கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குருட்டு வெளிச்சம்

Page 1


Page 2


Page 3

ச்சம்
குருட்டு வெளி
திக்குவல்லை கமால்

Page 4
KURUTTU VELICHCHAM A Collection of Short Stories
By:- DIKWELLA KAMAL (c) 191/B, Atulugama,
Bandaragama, Shri Lanka.
First Edition:- NOVEMBER - 1993
Published by: '. Pesum Pema Perani, 63, Mosque Road, Beruwela.
Printed by:- Quick Graphic Print, 26/6, Mosque Road, Beruwela.
Cover:-
THAVAM
Distributors:- POOBALASINGHAM BOOKDEPOT COLOMBO - JAFFNA
Price-Rs. 50/-

சமர்ப்பணம்
எனது மனைவி ஃபரீதா ஸல்ஃபிகா அவர்களுக்கு

Page 5
பேசப்படும் பேனா
பிரியங்களுடன் பேசுகிறேன். பேசும் பேனா பேரணியின் மூன்றாம் பிரசுரப் படையல், புகழ் பூத்ததோர் எழுத்தாளரினது புனைகதைப் புதையல். இது, புரிந்துணர்வு பார்த்து புத்தகம் போட வந்த திக்குவல்லைகமாலின் இன்னொருஇலக்கியவிலாசம். மேலும், இதய விசாலமும் கூட. வெளிச்சத்துக்கு விளம்பரம் தேவையில்லாததைப் போல, இவருக்கு எமது அறிமுகம் வேண்டியதில்லை இப்போதெல்லாம் இலங்கைத் தமிழ் கதைஞர் வபடடத்தில் முதன்மையாளர்களில் ஒருவராக முன்மொழியப்படும் இவர்இருபத்தைந்தாண்டுகள் இலக்கியத்தவம் இயற்றி விடட இனியவர். இவரது பாதங்கள்சேகரித்த பாதைகளில் மற்றொரு மைல் கல் இது. பேசும் பேனா பேரணி, வரலாறு-அறிவியல் என இரு துறைகளில் இரு புத்தகம் ஈன்றதை விடவும், இச்சிறுகதைத் தொகுப்பின் பிரசுரத்தில், அல்ல பிரசவத்தில் தன்னையே மேலும் ஒருமுறை புதுப்பித்துக்கொண்டிருக்கிறது.
தவறு பதிப்பித்துக் கொண்டிருக்கிறது. நன்றி சமாதானமே மேலான தாகம். பரீத் ஏ. ஜவ்ஸகி (பேசும் பேனா பேரணிக்காக) 30, 10, 1993.

செ. யோகராசா (எம். ஏ)
மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு.
அன்புள்ள திக்குவல்லை கமாலுக்கு,
அண்மைக் காலங்களில் இலங்கையில் வெளிவந்துள்ள சிறுகதை, கவிதைத் தொகுப்புகள் சிலவற்றுக்கு முன்னுரை எழுதுவோர் கடித பாணியிலான முன்னுரை எழுதியிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நானும் அத்தகைய முறையில் எழுதலாமென்று எண்ணுகின்றேன். மிக நெருங்கி வந்து சில அபிப்பிராயங்களை கூறுவதற்கு அத்தகைய வழி பொருத்தமானதென்று கருதுகின்றேன்.
இது உங்களது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. ஆனாலும், இலங்கை வாசகர் பலரும் இத்தொகுப்பினையே உங்களது முதற்தொகுப்பென்று கருதக்கூடும். சில வசதிகளுக்காக தமிழகத்தில் தமது தொகுப்பினை வெளியிடும் இலங்கை எழுத்தாளர் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுள் இதுவும் ஒன்று. எவ்வாறாயினும் இலங்கை எழுத்தாளரும் புத்தக விற்பனையாளரும் புத்தக வெளியீட்டடாளர் களும் இது பற்றிச் சிந்திக்க வேண்டுமென்பதனை உங்கள் முதற் தொகுதிக்கேற்படட அவலம் உணர்த்தி நிற்கின்றது.
போகட்டடும்.
உங்களது இத்தொகுப்பினூடாக தென்னிலங்கைப் பிரதேசம் மீண்டுமொரு தடவை இலங்கை சிறுகதை வளர்ச்சியில், வரலாற்றில், தன்னைத் தகுந்த முறையில் பதிவுசெய்துகொள்கிறது என்பதில் ஐயமில்லை.
நீங்கள் அறிமுகப்படுத்தும் உங்கள் கிராமம் சார்ந்த மக்கள் ஏழைகளும் உழைப்பாளர்களுமே. அன்றாட வாழ்வில் அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களும் நெருக்கடிகளும் ஏமாற்றங்களும் அவர்களது மனிதாபிமான உணர்வும் புரிந்துணர்வும் அவர்கள்

Page 6
சுரண்டப்படுவதும் ஏமாற்றப்படுவதுமே உங்கள் சிறுகதைகளூடாக வெளிக்கொணரப்படுகின்றன.
இன்னொரு கோணத்தில் பார்ப்பின் உங்கள் சிறுகதைகள் மனித உறவுகளையும், ஏழை - பணக்காரன்; முதலாளி - தொழிலாளி; கணவன் - மனைவி; தந்தை - மகள்; அவற்றினை அடிநாதமாகக் கொண்டெழும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முயல்கின்றன.
சுருங்கக்கூறின் ஓரளவுக்காயினும் உங்கள் சிறுகதைகளில் தென்னிலங்கை கிராமமொன்றின் இதயத்துடிப்பு கேடகிறது, மணம் வீசுகிறது. கிராமியச் சித்திரம் உருப்பெறுகிறது.
கிராமத்து மக்களின் பேச்சுமொழியை இயன்றளவு இயல்பாக வெகு லாவகமாக பதிவு செய்ய முயன்றுள்ளிர்கள், கே, டானியலின் படைப்புகள் மொழியியலாளருக்கு யாழ்ப்பாணத்துப்பேச்சு வழக்குப் பற்றி ஆய்வு செய்வதற்கு பயன்படுவது போல், தென்னிலங்கை முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்கினைப் பயின்று கொள்வதற்கு உங்கள் சிறுகதைகளும் L. JUGSTUt G) TLD.
உங்களுக்கு நினைவிருக்கிறதா அன்பு ஜவஹர்ஷாவின் "காவிகளும் ஒடடுண்ணிகளும்" புதுக்கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையில், காணும் குறைபாடுகள் சிலவற்றை நீங்கள் குறிப்பிடடது? அவ்வாறே நானும் சில குறைபாடுகளை இனிக் கூறப்போகிறேன்.
உங்கள் சிறுகதைகளில் வருவோர் பலரும் சர்வ சாதாரணமாகக் கிராமங்களில் காணக்கூடிய - கண்டிருந்தாலும் எழுத்தாளர்கள் பொதுவாக எழுதமுனையாத - உடனே நாம் மறந்து விடுகின்ற - ஆனாலும், மறக்க முடியாத மனிதர்கள். அத்தகைய மனிதர்களை மறக்க முடியாத விதத்தில் உங்கள் சிறுகதைகளில் உலவ விடப்பட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வதிலே நீங்கள் போதிய சிரத்தை

காடடவில்லை என்றே தோன்றுகிறது. சிரத்தை காடடியிருப்பின் கு. அழகிரிசாமி, தி ஜானகிராமன் முதலானோர் போல் மறக்க முடியாத சில மனிதர் களைத் தந்திருப்பீர்கள்!
உங்கள் சிறுகதைகள் மனித உறவுகளுக்கும் அவற்றின் அடிநாதமான உணர்வுகளுக்கும் அழுத்தம் கொடுக் கின்றன என்று மேலே குறிப்பிடடிருந்தேன். ஆயினும், அவ்வுணர்வுகள் சில சிறுகதைகளில் போதியளவு வெளிப்படவில்லை. (உ+ம்: ஒரே குடையின் கீழ்)
இன்னுமொன்று ஓரிரு சிறுகதைகள் முதல் வரைபு (FIRSTDRAFT)போல் இருக்கின்றன.அவை, வெவ்வேறு கோணத்தில், செறிவுடன், ஒருமைப்பாடடுடன் எழுதப்பட்டிருப்பின் சிலநல்ல சிறுகதைகள் கிடைத் திருக்கும்.(உ+ம்: பெரிய இடத்து உறவு) அடித்துமுடித்த பிற்பாடும் சில விநாடிகள் கேட்டடுக்கொண்டிருக்கும் கோயில் மணியின் நாதம் போல் அறை பளிரென்று கன்னத்தில் விழுந்த பிற்பாடும் சில விநாடிகள் விண்ணென்று வலிப்பதுபோல், நினைத்ததும் புல்லரிக்கும் இதமான வருடல் போல், மறக்க முடியாத முதற்காதல் போல் அமைந்திருக்கும்!
இறுதியாக ஒன்று, உங்கள் சிறுகதைகள் உள்ளடக்கத் திலும் உருவத்திலும் பராட்டும் படியாக விளங்குவது போல் கலைத்துவ ரீதியில் சிறந்து விளங்குகின்றனவா என்ற வினா என்னுள் எழுகிறது. பொதுவாக நோக்கினால் அவ்வாறு அமையவில்லை என்று நான் கூறினால் நீங்கள் விசனிக்கத் தேவை யில்லை. ஏனெனில், இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள், முன்னணி எழுத்தாளர்கள் பலரும் கலைத்துவமாக எழுதியவரல்லர். ஒருவிதத்தில் ல் அது அவர்களது பிழையுமன்று. எமது இலங்கையின் முன்னோடி விமர்சகர்கள் ஒரு காலகட்டடத்தில் படைப்பின் உள்ளடக்கத்தை, சமூகப்பெறுமானத்தை மடடும்

Page 7
வற்புறுத்திவிடடு கலைத்துவ அம்சத்திற்கு அழுத்தம் கொடாதமையினால் ஏற்படட விபரீத விளைவின் அறுவடையே எமது எழுத்தாளரிடம் கலைத்துவ மில்லாமை. தமிழகம் அத்தகைய படு குழியிலிருந்து எப்போதோ மீண்டு விடடது. இலங்கை எழுத்தாளர் களது உறக்கம் இன்னும் கலைந்ததாகக் கூறமுடியாது.
எவ்வாறாயினும், நிறைகளும் குறைகளும் கலந்துள்ள உங்களது சிறுகதைகளுக்குள் சிலவேனும், ஐம்பது அறுபது வருடங்களுக்கு பின்னர்வரும் வாசகனொரு வன் தென்னிலங்கை முஸ்லிம் மக்கள் ஐம்பது வருடங் களுக்கு முன்னர் எவ்வாறு வாழ்ந்தனர் என்றறிவதற்கு உதவி செய்யும் என்றே நம்புகின்றேன்.
அன்புடன்
செ. யோ 1993. 10. 07

திறவுகோல்
பூமாலை a பாராடடு. மலர்வெளியீடு. விழாக்கோலம் எதுவுமே இல்லை.
இலக்கியத் துறையில் இதயம் வைத்து இருபத்தைந்தாண்டுகள். எனக்குள் நானே வெள்ளி விழாக் கொண்டாடுகிறேன்.
இந்த வேளையில்தான் பேசும் பேனா பேரணியினரின் நேசம் கிடடுகிறது."
அதன் அடையாளமாக "குருடடு வெளிச்சம்" கண் சிமிடடுகிறது.
இக்கதைகள் பற்றி பெரிதாகச் சொல்லிக் கொள்ள எதுவும் இருப்பதாக எனக்குப் படவில்லை.
இம்முயற்சியில் கைகுலுக்கிய டொமினிக் ஜிவா, ஏ. இக்பால், செ. யோகராசா, மேமன்கவி, பூரீதரசிங், எம். எச். பெளஸால் அமீர், பரீத். ஏ. ஜெளஸகி, எம். ஏ. இனாமுல் ஹஸன் ஆகியோர் நன்றிக் குரியவர்கள் மட்டுமல்ல; என் நெஞ்சுக்குரியவர்க்ளும் கூட.
இலக்கிய தாகமே இமயதாகம்,
அன்புடன்
திக்குவல்லை கமால் 1993. 10. 25.

Page 8
கதவுகள்
* உணர்வுகள். உருவங்கள். மாறுதல்கள் 11
* தடைக்கற்கள் குறுக்கிடுகையில் புதிய
ஊற்றுக்கள் புஷ்பிக்கின்றன 2 * கண்ணீரும் கதை சொல்லும் 31 * மகிழ்ச்சிப் பேரிகை 38
தோளர்கள் - 44 * போதம் 49 & குருட்டு வெளிச்சம் 53 * ஒரே குடையின் கீழ் 60 * நேர்த்திக்கடன் 68 * பெரிய இடத்து உறவு 74 * தேடி வந்த நிம்மதி 8. * இரட்டைப் பழம் 89 * சுவடுகள் 97 * அஸ்தமனத்தில் ஓர் உதயம் 103
* நம்பிக்கை 112

உணர்வுகள். உருவங்கள். மாறுதல்கள்.
ஒருகாலத்தில் ஏதோவொரு பெயர்ப்பலகையுடன் ஜொலித் துக்கொண்டிருந்த அந்த அறை இப்பொழுதெல்லாம் தூங்கி வழிந்து. தூசு படிந்து. மேற் பூச்சுக்கூட கழன்றுகொண்டி ருந்தது.
அந்த அறை முன்படிக்கட்டின் ஒரு நுனியில்தான் பீடித் துண்டை புகைத்தபடி, ஏதோ சிந்தை வயப்பட்டவனாகக் குந்திக்கொண்டிருந்தான் காதர்ஸா, இன்னும் இரண்டொரு வர்மறுபக்கமாக நின்ற வண்ணம் கதையளந்து கொண்டிருந்த
g
இவ்வாறு அக்கம் பக்க வீடுகள், கடைகள், பள்ளிவாசல் ஒர மாகவும் பலரும் ஒதுங்கி நின்ருர்களென்றால், அதற்கு கார ணம் ஜும்ஆத் தொழுகை முடிவடைந்து எல்லோரும் வெளிக்கிடும் நேரம் பார்த்து, வானம் குமுறிக் கொட்டிப் பொழிந்த மழைதான். துவங்கிய ஆரவாரத்திற்கு வெகுநேரம் நின்று பிடிக்காமல், பத்தே நிமிடத்துக்குள்சாதாரணதூறலாக மாறிவிட்டது.
வேளைக்கு மழைநின்று விட்டதேயென்ற பெருமூச்சுடன் எழுந்தான் காதர்ஸா, பாதைக்கு மறுகரையில் நிறுத்திவைக் கப்பட்டிருந்தது அவனது பக்கி. நாள் முழுவதும் அதனை

Page 9
இழுத்துக்கொண்டலையும் மாட்டின் முதுகில் இருந்து மழைத்துளிகள் சொட்டுவதைப் பார்க்க அவனுக்கு பரிதாப மாகவுமிருந்தது.
ஸாரத்தை உயர்த்தி முழங்காலளவுக்கு மடித்துக்கட்டிக் கொண்டு, பாதையை குறுக்கறுக்கத் தயாராகையில்.
'காதர்ஸா’
பள்ளிவாசலின் பாதையோரச் சாலைக்குள்ளிருந்து இக்குரல் ஒலித்தது.
அவன் நிமிர்ந்து பார்த்தபோது, அங்கிருந்து கைகாட்டி அழைத்துக் கொண்டிருந்தார் ஆலிம்ஷா
மதிப்புவாய்ந்த ஒரு மனிதன் அழைத்தால் விடுவதா என்ன? அடுத்த நிமிடம் அவரின் முன்னே போய் நின்றான் காதர்ஸா, இருவருக்கு மிடையில் அரைமதில்:
“எனக்கிப்ப அவசரமான வேலயொன்டீக்கி. ஒன்ட பக்கியக் கொணுவந்து என்ன ஊட்டுக்கட்டக் கொஞ்சம் கொணு பெய்த்துடே-"சாடையாக சிரித்தபடி மெல்லிதமாகச் சொன்
னார் ஆலிம்ஷா
காதர்ஸா எந்தப் பதிலும் சொல்லாமல் யோசித்தவாறு முகத் துமயிர்களை விரல்களால் தடவியபடி கண்களைச் சுழற்றி னான்.
'எனத்தியன் யோசிக்கிய? நான் சும்மவா வரச்செல்லிய. அதுக்குள்ள கணக்கத்தாரன் . ' கொஞ்சம் இளக்காரமாக அழுத்திச் சொல்லி, தனக்கு உண்மையில் அவசர அவசியந் தான் எனக்காட்டுமாப் போல் அங்குமிங்கும் கொஞ்சம் தடு மாறிக்கொண்டார். 'புள்ளக்கி நெருப்புத்தணல் மாதிரி காச்சல், தொழுது முடிஞ் 12

சொடன மருந்தூக் கூட்டிக்கொணுபொக வாங்கொ' காலை யில் பதினொரு மணிக்குப் போல் மூசல் மாச்சி வந்து சொல்லி விட்டுப் போனது அவனது காதுகளில் மீண்டும் எதிரொலித்
ჭნჭნl.
"எனத்தியன் காதர்ஸா பேசாம நிக்கிய ? ? ஆலிம்ஷாவின் குரல் மீண்டும் அவனை உலுக்கியது.
"எனக்கிப்ப வேறொரு பைணமீக்கி"
ஆலிம்ஷா நான்கு புறமும் பார்த்துக்கொண்டார். பலரும் அவர்களது உரையாடல்களை கவனித்துக்கொண்டிருப்ப தைக் கண்டதும் அவருக்கு ரோஷம் தலைக்கேறிவிட்டது.
"என்னக் கொஞ்சம் கொணுபெய்த்துட்டா ஒனக்கு மணித்தி யாலக் கணக்கில போறா. பதினஞ்சி நிமிஷத்தில வந்திரே லும் 9
"வேற பைணமியலென்டா குத்தமில்ல. இதொரு நசக்காரப் புள்ள .அதச்சொட்டீந்தான்."
"போ.போ. ஒனக்கேலாட்டி’
காதர்ஸா பக்கியை நோக்கி நடக்கத் திரும்பினான்.
"ஒன்னே மொரு மனிசனென்டு நல்ல நாளேல கூப்பிட்ட ’ இது ஆலிம்ஷாவின் இறுதிச் சொற்கள்.
★
"சக் கொடியா?
மூக்குக் கயிற்றை இழுத்து, கைத்தடியால் இலேசாகத் தட்டிக் கொடுத்ததும் மாடு விரையத் தொடங்கியது.
13

Page 10
காதர்ஸா, தனக்கும் ஆலிம்ஷாவிற்கும் இடையில் கொஞ்ச நேரத்துக்கு முன்பு நடைபெற்ற உரையாடலை இரைமீட்டிப் பார்த்தான்.
யாருடனும் முட்டி மோதிக்கொண்டு வாழ வேண்டும் என்ற கொள்கை அவனுக்கில்லை. அதே நேரத்தில் சில விஷயங்க ளில் நிரம்பிய நிதானத்தையும் மனதீதியையும் அவன் கைக் கொள்ளத் தவறுவதுமில்லை.
‘டிங்?
காலுக்குக் கீழ் பொருத்தியுள்ள மணியை இடைக்கிடைய ழுத்தி, தனது பக்கிதான் போகின்றதென்பதை மற்றவர்கள் பார்க்காமலேயே புரிந்துகொள்ளவைக்க அவன் தவறுவ தில்லை.
“மூஸல்மாச்சி." விட்டோரமாக பக்கியை நிறுத்தி விட்டு இறங்கினான் அவன்.
"டைமுக்கு வந்தீக்கி. நான்பயந்து பயந்தீந்த’ எதிர்பார்த்துக் காத்திருந்த மூலல்மாச்சியின் குரலிது. சொல்லிவைத்தாற் போல் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து அவர்களின்நம்பிக்கைக் குரியவனாகி விட்டேனே என்ற பெருமிதத்தில் கொஞ்சம் மார்பை முன்னே போட்டுக்கொண்டான் காதர்ஸா,
"ஆ.ஆ. பத்திரமா ஏறுங்கோ "
நோய்க்காரப் பிள்ளையோடு சேர்ந்து இன்னும் இரண்டொரு சிறுசுகள் சவாரிச்சுகத்துக்காக தடிபிடி"யென்று ஏறிக்கொண் டார்கள்
"ஆ. ரெண்டு பொக்கத்துக்கும் சரிச்சரியா இfங்கொ’ உத்த ரவு போட்டுக் கொண்டு, மேற்பக்கமாகச் சுருட்டிக் கட்டியி ருந்த மறைப்புப் பிடவைகளை அவிழ்த்து விட்டான்.
l4

"மூஸல்மாச்சீ போத்தல கீத்தலயெல்லாம் எடுத்தா” பக்கி யின் முன்பக்கமாக ஏறியமர்ந்து, மூக்குக் கயிற்றை அவிழ்த்த வாறு உள்ளே எட்டி இப்படிக் கேட்டான்.
'ஒ.ஓ.எல்லம் எடுத்தீக்கி’
அவசரஅவசரமாக புறப்படுவதாலும் நோய்க் கவலையாலும் போத்தல் சாமான்களை எடுக்காமல்போய், அங்கே தடுமா றும் காட்சியெல்லாம் காதர்ஸாவுக்கு பழைய அனுபவத் தொடர்கள். அதனால்தான் முன்யோசனையோடு கேட்டுப் பார்த்தான்.
'ஹ்ம் . சக்கொடியா’
மாடு சலங்கைச் சத்தத்தை எழுப்பிக் கொண்டு ஒடத்தொடங் கியது, எத்தனையோ பேர் இங்கு பக்கி வைத்து உழைப்பு நடாத்துகிறார்கள் தான். ஆனால் அவர்களெல்லோருக்குள் ளும் காதர்ஸாவுக்குத்தான் தனிமதிப்பு. அவன் வயதில் மூத்த வன் என்பது மாத்திரமல்ல அதற்குக் காரணம்; உதவி செய்யும் மனப்பான்மையுடன் எல்லோருடனும் நடந்து கொள்வது
தான
"அவரு வாப்பாப் போல மனிசன்’ என்று பெண்கள் வாய் நிறையச் சொல்லிக் கொள்வார்கள். ஏனென்றால் ஆண் துணையின்றிப் போகிறவர்களுக்கெல்லாம் தானே முன் னின்று எல்லாக் கருமங்களையும் முடித்துக் கொடுத்து விடு வான் என்பதால்தான். 'ஆ பாத்து. மெதுவா எறங்குங்கோ’ என்றவாறு மருந்து சாப் முற்றத்திற்குள் ஒரு பக்கமாக நிறுத்தினான்.
நல்ல நேரம் சனநெரிசல் அவ்வளவாக இல்லை. நோய்க்காரப்
பிள்ளையை தானும் சேர்ந்து பிடித்துக் கொண்டுபோய் டாக் டரின் முன் வாங்கில் அமர்த்தி நிமிர்கையில்.
15

Page 11
"ஆ. காதர்ஸா கொஹமத ?- இது டாக்டரின் குரல்தான். நாளாந்தம் பலதடவை போய்வரும் அவனை அங்குள்ள அத் தனை பேருக்கும் நன்ருகத் தெரியும்.
"ஒ. இன்னவ மஹத்தயா.*- என்றவாறு முகத்தைக் காட் டிக்கொண்ட மகிழ்ச்சியோடு மறுபக்கமாகப் புகுந்து வெளி வந்துவிட்டான்.
“மூனு மாதிரிகுழிசமருந்தெல்லம் தந்தீக்கி’- மாட்டின் முது கைத் தடவிக்கொண்டிருந்த காதர்ஸா, மூஸல்மாச்சியின் குர லைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
'ஆ.ஏறுங்கேறுங்கொ. எவளவெடுத்தன்?"
'நாலுருவத்தான் ’
“ஒ. மத்தவனியளப் போலயல்ல. இந்த மஹத்தயாக்கிட்ட மிச்சம் கொறவு! ஆ. சரியா? எல்லாரும் ஏறினா?*
‘ஓ.ஒ. போம்” - அவளது குரல் மருந்தெடுத்ததால் தான் போலும் சற்று தெளிவாக இருந்தது.
'ஹ்ம். சக்கொடியா’
பக்கி நகர்ந்து கொண்டிருந்தது. காதர்ஸா தன்தொழிலுக்கேற்ற தகவல்களையும் மிகத்தெளி வாகத் தெரிந்து வைத்துக்கொள்வான். எந்தெந்த நேரத்தில் எந்தெந்த மருந்து சாப் திறப்பது மூடுவதிலிருந்து, யார் யார் எப்போது லீவில் போவார்களென்பது கூட அவனுக்குத் தெரி யும். நாலைந்து மைல்களுக்கப்பால் உள்ள வெதமஹத்தயா மார்களைப் பற்றிக்கூட விசாரித்து வைத்துக்கொள்வான்.
இதனால் அவனுக்கு சிலநேரம் நட்டந்தான். என்றாலும் மற்ற வர்களைச் செலவுக்கும் சிரமத்துக்கும் உள்ளாக்காமல் உதவு
16

வதில் அவனுக்கு நிரம்பிய மனத்திருப்தி. பக்கியில் பயணம் வைத்துக்கொள்பவர்களென்றால் பெரிய சீமான்களா என்ன?
'ஆ மெதுவாஎறங்குங்கொ’- பத்தே நிமிடத்திற்குள் கொண் டுவந்து சேர்த்து விட்டான் காதர்ஸா,
'பத்திரம் மகள் பாத்தெறங்குங்கொ'
"அப்பகாதர்ஸாஒங்கடகணக்கு '- குழைந்து வேண்டினாள்.
"அதெனத்தியன் ஒருவத்தானே'
"இந்தாங்கொ’
ஒரு ரூபாய்க்குற்றி கரம்மாறியது.
"சக் கொடியா’
மூக்குக் கயிற்றை இழுத்து பின்புறக் கால்களுக்கிடையில் காற் பெருவிரலால் ஒரு கூச்சம் கொடுக்க மாட்டுவண்டி குதிரை வண்டியாகப் பறந்தோடியது.
அப்பொழுது நேரம் ஆறு மணியிருக்கும். மாட்டை அவிழ்த்து மரத்தில் கட்டி வைக்கோலைத் தூர்ந்து போட்டு விட்டு, பக்கியைத் தள்ளி மடுவத்துள் நுழைத்து, முகம் கால் கழுவிக்கொண்டு முதலாளிவீட்டு வாசலுக்கேறினான்.
எவ்வளவுதான் அவன் கஷ்டப்பட்டுழைத்தாலும் கூலிப்பாடு தான். அந்த நான்கு ரூபாவைத்தவிர மற்றவை முதலாளியின் கைக்குத் தான் போய்விடும். வரும்படியைக் குறைத்துக் காட்டி, வைக்கோல் கணக்கை கூட்டிச் சொல்லி. இப்படி யான தில்லுமுல்லுகள் அவனுக்குத் தெரியாததல்ல. என்றா லும் மனநேர்மைக்கு மிக ஆழமாகப் பயப்படுபவன்தான்
17

