர் இடையறாத சிவத்தியானமுஞ் சிவபத்தியுமுடையராய் விளங்கினரென்பதும், அவருடைய சரித்திரம் முற்றுமுண்மையென்பதும் அவர் திருவாக்குக்களே வெளிப்படப் பகர்கின்றன. வாசனையாற் புறத்தே காணப்படும் எச்செயல்களையுஞ் சிவசம்பந்தப்படுத்தியே யெடுத்தோதுவர். திருவண்ணாமலையிலே இவர் தலவாசஞ் செய்தகாலத்திலே அங்குள்ள பெண்கள் வைகறையிலே யெழுந்து சிவதோத்திரஞ் சொல்லிக் கொண்டு அயல்வீட்டுப்பெண்களை யெழுப்பி நீராடப்போதலைக்கண்டு, அச்செயலைச்சிவசத்திகள் சிருஷ்டியின் பொருட்டு ஒருவரை யொருவரெழுப்புவதாகப் பாவித்துத் திருவெம்பாவையைப் பாடியருளினார். இப்படியே புறத்தேநிகழுகின்ற செயல்களாகிய படையெழுச்சி சாழல் பொற்கண்ண முதலியவைகளை யெல்லாம்சிவஞானச்செயலாகப் பாவித்துப் பாடியருளினர்.

இவருடைய மனமுஞ் செயலுமெக்கேயழுந்தித் கிடந்தனவென்பது, “எங்கையுனக்கல்லாதெப்பணியுஞ் செய்யற்க கங்குல்பகலெங்கண்மற்றோன்றுங்காணற்க விங்கிப்பரிசேயெமக்கெங்கோனல்குதியே லெங்கெழிலென்ஞாயிறெமக்கு” என்பது முதலிய திருவாக்கானுணரப்படும். பேரின்பக்கனியாகிய சிவத்தைக்கிடத்தற்கரிய பெரும்பேறாக மதித்தார் என்பது,

“ஞானக்கரும்பின்றெளியைப் பாகை, நாடற்கரியநலத்தைநந்தாத் தேனைப்பழச்சுவையாயினானைச் சித்தம்புகுந்துதித்திக்கவல்ல கோனைப்பிறப்பறுத்தாண்டு கொண்ட கூத்தனைநாத்தழும்பேறவாழ்த்தி” என்னுந்திவ்விய வாக்கானுணரப்படும்.
இவருடைய பாடலெல்லாம் ஞானப்பொருள் குறித்த வுருவங்களா மென்பதற்கு
“ வையகமெல்லாமுரலதாக மாமேருவென்னுமுலக்கைநாட்டி மெய்யெனுமஞ்சணிறையவட்டி மேதகுதெமன்னன் பெருந்துறையான் செய்யதிருவடி பாடிப்பாடிச் செம்பொனுலக்கைவலக்கைபற்றி யையனணிதில்லைவாணனுக்கே யாடப்பொற்சுண்ணமிடித்துநாமே” என்னுந் திருவாக்குச் சான்றாகும்.

இனி இவருடைய மெய்ஞ்ஞான போதவாற்றலோ வென்றால் அஃதெடுத்துரைக்குந்துணைத்தன்று. கல்லையுங்கனியவைக்குந் திவ்விய வாய்ச் சொல்லைச் சொல்லென்றுரைத்தலாகா தென்றே மாணிக்கவாசகமென் றிவ்வுலகத் தலைமே லேற்றி யோலமிடுவதாயிற்று.

“தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்குவிதிவகையும் யாமாரெமதார்பாசமா ரென்னமாயமிவைபோகக் கோமான்பண்டைத்தொண்ட ரொடுமவன்றன் குறிப்பேகுறிக்கொண்டு போகமாறமைமின்பொய் நீக்கிப் புயங்கனாள்வான் பொன்னடிக்கே”
இப்பரமோத்தம வாக்குவேதோபநிஷதங்க ளெல்லாவற்றையுமொருங்கேயளக்குந் துணையதாம். இப்படியே ஒவ்வொன்று மொவ்வோருபநிஷதமாமன்றி வாளா இலக்கியமன்று. சிதம்பரத்திலே சிவத்தோடிரண்டறக் கலந்த போது இவர்க்கு வயசு முப்பத்திரண்டு.

மாணிபத்திரன் - குபேரன் சேனாபதியாகிய ஒரு யடின். குபேரனோடு போர்புரிந்தபோது இம்மாணிபத்திரன் ராவணனை யெதிர்த்து அமர்புரிந்து மிக்க சூரனாய்நின்ற சமயத்து ராவணன் தன் கதாயுதத்தால் அவன்தலையைமோத அவன் தலை ஒருபக்கஞ்சாய்ந்து போனமையால் பார்சுவமௌலியெனப் பெயர் பெற்றான்.

மாண்டவி - தசரதபுத்திரனாகிய பரதன்பாரி. குசத்தவசன் புத்திரி. மாளவியெனவும் படுவள்.

மாண்டவ்வியன் - மகாதவங்களைச் செய்து சிறந்த ஒரு பிரமரிஷி. இவரே விதுரனாகப்பின்னர்ப் பிறந்தவர். விதுரன் காண்க.

மாண்டுகேயன் - (ரி) இந்திரப்பிரமிதிசீஷர். இவர் இருக்குவேதாத்தியனயர்.

மாதங்கதிவாகரன் - ஒருவடமொழிப்புலவன்.

மாதரி - மதுரையைச்சார்ந்த ஆயர்பாடியிலிருக்கும் இடைச்சியர்தலைவி. இவள் கோவலன் கொலையுண்டிறந்ததையும் கண்ணகி துன்புற்றதையுங் கேட்டு வருத்தமுற்றுத்த தீயில் விழுந்திறந்தவள்.

மாதர்கள் - சிவனுக்கு ஏவற்குரிய மாதர்கள் இப்பெயர் பெறுவர்கள் அவர்கள். பிராமிமாஹேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என எழுவர். சிலர் மதப்படி சண்டியோடு அஷ்டமாதரெனவும் படுவர்.

மாதவாசாரியர் - “வித்தியாரணியர்” காண்க.

மாதலி - தேவேந்திரன்சாரதி.

மாதவன் - விஷ்ணு. (உ) மதுவமிசத்தில் வந்தோன். (ந) கிருஷ்ணன். (ச) பரசுராமன்.

மாதவி - (க) யயாதிபுத்திரி. இவள் காலவனை மணந்து அஷ்டகன்முதலியோரைப் பெற்றவன். (உ) அகத்திய முனிவர் சாபத்தாலுலகிற் பிறந்த உருப்பசி. (ந) கோவலன் காதற்பரத்தை. இந்திரன் சபையகத்து ஒருவரை யொருவர் காமுற்று அகத்தியமுனிவராற் சாபம் பெற்ற சயந்தனும் உருப்பசியும் முறையே விந்தமலையில் மூங்கிலாயும், காஞ்சிநகரத்திலே தேவகணிகையாயும் பிறந்தன ரென்பது சிலப்பதிகாரம். உருப்பசி காஞ்சிநகரிற் பிறந்து மாதவியென்னும் பெயர்கொண்டாள். அவள் மரபிற் பிறந்த கோவலன் காதற் பரத்தையும் மாதவியெனப்பட்டாள்.

மாதவீயசங்கிதை - காலநிர்ணயம். வித்தியாரணியர் செய்த சோதிஷகிரந்தம் இதுவே.

மாதவீயம் - பராசரஸ்மிருதி வியாக்கியானம். மாதவாசாரியர் செய்தது.

மாதா - (க) இலக்குமி. (உ) துர்க்கை. (ந) உமாதேவியார்.
உலகத்தை யீன்றளித்தலின் உமாதேவியார்க்கிப்பெயர் உவமையாகுபெயர்.

மாதுமையம்மை - திருக்கோணமா மலையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மாதேவியம்மை - திருஅம்பர்மாகாளத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மாதைவேங்கடேசுரன் - இப்பிரபு, தமிழ்ப்புலவர்களுக்குப் பரமோபகாரியாயிருந்து தமிழைவளர்த்த அவதாரபுருஷன். ஒரு கவிக்கு ஆயிரம் பொன்னாகத் தொண்ணூற்றொன்பது கவிக்குக்கொடுத்து நூறாங்கவிக்கு நூறாயிரம் பொன்கொடுத்து ஒரு பிரபந்தங் கொண்ட பிரபுசிகாமணியிவனே. அது நோக்கியே படிக்காசுப்புலவரும் தமது தொண்டை மண்டல சதகத்தினுள்ளே “எல்லப்பன்” என்னுஞ் செய்யுளிலே “மாதைவேங்கடேசுரன் போல வரிசை செய்தான்” என்று புகழ்ந்தனர்.

மாத்திரி - மத்தமிரன் மகள். சல்லியன் தங்கை. பாண்டுவினது இரண்டாம்பாரி. இவள் பாண்டுவோடு உடன் கட்டையேறினவள். நகுலனும் சகாதேவனும் இவள் வயிற்றிற்பிறந்தோர்.

மாத்மீகன் - அறிவும், அறியப்படுபொருளுஞ் சூனியமென்றும், அதனாலே பிரபஞ்சந் தோன்றாதென்றுஞ் சொல்பவன்.

மாநாய்கன் - கண்ணகிபிதா. இவன் கோவலன் கொலையுண்டதையும் கண்ணகி துன்புற்றதையும் மாடலன் கூறக் கேட்டுத் துன்புற்றுத் தன்பொருளை யெல்லாம் தானஞ்செய்துவிட்டுத் துறவுபூண்டவன்.

மாந்தாதா - (இடி{) இரண்டாம் யுவநாசுவன் புத்திரன். இவன் பாரி சசிபிந்து. விந்துமதி இவன் மகன். மாந்தாதா, புருகுற்சன், அம்பரீஷன், முசுகுந்தன் என்னும் மூன்றாபுத்திரரையும் ஐம்பது புத்திரிகளையும் பெற்றவன். சௌபரி யென்னும் முனி இவ் வைம்பது புத்திரிகளையும் மணம் புரிந்தான்.

மாந்தரஞ்சேரலிரும்பொறை - சேரருள் ஒருவன். பராசரனென்னு மந்தணனுக்குப் பரிசில் கொடுத்தோன்.

மாபலி - பலிச்சக்கரவர்த்தி. இவன் பிரஹலாதன் புத்திரனாகிய விரோசனன் மகன்@ மகாபரக்கிரமசாலி. தேவர்களை இவன் துன்புறுத்த அவர்கள் விஷ்ணுபால் முறையிட, அவர் குறள் வடிவங்கொண்டு சென்று மூன்றடியாகவு மளந்து மூன்றாமடிக்கு அவன்தலைமேற் றிருவடியையூன்ற நெரிந்திறந்தவன்.
கம்பர் இச் சரித்திரத்தை இராமாயணத்தில் மிக்க மாதுரியமாகக் கூறுவர்.

மாழலனார் - இவாகடைச்சங்கப்புலவருள் ஒருவர். இவர் “பேர் மூலமுணருமாமூலர்” என்று ஆன்றோராற் புகழப்படுவர்.

மாமை - அரித்துவாரம்

மாயநகர் - தாருகாசுரன் அரசிருந்த நகரம்.

மாயாவதி - (க) சம்பராசுரன் பாரி. (உ) புத்தன் தாய்.

மாயாதேவி - சம்பராசுரன் வீட்டிற்பதிவிரதத்தை அநுட்டித் திருந்தவன்.

மாயாவாதி - சுத்தமாகிய பரப்பிரமம் மாயோபாதியினாலே வாதிக்கப்பட்டுச் சரீரத்தினுள்ளே சீவான்மாவாகநிற்குமென்றும், சீவான்மாவும் விவேகஞானமடைந்து, மாயாவத்தை கடந்து, பரமான்வாவோடு கடாகாயமும மகாகாயமும் போல அபேதமாய் விடுமென்றுஞ் சொல்லபவன்.

மாயாவி - (தி) மயன்மூத்த மகன். மண்டோதரிக்குந்து பிக்குந்தமையன். இவன் (மாயாவி) வாலியாற் கொல்லப்பட்டவன்.

மாயூரேசர் - திருமயிலாடுதுறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

மாயைபுரி - மாயாநகர். கஜமுகாசுரன் ராஜதானி. இது ஜம்புத்தீவின் கண்ணது.

மாராபிராமன் - புகழேந்திப்புலவர் காலத்திலே தொண்டைநாட்டுச் செஞ்சிநகரை யாண்ட சிற்றரசன். இவன் தமிழ்க்கலைவினோதனாய்ப்புலவர்களை அபிமானித்து வந்தவன்.

மாரீசம் - உபபுராணங்களுளொன்று.

மாரிசன் - (ரா) தாடகிபுத்திரன். சுபாகுதமையன். மாயாவிநோதங்களில் வல்லவன். விசுவாமித்திரர் யாகஞ் செய்தபோது அதனை அழிக்கக்கருதி வந்த இம்மாரீசன் சுபாகுஎன்னுமிருவருள் சுபாகுவை இராமன் அக்கினிஅஸ்திரத்தாற் கொன்று மாரீசனை வாயு அஸ்திரத்தாற் கொன்று மாரீசனை வாயு அஸ்திரத்தினாற் கடலிலே தள்ளிவிட்டான். அதன்பின்னர் இம்மாரீசன் சீதையை ராவணன் அபகரித்துச் சென்ற காலத்தில் மாயமானாகி ராமனை வஞ்சித்துக்காட்டுட் கொண்டு செல்ல ராமன் அதனைமாயம் என்றுணர்ந்து அவனைப் பாணத்தாற் கொன்றான்.

மார்க்கண்டேயபுராணம் - வியாசருடைய சீடராகிய சைமினிபகவான் முற்பிறப்பிலே பிராமணகுலத்தனவாயும், முற்பிறப்பிலெய்திய ஞானவிசிட்டத்தினாலே மிகுந்த சாமார்த்திய முடையனவாயும் உள்ள இரண்டுபடிpகளை நோக்கி, விஷ்ணுமூர்த்தி மானுடசரீரம் எடுத்தமைக்குக் காரணம் யாது என்றும், தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்னும் பாண்டவர் ஐவர்க்கும் பொதுவாகத் திரௌபதியம்மையார் என்னுமொருவரே மனைவியாக எய்துதற்குக் காரணம் யாதுஎன்றும், பலராமர் மதுமயக்கத்தினாலே தாம் செய்து கொண்ட பிரமஹத்திபாவ நிவாரணத்தின் பொருட்டு இவர் பிராயச்சித்தஞ் செய்து கொள்ள வேண்டியது எற்றுக்கு என்றும், திரௌபதியாருடைய புதல்வர் ஐவருக்கும் காத்தற்றலைவராயிருந்த கிருஷ்ணார்ச்சுனரிருவருக்கும், அகாலமரணம் எய்துதற்குக் காரணம்யாது என்றும் வினாவிய நான்கு விசிஷ்டவினாக்களின் உத்தரவிவரணங்களை உணர்த்தும் புராணம். இது முப்பத்தீரihயிரங் கிரந்தமுடையது. இது மார்க்கண்டேயப் புரோக்தமாதலின் இப்பெயர்த்தாயிற்று.

மார்க்கண்டேயனார் - மதுரைத்தலைச் சங்கப்புலவர்களுளொருவர். புறநானூற்றிலொரு செய்யுள் இவர் பாடியது. இவர் செய்த நூலை நச்சினார்க்கியர் தலையாய வோத்தென்று கூறுவர். இதனை “அறுவகைப்பட்டபார்ப் பனப்பக்கமும்” என்னுந் தொல்காப்பியச்சூத்திரவுரையினுட் காண்க.

மார்க்கண்டேயன் - (க) மிருகண்டன் புத்திரர். இவர் மகா இருஷி. இவர் தமது ஆயுளெல்லை பதினாறென்பதறிந்து தீர்க்காயுள் பெறக் கருதிச் சிவனைத் தினந்தோறுமிடைவிடாது பூசித்து அவரருளால் காலக்கடவுளது வன்மையை வென்றவர்.

மாலதி - காவிரிப்பூம் பட்டினத்துள்ளதோர் பார்ப்பனி.

மாலி - சுகேசன் புத்திரன். இவ்விராடிசன் தேவாசுரயுத்தத்தில் விஷ்ணுவினாற் கொல்லப்பட்டவன்.

மாலியவந்தம் - கிஷ்கிந்தைக்குச் சமீபத்துள்ள ஒரு மலை. வாலிவதத்தின் பின்னர் ராமலடி;மணர் கார்காலங்கழித்தவிடம் இம்மலையே.

மாலியவான் சுகேசன் புத்திரன். முதன்
மாலியவந்தன்
முதல் இலங்காபுரியில் அரசு செய்தவன் இவனே. இவனை வென்று குபேரன் அரசனாயினான். அவனைவென்று ராவணன் இலங்கையைக் கைக்கொள்ள மாலியவான் அவனுக்கு மந்திரியாயினானன்.

மாலினி - ஒருநதி. இது அயோத்திக் குவாயுதிக்கில் அபரதாலபர்வதங்களிலிருந் துற்பத்தியாகிக் கோசல தேசத்திற் பிரவாகிப்பது.

மால்வணங்குமீசர் - திருமாற்பேற்றிலேகோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

மாவசன் - அச்சோதை தந்தை.

மாழையங்கண்ணி - திருவலிவலத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மாளவம் - முன்னர் உச்சியினிபுரமும் பின்னர்த் தாராபுரமும் ராஜதானியாகப் பெற்ற தேசம். இது விதர்ப்பத்துக்கு வடக்கிலுள்ளது. இது மாளுவமெனவும்படும்.

மாளவி - மத்திரதேசாதிபனாகிய அசுவபதிபாரி. சாவித்திரி தாய்.

மாளுவவேந்தர் - மாளுவதேசத்தரசர்.

மாறனார் - மதுரையாசிரியன் மாறனார் எனப்படுபவர் இவரே. இவர் இடைச்சங்கத்துப் புலவர்களுளொருவர்.

மாறொக்கத்துநப்பசலையார் - கொற்கையைச் சூழ்ந்த நாட்டில் விளங்கிய இப்புலவர். காரி முதலியோரைப்பாடிப்பெரு நிதிபடைத்தவர். (புறநா)

மாற்றறிவரதேசரர் - திருப்பைஞ்ஞீலியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

மானக்கஞ்சாறநாயனார் - கஞ்கனூரென வழங்குங் கஞ்சாறூரிலே வேளாளர் குலத்திலே விளங்கியவொரு சிவபக்தர். மணக்கோலஞ் செய்து மணப்பந்தரின் கீழ் வந்திருந்த தமது புத்திரியினது கூந்தலை மாவிரதிவேடங் கொண்டு சென்று சிவபெருமான் கேட்க அதனைமறாது கொய்து கொடுத்தவருமிவரே.

மானசசரசு கைலாசத்திற் குபேரவனத்தி
மானசவாவி லுள்ளசரசு. அன்னப்படிpகளுக் குறைவிடமிதுவே. அன்னங்கள் பிறவிடங்களுக்குச் சென்று வாழினும் மழைக்காலத்தில் மீண்டுசென்று இவ்வாவியை யடைந்து விடும். இவ்வாவியின் காட்சி மிக்கரமணியமும் வசீகரமுமுடையதாம்.

மானவம் - உபபுராணத்தொன்று.

மாஹேசுவரசூத்திரம் - சம்ஸ்கிருத வியாகரணத்துக்கு முதனூலாகச் சிவபிரான் தமது டமருகத்தினின்றுந் தோற்றுவித்த சப்தமூலசூத்திரங்கள். அவை, (க) “அ, இ, உண்” (உ) “இருலுக்” (ந) “ஏ, ஓங்”, (ச) “ஐ, ஒளச்,” “ (ரு) ஹயவரட்,” (சு) “லண்” (ஏ) “ஞ ம ங நம்” (அ) “ஜ ப ஞ்,” (கூ) “கடதஷ்,” ய “ஜபகடதஷ்,” (கக) கபசடதசடதவ்,” (கஉ) “கபய்” (கந) “சஷஸர்.” (கச) “ஹல்”

மாஹிஷ்மதி - நர்மதை தீரத்துள்ள நகரம்.

மாஹேசுவரம் - உபபுராணங்களிலொன்று.

மாஹேயர் - இப்பொழுது மூலபானாவென்று வழங்குந் தேசத்துப் பிராசீன வேளாளர்.

மிசிரகேசி - வசுதேவன் தம்பியாகிய வற்சகன்பாரி.

மிசிரன் - கல்வியாலுயர்ந்த பெரியோர்க்குரிய ஒருவரிசைப்பெயர். கிருஷ்ணமிசிரன். வராகமிசிரன் எனபன போலவரும்.

மிசிரஸ்தானம் - துருக்கரால் மிசிறென்று வழங்கப்படுவதாகிய வொரு தேசம். தற்காலத்தில் ஐரோப்பியரால் “ஈஜிப்ட்” என வழங்கப்படுவது. யயாதியினால் தன்தேசத்தனி;ன்றும் மோடப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இம்மிலேச்சதேசஞ் சென்று அத்தேசத்துக்கரசராகி அச்சனங்களைக் கலந்தமையால் மிசிரஸ்தான மென்படுவதாயிற்று. சர்வில்லியம்ஜோன்ஸ் என்னுமாங்கில பண்டிதரும் இக்கருத்தேபடத் தமது நூலொன்றிலெழுதினர். (சுநிழசவள ழக வாந சு. யு. ளுழஉநைவல)

மிதிலன் - நிமிபுத்திரன். வசிட்டாச்சாபத்தால் நிமிதேசத்தை யிழந்துழல அவன் ராச்சியம் அரசின்றி யிருப்பக்கண்ட. மந்திரிகள் அவன் தேகத்தைக்கடைய அதினின்றும் ஒருபுத்திரனுற்பத்தியாயினான். அவன் பெயர் மிதிலன். கடைந்தெடுக்கப்பட்டவனென்னபது பதப்பொருள். நிமியிறந்தபின்னர் அவன் தேகம் தைலத்தாற் பக்குவம் பண்ணி நெடுங்காலம் வைத்துக் காக்கப்பட்டமையால் அவனுக்குப் பின்னர்க் காலத்தில் விதேகனெனவும் மொரு பெயருண்டாயிற்று.

மிதிலை - மிதிலனென்னுமரசன் நிருமித்த நகரம் ஆதலின் மிதிலையெனப் பெயர் பெற்றது. இது கண்டகிகௌசிகி நதிகளுக்கு நடுவேயுள்ளது. ஜனகனுக்கு ராஜதானி. பஞ்சகௌடதேசங்களுள் மொன்று.

மித்திரசகன் - (இடி{) கல்மாஷபாதன் காண்க.

மித்திரன் - அரிஷ்டன் தந்தை. நாலாம் ரேவதி நாயகன். சூரியனுக்கும் பெயர்.

மித்திராயு - (ரா) திவோதாசன் மகன்.

மிருகண்டன் - பிருகுபுத்திரனாகிய தாதைக்கு ஆயதி என்பவள் பெற்ற புத்திரன். மார்க்கண்டேயன் தந்தை.

மிருச்சகடி - இது சூத்திரகனாலே செய்யப்பட்ட ஒரு நாடகம். அது பத்துப்பாகமுடையது.

மிருடன் - உருத்திரன். சுகத்தைக் கொடுப்பவனென்பது பதப்பொருள்.

மிருதகன் - (ய) அக்குரூரன் தம்பியரு ளொருவன்.

மிருதுபத்து - (ய) அக்குரூரன் தம்பியரு ளொருவன்.

மித்துகாவதி - மாளவதேசத்துள்ள ஒரு பட்டணம்.

மிருத்தியு - (க) கூற்றுவன். யமன்.

மின்னம்மை - திருப்பூவனத்திலே கோயில் கொண்டிருக்கும்ம தேவியார் பெயர்.

மின்னனையாளம்மை - திருப்பெருவே@ரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மீமாஞ்சகன் - வேதம் அநாதி யென்றும், ஈசனை வேண்டாது கன்மமே பலத்தைக் கொடுக்குமென்றுஞ் சொல்பவன்.

மீமாஞ்சை - வேதார்த்த மிதுவென்று நிச்சயித்துக் கூறும் நியாய சாஸ்திரம். அது பெரும்பாலும் கிரியாகாண்டத்தையே யெடுத்து வியவகரிக்கும். இந்நூல் செய்தவர் ஜைமினி பகவான். இதனைப்பூர்வமீமாஞ்சை யென்று வழங்குவது முண்டு.

மீனாடிp - மதுரையிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மீனாடிpபீடம் - நவசத்தி பீடங்களுளொன்று.

மீனாங்கன் - மன்மதன்.

முகூர்;த்தை - தடிப்பிரஜாபதியினது இரண்டாம் புத்திரி. தர்மன்பாரி. இவளிடத்தில் பிறந்தசந்ததி மௌகூர்த்தியரெனப்படுவர்.

முகையலூர்ச்சிறுகருத்தும்பியார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

முக்காவல்லியம்மை - திருமண்ணிப்படிக்கரையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

முசுகுந்தன் - (இடி{) மாந்தாதாகனிஷ்ட புத்திரன். இவன் தேவர்களுக்கு யுத்தத்திற் சகாயஞ் செய்யப் போய் வெககாலம் நித்திரையின்றி அவர்கள் பொருட்டு யுத்தஞ் செய்தான். பின்னர்த்தேவர்கள் மகிழ்ந்து நீ நெடுங்காலத்துக்கு இடையூறின்றி நித்திரை செய்யக் கடவை. நித்திராகாலத்தேயுன்னை யெழுப்புவன் யாவனோ அவன் உயிர் துறக்க வென்று அநுக்கிரகித்தார்கள். கிருஷ்ணனது சூதினால் காலயவனன் முசுகுந்தன் நித்திரையை எழுப்பி உயிர்துறந்தான்.

முஞ்சன் - போஜன் சிறிய தந்தை.

முண்டகோபநிஷதம் - அஞ்ஞானமாகிய கணுவைச் சிதைக்கும் முண்டகம் போலுதலின் முண்டகோபநிஷதமென்னும் பெயர்த்தாயிற்று. முண்டகம் - மயிரெறிகருவி.
இவ்வுபநிஷதம் அதர்வ வேதத்தைச் சார்ந்தது. இவ்வுபநிஷதத்திலே, இவ்வுபநிஷகங் கேட்டரிஷிகள் குருபரம்பரை, பிரமவித்தை, வேதவித்தை, அக்கினிகாரிய தத்துவம், கிரியாபலத்தினது நிலையின்மை, ரிஷியும் பிரம வித்தையும், உண்மையை நாடுவோன் குரு வைத்தேடுவன், எல்லாம்பிரமத்தின்பாலுதிக்கும், எல்லாம் பிரமமாம் பிரமமும் அதனையடையுமுபாயமும், பிரணவவில்லு, யோகம் என்பனவே கூறப்பட்டுள்ள விஷயங்களாம்.

முதற்சங்கம் - இதன் வரலாற்றை மேல்வரும் ஆசிரியப்பாவானுணர்க. “வேங்கடங்குமரி தீம்புனற் பௌவத், திந்நான்கெல்லையி னிருந்தமிழ்பயின்ற, செந்நாப்புலவர் செய்தியீண்டுரைப்பி, னாடகக்குடுமி மாடக்கூடலின், முன்னர்ச்சங்கக்கன்மாப்பலகையிற், றிரிபுரமெரித்தவிரி சடைக்கடவுண், மற்றன்மராத்தார்க்குன் றெறியிளஞ்சேய், திண்டிறற்புலமைக் குண்டிகைக்குறுமுனி, புவிபுகழ்மருதங் கவினியமுரிஞ்சிப், பதிமுடிநாகன் நிதியின் கிழவ, னினையர் நானூற்றுநாற்பத் தொன்பதின்ம, ரனையர்நானான் காயிரநூற்றொடு, நாற்பத்தொன்பதின்மர் பார்க்கிற் செந்தமிழோர், புரிந்தன செய்யுட் பெரும்பரிபாடலு, முதுமையடுத்த நாரையுங்குருகுங், கதியுறச்செய்த களரியாவிரையு, மாங்கவரிருந்தது மத்தொகையாகு, மீங்கிவர் தம்மை மிரீ இயபாண்டியர்கள், காய்சினவழுதி முதற்கடுங்கோனீறா, வேசிலாவகையெண்பத் தொன்பதின்மர் கவியரங்கேறினா ரெழுவராகு, மகத்துவமுடைய வகத்தமியமிலக்கணம்” இச்சங்கமிருந்த தென்மதுரையும் அதனைச்சார்ந்த சிலநாடுகளும் கடல்கொண்டழிந்து போக அதற்குப்பின்வந்த பாண்டியர்கள் கபாடபுரத்தைத் தமக்கு ராஜதானியாக்கி இரண்டாஞ் சங்கத்தை அங்கே ஸ்தாபனஞ் செய்தார்கள். தமிழ் என்பதனுள் இதன்விரிவு காண்க.

முதாவதி - சௌநந்தை. விடூரதன் மகள். இவள் தோளிடசளோடு நந்தனவனஞ் சென்றபோது குஜம்பன் என்னும் ராடிசனால் பாதலத்திற் கொண்டு போய் மறைக்கப்பட்டாள். வற்சந்திரன் அவ்விராடிசனைக் கொன்று அவளை மீட்டுக் கொண்டு போய் மணம் புரிந்தான்.

முத்தாவதேசுரர் - திருத்துருத்தியிலெழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர்.

முத்துக்கிருஷ்ணமுதலியார் - மணலிமுத்துக் கிருஷ்ணமுதலியார் எனப் படுபவரிவரே. இவர் இற்;றைக்கு நூற்றிருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னர்த்த தென்புலஞ் சேர்ந்த அருணாசல கவிராயர் பாடிய இராமாயண கீர்த்தனத்தைத் தமது சபையில் அரங்கேற்றுவித்து அவர்க்குக்கனகாபிஷேகம் பண்ணி,

“கனந்தந்தான் கனகாபிஷேகந்தந்தான் களங்கமிலாக்கருப்பொருளை யழைத்துத்தந்தான், மனந்தந்தான்முடிசூட்டு மாலைதந்தான் வாணிசிங்காசனத்திருத்தி வரிசைதந்தான், இனந்தந்தானிராமகதை யெவர்க்குந்தந்தான் எனைராமாணக்கவிஞ னெனப்பெயர்தந்தான், அனந்தந்தான்மணலி முத்துக்கிருஷ்ணபூப னகந்தந்தானிருமையிலுஞ் சுகந்தந்தானே” என்னுங் கவிகொண்டமாந்தர் பெருந்தகை.

முத்துத்தாண்டவர் - இவர் சங்கீதவித்துவான். இவர்பாடிய பதங்கள் அத்தியற்புதரசமுடையன. இவர்சீகாழியிலே பிறந்து சிதம்பரத்திற் சிவதொண்டு பூண்டிருந்தவர். இவர் இற்றைக்க இருநூற்றறுபது வருஷத்துக்கு முன்னுள்ளவர்.

முத்கலன் (க) (ரி) இவ்விருஷிமகா
முற்கலன் சீலங்களை யுடையவராய்த் துர்வாச இருஷிமுதலியோரைச் சிநேகித்துத் தேவலோகங்காறும் பிரசித்தி பெற்றவர். (உ) அஜமீடன் இரண்டாம் புத்திரனாகிய நீலன் வமிசத்தவன். தந்தை அரியசுவன். திவோதாசன் இவன் மகன். புத்திரி அகலியை. இவள் கௌதமன் பாரி. இம்முத்கலன் டித்திரியனாகவும் தபசினால் பிராமணமாயினான். இவன் வமிசத்துப் பிராமணர் மௌத்கல்லிய கோத்திரத்தவர்களென்ற சொல்லப்படுவார்களாயின்றுமுளர்.

முத்தொள்ளாயிரம் - கடைச்சங்கப்புலவர் சேரசோழபாண்டியர்கள் மீது பாடிய ஒருநூல்.

முயற்சிநாயகர் - திருமீயச்சூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

முரசை - குபேரன் மனைவி.

முரலை - கேரளநாட்டகத்தொருநதி

முராசுரன் - தனுஜன். நரகாசுரன் தமையன். இவனைக் கிருஷ்ணன் கொன்று முராரியென்னும் பெயர் பெற்றான்.

முராரி - (க) இவன் அனர்க்கராகவீயமென்னும் நாடகஞ் செய்த சம்ஸ்கிருதகவி. (உ) கிருஷ்ணன்.

முருகநாயனார் - திருப்புகலூரிலே பிராமணகுலத்தில் விளங்கிய ஒரு சிவபக்தர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குச் சிநேகராக விருந்தவர்.

முருகன் - பாலசுப்பிரமணியக்கடவுள்.

முருகுவளர்கோதை - திருக்கண்ணார் கோயிலில் எழுந்தருளி யிருக்கும் தேவியார் பெயர்.

முரை - ஒன்பதாம் நந்தன் பாரி. இவள் சந்திரகுப்தன்தாய். இவள் சூத்திரவர்ணத்தவள்.

