கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முத்துமீரான் சிறுகதைகள்

Page 1
S, 4 V yR
。 ്യ
EE_
7 /
 
 
 
 
 
 
 
 


Page 2

முத்து மீரான் சிறுகதைகள்
எஸ். முத்து மீரான்

Page 3
முதற்பதிப்பு : ĜLD 19 ? 1
உரிமை எஸ். முத்துமீரான் (C)
வெளியிடுவோர் : மீரா உம்மா நூல் வெளியீட்டகம்
Guirgi'
கிந்தவூர் 01
ழரீலங்கா
அச்சிட்டோர் : மில்லத்யிரிண்டர்ஸ் 16,அப்புமேஸ்திரி தெரு, 6F6F260T-60000l.

அணிந்துரை
இலக்கியம் வாழ்க்கையை பிரதிபலிப்பது. மனிதர்கள் வாழும் விதங்களையும் அவர்களுடைய இயல்புகளையும் உணர்ச்சிகளையும் செயல்பாடுகளையும் படம் பிடித்துக் காட்டுவது.
வாழ்க்கை உயர்வுகள், சிறப்புகள், நல்லன மட்டுமே கொண்டிருக்கவில்லை. தாழ்வுகள், சிறுமைகள், தீய அம்சங் கள் முதலியவற்றையும் தன்னிடம் கொண்டுள்ளது. மனிதர் கள் மாண்புகள் பெற்றவர்களாக விளங்குவது போலவே, குறைபாடுகள் பலவீனங்கள் முதலியவற்றையும் பெற்றிருக் கிறார்கள். s
வாழ்க்கையையும் மனிதர்களின் போக்குகளையும் இலக்கியமாக்க முயல்கிறவர்கள் அனைத்தையும் உள்ளது உள்ளபடி எழுத்திலே சித்திரிக்கிறார்கள்.
இலக்கியத்தின் ஒரு அம்சமான சிறுகதை "வாழ்க்கையின் சாளரம்" என்று சொல்லப்படுவது உண்டு. வாழ்க்கையை அது காட்சி அளிக்கிறபடி திறந்து காட்டுகிறது சிறுகதை.
இத்தகைய சிறுகதைகளைப் படைப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் இலங்கை எழுத்தாளர் எஸ். முத்துமீரான், இவ் உண்மையை "முத்துமீரான் சிறுகதைகள்" என்ற இத் தொகுப்பு நன்கு புலப்படுத்துகிறது.
வழக்குரைஞர் முத்துமீரான் "பிரசித்த நொத்தாரிசு, சமாதான நீதவான், சத்திய ஆணையாளர்" என்று அறியப் படுபவர். அவருடைய இத்தன்மை அவரது எழுத்திலும் வெளிப்படுவதை "முத்துமீரான் சிறுகதைகள் காட்டு கின்றன.
வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டவர்கள், ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், உழைத்தும் உரிய

Page 4
d
u RvRP METŮ GAuto (ypiquumruDéð Asíî4øgh (Asrt sarrer stad? போன்றோரின்- உண்மைத் தன்மையை எடுத்துக் காட்டி, அவர்களது உரிமைக்குரலை ஒலிக்க வைக்கும் கதைகளை அவர் படைத்திருக்கிறார். நீதிக்காகவும், மக்களின் நல்வாழ் வுக்காகவும் குரல் எழுப்புகின்றன அவரது கதைகள், மனித நேயத்தோடும், சத்தியப் பற்றுடனும் முத்துமீரான் பிரச்னை களை கதைகளில் எடுத்துக் கூறுகிறார்.
இவற்றை அவர் பிரசாரம் போல் செய்யவில்லை; கதை மாந்தரின் உள்ளத்து உணர்வுகள். பேச்சுகள், செயல்கள் மூலம் கலைத்தன்மையோடு வெளிப்படுத்துகிறார். இது பாராட்டுதலுக்கு உரியது.
"என்னைப் பொறுத்தவரையில் எல்லாரும் மனிதர்கள் தான். எனக்கு ஒரு கடவுள் இருப்பாரேயானால் அவர் உங் களுக்கும் இருக்கட்டும். என் போன்ற உயர்சாதிகளுக்கு மட்டும் தான் அவர் இருந்தால், எனக்குச் சாதியும் வேண் டாம், கடவுளும் வேண்டாம். நான் விரும்புவதெல்லாம் புனிதமான உள்ளத்தைத்தான்" இப்படி ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. இதுதான் போற்றத்தகுந்த உயர் மனிதம் என் பதில் சந்தேகம் இருக்க முடியாது.
வாழ்க்கையில் இந்த உயர்பண்பு சகஜமாகக் காணப்படு வதில்லை. இன்றைய நிலையை "பெளர்ணமி நிலவில் உணர்ச்சிகள் துடிக்கின்றன" என்ற கதையில் குமார் என் பவன் அழுத்தமாக எடுத்துச் சொல்கிறான்:
"மனிதன் மிகக் கேவலமானவன். சுயநலக்காரன். தன் சுயநலத்திற்காக, மனித வாழ்க்கையின் அடித்தளத்திலேயே வெடிப்பை உண்டாக்கி விட்டான். கடவுளைத் தன் இச்சைப் படி மாற்றிக் கொண்டான். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று உயர்த்திக் கொள்ளும் மனிதனால், அவன்உள்ளத்தை மட்டும் உயர்த்திக் கொள்ள முடியவில்லையே."
இந்த ஆதங்கம் இக்கதைகளின் ஆசிரியருக்கு இருப்பதை அவருடைய கதைகளின் வாயிலாக உணர முடிகிறது. வலிய

வர்களின், செல்வர்களின், சுயற்லப்போக்கையும் பிறரை சரண்டிக் கொழுக்கும் தன்மையையும், பொதுநலப்பணிசமூக சேவை என்ற போர்வையில் சுயலாபநோக்குடன் மனிதத்தன்மையற்ற முறையில் அவர்கள் நடந்துகொள்கிற விதங்களையும் முத்துமீரான் பல கதைகளில் உணர்ச்சிகர மாக சித்திரித்துள்ளார்.
"சமயவாதிகளாலும், பிற்போக்குவாதிகளாலும் உரு வாக்கப்பட்டு, அவர்களின் அகுசையான ஆத்மாக்களின் இற்றுப்போன இதயராகங்களாக குமிழ்விட்டுக் கொண்டி ருக்கும் ஈனத்தனங்களும், குருட்டுக் கொள்கைகளும் அவர் களுக்குள்ளேயே சமாதியாகட்டும். வாழ்க்கை எல்லோருக்கும் இனிக்கட்டும்!" என்று குமார் என்கிற கதாபாத்திரம் குறிப் பிடுகிறது. இதுவே முற்போக்குச் சிந்தை கொண்ட முத்து மீரானின் இதயஒலி என்பதை அவருடைய கதைகள் அறிவுறுத்துகின்றன.
மணிகப் பண்புகளை, அன்பை, கருணையை, பிறருக்கு உதவும் நல்ல உள்ளத்தைக் கொண்ட மனிதர்களையும் அவர் திறமையாக உருவாக்கி உலாவவிட்டிருக்கிறார் தன் கதைகளில், மக்களின் பேச்சு நடையிலும், அழகான நயங்கள் சேர்ந்த நடையிலும் அவர் கதைகளைப்படைத்து தனது எழுத்தாற்றலை திறமையோடு புலப்படுத்தியிருப்பதை பாராட்ட வேண்டும்.
நூறு சிறுகதைகள் எழுதியுள்ள முத்துமீரானின் முதல் சிறுகதைத் தொகுப்பு இதுதான் என்று அறிகிறேன். அவரு டைய இதர பல கதைகளும் தொகுப்பாக வெளிவந்து அவரது எழுத்துத் திறமையையும் முற்போக்குச் சிந்தனை உள்ளத்தையும் வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு காலம் துணைபுரிய வேண்டும். அவருக்கு எனது பாராட்டுக்களை யும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 10. வள்ளலார் ஃபிளாட்ஸ் புதுத்தெரு, லாயிட்ஸ் ரோடு வல்லிக்கண்ணன் சென்னை 600 005