Page 12
காதர்ஸா.
"எனத்தியன் காதர்ஸா இன்டக்கி ஆன்ஸாயிபோட எனத்தி யாலும் கொழப்பமா’’ இது அவனது முதலாளியின் கேள்வி.
இப்படியொன்றை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
"கொழப்பமொன்டுமில்ல. ஜூம்மாக்குப் பொறகு நசக் காரப் புள்ளயொன்ட மருந்துக்குக் கொணுபொகீந்த. அதுக் கெடேல அவரஊட்டுக்கு கூட்டிக்கொணுபொகச் சென்னாரு . அதுக்கு நான் புரியப்படல்ல அவளவுதான்.' சாதாரண மாகவே பதில் சொன்னான் அவன்.
"அதல்ல காதர்ஸா அவரொரு மதிப்பான மனிசன். ம். ஏன்ட பத்து வரவுக்காரனென்டு தெரீந்தானே." அவரைக் கூட்டிக் கொண்டு போயிருக்க வேண்டும் என்று சொல்லுவது போல் அவரது விளக்கம் விரிந்தது.
"மொதலாளி.நான் செல்லியத்த கேளுங்கொ. வேற பைணமென்டால் நான் கூட்டிக் கொணு பெய்த்தீப்பன். இது நசக்காரப்புள்ள. அந்த நேரத்தில மனிசத்தன்மயத்தான் நான் பாத்த. ஆன்ஸாய்பல்ல எங்கட வாப்ப கபறுக்குள்ளிந்து வந்து கூப்பிட்டாலும் நான் பெய்த்தீக்கமாட்டன் ஒ.” காதர் ஸாவின் வார்த்தைகள் கம்பீரமாக வந்தன.
முதலாளியும் ஆலிம்ஷாவும் வியாபார ரீதியான தொடர்புக ளையும் தனிப்பட்ட உறவுகளையும் நீண்டகாலமாக வைத்தி ருப்பவர்களென்பது அவனுக்கு தெரியாத விடயமல்ல.
"காதர்ஸா மெதுவாப் பேசு. நீ தெரட்டியது ஏன்ட பக்கி யென்டு அவருக்குத் தெரீம். இந்த மாதிரி நடந்து கொண்டத் தால அந்த மனிசன் என்னேம் எப்படி நெனச்சீப்பாரு.’ எதிர் மாறான கண்டனத் தாக்குதல் தொடுத்தார்.
18

'இதெல்லம் எனக்குத் தேவில்ல. நடந்தது சரி. இப்ப எனத் தியன் செல்லிய?’ உழைத்து வரண்டுபோன அந்தச் சின்ன உருவத்திற்குள் இவ்வளவு வலிமையா?
'எனக்கிட்ட கூலிக்கு நிக்கியென்டா ஏன்ட மருவாரிய வெச்சி நடக்கோணும் தெரீமா’? மன்னிப்புக் கொடுக்கும் இறுதிக்கட்டத்தில் விடுக்கும் உருக்கமான எச்சரிக்கைதானோ!
"ஓங்களுக்கு நான் ஒம்பதாச் சம்பரிச்சித் தந்திட்டுத்தான் கூலி எடுக்கிய. அதுக்கு ஏன்ட மானத்தேம் மனிசத்தன்மேம் அடவு வெக்கோணுமென்டா வேற ஆளப் பார்த்துக்கோங் கொ’’ இப்படி இரைந்து விட்டு, அன்றுழைத்த காசை இடுப்பு மடிப்பிலிருந்து எடுத்து மேசையில் போட, அதில் சில நாண யங்கள் மேசையில் உருண்டு முதலாளியின் காலடியில் போய் விழுந்தன. அவன் விறுக்கென்று நடந்தான்.
'காதர்ஸா...' வாசற்படியில் நின்ற முதலாளியின் குரல்!
“வேற தாரயாலும் பார்த்துக் கோங்கொ’ வைரம் பாய்ந்த அவனது முடிவு.
e 8 0 p. . . p. O N O 0 p.
கேற்றைத்திறந்தவன் அக்குரல் கேட்டுத்திரும்பினான். பெற் றோல் மெக்ஸின் ஒளிப்பகைப் புலத்தில் மனிதத்தன்மை மறந்த அந்த மனித உருவம் தோட்டத்தின் இருட்பகைப் புலத்தில், இவ்வளவு காலமும் பழகியதை மறக்க முடியாத மனிதத்தன்மை பூண்ட அந்த மிருக உருவம்
இரண்டு உருவங்களும் மாறிமாறி அவனது கண்களில் சலனித் துக் கொண்டிருந்தன.
மீண்டும் அதே குரல் .
9

Page 13
'ம்பே.ம்பே."
மனிதர்கள் சிலநேரம் மிருகங்களாக இறங்க முடியுமென் றால், ஏன் மிருகங்கள் சிலநேரம் மனிதர்களாக உயரமுடியாது!
காதர்ஸா, காதுக்கிடையில் சொருகியிருந்த பீடித்துண்டை இழுத்தபடி திரும்பி நடந்து கொண்டிருந்தான்.
வீரகேசரி - 1974, 12, 29
20

தடைக்கற்கள் குறுக்கிடுகையில் புதிய ஊற்றுக்கள் புஷ்பிக்கின்றன
“பிலாயெலேய். பிலாயெலேய்’
வந்த களைப்போடு சேர்ந்து அந்த சுற்று வட்டாரமெங்கும் கேட்கக்கூடியதாக இந்தக்குரலை எழுப்பிவிட்டு லகேஜ் போட்டும் நிறுத்த முடியாத அளவுக்குச் சுமை கொண்ட சைக் கிளை சபறுதாத்தா வீட்டுச் சுவரோடு சேர்த்துச் சாய்த்து விட்டு, படிக்கட்டில் அமர்ந்தான் இஸ்ஸதீன்.
வேகமான மேல்மூச்சு, கீழ் மூச்சுக்கேற்ப உடம்பு மேலெ ழுந்து பதிய, முகத்திலும் மார்பிலும் ஊற்றெடுத்துக் கொண்டி ருந்த வியர்வை மணிகள் கூட்டிணைந்து மயிர்களுக்கிடை யால் கீழ் நோக்கி வழிந்து கொண்டிருந்தது.
'ஆ. பிலாயெலேய். பிலாயெலேய்”*
வழமைபோல் அன்றும் முதல் வாடிக்கைக் காரியான ஸெள தூண்தான் பிடவைத்தொங்கலை ஒரு கையால் உயர்த்தியபடி மலை வளவால் இறங்கிக்கொண்டிருந்தாள். சொல்லிவைத் தாற்போல் ஓடையடி முடுக்கால் லாஃபிர் நானா ஒட்டமும் நடையுமாக வர. இப்படி இரண்டொரு கணத்துக்குள் ஒரு கும்பல் நான் முந்தி நீ முந்தியென்று கூடிச் சலசலத்ததென் றால் தட்டுப்பாடான சாமான் என்றும் சொல்லவா வேண்டும்.
21

Page 14
அவன் எழுந்து நிதானமாக பலா இலைக்கட்டை அவிழ்க்கை யில்.
'எனக்குப் பதினைஞ்சாத்துக்கு’
'மம இஸ்ஸதீன் எனக்கு ரெண்டு கட்டு’
'எனக்கு முப்பே சாத்தட'
வேண்டுதல்கள் பலபுறமிருந்தும் வந்துகுவிந்துகொண்டிருந் தன. அது ஒவ்வொரு நாளும் இடம்பெறும் நிகழ்ச்சியாத லால் அவன் பரபரப்படைய நியாயமில்லையே.
'ஆ ஸெளதுரண் புடீங்கோ இது ஒங்களுக்கு”
'இந்தாங்க லாஃபிர் நானா'
இப்படி வரிசைக்கிரமமாக பலா இலைக் கொத்துகளை பகிர்ந்து போட்டுக்கொண்டிருந்தான். அவ்வப்போது ஒவ் வொருவரின் முகச்சுழிப்புகளையும் அவன் அவதானிக்கத் தவறுவதில்லை. செழிப்பான இலைக்கொத்துகளைத்தானே எவரும் விரும்புவர்.
'ஹஅய்.ஹ"அய்" அதற்கிடையில் ஒசிக்கடிப்புக்கு வந்து சேரும் ஆடுகளை விரட்டாவிட்டால் அவனுக்குத்தானே நட் டம். சொற்ப நேரத்துக்குள் தனக்கு மிகவும் வேண்டிய ஒருவருக்கு ஒதுக்கியது போக எல்லாம் விற்றாயிற்று. பிறகு ஓடிவந்த இரண்டொருவரையும் மாலையில் தருவதாகச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டான்.
மற்ற இடங்களில் ஏறெடுத்தும் பார்க்காத பலா இலைக்கே
இங்கு இத்தனை வரவேற்பென்றால், அதற்குக்காரணம் ஒவ் வொரு வீட்டிலும் இரண்டொரு ஆடு வளர்ப்பதை பழக்கமா
22

கக் கொண்டிருப்பதுதான். அவை வருடாந்தம் பள்ளி வாச லில் நடைபெறும் புறுதாக்கந்தூரிக்கு நேர்த்தியாகக் கொடுப் பதற்கும், அவ்வேளையில் தேவைப்படுபவர்களுக்கு விற்ப தற்குமாகத்தான். இது தவிர சொந்த வீடுகளில் நடைபெறும் கல்யாணம் கந்தூரிகளுக்கு ஆட்டிறைச்சியோடு சாப்பாடு கொடுக்காவிட்டால் அதையொருவித தாழ்வாகக் கருதுவ தும் இன்னொரு காரணம். எப்படியோ, அதன்மூலம் நாலைந் துபேர் உயிர் வாழக்கூடியதாகவுள்ளதான இந்நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகிறது.
"எனா பிலாக்கய வெட்டல்லயா? - ‘ட’ மடிப்பாக கையை மடக்கி குடையைத்தொங்கவிட்டவாறு சந்திப்பக்கமாக போய்க்கொண்டிருந்த லெவ்மாமா இப்படிக் கேட்டபடி நின் றார்.
"ஓ அதுக்கெனா வெட்டோமே" என்றவாறு பிரத்தியேகப்ப டுத்தி வைத்திருந்த பலா இலைக்கட்டுக்கு மேலிருந்த கத் தியை எடுத்தவாறே கண்களைப்பல புறமும் சுழற்ற, ஆங்காங் கேயுள்ள வீட்டு வாயில்களில் முக்காட்டோடு நின்ற பென் சன் எல்லையைத்தாண்டிய பெண்களைக் கண்டவுடன் அவ னுக்கு தைரியம் பிறந்தது. சைக்கிள் ஹாண்டலில் கட்டித்தொங்கவிட்டிருந்த பலாக் காயை அவிழ்த்து ஒரு ஒரமாக வைத்து கைவிரல்களால் சொட் டிப்பார்த்தபடி “மொத நொம்பர் சாமன். ஆட்டெறச்சி மாதிரிதான் ஈக்கும்’ என்றொரு விளம்பரத்தையும் முன்வைத் தான். பார்த்த பார்வைக்கு இளமஞ்சளாகவும், விரிந்து வெடிக்கப்போவது போலவும் தோற்றமளித்ததால் அவனது மதிப்பீட்டை யாரும் பிழைசொல்ல முடியாதுதான்.
பலாக்காயை கால்களுக்கு முன்வைத்து பெருவிரல்களால் அழுத்தி கத்தியை நடுப்பாகத்துள் குத்திப்புதைத்து ‘குருஸ்’ ஸென்ற ஒலியோடு பின்பக்கமாகக் கத்தியை இழுத்து, பலாக் காயை மறுபக்கம் திருப்பி இன்னொரு வெட்டு வெட்ட இரு
23

Page 15
பாதிகளாக பளிச்சென்று விரிந்தது.
"மொத நம்பர்.கீத்து வெட்டுங்கோ. எப்பிடியன் வெல’ லெவ்மாமாமாவுக்கு பூரண திருப்தி.
அவன் மீண்டுமொருமுறை நிமிர்ந்து பார்த்தான். ஏற்கெ னவே குறிப்பிட்ட பெண்மணிகள் மெதுமெதுவாக நெருங் கிக்கொண்டிருந்தார்கள்.
"கீத்து நாப்பது சாம். துண்டிருவது சாம்’ ஒரே மூச்சில் வெட்டி வைத்து கத்தி நுனியாலேயே பிசினையும் ஒற்றியெ டுத்து நிமிர்ந்தான்.
லெவ்மாமா ஒரு கீற்றை எடுத்துக் காசைக்கொடுத்து விட்டு நகர, துண்டுகளெல்லாம் ஒவ்வொரு பொம்புளைகளது கைக ளிலும் ஏறிவிட்டன. அவர்கள்தான் அடுத்தவர்களின் பேச்சில் ஒரு துளிகூட நம்பிக்கை வைக்காதவர்களாச்சே!. ஒவ்வொரு இடைவெட்டுச் சுளைத் துண்டுகளைக் கிள்ளிச் சுவை பார்த் துக்கொண்டார்கள்.
அப்பாடா அவனது மடி பெறுமதியால் அல்ல, ஐந்து பத்துசத நாணயங்களால் கனத்ததை முடிந்திறுக்கிக் கொண்டு, மற்றப் பலாக்கீற்றையும் எடுத்தபடி. வீட்டை நோக்கி சைக்கிளைத் தள்ளத் தொடங்கினான்.
★
பலாக்காய் அவியலுடன் பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பாயில் புரண்டஇஸ்ஸதீன்கண்விழித்தபோது சுமா ராக மூன்று மணியிருக்கும். கைகால்களை நீட்டி முறித்து கொட்டாவி எக்ஸைஸை முடித்துக் கொண்டு எழுந்து அமர்ந் தான.
'வாப்பா இந்தாங்கோ கோப்பி’ ஒரு கையில் ஆவி பறக்கும்
24

கோப்பிக் கோப்பையையும் மறுகையில் கால்வாசியளவு சீனி கொண்ட கரண்டியுமாக வந்து நின்றாள் அவனது பதின் மூன்று வயது மூத்தமகள்.
ஒவ்வொரு நாளும் அவன் இரண்டாம் தடவையாக, பின்நே ரம் மூன்றரை மணிபோல் பலாஇலை வெட்டப் போவது நிரந்தர டைம்டேபல் என்பதால் தான், அவள் வேளைக்கு அதனைத் தயாரித்திருக்கிறாள். சின்னப் பெண்ணாக இருந்தா லும் கூட நிலைமைகளை உள்வாங்கிப் பொறுப்புக்களை அவள் சமாளிப்பதை பார்க்க அடி மனதுள்அவனுக்கு மிகுந்த இரக்க உணர்ச்சி.
அவளது உம்மாநான்காவது தடவையாக 'புள்ள பொகுத்துக் காரி யாக இருக்கிறாள். இன்னும் குறைந்தது மூன்று மாதகா லத்துக்காவது அப்படித்தான் இருப்பாள்.
சைக்கிளைத் தள்ளிக் கொண்டு முற்றத்துக்கு வந்தவன் பிட வைத் துண்டால் துடைத்து பிரேக் கட்டைகளை அழுத்திச் சரிபார்த்துக் கொண்டான். வெட்டுக் கத்தி ஹென்டலுக்கும் பிரேக்கம்பிக்கும் மிடையில் இடம் பிடித்துக் கொண்டது.
பின்னால் பிரத்தியேகப்படுத்தி வைத்திருந்த பலாயிலைக் கட் டில் கொஞ்சத்தை இடுங்கி 'இந்தாம்கள் எங்கடாட்டுக்கு” என்று கொடுத்து விட்டு, மீதியோடு சைக்கிளில் ஏறி உழக்க தொட்ங்கினான். முப்பது சதத்துக்கு விற்கக் கூடிய அந்தளவு ஜஸ்மின் நோனா வீட்டுக்குத்தான். இந்த நடைமுறை கடந்த ஆறு மாதங்களாக வழக்கிலிருந்து வருகிறதென்றால் .
அன்று இப்படியொரு நேரம் சைக்கிள் துடைத்துக் கொண்டி ருக்கும்போது நாலைந்து பெண்களோடு சாமத்திய வீடொன் றுக்கு போய்க் கொண்டிருந்த ஜஸ்மின் நோனா அப்படியே நின்று புதுப்பணக்காரியென்ற திமிரோடு பார்த்தாள்.
'எங்கியன் சாமத்திய ஊட்டுக்கா போற?" பக்கத்தில் நின்ற
25

Page 16
அவனது மனைவிதான் கேட்டாள்.
மெல்லிய முறுவலோடும் தலையாட்டலோடும் அதற்கான பதிலை முடித்துக் கொண்டு 'இஸ்ஸதீன் நானா. நீங்க எந்த நாளும் எங்களயன் பிலாயெல வெட்டிய?’ என்று கேட்டு நிறுத்தினாள்.
"நான் ரெணு மூணுகட்டக்கங்கல போற. ஒரு எடமென்டில்ல கெடக்கிய மாதிரி’ ஸ்திரமற்ற தன்மையைச் சொன்னான். "வேஹல்லே பன்சலக்கி இங்கலிக்கியது எங்கட காணித் துண்டுதான், எல்லமே பிலாமரந்தான். ஒணுமென்டா ஒங்க ளுக்கு அதால வெட்டிக் கொணுவரேலும்’ சரளமாக இப்ப டிச் சொல்லியபோது, அப்படியொரு பெரும்தன்மையை அவன் எதிர்பார்க்காததால் வியப்படைந்தான்.
'நீங்க செல்லியென்டா எனக்கு மிச்சம் ஒதவியா ஈக்கும்’ வேஹல்ல என்னும் இடம், அவன் ஒவ்வொரு நாளும் போய் வரும் இடங்களை விட குறைந்த தூரத்தில் இருப்பதால் தான் அவனுக்கு மிகவும் உதவியாகப்பட்டது. 'நாங்க பாக்கியா கேக்கியா ஈந்திட்டு ஒரு நாளக்கிப் போறல் ல்ாம. அந்த பொக்கத்து சிங்களவனியள்தான் எல்லம்ே திண்டு தொலக்கியானியள். இப்படியொத்தரு போறவா ரென்டாத்தான் கொஞ்சமாலும் காப்பாத்திக் கொளேலும்’ பிரவேசச் சீட்டை வாயாலேயே எழுதிக் கொடுத்துவிட்டு நகர்ந்தவள் மறுபடியும் அப்படித் திரும்பி.
'எனக்கிட்டேம் ரெணுமூணு ஆட்டுக் குட்டீக்கி’ என்று சொல்லிச் சென்றாள். இந்த இறுதிச் சொற்கள்தான் அவனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலாஇலைக் கட்டை கொண் டுபோய்க் கொடுக்கச் செய்து வருகிறது.
பெல்லடித்துவிட்டு திறந்திருந்த கேற்றுக் குள்ளால் சைக்கி ளைத் திருப்பி ஜஸ்மின் நோனாவின் வீட்டுப் பக்கவாட்டு
26

ஜேம் மரத்தடியில் நிறுத்தினான் அவன்.
'பிலாயெலேய்.பிலாயெலேய்”
பின்புறம் நின்ற எடுபிடிப் பையனைக் கண்டதும் இலையை அவிழ்த்துப் போட்டுவிட்டு சைக்கிளைத் திருப்புகையில் தான் அக்குரல்.
'எனத்தியன் நோனா அப்படிச் செல்லிய? ஒன்றும் புரியாத வனாக குழம்பி நின்றான் அவன்.
'பிலாயெலாதான் வெட்டிக் கொளச்சென்ன. இப்ப பிலாக்க யெல்லாம் கொணந்து வெட்டிப்படுகியாம் நையாண்டிப் பாணியில் கேட்டுவைத்தாள்.
நெருப்புக் குண்டுகளை மார்பில் எறிவதுபோலிருந்தது அவ னுக்கு அன்று எப்படி சிங்களவன் மீது சுமத்தப்பட்டதோ, இன்று அதை அவன் மீதே.
"அப்படிச் செல்லவாண நோனா நான் பிலாக்க கொணவா ரது மெய். வலஸ்கலயால வாங்கிக் கொணுவாரன்’ தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொள்வது போன்ற அவஸ்த்தையில்தான் கதைத்தான்.
'ஹ்ம். அப்ப கண்ணால கண்டவங்க வந்துவந்து செல்லி யது பொய்’
"அப்ப நான் அங்க பொகமாட்டன்’ வேறெதைத்தான் அவ னால் கொல்ல முடியும் நிமிர்ந்து முகத்தை பார்க்க முடியாத வெட்கத்தோடு சைக்கிளைத் தள்ளினான் இஸ்ஸதீன். ... a 'எனத்தியன் எனத்தியன் ?’ உள்ளேயிருந்து வந்த அவள் கணவரின் குரல் தான் போலும்! 'ஒன்டுமில்ல. பாவமென்டு ஒரு ஒதவி செய்யப் போனா
27

Page 17
இதுதான் எங்களுக்கு கெடக்கிய நன்டி’
இறுதியாகக் காதில் விழுந்த சொற்களையும் கிரகித்துக் கொண்டு சைக்கிளை உழக்கினான். நெஞ்சில் ஏதோ கனப் பது போன்ற உணர்வு கால்களுக்கு வலிமை இழக்கச் செய் ததோ. −
நான்கு வருடங்களாக பலாயிலைத் தொழிலை மேற் கொண்டு வரும் அவன், கடந்த நான்கு நாட்களாகத்தான் ப்லாக்காய்களையும் கொண்டு வந்துவிற்க ஆரம்பித்தான். காரணம் இன்னொரு வழியால் குடும்பச்சுமையைச் சமாளித் துவந்த சொற்ப வருவாய் தடைப்பட்டதைச் சமப்படுத்தத் தான.
அவனது மனைவி சந்திக்கடை சோமசிறியை ஏற்பாடு செய்து கொண்டு சீனிக்கோவை அவித்தனுப்பி வருபவள். மேலதிக மாக இருபது இருபந்தைந்தை, மகளை வீடு வீடாக அனுப்பி விற்கவைப்பாள். தற்பொழுது வயிற்றுச் சுமை உச்சம் ஏறியி ருப்பதால். தூக்கம் விழிப்பதோ, நெருப்போடு குந்திக் கொண்டிருப்பதோ, மேலதிகமாக வேலை செய்வதோ கூடா தென்பது அக்கம்பக்க அனுபவம் வாய்ந்த பெண்களின் எச்ச ரிக்கை அதனை மனதில் கொண்டு அத்ற்கு இடைக்கால முற் றுத்தரிப்பு வைத்ததால், நாளாந்த செலவுகளில் இருந்து வந்த வறுமையிலும் செஞ்செளிப்பு மிகவும் குறைந்து போய் விட்
Lidl.
இலையில் என்ன செய்வதென்ற சிந்தனையோடு, நான்கு நாட்களுக்கு முன் பலாயிலைச்சுமையோடு சைக்கிளில் வந்த வரின் கண்களில் பட்டாள், இரண்டு பலாக்காய்களைச் சுமந் தபடி வந்த கிழவியொருத்தி அடுத்த கணம் அவற்றை வாங் கிக் கொண்டதோடு, இதைத் தொடர்ந்து செய்தாலென்ன. என்ற பரிசீலனை நிலை. அதனை விற்றுக் கிடைத்த சிறுதொ கையையும், ஒரு துண்டை உணவுக்கு பயன்படுத்த முடிந்த மையும், பரிசீலனை நிலையிலிருந்தும் அவனை முடிவுக்கு 28

கொண்டுவந்தது.
அடுத்த நாளிலிருந்தே அதிகாலையில் வலஸ்கல சந்தைக்குப் போய் இரண்டொரு பலாக்காயை வேண்டி ஹென்டலில் தூக்கிக்கொண்டு இரண்டாவது வேலையாகத்தான் வேஹெல்லைக்குப் போவான். இந்த ஒழுங்குதான் அவ னுக்கு வசதியாக இருந்தது.
ஆனால் இப்படியொரு எதிர்மாறான தாக்குதலை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை. பசையுள்ளவர்கள், மற்றவர்களின் ஒவ்வொரு செய்கையையும் தங்களுக்கு எதிரா னவை என்றும் பிடுங்குதலென்றும்தான் கற்பனை செய்து கொள்கிறார்களோ! எவ்வளவுதுணிச்சலாக அபாண்டம் சுமத் துகிறார்கள்?
வழமையாக வேஹெல்ல ரோட்டில் போய்க் கொண்டிருந்த அவனது சைக்கிள் இன்று வேறொரு வழியில் விரைந்து கொண்டிருந்தது.
இருபுறமும் பலவகையான மரங்கள் செறிந்த மண்ரோட்டில், சிறியதொரு தோட்டத்தை அண்டிய குடிசையருகில் மெது வாக இறங்கினான். குடிசைப்பக்கமாகக் காண்வெட்டிக் கொண்டிருந்தவன், சாடையாக அவனைப் பார்த்துச் சிரித் தான். அவனுக்கும் எப்போதோ கண்டதான ஞாபகம்..!
உழைத்துழைத்து நொந்துபோன உடலும், பலாப்பாலுக்கே சொந்தமாகிப் போன ஸாரமும், கறள் பிடித்து துண்டு துண் டாக கழன்ற விழத் தயாராகிக் கொண்டிருக்கும் சைக்கிளும் யாருக்குத்தான் அவனது நிலையைப் புரியவைக்காது.
'ம். பிலாயெல கொஞ்சம் வெட்டிக் கொளவா' தாழ்மை யாக வேண்டிநின்றான், குடிசையருகில் வேலைசெய்து கொண்டிருந்தவனைப் பார்த்து.
29

Page 18
"இதக் கேக்கோணுமா. வேண்டியமட்டும் வெட்டிக் கோங்கொ’ மிகவும் சிநேக பூர்வமான அனுமதி.
இஸ்ஸதீன் மிகுந்த முகமலர்ச்சியோடு தோட்டத்துக்குள் பிர வேசித்துக்கொண்டிருந்தான்.
மல்லிகை - 1975 பெப்ரவரி.
30

கண்ணிரும் கதை சொல்லும்
டனன். டனன் .டனன்'
வகுப்புக்குள் அடைபட்டு, புலன்களை பாடபோதனைகளுக் குள் ஊறவைத்துக் கொண்டிருந்த மாணவ மாணவிகளுக்கு
இந்த இடைவேளை மணியோசை தேனாமிர்தமாக இனித் 色gs,
அதனை எதிர்பார்த்துக் காத்திருந்ததே போன்று நான்கு வகுப் பறை மண்டபங்களுக்குள்ளிருந்தும் வெண்ணுரை ததும்பி வழிவதுபோல் புறப்பட்டு, இரண்டொரு நிமிடங்களுக்குள் பாடசாலைச் சுற்றுப்புறமெங்கும் பேச்சும் சிரிப்பும் ஒட்ட மும் கூத்துமாகக் கலகலத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு மட்டுமா? அந்நேரத்தை எதிர்பார்த்து வெளியே தவம் கிடக்கும் குட்டி வியாபாரிகளுக்கும் குதூகலந்தான்! பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டுவரும் ஐந்து பத்து சதங் களை ஏதோ ஏமாற்று இரைபோட்டு உறிஞ்சிக் கொள்ளலாம் அல்லவா? அவர்களைப் பிய்த்துப் பிடுங்குவது போல் சிறு வர் கூட்டத்தின் மொய்ப்பு.
"ஆ.வடே வடே."
31

Page 19
'ரெடகஜு. ரெடகஜ"
"பேம் பேம்’
அவள் ரமீஸா- வகுப்பறை வாசலோடு நின்றவள் ஒரு வித நினைவுச் சிலிர்ப்பில் மண்டபத்துக்குள் கண்களைச் செலுத் திய போது, யாரை எதிர்பார்த்தாளோ 'அந்த டீச்சர் ஏதோ வாசிப்பதும் இடையிடையே வெளியே பார்ப்பதுமாக அமர்ந் துகொண்டிருந்தார். இனி ஒரு கணமும் அங்கு நிற்பது நல்ல தல்ல என்று அவள் மனம் சொன்னதும் மெல்ல இறங்கி வந்து, அந்த சரிவுக் கண்மையில் இருக்கும் பெரிய கல்லின் மறுபக்க மாக நின்று கொண்டாள். அந்த நினைவு அவள் மனதில் சல னிக்க சலனிக்க, டீச்சரின் கண்களில் படாமல் இந்த நேரத்தில் எங்கேயாவது ஓடி ஒளித்துக்கொள்ள வேண்டும் போலிருந் ჭნტl
"பேம் பேம்’
ஐயோ என்ன மாதிரி நாராசம்போல் இந்த ஜஸ்பழக்காரனின் ஹோன் ஒலி அவளை வதைக்கிறது! இரு முனைத்தாக்குதல்க ளுக்கும் மத்தியில் அவள் சமநிலை தளும்பாது தவிப்புடன் நின்றாள்.
ஐஸ்பழக்காரனுக்கோ மூச்சு விட முடியாதபடி . யாருக்கு எப்படிக் கொடுத்துத் தீர்ப்பதென்று தெரியாத அவசரம்.
பச்சை. சிவப்பு. மஞ்சள். ஐஸ்பழங்கள்.
உதடுகளால் உறிஞ்சிச் சுவைத்து,தொண்டைக்குள்ளால் விழுங்கும்போது எவ்வளவு குளிர்மையாக இருக்கும் ரமீஸா வாயில் ஊறிய உமிழ்நீரை அப்படியே.
'வாடி வாஜஸ் வாங்கப்போம்’ கைநிறைய நிலக்கடலையை வைத்துக் கொண்டு, போதாக்குறைக்கு ஐஸ் வாங்க, தனது
32

