கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும்  
 

கலாநிதி சி.மௌனகுரு

 

சுவாமி விபுலாநந்தர்

காலமும் கருத்தும்

கலாநிதி
சி.மௌனகுரு


விபுலம்வெளியீடு – 4
VIPULAM PUBLICATION – 4


Swami Vipulanandar
KALAMUM KARUTHTHUM

(Collection of Articles on
Swami Vipulanandar)

Author : S. MAUNAGURU
M. A. Dip. in Ed. Ph. D.

First Edition : 18th August 1993

Printers : St Sebastian Printers.
Batticaloa.

Cover Design : Ilanvalagan Pathippagam

Publishers : Vipulam Puplication
7, Gnanasuriyam Square,
Batticaloa.

Price : 50/-



எழுத்தறிவித்த
என் தலைமைத்தமிழாசிரியர்
காலம் சென்ற
திரு. நாகமணி
அவர்களின் நினைவாக.


சுவாமி விபுலாநந்தர்
காலமும் கருத்தும்

உள்ளே உள்ளவை

1. வெளியீட்டுரை ……………. ஏ

2. என்னுரை ……………. ஏi

3. விபுலாநந்த அடிகளாரின்
சமூக கலை இலக்கிய நோக்கு …………….. 01

4. தமிழ் உணர்வின் வரலாறும்
விபுலாநந்தரின் தமிழுணர்வும் …………….. 42

5. விபுலாநந்தர் நயத்த
இலக்கிய நாயகர்கள் …………….. 103
வெளியீட்டுரை

விபுலம் தனது 4வது வெளியீடாக சுவாமி விபுலாநந்தரின் காலமும் கருத்தும் என்னும் இந்நூலை வெளியிடுகிறது.

இது வரை விபுலம் வெளியிட்ட நூல்களுக்கு ஆதரவு தந்த வாசகர்கட்கு எமது நன்றிகள்.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரப் பீடாதிபதியாகப் பணிபுரியும் கலாநிதி. சி. மௌனகுரு அவர்கள் சுவாமி விபுலாநந்தர் பற்றி எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. தம் கட்டுரைகளை வெளியிட எமக்கு அனுமதி தந்து ஆலோசனைகள் வழங்கிய கலாநிதி. சி.மௌனகுரு அவர்கட்கு எமது உளம் கனிந்த நன்றிகள்.

1992 ஜுன் மாதம் எமது முதல் வெளியீடு வெளியிடப்பட்டது. 1993 செப்டம்பர் மாதத்தில் எமது 4வது வெளியீடு வெளிவருகிறது. ஒரு வருடத்துள் 4 வெளியீடுகள் எம்மைப் பொறுத்தவரை குருவிதவையில் பனங்காய் தான். எனினும் வாசகர் தரும் ஆதரவு நம்பிக்கைதருகிறது. மேலும் உங்கள் ஆதரவைக் கோருகிறோம்.

7, ஞானசூரியம் சதுக்கம், விபுலம்
மட்டக்களப்பு வெளியீட்டுக்குழுவினர்.


என்னுரை

சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டு விழா பெரு விழாவாக நடந்து முடிந்துள்ளது. அறிந்தோருக்கு நினைவு கூறலாகவும், அறியாதோருக்கு அறிமுகமாகவும் அவ்விழா அமைந்தது விழா தந்த பயன்கள் பல.

சுவாமிகளின் வெளிவந்த, வராத எழுத்துக்களை மீண்டும் கொணரும் முயற்சி, சுவாமிகள் பற்றிய புதிய தகவல்கள் என்பன அவற்றுட் சில.

நூற்றாண்டு விழாவில் சுவாமிகளை அகவயமாகவும், (ளுரடிதநஉவiஎந) புறவயமாகவும் (ழுடிதநஉவiஎந) நின்று அணுகிய எழுத்துக்களும் வெளியாயின. ஒரு வரலாற்று நாயகரை இவ்வண்ணம் அணுகும் இயல்பை நாம் வரலாற்றிலே காணுகின்றோம். சுவாமியவர்களைப் புறவயமாக அணுக எடுத்த முயற்சிகளின் பயனே இக்கட்டுரைகளாகும்.

ஒருவரது கருத்துக்களை உருவாக்குவதில் அவரது சமூக வாழ்வு மிகப் பிரதானமான பங்கை வகிக்கின்றது. ஒருவர் வாழும் கால கட்டம் அவருடைய கருத்துக்கள் மீது மிகுந்த செல்வாக்கைச் செலுத்தும். காலத்தோடு ஓட்டிச் சிந்திப்பவரும் உண்டு. காலத்தை மீற்த் தூர நோக்கோடு சிந்திப்பவரும் உண்டு. முன்னையவர்கள் சிந்தனையாளர்கள்@ பின்னையவர்கள் மேதைகள்.

இக்கட்டுரைகள் சுவாமிகளின் சில கருத்துக்களையும் அக் கருத்துக்களின் உருவாக்கத்தில் அவர் வாழ்ந்த காலம் செலுத்திய செல்வாக்கையும் இனம் காண முயல்கின்றன. சுவாமிகள் பற்றிப் புறவயமான ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இவை உதவும் என்று நம்புகிறேன்.

ஒரு வகையில் இக் கட்டுரைகள் சுவாமியவர்களின் நூற்றாண்டு விழாவின் பிரதிபலிப்புகள் எனலாம். இத் தொகுதியின் முதற்கட்டரையான விபுலாநந்த அடிகளாரின் சமூக கலை இலக்கிய நோக்கு மட்டக்களப்பு விபுலாநந்த நூற்றாண்டு விழாச் சபை நடத்திய சுவாமி விபுலாநந்தர் நினைவுச் சொற்பொழிவினை அடிப்படையாகக் கொண்டது. சிறு பிரசுரமாக அச்சபையால் வெளியிடப்பட்டது.

இரண்டாவது கட்டுரையான தமிழுணர்வின் வரலாறும் விபுலாநந்தரின் தமிழுணர்வும் இதே சபை வெளியிட்ட விழாமலருக்காக எழுதப்பட்ட கட்டுரையாகும். இதன் இன்னொரு பகுதி கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி வெளியிட்ட சுவாமி விபுலாநந்த நூற்றாண்டு விழா மலருக்கு எழுதப்பட்டது.

மூன்றாவது கட்டுரையான சுவாமி விபுலாநந்தர் நயந்த இலக்கிய நாயகர்கள். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், கல்முனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், கல்முனை கார் மேல்ஃபாத்திமா கல்லூரிலும் நடைபெற்ற விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு தினத்தில் ஆற்றிய சிறப்புரைகளின் சுருக்க வடிவமாம். அவ்வுரைகளைச் சுருக்கி வவுனியா கல்வித் திணைக்களம் வெளியிட்ட விபுலாநந்தர் நினைவு மலருக்கு எழுதிய கட்டுரை அது. நூலுருப் பெறுகையில் சில திருத்தங்களுக்குள்ளாகியுள்ளது.

சொற்பொழிவுகட்காகவும் கட்டுரைகளை எழுதுவதற்காகவும் சுவாமியர்களின் ஆக்கங்களைத் தேடிப் படிக்க வேண்டியிருந்தது. இத்தேடல் ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. கற்கும் தோறும் சுவாமியவர்களின் ஆக்கங்கள் பெரு வியப்பளித்தன. தன் கால கட்டத்தில் அவர் வாசித்த நூல்கள், சிந்தித்த துறைகள், எழுதிய கட்டுரைகள் பிரமிப்பூட்டின். அவரது ஆக்கங்களைத் தேடும் செயலும், வாசிக்கும் செயலும் இன்றும் தொடர்கிறது. அவரது அகன்ற பார்வையும் தூர நோக்கும், மானிட நேயமும் மனதைக் கவர்கின்றன.

திரு.வ. சிவசுப்பிரமணியம் (மட்ஃவிபுலாநந்த நூற்றாண்டு விழாச்சபை இணைச் செயலாளர்) வித்துவான் சா. இ. கமலநாதன் (மட்ஃவிபுலாநந்த நூற்றாண்டு விழா மலர் ஆசிரியர்) திரு.வ. கனகசிங்கம் (அதிபர், மட்ஃஅரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை) அருட்திரு சகோதரர் மத்தியூ அடிகளார் (அதிபர், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி) ஆகியோர் இவ்வேளை ஞாபகத்திற்கு வருகிறார்கள். இவர்கள் இச்சொற்பொழிவுகளை ஒழுங்கு செய்தவர்கள்@ கட்டுரைகளை எழுத வைத்தவர்கள்.

ஒருவகையில் இவர்களின் நெருக்குவாரமே என்னை இக் கட்டுரைகளைச் சீக்கிரமாக எழுத வைத்தது. இவர் கட்கு என்மனமார்ந்த நன்றிகள்.

தமது பிரசுரமாக வந்த இந்நூலிலுள்ள எனது முதற் கட்டுரையை வெளியிட அனுமதி தந்த விபுலாநந்த நூற்றாண்டு விழாச் சபையினருக்கும், இந்நூலை வெளியிடும் விபுலம் வெளியீட்டுக் குழுவினருக்கும், விடாப்பிடியாக என்னை வேலை வாங்கும் தம்பி. க. ஆறுமுகத்திற்கும் என் நன்றிகள்.



சி.மௌனகுரு
கலை கலாசாரபீடம்
கிழக்குப்பல்கலைக் கழகம்
மட்டக்களப்பு.
18-07-93


விபுலாநந்த அடிகளாரின்
சமூக, கலை, இலக்கிய நோக்கு

முகவுரை :

மனித வரலாறு பல்வேறு முரண்பாடுகளுக்கும், போராட்டங்களுக்கும், மாற்றங்களுக்கும் மத்தியிலே சென்று கொண்டிருக்கின்றது. மனிதர்கள் தாம் வாழும் காலத்தில் தம்மைச் சூழ நிகழ்கின்ற நிகழ்வுகளுக்கு எதிர்வினை (சுநயஉவ) புரிவர். எதிர்வினை என்றால் பிரச்சினைகளை, நிகழ்வுகளை எதிர்த்தல் என்பது பொருளன்று. அந்தப் பிரச்சினையை எதிர் கொள்ளுதல் ஆகும். எதிர்கொள்ளுதல் மூன்று நிலைகளில் நடைபெறும்.

ஒன்று, தான் வாழும் காலச் சூழலில் காணப்படுகின்ற சமூக அமைப்பை, முரண்பாட்டை நடைபெறுகின்ற பிரச்சினைகளைக் கண்டு இது இப்படித் தான் என ஏற்றுக் கொண்டு அடங்கிப் போய் அதற்கமைய வாழ்தல். இந் நிலையினைப் பெரும்பாலான பொது மக்கள் மேற்கொள்வர்.

இரண்டு, அந்தச் சமூக அமைப்பினின்று ஒதுங்கித் தனக்குள்ளே தனித்துப்போதல், சமூகத்தைத் துறந்து போதல். முகத்தைத் துறந்து தவம் செய்கின்ற ஞானியர், யோகியர், சில எழுத்தாளர்கள் இந்நிலைமையினை மேற்கொள்வர்.

மூன்றாவது, அந்தச் சமூகத்தை, அதன் முரண்பாடுகளைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு அதற்கு முகம் கொணடுத்து அதற்கான தீர்வுகளை முன் வைத்து மாற்று வழிகளைக் காண முயற்சி செய்தல், சமூக உணர்வும் அர்ப்பணிப்புப் பண்பும் கொண்ட தனி நபர்கள் சிலது உள்ளனர். இவர்கள் ளுழஉயைடடலஇ யஉவiஎந iனெiஎனைரயடள ஆவர். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக சமய சீர்திருத்தவாதிகள் முற்போக்கானவையோ, பிற்போக்கானவையோ சில இயக்கங்களைச் சார்ந்து தொழிற்படுவோர் இவர்களுள் அடங்குவர். இவர்கள் ஒரு நோக்கிற்காக (ஊயளரளந) செயற்படுவர். இவர்கள் மூன்றாவது வகையினர்.

முதலாவது வகையினர் சாதாரண மக்களானமையினால் அவர்கள் தனிப்பட்ட கணிப்புப் பெறுவது இல்லை.

இரண்டாவது வகையினர் பிரச்சினையின் குவி முனைகளில் செயலாற்றுபவர்களாதலால் அவர்களின் சிந்தனைகள் அடுத்த தலைமுறையினரையும் ஈர்ப்பனவாகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் அச் சிந்தனையாளர்களை கூர்ந்து நோக்குகின்றார்கள்.

அவர்களின் சிந்தனைகளில் கொளள்வேண்டியவற்றை தம் தேவைகளுக்கு இயைய கொள்ள முயல்கிறார்கள்.. இதனால் அத்தகையோரை நினைவு கூருகிறார்கள். இறந்த ஒரு மனிதரின் பழைய நினைவுகளும், பழைய வாழ்வும் இவ்வாறு தான் இன்றைய நிகழ்வுகளாகின்றன.

விபுலாநந்த அடிகளும் இவ்வாறு தான் இன்றைய நிகழ்வாகி விடுகின்றார்.

இதுமட்டுமல்ல இறந்த மனிதரின் வாழ்வும் நினைவுகளும் இன்றையப் பிரச்சினைகளோடு இயைபுடையனவாகும் போது அவர்களின் நினைவு முக்கியத்துவமுடையதாகின்றது. ‘ஓ மில்டன் நீ இன்று எம்முடன் இருந்தால்’ என்ற ஏக்கமும் எழுகின்றது. சமூகத்தின் மாற்றங்களையும் முரண்பாடுகளையும் இவ்வாறு எதிர் கொள்ளுவோர்களில் முன்னணியில் நிற்பவர்கள் கலைஞர்களே. நுண்ணுணர்வு மிகப் பெற்ற இவர்கள் தான் சமூகத்தின் பிரச்சினைகளை முதலில் உணர்பவர்கள். இப்பிரச்சினைகளை முறைசார் புலமைக்கல்வி பெற்ற, பெறாத அறிஞர்களும் உணர்வர். பட்டமும், படிப்பும் இப்பிரச்சினைகளை விளங்கும் ஓர் முறையியலை (ஆநவாழனழடழபல) இவர்களுக்குத் தருவதனால், இவர்களின் விளக்கம் முன்னவரிலிருந்து வித்தியாசமாக அமையும்.

துறவியரும் தம் உள்ளுணர்வால் (iவெரவைழைn) இதனை உணர்வர் என்று கூறுவர். அதிஷ்டவசமாக விபுலாநந்தர் இம்மூன்றும் இணைந்த ஓர் உருவாக நம்முன் மிளிர்கின்றார். அவர் ஒரு கலைஞர். அறிஞர், துறவி, இக் கலவை மிக முக்கியமான கலவை. எனவே, சமூகம் பற்றிய அவர் கணிப்பு, அக்காலச் சூழலுக்கு அவர் எதிர்வினை புரிந்தவிதம், அவரது சிந்தனைகள் என்பன கணிப்பிற்குரியதாகின்றன.

சூழலின் தாக்கம்

இலங்கையிலே பிறந்த விபுலாநந்த அடிகளார் தமிழ் நாட்டிலும் வட இந்தியாவிலும் வாழ்ந்தவர். எனவே இம் மூன்று நாட்டு நிகழ்வுகளும் அவரைப் பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. விபுலாநந்த அடிகள் வாழ்ந்த 55 வருடங்களும் (1892 – 1947) இம் மூன்று நாடுகளிலும் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற காலங்களாகும்.

வட இந்தியச் சூழல்

இந்திய அரசியலில் வெள்ளையருக்கு எதிரான போராட்டம் மும்முரமாக நடந்த காலம் இது. காங்கிரஸ் கட்சி உதயமாகி மிதவாதிகள், தீவிர வாதிகள் போராட்டம் நடைபெற்று பின்னர் காந்தியின் தலைமை ஏற்கப்பட்டு, காங்கிரஸ் மக்கள் மயமாகி தண்டியாத்திரை, உப்புச் சத்தியாக்கிரகம் என்பன நடைபெற்று, மக்கள் கிளர்ச்சிகள் வெடித்ததுடன் இந்து முஸ்லிம் பிரச்சினைகள் தோன்றி இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு தேசங்களாக நாடு பிரியும் நிலையும் தோன்றிய காலம் இக்காலம்.

சமூகத்தில் அனைத்து இந்தியரும் ஒருவர் என்ற தேசிய எண்ணம் வலுப் பெற்ற காலம். தீண்டாமைக்கு எதிராக மகாத்மான காந்தி தீவிர குரல் கொடுத்த காலம்.

கலை இலக்கியத்தில் ஐரோப்பியக் கலைகளுக்கொப்ப, ஏன் அதற்கும்மேல் இந்தியக்கலைகள் சிறந்தன என்று கிழக்கின் பாரம்பரியத்தை மேற்குக்கு எடுத்துக் கூற இந்திய எழுத்தாளர்களும், அறிஞர்களும் உழைத்த காலம். மாக்ஸ்முல்லர், கலாயோகி ஆனந்த குமாரசாமி போன்றோர் இங்கு குறிப்பிடக்கூடியவர்கள்.

தமிழ் நாட்டுச் சூழல்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமும் பரந்துபட்ட தேசிய இயக்கமும் உருவாகிய இச் சூழலில்தான் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜஸ்டின் கட்சி உருவானது. பிராமணர், பிராமணர் அல்லாதவர் பிரச்சினைகளும் உருவாகின. இதன் விளைவாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற சைவ – தமிழ்க் கழகங்கள் உண்டாயின. தனித் தமிழ் இயக்கம் மறை மலையடிகள் தலைமையில் உண்டானது. கால்டுவெல்லின் கூற்றும் சிந்து வெளி நாகரிகக் கண்டுபிடிப்பபும் ஆரிய திராவிட கருத்தைத் தோற்றுவித்தன. தென்னிந்திய மக்கள் திராவிட இனத்தினர் என்ற கருத்துருவாக்கம் உருவானது. இதனால் திhவிடக் கழகத்தை ஈ.வே.ரா. தொடங்கினார். இதன் விளைவாக தமிழ்த் தேசிய வாதம் தமிழ் நாட்டில் உருவானது. இது இலங்கையில் தோன்றிய தமிழ்த் தேசிய வாதத்திலிருந்து வேறானது. இந்தியத் தமிழ் தேசிய உணர்வு பின்வரும் அம்சங்களைக் கொணடிருந்தது.

ஐ) ஆரியருக்கு எதிரானது. (யுவெi டீசயாஅin)
ஐஐ) சமஸ்கிருதப் பண்பாட்டுக்கு மாறானது. திராவிடப் பண்பாட்டை வலியுறுத்துவது.
ஐஐஐ) பிராமணரால் ஒதுக்கப்பட்ட பிராமணர் அல்லதார் ஆரியருக்கு முற்பட்ட திராவிடர் புகழ் பேசி தம்மைப் பிராமணர் பண்பாட்டு மேலாதிக்க நிலையினின்று விடுவிக்கப் பார்த்த தன்மை கொண்டது.1

சமூகத்தில் திராவிடக் கழகம் தீண்டாமைக்கு எதிராக சீர் திருத்தக் கருத்துக்களை வைக்க ஆரம்பித்தது இக் காலத்திலேயே.

கலை இலக்கியத்தில் தமிழர் கலைகளை மேன்மைப் படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோரும், மறைமலையடிகள், கா. சுப்பிரமணிய பிள்ளை போன்றோரும் தமிழ் ஆராய்ச்சியில் இரு துருவங்களாயினும் முன் நின்றனர். மணிக்கொடி, ஆனந்தவிகடன், கலைமகள், தினமணிக்கதிர், கல்கி போன்ற பத்திரிகைகள் தோன்றின.

வெள்ளையருக்கு இந்தியக் கலைகள் உணர்த்தப்பட்டது போல வடவரான ஆரியருக்குத் தமிழ்க் கலைகள் உணர்த்தப்பட வேண்டும் என்ற தமிழ் உணர்வு பிரதான ஓட்டமாக இருந்தது.

இலங்கைச் சூழல்

தமிழ் நாடு இவ்வாறாக இலங்கையின் சூழல் இன்னொரு விதமாக அமைந்தது.

இலங்கை அரசியலில் மோர்லின் மின்டோ. மனிங் சீர்திருத்தம். டொனமூர் அரசிலமைப்பு, சோல்பரித் திட்டம் அனைத்தும் விபுலாநந்தர் காலத்தில் நடைபெறுகின்றன. மெல்ல மெல்ல இலங்கையர் அரசியலில் பங்கு கொள்ளும் நிலை உருவாகின்றது. பொன்னம்பலம் இராமநாதன், அருணாசலம் போன்ற தமிழ்த் தலைவர்கள் உதயமாகின்றார்கள். 1920ல் அரசியல் நிலைமைகள் இலங்கையில் வகுப்புவாத உணர்வினை உருவாக்கின.

இக்காலத்தில் இந்தியாவில் இந்து முஸ்லிம் பிரச்சினை போன்று இலங்கையிலும் தமிழ், சிங்களப் பிரிவினை உருவாகி இருந்தது.

இலங்கையில் தமிழ் தேசிய உணர்வு 1930 ன் பின் முனைப்பு பெறலாயிற்று. இது பின்வரும் அம்சங்களைக் கொண்டதாயிருந்தது.2

1. கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு எதிரானது.
2. குறிப்பாகத் தமிழ் மக்களின் சைவத் தனித்துவத்தைப் பாதுகாக்க முனைவதாகவும் ஒரு மத - இலக்கிய இயக்கமாகவும் ஆறுமுக நாவலரால் மேற்கொள்ளப்பட்டது.
3. கிறித்தவப் பாதிரிமாரால் சனரஞ்சகப் படுத்தப்பட்ட சமய நடவடிக்கைகளையும் முறைகளையும் இது கையேற்றுக் கொண்டது.

சமூக அமைப்பில் காந்தியத்தின் தாக்கத்தினால் தீண்டாமை ஒழிப்பு சிறிய அளவில் மேற்கொள்ளப்படினும் ஆறுமுகநாவலரின் கோட்பாடுகள் தீண்டாமையை மேலும் வற்புறுத்துவனவாகவே அமைந்தன.

முரண்பாடுகளும் சமரசமும்

கலை இலக்கியத்தைப் பொறுத்தவரை தமிழ்க் கலைகள் பிரதானப்படுத்தப்பட்டன. கலைப் புலவர் நவரட்ணம் போன்றோர் முக்கியமானவர்கள். இலக்கியத்தில் மரபுவழி பண்பு பேணப்பட்டது. வித்துவான் கணேசையர், குமார சுவாமிப்புலவர் போன்றோர் பிரதானமானவர்கள். அத்தோடு ஈழகேசரி போன்ற பத்திரிகைகளும், நவீன இலக்கிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பின்னணியினைச் சுருக்கமாகப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

ஐ. ஐரோப்பிய நாகரிகத்திற்கும் - இந்திய நாகரிகத்திற்குமிடையே முரண்பாடு.
ஐஐ. வெள்ளையர் - இந்தியர் முரண்பாடு.
ஐஐஐ. ஆரியர் – திராவிடர் முரண்பாடு.
ஐஏ. திராவிடர் - தமிழர் முரண்பாடு
ஏ. பழைய இலக்கியம் - புதிய இலக்கியம் முரண்பாடு.
ஏஐ. கிறித்தவம் - இந்து முரண்பாடு
ஏஐஐ. முஸ்லிம் - இந்து முரண்பாடு
ஏஐஐஐ. இந்தக்களுள் காணப்பட்ட உயர்ந்தவன் - தாழ்ந்தவன் முரண்பாடு.
ஐஓ. சமயச் சார்பு – சமயச் சார்பின்மை.
ஓ. துறவுநெறி – உலக வாழ்க்கை நெறி.

இத்தகைய பிரச்சினைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் மத்தியில் விபுலாநந்தர் எவ்வண்ணம் இயங்கினார், இம் முரண்பாடுகளை எவ்வாறு அணுகினார், தீர்த்தார், தீர்க்க முயற்சித்தார் என்பதை ஆராய்வது ஓர் ஆராய்ச்சி மாணாக்கனுக்கு சுவையும், அறிவும் தரும் முயற்சியாகும்.

விபுலாநந்தரை அறிந்து கொள்ள அவரைப் புரிந்து கொள்ள எம் முன்னுள்ளவை உடனடியாக அவரது எழுத்துக்கள் தாம். இன்னும் அவர் ஆற்றிய சொற் பொழிவுகள், அவரது கடிதங்கள், சிறு குறிப்புகள், ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள், அவருடன் தொடர்பு கொண்டோர் அவர் பற்றிய எழுதிய குறிப்புக்கள் கிடைப்பின் சரியான கணிப்பீடுகளைச் செய்ய முடியும். அவர் எழுதிய கட்டுரைகள் காலவாரியாகத் தொகுக்கப்பட்டாமையும். அவற்றில் சரியான பின்னணி அடிக் குறிப்புகள் கொடுக்கப்படாமையும் எமது ஆய்வுக்குத் தடையாக உள்ள சில அம்சங்களாகும். எனினும் கூடியவரை கிடைத்த ஆதாரங்களை ஒழுங்குபடுத்தி இவ்வாய்வினை மேற்கொள்ளுவோம். அவ்வகையில் இக்கட்டுரை ஓர் ஆரம்ப முயற்சியே தவிர முடிந்த முடிவல்ல என்பதையும் கூறவிழைகின்றேன்.

விபுலாநந்தரின் எழுத்துக்களை வைத்து நோக்கும் பொழுது, 1920 ல், அவரின் எழுத்துக்களுக்கும் 1940 ல் அவரது எழுத்துக்களும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. 1920 ல் 28 வயதான விபுலாநந்தர் எழுதிய எழுத்துக்களுக்கும் 1940 ல் 48 வயதான விபுலாநந்தரின் எழுத்துக்களுக்கும் வித்தியாசம் இருப்பது இயல்பே. ஆராய்ச்சியாளர், பெரும் அறிஞர்களை இளவயது – முதிர்வயது என்று பிரித்தாராய்தல் இயல்பு. இளவயதில் உதித்த சிலை எண்ணக் கருக்கள் முதிர்நிலையில் வளர்ச்சி பெற்றுக் கனிந்தும் வரலாம். சில அழிந்தும் விடலாம். சில மாறுபாடும் அடையாளம். எனவே உதித்தவை எவை? அழிந்தவை எவை? மாறியவை எவை? வளர்ந்தவை எவை? என்ற ஆராய்ச்சி மிக அவசியமாகும். அதை விட்டு அவர் கூறிய அனைத்துக் கருத்துக்களையும் அவரின் முதிர்ந்த கருத்தாக எடுத்துப் பின்பற்ற நினைத்தல் அறிவுடமையாகாது அது கால முரணுமாகும்.

ஆரம்பத்தில் சித்தாந்தியாகக் காணப்பட்ட சுவாமிகள் பின்னாளில் பழுத்த வேதாந்தியாகக் காட்சி தருகிறார். மொழி பெயர்ப்புப் பற்றி இறுக்கமான கருத்துக்கள் கொண்டிருந்த சுவாமிகள் பின்னால் நெகிழ்ச்சியான கருத்துக் கொண்டவராயிருக்கிறார். இலக்கிய வரலாறு பற்றி ஆரம்பத்தில் விஞ்ஞான பூர்வமற்ற கருத்துக்கள் கொண்டிருந்த சுவாமிகள் பின்னாளில் அப்படி எழுதினாரல்லர்.

ஆரம்பத்தில் குமரிக் கண்டத்தையும் தமிழர் பெருமையும் பெரிதாகப் பேசாத அவர் பின்னர், தமிழர் குமரிக் கண்டத்தில் தோன்றி ஐரோப்பா நோக்கிப் பரபினர் என்ற கருத்தின் பால் ஈர்க்கப்பட்டார்.

ஆரம்பத்தில் தமிழாராய்ச்சி மேற்கொண்ட அவர் பின்னாளில் இசை ஆராய்ச்சி மாத்திரம் செய்கிறார்.

இவ்வகையில் அவர் எழுத்துக்கள் அவரிடம் காணப்பட்ட முரண்பட்ட சிந்தனைகளையே எமக்குக் காட்டுவனவாயுள்ளன. ஒரு வகையில் அவர் வாழ்வே முரணிலையிற் காணப்படுகிறது. துறவியான அவர் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவராயிருந்தார். துறத்தல், பற்று வைத்தல், எதிர் துருவங்களல்லவா?

சித்தாந்தியாக எழுதிய, நடந்த அவர் வேதாந்தக் கருத்துகளையும் தருகிறார்.

துறவியான அவர் அழகாக உடுத்தப் புறப்படுவதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் போல.

மரபு வழியில் இலக்கியம் பயின்ற அவர் நவீன கருத்துக்களையும் முன் வைக்கிறார்.

செந்தமிழ் மரபே தனி மரபு. பாண்டியன் தமிழே தமிழ் என்றுரைத்த அவர் பேச்சுத் தமிழையும் வரவேற்கிறார். தமிழ் மரபில் வளர்த்த அவர் ஆங்கில மரபையும் அரவணைக்கிறார்.

பழமையும்- புதுமையும் அவரில் இணைகின்றன.

அவரது சிந்தனைகள், முரண்பாடுகள் போலத் தோற்றமளிப்பினும் முடிவில் அவர் வைக்கின்ற முடிவான கருத்துக்கள் முக்கியமானவை. அவையே நமக்கு அவரை இனம் காட்டுவன.

1943 ல் எழுதிய ஒரு கட்டுரையில் பின்வருமாறு அவர் குறிப்பிடுகின்றார்.

“பழமையும் புதுமையும். துவைதமும், அத்வைதமும், பௌதீக விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானக் காட்சியும், மேற்றிசையறிவும், கீழ்த்திசைச் சமயமும், மனமொடுங்கிய தியானநிலையும், மனபதைக்குத் தொண்டு புரிதலும் சமரசப்பட வேண்டிய காலம் இது” 3

முரண்களைக் காணுதலும் முரண் வழிச் செல்லாது நல்லவற்றை இணைத்து சமரசம் காணும் நோக்கும் மனித குலத்திற்கு நன்மை புரிதல் வேண்டும் என்ற கருத்தும் விபுலாநந்தரின் கருத்தாகும்.

தமிழ் இலக்கியத்தை ஆழக்கற்ற விபுலாநந்தர் தம் முன்னோர்களினின்று இக்கருத்தைப் பெற்றிருக்கக் கூடும். உலகை வெறுத்து மறுமை வாழ்வை நோக்கிய சமணம் ஒரு பக்கமாகவும் அகம் புறம் என்ற இம்மை வாழ்க்கை இன்னொரு புறமாகவும் நின்ற சூழலில் இரண்டு போக்கின் நல்ல அம்சங்களையும் இணைத்து இம்மையிற் செம்மையாய் வாழ்ந்து மறுமையையடைய வழி சொன்னவர் வள்ளுவர்.

வடமொழி இலக்கியம் ஒரு புறமும் - தமிழ் இலக்கியம் ஒரு புறமுமாகவும் நின்ற நிலையில் இரண்டினுள்ள நல்ல அம்சங்களைத் தெளிந்து வடமொழி வால்மீகி ராமாயணத்தைத் தமிழ்க் கம்பராமாயணமாக்கியவர் கம்பர். பாரதியும் இவ்வாறே பழமை என்று பழமையை தள்ளவும் இல்லை. புதுமை என்று புதுமையை ஏற்கவும் இல்லை. இரண்டில் நல்ல அம்சங்களையும் இணைத்தார்.

பழந்தமிழ் இலக்கியம் பயின்ற அவர் தம்முன்னோரிடம் கற்ற பாடத்தை விவேகானந்தரில் உரசிப் பார்த்து உறுதி செய்து கொண்டார். விவேகானந்தரும் பழமை – புதமை இணைப்பின் இந்தியக் குறியீடு ஆவார்.

எல்லாச் செயற்பாடுகளும் மன்பதைக்குத் தொண்டு புரிதலே என்ற அவரது கூற்றில் மனிதர் மீது அவர் வைத்த அக்கறை புலப்படுகிறது.

எல்லா அறிவும் இறைவனை அடைவதற்கே என்ற பழைய கூற்றிலிருந்து எல்லா அறிவும் மனிதனுக்குச் சேவை செய்யவே என்ற அவர் கூற்று வித்தியாசப்படுகிறது.

இந்த எண்ணம் சிறு வயதில் அவரிடமிருந்த கருத்தாகும். இக்கருத்து விரிந்து பெருகையில் இது சேரும் கடலாக இருந்தது இராமகிருஷ்ணமிஷனாகும்.

விபுலாநந்தரின் ஆளுமைப்பின்னணி

விபுலாந்தரினால் ஆளுமையை உருவாக்கிய முக்கிய பின்னணிகளாக ஐந்தைக் குறிப்பிடலாம். அவையாவன :

1. மரபு வழித் தமிழ்க்கல்வி
2. ஆங்கிலக் கல்வி.
3. விஞ்ஞான கணித அறிவு
4. வடமொழி அறிவு
5. இராமகிருஷ்ண மடத்தொடர்பு
6. பன்மொழி அறிவு.

மரபு வழித் தமிழ்க் கல்வி

விபுலாநந்தரின் மரபு வழிக்கல்வி காரைதீவிலே ஆரம்பிக்கின்றது. தந்தையாரின் வழிகாட்டலின் கீழ் அவர் கல்வி பயில ஆரம்பித்தாலும் காரைதீவு வைத்திலிங்க தேசிகர், மென்கோவை கந்தையா பண்டிதர், கயிலாயபிள்ளை முதலியோரிடம் கற்றார். இவர் 1912 வரை அதாவது 20 வயது வரை தமிழ்க்கல்வி பயின்றார். கயிலாய பிள்ளையிடம் சிலப்பதிகாரம் பயின்றார். இளமையிற் காரைதீவு கண்ணகி கோயிலில் வருடாவருடம் பாடக் கேட்ட கண்ணகி வழக்குரை மீதிருந்த ஆர்வம் சிலப்பதிகாரம் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இவ் ஆர்வம் அவர் மனதினுள் கிடந்த வளர்ந்த தன் விளைவாகவே அவரது இறுதிக் காலத்தில் யாழ்நூல் உருவாகியிருக்கலாம்.

ஆங்கில அறிவு.

கல்முனையில் லீஸ் பாதிரியாரது மெதடிஸ்த பாடசாலையில் ஆங்கிலக் கல்வி கற்ற சுவாமியர்கள், 1904ல் மட்டக்களப்பு மெதடிஸ்த ஆங்கிலக் கல்லூரியிலும் பின் 1906 ல் சென்ற் மைக்கல் கல்லூரியிலும் ஆங்கிலம் பயின்றார். 1906ல் யூனியர் கேம்பிரிஜ் பரீட்சை எழுதினார். 1909 – 1910 வரை சென்ற் மைக்கலில் ஆசிரியப் பணியாற்றினார். 1915 ல் கொழும்பில் ஆங்கில ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் கல்விபயின்றார். இந்த ஆங்கில அறிவு தான் அவருக்குப் பரந்த உலகப்பார்வையை அளித்ததுடன் பல்நூற் புலமை பெறும் மனப்பாங்கையுமளித்தது.

விஞ்ஞான கணித அறிவு

1915 ல் ஆயவாள இன்டமிடியட் சோதனையும் 1919 ல் லண்டன் பி.எஸ்.ஸி பரீட்சையும் எடுத்தார். அதில் பௌதிகத்தை ஒரு பாடமாக எடுத்துச் சித்தியடைந்தார். இரசாயன ஆசிரியராகப் பணியாற்றியதுடன் யாழ்ப்பாணம், மானிப்பாய், இந்துக்கல்லூhயில் ஆய்வுக்கூடம் ஒன்றினையும் நிறுவினார்.

வடமொழி அறிவு

வைத்திலிங்கத் தேசிகரிடம் வடமொழிக்கல்வி பயின்ற இவர் யாழ்ப்பாண வாழ்க்கையின் போது அதனை மேலும் வளர்த்திருக்க வேண்டும். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நிறுவியமை இவரது வடமொழிப் பற்றைக் காட்டுகிறது. இராமகிருஷ்ண மடத் தொடர்பும் இவரது வடமொழி ஆர்வத்திற்கு மேலும் ஊக்கமளித்திருக்கலாம்.

