கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாரீசம்

Page 1


Page 2


Page 3

попѓзro
சிறுகதைத் தொகுப்பு
அமுதன்
வேல் வெளியீட்டகம்
மாவெழு ஒழுங்கை, குரும்பசிட்டி மேற்கு தெல்லிப்பன், இலங்கை,

Page 4
வேல் வெளியீடு : 3 முதற் பதிப்பு : 14 ஏப்ரில் 1978 பரிசுப் பதிப்பு : விலை ரூபா 4-75
MAREESAM
-/Ý Gềaéecéảaz, co S4aoé Séa xéee
Author : Amuthan Fromt Cover : Eswaran Selvarajah Jacket Printing: Nirmal Printers
98, Jampettah St., Colombo-15.
Printers : Kalaivani Printing Works 10, Main Street, Jafna. Publishers : Vel Publishing House,
Mavelu Lane, Kuumpasiddy West,
lellippalai, Sri Lanka. First Edition : 14th April, 1978.

தயாரிப்பு : வேல் அமுதன்
67, கிருன்பால் ருேட்
கொழும்பு 14.

Page 5
"மாரீசம்' நூல் சம்பந்தப்பட்ட சகல உரிமைகளும்
வேல் வெளியீட்டகத்திற்கே உரித்தானவை

புகுமுகம்
GI (DGDI
GS) GIsful LGin மாவெழு ஒழுங்கை,
குரும்பசிட்டி மேற்கு, Gescö65üuaar,
**இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”
வேல் வெளியீட்டகத்தின் மூன்ற வது வெளியீடு அமுதன் எழுதிய இந்நூல் ‘மாரீசம்'. இது தமிழர் புத்தாண்டுத் திருநாளரம் இன் றைய (14.4.78) பெருநாளில் வெளி வருகிறது.
இக்கலைப் படைப்பை எத்துணை கவனமாய்ப் படைக்க வேண்டுமோ, அத்துணை கவனமாகப் படைத் துள்ளோம். இதனின் விலையை எவ்
வளவு குறைக்க முடியுமோ, அவ்வ
ளவு குறைத்துள்ளோம்.
Lu600T S) 6ù fr Li ம் காணல் στιρέ, நோக்கமல்ல;இயன்றவரை முயன்று
முன்மாதிரியான ஒன்றையாக்கி,
ஆக்க இலக்கியத் துறையை வளம் படுத்துவதே எமது ஒரே நோக்கம். எம்மைப் பொறுத்தவரை போட்ட முதல் தேறிஞலே போதுமானது. மேலதிகமாக வரு மா யின், அது வெளியீட்டுத் துறைக்கே செலவு செய்யப்படும்.
வேல் வெளியீட்டகம் இப்படியான நூல்களைக் காலத்திற்குக் காலம் வெளியீட்டு, தமிழ் இ லக் கி யச் சேவை ஆற்றிக் கொண்டிருக்கும்.
எமது சேவை தொடர வாசக நண் பர்களாகிய தங்கள் ஆதரவு அவசி uLuth.

Page 6
ஆளுக்கொரு பிரதியாவது வாங்கி உதவுங்கள்" என வேண்டுகின்ருேம்.
எமது ஆக்கங்கள் பற்றிய உங்கள் கருக்தையும் எழு துங்கள். உங்கள் கடிதங்களை 67, கிருன்பாஸ் ருேட் கொழும்பு-14 என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.
இந்நூல் உருவாவதற்கு பல்வேறு வழிகளில் உதவி யளித்தவர்கள் பலர். அவர் களு ள் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் : திரு. கு. குருசுவாமி B. A. (Hons), திரு. கி. லக்ஷமணன் M. A., திரு. மா. குலமணி, திரு. வ. இராசையா, திரு. அரியாலை ஆனந்தன், திரு. த. சண்முகசுந்தரம் B, A, இவர்கள் அனைவருக் கும் வேல் வெளியீட்டகம் சார்பில் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம்.
என்றும் தங்கள்,
குரும்பசிட்டி, வேல் வெளியீட்டகம். 14-4-1978

என்னுரை
அமுதன 67, கிருன்யாஸ் ருேட், கொழும்பு-14.
நீட்டையும்,நம்மையும் வாழ வைப் பவை நல்ல சிந்தனைகள். 966 வாயளவில் மாத்திரம் இருந்து விட் டால், நீர் மேல் எழுத்தாகி, நிலை யற்றனவாகிவிடும்.
கல் மேல் எழுத் துப் போற் காலத்தை வென்று, நின்று,சிந்த ஜன கள் மனித சமுதாயத்தை வழி நடத்துவனவாக வேண்டில், சிந் தனையாளர் இலட்சியவாதிகளாக வாழல் வேண்டும்.
இலட்சியப் பிடிப்பு . மன வைராக் கியம் உடையவராக வாழுதல் இலே சான காரியமல்ல; எதிர் நீச்சல் வாழ்வு அது. பலங்கொண்டு வீசும் அ லை கள் முன்னேடிகளின் ஆயு ளுக்கே ஆபத்தை விளைவிப்பது முண்டு.
*ஆவது ஆகட்டும் பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்-உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை" என்ற மன உறுதிப் பா ட் டு டன் இலட்சியவாதிகள் வீறுநடை போடு வார்களாக அவர்கள் மக்களின் வாழ்வு மலரவும், வளம் பெருகவும் சமதர்ம அடி ப் படை யி ல் புதிய தோர் சமுதாயம் பிறக்கவும் வழி சமைப்பார்களாக அவர்கள் காட் டும் பாதையிற் சமுதாயம் சென்று RF GL peu45 Tés.

Page 7
இக் கருத்துக்கள் ‘மாரீசம்' என்ற இச்சிறு நூலின் அடிநாதமாக ஒலிக்கின்றன.
"மாரீச மீ” ஐந்து சிறுகதைகளின் தொகுப்பு. இவை
யெல்லாம் ஒரேகால கட்டத்தில் எழுதப்படாதவை யெனினும், இன்றைய காலத்திற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுச் செப்பமிடப்பட்டுள்ளன.
"சுயதரிசனம்" என்ற கதை 1956 இல் நான் தலவாக் கொல்லையில் வாழ்ந்த காலத்தில் “முன்னூற்று ஐம்பது ரூபா" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. "அனுட்டானம்' என்ற கதை 1974 இல் " பகுத்தறிவு " பத்திரிகையில் * வெள்ளிக்கிழமை " என்ற தலைப்பில் வெளிவந்தது. *மாரீசம்'1974 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. “கருநாகம்", "ஆத்மதிருப்தி ஆகிய கதைகள் இந்நூலுக்கெனவே எழுதப்பட்டவை. இந்நாட்டு வரலாற்றில் கறை படிந்த காலம் ஆகஸ்ட் 1977. தமிழ் இனத்தவர் ஈன இரக்கமின்றி - நீதிநியாய மின்றி - ஆண், பெண் போன்ற பாகுபாடெதுவுமின்றி வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்ட மாதமது. அந்த அட்டூழியங்களிற் சிலவற்றை நேரிற் கண்டும் - கேள்வி. யுற்றும் கண்ணிர் சிந்தியவர்களுள் நானும் ஒருவன் அத்தகைய ‘தீண்டல் மீண்டும் நாட்டில் தலைதுாக்கக் கூடாது என்ற நப்பாசையின் விளைவே கருநாகம்’ என்ற சிறுகதை, w
தங்களை மீண்டும், மீண்டும் சந்தித்துக் கலந்துரை யாடும் அவா எனக்குண்டு. அது கைகூடும் என்ற நம்பிக்கையுடன், தங்களுக்கு ஆன்ற வணக்கத்தையும் வாழ்த்தையும், அன்பையும் செலுத்தி விடைபெற்றுக் கொள்ளுகின்றேன்.
கொழும்பு, இலக்கியத்தில் தங்கள், 14-1-1978 அமுதன்.

அறிமுகம்
இந்நூலாசிரியரைப்
மாரீசம்' என்ற பெயரில் அமுதன் அவர்கள் எழுதிய மூன்ருவது நூல் அச்சிட்ப்படுவதை அறிந்து மகிழ்ச்சியடைகின் றேன். ஏற்க னவே " வைகறை ’ என்ற தலைப் பில் ஒரு சிறு கதைத் தொகுப்பை யும், "அறுவடை என்ற பெயரில்
பற்றி சிறிய நாடகமொன்றையும் அவர்
வெளியிட்டிருப்பதைத் தமிழிலக்கிய
இலக்டிமனஐயர்w.A.ஈடுபாடுடையோர் பலரும் அறி
வித்தியாதிபதி,
கல்வி அமைச்சு.
வர். இந்த நூல்களிரண்டும் அள விலே சிறியனவாயினும் உள்ள டக்கத்திலே குறிப்பிடத் தக்க அளவு சிறப்புடையனவாயமைந்து வாசகர் பலருடைய பாராட்டுக் களையும் பெற்றுள்ளன. அவரு டைய இந்த மூன்ருவது நூல் முந் திய நூல்களைவிட மேலும் அதிக பாராட்டைப் பெறுமென எதிர் பார்க்கின்றேன்.
இலக்கிய நூல்களை எமுதுவதில் ஈடுபாடுகொள்வது போலவே அமு தன் இலக்கிய இயக் கங்களை அமைத்து நடத்துவதிலும் ஈடு பாடுடையவர். இதுவரை மூன்று நூல்களை எமுதியது போல வே (இலங்கை அறிவு இயக்கம் தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) வள்ளு வர் மாமன்றம் ஆகிய) மூன்று இயக்கங்களை அமைத்து அவற்றுக் குப் பொறுப்பாளாரகவிருந்து அவற்றை அவரே நடத்திவருகின் gj.

Page 8
இன்று. வழங்கும் பொதுவான பாஷையிலே கூ வதாயின் 'ஆமுதன் ஒருதுடிப்புமிக்க @BT GW* லாம். இலக்கிய்த்தின் மூலமும் இலக்கிய"இக்கங்கள் சிலமும் சமுதாய்த்தை ஓரளவாவது சீர்திருத்தலா Qāp நம்பிக்கை அமுதனின் உள்ளத்தில்ே எப்ப டியோ உறுதியாக இடம்பெற்றுவிட்டதெனத் தோன்று கின்றது. இந்த நம்பிக்கைக்கு உறுதுணையாக அமை வபால அமுதனிடம் இயல்பாகவே பொருந்தியுள்ள எழுத்தாற்றலும் கற்பனைத் திறனும் அவருட்ைய் விசே ஷங்களாகும்.
சில ஆண்டுகளுக்கு முன் மருதானை தொழில்நுட் பக் கல்ஆாரித் தமிழ் மன்றத்துக்கு அமுதன் என்னை அழைத்திருந்தார். அப்ப்ோது அவர் அம் மன்றம் நடத்திய இலக்கிய அரங்குக்குப் பொறுப்பாளராக விருந்தார். அவ்வரங்கை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும்படியும் அவ்வரங்கிலே" புறநானூறு " என் அமீ பொருள் பற்றிப் பேசும்படியும் அமுதன் என் னிடம் கேட்டிருந்தார். அதுவே அமுதனை நான் முதன் முதற் சந்திக்கவும் அவருடைய ஆர்வத்தை அறிய வும் ஏற்பட்ட சந்தர்ப்பம். அதன்பின் காலத்துக்குக் காலம் அவருடைய இலக்கியப் பணிகளையும் சமுதா யப் பணிகளையும் காணவும் மதிப்பிடவும், பாராட்டி மகிழவும் வாய்ப்புகள் பல் கிடைத்தன. அமுதன் நல்ல இ லக் கி ய பாரம்பரியத்துக்குப் பெயர்பெற்ற சூழலிலே பிறந்தவர். இலட்சிய புருஷர் ஒருவர் நிறுவிய நல்ல பள்ளிக்கூடத்தில் நல்ல ஆசி ரியர்களிடம் ஆரம்பக் கல்வியைப் பெற்றவர். இவைக்ள் அவருடைய இளம் பராயத்திலே அவருடைய இளம் உள்ளத்திலே நிலையான தர்க்கங்களை ஏற்படுத்தியுள் ளனவெனக் கொள்வது மிகையாகாது. அமுதன் தான் எண்ணியூ எதையும் சாதிப்பதிலே சமர்த்தர். எப்படியாவது விடாப்பிடியாகத் தொடர்ந்து நின்று நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கவல்ல திட சித்தங் கொண்டவர்.
அமுதனின் இலக்கியப் பணிகளும் சமூகப்பணிக ளும்.மேலும் மேலும் தொடரட்டும்; அவற்றின் மூலம் தமிழ் வளரட்டும்; சமுதாயமும் நாடும் உயரட்டும் என உளமார வாழ்த்துகின்றேன்.
கி. லக்ஷமண ஐயர், .கொழும்பு 78۔2۔سے 27

தமிழுலகு சிறந்த இலக்கியப் படைப்புக்களை வர வே ற் று,
ஆதரித்து, ஊக்குவிக்கும் பண்பு
இந்நூலைப் பற்றி
கு. குருசுவாமி в. A. (Hons)
உதவி ஆராய்ச்சி உத்தியோகத்தர், அரசகரும மொழித் தினைக்களம்,
நிறைந்து, மலிந்து பொலிந்து திகழ்வது. குறுகிய காலத்திலே பல இளம் எழுத்தானரைத் தோற்று வித்த பெருமையினை உடையது இந்த எழுத்தாளர் வரிசையில், அமுதன் அவர்கள் கடிப்பும், தீவிர சிந்தனையும், முயற்சியும் கலந்து ஊற்றெடுக்கும் சமூக சீர்திருத்த வாதியாகவே காணப்படுகிருர்,
"மாரீசம்' என்ற தலைப்பிலே வெளி
வரும் இச் சிறுகதை நூல் மாரீசம்,
அனுட்டானம், சுயதரிசனம், கரு நாகம், ஆத்ம திருப்தி ஆகிய ஐந்து சிறுகதைகளைத் தன்னிடத் தடக்கிய தொகுப்பு ஆகும்.
மனித இனம், நாட்டிலே பல்வேறு துறைகளிலும் வாழ முயன்று, நன்மை தீமை ஆகிய இருவகைச் செயல்களையும் செய்து, அவற்றைப்
பிரித்தறிய முடியாதவாறு மயக்க
முற்றும், வையத்து வாழும் வகை யறியா தும் திகைக்கும்போது, வாழ்வில் தீமையை நீக்கி நன் மையை வளரச் செய்யவேண்டும் என்னும் பெருவிருப்புடன் நல்ல படைப்புக்களை உருவாக்கும் இந் நூலாசிரியரது இலக்கியப் பணி பெரிதும் வரவேற்கப்படக்கூடி யதே.

Page 9
சுருங்கக் கூறி விளங்க வைக்கும் ஆற்றல் அமுதன் அவர்களிடம் காணப்படும் சிறப்புத் தன்மையாகும். தாம் கருதியதைப் பிறர் மனதில் ஆழமாகப் பதிய வைக்கும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றியீட்டி யுள்ளார் என்று கூறுவது பொருத்தமானது.
1958-ஆம் ஆண்டு முதல் 1978-ஆம் வரை தமது சிந்தனையிலே உருவெடுத்த எண்ணக்கரு அனைத்தை யும் ஒழுங்கு படுத்தி, சீராக்கி, சொல்லோவியமாகத் தீட்டி இச்சிறுகதைத் தொகுப்பை வாசகர்களுக்கு முன்வைத்துள்ளார் நூலாசிரியர், அவரது பொறுமை, அடக்கம், பணிவு, மன உறுதிப்பாடு ஆகிய பண்புகள் பாராட்டப்பட வேண்டியனவாம்.
மாரீசம்” என்ற இராமாயண காலத்துப் பெயரைத் தமது நூலுக்குச் சூட்டி, உலகத்திலே இருவேறு தோற்றப்பாடுகளுடன் நடமாடும் மனித இயல்பினை யும்,தெளிவுற்ற சிந்தனையுடன் செயலாற்றும் வகையற்ற போலி வேடதாரிகளது கபடநாடகத் தன்மையினையும் தமது சிறுகதைகளிலே நூலாசிரியர் இழையோடச் செய்துள்ளார்.
பொது வாழ்வு, சமுதாய வாழ்வு, சமய வாழ்வு, குடும்ப வாழ்வு, அலுவலக வாழ்வு, உல்லாசப் பொழுது போக்கு ஆகிய பல துறைகளிலும் மக்கள் வாழ்க்கை யோடு நெருங்கி உறவாடி, பலரது வாழ்விலும் ஏற் படக்கூடிய பலவகையான சுவையான அனுபவங்களை யும் திரட்டித் தமது கதைகள் மூலம் உலகிலே உலாவ விட்ட பெருமை அமுதன் அவர்களுடையது என்ருல் அது மிகையாகாது.
அமுதன், சமய அனுட்டானத்தை மேற்கொண்ட வர்களை இலகுவாக ஏமாற்றி வெள்ளை உள்ளம் படைத்த நல்லவர்களைச் சூறையாடும் போலிகளை, நாசகாரிகளை அம்பலப்படுத்தியும்; S-9 pés. Ar 6oT பெண் களை க்

கண்டால், தமது சுயநிலை இழந்து பணத்தைப் பறி, கொடுத்து அவலமடையும் திடசித்தமற்ற ஆண் களுக்கு அறிவுரை கூறியும்; எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம் என்ற அபிமான எண்ணம் சிறிதுமில்லாத நாகரீகமற்ற கொடிய இயல்புடையோர் மத்தியில் வாழத் துடிக்கும் இனம் ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டுச் சீரழிந்த நிலையைச் சித்தரித்தும்; குடும்ப வாழ்விலே கணவனும் மனைவியும் தமது வாழ்வை நன்மை பெறச் செய்யும் ஆர்வத்துடன் வாழ விழையும்போது, சுய நலக்கும்பல் தமது நன்மையையே பெரிதென விரும்பி, உதவி செய்யும் உள்ளத்தை முற்ருக உலரச் செய்து தவிக்கவிட்டபோதும், தனது சுயமுயற்சியிஞலே வாழ முனைந்து வெற்றி காணும் குடும்பப் பெண்ணுடைய மன எழுச்சிகளைப் படம் பிடித்துக் காட்டியும் படிப் போர் மனதிற் பதியும் வகையில் தமது கதைகளை உருவாக்கிய திறமையை, அமுதன் அவர்களது கை வண்ணத்திலே காணக் கூடியதாயிருக்கிறது.
கதைகளுக்கும், சந்தர்ப்பம் சூழ்நிலைக்கும் ஏற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அழகுறக் கதைகளைத் தொகுத்துள்ளார். கதாபாத்திரங்கள் நேரடியாகப் பேசும் வகையில் அமைந்த இடங்களில் வார்த்தைகள் நேரடிப் பேச்சு மொழியாகவே அமைந்திருக்கின்றன. ஆசிரியரது நோக்கத்தை நன்கு தெரிந்துகொள்ளும் வகையிலே விறுவிறுப்பான போக்குக் கதைகளிலே தெளிவாகப் புலப்படுவதைக் குறிப்பிடாதிருக்க முடி штć5).
மனிதனை நேர்மையானவனுக, உளத் தூய்மையான வணுக, தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பவளுக, உலகை இன்பம் பயக்கும் எழிற் பூங்காவாக மாற்றி யமைப்பவளுக, பிறரது இரக்க சுபாவத்தை, நல்லித யத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றிப் பிறரை வஞ்சிக்காதவனுக, வெளித்தோற்றத்தைக் கண்டு

Page 10
மயங்கித் தன்னையும் இழந்து, பொருளையும் இழந்து, மானத்தையும் பறிகொடுத்துத் துன்பப்படாதவளுகை வாழ வைக்க முயலும் இந்நூலாசிரியர் அமுதன் அவர்களது பணி மேலும் சிறப்புற்று வளர்வதற்குத் தமிழ் கூறு நல்லுலகம் ஆதரவு கொடுத்தல் மிகமிக இன்றியமையாதது.
போலி வாழ்வு என்றும் நிலைக்காது. என்ருே ஒருநாள் உண்மை வெளிப்பட்டே தீரும் என்ற உண்மையைத் தமது கதைகளின் மூலம் நிரூபணமாக்கிய ஆசிரி யரது ஆற்றலை வரவேற்கிறேன். சமுதாயத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்பட வேண்டும். ஊழல்கள் மறைய வேண்டும். மனிதன் மனிதனுக வாழ முனைதல் வேண் டும். உலகம் போற்றும் உத்தமனுக வாழவேண்டும் என்ற சீரிய நோக்கங்கள் அனைத்தையும் தமது கதைகள் மூலம்வெளியிட்ட அமுதன் அவர்களது பணி மிகவும் வரவேற்றுப் பாராட்டிப் போற்றற்குரியது.
ஆதலின், இச்சிறுகதை நூலை அறிமுகம் செய்து வைப்பதிற் பெருமகிழ்வடைகிறேன். நூலாசிரியர் உயர்திரு. அமுதன் அவர்கள் இது போன்ற இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்று தற்குச் சிந்தணு சக்தியையும், மனுேதிடத்தையும், நீண்ட ஆயுளையும், சுகவாழ்வையும் பெறவேண்டும் என வாழ்த்துகிறேன். W
கொழும்பு, கு. குருசுவாமி
7.2.978.