தோழியையும் இழுத்துக் கொண்டோடினாள் ஸரீனா,
“சீ... இவள் என்னயாவது கூப்பிட்டீந்தா’- இப்படி ரமீஸா எண்ணிப்பார்த்தபடி மீண்டும்மேல் மண்டபப் பக்கமாக சற்று நகர்ந்து எட்டிப்பார்த்த போது, அங்கிருந்து இரண்டு ஆசிரி யைகள் வெளியே இறங்கிக் கொண்டிருந்தார்கள்
'அவங்களத் தொடர்ந்து அந்த டீச்சரும் வந்தா” என்ற கற்ப னைப் பயத்தால் அவள் கால்கள் மறுபக்கமாக நகர்ந்தன.
சென்ற வெள்ளிக்கிழமைதான். அதை எப்படி அவளால்
மறக்கமுடியும்.? அப்படி மறக்கமுடிந்திருந்தால் இப்படித் திண்டாட வேண்டிய அவசியமும் இல்லையே.
வழைமை போல் வகுப்புக்குப் பாடத்துக்கு வந்த ஆசிரியை யாருமே எதிர்பார்க்காதபடி “நீங்கெல்லாம் ஐஸ்பழம் சாப் பிட்டிருக்கீங்க தானே?’ என்று கேட்டபோது.
‘ஓஓ...? ஏக காலத்தில் பல குரல்கள்.
“சரி இன்னக்கி சாப்பிட்டவங்க கை உயர்த்துங்க பாப்பம்’
அப்போது ரமீஸா தனக்கு உதவியாக யாராவது இருக்கிறார்க ளாவென்று கண்ணோட்டம் விட்டபோது. நிலமை மோச மாக இருந்ததால் மான உணர்ச்சியோடு அவளும் கையை உயர்த்தினாள்.
"அப்ப எல்லோரும் சாப்பிட்டதா. பொய்சொல்ல வேணாம்."
'பொய்யில்ல டீச்சர்' 'ரமீஸாவும் சாப்பிட்டதா?’ டீச்சர், தனது பெயரைச் சொல் லிக் கேட்பாரென்று அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள் தானே.
:33

Page 20
'ஓ டீச்சர்’ எழுந்து நின்று உண்மையில் அவள் பொய்தான் சொன்னாள். அப்போது பின்பக்கமிருந்தெழுந்த மெல்லிய சிரிப்பொலி அவள் காதைத் துளைக்காமலில்லை.
'சரி விஷயத்துக்கு வருவோம்’- என்று தொடங்கி. ஐஸ். பனிக்கட்டி. நீர். நீராவி. இப்படியெல்லாம் விளக்கம் கொடுத்து, நிலை மாற்றம் பற்றிப் படிப்பித்து முடித்தார்.
அந்தப்பாடம் நிச்சயம் ரமீஸாவுக்கு விளங்கியிருக்காதுதான். ஆனால் அவளது மனம் அந்த நேரத்தில் நிலைமாற்றம் அடைந் திருந்தது மாத்திரம் உண்மை.
'நான் இன்டவளுக்கு வெட்டேல ஒரு பொக்கத்தில நிக்கியத் தக் கண்டுதான் டீச்சர் எனக்கிட்ட கேட்டீக்கி - இப்படி நினைத்துப் பார்த்த அந்த பிஞ்சு நெஞ்சத்தில், டீச்சருக்கு முன் னால் இரண்டொரு தடவை ஐஸ் தின்று காட்டவேண்டு மென்ற வைராக்கிய வித்து வேரூன்றிவிட்டது.
பழைய சம்பவத்தை இரைமீட்டியபடி 'ப' வடிவ மண்டபத் துக்குப் பின்னால் வந்து கீழிறங்குகையில் ஜெஸிர்ா, வெளியீரா, பஸிரா. எல்லோருமாக மேல்நோக்கி வந்துகொண்டிருந்தார் கள். போதாக்குறைக்கு அவர்களின் கைகளிலெல்லாம் விடை பெறத் தயாரானபடி ஐஸ் பழங்கள்.
பாவம், ரமீஸாவாலும் ஒரு ஜஸ்பழம் வாங்க முடிந்திருந் தால். அதற்காக அவள் கடந்த இரண்டு நாட்களாக எவ்வளவு முயன்றாள் தெரியுமா? அவள் எதிர்பார்த்ததுபோல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் வாப்பா இம்முறை வராமல் விட்டது துரதிர்ஷ்டமாய்ப் போய்விட்டது. உம்மாவிடம் தருவதற்கு மேலதிகமாக இல் லையென்பதை ஆறாம் வகுப்பில் படிக்கும் அவளால் புரிந்து கொள்ள முடியாதா என்ன ? அதற்காக சும்மா இருந்து விட வில்லை.
34

'உம்மா கொப்பி வாங்க சல்லிதாங்கொ’ முன்னேற்பாடாக வெள்ளிக்கிழமை பின்நேரமே கேட்டு வைத்தாள்.
'வாங்கித் தரேலேன். திங்கக் கெழமக்கித்தானே ஸ்கூல்" - உம்மாவின் நியாயச் சமாளிப்பு.
இடையிடையே கடைக்கு சாமான் வாங்க அனுப்பும் போதெல்லாம், அவளும் எவ்வளவாவது எஞ்சுகிறதா வென்று பார்த்தாள்தான். எல்லாம் தோல்வியாகவே முடிந்து போய்விட்டது.
திங்கட்கிழமையும் வந்து சேர்ந்தது. நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக அந்த டீச்சரின் முன்ஜஸ்பழம் சாப்பிட்டு, தன் மானப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் கொப்பி வாங்க நாற்பது சதம் கேட்கும் வாய்ப்பை எதிர்பார்த் திருந்தாள்.
சட்டை போட்டு தலைவாரியும் முடிந்தாகிவிட்டது. காலைச் சாப்பாடு பற்றிய எண்ணமும் அவ்வளவாக அவளை பாதிக்க வில்லை. அப்போது தான்.
"இங்க வா மகள் இந்தக் கெழம வாப்பாம் வரல்ல. கைல மடீலிந்த சல்லீம் கொஞ்சம் கொஞ்சமா முடிஞ்சி பெய்த்து. வாப்ப வந்தாத்தாரென்டு ஆப்ப அஞ்சி எடுத்துக்கொணுவாங் கொ’ என்றாள் ரமீஸாவின் உம்மா.
அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. கையில் காசிருந்தால் இப்படி கடனுக்கு 'ஆப்ப கேட்டனுப்புவாளா? அதன் பின்பு அவள் கொப்பிக்கதையையே அங்கெடுக்க விரும்பவில்லை.
இடைவேளை முடியும் நேரமாகி விட்டதைத் தொடர்ந்து, பாலர் வகுப்பு மண்டபப் பக்கமாக, விளையாட்டிடத்திற் கூடாக மேலே ஏறத்தொட்ங்கினாள் ரமீஸா.
35

Page 21
"டனன்.டனன்.டனன்.”
மணியோசை அங்குமிங்குமாகச் சிதறியிருந்தவர்களையெல் லாம் வகுப்பை நோக்கி ஓடச்செய்துகொண்டிருந்தது. அந்த நேரத்திலும்கூட ஆசிரியர்களுக்கு டிமிக்கி விட்டு விட்டு, அவ சர அவசரமாக அதையும் இதையும் வாங்கி நிறைத்துக்கொள் வோரும் இல்லாமலில்லை. சிலருக்கு அது ஒன்றுதானே அங்கு வேலை.
ஒருவாறு வகுப்பு மண்டபத்துக்கருகே ரமீஸா வந்து சேர்ந்து விட்டாள். அரையும் குறையுமாக எஞ்சியிருப்பதையும் சாப் பிட்டு முடித்து வகுப்புக்குள் நுழையும் அவசரம் பலருக்கு அவள் உள்ளே எட்டிப்பார்த்தாள். வகுப்பு சகமாணவிகளால் நிரம்பவும் பாட ஆசிரியை வந்துசேரவும் இன்னும் ஐந்தாறு நிமிடமாவது செல்லும்.
முகத்தில் அரும்பி நின்ற வேர்வைத்துளிகளை மெல்லத் துடைத்துக்கொண்டாள் ரமீஸா. உள்ளத்தில் நிறைந்திருக்கும் வேதனைத் துளிகளை.
அப்போது தான் அவசர அவசரமாக ஓடி வந்த பஸ்மியா கையி லிருந்த அரைவாசிகூடச் சாப்பிட்டு முடியாத ஐஸ் பழத்தை சுவரோர படிக்கட்டில் அப்படியே தொப்பென்று போட்டு விட்டு உள்ளே ஓடினாள்.
ரமீஸா அந்த ஜஸ்பழத்தை வைத்த கண்வாங்காமல் அப்ப டியே பார்த்துக்கொண்டிருந்தாள். இது எனக்கு கெடச்சீந்தா என்று எண்ணினாளோ என்னவோ!
வாயில் ஊறிய எச்சிலை மீண்டுமொரு முறை. மற்றவர்கள் தன்னை கவனிக்கிறார்களோ என்பதை கள்ளக் கண்களால் உளவு பார்த்துவிட்டு, திரும்பவும் அந்த ஜஸ்பழத்தைக் கண்க ளால். சும்மா விட்டால்தானே மனம்.
36

பஸ்மியாவின் எச்சிலை தன்மீது பூசிக்கொண்டதைவிட ரமீ ஸாவின் நாவுக்குள் சங்கமித்திருக்கலாமே என்று நினைத்தோ என்னவோ, அந்த ஜஸ்பழம் சிந்திய கண்ணீர் மெல்லிய கோடாக வளைந்து நெளிந்து படிக்கட்டில் வழிந்துகொண்டி ருந்தது.
அவள் தன் கண்மடல்களுக்கிடையில் முட்டிநின்ற கண்ணீர்த் துளிகளைக் கசக்குவது போன்ற பாசாங்கோடு துடைத்துக்
கொண்டு வகுப்புக்குள் நுழைந்தாள்.
அந்தச் சின்னக் கண்கள் சொரியும் சோகக் கண்ணீரின்
கதையை எத்தனை பேரால் தான் புரிந்துகொள்ள முடியும்.
தினகரன் - 1976 - 05. 23
37

Page 22
மகிழ்ச்சிப் பேரிகை
A O
சிலிங் சிலிங் பண்டக்கா .சின்னக் கொடீல பண்
டக்கா...'
இந்த ஓசை நயத்தோடெழுந்த ரபான் ஒலி அந்த பிராந்தியத் தையே ஆக்கிரமித்தது. மகிழ்ச்சி ஆரவாரத்தை இதைவிட வேறு எப்படி வெளிக்காட்ட இயலும்.
மூன்று குற்றிக்கால்களில் வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய ரபானைச் சூழ்ந்து நாலைந்து பெண்கள் அமர்ந்து, நொடிப் பொழுது வித்தியாசம்கூட இன்றி ஒன்றாகவே கைகளை இயங்க விட்டுக் கொண்டிருந்த அழகை மாத்திரம் வைத்தகண் வாங்காமல் பார்த்து ரசிக்கலாமே!
அந்த பெண்களில் ஒருத்தியின் கையில் அளவாக வெட்டியெ டுக்கப்பட்ட ஏழெட்டு ஈர்க்குகள். அதன் மூலமெழுந்த மெல் லிய சுருதி மேலும் இனிமையைச் சுரந்தது. அவள்தான் அக் கோஷ்டியில் வயதில் மூத்தவள்போல் தெரிந்தது. சில வேளை அக்கோஷ்டிக்கு அனுபவப்பயிற்சி மிக்க தலை வியோ என்னவோ?
அவர்களுக்குப் பக்கத்தில் வெற்றிலைத் தட்டும் கோப்பிச் சுவடுகளோடு நாலைந்து வெற்றுக்கோப்பைகளும் கிடந்தன.
38

அவை அந்த இலவச சேவைக்கான பரிமாறல்கள்!
அண்டை அயல் சிறுமிகள் பட்டாளத்தின் குதூகலமே தனி. அவர்களையும் இப்படித் தலைமைப்பாத்திரமாகக் கொள் ளும் நாளும் வராமல் போகுமா என்ன? ஊர்ப் பெண்கள் ஒருவர் இருவராக வந்து மகிழ்ச்சியை தெரிவித்தபின் அங்கு கிடக்கும் கோப்பியை விடுவார்களா? போதாக்குறைக்கு கிடைத்த்சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் இரண்டொருவராகக் கூடி ஊர்வம்பு அளக்கவும் தயங்கவில்லை.
வீட்டுக்காரியோ யந்திரகதியில் அங்கோடுவதும் இங்கோடு வதுமாக இயங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குத்தான் எத் தனை வேலைகள்.
ரபான் கோஷ்டியில் ஒவ்வொருவராக இடையிடையே கொஞ்சம் ஒய்வெடுக்குமாப்போல் ஒதுங்கி. வெற்றிலை, மூக்குத்தூள் இத்தியாதிகளைச் சொருகி உசாரை வருவிக்கமு யல, அதற்கிடையில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ப தைக் காட்டுமாப்போல் அவ்வப்போது வந்தவர் சிலரும் ரபான் கோஷ்டியோடு குந்தி எழுந்தனர்.
உள்ளே. அத்தனை வேடிக்கைகளையும் அவதானித்தபடி சக தோழிய ரின் மத்தியில் புதுக்கோலம் பூண்டிருந்தாள் ஜமீலா. இந்தச் சிலநாட்களாக உறவு வழியானவர்களும் சினேக பூர்வமான வர்களும் அன்பளிப்பாக வழங்கிய பெளடர்டின்கள், சவர்க் காரக்கட்டிகள், கிளாஸ் வகைகள் முதலியன மேசையில் அடுக்கடுக்காக காட்சிதந்தன.
கட்டைச் சட்டையோடு துள்ளித்திரிந்த ஜமீலா வெண்ணிற உடையலங்காரத்தோடு வீற்றிருந்தாள். இனிமேல் அவளால் அந்த கட்டைச் சட்டைகளை நினைத்துப்பார்க்க முடியாது தான்.
39

Page 23
அதேவேளை இனி ஸாயாவும் சட்டையும் அவளின் பொலி வைக் குறைத்து விடவா போகிறது? சும்மாவா, இப்போது அவள் 'புத்தி அறிஞ்சவள்’ அல்லவா?
இந்த ஒரு வாரமாக அவளுக்கு வீட்டிலே ராஜ உபசாரம். நாளுக்கொருசேலை, கட்டுப்பாடான உணவுகள், ஏழாம் நாளாகிய இன்று ஏழுகூட்டுக் கறிச்சோறு.
இப்போது அவளது முகத்திலும் கண்களிலும் புதியதொரு மதாளிப்பு கொஞ்சி விளையாடத் தொடங்கியிருந்தது.உள் ளத்தில் ஒரு வித ஏக்கமும் புதுவிதக்களிப்பும் இரண்டறக் கலந்த நிலை...!
இவ்வளவு காலமாக ஒவ்வொருநாள் மாலையிலும் தேநீர் அருந்திய பின் வந்துசேரும் மேல்வளவு ஃபரீதா. ரிஃபாயா இவர்களோடு பஞ்சோவின் கிணற்றுக்கு 'நல்ல தண்ணி கொண்டுவரப்போனால் வந்து சேர்வது ஆறுமணிக்குத் தானே. போகும் வழியில் சீதாவின் வீடு . அங்கே புளியங் காய், மாங்காய் மரங்களில் கைவரிசை. இடையில் வயற்கரை தென்னந்தோட்டத்தில் எல்லாம் மறந்து பொட்டி பாய்தல் விளையாட்டு. சில நாட்களில் மலைவளவுக்கு சிமிட்டிக்காய் பிய்க்கப் போனால் அங்கே விழுந்து சாய்ந்திருக்கும் மரக்கிளைகளில் ஏறிநின்று பாடிப் பாடி ஆடியசையும் “கோச்சிப்பல ஆட்டம்.
நோன்பு காலம் நெருங்கிவிட்டால் போதும், கூட்டாளிகள் சகிதம் குஞ்சூடு கட்டி . சுடு சோறாக்கி . மேடுமேடாக தலைப்பிறை தேடும் ஆனந்தம்.
ஆமாம், இப்படியிப்படி இன்னும் எத்தனை இனிய நிகழ்ச்சி கள். அத்தனையும் இனி கடந்த கால நீங்கா நினைவுகளாய் நெஞ்சில் நிழலாடுமே தவிர, அவற்றை மீண்டும் அனுபவிக் கும் வாய்ப்பு கிட்டப் போவதேயில்லை.
40

அதேவேளையில்.
சுபஹ"க்கு பாங்கு சொல்லும் போதெழுந்து, இதுகால வரை யிலும் "கொமருகள்’ என்று தூரநின்று பார்த்த அந்தக் கூட்டத் தோடு ஒன்றிணைந்து குளிக்கப் போய் கிழக்கு வெளுக்குமுன் வந்து சேர்வதை நினைத்துப்பார்ப்பதே அவளுக்கு இன்பமா கத்தான் இருந்தது.
பகல் வேளைகளில் வீட்டில் இருந்து வெளியே போக முடி யாத நிலையில் வாப்பா கொண்டுவரும் சாமான்களை, உம் மாவோடு சேர்ந்து சமைத்து, கைப்படைப்பான அவற்றைச் சாப்பிடுவதாக. வெளியே ஏதாவது வேடிக்கை, விசேடங்க ளென்றால் கதவு நீக்கலுக்கூடாக, ஜன்னல் சேலைகளுக்கிடை யால் பார்த்து ரசிப்பதாக. பட்டப்பகலிலும் எத்தனையோ எதிர்காலக் கனவுகள் அவளுக்கு!
'ஆ எல்லாரும் கோப்பி குடீங்கோ." ஜமீலாவின் உம்மா கையில் கோப்பி, மஸ்கட், தொதல் சகிதம் வந்தபோது கூட் டாளிகள் மத்தியில் ஒரு கிளுகிளுப்பு. அப்போது மாலை இளவெய்யில் ஜன்னலுக்கூடாக ஒளிக்கற்றைகளை பரப்பிக் கொண்டிருந்தது.
'ஜமீலா நாங்க தண்ணிக்கு போமாடி’ ஃபரீதாதான் கேட் டாள்.
"அவ இப்ப எங்களோட வரமாட்டா. ஸொபஹறிலதான் போவா’ இது நுவைஸா. இந்தக் கேலிப்பேச்சுக்களை யெல் லாம் கேட்டுக்கொண்டு மெளனமாக இருப்பவளா ஜமீலா. அவள் தான் வாயாடியாச்சே,
"ஒ ஒத்தரொத்தரா எங்களோட வந்து சேருவாங்க’
ஜமீலா இப்படிச் சொன்னதுதான் தாமதம், அங்கே பளார் என்று சிரிப்பொலி வெடித்தது. பாவம் ஃபரீதா கைகளால்
41

Page 24
முகத்தை மூடிக் கொண்டுதான் சிரித்தாள்.
'ஏத்தியன் கொமருக் கூட்டத்தட கொள்ளிச் சிரிப்பு’’ இப்ப டிக் கேட்டு அவர்களின் மகிழ்ச்சியை அங்கீகரித்தவாறு வெற் றுக் கோப்பைகளை எடுத்தபடி சென்றாள் ஜமீலாவின் உம்மா.
சொற்பநேர இடைவெளியைத் தொடர்ந்து ரபான் ஒலி புதிய தொரு ஓசையுடன் ஒலிக்கத் தொடங்கியது.
தனது ஒரே மகளின் மகிழ்ச்சி விழாவுக்கான சகல ஏற்பாடுக ளையும் செய்துகொடுத்த ஜெமீல் நானா காம்பராவுக்குள் சாய்ந்தபடி இருந்தார். சொந்த உழைப்பின் மூலம் வாழ்க்கை வண்டியை நகர்த்தி வரும் அவர் எதிர்காலத்திற்காக எதையும் சேர்த்து வைத்ததுமில்லை.
ஐந்துமணி ஒலித்ததை தொடர்ந்து வழமைபோல் ஏதாவது காய்கறி சாமான்கள் வேண்டப் போகும் நினைப்போடு தயா ராகையில்தான் ஸபுராத்தா அவரைக் கண்டுகொண்டாள்.
'மம ஜெமீல் இப்ப முந்தியப் போலயல்ல. கொமருகாரன் யோசினயாக நடந்து கொளோணும்" - எவ்வளவு பெரிய தொரு உண்மையை வாழ்வின் பெரும்பகுதியை நகர்த்தி விட்ட அவள் நாசூக்காகச் சொன்னாள்.
இந்த வார்த்தைகள் குளத்தில் விழுந்த கல்லைப்போல் அவ ரது நெஞ்சிலே அலைபரப்பி வியாபித்தது.
கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஜெமீல் நானாவை மகளின் புன்னகை வழியனுப்பியது. அவளுக்கே
சொந்தமான இந்த புன்னகையைச் சுமந்தபடிதான் அவர் எப் போதும் வெளியே நடமாடுவார்.
அந்தக் குலக்கொழுந்தின் நினைவோடு அவன் வீடு திரும்பு 42.

கையில் அவளுக்காக டொஃபி, பிஸ்கட், பழம், உடுப்பு இப் படி எதையாவது கையோடு கொண்டு வந்து சோர்ப்பது பதி னான்கு வருடப் பழக்கமாயிற்றேr
ஆனால், இனிமேல் அவர் தன் மகளுக்காகக் கொடுக்கவேண் டியவை அவைகள்தானா? இச்சமுதாய அமைப்பின் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாகிவிட்ட வீடு, காணி, பணம் இவைகள் தானே அவனுக்குள் ஒரு புதிய தேவையும் அவசியமும் வித் திட்டது. "கொமருகாரன்” இல்லையா?
முன் வாசலைக் கடந்து. முற்றத்தில் தடம்பதித்த ஜமீல் நானாவின் செவியில் இன்னுமே முற்றுப் பெறாமல் புதிய ஓசை அமைப்போடு எழுந்துகொண்டிருந்த ரபான் ஒலி ஆர்ப் பரித்தது.
“பண்டக்கா புள்ளப் பெத்தா,. வாங்கடிதாயே பாக்கப் Glumtub”
சிந்தாமணி - 1977. 06 , 19
43

Page 25
தோளர்கள்
திடீரென்று நேற்று இரவு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இல்யாஸ் நானா, இரண் டொரு மணி நேரத்திற்குள்ளேயே மெளத்தாகிவிட்ட செய்தி எங்கும் பரவலாகிக் கொண்டிருந்தது.
சிரிசேன அதிகாலையிலேயே சுமந்துகொண்டு வந்து இந்தச் செய்தியால், எதிரிசிங்ஹவும் கருணாதாஸவும் நிலைகு லைந்து போய் விட்டார்கள். மலைபோலிருந்த மனிதன் என் பதற்காக மட்டுமல்ல, நேற்று காலையிலும் கூட அவர்க ளோடு ஒன்றாகக் குடித்து இன்புற்றவர் அல்லவா?
தங்கள் தொழிலுக்கு போவதைக்கூட மறந்து விட்டார்கள் அவர்கள். தங்கள் பகுதியின் ஒருபலமான பிரகிருதி சாய்ந்து விட்ட பின்பு வேறு எதுவும் அவர்களுக்கு ஓடவில்லை. கடைசிக்காரியங்களில் தங்கள் பங்களிப்பைச் செய்து ஆத்ம திருப்தி அடைந்துகொள்ள அவர்களின் கால்கள் இல்யாஸ் நானாவின் வீட்டை நோக்கி நகர்ந்தன.
அப்பகுதியில் எல்லா வீடு, கடைகளிலும் வெள்ளைக் கொடி கள் சோகத்தைச் சொரிந்துகொண்டிருந்தன. ஒரு காலத்தில் சொந்தக் காணிகள் இருந்தும்கூட காலடிவைக்கப் பயந்து
44

நடுங்கிய. ஊருக்கு ஒதுக்குப்புறமான சிங்கள மண்டிதான் அது. துணிந்து முதன் முதலில் அங்கு குடியிருக்கச் சென்றவர் இல்யாஸ் நானாதான்.
தனிப்பட்ட முறையில் அவரிடம் சில பிழைகள் இருக்கத் தான் செய்தன. இருந்தாலும் இந்த நாலைந்து வருடங்களுக் குள், நாலைந்து குடும்பங்கள் வாழவழிபண்ணியவர் என்ற வகையில் அவருக்கு நிலையானதொரு மதிப்பும் இருக்கவே செய்தது.
பிரபலமானவர்கள் அல்லது எல்லோருக்கும் வேண்டியவர் கள் யாராவதுஇறந்தால், ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்க ளும் குறிப்பிட்ட தூரத்திற்கு சடலத்தைப் பொறுப்பேற்றுச் சுமந்து செல்லும் வழக்கம் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த தால், அதன்படி தங்களுக்கும் தரவேண்டுமென்று வேண்டிக் கொள்ள விரும்பினர் சிரிசேன கோஷ்டியினர்.
女
மூஸா மெளலவிக்கு, எங்குமே முகம் கொடுத்திராத பிரச் சனை அங்கு ஏற்பட்டிருந்தது. மெதுவாகத் தனது நீண்டதாடி யைத் தடவியவாறு அழுத்தமாகத் தனது முடிவைச் சொன் Gυτπή. w
"இதுக்கு நாங்க எடம் குடுக்கேல. ஒரு முஸ்லீமட மையத்த காஃபிரானவங்க தூக்கிக்கொணு போக உடேலுமா..?’.
போதாக்குறைக்கு அங்கு கூடிநின்ற யார் யாரோவெல்லாம் தலையாட்டினார்கள். இதை எப்படித்தான் அவர்களுக்கு எடுத்துச் சொல்வதென்று பயமாக இருந்தது இல்யாஸ் நானா வின் மகனுக்கு அதற்காக சொல்லாமலிருந்து விட முடியுமா என்ன? எப்படியோ ஒருவாறு சொல்லித் தீர்த்தான்.
"அப்ப நாங்க போம்" - என்று சிரிசேன கோபத்தோடு
45

