கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முகம் தேடும் மனிதன்

Page 1
| TTH als THE -".
 


Page 2

முகம் தேடும் மனிதன்
குமார் மூர்த்தி
காலம் வெளியீடு

Page 3
முகம் தேடும் மனிதன் குமார் மூர்த்தியின் சிறுகதைகள்
G) குமார்மூர்த்தி
முதல் பதிப்பு: மார்ச் 1995
வெளியீடு : காலம், பெரம்பூர், சென்னை- 11
வடிவமைப்பு : வே. கருணாநிதி
அச்சாக்கம் : கண்ணப்பா ஆர்ட்ட பிரிண்டர்ஸ் 60/4. சூரப்ப முதலி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
அடடை ஓவியம் : மணிவண்ணன்
விற்பனை உரிமை : திலீப் குமார் 25, 3வது டிரஸ்ட கிராஸ் தெரு, மந்தைவெளிப்பாக்கம் சென்னை - 600 028.
கனடாவில் கிடைக்குமிடம் Kumamoorthy P.O. Box : 87180 2942 FINCHAVE, East Scarborough Ontario Canada MIW 2TO
விலை ரூ. 20.00

என்னைப் படிக்க வைத்து உத்தியோகஸ்தனாக்கி விட வேண்டுமென கடைசிவரை முயன்று தோற்றுப்போன
என் அப்பு வ.நா. வுக்கு

Page 4

பதிப்பாளர் குறிப்பு
'காலம் வெளியிடும் நான்காவது நூல் இது அண்மைக் காலத்தில் எழுதத் தொடங்கி மிகக் குறுகிய காலத்துக்குள் ஈழத்துப் புனைகதை உலகின் மிக முக்கியமான படைப்பாளியாகக் குமார் மூர்த்தி தெரியவந்துள்ளார். அரசியலின் அசுரப் பிடியில் சிக்குண்டு அல்லலுறும் ஈழத் தமிழர் வாழ்வின் அவலங்களையும் கோரங்களையும் தனிமனித - குடும்ப - சமூகப் பின்புலங்களினுாடாகவும், அவற்றின் உள்ளும் புறமும் ஆன ஊடுபாவலின் மூலமாகவும் குமார்மூர்த்தி தம் படைப்புகளில் வெளிப்படுத்துகிறார். அவர் படைப்புகள் ஒரு காலத்தின் வரலாறன்றி வேறில்லை.
படைப்பின் களன்களிலாகடிடும், படைப்பாளியின் தனித்துவமிக்க பார்வைகளிலாகடடும், படைப்பு மனோபாவங்களிலாக உடும், படைப்பாக்க நெறி களிலாகபடடும் குமார் மூர்த்தியின் எழுத்துகள் விசேஷ அடையாளங்கள் கொண்டிருக்கின்றன.
குமார்மூர்த்தியின் முதல் சிறுகதைத் தொகுதி இது தம் சிறுகதைகள் மூலம் ‘காலம் இதழை வலுப்படுத்திய குமார்மூர்த்தியின் கதைத் தொகுதியை 'காலம் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.
செல்வம்

Page 5

முகம் தேடும் மனிதன் 9 ஹனிபாவும் இரண்டு எருதுகளும் 27 சின்னத் துப்பாக்கி 37 பயணம் 44 குண்டு வெடிப்பு 49 இறுதி அத்தியாயம் 53 ஒரு மனிதன் 59 கல் வீடு 65 எங்கள் ஊரும் பள்ளிக்கூடமும் 68 உடைபடும் சுவர் 72 மஞ்சள் குருவி 83

Page 6

முகம் தேடும் மனிதன்
மாதம் தேதி நினைவில் அழிந்து போன ஏதோ ஒரு நாள். அப்போது மழைக்காலம் தொடங்கி சிறிது நாள் கடந்துவிட்டிருந்தது. வானம் எங்கணும் சாம்பல் பூத்த மேகங்கள் ஒன்றையொன்று நெருக்கி கடாமுடாவென்று உறுமிக் கொண்டிருந்தன. சூரியன் பூமியை எட்டடிப் பார்க்க பெரும்பாடு படடுக் கொண்டிருந்தான். ஆனால் மேகங்கள் கொஞ்சமும் இரக்கமில்லாமல் கர்வத் தோடு மறைத்துக் கொண்டு நின்றன. அடாவடியான இந்தச் செயலுக்குப் பயந்து சூரியன் ஊமையாகிக் கனன்று கொண்டிருந்தான். அந்த பிரதான தெரு நீளத்துக்கு, மழை வெள்ளம் நெடுஞ்சாண் கிடையாக வியாபித்துக் கிடந்தது. மாட்டு வண்டில்கள் போகும் போது அதன் சக்கரம் அதிகமாக நீரில் அமுங்குவதும், அதனால் மாட்டு வால்வரை நீர் முடடி அது வாலைத் தூக்கி வைத்துக் கொள்வதையும் பார்க்கும் போது நீண்ட காலத்திற்கு வீதிகள் செப்பனிடப்படாமல் இருக்கின்றன என்பதை ஊகித்துக் கொள்ள முடியும். பாதசாரிகள் கவனமாக சாலையைத் தவிர்த்து, ஓரமாக நடந்து கொண்டிருந்தனர். அதேநேரத்தில் அடிக்கொருதரம் தலையை 'சடக்" என்று வெட்டி வானத்தைப் பார்ப்பதும், மறுபடியும் நடையை துரிதப்படுத்துவதுமாக இருந்தனர். வானத்திலிருந்து ஏதோ ஒன்று தலைக்கு மேல் போடப்படப் போவது போலவும் அதிலிருந்து தப்பித்து ஓடத் தயார் செய்வது
குமார்மூர்த்தி 9

Page 7
மாதிரியும் இருந்தது அது. நான்கு வருடங்களுக்குப் பின் அந்த மண்ணில் நிற்கும் உணர்வு என்னுள் ஒரு பயத்தையும் கிலேசத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தேவைக்கேற்றபடி ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டிருப்பது, நான் அவர்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போயிருப்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது. ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு இறுக்கம். பரக்கப்பரக்க எதையோ தேடும் கண்கள். கை நழுவிப் போய்விட்டட ஒன்றை மறுபடியும் பெற்றுவிட வேண்டும் என்பது மாதிரியான தவிப்பு. மொத்தத்தில் ஒவ்வொருவர் முகமும் ஒவ்வொரு வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. விட்டடுவிடடு வரும் மெல்லிய ஊதல் காற்று, எது என்று பகுத்தறிய முடியாதபடி குழம்பிப்போன நெடி யை என் மூக்கினுள் நுழைத்து விடடுச் சென்றது. மற்றெல்லாவற்றையும் விட அதில் கந்தக நெடி அளவுக்கதிகமாக இருப்பது தெரிகிறது. யாழ்பாணத்துக்கு இதுதான் நிரந்தரமானது என்பதாக முடிவு செய்து
விட்டட தைப்போல் யாரும் அதற்காக மூக்கைப் பிடிக்கவோ முகத்தைச் சுழிக்கவோ செய்யாமல், ஆசுவாசமாக சுவாசித்துக் கொண்டு தங்கள் வேலைகளைக் கவனித்தனர். атлiђgy போன
கட்டிடங்களைவிட எஞ்சியிருந்தவைகளும் கரிப்பற்றுப் பிடித்து, எந்த நேரத்திலும் எரியலாம் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தன. எங்கேயோ தூரத்தில் கட்டிடம் அல்லது ஏதோ ஒரு ஊகிக்க முடியாத வஸ்து எரிந்து கொண்டிருப்பதற்கு அடையாளமாக கரும்புகை வளைந்து மேலெழுந்து காற்றோடு கரைந்து கொண்டிருந்தது. மூளிப் பனை மரங்கள் சில எதையும் எதிர்கொள்ளத் தயார் என்பது போல் காற்றோடு உர் உர்’ என்று கறுவிக்கொண்டிருந்தன. வர்ணிக்க முடியாத அலங்கோலமாக இருந்தாலும் இன்னும் நகரம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதில் பரம சந்தோஷம்.
10 முகம் தேடும் மனிதன்

இவ்வளவு பரபரப்பையும் ஒரே அடியில் அடித்துச் சாய்த்து விடுவது போல், உடைந்த மதில் கல்லுமேல் சாவகாசமாக உடகார்ந்து கொண்டிருந்தார் ஒரு மனிதர். நடுத்தர வயதுக்கு கொஞ்சம் மேலேயே இருக்கும். தலையில் நரை விழுந்திருந்தது. ஏதோ ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததற்கான முகக்களை. எடுத்த எடுப்பிலேயே நடுத்தர வர்க்கம் என்று சொல்லி விடலாம். புரடசிக்காரர்கள் கூட கோபித்துக்கொள்ள மாடிடார்கள் அருகில் போன என்னை ஏற இறங்கப் பார்த்தார். அந்தக் கண்களில் ஒரு சோகமும் கூடவே ஒரு கேள்விக் குறியும் தொனித்தது. வாய்க்குள் வெற்றிலை இருப்பதற்கு அடையாளமாக ஓரத்தில் லேசான சிகப்பு கோடு காடடியது. ஓரமாக உடகார்ந்த என்னை ஒரு தினுசாக பார்த்துவிட்டு முன்னிலும் கடுமையாக வாயைக்
குதப்பிக்கொண்டார். வாயை மூடி வைப்பதற்கும் மூட வைப்பதற்கும் வெற்றிலை பாக்கு ஒரு நல்ல கருவிதான். அதுதான் நம் முன்னோர்களும் மிகக் கவனமாக அந்தப் பழக்கத்தை வளர்த்து வந்துள்ளனர் போலும். இப்போதைய நிலைமைக்கு அது எவ்வளவு பொருத்த மாயிருக்கிறது என்பதை நினைத்த போது சிரிப்பு வந்தது. இப்போது அவரின் பாதை வீதிக்கு எதிர்த்த மதிலில் நிலை குத்தியிருந்தது. அது இன்னும் இடிந்து விழாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என்னும் அளவிற்கு ஏராளமான சுவரொடடிகள். வண்ண வண்ணமாக, பளபளப்பாக, தொங்கு மீசை முகங்கள், அரும்பு மீசை முகங்கள், புன்சிரிப்பு முகங்கள், தொப்பி முகங்கள், கடுமை படர்ந்த முகங்கள், மென்மையான முகங்கள். அத்தனை முகங்களும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு பளிச்சிட்டடன. அந்த அழகு முகங்களுக்குக் கீழும் மேலுமாக, கோபுரத்துக்கடியில் இருக்கும் குடிசைகள் மாதிரி குறுணி குறுணியான எழுத்துக்கள். அந்த முகங்களே ஆயிரம் கதை சொல்லும்
குமார்மூர்த்தி 17

Page 8
போது இந்த எழுத்துக்கள் அநாவசியமாகப்பட்டது எனக்கு. கீழ்க் கோடி மூலையில் நைந்து போன உடையோடு ஒரு மனிதன் அரும்பு மீசைச் சுவரொடடி ஒன்றை ஊழலித்துப் போன தனது கைகளால் வருடிக் கொண்டிருந்தான். அவனின் செய்கை என் இதயத்தின் கனத்தை மேலும் அதிகரித்தது. உப. கார்ந்திருந்த மனித ரோடு பேச்சுக் கொடுத்தேன். இதுதான் அவர் சொன்ன கதை.
சிவப்பிரகாசம் ஒரு குமாஸ்தா. உடனேயே எந்த இலாகா, எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று கேட்டபது எம்மவர் வழக்கமாயிற்றே! என்ன செய்வது எல்லாம் நம் குழ்நிலைக் கோளாறுதான். அதற்கு யார் என்ன செய்ய முடியும். ஏதோ ஒரு காணிக்கந்தோரில் குமாஸ்தா. (புரியாத பதவியைச் சொல்லி எனது மேதா விலாசத்தைக் காடடுவதாக வாசகர்கள் குறைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் எல்லா வகையான இடிகளையும், சுமைகளையும் தாங்கிக் கொள்ளும் இந்த சாசுவதப் பதவியை, நம் ஊர் வழக்கப்படி 'கிளார்க்கர்" என்று அந்தஸ் தோடு அழைப்பார்கள். ஏனோ தெரியவில்லை சில ஏடுகள் இதைக் குழப்புகின்றன. எது சரியானது என்பதை அறிய அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்வதாக அறிகிறேன். முடிவை வாசகர்கள் அறியும்படி விடடு விடுகிறேன்). சிரமப்படடுத் தேடியும். சம்பளப் படடியல் கைக்கு எடிட வில்லை. தவிர இது ஒரு கெளரவப் பிரச்சனையும் கூட. இருந்தும் என்ன பெரிசாகக் கொடுத்துவிடப் போகிறார்கள், வரவுக்கும் செலவுக்கும் திண்டாட்டமாகத்தான் இருந்திருக்கும். நகர
12 முகம் தேடும் மனிதன்

வாழ்க்கை அப்படி என்ன லேசுப்பட்டதாகவா இருந்திருக்கும். பொருடகளின் அன்றாட விலையேற்றத் தால் ஏற்படும் நிஜமான பற்றாக்குன்றக்கும், வளர்ந்து வரும் போலியான பகட்டடுக்கும் இடையில் முன்னேறவும் முடியாமல் பின் வாங்கவும் முடியாமல், மூச்சுத் திணறி அவஸ்தைப்படடுக் கொண்டிருக்கும் இந்த இடை நிலை அரசாங்க ஊழியர்கள், ஒரு சுமைதாங்கிதான் என்பதை சொல்லவும் வேண்டுமா! பிரகாசத்துக்கு நகர்ப் பகுதியில் சிறிய வீடு உண்டு. எல்லோருக்கும் அறிமுகமான கந்தசாமி கோவிலில் இருந்து கிழக்கே போகும் தெருவில் அரை மைல் போனால் ஒரு காளி கோவில் தென்படும். அதிலிருந்து வடக்காக ஓடும் கறுப்பு ரோடடில் மூச்சுப் பிடித்துக் கொண்டு மூன்று பர்லாங்கு தாண்டியதும் ஒரு வீரபத்திரன் கோவில். அதையும் இரண்டு எடடில் தாண்டி விடடால் அரசமரத்துக்குக் கீழே சின்னதாக ஒரு பிள்ளையார் சிலை. அதற்கு எதிர்ப்புறமாக அதாவது பீச்சாங்கைப் பக்கமாக, குப்புற இறங்கி ஓடும் சந்தில் மூன்றாவது வீடு. நாற்சார் சதுர வீடு, வடக்குப் பார்த்த தலை வாசல். வீடு சுத்தமாகவும் பார்க்கும் படியாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் மனைவிதான். மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின்பும் சுறுசுறுப்புக் குறையாமல் பம்பரமாக இயங்கிக்கொண்டிருப்பாள் என்பதைத் தவிர அவளைப் பற்றி யாதொன்றும் அறிய முடியவில்லை. இதில் ஆச்சரியப்படும்படியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. பழகிப் போன ஊர் வழமைதான்.
சதா பற்றாக்குறையான வாழ்க்கைக்கு மத்தியில் மூன்று பிள்ளைகளையும் நகரத்துப் பள்ளியில் படிக்க வைப்பது 676.560) 5u / துயரமானது என்பதை விளக்குவதற்கு வார்த்தைகளே இல்லை. அதுவும் இந்த நகரத்துப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றனவே, இராட்டசத குமார்மூர்த்தி 13

Page 9
குணம் படைத்தவைகள். அதைக் கொண்டு வா! இதைக் கொண்டு வா! என சதா பிள்ளைகளிடம் இருந்து எதையாவது பிடுங்கிக்கொண்டே இருக்கும் என்பதுதான் உலகறிந்த விஷயமாயிற்றே! ஆனால், படடம் வாங்கி, அரசாங்க உத்தியோகம் பெற்று, பிள்ளைகளைப் பெற்று, ஓய்வூதியம் பெற்று, நன்கொடை வாங்கி, திருமணம் செய்து இன்னும் சொல்ல முடியாத இத்தியாதி சமாச்சாரங்களுக்கும் படிப்பு முக்கியமானதென்பது பாடசாலைகளுக்குத் தெரியுமாகையால் அவை கொஞ்சமும் விட்டுக் கொடுக்க மனமில்லாது நடந்து கொள்கின்றன போலும். அதற்காக நாம் கவலைப்படடு ஆகப்போவதுதான் என்ன. மூத்த பையன் பதினெட்டு வயதைத் தாண்டி உயர் வகுப்புப் படிக்கிறான். அடுத்தவர்கள் இருவரும் பெண்கள். கீழ் வகுப்பு படிக்கிறார்கள். சாதாரண காலங்களிலேயே வாழ்க்கை கடினமாக இருக்கு மென்றால் போராட்டம் அது இது என்று குழம்பிப்போயுள்ள காலத்தில் அதுவும் அரசாங்கமே எதிரியாக மாறிவிடட காலத்தில் மகா ஜனங்களின் கஷ்டத்தைப் பற்றி விளக்குவது கடினமானதுதான். ஆனால் கிடைத்ததைக் கொண்டு எல்லோரும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். சிலருக்கு அர்த்தமுள்ளதாகவும் சிலருக்கு அர்த்தமற்றதாகவும் ஒவ்வொரு நாளும் பயத்தையும் ஏக்கத்தையும் சுமந்து கொண்டு நடமாடினர்.
ஓய்! என்ன காணும் பிரகாசம் ஒரேயடியாக யோசித்துக் கொண்டிருக்கிறீர். கோப்புகள் எல்லாம் அப்படியே கிடக்கிறது!
14 முகம் தேடும் மனிதன்

என்ன ஐயா செய்கிறது எல்லாம் என் பையனைப் பற்றித்தான். ஒரே பயமாக இருக்கிறது. கொஞ்ச காலமாகவே பிரகாசத்திற்கு பயபும் அதிகரித்திருந்தது. அவருக்கு எட்டடும் செய்திகள் நல்லனவாக இருப்பதில்லை. திடீர் திடீரென பையின்கள் காணாமல் போவதும், படைகள் வளைத்துப் பிடித்துக்கொண்டு போவதும், பாடசாலைக்குப் போன பையன்களின் சயிக்கிளும் புத்தகமும் மடடுமே வீடு திரும்புவதும் பரவலாக நடந்துகொண்டிருந்தது. இத்தனை காலமும் அணுஅணுவாகத் தன்னை உருக்கி வளர்த்த மகனுக்கு ஒன்றென்றால். நினைக்கும் போதெல்லாம் அவருக்கு அடி வயிற்றில் வலித்தது. இனம் புரியாத ஏதோ ஒன்று வந்து நெஞ்சை அடைப்பது மாதிரியிருக்கும். வாய் விடடுக் கதற வேண்டும் போல் இருக்கும். தனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்த பயம் இருப்பதும் அவரவர் தகுதிக்கேற்ப அங்கலாய்ப்பதும் அவருக்குத் தெரியாததல்ல. இருந்தும் அவர் தன் மகனைப் பற்றி கற்பனையை அதிகமாகவே வளர்த்து வைத்திருந்தார். அதற்கேற்றாற்போல் அவனும் படிப்பில் மிகவும் புத்திசாலிப் பையன். துருதுரு என்று எதையாவது செய்துகொண்டே இருப்பான். அவனைப் பெரிய படிப்பு படிக்க வைத்து பெரிய உத்தியோகத்தில் அமர்த்த வேண்டும் என்று அடிக்கடி மனைவியிடம் சொல்லிக் கொள்வார். அவனின் தலையில்தான் இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலமும் தங்கியிருந்தது. இந்த மகனுக்கு ஏதாவதென்றால், அவர் மனதுக்குள் வேண்டாத தெய்வங்கள் இல்லை. அவர் அதிக ஆச்சாரமானவர். தெய்வ சிந்தனையுள்ளவர். மகனுடைய இப்போதைய போக்கும் அவருக்கு அவ்வளவாக திருப்தி தரவில்லை. நண்பர்கள் என்று போவதும் வருவதும் ஏதோ குசுகுசுப்பதுமாக இருக்கிறான் என தாய் வேறு
குமார்மூர்த்தி 15

Page 10
முறையிடுகிறாள். என்ன ஏது என்று அவனைக் கண்டிக்கவும் அவருக்கு தயக்கமாக இருக்கிறது. முன்னைப் போல் காலம் இல்லை இப்போது. 6TL/Téħra L - L0/765 ஏத7வது சொல்லப்போய் அதுவே விபரீதமாகிவிடும். ஆனால் மகனில் அவருக்கு இன்னும் மலைபோல் நம்பிக்கை இருந்துகொண்டுதான் இருந்தது. இருந்தாலும் எங்காவது வெளிநாடடுக்கு அனுப்பி வைத்தால் எல்லா பயமும் அற்றுப் போய்விடும். அத்தோடு பணக் கஸ்டமும் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் கொஞ்ச நாடகளாகவே அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு ஏற்ற ரொக்கப்பணம் அவரிடம் இல்லாததால் எத்தனையோ பேரிடம் கேட்டுப் பார்த்தாயிற்று. தருகிறோம் என்கிறார்களேயொழிய கைக்கு வந்த பாடில்லை. யாராவது கொஞ்சம் வசதியானவர்களாகத் தெரிந்தவர்களைக் கண்டாலோ இவரிடம் இருக்குமா? தருவாரா? கேடடுப் பார்க்கலாம்ா? என்று அவர் மனம் அடித்துக் கொள்ளும்.
உமக்கு சங்கதி தெரியாதோ, பிரகாசம்!
சொல்லுங்கள் ஐயா! எனக்கு ஒன்றும் தெரிந்தபாடாயில்லை. என் மூளை வேறு குழம்பிக் கிடக்கிறது. நீங்கள்தான் பலதையும் பத்தையும் வாசிக்கிறவர். சொன்னால்தானே தெரியும் சேதி!
இரவு ஒரு போலீஸ் நிலையத்தை நொறுக்கித் தள்ளி.ான்களாம் நம்ம பையன்கள்.
அப்படியா, சங்கதி சந்தோஷமான செய்திதான் ஐயா. அவன்களுக்கும் இப்போது தெரியும் எங்கள் பையன்களைப் பற்றி எங்களை என்ன வேணுமானாலும் செய்யலாம் என்று எண்ணியிருந்தவர்களல்லவா அவர்கள். இப்போது புரிந்திருக்கும் அது. ஆக நமக்கு வெற்றி
16 முகம் தேடும் மனிதன்

