கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாறாத மனங்கள்

Page 1
143.12
L齿山
LA PER .
 


Page 2


Page 3

மாறாத மனங்கள்
தி. உதயசூரியன்
தொல்புரம் கிழக்கு விக்கினேஸ்வரா சனசமூக நிலைய வாசகர் வட்ட வெளியீடு,
தொன்புரம் கிழக்கு,
4 g'/gd.

Page 4
* மாறாத மனங்கள் "
( சிறுகதைத் தொகுப்பு )
திருநாவுக்கரசு உதயசூரியன்
முதற் பதிப்பு:
ஆகஸ்ட் 1994
Q6hu 6rFu9(3: தொல்புரம் கிழக்கு விக்கினேஸ்வரா சனசமூக நிலைய
வாசகர் வட்டம்,
முகப்போவியம்:
ஞானம் ஆர்ட்ஸ்.
அச்சுப் பதிவு பராசக்தி அச்சகம், காங்கேசன்துறை வீதி, கொக்குவில், பிரதிகள் 1000
பதிப்புரிமை. பதிப்பாசிரியருக்கே.
F6oap - 50/-
Maratha Manangal ( Collection of Short Stories )
BY
Thirunavukkarasu Uthayasurian
Year of Publication August - 1994.
Published by:- “ Tholpuram East Vignes wara Community
Centre - Readers Circle. '
Front Cover - Gnanan Arts.
Printed at - Paraskthy Printers, Kokku vil, Jaffna. Sri-Lanka.
No. of Copies - 1000
Copy Right Reserved

உள்ளே s . .
அணிந்துரை
ஆசியுரை
உங்களுடன் சில வார்த்தைகள்
அக்கரைக்கு அப்பால் இன்ரவி4.
அவலங்கள்,
உணர்வுகள் ஊசலாடுகின்றன.
தப்புத் தாளங்கள்.
இரவல் கொள்ளி.
காலத்தின் தேவை.
மாறாத மனங்கள். w (வல்லை. ச. ச. சேவா சங்கம் பொன்விழாவையொட்டி நடாத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றது )
Gruvi Guaru odgo6007 aivas sit.
காஞ்சனா வித்தியாசமானவள்.
ஏமாற்றங்கள்.

Page 5
அணிந்துரை
இதுதான் சிறுகதை என்று கூறுவதற்குத் திட்ட வட்டமான வரைவிலக்கணம் எதுவும் இல்லாத போதும், வரலாற்று ரீதியாகப் புகழ்பூத்த பல இலக்கிய கர்த்தாக்க ளது குறிப்பிடத்தக்க சிறுகதைகளைக் கொண்டு இலக்கிய வாதிகள் ஒரு வரையறையினை அமைத்துள்ளனர். சிறு கதை பற்றிக் கருத்துக் கூறிய பிரான்ஸ் தேசத்துச் சிறந்த எழுத்தாளருள் ஒருவரென்று கருதப்படுகின்ற திரு, Guy de. Maupssant என்ற எழுத்தாளன் பின்வருமாறு கூறுகின் றார் - "சிறுகதை என்பது ஒருவனது சொந்த அனுபவங் களின் வெளிப்பாட்டையும், ஆற்றலையும், ஆளுமையையும் துல்லியமாக மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் ஒரு ஊட கமாகும்". இந்த வரையறையின் படி நல்லதொரு சிறுகதை எனக்கூறுகின்ற போது ஒரு வாசகன், தான் வாசிக்கின்ற சிறுகதையினைப் புகழ்பெற்ற சிறுகதையொன்றோடு ஒப் பிட்டு அவ்வாறானதொரு சிறுகதையினை வாசித்தேன்! என்று மனநிறைவு அடைய வேண்டும். உதாரணமாகக் கூறின், அது ஹெமிங்வே போல, செக்கோவ் போல, புதுமைப் பித்தன் போல அமைந்ததெனக் கூறவேண்டுமெனச் சொல் GGRUGO.
ஒரு சிறுகதை எழுத்தாளன் தான் எடுத்துக் கொண்ட விடயத்தையும், சொல்லும் முரையையும் தெ ஸ்ரி வா கத் தெரிந்து கொண்டு சொற் சிக்கன்த்தோடு கலை அழகையும் சரியான முறையில் பிரயோகிக்க வேண்டும். கலை அழகு

சேருகின்ற போதுதான் அது கட்டுரையிலிருந்து வேறுபடு கின்றது. கட்டுரையும் கருத்துக்களைத்தரும். ஆனால், கலை அழகுதான் உணர்ச்சியை ஏற்படுத்தும். இலக்கியம் கருத்தை யும் தரும். உணர்ச்சியையும் தரும். அதனால்தான் இலக்கி யங்கள் ஒரு மொழியின் வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
இலக்கியம் சமுதாயத்தின் நிலைப்பாட்டையும், அதற் கும் தனிமனிதனுக்கும் உள்ள உறவு முறைகள். அந்த உறவு முறைகளினால் ஏற்படுகின்ற தனிமனிதப் பிரச்சனைகள் மனித நடவடிக்கைகள், சமுதாத மாற்றம், அம்மாற்றத்தால் தனிமனித நடவடிக்கையினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்பவற்றைப் பிரதிபலிக்கின்றன. அதனால் ஒரு எழுத்தா ளன் மேற்கூறப்பட்ட விடயங்களைச் சரியான முறையிலே உணர்ந்து அதனைத் தனது கதாபாத்திரம் அல்லது கதாபாத் திரங்களினூடாக வெளிக் கொணரக் கூடிய ஆற்றலுடைய வனாக இருக்க் ைேண்டும். அவன் தனது கதாபாத்திரங்களி னுாடாக கூறிய கருத்துக்களிலும் பாாக்க கூறாத பல கருத்துக்களை வாசகன் ஊகித்தறியக் கூடியதாக அமைய வேண்டியது அவசியம். அதாவது பேராசிரியர் கா. சிவத் தம்பி அவர்கள் கூறுவது போல 'சிறுகதை ஒரு குறிப் பிட்ட மனோநிலை அல்லது உணர்வு நிலையைக் காட்டுவ தாக அமைவது அவசியம். இந்த மனநிலையை வார்த்தை களால் சுட்டிக் காட்டாது கதையிலை வாசிக்கும் வாச கனின் மனதில் அவனை அறியாது அவ்வுணர்வுநிலை தோன் றும்படி செய்யமுடியுமானால், அது ஒரு சிறந்த சிறுகதை uaas sy Goocu cpg.udi.
தமிழ் இலக்கியத்தில் பல சிறுகதை விற்பன்னர்கள் தோன்றி உள்ளனர். அப்பட்டியலைப் போடுவது தேவை யற்றதெனக் கருதுகின்றேன். ஈழத்தைப் பொறுத்த வரை அண்மைக் காலங்களில் பல இலக்கியப் படைப்பாளிகள் தோன்றி வருகின்றனர். ஒரு போராட்டச் சூழலில்தான் சிறந்த

Page 6
இலக்கியீங்கள் வ்ள்ர முடியும் என்பதற்கு எங்களது மண் நல்லதொரு உதாரணம்ாக அமைந்து வருகின்றது. இக்கா9ே எழுத்தாளர்கன்ள தமிழ் இலக்கிய உலக்மே உன்னிப்பாகக் வேனித்து வருகின்றது தற்கால எம்மண்ணின் யதார்த்த நிலையைப் படம் பிடித்துக் காட்டும் இலக்கியங்களுள் கவிதை முன்னுரிமை பெற்றாலும், சிறுகதைகளும் குறிப் பிடத்தக்க அளவு வெளிவந்துள்ளன.
* * * *:, மண்ணில் வாழும் மக்கள்ைக் கொண்டு இல்க்கியல் உருவாகிறபடியினாலும் ன்ேனையும் மக்கள்ையும் உதறி விட்டுப் படைப்பிலக்கியம் விண்வெளியில் தளிர்க்க முடி யாதென்பதிாலும் இவ்வாறான இலக்கியங்கள் இங்குதோன்று கின்றன என்று கருதுகின்றேன்.
இந்த அடிப்படையில் தோன்றிய பத்து சிறுகதை திரு “தி உதயசூரியன் அவர்கள் இந்நூலில் சேர்த் துள்ளார். திரு உதயசூரியன் அவர்கள் ஒரு அரச உத்தி யோக்த்தர். தனது கிராம்மாகிய தொல்புரத்தில் ஒரு சமூக சேவிகன். 'தீன்து சமூக சேவைக்கு சனசமூக நிலையத் தினை ஷ்ரு ஊடகமாகக் கொண்டவர் ஒரு சமூக சேவகன் தான் காணுகின்ற சமுதாயப் பிரச்சினைகளுக்கு தனிமனிதப் பிரச்சின்னக்குத் தீர்வு காண்பதின் மூலம் தீர்வு காண முனையக் கூட்ாது. சமுதாயத்தின் ஒட்டு மொத்தமான பிரச்சினைக் இக்கார்ண்த்திைக் நன்கறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முனைய
魏曹黨 龜f 666
J。
s
இச்சிந்தனையாற் போலும், திருதயசூரியன் தான் காணுகின்ற பிரச்சினைகளுக்கு இலக்கிய வடிவம் கொடுத் துத் தீர்வு காண முனைகின்றார். இவரது கதைகளில் வெளி நாட்டில் பிள்ளைகள் வாழ்வதும் வயது போன பெற்றோர் களைப் பராமரிப்பதற்கு எவருமின்றி உடற்பிணியாலும் பாசப்பிணியாலும் வால்கின்ற 4dno6060vպծ, Թւ-ծ

பெயர்ந்த மக்களின் அவல நிலைகளையும், பொம்மர். ஷெல் போன்றவற்றின் மனித அழிப்புக்களையும், கிளாலிப் பாதைப் பயணக் கஸ்டங்களையும், சமுதாய ஏற்ற இறக் கங்களையும் வாசகர்கள் தரிசிக்கலாம். இக்கால யதார்த் தத்தை இந்நூல் ஓரளவுக்கு ஆவணப்படுத்தியுள்ளதெனக் கூறலாம்.
இது இவரது கன்னி முயற்சி இவரை அரவனைக்க வேண்டியது எங்கள் எல்லோரினதும் கடமையெனக் கருது கின்றேன். அவ்வாறு நாம் செய்வோமேயானால் நிச்சய காக இந்த மண்ணில் நல்லதொரு இலக்கியக் கலைஞனது
வளர்ச்சியைக் காணலாம்.
இச்சிறுகதைத் தொகுதியினை தொல்புரம் கிழக்கு விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் வாசகர் .فيسا له வெளியிடுவதனை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி4மைசின் றேன்.
வாழ்க, வளர்க என திரு. உதயசூரியனையும், இச் சனசமூக நிலையத்தினரையும் வாழ்த்துகின்றேன்.
24, கொழும்புத்துரை விதி சுண்டிக்குளி, சுந்தரம் டிவகலாலா யாழ்ப்பாணம்.
O5-08-1994.

Page 7
ஆசியுரை
திருநாவுக்கரசு உதயசூரியன் இவர்களின் escârcofo U படைப்பாக பத்துச் சிறுகதைகளைத் தொகுத்து தொல்புரம் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய வாசகர் வட்டத்தினர் வெளியிடுகின்றனர் 'மாறாத மனங்கள்" என்னும் மகுடத் தின் கீழ், இவருடைய படைப்புக்களின் கனிரசம் சுவைத்த வாசகர் வட்டத்தினர். "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்னும் முதுமொழிக்கேற்பப் பலரும் பருகி அனு பவிக்கும் நோக்குடன் வெளியிடுகின்றனர் இந்நூலை,
அவருடைய சிறுகதைகள் சிலவற்றை அவ்வப்போது வாசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. சரித்திரத்தில் இடம் பெறவேண்டிய சில கட்டங்களையே மிகவும் சாணக் கியமாகச் சித்தரிக்கின்றார் தனது படைப்புக்களில், கடின மான அனுபவங்களை எளிமையாக உள்ளங்களில் ஊன்ற வைக்கும் உத்திகைகளை அவரது சிறுகதைகளில் நாம் உண ரக் கிடக்கின்றது. பின்னொருகாலத்தில் வாசிக்கும் வாச கர்கள் இக்காலத்தில் எம்மவருடைய வாழ்க்கை எங்ங்ணம் இருந்திருக்கும் என்பதனை ஊகிக்கக் கூடிய முறையில் இவருடைய சிறுகதைகள் சித்தரித்து நிற்கின்றன.
இவரோ ஒரு அரச ஊழியர், ஏறக்தாழ பதினாறு வருட அனுபவம் நிறைந்தவர். தொழிலோ ஆங்கிலத் தட் டெழுத்தாளர். இவருடைய தொழில், தாய்மொழிக்கோ, சிறுகதைக்கோ சிறிதும் தொடர்பில்லாதது. ஒரு சாதாசன

இல்வாழ்வான். சனசமூக நிலையங்களின் சேவையாளர் களும், ஆலயப்பணி செய்பவர்களும், இலங்கைச் செஞ்சி வைச் சங்கத்தினரும் இவரது வட்டாரத்தில் 'தம்பி உதயனை, நாடுவது நாமனைவரும் அறிந்ததொன்றாகும்.
இத்தகைய ஒருவர் இப்பேற்பட்ட படைப்பினை எமக்கு அளிக்கும்போது அவருடைய இயல்பான உணர்வுகளை வெளிக்கொணரும் ஆற்றல்களைப் பற்றிச் சான்றுபகரவேண் டியதில்லை. யாவும் வெள்ளிடைமலை. சுறுசுறுப்பான விவேகமான இயல்புகளையுடையவர். அவருடைய படைப் புக்களும் அவற்றையே சித்தரிக்கின்றன. கன்னிப்படைப்பு இங்ங்ாமாயின் கனிந்த படைப்புக்கள் எங்ங்ணம்!
எல்லாம்வல்ல இறைவன் அறுபத்திநான்கு கலைகளை யும் பற்பல உளடகங்களுடாக வெளிக்கொணருகின்றான்" அப்பேற்பட்ட ஊடகம்தான் தி, உதயசூரியன் அவர்கள். இவ்வூடகம் மென்மேலும் வளர்ச்சியுற்று வையம் வளம் பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.
விலைமதிப்பீட்டுத்திணைக்களம் ச. தி. சண்முகநாதன் αυσφύυσοδοτώ. உதவி விலை மதிப்பீட்டாளர் O8.08. 994.

Page 8
உங்களுடன் சில வார்த்தைகள் . . .
o a நாட்களிலேயே நான் அதிகமாக வாசிப்ی - آلا பது வழக்கம் பெற்றோர் கடலைக் கொட்டைக்குத் தரும் சில்லறைக் காசையும் "சுதந்திரன்’ பத்திரிகைக்கும், மற்றும் மாதாந்த சஞ்சிகைகள் வாங்கிப் படிப்பதற்குமே பயன்படுத்தி G607 air.
பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்திலும், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் எனக்குத் தமிழ் அறிவைப் புகட்டிய ஆசிரியர்களை இன்றும் நன்றியுடன் நினைத்துக் கொள்வதுண்டு.
நான் சிறுகதைகள் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாக படிக்கும் காலத்திலேயே கவிதைகள், கட்டுரைகள், சிறு துணுக்குகள் என்பவற்றை எழுதி வத்துள்ளேன். இவற்றைப் பத்திரிகைகளிலும், மாதாந்த சஞ்சிகைகளிலும் பிரசுரிக்க அனுப்பிவிட்டு பிரசுரிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த் திருப்பேன். ஆரம்பத்தில் ஏமாற்றம் கிடைத்தாலும், பின்னர் பலர் பிரசுரித்து எனக்கு ஊக்கமளித்தனர்.
இதன்பின்னர் சிறுகதை எழுத வேண்டுமென்ற அவா எனக்கு ஏற்பட்டு, எழுத ஆரம்பித்தேன். என்னுடைய கதை கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கக் கூடிய தரமுள்ளதா என்ற பயவுணர்வினால் நீண்டகாலமாக அவற்றை அனுப்பாது வைத்திருந்தேன். வவுனியா, கொழும்பு புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரச சேவையில் கடமையாற்றியபோது வன்செயல்களின் போது அவற்றை கைநழுவ விட்டமையை எண்ணும்போது மனதைத் துயரம் அடைக்கின்றது.

1987இல் யாழ். மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்த தன் பின்னர் மீண்டும் சிறுகதை எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது. எழுத ஆரம்பித்தேன். ஒருசிலவற்றை பத்திரிகைகளுக்கும் அனுப்பினேன். பிரசுரமும் செய்தனர் எனது கதைகளைப் பிரசுரம் செய்த "ஈழநாதம்", " வல்வை சனசமூக சேவா சங்கம்" ஆகியோருக்கு எனது நன்றியறி தலைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
1987இற்குப் பின்னர் என்னால் எழுதப்பட்ட கதை களையே இச்சிறுகதைத் தொகுதியில் சேர்த்துள்ளேன். இக். காலகட்டத்தில் எமது மக்கள் படும் இன்னல்களையும் சோதனைகளையும், மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும், அரச ஊழியர்களின் அவல நிலையையும், சீதனப்பிரச்சினை போன்றவற்றையுமே கருப்பொருளாக வைத்து இக் கதை களை வரைந்துள்ளேன். எனது கருப்பொருட்கள் யாவும் வீட்டிலிருந்து யாழ், காரியாலயம் வரையும் மீண்டும் யாழ் காரியாலத்திலிருந்து விடுவரையும் துவிச்சக்கரவண்டியை தினமும் இருபது மைல்கள் மிதிக்கும்போது ஏற்பட்டவையே யாகும்.
என் உள்ளத்தில் ஏற்பட்ட சில உண்மைகளை கதை வடிவில் தந்துள்ளேன். எனது கன்னிப்படைப்பாகையால் பிழைகள் இருக்க இடமுண்டு. அவற்றையெல்லாம் வாசகர் களாகிய நீங்கள் மன்னிப்பீர்களென எதிர்பார்க்கின்றேன். வாசகர்களது உண்மையான உற்சாகமளிக்கும் துணை இன் ரேல், எழுத்தாளனின் மனம் சோர்ந்து ஒரம் கட்டப்பட்டு விடும் என்பதை நான் நன்கறிவேன். மதிப்பீடு செய்வதும், விமர்சிப்பதும் வாசகர்களாகிய உங்களது உரிமை அந்த உரிமையோடு வரும் காத்திரமான விமர்சனங்கள் என்னைச் செழுசைப்படுத்தும் என்பதால் அவற்றை எதிர்பார்க்கிறேன்.
இவ்வேளையில் இச்சிறுகதைத் தொகுதிக்கு தன்னு டைய வேலைப்பழுவினையும் பாராது, இலக்கியப்பணியை யும் ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கில் அணிந்துரை, தந்துதவிய திரு. சுந்தரம் டிவ கலாலா, உள்ளுராட்சி, உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்கள் அவர்களுக்கும், அட்டைப்பிற்குறிப்பு வழங்கிச் சிரப்பித்த எனது அன்புக்கும், பெருமதிப்புக்குமுரிய ஆசான் கவிஞர்

Page 9
சோ. பத்மநாதன் அவர்கட்கும், ஆசியுரை வழங்கிய எனது அலுவலக உயர் அதிகாரி திரு. ச. தி. சண்முகநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
அத்துடன், இச்சிறுகதைத் தொகுதியை வெளியிட எண்ணியபோது பல வழிகளிலும் நல்லாலோசனைகள் வழங் கிப் பத்துரக்கம் அளித்த எனது அலுவலக நண்பர்கள் நா. இரகுநாதன், எஸ். கே. கங்கவடிவேல் ஆகியோருக்கும், அவ்வப்போது மனங்கோணாது தமிழ் தட்டெழுத்து செய்து உதவிய திருமதி க. பஞ்சரத்தினம் அவர்கட்கும் எனது மனப் பூர்வமான நன்றிகள்.
இவ்வேளையில் அட்டைப்படம் வரைந்து சிறப்பித்த ஞானம் ஆர்ட்ஸ் அன் அட்வரைசிங்ஸ் அவர்களுக்கும், மிக வும் குறுகிய காலத்தில் நல்ல முறையில் அச்சுப் பதித்துத் கந்த கொக்குவில் பராசக்தி அச்சகத்தாருக்கும் எனது நன் றிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இச் சிறுகதைத் கொகு தியை வெளியிட முன்வந்த "தொல்புரம் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய வாசகா வட்ட நிர்வாகிகளுக்கும்", மற் றும் பல வழிகளிலும் உதவிய அன்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
சிறுபராயத்திலிருந்தே என்னை இலக்கியத் துறையில் உற்சாகப்படுத்தி வளர்த்து இறைவனடி சேர்ந்த, எனது பாசமிகு கந்தையார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பன மாகிறது. தொடர்ந்து என்னை இத் துறையில் உற்சாகப் படுத்திவரும் அன்புத் தாயாருக்கு எனது வந்தனங்கள் உரித் தாகுக,
இறுதியாக, தமிழ் இலக்கிய உலகில் ஏதோ ஒரு பங் களிப்பையாவது என்னால் செய்ய முடிந்ததேயென்ற மன நிறைவோடு, வாசக நண்பர்கள் இந்த நூலை ஏற்றுக்கொள் ளுவார்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்
வணக்கம் பச்சந்தை, தொல்புரம் கிழக்கு, தி. உதயசூரியன் ở g?&yợ tô. | 0-08-1994.

அக்கரைக்கு அப்பால் 6 இன்ரவியூ
கோ மேய்த்தாலும் கொரிணமேந்து உத்தி யோகம்" பார்க்க வேணும் என்ற தனது தாயா ரின் விருப்பப்படி, 1963 ஆம் ஆண்டு அரசசேவை யில் காலடி எடுத்து வைத்த கந்தமுத்தர், முப்பது வருடங்களாகக் கடுமையாக உ  ைழ த் து வரும் மனுசர். அரச சேவையில் இருப்பவரென்றால் ஏதோ காலையில் போப் கையொப்பமிட்டுவிட் டால் சரி; இடையிலே உள்ள மற்ற வேலைகளைச் சென்று பார்த்துவிட்டு, மீண்டும் வந்து ஏதோ சொற்ப வேலைகளைக் கவனித்து விட்டு ஒப்ப மிட்டுவிட்டு வருவதுதானே என்று பலர் பேசிக் கொள்வது உண்டுதான். இருந்தாலும், கந்தமுத் தர் இதற்கு விதிவிலக்கானவர். காலையில் உரிய நேரத்திற்குச் சென்று தனது வே ைலக  ைளக் கவனிப்பதோடு, யாராவது லீவில் செல்லும் உத் தியோகத்தர்களது வேலைகளையும் எடுத்துச்

Page 10
செய்து முடிப்பதில் மகிழ்ச்சியடையவர். அப்படிச்செய்யக் கூடிய திறமையும் கந்தமுத்தருக்கு இருந்த்தால் எவவித சிரமத்தைவும் அவருக்கு உண்டாக்கவில்லை. தற்சமயம் அரசாங்க எழுதுவி னைஞர் சேவை வகுப்பு 1 இல் இருக்கும் கந்தமுத்தர், சிங்களத் தேர்ச்சியில் குறித்த காலத்தில் சித்தியடையாததால், முப்பது வருடங்கள் பூர்த்தியாகியும், தற்பொழுதும் வகுப்பு 1இல் உள் ளார். சிங்களத் தேர்ச்சி காரணமாக எத்தனை திறமையுள்ள அரச ஊழியர்கள் அரச சேவையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள் ளமை பற்றி சில வேளைகளில் கந்தமுத்தர் யோசித்து பெருமூச்சு விடுவார்.
கந்தமுத்தருக்கு குடும்பச் சுமை ஒருபுறம், ஆறு பிள்ளை களுடன் தனது வயோதிபத் தாயையும் பார்க்க வேண் டி ய பொறுப்பு. கந்தமுத்தருக்குத் தான் இளைப்பாறு முன் எப்படியும் எழுது வினைஞர் அதிஉயர்தரப் பரீட்சையில் தோற்றிச் சித்திய டைய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால், வர்த்த மாணியை அடிக்கடி புரட்டிப் பார்த்துக் கொள்ளுவார். யாழ்ப் பாணத்தில் கடமை புரியும் அரச ஊழியர்களுக்கு இப்படியும் ஒரு சாபக்கேடு இருந்து வருகிறது. அதாவது வர்த்தமானி இங்கு தபாலில் வந்து சேருமுன்னரே பதவி உயர்வு, பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி காலாவதியாகியிருக்கும். கந்தமுத்த ரின் நல்ல காலத்திற்கு யாரோ கொழும் பிலிருந்து வரும்போது கொண்டுவந்த வர்த்தமானி கைக்குக் கிடைக்கவே, அவரும் விண்ணப்பம் செய்தார். இப் தவி உயர்வுக்குக் கொழும்பில் ஒரு இன்ரவியூ மாத்திரமே. கடந்த கால சேவை விபரங்களும், அனு பவங்களும் இன்ர வியூவில் சுருத்தில் எடுத்துக் கொள்ளப்படும், கந்தமுத்தருக்கோ தனக்கு இன்ரவியூ சக்சஸ் ஆகும் என்ற திட மான நம்பிக்கையிருந்தது. கந்தமுத்தர் இன்ர வியூவைச் சந்திக்கத் தேவையான ஆவணங்களையும் தயார்படுத்திக் கொண்டார்.
இன்ரவியூவுக்கான கடிதம் ஒருவாறு ஒருவார காலத்திற்கு முன்னர் கிடைத்தது. ஐம்பத்திரண்டு வயதான கந்தமுத்தருக்கு மனதில் ஒரே நெருடலாக இருந்தது தான் எப்படிக் கிள1 லியூ டாகப் பயணம் செய்யப் போகிறேன்; தான் இப்பாதை ஊடா கச் சென்று வருவது சாத்தியப்படுமா வென்று எவ்வாறாயினும், கொழும்பு செல்வதென் மனதைத் தேற்றிக் கொண்டு பயண
2 த ஷ மாறாத மனங்கள்