Page 26
வெளிக்கிட்டபோது அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
女
மாலை ஐந்து மணிக்கெல்லாம் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த் தியாகியிருந்தன. வீட்டின் அண்டை அயலெல்லாம்சனத்தால் நிரம்பி வழிந்தது.
தெரிந்த முகங்களைவிட தெரியாத முகங்களேஅங்கு அதிகம். இல்யாஸ் நானாவின் கூட்டம் குடும்பத்தினர் அக்கம் பக்கக் கிராமங்களிலிருந்தெல்லாம் வருகை தந்திருந்தனர்.
எல்லோருக்குள்ளுமாக சிரிசேன குழுவினர் கூட நின்றிருந்த தைக் கண்ணுற்றபோது, இல்யாஸ் நானாவின் மகனுக்கு ஒரு வகையில் பெரிதும் நிம்மதியாக இருந்தது. காலையில் கோபத்தோடு சென்றவர்கள் என்பதற்காக அல்ல; அதைத் தொடர்ந்து என்ன நிலைமைகள் ஏற்படுமோ என்றெல்லாம் யோசித்துமே அவன் பயந்திருந்தான்.
அவர்களது கண்கள் நன்றாகச் சிவப்பேறியிருந்தன. நல்ல மப் பான நிலையில் அவர்கள் வந்திருந்தார்கள். ஒரு சகா இல்லாத வேதனை இன்னும் அதிகமாக அவர்களைப் போடச் செய்தி ருந்ததோ என்னவோ!
திடீரென்றாற்போல வீட்டுக்குள்ளிருந்து அழுகையொலி வெடித்துக் கிளர்ந்தது. சந்தூக்கு வெளிவருவதற்கான அத்தாட் சிதான் அது என்பது எல்லோருக்குமே புரிந்து விட்டது.
சந்தூக்கை வெளியே கொண்டு வந்துவைத்தபோது, வழக்கம் போலவே உறவு வழியானவர்களுக்கும் மிகமிக நெருக்கமா னவர்களுக்கும் விட்டுக் கொடுத்து மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். இறுதிப்பயணத்துக்க்ான வாகனத்தை தோள்க ளில் சமந்துசெல்லும் உரிமைப் பத்திரம் அப்படியானவர்க
46

ளுக்குத்தானே கிட்டும்.
சிரிசேனவின் கண்கள் கலங்கின. அத்னூடே அவனது கண்ச மிக்ஞையும் குழுவினருக்குப் புரிந்து விட்டது.
மையத்து ஊர்வலம் மெதுமெதுவாக நகரத்தொடங்கியது. அறிந்தோர். தெரிந்தோர். அப்பகுதிச் சிங்களச் சகோதரர் கள் அனைவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள்.
பள்ளிவாசலில் மையத்துத் தொழுகையைத் தொடர்ந்து, அதையடுத்துள்ள மையவாடியில் மையத்து அடக்கம் ஒழுங் காக நடைபெற்றது. துஆவும் முடிவடைந்தது.
சிந்தனை வயப்பட்ட மனங்களோடும் சோகத்தை சுமந்த வாறும் மையத்துப் பிட்டணியிலிருந்து ஒருவர் இருவராக வெளியேறிக் கொண்டிருந்தூர்கள்.
பாதைக்கு வந்த சிரிசேன மற்றவர்களின் வரவுக்காக ஒதுங்கி நின்றான். அப்போது அங்கே எதிரிசிங்ஹவும் கருணாதாஸ் வும் கதைத்தபடி வந்துசேர்ந்தார்கள்.
இதுவரை காலமும் எத்தனை எத்தனையோ ஈமக்கிரியைக ளில் கலந்து கொண்டவர்கள் தான் அவர்கள். இன்று அவர்க ளுக்கு எப்போதுமே இல்லாத பெரும் திருப்தி. இல்யாஸ் நானாவுக்கான அதிஉச்ச இறுதிப்பங்களிப்பை, அதுவும் தந்தி ரமாக செய்துவிட்ட பெருமிதம் மூவரது முகங்களிலும் பளிச் சிட்டது.
அங்கும் இங்கும் பார்த்து தங்களுக்குள் சிரித்தபடி தலையிற் கட்டியிருந்த லேஞ்சிகளை மெல்ல அவிழ்த்துக்கொண்டனர்.
"என்ன சிரி தோள்வலிக்குதோ?’ என்று எதிரிசிங்ஹ கேட்ட போது, மூவரும் ஒருபாட்டம் வாய்விட்டுச் சிரித்து
47

Page 27
ஒய்ந்தனர்.
மீண்டும் இல்யாஸ் நானாவின் வீட்டுப்பக்கமே அவர்களது கால்கள் நடந்தன.
மல்லிகை - 1980 ஆகஸ்ட்.
48

போதம்
பதினைந்து மைல்களுக்கப்பால் அவசரமாகப் போகவேண் டிய அவசியம். ஆளனுப்பி அழைப்பு. என்னவென்று தெரிய வில்லை. மனைவியோ விட்டபாடில்லை. எனக்குத்தான் மாமா! அவளுக்கு வாப்பாஅல்லவா! பிள்ளை மனம் விடுமா என்ன
இரவு ஒன்பது மணி.
பஸ் ஸ்டான்டை அடைந்தாகி விட்டேன். பிரைவட் வாகனங் கள் இந்நேரத்திலா..? ஒன்பது பதினைந்துக்கு கொழும்பில்
இருந்து வரும் கதிர்காமக் கடுகதி இருப்பதாக வெற்றிலைக்
காரியின் உறுதிப்பாடு.
எனக்குள் ஒரு சந்தேகம். நியாமானதுதான்.
கொழும்பில் இருந்துவரும் கதிர்காமக் கடுகதி, இடையில் பதினைந்து மைல் தூரம் போகவிருக்கும் என்னை ஏற்குமா வென்றுதான்.
ஒரு வேளை இப்படியொரு பதில் கிடைக்கலாம்.
‘என்ன இப்பதானா எங்களத்தேவ. பிரைவெட்டில போக லாமே.”*
49

Page 28
என்னதான் செய்வது?
வானொலியில் தலைப்புச் செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தன. இப்போதோ இன்னும் கொஞ்சம் நேரத்திலோ கதிர்காமக் கடுகதி வந்துவிடும்.
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்.
ஒ. ஒரு ஸாது. பெளத்த பிக்கு. மக்கள் வங்கிக்கு அருகாமை யில் நிற்பது தெரிந்தது.
மாத்தறை பஸ்ஸொன்று வந்து சேர்ந்தது. அது ஒரு கடுகதி யல்ல. சிறிது நேரத்தில் புறப்பட்டது.
ஞாபகத்தோடு மக்கள் வங்கிப் பக்கம் பார்த்தேன். அந்த பிக்கு இன்னும் அந்த இடத்திலேயே நின்றார். எனக்கு மகிழ்ச்சி. ஏனெனில் நான் போகும் திசையிலேயேதான் அவரும் போக இருக்கிறார். கடுகதியல்ல, அதிகடுகதி என்று ஒன்று இருந்தா லும் அதுவும் பிக்குகளை உள்வாங்கிக் கொள்ளும்தானே? நிற்க இடமில்லாமல் நிரம்பி வழிந்தாலும் கூட, அவர்களுக் காக ஆசனம், உத்தரவாதம் தானே? எனக்கு ஃபுட்போட்டில் ஒரு காலை வைத்துக்கொள்ள இடம் கிடைத்தாலும் போதுமே! பிக்குவைக் கூட்டாளியாக்குவதுதான் எனக்கு ஒரே வழியா கப் பட்டது. மெதுவாக நெருங்கினேன்.
‘ஸாது எங்க போறிங்க?"
'தங்கல்லக்கி போகவேண்டிடுயிருக்கு”
எனக்கு மனம் குளிர்ந்தது. நானும் போகவேண்டியிருந்தது அதே இடம் தான்.
'கதிர்காம பஸ்ஸொன்னு இப்ப இருக்கில்லியா’
50

"அப்படியா’
காரியம் கைகூடி விட்டது.
'என்னேம் ஸாதுட ஆளாக்காட்டிக் கொளோணும். அவ ருக்கும் சேத்தி நானே டிக்கேற் எடுக்கோணும் எனக்குள் திட் டம் முகிழ்விட்டது."
ஹோன் சத்தம் கேட்டது. பாலத்துக்கு மேலால் வெளிச்சம் தெரிந்தது. கதிர்காம பஸ்தான். சுமக்க முடியாத சுமையோடு வந்துநின்றது.
வெற்றிலைக்காரிக்கு கடைசிக்கட்ட வியாபாரம். டிரைவரும் கண்டக்டரும்கூட இறங்கி விட்டார்கள்.
நான் பிக்குவைப் பார்த்தேன். அவரில் ஓர் அசைவாட்டத்தை யும் காணவில்லை. எனக்கு வியப்பு!
‘ஸாது கதிர்காம பஸ்தான்’ நான் சொன்னேன்.
சற்று நேர அமைதி. 'பாருங்க நெறைய சனம். கொழும்பில் இருந்து ரொம்பத்தூ ரம் போறவங்க, அதுவும் இரவு. கொஞ்சத்தூரம் போக நான் ஏறினா எழும்பி இடந்தருவாங்க. பாவமில்லயா. நான் நின்னு கொண்டு போகப் பார்த்தா அதுக்கும் விடமாட் டாங்க. அதனால செக்ஷன் பஸ்ஸில போறன்’ அமைதியாக அவர் சொன்னார்.
"அப்ப நான் எப்படியாவது பொகப்பார்க்கிறன்’- பதட்டத்
தோடு விடை பெற்றேன்.
கண்டக்டர் வெற்றிலை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
'பஜாரில ஸிகரட் டிமான்டில்லயா' என்றவாறு கண்டக்ட
51

Page 29
ருக்கு ஒரு சிகரட்டை நீட்டினேன். நானும் ஒன்றைப் பற்றிக் கொண்டு லைட்டரைக் கொடுத்தேன்.
'ஆ வந்தவங்க ஏறுங்க '
நானும் ஒருவாறு ஃபுட்போட்டில் தொங்கிக் கொண்டேன்.
டிக்கட்டும் கிடைத்தாயிற்று. கொடுத்த லஞ்சம் கைகொடுத்
莎š·
கடுகதி கடுகதியாக விரையத் தொடங்கியது. போகிற போக் கில் பதினைந்து நிமிடத்திலேயே தங்கல்லையை அடைந்து விடும் போலிருந்தது. எனது பதட்டம், பிரச்சினை எல்லாம் தீர்ந்த நிலையில் மீண்டும் அந்த பிக்குவின் நினைவு.
"பிக்குகள் கொடுத்து வைத்தவர்கள். எங்கேயும் ஏறலாம். எப் போதும் அமரலாம். சில நேரம் கிழடுகள் கூட எழவேண்டியி ருக்கும்.
அனுபவத்தில் இதைக்கண்டு கண்டு, ஒருவித குறைவு மனப் பான்மையே எனக்குள் பதிவாகியிருந்தது. அதற்குள் இப்படி պմ).
எனக்குள் ஒரு புதுநிறைவு. பஸ் பறந்து கொண்டிருந்தது.
மல்லிகை - 1983 ஜனவரி.
52

குருட்டு வெளிச்சம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்திருந்தது. இரண்டொரு நாட்களாக இரவும் பகலும் ஒரே சிலுசிலுப்பு. இப்படி மழைபெய்ய ஆரம்பித்தால் தான் சில குடும்பப் பெண்களுக்கு விறகின் நினைப்பு வந்துவிடும். இதற்கு மிஸ்றிதாத்தாவும் விதிவிலக்கல்ல.
அன்று காலையில் விறகுக் கரத்தையைக் கண்ட போதுதான் அவளுக்கு மனம் குளிர்ந்தது. அவளுக்கு மட்டுமா என்ன, அக்கம் பக்கத்துப் பெண்கள் அத்தனை பேருக்கும்தான். இத னால் மிஸ்றி தாத்தா நினைத்தது போல் அளவுக்கு அதிகம் வாங்கி அடுக்கிக் கொள்ள முடியவில்லை.
ஆக மூன்றே அந்தர் விறகுதான் அவளுக்கும் கிடைத்தது. என்னதான் செய்வது?
அன்று முழுதும் சூரியனை எட்டிப் பார்க்கவிடாது மேகக் கூட்டம் திரண்டு இருண்டு போய்க் கிடந்தது. எந்த நேரத்தில் வெடித்துக் கொட்டத் தொடங்குமோ என்ற பயத்தில் எல் லோரும் எடுத்த விறகை உள்ளே கொண்டு செல்வதில் ஈடு பட்டிருந்தார்கள்.
மிஸ்றி தாத்தாவுக்கு உதவ இன்னும் மூன்று பேர் வந்து சேர்ந்து விட்டார்கள். வேறு யார்தான்? அவர்களது குஞ்சும
53

Page 30
கள் ஹம்ஸியாவும் அவளது அக்கம் பக்கக் கூட்டாளிகளான ஃபாத்திமாவும் மரீனாவும்தான். ஆளுக்கொரு துண்டாகக் கொண்டுபோவதும் வருவதுமாக. அது அவர்களுக்கொரு வேலையாகவல்ல விளையாட்டாகவே அமைந்தது.
மூன்று அந்தர் விறகையும் முற்றாகக் கொண்டுபோய்ச் சேர்த்து, எச்சசொச்சங்களைக் கூட்டித்துப்புரவு செய்து முடிக் கையில் சரியாக மஃரிபுக்கு பாங்கு சொல்வது கேட்டது. இனி யென்ன. மிஸ்றி தாத்தா தொழுதுவிட்டு முன்வாசலுக்கு வந்தபோது, அங்கே அவளது குஞ்சுமகள் ஹம்ஸியா பதட் டப்பட்டபடி பயந்துபோய் நின்றாள்.
'உம்மா ஏன்ட மால இல்லும்மா’ உம்மாவைக் கண்டதும் அவள் சிணுக்கக் குரலில் சொன்னாள்.
'ஆ. மாலயக் காணல்லயா. கழட்டிவை, கழட்டிவை யென்டு எத்தினதரம் சென்னன்’ அவளுக்கு இருப்புக் கொள் ளவில்லை. அதன் பெறுமதி எவ்வளவென்று அந்தக் குழந் தைப் பிள்ளைக்கா தெரியப் போகிறது! உம்மா போட்ட சத்தத்திற்கு உள்ளேயிருந்து கைரியாவும் ஓடி வந்தாள்.
"எங்கியாலும் புழுந்தீக்குமும்மா . தங்கச்சி ஊட்டுக்குள்ள தானே வெளாடிக் கொண்டு நின்ட* உம்மாவை நிதானப்ப டுத்தும் பாங்கில் சொன்னாள் கைரியா.
அதைத் தொடர்ந்து டோர்ச்லைட்டும் லாம்புக் குப்பியுமாக இருவரும் மாலை தேடும் படலத்தில் இறங்கினார்கள். முன் முற்றம். உள்வாசல். சமையலறை. பின் பக்கம். எல்லாம் பார்த்தாகி விட்டது எங்குமே இல்லை.
'ம் தொலஞ்சி. இன்டக்கி எவ்வளவு பெறுமதியென்டு தெரீமா. மூவாயிரமீந்தாலும் அப்பிடியொன்டு எடுக் கேல. ம். புள்ளக்கித் தெரியாம தாருசரி களவான்டீக்
54

கும். சேந்து வெளாடிக் கொண்டீந்த புள்ளயஸ் எடுத்தோ தெரிய* மிஸ்றி தாத்தா மனதில் பட்டதையெல்லாம் எவ்வித தணிக்கையும் இன்றி வெளிக்கொட்டத் தொடங்கிவிட்டாள்.
அர்த்தமில்லாமல் ஆதாரமில்லாமல் மற்றவர்மேல் குற்றம் சுமத்துவது கைரியாவுக்கு சற்றும் பிடிக்கவில்லை.
线 貂
சும்ம கண்ணால காணாததயெல்லம் செல்லவா ணும்மா. இப்பராவேலதானே தேடின. நாள வெளணக் கும் பாத்திட்டு விசாரிச்சுப் பாக்கோம்’ இப்படிச் சொன்னாள் மகள் கைரியா. இத்தனைக்கும் பயந்துபோய் என்னதான் நடந் ததென்று தெரியாமல் திக்பிரமை பிடித்து நின்றாள் ஹம்ஸியா.
அப்போது தான் வேலைக்கு போயிருந்த மன்சூர்நானா வந்து சேர்ந்தார். வீட்டில் ஏதோ அசாதாரணத்தன்மை நிலவுவது அவருக்கு சட்டென்று விளங்கிவிட்டது. மனைவியும் விடு வாளா என்ன? எல்லாவற்றையும் ஆரம்பம் முதல் ஒப்புவித்த பின்பு தான் அவளுக்கு நிம்மதி ஏற்பட்டது.
மன்சூர் நானா ஆத்திரமோ கோபமோ அடைந்துவிட வில்லை. மாறாக அமைதியாகச் சொன்னார்.
"அதுக்கெனத்தியன் செய்த. எவளவு சம்பரிச்சீக்கன், எவ ளவு இல்லா மாக்கீக்கன். வாரத்துக்குள்ளதெல்லாம் வரத் தான் செய்யும்’ வாப்பாவின் பதில் எல்லோரையும் விட ஹம்ஸியாவுக்கே பெரிதும் ஆறுதலாக இருந்தது.
மிஸ்றி தாத்தாவுக்கு இரவு தூக்கமேயில்லை. அடுத்த நாள் எப்போது விடியுமென்று வழிபார்த்த வண்ணமே நேரம் நகர்ந்தது. சுபஹ"க்கு பாங்கு சொல்வதோடேயே எழுத்து விட்டாள் அவள். அதிகாலை இருள் அகலும்போது மீண்டும் மாலைதேடும் படலம் தொடங்கியது. ஆனால் மாலைதான் கிடைத்ததாக இல்லை. மிஸ்றி தாத்தாவுக்கு மனம் பொறுக்க
55

Page 31
வில்லை. விடுவாளா. புதியதொரு ஐடியா அவளுக்குள் பளிச்சிட்டது.
‘ம். மை வெளிச்சம் போட்டுப் பாத்தாநல்லம் போலீக்கு. அஸனா லெப்ப வெளிச்சம் போட்டுப் பாத்தாசரியாச் செல்லி யாம். நாங்களும் அவருக்கிட்ட கேட்டுப் பாக்கியதானே. ஸமீர தாத்தட புள்ளேட மோதிரம் இல்லாப்பெய்த்து அவரு சென்ன மாதிரி கெடச்சதானே'.
மனைவியின் புதிய யோசனையைக் கேட்டதும் மன்சூர் நானாவுக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. இனி அவள் அதைச் செய்யாமல் அமைதியடையப் போவதில்லை என்பது கூட அவருக்குத் தெரியும்.
ge. . . . . மை வெளிச்சக்காரருக்கும் வருமானம் ஒனும்தானே. ஒங்களப்போல பொம்பிளயஸ் இல்லாட்டி மிச்சம் கஷ்டம்’ வழமையான தனது நையாண்டித் தனத்தைக் கக்கினார் மன் சூர் நானா.
‘ம். நீங்க செல்லியமாதிரி ஆயிரக்கணக்கான சாமன உட் டிட்டு எனக்கு சும்மீக்கேல. நான் லெப்பேக்கட்டப் பொகப்
போற*
மிஸ்றிதாத்தா புறப்பட்டு விட்டாள். ஒரு முறை பதட்டமில் லாத முறையில் தேடிப்பார்ப்பதற்கு மன்சூர் நானாவுக்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்தது. மகள் ஹம்ஸியாவை அருகே அழைத்து மென்மையான பாங்கில் விசாரித்துப் பார்த்து போது. பகல் கல்யாண வீட்டுக்குப் போய்வந்த பின்னர் அடுத்த வீட்டுக்காவது போகவில்லையென்பது தெளிவாகி யது. மற்றைய பிள்ளைகளோடு வீட்டு முற்றத்திலேயே தான் விளையாடிக் கொண்டிருந்தமையும் தெரிந்தது.
மை வெளிச்சம் பார்க்கப் போன மிஸ்றிதாத்தாஒருமணிநேரத் துக் கிடையில் மீண்டும் வந்துசேர்ந்து விட்டாள். என்ன உண்
56

மையைத்தான் மைவெளிச்சத்தில் கண்டு பிடித்து கொண்டு வந்திருக்கிறாளோ என்று அறியும் ஆவல் மகளுக்கும் கணவ னுக்கும்!
"சாமன் ஊட்டுக்குள்ள இல்லயாம். மூனு நாளேக்குள்ள கெடக்காட்டி மிச்சம் தூரம் பெய்த்திருமாம். ரெண்டு கைமாறி இப்ப மூனாவது கைலயாம்" லெப்பை சொன்னதை மூச்சுவி டாமல் அப்படியே கொட்டித் தீர்த்தாள் மிஸ்றிதாத்தா.
'ஆ அப்பிடியா' என்று கேட்டபடியே தன் வழமையான தொழிலுக்குப் புறப்பட்டார் மன்சூர் நானா, கைரியாவும் குசு னிக்குள்தன்கடமைக்காகப் புகுந்து கொண்டாள். சாய் கதிரை யில் அமர்ந்த மிஸ்றி தாத்தாவுக்கோ அடுக்கடுக்கான யோச னைகள் அலைபோல் புரண்டு வந்தன.
பசிவெறிபிடித்த பூனையின் கையில் சுண்டெலிகள் சிக்கியது போல் அவளிடம் வந்து மாட்டிக் கொண்டார்கள், நேற்று மாலையில் ஹம்ஸியாவோடு விளையாடிக் கொண்டிருந்த அக்கம் பக்கப் பிள்ளைகள் இருவர். விடுவாளா? கேள்விக் கணைகள் தொடர்ந்தன.
பாவம் அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. மிரளமிரள விழித்தார்கள். வீட்டில் போய் சொல்லாமல் இருப்பார்களா என்ன? தங்களது பிள்ளைகளைக் கள்ளம் சாட்டிவிட்டார்க ளேயென்று அவர்களுக்கும் மிஸ்றிதாத்தாவின் மேல் சற்றே மனக்குறையுந்தான்.
அஸனா லெப்பை மைவெளிச்சத்தில் சொன்ன காலக்கெடு கடந்தாகிவிட்டது. எதிர்பார்ப்புக்களும் உளவு பார்க்கும் முயற்சிகளும் வீணாகிப்போய், யாரைக்கண்டாலும் ஒரு வித சந்தேகப் பார்வை.
முற்றாக ஒரு கிழமை கடந்த பின்புதான் அவளுக்கு துப் பொன்று கிடைத்தது. ஐந்தாறு வீடுகள் தள்ளி அமைந்துள்ள
57

Page 32
ஸெய்னம்புவின் மகன் டேப்ஸெட்டும் கையுமாக வந்துள்ள செய்திதான். போதாதா இனி.
'ம். தொழில் தொறவில்லாம சும்ம ஊர்சுத்தியவன் மூவா யிரத்துக்கு டேப் வாங்கீக்காம்’- மிஸ்றிதாத்தாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
‘ஸெய்னம்பு. ஒன்ட மகன் டேப் கொணுவந்தீக்கென்டு எல்லாரும் செல்லியாங்க. நானும் சும்மா பாத்திட்டுப் பொக வந்தேன்’ என்றவாறு ஸெய்னம்புவின் வீட்டுக்குள் புகுந்த மிஸ்றிதாத்தா அந்த கெஸட்டைக் கண்டு அப்படியே பிரமித்துவிட்டாள்.
'ஒ மிஸ்றி தாத்தா. கொஞ்சநாளா செல்லிச் செல்லீந்தான். இப்பதான் அவனுக்கு வசதிப்பட்டீக்கி’ சற்றே பெருமை யோடு சொல்லத் தொடங்கினாள் ஸெய்னம்பு.
ம். சின்னப் புள்ளயஸ்ட காதிலகழத்தில ஈக்கியத்த கழட் டியெடுத்தா வசதிப்படாமீக்கியா' மிஸ்றி தாத்தா குத்தலாக
இப்படிக் கேட்டதும் ஸெய்னம்புவுக்கு தூக்கிவாரிப்போட்டது
விடுவாளா..?
பேச்சுக்கு பேச்சு. அது சண்டையாக உருவெடுத்து அப்பகு தியே பரபரப் படைந்து விட்டது. வாயைப் பிளந்தபடி அதிச யம் பார்த்து நின்றவர்களெல்லாம் மிஸ்றிதாத்தாவுக்கு ஆதர வாகவே குசுகுசுத்துக் கொண்டார்கள்.
மிஸ்றிதாத்தாவின் குஞ்சு மகளின் கழுத்திலிருந்த மாலையை
ஸெய்னம்புவின் மகன்களவெடுத்து, டேப் வாங்கியுள்ளதாக ஊர்கதைக்கத் தொடங்கியது.
மாலை கிடைக்காமல் விட்டாலும் மைவெளிச்சம் உண்மை யென்று உறுதி ஏற்பட்டுவிட்டது மிஸ்றிதாத்தாவுக்கு. 58

மாதங்கள் உருண்டோடின. மாலையின் கதையை எல்லோ ருமே மறந்து போய்விட்டார்கள். மிஸ்றி தாத்தாவும் கூடத் தான்.
ஒரு நாள் மிஸ்றிதாத்தாவும் மன்சூர் நானாவும் முன்வாசலில் அமர்ந்து ஏதேதோ விவகாரங்களை அலசிக் கொண்டிருந்தார் கள். அப்போது உள்ளே சமையலில் ஈடுபட்டுக்கொண்டி ருந்த கைரியா "உம்மா உம்மா ஒடிவாங்கோ’ என்று கத்திய போது, என்னவோ ஏதோவென்று துடிதுடித்துக் கொண்டு ஒடினார்கள்.
அங்கே. கைரியாவின் கையிலே ஒரு விறகுத்துண்டு. அதிலே பிய்ந்து தொங்கியபடி ஒரு மாலை.
மாலை காணாமல் போன அன்று விறகு வாங்கியதும் விளை யாட்டு வாக்கில் ஹம்ஸியாவும் அவளது கூட்டாளிகளும் விறகு கொண்டுசென்றதையும் யாரும் மறந்திருக்க முடியா தல்லவா..?
"பாத்துக்கோங்கொ. எத்தினபேரச் சந்தேகம் நெனச் சன். எத்தின பேரோட சண்ட புடிச்சன். மைவெளிச் சத்தை பத்தி இப்ப எனத்தியன் செல்லிய. மூனு நாள் பிந் தினா கெடக்கியல்லயென்ட. இப்ப மூனுமாஸம் பிந்தி கெடச்சீக்கே. இதுக்குப் பொறகாவது அல்லா ரஸலை நம் புங்கோ’- மன்சூர் நானா சீறிச்சினந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
கைரியா பிய்ந்த மாலையைப் பெயர்த்தெடுத்துவிட்டு விற குத் துண்டை அடுப்புக்குள் திணித்தாள்.
மிஸ்றிதாத்தா எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள்.
வீரகேசரி - 1984, 07, 29
59

Page 33
ஒரே குடையின் கீழ்
“உழைத்து உண்பதே மிகச்சிறந்த உணவாகும். உழைக்காம லிருந்து இன்னொருவரின் உழைப்பை உறிஞ்சிக் கொள்வது விரும்பத்தக்கதல்ல. இதனால்தான் வட்டி ஹறாமாக்கப்பட் டுள்ளது. இன்று வட்டி பல்வேறு வடிவங்களில் எங்கள் மத்தி யில் காணப்படுகிறது’
பேஷ் இமாமின் ஜும்ஆ பிரசங்கம் தீர்க்கமாக ஒலித்தது. அத் னால்தான் கூடிநின்ற சனத்தில் ஒருவர் கூட அசையாமல் அப் படியே அமர்ந்திருந்தனர். இந்தக் கொஞ்ச நாட்களாக பேஷ் இமாமின் பயான் பொதுவாக எல்லோரையுமே ஈர்த்திருந்தது.
காலாதிகாலமாக வணக்க வழிபாடுகளின் சிறப்புக்களையும் மகிமைகளையும் அவற்றை அனுபவிப்பதால் மறுமையில் வாய்க்கப் பெறும் கீர்த்திகளையுமே கேட்டுக்கேட்டு அலுத் துப் போயிருந்த ஜமாஅத்தினருக்கு இப்பொழுதெல்லாம் ஏதோ புதிய கதவுகளைத் திறந்து காட்டுவதுபோலிருந்தது.
பேஷ் இமாம் அந்தப் பள்ளிவாசலுக்கு வருகைதந்து இன்னும்
ஒரு மாதம் கூடப்பூர்த்தியாகி விடவில்லை. பரம்பரை பரம்ப ரையாக ஊரிலுள்ள லெப்பைக் குடும்பமொன்றின் வாரிசு
60

களே பள்ளிவாசலின் முக்கிய பொறுப்பை வகித்து வந்தனர். இதற்கு அனுசரணையாகவே பள்ளிவாசல் மத்திச்சம்மாரும் இயங்கிவந்தனர்.
இத்தகைய போக்குகளையெல்லாம் எல்லாக்காலத்திலும் எல் லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்ன? வாலிபர் கூட்ட மொன்றின் இயக்கம் ஊரை ஒரு கலக்குக் கலக்கியது.
இதன் வெளிப்பாடாகத்தான் வெளியூரில் இருந்து ஒரு மெள லவி பேஷ் இமாமாகக் கடமையேற்றார். அவரும் ஒரு வாலிப ராக இருந்தமை இன்னும் விசேடமாக அமைந்தது.
தொழிலாளர்களின் உழைப்பின் மகிமையும், அவர்களுக்கு ஊதியம் மறுக்கப்படுவதையும், பதுக்கல் வியாபாரங்களும், ஏமாற்று வித்தைகளும் பேஷ்இமாமின் பிரசங்கங்களில் ஒலிக் கத் தொடங்கின.
இப்பொழுதெல்லாம் ஊர் வாலிபர்கள் பேஷ்இமாமின் நட் புக்கு ஆளாகி விட்டார்கள். ஊரை ஏய்த்துக் கொண்டிருந்தவர் களும், பள்ளிவாசல் பரிபாலகர்களும் இதனால் கலங்கிப் போய் நின்றனர்.
"இன்டக்கி சென்ன ஹதீது சா..? கூட்டம் கலைந்ததும் சில
வாலிபர்கள் இமாமை நெருங்கினர்.
'இதெல்லம் எடுத்துக் காட்ட வேண்டிய விசயங்கதான். உள் ளத்த உள்ளமாதிரி செல்லோனும். இது எங்கட கடம. இல் லாட்டி அல்லாட கோவத்துக்கு நாங்களும் ஆளாகிய’ பேஷ் இமாம் உணர்ச்சி பூர்வமாகச் சொன்னார்.
“ “ùo ஹ்ம்
செருமியபடி அவ்விடத்தைக் குறுக்கறுத்துக் கொண்டு சென் றது வேறுயாருமல்ல; நஸ்ரீன் முதலாளிதான்.
6.