தானாக்கும். அது சரி பையன்களிடம் நீர்மூழ்கி கூட இருக்குதாமே! இருக்கும் இருக்கும். பக்கத்து நாடு கொடுத்தாலும் கொடுத்திருக்கும்.அவருக்கு சந்தோஷத்தில் முகமெல்லாம் விரிந்து ஒரு முறை தலையைப் பலமாக ஆட்டிக் கொண்டார். எதிலோ இருந்து விடுதலை பெற்றதுபோல் கைகளை பலமுறை சொடுக்கிக்கொண்டார். yo ,
பிரகாசம் கொஞ்சம் மென்மையான சுபாவம் உடையவர். சில வேளைகளில் மடடும் உற்சாகமாகக் கதைப்பார். நாற்பத்தாறு வயது பூர்த்தியாகிறது. எட்டி வயிற்றில் உதைத்தால் எப்படியோ அப்படி ஒரு உள்வாங்கின தோற்றம். கொஞ்சம் நீளமுகம், கொஞ்சம் வழுக்கை. அரசாங்க ஊழியத்துக்கு போதுமான தோற்றம். கடந்த இருபது வருடமாக சாசுவதமான இந்த பேனா ஒட்டும் தொழிலைத் தவிர வேறு எதுவும் கிடையாது. பதவி உயர்வைப் பற்றி தீவிரம்ாக சிந்தித்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் அவரின் எண்ணத்தை அறிந்தது போல் அரசாங்கம் மொழிக் கொள்கையைக் கொண்டுவந்து எல்லாவற்றையும் மறக்க அடித்துவிட்டது. பலமுறை முயன்றுதான் பார்த்தார். ஒன்றும் பலனில்லாமல் போய்விட்டது. இந்த அநீதிக்கும் சேர்த்துத்தான் இப்போது அரசாங்கம் வாங்கிக் கட்டடிக் கொண்டிருப்பதாகப் பொங்கிப் பொங்கி சந்தோஷப்படுவார். அரசாங்கத்துக்கு இன்னமும் வேண்டும், அப்போதுதான் ஒரு வழிக்கு வருவார்கள். அதுவரைக்கும் பையன்கள் விட்டுக் கொடுக்கக்கூடாது என்று மனதுள் வைராக்கியப்படடுக் கொள்வார். ஆனால் அடுத்த கணம் மகனை நினைக்கும் போது வயிற்றைக் கலக்கும் சம்பவமாக மாறத் தொடங்கிவிடும். எதிரிக்குத் துன்பம் வரும் போது, சந்தோஷப்படுவதைப் போலவே இதுவும் இயலாமையின் வெளிப்பாடுதான். இருந்தும் சில
குமார்மூர்த்தி 17

Page 11
வேளைகளில், பலமுள்ள அரசாங்கத்தோடு மோதி வெற்றி பெற முடியாது போனாலும் போய்விடலாம் என்று எண்ணவும் செய்வார். ஆனால் சகபாடிகள் மத்தியில் எந்தக் கருத்து வலுக்கிறதோ, அந்தக் கருத்துக்கு முரணாக ஒரு போதும் நிற்கமாட்டடார். அதற்காக நாம் அவரைக் குற்றம் சொல்லுவது முறையாகாது. வலுத்தவன் கருத்துக்கு இசைந்து போவதென்பது Լյու... L- 6ծ7 الأ6 سام الله காலத்திலிருந்தே வளர்ந்து வந்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே!
IV
அன்று அலுவலகம் கொஞ்சம் பயத்துடனும் படபடப்புடனும் இயங்கத் தொடங்கியிருந்தது. இனம் புரியாத அமைதி அலுவலகமெங்கும் வியாபித்திருந்தது. வழமையாக உரக்க ஒலிக்கும் தட்ட டச்சு சத்தங்கள் கூட அன்று அமுங்கி பயந்து பயந்து ஒலிப்பது மாதிரி இருந்தது. எங்கோ தூரத்தில் கத்தும் காக்கைகளின் குரல் காதுக்குள் புகுந்து அபஸ்வரமாக ஒலித்தது. ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் போல் ஒவ்வொருவருக்கும் தோன்றியது மாதிரி அவரவர் இருக்கைகளிலேயே இருக்கப் பிரியப்பட்டனர். எதேச்சையாக சந்திப்பவர்கள் d3, L - முகத்தை பக்கவாட்டடுக்கு திருப்பி, எதையோ பார்க்க பயப்பட்டது மாதிரி நடந்து கொண்டனர். மனக்கண் முன் அந்த கோரமுகம் அடிக்கொரு தடவை வந்து அழிய மறுத்து அலைக்கழித்தது. இது சரியா! இது சரியா! என்ற கேள்வி அலை அலையாக வந்து தாக்குவது மாதிரி ஒரு உணர்வு ஏற்படடது. மறுகணம் அப்படி எதுவும் இல்லை போல் மனது அடிப்பதை குறைத்துக்கொண்டது. இருந்தாலும்
18 முகம் தேடும் மணிதன்

இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்த வன்ம உணர்வு செய்ய வேண்டியதைத்தான் செய்திருப்பார்கள், சரியானதைத்தான் செய்திருப்பார்கள்' என்று இசைந்து கொண்டது. அது வேறு ஒன்றுமில்லை - அலுவலக முன் சந்தியில், விழி பிதுங்கி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, கோரமான முகத்தோடு, மின் கம்பத்தில் தொங்க விடப்பட்டடிருந்த இறந்த மனிதனின் முகம்தான். சிகப்புமையால் கோணல்மாணலாக எழுதி தொங்கவிடப் பட்டட அட்டடை காரணத்தைச் சொல்லிவிட்டுக் காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது. மக்கள் கூடடம் மெளனமாக நின்று பார்த்துவிடடு மெளனமாக :ே/ கலைந்து போயினர். மனதில் நினைப்பதை வெளிக்காட்டுவது கூட அபத்தம் என்பது மாதிரி பிரயத்தனப்படடு முகத்தை நேராக வைத்துக் கொண்டனர். பிரகாசமும் முதலில் திடுக்குற்றாலும் அதை வெளியில் காடடாதவாறு செய்து கொண்டார். ஆனால் அவர் பார்த்த மரணங்களையும் இதையும் ஒப்பிடடுப் பார்க்காமல் அவரால் இருக்க முடியவில்லை. அவர் அறிந்த காலம் தொட்டு மரணத்துக்கு அதிக மரியாதை கொடுக்கப்படடு வந்தள்ள்தாகவும் கண்களுக்கு சந்தனம் நிரப்பி மூக்குத் துவாரத்துக்கு பஞ்சு வைத்து பெருவிரல்களை இணைத்துக் கட்டடி, பஞ்சு வைத்த பேழையில் வைத்து. பார்ப்பவர்கள் மனம் விகாரப்பட்டு விடக் கூடாதே என கவனப் படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இது முற்றிலும் மாறாக, அந்த விகார முகம் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது.
இவையெல்லாம் மதியத்துக்குள் மறக்கப்படடு அலுவலக சந்தடிக்குள் புதைக்கப்பட்டு, அன்றாட பிரச்சனைகள் கண் முன்னே வர அவர் வீடு வந்து சேர்ந்த போது அது வெறிச்சோடிக் கிடந்தது. மூலையில் மனைவி தலைவிரி கோலமாக சிதறிக் கிடந்தாள்.
குமார்மூர்த்தி 19

Page 12
அவரைக் கண்டதும் மண்ணிலும் வயிற்றிலுமாக மாறி மாறி அடித்துக்கொண்டு அழத் தொடங்கிவிடடாள். என்ன, " ஏது என்பதைக் கேட்பதற்குக்கூட திராணியில்லாமல் கைகால்கள் துவண்டு போக வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள்ளேயே சிக்கிக் கொள்ள தூணைப் பிடித்துக்கொண்டார்.
ஆயிற்று, அவர் பயந்தபடியே எல்லாம் நடந்து விடடது. இருந்தும் ஆதங்கப்பட்ட மனதின் நப்பாசை வீதியில் கேடகும் ஒவ்வொரு சயிக்கிள் சத்தத்தையும் நம்பி, ஏமாந்து, சலிப்படைந்தது. காலையில் விட டேறியாக வந்த கடிதத் துண்டும் சயிக்கிளும் மகன் நாட்டுக்காக உழைக்கப் போய்விடடான் என்பதை
இறுதியாகக் கூறிவிடடன.
V
இப்போது வீடு மொத்தமும் களையிழந்து புகை போக்கி மாத்திரம் எப்போதாவது புகைவிடடு சோம்பலை முறித்துக் கொண்டது. இடையிடையே கேட்கும் வெடிச் சத்தங்களும், ஓடடசாட்டங்களும், அஞ்சலிகளும் இயல்பைக் குலைத்து, இருப்பை அச்சப்படுத்திக் கொண்டிருந்தன. இயற்கை ஊமையாகிப் போக செய்திகளும் வதந்திகளும் கைகால் உருப்பெற்று கிலியை இன்னும் கூட்டிக் கொண்டிருந்த காலம் அது. அடுத்து என்ன நடக்கும், யார் மரணிப்பார்கள் என்பது ஆண்டவனுக்கே அறிய முடியாதபடி மர்மமாகவே இருந்தது. ஒவ்வொருவரும் எதையும் பெரிதுபடுத்த விரும்பாமல் இருக்கப் பழகிக்கொண்டனர். ஆனால் பிரகாசம் ஒவ்வொரு முகத்தையும் ஆழமாகப் பார்த்தார். 20 முகம் தேடும் மனிதன்

மரணத்தை விட் மரணத்தின் தன்மை பற்றிய வடுக்கள், அந்த முகங்களில் கோரத் தாண்டவமாடியிருப்பதை விளங்கிக் கொண்டார். வலிந்து புகுத்தப்படட ஒவ்வொரு மரணத்திலும் கேள்வியொன்று எழும்ப காத்துக் கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. அப்போதுதான் ஏன் இந்த மரணங்கள் என்ற கேள்வி, எங்கோ ஒரு மூலையில் சிறு பொறியாகத் தட்டி, மெல்ல மெல்ல வளர்ந்து, உள்ளத்தைச் சல்லடையாகக் குடைந்து இதை என் மகனும் செய்திருப்பானோ என்ற எண்ணம் புள்ளியிட்டடதும் இதயத்தில் சுரர் என்று வலித்தது. கண்கள் இருண்டு தலை கிறுகிறுத்தது. அப்படியென்றால் இந்தக் கொடூரத்தைச் செய்ய எங்கிருந்து கற்றுக் கொண்டிருப்பான். யார் கற்றுக் கொடுத்திருப்பார்கள், பூச்சி, பூரானைக் கொல்லப் பயப்படுவானே! அவனுக்கு இப்படி ஒரு அரக்கத்தனமா, நான் என்ன பழி பாவம் செய்தேன், இவனைப் பெற்றதற்கு! எண்ணங்கள் கட்டடு மீறிப்போக, ஈஸ்வரா என்று காதைப் பொத்திக் கொண்டார். மறுகணம், இருக்காது, ஒருக்காலும் இருக்காது, சிறு துன்பத்தைக்கூடத் தாங்க முடியாத அவனைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன! இவற்றையெல்லாம் வேறு யாரோதான் செய்வார்கள். மறுபடியும் அவரின் நினைவு நிதானத்துக்குத் திரும்பியது. அவனை வளர்க்க அவர் பட்டட கஸ்டங்களையெல்லாம் நினைவுபடுத்திப் பார்ப்பார். பத்துப் பன்னிரெண்டு வயது வரை ஆஸ்துமா வியாதி அவனைப் பாடாய்ப் படுத்தியது. நேரம் காலம் இல்லாமல் ஆஸ்பத்திரியும், பரியாரி வீடும், கோயில் வாசலுமாக இருந்தும் அவர் கொஞ்சமும் சவிக்கவில்லை, ஆனால் இப்போது ஏதோ இனம் புரியாத சலிப்பும் வெறுப்புமாக மனம் ஓஹோவென்று விச்சிராந்தியாகக் கிடந்தது.
குமார்முர்த்தி 21

Page 13
கால்கள் செயலற்றது மாதிரி ஒரே இடத்தில் நெடுநேரம் நின்று போவோர் வருவோரையெல்லாம் கூர்ந்து பார்ப்பார். ஒவ்வொரு முகத்திலும் மின் கம்ப மனிதனின் முகச் சாயல் தெரிவது மாதிரியிருக்கும். அதற்குப் பிறகு எத்தனையோ மரணங்களைக் கண்டு விட்டாலும் ஆரம்பத்தில் பார்த்த மின் கம்ப மனிதனின் முகம் அழிச்சாட்டியமாக அழிய மறுத்து திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. மேல் துண்டைப் போர்த்துக் கொண்டு வீதியோரமாக நடப்பார். எங்காவது நடக்க வேண்டும் போல் கால்கள் துரிதப்படும். வீதியில் நடக்கும் எந்த சம்பவங்களிலும் சுரனை இருக்காது. சுடுமணல் கூட காலுக்கு உறைக்காது. ஆனால் ஒவ்வொரு மின்கம்பத்தைக் கடக்கும்போதும் கால்கள் தானாக சோர்வடைவது மாதிரியிருக்கும். பார்க்கக் கூடாது என்று மனது பிடிவாதமாக மறுத்தாலும், கண்களைக் கட்டுப் படுத்த முடியாமல் அபாயம் என்ற எழுத்துக்குக் கீழே இலக்கங்களுடன் நேராக நிமிர்ந்து நிற்கும்; போய்விடும். அது வெறுமையாக, அபாயம் தெரிந்திருந்தாலும் கூட அந்த இலக்கங்கள் ஒரு முறை திடுக்கிட வைக்கும். மறுபடி மனசு லேசாகி மீண்டும் நடக்கத் தொடங்குவார். அப்படித்தான் ஒரு கம்பத்தில் நிமிர்ந்த போது வெள்ளைப் பூனை ஒன்று கட்டடி தொங்க விடப்பட்டிருந்தது. பளபளப்பு மாறி அதன் கண்கள் பழுப்பேறியிருந்தன. அதன் கழுத்திலும் ஒரு அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. துரோகிக்கு தண்டனை - எலிகள் சங்கம்' என்று குழந்தைத்தனமாக கிறுக்கியிருந்தது. எதிரே சிறுவர்கள் கலகலப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். கால் வலிக்க வலிக்க நெடுநேரம் நின்று மாறிமாறிப் பார்த்தார். ஏதோ சொல்லி ஆதங்கப்பட வேண்டும் என்று மனது அங்கலாய்த்தது. ஆனால் சொல்ல முடியாத தவிப்பாய், வார்த்தைகள் தெரியாத தவிப்பாய்,
22 முகம் தேடும் மனிதன்

அகன்று விடடார். பெரும்பாலும் அவருக்கு தனிமை வேண்டியிருந்தது. மெளனம் இனித்தது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் மகனின் பிரிவுதான் இப்படி ஆக்கிவிட்டது என்று கூறுவது காதில் விழுந்தாலும் மெளனமாகவே இருப்பார்.
அவரின் மெளனத்தைப் போலவே நகரமும் அதன் மேல் திணிக்கப்படட சந்தடியைத் தவிர சோகமாகிக் கிடந்தது. தனக்குப் பரிச்சயமான ஒவ்வொரு முகத்தையும் பறி கொடுக்கும் போது, கூடவே இரத்தத்தையும், நிண நீரையும் வாஞ்சையோடு உள்வாங்கி, மறுபடியும் மெளனித்துக் கொண்டது.
V
இப்போது பிரகாசத்தின் மகன் எப்போதாவது வீடு வந்து போகிறான். அவன் தோற்றமும் மாறுபட்டடிருந்தது. மொழு மொழுவென்ற குழந்தைத்தனம் முகத்திலிருந்து மறைந்து காய்ந்து கறுத்து லேசான முரட்டடுத்தனம் அப்பியிருந்தது. படபடத்த புருவங்களுக்கிடையில் துருதுருத்த கண்கள் போய், ஏகாந்தமும் வன்மமும் கொண்ட கண்களாக இருந்தன. அவை. கைகளில் நரம்புகள் புடைத்துக் கட்டடுமீறிக் கொண்டிருந்தன. கொஞ்சலும் சிரிப்புமாயிருந்த அவன் பேச்சுக்கூட கரகரத்துப் போயிருந்தது. இருந்தாலும் அவன் வரவு பெண் பிள்ளைகளுக்கும் தாய்க்கும் சந்தோசமாகவே இருந்தது. பெண்பிள்ளைகள் அவனிடம் எதை எதையெல்லாமோ கேட்டு வைத்தனர்.
விக்கி விழுங்கி அவன் சொல்லும் பதில்கள் கூட அவர்களுக்கு திருப்தியாயிருந்தன. அவர்கள் மனதில்,
குமார்முர்த்தி 23

Page 14
எண்ணத்தில் அவன் ஒரு பிரம்மாண்டமான விருடசமாக, யாரும் வெற்றி கொள்ள முடியாத ஒருவனாகத் தெரிந்தான். வெகு விரைவில் கிடைத்தற்கரிய பொருள் ஒன்று கிடைத்துவிடப் போவதாகவும், அந்த சாசுவதமான அொருளுக்கு அண்ணாதான் குத்திரதாரி என்றும் அவர்களது கற்பனைக் கடல் பரந்து விரிந்தது. மெச்சப்படும் காரியங்களெல்லாம் அவன் குழுவுக்கு சொந்தமானதுதான் என அக்கம் பக்கத்தில் உள்ள ஒத்த வயதினருடன் வாதிடடனர். ஆனால் அவர்களோ பல பிரிவாகி கண் காணாதவர்களுக்காகக் கூட சச்சரவிடடுக் கொண்டனர். கூச்சலும், வாதாட்டடுமாய் விளையாட்டடு மைதானம் குழம்பிக் கிடந்தது.
(வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். அவன் எந்தக் குழுவில் இருந்தான் என்பதைப் பற்றி எவ்வளவோ நினைவு படுத்தியும் நினைவுக்கு வர மறுக்கிறது. அண்மைக் காலமாக எனது ஞாபக சக்தி தீவிரமாக பிசகத் தொடங்கியிருப்பதுதான் காரணமா அல்லது ஏகப்படட குழுக்கள் இருந்ததுதான் காரணமா என்பதை அறுதி யிட்டு சொல்ல முடியாதுள்ளது. இது ஒரு புறமிருக்க ஏதேதோ அந்நிய எழுத்துகள் எல்லாம் மாறிமாறி வந்து என்னைக் குழப்புவது என்னவோ உண்மைதான். அதோடு இதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்தால் தங்கள் புனிதத் திருப்பெயர் திட்டடமிட டே கொச்சைப் படுத்தப்படுவதாக ஏதாவது ஒரு குழு நம் மேல் பாரம் சுமத்த வாய்ப்புண்டான படியால், ஏதோ ஒரு குழுவில் இருந்தான் என்பது இப்போதைக்கு, எல்லோருக்கும் செளகரியமாக இருக்கும்.)
நல்லது, நிலைமையின் கடுமையும், இருப்புக்கு இருக்கும் சவாலும் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான சலனத்தை ஏற்படுத்தினாலும், யாராவது பதில்
24 முகம் தேடும் மனிதன்

காணுவார்களென்றோ அல்லது எப்படியாவது பதில் காணப்படும் என்றோ மனத்தை அடித்து முடக்கி நம்பிக்கையோடு அடுத்த நாளை எதிர் நோக்கினர். இதிலெல்லாம் பிரகாசம் தனித்தே இருந்தார். ஏதோ ஒரு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டடவராக, மனிதர்களின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டடார். அதைவிட அது ஒரு பயமாகக் கூட இருந்தது. ஊரில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் திடீரென கரிய கொம்புகள் முளைத்து விட்டதாகவும் ஒரு வரை ஒருவர் துரத்திக் கொண்டு முடி வேயில்லாத தூரத்துக்கு ஓடுவதாகவும் அவர் கண்ட
கனவும் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து அச்சமூட்டியது. மனது கஷ்டமாகி ஒரு நிலைப்பட மறுக்கும் வேளைகளில் காக்க காக்க கதிர் வேல் காக்க!” என்று அட் சரம் பிசகாமல் ஒற்றைத் துண்டைப் போர்த்திக்கொண்டு காண்டாமணியை நோக்கி வாஞ்சை யோடு நடந்த அந்த நாடகளை, அந்த வீதிகளை ஒப்பிடடுப் பார்ப்பார். வீதிகளில் சூனியம் கவ்விக் கொண்டுள்ளதாக உணர்வார். தன்னைப் பழி வாங்கு வதற்குத்தான் வீதியோரங்களில் முகங்கள் வீசியெறியப் பட்டிருப்பதாக துடித்துப் போவார். மரணத்தின் வேதனையை வாங்கிக்கொண்ட அந்த முகங்களோடு தன்னுடைய முகத்தைப் பொருத்திப் பார்ப்பார். அது பரந்து விரிந்து சூரபத்மனாகி. ஐயோ என்று அலறுவார். சத்தம் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொள்ளும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் மகனின் முகமும் திடீரென ஞாபகத்துக்கு வரும். அதுவும் விகாரமாகி, கோரமாகி, கண்களை இறுக மூடிக் கொள்வார். கருவண்டு போன்ற கண்களும் சிகப்புக் கோடி ழுத்த இதழுமாக அவன் தொட்டிலில் கிடந்த முகம் நினைவுக்கு வரும். மறுகணத்தில் அதுவே மெல்ல மெல்ல அகன்று பரந்து
குமார்மூர்த்தி 25

Page 15
மின்கம்ப மனிதனின் சாயலை ஒத்ததாகி. வானத்தை வெறித்துப் பார்ப்பார், குருவிகள் புள்ளி புள்ளியாகித் தேய்ந்து மறையும்.
அன்று இரவு கேட்டட குண்டுச் சத்தங்துள் அவரை படுக்கையை விட்டடு எழுந்திருக்க விடாமல் ஒரேயடியாக உறைய வைத்திருந்தன. அவை வழக்கத்துக்கு மாறாக அருகாமையில் வெகு அருகாமையில் கேட்டிருந்தன. பூமி தாங்க மாட்டாமல் வீடடையும் வீடடுக் கூரையையும் உலுப்பி எடுத்து நியாயம் கேட்டடிருந்தது.
கூக்குரல்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் நடுவில் இரத்த விலாறாக அடிக்கப்பட்ட மகனது உடல் முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது. அதில் மரணத்தின் வேதனை கோடுகளாகி வழிந்திருந்தது. மறுபடியும் மறுபடியும் காரணமில்லாமல் மின்கம்ப மனிதனின் முகமும் நினைவுக்கு வந்து அழிய மறுத்தது. வலுக்கட்டாயமாக மகனின் உண்மையான முகத்தைப் பார்ப்பதற்காக மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
இப்போது அவர் சுவரொட்டிகளில் Los 60fait
முகத்தைத் தேடுகிறார்.