FIDiùLIgMIIt
தெல்லியூர் மகாஜனக் கல்லூரியை நிறுவி தொல்லை தந்த பல பிரச்சனைகளுடன் போராடி வெற்றி கண்டோன் - உயர்ந்தோன் - உத்தமன் - பாவலன் தெ. ஆ. துரையப்பாபிள்ளை அவர்களுக்கும், அவர் நெறி நின்று அவர் பணி தொடர்ந்த - தொடரும் அதிபர்களுக்கும். மகாஜஞ மகிமைக்கு மனமார உழைத்த - உழைக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், மாணவ மணிகளுக்கும் மகாஜனு மாணவன் - சிறியேன் சிந்தை மகிழ்ந்து, உளம் நெகிழ்ந்து சமர்ப்பிக்கும் சிறு மலர், இது.
- அமுதன்

Page 11
உள்ளே.
மாரீசம்
அனுட்டானம்
சுயதரிசனம்
கருநாகம்
ஆத்ம திருப்தி

IDIfri)
சைக்கிளில் வந்துகொண்டிருக்கின்றேன்.
எனது சைக்கிள் கொழும்பு விக்ரோறியாப் பாலத் தைக் கடந்துகொண்டிருக்கிறது. பள்ளங்களும் அவை நிறைய வெள்ளமுமாகப் போக்குவரத்திற்குத் தகுதி யற்ற அந்தப் பாலத்தில் சைக்கிள் நடை பயிலும் குழந்தை போல் வந்துகொண்டிருக்கிறது.
இன்று அதிகாலையில் மழை பெய்தது. அது பெரிய மழையல்ல. மழை ஒழிந்து மூன்று மணித்தியாலங்கள் கடந்தும் விட்டன. இருந்தும், பாலம் வெள்ளக்காடா கவே தோற்றமளிக்கிறது.
இந்தப் பாலத்திற்கு நன்கு பரிச்சயமான என்னுற்
கூட வழியெது, குழியெது எனப் பாதை அறிந்து சைக்கிளை ஒட்ட முடியவில்லையே!
இரவென்ருல் இங்கே இன்னுெரு இடைஞ்சல். இருளோடு போராட வேண்டியதே அது. முழுப் பாலமும் காரி ருளிலேயே. பாலம் கடந்த சந்திக் கம்பத்தில் மாதி திரம் ஒரே ஒரு மின் விளக்கு கலங்கரை விளக்கை
நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது.

Page 12
18 மாரீசம்
பாலத்தின் முன் காவலுக்காகப் போடப்பட்டுள்ள பொலிசைப் பொழுது மறைந்தால் காண முடியாது" அவருக்காகப் போடப்பட்டுள்ள ஷெட் வேறு சேட்டை களுக்காகப் பாவிக்கப்படுவதுண்டு.
பாலத்தில் களவுக்கும், காடைத்தனத்திற்கும் குறை வில்லை.
சிறிது காலத்திற்கு முன்புதான் இவ்விடத்தில் பயங் கரக் கொலையொன்று நடைபெற்றது. வத்தளை புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கு பற்றி விட்டுத் திரும்பிய வியாபாரியும் அவரின் மனைவியும் பந்தாடப் பட்டனர். வியாபாரி பணத்தையும், உடைமைகளையும், உயிரையும் இழந்த நிலையில் ஆற்றுக்கு இரையாக்கப் பட்டார். அவரின் மனைவி மானபங்கப்படுத்தப்பட்டு அடியுதைக் காயங்களுடன் விரட்டப்பட்டாள்.
சீர்கேடு இவ்வளவு மோசமாகியிருந்தும், பாலம் போதிய பாதுகாவலற்று விதவையாகவே இருந்தது.
பாலத்தின் பொறுப்பு யாருடையதென்பது திட்டவட்ட மாகத் தீர்க்கப்படாமையே இத்தனைக்கும் காரணமாம். கொழும்பு மாநகர சபை, பாலம் தனக்கே உரித்தான தென்றும், பேலியகொடை நகர சபை, பாலம் தனக்கே உரித்தானதென்றும் இழுபறிப்பட்டன. பாலத்தின் பரிதாபநிலையைப் பத்திரிகைகள் அம்பலப் படுத்தின. ஆசிரியருக்குக் கடிதமாகக் கட்டுரை எழுதிய வர்களுள் நானுமொருவன், . . இப்படி, பல நினைவலைகள் சைக்கிள் பாலத்தைக் கடந்து கொண்டிருக்கும் வேளை, மனத்துள் எழுந்து கொண்டிருந்தன.
எனது சைக்கிள் ஹான்டிலின் மேல் ஒரு பெரிய அரிசிப் பார்சல். ஹான்டிலின் வலக்கைப் பக்கத்தில்

அமுதன் 19
பிரப்பம் கூடை நிறைய காய்கறியும், அரிசிப் பார் சலும்,
சைக்கிளில் சாமான் வாங்கச் சந்தைக்குப் போய்வரு வது எனது தலைவிதியல்ல; நான் விரும்பி வகுத்துக் கொண்ட ஒழுங்கு முறை. என்னுல் சந்தையில் வாங் கும் சாமான்களை வாடகைக் காரில் போட்டுக்கொண்டு ஜம் என வரமுடியும். நான் அதை விரும்பவில்லை. எளிமையைக் கடைப்பிடிப்பதற்கும்.எடுத்துக்காட்டாக வாழ வேண்டுமென்பதற்குமாக நான் கடின வழிகளை நாடியுள்ளேன்.
ஆடம்பரம், டாம்பிகம், படா டோபம் முதலியவை நான் வெறுப்பவை.
இத்தகைய நற்சிந்தனைகள் என் மனதில் வேரூன்றச் செய்தவர், நம்மாலெல்லாம் செல்லமாக " மாஸ்டர் " என அழைக்கப்படும் இடி முழக்க" சேர சிங்க என்ப வர். -
இவரொரு மேதையும், நாவலரும். இடம், காலமறிந்து பேசும் திறன் மிக்கவர். இவர் இடிமுழக்க ஒலியில் உரை நிகழ்த்துவதால் இவருக்கு "இடி முழக்கம்" என்ற பட்டம் சூட்டப்பட்டது. இவர் ஞாயிறு நாட்களில் வகுப்பு நடத்தி வந்தார். இவ்வாராந்த வகுப்புக்குத் தவருது போய் வந்தவருள் நானுமொருவன். என் குருபக்தியையும், அறிவுப் பசியையும், இலட்சியப் பற்றையும் மெச்சிய மாஸ்டர் என்னைத் தமது நம்பிக் கைக்கும், நன்மதிப்புக்கும் உரிய மாணவனுக ஏற்றுக் கொண்டார்.
நான் மாஸ்டரின் தூண்டுதலால் சமூக பணிகளிலும் பங்குபற்றினேன் - சாதி ஒழிப்பு, சேரி ஒழிப்பு, முதி

Page 13
20 மாரீசம்
யோர் படிப்பு, வெள்ள இன்னல் நிவாரணம், ஏழைகள் புனர்வாழ்வு, எதிர்ப்பு ஊர்வலங்கள், உரை அரங்குகள் பட்டி மன்றங்கள், மே தின விழா - இப்படி, நாம் ஒன்று கூடி ஆற்றிய சேவைகள் பல.
ஆண்டுதோறும் களனி கங்கை பெருக்கெடுப்பதும் கரையோரத்தில் வசிக்கும் ஏழை எளிய துகள் இன்ன அக்கு ஆளாவதும் வழக்கம். பேய் மழை என்று தெரிந்ததும் மாஸ்டர் மாணவரையும், தொண்டர்களை யும் அழைத்துக் கொண்டு தெருத் தெருவாக - வீடு வீடாக நிதி திரட்டுவார். மாஸ்டர் அரைக் காற்சட்டை யுடனும், ரீ சேட்டுடனும் வேலை செய்வதைப்பார்த்தால் எங்களுக்கு ஊக்கம் ஊற்று எடுக்கும். இனி, மாஸ்டர் வந்தால், பெரு நிதி சுலபமாகச் சேரும். சேரும் பணத்தைக் கொண்டு புனர் வாழ்வுத் திட்டங்களை வகுத்து மாஸ்டரே முன்நின்று நடைமுறைப்படுத்து வார்.
மாஸ்டரின் உறவால் நான் நாளுக்கு நாள் நல்லவனுக் கப்பட்டேன். புகைத்தலை விட்டதும், குடிப்பதை விட் டதும், கும்மாளத்தை விட்டதும் மாஸ்டராலேயே. இதனுல் அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்ட வன்.
சித்தாந்தப் பேச்சும் புத்தகப் படிப்புமாக வளர்ந்த தாடியுடன் திரியும் என்னைப் பலர் ‘சாமியார் ", * ஆசாமியார் " எனக் கேலி செய்கின்றனர். சில நண்பர்கள், உறவினர்கள் என்னை விலகி நடக்கின்ற னர். மனைவியும், பிள்ளைகளும் பல வேளைகளில் வெறுப் பைக் காண்பிக்கின்றர்கள். இடத்திற்கேற்ப, ஆளுக் கேற்ப நிறம் மாற்றும் பச்சோத்தித்தனம் எனக்கு இல்லாமையால், கந்தோர் வாழ்வும் இருண்ட வாழ்வே.
என் வாழ்வு எதிர் நீச்சல்தான் என் மனம் அலை கடல்தான்! இருந்தும், இலட்சியப் போக்கை மாற்றிக்

அமுதன் 2.
கொள்ள நான் விரும்பவில்லை. என் திடசங்கற்பத்தில் தளர்ச்சியே இல்லை.
காலப் போக்கில், உடம்பில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக, உடல் வலுவற்ற நிலையில் வாராந்த வகுப்புக்குப் போவதையும், மாஸ்டரைக் காண்பதை யும், தீவிர சமூக சேவை ஈடுபாட்டையும் நிறுத்திக் கொள்ள நேர்ந்தது. என்னுல் முடிந்தவரை இலட்சிய வாழ்வு வாழ்ந்து எடுத்துக் காட்டாக வாழலாமென என்னை நான் கட்டுப் படுத்திக் கொண்டேன்.
. இப்போது, எனது சைக்கிள் நீர்கொழும்பு-கண்டி ருேட் சந்திக்கு வந்து விட்டது. பேரிரைச்சலோடு ருெக்கெட் வேகத்தில் வந்த றேசிங் காரொன்று எனது சைக்கிளை நொருக்கி விட்டதோ!. இல்லை சைக்கிள் தப்பி விட்டது. *தரித்திரியம் 1", காரினுள் முஸ்பாத்தி பண்ணி வந்த இரண்டு ‘மூதேசிகள்? கேலியாகச் சிரித்துங் கொண்
60.
எனக்கு எரியும் நெருப்புள் நெய் ஊற்றியது போலி ருந்தது. என்னுள் பீறிட்ட கோபத்திற்கு நான் எது வும் செய்திருப்பேன்.
ஆணுல், றேசிங்கார் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்து விட்டது. சினத்த மனநிலையில், சைக்கிளைத் திருப்பி னேன். கண்டி ருேட் பக்கம் திரும்புகையில், பிரப்பங் கூடை ஹான்டிலுக்கு இடையூருகி, சைக்கிள் பெரிய வட்ட மாக வளைந்து, தெருவோர பையனுெருவனை மோதி விடும் போலிருந்தது.

Page 14
22 Lor farið
சடின் பிறேக் போட்டேன். பொடியன் தப்பிப் பிழைத் தான்.
ஆணுல், இன்னுெரு சனியனல்லவா வந்து விட்டது. செயின் கழன்று விட்டதே!
உடனே ஒரே பாய்ச்சலில் குதித்து, சைக்கிளை மின் சாரக் கம்பமொன்றுடன் சாய்த்தி வைத்துவிட்டு, தடிக் கம்பைக் கொண்டு செயினைச் சரி செய்தேன்.
மீண்டும், சைக்கிளில் தொங்கி ஏறினேன்.
ஐய்.யய்யோ! ஹான்டிலின் மேலிருந்த அரிசிப் பார் சல் அப்படியே ருேட்டில் விழுந்து, “சீமெந்துக் கடு தாசி கிழிந்து, அரிசி முழுதும் சிதறுண் டு போய் விட்டதே! அரிசியைப் பெறப்பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.
இப்போது அரிசி அருந்தலான காலம். “ஹந்தே இந் தலாத் ஹால் தெனவா" என நம்பிக்கைக் கோஷம் எழுப்பி, மக்களை த் தம் வசப்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றிய "அப்பே ஆண்டுவ" அரிசியையே அருந்த லாக்கி விட்டது; நாளை தொடக்கம் கடைகளில் அரிசி விற்கப்படுவதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கி விட்
• التي سا என் தொட்டலங்க முதலாளி எனது தேவையறிந்து தேடித் தெரிந்து, அரிசி தந்த காலம் மலையேறி விட் டது. இன்று நான் தலை சொறிந்து, தயங்கி, இரந்து வாங்கும் காலம் பிறந்து விட்டது. நேற்றுவரை ஒரு படி அரிசி ரூபாய் நாலரை. இன்ருே எட்டெழுபத்தைந் தாம் ! நாளை அரிசியைக் கடைகளில் காணவே முடி ur Gas !.
இத்தகைய ஏக்கங்கள் கொட்டுண்ட அரிசியைக் கூட்டி அள்ளத் தூண்டுகின்றன. திரும்பவும் சைக்கிளை விட்டி

அமுதன் 23
றங்கி அரிசியை அள்ளுவோமா விடுவோமா எனத் தயங்குகிறேன். நான் முடிவெடுப்பது எடுக்க முன், ஒரு நடுத்தர வயதான பெண் அரிசியைக் கூட்டி அள்ளிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு உதவியாக ஒரு சிறுவனும் சேர்ந்து கொண்டான். இவர்களுக்குப் போட்டியாக ஒரு கிழவனும் சேர்ந்து கொண்டான். அவன் அந்த வயதான பெண்ணையும், சிறுவனையும் ஏதோ சொல்லி ஏசி விரட்டுவதும் தெரிந்தது.
இந்த நேரம் நாய்களும் குரைத்தன. திரும்பிப் பார்த் தேன். அயலிலிருந்த ஒரு சிங்கள ஹோட்டலுக்குப் பின்புறம் இன்னேர் யுத்தம் நடைபெற்றுக் கொண்டி ருந்தது. அது நாய்ச் சண்டை. எறியப்பட்ட மீனின் எச்ச சொச்சத்திற்காக நடைபெறும் கடிபாடு.
திரும்பவும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன் றின. விரைவாக வீட்டுக்குப் போய்விட வேண் டும் என்ற எண்ணத்துடன் மிதிக் கட்டைகளைப் பலமாக உழக்கினேன்.
சைக்கிள் கழனி புதிய பாலச்சந்தியைக் கடந்து சிறிய துாரம் சென்று விட்டது. "ஏய், சைக்கிள் பத் த ட் ட தான்ட”, என்ற அதிகாரக் குரல் என்னை அதிர வைத் தது. அங்கே, வீதியோரத்தில் நெஞ்சு நிமிர்த்தியவாறு பொலிஸ் அதிகாரி ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
பொலிஸ்க்காரன் ஒருவன்தாளு?
இல்லை, அவனைத் தொடர்ந்து தூரத்துக்குத் தூ ரம் பல பொலிஸ்க்காரர்கள் இரு மருங்குகளிலும் நின்ற னர். ஒரு பெரிய பொலிஸ் வானும் தூரத்தில் தென் பட்டது. நடக்கவிருப்பதைக் காணும் ஆவ லோ டு ருேட் ஒரமாக நானும் ஒதுங்கினேன்.
ருேட் ஓரங்களில் அநேகர் அடக்கமாக நின்றனர். இங்கே நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்ட

Page 15
24 மாரீசம்
மாக நின்றதையும் - பொலிஸ் வாகனப் போக்குவரத் தைக் கட்டுப்படுத்தியதையும் இத்தனை நேரமாக சிந் தனையில் மூழ்கியிருந்தமையால் கவனிக் கத் தவறி விட்டேன்.
சற்றுத் தூரத்தில் எனது பழைய நண்பர்கள் உப்பாலி யும், சிவபாலனும் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் மாஸ்டரின் வாராந்த வகுப்புக்களில் எனக்கு அறிமுக மானவர்கள். அவர்களை அணுகி, பழைய சம்பவங்களைத் தொடர்புபடுத்தி நட்பைப் புதிப்பித்துக் கொண்டேன்.
இங்கே நடக்க விருப்பது வெளிநாட்டு தூதரகப் பிர முகர் ஒருவர் புத்த பெருமானின் புனித தாது தந் தத்தைத் தரிசிக்க ஏற்பாடாகியிருந்த மோட்டார் பவனி என்பது தெரிய வந்தது.
இந்த நேரம் மோட்டார் பவனியொன்று வந்து கொண் டிருந்தது.
இது சாதாரண பவனியல்ல செல்வந்தர் வீ ட் டு க் கலியாண ஊர்வலத்தை விடப் பெரியதொன்று. இதிலே நூற்றுக்கணக்கான கார்கள். அவை பல வகையின : பல வடிவின ; பல வண்ணத்தவை.
.ஒரு சிறு அலுவலுக்காக இத்தனை ஆரவாரமும், நேரமெடுக்கும் ஒழுங்குகளும், இத்தனை கார் களு ம் எதற்காக? பொருளாதாரரீதியில் நலிந்த இந்த நாடு, இந்தப் பெரிய கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக் கலாமா ? அத்தியாவசிய உணவுப் பொருளாகிய அரி சிக்கே செலாவணி இல்லாதபோது, ஆடம்பரத்திற்கு அநியாயமாக அள்ளி இறைப்பதா ?
இப்படி, பலவாருகச் சிந்தித்து நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார்கள் எங்களைக் கடந்து செல் அகின்றன.