முல்லைநகைவடிவாள் - திருமயேந்திரப்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

முல்லைவனநாதர் - திருமுல்லை வாயிலிற் கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

முல்லைவனேசர் - திருக்கருவூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

முறுவல் - இஃது இறந்நாடகத்தமிழ் நூல்களுளொன்று. பழைய காப்பியம் ஐந்தனுள் ஒன்று.

முனி - தடிப்பிரஜாபதி புத்திரிகளொருத்தி.

முனையடுவார்நாயனார் - சோழநாட்டிலே திருநீடூரிலே வேளாளர் குலத்திலவதரித்துக்கூலிப்படையாளாகப் போர்முனையிற் சென்று பொருது பொருள் சம்பாதித்து அப்பொருளைக் கொண்டு சிவனடியார்களைத்திருவமுது செய்வித்தலை விரதமாகக் கொண்ட ஒரு சிவபக்தர்.

முஷ்டிகன் - கஞ்சன் தூதன். பலராமன்என்னும் மல்லயுத்த வீரனாற் கொல்லப்பட்டவன்.

மூகன் - அருச்சுணன் தவஞ் செய்த போது அவன் தவத்தைப் பரீடிpக்குமாறு கிராதவேடங் கொண்டு சென்ற சிவபிரானாற் கொல்லப்பட்ட பன்றிரூபங் கொண்டதானவன்.

மூகாம்பை - சையபர்வதசமீபத்தில் எழுந்தருளியிருக்கும் தேவி பெயர்.

மூர்க்கநாயனார் - தொண்டை நாட்டிலே வேளாளர் குலத்திலே தலைமை பெற்று விளங்கிய ஒரு சிவபக்தர். இவர் தம்மிடத்துள்ள திரவியங்களையும் அடிமை நிலம் முதலியவற்றையும் மகேசுர பூசையின் பொருட்டுச் செலவு செய்துவிட்டு வேறுவழியின்றித் தாம் முன்பயின்ற சூதினாலே பொருள் சம்பாதித்துத் தாம் கொண்ட மகேசுர பூசைத்தொண்டை வழுவாது செய்துவந்தவர்.

மூர்த்திகள் - அஷ்டமூர்த்திகள் காண்க.

மூர்த்திநாயனார் - பாண்டிநாட்டிலே மதுராபுரியிலே வைசியர் குலத்திலே விளங்கிய ஒரு சிவபக்தர். தாஞ்செய்து வந்த சந்தனத் திருத் தொண்டுக்குச் சந்தனக்கட்டை அகப்படாமலிடையூறுவரத் தமது முழங்கையைச் சந்தனக்கட்டை போலக்கல்லிலே எலும்பு தேயும்படி தேய்த்த வுறுதிப்பாடுடையவரும், மதுரைநகருக்கு அரசனாகும்படி சிவாஞ்ஞை உண்டாயபொழுது சடாமுடியே கரீடமும் ருத்திராடிமே ஆபரணமுமாகக் கொண்டு அரசியற்றியவரும் இவரே.

மூலகன் - (இ) நாரீகவன். இவன் அசுமகன் புத்திரன். பரசுராமன் டித்திரியநாகஞ் செய்து வரும் போது இவன் தன்மனைவியை வைத்துவிட்டிறந்தான். அவள் மூலமாக மீளவும் டித்திரியவமிசம் தழைத்தமையால் இவன் மூலகன் என்னும் பெயர் பெற்றான்.

மூவன் - பெருந்தலைச்சாத்தனாராலிகழ்ந்து பாடப்பட்ட சிற்றரசன். அப்புலவர் பாடிய “பொய்கைநாரை” என்னுஞ் செய்யுளிலே,
“பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக்கையற்றுப் - பெறாது பெயரும் புள்ளினம்போலநின் - னசைதரவந்து நின் னிசைநுவல் பரிசிலேன் - வறுவியேன் பெயர்கோழூ ழூ ழூ “ எனப்பாடி நொந்து சென்றனர்.

மூஷிகம் - (க) ஒருதேசம். அது தற்காலம் கொச்சியெனப்படும். (உ) விநாயகர்வாகனம். (உ) சௌபரி முனி பாரியாகிய மனோமனய என்பவளைக்கிரவுஞ்சன் என்னுங் கந்தருவவேந்தன் கண்டு மோகித்து அவள்கரத்தைப்பற்றினன். அதுகண்ட முனிவர் வெகுண்டு கிரவுஞ்சனை “மூஷிக” மாகுக வென்று சபித்தார். அவன் மூஷிகமாகிப் பலிபீடமுள்ள விடங்களை யெல்லா மகழ்ந்து திரிகையில் விநாயகக்கடவுள் அம்மூஷிகத்தைத் தமக்கு வாகனமாக்கிக் கொண்டனர். மூஷிகம் - பெருச்சாளி.

மெய்ஞ்ஞானநீலகண்டேசுவரர் - திருப்பைஞ்ஞீவியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

மெய்கண்டதேவர் - திருவெண்ணை நல்லூரிலிருந்த வேளாளராகிய சுவேதவனப்பெருமாள். இவர் பரஞ்சோதி முனிவரது மாணாக்கர். சித்தாந்தசாஸ்திரத்து மெய்ப்பொருளுணர்ந்த சாஸ்திரத்து மெய்ப்பொருளுணர்ந் துலகுய்யவெளிப்பட்டருளிய குருபீட மாதலின் மெய்கண்டதேவரென்னுங் காரணப் பெயர் கொண்டார். வடமொழிச்சிவஞான போதத்தைத் தமிழிலே மொழிபெயர்த்து அப் பெயரினாலே தானே வெளியிட்டவர் இவரே. இவர்க்கு மாணாக்கர் அருணந்தி சிவாசாரியார்.
அருணந்திசிவாசாரியர் தாம் மெய்கண்டதேவருக்கு வயசாலும் கல்வியறிவாலும் மிக்கவரென நினைந்து தம்மாணாக்கரோடு அவர் பாற் சென்று இறுமாப்போடு உலாவிநின்றனர். அப்பொழுது அருணந்தி சிவாசாரியர் ஏவலால் அவர் மாணாக்கருளொருவர், மெய்கண்டதேவரைவணங்கி, அகங்காரமாவது யாதென்றுவினாவ, மெய்கண்ட தேவர் “நுங்குருமூர்த்தி நிற்கு நிலையே அதுவாம்” என்றருளிச்செய்ய, அருணந்திசிவாசாரியர் மெய்கண்டான் றிருவடியிலே வீழ்ந்து திருவடிகளிரண்டையும் பற்றிக்கொண்டு தமக்குஞானோபதேசஞ் செய்தருளுமாறு வேண்டிச் சிவஞானபோதநூலைக் கேட்டறிந்தா ரென்பது கர்ணபரம்பரை, இவர்கள் காலம் அறுநூற்றைம்பதுக்கு முன்னுள்ளது. இம்மெய்கண்டதேவர் அவதாரஞ் செய்திலராயின, தமிழ் நாட்டில் இரவுரவாகமத்துட் கூறுப்பட்ட சிவஞானபோத படலமாகிய சகலாகம நவநீதம் எளிதிலே வெளிப்படுதலும், சைவம் ஏனையசமயப் பெரும்படைகளையெதிர்த்துப் பொருது வெற்றித்தம்பம் நாட்டுவதுமில்லையாம்.

கலியின் கொடுமைக்கஞ்சிச்சமயாசாரிய ரெல்லாம் மறைந்த இக்காலத்தே, நாற்றிசையினும் ரணபோமுழக்கி வளைந்திருக்கும் புறச்சமயவாதிகள் படைத்திரள், இச்சிவஞானபோதமென்னும் பேரகழிக்கும் சிவஞானசித்தியென்னும் வாணாஸ்திரத்துக்குமே அஞ்சி நிலைதளர்கின்றது. அப்பேரகழியும் அவ்வஸ்திரமுமில்லையாயின் சைவம் நெடுங்காலத்திற்கு முன்னே அரசிழந்து விடும். அவ்வகழியைக் கடக்குமாற்றலும், அவ்வஸ்திரத்திரத்திற்கு மேற்பட்ட அஸ்திரமும், உலகத்தில் மற்றெச்சமயமும் எக்காலத்திலும் பெறாதென்பது நன்கு துணிந்வுண்மையாம்.

முதுநாரை - முதற் சங்கத்தார் செய்த இசைத்தமிழ்நூல்.

மூதுகுருகு - முதற் சங்கத்தார் செய்த இசைத் தமிழ்நூல். இது பெருங்குருகெனவும் படும்.

மெய்ப்பபொருணாயனார் - தம் அரண்மனையினுள்ளே புகுந்து சைவாகமோபதேசஞ் செய்ய வந்தேன் என்று கூறி அங்கோரிடத்திற் றனிமையிற் கொண்டு சென்றிருந்து உபதேசஞ் செய்வான் போல, மறைத்து வைத்திருந்த உடைவாளாலே தம்கைக்குத்தி வீழ்த்திய முத்திநாதனென்னும் பகை யரசனுக்கு அவ்வுயிர் போஞ் சமயத்தினும் ஒருவரும் இடையூறு செய்யாதபடி பக்கத்திலே நின்றவர்களைத் தடுத்து உயிர் விட்டபக்த சிரோமணியாகிய இவர், சேதிநாட்டிலே திருக்கோவலூரிலே மலையமாநாட்டாருக்கு அரசராக் விருந்தவர்.

மேகநாதன் - ராவணனுக்கு மந்தோரியிடத்துப் பிறந்த புத்திரன். இந்திரனோடு பொருது இவனைவென்றமையால் இந்திரஜித்து என்னும் பெயர் பெற்றவன். லடி{மணணாற் கொல்லப்பட்டவன். இருவர்க்குமிடையே நடந்தயுத்தம்மிகக் கடியதும்கொடியதுமே. இவனைக் கம்பர் தாம் பாடிய ராமாயணத்திலே “வில்லாளரானார்க் கெல்லாமேலவன்” என்று புகழ்வர்.

மேகலம் - (க) நர்மதை யாற்றை யுடைய தேசம். (உ) மேகலமலை.

மேகலன் - விந்தியாபர்வதச் சாரலில் வசிக்கும் ஒரிருஷி.

மேகலகன்னிகை - நர்மதை. மேகலபர்வதத்திலுற்பத்தியாகும் நதியாதலின் இப்பெயர் பெற்றது.

மேதாதிதி - (க) பிரியவிரதன் புத்திரருள் ஒருவன். இவன் பங்குக்கு வந்த தீவுபிலடித்துவீபம். இவன் புத்திரரெழுவர். (உ) கண்ணுவர் புத்திரன். இவன் வமிசத்துப் பிராமணர்காண்வாயா ரெனப்படுவர்.

மேதாநிதி - சிரகாரி.

மேரு - பூமிக்கு நாராசம் போலத்தென் துருவம் முதல் வட துருவம் வரையும் உள்ளே வளர்ந்து வடதுருவத்தில் முனைத்திருக்கும் பொன்மயமாகியமலை. வடதுருவம் சுமேருவென்றும், தென் துருவம் குமேருவென்றும் வடவா முகம் என்றும் சொல்லப்படும். சுமேருவே சாதாரணமாக மேருவென்றும வழங்கப்படும். இச்சுமேருப்பிரதேசத்திலிருப்பவர்களுக்கு உத்தராயண காலமாகிய ஆறுமாசமும் பகலும் தடிpணாயனகாலமாகிய ஆறுமாசமும் இரவுமாகவிருக்கும். இம் மேருவினது புத்திரி மேனகை.

மேருதேவி - நாபிபாரி. இருஷபன் தாய்.

மேலைத்திருக்காட்டுப்பள்ளி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

மேனகை - (க) ஒரப்சரஸ்திரி. விசுவாமித்திரன் தவத்தை அழிக்குமாறு இந்திரன் விடுக்க, அவள் சென்று அவரைக்கூட்டிச் சகுந்தலையைப் பெற்றாள். (உ) மேருபுத்திரி. இமவான் பாரி. இவளுக்கு மனோரமையென்றும் பெயர். இவள்புத்திரிகள் கங்கையும் பார்வதியும்.

மேனை - (க) பிதிர்தேவதைக்குச் சுவத்தையிடத்துப் பிறந்த புத்திரி. இவள் புத்திரி வைதரணி. (உ) மலையரசன் மனைவியாகிய மேனகை.

மைத்திரேயன் - (க) (ரி) குசீலவன் புத்திரன். பராசரன்சீஷன். இவன் துரியோதனனைக் காமியவனத்திற்கண்டு அவனுக்கு ஞானோபதேசஞ் செய்ய எத்தனித்த போது அதனைச்சிரவணஞ் செய்யாது பரிகசித்தமையினால் துரியோதனனை “வீமன்கதாயதத்தால் இறக்க” வென்று சபித்துச் சென்றவன்.

மைநாகன் - இமவான் மேனகையிடத்துப் பெற்ற புத்திரன். கிருதயுகத்தில் மலைகளெல்லாம் சிறகுகளையுடையனவாய்ப் பூவுலகில் எங்கும் பறந்து பட்டணங்கள் மீது சென்று படிந்து அப்பட்டணங்களையும் ஜனங்களையும் நாசஞ் செய்து வந்தன. அதுகண்ட இந்திரன் அம்மலைகளைச் சிறகரிந்து பறவாவண்ணந் தடுத்தான். அப்போது மைநாகன் வாயுசகாயத்தால் தப்பியோடிச்சமுத்திரத்திலொளித்தான்.

மைந்தன் - ஒருவாநரன். இவனுக்குச் சகோதரரிருவர். இவன் அசுவினிதேவர்கள் புத்திரன். இவன் சுக்கிரீவன் சேனாபதிகளுளொருவனாயினான்.

மையார்தடங்கணாயகி - திருக்கோடிக்குழகரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மைவார்குழலியம்மை - திருவிற்குடி வீரட்டத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மோகவதி - (க) மோகவந்தன் புத்திரி. சுதர்சனன் பாரி. இவளே நிருகன் வமிசத்துக் கடைத்தோன்றல். (உ) பாரதயுத்த காலத்திலே குருNடித்திர சமீபத்திலிருந்த வொருநதி. பாண்டவர் பாரதயுத்தம் முடிந்த பதினெட்டாநாளிரவு இந்நதிக் கரையில் நித்திரை செய்தார்கள்.ஷ

மோகாம்பிகை - திருப்பாற் றுறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

மோகினி - விஷ்ணு வடிவங் கொண்ட காலத்தில் வகித்த பெயர். அமிர்தமதனகாலத்தில் தேவர்களோடு அசுரர் மாறுகொண்டு நிற்க அவ்வசுரரை அமிர்தத்திலே பங்கு பெறாமற்றடுக்கு முபாயமாக இம் மோகினிரூபத்தை விஷ்ணு வெடுத்து அவர்களை நோக்கி, “இவ்வமிர்தம் வேண்டுமோ, என்போகம் வேண்டுமோ” வென்று கேட்க, அவர்கள் அம்மோகினிமேற் காதலித்துப் புறஞ் சென்றார்கள். அவ்வேளையில் தேவர்கள் எல்லோருங் கூடி அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொள்வாராயினர். அப்போது ராகுவும் கேதுவும் தேவவுருக்கொண்டு தேவர்களுட்கலந்து நின்று அமிர்தம் பருக எத்தனித்தார்கள். அதனைச் சூரியசந்திரர் குறிப்பாலுணர்த்த வுணர்ந்த வி;ஷ்ணு தமது சக்கரத்தால் ராகு கேதுக்களது சிர சரீரங்களை யூறு செய்தா ரென்பது புராணசாரம்.

(உ) தாருவனத்துக்கண் சிவன் சுந்தரவடிவங் கொள்ள விஷ்ணு கொண்ட மோகினி வடிவு.

(ந) ஓரப்சரப் பெண். இவன்பூஞ்சோலை முதலிய விடங்களிலும், காமுகர்கனவிலுந் தோன்றி அவர்களை யுருக்குலைக்குந் தொழிலினையுடையவன்.

மோசிகீரனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களு ளொருவர். சேரமான் தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும் பொறையுங் கொண்கானங் கிழானும் இவராற் பாடப்பட்டோர். இவர் திருவள்ளுவருக்குஞ் சிறப்புக்கவி யொன்று கூறினர்.

மோசிசாத்தனார் - புறநானூறு பாடினோரு ளொருவர்.

மோடி - வனத்திலுறையுங்காளி.

மௌகூர்த்திகர் - தர்மன் முகூர்த்தையிடத்துப் பெற்ற தேவகணம். முகூர்த்தகாலங்களுக் கதிதேவதைகளாகிய இவர்கள் அவ்வம் முகூர்த்தங்கள் தோறும் உலகத்திலே செய்யப்படும் கருமங்களை யேற்றுவைத்திருந்து அந்தக்கிரமமாகப் பலன்களையூட்டுவோர்.

மௌத்தகல்லியர் - முத்கலன் கோத்திரத்துப்பிராமணர்.

மௌத்தகல்லியன் - (ரி) சாகல்லியன் சீஷன்.

மௌநேயர் - கசியபன் முனியென்பவள் வயிற்றிற் பெற்ற கந்தருவர்.

மௌர்வியர் - சந்திரகுப்தவமிசத்தரசர். இவர்கள் பதின்மர். நூற்றுமுப்பத்தேழு வருஷம் ராச்சியம் பண்ணினர்.

யக்கர் கசியபன் சுரசையிடத்துப்
கடிர் பெற்ற புத்திரர். இவர்கள் குபேராதியர்கள். இவர்கள் தேவசபையில் யாழ்வாசிப்போர். யக்கர் கிந்நரர், கந்தருவர் என்போர் தேவருக்குப் பிறந்தமையால் தேவயோனிகளெனப்படுவர்.

யக்கியக்கினன் - (த) யக்கிய மூர்த்தியாகிய விஷ்ணுவினாற் கொல்லப்பட்டவன்.

யக்கியகோபன் - யஞ்ஞகோபன் எனவும்படுவன். இவன் மாலியவந்தன் புத்திரன்.

யக்கியதத்தன் - இவன் ஒரு பிராமண புத்திரன். தசரதன் வேட்டைமேற் சென்றபோது, இவன் தன்கமண்டலத்திலே குனிந்து நீரருந்துகையில் இவனை யானையென நினைந்து தூரத்தினின்றபடியே பாணத்தாற் கொன்றான். அதுகண்ட தந்தைதாயர் தசரதனை நீயும் எம்மைப்போலப் புத்திரசோகத்தா லிறக்கவென்று சபித்தார்கள்.

யக்கியம் - தேவதாப்பிரியமாகச் செய்யப்படும் அக்கினிகாரியம். இஃது இருபத்தொரு வகைப்படும். யக்கியம் - யாகம்.

அவை சப்தயக்கியம்,சப்த ஹவிர்யக்கியம், சப்தசோமசமஸ்த மென்பன. இவைகளைக் குறித்த விதானங்கள் எல்லாம் ஆபத்தம் பசூத்திரத்துட் காண்க.

இன்னும் பிராமணர்க்கு நியதமாகவுள்ள யாகங்கள் ஐந்து. அவை பஞ்சமகா யக்கியமென்று சொல்லப்படும். அவை தேவயக்கியம், பிதிர்யக்கியம், பூதயக்கியம், மானுடயக்கியம், பிரமயக்கியம் என்பன.

யக்கியவராகம் - வராகவதாரங் காண்க.

யக்கியன் ருசிபிரஜாபதிக்குச்சுவாயம்
யஞ்ஞன் புவமனு புத்திரியிடத்திற் பிறந்த புத்திரன். இவனுடைய தங்கையைத் தடிpணன்மணம் புரிந்தான். இவ் யக்கியனை விஷ்ணு அவதாரமென் பாருமுளர்.

யசோதை - நந்தன் மனைவி. இவனே கிருஷ்ணனை வளர்த்ததாய்.
கிருஷ்ணன் பிறந்த அன்றிரவிலே இவள் வயிற்றிலும் ஒரு பெண் குழந்தையோக நித்திரையின் அமிசமாகப் பிறந்தது. அது பிறத்தலும் அசோதை பிரசவவேதனையால் அறிவுமழுங்கிச் சோகமுற்றுக் கிடந்தாள். அருகிருந்தோரும் தம்வசமழிந்தனராய்ச் சோகமுற்றுக் கிழந்தனர். மழையுங் காரிருளும் மூடுவவாயின. அச்சமயத்திலே வசுதேவன் தன் குழந்தையாகிய கிருஷ்ணனைக் கஞ்சன் வாளுக்கிரையாகா மற்றப்புவிக்குங் கருத்தினனாய்ப்பிறந்தவுடனே கையிலேந்திக் கொண்டுபோய் அந்நந்தன் மனையினுட் புகுந்து, அசோதையின் பக்கத்திலே கிடத்திவிட்டு அங்கிருந்த பெண் சிசுவைக் கவர்ந்து சென்ற தேவகி பக்கத்திலேயிட அதுகாறும் வாய்திறவாது கிடந்த சிசு அழுவதாயிற்று. அவ்வொலிகேட்ட காவலாளர் கஞ்சனுக்குணர்த்தக் கஞ்சனோடிச் சென்று அக் குழந்தையைக் கவர்ந்து தறையிலிட்டு வாளை யோங்கினான். தேவகி கதறியழுது, கஞ்சனை நோக்கி, அண்ணா! மண்டலேசா! இதுபெண் குழந்தை! இஃது உனக்க யாதுதீங்கு செய்ய வல்லதாகும்! வீணில் உயிர்ப்பழி கொள்ளாதொழி! என்ற தடுத்தான். அஃது அவன் செவியிற் பட்டிலது. அவன் ஒங்கியவாள் மீளுமுன்னே அக்குழந்தை அந்தரத்தெழுந்து எண்கரங்களோடு சோதிரூபமாய்த் தோன்றிநின்று “ஏய்! கஞ்சா! என்னை வீணேகொல்லாமுயன்றாய்! உன்னைக் கொல்லவந்தபாலன் வேறோரிடத்திலே வளர்கின்றான். அவனால் நீ மடிவது சரதம்” என்று கூறி மறைந்தது.

அது நிற்க, அங்கே யசோதை மயக்கந்தீர்ந்து விழித்துப்பார்த்தபோது, நீலமணிபோல ஓர் ஆண் குழந்தையிருப்பக்கண்டு பெருமகிழ் கொண்டு வளர்த்தாள். அக்குழந்தையின் உண்மைவரலாறுணர்ந்த பின்னரும் தன் அருமைக் கண்மணி போலவே வளர்த்து வந்தாள்.

யசோவதி - ஈசானபுடபேதம்.


யஞ்ஞகோபன் மாலியவந்தன்புத்திரன்.
யக்கியகோபன்

யதி - (க) பிரமமானசபுத்தரருளொருவன். (உ) நகுஷன் சேட்டபுத்திரன். யயாதி தமையன். இவன் துறவியாகி ராச்சியத்தை விடுத்துப்போனவன்.

யதிராஜன் - ராமானுஜாசாரியர்.

யது - யயாதிக்குத் தேவயானைவயிற்றிலுதித்த புத்திரன். இவன் வமிசத்தார் யாதவரெனப்படுவர்.

யதுகிரி - மைசூரிலுள்ள ஒரு விஷ்ணுதலம்.

யமன் - கசியபப்பிரஜாபதி புத்திரனாகிய விவசுவதன் என்னும் சூரியன் புத்திரன். இவன் அஷ்டதிக்கு பாலகருள்ளு மொருவனாவன். இவன் பிதிர்லோகாதிபன். இவன் திக்குத்தெற்கு. பாரி சியாமளாதேவி. பட்டணம் சம்யமனி. வாகனம் மகிஷம், ஆயுதம் தண்டம், தருமன் என்றம் பெயர் பெறுவன். யமன் என்பதற்குக் கூற்றுவன் என்பது பதார்த்தம். கூறுசெய்வோ னென்பது கருத்து. இவன் தொழில் உயிர்களை ஆயுள் முடிவில் உடலினின்றும் பிரித்துக்கொண்டு போதல். அத்தொழிலிற் சிறிதும் நடுநிலை தவறாதவன். அது பற்றியே இவனைத்தருமனென்று கூறுப. இவன் தருமத்தைக் குறித்து,

“போற்றவும் போகான் பொருளொடும்போகான் சாற்றவும்போகான் தமரொடும்போகான் நல்லாரென்னான் நல்குரவறியான் தீயாரென்னான் செல்வரென்றுன்னான்”
என்று ஆன்றோரும் பாடினர். மார்க்கண்டேயரைச் சிவபெருமானுக்கு உத்தம அடியாரென்று கருதாது அவர்மீதும் பாசந்தொட்டு அவரைப் பற்றியபோது சிவபெருமானார் அவனுக்கு முன்னே தோன்றித் தடுத்த வழியும் அஞ்சாது தமது ஆஞ்ஞையைச் செலுத்த எத்தனித்து அவராற் கொலையுண்டு பின் உயிர் பெற்றானென்றால் அவன்நடுவு நிலைமை பெரிதும் வியக்கற்பாற்று.

யழனாநதி - சூரியன் புத்திரி. யமன் சகோதரி. இந்நதி காளிந்தி நதியிலுற்பத்தியாதலின் காளிந்தி யெனவும்படும்.

யழனைத்துறைவர் - இவரே ஸ்ரீ ஆளவந்தாரெனப்படுவா. இவர் பன்னிரண்டு வயசு நிரம்பாச் சிறுவராக விருக்குங்காலத்திலே பாண்டிய சமஸ்தான வித்துவானாகிய ஒரு பிரபலமகா பண்டிதரை மூன்று அற்பவினாக்களால்வென்று பாண்டியன் சங்கேதப்படி அவன் நாட்டிற் பாதி கொண்டரசு புரிந்தவர். “உமது தாய்புத்திரவதியல்லள்” என்றும், “தர்மவானாகியபாண்டியன் தர்மவான் அல்லன்” என்றும், “பதிவிரதையாகிய ராஜபத்தினிபதி விரதையல்லள்” என்றும் ஏதுக்கூறி ஸ்தபித்தல் வேண்டுமென்று கேட்டகேள்விகளுக்கு வித்துவான் யாதுங்கூறாதிருக்க, பாண்டியன் யமுனைத்துறை வரை நோக்கி, நீர் நாட்டுவீரேல் என்அரசிற்பாதி தருவலென்ன, யமுனைத்துறை வரைநோக்கி, நீர் நாட்டுவீரேல் என் அரசிற்பாதி தருவலென்ன. யமுனைத்துறைவர், “ஒருபிள்ளையும் பிள்ளையல்ல ஒருமரமுந் தோப்பல்ல” என்றாற் போல ஏகபுத்திரனைப் பெற்றாள் வாழைமலடியெனக் கூறுதல் தரும நூன் முறையாதலின் இவர் தாய் மலடியாயினாளென்பது முதல்வினாவுக் குத்தரமென்றும், குடிகள் செய்யும் பாவம் அரசனைச் சேருமென்னும் விதியால் அரசன் தருமவானல்லன் என்பது இரண்டாவதற்குத்தரமென்றும், மணப்பந்தரிலே அக்கினி முதலிய தேவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுப் பின்னர் வரன்கையி லொப்பிக்கப்பட்டவளாதலின் பதிவிரதாபங்கம் பெற்றாளென்பது மூன்றாவதற்கு உத்தரமென்றுங்கூற, அரசன் அவருடையகுசாக்கிரவிவேகத்தை மெச்சிஅவரை மார்புறத் தழுவிப் பாதியரசு கொடுத்தான் என்பது கர்ணபாரம்பரியம்.

இவர் சிறிதுகாலமரசு செய்திருக்கையில் மணக்கால்நம்பி யென்னும் வைஷ்ணவாசாரியர் இவர்பாற் சென்று, நீர் நம்மோடு தனித்து வருவீராயின், உமது பாட்டனார் வைத்துப்போன புதையலைக்காட்டுவே னென்று கூறியிவரை வஞ்சித் தரைழத்துப்போய் ஸ்ரீ ரங்கத்திற் கோயில் கொண்டிருக்கும் அழியாநிதியாகிய திருமாலைக்காட்டப் பூர்வஜன்;ம வாசனையால் அச்சந்நிதியை யடைந்த மாத்திரத்தே இவர் துறவுடையராய விஷ்ணு வழிபாடே பரமசாம்பிராச்சிய மெனக் கொண்டு அன்று முதலதனையே பற்றி நின்றார். இவர் ஏழு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னுள்ளவர்.

யயாதி - நகுஷன் புத்திரன். இவன் முதலிலே சுக்கிரபுத்திரியாகிய தேவயானையையும், அதன் பின்னர் விருஷபர்வன் புத்திரியாகிய சர்மிஷ்டையையும் விவாகம் புரிந்தவன்.

தேவயானையிடத்தில் யது, துர்வசன் என இருபுத்திரரையும், சர்மிஷ்டையிடத்தில் துருகியன், அணு, பூரு என மூன்று புத்திரரையும் பெற்றான்.

சுக்கிரன், யயாதியை நோக்கி இருவரையும் படிபாதமின்றி நடாத்திவருக வென்று கற்பித்த வழியும் அந்நியதியிற்றவறிய யயாதி மேற்கோபமுடையனாய். நீகிழப்பருவமுடையனாகவென்று சபித்தப் போயினான். அதனால் வருந்தியயாதி தன் புத்திரரை நோக்கி எனது கிழப்பருவத்தைப் பெற்றுக்கொண்டு தனது எவ்வன பருவத்தை எனக்குக் கொடுக்க விரும்புபவன் நும்மில்யாவன் என்ன, மற்றெல்லாரும்மறுக்கப்பூருமாத்திரம் அதற்கு முகமலர்ந்து முற்பட்டுத் தனது எவ்வனத்தை அவனுக்குக் கொடுத்து அவன் கிழப்பருவத்தைப் பெற்றான். அது பெற்ற யயாதி ஆயிரமியாண்டு சிற்றின்பநுகர்ந்தும் திருப்தி அடையாதீற்றில் பூருவுக்கு முடிசூட்டிச் காட்டிற் சென்று தவமியற்றிக் காலங்கழித்தான்.

யதுவினால் யாதவ வமிசமும் துர்வசனால் சேரசோழ பாண்டிய வமிசமும், துருகியனால் காந்தாரவமிசமும் விருத்தியாயின.

யவனம் - (க) பாரத வருஷத்துக்கு மேற்கேயுள்ள தேசம்.
(உ) “கிரேக்க”தேசம். அத்தேசத்தார் யவனப்பெண்களும் முற்காலத்தில் ஆரியராசாக்களுக்கு ஏவலாளராக விருந்தார்களென்பது சிலசம்ஸ்கிருத நாடகங்களா லறியக்கிடக்கின்றது. அவருள்ளே சிலர் ஆரியசாஸ்திரங்களைக் கற்றுப் பண்டிதராகித் தமது நாட்டிற் சென்று விளங்கியது மன்றிச் சோதிடசித்தாந்த முதலிய நூல்களுஞ் செய்தார்கள். அச்சித்தாந்தம் ஆரியராலும் எடுத்தாளப்பட்டு வருவதாயிற்று.

யவனர் - பாரத வருஷத்துக்கு மேற்கேயுள்ள தேசத்தில் வசிப்போர் யவனரெனப்படுவர். இவர்களுள் ஒரு சாரார் யயாதிபுத்திரனாகிய துர்வசுவமிசத்திலே பிறந்து வேதானுஷ்டானங்களைத் துறந்து பதிதரானடித்திரியர். அவர்கள் பாரதவருஷத்தைவிட்டு அதன் மேற்கே யுள்ள தேசங்களிலே சென்று யவனரோடு கலந்து யவனராயினார்கள்.

தற்காலத்தவராற்கிரேக்க சென்ற சொல்லப்படுபவர்களும், ஏனைய ஹ{ணர்களும் பாரசீகர்களும் பூர்வத்தில் யவனரென்றே சொல்லப்படுவர். யவனர் வெண்ணிறமுடையவரும் கருநிறமுடையவரும் மென இருபாற்படுவர். கருநிறமுடையவர் காலயவனரென்றும் மற்றோர் யவனரென்றும் வழங்கப்படுவர். (பாணினியென்பதனுட்காண்க)

யவீனரன் - பூருவமிசத்துத் துவிமீடன் புத்திரன். (உ) முற்கலன் தம்பி.

யாகசேனன் - துருபதராஜன்

யாஞ்ஞவல்கன் - மிர்மராதர் புத்திரர். இவர் சைவசம்பாயனர்சீஷர். வைசம்பாயனர் ஒருநாள் தமது சகோதரி புத்திரனை இருளிலே கால்பிழைத்து மிதிக்க அப்புத்திர னிறந்தான். அதனால் அவர்க்குப் பிரமஹதஞ் சீஷர்களை விரதங் காக்குமாறு ஏவினர். யாஞ்ஞவற்கியர் மற்றையோர் தேகவல்லியில்லாதவராயிருத்தலின் அதனைத் தாமேசெய்வதாக வேண்டினர். அவர் தம்முரையை மறுத்தாரென்று யாஞ்ஞவற்கியரை முனிந்து என் வேதங்களை விடுத்துப் போகவென்றனர். யாஞ்ஞவற்கியர் பக்திமேலீட்டினாற் சொன்னதையுணராது முனிவு செய்தவுமக்குயான் சீஷனாயிருத்லுந் தகாதெனக்கூறி, அவர் பாலோதிய யசுர்வேதகாகைகளை யெல்லாம் கண்டத்தினின்று மிரத்தம் கான்றுவிழுமாறு ஒதிவிட்டு, இவ்வேதசாகைகளை இனி யோதேனெனக் கூறிப் போய்ச் சூரியனை வழிபட்டுத் தவங் கிடந்தார்.