ஹனிபாவும் இரண்டு எருதுகளும்
ஆனமடடும் அடித் தொண்டையை முன்னுக்கு எடுத்து உச்சஸ்தாயியில் அலறியது வெள்ளையன். திடுக்கிடடு வாரிச்சுருடடிக்கொண்டு வந்து பார்த்தார் ஹனிபா. தொழுவத்தில் வெள்ளையன் விழுந்து கிடந்தது. மெல்லிய நிலா வெளிச்சத்தில் அதன் கண்கள் பிரண்டு பிரண்டு வந்தன. பின்னங்கால்களை வெடடி வெடடி இழுத்தது. ஒரு கணம் திகைத்துப் போனார். பின்பு சுற்றிச் சுற்றி ஓடி வந்தார். அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. வீடடுக்குள் ஓடி மின்மினி பூச்சிபோல் இருந்த் லாந்தரை தூண்டி விடடார். அது பளக்' என ஓசை எழுப்பிவிட்டு கண்களைக் கூச அடித்தது. எடுத்து வந்து Լ0ք/LIւգ ԱյԼճ பார்த்தார். வெள்ளையன் அப்படியேதான் கிடந்தது. அக்கம் பக்கத்தில் எந்த ஒரு அரவமும் இல்லை. சுட்டியன் காதிரண்டையும் உயர்த்தி வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தது. வெள்ளையன் பக்கத்தில் உடகார்ந்து தாடையைத் தட விவிட்டார். அதன் தலையைத் தூக்கி நிமிர்த்துவதற்கு முயன்று பார்த்தார். முடியவில்லை. வீட்டைப் பார்த்து சத்தம் போடடார். மனைவி ஏற்கனவே வாசலைத் தாண்டி வந்து கொண்டிருந்தாள்.
இருவருமாக சேர்ந்து தூக்கி நிறுத்த முயன்றனர். ஒரு வழியாக நந்தி மாதிரி வெள்ளையன் உடகார்ந்து விடடது. வாயில் கொஞ்சம் வெள்ளை நுரை
குமார்மூர்த்தி 27

Page 16
தள்ளியிருந்தது. அதைக் கண்டதும் அவருக்கு உடம்பு லேசாக நடுங்கியது. கண்களில் நீர் முடடியது. முடிந்தமட்டும் அன்றைய நிகழ்ச்சிகளைக் கோர்வை யாக்கிப் பார்த்தார். எல்லாமே வழமையாகத் தானிருந்தது. அந்த ஒரு கிழமையாகவே மணியத்தின் நெற்காணியில்தான் வேலை. உழவு, மறுப்பு, கலக்கல் எல்லாமே இந்த வெள்ளையனும், சுட்டியனும்தான். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது. ஹனிபா வயலுக்குள் கால்வைத்து விட்டடார் என்றால் போதும். மணியம் அந்தப் பக்கத்துக்கும் போகமாட்டடார். வெற்றிலை, பாக்கு தொடங்கி விதை நெல்லு வரை சக வேலையாட்டகளிடம் கொடுத்தனுப்பி விடடு ஆசுவாசமாக உடகார்ந்திருப்பார். அல்லது வேறு சோலி பார்க்கப் போய் விடுவார். ஹனிபா இம்மி பிசகாமல் காரியம் ஆற்றக் கூடியவர். சொந்த வேலையைப் போலவே நேரம் காலம் பார்க்க மாட டார். மணியத்தின் வேலை முடியமடடும் வேறு எங்கும் போக விருப்பப்பட மாட்டார். எல்லாம் முடிந்து இன்னும் ஒரு நாள் பாக்கி இருந்தது.
வெள்ளையன் இப்படி படுத்துக் கொண்டது என்ற வருத்தம் ஒருபுறம். மறுபுறத்தில் மணியத்தின் வேலை முடியவில்லையே என்ற கவலை அவருக்கு நெஞ்சை அடைத்தது. மெல்லிய சுடுநீரில் கொஞ்சம் உப்பைக் கரைத்து வரச் சொல்லிவிடடு வெள்ளையன் பக்கத்தில் உடகார்ந்து விடடார். ஆசுவாச மிகுதியால் அதை ஒரு முறை கட்டடியணைத்துக் கொண்டார். இயலாத நிலையிலும் தலையை மெதுவாக ஆடடியது அது.
பிறந்ததில் இருந்தே வெள்ளையணுக்கு ஹனிபாவைத் தெரியும். எல்லாமே அதுக்கு அவர்தான் என்பது கூடத் தெரியும். அதனால் எப்போதும் ஒரு
28 முகம் தேடும் மனிதன்

கற்பனைக்கு அப்பாற்பட்ட நன்றியுணர்வு அதனிடம குடி கொண்டிருக்கும். பிறந்தவுடனேயே தாய்ப்பசு இறந்து விடடது. சீக்காளியாகிப் போன வெள்ளையன் கடைசிக் கையாக ஹனிபாவிடம் வந்து சேர்ந்த போது நாளையோ மறுநாளோ இறந்துவிடும் போலிருந்தது. பிள்ளை மாதிரி பார்த்தார். மனைவிகூட முணுமுணுத்துக் கொண்டார். இருந்தும் அதற்கு வேண்டிய வைத்தியம் எல்லாம் செய்து உயிர் கொடுத்து விடடார். வீடடை சுற்றிச் சுற்றியே வரும். குழந்தைகளோடு விளையாடும். காளையான பின்பும் கூட அதன் குணங்களில் மாற்றம் ஏற்படவில்லை. யாராவது புல்லைப் பிடுங்கிக் கொண்டு வருவார்கள் என்று வாசலைப் பார்த்தபடியே நிற்கும். வெறுங்கையோடு வந்தால் போதும் ஓடி வந்து செல்லமாக முட்டடும். வெளியில் போனாலும் அதிக தூரம் போகாது. 'வெள்ளையன்' என்றால் போதும் ஓடடமாக வந்துவிடும். வெள்ளையென்றால் பால் வெள்ளை. ஒரு மறு கிடையாது. சோப்புப் போட்டடு குளிப்பாடடி விடடுப் பார்த்தால் தும்பை பூ மாதிரி பளபளப்பாக இருக்கும்.
தற்செயலாகத்தான் சுடடியன் அவர் கண்களில் பட்டது. வெள்ளையனுக்கு ஏற்ற ஜோடி என்பதை அவர் உடனே கண்டுகொண்டார். வாங்குவதற்குக்கூட அவருக்கு கஸ்டமாகத்தான் இருந்தது. ஹனிபா ஒன்றும் வசதியானவர் இல்லை. அன்றாடம் காச்சிதான். ஆனால் கஸ்ட ஜீவனம் ஒன்றும் கிடையாது. அவருக்கு மாதம் முப்பது நாளும் வேலையிருந்து கொண்டேயிருக்கும். நல்ல வயல் வேலைக்காரன் என்று பெயரெடுத்தவர். நெடுநெடு என்று வளர்ந்த தோற்றமும் திடகாத்திரமான உடல்வாகும் உண்டு. தலை நரைக்கத் தொடங்கி விட்டடிருந்தது. வாய் நிறைய வெற்றிலை போட்டுக் கொள்வார். காலைத் தொழுகையை ஒருநாளும் தவறவிட மாடடார். அதைவிட பள்ளிவாசல் நிர்வாகத்திலும் குமார்மூர்த்தி 29

Page 17
பங்கெடுத்துக் கொள்பவர். அவர் மடடுமல்ல தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் கருமம் அது. புலனுக்கு அப்பாற்படடு நியதியாகிப் போன விடயம். தனது கடமைதான் வாரிசுகளுக்கு பிரதிஷ்டம் பண்ணுவது என்ற ஆதாரக் கோட்டபாட்டோடு தொடர்பு கிடையாது.
சோடாப்போத்தலுக்குள் விடடிருந்த உப்பு நீரை மோவாயை உயர்த்தி, மிகப் பக்குவமாக போத்தல் வாயை அதன் வாய்க்குள் அழுத்திப் பிடித்துக் கொண்டார். சட சடவென அவ்வளவு உப்பு நீரும் உள்ளே இறங்கி விட்டடது. அவருக்கு மனது கொஞ்சம் நிர்மலமாகி நம்பிக்கை பிறந்தது. மனைவியைப் பார்த்து தேனர் போடடுக்கொண்டு வரச் சொல்லிவிடடு வெள்ளையனுக்கு பக்கத்துத் தூரணோடு உடகார்ந்து விட்டடார்.
ஒரு உடன்பிறப்பின் மேல் வைத்திருக்கும் பாசம் போல்தான் அவருக்கு வெள்ளையன் மேல் பாசம். ஒவ்வொரு பேச்சிலும் அது தொனிக்கும். ஒருநாளும் ஓங்கி அடிக்கமாட்டார். கோபம் வந்தால் அதட்டடினாலே போதும். மனம் அறிந்து வேலை செய்யும். கழுத்து மணியை ஒரு தடவை ஆடடி விட்டு நடையை எட்டிப் போடும். சுட்டியனுக்கு மடடும் சில வேளைகளில் அடி விழும். அதுக்கு கொஞ்சம் முரண்டு பிடிக்கும் சுபாவமும் உண்டு. வேலை முடிந்து இரண்டுக்கும் குளிப்பாட்டடி கரையில் விடடுவிடடுத்தான் அவர் குளிப்பார். சுடடியன் விறுவிறு என்று வீடடுக்கு வந்துவிடும். வெள்ளையன் நின்று அவரைக் கூடடிக் கொண்டுதான் வரும். வழியில் மரைக்காயர் கடையில் வெற்றிலை பாக்கு வாங்கிவிட்டடு கொஞ்சம் அதிகமாக நின்று கதைத்து விடடால் போதும் பிடடத்தில் லேசாக முட்டி ஞாபகப்படுத்தும். அவனுக்கு பசி" என்றுவிட்டு புறப்பட்டுவிடுவார் ஹனிபா.
30 முகம் தேடும் மனிதன்

இப்படித்தான் ஆந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை மழை லேசாகத் துரறிக்கொண்டிருந்தது. குளிர் காற்று வெட வெடத்தது. மின்னலும், முழக்கமுமாக வானம் கனத்திருந்தது. தொழுவத்தில் எருதுகளைக் கட்டடி விடடு வைக் கோலும் பரப்பிவிட்டு வந்து படுத்துக் கொண்டார். நடுச்சாமத்தில் வெள்ளையனின் கத்தல் கேட்டடு திடுக்கிடடு எழுந்து வந்து பார்த்தார். காற்று பலமாக அடித்துக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற தென்னைகள் எல்லாம் பேயாடடம் போட்டடன. மழையும் பலமாக இருந்தது. மீண்டும் நாலைந்து தடவை வெள்ளையன் திமிறித்திமிறி அலறியது. ஆவேசப்படடு மூசியது. இந்த அமளியில் மனைவியும் பிள்ளைகளும் விழித்துக்கொண்டு வெளியில் வந்துவிடடனர். சற்று நேரத்திற்கெல்லாம் பக்கத்தில் நின்ற தென்னை சடசடவென முறிந்து வீடடுக்கூரை மேல் விழுந்து விடடது. எல்லோரும் வாயடைத்துப் போய் வெள்ளையனை கட்டடிப் பிடித்துக் கொண்டனர்.
இருந்த இடத்தில் இருந்து நகர்ந்து வானத்தை அண்ணாந்து பார்த்தார். மறைத்துக்கொண்ட மேகங் களூடாக நிலவு மங்கலாகத் தெரிந்தது. இன்று எத்தனையாம் பிறையாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தார். ஞாபகத்துக்கு வர மறுத்தது. விடிவதற்கு கொஞ்ச நேரம்தான் என்று ஊகித்துக் கொண்டார். புதிதாகக் கூடவே வெளிக்கிடட சேவலின் குரல் அபஸ்வரமாக வந்து ஒலித்தது. தூரத்தே ஒரு நாயின் ஊழையும் அவலமாக ஒலித்து தேய்ந்து போனது. என்ன விபரதமோ என்று அவர் மனம் துணுக்குற்றது. படடணத்தில் வேலை செய்யும் அவரது மகனைப்பற்றி ஒரு கணம் நினைத்துக் கொண்டார். எந்த நேரமும் இராணுவம் கண்ட மேனிக்கு சுடுவார்களாம் என்று கடிதம் போட்டடிருந்தான். அப்படி ஒன்றும் நடக்கக் குமார்மூர்த்தி 37

Page 18
கூடாது என்று மனம் ஸ்தூலமாக பிரார்த்தித்துக் கொண்டது. இன்ஸா அல்லா' என்று சொல்லிக்கொண்டு பள்ளிவாசலைப் பார்த்தார். அது அவர் கண்களுக்குப் புலப்படவில்லை.
மனைவி கொண்டு வந்த தேனீரை அவசரமாகக் குடித்துவிடடு சோர்ந்து கிடந்த வெள்ளையனை மீண்டும் இருவருமாகத் தூக்கி நிறுத்தினர். அது மறுபடியும் நந்தி மாதிரி உடகார்ந்துவிடடது. கொர்கொர் என்று மூச்சு விடுவதற்கும் சங்கடப்பட்டடுக் கொண்டிருந்தது. மூக்கில் இருந்த நுரையை கையால் வழித்துவிட்டார். கை பிசுபிசுத்தது. சால்வைத்தலைப்பால் துடைத்துக் கொண்டார்.
இந்த நேரத்தில் காஜா முகைதீனும் இல்லையே என்று நினைத்ததும் கவலை இரு மடங்காகியது. மாட்டு வைத்தியத்தில் விசயஞானம் உள்ளவர். கூப்பிட்டட குரலுக்கு ஓடி வந்து விடுவார். குண்டுக்கு பலியாகிக் கொண்டு வந்து போட்டட போது ஊரே கலங்கிப் போனது.
நிலம் வெளுக்கத் தொடங்கியதும் தன் பிடியை அப்படியே மனைவியிடம் மாற்றிவிட்டு ஓட்டமும் நடையுமாகப் போய் மரிக்காயரைக் கூப்பிட்டார். ஹனிபாவின் குரலைக் கேட்டடதும் மரிக்காயருக்கு திகைப்பூண்டி மிதித்தது போல் பட்டது. ஒரு நாளும் இப்படி ஒரு அவலக்குரலை அவர் ஹனிபாவிடமிருந்து கேட்டது கிடையாது.
'என்ன காக்கா" என்று பதட்டடத்துடன் வெளியில் வந்தார் மரிக்காயர்.
ஹனிபா விசயத்தை சொன்னதும் "நேத்து சாயந்தரம் வந்து தே. நல்லாத்தானே போச்சு' என்று புருவத்தை நெரித்து சொல்லிவிடடு பின்னால் திரும்பி உசேன்’ என்று
32 முகம் தேடும் மனிதன்

சத்தம் வைத்தார். தொழுகைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த உசேன் அப்படியே வந்துவிட்டார்.
மூவருமாகச் சேர்ந்து வெள்ளையனை நிற்க வைக்க முயன்றனர். அது நிற்கமுடியாமல் தள்ளாடிச் சாய்ந்தது. ஒரு வழியாக கால்களை நடடி விட்டதும் உடம்பை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டு நின்றது. காலில் இருந்து ஒன்று- விடாமல் தடவிப் பார்த்தனர். ஒரு காயமோ அடையாளமோ தென்படவில்லை. LOմ)/ւմւգեւյԼճ தாடையையும், முன்னங்கால் இருகண்ணையும் தடவிப் பார்த்தார் மரிக்காயர். லேசாக உப்பியிருப்பது போல் பட்டடது. வியாதியை கண்டுபிடித்து விடட மிதப்பில் தலையை மேலும் கீழும் ஆடடி விட்டு நுஇது முன்னடைப் பானாகத்தானிருக்க வேண்டும்ங் என்றார். மற்ற இருவரும் தடவிப் பார்த்துவிட்டு அப்படித்தானிருக்க வேண்டும் என்று ஒருப்படடனர்.
நுரெண்டு வாடடி நையம் அடிச்சா எல்லாம் காத்தா பறந்திடும். அல்லா மேல பாரத்தப் போடுங்க. ஒண்ணும் வராதுங் என்ற மரிக்காயரின் வார்த்தை ஹனிபாவின் கண்களை விரியச் செய்தது.
ஆழ்ந்த பெருமூச்சோடு ஒருமுறை அண்ணாந்து பார்த்துக்கொண்டார். மறுபடியும் வெள்ளையனை படுக்கவைத்து விட்டு நையம் அடிப்பதைப் பற்றி கதைத்துக் கொண்டனர். பக்கத்தில் நின்ற சுடடியன் வெள்ளையனின் ஏரியை நாவால் நக்கிவிடடுக் கொண்டது.
ஊர் பரபரத்துக் கொண்டிருந்தது. எல்லோருடர் அங்கும் இங்குமாக ஓடுவதும் அங்கலாய்ப்பதும பதைபதைப்பதுமாக இருந்தனர். மதிய வெய்யில் வேறு கண்களைக் கூச அடித்துக் கொண்டிருந்தது.
குமார்மூர்த்தி 33

Page 19
வேர்த்துக் களைத்து சால்வைத் துண்டால் முகத்தைத் துடைத்தபடி வந்து கொண்டிருந்தார் ஹனிபா. மூன்று நான்கு மைல்களுக்கு மேல் அலைந்து திரிந்து சேர்த்த பனம்பாளையும், வேப்பம் கொடடையும் கையில் தொங்கிக் கொண்டிருந்தது. மனம் மட்டும் வெள்ளையன் குணமாகிவிட வேண்டும். அதற்கு வைத்திய வேலைகளை முடித்து வேறு யாருடைய சோடிகளைக் கொண்டாவது மணியத்தின் வேலையை முடித்துவிட வெண்டும் என்று மனம் திரும்பத் திரும்ப அசைபோட்டடுக் கொண்டிருந்தது.
வளவுக்குள் நுழைந்ததும் முற்றத்தில் மனைவியும்
பிள்ளைகளும் நின்று கொண்டிருந்தனர். முகம் இறுகிக் கறுத்து என்றுமில்லாதவாறு சோகம் அப்பிக்கிடந்தது. அவர்களைப் பார்த்ததும் ஹனிபாவுக்கு தலையெல்லாம் கிறுகிறுத்தது. வெள்ளையனுக்குத்தான் ஏதோ என்று எண்ணிக்கொண்டு ஓடிச் சென்று வெள்ளையனைப் பார்த்தார். பக்கவாட்டாக சரிந்து கிடந்தது அது. பக்கத்தில் உடகார்ந்து மூச்சு வருகிறதா என்று பிறங்கையை வைத்துப் பார்த்தார். லேசாக விட்டடுவிட்டடு மூச்சு வந்து கொண்டிருந்தது. அப்போது அவர் இளைய மகள் பின்னால் நின்று கொண்டு,
'வாப்பா எங்களை எல்லாம் போகட்டடாம்' என்றாள் வெடித்த குரலில்.
'அம்மா சொல்ல பேச்ச கேளு பிள்ள' என்று கூறிவிடடு கையில் இருந்த மூடடையை விறுவிறு என அவிழ்த்து பரப்பத் தொடங்கினார்.
ஆனால் அவர் மனைவியும் ஓடி வந்து இயக்கக்காறங்க எங்களையெல்லாம் இந்த ஊரை விட டே ஒழிஞ்சு போகட்டடாமே!. யல்லா இதென்ன கொடுமை!..' என்று ஒப்பாரி வைத்ததும்தான் அவருக்கு 34 முகம் தேடும் மனிதன்

உறைத்தது. வெள்ளையன் அலறியதும ஒரு கணம் நினைவுக்கு வந்தது. ஏதோ விபரதம்தான் என்று மனம் தீர்ப்புக் கூறியது.
அவரையும் அறியாமல் ரோட டுவரைக்கும் நடந்து வந்தார். பார்த்த முகங்கள் எல்லாம் இறுகி விவரிக்க முடியாத சோகத்தில் இருந்தன. அதிகம் பேர் பள்ளிவாசலை நோக்கிப் போவதும் குழந்தைகள் தெருப்புழுதியில் அங்கும் இங்கும் ஓடுவதும் தெரிந்தது.
துப்பாக்கிகளை வெளியில் நீட்டடியபடி இரண்டு வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அவ.6 ரக் கடந்து வேகமாகப் போயின. மணியத்தின் இளைய மகன் பின்னால் இருப்பதைக் கண்டவுடன் பழக்க தோசத்தில் தம்பி’ என்று கூப்பிட வாயெடுத்தவரால் ஏனோ கூப்பிட முடியாமல் போயிற்று. தொண்டைக்குள் ஏதோ வந்து அடைத்துக் கொண்டது மாதிரியிருந்தது.
புழுதி அடங்கிப் போனதும்தான் பக்கத்தில் வந்த மரிக்காயரைக்கூட அவருக்குத் தெரிந்தது.
"என்னவாம் காக்கா?
"ஊரைவிட டே ஒழியட்டாம்"
"எங்க போறதாக்கும்?"
அல்லாவுக்குதான் வெளிச்சம்" என்று பள்ளி வாசலைப் பார்த்துக் கூறிவிடடு வேகமாகப் போய் விட்டடார்.
புரிந்ததும் புரியாததுமாக, நடக்கக்கூடாதது நடந்து கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை வந்ததும் அவரையும் அறியாமல் கால்கள் வீடடை நோக்கி நடந்தன. கிடடப் போய் வெள்ளையனைப் பார்த்தார்.
குமாமூர்த்தி 35

Page 20
கண்கள் மூடியிருந்தது. காது வேகமாக ஆடிக் கொண்டிருந்தது. சுட்டியன் பக்கத்தில் நின்று நக்கிக்கொண்டிருந்தது.
பெருங்குரல் எடுத்து ஓ’ வென்று கத்தவேண்டும் போலிருந்தது அவருக்கு. அப்படியே உடகார்ந்து விட்டார். கண்கள் மூடிக்கொண்டு வந்தன. வயிற்றுக்குள் இருந்து கனத்த பொருள் மேலெழும்பி நெஞ்சை அடைப்பது போலிருந்தது. சிந்தனை மரத்துப்போனது. பரிச்சயமான குரல்கள் எல்லாம் அழுது கூக்குரலிடுவது மடடும் காதுக்குக் கேட்டது. காதையும் பொத்திக் கொண்டார். V−
'எல்லோரும் போறாங்க. வாப்பா வாங்க வாப்பா! என்ற இளைய மகள் அவர் கைகளைப் பிடித்து இழுத்தாள். எந்த சுய உணர்வுமில்லாது எழுந்து நடந்தார். சிறிய துணி மூட்டடையோடு மனைவியும் மூத்த மகளும் முன்னுக்கு நடந்து கொண்டிருந்தனர். பிட்டடத்தில் ஏதோ முடடியதும் திரும்பிப் பார்த்தார். சுட்டியன் நின்று கொண்டிருந்தது. அடக்கி வைத்திருந்த தெல்லாம் வெடித்துப் பீறிட அதன் கழுத்தை கட்டடிக் கொண்டு விசித்து விசித்து அழுதார். வீதியில் சாரிசாரி யாகப் போகிறவர்கள் கூடப் பார்த்துக் கொண்டு போயினர். அவரை வலுக்கட்டடாயமாக விடுவித்துக் கொண்டு நடந்தாள் அவரது இளைய மகள். கேற்று வரைக்கும் கூடவே வந்தது சுட்டியன். அவர்கள் றோட்டில் இறங்கியதும் கேற்றடியில் நின்றுகொண்டு வெள்ளையனை திரும்பிப் பார்த்தது. பின் இவர்களையும் பார்த்தது.
ஹனிபாவின் கண்ணுக்கெட்டடிய தூரம் வரைக்கும் சுடடியன் கேற்றடியில் நின்று மாறிமாறிப் பார்த்துக் கொண்டு நின்றது.