இராமகிருஷ்ணமடத் தொடர்பு

1911-1912 காலங்களில் தமது 20 வயதில் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் இவருக்கு விவேகானந்த சபை உறுப்பினர்கள் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அதில் உறுப்பினருமானார். 1917ல் கொழும்பில் சர்வானந்தாவால் கவரப்பட்டார். இதன் வளர்ச்சியாகத்தான் 1922ல் சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தில் பிரபோத சைதன்யாராகி 1924ல் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவுத் திருநாமமும் பெற்றார். இராமகிருஷ்ண மடம் அவருக்கு வேதாந்த அறிவைத் தந்தது. அனைத்து ஆன்மாவையும் சமனாகக் காண்கின்றபோக்கிற்கு ஒரு தத்துவ பலத்தை அத்வைத வேதாந்தம் இவருக்களித்தது.

பன்மொழி அறிவு

விபுலாநந்தருக்குப் பன்மொழி அறிவு இருந்தது. அவருக்கு லத்தின், கிரேக்கம், வங்காளம், பாளி, சிங்களம், அரபு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் தெரிந்திருந்தன. இப்பன்மொழி அறிவு அவருக்கு நூல்களை அவற்றின் மூலத்திலேயே படித்தறியும் வாய்ப்பினைக் கொடுத்திருக்கலாம். பன்மொழி அறிவு பரந்துபட்ட பார்வையினையும் இவருக்குக் கொடுத்தது.

மேற்குறிப்பிட்ட பின்னணிகள் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய தமிழறிஞர்கட்கு ஒரு சேரக் கிடைக்காதவை. அவர் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் ஒன்றில் மரபு வழி வந்த தமிழறிஞர்களாயிருந்தனர். அன்றேல் சைவ சித்தாந்தக் கூட்டுக்குள் நின்று கொண்டு தமிழை அளந்தனர். அன்றேல் நவீன நோக்கற்றவராயிருந்தனர். பெரும்பாலும் தமிழ் வளர்த்தல் என்பது இவர்கட்கு பழைய இலக்கண இலக்கிய மரபைப் பேணுதல் அல்லது அதன் வழி வளர்த்தல் என்பதாகவே இருந்தது.

விபுலாநந்தர் இவர்களினின்று வேறுபடுகின்றார். ஆங்கிலக் கல்வி அவருக்கு ஆங்கிலக் கலை இலக்கிய ஆராய்வு உலகை அறிமுகம் செய்தது. வடமொழிப் புலமை அவருக்கு வடமொழிக் கலை இலக்கிய உலகைக் காட்டியது.

வேதாந்த நெறி அனைத்தையும் பேதா பேதம் காட்டாது உள்வாங்கும் திறனையும், குணத்தையும்; அளித்தது.

விஞ்ஞான அறிவு புறநிலை நின்று ஆராயும் பண்பை அவருக்குத் தந்தது.

இவற்றால் தன்கால மரபு வழித் தமிழறிஞர்களிடமிருந்து விபுலாநந்தர் வேறுபடுகின்றார். அவரது சமூக, கலை, இலக்கிய நோக்கினை இவ் ஆறு பின்னணிகளும் நிர்ணயம் செய்வதனைக் காணலாம்.

இந்த அடித்தளத்தில் எழுந்த அவரது சிந்தனைகள் அகண்ட உலக நோக்கையும் - அந்த உலகப் பரப்பில் தமிழனையும் ஒன்றாகக் காணும் தன்மையையும் தமிழ் சமூகத்தின் தனித்துவத்தை உலக சமூகத்தில் தேடும் பார்வையையும் அவருக்கு அளித்தன.

சமூக நோக்கு

ஒருவரின் சமூக நோக்கே அவரின் ஏனைய சிந்தனைகளுக்கான வாயிலாக அமைகின்றது. ஒருவரின் தத்துவ நோக்கைக் கூட சமூக நோக்கே நிருணயித்து விடுகிறது. சமூகம், ஏற்றத் தாழ்வுகள் மிக்க பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது ஆசியாவில் சாதிகளாகவும், ஐரோப்பாவில் வர்க்கங்களாகவும் உலகப் பரப்பில் இனங்களாகவும், சமூகம் பிளவுண்டு கிடக்கிறது. இதனால் சமமின்மை மன்பதையிடம் நிலவுகிறது. இப் பிரிவுகள் பற்றிச் சாதகமான அல்லது பாதகமான நோக்கு மனிதர் ஒவ்வொருவரிடமும் உண்டு அந்நோக்கு ஒவ்வொருத்தரினதும் அறி, அனுபவம் தத்துவம் நோக்கிற்கியைய உருவாகிறது.

விபுலாநந்தரின் இளமைக்கால வாழ்க்கையும், மட்டக் களப்புச் சூழலும், இராமகிருஷ்ண மடத் தொடர்பும் வேதாந்த ஞானமும் அவருக்கு சமூகப் பிரிவினைகளுக்கு எதிரான நோக்கையே கொடுத்தன.

‘மனிதன் உடலமைப்பில் ஒரே மாதிரியாக இருந்தாலும், குண வித்தியாசத்தினால் பலவகைப்படுவான்’4 இ என்ற விபுலாநந்தரின் கூற்றில் மனிதனை வித்தியாசப்படுத்துவது குலமல்ல குணம், என்ற தொனி தெறிக்கிறது. உடலமைப்பில் அனைவரும் ஒன்று தான் என்ற இவர் கூற்றில் மனிதர் அனைவரும் பார்வையில் ஒன்று தான்; சமம் தான் என்ற பொருளும் தொனிக்கிறதல்லவா?

‘மனிதர்கள் இரண்டு விதமாக வகுக்கப்படுவர். ஒரு விதம் பகவானிடத்தில் மனத்தைச் செலுத்தும் பத்தர்கள். மற்றொரு விதம் பொன் மீதும். பெண் மீதும் ஆசை வைத்திருக்கும் மானிடப் பத்தர்கள்.’5

மனிதனை இரண்டே இரண்டு சாதியாகப் பிரிக்கும் இவர் நோக்கில் ஒளவையாரின் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்ற தொனியின் சாயல் விழுகிறது. பக்தி உடையோர் இல்லாதோர் என்ற இரண்டு சாதிகளாகப் பிரிக்கலாமே தவிர வேறு சாதிகளாகப் பிரிக்க முடியாது என்பது அவர் கொள்கை.

பிராமணனுக்கு வியாக்கியானம் தர வந்த விபுலாநந்தர் அந்தணன் அறிஞனாய் இருந்தால் மாத்திரமே அவன் உண்மையான பிராமணன் என்று கூறுகிறார். பிறப்பால் சாதியில்லை. குணத்தால் தான் சாதி என்ற பாரதியின் கூற்று இங்கு பிரதி பலிப்பது போல உள்ளது. இதே கருத்தை என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் தன் நூலில் தி.வி.க.வும் இக்கால கட்டத்தில் வெளியிடுவது குறிப்பிடற்குரியது.

1930ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் திருவேட்களத்தில் ஒதுக்கப்பட்ட ஆதித்திராவிடர்கள் வாழுகின்ற சேரிகளுக்குச் சென்று பாலர்கள் படிக்க பள்ளிகள் ஏற்படுத்தினார். வளர்ந்தோர் படிக்க இரவுப் பள்ளிகள் ஏற்படுத்தினார்;. இதனால் கல்வி அறிவு பெற வாய்ப்பில்லாது ஒதுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவு கிடைக்க வழி காட்டினார். அவருக்கு சிதம்பரம்தாலுகா, வேட்களம் ஆதித் திராவிடர்களின் சார்பாக அளிக்கப்பட்ட பிரிவுரை வாழ்த்தில்.

“தம் நலம் பேணும் பார்ப்பனர்களால் சண்டாளர்கள் என்றழைக்கப்படும் எங்களை அழைத்துது; தங்ளக் வீட்டினுடனிருத்தி விருந்துண்ட காட்சியும், உவகையும் எங்கள் கண்களையும் மனதையும் விட்டு அகலுமோ?.... எங்கள் முன்னேற்றத்திற்கென தங்களால் தொடங்கப்பட்ட இரவுப்பள்ளி என்றும் வளர்ந்து ஓங்குவதற்குரிய வழியொன்று தாங்கள் தேடுவதோடு, இழத்தீவில் தங்களால் நடாத்தப்படும் பள்ளிகளில் எங்குல மாணவர் பலரை சேர்த்துக் கொள்ளும் படியும் வேண்டுகிறொம்…” 6

என்று வரும் ஆதி திராவிடர்களின் உளக் குறிப்புகள் விபுலானந்தர் மனதையும் சேவையையும் எமக்கு உணர்த்துவன. விபுலானந்தரின் சமதர்ம சிந்தனை வாய்ந்த இக் கல்வித் தொண்டு நாவலரின் கல்விப் பணிகளோடு ஒப்புநோக்கற்குரியது. நாவலரின் கல்விப் பணிகளைப் போல் பல மடங்கு விஞ்சியது.
சமூக நோக்குப் பற்றி அவர் நோக்கு மென்மேலும் பரந்து விரிவதை 1942, 43ல் அவர் எழுதிய தென்னாட்டில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கு வட நாட்டில் பரவிய முறை எனும் கட்டுரையில் காணலாம். 7

சாதி பேதம் வாண பேதங்களின்றி தொண்டர்கள் யாவரும் ஒருங்கு சேர்ந்து இறைபணி செய்தமையை அதில் விரிவாகக் கூறுகிறார். கவுணிய குலத்தவரான சம்பந்தருக்கும் பாணராகிய நீலகண்டருக்கும் உள்ள உறவு, வேளாள அப்பரும், பிராமணரான சம்பந்தரும் கொண்ட உறவு, பாணர்குல திருப்பாணழ்வாரை உலோக சாரங்க முனிவர் தன்தோள்மீது கொண்டு சென்றமை, அரச குலத்தவரான சேரமான் பெருமாள் திருநீற்றுச் செலவினைக் கண்டு வண்ணான் முன்னிலையில் தலை வணங்கியமை. நான்காம் குரவரான உமாபதி சிவாச்சாரியார் கொற்றவன் குடியில் வசித்ததுடன் அங்கு பெற்றான் சாம்பான் என்ற புலையனுக்கு தீட்சை கொடுத்தமை, இராமானுஜர் தீண்டத் தகாதோருக்கும் இராமநாத மந்திரம் ஓதித் தீட்சை தந்தமை இராமானுஜரின் சீடரான இராமநந்தர் சம்பந்தி போசனம் செய்தமை, இராமநந்திரின் சீடர்களாக சக்கிலியரான ரவிதாஸரும் நாவிதராகிய சோனரும் உழவராகிய தன்னரும் இஸ்லாமிய நெசவுகாரரான கபீர்தாஸரும் இருந்தமை இங்ஙனம் எண்ணற்ற உதாரணங்களைப் பழைய நிகழ்ச்சிகளினின்றும் எடுத்துக் காட்டுகிறார்.

குலம் தரு செல்வம் தரும் என்ற திருமங்கையாழ்வார் பாடலுக்கு உரைகண்ட பெரியவர்கள் பண்டைக்குல மொழிந்து தொண்டைக்குலமாதல் என்றுரைத்த உரையை அழுத்திக் கூறுகிறார்.

பிரிவுகள் இல்லாத, சாதி பேதங்கள் இல்லாத வருண பேதங்கள் இல்லாத, இன பேதங்கள் இல்லா ஒரு மனித குலத்தையே விபுலாநந்தர் கனவு கண்டார் என்பதை அவர் எழுத்துக்கள் காட்டுகின்றன. இத்தகைய ஒரு சமூகநோக்கை அவருக்களித்ததில் வேதாந்த ஞானம் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். தமிழ் மக்களின் எதிர் கால எழுச்சி மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட அடிகளார் தமிழ்ச் சமூகம் தமக்குள் ஏற்றத் தாழ்வு அற்ற ஒரு சமூகமாக உருவாக வேண்டும் என்றே விரும்பி இருப்பார் என்பதில் ஐயமில்லை. இந்தப் பரந்த பார்வையினை அவர் கலைகள் மீதும் இலக்கியங்கள் மீதும் செலுத்தினார்.


கலை இலக்கியங்கள் சம்பந்தமாக அவர் எழுதிய கட்டுரைகள் தொடக்கம் அவரது ஆராய்வின் கொடுமுடி எனக் கருதப்படும் யாழ்நூல் வரை தொகுத்து நோக்கின் உலகக் கலை இலக்கியங்களைத் தமிழருக்கு அறிமுகம் செய்வதும், இரண்டிற்குமிடையே காணப்படுகின்ற அபேதத் தன்மைகளை இனம் காட்டுவதும், உலக கலை இலக்கிய வளர்ச்சியை நோக்கித் தமிழரை முன் தள்ளுவதும், அதே நேரம் தமிழருக்குரிய தனித்துவமான கலை இலக்கிய வளர்ச்சியை தமிழருக்குரிய தனித்துவமான கலை இலக்கிய வளர்ச்சியை உணர்த்துவதுமே அவர் நோக்கங்களாயுள்ளன.

உலகம்- தமிழ்நாடு என்ற இரு துருவ முரண்பாடுகளை இணைக்க முயன்றவர் விபுலாநந்தர். முரண்பாடுகளில் ஒற்றுமை காணும் அவரது முதுகெலும்பான நோக்கே இங்கு செயற்படுகிறது எனலாம்.

விபுலாநந்தர் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வாழ்ந்த காலப்பகுதியில் தமிழ்த் தேசிய வாதம் வளர்ந்து வந்தமை முன்னரே குறிப்பிட்ட ஒரு விடயமாகும். தமிழ்த் தேசியம் பேசியோர் இருநிலைக்குள் அடங்கினர்.

ஒரு சாரார் இந்திய நாகரிகத்தின் ஒரு கூறாகவே தமிழ் நாகரிகத்தைக் கண்டனர். நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோர் இவ்வகையினர்.

இன்னொரு சாரார் தமிழர் நாகரிகத்தினையே இந்தியாவின் புராதன நாகரிகமாகக் கொண்டனர். பி.டி ஸ்ரீனிவாச ஐயங்கர், வி. கனகசபைப்பிள்ளை, ஆபிரகாம் பண்டிதர் போன்றோர் இவ்வகையினர். ஆனால் இரு சாராருமே தம்மால் முடிந்தளவு தமிழ்த் தொண்டு புரிந்தோரே.

தமிழரின் தனித்துவத்தை வெளிக் கொணர மேற்சொன்ன இரு சாராருமே முயன்ற இந்த வேளையிலே ஒவ்வொரு துறையிலும் தமிழ் வளர்ச்சி மேற்கொள்ளப் பட்டது. ஏட்டிலிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரும், தமிழருக்குரிய தத்துவம் எனக் கூறிச் சைவ சித்தாந்தம், அதனோடு ஒத்த முருக வழிபாடு என்பதை அறிமுகம் செய்வதில் மறைமலை அடிகள், திரு.வி.க. முதலியோரும், தமிழருக்குரித்தான நாடகத்தைக் காணுதலில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியோர், திரு. வி.கோ. சூரியநாராயணசாஸ்திரி போன்றோரும், தமிழரின் இசையைக் காண்பதில் ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியா போன்றோரும் ஈடுபட்டனர். ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே கால்டுவெல் ஐயர் அவர்கள் தமது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை வெளியிட்டு ஆரிய மொழியினின்று மாறுபட்டதுடன் தனித்து வாழுமான அமைப்புடைய திராவிட மொழி என்று கூறத் தொடங்கி விட்டார். இதையொட்டி ஆய்வாளர்கள் திராவிடமொழி, ஆரிய மொழி இனம், செமிட்டிக் மொழி இனம், இரண்டிக்கும் மாறுபட்டது; வேறுபட்டது என நிறுவினர். கில்பர்ட்சிலேட்டர் ஜேம்ஸ் ஹார்னல், பியூரர் கிறிஸ்டோபர், ஹெய்மன் டார்வ், என். லஹோவரி, ஜி.எலியட், ஸ்மித் டாக்டர் ர்.சு. ஹால், நு.P. ஹாவல் போன்றோரும் திராவிடத் தனித்தன்மையை சரித்திர ரீதியாக வலியுறுத்தினர். திராவிடரின் தனித்தன்மை என்பதற்கு ஆய்வறிவியல் ஏற்புடமை – அந்தஸ்து தேடிக் கொள்ள இவர்கள் முயற்சிகள் உதவின.

இந்தோ – ஆரிய ஐதிகத்தினைத் தோற்றுவிக்க காரண கருத்தாவாக இருந்த மாக்ஸ் முல்லர், (1919) து.ஆ. நல்ல சாமிப்பிள்ளை போன்றோர் சித்தாந்த தீபிக: வுயஅடை யுவெஙைரவைல போன்ற ஆராய்ச்சிக் சஞ்சிகைகளில் எழுதிய தமிழர் பற்றிய கட்டுரைகளினால் கவரப்பட்டு தனது வுhந ளுiஒ ளுலளவந in ஐனெயைn Phடைழளழிhல என்னும் நூலில் திராவிட மொழி இலக்கிய ஆய்வில் ஈடுபடுவோர் தென்னிந்தியாவிலே தத்துவ இலக்கியமொன்றுள்ளது என்பதை அறிவர் என ஒப்புக் கொள்ளுகிறார்.

இத்தகைய பின்னணியிலே தான் அரங்கிற்கு வருகிறார் விபுலாநந்தர். அவரும் தமிழரின் தனித்துவம் பற்றி, தமிழ்க்கலை இலக்கியம் பற்றித் தன் கருத்துக்களை முன் வைக்கிறார். ஒரு வகையில் அவரது கலை இலக்கியப் பணிகள் அன்றைய காலத்தின் தேவையுமாகும். கலை பற்றிய அவரது நோக்கினையும் பணிகளையும் பின்வரும் மூன்று தலையங்களின் கீழ் நோக்குதல் பயனுடையதாம்.

1. கலைகள் பற்றிய அவரது கோட்பாடுகள்.
2. இசைக் கலைக்கு அவரது பங்களிப்பு.
3. நாடகக் கலைக்கு அவரது பங்களிப்பு.

கலைகள் பற்றிய கோட்பாடுகள்:

கலைகள் பற்றிய அவரது கோட்பாடுகளை அறிய அவரது பின்வரும் கட்டுரைகள் உதவுகின்றன.

1. நாகரிக வரலாறு
2. எகிப்திய நாகரிகம்.
3. யவனபுரக்கலைச் செல்வம்
4. மேற்றிசைச் செல்வம்
5. ஐயமும் அழகும்.
6. உண்மையும் வடிவும்
7. நிலவும் பொழிலும்
8. மலையும் கடலும்
9. கவியும் சால்பும்
10. நாடும் நகரும்

கலைவரலாறு இன்று பல்கலைக்கழகங்களில் ஒரு பாடநெறியாகியுள்ளது.தமிழர்களின் கலை வரலாறு இன்னும் ஒழுங்காக எழுதப்படவேயில்லை. பூர்வாங்க முயற்சிகள் ஆங்காங்கு நடைபெற்றுள்ளன. பேர்ஸி பிறவுண். ஸ்டெலா காமேஷ், சிம்மர், ஆனந்தகுமாரசாமி ஆகியோர் இந்தியக். கலை வரலாற்றின் பல அம்சங்களை விரிவாக எழுதியுள்ளனர். இந்நிலையில் தமிழர் கலை வரலாற்றை எழுத முயன்றோருக்கு விபுலானந்த அடிகளார் உலகக் கலை வரலாற்றை நாகரிக வரலாறு எனும் கட்டுரையில், 8 தொட்டுக் காட்டிச் செல்கின்றார். இன்று கலை வரலாறு, சரித்திரத்திற்கு முந்திய கலைவரலாறு, எகிப்திய கலை வரலாறு, கிரேக்க கலை வரலாறு, றோமானிய கலை வரலாறு, பைசாண்டிய கலை வரலாறு, றோமானிய கலை வரலாறு, பைசாண்டிய கலை வரலாறு, மத்திய கால கலை வரலாறு, மறுமலர்ச்சிக் கால கலை வரலாறு, நவீன கலை வரலாறு எனப்பாகுபடுத்தி பயிற்றுவிக்கப்படுகிறது. ஏறத்தாழ இதே வரலாற்று அணுகுமுறையைச் சுவாமிகள் கையாளுகிறார்.

பண்டைய நாகரிகமான பாரசீகம், அசிரியம், பபிலோனியா ஆகியவற்றின் நாகரிகங்கள், கலைகள் எடுத்துக் கூறப்படுகின்றன. எகிப்திய நாகரிகம் எனும் கட்டுரையில்9 எகிப்தியரின் பிரமிட்டுக்கள் பற்றிக் கூறுறார். அந்நாகரிக காலத்தை கி.மு. 3335 (கலியுக ஆரம்பத்திற்கு 234 வருடத்திற்குமுன்) எனக் கணிப்பிட்டு அக்காலத்தில் கட்டப்பட்ட டுழிநசழ hழரnவை வநஅpடந யவ வாந hநயன ழக வாந டயமந இனை குளத்தலை முற்றத்துக் கோயில் என அழைத்து அக் கோயிலின் அழகை பிரமிட்டுடன் ஒப்பிடுகிறார். 10

மொசப்படோமியாவில் நடைபெற்ற அகழ்வாராய்வின் போது கண்டெடுத்ததும், பாக்தாத் நகரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுமான யாழ்க்கருவி பற்றிக் குறிப்பிடுகிறார்.11 இக்கருவி பின்னாளில் இவர் தமிழரின் பண்டைய யாழ்களை அமைக்கும் முயற்சிக்கு உந்துதலை அளித்திருக்கலாம். 1922ல் எகிப்தில் துட்டங்காமனின் பிரமிட் கட்டிடம் கண்டு பிடிக்கப்பட்டமை உலகக் கலை வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகும். அதனைத் தனது கட்டுரையிற் குறிப்பிடும் அடிகளார் அங்கு காணப்பட்ட அழகு பொருந்திய கருங்காலிக் கட்டில்களையும் நவமணி இழைத்த ஆபரணங்களையும் பற்றிக் கூறுகிறார். 2னெ

எகிப்தினையடுத்து கிரேக்கின் நாகரிகமும் கலை வளமும் கூறும் அடிகளார் கிரேக்க நாகரிகத்தின் தொடர்ச்சியாக உருவான றோம நாகரிகம் பற்றியும் மத்திய கால நாகரிகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரைகளில் இரண்டு அமிசங்களைக் காண முடிகிறது. ஒன்று இத்தகைய பழம் பெருமை வாய்ந்த நாகரிகங்களையும் கலைகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்தல். இன்னொன்று பழைய அசிரிய, சுமேரிய, பபிலோனிய மக்களுடன் தமிழ் மக்களையும் இணைத்து சுமேரியர், தமிழர் ஒற்றுமையைத் தொட்டுக் காட்டுவதன் மூலம் தமிழரின் பண்டைய பாரம்பரியத்தைத் தமிழருக்கு உணர்த்துதல்.


தமிழர்கள், உலகக் கலை வரலாற்றை, நாகரிகத்தை அறிய வேண்டும், பண்டைய நாகரிகங்களுடன் தாமும் தொடர்பு உடையோர் என்று அறிய வேண்டும்: தமகென்று தனித்தவமான ஒரு நாகரிகத்தைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய வேண்டும் என்ற நோக்கு அவருக்கு 20களில் அவரது 28 வயதிலேயே ஆரம்பித்துவிட்டது.

இந்த நோக்கு அவரது முதிர்ந்த வயதுகளில் மேலும் வளர்ந்து முதிர்ச்சியுடன் வெளிப்படுகிறது. அம்முதிர்ச்சியில் உதாரணங்களாகத் திகழ்வனவே 1942 ல் மதுரையில் இயற்றமிழ் மாநாட்டுக்கு தலைமை வாங்கி, அவர் ஆற்றிய உரையும் 1947ல் அவர் வெளியிட்ட யாழ்நூலும்.

ஆங்கிலராதி மேலை நாட்டவரது செல்வப் பெருக்கத்திற்கான காரணங்களை ஆராய்ந்த விபுலானந்தர் அவர்களது ‘அரசியல் முறையும் புலனெறி வழக்கமும் கலை பயினிலைமையும், பொருள் செயல் வகையும்’13 என்று கூறி அவர்களின் கலை வரலாற்றை, நாகரிகவரலாற்றைத் தமிழருக்குணர்த்துவதன் மூலம் தமிழரையும் முன்னேற்றலாம் எனக் கருதி இருக்கக் கூடும்.

அந்நிய நாகரிகம் என்று ஐரோப்பியக் கலைகளை ஒதுக்கினாரல்லர் அடிகள். அங்கிருந்து நல்லன பெற்று தமிழர் கலைகள் தளைக்க வேண்டும் என்ற கோட்பாடே விபுலாநந்தரின் கோட்பாடாயிற்கு பரந்த உலகப் பின்னணியில் தமிழர் கலைகளை இனம் காண்பதும் அதை வளர்ப்பதும் அவரது பிரதான கலை நோக்கம் எனலாம்.

சிற்பம், ஓவியம், கட்டிடக்கலைகள் பற்றி அவர் கூறிச் செல்லும் கருத்துக்கள் இக்கலைகள் பால் அவருக்கிருந்த அறிவைக் காட்டும். வண்ணமும், வடிவும், ஐயமும், அழகு என்ற கட்டுரைகள் இதற்குச் சான்றுகளாம். ஓவியத்தை இரசித்தல் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்.

‘நவிலும் தோறும் இனிமை பயக்கும் நூல் நயம் போலவும் பயிலுந்தோறும் இனிமை பயக்கும் பண்புடையாளர் தொடர்பு போலவும் பார்க்குந்தோறும் இனிமை பயக்கும் பண்புடையாளர் தொடர்பு போலவும் பார்க்குந்தோறும் அறிவுடையோனுக்கு உவகையளிக்கும் ஓவியமே அழகிய ஓவியம்’14

வெறும் காட்சியாக மாத்திரம் ஓவியத்தை இரசிக்க முடியுமா? காட்சிக்குப் பின்னாலுள்ள ஓவியனின் உள்ளத்தைக் காண முயல வேண்டுமென்பது ஓவிய ரசிப்பின் இன்றையக் கொள்கையாகும். இதுவே இந்திய மரபின் ரசக் கொள்கையும் ஆகும். ஐயமும் அழகும் என்ற வியாசத்தில் வரும் காட்சியில் ஐயம் மிக்கது ஐயமே உண்மைப் பொருளை உணர்த்தும் என்ற கூற்றில் கலைரசிப்பின் நவீன நோக்குகள் விபுலாநந்தரில் தொனிப்பதைக் காண முடிகிறது. சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோயில், சிகிரியாக் குகை, அமராவதி ஆகிய இடங்களிற் காணப்படும் சிற்பம், ஓவியம் பற்றி அடிகளார் குறித்துச் செல்வது அவரது சிற்ப, ஓவிய ஈடுபாட்டிற்கு உதாரணங்கள் ஆகும். இவ்வகைச் சிற்ப, ஓவியங்களையும், அவற்றை ரசிக்கும் முறையினையும் தமிழ் மக்களுக்கு ஊட்டுதலும் அடிகளாரின் கலை நோக்கினுள் அடங்கும்.

இசை பற்றிய நோக்கும் பணியும்

விபுலாநந்தர் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலம் தமிழிசை இயக்கம் வேகம் பெற்ற காலமாகும். தமிழிசை பற்றி நடந்த முக்கிய ஆராய்ச்சிகளின் பெறுபேறுகதான் விபுலாநந்தரின் யாழ்நூல். 1920 ல் அண்ணாமலையில் அண்ணாமலைச் செட்டியா இசைக் கல்லூரியை நிறுவியதிலிருந்து இவ்வியக்கம் வேகம் பெறுகிறது. இதற்கு முன்னரேயே தமிழரின் இசை ஆராய்ச்சி ஆரம்பமாகி விட்டது 1907 ல் கர்ணாமிர்தசாகரத்திரட்டு எனும் நூலையும் 1917ல் கர்ணாமிர்த சாகரம் எனும் நூலையும் ஆபிரகாம் பண்டிதர் வெளியிடகிறார். இந்த பின்னணியிலே தான் விபுலாநந்தரின் இசை ஆர்வமும் உருவாயிற்று.15

யாழ்நூலை உருவாக்கும் முன்னரேயே அவா இசை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தமையை அவரது இசை பற்றிய கட்டுரைகள் உணர்த்துகின்றன. 1940 லிருந்து அவரது முழு நோக்கும் இசையின் பாற்றிரும்பி இருக்கவேண்டும். வங்கியம் (1942) சங்கீத பாரிஜாதகம் (1942) நட்டபாடைப் பண்ணின் எட்டுக் கட்டளைகள் (1942) பாரிஜாத வீணை (1944) நீரரமகளிர் இன்னிசைப்பாடல், பண்ணும் திறனும் சூழலும் யாழும், எண்ணும் இசையும், பாலைத்திரிபு, சுருதிவீணை, இயலிசை நாடகம், போன்ற அவரது கட்டுரைகள் அவர் 1940 லிருந்து இசைபற்றிச் சிந்தித்தமைக்கு உதாரணங்களாகும். இக்கட்டுரைகளினூடாக வளர்ந்து வந்த இசை பற்றிய அவர் கருத்தே யாழ் நூலாக முழுமை பெற்றிருக்க வேண்டும்.

யாழ்நூல் பற்றிப் பல அறிஞர்கள் போற்றி புகழ்ந்துள்ளனர். எனினும் முறையான மதிப்பீடு ஒன்றினை யாரும் இதுவரை செய்ய முயன்றாரில்லை. அடிகளார் மீது மற்றோர் கொண்டு இருந்த மதிப்பும், பத்தியும் புற நிலையான ஆய்வுக்குத் தடையாக அமைந்திருக்கலாம். அல்லது இசை ஆய்வு ஒரு துறையாக இன்னும் தமிழரிடை வளராமையும் ஒரு காரணமாயிருக்கலாம்.

யாழ் நூலைப் புரிந்து கொள்ள மூன்று வகை அறிவு தேவைப்படுகிறது.

1. இசை அறிவு
2. கணித அறிவு.
3. தமிழ் அறிவு.

இசையைக் கணித மொழியில் விளக்க முனைந்த விபுலாநந்த அடிகளார் இசைக்கணிதமே தமிழிசைக்கு அளித்த பங்களிப்பு எனலாம். இவ் யாழ் நூலில் அடிகளாரின் தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும், விஞ்ஞான (கணித) புலமையும், சங்கீதப் புலமையும் சங்கமிப்பதனைக் காணலாம்.

யாழ் நூல்

சங்க இலக்கியங்களையும், சிலப்பதிகாரத்தையும், தேவாரங்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழரின் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக இனம் காண முயலுகிறார் அடிகளார். பாயிரவியல், யாழுறுப்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல், சேர்க்கை என்ற பகுதிகளாக இந்நூல் வகுக்கப்பட்டடுள்ளது. பாயிரவியலில் தன் நோக்கம் கூறிய அடிகளார் யாழுறுப்பியலில் பண்டைத் தமிழில் இலக்கியங்களை ஆதாரமாகவும் தாம் கற்ற மேற்கு நாட்டு வரலாறுகளைத் துணையாகவும் கொண்டு பண்டைத் தமிழர் மத்தியில் வழக்கிலிருந்து யாழ்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியிலீடுபடுகிறார். வில்யாழ், போரியாழ், மகரயாழ், சீறியாழ் எனப்படும் செங்கோட்டு யாழ், சகோட யாழ் ஆகிய யாழ் வகைகளை வெளிக் கொணர்கிறார். பௌதிக இயலுக்கு ஏற்ப யாழின் நரம்பின் அமைப்புகள் கூறப்பட்டு ஒலிகள் அளக்கப்படுகின்றன. இசை நரம்புகளின் சிற்றெல்லை. பேரெல்லை என்பன கூறப்படுகின்றன.

பாலைத்திரிபியலில் பாலையின் வகைகள் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற் செம்பாலை என வகுக்கப்பட்டு சகோடயாழுக்கு இசை கூட்டும் முறையும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையில் யாழாசிரியனது அமைதி கூறிய செய்யுட் பாகத்துக்கு உரை கூறும் முகத்தான் பண்டைய யாழ் பற்றித் தன் கருத்து உரைக்கிறார் அடிகளார்.

பண்ணியல் எனும் அதிகாரத்தில் பண்களைப்ப்றிய தன் கருத்துக்களை முன் வைக்கின்றார்.பிங்கலந்தை, சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு ஆகிய நூல்களினின்று சூத்திரங்கள் காட்டப்படுகின்றன. நூற்று மூன்று பண்களைக் குறிப்பிட்டு அவற்றில் பாலை நிலைகளைச் சுருதி வீணையிலமைத்துக் காட்டும் முயற்சி இவ்வதிகாரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வதிகாரத்தில் பழந்தமிழிசை மரபிற்கும் வட நாட்டிசை மரபிற்குமிடையே அமைந்த தொடர்பும் விளக்கப்படுகிறது.

தேவாரவியல் எனும் அதிகாரத்தில் 4ம் திருமுறைக்கு யாப்பமைதி கூறப்படுகிறது. தேவாரப் பண்ணின் உருவங்கள் ஆராயப்படுகின்றன. இந்தளம், காந்தாரபஞ்சமம், நட்டராககம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, கௌசிகம், செவ்வழி, செந்துருத்தி, காந்தாரம், குறிஞ்சி, மேராகக் குறிஞ்சி முதலாகிய பண்கள் பற்றிக் கூறப்படுகின்றன.

ஒழிபியலில் கணிதத்திற்கும் இசைக்குமுள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. இசைக் கணிதம் இதில் வெளிப்படுத்தப்படுகிறது. அத்தோடு இவ்வியலில் குடுமியாமலை இசைக் கல்வெட்டுப் பற்றி விளக்குவதுடன் தமிழிசையில் சுருக்கமான வரலாறும் உரைக்கப்படுகிறது. குடுமியாமலை இசைக் கல்வெட்டு தமிழிசை பற்றியது என்றுமுதல் விளக்கமளித்தவர் விபுலாநந்த நடிகளே என்று ஞானாகுலேந்திரன் குறிப்பிடுகிறார்.

இறுதியாக, சேர்க்கையில் தேவார இசைத்திரட்டும் இசை நாடகச் சூத்திரங்கள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன. முடிவுரையில் யாழ் நூலின் நோக்கம் கூறப்படுகிறது. சிலப்பதிகார அரங்கேற்றுக் கதையில் யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த ஒரு விரிவுரை இந்நூல் என்று கூறுகிறார் அடிகளார்.

1. பண்டைத் தமிழர் இசைக் கருவிகளையும் இசையையும் வெளிக் கொணர்வதும்
2. தமிழிசை வரலாற்றை விளக்குவதும்
3. இசை ஆராய்ச்சி இன்றியமையாத கணக்கு முறைகளைக் கணிதம் மூலம் விளக்குவதும்,

இந்நூலின் நோக்கங்கள் என நாம் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.


தமிழரின் தனித்துவம் பற்றிய நோக்கைக் கொண்டிருந்த அடிகளார் தமிழரின் தனித்துவம் எனக் கருதப்பட்ட பண்ணிசையை வெளிக் கொணர்ந்தமையும், பழைய இசைக் கருவிகளை இலக்கிய உதவி கொண்டு மீளுருவாக்கம் செய்தமையும் தமிழ் இசைக்குச் செய்த பணிகளாகும்.

நாடகக் கலை பற்றிய நோக்கும் பணிகளும்

18ம், 19ம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் படித்த மத்திய தர வர்க்கத்தினருக்கு ஊடாக ஐரோப்பிய நாடக மரபு தமிழுக்கு அறிமுகமாகின்றது. ஐரோப்பிய நாடகங்களை நேரடியாகவும் தழுவியும் படித்தவர்கள் அறிமுகம் செய்தனர். விபுலாநந்த அடிகள் சேக்ஸ்பியரை மதங்கசூளாமணி மூலம் 1926ல் அறிமுகம் பண்ணுமுன்னரேயே சேக்ஸ்பியர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டோ தழுவப்பட்டோ அறிமுகப்படுத்தப்பட்டு விட்டார். இம் முயற்சிகள் 1880 இலிருந்து ஆரம்பித்துடார். 1880 ல் ‘ரெம்பஸ்ற்’ காற்றுமழை என்ற பெயரில் விசுவநாதன் பிள்ளையால் மொழி பெயர்க்கப்படுகிறது.