Page 5
என்னுரை
நான் ஒடியாடித் திரிந்த என் கிராமத்து மண், கள்ளம் கபடமற்ற அதன் மக்கள். அவர்களின் தூய்மை நிறைந்த வாழ்க்கை, பாசவுணர்வுகள், உள் உந்தல்கள், இவைகளில் குமிழ் விட்டு மறைந்த சுழிவு நெளிவுகள், சுருக்குகளின் பிரதிபிம்பங்களே இச்சிறுகதைகள்.
962ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டு வரையில் நான் எழுதிய சிறுகதைகளில் பதின்மூன்றை இத்தொகுப்பில் சேர்த்து அளிப்பதில் பெரு மகிழ்ச்சியும், மனநிறைவும் அடை கிறேன். இப்பதின்மூன்று சிறுகதைகளும், என் இதயத்தை தொட்டுக் தடவி, என்னுள் எத்தனையோ பளுக்களை உருவாக்கி என்னோடு உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட துயர கீதங்கள். இவைகள் வெறுங் கற்பனை குப்பைகளல்ல. வாழ்ந்து களைக் துப்போன, வாழுகின்ற, வாழத்துடிக்கன்ற ஜீவனுள்ள மனித ஆத்மாக்களின், உணர்ச்சி பூர்வமான வெளிப்பாடுகள்.
இச்சிறுகதைகளைப் படிக்கும் போது, உங்களை, உங்கள் உறவினர்களை, உங்கள் உள்ளங்கவர்ந்தவர்களை, உங்க ளால் வெறுக்கப்படுபவர்களை நீங்கள் சாதாரணமாகத் தரி சிக்கலாம். இவர்கள் எல்லோரும் என் யதார்த்த பூர்வமான தரிசகர்கள்
வாழ்க்கை வர்ணமயமான மலர் தோட்டமாகவும், இனிக்கும் விருந்தாகவும் மட்டுமே காட்சி தருவதில்லை; கோரங்களும், கொடுமைகளும், வஞ்சனைகளும், சின்னத் தனங்களும், கசப்புகளும் வெறுக்கப்பட வேண்டியவைகளும் மண்டிக்கிடக்கின்ற கலவையாகவும் தான் இருக்கிறது அதை இச்சிறுகதைகள் சுட்டிக்காட்டமுயல்கின்றன.அவ்வளவுதான்" இச் சிறுகதைத் தொகுப்பிற்கு அன்போடு அணிந்துரை தந்துதவிய முதுபெரும் எழுத்தாளரும், சிறந்த இலக்கிய விமர்சகரும், சாகித்திய அகாடமி பரிசு பெற்றவருமான திரு. வல்லிக்கண்ணன் அவர்கட்கும், இந்நூல் வெளிவர பல வழிகளில் எனக்கு உறுதுணையாக இருந்த என் நண்பர் களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள். இத்தோடு, இந்நூலை இவ்வளவு அழகாக அச்சிட்டுத் தந்த மில்லத் பிரின டர்ஸ் உரிமையாளர் ஆலி ஜனாப், பிரபல நாவலாசிரியர், எம். செய்யிது முகம்மது ('ஹஸன்") அவர்கட்கும், அதன் தொழிலாளர்களுக்கும், மீரா உம்மா நூல் வெளியீட்டாளர் களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள், “@山前命”” எஸ். முத்துமீரசன் நிந்தவூர்-01. பூரீலங்கா

பதிப்புரை
கவிதை, சிறுகதை, உருவகக் கதை, வானொலி நாடகம், நாட்டார் பாடல்கள், ஆராய்ச்சிகள், விமர்சனம் ஆகிய துறைகளில் இலங்கையில் மட்டு மில்லாது இந்தியாவிலும் புகழ் பெற்றுள்ள எழுத் தாளரும், கவிஞரும், ஆராய்ச்சிய7ளருமான சட்டத் தரணி எஸ். முத்துமீரான் எல். எல். பி. , என். பி., ஜே. பி. அவர்களின் ஆக்கங்களைத் தொடர்ந்து வெளி யிடவுள்ளோம். அன்னாரின் பலவருட ஆராய்ச்சித் தொகுப்பான 'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம்" என்னும் சிறந்த நூல் எங்களின் முதல் வெளியீடாக அண்மையில் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து எமது இரண்டாவது வெளியீடாக, "முத்து மீரான் சிறுகதைகள்' என்னும் இந்த நூலையும் வெளி யிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலையும் பெருமனம் கொண்டு ஏற்று மகிழும் என நம்புகிறோம். அடுத்து "முத்து மீரான் கவிதைகள்" என்னும் அரிய தொகுதி யையும் வெளியிடவுள்ளோம்.
அதனையும் தொடர்ந்து அவரின் மற்ற நூல்கள் மட்டுமின்றி, தகுதியும், தரமும், ஆழமும் உள்ள பிற ஆக்சங்களையும் வெளியிட எமக்கு முழுமனதோடு கை கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-மீரா உம்மா நூல் வெளியீட்டகம்

Page 6
l
3.
உள்ளே.
பக்கம்
காணிக்கை s
வண்ணநிலா புன்னகை செய்கிறது!
ஈறல் 2
சாக்காட்டில் ஒரு சமுதாயம் வாழ்கிறது! 9
புயலும் பசியும் 24
புதிய உலகம் ஜனிக்கிறது! O
பெளர்ணமி நிலவில் உணர்ச்சிகள் துடிக்கின்றன! 36
பாவம் அவர்கள் பொதுநல வாதிகள் 44
அவள் கனவுகள் உயிர் பெறுகின்றன! 50
இதயம் அழுதுகொண்டே இருக்கிறது! 56
இருளுக்கும் நிழலுண்டு 63
அவர்கள் தேவனின் குமாரர்கள்! 68
அவரொரு அன்று பிறந்த பாலகன் 75

காணிக்கை
(என்னுரை :
இலக்கியம் வாழ்க்கையின் பிரதிபிம்பம். வாழ்க் கையில் அற்புதமான, அற்பத்தனமான - போற்றவும், தூற்றவும் கூடிய - எத்தனையோ நிகழ்ச்சிகள் விரவிக்கிடக்கின்றன. இந்நிகழ்ச்சிகளில் ஏதோ ஒரு வழிபாட்டின் பிறப்பே இச்சிருஷ்டி.
இச்சிருஷ்டியில் தத்துவ வி சாரத் தி னா ல் புரிந்தோ, புரியாமலோ இருக்கக்கூடிய "சுருக்குகள்" பலவற்றைக் காணக்கூடும் இதுவெல்லாம் சாதாரண மானவை. (காந்த) விசைக் கோட்டின் பாதையில் பிணைந்த, பிணைபட்ட இரும்புத்தூள்கள்.
ஆகவே, கருவின் கருக்களின் பிணைப்பை, சக்தியின் தோற்றப்பாடுகளை, அதன் வழிப்பாட்டு முறைகளைப் புரிய, புரிந்துகொள்ள முடியாத, நுனிப் புல்லோட்ட வெள்ளாட்டு வாசகர்கள் - இச் சிருஷ்டியினை தவறாகப் புரிந்து கொண்டால் தமியேன் அதற்குப் பொறுப்பாளியல்ல)
விடியச்சாமம். நான் எங்கு மூத்தம்மாட வலக் கையைப் புடிச்சிக்கிற்கு கடக்கரப் பள்ளிக் கொடியேற்றத்திற்கு, நேந்த நாரிசாவும் காணிக்கையிம் எடுத்துக்குப் போறன். எனக்கு அம்மாப் போட்டு பண யாரமும் உறட்டியிம் கடக் கரப் பள்ளிக்கு சுட்டுக் குடுக்க, எங்க உம்மா நேந்து வெச் சயாம். லாவு விடிய விடிய எங்கு உம்மாவும் மூத்தம்மாவும் பணியாரமும் உறட்டியிம்தான் சுட்ட. நான் இண்டைக்குத் தான் முதன் முதலாப் போறன். எங்கு மூத்தம்மா கனக்க நாள் போயிரிக்கா. நானும் எங்கு வாப்பாவும் தீப்பளயத்

Page 7
s முத்து மீரான் சிறுகதைகள்
திக்குப் போய்த்தளப்பத்துக் கொத்தும், சோறாக்கிற பான யிம் வாங்கி வந்திருக்கம். பீப்பளயத்திக்கு உறட்டியிம் பணி யாரமும் கொண்டு போகல்ல. அங்க நல்ல வடிவான பாவப் புள்ளயெல்லாம் வித்தாங்க. எனக்கொரு பாவப்புள்ள வாங்கித் தரச் செல்லி நான் குழறியிம், எங்கு வாப்பா வாங்கித் தரல்ல. இண்டைக்கு எங்கு மூத்தம்மா கட்டாயம் பாவப்புள்ள வாங்கித் தருவா.
"கெதியா நடந்து வா மன"
எங்கு மூத்தம்மா பணியாரப் பொட்டியத் தலயில வெச்சிக்கிற்ரு உரமா நடந்து போறா. அவ ஒவ்வொரு நாளும் விடியச்சாமத்தில எழும்பித் தலையில பாய்க்கட்ட வெச்சிகிற்ரு வட்டைக்க போய்ப்போய் நல்ல பழக்கம். எனக்கு இப்பதான் எட்டு வயசி. அவவோட நான் நடக்கமாட்டன்.
"றோட்டப் பாத்து வா மன. கல்லுக் கில்லு கிடந்து கால்ல அடிச்சிரும்."
எங்கு மூத்தம்மாக்கு என்னோட நல்ல இரக்கம். எங்கு உம்மா மட்டும் தான் அவக்குப் புள்ள. நான் மட்டும்தான் எங்கு உம்மாக்குப் புள்ள. பள்ளிக்குடத்துக்குப் போகாட்டி எங்கு உம்மா எனக்கு உரமா அடிப்பா. ஆனா, எங்கு மூத்தம்மா அறவே அடிக்கமாட்டா. எனக்கு மூத்தம்மாவோ டத்தான் நல்ல விருப்பம். ஒவ்வொரு நாளும் மூத்தம்மா தான் கடலக் கொட்டையிம் முட்டாசிம் வாங்கித்தாற. நான் படிக்கிற பள்ளிக்குடத்துக்குப் போகாட்டியிம், எங்கு மூத்தம்மாதான் கூட்டிக்குப் போய்ப் பெரியையாட்டச் செல்ற. எங்கு பெரியையைா பள்ளிக்குடத்துக்குப் போகாட்டி உரமா அடிப்பாரு. எங்கு மூத்தம்மா வந்து சொன்னா அறவே அடிக்க மாட்டாரு. எங்கு மூத்தம்மா தங்க elpájg5lt LDIT......
"சைக்கிள் காறெல்வாம் வருகுது றோட்டப் பாத்துக் 56AJ GOTLDT 6.urt LD67””