அமுதன் 25
இத்தனை நேரமாக கழிவுப் பொருட் தேக்கத்தால் ருேட்டோரக் கான்களிலிருந்து வீசிய துர்நாற்றம் இப் போது அடங்கி விட்டது. புத்தம் புது மல்லிகை மலர் களிலிருந்து வீசும் நறுமணம் போல் வாசனைத் திரவி யத்தின் சுகந்த மணம் வீசியது. இது முகமும், மேனி யும் மினிக்கிய நவநாகரிக நங்கையர் தந்த செயற்கை மனம்.
துணி துவைக்க சோப் இல்லை. பல் துலக்க பற்பசை இல்லை. சிலர் முகம் மினுக்க விலையுயர்ந்த பிறநாட்டு வாசனைத் திரவியங்களா ? இந்த அநியாய ஆட்சிமுறை நாசமாய்ப் போக 1 எனச் சபித்துக் கொண்டேன்.
இந்தப் பெண்ணினத்தார் உடுத்த அத்தனையும் பிற நாட்டு உயர்தரப் பட்டு வகைகளே ! எம்மில் சிலருக்கு மாறி உடுக்க உடையில்லை. பலருக்
குக் கைத்தறிச் சீலையும், உள் நா ட் டு உற்பத்தியும். இவர்களுக்கோ.
- என் மனம் இந்தச் சமுதாய அதர்மத்தை எண்ணிக் கொதிப்பெய்தியது.
கார்களுள் சென்ற ஆடவர்களும் அப்படியே! கோட்டு சூட்டு, மொட் ரை என்பனவற்றை அணிந்து அசல் காலனித்துவகாலக் கனவான்களாகத் தோன்றினர்.
என்ன அநியாயம் எமது சேரசிங்க மாஸ்டருமல் லவா ஒரு பெரிய, புத்தம் புது மொடல் காரினுள் சென்று கொண்டிருந்தார். அவரருகில் அவரின் வெள் ளைக்கார மனைவி சிகரெட்டும் கையுமாகக் காணப்
Ts.
இந்த நேரம் ஒரு கணம் அன்றைய மாஸ்டரின் தோற் றம் என் மனக்கண்முன் தோன்றியது. அதனை இன் றைய மாஸ்டரின் தோற்றத்தோடு ஒப்பிட்டுப் பார்த் தேன். எத்தனை பெரிய மாறுபாடு எத்தனை பெரிய வேற்றுமை

Page 16
26 மாரீசம்
அன்று அவர் சர்வசாதாரண உடையில் இன்று இவர் விலையுயர்ந்த வெளிநாட்டு உடையில். அன்று அரைக் காற்சட்டையும், ரீ சேட்டும் அணிந்திருந்தார். இன்று இவர் கோட்டும், சூட்டும், மொட் ரையும் அணிந் திருக்கிறர்.
அன்று அவர் அனேகமாகக் கால்நடையில். இன்று இவர் பெரிய, புத்தம் புதிய மொடல் காரினுள். அன்று அவர் ஏழை எளிய துகள் மத்தியில். இன்று இவர் விதேசியப் பழக்க வழக்கங்களுடன் கூடிய வெள்ளைக் கார மனைவியோடு.
இந்த வேளை இவரொரு அரசாங்க கூட்டுத்தாபன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகப் பத்திரிகை புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு, அதனைப் படித் தமை நினைவுக்கு வந்தது. இன்னுெரு தடவை, இவர் கூட்டுத்தாபன அலுவலாக மேற்குநாடு போவதாகப் பத்திரிகை செய்தி போட்டு, அதனையும் படித்தமை நினைவுக்கு வந்தது. எனக்கு அடக்க முடியாதளவு ஆத்திரம் வந்தது கோபம் நிறைந்த கண்களால் மாஸ்டரை எரித்து விடு வதுபோல் பார்த்தேன்.
மாஸ்டர் அக்கறைப்பட்டதாகவோ, மனச் சஞ்சலப் பட்டதாகவோ தெரியவில்லை. எம்மைப் பார்த்து இலே சாகச் சிரித்துக் கொண்டார். தனது வலக்கையை உயர்த்தி, அசைத்து வணக்கம் தெரிவித்துக் கொண் டார்.
ஆம்! அவர் இராஜதந்திரமாக எம்மிடமிருந்து தப்பித் துக் கொண்டார்.
இப்போது கார்கள் போய்விட்டன. ஆரவாரம் அடங்கி விட்டது. மக்கள் கூட்டம் கலைந்து விட்டது. நாம்

அமுதன் 27
பேரதிர்ச்சியால் விடுபடவில்லை. விறைத்துப் போய் வைத்த கண் வாங்காமல், கற்சிலைகளாக நின் ருேம்.
முதல் முதலில் பேச்சை ஆரம்பித்தது உப்பாலி. *பாத்தியா மச்சாங் மாஸ்டரை” - அவன் கேள்வி எழுப்பினுன்.
"மாரீசனடா இவன். இந்த சேரசிங்க போன்றேரின் மாரீசத்தனத்தாலேயே எமது இயக்கம் பின்வாங்கு கிறது”, எனச் சொல்லி நொந்து கொண்டான் சிவ பாலன்.
முற்ருக முழுதாக ஏற்றுக் கொண்டதாக நான் தலை யசைத்தேன்.
எமது உரையாடல் வளர வசதி இருக்கவில்லை. கரு முற்றி இருளடையும் வானம் எந்நேரமும் தனது கை வரிசையைக் காட்டிடும் போலிருந்தது. தூரத்தில் வானம் இடிப்பது கேட்டது. மின்னல் வெட்டுவதும் தெரிந்தது.
. இங்கேயும் இடி முழக்கம்! மின்னல் வெட்டுக்கள்!- அவை வேகமாகப் பரவ ஆரம்பித்தன.
மேலும் அசட்டையாக நிற்றல் ஆபத்தானது என்ற எண்ணத்துடன் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந் தோம்.
நான் கழனி பட்டிய சந்தியிலுள்ள எனது வீடு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன்.

Page 17
3)ILLIGIIIb
கர்ப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்ற மகோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வள்ளி மணுளன் வெள்ளி மயில் வாகனத்தில், அடி யார்கள் புடை சூழ - வாத்தியங்கள் மங்களயிசை எழுப்ப - தொண்டர்கள் கொடி, குடை, தீவட்டிகள் ஏந்திவர - பெண்கள் சாமரை வீச கொடித் தம்பத்தை அணுகிவிட்டான்.
புரோகிதர் புஷ்ப, தீப ஆராதனை செய்கின்ருர்கள். *அரோகரா’ கோஷம் வானை அதிரச் செய்கிறது.
அந்தச் சிறிய, அழகிய ஆலயம் பக்தகோடிகளால் நிரம்பி வழிகிறது. கோயில் உள்வீதிகளிலும், வெளி வீதிகளிலும் பக்தி பரவசமாக நிரம்பி நிற்போரின் வசதிக்காக பேரொளி பரப்பும் மின்விளக்குகளும், ஒலிபரப்பியும் இணைக்கப்பட்டுள்ளன. *கோவிலடி நடராசா அங்குமிங்கும் ஓடி கருமங்களைக் கவனிக்கிருர், அவர்தான் கோவில் முகாமையாளர். இருந்தும், அவர் நல்லடியாருள் ஒருவராகச் செயற் ւսG&dցj.

அமுதன் 29
கோவிலடி நடராசாவுக்கு வேதாகம விதிமுறைகள் வாய்ப்பாடம். அவதான-அனுபவ வழியில் சமய ஆசா ரங்களை நன்கு அறிந்து கொண்டவர் அவர்,
கொடியேற்ற மகோற்சவம் மாத்திரமல்ல, மகமா-மார் கழித் திருவெம்பாவையா - நவராத்திரியா - சிவராத் திரியா-நித்திய பூசையா எதுவாகிலும் சாஸ்திர முறைப் படி நடந்தேற நிர்வாகிக்கும் திறன் அவருக்குண்டு. அவரின் திறமையைச் சுப்பிரமணிய சுவாமி கோவில் புரோகிதரும் மெச்சுகின்றனர்.
ஆண்டாண்டு நடைபெறும் முகாமையாளர் தெரிவில் ஆட்சேபனை எதுவுமின்றி அனைவரினதும் ஏகோபித்த ஆதரவை நடராசா பெறுகிருரென்றல், அது அவரின் அனுட்டான அறிவு, ஆற்றல்களுக்குக் கிடைக்கும் அங் கீகாரம் ஆகும். அத்தோடு அவரின் பணப்பலமும் பத வித்தெரிவுக்கு ஒரு காரணியாக அமைகிறது.
அவர் நாலாம் குறுக்குத் தெருவில் மொத்த வியாபார மும், செட்டியார் தெருவில் நகைக்கடையும் நடத்து Lauf.
நடராசாவுக்கு “கோவிலடி” என்ற பட்டம் இயற்கையா கக் கிடைத்த ஒன்று. இரவு - பகல் - இடைநேரம் என்று பாராது எந்த நேரமும் அவர் கோவிலிலேயே காணப் படுவதாலும், அவரின் "சுப்பிரமணியன் இல்லம்" என்ற பெயர் சூட்டப்பட்ட மனை கோவிற் சுற்ருடலிலேயே இருப்பதாலும் “கோவிலடி” என்ற பட்டம் அவரின் பெய ருடன் இணைக்கப்பட்டு விட்டது.
கோவிலடி நடராசாவுக்கு ஒரு குறை. அதாவது, அவ ருக்குச் சமய சாஸ்திர விதிமுறைகள் தெரிந்த அள வுக்கு சமய சித்தாந்தத் தெளிவு இல்லை. அவர் சமய சித்தாந்தத்தை அறிய விரும்பியதில்லை. சமய நடை முறைகளை - அனுட்டானங்களைக் கடைப்பிடித்து ஒழுகி கினுல் போதும் என எண்ணி மனத் திருப்தி எய்துகிருர்,

Page 18
30 m மாரிசம்
இன்று கொடியேற்ற மகோற்சவத்தை சோடை போகாது சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்குமவர். கொடிச்சீலை-கொடித்தம்பம். கொடியேற்றம் ஆகியன கூறும் சமய தத்துவத்தை விளக்க வல்லர் அல்லர் ; ಟ್ಚpಲಿ பற்றி அறிய அவர் அக்கறைப்பட்டதும்
இல்
. இப்போது முருக பக்தர்களின் ஆரவாரத்தோடு கொடியேறுகிறது. அதனைத் தொடர்ந்து தேவார பாராயணம் நடைபெறு கிறது. தேவாரத்தைப் பண்ணுேடு - பாவனையோடு பாடிடும் மாங்குயில் பார்வதி. அவள் மருதஞர்மடம் இராம நாதன் பெண்கள் கல்லூரியில் பயின்ற காலத்தில் கவன மாக - கருத்தூன்றி பண்ணிசை படித்தபடியால், ஆயி ரக் கணக்கான மக்கள் மத்தியிலும் நாணமோ, அச் சமோ இன்றி, கேட்ட மாத்திரத்தே கேட்போர் சிந்தை யைக் கவரும் விதத்தில் அவளால் பாடிட முடிகிறது.
பார்வதி கானக் குயில் மாத்திரமல்ல, காண்போர் அவனப்படக்கூடியளவு அழகியும்கூட !
அவள் பழுத்த அம்பலவி மாங்கனி - பன்னீர் விட்டுக் குழைத்த சந்தனக் குழம்பு-இதழ் விரிந்த வில்வம் நறுமலர் 1
அவள் கணவனின் கருத்தறிந்து, அவனை மகிழ்விப் பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு, அடிசிற்கு இனியவளாக - அன்புடைய மாதாக-பதி சொற்கடவாத பாவையாக - அடிவருடி, பின் தூங்கிமுன்னெழும் பேதையாக வாழுகிருள்.
இத்தகைய காரிகையைக் கரம் பிடிக்கும் பாக்கியம் பெற்றவர், கோவிலடி நடராசா.

அமுதன் 3.
நடராசாவின் இரத்த உறவினளான பார்வதி கரம் பிடித்த கணவனுேடு கடந்த பத்தாண்டுகள் இல்ல றத்தை நல்லறமாக நடத்தி விட்டாள். அழகு - ஆரோக்கியம்-பொருள் -பெருமை இப்படிப் பல பேறுகளைப் பெற்ற அந்த அற்புதக் குடும்பத்திற்கு ஒரே ஒரு பெரும் குறை,
அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை !
"ஒரு பிள்ளையாவது இல்லையே!” என்ற ஏக்கம் அவர் களை வாட்டாமல் வாட்டி - வதைக்காமல் வதைத்து - கொல்லாமற் கொன்று கொண்டு இருக்கிறது.
அப்பெரும் குறையைப் போக்க அவர்கள் போகாத திருக்கோவில் இல்லை - ஆடாத புண்ணிய தீர்த்தம் இல்லை - கானுத வைத்தியர் இல்லை - செய்யாத பரிகாரம் இல்லை.
இன்றும் கொடியேற்ற மகோற்சவம் தொடங்கிய நேரம் தொட்டு, இறுதி எய்திய நேரம் வரை சோர்வோ சலிப்போ இன்றிக் கோவிலிலேயே நின்று கருமங்களைக் கரிசனையோடு கவனித்து வீடுதிரும்புகின்ருர்கள் என் ருல், பிள்ளையில்லாத் தம்குறை நீங்குமென்ற நினைப் பும் ஒரு முக்கிய காரணமாகும்.
விதிகளில் குழந்தைகள் குதித்தோடி விளையாடுவதைக் காணும் போதும் - மழலையைக் கேட்டு மெய்சிலிர்க்கும் போதும்-குழந்தைகளின் குறும்புத்தனத்தையும், கள்ள மில்லா வெள்ளை உள்ளத்தையும் கண்டு களிக்கும் போதும் - "தின்னப் பழம் கொண்டு வருவான். பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான். என்னப்பன் என்னையன் என்ருல், அதனை எச்சிற்படுத்திக் கடித்துக் கொடுப்பான்." என்பன போன்ற குழந்தைக் கவிதை களைக் கேட்டின்புறும் போதும் அவர்களின் மனம் தீக்கி ரையாகி வெந்தழல் வேதனையை அனுபவிக்கிறது.

Page 19
32 மாரீசம்
தனிப்பட்ட முறையில் பார்வதியின் மனநிலை பரிதாபத் திற்குரியது. அவள் அடிக்கடி தன் வயிறும் பருத்து உருண்டு, திரண்டு, உருமாறி மகவைத் தாங்க-தாய்ப் பால் மகவுக்கூட்ட - குழந்தை பாலை ஆவலாகக் குடிப் பதை அனுபவித்து மகிழ-மென்மொழியைக் கேட்க - குறுநடையை, குறும்புத்தனத்தைக் கண்டு களிக்க-தாய் மையைப் பூரணமாக அனுபவிக்க பேராவல் கொண்ட வளாக நடராசாவை உணர வைக்கிருள்; தன் மன விருண்டுதலை வெளிப்படுத்துகிருள்.
பாவம் ! நடராசா என்ன செய்வார் ?
அவர் பலகாலமாகப் பிள்ளையில்லாமலே இருந்து கடந் தாண்டு பிள்ளையொன்றைப் பெற்ற நண்பன் தணிகா சலத்துடன் கலந்தாலோசித்தார். சுப்பிரமணிய சுவாமி கோவிற் குருக்களிடமும், வேறு நம்பிக்கையான நண்பர்களிடமும் கேட்டார். நண்பர்கள் அனைவரும், “பழியை இறைவனிடமே போட்டு, முன்னையை விடத் தீவிரமாக இறைத் தொண்டு செய்யப் பிள்ளைச் செல் வம் கிடைக்கும்” என்றனர்; சிவனடியார்களை ஆத ரித்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறும்படியும் தூண்டினர்.
அதன்படி நடராசா அடிக்கடி பூசை, திருவிழா என நடத்துகிருர்-அன்னதானம், பூதானம் எனத் தானங் கள் செய்கிருர் - ஞாயிறுதோறும் பஜனை வகுப்பு இலவச சமய வகுப்பு என்பன நடைபெற ஒழுங்கு மேற்கொண்டிருக்கிருர் - கோவிலுக்குத் தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பல புதிய வசதிகளை ஏற் படுத்திக் கொடுக்கிருர். துறவிகள், யோகிகள், சாமிகள் சந்நியாசிகள், பண்டாரங்கள் ஆகியோரை வர வழைத்து - ஆதரித்து - உபசரித்து ஆசீர்வாதமும் பெறுகிருர்,
*சுப்பிரமணியன் இல்லம் ஆண்டவன் அடிமைகளுக் கும், ஆண்டிகளுக்கும் கதவை அகலத்திறந்து வைத்

அமுதன் — - -- 33
திருக்கிறது. வெறும் மேனியர் - வேட்டி, சால்வை அணிந்தவர் - திருநீறு சந்தனம் போன்ற பல சமய சின்னங்கள் தரித்தவர் - இப்படிப்பட்டோருக்கு வர வேற்பே இல்லாத கொழும்பு நகரில், நகைப்பும் - நக்கலும்-நளினமும்-நாயும் வரவேற்பாகக் கிடைக் கும் இந்நாளில் சந்நியாசிகள், ஆண்டிகளைப் பொறுத்த மட்டில் சுப்பிரமணியன் இல்லம் பெரிய வரப்பிரசாதமே!
அவர்கள் சுப்பிரமணியன் இல்லத்தில் புறம்பான பூசை அறை - குளியல் அறை - படுக்கை அறை வசதிகளை அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்நிலையில், சுப்பிரமணியன் இல்லத்திற்குச் சாமி களின் வரவுக்குப் பஞ்சமாகவா இருக்கும்?
அவர்கள் படையெடுப்புக்கள் போன்று அடிக்கடி வந்து, நடராசா தம்பதிகளின் பணிவன்பான உப சரணையையும் அனுபவித்து, மனமார ஆசீர்வதித்தும் தான் செல்கின்றனர். ۔
இருந்துமென்ன, இன்னும் நடராசா தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவில்லையே!
நடராசா மேலும் அனுட்டான முறைகளை வலுப் படுத்தி, ஆண்டவனின் அணுக்கிரகத்தைப் பெற முடிவு செய்து விட்டார்.
சாதாரண நாட்களில் மச்சமாமிசம் சாப்பிட்டு வந்த பழக்கத்தை அடியோடு கைவிட்டார். w
சைவச் சாப்பாட்டையே சாப்பிடுவதெனத் திடசங் கற்பம் பூண்டுகொண்டார். கொண்டாட்டங்களில் மாத்திரம் மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்தது. அதையும் விட்டுவிட்டார்.

Page 20
34 மாரீசம்
இப்போது வெள்ளிதோறும் உபவாசமும், மெளனவிரத மும் அனுட்டிக்கிருர். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் ஆலயமணி கேட் பதற்கு முன்பாக எழுந்து-நீராடி-தாம் தோய்த்து உலர்ந்த வேட்டியை அணிந்து-நீர் ஆகாரங்களை மாத்திரம் அருந்தி நாள்முழுவதும் மெளனம் காக்கி ருர். ஏதாவது பேச வேண்டுமானுல், சைகை மூல மாகவோ - எழுத்திலோ காண்பிப்பார்.
O O O
அன்று வெள்ளிக்கிழமை. நடராசா அனுட்டானங்களை மேற்கொள்ளுகிருர். பார்வதி வழமைபோல் வேலையாட்களின் உதவியோடு வீட்டு வேலைகளையும், விருந்தினரையும் கவனிக்கிருள். அன்றையதினம் விருந்தினராகச் சிலர் வந்திருந்தனர். அவர்களுள் இருவர் ஆன்மீக உயர் பக்குவநிலையில் உள்ளவராகக் காணப்பட்டனர். ஒருவர் உயரமானவர். நல்ல உடலுறுதி பெற்றவர்.
இவர் காவியங்க வஸ்திரம் அணிந்தவராக - மேனி முழுதும் அழகாக திருநீறும், சந்தனமும் தரித்தவராக - உருத்திராக்க மாலை போட்டவராகக் காணப்பட் டார். அவரின் மஞ்சட் கைப் பையுள் சில பொருட் களும், திருவாசகமும் வைத்திருந்தார். அடுத்தவர் மெலிந்தவர். உயர்ந்தவருக்கு - சாமி யாருக்குக் குற்றேவல் செய்யும் சீடனுகக் காணப் பட்டார்.
அனைவருக்கும் நண்பகற் போசனம் வழங்கப்பட்டது.
மாலைப்பொழுதில், தேநீரும் சில தீன் பண்டங்களும் வழங்கப்பட்டன.

அமுதன் 35
வந்தவருள் சாமியாரையும், சீடனையும் விட மற்றை யோர் இருளுதலுக்கு முன்பாகப் போய்விட்டனர்.
நடராசா எழுத்துமூலம் அவ்விருவரையும் யாரென விசாரித்தார். நெடியவர் தான் நன்கு பிரபல்யமான சமய குரு ஒருவரெனவும், மற்றையவர் தனது பிர தான சீடரெனவும் தெரிவித்தார். நடராசா அடுத்தநாள் பகல்வரை தங்கும்படி தயவா கக் கேட்டு, தானும் மனைவியும் ஆசீர்வாதம் பெற ஆவலுடையவராக இருப்பதாகத் தெரிவித்தார்.
நடராசாவின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது.
இருள் சூழ்கிறது. நடராசாவும், மற்றையோரும் நித்திரைக்குச் சென்று விட்டனர். பார்வதிக்கு இலகுவில் நித்திரை வருவதாகவில்லை;
அவளது உள்ளத்தின் ஆழத்தில் பல நினைவுகள், ஆசைகள் அலைமோதுகின்றன .
"நாம் மேற்கொள்ளும் அனுட்டானங்கள் - செய்யும் புண்ணியங்கள் பலனளிக்காமலா போகும்?. ஆண்ட வன் நம்மை ஆட்கொள்வான். எமது வேண்டுகோளை நிறைவேற்றுவான்.” *தணிகாசலத்தின் மனிசியும் இப்படித்தானே இருபது வருடம் பிள்ளை இல்லாமல் இருந்துவிட்டு இப்பதானே பெடியஞென்றைப் பெற்றவள். எனக்கும் . ” ‘சாமியாரின் ஆசீர்வாதம் பலிக்கும். அவர் அருளுள்ள சாமியாராகவல்லவா இருக்கிருர்?" *அழகும், அறிவும் ஆண்மையும் உள்ள முருகன்
போலை ஒரு பெடியன் . பிறப்பான் சுப்பிரமணிய சுவாமி இரங்குவார்!"