சூரியன் குதிரைவடிவு கொண்டு வெளிப்பட்டு வைசம்பாயனர்க்குத் தெரியாத பதினைந்து சாகைகளை அநுக்கிரகித்துப் போய் யாஞ்ஞவற்கியர் அவற்றை யோதுவாராகித் தஞ்சீஷரையு மோதுவித்தார். குதிரை வடிவத்தோடு அநுக்கிரகித்தமையின் வாஜசனேய சங்கிதை யென்னும் பெயர் இச் சாகைகளுக் குளதாயிற்று. (வாஜி - குதிரை) முன்னே இவர்கான்ற இரத்தங்களைச் சகபாடிகள் மானுட சரீரத்தோடுண்பது தகாதென்று யுண்டமையின்தைத்திரீய மென்னும் பெயர் அச்சாகைகளுக்குளதாயிற்று.
தித்திரி - சிச்சிலிப்புள்.

யாஞ்ஞவல்கியம் - பதினெண்மிருதிகளு ளொன்று. இதற்கு விஞ்ஞானேசுவர யோகிகள் ஒரு வியாக்கியானஞ் செய்தனர்.

யாஜன் - ஒருமுனிவர். இவர் அநுக்கிரகத்தால் துருபதராஜன் அக்கினி குண்டத்திலே திருஷ்டத்துய்மனென்னும் புத்திரனையும் கிருஷ்ணை யென்னும் புத்திரியையும் பெற்றான்.

யாதவநிகண்டு - ஒருசம்ஸ்கிருத நிகண்டு.

யாதவர் - யதுவமிசத்தவர்கள். இவ்வமிசம் பல்கிப் பலகிளைகளாகி அநேக பிரசித்தி பெற்றராஜாக்களைத் தந்தது. யதுவினது மூத்தகுமாரனாகிய சகஸ்திரஜித்துவினாலே ஹேஹயவமிசமாயிற்று. அவர்களுக்கு மாகிஷ்மதி ராஜதானி. அவ்வமிசத்திலேயே கார்த்தவீரியார்ச்சுனனென்னும் பிரசித்தி பெற்ற அரசன் தோன்றினான். அவன் சந்ததியிலே தாளஜங்கர்கள் தோன்றி விளங்கினர். யதுவினது இரண்டாம் புத்திரனாகிய குரோஷ்டுஷவமிசத்திலே பிரசித்தி பெற்றவர்கள் சசி. பிந்து, சியாமகன். விதர்ப்பன் என்போர். இவருள் விதர்ப்பனால் விதர்ப்பராஜ வமிசம் வந்தது. விதர்ப்பன் மூன்றாம் புத்திரனாலே சேதிவமிசம் வந்தது. இரண்டாம் புத்திரன் வமிசத்தனாகிய சாத்துவதனால் போஜவமிசமும் அந்தகவமிசமும் விருஷ்ணிவமிசமும் வந்தன. போஜவசமித்துக்கு ராஜதானி தாராபரம். அந்தவமிசத்திலே கிருஷ்ணன் பிறந்தார்.

யாமர் - யக்கியன்மக்கள். இவர் பன்னிருவர். சுவாயம்புவமனுவந்தரத்திலுள்ள தேவதைகள்.

யாமளேந்திரர் - இந்திரகாளியமென்னு மிசைத்தமிழ் நூல் செய்தவர். இவர் கடைச்சங்கமிருந்த காலத்தையடுத் திருந்தவர். சிலப்பதிகாரவுரையாசிரியர் மேற்கோளாகக் கொண்ட நூல்களுள் இவர் நூலு மொன்று.

யாமளை - உமாதேவியார்.

யாமி - ஜாமி. இரண்டாம் தடிப்பிரஜாபதி மகள். தருமன்பாரி. இவள் துருக்கபூமிகளுக்கு அதிர்ஷ்டான தேவதை.

யாமினி - ஒருகலாசத்தி.

யாழினுமென்மொழியம்மை - திருவிளமரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

யாழின்மென்மொழிநாயகி - திருமணஞ்சேரியி லெழுந்தருளி யிருக்கும் தேவியார் பெயர்.

யாழைப்பழித்த மொழியம்மை - திருமறைக் காட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

யாழ்முரிநாதேசுவரர் - திரத்தருமபுரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் கட்டுண்டவன். இவனைப்பாடியபுலவர் குறுங்கோழியூர்கிழார். (புறநா)

யுகங்கள் - கிருத, திரேத, துவாபர, கலியுகங்கள்;. இச் சதுர்யுகம், சந்தியமிசகாலங்களுளப்படப் பன்னீராயிரம் தேவவருஷங்க கொண்டது. அதாவது சந 20,000 மானுஷிய வருஷங் கொண்டது.
கிருதபுகம் - கஎ, உஅ000
திரேதாயுகம் - கஉ, சுசு000
துவாரபரயுகம் - அ, சுச000
கலியுகம் - ச,நஉ000

இச் சதுர்யுகம் ஆயிரங்கழிந்தால் பிரமனுக்கு ஒருபலாம். பின்னுமோராயிரஞ் சென்றால் ஒரிரவாம். இப்படி நசு0 பகலிராக்கழிந்தாலர் பிரமவருஷமொன்றாம். இவ்வருஷம் நூறு சென்றால் பிரமாவுக்கு ஆயுள் முடிவாம். இவ்வாயுளில் முற்பாதிருய. வருஷம் பாத்தும கற்பம் என்றும், பிற்பாதிருய. வருஷம் வராககற்பமென்றுஞ் சொல்லப்படும் இப்போது நடப்பது வராக கற்பம். பிரமாவுக்கு ஒரு பகலில் பதினான்கு மனுக்கள் அரசுசெய்வர். அம்மனுவந்தரம் ஒன்றில் தேவேந்திரன் சப்தரிஷிகள் முதலியோர் பிறந்திறப்பார்கள். பிரமாவுக்கு இரவாகும் போது பிரளயகால முண்டாகும். அப்பிரளயத்தில் திரிலோகங்களும் அழிந்தொழிய மகர்லோகவாசிகள் ஜனலோகஞ் சேர்வார்கள்.

கிருதயுகத்திலே தருமதேவதை நான்கு பாதத்தாலும், திரேதயுகத்தில் மூன்று பாதத்தாலும், துவாபரத்தி லிரண்டாலும், கலியில் ஒரு பாதத்தாலும் நடக்கும். இன்னும் கிருதயுகத்திலே தியானமும், திரேதயுகத்திலே தியானமும் யாகமும், துவாரபரத்திலே யாகமும், கலியிலே தானஞ்செய்தலும் சற்கருமங்களெனப்படும்.

யுகசந்தி - கிருதத்துக்கு அளதேவ வருஷம். மற்றையுகங்களுக்குத் தனித்தனியே உள.

யுதாசித்து - யதுவமிசத்து விருஷ்ணி இரண்டாம் புத்திரன். இவன் புத்திரர் சினிஅநமித்திரன் என இருவர். (உ) கேகயதேசாதிபதி. அவன் தசரதன் பாரியாகிய கைகேசி சகோதரன். இவன் ராஜதானி கிரிவிரசம்.

யுதிஷ்டிரன் - குருவமிசத்துப் பாண்டு மூத்தமகனாகிய தருமராஜன். யுதிஷ்டிரன் என்பதற்குக் கலங்காமல் யுத்தஞ் செய்வோன் என்பது. பொருள் இவன் பொறுமைக்கிலக்கியமாயுள்ளவன்.

யுயுதானன் - யதுவமிசத்துச் சாத்தியகி.

யுயுற்சன் - திருதராஷ்டிரனுக்கு வைசியப் பெண்ணிடத்துப் பிறந்த புத்திரன். திருதராஷ்டிரனுக்குப் பின் இந்திரப்பிரஸ்தத்தி லரசுபுரிந்தோன்.

யுவநாசவன் - (இ) (க) இந்தன் புத்திரன். சபஸ்தன்தந்தை. (உ) திருதாசுவன் மகன். இவன் மகன் மாந்தாதா. இவன் தனக்குச்சிலகாலம் புத்திரோபத்தியில்லாததினால் அதன் பொருட்டு ஓரிந்திர யாகஞ் செய்தான். அவ்வியாகத்தில் இவன்பாரிக்காக மந்திரித்துவைத்த நீரை இவன் இரவில் மிகுந்ததாகத்தால் அதுவென்றறியாது பானஞ் செய்தமையால் தன்பத்தினி தரிக்க வேண்டிய கருப்பததைத்தானே தரித்தான். அதுகாரணமாக அவன் வயிற்றிலிருந்தசிசு வயிற்றைப்பீறி உரியகாலத்தில் வெளிப்பட்டது. தாயின் பாலுக்குப் பிரதியாக இந்திரன் தன்விரலைக் கொடுத்து வளர்த்தான். இக்காரணம்பற்றியே அச்சிசுமாந்தாதா வென்னும் பெயர் பெற்றது.

யூபாஷன் - (த) ராவணன் பரிவாரத்தவருள் ஒருவன். இவன் அநுமானால் அசோகவனத்தின் கண்ணே கொல்லப்பட்டவன்.

யோகசாரன் - சௌத்திராந்திகனிற் சிறிது வேறுபட்டு, அறிவு அரூபமென்றும் பிரபஞ்சம் பொய்யென்றுஞ் சொல்பவன். இவன் புறப்புறச் சமயிகளுளொருவன்.

யோகசித்தி - அங்கிரசன் புத்திரி. பிருகஸ்பதி சகோதரி. பிரபாசுரன்பாரி. விசவகர்மன் தாய்.

யோகநந்தேசர் - திருவியலூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

யோகம் - இந்திரியங்களை வசஞ்செய்து கொண்டு சித்தத்தைப் பிரமத்தினிடத்து நிறுத்துதல். இது ராஜயோகம் கன்மயோகம் அடையோகமெனமூன்றாம். யோகசாஸ்திரஞ் செய்தவர் பதஞ்சலி பகவான். உலகப்பற்றைத் துறந்து சித்தத்தைப் பிரமத்தினிடத்தினிறுத்துதல் ராஜயோகம். பலாபேiடியின்றிக் கர்மத்தைச் செய்து கொண்டு பிரமோபாசனை பண்ணல் கர்மயோகம். சுவாசத்தையடக்கல் முதலியவற்றைப் பதுமாசனமுதலியவையிட்டுப் பயிலல் அடையோகம்.

யோகி - நின்மலசத்துவபரிணாமரூபமாகிய சித்தவதிருத்திகளை உன்முகமாகத் திருப்பி அவைகளை அவற்றின் முதற் காரணத்திலே ஒடுக்குதலாமென்பவன். இவன் புறச்சமயிகளுளொருவன்.

யோகினிகள் - இவர்கள் பன்னிருவர்கள். (க) வித்தியா. (உ) ரேசிகா (ந) மோசிகா. (ச) அமிர்தா. (ரு) தீபிகா. (சு) ஞான. (எ) ஆபியாயனி, (அ) வியாபினி.(கூ) மேதா. (ய)வியோமா. (கக) சித்திரூபா. (கஉ) வடி{மியோகினிகள். இவர்கள் வித்தியாசக்திகளாய் வாசினிகளோடு அடிரங்களை அதிகரித்து நிற்போராவார்கள்.

யௌவனன் - பிரியவிரதன் வமிசத்தவன். தீமந்தன் மகன்.

யௌவனாசுவன் - (இ) அம்பரீஷன் புத்திரன். ஹரிதன் தந்தை.

ரகு - (இடி{) தீர்க்கவாகுபுத்திரன். அஜன்தந்தை. (ரகுவைத்திலீபன் புத்திரனென்பது ரகுவமிசம்) ஆண்மையிலும், கல்வியிலும், மிக்க பெயர் படைத்தோன். இவன் வசுவசித்தென்னும் யாகஞ் செய்து அவ்வியாகத்துக்குச் சென்றிருந்த அந்தணர் குழாத்துக்குத் தன் சம்பத்தெல்லாம் வாரி வழங்கினவன்.

ரக்தபீசன் - (தி) சும்பநிசும்பர் சகோதரி புத்திரன். இவன் தேசத்திலிருந்து சிந்துகின்ற ரத்தத்துளிகள் எத்தனையோ அத்தனை அசுரர் பிறப்பார்களென்று நியமமிருந்தமையால் அதனை நினைத்துக் காளிகாதேவி கராளரூபந்தாங்கி ஒரு துளியாவது சிந்தாமல் அவனைக் கொன்று தொலைத்தாரெனக் கூறுப.

ரங்கநாதன் - ஸ்ரீரங்கத்திற் கோயில் கொண்டிருக்கும் விஷ்ணுமூர்த்தி. (உ) ஓராந்தரகவி.

ரசசு - அநேநசு வமிசத்துத் தரிககுத்தன் தந்தை.

ரசநிரூபணம் - ஓரலங்கார கிரந்தம். இது சிங்காரசநிரூபணம், அஷ்டரசநிரூபணம், பாவநிரூபணம் என மூன்று நிரூபணங்களையுடையது.

ரசரத்தினாகரம் - ஓரிரசவாதகிரந்தம். நவரத்தினங்கள் லோகங்கள் கந்தகாதிகள் என்பனவற்றைப் பஸ்மம் பண்ணும்முறை, உருக்கும் முறை, முதலியன இதிற் கூறப்படும். இது நி;த்தியநாத சித்தராற் செய்யப்பட்டது.

ரசனை - திதிபுத்திரி. துவஷ்டாபாரி.

ரசாதலம் - கீழுலகத்தொன்று. இது மலைமயமாயுள்ளது. இதற்கு அரசன்வாசுகி. இதற்கு ராஜதானி போகவதி. வாமனாவதாரமெடுத்து விஷ்ணுவினால் மிதித் தழுத்தப்பட்ட பலிச்சக்கரவர்த்தி போயுறைந்த விட மிதுவாதலால் பலிசத்துவ மெனப் பெயர் பெற்றது.

ரசை - பிரசாபதிபாரி. அகன் என்னும் வசுவினது தாய்.

ரஜன் - பிரியவிரதன் வமிசத்து விரஜன் புத்திரன்.

ரஜி - ஆயுபுத்திரன். புரூரவன் புத்திரன். நகுஷன் தம்பி. இவனுக்கு ஐஞ்äறு புத்திரர் பிறந்தனர். அவர்கள் மகா வீரர்கள். தேவர்கள் அவர்களை வேண்ட அவர்கள் தைத்தியர்களை வென்று தேவேந்திரனுக்குச் சுவர்க்கத்தைக் கொடாது தாமே ஆளவிரும்பியபோது இந்திரனால் நிர்மூலம் பண்ணப்பட்டார்கள்.

ரதிகன் - (கு) ஜயசேனன் புத்திரன்.

ரதிதேவி - மன்மதன் பாரி. இவ்விரதிதேவியே மாயாதேவியாகவும், பிரத்தியுமனன் பாரியாகவும் அவதரித்தாளெனக் கூறுவர்.

ரதிதரகோத்திரங்கள் - ரதீதரண்பாரியிடத்து அங்கிரசமுனிக்குப் பிறந்த பிரமதேஜோதனருடைய சந்ததிகள்.

ரதீதரன் - இடி{வாகுதம்பி. நபகன் வமிசத்து அம்பரீஷன் புத்திரனாகிய விரூபன் பௌத்திரன்.

ரத்தினகிரிநாதர் - திருநாட்டியத்தான்குடியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

ரத்தினபரீiடி - “வயிரம்” காண்க.

ரத்தினநாயகர் - திருஆடானையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

ரத்தினாபணம் - பிரதாபருத்திரீய வியாக்கியானம்.

ரத்தினாவளி - ஸ்ரீ ஹரிஷதேவர் செய்தசம்ஸ்கிருத நாடகம். இது பாண்டவவமிசத்து உதயணன் சரித்திரஞ் சொல்வது.

ரந்திதேவன் - பூருவமிசத்தான். சங்கிருதிபுத்திரன். இவன் தன் சம்பத்துக்களையெல்லாம் வறியார்க்குக் கொடுத்துவிட்டு வனத்திற் சென்று வசிக்கும் போது ஒருநாள் டசியால் வருந்தி அகப்பட்ட அற்ப வுணவையுண்ணத் தொடங்கும் போது ஓரந்தணனும்பசியால் வாடி அவனிடம் வருவானாயினான். அதுகண்ட ரந்திதேவன் அவ்வுணவிற் பாதியைக் கொடுத்தான். அச்சமயம் இன்னுமோரந்தணன் டசித்து வந்தான். அவனுக்கும் எஞ்சிய பாகத்தில் பாதியைக் கொடுத்தான். அச்சமயம் பின்னுமொருவன்வர மிக்கிருந்த தன்பாகத்தையுங் கொடுத்தான். இங்ஙனமாகப் பின்னருமோ ரதிதி வந்து தாகத்துக்காகவிருந்த ஜலத்தையும் பருகிப் போயினார். அது கண்ட தேவர்கள் இவன் உபகார குணத்தைமெச்சி அவனுக்கு வேண்டும்வரங்களை யீந்துபோயினர். இவன் செய்தயாகங்கள் எண்ணில. யாகபலித் தோலினிரத்தத்திலிருந்து ஓராறுற்பத்தியாயிற்று. அது சர்மணவதி யெனப்படும்.

ரபசன் - (க) ஆயு பௌத்திரன். கம்பீரன்தந்தை. (உ) ஒரு சம்ஸ்கிருத நிகண்டு செய்த பண்டிதன். அந்நிகண்டு ரபசகோச மெனப்படும்.

ரம்பன் - ஆயுபுத்திரன். புரூரவன் பௌத்திரன். நகுஷன் தம்பி.

ரமா லக்குமிதேவி.
ரமை

ரம்பை - இந்திரன் சபையிலாடும் ஓரப்சரப்பெண். இவள் மகாரூபவதி. இவள் நளகூபரன்பாரி. கௌரி.

ராகு - (த) விப்பிரசித்திபுத்திரன். இவன் தாய் சிங்கிகை. இவன் தம்பி கேது. இவர் இருவருக்கும் கசியபன் பௌத்திரர். விஷ்ணு மோகினி வேஷங் கொண்டு அமிர்தம் பங்கிடும் போது ராகு, தேவதாரூபங் கொண்டு தேவரோடு கலந்து அமிர்தங்கொள்ள எத்தனித்த போது, சூரியசந்திரர் அஃதுணர்ந்து விஷ்ணுவுக்குணர்த்தினமை பற்றிச் சூரியசந்திரர்க்கும் ராகு கேதுக்களுக்கிடையே பகையுண்டாயத. அச்சமயத்திலே விஷ்ணு ராகுவினது தலையைக் கொய்து விட்டார். ராகுகேதுக்கள் சாயாக்கிரகங்கள்.

ராகை - (ர) தாதாபாரிகளுளொருத்தி. (உ) சுமாலிமகள். தூஷணன் திரிசிரன் என்பவர்கள் தாய்.

ராடிசர் - இவர்கள் கசியபனுக்குச் சுரசையிடத்துப் பிறந்தவர்கள். இவர்கள் பிறந்தவுடன் பசிதாகங்களையடைந்த சிலர் “யடிhம” என்றும் டசிதாக மில்லாத மற்றோர் “ரடிhம” என்றும் அழுதார்கள். அதுபற்றியே யடிரென்றும் ராடிசர் என்றும் பெயர் பெற்றார்கள் (யடிhம - யாமுண்ணுக) (ரடிhம - யாங்காக்க) (உ) நந்தர்களுடைய மந்திரி. ராடிசன் என்னும் பெயருடையவன். முத்திராராடிச மென்னும் நாடகத்தில் இவன் முக்கியபாத்திரம்.

ராடிசர்களைப் புலஸ்தியன் மரபில் வந்தோரென்றுங்கூறுப. இவர்கள் பிராமண அமிசமாகப்பிறந்தும், நரமாமிசபடிமும், மாயவல்லபமுமுடையராய்த் தேவர்களுக்குப் பகைவராயிருந்தவர்கள். இவர்களுள்ளே ராவணகும்பகர்ணர்கள் முக்கியர்கள்.

ராசிகள் - மேஷாதி மீனமீறாயுள்ள பன்னிரண்டும் ராசிகளெனப்படும். சூரியன் ஒரிராசியிற் சஞ்சரிக்குங்காலம் ஒருமாசமெனப்படும்.

ராஜகேசரி - (க) ஒரு சோழன். (உ) ஈழநாட்டிலரசுபுரிந்த ஓரரசன். அரசகேசரி காண்க.

ராஜதர்மன் - நாரீஜங்கன்.

ராஜராஜநரேந்திரன் - வேகிதேசாதிபதி. இவ்வரசனுடைய சமஸ்தானவித்துவானே நன்னயப்பட்டன்.

ராஜன் - (க) சந்திரன். (உ) இந்திரன். (ந) ஓர்யடின்.

ராஜாநகன் - உத்தம புலவர்களுக்கு முற்காலத்திலே சூட்டப்படும் ஒரு பட்டாபிதானம்.

ராஜாதிதேவி - வசுதேவன் தங்கை. ஜயசேனன் பாரி. இவள் புத்திரர் விந்தன், அநுவிந்தன்.

ராதை - (க) கிருஷ்ணன் பிரியநாயகி. நந்தன் தங்கை. (உ) கர்ணணை வளர்த்ததாய். இது பற்றியே கர்ணன் ராதேயனெனப்படுவன்.

ராமகிரி - நாகபுரத்துக்குச் சமீபத்துள்ள ஒரு மலை. இதன் பிரஸ்தாபம் மேகதூதத்திற் சொல்லப்படும்.

ராமகிருஷ்ணன் - ஓராந்தரகவி. இவன் பிறந்தவூர் தெனாலி. கிருஷ்ண தேவராயருடைய சபையில் விளங்கிய எண்மர் வித்துவான்களுளொருவன். அதி சாதுரியபுத்தியும் விகட சாமர்த்தியமு முடையன். தெனாலி ராமன் என்னும் பெயர் சாதாரணவழக்கு. பாண்டுரங்க மான்மியம் என்னும் மகாவியஞ் செய்தவனமிவனே. இது முழுவதும் விலடிணரசமுடையது. இவர் கூறிய விகடகதைகள் அநேகம் இக்காலத்தும் வழங்கி வருகின்றன. “தென்னாலுராமன்” காண்க.

ராமபத்திரன் - இவர் கிருஷ்ண தேவராயர் சபையிலிருந்த எண்மர் பண்டிதரு ளொருவர். ராமாப்பியுத மென்னும் மகாகாவியஞ் செய்தவர்.

ராமமந்திரி - ஓராந்தரகவி. இவர் ஆதுனிக கவிகளுளொருவர். இவர் தசாவதாரசரித்திரஞ் செய்தவர்.

ராமராஜபூஷணன் - பட்டுமூர்த்தி.

ராமர் - விஷ்ணு தசாவதாரங்களுள் எழாம் அவதாரமா யுள்ளவர். இவர் இடி{வாகு வமிசத்திலே அஜன் புத்திரனாகிய தசரதனுக்குக் கௌசலையிடத்துப் பிறந்த புத்திரர். இவர் பாரிசீதை. பரதன், லடி{மணன், சத்துருக்கினன் என்போர் தம்பியர்@ குசலன்புத்திரர்.

இவர் பாரியோடும் லடி{மணனோடும் பிதிர்வாக்கிய பரிபாலனார்த்தம் பதினான்குவருஷம் வனவாசஞ் செய்து ராவணன் கும்பகர்ணன் முதலியோரைக் கொன்று, தண்டகாரணியவாசிகளாகிய முனிவர்களுக்கு அவ்வரக்கரால் விளைந்த துன்பங்களை நீக்கி மீண்டு தமது ராச்சியம் பெற்று நல்லரசு புரிந்தவர். இவர் தசரதன் புத்திரனாதலின் தாசரதி யென்றும், ககுத்தன் வமிசமாதலின் காகுத்தனென்றும், ரகுகுலதிற் பிறந்தமையின் ராகவ னென்றும் பெயர் பெறுவர்.

ராவணனைக் கொன்று சிறையிட்டபோது ராமருக்கு வயசு நாற்பது. பூர்வம் தேவர்க்கும் அசுரர்க்குமிடையே நடந்தயுத்தத்திலே பிருகு மகாமுனிவ ருடைய பத்தினியை விஷ்ணு கொன்ற காரணத்தால், பிருகு கோபித்து விஷ்ணுவை நரனாகப்பிறந்து பத்தினியைப்பிரிந்து வருந்துமாறு சபித்தமையின் விஷ்ணு இவ்வவதார மெடுத்து வருந்தினர். ராமர் தம்மைக் காட்டுக்கனுப்பித் தனது புத்திரன் பரதனுக்கு அரசு பெற்ற சிறியதாயாகிய கைகேயி யிடத்திலே அணுத்துணையும் கோபமில்லாதவராய்த் தமது தந்தையார் பாற்சென்று அவளைச் சபித்த சாபத்தை நீக்குமாறு வரம்பெற்ற பெருந்தகைமையும், பிறர்துயர்கூரத் தாமதுகண்டு சகியாதபேரருளு முடையரென்றால், அவரிடத்து விளங்கிய திவ்வியகுணங்களை யெடுத்துச் சொல்லதெங்ஙனம்.

ராமபிரான் உத்தம அரசராக வன்று உத்தமகாருண்ணிய மூர்த்தியினது அவதாரமாக் கொண்டே இந்நாளிலும் வழிபடப்படுவர். இவரை வழிபடுவோர் தொகையும் இவர்க்கு ஆலயங்களும் ஆரியவார்த்தத்தில் எண்ணில. “ராம ராம சத்திய நாம” என்னும் மந்திரம் ராமபக்தர்கள் வாயிலும் மனத்திலும் நீங்காதது ராமர் பெருந்தகைமையை மேல்வரும் “ராமாயணம்” என்பனுட் காண்க.

ராமாயணம் - இது ஸ்ரீராமருடைய வரலாறு கூறுவதோரிதிகாசம். இது வடமொழியிலே வான்மீகி பகவானாற் கூறப்பட்டது. இது ஆதி காவியமெனவும்படும். இது பாலகாணடம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிஷ்கிந்தாகாண்டம், லங்காகாண்டம், யுத்தகாண்டம், உத்தரகாண்டம் என ஏழுகாண்டமும் இருபத்துநாலாயிரங்கிரந்தமுமுடையது. ஒவ்வோராயிரத்து முதற் சுலோகத்து முதற்பாதம் காயத்திரி மந்திரத் தொவ்வோ ரெழுத்தாற் றொடங்குதலின் இக்காவியம் காயத்தரிரூப மெனப்படும்.

இவ்விராமாணத்தைத் தமிழிற் காவியமாக மொழி பெயர்த்வர். கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர். இவர் சாலிவாகனசகம் அ0எல் விளங்கியபுலவர். கம்பர் வான்மீகி ராமாயணத்தையே மொழி பெயர்த்தாரென்பது.

“வேதபாடையினிக்கதை செய்தவர் மூவரானவர் மூவருண்முந்திய- நாவினானுரையின் படி நான்றமிழ்ப் - பாயினுலிதுணர்த்திய பண்பரே” என்னுங் கம்பர் வாக்காலுணரப்படும். முதலிற் செய்தவர் வான்மீகி. அதன் பின்னர்ச் செய்தவர் வசிட்டர். அதன் பின்னாச் செய்தவர் போதாயனர். கம்பராமாணத்துச் சரித்திரம் பெரும்பாலும் வான்மீகி ராமாயணப்படியேயாயினும் வர்ணனை யெல்லாம் கம்பருடையனவேயாம். கம்பர் லங்கா காண்ட மென்பதைச் சுந்தரகாண்டமெனப்பெயரிட்;டு வழங்குவர். கம்பராமாணத்துச் செய்யுள் பதினாயிரம். எஞ்சிய ஈராயிரமும் ஒட்டக் கூட்டத்தார்பாடல்.

கம்பர் பாடிய ராமாயணத்திலே செய்யுள் வன்மையும, சொற்சாதுரியமும் சந்தவின்பமும், பொருட் கம்பீரமும், சிருங்காரம், சோகம், வீரம் முதலியரசங்களும் பயின்ற வருதலால், அது தமிழிலேயுள்ள இலக்கியங்களை யெல்லாங் கடந்து தமிழ்க் கலைவினோதர்களை வசீகரிக்கும் பெருஞ் சிறப்பினையும் மதிப்பினையும் முடைய பெருங்காவியமாயிற்று.

கம்பர் வாக்கெல்லாம் பெரும்பாலும் ஊன்றி நோக்குமிடத்து ஒரு பொருளும், வெளிப்படையி லொருபொருளும் பயப்பனவாய்க் கற்போர்க்கு அதிசயமும் ஆராமையுமுண்டாக்குமியல்பின. அவர் சாதுரியத்தை மேல்வரும் கவியாலள விட்டுணர்க:-
“இந்திரன் சசியைப்பெற்றானி ருமூன்றுவதனத்தோன்றன், றந்தையமுமையைப்பெற்றான் றாமரைச்செங்கணானுஞ், செந்திருமகளைப்பெற்றான் சீதையைநீயும்பெற்றா லந்தரம்பார்க்கினன்மை யவர்க்கில்லையுனக்கேயையா”

இக்கவியிலே, “நன்மை அவர்க்கில்லை,உனக்கே” நன்மை என்பதாகத் தொனிக்கினும், பின்னர் நிகழப்போவதை நோக்குமிடத்து, “நன்மை அவர்க்கு, இல்லை யுனக்கு” என்பது தோன்ற வமைத்தனர். இக்கவியில் மாத்திரமன்று அடுத்த இரண்டுகவிகளிலும் இவ்வாறே அநிஷ்டப் பொருட் குறிப்பமையப்பாடி யிருத்தல் காண்க.

“பாகத்திலொரு வன்வைத்தான்” என்னுஞ் செய்யுளிலே, “நீயெங்ஙனம் வைத்துவாழ்தி” என்று வினவியதற்கு, நீ எவ்விடத்திலிருத்தி வாழப்போகின்றாய்? என்றும், நீ எப்படி வைத்து வாழ்வாய் வாழமாட்டாய் என்றும் பொருள்படுமா றமைத்தனர். மற்றச் செய்யுளிலே, “பிள்ளை போற் பேச்சினாளைப் பெற்றபின் பிழைக்கலாற்றாய்” என்பதற்கும், சீதையைப் பெற்றபின் அவள் இஷ்டத்துக்குமாறாக யாதுஞ் செய்யமாட்டார் என்றொரு பொருளும், “அவளைப் பெற்றால் இறப்பாய்” என்றமற்றொரு பொருளும் கொள்ள வைத்தனர். இவ்வாறே அவர் சாதுரிய சாமர்த்தியங்கள் ஊன்றி நோக்குந்தோறும் ஊற்றாய்ப் பெருகும். மேலெயெடுத்துக் காட்டிய செய்யுட்கள் மாரீசன் வதைப்படல்திலே சூர்ப்பணகைகூற்றாக வருவன.

இனி வான்மீகிபகவான் வைதிகப் பொருளையெல்லாம் லௌகிகப் பொருண்மேல்வைத்துக் கூறுங் கருத்தினையுடையராய் ராமசரித்திரத் தினையே ஏற்றவாயிலாகக் கொண்டு வெளிப்படையிலே லௌகிகத்திற் குரிமையும் இனிமையும் பயக்கவும், குறிப்பிலே வைதிக போதமும் தத்துவங்களும் விளங்கவும் இப்பாரகாவியத்தை இயற்றிப் போயினர். இவ்வுண்மை மேலேயெடுத்தோதிய காயத்திரியடிரக் குறிப்பினால் நன்கு துணியப்படும்.