ஏற்பாடுகளைக் கவனித்தார். கந்தமுத்தர் பயணத்தை மேற் கொள்ளவிருந்த தினம், அவரது வயதான தாயாருக்கு திடீ ரென வருத்தம் கடுமைப்படுத்த, அவசரமாக யாழ். ஆஸ்பத்திரி யில் காட்டி ஆவன செய்து கொண்டு கந்தமுத்தர் கிளாலிக் கரையில் படகுக்காகக் காத்திருக்கிறார், காத்துக் கொண்டிருக் கும் வேளையில், இன்ரவியூ யோசனை ஒரு பக்கம், சுகயின முற்றிருக்கும் தாயாரின் யோசனை மறுபக்கம். தன்னுடன் உடன் பிறந்த சகோதரர்கள் ஏழு பேர் இருந்தும், தற்போது எவரும் இங்கு இல்லாதது கந்தமுத்தருக்கு எரிச்சலையூட்டியது. நாட்டுப் பிரச்சினையைச் சாட்டாகச் சொல்லி கனடா, சுவிஸ், பிரான்ஸ், ஜ்ேர்மனி என்று சென்று விட்டனர். சென்றாலும் பரவாயில்லை; தாயாரைப்பற்றி விசாரித்து ஒரு வருடத்தில் ஒரு கடிதம் கூட எழுத முயற்சிப்பதில்லை. " ஐ ஆம் ஏ புவர் கிளாக் தே ஆர் ஒல் றைற் தெயார்' இதனாலேயே கந்தமுத்தர் சகோதரர்களை நொந்து கொண்டார்.
பயந்த சுபாபம் கொண்ட கந்தமுத்தர் கடற்படையின ரின் பராவெளிச் சத்தைக் கண்டு அருகிலிருந்த இளம் பெடிய னைப்பார்த்து ' தம்பி! யாரடா உந்த வெளிச்சம் அடிக்கிறது. நேவிக்காறர். கிட்ட வாறாங்களோ, கண் போட்டால் அடிப்பாங் களோ" என்று வினவினார். இளம் பொடியன் கந்தமுத்தரைப் பார்த்து 'ஐயா ஒன்றுக்கும் பயப்படாதேங்கோ. அது நேவிக் காறற்றை வெளிச்சம் தான் என்றாலும் அவர்கள் எங்களுக்குக் கிட்டடியில் தற்சமயம் இல்லை. அவர்கள் எங்களுக்குக் கிட்ட வரமாட்டார்கள். எங்கடை தம்பியவை அவையளை இப்ப நல் லாய்ப் பயப்படுத்தி வைத்திருக்கிறார்கள்’ என்றான் இளம் பெடியனின் பயமின்மையையும், தனக்கு ஆறுதல் கூறியதையும் கந்தமுத்தர் மனதிற்குள் மெச்சிக் கொண்டார். அக்கரையை அடைந்ததும்தான் கந்தமுத்தருக்கு அரை உயிர் வந்தது போல இருந்தது. ' உத்தியோகம் புருஷ இலட்சணம் ' என்பார்கள் அரச சேவையில் சேர்ந்த காலம் தொடக்கம் தான் படும் கஷ்டங் களை பயணத்தின் போது அசைபோட்டுக் கொண்டார் இப்படித் தானா சகல அரச ஊழியர்களும் கஷ்டப்படுகின்றனர்!
இன்ரவியூவுக்கு வெளிக்கிட்டதே. கொஞ்சம் சம்பளம் இதனால் கூடும். பென்சன் எடுக்கும் போது கொஞ்சம் பென் சனும் இதனால் கூடும் என்ற எண்ணத்திலேயே ஆகும் இருந்
G. a guesfu 1öI S S 3

Page 11
திாலும்’ம்ாதுக்குள் இன்னொரு பயமும் வந்தது; இன்ரவியூவில் தற்சமயம் தேறிவிட்டால் பிற மாவட்டங்களுக்கு மாற்றம் தந்து விடுவார்களோவென்று, அப்படியாயின் எனது குடும்பத்தையும், வயதான அம்மாவையும் யார் கவனிப்பது!
கந்தமுத்தர் ஒருவாறு பல சோதனைச் சாவடிகளைத் தாண்டிப் பலவிதமான பயண அனுபவங்களுடன் கொழும்பைப் போய்ச் சேர்ந்தார். கந்தமுத்தர் மாற்றலாகிக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்குப் பிறகு கொழும்பு சென்றதில்லை. அரைகுறையில் பேசத் தெரிந்த சிங்களமும் அடியோடு போய்க் கொண்டிருக்கும் காலம் என்றாலும், சில சொற்களை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொள்ளும் திறமை கந்தமுத்தருக்கு இருந்தது. இந்தக் காலத் திலை யாழ்ப்பாணத்து ஆட்களின்ரை வீடுகளுக்குப் போய் நிற் பது சரியல்ல என்று கந்தமுத்தருக்குப் பட்டது. கோட்டை புகை யிரத நிலையத்திலிருந்து ஒரு ஒட்டோ மூலம் கொட்டகேனை யிலுள்ள விடுதியொன்றிற்கு சென்றார் கந்தமுத்தர். நேரம் இரவு 10 - 30 மணி. இருந்தாலும் விடுதி, றெயினைப் பார்த்துக் கொண்டு இருப்பது போல திறந்திருந்தது. மொட்டை மாடியின் ஒரு பக்கத்திலே வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. மற்றப்பக் கத்தில் 304 அடி சூடுபிடித்துக் கொண்டிருந்தது.
கந்தமுத்தர் ஒட்டோவால் இறங்கியதும் பலர் யாழ்ப் பாண நிலைவரம், பயண நன்மை. தீமை என்பனபற்றி ஆவலு டன் கேட்டனர். களைத்த முகத்துடன் சென்ற கந்தமுத்தரை உள்ளே செல்ல வழிவிட்டனர். அலுவலகக் கறுப்புப் பையுடன் சென்ற கந்தமுத்தரைக் கண்ட நிசெப்சனிஸ்ட் " ஐயாவுக்கு தனி அறையா ... " என்று இழுத்தான். கந்தமுத்தருக்கு மனதிற்குள் ஒரே எரிச்சலாய் இருந்தது "" தம்பி, நான் இன்றி ரவு மாத்திரம் தான் தங்குவேன்; நாளை மத்தியானம் இன்ர வியூ உடனே திரும்பி விடுவேன்" என்றார். வயதான தாயைப் பற்றி மனதுக்குள் அடித்துக் கொண்டிருந்தது. " பாயும் தலை அணையும் தந்தால் போதும்: நான் படுத்துவிட்டு எழும்பி விடியப் போய் விடுவேன்" -6rrorf.“ கொடுத்தி பாயும், தலை
4 f. ஈ) மாறாத மனங்கள்

அணையும் பலர் படுத்தெழும்பியவை என்பதை அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே உணர்ந்து கொண்டார். அலைச்சலு டன் படுத்த கந்தமுத்தர் உடனே குறட்டை விட ஆரம்பித்து விட்டார்.
அன்றிரவு நடுநிசி 12 - 30 மணியிருக்கும், ஹோட்டல் வாசலில் பொலிஸ் வாகனங்கள் இரண்டு வந்து ஒலி எழுப்பும் சத்தம் கேட்டது. கந்தமுத்தருக்கு கொழும்பில் தற்சமயம் தடக் கும் ஆள்பிடி சம்பவங்கள் பற்றித் தெரியுமென்றாலும், இந்த நேரத்தில் அதுவும் 52 வயது சென்ற மனிதனை பிடிப்பார்கள் என்று எண்ணவில்லை. உள்ளே திடுதிடுவென வந்த பொலிஸ் கோஷ்டி சிங்களத்தில் "ஒக்கமல அய்டன்டி காட் கண்ட" என்று பெருத்த குரலில் எழுப்பியது. கந்தமுத்தருக்கு அந்நேரத்தில் தான் ஆரம்ப நாட்களில் சிங்களம் படிக்கும்போது பட்ட கஷ் டங்கள் நினைவுக்கு வந்தன. உள்ளே நின்று கொண்டிருக்கும் பொலிஸ்காரர் சகலரையும் பலவிதமான கேள்விகளைக் கேட்டுப் பயப்படுத்தினர் பலர் சிங்களம் புரியாததால் விழித்தனர். கந்த முத்தரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. கந்தமுத்தரும் தன்னா லான சிங்களத்தை உரிய நேரத்தில் அவிட்டுவிட்டார் . " மம ஆண்டு வே சேவையே இன்னே; சேவையே உசஸ் கிறீம இன்ர வியூவர யாப்பணய இந்தாலா ஆவே " " அத தமாய் ஆவே. கெர இன்ரவியூ " " றாஜ பரிபாலரையே ”* என்று விளக்கினார், பொலிஸ்காரர் சிங்களம் பேசியதையோ அல்லது வயதையோ பார்த்து விடவில்லை. அரை ம ணித்தியாலத்திற்கு மேலாக பொலிஸ்காரருடன் கந்தமுத்தர் வாதிட்டும் பலனழிக்கவில்லை. ஹோட்டலில் இருந்த யாருக்கும் பரிவுகாட்டாது எல்லோரும் வாகனங்களில் உடன் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். பொறுப்பதிகாரியுடன் கந்தமுத்தர் தனது நிலையை ஆங்கிலத்தில் விளக்கியதன் பயனாக, பொறுப்பதி காரி கந்தமுத்தருக்கு ஒரு கொண்டிசன் போட்டு மத்தியானம் நடைபெறவிருக்கும் இன்ரவியூவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கினார். " ஐவில் அலவ் யூ ரூ அற்றண்ட் த இன்ரவியூ; பட் யூ மஸ்ற்கம் பாக் ஆவரத இன்ரவியூ" என்றார் பொறுப்பதி காரி. கந்தமுத்தர் தாங்யூசேர் " என்று கூறி ரொறன்ரன்ற்
தி. உதயசூரியன் So So 5

Page 12
ஸ்கொயாரில் உள்ள அலுவலகத்திற்கு இன்ரவியூவிற்காக ஒட்ட மெடுத்தார். இன்ரவியூவில், தான்பட்ட கஷ்டங்களையும், பொலிஸ் தன்னைத் தேவையில்லாது பிடித்துக் கஷ்டப்படுத்தி யதையும், மீண்டும் பொலிசில் சரணடைய வேண்டியுள்ளதை கூறியும், மேலதிகாரிகளால் கந்தமுத்தரின் கஷ்டங்களைக் கேட்க முடிந்ததேயொழிய எவ்வித பரிகாரமும் காணமுடியவில்லை.
இன்ரவியூ முடிந்ததும் கந்தமுத்தர் சட்டத்தரணி ஒருவ ரைச் சந்தித்து, சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையம் சென்று, தன்னை விடுவித்துக் கொள்கிறார். இன்ரவியூவுக்கு வந்து தேவை யில்லாது சட்டத்தரணிக்கு ரூ. 5000/- கொடுக்க வேண்டியதை எண்ணி கவலையடைந்தார். இனி கொழும்பில் ஒரு நிமிடமும் தங்கக் கூடாது. என்று எண்ணியபடி செல்கையில் கந்தமுத்தருக்கு ஐ. சி. ஆர். சி மூலமாக செய்தி ஒன்று வந்தது. செய்தியைப் படித்ததும் கந்தமுத்தர் மயக்கமடையும் நிலை ஏற்பட்டது. சுகவீனமுற்றிருந்த தாயார் மரணமாகி ஈமக்கிரியைகளும் முடிவ டைந்து விட்டதாக அச்செய்தி கூறியது. ஏழு உடன்பிறப்புக்கள் போலில்லாது தானும், தனது குடும்பமும் வயோதிபத் தாயைப் பார்த்து இறுதிக் கடமை செய்யவென இருந்த கந்தமுத்தருக்கு இந்தப் பாழ்பட்ட இன்ரவியூவினால் இந்த நிலை ஏற்பட்டதை நொந்து அழுதார்.
தன்னையே அறியாது கால்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்குச் செல்ல, வவுனியா வரை செல்லும் புகை வண் டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு தாயாரின் முப்பத்தொன்றுக் காவது சென்றுவிட வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டார்.
( ஈழநாதம் - 08 - 10 - 93 )
6 9 மாறாத மனங்கள்

அவலங்கள்
இரவு முழுவதும் சோனாவாரியாக மழைபெய்து விடியத்தான் சற்று ஓய்ந்திருந்தது. இருந்தும் கருக்கொண்ட மேகங்கள் இன்னும் கலையவில்லை’ அங்கும் இங்குமாக திட்டுத் திட்டாக நிலை GésmGior டிருந்தன. அடுத்ததொரு நீண்ட தூற்றலுக்கான
ஆரவாரிப்பு.
தொடர்ந்து ஒரு கிழமைக்கு மேலாகப் பெய்துவரும் அடை மழையினால் அகதி முகாமில் இருந்த ஐம்பத்தி ஐந்து குடும்பங்களும், பக்கத் திலுள்ள தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்குள் சரண் புகுந் தனர். பள்ளிக்கூடப் பிறின்சிப்பலுக்கு இவர்களை அங்கு வைத்திருக்க விருப்பமில்லை. எப்ப மழை விடும்; எப்ப இவர்களை முகாமிற்குத் துரத்தலாம் என்ற யோசனை.
காரைநகரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்களைச் சும்மா கிடந்த சிங்கப்பூர்க் காணிகளை இனம்கண்டு கட்டிக் கொடுத்த குடிசைகளே இவர்

Page 13
களது தற்போதைய மாளிகைகள். மிகவும் தாழ்ந்தவளவாய் இருந்தபடியால் ஊரிலுள்ள வெள்ளம் முழுவதும் இவர்களது. முகாமிற்குள் "புகுந்து பெரிய குளம்போலக் காட்சி அளித்தது.
இந்த முகாமில் இருப்பவர்களில் அநேகமானோர் கடற் றொழில் செய்தே வாழ்ந்தவர்கள். காரைநகருக்குள் இராணுவம் பிரவேசித்ததும் சேர்த்து வைத்த பொருள் பண்டங்களையும் விட்டு விட்டு ஓடிவந்தவர்கள். ஒரு சிலர் அவசரம் அவசரமாக வரும் போது தங்களுடன் தங்களது தொழிலுக்குத் தேவையான வலை. பறி போன்றவற்றை எடுத்து வந்திருந்தனர்.
தினமும் முகாமில் இருப்பவர்களில் ஆண், பெண் வித்தியா சமின்றி கடற்றொழிலுக்கு பொன்னாலை, திருவடிநிலைப் பக்கம் போய் வந்தனர். எப்பதான் முந்தின மாதிரி நிம்மதியாய்க் கடலுக் குப் போய்வர முடியுமோ என்று மனதினுள் நினைத்தவாறு சின்ன வனும், கோவிந்தனும் வழமைபோல் தொழிலுக்குப் புறப்பட்டனர்.
சின்னவனும் கோவிந்தனும் சகோதரர்கள். υβδοωανιψιό ονόσοου யையும் தோளில் போட்டுக் கொண்டு பொன்னாலைப் பாலத்தை அண்டிய கடலுக்கு நடையைக் கட்டினர். இவர்களது பிடிபாட் டைப் பொறுத்தே அன்ரண்டாடு கறி புளிப்பாடு ஒடிக்கொண்டி ருந்தது,
அரசாங்கம் அகதிகளுக்குத் தாற நிவாரணத்தைப் பற்றிச் சனங்கள் பெரிசாய் அலட்டிக் கொண்டாலும், இந்தக் குடிசையில் வாழும் குடிபெயர்ந்தவர்களுக்குத் தான் தினமும் படும் கஷ்டங்கள் புரியும். வெறும் கஞ்சியைக் குடித்தாலும் தன்ரை, தன்ரை உணரிலை இருக்குமாப் போல் வருமே?
. അരഭ് கடையிலே கியூவிலை நீண்டு நிவாரணச் சாமான் களைத் தலையிலை வைத்துத் தூக்கிக் கொண்டு வரேக்கை பார்த்துவிட்டு, எத்தனை சனங்கள் பெருத்த பெருமூச்சு விடுகு துகள். இவர்களெல்லோரும் இப்பவும தங்கடை, தங்கடை வீடு வாசல்லை இருந்து வாழ்பவர்கள்.
8 9 ஒ. மாறாத மனங்கள்

அம்மாப்பச்சை அரிசியையும், அமெரிக்கன் மாவையும், மைசூர்ப்பருப்பையும், கையிலண்ட் பால் மாவையும், படியளந்து விட்டு, அகதிகளுக்காக எத்தனையோ கோடி ரூபா செலவழிக் குது மாதாமாதம் அரசாங்கம், எண்டு பேப்பரிலை பெரிசாய்ப் போட்டதைப் பார்த்து விட்டு, படிச்ச வெள்ளை வேட்டி உடுத்த வர்கள் கூட " உவங்களுக்கென்ன அகதியெண்ட சாட்டிலை கடவுளே எண்டு பறவாயில்லை. சும்மா கிடந்து கொண்டு சாப்பிட் டுக் கொண்டு திரியிறாங்கள் " அகதிகளின் காதுகளில் இவை விழாமலில்லை.
சின்னவனும், கோவிந்தனும் கடலை நோக்கி நடக்கும்போது பலவிதமான கதைகளையும் கதைப்பதுண்டு. இண்டைக்கு மனிசி சொன்னவள் உப்பு, புளி, தேங்காய் முதல் கொண்டு வாங்க வேணும்; அடுப்புக்கை வைக்க ஒரு துண்டு விறகுகூட இல்லை பச்சை விறகை வாங்கியந்து அடுப்புக்கை வைச்சு ஊத, கண்ணும் அவிஞ்சு போச்சு. வலையிலை ஏதாவது படாவிட்டால், என்பஈே அதோகதி தான்" என்றான் சின்னவன்.
கோவிந்தனின் மகன் மணி, முகாமிற்குச் சற்றுத் தள்ளி யுள்ள தமிழ்ப் பள்ளிக்கூடத்திலை ஆண்டு நாலில் படிக்கிறான். அவனுக்குத் தேவையான கொப்பி, பென்சில் வாங்கவாவது பிடி பாடு இருக்க வேணும் இண்டைக்கு. நாளைக்கு கொப்பி, பென் சில் வேண்டிக் குடுக்காட்டி, கான் பள்ளிக்கூடம் போகமாட்டன் எண்டு நிற்கிறான்" என்றான் கோவிந்தன்.
இருவரும் தத்தம் வலைகளை தங்கள் குல தெய்வமான காரைநகர்ச் சிவனை நினைத்துக்கொண்டு வீசினர். கதரினா பீச் பக்கமிருந்து " டொம், டொம் ' என்ற பயங்கரச் சத்தம் வந்தது. ' கண்போட்டிலிருந்து அடிக்கிறாங்கள் ' சின்னவன் முணுமுணுத்தான். ' இண்டைக்கு என்னதான் அடிச்சாலும் ஏதா வது பிடிச்சுக் கொண்டுதான் போகவேனும் " கோவிந்தனின் மனம் இப்படிக் கூறியது.
தி. உதயசூரியன் S. So 9

Page 14
ஒருபுறம் கண்போட்டிலிருந்து காதுகளைப் பிய்க்கும் சத்தத் துடன் அடி, மறுபுறம் வலந்தலைச் சந்தியிலிருந்து துப்பாக்கிச்சூடு, ஆமிக்காரன் மீன்பிடிப்பவர்கள் எண்டு தெரிந்து கொண்டும் அடிக் கிறான்கள். இண்டைக்கு விடமாட்டான்கள் போலை கிடக்கு எண்ெ கோவிந்தன் கூறி வாய் மூடுவதற்குள் துப்பாக்கிச் சன்னம் ஒண்டு கோவிந்தனின் மார்பைப் பதம் பார்த்தது. "ஐயோ" என்ற குரல் வந்த பக்கம் பார்த்தான் சின்னவன். இரத்தம் பீறிட்டவாறு கோவித் தன் பாலத்துக்குக் கீழே கிடப்பதை அவதானித்தான். தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள் வந்தவண்ணமிருந்தது. கடலில் குதித்த சின்னவன், பாலத்தின் கல்லொன்றில் பிடித்தபடி சிறிதுநேரம் தொங் கினான். உடனடியாக கோவிந்தனின் உடலைத் துரக்கிக் கொண்டு செல்ல முடியாதவாறு ஷெல்களும் பொன்னாலைச் சந்தியை நோக்கி ஏவப்பட்டன.
கோவிந்தனின் உடலை சற்றுத் தூக்கிப் பார்த்தான் உடல் குளிர்ந்து கொண்டு போவதை சின்னவன் உணர்ந்தான். சகோ தர பாசத்தால் துடிதுடித்து அழுதான்.
சிறிது நேரத்தில் சத்தங்கள் ஒய்ந்தது. “பொடியை" எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு முகாமை நோக்கி நடந்தான்.
முகாம் அமளிதுளிைப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையி ால் சேறும், சகதியுமாய் இருந்த முகாமில் * பொடி" யை வைத் துச் செத்தவீடு நடத்த முடியவில்லை.
முகாமின் முன்னுக்கு இருக்கும் வீடு, பென்சனியர் பேரம் பலம் அவர்களுடையது. அந்த நாளையிலை அந்த ஏரியாவிலேயே பெரிய வீடு எண்டால் பேரம்பலம் வீடு ஒண்டுதான். பேரம்பலம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் முப்பது வருஷங்களுக்கு மேலாக ஸ்ரோர்கீப்பராக வேலை செய்து, நல்ல வெட்டுக் கொத்துடன் உழைச்சதால் கட்டிய வீடு அது.
பேரம்பலத்தாருக்கு இந்த அகதி முகாம் இதிலை இருக்கிறதே துப்பரவாய்ப் பிடிக்காத விசயம். அகதி முகாம் போடவெண்டு
10 ல் $ மாறாத மனங்கள்

வளவை வந்து பார்க்கேக்கையே தனது எதிர்ப்பைத் தெரிவித்த வர், அது சரிவரேல்லை.
அகதி முகாம் தலைவர் கதிரன், முன் வீட்டில் சார்மனைக் கதிரெக்கை கிடந்து கொண்டு சுங்கானை வாயில் வைத்து ரசித்து, ரசித்துப் புகைவிட்டுக் கொண்டிருந்த பேரம்பலத்தார் வீட்டை ஓடினான்.
9tus . . . . . . " H/S &GS) - ** அது நான்தான் ஐயா, முகாமிலை இருக்கிறனான்; முகாமிலை இருக்கிற கோவிந்தன் கடலிலை தொழில் செய்யப்போன இடத்திலை ஆவி சுட்டுச் செதி துப் போனான், முகாமுக்கை கால் வைக்க முடியாத அளவு சேறும், சகதியுமாய்க் கிடக்குது. அதுதான் . " அதுதான் என்ன சொல்லு . " ஒரு அதட்டு அதட்டினார் பேரம்பலம்.
* ஒரு கட்டில் தந்தியள் எண்டால் சவத்தை அதிலை வளத் தலாம். பிறகு வடிவாய்க் கழுவிப்போட்டுத் திரும்பத் தரலாம் எண்டு பார்க்கிறேன். "
“ என்னடா கேக்கிறாய்; எங்கையிருந்து, வந்து என்னைப் பார்த்து சவம் வளத்தக் கட்டில் கேட்கிறாய்; அவ்வளவு துணிவு தானே உனக்கு பேரம்பலம் துள்ளி விழுந்தார் கோபத்தினால்.”
கதிரன் அதிர்ச்சியடைந்தவனாய், 'ஐயா நான் கேட்டது பிழை தான் என்னை மன்னிச்சுப் போடுங்கோ " எண்டு விட்டு, மனதை எங்கையோ அலைய விட்டவாறு முகாமை நோக்கி நடந் தான்.
இங்கு நடக்கும் போராட்டத்தைச் சாட்டாகச் சொல்லிக் கொண்டு பல லட்சம் ரூபா செலவழித்து ஜேர்மணி, பிரான்ஸ், சுவிஸ், கனடா எண்டெல்லாம் போய் அகதி எண்ட முத்தினர குத்திக்கொண்டு தங்கடை பொருளாதாரத்தை வளர்த்துக் கொண் டிருக்கிற அகதிகள் போன்றவர்களா நாங்கள். ஊர்விட்டு ஊர் வந்து எத்தனை வடுச் சொற்களைக் கேட்டுக்கொண்டு இந்தக் குடிசைகளில் நாம் சீவியம் நடத்துகிறோம். கதிரனின் மனம் பல கேள்விகளைக் கேட்டுக் குழப்பிக் கொண்டது.
தி. உதயசூரியன் G G 11