யுவெழலெ யனெ ஊடழியவசயஇ யுள லழர டுமைந வைஇ ழுவாநடடழஇ முiபெ டுநயசஇ முiபெ துழாnஇ ர்யஅடநவஇ ர்நசெல iஎஇ ஊலஅடியடiநெஇ துரடநைள ஊநயளநசஇ வுறநடகவா niபாவஇ வுறழ பநவெடநஅநn ழக ஏநசழயெஇ வுநஅpநளவஇ வுயஅiபெ ழக வாந ளாசநறஇ வுhந ஊழஅநனல ழக நசசழசஇ வுhந றiவெநசள வுயடநஇ ஆரஉh யனழ யடிழரவ ழெவாiபெஇ ஆயஉடிநவாஇ ஆனை ளரஅஅநச niபாவ னசநயஅஇ ஆநயளரசந கழச அநயளரசநஇ சுiஉhயசன ஐஐ சுநஅநழ யனெ துரடநைவ.

ஆகிய 21 நாடகங்களையும் தழுவியோ மொழி பெயர்த்தோ 50 நூல்கள் வெளிவந் விட்டன என அறிகிறோம்.16 இதனை விட கிரேக்க நாடகாசிரியரான சோபோக்கிளிஸ், பிரஞ்சு நாடகாசிரியரான மோலியர் ஆகியோரின் நூல்களும் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. டுழசன டுலவழனெ; ளுநஉசநவ றயல ஐத் தழுவி பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மனோன்மணியம் வெளியிட்டு விட்டார். சமஸ்கிருத மொழியிலிருந்து பவபூதியின் உத்தரராம சரிதம், காளிதாசனின் சகுந்தலை, மாளவிகாக்கினிமித்திரம், பாசனின் சொப்பன வாச வதத்தா, தூதகடோத்கசம் பில்கணனின் பில்கணியம், மகேந்திரவர்மனின் மத்திவிலாசம், சூத்திரகனின்மிருச்ச கடிகம் போன்ற நூல்களைப் பலரும் மொழி பெயர்த்து விட்டனர்.

விபுலாநந்தர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பிய நாடக மரபுக்கியைய நாடகங்களை மேடையிடுவோரில் பம்மல் சம்பந்த முதலியார் முக்கிய மானவராகத் திகழ்ந்தார். வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், கலாவதி, மானவிஜயம் என்னும் நாடகங்களை எழுதியதுடன் நாடகவியல் என்றதொரு நாடக இலக்கண நூலையும் எழுதினார்.

இதே காலகட்டத்தில் இலங்கையிலும் தமிழ் நாடகதுறையில் படித்த மத்திய தரவர்க்கத்தினரின் பங்களிப்பு ஆரம்பமாகி விடுகிறது. 1913ல் கொழும்பில் லங்கா சுபோதசபை ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முக்கியஸ்தர், கலையரசு சொர்ணலிங்கமாவார். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களை இவர் மேடையிட்டார். அவற்றுட் பல சேக்ஸ்பியரின் நாடகங்களின் தழுவல்களாகும். 1914ல் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி சபையும் 1920 ல் மட்டக்களப்பில் சுகிர்த விலாச சபையும் ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்புச் சுகிர்த விலாசசபை வித்துவான் சரவண முத்தன் விபுலானந்தரின் நெருங்கிய நண்பர். ஐரோப்பிய நாடகங்களும், சிறப்பாக சேக்ஸ்பியரின் நாடகங்களும் வடமொழி நாடகங்களும் தமிழுக்கு அறிமுகமான ஒரு பின்னணியில் மத்திய தரவர்க்கத்தவர்களும் கற்றோரும் இப்பணியிலீடுபட்ட காலையில் குறிப்பாக இந்நாடகங்கள் தமிழ் நாட்டில் பம்மல் சம்பந்த முதலியார் போன்றோராலும் ஈழத்தில் அவரது ஏகலைவச் சீடரான கலையரசு சொர்ணலிங்கம் போன்றோராலும் மேடையிடப்பட்ட காலத்திலே தான் மத்திய தர வகுப்பினரும், ஆங்கில வடமொழி அறிவு பெற்றவருமான விபுலாநந்தர் மதங்க சூளாமணி எழுதுகிறார்.

விபுலாநந்தர் தாம் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற நாடகம் பற்றிய தமது நோக்கினை மதங்க சூளாமணியின் முகவுரையிற் குறிப்பிடகிறார்.

“கல்வியறிவில்லாதார் கண்ட கண்டவாறு நாடகங்களை அமைக்க முற்பட்டு நாடகத்துக்கே ஓர் இழிந்த பெயரையுண்டாக்கி விட்டனர்.”18

என்று கூறும் அவர் அக் காலத்தில் நாடகம் எழுதிய நாடகமாடிய பலரைப் போலி நாடகக் கவிகள் என்கிறார். போலி நாடகக் கவிகளால் நாட்டுக்கு விளைகின்ற கேடு போலிவைத்தியனால் நாட்டிற்கு விளைகின்ற கேட்டினைப் பார்க்கப் பல்லாயிரம் மடங்கு பெரிது என்று கூறுமவர்@ நாடகத்தை வெறுத்தொதுக்காது அதனை ஆராய்ந்து நல்ல நாடகங்களை அமைப்பது கற்று வல்லோர் கடமை என்கிறார். மேலும் “புதுநாடகமமைப்பதற்கு முற்படும் கவிஞருக்கு முறையறிந்தமைப்பதற்கு உதவியாகிய கருவி நூலும் இல்லை” 19 என்கிறார்.

எனவே அவர் மதங்க சூளாமணி எழுத நேர்ந்தமைக்கான காரணங்கள் எமக்குத் தெளிவாகின்றன.

1. போலி நாடகங்களை நீக்கவும்
2. நல்ல நாடகங்களை அமைக்கவும்
3. மக்கள் அதனால் பயன் பெறவும்.

நினைத்த அடிகள் கற்று வல்லாருக்கு நாடகம் பற்றி அறிவூட்ட எண்ணி இந்நூலை எழுதுகிறார்.

மன்பதைக்குத் தொண்டு செய்தல் என்ற அவர் நோக்கு இங்கு தெரிகிறது. அனைத்து அறிவும் மன்பதைக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய அவர் இங்கும் நாடகத் துறை மன்பதைக்குச் சேவை செய்ய வேண்டும் என எண்ணுகிறார்.

‘நாடகவியலை ஆராய்கின்ற இச்சிற்றாராராய்ச்சி’ என்றே தன் நூலைப் பற்றி விபுலாநந்தர் குறிப்பிடுகிறார். ‘விபுலாநந்தர் கூத்து (நாடக) தமிழில் இறைவாப் புகழ் படைத்த நூல்கள் பல உருவாக்கினார்’ என்று பலர் கூறுவதைப் போல அல்லாமல் நாடகத்தை ஆராயவே அவர் நூல் இயற்றினார். அவர் நாடகம் எழுதியவருமன்று@ தம் காலத்தில் வாழ்ந்த சம்பந்த முதலியார், சொர்ணலிங்கம் போன்று நாடகம் நடித்தவருமன்று. நாடக ஆராய்;சியாளர் மாத்திரமே. இக்கால நாடகக்காரர்களுடன் நாடக எழுத்தார்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் கிடைப்பின் பிரயோசனமாகவிருக்கும்.

மதங்க சூளாமணி

மதங்க சூளாமணி 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. உறுப்பியல்
2. எடுத்துக்காட்டியல்.
3. ஒழிபியல்

உறுப்பியலில் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையினால் பெறப்பட்ட அழிந்து போன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை உரைக்கின்றார்.

இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்திற்குரிய கட்டுக்கோப்பு (ளுவசரஉவரசந) என்பவற்றுடன் நாடகத்திற்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவை என்பன பற்றி இந்திய ரசக்கோட்பாட்டினடியாக எடுத்துக் கூறப்படுகிறது.

இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் நாடகங்களில்

டுழஎநசள டுயடிழரள டழளவ.
முiபெ டுநயச
சுநஅநழ துரடநைவ.
வுiஅழn ழக யுவாநளெ
வுhந வுநஅpநளவ
ஆயஉடிநவா
ஆநசஉhயவெ ழக ஏநniஉந
துரடயைள ஊநயநச.
வுவைரள யுனெசழniஉள
யுள லழர டமைந வை
வுhந றுiவெநசள வுயடந
வுறநடகவா niபாவ

ஆகிய 12 நாடகங்களும் உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கமைய விளக்கப்படுகின்றன. நாடகத்தின் அமைப்பை மகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என விளக்கி அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு காணப்படுகிறது. என்பதனையும் அத்தோடு நாடகம் தரும் வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, உருத்திரம், நடுவு நிலையாகிய 9சுவைகளையும் தந்து அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார்.

இதற்காக அவர் 12 நாடகங்களையும் முற்றாக மொழி பெயர்த்தார் அல்லர். விபுலாநந்தர் கேஷ்க்ஸ்பிரியரின் நாடகங்களை மொழி பெயர்த்தார் என்று பலா தெரியாது மொழிகிறார்கள். இந்நாடகங்கைள அறிமுகம் செய்யும் போது தமது ஆராய்வுக்குத் தேவையான பகுதிகளை மாத்திரமே அவர் மொழி பெயர்த்தார் என்பதனை நாம் மனங் கொள்ள வேண்டும்.

இப் 12 நாடகங்களிற் சிலவற்றின் அமைப்பை விஸ்தாரமாகக் காட்டிச் செல்லும் அவர் சிலவற்றின் கதைகளை மாத்திரமே கூறிச் செல்கிறார். இது அவரது முதற் கட்டச் சிந்தனைகள் மாத்திரமே போல தெரிகிறது. இதனை விரிவுற எழுதும் எண்ணம் அவருக்கிருந்தமையை அவரது முன்னுரை காட்டுகிறது.

ஒழிபியல், தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்துக் கூறுகிறது. தனஞ்சயனார் பரத நூல், நாட்டியச hஸ்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகம். இதனால் வடமொழி நாடக இலக்கணங்களை ஒழிபியலில் அறிமுகம் செய்ய முயற்சிக்கிறார் எனலாம். இதனைவிட தொல்காப்பியச் சூத்திர உரையினின்று எடுக்கப்பட்ட நாடகத்திற்குரிய அபிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்திற்கு பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல், அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டள்ளன.

இந்நூலை அடிப்படையாகக் கொண்டு விபுலாநந்தரின் நாடகப் பணியை நோக்குவோம்.

1. தமிழில் நல்ல நாடகங்கள் தோன்ற வேண்டுமென்பதே அவரது முக்கிய நோக்கமாகும். அந்நாடகங்கள் நாடக இலக்கணங்கள் அமையப் பெற்றனவாகவும், மேற்கும் நாட்டின் மதங்க சூளாமணியான (மதங்கர் –நாடகக்காரர், சூளாமணி-சிறந்தவர்) சேக்ஸ்பியர் நாடகங்கள் போல் அமைய வேண்டும் எனவும் அவர் ஆசையுற்றிருக்க வேண்டும். தம் காலத்தில் நடைபெற்ற அல்லது எழுதப்பட்ட சேக்ஸ்பியரின் நாடகங்களும் சரியானபடி மொழி பெயர்க்கவோ, நடிக்கப்படவோ இல்லை என்பது அவர் அபிப்பிராயம் போலும். மேற்கு நாட்டு நாடகங்களை – சிறப்பாக சேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழ் நாடக - இந்திய நாடக இலக்கண முடிவுகளுக்கமைய ஆராய்ந்தமை சிந்தித்தற்குரியது. ஆராயலாமோ என்பதும் ஆராய்ச்சிகுரியது.

2. தமிழில் நாடகம் சிறப்படைய ஆசையுற்ற விபுலாந்தர் சேக்ஸ்பியரைச் சரியானபடி அறிமகம் செய்வதுடன் வடமொழி நாடகமரபையும் அறிமுகம் செய்து அதற்கொப்ப தமிழ் நாடகமரபையும் காட்டுகிறார். ஒருவகையில் தமிழர் மத்தியில் நாடகமரபு ஒன்றிருந்ததென்பதை – அதன் தனித்துவத்தைக் காட்டுவதும் அவர் நோக்கமாயிருந்திருக்கலாம். ஆனால் அத்தனித்துவம் வெறும் தனித்துவமாயில்லாது உலகின் வளர்ச்சியினை உள்வாங்கி வளரும் தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதே அவர் அவா போலும். தமிழ்த் தனித்துவம் - உலகளாவிய சிந்தனை என்ற இரு முரண்களையும் இணைத்துஒன்றிலிருந்து ஒன்று பெற்று, சமரசம் கண்டு வளர வேண்டும் என்ற அவர் எண்ணமும் இங்கு தெரிகிறது.

3. தமிழ் நாடகம் எழுதுவது நடிப்பதை விடத் தமிழ் நாடக ஆராய்ச்சியே அவரது பிரதான நோக்குப் போலும். இன்று பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடகமரபு, ஆசிய நாடக மரபு பற்றி மாணாக்கர் பயில்கின்றனர். இந்நிலையில் இற்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னரே இது பற்றி சிந்தித்த விபுலாநந்தர் தூர நோக்குடைய மேதையாகக் காட்சியளிப்பதுடன்@ அவர் காலத்தில் நாடகத்துறையில் ஈடுபட்டவர்களிடமிருந்து நாடக ஆராய்ச்சியாளர் என்ற வகையில் வேறுபட்டும் காணப்படுகிறார்.

சேக்ஸ்பியரை மாத்திரம் அறிமுகப்படுத்தாது கிரேக்க நாடகங்களையம் ஆட்டுப்பாடலிலிருந்து அது தோன்றியமையையும் இணைந்து ஆட்டுப்பாடலைத் தமிழரின் பண்டைய வேலனாட்டத்துடன் ஒப்பிடுதல்21 பின்னோக்கிப் பார்க்கையில் நாடக ஆராய்ச்சியில் அவர் கொண்டிருந்த தூரப் பார்வையினைப் புலப்படுத்துகிறது எனினும் கமெடி (ஊழஅநனல) றஜடி (வுசயபநஎ) பற்றிய அவர் கருத்துக்கள், தமிழ் நாடகங்கள் பற்றிய அவர் கருத்துக்கள், இந்திய நாடக மரபின் இலக்கணம் கொண்டு ஐரோப்பிய நாடகங்களை ஆராய முயன்றமை என்பன ஆராய்விற்குரியன.

தொகுத்துக் கூறின் இசையில் தமிழ்த் தனித்துவம் கண்டது போல நாடகத்திலும் தமிழ்த் தனித்துவம் காணல். அதே நேரம் உலக சமஸ்கிருத நாடக வளர்ச்சிக்கியைய எம்மை வளர்த்தல். நாடகத்தை ஆராய்ச்சி ரீதியாகக் கற்றல், நாடக அறிவு பெறல். இந்த அறிவை மன்பதைக்குப் பயன் தரக்கூடிய விதத்தில் பிரயோகித்தல் என்பன நாடகக் கலை பற்றி அவர் கொண்டிருந்த நோக்குகள் ஆகும்.


இலக்கிய நோக்கும் பணியும்

அவரது கட்டுரைகளும் சொற்பொழிவாற்றிய தலைப்புக்களும், ஆராய்ச்சி நூல்களும் செயற்பாடுகளும் அவரது இலக்கியப்பணிகளின் தன்மை பற்றியும் அதனூடாக எழும் அவர் இலக்கிய நோக்கு பற்றியும் அறிய உதவும் சாதனங்கள் ஆகும். 40 களில் அவரது இலக்கிய நோக்குக்கும் 20களில் அவர் இலக்கயி நோக்குற்குமிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தமிழ் மக்களுக்கு உலக இலக்கியங்களையும் அவற்றில் செழுமையினையும் அறிமகம் செய்தல் அவரது இலக்கிய நோக்கினுள் மிக முக்கியமானதாகப்படுகின்றது. சேக்ஸ் பியரையும், தனஞசெயனாரையும் அறிமுகம் செய்வதன் மூலம் தமிழ் நாடகத்தை தரம் வாய்ந்த நிலைக்கு உயர்த்த எண்ணிய அடிகளார் உலக இலக்கியங்களையும் தாகூர் போன்ற வங்காளக் கவிஞர்களையும் அறிமுகம் செய்தல் மூலம் தமிழ் இலக்கியத்தின் தரத்தையும் உயர்த்த எண்ணியிருப்பார் என்பதில் ஐயமில்லை. கிரேக்க நாடகங்களையும், நாடகாசிரியர்களையும், அங்கிலத்தில் சிறந்த புலவர்கள் எனக்கணிக்கப்படும் மில்டன், சேக்ஸ்பியர், வால்டர் ஸ்கொட்ஷெல்லி, டென்னிஸன், றொபர்ட் பிரௌணிங், டைரன், கீட்ஸ் ஆகியோரையும் நோர்வே நாடகாசிரியர் இப்ஸ்னையும், வங்கமொழிக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூரையும் அறிமுகம் செய்யும் விபுலாநந்தர் சேக்ஸ்பியர், மில்டன், உவேட்ஸ்வர்த், கீட்ஸ், ஷெல்லி டெனிசன் ஆகியோரது கவிதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். தமிழ் மாத்திரம் அறிந்தவர் பிற மொழியிலும் நல்லவையுண்டு எனக்கண்டு அவற்றை அறிந்து தம் மொழியில் அவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்மென்ற சமரசப் போக்கே இதற்குக் காரணமாகும். ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவிப்பதற்குக் கபிலர்பாடிய குறிஞ்சிப்பாட்டினை ஒருவாறு நிகர்ப்ப ஆரியமும் தமிழும்வல்ல பண்டிதமணியாருக்கு (பண்டிதமணி கதிரேசன் செட்டியா) ஆங்கில மொழிக் கவி நயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி எழுந்த கட்டுரை என்று தமது ஆங்கில வாணிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.22 மொழி பெயர்க்க அவர் தெரிந்தெடுத்த மேற் குறிப்பிடப்பட்ட கவிஞர்களின் பாடல்கள் விபுலாநந்தரின் நோக்கினைக் காட்டுவன. மானிடப் பெருமிதமும் தேசாபிமானமும், உலகவாழ்வும், ஆன்மிக உணர்வும் நிரம்பப் பெற்ற பாடல்கள் அவை. இப்பாடல்களிற் கூட ஆத்மிகமும் - உலோகாயுதமும் இணையும் தன்மையினைக் காணலாம். அடிகளாரை தமிழியல் ஆராய்வுகளில் ஒப்பியல் கல்விக்கு முக்கிய இடமளித்த முன்னோடிகளுள் ஒருவர் எனக் குறிப்பிடும் கைலாசபதி ஆங்கில இலக்கியத்தை மாத்திரம் கற்பதோடு அமைந்தவர் அல்லர் அடிகள். உலக வரலாறு மானிடவியல், தத்துவம், விஞ்ஞானம், புராதன மொழிகள் முதலியவற்றையும் இடைவிடாது படித்து வந்திருக்கிறார். இவற்றின் விளைவாகவே பரந்த உளப் பாங்கு அவரிடத்தே வளர்வதாயிற்று என்றும் கூறிச் செல்கிறார்.23 இப்பரந்த பார்வையினைத் தமிழ் அறிஞரும் எழுத்தாளரும் பெறின் தமிழ் இலக்கியத் தரம் உயரும் என அடிகளார் எண்ணியிருக்கக் கூடும்.

இலக்கிய விமரிசனத்துறையிலும் அடிகளாரின் பங்கு குறிப்பிடற்குரியது. இந்திய அழகியற் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அவர் கவிதைகளை மதிப்பிட்டார் போலத் தெரிகிறது. கவிதை நயத்திலில் இரசிக விமரிசமுறை ஒன்றினையே அவர் செய்தள்ளார். சொற்களின், ஓசையின், கவிதை அமைப்பின் துணை கொண்டு புலவனின் உணர்வையும் பாடல் தரும் சுவையையும் பெறலே இவவ்ணுகு முறையின் பிரதான நோக்காகும்.

யாழ்ப்பாணத்திலே வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை போன்றோரால் வளர்க்கப்பட்டு, பண்டிதமணி போன்றோரால் புகழப்பட்ட மரபு இது. விபுலாநந்தர் காலத்தில் தமிழ் நாட்டில் டி.கே.சி.யின் பாடல்களும் தெரிவும் வெறும் ரசனையின் டாற்பட, விபுலாநந்தரின் தெரிவும், பாடல்களும் ரசனையோடு மன்பதைக்கு ஆண்மை, வீரம்,ஞானம், தேசாபிமானம், பத்தி ஊட்டுவனவாயுமுள்ளன. இவ்வகையில் தம் கால ரசிக விமரிசனகாரர்களிலிருந்து இவர் வேறுபடுவதுடன் இலக்கிய விமரிசனம் சுட மன்பதைக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்குடையவராயும் காணப்படுகிறார்.

பழைமை வாதியான இவர் நவீன இலக்கிய வளர்ச்சியில் நாட்டம் கொண்டுருந்தமை அவரின் கால முரணற்ற இலக்கிய பார்வையினை எமக்குக் காட்டுகிறது. மகாகவி பாரதியாரைத் தமிழ் நாட்டில் பிரபல்யப்படுத்தி பெருமை இவருக்குண்டு. தமிழ் நாடு பாரதியின் கவித்திறனையும் கருத்து வல்லமையையும் காணுமுன்னர் கண்டு வெளிக் கொணர்ந்தவர் இவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் எழுதிய நாடகங்களை “இது கொடுத்தமிழ் நாடகங்கள்” என ஒதுக்கினாரல்லர். அவற்றை உவந்தேற்ற விபுலாநந்தர் ‘மட்டக்களப்பு வழக்குத் தமிழையும் ஓரிரண்டு நாடகங்களிற் படம் பிடித்து வைப்பது நன்று’24 – என்று கூறி வாழ்த்துகிறார். பாண்டியன் தமிழே தமிழ் என்று கூறிய பண்டிதர் மயில்வாகனனார், வழக்குத் தமிழின் இயல்பை ஆராயந்து எழுதிய சோழமண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும் என்னும் கட்டுரை முக்கியமானதாகும்.

இவர் காலத்தில் மாதவையா போன்றோர் நாவல் எழுத ஆரம்பித்து விட்டனர். மணிக்கொடி தோன்றி விட்டது வ.வே.சு. ஐயர் ஆகியோர் கதை எழுதுகிறார்கள். கலைமகள், கல்வி, ஈழகேசரி ஆகிய பத்திரிகைகள் நவீன இலக்கியத்திற்கு இடமளிக்க ஆரம்பித்துவிட்டன. பேராசிரியர்களான வையாபுரிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை தொடக்கம் மு. வரதராசன் வரை இதற்கு உதாரணங்களாகும். எனினும் அடிகள் அம்முயற்சியில் ஈடுபட்டாரல்லர். அடிகள் ஆராய்ச்சியாளனே தவிர வசன ஆக்க இலக்கியகாரர் அல்ல என நாம் அமைதி காணலாம். எனினும் நவீன தமிழ்க் கவிதையின் தாக்கம் அவரிலும் இருந்தது என்பதை அவரது சில கவிதைகள் காட்டி நிற்கின்றன. கடுமையான செய்யுள்களை எழுதிய அடிகளார் எளிமையான கவிதைகளையும் எழுதியுள்ளார். நவீன இலக்கியம் அடிகளாரில் பிரதிபலிப்பதை அவரின் கவிதைகள் மூலம் தான் கண்டு கொள்ளலாம். நவீன இலக்கியத் துறைகளில் கால் வைத்த தாகூரை ஆதாரமாகக் கொண்டிருந்த அடிகளார் நவீன இலக்கியம் பற்றி கரிசனை கொண்டிந்தார் எனக் கொள்வதில் தவறில்லை.

பின்னாளில் அவர் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் மறுமலர்ச்சிக்கழகம் ஒன்றினை ஆரம்பித்து நடத்திய போது அதிற் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் என்று அறிகிறோம். பழைய இலக்கியப் படிப்பினுடன் புதிய இலக்கியத்தையும் அரவணைத்த அவரது அகண்ட பார்வையினை இது நமக்குப் புலப்படுத்துகிறது.

அனைத்திலும் சமரசம் கண்டு நல்லன கொள்ளும் இவர் போக்கினை இலக்கியத்திலும் காண்கிறோம். மனிதரில் வேற்றுமை காணாதது போல பழைய இலக்கியமே நன்று. புதிய இலக்கியம் இலக்கணத்துள் அடங்காதது எனவே அது தீது என்றோ, செந்தமிழில் எழுதும் இலக்கியமே இலக்கியம் ஏனையவை இலக்கியமல்ல என்றோ தமிழ் இலக்கியமே சிறந்தது ஏனையவற்றுள் ஒன்றுமில்லை என்றோ இருமுறைச் சிந்தனை கொண்டவரல்லர் அடிகளார். இரண்டிலுமுள்ள நல்லனவற்றைக் கண்டு அதற்குள் சமரசம் செய்து அதன் மூலம் சிறந்த உணர்ச்சியைக் காட்டியவர் அடிகளார்.

இலக்கிய நோக்கைப் பொறுத்தவரை காலத்தோடு வளர்ந்தவர் அவர். மாறாத உடும்புப்பிடி அவரிடம் இல்லை. மாறுதலிலும் மாற்றத்திலும் நம்பிக்கையுடையவர். இத்தத்துவத்தில் வைத்த நம்பிக்கையே அவர் எழுத்துக்களுக்கு ஆழமும், அர்த்தமும் கொடுத்தன.

தொகுப்பு

தொகுத்துரைக்குமிடத்து விபுலாநந்தரிடம் மனிதனையும், சமூகத்தையும் புரிந்து கொள்ளுகின்ற- இயங்கியல் நிலையில் - அதன் சகல முரண்பாடுகளோடும் அதனைக் காணுகின்ற அகண்ட பார்வையும், அனைத்திலும் தொடர்பைக் காணுகினற் தத்துவ நோக்கும் காணப்பட்டன. அவருடைய வாழ்க்கைப் பின்னணியும், நுண்மான்நுளைபுல அறிவும் வேதாந்த தத்துவமும் அவருக்கு இந்தப் பார்வையை அறித்திரக்கலாம்.

அவருடைய பிரதான சிந்தனைப் போக்கும் செயற்பாடுகளும் இந்தத் தடத்திலேயே செல்லுகின்றன. இதற்கு புறனடையாகச் சில கட்டுரைகள் இல்லாமல் இல்லை. ஆனால் பிரதான ஓட்டம் இதுவே.

சகல முரண்பாடுகளையும் இணைத்தலும் சமரசம் காணுதலும் அவரின் பெரு நோக்காயிற்று. விவேகானந்தர் நவீன கால இந்தியாவுக்களித்த சிந்தனைப் போக்கு இது. அவர் வழிவந்த விபுலாநந்தர் இவ் வழிச் சென்றது வியப்பன்று.

சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை கண்ட அவர் அத்தகைய பண்புகள் இல்லாத தொண்டர் குலம் போல் புதுக்குலம் ஒன்று தமிழர் மத்தியிலே தோன்ற வேண்டுடும் என்று விரும்பினார்.

அத்தகைய சமூகத்திற்கு வேண்டிய மன உரத்தை அச் சமூகத்தின் பாரம்பரியத்தில் இருந்தே எடுத்துக் காட்டினார். இசைக் கலையைப் பொறுத்தவரை தமிழிசை மரபைக் கண்டறிந்தார். மரபைப் பேணினார். பழைய யாழினை மீளுருவாக்கம் செய்தார். கலைகளைப் பொறுத்த வரை நல்ல கலைகளை, ஆழமான கலைகளை அறிந்து உணர்ந்து ரசிக்கும்படி வழி காட்டினார். ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் நம் வாசகருக்கு ஆழமானது இது மேலோட்டமானது. இது என்று கற்கும் கலை நயம் கண்டறியும் முறையைக் காட்டினார். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தினர் ஆரோக்கியமான மனம் பெற விரும்பினார்.

நாடகங்களைப் பொறுத்தவரை தமிழ் நாடக மரபைத் தமிழரை அறியச் செய்யப் பண்ணியதுடன் மேற்கு நாட்டு நாடகங்களையும், சமஸ்கிருத நாடக மரபினையும் அறிமகம் செய்து மரபில் நின்று புதியது உருவாக வழி சமைத்தார்.

இலக்கியத்தைப் பொறுத்தவரை மரபு வழித் தமிழையும், தமிழர் தம் பெருமையையும் உரக்கக் கூறிய போதும் அதன் நவீன வளர்ச்சியிலும் அக்கறை காட்டினார். பிற நாட்டு இலக்கிய மொழிபெயர்ப்பும், பாரதி அறிமுகமும் பேச்சுத் தமிழை ஆதரித்ததும் இதற்குதாரணங்களாகும்.

கூட்டு மொத்தமாகக் குறிப்பிடின் அவர் பழைமை பேணினாரில்லை. பழைமையினின்று புதுமையை அவாவினார். அப்புதுமை உலகம் தழுவியதாக உலக கலை இலக்கியப் போக்குடன் ஒட்டியதாக அமைய வேண்டும் என அவாவினார் போலும். தமிழை உணர்வு நிலையில் அணுகாமல் அறிவு நிலையில் அணுகமுயன்றார்.

குறுகிய மனப்பாங்கினின்று நம்மை விடுவித்து பரந்த நோக்கில் நம்மை நாம் விளங்கிக் கொள்வதும் நமது பாரம் பரியத்திலிருந்து புதுமையைக் கண்டறிந்து வளர்த்துச் செல்வதும் சகல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு இணைவு கண்டு மன்பதைக்குத் தொண்டு செய்ய முன்வருவதும் இன்றைய தலைமுறை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாகும்.

சான்றாதாரங்கள்

1. சிவத்தம்பி கார்த்திகேசு, தமிழ் இலக்கிய வரலாறு நியூ சென்சுரி புக் ஹவுஸ் சென்னை, 1988, பக் 87.

2. மேலது பக்- 87.

3. செல்வனாயகம், அருள், விபுலானந்த ஆராய்வு, கலைமகள் வெளியீடு, சென்னை. 1963. பக் - 140.

4. செல்வனாயகம் அருள். விபுலாநந்தத்தேன். பாரிநிலையம், சென்னை 1956, பக் -40.

5. மேலது பக் - 38.

6. அடிகளாருக்கு சிதம்பரம் தாலுகா ஆதித்திராவிடர்கள் சார்பில் அளிக்கப்பட்ட வாழ்த்துமடல், 1933.

7. விபுலாநந்த ஆராய்வு, பக். 121-138

8. மேலது. பக் . 43-54

9. மேலது. பக். 55-63

10. மேலது, பக். 60.

11. இலக்கியக் கட்டரைகள், உயர் திரு விபுலாநந்த அடிகள், கல்வித் திணைக்களம், 1973, பக். 57

12. விபுலாநந்த ஆராய்வு பக். 57

13. மேலது பக். 34.

14. செல்வனாயகம் அருள். விபுலாநந்தச் செல்வம். கலைமகள் வெளியீடு, சென்னை, 1963 பக் 112.

15. விபரங்களுக்கு பார்க்க, பண்பாடு, பருவ இதழ் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், இதழ் 2, ஆகஸ்ற் 1991.

16. சக்திப்பெருமாள், திருமதி. டாக்டர், தமிழ் நாடக வரலாறு, மதுரை 1990, பக் 347-350.

17. சொர்ணலிங்கம் க. நாடகமும் நானும், சுன்னாகம் 1968 பக் - 26.

18. விபுலானந்த சுவாமிகள் முன்னுரை, மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல், மறுவெளியீடு, பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 1987.

19. மேலது.

20. மேலது

21. விபுலானந்த ஆராய்வு பக் - 75.

22. விபுலானந்தச் செல்வம், பக் - 182

23. கைலாசபதி க. முத்தமிழ் முதல்வரின் ஒப்பியல் நோக்கு’ அடிகளார் படிவ மலர் கொழும்பு. 1969 பக். 78.

24. இலக்கியக் கட்டுரைகள் பக் 145.


தமிழ் உணர்வின் வரலாறும்
விபுலாநந்தரின் தமிழ் உணர்வும்
(விபுலாநந்தர் எழுத்துக்களின் தமிழ் உணர்வு பற்றி ஓர் ஆய்வு)
1942 ஆம் ஆண்டிலே மதுரையில் நடைபெற்ற இயற்றமிழ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கித் தலைமைப் பேருரை நிகழ்த்திய விபுலாநந்த அடிகளார் பின்வருமாறு கூறினார்.

‘இரண்டரைக் கோடியென்னும் எண்ணினராகிய நம் தமிழ் குலத்தார் அனைவரும் பசியும் பிணியும் பகையும் நீங்கிப் பொருட் செலவமும், செவிச்செல்வமும், அருட்செல்வமும் ஏற்ற பெற்றியெய்தப் பெற்று மண்ணக மாந்தர்;கு அணியெனச் சிறந்து வாழ்வார்களாக.

பந்த பாசங்களைத் துறந்து மனுக்குலத்துக்குச் சேவை செய்ய வந்த விபுலாநந்தர் தமிழ்க் குலத்தவர் பசியும் பிணியும் நீங்கி, பொருட் செல்வம் முதலிய செல்வம் பெற்று வாழ வேண்டுமென்று கருதுவதும், “நம் தமிழ்க் குலம்” என உளப்பாட்டுத் தன்மைப் பன்மையிற் கூறுவதும், ஏனைய சமூகங்களை விடத் தமிழ்ச் சமூகம் மேலாக வாழவேண்டும் என்று அவாவுவதும் துறவு பூண்ட போதிலும் தமிழையும். தமிழர் சமூகத்தையும் துறக்காத விபுலாநந்தரின் உளப் போக்கையும், தமிழ்ப்பற்றை விடாத மனப்பாங்கையும் காட்டுவனவாயுள்ளன.

1948 ஆம் ஆண்டிலே விபுலாநந்தர் மறைவையொட்டி தி.க.க. முருகேசபிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஈழமணி விபுலாநந்த நினைவு மலரில், விபுலாநந்தர் பற்றிக் கூறவந்த கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்.

சங்கத் தமிழ் கேட்க வேண்டுமானால் இவரிடம் கேட்க வேண்டும். ஒருவர் பெரும் பேராசிரியர் சாமிநாதர் மற்றொருவர் விபுலாநந்தர். நான் அவர்களைப் பார்த்து இருபத்திரெண்டு ஆண்டுகளாயின. ஆனால் அக்காலத்தில் அவா உடல் மெலிந்தே வந்தது. தமிழ்த்துடிப்பு வலுவாய் இருந்தது. அந்தத் துடிப்பு இன்று பல்லாயிரம் தமிழர் நெஞ்சில் முரசடிக்கும் அடிகளார் பலருக்குத் தமிழ் வெறியேற்றினார்கள்.


துறவியான அடிகளார் தமிழ்ப்பற்றும் சமூகப்பற்றும் மிக்கவர் மாத்திரமன்று. தமிழர் நெஞ்சில் முரசடிக்கும் வகையில் தமிழ் வெறியேற்றியவராக கவியோகியால் வர்ணிக்கவும் படுகின்றார். துறவுக் கோலம் பூண்ட அடிகளாரைத் தமிழ் பற்றிக் கொண்டது. தமிழைத் துறக்க முடியாத துறவியானார் விபுலாநந்தர்.

பந்தபாசங்களையும், சொந்தபந்தங்களையும் சுகபோகங்களையும் துறந்தவரால் ஏன் தமிழ் உணர்வையும், தமிழ்ப்பற்றையும் துறக்க முடியவில்லை? விபுலாநந்தரின் தமிழ்ப்பற்றுக்கான காரணங்கள் என்ன? எவ்வாறு அவர் எழுத்துக்களை இத் தமிழுணர்வு பாதித்தது? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணுதல் விபுலாநந்தரையும், அவர் கருத்துக்களையும் புரிந்து கொள்ள உதவும். அதற்கான ஒரு முயற்சியே இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகிறது.

விரிவாகவும், வரலாற்றுப் பின்னணியிலும் சுவாமியின் கருத்துக்களை ஆராயும் இக் கட்டுரை மூன்று முக்கிய தலைப்புக்களின் கீழ் அமைந்துள்ளது.