காணிக்கை
எங்கு மூத்தம்மாக்கு காறெண்டாச் சரியான பயம். எனக்கு ஒளுப்பமும் பயமில்ல. நான் எங்கு வாப்பாவோடக் கணக்க நாள் ஆசிபத்திரிக்கும், படத்திக்கும் காறுல GBL unruffji 66ir........
"காசக் கவனமா வெச்சிக்க மன.”*
எங்கு உம்மா எனக்கு வலுரன் வாங்கப் பத்திச் சதமும், பள்ளிக்க காணிக்க போட அம்பது சதமும் தந்திரிக்கா. எனக்குக் காணிக்க போட அறவே விருப்பமில்ல. பாவப் புள்ள வாங்கத்தான் எனக்கு நல்ல விருப்பம். எங்கு மாமாட மகன் சலீம் ஒரு வடிவான பாவப்புள்ள வெச்சிரிக் கான். அதப் பாக்கையிம் எனக்குத் தரமாட்டான். இண் டைக்கு நானும் பாவப்புள்ள வாங்கி, அவனுக்குப் பாக்கை யும் குடுக்கமாட்டன். அவனோட எனக்குச் சரியான கோவம். மூத்தம்மாவோடத்தான் எனக்கு நல்ல விருப்பம்.
'பிராக்குப் பாராமச் சட்டுப்பண்ணி நடந்து வா மன"
எங்கு மூத்தம்மா ஒடி ஒடி நடந்து போறா. எனக்கு அவவப்போல நடக்க ஒண்ணா. எவ்வளவு சனம்தான் வருகிது. எல்லாரும் புதுச்சட்ட சாமான்தான் போட்டு வாறாங்க. எனக்குப் புதுச்சாமானில்ல. எங்கு வாப்பா கிழிநெச்சிக்கு வெள்ளாம வெட்டப் போயிரிக்காரு. அவரு வந்து எனக்குப் புதுச்சட்டையிம் றவிசரும் வாங்கித் தரு வாரு. புதுறவிசரும் சட்டையிம் போட எனக்கு கணக்க ஆச. எங்கிட ஊட்டுக்குப் பின்னால இரிக்கிற வாத்தியம்மாட மகன் தயாநிதி, எவ்வளவு புதுச் சட்டையிம் றவிசரும் வெச் சிரிக்கான். அவனும் நான் படிக்கிற பள்ளிக்குடத்திலதான் படிக்கிற. என்ர மேசைக்குப் பக்கத்திலதான் அவன்ட மேசை யிம். அவன் சரியான எரிச்சக்காறன். என்ற றவிசரும் சட்டையிம் நாத்தமெண்டு என்ன ஒவ்வொரு நாளும் கேலி பண்ற. எங்கிட வகுப்புச் சேறுக்கும் அவனோடத்தான் நல்ல இரக்கம். நான்தான் எங்கிட வகுப்பில முதலாம்புள்ள. தயாநிதிக்கு அறவே கணக்குத் தெரியா. என்ர கணக்கப் பாத்துத்தான் அவன் செய்யிற. நான் கணக்குக் காட்டாட்டி

Page 8
முத்து மீரான் சிறுகதைகள்
எனக்கு அவன் அடிக்கிற. அவனோட எனக்கு அறவே விருப்பமில்ல.
'மன ! அன்னா தெரியிறதான் கொடியேத்தப் பள்ளி, கெதியா எட்டிப்போடு வாப்பா."
இப்பதான் எனக்கு மூத்தம்மாவ முந்திக்கு ஒட விருப்ப "மாயிரிக்கு. பள்ளியடிக்குப் போய் முதல்ல பாவப்புள்ள தான் வாங்கணும். பாவப்புள்ளய வாங்கி றவிசருக்க வெச்சிப் போட்டுத்தான் பள்ளிக்க போகணும். நான் சிவத்த பாவப்புள்ளதான் வாங்கணும். எங்கு மாமாட மகன் சலீமும் சிவத்தப் பாவப்புள்ளதான் வெச்சிரிக்கான். என்ர பாவப்புள்ளய நான் ஆருக்கும் குடுக்க மாட்டன். சலீண்ட பாவப்புள்ளட தலயில ஒழுப்பம்போல உடஞ்சிரிக்கு. அவன்ட நல்லா உடஞ்சாத்தான் எனக்கு நல்லம். என்ர பாவப் புள்ளய நான் ஒவ்வொரு நாளும் சவுக்காரம் போட்டுக் கழுவுவன். அவன் சலீம் ஒரு நாளும் கழுகிறல்ல.
"ஆக்களெல்லாம் வருகிது கைய உட்றாம நல்லா இறுக்கிப் புடிச்சிக்க மன".
கறுத்தக் காறு, சிவத்தக் காறு, வெள்ளக் காறு, பச்சக் காறு எவ்வளவு காறுகளத்தான் கிடக்கு. எல்லாம் புதுக் காறுகள்தான். ஏன்ர வாப்பா ! எவ்வளவு சனம்; எவ்வளவு கட, நடக்கக்கூட இடமில்ல. சீ ! வெக்கமில்லாம ஆம்புள யழும் பொம்புளயழும் ஒண்டா நடந்து போறாங்க. எங்கிட ஊரில ஆம்புளயக் கண்டா பொம்புளயெல்லாம் மொக்காட்ட உரமா இழுத்துப் போட்டுக்கு, ஒதுங்கிப் போவாங்க. இஞ்ச, ஆம்புளயிம் பொம்புளயிம் ரோசமில்லாம கிட்டக்கிட்ட நிக்காங்க, அன்னா ஒரு பெரிய பொம்புளப் புள்ளைக்கு ஒருவன், முளங்கையால் இடிச்சிப் போட்டுப் போறான். வளிசல், தீப்பள்ளயத்திலயிம் இப்படித்தான் பொம்புளை யிம் ஆம்புளையிம் ஒண்டாத்திரிஞ்சாங்க. இதுவும் தீப்பள்ள ய்த்தப் போலத்தான் இரிக்கு. எவ்வளவு சாய்வுமாருதான் றவ்வாணம் கொட்டிக்குப் படிக்காங்க ஒரு சாயிஷ் யே எழும்பினவன் மாதிரி, தலயில ஊசியால குத்திக்கிற்ரு

Inrif --
கத்திறான். சீ ! எனக்கு அவனப் பாக்கவே விருப்பமில்ல; ஆக்களெல்லாம் நாலஞ்சி மரக்கட்டைக்கி மண்ணக் கூட்டி, மணக்குச்செல்லாம் கொழுத்துறாங்க. எனக்குச் செரியான சிரிப்புத்தான். எங்கு மூத்தம்மாவும் ரெண்டு மணக்குச்சக் கொழுத்திப் போட்டு மண்ணக் கூட்டினா.
"காலக் கழுவுவம் இஞ்ச வா மன. காலக் கழுவிப் போட்டுத்தான் பள்ளிக்க போகணும்."
நானும் மூத்தம்மாவும் காலக் கழுவிக்கி பள்ளிக்க போய், பணியாரத்தையிம் உறட்டியையிம் குடுத்துப் போட்டு வாறம், பள்ளிக்க அவுலியா அப்பா பச்சக் குப்பாயம் போட் டுக்கு இரிக்காரெண்டு, மூத்தம்மா பொய் செல்லிப்போட்டா. பள்ளிக்க எல்லாம் ஆக்கள்தான் இரிக்காங்க. அவுலியா அப்பாவைக் காணல்ல. எங்கிட பணியாரத்தையிம் உறட்டி யையிம் அவுலியா அப்பா திங்கமாட்டாரு. வீணாகத்தான் பணியாரமும் உறட்டியிம் கொண்டாந்த, மூத்தம்மா என்ன நல்லா ஏமாத்திப் போட்டா. எனக்கு இப்ப மூத்தம்மா வோட விருப்பமில்ல. பொய் செல்றவங்க கூடாதவங்க எண்டு, சேறுதான் சென்ன.
"வா மன மணறாவில காணிக்கையப் போட்டுட்டு வருவம்...”*
மணவிறா எவ்வளவு பெரிசி. ரெண்டு தென்னமரத்திர உயரமிரிக்கும். எவ்வளவு கண்ணாடியத்தான் பதிச்சிரிக் காங்க. பச்சக் கண்ணாடி, சிவத்தக் கண்ணாடி, நீலக் கண்ணாடியெல்லாம் பளிச்சிப் பளிச்செண்டு வெட்டுது. பாக்க எவ்வளவு வடிவாத்தானிருக்கு.
'தம்பி! றவிசரிக்க இரிக்கிற காச எடுத்து, விஸ்மில்லாச் செல்லி அந்த ஒட்டைக்குள்ள போடு மன."
எனக்கு காசி போட அறவே விருப்பமில்ல. ஒட்டைக் குள்ள காசப்போட்டா, எப்பிடிப் பாவப்புள்ள வாங்கிற. எவ்வளவு வடிவான பாவப்புள்ளயத்தானிரிக்கு. அதுக்கு