Page 34
'சரி ஒங்களுக்கு நேரமாகிய போல பொறகு சந்திக்கோம்’ வாலிபர்கள் விடைபெற்றுக்கொண்டார்கள்.
பதினைந்தே நிமிடத்துக்குள் பள்ளிவாசல் யாருமே இன்றி அனாதையாகி விட்டது.
★
"நல்லா போட்டுத்தின்னுங்கொ. அது ஆட்டெறச்சி பிஸ் டேக்தான். மறுபேணம் எங்கியன் பெய்த்து தின்னப்போற. தட்டத்தனிய வந்து எங்கடூரில வேலசெய்த ஆளில்லயா’ நஸ் ரீன் முதலாளி நன்றாக உபசரித்தார்.
'மெளலவி மாருக்கு தின்னச் செல்லிக் குடுக்கோணுமா? ஒரு வெட்டு வெட்டினார் பேஷ்இமாம்.
இப்படிக் கலகலப்பாகக் கதைத்தபடியே பகல் சாப்பாட்டில் தங்களை மறந்தனர் இருவரும். பலதரத்திலான பலவிதமான சாப்பாடுகளையும் ருசிபார்க்கும் வாய்ப்பு இப்படி ஒரு சில ருக்குத்தானே கிடைக்கும்!
புதிதாக அவர் பள்ளிவாசலுக்கு பதவியேற்று வந்தபின் சாப் பாட்டு ஒழுங்கு ஒரு பிரச்சினையாக எழுந்தது. அடுத்த சில மணி நேரத்திற்குள் அது ஒரு பிரச்சினையே அல்ல என்ற நிலை உருவாகிவிட்டது.உனக்கெனக்கென்று வாரத்தில் ஒவ் வொரு வேளையாக பதினான்குபேர் பங்குபோட்டுக் கொண் டார்கள். அந்த வரிசையில் தான் நஸ்ரீன் முதலாளிக்கு அன்று வாய்த்திருந்தது.
'அப்ப நான் வரட்டா’
சாப்பாடு உட்கொண்டு சற்றுநேரம் அமர்ந்தபின் இப்படிச் சொல்லி விடைபெறத் தயாரானவராக எழுந்தார் பேஷ்இ மாம்.
62.

"எனா அவசரம் கோப்பி குடிச்சிட்டுப் பொகேலும். அஸ ருக்கு நேரமீக்கிதானே..ம். எத்தின விஷயம் ஒங்களோட கதக்க நெனச்சிக் கொண்டீக்கியன். அதுக்கெடேல’
"அப்படியா ?’ என்றவாறு மீண்டும் ஹாய்யாக அமர்ந்து கொண்டார் அவர். மேலே மின்விசிறி சுழன்று சுகமளித்துக் கொண்டிருந்தது.
'நீங்க ஊருக்கு புதிய மனிசன். எல்லாருக்கும் பொதுவா நடந்து கொளோணும். அதால செல விஷயங்கள செல்லத் தானே ஒனும்’
"கட்டாயம் அது ஒங்கட கடம’
'ஒன்டுமில்ல . ஊரு விஷயங்கள பள்ளிவாசல் வேலகள
பாக்கியது எங்களப் போல கொஞ்சம் பேருதான். ஒங்க
ளுக்கு. மோதீனப்பக்கெல்லம் சம்பளம் குடுக்கியதும் நாங்
கதான். ம் . போதுமான மனிசரோட நல்லா நடந்துக்கொ ளோணும் ஹஸரத்.’
‘மெய்தான் மொதலாளி. நான்தாரோடேம் அப்பிடி வித்தியா சம் காட்டி நடந்துக் கொளல்லயே’ சற்றே சரணடைந்துபோன வராக பேஷ்இமாம் சொன்னார்.
"இல்ல . நீங்க பொடியன்மாரோட கொஞ்சம் நல்லம். அவங்க ஒன்டுக்கும் ஒதவாதவனியள். பள்ளிச் செலவுக்கா லும் ஒரு சாம் குடுக்கியல்ல. குடுக்க வழீமில்ல’ சொல்ல வந்த விஷயத்தை நீண்ட ஒத்திகைக்குப் பின் சொன்னார் நஸ் ரீன் முதலாளி. தலையாட்டியபடியே கேட்டுக் கொண்டிருந்த பேஷ் இமாமுக் குள் பல எண்ணக் கீற்றுக்கள். எதையாவது சொல்லித் தப்பிக் கொள்ள அவரால் முடியவில்லை. தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் போலவே பட்டது.
63

Page 35
'கோப்பி குடீங்கொ’
உள்ளேயிருந்து கோப்பிக் கோப்பையோடு வந்தவர் முதலா ளியின் உறவுக்காரராக இருக்க வேண்டும். கோப்பியை இருவ ருமாக குடித்து நிமிரும் போது மணிக்கூடு மூன்று மணிகாட் Լգ-Աl5].
'ம். இவரப் பள்ளிக்கு கூட்டிக்கொணுபெய்த்துடுங்கொ’ முன் வாசலில் நின்ற கார் ட்ரைவருக்கு அறிவிப்புக் கொடுத் தார் நஸ்ரீன் முதலாளி. பேஷ்இமாமைச் சுமந்துகொண்டு கார் விரைந்தது.
女
பெரிய மத்திச்சம் வீட்டில் அன்று மத்திச்சம்மார்களெல்லாம் ஒன்று கூடியிருந்தனர். பள்ளிவாசல் பரிபாலனம் சம்பந்தமாக இப்படியாக அவர்கள் மாதாந்தம் கூடுவதுண்டு.
அன்று அழைப்பின் பேரில் பேஷ் இமாமும் அங்கேபிரசன்ன மாகியிருந்தார். தொழுகை முதலான வழிபாட்டு நிகழ்ச்சி களை ஒழுங்காகச் செய்துவருவதல்லாது நிர்வாக விஷயங்க ளில்தான் அவருக்கு எவ்விதப் பங்குமில்லையே. அப்படியி ருக்க தன்னை ஏன் அழைத்தார்கள் என்பது அவருக்கே புரி யாத புதிர்தான்.
"ஆ. ஒங்களுக்கு மூனுமாஸம் பிந்தின பொறகுதான் சம்ப ளம் முடிவு செய்தென்டு சென்ன. ஆனா அதுக்கு முந்தியே சம்பள விஷயமா தீர்மானிச்சிட்டோம். ஒங்கள மிச்சம்பே ருக்கு நல்லாப் புடிச்சீக்கி. அதச் சொட்டீம் இந்த மாஸத்தி லீந்து ஆயிரம் ரூவா சம்பளம் தரப்போற, நீங்க எனத்தியன் செல்லிய ?’ பெரிய மத்திச்சம்தான் இவ்வாறு கேட்டார். 'அல்ஹம்துலில்லா. நல்லந்தானே’ பேஷ்இமாம் சொன் னார். இது அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமென்பதை அவர் 64

முகம் பிரதிபலித்தது.
'இதெல்லம் பாத்துக்கேட்டு நாங்கதான் செய்யோணும் ஹஸ் ரத். எங்களுக்கு கதசெல்லிக் கொண்டு திரிய வேராக்களிக்கி. அவனியஞக்குப் பயந்து நாங்க அல்லாட விஷயத்த உட்டுப் போடியல்ல. ம் . ஹஸரத்தட ஹதீதும் செலநேத்தக்கி எங்க ளுக்கு அடிக்கிய மாதிரீக்கி." ஹமீத் ஹாஜியார் நைஸாக விட்டார்.
‘நான் ..நான் புதியாள்தானே ஹாஜியார். ஊரப்பத்தீம் சரி யாத்தெரிய’ பேஷ் இமாம் சமாளிக்க முயன்றார்.
'இல்லில்ல ஓங்களுக்கு குத்தம் செல்லல்ல. எதுக்கும் ஓங்க ளுக்கு ஒதவ ஈக்கியது நாங்கதான். நீங்க கேக்காமலே சம்பளத் தக் கூட்டின. இன்னம் கந்திரி, கலியாணமென்டு ஊரு வருமா னங்கள ஒழுங்காக்கி தார. இதல்லாம தனிப்பட்ட மொறேல தேவயலிந்தாச் செல்லுங்கொ. ஏன்ட ஒதவியச் செய்த." ஹாமித் ஹாஜியார் எல்லோரது சார்பிலும் தன்கருத்தை முத் தாய்ப்பாக வைத்தார்.
"இன்ஷாஅல்லா’ மனநிறைவோடு அங்கிருந்து விடைபெற் றார் பேஷ்இமாம்.
அஸர் தொழுதுவிட்டு மேல் மாடிக்கு வந்த அவருக்கு, மிக அவசரமாக தன் நிலைப்பாட்டை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
அவர் கடந்த எட்டு வருடங்களாக வெவ்வேறு பகுதிகளி லுள்ள பத்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றி யிருக்கிறார். அங்கிருந்தெல்லாம் காலப் போக்கில் வெளி யேற வேண்டியிருந்ததற்கு முக்கிய காரணம் சம்பளப்பிரச் சினைதான்.
இதுவரை வேறெந்த இடத்திலும் எழுநூற்றி ஐம்பதுக்குமேல்
65

Page 36
சம்பளம் போட்டதாக இல்லை. உரிய நாளில் மொத்தமாக கையில் கிடைப்பதும் அபூர்வம்தான். ஊர் வசூலை நம்பி சம்பளம் போடுவதென்றால் இப்படித்தானே!
இங்கு ஆயிரம் ரூபா. பெருமூச்சோடு நினைத்துப்பார்த் தார். பெரிய மனிதர்கள் வீட்டில் வேளைக்குத்தரமான சாப் பாடு. கல்யாணம், கந்தூரி வருமானங்கள். தொடர்புகள். இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது இந்த வாய்ப்பை இழந்துவிட அவர் விரும்பவில்லை. அதை மேலும் ஸ்திரமாக்கிக் கொள்வதே நல்லதாகப்பட்டது.
'அல்ஹம்துலில்லா’ ஒரு முடிவு அவருக்குள் உதயமாகியது.
அன்று வெள்ளிக்கிழமை.
ஊர்ச் சனங்களெல்லாம் பள்ளிவாசலில் ஒன்றுகூடும் நாளல் லவா? பிரசங்கம் ஆரம்பமாயிற்று.
'ஐவேளையும் நாம் ஒன்று கூடித்தொழுன்ற பள்ளிவாசல்கள் அல்லாவுடைய இல்லங்களாகும். பள்ளி வாசல்களைப் பரி பாலிப்பவர்கள். அதற்காக செலவுசெய்பவர்கள் அல்லா விடத்தில் மேலான அந்தஸ்தைப் பெறுவார்கள். அவர்க ளுக்கு மறுமையில் நல்ல கண்ணியமுண்டு.”
பேஷ்இமாமின் குத்பாப் பேருரை மத்திச்சம்மாருக்கு இனிப் பாகவிருந்தது. கொஞ்சகாலமாக புதிய புதிய விஷயங்களை நுகர்ந்து வந்தவர்களுக்கு ஏமாற்றமென்றே சொல்லவேண் டும்.
ஜும்ஆ முடிவடைந்ததும் சந்திப்புகள்.
'ஏத்தியன் மசான் இன்டக்கி அவளவு நல்லாப்படல்லயே’
66

இப்படி ஒருவன் தொடங்கினான்.
'ம் பேஷ்இமாமும் வலேல புழுந்திட்டார் போலீக்கி, எதுக்
கும் இப்ப ஆளச் சந்திக்கோம்’ இது மற்றொருவரின் யோசனை.
'அது வார**
ஆமாம், பேஷ்இமாம் வந்துகொண்டிருந்தார். அவரோடு கூடவே ஹாமிது ஹாஜியாரும் வந்தார். இன்று அவரது வீட் டில்தான் பகல் சாப்பாடு போலும்.
வாலிபர்கள் ஆவலோடு பேஷ்இமாமின் முகத்தைப் பார்த்த னர். என்ன ஆச்சரியம்! அன்று அவருக்கு இவர்களைத் தெரிய
வேயில்லை.
இருவரும் வெளியிறங்கி ஒரே குடையின் கீழ் மிகநெருக்மாக
நடைபோட்டார்கள்.
மல்லிகை - 1984 அக்டோபர்.
67

Page 37
நேர்த்திக் கடன்
ஐந்து மணி
இது பார்வையாளர்களுக்குரிய நேரமல்லவா? எங்கும் நோயாளர்களையே பார்த்துப் பார்த்து, அந்த நோயாளிகளில் ஒருவனாக நானும் இருந்து களைத்துப்போன கண்களுக்கு இது ஓய்வுநேரம். ஏனென்றால் இந்த ஒரு மணி நேரமும் தானே நோயாளிகளை மறந்து சாதாரண மனித முகங்களைக் காணமுடிகிறது.
இதென்ன அதற்கிடையில் அணையுடைந்த வெள்ளம் போல வாட் நிறைந்து விட்டதே வேதனை, ஆதரவு, ஆவல் அத்த னையும் ததும்பி நிற்கும் முகங்கள். தங்கள் அன்புக்குரியவர்க ளைக் கண்டு தீர்க்கும் வேகம். கைகளில் சுமைகள் வேறு.
வந்தவர்கள் இடையிடையே என்னையும் எவ்வித உறவுத் தொடர்பும் அற்ற நிலையில், நோயாளியென்ற அனுதாபத் தில் மாத்திரம் பார்த்தனர். அவர்களின் முகங்களிலெல்லாம் ஒரு கேள்விக்குறி? அது என்னவென்று எனக்குப் புரியாம லில்லை.
என்னைப் பார்க்க யாருமே வரவில்லை. ஒவ்வொரு பார்வை யாளர் நேரத்திலும் நான் அனாதையாகத்தான் இருந்துவிடு வேன். இடைக்கிடை என் நண்பன் ஒருவன் மாத்திரம் வரு
68

வான். அவன் வந்தாலும்கூட தலையைத் தடவி, கொண்டு வந்ததைப் பரிமாறி, இப்படி எதுவுமே செய்யாததால் அவனை யாரும் கவனத்திற் கொள்வதுமில்லை.
சுமார் நூற்றி ஐம்பது மைல் தொலைவிலிருந்து வந்து தலை நகரிலே தொழில் புரிபவன் நான். சாதாரண கடைச்சிப்பந்தி தான். ஏதோ கிடைக்கும் நானூறு, ஐநூறை உம்மாவுக்கு அனுப் பினால் நால்வர் கொண்ட குடும்பத்தை நகர்த்த அது துணை நிற்கும்.
நீண்டகாலமாகவே எனது வலது தொடையின் தோலுக்கடி யில் உட்பக்கமாக உருண்டை வடிவான ஒரு தசைவளர்ச்சி.
பொறுக்க முடியாத வேதனையை அது தருவதில்லை. அத னால் அது பற்றிய அக்கறையும் கொள்ளவில்லை.
கொழும்பு வந்தபின் அதனை ஒரு டாக்டருக்குக் காட்டிய போது, சிறியதொரு சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றி விட முடியுமென்றும், பெரியாஸ்பத்திரியில் மிகக் குறைந்த செலவில் செய்து கொள்ளலாமென்றும் சொன்னார். அந்த ஏற்பாட்டில்தான் மூன்று நாட்களுக்கு முன்பு வாட்டில் அனும திக்கப்பட்டேன்.
இதை உற்றார் உறவினருக்கு அறிவிப்பதா? ஒபரேசன் என்பது தற்காலத்தில் எவ்வளவு முன்னேற்றமடைந்துள்ளதென்பதை யெல்லாம் புரிந்துகொள்ளாதவர்கள் அவர்கள். என்னவோ ஏதோவென்று, அடித்து விழுந்து கொண்டு ஓடோடி வந்தா லும் வந்து விடுவார்கள். அதற்கு எவ்வளவு செலவு, சிரமம்! இதையெல்லாம் யோசித்த பின்புதான் யாருக்குமே அறிவிக் காமல் இங்குள்ள நண்பன் ஒருவனோடு வந்து சேர்ந்தேன்.
‘சாமில் எப்படி ...???
குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தேன். அங்கே நண்பன் நஸார், வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தான்.
69

Page 38
"இன்டக்கி வாரல்லயென்டுதான் நெனச்ச. நல்ல யாவார நாள்தானே’’
'மிச்சம் கஷ்டப்பட்டுத்தான் ஒரு மாதிரி பாஞ்சிவந்த, எப் பேக்கன் ஒபரேசன்?"
"நாள வெளண ஒம்பது மணிக்கு"
'சின்ன விஷயந்தானே. ரெண்டு நாளேல டிகேட் வெட்டு வாங்க. அப்ப நான் பெய்த்திட்டு நாளக்கி வாரனே. இன்ன இதில பிஸ்கட், வாழப்பழமெல்லமீக்கி a a s O. வாரன்."
“ “ger)” o எல்லோரும் வெளியேறும் நேரத்திலாவது அவன் வந்து போனதில் எனக்குப் பெரியதிருப்தி.
ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது.
நேற்று இரவே சாப்பிடத்தராமல் வஸ்தி போட்டு வயிறு கழு விவிட்டதால் பசி வயிற்றைத்தின்றது. இருந்தாலும் ஒரு வித பயம் அதனை மறைத்துக் கொண்டிருந்தது.
தொடைப்பகுதியெங்கும் சுத்தம் பண்ணி அலாதியான வேட்டி, சேட், தொப்பிகளை அணிவித்துவிட்டார்கள். இங்கு வந்தபின் நண்பர்களாகிவிட்ட பியசோம, சிறிபால, வேலாயு தம் எல்லோரும் அதே தோற்றத்தில்தான் நின்றார்கள். எல்லா முகங்களிலும் ஒருவித கலக்கம்.
ஊசி மருந்தேற்றி ஒவ்வொருவராக தள்ளுவண்டியில் வைத்து தியேட்டருக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னையும் தான்.
ஒபரேஷன் தியேட்டர் ஒரு புதிய சூழ்நிலையாகத் தெரிந்தது. பச்சை உடுப்புக்களோடுதாதிகள் நடமாடினார்கள். முகத்தை மறைத்துக் கட்டிய மேலணியுடன் டாக்டர்களின் இயக்கம்.
70

மெதுவாகத் தலையைத் தூக்கிப்பார்த்தேன். வரிசையாக எத்த னையோ பேர். நம்பர் பார்த்துப் பார்த்து ஒவ்வொருவராக உள்ளே அழைத்துக்கொண்டுபோவது தெரிந்தது.
அடுத்ததோ அதற்கடுத்ததோ நான். என்னுடைய தைரியமெல் லாம் வழிந்து போய் உடல் பலவீன மடைந்துகொண்டுவந் தது. தற்செயலாக ஏதும் நடந்து விட்டால்.
'யா அல்லா என்னக் காப்பாத்து' மனம் பிரலாபித்தது.
இந்த விஷயம் என் பெற்றோருக்கு தெரிந்திருந்தால். எத் தனை நேர்த்திகள், ஒருவருக்குந் தெரியாமல் ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைக்கேற்ப வைத்திருப்பார்கள்.
அவ்லியாக்களின் ஸியாரம் சென்று அன்னதானமளிக்க ஒரு வர், உயரத்துக்கு ரொட்டி சுட்டு ஊரெல்லாம் பகிர இன்னொ
ருவர், மெளலூது ஒதி சாப்பாடு கொடுக்க மற்றொருவர்.
இப்படியிப்படி ஒரு சாதாரண காய்ச்சலென்றாலே மருந்தை
விட நிய்யத்துக் கடன் வைப்பதிலே நம்பிக்கை கொண்டுள்ள
வர்களாயிற்றே அவர்கள்!
'நம்ப டுவன்டிஃபோ' என்மனம் திக்கென்றது. இரண்டு பேர் வந்து கால்பக்கமாக தொங்கிய ஃபைலைப் பார்த்து விட்டு தள்ளிக்கொண்டு சென் றார்கள்.
'யாஅல்லா நீதான் பெரியவன். ஒபரேசன் பிரச்சினில்லாம நடந்து சொகம் கெடக்கோணும். யாஅல்லா ஏழு பேரட பசி தீத்து வெக்கியன்."
வேறொரு கட்டிலுக்கு மாற்றியதோடு, நெஞ்சுக்கு சற்றே உய ரத்தே பிரகாசமான குவி விளக்குகளெல்லாம் ஒளிர்ந்தன. தாதி கள், டாக்டர்கள், இப்படி எத்தனையோ பேர் சூழ்ந்து நின்றார் கள். யாரோ ஒரு நேர்ஸ் இடதுபக்க முன்கையில் மருந்தேற்று
'71

Page 39
வது தெரிந்தது.பின்பு.
சாடையாக கண்மடல்கள் திறபட்டு, ஏதோவொரு தடுமாற்
றத்தில் அல்லற்பட்டு, சிறிது சிறிதாக உணர்வு விழித்துப் பார்த்தபோது. வாட்டில் பழைய கட்டிலிலேயே நான்
இருப்பது தெரிந்தது. அசைய முடியாதபடி இடுப்புக்குக் கீழால் மெத்தையோடு சேர்த்து போர்வையால் இறுக்கிவைத்
திருந்தார்கள்.
'அல்ஹம்துலில்லா. என்னக் காப்பாத்திட்டாய் யாஅல் லா’ மனம் மிகவும் லேசாக இருந்தது.
அப்போதுதான் நேரத்தை பார்த்தேன். சத்திரசிகிச்சை நடை பெற்று சுமார் நான்கு மணி நேரத்தின் பின்புதான் எனக்கு உணர்வு வந்திருந்தது.
'தம்பி எப்படி ? வாட் டாக்டர் தான் வந்தார். உஷ்ணநிலை, பிரஷர் போன்றவற்றையெல்லாம் பரிசோதித் தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது.
'உங்களுக்கு நோமலாத்தானிருக்கு. நாளக்கி டிகட் வெட்ட லாம்??
அந்த வார்த்தைகள் எனக்கு அமுதாக இனித்தது. மீண்டும் மயக்கமும் தூக்கமும்!
大
ஒபரேஷன் நடைபெற்று இன்று சரியாக ஒரு மாதம் பூர்த்தி. சிற்சில விடயங்களில் கவனமாக இருக்கச் சொன்ன காலக்கெ
டுவும் இன்றோடு நிறைவு பெற்றது.
‘ஏழு பேருக்கு சாப்பாடு குடுக்கோணும் இறுதிக் கட்டத்தில் நான் வைத்த நேர்த்திக் கடன் ஞாபகத்திற்கு வந்தது.
72

இதை வீட்டில் சொல்வதா? ஒபரேசன் முடிந்த பின்பு, அதை அவர்களிடம் சொன்னது போல். நேர்த்திக்கடனையும் நிறைவேற்றிய பின்பு சொல்லுவது தான் நல்லதாகப்பட்டது.
தற்செயலாகவாவது சொன்னால் மெளலூது, ஃபாத்திஹா என்று கிரியாம்சங்களெல்லாம் அதிகரித்து, பெரிய விஷய மாக அதை மாற்றிவிடுவார்களே! அதையெல்லாம் அந்தந்த முறைப்படி செய்யாவிட்டால், கோபப் பார்வை விழுந்து இன் னும் துன்பங்கள் தொடரும் என்றெல்லாம் விளக்கங்களும் வேறு சொல்லத் தொடங்கிவிடுவார்கள்!
பகல் வேளைதான். சேட்டை அணிந்து கொண்டு டவுனுக்கு வந்தேன். சேப்பில் ஐம்பது ரூபா இருந்தது.
தேடிய சாப்பாட்டுக் கடை கண்களில் பட்டது. வாயிலில் “தொர. ஐயா.* பசிக் குரல்கள்.
ஏழு பார்ஸல் சாப்பாடு வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.
'யாஅல்லா நான் வெச்ச நிய்யத்துக் கடன நெறவேத்தியன்’ என்ற எண்ணத்தோடு அந்தப் பசிக்கரங்களுக்கு அவற்றை நீட் டினேன். ஏழு பார்ஸல்களும் தீந்தாயிற்று. எச்சில் இலை தேடி வந்தவர்களுக்கு இது எதிர்பாராத விருந்துதான்.
அவர்கள் அப்துல் காதர்களோ, அப்புஹாமிகளோ. யார் யாரோ என்பது எனக்குத் தெரியாது! தெரிய வேண்டிய அவசி
யமும் இல்லையே! ஆனால் பசித்த மனித வயிறுகள் என்பது மாத்திரம் எனக்கு நிச்சயம்.
நான் பூரண மனத்திருப்தியோடு வீட்டுக்கு நடந்தேன்.
மல்லிகை-1985 ஜனவரி.
73

Page 40
பெரிய இடத்து உறவு
பின்பக்க கேற்றைத் திறந்துகொண்டு வெளியிறங்கினாள் ரினோஸா. காலை நேரம் ஆதலால் அப்பகுதியில் அமைந்தி ருந்த சின்னஞ்சிறு வீடுகளைச் சேர்ந்தவர்களெல்லாம் தங்கள் காலைக் கடமைகளில் கண்ணாயிருந்தனர்.
அந்தப் பத்துப் பன்னிரண்டு வீடுகளுக்குமாக ஒரேயொரு கிணறுதான். இயற்கை உபாதைகளுக்கும் முழுமையாக வசதி யற்ற நிலை. அவர்கள் வெளியுலகோடு தொடர்பு படுத்த ஒற்றையடிப் பாதையொன்று.
குளித்துவிட்டு தலைமுடியை விரித்துப் போட்டபடி வந்த ரினோஸ்ாவுக்கு, அங்கே அடிபிடிபடுவதுபோல் இயங்கி நின்ற பெண்களையும் சிறுபிள்ளைகளையும் கண்டபோது முகத்தில் கடுகடுப்பு தகித்தது.
பெரிய இடத்துச் சிங்காரியல்லவா அவள் அந்தப் பிராந்தியத் திற்கே அரண்மனை போல் திகழும் இரட்டைத்தட்டு வீட் டுக்கு ஒரேயொரு மருமகளாக வந்து சேர்ந்திருக்கும் ரினோ ஸாவிற்கு பெருமை கட்டுமீறி நின்றது. அவளும் சும்மா வல்ல, வசதிபடைத்த அயலூர் ஹாஜி ஒருவரின் மகள்தான்.
74