Page 21
36 மாரீசம்
*. பிறகு எனக்கென்ன குறை? இந்த ரவுனிலை நாமும் தலை நிமிர்ந்து திரியலாம். எமக்கென்ன காசில்லையா, காணி, நிலம், பொருள் பண்டம் இல்லையா? வீடுவாசல் இல்லையா? . என்ன இல்லை?” நேரம் செல்லச் செல்ல நித்திரை அவளை ஏற்றுக் கொண்டது. பார்வதி நித்திராதேவியின் அரவணைப் பில் கண்ணயர்ந்து தூங்குகிருள்.
O O Ο
அதிகாலை. அருணன் உதிக்கிருன். அவனது செந்தீக் கரங்கள் முழு வானத்தையும் தீப்பற்றி எரியவைக்கின்றன. யன்னல் வழியாக உட்பகும் சில செந்திக் கதிர்கள் நடராசாவை த் தட்டியெழுப்புகின்றன. அவர் வழ மைக்கு மாருக அதிக நேரம் தூங்கி விட்டதை உணர்ந்து துடித்தெழுகிறர். இன்று இன்னமும் பார் வதி கோப்பி போட்டுக்கொண்டு வரவில்லையே என அறிந்து வருந்து கிருர், அடுத்த கணம், முதல் வேலையாக பார்வதியோடு சாமி யாரைத் தரிசித்து, ஆசீர்வாதம் பெறும் ஆவலோடு படுக்கை அறைக்கு விரைகிருர், அங்கே பேரதிர்ச்சி நடராசாவைக் காத்துக் கிடக்கி றது! அவரால் அவரது கண்களையே நம்பமுடியவில்லை.
"கனவா? மனப்பிரமையா? மாயாஜாலமா? - அவர் சந்தேகிக்கிருர், கண்களை அகல விரித்து ஆராய்கிறர்.
அது, கனவல்ல மனப்பிரமையல்ல மாயாஜாலமல்ல! அவர் கண்ட காட்சி உண்மையே! 'அட, பாவி"

அமுதன் 37
என்ற வார்த்தைகள் அவரை அறியாமலே வெளிக் கிளம்புகின்றன. ஒரு நாள் முழுவதும் மெளனம் காத்து, உபவாசமிருந்து, புண்ணியம் தேடிய அவரின் வாய் “புழுத்த தூஷணத்தில் ஏசுகிறது.
அங்கே! .
சாமியையோ சீடனையோ காணவில்லை! அவர்களின் அறை காலியாகக் கிடக்கிறது.
பெரியறையுள் இரும்புப் பெட்டி திறந்தபடி கிடக்கிறது. லாச்சிகளும், கடுதாசிகளும் இழுபட்டுச் சிதறிக் கிடக்கின்றன. அதனுளிருந்த முப்பதினுயிரம் பெறு மதியான நகைகளையும், இருபதினுயிரம் ரூபாய் காசை யும் காணவில்லை!
பெரியறையை அடுத்த படுக்கை அறை பயங்கரமாக இருக்கிறது. படுக்கை விரிப்பும், தலையணைகளும் நிலத்தில் எறிபட்டுக் கிடக்கின்றன. தரையில் துணி மணிகளும், சில படுக்கையறைச் சாமான்களும் சிதறிக் கிடக்கின்றன.
பார்வதி தாலியும் நகைகளும் பறிபோன பரிதாப நிலையில் . ஆடை அணிகள் அரைகுறையான அலங் கோல நிலையில் .
அவளது குங்குமதி திலகம் அழிபட்டுக் கிடக்கிறது. சாயம் மூக்கு நுனிவரை அப்பப்பட்டுக்கிடக்கிறது. தலைமயிர் குலைந்து கிடக்கிறது. நகவெட்டுக் காயங் கள் முகத்திலும் உடம்பிலும் கிடக்கின்றன. முகத்தில் களை இல்லை. பேச்சில் தொடர்பு இல்லை. அறிவு செயற்படுவதாக இல்லை.
அவள் தரையில் குந்தி இருந்தபடி வீட்டு முகட்டை அண்ணுந்து பார்க்கிருள். அடிக்கடி அர்த்தமின்றிச் சிரிக்கிருள். திரும்பத் திரும்ப, "சி.ச்சீ, இந்தப் பிள்ளை

Page 22
38 Librfarb
எனக்கு வேண்டாம். இது எச்சிப் பிள்ளை!”, “சி.ச்சீ இந்தப் பிள்ளை எனக்கு வேண்டாம். இது எச்சிப் பிள்ளை", சி. ச்சீ! இந்த." எனச் சொல்லிக் கொள்
ளுகிருள்.
ஆம்! . அவள் கற்பழிக்கப்பட்டு விட்டாள்! அவளுக் குச் சித்தப் பிரமை பிடித்து விட்டது !
இதுவரை தூஷண வார்த்தைகளால் பொரிந்து தள் ளிய நடராசா, பார்வதிக்கு நேர்ந்ததைத் தெரிந்து கொண்டபோது விறைத்துப் போஞர். பிரமிப்பின் அதிகரிப்பால் நாத் தளதளத்தது-நடுக்கம் பிடித்தது - இரத்தம் வேகமாக ஓடியது - வேர்வை ஆருகப் பாய்ந்தது.
சமய அனுட்டானங்களாற் பயனின்மை 1 சாமியார் வேடத்தில் ஏமாற்று ! களவு கற்பழிப்பு 1 சித்தப் பிரமை - இத்தனை தாக்கல்களுக்கும் ஈடுகொடுக்க மாட்டாத நடராசா அடிதறித்த பட்டமரமாகச் சாய்ந்து விழுகிருர்.

drIII HIFIÍ
சிம்பள நாட்களில் சிவபாதம் சதாம் வீதியிலுள்ள கந்தசாமியின் கந்தோருக்கு நாலரை மணியளவில் வருவது வழக்கம். இன்றும் என்றும் போல் நேரத் திற்கே வந்துவிட்டார். சிவபாதம் வருவதைக் கண்ட கந்தசுவாமி செய்து முடித்ததும் முடியாததுமாக மேசைமேல் பரப்பிக் கிடந்த பத்திரங்களை அள்ளிக் கட்டி, அலுமாரி லாச்சிகளுள் அடைத்து வைத்தார். விரித்து வைத்திருந்த பதிவேடுகளை மூடி, ஒதுக்கி வைத்தார். புறப்படும் நேரம் நாலரை மணியென வரவு இடாப்பிற் குறிப்பிட்டு, கையெழுத்து வைத்து விட்டு நண்பன் சிவபாதத்துடன் வெளிக் கிளம்பினுர்.
இருவரும் சதாம் குவீன் வீதிச் சந்தியை நோக்கி நடந்தனர். இச் சந்தியில் அந்நியர் ஆட்சியின் அடை யாளச் சின்னமான நெடிய கலங்கரை விளக்கம் உண்டு. இதனண்டையில் சீனத்தவரின் பிரபல்யமான *மான்சிங் ஹோட்டல்" உண்டு. இந்த ஹோட்டலை நாடி, தேடி வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும், உள்நாட்டுப் பிரமுகர்களும் வருவதுண்டு. இத்தகைய வொன்றில், சில மணிநேரம் தங்கி, சிற்றுண்டி சுவைத்து, புதுச் சூழலை அனுபவித்து மகிழுமி

Page 23
40 Loir fifth
நோக்கமாகக் கந்தசாமியும் சிவபாதமும் உட்புகுந் தனர்.
நண்பர்கள் ஒரு மூலை ஓரமாகவிருந்த ஆசனங்களில் வசதியாக அமர்ந்தனர். கந்தசாமி உண்டி பரிமாறு பவனிடம் தங்களுக்கு மட்டன் ருேல்களும் ஸ்ரவுட் குடிவகையும் தரும்படி ஆடர்செய்தார். அவை கிடைத் ததும் முடிந்தளவு ஆறுதலாக அவற்றைச் சுவைத்துக் கொண்டிருந்தனர்.
இப்படி மாதம் இருமுறை கூடியிருந்து சுவைப்பதில் இவர்களுக்கு ஒருவித ஆறுதல். குத்திக்கொண்டிருக் கும் தம் மனத்தைச் சாந்தப்படுத்த - மனம் திறந்து பேசி, பிரச்சினைகளை அலசி ஆராய - சுமையான வாழ்க்கையின் தாக்கத்தைச் சில மணி நேரம் மறந்து, மகிழ்வதற்காக இவர்கள் திட்டமிட்டு நடை முறைப்படுத்தும் பழக்கம், இது.
இந்த வகையால் ஏற்படும் முழுச் செலவையும் ஓவர் டைம் காசு கொடுக்கப்படும் நாட்களில் சிவபாதம் தாங்கிக் கொள்ளுகின்ருர்; சம்பளக் காசு கொடுக்கப் படும் நாட்களில் கந்தசாமி தாங்கிக்கொள்ளுகின்றர்.
இன்று செலவு செல்கிறதே என்று கந்தசாமி கவலைப் பட்டுக்கொள்ளவில்லை. அவர் கந்தோரில் செய்யும் தில்லுமுல்லுகளால் பெரியதொரு தொகை சம்பளமாக அவருக்குக் கொடுக்கப்படுகிறது. உழைப்பின்றி அதிக ஊதியம் கிடைக்குமாயின், அதில் ஒரு பகுதியை மனதிற்குப் பிடித்தவொன்றுக்குச் செலவிட யார்தான் தயங்குவார்கள்? கந்தசாமி கந்தோரில் ஒரு 'நல்ல பிள்ளை’. அவர் முதலாளிக்கும் நல்லவராக, தொழிலாளிக்கும் நல்ல வராக, நடித்தார்.
அவர் எந்தத் தொழிற் சங்கத்திலும் சேர்ந்து கொள்ள வில்லை. தொழிற் சங்கவாதிகளிடமிருந்து தப்பிக்

அமுதன் 41
கொள்ள அவர் பல உபாயங்களை மேற்கொள்ளுகிருர். சக தொழிலாளரைக் காணும்போது முஸ்பாத்தி விட்டுப் பேசி மகிழ்வது - தொழிலாளரின் பிரத்தியேக அலு வல்களில் பங்குபற்றுவது - கஷ்டப்படுவோருக்கு வட்டியின்றி கடனுகக் காசு கொடுப்பது - இவை, இவரின் சில தந்திரங்களாகும்.
இவர் காலையில் நேரத்திற்கு முன்பாகவே வேலையை ஆரம்பித்து விடுவார். சக தொழிலாள நண்பர்கள் கந்தோருக்கு வருமுன்பே, உயரதிகாரிகளைக் கண்டு தனது விற்பன்னத்தை விளம்பரப்படுத்தவும்-சொந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளோ ரைக் கழுத்தறுக்கவும் இவருக்கு இது வசதியளிக் கிறது.
கந்தோரிலுள்ள பேரேடுகளையும், முக்கிய ஏடுகளையும் தனது மேசைமேல் பரப்பி வைப்பார். வெளிப்பார் வைக்கு முழு வானத்தையும் தூக்கும் ஹெக்குலிஸ் போலக் காட்சியளிப்பார்.
கந்தசாமியின் திறமை பாராட்டப்படுகிறது. இன்று வரை வெகுமதிகளாக மாதாந்த சம்பளமாக ரூபாய் தொளாயிரம் பணமுடிச்சும், லெஜர் கிளார்க் என்ற பட்டமும், தனியறைக் கெளரவமும், கட்டுப்பாடற்ற ஓவர்ரைம் செய்யும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன.
அவரும் கைமாருகக் கந்தோர் பொழுதில் செய்தித் தாள் படித்தும், சொந்தக் கடிதங்களை எழுதியும், பிரத்தியேக தேவைகளுக்குத் தொலைபேசியைப் பாவித் தும், சொற்ப நேரம் தூங்கியும், மேலதிக நேரத்தில் ஓவர் ரைம் வேலை செ ய் தும், மேலதிகாரிகளின் சொந்தத் தேவைகளைக் கவனித்தும் நன்றி க் கடனைத் தீர்க்கின் ருர்.

Page 24
42 Lorfferth
இத்தகைய கந்தசாமியாம் சாடிக்கு ஏற்ற மூடியே சிவபாதம். அவரும் கந்தசாமி கையாளும் அதே வழி முறைகளைக் கையாண்டு தனது கந்தோரில் முன்னேறி விட்டார். இத்தகைய இருவர் அடிக்கடி சந்திப்பது தவிர்க்க முடியாததும், தேவையானதுமல்லவா?
இன்றும் மட்டன் ருேல்களைக் க டி த் த ப டி யும், ஸ்ரவுட்டை ருசித்தபடியும் பரஸ்பரம் சுகம் விசாரித் தனர். பொதுப் பிரச்சினைகளையும், பொது விடயங் களையும் அலசி ஆராய்ந்தனர்.
இந்த நேரம் அவர்களுக்கு எதிராகவிருந்த மேசை யைச் சுற்றியிருந்த வெளிநாட்டுச் சோடியொன்று சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளிக்கிளம்பு கிறது. போகும்போது, அவன் அவளின் வெண்ணெய் நிறக் கன்னத்தில் முத்தம் கொடுக்கிருன். அவள் அவனின் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போகிருள்.
அதே ஆசனங்களில் வேருெரு வெள்ளைக்காரச் சோடி அமர்ந்து கொள்கிறது. அவளின் மார்பும், இடுப்பும் மாத்திரம் சிறு துண்டுகளால் மறைக்கப்பட்டுள்ளன. அவன் 'அரைக் காற்சட்டையும், நிறச் சேட்டும் அணிந் திருந்தான். அவர்கள் வரும் போதே ஒருவரை ஒருவர் அணைத்தபடி வந்து, அதே மாதிரியே இருந்து குடி வகை அருந்தினர்.
*சிவா, தேயா போன் ரு என் ஜோய், நாங்க மச்சான் லைவ்வை அவ்வளவு என் ஜோய் பண்ணுகிறதில்லை. காசேதான் கடவுளடா என்றல்லே இருக்கிருேம்" கந்தசாமி அங்கலாய்த்தார்.
"சாமி, நாங்களென்ருலும் லிற்றில் பிற் என்ஜோய் பண்ணுகிருேம். இவன் சுப்பரைப் பாத்தியேடா. றியல்

அமுதன் 43
நப்பியடா. மனிசன் ஆயிரக் கணக்கில் உழைக்குது. வருத்தத்திற்கும் செலவழியாது. உவ்வளவு காசு இருந்தும் என்ன பலன்?”
“ஏன் இவன் பெர்ணுண்டோவும் உப்பிடித்தான். அதுகள் சனியன்களடா. ஏன் நாங்கள் திறமே?”
"ஏன் எங்களுக்கென்ன? மாசம் இரண்டு முறை நல்லாத்தானே செலவழிக்கிருேம்!"
"சிவா, நாங்க என்னத்தைச் செலவழிக்கிருேம்? சில பயிற்றும் இரண்டொரு பொட்டிலும் ஒரு செலவே?."
"இனி, இன்னுெண்டை மறுக்கிறியே? நாங்க மனச்
சாட்சிக்கு மாருக, நடந்து போட்டு, மன ஆறுதலுக் காக ஏதோ செலவழிக்கிருேம்.”
சிவபாதம் அக்கருத்திற்குப் பதிலளிக்கவில்லை. அமைதி யாக இருந்து விட்டார். அமைதி ஆமோதிப்பின் அறிகுறிதானே!
இந்த நேரம் சுவர் மணிக்கூடு ஆறுமணி என்பதை அறிவித்தது. கந்தசாமி தீனுக்குரிய கட்டணத்தைச் செலுத்தினுர், இரண்டு பைக்கற் பிறிஸ்ரல் சிகரெற்றும் வாங்கினுர். சிகரெட்டைப் புகைத்தபடி நண்பர்கள் குவீன் வீதி வழியாக காலிமுகக் கடற்கரைக்குப் போகின்றனர். ン
உரையாடல் தொடருகிறது. பல பிரச்சினைகள் பற் றிக் கருத்துப் பரிமாறல் நடைபெறுகிறது. *.சிவா, நாங்க என்ன விரும்பியா திருகுதாளம் செய்கிருேம்? வாழ்க்கைச் செலவைத் தாக்காட்டவும்பிள்ளைகளுக்குச் சீதனம் தேடிக்கொள்ளவும் - பிற் கால வாழ்க்கைக்குமாகத் தானே இதெல்லாம்".
"அப்ப இந்தச் சமுதாய அமைப்பு மாறிஞல்.”

Page 25
44 - மாரீசம்
*இந்தச் சுரண்டல் சமுதாய அமைப்பு மாறி, மனித அத்தியாவசிய தேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஆட்சிமுறை வந்தால், நான் நல்லவனுகி விடுவேன். இப்ப நாங்க விரும்புகிருேமோ இல்லையோ களவு செய் யத் தூண்டப்படுகிருேம்-நிர்ப்பந்திக்கப்படுகிருேம்." *சிவா, இன்னுெரு முஸ்பாத்தியைக் கவனித்தியா? இப்ப, கம்பனிக்காரன் அரசாங்கத்தை ஏமாற்றுகிருன். நாங்க கம்பனியை ஏமாற்றுகிருேம். எம்மை வேறு Lushojo”. *அப்ப சாமி, கம்பனி நாட்டைக் கோடிக் கணக்கில் சூறையாடுது, நாங்க நூற்றுக்கணக்கில். அப்படித் தானே!" “ஓமோம். இதுவொரு சங்கிலித் தொடர் மாதிரி’
அவர்கள் கடற்கரையை அடைந்து விட்டார்கள். மெல்ல மெல்ல நடந்து புற்றரையின் நடுப்பகுதியை அடைந்தவர்கள், கடலுக்கெதிராகப் போடப்பட்டுள்ள சீமெந்து ஆசனத்தில் அமர்ந்து கொள்கிருர்கள். ஆதவன் அற்புதமாகக் காட்சி அளிக்கிருன். தனது செம்மேனி அழகைக் காட்டி, ஆனந்த நடனமாடு கிருன். அசைந்தாடும் பந்து போல் மேலும் கீழும் துள்ளிக் குதித்து - நீருள் மூழ்கி விளையாடுகிருன். வான மங்கை நீலத் துகில் மாற்றிச் செந்தீ ஆடை அலங்காரத்திற் பெருமிதம் கொள்ளுகிருள். அவளின் கர்வத்தைக் கண்டு பறவை இனம் கேலி செய்தது.
குளிர்காற்று வீசியது. உடம்பைத் தடவிக் கொண்டு செல்லும் ஸ்பரிசம் இனிய உணர்வை ஊற்றெடுக்கச் செய்கிறது. இப்போது செம்மை அகல்கிறது. கருமையின் ஆட்சி ஆரம்பிக்கிறது.

அமுதன் 45
பட்டாம் பூச்சிகளின் படை எடுப்போ?.
அல்ல, அல்ல! நவநாகரிக நங்கையரின் கும்மாளம். நண்பர்களுக்கு ஆசையை உண்டு பண்ணும் வகை யில் காணுமிடமெங்கும் முகம் மினுக்கிய நங்கையர். அவர்கள் கல கலவெனக் கதைத்தபடி ஒடியாடித் திரிந்தனர்.
நண்பர்கள் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு அடுத்திருந்த ஆசனத்தில் ஒரு சோடி, அவளின் தொடையில் அவன் சாய்ந்தபடி, அவள் அவனின் மயிரைக் கோதியபடி.
புற்றரையில் ஒரு காதற் சோடி, படுத்தபடி .
இப்படி, பல காதற் சோடிகள்.
கந்தசாமிக்கோ சிவபாதத்திற்கோ அழகை இரசிக்க முடியவில்லை. இயற்கையை இரசிக்க முடியவில்லை. ஒவ்வொரு அழகு விம்பமும் விபரீத ஆசைக்குத் தூப மிட்டது. வயிற்றை நிரப்பி நிற்கும் குடிவகை மதியை மயக்க, சிகரெட் காமத்தை உருக்கூட்ட, காதற் காட்சி கள் காம வெறியை ஏற்றின.
வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்த நாள் சந்திக்கலாமென்ற நம்பிக்கையோடு, இருவரும் அவரவர் வீட்டுக்குப் போகத் தயாராகினர். காலிமுக ஹோட்டலுக்கருகாமையில் உள்ள பஸ் தரிப்பு இடத்தில், சிவபாதத்திற்கு உடனேயே பஸ் கிடைத்து விட்டது. அவர் கந்தசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டு, கொட்டாஞ்சேனை பஸ் மூலம் பயணமானுர்,
கந்தசாமி போக வேண்டிய இடம் வெள்ளவத்தை, அவர் அவருக்குரிய பஸ்ஸினுக்காகச் சற்று நேரம் காத்து நிற்க வேண்டியிருந்தது.