Page 9
முத்து மீரான் சிறுகதைகள் முன்ன, ஒட்டைக்குள்ள காசப் போட்டா அவுலியா அப்பா ள்ப்பிடி எடுக்கப்போறாரு இஞ்சதான் அவுலியா அப்பா இல்லியே. மூத்தம்மாவுக்கு அறவே புத்தியில்ல. இல்லாட்டி ஒட்டைக்குள்ள காசப் போடச் சொல்லுவாவா. நான் ஒட்டைக்குள்ள காசப் போடல்ல. ஆனா, மூத்தம்மா பாவப் புள்ள வாங்கித் தாறெண்டு சொல்லிப் போட்டு, என்ர றவிசருக்க கையை ஒட்டிக் காச எடுத்து; ஒட்டைக்குள்ள போட்டுட்டா. கடசில நான் எவ்வளவு கெஞ்சியிம் மூத்தம்மா பாவப்புள்ள வாங்கித் தரல்ல. நான் எவ்வளவு நெனப்பெல்லாம் நெனச்சிருந்தன். என்ர எல்லா நெனப்பும் மண்ணாப் போச்சி. சலீம் செரியாத்தான் கேலி பண்ணு வான். அவனுக்கு முன்ன, மூத்தம்மா என்ன ஊமையாக்கிப் போட்டா. அவன் பொல்லாத வளிசல். மூத்தம்மா நல்ல மூத்தம்மா. காசி இரிந்தாக் கட்டாயம் மூத்தம்மா பாவப் புள்ள வாங்கித் தந்திருப்பா. எனக்குப் பாவப்புள்ள இல்லாட்டியிம் மூத்தம்மாதான் வேணும். நான் என்ர கண்ணத் தொடச்சிக்கிற்ரு, மூத்தம்மாட கையப் புடிச்சி ஊட்ட வாறன். எங்கு மூத்தம்மா தங்க மூத்தம்மா.
(சாய்ந்தமருது மகா வித்தியாலய மாணவர் மன்ற "மாணவ மஞ்சரியில் 1965ல் வெளிவந்தது.)

வண்ணநிலா புன்னகை செய்கிறது!
ஆதம்வாவாப் போடியார்..? வாழ்க்கையின் தத்து
வத்தைப் பரிபூரணமாகப் புரிந்து கொள்ளத் திராணியற்று, அதன் இழுவைக்கு இசைந்தாற் போல் விசை கூட்டிச் சுழல முடியாமல், அடியை நுனியென நினைத்து, அதன் பிம்பத் தில் எழுந்து மறையும் அர்த்தமற்ற உணர்ச்சிகளுக்கு அடிமை யாகி நுனிப் புல்லோட்ட வெள்ளாட்டின் போக்கில், தலை கால் தெரியாது தவித்துத் திரியும் உணர்ச்சிப் பிண்டம் அவர். போடியாரின் பிரபல்யத்தைச் சின்னஞ்சிறு குழந்தை யும் அவ்வூரில் அறிந்திருந்தது வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதில் தனக்கு நிகர் யாருளர் என்ற தனிப் போக்கில், அவ்வூரின் வட்டித் தந்தையென்னும் பட்டப் பெயரில் வழுக்கி விழுந்து, கரைசேர முடியாமல் தத்தளித்துக் கொண் டிருக்கும் அவருக்கு ஓர் அழகிய மகள். பெயர் கதிஜா. அவ் வூரின் அழகு ராணி அவள். கவிஞனின் பேனாவிற்கும், சிற்பி யின் உளிக்கும், ஓவியனின் தூரிகைக்கும் சதா வேலை கொடுத்து, பல்லாயிரக் கணக்கான இளைஞர்களைத் தன் காலடியிலே கிடக்கச் செய்து கம்பீரமாகக் கொலுவீற் றிருக்க வேண்டிய அக்கோமகள், பாவம். அங்கோ ஏதோ பலவந்தமாகப் பறித்தெடுத்து, வேண்டாவெறுப்பில் கசக்கி, பட்டு இதழ்கள் யாவும் கட்டுக் குலைந்து, உருமாறிக் கிடக் கும் ரோஜா மலரைப் போல், சிந்தனையின் கோரப் பிடியில் அமிழ்ந்து தப்ப முடியாமல், சதா அனல் போன்ற பெரு மூச்சுகளை விட்டுக் கொண்டு, நீல வானத்தின் சூனியப் பகுதிக்கு எல்லைகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, பரி தாபமாகக் கிடக்கிறாள். பாவம்! அப்பேதை கேட்டு வந்த வரம், அதுதான் போலும்!
ஆதம்வாவாப் போடியார் இரண்டு திருமணங்கள் முடித்துக் களைத்தவர். இதில் முதல் திருமணம், மிக விமரி

Page 10
முத்து மீரான் சிறுகதைகள்
சையாகப் போடியாரின் பெற்றோர்களால் முடித்து வைக்கப் பட்டது. இத்திருமணத்திற்கு இறைவன் அளித்த பரிசுதான் கதிஜா. இப்பொழுது கதிஜாவுக்கு வயது இருபத்தெட்டுக்கு மேல்தான் இருக்க வேண்டும். கதிஜாவின் தாய் அவளைப் பெற்று, மறு நிமிடமே தன் அன்புக் குழந்தையின் இன்பக் அளிப்பைக் காண முடியாத துர்ப்பாக்கிய நிலையில் கண் களை மூடிக் கொண்டாள். இந்நிகழ்ச்சி, போடியாரின் வாழ் வில் ஒரு பேரிடியென்றே கூற வேண்டும்.
இதன் பின், தன் வாழ்க்கையில் இனித் திருமணமே முடிப்பதில்லையென்ற வைர நெஞ்சுடனேயே போடியார் வாழ்ந்து வந்தார்.
தனி மனிதனின் விருப்பத்திற்கேற்றவாறா உலகம் இயங்குகிறது..?
போடியாரின் தனிமை வாழ்வு சில மாதங்களே நீடித் தது. மீண்டும் போடியாரை மாப்பிள்ளை என்ற பட்டுச் சட்டைக்குள் புகுத்தி இல்லறம் என்ற விநோத உலகில், சதனம் என்னும் சீலையால் நேத்திரங்களை மறைத்துக் கட்டி, உலாவ விட்டனர் அவர் உறவினர். இத்திருமணத் தில் போடியாருக்குப் பிள்ளைகளே இல்லை. பாவம், அவர் இரண்டாவது மனைவி, கருவற்ற மலடு. இது ஆதம்வாவாப் போடியார் பெற்ற பாக்கியம் போலும்!
அறுபது வயதைக் கடந்தும், இன்னும் இளைஞனே என்ற மயக்க நிலையில் கட்டுண்டு, நடு நிசி வரை, அழுக் கோடு அழுக்காகி அதனோடு ஒன்றித்து, அதனால் ஏற்படும் அக்கினி ஜாவாலையில், எண் சான் உடம்பை எரித்து, எப்படியோ இன்பங்கண்டு கொண்டிருக்கும் போடியார் இன்று, இரண்டாவது மரைனவியையும் பறிகொடுத்த தனிக் கட்டை, அப்படித்தான் அவர் வாழ்க்கை அமைந்து விட்டது"
இரண்டாவது மனைவியும் தன்னை விட்டுச் சென்ற பின், தன் வாழ்க்கையை மகள் கதிஜாவை வளர்ப்பதற்கே அர்ப்பணித்தார். அன்றும் இன்றும் அதே நோக்கோடுதான் வாழ்ந்தும் வருகின்றார்.

வண்ணநிலா புன்னகை செய்கிறது!
2
ஆண்டவனின் அதியற்புத அழகுச் சிருஷ்டியான தன் மகள் கதிஜாவின் திருமணமே, இன்று அவர் வாழ்க்கை. இறப்பதற்கு முன் அத்திருமணத்தைக் கண்குளிரக் கான வேண்டுமென்றுதான், போடியார் இரவும் பகலும் துடித்துக் கொண்டிருக்கிறார். அவர் கடைசி ஆசையும் அதுவே ஆனால்.
எத்தனையோ படித்த மாப்பிள்ளைகள் கதிஜாவைத் திருமணம் முடிக்கப் பந்தயங்கட்டி ஒற்றைக்காவில் நின்றும், அவர் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை. பேயாக இருந்தாலும் பனத்தோடும், காணியோடும் வரட் டும் என்ற வாட்டுக் கெளரவத்தால் பட்டை தீட்டப்பட்ட அனுங்குப் பிடியில், காலடிக்குக் கரணம் போட்டு வரும் மாப்பிள்ளைகளையெல்லாம் தட்டிக் கழித்து, மகளின் திரு மணத்தைப் பின்போட்டுக் கொண்டே வருகின்றார்.
பாவம் அவர் ஒரு பழங்காலப் பணப் பைத்தியம் ஒரு நாள் இரவு, இளந்கென்றவில் களி நடம் புரியும் தென்னங் கீற்றினிடையே, கார்கால வானத்து வண்ண நிலா புன்னகை செய்து கொண்டிருந்தது. விண்னை நோக்கித் தவம் புரியும் கமுகும், தென்னையும், வெண்னிலவின் தண்னொளியில் மூழ்கித் திளைத்து, வெள்ளிக் கம்பங்களாக மாறி இருந்தன.
கதிஜா வழக்கம் போல், எண்ணற்ற வண்ண வேலைப் பாடுகள் செய்த அழகிய கற்பன்பாயொன்றில் அமர்ந்து, அனல் போன்ற பெரு மூச்சுகளை அவதிப்பட்டுச் சிதறியபடி இருந்தாள்.
விரல் நொடிக்கும் நேரம் சடக்கென்று குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த தன் தந்தை பக்கம் திரும்பி, "வாப்பா! நீங்க சாயங்காலம் போன விஷயம் எப்படிப் போச்சி?" என்று கேட்டாள்.