இந்த எளிய சனங்கள் வீடமைத்துக் கொண்டு குடியிருக்கும் காணி, ஒரு காலத்தில் ரினோலாவின் மாமனார் ஈனா இபுரா ஹீம் லெப்பை ஹாஜியாருக்கு சொந்தமாக இருந்ததுதானாம். இந்தப் பூர்வீக உரிமையை நினைத்து. அந்தச்சனங்களெல் லாம் தனக்கு மரியாதையும் எடுபிடி வேலையும் செய்ய வேண் டுமென்று எதிர்பார்க்கும் ரினோஸாதன்னையொரு இளவரசி யாகவும் கருதியிருக்க மாட்டாள் என்று சொல்வதற்கில்லை.
"இனாயா. இனாயா இங்கல கொஞ்சம் வாரா? சற்று பலமாக ரினோஸா குரல் விடுத்தபோது இருந்த வேலைகளை யெல்லாம் அப்படியப்படியே வைத்துவிட்டு ஓடிவந்தாள் இனாயா.
"நீங்க வரோணுமா. செல்லியனுப்பீந்தாநான் வாரதானே? தன் பக்தி சிரத்தையையும் தாழ்மையையும் வெளிப்படுத்திக் கொண்டாள் இனாயா,
"இல்லா இன்டக்கி எங்கட மதினி ஊட்டாரெல்லம் வாரெண்டு செல்லியனுப்பீக்கி. பகலக்கி சாப்பாடு ரெடியாக் கோணும். அதுக்குத்தான் ஒன்னக் கூப்பிட்ட இப்பவே வந்தா லேசாயிக்கும்’
இவ்வாறு சொல்லி இனாயாவின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு, மீண்டும் கேற்றைத்திறந்து கொண்டு உள்ளே சென் றாள் அவள்.
இனாயாவுக்கும் பெருமை பெருமையாக வந்தது. அங்கு நின்ற மற்றப் பொம்பிளைகளெல்லாம் தன்னைப்பார்த்து பொறாமை பொறாமையாகப் பொங்கி வெடிப்பதாக அவ ளுக்கோர் எண்ணம். இவற்றையெல்லாம் அவதானித்தபடி கிணற்றடியில் குழுமி நின்ற பெண்களின் வாய்கள்சும்மாஇருக்குமாஎன்ன? அவர்க ளுக்குள் ரஹ்மா பெரிய வாயாடி அல்லவா? விடுவாளா
75

Page 41
என்ன!
'ம் சட்டி முட்டியல்ல மிஞ்சியத வழிச்சிக் குடுத்துக் குடுத்து. கிழிஞ்ச சட்ட பொடவயக் காட்டிக்காட்டி. இனாயவ வேலக்காரியாக்கி வெச்சீக்கியத்தக் கண்டா? அவ ளுக்கும் சொண ஈந்தாத்தானே. உசிரு வாணமென்டு சாகிய* சற்று பலமாகவே சொல்லித் தீர்த்தாள்.
எதையும் பொருட்படுத்தாமல் தன் வீட்டினுள் அவசர அவசர மாக நுழைந்தாள் இனாயா, மிச்சசொச்ச வேலைகளை முடித் துவிட்டு ரினோஸா நோனாவின் மாளிகைக்குப் போகும் அவ சரம்.
கணவன் இஸ்மாயில் இன்னும் சற்று நேரத்தில் தொழிலுக்கு புறப்பட்டு விடுவான். மற்றது ஐந்து வயது மகள் மாத்திரம் தானே! மனைவியின் பதற்றத்தையும் அவசரத்தையும் கண்ட இஸ்மா யிலுக்கு விஷயம் விளங்கி விட்டது. இதெல்லாம் அவனுக்கு அவ்வளவாக ‘பிடிப்பதில்லை. அதற்காக அவள் நின்று விடவா போகிறாள்.
'இனாயா எனத்தியன். நோனூட்டிலிந்து தாக்கல் வந் திட்டர். நான் எனத்தசரி சம்பரிச்சிக் கொண்டு வார தானே. கஞ்சித் தண்ணியக் குடிச்சிட்டுச்சரிமானம் மருவா ரியா ஈக்கோணும். பழய சோறுகறிக்கும் பொடவத்துண்டி யளுக்கும் ஏமாந்து கொண்டு. மருந்துக்குப் பொகச் செல்லே புள்ளதுக்கியத்துக்கு காரில இருப்பட்டிக் கொண்டு போனா. ஒனக்கு அதுதான் பெரிசி" வழமைபோலவே அன்றும் இஸ்மாயில் தன் உள்ளக்கிடக்கையைக் கொட்டத் தவறவில்லை.
'ஓ நான் நோனோட நல்லா ஈக்கியது இங்கீக்கிய பொம்புள ளுக்குத்தான்புடிக்கியல்ல பொறாமப்படுகியென்டு நெனச்ச.
76

இப்ப பாத்தா ஒங்களுக்கும் புடிக்கியல்ல போலீக்கி’ படபட வென்று கோபம் கொப்பளிக்க இரைந்து தீர்த்தாள் இனாயா,
பாவம் இஸ்மாயில் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. வழமைபோல் தன் தொழிலுக்குப் புறப்பட்டு விட்டான். எல் லோருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றும். எவருக்கும் அடிபணிந்து வாழத் தேவையில்லையென்றும் அவன் எத்தனை முறை எடுத்துரைத்தாலும் அதெல்லாம் இனாயாவைப் பொறுத்தமட்டில் செவிடன் காதில் சங்கூதிய கதை போலத்தான். கணவன் புறப்பட்டுச்சென்று பத்து நிமிடம் கூட ஆகிவிட வில்லை. கையோடு மகளையும் அழைத்துக் கொண்டு, ரினோஸா வீட்டுக்குள் புகுந்தாள் இனாயா.
அங்கே இரண்டு கோழிகள் உயிர்த்தியாகத்திற்கு தயாராக நின் றன. கறிகாய் சாமான்களெல்லாம் அளவுக்கதிகம் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்தன.
இனாயா வந்து சேர்ந்ததைக் கண்டதும் ஜுனைத் முதலாளிக்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை.
"ஆவாங்கொ வாங்கொ. இனாய வந்தாத்தான் இங்க எல்லம் நடக்கிய. இல்லாட்டி எங்கட நோனக்கு ஒன்டும் ஒடியல்ல, சரி இன்னம் தேவப்பட்ட சாமனியள பாத்துச் செல்லுங்கொ’
இனாயாவின் உச்சி குளிர்ந்து விட்டது. ஜுனைத் முதலாளி கூட அவளுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார்.
பன்னிரண்டு மணிக்கெல்லாம் வரவேண்டியவர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். அதுவரை மேற்பார்வை செய்த வண்ண மிருந்த ரினோஸாவுக்கு அதன் பின்பு அங்கே என்ன வேலை! முன்வாசல் கலகலத்துக்கொண்டிருந்தது. இனாயா குசுனிக் குள் நெருப்போடு போராடினாள். உதவிக்கு இரண்டு சிறுமி
7ך

Page 42
கள் மாத்திரம் தான்.
மூன்று மணியோடு விருந்தாளிகள் புறப்பட்டு விட்டார்கள். இனியென்ன. பசியோடுடிருந்த இனாயா தனக்குரிய வற் றைப் போட்டெடுத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தாள். இந்தக்காட்சியை கதையளந்தபடி கூடிநின்ற பின் தோட்டத் துப் பெண்கள் பார்த்து ரசிக்காமலில்லை.
நோனாவின் அகங்காரத்திற்கும் பணப் பெருமைக்கும் அடிப ணிந்து போகாத அவர்களது தன்மையை பயன்படுத்தி, நோனாவோடு அவர்கள் சொல்வதாக இல்லாத பொல்லாத கோள்களையெல்லாம் மூட்டி அந்த இடைவெளியை விரித்து வைத்திருப்பதெல்லாம், தான் மாத்திரம் 'எச்சிச் சோறு' அனுபவிப்பதற்காகத்தான் போலும்!
‘ம் ஞாயமான மனிசரோட இவளியளுக்கு நல்லா ஈக்கத்தெ ரிய. அதுக்கு நான் எனத்தியன் செய்த. அவங்களுக்கிட்டச் சல்லீக்கியது மெய்தான். இவங்க பொறாமப்பட்டா இல்லாப் பெய்த்திருமா. நாங்க இரிக்கிய நெலத்த கோமேந்து தந்தா லும் அது தாரடயன். அவங்கட ஆச்சியப்படதானே. இந்த நன்டியாவது கல்பிலீக்கா’ சில நாட் களுக்கு முன்பு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது இனாயா இரைந்து தள்ளி ய்து கேற்றுக்கு அப்புறம் நின்ற ரினோஸாவைப் புளகாங்கித மடையச் செய்யத்தவறவில்லை. அன்றைய மாலைப் பொழுது குளிரோடும் பணியோடும் தான் ஆரம்பித்தது. வழக்கத்தை விட சற்று வித்தியாசமான சாப்பாடல்லவா? இனாயாவுக்கு இனிய நித்திரையை நல்க இதமான சுவாத்தியமும் கைகொடுத்ததுபோலும் ஆனால் இஸ்மாயிலுக்கோ சங்கடம் மிக்கதாக மாறிவிட்டது.
மழைகாலத்தில் சளிக் கோளாறு. கோடை காலத்தில் கால் வெடிப்பு. பனிபெய்தால் ஆஸ்த்மா. இப்படியாக எத்த, னையோ சிக்கல்கள் நிறைந்தவன்தான் இஸ்மாயில்
78

இஸ்மாயில் முக்கிமுனகி மேல்மூச்சுகீழ்மூச்சு வாங்கிஅவஸ்த் தைப்பட்டபோது. விழித்துக் கொண்ட மகள் பயந்துபோய் வைத்த அழுகைச்சத்தத்திற்கு, அக்கம் பக்கத்தவர்களெல்லாம் அந்த நடு இரவிலும் தூக்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு வந்து சேர்ந்து விட்டார்கள். பெண்கள் அனுதாபப் பட்டவர்கள். ஆண்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவசரப்பட்டார் கள். எப்படியும் நாலைந்து கிலோமீற்றர் போயாக வேண்
டுமே!
"கொஞ்சம் நில்லுங்கோ ஒடிவாரன்’ என்றவாறு குப்பி லாம்பை ஏந்திக்கொண்டு வெளியிறங்கினாள் இனாயா.
"அவள் ஏமத்திலேம் ஜாமத்திலேம் அங்க படுகிய பாட்டுக்கு இப்படியொரு டைமில காரக் கொணந்து ஒதவோணும்தா னே’ கூடிநின்ற பொம்புளைகள் தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள்.
★
'நோனா நோனா. மொதலாளி மொதலாளி” கேற்றுக்கு வெளியே நின்று இனாயா சத்தமிட்டு வெகு நேரத்திற்குப் பின்பே அவர்களுக்கு கேட்டது போலும்.
முன்விராந்தை விளக்கொளிர்ந்ததும் அவளது மனம் குளிர்ந்து போய் விட்டது.
"எனத்தியன் இனாயா இந்த ஜாமத்தில?’ இரவு உடுப்போடு தோன்றிய ரினோஸா கேட்டாள்.
"இல்ல இன்டக்கி செரியான பனியெலியன். அவருக்கு எடக்கெடவாரதான். இன்டக்கி மிச்சம் கஷ்டப்படுகியாரு. இஸ்புர்தாலக்கி கூட்டிக்கொணுபோனா நல்லமென்டு’
'ஆ. அப்பிடியா? கெட்டநேரம் பாருங்கொலே. கார 79

Page 43
கெரேஜில போட்டிட்டு டைவர் தொறப்பேம் எடுத்துக் கொண்டு பெய்த்தீக்கேன்’ ஜுனைத் முதலாளிதான் இப்படிச் சொன்னார். நோனா எதுவும் பேசியதாக இல்லை.
《 貂
ம். அப்ப எனசெய்யவன்’ பெருமூச்சு விட்டபடியே அவள்திரும்பியபோது, கதவடைக்கும் சத்தம் மிகப்பெரிதாக கேட்டது.
★
காரையும் காணவில்லை கார் கொண்டுவரச் சென்ற இனாயா வையும் காணவில்லை. அதற்காக நோயாளியை வைத்துப் பார்த்திருக்க முடியுமா என்ன?
சாய் கதிரையொன்றில் இஸ்மாயில் நானாவை இருத்தி. இரண்டு தடிகளைக் குறுக்கே போட்டுக்கட்டி. நாலைந்து பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு போகத் தயாராகையில் தான். இனாயா வெறுங்கையோடும் வெட்கத்தோடும் அங்கே வந்து சேர்ந்தாள்.
வீரகேசரி - 1985. 12, 01.
80

தேடி வந்த நிம்மதி
இஷா தொழுதுவிட்டு வரும் போது முனஷ்வரின் முகத்தில் ததும்பிநின்ற மகிழ்ச்சியை ஃபெரோஸா சட்டென்று புரிந்து கொண்டாள்.
"எனத்தியன் இன்டக்கி மிச்சம் சந்தோஷத்தோட வார??? ஃபெரோஸாவுக்கும் அந்த மகிழ்ச்சிக்குரிய காரணத்தை தெரிந்துகொள்ள ஆவல் இருக்காதா என்ன?
"அப்பிடி ஒன்டுமில்ல ஃபெரோஸா, நானும் பேரு குடுத்திட் டன். அதுதான்’ என்றார் மீசைக்குள்ளால் சிரித்தபடி,
கணவன் என்னதான் சொல்கிறாரென்று ஃபெரோஸாவுக்குப் புரியவில்லை. அவள் நெற்றியைச் சுருக்கி . கண்மணிகளை மேலே சொருகி. எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வர முயற்சித்தாள்.
'ஆ. பத்து நாளக்கி ஜமாத்திலபொக பேர் குடுத்திட்டன்’ அதிகநேரம் அவளைக் குழப்பியடிக்காமல் நேரிடையாகவே சொல்லிவிட்டான்.
"அப்ப நீங்களுமிப்ப ஜமாத்துக்காரன் ம். எந்தநாளும்
அவங்க வந்து வந்து கூப்பிடுகிய. இப்பதான் அல்லா ஓங்க
ளுக்கு ஹிதாயத்த தந்தீக்கி.ம். பெய்த்திட்டு வாங்கொ’
81

Page 44
ஏதோ நல்ல மனிதர்கள் நாளுக்குநாள் அலுக்காமல் சலிக்கா மல் அழைப்பதற்குதன் கணவர்மதிப்பளித்துவிட்டாரே என்ற வகையில் அவளுக்கு பெருமிதமாக இருந்தது.
"எங்கட கலியாணத்துக்குப் பொறகு இதுதான் நாங்க மிச்சம் நாள் பிரிஞ்சீக்கப்போற. புள்ள என்னத் தேடித் தேடிக் கரச் சல் படுத்தியொன்டும்.’’ முனல்வர் தன் பிரிவாற்றாமையை ஒரு கணம் நினைத்துப் பார்த்தான்.
"அதுக்கேத்தியன் பிரிஞ்சீந்தும் பழகோணும்தானே. ராவக்கி தனிக்குத்தொண தாரச்சரி கூப்பிட்டுக் கொளேலும். அல்லாட காவல்ல நீங்க பெய்த்திட்டு வாங்கொ’ கணவ னுக்கு மேலும் தைரிய மூட்டினாள் ஃபெரோஸா.
அடுத்தநாள் ஸ"பஹ" தொழுகைக்கு பின் புறப்பட இருந்த தால் முன்னேற்பாடுகளை இப்பொழுதே செய்துகொள்ள வேண்டியிருந்தது. தேவையான உடுப்புக்களையும் இதர பொருள்களையும் பேக்கினுள் அடுக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் முனல்வர்.
உள்ளே இரவுச்சாப்பாட்டை ஒழுங்கு படுத்துவதில் சற்றே கரிசனையோடு இயங்கினாள்ஃபெரோஸா. குழந்தை எழும்பு வதற்கிடையில் சாப்பாட்டு வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டாமா என்ன?
"சோறு தின்ன வாங்கொ.” ஃபெரோஸாவின் அழைப்பு ஒலிக்க அதிக நேரம் செல்லவில்லை.
இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார் கள். 'மறுபேணம் இன்னும் பத்து நாளக்கிப் பொறகுதான் இப் பிடி ஒன்டுக்கீந்து தின்னவாகிய’ சாப்பிட்ட படியே இப்படிச் சொன்னாள் ஃபெரோஸா.
82.

'அதுசரி. சும்மா கொச்சிக்கத் தூளப்போட்டு மீனாக்கீக்கி. கொச்சிக்கய வறுத்து அரச்சிப் போட்டீந்தா கெலவல்லன் மீனாணம் எவளவு ரசமன்’ எதையோ சொல்லப்போய் எதையோ வாங்கிக் கட்டிக்கொண்டாள் அவள்.
அது இன்று மாத்திரம் உள்ள விடயமல்ல! எப்போதும் ஃபெ ரோஸாவின் சமையலில் ஏதாவதொரு குறைபாட்டைக் கண்டு கொள்வது அவளது கணவனின் இயல்பு. வேண்டு மென்றே குறை காண்பதல்லவென்பதும் அவளுக்கு தெரிந்த துதான்.
"இன்டக்கி எப்பிடிச்சரி தின்னுங்கொ. பத்து நாளக்கி ஏன்ட கையால சோறு கெடக்கியல்ல. போறவார எடத்தில நல்லாத் தின்டிட்டு வாங்கோ’ வேறொரு கோணத்தில் அந்த நிலை மையை சமாளித்தாள் ஃபெரோஸா.
அன்றைய இரவு இருவருக்குமே சற்று வித்தியாசம்தான். அடுத்த நாள் அதிகாலையில் முனல்வர் மனைவியிடமும் குழந்தையிடமும் விடைபெற்றுக் கொண்டான். கணவன் மறையும் வரை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்ட்ே யிருந்தாள் ஃபெரோஸா. பெருமூச்சு விட்டபடி தன்னுடைய வாழ்வை இரைமீட்டிப்பார்த்தாள் அவள்.
முனல்வர் ஃபெரோஸா இருவருக்குமிடையில் திருமணம்
நடைபெற்று இற்றைக்கு மூன்று வருடங்களாகின்றன. அந்த
மூன்று வருட அறுவடையாக இருவருக்கும் கொஞ்சிக் குதூக
லிக்க ஒரேயொரு குழந்தை. குழந்தைக்கு சுமார் ஒரு வருடம்
தான். இந்தக் குறுகியகாலக் குடும்ப வாழ்வில் கணவரின் கருத்த
றிந்து வாழ்வதில் கைதேர்ந்துவிட்டாள் ஃபெரோஸா. கணவ
ரின் விருப்பம், இயல்பு, மனப்பாங்கு,இவற்றை புரிந்து
கொள்ளும் எந்த மனைவியாலும் சிறப்பாக வாழமுடியும்
தானே.
83

Page 45
அவள் ஒன்றும் அவ்வளவுதூரம் அனுபவசாலியென்று சொல் வதற்கில்லை. கல்யாண ஏற்பாடுகள் நடைபெறும் வரை அவள் படிப்பு படிப்பென்றே காலத்தைக் கடத்தியவள்தான். அந்தப் படிப்பு குடும்ப வாழ்வுக்கு எவ்வளவோ கைகொ டுத்து வருகின்றதென்பதை நினைத்துப் பார்க்குந்தோறும் அவள் பெருமிதமடைவாள்.
இருந்தும் ஒரேயொரு குறைபாடு. "கொமரு காலத்தில் வீட்டு வேலைகளுக்கு அவ்வப்போது உதவியாக இருந்த போதிலும் சமையல் வேலைகளை முறையாக அறிந்து வைக்காமைதான்.
கல்யாணத்தின் பின்பு சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் நடாத்த வேண்டிய நிலை. அங்குதான் சமையல் அவளுக் கொரு சவாலாக எழுந்து நின்றது.
அவள் கணவன் வசதிவாய்ப்பு நிறைந்தவனோ ஆடம்பரப் பிரியனோ அல்ல. என்றாலும் எளிமையான உணவுகளைக் கூட சுவையாக உண்டு பழகியவன். இதனால் அவனையறியா மலேயே சமையல் விமர்சனங்கள் உடனுக்குடன் அரங்கே றும். அப்போதெல்லாம் தனது அறியாமையை எண்ணி ஊமைக்கண்ணீர் சொரிவாள் ஃபெரோஸா.
தன்னை எல்லா வகையிலும் திருப்தியாகவும் சந்தோஷமாக வும் வைத்திருக்கும் கணவருக்கு வாய்க்கு ருசியாக உணவு படைக்க முடியவில்லையே என்ற கவலையால் கலங்குவாள் அவள்.
முனல்வர் தப்லீஃ ஜமாஅத்தில் சென்று ஒன்று. இரண்டு. மூன்று. என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அன்று பதினோராம் நாள். கணவன் மாலையில் வந்து சேர்வார் என்ற நம்பிக்கை அவளுக்கு.
"அஸ்ஸலாமு அலைக்கும்’
84

பகல் ஒரு மணிக்குப் போல் வீட்டு வாயிலில் ஒரு குரல்.
ஒடிப்போய்ப் பார்த்தாள் ஃபெரோஸா. வேறு யாருமல்ல; அவள் கணவனே தான். ஆரவாரத்தோடு வரவேற்றாள். அணைப்பில் இருந்த குழந்தை இடைவெளிக்குப்பின்பு வாப் பாவைக்கண்ட ஆனந்தத்தில் தாவிப் பாய்ந்தது.
குசுனிக்குள் ஒடிவந்தாள் அவள். இப்படி இந்த நேரத்தில் அவர் வருவாரென்று எதிர்பார்த்தா அவள் சமையல் செய்தாள்!
முனல்வர் சாப்பிட விருப்பக்குறைவான நாட்டரிசிதான் அன்றைக்கென்று சமைத்திருந்தாள். கறிகள்போக அவசரமாக புளிச்சம்பலொன்றாவது செய்தெடுக்க வெங்காயத்தை அரிய ஆரம்பித்தாள். பிறகுதான் தெரிந்தது தேசிக்காய் இல்லாத விஷயம். உடனே வருவித்துக்கொள்ள அங்குயாரும் துணைக்கு இருக்கவுமில்லை. என்னதான் செய்ய? புளிச்சம் பல் புளியில்லாத சம்பலாக உருவெடுத்தது.
இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள். 'பத்து நாளக்கிப் பொறகு இதா சாப்பாடு' என்று எரிந்து விழுவார். எப்போது அந்த எரிகற்கள் வெளிப்பாயப் போகின்றதோவென்று எதிர் பார்த்தே நின்றாள் ஃபெரோஸா என்ன ஆச்சரியம், சாப் பிட்டு முடிந்து 'அல்ஹம்துலில்லா’ என்றபடி எழுந்துவிட் டார் அவர்.
நாடகள நகர்ந்தன. தனது பத்துநாள் புது அனுபவங்களை அவ்வப்போது மனைவிக்கும் சொல்லத் தவறவில்லை முனவவா. அதே போல அவரைப் பற்றி ஃபெரோஸாவிட மும் பலரும் கேட்கத்தவறவில்லை.
ஒரு நாள் அடுத்த வீட்டு ராஹிலா “எனத்தியன் ஒங்கட அவரு ஜமாத்தில பெய்த்திட்டு வந்தீக்காம். மொகத்திலயென்டா தாடிகீடியாலும் மொளச்சில்ல' என்றாள் பகிடியாக!
85

Page 46
உண்மையில் பார்த்த கண்ணுக்கு வெளித்தோற்றத்தில் ஒரு மாற்றமும் இல்லைதான். ஆனால் அவளறிந்த மட்டில் அவ னுக்குள் ஏற்பட்டிருந்த ஒரேயொரு மாற்றத்தைக் கேட்டறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் பிரவகித்து நின்றது ஃபெ ரோஸாவுக்கு!
"இப்ப நீங்க ஏன்ட சோறு கறியப் பத்தி ஒன்டுமே செல்லி யல்ல. நீங்க ஜமாத்தில பெய்த்திட்டு வந்தத்திலீந்து கேக்கோ ணும் கேக்கோணுமென்டீந்த’ என்று கதையை ஆரம்பித்தாள்.
'ஃபெரோஸா ஒங்களுக்கட்ட நான் மன்னிப்பு கேக்கோ ணும்’ என்றார் எடுத்த எடுப்பில்
"அதெனா அப்பிடிச் செல்லிய?’ எதுவுமே புரியாத வளாக இப்படி வினா எழுப்பினாள்.
'இல்ல. இவளவு நாளும் ஒங்கட சாப்பாட்டுக்கு நான் கொற சென்ன. கோவத்தில ஏசின’’
"கொற ஈந்தா செல்லோனும்தானே'
"இதக் கொஞ்சம் கேளுங்கொ ஃபெரோஸா, ஜமாத்தில போனடைமில எங்கட அமீரு என்னேம் ஒருநாள் சோறாக்கப் போட்டிட்டாரு'
"ஏங்கத்தமே ஒங்களுக்கு சோறாக்கத் தெரீமா’
"தெரிஞ்சாலும் தெரியாட்டீம் அமீர்சாஹிப் சென்னா அத நாங்க செய்யோணும். ஜமாத்து மொற அப்பிடித்தான்’
'ஜாதிச் செய்தி. இனியினி.”
‘நானும் சேந்து ஆக்கின. பச்ச வெறகப்போட்டு ஊதிஊதி கண்ரெண்டும் சொகசொகேரென்டு சொகத்துப்பெய்த்து’
86

'ம். எப்பசரி அடுப்படிக்கி கிட்டவாகீந்தாக்தானே அந்த வருத்தம் வெளங்கிய.’
'நீங்க எந்தநாளும் எவளவு கஷ்டப்படுகியென்டு எனக்கு அன்டக்கித்தான் வெளங்கின’
'அப்ப அதுக்குத்தான் மன்னிப்புக் கேக்கோணுமென்டு நீங்கி செல்லீக்கி. ம். நீங்கி ஆக்கின சோத்தத் தின்டிட்டு நல்லா ஏசீப்பாங்க?"
'சத்தியம் பண்ணிச் செல்லிய ஃபெரோஸா ... எங்களுக்கு தெரிஞ்சமாதிரி உப்பு புளியெல்லம் போட்டாக்கின. ஆனா ஒத்தராலும் வாயத்தொறந்து கிச்செண்டு பேசல்ல."
"ஏன்டும்மே பெரிய புதினமாயீக்கி?
"புதினந்தானே ஒதிப்படிச்சவங்க மொதலாளிமாரு. ம். எல்லாரும் எங்களோட வேல செஞ்ச. இவளவு பெரிய மனிசரே கொறநெறயப் பொறுக்கச்செல்லே நான் எப்பிடிக் கோணுமன்’ முனஷ்வர் கவலையோடு தன் மனமாற்றத்திற் கான காரணத்தை முன்வைத்தான்.
"இங்கபாருங்கொஏன்டமனசீலீந்த பெரியகொறபாடு நல்ல மாதிரி ஒங்களுக்கு ஆக்கித்தரேலான்டியதுதான். நீங்க ஜமாத் தில பெய்த்திட்டு வந்தத்தில எனக்கிப்ப எவளவு நிம்மதியன் . எல்லம் அல்லா செய்தவேல’ தன் மனக்கவலை நீங்கிய ஆறுதலில் ஃபெரோஸா மெய்மொழிந்தாள்.
முனஷ்வர் மனம் மலர்ந்து சிரித்தான்.
'நீங்கி இதோட நின்டிராம இதூப்பொறகும் அல்லாட பாதேல பொகோணும்’
87