Page 15
முகாமின் கோவிந்தனின் மனைவியும், மகனும் பிரேதத்தின் மேல் விழுந்து அழுது புலம்பிய வண்ணமிருந்தனர்.
வானம் மீண்டும் மந்தாரமாக இருந்தது. ஆங்காங்கே சிறு சிறு தூறல்கள் விழுந்தன. அந்த ஊரிலுள்ள பிரேத வண்டிலில் பச்சைப் பன்னாங்கில் கோவிந்தனின் உடல் மயானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
வானத்திலே திடீரென பேரிரைச்சலுடன் வந்த சுப்பர் சொனிக் வட்டமேதும் இடாமலேயே, வந்தவரத்தில் இரண்டு குண்டு களை இரக்கமின்றிப் போட்டுவிட்டுச் சென்றது. முகாமில் உள்ள மக்கள் அவலச் சத்தமிட்டனர். குண்டுகள் இரண்டும் பேரம்பலத் தார் வீட்டிலேயே விழுந்து வெடிக் து, சாய்மனைக் கதிரையில் படுத்திருந்த பேரம்பலம் துடிதுடித்து மரணமானார்.
பேரம்பலத்தாரின் பொடியை வளர்த்தக்கூட ஒரு கட்டிலை உருப்படியாக அந்த வீட்டில் எடுக்க முடியவில்லை. வீடும், தள பாடங்களும் சுக்கு நூறாகின.
பேரம்பலத்தின் பத்தினி அமராவதி ஒப்புகள் பல சொல்லி aypg) கொண்டிருந்தாள்.
சுப்பர் சொனிக், புக்காரா என்பன குடாநாடு முழுவதும் பரவலாகத் தாக்கிச் சத்தங்கள் கேட்டவண்ண மிருந்தது. எறிக ணைத் தாக்குதல்களும் நடந்த வண்ணமிருந்தன, அமராவதியின் அண்ணா வந்து பொடியை நேரத்துடன் எடுக்க நடவடிக்கை ஏத்ேதுக் கொண்டிருந்தார்.
பிரேதத்தை " ஹேர்ஸ் ' பிடித்துக் கொண்டு போக வேணு மெண்டு அமராவதி அடம்பிடித்தாள் அண்ணரோடு. அன்றைய பரவலான தாக்குதல்களால் எவரும் யாழ்ப்பாணம் போய் ஹேர்ஸ் ஒழுங்கு செய்ய முன்வரவில்லை, இறுதியில் பிரேத வண்டி லிலேயே கொண்டு செல்வதென்று முடிவெடுக்கப்பட்டது.
12 இ) இ மாறாத மாங்கம்

செத்த வீட்டில் இருந்தவர்கள் பேரம்பலத்தாரின் சாவைப் பற்றிப் பலவாறு விமர்சித்தார்கள். " ஆசை பிடித்த மனுசன், அனு பவிக்காமல் போட்டுது, இறிகேசன் டிப்பாட்மென்டிலை இருந்து அடிச்சுக் கொண்டு வந்து கட்டின விடு தானே உது ' பலரது வாய் இப்படி முணுமுணுத்தது.
இந்த ஊருக்கெண்டு பிரேத வண்டிலொண்டு செய்ய வெண்டு பதினைந்து வருஷங்களுக்கு முன்னர் ஊரிலை படலை படலையாய்த் திறந்து காசு சேர்த்துக் கொண்டு வரேக்கை பேரம் பலத்தார் சொன்னது " உங்களுக்கெல்லாம் வேற வேலை இல் லையா; நான் உதுக்குக் காசு போடமாட்டன், என்ரை " பொடி' உங்கடை வண்டில்லை போகச் சரிவராது; என்ரை நிலைக்கு உதிலை போறது தகுதியாயும் இராது; என்ரை பிரேதம் ஹேஸ்லை மரியாதையாகத்தான் போகும் ' என்று காசு போடாமல் விட்டவர்
முகாமிலை இருந்த கோவிந்தனின் பிரேதம் இறக்கப்பட்ட பின்னர், பேரம்பலத்தின் பிரேதத்தையும் அதே வண்டில் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி சென்றது.
வண்டிலுக்கு ஏழை, பணக்காரன் என்ற பேதம் ஏது?
கோவிந்தனின் மகன், மணி பள்ளிக்கூடம் போய் வழமை போல மூலையில் இருந்தான். அவனுக்கு சக மாணவர்களின் அர வனைப்போ, ரீச்சரின் அரவணைப்போ கிடையாது. ரீச்சர் மணி யைப் பார்த்து, “ டேய், உனக்குக் கொப்பர் இருக்கேக்கையே படிக்க வசதியில்லை. கொப்பி, பென்சில் ஒழுங்காய்க் கொண்டு வரமாட்டாய், இப்ப கொப்பரை ஆமிக்காரன் சுட்டுச் சாகடிச்சுப் போட்டான், இனியும் ஏன் இங்கை வந்து மினக்கெடுகிறாய்; வசதியில்லாத நீயெல்லாம் படிக்க ஆசைப்படக்கூடாது, இங்கை எங்கடை ஊர்ப்பிள்ளையன் படிக்க வந்திருக்கி துகள், நீ அவர் களையும் பழுதாக்கிப் போடுவாய். இப்படியே ரீச்சர் வாய் ஓயாது பொரிந்து தள்ளினார். மணியின் கண்களிலிருந்து சொட் டுச் சொட்டாக நீர் வழிந்து, பளுப்பு நிறத்திலிருந்த அவனது சேட்டில் விழுந்தது.
. உதயசூரியன் G. S 13

Page 16
மணி. பள்ளிக்கூடம், விட்டு அழுத கண்களுடன் முகாமிற் குள் நுழைந்தான்,
தாய் வலையில் இருந்த சிறுசிறு ஓட்டைகளைத் தைத்த வண்ணமிருந்தாள். மணியின் முகத்தை அவதானித்த தாய் ' என் னடா ஒரு மாதிரியாய். வாராய் வா, ரொட்டி கட்டு வைச்சிருக் கிறன், காலமையும் வெறு வயித்தோடை போனணி " என்று மணியைக் கூட்டிச் சென்றாள்.
ரொட்டித் துண்டை எடுத்து ஒரு கடி கடித்த மணி, "அம்மா, நான் இனிமேல் பள்ளிக்கூடம் போகமாட்டன். ரீச்சர் என்னை கொப்பி, பென்சில் கொண்டு வராமல் வரப்படாது எண்டு சொல் லிப் பேசிப்போட்டா. நான் படிக்கப் போறதாலை, தங்கடை ஊர்ப் பிள்ளைகளுக்குக் கரைச்சலாம் "
நான் நாளையிலை இருந்து அப்பா செய்த கடற்றொழில் செய்யப் போறன் . பிரச்சினை தீர்ந்து காரைநகருக்குப் போனப் பிறகு பழையபடி எங்கடை பள்ளிக்கூடத்திலை படிக்கப்போறன்
தாயின் கண்களிலிருந்து முத்து முத்தாய் நீர்த் துளிகள் விழுந்து தெறித்தன
14 S ஒ.- மாறாதமனங்கள்

5.
" உணர்வுகள் ஊசலாடுகின்றன”
நேரம் இரவு பத்து மணியென்றாலும் சாலை யில் பெரும் இரைச்சலுடன் வாகனங்கள் ஒடிக் கொண்டிருந்தன. ரொறொன்ரோ நகரின் பிர தான வீதியில் உள்ள " பிளற்ஸ் " (Fats) இல் 35 ம் தட்டிலிருந்து வீதியை கவனிக்க கலாவிற்கு வீதி வெளிச்சங்களின் பிரகாசத்தினால் கண்கள் கூசின. யாழ்ப்பாணத்திலிருந்து தனது மாமாவின் கடிதம் வந்த நாளிலிருந்து கலாவிற்கு மனதிற் குள் ஒருவித நெருடல். கடிதம் கிடைத்த நாளி லிருந்து கலாவின் பேச்சில் மாற்றம் இருந்ததை எல்லோராலும் அவதானிக்க முடிந்தது. கடந்த இரண்டு கிழமைகளாக அக்கடிதத்தைத் திரும்பத் திரும்ப எடுத்துக் கலா வாசிப்பாள். மாமாவும், குடும்பத்தினரும் அங்கிருந்து படும்பாட்டை அல சிப் பார்த்தாள். என்னுடைய மாமா குடும்பம் மட்டுமா! எத்தனை குடும்பங்கள் அங்கிருந்து அல்லற்படுகின்றன என்றது கலாவின் மனம்.

Page 17
கலாவின் தாய் பறுபதம், கலாவை இரவு சாப்பாட்டிற் காகக் கூப்பிட்டாள். " எனக்கு வேண்டாம் அம்மா, இன்றைக் குச் சாப்பாடு. ஒரு நேரம் சாப்பிடாது விட்டால் இப்ப என்ன குறைந்து போகப் போறேனோ என்றாள். கலா தொடர்ந்தாள் நாங்கள் இங்கே வந்து என்னத்தைக் கண்டு விட்டோம். எல்லாம் பகட்டு வாழ்க்கை. ஊரில் இருந்திருந்தால் எத்தனை சுகங்கள். எங்கடை ஊர், எங்கடை பள்ளிக்கூடம் என்று திரியும்போது எத்தனை மகிழ்ச்சி. இங்கு வந்து கடைசியாகக் கண்டது, எங் கடை தாய்மொழியையும் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்தது தான் ' என்றாள்.
கலாவின் பேச்சை அவதானித்த தாய் பறுவதம், இப்ப டியே விட்டால் மகள் தொடர்ந்து எல்லையை மீறிப் போய் விடுவாள் என்ற எண்ணத்துடன் குறுக்கிட்டு" என்ன உது கலா உன்னுடைய பேச்சு. நானும் கொஞ்ச நாளாய்ப் பார்த்துக் கொண்டு தான் வாறன்; உன்ரை பேச்சுவாக்கு அவ்வளவு நல்ல தாய்த் தோன்றேல்லை. நீ மூத்தவள் வடிவாய்ப் பேசினால்தான் மற்றதுகளும் உன்னைப் பார்த்து நடக்குங்கள், உனக்கு ஒண்டு சொல்லுறன் கலா நீ வயது வந்த பிள்ளை; நான் சொல்லி விளங்க வேண்டியதில்லை எண்டுநினைக்கிறன், இனிமேல் இங்கை வந்து என்னத்தைக் கண்டது என்ற பேச்சை மட்டும் எடாதை "' என்று பெருமூச்செறிந்தாள்.
பறுவதம் அந்த நாளையிலே ஏழாம் வகுப்பு வரைதான் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலை படித்தவள் என்றாலும், படிப்பில் கெட்டிக்காரி. தகப்பனின் விருப்பப்படி கையெழுத்துப் போடப் படிச்சால் காணும் என்று கூறி பறுவதத்தைப் பளிக்கூடத்தால் நிற்பாட்டிப் போட்டார். தன்ரை கணவன் ஊரைவிட்டு கனடா வுக்கு வெளிக்கிட்ட நாள் தொடக்கம் நாலு பிள்ளைகளையும் கட்டி அவிட்ட அனுபவசாலி. அத்தோடு, கொழும்புக்கு வந்து புருசனோடு ரெலிபோனில் கதைத்தாலென்ன, வெளிநாட்டுக் காசை மாற்றிக் கொண்டு ஊருக்கு வந்தாலென்ன, சகல வேலை களையும் தானே செய்து அனுபவப்பட்டவள். கணவன் 1982ம் ஆண்டு ஊரைவிட்டு வெளிநாடு போகும் போது தனது கடைசிப்
16 பி கு மாறாத மனங்கள்

பெடியனுக்கு ஆறு மாதங்களே. மூத்தவள் கலாவுக்கு பத்து வயது. காலத்துக்குக் காலம் தலைமாத்தி ஒவ்வொரு ஏஜென்சி யாய்ப் பிடித்து தன்ரை பிள்ளைகள் நாலையும் அனுப்பித் தானும் கடைசியாய்க் கனடா போய்ச் சேர்ந்த கதையை இப் பவும் சில வேளைகளில் கெட்டித்தனமாகப் பேசுவதுண்டு.
கடைசிப் பெடியன் கோபுவை அனுப்பும்போது வயது ஐந்து. கிறீன்லன்ட்ஸ் ஹோட்டலில் தானும், கோபுவும் இரண்டு மாதங்களாய் தவம் கிடந்ததும், அப்ப்ோது அங்கு கனடாவி லிருந்து வந்து நின்ற ஒருவரைப் பழக்கம் பிடித்துக் கோபுவை அவரின் பிள்ளையென்று தலைமாத்தி அனுப்ப ஒழுங்கு செய் யப்பட்ட பாடும், பின்னர் கோபுவுக்கு இவர் உன் அப்பா என்று * றெயினிங் ' கொடுத்தனுப்ப, பாங்கொக்கில் வைத்து துருவித் துருவி கேள்வி கேட்க, கோபு பயந்து, என்ரை அப்பா கனடா வில் இருக்கிறார் என்று தான் அம்மா சொல்லுறவ இவர் என் அப்பா இல்லை என்று உளற, கடைசியிலை பாங்கொக்கிலி ருந்து அடுத்த பிளைற்றிலை திருப்பி அனுப்பியதை மனதுக்குள் பறுவதம் அசைபோட்டுக் கொண்டாள். பிறகு, மற்றத்தரம் ஏஜென்சிக்கு காசுகட்டி வேறு " றான்சிற் (Transit ) " மூலமாக கோபுவை அனுப்பப்பட்டபாட்டை எண்ணிப்பார்த்தாள்.
கலா தாயின் பேச்சைப் பொருட்படுத்தாது தொடர்ந் தான். ' எங்கடை ஊரிலை பச்சைத் தண்ணியைக் குடித்துப் போட்டுச் சீவித்தாலும் பரவாயில்லை; இங்கை ஒரு இட்டுமுட் டுக்கை இயந்திர வாழ்க்கை நடத்திற மாதிரி இருக்கு. வெளியே வெளிக்கிட்டால் வெட்கக் கேடாய்க் கிடக்குது, அகதிகளாய் வந்த எங்கடை பெடியள், இங்கை வந்து, சந்தியிலை வந்து கத்திக்குத்து, அடிதடி சண்டை பிடிக்குதுகள். இங்கை பாருங்கோ. இண்டையான் பேப்பரை , பஸ்சுக்குள் போகவே எனக்குப் பய மாயிருக்கு. எங்கடை கலை, கலாச்சாரம் எல்லாத்தையும் விட் டிட்டு இங்கை நாங்கள் மேற்குலகில் கனவு காண்கிறோம். எனக்கெண்டால் இப்பவே ஊருக்கு போகவேணும் போலிருக்கு” என்றாள் கலா,
6. a.suesituar S. S. 17

Page 18
"இங்கை அப்பா, இவள் காை என்ன சொல்லுநாள் எண்டு கேளுங்கோவேன்; இவள் ஏதோ கலை, கலாச்சாரம் பற்றியெல்லாம் கனக்கக் கதைக்கிறாள். எனக்கெண்டால் ஒண் டுமே விளங்கேல்லை ” என்றாள் பறுவதம் கணவரைப் பார்த்து
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த தகப்பனின் மனதில் கலா கூறுவதில் உண்மை இருக்கிறது என்று உணர்ந் தவராய் ' கலா! நீ இப்படிப் பேசப்படாதம்மா ஏதோ அங்கை நடக்கிற சண்டை சச்சரவுகளாலை நாங்கள் இங்கை வந்து சேர்தி திட்டம் கடவுளே எண்டு பொருளாதாரத்திலையும் முன்னேறி விட்டம். படிப்பும் ஆங்கிலத்திலை படிக்கிறியள் தானே. நாங்கள் இங்கை நெடுக இருக்க வேண்டும் என்று இல்லையம்மா. அங்கை ஒரு சமாதானம் பிறக்க, நாங்கள் வேணுமென்றால் திரும்பிப் போய்விடலாம். எங்களுக்குத் தானே "கேசும்’ ஒ. கே. பண்ணி காட்டும் தந்திட்டினம் " என்று பறுவதத்தையும் பார்த்துப் பார்த்து மகளுக்கு கூறினார்.
தகப்பன் கூறி முடிக்கவும், கலா தகப்பனிடம் தனது உள் ளக்கிடக்கையைக் கூறிவிட்டு, ' நீங்களும் ஏன் அப்பா ஒர வஞ் சகமாய்க் கதைக்கிறீங்கள் " என்றாள். அப்பாவுக்குத் தெரியும் கலாவுடன் கதை கொடுத்துத் தப்ப முடியாதென்று. அதை வாய் விட்டுச் சொல்லியும் விட்டார் அப்பா, 'கலா! நீ உன்னுடைய பேரன் மாதிரி. அவரும் அந்த நாளையிலை உப்படித்தான் நிண்டு வாதாடுவார். தனக்குப் பிடிச்சது சரியெண்டு பட்டுவிட்டால் கடைசி வரைக்கும் யாராய் இருந்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டார். "" அப்பா! அப்படியொன்றும் புதிதாய் நான் சொல்லவில்லை. இங்கே நீங்கள் விளங்கியும் விளங்காதது போலப் பேசுவது விந்தையாக உள்ளது” என்றான்
" அங்கை சண்டை நடந்து கொண்டிருக்கும்போது எத் தனை ஆயிரம் மக்கள் சீவிக்கின்றனர். எவ்வளவு பேர் பலவித கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். போஜாக்கான சாப்பாடு, தேவையான வைத்திய சேவை இல்லாது கஷடப் படுகின்றனர்.
8 tort fors pair diad

எத்தனையோ பேரி ஷெல், விமானத் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்து,இருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி, அடுத்த நேரச் சாப்பாட்டைப் பற்றியே சிந்தித்தபடி அகதிகளாக வாழ் கின்றனர். அவர்கள் தான் உண்மையான அகதிகள் அப்பா, நாங்கள் எல்லாம் பணம் சம்பாதிப்பதற்காக கண்டம் விட்டுக் கண்டம் வந்த பேய்கள் அப்பா. போராட்டம் நடக்கும்போது அங்கு இருக்கப் பயந்து ஓடி மறைந்து வாழ்ந்து விட்டு,சமாதானம் வந்ததும் போகலாமென்பது சரியா அப்பா" என்றாள்கலா,
தகப்பனுக்குத் தலை சுற்றியது. கலா விடவில்லை. "ஐந்து வயதில் இங்கு வந்த தம்பி கோபு இப்ப தமிழ்பேசத் தெரியாது தத்தளிக்கிறான். அம்மம்மா கோபுக்குட்டி கடிதமாவது ஒன்று எழுதிப்போடு என்று எழுதுகின்றா அங்கிருந்து. ஆனால், C3Ֆո՞ւ வால் முடியுதில்லை. அவன் தொடர்ந்தும் இங்கு இருக்க வேண் டியவனா அப்பா! அவன் தொடர்ந்து இங்கிருந்தால் அவனது தாய்மொழி என்னாவது! தற்சமயம் வெளிநாட்டில் வாழும் எம் போன்றோர் தாய்மொழியை மறப்பது பற்றிச் சிந்திக்காமல் வாழ் கிறார்கள். ஆனால், இதன் விளைவு பின்னர்தான் விளங்கும் அப்பா. நீங்கள் கனடா வந்து பதின்மூன்று வருடங்களாகி விட் டது. இனி இங்கிருந்து பணம் சம்பாதித்தது போதும் வாழ்க்கை தடாத்த பணம் தேவை தான். ஆனால், பணம் ஒன்றையே வாழ்க்கையாக நினைத்து எமது பண்பாட்டை இழக்கக் கூடாது. நீங்கள் இங்கு வர முன்னர் புடவைக் கடையில் வேலை செய்து குடும்பத்தை ஒட்டவில்லாயா அப்பா எமது மண்ணில் கஷ்ட முறும் மக்களுடன் தாமும் சேர்ந்து கொள்வோம் அப்பா" என்
றாள் உணர்ச்சி வசப்பட்டவளாய் கலா.
சகலதையும் கேட்டுக் கொண்டிருந்த பழவதம் ' கலா! நீ உன் தலைமேல் மண் அள்ளிக் கொட்டப் பார்க்கிறாய் நீ படித்தவள் எல்லாவற்றையும் யோசித்துக் கதை என்றாள். நீ விரும்புகிறபடி ஊருக்குப் போவதென்றாலும் கொழும்பு வரை தானே போவாய்; கொழும்பிலிருந்து ஊருக்கு இப்ப போக முடி
தி. உதயகுரியன் S 9 19

Page 19
யுமா? இங்கே 24 மணித்தியாலமும் மின்சாரத்துடன் பழக்கப் பட்ட நீங்கள் அங்கு போய் என்ன செய்யப் போறிங்களோ " என்று நெஞ்சில் அடித்துக் கொண்டாள்.
கலாவுக்கு மேலும் தாயுடனோ அல்லது தகப்பனிடமோ பேச நா எழவில்லை. பதிலுக்கு அழுகை தான் வந்தது. என்னு டைய பெற்றோரைப் போலத்தானா வெளிநாட்டில் வாழும் எல்லோரும் பகட்டு வாழ்க்கையை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் காலையிலே வெளியில் சென்ற கலா மாலையே வீடு திரும்பினாள். தாய் கலாவுடன் பேச்சைக் குடுக்க முன்னரே, கலா தான் மூன்று நாட்களில் கனடாவிலிருந்து மொஸ்சோ வழியாக கே. எல் எம். எயர்லைன்ஸ்சில் கட்டுநா யக்கா பயணமாவது பற்றிக் கூறியது எல்லோருக்கும் அதிர்ச்சி யைக் கொடுத்தது.
20 S ஒற மாறாத மனங்கள்

4.
'தப்புத் தாளங்கள்"
குமார் சற்று நேரத்திற்கு, முன்பாகவே தனது இரவு வேலையை முடித்துவிட்டு வந்திருந்தான். பகல் முழுக்க அப்பிள் தோட்டமொன்றில் வேலை. அறையில் வந்து சமைத்துச் சாப்பிட்ட பின்னர் மீண்டும் இரவுக் கடமைக்கு ஒட்டம். படுக்கையில் வந்து படுத்தவனுக்கு நித்திரை வர மறுத்தது. ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக ஹோட்டலொன் றில் வேலை செய்துவிட்டு வந்த களைக்கு சிகரட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தவாறு சிந்தனை அலைகளை பலபக்கமும் சுழலவிட்டுச் சுருள்சுரு ளாக புகையை ஊதியபடி படுத்திருந்தான்.
குமார் மேற்கு ஜேர்மனிக்கு வந்து ஆறு வரு டங்களுக்கு மேலாகின்றது. திருமணமாகாதவன். சிகரட்டை ஊதி முடித்துவிட்டு லைற்றை ஒவ் பண்ணவும் "கிறிங் கிறிங்' என ரெலிபோன் மணி
அடித்தது.