முதலாம் பகுதியில், ஆரம்பத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் உணர்வின் தோற்றமும், அதற்கான காரணங்களும் விளக்கப்படுகின்றன.

இரண்டாம் பகுதியில் 19ஆம் நூற்றாண:டின் பின் எழுத்திபெற்ற தமிழ் உணர்வின் தன்மைகளும் அதற்கான காரணங்களும் விளக்கப்படுகின்றன.

மூன்றாம் பகுதியில் தமிழ் உணர்வின் இந் நீண்ட வரலாற்றுப் பின்னணியில் விபுலாநந்தர் என்ன பங்கினை வகிக்கின்றார் என்பதும். காலம் இவர் கருத்துக்கள் மீது செலுத்திய தாக்கமும் விளக்கப்படுகின்றன.

19ஆம் நூற்றாண்டுவரை தமிழ் உணர்வி;ன் தோற்றமும் அதற்கான காரணங்களும்

தமிழ் இலக்கிய வரலாற்றையும், தமிழ் இலக்கியங்களையும் வரன் முறையாகப் பயில்வோர் ஆங்கு. தமிழர், தமிழ்மொழி. தமிழ்நாடு, தமிழரசர், தமிழ் சமூகம், தமிழர் ஆட்சி பற்றிய உணர்வு தமிழ்ப் புலவர்களாலும், அறிஞர்களாலும் விதந்து ஓதப்பட்டிருப்பதை அவதானிப்பார்கள். காலச் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு காலப்பகுதியிலும் இவ்வுணர்ச்சியுரைகள் கூடியும், குறைந்தும் ஒலிப்பினும், தமிழ் உணர்ச்சி மங்காமல் இருந்து வந்தமையையும் உணர்வர்.

கி.பி. 450-550 க்கிடையில் எழுந்ததாகச் சில ஆராய்ச்சியாளர்களாற் குறிப்பிடப்படும் சிலப்பதிகாரத்திலே தமிழர் பெருமை பேசப்படுகிறது. இமயமலையிற் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் முறையே தமது விற்கொடி, புலிக்கொடி, மீன்கொடி பொறித்தமையும், சேரன் செங்குட்டுவன் வடக்கே படையெடுத்து கனக விஜயரான வடவரைவென்று கண்ணகிக்குக் கல்கொணர்ந்தமையும் குறிப்பிடப்படுகிறது.

கி.பி.7 ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் இறையனார் களவியலுரையில் தமிழ்மொழியில் பெருமை இன்னொரு விதத்திற் சிறப்பிக்கப்படுகிறது. முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் பற்றிய காலப்பிரிவு, கடல்கோளும், அழிந்த நூல்களும் பற்றிக் கூறப்படுவதுடன் முதற் சங்கத்தில் சிவபெருமான் இருந்து தமிழ் வளர்த்தார் என்றும், இரண்டாம் சங்கத்தில் முருகக்கடவுள் இருந்து தமிழ் வளர்த்தார் எனவும் சொல்லப்படுகிறது. அத்துடன் அகத்தியர், தொல்காப்பியர் ஆகியோர் சிவனிடம் தமிழ் கேட்ட மாணவ பரம்பரையாகக் காட்டப்படுகிறது.

இறையனார் களவியலுரையிற் கையாளப்பட்ட இக்கதை பிற்காலத்தில் தமிழுணர்வு மீதூரப் பெற்றுப் பாடிய பல புலவர்களைப் பெரிதும் பாதித்து.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தேவாரம் பாடிய சம்பந்தரும், அப்பரும் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரும் தமிழின் சிறப்பைப் பாடுகின்றனர். சம்பந்தர் அடிக்கடி தன்னை ‘நற்றமிழ் ஞான சம்பந்தன்’ எனத் தமிழோடு தொடர்பு படுத்தியே அழைத்துக்கொள்ளுகிறார். நாவுக்கரசர் சலம்பூவோடு தமிழோடிசை பாடலையும் மறக்காதவராகத் தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துகிறார். அத்தோடு “ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்” என விளித்து இறைவனைத் தமிழ்க்கடவுளாகவே காண்கிறார். மாணிக்கவாசகர் இறைவன் புலவர் வேடத்தில் வந்து தருமிக்குப் பொற்கிளி வாங்கித் தந்த கதையை ‘நற்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக்கருளினோன்’ என்று வெளிப்படுத்துகிறார்.

சங்கத்திலே இருந்து இறைவன் தமிழ் வளர்த்த இறையனார் களவியலுரை கூறும் பௌராணிக மரபு நினைவு இன்னொருவிதத்தில் இங்கு மீட்கப்படுகிறது.

15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களாக குமரகுபரர், சிவப்பிரகாச சுவாமிகள், தமிழ்விடுதூது ஆசிரியர், முதலிய கவிஞர்களது ஆக்கங்களைப் படிப்போர் அவற்றில் தமிழுணர்ச்சி இடையிடையே சுழித்துப் பாய்வதனை அவதானிப்பர். 15ஆம் நூற்றாண்டில் வாழந்த பரஞ்சோதியார் தம் திருவிளையாடற் புராணத்தில்.

கண்ணுதற் பெரும் கடவுளும்
கழகமோடமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த
பழந்தமிழ்

என பண்டைய பௌராணிக் கதையினைத்துணைக் கிழுத்துத் தமிழின் பெருமையைக் கூறுவதுடன் இன்னும் ஒரு படி மேற்சென்று

மண்ணிடைச் சில இலக்கண
வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப்படக் கிடந்ததா?
எண்ணவம் பாடுவோமா?

என ஏனைய மொழிகள் சிலவற்றைக் குறைத்து தமிழின் பெருமையைக் கிலாக்கின்றார். பரஞ்சோதி முனிவர் வாழ்ந்த காலம், வடமொழி ஆதிக்கம் தமிழ்மொழி மீது வெகுவாகக் கவிந்த காலம். இலக்கணக் கொத்து என்ற நூலை யாத்த ஈசான தேசிகர் தமிழ் வட மொழியின்றித் தனித்தியங்க முடியாது என்று கூறி

ஐந்தெழுத்தாலொரு பாடையென்று
அறையவும் நாணுவோர் அறிவுடையோர்

என்று தமிழ் மொழியை நையாண்டி செய்த சூழ்நிலையிலேதான் கீழ்வரும் கூற்று பரஞ்சோதி முனிவரின் வாயிலிருந்து பாய்கிறது.

தொண்டர் நாதனை தூதிடை
விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும்
என்பு பெண்ணுருவாக
கண்டதும் மறைக் கதவினைத்
திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபலச்
சொற்களோ சாற்றீர்?

பரஞ்சோதியின் மனக் கொதிப்பு பாடலிற் தெரிகிறது. வடமொழியா? தமிழா? சிறந்தது என்ற கேள்வியிலேயே தமிழின் சிறப்பைக் கூறிவிடும் கெட்டித் தனத்தையும் அதற்குத் துணையாக தமிழிசையால், நாயன்மார் புரிந்த அற்புதங்களை பற்றிய கர்ணபரம்பரைச் செய்திகளை தமிழ்ச் யெ;திகளாகக் கொள்வதையும் காணலாம்.


இதனுடைய தர்க்கரீதியான வளர்ச்சியாகத்தான் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் (1855-1897) தமிழைப் பரம்பொருக்கு ஒப்பிடுவதனைக் காணலாம்.

பல்லுயிரும் பலவுலகும்
படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்
இருந்தபடி இருப்பது போல்

இருக்கும் தமிழ்மொழி ஆரியம்போல் உலகவழக்கு அழியாது சீரிளமையோடு இருப்பதாக அவர் கூறுவார். இதனின்று தான் தமிழை அன்னையாக அதுவும் கன்னியாகக் கருதும் கருத்துருவம் உருவாயிற்று.

சுந்தரம்பிள்ளைக்கு இருபத்தி ஏழு வயது நடந்து கொண்டிருக்கையில் பிறந்த சுப்பிரமணியபாரதியார் (1882) தமிழைத் தாயாக வைத்து தமிழ்த்தாய் தமிழ் மக்களைப் பார்த்துப் புதிய சாத்திரம் வேண்டுமவதாகப் பாடுகிறார். இதைவிட செந்தமிழ் நாடு, தமிழ், தமிழ்மொழி வாழ்த்து, தமிழ்ச்சாதி, வாழிய செந்தமிழ் என்ற தலைப்புக்களில் தமிழர், தமிழர் சமூகம், தமிழ் மொழி பற்றியும் பாடியுள்ளார்.

கனக சுப்புரத்தினமான பாரதிதாசனில் (1891) இத்தமிழ் மொழி உணர்வு பிற மொழிப் பழிப்பாகவும், தமிழ் இன உணர்வு ஒருவகையில் தமிழ் வெறியாகவும் வெளிப்படுகிறது. இன்றைய கவிஞர்கள் சிலரிடம் இப்போக்குகள் இன்றளவும் காணப்படுகின்றன.

பண்டைய தமிழ் மன்னர்களின் பெருமைகளை கூறுகின்ற நிலையினின்று, இறைவனோடு தமிழை இணைத்து இறைவனே தமிழை வளர்த்தான் என்ற கதைக்கூடாக, ஏனைய மொழிகளை விட, தமிழே சிறந்தது என்று அதற்கு உயர்வு கற்பித்து, அதைப்பின்னர் எல்லையறு உயர் பரம்பொருள் நிலைக்கு உயர்த்தி, பின்னர் அதனைச் சீரிளமைத் திறம் குன்றாத கன்னியாக வியந்து, இறுதியில் தமிழ்த் தாயாகப் போன்றிவ வணங்குகின்ற தன்மை காலப்போக்கில் வளர்ந்து வந்தமையினையே சுருக்கமாக மேலே குறிப்பிட்டோம். தமிழ் நாட்டில் இன்று கடவுள் வாழ்த்து தமிழ் வாழ்த்தாகவே இருப்பதும் இங்கு நினைவு கூரற்குரியது.

தமிழ் உணர்விற்கான காரணம்

இத்தகைய தீவிர தமிழ் உணர்ச்சி தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட காரணம் யாது? தமிழின் பெருமைகளைக் கூறியது மாத்திரமன்றி அதனை ஏனைய மொழிகளை விட உயர்த்தி, தாயாக கருதும் நிலை ஏன் வந்தது. இதற்கான காரணத்தைத் தமிழர்களின் வரலாற்றிலே தான் தேட முடியும்.

வேட்டுவ நிலையினின்று, மந்தை மேய்க்கும் நிலைக்கு மாறி, நிலையாக ஓரிடத்திலிருந்து வேளாண்மை செய்து, கடல் கடந்து வாணிபம் செய்யும் நிலைக்கு உயர்ந்த புராதன தமிழரின் வரலாற்று வளர்ச்சியினையே குறிஞ்சி (மலை – வேட்டைக்காலம்) முல்லை (காடு – மந்தை மேய்ப்புக்காலம்) மருதம் (வயல் - வேளாண்மை செய்த காலம்) நெய்தல் (கடல் - வணிகம் செய்த காலம்) என்ற சங்க கால இலக்கியங்கள் தரும் பொருள் மரபு குறியீடாகக் காட்டி நிற்கிறது.

குன்றுகளிலும். மலைகளிலும் வாழ்ந்த தமிழ் இனம் கடற்கரை நோக்கி வளர்ந்த நாகரிக வரலாற்றை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எண்ணக்கரு (ஊழnஉநிய) காட்டி நிற்கின்றது என்பர் கமில்சுவலபில்.

வேட்டுவ நிலையில் குழுக்களாகவும், மந்தை மேய்க்கும் நிலையில் குலங்களாகவும் வாழ்ந்த தமிழினம், வேளாண்மை செய்யும் நிலையில் வேந்தர்களையும், கடல் கடந்து வியாபாரம் யெ;யும் நிலையில் முடியுடை மூவேந்தர்களையும், தம் தலைவர்களாகக் கொள்ளும் நிலைக்கு வளர்ந்தது. குலங்களும், குழுக்களும் தம்முட் தாமே பொருதிய நீண்டகால வரலாற்றில் எஞ்சிய மூன்று பெரும் குழுக்கள் தாம், சேர, சோழ பாண்டியராவர். தமிழ் நாட்டின் வட பகுதிச் சோழரின் கீழும், தென்பகுதி, பாண்டியர் கீழும். மேற்குப்பகுதி சேரரின் கீழும் வந்தன.

அதிகாரவலுவும், படைப்பலமும் மிக்க தமிழ் அரசாகள் அதிகார வலுவும், படைப்பலமும் அற்ற தமிழ் மக்களை ஆளத் தொடங்கினர். ஒரு வகையில் தமிழரைத் தமிழரே ஆண்டனர். இவ்வாட்சி கி.பி 4ம் நூற்றாண்டு வரை நடைபெற்றது.

கி.பி 436க்குப் பின் களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுகிறது. தமிழகத்தின் இருண்டகாலம் என களப்பிரர் ஆட்சிக் காலம் அழைக்கப்படுகிறது. இவர்கள் ஆட்சி கி.பி 6 ஆம் நூற்றாண்டுவரை நிலவுகிறது.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10 ஆம் ந}ற்றாண்டுவரை தமிழரல்லாதவரும் ப்ராக்ருத மொழிக்காரரும் முன்னாளில் சமணராயிருந்து பின் சைவர்களாக மாறியவர்களுமான பல்லவருடைய ஆட்சி நிலவுகிறது (பிற்காலத்தில் பல்லவர்கள் தமிழோடு தம்மை இணைத்துக் கொண்டனர். சாசனங்களைத் தமிழிற் பொறித்தமையும் 3 ஆம் நந்திவர்மன் தமிழ் நந்தி என அழைக்கப்பட்டமையும் இதற்குச் சான்றுகளாம், எனினும் பல்லவர்கள் அன்னியரே) இவ்வகையில் தமிழர்கள் ஆரம்பதில் தொடர்ச்சியாக 800 ஆண்டுகள் அந்நியராட்சியின் கீழ் இருந்தனர்.

கி.பி 10 ஆம் நூற்றாண்டிலே தான் தமிழர்களான சோழர்கள் மீண்டும் தமிழரை ஆட்சிபுரிய ஆரம்பிக்கின்றார்கள். இவர்களின் ஆட்சி கி.பி 13 ஆம் நூற்றாண்டுவரை நடைபெறுகிறது. கங்கையும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திருந்த செம்பியராகவும் தமிழ் உணர்வு கொண்டவர்களாகவும் அவர்களைப் பற்றிய மெய்கீர்த்திகளில் வர்ணிக்கப்படுகின்றார்கள்.

13 ஆம் நூற்றாண்டுடன் சோழப் பேரரசு வீழ்ச்சியடைய இஸ்லாமியர் ஆட்சியும், தொடர்ந்து தெலுக்கு மொழிபேசிய நாயக்கரது ஆட்சியும் தமிழ் நாட்டில் நடைபெறுகிறது. நாயக்கர் ஆட்சி 18 ஆம் நூற்றாண்டு வரை நடை பெறுகிறது. அதன் பின்னர் ஆங்கிலேயே மொழிபேசிய கிறிஸ்தவரான ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ்த் தமிழர் வருகின்றனர். 1947 வரை தமிழ் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியே நிலவியது.

1947 இந்தியா சுதந்திரம் பெறுகிறது. அதன் பின் இந்திய மத்திய அரசின் கீழ் மாநில சுயாட்சி நிலையில் தமிழர் தம்மைத் தாமே இந்திய சட்டநெறி களுக்கியைய ஆளுகின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட வற்றிலிருந்து கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னரும் கி.பி.10ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையுமே முன்னர் தமிழர் ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றது என்பது தெளிவாகின்றது.

கிறிஸ்தாப்தத்திலிருந்து இற்றைவரை ஒரு கணக்கெடுத்துப் பார்ப்பின் கிறிஸ்தாப்தத்தின் ஆரம்பத்திலிருந்து 400 வருடங்களும் இடையில் கி.பி 10ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டுவரை 400 வருடங்களுமாக தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சிசிறப்பாக 800 வருடங்களே நடைபெற்றதெனலாம். ஏனைய 1100 வருடங்களும் அந்நியர் ஆட்சியின் கீழும் குழப்ப நிலை மத்தியிலுமே தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததெனலாம். தமிழரை களப்பிரர், பல்லவர், நாயக்கர் (தெலுங்கர் மராட்டியர்) இஸ்லாமியர். ஆங்கிலேயர். பிரான்சுக்காரர் போன்ற அந்நிய இனத்தினரே ஆண்டுள்ளனர்.

பல்லவர், நாயக்கர் போன்றோர் தமிழ் மக்களுடன் இரண்டறக் கலந்த தமிழ் மன்னாகளாகக் தோற்றம் காட்டினும் அடிப்படையில் அவர்கள் அந்நியாகளே. இவர்களின் ஆட்சியினால் வடமொழி, தெலுங்கு, அரசு, ஆங்கிலம், ஆகிய மொழிகளின் செல்வாக்கும், பௌத்தம், சமணம், வீரசைவம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் செல்வாக்கும் தமிழ்மீது ஏற்பட்டது.

இடையிடையே பாண்டிய மன்னர் எழுச்சி பெற்றுத் தமிழ் ஆட்சி நடத்திய போதும் பெரும் போக்கான ஓட்டம் அந்நியராட்சியே.

அந்நியராட்சியின் கீழ் நீண்ட காலம் வாழும் ஓர் இனம் தன் தனித்துவத்தைக் காப்பாற்ற நினைத்தல் இயல்பு. அந்தப் பாதுகாப்புணர்வின் ஒரு வெளிப்பாடே தமிழுணர்வாகப் பிரதிபலித்தது எனலாம்.

தமிழுணர்ச்சி கொப்பளித்த பல்லவர் காலம், நாயக்கர் காலங்களில் அந்நியராட்சி மாத்திரமல்ல வட மொழித்தாக்கமும் தமிழிற் பெருமளவு ஏற்பட்டது. பல்லவர் காலத்தில் தமிழை வளம்படுத்த உதவிய வடமொழி, நாயக்கர் காலத்தில் தமிழை ஒதுக்;கி விடுமளவுளக்குச் செல்வதனையும், காணலாம். எனவே தான் பல்லவர் காலத்தில் வடமொழி – தமிழ்மொழி சமரசமம், நாயக்கர் காலத்திலும் அதன் பின்னரும் வடமொழி – தமிழ்மொழிச் சண்டையும் தமிழ்ப் புலவர்களின் பாக்களில் இடம் பெறலாயின. வடவர் ஆதிக்கம், ஆங்கிலமொழி ஆதிக்கம் அபரிதமாகக் காணப்படும் இருபதாம் நூற்றாண்டில் தமிழுணர்ச்சி மேலும் கொப்பளிப்பதை இதன் பின்னணியிற்தான் விளங்கிக் கொள்ள முடியும்.

அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தின் ஒரு வெளிப்பாடே தமிழ்மொழிப் பாதுகாப்புப் போராட்டமுமாகும். பல்லவர் காலத்தில் போராட்டத்தில் முன்னணி வீரர்கள் சம்பந்தரும், அப்பரும், நாயக்கர் காலத்தில் குமர குருபரரும் பரஞ்சோதிமுனிவரும், ஆங்கிலேயர் காலத்தில் சுந்தரம்பிள்ளையும், பாரதியும், பாரதிதாசனும். இவர்கள் அனைவருமே தமிழ்மொழியை – தமிழ் உணர்வை முன்னிறுத்தி அவ்வுணர்வூக்கத்தில் தமிழர்களை அந்நியத்திற்கு எதிராக அணிதிரட்ட முயன்றனர். அந்நியராக இங்கு வந்தோர் சாதாரண மக்களல்ல. ஆள்பவமும், அதிகாரபலமும் பணபலமும் மிக்க நிலவுடமையாளர்களே அவரை எதிர்த்து மக்களின் மக்களின் ஆதரவுடன் தம் அதிகாரம் நிலை நிறுத்த முயன்றோரும் தமிழர் மத்தியில் இருந்த ஆள் பலமும் அதிகாரபலமும் பெற்ற நிலவுடமையாளாகளே. இரு அதிகார வர்க்கத்திற்கிடையே நடைபெற்ற போரில் மக்களை அணிதிரட்டும் ஆயுதமாக வலிமை வாய்ந்த ஆயுதமாகத் தமிழ் திகழ்ந்தது.

சமூகத்தின் அடிக்கட்டுமானத்தில் (டீயளiஉ ளுவசரஉவரசந) உள்ள வர்க்கங்களுக்கிடையே அதிகாரத்தைக் கைப்பற்ற முனைகின்ற வர்க்கப்போரே வரலாற்றினை இய்ககுகின்றது என்பது ஒரு கொள்கை. இவ்வர்க்கப் பொரில் மேற் கிளம்புகின்ற மேற் கட்டுமானத்தைச் சேர்ந்தவையே கலை, இலக்கியம், தத்துவம் என்பவை.

வணிக வர்க்கத்தினரின் சமயமான சமணத்திற்கு எதிராக நிலவுடைமையாளரின் சமயமான சைவத்தை நிலை நிறுத்த எழுந்தபோரே சமண- சைவப்போராக வெளிக்கிளம்பியது. இதில் சைவம் தனக்கு ஆதரவாக தமிழை இணைத்துக் கொள்கிறது.

சமஸ்கிரத நெறியை முன்னெடுத்தவர்களாக நிலவுடைமையாளர்களும் தெலுங்கருமான நாயக்க நிலப்பிரபுக்களுக்கு எதிராக தமிழ் நிலப்பிரபுக்கள் தம் மடாலயங்களை செல்வாக்கு மிக்கதாக வைக்க எடுத்த முயற்சியில் நாயக்கர் காலச் சைவ, வைணவ எழுச்சியுடன் தமிழும் இணைந்து கொள்கிறது.

ஆங்கிலேயரான வணிகருக்கு எதிராகவும், அவர் மதமான கிறிஸ்தவத்திற்கெதிராகவும் தமிழ் நிலவுடமையாளர் தொடுத்த போரில் சைவம் முனைப்பாகச் செயற்பட்டது. சைவத்தோடு தமிழை இணைத்து சைவமும் தமிழும் என்ற கோஷம் முனைப்பாயிற்று.

இந்திய சுதந்திரப் போரும் இவ்வாறே. இந்தியாவைச் சுரண்ட வந்த அந்நியரான ஆங்கில வணிகருக்கு எதிராக இந்தியாவின் நிலவுடைமையாளரும் வணிகரும் படித்த மத்திய தரவர்க்கத்தினரும் இணைந்து நடத்திய யுத்தமே இந்திய சுதந்திரப் போர்.

இந்திய பொதுமக்களை தம்முடன் இணைத்துக் கொள்ள இந்தியத் தேசியம், பாரதத்தாய், வந்தே மாதரம் போன்ற கருத்துக்களையும் இந்தியாவின் பழம் பெருமைகளையும் போராட்டத்தின் முன்னணி வீரர்கள் மக்கள் முன் கொண்டு சென்றனர். (அதிகாரம் கைக்கு வந்ததும் இந்திய முதலாளிகளும் நிலவுடமையாளர்களும் போராட்டத்தின் உந்து சக்திகளாக நி;ன்ற சாதாரண மக்களைப் பெரிதும் கவனிக்காது விட்டது மாத்திரமன்றி தொடர்ந்து அதே கோஷங்களைக் கூறிச் சுரண்டுவதையும் காணலாம்.)

இத்தகைய அந்நிய எதிர்ப்புப் போர்களில் மொழியுணர்வு, சமய உணர்வு என்பன பயன்படுத்தப்படும். இத்தன்மை இரண்டு போக்குகளைக் கொண்டதாக அமையும். ஒன்று முற்போக்கு இன்னொன்று பிற்போக்கு, அந்நிய ஆட்சி முறைகளை எதிர்த்துச் சுதேசிய ஆட்சி முறையினை மீண்டும் நிலைநாட்ட எடுக்கும் முயற்சி முற்போக்கு. அம்முயற்சி கைகூடிய பின் அதேமொழி, சமய உணர்வை தம்மோடு சேர்ந்து பாடுபட்ட மக்களை மேலும் சுரண்டப் பயன்படுத்துதல் பிற்போக்கானதாகும். வரலாற்றில் இவ்விரு அம்சங்களுக்கும் சான்றுகளுண்டு. ஆளுமையும், தூரநோக்கும், சரியான பார்வையும் கொண்ட தலைவர்கள் முற்போக்கான தேசிய உணர்வை மேலும் வளர்த்து முற்போக்கான திசைகளை நோக்கிச் செல்வர்.


தமிழ் உணர்வும் தமிழ்த் துறவிகளும்

இத்தகைய ஓர் அந்நிய எதிhப்புப் போரில் துறவிகளும் சமயத் தலைவர்களும் முன்னிற்பது வரலாற்றியற்கை. சிறப்பாக தென்னாசியாவிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும் மதஸ்தாபனங்களும் அதன் தலைவர்களும் மிக வலிமை வாயந்த சக்தியினராவர். ஆத்மீகத்திலிருந்து அரசியல் வரை அவர்கள் செல்வாக்கு அளப்பரியது. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கன்று.

சமணத் துறிவியான இளங்கோவடிகள் தமிழ்ப்; பற்று மிக்கவராயிருந்தார். சமயத் தலைவர்களான சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் தமிழ்மீது பற்றுமிக்கோரே. குமரகுருபரர், பரஞ்சோதிமுனிவர், போன்ற சமயத் தலைவர்களும் தமிழ்மீது உணர்ச்சி பூர்வமான பற்றுடையயோரே. இராமலிங்க சுவாமிகள் சமயப்பற்று மிக்கவராயிருந்தார். ‘ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்’ என்று பிரசாரம் செய்தார்.

இவர்கள் அனைவருமே ஒருபார்வையில் அனைத்தும் துறந்து துறவிகள். சொத்து, சுகம், பந்தம், பாசம் அனைத்ததையும் துறத்தலே துறவின் முதற்படி. பற்றுக்களை அகற்றியவர்கள் இவர்கள் பற்றற்றான் பற்றினைப் பற்ற பற்றுக்களை அகற்றிய இவர்கள், தமிழ்ப்பற்றையும் மாத்திரமும் அகற்றமுடியாதவரானர்கள். துறத்தலுக்கு மாறாக தமிழ் மீது பாசமிக்கவரானார்கள். தமிழே அவர்களின் சொத்தாயிற்று. எவ்வளவு ஒதுங்கிச் சென்றாலும் நிஜ உலகின் யதார்த்த வாழ்வினின்று யாரும் தப்பிச்சென்று விட முடியாது என்பதற்குப் பிண்டப் பிரமாணமான உதாரணங்கள் இவர்கள்.

வாழையடி வாழையென வந்த இத் திருக் கூட்டத்தின் வழியில் துறவியான விபுலாநந்தரும் இணைந்து கொண்டார். தமிழைத் துறக்காத துறவியானார். தம் முன்னோர்களின் தமிழுணர்வினின்று விபுலாநந்தர் பல வகைகளில் மாறுபடுகின்றார். விபுலாநந்தரின் தமிழ் உணர்வு பாரம்பரியச் சொத்தாயினும் அவரது காலச் சூழல் அவர் தமிழுணாவையும், அதன் போக்கையும் நிர்ணயித்த வலுவான காரணிகளுள் ஒன்று. விபுலாந்தரின் காலச் சூழலை அறிதல் மூலம் அவரின் தமிழுணர்வின் மூலவேர்களை அறிந்து கொளள் முடியும்.

19ம் நூற்றாண்டின் பின் தோற்றம் பெற்ற தமிழ் உணர்வும் அதற்கான காரணங்களும்.

ஆங்கிலேயரது ஆட்சி இலங்கையிலும் இந்தியாவிலும் 19ம் நூற்றாண்டில் ஆங்கிம் படித்த மத்தியதர வர்க்கத்தினரை உருவாக்கி விட்டது. ஆங்கிலேயரது முதலாளித்தவப் பொருளாதாரக் கொள்கைகள் தமிழ்ச் சமூகத்தின் படிமுறை ஒழுங்கமைப்பை (ர்சையஉhல) மெல்ல மெல்ல மாற்றவுமாயின. இதனால் ஆங்கிலங் கற்றவர்களும், நிலவுடiமையாளர்களுமான பிராமணர் அல்லாதார் ஆதிக்கம் தமிழ் நாட்டில் ஏற்படலாயிற்று. இலங்கையிலும் ஆங்கிலம் கற்ற பிரமணரல்லாத உயர் வகுப்பினரிற் கணிசமானோர் கிறிஸ்தவர்களாயின. கல்வி மதம் மாற்றம் கருவியாயிற்று. கல்வியுலகிலும் நிர்வாக உலகிலும் ஆங்கிலம் கற்ற கிஸ்தவராதிக்கம் நிலவியது.

ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றம்

பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக வேளாள வகுப்பினரின் எழுச்சியின் பிரதிபலிப்பாகவே மறைமலையடிகள் போன்றோரால் சைவசித்தாந்தம் தமிழர் மதமென நிறுவப்படுகிறது. தத்தவ உலகில் தமிழர் மதமாகச் சைவ சித்தாந்தமும் இலக்கிய உலகில் தமிழர் இலக்கியங்களாக எட்டுத் தொகை, பத்துப் பாட்டு. தேவார திருவாசகங்களும் கூறப்பட, அரசியல் உலகில் தமிழ் நலன் காக்கும் அரசியற் கட்சியாக ஜஸ்டிஸ் கட்சி தோற்றம் பெறுகிறது. தமிழர் கட்சி என்பதனைவிட திராவிடர் கட்சி என்பதே அதற்குப் பொருந்தும் ஏனெனில் பிராமணரின் ஆதிக்கத்தின் தாக்கத்திற்குள்ளான தென்னாட்டு முக்கியஸ்தர்கள் பலர் அதனுள் இருந்தனர். இக்கட்சிக்கு ஈ.வெராவின் ஆதரவு இருந்தது. 1920இல் காங்கிரசிலிருந்து பிரிந்த திராவிடக்கழகத்தை தொடக்கிய திராவிடர் இயக்கத்தின் தந்தையென கருதப்படும் ஈரோடு வெங்கடப்பன் இராமசாமியான ஈ.வே.ரா. தெலுங்கர் என்பது இங்கு நினைவு கூறியது.

இலங்கையில் ஆங்கிலக் கிறிஸ்த்தவர்கட்கு எதிராக ஆறுமுக நாவலர் போன்றோர் சமய இலக்கிய உலகிலும் இராமனாதன் போன்றோர் அரசியல் உலகிலும் செயற்படுகின்றனர். சைவத்தோடு தமிழை இணைத்துச் சைவமும் தமிழர் என்ற கோட்பாட்டை நாவலர் முன்வைத்தார். சாதி அமைப்பில் முன்னணியில் நின்ற வேளாளரே இத் தமிழுணர்வை ஆரம்பத்தில் ஈழத்தில் முன்னெடுத்தனர். இவ்வகையில் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் தேசிய வாதம் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் சைவத்தைத் தன்னுடன் இணைத்து சமூகத்தின் உயர் நிலையில் வாழ்ந்த வேளாளர் நலன் காக்கும் வாதமாக உருக் கொண்டது.

எனினும் தமிழ் நாட்டுத் தமிழ்த் தேசிய வாதத்தில் இன்னொரு பண்புமுண்டு. தமிழ் நாட்டில் வேளாளர் தவிர்ந்த முதலிமார். நாயுடு, நாடார், வன்னியர் போன்ற வகுப்பினர்கள் - இன்னொருவகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அல்லாதவர்கள் - ஆங்கிலம் கற்றதுடன் ஆங்கிலேயரின் பொருளாதார கொள்கை காரணமாகப் பொருளாதார பலமிகக்வரானமையினால் பிராமண ஆதிக்கத்தினின்று தம்மை விடுவிக்க திராவிடப் பண்பாட்டை பெரிதுபடுத்தினார்கள்.
சாராம்சத்தில் தமிழ் நாட்டுத் தேசிய வாதத்தின் ஒருகிளை பிராமண ஆரிய எதிர்ப்பாகவும், இன்னொரு கிளை பிராமணர், வேளாளர் அல்லாதார் பிராமண ஆதிக்க நிலையினின்று திராவிடப் பண்பாட்டுப் பெருமைபேசி அதனாதிக்கத்திலிருந்து விடுவிக்கப் பிரயத்தனம் செய்யும் முயற்சியாகவும் வளர்ச்சியுள்ளது.

இலங்கையில் தமிழ்த் தேசிய வாதம் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதாகவும், சைவப் பெருமைபேசி, கிறித்தவமத்திலிருந்தும் அவர்தம் ஆதிக்கத்திலிருந்தும் தம்மை விடுவிக்கும் தன்மை கொண்டதாகவும் வளர்ச்சி பெற்றது.

இவ்வண்ணம் வளர்ச்சி பெற்ற தமிழ்த் தேசிய வாதத்தின் தொடர் வளர்ச்சி முக்கியமானது.

தமிழ் நாட்டின் தமிழ் தேசிய வாதம் திராவிடர் தனித்துவம் பேசியதிலிருந்து. தமிழர் தனித்துவம் பேசும் தன்மைக்கு மாறி, பின் மாநில சுயாட்சிக்குரிய அதிகாரங்களைப் பெற்று தமிழன் தமிழனை ஆள வேண்டும் என்ற போக்குடையதாக விரிந்தது.

இலங்கையில் தமிழ்த்தேசிய வாதம் பின்னாளில் சிங்கள – பௌத்த எதிர்ப்பியக்கமாக மாறி தமிழர் தமிழரை ஆழும் தனி நாடுகோரும் போக்குடையதாக விரிந்தது.

தமிழ்த்தேசிய வாதத்தின் மையக் கருதமிழர் தனித்துவத்தையே வலியுறுத்தியது. தமிழர் தத்துவமாக சைவ சித்தாந்தை மறைமலையடிகளும், ஆறுமுகநாவலரும் கொள்ள. சுயமரியாதைக் கழகத்தினர் திருக்குறளைக் கொண்டனர். பிராமணரல்லாதாருக்கிடையே நிலவிய உள் முரண்பாடுகளின் வெளிப்பாடே இது. இதுதனியாக ஆராய்வுக்குரியது.

தமிழரின் தனித்துவத்தை அரசியல் வடிவமாக ஆக்கும் வளர்ச்சிக்கு 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே அடித்தளமிடப்பட்டு விட்டது.

பண்டைய இலக்கியங்களின் பதிப்புமுயற்சிகள்

பண்டைத் தமிழ் இலக்கியங்களை எட்டு வடிவினின்று எழுத்து வடிவிற்குக் கொணர்ந்த இம் முயற்சி 18ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. சிறப்பாகச் சங்க இலக்கியப்பதிப்பும் குறிப்பாக : ஏனைய இலக்கியப் பதிப்புகளும் தமிழ்த்தனித்தவத்தை வெளிப்படுத்தும் ஆதார பூர்வமான கருத்துக்களை முன்னணி வீரர்கட்கு அளித்தன. உ.வே. சாமிநாதையர் ( ), சி.வை.தாமோதரம்பிள்ளை ( ) ஆகியோர் முயற்சிகள் இவ்வகையில் விதந்து குறிப்பிடத்தக்கவை. இவர்களும் தமிழகத்தவரும், ஈழத்தவரும் அடங்குவர். ஈழத்தில் இவ் விலக்கியங்களைக் குறிப்பாகச்சைவ இலக்கியங்களை ஆறுமுக நாவலர் சைவ எழுச்சிக்கு ஓர் ஆயுதமாகப் பாவித்தார். கந்தப்புராணமும் திருவிளையாடற்புராணமும், பெரியபுராணமும், மக்கள்மயப்படுத்தப்பட்டன. அவையே தமிழ் இலக்கியங்களின் பொட முடிகளாகக் கணிக்கவும் பட்டன. தமிழ் நாட்டில் சுய மரியாதைக் கழகத்தினர் சங்க இலக்கியங்கள், திருக்குறள் என்பனவற்றைப் பெரிதுபடுத்திப் பேசினர்.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்

தமிழர் தனித்துவம் பேசிய தமிழ் ஆராய்ச்சியாளருக்கு உற்சாகம் தந்த ஆய்வு ஒன்று 1856 இல் நூலாக வெளிவந்தது. அதுவே கால்டுவெல் பாதிரியார் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (யு ஊழஅpயசயவiஎந புசயஅஅநச ழக வாந னுசயஎனையைn டயபெரயபநள) என்ற நூலாகும். தமிழ் ஆராய்ச்சியின் முதல் தலைமறையின் தனி நபராக விளங்குபவர் இவர் என்று யு.ஏ. சுப்பிரமணிஐயர் இவரைக் கூறுவர். 6

மாக்ஸ்முல்லர் போன்றோர் திராவிடரின் தனித் தன்மையை கூறியிருப்பினும் முழுமையான ஆராய்ச்சி நோக்குடன் கூறிய முதல் நூல் இதுவே திராவிடமொழி வடமொழியினின்று வேறானது. தனித்து இயங்க வல்லது என்று ஆணித்தரமாக நிறுவிய இவரை திராவிட மொழி அறிஞர் எல்லாக் காலத்திலும் நன்றியுடன் போற்றுவர் என்பர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையவர்கள்.7

“திராவிட மொழிகள் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழியாக நிலை பெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்து விட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும்” 8 என்பது கால்டுவெல் கூற்று. தமிழின் தனித்துவம் வேண்டி அதற்கான இயக்கங்களை ஆரம்பித்தோர்க்கு இவ் ஆராய்ச்சி வரப்பிரசாதமாயிற்று. பிற்காலத் தமிழ் ஆராய்ச்சியை கால்டுவெல் கொள்கைகள் வெகுவாகப் பாதித்தன.