Page 26
46 மாரீசம்
அங்கே அவரை விட வேறு சிலரும் பஸ்ஸினுக்காகக் காத்து நின்றனர். அவர்களுள் பெல்பொட்டம் அணிந்த ஒரு இளம் பெண். எங்கேயோ அவளைக் கந்தசாமி பார்த்த மாதிரியும் இருக்கிறது. அவளும் கந்தாமி யைப் பார்த்துப் புன்னகை பூக்கிருள்.
அந்த நேரம் அங்கொடையிலிருந்து கல்கிசைக்குப் போகும் நூற்று முப்பத்தினுங்காம் இலக்க பஸ் வரு கிறது. கந்தசாமிக்கு பஸ்ஸில் ஏறவா, விடவா என ஒரு தயக்கம். “இந்த பஸ்சைப் போக விட்டுவிட்டு பெல்பொட்ட அணங்கோடு சற்று நேரம் பேசி மகிழ லாம்” என எண்ணம் தோன்றுகிறது.
அவ்வளவு துணிவு அவருக்கு இல்லை. அவரை அறி யாமலே அவர் பஸ்ஸில் ஏறிக்கொள்கின்றர். என்ன அதிஷ்டம் அவளுமல்லவா அதே பஸ்ஸில் ஏறினுள்.
வைத்த கண் வாங்காமல், அவளையே பார்த்தபடி, பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு பஸ் சாரதிக்குப் பின்புறமாகவுள்ள கடைசி ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுகின்றர். அவளுமல்லவா அதே ஆசனத்திற்கு வருகிருள்!
அவள்1
கனிந்த மாதுளம் பழத்தை நினைவூட்டுகிருள். அவ எளின் நிறமும் அழகும் அத்தகையன. அவள் மேனி
நிறத்திற்கு ஏற்ப இளம் செந்நிறச் சேட்டும் கடும் சிவப்பு பெல்பொட்டமும் அணிந்திருந்தாள்.
இறுக்கமான ஆடை அலங்காரம் அவளின் .
அவளின் இதழ்கள் இரத்தச் சிவப்புச் சாயத்தால் அழகு படுத்தப்பட்டிருந்தன. அவை கொவ்வைப் பழங்களை
ஒத்திருந்தன. முகம் பவுடரால் மினுமினுத்தது.

அமுதன் 47
விரித்து விடப்பட்ட நீண்ட கருங் கூந்தல் அவளுக்கு அழகாகவிருந்தது. இவற்றுக்கு மேலாக அவள் பூசிய சென்ரின் மணம் சுகந்தமாக வீசியது.
அவள் அழகியே!
கந்தசாமி அழகை இரசிக்கும் நிலையில் இல்லையே! அவரின் பார்வை அங்கங்களின் மேல் கூர்மையாக விழுந்தது. பிறகு அது கீழே கீழே இறங்கி அழகை மேய்ந்தது. பார்வை நன்ருக இறங்கி விட்டது. கட்டுக்கடங்காத அவரின் கண்கள் மூர்க்கமாகக் கற் பழிப்பில் ஈடுபட்டன.
மேலும் வெறியின் வேகம் தணியாதவராய் அவளை வரவேற்கும் தோறணையிற் சிரித்து, இடமொதுக்கிக் கொடுத்து, தனதருகில் அமர வைத்தார்.
இத்தனை வருட காலமாக அடக்க ஒடுக்கமான கிராமிய பெண்ணுடன் பாலுறவை வேண்டிய அளவு, வேண்டிய மாதிரி அனுபவித்த கந்தசாமிக்கு இன்று புது அணு பவமாக - என்றும் காணு இன்பப் புத்தெழிர்ச்சியாக இருக்கிறது. "இடைக்கிடை இப்படியான ஒரு மாற்றம் வரவேற்கத்தக்கதுதான்", என எண்ணிக் கொண்டார்.
பஸ் இப்போது வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. கந்தசாமிக்கு பஸ் சுவர்க்கத்தை நோக்கிப் பறந்து கொண்டிருப்பது போலிருந்தது.
பெல்பொட்டக்காரி ஒரு முறை தலையைச் சிலுப்பினுள். அவளின் கருங் கூந்தல் மயிர்கள் கந்தசாமியின் முகத் திலும் தோளிலும் விழுந்தன, "ஐ ஆம் வெரி சொறி” என மன்னிப்புக் கோரும் தோறணையில் மெல் விரல் களால் மயிரைச் சரி செய்வதாகப் பாசாங்கு செய்து கந்தசாமியின் வதனத்தைத் தடவிக் கொண்டாள்.

Page 27
48 Lof far is
அத் தடவல் அவருக்கு காமவெறிப் பாய்ச்சலுக்கான ஸ்விச்சை முடுக்கி விட்டது போலிருந்தது. காமம் உடம்பு எங்கும் பாய்ந்து, உச்சிவரை உயர்ந்து விட் -ஆ. இருந்தும், உடற் பசி எடுத்துக் கொண்டமை யைக் காட்டிக் கொள்ளாதவராக, யன்னல் வழியாக தெருவோரக் கட்டிட அழகை இரசிப்பது போற் பாசாங்கு செய்தார்.
காலி வீதியின் மருங்கிலே அழகிய கட்டிடங்கள். வீதி யின் நடுவிலே வரிசையாக மின் விளக்குக் கம்பங்கள். மின் விளக்குகள் தண்ணுெளி பரப்பி பார்க்கும் இட மெங்கும் இளவேனிலை நினைவூட்டும் அவ்வழகே அழகு!
வீதியோரத்தில் சில வெளிநாட்டினர் நின்றனர். அவர் களிற் சிலர் ஒரு அன்னுசி வண்டிக்காரனைச் சூழ்ந்து நின்று அன்னசிப் பழத் துண்டுகளை வாங்கிச் சுவைத் தனர். ஒரு கடலைக்காரனுக்கு நல்ல விற்பனையாக விருந்தது.
இப்படி எத்தனையோ காட்சிகள்! இவற்றை எல்லாம் கந்தசாமி பார்க்கின்ருர்தான். ஆணுல், இவற்றைக் கருத்திற் கொள்ள முடிகிறதா? இரசிக்க முடிகிறதா?
அவர் உடற்பசிக்கல்லவா தீன் தேடுகின்றர்.
நல்ல அதிஷ்டம் பெல் பொட்டக்காரி மெதுவாக தனது இடக்கையை கந்தசாமியின் முதுகுப்புறம் போட்டாள். தலையை இலேசாகத் தாழ்த்தி முகங்கள் முட்டிடும்படி செய்தாள். ஆரம்பத்தில் அணங்குடன் பேசி மகிழ மாத்திரம் எண்ணிய கந்தசாமி, இப்போது பேச வலு இழந்தவராக - காமவெறிக்கு அடிமையாகி அவளின் கேளிக்கைக்கு இடமளித்தார்.
----. 8)ůu, osu (35yb !

அமுதன் 49 பஸ்ஸின் கடைசி ஆசனம் காதலருக்கெனவே ஒதுக் கப்பட்டதா? அங்கே யாரின் கண்களிலும் படாது காதல் லீலைகளை நிறைவேற்றி விடலாம். அந்தநேரம் பஸ்ஸி அள் சன நெருக்கடி அற்றிருந்தமை கந்தசாமிக்குத் அதுணிவைக் கொடுத்தது. வேறு இயற்கையும் ஒத்து ழைத்தது. யன்னல் வழியாக கடற்காற்று சுமாராகி வீசியது. சொல்லி வைத்ததைப் போன்று வானம் கரு விற்று, அாற்றல் மழையாகப் பெய்யத் தொடங்கியது"
இதமான சூழலை உண்டுபண்ணியமைக்காகக் கந்த சாமி கடவுளுக்கு நன்றிசொன்னர். பஸ்ஸை மெதுவாக ஓடவைத்து உதவும்படியும் பிரார்த்தித்துக் கொண்டார். கொள்ளுப்பிட்டி-பம்பலப்பிட்டி என கொழும்பு மாந கரின் முக்கிய இடங்களைக் கடந்து ஓடிய பஸ் வெள்ள வத்தையை அணுகி விட்டது.
“வெல்லவத்தே, பயின்ன!" பஸ் நடத்துநர் இரைகி ருர், கந்தசாமிக்கு இறங்க சற்றும் மனமில்லை. இருந் தும், இறங்கியே ஆக வேண்டுமென்பதால், வெறுப்புட னும் மனவேதனையுடனும் இறங்குகின் ருர். இறங்கிய போது, கடமை உணர்வை வெளிப்படுத்தும் ஆவலாக, "குட் நயிற் டியர்" என்கின்றர். ஆரணங்கினுக்கு நன்றியுணர்வு இல்லையா? அவளும் பதிலுக்கு, “குட் நயிற் டாலிங்” என்கிருள். கந்தசாமியையே பார்த்த படி, கையை அசைத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்கிருள். பஸ் நியாயமான தூரம் ஒடும்வரை இது நடைபெறு கிறது.
துாற்றலாகப் பெய்த மழை இப்போது சற்று அதிக மாகி விட்டது. கந்தசாமி ஓடோடிப் போய் மார்க் கெற் கட்டிடத்துள் ஒதுங்கிக் கொள்ளுகின் ருர்,
கந்தசாமியின் நினைவுகள் இன்னம் விடுபட்டபாடில்லை. சேர்ந்து பிரயாணம் செய்த சுந்தரியையே மனம் வட்டமிட்டது.

Page 28
50 மாரீசம்
சாயல்-உரஞ்சல்-ஸ்பரிசம்-அத்தோடு. Mbr*
ஆகா! என்ன இன்பம். நினைக்க நினைக்க இனிக்கிறது. நினைவின் தித்திப்பில் அரைமணி நேரமளவில் சுய நினைவற்று சிலையாக நின்று விட்டார்.
மழையோ விடுவதாக இல்லை. இப்போது கடுமையா கப்பொழிந்தது. நேரம் மணி ஏழாகி விட்டது. வழ மைக்கு மேலாக ஒன்றரை மணித்தியாலங்கள் சென்று விட்டன. இன்னமும் வீடுபோய்ச் சேராது நிற்க முடி யாது. மனைவியும், பிள்ளைகளும் தேடுவார்கள். டாக்ஸி ஒன்றைப் பிடித்துக்கொண்டு போக முடிவு செய்தார்.
டாக்ஸிக்குத் தேவைப்படும் காசை முற்கூட்டியே எடுத்து, புறம்பாக வைத்துக்கொள்ள காற்சட்டைப் பைக் கற்றுள் கையை விட்டார். என்ன ஆச்சரியம்! மணிபேஸைக் காணவில்லை 1 சேட்பைக்கற்றுட் துழா விஞர். வேறு இடங்களையும் தட்டிப் பார்த்தார். பேஸ் இல்லை. h
ஐய்யய்யோ! எழுநூறு ரூபாய். எங்கே போயிருக்கும்?
"முழு மாதச் சம்பளம் அப்படியே தொலைந்து விட் டதே!. பறிகொடுத்தேஞ?” - தடுமாறினுர்,
"பஸ்ஸினுள் ஏறியபோது இருந்ததே. ஆம்,ஆம் அது பறி போயே விட்டது!” - சற்று உரக்கக் கத்தினுர்.
"அந்த சிறுக்கி மூதேசிi சனியன்!. (தூஷணத்தில் ஏசினர்) ஏமாற்றி விட்டாள் ! எனது பலவீனத்தைப் பாவித்து ஏமாற்றி விட்டாள் அறுதலி.”
கந்தசாமிக்கு இப்போது இரண்டு வெறியும் தணிந்து விட்டது. வெட்கவுணர்வும் வேதனையுணர்வும் வாட் டின. "தசைப்பிடுங்கலால் மதியிழந்து மடையணுகி விட்டேனே" என வருத்தப்பட்டார்.

அமுதன் 51
"இனி டாக்ஸியில் போகமுடியுமா?"
"வீட்டு வாடகைக்கு என்ன செய்வ்து? லயிற் பில்லை எப்படிக் கட்டுவது? பாற்காரனுக்கு என்ன சொல்லு வது? பேப்பற்காரனை எப்படிச் சமாளிக்கலாம்? மாத மற்றைய செலவுகளுக்கு .
“மனைவிக்குப் புடவை வாங்கித் தருவதாக வாக்களித் தேனே மூத்த மகளின் பிறந்தநாள் வருகிறதே! மக் களுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கவேண்டுமே.
“மனைவிக்கு என்னத்தைச் சொல்லுவது? துளைத்துத் துளைத்துக் கேட்கும் பிள்ளைகளிடமிருந்து எப்படித் தப்புவது?."
இப்படி, ஆயிரம் ஆயிரமாக எண்ணங்கள் படையெடுத் தன. அவர் பலமிழந்த, தன்மானமிழந்த அபலநிலை யில், சுயஉருவத்தின் கோணலைக் காண முடிந்தது. பின் ஏதோ ஒரு வெறிபிடித்தவர் போல், மழையின் கொடுமையையும் பொருட்படுத்தாது, பஸ் சில் ஸ் லேனிலுள்ள தனது வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக விரைந்தார்.

Page 29
கருநாகம்
ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்து ஏழு ஆகஸ்ட் மாதம் பதினேழாம் திகதி. ஒரு புதன்கிழமை அதிகாலை. கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து புகைவண்டி - "யாழ்தேவி யாழ்ப்பாணம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.
யாழ்தேவி வழமை போல் பிரயாணிகளால் நிரம்பி வழிகிறது. நடைபாதையில், ஆசன இடைவெளிகளுள், ஆசனங்களுக்குக் கீழ், கதவுகள் ஒரம் - இப்படி, க்கும் ஒரே சனத் திரள். பச்சிளம் பாலர்கள், தாய்மார்கள், பெரியோர்கள், நோயாளிகள் - இப்படிப் பலதரப்பட்டோர்.
இவர்களுள் பிரபல்ய டாக்டர் கணேசன் அவர்களும் ஒருவர். பிரயாணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பொழுதைப் போக்குகின்றனர். கணேச னுக்கு நேரம் கழிவதாகவில்லை. ஒவ்வொரு நிமிடமும் நத்தை வேகத்தில் நகர்ந்து, அவருக்கு நரக வேதனை யைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவரின் உடல் புகைவண்டியினுள்ளும் உணர்வு அவர் பிறந்த ஊரி லிருக்கும் அவரின் தந்தையைச் சுற்றியும் வட்ட மிட்ட அது.

அமுதன் 53
*அப்பா அவஸ்த்தைப்படுவாரா ? வேதனை தாங்க மாட்டாமல் கத்தி அழுவாரா?. பாவம் நான் அங்கி ருந்தால், தேவை அறிந்து உதவுவேன். கஷ்டத்தைக் குறைக்க மருந்து கொடுப்பேன்.
"நான் எப்போதோ போயிருக்க வேண்டும். பேய்த் தனமாக விமலாவையும் கயல்விழியையும் மாத்திரம் அனுப்பியிருந்தேனே! அவர்கள் போனபோது நானும் போயிருக்கவேண்டும். அப்பாவுக்குக் கடுமை. உடனே வருக எனத் தந்தி வரும்வரை போகாதிருந்து விட் டேனே!
* நான் போகமுன் வருத்தம் மோசமாகி. நடக்காது அப்படி நடக்கவே நடக்காது. அவர் புண் ணியம் செய்த ஆன்மா. ஆண்டவன் கருணை காட்டுவார். செல்வச்சந்நிதியான் கைவிட மாட்டான். அவர் தனது விருப்பத்தை நிறைவேற்றியே கடைசி மூச்சை விடுவார். *. வழிக்கு வழி சொன்ஞரே! 'தம்பி! எனக்கு நீ ஒன்றும் செய்ய வேண்டாம், அந்தியகாலம் அண்டை யில் நின்ருல் போதும், அதை மாத்திரம் செய்து போடு" என்ருரே!. செய்வேனு? அவர் சாகமுன் போயிடுவேனு?
"போயிட முடியும் யாழ்தேவி எப்படியும் மூன்று மணிக்கு முன்பாக யாழ்ப்பாணம் போய்விடும். ரவு னிலை கார் பிடித்தால் அரைமணித்தியாலத்துள் வீட் டிற்குப் போய் விடலாம்.”
இப்படி, பல்விதமான சிந்தனைகளில் மூழ்கி, தன்னை மறந்து, சுற்றடலில் நடப்பதை அறியாது கணேசன் அதிக நேரம் இருந்துவிட்டார். பொத்துஹேர புகை யிரத நிலை பத்தில் புகைவண்டி இருபது நிமிட நேரம் வரை மறிக்கப்பட்டிருந்ததையும் அவர் அவதானிக்கத் தவறி விட்டார்.

Page 30
54 மாரிசம்
இப்போது புகையிரதப் பெட்டிகளிலிருந்து எழுந்த அலறலும், அழுகையும், ஒலமும், பேரிரைச்சலும் கணேசனைப் பிரத்தியட்ச உலகுக்கு அழைத்து வந்தன. கணேசன் விழித்துக் கொண்டார். தன்னைச் சூழ்ந் துள்ள பேராபத்தை உணர்ந்து கொண்டார்.
அது, இனக் கலவரம் சிங்கள - தமிழ்க் கலவரம்
தமிழர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். குழந்தை கள், பாவையர், வயோதிபர், நோயாளர் என இரக்கம் காட்டப்படவில்லை. தடி, பொல்லு, போத்தல், கத்தி, கிறிஸ் ஆகிய ஆயுதங்களால் தாக்கினர். கன்னங்கள் பதம்பார்க்கப்பட்டன. கைகால்கள் முறிக்கப்பட்டன. தலைகள் உடைக்கப்பட்டன.
கணேசன் இருந்த பெட்டியினுள்ளும் சில சிங்களக் காடையர் ஏறினர். 'உம்ப தெமளத, சிங்களத" என விசாரித்து, தமிழருக்கு வசைமாரியும், அடியுதை யும் கொடுத்தனர். சேட்டுக்களையும், சட்டைகளையும் கிழித்தனர் சால்வைகளைப் பறித்தனர். வேட்டிகளையும் சேலைகளையும் உரிந்தனர். பேணுக்கள், மூக்குக் கண்ணு டிகள், கைக்கடிகாரங்கள், மணிப்பேசுகள் முதலியவற் றைப் பறித்தனர். கையணிகள், காதணிகள், கழுத் தணிகள் முதலியவற்றைப் பிடுங்கினர். பொதிகள், சூட்கே சுகள் முதலியவற்றைக் கொள்ளையடித்தனர்.
இரண்டு காடைகள் கணேசனுக்கு முன்னிருந்த ஆசனத்திலிருந்த ஒரு பெரியவரின் கன்னத்தில் "பளார்', 'பளார்," என்று அறைந்தனர். அவரின் LD2OT வியின் தாலிக்கொடியையும், தோட்டையும் பிடுங்கினர். அத்தாயின் காதுகளிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. அவள் ஓலமிட்டாள். அவர்களின் இரு குழந்தைகளும் பயந்து அலறின. காடைகள் குழந்தை களுக்கும் தம் கைவரிசையைக் காட்டினர். இரு குழந்தைகளையும் தூக்கித் தூக்கி ஆசனத்தில்

அமுதன் , 55
மோதினர். அவர்களின் கைகால்கள் முறிந்தனவோ, என்னவோ! அவர்கள் குரலிழந்து, அறிவுசோர்ந்து, அயர்ந்து, வீழ்ந்தனர்.
இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்க - தடுத்து நிறுத்த யாரும் முன்வரவில்லை. வெளியே துப்பாக் யும் கையுமாக மரக்கட்டைகளாக நின்று கொண்டி ருக்கும் காவற் படையினரே உணர்ச்சியற்ற அலிக ளாக தொழிற்பாடற்று இருக்கும்போது, தலையிடு வதற்கு யாருக்குத்தான் துணிவுவரும்?
கணேசனுக்கு ஆச்சரியமாகவிருந்தது. காவற்படையி னர் கடமை உணர்ச்சி அற்றவர்களாக - பாரபட்சம் காட்டுபவர்களாக - பாவத்திற்குத் துணைபுரிபவர் களாக இருப்பார்களென அவர் கனவிலும் நினைக்க வில்லை. 'வேலியே பயிரை மேய்ந்தால்.”என எண்ணி மனவேதனை அடைந்தார். "இந்தப் பாவிகள் நாச மாய்ப் போக!' என அவரை அறியாமலே அவரின் வாய் முணுமுணுத்தது.
கொடுமை மேலும் சிறிது நேரம் தாண்டவமாடியது கடைசியில் சீழ்க்கை ஒலி அறிவித்தலைத் தொடர்ந்து தாக்கல் திடீரென நிறுத்தப்பட்டது. காடைகள் புகை வண்டிப் பெட்டிகளிலிருந்து குதித்தோடி ஓரிடத்தில் கூடினர். அவர்கள் மத்தியில் விஷமி பியசேஞ காணப்பட்டான். அவன் நடந்து கொண்ட விதத்தில் அவனுக்குக் காடைகள் மத்தியில் செல்வாக்கிருப்பதா கவும், அவனின் சொற்படி அவர்கள் செயற்படுவதா கவும் தெரிந்தது. பியசேஞ காடையர்களுக்கு ஏதோ சொல்லிக் கொண்டான். அவர்கள் பொருட்களையும், பொதிகளையும் தூக்கிக் கொண்டு ஓடினர். அவர்களைத் தொடர்ந்து பியசேனவும் தங்க வளையல்களையும், சங்கிலிகளையும், தாலிக்கொடிகளையும், கைகளிற் கொழுவிக் கொண்டு ஒடிஞன்.