Page 20
ரெலிபோனை வெறுப்புடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு றிசீவரை எடுத்தான். " ஐ ஆம் ஸ்பீக்கிங் பிறம் கலம்பு, ஐ வோன் ரூ ஸ்பீக் மிஸ்ரர் ராஜன் " என்ற குரல் ஆங்கிலத்தில் ஒலித்தது. குமாருக்கு ஆங்கிலம் தெரியுமென்றாலும் , * யார் நீங்கள் பேசு றது " என்று தமிழில் சற்று அதட்டிக் கேட்டான். ' ராஜனா பேசுறது ’ என்றது மறுபக்கத்திலிருந்து. ' ராஜன் வேலைக்குப் போய்விட்டார்; இன்னும் மூன்று மணித்தியாலத்திற்குப் பிறகே றுாமுக்கு வருவார்" என்றான் குமார். என்னுடைய நம்பர் 608755 தயவு செய்து ராஜன் வந்தவுடன் என்னுடன் கதைக்கும்படி கூறுங்கள் " என்றார் ரவிக்குமான்.
** சே! எங்கடை மணிசராலை எப்பவும் தொல்லைதான் கொஞ்ச நேரம் நிம்மதியாய் கண் அயரலாம் என்றால் ' கால் கள் படுக்கையை நோக்கி நகர்ந்தன.
குமார் படுத்தபடியே மீண்டும் ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தான். ' தம்பி ! புகைப்பிடிப்பது உடலுக்குக் கேே விளைவிக்கும், புகை பிடிப்பவன் எத்தனை நோய்களுக்கு உள்ள77 கின்றான்' என்றெல்லாம் தகப்பனார் கூறியவையை அந்நேரத் தில் நினைத்துப் பார்த்தான். ' இதுவும் இல்லையெண்டால் வேறு என்ன சுகமிருக்கிறது இங்கு ’’ இப்படிக் குமாரின் மனம் கூரிச் ச9ாதானம் செய்தது.
ராஜன் வந்தவுடன் விடயத்தைக் கூறவேண்டும் என்று நினைத்தவாறு படுத்த குமார் கண் அயர்ந்தான்.
* கோலிங் பெல் ' சத்தம் அடுத்து ஒலித்தது. சலிப்புடன் குமார் கதவைத் திறந்தான். ராஜனின் காலிலிருந்த சப்பாத்துக்கள் கட்டிலின் கீழ்போய்ச் சங்கமித்தது.
** ராஜன், ! உனக்கு ஒரு ரெலிபோன் கோல் வந்தது
கொழும்பிலிருந்து ' குமார் சொல்லி முடிப்பதற்குள்ளேயே ராஜன் குறுக்கிட்டு " என்ன கதைத்தார்கள், யார் கதைத்தது ?" என்றான்.
22 இற ஒற மாறாத மனங்கள்

* யாரோ, ரவிக்குமாராம்; மிகவும் உமக்கு வேண்டியவர் என்று ரெலிபோன் நம்பரைத் தந்தார். இந்தாரும் நம்பர். உம்மை வந்தவுடன் கதைக்கும்படி கூறினார் ** ராஜன் நம்பரைச் பார்த் தான். ** இந்த நம்பர் தானே எனது மூத்த மாமாவினுணடயது. ரவிக்குமார் ஏன் என்னுடன் ரெலிபோனில் கதைத்தார்; ராஜனின் மனம் இக்கேள்வியைக் கேட்டது.
வேலையினால் வந்த களை ஒருபுறம். ரெலிபோன் கோல் விவகாரம் மறுபுறம், ராஜன் ரெலிபோனடிக்குச் சென்று நம்பர் களை ஒவ்வொன்றாக அழுத்தினான். நம்பர் என்கேஜாக இருந்தது. மீண்டும் முயற்சித்தான் ராஜன்.
ரெலிபோனில் தனது முத்த-மாமனின் குரல் கேட்டது. நான் ராஜன் பேசுறன் மாமா, ஊரிலை இருந்து என்னுடைய நண்பன் 7விக்குமார் உங்கு வந்து நிற்பதாகவும், எனக்குப் போன் பண்ணி யதாகவும் எனது றுரம் மேற் கூறினார். அதுதான்."
* ரவிக்குமார் உன்னுடன் பேச வேண்டுமென்று இங்கு நிர் கிரார்தான். லைனிலை நில்லு. நான் கூப்பிடுறன்' என்றார் மாமா சற்றே வேண்டா வெறுப்புடன்.
ரவிக்குமார் மாமாவிடமிருந்து றிசீவரை வாங்கி "ஹலோ! ராஜனா. நான் ரவிக்குமார் பேசுறன். ’
" ஓம் நான் ராஜன்தான் பேசுறன். என்ன மச்சான் இருந் தாப்போல என்ரை ஞாபகம் வந்தது. எப்படி ஊர்ப்புதினங்கள்." என்று விடாது கதைக்கும்போது ராஜனின் மனம் 'ஏன் இவன். திடீரென என்னுடன் ரெலிபோனில் கதைக்க முற்பட்டான்' என்ற எண்ணம் மனதில் அலைமோதியது.
" இல்லையடாப்பா. சும்மா கனகாலம் உன்னோடை கதைக்
கேல்லை. அதுதான் " . ரவிக்குமார் ' அதுதான் . " என்று இழுத்தவிதம் ராஜனின் மனதை மேலும் சந்தேகப்பட வைத்தது.
G. D.SALus fuLuGår. SO SOM 23

Page 21
"டேய் ரவி! நீ பள்ளிக்கூடத்திலை படிக்கும்போதும் இப் படித்தான். நேராக எந்த விசயத்திலும் கதைக்க மாட்டாய். சுற்றி வளைத்துத்தான் எதையும் கதைப்பாய். பிளிஸ் ரவி, ஏதாவது ஊரிலை விஷேசமா, சொல்லடா . "ராஜன் அவசரப்பட்டான்.
“ சாஜன் நான் சொல்லப் போறதையிட்டு நீ என்னுடன் கோபிக்கக்கூடாது. நான் சொல்லுறதை நீ எந்தவித சந்தேகமும் கொள்ளாது நம்புவாய் என்றால் சொல்லுவன் இல்லையெண் டால்.” சொல்வி முடிக்குமுன்னரே " ரவி ஏன்ரா என்ரை பொறு மையைச் சோதிக்கிறாய். தயவுசெய்து கெதியாய்ச் சொல்லடா, நான் உன்னை நம்புறனடா பிளிஸ் രൂuഴ&?'
" உன்ரை குடும்ப விசயத்திலை தலையிடுறன் எண்டு குரை விளங்காதை ராஜன். உன்ரை மாரிசி விஜயாவைப்பற்றி ஊரிலை எல்லாரும் va) (973fugă கதைக்கிறார்கள். நாளுக்கு நாள் புதுப் 4சிக் கதைகள் வருகுது. எங்களோடை படிக்க மோகனுடன் அடிக் கடி வெளியிலை போய்வாறாளாம் விஜயா அத்துடன் அவளு டைய மனம் பாதிக்கப்பட்டிருக்கலாமென நினைக்கிறேன். அதுதான் * தான் உன்னுடன் படிக்கிற காலம் தொடக்கம் வைத்திருந்த உண் மையான நட்புக் காரணமாக இதை உனக்குத் தெரிவிக்க விரும் ü"Gau G?&ategöy வந்தனான். ? ?
ராஜனுக்கு தலைசுற்றி, உலகமே இருண்டு கொண்டு வருவது போல இருந்தது. * ரவி கொஞ்ச நேரம் லைனிலை நிற்கிறியா. கொஞ்சத் தண்ணி.தண்ணி குடிச்சிட்டு வாரன், !
* நீ மச்சான் ஆறுதலாய் றெஸ்ற் எடு இப்ப, பிறகு ஆறுத லாய் போன் பண்ணு. நான் இன்னும் ஒரு கிழமைக்குப் பிறகுதான் ஊருக்கு வெளிக்கிடுவன் "
குமார் ராஜனை அவதானித்துவிட்டு ' ஏன் ராஜன் ஒரு மாதிரி இருக்கிறீர்.' ஊரிலை யாருக்காவது சு கயினமா? அல்லது
ராஜன் மெளனமாகவே இருந்தான். ராஜனின் ‘மூட் மாறி யுள்ளதை அவதானித்த குமார் இப்ப குழப்பக் கூடாது என்று நினைத்துப் பேசாது விட்டான்.
24 650 6 மாறாத மனங்கள்

ராஜன் வழக்கமாக இரவு வேலையால் வந்து கைகால் கழுவி ஒரு ரீ குடித்த பின்பே படுப்பதுண்டு.
ஆனால் . ராஜன் படுக்கையில் அப்படியே சாய்ந்தான். அவனது யோசனை பல பக்கங்களுக்கும் சென்றது. தனது வாழ்க் கையில் பாடசாலை நாட்களிலிருந்து யோசிக்கத் தொடங்கினான்.
தன்னையும் விஜயாவையும் தன்னோடு படித்த சக மாணவ மாணவிகள் ஒன்று சேர்த்துக் கதைக்க ஆரம்பித்ததும், அதிலிருந்து உண்மையாகவே தனக்கும், விஜயாவிற்குமிடையில் காதல் அரும் பியதும், அது காலப்போக்கில் பாடசாலை முழுவதும் பெரிதாய் தெரியவந்து, கடைசியில் பாடசாலை மதிலில் எனது பெயரும் விஜயாவின் பெயரும் ' கொட்டை ' எழுத்துக்களில் எழுதப்பட்டு விமர்சிக்கப்பட்டதையும் எண்ணிப் பார்த்தான். அவ்வேளையில் தனிமையாக ஒருநாள் நாங்கள் இருவரும் சந்தித்துக் கதைத்தபோது " நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ, உப்படி எத்தனை எதிர்ப்பு வந்தாலும், நான் உங்களைவிட வேறு ஒருவரையும் திரு மணம் செய்யமாட்டன்’ என்று கூறியதையும் எண்ணினான். நான் உந்தியோகமாகும் வரைக்கும் எவ்வளவு காலமென்றாலும் தான் காத்திருக்கத் தயார் என்றும் கூறி விஜயா சொட்டுச் சொட்டாகக் கண்ணிர் விட்டதை எண்ணி, இது மாய்மாலக் கண்ணிரா என்ன? என்றது ராஜனின் மனம்.
திருமணம் முடித்து ஒரு மகனைப் பெற்ற பின்னர் நாட்டின் சூழ்நிலையைச் சாட்டாகக் கூறி வெளிநாடு போனால் பொருளா காரத்தை மேம்படுத்தலாம் என்று நான் வேலையைவிட யோசித்த போது, "ஐயோ அப்படி ஒன்றும் செய்யாதேங்கோ, உங்களை விட்டிட்டு எப்படி நான் தனிய இருக்கிறது" என்றெல்லாம் கூறிய விஜயாவா இப்படி நடந்தாள்.
அப்பொழுதுதான் தனது தாய் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதிய கடிதத்தின் அர்த்தம் புரிந்தது ராஜனுக்கு. " நீ எவ்வளவுக்குக் கெதியாய் இங்கு வர முடியுமோ அவ்வளவுக்குக் கெதியாய் வா’ என்று சூசகமாக தாய் எழுதியிருந்தாள்.
தி. உதயசூரியன் S $ 25

Page 22
வழமைபோல ராஜனால் அதிகாலையில் எழும்ப முடிய வில்லை. ராஜன் தூக்கத்தில் இருக்க குமாரே கோப்பி கொண்டு வந்து கொடுத்தான்.
ரெலிபோன் மணி அடித்தது, குமாரே எடுத்தான். ' ராஜன் உமக்குத்தான் *" என்றான்.
* ஹலோ . நான் இன்றைக்கு வரமுடியாது என்றும், சு கயினமாய் இருப்பதாகவும் " போனில் ராஜன் கூறினான்.
இன்றைக்கு வேலை அதிகம் இருப்பதாய் உடன்வருமாறு ராஜன் வேலை செய்யும் அப்பிள் தோட்ட முதலாளி போனில் கேட்டிருந்தார்.
" வெளிநாட்டவரைக் கொண்டு குறைந்த உளதியத்தில் வேலை செய்வித்துப் பழகி விட்டனர் " என்று ராஜனின் ம?ம் கூறிக் கொண்டது.
அன்று முழுவதும் ராஜனால் ஒன்றுமே செய்ய கைகால் ஏவ வில்லை .
குமாருக்கு சங்கதியைக் கூறினான் ராஜன். குமார் ராஜ்னிலும் பார்க்க வயதில் இளையவன். திருமணம் ஆகாதவன் இருந்தாலும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து சின்ன வய திலிருந்தே பல மேடு பள்ளங்களைக் கண்டு அனுபவப்பட்டவன். ராஜனுக்கு ஆறுதல் கூறினான்.
அன்றிரவு ரவிக்குமாரின் போன் வந்தது ரவிக்குமார் ராஜ னுக்கு ஆரம்பத்திலேயே ஆறுதல் கூறினான்.
* நான் கொஞ்ச விடயங்களைச் சொல்லுறன் ராஜன் நீ ஆறுதலாய் இவற்றைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரவேணும். நான் உன்னுடைய விட்டை போனகிழமை போனேன். என்னைக் கண்ட தும் ' விக்கி விக்கி ' அழத் தொடங்கினாள் உன் மனைவி. ஏன் அழு கிறியள் விஜயா என்றேன் மெதுவாக. பதிலுக்கு அழுகை கூடியதே ஒழிய நிற்கவில்லை.
உன்னுடைய அம்மா ( ஆச்சி ) மூலையில் இருந்த் படி ’இப் படித்தான் கொஞ்ச நாளாய் இருக்கிறாள். யார் என்ன கேட்டா லும் பதில் இல்லை. எதையோ நினைச்சுக் கொண்டு, சூனியத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். எனக் கெண்டால் ஒண்டும் விளங்கேல்லை மேனை' என்றாள்.
26 * 49 UDrprés pszy fisób

இருந்தாப்போல விஜயா வாய்திறந்து " வாழ்க்கை முழுவ தும் அழுது கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு வந்திட்டன் இந்த அழுகை பெரிசில்லை . " என்றாள்.
* ஏன் நீங்கள் வாழ்க்கை முழுவதும் அழவேணும். ?" நான் திருப்பிக் கேட்டேன். ' ஆண்கள் எல்லோரும் கலியாணத்தைச் செய்து போட்டு வருடக்கணக்காய் வெளிநாடு என்று போய் இருந் தால், பெண்கள் இங்கை எப்படி வாழ்வது." மடை திறந்த வெள் ளம்போல . வெட்டப்பட்ட நாடியிலிருந்து பீறிட்டுப் பாயும் குருதி போல அவள் பேசத் தொடங்கினாள். அதைச் ‘சுருக்கெழுத்தில்' எடுக்க முயன்றிருந்தால சுருக்கெழுத்தாளர் திணறியிருப்பார். அவ்வளவுக்கு பேச்சு வேகமாக இருந்தது ராஜன். வாழ்க்கை என் பது வெறுமனே பணத்தில் மட்டும் தங்கியில்லை. நீ ஜேர்மனிக்குப் போயும் எட்டு வருடங்களாகி விட்டது, இனி நீ உங்கிருந்து உ9ைத் தது போதும். தயவுசெய்து நீ உடன் நாட்டுக்குத் திரும்பு. எல்லாம் சரியாகிவிடும். இதுவே என்னால் சொல்லக்கூடியது' என்றான் ரவிக்குமார்.
ராஜனின் மாமாவும் ரவிக்குமாரின் புத்திகளை ஆமோதித்து ராஜனோடு போனில் கதைத்தார்.
ராஜன் படித்தவன். யாராவது புத்தி சொல்லும்போது கேட் கக் கூடியவன்.
ராஜன் திடீரென முடிவெடுத்தவனாய், "* ரவி, ஊருக்குப் போனவுடன் விஜயாவிட ம சொல்லு, இந்த மாதத்துக்குள்ளை நான் ஊருக்கு வந்து ஊரிலை தொடர்ந்து குடும்பம் நடத்தப் போவதாக ** அத்துடன் தனக்கு புத்திமதி கூறிய ரவிக்கும் நன்றி கூறினர்ன்.
ரவிக்குமாருக்குப் பெருத்த மகிழ்ச்சி. ரவிக்குமார் ஊருக்குப் போய் விஜாவிடம் ராஜனின் வருகை பற்றிக் கூறியபோது விஜயா வின் முகம் மலர்ந்தது.
ராஜன் பிளேனில் பிரயாணம் செய்தபோது, அவன் முன்னர் படித்த அறிஞர் அண்ணாவின் புக்தகத்திலுள்ள வரிகள் தான் ஞாப கத்தில் வந்தது. ஆனின் உயிர்ப்புச் சக்தியே பெண் தானே? அவள் கலகலப்பின்றி " முடங்கிப் போனோல் எல்லாமே முடக்கம் தான்" என்பது. இதனை மீண்டும மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டான்.
தி. உதயசூரியன் S (S 27

Page 23
S. "இரவல் கொள்ளி"
சின்றைய புதினப்பத்திரிகையில் இருந்த செய்தி பறுபதம் ஆச்சிக்குச் சந்தோஷமளித்தது. கடந்த மூன்று மாத காலமாக கொழும்பிலிருந்து அனுப் பப்படாத தபால் பொதிகள் கப்பல் மூலம் பருத்தித் துறைக்கு எடுத்து வரப்பட்டதாகவிருந்த செய் தியே பறுவதம் ஆச்சியின் மகிழ்ச்சிக்குரிய செய்தி. அன்றிரவு முழுவதும் பறுவதம் ஆச்சியின் நினைவு முழுவதும் அந்தக் கப்பல் பற்றியதே. எப்ப விடியும், எப்ப தபாற்காரன் தனது விட்டுப் படலையடியில் உளதுவான் என்ற எண்ண அலை களில் ஆச்சி அன்றிரவு முழுவதும் மிதந்து கொண்டு இருந்தாள்.
* பிள்ளைகள் தான் வெளிநாடு எண்டு போயிட்டு துகள். அதுகளின்ரை காபிதத்தையா வது இடைக்கிடை பார்த்தால் கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாய் இருக்கும். இந்த அறுவான்கள் கொழும்

பிலை இருந்து வார கப்பல்கள் எல்லாத்திலையும் அனுப்பினால் என்னவாம்’ இது ஆச்சியின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பைப் பின்னேரங்களில் அப்பப்ப ஒழுங்கையில் கூடும் மாநாடுகளில் ஆச்சி முன்வைப்பதுண்டு.
பறுவதத்தின் கணவன் சம்பந்தர் பாரிசவாத நோயினால் படுகையில் விழுந்து இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறது. உங் களை ஒருக்காப் பார்க்க அப்பா ஆசைப்படுகிறார் எண்டு பல தட வைகள் எழுதியும், பிள்ளைகளிடமிருந்து வரும் கடிதங்களில் அதைப்பற்றி எந்தவொரு நல்ல பதிலையும் காண முடியவில்லை.
இந்த முறை வரும் கடிதத்திலையாவது நல்லதொரு எதிர் பார்ப்பை ஆவலோடு பார்த்திருந்த பறுவதம் ஆச்சியின் வீட்டில் தபாற்காரன் விசில் ஊதும் சத்தம்கேட்டது.பறுவதம் ஆச்சி குசினிக் குள் செய்து கொண்டிருந்த கைவேலையையும் விட்டிட்டு ஒருவித 4/த்துணர்வுடன் தபாற்காரனை நோக்கி ஓடினாள்.
பறுவதம் ஆச்சி கடிதத்தைப் பெற்றதும், "இதென்னடா மோனை கடிதம் இரண்டு பக்கத்தாலையும் உடைச்சுக் கிடக்குது’ ஆச்சியின் கேள்விக்குப் பதிலைக் குடுக்க விரும்பாவிட்டாலும்; சயிக்கிளை மிதிக்கத் தொடங்கிய தபாற்காரன் விசயன் மற்றத் தரம் காலை ஊன்றிக்கொண்டு, 'ஏனணை ஆச்சி, உந்த ஊரில் புதினமெல்லயம் உனக்குத் தெரியும், இது மாத்திரம் தெரியாதே, எங்கடை அரசாங்கம் இப்ப கடிதங்களை உடைத்துப் பார்த்துத் தானே அனுப்பு/வினம். மேலும் விளக்கம் குடுக்கத் தொடங்கினால் கையில் அடுக்கி வைச்சிருக்கிற கடிதங்களைக் குடுத்து முடிச்சி பாடில்லை என்ற எண்ணத்துடன் விசயன் சயிக்கிளை மிதிக்கத் தொடங்கினான்
ஆச்சிக்கு உடைச்சபடி வாங்கின கடிதத்திலை திருப்தியின் லாமல் இருந்தது கடிதத்திலை வார நன்மைதீமைகளையெல்லாம் " தணிக்கை "" பண்ணியே அயலட்டைக் கெண்டாலும், இனசனத் துக்கு எண்டாலும் கூறுவது வழக்கம். உடைச்சிருந்த கடிதத்தை யார், யார் வாசித்தார்களோ என்று கிலேசத்துடன் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினாள்.
5. e-squgsfusif S & 29

Page 24
கடிதத்தைக் வாசிச்சுக் கொண்டிருந்த ஆச்சியின் செவி களில் சம்பந்தரின் முணுமுணுக்கும் சத்தம் கேட்டது. " கொஞ்சம் பொறுங்கோ "கனடாவிலை இருந்து உங்கடை மகன்ரை கடிதம் தான் வந்திருக்கு, வாசிச்சுப் போட்டுச் சொல்லுறன் என்ன எழு தியிருக்கிறானெண்டு",
சம்பந்தருக்கு கண்பார்வை குறைந்திருந்ததால் கடிதத்தை யாவது படிக்கும் பாக்கியம் இல்லாதவர். பநுவதம் ஆச்சி (1997 காலத்து ‘காந்திக் கண்ணாடி" ஒன்று வைச்சிருக்கிறா. அதைக் கொண்டு எதையும் வாசிக்கப் பழகிக்கொண்டுள்ளா.
மனதில் பொங்கிய உணர்வுகளின் மேலீட்டால் மீண்டும் சிம்பந்தர் "உதை ஒருக்காப் பிலத்துப் படியனனை' என்றார்.
ஆச்சி கடிதத்தில் சாராம்சத்தைச் சொல்லத் தொடங்கி னாள் ' உங்கடை மகனுக்கு இப்ப தானம் "கேஸ்" (Case) cyptp (65 சிருக்காம்'. இப்போதைக்கு இலங்கைக்கு வார தெண்டது முடி யாத காரியமாம். தான் உங்கடை சொல்லைக் கேட்டு இங்கை வந்ததால், கடைசியிலை இவ்வளவு காலமும் ஜேர்மனியிலையும் கனடாவிலையும் நாயாய் அலைஞ்சதிலை பிரியோசனம் இல்லை.
too.
சம்பந்தர் குறுக்கிட்டு, அப்பவும் நான் உனக்குச் சொன்ன னானெல்லே, உவன் ஏன்- 'குரங்கு குட்டிகளையும் காவிக் கொண்டு திரியிறது போல ' இருந்ததுபோல இருக்காமல் ஜேர்மனியிலை இருந்து கனடாவுக்கு எண்டு வெளிக்கிட்டவன் ஜேர்மனியிலை கடவுளே எண்டு நல்லாய் உழைச் சவன், இப்ப கனடாவுக்குப் போனாப்பிறகு எந்தக் கடிதத்திலையும் பஞ்சம் கொட்டி எழுதுறான். அகதி அந்தஸ்தோடை போனால், போன இடத்திலை ஏதோ பிழைத்துக்கொண்டு இருக்கிற துக்கு, நேரத் துக்கு நேரம் இடம்மாறிக்கொண்டு திரியிறதே, அங்கை கனடா விலை என்ன அகதியாய் இல்லாமல் வேறையாவே வைச் சிருக்கர் போகினம்! பத்து வருஷத்திற்கு மேலை ஜேர்மனியிலை இருந்த வனுக்கு, இப்ப ஏன் கனடா எண்ட மோகம் வந்தது. மனிசிக்காரி' யின்ரை சகோதரங்கள் அங்கை இருக்கினம் எண்டு மனிசி மனதை
30 6 G மாறாத மனங்கள்

மாற்றிக் கொண்டு போட்டாளோ.." இப்படியே சம்பந்தர் பேச இயலாத வேளையிலும் தைரியமாகப் பேசிக் கொண்டே போனார்.
பறுவதம் ஆச்சிக்கு இளைய மகனைக் குறை கூறுவது பிடிக்காத விசயம். தனக்குக் கொள்ளி வைக்கிற பிள்ளையெண்டு பாசம் அதிகம். இஞ்சை இருக்கேக்கையும் இளையமகன் சுந்தரத் துக்குத் தான் தன்ரை பிள்ளையெண்டு பிடிச்ச பிடிச்ச மாதிரி எதை யும் செய்வாள்.
இந்த வயதுபோன நேரத்திலை பெற்றோரைப் பார்க்க வேணும் எண்ட எண்ணத்திலை ஊரைவிட்டு அசையாது, பேருக்கு கவுண்மேந்து உத்தியோகம் எண்டு யாழ்ப்பாணத்துக்கு ஊரிலை இருந்து சையிக்கிள் அடிச்சு வாற மூத்த மகன் லிங்கத்தைப் பற்றி பறுவதத்திற்கோ அல்லது சம்பந்தருக்கோ கரிசனை இல்லை. போன மாதம் ஏதோ வீட்டிலை பொருளாதாரக் கஷ்டம் வந்து கறிபுளிப் பாட்டிற்கே கையிலை காசு இல்லாமல் தவிக்கேக்கை " உங்க ளாலை தானே நாங்கள் இங்கையே ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டியிருக்கு இல்லையெண்டால் நானும் என்ரை குடும்பத்தை யும் கூட்டிக்கொண்டு கனடாவுக்குப் பறந்திருப்பன் எண்டு கூற, நீயும் கனடாவுக்குப் போய்த்தான் இருப்பாய்; உன்ரை பென்சன் உத்தியோகத்திற்காகப் பார்த்துக் கொண்டு இருக்கிறாய் ' எண்டு தகப்பன் சொன்னதை லிங்கம் மறக்கவில்லை. பறுவதம் இந்த வய சிலையும் ஊருக்கை வட்டிக்குக் குடுத்து வாங்கிக் கொள்ளுவாள். ஆனால், ஒரு சதமும் கஷ்டப்படுகிற மகனுக்குக் குடுக்க சாட்டாள்"
சாதாரண காலமெண்டால் நான் ஒருவரையும் எதிர்பாாக்க மாட்டன். இப்ப போராட்ட காலமெண்டதாலையும், பொருளாதா ரத் தடையெண்டதாலையும் சாமான்கள் நான்கு மடங்கு விலை ஏற்றம், மாதம் மூவாயிரம் எடுத்து பன்னிரண்டாயிரம் செலவு செய்ய வேண்டிக்கிடக்கு. இதுகள் ஆருக்கு விளங்கப் போகுது தகப்பனின் இளைய மகன் பற்றிய பேச்சுக்கு லிங்கத்தின் மனம் அடுத்த அறைக்குள் இருந்து இவ்வாறு கூறியது.
" இராணுவ நடவடிக்கைகளால் எங்கடை ஊருக்கையே எத்தனை ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வந்து பெரிய கஷ்டப்

Page 25
பட்டு வாழுதுகள். இவர்கள் தான் உண்மையில் அகதிகள். இஞ் சையிருந்து வெளிநாட்டுக்குப் போய் அகதி எண்டு முத்திரை குக் திக் கொண்டு, பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொண்டு, வாழுபவர்கள் அகதிகளா" ! லிங்கம் தன்னையும் அறியாமல் கூறிய வார்த்தைகள் சம்பந்தருக்கு காதுகளில் விழாமலில்லை.
அடுத்து நாளும் தபாற்காரனின் விசில் சத்தம் பறுவதம் ஆச்சிக்குத் தென்பூட்டியது. " என்னணை ஆச்சி ஒவ்வொரு நாளும் உனக்கு வெளிநாட்டுக் கடிதம் வருகுது" இது தபாற்காரன் விச யனின் கிண்டல்,
உன்ரை கண்பட்டது போ என்று கூறியவாறு ஏற்கனவே உடைபட்டுக் கிடந்த மகளினது கடிதத்தை எடுத்துப் படித்தாள் நாங்கள் பிரச்சனை தீர்ந்தாலே ஊருக்கு வரலாம் என்று எழுதப் பட்டிருந்தது, பேரப்பிள்ளைகளைக் கடிதம் எழுதுங்கோ, பேரப்பிள் ளைகளின் கடிதத்தைப் பார்க்க ஆசையாகவுள்ளது என்று எழுதிய *ற்கு அங்கிருந்து பேரப்பிள்ளைகள் எழுதிய ஆங்கிலக் கடிதத்தைக் கண்டதும் ஆச்சி முணுமுணுக்கத் தொடங்கினாள். 'இந்த ஊரை விட்டு இங்கிலீசுக் காறன்ரை ஊருக்கு வெளிக்கிட்டது உதுக்குத் தானாக்கும். ' தன்ரை தாய்மொழியையே மறக்கும் அளவுக்கு எங்கடை பிள்ளைகுட்டியள் சீரழியிறதை ஆச்சி இங்கிருந்த வாரே கடிதத்தை வைத்துக் கொண்டு ஊகித்துக் கொண்டாள். இஞ்சத்தைக் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலை நாலாம் வகுப்பு வரை படிச்சாலும் அது படிப்புத்தான். இது என்னடா வெண்ால். ஆச்சி யின் தமிழ் உணர்வு மனத்திலிருந்து பிறீட்டுக் கொண்டது.
சம்பந்தர் படுக்கையில் கிடந்தவாறு பிள்ளைகளின் வருகை யைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கினார். நான் இனி எழுந்து நடமாடக்கூடிய ஆளா .. நான் இரக்கு முன்னர் பிள்ளைகளைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா . சம்பந்தரின் எண்ண அலைகள் மனதை அலைக்கழித்தது. நாட்கள் செல்லச் செல்ல பிள்ளைக ளைப் பற்றியே மனதைவிட்ட சம்பந்தரின் நோய் மோசமாகிக்
கொண்டு போனது .
32 G G மாறாத மனங்கள்