சிலப்பதிகாரப் பதிப்பு

இத்தமிழ்த் தேசிய உணர்வு என்ற நெருப்புக்கு நெய்யாக அமைந்தவற்றுள் சிலப்பதிகாரப் பதிப்பும் ஒன்றாயிற்று. 1892 இல் உ.வே. சாமிநாதையரால் சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்படுகிறது. ஐயருக்கு முன்னாலேயே சுப்பராயச் செட்டியாரும் (1872) ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும் (1876) புகார்க் காண்டத்தை மட்டும் முறையே மூலமாகவும் உரையுடனும் வெளியிட்டிருந்தனர். உ.வே. சாமிநாதையர்தான் நூல் முழுவதையும் உரையுடன் பதிப்பித்தார்.

1892 இல் சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்பட்ட போது அக்காலப்பகுதியில் அது நன்கு அறியப்படவில்லை. பின்னாளில் இது ஆராய்ச்சியாளரைப் பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக வி. கனகசபைப்பிள்ளை (1855-1906) பெ. சுந்தரம்பிள்ளை ஆகியோர் சிலப்பதிகாரத்தை பெருமளவு பயன்படுத்தினர். கனகசபைப்பிள்ளையின் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் தமிழ் உணர்வு மிக்க ஆராய்ச்சியாளருக்கு முன் மாதிரியாயிற்று.

சிந்தவெளி நாகரிகம் கண்டுபிடிப்பு

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண ஆராய்ச்சி தந்த திராவிட உணர்வை, சிலப்பதிகாரப் பதிப்பு இன்னும் வேகமூட்டியது. பண்டைத் தமிழ் நூற்பதிபுகள் தமிழுணர்வுத் தீயை விசிறும் காற்றாடிகளாயின தமிழ்த் தேசிய வாதத்திற்கு இவை ஓர் அறிவியல் பின்னணியைத் தந்தன. இந்த உணர்வை மேலும் ஆதாரபூர்வமாக்கியது 1925 இல் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம். ஆரியர் வருமுன்னரே இந்தியாவில் ஒரு நாகரிகம் இருந்தது என்றும் அது கி.மு. 3000-1500க்கு மிடைப்பட்ட தென்றும் கூறப்பட்டது. அது திராவிடரின் நாகரிகம் என்ற கருத்தை பாதர் ஹெரஸ் முன்வைத்தார். இந்த புதை பொருட் சான்று தமிழ் ஆராய்ச்சியாளருக்கு மேலும் உற்சாகம் தந்தது. தமிழினம் பண்டைய இனம், தனித்துவமான இனம், ஆரிய இனத்தினின்று மாறுபட்ட இனம் ஆரியர் வருமுன்னரேயே பெருநாகரிகம் பெற்று வாழ்ந்த இனம் என்று சொல்ல தமிழ் ஆராய்ச்சியாளருக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாகியது சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பு.

ஆரிய நாகரிகத்திற்கு மறுதலையாகத் தமிழர் நாகரிகத்தையும், தமிழர் உயர்வையும் நிறுவ முயன்றனர் தமிழ் அறிஞர் பலர் பூரணலிங்கம்பிள்ளை (1866-1947) கா. சுப்பிரமணியபிள்ளை@ மறைமலையடிளென்ற வேதாசலம்பிள்ளை, கே.என். சிவராஜபிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, ஒளவை துரைசாமிப்பிள்ளை, சோமசுந்தரம்பிள்ளை, எஸ். பவானந்தபிள்ளை போன்ற ‘பிள்ளைமார்’ அளவிலும் வடிவத்திலும் பிராமணத் துவேஷத்தையும் தமிழ்த் தூய்மையையும் பேணினர்.

வி.கே. சூரியநாராயண சாஸ்திரியார் தமிழ் நாடகக் கலை பற்றி நாடகவியல் என்ற பெயரில் சாஸ்திர நூலொன்று யாத்தார்@ ஏபிரகாம் பண்டிதர் தமிழிசையை விளக்கி கர்ணமிர்தசாகரம், கர்ணாமிர்த சாகரத்திரட்டு என்ற நூல்களை வெளியிட்டார். சரித்திர ஆசிரியர்களாக இருந்தோர் கூட இத்தகைய பின்னணிகளின் செல்வாக்கிற்குள்ளாயினர் என்பதற்கு பின்வரும் கூற்று சான்றாகும்.

தமிழ் நாட்டின் பெருமையே பெருமை
… எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாட்டில் முன்னர் தென்னாட்டில் மக்கள் வசித்து வந்தனர். தென்னாட்டிலிருந்து தமிழ் நாகரிகம் உரோமபுரிக்கும். கிரேக்க நாட்டிற்கும் பரவியது. இன்னும் தக்கிணபீட பூமியைச் சேர்ந்த வேட்டுவர் என்ற குறிஞ்சி நில மக்கள் யவன தேசத்திற்குச் சென்று தங்கள் அரசவை நிலைநிறுத்தித் தங்கள் பெயரையும் அந்நாட்டிற்குக் கொடுத்தனர்”

இந்திய வரலாற்றை மட்டுமன்றி, மேனாட்டு வரலாற்றையும் ஓரளவு அறிந்திருந்த, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியராயிருந்த வி.ஆர். கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியராயிருந்த வி.ஆர். ஆர் தீஷிதர் கூசாது தமிழ் மக்கள் யவன தேசத்திற்குச் சென்று தங்கள் அரசை நிறுவினர் என்னும் பொழுது ஐரோப்பிய வரலாறு அர்த்தமற்றதாகிவிடுகிறது.” என்பர் கைலாசபதி.

இத்தகையதொரு தமிழுணர்ச்சி மீதூரப் பெற்ற சூழலில் தமிழ் ஆராய்ச்சியில் மூன்று வித போக்குகள் தலையெடுத்தன.

ஒன்று, தமிழின் பழமையைப் புகழ்ந்துபேசுவதும், அதன் தனித்துவத்தையும், சிறப்பையும் ஆய்வுகள் மூலம் சிலாதித்து உயர்த்துவதுமான ஒரு போக்கு.

இரண்டு, தமிழ் மொழி வடமொழியினின்று தோன்றியது. அதற்கு அத்தகையதொரு பழம் பெருமையில்லை. வடமொழித்தொடர்பே தமிழ் மொழியை வளம் படுத்தியது என்ற ஒரு போக்கு.

மூன்று, இந்த இரண்ட உணர்ச்சி முனைகளுக்கும் இடையில் நிதானமாக அறிவு வழி நின்று தமிழர் வரலாற்றை, இலக்கியங்களை ஆராயும் போக்கு. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றோர் இதற்கு உதாரண புருடர்களாவர்.

இம் மூன்று போக்குகளுக்குமான சமூகவியற் காரணங்கள் தனியாக ஆராயப்படவேண்டியவை.

இம் மூன்று போக்குகளிலும் விபுலாநந்தரின் ஆய்வுகள் முதலாவதுபோக்கினைச் சார்ந்தனவாகவே பெரும்பாலும் அமைந்திருந்தன. இப் போக்கில் வரும் ஆய்வுகளே பிரபல்லியமாயின. அக்காலகட்டத்தில் தோன்றி வளர்ந்த அக்காலச் சமூக உறவுகளுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் அது உவப்பானதாக இருக்கவே அத்தகையோரே தமிழ் அறிஞர்களாகவும், அத்தகைய ஆய்வுகளே தமிழ் ஆராய்ச்சி எனவும் கணிக்கும் ஒரு செல்வாக்குமிக்க போக்கு உருவானது. இந்த அகண்ட பின்னணியில் விபுலாநந்தரைப் பொருத்திப் பார்க்கையில் அவரின் தமிழுணர்வின் மூலவேர்களையும் தனித்துவத்தினையும் கண்டு கொள்ளலாம்.

வரலாற்றுப் பின்னணியில் விபுலாநந்தர் பங்கும், காலம் அவர் கருத்துக்கள் மீது செலுத்திய தாக்கமும் களவியலுரைகாரர் வழியில் விபுலாநந்தர்.


விபுலாநந்தர் தமிழ் மொழியை இறையனார் கள வியலுரைகாரரின் வழியில் நின்றே ஆரம்பத்தில் நோக்குகின்றார்.

“இறையனார் களவியலுரையில் தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை தமிழை இந்து மயப்படுத்துவதற்கான தமிழை இந்து மயப்படத்துவதற்கான – முக்கியமாக அதனைச் சைவமரபின் ஓரங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.” 10.

என்பர் . கா.சிவத்தம்பி. சமண, பௌத்தமதங்களை சைவ. வைஷ்ணவ மதங்கள் குரோதத்துடன் எதிர்த்துப் போராடிய ஒரு காலத்தில் இக்கதை உருவாகியிருக்கலாம் என்பது ஆராய்வாளர் கருத்து. சமணரின் திராவிட சங்கத்திற்கு மறு தலையாக உருவாக்கப்பட்ட கருத்துருவே தமிழ்ச்சங்க ஐதிகம் என்ற கருத்தை எம். சேஷகிரி சாஸ்திரி (1894) தொடக்கம் சோ. கேசவன் வரை (1980) பலர் பல்வேறு ஆதாரம் காட்டி நிறுவியுள்ளனர். சமணரோடு தொடர்புற்றிருந்த தமிழை@ சைவத்தோடு இணைக்க சைவத்தமிழ் மக்கள் செய்த முயற்சியைப் போலவே தமிழ்நாட்டில் வாழ்ந்த பௌத்த தமிழர்களும் தமிழைத் தம்மதத்தோடு இணைக்க முயன்றுள்ளனர். வீரசோழிய ஆசிரியரான புத்தமித்திரனார் மகாயான பௌத்த பிரிவினைச் சார்ந்தவர். அவர் தமிழை அவலோகீஸ்வரரே அகத்தியருக்கு உபதேசித்தார் என்கிறார்.

“ஆயும் குணத்து அவலோகிதன்பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தான் தமிழ்”
(வீரசோழியம் - பாயிரம் 11)

இதன்படி தமிழருக்கு அகத்தியன் தந்ததமிழ் அவலோகீஸ்வரர் தந்ததாகும். அகத்தியனைத் தமிழ் முனியாகக் காணும் சைவரும், பௌத்தரும் அவருக்குத் தமிழ் உரைத்தவர் யார் என்பதில் தத்தம் வழி நிற்பதனைக் காணுகிறோம். வீரசோழிய ஆசிரியரின் கூற்று ஒரு வகையில் தமிழை; சிவனுடன் தொடர்புபடுத்திய தற்கான பதில் குறிப்பாகும்.

தமிழைத்தத்தம் இறைவர்களே வளர்த்தனர் என்ற கருத்து சமயச் சண்டைகள் உக்கிரமாக நடைபெற்ற அக்காலத்தில் இருத்தல் இயல்பே. உண்மையில் மொழி என்பது மனித இனவளர்ச்சியோடு உருவாகியதாகும். தம் கருத்தக்களைப் புலப்படுத்த, தம் நடைமுறைக் கூடாக மனிதன் உருவாக்கிய அற்பதமான சாதனமே மொழி. இம் மொழிக்கண்டுபிடிப்பு மனித வரலாற்றில் ஒரு பாய்ச்சலாகும். வளர்ச்சியூடே அவன் அனுபவம் பெற்ற அவ்வனுபவத்தின் விளைபொருளாகவே இலக்கியங்களும் அதைத் தொடர்ந்து இலக்கணங்களும் உருவாகின. இத்தகைய விஞ்ஞானபூர்வமான கருத்துக்கள் இன்று நிறுவப்பட்டதுடன் அந்தவகையிலேயே ஆராய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் ஆராய்ச்சி குநை;தை நிலையில் இருந்த அக் காலகட்டத்தில் சமயச் சார்பான ஐதீகங்கள் தமிழ் பற்றித் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த ஐதீகங்கள் இன்று மிகச் சிலரையே பிடித்திருப்பினும் அன்று பெரும்பாலான தமிழ் அறிஞர்களைப் பிடித்திருந்தது.

1894 இலிருந்த சங்கம் பற்றிய மறதலையான ஆராய்வுக் கருத்துக்கள் எழலாயின. றொபர்ட் கால்டு வெல் (1856) சி.வை. தாமோதரம்பிள்ளை (1881) வி.கோ. சூரிய நாராயண சாஸ்தி (1870-1902) போன்றோர் வித்தியாசமான கருத்துருவங்களை இலக்கிய வரலாற்றில் வைத்த ஒரு சூழலிலேதான் சபாபதி நாவலரின் திராவிடப் பிரகாசிகை (1899) வெளிவருகிறது. தமிழைச் சைவம் சாராத நோக்கில் விளக்குவதற்குத் தன் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் சபாபதி தன் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் சபாபதி நாவலர் தமிழ் இலக்கண, இலக்கிய, மெய்யியல் பாரம்பரியங்களை சைவசித்தாந்தியாக நின்று எடுத்து விளக்குகின்றார்.

சபாபதி நாவலரின் கருத்துக்கள் பிற்காலச் சைவத் தமிழ் அறிஞர்களின் கருத்துக்களைப் பெரிதும் பாதித்தன தமிழ் நாட்டில் ஆளும் வர்க்கமாகும் முயற்சியில் வேளாளர் போராடி வந்த இச் சூழலில் தமிழரின் தத்துவமாக சைவமே முன்னிறுத்தப்பட்ட பின்னணியில் சபாபதி நாவலரின் கருத்துக்கள் சமூகச் செல்வாக்குப் பெற்றமை ஆச்சரியமன்று. விபுலாநந்தர், தொடக்கம் பண்டிதமணி வரையுள்ள சமயச் சார்புமிக்க அறிஞர் அனைவரும் இக்கருத்துக்களின் செல்வாக்கிற் குட்பட்டவர்களே.

அன்பினைந்திணையரை என்னும் தன் கட்டுரையில் விபுலாந்தர், சபாபதி நாவல் கருத்துக்களை அடியொற்றியே செல்கிறாh. இறையனாh களவியல் என்னும் நூலை இறைவனே செய்தான்@ சிவனின் மகனாகப் புராணத்திற்கு கூறப்படும் முருகனெ மூங்கைப் பிள்ளையான உருத்திர் சன்மனாக வந்து, தன் மெய்ப்பாட்டினால் நக்கீரர் உரையே சிறந்த உரை எனத் தீர்ப்புக் கூறினான்@ என்பன விபுலாநந்தர் கருத்துகளும் ஆகும். 11

மாணிக்கவாசகப் பெருமான் ஐந்திணைக் கோவையை முற்றுவிக்க, அதனைத் திருச்சிற்றம்பலமுடையார் தமது அருமைத் திருக்கரத்தினால் எழுதித் தந்தார் என்ற சமயம் சார் கர்ண பரம்பரைக் கதையினையும் இக்கட்டுரையினில் விபுலாநந்தர் கூறுகிறார்.12

இங்கு, இறையனார் களவியலுரை ஐதீகத்தினை ஏற்றோர் மரபு நின்று தமிழைச் சிவனுடனும் முருகனுடனும் தொடர்பு படுத்துவோர் கருத்துடன் - ஒரு வகையில் சைவத் தமிழ் மரப வழிக்கருத்துடன் விபுலாநந்தர் உடன்பாடும் பண்பினைக் காணுகின்றோம்.

சங்க இலக்கிய அகப்பொருள் மரபினை சைவ தத்தவக் கண்கொண்டு நோக்கும் போக்கும் சபாபதி நாவலரிலிருந்து வேகமாகக்; கிளைவிடுகிறது. உலகியற் காதலுக்கு பேரின்ப விளக்கமளிக்கும் இப்போக்கு வரலாற்றுக்கூடாக வளர்ந்து வந்தமைக்கு வலுவான காரணங்களுண்டு. பௌத்த சமணரின் அற ஒழுக்கக் கருத்துக்கள் சமூகத்தில் மிகச் செல்வாக்குப் பெற, உலகியல் சார்ந்ததும், பண்டைய நெறிமுறைகளுமான அக, புற வாழ்க்கை முறைகள் இரண்டாம் பட்சமாகக் கருதப்பட்டன. இந்நிலையில் அவற்றிற்கு ஆன்மீக விளக்கமும், தெய்வத் தன்மையும் ஏற்றுதல் மூலமே அதனை மீண்டும் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ள வைக்கவும் உயர் நிலையில் வைக்கவும் முடியும். தாசிகள் மத்தியில், 19ஆம் நூற்றாண்டில் சீரழிந்து, சதுராட்டம் என்ற பெயர் பெற்று இருந்து பரதநாட்டியத்தை அன்மீக நெறி நின்று விளக்கி, இறையனுபவத்துடன் இணைத்து உன்னத கலையாகப் பரவச் செய்த ருக்மணி அருண்டேல் முயற்சிகளோடு ஒப்பிடுகையில் அகப் - புற ஒழுக்கங்கள் ஆத்மீகநெறி விளக்கம் பெறவேண்டியிருந்த அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம்.

உலகியற் காதலை ஆன்மீகக் காதலாகக் காட்டும் முயற்சிகள் பல்லவர் காலத்திலே நடைபெறுகின்றன. கோவை, உலா, மடல் என்னும் இலக்கிய வடிவங்களைக் கையாண்டு, இறைவன் மீது காதல் கொள்ளும் காதலியர்களாகத் தம்மை உருவகித்து ஆழ்வாரும் நாயன்மாரும், பாடல்கள் பாடுகின்றனர். இறைபக்தியைப்பரப்பப் பண்டைய அகத்திணை ஒழுக்கம் இங்கு கையாளப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே காதல் இறை அனுபூதிக்கூடாக விளக்கமுற்றது. அகத்திணை மரபும் இவ்வாறே விளக்கப்பட்டது. பிற் காலத்தெழுந்த சமய அனுபூதி நெறிகளைக் கொண்டு முற்காலத்தெழுந்த இலக்கியக் கருத்துக்களை விளக்குதல் வரலாற்று முரணுள் அடங்கும் என்பது ஒரு புறமாக, அவ்வண்ணம் விளக்குதல் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் ஒரு வரலாற்றுத் தேவையான அமைந்து விட்டது என்பதனைத்தான் நாம் இங்கு தெளிந்து கொள்ள வேண்டும். வணிக வர்க்கத்தினரான சமணருக்கு எதிராக நிலவுடமையாளரான வேளாளரும், பிராமணரும் முன்னின்று நடத்திய சமயப்போரில் சைவம் புது உருவும். புதுப் பொலிவும் பெற்றது. உலகியலையே சமயத்தின் அத்திவாரமாக்கினர் சைவ நாயன்மார். சமணரால் வெறுக்கப்பட்ட ஆடலும் பாடலும், காதலும், வாழ்க்கையும் சைவரால் ஏற்கப்பட்டன. புது விளக்கம் தரப்பட்டன. இவ் வரலாற்றுத் தேவையினைச் செய்தோர் மரபில் விபுலாநந்தரும் இணைந்து கொள்கிறார்.

தனது பொருணூற் சிறப்பு என்னும் கட்டுரையில் தமிழ் அகப்புற இலக்கணத்தைச் சித்தாந்த மரபினின்று அவர் விளக்குவதைக் காணலாம்.

‘இனி நுண்மதித் தமிழ் மாந்தர் வீட்டியல் கூறிய மரபினை யாராய்வோம். சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீடு இலக்கண வகையாற் கூறுந் தரத்ததன்று. வீடு கூறிய ஏனைய மொழி மாந்தரும், அதனைக் காரண வகையாலும் எடுத்துக் காட்டுவகையாலும் கூறினரேயன்றிச் சொல்லுக் கடங்காப்பேரின்பத்தைக் சொல்லுக்கடக்க முயன்றாரல்லர். காரண வகையாற் கூறுமிடத்து பெருந்திணையானும், காஞ்சித்திணையானும் கூறப்படும். பின் அனுபவவகையாற் கூறுமிடத்து அகத்திணை அன்பு மார்க்கமாகும். புறத்திணை அறிவு மார்க்கமாகும்.13

அகத்திணை புறத்திணை என்ற பொருள் மரபினைப் பண்டைய புலவர் பாடியது வீட்டின் இயல்பைக் கூறவே என்பது விபுலாநந்தர் கருத்தென்பதற்கு மேற்போந்த வாசகம் சான்றாகும்.

“மனமொழி மெய்களாலறிய ஒண்ணாப் பேரின்பப் பொருளை யாண்டும் வெளிப்படையாகக் கூறுவது இயலாத தொன்றாதலின் அசிரியர் குறிப்பாக உணர்த்துவது மரபாயிற்று… 14

என்கிறார் விபுலாநந்தர், சமயச்சார்பினை இலக்கியத்தில் ஏற்றயதன் தர்க்க ரீதியான விளைவாகவே தம்மதம் சாராத ஏனைய இலக்கியங்களைப் புறம் தள்ளும் போக்கு பல சைவத்தமிழ் அறிஞர்களிடம் காணப்படலாயிற்று. சைவ இலக்கியங்களை மாத்திரமே சிறந்த இலக்கியங்களாகக் கொண்ட ஆறுமுக நாவலர் போன்றோர் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி போன்ற நல்ல இலக்கியங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதனையும் இதன் எதிர் விளைவாக பிராமண, புராண எதிர்ப்பியக்கத்தில் முன்னணியில் நின்ற அண்ணாதுரை கருணாநிதி போன்றொர் பெரியபுராணம், கந்தபுராணம் கம்பராமாயணம் ஆகிய காவியங்களை ஆரியர் ஆதிக்கம் கூறும் தமிழர் எதிர்ப்பு நூல்கள் என்று விளக்கமளித்து எரிக்க முயன்றமையையும் நினைவு கூருகையில் தீவிர ஒருபக்கச் சார்பு தமிழுக்கு எத்துணை தீமையை ஏற்படுத்தும் என்பது புலனாகின்றது.

சைவ சித்தாந்த நெறிநின்று தமிழ்மொழியையும், இலக்கியத்தையும் விளக்கினோரின் செல்வாக்கிற்குள் ஆரம்பகாலத்தில் அடிகளார் உட்பட்டிருந்தார் என்பதனைச் “சிவன் எழுதி வைத்த இறையனார் களவியலும், மணிவாசகர் கூறச் சிவன் எழுதிய திருக்கோவையாரும் தமிழரின் வேதங்கள் என்றும் அவை சிறப்பு நூல்களாக நின்று வீட்டியலை விளக்கி நிற்பவை என்றும் கூறுவதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இக்கட்டுரைகள் அடிகளார் 1920 களில் எழுதிய கட்டுரைகளாகும். அப்போது விபுலாநந்தருக்கு வயது 32. 1899ல் வெளிவந்த சபாபதி நாவலரின் திராவிடப் பிரகாசிகைக் கருத்துக்கள் அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் வாழ்ந்த சைவத்தமிழ் அறிஞர்கட்கு ஊக்கமும், உற்சாகமும் தருவனவாயிருந்ததுடன் அவர்கள் மீது செல்வாக்கும் செலுத்தின இரண்டு நாடுகளிலும் தம் இளமைப் பருவத்தைக் கழித்த விபுலாநந்தர் இக்கருத்துக்களால் பாதிக்கப்பட்டிருத்தல் இயல்பே. மரபு வழியாகவந்த சமயம் சார்ந்த தமிழ் உணர்வுக் கருத்து விபுலாநந்தரின் ஆரம்ப எழுத்துக்களிற் காணப்படுகிறது என்பதே நாம் இங்கு மனம் கொள்ளத்தகது.

இத்தகைய கருத்துக்கள், அவரது பிற்கால எழுத்துக்களிற் காணப்படாமையும் சித்தாந்தக் கூட்டுக்குள் நின்று வெளிப்பாட்டு சகல உலக இலக்கியங்களையும் மனித இலக்கியமாகக் காணுகின்ற போக்கு அவரது பிற்காலக் கட்டுரைகளிற் காணப்படுவதையும் காணுகையில் சபாபதி நாவலர், ஆறுமுக நாவலர் போன்றோரின் சைவத் தமிழ் இலக்கிய மரபினின்று விபுலானந்தர் பிற்காலத்தில் மாறுபட்டுவிட்டமை புலனாவதுடன் விபுலானந்தரின் வித்தியாசமான போக்கும் தெரிகிறது.

திராவிடது நாகரிகத்தைத் தமிழர் நாகரிகமாகக் காணும் முயற்சி.

கால்டுவெல் பாதிரியாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் சமஸ்திருத மொழியினின்றும் வேறாக ஒரு மொழி இந்தியாவில் ஏற்கனவே வழங்கி வந்தமையை உறுதி செய்தது. ஆரியரிலிருந்து வேறுபட்ட ஒர் இனத்தினர் இந்தியாவில் வாழ்ந்திருக்கலாம் என்ற ஊகத்தை இது தந்தது. இந்த ஊகத்தை மேலும் உறுதிப்படுத்தியது சிந்துவெளி அகழ்வாராய்ச்சி. சிந்து வெளி அகழ்வாராய்வு கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர் ஆரியரே இந்தியாவின் பூர்வீக குடிகளென்றும் ஆரிய நாகரிகமே இந்திய நாகரிகம் எனவும் கருதப்பட்டது. ஆனால் சிந்துவெளி அகழ்வாராய்வு இக்கருத்துக்களைத் தகர்த்தெறிந்தது. ஆரியர் வருவதற்கு முன்னர் கி.மு. 3500 ஆம் ஆண்டிலேயே வட இந்தியாவில் (இன்றைய பாகிஸ்தான்) ஒரு நகர நாகரிகம் இருந்ததெனவும் அது திராவிடர் எனும் சாதியாருக்குரியது எனவும் சேர் ஜோன் மார்சல், ஹீராஸ் பாதிரியார் ஆகியோர் நிறுவினர். திராவிட மொழிகளிலிருந்து வந்த திருந்திய மொழிகளாக தென்னிந்தியாவில் வழங்கிய தமிழ், தெலுங்கு. கன்னடம். மலையாளம் ஆகியவற்றைக் கூறி அதனிடையே ஒப்பியல் ஆய்வினை ஏற்கனவே கால்டுவெல் மேற் கொண்டிருந்தமையினால் சிந்து வெளியில் வாழ்ந்த திராவிடர் இந்தியாவின் தென்னாட்டு மக்களே என்ற கருத்து உருவாயிற்று. அப்படியாயின் தென்னாட்டிலிருந்த மக்கள் முன்னர் எங்கிருந்தனர் என்ற வினாவும் பிறந்தது. வடக்கேயிருந்து ஆரியரால் கலைக்கப்பட்டு இவர்கள் தென்னாடு வந்தனர் என்ற கருத்து இதிலிருந்து பிறந்தது. இதன் இன்னொரு விளைவாக, தென்னாடு இருந்து வடக்கே சென்று தம் நாகரிகம் நிறுவினர் திராவிடர் என்ற கருத்தும் உருவாயிற்று. இவ்வணண்ம் திராவிடர்களின் மூலத்தை ஆராயப் புகுந்த ஆராய்ச்சியுலகம் இரு பிரிவினரைக் கொண்டதாயிற்று. ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவினின்று வந்த கூட்டத்தினரே திராவிடர் அவர்கள் தெற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியாவில் திராவிட நாகரிகத்தைத் தோற்றுவித்தனர் என்றனர். இன்னொரு பிரிவினர் தென்னிந்தியாவில் வாழ்ந்த இனத்தினரே திராவிடர் அவர்களின் வடக்கு நோக்கிய பயணமே சிந்துவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தது என்றனர். இந்த வாதப் பிரதிவாதங்கள் இன்றளவும் உள்ளன.

சிந்துவெளி நாகரிகத்தினைத் திராவிட நாகரிகம் என ஏற்ற ர்.சு ர்யடட அதனைச் சுமேரிய பபிலோனிய நாகரிகத்துடன் ஒப்பிட்டார். குயவாநச ர்நசயள உம் திராவிட மக்கள் சுமேரிய நாட்டில் குடியேறியிருக்கலாம் என்று குறிப்பிடகிறார். ளுவழசல ழக ஊhயடனநய ஏநனiஉ ஐனெயை எனும் நூல்களை இயற்றிய சுயபநணiநெ எனுமறிஞர் செமித்தியர் வருகையின் முன் பழைய பபிலோனியா மேற்குப் பாகங்களில் வாழ்ந்த திராவிட மக்களுக்குமுள்ள தொடர்பு சிறப்புவகையானது என்கிறார். சால்டியாவின் பழைய நகரமாகிய ஊர் என்னுமிடத்திலே கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஒருமனையினுள்ளே தென்னிந்தியத் தேக்கமரத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டதாக இவர் கூறுகிறார்;.

டீசவைiளா யுளளழஉயைவழைn என்னும் ஆராய்ச்சிக் கழகத்தலைவராகிய ளுசை துழாn நுஎயn ‘மனித சாதியாரின் தொட்டில் தென்னியந்தியாவாயிருந்திருக்கலாம்’ என்று கூறினார். இவ்வண்ணம் ஆரியருக்கு முந்திய ஒரு நாகரிகம் இந்தியாவில் இருந்தது என்பதைச் சிந்துவெளிக் கண்டுபிடிப்பாளர் நிறுவியதுடன் அதனை மிகப் பண்டைய நாகரிகங்களாக சுமேரிய – பபிலோனிய நாகரிகங்களுடன் தொடர்புபடுத்தும் முயற்சியும் தென்னிந்திய மக்களுடன் தொடர்புபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

தென்னிந்தியாவுடன் இந்நாகரிகத்தைத் தொடர்புபடுத்திய அறிஞர் கருத்து விபுலாநந்தருக்கு உடன்பாடான கருத்தாகும். தென்னிந்தியத் திராவிட நாகரிகத்தைத் தமிழருடன் தொடர்பு படுத்தும் முயற்சிகளில் விபுலாநந்தர் ஈடுபடுகிறார். விபுலாநந்தர் தமிழ் ஆராய்ச்சியாளரேயொழிய சரித்திர ஆய்வாளர் அல்ல என்பதை நாம் இங்கு மனம் கொள்ளல் வேண்டும். தம் கருத்துக்களையும் ஊகங்களாகவே அவர் முன்வைக்கிறார். இவை ஆராயப்பட வேண்டியவை என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். ஆக விபுலாநந்தர் செய்ததெல்லாம் திராவிடர் என்று கூறப்பட்ட இனத்தினை தமிழருடன் தொடர்புபடுத்தியதும் ஒருபடி மேற்சென்று தமிழரே திராவிடர் எனக்கூறியதுமாகும்.

உலகபுராணம் எனும் கட்டுரையில் திராவிடரின் பரம்பரைப்பற்றி கல்கத்தாவினின்று வெளிவந்த நேற சுநஎநைற யில் குயவாநச ர்நசநள தரும் கருத்துக்களை வரிசைப் படுத்தித்தரும் விபுலாநந்தர் ஓரிடத்தில்

“மேலே நாம் திராவிடர் என வழங்கிய குலத்தினை தமிழர் என்றே சொல்லலாம். கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளும் அவற்றை வழங்கும் மக்கள் தமிழிலும், தமிழரிலும் இருந்து தோன்றிய காரணத்தினாலே பண்டைச் சரித்திரத்திலே திராவிடமென்பது தமிழேயாகும். ஆரியவர் வருமுன் இந்தியா முழுவதிலும் பரவியிருந்தவர் தமிழரே”15

என்று கூறுகிறார். தமிழின் வேறுபட்ட தாய் அதைக் காட்டிலும் மிகத் தொன்மை வாய்ந்ததாயுள்ள ஒரு பண்டைமொழி இருந்திருக்கவேண்டும் என்ற மொழி நூன் முடிவை நோக்கியே கால்டுவெல் பாதிரியாரின் பார்வை இருந்தது. திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழி தமிழ் எனக் கூறிய பாதிரியார் தமிழினின்றுதான் ஏனைய மொழிகள் தோன்றின என்றாரில்லை. பின்னாளில் தமிழில் இருந்துதான் கன்னடம், மலையாளம், தெலுங்கு தோன்றின என்ற கருத்தை உணர்ச்சி மீதூர்ப்பாடினார் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை. அந்தக் கருத்து, காலச் சூழ்நிலை காரணமாகச் செல்வாக்கு மிக்க கருத்தாயிற்று. விபுலாநந்தரும் அக் கருத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.

திராவிடருடன் தமிழரைத் தொடர்பு படுத்துவது மாத்திரமல்ல, தமிழர்தான் திராவிடர் என்ற கருத்தும் விபுலாநந்தருக்கிருந்தது. விபுலாநந்தர் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையிலும் இறையனார் களவியலுரையிலும் வரும் கடல்கோள் கதையினை, சரித்திரத்துடன் இணைத்துப் பார்க்க முனைகிறார்.

“தமிழரது பழைய வரலாற்றினைப் பற்றிய சில முடிபுகள் தொல்காப்பிய எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரை, சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லாருரையென்னும் இவை தம்முள்ளே காணப்படுகின்றன. இம் முடிவுகள் வரலாற்று நூலாசிரியர்கள் (ர்ளைவழசயைளெ) ஆராய்ந்து கண்ட சரித்திர முடிபுகளோடு ஒரு புடை ஒத்திருக்கின்றனவாதலின் உரை நூன் முடிபுகள் வெறுங்கதைகள் அல்ல என்பது துணியப்படுகின்றது.16

என்ற அவர் கூற்றில் இது புலனாகின்றது. குமரியாற்றுக்குத் தெற்கே பஃறுளியாறு என்று பெயரியல் ஆறு இருந்தமை, கடல் கொள் நடந்தமை. சங்கம் இருந்தமை ஆகியவற்றை விரித்து, தலைச்சங்கத்தின் இறுதிக் கடல் கோள் கி.பி.550 இல் நடந்திருக்கலாம் என்று கூறுகிறார். இதன்படி சிந்துவெளி நாகரிகம் (கி.மு.3500) தோன்ற முன்னர், அதற்கும் 2000 வருடங்கட்கு முன்னர் தமிழர் தென்னிந்தியாவில் குமரிக்கண்டத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்தனர் என்று கூற வருகிறார். உலக புராணம் எழுதியதன் நோக்கம் தமிழர் நாகரிகமே மிகப் பழைமை வாய்ந்த நாகரிகம் என்பதை விளக்கவே என்பதை பின்வரும் அவர் கூற்று காட்டும்.

‘தமிழரது நாகரிகம் மிகமிகப் பழமைவாய்ந்தது. உலக சரித்திரத்திலே தமிழரே முதன் முதல் நாகரிக வாழ்க்கையெய்திய சாதியாரென்பதற்கும். கடல் கடந்து சென்று தமது நாகரிகத்தைப் பலப்பல நாடுகளிலும் பரப்பினார் என்பதற்கும், வாணிகத் துறையிலும், கணிதநூல். வானநூல் முதலிய நூற்றுறைகளிலும் வல்லுனராயிருந்தார் என்பதற்கும் பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இவை தம்மைச் சுருக்கமாக ஆராய்ந்து கூறுதலே உலக புராணம் என்னும் இப்பொருளுரையின் நோக்கமாகும்.’17

உலகபுராணத்திலே ஆரியர் பக்கமோ, திராவிடர் பக்கமோ சாராது பழந்தமிழரது வரலாறு பற்றிக்கூறும் குயவாநச ர்நசயள ஐப் பாராட்டும் விபுலாநந்த அடிகளார், மொகஞ்சதாரோ பற்றி ர்நசயள கூறும் கருத்தக்களை முன்வைக்கிறார். அவர் கருத்துக்களைத் தமிழருடன் இணைக்கிறார்.