Page 31
56 or fost ub
ஈன இரக்கமற்ற இந்த நடத்தைகளைக் கவனித்த கணேசனுக்கு கவலையும், ஆத்திரமும் அதேவேளை பயமும் மனத்தை நிரப்பின. அவர் தாம் பாதுகாப் பெதுவுமற்ற, பரிதாபத்திற்குரிய, ஆளப்படும் ஒரு அடிமை இனத்தில் பிறந்ததை நினைத்து, நினைத்து மனம் நொந்து கொண்டார்.
அந்த நேரம் அந்தக் காடையர் கூட்டம் பக்கத்தி லிருந்த வயல் வரம்புகள் வழியாக ஓடிக்கொண்டிருந் தது. வீசிக்கொண்டிருக்கும் காற்றுக்கு வளர்ந்த பயிர் கள், செடிகொடிகள், இலைகுழைகள் தலைசாய்த்து வீழு கின்றமை, இயற்கை அன்னையே கயமையைக் கண்டு நாணியமை போன்றிருந்தது, கன்னித் தரையிருக்க, வளம் கொழிக்கும் வயல்நிலமிருக்க, நீர் வளம் நிறைய விருக்க, காலநிலை சாதகமாயிருக்க அவற்றை உதா சீனம் செய்து அல்லவை செய்து ஒழுகுவோரை - தட்டிப் பறித்து வயிறு வளர்ப்பவரைக் கண்டு யார் தான் நாணுர்கள்? யார்தான் நகைக்கார்கள்?
கடந்த முக்கால் மணிநேர காலமளவு நிறுத்தப்பட் டிருந்த புகைவண்டி யாழ்தேவி தொடர்ந்து ஓடுகிறது. அது குருநாகல் வரை ஓடி, மேலிடத்து கட்டளைக் கிணங்க, திரும்பக் கொழும்புக் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
O O O
கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் ஒரு அழகிய வீடு. அது ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடம். அழகிய மாது தூய வெண்ணிற ஆடையில் அலங்காரமாகக் காட்சி யளிப்பதைப் போன்று கட்டிடத்தின் முக்கிய பகுதி களுக்கு வெள்ளைநிற தீந்தை பூசப்பட்டுள்ளது. வீட் டின் பின்புறத்தில் ஓங்கி வளர்ந்த பெரிய மரங்கள்.

அமுதன் 57
முன்புறத்தில் அளவான புற்றரையும், அழகான பூஞ் சோலையும். s
அந்த வீட்டின் உபசரணை மண்டபம் விசாலமானது. நான்கு உட்புறச் சுவர்களிலும் அலுமாரிகள் பதிக்கப் பட்டு, பலவகையான புத்தகங்கள் இனம் இனமாகப் பிரிக்கப்பட்டு, நிரப்பப்பட்டிருக்கின்றன. முன் வாச லுக்கு நேர் எதிரான நடுச்சுவரில் காந்தி மகாத்மா வின் பெரிய திருவுருவப்படம். அது அலங்கரிக்கப்பட் டுள்ளது. அதுவன்றி, அம்மண்டபத்துள் வேறு படங் கள் எதுவும் தொங்கவிடப்படவில்லை. நடு மண்டபத் துள் விலை உயர்ந்த ஆசனங்கள் போடப்பட்டுள்ளன. ஆசனங்களின் ஓரங்களிலுள்ள ரீப்போக்களில் அன் றைய தினசரிகள் மாத்திரம் அடுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் தரை செந்நிற பொலிஸ்பூசி மெருகேற் றப்பட்டுள்ளது. ஆசனங்கள் உள்ள இடத்தில் கடும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
வாயில் தூணுென்றில் "கருணை இல்லம்" எனப்பொறிக் கப்பட்டுள்ளது. மறு தூணில் 'டாக்டர். எம். கணேசன் M. B. B. S. (Cey.), F. R. C. S. , M, D. (Lon.) ʼ 6T6OT ’u பொறிக்கப்பட்டுள்ளது.
ஆம்! அதுவே பிரபல்ய டாக்டர் கணேசன் வாழும் கொழும்பு மனை - 'கருணை இல்லம்".
அந்த உபசரணை மண்டபத்தில் கணேசன் காணப்பட் டார். அவர் என்றும் அறியாத ஏக்கத்துடன் ஒன்றும் ஓடாத மனநிலையில், ஓரிடத்தில் ஒய்ந்திருக்க முடியாத வராக அங்கும் இங்குமாக நடை போட்டுக் கொண்டி ருந்தார். இதுவரை பல நூறு தடவைகள் மண்டபத் தின் முழு நீளத்தை நடந்திருப்பார். மேலும் நடந்து கொண்டேயிருந்தார்.

Page 32
58 மாரீசம்
கணேசனின் மனத்தில் அமைதி இல்லை. அங்கே கலக் கமும் குழப்பமும் அவரின் முகத்தில் ஒளி இல்லை" அங்கே பயமும் துயரமும்! அம் மனையில் களை இல்லை. அங்கே மயான அமைதியும் ஆரவாரமின்மையும்!
கணேசன் பலதடவை தொலைபேசி மூலம் தந்தையின் நிலையறிய முயன்ருர், ஒன்றும் இதுவரை பயனளிக்க வில்லை. யாழ்ப்பாணத் தொலைபேசி அலுவலகம் இனக் கலவரம் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளதாக அறிவிக்கப்பட்டது. விமான மூலம் ஊருக்குப் போக விமான அலுவலகத்திற்குப் போன் செய்து விசா ரித்தார். உடனடியாகப் போக ஆசன வசதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வழியறியாது தனது நில மையை விளக்கி விமானத் தபாலாக மூன்று கடிதங்கள் அனுப்பி விட்டார். அவை போய்ச் சேர்ந்திருக்குமோ? எப்போதுதான் போய்ச் சேருமோ! அரச இயந்திரம் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை ஸ்தம் பித்து விட்டதே!
நாட்டில் நிலைமை மோசமாகவிருந்தது. மோசநிலைமை வர வர பயங்கரமாக மாறியது. பன்னிரண்டாம் திகதி வெள்ளி இரவு யாழ்ப்பாணம் சென்ற்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற களியாட்டு விழா விலே தொடங்கிய பொலிஸ் பொதுமக்கள் கைகலப்பு சில செந்தீப் பொறிகள் நாட்டின் நாலாபக்கங்களிலும் இனக்கலவர பெருந்தீயாக மாற வித்திட்டது. கடை உடைப்பு, தீவைப்பு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு என்ற செந்தீச்சுவாலைகள் தமிழருக்குப் பெரும் சேதத்தை விளைத்தன. மேலும் திட்டமிட்டு தலையும், வாலும் வைத்து பரப்பப்பட்ட வதந்திகள் எரியும் பெருந்தீக்கு எண்ணெய்யாகி, தீ பரவ வழி வகுத்தது. தமிழர்கள் ஓடினர், உயிரைப் பாதுகாக்க ஓடினர். உறைவிடங்களையும், உடைமைகளையும் விட்டு ஓடினர். ஆயிரக்கணக்காக ஓடினர். பல்லாயிரக்கணக்காக

அமுதன் 59
ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். புதிய புதிய அகதி முகாம்கள் திறக்கப்பட்டன. தாம் பிறந்த நாட்டிலே தமிழர்கள் தம்மை தாம் சிறைக்கைதிகளாக்கினர். வெம்சிறை வேதனையை அனுபவித்தனர்.
உண்மை நிலைமையை நாடறியச் செய்யும் நல்லெண் ணத்தில் நாட்டு முதல்வர் பதினெட்டாம் திகதி தேசிய அரசுப் பேரவையில் பின்வருமாறு பேசினுர்,
*. . மாத்தளையில் தமிழர் ஒருவரின் மதுபானக் கடை யொன்றும், தமிழ்க்கடையொன்றும் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன. தம்புளையில் நிலைமை இன்னும் திருப்திகரமாகவில்லை. அனுராதபுரத்தில் பட்டணப் பகுதியில் ஏறத்தாழ நூறு தமிழ் வீடுகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளன. தமிழர் மூவர் கொலைசெய்யப் பட்டுள்ளனர்; கெக்கிராவையில் மூன்று கடைகளும், நொச்சியாகமவில் பத்துக் கடைகளும் எரிக்கப்பட் டிருக்கின்றன. கச்சேரியில் புகலிடம் அளிக்கப்பட்ட ஏறத்தாழ நானூறு தமிழ் ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரும் பன்னிரண்டு பஸ்வண்டிகளின் மூலம் வவுனியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். குருநாகலில் தமிழ்விடுதியகம் ஒன்று தாக்கப்பட்டது. கல்கமுவவில் ஏறத்தாழ பதிளுெரு தமிழ்க்கடைகள் தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. இன்று நான்கு மணிவரை கிடைத்த இறுதியான தகவல்கள் இவை.”
நாட்டு முதல்வரின் இந்த உரையை வானெலி ஒலிபரப் பியது. தேசிய அரசுப்பேரவையில் இனக்கலவரம் சம் பந்தமாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களையும், நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களையும் செய்தித்தாள்கள் வெளியிட்டன.
பொலிசாருடன் இராணுவமும், கடற்படையும், விமா னப்படையும் தேசப்பாதுகாப்பு வேலைக்கு ஈடுபடுத்தப் பட்டனர். அவர்களுக்கு, சுடுவதற்கு அனுமதி வழங்

Page 33
60 — மாரீ சம்
கப்பட்டிருந்தது. ஊரடங்குச் சட்டமும் இடத்திற்கு இடம் வெவ்வேறு நேரங்களில் அமுல்செய்யப்பட்
டிருந்தது.
கொழும்பில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தநேரத் திலும் பல வன்செயல்கள் நடைபெற்றன. கிருலப் பனைப் பகுதியிலும் அசம்பாவிதங்கள் தலைதுாக்கின.
கணேசன் காணக்கூடியதாகவே வீடுகள் தீக்கிரை யாக்கப்பட்டன. வெந்தழற் புண்களோடும், வெட்டுக் காயங்களோடும் தமிழர்கள் அள்ளுப்பட்டு ஓடுவதைக் கணேசன் கண்டு அழுதார்.
இன்றைய சூழ்நிலையில், தகப்பனைப் போய்ப் பார்ப்பது முயற்கொம்பென்பது கணேசனுக்குத் தெளிவானது. *தம்பி! அந்தியகாலம் அண்டையில் நின்றல்போதும் அதை மாத்திரம் செய்து போடு” என்ற தந்தையின் தயவான வேண்டுகோள் கணேசனின் செவிப்பறையில் பலமுறைமோதி ஒலிப்பது போலிருந்தது, தகப்பனின் இந்நேர நிலைபற்றி ஆழ்ந்து சிந்தித்தார். அவரின் மனத்தில் தந்தை குறையுயிரில் அவஸ்தைப்படும் காட்சி தெளிவாகத் தெரிந்தது. தந்தைக்குச் சேடமிழுத்தது. அவர் மகனைக் கண்களாற் தேடுவது போலிருந்தது. இனசன பந்துக்கள் சிலர் தந்தையைச் சூழ்ந்து அழு தனர். வேறு சிலர் வேதனையோடு எதையோ காதோடு காதாக கிசுகிசுத்தனர். சிலர் கூடியிருந்து சிவபுரா ணம் படித்தனர். கணேசனின் மனைவி விமலா அமைதி யற்றவளாக அங்குமிங்கும் ஓடி அலுவல்களைக் கவனிக் கிருள். கணேசனின் ஒரே பிள்ளை கயல்விழி 'அப்பா", *அப்பா” - எனக் கதறி அழுகிருள்.
கயல் விழி 'அப்பா” என அழைப்பது கணேசனையே. கணேசனுல் என்ன செய்ய முடியும்? கணேசன் எப் படிப் போவது? எப்படி ஈமக் கடன்களை ஆற்ற முடி யும்? கணேசன் தகப்பனுக்கு ஒரே பிள்ளை. இறுதிக்

அமுதன் 61
கடன்களை அவரே செய்ய வேண்டும். அது அவரின் தந்தையின் வேண்டுகோளும். "என்னைத் தன்னம் தனியாக, தாங்கொண்ணுக் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்த்தாரே. டாக்டராக்கப் படாதபாடுபட்டாரே. நான் அவரின் ஒரேயொரு ஆசையையும் நிறைவேற்ற வக்கற்று விட்டேனே", என நினைத்து கணேசன் மனம் நொந்துகொண்டார். அவரின் கண்கள் கலங்கி நீற் துளிகளை நல்கின. h−
கண்ணிர்த்துளிகள் கணேசனுக்குச் சாவின் தறுவாயில் பருக்கப்படும் தெளிவை நினைவூட்டியது. விமலாவும் கயல்விழியும் இந்நேரம் தந்தையின் வாயுள் பாலே விடுவதாகக் கற்பனை செய்து கொண்டார்.
அடுத்த கணம் கணேசனின் நினைவு வேறுபக்கம் சென்
றது. "நான் தந்தையை மட்டுமல்ல, விமலாவையும், கயல்விழியையும் காணும் வாய்ப்பையும் கூட இழந்து விடுவேஞ’ ’, என நினைத்துக் கலங்கினர். "கருணை
இல்லமும் தாக்கப்படுமோ?. ” என எண்ணிப் பயந் தார். “சில சமயம் நானும் இனக் கலவரத்துக்குப் பலிக்கடா ஆக்கப்பட்டால்.", எனச் சிந்தனை ஓடிய
போது, அறிவு சோர்வதும், அயர்ச்சி ஏற்படுவதும் தவிர்க்க முடியாமலிருந்தது. இப்படி ஒரு கணம். மறுகணம் மனம் விழித்துக்கொண்டு மேலும் சிந்தணு லோகத்திற் சஞ்சரித்தது.
"நான் யாருக்கும் எதுவிதமான பாவமும் செய்யாத வன். மக்களிடை பாகுபாடு பாராட்டாதவன். இரவு பகல் என்று பாராது-மக்கள் சேவையே மகேசன் சேவை என நினைத்து மக்களின் நலனுக்காக உழைத் தவன். நான் டாக்டராகச் சேவை செய்த விடங்களில் எல்லாம் எவ்வளவு சேவை செய்துள்ளேன். குருநாகல் மக்களுக்கு எவ்வளவோ செய்தேன். நான் கொழும்பு பெரிய வைத்தியசாலைக்கு மாற்றம் பெற்று வந்தபோ அது நகரே திரண்டு என்சேவையை மெச்சி விழா எடுத்ததே!

Page 34
62 uðn fe-tb
இந்தக் கொழும்புப் பகுதிக்குக் கொஞ்ச நஞ்சமா செய்துள்ளேன்? இக்கிருலப்பனைப்பகுதி என் சேவையை மறந்து விடுமா? என்னிடம் உதவி பெற்றேர் நன்றி மறப்பார்களா? நான் வைத்தியசேவை மாத்திரமா செய்தேன்? போன வாரமே, ஒரு ஏழைக் குடும்பத் திற்கு அள்ளிக் கொடுத்தேனே! இந்தப் பாடசாலைக்கு நிதியுதவி செய்தேனே! பாஞ்சாலைக்குப்பணம் கொடுத் தேனே மறப்பார்களா?. மக்கள் மறப்பார்களா..? மக்கள் மறந்தாலும் மகேசன் மறக்கமாட்டான். ஆண் டவன் அருள் புரிவான்.
"இவன் பியசேன சிலசமயம் சந்தர்ப்பத்தைப் பாவித் துப் பழிவாங்குவாஞ? இவன் பொத்துஹேரவில் இழைத்த கொடுமையைப் பொலிசிற்குச் சொன்னேனே! இவனுக்குத் தெரிந்திருக்குமா?.
**இவன் பியசேனு என்னுடைய வீட்டிலேயே திருடிய தைப் புகார் செய்து, இவனைச் சிறைக்குள் தள்ளி னேனே! இவன் இன்னம் வன்மம் பாராட்டுவாஞ? என்னைப் பழிக்குப்பழி வாங்குவதாகக் கொக்கரித் தானே! இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்துச் சபதத்தை நிறைவேற்றுவாணு ?. "இவனுெரு நாகம். பொல்லாத கருநாகம். முழுமதி யைக் கருநாகம் விழுங்குகிறதென்பது ஐதிகக் கதை. இக்கதை என்னைப் பொறுத்தவரை நிசமாகி விடுமோ!. என்னை என் தந்தை காணுமற் போனதுபோல் நானும் எனது ஒரே பிள்ளையைக் காணுமலே சாகடிக்கப்படு வேணு? ஐயோ விமலா ஐயோ கயல்விழி நான் ஒரு பாவி. பாவி!”- கணேசன் அழுதே விட்டார்.
“பியசேனுவைத் திருத்தும் நோக்கமாகவே நான் இவ னைக் கண்டித்தேன். நல்லவனுக்கும் நோக்கமாகத்தான் கூடாத கூட்டாளிகளுடன் சேர வேண்டாம் என்றேன். புகைக்க வேண்டாம், குடிக்க வேண்டாம் என்றதும்

அமுதன் 63.
இதனுலேயே. இவன் எதையும் புரிந்து கொள்ளவில்லை என்னையும் புரிந்து கொள்ளவில்லை. சூதாட்ட வெறி இவனை விட்டு வைக்கவில்லை. என்ன சொல்லியும் ஏது செய்தும் கேட்டாணு? சூதாட்டத்தாலே பள்ளிப் படிப் பையும் நாசமாக்கினனே! பணம் தேவைப்பட்டு, எத் தண்முறை என் வீட்டிலேயே திருடினன். அதனுற் தான் கையும் மெய்யுமாகப் பிடித்து, பொலிசிடம் கொடுத்து அடியுதை வாங்கிக் கொடுத்தேன். திருடிய குற்றத்திற்காகச் சிறை போய்வந்த இவன் திருந்தி விடுவான் என்றல்லா நினைத்தேன்? இவன் என்னையே எதிர்த்து ஏசி, பழிக்குப் பழிவாங்குவேன் என்ற சபா லோடல்லவா வீட்டை விட்டுக் கிளம்பினுன்?.
“வம்பிலே பிறந்த அநாதையான இவனைத் தேடுவார்
யாருமின்றி இருக்க, வாங்கி வளர்த்தேனே. பெற்ருர், உற்ருர், உறவினர் யாருமற்ற இவனைத் தகப்பனுக்குத்
தகப்பணுக, தாய்க்குத் தாயாக வளர்த்தேனே. இவனுக்
காக - இவனின் நலனுக்காக செல்வாக்காக இருந்த
குருநாகல் வைத்தியசாலையை விட்டு, மாற்றம் பெற்று
கொழும்புக்கு வந்தேனே. இவை அனைத்தையும் இவன்
தெரிந்திருந்தும், என்னைப் பழிக்குப் பழி வாங்கத் தான் போருஞ?.
**இந்தப் பகுதி மக்கள் எனக்குத் தீங்கு வர விடமாட் டார்கள். தம்முயிரையும் கொடுத்து என்னைக்காப்பாற் றுவார்கள். பலதடவை நன்றி மறக்கமாட்டோம். நன்றி யுணர்வோடு நடப்போம் என உறுதியும் அளித்துள் எனரே!.
இந்த நேரம் கணேசனின் கார்ச்சாரதி தருமரட்ணு ஓடோடி வந்தான் “மா.த்தையா, மா.த்தையா பியசேஞ அப்பே கே கடன்ட கட்டியக்கெக்க எனவா” என விம்மலோடு வெளியிட்டான். 'மாத்தையா, நீங்க அவன் பொத்துஹேரவில் செஞ்சதைப் பொலிசுக்குச் சொன்னது தெரிந்து போச்சு" என்றன். உடனடியா