ராமாயண கதாநாயகராகிய ஸ்ரீ ராமபிரானம் சக்ரவர்த்தி திருமகனாராக அவதரித்தும், தந்தையார் வாக்கைக் காக்குமாறு காட்டுக்கேகிய பெருந்தகைமையும், சத்தியம், பொறுமை, அறிவு, ஆண்மை, நீதிதிறம்பாமை, பேரருளுடைமை, நன்றிமறவாமை, அடைந்தவரைக் காக்கும் பேராற்றல், சகோதரவொற்றுமை முதலிய உத்தமகுணங்களுக்கெல்லா முறைவிடமாகவுள்ளவர். அவருடைய இல்லறவொழுக்கச் சிறப்புச் சூர்ப்பணகைக்கு எடுத்தோதிய நன்மதியுரைகளால் விளங்கும். ஸ்ரீ ராமரைப் பாலியப்பருவத்தில் வீதியிலே விளையாட்டயரும் வேளையிலே கண்டு உச்சிமோந்து கட்டித்தழுவிச் செல்பவனாகிய ஒருபிச்சைக்காரன், அவர் காட்டுக்கேகி மீண்டுவந்து பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்டேழுந்தருளியிருக்கும். அவ்வமையத்திலே அச்சபை முன்னேவந்து, “அடாராமா! எங்கடாபோயிருந்தாய்! உன்னைக்காணாமல் என்கண்கள் மிகவருந்திவிட்டனவே” யென்று போராமையோடு கூவியழ, அவர் சிங்காசனத்தை விட்டேழுந்து “யானும் உம்மைக்காணப் பேராசையுற்றேன் வருக என் சிறியதந்தையே” என்றிருகையும் நீட்டியழைக்க, அச்சபையிலிருந்த அரசர் முனிவர் பெரியோரெல்லா மதிசயித்தெழுந்து வழிவிட, பிச்சைக்காரனாகிய முதியோன் சென்ற அவரைத்தழுவி மோந்து போயினன். அவனுடைய அழுக்குடையையும் நாறுகின்ற சரீரத்தையும் நோக்காது பேரன்பாற் கட்டுண்டுமயங்கிய ராமன் பெருந்தகைமைக்கு எல்லையுமுண்டோ! இத்துணைச் சிறந்த பெருயோனது சரித்திரத்தைக் கேட்டலும் கற்றலும் உலகுக்குப் பெரும் பயனைத்தராமற் போகுமா? இப்பெருமையெல்லா நோக்கியே இதனைத் திவ்வியநூலென்று பெரியோர் கொண்டாடுவர்.

ராமானுஜாசாரியர் - வசிஷாத்வைதம் தோத்தாரகராகிய இவர் எண்ணூற்றிருபது வருஷங்களுக்கு முன்னிருந்தவர். இவர் தந்தையார் ஆசூர்க்கேசவாசாரியார்@ தாயார்காந்திமதி. இவர் ஜன்மஸ்தானம்பூதபுரம். (ஸ்ரீபெரும்பூதூர்) இவர்வித்தியாப்பியாசஞ் செய்தவிடம் காஞ்சி.

இவர் யாதவப்பிரகாச ரென்னும் சந்நியாசியிடத்திற் சாஸ்திரங்களைக்கற்று வல்லராசித் தங்குரு முன்னிலையிலே தானே விசிஷ்டாத்துவைத மதத்தைச் சாதித்துப் பின்னர்த் திரிதண்ட சந்நியாசியாகி, யதிராஜன் என்னும் பெயர் பெற்றுத் திருநாராயணபுரம் ஸ்ரீரங்கம் திருப்பதி முதலியஸ்தலங்களிற் சென்று ஆங்காங்கும் மடங்கள் ஸ்தாபித்து வைஷ்ணவமதத்தை நிலைநாட்டினர். அதன்பின்னர்ப் பலவிடங்களுக்குஞ் சென்று பரமதங்களைக் கண்டித்துத் தமது மதநாட்டி ஆங்காங்குஞ் சீடர் குழாங்களைச் சேகரித்துத் தமது மதத்தை விருத்தி செய்தனர். இவர் கீதாபாஷியம், வியாசசூத்திரபாஷியம், தர்க்கபாஷியம் முதலிய அநேக நூல்களைச் செய்தார். இவரை வைஷ்ணவர்கள் பாஷியகாரரென்றும், எம்பெருமானாரென்றும் வழங்குவர். இவருக்கு முன்னர் விசிஷ்டாத்துவைதமதம் நாட்டினவர்கள் பன்னிருவராவார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், சூடிக்கொடுத்தாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்போர்.
ராமேசுவரம் - ராமர் ராவணனைக் கொன்று திரும்பியபோது சேதுவோரத்திலே சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து பூசைபுரிந்த ஸ்தலம். இவ்விலிங்கத்தைத் தரிசித்துவழிபடுவோர் சகலபாவங்களும் நீங்கப்பெறுவர் என்பது புராணசம்மதம்.

ராவணன் - (ர) ராடிசர்தலைவன். இவன் ராஜதானி லங்காபுரி. புலஸ்தியன் புத்திரனாகிய விச்சிரவாவு புத்திரன். தாய்சுமாலி புத்திரியாகிய கைகசி. இவன் பாரிமயன் மகளாகிய மந்தோதரி. (மண்டோதரி) கும்பகர்ணன், விபீஷணன் என்போர் இவன் தம்பியர்@ சூர்ப்பணகை தங்கை. இவன் புத்திரன் இந்திரஜித்து. இவன் பத்துத் தலைகளை யுடையனாதலின் தசக்கிரீவன் தசகண்டன் முதலிய நாமங்களைப் பெறுவன். இவன் மகாவுக்கிரதவங்கள் செய்து, “மனுஷரைப் பொருட் படுத்த கிலேன்@ மற்றெவ்வகைத் தேவராலும் அசுரராலும் இறவாதிருக்க வரந்தருக” வென்று பிரமாவை வேண்டிப் பெற்றான். அவ்வரப்பிரசாதத்தால் மிக்க கருவமுடையனாகித் திரிலோகங்களிலுஞ் சென்று சாதுக்களையுந் துன்புறுத்தி வந்தான். இத்துன்பங்களை யொழிக்குமாறே விஷ்ணு ராமனாகப் பிறந்து ராவணனைக் கொன்றார். ராவணன் திக்கெல்லாம் வெற்றிபெற்று வடக்கிற் சென்று குபேரனைக் கண்டு அவனைச்செயித்து அவன் புஷ்பக விமானத்தைக் கவர்ந்து கொண்டு கைலைக்கு மேல் நேராகவந்தபோது நந்திதேவர்தடுப்ப, இவன் தனது விமானத்தோhழிந்து அக்கைலையை வேரோடும் பழித்துச் செல்வெனென்று கர்வங்கொண்டு பெயர்த்துத் தோள் மேற் கொள்ள வெத்தனிக்க, அதுகண்ட சிவன் தமது பெருவிரலாலழுத்த, அம்மலையின் கீழ் அகப்பட்ட இவன்நெடுங் காலங் கிடந்து வருந்திச்சிவனைத்தோத்திரித்து அவ்வாபத்தினின்றும் நீங்கிப் போயினான். அக்கைலையின் கீழ்க்கிடந் துச்சவிசையாலழுது துதித்தமையால் இவனுக்கு ராவணன் என்னும் பெயர் வாய்ப்பதாயிற்று.

இவன் திக்குவிஜயஞ் செய்யப் போனவிடங்களில் அபஜயப்பட்டுத் திரும்பியது இரண்டிடத்தன்றி மற்றெங்கு மில்லை. ஒன்று வாலியாலும் மற்றது கார்த்தவீரியார்ச்சுனனாலுமேயாம் இவன் மேரு பக்கஞ் சென்ற போது அங்கே அரம்பையைக் கண்டு அவளைப் பலவந்தம் பண்ணிப் புணர்ந்தான். அது கேட்ட நளகூபரன்சினந்து, நீ எப்பெண்ணையாயினும் அவள் சம்மதமின்றிப் புணர்வையேல் உன் தலைகள் ஆயிரத்துண்டமாகச் சிதறி யிறக்கக்கடவையென்று இவனைச் சபித்துப் போயினான். அதுபற்றியே சீதையை மானபங்கஞ் செய்யாது தன் சிறையிலிட்டு அவள்பாற் சென்றிரந்து வருவானாயினதும், முன் நரரைப் பொருட்படுத்தாது கேட்டவரத்திழுக்கால் நரனாகிய ராமனாலிறந்தது மாமென்க.

ராஷ்டிரபாலன் - (ய) கஞ்சன் தம்பி.

ராஷ்டிரபாலிகை - உக்கிரசேனன் புத்திரி. சிருஞ்சயன்பாரி.

ரிபு - யதுவினது நான்காம் புத்திரன்.

ரிபுஞ்சயன் - பிருகத்திரதன் வமிசத்து மகததேசராஜர்களுள் கடையரசன். இவன் தனது மந்திரி சுக்கிரீநகனாற் கொல்லப்பட்டவன்.

ருகன் - விருகன் தந்தை. விஜயன் புத்திரன்.

ருக்குமகேசன்
ருக்குமதரன்
ருக்குமநேத்திரன் ருக்குமிதம்பியர்.
ருக்குமவாகு

ருக்குமன் (ய) ருசிகன் புத்திரர். சியா
ருக்குமேஷ{ மகன் சகோதரர்.

ருக்குமி - விதர்ப்பராஜனாகிய வீஷ்மகன்மூத்த மகன். ருக்குமிணி தமையன்.

ருக்குமிணி - கிருஷ்ணன் மூத்தமனைவி. வீஷ்மகன் புத்திரி. பிரத்தியுமனன் தாய்.

ருடியன் - (பு) மகாவீரன் புத்திரன், இவனுக்குப் புஷ்கராருணி, கவி, திரயாருணி எனமூவர்புத்திரர். இவர்கள் சந்ததியார் பிராமணராயினர்.

ருசி - ஒருபிரஜாபதி. சதரூபன் புத்திரியாகிய ஆகூதி இவன் பாரி. இவளிடத்திற் பிறந்த புத்திரன் யஞ்ஞன்.

ருசிகன் - (ய) தருமன்புத்திரன். இவன்புத்திரர் சியாமகன், புருது, ருக்குமோஷ{, ருக்குமன், புருசித்து என்போர்.

ருசிரதன் - (பு) குரு

ருசிராஜன் - பிருகதிஷன் வமிசத்துச் சேனசித்துபுத்திரன். பிராக்கியன் தந்தை.

ருத்திரகோடி - ஒரு தீர்த்தம். இதுஒரு காலத்தில் ருத்திரன் இருஷிகளுக்குப் பிரத்தியடிமாகக் கோடி ரூபமாய்த் தோன்றினமையால் இப்பெயர் பெற்றது.

ருத்திரபர்வதம் - ஜானவிகட்டமென்னும் கங்கைக் கரையிலே யுள்ள மலை.

ருத்திரப் பிரயாகை - மந்தாகினிக்கும் அளக நந்தைக்கு மிடையே யுள்ள Nடித்திரம்.

ருத்திரர் - இவர் அஜன்,ஏகபாதன், அரன், அகிர்ப்புத்தியன், சம்பு, திரியம்,பகன், அபராஜிதன், ஈசானன், திரிபுவனன், துவஷ்டா, ருத்திரன் எனப்பதினொருவர். இவர்களை ருத்திரன் மானசபுத்திரரென வழங்குவர். பிரமமானச புத்திரரெனவும் படுவர்.

ருத்திரன் - திருமூர்த்திகளுளொருவராகிய சங்காரகர்த்தா. சிவனுக்கும் பெயராம். பிரமாவினது புத்திரருள்ளு மொருவராவர். ஸ்ரீ கண்டருத்திரர் முதலிய ருத்திரபேத மெண்ணில

ருத்திராடிம் - சிவபக்தராற் றரிக்கற் பாலதாகிய ஒரு மணி. திரிபுராசுரர்களை வதம் பண்ணப் புறப்பட்ட போது காயத்திரியைக் கண்ணைமூடிச் செபிக்கக் கண்களிலிருந்து வீழ்ந்த கண்ணீர்த் துளிகள் இம் மணிகளாயின வென்பது சரித்திரம்.

ருமை - சுக்கிரீவன் பாரி.

ருரன் - சியவனன் புத்திரனாகிய பிரமதிக்குக் கிருதாசியென்னும் அப்சரசையிடத்திற் பிறந்த புத்திரன். இவரோரிஷி. இவர் பாரி பிரமத்துரை. இவர் தமது பாரி ஒரு பாம்பாலிறக்க, அவளைத் தமது தவமகிமை யாலெழுப்பி, அன்ற முதற் பாம்புகளைக் கொல்வதே விரதமாகக் கொண்டவர். அவ்விரதத்தை நீக்கினவர் டுண்டுபம் என்னும் சர்ப்பரூபந் தாங்கியிருந்தவராகிய சகஸ்திரபாதமுனிவர். ருரன் மகன் சுநகன்.

ரூபாசுவன் - (இ) கிருதாசுவன்.

ரூபாவாகிகள் - ரூபாநதிதீரவாசர்கள்.

ரூபை - சுக்திமநதமென்னுமிடத்திலிருந்து பாய்கின்றவொரு நதி.

ரேணுகை - பரசுராமன் தாய், ஜமதக் கினிபாரி.

ரேணுமதி - நகுலன்பாரி.

ரேவதி - ரைவதபர்வத மீதில் தாமரைத் தடாகத்திற் பிறந்த ஒருகன்னிகை. இவளைப் பிரமசன் என்னுமுனிவர் எடுத்து வளர்த்தார். இவள் புத்திரன் ரைவதமனு. (உ) பலராமன் பாரி. ரேவதன் புத்திரி. இவள் சரியாதி பௌத்திரனாகிய ரைவதன் புத்திரன் குகுத்மிபுத்திரியெனவும் படுவள். (ந) நடித்திரங்களுளொன்று. (ச) அரிஷ்டன் பிப்பலன் என்போர்க்குத் தாய். மத்திரன் பாரி.

ரேவந்தன் - ஒரு குஹியகன்.

ரைப்பியன் - (பு) ஈளினன். இவன் சுமதிபுத்திரன். உ (ரி) அர்த்தாவசு பராவசு என்போர் தந்தை

ரைவதம் - ஒரு மலை. இது குமுதமலையெனவும் படும். இது துவாரகைக்குச் சமீபத்திலேயுள்ளது. இருதவாக்கு என்னும் இருஷியால் சபிக்கப்பட்ட ரேவதி இம்மலைமேல் வீழ்ந்து ஒரு தடாகமாயினமையால் இப் பெயர் பெற்றது.

ரைவதன் - ஐந்தாம் மனு. பிரியவிரதன் வமிசத்துத் துர்த்தமனுக்குரேவதியிடத்திற் பிறந்த புத்திரன். (உ) ஆநர்த்தன் புத்திரன். குருத்மிதந்தை.

ரோசனை - வசுதேவன் பாரிகளுளொருத்தி.

ரோமகசித்தாந்தம் - சோதிடசித்தாந்தங்களுளொன்று. இது ரோமகன் என்னும் பண்டிதன் செய்தது.

ரோமகபுரி - இது பூர்வகாலத்திலே மேகலாரேகையிலே லங்காபுரிக்கு மேற்கே தொண்ணூறுபாகை தூரத்திலே யிருந்த பட்டணம்.

ரோமகர்ஷணன் - வியாசன் சீஷனாகிய சூதர். இவர் அநேகபுராணங்களையுப தேசித்தவர்.

ரோமகன் - ரோமகபுரியிலிருந்து ஆரிய தேசத்தில்வந்து ஆரியசாஸ்திரங்களைக் கற்றுவிளங்கிய பூர்வகாலத்துப் பண்டிதன்.

ரோகிணம் ஒருமலை. இம்மலையிலே
ரோஹிணம் ரத்தினாகரங்கள் நேகமாகவுள்ளன.
(உ) ஒரு விருடிம். இது அலம்பதீர்த்தக் கரையிலே யுள்ளது. இதிலே வாலகில்லியர் தலைகீழாகத் தூங்கித் தவஞ்செய்திருக்கும் போது கருடன் அமிர்தங்கொண்டு வருமாறு சென்றது. தனக்கு வழியுணவாக ஓர் யானையையும் ஒரு கச்சபத்தையும் கொண்டு சென்ற அக்கருடன் அவ்வுணாவோடிவ் விருடித்தின் மீது வதிந்திட அம்மரம் ஒடிந்து சாய்ந்தது. சாய்தலும் வீழாமுன்னர்க் கருடன் எழுந்து தன்காலிற் சிக்கிய அம்மரத்தையும் அவ்வுணாவோ டுடன் கொண்டு சென்று போய் நிஷ்புருஷமலையிலே இறங்கித்தனது உணவைத்தின்று போயது. அவ்விருடித்திற் றொங்கிய வாலகில்லியரும் அம்மரத்தோடு கொண்டு போய் இம்மலையில் விடப்பட்டார்கள்.

ரோமபாதன் - (அங்) தசரதன். தருமரதன் புத்திரன். இவன் தனக்குச் சந்ததியில்லாமையால் ஸ்ரீ ராமன் தந்தையாகிய தசரதன் புத்திரி சாந்தையை எடுத்து வளர்த்தவன். (உ) விதர்ப்பன் மூன்றாம் புத்திரன்.

ரோமஷன் - (ரி) இந்திரன் ஏவலால் அருச்சுனன் நாகலோகத்தி லிருக்கிறானென்று தருமருக் குணர்த்தி அருச்சுனனைத் தீர்த்த யாத்திரை செய்ய ஏவிய முனிவர்.

ரோஹிணி - நடித்திரங்களுளொன்று. தடின் மகள். சந்திரன் பிரியநாயகி. (உ) பலராமன் தாய். வசுதேவன் பாரி.

ரௌகிதம் - பாரதயுத்தத்திற்குப் புறப்பட்ட கௌரவ சேனைக்குப் பாசறையாயிருந்தவனம்.

ரௌத்திராசுவன் - (பு) அஹம்யாதி புத்திரன். இவனுக்குக் கிருதாசியிடத்திற் பதின்மர் புத்திரர் பிறந்தார்கள். அவர்களுள்ளே இருசேயு மூத்தோன்.

ரௌரவம் - ஒருநரகம். இந்நரகத்திலே மகாகொடிய பாவிகளிட்டு வருத்தப்படுவார்கள். ஈராயிரம் யோசனை சதுரமாயுள்ளது. இந்நரகம் முழங்கா லாழம் உருக்கிய செம்புநீர்ப் பரவையாக விருப்பது.

லங்காதேவி - தருமன் பாரியாகிய தடின்புத்திரி. லம்பா என்றும் பெயர் பெறுவள்.

லங்காபுரி ராவணன் ராஜதானி. இது
லங்கை தென்சமுத்திரத்திலே திரிகூடபர்வத சிகரத்திலே விசுவகர்மாவினால் நியமிக்கப்பட்ட பட்டணமும் அதனைச்சேர்ந்த நாடுமாம் முதலிலே மாலியவந்தனுக்கு ராஜதானியாகிப் பின்னர்க் குபேரனுக்கு ராஜதானியாகி அதன்பின்னர் ராவணனாலே அபகரிக்கப்பட்டது. ஏழுமதில்களையுடையது. இதனைச் சேர்ந்த நாட்டையுள்ளிட்டு இஃது எழுநூறுகாதம் விஸ்தாரமாயிருந்த தென்பர்.

இது சூரிய சித்தாந்தத்திலே சொல்லப்பட்ட மேகலாநகரங்கள் நான்கனுள் ஒன்று. சோதிட சாஸ்திரத்துக்கு நாடிஸ்தானமாக விருந்தது. இப்போதுள்ளலங்கை மேகலாரேகை (நுஙரயவழச) க்கு வடக்கே வெகுதூரத்திலிருப்பதாலும், ஆதிலங்காபுரி மேகலாரேகையிலிருந்தமையாலும், கடல்வாய்ப்பட்டழிந்த லங்கையினது ஒருசிறுகூறே தற்காலத்துள்ளதாதல் வேண்டும்.

லங்கினி - லங்கையைக் காவல் செய்துநின்ற ஒரு ராடிசி. இவள் அது மந்தனாற் கொல்லப்பட்டவள்.

லங்கை - லங்காபுரி காண்க.

லடி{மணவதி - கௌடபுரி.

லடி{மணன் - ராமன் தம்பி. தசரதனுக்குச் சுமித்திரையிடத்துப் பிறந்தபுத்திரன். இவன் ராமனிடத்து மிக்க பக்தியுடையவன். இவன் ராமன்மேல் வைத்த பக்தியினாலும் சகோதர அன்பினாலும் ராமரோடு காட்டுக்கேகி அவருக்கு வந்த கஷ்டங்களை யெல்லாம் உடன் அநுபவித்தானாதலின் சகோதர அன்பிற்கு இவனை இலக்கியமாக எடுத்துக் கூறுவர்.

லடி{மி - அமிர்தமதனத்துக்கண் திருப்பாற்கடலி லெழுந்த பெண். இவர் விஷ்ணுவுக்குத் தேவியாயினர். பிரமாவுக்குப் புத்திரியாய் சியேட்டாதேவிக்குப் பின் பிறந்தவராகவும் சொல்லப்படுவர். பிருகுபுத்திரியென்றுஞ் சிலர் கூறுவர். இதுகாரணமாகப் பார்க்கவி யென்றும் ஒரு பெயர்பெறுவர். இவ்விகற்பமாகிய கொள்கையெல்லாம் கற்பந்தோறும் எடுத்த அவதார பேதத்தால் வந்தனவாம். லடி{மிதேவி செல்வங்களுக் கெல்லாம் அதிதேவதை.

லடி{மீசுவரர் - திருநின்றியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

லதை - ஓரப்சரப்பெண்.

லம்போதரன் - விநாயகர். தொந்தி வயிற்றினையுடையவ ரென்பது பொருள்.

லவணாசுரன் - மதுபுத்திரன். இவன் சாதுக்களை வருத்துவதே தொழிலாகக் கொண்டு திரியுங்காலத்திலே சத்துருக்கனாலே கொன்றொழிக்கப்பட்டவன்.

லவன் - ராமர்புத்திரன்.

லாங்கலி - பலராமன்.

லாங்கிலினி - மகேந்திரபர்வதத்திலே உற்பத்தியாகமோர் நதி.

லாசகன் - சிவன்

லிங்கம் - சிவபெருமானார் ஆன்மாக்கள் தம்மை வழிபட்டுய்யுமாறு கொண்ட நிர்க்குண சொரூபமாகிய சகளவடிவம். பீடமும் லிங்கமும் சதாசிவவடிவம். அது கன்மசாதாக்கிய வடிவமெனவும்படும். பீடஞ்சத்தியையும், லிங்கம் சிவத்தையுங் குறிக்கும். இச்சாதாக்கியத் திருமேனி சர்வான்மாக்களையும் சர்வாண்டங் களையும் அடக்கியிருக்கும் பரம காரணனை விளக்குதலின், உலகத்து மக்கள் தியானித்து வழிபாடு புரிதற்குச் சிறந்த சின்னமாகவுள்ளது. இதனிலுஞ் சிறந்ததொரு சின்னம் வேறில்லை. லிங்கம் பராத்த மென்றும் இஷ்டமென்றும் இருபாற்படும். அவற்றுட்பரார்த்தம், சுயம்பு காணம் தைவிகம் ஆரிடம் மானுடமென ஐவகை லிங்கமாம்.

இஷ்டலிங்கம் சுவார்த்தமாகப் பூசிக்கப்படுவதாயொருவன் தன் குரு விடத்துப் பெறுவது. (உ) விக்கிரகங்களுக்கும் பொதுப் பெயர்.

லீலாவதி - இரணியகசிபன் பாரி. பிரகலாதன்தாய். (உ) பாஸ்கராசாரியர் புத்திரி. இவள் பொருட்டே லீலாவதி யென்னும் பிரபல கணித நூல் பாஸ்கராசாரியரால் செய்யப்பட்டது. (ந) துர்க்காதேவி.

லீலாவதிகணிதத்திலே வல்லவளாகிய பின்னர்த் தான் செய்த நூல்களை யெல்லாந்தந்தை பெயராற் பிரகடனஞ் செய்தாளென்பர்.

லைங்கம் - லிங்கபுராணம். நந்திகேசுரராற் கூறப்பட்டது. பதினோராயிரங் கிரந்தமுடையது.

லோகபாலர் - பூமிக்கு நான்குபக்கத்திலும் லோகா லோக பர்வதத்திலேயிருந்;து பூமியைக் காக்கின்ற சுதன்வன், சங்கன், இரணியரோமன், கேதுமந்தன் என்னு நால்வர் இப்பெயர் பெறுவர்.

லோகாலோகம் - சக்கரவாளகிரி. இது மண்டலாகாரமாகவுள்ளது. இதுவரைக்குமே சூரிய கிரணம் வியாபகமாம்.

மனுஷர் வசித்தற் கொவ்வாத பூப்பிரதேசம் அலோகமென்றும் வசித்தற்குரியது லோகமென்றுஞ் சொல்லப்படும். பூகோளத்தினது அதி உத்தரபாகமும், அதிதடிpணபாகமும் அலோகமாம். இரண்டையும் பிரிக்கு மெல்லையே லோகாலோகபர்வதமாம்.

லோகிதாசியன் - அரிச்சந்திரன் புத்திரன்.

லோகித்தியநதி - தேவாரணியத்தருகேயுள்ள ஒரு நதி.

லோபாமுத்திரை - அகஸ்தியர் பாரி. விதர்ப்பராஜன் புத்திரி. புலஸ்தியர் தங்கை.

லோகபாதன் - அங்கதேசராஜன்.

லோலா, லோலை - லவணாசுரன் தந்தையாகிய மவினதுதாய்.

வக்திரயோதி - விப்பிரசித்தி புத்திரன்.

வங்கம் - ஒரு தேசம். இது கௌடஞ் சார்ந்துள்ளது.

வங்கன் - (அ) பலியினது இரண்டாம் புத்திரன். வங்கன் ஆதியில்; அரசுபுரிந்த தேசம். வங்கமெனப் பெயர் பெறுவதாயிற்று.

வங்கியசூடாமணி - சண்பகபாண்டியனெனப்படுபவன் இவனே. தருமி இவன் காலத்தவன்.

வங்கியசேகரன் - விக்கிரமசோழன் காலத்திலே மதுரையிலரசுபுரிந்த பாண்டியன். இவன் சோமசுந்தரக் கடவுளிடத்துத் தமிழ்ச் சங்கப்பலகை பெற்ற பாண்டியன். இவனே கடைச்சங்கத்தை ஸ்தாபகஞ் செய்து அதற்கு வேண்டிய நிபந்தங்களமைத்து நூலாராய்தலும் நூல்செய்வித்தலுமாகிய முயற்சிகளால் தமிழைவிருத்தி செய்தவன்.

வசந்தமாலை - மாதவிதோழி. கூனியென்றும் இவளுக்குப் பெயருண்டு.

வசிட்டன் - பிரமமானச புத்திரருள் ஒருவராகிய இவர் மகா தவச்செல்வர். இடி{வாகுவமிசத்து அரசர்க் கெல்லாம் குலகுரு இவரே.

இவர் வைசுவத மநுவந்தரத்திலே சப்த ரிஷிகளு ளொருவர். பாரி அருந்ததி. புத்திரர் சக்தி முதலிய நூற்றுவர்.இவர் பூர்வத்திலே தடின் மகளாகிய ஊர்ச்சை என்பவளை மணம்புரிந்து அவளிடத்திலே ரஜன். கோத்திரன் ஊர்த்துவவாகு, சவனன், அநகன், சுதபன், சுக்கிரன் என எழுவர் புத்திரரைப் பெற்றார். இவர்கள் சுபாயம்புவமநுவந்தரத்திலே சப்தரிஷிகளாக விருந்தார்கள். இவர் முன்னே பிரமமானச புத்திரராக விருந்த போது நிமிசாபத்தால் சரீரத்தையிழந்து பின்னர் மித்திராவருணர்களுக்குப் புத்திரராகப் பிறந்தார். (அகஸ்தியன் காண்க) இவரே பின்னர் வியாசராகவும் பிறந்தாரெனப்படுவர்.

வசு - (க) (கு) சேதிராயனாகிய கிருதிபுத்திரன். (உ) நிருகன் வமிசத்துப் பூதசோதிபுத்திரன்.

வசுக்கள் - அஷ்டவசுக்கள்.

வசுசேனன் - கர்ணன்.

வசுதன் - (இ) திருசதசியல்.

வசுதேவன் - (க) (ய) ஆனகதுந்துபி. சூரன் புத்திரன். தேவகிநாயகன். கிருஷ்ணன் பலராமன் என்போர்தந்தை. (உ) கண்ணுவன்.

வசுதை - மாலியனென்னு மிராடிசன் பாரியாகிய ஒரு கந்தருவப்பெண்.

வசுபதன் - உபரிசரவசுவினது சேனாபதி. கோலாகலசங்கமத்திலே சுக்திமதியிலே பிறந்தவன்.

வசுமந்தன் - சுருதாயு.

வச்சிரசுவாலை - கும்பகர்ணன் பாரி.

வச்சிரதந்தன் - பகதத்தன் புத்திரன்.

வச்சிரதமிஷ்டிரன் - ராவணன் துணைவரிலொருவன். இவன் அகந்தனாற் கொல்லப்பட்டவன்.

வச்சிரதம்பநாயகர் - திருமழபாடியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்.

வச்சிரநாடு - சேனையாற்றின் கரையிலுள்ளது.

வச்சிரநாபன் - விப்பிரசித்திபுத்திரன். தாய் சிங்கிகை. இவன் மகன் பிரபாவதி.

வச்சிரமுஷ்டி - மாலியவந்தன் புத்திரன்.

வச்சிரன் - கிருஷணன் பௌத்திரனாகிய அநிருத்தன் புத்திரன். கிருஷ்ண நிரியாணத்தின் பின்னர் இவனே மதுராபுரிக் கரசனாயினவன்.

வச்சிரவாகு - சூரபன்மன் புத்திரருள் ஒருவன். இவன்றாய் பதுமகோமளை.

வச்சிராங்கன் - கசியபன் புத்திரன். இரணியாடின் இரணியகசிபன் என்போர் இறந்தபின்பு, திதி புத்திரவிச்சையால் தவங்கிடந்து கருப்பங் கொள்ள அக் கருப்பத்தை இந்திரன் சேதித்தான். அங்ஙனஞ் சிதைவுற்ற கருப்பம் ஏழுகூறாக ஏழுமருத்துக்கள் பிறந்தார்கள்.

அதன் பின்னரும் புத்திரன் வேண்டித் தவங்கிடந்த போது இவ்வச்சிராங்கன் பிறந்தான்.

வச்சிராங்கன் இந்திரனை வென்று பிரமாவை நோக்கித் தவங்கிடந்து தாரகனைப் பெற்றான்.

வச்சிராங்கி - வச்சிராங்கன் பாரி. தாரகன் தாய்.

வச்சிரை - ஓரப்சரஸ்திரி.

வஞ்சி - சேரர்களுடைய இராஜதானி. இதனைக் கொடுங்கோளுரென்பார் சிலர். திருவஞ்சைக் கள்மென்பார் சிலர். இவ்விரண்டூர்களும் கொச்சியைச் சார்ந்த நாட்டில் ஒன்றற் கொன்று சமீபமாக உள்ளன.

வடகுரங்காடுதுறை - காவிரிக் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.

வடநெடுந்தத்தனார் - இவர் நாலைகிழவனைப் பாடிய புலவர்.

வடமதுரை - வடநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.

வடமவண்ணக்கன்பெருஞ்சாத்தனார் - இவர் வடவண்ணக்கன்பெருஞ் சாத்தனாரெனவும் படுவர். தேர்வண்மலையனைப் பாடிய புலவர் இவரே.

வடழலநாதர் - திருப்பழுவூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வடவாழகம் - குமேரு.

வடவை - பெண் குதிரைரூபந் தாங்கிச் சூரியனைக் கூடிய அச்சுவினி. இது சமுத்திரமத்தியிலுள்ளது.

வடஸ்தானம் - பாரதயுத்த காலத்திலே குருசேனைக்குப் பாசறையாக விருந்தவிடம்.

வடவாம்பிகை - திருக்கோடிகாவிலெழுந்தருளி யிருக்கும் தேவியார் பெயர்.

வடிவுடையம்மை - திருவொற்றியூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வடிம்பலம்பநி;னறபாண்டியன் - பஃறுணியாற்றை அமைத்தவன். இவன் கடற்றெய்வத்துக்குப் பெரு விழாவாற்றினோன்.

வடுகேசுவரர் - திருவடுகூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வடுநேர்கண்ணம்மை - திருவலம்புரத்திலே கோயில கொண்டிருக்கும் தேவியார் பெயர். (உ) திருவடுகூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வண்டமர்பூங்குழலம்மை - திருக்கோளிலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வண்டமர்பூங்குழல்நாயகி - திருவாழ்கொளிபுத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வண்டமர்பூங்குழல்நாயகியம்மை - திருப்பாம்புரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வண்டார்குழலி - திரு ஆலங் காட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். (உ) திருக்கோளிலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வண்டுவார் குழலியம்மை - திருமருகலிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வண்ணக்கஞ் சாத்தனார் - இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்.

வதரியாச்சிரமம் - இதுவடநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

வதூசரை - ஒரு நதி. பிருகுமகாவிருஷியினது பாரியைப் புலோமன் என்னும் இராடிசன் கவர்ந்து சென்றபோது அவள் கண்களிலிருந்து ஒழுகிய தாரைகளால் உண்டாகிய நதியென்பர்.