“முகிஞ்சதராவிலிருந்த பழைய மக்கள் மிதுன ராசியினை ‘யாழ்’ என்னும் பழந்தமிழ்ப் பெயரினாலேயே வழங்கினார்களென்றும், யாழ் உருவத்தினாலே குறியிட்டார்களென்றும் ஹீராஸ் சுவாமியார் மற்றோரிடத்திலே குறிப்பிட்டிருக்கின்றார். ………..முகிஞ்சதாரா நாகரிகம் பழந் தமிழ் நாகரிகத்தோடும் யூபிற்றஸ்-ரைகிறிஸ் நதிக்கரையிலே பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் விளங்கிய சுமேரிய நாகரிகத்தோடும் தொடர்புடையது என்பது அறிஞர்கருத்து, சுமேரியர் தமிழர் வழிவந்தவர்களே என்பதற்குப் பல சான்றுகள் உள”18

என்பது விபுலாநந்தர் கூற்று. சுபைஎநனiஉ ஐனெயை என்னும் நூலின் ஆசிரியரான யுடிiயௌh ஊhயனெசய னுயள பற்றிக் குறிப்பிட், சோழதேயம் என்ற மொழிச்சிதைவே ‘சாலதேயம்’ (ஊhயடனநய) என்றும் அந்நாட்டிற்குச் சோழகுலத்தார் குடியேறியது இற்றைக்குப் பதினாயிரம் ஆண்டுகளின் முன்னாகல் வேண்டுமென்றும் அபிநாஸ் சந்திரதாஸ் கூறுவதாகக் கூறுகிறார்.

சால்டியாவில் வாழ்ந்த சாலதேசத்தவர் வான நூலிற் சிறப்புப் பெற்றிருந்ததாக அபிநாஸ் சந்திரதாஸின் கூற்றை மேலும் குறிப்பிட்டுச் செல்லும் விபுலாநந்தர். சால்டியா தேசத்தவர் ஆயிரத்து நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை சிரியஸ் (ளுசைரைள) விண்மீன் சூரியனோடு ஒருங்குதிப்பதென அறிந்து அக்கால எல்லையினை ஒரு சோதிவட்டமாகக் (ளுழவாநை ஊலஉடந) கணிப்பது போலவே தமிழரும் பண்டைக் காலத்திற் காலத்தைக் கணித்தனர் என்பதனைச் சங்கமிருந்த கால எல்லைகள் தமிழ் நூல்களில் வகுக்கப்பட்ட முறைமையினைக் காட்டி நிறுவுகிறார். இதன் மூலம், கால எல்லையினைச் சோதிவட்டமாகக் கணித்தறியும் மறையினைச் சால்டியாவிற் குடியேறிய சோழ குலத்தவரே அங்கு கொண்ட சென்றிருக்க வேண்டுமென்று மறைமுகமாகக் கூறவருகிறார். அபிநாஸ் சந்திரதாஸ் போன்றோரின் கூற்றுக்களுக்குத் தமிழ் இலக்கியச் சான்றுகளை ஆதாரமாகத் தரும் விபுலாநந்தரின் சிந்தனைப் போக்கு இங்கு புலனாகின்றது.

மத்ஸ்புராணத்திலே சலப்பிரளயமும், மநுவரசன் அதனை எதிர்கொண்ட விதமும் கூறப்படுகிறது. மத்ச புராணத்திற் குறிப்பிடப்படும் மநுவரசன் சோழகுலத்து மன்னனே என தமிழ் நூற்சான்று காட்டிக் கூறும் விபுலாநந்தர் மத்ஸபராணம் கூறும் சலப்பிரளயக் கதையைத் தமிழ் இலக்கியங்கள் கூறும் கடல் கோளுடன் இணைத்து, கடல் கோளாகிய சலப்பிரளயக் கதை தென்னாட்டிலிருந்து வடநாட்டிற்குச் சென்றது என்று கூறுகிறார்.19 இக்கதைதான் யூபிறற்றஸ் - ரைகிறிஸ் நதிக்கரைக்கும் சென்றது என்றுரைக்கிறார். ர்.சு.ர்யடட லுடன் இதில் உடன்படும் விபுலாநந்தர், தொல்காப்பியத்துக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையிற் கூறப்படும் நிலந்தருதிருகினியர் எழுதிய உரையிற் கூறப்படும் நிலத்தருதிருவின் நெடியோனாகிய பாண்டியன் மாகீர்த்தியின் ஆட்சியாண்டினை சலப்பிரளயத்திற்கு முன்னிருந்த சுமேரிய மன்னர்களின் ஆட்சியாண்டுடன் ஒப்பிடுகிறார். இது பற்றி விபுலாநந்தரின் கூற்றுப் பின் வருமாறு

‘தொல்காப்பிய உரையிலே ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறிய குறிப்பொன்றினை உளங்கொள்ளுதல் இன்றியமையாததாகும். நிலத்தருதிருவின் நெடியோனாகிய பாண்டியன் மாகீர்த்தி இருபத்து நாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின் அவனும் அவன் அவையினுள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் ‘அவர்கள் கேட்டிருப்ப’ என்றலின் தமிழ் மன்னது அவைக்களத்தாரின் அறிவு மிகுதி தெளிவாகின்றது. கடல்கோளின் முன்னிருந்த இம்மன்னன் இருபத்தினாலாயிரம் ஆண்டுவீற்றிருந்தானென்பது நமக்கு வியப்பைத் தருகின்றது. சுமேரிய சரித்திரத்திலும் சலப்பிரளயத்திற்கு முன்னிருந்த மன்னர் எண்மருள் ஒவ்வொருவரும் 18600 முதல் 43200 வரையுமுள்ள எல்லையினவாகிய ஆண்டுகள் வீற்றிருந்தார்கள் என்னும் செய்தி அகப்படுகின்றது. இருவரலாற்றுக்கும் தொடர்புண்மை இதனால் புலப்படுகின்றது.20

கிறிஸ்தவ வேதநூலான விவிலிய நூலில் வரும் கலப்பிரளயக் கதை தமிழ் நாட்டிலிருந்து சென்றிருக்க வேண்டுமென்றும் அதில்வரும் பெரியோனாகிய நோ (நோவா) என்னும் பொருளினதாகிய மாநோ என்னும் பெயர் ‘மநு’ என்பதனை ஒத்திருத்தலை நோக்குக என்கிறார்.21

இவ்வண்ணம் திராவிடர் தென்னகத்தார் என்ற கூற்றின் வழிநின்று திராவிடர் தமிழரே என்று நிறுவ தமிழ் நூல்களிலிருந்து உதாரணங்களைத் தருவதையும் பௌராணிகக் கதைகளாகக் கருதப்பட்டவற்றைச் சரித்திரத்துக்கு முற்பட்ட தமிழர் வரலாற்றை அறியப் பயன்படுத்த முயற்சிப்பதையும் விபுலாந்நதரின் எழுத்துக்களிற் காணலாம்.

இத்தகைய கருத்துக்களினடியாக தன்னளவில் தமிழரின் மிகப்புராதன சரித்திரம் பற்றிய கருத்தருவத்தை மெல்லமெல்ல விபுலாந்நதர் உருவாக்கிவைத்திருந்தார்.

தமிழ் நாட்டில் கடல் கோள் ஏற்படும் முன்னர் இருந்த குமரிமுனைக்கும் பஃறுளியாற்றுக்கும் இடையில் 14000 வருடங்கட்கு முன்னர் வாழ்ந்த தமிழ்மக்களே கடல்கோளின்பின் கடல் கடந்து சென்று மத்திய தரைக்கடல் நாகரிகங்களைத் தோற்றுவித்திருக்கலாம் என்பதும், உரோமரும் யவனரும் வருமுன்னர் மத்திய தலைக்கடல் நாடுகளில் வாழ்ந்த பழங்குடியினர் ஏற்கனவே அங்கு சென்ற தமிழ்க் குலத்தினரே என்பதும் விபுலாநந்தர் கருத்து.

1942 இல் தனது 50வது வயதிலே மதுரை இயற்றிமிழ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கித் தலைமைப்போருரை நிகழ்த்திய அடிகளாரின் பேச்சில் தமிழர் சரித்திரம் பற்றிய அவர் பூரண நோக்கு தெரிகிறது. அவர் கருத்தைச் சுருக்கமாக இங்கு தருகிறேன்.

‘தமிழ்மக்கள் 14000 ஆண்டுகட்கு முன்னர் குமரி யாற்றுக்கும் பஃறுளியாற்றுக்குமிடையில் சிறப்பாக வாழ்ந்தனர். அக்காலத்தில் அவர்கள் மிகப் பெரும் நாகரிகம் பெற்றவராக வாழ்ந்தனர். கடல் கோளினால் குமரிநாடு அழிய அவர்கள் ஓதக்கோன், உவணன் என்போர் தலைமையிற் கப்பலில் தப்பிச் சென்று எகிப்திலும், சிந்துவெளியிலும் குடியேறினர். சுமேரியாவிலே முன்னர் சோழர் குடியேறினர். அதுவெ சால்டியா எனப்பட்டது. மத்திய தரைக் கடற்பகுதிகளைக் கிரேக்கரும் யவனரும் கைப்பற்றி நாகரிகம் பரப்பமுன்னர் அப்பகுதிகளில் மீனவர். எத்துருஸ்கர். நுமிதியர், பேர்பெரியர், ஜபீரியர் ஆகிய பழங்குடியினர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆரம்பத்தில் இப்பகுதிகளில் குடியேறிய தமிழர்களேயாம். சேரமன்னர்களும் கப்பலிற் சென்று கிரீத் (புசநவந) தீவினைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்து;ளனர். தமிழ்க் குலத்தின் இன்னொரு சாரார் பசுபிக் பெருங் கடலினைக் கடந்து சென்று மத்திய அமெரிக்காவிலே குடியேறி மெக்ஸிக்கோ, பீரு, யுக்காட்டன் முதலிய இடங்களிNலு வாழ்ந்து நாகரிகத்தினைத் தோற்றுவித்தனர். இவ்வண்ணம் தமிழ் நாட்டினின்று புறப்பட்ட பாண்டியர் எகிப்திலும் சிந்துவெளியிலும், சேரர்கள் கிரித்தீவிலும், சோழர்கள் மத்திய தரைக் கடல் நாடுகளிலும் தமிழர்களில் இன்னொரு சாரார் அமெரிக்காவிலும் (மாயா) நாகரிகங்களை உருவாக்கினார்கள்.

விபுலாநந்தரின் வார்த்தைகளில் இக்கருத்தைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்.

இற்றைக்கு ஒன்பதினாயிரம் ஆண்டுகளின் முன் பூவலயத்தின் நடுப்பாகம் முழுவதிலும் தமிழ்க் குலத்தார் சீரும் சிறப்புமுற்று வாழ்ந்தனர் என்பதும் பெறப்படுகின்றன. கடல் கொண்ட அத்திலாந்திஸ் (டுழளவ யுவடயவெiஉ) தெங்கமரமும் யானையுமுடையதாயிருந்ததெனக் கூறப்டுதலின் கடல்கண்ட குமரி நாட்டின் வரலாறே மத்திய அமெரிக்காவினின்று ஐரோப்பாவினையடைந்த ஞான்று கடல் கொண்ட அத்திலாந்திஸ் வரலாறாக உருத்திருந்ததெனக் கொள்வதும் ஒருதலை.22

பபிலோனிய, சுமேரிய. சிந்துவெளி, மாய நாகரிகங்களைத் தமிழர் நாகரிகமாகக் கொள்வது ஒரு புதிய கருத்தாகும். கடல் கோளுக்குத் தப்பிய தமிழரின் ஒரு சாரார் குமரிக் கண்டத்தினின்று புறப்பட்டுத் தாம் சென்ற இடங்களில் நதாகரிகங்களை நிறுவினர் என்றும், ஏற்கனவே வியாபாரம் நிமித்தமும் போர் நிமித்தமும் சென்ற தமிழர் மத்திய தலைக்கடல் மாயா நாகரிகங்களின் அத்திவார இனத்தினர் என்றும் தமிழ் நாட்டின், கடல் கோள் கதையே உலக சலப்பிரளயக் கதைக்கு ஆதாரமென்றும் சில கருது கோள்களினை (ர்லிழவாநளளை) விபுலாநந்தர் வைக்கிறார்.

தமிழ் உணர்ச்சி மீதூரப்பெற்ற விபுலாநந்தர் மேற்குறிப்பிட்ட நாகரிகங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகளைச் சுட்டும் ஆராய்ச்சியாளர் கருத்துக்களையும் திராவிடர் பற்றிய ஆராய்வாளர் சிலரின் கருத்துக்களையும், தமிழ் இலக்கியங்கள் தரும் கடல் கோள் ப்றிய கர்ணபரம்பரைக் கதைகளையும், தமது தமிழுணர்ச்சியையும் கலந்து இத்தகைய ஓர் கருது கோளினை முன்வைத்தார். இது தமிழுணர்வின் பாற்பட்ட கருதுகோளாயினும் இவை ஆராயப்பட்ட வேண்டியவை என்பதில் விபுலாநந்தருக்குக் கருத்து மாறுபாடில்லை. விபுலாநந்தர் ஓர் ஆராய்ச்சியாளர்@ தமிழ் ஆராய்ச்சியாளர் அறிஞர்@ தன் கருத்துக்களைக் கூறிவிட்டு அவர் கூறும் வாக்கியம் நுனித்து நோக்குதற்குரியது.

இவைபோன்ற முடிவுகளையெல்லாம் வரலாற்று நூற்றுறையில் வல்லோராயுள்ளோர் காய்தல் உவத்தல் அகற்றி நடுவு நிலைமையோடாராய்ந்து பொருட்டொடர் நிலையினமைந்த நூல் வடிவாக்கித் தருதல் வேண்டும்.2னெ

இவை முடிவுகளோயொழிய முடிந்த முடிவுகள் அல்ல என்பதும். இவை வரலாற்றுத்தறையிலுள்ளோரால் ஆராயப்பட வேண்டியவை என்பதும் விபுலாநந்தர் கொள்கையாம். தமிழ் உணர்ச்சி ஒரு பக்கம் இழுக்க – அறிவு உலகு மறுபக்கமிழுக்க இடையில் நிற்கும் விபுலாநந்தர் தான் நம்முன் காட்சி தருகிறார். உலக புராணத்தில் ‘இளமாணக்கருக்குக் கல்வி பயிற்றும் போதகாசிரியர்கள் தமிழ்க்குலத்தாரின் பழமையையும் செழுமையையும் ஆராய்ந்துணர்ந்து மாணவர்க்கு அறிவுறுத்துவார்களாக என்று கூறும் விபுலாநந்தர் 1942 இல் ஆற்றிய உரையில் நடுவு நிலைமையோடாராய்ந்து நூல் செய்யுமாறு கூறுகிறார்.

கவியொகி சுத்தானந்தர் கூறுவதுபோல தமிழ்த் துடிப்பு விபுலாநந்தர் உடலெல்லாம் இருந்தது என்பதற்கு இவை சான்றுகளாகும். பலருக்குத் தமிழ்வெறி ஏற்றினார் என்பதும் இவற்றினின்று புலனாகின்றது. எனினும் இவை ஆராயப்பட வேண்டியவை என்ற கருத்தும் அவரிடம் மதயானையை அடக்கும் அங்குசம் போல மனதில் இருந்தது என்பதும் புலனாகின்றது. இத்தகைய கருதுகோள்களை (ர்லிழவாநளைளை) முன்வைப்பதும் ஆராய்வதும் ஆராய்ச்சியின் போக்கில் அதுமேலும் வளர்வதும், அல்லது மறுக்கப்பட்டு அக்கருத்து அழிவதும் ஆராய்ச்சி உலகில் சகஜம்.

தம் காலத் தமிழுணர்வுச் சூழலுக்கு ஏற்ப விபுலாநந்தர் தமிழர் பூர்வீகம்பற்றிய தன் கருத்துக்களைத் தருவதோடு ஒரு படிமேல் சென்று உலகின் பூர்வீக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடி தமிழர்களே என்றும் கூறினார். இக்கூற்றுகள் தமிழுணர்ச்சி மிக்கோர் மத்தியில் பெருவரவேற்புப் பெற்றிருக்கும். ஆராய்வாளர் மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றிராத இக் கூற்றுக்கள் இன்றும் ஆராயப்படுகின்றன. பூர்வீக நாகரிகங்களின் முன்னோடி தமிழரே என்பது பற்றி எவரும் இன்னும் கருத்துக்கள் கூறினாரில்லை. விபுலாநந்தரின் அக்கருத்துக்களைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் யாரையும் சரித்தர உலகில் கண்டோமில்லை. எனினும் குமரிக்கணடம் பற்றி அவர் கூறும் கருத்துக்கள் அண்மைக்காலமாக ஏற்கப்படுவதனை அவதானிக்கலாம். அங்கு மக்கள் இருந்தார்கள், நாகரிகம் இருந்தன பற்றிய கருத்துக்கள் அல்ல அவை. குமரிக்கண்டம் இருந்தது என்ற கருத்தே இன்று நிரூபித்தலுக்கு அண்மையில் வருகிறது.

அண்மையில் இந்துமா பெருங்கடலை ஆழ்ந்து ஆராய்ந்து எழுபதுபேர் கொண்ட இரஷ்யாவின் விஞ்ஞான அறிவுக் குழுவினர் அம் மாகடலின் அடிப்பொருளை ஆராய்ந்ததன் பயனாக அங்கே 1000 லட்சம் ஆண்டுகட்கு முன்னர் நிலப்பரப்பு இருந்ததென்றும் இலங்கைக்குத் தென்கிழக்கில் 550 கல் தொலைவில் ஆழ்கடலில் 10,000 அடி உயர மலை உள்ள தென்றும் முடிவு செய்து அந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். அந்த அய்வுக் கழத்தலைவராகிய பேராசிரியர் P. பெஸ்ருகௌ (Pசழக. P. டீநணசரமழஎ) கல்கத்தாவில் 20-02-61இல் இந்த உண்மையை வெளியிட்டார். 24

எதிர்காலத்தில் செய்யப்படப்போகும் ஆய்வுகளே விபுலாநந்தரின் தமிழர் பூர்வீகம் பற்றிய கருத்துக்களை வலுவுடையதாக்கும் அல்லது வலுவற்றதாக்கும். எனினும் விபுலாநந்தரின் காலச் சூழலும். தமிழுணர்ச்சியும் அவர் ஆராய்ச்சிகளைப் பாதித்தன என்பதே நாம் இங்கு மனம் கொள்ளத்தக்கதாகும்.

தமிழ்மொழி - இலக்கணம் ப்றிய விபுலாநந்தர் பார்வை

ஏனைய மாழிகளின் தொடர்பின்றித் தமிழ் தானே இயங்கும் பெற்றியது என்ற கால்டுவெல்லின் கூற்று தனித்தமிழ் இயக்கம் வரை விதையூன்றிவிட்டது. தமிழ் மொழி பழமையானது. தனித்துவமானது, பிறமொழி உறவுகள் அதற்குத் தேவையில்லை என்ற கருத்துக்கள் இதனால் எழுந்தன. தமிழின் தொன்மைபற்றியும் அதன் தனித்துவம் பற்றியும் விபுலாநந்தர் கொண்ட கருத்துகளுக்கு கால்டுவெல்லின் கருத்துகளே ஆதாரமாகும். தமிழ்த்தனித்துவம் பற்றிய இவர் கருத்துக்ள் இவரின் ஆராய்ச்சியையும் தாக்கியுள்ளது.

உலகச் சுருக்கமும் ஏனைய மொழிகளோட அறாத் தொடர்பினைத் தமிழ்மொழி பெறுதலுமாகிய இக்காலச் சூழலில், பிறமொழிச் சொற்கள் தமிழ்மொழியிற் கலத்தலும் அவற்றைத் தமிழ்மொழி உள்வாங்குதலும் இயல்பு. பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சொன்ன தமிழ் அணங்கின் சீரிளமைத் திறத்தினை, (தூய தமிழை – பிறமொழிக் கலப்பற்ற தமிழை – முக்கியமாக வடமொழி கலவாத தமிழை – எழுத்து மொழித் தமிழை) செந்தமிழை கையாளுவதன் மூலமே பேணமுடியும் என்று மறைமலையடிகள் போன்றோர் எண்ணினர். தனித்தமிழியக்கம் இவ்வடிப்படையிலேயே உருவானது. அக்காலப் பண்டிதர் அனைவரும் பேச்சுத் தமிழுக்கு எதிரானோரே. இலக்கணத்தமிழின் இரட்சகர்களான இவர்கள் செந்தமிழ் பேசுதலே தமிழ் பேசுதல் என்று எண்ணினர். தமிழுக்குப் புரட்சிக் கவிஞராக அறிமுகமான பாரதிதாசன் கூடத் தமது பாட்டொன்றில் காதலி கொச்சைத் தமிழில் பேசிவிட்டாள் என்பதற்காக அவளைக் கைவிட்ட காதலனை ஆதர்ச (னைநயட) தமிழ்க் காதலனாகக் காட்டுகையில் பண்டிதர் முதல் புரட்சிப் பாவலர்வரை தமிழ் மரபு பிடித்தாட்டிய தன்மையினைப் புரிந்து கொள்ளலாம்.

இச் சூழலிலேதான் தனித்தமிழில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்ளும் வழக்கம் அக்காலத் தமிழ் அறிஞாகளுடையே உருவாயிற்று. சுவாமி வேதாசலம் பிள்ளை என்ற வடமொழிப்பண்பு மிக்க பெயரை (வேதம் - மறை. ஆகலம்- மலை) மறைமலையடிகள் என வேதாசலம்பிள்ளையவர்கள் மாற்றியமையும். சூரிய நாராயண சாஸ்திரியார் தன் பெயரை பரிதிமாக்கலைஞன் என மாற்றியமையும், நவநீத கிருஷ்ணன் வெண்ணெய்க் கண்ணனார் என மாற்றியமையும். பிற்காலத்தில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை தன் புனைபெயராக (கணம்-குழு. பதி - இறை) குழூஉஇறையனார் என மாற்றியமையும் தனித் தமிழியக்கத்தின் தாக்கமே.

இத்தனித் தமிழியக்கத்தின் தாக்கம் அன்றைய புலவர்களை மாத்திரமன்று நாடகக் கலைஞர்களையும் தாக்கியது என்பதற்கு செக்ஸ்பியரின் (ஊலஅடிநடiநெ) சம்பந்த முதலியாரால் (1914) சிம்மளநாதன் எனவும், ழுவாநடடழ பி.எஸ். துரைசாமி ஐயங்காரால் (1910) யுத்தலோலன் எனவும் ஏ. மாதவையரால் (1918) உதயலன் எனவும் ர்யஅடந பி.சம்பந்த முதலியாரால் (1908) அமலாதித்தன் எனவும். ஆயஉடிநவா சம்பந்தமுதலியாரால் (1910) மகபதி என ஆக்கப்பட்டமையும் சான்றுகளாகும். ஆங்கிலப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக ஆக்கப்பட்டமையே இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


விபுலாநந்தருக்கு தனித்தமிழியக்க முன்னோடிகளினதும் தீவிர செயற்பாட்டாளர்களினதும் (யஉவiஎளைவ) தொடர்பு இருந்தமைக்குச் சான்றுகளுண்டு. எனவே தமிழ்மொழிப்பற்றும் தீவிர தமிழுணர்ச்சியும் கொண்டிருந்த விபுலாநந்த அடிகளார் இத்தகைய ஒரு கோக்கின் செல்வாக்கிற்குட்படுதல் தவிர்க்க முடியாததே.

மதங்க சூளாமணியில் (1924) தன் ஆராய்ச்சிக்கு சேக்ஸ்பியரின் சில நாடகங்களிலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்துத் தரும் விபுலாநந்தர், அந்நாடக நாயர்களின் ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் தருகையில் தனித்தமிழ் இயக்க முன்னோடிகளைப் பின்பற்றுவதைக் காணலாம். ஆயஉடிநவா மகபதி எனவும் யுடழளெழ அலாயுதன் எனவும் யுவெழnழை அனந்தன் எனவும் ஆநசஉரவழை மார்த்தாண்ட சோழன் எனவும் வுலடியட தீவலமல்லன் எனவும் துரடநைவ சுசீலை எனவும் சழஅநழ இரம்மியன் எனவும் அடிகளாரின் நூலில் தமிழ் நாமம் பூணுகிறார்கள். இவை தனித் தமிழ்ப் பெயர்களன்று தமிழ் மயப்படுத்தப்பட்ட பெயர்களாகும்.

இவ்வண்ணம் தமிழைப் பிறமொழி கலவாது எழுத வேண்டும் என்ற எண்ணமும் தனித்தமிழியக்கத்தின் வாடையும் மரபுவழித் தமிழ்ப் பயிற்சியும் விபுலாநந்தரை மரபின் மீது பற்றிறுக்கம் கொள்ளச் செய்கிறது.

‘தமிழ் மொழியை மரபு தவறாது ஆராய்ந்து கற்றோரும் அவ்வாறு கற்றுத் தேறியவரை வழிபடுவோருமாகிய இருசாரருமே உண்மைத்தமிழ் தொண்டிற்கு உரியோராவார்.’25

என்று கூறும் விபுலாநந்தர் மரபை ஆதரிப்பது மாத்திரமன்றி

‘முன்னோர் மொழி பொருளையும் மரபுபட்ட இலக்கண முடிவுகளையும் ஆராய்ந்தறிந்து கொள்ளாது நெறியலா மக்களை மயக்கி அவர் தம்மை நெறியல்லா நெறியிற் புகுத்தி ஆரவாரிப்போர் செயலானது குருடனைக் குருடன் வழிநடத்துவது போலாகும்.’26

என்று கூறுவது மரபைப் போற்றுவதுடன் இலக்கண மரபுகள் அறியாது எழுதுவோர் க்ணடிக்கப்படத்தக்கவர் என்ற அவர் கருத்துயும் காட்டுவதாயுள்ளது. தமிழ் மொழிப் பழமை. தூய்மை பற்றி விபுலாநந்தர் கொண்ட கருத்துக்களே தமிழ் மரபு பேணல் அதன் இலக்கண மரபு பேணல் என்ற நிலைக்கு அவரைக் கொணர்ந்தது எனலாம்.

மரபு பேணப்பட வேண்டும் என்ற கருத்து உறுதியானதும் எது மரபு? எது தமிழ், என்ற வினா எழுதல் இயல்பு. தமிழை மரபு வழித் தமிழ் பண்டிதர்களிடம் அறிந்தது மாத்திரமன்றி தாமாகவே மொழி ப்றிய நவீன கருத்துக்களை அறியும் வாய்ப்பும் அடிகளாருக்கிருந்தது. மொழியியல் ஆய்வுகள் தமிழிற் பெரு விருத்தியுறாத காலத்தில் அடிகளார் வாழ்ந்திருப்பினும் 1850 லிரந்துகால்டுவெல் தொடக்கி வைத்த மொழியியலாய்வு குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் மொழியியலாய்வு Phடைழடழபல எனக் குறிப்பிடப்பட்டது. கால்டுவெல்லின்குப் பின்னர் திராவிட மொழிகள் அதன் கிளைகள் கொள்கைக் பற்றிய ஆய்வுகள் எழலாயின. இருபல்கலைக்கழங்களிற் பேராசிரியராகக் கடமை புரிந்த விபுலாநந்தர் மொழியியல் ஆய்வுகள் பற்றியும் அறிந்திருப்பார். மொழியியல் ஆய்வு பற்றிய அறிவு தமிழ். சோழநாட்டுத் தமிழ், ஈழநாட்டுத் தமிழ். பாண்டி நாட்டுத்தமிழ் எனவும் இன்னும் பல உட்கிளைகளாகவும் பிரிந்து கிடப்பதை அடிகளாருக்கு அறித்திருக்கும். சோழமண்டலத்தமிழும் ஈழமண்டலத் தமிழும் என்ற ஒரு கட்டுரையில் மரபு வழித்தாக்கமும், தமிழுணர்ச்சியும் பெற்ற விபுலாநந்தர்.

எது தமிழ் என வினவுவார்க்கு பாண்டியன் தமிழே தமிழ் என்போம்27

என்கிறார். தராதர அங்கிலத்தை – அரசவை சார்ந்த உயர் குழாத்தினரின் ஆங்கிலத்தை வேந்தன் மொழி (முiபெ டுயபெரயபந) என அம்மொழிப்புலவொர் விதந்து கூறுவது போல தமிழினைப் பாண்டியன் தமிழ் என நாம் கூறவேண்டும் என்பது அடிகளார் கருத்து.

இன்றைய மொழியியல் ஆய்வும், வளர்ச்சியும் இவ்வண்ணம் கூறாது. மொழியியல், மக்கள் பேசும் தமிழே வாழும் தமிழ் என்று கூறும். ஆனால் விபுலாநந்தர் பாண்டியன் தமமிழையே தமிழ் என்கிறார். மக்கள் பேசும் தமிழை முன்னிறுத்தாது மன்னரைச்சார்ந்த உயர் குழாத்தினர் பேசும் தமிழை முன்னிறுத்தியமை இலக்கணம் கூறும் முறைக்கியைய ஒரு செயற்கை நடையில் - எழுத்து நடையிற் பேசும் - எழுதும் முறையினை மனதிற் கொண்டேயாம்.

தமிழ் உணர்ச்சியும், தமிழின் தொன்மைபற்றிய கருத்துருவமும் விபுலாநந்தருக்கு மொழித் தூய்மை. மரபு பேணும் மனப்பாங்கைக் கொடுத்திருப்பினும், நடைமுறைவாழ்வும், அதனாற் பெற்ற அனுபவ அறிவும், அவர் பெற்ற நூலறிவும் இக்கருத்துக்களைவ விட மாறுபட்ட கருத்துக்களையும் அவருக்குத் தந்தன.

மதங்க சூளாமணியில் ஆங்கிலப் பெயர்களுக்குத் தக தன் முன்னோரை அடியொற்றித் தமிழுருவம் தந்த அடிகளார், அத்தகைய பெயர்கள் சிலவற்றை வடமொழிப் பெயர்களிலும் அமைந்திருப்பதனை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. குநசனநயெனெஐ, பிரியதர்த்த மன்னன் எனவும், குழழடஐ, விதூஷகன் எனவும் தயஙரநn ஐ ஜயதேவன் எனவும், Pழசவiஉ ஐ, விஜயை எனவும் மாற்றியிருப்பதைக் காணுகையில் மறைமலையடிகள் போன்றோரைப்போன்று தனித் தமிழ்ப்பற்றுக் கொண்டவராக விபுலாநந்தர் இருக்கவில்லை என்பதும் தெரிகின்றது. வடமொழி எதிர்ப்புவெறி தனித்தமிழ் இயக்கக்கொள்கையினரைப் போல இவரிடம் இருக்கவில்லை என்பதுடன், நிதானமான ஒரு நோக்கு இவருக்கிரந்தது என்பதனைப் பின்வரும் இவரது கூற்றுக் காட்டுகின்றது.

‘வடமொழி, தமிழ்மொழியெனுமிருமொழிக்கும் இலக்கணம் ஒன்றேயென்று எண்ணக’ என்னும் கூற்றினை நாம் முற்றிலும் ஒப்புக்கொள்ளாவிடினும் வடமொழியிலிருந்தெடுத்து தமிழான்றோராலே தமிழுருவாக்கி வழங்கப்பட்ட சொற்களைப் பிறமொழிச் சொற்களெனக் கடிந்தொதுக்குதல் மேற்கொள்ளாது அவைதம்மை ஆக்கத் தமிழ் மொழியாகத் தழுவிக் கொள்வதே முறையாகும். 28

விதூஷகன், விஜயை, ஜயதேவன். பிரியதர்த்த என்ற பெயர்கள் யாவும் வடமொழிப் பெயர்களே. ஆனால் இவையாவும் தமிழ் ஆன்றோரால் வழங்கப்பட்ட பெயர்கள் என்ற கருத்தே விபுலாநந்தர் கருத்தாகும். இக் கருத்து அன்றைய தீவிரத்தனித் தமிழியக்கத்திலிருந்து இவரை வேறுபடுத்தும் கருத்தாகும்.

இவ்வண்ணம் மொழிபற்றிய ஒரு தாராளக்கொள்கை உருவாதற்கு இவருடைய பன்மொழி அறிவுடன், இவர் கலை சொல்லாக்கத்திலீடுட்டிருந்தமையும், பிறமொழிச் சொற்களுக்கு பல புதுத் தமிழ்ச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்தமையும் உலக அறிவை தமிழுக்குள் கொணர பண்டைய தமிழ் மாத்திரம் போதாது என்ற உண்மைகளை இவர் நடைமுறையிற் கண்டு கொண்டமையும் இவரின் மொழிபற்றிய தாராளக் கொள்கைக்குக் காரணங்களாகலாம்.

சோழ மண்டலத் தமிழும். ஈழமண்டலத் தமிழும் என்னும் கட்டுரையில் வட நாட்டிலிருந்து வெளிவரும் மாடன் ரிவியூ என்னும் ஆங்கில மாசிகை ஒன்றிலே தமிழ்மொழி ஒலியியல் (வுhந Phழநெவiஉள ழக வாந வுயஅடை டுயபெரயபந) என்னும் பொருள் பற்றி எழுதிய தன் வியாசம் பற்றிக் குறிப்பிடுகையில்

‘குறித்த வியாசத்திலே தமிழ் நாட்டு மக்கள் இக்காலத்திலே. திண்ணையிலும், தெருவிலும் கடை வீதியிலும், தொழிற்சாலையிலும் வழங்கும் தமிழ் மொழியின் சிறப்பிலும் வழங்கும் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள் சிலவற்றை எடுத்தக் காட்டினென். அஃதன்றியும் ஸ்ரீமான்.டி.கே சிதம்பரநாத முதலியாரை உள்ளிட்ட தமிழன்பார்கள் தமிழ் மக்களது வழக்கு மொழியாகிய உயிர்த்தமிழினது அழகினையும் ஆற்றலினையும் தீர விசாரித்து ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.29

என்கிறார். வழக்குத் தமிழின் சிறப்பியல்புகள் என்று குறிப்பிடுவதும், வழக்குத் தமிழே உயிர்த் தமிழ் என்பதும், அது அழகுடன் ஆற்றலும் வாயந்தது என்பதும் அடிகளார் கருத்து.

மரபுவழி - இலக்கணப்படி எழுத வேண்டுமென்று கூறும் அடிகளார் வழக்குத் தமிழே உயிர்த்தமிழ் என்று கூறுவது முரணாகத் தெரியினும் இது முரணன்று.

அறிவும், நடைமுறையும் விபுலாநந்தரை தமிழுணர்ச்சிச் சுழிக்குள்ளிருந்து நிஜ உலகுக்கு இழுத்து வந்து விட்டது. உணர்ச்சி பாண்டியன் தமிழ் பக்கம் நிற்க அறிவு சாதாரணமக்கள் தமிழின்பக்கம் நிற்கிறது. உணர்ச்சி தூய தமிழ் மொழிப் பிரயோகத்தின்பால் நிறக், அறிவு அது பிழை எனச் சாற்றுகிறது.

தமிழ்மொழி ஆராய்ச்சியிலீடுபாடுடைய விபுலாநந்தர், மொழி காலத்திற்குக் காலம் மாறுகின்றது என்பதையும், அதை மாற்றி வளர்த்தெடுப்போர் சாதாரணமக்களே என்பதையும் அறிந்து வைத்திருந்தார். கம்ப இராமாயண காலத்தில் எல்லோரும் பேசிய தமிழை அறிய இராமாயணத்தைவிட அக்காலக் கல்வெட்டுகள் தான் உதவுகின்றன எனக்கூறும் அடிகளார், கலித்தொகையில் உலக நடையும், வழக்கு மொழியும் வருவதைக் கூறுகிறார்.