Page 35
64 மாரீசம்
கப் பொலிசுக்குப் போன் பண்ணிப் பாதுகாப்புத் தேடும்படி கணேசனிடம் வேண்டிக்கொண்டான்.
கணேசன் செயலற்று நிற்பதைக் கண்ட தருமரட்ணு, “மாத்தையா, இவன் பியசேன ஒரு மிருகம். அவ அக்குக் கருணை காட்ட வேண்டாம்” என மீண்டும் கெஞ்சிக்கேட்டுக் கொண்டான்.
தருமரட்ணுவின் இந்த வார்த்தைகளில் நியாயமிருப்ப தாகக் கணேசனுக்குத் தோன்றியது. அவர் தொலை பேசியில் பொலிஸ் நிலையத்தோடு தொடர்பு கொண் டார். அவருடன் பேசிய பொலிஸ் அதிகாரி கணேச ணுக்குதி தெரிந்தவரே. பலதடவை டாக்டரின் வைத்திய உதவி நாடி கருணை இல்லத்திற்கும் வந்து போனவர். அவர் தாம் உடனே நடவடிக்கை எடுப்பதாக வாக் களித்தார்.
சில நிமிட நேரத்திற்குப்பின் காடையர் கூட்டமொன்று அாரத்தில் வருவது தெரிந்தது. அது சந்தர்ப்பத்திற் கேற்ப இனத்துவேஷ கோஷங்களை எழுப்பியது. "தெமுளுவ மறப்பிய." **மே சிங்கள அப்பகே ரட்டய்.”
"பறைத் தெமுளு உம்ப மறனவா."
. இப்போது காடையர் கூட்டம் கருணை இல்லத்தை நெருங்கி விட்டது. அங்கே ஆண்களும், பெண்களும் சிறுவர்களுமாக அநேகர் காணப்பட்டனர். அவர்கள் பலவிதமான பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். அக்கூட்டத்தின் முன்வரிசையில் பியசேனு காணப் பட்டான்.
இத்தனை காலமாகக் கருணை இல்லத்தில் காட்சிப் பொருளாக இருந்த துப்பாக்கியை ஒடிச் சென்று

எடுத்து வந்து, “வெறி நாய்களைச் சுட்டுத் தள்ளுங்க மாத்தையா”, என தருமரட்ணு வேண்டிக் கொண் Lsr 6ör.
ஆணுல், அவன் அடுத்த நிமிடம், "ஐயோ, மா - த். தையா” என்றவாறு பிணமானன். அவனைப் பியசேன வின் துப்பாக்கி தீத்துக்கட்டிவிட்டது! மீண்டும் பிய சேஞவின் துப்பாக்கி செந்தீயைக் கக்கியது. அந்த வேட்டுக்குப் பலியானவர் அறக்காவலரே! அவர் சாந்த சொரூபி காந்தி மகாத்மாவின் திருவுருவப்படத்தின் கீழ், " அப்பா" என்றவாறு சுருண்டு வீழ்ந்தார்.
கோட்சேயை விடக் கொடியவஞன பியசேனவின் பித்தலாட்டம் அதனுடன் நின்றதல்ல. மேலும் கோபா வேஷத்துடன் பாய்ந்தோடி அழுக்கேறிய கால்களால் அறக்காவலரை உதைத்தான். மண்டையை ஏறி மிதித் தான். விழி பிதுங்கிய நிலையில் இரத்த வெள்ளத்துள் மிதக்கும் அறக்காவலரைக் கால்களிற்பிடித்து குறை யிழுவையாக இழுத்து வீதியின் மத்திக்குக் கொண்டு வந்து, பெற்ருேல் ஊற்றி தீக்கு இரையாக்கினுன்.
அவமானமும், அருவருப்புமான இந்தச் செயல் ஒரு புறம் நடைபெற, மறுபுறம் வேறேர் வெறியாட்டம்
நடைபெற்றது.
காடையர் கூட்டம் கருணை இல்லத்தைச் சில்ல பொல்ல மாக்கியது. கண்ணுடிச் சாமான்களையும், சில தள பாடங்களையும் நொருக்கியது. விலையுயர்ந்த தளபாடங் களையும், வீட்டுச் சாமான்களையும் சூறையாடியது. துணிமணிகளையும், நகைநட்டுக்களையும் கொள்ளை யடித்தது. இறுதியில் கருணை இல்லத்தை பெற்றேல் ஊற்றி தீயிலிட்டது.
கருணை இல்லம் இன்னம் எரிந்துகொண்டேயிருக்கிறது.

Page 36
ஆத்ம திருப்தி
கீலியானம் சொர்க்கத்தின் திறப்பு விழாவாக-புதுச் சோலைக்கு வசந்த விழாவாக - புது அத்தியாயத்தின் ஆரம்ப விழாவாக இருக்கும் என அதிகமான பெண் கள் நினைக்கிருர்கள். சிலருக்கு இந்நினைப்பு பகற்கன வாக - கானலாக - கண்ணிராக மாறிவிடுகிறது. என் னைப் பொறுத்தவரையிலும் அது அப்படியே!
எம் மண வாழ்வு வெற்றி ஈட்ட வேண்டும் என்பதற் காகப் பல புத்திமதிகளை இவருக்குச் சொன்னேன் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டனவே.
எலி வளை என்ருலும் தனி வளை வேண்டும் - தனிக் குடித்தனம் மிகவும் சிறந்தது-வழி வழி வரும் வாழும் முறை இதுவே என்றேன். என் ஆலோசனை செவிடன் காதில் ஊதிய சங்கொலிபோற் பயனில்லாமற் போய் விட்டதே
இவர் என்னைப் புறம்பான வீட்டிற் குடியமர்த்தி இருக்க லாம். அல்லது, தான் தொழில் செய்யும் பூண்டுலோ யாவிலேயே வீடொன்றை வா ட  ைக க் கு எடுத்துக் கொண்டு, என்னைக் கூட்டிக் கொண்டு போயிருக்க

அமுதன் 67
லாம். இவர் இதையும் செய்யவில்லை - அதையும் செய்யவில்லை - எதையும் செய்யவில்லை.
என்னைப் பொறுத்தவரை இவர் அசட்டுத்தனமாக இருந்தமை அறியாமை அல்ல; விளக்கக் குறைவுமல்ல; எல்லாம் விஷயத்தோடேதான்!
இவரின் எண்ணத்தில் விஷம் கலக்கப்படுகிறது. விச மத்தனமாகக் கலக்கப்படும் விஷத்தால், இவரின் மதி மயங்கிப் போகிறது. தன் பெண்டாட்டி, பிள்ளைகள் என்ற நினைவு குறைந்து, தனது பெற்றேர் - சகோதர ரென்றல்லவா கூடுதலாக நினைக்கிறர்!
'எச். என். சீ. ஈ. படிக்கும் தம்பியைப்பட்டதாரி ஆக்க வேண்டும். மூத்த தங்கச்சிக்கு நல்ல இடத்தில் கலியா னம் செய்து வைக்க வேண்டும்”, என்றல்லவா அங்க லாய்க்கிருர் 'அம்மா பாவம்", "அம்மா பாவம்" என் றல்லவா அடிக்கடி சொல்லிக் கவலைப்படுகிருர்
குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்தால், எங்களது ஒழுங்குமுறையில் கூடுதலான சில பொறுப்புக்கள் - கடமைகள் உண்டுதான். அதற்கு ஒரு அளவு கணக்கு ஒரு வரையறை இல்லையா? தான் குடும்பகாரணுகி விட் டால், அதுகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்துவதில்லையா? தனது குடும்பமே தனக்கு முதற் கடமை என்று நினைப்பதில்லையா?
நான் கலியாணம் செய்து ஏழு வருடங்கள் ஆகி விட் டன. மூன்று பிள்ளைகளுக்கும் தாயாக்கப்பட்டு விட் டேன். இன்னம் எனது அண்ணன்மாரே என்னைப் பார்க்கட்டும் என அசட்டையாக இருப்பது நியாய மாகுமா? அண்ணன்மார் என்ன தனிக்கட்டைகளா? அவர்களுக்கு மனைவி மக்கள் என்று இல்லையா? நாமும் அவர்களுக்குப் பாரமாக்கப்பட்டால், அவர் களின் குடும்பங்களில் இது பிரச்சனையைக் கிளப்பாதா? ஒரு

Page 37
68 மாரீசம்
வருடமா, இரண்டு வருடமா, எத்தனை வருடங்கள் அண்ணன்மார் என்னைப் பார்ப்பது? நான் பிறந்த அன்றே பெற்றவளை இழந்த துர்ப்பாக்கியசாலி. அதிக காலம் அப்பாவும் இருந்தவரல்ல. அன்று தொட்டு, இன்றுவரை - இன்று என்னேடு மூன்று பிள்ளைகளையும் அண்ணன் மார் பார்ப்பதென்றல் முடிந்த காரியமா?
இவர் ஒரு பேயர்.
இல்லை! இல்லை! இவர் குழந்தை மாதிரி. நல்லவர். இலேசாக ஏமாற்றப்பட்டு விடுகிருர், அதுகள் திட்ட மிட்டு, வசப்படுத்திக் காரியத்தை நிறைவேற்றி ப் போடுதுகள்.
மாமியின் மருட்டுக் கதைகளுக்கு யார்தான் எடுபடா யினம்? "ராஜா', 'மோனே’, ‘தம்பி’ என்றல் யார்தான் உருகாயினம் மாமி வீட்டில் மற்றவை யென்ன திறமா? சாடிக்கேற்ற மூடிகள்தான். உருக்க மாகக் கடிதம் எழுதுவது. அடிக்கடி பூண்டுலோயா போவது. படிப்பு உடுப்பு என்று காசு கேட்பது. அது கள் அவரின் வருமானத்தின் சுளையைச் சுவைத்தால், நான் அனுபவிப்பது கோதையே!
என் நிலையை எண்ணி எண்ணி நான் கண்ணிர் வடித்த நாட்கள் பல. மறைவாகக் கத்தி அழுத நாட்களும் seleccion G.
நான் அழுதது மனிதர்களின் கண்களிற் படாதுதான். மனிதர்களின் காதுகளிற் கேட்காதுதான். தெய்வத் திற்கும் கேட்காதா ? தெய்வத்திற்கும் தெரியாதா ? ஏழை அழுத கண்ணிர் கூரிய வாளாகி விடாதா?.
இறைவா, எம்மைக் காப்பாற்று எமக்குக் கருணை செய்! எமக்குச் சரியான வழியைக் காட்டு!

அமுதன் 69
எனது பிரார்த்தனையின் பலனுே, என்னவோ! ஒரு நாள் எனது நகைகட்டு என்ற பேரில் பெரிய பூகம்ப மொன்று வெடித்தது!
தனது மூத்த தங்கைச்சிக்குச் சீதனமாகக் கொடுத்து கலியானம் செய்து வைக்கவென இவர் என்னுடைய நகை நட்டுக்களைக் கேட்டார். அண்ணர் மார் ஆட்சே பித்தனர். இவர் விட்டுக் கொடுக்கவில்லை. 'ஒரு பெண்ணின் வாழ்வு முக்கியம். ஒரு குமர் கரைசேர வேண்டும்” என வாதிட்டார்.
“உங்கடை மனிசி ஒரு பெண்ணில்லையா? அவளின் வாழ்வு முக்கியமில்லையா? ஒருத்தியின் சொத்தை அப கரித்து இன்னுெரு பெண்ணுக்குக் கொடுப்பதா? வெட்க மில்லையா?", என மூத்தண்ணை கேள்வி எழுப்பினுர்.
"அபகரிக்கிறதா? என்ன அர்த்தமில்லாமற் பேசுறிங் கள்?", என்ரை மனிசியின் ரை ஒரு பொருளில் எனக்கு உரிமை இல்லையா? நான் எனக்கு உருத்தான வொன் றையே எடுக்கிறேன்”, என இவர் மறுத்துப் பேசிணுர்.
சின்னண்ணை படுபொல்லாதவர். அவருக்குத் தன்மை வழமையாகப் பேச வராது. எடுத்ததிற்கெல்லாம் தடி யெடு தண்டெடு என்று தான் நிற்பார். மனிசன் *உரிமை”, “உருத்து” என்று பேசியது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ‘என்ன மடைக் கதை பேசுகிறீர்?ஒரு காலமுமில்லாத உருத்து, உரிமை என்று பேசுகிறீர். கலியாணம் கட்டியும் அவள் இன்னமும் எங்களோடேயே இருக்கிருள். அவளையும் பிள்ளைகளை யும் நாங்களே பார்க்கிருேம்.
என்றும் வராத உரிமை இன்று வந்தது நல்ல வேடிக் கையாக வல்லவே இருக்கு ! . வேறை கதை ஏன் ? நாங்கள் அவளுக்கு ஆசை அருமையாகப் போட்ட நகை இவை. இவையிலை கைவைச்சால், ஒரு கொலை தான் விழும்", எனக் கொக்கரித்தார்.

Page 38
70 or ferð
நான் கதைபாடைத் தடுக்க முயற்சி எ டு த் தே ன். “நகைநட்டு என்னுடையது. நான் மறுத்தால் தானே பிரச்சினை” எனச் சமாதானப்படுத்தினேன். இரண் டாவது அண்ணையும் சமாளித்தார்.
நகைநட்டுப் பூகம்பம் வெறும் அதிர்ச்சியோடு நின்று விடவில்லை. குடும்பத்தை இரண்டாகப் பிளந்தே விட் டது. நாங்கள் வேறை வீடு தேடிக்கொண்டு, பிறந்து இத்தனை வருட காலமாக வாழ்ந்த வீட்  ைட விட்டு வெளியேறி விட்டோமி.
இப்போது நானும் பிள்ளைகளும் தனிக்கூட்டுப் பறவை கள். இருபந்தைந்து வருடகாலச் சகோதர பாசம் அறுந்து விட்டது. அண்ணர் மார் வாறதோ, நாங்கள் போறதோ இல்லை. வழிதெருவிலே கண்டாலும் பேசு வதுமில்லை. மாமியவையின் தொடர்பு ஒருக்காலும் சரியாக இருக்கவில்லைத்தானே ! மைச்சாளுக்கு நகை நட்டுக் கொடுத்ததால் வந்த கேடு என்டு நினைத்தும் அதுகள் உணர்ந்து திருந்தவில்லை. இன்னம் எம்மைப் பொறுத்தவரை ஒதுங்கி நடக்கினம்.
இவரையும் கொஞ்சம் விலக்கி நடப்பினமென் ருல் . அப்பிடியோவென்ருல், அப்பிடியல்ல. எ ன் னு  ைடய வீட்டுக்கு வராத துகள் இவற்றை கடைக்குப் பூண்டு லோயாவுக்குப் போ குதுகள். அங்கே மாதக்கணக்காக நின்று இவரைச் செலவழிக்கச் செய்யுதுகள். படங்க ளுக்குக் கூட்டிக் கொண்டு போகச் செய்யுதுகள் . போன மாதம் புதுமாப்பிள்ளை பெம்பிளையாகப் போன துகள் வான் பிடிப்பித்து அப்பிடியே கதிர்காமமும் போயிருக்கினம். எல்லாத்திற்கும் செலவழிக்கிறது இவர்தானே ! . என்னுடைய நகைநட்டைக் கொடுத் தார். கலியாணத்திற்குச் செ ல வழித் தா ர். பிறகும் செலவழிக்கிருர்,

அமுதன் 7
நானும்தானே இருக்கிறேன். எனக்கென்ன கதிர்காமம் போக ஆசையில்லையா ? என்னுடைய பிள்ளைகள் கதிர் காமம் போன துகளா ? அதுகளுக்குப் போக ஆசை இல்லையா ? கூட்டிக் கொண்டு போனல் பார்க்காது களா ? இவைகளை யார் இவருக்குச் சொல் லு வது ? இன்னம் அதுகள் அண்டிவிட்டி வேடிக்கை பார்க்கினம் அதுகளின் கதைகளைக் கேட்டு இவர் இன்னமும் பய ணத்தாலை நேரே தன் தாய் வீட்டிலேயல்லவா வந்து இறங்குகிருர், அதுகள் எடுக்க முடிந்ததை எடுத்துக் கொண்டு, ஆளை வெறும் சூட்கேசுடனல்லவா அனுப் புதுகள்.
இப்படி எத்தனைக்குத்தான் பேசாதிருப்பது ? எத்தனை நாளைக்குத்தான் பொறுப்பது ? சில வேளை எரிந்து விழுவதுதான். சிலவேளை நாயும் பூனையும் மாதிரி.
என்னுடைய வாழ்க்கை நிம்மதி அற்றது. புயலுக்கு அகப்பட்ட படகு மாதிரி. அமைதி கிட்டடியில் கிடைக் குமா ? வாழ்க்கைப் படகு ஒடுமா ? . என்னுல் என்ன செய்ய முடியும்? சுக்கான் பிடிக்க வேண்டியவர் சுய நினைவு அற்று இருக்கிருரே ! . பழியைக் கடவுளிடம் போடுவோம். வாறதை வாறமாதிரியே ஏற்றுக்கொள்ளு (36urtb.
அ ண் ண ர் மா ருக்கு எல்லாம் தெரிந்து விட்டஅ. பொறுக்கமாட்டாமல் என்னிடம் ஆன் அனுப்பி இவ ரைப் பிரிந்து வரும்படி கேட்டனர். "பிரிவு" என்றது நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது போலிருந்தது வாழ்க்கையிலே தலை நிமிர்ந்து, அண்ணர் மாருடன் எதிர்த்துப் பேசாத நான், “விட்டு விட்டு வரட்டாம்" என்றதைக் கேட்டவுடன் அவர்களில் சீறிப் பாய்ந் தேன். "நான் வாழ்ந்தாலும் - தாழ்ந்தாலும் - வீழ்ந் தாலும் அவரோடேயே இருப்பேன். விசர்ப் பேச்சுப் பேசவும் வேண்டாம். இங்கை யாரையும் அனுப்பவும்

Page 39
72 oriferò
வேண்டாம்” என வந்தவரிடம்கண்டிப்பாகச் சொல்லி, அனுப்பினேன்.
அண்ணர்மார் அதற்குப் பிறகு என்னுடைய வாழ்க் கையில் தலையிடவில்லை. அவர்கள் தலையிட மாட்டார் கள். நல்ல மாட்டிற்கு ஒரு சூடுதானே ! “அவள் கண் ணகி போல்லல்லோ பேசுகிருள். அவளின் தலைவிதி அது. விதிப்படியே நடக்கட்டும்” என விட்டுவிட்டார் கள்.
என்னுடைய தலைவிதி சரியில்லைத்தான் பட்ட காலிலே பட்டது. அடிமேல் அடி விழுந்தது. இப்போது அடி மேல் அடி மட்டுமல்ல, காலே முறிந்துவிட்டது. குடும்பத் தின் இரண்டுகாலில் ஒன்று முற்ருக முறிந்துவிட்டது.
ஆம் இவருக்குப் பாரிசவாதம் ! ஒரு காலும் கையும் வழங்காது !
இவருக்குப் பாரிசவாதம் வந்ததும், இவரின் பக்கத்துக் கடைக்கார நண்பர்கள் பூண்டுலோயாவிலே இருந்து கார் பிடித்து இவரைக் கொண்டு வந்து எங்கள் வீட் டில் விட்டனர்.
இவரைக் கட்டிய நாளைக்கு அன்றுதான் மனிதன் பய ணத்தாலே நேரே என்னிடம் வந்தது.
இவற்றை இப்போதல்ல யோசிப்பது. நான் அப்படி யோசிக்கும் அளவுக்கு அற்பத்தனமானவளும் அல்ல. ஆசாபாசங்களை அப்படியே மூட்டைகட்டி கப்பலேற்றி விட்டு, முழு மூச்சாக வாழ்க்கைச் சவாலை ஏற்றுக் கொண்டேன்.
சவாலை என்னுல் சமாளிக்க முடியும். சம்மட்டி அடி கொடுத்து அதைச் சுக்குநூருக்கவும் தெரியும். என்

அமுதன் 73
வாழ்க்கையிடர் இருந்த இடம் தெரியாது ஓடப்போகி றது. அதை நான் செய்து காட்டப் போகிறேன். இது சத்தியம் !
என் அண்ணர்மாரா ? . இனி அவர்கள் உதவத் தேவை யில்லை ! மாமியா ? . மற்றவர்களா ? . அவர் கள் வரவே தேவையில்லை !
எனக்குக் தெய்வத்தின் துணை உண்டு. சத்தியத்தின் பலம் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னம் பிக்கை உண்டு. நாங்கள் வாழத்தான் போகிருேம் !
எனக்கு ஆணவப் பிடிப்பல்ல. இது, சத்திய ஆவேசம். இது, மற்றையோருக்குச் சங்கடத்தை உண்டு பண்ண நான் விடமாட்டேன். “உவனுக்குச் சுகமில்லையாம்” எனச் சாலக் கதை பேசிக்கொண்டு மாமியும், மாமாவும் கடமைக்கு வந்தபோது, நான் நல்ல கட்டுப்பாடாகத் தான் பிழங்கிக் கொண்டேன். ஆணுல், அதுகள் திரும் பிப் போகும் போது தங்களது கோணங்கிப் புத்தி யைக் காட்டிப் போட்டினம். “உனக்கென்னடா மரு மகள் நல்லாகப் பார்க்கிருள். நீ கொடுத்து வைத்த னியடா’ என ஆறுதற் கதை சொல்லிச்சினம்.
ஆம் 1 ஆம் 1 மருமகள் இருக்கிருள் தான். அவள் சந் தனக் கட்டையாக தேய்ந்து, தேய்ந்து தனது தியா கத்தில் இவரை வாழவைக்கட்டும்! இவரின் உழைப்பை அனுபவித்தவை இ ன் ன மீ எரியும் வீட்டில் பிடுங்கி எடுக்கட்டும் !
இதுகளுக்கு .
வேண்டாம் 1 இன்னம் பொறுத்திருப்போம். பொறுத் தார் பூமி ஆள்வார்.