வந்தி - (ரி) இவரோ ரிருஷி. ஜனக மகாராஜனுடைய யாக சாலையிலே இவரை அஷ்டவக்கிரன் வாதத்திலே வென்றான்.

வபு, வபுசு - ஓரப்சரக் கன்னிகை. இவள் நாரரேவலால் துர்வாசதவத்தையழிக்க வெத்தனித்த போது அவரால் சபிக்கப்பட்டுப் படிpகளைப் பெற்றவள்.

வபுஷ்டை - காசிராஜன் மகள். மூன்றாம் ஜனமேஜயன்பாரி.

வபுஷ்மந்தன் - பிரியவிரதன் புத்திரருளொருவன். இவன் பங்குக்கச் சான்மலித்தீவு வந்தது. இவன் புத்திரரெழுவர்.

வயலூர் - பாண்டிநாட்டுள்ள ஒரூர். இது வார்த்திகனுக்கு ஒரு பாண்டியனாற் பிரமதாயமாகக் கொடுக்கப்பட்டது. திருத்தங்காலுக்குக் கிழக்கேயுள்ளது.

வரகுணபாண்டியன் - சேரமான் பெருமாணாயனார் காலத்தில் மதுரையில் அரசுசெலுத்திய பாண்டியன்.

வரதுங்கபாண்டியன் - பிரமோத்தர காண்டத்தைத் தமிழிற் பாடியவர். அதிவீரராமபாண்டியன் தமையனார்.

வரதை - விதர்ப்பதேசத்தி லுற்பத்தியாகிக் கோதாவிரியிற் சங்க மிக்கும் நதி.

வரருசி - (க) பாணினியாகரணத்துக்கு வியாக்கியானஞ் செய்த இருஷி. காத்தியாயனர் எனவும் படுவர்.

வரலடி{விரதம் - ஆவணிமாசத்துச் சுக்கிலபடித்துச் சுக்கிர வாரத்திலே லடி{மிதேவியைத் தியானித் தனுஷ்டிக்கப் படுவதாகிய ஒருவிரதம். இதனால் பெண்களுக்குப் புத்திரபௌத்திர விருத்தியும் சகலசம்பத்துமுண்டாகப் பெறுவர் என்பது புராணம்.

வராககர்ணன் - ஓரியடின்.

வராகபுராணம் - விஷ்ணுவின் வாயிற் காவலாளராகிய ஜயவிஜயர் என்னுமிருவரும் ஒருபோது வைகுண்டலோகப் பிரவேசஞ் செய்ய வந்த முனிவரொருவரைத் தடுத்தமையினாலே சாபமேற்று, பூமியிலேகசியபர் திதி என்பவர்களுக்குப் புதல்வராகப் பிறந்து இரணியகசிபு இரணியாடின் எனப் பெயர் பெற்றமையும், இவ் விருவரிலே இரணியகசிபு மூவுலகங்களையும் செயித்தமையும், இரணியாடின் நேரே சுவர்க்கத்துக்குப் போய்த் தேவர்களை வென்றமையும், தேவர்கள் வராகவுருவமுற்றிருந்த விஷ்ணு மூர்த்தியை வேண்ட அவ் விரணியாடினைக் கொன்றமையும், திதி என்பவளுக்கும் விட்டுணுவுக்கும் நடந்த யுத்தத்திலே திதி தோற்றமையும், விஷ்ணு வராகரூபத்தைப்படிப்படியே நீக்கிக் கொண்டமையும் உணர்த்துவது. இஃது இரபத்துநாலாயிரங் கிரந்தமுடையது.

வராகமிகிரன் - ஒரு ஜோதிஷன். இவர்கலியுகம் மூவாயிரத்தறுநூற்றில் விளங்கியவர். அஃதாவது இற்றைக்கு ஆயிரத்துநானூறு வருஷங்களுக்கு முன்னே யிருந்தவர். இவர் செய்த நூல்கள் பிருஹத்சம்ஹிதையும் பிருகத்ஜாதகமுமாம்.

வராகம் - க. விஷ்ணுதசாவதாரங்களு ளொன்று. அது மூன்றாவதவதாரம். கற்பாந்தரத்திலே சமஸ்தமும் ஜலத்திலே மூழ்கிப்போன போது அச்சலத்தின்மீது ஆலிலை மேலறி துயில்; கொண்டிருந்த விஷ்ணு அப்பூமியைத் தமது கொம்பிற்றாங்கிச் சலத்தின் மீது கொண்டுவந்துகாக்கவும் இரணியாடினைக் கொல்லவும் சுவேதவராகரூபமாக அவதரித்தார். உ. மகததேசத்தின் கண்ணதாகிய ஒரு மலை.

வரந்தருவான் - வில்லிபுத்தூராழ்வார் மகனார். இவர் தந்தைபாற் பாடங்கேட்டு வரும்போது ஒருநாள் தந்தை சொன்ன பொருளை விடுத்துத் தாமாகவொன்றைக் கற்பித் துரைத்தனர். அது கண்டு வில்லிபுத்தூரர் சினங்கொண்டு தம் வீட்டினின்றும் அவரையோட்டி விட்டனர். அன்று முதல் அவர் வேறோராசிரியரை யடைந்து கல்விகற்றுவல்லராகித் தந்தையாருக்குப் புலனாகாமல் நெடுங்காலமாக மறைந்தொழுகி வருவாராயினர். தந்தையார் பாரதத்தைப் பாடி அரங்கேற்றுங் காலத்திவர் வேடமாறி அச்சபையின் கண்ணே சென்றிருந்தார். வில்லிபுத்தூரர் நூலைஅரங்கேற்றத் தொடங்குமுகத்திலே “ஆக்குமாறயனாம்” என்னுங் கவியைக் காப்பாக வெடுத் தோதி அதற்குப் பொருளுரைத்தனர். அச்சபையி லிருந்தோர், வில்லிபுத்தூரரை நோக்கி, நம்வினாவுக் குத்தரங் கூறிப்பின்னர் அரங்கேற்றுக வென, வில்லிபுத்தூரர் உமது வினா யாதென்றனர். அவர்கள், உமது நூலுக்கு முதனூல் வியாசபாரதமன்றோ. அந்நூலிலே விநாயகவணக்கஞ் செய்து நூலாரம்பஞ் செய்யப்பட்டிருக்க நீர் அங்ஙனஞ் செய்யாது பொதுவாக வணக்கங்கூறிய தென்னை யென்றார்கள். அப்பொழுது வரந்தருவான் எழுந்து இச்சபை பல்வகைச் சமயவாதிகளுங் கூடியிருக்கும் பொதுவாதலின் பொதுவணக்கம் யாவற்கும் ஒப்பக் கூறப்பட்டது. மற்றையவிநாயக வணக்கம். கவிதம்மகத்தே கூறிவிட்டே இது கூறினர் என்றார். அதுகண்ட வில்லிபுத்தூரர் மகிழ்ந்து அச்சநீங்கினராயினும் அது கூறினான் யாவனென்றதிசயித்திருந்தார்.

சபையோர் வரந்தருவாளை நோக்கி, அஃதுனக்குப் புலனாயதெப்படியென்ன, வரந்தருவான் தாமே
“நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே வாடாததவவாய்மை முனிராசன் மாபாரதங் சொன்னநாள். ஏடாகமாமேரு வெற்பாகவங்கூ ரெழுத்தாணிதன் கோடாகவெழுதும்பிரானைப் பணிந்தன்புகூர்வாமரோ”
என்னுங் காப்பைப்பாடி இதுவே அவர் கூறியகாப்பென்பது யான் இவர்க்குப் புத்திரன் என்றார். அதுகேட்டுச்சபையார் அடங்க, வில்லிபுத்தூரரு மகிழ்ந்து அரங்கேற்றினர். அது முடிந்த பின்னர் வில்லிபுத்தூரர் தமதுமைந்தனையே அதற்குச்சிறப்புப்பாயிரஞ் செய்க வென்றேவிப் பெற்று அவரைத் தழுவிக்கொண்டாடினர் என்பது புலவோர் கர்ணபரம்பரை. அச்சிறப்புப் பாயிரம் இவரே செய்தா ரென்பது “அவன் மகன்வரந்தருவானிப் பதிகஞ் செப்பினானே” என்று வருதலாலுணர்க. தம்மைப் படர்க்கை முகமாகக் கூறியது வடமொழி வழக்கு.

வராகி - தேவிகொண்ட மூர்த்தங்களுளொன்று.

வராங்கி - சரியாதிபாரி.

வருணன் - அஷ்டதிக்கு பாலகருளொருவன். இவன் திக்குமேற்கு. பாரிசியாமளாதேவி. இவன்பட்டணம் சிருத்தாவதி. ஆயுதம் பாசம். வாகனம்முதலை. அன்னவாகனமென்றுஞ் சிலர்கூறுவர். இவன் ஜலத்துக்கு அதிதேவதை.

வரூதினி - ஒரு கந்தருவப்பெண். இவள் பிரவரன் என்னும் பிராமணனைக்கண்டு மோகித்துத் தொடர, அவன் அதற்கிணங்காது மறுத்துப் போயினான். அப்போது ஒருகந்தருவன் அப்பிரானணனைப் போல வடிவங் கொண்டு அவள் முன்னேசெல்ல இருவருங்கூடிச் சுவரோசி என்பவனைப் பெற்றார். சுவரோசி சுவாரோசிஷமனுவைப் பெற்றவன்.

வருணை - ஆரியாவர்த்தத்திலேயுள்ள ஒரு நதி.

வர்ச்சசு - சந்திரபுத்திரரு ளொருவன்.

வர்ணங்கள் - “ஜாதி” காண்க.

வர்ணதிருக்கு - (ய) அக்குரூரன் தம்பி.

வர்ஷாதேவி - மரீசிபாரிகளுளொருத்தி இவள் புத்திரர் அறுவர். பிரமசாபத்தால் இவர்கள் தேவகிவயிற்றிலே புத்திரராகப் பிறந்து கஞ்சனாற் கொல்லப்பட்டுச் சுதலமடைந்தார்கள். பின்னர்க் கிருஷ்ணன் பிறந்து வளர்ந்தபின்னர்த் தேவகிசித்தப்படி அவரால் அவ்வறுவரும் சாபவிமோசனம் பெற்றனர்.

வலம்புரநாதர் - திருவலம் புரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

வலலன் - அஞ்ஞாதவாசத்துக் கண்வீமன் வகித்துக் கொண்ட பெயர். பலராமனும் இப்பெயர் பெறுவன்.

வல்லபாசாரியர் - வேதாந்த சூத்திரத்துக்கு வியாக்கியானஞ் செய்தவர்.

வல்லபை - விநாயகக் கடவளினது சக்திகளுளொருவர். இவர் யமுனை யாற்றருகேயுள்ள ஒரு தடாகத்தில் ஒரு தாமரை மலரின் கண்ணே பெண் வடிவாக அவதரித்து மரீசியாலெடுத்து வளர்க்கப்பட்டு வருநாளிலே இவர் தந்தை அநுஞ்ஞையோடு காட்டிலே தவஞ்செய்யப் புகுந்தார். இவர் உமாதேவியாரது அமிசமாதலின் சிவபிரான், மரீசி தானொரு புத்திரியைப் பெற்றுச் சிவபிரானுக்கு மருகியாக்குதல் வேண்டுமெனக்கொண்ட அபீஷ்டத்தைக் கொடுத்தருளுமாறு விநாயகவடிவங் கொண்டவ்விடஞ் சென்று இவரைச் சக்தியாக்கிக் கொண்டன ரென்பது புராணம்.

வல்லபி - ராஜபுத்திர ஸ்தானத்திலேயுள்ள ஒரு நகரம்.

வள்ளலார் - க. ஒழவிலொடுக்கமென்னுமற் புதஞான நூல்பாடிய புலவர். இவர் கரு0 வருஷங்களுக்கு முன்னுள்ளவர் என நிதானிக்கப்படுவர்.

வன்ளல்நாயகர் - திருமணஞ்சேரியி லெழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர்.

வள்ளிநாயகி - சிவமுனிவருக்கு மான்வயிற்றிலே பிறந்தபுத்திரியார். தணிகையிலே வள்ளிக்கிழங்ககழ்ந்த குழியிற் பிறந்தபடியால் வள்ளியெனப் பெயர் பெற்றார். வேடரால் எடுத்து வளர்க்கப்பட்டவர். சுப்பிரமணியக் கடவுளினது உபயசக்திகளுளொருவரே யிவராகப் பிறந்தமையின் இவர் மீளவும் அக்கடவுளுக்குத் தேவியாராயினர்.

வற்சகன் - வசுதேவன் தம்பி.

வற்சப்பிரீதி - திஷ்டன் வமிசத்து பலந்தனன் புத்திரன்.

வற்சரன் - துருவன் இரண்டாம் புத்திரன். புஷ்பாரணன், சந்திரகேதன், இஷன், ஊர்ச்சன், வசு, ஜயன் என்போர்க்குத் தந்தை.

வற்சலை - பலராமன் மகள். அபிமன்னியு பாரி.

வற்சன் - க. (பா) சேனசித்து புத்திரன். உ. (கா) விருதத்தனன், குவலயாசுவன், இருதத்துவஜன் என்போர்க்குத் தந்தை. ந. கம்சன் தூதர்களுளொருவன். இவன் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன்.

வனமுலைநாயகியம்மை - திருக்கீழ் வே@ரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வன்பரணர் - வையாவிக்கோப்பெரும் பேகனையும் வல்விலோரியையும் பாடிய புலவர். இவரைக் கபிலரென்பாருமுளர். (புறநா)

வன்னி - க. அக்கினி. உ. யயாதிபவுத்திரன். ந. துர்வசுபுத்திரன்.

வள்ளிநாயகர் - திருவெண்ணியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வாகீசர் - திருநாவுக்கரசர்.

வாசமலர்க்குழல்நாயகி - திருஎதிர்கொள் பாடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வாசவதத்தை - இவள் அநேக சரித்திரங்களுக்குக் கதாநாயகி. பித்தியோதனன் மகள்.

வாசஸ்பதிமிசிரன் - வேதாந்தசூத்திரத்திற்குச் சங்கராசாரியர் செய்த பாஷியத்திற்கு வியாக்கியானஞ்செய்தவர். இவர் ராமானுஜருக்கு முன்னிருந்தவர்.

வாசவன் - இந்திரன்

வாசுதேவன் - க. கிருஷ்ணன். உ. கரூசதேசராஜா. இவன்மிக்க கர்வமுடையனாய்த் தானே கிருஷ்ணனென்று சொல்லப்படத் தக்கானென்றி றுமாந்திருந்த காலத்திலே கிருஷ்ணனாலே கொல்லப்பட்டவன்.

வாஜசநேயசாகை - யாஞ்ஞவல்கியன் செய்த யருரர் வேத சாகை.

வாதாபி - (த) விப்பிரசித்திக்குச் சிமஹிகையிடத்திற் பிறந்த புத்திரன். (அகஸ்தியர்காண்க) அசமுகி துருவாசரை வலிதிற் கூடி இவ்வலன்வாதாபி என்போரைப் பெற்றாளென்பது கந்தபுராணம்.

வாத்சியன் - (ரி) சாகல்லியன் சீஷன்.

வாமதேவன் - வசிஷ்டனோடு அயோத்தியில் வசித்த தசரதன் புரோகிதன். உ. சிவன்.

வாமனம் - அஷ்டாதசபுராணங்களுளொன்று. சுவேதவராக கற்பத்துக்குரியதாகிய முதல் மூன்று வேதத்திலும் சொல்லப்பட்ட விஷயங்களையும் திரிவிக்கிரம வரலாறுகளையும்எடுத்துக் கூறுவது. இது பிரமாவினால் சொல்லப்பட்டது. பதினாலாயிரங் கிரந்தமுடையது. உ. தென்றிசையானை.

வாமனன் - க. பலிசக்கரவர்த்தியைச் சங்காரம் பண்ணும் பொருட்டுக் கசியபனுக்கு அதிதியிடத்துப் பிறந்த விஷ்ணு. இவ்வவதாரம் தசாவதாரங்களுளைந்தாவது. உ. காசிகாவிருத்தி செய்தவர்.

வாமாசாரம் - தந்திரமார்க்கத்து இடங்கையார் வழக்கம்.

வாயிலார் நாயினார் - மயிலாப்பூரிலே வேளாளர் குலத்திலவதரித்;து ஞான பூசை செய்து சிவபதம் அடைந்த பக்தர்.

வாயு - இவன் வாயுமண்டலத்திற்கு அதிதேவதை. வெள்ளியமேனியும் மான் வாகனமும், எக்காளமும், அழகியரதமும், அவ்விரதத்திற்கு இரண்டு முதலாயிரங் குதிரைகளுமுடையன். இவன் அதிதிபுத்திரன்.

வாரணாசி, வாராணசி - காசி. வரணை அசி என இருநதிகள் கூடிப் பிரவாகித்தலால் அஃது இப்பெயர் பெற்றது.

வாரணாவதம் - பிரயாகை. இது துரியோதனன் பாண்டவர்களை யிருத்திக் கொல்லுமாறு அரக்குமாளிகை அமைத்த இடம். இது பாரதயுத்த காலத்திலே கௌரவசேனைக்கு ஒருபாசறையாகவு மிருந்தது.

வாராகம் - க. ஒரு கற்பம். உ. ஒருபுராணம். இது கற்பாதிமானங்களும் பிறவும் கூறுவது. இது உச000 கிரந்தமுடையது.

வாருணம் - ஒருபுராணம்.

வாருணி - மத்தியத்துக்கு அதிதேவதை.

வார்கொண்டமுலையம்மை - மேலைத்திருநாட்டுப் பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வார்த்திகன் - தடிpணாமூர்த்தி. (சிலப்)

வாலகில்லியர் - இவர்கள் பிரமமானச புத்திரரு ளொருவராகிய கிருது புத்திரர் அறுபதின்மர். மகாவமுடையோர். இவர்கள் அங்குஷ்டப்பிரமாணமாயுள்ள தேகமுடையோர்கள். இவர்கள் நிரந்தரம் சூரியரதத்தைச் சூழ்ந்து திரிவர்.

வாலாம்பிகை - திருநெய்த்தானத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

வாலி - சுக்கிரீவன்தமையன். அங்கதன் தந்தை. இவன் பாரிதாரை. இவன் சுக்கிரீவன் வேண்டுகோளினபடி ராமராற் கொன்றொழிக்கப்பட்டவன். இவன் இறந்தபின்னர்த் தாரைசுக்கிரீவன் மனைவியாயினாள்.

வாலீசுவரர் - குரங்கணின் முட்டத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

வால்மீகி - வடமொழியிலே ராமாயணஞ் செய்த வித்துவசிரேஷ்டர். இவர் ஜாதியிலே பிராமணராகியும், கிராதர்தொழிலை மேற்கொண்டு காட்டிலேயிருந்து வழிப்போக்கர்களை அலைத்து அவர்கள் பொருளைக் கவர்ந்தொழுகும் நாளில் நாரதர் கண்டு ஞானோபதேசம் பண்ணி அவரை நல்வழிப்படுத்தினர். அதன்பின்னர் மகாதவசிரேஷ்டராகி ராமாயணத்தை இயற்றி முடித்தார். சீதையை ராமர் காட்டுக்கனுப்பியபோது இவ்விருஷியே அச் சீதையையம் குசலவர்கள் என்னும் புத்திரரையும் ஆதரித்தவர். இவர் வருணன் மகனார் என்றுங் கூறப்படுவர். அதுகாரணமாகப் பிராசேதசர் எனவும் படுவர். (பிரதேசஸ் - வருணன்@ அவன் புத்திரர்)

வாழவந்தநாயகியம்மை - திருவாஞ்சியத்திலே கோயில் கொண்டிருக்கும தேவியார் பெயர்.

வான்மீகியார் - (க) முதற்சங்கத்திருந்த ஒருத்தம தமிழ்ப்புலவர். இவர் செய்த நூலை நச்சினார்க்கினியர் தலையாய வோத் தென்பர். (உ) கடைச்சங்கப்புலவருளொருவர். இவர் பாடல் ஒன்று புறநானூறுற்றினுள்ளே யுளது.

விகடவிநாயகர் - விஷ்ணு சக்கரத்தைக்கவ்விய கபாலம் அதனை நெகிழ்க்காதாக, விஷ்ணுவிநாயகரை வேண்ட, அவர்விகடக் கூத்தாடுவையேல் அதனை வாங்கித் தருவேனெனக்கூறி அங்ஙனஞ் செய்ய வாங்கிக் கொடுத்தவர்.

விகடன் - (ரி) சுமாலிபுத்திரன்.

விகர்ணன் - துரியோதனன் தம்பி.

விகிருதி - (ய) ஜீமூதன் புத்திரன்.

விகுடிp - (இ) குடிp புத்திரன். ககுஸ்தன்தந்தை.

விக்கிரமார்க்கன் - சந்திரசர்மன் என்னும் பிராமணனுக்கு உச்சைனிபுத்திரசனாகிய சுருதகீர்த்தியினது புத்திரியிடத்துப்பிறந்த புத்திரன். இவன் உக்கிரதவங்கள் செய்து காளிகாதேவயினது அநுக்கிரகம் பெற்று அதனால் எக்கருமங்களையும் சாதிக்கும் ஆற்றலுடையனானான். சாகசாங்கன் என்னும் சிறப்புப்பெயர் இவனுக்கு இக்காரணம் பற்றி வந்ததுவேயாம். இவன் நெடுங்காலம் உச்சயினிபுரத்திலே பெரும்புகழோங்க அரசுபுரிந் தீற்றிலே சாலிவாகனனாற் கொல்லப்பட்டவன். இவன் அரசுபுரியத் தொடங்கியகாலம் இற்றைக்கு (கலிருத) ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னருள்ளது.

விக்கிரமோர்வசியம் - ஒருசம்ஸ்கிருதநாடகம். இது காளிதாசனாற் செய்யப்பட்டது. இதிலே புரூரவன் ஊர்வசி மேல் வைத்த காதல் எடுத்துக் கூறப்பட்டது.

விசயநாதர் - திருவிசயமங்கையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

விசாகதத்தன் - முத்திராராடிசமென்னும் நாடகஞ் செய்த கவி.

விசாரசர்மர் - சண்டேசுரநாயனார் காண்க.

விசாலம் - கிரிவிரசத்துக்கும் மிதிலைக்கு மிடையேயுள்ள நாடு.

விசாலன் - இடி{வாகுதம்பியாகிய நபகன் வமிசத்துத் திருணவிந்து புத்திரன். இவன் புத்திரன் எமசந்திரன். (ஹேமசந்திரன்)

விசாலாடிp - காசியி லெழுந்தருளியிருக்கும் அம்மையார் பெயர். (உ) திருப்பைஞ் ஞீலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். (ந) திருப்பாச்சிலாச் சிராமத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

விசித்திரவீரியன் - திருதராஷ்டிரன் பாண்டு என்போர் தந்தை. இவன் தந்தை சந்தது. தாய் சத்தியவதி. தமையன் சித்திராங்கதன்.

விசித்தரன் - கன்கவிசயருடைய நட்பாளராகிய ஓரரசன்.

விசிரவசு - புலஸ்தியன் புத்திரன். இவன் பாரியர் நால்வர். திருமண விந்து புத்திரியாகிய இளாவிளை யிடத்துப் குபேரன் பிறந்தான். சுமாலி மகளாகிய கைகசி யிடத்தில் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என மூவர் பிறந்தார்கள். இவள் தங்கை ராகையிடத்துக்கரன், தூஷணன், திரிசிரன் என்போர் பிறந்தார்கள். இவன் விச்சுரவாவு எனவும் படுவன்.

விசிருஷ்டன் - (ய) கஞ்சன் தம்பி.

விசிஷ்டாத்துவைதம் - ராமானுஜமதம். அது பிரமமும் வேறு, ஆன்மாவும் வேறு, பிரமத்துக்கு ஆன்மாக்கள் சரீரமாக விருந்து சந்நிதானவிசேஷத்தால் ஞானங் கைகூடப் பெற்றுப் பிரபஞ்சத்தை முற்றத்துறந்து பிரமத்தினது திருவடிமேல் வைத்த பற்றுடையராய் வைகுண்டஞ் சென்று அங்கே சாரூபம் பெற்றா நந்திக் திருத்தலே முத்தியென்று கூறுவது.

விசுவகந்தன் - (இ) பிருதன்புத்திரன். சாசுவதன், இந்தன், விசுவகன் அதிசாந்திரன் என்னும் பெயர்களையும் பெறுவன்.

விசுவகர்மா - பிரபாசனுக்கு யோகசித்தியிடத்திற் பிறந்த புத்திரன். இவன் தேவகம்மியன்.

விசுவகன் - (இ) (க) விசுவகந்தன். (உ) அங்கிரசன் வமிசத்தில் ஒரக்கினி.

விசுவசகன் - விருத்தசர்மன் புத்திரன். கட்டுவாங்கன் தந்தை.

விசுவசித்து - (பா) ஜயத்திரதன் புத்திரன். சேனசித்து தந்தை.

விசுவதேவர்கள் - சிரார்த்த காலத்திலே அர்ச்சிக்கப்படுகின்ற தேவதைகள். இவர்கள் வசுபந்தர், கிருதுதடிர், காலகாமர், துரிவிரோசனர், புரூரவாத்திரவர் எனப்பதின்மர்.

விசுவநாதர், விசுவேசுரன் - காசியிலேயுள்ள சந்திரசேகரசுவாமி. தேவிபெயர் விசாலாடிp. அன்னபூரணி என்பது மற்றொரு தேவிமூர்த்தம்.

விசுவபதி, விசுவபுக்கு - அங்கிரசன் வமிசத்தோரக்கினி.

விசுவம் - ஒரு நிகண்டு. விசுவன் செய்தது.

விசுவன் - விசுவநிகண்டு செய்தவன்.

விசுவரூபன் - துவஷ்டாவுக்கு ரசனையிடத்துப் பிறந்த புத்திரன்.

விசுவாநரன் - சாண்டிலியவமிசத்துப் பிறந்தவன். இவன் புத்திரன் வைசுவாநரன் என்னும் அக்கினி.

விசுவாமித்திரன் - புரூரவன் மூன்றாம் புத்திரனாகிய அமவச வமிசத்துதித்த காதி புத்திரர். இவர் ஜாதியில் டித்திரியர். தமது தபோபலத்தால் பிராமணனாயினார். தம்மைப் பிராமணனாக அங்கீகாரஞ் செய்யாத வசிஷ்டர் மீது கோபமுடையராகி அவருடைய புத்திரர் நூற்றுவரையும் மாள்வித்தார். அதனாலும வசிஷ்டர் சலிக்காதிருந்தனர். திரிசங்குவுக்கு அந்தரசுவர்க்கம் அளித்தவரும் அரிச்சந்திரனைக் கொடியபரீiடியால் சத்திய விரதன் என்னும் பெயரோடு விளக்கச் செய்தவரும் சகுந்தலைக்குத் தந்தையம் இவரே.

விசுவாமித்திரை - வைடூரிய பர்வதத்திலுள்ள ஒரு நதி.

விசுவாவசு - ஒரு கந்தருவ ராஜன். இவனுக்கு யாஞ்ஞவற் கியமகாரிஷி தத்துவோபதேசம் பண்ணினர்.

விசுவை - தடிப்பிரஜாபதி மகள். தருமன்பாரி. இவளிடத்துப் பிறந்த புத்திரர் விசுவதேவர்.

விச்சிக்கோன் - கபிலராற் பாடப்பட்ட ஒரு சிற்றரசன். பாரியினது புத்திரிகளை மணத்திற் கொள்ளுக வென்று கபிலர் வேண்டிய வழியுமுடன் படாது மறுத்தோன் இவனே.

விஜயநகரம் - கன்னடதேச ராஜதானி. இந்நாளிலும் இது ஆரிய ராஜாவால் ஆளப்பட்டுவருகின்றது.

விஜயமாநகரம் - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

விஜயன் - க. (இ) சுதேவன் புத்திரன். உருகன் தந்தை. உ. விஷ்ணு பரிசரருளொருவன். ந. அர்ச்சுனன். ச. அமவசு. ரு. (அம்) பிருகன்மனசு புத்திரன். சு. (மி) ஜயன் புத்திரன்.

விஜயாசுவன் - பிருதுசக்கிரவர்த்தி மகன். அந்தர்த்தானன் எனவும் படுவன்.

விடகன் - (ர) சுமாலி புத்திரன்.

விடூரதன் - வற்சப்பிரீதி மாமன். முதாவதி தந்தை. உ. (ய) இரண்டாம் பசமானன் புத்திரன்.

விததன் - பரத்துவாசன். இவன் ஊதத்தியின் பாரியிடத்தில் பிருஹஸ்பதிக்குப் பிறந்தவன். இவன் பிறந்தலும் தந்தையாரிருவரும் இறந்து போயினர். அப்போது மருத்து இவனை எடுத்துப்போய் சந்தானமின்றிருந்த பூருவமிசத்துப் பரதனுக்குக் கொடுத்தனர். இவன் புத்திரனாகிய புமன்னியனைப் பரதன் தத்த புத்திரனாக்கிக் கொண்டான்.

விதர்ப்பம் - அஸ்தினாபுரத்துக்குத் தெற்கின்கணுள்ள தேசம்.

விதர்ப்பன் - (ய) சியாமகன் புத்திரன். இவன் அரசுபுரிந்த தேசம் விதர்ப்பமெனப்பெயர் பெறுவதாயிற்று. இவனுக்குக் குசன், கிருதன், ரோமபாதன் என மூவர் புத்திரர்.

விதலம் - கீழுலகங்களுள் இரண்டாவது. இது இருள் சூழ்ந்துள்ளது.

விதஸ்தை - சந்திர பாகையிற் பிரியுமோருநதி.

விதாதை - தாதை தம்பி. இவன் பாரி நியதி.

விதிசை - மாளவதேசத்துள்ள ஒருநதி. உ. மாளவதேசத்திலுள்ள ஒரு நகரம்.

விதுரன் - திருதராஷ்டிரன் மந்திரி. அம்பிகையினது தோழியினிடத்து வியாசருக்குப் பிறந்த புத்திரன். இவன் மாண்டவியர் சாபத்தாற் சூத்திரனாகப் பிறந்த யமன். இவன் மகாதரும சீலன். திருதராஷ்டிரன் பாண்டவர்களை வஞ்சிக்கத் துணிந்த போது அது தகாதென வாதாடினவன். இவன் தருமநெறி சிறிதும் வழுவாதவன். பாண்டவர்களுக்குத் திருதராஷ்டிரனும் அவன் புத்திரரும் சூழ்ந்தவஞ்சனைகளை யெல்லாம் அப்பாண்டவர்களுக் குணர்த்தி அவர்களை அவ்வஞ்சனைக்குத் தப்புவித்தவனும் அரக்கு மாளிகை அமைத்து அதிற்பாண்டவர்களை யிருத்தித் தீக்கொளுவிக் கொல்லத் துரியோதனனெத்தனித்த பொழுது அம்மாளிகையிலே இரசியமாகப் பிலவழியொன் றமைப்பித்து அவ்வழியே புகுந்து பாண்டவர்களை உயிர்பிழைக்கும்; படி காத்தவனும் இவ்வுத்தமனே.

இவன் யவனபாஷையிலும் வல்லவன். உதிஷ்டிரனும் அவ்யவனபாஷையில் வல்லவன். இவன் திருதராஷ்டிரன் சபையில் நடந்த இரகசியங்களை யெல்லாம் இப்பாஷையினாலேயே உதிஷ்டிரனுக்குப் பிறரறியாவண்ணம் வாய்மொழியாலும் திருமுகமூலமாகவும் உணர்த்திவந்தான்.

விதுஷன் - இந்திரனுக்குச் சசிதேவியிடத்துப் பிறந்த மூன்றாம் புத்திரன்.

விதூரதன் - (கு) சுரதன் புத்திரன்.

விதேகன் - நிமிபுத்திரன். மிதிலன். இவன் அரசுபுரிந்தமையின் மிதிலாதேசம் விதேக தேசமெனவும்படும்.

வித்தியாதரர் - தேவர்களுளொருபேதம். இவர்கள் மாலிகாஞ்சனாதிவித்தைகளை யுடைய மேகவாகனர்கள்.

வித்தியாநாதன் - ஐஞ்äறு வருஷங்களுக்கு முன்னே ஏகசிலாநகரத்தில் விளங்கிய ஒரு சம்ஸ்கிருதாலங்காரகவி. இவர் தமது அபிமானபிரபுவாகிய பிரதாப ருத்திரன் மேல் அலங்காரநூல் ஒன்ற செய்து பிரதாபருத்திரீயமெனப் பிரதிஷ்டை செய்தவர்.

வித்தியாரணியர் - மாதவாசாரியர்
இவர் துங்கபத்திரைநதி தீரத்திலுள்ள தாகிய பம்பை யென்னும் கிராமத்திலே இற்றைக்கு ஐஞ்äறுப் பதினேழு வருஷங்களுக்கு முன்னே வித்தியா நகரத்திலே அரசு வீற்றிருந்த அரிகர ராயர் காலத்திலிருந்தவர்.