Page 11
O முத்து மீரான் சிறுகதைகள்
பொடியன் இங்கிலிசெல்லாம் படிச்சித்தாள் இரிக்கா னாம். ஆனா, பெயரிலயோ அல்லது கையினயோ ஒரு தம்படியுமில்லையே' என்று மகளின் கேள்விக்கு விடை யைக் கூறி அலுத்துக் கொண்டார், போடியார்.
"அப்ப அவரையிம் ஒங்களுக்குப் பு டி க் க ல் லி யாரிக்கும்.?"
"ஓம் புள்ள ஒரு தம்படிக்கும் வழியில்லாத ஒட்டாண் டிப் பயலொருவனுக்கு ஒன்ன முடிச்சிக் குடுக்கிறதப் பார்க்க, நம்முட சீனம்பெட்டி வயக்காரன் மம்மதுக்கு முடிச்சிக் குடுத்திருவன். என்ர தகுதியென்ன பண்ரமென்ன! என்ர தகுதிக்கேத்த மாப்பிள்ளை வந்து பட்டால் தான், ஒன்ன நான் முடிச்சிக் குடுப்பேனே தவிர, சும்மா கண்ட நிண்ட வனுக்கெல்லாம் கடைசி மட்டும் முடிச்சிக் குடுக்க மாட் டேன். ஒனக்கென்ன புள்ள, இப்ப வயசாபோச்சி."
போடியார் தன் பழைய பல்லவியைப் புதுராகம் எடுத் துப் பாடிவிட்டு, மீண்டும் குர்ஆனில் சங்கமமாகி விடுகின்
JTT.
"நீங்க செல்றத்தப் போல ஒருவரும் வந்து படாட்டி என்ன செய்யப் போரீங்க..?"
கதிஜாவின் கேள்வி அநாதையாகித் தவித்துக் கொண்டி ருக்கிறது.
எங்கும் மயான அமைதி,
அனல் போன்ற பெருமூச் சொன்றைச் சிந்திவிட்டு, கதிஜா படுத்துக் கொள்ளுகிறாள்.
மறுநாள் இரவு.
போடியார் தன் மாட்டுப்பளை வயல் சூடு மிதிப்புக்ாகப் போயிருந்தார். பொதுவாக இரவில் சூடு மிதிப்புக்காகச் செல்பவர்கள், விடியற்காலை வருவது தான் வழக்கம். இதைப் போன்றே போடியாரும் விடியற் காலையில் வருவ தாகக் கூறி, ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வி விட்டுப் போயிருந்தார்.

mehrsofsvir Litts); (IFFDg1
ஆனால் வழக்கத்திற்கு மாறாகச் சூடு மிதிப்பு நடு நிசி யோடு முடிந்துவிட்டது.
மகளின் தனிமையை எண்ணிய போடியார், தன் சங்க காலத்துச் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு இரவோடு இர வாக இல்லம் வந்து விட்டார்.
அங்கே
"எல்லாம் தெரிஞ்சிதான் இந்த முடிவுக்கு நான் வந் திரிக்கன். எங்கிட வயக் காரனா இரிக்கிற ஒங்களுக்கு, அந்த வயல்களுக்குச் சொந்தக்காரனாக வர முடியாதென்று என்ன சட்டமா இரிக்கு. எங்க வாப்பாக்குத் தான் எனக்கொரு மாப்பிள்ளையைத் தேடித்தர முடியல்ல. ஆனா, எனக்குமா முடியாது? நான் என்ன விரல் வெச்சாக் கடிக்கத் தெரியாத கொழந்தப் புள்ளயா? என்ர ஆசைப்படி கவியாணம் செய்ய எனக்கும் தவுலத்தும் வயசிம் இருக்குத் தானே! நீங்.பொறப் படுங்க விடியிறதுக்குள்ள இஞ்சரிந்து போயிருவம்.பாவம்! அவரின் தகுதிக்கேற்ற மாப்பிள்ளை இனி எங்கிருந்து வரப் போகிறானோ?"
இருளின் அமைதியைக் கிழித்து, கதிஜாவின் உயிர்த் துடிப்புள்ள வார்த்தைகள், அமைதியாக நின்றுகொண்டிருக் கும் போடியாரின் அகத்தைக் குடைந்து பிழிந்து கொண்டி ருக்கின்றன.
உலகம் அழியவில்லை. வழிந்தோடும் கண்ணீர்த் துளி களைத் தோளில் கிடந்த துப்பட்டியால் துடைத்துக் கொண்டு, வீட்டுக்குள் நுழைகின்றார் போடியார். அவர் உள்ளம், என்றுமில்லாத பூரிப்பில் மிதந்து கொண்டிருக்கி றது.நாளை அவர் மகளுக்கு ஊர் அறியத் திருமணம் நடை பெறப் போகிறதே என்ற ஆனந்தக்களிப்பில், வண்ண நிலா புன்னகை செய்து கொண்டிருக்கிறது!

Page 12
FFD6) வெட்டுக்குத்துக்காலம், வளி, அனல் போன்று வெப் பத்தோடு வீசிக்கொண்டிருக்கிறது. பறவைகள் நீர் வேட் கையினால் கூச்சலிட்டுக்கொண்டிருக்கின்றன. மர நிழலில் வில பறவைகள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டிருக் கின்றன. எறிக்கும் எல்லையும் சட்டை செய்யாது வேலை யாட்கள், ஆதம்வாவாப் போடியாரின் வயலைப் புரட்டிக் கொண்டிருக்கின்றனர்.
"டியேய், உப்பெட்டியெல்லாம் மிரியாம ஏறுங்கடி வரம்பில."
வயற்காரன் மம்மதின் அடிவயிற்றிலிருந்து சுழியோடி வரும் கொடூரமான வார்த்தை கனலாகப் பறக்கிறது.
நாலு திக்கிலுமிருந்து வேலையாட்கள், 'கதிர்களையெல் லாம் சேர்த்துக் கட்டுகளாகக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். "மம்மதோ நீ போய்ச் சூடுவெக்கிற இடத்த வெளி சாக்கிற்று ஒடியா."
பரணிலிருக்கும் போடியாரின் ஆணை விரைகிறது. வயற்காரன் மம்மது கல்லெறிபட்ட நாயென ஓடுகிறான். "கவுத்துக்கட்ட எடுத்துக்கு ஓடியாடம்பே." வேலையா ளொருவன் ஏவவிடுகிறான். வயற்காரன் மம்மதின் மகன் கயிற்றுக் கட்டைத் தூக்கிக் கொண்டு குடல் தெறிக்க ஓடுகிறான்.
"டேய் திருப்பியிம் அன்னா இறங்கி ற் ராளு கள்ளா." பரணிலிருக்கும் போடியாரின் அகோரமான வார்த்தை, வயக்காரன் மம்மதின் செவி அளைகளில் புகுந்து குருதியை உறிஞ்சுகிறது.
மம்மது புரட்டுமிடத்திற்கு நாயென விரைகின்றான். மம்மது வரவின் அதிர்ச்சியில் சிந்தையிழந்த நாரியரெல் லாம், பொறுக்கிய கதிர்க் கற்றையுடன் சிதறி ஓடுகின்றனர்.

றல் 13 பரணில் உல்லாசமாயிருக்கும் போடியாரின் அகம், இக் காட்சியில் அமைதியுறுகிறது.
"நாசமத்துப் போவான் என்னாளாரிக்கான்." "ஓங்காலாத்தா, கொட்டுங்கிற கதிரபிம் பொறக்க உர்றானில்ல."
ஒடிக்களைத்த பேதைகளின் வார்த்தைகள், வளியோடு புணர்கின்றன.
பெண்களை விரட்டியடித்த பெருமிதத்தில் வயற்காரன் மம்மது, கட்டு வரம்பால் அன்ன நடை போடுகிறான்.
"கெதியா வாங்க டப்பா." வேலையாளொருவனின் வயிற்றைக் கிளறிக் குருதியை உறிஞ்சிவரும் அலுத்துப் போன வார்த்தை.
ஒதுங்கித் தூர நின்ற நாரியரெல்லாம் திரும்பவும் உப் பெட்டி புரட்டுமிடத்திற்கு விரைகின்றனர்.
"லெக்கோ அவன்ட கட்டில இழாமப் பொறக்குங்ககா' வேலையாளொருவன் கனிவாகக் கூறுகிறான். இனிப்பைத் தொடரும் எறும்பெனப் பெண்கள், ஒடி ஒடிக் கதிர்களைப் பொறுக்குகின்றனர்.
கதிரனைத்தும் கட்டி முடிவடைகிறது. வேலையாட்கள் பகல் போஜனத்திற்காக, அவிழ்த்து விட்ட ஆனிரையெனப் பானை நோக்கி நடக்கின்றனர்.
பெண்களும் தங்களின் வயிற்றை நிரப்ப, பக்கத்திலுள்ள மரநிழலை நாடிச் செல்கின்றனர். மரநிழலிலமர்ந்து பெண்க ளெல்லாம் தங்கள் தங்கள் சோற்றுப் பட்டைகளை அவிழ்த்து, குழிவிழுந்த வயிறுகளை நிரப்புகின்றனர்.
"என்னகா லாத்தா கறி?" "லாவு போறத்துக்கு நேரஞ்சென்டு போச்சி புள்ள, கடசில ஒன்டுமில்லாம வழுதிலங்காய வாங்கிச்தான் சுண்டின."