கிரேத் துப்பாகக
குனிந்து குனிந்து மண்ணை வெட்டி வெளியே எறிந்து கொண்டிருந்தான் மணிவண்ணன். வியர்வைத் துளிகள் ஒன்றிரண்டு மண்வெட்டிப் பிடியிலும் வெட்டடிய மண்ணிலுமாக விழுந்து கரைந்தது. வெளியே வெய்யில் எரித்துக்கொண்டிருந்தாலும், எந்த நோக்கமும் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் மேகங்கள் கொஞ்ச நேரம் நிழலைக் கொடுப்பது அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. வயதுக்கு அவன் வளர்ச்சி போதுமானதாகத்தான் இருந்தது. இன்னும் அவன் நீளக்களிசான் போட்டடுக் கொள்ளத் தொடங்கவில்லை. போடுவதற்கு ஆசையில்லாமல் என்ன? இதற்காக அம்மா சிபாரிசு பண்ணியும் கூட அடுத்த வருடம் பத்தாம் வகுப்பில் போடடுக் கொள்ளலாம் என்று அப்பா கண்டிப்பாகச் சொல்லி விடடார். அப்பா எப்போதும் சரியானதையே செய்வார் என்று வீடடில் இருந்தவர்களுக்கெல்லாம் இருந்த நம்பிக்கை போலவே அவனும் இருந்துவிடடான். மர வேரில் பட்டு மண்வெட்டடி "ணங்" என்று எகிறிக் குதித்தது. தடுமாறி விழப் போனவன் சுதாரித்துக் கொண்டான். தண்ணர்த் தாகத்தினால் வாய்க்குள் எச்சில் களி போல திரண்டு திரண்டு வந்தது. கண்ணிரா, வியர்வைத்துளிகளா என்று பிரித்து அறிய முடியாதபடி அரும்பு மீசையூடாக வாய்க்குள் விழும் ஓரிரு துளிகள் உப்புக் கரித்தன.
குமார்மூர்த்தி 37

Page 21
என்னைக் கொல்லப் போகிறார்கள். நான் சாகப் போகிறேன். இதோ இந்தக் குழியில்தான் என்னைப் புதைக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் மறுபடியும் வந்ததும் ஓவென்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் அது ஒரு கண நேரத்தில் கரைந்தது. சாவென்றால் என்ன? செத்தடபின் எப்படி இருப்பேன். மேலோகத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்? தாத்தாவும் பெரிய மாமாவும் இருப்பார்களா? என்ற ஆராய்ச்சி எங்கேயோ தொலை தூரம் போய்விட்டடது.
தலையை லேசாக நிமிர்த்திப் பார்க்கிறான். மண் அள்ளிப்போடும் திசைக்கு எதிர்த்த திசையில் இப்போதும் முரளி அந்த சின்னத்துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தபடி பக்கத்தில் இருந்தவர்களுடன் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தான். ஆகா! எவ்வளவு அழகான துப்பாக்கி கருகருவென்ற அதன் பிடியும் கையடக்கமும்! மீண்டும் அவன் எண்ணங்கள் துப்பாக்கியைச் சுற்றி வடடமடிக்கத் தொடங்கிவிடடன. அந்தத் துப்பாக்கியை சினிமாவில் பார்த்து ஏங்கிய காலம்; நல்லுரர்த் திருவிழாவின் போது பொம்மைத் துப்பாக்கி வாங்கித்தரச் சொல்லி அப்பாவிடம் கேட்டடு, நறுக்" கென்று குட்டடு வாங்கியது; பின் அண்ணாவுக்கு மாமா வாங்கிக் கொடுத்த துப்பாக்கியை திருடி பாடசாலைக்குக் கொண்டு போனது; அண்ணனிடம் உதைபட்டது; எல்லாம் திரைப்படம் போல் வந்துபோனது. ஆனால் அவன் உண்மைத் துப்பாக்கியை நேரில் பார்த்த நாளை, அது நடந்து எவ்வளவோ நாட்டகள் ஆகிவிடட போதிலும் எப்படி மறக்கமுடியும்? அவன் லடசியக்கனவின் ஆரம்ப நாளல்லவா அது.
தெருவை அடைத்துக்கொண்டு வியர்க்க வியர்க்க பந்து விளையாடிக்கொண்டிருந்த அந்த பொன்மயமான மாலைப் பொழுதில்தான் சயிக்கிளில் வந்த வாலிபன்
38 முகம் தேடும் மனிதன்

சாரத்திற்கு வெளியில் செருகியிருந்த அந்த சின்னத் துப்பாக்கியைக் கண்டான் மணிவண்ணன். மணிவண்ணன் தான் முதலில் கண்டவன். கண்டவுடன் திகைப்பூண்டில் மிதித்து விட்டவன் போல் உடம்பெல்லாம் நடுங்கியது. அடுத்த கணம் வெறிபிடித்தவன் போல் சயிக்கிள் வாலிபனைத் துரத்திக்கொண்டு வேகமாக ஓடினான். மற்ற சிறுவர்களுக்கு எதுவுமே விளங்கவில்லை. சயிக்கிள் வேகத்தை விட அவனின் வேகம் அதிமானதாகவே இருந்தது. ஆனால் சயிக்கிள் வாலிபனோ இவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை. இதோ அவனின் லடசியக் கனவுக்கும் அவனுக்கும் பத்தடி தூரம் ஆகிவிட்டது. அது குறுகி ஆறடி ஐந்தடி என்று வந்திருக்க வேண்டும். அவன் சர்வநாடியும் கண்களுக்கூடாக அந்தக் கறுத்த சின்னத் துப்பாக்கியை ஸ்பரிசித்த வேளை கால்பெரு விரல் இரண்டாகப் பிளந்தது போல் ஒரு உணர்வு - சட. வெறுங்கல்லு - சனியன். சபித்துக் கொண்டே காலைப் பார்த்தான். துரத்தல் நாடகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததையிட்டடு அவனுக்கு மகாகோபம். அந்தத் துப்பாக்கி அவன் கையில் இருந்திருந்தால் அந்தக் கல்லையே சுட்டுத் தள்ளியிருப்பான். ஆனால் துப்பாக்கி கண் காணாத தூரம் போயேவிடிடது. அப்புறம் என்ன பள்ளிக்கூடத்தில் வகுப்பில் துப்பாக்கிதான் பிரதானமாக இடம் பிடிக்கும் கதாநாயகன். ஒரு நாளைக்கு ஒரு தரமாவது துப்பாக்கி கதை கதைக்காவிட்டடால் அவனுக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருக்கும். இப்படி எத்தனை நாள் அவஸ்தைப் பட்டிருப்பான் என்பது பற்றி சொல்லவே முடியாது. ஆனால் அந்தத் துப்பாக்கியைக் கண்ட நாள் முதல் 67 603 GuLIT பறி கொடுத்தவன் போல, வாழ்க்கையில் இருந்த எல்லாவற்றையும் இழந்து விடடவன் போல, எப்போதும் மந்தமாகவே இருந்தான். அவன் கனவில், தெருவில் எல்லாம் துப்பாக்கி கிடப்பது
குமார்மூர்த்தி 39

Page 22
மாதிரியும், மாடும் ஆடும் அதை ஏறி மிதித்துக் கொண்டு போவது மாதிரியும், நாயும் பூனையும் கடித்துக் கடித்து விளையாடுவது மாதிரியும் வரும். அதைப் பார்க்கும் அவனுக்கு தாங்கமுடியாத வேதனையாயிருக்கும். ஆனால் அப்பாவோ சற்றும் இரக்கமில்லாமல் கை கட்டடிக் கொண்டு வேடிக்கை பார்ப்பார். பிறிதொரு கனவில் ஆளுக்கொரு துப்பாக்கி எல்லோரிடமும் இருக்கும். ஆனால் இவனிடம் இருக்காது. எல்லோரும், இந்தா என்று நடடுவார்கள். ஆனால் கொடுக்காமல் ஏமாற்றுவார்கள். அவனுக்கு அழுகை அழுகையாக வரும். எது எப்படியோ அந்த சின்னத் துப்பாக்கி அவனை நன்றாகவே ஆக்கிரமித்து விடடிருந்தது. அவன் துப்பாக்கி பற்றி சிந்திக்காமல் இருந்தால் அவன் அவனையே சந்தேகிக்கும் படியாக ஆகிவிடடது. சர்வமும் அதுதான். அது இருந்தால் சகலமும் காரிய சித்தியாகும். அதை ஆட்ட காட்டி விரலுக்குள் போட்டு சுழற்றி பெருவிரலால் பிடித்தால். என்று கற்பனை பண்ணும் போதே தேக்கு மரத்துக்கும் தென்னை மரத்துக்கும் மேலாக வெண்பஞ்சு மேகத்தோடு மிதப்பது போல இருக்கும் அவனுக்கு. M
எப்போதென்று சரியாகச் சொல்ல முடியாத ஞாபக மறதியாகிப் போன ஒருநாள், அவன் பாடசாலைக்குப் போகும் போது அதிகாலையிலேயே மாதா கோவில் சுவரில் ஒட்டியிருந்த அந்த சுவரொட்டி அவனைத் தடுத்து நிறுத்தியது. வழவழப்பான வண்ணப்படத்தில் வாடட சாட்டடமான வாலிபன். இரண்டு கைகளாலும் சின்னத் துப்பாக்கியைப் பிடித்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தான். தன்னையே குறி பார்ப்பது போலப் படடதும் ஒரு கணம் திடுக்குற்று சற்று விலகிக் கொண்டான். பின் தன் அறியாமையையும், மடத்தனத் தையும் நினைத்து மனதுக்குள் வெடகப்படடுக் கொண்டான். அந்தத் துப்பாக்கியையும் அதைப்
40 முகம் தேடும் மனிதன்

பிடித்திருந்த கைகளையும் விட்டடு அவன் கண்கள் நகர வேயில்லை. வீடு, பாடசாலை, சூழல் எல்லாம் மறந்து அந்த சுவரொடடி வாலிபனாகவே தன்னை பாவனை செய்து கொண்டான். கால் வலித்த போது மாற்றி மாற்றி விடடுக் கொண்டது உடம்பின் இச்சைச் செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.
சுவரொடடிக்குக் கீழே எழுதியிருந்த வசனங்களைக் கூட அவன் பார்க்கவில்லை. எப்போதுமே அவன் அதைப் பார்த்ததில்லை. திடீரென காதில் ஏற்படட வலிதான் அவனை இந்த நிஜ உலகத்துக்கே கொண்டு வந்த தெனலாம். அந்தக் காது முறுக்கலும் கூட அவனுக்கு பரிச்சயமான ஒன்றுதான். அது வகுப்பு மாஸ்டருடையது. காதலியைப் பிரிந்த காதலன் போல் அன்று அவன் போன கோலம், பாடசாலை முடியும் வரைக்கும் அவன் தவித்த தவிப்பு - அதை மறுபடியும் பார்ப்பதற்கு அவனிடம் இருந்த துடிப்பு - எல்லாமே ஒரு கணத்தில் தவிடுபொடியாகிவிடடது. யாரோ பாடபிகள் சாணி அபிஷேகம் செய்து அவனை ஏமாற்றி விடடிருந்தார்கள். ஆனால் அவன் உள்ளத்தில் எரியும் கொழுந்தை அவர்களால் அணைக்க முடியுமா? உலகம் எவ்வளவு வஞ்சகத் தனமானதென்பதை அன்று அவன் உணர்ந்துதான் இருந்தான். தன்னை வஞ்சிப்பதற் காகத்தான் இந்த சாணித் திருவிளையாடல் நடந்திருக்கிறதென்பதை அவன் திட்டட வட்டடமாகவே உறுதி செய்து விட டான். எங்கெங்கேயோவான தேடல் முயற்சிகள், பரிமாற்றங்கள் எல்லாம் சேர்ந்து அவனை ஒரு சின்னத் துப்பாக்கி வைத்திருப்பவனிடம் அறிமுகமாக்கியது. அந்தத் துப்பாக்கியை அவன் கையில் வாங்கியதும் அந்த இரும்பைப் போலவே அவனும் ஒரு கணம் ஜில்லிடடுப் போனான். கண்கள் பளபள வென்று ஒளியைக் கக்கி, மூச்சு விடுவதே ஒரு ஆனந்தமாக,
குமார்மூர்த்தி 41

Page 23
தன்னைப் போல் தன்னைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் சந்தோஷமாக இருப்பதாக, தன்னைப் பார்த்து எல்லாம் பணிந்து வணங்கிக் கொண்டிருப்பதாக, இவர்களெல்லாரையும் விட ஆயிரம் மடங்கு பெரிய பலசாலியாக தான் இருப்பதாகவும் அவன் சிறகடித்தான்.
வீடடுக்கு வந்த போது அப்பா ருத்ரதாண்டவம் ஆடினார். அவன் ஒரு நமடடுச் சிரிப்புடன் குசினிக்குள் சென்று விடடான். இரண்டொரு நாளில் அப்பா அடங்கிவிடடார். அவர் அடங்கினாரா அல்லது அடக்கினார்களா? என்பதில் அவன் அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. ஆனால் அந்த சாசுவதமான பொருள் இருந்தால் எந்தப் பெரிய எதிரியும் அடங்கிப் போவான் என்று கண்முன்னே நிரூபணம் ஆகியவுடன் அந்தப் பொருளின் மேல் அவனுக்கு இன்னும் வாஞ்சை கூடியது. அது அவனின் எல்லாமுமே என ஆகிவிட்ட தோடு உலகத்தின் எல்லாமுமே அதுவாகி விடடதாக அவன் நிச்சயித்துக்கொண்டான்.
'டேய் கெதியாய் வெட்டடா?' என்ற குரல் அவன் எண்ணத்தையெல்லாம் மீண்டும் குழிக்குள் கொண்டு வந்தது. சாகப் போகிறோமே என்கிற நினைப்பு
LDմ)/L/ւգ եւյԼճ வந்தவுடன் துக்கம் தொண்டையை அடைத்தது. சிரிப்புக் கலந்த குரலில்தான் இப்போது முரளி சொன்னான் என்பதை நினைத்தவுடன்
மணிவண்ணனுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. முரளி நல்ல பொடியன் என்னை ஒன்றும் செய்யமாடடான். என்னை வெருட டுவதற்குத்தான் இப்படிச் செய்கிறான். பின் விடடு விடுவான் என்று அவன் மனம் ஒரு முறை பேதலித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது. அவனுக்கு முரளியை நீண்ட நாடகளாகத் தெரியும். நெருங்கிப் பழகாவிடடாலும் அடுத்தடுத்த வகுப்புத்தான்;
42 முகம் தேடும் மனிதன்

கன்ரனிலும், லைடயிறறி, பிளேகிறவுன்டிலும், சிரித்து ஓரிரு வார்த்தைகள் கதைப்பதுண்டு. ஆனால் பக்கத்தில் நிற்பவர்கள் கொஞ்சம் முர4உடுத்தனமாய் முன்பின் தெரியாதவர்கள். சிவா, கரி என்று பேச்சு வாக்கில் காதில் விழுந்தது மட்டும் ஞாபகம். ஆனால் அவர்களிருவரும் நீளமான துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். துரோகி, கைக்கூலி, எதிர்ப்புரடசிக்காரன் என்று அடுக்கடுக்காகச் சொல்லிக் கதைத்துக்கொண்டார்கள். ஆனால் மணிவண்ணனுக்கு இது அவ்வளவாக விளங்கவில்லை. தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பது போல அவன் மனம் மீண்டும் சின்னத் துப்பாக்கியை நோக்கியே தாவியது.
பசியும், தாகமும், களைப்பும் மேலிட மணிவண்ணன் அண்ணாந்து கெஞ்சுபவனைப் போல் அவர்களைப் பார்த்தான். அவன் கண்கள் பஞ்சடைத்தது போல் வெளிறி ஓரங்களில் நீர் திரையிட்டது. முழங்கால்களும் கொஞ்சமாக மண்டியிடடன. கைகள் இரண்டையும் கூப்பி தண்ணர் கேட்கும் பாவனை காட்டியது வாய். ஏதோ காணக் கூடாத காட்சியைக் கண்டது போல் கண்கள் மிரடசியுடன் சுற்றிச் சுற்றிப் பார்த்தன. அதே நேரத்தில் முரளியின் கையில் இருந்த சின்னத்துப்பாக்கி அந்த வண்ணப்படத்தில் இருந்தது போல் அவனுக்கு நேராக உயர்ந்தது. முன்னைப் போல் சற்றுத் தள்ளிக் கொள்ள எத்தனித்த போது அந்த சின்னத் துப்பாக்கி சின்னதாய்ச் சீறியது. குழிக்குள் இருந்து 'அம்மா' என்றொரு சின்னக் குரல் குழியை விட்டு மேலெழும்பி மரத்தின் இலையைத் தொட்ட போது மரங்கள் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டன.

Page 24
LL607li
தாவூத் கலங்கித்தான் போய்விட்டடார். எதற்கும் கலங்காத மனுஷன்' என்று பெயரெடுத்தவர் ஆடிப் போனார் என்றால் அது ஊழிக் குழப்பமாகத்தான் இருக்க வேண்டும். எதுவாகிலும் சரி, தாவூத்காக்கா என்ன சொல்கிறார் என்று அபிப்பிராயம் கேடக வந்தவர்களெல்லாம் கூட்டடம் கூட்டமாக மாமர, பலாமரத்து வேர்களில் உடகார்ந்து மண்ணில் எதையோ கிறுக்குவதும் அழிப்பதுமாக இருந்தனர். தாவூத் எதையாவது பேசமாடடாரா என்று அடிக்கடி ஏக்கத் தோடு அவரைப் பார்ப்பதும் பின் பழையபடி மண்ணில் கையைப் பிசைவதுமாக ஒரு சொல்ல முடியாத தவிப்பில் உழன்று கொண்டிருந்தனர். ஆனால் தாவூத் யாருடனும் பேசவில்லை. வெறும் மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டு தென்னை மரத் தோடு சாய்ந்து கொண்டிருந்தார். அவரின் கம்பீரமான தோற்றம் தென்னை மரத் தோடு ஒருங்கப் போயிருந்தது. நெஞ்சுக்கூடு விரிந்து சுருங்குவதைத் தவிர வேறு எந்தச் சலனமும் அவரிடம் காணப்படவில்லை. போன வருடத்துக் கோடையில் எல்லாப் பிள்ளைகளையும் விட அதிகமாக நேசித்த கடைசி மகன் செத்துப் போனபோது கூட அவர் இப்படிக் கலங்கியிருக்கவில்லை. நீ இருந்து பார் தாவூத் மரிக்காயருடைய இடத்துக்கு உன் கடைசி மகன்தான் வருவான்' என்று அவரது சகபாடிகள்
44 முகம் தேடும் மனிதன்

சொல்லும் போது அவருக்கு விவரிக்க முடியாத பெருமை ஏற்படும். தந்தை மீது எப்போதுமே ஒரு தனி மரியாதை வைத்திருந்தார் தாவூத். அவர் மட்டும் என்ன அந்த சுற்று வட்டாரமே அப்படித்தான் இருந்தது. மரிக்காயருக்குப் பின் மற்ற பிள்ளைகள் எல்லோரையும் விட தந்தையின் இடத்தைப் பிடித்துக் கொண்டார் தாவூத். இருந்தாலும் தந்தையைப் போல் அவ்வளவு சிறப்பாகச் செயலாற்ற முடியவில்லையே என்கிற மன ஆதங்கம் எப்போதும் அவரிடம் குடி கொண்டிருக்கும். கால மாற்றமும் நாகரீக மாற்றமும் ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டிருந்தது. மனிதர்கள் தேசமெங்கும் பரந்தார்கள். ஆனால் அவர்கள் சிந்தனைகள் குறுக்கப்படடுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு செயலையும் தேவை கருதிச் செய்வதை விட லாபம் கருதிச் செய்வதே நியதியாகி விட்டிருந்தது. ஆனால் தாவூத் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தார். யார் எதுவாக இருந்தாலும் மனிதர்களை நேசித்தார். பிரிவுகளை என்றுமே அவர் பிரித்துப் பார்த்ததில்லை. அது அவர் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டது. தனக்குப் பின் தன் மகன் இதைச் செய்வான் என்ற நம்பிக்கை மலை போல் இருந்தது. அந்த ԼO 5 6ծ7 செத்துப் போனபோது கூட அவனோடு குண்டடிபட்டு செத்துப் போன மற்றவர்களுக்காகவும் தான் வருத்தப்பட்டார். அவ்வளவு நெஞ்சுறுதி கொண்டவர் அந்தச் செய்தியைக் கேட்டடது முதல், தென்னை மரத்தோடு உறைந்து விட்டார். இதே மாதிரிதான் அன்றொரு நாளும் தென்னமரத் தோடு சாய்நது நின்றார், கம்பீரமாக, அவரைச் சுற்றி பல பேர் கூடியிருந்தனர். எல்லோர் முகத்திலும் சிறு பதட்டடம் குடி கொண்டிருந்தது. தாவூத் என்ன முடிவெடுக்கப் போகிறார் என அறிவதற்கு அவர் முகத்தையே பார்த்துக்கொண்டனர். அவரிடம் இருந்த சுதேசி
குமார்மூர்த்தி 45

Page 25
மனப்பான்மையும், தலைமுறை தலைமுறையாக ஏற்பட்டுவந்த வழி நடத்தும் பக்குவமும், அவர் நியாயம் எப்போதும் சரியாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையை அனைவரினதும் உள் மனதிற்குள்ளும் குடி புகுத்தியிருந்தது. தாவூத்தின் தென்னந்தோப்புக்குள் தான் இயக்கக் கூட்டம் நடைபெறப்போவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதால் எங்களுக்கு அரசாங்கத்தால் பிரச்சனை ஏதும் வருமோ என்றுதான் பயமாக இருக்கிறது’ என்று மெதுவான குரலில் கூறினார் செய்யதுக் கிழவன். தாவூத் எல்லோரையும் ஒருமுறை அர்த்த புஷ்டியுடன் பார்த்து முறுவலித்துக் கொண்டார். பிரச்சனைகள் வரலாம். கலகம் பிறக்காமல் நியாயத்தை நாம் தேட முடியாது. அவர்களின் போராட்டம் எல்லாரும் சமமாக வாழ வேண்டும், உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நடக்கிறது. நாமும் இப்போது உரிமைகளை இழந்துதான் வாழ்கிறோம். எங்களைப் பற்றி எந்தவித அக்கறையுமில்லாத தலைமைகள் தங்கள் சுகபோகத்தை மடடுமே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் எதிர் காலத்தை நாங்களே தீர்மானிக்கும் போதுதான் எங்களுக்குள்ள பிரச்சனைகளை விளங்கிக்கொண்டு தீர்வு காணமுடியும். அவர்களும் காலம் காலமாக மறுதலிக்கப் பட்டடு வந்த உரிமைகளைக் கேடடுத்தான் போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள். இப்போது நாம் அவர்களுடன் இணைவதுதான் புத்திசாலித்தனம். இஸ்லாமும் அதைத்தான் வலியுறுத்துகிறது. உங்களுக்கு என்ன சந்தேகங்கள் இருக்கிறதோ அதையெல்லாம் தயங்காமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் கூடடத்துக்கு எல்லோரும் கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்று தனது குடடிப் பிரசங்கத்தை முடித்த போது எல்லோர் முகத்திலும் ஒரு திருப்தி ஏற்பட்டிருந்தது. அதற்குப்பின் 46 முகம் தேடும் மனிதன்

எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டிருந்தன. இராணுவத்தின் தேடுதல்கள் பயமுறுத்தல்கள் எல்லாவற்றையும் மீறி அந்த கிராம்மே இயக்கத்துக்கு சார்பாக இருந்தது. இன்று காலையில் கேள்விப்பட்ட அந்த விார்த்தைகள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் இடியாக இறங்கியிருந்தது. காகங்கள் பெருங்குரலெடுத்துக் கத்தி, தங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டிருந்தன. வெய்யில் கர்ன கடுரமாக தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. மரங்கள் மெளனமாக நடப்பவற்றை உன்னித்துக் கொண்டிருந்தன. தாவூத் என்ன முடிவு எடுக்கப் போகின்றார் என கூடியிருந்தவர்கள் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். எந்தப் பிரச்சனையாயிருந்தாலும் தன்னுடைய பழுத்த அனுபவத்தின் மூலம் விடை காணும் தாவூத்திற்கு இது விடை காண முடியாத கேள்வியாகிப் போய்விட.டது என்பதற்கு அடையாளமாக முகம் இறுகிக் கறுத்துக் கிடந்தது. தன்னை நம்பியிருப்பவர்களுக்கு ஏதாவது ஆறுதல் சொல்ல வேண்டுமே என்கிற நினைவு கூட இல்லாமல் மரமாக நின்றுகொண்டிருந்தார். எதிர்த்த பக்கத்தில் அவரின் வீடு கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அது அவரின் உழைப்பின் மொத்த வடிவம். வண்ணக் கலவையால் பிறை செதுக்கப்பட்ட முகப்பும் இரண்டுபக்கமும் நீண்ட சீமெந்து திண்ணையும் விறாந்தையுமாக எப்போதும் கலகலவென்றிருந்த வீடு, இப்போது வெறித்துப் போய்க் கிடந்தது. ஒருவரோடொருவர் கதைத்து மனதைத் தேற்றிக் கொள்ளக் கூடிய விடயமல்ல இது என்ற நினைப்பில் போலும் யாரும் யாருடனும் பேசப் பிரியப்படாமல் ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தை ஒரு கணம் ஏறிட்டுப் பார்ப்பதும் மறுபடியும் மண்ணில் பதிப்பதுமாக இருந்தனர். எங்கு போவது யாரிடம் போவது என்பதை
குமார்மூர்த்தி 47

Page 26
விட தாங்கள் அநாதையாக்கப்படடுவிட டோம் என்கிற உணர்வு மேலும் வருத்தியெடுத்தது. காலம் காலமாக பழகிப் போன மண்ணையும் மரங்களையும் இன்னும் சுற்றியுள்ள ஜீவராசிகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். இவையெல்லாம் பொய்யாக இருக்கக் கூடாதா என்று மனது ஒரு கணம் அடித்து ஓய்ந்தது. மறுபடியும் அந்த மோட்டார் சயிக்கிள் இளைஞன் அவர்களிடம் வந்தான். அந்தச் சிறுவனுக்கு குந்தியிருப்பவர்கள் அனைவரும் எழுந்து மரியாதை செய்து கொண்டனர். இன்னும் புறப்படவில்லையா? எனும் அர்த்த புஷ்டி யோடு ஒவ்வொருவர் முகத்தையும் ஏளனத் தோடு பார்த்தான். இதோ இந்த நாய்க் குடடியையும் தான் கொண்டு போகப் போகிறோம் என்று தாவூத்தின் சின்ன மகள் உரத்துச் சொன்னது அவரையும் கடந்து தெருவீதிக்கப்பாலும் கேட்டடது. தாவூத் மகளை அணைத்துக் கொண்டார்.