Page 47
"இன்ஷா அல்லா’ என்றவாறு மணிக்கூட்டைப் பார்த்தபடி எழுந்தான் முனஷ்வர். இஷாவுக்கு பாங்கு சொல்ல இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருந்தன.
வீரகேசரி - 1986, 11, 23.
88

இரட்டைப் பழம்
ஜெஸ்மினா தன் சிவந்த இதழ்களை விரித்து புன்னகை பூத்தாள். அள்ளி ஒரு முத்தம் கொடுக்கவேண்டும் போன்ற உந்துதல். என்ன செய்வது? அது பள்ளியறை அல்லவே!
"இன்டக்கி எனக்கெனத்தியன் கொணுவந்த?’ சின்னப் பிள்ளை போன்று செல்லமாக அவள் கேட்டாள்.
“ஒன்டும் கொணுவராம வாரா நான் ’அவள்மீது எனக்குள்ள ஆழ விருப்பத்தை வெளிக்காட்டிக்கொண்டு, மேசைமேல் வைத்த சொப்பிங்பேக்கை தூக்கி எடுத்தேன்.
வேலைவிட்டு வரும்போது ஒவ்வொரு நாளும் அவளுக்காக ஏதாவது எடுத்து வருவது எனக்கு வழக்கமாகிப் போய்விட் டது. மஸ்கட். பூந்தி. பக்கடா. இந்த வரிசையில் இன்று கோழிக்கூட்டு வாழைப்பழம்தான் என் கண்களைத் தொட் டது. நல்ல மொத்தமான பழம். ஒன்று இரண்டு ரூபாவாக ஒருசீப்பு.
'ஆய் கொழுத்த கொழுத்த ஜாதி வாழப்பழம்' என்றவாறு அவள் பாய்ந்த போது. சரிந்து விழுந்த முந்தானையைக்கூட பொருட்படுத்தவில்லை. நானென்ன அன்னியனா என்ற நினைப்பு போலும்!
89

Page 48
“கொஞ்சம் நில்லுங்கொ நான் தாரன்’ என்றுமில்லாதபடி இன்று ஏன் இப்படி என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆச்ச ரியமான ஒரு பார்வையை வீசிநின்றாள்.
"இங்க பாருங்கொ ரெட்ட வாழப்பழம். ஒன்டு ஒங்களுக்கு. மத்தது எனக்கு’ என்றவாறு அந்தப் பழச்சீப்பில் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பழங்களைப் பிய்த்தெடுத்தேன் நான்.
'எனக்கு வாணா.” ஒரேயடியாக பின்வாங்கினாள் அவள். பதிலுக்கு எனக்குமொரு அதிர்ச்சியைத் தருகிறாளா என்ன..!
"ம். நீங்க தானே ரென்டு பேருக்கும் ஒரு கோப்பேல தேத் தண்ணி கொணுவார. நான் தின்னியத்தில ஒரு துண்ட பறிச் செடுக்கிய" நான் அவளிடம் காரணத்தை வினவினேன்.
'எனக்கு ரெட்ட வாழப்பழம்தின்னப்பயம்’ பயத்தின்சாயல் முகத்தில் அப்பியபடி ஜெஸ்மினா சொன்னாள். எனக்கு வியப்பாக இருந்தது. அதை அறிந்து கொள்ள விருப் பாகவுமிருந்தது.
'தின்டா எனத்தியன்?" 'தின்டா ரெட்டப்புள்ள கெடக்கியாம் ” இதுதான் அவள் சொன்னகாரணம். எனக்கு சமகாலத்தில் சிரிப்பும் கோபமும். இப்படியொரு நம்பிக்கை. சம்பந்தமில்லாத இரண்டு விஷ யங்களைச் சம்பந்தப்படுத்தி இவளுக்குள்ளுமா?
'ரெட்டப் புள்ள கெடச்சா நல்லந்தானே. ரெண்டு பைணம் கஷ்டப்பட்த்தே வில்ல."
'நீங்க தின்னாட்டி எல்லந்தூக்கி விசியிப்ப" வாழைப்பழச் சீப்பை அப்படியே தூக்கிக் கொண்டு எழுந்தேன்.
'ஆ தின்னிய தின்னிய."
9()

முதற்தடவையாக அவள் மீது எனக்கேற்பட்ட கோபத்தை அவள் புரிந்து கொண்டாள் போலும் கோபம் வராமலா இருக்கும் சாதாரண பாமரப் பெண்ணென்றால் பரவா யில்லை. அட்வான்ஸ் லெவலில் அதுவும் "பயோ’ செய்த இவளுக்கா இப்படியொரு பயம்!
அந்த இரட்டைப்பழத்தை உரித்து. நான் ஒன்றைத் தின்ற் படி அடுத்ததை அவளுக்கு நீட்டினேன். ஏதோ விருப்பமில் லாமல் மருந்து சாப்பிடுவதுபோல் அவள் அதைச் சப்பி விழுங்கினாள்.
எவ்வளவுதான் படித்தாலும் சமூகத்தில் ஊறிப்போன நம்பிக் கைகளும் கருத்துக்களும் மனதைவிட்டும் அப்படி இலேசாக அகன்று விடுவதற்கில்லை என்பதற்கு ஜெஸ்மினாவும் ஒர் ஆதாரமாக எனக்குள் மிளிர்ந்தாள்.
“தேத்தண்ணி ஊத்திக் கொணுவாரன்’
அவள் எழுந்து சென்றது உண்மையில் தேநீர் தயாரிக்கவா அல்லது கொல்லைப் பக்கமாகச் சென்று வாந்தியெடுக்கவா? அது அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம்.
எனக்கும் ஜெஸ்மினாவுக்கும் திருமணம் நடந்து மூன்று மாதங்கள்தான். இதுவரை ஒரு குழந்தை கிடைப்பதற்கான அறிகுறி எதுவுமில்லை. மாதாமாதம் எதிர்பார்ப்பதும் ஏமாற்ற மட்ைவதும் தான் அவளுக்குப் பழக்கமாகிப்போய் விட்டது. இப்பொழுது அவள் மனதுக்குள் இன்னொரு பிரச் சினை.
'யா அல்லா இந்த நம்பிக்க உறுதியாப் பொகாம நீயே பாத் துக்கோ’ எனக்குள் துஆ விரிகிறது.
அறிவுபூர்வமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒரு படித்த பெண்ணை நீண்ட காலமாகக் கற்பனை செய்து.
9.

Page 49
ஜெஸ்மினா கிடைத்த போது நான் அடைந்த சந்தோஷம் சொல்லித் தீர்க்கக்கூடியதல்ல. இப்பொழுது நான் எதிர்நோக் கியுள்ள பிரச்சினை எனது எண்ணத்துக்கு ஒரு சவால் இல் லையா?
இந்தாங்கொ
தேநீர்க் கோப்பையை ஏந்தியபடி அவளது முகத்தை நோக்கி னேன். இன்னும் அந்த இருள் முற்றாகக் கலைந்து விட வில்லை.
"ஜெஸ்மினா எப்பிடியன்?’ மல்லார்ந்தபடி படுத்திருந்த மனைவியின் தலைமுடியைக் கோதிவிட்டேன்.
'பொகுத்துக்குள்ள எனத்தியோமாதிரி" அவள் நொந்துபோ னவளாக புதியதொரு அனுபவத்திற்கு ஆட்பட்டவளாகச்
சொன்னாள்.
"அப்பிடித்தான் பொகப்பொகச் சரிவரும்’ இமைகளில் முட் டிநின்ற கண்ணீர்த் துளிகளைத் துடைத்துவிட்டேன் நான்.
'பொகுறு மிச்சம் பெரிசிமாதிரி. மாஸ்க் கணக்கு கூடப் பெய்த்தீக்குமென்டு எல்லாரும் செல்லிய.”
'அவங்களுக்கெப்பிடியன் தெரிஞ்ச. எங்களுக்குத்தானே சரி யான கணக்கு தெரிஞ்ச'
. "தல்ப்புள்ளயெலியன். நாங்க பொழயாச் செல்லியாம்"
'நீங்க பொழயாச் சென்னாலும் நான் சரியாத்தானே செல்லு வன்’
"அப்படியென்டா ரெட்டப்புள்ளயா ஈக்கும். அதுதான் இவ 92

ளவு பெரிசி” மீண்டும் தன்நம்பிக்கைக்கு அழுத்தம் கொடுக்க முயன்றாள் அவள்.
"ரெட்ட வாழப்பழம் தின்டது இன்னேம் நெனவிக்கிபோல’ இது கடிந்து கொள்ளக்கூடிய நேரமல்லாததால் கனிவாகக் கேட்டேன்.
அதற்கு அவள் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக இருந் தாள். இடைக்கிடைதன் வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொள் ளத் தவறவில்லை.
ஜெஸ்மினாவுக்கு இப்பொழுது மூன்று மாதம். ஆரம்பத்திலி ருந்த மகிழ்ச்சி நாட்போகப்போக கவலையாக உருவெடுத் துக்கொண்டிருந்தது.
வருபவர்களும் சுகம் விசாரித்துச் செல்பவர்களும் அமைதி யையும் ஆறுதலையுமா அளித்துவிட்டுப் போகிறார்கள். ஒவ் வொருவரும் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிச் சொல்லி. அவர்கள் பல்வேறுபட்ட பீதிகளை மூட்டி மூட்டி ஏற்படுத்திவரும் துர்ப்பாக்கிய சூழலை ஒரேயடியாக என் னால் அறுத்தெறிந்துவிட முடியவில்லை.
கல்யாணம் செய்தால் காலப்போக்கில் குழந்தை தரிப்பது. புதினமா என்ன? இதுவரை வைத்திய ஆலோசனை பெற் றோமே தவிர வைத்தியப்பரிசோதனைகள் எதுவும் செய்ய வில்லை. அது இப்போதைக்கு அவசியமாகப்படவுமில்லை. இருந்தும் ஜெஸ்மினாவின் மன்ச்சாந்திக்காகவாவது டாக்டரி டம் அழைத்துச் செல்லவேண்டும் போலிருந்தது. அதைவிட அவள் மனதில் வேரூன்றிவரும் இரட்டைக் குழந்தைச் சந்தே கத்தையும் கிள்ளிவிடவேண்டுமே
"எப்பேக்கன் என்ன தொஸ்தரூட்டுக்கு கூட்டிக்கொணுபோ .மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் ייל מן
93

Page 50
'சரி நாளக்கிபோம்"
நான் இப்படிச்சொன்னபோது அவள் முகத்தில் அழகு நிலா குடியமர்ந்து விட்டது.
'ஜாதி வியோஜி தொஸ்தரொன்டு வந்தீக்காம். இப்ப அவருக் கிட்டத்தான் எல்லாரும் போற"
"அப்ப நாங்களும் அவருக்கிட்டே போம்"
ஜெஸ்மினாவுக்கு பூரண திருப்தி.
女
வீஒஜி டாக்டர் செனரத்தை அவரது கிளினிக்கில் சந்திக்க 'சல் லிகட்டி' அழைப்புவரும்வரை காத்திருந்தோம். அழைப்பு கிடைத்ததும் இருவரும் உள்ளே சென்றோம். அவசரமான சூழ்நிலையிலும் அமைதியாக தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தார் டாக்டர். இருவரும் மாறிமாறிப் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம்.
"ஆக மூணுமாதம்தானா?’ காலத்தையும் வயிற்றையும் பார்த் தபோது அவருக்கே ஒரு சந்தேகம்.
'ரெட்டக் குழந்தயா இருக்குமென்டு இவங்க நெனக்கியாங்க டொக்டர்’ எமக்கு முன்னேயுள்ள மிகப்பெரிய gig னையை நான் அவருக்கு இடமாற்றம் செய்தேன்.
அவர் சிரித்தபடி பரிசோதித்துவிட்டு, சிறுநீர்ச் சோதனைக் கான ஒழுங்குகளைச் செய்தார்.
மீண்டும் அழைப்புக் கிடைக்கும்வரை இருவரும் வெளியே காத்திருந்தோம்.
94.

'அல்ன்வே ரெட்டப் புள்ளயா ஈக்கப்படாது'அவள் இடை விடாது மனதுக்குள் துஆ செய்து கொண்டிருந்தாள்.
'அல்லாவே 6?(5 புள்ளயா ஈக்கோணும்’ நானும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் துஆ செய்தேன்.
'அன்ன பர்ருங்கொ அந்தப் பொம்புளக்கி நாலு மாஸமாம். சாடயாலும் வெளங்கியல்ல. எனக்கு ரெட்டப் புள்ளயச் சொட்டீந்தான் இவளவு பெரிசி" ஜெஸ்மினா தன் சந்தேகத் துக்கு ஆதாரங்களை இழுத்துக்கொண்டிருந்தாள்.
''g அந்த ரெட்ட வாழப்பழத்த இவளுக்கு தின்னக் குடுக் காட்டி ஒரு கரச்சலுமில்ல’ நான் எனக்குள் என்செயலை எண் ணிக் கலங்கினேன்.
அது ஒர் அர்த்தமில்லாத சின்ன விஷயந்தான். ஆனால் அது இவ்வளவு தூரம் ஆட்டிப்படைக்கும் பிரச்சினையாக உருவா குமென்று நான் நினைத்தேனா என்ன!
"மிஸிஸ் ஜெஸ்மினா’
அழைப்பு எங்களுக்குத்தான்.
'ஒத்தப் புள்ளயா. ரெட்டப் புள்ளயா' மனதுக்குள் திக்திக்.
‘என்ன டொக்டர்?? நான் கேட்டேன்.
கொஞ்சநேரம் மெளனமாக நின்ற டாக்டர்.
'ஒத்தயா ரெட்டையான்னுதானே ரெண்டுபேரும் யோசிக்கி நீங்க. ம். இவங்க வயிற்றில இருக்கிறது.”
இடிவிழுந்தது போலிருந்தது எங்களுக்கு
'அப்படியென்டா..? தீனக்குரலில் நான் கேட்டேன்.
95

Page 51
ஜெஸ்மினாவின் தொண்டை அடைத்துக் கெரீண்டது போலும்!
'வயித்தில ஒரு கட்டி. உடனடியா ஒபரேசன் பண்ணணும்’ சில அறிக்கைகளைப் பார்த்தபடி டாக்டர் சொன்னார்.
எங்கள் இருவருக்கும் இனி வார்த்தைகளா வரும் சிந்தனை யெல்லாம் கரடுமுரடான புதியதொரு கோணத்தில் திருப்பப் பட்ட பிறகு.!
வீரகேசரி - 1988, 09. 25.
96.

சுவடுகள்
"நான் ஜெய்னம் தாத்தூட்டுக்கு கொஞ்சம் பெய்த்திட்டுவா
凯 த (5 (olá5IT(35 ரன். புள்ள நில்லுங்கோ’
'எனக்கேல நானும் வார'
உம்மாவும் மகளும் எதிர்ப்பக்கமாக அமைந்துள்ள ஜெய் னம்பு தாத்தா வீட்டுக்குச் சென்றனர். மாடிவீடு குளு குளு வர்ணப்பூச்சில் குளிந்து நின்றது. ஜெய்னம்பு தாத்தாவின் மகள் ஃபெளஸியாவின் கல்யாணம் நடந்து இன்னும் இரண்டு மாதம்கூட பூர்த்தியாகி விடவில்லை.
'ஆ இஸ்ஸத்து வாவா’ அவளுக்கும் ஒரு வரவேற்பு அங்கு இருக்கத்தான் செய்தது. உறவு என்று ஒன்றுமில்லாமல் விட் டாலும் கூட முன்வீடு என்ற நெருக்கம்.
"ஒ இனி மகளுக்கு புதிய பெருநாளேன். மாப்பிளுட்டுச் சனமெல்லம் வாரொன்டுமாயிக்கும்’ இது இஸ்ஸத்தின் வின வல். எதையாவது கதைத்தாக வேண்டுமே!
"அது தான் இஸ்ஸத்து. பெருநாளக்கி வந்தாத்தானே பஸந்து. அன்டக்கி கரச்சலென்டு பெருநாளக்கி மத்தநாத் தக்கி வாராமென்டு செல்லியனுப்பீக்கி’
97

Page 52
இப்படி விளக்கமொன்று கொடுத்தவாறே, இஸ்ஸத்தையும் பின்தொடரவைத்து மகளின்காம்பராவுக்குள் புகுந்தாள் ஜெய் னம்பு.
அங்கே இன்னும் இரண்டொரு அக்கம் பக்கப் பெண்கள் இருந் தார்கள். கட்டிலிலே புதியபெருநாள் உடுப்புக்களெல்லாம் பரத்தி வைக்கப் பட்டிருந்தன. பிடவை, சட்டை, செருப்பு முதற்கொண்டு பெளடர், கீறீம் இத்தியாதிகள்வரை எதற்குமே குறைச்சலிருக்கவில்லை.
"இந்தச் செருப்பு ஜோடுமட்டும் நானூத்து தொண்ணுாறு ரூவ வாம்’
பொன்னிற வேலைப்பாடுகள் கொண்ட அந்தச் செருப்பைக் காட்டிப் பெருமையோடு சொன்னாள் ஜெய்னம்பு. இஸ்ஸத்து வியப்பு விழி கொட்டாமல் ஒவ்வொன்றாக நோட்டம் விட் டாள். அவளுக்கென்றும் ஒரு புதிய பெருநாள் இருந்து எப் போதோ மறந்துவிட்டதை மீண்டும் நினைவு வீணையில் மீட் டிப்பார்த்தாளோ?
'நல்ல பஸந்தே உம்மா’ செருப்பைத் தன் சின்னக்கரங்களால் தொட்டுப்பார்த்தபடி கேட்டாள் அவள் மகள் மஸிதா. 'பெய்த்திட்டு வேறொரு நாளக்கி வாரனே’ இஸ்ஸத்து அங் கிருந்து விடைபெற்றாள்.
'பெருநாள் சாப்பாட்டுக்கு நேரத்தோட வாங்கொ’ அப்போ துதான் புதுப்பெண்ணின் குரல் ஒலித்தது இஸ்ஸத்தைப் பார்த்து.
நோன்பு இல்லாவிட்டால் ஏதாவது குளிர்பானம் கொடுக்கா மல் விடவா போகிறார்கள்.
உம்மாவின் கையைப் பிடித்தபடி வீட்டுக்கு வந்த போதும்
98

மnதாவின் மனதிலென்றால் அந்தச் செருப்பின் தோற்றமே அப்படியே அழுந்திப்போயிருந்தது.
★
"மஸிதா. இங்க வாங்க மகள்’ வாப்பாவின் குரலைக் கேட்டு பின்வளவில் விளையாடிக் கொண்டிருந்தவள் மின்ன லாய் வந்து நின்றாள்.
"வாப்ப கொணந்தா...??? பொங்கி நிற்கும் எதிர்பார்ப்பு அந்தக் கேள்வியிலேயே ததும்பி விழுந்தது.
"அன்ன உம்மக்கும் புள்ளக்கும் சட்டப் பொடவ கொணந்த”
டிப் பார்த்தாள் அவள். உடனே அதைத் தைத்து உடுத்திக் கொள்ள வேண்டும் போலிருந்து மஸிதாவுக்கு 'வாப்பா வெள்ளச்சட்ட.??? இன்னொரு கேள்வியையும் வேறு எழுப்பி நின்றாள்.
"வெள்ளச்சட்ட ரெண்டீக்கிதானே புள்ள. ஹஜ்ஜிப் பெரு நாளக்கி எடுத்துத்தாரனே."
நோன்பு ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டுத் திட்டமிட்டு எப்ப டியோ அறுநூறு ரூபாவை அர்ப்பணித்து பெருநாளை சமா ளித்துக்கொண்ட அவஸ்தைகளெல்லாம் அவளுக்குத் தெரி யவா போகிறது!
"ஜாதி டிசைன் பொடவயொண்டு. எவளவன்? பல்லெல் லாம் சிரிப்பாக கேட்டாள் இஸ்ஸத்து.
"இருநூத்தறுவதுருவ. ஒயில் ஸாரீம் வெலயேறி” தனது தெரிவில் மனைவி திருப்திகண்டதே பெரிய காரியம் என்ற நினைப்பு அன்வருக்கு
'99

Page 53
'உம்மா எனக்கு செருப்பொன்டு கொணேதரச் செல் லுங்கொ. அந்தப் பொண்மாமீட செருப்பப்போல’
இஸ்ஸத்து பொறுக்க முடியாமல் சிரித்து ஒய்ந்தாள் அந்தச் சிரிப்பின் அர்த்தம் அன்வருக்கு விளங்கியிருக்க முடியாது தான்.
'முன்னுத்தூட்டு ஜெய்னம் தாத்தட மகளுக்கு புதிய பெருநா ளக்கி கொணந்தீக்கிய செருப்பப்போல கொணந்து தரட்டாம் ஒங்கட மகளுக்கு. பாவம் ஐநூறு ரூவக் குடுத்து ஒன்டு கொணந்து குடுங்கொளே’
விஷயம் விளங்கிவிட்டது அவனுக்கு
“கொணந்து தாரன் மகள். நீங்க பொண்ணாகச் செல்லே. அல்லா எங்களுக்கு நல்ல காலத்தத் தந்தா கொணந்து தாரன்’
அன்வர் சொன்னதில் 'கொணந்து தாரன்’ என்ற வார்த்தைக ளைத் தவிர வேறு எதுவும் மஸிதாவுக்கு புரியவில்லை. சின்ன தொரு பொன்னிறச் செருப்பு தனது கால்களில் இருப்பது போல ஒர் உணர்வு அவளுக்கு
女
பெருநாள் குதூகலம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. "நான் தொழுதிட்டு வாரன் மகள்' மகள் பின் தொடர்வதை விரும்பாதவளாக மகளிடமே அனுமதி கேட்டாள் இஸ் ஸத்து.
‘நானும் வார. நானும் வார.” தனது புத்தாண்டின் புதுப் பொலிவோடு அவளும் பின்தொடர்ந்தாள்.
சின்னத் தைக்காவில் பெண்களுக்கு பெருநாள் தொழுகை ஏற்
'100

பாடாகியிருந்தது. பின்புற வழியால் அவர்கள் இருவரும் முன்னோக்கினர்.
'உம்மா செகரு செகரு கால்லபடும் என்னத் தூக்குங்கொ’
அந்தச் சிற்றோடையில் ஒரடி அகலத்திற்கு நீர் அசைந்து கொண்டிருந்தது. மஸிதாவைத் தூக்கி அப்பக்கமாக இறக்கி விட்டாள் இஸ்ஸத்து.
தைக்கா வாயிலிலே பற்பல வகை மாதிரிகளில் செருப்புக்க ளின் மகாசபை நடந்து கொண்டிருந்தது. வெளியே சின்னஞ் சிறுசுகளின் குதூகலம். மஸிதாவும் அவர்களில் ஒருத்தியாகச் சங்கமித்துக் கொள்ள அதிக நேரமெடுக்கவில்லை.
உள்ளே புத்தாடைகளில் ஜிலுTலுப்பும் நறுமண கமகமப் பும் தக்பீர் எதிரொலிப்புமாக. தொழுகை நிறைவுபெற பதினைந்து நிமிடங்களுக்குமேல் எடுக்கவில்லை.
“செருப்பில்லயா மாறிப்பட்டோ தெரிய..??
தொழுதுவிட்டு வந்த புதிய பெண் ஃபெளஸியாவுக்கு எதிர் பாராத ஏமாற்றம் காத்திருந்தது.
"மாறிப்பட்டீந்தா வேறொன்டு ஈக்கோணும். தாருசரிகள வான்டீக்கும். இந்தாங்கொ இதப் போட்டுக்கொணு வாங்
கொ’ துணைக்கு வந்த கைஜ"ம்மா தனது செருப்பைக் கொடுத்தாள்.
இஸ்ஸத்து கண்களை உருட்டி உருட்டி அங்கும் இங்கும் பார்த்தாள். மகள் மஸிதாவைக் காணவில்லை.
எல்லோரும் குறுக்கு வழிகளால் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
'ஆ இதீக்கி செருப்பு'
W 101

Page 54
இக் குரலைக் கேட்டதும் எல்லோரும் ஒரு கணம் ஸ்தம்பித்த னர்.
"தாராலும் துச்சினக்காரப் பொடியனியள் கொணுவந்து போட்டீப்பானியள்’
சிற்றோடை அருகில். சற்று கீழாக இரண்டு செருப்புகளும் பளபளத்துக் கண்சிமிட்டின. ஃபெளஸியாவுக்கு போனஉயிர் வந்து சேர்ந்து விட்டது போல!
இஸ்ஸத்தின் கண்கள் என்னவோ குத்திட்டு நின்றன. ஒடை யின் சதுப்புப் பகுதியில் சின்னச் சின்னக் காலடிச்சுவடுகள். அவளைத் தவிர வேறுயாரும் அதைக் கவனித்திருக்க முடியா துதான்.
கலைமலர் - 1988 அக்டோபர்.
102

அஸ்தமனத்தில் ஒர் உதயம்
குத்தூஸ் நானாவைப் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு இல் யாஸ் ஹாஜி செலுத்திவந்த கார் அந்தப் பாதைவழியே மெது வாக சென்றுகொண்டிருந்தது. யோனகபுரம் சந்தியையும் பொல்கஹமுல்லயையும் இணைக்கும் அரைகுறைத்தார்ரோ டுதான் அது.
"அப்படி நிப்பாட்டுங்கொ ஹாஜி. தம்பிலிக்க குடிக்கோம்’
குத்தூஸ் நானா காட்டிய இடத்தில் கார் நின்றது. போக்கடி யைத் தாண்டி வயல் பக்கமாகக் காரை நிற்பாட்டியது சும்மா வல்ல; விஷயத்தோடுதான்.
பக்கத்தேயிருந்த குச்சில் கடையில் வரிசையாக வைக்கப்பட் டிருந்த பிளாஸ்டிக் போத்தல்களில் ஏதேதோவெல்லாம் இருக்கத்தான் செய்தன. எல்லாவற்றையும் விட சிறிய பெட்டி யொன்றின்மேல் வைக்கப்பட்டிருந்த தெம்பிலிக் குலைதான் மிகப் பெரிதாகத் தெரிந்தது.
பொடிஐயா கத்தியும் கையுமாக வெளியிறங்கி தெம்பிலி களை வெட்டி நீட்டினான். அதைப் பெற்றுக்கொண்டபடியே அங்கு மிங்குமாக கண்களைச் சுழலவிட்டார் குத்தூஸ் நானா, இடைக்கிடை நேரத்தையும் பார்த்துக் கொண்டார்.
O3