Page 13
முத்து மீரான் சிறுகதைகள் په ؤ
"என்னயிர லாத்தா எல்லாம் கயித்த மாத்தானிருக்கு, நானும் மையறுக்கிழங்குதான்."
கதையோடு சாப்பாடும் முடிவடைகிறது.
சாப்பிட்ட பெண்களில் சிலர் தங்கள், தங்கள் வெற் நிலைக் குட்டானை எடுத்து, வெற்றிலையை வாயில் திணித்துக் கொள்கின்றனர். சாப்பிட்ட களைப்பில் சிலர் கண்ணயர்கின்றனர். சில குமரிப் பெண்கள் எதையெல் லாமோ இழுத்துப் போட்டு வம் பன க் கின்ற னர். சிலர் பொறுக்கிய கதிரனைத்தையும் ஒன்று திரட்டித் துவைக் கின்றனர். கிழவி அலிமா மட்டும் ஒன்றும் பேசாமல், சசியை அடையத் திண்டாடிக் கொண்டிருக்கும் விஞ்ஞானியைப் போன்று, அனல் போன்ற பெருமூச்சை உமிழ்ந்துகொண் டிருக்கிறாள். கிழவியின் பெருமூச்சு, பக்கத்திலிருக்கும் கதிஜாவை ஈர்க்கிறது.
"என்னகா லாத்தா ஒரு மாதிரியாரிக்காய்?"- கனி வாகக் குழைகிறாள்.
'ஒன்டுமில்லபுள்ள .' வலுவற்ற வார்த்தை பெரு
மூச்சோடு சங்கமித்து மறைகிறது.
"எப்பகா லாத்தா புள்ள ஆமினாட கலியாணம்?"- அதரங்களில் நறைபெருக மீண்டும குழைகின்றாள்.
"அத நெனச்சாத்தான் புள்ள என்டமனம் Elj மாதிரியாப் போகுது."- அடிவயிற்றிலிருந்து உலர்ந்து வரும் வார்த்தை, அகத்தைக் கிளறிக் குருதியை உறிஞ்சியா வருகிறது?
"ஏங்கா லாத்தா தம்பி அவியாரு நல்ல புள்ள தான." -கிழவி அலிமாவின் அகத்திலுள்ளதை அறியத் துடிக்கும் மேற் பூச்சு.
"மெய்யா, மெய்யா அவக நல்லபுள்ளதான். ஆனா அவகளால் என்னெய்ய ஏலும் அவக வாப்பா தானே நல்ல சீதனம் வேணுமென்டு ஒரே புடியாரிக்காரு." அலிமாவின் குழிவிழுந்த நேத்திரங்களில் அனல் நீர் சுரந்து, கன்னங்களில் உருள்கிறது.

pEPT OF TirNDys
- R FT TGI{ மல் CULTURAL ጓቛHIC
"argir an Cray சீதனம் கேக்காங் தி லாத்தா" அமுதை மிஞ்சிக் குடிக்கத் துடிக்கும் குழவியின் சாயல்,
"அவருகாக்கா ஆயிரம் ரூபா கையில வேணுமென்டு முத்தக்கால்ல நிக்காரு." சிந்தையில் சிதைந்து கிடந்த பெருமூச்சு தழலுக்கு ஒதனமாகி வெளிவருகிறது.
"நீயும் தாறென்டு செல் விற்றியா லாத்தா?' வாழ்க் கையில் முடியாத தொன்றை நினைத்து, ஏப்பமிட்டுத் தவிக் கும் நிலையா? சகத்திற்கும், சசிக்கும் தோரணமிட்டுப் பார்க்கத் துடிக்கும் விழைவா?
"எப்படிக் கயித்தப்பட்டாலும், நம்மடLள்ள நல் வாரிக்கணுமென்டாக் குடுக்கத்தான வேணும்" கிழவி அலிமாவின் தோல் சுருங்கி வலிவிழந்த புயங்கள், புடைத்து நிமிர்கின்றன.
"நீ செல்றதும் மெய்தாங்கா வாத்தா. நம்மடடள்ள நல்லாரிந்தாத்தான நமக்கழகு" குவலயத்தில் வதியும் ஒவ் வோர் அரிவையரும் பின்பற்றி நடக்கப் போதிக்கும் நல்லுப தே ச மா? அலக்கண்ணில் உவப்படையும் தாய்மைத் துடிப்பா?
"அத நெனச்சித்தான இந்த நடக்கேலாத வயசிலயும் வட்டக்க கதிரு பொறக்க வாறன்" அலிமாவின் சிந்தை வலுப் பெற்றுச் சுருங்கிக் கிடக்கும் இதழ்கள் சோபையுடன் புன்னகை உமிழ்கின்றன. ஏகன் படைத்த மனிதன் முயன் றால், எதையும் சாதித்துவிடலாமென்ற திடநம்பிக்கை. மனைவியென்ற போர்வையில் மகளை மறைத்துப் பார்க்கத் துடிக்கும் உள்ளக் கிளர்ச்சி.
"அப்ப எப்பகா லாத்த கவியாணத்த வெச்சிரிக்கீங்க" சிந்தையைச் சிதைத்து வரும் பெருமூச்சின் அகோரத்தில் கதிஜாவின் முகத்தில் அல்ஜனிக்கிறது.
அவங்களுக்கு இப்பெண்டான புறியந்தான், அனா எங் களாலதான் அவங்க சுணங்கிரிக்காங்க" அவிமாவின் முகத் தில் ஏழ்மை படர்கிறது.

Page 14
16 முத்து மீரான் சிறுகதைகள்
"எல்லாத்தயும் அந்த அல்லாஹ் ஹயராக்கி வெப்பான் லாத்தா' சகத்தில் வதியும்ஜீவனனைத்துக்கும் முதல்வனிருக் கிறான் என்ற உண்மை கொண்டலில் மின்னி அழிகிறது.
வாற அச்சி மாசத்திலயாவது என்ட புள்ள ஆமினா உம்மாக்கு, கலியாணம் பண்ணிவெச்சாத்தா புள்ள வின்ட நெஞ்சில உள்ள ஈறல் நீரும்" வளியற்ற வலூனனெக் கிடக்கும் வயிற்றிலிருந்து கிளம்பி வரும் பெருமூச்சு, அன லோடு புணர்கிறது.
எல்லாத்துக்கும் அந்தி அல்லாஹ்தான் கிருபசெய் யணும்"
கதையும் கடைசியாகிறது. வேலையாட்களும் குடுவைப் பதற்காக வயலில் இறங்குகின்றனர். ஒருவன் தூக்கிக் கொடுக்கப் பலர் சுமந்து செல்லச் சிலர் சுமந்து செல்லும் கதிற்கட்டையெல்லாம் சேர்த்துக் குவித்துச் சூடு வைக் கின்றனர்.
"மம்மதோ சூட்டடிய போய், உன்ட மகன கவுத்தெல்
லாம் பொறக்கச் செல்லுடம்பே."
வயற்காரன் மம்மதின் சோற்றுப் பெட்டியை உறிஞ்சி விட்டுப் பரணில், பாடுகாட்டிப் படுக்கும் போடியாரின் ஆணை, மம்மதின் செவி அளைகளில் புகுந்து ரீங்காரமிடு கிறது. மம்மதின் மகன் சூட்டடிக்கு விரைகின்றான்.
"மம்மத்தம்பே அன்னா என்ட வண்ணான்சின்னான் வாறான்; அவனுக்கந்தி மோட்டுக்கட்டுலொன்ற எடுத்துக் கொடுத்திடு".
ஏதோ தன் வாழ்க்கையில் ஒரு மாபெரும் கொடையைத் தன் கரத்தால், கொடுக்கப் போகிறே ாமென்ற பெரு மிதத்தில் வண்ணான் வரும் திசையை நோக்கி வீரநடை போடுகிறான் மம்மது பெண்களெல்லாம், மீண்டும் வயலில் இறங்கிக் கதிர்பொறுக்குகின்றனர்.
பரணில் உல்லாசமாகப் படுத்துக் கொண்டிருக்கும் போடியாரின் நேத்திரங்கள் இக் காட்சியில் அழல்கின்றன.