குண்டு வெடிப்பு
நேரம் ஆகஆக அவளுக்கு பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தடடுத்தடுமாறி வாசல் வரை சென்று ஏதாவது அரவம் கேட்கிறதா என காதைக் கூர்மையாக்கிப் பார்த்தாள். பெரும் இரைச்சலும் குழப்பமுமாக இருந்தது. அவளுக்குப் பரிச்சயமான பக்கத்து வீட்டு ஆட்ட களையெல்லாம் கூப்பிடடுப் பார்த்தாள். யாரும் பதில் குரல் கொடுக்கவில்லை. அந்தப் பெரிய சத்தம் கேட்ட திசையை அவளால் யூகிக்க முடிந்தது. அது அவள் மகன் கடலை விற்கும் இடமாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்ததும், அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. ஆனால் மறுபடியும் அவளுக்கு திசையில் சந்தேகம் வந்ததும், இந்தப் பக்கம் அவன் போக மாடடான் என மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். இருந்தாலும் இவ்வளவு நேரமும் அவன் ஒரு நாளும் வராமல் இருந்ததில்லை என்பதை நினைக்கும் போது மறுபடியும் உடலெல்லாம் நடுங்கியது.
அவளுக்கு எல்லாமுமே அவனாகத்தான் இருந்தான். கண்ணை இழந்த போதும் சரி கணவனை இழந்த போதும் சரி அவனே ஊன்றுகோல் ஆனான். சொல்லிக் கொள்ளச் சொந்தமில்லாத சேரி வாழ்க்கையாக இருந்தாலும் மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்கிற நியதிக்கு அவள் மட்டுமென்ன
குமார்மூர்த்தி49

Page 27
இந்தப் பிரபஞ்சமே தலைசாய்க்கத்தான் வேண்டும். மனித உயிர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடுகின்ற ஒவ்வொரு கணமும் ஒரு வரலாறுதான். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் மனித உயிர்களை வலிந்து அழிப்பதற்கு கங்கணர் கட்டடி நிற்கும் சக்திகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. காரணங்கள் மாறுபடலாம். சூழ்நிலைகள் மாறுபடலாம். ஆனால் இரையாகும் மனித உயிர்கள் எல்லாமே ஒன்றுதான்.
மறுபடியும் தட்டுத்தடுமாறி வாசலுக்கு வந்து பார்த்தாள். பெரும் இரைச்சலும் ஒலமுமாக குழம்பிக்கிடந்தது. அதற்கப்புறம் அங்கும் இங்கும் ஓடும் காலடி ஓசையையும் கரி நாற்றத்தையும் தான் அவளால் திட்ட வட்டமாக உணர முடிந்து, இதயம் ஒரு கணம் நின்று, மறுபடியும் வேகமாக அடித்துக் கொண்டது. அந்தச் சம்பவம் நடந்த அன்றும் அப்படித்தான் என்பது ஞாபகத்துக்கு வந்ததும் மகனின் பெயரைச் சொல்லி உரக்கக் கூப்பிடடாள். அது அவளிடமே திரும்பி எதிரொலித்தது. உடகார்ந்து ஒரு பாட்டடம் அழுது தீர்த்தாள். பட்டாசுக் கம்பனியின் வெடி விபத்தில் கருகிப் போன கணவனின் உடலும் கண் முன்னே தோன்றி மறைந்தது. அப்போதெல்லாம் அவளுக்கு பார்வை ஓரளவுக்கு இருந்தது. பின்னாளில் அது மெல்ல மெல்ல மறைந்து போயிற்று. பணம் இருந்தால் பார்வையை மீண்டும் பெற்றுவிடலாம் என்று சிறுவனுக்குத் தெரிந்த போது அம்மாவைக் கட்டடியணைத்து பெரிய மனிதத் தோரணையில் ஆறுதல் கூறினான். இதோ பணத்தை உழைத்து விடுகிறேன் என்று கையைச் சொடுக்கி ஓசை எழுப்பி அவளைச் சிரிக்க வைத்தான். அன்றிலிருந்து அவன் கடலைச் சுருளோடு பம்பரமாகச் சுற்றி வந்தான். பஸ்நிலைய நண்பர்கள் கூட அவனுக்காக வருத்தப்பட்டுக்
50 முகம் தேடும் மனிதன்

கொண்டார்கள். அவனோடு போட்டடி போடுவதைக் கூட தவிர்த்துக் கொண்டார்கள். கிடைக்கும் ஒவ்வொரு சதத்திலும் அம்மாவின் பார்வை வந்து விடும் என்று மலை போல் நம்பியிருந்தான்.
ஆனால் நகரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் போக்குக் காடடியது. காக்கிச் சட்ட டைகளும் கனத்த துப்பாக்கிகளும் எதற்கெடுத்தாலும் துருத்திக் கொண்டு நின்றன. திடீரென ஒரு நாள் நகரமே புகைமண்டலமாகப் பற்றி எரிந்தது. ஏனென்று அவனுக்கு காரணம் புரியவில்லை. ஆனால் அவன் கண் முன்னாலேயே ஒரு மனிதனின் உயிர் கொடுரமாகப் பறிக்கப்பட்டதைப் பார்த்து நிலை குலைந்து போயிருந்தான். இன்னும் எத்தனையோ அரக்கத் தனங்களைப் பற்றி அவன் கேள்விப்படடாலும் எல்லாவற்றிற்கும் மேலாக, சிறையில் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதும் அம்மாவைக் கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். ஆனால் அதைப் பற்றி அவன் ஒருக்காலும் அறிந்திருக்கவில்லை. அது எப்படி நடந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தான். எல்லாமே பெரிய பெரிய உருவங்களாக, 3FTl öt vaú நிறத்தில் தெளிவில்லாமல் தெரிந்தது. காரணத்தைக் கேடடு தாயை உலுக்கினான். அவளுக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை; இது அநியாயம் என்று மட்டடும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனது பிஞ்சு மனம் அதிலெல்லாம் சமாதானமடைந்ததாகத் தெரியவில்லை. அம்மா கண் பார்வை இல்லாமல் படும் அவஸ்தையை ஒவ்வொரு நாளும் பார்த்து வெதும்புகிறவனுக்கு, அவளுக்கு பார்வை கிடைக்காதா என ஏங்கும் அவன் உள்ளத்துக்கு, இருக்கும் கண்ணைக் குத்திப் பறிப்பது என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடூரம்தான். அதற்குப் பின்பும் பல
குமார்மூர்த்தி 57

Page 28
கொடூரங்கள் நடந்து விட.டிருந்தாலும், அவனால் அதை மடடும் மறக்க முடியவில்லை. நண்பர்களோடு கதைக்கும் போது மிகவும் ஆத்திரப்படுவான். சில சமயங்களில் அழுதே விடுவான். கண் இழந்த அந்த முகம் தெரியாத மனிதர்களைப் பரிதாபத் தோடு நினைத்துப் பார்ப்பான்:
வேதனையில் நெஞ்சுக் கூடு விரிந்து சுருங்கும்.
இதோ வந்து விடுகிறேன், டாக்டரிடம் போகலாம் என்று சொன்னவன் போன பக்கத்தை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அது வெடிச் சத்தம் கேட்ட பக்கத்துக்கு ஒத்ததாகவே இருந்தது. கலவரமடைந்தவள் மறுபடியும் திசையை ஞாபகப்படுத்திப் பார்த்தாள். குழப்பமாகவும் கலங்கலாகவும் இருந்தது. வாசற்படியில் உப. கார்ந்து கொண்டாள். இரைச்சலுக்கு மத்தியிலும் தூரத்தே கேட்டட வானொலியின் குரல் குண்டு வெடிப்பைச் சொல்லிக் கொண்டு தேய்ந்து போயிற்று. சின்னச் சின்னக் கால்களும் கைகளும் சிதறிக் கிடந்தது பற்றி அது ஒன்றும் அலட்டடிக் கொள்ளவில்லை. ஆனால், அவளோ வாசலில் கேடகும் ஒவ்வொரு காலடி ஓசையையும், கவனத்தோடு கேட்டடபடி அவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள்.

இறுதி அத்தியாயம்
நிலைக் கண்ணாடியில் மீண்டும் ஒருமுறை பார்த்தாள் சுமதி முகம் லேசாக உப்பி, கண்களுக்குக் கீழாக கருவளையமிட்டடு கறுத்திருந்தது. முகத்தைப் L isTsidias சகிக்க முடியாமல், வெடுக்கென்று திரும்பிவிட்டாள். என்னவென்று விளங்க வைக்க முடியாத ஒரு சோகமும் படபடப்பும் முகிலின் நிழல் போல் கடந்து போனதை அவளால் உணர முடிந்தது. இரவு நெடுநேரம் வரையில் கண் முழித்திருந்தது காரணமாயிருக்கலாம் என மனதுக்குள் சமாதானப் படுத்திக் கொண்டாள்.
இரவு முழுவதும் விட்டடுவிடடுக் கேடடுக் கொண்டிருந்த வேடடுச் சத்தங்கள் ஓய்ந்து காலைச் குரியனின் கணகணப்புடன், வெறும் காக்கை குருவிகளின் கீச்சிடல் மடடும் கேட்டடது. இந்த அமைதி ஒரு வித்தியாசமான பிரக்ஞையை மனதில் ஏற்படுத்தியதும், பழக்கப்பட்டுப் போன வாழ்க்கையில் இருந்து விலகி வந்துவிட்டது மாதிரி ஒரு உணர்வு வந்து உடல் சிலிர்த்துக்கொண்டது. சே! என்ன விபரீதம் இது. இடையில் வந்த இந்தச் சம்பவம் உணர்வோடும் உடலோடும் ஒட்டிக்கொண்டு விடட தா? மனிதன் ஒரு இசைவாக்கப் பிராணி என்பது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கிறது. திணிக்கடபடும் சம்பவங்களே பின் நியதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன’ என்பதற்கு
குமார்மூர்த்தி 53

Page 29
இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும். குழல் மனிதனுக்காகவா அல்லது மனிதன் சூழலுக்காகவா? உற்சாகமான காலைப்பொழுதே களைப்பாக இருந்தது அவளுக்கு.
s
நேற்றிரவு வந்த நினைவு திடீரென மறுபடியும் வந்து மையமிடடது. எதன் அடிப்படையில் அந்தக் கருத்து தோன்றியிருக்கக் கூடும் என்பதைப் பல முறை யோசித்துப் பார்த்தும் பதில் குழப்பமாகவே இருந்தது. ஆனால் காரண காரியமில்லாமல் அந்த நினைவு உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் பதிந்து கிடந்ததை மட்டும் அவளால் தடடிக் கழித்துவிட முடியவில்லை. ஒரு வேளை வீதியில் கிடந்த அந்த உடலைக் கண்ட நாளில் இருந்து வந்ததாக இருக்கலாம். இல்லை அதை வீசிவிட்டுப் போன மனிதர்களைப் பார்த்ததில் இருந்து இருக்கலாம். அல்லது எந்த உணர்ச்சி பாவமும் இல்லாமல் அந்த உடலைக் கடந்து போன மனிதர்களைப் பார்த்ததில் இருந்து இருக்கலாம். இல்லை, அதை வீசிவிடடுப் போன மனிதர்களின் உணர்வுகளைப் பற்றியதாக இருக்கலாம். எது எப்படியோ மரணம் என்பது நிச்சயமானது. உண்மையானது, இறுதியானது, முடிவானதும் அதுதான். பஞ்சுப் பெட்டியில் வைத்துப் பூட்டினால் என்ன, புழுதியில் வீசியெறிந்தால் என்ன? இதயத்துடிப்பு நிற்பதுதான் இறுதியானது. அவளையும் அறியாமல் உள்ளங்கை நெஞ்சை அழுத்தியது. நெஞ்சுக்கூடு லேசாகப் படபடத்தது. மறுபடியும் மனதின் உள்ளார்ந்த மூலையில் இருந்து ஏதோ ஒரு அழுத்த உணர்வு Լյւգ ւնւ /ւգ եւ IIT&ւն பெரு கி, சர்வாங்கமும் வியாடபித்தது. மயிர்க்கால்களைக் குத்திட வைத்து திடீரென சுருங்கிக் கொண்டது. இவையெல்லாம் மருத்துவப் படடதாரியான அவள் ஸ்தூல அறிவுக்கு ஒவ்வாது முரண்பாடாகி, முறிந்து, பின் தொடர்ந்தது. மரணம் என்பது உடலின் இறுதி வடிவமாக இருக்கலாம்.
54 முகம் தேடும் மனிதன்

அல்லது எண்ணத்தின் முற்றுப்புள்ளியாக இருக்கலாம். ஆனால் இது நிகழ்வது ஒன்றுதான் சத்தியமானது, நிச்சய மானது. அது இன்றாகவும் இருக்கலாம். என்றாகவும் இருக்கலாம். ஆனால் இல்லாமல் இருக்க முடியாது. அதை நிர்ணயிப்பது யார்? அருவமான அப்பாற்பட்ட சக்தியா? உருவமான கண்ணுக்குத் தெரிந்த.
திடீரென குழந்தை வீரிடடுக் கத்தியது. அரக்கப் பரக்க எழுந்து குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள். குழந்தைக்கு லேசாக உடம்பு தகித்துக்கொண்டிருந்தது, வேண்டாம்! இன்று எங்கும் போக வேண்டாம். குழந்தைகளுடனேயே இருக்க வேண்டும். என் குழந்தைகள், என் செல்வங்கள். அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்து கண்களில் பனித்தது. குழந்தைகளைக் கவனித்து எத்தனை நாளாகி விட்டது. நினைத்துப் பார்த்தாள். ஏக்கம் பெருமூச்சாக வெளி வந்தது. இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்துதான் இப்படி என்பது மட்டும் அழியாமல் நினைவில் வந்தது. அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது கூட ஒரு தற்செயல் சம்பவம்தான்.
இன்று எமது சமூகம் குழம்பிப் போயுள்ளது. சரி எது? தவறு எது? என்று பிரித்துணர முடியாதபடி சகலதும் தாறுமாறாக்கப்படடுள்ளது. நாங்களும் அப்படித்தான். இப்போது நம்முன் உள்ள முக்கிய கடமை நிகழ்வுகளை உள்ளபடி பதிய வைத்து அடுத்த தலைமுறைக்கு அறியத் தருவதுதான். என்று அவள் கூறிய கருத்தை சக ஆசிரியர்களில் சிலர் ஏற்றுக்கொண்டு, அவளையே பொறுப்பேற்க வைத்து செயல்பட்டனர். இப்போது அது இறுதி அத்தியாயத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அதன் தயாரிப்பில்தான் இரவு நெடுநேரம் வரையில் இருந்தாள். அந்த முக்கியத்துவமெல்லாம். இப்போது
குழந்தையின் அழுகையில் கரைந்து போயிற்று.
குமார்மூர்த்தி 55

Page 30
அவளின் அணைப்பில் குழந்தை மீண்டும் துர்ங்கத் தொடங்கியதும் மகன் படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள். se/gif காலியாக இருந்தது. எங்கு போயிருப்பான். கூப்பிடடபடியே வெளியில் வந்து பார்த்தாள். முற்றத்துப் பதுங்கு குழிக்குள் கையில் ஒரு பொம்மைத் துப்பாக்கியை வைத்து 5 of விளையாடிக் கொண்டிருந்தான் அவன். முதலில் அதைப் பறித்து முறித்து எறிந்துவிட வேண்டும் என்று கைகள் குறுகுறுத்தன. பின் நிதானித்துக் கொண்டாள். இது ஒரு குழ்நிலையின் தாக்கம், வெளிப்புறக் கவர்ச்சி இவனைக் கண்டிப்பதால் மடடும் இந்தப் பிரச்சனைக்கு முடிவு வந்துவிடப் போவதில்லை. இன்று இது இளம் சமுதாயத்தின் மனதில் ஆழப் பதிந்துவிட்ட நோயாகி விட்டது. ஆண்டவனே! இது எங்கு போய் முடியப் போகிறது. ஒரு கணம் கண்களை இறுக மூடிக் கொண்டாள். உலகம் தலை கீழாகச் சுற்றியது.
அவனை மெதுவாக அனைத்துவந்து படிப்பு மேசையின் முன் இருத்தி புத்தகத்தை எடுத்துக் கொடுத்தாள். அவளுக்கு தலை, பெரும் பாரமாய்க் கனத்தது. புருவத்தை மேலும் கீழும் நீவி விட்டுக் கொண்டாள். சுற்றிவர எரியும் நெருப்புக்கு நடுவில் நிற்பது போன்ற தவிப்பு அவள் உணர்வில் இருந்தது. தாய் கொண்டு வந்து கொடுத்த தேநீரை சடக் கென்று வாங்கி ஒரு வாய் உறிஞ்சியதும் எல்லாமே நிதானத்துக்கு வந்தது மாதிரியிருந்தது. தனது தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அது நிர்மலமாக பளிச்சென்றிருந்தது.
என்னை உருவாக்க இவள் எவ்வளவு துன்பப்பட டிருப்பாள். இவளின் சொல்ல முடியாத தியாகமும் அர்ப்பணிப்பும், வெற்றி பெற்றுவிடட தென்ற
இறுமாப்பில் நிமிர்ந்து நிற்கிறாள். தனது கடமை முற்றுப்பெற்று விடடதென்று சொல்லாமல் சொல்கிறது
56 முகம் தேடும் மனிதன்

அவள் முகம். ஆனால் நான். மகனைப் பார்த்தாள். அவனின் பார்வை, பதுங்கு குழிப் பக்கமாக வெறித்துக் கிடந்தது, அவளுக்கு சுரீர் என்று நெஞ்சில் குத்தியது மாதிரி இருந்தது. என்னுடைய தியாகமும் அர்ப்பணிப்பும் இவனை எந்தளவுக்கு மனிதனாக்கப் போகிறது? அவள் மனம் ஆராய்ச்சியில் இறங்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக சமூகம் நலமாக இருந்தால்தான் என் பிள்ளைகளும் நலமாக இருப்பார்கள். இதில் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சமுதாயம் எனக்குத் தேவையானது. நான் சமுதாயத்துக்குத் தேவையானவள்.
இப்போது அவளுக்கு கல்லூரிக்குப் போக வேண்டும், இறுதி அத்தியாயத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்துவிட்டது. அவசர அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு, வாசல் வரை நடந்தவள், ஏதோ சிந்தித்தவளாய் லேசாக கால்கள் தளர திரும்பி வந்தாள். இந்தச் செய்கை தாய்க்கு வழக்கத்துக்கு மாறாக இருந்தது. மகளைக் கலக்கத் தோடு பார்த்தது அந்தத் தாயுள்ளம். சுமதியின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. முகத்திலும் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. மிகவும் சிரமப்படடு, குழந்தைகள் கவனம்’ என்று சொல்லும் போதே குரல் கரகரத்து தொண்டையை அடைத்துக் கொண்டு விட்டது அவளுக்கு.
கல்லூரியை விட்டடு வெளியில் வரும்போதே சூரியன் களைத்து தென்னை மரங்களுக்குள் இறங்கியிருந்தான். வீதிகளெல்லாம் ஆள் அரவமற்று, குனியமாகி இருந்தது. தூரத்தில் கேட்ட கும் வேட்டுச் சத்தத்துக்கு , நாய்கள் மடடும் ஊளையிடடுக் கொண்டிருந்தன. அமைதியும் தனிமையும் ஒரு பயத்தைக் கொடுத்தாலும், குழந்தை களைக் காண வேண்டும் என்ற ஆவல் அவளை எட்டி நடை போட வைத்தது. வீதியோரங்களில் நிற்கும் மரங்கள் அசைவது கூட ஒரு கணம் மனத்தின்
குமார்மூர்த்தி 57