Page 40
74 DT feft:5
*உனக்கென்னடா மருமகள் நல்லாகப் பார்க்கிருள்." ஆம் 1 ஆம் ! நான் இவரை நல்லாகத்தான் பார்க்கி றேன். இவரும் இன்னுெரு பிள்ளை என்ற உணர்வோடு தான் பார்க்கிறேன். இவரைப் பராமரிப்பது மனத் திற்கு இதமாக இருக்கிறது.
இவர் காலைக் கடன்களைக் கவனிக்க உதவுகிறேன். பல் துலக்கி, முகம் அலம்ப வைக்கிறேன். வேளைக்கு வேளை ஒறேஞ் சோ மாமயிற்றே பழரசமோ சூப்போ ரோனிக்கோ கொடுக்கிறேன் நேரம் தவருமல் சாப்பாடு ஊட்டி விடுகிறேன். ஒவ்வொரு நாளும் கைகாலுக்கு மருத்தெண்ணெய் பூசிஉருவுகிறேன் இடைக்கிடை இலை குழை அவித்துக் குளிக்க வைக்கிறேன். இப்படி, எந்த வேலையிலும் நான் குறைவிடவில்லை. இனி வெள்ளி தோறும் அம்மன் கோவில் பின்னேரப் பூசைக்குப் போய், இவர் பேருக்கு அருச்சினை செய்து, திருநீறு சந்தனத்தைக் கொண்டு வந்து, இவருடைய நெற்றி யில் பூசியும் விடுகிறேன்.
வாதம், பிடிப்பு உளைவு - இந்த விதமான வருத்தங் களுக்குப் பேர் போன நாட்டு வைத்தியர் "சில்லா8ல சின்னத்தம்பி பரியாரியார்?. அவரிட்டைதான் நாங்கள் மருந்து வாங்குவது. அவர் மாதம் ஒருமுற்ை வீட்டிற்கே வந்து, பிடிப்புக்கும், விறைப்புக்கும் எண்ணெய் தரு வார்.
மருந்துக்குக் காசு வேண்டும். நாங்கள் ஐந்து பேர் சாப்பிடக் காசு வேண்டும். இவைகளுக்கு எல்லாம் அதிகம் காசு செலவு போகிறது. கையில், மடியில் கிடந்தது எல்லாவற்றையும் செலவு செய்து விட்டோம். நகைநட்டுக்களையும், சில வீட்டுத் தளபாடங்களையும் விற்று விட்டோம். இவர் இல்லாமல் இவரின் கடையை நடத்த முடியாது என்றபடியால் அதையும் அறவிலைக்கு விற்று விட்டோம்.

அமுதன் ገ5
மாமி வருகிற வேளை யெல்லா ம் ஆத்திரம் ஊட்டும் கதைதான். 'உனக்கென்னடா டி கடை விற்ற காசு இருக்கு", *நகை விற்ற Sér இருக்கு”, “FTDArst சக்கட்டு விற்ற காசு இருக்கு", என்று மோட் டு க் கதைதான்.
இதுகளுக்கெல்லாம் இவர் ஒன்றுமே பேசமாட்டார். இவர் இப்ப பேசுவதே குறைவு. மாமி வீட்டாரோடு கதைகாரியமே இல்லை. இவருக்கும் அது களின் அழுகல் மனப்பான்மை இப்போது நன்ருக விளங்கியிருக்கும் ...நன்றி கெட்டதுகள். உண்மையான பிள்ளைப் பாசம். இல்லாத துகள். சகோதர பாசமே இல்லாத துகள். எப்படியும் தாம் தப்ப வேண்டும். தாங்கள் நல்லாக இருக்க வேண்டும் என்று தகாத ஆசை உள்ளதுகள். ஒருநாள் காசெல்லாம் செலவழிந்து போய் நாங்கள் செய்வதறியாது முழித்துக்கொண்டு இருக்கையில் மாமி வந்து நல்லாக மாட்டுப்பட்டுக் கொண்டா. “டே காசில்லாட்டில் தாலிக்கொடியை வில்லேன்” என்ரு.
அவருக்கு எங்கேயிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ தெரியாது. எரிமலை போல் சீறிப் பாய்ந்தார்.
*நீங்கள் மனிசரல்ல, ஈன இரக்கமில்லாத பிசாசுகள் உங்களுக்கு இரத்தத்தை உறிஞ்சத்தான் தெரியும். மற்றவரும் உங்களைப் போலைதான். அதுகளும் வாழ வேண்டுமென்ற நினைப்பே இல்லை.
*அவளையோ, பிள்ளைகளையோ பாராது உங்களுக்கே உழைத்து உழைத்து போட்ட எனக்கு, உங்களாலையே மச்சான்மாரோடு பிசகுப்பட்ட எனக்கு, நீங்கள் சொல்ல வேண்டிய கதையா சொல்லுறியள்?.
"உங்களுக்குத் தந்து கெட்ட எனக்கு, நான் நொந்து இருக்கும்போது என்ன செய்கிறியள்? இம்மியேனும் தரமாட்டியள். இன்னம் புடுங்க வாறியள்.

Page 41
76 மாரீசம்
"எவ்வளவை உங்களுக்குத் தந்தேன். நான் கையிலை மடியிலை இல்லாமல், படுத்த படுக்கையாக இப்பிடிக் கிடக்கும்போது, என்னத்தைத் தந்தியள்? *உணர்ச்சியே இல்லாமல் தாலிக்கொடியையே விற்கும் படி புத்தி சொல்லுறியள். புத்தி சொன்னது போதும் இந்தப் பக்கமே வரவேண்டாம். போய்த் தொலைஞ்சு போங்கோ!"
இப்படி, இவர் கத்தியபோது, மாமி எந்தப் பக்கத்தாலை எப்படிப் போனு என்று தெரியாது. நான் கதைக் கவே இடம் விடாமல் இவர் கத்திப் போட்டார்.
அன்றைக்குப் போன மாமி அன்றுதான். அதற்குப் பிறகு மாமியோ, மாமி வீட்டாரோ எங்களிடம் வரு வதே இல்லை!
இவ்வளவு காலமாகப் பிடித்த ஏழரைச் சனியன் தொலைந்த மாதிரி. அன்றைக்கு பிறகு எல்லாம் படிப் படியாக குணமாகி வருகின்றன.
இப்போது இவருடைய முகம் தெளிவாகி விட்டது, பாரிச விறைப்பு நியாயமான அளவு சுகமாகி விட்டது. கைகாலில் மெல்லிய உஷ்ணமும், உயிர்த்தன்மையும் உண்டு. நடக்கப் பயில்வதற்கெனக் கட்டப்பட்ட கொடியிலேயோ, வேலியிலையோ, மேசை கதிரைகளி லேயோ பிடிச்சுப் பிடிச்சு இவரால் நடக்க முடிகிறது. இவருக்குப் பாரிசவாதம் சுகம் வரும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.
நாங்கள் யாருக்கு என்ன அநியாயம் செய்தோம்? எங் களைக் கடவுள் கஷ்டப்பட விடமாட்டார். எங்களுக் குக் கடவுள் கைகொடுப்பார்.
ஆளுல். இப்போது வேருெரு பிரச்சினை. நாம் ஐந்து பேர் இனி எப்படி வாழுவது என்ற யோசனை. விழுந்த எங்களைச் சமுதாயம் தூக்கி விடுவதாகவில்லை. இன் அம் ஏறி மிதித்துவிடும் போலிருந்தது. இவரால் இப்

seСрбdr 77
போது என்ன செய்ய முடியும்? பிள்ளைகளோ சின்னஞ் சிறிசுகள். செய்வதானுல் நான்தான் ஏதாவது வேலை செய்ய வேண்டும். a.
அண்ணன்மாரிடம் போகவா?. அது வெட்கம் மரி யாதை இல்லை! இந்தநிலையில் போஞல் எங்களுக்கு மரி யாதை இருக்காது. உற்ருர், உறவினரிடம் போகவா?. அயலட்டையில் உள்ளவர்களிடம் போகவா?. யாரும் உதவார்கள் உதவுவதாஞலும், எத்தனை நாட்களுக்கு உதவ முடியும்?. தன் கையே தனக்குத் துணை. நம் கையே நமக்குத் துணை டி. ஆம்! எம்மை எதிர்நோக்கும் இடரைத் அாக்கி யெறியத் துணிந்து விட்டேன்! அதனைத் தூள்தூளாக நொருக்கத் துணிந்து விட்டேன்! நான் கூலிக்கு அரிசி இடித்துக் கொடுக்கிறேன். வீடு தேடிக் கொண்டு வந்து தருபவருக்கு அரிசி, மிளகாய், கோப்பி இடிச்சுக் கொடுக்கிறேன்.காலை எட்டுமணிக்கு உரல் நிமிர்த்தினுல், இரவு எட்டுக்குத்தான் அதனைப் பாட்டத்தில் போடுவது. மூத்தவளை எனக்குத் துணை யாக வேலை செய்து தரப் பழக்கியிருக்கிறேன். மூத்த வள் பக்கத்திலே இருந்து மாஅரித்தோ, புழுங்கலைப் பார்த்தோ உதவி செய்வாள். சமைக்க உதவுவதும், சின்னப்பாப்பாவைப் பார்ப்பதும் நடுவிலி. நாங்கள் களவு பொய் இல்லாமல் வேலை செய்கிருேம். எங்களுக்கு வேலை கிடைக்கிறது. நியாயமான அளவு காசும் கிடைக்கிறது. இந்த மாதிரி வேலை செய்து பிரச்சினையைச் சமாளிக்கலாம். இது,எனது நம்பிக்கை. வேலை செய்கிறேன் என்று எனக்கு வெட்கமில்லை. மன வேதனையும் இல்லை. மாருக, மன ஆறுதல் உண்டு; மன நிம்மதி உண்டு; ஆத்ம திருப்தி உண்டு; இனம் தெரி யாத ஒரு சுகமுமுண்டு. இந்தச் சுகம் பொருள் வசதி தரும் சுகத்தை விட-தாம்பத்தியம் தரும் சுகத்தை விட-பேரும், புகழும், பிறரும், பிறவும் தரும் சுகத்தை விட உயர்ந்தது.

Page 42
திருமுகம்
ஐயாறன் (கே. பி.அரன்) கெளரவ ஆசிரியர், ‘ஈழநாடு", யாழ்ப்பாணம்.
‘வெகறை எனும் நூலின் வெளி யீட்டு விழாவில் ஆசியுரை வழங் கிய கி. லக்ஷமணன் அவர்கள் இந் நூலின் ஆசிரியரான அமுதனைப் பாராட்டுகையில், "இவர் ஈழநாடு செய்த தவப்பயன்” என்று கூறி வாயார வாழ்த்தினுர்.
ஏற்கெனவே இவர் எழுதிய "அறு வடை நூல் எல்லாம் விற்று விட் டனவாம். தமிழ்ப் பொதுமக்களின் ஆதரவு இந்த நூலாசிரியருக்கு அமோகமாக உள்ளதென்பதற்கு இது நல்ல அத்தாட்சி.
வைகறை நூலில் ஒரு கதையைப் படித்தேன். உள்ளத்தைத் தொடு கின்றது. சமுகத் தவறுகளைக் குத் திக்காட்டி சீர்திருத்த வைக்கிறது. புகழ் பெற்ற டால்ஸ்டாயின் கதை களை நினைவூட்டுகின்றது. பட்டுக் கத்தரித்தது போன்ற தெள்ளிய நடை, உள்ளத்து உணர்ச்சிகளை வாலிப வேகத்துடன் பிரதிபலிக் கிறது. மேலே கூறியது போல், "அமுதன் ஈழநாடு செய்த தவப் பயன்தான்". அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் காத்துள்ளது.
நல்ல சிறுகதைகளை எழுதுவது மிகவும் கடினம் என்பதை அறி வேன். எழுத்துத்துறையில் பல் லாண்டுகளிருந்தும் சிறுகதைகளை எழுதும் தகுதியும் துணிச்சலும்

இன்னம் எனக்கு ஏற்படவில்லை. நல்ல தைப் பொங்கல் பரிசைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்துள்ள ஆசிரியர் அமுதன் வாழ்க! A.
யாழ்ப்பாணம், 1-2-1977. ஐயாறன்
மேலுள்ள திருமுகம் நாம் 1977 தைப் பொங்கல் திருநாளன்று (14-1-77) வெளியிட்ட, அமுதன் எழுதிய *வைகறை சிறுகதைத் தொகுப்பு நூல் சம்பந்தமானது. இதனைத் திரு. ஐயாறன் அவர்கள் ‘ஈழநாடு’ பத்திரி கையில் எழுதியிருந்தார்.
இப்படிப் பலர் பாராட்டுக்கள் தெரிவித்தும், வாழ்த் துக்கள் தெரிவித்தும் அஞ்சல்கள் வரைந்துள்ளனர். பல பத்திரிகைகள் விமர்சித்துக் கட்டுரைகள் எழுதி
இருந்தன.
பாராட்டி எம்மை ஊக்குவித்தும், அறிவுரை தந்து எம்மை வழிப்படுத்தியும் உதவும் அனைவருக்கும் நாம் கடமைப்பட்டவர்கள். இவர்களுக்கு எமது உள்ளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம்.
-நிர்வாகி, வேல் வெளியீட்டகம்.

Page 43
l.
வெளி வந்தவை
அறுவடை
2. வைகறை
3.
வேல் வெளியீட்டகத்தின்
வெளியீடுகள்
அமுதன் எழுதியவை :
- வள்ளுவப் பிரசார நாடகம்
சாதிாரண பதிப்பு - just 3-25
பரிசுப் பதிப்பு —=. 25-4 وو
- சிறுகதைத் தொகுப்பு
சாதாரண பதிப்பு - 3-75 பரிசுப் பதிப்பு - , 5-00
- சிறுகதைத் தொகுப்பு
சாதாரண பதிப்பு -- 375 و
பரிசுப் பதிப்பு --75-4 وو كس
- குறுநாவல்
வ. கிருஷ்ணசாமி B. A. எழுதியது:
மாரீசம்
வெளிவருவது 4. சங்கமம்
5.
சன சமூக நிலையம்
- அதன் விளக்கமும் இயக்கமும் - கட்டுரை
உங்கள் தேவைகளுக்கு எழுதுக.

FIELDI!
ஆம்! கலைக்குன்றில் ஊற்றெடுத்து ஒய்யாரமாக ஓடும் ஆயகலைகளுள் அநேகம் அவனுட் சங்கமம்! அவளுே கலை மக்களுக்காக என்ற உணர்வுந்தலின் செயற்பாட்டால் மக்கட் சமுத்திரத்துட் சங்கமம்
இருந்தும், ஜனசமுத்திரம் அவனை வரவேற்கவில்லை! - வாழவைக்கவில்லை; மாருக, அவனையே விழுங்கி ஏப்பம் விட்டது!
இந்தக் கண்ணிர்க் கதையைத் தத்ரூபமாகச் சித்திரிக்கிருர் அமுதன் அவர்கள்.
சங்கமம்" வேல் வெளியீட்டகத்தின் அடுத்த ஆக்க இலக்கிய வெளியீடு! *சங்கமம்" ஒவ்வொரு குடும்ப நூலகத்திலும் இருக்க Geau adarngu grdeb! M "சங்கமம்" ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய நூல் விரைவில் வெளிவருகிறது -
FISIDs'

Page 44


Page 45
ளோஃ செய்கிறேன் என்று ஃனயும் இல்லே. மாமுக, ! உண்டு ஆத்ம திருப்தி உ உண்டு. இந்தச் சுகம் பெ. தாம்பத்தியம் தரும் சுகத் ரும், பிறவும் தரும் சுசுத்
நாட்டில் நிஃபை போசா, ரெட் டயங்கிரமாக மாறிய எரிக்கிழமை இரவு யாழ்ப்ப மைதானத்தில் நடைபெற்ற கிய பொலிஸ் பொதுமக்கள் கள் நாட்டின் நாளிாடக்க தீயாக மாற வித்திட்டது கொள்னே, கொஃ, சுற். கிள்.
துணி துவைக்க சோப் இன் சிலர் முகம் மினுக்க விஃலட்
rů. říjnart To
சி.ச்சீ இந்தப் பின்ஃன எ பிள்ளே சி.ச்சி இந்தப்பி; எச்சிப் பிள்ஃள! இது எச்சி
பட்டாம் பூச்சிகளின் படை நாகரிய நங்கையரின் கும்
இந்தச் சுரண்டல் சமுதாய பாவசிய தேவைகளுக்கு உத் வந்தால், நான் நல்வணுைகி புகிருேமோ, இல்ஃலயோ
ருேம் - நிர்ப்பந்திக்கப்படுகி

வரிகள்
எனக்கு வெட்கமில்லே, மனவேத ன ஆறுதல் உண்டு; மனநிம்மதி ண்டு இனம் தெரியாத ஒரு சுகம் ாருள் வசதி கரும் ககத்தை விட Tத விட - பேரும் புகழும், பிற 1த விட உயர்ந்தது.
ாகவிருந்தது. மோசநிஃமை வர து. பன்னிரண்டார் திகதி வெள் ானம் சென்ற் பற்றிக்ள் கல்லூரி களியாட்டு விழாவிவே தொடங் னஃசுலப்பு - சில செந்தீப் பொறி ங்களிலும் இனக் கவரை பெருத் . கடை உடைப்பு, தீ வைப்பு, ழிப்பு என்ற செந்திச் சுவா ஃ
ஃ. பல் துவக்க பற்பசை இல்ஃ. புயர்ந்த பிறநாட்டு வாசிஃனத் திர
*னக்கு வேண்டாம். இது எச்சிப் ள்ஃா எனக்கு வேண்டாம். இது |ப்பிள்ளே! சி.ச்சி இந்த.
-யெடுப்போ? அல்ல, அல்ல!! நவ
ாளம்.
அமைப்பு மாறி, மனித அத்தி ந்தரவாதம் அளிக்கும் ஆட்சிமுறை விடுவேன். இப்ப நாங்கள் விரும்
களவு செய்யத்துரண்டப்படுகின் ன்றுேம்.