இவர் சம்ஸ்கிருதத்திலே ஏறக்குறைய எல்லாச் சாஸ்திரங்களிலும் வல்லுநராய் அவ்வச் சாத்திரங்களிலும் நூல்கள் செய்து விளங்கிய பிரசித்த பண்டிதர்.
இவர் தந்தைமாயணன். போகநாதர் சாயணாசாரியர் இவர் சகோதரர். இவர் புக்கணன் என்னுமரசனுக்கு மந்திரியாகவுமிருந்தவர். பராசர மாதவீயஞ் செய்தவருமிவரே.

இவர் வறிய குடும்பத்திலே பிறந்தவராதலின் இளமையிலேயே செல்வராக வேண்டுமென்னும் பேரவாவோடு கல்விகற்று வந்தார். தம்மெண்ணம் விரைவிலே கைகூடாமையினாலே திருமகளையும் கலைமகளையும் நோக்கித் தவங்கிடக்குமாறு காட்டகத்திற்புகுந் துழலுவாராயினர். ஒருநாள் காட்டகத்தே அரசனுக்குரிய மாடுகளை மேய்த்துத் திரிபவனாகிய புக்கணனென்னு மொருடித்திரியனைக்கண்டு தாமநுபவிக்குங் கஷ்டத்தை யெடுத்துக் கூறினர். புக்கணன் அவர் மீது பேரிரக்க முடையனாகி அவர்க்குத் தினந்தோறும் போதியபால் தருவதாக வாக்களித்தான்.

அதற்கு அவர் அரசனுக்குரிய பாலை யான் கவர்தல் துரோகமாகுமேயென்ன, புக்கணன்அரசனுக்கு அளவுக்கு மேற்படப் பாலிருத்தலின் அவமே செல்லற் பாலதாகிய கூற்றிலொரு சிறுகூறு தவமேபுரிகின்ற உமக்குப் பயன்படுதல் அவனுக்குப் புண்ணியம் பயக்குமே யென்ன, அவர் உடன்பட்டனர்.

அவ்வாறே புக்கணன் கொடுக்கும் பாலையுண்டு காலக்கழிவு செய்து வரும் மாதவாசாரியார் அப்புக்கணன் மீது பேரன்புடையராயினார். உண்டிக்கவலை தீர்த்தலும் மாதவர் பேரூக்கங் கொண்டு தவமுயன்றார்.

நெடுங்காலங் கழிந்தபின்னர்க் கலைமகளுந் திருமகளும் புக்கணனுக்குத் தோன்றி, மாதவர் கருத்து இப்பிறப்பிலே நிறைவேறாதென்று கூறிப்போக, அவன் அதனை அவர்க் குரைத்தான். அவ்வளவி லமையாது அவர் மேன் மேலும் முயன்றார். ஈற்றிலே அவர் கோபமுடையராகித் தாமணிந்த பூணூலைக் கழித்து வீசிவிட்டுச் சந்நியாசியாயினர். அதுகண்டு கலைமகளும் திருமகளும் வெளிப்பட்;டு இனி யுனக்கு வேண்டுவதைக் கேட்கக் கடவையென்ன, அவர் கலைமகள் அநுக்கிரகமொன்றே வேண்டுவது@ திருமகள் அநுக்கிரகமினி வேண்டுவேனல்லேன்@ ஆயினும் திருமகளநுக்கிரகம் புக்கணனுக் குண்டாகுக@ அவனே நும்மருளை யான் பெறுதற்கநு கூலியாயிருந்த பரமோத்தமன் என்றார். அது கேட்டிருதேவியரும் மகிழ்ந்து மறைந்தனர்.

இது நிகழ்ந்த சின்னாளில் ஹஸ்தினா புரத்தரசனிறக்க, மந்திரிமார் பட்டத்துயானையை அலங்கரித்த அபிஷேகக்குடத்தை அதன் கையி;ற் கொடுத்து ஓரரசனைக் கொண்டு வருமாறு பரிசனங்களோடு விடுத்தனர். அது பல நாடு காடுகளைக் கடந்து புக்கணனிருக்குங் காட்டை யடைந்தது.

புக்கணன் அவ்வமையந் துயில் செய்வானாயினான். யானை அவனை யடுத்துக் கங்கைநீரை அவன் மேற்சொரிய, அவன் துணுக்குற்றெழுந்து பார்க்கஅவன் கழுத்தில் மாலையைச் சூட்டி வணங்கி அவனைத் தூக்கித் தன்முதுகின் மேலுள்ள தவிசின் மீதிட்டுக் கொண்டு சென்று அரசனாகிற்று.

நாட்சில கழிந்தபின்னர் மாதவாசாரியர். புக்கணன் தம்மேற் கொண்ட அன்பை அரசனாயிருக்கு நிலையிலும் சாதிப்பவனோவென்று நிதானிக்குமாறு அவன்பாற் சென்றனர். அவர் வரவை யொற்றராலுணர்ந்த புக்கணன் பண்டையிலும் மிக்க அன்பும், வணக்கமும், அடக்கமும், நட்பு முடையனாய் நடந் தெதிர்கொண்டு தழுவிக் கொண்டாடி அவற்க்குப் பிரியாநண்பனாய், எக்கருமத்திலும் அவரையுசாவி நல்லரசு புரிந்து வருவானாயினான்.

ஒருநாள் அவன் அவரைப் பார்த்து நம்பெயர் உலகில் நின்று நிலவும் பொருட்டும் எனக்குப் பின்வருமக்கட் பரம்புக் கெல்லாம் பயன்படுமாறும் நூல்களைச் செய் துலகுக்கு பகரித்தல் கடனாகக் கொள்வீரென்ன அவ்வாறே செய்து மெனக்கூறி அவர் எண்ணிறந்த வியாக்கியானங்களை யெழுதிப் பிரகடனம் பண்ணினர்.

வேதம், உபநிஷதங்கள் சூதசங்கிதை முதலியனவெல்லாம் இவர் அவதாரஞ் செய்திலரேல் பாஷியங்கள் வியாக்கியானங்கள்காணா. இவர் செய்த பாஷியங்களுக்கும் வியாகும், வியாக்கியானங்களுக்குங் கணக்கிடுதல் எளிதன்று. இவர் செய்த சங்கரவிலாசம் நாற்பதினாயிரஞ் சுலோகமுடையது. வித்தியாரண்ணியர் என்னும் பெயர் தீடிh நாமம்.

வித்தியுத்துருவன் - (ர) குபேரன் ஏவலாளருளொருவன். கங்கன் என்னும் படிpயரசனைக் கொன்றமைக்காகக் கந்தரன் என்னும படிpயாற் கொல்லப்பட்டவன்.

வித்தியுற்கேசன் - (ர) ஹேதி புத்திரன். தாய் பயை.

வித்தியுற்சிகுவன் - (ர) ராவணன் தூதருளொருவன். மகாமயாவி. சீதை அசோக வனத்திலிருந்து ராவணன் சாலங்களுக்குடன் படாதிருந்தமைகண்ட இவன் ராமலடி{மணர்களுடைய தலைகளைக் கொய்துவந்தேனென்று பொய்த்தலைகள் செய்து அவளுக்குக்காட்டி இனியாயினும் ராவணன் எண்ணத்துக்குடன் பாடாயாவென்று கேட்டவன். (உ) சூர்ப்பணகைநாயகன். இவன் காலகேயவமிசத்தவன். ராவணன் திக்குவிசயத்துக்குச் சென்றபோது உடன்சென்ற இவனைக் காலகேய யுத்தத்தலே தனதுமைந்துனனென்றறியாது கொன்று மீண்ட போது தன் செயலையுணர்ந்து சூர்ப்பணகையைத் தேற்றி அதற்காக ஜனஸ்தானத்தை நிருமித்து அங்கே அவளை யிருந்தரசு செய்யமாறு செய்தான்.

விநதன் - சீதையைத் தேடிவரும் பொருட்டுச் சுக்கிரீவனால் அனுப்பப்பட்ட தூதரு ளொருவன்.

விநதை தடிப்பிரஜாபதிமகள்.
வினதை கசியபன் பாரிகளு ளொருத்தி. இவள் கருடன் தாய்.

விநாயகன் - க. விக்கினேசுவரன். (உ) கருடன்.

விந்தாநுவிந்தர் - ஜயத்சேனனுக்கு வசுதேவன் தங்கையாகிய ராஜாதி தேவியிடத்திற் பிறந்த புத்திரர்.

விந்தியபர்வதம் - விந்தமலை. இது தடிpணத்தையும் உத்தரத்தையும் பிரிக்கு மெல்லைமலை. அகத்தியாராற் பாதாலத்தழுத்தப்பட்ட மலை.

விந்தியாவளி - பலிசக்கரவர்த்திபாரி.

விபண்டகன் - இவன் பிரமசாரிய விரதத்தை அநுஷ்டித்து வரும் போது ஒருநாள் ஒரு தடாகத்திலே நிராடி நிற்கையில் ஊர்வசிவர அவளைக்கண்டு விரகமுடையனாய் இந்திரியத்தை அத்தடாகத்தில் விட்டான். அதனை ஒரு பெண் மான் நீரோடருந்திக் கருப்பமுற்று இருசியசிருங்கன் என்னுங் குமாரனையீன்றது.

விபாசை - இமயத்தின் தென்பாலற் பத்தியாகிச் சதத்துரு நதியிற் சங்கமிக்கின்றநதி. இது புத்திர சோகத்தால் வருந்தியவசிஷ்டரது பாசத்தை விமோசனம்பண்ணினமையின் இப்பெயர் பெற்றது.

விபாவசன் -(க) (த) தநுவினது புத்திரருளொருவன். (உ) முராசுரன் புத்திரன். இவன் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன். (ந) ஒரு பிராமணன். இவன் தனது தம்பியாற் கூர்மமாகச் சபிக்கப்பட்டுக் கருடனாற் படிpக்கப்பட்டவன். (ச) வசுபுத்திரன்.

விபாவசி - மந்தாரன்; என்னும் வித்தியாதரன் மகள். இவள் சுவரோசிக்கு மிருகபடிpஜாதிகளுடைய பாஷைகளை உணரும் வித்தையைக் கற்பித்து அவனுக்கு மனைவியாயினவள்.

விபீஷணன் - விசிரவசுவுக்குக் கைகேசியிடத்திலே பிறந்த மூன்றாம் புத்திரன். ராவணன் தம்பி. இவன் சீதையை ராமனிடத்திற் கொண்டு போய் ஒப்புவித்து விடும்படியாகப் பலவாறு போதித்தும் அவன் கேளாமையால் அவனை விடுத்துப் போய் ராமரைச் சரணடைந்தவன். இவனை ராமர் அபயஸ்தம் கொடுத்து ராவணசங்காரதின் பின்னர் இலங்காபதி யாக்கினர். இவன் சிரஞ்சீவி. இவன் பொருட்டாக ஸ்ரீ ரங்கநாதர் தெற்குமுகமாக அறிதுயில் கொள்ளுகின்றனர் என்பது ஐதிகம்.

விபு - க. (கா) சத்தியகேதுபுத்திரன். சுரபுதந்தை. (உ) ய. பப்பிருபுத்திரன்.

விபுலன் - (க) பலராமன்தம்பி. (உ) சீவகன் தம்பியருளொருவன். (ந) மேரு. (ச) இமயம்.

விபூதி - சைவசின்னங்களுள் விசிட்டமாகிய திருநீறு. இது ஐசுவரியத்தைத் தருவதும், பாவநாசஞ் செய்வதும், சகலதுக்கங்களையும் நீக்குவதுமாகிய குணங்களையுடையது. இக்காரணம் பற்றி இதுவிபூதி, ரiடி முதலிய நாமங்களைப்பெறும். விபூதி என்பதன் பொருள் அரண்,வலி.

விப்பிரசித்தி - இவன் கசிபனுக்குத் தனுவினிடத்திற் பிறந்த புத்திரன். திதிபுத்திரியாகிய சிம்மிகை இவன் பாரி. இவன் புத்திரர், ராகு, கேது, நமுசி, வாதாபி, இவ்வலன், நரகன், சுவர்ப்பானன், புலோமன்,வக்திரயோதி முதலியோர்.

விப்பிரன் - சிஷ்டிபுத்திரருளொருவன்.

விப்பிராஜன் - (பா) சுகிருதிபுத்திரன்.

வியலூர் - செங்குட்டுவனால் வெல்லப் பட்டவூர்களுளொன்று. வீயலூர் எனவும் வழங்கும். (சிலப்)

வியாக்கிரபாதர் - மத்தியந்தினமுனிவர் குமாரர். இவர் பூர்வநாமம் பாலமுனிவர். இவர் சிவபூஜையின் பொருட்டுக் கொய்யும் மலர்கள் பகற்காலத்திலே வண்டால் எச்சிற்படுகின்றனவேயென்று வருந்திச் சிவனிடத்திலே புலிகண்ணும் புலிக்காலும் வேண்டிப் பெற்றுத் தில்லைவனத்திலே இரவிற் சென்று மலர்கொய்துவைத்துப் பகல் எல்லாம் பூசைபுரிபவர். இவர் அதுபற்றியே வியாக்கிரபாதர் என்னும் பெயர் பெற்றார். இவர் சிதம்பரத்திலே கனகசபையிலே சிவபெருமான் செய்கின்ற ஆனந்தத்தாண்டவத்தைப் பிரத்தியடிமாகக் கண்டவர்.

வியாக்கிரபுரேசர் - திருப்பெரும்புலியூரிற் கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.

வியாசர் - (ரி) கிருஷ்ணத்துவைபாயனர். பராசரர் சத்தியவதியைக் கூடிப் பெற்ற புத்திரர். வேதங்களை வகுத்த காரணத்தால்வியாசர் என்னும் பெயர் பெற்றனர். வேதாந்த சூத்திரஞ் செய்தவரும் மகாபாரதத்தை விநாயகரால் எழுதுவித்தவரும் இவரே. இவர் புத்திரனார்சுகர். இவர் கங்கையின் கண்ணுள்ள தீவிலே பிறந்தமையால் துவைபாயனர் எனப்படுவர். துவீபம் - தீவு அயனர் - அதிற்போந்தவர். இவர் புராணங்களையும் பதினெட்டாக வகுத்தனர். பாண்டு திருதராட்டிரர் களுக்குத் தந்தையுமிவரே.

வியாதி - நகுஷன் மகன்.

வியுஷ்டி - புஷ்பாரணனுக்குத் தோஷையிடத்துப் பிறந்த புத்திரருளொருவன். இவன் பாரி புஷ்கரிணி. சர்வதேசசு இவன் புத்திரன். பிரதோஷன். நிசீதன் இவன் தமையன்மார்.

வியோமன் - (க) சம்சன்சேனாபதி. இவன் ரேபல்லையிலே கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன். (உ) (ய) தசாருகன் புத்திரன்.

விரகாங்கன் - ஓரரசன். இவன் புத்திரரைவரும் வேதத்திலுள்ள சிலகீதங்களுக்குக் கர்த்தர்.

விரஜன் - க. (ரி) ஜாகர்ணன் சீஷன். உ. (பிரி) துவஷ்டாபுத்திரன்.

விராடன் - மற்சியதேசாதிபதி. இவன் தேசாதிபதி. இவன் தேசத்திலேயே பாண்டவர்கள் தமது அஞ்ஞாதவாச காலத்தைக் கழித்தார்கள். இவன் புத்திரியாகிய உத்தரையை அருச்சுனன் புத்திரனாகிய அபிமன்னியன் பாணிக்கிரகணஞ் செய்தான். பாண்டவர்களுக்குப் பாரதயுத்தத்திலே விடராடராஜன் பெருந்துணையாக நின்றவன்.

விராதன் - (ரா) பூர்வம் தும்புரு என்னும் கந்தருவன் குபேரன் சாபத்தால் ராடிசனாகி இப்பெயர் பெற்றான். இவன் ராமன் தண்டகாரணியஞ் சென்ற போது அவராற் கொண்றொழிக்கப்பட்டவன்.

விரிச்சியூர்நன்னாகனார் - புறநானூறு பாடினோருளொருவர்.

விரியூர்நசக்கனார் - புறநானூறு பாடினோரு ளொருவர். விரியூர் அங்கனெனப்படுவாரும் இவரேபோலும்.

விருகதேசசன் இவர்கள் சி;ஷ்டிபுத்திரர்கள்.
விருகலன்

விருகன் - க. இருகன் புத்திரன். பாகுகன் தந்தை. (உ) சுகன் என்னும் தைத்திரியன் புத்திரன். (ந) வசுதேவன் தம்பி. (ச) வசுதேவன் தம்பியாகிய வற்சகன் புத்திரன்.

விருகோதரன் - வீமன்

விருக்கிணன் - கார்த்தவீரியார்ச்சுனன் பௌத்திரன். மதுபுத்திரன். விருஷ்ணி தந்தை.

விருஜினவந்தன் - (ய) குரோஷ்டு புத்திரன்.

விருத்தடித்திரன் - ஜயத்திரதன் தந்தை.

விருத்தசர்மன் - (இ) தசரதன் புத்திரன். தலீபன் என்றும் பெயர் பெறுவன். இவன் புத்திரன் விசுவசகன்.

விருத்திரன் - ஓரசுரன். துவஷ்டாதனது ஜேஷ்டபுத்திரனாகிய விவசுரூபனை இந்திரன் கொன்றானெனக் கோபித்து அவனை ஜயித்தற் பொருட்டுத் தவமிருந்து பெற்ற புத்திரன் இவன். இவ்விருத்திரன் மேகங்களைப்பிடித்துச் சிறையிட்ட போது இந்திரன் நெடுங்காலம் போராடி அவனைக் கொன்றொழித்தான்.

விருந்திட்டநாதர் - திருக்கச்சூராலக் கோயிலிலே எழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர்.

விருஷகன் - சகுனிதம்பி.

விருஷசேனன் - கர்ணன் புத்திரன். இவன் அருச்சுனனாற் கொல்லப்பட்டவன்.

விருஷணன் - கார்த்தவீரியார்ச்சுனன் மூன்றாம் புத்திரன்.

விருஷதர்ப்பன் - சிபிமூத்தமகன். உ. சீநரதேசத்தரசன்.

விருஷத்திரன் - இடி{வாகு தம்பி. வைவசுவதன் புத்திரன். இவன் குருசாபத்தால் சூத்திரகாகிப் பின்னர்ப் பிராமணனாயினவன்.

விருஷபகிரி - தற்காலம் ரத்தினபுரியெனப்படும். இது மகததேசத்திலே வராகபர்வதத்துக்கு அணித்தாயுள்ளது.

விருஷபர்வன் - தானவர்க்கதிபதி. சுக்கிரன் சீஷன். இவன் சகியபனுக்குத் தனுவயிற்றிலே பிறந்தோன். இவன் மகளாகிய சர்மிஷ்டை சுக்கிரன்மகளாகிய சர்மிஷ்டை சுக்கிரன் மகளாகிய தேவயானையை அவமதித்துப் பேசினாள். அஃதுணர்ந்த விருஷபர்வன் அச்சர்மிஷ்டையைத் தேவ யானைக்கு ஏவற்பெண்ணாகுக வென்று சபித்தான். அவ்வாறு அவள் அடிமையாயிருக்கும் காலத்தில் யயாதி தேவயானையை மணம் புரிந்தபோது சர்மிஷ்டையையும் உடன் கொண்டு போய்ப் பின்னர் அவளையும் மனைவியாக்கினான்.

விருஷரதன் - கர்ணன் தம்பி.

விருஷன் - சிருஞ்சயன். ராஷ்டிரபாலரிகை வயிற்றிற் பெற்ற புத்திரன்.

விருஷ்ணி - (க) (ய) விருக்கிணன் புத்திரன். (உ) விதர்ப்பன் இரண்டாம் புத்திரனது வமிசத்துச்சாத்தவதன் நான்காம்புத்திரன். இவன் வமிசத்தோர் விருஷ்ணர் எனப்படுவர். சுமித்திரன், யுதாசித்து என இருவர் இவன் புத்திரர். (ந) அந்தகன் பௌத்திரன். குகுரன் புத்திரன். (ச) பஜமானன் புத்திரருளொருவன்.

விரூபன் - இரண்டாம் அம்பரீஷன் மகன்.

விரூபாடின் - (க) (ரா) மாலியவந்தன் புத்திரன். இவன் சுக்கிரீவனாற் கொல்லப்பட்டவன். (உ) தநுபுத்திரன்.

விரோசனன் - பிரஹலாதன் புத்திரன். பலிச்சக்கர வர்த்தியினது தந்தை.

விரோஹணன் - (பிரி) நரன்புத்திரன்.

விலோமதநயன் - (ய) குகுரன் பௌத்திரனாகிய விருஷ்ணிபுத்திரன்.

வில்லவன்கோதை - செய்குட்டுவன் மந்திரி.

வில்வவனநாதர் - திருக்கொள்ளம் பூதூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வில்வவனேசர் - திருவைகாவிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

விவசுவதன் - துவாதசாதித்தியருளொருவன். தந்தை கசியபன். தாய் அதிதி. இவன் விசுவகர்மன் புத்திரிகளாகிய சஞ்ஞாதேவி சாயாதேவி என்பவர்களை விவாகம் பண்ணினான். இவ்விவசுவதனுக்கு வைவசுவதமன், யமன், சனி எனமூவர் புத்திரரும், யமுனை, தபதி என இருபுத்திரிகளும் பிறந்தார்கள்.

விவிம்சன் - இரண்டாங் கனித்திரன் தந்தை.

விழியழகர் - திருவீழிமிழலையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

விறன்மீண்டநாயனார் - செங்குன்றுரிலே வேளாண்மரபிலே விளங்கிய ஒரு சிவபக்தர். இவர் சுந்தரமூர்த்திநாயனார் காலத்தவர்.

விஷ்ணு - திரிமூர்த்திகளுளொருவர். இவர் தொழில் திதி. இவர் உலக பரிபாலனத்தின் பொருட்டு எடுத்த அவதாரங்கள் பத்து@ அவைமற்சியம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமன், ராமன், கிருஷ்ணன், புத்தன், கற்கி என்பனவாம். விஷ்ணுவுக்குப் பீதாம்பரன், கருடத்துவசன், சக்கராயுதன், லடி{மிபதி முதலியபல நாமங்களுள. இவருக்கு ஆயுதம் சுதரசனமென்னும் சக்கரம், பாஞ்சசன்னியமென்னுஞ் சங்கு, கௌமோதகி யென்னுந் தண்டு, நந்தகம் என்னும் வாள், சார்ங்கமென்னும் வில்லு என ஐந்தாம். இவருடைய ஆவரணம் கௌஸ்துபம், மார்பிலேயுள்ள மற்சம்சீவற்சம், இவர் பாற்கடலிலே சர்ப்பசயனத்திலே துயில்கொள்வர். நாராயணனே விஷ்ணு வென்றும், நாராணனே நிர்க்குணவடிவென்றும் விஷ்ணு சகுணவடிவென்றும் புராணங்கள் பலபடக்கூறும். “நாராயணன்” காண்க.

விஷ்ணுகுப்தன் - சாணக்கியன்

விஷ்ணுசர்மன் - க. வேதநாராயண புரத்தக்கிரகாரத்திலிருந்த ஒரு பிராமணர். இவர் புத்திரன்விக்கிரமார்க்கன் தந்தையாகிய சந்திரசர்மன். (உ) பஞ்சதந்திர மென்னும் நூலைச் செய்து சுதரிசனன் என்னும் ராஜாவுடைய புத்திரருக்கு அந்நூலால் ராஜதந்திரம் நீதிசாஸ்திரமுதலியவற்றைக் கற்பித்தவர்.

விஷ்ணுபுராணம் - பதினெண்புராணத்தொன்று. பராசரர் அருளியது. இது உச000 கிரந்தமுடையது. இதிலே வராககற்ப வரலாறு முதலியன கூறப்படும். பலவகைப்பட்டவுலகங்களையும், கிரகமண்டலங்களையும், யுகசரித்திரங் களையும் குறித்து ஆராயவிரும்பு வோர்க்கு இது சிறந்த நூலாகும்.

விஷ்வக்ஜோதி - பிரியவிரதன் வமிசத்து ஓரரசன்.

விஷ்வசேனன் - க. பிரமத்தன்புத்திரன். உ. விஷ்ணுதூதருளொருவன். இவன் வைகுண்;ட சேனாபதி.

விஷ்ணுவர்த்தனன் - பாஸ்கரவந்தன்.

விஹாரம் - வங்கதேசத்துக்கு வடக்கின் கணுள்ள தேசம்.

வீட்டுமன் கங்கை வயிற்றிலே சந்தனுவு
வீஷ்மன் க்குப் பிறந்த புத்திரன். சந்தனு கிழப்பருவத்தை அடைந்தபொழுது அதிரூபவதியாகிய ஒரு கன்னிகையைக்கண்டு அவள் மேற்காதலு டையனாகி அவளுடைய தந்தையாரி; டத்தில் தூதனுப்பித் தனக்கு மணம் பேசுவித்தான். அவர்கள் வீஷ்மன் பட்டத்துக்குரிய புத்திரனாயிருத்த லினாலவள் வயிற்றிற் பிறக்கும் புத்திரன் பட்டத்துக்குரியனாகானென மறுத்தார்கள். அதனைக் கேள்வியுற்ற வீஷமன் தந்தையினுடைய அவாவைத் தீர்க்கும் பொருட்டு அக்கன்னிகையினுடைய அவாவைத் தீர்க்கும் பொருட்டு அக்கன்னிகையினுடைய தந்தையாரிடஞ் சென்று தனக்கு அரசுரிமையும், விவாகமும் வேண்டுவதில்லை யெனச்சத்தியஞ் செய்து கொடுத்தான். அவ்வாறே சந்தனு அவளை மணம்புரிந்து, அவள் வயிற்றிற் பிறந்த விசித்திரவீரியனுக்கு அரசுரிமையீந்தான். வீஷ்மன் விசித்திரவீரியனையும் அவன் புத்திரனையும் சத்தியந்தவறாத அன்போடு பாதுகாத்து வந்தான். இவன் பாரதயுத்தத்திலே அர்ச்சுனனுக்குத் தோற்று நெடுங்காலந் தவஞ் செய்திருந்திறந்தான்.

வீணை - தபதிநதி.

வீடூரான் இவன் தொண்டை
வீடூர்ழதலி நாட்டு வீடூர்க்கிறைவனாகிய ஒரு வேளாளப்பிரபு. இவன் தமிழ்ப் புலவர்க்குத் தாதாவென்று தன்வாயிலிற் கொடியுயர்த்தித் தன்பால்வரும் புலவர்க்கெல்லாம் பெருநிதி வழங்கி வருநாளில், ஒரு புலவன்போய்த் தனது நுண்புலமை நிலைநாட்ட, இவன் அவனைப் புகழ்ந்து மெச்சி வேண்டுவதைக் கேட்டருளுமென்ன, புலவன் உன்பிரியநாயகியைத் தருதல் வேண்டுமென்றான். அதுகேட்ட இப்பிரபு சிறிதும்மனங்கோணாமல் தனது கற்பிற் சிறந்த மனையாளை யழைத்து “உன்னை இப்புலவர் பெருமானுக் கீந்து விட்டேன் இன்றுமுதலா நீயெனக்கு மாதாவாயினை” என்றான். அதுகேட்ட புலவன் நெஞ்சந்துணுக்குற்றுப் புருஷோத்தமனே, உன்மனக் கிடைக்கையைப் பரீடிpக்குமாறு கேட்டதைப் பொறுத்து நான் கேட்குமுன்னே என்மனத்திலே என்புத்திரியாகப் புத்திபண்ணப்பட்ட இவ்வுத்தமியை மீளவும் அங்கீகரித்து என்னை மாமனாகக்கொண்டு இன்றுமுதல் அக்கேண்மை பாராட்டிவரக்கடவை, அதுவே எனக்குப்பெரியதோரூபகாரமும் பரிசிலுமாகுகவென்றான். பிரபுவும் புலவன் சொல்லை மறாது அங்கீகரித்தான். இவ்வுண்மை,

“போதாருந்தண்பொழில் வீடூரதிபன்புலவர்க்கெல்லாந் தாதாவெனக்கோடி கட்டுதலா லவன்றன்மனையை,நீதாவென வொருபாவாணன் கேட்பவந்நே ரிழையை, மாதாவெனவழைத் தானென்கொலாந்தொண்டை மண்டலமே” என்னுந் தொண்டை
மண்டல சதகத்தாற் பெறப்படும்.

வீதிஹேத்திரன் - தாளஜங்கன் புத்திரன். உ. (கா) திருஷ்டகேதன் புத்திரன். பாரவன் தந்தை. ந. இந்திரசேனன் புத்திரன்.

வீமரதன் - ஒரு பாண்டியன்

வீமபராக்கிரமன் - ஒரு பாண்டியன்.

வீமன் - பாண்டுவினது இரண்டாம் புத்திரன். வாயுவினது அனுக்கிரகத்தினாற் பிறந்தவன். இவன் மல்யுத்தத்தினும், புஜபலத்தினும், கதாயுதப்போரினும் தனக்கிணையில்லாதவன். ஜராசந்தனை வென்றவனும் திரௌபதியைக் கவர்ந்து சென்றஜயத்திரதனை வென்றவனும், விராடனிடத்திலே மடைப்பள்ளிக்கதிபனாக விருந்தவனும், கீசகனைக் கொன்றவனும், துரியோதனனைப் பாரதயுத்தத்திலே கொன்றவனும், இடிம்பனைக் கொன்று அவன்தங்கையை மணம் புரிந்தவனும் இவனே.

வீரகன் - விநாயகன்.

வீரகவிராயர் - தமிழிலே அரிச்சந்திரபுராணம் பாடிய புலவர். இவர் நல்லூர், நகரத்தில் நானூறு வருஷங்களுக்கு முன்னே விளஙகியவர்.

வீரசேனன் - நளன் தந்தை. நளன்மகனும் இப்பெயர் பெறுவன்.

வீரசோழியம் - பொன்பற்றியூர்ப் புத்தமித்திரனார் செய்த இலக்கணநூல். வீரசோழன் செய்வித்தது.

வீரட்டானேசுவரர் - திருக்கண்டிய10ர் முதலிய அட்டவீரட்டத்திலும் கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வீரணன் - ஒரு பிரஜாபதி

வீரநகரம் - தேவிகாநதி தீரத்திலே புலஸ்தியப்பிரமா தவஞ்செய்தவிடம்.

வீரபத்திரர் - சிவகுமாரருளொருவர். தடின் சிவனையும், உமாதேவியாரையும் அவமதித்தகாரணத்தாற் சிவன் கோபித்துத் தமது நெற்றிக் கண்ணை வழிக்க, அதினின்றும் இவ்வீரபத்திரர் தோற்றினர். வீரபத்திரர் உடனே தடின்யாகஞ் செய்கின்ற விடத்துக்குச் சென்று அவ்வியாகத்தை அழித்துத் தடினையுங் கொன்றார். அதுகண்ட தேவர்கள் சிவனைநோக்கி யாம் செய்தபிழையைப் பொறுத்தருளவேண்டு மென்று பிரார்த்திக்க அவர் தடிணையாட்டுத் தலையையுடையனாக வெழுப்பியருளிப் போயினர். வீரபத்திரர் ஆயிரந்தலையும், இரண்டாயிரங்கையும், மூவாயிரம் கண்ணுமுடையவர்.

வீரபத்தினி - கண்ணகி நெடுஞ்செழியனை வழக்கில் வென்றுமதுரையைத் தன்கற்பால் எரித்தமையின் இவளுக்கு இப்பெயர்.

வீரபாண்டியன் - வேட்டையாடும் பொழுது புலியாற் கொல்லப்பட்ட பாண்டியன்.

வீரவாகு - விசுவாமித்திரர் வேண்டுகோளுக்கு அரிச்சந்திரனை அடிமை கொள்ளும் பெருட்டுச் சண்டாளனாக அவதரித்த யமன்.

வீரவாகுதேவர் - பார்வதியாருடைய காற்சிலம்பினின்றும் சிந்திய நவரத்தினங்களும் நவசத்திகளாகிச் சிவத்தை இச்சித்து நோக்கித் தனித்தனி ஒவ்வொரு புத்திரரை யீன்றார்கள். அவருள் முதற்சததியாகிய ரத்தினகன்னிகையீன்ற புத்திரனார் இவ்வீரவாகுதேவர். இவர் சுப்பிரமணியருடைய சேனாபதியாகிச் சூரசங்காரத்துக்கு உபகாரமாயிருந்தவர்.

வெண்குன்று - முருகக்கடவுளுடைய திருப்பதிகளுளொன்று

வெண்டாளி - இடைச்சங்கத்து நூல்களுளொன்று.

வெண்டுறைநாதர் - திருவெண்டுறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வெண்பாக்கநாதர் - திருவெண்பாக்கத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வெண்ணெய்மலை - கொங்குநாட்டின்கணுள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம்.