Page 55
இல்யாஸ் ஹாஜி ஒரே மூச்சில் தெம்பிலியைக் குடித்து. கோம்பையை உருட்டி விட்டு தனது முன்தள்ளிய வயிற்றைக் கொஞ்சம் தடவிக் கொண்டார். நல்லவேளை பொடிஜயாவி டம் இரண்டொரு கோல்ட்லீவ் சிகரட்டுகளும் இருக்கத்தான் செய்தன.
இருந்தாற் போல குத்தூஸ் நானாவிற்கு குசு பிறந்து விட்டது. நேரமும் விஷயமும் கைகுலுக்கின போலும் அவரின் கண் சமிக்ஞையை ஏற்றுக் கொண்ட ஹாஜி அந்தக் காட்சியை நுணுக்கமாக அவதானித்தார்.
பாதையைக் குறுக்கறுத்துக் கொண்டு, இடுப்பிலே குடம் சுமந் தபடி சென்றாள் ஒர் இளமங்கை, மெலிந்த சீரான உடற்கட்டு. பின்னிவிட்ட தலைமுடி இடுப்புக்குக்கீழாக அசைந்தாடியது. சாயாவும் சட்டையும் முந்தானையுமாக அவள் தண்ணீர் அள் ளிக்கொண்டு போவதும். வருவதுமாக.
"போம் குத்தூஸ் நானா' காசைக் கொடுத்துவிட்டு இருவரும் காரில் ஏறினர்.
சரியாக நேரம் கணித்துக் காரைச் செலுத்தி. அந்த இடத்தில் ஹோன் அடித்தபோது, ரோட்டைக் கடக்கப்போனவள் பட் டென்று நின்று. காருக்குள்ளே பார்த்தபோது. நீள் கண்க ளும், நேரிய மூக்கும். மெல்லிய இதழ்களுமான கறுப்பும் சிவப்பும் குழைந்த முகப்பொலிவை ஹாஜியின் மனம் சிக்கெ னப்படம் பிடித்துக் கொண்டது.
கார் சற்று வேகமாகச் சென்றது.
‘ஹாஜி எப்பிடியன்? குத்தூஸ் நானா கேட்டார்.
'இது ரஸ்ஸாக்கட மகளா? நல்ல பஸந்தானகுட்டியே. ம். எத்தின வருஷமன்?’
104

"ஒங்கட மூத்தவள்ட வயஸிக்கும்’
'காரியமில்ல. விஷயத்த நடந்தோண்டியதான்’ ஹாஜி எங்கோ ஒர் உலகத்தில் மிதந்தபடி தன் சம்மதத்தைத் தெரிவித் தார்.
இனியென்ன. சக்கரமாகச் சுழன்று விஷயத்தை முடிக்க குத் தூஸ் நானாவுக்கு சொல்லவா வேண்டும்.
女
எப்போதோ கடுங்கோடை ஒன்றின் போது தோண்டப்பட்டு, பின்னர் பாழடைந்து போன கிணற்றுப் படிக்கட்டில், குத் தூஸ் நானாவும் ரஸ்ஸாக் நானாவும் அமர்ந்திருந்ததார்கள். வயலோரமாக அது அமைந்திருந்ததால் இப்படிப்பட்ட பிரகி ருதிகளுக்கு அது காற்று வாங்கவும் பொருத்தமானதுதான்.
மடியைத்திறந்து சுருட்டு, தீப்பெட்டி, "கட்டு களையெல் லாம் எடுத்து வைத்தார் குத்தூஸ் நானா. அதையெல்லாம் கண்டபோது ரஸ்ஸாக் நானாவுக்கு மகிழ்ச்சிகுதித்துவிட்டது. சுருட்டு தயார் பண்ண அதிக நேரமெடுக்கவில்லை.
மாறிமாறி இருவரும் ‘தம் மடித்து புகையின்பத்தை அனுப வித்து வெளிக்கக்கிக் கொண்டார்கள். அதனூடே புதிய உத் வேகமொன்று கிளர்வதுபோல.
"மச்சான் ரஸ்ஸாக். ம். இப்படியே திரிஞ்சா சரிவாரா?”
குத்தூஸ் எதைக் கேட்கிறாரென்று ரஸ்ஸாக்கிற்கு படவே யில்லை.
'இப்படி திரியாம. கோட்டுச்சட்ட பேர்ட்டுக் கொண்டா
திரியச்செல்லிய"
'ஊட்டுக்குள்ள கொமரொன்டீக்கி. அதுக்கொரு எசவு Linrå
105

Page 56
கல்லயாண்டு கேக்கிய’ சிரித்தபடியே தனது நோக்கத்தின் முதல் கட்டத்தைத் தொட்டான் குத்தூஸ்.
"பாக்கியதான் மசான். எங்களப்போல கஞ்சாக்காரனிய
ளும் இருவதிருவத்தஞ்சென்டு கேக்கியானியள். அது மட் டுமா சவடி, ஊடுவாசல். ஆ"
'நானும் ஸமீனாப்பத்தி யோசிச்சி யோசிச்சிப் பாக்கிய. ஒரு விஷயமீக்கி. லேசா முடிச்சிக்கொளேலும்’
"ஆ" ஒரு முறை திரும்பி நின்று ஃபுல் தம்மொன்றை அடித் தான் ரஸ்ஸாக்.
"நல்ல வசதியான ஆள். ஒரு செம்புச் சல்லியாலும் குடுக்கத் தேவில்ல. நீ புரியப்பட்டாச்சரி?
“செல்லு மசான் எங்கியனெங்கியன்? அவசரப்பட்டான் அவன். சற்றே பதமாகப்பட்டடிருந்த நேரம் போலும்.
"தெரீந்தானே எங்கட இல்யாஸ் ஹாஜி. அவருதான் ஆள்’
“கத்தமே பொறவு. எனத்தியனப்பா மோட்டுப் பேச்சிப் பேசிய. கலியாணம் புடிச்சி புள்ள குட்டீக்கிய வயஸாளிக்கி பச்சக் கொமரக் குடுக்கச் செல்லியா. ஏன்ட தலய அசடாக்க வாண. சல்லி சாமான் இல்லாத்தூப் பலிக்கி புள்ளயப் பாழ் கெணத்திலபோடச்செல்லியா’ ரஸ்ஸாக் கொஞ்சம் ஒவராகச் சத்தம் போட்டான்.
"நீ செல்லியதெல்லம் மெய்தான். புரியமில்லாட்டி கெழவி யாகங்காட்டீம் ஊட்டுக்குள்ள வெச்சிக்கோ. ரஸ்ஸாக் இந் தக் காலத்தில இதெல்லம் பாக்கேல. வசதியுள்ளவங்க வெச் சிக் காப்பாத்ததேன்டியவங்க எத்தின கலியாணம் முடிச்சா எனத்தியன்’
"மசான் நான் புரியப்பட்டாலும் எங்கட பொஞ்சாதியென்டா
106

இதுக்குப் புரியப்படுகியல்ல. தும்புக்கட்டத்தான் தூக்கி யொன்டும்??
"சரிசரி இங்க வா’
முதுகைத்தடவி காதுக்குள் எதையோ சொல்லி ஒரு வெற்றிச் சிரிப்புச் சிரித்தார் குத்தூஸ் நானா.
"அப்படியா? அப்ப ஸெட் பண்ணு மசான்’ ஒரு வித குதூக லத்தோடு துள்ளினான் ரஸ்ஸாக்.
இது முதல் அங்கமல்ல என்பது ரஸ்ஸாக் நானாவிற்கு இப் போதுதான் பட்டது.
‘'இப்பவே பெய்த்துப் பொஞ்சாதியோட பேசினாத்தான் சரி. ம். எறங்கு எறங்கு."
இருவரும் சற்றே கிறுகிறுத்த நிலையில் நடந்துகொண்டிருந் தார்கள்.
女
"இங்க பாருங்கொ இந்த விஷயத்துக்கு ஸமீன கொஞ்சமா லும் புரியமில்ல. புரியமில்லாத்த நாங்கேத்துகன் செஞ்சி குடுக்கிய’ மனைவி மரியம் திரும்பத் திரும்ப இதே ரகோ டைத்தான் போட்டுக்கொண்டிருந்தாள்.
'அவள் புரியமில்லாட்டி உட்டுப்போடேலும். வேற ரொக் கம்கட்டி மாப்பிளேக் குடுக்க எங்களுக்கிட்டீக்கா, ஒனக்கட் டீக்கென்டா வேண்டி யொத்தனுக்கு பாத்துக் குடு’ ரஸ்ஸாக் நானா சற்றுக் கடுமையாகவே சொன்னார்.
"புள்ள குட்டியள பெத்து வளத்தா. அது போல மத்த மத்த வேல வெட்டியளேம் செஞ்சி குடுக்கோணும்’
107

Page 57
'அதத்தான் செல்லிய. ஊருலகத்தில இல்லாததா இது. நானும் எத்தினயோ விஷயங்கள பாத்திட்டுத்தான் இதச் செல் லிய. நீ புரியமில்லாட்டீம் ஒன்ட மகள் புரியமில்லாட்டீம் ஏன்ட புரியத்துக்கு எனக்கு வேண்டியொத்தனுக்கு குடுக்கே லும். அன்னத நல்லா நெனவுவெச்சிக்கோ. ஒனக்கும் அவ ளுக்கும் நெனச்ச மாதிரி ஆடுடுகியல்ல" அதையும் இதையும் தூக்கியடிக்காத குறையாக இடி இடித்துவிட்டு விசுக்கென்று வெளியே பாய்ந்தான் ரஸ்ஸாக்.
சற்று நேர அமைதின் ஆட்சி. அதை மெல்லக் கிழித்துக் கொண்டு ஸமினாவின் முனகல் கிளர்ந்தது.
'உம்மா. வாப்ப பொல்லாதவரு. அவரட புரியத்துக்கு மாத் தமா எங்கடூட்டில ஒண்டும் நடக்கியல்ல. இன்னமின்னம் பேசப்போனா அடிகுத்தும் கரச்சலுந்தான் மிச்சம்'
ஸமீனா அழுதழுது இப்படிச் சொன்னபோது, அவளை எப்ப டித் தேற்றுவதென்று தெரியாமல், மெல்ல மெல்ல தலையைத் தடவிக் கொடுத்தாள் மரியம். அவள் கூட இவ்வளவு காலமும் எதைத்தான் கண்டாள்; கண்ணீரையும் கவலையையும் தவிர
"ஏன்ட நஸிபு இதாயிக்கும். நான் இதுக்குப் புரியப்படுகியன்
உம்மா’’
வேறு எதுவும் செய்ய முடியாத அவல நிலையில். இந்த ஒருவாரகாலமாகப் போராட்டம், வாக்குவாதங்களின் பின்ன ணியில் ஸமினாவால் வேறென்ன முடிவுக்குத்தான் வர இய லும்
மரியம் மகளை மார்போடணைத்துக் கொண்டாள்; கண் ணிர்த் துளிகளை மார்பிலே சொரிந்தபடி.
女
108

ரஸ்ஸாக் நானாவின் வீட்டில் இரண்டொரு விளக்குகள் கூடுத லாக எரிந்தன. நாலைந்து பேர் அங்கும் இங்குமாக நடமாடிக் கொண்டிருந்தனர். மூன்று மரவைக்கு மேற்படாத அளவுக்கு சாப்பாடும் கூட.
இஸ்யாஸ் ஹாஜி ஏற்கெனவே அனுப்பிவைத்திருந்த பெறும தியான பிடவைகளாலும் நகைகளாலும் அவள் அலங்கரிக் கப்பட்டிருந்தாள். உள்ளம் செத்துப் போய் உடல் மட்டும் அந்த அலங்காரங்களால் உயிர்பெற்றிருந்தது.
ரஸ்ஸாக் நானா மாத்திரம் புது உசாரோடு சிகரட் புகைத்தபடி எப்போது மாப்பிள்ளையைச் சுமந்தபடி அந்தக் கார் வரு மென்று எதிர்பார்த்தவண்ணமிருந்தார்.
மரியம் தாத்தா வீட்டில் கல்யாணம் தின்னக் காத்திருந்த அக் கம் பக்கத்தவர்கள் ஏமாற்றம் அடைந்து. பார்வையாளர்க ளாக மட்டும் தூர நின்றனர். 'தனி ஊடெடுத்து ஸமீனவ வெக்கப்போறாம்’ என்று அவர்கள் குசுகுசுக்கவும் தவற வில்லை.
காரொன்றின் முகப்பு வெளிச்சம் வரவர அதிகரித்துக் கொண்டு வந்தது. இந்த நேரத்தில் வேறு எந்தக் கார்தான் அந்த ரோட்டில் வரமுடியும்! w
'மாப்பிள வாரபோலீக்கி’. உள்ளே பார்த்துச் சொன்னார் ரஸ்ஸாக் நானா, அதற்காக அங்கே ஒரு பரபரப்பும் ஏற்பட்டு விடவில்லை.
குத்தூஸ் நானா முன் இருக்கையில் பெருமிதத்தோடு அமர்ந்தி ருந்தார். மாப்பிள்ளையோடு ரெஜிஸ்டாரும் லெப்பையும் பின்னே இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இன்று ஸ்பெ ஷல் ஹதியாதான்.
நிக்காஹ்.. காவின் எல்லாம் அமைதியாக நடைபெற்றதைத்
09

Page 58
தொடர்ந்து, இல்யாஸ் ஹாஜி தன் இரண்டாம் தாரத்திற்கு தாலியும் கட்டிவிட்டார். அவளது கழுத்தே வளைந்து விடுமள வுக்கு தங்கச்சவடி பாரமாக இருந்தது.
இல்யாஸ் ஹாஜியைப் பொறுத்தமட்டில் அவரது வாழ்க்கை யில் ஒரு புதிய உதயம் தான். ஆனால்.
சாப்பாட்டைத் தொடர்ந்து ஏற்கெனவே சொல்லியிருந்தபடி புதுப் பெண்ணை அழைத்துச் செல்லும் நேரம் வந்துவிட்டது.
கார் புறப்பட்டபோது அதனைப் பார்க்கக் கூட முடியாதபடி மரியத்தின் கண்களுக்குள் புகைமூட்டமொன்று குடியமர்ந்து விட்டது. ரஸ்ஸாக் நானாவிற்கோ வீட்டு முகப்பில் வெற்றிக் கொடியொன்றைப் பறக்கவிட்ட பெருமிதம்.
★
அடுத்த நாள்.
"குத்தூஸ் எப்படியன் மசான்’ என்றவாறு அவரது வீட்டுக் குள் புகுந்தான் ரஸ்ஸாக்.
'ஆ பொண்ணடவாப்பவா' மெல்லிய நையாண்டி ஒன்றைப் போட்டு வரவேற்றார். கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்த ரஸ்ஸாக் சுற்றுமுற் றும் பார்த்து விட்டு 'அந்த விஷயம் எப்பிடியன்’ என்று கேட்டான்.
'அதெல்லம் சென்னாச் சென்ன மாதிரித்தான்’ என்றவாறு உள்ளேசென்ற குத்தூஸ் நானா அந்தக் கவரைக் கொண்டுவந்து கையிலே கொடுத்தார்.
“வேற வாப்பமாரு ஆயிரக்கணக்கில குடுத்துத்தான் மாப்பிள எடுக்கிய. ம். மாப்பிளேக்கிட்ட ஆயிரக் கணக்கில எடுத்
110

தீக்கிய ஒரேயொரு வாப்ப நீதான் மசான்’ பெரிதாக சிரித்துச் சிரித்துச் சொன்னார் குத்தூஸ்.
'அதுக்கு ஒன்னப் போல ஆள்களும் ஈக்கோணும். இல் லாட்டி எங்கியன் நடக்கிய?
'சரி எண்ணிப் பாத்தா?
'ஓ பத்தாயிரமீக்கி’ சொல்ல முடியாதபூரிப்பு ரஸ்ஸாக்கிற்கு.
"சும்ம செலவழிச்சுப் போடாம எனத்தியாலும் யாவார மொன்டப் பாத்துச் செய்’ஆலோசனையும் வேறு முன்வைத் தார் குத்தூஸ்.
நன்றியோடு விடைபெற்ற ரஸ்ஸாக்கின் மனதிலே.
"தலப்புக்கு பெட்டிங்ஸென்டருக்குப் பெய்த்து நாலஞ்சி குதி ரயத் தேடி ஐநூறு ரூவக்கொரு துண்டு போடோணும்.
அதோட நல்லோரு கட்டு சுருட்டும் அடிக்கோணும். யாவா ரத்தப்பத்தி பொறகுபாக்கோம்
கால்கள் நிலத்தில் படாதபடி நடந்துகொண்டிருந்தான் ரஸ் ஸாக்.
மல்லிகை - 1989 மார்ச்.
111

Page 59
நம்பிக்கை
“ஸலாதுன்வ தஸ்லீமுன் வஅஸ்காத ஹிய்யதீ.”
பக்தி சிரத்தையோடு ராகமெடுத்து ஒதிக்கொண்டிருந்த ஸாதிக் நானா முன்பக்கமாக யாரோ மாறுவதுபோல் தெரிந்த தால், மெளலூதை ஒதியபடியே நமிர்ந்து அப்பக்கமாக மெல் லப் பார்த்தார்.
பொஸ்ஸின் இரண்டாவது மனைவி முற்றத்தில் நிற்பதைக்
கண்டதும் அவரது ராகம் பக்தியையும் விஞ்சிக் கொண்டு மேலே மேலே எழுந்தது.
'அலல்முஸ்தஃபா வல்ஆ லீஃபீகுல்லி உம்மதீ."
அன்று திங்கள் இரவு. வெள்ளி, திங்கள் இரவுகளில் எதை மறந்தாலும் பதுறு மெளலூது ஒதுவதை மாத்திரம் மறக்க மாட்டார் அவர்.
ஊரில் இருக்கும் போது அவருக்குள் குடிபுகுந்த இந்தப் பழக் கம் ஸவூதியில் தொழில் வாய்ப்புப் பெற்று வந்த போதும் கூட அவரை விட்டு அகலவில்லை.
வாலிபப்பருவத்தில் எந்த தொழிலைச் செய்வதென்று தெரி யாமல் நாலைந்து தோணிகளில் கால் வைத்துக்கொண்டு
112

அலைக்கழிந்தபோது, அவரை ட்ரைவிங் பழகவைத்து தொழிலுக்கு வழிகாட்டிய ஸல்மான் ட்ரைவர் அவருக்கு வழங்கிய தொழில் நுணுக்கங்களில் ஒன்றுதான் இதுவும்!
'ஸாதிக் நீ லைஸன், இன்ஸ"ரன்ஸ மறந்தாலும் மெளலூது கிதாப மட்டும் மறக்கவாண. ஒருஜாதி எக்ஸிடன்டும் நடக் காம அது ஒன்னக் காப்பாத்தும். வெளங்கினா'
அன்று அந்த வார்த்தைகளைச் சொன்ன ஸல்மான் ட்ரைவர் மெளத்தாகிப்போய் எத்தனையோ ஆண்டுகள்! ஆனால் இன் னும் அந்தக்குரல் ஸாதிக்கின் காதுகளில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எத்தனையோ தடவை அவன் வாகனம் செலுத்தப்போய் மயி ரிழையில் உயிர்தப்பியிருக்கிறான். அந்த சந்தர்ப்பத்திலெல் லாம் அந்த மெளலூதுக் கிதாபை எடுத்து முத்த மிட்டு நெஞ் சோடு இறுகணைத்து 'பதுறு ஸஹாபாக்களே என்னக் காப் பாத்திட்டீங்க’ என்று நன்றி ததும்பச் சொல்லிக்கொள்வான்.
ஒரு நாள் இரவு o O O.
ரஜாப் முதலாளி, ஊரிலே ஹயர் ஒடுவதற்காக ஸாதிக் நானா வின் பொறுப்பில் மோரிஸ் மைனர் காரொன்றை ஒப்படைத் திருந்த காலம்.
நள்ளிரவில் கதவுதட்டும் ஒலி. இனியென்ன கூலிக்கார்க்காரர் கள் எதிர்பார்க்க வேண்டியதுதானே. மையத்து வீடொன்றுக் குப் போகவேண்டியிருந்தது. அவசர அவசரமாகப் போகு மாறு சம்பந்தப்பட்டவர்களின் வேண்டுகோள். அந்தநேரத் தில் பாதையும் தாராள மனதோடு இடம் கொடுத்தது.
சந்தியொன்றில் காரைத்திருப்பும் போது. திடுதிப்பென்று நாய்க்கூட்ட மொன்று குறைத்துக் கொண்டு முன்னே பாய்ந்த
113

Page 60
துதான் தெரியும். பிரேக் சத்தத்தோடு டெலிஃபோன் போஸ்டை முத்தமிட்டு நின்றது கார். எங்கு எதில் இடித்த தென்றே தெரியவில்லை. அவனது நெற்றியில் பலத்த அடி.
சற்றுநேர இடைவெளிக்குப் பின் நின்று நிதானித்துப் பார்த்த போது பெரிதாக ஒன்றுமில்லையென்தை பயணித்தவர்கள் புரிந்து கொண்டனர்.
ஆனால் அவனது இதயத்திலே நெற்றியைவிடப் பலத்த அடி! மெளலூதுக் கிதாபு காருக்குள் இருந்தும் அந்த ஸஹாபாக்கள் காப்பாற்றவில்லையே என்றுதான்!
டக்கென்று அந்தக் காகிதப் பையை இழுத்தெடுத்தான் ஸாதிக். உள்ளே லைசன்ஸ், இன்ஸ"ரன்ஸ் மாத்திரந்தான் இருந்தது. மெளலுதுக் கிதர்பு இருக்கவில்லை.
அப்பாடா பெரிய ஆறுதல் அவனுக்கு.
"சரிபோம்’ மீண்டும் பயணம் தொடர்ந்தது.
அடுத்த நாள் வீட்டுக்குச் செல்லும்போது மனிதனாகச் செல்ல வில்லை அவன். வைத்த ச்த்தத்திற்கு மனைவி, பிள்ளைக ளெல்லாம் நடுநடுங்கிப்போய் விட்டார்கள்.
‘என்னால தான் இதெல்லம் நடந்த. ராவு ஒதியத்துக்கு நானந்தக் கிதாப எடுத்த, ஒதி முடிஞ்சி வெக்கியத்துக்கு முந்தி. சின்னவள் சோறு கேட்டழுதத்தில அப்படியே மறந் துபெய்த்த." அழாக்குறையாகச் சொன்னாள் மனைவி ஸெய்னம்பு.
அடுத்த கணம் வீட்டிலிருந்து பக்கென்று வெளியே பாய்ந் தான் அவன். அவன் போகும் வேகத்தையும் நொறுங்கிப் போயிருந்த காரின் பக்கவாட்டையும் பார்த்தபோது, இனி யென்ன நடக்குமோவென்று ஏங்கிப்போனாள் அவள்.
114

போனவேகத்திலேயே திரும்பிவந்து சேர்ந்தான் ஸாதிக்.
"இங்க லெவ்மாமாக்கிட்டப் பெய்த்து இனுமொரு கிதாபு வாங்கிக் கொணுவந்த. இத நீங்கொத்தரும் புடிக்கப்படாது. காருக்குள்ளயே ஈக்கட்டும்'
'சரி என்பதற்கடையாளமாக தலையாட்டிச் சிரித்தாள் அவள். -
!"ஸாதிக்’
இரைமீட்டலை அறுத்தது அக்குரல். ஆமாம் பொஸ்தான். அவன் எழும்புவதற்கிடையில் உள்ளே வந்துவிட்டார்அறபி.
“இத நான் பாத்திட்டு தரட்டுமா?’ என்று கேட்டபடியே மேசையில் விரித்தபடியிருந்த மெளலூதுக் கிதாபைக் கையிலே எடுத்துக் கொண்டார் பொஸ்.
அவனுக்கு சந்தோஷமோ பொறுக்க முடியவில்லை. அதன் ஒற்றைகளைப் புரட்டியபடியே பொஸ் சென்றபோது, தன்னை மறந்து அப்படியே அமர்ந்து கொண்டான் ஸாதிக்.
"பொஞ்சாதி செல்லித்தான் வந்தீக்கி. ம். இவளவு நாளா நான் ஒதியத்த அவகாணிய. எவளவு பரக்கத்தான ஒதலன்'
தனக்கொரு புரொமோஷன் கிடைத்துவிட்டதுபோன்ற பெரு மிதம் அவனுக்கு அவர்கள் எதிர்பார்க்காத நல்ல காரியங்க ளைச் செய்தால் நிச்சயமாக அதற்கொரு வெகுமதி கொடுப் பது அறயிகளின் பண்பல்லவா?
ஸாதிக் நானா ஐந்து பிள்ளைகளின் தகப்பன். அவர்களில் மூன்றுபேர்பெண்கள். அதிலும் இரண்டுபேர் குமர்கள். இந்த இருபத்தைந்து வருடங்களாக அவன் ட்ரைவர் வேலைசெய்து கண்டதொன்றுமில்லை:வீட்டில் அடுப்பெரிந்ததைத் தவிர!
115

Page 61
இந்த நிலையில் குமர்காரியங்களையாவது ஒப்பேற்றிவிடும் நோக்கத்தில்தான் பல ஆயிரங்களால் ஏஜென்ஸிகளைக் குளிப்பாட்டி இப்படி ஹவுஸ் ட்ரைவராக ஸ்வூதிக்கு வந்து சேர்ந்தான்.
இங்கு வந்து நாலைந்து மாதங்கள்தான். ஒவ்வொரு மாதமும் ஏழாயிரத்துக்கு மேல் சம்பளம். வேலையும் அவ்வளவு கஷ்ட மானதல்ல. பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்வதும் சொப்பிங் போவதும். வார இறுதியில் எங்கா வது தூரப் பயணம் போவதும்தான்.
அப்பிள், முந்திரிகை பழங்களோடு நல்ல சாப்பாடு. பிள்ளை களை நினைத்து நினைத்துச்சாப்பிட்டுக் கொள்வான். கொசுக் கடின்ய மறந்து ஏயாகண்டிசன் அறையில்தான் நித்திரை. வேளைக்கு தொழுதுகொள்ளவும் தவறமாட்டான்.
எதையோ யோசித்துக்கொண்டிருந்தவனின் கண்களில் அந்த சிகரட் பெட்டி பட்டது. இனியென்ன ஒரு சிகரட்டைப் பற்றி ஒரு தம் ஆழமாக இழுத்த போது மூளையிலே இன்னொரு சிலிர்ப்பு.
'இப்ப பொஸ் வந்து பதறு மெளலூதப் பத்திக் கேப்பாரு. எப்பிடி யெப்பிடிக் கேப்பாரோ தெரிய. நல்ல மொறக்கி மறுமொழி செல்லோனும். எதச் சென்னாலும் செல்லாட் டீம். மெளலூது ஒதிவார ஊட்டியளுக்கு கள்ளன் வந்தா. உள்ளுக்கு பதுறு ஸஹாபாக்களட வாள்சத்தம் கேக்கிய. அப்ப கள்ளன் பயந்து ஓடிய. இதத்கட்டடாயம் செல்லோ
ணும்’
கேள்விகளையும் எழுப்பி பதிலையும் சொல்லி தன்னைத் தானே ஒத்திகை பார்த்துக் கொண்டான் ஸாதிக்.
டக்.டக்.டக்.
16

ஆமாம் பொஸ்தான் வந்துகொண்டிருந்தார்.
"ஸாதிக்’
அழைப்பு விடுத்தார் பொஸ்.
எங்கோ மிதந்தவனாக வெளியே வந்தான் ஸாதிக். முற்றம் ஒளியால் குளித்துக் கொண்டிருந்தது.
"இந்தாங்க. இதில என்ன சொல்லியிருக்கென்னு நல்லா ஓதி வெளங்குங்க. அந்த ஸஹாபாக்களக்கூட மனிதப் புனி தர்களா மாத்தின வரலாறு இதுக்குத்தானிருக்கு."
அவர் நீட்டிய அல்குர்ஆன் பிரதிய்ை இருகரங்களையும் நீட்டி மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான் ஸாதிக்.
"இனிமேல இத ஒதுங்க” புன்னக்ைத்தபடியே சொன்னார் பொஸ்.
ஸாதிக் நானாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
ஒரு வகையான கேலிச் சிரிப்பொன்றைக் கக்கியபடி கண்க ளால் ஒரு பக்கமாகச் சிமிட்டிக் காட்டினார் பொஸ். அந்தப் பக்கமாக ஸாதிக் நானா தனது பார்வையைத் திருப்பிய
போது.
அவனது இதயம் வெடித்துச் சிறியது. அதன் காங்கை வியர் வையயாக அவனைக் குளிப்பாட்டியது.
அங்கே. அந்த பதுறு மெளலூதுக் கிதாபு.
அல்ஹஸனாத் - 1989 டிசம்பர்.
117

Page 62
குறிப்புகள்

குறிப்புகள்

Page 63


Page 64