Page 31
தைரியத்தைப் பரிசோதித்துப் பார்த்தது. அரக்கத்தனமாக இருட்டு சர்வமும் வியாபித்து அவளை முந்திவிடத் துடித்தது. இல்லை தான் முந்த வேண்டும் என எண்ணம் துடித்தது. காலடி அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். இரண்டு சிறுவர்கள் அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் மெலிந்த தோற்றமும், இறுகிப்போன முகமும், அவளுக்கு சொல்லமுடியாத வேதனையாக இருந்தது. இன்னும் ஓரிரண்டு வருடங்களில் என் மகனும் இவர்களைப் போல் வளர்ந்து விடுவான். மகனின் உருவத்தை அவர்களோடு நிறுத்திப் பார்த்தாள். நீளமூக்கும், சுருள் முடியும் நிழலாகத் தோன்றி மறைந்தது. பாவம்! இந்தப் பிள்ளைகளுக்கு என்ன துன்பமோ! சே. சின்னஞ் சிறுசுகள்கூட எவ்வளவு துயரங்களைத் தாங்கிகொள்ள வேண்டியிருக்கிறது. முடிவில்லாத துயரங்களுக்கு எப்பொழுதுதான் முடிவு வரப் போகின்ற தோ! இந்த நேரத்தில் படையினர் வந்தால். நினைத்தவுடன் நெஞ்சு பகீரென்றது. அவர்களுக்கு ஒன்றும் நேர்ந்து விடக் கூடாதே என்று மனம் பிரார்த்தித்துக் கொண்டது. பிள்ளைகளே சீக்கிரமாக வீடடுக்கு போய்ச் சேருங்கள் என்று சொல்ல வேண்டும் என எண்ணியவளாய் நடையைத் தளர்த்தி, அவர்கள் அருகில் வரும் வரை காத்திருந்தாள். அவர்கள் அண்மித்ததும், சினேகமான புன்சிரிப்போடு சொல்ல வேண்டியதைச் சொல்ல வாயெடுத்தவள், மிரண்டு போனவளாய் வார்த்தைகள் வெளி வராமலே துவண்டு நிலத்தில் விழுந்தாள். பிடரித் துவாரத்தினூடாக குருதி கூந்தலை நனைத்து மண்ணில் இறங்கியது. கண்கள் அவர்கள் போகும் திசையைப் பார்க்க எத்தனித்தது. ஆனால் பார்க்க முடியாமல், இருள் முழுவதுமாக அவளை முந்திக்கொண்டது.
58 முகம் தேடும் மனிதன்

ஒரு மனிதன்
சுள்ளென்று காலை வெயில் எரித்துக் கொண்டிருந்த போது வீட்டை விடடுப் போன சாம்பசிவத்துக்கு அது கண்ணில் பட்டது. ஆணி அடித்தது போல் அந்த இடத்தில் அப்படியே நின்று விட்டார். இமை வெட்டாமல் அந்த உருவத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். போவோர் வருவோர் எல்லாம் ஒரு கணம் நின்று பார்ப்பதும் புரிந்ததும் புரியாததுமாக தங்களுக்குள் தலையாட்டடிக்கொண்டு அல்லது முகத்தை வெறும் சோகமாகத் தொங்கப் போட்டடுக்கொண்டு இடத்தை விட்டு நகர்ந்து கொண்டிருந்தனர். மறுபடியும் அந்த தெருவால் போக வேண்டிய குழ்நிலையில் வந்த சில பேர் அந்த உருவத்தைவிட சாம்பசிவத்தைப் பார்த்துப் பரிதாபப்படடுக் கொண்டனர். அந்த உருவத்துக்கு அவர் நெருங்கிய உறவுக்காரர் என்பது அவர்களின் 6760ö76007L0/7 5 இருக்கலாம். ஆனால் சாம்பசிவம் அந்த உருவத்தின் முகத்தை என்றும் பார்த்ததாக ஞாபகம் இல்லை. முப்பது அல்லது முப்பத்து மூன்று வயது இருக்கும் அந்த மனிதனுக்கு. அங்கங்கள் எல்லாம் எந்தவித குறைபாடுமின்றி கனகச்சிதமாக அமையப்பெற்றிருந்தது. முகம் மடடும் உண்மை நிலையில் இருந்து மாறி விகாரமாகிக் கிடந்தது. விழிகள் இரண்டும் பிதுங்கி தனக்கேற்பட்ட பயங்கரத்தை விவரிக்க முயன்று கொண்டிருந்தன. காது வழியாக இரத்தம் வழிந்து தோள் மூடடில் உறைந்து
குமாமூர்த்தி 59

Page 32
போயிருந்தது. மின் கம்பத்தோடு கட்டி வைத்து விடடுத்தான் அவன் காதுக்குள் கட்டிருக்க வேண்டும்
என்பதற்கு வலுவான -gy60) – u J/TGITLD/Tá5 கயிறு கட்டப்பட்டிருக்கும் இடங்களில் இரத்தக்கசிவு காய்ந்திருந்தது.
பொழுது சாயும் நேரமாகி விடடிருந்தாலும் அந்த மனிதனைத் தேடி யாரும் வரவில்லை என்பதை நினைத்த போது அவரை ஆத்திரமும் அருவருப்பும் உலுக்கியது. நீங்கள் ஒவ்வொருவரும் கொலையாளிகள். இந்தக் கொலைக்கு நீங்கள் ஒவ்வொருவரும் உடந்தையாகத்தான் இருக்கின்றீர்கள். இதிலிருந்து நீங்கள் தற்காலிகமாகத் தப்பித்து ஓடலாம். ஆனால் இதன் A 6)6) 607 நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கத்தான் போகின்றீர்கள். நீங்கள் மடடுமென்ன உங்கள் சந்ததியே இதற்காக வருந்தத்தான் போகின்றது என்று ஒவ்வொருவரையும் நிறுத்தி முகத்துக்கு நேரே கேட்க வேண்டும் போல் அவருக்குத் துருதுருத்தது. இருந்தும், எல்லாவற்றையும் நிதானமாக்கி முடிந்தமட்டும் எச்சிலைக் காறி பலமாகத் துப்பினார். அது புழுதி மண்ணுக்குள் சுருண்டு தற்காலிகமாகத் தன்னை மறைத்துக் கொண்டது. மனிதர்களும் இப்படித்தான் ஏதோ ஒன்றுக்குள் தற்காலிகமாகத் தங்களை மறைத்துக்கொள்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள் என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.
கருத்துகளைக் கேடக யாரும் தயாராக இல்லை என்பதைத் திட்ட வட்டடமாகத் தெரிந்து கொண்டபின் அவருக்கு மெளனம் பெரிதும் உதவியாக இருந்தது. இதே சம்பவம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால் եւմn 60U սյԼճ அசைய விடாமல் ஒவ்வொருத்தரையும் நிறுத்திக் கேள்வி கேட்டடிருப்பார். 60 முகம் தேடும் மனிதன்

அவர்களும் ஏதோ பதிலைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கின்ற நியதிக்குக் கட்டுப்பட்டடு செயற்பட்டிருப்பார்கள். ஆனால் . இன்று யாரும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை விட யாரும் கேள்வி கேடகக்கூடாது என்பது
எழுதாத விதியாக ஆகிவிட டிருக்கின்றது.
உலகத்தின் ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. இதன் அடிப்படையில் மனித சமுதாயத்தின் வளர்ச்சியும் முன்நோக்கியதுதான். சமூகப் பாகுபாடுகள் மறைவதும் புதிய கோட்டபாடுகள் உருவாகுவதும் தவிர்க்க முடியாதவை. அடிப்படையில் இவை எல்லாம் பொருளாதார வளர்ச்சியின் மையப்புள்ளிகள். இயங்கியல் விதிப்படி மாறுவதும் மாற்றுவதும் நிச்சயமானது' என்று முழங்கிய அந்த மனிதனின் கருத்துகளோடு காதலாகிக் கல்லூரியை விடடுப் புறப்படட அறுபதுகளின் ஆரம்பம் அது. எதையும் செய்து முடிக்கலாம் என்கிற துணிவும் நம்பிக்கையும் மலை போலக் குவிந்திருக்க, வலுவும் ஆற்றலும் முறுக்கிப் போட்ட இருபது வயது இளைஞனாக இருந்து எங்கு அநீதி நடந்தாலும் அங்கு நின்று அதைப்பற்றிப் பேச உரிமையிருந்த காலம்.
வாழ்க்கையின் வசந்தங்களையும் சூழலின் முரண்பாடுகளையும் தந்தை என்ற ஸ்தானம் கிடைக்கும் வரைக்கும்தான் அவரால் அனுபவிக்க முடிந்தது. பிள்ளைக்கு பால் கள்ளச் சந்தையில்தான் வாங்கியாக வேண்டும் என்பது அவருக்குக் கட்டாயமாக்கப்பட்ட போதுதான் யதார்த்தத்திற்கும் கொள்கைக்கும் உள்ள இடைவெளியின் தூரத்தை அவரால் உணர முடிந்தது. வரித்துக் கொண்ட கொள்கையும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிஜ வாழ்வும் வேறானவை தான் குமார்மூர்த்தி 67

Page 33
என்பதைத் தெரிந்து கொண்டாலும் வாழ்கையையோ அல்லது கொள்கையையோ உதறித் தள்ள முடியாது திரிசங்கு சொர்க்கமாகியது அவர் வாழ்க்கை. தேவைக்குப் பணம் வேண்டும், பணத்திற்கு உழைப்பு / வேண்டும், அதற்கு வேலை வேண்டும். ஆனால் எந்த வேலையையும் மனமிசைந்து செய்வதற்கு அவர் வரித்துக் கொண்டிருந்த கொள்கை விடடுக் கொடுக்க மறுத்தது. ஒவ்வொரு வேலையிலும் இருந்த ஊழல்களோடும் அக்கிரமங் களோடும் அவரால் சமரசமாகிப் போக முடியவில்லை. எந்த வேலையும் கொஞ்ச நாடகளில் பொறுப்பில் லாதவன், முன் கோபக்காரன் என்ற பட்டத் தோடு முற்றுப்பெற்றதாகி விடும். அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சாதாரண புறம் போக்குச் செயல்களைக் கூடத் தாங்கிக்கொள்வதற்கு அவர் நீண்ட நாளைய முயற்சி
எடுக்க வேண்டியிருந்தது. குழப்பல்வாதி கொமினிசக்காரன் என்கிற வலுவான வீச்சு அவருக்கு முன்னால் எப்போதும் கை வீசி நடந்து
கொண்டேயிருக்கும். மனைவி கூட அவரை உதாசீனம் செய்யத் தொடங்கியபோது அவர் பட்டட மனக்கவுர்டம் அவருடனேயே அமுங்கிப் போனது. சமுதாயத்திலுள்ள ஒட்டடுமொத்தக் குறைபாடடுக்கு தன் மனைவியையோ அல்லது டபிள்ளைகளையோ குற்றம் சொல்லுவதற்கு அவர் மனம் சற்றும் இடம் கொடுக்க மறுத்தது. கலாச்சாரம் பண்பாடு என்ற போர்வையில் சுதந்திரம் மட்டுமல்ல எங்கள் முன்னேற்றமும் நாசமாக்கப்படுகின்றது. மேலைத்தேய நாடுகளின் பரந்த விஞ்ஞான உலகத்தின் முன்னேற்றம், அவர்களின் தளையை மீறிய தன்மையில்தான் தங்கியிருக்கின்றது. மொழியையும் மதத்தையும் காக்க வேண்டும் என்கின்ற பேரவாவில் மிகுதி எல்லாவற்றையும் கோட்டை விடடு விடுகின்றோம். இந்த மொழியையும் மதத்தையும் காலத்துக்கேற்றவாறு நவீனப்படுத்தாவிடில் இதையும் இழந்து அடையாளம்
62 முகம் தேடும் மனிதன்

இல்லாதவர்களாகத்தான் வாழ வேண்டி வரும்' என்று தன் உற்ற நண்பர்களுடன் வாதிடுவார்.
தனிநாடு கோரிக்கை எழுந்த போது வலுவான எதிர்ப்பு அவரிடம் இருந்து வெளிப்படடது. எங்களை நாங்களே கொடூரமாக அடக்கிக்கொண்டு சுதந்திரம் பற்றிப் பேச எங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? என்று சாதிப் பிரிவினைகளால் நடக்கும் அனர்த்தங் களையும் வன்முறைகளையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லோம் காரசாரமாக விமர்சிப்பார். இதற்கு பயமுறுத்தல்களும் கல்லெறிகளும்தான் அவருக்குப் பதிலாகக் கிடைக்கும். அடிப்படைப் பிரச்சினைகளை மறைப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு இது கைவந்த கலையானபடியால் அவர் அதைப் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அது நாளடைவில் ஆயுதப் போராட்டட வடிவெடுத்தது. அதன் ஒரு சில நடவடிக்கைகளின் வெளிப்பாடுகள் அவசரமானதும் தொலை நோக்கு இல்லாததும் என்பதை எளிதில் புரிந்து கொண்டார். அதை விமர்சித்த போது அவருக்கு கனத்த துப்பாக்கிகளின் காம்புகள் கடுமையாகப் பதில் தந்தன. தவிட, டைத் தேடிப் போக சம்பா அரிசியை நாய் கொண்டு போன கதையாக, இருந்த அற்ப சுதந்திரமும் பறிபோய் விட்டது என்பதைத் திட்டட வட்டடமாகத் தெரிந்துகொண்ட பின் இனி உயிர் வாழ்வதாயிருந்தால் அவர் பலமாக நேசித்த மண்ணையும் மக்களையும் விடடுப் பிரிய வேண்டும் அல்லது மெளனமாக வாழ வேண்டும். அவரின் பொருளாதார நிலைக்கு இரண்டாவதே பெரிதும் வசதியாக இருந்தது.
காகங்கள் கிடைத்த தண்ணில் அவசரம் அவசரமாகக் குளித்து தங்கள் கூட்டடை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக
குமார்மூர்த்தி 63

Page 34
மனிதர்களின் நடமாட்டமும் வெகுவாகக் குறைந்திருந்தது. களைத்துப் போன மாடுகளோடும் வியர்த்து உப்புப் பூரித்துப் போன மனிதர்களோடும் வந்து கொண்டிருந்த வண்டில்தான் அவர் சிந்தனையைத் துரிதப்படுத்தியது.
முற்றத்து வாங்கில் அந்த மனித உடலைப் படுக்க வைத்து, சின்ன வயதில் சாதி மாறித் திருமணம் செய்ததால் விலக்கி வைக்கப்பட்ட தன் ஒன்று விடட தம்பி என்ற போது வீட டோடு சேர்ந்து அயலும் அதிர்ந்து போனது. பொய் சொன்னதற்காக அவர் மனதிற்குள் வருத்தப்பட்டடுக் கொண்டார். அடக்க வேலைகள் சம்பிரதாயப்படி நடந்த போதும் கிரியைகள் நடந்த போதும் அவர் முகத்தில் சோகம் அப்பியே இருந்தது. ஆனால் போராட்டக் குழுவில் இருந்த அவர் மகன் மடடும் ஒரு மூலையில் வெறுமையாக நின்றான். தன்னால் தண்டனை நிறைவேற்றப்படட அந்த மனிதன் குற்றவாளியா இல்லையா என்பதை விட உறவினனா இல்லையா என்பதை அறிவதில் அவன் மனம் அங்கலாய்த்துக் கொண்டது. சம்பந்தமில்லாத யாரோ ஒரு மனிதன் என்ற எண்ணத்தில் 35_ _ _ 6ù) 67760) I A நிறைவேற்ற அவன் காட்டிய அவசரமும் ஆத்திரமும் இப்போது கரைந்து வடிந்துகொண்டிருந்தது. குற்ற உணர்வு மேலோங்கி உடலெல்லாம் மயிர்க்காலிட்டடது. கெஞ்சல் கதறல் எதையும் கேடகாமல் தந்தைக்குச் சமமானவரைக் கொடுமைப்படுத்திக் கொன்றுவிட்டடதே இந்தக் கைகள் என்று கைகளைப் பார்த்தான். அது ஒரு முறை பலமாக நடுங்கி ஆடிக் கொண்டது.
சாம்பசிவம் ஒரக் கண்ணால் அதைப் பார்த்து அமைதி அடைந்து கொண்டார்.
64 முகம் தேடும் மனிதன்

கல் வீடு
எனன வேளையில் அந்த வீடடைக் கட்டினாரோ பரமேஸ்வரன், இப்பா ஆகுமென்று யார்தான் நினைத் திருந்தார்கள். புதுக்கருக்கு குலையாமல் ஒவ்வொரு கல்லையும் முகர்ந்து பார்த்து அவர் பட்ட ஆனந்தம் ஒரு குழந்தையைத் தூக்கி கொஞ்சுவது போல இருக்கும். பாடிடன் காலத்திலிருந்தே, கல் வீடு என்பது கனவான ஒரு சரித்திரம்தான். நாலு கைத் தாழ்வாரமும் உச்சியில் இடித்துக் கொள்வது மாதிரியான தலைவாசலும் கொண்ட அந்த ஒலை வீட்டில் மூன்று தலைமுறை வாழ்ந்து விடட்து என்பது ஒரு சாதனைதான்.
சின்ன வயதிலிருந்தே பரமேஸ்வரனுக்கு கல் வீடு என்றால் அடங்காத ஆசை. மழை வந்தால் ஒழுகாது சட்ட டியும் அண்டாவுமாக தூக்கி அலையத் தேவையில்லை. வழவழப்பான சுவரில் நிம்மதியாக சாய்ந்து மழை நீர் சொட டு சொட்ட டாகக் கொட்டுவதைப் பார்த்து மகிழலாம். எந்தக் காற்று மழையென்றாலும் சுவர் கரையாது. மண் அள்ளிக் குதப்பி மறுபடியும் சுவர் வைக்க வேண்டியதில்லை. இதெல்லாம் தெருக்கோடி சுந்தரேசன் வீட்டில் மழைக்கு ஒதுங்கியபோது கண்டுகொண்ட உண்மைகள். பள்ளிக்குப் போகும்போதும் வரும் போதும் அந்த வீடடை ஒருதரம் பார்க்காவிடடால் எதையோ பறி கொடுத்தது போல் ஆகிவிடும், ஒப்பிடடுப் பார்த்துப் பார்த்து மனம் சலித்துப்
Gumseglfög) 65

Page 35
போகும். வீட்டடில் உள்ளவர்களிடம் dr. t.-- காரணமில்லாமல் எரிச்சல் வரும். வீடடில் இருப்புக் கொள்ளவே பிடிக்காது. மறுபடியும் சுந்தரேசன் வீட்டை ஒரு தரம் போய்ப் பார்க்க வேண்டும் போலப் பிரமை தடடும்.
ஆவலை அடக்கமாடடாமல் ஒரு நாள் தந்தையிடம் கேட்டட போது நீ வளர்ந்து பெரியவனாகிக் கட்டடிக் கொள்! என்று கண் கலங்கிக் கூறியது பசுமரத்தாணி போல் அவர் மனதில் பதிந்து விட்டது. அன்றிலிருந்தே அந்த வீடடுக்கு அவர் மனதில் அஸ்திவாரம் விழுந்துவிட்டது. அவர் வாலிபப் பருவத்துக்கு வர, முதலே தந்தை பனையில் இருந்து விழுந்து இறந்து போகவே அவர் தொழிலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவர் தலையில் விழுந்து விட்டது. ஆனால் எந்தக் காலத்திலும் பரமேஸ்வரன் சளைக்கவில்லை. குருவி சேர்ப்பது போல் ஒவ்வொரு கல்லாகவும், ஒவ்வொரு மரமாகவும் கொண்டு வந்து பத்திரப்படுத்தி வைப்பார். பார்ப்பவர்கள் கேலி செய்தாலும் அதைப் பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ள மாடடார்.
வசதி படைத்தவர்களுக்கே சவால் விடும் வீடு கட்டடும் வேலை சாதாரணமான தொழிலாளியான பரமேஸ்வரனுக்கு ஐந்து வருடங்கள் பிடித்த தென்றால், அது அவரின் அதிர்ஸ்டமென்று தான் சொல்ல வேண்டும். அவர் மடடுமா அந்தக் குடும்பமே அந்த வீடடுக்காக எத்தனை தியாகங்களைச் செய்திருந்தது.
வடக்குப் பார்த்த தலை வாசலும் கிழக்குப் பக்கமாக உயர்ந்து நிற்கும் புகை போக்கியும் கொண்ட அடக்கமாக நிமிர்ந்து நிற்கும் அந்த வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் தான் வெற்றி பெற்ற இறுமாப்பில் பூரித்துப் போவார் பரமேஸ்வரன். ஊரறிய அதில் குடிபுக 66 முகம் தேடும் மனிதன்

வேண்டும் என்பதற்காக எத்தனை தடவை நாள் குறித்தாகிவிட்டது. குருக்கள் குறித்த நாள்களில் பழுதில்லைதான் என்றாலும் நாட்டடுப் பிரச்சனையால் ஊரடங்குச் சட்டம், அல்லது சுற்றி வளைப்பு, ஹர்த்தால் என்று ஏதாவது இடையூறு வந்து கொண்டே இருக்கும்.
அன்றும் அப்படித்தான் மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. நாளை மறுநாள் குடி புகலுக்கான வேலைகளில் மூழ்கியிருந்த பரமேஸ்வரன் வாசலில் இரண்டு வாலிபர்கள் கையில் சிறு துப்பாக்கிகளுடன் வந்த போது ஒரு கணம் திடுக்கிடடுப் போனார். என்ன ஏது என்று கேடக முடியாத நிலை. வந்தவர்க வம் மிகவும் விறைப்பாகவே பேசிக் கொண்டனர். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விடும் போல் மனது அடித்துக் கொண்டது. இஸ்ட தெய்வத்தைப் பலமுறை வேண்டிக் கொண்டு வீடடை சுற்றும் முற்றும் ஏறிட்டுப் பார்த்தார். அது எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. உடம்பில் உள்ள சக்தியெல்லாம் ஒன்று திரடடி காலை மெதுவாக நகர்த்தி அவர்களின் பக்கம் போன போது ஆமிக்காறன் வாறான் ஒடுங்கோ’ என்ற வார்த்தை ஈட்டியாக அவர் நெஞ்சில் வந்து குத்தியது.
நித்ானிக்கும் நேரத்துக்குள் உறுமல்களும் கனத்த &5/76) 19. ஓசைகளும் அந்த வடடாரத்தையே ஆக்கிரமித்துக் கொண்டன. முதலில் சிறு துப்பாக்கி ஓசை வெடிப்பது அவர் காதுக்கு துல்லியமாகக் கேட்டது. தொடர்ந்து பெரிய துப்பாக்கிகள் வெடிப்பதும் துல்லிய மாகக் கேட்டது. அதற்கு மேல் கொண்டு அந்த வடடாரத்தையே அதிரவைத்த பாரிய சத்தம் அவர் காதுகளுக்குக் கேடகவில்லை.
இப்போதெல்லாம் சிதறிக் கிடக்கும் ஒவ்வொரு கல்லையும் தன் ஒற்றைக் கையால் எடுத்து முகர்ந்து பார்த்து ஏகாந்தமாக சிரித்துக் கொள்வார் பரமேஸ்வரன்.
குமரர்மூர்த்தி 67