வெளிமாள் - பெருஞ்சித்திரனாராற் பாடப்பட்டோன். இச்சிற்றரசன் மிக்ககொடையுளோன். இவன் இறக்கும் போது பெருஞ்சித்திரனார்க்குப் பரிசு கொடுக்குமாறு தம்பிக்காஞ்ஞை செய்திறந்தான். அவன் கூறிய அளவிற்சிறிது கொடுப்பப் பெருஞ் சித்திரனார் கொள்ளாமற் போய்க் குமணனையடைந்த யானையும் பொன்னும் பெற்று மீண்டுபுக்கு, அவனைநோக்கி, இரப்போர்க்குக் கொடுப்பவன் நீயுமல்லை. இரப்போர்க்குக் கொடுப்பவரில்லையுமல்லர். யான் பெற்று வந்த ஊர்ப்புறத்தே கட்டியிருக்கும் யானை குமணன் தந்த பரிசில். யான் போய் வருகிறேன். என்னுங் கருத்தினையுடைய

“இரவலர்புரவலை நீயுமல்ல புரவலரிலவர்க்கில்லையுமல்ல ரிரவலருண்மையுங் காணினியி ரவலர்க், கீவோருண்மையங்கா ணினிநின்னூர்க், கடிமரம்வரு ந்தத்தந்தியாம்பிணித்த, நெடிந ல்யானை யென்பரிசில், கடுமான் றோன்றல் செல்வல்யானே”

என்னும் பாடலைக் கூறிப்போயினர்.

வெள்ளி - சுக்கிரன். இவன் அசுரகுரு.

வெள்ளிடைமன்று - காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஐந்துமன்றத்துள் ஒன்று. இது திருடர்களை வெளிப்படுத்துவது.

வெள்ளிமலைநாதர் - திருத்தெங்கூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். (வெள்ளிமலை - கயிலாசம்)

வெள்ளியம்பலம் - மதுரையிலுள்ள ஒரு மன்றம்.

வெள்ளியம்பெருமலை - வித்தியாதரர் களுடையமலை.

வெள்ளிவீதியார் - இவர் திருவள்ளுவர்க்குச் சிறப்புப்பாயிரஞ் சொல்லிய கடைச்சங்கப்புலவருளொருவர். இவர் பாடிய”கன்று முண்ணாதுகலத்தினம்பாடாது” என்ற பாட்டுத்தொல்காப்பியவுரையினு மொன்றுளது. இவர் கற்பனாலங்காரம் பெறப் பாடுவதில் வல்லவர் போலும்.

வெற்றிவேற்செழியன் - கொற்கை நகரத்திருந்த ஒரு பாண்டியன். இவன் கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டுத் திருவிழாச் செய்து தந்நாட்டிற் சம்பவித்திருந்த துன்பங்களை யெல்லாம் நீக்கினவன். இவனுக்கு இளஞ்செழியனென்றும் பெயருண்டு.

வேகவதி - வைகை

வேங்கடம் ஒரு மலை. திருப்ப
வேங்கடாசலம் திஸ்தல மிதன்கணுள்ளது. இது தமிழ் நாட்டுக்கு வடவெல்லையாகவுள்ளது. இதிலே அதிப்புராதனமாகிய ஒரு சுப்பிரமணிய ஆலயமும், விஷ்ணுவாலயமும் உள்ளன. முன்னையது தற்காலமில்லாத தொழிந்தது.

வேணுகோபாலன் - கிருஷ்ணன் வேய்ங்குழல் வாசிக்கும் வடிவத்திற் கொண்ட பெயர்.

வேணுநாதர் - திருநெல்வேலியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வேணுஹயன் - சதசித்து புத்திரன்

வேண்மாள் - செங்குட்டுவன் மனைவி. இவள் கண்ணகியைப் பிரதிஷ்டித்துப் பூசிக்க வேண்டும் என்று தன்கணவனை வேண்டிக் கொண்டாள்.

வேதகர்ப்பை - துர்க்கை.

வேதகிரீவரர் - திருக்கழுக்குன்றத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வேதசிரசு - பிராணன் புத்திரன். உசேநசுதந்தை. மார்கண்டேயன் புத்திரனென்றும் சிலர் கூறுப.

வேதநாதேசுவரர் - திருவோந்துரிலே கோயில் கொண்டிருக்கும்சுவாமி பெயர்.

வேதநாயகி - திருக்கழப்பாலையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வேதபுரீசர் - திருவேதிகுடியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். உ. திருஅழுந்தூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வேதமங்கையம்மை - திருநணாவிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வேதமித்திரன் - சௌபரிகுரு.

வேதம் - சுருதி. இது இருக்கு, யசுர், சாமம், அதர்வணம், என நான்குவகைப்படும். அந்நான்கும் ஞானகாண்டம், கர்மகாண்ட மென இருபாற்படும். ஞானகாண்டம் பிரமத்தைப் பிரதிபாதிப்பது. அஃது உபநிஷதம் எனப்படும். கர்மகாண்டம் வருணாச்சிரம தருமங்களையும், இந்திராதி தேவபூசைகளையுமெடுத்துக் கூறுவது. அப்பூசைகள் சர்வாந்தரியாமியாகிய பரமபதிக்குப் பிரீதியாக ஒவ்வொரு மூர்த்த மூலமாகச் செய்யப்படுவன. இவ்வேதம் காலந்தோறும் இருஷிகளால் அவ்வக்கால பக்குவத்துக்கேற்ப வகுக்கப்படும். தற்காலத்துள்ள நான்கும் துவாரபரயகாந்திய காலத்திலே தோன்றிய கிருஷ்ணத்துவைபாயனர் என்னும் விடயாசரால் வகுக்கப்பட்டன. இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர்வேதம் நூறுசாகையும், சாமவேதம் ஆயிரஞ்சாகையும் அதர்வணவேதம் ஒன்பது சாகையும் உடையன. இன்னும் வேதம் மந்திரமென்றும் பிராமணமென்றும் இருபிரிவினையடையதாம். மந்திரம் தேவதைகளைத் தியானிக்கும் வாக்கியங்கள். பிராமணம் அம்மந்திரங்களைப் பிரயோகிக்கும் முறையையறிவிப்பது.

வேதவதி - சீதையினது பூர்வநாமதேயம். இவள் குசத்துவஜன் என்னும முனிக்கு மானச புத்திரியாகப் பிறந்து விஷ்ணுவுக்குத் தேவியாக வேண்டும் என்னும் அவாவோடிருக்குங் காலத்திலே தம்பன் என்னும் ராடிசன் இவளைத் தனக்குப் பாரியாகத் தருமாறு குசத்துவஜனை வேண்டினன். அதற்கு அவர் உடன்படாது மறுக்க, தம்பன் அவரைக் கொன்று பிரமஹத்தியால் தானும் இறந்தான். அப்பால் இவளை ராவணன் கண்டு மோகித்துப் பலவந்தம் பண்ண அவள்கோபித்து, பாவீ! நீ என்னை அவமானம் பண்ண எத்தனித்தமையால், நான் உனது வமிசத்துக்கு நாசகாரணமாக உலகத்திலே யோனிவாய்ப்படாது பிறந்து இப்பழிதீர்ப்பேனெனக்கூறி அக்கினிப்பிரவேசஞ் செய்து அத்தேகத்தைப் போக்கினாள். அதன் பின்னர் அவள் இலங்கையிலே ஒரு தடாகத்திலே தாமரையில் ஜனித்து அழகிய சிசுவாய் விளங்க அச்சிசுவை ஏவலாளர் எடுத்துப் போய் அவன் கையிற் கொடுத்தனர். சோதிடர் அச்சிசுவால் இலங்கை அழியுமென்று கூற, இராவணன் அதனை ஒரு பேழைமிதந்து போய் மிதிலைநாட்டுத் துறையிலடைந்து மண்ணிற் புதைந்து கிடந்து ஜனகன் புத்திரகாமேட்டியாகஞ் செய்துழுத போது அவன் கைப்பட்டது. அச்சிசுவே சீதை.

வேதவியாசர் - வியாசர் காண்க.

வேதன் - ரி. பௌஷிய ராஜாவுக்குக்குரு. அயோததௌமியன் சீஷன்.

வேதாங்கம் - சிiடி, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் ஆறும் வேதத்திற்கு அங்கமெனப் படும். வேதத்தைச் சுரத்தோடு கிரமமாகவோதல் வேண்டும். அங்ஙனமோதா விடத்து மந்திரங்கள் உரியபயனைத்தரா. சுரவேறுபாட்டினாலுச் சரிக்குமுறைமையை அறிவிப்பது சிiடியாம். வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அநுட்டிக்கும் முறைமையை அறிவிப்பது கற்பமாம். வேதங்களின் எழுத்துச் சொற் பொருளிலக்கணங்களை அறிவிப்பது வியாகரணம். வேதப் பொருளை நிச்சயிப்பது நிருத்தம். வேத மந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரையும், அவைகளுக்கு எழுத்து இவ்வள வென்பதையும் அறிவிப்பது சந்தோவிசிதி. வேதத்தில் விதிக்கபட்ட கருமங்களைச் செய்யுங்காலத்தை நிச்சயிப்பது சோதிடம்.

வேதாந்தசூடாமணி - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் தமிழிற் செய்த வேதாந்த நூல். செய்யுட் சிறப்பும் பொருட்கம்பீரமுமுடையது. இதற்கு முதனூல் வடமொழியிலுள்ள விவேகசிந்தாமணி.

வேதாந்தசூத்திரம் - உபநிடதங்களை யெல்லாம் ஆராய்ந்து வியாசமுனிவர் இயற்றிய சூத்திரரூபமாகிய பிரமமீமாஞ்சை வேதாந்தமெனப்படும். இஃது உத்தரமீமாஞ்சை எனவும், சாரீரகசூத்திரமெனவும், வேதாந்தசூத்திரம் எனவும்படும். இந்த வேதாந்தசூத்திரம் நான்கு அத்தியாயங்களையும், பதினாறுபாதங்களையும், நூற்றைம்பத்தாறு அதிகரணங்களையும், ஐஞ்äற்றைம்பத்தைந்து சூத்திரங்களையும் உடையது.

இரண்டாம் அத்தியாயத்திலே சாங்கிய முதலிய புறச்சமய விரோதபரிகாரமும், மூன்றா மத்தியாயத்திலே வித்தியாசாதன நிர்ணயமும், நான்கா மத்தியாயத்திலே ஞானசாதனபலமாகிப் வீடுபேறும் பேசப்படும்.

வேதாந்தம் - க. உபநிஷதம். உ. உத்தரமீமாஞ்சை. அஃது அத்துவைதம்

வேதாந்ததேசிகர் - இவர் வடகலை வைஷ்ணவாசாரியர். சிறந்த பண்டிதசிரோமணி. இவர் செய்த நூல்பரமபதசோபானம். இவர் ஐஞ்äறுவருஷங்களுக்கு முற்பட்டவர்.

வேதா - பிரமா

வேதாரணியம் - வேதங்களாற் பூசிக்கப்பட்ட சிவஸ்தலம். இது சோழநாட்டிலே தென்பாலிலுள்ளது.

வேதிகை - தருமராஜன் பாரி.

வேதிகை - திரௌபதி.

வேப்பத்தூர் - இவ்வூர் கலியுகம் பதினாறாண்டாகிய ஜய வருடத்திலே சந்திரகுலசேகரபாண்டியன் அயோத்தியிலிருந்து இரண்டாயிரத் தெண்மர் பிராமணரைக் கொணர்ந்து குடியேற்றித் தானஞ் செய்த வூர்களுளொன்று. இது பாண்டி நாட்டில் இன்றும் பெரியதோர் அக்கிரகாரமாக விளங்குவது.

வேமனன் - இவர் சற்றேறக் குறைய முந்நூறு வருஷங்களுக்கு முன்னே விஜய நகரத்திலே விளங்கிய வித்துவான்@ வேதாந்த சாஸ்திரங்களிலே மகாலிபுணர்@ இவர் செய்த நீதிநூல் அத்தியற்புதமானது. அந்நூல் தமிழிலே வேமன வெண்பாவென்;னும் பெயரால் மொழிபெயர்க்கப்பட்டது. (பலிஜ - புரா)

வேலாயுதன் - சுப்பிரமணியக்கடவுள் வேலாவது சக்தியின் கூட்டம்.

அது மூன்று சதுஷ்கோணங்களாற் குறிக்கப்படும். இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி யென்னு மூன்றன்பார சொரூபம் முக்கோணமாகவும், அவற்றின் அபர சொரூபம் அம்முக்கோணத்தின் பாதகோணமிரண்டையு மாதாரமாகக் கொண்டு முக்கோணமாகவும் விரிந்து இரண்டுங் கூடி நாற்கோணமாகும்.

அவ் வதோமுக முக்கோணத்தினுனியினின்றும் பின்னரு மச்சக்திகள் தம்முண்மாறி இச்சையிற்கிரியை, கிரியையின் ஞானம், ஞானத்தி லிச்சையெனக் கூடித் திரிகோணமாகும். அத் திரிகோணபாதத்திலிருந்து அபரசொரூபமாகிய முக்கோண முதிக்கும். அவையிரண்டுங்கூடி மத்திய சதுஷ்கோணமாகும். அதன் அதோமுககோணத்தினின்றும் மீளவும் அச்சக்திகள் தம்முண் மாறிக் கூடி முக்கோணமாகும். அதினின்றும் பின்னருமுக்கோணமாகக் கூடிச் சதுஷ்கோணமாகும்@ இம்மூன்று நாற்கோணங்களுமே வேலாயுதம்.

முதற் சதுஷ்கோணத்தில் இச்சாசக்தியும்,மத்திய சதுஷ்கோணத்திலே ஞானாசக்தியும், அடிச் சதுஷ்கோணத்திலே கிரியா சக்தியும் உதித்து நிற்கும். இச்சக்திகளை யெல்லாம் ஆயுதமாகக் கொண்ட கடவுள் என்பதே வேலாயுதன் என்பதன் கருத்தாம். அற்றேல் வள்ளிதெய்வநாயகிகளைச் சக்தியென்பதெனை கொலாமெனின், அஃதுண்மையே. ஞானமே வடிவாகவுள்ள சுப்பிரமணியக்கடவுளுக்கு இச்சாசக்தியும், கிரியாசக்தியும் உபசக்திகளாம். ஞானசக்தியைவிட்டு அவையிரண்டும் நீங்காதலின் தேவியாராகப் பாவிக்கப்பட்டன.

ஞானமேசுப்பிரமணியக்கடவுளுக்கு வடிவுமென்பதற்கு” ஞானந்தானுருவாகிய” என்னுங் கந்தபுராணச் செய்யுள் பிரமாணமாம். அற்றேல் ஆறுமுகங்களாற் குறிக்கப்படுவன. யாவையோ வெனின், அவை சிவன், சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், விஷ்ணு, பரமா என்னும் அறுவரதுந் தொகுதி ரூபங்களேயாம். அது பற்றியே அறுவர்க்குமுரிய தொழில்களெல்லாம் சுப்பிரமணிய மூர்த்தியிடத்திலேயுளவாகப் புராணங்கள் கூறுவதுமாமென்க.

வேலை - மேருபுத்திரி. சமுத்திர ராஜன்பாரி.

வேளாளர் - உழுவித்துண்போரும் உழுதுண்போருமென இருவகையினர். அவருள், உழுவித் துண்போர் மண்டிலமாக்களும், தண்டத்தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாருமுதலிய பதியிற் றோன்றி வேளெனவும், அரசெனவுமுரிமை யெய்தினோரும், பாண்டிநாட்டுக்கா விதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்குமகட்கொடைக்குரிய வேளாளராம். வேளாளர்க்குரிய கருவி நாஞ்சில், சகடமுதலாயின. இவர்க்குச் சிறந்ததொழில் உழுதல், உழுவித்துண் போர்க்கு வேந்தர் கரும முடித்தலும், உழுதுண்போர்க்கு வணிகமுரித்தாலுண்டு.

வேளாளர் நான்காம் வருணத்தவர். இவர்க்கு வேதமொழிந்தனவோதலும், ஈதலும், உழவும், நிரையோம்பலும், வாணிகமும், வழிபாடுமாகிய ஆறுமுரியன.

வேளாளர் ஆதியிலே கங்கைக் கரையிலேயுள்ளோராதலினாலும் பின்னர் அங்கிருந்து சென்று தென்னாட்டிற்குடி கொண்டோ ராதலினாலும், கங்காபுத்திர ரென்றும், கங்கைமைந்தரென்றும், கங்கா குலத்தரென்றுங்கூறப்படுவர். மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனை இரந்து பிணைநின்று சிறைமீட்டவர் வேளாளராத லின்அவர்க்குக் கார்காத்தாரென்னும் பெயருமுளதாயிற்று.

வேளாளர் பெருமையைக் கம்பர் ஏரெழுபதாலும் படிக்காசர் தொண்டை மண்டல சதகத்தாலும் பாடினர். சம்பந்தமூர்த்திகளும் தமது தேவாரத்தினும் வைத்துப் பாடினர்.

வேனன் - சுவாயம்புவன் வமிசத்துஅங்கன் மகன். பிருதுச்சக்கரவர்த்தி தந்தை. வேனன் புத்திரோற்பத்தியின்றி இறக்க அவன்தொடையெலும்பை யெடுத்துக் கடைந்த போது இப்பிருது சக்கரவர்த்தி பிறந்தான்.

வேனெடுங்கண்ணியம்மை - திருவெண்டு றையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வேற்கண்ணியம்மை - திருவேற்காட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

வேற்காட்டீசுவரர் - திருவேற் காட்டிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.

வைகை - வேகவதியெனப்படுவதாகிய நதி. இது பாண்டிநாட்டிலே யுள்ளது. இதன் கரைக்கண்ணது மதுரைநகரம். வேக முடையதாதலின் வேகவதி யெனப்படும். மாணிக்கவாசகர் பொருட்டு கரைகடந்து பொருகிய இந்நதியினது கரையினொரு கூற்றைச் சிவபிரான் கூலியாளாகி மண்சுமந்து அடைப்பார் போலத் திருநடம்புரிந்தனர்.

வைசம்பாயனர் - (ரி) விசமபன் என்னும் ரிஷி புத்திரர். இவர் வியாசர் சீடரு ளெருவர். ஜனமேஜயனுக்கு வியாச பாரதத்தைப் பிரசங்கித்தவரும் இவரே.

வைசிரவணன், வைச்சிரவணன் - விச்சிரன் குமாரனாகிய குபேரன்.

வைசுவதேவம் - போசனார்த்தமாக வேனும் சீவஇமிசையாகிய பாவநிவிர்த்தியின் பொருட்டேனும் பிராமணர் தினந்தோறுஞ் செயற்பாலதாகிய கருமம்.

வைசியர் - இவர் மூன்றாம் வருணத்தவர். இவர்க்கு ஓதல், வேட்டல், உழவு, நிரையோம்பல், வாணிகம் என்னு மறுதொழிலும், நூலுமுரியன.

வைசுவாநரன் - (க) அங்கிரசன் வமிசத்தனாகிய அக்கிணி. உ. தனுபுத்திரன். இவனுக்கு ஹயசிரை, காலகை, உபதானவி, புலோமையென நால்வர் புத்திரிகள் பிறந்தார்கள். அவர்களுள் உபதானவி, ஹிரண்ணியாடினையும் , ஹயசிரை கிருதுவையும், காலகையும், புலோமையும் கசியபனையும் மணம்புரிந்தார்கள்.

வைசேஷிகம் - தரிசனங்கள் ஆறனுளொன்று. இது கணாதமதமெனப்படும். கௌதமமதம் திரவியம் பதினாறென இஃது ஏழென்பது. இது தருக்க சாஸ்திரமெனவும்படும். இது பொருணிச்சயம் பண்ணுதற் குபகாரமா யுள்ளதாதலின் மாந்தர் யாவரும் ஒதற்பாலதாகிய வொரு சாஸ்திரம். சமய நூலாராய்ச்சிக்கும் இஃதின்றியமையாததாம்.

வைடூரியம் - ஒருமலை. இதுநருமதை, தபதி நதிகளுக்கு இடையேயுள்ளது.

வைதரணி - க. யமபுரத்தியாறு. இந்நதியை எளிதிற் கடக்குமாறு கோதானங் கொடுக்கப்படுவது. அந்தியகாலம் வந்தடுத்த பின்னரும் உயிர் சரீரத்தை விட்டு எளிதிற் பிரியவொட்டாமல் அதனைத்தடுத்துநிற்பதாகிய வாசனைக் கெல்லையே வைதரணியென்றுருவகித்துக் கூறுப்பட்டதுபோலும்.

உ. பிதிர்களுக்குச் சுதையிடத்துப் பிறந்த ஒரு புத்திரி.
ந. கலிங்கதேசத்திற் பிரவாகிக்கும் ஏற்றவிடமாகக் கூறுப்பட்டுள்ளது.

வைத்தியநாதநாவலர் - இற்றைக்கு இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னே திருவாரூரிலே அபிஷேகத்தார் மரபிலே அவதரித்துத் தமிழ்க்கடல் குடித்துத் தமிழ்பாரி பொழிந்து விளங்கிய பாண்டிதசிகாமணி. இவரே இலக்கண விளக்கஞ் செய்தவர். அந்நூலுக் குரையும் இவர் தாமேயெழுதினர். தொல்காப்பியத்துக்குப் பின்னர்த் தோன்றிய இலக்கண நூல்களுள்ளே இந்நூல் மிகச்சிறந்தது. இவர் காலத்திலே இவரோடு வாதம்புரியும் வன்மையில்லாதவராயிருந்து பின்னர் வன்மை படைத்த சிவஞானமுனிவர் இலக்கணவிளக்கச் சூறாவளியென வொரு நூலியற்றினர். அதனால் அதுமறைந்து தொழியாது இன்னும் ஒளிபெற்று நிலவுகின்றது. சூறாவளி இலக்கண விளக்கத்தைமறுப்படுத்தாமல் தன்னையியற்றிய சிவஞானமுனிவரென்னும் கலாசந்திரனுக்கே களங்கமாயிற்று.

வைத்தியநாதநாவலர்க்குத் தொண்டைமண்டல சதகம் பாடிய படிக்காசுப்புலவர் மாணாக்கர்.

ஒருதுறைக்கோவைபாடிய அமிர்தகவிராயர் ஒரு காலத்தவர். வைத்தியநாதநாவலரைச் சுவாமிநாத தேசிகரே “தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன்” என்று புகழ்வரென்றால் இவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டா.

வைந்நியன் - இவன்வேனன் வாமபாகத்திற் பிறந்தவன்.

வைபாடிகன் - மஞ்சளும், சுண்ணாம்புங் கூடிய விடத்து, சிவப்பொன்று தோன்றுமாறு போல, இந்திரியங்கள் கூடியவிட்த்துப் பிரபஞ்சந்தோன்று மென்னுஞ் சமயி.

வைப்பிராகை - மேருவுக்கு மேற்கின் கணுள்ள வனம்.

வைரம், வயிரம் - வலாசுரன் கொல்லப்பட்டபோது அவனெலும்பானது சிதறிப்பலமலைகளிலும் வீழ்ந்துகிடந்து வயிரமணிகளாயின. ததீசியெலும்பென்பாருமுளர். அவ்வயிரம் ஒளிவேறுபாட்டான் நான்காகும்.

“அந்தணன் வெள்ளையரசன் சிவப்பு, வந்தவை வைசியன் பச்சை சூத்திர, னந்தமில்கருமை யென்றறைந்தனர் புலவர்”
அவை பிரமவயிரம், டித்திரியவியிரம், வைசியவயிரரம், சூத்திரவயிரமென்பனவாம். வயிரத்திற்குக்குற்றம் :-
“சரைமலங்கீற்றுச் சம்படிபிளத்த, றுளைகரிவந்துகாகபாத, மிருத்துக்கோடிக ளிலாதனமுரித, றாரைமழுங்கறன்னோ, டீராறும் வயிரத்திழிபெனமொழிப” என்றபடி
பன்னிரண்டாம். அவற்றுள் மிக்க குற்றம் நான்கும் பயனுமாவன:-

க. “காகபாதநாகங் கொல்லும்”

உ. “விந்துசிந்தையிற்சந்தாபங்தரும்”

ந. “மலம்பிரியாதது நிலந்தரு கிளைகெடும்”

ச. “கீற்றுவரலினையேற்றவர் மாய்வர்” என்பன.

குணமாவன:-

“பலகையெட்டுங் கோணமாறு, மிலகிய தாரையுஞ் சுத்தியுந்தராசமு, மைந்துந் குணமென்றறைந்தணர் புலவ, ரிந்திரசா பத்திகலொளிபெறினே” என்பன. (இந்திரசாபம் - வானவில்)

சிவசாத்திரங்களிலே வயிரம் ஒரு வகைக் கல்வென்று கூறப்படும். வயிரம் மதங்கமலை, இமயமலை, வேணாநதி முதலிய விடங்களிற் படுவனவென்பது ஆரியநூற்றுணிபு. வயிரத்தைச் சரீரத்தி லணிவதனால் கருப்பதோஷத்தினாற் புத்திரோற்பத்தியில்லாத பெண்களுக்குப் புத்திரப்பேறும், யாவர்க்கும் இடி, விஷ முதலியவற்றுக் கச்சமின்மையுமுண்டாம்.

வலாசுரன் வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் அதனைக்கனைத்துமிழ, அதுவீழ்ந்து பல மலைகளிலுமூறிப்பிறந்தகற்கள் மரகத மெனப்படும். கருடோற்காரமெனப்படுவதுமிதுவே. பச்சைக்கு:-

“நெய்த்தமயிற்கழுத்தொத்தபைம் பயிரிற், பசுத்தல் பொன்மைதன்னுடன் பசுத்தல், வக்கி பாய்தல் பொன்வண்டின்வயி, றொத்துத் தெளிதலொடெட்டுங் குணமே”
“கருதுதல் வெள்ளைகன்மணல் கீற்று, பரிவுதார்சாயையிறுகுதன் மரகதத், தெண்ணிய குற்றமிவையெனமொழிப”
இனி மாணிக்கம். பதுமராகம், சௌகந்தி, குருவிந்தம், கோவாங்கு என நான்கு:-

“;தாமரை கழுநீர் சாதகபுட்கண, கோபமின்மினி கொடுங்கதிர் வினக்கு, மாதுளைப்பூவிதை வன்னியீரைந்து, மோதுசாதுரங்க வொளியாகும்மே” (சாதுரங்கமென்பது - பதுமராகம்) “திலகமுலோந்திரம் செம்பருத்திப்பூக், கவிமலர்குன்றி முயலுதிரம்மே, சிந்துரங்குக்கிற்கண்ணெனவெட்டும், எண்ணிய குருவிந்த மன்னியநிறமே” “கோகிலக்கண்செம்பஞ்சு கொய்மலர்ப்பலாச, மசோகப்பல்லவ மணி மலர்க்குவளை யிலவத்தலர் களெனறாறுகுணமுஞ், சௌகந்திக்குச் சாற்றிய நிறனே” “கோவைசெங்கல்குராமலர் மஞ்சளெனக். கூறியநான்குங் கோவாங்குநிறனே” (கோமேதகம் - கோமூத்திரநிறமுடையது) இனிப்புருடராத்தினது குணம் பொன்னையுருக்கி மாசறத்தெளிய வைத்தா லொத்த நிறத்தினையுடைமை. வைடூரியம் தேன்றுளி நிறத்தினை யுடையது. நீலம்,
“வெள்ளை சிவப்புப் பச்சைகருமையென, றெண்ணியநாற்குலத்திலங்கிய நிறமே,” “கோகிலக்கழுத்துக்குவளை சுரும்ப, ராகுலக்கண்கள விரிச்சாறு, காயாலெனக் குணம்பதி னொன்றாமே” எனவருவனவற்றாலே தெளியப்படும்.

நீலத்திற்குக் குற்றமெட்டு. இது காறுங்கூறியமணிகளெல்லாம் ஒரு முதலிற்றோன்றின. இனிமுத்துக் குரியகுற்றம், காற்றேறு, மணலேறு, கல்லேறு, நீர்நிலை யென்பன. குணம் : சந்திரனிறமும், வெள்ளியினது சோதியும், செவ்வாயினது ஒளியுமென மூன்றாம். எல்லாம் உருண்டனவாதல் வேண்டும். பவளத்தினது குணம் : துளையின்மையும், உருட்சியும், சிந்துரநிறமும், முசுமுசுக்கைக்கனி நிறமுமுடைமை. முத்தினாலே மேகோஷ்ணநீங்கும். இரத்தின பரீiடியென்னு நூலிலும் பிற நூல்களிலும் விரிவுகாண்க.

வைரவக்கடவுள் - சிவ வடிவங்களுளொன்று. இவர் சிவன் திருக்குமாரருளொருவர். இவர் சிவன் தம்மை மதியாத பிரமனது ஐந்துசிரசுகளிலொன்றைக் கொய்விக்குமாறு தோற்றுவிக்கப்பட்ட மூர்த்தி.

வைராக்கியசதகம், வைராக்கியதீபம் - இவ்விரண்டும் சாந்தலிங்கசுவாமிகளாற் செய்யப்பட்ட ஞானநூல். பாட்டாலும் பொருளாலுஞ் சிறந்தன.

வைவசுவதமநு - விவசுவதன் புத்திரன். இவன் பாரி சிரத்தை. இவன் புத்திரர் இடி{வாகு, நிருகன், சரயாதி, திஷடன், திருஷ்டன், கரூசன், நரிஷ்யந்தன், விருஷத்திரன், நபகன், கவி எனப் பதின்மர். இவருள் இடி{வாகு வமிசத்தரசர்களுக்கு அயோத்திராஜதானியாயிற்று.

இடி{வாகுவமிசத்தார் காரூசரெனப்படுவர்.

நபகன் வமிசத்தார்க்குக் கண்டகி தீரதேசமுரியது.

சரியாதி வமிசத்தார்க்கு குசஸ்தலி ராஜதானி. இவர்களே வைவசு வதமநுவமிசத் தரசர்கள்.

வைவசுவதமநுபாரியாகிய சிரத்தை தனக்கு ஒரு புத்திரியும் வேண்டுமென்று பிரார்த்தித்து இளையென்னும் புத்திரியைப் பெற்றாள். அதுகண்ட வைவசுவதன் தனது குருவாகிய விசிஷ்டரை நோக்கி அப்புத்திரியைப் புத்திரனாக்கித் தருகவென்ன, அவரும் அவ்வாறே இளையைச் சுத்தியுமனன் என்னும் புத்திரனாக்க, அவனையும் ஒருதிசைக்கரசனாக்கினான். அப்புத்திரனொரு நாள் வேட்டை மேற் சென்ற போது சரவணப் பொய்கையைக் கண்டு அங்கே தங்கினான். தங்குதலும் பூர்வம் பார்வதிதேவியார் யாவனொருவன் இப் பொய்கையில் வந்து தங்குவானோ அவன் பெண்ணுருப்பெறக் கடவனென்று விதித்தவுண்மையாற் சுத்தியுமனன் மீளவும் இளையென்னும் பெண்ணாயினான். அவ்வடிவத்தைக் கண்ட புதன் மோகித்துக் கூடிப் புரூரனைப் பெற்றான். இப் புரூரவனாலேயே சந்திர வமிசம் பெருகுவதாயிற்று. பின்னர் வசிஷ்;டரது முயற்சியால் இளை ஒருமாசம் பெண்ணாகவும் ஒருமாசம் சுத்தியுமனன் என்னும் ஆண்மகனாகவுமிருக்கச் சிவன் அருள் புரிந்தார்.

வைஹயம் - மகததேச ராஜதானியாகிய கிரிவிரசத்துக்குச் சமீபத்துள்ள ஒரு மலை.

வைஷ்ணவம் - வைதிகசமயம் மூன்றனுளொன்று. மூன்றாவன சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்பன.

வைஷ்ணவம் விஷ்ணுவை முதற்கடவுளாகக் கொண்ட சமயம்.

இது தென்கலை வடகலை யெனயிரண்டாம். தென்கலை நாலாயிரப் பிரபந்தத்தையும் வேதபுராணங்களையும் சமமாகக் கொள்வது. வடகலை நாலாயிரப்பிரபந்தத்தை அங்ஙனங் கொள்ளாதது.

ஆழ்வார்களும் ராமானுஜாசாரியருமே இச்சமயத்தை ஸ்தாபித்தவர்கள்.

வைஷ்ணவர்கள் விசிட்டத்துவைத சித்தாந்தக் கொள்கையினையுடையர்கள்.

ஸ்ரீகண்டம் - மலயபாவதம்

ஸ்ரீகண்டன் - க. சிவன். உ. பவபூதி.