தகப்பனின் நிலையை நாளடைவில் உணர்ந்த மூத்த மகன் லிங்கம். அவசரமாக ஒரு கடிதம் எழுதி கிளாலிக்காலை போகும் ஒரு நண்பன் மூலமாகக் கொழும்பில் போடும்படி கொடுத்து விட்டான்.
"அப்பாவுக்கு உங்கள் இருவரையும் பாராது சீவன் போகாது; கடைசிக் காலத்தில் பாரிசவாத நோயில் படுக்கையில் இருக்கும் அப்பாவுக்குப் படுக்கைப் புண்ணும் வந்து வாட்டுகிறது. 9ே44மானால் ஒருமுறை வந்து அப்பாவையும், அம்மாவையும் 'ார்த்துச் செல்லுங்கள். இதுவே உங்கள் பெற்றோருக்குச் செய் யும் கைமாறு’ என்று லிங்கம் குறிப்பிட்டிருந்தான்.
இந்தக் கடிதத்தை வாசித்த சுந்தரம் அங்குள்ள தனது சகோ தரியிடமும் கடிதத்தைக் காட்டினான். இருவரும் தங்களது இளமைப் பராயம் பற்றிப் பேசிக் கொண்டனர். தங்களை வளர்க்க பெர் றோர் பட்டபாட்டைப் பற்றிப் பேசிய போது சுந்தரத்தின் கண் களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன.
அம்மன் கோவில் திருவிழா 25 வருடங்களுக்கு முன்னர் நடந்தபோது அப்பா தன்னைத் தூக்கிக் கொண்டு போய் காவடி காட்டிய காட்சி மனதில் உருண்டு ஒடியது. அப்போது சுந்தரத்திற்கு வயது ஐந்து. " நான் வயக வந்து பாயில் கிடக்கும்போது நீ தூக்கிப் பார்ப்பியாடா" என்று தன்னைப் பார்த்துக் கேட்டது நினைவிற்கு வந்தது ,
இந்த வேளையில் எனது நன்மைகளையும், ஆடம்பர வாழ்க் கையையும் பார்த்துக்கொண்டு இருப்பது கூடாது. கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களாகிய நாம் எமது ஆன்மாவை விற்றுவிட்டு தனிப்பட்ட முறையில் எங்கு போயும் நன்றாக வாழலாம் என்ற சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது சரியா . என்று சிந்தித்தான். W
ஒரு முடிவுக்கு வந்த சுந்தரம் சகோதரியிடம் " " நான் வார
மாதம் ஊருக்குப் போகப்போறன். படுக்கையிலை கிடக்கிற அப் பாவைப் பார்த்திட்டு வரப்போரன்’ என்றான்.
(தி, உதயசூரியன் S இ:ே33

Page 26
வெள்ளைக் கடதாசியில் நீலமையின் உதவியுடன் வீட்டிற் குக் கடிதம் எழுதத் தொடங்கினான். " நான் வாரமாதம் முதல் கிழமையில் கொழும்பு வருகிறேன்; அண்ணா வந்து என்னை ஊருக்குக் கூட்டிச் செல்லவும்"
கடிதம் கொழும்பிலுள்ள உறவினர் ஒருவருக்கு அனுப்பப் பட்டு, யாழ்ப்பாணம் செல்லும் இன்னொருவர் மூலமாக அனுப்பப் O.C.-3.1.
கடிதத்தைப் படித்த பநுவதம் ஆச்சி மகிழ்ச்சியின் எல்லை யில் காணப்பட்டாள் சம்பந்தர் மகனின் வரவையறிந்து புன்முறுவல் சிட்ம்ே பூத்தார். அவ்வளவுக்குச் சம்பந்தரின் உடல்நிலை மோச மாகிக் கொண்டிருந்தது.
லிங்கம் ஒரு கிழமை லீவுடன் கொழும்பை நோக்கிப் புறப் படும்போது, " மோனை லிங்கம் உன்ரை தம்பியைக் கவனமாய் இங்காலை கூட்டியந்திடு ’ சம்பந்தர் அனுங்கி அனுங்கி விடை கொடுத்தார். ノ
லிங்கம் கொழும்பு போய்ச் சேர்ந்ததும் தம்பியாருக்கு ரெலி போன் மூலம் வருகை பற்றித் தகவல் கொடுத்தான். பெற்றோரின் நிலை, ஊர்ப்புதினங்கள் யாவற்றையும் சகோதரங்கள் ஆவலுடன் கேட்டறிந்தனர்.
நாளைய மறுதினம் புறப்படும் கே. எல். எம். பிளைற்றில் கட்டுநாயக்கா வருவதாக "புக்? பண்ணியிருப்பதாகவும் விமான நிலையத்திற்கு வாகனம் கொண்டு வரும்படியும் கூறினான் சுந்தரம். அன்று மதியம் வெள்ளவத்தையில் லிங்கம் நின்ற வீட்டிற்கு 8. சி. ஆர் சி. வாகனம் ஒன்று வந்து 1 கிரீச் " என்று பிறேக் பிடித்து நின்று, ஒரு செய்தியைத் கொடுத்துவிட்டுச் சென்றது. செய்தியில் சம்பந்தர் எக்ஸ்பயட் பியூனரல் ருக் பிளேஷ்" என்று இருந்தது.
லிங்கத்தால் துயரத்தைத் தாங்க முடியாது கண்களிலிருந்து நீர் வழிந்து கன்னங்கள் வழியாக ஓடியது. இரண்டு ஆம்பிளைப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தும், கடைசியிலை இரவல் கொள் ளியா " அப்பாவுக்குக் கிடைத்தது. லிங்கம் வெள்ளவத்தை யிலுள்ள ரெலிபோன் பூத்தை நோக்கிச் சென்று சுந்தரத்திற்கு விசயத்தைச் சொல்லும்போது குளறி அழவேண்டும் போலிருந்தது.
34 (2 S மாறாத மனங்கள்

6 காலத்தின் தேவை
இராசனுக்கு நித்திரையே வரவில்லை. திரும் பித் திரும்பிப் படுத்துப் பார்த்தான். ஆனால், நித்திராதேவி இராசனை அணைக்க மறுத்தாள். சுவரில் மாட்டப்பட்டிருந்த மணிக்கூடு பதினொரு முறை அடித்து நேரத்தைப் பறைசாற்றியது. இராசனுக்கோ அன்றைய தினம் நடந்த சம்ப வத்தை மறக்கவே முடியவில்லை. இவற்றையெல் லாம் பெரிதாய் எடுத்து மனதைக் குழப்பக் கூடாதென்று தனக்குத்தானே சமாதானம் கூறி யும் பார்த்தான் பொது நோக்குடன் ஏதாவது ஊருக்கு நல்லதாய்ச் செய்ய வேணும் என்று இறங்கி விட்டால் இப்படியும் பேச்சுக்கள் கேட்க வேண்டி வருந்தான் என்று முன்னைய சனசமூக நிலையத் தலைவர் கடந்த பொதுக் கூட்டத்தில் கூறியது இராசனுக்கு ஞாபகம் வந்தது.

Page 27
இராசன் தன்னுடைய கிராமத்தின் மத்தியில் இயங்கும் சனசமூக நிலையத்தின் தலைவர். இராசன் பொறுப்பெடுத்த நாளிலிருந்து இவனது திறமையினாலும் ஊக்கத்தினாலும் திறம் பட இயங்குவது எல்லோராலும் நல்லாய்க் கதைக்கப்படுகிற விசயந்தாள்.
அன்றைய தினம் இராசனும், நிர்வாகத்தினரும் தங்களது நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானித்தவாறு தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் கொலரா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இறங் குவதென்று வெளிக்கிட்டனர். சந்தியில் இருக்கும் மூன்று தேநீர்க் கடைகளுக்கும் இராசனும், நிர்வாகத்தினரும் போனார்கள்
கடைக்கு முன்னால் கொட்டை எழுத்துக்களில் "பியூற்றி கபே " என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் கடையும் " பியூற்றி ' யாகத் தெரியவில்லை, அங்கு வேலை செய்பவர்களும் " பியூற்றி" யாகத் தெரியவில்லை; ஆனால், சாப்பாடு. முதல் கடைக்கு முன்னால் அப்பச்சட்டிக்கு மேலால் சுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்தது நெருப்பு. அப்பச் சட்டி முன் நின்று அப்பம் சுடுபவர் கையில் சிறுபீடித் துண்டு காணப்படுகிறது. " ஏன் அண்ணை! இப்படியெல்லாம் செய்கிறியள்! ஒரு கையிலை பீடித்துண்டும் மற்றக் கையிலை அப்பத்தையும் எடுப்பது சரியோ! நீங்களே கொஞ்சம் யோசித் துப் பாருங்கோ' அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே சுற்றிவர நின்று அப்பம் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் சுடச் சுட ஒவ்வொன்றாய் கொத்திக் கொள்கின்றனர்.
அங்காலை பார்த்தால் பாண் வியாபாரம் வலு அமளி யாய் நடந்து கொண்டிருந்தது ' சாமி அண்ணை, உந்தப் பாணையாவது அலுமாரிக்குள் வைத்து விற்றால் என்ன? " என் றான் நிலையச் செயலாளர் துரை. " ஆரது தம்பியவை! எப்ப தொடக்கம் உந்த உத்தியோகம்! எங்கடை வேலை எங்களுக்குப் பார்க்கத் தெரியும், நீங்கள் உங்கடை வேலையைப் போய்ப் பாருங் கோவன். உங்களுக்கெல்லாம் வேறை வேலையே இல்லையோ'
36 SO (G) uorrspnr 5 uDavši saîr

என்றான் முதலாளி சாமி. இராசனுக்கும் துரைக்கும் ம்ற்றும் அங்கத்தவர்களுக்கும் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வந்தது.
கோபத்தை அடக்கியவாறு, " அண்ணை நாங்கள் உங் களை ஒண்டும் செய்ய இங்கை வரேல்லை; நாங்கள் தன்மையா கத்தானே கேட்டனாங்கள். இப்படியெல்லாம் நீங்கள் செய்கிறது சரியில்லையென்று வாந்திபேதி நோய் இப்பேற்பட்ட வேலைக ளாலை தான் பரவுதண்ணை. ஒவவொரு நாளும் பேப்பரிலையும் வருகுதெல்லோ இதுபற்றி. அங்காலை ஒரு பக்கம் ஷெல் அடி யாலையும் சாகுது சனங்கள். நீங்கள் என்னெண்டால் கொலரா வையும் கூப்பிடுகிறது எண்டு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறியள். நாங்கள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர். எங்கடை ஊரிலை இப்படியான நோயைப் பரவவிடாது பார்க்க வேணும் எண்டு தான் இண்டைக்கு நாங்கள் வெளிக்கிட்டனாங்கள். நீங் கள் வேணுமெண்டால் இப்படி வந்து நாங்கள் கேட்பது பிழை யோவெண்டு யாரையாவது கேட்டுப் பாருங்கோ " என்றான்
இராசன்.
* நீங்கள் உப்படியே தொடர்ந்தும் நடந்தால் கொலரா இங்கையும் வரப்போவது நிச்சயம் அண்ணை உங்கடை கடைக் குப் பின்னாலை எவவளவு அழுக்குத் தண்ணீர் தேங்கி நிக்கிது. உங்களுக்கு கஷ்டமெண்டால் சொல்லுங்கோ அண்ணை நாங்கள் இதை வெட்டித் துப்புரவாக்கித் தாறம்" என்றான் செயலாளர்
துரை .
""முந்தநாள் உங்கை பிரதேச சபையிலை நடந்த கொலரா தடுப்புச் சம்பந்தமான கூட்டத்துக்கு வந்தனிங்கள் தானே. அப்ப அவர்கள் விளக்கமாக எல்லாம் சொல்லக் கேட்டுக் கொண்டு இருந்தனிங்கள். உங்களுக்கு இதுபற்றி ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் சொல்லலாம் எண்டு பி. எச். ஐ கேட்க வாயை மூடிக்கொண்டு இருந்து போட்டு, இப்ப நீங்கள் இப்படியெல்லாம் செய்யிறது சரியில்லைப் பாருங்கோ ' என்றனர். சனசமூக நிலைய நிர்வாக அங்கத்தவர்கள் ஒருமித்தவாறு.
தி. உதயசூரியன், S 9 37

Page 28
" உது மாத்திரமே அண்ணை உங்கை பாருங்கோ. உநீ தத் தண்ணி. வாளிக்கை என்ன கிடக்குதெண்டு உதை மூடி வைக்கப்படாதே அண்ணை "என்றான் இராசன்.
" தம்பியவை இனிக் கதையாதேங்கோ " என்றான் முத லாளி. எங்களுக்குத் தெரியும் எல்லாம் சரிவரச் செய்ய எங் கையோ கொலராவாம். இங்கை வந்திட்டினம் முந்தநாள் முனைச்ச முளையான்கள், தயவுசெய்து இனி ஒண்டும் சொல்ல வேண்டாம் "என்றான் எரிச்சலுடன் முதலாளி. இவர்கள் நின்று கதைப்பதனால் தனது வியாபாரம் கெடுகிறது என்று நினைத் தவாறு.
சனசமூக நிலைய நிர்வாகத்தினர் இனியும் நின்று கதையை வளர்த்தால் வீண் வம்பு ஆகிவிடும் என்று எண்ணி, நேரே சன சமூக நிலையம் வந்து சேர்ந்தனர். நடந்த சம்பவத்தைப் பற்றிச் சகலரும் பலவிதமாக கருத்துப் பரிமாறிக் கொண்டனர். “இந்த விடயத்தை இப்படியே விட்டால் இங்கு சனசமூக நிலையம் நடத்துவதில் என்ன அர்த்தம்'என்றான் செயலாளர். இதற்கான பரிகாரம் காண நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் உடனடியாக, நடந்த சம்பவத்தை விளக்கி பிரதேச சபை நிர்வாகத்தினருக்கு, எழுதி, இங்கே இயங்கும்தேநீர்க் கடைக்காரர்களை திருத்த ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
அன்று நடந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் அசை போட்டபடி இராசன் அன்றிரவு, முழுவதும் நித்திரையின்றி விழித் திருந்தான். சீ! இப்படியும் மனிதர்களா! நாம் எதுவும் முதலாளி மீது கசப்பாய் கூறவில்லையே; தன்மையாகவும், அன்பாகவும் தானே நிலையை விளங்கப் படுத்தினோம். தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் கொலராவின் தீமை பற்றி விaங்கக் கூடிய எவரும் இப்படிச் செய்யமாட்டார்கள் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
38 இற S மாறாத மனங்கள்

அடுத்த நாள் காலை சனசமூக நிலையத்தின் நிர்வாகத் தினர் தங்கள் பகுதியிலுள்ள இரண்டு இடம்பெயர்ந்தோர் முகாம் களுக்கும் சென்று, அங்குள்ள மக்களுக்குக் கொலராவை வரவி டாது தடுக்க நாம் எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறினர். இரண்டு முகாம்களிலும் உள்ள கிணறு களுக்கு குளோரின் போடப்பட்டது " ஏன்? தம்பி உதைப் போடு றியள்" என்கிறது முகாமில் இருக்கும் ஒரு ஆச்சியின் குரல். * ஆச்சி உதனை வயித்தாலை அடி எல்லா இடமும் பரவுதாம்: அதைத் தடுக்க தண்ணீரிலுள்ள கிருமிகளை இல்லாமல் பண்ண மிருந்து போட்டனாங்கள். சில மணித்தியாலங்களுக்குப் பிறகு நீங்கள் தண்ணிர் எடுத்துப் பாவிக்கலாம்" என்றான் நிர்வாகத் தினரில் ஒருவன். ஆச்சியும் * அது நல்லது தான்" என்பது போலத் தனது தலையை ஆட்டிக் கொண்டாள்.
இராசனுக்கும் நிர்வாகத்தினருக்கும் அன்றைய தினம் மன தில் பெரும் மகிழ்ச்சி, எமது சனங்களில் சொல்வதைக் கேட்டு நடக்க ஒரு சிலராவது இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை யிட்டு, முதல் நாள் நடந்த கசப்பான அனுபவத்திற்கு அடுத்த நாள் சம்பவம் சந்தோஷத்தைக் கொடுத்தது.
வழக்கமாக சனசமூக நிலைய நிர்வாகத்தினர் மற்றும் வயதான அப்புமார் அந்திசாயும் வேளையில் முன்றலில் கூடுவது வழக்கம். தினமும் நடக்கும் புதினங்களை அலசுவதுதான் வேலை. அன்றைய தினம் நிலையத்தின் போசகரும் சேர்ந்து கொண்டார். தலைவர் போசகரிடம் யாவற்றையும் விளங்கப் படுத்திச் சொன்னான். போசகர் பெரியதம்பி ஊரிலை ஒரு பெரிய மனுசர். அந்த நாளையிலை லண்டன் மெற்றிக்குலேசன் பாஸ்பண்ணி, வெள்ளைக்காறன்ரை அரசாங்கத்திலை சிறாப்ப ராய் வேலை செய்தவர். நல்ல அனுபவசாலியும் கூட. 'தம்பி யவை நீங்கள் செய்கிறதொண்டு நல்ல தொண்டு. உப்பிடியான ஒரு சிலரினது நடத்தைகளைப் பார்த்துச் சேவை செய்யவெண்டு முன் வைத்த காலை பின்வைக்கக் கூடாது. அதுவும் இப்ப போராட்டம் ஒண்டு நடக்குது; இந்த தேரத்திலை சனசமூக
S. a sue fugir, ; 6 So 39

Page 29
நிலையம் போன்ற பொது அமைப்புகள் வடிவாய் இயங்க வேண் டும். நீங்கள் மனதை தளர விடாதேங்கோ" என்று அடுக்கிக் கொண்டே போனார்.
“அது சரி ஐயா! நீங்கள் செர்ல்லுறதை ஏற்றுக் கொள்ளு றம்; ஆனால், எங்கடை சனங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை" என்றான் இராசன். ஒரு கருத்தரங்கு வாண்டு நாங்கள் மினக்கெட்டு சேமக்கலம் தட்டி, அறிவித்தாலும் வரு வதாயில்லை, கதைத்துக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர். "அது இல்லை அண்ணை நீங்கள் சனசமூக நிலையத்தாலை இடைக்கிடை ஒரு லீற்றர் மண்ணெண்ணையாவது எடுத்துக் கொடுத்தால் சனங்கள் தன்ரை பாட்டிலை வந்து சேருவினம்" என்ற அபிப்பிராயத்தை அவிட்டு விட்டார். 'முடியுமெண்
டால் செய்யலாம் தானே" என்றான் தலைவர்.
"நாங்கள் ஏதாவது தேவையென்று கேட்டுப் போனால் சனசமூக நிலையம் நெடுகஷம் மக்களட்டையிருந்து சுரண்டும் நிலையம் எண்டெல்லோ சனங்கள் நினைக்குது" என்றது இன் னொரு குரல். "சில வேளைகளில் எங்களைக் கண்டவுடன் காணாதது போலையெல்லோ போகினம்" என்றது மற்றொரு குரல்.
"அதுதான் சொல்லுறன், எங்கடை மக்கள் தாங்களா கத் திருந்தி, எதற்காகச் சனசமூக நிலையம் இப்படிச் செயற் படுகிறது என்று சிந்திக்கும் வரை எங்கள் பாடு இப்படித் தான்" என்றான் தலைவர் இராசன் மன உளைச்சலுடன்.
"உதென்ன தர்மலிங்கமண்ணை ஒருநாளும் இல்லாத வாறு உப்பிடி ஓடிவாறார்" என்று திரும்பிப் பார்க்க. 5rio லிங்கண்ணை ஒரு கடிதத்தை நீட்டினார் தலைவரிடம் தலை வர் உடைத்துப் பார்த்தார்,
40 o *) மசிறாத மனங்கள்

கடிதத்தில் இருந்த செய்தி மனமகிழ்ச்சியைக் கொடுத் தது எல்லோருக்கும். "தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற் றேன். அதன்படி, நாங்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டு உடனடியாக இக்கிராமத்தில் இருக்கும் மூன்று தேநீர்க்கடை களையும் மூடிவிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளேன்”.
ஒப்பம்: விசேட ஆனையாளர்
நிர்வாகத்தின் மகிழ்ச்சிக்கு எல்லை தெரியாமலிருந்தது.
அடுத்தநாள் காலைப் பத்திரிகையைப் பிரட்டியபோது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது.
தேநீர்க்கடை முதலாளி சாமி யாழ். போதனா வைத் தியசாலையில் வாந்திபேதி நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததும், அவரது ஐந்து வயது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுச் சிறிது நேரத்தில் மரணமானதுமே அச்செய்தி.
தி. உதயசூரியன் S C 41

Page 30
7
மாறாத மனங்கள்
*ரவணைக்கு விடியப்பரம் நாலு மணிக்குப்பிறகு நித்திரை வருவது குறைவு. கோழி கூவுவதற்கு முன்னரே சரவனை அன்றும் விழித்துக் கொண் டான். சரவணைக்கு ஏற்றவாறு மனைவி வள்ளி யம்மையும் வெள்ளனவாக நித்திரைவிட்டு எழும்பப் பழகிப் பல ஆண்டுகளாகி விட்டன. பிள்ளைகளும் அப்படித்தான்.
** எனை, உன்னைத்தான் கூப்பிடுகிறன், உங்கை எங்கை அடுப்படியிலையே, நீ இரணை வயலுக்கை கொஞ்சம் உழக் கிடக்குது அதை வெய்யிலுக்கு முன்னம் முடிச்சுப் போட வேணும்' எண்டு திண்ணையிலை இருந்து சுருட்டை உருட்டி உருட்டிப் பிடித்து புகையை விட்ட சரவணை, தோளிலை கிடந்த துணியை உதறிக் கொண்டு எழும்பினான்,

இஞ்சாருங்கோ, இஞ்சை கோப்பி போட்டிட்டன், அதைக் குடிச்சுப்போட்டு போங்கோ" என்று அடுப்படிக்கை இருந்து கோப்பியுடன் அவசரமாக வந்த வள்ளியம்மையின் தலையை குசினித் திண்ணையின்ரை வளை பதம் பார்த்தது. அவள் தலை யைத் தடவியவாறு கோப்பியை நீட்டினாள் சரவணையிடம். வலது பக்கத்தோளில் ஏரைப்போட்ட சரவணை மாவெள்ளைய னையும், கறுப்பியையும் துரத்திக் கொண்டு வரம்பில் போய்க் கொண்டிருந்தான்.
சரவணைக்கு வயது அறுபத்தி மூன்று. பார்ப்பவர்கள் அறு பத்தி மூன்று வயது எண்டு சொல்ல மாட்டார்கள். நல்ல திடகாத் திரமான சரீரம். இண்டைக்கும் வெய்யில் கொளுத்தப் போகுது போலை, இந்த முறை வெள்ளாண்மை ஏய்க்கத்தான் போகுது போலை என்று நினைத்தபடி ஏரைப் பூட்டி உழ ஆரம்பித்தான்
6 (TG) 60607,
சரவணை வயல் வேலை எதுவென்றாலும் சலிப்பில்லாமல் தொடர்ந்து செய்வான். சரவணை மாடுகளை வளைத்து வளைத்து உழும்போதெல்லாம் இண்டைக்கு இந்தத் காணிக்காற சிதம்பரம் ஐயா வரப்போறார், குத்தகைக் காசை இண்டைக்கு வைக்க வேணும். இல்லாது போனால் உன்னை காணி செய்ய விடமாட் டன் எண்டு வெருட்டிப்போட்டுப் போனது மனதைச் சஞ்சலப் படுத்தியபடி இருந்தது. என்ன இருந்தாலும், சிதம்பரம் ஐயா மாதிரி, இன்னும் பலரது காணிகளைக் குத்தகைக்கு எடுத்துச் செய்வத ன லேயே என்ரை குடும்பம் அங்கினை ஒடு து; அந்த உதவியை நான் மறக்கக்கூடாது என்று சரவணையின் மனம் கூறியது.
வெள்ளையன் கொஞ்சம் நடையைத் தளர்த்த வாலை முறுக்கி உற்சாகத்தை ஊட்டினான் சரவணை. மாடுகள் களைக் கத் தொடங்குவதை அவகானித்த சரவணை இரண்டையும் அவிட் டுக் கொண்டு பக்கத்திலுள்ள குளத்திற்குத் தண்ணிர் காட்டச் சென்றான் த7 ன் நேரத்திற்கு சாப்பிடாவிட்டாலும் மாடுகளைக் கவனிப்பதில் சரவணை கெட்டிக்காரன் “வாய்விடாச் சீவன்கள்’ அதுகளை முதல்லை கவனிச்சுப்போட்டு நீங்கள் எல்லாரும் சாப் பிடக் குந்துங்கோட்ா எண்டு சரவணை பிள்ளைகளை அதட்டிக்
கொள்வார்.
தி, உதயசூரியன் 0 இ9 43