Page 36
எங்கள் ஊரும் பள்ளிக்கூடமும்
எல்லாவற்றையும் வெண்பனி கவனமாக மறைத் திருந்தது. மெல்லிய ஊதல் காற்றுக்கு கூட குளிர் அதிகமாகத் தெரிந்தது. காருக்குள்ளேயே உடகார்ந்திருந்தேன். குளிருக்கு அது இதமாக இருந்தது. பாடசாலை முடிவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. நாள் முழுக்க இயந்திரங்களோடு போராடி விடடு வந்த அசதி அதிகமாக இருந்தாலும் பிள்ளையின் முகத்தைப் பார்க்கப் போகிறோமே என்கிற ஆவல் அதைக் காணாமல் செய்திருந்தது. அதற்காகவே அதிக நேரம் காத்திருக்க வேண்டும் போல் பட்டது. இப்படி சின்னச் சின்ன ஆசைகளோடு இந்த நாடடு வாழ்க்கை அடங்கி விடுகிறது. இருந்தாலும் எதிலுமே ஒரு இய்ந்திரத்தனம் ஓடிக் கொண்டிருக்கும். ஆத்ம திருப்திக் கென்று எதையுமே செய்ய முடியாத அவசரம். ஏதோ ஒரு பாரம் தலைமேல் அழுத்துவது மாதிரியும் எதையோ தவற விடடுவிட்டு அதைத் தேடிக் கொண்டிருப்பது மாதிரியான வெறுமை உணர்வும் அடிக்கடி ஓடி மறையும். சொந்த நாட்டு வாழ்க்கை எப்படி இருக்கும், கால் வலிக்க ஓடித்திரிந்த மண்ணும் கல்வி கற்ற கல்லூரிகளும் எவ்வளவுதான் அருகின வசதிகளோடு இருந்தாலும் துண்டுப்படம் போல் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கும்.
கதைகளில் சினிமாக்களில் வருவது மாதிரியல்ல எங்கள் ஊர். நினைத்த நேரத்தில் விழுங்கி ஏப்பம் விட்டடு 68 முகம் தேடும் மனிதன்

விடுவேன் என்று சதா பயமுறுத்திக் கொண்டிருக்கும் சமுத்திரத்திற்கு நடுவில் நிறையக் கல்லும் கொஞ்சம் போல் மண்ணும் உள்ள தீவு அது. பட. டென்று ஒரு வரியிற் சொல்லி விடடாலும் அதற்கென்று ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. இருபது கல் தொலைவில் உள்ள இராமேஸ்வரத்து அபிஷேகத்திற்கு குடம் குடமாக பால் கொண்டு போனதாகச் சொல்லுவார்கள். நல்ல கோரோசனை இருப்பதாகக் கூறிக்கொண்டு போத்துக்கீசியர் காலடி வைத்தபின் பெடடி பெட்டியாக புட்டிப்பால் வெளியூரில் இருந்து இறக்குமதியாகின்றது. பருத்திக் காட்டுக்குள் எருமை மாடுகளை மேயவிடடு நாள் முழுக்க விளையாடுவதாக அப்பு சொல்லுவார். அவர் காலத்திலேயே அவை எல்லாம் அற்றுப்போன சோகம், அவரின் கடைசிக் காலத்தில் நிறையவே அப்பியிருந்தது.
கு! உ4 (35ւ էգ Ամո եւն L16) பள்ளிக்கூடங்கள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் -9// It /fr Lחמ&lff மகாவித்தியாலயம் இருக்கும். சுற்றி வர கோணல்புளியும் தேக்க மரமும் மசமசவென்று வளர்ந்திருக்கும். அதன் பழத்தின் ருசியை வார்த்தையில் எழுதி விட முடியாது தடி யை விட டெறிந்து பழம் பறிப்பதில் இருந்து விதையைக் கல்லால் குத்தி பருப்பு எடுத்து வாயில் போடுவது வரைக்கும் அடடாவதானத் தோடு செய்ய வேண்டும். கல்லு கையைப் பதம் பார்க்கும் அல்லது ஆசிரியர் கண்டால் ஐந்து அடி இலவசமாகக் கிடைக்கும். பாட நேரத்தில் வெளியில் நின்றாலும் இலவச அடி உண்டு.
பாடசாலை வளாகத்திற்குள்ளேயே மாதாவுக்கும் சரஸ்வதிக்கும் எதிரெதிரே கோயில்கள் உண்டு. எந்தக் கோயிலுக்கும் யாரும் போகலாம். எந்தக் கடடுப்பாடும்
குமார்முர்த்தி 69

Page 37
கிடையாது. ஆனால் எந்த நேரத்தில் எதைக் கேட்டுத் தொலைக்கிறாரோ என்று , ஆசிரியர்களை எங்கு கண்டாலும் ஒரே பயம். பலரைப் பயத்தின் காரணமாகப் பிடிக்கும்; சிலரை பாசத்தின் காரணமாகப் பிடிக்கும். ஆனால்: ஆசிரியர்களின் நினைவு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும்.
ஆனால் இங்கு பெயரைச் சொல்லியே கூப்பிடுகிறார்கள். சாதாரணமாகப் பழகுகிறார்கள். தோளில் கை போட்டுக்கூட நடக்கிறார்கள். ஆசிரியரும் மாணவர்களும் மிகவும் அன்னியோன்யமாகத்தான் நடக்கிறார்கள். ஏற்றத்தாழ்வு என்று எதுவும் பார்ப்பது கிடையாது. பயமுறுத்திப் பாடம் சொல்வித் தரும் பழக்கமும் கிடையாது. கேட்டக ஆசையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பயமுறுத்திப் பாடம் சொல்லித் தந்த எங்கள் வாத்தியாரும் நல்ல வர்தான். பாடமாக்கிச் சொல்லவேண்டும் என்பதைத் தவிர அவர் அதிகமாக ஒன்றும் கேட்பது இல்லை. ஆனால் ஏனோ தெரியவில்லை என்னோடு மடடும் விரோதமாகிப் போனார். பாட்டடன் பூட்டடன் காலத்தில் பகை இருந்தது பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. வகுப்புக்குள் நுழைந்ததும் அவர் கண்ணுக்கு நான் எப்படித் தெரிகிறேனோ நான் அறியேன். அந்தத் திருக்குறளை மடடும் தான் என்னிடம் கேட்பார். நூறாவது தடவையாக நானும் கற்க கடசறற.ற. என் திக்கு வாய் சமயம் பார்த்து சதி செய்யும். அவ்வளவுதான் நீ தான்டா களிசற' என்று பள்ளிக்கூடமே அதிரும்படி ஒரு முறை கத்துவார். கையோடு போடா வெளியில’ என்று டகர லகரம் பிசிறுபடாமல் சுத்தமான தமிழில் சொல்லுவார். சில சமயங்களில் காது கன்னம் பிடரி என்று பிரதான நகரங்களை நோக்கிக் குறிவைத்துத் தாக்கப்படும் சம்பவங்களும் நடப்பதுண்டு.
70 முகம் தேடும் மனிதன்

தமிழ்ப் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தோற்றுப் போன கஜனி முகம்மது மாதிரி வராந்தாவில் பக்க வாடடாக நடந்து வகுப்பு: பக்கத்து வகுப்பு அத்தனை கண்களும் ஆழ்ந்த சோகத் தோடு பார்க்கும் பார்வையையும் தாண்டி, வெளியில் வந்து பின்பக்கமாகச் சென்று, கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர காக்கா குருவி கறட்டான் கரப்பான் பூச்சி கட்ட டெறும்பு பெயர் தெரியாத இத்தினியூண்டு பூச்சிகள் எல்லாம் ஜீவனம் பண்ணும் அந்தப் பெரிய ஆலமரத்து வேரில் உடகார்ந்து சில்லென்று ஈரமணலுக்குள் வெறும் காலைப் புதைத்து, புத்தகத்தைத் திறந்தால் படிப்பைத் தவிர பாக்கி அத்தனை விஷயமும் ஞாபகத்திற்கு வரும். அடுத்ததாக எப்போதும் சுகாதாரப் பாடம் வரும். அந்த ஆசிரியர் மிகவும் நல்லவர். வாய் சிவக்க தாம்பூலம் இருக்கும். பந்துக்கிண்ண மூட்டு எங்கேயிருக்கிறது என்ற கேள்வியோடு ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உதட்டில் வைத்துக் கொண்டு விறாந்தைக்குப் போய்விடுவார். அடுத்தவனிடம் கேட்டடுச்சொல்ல அது வசதியாக இருக்கும்.
அப்பா போகலாமா என்றாள் மகள் கரின், கதவைத் திறந்து கொண்டே. எல்லாவற்றையும் மூடிக்கட்டடி முகம் மடடும் வெளியே துருத்திக் கொண்டிருந்தது அவளுக்கு. எனக்கு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மனது தத்தளித்தது.
இதிலிருந்து எப்போது விடடு விடுதலையாகி.

Page 38
உடைபடும் சுவர்
நான் அவனைச் சந்தித்த போது மிகவும் இளைத்திருந்தான். மாதக் கணக்கில் சவரம் செய்யாத தாடியோடும் கசங்கிய சட்ட டையோடும் காணப்படடான். பார்க் ஒன்றில் உப-கார்ந்திருந்தபோதுதான் கண்டேன். இந்த பாலு என்கிற பாலசிங்கத்தை எனக்கு பன்னிரண்டு வயதிலிருந்தே தெரியும். ஆனால் அன்று பார்க்கில் பார்த்த போது அடையாளமே தெரியவில்லை. அவ்வளவுக்கு மாறிவிட்டிருந்தான். கிடடப் போய் நிதான் பாலுவா? என்று கேட்டகக் கூட பயமாக இருந்தது. கொஞ்ச நாளைக்கு முன் வேறொரு பார்க்கில் நம்மவர் ஒருவர் மயக்கத்தில் கிடந்ததாகவும், அதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட இன்னொரு நம்மவர் உதவி செய்யப் போய் கடைசியில் அவர் பொலிசிடம் இருந்து விடுபட்டதே பெரிய கதையாக ஊரெல்லாம் கதைத்துக் கொண்டார்கள். மயங்கிக்கிடந்தவர் போதை மருந்து மயக்கத்தில் கிடந்ததுதான் காரணமாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆண்களும் பெண்களும் வெய்யிலின் சுகத்தை அனுபவித்தபடி இருந்தனர். போன வாரம்தான் கோடை விடுப்பும் வந்தது. இந்தக் காலத்தில் ரொறன்ரோவைப் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கும். எங்கு பார்த்தாலும் புல்தரைகளும் மரங்களும் பச்சைப் பசேலென்று கவிந்திருக்கும். t_1 <) &#FLü புல்லைத் தின்றுவிடடு கழியும் மாடும், எருமையும் கிடையாது. சாலைகள் துப்புரவாக இருக்கும். விதவிதமாக பெரிசும் 72 முகம் தேடும் மனிதன்

சிறுசுமாக எல்லாவகைப் பூக்களும் இருக்கும். ஆனால அரளிப்பூ மாத்திரம் இல்லை. நம் நாட்டில் சாமிக்கு சாத்துவது, காய் அரைத்து சாப்பிடடு தற்கொலை பண்ணிக்கொள்வது இதெல்லாம் நமக்கு சொந்தமான சமாச்சாரம். பார்க்குகளில் பெஞ்சுகள் போடடு தண்ணிர்த்தொட்டி அமைத்து ரொம்ப அழகாகப் பராமரிப்பார்கள். மாப்பிள் மரத்தில் இருந்து மர அண்ல்களும் புறாக்களுமாக இறங்கி வந்து எதையாவது வாங்கிக் கொறித்துக்கொள்ளும். காதல் ஜோடிகள்தான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விடுவார்கள். நாகரிகமான நாட்டுச் சமாச்சாரம், நாம் என்ன செய்வது?
அவனை நெருங்கியும் என்னைக் கவனித்ததாக இல்லை. தலையைச் சொறிந்துகொண்டேன். மயிர் ஒன்றிரண்டு கையோடு வந்தது. முப்பத்தாறு வயதில் முக்கால்வாசி வழுக்கையாய்ப் போன என் தலை. என்ன செய்வது, மூன்று தங்கைகளைக் கரை சேர்த்து முடிய முன்பாதி வழுக்கை போராடடம் என்று தொடங்கிய பின் முப்பத்திரண்டு இயக்கங்களின் கொள்கைகளையும் விளக்கங்களையும் கேட்டடு மேல்பாதி வழுக்கை. கனடா வந்து சுடுதண்ணில் குளிக்கத் தொடங்க சீப்பு வாங்கும் காசு மிச்சமாகிவிட்டது.
பாலு என்றேன்!'அண்ணாந்து பார்த்தான். கண்கள் கலங்கியிருந்தன. ஆச்சரியத்துடன் புருவங்களை நெரித்தான். இருவரும் சந்தித்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். அவன் ஸ்காடி ரோவில் நான் டவுன் ரவுனில். அவ்வளவு அதிக தூரமில்லை. ஆனால் நேரப் பிரச்சனைதான் முக்கியமானது. ஏழுநாள் வேலை செய்தாலும் எப்போதுமே பற்றாக்குறைதான் எனக்கு.
பாலு ஸ்ரேபுரோவில் வீடு வாங்கியிருந்தான். காலியான வீடடுக்கெல்லாம் போயிருந்தேன். அதற்குப்
Guatisepibød 73

Page 39
பின் ஓரிரு நாட்கள் டெலிபோனில் கதைத்ததோடு சரி கோபமொன்றும் கிடையாது. என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன பாலு தாடியெல்லாம்? இது என்ன கோலம்? என்றேன். அழத் தொடங்கிவிட்டான்.
என்னில் பார்க்க பன்னிரண்டு வயது இளமை. எப்போதுமே என்னில் ஒரு மரியாதை அவனுக்கு. அண்ணா' என்று அடக்கமாகக் கதைப்பான். தானும் தன் சோலியுமாக இருக்கும் நல்ல குணமான பொடியன். இவனுக்கு என்ன குறை! வீடு வாங்கியிருக்கிறான். புதுசாக கார் வாங்கியிருக்கிறான் ஊரில் காதலித்திருந்தவளையே செலவு பண்ணிக் கூப்பிடடு கலியாணம் செய்தவன். கெளரிநல்ல குணமான பிள்ளை.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஊரில்தான் ஏதேனும்.அவன் அழுவதை நிறுத்துவதாக இல்லை. தோளைப் பிடித்து உலுக்கி அணைத்துக்கொண்டேன். ஊரில் எவ்வளவோ அன்னியோன்னியமாகத்தான் இருந்தோம். அந்நிய நாடு அந்நியமாக்கி விட்டது. விடாக்கண்டனாக நானும் மல்லுக்கட்டியதில் கெளரி துரோகம் செய்து போட்டாள்ள அண்ணை’ என்று விட்டு குலுங்கிக்குலுங்கி அழுதான். திடீரெனத் தாக்கிய இந்த அதிர்ச்சியில் நானும் நிலைகுலைந்து போனேன். அவனுக்கு ஆறுதல் வார்த்தை கூறக்கூடத் திராணியில்லாமல் ரூமுக்கு வரும்படி மட்டும் கூறிவிடடு வேலைக்குச் சென்று விட, டேன்.
எனக்கு வேலையும் சரியாக ஓடவில்லை. பாலுவின் தோற்றமும் கெளரியின் சிரித்த முகமும் மாறி மாறி வந்து அலைக்கழித்தது. சின்ன வயதிலிருந்தே காதலித்தவர்கள். கெளரி அப்படி மாறக்கூடிய பெண்ணுமல்ல. பின்
74 முகம் தேடும் மனிதன்

எப்படி..? கனடா அவளையும் மாற்றி விடடதா? பல தமிழ்ப் பெண்களின் கதை தெருத் தெருவாக நாறடிக்கப்படுவதும், தொலைபேசி நாடகங்களும், ஓடிப்போவதும், கணிசமான விவாகரத்து வழக்குகளும் என்று கனடாத் தமிழர்களின் முன்னேற்றப்பாதை பற்றி ஒவ்வொரு நாளும் கேள்விப்பட்ட தோடு கெளரியும் சேர்ந்துவிட்டடாளா? முகம் தெரியாதவர்களைப் பற்றி கேள்விப்பட்ட போது பெரிதான தாக்கம் என்னுள் ஏற்படவில்லை. இப்போது, பழகிய முகம். காரணமில்லாமல் எல்லாவற்றின் மீதும் கோபமும் எரிச்சலுமாக வந்தது.
பாலு ரூமுக்கு வந்திருந்தான். குனியமாக எதையோ வெறித்துக் கொண்டிருந்தான். பியர் கொடுத்து கொஞ்சம் தெம்பாக்கி, அவனைப் பேச வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடடது. அழுகையினூடே சிலவற்றை மடடும் சொன்னான். யாரோ வீடடில் வாடகைக்கு குடியிருந்தவனோடு அவளுக்கு.பின்பு என்ன? சண்டை சச்சரவு என்று பூகம்பமே வெடித்திருக்கிறது. ஏற்கனவே இந்த கலியாணத்தை விரும்பாத அவன் அக்காளும் நெய் வார்த்திருக்கிறாள். எல்லாமே சீரழிந்து இப்போது அவன் விட டேற்றியாக யாரோ நண்பர்களுடன் தங்கியிருக்கிறானாம். இப்படித்தான் பலர் ரொறான் ரோவில் பேருக்கும் புகழுக்கும் கடன்படடு வீடு வாங்குகிறார்கள். முன் பின் தெரியாதவர்களுக்கு அறை வாடகைக்குக் கொடுக்கப்படுகிறது. பின்பு வீடடுக்காரிக்கும், குடியிருப்பாளருக்கும் இது என்று கதை கட்டப்படும். முத்திரை குத்துவதிலும் கதை கடடுவதிலும் நம்மவர்களை மிஞ்ச யாராலும் முடியாதே! நண்பர்கள் சொன்னபோது பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இப்போது கண் முன்னால் ஒரு குடும்பம் சிதைந்து போகிறது. ஒரு தடவை கெளரியைப் பார்த்து நாலு
குமார்முர்த்தி 75

Page 40
வார்த்தை குடாகக் கேட்டடுவிடடு வர வேணடும் போல் மனம் குறுகுறுத்தது.
அவள் தங்கியிருந்த வீட் டைக் கண்டுபிடிப்பதில் அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. பெல்லை அழுத்தினதும் கெளரியே வந்து கதவைத் திறந்தாள். வெள்ளையில் பூப்போட்ட கவுனுடன் தலைவிரி கோலமாக நின்றாள். அவள் சந்தோஷமாக இருப்பதாகப் பட்டதும் என் மனக் குமைச்சல் இன்னும் அதிகமாகியது. புன்முறுவலோடு உள்ளே கூட்டடிச்சென்று சோபாவில் 2 L • 695 fTJU வைத்துவிட்டு சற்று தள்ளியிருந்த சோபாவில் உட்கார்ந்து விசும்பி விசும்பி அழத் தொடங்கிவிட்டாள். பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.
குத்துச் சண்டைப் பிரபலங்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டிருந்தார்கள் ரவியில். ஒரு வயதான அம்மாள் ஹாலுக்குள் வந்து எட்டிப் பார்த்துவிட்டு வெடுக்கென்று போய்விடடாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாருக்காக இந்த குத்துச் சண்டை? இந்த அம்மாளுக்காகவா அல்லது கெளரிக்காகவா? எனது சந்தேகத்தை நீடிக்க விருப்பம் இல்லை போலும். நாலு வயது நிரம்பிய ரசிகர் அநாயசமாக வந்து ரிவிக்கு முன் உடகார்ந்து கொண்டார். அவருடைய ஐம்புலனும் ரவியிலேயே லயித்திருந்தது. ஒரு குத்துச்சண்டைப் பிரபலம் ஒரு பெண்ணை மேடையில் வைத்து ஆபாசமாக ஏதோ செய்து கொண்டிருந்தான். அதையும் குறிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் அந்த ரசிகர். ஒருவேளை இவரின் அப்பா ஸ்ரேடியத்துக்கு நேரில் பார்க்கப்போயிருக்கலாம். காடசி தவறாமல் போகும் நண்பர்கள் வரிசையில் இந்த முகம் தெரியாத மனிதரையும் இணைத்துக் கொண்டேன்.
கெளரி இன்னும் அழுது கொண்டிருந்தாள். என்ன நடந்தது என்று கேட்டபது அடிமுடடாள்தனம். பேச்சை 76 முகம் தேடும் மனிதன்

ாற்றி வீடடுக்காரர் நலத்தை விசாரித்தேன். எல்லாமே போச்சு’ என்று மீண்டும் அழுதாள்.
அவளின் குடும்பம் மிகவும் ஆச்சாரமான குடும்பம். அப்பா ஒரு பண்டிதர். எங்கள் மாமாவின் மில்லுக்கு முன்னால்தான் வீடு. தென்னையும், கமுகும், வாழையுமாக வீடு சோலையாக இருக்கும். ஆளுயர சுற்று மதிலும், அலங்கார முகப்பும் பளிரென்றிருக்கும். சிறுவர்களோடு சிறுவர்களாக பாலுவும் கெளரியும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தது, இப்போதும் பசுமையாக ஞாபகத்தில் வந்து போனது. நான் கொழும்பில் வேலை கிடைத்துப் போனடபின், கெளரி வளர்ந்து பெரியவளாகி, பாலு வளர்ந்து அவளைக் காதலித்தது எல்லாம் என்னைக் கேடகாமல் நடந்த சமாச்சாரங்கள்.
இப்போது கெளரி அருகில் வந்து உட் கார்ந்து கொண்டாள். கலகலப்பாக பேசும் பண்பும், வெகுளித் தனமும் இன்னமும் அப்படியே இருந்தது. திக்கித் திணறி அவள் சொன்னவைகளைக் கோர்த்துப் பார்த்தேன். விஷயம் முற்றாக விளங்கிவிட்டடது. யாரோ முன்பின் தெரியாதவனுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். யாருமில்லாத வேளையில் அவளிடம் வாலாடடி இருக்கிறான் அந்தக் கயவன். அதை அவள் பாலுவிடம் சொல்ல, பாலு அவனை விசாரிக்கப்போக, எல்லாம் அவளும் விருப்பத் தோடுதான்’ என்று சொன்னதோடு நில்லாமல் இன்னும் என்னென்னவோ வாய் கூசாமல் சொல்லி தன்னை தற்காத்துக்கொண்டான் அந்த வீரத் தமிழன்.
ரூமுக்கு வந்த போது நன்றாக இருட்டி விட்டது.
புழுக்கம் வேறு ஆளை அமுக்கியது. ரூம் என்று எனக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொள்வதைத் தவிர
குமார்முர்த்தி 77