றல்
முகத்தில் குருதிசுரந்து ஆவேசத்தால் கதிர் பொறுக்கிக் கொண்டிருக்கும் அரிவையரை வஞ்சிக்க நெகிழும் பிரவேசத் நடிப்பு -
'டேமம்மதோ அன்னா கட்டில இழுக்காளுகள், ஓடிப் பொய் நல்லாச் சாப்பாடு கொர்ரா."
மம்மது கட்டவிழ்ந்த நாயென விரைகின்றான்.
மம்மதின் வரவின் அதிர்ச்சியில் சிந்தை குலைந்த நாரிய ரெல்லாம், நாலா பக்கமும் சிதறி ஓடுகின்றனர். மம்மது வேட்டை நாயென விடாமல் துரத்துகின்றான்.
உயிருக்குப் பயந்தோடிய பெண்களில் கிழவி அலிமா, கட்டு வரம்பில் சறுக்கி மல்லாந்து வீழ்ந்து, அமைதியாகக் கிடக்கின்றாள்.
அலிமாவின் தலையின் பின்புறமிருந்து, குருதி ஆறாகப் பெருகி, தரையில் ஓடி உறைகிறது.
தன் ஒரே ஒரு செல்வமகள் ஆமினாவை நினைத்து, ஆயிரமாயிரம் மனக்கோட்டைகளைக் கட்டிச் சுமை யுடனிருந்த அவள் ஜீவன், எல்லாச் சுமைகளையும் களைந்து பிரிந்து விட்டது.
கிழவி அலிமா வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித்தன், மகள் ஆமினாவின் சீதனத்திற்காகச் சேர்த்து வைத்த பணம் அவளின் ஈமக் கடனுக்குத்தான் ஆயிற்று. அலிமா மவுத்தாகி மண்னோடு மண்ணாகி விட்டாள் என்றால், ஊரில் பலர் நம்ப மறுக்கிறார்கள்.
அவள் மவுத்தாகிவிட்டாள் என்பதற்கு ஒரே ஒரு சான்றுதானுண்டு.
அதோ,

Page 15
iš முத்து மீரான் சிறுகதைகள்
சீதனமின்றிக் கிழவி அவிமாவின் மகள் ஆமினாவை, யாரும் கலியாணம் முடிக்க முன் வராததினால், தாய்ப் பாசத்தையும் காதல் நினைவுகளையும் நெஞ்சிலே சுமத்து கொண்டு எழில் வானம்பாடி போல் இன்பச் சிறகடித்துப் பறக்க வேண்டிய இளமைப் பருவத்தில், துயரே உருவாகித் தாயின் மகளாகத் தலையில் பாய்க்கட்டுடன், சீனம்பெட்டி வயலை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாள்.
器

சாக்காட்டில் ஒரு சமுதாயம் வாழ்கிறது!
நானொரு பேயனாம். எல்லாரும் என்ன அப்படித்தான் செல்றாங்க, எனைக்கு அதப்பத்தியெல்லாம் கொறயிமில்ல, சுவலயிமில்ல, எனைக்கு உம்மாவுமில்ல, வாப்பாவுமில்ல. ான்ர சின்ன வயசிலேயே எல்லாரும் என்ன எத்தினா டிட்டுப் போட்டு மவுத்தாப் பெயித்தாங்க. இந்த ஒலகத்தில எனைக் குச் சொந்தக்காரங்க ஒருவருமே இல்ல. இப்படி இரிந்தாலும் ானைக்கு சோத்துக்கும் காசிக்கும் பஞ்சமே இல்ல. எல் லார்ர ஊடும் என்ர ஊடுதான். எல்லாரும் என்ர சொந்தச் காரங்கதான். எனைக்கு எந்த ஊட்டுக்குப் போனாலும் சோறு தருவாங்க அதப்போல, யாரிடம் கைநீட்டினாலும் எனைக்கு காசி தருவாங்க. இதனால் எனைக்கு எந்தக் கவலையிமே இல்ல.
எனைக்கு ஒரு பிடி தந்தால் போலும், எந்த வேலையை யும் நொடிப் பொழுதில் செஞ்சி போடுவன், எனைக்கு எல்லா வேலையிம் தெரியிம், கொள்ளி கொத்திக் கொடுக் கிற தொடக்கம் கொச்சிக்காய் அரைக்கிற வரையில எனைக்கு தண்ணிபட்ட பாடு. இப்ப எனைக்கு வயசி அறுபதுக்கு மேலதான் இரிக்கணும். எனைக்குக் கணக்கெல்லாம் நல்லாத் தெரியாது. நான் பள்ளிக்குடப் பக்கமே போகல்ல. என்னைப் படிக்க ஒருவரும், பள்ளிக்குடத்திற்குக் கொண்டு உடல்ல. எனைக்கு படிக்க ஆசதான். எனைக்கு மட்டும் ஆச இரிந்து என்ன புண்ணியம்?
நான் இன்னம் கவியானம் முடிக்கல்ல. எனக்குக் கவி பாணம் முடிக்க, கொள்ள ஆசதான். ஆனா எந்தப் பொம் புளயிம் என்னைக் கலியாணம் முடிக்க ஆசப்படல்ல. நான் கலியாணம் முடிக்காட்டியிம், இந்த ஊருக்குள்ள நடக்கிற ால்லாக் கலியானத்திற்கும் செல்லாமலே போயிருவன். இது என்ர சின்ன வயசிப் பழக்கம், நான் தூக்கி வளத்த

Page 16
器山 முத்து மீரான் சிறுகதைகள்
புள்ளயளெல்லாம் இப்ப, அவங்கிட புள்ளயஞக்கே கலி யாணம் முடிச்சிற்ராங்க, நானும் கலியானம் முடிச்சிரிந்தா, என்ர புள்ளயஞக்கும் கலியானம் முடிச்சிருப்பன்.
எனைக்கு வாப்பா, உம்மா இல்லாட்டியிம் நான் செல்லக் சுண்டு ராத்தாட ஊட்டதான் படுக்கிறதும், இரிக் கிறதும், என்ர உம்மாவும் வாப்பாவும் செல்லக்கண்டு ராத்தாதான். ராத்தாவுக்கு ஒரே ஒரு ஆம்புளப் புள்ளதான். அந்தப் புள்ளதான் வாயிது உடயாரு.
தம்பி உடயாரு, அவர்ர மூணு பொம்புளப் புள்ளயஞக் குக் கலியாணம் முடிச்சிக் கொடுத்திட்டாரு இந்தப் புள்ள யள்ள புரிசன் மாரெல்லாம் இங்கிலிசு படிச்ச பெரிய உத்தியோகாரங்க, இவங்கிட கவியானத்துக்கு கொள்ளி கொத்தினதெல்லாம் நான்தான். பந்தல் போர்றற்துக்கு மரத் திலேறி தென்னங் குருத்தும் நான்தான் வெட்டின. இப்ப, என்னால ஒரு வேலயிம் செய்ய முடியா கண்ணும் நல்லாப் புகைஞ்சி போச்சி.
தம்பி வாயிது உடயாருக்கு கூடக் கொறய வளவெவ் லாம் கிடக்கு. கடக்கரையில நாலஞ் சேக்கர் தென்னந் தோட் டமும் இரிக்கு. இந்தத் தோட்டத்திலதான் தங்கச்சி சரி னாம்மா அவட உம்மாவோட இருந்தா, இவ நல்ல வடிவு. இதனால, தம்பிக்கு இந்தப் புள்ளயில ஒரு கண். இந்தப் புள்ள என்னோட நல்ல பாத்தம். என்னக் கண்டாப் போதும் சீவனமாச்சிருவா. எனைக்கும் இந்தப் புள்ளயோட நல்ல பாசம், தம்பி உடயாரு இந்தப் புள்ளட ஊட்ட எட்டில தப்புல போயிற்ரு வந்தவரு அடிக்கடி போகத் தொடங்கிற் ராரு. கடசில ரெண்டாம்தாரமா காவின் எழுதாம சரினாம் மாவ வெச்சிக்கிற்ராரு, அந்தக் காலத்தில, இந்தப் புள்ளய தம்பி உடயாரு ஒரு ராணியப் போலதான் வெச்சிக்கு இரிந் தாரு. சொந்தப் பொண்டாட்டியையும் பாக்க இந்தப் புள்ளய மிச்சம் கலாதியா வெச்சித் திரிந்தாரு, இதனால இவர்ர குடும்பத்தில பெரிய கொழப்பம் எல்லாம் வந்தும் அவரு ஒண்டுக்கும் பயப்புடல்ல, கொஞ்சகாலம் சரீனாம் மாட ஊட்டயே சொதயமா இருந்திற்ராரு. இவர்ர உம்மா

ச்ாக்காட்டில் ஒரு சமுதாயும் வாழ்கிறது 2.
வாப்பா ஏசியிம் இவரு மசியல்ல, வாறது வரட்டுமென்டு பேசாம இருந்திற்ராரு, அவரு புடிச்சா ஒரு புடிதான்.
கொஞ்ச நாளயால சரீனாம்மாவும் உடயார் தம்பிக்கு புள்ளொண்டாயிற்ரா. இதுக்குப் பொறகு உடயார்ர குடும் பத்தில பெரிய கொழப்பமெல்லாம் வந்து போச்சி. ஊரெல் லாம் சேந்து, இவர உடன சரீனாம்மாவ காவின் எழுதச் செல்வியும் இவரு காவின் எழுதல்ல. பள்ளி மரக்கார்மாரும் எவ்வளவு பாடுபட்டும், இவரு காவின் மட்டும் எழுதல்ல. இதனால ஊராக்களெல்லாம் இவருக்கு எதிப்பா,ஏசெண்டுத் துரைக்கு பித்திசம் போட்டு இவர்ர உடயார் வேலய நித் தாட்டிப் போட்டாங்க. இந்தக் கோவத்தில இவரு, சரி னாம்மாவை உட்டுப் போட்டு வந்திட்டாரு. இவரு உட்டுப் போட்டு வாற நேரம் சரீனாம்மா நெறமாசப் புள்ளத்தாச்சி. சரினாம்மா அவர்ர கால்ல உழுந்து கெஞ்சியிம், அவரு ஒண்டையிம் கேக்கல்ல; வந்திட்டாரு.
இவரு உட்டுப்போட்டு வந்து மூணு நாளபால சரி னாம்மா, பொம்புளப் புள்ளையொண்டப் பெத்துப் போட்டா இந்தப் புள்ள அப்பிடியே உடயார் தம்பிய உரிச்சாப் போல இரிந்திக்கு. நல்ல மூக்கும் முழியுமா வடிவா இரிந்தா. இந்தப் புள்ளயக் கண்டவங்க யாரும் அதத் தூக்கி கொஞ்சாமே போனதே இல்ல. எனைக்கு அந்தப் புள்ளயத் தூக்கி ஒரு தர மாவது கொஞ்சாட்டி, அண்டைக்கு சோறே இறங்காது. அந்தப் புள்ளயில அவ்வளவு ஆச எனக்கு. இதக்குப் பொறகு, சரீனாம்மா பாயத்தட்ட இளச்சி தன்ர புள்ளய வளர்த்து வந்தா, நானும், இந்தப் புள்ளயிக்கு தொன பா. அவட ஊட்டயே சொதயமா இருந்திற்ரன்,
இப்ப, சரீனாம்மாட மகளுக்குப் பதினாலு வயசி. வாற மார்கழி மாசம் கவுமந்து சோதின எடுக்கப் போறா. பள்ளிக் குடத்தில இவதான் முதலாம் புள்ள. என்ன மாமா, மாமா எண்டு உசிரயே உடுவா. நான்தான் இவல ப ன் வளி க் குடத்துக்கு கூட்டிக்குப் போய் கூட்டிக்கு வருவன். வாத்தி மாருக்கும் இந்தப் புள்ளயில நல்ல இரக்கம். இந்தப் புள்ளைக்குப் புத்தகம் கூட வாத்திமாருதான் வாங்கிக்