Page 31
வள்ளிப்பிள்ளை பழஞ்சோற்றுடன், இராத்திரி மிஞ்சின றால் குழம்பைச் சுடவைத்து நாலு திரணையாய் திரட்டி வைத்துக் கொண்டு கிடுகிடு வென்று வயலை நோக்கி நடந்தாள். வள்ளிப் பிள்ளைக்கும் வயது ஐம்பத்தெட்டு என்றாலும் ஆரோக்கியமான உடம்பு. ஏழு பிள்ளைகளைப் பெற்றவள்போல இல்லாது வாட்ட சாட்டமாக இருந்தாள்.
புளிச்ச இறால் குழம்பெண்டால் சரவணை க்குப் பிடிக்கும். குளத்தடியிலிருந்து மாடுகள் இரண்டையும் சாய்த்துக் கொண்டு வயலை அடைந்தான் சரவணை. உழுத வயலுக்கை இருந்த புல்லை அரித்துப் பொறுக்கிக் கொண்டிருந்த வள்ளியம்மை, “ இனிச் சாப்பிட்டிட்டுத் தொடங்குங்கோ இம் . இந்தாருங்கோ, கையைக் கழுவுங்கோ" என்றாள்.
" உங்கை நீ என்ன செய்யப்போராய் எண்டு எனக்கு விளங்கேல்லை; வள்ளி . இங்கை இதை உன்ரை கையாலை உருட்டித் தாவன் ' என்றான் சரவணை, வள்ளியம்மைக்கு விளங்கி விட்டது. “ இந்தாளுக்கு இப்பவும் . " எண்டு கொண்டு கையி ரண்டையும் முந்தானையில் துடைத்துவிட்டு, புளித்த 9ால் குழம்பை நிறைய விட்டுக் குழைத்துக் கொடுத்தாள். சரவணை உறிஞ்சி உறிஞ்சிச் சாப்பிட்டான்.
இந்த நேரத்திலை, சனசமூக நிலையத்திலை இண்டைக்கு நடக்கப் போகின்ற பிறப்புப்பதிவு, திருமணப்பதிவு பற்றிய நினைவு வள்ளியம்மைக்கு வந்தது. ' அது சரி . இண்டைக்கு ஆரோ ஒரு மணியளவிலை கவுண்மேந்திலை வேலை செய்கிற பெரிய ஆட்கள் ச. சி. நிலையத்துக்கு வருகினமாம். இந்தக் கிராமத்திலை பலருக்கு இன்றுவரை திருமணப்பதிவு, பிறப்புப் பதிவு செய்யப் படேல்லை யாம். கலியான ப்பதிவு இல்லாமல், பிறப்புப் பதிவு இல்லாமல் கன பேர் இருக்கிபடியால் அதுகளின் ரை பிள்ளை குட்டிகள் தங்கடை ஒரு காரியங்களும் பார்க்க ஏலாமல் செரியாய் கஷ்டப்படு கிற துகளாம். அதுதான் இண்டைக்கு உந்தச் ச. ச. நிலையப் பொடியள் பெரியவர்களைக் கண்டு கதைத்து இங்கையே கூட்டி வந்து பதியப் போகினமாம். ச. ச. நிலையத் தலைவர் எங்கடை சண்முகத்தின்ரை மூத்தவன்தான் முந்த நாள் எனக்கும் சொன்ன வன்' என்றாள் வள்ளியம மை மூச்சுவிடாமல்,
44 G S மாறாத மனங்கள்

வள்ளியம்மை மூச்சுவிடாமல் செய்த பிரசங்கத்திைக் கவனித்த சரவணை " அது சரி. நிதான் அங்கை முன்னுக்கு நிக் கப்போறாய் போலிருக்கு அவங்கள் ஆரும் செய்கிறவை செய் யட்டன், நீ உன்ரை பிராக்கைப் பாரன் என்று இழுத்தான். உனக் கும், எனக்கும் நாற்பது வருஷங்களுக்கு முதல் கல்யாணம் நடக் கேக்கை உந்தப் பதிவுகள் எங்கை செய்தனாங்கள்; உன்ரை கொப் பரும் என்ரை அப்பரும் உதுகள் ஒண்டையும் பாராது நாலு பேருக் குச் சாப்பாட்டைக் குடுத்து மஞ்சள் கயிற்றைக் கட்டினதுதானே. இந்த * குக் கிராமத்துக்கை நான் நினைக்கேல்லை கவுண்மேந் திலை இருந்து வருவினமெண்டு. அங்கினை உப்படியே இருந்திட் டுப் போவம் ' என்றான் சரவணை,
பதிலுக்கு வள்ளியம்மையும் விடவில்லை; ' உங்கை பாருங் கோவன் ஸ்பீக்கர் கூடப் படிச்சுச் சத்தம் கேட்குது. எங்களுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எங்கடை பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்காவெண்டாலும் நாங்கள் இரண்டு பேரும் போய் கலியாணப் பதிவைச் செய்வம். சரி இண்டைக்கு உழுதது காணும். வாருங்கோ’ என்று வற்புறுத்தினாள் வள்ளியம்மை.
" இனி நீ நினைச்சிட்டால் விட்மாட்டாய் என்று எனக்குத் தெரியும் தானே. அப்ப எங்களுக்கு இண்டைக்குத்தான் கல்யாணப் பதிவு . ஆ . " என்று ஒரு பார்வை பார்த்தான் சரவணை. வள்ளியம்மை சரவணையைப் பார்த்து " ஆளைப் பார் ஆளை, தலையும் நரைச்சுப் போச்சு " என்று சொல்லி முடிப்பதற்குள், சரவணை மாடுகளையும் சாய்த்துக் கொண்டு வீட்டை நடக்கத் தொடங்க வள்ளியம்மை புல்லுக் கடகத்தினைச் சுமந்து கொண்டு பின் தொடர்ந்தாள்,
சரவணை முகத்தில் பூத்த வியர் வைத் துளிகளைத் துடைத் தவாறு, ' இஞ்சேனை, வள்ளி . உந்த மாடுகள் ரண்டுக்கும் கொஞ்ச வைக்கல் போட்டிட்டு வாணை, பிறகு உதுகள் நிண்டு சுத்திக் கொண்டு நிக்குங்கள்' என்றான்.
"ரண்டுபேரும் இண்டைக்கு என்ன நேரத்தோடை வந்தாச்சு” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ஐந்தாவது வாரிசு. வள்ளி யம்மை மிகுந்த ஆர்வத்துடன் விசயத்தைக் கூறினாள்.
g. a guesiusi S S 45

Page 32
வள்ளியம்மையின் பெட்டகம், சூட்கேஸ், அலுமாரி எல்லாமே அவளது வீட்டிலிருக்கும் ஒரு பழைய தீவுக்கடகம் தான். சரவணை யின்ரை பட்டுவேட்டி சால்வை’தொடக்கம் அது க்கைதான் சங்கம மாய் வருடக்கணக்கில் இருக்கிறது. வள்ளியம்மை தனது இணைக் கூரையை எடுத்து நாலுதரம் உதறிப்போட்டு உடுத்துக் கொண் டாள். சரவணை தன்ரை மூத்தவன் போன தீபாவளிக்கு வேண் டிக் கொடுத்த நாலு முழ வேட்டியைக் கட்டிச் சால்வைத் துன-ை ιθώ தோளில் போட்டுக் கொண்டான்.
வள்ளியம்மை ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கல்யாணத்திற் “குப் பிறகும் 'ஏழ்மையாக வாழ்ந்தாலும் அழகில் குறையாதவள்; மஞ்சளிலே சிறிது செம்மையைக் கொட்டிய நிறம், வாட்ட சாட் டமான பாரிய சரீரம், முன் நெற்றியிலே தொடங்கி நடுவக்கிட் டின் இரு கரையையும் பற்றிக் கொண்டு மேலே மேலே பரவிச் செல்லும் தரை, பளிச் சென்ற முகம், நெற்றியிலே ஒரு சத அக லக் குங்குமப் பொட்டு, கழுத்திலே மஞ்சள் கயித்திலே தாலி.
இருவரும் ச. ச, நிலையத்தை நோக்கி நடந்தனர்" இருவரும் ஜோடியாக வெளிக்கிட்டு இப்படி சென்றதை ஒரு நாளுமே பார்த் திராத வாரிசுகள் கண் வெட்டாது பார்த்துக் கொண்டே நின்றனர். * இந்த உளர்ச் சனங்கள் கண்ணிலை போட்டிடப் போகுதுகள். உங்கத்தையாலை வந்ததும் உப்பும், மிளகாயும் எரிச்சுப் சந்தி யிலை போட வேணுமென்று '' வாரிசு ஒன்று முணுமுணுத்துக் கொண்டது.
தம்பதிகள் ஜோடியாக போய்ச் சேர்ந்ததும், எல்லோரும் இவர்களையே கண்வெட்டாது பார்த்தனர். வள்ளியம்மைக்குத் தன்னையறியாமல் ஒருவித வெட்கமும் ஏற்பட்டது . நாணம் என் றுமே நித்திய கன்னி. முதுமையின் எல்லைமைத் தொட்டு நிற் வளிடங் கூட, தன் தனித்தன்ம்ை மாறாமற் பரந்து நிற்கும் மகா * மந்திர சக்தி அதற்கு உண்டு.
*விழா: ஆரம்ப மாகியது, ச. ச, நிலையத் தலைவரான கண் னன் தலைமையுரையில், “ இண்டைக்கு இந்தக் கிராமத்துக்கு நல்ல நாள் என்றும், இந்தக் கிராமத்துக்குள்ளை பல வருடங்களுக்
* 46 :) ) ஃமாறாத மனங்கள்

ாகுப் பிறகு பல உயர்பதவி வகிக்கும் அரச உத்தியோகத்தர்கள், அதுவும் பாமர மக்களாகிய எங்கடை பல முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்ய வந்திருக்கிறது மகிழ்ச்சியாகவுள்ளது" என்றார்.
அரச அதிகாரிகள் பாட்டன், பாட்டி உட்படப் பலருக்கு பதிவுத் திருமணம், பிறப்புப் பதிவு என்பன செய்து வைத்தனர். ச. ச. நிலையத்தினர் அதிகாரிகளுக்கு மீண்டும் நன்றி கூறினர். இண்டைக்கு இந்த நிகழ்வுக்கு வந்து இந்தப் பதிவுகளைச் செய்து கொண்டதனால், உங்கடை பிள்ளைகள், பேரப்பிள்ளைகளாவது பயனடையப் போவது நிச்சயமென்றும், "இனிமேல் உடனுக்குட்ன் இப்படிப்பட்ட பதிவுகளை அரச அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு செய்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்ட னர். கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கைதட்டிக் கரகோஷம் செய்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பதிவு செய்து கொண்டவர்களில் யாராவது ஒருவரை ஒரு சில வார்த்தைகள் மேடைக்கு வந்து பேசுமாறு அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார். கூடி நின்றவர்கள் ஒருவரையொரு வர் பார்த்தனர்.
சரவணை பயமேதுமின்றி மேடைக்குப் போய், சால்வையை எடுத்து கக்கத்துக்கை வைத்துக்கொண்டு, 'ஐயாமார் எல்லா ருக்கும் வணக்கம்" என்றான், கூடிநின்ற சனங்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர். தூரத்திலிருந்த இளைஞர்களின் விசிலடித்த சத்தமும் கேட்காமலில்லை. சரவணை தொடர்ந்தான்- 'எனக் குப் பேச ஒண்டும் தெரியாது; நான் ஒண்டுமே படிக்கேல்லை; என்ரை மனிசி, பிள்ளைகள் எல்லாருமே அப்பிடித்தான், இண் டைக்கு இங்கை வந்து இந்த வேலைகளை எல்லாம் செய்த மைக்காக நன்றி சொல்லிக் கொண்டார்." அதோடை இன்னு மொண்டையும். சொல்லப்போறன் என்று தொடங்கினான் சர வணை, இந்தச் ச. ச. நிலையத்தைச் சிரமதானம் மூலம கட் டேக்கை, எங்களுக்கேன் உதுகளை இங்கே பேப்பரே படிக்கப் பலருக்குத் தெரியாது எண்டு கனபேர் கதைத்தவை. இப்பத்தான் ச. ச. நிலையத்தின் ரை அருமை விளங்குது என்றான்.
தி உதயசூரியன் 09 S 47

Page 33
சரவணை பேச்சை இப்படியே நீட்டிக்கொண்டு போக, அதிகாரி ஒருவர், சரவணை அனுபவத்தால் பல விடயங்களை யதார்த்தமாகக் கூறுகிறான் என்ற தோறணையில் நெற்றியை மேலே உயர்த்திச் சரவணையை மெச்சிக் கொண்டார். சர வணைக்கு மீண்டும் காரசாரமான கைதட்டல் நிகழ்ந்தது.
ச. ச. நிலையத் தலைவர், அதிகாரிகள் எல்லோரையும் மற்றும் அயற்கிராமத்திலிருந்து வந்திருந்த கிராம முன்னேற்றச் சிங்கத் தலைவர், மற்றும் படித்தவர்கள், பெரியவர்கள் யாவரை யும் தங்களால் வழங்கப்படவிருக்கும் தேநீர், சிற்றுண்டி விருந் தினை அருந்திச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
அதிகாரிகளும், மற்றையோரும் ஒருவரையொருவர் ஆச்ச ரியத்துடன் பார்ப்பது போலப் பாாத்துக் கொண்டனர் ஒருசிலர் ஏதோவொரு சாட்டுப் போக்கைச் சொல்லி அந்த இடத்தை விட்டு நழுவத் தொடங்கினர். “சில படித்தவர்கள்' அதுவுமில் லாமல் நைசாக இடத்தைக் காலிபண்ணிக் கொண்டிருந்தனர்.
'சாதி இரண்டொழிய வேறில்லை. ' என்ற ச. ச. நிலை யப் பாலர் பாடசாலை ஆசிரியை பிஞ்சு உள்ளங்களுக்கு இன்று காலை சொல்லிக் கொடுத்தது ச. ச. நிலையத் தலைவர் கண் ணன் காதில் விழுந்திருந்தது.
இந்தப் பிஞ்சு உள்ளங்கள் வளர முன்பாவது இந்தச்
சாதிப் பேயை ஒழிக்க இந்தச் ச. ச. நிலையம் பாடுபடுவது என்று ச. ச. நிலைய நிர்வாகம் சபதமெடுத்துக் கொண்டது.
48 ) G மாறாத மனங்கள்

எயர்போட் திருமணங்கள்
நிான்கு பொம்பிளைப் பிள்ளைகளைப் பெற்ற நாகமுத்தர் ஈஸிசெயருக்குள் நாலாய் மடிந்து படுத்தவாறு சிந்தனைகளை நாலாபக்கமும் அலைய விட்டார். சீ, பொம்பிளைப் பிள்ளை களைப் பெறவே கூடாது. சிந்தனை ஓட்டத் தில் இப்படியும் மனம் கூறியது. பொம்பிளைப் பிள்ளைகளைப் பெற்றாலும், உத்தியோகம் பார்க்க விடக்கூடாது; தங்களது படிப்பிற்கும் , உத்தியோகத்திற்கும் ஏற்ற மாப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தனது பிள்ளைகளை மனதிற்குள் நொந்து கொண்டார்.
நாகமுத்தரது மூத்தவள் கமலம், கல்லூரி ஒன்றின் ஆசிரியை. கல்யாண வயதைத் தாண் டிச் செல்லும்போது, ஒருவாறு பக்கத்து ஊரில் படிப்பிக்கும் ஆசிரியர் ஒருவரைக் கட்டி வைத்து விட்டார். இருந்த வீடு வளவை சீவிய உரித்து

Page 34
டன் எழுதிக் கொடுத்தாயிற்று கமலத்திற்கு. இரண்டாமவள் ஜோதி அரச திணைக்களமொன்றில் ரைப்பிட்டாக வேலை செய்கிறாள். மூன்றாமவள் கொழும்பில் தனியார் நிறுவன மொன்றில் றிசப்சனிஸ்ட், நான்காமவளும் ஆசிரியை திருமண மாக வேண்டிய மூன்று குமரிகளையும் பற்றி நாகமுத்தர் யோசித்துக் கொண்டிருக்கையில். இரண்டாவது மகள் ஜோதி கோப்பியுடன் வந்து "அப்பா' என்று கூப்பிட நாகமுத்தர் அலையவிட்ட சிந்தனைகளை அப்படியே விட்டுவிட்டு ‘என்ன பிள்ளை” என்றார் பதட்டத்துடன். ஏன் அப்பா! என்ன உங்களுக்கு கனவு கண்டனிங்களோ" என்றாள் ஜோதி. "இல்லை. இல்லை. பிள்ளை" என்று இழுத்தார் நாகமுத் தர். என்ன அப்பா ஒளிக்கிறியள் என்னெண்டு சொல்லுங்கோ வன் என்ற ஜோதியை, மறுகணம் லேசாகப் பார்த்தவாறே கோப்பியை வாங்கி மிடறை நணைத்தபடி, 'இல்லை ஜோதி, உங்களுக்கும் வயது ஏறிக்கொண்டே போகுது. ஒவ்வொரு நாளும் போகப்போக எனக்கு மனம் 'டிக், டிக்" என்று அடித் துக் கொண்டேயிருக்கிறது. உன் அம்மா பார்வதிக்குக் கடை சியில் கோமாவாக்கிச் சாகும் தறுவாயில் கூட என்னைக் கேடது ஒன்றேயொன்று, என்ரை பொம்பிளைப் பிள்ளைகளைக் கண்கலங்காமல் பார்த்து கொள்ளுங்கோ, என்ரை பிள்ளை சகளும் உங்களை ஒரு குறையும் விடாமல் பார்த்துக் கொள் ளுங்கள், என்றது தான்’ என்று கூறி முடிப்பதுக்குள் நாகமுத் தரின் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டுச் சொட்டாக விழு வதை ஜோதி அவதானிக்கத் தவறவில்லை.
"அப்பா! நீங்கள் ஏன் இப்படி மனதை விடுகிறீங்கள்! நாங்கள் கடவுளே என்று எல்லாரும், உத்தியோகம் ஆகி அவ ரவர் பாட்டைப் பார்க்கக் கூடிய நிலையில தானே இருக்கிறம். நீங்கள் ஓடி ஆடித் திரிந்து அவரை இவரையெண்டு கண்டு கதைத்து ஏதோ உத்தியோகம் ஆக்கிப் போட்டியள். நீங்கள் அம்மா இல்லையென்ற குறையைக் கூடத் தெரியவிடாது எல் லாவற்றையும் எங்களுக்காகச் செய்து தருகின்றீர்கள்’’ என்று இப்படியே நீட்டிக் கொண்டு போனாள்.
50 S S unt Dirs Dorfsch

"இல்லை அம்மா." என்று இழுத்ததுமே ஜோதிக்கு அப்பா ஏதோ வேறு விடயமாகக் கதைக்கப் பீடிகை போடு கிறார் என்று விளங்கி ' என்ன அப்பா" என்று குறுக்கிட்டாள் *ஜாதி "இல்லை பிள்ளை உங்களுடைய கல்யாண விடயம் பற்றித்தான் எனச்கு எத்த நேரமும் யோசனை. எப்பிடியும் உன்ரை அலுவலை என்றாலும் இந்த வருடத்திற்குள் ஒப்பேற் றிப் போடவேணும் என்றுதான் யோசிக்கிறன்' என்றார் தாக முத்தர். ' அது சரி அப்பா, செய்யத்தான் வேணும், நீங்களும் எந்த நேரமும் இது விடயமாய் ஒடித் திரியிறியள் தானே. விதி வந்தால் எல்லாம் நடக்கும் தானே” என்றாள். "விதி என் னம்மா விதி; இப்ப மாப்பிள்ளை தேடுவதென்றால் கல்மேல் நார் உரிப்பது போன்ற தம்மா. அதுவும் குறைந்த வயதுப் பிள்ளைகளுக்கு ஒரு மாதிரிப் பிடிச்சுய் போடலாம். ஆனால். உங்களுக்கோ முப்பதுககு மேலாகிப் போச்சு. பெடியள் எல்லாம் வெளிநாடு என்று வெளிக்கிட்டு, அங்கையெல்லோ பொம்பி ளைப் பிள்ளைகனைக் கல்யாணத்திற்காக அனுப்ப வேண்டியி ருக்கு. இங்கை உங்களுக்குப் பொருத்தமாய் எங்கையிருக்கு என்று இழுத்தார். தனது மனதில் உள்ள வெளிநாட்டு Lו" וחמ பிள்ளை விடயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற எதிர் பார்ப்புடன்,
*அப்பா, அது எல்லாம் சுாலம் சரி வரத் தானே வரும்” என்றாள் ஜோதி, இந்த விடயத்தை இத்துடன் முடிப்பதற்காக எப்படியும் சூட்டோடு சூடு இவவிடயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற முடிவுட ன் ஈஸிசெயருக்குள் இருந்து சற்று எழும்பத் தெண்டித்தபடி, ‘அம்மா ஜோதி! நான் சொல்லுறன் என்று கோபிக்காதை கொஞ்சம் நான் சொல்லப் போறதை நிதானமாய் யோசித்துப் பார்’ என்ற நாகமுத்தர், விசயத்திற்கு உடனே வரத்தொடங்கினார். முந்தநாள் புறோக்கர் கனக ரைச் சந்தித்தபோது கதைத்த ஜேர்மனி மாப்பிள்ளை பற்றிய கதையை அவிழத்து விட்டார் நாகமுத்தர், “எங்கட செலவில் உன்னை ஜேர்மனிக்கு அனுப்பி விட்டால் சரியம்மா, அதுவே போதுமாம் சீதனமாய். எயர்போட்டில் மாப்பிள்ளை வந்து கூட்டிப் போவாராம்" என்று சொல்வதற்குள்ளேயே ஜோதி
தி. உதயசூரியன் 02 S 51

Page 35
எரிச்சலுடன், 'உங்களுக்கென்னப்பா பைத்தியம் பிடிச்சிட் டுதா’ என்று எரிந்து விழுந்தாள். 'மூன்று இலட்சம் மட்டில் ஏஜென்சிக்குக் கட்டி ஜேர்மனி போய் எயர்போட்டில் முன்பின் தெரியாத ஒருவனோடு வாழ்க்கை நடாத்தச் சொல்வது சரி யென்று நீங்களும் கூறுகிறீர்களா' என்றாள் பதற்றத்துடன் ஜோதி. "பெண்களை இப்படியெல்லாம் அனுப்பி வெளிநாட் டில் என் போன்ற பெண்கள் வியாபாரப் பொருட்களாக மாறும் அவலங்கள். பல நடைபெறுகின்றன அப்பா. அதற்கு நானும் தயாராயில்லை" என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனாள். அப்பாவின் திட்டத்தை மீண்டும் யோசித்துப் பார்க்கையில் அவளுக்கு மென்மேலும் ஆத்திரம் பொங்கியது. பெண்கள் தாங்கள் சொந்தக் காலில் நிற்பதற்காகவே உழைக்கின்றனர்" இன்னும் சொல்லப் போனால், பெண்கள் இன்று உத்தியோகம் என்று ஒட்டிக்கொண்டிருப்பதற்குக் காரணம், தங்கள் கணவர் மாரின் ஊதியம் போதாமையினாலேயாகும்
நாகமுத்தரும் விடவில்லை. 'அம்மா ஜோதி! 'பருவத்தே பயிர் செய்’ என்பார்கள். ஆனபடியால், எதற்கும் நாம் அந் தந்தக் காரியத்தை அந்தந்த வேளையில் செய்தே ஆகவேண் டும்" என்றார்.
*அதற்காக, ஜேர்மனியில் முன்பின் தெரியாத ஒருவ னுடன் நாடுவிட்டு நாடு போய் என்னால் கல்யாணம் செய்து நிம்மதியா வாழ முடியாது அப்பா. போனமாதம் பக்கத்து வீட்டு ராணி உப்பிடித்தான் ஜேர்மனிக்குப் போய் பிறாங் போர்ட் எயர்போட்டில் இறங்கிப் பார்த்தபோது, மாப்பிள் ளைப் பொடியன் வேறொருத்தியுடன் வந்து நின்றதும், அதைப் பொறுக்க முடியாத ராணி எயர்போட் மேல்மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய எத்தனித்ததும். பின்னர் ராணி யின் பரிதாப நிலையைப் பார்த்து வேறொரு இலங்கைப்பையன் அவளைக் கைப் பிடித்ததும் உங்களுக்குத் தெரியாதா அப்பா என்றாள் மூச்சு விடாமல், திருமணம் என்பது "ஆயிரம் காலத் துப் பயிர்" என்று நீங்கள் தானே அடிக்கடி கூறுவீர்கள். ஏன் இந்தக் கல்யாணக் கதையை ஆரம்பித்தீர்கள்' என்றாள் ஜோதி. - -
52 0 9 மாறாத மனங்கள்