Page 41
உண்மையில் ஒரு பொந்து. நிலவறையில் தயாரிக்கப் LJL - L - S/. இருந்தாலும் விலை அதிகம்தான். சுதந்திரத்திற்கு அந்த விலை.
இல்லாத நண்பனுக்கு விபத்து என்று சொல்லி வேலைக்கு லீவு போட்டுவிட்டடு பாலுவைத் தேடிப்பிடித்து ரூமுக்கு வரும்போது வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தது. குளிர்மையான பியர் உள்ளுக்குள் இறங்கியதும் இதமாக இருந்தது. நீண்ட நேரமாக இருவரும் எதுவும் பேசவில்லை.
எப்போது விவாகரத்து கிடைக்கும் என்ற என் கேள்வியில் மெளனம் கரைந்தது. என்னை இமை வெட.டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் l 1/16). ஏனென்றால் அவள் மறுமணம் செய்வதற்கு சம்மதித்துவிடடாள். பையன் எனக்கு தெரிந்தவன்தான். நல்ல குணமான பொடியன், நான்தான். அவனுக்கு கண்கள் சிவந்து மீசை துடித்ததுகூட என் கண்களுக்குத் தெரிந்தது. வாயை மூடிப் பல்லை நறுப்பிக் கொண்டான். மீதமிருந்த கால் போத்தல் பியரை மடக்கென்று குடித்துவிடடு, எழுந்து விறைப்பாக வாசல் வரைக்கும் போனவன் மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டான். எனக்கு முன்னாலிருந்த பியரையும் என்னைக் கேளாமல் வெடுக்கென்று எடுத்துக் குடித்துவிட்டு போத்தலைத் தடாரென்று ஓசையோடு வைத்தான். இந்த இடத்தில் வேறு யாருமாக இருந்திருந்தால் அவனின் கோபம் வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் நான் இந்த பாலுவுக்கு பயந்த காலமும் இருந்தது. திருட்டடு தம்" அடிக்கிற காலம். கொழும்பு உத்தியோகத்தில் பெற்றுக்கொண்ட பழக்கம். ஊருக்கு வரும் போது கூல்பாருக்குள் ஒதுங்கி ஒன்றிரண்டு சுகத்தை அனுபவிப்பது வழக்கம். திடீரென்று ஒரு நாள் பாலு 78 முகம் தேடும் மனிதன்

கண்டுவிடடான். எங்கே வீட்டடில் சொல்லி விடுவானோ என்று பயந்து அவனைக் காணும் போதெல்லாம் தாஜா பண்ணுவேன். ரொறன்ரோ வந்தபின் ஏக சுதந்திரம். எனக்கு மட்டுமென்ன எட்டு வயதுச் சிறுவனுக்கும் ஏக சுதந்திரம்தான் இங்கு. தடடிக் கேட்டடால் பொலீஸ் வரும். தாய் தகப்பன் கம்பி எண்ணவேண்டி வரும்.
இப்போது Listg/ கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு கேவிக் கேவி அழுதான். தங்கள் தவறுகளை தாங்களே உணருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தால் நிறைய பிரச்சனைகள் தீர்ந்து போய்விடும் என்று நான் நம்புவது உண்டு. அவர்கள் உள்ளுணர்வுகளில் நியாயமான சிந்தனை இருக்கும். அதைத் தூண்டி விட வேண்டும். சிறிது நேர அமைதிக்குப்பின் பாலுவைக் கூ! அடி வந்து காரில் ஏற்றினேன். பதிலேதும் கூறாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
கெளரி வீடடுக்கு முன்னால் காரை நிறுத்தியபோது எதேச்சையாக வெளியில் வந்த கெளரி எங்களைக் கண்டு திகைத்துப் போனாள். நான் கேட்டதுக்கு மறுப்புச் சொல்லாமல் காருக்குள் ஏறிக்கொண்டாள். இருவர் முகத்திலும் ஏக்கமும், தாபமும், வன்மமும் மாறி மாறித் தோன்றி மறைவதை மட்டடும் உணர்ந்து கொண்டேன். ஆனால் மெளனமே பெரிதும் ஆடசி செய்தது.
ரூமுக்கு வந்த போது ர“வியை நிற்பாடடாமல் போனதற்காக தலையைச் சொறிந்துகொண்டேன். இருந்தாலும் பெர்லின் சுவர் உடைப்பதைக் காடடிக் கொண்டிருந்தார்கள். மனதுக்கு இதமாக இருந்தது. சுவருக்கு அப்பால் இருக்கும் உலகத்திற்கு அப்போதுதான் சூரியன் உதிக்கிற மாதிரி என் கண்களுக்கு கமராவின் வெளிச்சம் தென்படடது. கெளரியிடம் ஊர் விடயங்கள் பற்றிப் பொதுவாகப் பேசினேன். பாலு குனிவதும்
குமார்மூர்த்தி 79

Page 42
நிமிர்வதுமாக ஒரே டென்சனாக இருந்தான். உங்களுக்கு ஆட சேபணை இல்லையென்றால் சமைத்து சாப்பிட்டு விடடுப் போகலாம்; எனக்காகத்தான் கேடகிறேன் என்று சொன்னதும் கெளரி புன்சிரிப்போடு தலையை ஆடடிக் கொண்டாள். எப்போதோ செத்துப் போன கோழியை பிரிஜ்ஜில் இருந்து எடுத்து சமையலுக்கு அவளோடு உதவியபோது, பாலு எதிலும் கலந்து கொள்ளாமல் கதிரை நுனியில் விறைப் போடு இருந்தான். அவனுக்கு உள்ளூர மனம் இருந்திருக்கலாம், இருந்தாலும் ஆண்டபிள்ளையாயிற்றே என்ற கிறுக்குத்தனமும் கூடவே தொற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது.
கெளரியிடம் சொல்லிவிட்டடு பாலுவோடு வெளியில் வந்து நடந்த போது அடுத்த கட்டடத்தைப் பற்றி மனது தீவிரமாக அடித்துக்கொண்டிருந்தது. தேடகம் நூல் நிலையத்திற்குள் நுழைந்து பேப்பர்களை மேலோடட ம/ாக மேய்ந்துவிடடு வெளியில் வந்து நடந்தபோது, பாலு எனது கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தி ஏன் அண்ணை ஒன்றும் கதைக்கிறியள் இல்லை’ என்று உருகி ஓடும் பனி போல மெதுவாகக் கேட்டடான். என் மெளனம், அவனை மிகவும் வாடடியிருக்கிறது. எதையோ சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை மடடும் புரிந்துகொண்டேன். அவனை ஆதரவோடு அனைத்தபோது ஏக்கப் பெருமூச்சு விஸ்தாரமாக வெளியேறியது.
பாலு! நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் அளவுக்கு நீங்கள் சிறுபிள்ளைகள் அல்ல. நீங்கள் எவ்வளவு அன்பாக வாழ்ந்தீர்கள் என்பதை நான் சொல்லுவது அதைக் கொச்சைப் படுத்துவதாகத் தான் இருக்கும். நீ சிந்திக்கக் கூடியவன், புரிந்து கொள்ளக்கூடியவன் என்ற எண்ணத்தில்தான் ஆரம்பத்தில் இருந்தே மனத் தூய்மையோடு அவள் எல்லாவற்றையும் 80 முகம் தேடும் மனிதன்

சொல்லியிருக்கிறாள். அதை நி" சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட டாய். 2 66 g/60), u/ அலடசியம்தான் பிரச்சனையை வளர விட்டது என்பது என்னுடைய கணிப்பு. சம்பவங்கள் விபத்து மாதிரி நடப்பவை. அதைப் புத்தி சாதுரியத்துடன் தவிர்த்துக் கொள்பவன்தான் கெட்டடிக்காரன். இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் கெளரி இன்னும் சுற்று மதில் வீடடுக்குள் இருந்த கெளரியாகவே இருக்கிறாள். எந்த சூழ்நிலையும் அவளை மாற்றும் என்று நான் நம்பவில்லை. நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
உண்மைதான் அண்ணை, நானும் தவறு செய்து விட டேன். பணம், பணம் என்று அலைந்ததில் எல்லாவற்றையும் மறந்து. முதல் முறையாக அவன் தன் பிழையை ஒப்புக் கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
வீடடுக்குள் நுழைந்த போது ர“வியில் மறுபடியும் சுவர் உடைவதைப் பார்க்க வேண்டும் போல் மனது ஆதங்கப்பட்டது. கட்டடிய கைகளே அதை உடைத்த போது, மயிர்க்கால்கள் குத்திட்டடு நின்றதை, மனது மறுபடியும் நினைத்துக் கொண்டது.
கெளரியே சாப்பாடு பரிமாறினாள். நீண்ட நாள்களுக்குப் பின் ருசியான சாப்பாடு வளையல் கையால் என்று சொன்னபோது அவனையறியாத சிரிப்பில் பாலுவுக்கு புரையேறிற்று. சடுதியாக அருகில் சென்று தலையில் தட.டி விட்டடு தண்ணிர் எடுத்துக் கொடுத்தாள் கெளரி அவளாக இல்லை அவளின் உள்ளுணர்வுதான் அதை உரிமையோடு செய்திருக்க வேண்டும் என்று நினைத்தவுடன் எனக்கு அந்த ரூமை விடடு உடனடியாக வெளியேற வேண்டும் போல் இருந்தது.
குமார்மூர்த்தி 81

Page 43
அவசர வேலை, ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று பொய் கூறிவிடடு வீதிக்கு வந்து கால் போன போக்கில் நடந்தேன். உலகம் புதுமையாக இருந்தது. எதிர்ப்படும் மனிதர்களெல்லாம் சந்தோசமாக இருப்பதாகப் படடது. இந்த தனிமை அவர்களைச் சேர்த்து வைக்கலாம் அல்லாமலும் விடலாம். இடையில் நான் எதற்கு பூசாரி மாதிரி ஊரிலும் இதை விட அதிகம் பிரச்சனைகள் வந்திருக்கும். பெரியவர்கள் பேசித் தீர்த்திருப்பார்கள். ஆனால் இங்கே. ஏனோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் சங்கரி மாமாவின் நினைவு வந்தது. பாவம் மனுசர் நல்லவர்தான். கொஞ்சம் ஊர் மருந்து சாப்பிட்டடு விட்டடால் சீதனக்காணி ஞாபகம் வந்து விடும். மாமியோடு கலாடடா என்று சொல்லத் தேவையில்லை. இப்படித்தான் மூன்று சிறுவர்கள் வந்து குடும்பப் பிரச்சனை தீர்த்து வைக்கிறோம் என்று சொன்னபோது எந்த இயக்கம் தம்பியவை’ என்று எக்குத்தப்பாகக் கேட்டடுவிட்டார் சங்கரி மாமா. அவ்வளவுதான் நடமாட முடியாத மனிதனாகி விட்டடார்.
பழைய ஞாபகங்களை அசைபோடடு விடடு கடைசி ஆளாக பார்க்கை விடடுப் புறப்படும் போது நடுச் சாமத்தை தாண்டி விட்டிருந்தது. ரூமை எடடிப் பார்த்த போது விளக்குகள் அணைக்கப்படடு நிசப்தமாக இருந்தது. காருக்குள் சென்று முடங்கிவிட டேன்.
காலையில் ரூமுக்குள் போனபோது, பாலுவுக்குப் பின்னால் கெளரி ஒடடிக் கொண்டு நின்றாள். அவள் கண்கள் துருதுருத்தன. இருவரும் ஏதோ சொல்லவந்து சொல்ல முடியாத தவிப்பாய் விழுங்கிய போது, எனக்கு குட்பீர் என்று சிரிப்பு வந்தது. அதோடு அவர்களும் கலந்து கொண்டார்கள்.

மஞ்சள் குருவி
லேசான குளிரும் வெய்யிலும் சேர்ந்த இதமான காலை நேரம். அந்த நேரத்தை வெளியில் கழித்து விட வேண்டும் என்ற ஆவல் மிதக்க, ஆப்வொருவரும் கிடைத்த புல்தரைகளில் உடகார்ந்து கொண்டனர். சாவகாசமாக காலை நீட.டினர். கையைப் பின்புறமாக ஊன்றிக் கொண்டனர். சிலர் புல் நுனிகளைக் கிள்ளிப் பார்த்து விட்டு எறிந்தனர். இறுக்கமான உடையணிந்த பெண் ஒருத்தி மல்லாக்காகப் படுத்து இருந்தாள். சூழ்நிலை அவளை பரவசப்படுத்தியது. கண்களைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடியது.
வேலைக்கு நேரம் போய் விட.டதே என்ற அவசரர். சீக்கிரம் பஸ் வந்தால் நல்லது என்ற ஏக்கம், இன்னும் கொஞ்சம் அதிகமாக நிற்கலாமா என்ற தவிப்பு. ஒரு அந்தகார நிலை என்னை ஆட்ட கொண்டது. இன்றைய பொழுது இப்படியே இருக்க வேண்டும் என்ற ஆசை மேலிடடது.
காலை லேசாக இடம் மாற்றி வைத்தேன். நறுக் என்றது. குனிந்து பார்த்தேன். நெஞ்சு ஒரு கணம் துணுக்குற்றது. உற்சாக மெல்லாம் திடீரென வடிந்து விட்டது. மனம் சோர்ந்துவிட்டது. ஒரு சில பஸ்கள் என்னைக் கடந்து போயின. புதிய மனிதர்களும் வந்து
குமார்மூர்த்தி கீ8

Page 44
போயினர். எந்தவித சொரணையும் இல்லாமல் அந்தக் குருவியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதன் பழுப்பு மஞ்சள் இறக்கைகள் வெய்யிலுக்கு லேசாக மினுமினுத்தன. கால்கள் இரண்டையும் நீடடியபடியே மல்லாக்கக் கிடந்தது."சற்று நேரத்திற்கு முன்பு தான் அது இறந்திருக்க வேண்டும். அண்ணாந்து பார்த்தேன். மின்சாரக் கம்பிகள் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தன. பல குருவிகள் மின்சாரக் கம்பிகளில் உடகார்ந்து கீச்சுக் குரலில் கத்தின. உட்காருவதும் பறப்பதுமாக இருந்தன. அது துக்கம் விசாரிப்பது போலவும் இருந்தது. நியாயத்தைக் கேட்பது போலவும் இருந்தது. எங்களின் இருப்பை ஆட சேபிப்பது போலவும் இருந்தது. எல்லைகள் அற்ற இருப்பு அவைகளுக்கு. எப்போதும் சுதந்திரம் இறக்கைகளில் உண்டு.
எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்தமானது அந்த மஞ்சள் குருவி மடடும்தான். மஞ்சள் என்றால் அப்படி ஒரு மஞ்சள்! வெல் வெற் மாதிரிப் பளபளக்கும் இரட்டை இறகுகள் மட்டடும் ஓடும் நீண்ட வால். சின்னக் கொண்டை. அடிக்கொருதரம் வாலை சிடிக் சிடிக் என நிமிண்டி விடும், றோட டோரத்து மகிழம் மரத்தில் பார்க்கலாம். பாடசாலைக்குப் போகும் போது இருக்கும். ஒரு நிமிஷம் தானும் கிளையில் இருக்காது. தாவித் தாவி பழத்தைக் கொத்தித் தின்னும். நெருக்கமாக நின்று கவனித்தாலும் தன் செயலில் கருத்தாக இருக்கும். கையை நீட்டடினால் எடடத்திற்குப் போய்விடும். அதைப் பிடிப்பதற்கு நானும் முயற்சித்தது கிடையாது. தானாக வந்து கையில் உட்காராதா என்ற ஏக்கம் கிளம்பும். எதையும் அது பொருட்படுத்தாது.
பாடசாலைக்குப் பல நாட்டகள் தாமதமாகப் போயிருக்கிறேன். சிலவேளைகளில் அந்த வழியால்
84 முகம் தேடும் மனிதன்

போகும் நமசிவாய வாத்தியார், என் காதைப் பிடித்து கூட்டடிக் கொண்டு போவதும் உண்டு. என் படிப்பு முடிந்த பின்னும் அந்த மஞ்சள் குருவியில் மாற்றம் இல்லை. ஊரை விடடுப் புறப்படும்போது அதைப் பார்த்து பொறாமை கூட வந்தது. மனிதனாகப் பிறந்திருக்கக்
கூடTது.
இங்கு வந்தபின் சில நாட்கள் வரை ஊரும், பள்ளிக் கூடமும், நண்பர்களும், மஞ்சள் குருவியும் நினைவைச் சுற்றிச் சுற்றி வந்தன. கூண்டில் அடைத்தது போல் தவிப்பாக இருந்தது. சூழ்நிலையும் நிர்ப்பந்தங்களும் என்னை அழுத்திப் பிடித்த போது எல்லாமே தேய்ந்து போயிற்று.
நீண்ட காலத்திற்குப் பின் ஊர் நண்பன் வந்திருந்தான். ஊரைப் பார்த்த சந்தோஷம் எனக்கு. நினைவுகள் ஸ்படிகமாக வந்து போயிற்று. ஒவ்வொன்றையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்று மனம் உந்தியது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரே பதிலாக ஊர் சுத்தமாக இருக்கிறது என்றான்.
அப்படி யென்றால் என்றேன்.
வெறும் மண்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் அழித்து விடடார்கள் என்றான்.
நெஞ்சில் நெருடிற்று. கற்பனை பண்ணிப் பார்த்தேன். தொடர்பறுந்து போன கனவுகள் மாதிரி பழையதும் புதியதும் மாறி மாறி வந்தன. பின்னாளில் அதுவும் உருக்குலைந்து போயிற்று.
குனிந்து அந்தக் குருவியை எடுத்தேன். அது சில்லென்று குளிர்ந்தது. பக்கத்தில் நின்றவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். என் உடலெல்லாம் ஒரு
குமார்மூர்த்தி 85

Page 45
கணம் மயிர்க்காலிடடது. சூழ்நிலை என்னைக் கரைத்து விட்டது. பிரியமான மஞ்சள் குருவி கையில் இருப்பது போன்ற பிரமை தடடியது. அதன் இறக்கைகளை நீவிவிடடுக் கொண்டேன். இதன் உயிர் மீண்டும் வராதா என்ற ஏக்கம், ஒரு கணம் ஓடி மறைந்தது.
வேலி ஓரத்து பூஞ்செடிக்குள் பத்திரமாக வைத்து விட்டு வேலைத் தலத்து இயந்திரங்களுக்குள் சங்கமித்து விடடாலும் இயந்திரங்களின் இரைச்சலும் மீறி என் ஊரின் சலசலப்பு ஓங்கி ஒலித்தது.
நுழைவாயிலில் அகன்ற ஆலமரம். அதோடு உயர்ந்து நிற்கும் பிள்ளையார் கோவில். சப்பறத்திற்குப் பின்னால் நீள்வடிவ மைதானம். அரை மைல் போனால் பட் வடிவப் பள்ளிக்கூடம். அதற்கு முன்னால் சிறியதும் பெரியதுமான கடைகள். பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்கால். தெற்குப் பக்கமாக பச்சை பசேலென்ற நெல்வயல்கள், அதையும் தாண்டினால் கிடுகிடுவென வளர்ந்த காட்டடு மரங்கள். அதற்குள் தொப்பென இறங்கும் கீழ்வானம்.
புழுதியை வாரியடித்து வந்து போகும் டவுன் பஸ். எந்த முகாந்திரமும் இல்லாமல் குரைக்கும் நாய்கள். இராக்குருவிக் கத்தலுக்கு, வீடடுக்குள்ளேயே அடைந்து கிடைக்கும் இளவடடங்கள்.
எல்லாமே ஒரு அதிகாலை வேளையில் இரண்டு இளைஞர்களை இரத்த விலாறாக்கி நாற்சந்தியில் போடட இராணுவத்தின் வருகையோடு சோபை இழந்து
விட.டன.
அவதானமும், குசுகுசுப்பும், சந்தேகப்படுதலும் தொற்றிக் கொண்டு ஒவ்வொருவரையும் வாடடி யெடுத்தது. காலடியோசையைக் கூட காது கொடுத்துக் கேட்கும் பக்குவமும் அதைப் பிரித்தறியும் சாமர்த்தியமும் 86 முகம் தேடும் மனிதன்

கூட சாதாரணமாகியது. சோகம் எப்போதும் இழை யோடிக் கொண்டிருந்தது, பின்னால் மரணிப்வர்களுக்குக் கூட சோகம் தயாராகக் காத்திருந்தது.
மாலையில் வீடு திரும்பும் போது மனம் விச்சிராந்தியாகி வேறு வாழ்வின் அந்தலைகளை ஆராய்ந்தது மனம். ஒளிக்கற்றை போல் கண்ணுக்குத் தெரியாத சோகம், பகிர்ந்து கொள்ள முடியாத பரிதவிப்பு. நெஞ்சு கனத்தது.
சமையலறைக்குள் நுழைகிறேன். மனைவி வேகத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள். நாள் முச்சூடும் தையல் இயந்திரத்தோடு போராடி தோற்றுபோன களைப்பு அவள் முகத்தில் வடிந்து கொண்டிருந்தது பிள்ளை பராமரிப்பு விடுதியில் இருந்து விடுபட்டட குசியில் ஒவ்வொரு சுவரையும் தொட்டு அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தாள் மகள். அன்றைய தேதிக்குக் கட்டட வேண்டிய பில் எல்லாம் மேசையில் இறைந்து கிடந்தன.
என் சோகத்தை மனைவியிடம் சொன்ன போது ஐயோ பாவம்' என்றாள், விறைத்துப் போன கோழியை வெட்டடிக் கொண்டே. யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவள். இந்தக் கட்டிடக் காடடின் சிக்கலை சிக்கெடுத்து வாழத் தெரிந்தவள். என் சோகத்தைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் துடிப்பு அவள் கண்களில் முடடுகிறது. இந்த விசாரிப்புதான் என் ஆத்மாவையும் நம்பிக்கையையும் அணைய விடாமல் தடுப்பது.
ரெலிபோன் கிணுகினுக்கிறது. ஆயுள் காப்புறுதி மலிவு விலைக்கு இருக்கிறது என்கிறார் ஒரு கனவான். சிரிப்புதான் வருகிறது. அவருக்கு ஏதோ சொல்லி சமாளித்துவிடடுப் போனை வைக்கிறேன். மகள் வந்து ஒட்டடிக் கொள்கிறாள். அவளின் கீச்சுக் குரலோடும்
குமாமூர்த்தி 87

Page 46
சமையலறையின் மணத்தோடும் பியர் நுரையின் குளிர்ச்சியோடும் மனம் லேசாகிப் போகிறது.
என் தேசமும் மஞ்சள் குருவியும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து நாளைய வேலை பற்றிய பட படப்பு தொற்றிக் கொள்கிறது.


Page 47
அரசியலின் அசுரப்பிடியில் ஈழத் தமிழர் வாழ்வி: கோரங்களையும் தனிமனி பின்புலங்களினூடாகவும். புறமும் ஆன ஊடுபா குமார்மூர்த்தி தம் UGölü கிறார். அவர் படைப்ட வரலாறன்றி வேறில்லை.
படைப்பின் களன்களிலா8 தனித்துவமிக்க பார்வைச்
மனோபாவங்களிலாக
நெறிகளிலாகட்டும் குமார் விசேஷ அடையாளங்கள்
காலம் ெ

சிக்குண்டு அல்லலுறும் ன் அவலங்களையும் த - குடும்ப - சமூகப் அவற்றின் உள்ளும் ாவலின் மூலமாகவும் புகளில் வெளிப்படுத்து புகள் ஒரு காலத்தின்
கட்டும். படைப்பாளியின் களிலாகட்டும், படைப்பு ட்டும், படைப்பாக்க மூர்த்தியின் எழுத்துகள் 1 கொண்டிருக்கின்றன.
வளியீடு