‘ஒருவர் பிறந்த தாலுகா, ஜில்லா, அவரது குலம், கோதிரம், தொழில், பொருணிலை என்னுமிவற்றை அவரது மொழியினின்று அறிந்து கொள்கிறோம். ஆதலினாலே எல்லாரும் எல்லாவிடத்தும் உயர்ந்தோர் வழக்கையே கை;கொள்ள வேண்டும் என்பது எனது கருத்தன்று, தாம் தாம் வழங்குகினற் வழக்கு மொழியையே நயம் பட உரைக்கப் பயின்று கொள்ள வேண்டும்.’2னெ

பாண்டியன் தமிழே தமிழ். அதுவே நிலைபேறுடையது. அறிஞர் போற்றற்குரியது என்று கூறிய அதே அடிகளார், பின்னால் எல்லாரும் எல்லா இடத்தும் உயர்ந்தோர் வழக்கைக் கைக்கொள்ள வேண்டும் என்பது தன் கருத்தன்று என்பது வழக்கு மொழியாகிய உயிர்த்தமிழ் என்பதும் அடிகளார் தமிழ்மொழிபற்றி வைத்திருந்த கருத்துக்களைக் காட்டுவனவாயுள்ளன.

தமிழுணர்ச்சிக்கும், ஆராய்ச்சியறிவுக்குமிடையில் நின்ற அடிகளார் தமிழணர்ச்சிமீதூரப் பெற்று மரபை அழுத்தினும், தனித்தமிழை வரவேற்றினும், நடைமுறையில் அவ்வாறு முடியவில்லை. தமிழுணர்ச்சி அவரை வெகுவாகப் பாதித்தது. அதேநேரம் அறிவு அவரைச் சதா உறுத்திக்கொண்டே இருந்தது என அமைதி காணுதலே பொருத்தமுடைத்துபோலத் தோன்றுகிறது.

மதங்கசூளாமணியின் தமிழுணர்ச்சி

விபுலாநந்தரின் இரண்டு முக்கிய ஆய்வு நூல்கள் மதங்க சூளாமணியும் (1924) யாழ் நூலும் (1943), தமிழர் பண்டு பெருமையுடன் வாழ்ந்தனர்@ அவர்கள் பெரு நாகரிகம் பெற்று வாழ்ந்தனர் எகிப்திய. சமேரிய, சிந்து நாகரிகங்களுக்கு நாகரிகத்தை வழங்கும் அளவு நாகரிகம் பெற்றிருந்தனர் என்ற கருத்துகளைக் கொண்டிருந்த விபுலாநந்தர், மதங்க சூளாமணியிலும் பண்டைய தமிழர் நாடகத்தையும், யாழ் நூலில் பண்டைய தமிழர் இசையையும் பற்றிக் கூற முனைகிறார்.

உறுப்பியல், எடுத்துக் காட்டியல். ஒழிபியல் என மூன்று இயல்களாக வகுக்கப்பட்டுள்ள மதங்க சூளாமணியில் தமிழுணர்வில் தாக்கம் தெரிகிறது. முன்னுரையில் அவர் சேக்ஸ்பியர் நாடகம் பற்றிக் கூறுகையில்.

“இவர் அமைத்த நாடக நூல்கள் தமிழறிஞர் வகுத்துரைத்த சந்தியும், சுவையும், சத்தவமும், பிறவும் என்னும் நாடக உறுப்புக்களனைத்தும் செவ்விதினமைந்து கிடக்கும் இயல்பின வாதலின் அவற்றை ஆராய்தல் நாடகத் தமிழுராய்ச் சிக்கு இன்றியமையாததாமென எனது உள்ளத்துப் புலப்பட்டது.”31

என்கிறார். தமிழறிஞர் ஏற்கனவே வகுத்துரைத்த நாடக உறுப்புக்கள் என்று கூறுகையில் தமிழில் நாடகம் பற்றி ஏற்கனவே கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன என்ற கருத்து விபுலானந்தருக்குண்டு என்பது தெளிவாகின்றது. வகுக்கப்பட்டிருக்குமாயின் அதற்கு ஆதார நூல்கள் வேண்டுமன்றோ? அத்தகைய நூல்கள் இருந்தன, ஆனால் இறந்தன என்ற கூறி அந்நூல்களை அடியார்க்கு நல்லாருரையை ஆதாரம் காட்டி, பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல் என நாடக நூல்களின் பெயர்களைத் தந்து இவை அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முன்னரே அழிந்து போயின என்கிறார். பின்னர், இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நூல்களின் பெயர்கூறி@ இவற்றினின்று எடுக்கப்பட்ட சில சூத்திரங்கள் அடியார்க்கு நல்லார் உரையால் அறியக்கிடக்கின்றன என்கிறாh.

இவ்வண்ணம் அடியார்க்கு நல்லார் உரைமூலம் கிடைக்கும் நாடக ஆதாரங்களை ஒன்று திரட்டி அவற்றின் கருத்துக்களையே தமிழ் நாடகமரபாகக் கண்ட விபுலானந்தர் அவற்றை ஆதாரமாகக் கொண்டே சேக்ஸ்பியரின் நாடகங்களை அணுகுகின்றார். அவரது பின்வரும் கூற்று இதனைப்புலப்படுத்தும்:

“சிலப்பதிகார உரையில் ஆங்காங்கு காட்டப்பட்டிருக்கும் நாடக இலக்கண முடிவுகளை ஆதாரமாக நிறுத்தி, செக சிற்பியாருடைய நாடக நூல்களை இலக்கியமாகப் பொந்த வைத்து ஆராய்வது கரதிற்று இவ்வாராய்ச்சி.2னெ

இது மதங்கசூளாமணி முன்னுரையில் வரும் விபுலாநந்தர் கூற்றாகும்.

தமிழின் நாடகம் இருந்தது@ நாடக இலக்கணம் இருந்தது என்று நிறுவுவதும் அவற்றை அடியாகக் கொண்டு உலக நாடக ஜாம்பாவானான சேக்ஸ்பியரை அளந்தறிவதும் அவர் நோக்கம் என்பதை முன்னுரையில் வரும் கூற்றுக்கள் தெளிவுபடுத்துகின்றன. எடுத்துக் காட்டியலில் இது செய்யவும் படுகிறது. ஒழிபியலில் வட மொழியாசிரியராகிய தனஞ் செயனாரின் தசருபக (நாடக இலக்கணம்) மொழி பெயர்ப்பாக உள்ளது.

ஆயஉநடிநடா ஐ மகபதி எனவும் துரடசநவ ஐ சுசிலை எனவும் தமிழ் மரபுக்குள் தன்வயமாக்கிக் கொண்டதைப் போல சேக்ஸ்பியரின் நாடகங்களையும் தமிழ்நாடகமரபுக்குள் கொணரமுயல்வதை எடுத்துக்காட்டியலில் காணலாம். சந்தியை முகம், பிரதி, முகம், கருப்பம், விளைவு துய்த்தல் என வகுக்கும் அடிகளார் அவ்வடிப் படையிலேயே சேக்ஸ்பியர் நாடகங்களை ஆராய்கிறார். இவை நாடகம் பற்றிய நாட்டிய சாஸ்திர அணுகுமுறையாகும். சந்தி, பிரதிமுகம், கருப்பம் என்ற சொற்களே வடமொழிச் சொற்களாம். ‘மேனாட்டாரின் கமெடி (ஊழஅநனல) ரிறஜெடி (வசயபநனல) என்பதை நாம் வேத்தியல் பொதுவியல் எனவும் கூறலாம்” என்று விபுலாநந்தர் சொல்வது மேனாட்டு நாடகமரபைத் தமிழ் மரபுக்கூடாக உள்வாங்கும் தன்மையையே காட்டுகிறது.

தமிழருக்கென்று ஒரு நாடகமரபு உண்டா? உண்டாயின் அதுயாது? என்பது இன்று தமிழ் நாடக ஆய்வாளருக்கு சவால்தரும் ஒரு வினாவாகும்.

நாட்டிய சாஸ்திரம் மார்க்க, தேசி என்ற இருவகையான நாடகமரபுகளைக் கூறுகின்றது. இரண்டம் இந்திய கண்டத்தில் வழக்கிலிருந்த நாடக மரபுகள் தான்.

மார்க்க உயர் செந்நெறி நாடகமரபு. இதுபொது மரபு தேசிய அவ்வத்தேசங்களுகக்குச் சிறப்பாக உரிய நாடக மரபு. தேசி இடத்துக்கு இடம் தேசத்துக்குத் தகமாறுபடும்.

ஆரியமயமாக்கம் காரணமாக இந்தியாவின் சமஸ்கிரத மொழி பல மாநிலங்களுக்குப் பரவியது. சமஸ்கிரதமயமாக்கம் காரணமாக நாட்டிய சாஸ்திரம் கூறிய மார்க்கமரபு சகல பிரதேசங்களிலும் உயர் கலையாகச் செல்வாக்குற்றது. அத்தோடு அவ்வப்பிரதேசத்திற்குரிய தேசிக்கலைகளிலும் இது செல்வாக்கினைச்செலுத்தியது. இதேபோல தேசியின் செல்வாக்கு மார்க்கவிலும் ஏற்பட்டது. இரண்டும் இணைந்ததான ஒரு பொதுமரபே இன்று இந்தியாவின் நாடகமரபாக எண்ணப்படுகிறது. எனவே தான் சிற்சில வேறுபாடகள் காணப்படினும் இந்திய பாரம்பரிய நாடகங்கள் அனைதிலும் அதன் அமைப்பு அவைக் காற்றுமுறைகள் ஆகியவற்றில் பெருமளவு ஒற்றுமை காணப்படுகின்றன.

கடந்த கால நாடக ஆய்வுகள் இவ்வுண்மைகளை எமக்குத் தருகின்றன. இன்றும் ஒவ்வொர இந்தியப் பிரதேச மக்களும் - அப்பிரதேச நாடகம் பற்றி ஆராயும் நாடக ஆய்வாளரும் அவ்வப்பிரதேச நாடக மூலங்களை (தேசிநாடகம்) – அதன் தனித்துவங்களைத் தேடமுனைகிறார்கள். கன்னட யÑகானம், கேரளகதகளி என்பன இவ்வாறு வளர்ச்சி பெற்றனவேயாகும்.

இவ்வகையில் தமிழரின் நாடகமரபைத் தேடிக்கான 60 வருடங்களுக்கு முன்னர் விபுலாநந்தர் முயற்சிகள் மேற்கொண்டமை அவரது நுண்மாண் நுழை புலத்தையும், தூர நோக்கையும் காட்டுகிறது.

அடியார்க்கு நல்லார் உரையைத் தமிழ் நாடக முடிவுகளாகக் குறிக்கும் அடிகளார், அவர் காட்டும் நூல்களினின்று உரைமூலம் ஆதாரம் தரும் அடிகளார் அவற்றிற்கான மூலகத்தைக் குறித்தாரில்லை. நாட்டிய சாஸ்திர விதிகளுக்கமையவே இந் நூல்களின் கூற்றுக்களும் காணப்படுகின்றன. நாட்டிய சாஸ்திரத்துடன் இவற்றை இணைத்து அடிகளார் எங்கும் குறிப்பிடவில்லை. அவ்வண்ணமாயின் இந்நூல்கள் கூறும் கருத்துக்கள் பற்றி அடிகளாரின் கருத்து என்ன?

ஒன்றில் அவர்கருத்து இக்கருத்துக்கள் தனித்துவமானவை என்பதாயிருக்கலாம். அல்லது தமிழ்க் கருத்துக்களையே நாட்டியச hஸ்திர ஆசிரியர் கூறியுள்ளார் என்பதாயிருக்கலாம். தமிழரே நாகரிகம் மிகுந்த பண்டைய இனம் உலகுக்கு நாகரிகம் தந்த இனம் என்ற கருத்துக் கொண்டிருந்த அடிகளார் பின்னைய கருத்தையே கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. எனினும் இதுபற்றித் திட்ட வட்டமான முடிவு அவருக்கு இன்மையாலேயே அவர் தமிழ் நாடகக் கருத்துக்களை நாட்டிய சாஸ்திரத்துடன் ஒப்பிடவில்லை என்று நாம் அமைதிகாணலாம்.

வடமொழி ஆசிரியரான தனஞ் செயனாரின் தசரபகத்தைத் தமிழில் தந்தமை விபுலாநந்தரை மேலும் விளங்கிக் கொள்ள எமக்கு ஒருதிறவு கோலைத் தருகிறது. வடமொழி நாடக மரபு தமிழுக்கும் இயைபுடையது என்ற கருத்து விபுலாநந்தருக்கிருந்தது என்பதனை இது காட்டுகின்றது. எதிலிருந்து எது வந்தது? என்பது தான் அவருக்குள்ள பிரச்சினையாயிருந்திருக்கலாம்.

இப்பிரச்சினைகள் எல்லாம் அவருக்கு இருந்தன என்பதனையே அவர் முன்னுரையில் கூறும்பேனாளில் ஓய்வு ஏற்படுமாயின் வழுக்களைக் களைந்து, புதுக்கி எழுதுவேன் என்ற கூற்று வெளிப்படுத்தகிறது.

இங்கும் அவர் ஆய்வைத் தமிழுணர்ச்சி முன் தள்ளுவதையும். அதேநேரம் அறிவு அதை நிதானப்படுத்துவதையும் காணுகின்றோம்.

யாழ்நூலில் தமிழுணர்ச்சி

விபுலானந்தரின் ஆராய்ச்சிகளும் கொடுமுடியாக வைத்து எண்ணப்படுவது யாழ் நூல் நாகரிகமும் சிறப்பம்மிக்க வாழ்ந்தபண்டைய தமிழர்கள் கையாண்ட இசையை வெளிக்கொணர்தலே அவரின் நோக்கமாகும். எகிப்திய யாழினையும் சங்க இலக்கியங்களையும் ஆதாரமாகக் கொண்டு பண்டைத் தமிழர் கையாண்ட யாழ் பற்றியும் அதன் அமைப்புகள் பற்றியும் கூறுகிறார். விபுலாநந்தர். பண்டைய யாழ்களை மீளுருவாக்றார் விபுலாநந்தர். பண்டைய யாழ்களை மீளுருவாக்கியும் காட்டுகின்றார். வில்யாழ், பேரியாழ், சிறியாழ், சகோடயாழ் என யாழ்களின் வகைகளை வகுக்கும் விபுலானந்தர் வில்யாழ் பற்றி அறிமுகம் செய்வது சுவையாயுள்ளது. தமிழரின் பூர்வீகம் பற்றி அவருடைய கருத்து முன்னரேயே கூறப்பட்டது. இந்தியாவின் தென்பால் பஃறுளி ஆறு இருந்தது@ குமரிக்கண்டத்தில் தமிழர் நாகரிகம் உருவாயிருக்கலாம் என்ற கருத்தக்கள் அடிகளாரின் கருத்துகளாம். வில்யாழையும் அந்தப் பின்னணியில் தான் அறிமுகம் செய்கிறார். இப்படி ஆரம்பிக்கிறது அக்கட்டுரை:

“பழந்தமிழ் நாட்டுப் பஃறுளி ஆற்றங்கரைக்குச் செல்வோமாக முல்லை நிலம் மரங்களடர்ந்த சோலை. பாங்கா ஒரு பசும்புற்றரை. புற்றரையிலே பசுக்களும், கன்றுகளும் மேய்கின்றன. கார்காலம். இடையனொருவன் வருகின்றான்…”33

என்று ஆரம்பித்து அவ்விடையன் இடைச்சி கொணர்ந்த கூழினை உண்டபின்னர் குழலை வாசிக்கிறான். பின் வில்வடிவமான கருவியை எடுக்கிறான். அஃது ஒரு வில்யாழ் மரல் நாரினால் கட்டிய ஏழு வில்கள் இருக்கின்றன. அவ்வில்யாழில் குறிஞ்சிப்பண் வாசிக்கின்றான். இவ்வண்ணம் கூறிய விபுலாநந்தர்.

இடையனுடைய வரன் முறை நம் சொந்தக் கனவு அல்ல. தலைச் சங்கத்துக்கு முன்னடந்த இந் நிகழ்ச்சியினைக் கடைச்சங்க காலத்து புலவராகிய கடியலூர் உருத்திரர் கண்ணனார் கனவு கண்டு தாம் தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய மெரும்பாற்றுணப் படையில் பொதிந்து வைத்துள்ளார்.34

இவற்றினின்று விபுலாநந்தர் கூறும் தமிழரின் யாழின் காலம், தலைச்சங்க காலத்துக்கு, பஃறுளியாற்றங்கரைக்குச் சென்று விடுவதனைக் காணலாம். தமிழுணர்வே அவர் ஆராய்ச்சியைத் தொடங்க உந்து சக்தியாயிற்று என்பதற்கு இது சான்றாகும்.

தமிழருக்கு ஒரு பெரும் இசை மரபு இருந்திருக்குமாயின் அது தொடர்ச்சி பெற்றிருக்க வேண்டுமே? ஆம். அதனை ஏனைய இயல்களில் ஆராய்கின்றார். பண்டைத் தமிழர் இசைக் கருவிகளை வெளிக்காட்டுவதுடன், தமிழரின் இசை வரலாற்றை விளக்குவதும் அடிகளாரின் நோக்கமாகும்.

குடுமியாமலைக் கல்வெட்டுக்கள் தமிழிசை பற்றிக் கூறுவனவே என்ற அடிகளாரின் முடிவு இதன் வெளிப்பாடே. அரங்கேற்றுக் கதையில் மாதவியிசைத்த யாழ்க் கருவியின் அமைப்பு. பாடிய அமைப்பு தேவாரகாலத்தில் மூவரருளிய பாடல்களும் பாடப்பட்ட முறை என்பனவற்றைத் தருதல் தமிழர் இசையின் அறாத் தொடர்ச்சி விளக்கப்படுகிறது.

இவர் ஆராய்வை இக்காலத்தெழுத்த தமிழிசை இயக்கத்தின் பின்னணியில் நோக்கவேண்டும். 1941 ஆம் ஆண்டளவில்தான் தமழி நாட்டில் தமிழிசை இயக்கம் தொடங்கியது. தமிழ் இசை வளர்ச்சிக்காக முதன் முதலாக மாநாடு ஒன்று அண்ணாமலை நகரில் கூட்டப்பட்டது. 1943 மே மாதம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டது. தமிழிசை இயக்கத்திற்கு ஓர் அரசியல் பின்னணியும் உண்டு என்பர். 1931ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரானதையடுத்து விபுலாநந்த அடிகள் பழந்தமிழ் இசையாராய்ச்சியில் குறிப்பாகக் கவனம் செலுத்தலானார். 1940 களிலிருந்து தமிழ் இசைபற்றிய கட்டுரைகளை எழுதுகிறார். அதன் முழுமைதான் 1947 இல் யாழ் நூலாக வெளிவருகிறது.

சிலப்பதிகாரமே அடிகளாருக்கு தமிழ் இசை ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாயிற்று. தமிழர் பெருமை, தமிழர் நாகரிகத்தை முன்னிறுத்தியோருக்கு கனகசபைப்பிள்ளை தொடக்கம் கருணாநிதி வரை சிலப்பதிகாரமே ஆதரமாயிற்று. அடிகளாரும் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் யாழாசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்ததொரு விரிவுரையாக யாழ்நூல் ஆய்வு எடுத்துக்கொள்ளப்பட்டது என்பர்.

தமிழ் உணர்ச்சியும் அக்காலத் தமிழ் நாட்டுச் சூழலும் இவரை தமிழிசை ஆராய்ச்சியை நடத்தத்தூண்டின. அவருடைய அறிவும், ஆராய்ச்சியுணர்வும் தமிழிசை பற்றிய தகவல்களை வெறும் உணர்ச்சிபூர்வமான உரைகளாகவன்றி ஆராய்வு பூர்வான கருத்துக்களாக வெளிப்படுத்தின. தமிழ் உணர்ச்சியும் அறிவின் நிதானமும் இணைந்து செல்வதனை யாழ் நூலிற் காணலாம்.

தமிழ்தேசியமும் விபுலாநந்தரும்

விபுலாநந்தர் வாழ்ந்த காலத்திலும், அதற்கு முன்னாலும் தமிழ்தேசிய இயக்கம் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் தோன்றியமையும் ஈழத்தில் எழுந்த தமிழ் தேசிய இயக்கம் கிறிஸ்தவ, சிங்கள எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும், தமிழ் நாட்டில் எழுந்த தமிழ்த் தேசிய இயக்கம் பிராமண சமஸ்கிருத எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் அமைந்திருந்தன என்பதும் முன்னரேயே கூறப்பட்டன.

விபுலாநந்தரின் தமிழுணர்ச்சியில் கிறித்தவ எதிர்ப்போ பிராமண எதிர்ப்போ இருக்காதது இங்கு அழுத்திக் குறிப்பிட வேண்டிய அம்சமாகும். வடமொழியின் சிறப்பையும் அவ்விலக்கியங்களின் செழுமையை அறிந்தமையும், கிறித்தவ பாடசாலைகளில் கற்று ஆங்கில இலக்கியங்களிற்றிளைத்திருந்தமையும் இவருக்கு கிறித்தவ – பிராமண எதிர்ப்பின்மைப் போக்கினைக் கொடுத்திருக்கலாம். விபுலாநந்தரின் தமிழுணர்வும், தமிழ்தேசியமும் தனித்துவமானது. அது பிறமொழி, பிற இனக்காழ்ப்பற்றது. பண்டையதமிழர்களின் பெருமைகளை விபுலாநந்தர் உயர்த்திப் பேசினாரேனும் மற்றைய இனங்களை எவ்விடத்தும் தாழ்த்திப்பேசினாரில்லை. எங்கிருந்தெல்லாம் தமிழர் நல்லன் பெற வேண்டுமோ அங்கிருந்தெல்லாம் பெற வேண்டும் என்றும் அவாவினர். தன் காலத்தமிழி உணர்ச்சிமிக்க பண்டிதர்மாரிடமிருந்தும் தமிழுணர்ச்சி மிக்க அறிஞரிடமிருந்தும் இவ்வாறு தான் அவர் வேறுபடுகிறார். மாறாக பிறமொழி அறியாது தமிழ் மட்டுமே அறிந்தோர் பயன்பெறும் பொருட்டு ஆங்கில இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்துக் கொடுத்தார். தமிழ் மட்டும் தெரிந்த பண்டிதமணி கதிரேசச் செட்டியாருக்குப் பயன்படும் வகையில் ஆங்கிலவாணி கட்டுரையைத் தாம் எழுதியதாகக் கூறுகிறார். அவருடைய ஆங்கிலவாணி, மேற்றிசைச் செல்வம் ஆகிய கட்டுரைகள் ஐரோப்பிய மரபுகளையும் வளர்ச்சியையும் தமிழருக்கு அறிவுறுத்த எழுதப்பட்ட கட்டுரைகளாகும். பிறமொழித் தொடர்பு பிற கலாசாரம் பற்றிய அறிவும் தமிழ்மக்களை ஆரோக்கிய சிந்தனையுள்ளவர்களாக வளர்க்கும் என்பது அவரது எண்ணம் போலும்.

“கால நீரோட்டம் விரைந்து ஓடுகிறது. தமிழர் பழங்காலச் சிறப்பினை மாத்திரம் பறையறைந்து கொண்டிருப்பர் எனின் நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும், முழுவதையும் இழந்த நீர்மையராதல் கூடும். சென்ற நூற்றாண்டிலே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விஞ்ஞான நூல் மிகவும் விருத்தியடைந்து விளங்குகின்றது. அறிவுச் செல்வத்தை தமிழ்மொழி பெறுவதற்குகான செயல் சிற்நத தமிழ்த் தொண்டாகும்.’35

என்ற விபுலாநந்தர் கூற்றில் தமிழ் தொண்டு என்றால் என்ன? என்பதற்கான விடை கூறப்படுகிறது. அறிவுச் செல்வத்தை அதிலும் மேற்கு நாட்டில் விருத்தியடைந்த விஞ்ஞான அறிவை தமிழ்மொழி பெறும் வகை செய்தலே தமிழ்த்தொண்டு என்கிறார். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிவதில் மகிமை இல்லை” என்ற பாரதியின் கூற்றுக்கும் விபுலாநந்தர் கூற்றுக்கும் மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. அறிவு ரீதியான ஆக்கப்பாடான வேலைகளே தமிழ்த் தொண்டு என்பது விபுலாநந்தர் எண்ணம் போலும். உணர்ச்சியை விட அறிவே இங்கு முதன்மை பெறுகிறது.

பிறமொழிகளிலுள்ள சிறந்த கவிதைகளை அவர் தமிழிலே பெயர்த்துள்ளார். தமிழ் இலக்கியம் போல பிறமொழி இலக்கியங்கள் இருப்பதையும். பிறமொழி இலக்கியங்களிற் காணப்படும் கருத்துக்கள் தமிழில் இருப்பதனையும் எடுத்துக்காட்டுவார். தன்னிற் பிறரையும் பிறரில் தன்னையும் காணும் வேதாந்த தத்துவ ஞானம், அவருக்குத் தமிழ் இலக்கியத்தில் பிற இலக்கியத் தன்மைகளையும், பிற இலக்கியங்களில் தமிழ் இலக்கியங்களின் தன்மையினையும் காணும் ஒப்பியல் நோக்கைத் தந்திருக்கலாம்.

விபுலாநந்தரின் தமிழ் உணர்வுக்கான காரணங்களை அவரது வாழ்க்கைப் பின்புலத்தோடும் இணைத்து நோக்குவது அவசியம். அது தனியாக எழுதப்பட வேண்டியது. எனினும், மட்டக்களப்பின் சமூக வாழ்க்கைமுறை, பல இனமக்களோடும் அவர் இளவயதிலிருந்தே பழகியமை, அவர்களது கலாசாரங்களை அறிந்தமை கண்ணகி வழிபாட்டின் பின்னணியில் வளர்ந்தமை, ஆங்கில பாடசாலைகளில் பாதிரிமாரின் கீழ்க் கல்வி பயின்றமை என்பன போன்ற பின்னணிகளும் அவரது தமிழ் உணர்வைப் பாதித்த காரணிகளாகும். பிற இன மத காழ்ப்பு அவர் தமிழ் உணர்விற் காணப்படாமைக்கு அவரது வாழ்க்கைப் பின்னணியும் ஒரு காரணமாகும்.

விவேகானந்தாரால் விரிவுபடுத்தப்பட்ட வேதாந்தம் இந்தியாவையும், அதைச் சூழ உள்ள நாடுகளின் கலைகளையும் இந்தியப் பொதமைக்குள்ளேயே காணமுயன்றது. வேதாந்தத்தின் இந்தியப் பொதுமைக்கும் தமிழின் தனிச் சிறப்புக்கும் இவர் அமைதிகாண முனையும் முறைமை முக்கியமானதாகம். இதனால் இவர் தமிழுணர்வில் நிதானம் காணப்படுவதைக் காணலாம்.

விபுலாநந்தருக்குத் தமிழுணர்ச்சி அதிகமாகவே இருந்தது உண்மைதான். தமிழரின் பெருமைகளை எழுதினார்@ பேசினார்@ ஆராய்ந்தார்@ வெளிக் கொணர்ந்தார். மறைவாகப் பழங்கதைகள் பேசுவதில் அவருக்கு உடன்பாடில்லை. புதிய சவால்களைச் சந்தித்து, முன்னேறி வரும் உலகுடன் ஏற்ப தமிழினம் விழித்தெழுந்து இணைந்து கொள்ள வேண்டும் என எண்ணினார். அவரின் மொழிபெயர்ப்பு இதன் வழிப்பாடே.

பிறமொழி, பிற இனக்காழ்ப்பற்ற தமிழ் இன உணர்வே விபுலாநந்தரின் தமிழ் உணர்ச்சியாகும். சுத்தானந்த பாரதியார் கூறியது போல அவர் தமிழ்த் துடிப்புப் பல்லாயிரம் நெஞ்சங்களில் முரசடிக்கும். அவர் பல்லாயிரம் மக்கள் மனதில் தமிழ் வெளியேற்றியமை உண்மைதான்.

தமிழரை ஆளுமையுள்ளவர்களாக. பிறரக்கிரங்குபவராக, உலக நாகரிகத்தைத் தம் நாகரிகமாகக் காண்பவராக, சுருங்கச் சொன்னால் உன்னத மனித சமுதாயமாக மாற்றம் அவர் நெறி கொண்டிருந்தார். தன்னளவில் அதைச் செய்தும் இருந்தார். விபுலாநந்தர் காலத்தின் விளைபொருள். புதிய காலத்திற்கான வித்துக்களைத் தந்தவர். அவரின் ஒரு பாதி தமிழுணர்ச்சியென்றால் மறுபாதி அறிவு ஆராய்ச்சி.

சான்றாதாரங்கள்

1. ஈழமணி. மலர் 1948 (தடித்த எழுத்துக்கள் எம்மாலிடப்பட்டவை)

2. மேலது, (தடித்த எழுத்துக்கள் எம்மாலிடப்பட்டவை)

3. களவியல் என்னும் இறையனார் அகப் பொருள் மூலமும் நக்கீரனார் உரையும், பவானந்தர் கழக சென்னை 1939, பக் 5-7

4. கைலாசபதி. க, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் (மேலதிக விபரங்களுக்கு இந்நூலிலுள்ள நாடும் நாயன்மாரும் என்ற கட்டுரையைப் பாhக்குக) சென்னை 1966.

5. சிவத்தம்பி. கா, தனித்தமிழியக்கத்தின் அரசியற் பின்னணி. சென்னை.

6. சுப்பிரமணி ஐயர் யு.ஏ. தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி சென்னை, 1959, பக் ஓஐ

7. வையாபுரிப்பிள்ளை, திராவிட மொழிகளில் ஆராய்ச்சி. சென்னை 1959. பக் 36-56

8. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (தமிழில் கா. கோவிந்தன், ஆ. சிங்காரவேலு) சென்னை1959. பக் 60-61

9. தீட்சிதர் ஏ.சு.சு, பண்டைத் தமிழ்ப்பெருமை கதிரேசன் செட்டியா மணிமலர், 1941. பக் 236-240

10. சிவத்தம்பி கார்த்திகேசு, தமிழில் இலக்கியவரலாறு, வரலாறெழுதியல் ஆய்வு சென்னை 1988, பக் 65.

11. அருள் செல்வனாயகம் (தொகுப்பு) விபுலாநந்த ஆராய்வு, சென்னை, 1964, பக் 28-33

12. முற்குறிப்பிட்ட நூல் பக் - 30

13. மு.கு. நூல், பக் 22

14. மு.கு. நூல், பக் 24

15. மு.கு. நூல், பக் 96

16. மு.கு. நூல், பக் 84

17. மு.கு. நூல், பக் 86

18. மு.கு. நூல், பக் 81-82

19. மு.கு. நூல், பக் 91-92

20. மு.கு. நூல், பக் 92-93

21. மு.கு. நூல், பக் 93

22. உயர்திரு விபுலாநந்த அடிகள் இலக்கியக்கட்டுரைகள் கொழும்பு 1973 பக் 69-70

23. மு.கு. நூல், பக் 70

24. வரலாற்றுக்கு முன்வடக்கும் தெற்கும்

25. உயர் திரு விபுலாநந்த அடிகள், இலக்கியக் கட்டுரைகள் கொழும்பு 19-73 பக் - 77

26. மே.கு. நூல் பக் 77

27. மே.கு. நூல் பக் 77

28. மே.கு. நூல்

29. மே.கு. நூல் பக் 143

30. மே.கு. நூல் பக் 145

31. விபுலாநந்த சுவாமிகள் முன்னுரை மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல் மறு வெளியீடு. கொழும்பு 1987 பக் ஓ-ஓஐஐ

32. மு.கு. நூல் பக் ஓஐ

33. விபுலாநந்த சுவாமிகள் இயற்றிய யாழ்நூல் என்னும் இசைத்தமிழ் நூல் தஞ்சை, ஆனந்த ஆண்டு, கலி 30 எகூ பக் ஙய

34. மே.கு. நூல் பக் ஙய – ஙஉ

35. உயர் திரு விபுலாந்த அடிகள் இலக்கியக் கட்டுரைகள் கொழும்பு 1973 பக் 76.


சுவாமி விபுலாநந்தர் நயந்த இலக்கிய நாயக்கர்கள்

விபுலாந்த அடிகளாரின் நூற்பலமை மிகப் பரந்தது. அவரது கட்டுரைகளில் அவர் எடுத்தாளும் தகவல்கள் எம்மைப் பிரமிக்க வைக்கின்றன. தத்துவம், சரித்திரம், விஞ்ஞானமட, நாடகம், சங்கீதம், கலைகள், தமிழிலக்கியம், சமஸ்கிருத இலக்கியம், கிரேக்க இலக்கியம், ஆங்கில இலக்கியம் எனப் பல துறைகளிலும் பரிச்சயமுடையவராக அடிகளார் காட்சி தருகின்றார். இன்றைய ஆய்வு நெறியில் பல்துறை ஆய்வொழுங்குச் சங்கம அணுகுமுறை (ஆரடவல னுiஉipடiயெசல யுppசழஉh) சிலாகிக்கப்படுகிறது அம்முறை நின்று ஆய்வோரின் ஆய்வுகள் ஆழமும், சமூகப் பயன்பாடும் மிக்கனவாயிருப்பதுடன் புதிய பார்வைகளையும் தருகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த அடிகளாரிடம் இச்சிந்தனையோட்டம் காணப்படுகிறது.

“முத்தமிழ் முனிவர் விபுலாநந்த அடிகள் பல துறைகளிலே உழைத்துத் தமிழுக்கு உரமூட்டியவா”.1

என்பர் க. கைலாசபதி. சுவாமி விபுலாநந்தர் பற்றி மேலும் அவர் இவ்வாறு கூறுவர்.
“ஆங்கில இலக்கியத்தை மாத்திலம் கற்பதோடு அமைந்தவர் அல்லர் அடிகள். உலக வரலாறு, மானிடவியல், தத்துவம். விஞ்ஞானம், புராதன மொழிகள் முதலியவற்றையும் இடைவிடாது படித்து வந்திருக்கிறார்.”2

பல்துறைகளையும் தானாகவே தேடிக்கற்கும் மன்பாங்குதான் அடிகளாரை பல்துறை ஆய்வொழுங்கிற் சிந்திக்கும் படி செய்தது எனலாம்.

அடிகளாரின் காலப்பின்னணி ஏற்கனவே விரித்துரைக்கப்பட்டுள்ளது. தாழ்வற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு, இந்திய மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் பாழ்பட்டு நின்ற காலத்திலே வாழ்ந்த அடிகளார், அம்மக்கள் அந்நிய ஆட்சியினின்று விடுதலை பெறுவதுடன், அடிமைப்பட்ட மக்களாக அன்றி. ஆளுமை மிக்க மக்களாக வாழவேண்டும் என்றும் விரும்பினார். அவருடைய செயற்பாடகள் அவற்றை நோக்கியனவாகவே அமைந்தன.

தன் காலச் சூழலிற் தனக்குக் கிடைத்த அறிவுத் திரட்சியின் பின்னணியில் அதற்கான வழிமுறைகளை அடிகளார் சிந்தித்தார். தனி ஆளின் ஆன்ம ஈடேற்றம் என்ற தன்மையைக் கடந்து சமூக விடுதலையை நோக்கமாகக் கொண்டதும், உலகையும் உலக வாழ்க்கையையும் தள்ளிவிடாது அதனையும் உண்மை என உணர்த்தியதும். அத்வைத வேதாத்தத்தின் தூய்மையிலிருந்து அதனைச் செயல்முறை வேதாந்நதமாக வளர்த்தெடுத்ததுமான விவேகானந்தர் தந்த இராமகிருஷ்ண இயக்கத்தில் தன்னை இவர் இணைத்துக்கொண்டமை@ தனி ஆளாக அன்றி இயக்க ரீதியன செயற்பாடே உலகை மாற்றுவிக்கும் வழி என்ற இவரது தீர்க்க தரிசன சிந்தனையைக் காட்டுகிறது.

உலகு என்பது இங்கு ஆகுபெயராகும் உலகை மாற்றுவித்தல் என்பது உலக மக்களை மாற்றுவித்தல் ஆகும். உலக மக்கின் மனோபாவத்தில் ஏற்படும் மாற்றம் மனிதனை மனிதனாக்கும் என்று கண்ட அடிகளார் கல்வி நெறிமூலம் அம்மனோபாங்கு மாற்றத்திற்கு முயன்றார்.