"அம்மா ஜோதி! என்ரை யோசனை என்னவெண்டால், உனக்குப் பிறகும் இரண்டு பேர் அடுத்துத் தொடுத்து இருக்கு துகள். அதுதான். உனக்கு இப்ப முடிச்சு வைக்காவிட்டால் அதுகளும் வாழமுடியாதம்மா’ என்றார் பெருத்த மன உளைச் சலுடன்.
"பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக அரசில் கடமை யாற்றிவிட்டு பென்சனையும் அனுபவியாது செல்வதா" என் றாள் ஜோதி பென்சன் என்னம்மா பென்சன். வாழ்க்கை என்பது பணம் பொருள், பண்டம் என்பவற்றில் மட்டும் தங் சவில்லையம்மா. உரிய காலத்தில் அவை அவை நிறைவேறியே தீரவேண்டும்.** நாகமுத்தருக்கு இந்த நேரத்தில் அன்று கந் தோருக்கு வந்த சுற்றுநிருபத்தை ஜோதி கூறியது ஞாபகத்திற்கு வந்தது. பத்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஒரு ஊழியர் விரும்பும் பட்சத்தில் ஓய்வுபெற முடியுமென்றும், இரு பதாவது வருடத்தில் ஊழியருக்குரிய பென்சன் வழங்கப்படு மென்பதுமே அது. இதை இந்த நேரத்தில் ஜோதியிடம் கூறிய நாகமுத்தர், இனி நான் சொல்ல ஒண்டுமில்லையம்மா. ஏதோ நீ தான் இனி முடிவெடுக்க வேண்டும் என்றார்.
அன்றிரவு முழுவதும் நித்திரையில்லாது புரண்டாள் ஜோதி. அப்பா தனக்குக் கூறிய கடைசி வசனம் ஜோதியை வாட்டியது. 'நீ கரை சேர்ந்தால் தான் உனக்குப் பிறகு இருக் கும் மற்ற ரெண்டும் கரை சேரும் என்றது". அடுத்த நாள் காலை ஜோதி திடகாத்திரமான முடிவுடன் அப்பாவென விழித்தாள். நாகமுத்தருக்கு விளங்கிவிட்டது. இவள் ஏதோ சொல்லப் போவது "என்னம்மா' என்றார். ஆவலுடன் "அப்பா! நான் வேலையை விட்டிட்டு உடன் ஜேர்மனி கல் யாணத்துக்காகச் செல்ல முடிவு செய்து விட்டேன் என்றாள்'.
அப்பா நன்றியுடன் ஜோதியைப் பார்த்துப் புன்னகைக்க, ஜோதி கலங்கிய கண்களுடன் தனது பயண ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றாள், தகப்பனையும், சகோதரங்களையும் விட்டுப் பிரியப்போகும் சுமையுடன்.
தி. உதயசூரியன் G இ) 53

Page 36
*காஞ்சனா வித்தியாசமானவள்”
*Tஞ்சனா தனது கிராமத்தில் இயங்கும் சன சமூக நிலையத்தின் பாலர் பாடசாலை ஆசிரியை. அவள் தனது தொழிலைச் சம்பளத்திற்காக மட் டும் செய்வதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். சனசமூக நிலைய நிர்வாகத்தி னருக்கு காஞ்சனா ஆசிரியையாக வந்து சேர்ந் ததனால் பெரும் திருப்தி. இப்பாடசாலை ஆரம் பித்து, முதல் இரண்டு வருடங்களும் எந்தவித உற்சாகமுமின்றி இயங்கிய பாலர் பாடசாலை காஞ்சனா ஆசிரியையாகப் ப்ொறுப்பெடுத்த பின் னர், கடந்த மூன்று ஆண்டுகளாக பிள்ளைகளை இப்பாடசாலையிலேயே சேர்க்க வேண்டுமென்று பெற்றோர் முண்டியடித்துக் கொண்டு வருகின் 少aró。
காஞ்சனா ஒரு ஏழை வீட்டில் பிறந்தவள். தகப்பன் மணியம் ஏ. ஜி. ஏ. கந்தோர் காவலாளி.

ஏழ்மை அவருடைய நடை, உடை பாவனையில் தெரிந்தாலும், அவளுடைய இயற்கை அழகு யாரையும் கவராமல் விடாது. அவள் பேசுவது கூட மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் மிகவும் அமைதியாக இருக்கும். ஒருமுறை பாலர் பாட சாலைகளின் செயற்பாடுகள் பற்றிய புள்ளிவிபரங்கள் எடுக்க வந்த அரச அதிகாரி கூட, தான் போய் வந்த பாலர் பாடசாலை களின் ஆசிரியைகளுக்குள் காஞ்சனா மிகவும் திறம்படச் செயற் படுவது பற்றி கூறியிருக்கிறார் நிர்வாகத்தினரிடம்.
காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு காஞ் சனா 7.45 மணிக்குத் தினமும் வந்து விடுவாள். சகல வேலை களையும் தானாகச் செய்து, குழந்தைகளுக்கு வேண்டிய குடி 2?னர் தொடக்கம் யாவற்றையும் தயார்படுத்தி வைப்பாள்.
ஒருநாள் காஞ்சனா பக்கத்துக் கிணற்றுக்குத் தண்ணிச் எடுக்க வாளியை எடுத்துக்கொண்டு செல்லும் போது "ஏன் காஞ்சன்ா உமக்கெல்லாம் சிரமம். நான் தண்ணிர் எடுத்து வந்து தாட்டுமா, கொண்டாரும் வாளியை" என்றான் திடீரென வழி மறித்து ரஞ்சன்.
ரஞ்சன் காஞ்சனா வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி மிக வும் வசதியாக வாழும் இளைஞன், யாழ், பல்கலைக்கழக இரண் டாம் வருட மருத்துவபீட மாணவன். அடர்ந்த மீசையும், திடகாத் திரமும் உள்ள அழகான வாலிபன். ரஞ்சனின் தகப்பன் சிவராசா அப்பகுதி ஏ. ஜீ. ஏ. மிகவும் பணக்காார்.
காஞ்சனா எதிர்பாராத விதத்தில் ரஞ்சன் திடீரென வந்து தண்ணிர் எடுத்து வந்து கருவதாகக் கேட்க, **இல்லை பரவா யில்லை; தாங்ஸ்" என்று கூறிவிட்டு, கிடுகிெேவன்று நடந் தாள். ரஞ்சனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
காஞ்சனா மீது காதல் கொண்டது இன்றல்ல. தனது காதலை எப்படி வெளிப்படுத்தலாம்; எப்போது காஞ்சனாவோடு கதையை ஆரம்பிக்கலாமென்று ரஞ்சன் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றான். ஆனால்,
60. aastuErstflagaðir “ SO SO 55

Page 37
ரஞ்சன் இன்று காஞ்சனாவோடு எப்படியும் கதையைக் கொடுத்து, தனது விருப்பத்தைத் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்த படியே வந்தான்.
காஞ்சனா கிணற்றடியில் போய் நின்று ஒரு வாளி தண் ணிாை அள்ளித் தனது வாளிக்குள் ஊற்றாது, ஏதோ யோசித்த வாறு நிலத்தில் ஊற்றியதை வீட்டுக்காரி கனகம்மா அக்கா கவ னித்து விட்டா " என்ன பிள்ளை ! காஞ்சனா, ஏன் பிள்ளை தண்ணியை அள்ளி கீழே உளத்துகிறாய். வாளிக்கை உளத்திக் கொண்டு போவன் மேனை' என்றாள். திடீரென தன்னைத்தானே சுதாகரித்தவாறு, "இல்லை அக்கா." என்று இழுத்தவாறு தண் ணிரை எடுத்துக் கொண்டு தெருவைக் கடந்து பாடசாலை வந் தடைந்தாள்.
பிள்ளைகள் ஒவ்வொன்றாய் வரத் தொடங்கினர். தின மும் காலை நேரத்தில் பாலர் பாடசாலையடியில் ஒருவித இரா கம் பாடும் படலம் ஆரம்பமாவது வழக்கம். இது காஞ்சனாவுக்கு பழக்கப்பட்டு விட்டது அன்றைய தினமும் சுரேஷ், ரமணி, கிரி என்று அடுத்தடுத்து விக்கலெடுத்து 'வீட்டை" என்று வந்ததும் வராததுமாக அழத்தொடங்கி விட்டனர். "அம்மாவும் தன்னோடை வந்திருங்கோ' என்று ஒரு சிலரும், பாட்டியின் சீலைத் தலைப் பைப் பிடித்தபடி வேறு சிலரும் நின்றனர். வழக்கம் போல காஞ் சனா அழும் பிள்ளைகளைச் சமாதானப்படுத்தி எல்லோரும் கட வுள் வணக்கம் சொல்லுவம் வாருங்கோ" என்று பிள்ளைகளைக் கூப்பிட்டாள்.
"அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய தொப்பை
அப்பனைத் தொழ வினையறுமே" என்று காஞ்சனா சொல்லிக் கொடுக்க, அனைவரும் பிற்பாட்டுப் பாடத் தொடங் கினர்.
அன்று பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகளைப் பெற்றோர் ஒவ்வொருவராய், வந்து கூட்டிச் செல்லும் நேரம். ரஞ்சன் தடித்த ஜீன்சும் ரீசேட்டும் அணிந்து கமகமவென்று கொலோனும் அடித்து ரிப்ரொப்பாக வெளிக்கிட்டபடி சயிக்கிளில் வந்து பாலர் பாடசாலைக்குள் பிரவேசித்தான்.
56 ) 69 uompră subst essi

காஞ்சனா ரஞ்சனின் வருைையைக் கண்டதும், அவனிடம் பேசி விரும்பாது, செருப்பை மாட்டிக் கொண்டு வெளிக்கிட ஆயத்தமாக, 'காஞ்சனா” என்று அழுத்தமாகக் கூப்பிட்டான் 7ஞ்சன். பணக்கார வர்க்கமே, இப்படி ஏழைப் பெண்களை நிம் மதியாக வாழ விடாது பின்னும் முன்னும் கலைத்துத் திரிவது தானா வழக்கம் என்று முகத்திலடித்த மாதிரிக் கூறவேண்டும் போல் இருந்தது. காஞ்சனாவுக்கு. உம்மோடு கொஞ்சம்மணம் திறந்து பேசவே வந்திருக்கிறன். கொஞ்சம்.நில் காஞ்சனா” என் ரான் ரஞ்சன். நீர் ஒரு வாலிபன், நான் ஒரு கன்னிப்பென்' அதுவும் இந்த பாலர் பாடசாலையில் தனியாக நின்று கதைப் பது சரியா என்பது போன்ற முகபாவனையுடன் முழு சிப் பார்த் தாள் காஞ்சனா, "உன் வார்வை புரிகிறது காஞ்சனா, ஒரு நிமி டமாவது நின்றுவிட்டுப் போ" என்று கெஞ்சினான், "நான் ஒரு பணக்கார விட்டுலை பிறந்து வாழ்வதனால் தானே என்மீது நீர் சந்தேகப்படுகின்றீர்?
காஞ்சனா ஒரு அடி பின்னெடுத்து வைத்து, 'ஏன் என் பின்னால் சுற்றுகிறீர் ரஞ்சன்! பார்க்கிறவையள் என்ன நினைப் பினம் தெரியுமே; நீர் பெரிய இடத்துப் பிள்ளை; அதுவும் ஆம் பிளை. எதிலும் தப்பித்துக் கொள்ளலாம். பார்க்கிறவையள் சொல்லுங்கள். அந்தப் பணக்கார ஏ ஜி. ஏ.யின் மகனும், ஏழைக் ” என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே ரஞ்சன் குறுக்கிட்டு, ‘நீர் பணக்காரரை நிரம்ப விமர்சிக்கிறீர் காஞ்சனா. எல்லாக் பணக்காரர்களும் நீர் நினைக்கிற மாதிரி
காவற்காரரின் மகளும்.
வஞ்சகர்களும் இல்லை; ஏமாற்றுப் பேர்வழிகளுமில்லை காஞ் scormo'.
"காஞ்சனா, நான் உம்மை மனதார நேசிக்கிறேன். நீர் நினைக்கிற மாதிரி ' பணக்காரன் - ஏழை என்று பேதம் பார்க் பார்க்கிற ஆளில்லை இந்த ரஞ்சன். நான் ஆறு மாதங்களுக்கு மேலாக உம்மோடு இது பற்றிப் பேச வேண்டும் என்று தவி பாய்த் தவித்துக் கொண்டு திரிகிறன் காஞ்சனா” என்ரான் ரஞ்
T
தி. உதயசூரியன் S S 57

Page 38
காஞ்சனா குறுக்கிட்டாள்; "நீர் மாத்திரமல்லை ரஞ்சன், ஆரம்பத்திலை இப்பிடித்தான் எல்லாரும் சொல்லுவது, பிறகுதான் அங்கை ஏசுகினம், இங்கை பகிடி பண்ணுகினம், உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றெல்லாம் ஏற்றத் தாழ்வு பார்ப்பது வழக்கம், ரஞ்சன், நீர் இன்னும் இரண்டு வரு டங்களில் ஒரு டாக்டராக வரப்போறனிர். அப்பவும் நான் இங்கை தானூறு ரூபா சம்பளத்திலை பாலர் பாடசாலை ஆசிரியையா கத்தான் இருக்கப்போறன், தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதையும் ரஞ்சன்” என்று கெஞ்சினாள்,
ரஞ்சன் விடவில்லை; 'ஏன் காஞ்சனா! நீர் என்ன படிப் பில்லாதனிரா, ஏ. எல். பாஸ் பண்ணி, மேலுக்குப் படிக்க வேண் டியனிா , வசதியின்லையெண்டு தானே படிப்பை நிற்பாட்டின னிர். தான் உதவி செய்கிறன். நீர் எக்ஸ்ரேனலாய் படிப்பைத் தொடருமன் என்றான்.
காஞ்சனாவின் மனம் "டிக்" என்று அடித்தது. "நீர் காசு தந்து உதவிசெய்து, நான் படித்துப் பட்டம் பெற்று உம்மைக் திருமணம் செய்ய நான் வெட்கம் கெட்டவளில்லை ரஞ்சன். நான் திரும்பவும் கேட்கிறன் உம்மை, நீர் என்மேல் உண்மையி லேயே அன்பு வைத்திருக்கிறீரெண்டால், தயவு செய்து என்னை மறந்து விடும். என்னுடைய விருப்பம், நீர் நல்லதொரு அழகான டாக்டரையோ அல்லது உமக்குப் பொருத்தமானதொரு பணக் காரப் பெண்ணைத் திருமணம் செய்ய வேணுமென்பதுதான். பிளிஸ் டு தற். என்று கூறிவிட்டு”, வேகமாக நடக்கத் தொடங் கினாள் வீட்டை நோக்கி.
முற்றத்தில் போடப்பட்டிருந்த சாக்குக் கட்டிலில் சாய்ந் திருந்த மணியத்தார், "ஏன் அம்மா காஞ்சனா, இன்றைக்குப் பிந்திப் போச்சு, யாரன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போக வரப் பிந்திப்போச்சோ" என்று கேட்டவாறு ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.
காஞ்சனா பதிலேதும் கூறாதவளாய் வீட்டினுள் நுழைந் தாள். அன்றிரவு நீத்திரையே வரவில்லை. அங்குமிங்குமாக படுக் கையில் புரண்டாள். தன் குடும்ப நிலையை யோசித்துப் பார்த்
58 S G மாறாத மனங்கள்

தாள். தன்னுடைய தாய் காமாட்சி பசரிசவாத தோப்பினால் படுக்கையில் இருந்தபோது, கதைப் புத்தகங்கள் வாசித்துக் காட் டுவது காஞ்சனாவின் வேலை. வாசித்துக் காட்டும் போது சில வேளைகளில் தாய் வாசிப்பதை நிறுத்தச் சொல்லி காஞ்சனா வுக்கு புத்திமதி கூறுவதை யோசித்துப் பார்த்தாள்.
ஏழைகள் படும் கஷ்டம் பணக்காரர்களுக்குத் தெரிவ தில்லை. பணக்காரர்கள் தங்களின்ரை நிலையிலை வைத்துத் தான் ஏழைகளையும் எடை போடுவார்கள். நீ காஞ்சனா cዎc® மூச்சாய்ப் படிச்சு முன்னுக்கு வந்தால் தான் எங்களை இப்ப புறக்கணிக்கிறவை எல்லாரும் தேடி வருவினம். அப்பாவின்ரை சம்பளம் ஒரு கிழமைக்குக் கூடப் பத்தாமல் கிடக்குது. மிகுதி நாளைக்கு, கிடக்கிற நகை நட்டை விற்றுத்தான் சீவியம் போகுது; இப்படியே வித்துச் சுட்டுத் திண்டு எத்தனை நாளைக்கு வாழப் போறமோ தெரியாது எண்டு தாய் பெருமூச்சோடு கூறு வதை எண்ணிப் பார்த்துக் கொண்டு, கடைசியில் ஒரே மன மாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.'
அடுத்தநாள் வழமைபோல பிள்ளைகளுக்குப் பாடம் படிப் பித்துவிட்டு, பிள்ளைகளின் கைகளிலுள்ள வளர்ந்த நகங்களை வெட்டிக்கொண்டிருந்தாள். திடீரென கமகமவென்று நறுமணம் வீசுவது போன்ற உணர்வு காஞ்சனாவுக்குத் தோன்றவே நிமிர்ந்து பார்த்தாள். வாசற்படியில் ரஞ்சன் சிலைபோல நின்றான். காஞ் சனா இருக்கையிலிருந்து எழுந்தாள். **ஏன் காஞ்சனா இந்த மரியாதையெல்லாம்" என்று ரஞ்சன் சொல்லி வாய் மூடுவதற்குள், ஏன் ரஞ்சன் மீண்டும் இங்கு வந்தீர்" என்றாள் காஞ்சனா கோப மாக, "நான்தானே நேற்றே முடிவு சொல்லி விட்டேனே என் றாள்; இதை அவதானித்துக் கொண்டிருந்த குழந்தைகள், ரஞ் சன் மாமா ஏன் எங்டை ரீச்சரை ஏசிறியள் என்று கேட்டதும், ரஞ்சன் வெட்கப்பட்டான். ரஞ்சனுக்கு மேலும் எதுவும் பேச வாய் எழவில்லை. சயிக்கிளைத் திருப்பிக் கொண்டு வீட்டை நோக் கிச் சென்றான்.
இரவு படிக்கப் புத்தகங்களைப் புரட்டினான், காஞ்சனா வின் முடிவினால் மனம் தத்தளித்ததே யொழிய படிப்பில் கவனம்
தி. உதய சூரியன் G 89 59

Page 39
செல்லவில்லை. காஞ்சனா மனத்தை மாற்றுவாள் என்று முத்ல் நாள் எண்ணிய ரஞ்சனுக்கு அடுத்த நாள் ஏமாற்றத்தைக் கொடுத் タgs・
பாலர் பாடசாலையில் இரண்டு நாளும் ரஞ்சன் கதைத் தது, பக்கத்து வீட்டு கனகம்மா அக்கா அவதானித்து விட்டா. கனகம்மா அக்காவுக்கு ஒரு செய்தி கிடைத்து விட்டால், அது அந்தக் கிராமம் முழுவதுமே காற்றோடு காற்றாகச் சேர்ந்து விடும். ஏ. ஜீ. ஏ. சிவராசாவின் காதுகளிலும் இந்த விடயம் அன்றே போய்விட்டது.
அடுத்த நாள் மணியத்தாரை காரியாலயத்திற்கு வருமாறு கூப்பிட்டார் ஏ ஜி. ஏ. மணியத்தார் காலையிலை "வணக்கம் ஐயா" என்று சொல்லியவாறு 'சுவிங் டோறைக்' திறந்து கொண்டு செல்ல, மணியத்தாரை முறைத்துப் பார்த்தவாறு பதி லுக்கு "வணக்கம்' என்றார். "ஐயா வரச் சொல்லி அனுப்பி னிர்கள் "அதுதான் என்று மணியத்தார் வழமையான அடக்கதது டன் தொடங்க, ஏ. ஜி. ஏ. "அது சரி மணித்தார், உமக்கு ஏன் இப்படி பெரிய ஆசை வந்தது' என்றார் ஏளனமாக. ஒன்று மறியாத மணியத்தார் " ஏன் ஐயா இப்படிக் கேட்கிறியள்' என் ர9ார் மனதினுள் ஒரு பய உணர்வுடன், இல்லை மணியம் எப்ப வும் "விரலுக்கு ஏற்ற வீக்கமாய்த்தான்' சம்பந்தம் பார்க்க வேணும். நான் கனக்கக் கதைக்க விரும்பேல்லை; உம்முடைய மகள் காஞ்சனா என்னுடைய மகன் ரஞ்சனை விரும்புகிறாளாம் என்றதுதான் தாமதம் மணியத்தார் என்ன ஐயா சொல்லுறியள். எனக்கு. இதுபற்றி ஒன்றுமே தெரியாதையா. கொஞ்சம் பொறுங்கோ, ஐயா. என்று சொல்லி விட்டு சயிக்கிளை எடுத் துக் கொண்டு வீட்டை ஓடினார் மணியத்தார். வழக்கத்தில் ஏ" ஜி. ஏ. ஒப்சிலிருந்து பத்து நிமிடங்களில் வந்து சேரும் மணியத் தார், அன்று ஐந்து திமிடங்களில் வீட்டை வந்து சேர்ந்தார்.
சயிக் கிளை நிற்பாட்டிய விதத்தில் காஞ்சனாவுத்கு விளங்கி விட்டது. ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்று. ஏன் அப்பா
60 S S மாறாத மனங்கள்

அப்பா என்று கொண்டு வருவதற்குள், காஞ்சனாவின் கன்னத் ፰ëዕ ““cሠ6nrጠሐ”” என்று ஒரு அறை அறைந்தார் மணியத்தார்.
காஞ்சனா புரிந்து கொண்டாள். அப்பா நீங்கள் கோபப் பவேதற்கான காரணம் புரிகிறது எனக்கு. சகலதையும் ஒழிப்4 மறைப்பின்றிக் கூறினாள் காஞ்சனா. அதற்காகத் திரும்பப் போய் உங்கள் பெரியவரான ஏ. ஜி. ஏ. யுடன் சண்டை பிடிக் காதீர்கள். அவர்கள் பணக்காரர்கள் தானே, பரவாயில்லை என்றாள், கனத்த குரலில், மணியத்தாரின் கண்களிலிருந்து சொட்டுச்சொட்டாகக் கண்ணிர்த் துளிகள் விழுந்தன.
தன்னுடைய மகனைப் பற்றித் தீர விசாரியாது ஏ. ஜீ. 7 தன்னை இப்படிக் கேட்டது மணியத்தாரின் மனதை நெருடிக் கொண்டிருந்தது. அடுத்தநாள் ஒபீசுக்குப் போன மணியத்த77 ஏ. ஜீ. ஏ. யின் அறைக்குள் புகுந்து "ஐயா" என்றார். குனிந்த குனிவில் "பைல்" ஒன்றிற்குள் மூழ்கிப் போயிருந்த ஏ. ஜி. 7 "ஆ! மணியத்தாரே வாரும்' என்று கூறியதும், மணியத்தார் பேச்சை எடுப்பதற்குள்ளேயே ஏ. ஜி. ஏ. மணியத்தாரைப் பார்த்து "இங்கை பாரும், நேற்று உம்மை மனம் நோகப் பேசிப் போட் டனோ தெரியாது." என்று இழுத்தவாறு வாயைத் திறந்தார். தன்னுடைய மகனின் பிழையை இப்ப மூடி மறைத்துக் கதைக் கப் பார்ப்பது மணியத்தாருக்கு விளங்கியது. “அது பரவர் யில்லை ஐயா, நான் அதைப்பற்றிந் பெரிசாய் எடுக்கேல்லை. ஏனெண்டால் ஐயா, “இந்த மணியத்தின்ரை பிள்ளைகள் ஒரு நாளும் உப்பிடியான வேலைகளுக்குப் போகாதுகள் எண்ட முழு நம்பிக்கை எனக்கிருக்கு' என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார். −
பணக்கார வர்க்கமே தங்களது பிரிைகளை ஒத்துக்கொள் வதில்லை என்று எப்பவாவது சபதம் போட்டிருக்கிறார்களோ
நினைத்தவாறு மணியத்தார் சயிக்கிளை உழக்கத் தொடங்கினார்.
நாட்கள் உருண்டோடின ரஞ்சன் இப்பொழுது மருத்துவ பீட கடைசி வருட மாணவன். ரஞ்சன் வீட்டை அடிக்கடி கல்
தி உதயசூரியன் S S 61