ஸ்ரீகண்டாசாரியர் - நீலகண்டாசாரியர். சங்கராசாரியரும் இவரும் ஒரு காலத்தவர்கள். இருவரும் ஒருமுறை சந்தித்த போது ஸ்ரீகண்டர் வினாவியவினாக்களுக்குச் சங்கரர் விடைசொல்லாது மயங்கி நரசிங்கமூர்த்தியைத் தியானித்தனர். அம்மூர்த்தி வெளிப்பட்டு ஸ்ரீகண்டரைத் தண்டிக்க எத்தனித்தது. அது கண்டநீலகண்டர் பரமசிவத்தைத் தியானித்தனர்.

அப்பொழுது பரமசிவன் சரபரூபமாகியத் தோன்றி நரசிங்கத்தைக்கிழித் தெறியச்சங்கரர் ஸ்ரீகண்டரை வணங்கி, அவரிடத்துச் சிவதீiடி பெற்றுச் சிவானந்தலகரி சௌந்தரியலகரி முதலியவற்றைச் செய்தாரென்பர். (நீலகண்டவாசாரியர்காண்க)

ஸ்ரீசைலம் - டிpதிதரமலை.

ஸ்ரீதராசாரியர் - விஷ்ணுபுராணத்துக்கும் பாகவதத்துக்கும் சம்ஸ்கிருதத்திலே வியாக்கியானஞ் செய்தவர்.

ஸ்ரீதேவி - க. லடி{மிதேவி. உ. தேவகன் மகள். வசுதேவன் பாரியாகிய தேவகியோடு பிறந்தவள்.

ஸ்ரீபெரும்பூதூர் - தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்

ஸ்ரீமுஷ்ணம் - நடுநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.

ஸ்ரீரங்கம் - காவேரி கொள்ளிடங் களுக்கிடையே யுள்ள ஸ்தலம். இந்த ஸ்தலத்தி லெழுந்தருளியிருக்கும் விஷ்ணுமூர்த்தி விபீஷணனால் பூசிக்கப்பட்டவர்.

ஸ்ரீராமநவம் - சைத்திர சுக்கிலநவமி. இத்தினம் விஷ்ணு ராமனாக அவதரித்தமையால் விரத தினமாகக் கொள்ளப்பட்டது.

ஸ்ரீவரமங்கை - பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

ஸ்ரீவைகுந்தம் - பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

ஸ்ரீஹர்ஷன் - சேஷதர்மம் எழுதிய சம்ஸ்கிருதகவி.

ஷட்சக்கிரவர்த்திகள் - அரிச்சந்திரன், நளன், புருகுற்சன், புரூரவன், சகரன், கார்த்திவீரியார்ச்சுனன் என்போர்.

ஷண்முகன் - ஆறுமுகக்கடவுள். வேலாயுதன் என்பதனுட் காண்க.

ஸ்கந்தன் - சுப்பிரமணியக்கடவுள்.

ஸ்காந்தம் - க. சிவபுராணங்களுளொன்று. சிவமான்மியங்களையும், ஏனைய தருமங்களையும் மிகவிஸ்தாரமாகக் கூறுவது. இஃது ஒருலடிங் கிரந்தமுடையது.

உ. உபபுராணங்களுள் ஒன்று. ஸ்காந்தத்திலொருபாகமே தமிழிலே கந்தபுராண மென்னும் பெயராற் கச்சியப்பராலே மொழி பெயர்க்கப்பட்டது. கச்சியப்ப சிவாசாரியர் குமாரகோட்டத்து அர்ச்சகராயிருக்கும் போது சுப்பிரமணியக் கடவுளது ஆஞ்ஞையினாலே அதனை மொழி பெயர்த்தனர் என்பர். அஃதுண்மையேயாமென்பது அப்புராணத்துச் செய்யுள் ரீதியாலும் செபாகத்தாலும் சாஸ்திரக் கருத்துக்களின் மலிவாலும் விளங்கும்.

ஸ்தூலகர்ணன் - ஒருயடின். இவனாலேயே சிகண்டி புருஷ்த்துவம் பெற்றது.

ஸ்தூலகேசன் - (ரி) பிரமத்துவரை யென்பவள் தந்தை.

ஸ்தூலசிரசு - கவந்தனுக்குச் சாபமிட்டரிஷி.

ஸ்நுஷை - விதர்ப்பன் பாரி.

ஸ்மிருதி - தடின்பாரி. முதல்; அங்கிரசன்பாரி. சிரத்தையெனவும் பெயர் பெறுவள். சினீ, வாலி, குகு, ராகை, அநுமதி என்போர் இவள் புத்திரிகள்.

ஸ்மிருதிகள் - வேதார்த்தங்களைத் தழுவிய தருமசாஸ்திரங்கள். அவற்றுள் மனுஸ்மிருதி மிக்க பிரபலமுடையது. அது ஜகத்துச் சிருஷ்டி முதற் சகல விஷயங்களோடும் மாந்;தர் தத்தம் வருணாச்சிரம தருமப்படி யொழுக வேண்டிய முறைகளெல்லாம் விரித்துரைப்பது.

பிருகஸ்பதிமிருதி, தடிஸ்மிருதி, கௌதமஸ்மிருதி, யமஸ்மிருதி, ஆங்கீரசஸ்மிருதி, யாஞ்ஞவற்கியஸ்மிருதி, பிரசேதஸ்மிருதி, சாதாதபஸ்மிருதி, பராசரஸ்;மிருதி, சம்வர்த்தஸ்மிருதி, ஒளசனஸ்மிருதி, சங்கஸ்மிருதி, லிகிதஸ்மிருதி, ஆத்ரேயஸ்மிருதி, ஹாரீதஸ்மிருதி என ஸ்மிருதிகள் பதினெட்டு. இவையே யன்றி உப ஸ்மிருதிகளும் பதினெட்டுள. அவை கண்ணுவ- கபில - லோகித - தேவல - காத்தியாயன - லோகாடிp - புத - சாதாதப - அத்திரி - பிரசேத - தடி - விஷ்ணு -விருத்தவிஷ்ணு - விருத்தமனு - தௌமிய - நாரத - பௌலஸ்திய - உத்தராங்கிதஸ்மிருதிகள்.

ஸ்வதை - பிதிர்தேவதைகள் பாரி.

ஸ்வயம்பிரபை - ஹேமையென்னும் அப்சரசு புத்திரி. அநுமான் முதலியோர் சீதையைநாடிச் சென்ற போது இவளிருக்கும் காஞ்சனபிலத்திற் பிரவேசித்து வெளிப்படவியலாது திகைத்து நிற்ப இவள் அவர்களை வெளிப்படும் படி உதவி புரிந்தவள்.

ஹம்சக்தை - ஹம்சரூபராகிய பிரமசாத்தியர்களுக்கு உபதேசிக்கப்பட்டகீதை.

ஹம்சன் - (ய) வசுதேவனுக்குச் சீதேவியிடத்துப் பிறந்த இரண்டாம் புத்திரன். உ. டிசிகன் சகோதரன். கௌசிகனெனவும் படுவன்.

ஹம்சை - மேருவுக்கு உத்தரத்திலுள்ள ஒரு மலை.

ஹயக்கிரீவன் - க. குதிரை முகமும் மனுஷியபதேகமும் உடையகற்கி அவதாரத்தின் பெயர். மதுகைடவர் தங்களை அபகரித்தொனிக்க அவைகளை மீட்டுமாறு கொண்ட மூர்த்தம். ஹயக்கிரீவமூர்த்த மெனப்படும். உ. சோமகன் என்னும் தானவன்.

ஹயசிரை - வைசுவாநரன் புத்திரி. கிருது பாரி.

ஹாதத்தாசாரியர் - கஞ்சனாரிலே மதுசூதனாசாரியருடைய புத்திரனார். இவர் பூர்வசமயம் வைஷ்ணவம். பின்னர்ச் சைவசமய சாஸ்திரங்களைக்கற்றுச் சைவசமயியாயினர். அதுகண்ட வைஷ்ணவர்கள், இவரை நோக்கி, உமது சிவன் உண்மைப் பரம்பொருளாயின் நாங்களிடும் இருப்புப்படிமேனின்று சிவ பரத்துவ நாட்டக்கடவீர் என்ன, இவர் அதற்குடன்பட்டு வைஷ்ணவர்கள் பழுக்கக்காச்சிய இருப்புப் பாளப்படியேறிச் சிவபரத்துவஞ் சாதித்தவர். இவர் பூர்வநாமம் ஹரிதத்தர். இவராலியற்றப்பட்ட நூல்கள் சதுர்வேத தாற்பரிய சங்கிரகமுதலியன. “உயர்கா யத்திரிக் குரியபொருளாகலிற், றசரதன் மதலை தாபித் தேத்தலிற், கண்ணன் கயிலையி னண்ணிநின்றிரப்பப், புகழ்ச்சியி னமைந்த மகப்பே றுதவலிற், றனாது விழியு னொராயிரங் கமலப், புதுமலர் கொண்டு பூசனையாற்றலின், அமைப்பருங்கடுவிட மமுதுசெய் திடுதலிற், றென்றிசைத் தலைவனைச் செகுத்துயிர் பருகலின், அவுணர் முப்புரமழிய வில் வாங்கலிற், றக்கன் வேள்வி தகர்த்தருள் செய்தலிற், றனஞ்செயன் றனக்குத் தன்படை வழங்கலின், மானுட மடங்கலை வலிதபக்கோறலின், மாயோன் மகடூ உவாகிய காலைத், தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலின். ஆழ்கடல் வரைப்பினான் றோரநேகர், அன்பு மீதூர வருச்சனையாற்றலி, னான் கிருசெல்வமுமாங்கவர்க் கருடலின், ஐயிரு பிறப்பினு மரியருச்சித்தலின், இரு வருமன்னமுமேனமு மாகிஅடி முடி தேட வழற்பிழம்கலிபாற், கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற், பொய்புகல் வியாதன் கைதம்பித்தலின், முப்புர மிறுப்புழி முகுந்தப் புத்தேண், மால்விடை யாகி ஞாலமொடு தாங்கலின். அயன்சிர மாலை யளவில வணிதலின், ஞானமும் வீடும் பேணினர்க்குதவரலிற், பசுபதிப் பெயரிய தனிமுதற் கடவுள், உம்பர்களெவர்க்கு முயர்ந்தோன், என்பது தெளிகவியல்புணர்ந்தோரே” இது ஹரதத் தாசாரியா அருளிச் செய்த சிவபரத்துவ நிரூபணமொழிபெயர்ப்பு.

ஹரன் - க. சிவன். உ. (ரா) மாலியவான் புத்திரன். விபீஷணன் மந்திரி.

ஹரி - விஷ்ணு

ஹரிகேசன் - (ய) வசுதேவன் தம்பியாகிய சியாமகன் மகன்.

ஹரிக்கிராமம் - விதர்ப்பதேசத்துள்ள ஒரு கிராமம்

ஹரிச்சந்திரன் - இவன் சூரியவம்சத்தில் இருபத்துநான்காம் சந்ததி. இவன் திரிசங்கு புத்திரன். இவன் மனை விசந்திரதயம் புத்திரியாகிய சந்திரமதி. புத்திரன் லோகிதாசன்.

ஹரிச்சந்திரன் மகா உதாரசீலனும் சிறிதுந்தவறாத சத்தியவந்தனுமாக விளங்கினவன். இவனுடைய சத்திய விரதத்தை வசிஷ்டர் இந்திரன் சபையில் எடுத்துப்பாராட்டிய போது விசுவாமித்திரன் அவனைப் பொய்யனாக்குவேனென்று சபதங்கூறி இவனுடைய சத்திய விரதத்தை பரீடிpக்கப் புகுந்தான். அவன் செய்த கொடிய வஞ்சப் பரீiடி களுக்கெல்லாம் இவன் சிறிதுங்கலங்காது நின்ற தன் மனைமக்களைப்பிரிந்து தானும் தான் கொண்ட சத்திய விரதத்தைக் காத்து இன்று மழியாப்புகழ் படைத்தவன்.

ஹரிணாங்கன் - சந்திரன்.

ஹரிணி - ஓரப்சரசை.

ஹரிதன் - (க) யாவனாசுவன் புத்திரன். இவன் தவத்தாற் பிரம ரிஷியாயினவன். இவன் டித்திரியவர்ணத்தவனேயாயினும், இவன் வமிசத்தார் பிராமணராயினர். அவர்கள் ஹரிதரெனப்படுவர்கள். ஆங்கிரச, அம்பரீஷ, யாவனாசுவ வமிசமாகப் பிறந்தார்கள். உ. (இ) லோகிதாசியன் புத்திரன். சம்பன் தந்தை.

ஹரித்துவாரம் - கங்காத்துவார மெனப்படும் Nடித்திரம். விஷ்ணுவாற் கொல்லப்பட்ட மனு தனது மரணகாலத்திலே இத்தலம் புண்ணியஸ்தலமாகும்படி அநுக்கிரகிக்குமாறு விஷ்ணுவை வேண்ட அவ்வாறாயது.

ஹரியங்கன் - (அ) சம்பன் புத்திரன்.

ஹரியசுவன் - க. (இ) திருடாசுவன் புத்திரன். நிகும்பன் தந்தை. உ. (இ) அநரண்ணியன் புத்திரன். சுமனசன் தந்தை. ந. (மி) திருஷ்டகேதுபுத்திரன். ச. (பு) பர்மியாசுவன்.

ஹரிஹரராயன் - இவன் துங்கபத்திரா நதிதீரத்திலே காட்டைக் கெடுத்து நாடாக்கி வித்தியாநகரம் நிருமித்து அங்கிருந்து அரசியற்றினவன். இவன் இற்றைக்கு ருள வருஷங்களுக்கு முன்னிருந்தவன்.

ஹரிஹரன் - விஷ்ணுவும் சிவனுங்கூடிக் கொண்டருளிய வடிவம்.

ஹரிஹரபுத்திரன் - சாத்தனார். இவர் ஐயனாரென வழங்கப்படுவர். மோகினி வடிவங் கொண்ட விஷ்ணுவைச் சிவன் கூடித் தோற்றுவித்த புத்திரனார் இவரே. இவர் அறநெறியிலிழுக்கினோரை யொறுப்பவர். இவர்க்கு வாகனம் வெள்ளையானை. பூரணையும் புட்கலையுந் தேவிமார். இவர் தற்காலத்திலே கிராமதேவதையாகப் பூசிக்கப்படுவர். இவர் செண்டாயுதமும் கருங்கடல் வண்ணமு முடையவர்.

ஹரீதன் - விசுவாமித்திரன் புத்திரன். இவன் வமிசத்துப் பிராமணர் ஹரீதரெனப்படுவர்.

ஹர்ஷன் - தருமனுக்குச் சிரத்தையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் மனைவி நந்தை. சமன், காமன் என்போர் சகோதரர்.

ஹலாதன் - பிரஹலாதன் தம்பி. அநுஹலாதன் எனவும் படுவன்.

ஹவ்வியவாகனன் - க. கிரகபதி. உ. அக்கினி. சுசிபுத்திரன்.

ஹவிர்ப்புக்கு - பிரீதி. புலஸ்தியன் பாரி. இவள் விச்சிரவாவு தாய்.

ஹவிர்யக்கியங்கள் - சிரௌதாக்கினியிலே அமைக்கப்படும் எக்கியபேதங்கள். அக்கினியாதேயம், அக்கினிஹோத்திரம, தரிசபூரணமாசம், ஆக்கிரஹாயணம், சாதுர் மாசியம், நிரூடபசுபந்தம், சௌத்திராமணி என ஏழாம்.

ஹவிர்த்தானன் - விஜயாசுவனன் என்னும் அந்தர்த்தானனுக்கு நபஸ்வதியிடத்துப் பிறந்தவன். இவன் பர்ஹி, கயன், சுக்கிலன், கிருஷ்ணன், சத்தியன் என்னும் அஜினன் என்னுமறுவர் புத்திரரைப் பெற்றவன். இவர்கள் பிரசேதசரெனப்படுவர்.

ஹனுமந்தன், ஹனுமான் - சுக்கிரீவன் மந்திரி. ராமன் தூதன். வாயுதேவனது அநுக்கிரகத்தால் அஞ்சனை வயிற்றிற் பிறந்தவன்.

ஹஸ்திபுரம் - ஹஸ்தினாபுரம்.

ஹஸ்தினாபுரம் - கௌரவர்களுக்கு ராஜதானி. இது ஹஸ்திகன் நிருமித்த நகரம். இந்நகரம் பிற்காலங்கங்கை கொண்டழிந்தது. இப்போதுள்ள “தில்லி” நகருக்கு அறுகாத் தூரத்திலிருந்தது.

ஹஸ்தன் - (ய) வசுதேவனுக்கு யோசனையிடத்துப் பிறந்தவன்.

ஹஸ்திகன் - (பு) சுகோத்திரன் புத்திரன். இவனே ஹஸ்தினாபுரம்நிருமித்தவன். அஜமீடன், துவிமீடன் புருமீடன் என்போர் இவன் புத்திரர்.

ஹார்த்திக்கியன் - (ய) கிருதவர்ம

ஹாஹா - ஒருகந்தருவன். தமிழிலே ஆகாவெனவழங்கப்படுபவன். (நைடதம்)

ஹிரணியநாபன் - க. ஸ்ரீரமன் மகனாகிய குசன் வமிசத்திற் பிறந்தவன். இவன் ஜைமினிசீஷனாகிய யாஞ்ஞவற்கியரால் யோகமார்க்கம் உபதேசிக்கப்பட்டவன். (உ) மைநாகன்.

ஹிரணியபுரம் - நிவாதகவச காலகேயர்களுடைய தேசம். அது சமுத்திரமத்தியிலுள்ளது.

ஹிரணியரோமன் - நான்குலோக பாலர்களுளொருவன்.

ஹிரணியாடின் - க. ஹிரணிய கசிபன்; தம்பி. தந்தை கசியபப்பிரஜாபதி. தாய் திதி. இவனும் இவன் தமையனும் சனகசநந்நர்களுடைய சாபத்தினால் சாடிசர்களாகப்பிறந்த விஷ்ணு துவாரபாலர்களாகிய ஜயவிஜயர்கள். இவர்கள் தவத்தினால் மிக்க கர்வமுடையர் களாய்த் தேவர்களுக்குத் துன்பஞ் செய்துவருங் காலத்தில் விஷ்ணுவாற் கொல்லப்பட்டவர்கள். உ. (ய) வசுதேவன் தம்பியாகிய சியாமனுடைய இரண்டாம் புத்திரன்.

ஹிடிம்பள் - வீமனாற் கொல்லப்பட்ட அசுரன். இடிம்பன்.

ஹிடிம்பை - ஹிடிம்பன் தங்கை. வீமன் இவளைக் காட்டகத்திற் கண்டு மணம் புரிந்தான். இவள் வயிற்றிற் பிறந்தபுத்திரன் கடோற்கசன்.

ஹிமசுதை - பார்வதி.

ஹிமசுதன் - மைநாகன்

ஹிமபுரம் - ஒஷதிப்பிரஸ்தமென்னும்இமாலய ராஜதானி.

ஹிமவான், ஹிமவந்தன் - இமயமலை. மேருபுத்திரியாகிய மனோரமையென்னும் மேனையை மணம் புரிந்து பார்வதியையும், கங்கையையும் பெண்ணாகப் பெற்று வளர்த்தவன்.

ஹிமாலயம் - இமயபர்வதம்.

ஹிம்சை - நிருதிமகள். அதர்மன் பாரி.

ஹிரணியகசிபன் - கசியபனுக்குத் திதியிடத்துப்பிறந்த புத்திரன். இவன் விஷ்ணுவால் நரசிங்காவதாரத்திற் கொல்லப்பட்டவன். இவன் மூவுலகங்கைளும் ஜயித்தவன். இவன் மகன் பிரஹலாதன்.

ஹிரணியகர்ப்பன் - க. பிரமா. உ. விஷ்ணு.

ஹிரண்மயவருஷம் - நவவருஷங்களு ளொன்று. இது இளாவிருத வருஷத்துக்கு வடக்கேயுள்ளது.

ஹிருசுவரோமன் - (மி) சுவர்ணரோமன் புத்திரன். இவன் இரண்டாஞ் சனகன் தந்தை.

ஹிருஷிகேசன் - விஷ்ணு.

ஹில்வலை - மிருகசீரிஷ நடித்திரத்தினது தலையிலுள்ள உபநடித்தரங்களைந்தும் இப்பெயர் பெறும்.

ஹீரன் - நைஷதம் செய்த ஹர்ஷருகுத் தந்தை.

ஹிருதிகன் - (ய) போஜன் புத்திரன். இவன் புத்திரர் தேவமீடன், சததன்வன், கிருதவர்ணன்.

ஹ{ணதேசம் - ஹ{ணர்களுடையதேசம். இவர்கள் யவனரெனவும்படுவர். (ஹ{ணர் - வெண்ணிறமுடையர்)

ஹ{ஹ{ - ஒருகந்தருவன். இவன் ஒரு சாபத்தால் முதலைகாகிக் கிடந்து கஜேந்திரனென்னும் யானையைப் பிடித்த போது விஷ்ணுவினாற் கொன்றி ரடிpக்கப்பட்டவன்.

ஹேதி - சிருஷ்டிகாலத்திற் பிரமாவினால் படைக்கபட்ட ராடிச அரசன். இவன்பாரி காலாக்கினி யென்னும் பயை. புத்திரன் வித்தியுத்கேசன். இவன் மாலியவந்தன் முதலாகிய ராடிச வம்சத்திற் மூலபுருஷன்.

ஹேமசந்திரன் - (க) விசாலன் புத்திரன். (உ) சாலிவாகன சகாப்தம் கக00 ளுத்திலிருந்த ஒரு சம்ஸ்கிருத கவி. இவர் தம்பெயரால் ஒரு நிகண்டு செய்தவர். (அது ஹேமசந்திரகோசம் எனப்படும்)

ஹேமன் - (அ) ஜயத்திரதன் புத்திரன். பலியினது பாட்டன்.

ஹேமாத்திரி - சுமேரு மலை.

ஹேமாங்கதன் - (ய) வசுதேவனுக்கு ரோசனையிடத்திற் பிறந்த புத்திரன்.

ஹேமை - ஒரு அப்சரஸ்திரி.

ஹேமகூடம் - மேருவுக்குத் தென்பாகத்தில் பூமியினது நூனியிலே யுள்ள மலைகளுளொன்று.

ஹேஹயன் - (ய) சதசித்து மூன்றாம் புத்திரன்.

ஐஹரம்பம் - ஒரு பருவதம். இது மணிபுரத்தருகே கபிலநதிக் குற்பத்தி ஸ்தானமாகவுள்ளது.

ஐஹஹயம் - கார்த்தவீரியார்ச்சுனன் அரசுபுரிந்த தேசம். அது நருமதை நதிதீரத்திலுள்ளது.
ழூ¾ழூ¾ழூ¾ழூ¾ழூ¾ழூ

அநுபந்தம்

ஆறுமுகநாவலர் - யாழ்ப்பாணத்திலே நல்லூரிலே, வேளாளர் குலத்திலே, சாரலிவாகனசகனம் ஆயிரத்தெழுநூற்று நாற்பத்தைந்தாம் வருஷத்திலே, கந்தப்பிள்ளை யென்பவருக்குப் புத்திரராக அவதரித்தவர்.

இவர், தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்னும் முப்பாஷைகளையுங்கற்று, அப்பாஷைகளிலே வியவகாரசத்திவந்த பின்னர், தமிழையே முற்றக்கற்கும் பேரவா வுடையராயினார். அதனால், இவர் அக்காலத்திலே பிரபலவித்துவான் களாய்விளங்கிய சரவணமுத்துப்புலவர் முதலியோரிடத்துச்சில இலக்கண விலக்கியங்களைப் பாடங்கேட்டுத், தமக்குப்பாடஞ் சொன்ன ஆசிரியர்களும் நாணத்தக்க நுண்ணியபுலமையும், கூர்;ந்த விவேகமும், வாக்குவன்மையும், ஒப்பற்ற ஞாபகசத்தியும், ஆசாரசீலங்களும், நற்குணநற்செய்கைகளும், சிவபக்தியும், சமயாபிமானமும், சபையங்சா ஆண்மையும் பெரிதுமுடையராய் விளங்கினார். அக்காலத்திலே, இவர் ஆங்கிலக்கல்வியினாலே தமிழ்க் கல்வி அபிவிருத்தியடையாது குன்றிப் போவதை நோக்கிகப்பரிதபித்து வண்ணார் பண்ணையிலே ஒருதருமத் தமிழ்ப் பாடசாலை தாமும் இடையிடையே உபாத்தியாயராகவிருந்து கல்வி கற்பிப்பாராயினர். அதுகண்டு, நாற்றிசை யினின்றும் சைவப்பிள்ளைகள் அங்கே சென்று தமிழ்கற்கத் தொடங்கினார்கள். அதனால் அப்பாடசாலை ஓங்கி வளர்வதாயிற்று. அதுகாறும் பனையேட்டி லெழுதி வழுக்களோடு கற்றும் கற்பித்தும்வந்த நிகண்டு முதலிய நூல்களை வழுக்களைந்து சுத்த பாடஞ் செய்து காகித புஸ்தகமாக அச்சிடுவித்துத், தம்பாடசாலை மாணாக்கருக்கும் மற்றோர்க்கும் உபயோகமாகும் படி செய்தனர்.
காகிதபுஸ்தகங்கள் வரவே, தமிழ்க் கல்வியபிமானம் வரவர ஓங்குவதாயிற்று. இப்புஸ்தகங்களினாலே அவருடைய பெயர் தமிழ்நாடெங்கும் வியாபித்து விளங்கிற்று.

பாடசாலைகளுக்கு உபயோகமாகும்படி வசனநடையிலே பாலபாடங்களெழுதி அச்சிடுவித்தார். எவருக்கும் உபயோகமாகும்படி பெரியபுராண முதலிய நூல்களை வசனமாக்கினார். கந்தபுராணம், வில்லிபுத்தூரர்பாரதம், திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையாருரை முதலிய அரும்பெரும் நூல்களை யெல்லாம் வழுக்களைந்து சுத்தபாடமாக்கி அச்சிட்டு லகத்துக்கு பகரித்தார். அவற்றுள், திருக்குறள் பரிமேலழகருரையும், திருக்கோவையாரையும், இராமநாதபுரத்து மகாராசாவினது மந்திரியாகிய பொன்னுச்சாமித்தேவர் இவரை தமது நாட்டிற் சந்தித்த இவரை தமது நாட்டிற் சந்தித்த பொழுது, “இந்நூல்களை ஆராய்ச்சிசெய்து சுத்தபாடமாக்கி அச்சிடவல்லார் தங்களையன்றி;ப் பிறறொருவரையுங் காண்கிலோம்” என்று கூறி, அதற்கு வேண்டும் பொருள் கொடுத்து இவரைக் கொண்டு திருத்தி அச்சிடுவிக்கப்பட்டன.

திருக்குறள், திருக்கோவையார், நன்னூல்விருத்தியுரை, தொல்காப்பியச் சொல்லதிகாரம், சேனாவரையருரை முதலிய நூல்கள் இவராற்றிருததி, அச்சிடப்படாதிருக்குமாயின், இந்நாளிலும் அவற்றை நாம் ஓலைப் புத்தகங்களிலேயே படித்துச் சங்கடப்பட்டு மலையவேண்டியவர்களாவோம். இந்நூல்களைச் சுத்தபாடமாக்கித் தரும்பொருட்டு இவர் அவதாரஞ் செய்தாரென்றே நாம் கொள்ளுதல் வேண்டும். இவர் அவதாரஞ் செய்திலரேல், அவற்றை நாம் இக்காலத்திற் காண்பது மில்லையாம்.

இவர், யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்று, சிதம்பரத்திலும் ஒரு வித்தியாசாலை ஸ்தாபித்து, அதுவுந்தளராமல் நடைபெறும் பொருட்டு அதற்கும் முதனிதியமைத்து வைத்தார். அவ்வித்தியாசாலையைப் போலவே, தளராமல் நடைபெற்று வருகின்றது. இவர் தமிழபிவிருத்தியின் பொருட்டும், சைவசமயாபி விருத்தியின் பொருட்டும் தம்மாயுட்கால முழுவதையும் போக்கியவர். இவர் தாமீட்டிய செல்வத்தையெல்லாம் ஒருசிறிதும் புறத்தே போகாவண்ணம் இவ்விரண்டிற்குமே ஆக்கிவைத்தார். இவ்விரண்டையும் பரிபாலிக்கும் பொருட்டே தஞ்சுற்றத்தாருடைய தொடர்பை முற்றத்துறந்தார். ஏனைய கல்விமான்களைப் போலச் சைவசீலங்களைப் போச்சளவிற் காட்டாமல், தம்மொழுக்கத்தாலும் எடுத்து நாட்டினவர். இறக்கும்போது இவருக்கு வயசு 57. இவர் எவ்விஷயங்களையும் ஐயந்திரிபற வெடுத்து மாணவர்க்குப் போதிப்பதிலும், சமயவிஷயமேயாயினும் பொதுவிஷயமேயாயினும் ஒன்றை யெடுத்துத் தீரவிசாரித்துத் தர்க்க முறையாகப் பிரமாணத்தோடு எப்பெருஞ் சபையிலும் எத்துணைப் பெருமாற்ற லுடையோரும் மற்றெத்திறத்தினரும் அங்கீகரிக்கும் வண்ணம் நாட்டிப் பிரசங்கிக்கும் சாதுரியத்திலும், கேட்போருள்ளத்தைப் புறஞ் செல்ல விடாது தம்மாட்டுக்கவரும் வாக்கு வன்னையிலும், கடன்மடைதிறந்தா லொப்பச் சொற்பஞ்சமின்றி வாக்குமழை பொழியும் அற்புத ஆற்றலிலும், இவர்க்கிணையாவா ரொருவரை நாம் இன்னுங் காண்கிலேம்.

ஆளவந்தார் - இவர் வீரைமா நகரத்திலே விளங்கிய புலவர். ஞானவாசிட்டத்தைத் தமிழிலே ஈராயிரம் விருத்தங்களாற் பாடிய புலவர்.

சரணவப்பெருமாளையர் - இவர் திருத்தணிகையிலே வீரசைவர் குலத்திலவதரித்துச் சென்னையிலேயிருந்து தமிழ்க்கலை வளர்த்து இற்றைக்கு முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னே அருவுடம்பு கொண்டவர் நாலடியார், நன்னூல், நைஷதம், திருவள்ளுவமாலை, நன்னெறி முதலிய நூல்களுக்குரையும், பூகோயதீபிகை, பாலபோத இலக்கண முதலிய நூல்களும் செய்தவர் இவரே. இவர் செய்த திருவள்ளுவமாலையுரை மிக்க திட்ட நுட்பமமைந்து புலவோருள்ளத்திற்கு அதிசயானந்தம் பயப்பது.

இவர் செய்தநைஷதவுரை முற்றுப் பெற்றிருக்குமாயின் அதற்கிணை பிறிதொன்றெக்காலத்து முளதாகாது.

மீனாடிpசுந்தரம்பிள்ளை - இவரும் ஆறுமுகநாவலரும் ஒரே காலத்தவர்கள். இவர் மகாவித்துவான் என்னும் பட்டாபிதானம் பூண்டவர். இவர் பாடும் வன்னையிலே கம்பரிலுஞ் சிறந்தவரென்னலாந்தகுதி வாய்ந்தவர். இவர் பாடிய பாடல்களுக்குக் கணக்கில்லை.

இவர் ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகையும் பாடவல்லவர். இவர் நாகைக் காரோணபுராணம், மயூரபுரணம், குடந்தைப்புராணமுதலிய ஐம்பது நூல் பாடினார். இவர் திரிசிபுரத்திலே பிறந்து திருவாவடுதுறை மடாலயத்திலே கலைபயின்று அம்மடத்து ஆதீனவித்துவானாகி அநேக மாணாக்கரைச் சேர்த்துத் தமிழ்க்கலை பயிற்றி அவர் மூலமாகத் தென்னா டெங்கும் தமிழ்பயிர் வளர்த்தவர்.

வில்லிபுத்தூராழ்வார் - தமிழிலே விருத்தப்பாவாற் பாரதம்பாடிய புலவர். இவர் ஆட்கொண்டான் என்னுஞ் சனியூர் அரசனுக்கு அபிமானப்புலவர். இவர் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளவர். இவர் சரித்திரத்தை “வரந்தருவான்” என்பதனுட் காண்க.

--------------

குறிப்பெழுத்துவிளக்கம்

அ - அணவமிசம் பா - பாஞ்சாலவமிசம்;
அம் - அங்கதேசராஜவமிசம் பூ - பூருவமிசம்

இடி{ - இடி{வாகு வமிசம். பிரி - பிரியவிரதவமசம்
கா - காசிராஜவமிசம் பிர - பிருகதிஷவமிசம்
குரு - குவமிசம் ம - மகததேசராஜவமிசம்.
த - தநுவமிசம் (தானவர்) மி - மிதிலை ராஜவமிசம்.
திதி - திதிவமிசம் (தைத்திரியர்) ர, ரா - ராடிசவமிசம்.
நரி - நரிஷியந்தவமிசம். வை - வைகிருதம்.

----