வெறும் வகுப்பறைக் கற்பித்தல் மாத்திரமன்றி, மனிதனை மனிதனாக்கும் கல்வியை, ஒழுக்கமும் சீலமும் இளமை முதல் விரவி நின்ற கல்வியில் வழங்கியது அன்னாரது கோட்பாடு ஆளுமைக் கல்வி ஒழுக்க மேன்மைக்கல்வி வுhந அயn ஆயமiபெ ஊhயசயஉவநச டீரடைனiபெ நுனரஉயவழைn அடிகளாரது கல்விச் சிந்தiனியன் ஒப்பற்ற இலக்குகளாக அமைந்திருந்தன.3

ஆளுமைக்கல்வி என்ற பதம் இங்கு நுனித்து நோக்குதற்குரியது. கல்வி மனிதனின் ஆளுமை விருத்திக்கு உதவி செய்ய வேண்டும்@ ஆளுமையை உருவாக்க வேண்டும்@ என்பது அடிகளார் கருத்து. கல்வி கற்றல் அரச ஊதியம் பெற என்ற கருத்து முனைப்படைந்து நின்ற அக்காலத்தில் விபுலாநந்தரின் கருத்து. வித்தியாசமாக ஒலிக்கிறது. மனிதனுள் மறைந்து கிடக்கும் மகாசக்தியை அவனுக்குணர்த்துவதே சுவாமி விவேகானந்தர் நோக்கு. சுவாமி விவேகானந்தர் வழிநின்ற சுவாமி விபுலாநந்தர். கல்வி நெறி மனித ஆளுமையை@ மனிதனுள் மறைந்து கிடக்கும் மகாசக்தியை வெளிக்கொணரவேண்டும் என்றே கருதினர். கல்வி நெறிகளுள் ஒரு பிரிவான இலக்கியக்கல்வியும் இவ்வண்ணமே அமைதல் வேண்டும் என்று விபுலாநந்தர் எண்ணியதில் வியப்பில்லை.

இலக்கியக்கல்வி நெறியிற் கூடுதலான நாட்டமுள்ள அடிகளார் உலக இலக்கியங்களிலும், பாரத இலக்கியங்களிலும் தாம் இரசித்த பகுதிகளைத் தமிழிற் தருகிறார். அவரது இலக்கிய விமர்சன அணுகுமுறை இரசனை நெறிப்பட்டதாயினும்@ அவரது பாடல் தெரிவு வெறும் பொழுதுபோக்கு இரசனையின் பாற்படாது சமூக நலனாட்டம் கொண்டாயிருந்தது. மக்களுக்கு அறிவூட்டும் தன்மைகளை. மக்களைச் சிந்திக்க வைக்கும் பான்மைகளை அவர் தெரிந்த பாடல்கள் பெரும்பான்மை கொண்டிருந்தன.

காவியம் ஒன்றைக் கற்கும்போது அல்லது சிறந்த நாடகம் ஒன்றை நயக்கும்போது அதில் வரும் பாத்திரங்கள் சில நம்மோடு நெருங்கி வருகின்றன. சிலவற்றை நயக்கிறோம்@ வியக்கிறோம்@ நயப்பும் வியப்பும் நம்மை நமக்கு இனம் காட்டும். வெள்ளத்தனைய மலரீட்டம் போல நமது உள்ளத்தின் விசாலத்திற்கமையவே நாம் இரசிக்கும் பாத்திரங்களும் அமையம். ஒருவரின் இரசனையைக் கொண்டு அவரின் உள்ள விசாலத்தின் பரப்பை அறிய முடியும்.

விபுலாநந்தரை உண்மை, நேர்மை, அஞ்சாமை, தேடல் போன்ற பண்புகள் வாய்ந்த ஆளுமைமிக்க இலக்கியக் கதாபாத்திரங்கள் கவர்ந்தன. இத்தகைய குணம் மிக்க பாத்திரங்களை அவர் வெகுவாக இரசித்தார். தான் இரசித்தது மாத்திரமன்றி மக்கள் நலனாட்டம் கொண்ட அடிகளார் மக்களுக்கும் அவற்றை அறிமுகம் செய்தார். அப்பாத்திரங்களின் பண்புகள் சிறிதேனும் தமிழ் மாணாக்கருக்குச் சுவறப்படின் புதிய தலைமுறை உருவாகக் கூடும் என்ற எண்ணம் அடிகளார் மனதில் இருந்திருக்கவும் கூடும்.

மூன்று கதாபாத்திரங்கள்

அடிகளாரைக் கவர்ந்த மூன்று கதாபாத்திரங்கள் இங்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாவது பாத்திரம் கர்ணன். இவன் மஙா பாரத்த்தின் முக்கிய பாத்திரங்களுள் ஒருவன். வியாசர் தந்த மகாபாரதத்தை தமிழ்ப்படுத்தியவர்களுள் வில்லி புத்தூராழ்வார் முக்கியமானவர். தமது பாரதத்தில் காட்டிய கர்ணனையே அடிகளார் நமக்கு இங்கு அறிமுகம் செய்கிறார். கர்ணனை அடிகளார் கன்னன் எனவே குறிப்பிடுகிறார்.

இரண்டாவது பாத்திரம் யூலியஸ்சீகர், றோமராச்சியம் வளர்ந்து வந்த காலத்தில் அதனை வளர்ச்சி நிலைக்கு இட்டுச் சென்ற வீரர்களுள் ஒருவன் யூலியஸ்சீகர். பல மாநிலங்கையும் அண்டைய நாடுகளையும் அவ்விராச்சியத்துடன் இணைத்து அது பேரரசாக வளர அடித்தளமிட்டோருள் முக்கியமானவன். அவனைப் பற்றி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் யூலியஸ்சீசர் ஆண்மையும் அஞ்சாமையும் மிக்க அப்பாத்திரத்தை ஷேக்ஸ்பியரின் நாடகத்திலிருந்து மொழிபெயர்த்து அறிமுகம் செய்கிறார் விபுலாநந்தர்.

அடுத்த பாத்திரம் யூலிசஸ். கிரேக்க மகாகவியான ஹோமர் படைத்த இலியட் ஒடிசியில் வரும் ஒரு முக்கிய பாத்திரம் யூலிஸஸ். அந்தப் பாத்திரத்தின் வீரச் சொற்களை அமைத்து தெனிசன் என்னும் அங்கிலப் புலவர் இயற்றிய கவிதையை மொழிபெயர்த்து அதன் வாயிலாக தேடலும், பிரயாணத்தில் விருப்பமும் கொண்டவனான யூலிஸஸை அறிமுகம் செய்கிறார்.

கன்னன்

1939 ஆண்டு கல்முனையில் ஆசிரியர் விடுமுறைக் கழகம் ஒன்று நடந்தது. இக்கழகத்திற்குத் தலைமை தாங்கி இலக்கியச் சுவை பற்றி ஓர் விரிவுரையாற்றும் படி அடிகளைக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கிணங்கிய அடிகள் இலக்கியம் கற்றலும் இலக்கியச் சுவையிலீடுபடலும் என்ற பொருள் பற்றிச் செந்தமிழ் நடையிலே ஒரு விரிவுரை ஆற்றினார்.4 அவ்வுரையிலே கன்னன் பாத்திரம் பற்றி விளக்கியுள்ளார்.

“பாரதத்திற்குக் காப்பியத் தலைவன் யாவன்?” என வினா எழுப்பும் அடிகளார்@ ‘கன்ன பிரான் என்பாரும் அருச்சுனன் என்பாரும், உதிட்டிரன் என்பாரும் சுயோதனன் என்பாரும் உளர் எனினும் இவர்கள் அனைவரையும் தன் அன்பினாற் பிணித்த அங்கர் கோனாகிய கன்னனே காப்பியத்தின் தலைவன்’5 என்று விடையும் தருகிறார்.

பாண்டவருக்கு அண்ணனாக உயர் குடியிற் பிறந்தும், சந்தர்ப்ப வசத்தால் தாழ்குடியில் வந்த தேரோட்டியால் வளர்க்கப்படுகிறான் கன்னன், தாழ்குலத்தில் வளர்ந்தமையால் Ñத்திரியனுக்குரிய உரிமைகள் அவனுக்கு மறுக்கப்படுகின்றன. வீரமும், ஆண்மையும் புத்தியும் மிக அவனை மேல் எழ அன்றைய சமூக நீதி அனுமதிக்கவில்லை. எனினும் தனது கெட்டித்தனத்தாலும் விடாமுயற்சியாலும் அஸ்திரப் பிரயோகங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன் அதன் மூலம் தன் திறமையை அவையிற் காட்டி மன்னன் துரியோதனனின் மதிப்பையும் நட்பையும் பெற்றுக் கொள்கிறான் கன்னன்.

போட்டி நடந்த அவையின் மத்தியிலே தன்னையும் தன் பிறப்பையும் சுட்டிக்காட்டி அவமதித்தோர் நடுவே, தன்னை உயர்த்தி அரசனாக்கி தன் அவமானம் போக்கிய நண்பனாகிய துரியோதனனை அவன் என்றும் மறக்கவுமில்லை@ கைவிடவுமில்லை.

கன்னனை வீழ்த்தி பாண்டவர்கட்குவெற்றி ஈட்டித்தர கண்ணன்போடும் திட்டங்கள் ஏராளம். கடைசி நேரத்திலே – யுத்தம் தொடங்கு முன்னர் கன்னனின் பிறப்பின் இரகசியத்தை வெளிப்படுத்தி தாயான குந்தி தேவியன் மூலமாகவே அவன் பாண்டவர்களின் தமையன் என்ற உண்மையை கன்னனுக்கு உணர்த்துகிறான் கண்ணன். அப்போதும் கன்னன் அசைந்தானில்லை. செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதே என் பணி@ அதுவே தர்மம் என்று கூறி பாண்டவர் பக்கம் சேர மறுத்து விடுகிறான்.

17ஆம்நாள் போர் ஆரம்பமாகிறது. அண்ணனென்று அறியாது காண்டீபம் தூக்கி நின்ற அருச்சுனனோடு தம்பி என்று அவனை அறிந்த கன்னன் பொருதுகிறான். இருவரையும் அறிந்த கண்ணன் அருச்சுனனின் சாரதியாகத் தேர் நடத்தி கன்னனைக் கொல்லும்படி அருச்சுனனை ஏவுகிறான். அருச்சுனன் அம்புகள் கன்னன் மார்பில் பாய்கின்றன. களத்தில் வீழ்ந்த கன்னனின் உயிர் போகாமல் நிற்கிறது. தர்மதேவதை அவன் உயிரைக் காப்பதை அறிந்த கண்ணன் வஞ்சவேதியர் வடிவு கொண்டு கன்னனை அடைகிறான். அப்போர்க்களக் காட்சியை அடிகளார் பின்வருமாறு வர்ணிக்கிறார்.

‘குருத்NÑத்திரப் போர்க்களத்தில் போர் தொடங்கிய பதினேழாம் நாளன்று நடந்த இத்தெய்வக் காட்சியை அகக்கண்ணால் நோக்குவோமாக. பொழுது மேற்றிசையிலே இரண்டு விரற்கிடை தூரத்திலே நிற்கிறது. சூரியனது பொன் போன்ற கிரணங்கள் புதல்வனது ஆகத்தினை மெல்லெனத்தழுவி நிற்கின்றன. அருச்சுனனது ஆயிரம் அம்புகள் துளைத்த துளைகளினின்றும் பாய்கின்ற செங்குருதிசூரியகுமாரனது உடலத்திலே ஆயிரம் கிரணங்கள் போலத்திகழுகின்றது, இரு பெருவீரர்களின் இரதத்திற் பூட்டியகுதிரைகள் செயலற்று நிற்கின்றன. கண்ணபிரான் விஜயனைச் செருவொழிதி’ எனக் கையமர்த்தி கன்னனை நோக்கி வருகிறான்.6

வந்த கண்ணன் “வறுமையால் வாடினேன் இக் கணத்து எனக்கு இயைந்ததொன்று அளிப்பாய்’ என்று யாசிக்கின்றான். உயிர்போகும் துன்பநேரத்திலும் அச்சொற்கள் கன்னனுக்கு காதில் அமுதமெனப் பாய்கின்றன. இரதத்தின் மீது விழுந்து கிடக்கும் கன்னன் மகிழ்வோடு ‘தரத்தக்க பொருள் என்ன?” என வினவ ‘நின் புண்ணியமனைத்தும் உதவுக’ என்கிறான் வேதியனாக வந்த கண்ணன்.

ஆவியோ நிலையிற் கலங்கியது யாக்கை
அகத்ததோ புறத்ததோ அறியேன்
பாவியேன் வேண்டும் பொருளெலா நயக்கும்
பக்குவம் தன்னில் வந்திலையால்
ஓவிலாதியான் செய் புண்ணிய மனைத்தும்
உதவினேன் கொள்க நீ,

என்று கூறி தன் இதயத்திற் பாய்ந்து கிடந்த அம்பினை வாங்கி அங்கு பாய்ந்த செந்நீரே நீராக தான் புரிந்த புண்ணியமனைத்தினையும் தானம் செய்கிறான். பெற்ற கண்ணபிரான் ஆதிய வேதியன் ‘வேண்டிய வரம் கேள்’ என்கிறான். இது கேட்ட கன்னன்

‘இல்லையென்றிரப் போர்க் கில்லையென்றுரையா இதயம் நீ அருள்’

என்கிறான், கருணை வள்ளலாகிய கண்ணபிரன், உளமுருகிக் கண்களினின்று சொரிந்த நீரினாலே கன்னனை நீராட்டித் தனது தெய்வ வடிவோடு அவன் கண்களிக்கக் காட்சியளிக்கின்றான். இரண்டு தெங்வங்கள் சந்திக்கின்றன. ஒன்று தெய்வமான கண்ணன்@ மற்றொன்று தன் குணத்தால் தெய்வமான கன்னன்.

வாழ்ந்த காலத்தில் நன்றி மறவாத நண்பனாக வாழ்ந்த பண்பு@ தனக்குச் சுகபோகம் கிடைக்கும் என்று கண்டும் கடைசிவரை அதை ஏற்காது விட்ட தன்னல மறுப்பு. உயிர் பிரியுந் தறுவாயிற் கூடக் கொடையை மறக்காத பண்பு. இறக்கும்போது கேட்கும் வரத்திலும் ‘இல்லையென்றிரப்போர்க்கு இல்லையென்றுரையா இதயம்’ கேட்கும் உயரிய சால்பு. இவை இன்றைய மனிதர் கன்னனிடமிருந்து கற்கவேண்டிய பண்புகள்.

யூலியஸ்சீர்

ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங்கில மொழிக்கவி நயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி 1941 இல் எழுதப்பட்ட ஆங்கில வாணி என்ற கட்டுரையில் யூலியஸ்சீசர் பற்றி அடிகளார் எழுதியுள்ளார். அத்தோடு. மதங்க சூளாமணியில் விரிவாக இதுபற்றி எழுதியுள்ளார். யூலியஸ்சீசர் பற்றி அடிகளார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“இந்நாடகத் தலைவராகிய யூலியஸ்சீசர் பராக்கிரம சாலியென்றும் சேனைத் தலைவரென்றும் முன்னர் குறிப்பிடப்பட்டார். உரோமபுரியில் வாழ்ந்த காஸியஸ் எனப் பெயரிய சனத்தலைவனொருவன் கஸ்கா, திரேபோனியஸ், லிகாறியஸ். டேசியஸ், சின்னா, கிம்பர் என்பாரையும் நீதிமானும் யூலியஸ் சீசரது நண்பனுமாகிய மார்க்கஸ் புருட்டஸையும் தன்வயப்படுத்தி பங்குனித்திங்களின் நடுநாளில். நண்பகலில், அத்தாணி மண்டபத்தில் யூலியஸ் சீசரது உயிரைக் கவர்வதற்கு ஏற்பாடு செய்தனன். பல்வகை உற்பாதங்கள் தோன்றின.7

யூலியஸ்சீசரின் மனைவி கல்பூர்ணியா திக்கனாக் காணுகின்றாள். காலைப்பொழுது வந்ததும் கணவன் முன் சென்று தான் கண்ட கனவைக்கூறி ‘அகத்திடையின் றிருந்திடுக அவை புகுதலொழிக’ என்கிறாள், அதற்கு சீசர் தரும் பதிலை அடிகளார் பின்வருமாறு மொழிபெயர்த்து வழங்குகிறார். சீசர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சாத செஞ்சத்(து)
ஆடவனுக்(கு)ஒரு மரணம் அவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவர், என்றறிந்திருந்தும், சாதலுக்கு நடுங்கும்
துன்மதி மூடரைக்கண்டால் புன்னகை செய்பவன் யான்
இன்னலும் யானும் பிறந்ததொரு தினத்தில் அறிவாய்
இளம் சிங்கக் குருளைகள்யாம், யான்மூத்தோன் எனது
பின்வருவது இன்னல் என்பபகை மன்னர் அறிவார்
பேதுறல் பெண்ணங்கேயான் போய்வருதல் வேண்டும்.8

அஞ்சா நெஞ்சமும் துணிவும் கொண்ட ஒரு மனிதனை இங்கு காண்கிறோம். இறப்புக்கு வீரன் அஞ்சுவதில்லை. பயந்தோர் பயந்து பயந்து சாவார். பயமில்லாதோர் ஒரு தரம்தான் சாவார். சாதலுக்கு நடுங்குபவர் மூடர். அவரைக் கண்டால் சிரிப்புத்தான் எனக்கு வரும். என்ற சீசரின் வீரக் கூற்றுக்களிலும் இன்னலும் யானும் சகோதரர். அதிலும் நான் மூத்தவன் எனவே இன்னல் எனக்கு ஒரு பொருட்டல்ல எனக்கூறும் அவனது வார்த்தைகளிலும் ஆண்மையை@ அஞ்சாமையை, வீறாப்பைக் காணுகிறோம்.

அத்தாணி மண்டபத்திற்குச் சென்ற சசரை வழியில் சிம்மர் முழந்தாளிட்டு வணங்கி. தன் சகோதரனை மன்னித்து விடும்படி வேண்டுகிறான்.

‘மஹெளதாரிய மகாபிரபுவே ஏழையேனது விண்ணப்பத்திற்கிரங்கி ஏழையேனது சகோதரனை மன்னித்தருள வேண்டும்’9 என்று இரங்கிய அவனைப் பார்த்து சீகர் கூறிய வார்த்தைகளை அடிகளார் பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்.

தாழ்ந்து மென்மொழியுரைத்திடேல்
தரணியிற் பணிந்து
வீழ்ந்து நைபவர்
பொய்யுரைக் கிரங்கிய வீணர்
சூழ்ந்து செய்தன துடைத்துப் பின்
சோர்வினையடைவார்
ஆழ்ந்த செய்வன செய்யும் நான்
அவர் நெறியணைடேன்.10

தாழ்பவர், வீழ்ந்து நைபவர், பொய்யுரைக்கிரங்கும் வீணர்கள் பிழையானவர்கள். நான் அவர் பக்கத்திற்குரியவனல்ல என்று சீகர் கூறும் வாசகங்களில் சீசகரின் குணாதிசயம் மட்டுமல்ல, மனிதன் மற்றவனுக்குத் தாழ்ந்து விடக்கூடாது@ மனிதன் மனிதனாகவே இருக்கவேண்டும் என்ற பண்பும் புலப்படுகிறது.

மார்க்கஸ் புருட்டஸ் சீசரிடம் சிம்பரின் விண்ணப்பத்தைக் கவனிக்கும்படி கேட்கிறான். காசியஸ் சீசரை நோக்கி ‘மகிமை பொருந்திய சீசரே உம்மிருதாளினையும் பற்றினேன். சிம்பரின் சகோதரனை விடுவிக்க வேண்டும்.’ என்றனன். சீசர் தம்மைச் சூழ நின்று விண்ணப்பித்தோரை நோக்கி.

இலரங்குதிர் என்ன இரக்கும் நீர்மையர்
தமைப்பிறர் இரக்கிற் தயை காட்டுநரே
நும்போல்வேனெளின் நும்மொழிக்கிசைவேன் என்று தொடங்கி

-புகன்ற

மொழியிற்பிரியேன் பழியொடு படரேன்
மலைவீழ்வெய்தினும் மனம் வீழ்விலனே.11

எனக்கூறுகிறான். இதனை அவனது தற்பெருமை உரையென உடைவாளினை உருவி வெட்டினார்கள். சீசர் இறந்தது ஒரு புறமாக அவனது மனத்திண்மையும், மலை வீழ்ந்தாலும் தன் மனம் வீழாது என எண்ணிய தன்னைப் பற்றிய பெருமித உணர்வும். வீரமும், ஆண்மையும் இங்கு கவனிக்கப்பட வேண்டியனவாம்.

அந்நியராம் அங்கிலேயரின் காலடி வீழ்ந்து பணிந்து வாழ்ந்த மக்களுக்கு ‘இரங்குதிர் என்ன இரக்கும் வீரரைப் பார்த்து இகழ்கின்ற. யூலியஸ் சீசர் போன்ற குணாதிசயங்களை அறிமுகம் செய்வது அவசியம் என அடிகளார் எண்ணினார் போலும். அக்காலத்தில் வாழ்ந்த பாரத மக்களைப் பற்றிப் பாரதி பாடுகையில் ‘அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் பொருள் இல்லை அவனியிலே’ என்றான். ‘அச்சமும் சிறுமதியும், அடிமைத்தனமும்’ மிக்க அக்கால மக்களுக்கு ‘அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சாத நெஞ்சத்து ஆடவர்க்கு ஒரு மரணம்’ எனக்கூறிய யூலியஸ் சீசர் போன்ற அச்சமில்லா வீரர்களின் அறிமுகம் அவசியமானதே. அடிகளாரின் இக் கருத்துகள் காலமறிந்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எனக்கூறுவதிற் தவறில்லை.

யூலிசஸ்

ஹோமர் படைத்த பாத்திரம் யூலிசஸ். இப்பெயரை உலீசன் எனத் தமிழ்ப்படுத்தி அழைக்கிறார் அடிகளார். ஹெலன் எனும் அரச குமாரியை மீட்க 10 ஆண்டுகள் கிரேக்கத்தில் நடைபெற்ற போர் பிரசித்தமானது. கிரேக்க மக்களின் பண்டைய வீரயுக வாழ்வோடு அது சம்பந்தமாக எழுந்த கதைகள் பின்னிப் பிணைந்தவை. பத்து ஆண்டுகள் போரிலும் பத்து ஆண்டுகள் பிரயாணத்திலும் கழித்தவன் உலிசன். ஓய்வு என்பதே அறியாதவன், சும்மா இருக்கத் தெரியாதவன். புதிய. புதிய அனுபவங்களைத் தேடுபவன். புதிய, புதிய திசைகளை நோக்கிச் செல்ல விரும்புவன்@ தேடல் நோக்கு அவனோடு பிறந்த ஒன்று.

கிழப்பருவமெய்திய உலீசன் நாட்டுக்கு மீள்கிறான். இளமைப் பருவத்தில் துடிதுடிப்போடு ஓடி ஆடித் திரிவதைப் போல இப்போது இருக்க அவன்முதுமை உடல் இடம் தருவதாயில்லை. எனினும் நாடுவந்து. ஓய்வு பெற்ற அவனால் எல்லோரையும் போல உண்டு, உடுத்து உறங்கி வறிதே இருக்க முடியவில்லை. சுறுசுறுப்பான அவன் மனம் அதற்கு இடம் தரவில்லை. மற்றவர்கள் “சும்மா” வாழ்வது அவனுக்கு வறிதாகத் தெரிகிறது தெனிசன் பாடிய உலீசனின் பாடலை மொழி பெயர்த்துத் தருவதன் வாயிலாக உலீசனின் குணாதிசயத்தை மக்கள் மனதிற் பதிக்கிறார் அடிகளார். தான் சும்மா இருப்பதை வெறுத்த உலீசன்.

பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே
வறிதிங்குறையும் மன்னன் யானே’

எனத் தன்னைத்தானே விமர்சித்துக் கொள்கிறான். விளைவு குன்றிய களர் நிலமும் புகைபடிந்த சாப்பாடும், மூப்பு வந்து சேர்ந்த மனைவியும் சேர, எதுவும் செய்யாமல் வறிதேயிருப்பது அவனுக்கு வாழ்க்கையில் அலுப்பையே தருகின்றது.

என்னிழல் வாழ்வோர் என்னியல் பறியார்
உண்பார், துயில்வார்: ஒண்ணிநி விப்பர்கு
செம்மை நலமிலாச் சிறியோர்’

எனத் தன்னைச்சூழ சாதாரண வாழ்க்கை வாழும் மக்களைப் பரிதாபத்தோடு நோக்கும் அவன் தான் பிரயாணத்திற் பெற்ற அனுபவங்களை நினைவு கூறுகின்றான். செழுமையான@ பயன்மிக்க அந்த நாட்களை கூறுகிறான்.

விழைவுறு மனனோடு அலைவுறு நாளில்
அளப்பில கண்டேன் அறிந்தனபலவே
எத்தனை நகரம் எத்தனை மக்கள்
எத்தனை ஒழுக்கம் எத்தனை அவைக்களம்
பெரும் பெயர் நிறுவி அரும்புகழ் படைத்தேன்.14

எனத்தான் கண்ட நகரம், மக்கள், ஒழுக்கங்கள், அரசவைகள், அரசியல்கள் அத்தனையும் மகிழ்வோடு நினைவு கூர்வதுடன் தனது சாதனைகளையும் நினைக்கிறான். அந்த அனுபவத்திரட்சியினால் அவன் பெறும் ஞானம் பெரிது. வாழ்க்கை என்பது உண்டு உடுத்து உறங்கி வாழும் சிறிய வட்டமன்று. அத பெரிய வட்டம். சிறிய வட்ட வாழ்க்கைக்கப்பாலும் விடயங்கள் உள்ளன என்பதே அந்த ஞானம்.

வாழ்க்கை வட்டத்து எல்லையில் இகந்த
வேற்றுப் புலங்கள் மிகப் பல உள@ அவை
செல்வழிச் செல்வழி சேணிடை அகல்வன்.15

என்கிறான் உலீசன், ஆம் வாழ்க்கையை ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழாமல் தேடல் நோக்கோடு வாழ்க்கையைப் பார்ப்பவன் வேறு பல விடயங்களையும் வாழ்விற் காண்பான். வாழ்வின் அர்த்தத்தை, வாழ்வின் அனுபவங்களைத் தேடிச் செல்லச் செல்ல அவை இன்னும் இன்னும் என அகண்ட கொண்டே இருக்கும். அத்தகைய தேடல் எண்ணமுடையோன் ஓய்வு அறியா உளத்தினன். இத்தகைய உள்ளமுடையோர் பொழுதுகளாகவே அவர்கட்குத் தோன்றும். அவப்பொழுதுகளை அனபவித்த உலீசன்

வாளா உயிர்த்தல் வாழ்க்கையாமோ
அறிவு நிறைதலும் அருஞ் செயல்புரிதலும்
ஓரிரு பிறவியில் ஒழியும் நீர்மையவோ 2னெ
என்கிறான்.

பிறவிதோறும் அறிவைத் தேடவேண்டும். பிறவி தோறும் அருஞ்செயல் புரியவேண்டும். இதுவே உலீசனின் நோக்கு. எனினும் அவனுக்கு வயது சென்றுவிட்டது. கிழவனாகி விட்டான். இறப்பதற்கு இன்னும் சில நாட்கள் தான் உண்டு. இறப்பைப் பற்றிக் கவலைப் படவேண்டிய உலீசன் அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாது வாழும் நாளை அர்த்தமுடையதாக்க எண்ணுகிறான்.

யாண்டு பல கழிந்தன@ ஈண்டு இப்பிறவியில்
ஏஞ்சி நாள் ஒரு சிலவே@ அங்கவை
புதுப் பயன் விளையும் நாளாகுக.17

என்னும் உலீசனின் கூற்றில் எஞ்சிய நாளையும் பயனுடன் கழிக்க வேண்டும் என்ற வாழ்க்கைப் பிடிப்பும் புலனாகின்றது. நடை முதிர்ந்து விட்டது எனினும் அவனது ஆசையைப் பாருங்கள்.

விதிப்பட
மக்கள் யாத்த எல்லையினிகந்து
குணகடற் குளிக்கும் வான் மீன்போல
அறிவு நிறைதற் கிவ் அயலகடல் கடக்க
நரைமுதிர் உள்ளம் நாடி நின்றதுவே.18

மூப்பு அவனுக்கு ஒருதடை இல்லை. அறிவுதேடுதலே அவனது வேட்கை. சாதல் வருமுன் இன்னும் இன்னும் எனப் பயன்தரு காரியங்கள் புரிவதே அவன் நோக்கு. தான் மாத்திரம் அப்படிச் செய்வது குறிகிய நோக்கு. ஏனையோரையும் தான் கண்ட உன்னதவழி அழைப்பது விசால நோக்கு. நண்பர்களையும் தன்னுடன் அழைக்கிறான் உலீசன்.

வம்மின் நண்பீர், என்னுடன் உழன்நீர்
யானும் நீரும் ஆண்டினில் முதிர்ந்தனம்
மூப்பினும் வினையுள. ஆக்கமும் உளவே
காதல் எய்துமுன் மேதகவுடைய செயல் சில புரிகுவம்,19

என்பது அவன் அழைப்பு. ‘மூப்பினும் வினையுள’ என்ற அடிகள் நயமிக்கவை. மூப்பு அவனைப் பயப்படுத்தவில்லை.

“இரிந்தன பலவெனின் இருப்பவும் பலவே’ என்கிறான்.2னெ

இவ்வரிகளில் அவன் உலக நோக்கு புலப்படுகிறது. இவ்வுலகத்தை மேலும் மேலும் அறிய, மேலும் மேலும் துய்க்க, வயோதிபப் பருவத்திலும் அறிய, மரணம் வரும் வரை அறிய நினைக்கும் உலீசன் விபுலாநந்தரின் குரல் எனலாம் போலத் தோன்றுகிறது.

கர்ணன் இந்தியா உலகுக்கு அளித்த பாத்திரம் சீசர் றோமாபுரி உலகுக்கு அளித்த பாத்திரம். யூலிசஸ் கிரேக்கம் உலகுக்கு அளித்த பாத்திரம். மூன்று நாடுகளுமே பழம்பெருமையும் கலை கலாசாரச் சிறப்புகளும் பெற்ற நாடுகள். உலகப் பண்பாட்டுக்கு இம் மூன்று நாடுகளதும் பங்களிப்பு அனந்தம். விபுலாநந்தர் காட்டும் கன்னன். வில்லிபுரத்தூரார் கண்ட கன்னன், அவர் காட்டும் சீசர், சேக்ஸ்பியர் காட்டும் சீசர். அவர் அறிமுகம் செய்யும் உலீசன், தெனிசன் காட்டிய யூலியஸ். வில்லிபுத்தூரார், சேக்ஸ்பியர். தெனிசன் மூவரும் மிகப் பெரும் கவிஞர்கள்.

விபுலாநந்தரின் தெரிவுதான் இங்கு முக்கியம். கன்னன், சீசர், யூலிசஸ், சொந்த பந்தங்களுக்காக நாட்டை கைவிடாத, இரப்போர்க்கு இல்லையென்னாது ஈயும்பண்பினன் கன்னன், அஞ்சாநெஞ்சினன்: எதிரியும் தாழ்ந்து தலைகுனியும் பண்பைப் பெறக்கூடாது என்ற உளப்பண்பினன் சீசர். வயோதிப நிலையிலும் மேலும் மேலும் உலகை அறிய ஆசைப்படுபவன், இறக்கும் வரை அர்த்தமான வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கு கொண்டவன் உலீசன்.

எத்தனை அற்புதமான பாத்திரங்கள். கன்னன் பாத்திரத்தை வில்லிபுத்தூராழ்வாரின் பாடல்களைக் கொண்டு அறிமுகம் செய்த அடிகளார், சீசரையும் உலீசனையும் தனது மொழிபெயர்ப்புக்கூடாக அறிமுகம் செய்கிறார்.

தான்படித்த இலக்கியங்களினின்று எவற்றை ரசிக்க வேண்டும், எவற்றை மக்களுக்குத் தரவேண்டும் என்ற அடிகளாரின் நோக்குப் புலனாகின்றது.

அடிகளார் துறவி, ஆனால் விவேகானந்தர் வழி வந்த இராமகிருஷ்ண மடத்துறவி, வாழ்க்கையை மாயை என உதறாத துறவி. துறவினால் தன் ஆன்மா மாத்திரம் உயர் நிறையடைய வேண்டும் என்று எண்ணாத சுயநலமிலாத்துறவி. மக்களும் தம்மைத் தாமே உணர வேண்டும் எனது மக்களுக்குச் சேவை புரிந்த துறவி ஒருவகையிற் பற்றுவைத்த துறவி.

மற்றயவை மீது வைக்கும் பற்றினால் தன்மீது வைக்கும் பற்றைத் துறக்கலாம். மக்கள் மறுமைப்பயனை மாத்திரமல்ல இம்மைப்பயனையும் பெற வேண்டுமென்பது அடிகளார் கருத்து. வேதாந்த ஞானத்தில் ஈடுபாடு மிக்க மகாகவி பாரதியார் கூட ‘செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சென்றிடலாம் என்போர் பித்தர்’ என்று கூறினார். இங்கு இப்பிறவியிலேயே மக்கள் மக்களாக வாழ வேண்டும் எனறு விரும்பினார்.

கர்ணன் போல மிக விரிந்த மனப்பாங்கு கொண்டவர்களாக, யூலியஸ்சீசர் போல ஆண்மையும் அஞ்சாமையும் மிக்கவர்களாக, உலீசன்போல் கிழப்பருவ மெய்திய பின்னும் உலக அனுபவங்களை மேலும் மேலும் பெறும் தேடல் நோக்கமுடையவறர்களாக மக்கள் வாழவேண்டும் என்பது அடிகளார் அவா.

சுருங்கச் சொன்னால் வாழ்க்கையை வறிதே வாழாமல் அர்த்தம் பொதிந்த வாழ்வாக அமைத்துக்கொள்ளவேண்டும் என்று வழி காட்டுகின்றார் அடிகளார். பாரதி கூறிய

தேடிச் சோறு நிதமுண்டு – பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப்போல 21


வாழாமலட, அர்ப்பணிப்பும், உண்மையும், ஆண்மையும், நேர்மையும், தேடல் நெஞ்சமும் கொண்ட மக்களாகத் தமிழ் மக்கள் வாழவேண்டும் என்ற அடிகளாரின் ஆசையை அவர் தெரிவு செய்து தருகினற் உலக இலக்கியப் பாத்திரங்களுக் கூடாகக் காணுகின்றோம். அவர் காட்டும் பாத்திரங்களுக் கூடாக அடிகளாரின் மனப்பாங்கினையும் அறிந்து கொள்கிறோம்.

சான்றாதாரங்கள்

1. கைலாசபதி. க. “முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோக்கு” அடிகளார் படிவமலர், கொழும்பு 1969 பக்: 77
2. மேலது, பக்: 79

3. தியாகராஜா. க. “சுவாமி விபுலாநந்தரின் கல்விச் சிந்தனைகள்” சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு மலர், மட்;டக்களப்பு. 1992, பக் : 83,

4. செல்வநாயகம் : டி.ரி. விபுலாநந்த அடிகள் சென்னை 1958, பக்: 133

5. உயர் திரு விபுலாநந்த அடிகளார். இலக்கியக் கட்டுரைகள், கொழும்பு. 1973 பக்: 2
6. மேலது, பக். 3-4
7. மேலது, பக். 86
8. மேலது, பக.; 87
9. மேலது, பக.; 87
10. மேலது., பக். 87
11. மேலது, பக். 88
12. மேலது, பக்.104
13. மேலது, பக். 104
14. மேலது, பக். 104
15. மேலது, பக். 104
16. மேலது, பக். 104
17. மேலது, பக். 105
18. மேலது, பக். 105
19. மேலது, பக். 105
20. மேலது, பக். 105
21. மகாகவி பாரதியார் கவிதைகள்.