Page 40
யாணப் புரோக்கர்கள் வந்து போவதை காஞ்சனா .அவதானிக் கத்தவறவில்லை.
ஒரு கலியாணக் காட்டுடன் மணியத்தார் வந்தார் ஒருநாள். "யாருடைய கலியாணக் காட் அப்பா' என்று காஞ்சனா கேட் பதற்குள்ளேயே, கலியாணக் காட்டை நீட்டினார் மணியத்தார்" ஆவலுடன் உடைத்துப் பார்த்தாள்.
ரஞ்சன் Issar காஞ்சனா (இறுதி வருட மருத்துவபீட (இறுதி வருட மருத்துவபீட மாணவன்) __x-X_r மாணவி) என்றிருந்தது*
காஞ்சனாவுக்கு ஒரு கணம் திகைப்ப்ாயிருந்தது. கீழே ? டும் பார்த்தாள் இது 'சாதாரண பாலர் பாடசாலை ஆசிரியை காஞ்சனா' இல்லை. " எம். பி. பி. எஸ். காஞ்சனா” அல்லவா! என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள்.
கலியான வீட்டிற்கு முதல்நாள் ரஞ்சன் பாலர் பாடசா க்கு வந்தான். நெற்றியிலே முத்து முத்தாக வியர்வை துளிர்த் திருந்தது. காஞ்சனா என்று மிகவும் மெதுவான குரலில் கூப் பிட்டான்.
குழந்தைகள் ரஞ்சனைக் கண்டதும் ' ரீச்சரிட்டை ரஞ்சன் மாமா வந்திருக்கிறார்' என்று குதூகலித்துச் சத்தம் போட்ட னர். ரீச்சர் சிரித்தவாறு *அப்படிச் சொல்லக் கூடாது' என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தாள்
ரஞ்சன் பேச்சை ஆரம்பித்தான், காஞ்சனா! உன்  ைன நேரில் கண்டு மன்னிப்புக் கேட்கத்தான் வந்திருக்கிரேன்" என் றான். "எதற்காக நீர் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேணும்" என்ற தோரணையில் காஞ்சனா ரஞ்சனைப் பார்த்தாள். காஞ் சனா! 'இந்தாரும் உமக்கு ஸ்பெஷல் இன்விற்றேசன்’ என்று வெடிங்காட்டை நீட்டினான் ரஞ்சன். “தாங்ஸ், எனது அட்வான்ஸ் கொன்கிராஜிலேசன்ஸ்'
இ2 ) இ) மாறாத மாங்கள்

என்று புன்முறுவல் பூத்தாள் காஞ்சனா. அதற்கு நன்றி கூறுவது போல தலையை அசைத்துக் கொண்டான் ரஞ்சன்.
அது எல்லாம் இருக்கட்டும், நீர்ஆான் கலியாண வீட்டுக் கோலம் போடுவது றிசப்சனுக்குப் பொம்பிளையை வெளிக்கிடுத் துவது எல்லாம் என்று உரிமையுடன் கேட்பது போலக் கேட்டுக் கொண்டான் ரஞ்சன்.
எனக்குக் கணக்க வேலைகள் இருக்குக் காஞ்சனா, நான் வரட்டுமா என்று வெளிக்கிடும்போது "நீர் வித்தியாசமானவள் தான்' என்று கூறியவாறு சென்றான்.
கலியான வீடு, தடல்பிடலாக நடந்து, மரப் பிள்ளை பொம்பிள்ளை ஊர்வலமாக வர மணியத்தார், 6չն՞ւ (6 ծ / 6006) யடியிலும் கும்பம் வைத்து ஆராத்தி எடுத்து ஆசீர்வதிக்கப்பட் டது. காஞ்சனா வழமையான புன்முறுவலுடன் நின்றதை மஞ்சன் கவனிக்கத்தவறவில்லை,
தி உதயசூரியன் 9 9 63

Page 41
O
ஏமாற்றங்கள்
Tழ்ப்பாணத்தில் மின்சாரம் தடைப்பட்டுள்ள மையால் பல வீடுகளில் தற்சமயம் சைக்கிள்கள் திடீர்திடீரென தலைகீழாக வைக்கப்பட்டு டைன மோவைச் சுற்றி றேடியோ கேட்பது வழக்கமாகி விட்டது. சுந்தரத்தின் வீட்டிலும் அதே காட்சி தான். சுந்தரம் யாழ்ப்பாணத்திலிருந்து புறமோ சனுடன் மாற்றலாகிக் கொழும்புக்குப் போய் மூன்று வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் அவ சர கடிதத்தைக் கண்டு கிளாலியூடாக ஊருக்கு வந்திருந்தான்.
சுந்தரத்திற்கு வயது நாற்பதைத் தாண்டிவிட்ட போதிலும், பயந்த சுபாவம் உடையவன். எதற் கும் நாலு பேரைக் கேளாது எதையும் செய்ய மாட்டான். கனகாலமாக ஊருக்குப் போகாமலி ருந்த சுந்தரத்தை, வீட்டில் ஏதாவது தகராறா வென்று நண்பர்கள் கிண்டல் செய்வதுண்டு. அவன் அதையெல்லாம் பெரிதுபடுத்தாது சமா வித்துக் கொள்வான்.

சைக்கிளைச் சுந்தரத்தின் சகோதரி விமலா சுற்றியவாறு பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அம்மா அடுப்படியிலே யிருந்து கூப்பிட்டதையும் பொருட்படுத்தாது பாட்டிலே மூழ்கி யிருந்தாள்.
கனகாலத்திற்குப்பிறகு கொழும்பிலிருந்து வந்த மகனுக் குத் தினமும் விதம்விதமான சாப்பாடு விழுந்து கொண்டிருந் தது பார்வதியின் கையினால் பார்வதி அன்றைய தினம் தோசையை முறுகச் சுட்டு எண்ணெயும் விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அம்மா சுடச்சுட, மகன் கணக்கு வழக்கில் லாது சாப்பிட்டுவிட்டு, எழும்ப ஏலாது கையை ஊன்றிக் கொண்டு எழும்பினான்.
சுந்தரம் நாலு மிடறு தண்ணீரைக் குடித்துவிட்டுத் திரும் சவும், பார்வதி சுந்தரத்தைப் பார்த்து, 'தம்பி! நீயும் வந்து நாலு நாளாய்ப் போச்சு. இவளின்ரை அலுவல் இன்னும் சரி வரேல்லை. எனக்கு என்னவோ பயமாய்க் கிடக்கு. இந்தச் சம்பந்தமும் ஏதாவது சாட்டுப் போக்குச் சொல்லிக் குழம்பிப் போய்விடுமோவெண்டு" என்றாள்.
"பயப்படாதயணை; தங்கச்சிக்கு நாங்கள் இதுவரை எ* தனை இடங்களிலை பார்த்தாச்சு ஒண்டில் சீதனத்திலே குழம் பும், அல்லது வீடு சரியில்லை எண்டு குழம்பும். அல்லது பொம் பிளை வடிவில்லையெண்டு குழம்பும் இப்படியே காலம் Hர ளுது. விதி எண்டு ஒண்டு இருக்குந்தானே. அப்பதான் காரிய மும் சித்தியாகும் "அதுசரி அப்பு, அவளுக்கெல்லோ வயது போய்க் கொண்டிருக்கு. அவளின் ரை வயது என்ன வேண்டு தெரியுமே வாற வைகாசிக்கு முப்பத்துநாலு முடியுது. "ரு வத்தே பயிர் செய்' எண்டு சொல்லுவினம, குமர் முத்திக் குரங்காய் எல்லோ போய்விடும்" என்றாள் கவலையுடன்.
சுந்தரம் பார்வதியின் கதையைக் கேட்டவாறே அறைக்
குச் சென்று சேட்டை எடுத்து மாட்டினான். தாய் அதைக் கவனித்துவிட்டு, "எங்கே மோனை வெளிக்கிடுகிறாய்; கொப்ப
தி. உதயசூரியன் S ல் 65

Page 42
ரும் புறோக்கரும் மாமாவும் பொடியன்ரை வீட்டையெல்லோ போட்டினம். என்ன முடிவோடை வருகினமோ தெரியாது; சுறுக்காய் வந்துவிடு மோனை' என்றாள்.
"நான் மணியர் கடைப்பக்கம் ஒருக்காப் போட்டுவாறன்?? என்றுவிட்டு வாசலில் கிடந்த செருப்பைச் செருகிக் கொண்டு நடந்தான்.
சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கியதும் வழமையாகப் பற்ற வைக்கும் சிகரெட்டைப் பற்றிவிட வேண்டும் போல இருந்தது சுந்தரத்திற்கு.
சைச் கிளைச் சுற்றிப் பாட்டுக் கேட்டு க் கொண்டிருந்த விமலா ஒரே ஓட்டமாகக் குசினிக்குள் ஓடினாள். 'என்ன பிள்ளை இப்படி ஒட்டம்' என்றாள் பார்வதி. 'அது இல்லை அம்மா, ஏன் தெரியுமே, அண்னை சாப்பிட்ட உடனே சேட்டை மாட்டிக்கொண்டு மணியர் கடைப்பக்கம் போறார்! சிகரட் குடிக்க அம்மா" என்றாள். 'நீ சும்மா போடி ; உனக்கு எந்த நாளும் அவனோடை போட்டிதான்; அவன் தாண்டி உன்னை வாழவைக்கப் போறவன் அவன் உன்ரை அண்ணன் தானே. என்ணெண்டாலும் செய்யட்டும்' என்றாள் மகன் பக்கம் சார் t.!ITቇ5.
விமலா தோல்வியுடன் மீண்டும் றேடியோவுடன் மினக் கெட்டாள்.
சுந்தரம் மணியத்தாரின் கடைப்பக்கம் ‘போய்ச் சேர்ந் தான் வீதி இருளில் மூழ்கியிருந்தது. தான் கடைசியாக க் கொழும்புக்குப் போகேக்கை லைற் இருந்தபடியால் வீதிகள் கூட்ப் பிரகாசமாய் இருந்தன. இப்ப எல்லாம் இருளில் இருப் பதைப் பார்க்க வெறுப்பாக இருந்தது அவனுக்கு.
o(5 கணம் வான்த்தை அண்ணார்ந்து பார்த்தான் மழை பெய்யக்கூடிய மப்பாகவும், இருளாகவும் வானம் இருந்தது. வானத்தில் நட்சத்திரங்களைக் காணவில்லை. துமி ஒன்று காதுப் பொருத்தில் விழுந்து ஜில்லிட்டது
66 ல் 30 மாறாத மனங்கன்

மணியத்தாரிடம் போய் சிகரட் வாங்கலாமென்று பார்த் தால் சனங்கள் முண்டி அடித்துக்கொண்டு சாமான்கள் வாங் கியவாறு இருந்தனர். அத்துடன் தனக்குப் படிப்பித்த கண்க சபை வாத்தியாரும் ஏதோ வாங்கிக் கொண்டிருந்தார். புதுப் புதுச் சனங்கள் எல்லாம் இந்த ஊரில் திரிவதையும் சுந்தரம் கவனித்தான் பக்கத்திலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாமிலி உள்ள சனங்கள் என்று பின்னர் உணர்ந்து கொண்டான்.
சனங்கள் சற்றுக் குறைய. சுந்தரம் கடைக்கு முன்னாள் செல்ல, "ஆ. எப்ப தம்பி சுந்கரம் கொழும்பாலை வந்தனி; நான் நினைக்கிறன் பிரச்சினை தொடங்கினத்துக்குப் பிறகு இப்பத்தான் ஊர்ப்பக்கம் எட்டிப் பார்த்திருக்கிறாய் டோல' என்றார் மணியத்தார். 'ஓம் அண்ணை "" என்று முடிக்கு முன்னரே " தங்கைச்சிக்கு ஏதாவது விஷேமே” என்று ஆரம் பித்தார். ' அது விசயமாத்தான் வந்தனான்; இன்னும் முற்றா கேல்லை" என்றான் சுந்தரம்.
* அது சரி, இப்ப என்ன தம்பி கடைப்பக்கம் வந்தனி!" " ஒரு பிறிஸ்டல்." என்று இழுத்தான் சுந்தரம். “அது சரி சுந் தரம் இதுகளெல்லாம் எப்ப பழகினணி; அங்கையொரு குமர் இருக்குது கட்ட கொப்பருக்கும் ஆமான உழைப்பில்லை’ என்று பெரிய பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார், மணியத்தார் பிறிஸ்ட லையும் தீப்பெட்டியையும் கொடுத்தவாறே,
மழை சோவெனப் பெய்யத் தொடங்கியது சிகறெற்றும் பற்றி முடிந்து விட்டது. மழை விட்டபாடில்லை. சாடையாகத் துமி விழ விழ சுந்தரம் வீட்டை நோக்கி நடந்தான்.
வீதியில் தண்ணீர் தேங்கி நின்ற குழிக்குள் ஒருகால் " சளக் "" கென்று இறங்கி விட்டது. ஒரு கணம் தடுமாறி விழப் போனவன் சமாளித்துக் கொண்டே நீருக்குள் அமிழ்ந்து விட்ட ஒரு காலை அவக் கென்று எடுத்தான். ஒன்றைச் செருப்பு அறுந்துவிட மற்றச் செருப்பையும் சேர்த்து வேலிக்கு. அப்பால் வீசி எறிந்தான். வெறுங்கால்களுடனேயே காயாக நடந்தான்.
தி. உதயசூரியன் ( 0 - 9 67.

Page 43
சுந்தரம் வீட்டிற்குப் போகும் முடக்கில் திரும்பவும், வீட் டில் கொஞ்சம் அமளியாகச் சத்தம் கேட்டது.
சுந்தரத்தின் மனம் பேதலித்தது; இந்தச் சம்பந்தமும் ஏதாவது காரணத்திற்காக குழம்பிவிட்டால் சீதனம் கூடக் கேட் கிறார்களோ! அப்படிக் கேட்டுவிட்டால் என்னால் என்ன செய்ய முடியும்! அரச உத்தியோகம் பார்த்துக் கொழும்பில் தானும் சீவித்து, மாதாமாதம் வீட்டிற்கும் அனுப்பி, சீதனத்திற்கு என் றும் மிச்சம் பிடிக்க முடியுமா என்று சிந்தித்தவாறு. தான் வீட் டிற்கு வருவதை அறிவிக்குமாப் போல காறித்துப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
தகப்பனார் ஈஸிசெயருக்குள் படுத்திருந்தவாறு சுருட்டை உருட்டி, உருட்டிப் பிடித்தவாறு மண்சிரட்டைக்குள் எச்சிலை துப்பிக் கொண்டிருந்தார். தகப்பன் கலியாணப் பேச்சை எடுக் கும்வரை தான் தொடங்கக்கூடாது என்று எண்ணியவாறு, சுந் தரம் கொழும்பிலிருந்து கொண்டுவந்த நாவலொன்றை மேசை யருகே எடுத்து வந்து படிக்கத் தொடங்கினான். அது அலுப் புத் தட்டுகிற ஒரு காதல் கதை வாழ்க்கையின் சாராம்சத்தை அதன் சிக்கல்களை அதில் தரிசிக்க முடியவில்லை.
சுருட்டைத் திண்ணையின் ஒரத்தில் வைத்துவிட்டு, குசினிக் குள் பிரவேசித்தார் தகப்பன். பார்வதியுடன் ஏதேதோ குசு குசுத்த சத்தம் சுந்தரத்திற்குக் கேட்டது. ஆனால் எதுவும் தெளி வாகக் கேட்கவில்லை. சுந்தரத்தின் பெயர் மாத்திரம் அங்கு அடிக்கடி பாவிப்பதை கிரகித்துக் கொண்டான்.
சுந்தரத்தின் கையிலிருந்த நாவலில் காதலித்தவளைக் கைப்பிடிக்க மாப்பிள்ளை சீதனம் " என்ற பெயரில் இரண்டு இலட்சம் கேட்டுக் கல்யாணம் குழம்பும் கட்டம் ஒன்று வந்தது.
பார்வதி சுந்தரம் அருகே வந்தாள். தம்பி தங்கச்சியின் ரை கலியாணம் குழம்பிப் போய்விடும் “போல இருக்கு" அம்மாவின்
68 S) S artApras upaiasat

குரல் தழுதழுத்தது. அம்மா சின்ன விசயத்திற்கும் மூக்கைச் சீறி அழுபவள்தான்.
" ஏன் அம்மா" என்று பதற்றத்துடன் கேட்டான் சுந்த ரம். ' இல்லை தம்பி . மாப்பிளை வீட்டுக்காரர். ' " என்ன விசயத்தைச் சொல்லுங்கோவன்; ஏன் விக்கி விக்கி கதைக்கிறி யள்" என்றான்.
" மாப்பிளைக்கு ஒரு தங்கச்சி இருக்காம். படிச்ச பொண் ணாம். ரீச்சராய் இருக்கிறாளாம். மாத்துச் சம்பந்தம் செய்யச் சொல்லிக் கேட்டவர்களாம். இல்லையெண்டால் முதல் கேட்ட சீதனத்தோடை இன்னும் ஒரு இலட்சம் கூடக் கேக்கினையாம்."
சுந்தரம் அதிர்ச்சியுடன் பார்வதியை நிமிர்ந்து பார்த் தான். அவன் முகம் கறுத்து இறுகிக் கிடந்தது. அந்தக் கண்க ளில் தெரிவது கோபமா . பரிதாபமா . இன்னதென இனம் கண்டு கொள்ள முடியாத ஏதோ ஒர் உணர்வு. பார்வதியால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
" எல்லாம் திட்டம் போட்டுத்தான் கொழும்பிலிருந்து வரச்சொல்லிக் கூப்பிட்டனீங்கள்."
அவன் இருந்த கதிரையிலிருந்து எழுந்து வளையைப் பிடித்துக் கொண்டு நின்றபடி இருண்டு கிடந்த சூனியத்தை உற்று நோக்கினான். ஒருகணம் வெறுமை அவன் இதயத்தை அரித்தது. மறுபடியும் கதிரையில் வந்து குந்திக் கொண்டு மேசை யில் முகம் கவிழ்ந்தான். மீண்டும் தலையை நிமிர்த்தித் தாயைப் பார்த்தான்.
தகப்பன், தாய், சகோதரி மூவரும் அவன் வாயிலிருந்து விடுதலை பெறப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்து நின்றனர்.
* அதுக்கு இப்ப . நீங்கள் என்ன செய்யப் போவதாக
உத்தேசம் .
தி. உதயசூரியன் ஒ S 69

Page 44
" நீ " ஓம் " எண்டு சொன்னால் சரி தம்பி; உன்னைத் தானே நாங்கள் கேட்கலாம் " என்றாள். பார்வதி.
'தங்கைக்கு என்னைப் பிணை நிற்கச் சொல்லித்தானே என்னை வரச்சொல்லி எழுதினிங்க" என்று மனம் கேட்டது.
“எனக்கென்று தனிப்பட்ட ஆசைகள். விருப்பு வெறுப்புக் கள் எதிர்கால வாழ்வு பற்றி ஏன் இருக்கக் கூடாது! அத்த னையும் குடும்ப உறவு என்ற கட்டுக்கோப்பிற்குள் அடங்க வேண்டியவைதானா.
அவன் மெளனமாகத் தலையைக் கவிட்டபடி LD 650TGSL-60L உடைத்தாள் முடிவை எடுக்க முடியாது தடுமாறினான்
தாய் விடவில்லை; தம்பி. என்ன முடிவு மோனை சொல்லுற???
அவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக தலையை நிமிர்த்தித் தாயையும், சகோதரியையும் பார்த்தான். தாயைப் பார்க்க அவனுக்கு பரிதாபமாகத்தான் இருந்தது முகத்தில் பலவித மான துயரங்கள் தாண்டவமாடினர். சகோதரி விமலா மூலை யில் நின்று கண்ணீர் விட்டவாறு நின்றாள்.
அவன் அமைதியாகப் பதட்டமில்லாமல் சொன்னான் "அம்மா. இனிமேல் தங்கச்சிக்கு கலியாணம் பேசப்போறதிாக இருந்தால் பதில் மாப்பிள்ளை. கேட்காத இடமாகப் பார்த்துப் போங்க, தங்கச்சியை எப்படியும் நான் கட்டிக் குடுப் பன் விரைவிலை. அதைப்பற்றி யோசியாதேங்கோ நான் கொழும்புக்கு நாளைக்கே வெளிக்கிடப் போறன். அங்கை டிப்பார்ட்மெண்டிலை எடுக்கக்கூடிய லோன் எல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு மாதத்திற்கிடையிலை திரும்பி வாறன். ஒரு இலட்சம் கூடத் தரலாமெண்டு வாக்குப் பண்ண அப்பாவிடம் சொல்லுங்கோ" என்றான்.
70 è Sò tra. Le rima

சுந்தரம் முடிவைக் கூறிவிட்டு, "அம்மா!" என்று விழித் தான், பார்வதி "என்ன தம்பி’ என்று ஆவலாகக் கேட்டாள்.
"நான் மாத்துச் சம்பந்தத்திற்கு ஏன் சம்மதிக்கவில்லைத் தெரியுமா?" என்றான். நான் ஏற்கனவே என்னுடன் படித்த ளோயினி என்ற ஒரு ஏழைப் பெண்ணைத் திருமண்ம் செய்வ தாக முடிவு செய்து விட்டேன். என்னுடைய தங்கச்சி சீதனக் கொடுமையால் படும் பாட்டை நான் நன்றாய் உணர்ந்தவ
னென்றபடியாலேயே இந்த முடிவைத் தீர யோசித்து எடுத் தேன்.
பார்வதியின் முகம் வாடியதைச் சுந்தரம் கவனித்தான் "அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சீதனம் வாங்காமல் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்வது விருப்பமிருக்காது என்று எனக்கு நன்றாய் தெரியும். ஆனால், நான் எடுத்த மூடிவை மாற்றப் போவது கிடையாது"
தகப்பனும் தாயும் ஒரே குரலில் 'தம்பி ஏதோ யோசித்து எல்லாத்தையும் செய் பிறகு நீ தான் பின்னுக்குக் கஷ்டப்படு வாய்” என்றனர்.
"அப்பா குமரி ஒன்று மூலைக்கை இருந்து கொண்டு பெருமூச்சு விடுறதைத் தடுக்க, நான் க்ைகொடுக்கப் போறதை யிட்டுப் பெருமைப்படுகிறன். இந்த ஊரிலை நான் முன்மாதிரி யாம் நடந்து காட்டப் போறன். தயவுசெய்து என்னை மன் னித்து விடுங்கள்" என்றான்.
அடுத்த நாள் சுந்தரம் பயணத்தை ஆரம்பித்தான். கிளாவியில் வள்ளத்தில் ஏறி உட்கார்ந்தான். சிறிதுநேரத்தில் குளிருடன் சேர்ந்த பெரும் புயல் அடிக்கத் தொடங்கியது சுந்தரம் தனது வள்ளங்களுக்கு முன்னால் சென்ற வள்ளங்கள் இரண்டு புயலின், அகோரத்தினால் கவிழுவதைக் கண்டான் தன்னையறியாமல், "வழக்கம்பரை அம்மாளாச்சி" என்று உரக்
9. aas esfuera (2) O 71

Page 45
கக் கத்தினான். காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கந்தரத் தின் வள்ளமும் மெல்ல மெல்ல கவிழ ஆரம்பித்தது.
சின்னவயதில் நீந்தப் பழகப் போகவென்று பெற்றோரி கேட்க, பெற்றோர் பழகவிடாது மறித்ததைச் சுந்தரம் அந்த நேரத்திலும் நினைத்தவாறு, 'விமலாவையும். நளாயினியையும் தொடர்ந்தும் குமர்களாகவே இருக்கப் போகின்றீர்களே' என்று மனம் வெதும்பியவாறு நீரில் மூழ்கினான்.
முற்றும்.
72 () ) ar pra tos iară
 


Page 46


Page 47
நூலாசிரியர் பற்றி ஆக்க இலக்கியம் பல
அமைவது அநுபவம், தான் 3 பார்ப்புக்கள், ஏமாற்றங்கள், முர பற்றிய அநுபவம் இல்லாதவன் எ போராட்டம், அழிவு, ! வாழ்வே தலைகீழாய்ப் போன கதையை எழுதுகிறார் உதயது பதவி உயர்வுக்காக,தவி புப் பயணம் மேற்கொள்ளும் யைச் சித்தரிக்கிரது "அக்க.ை இராணுவ தடவடிக்கை: தொழில் செய்து போப் ேெழல் பாடசாலையில் புரக்கணிப்பு களின்" கீழ்
Gli 3 di 77 பெண் அலாவால் அந்நாட்டுக் பாது போவதை" உணர்வுகள் :
சமூக சீர்திருத்தத்தை வாறு பழைய சாதி அமைப்பு 'கள் என்பதைக் கலை நடத்
{pନ୍ଧt!!! ଣ୍ଟା ଘେନିଂ " "
எழுத்தாளனுக்கு - கன நோக்கும் பண்பு இருக்க வேே சுற்றி நடப்பவைகளைக் கூர்த், கலையழகோடு தருகிறார். வ. கிரார்.
அவருக்கு நல்ல எ ஆகஸ்ட் - ??4
T
 

டைக்கும் ஒருட்டிருக்கு உசத்தாக் ாழ சின்த சமூகத்தின் எதிர் ண் பாதிகள், அவலங்கள் இவை முதுவது இலுக்கியம் ஆகாது. ர்ெ பெரர் ஆப் என்பவஜ்ஜால் ஒரு மண்ணின் - மக்களின்ரியன்,
பிர்க்க முடியாதபடி, கொழுச் கந்த முத்தர் படும் அவஸ்தை ரக்கு அப்பால் இன்சவியூ" பால் இடம்பெயர்த்து மீனவன் பட்டுச் சாஸ்தும், அவன்மிக்கின் க்குள்ளாவதும் " ஆகிய ஐங்
ரின் ாேப் காலு இன்றும் இனம்
கலாச்சாரத்தோடு ஒன்றமுடி 2ள சலாகிேன்றன" சுட்டுகிறது. மூன்னெடுப்பவர்கள் கூட, ஈப் க்குள் கட்டுண்டு சிடக்கிறார் தோடு ஆாட்வேது 'மிர் த ரீதி
லஞனுக்கு-எதையும் கூர்ந்து *இம். உதடி துரியன் தம்மைச் து நோக்குகிறார் அவற்றைக்
ாசகர்களைச் சிந்திக்க வைக்
திர்காலம் உண்டு. - கவிஞர் சோ. பத்மநாதன்