Page 17
முத்து மீரான் சிறுகதைகள்
கொடுக்கிற, தம்பி உடLாரு இந்தப் புள்ளய கண்ணுலையிம் பாக்க மாட்டாரு. செல நேரம்,செல்லக் கண்டு ராத்தா மாத் திரம் அத இத வாங்கிக் கொடுப்பா அவக்கு இந்தப் புள்ள யில கொஞ்சம் இரக்கம்தான். நான் அவட ஊட்ட எட்டில தப்பிலு போனா இந்தப் புள்ளயப் பத்தி ஒரே எனைக்கிட்ட கேப்பா, அவட சீதவிக் குணத்திக்கு பொறகுதான் எல்லாம். சொல்லப் போனா செல்லக்கண்டு ராத்தாடகுனத்துக்காகத் தான், அல்லா எங்கிட உடயார் தம்பிக்கு படி அளக்கான், இல்லாட்டி இவரு செய்யிற கருமத்துக்கெல்லாம் அல்லா தண்ணியம் கொடுக்க மாட்டான். எத்தின கொமரத்தான் இவரு கெடுத்துப் போட்டாரு இப்ப நான் இவர்ரமுகத்திலை யிம் முழிக்கிறல்ல.
பாவம் சரீனாம்மாட மகளுக்குப் பொறப்பு சாச்சிப்பத்தி ரம் இல்ல. இந்தப் புள்ளைக்கு உடயார் தம்பியும் பதிவு வெக் கல்லசரீனாம்மாவும் வெக்கல்ல. இதனால இந்தப் புள்ள கவு மந்துசோதின எடுக்கேலாண்டு, பெரிய வாத்தியாரு செல்லிப் போட்டாரு. இப்ப பொறப்புச் சாச்சிப் பத்திரம் எடுக்க வேணுமென்டா, புள்ளட வாப்பாவ, புள்ளட உம்மா பொலிசி கொட்டில வழக்கு வெச்சித்தான் எடுக்கணுமாம். இதுக்கா சரீனாம்மா உடயார் தம்பிர கால்ல உழுந்து கெஞ் சிக் கேட்டா. ஆனா, அவரு ஒன்டுக்கும் இணங்கல்ல. தன்ர ஆதினத்தில் பங்கு போயிருமெண்டு இந்தப் புள்ளய, அவர்ர புள்ளயில்லை என்டே சத்தியம் பண்ணிற்ரார்.
இதக்குப் பொறகு, சரீனாம்மா உடயார் தம்பிர பக்கமே போகல்ல. கடசில தன்ா புள்ளைக்குப் பொறப்புச் சாச்சிப் பத்திரம் எடுத்துத் தருமாறு என்ர கால்ல உழுந்து கெஞ்சினா. உடயார் தம்பிக்கு ஊரறிய ஒலகறியப் பொறந்த புள்  ைஎ க்கு நான்தான் வாப்பாண்டும் நான்தான் பதிவு வெக்க மறந்து பெயித்த னெண்டும் கோட்டில, நீதவானுக்கு முன்ன செல்லும்படி என்ர கால்ல உழுந்தா, நான் சரீனாம்மாட செல்லுக்கு எந்த மறுத்துவா அம் செல்லாம ஒடன ஒமெண்டு செல்லிற்ரன். எப்படி பெண்டாலும் சரினாம்மாடபுள்ள நல்லா இரிக்கணுமெண்டு

ördatılış6 ஒரு சமுதாயம் வாழ்கிறது
நானும், நீதவானிட்ட உடயார் தம்பிர மகள் என்ர புள்ள மெண்டே செல்லிற்ரன். எனைக்கிட்ட எந்த ஆதினமும் இல்ல. என்ர மனரி மட்டும்தான் எனக்கிட்ட இரிக்கிற ஆதி னம், அத்தான் சரீனாம்மாட மகளுக்கு நான் கொடுத்திரிக் கன்
இந்தப் பேயனுக்குக் கிடைச்ச பாக்கியம் எங்கிட் உட பார் தம்பிக்கு கிடைக்காம போச்சி. ஊருக்க அவர ஒருவி ரும் இப்ப மதிக்கிறல்ல. ஆளக் காச நோயிம் புடிச்சிப் போட்டு, முகமெல்லாம் நல்லாக் கறுத்து. ஆளும் உடஞ்சி பெயித்தாரு.ஆளுக்குக் கையிலயிம் ஒண்டுமில்ல. அவரு செய்த கருமத்திக்கெல்லாம் அல்லா நல்லாக் கொடுத் திரிக்கான் அந்த வல்ல பெரிய நாயன ஆருதான் ஏமாத்* முடியும், ஏழயளயெல்லாம் எப்படிக் சசக்கிப் புழிஞ்சாரு. இப்ப அல்லா அவரக் கசக்கிப் புழியிரான். அவர்ர புள்ளயரும் இப்ப நல்லாக் கவனிக்கிறல்ல. ஒரு வாய்ச் சோறு கொடுக்கிறதும் பெரிய கஷ்டம். எவ்வளவோ ஏச்சிம் பேச்சும் இந்தக் கிழட்டுச் சனியன் மவுத்தாப் போகுதில்லியே எண்டு அவர்ர புள்ளயன் செல்லுவாங்க. இதெல்லாம் அவருக்கு வேணும் எங்கிடசரீனாம்மாட கருமம் அவரச்சும்மா விடுமா? அவகண்ணால ஊத்தின தண்ணிக்கு கணக்கிருக்கா?
இப்ப சரீனாம்மாடமகள் றெயினிங் கொவிச்சிக்கெல் லாம்"போய் வந்து எங்கிட ஊருப் பள்ளிக்குடத்தில்தான் படிப்பிக்கிரு. எனைக்கு சாறன் சட்டை யெல்லாம் பாங்கிட புள்ள வாங்கித் தந்திருக்கா, ஒவ்வொரு நாளும் நான்தான் ஆவவ பள்ளிக் குடத்திக்குக் கூட்டிக்குப் போய் கூட்டிக்கு வாற. அவ எங்க போனாலும், என்னத்தான் தொணைக்குக் கூட்டிக்கு போவா..இந்த ஒஓகத்தில இனபந்தெண்டுசெல்றத் திக்கு ஒத்தரும் இல்லாம வாழ்க்கட அடி மட்டத்தில கெடந்து தவச்சிக் கிடந்த என்ைக்கும்; சொந்த மெண்டு. செல்றத்திக்கு ரெண்டுபேரு கிடக்கிறாங்க. அவங்க ரெண்டு பேரும்தான எனைக்கு இப்ப எல்லாம். இப்ப எனைக்கு மவுத்துக்குப் பயமில்ல. ஏனெண்டா, நான் மவுத்தானா என்ன அட்க்கிறத்திக்கு இப்ப ஆக்களிருக்கு. நான் சாக்கடை பில கிடந்தாலும், இவங்கிட குளிச்ச்சியூான நெழல் இருக்கு மட்டும் எனக்கு கவலேயில்ல. அந்த நெழல் மிச்சம் சொகு FITSSTSI

Page 18
LLgi Lਘi
(1)
கிராம சேவகரின் காரியாலயம் மக்களால் நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது. இரக்கமற்ற புயலால் வீடுகளை யும், உடைமைகளையும் முற்றாக இழந்து, வெறுங்கை களோடு, திரானியற்றுப் பரிதாபமாக நிற்கும் மக்கள் அரசாங்கம் கொடுத்த நிவாரணப் பொருள்களைப் பெறு வதற்காகத் தவமியற்றிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை யில் ஏற்பட்ட இவ்வெதிர்பாராத தாக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது தவித்துக் கொண்டிருக்கும் அவர்களைச் சோகம் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.
கலங்கி நிற்கும் பொது மக்களின் வேதனைகளிலிருந்து தன்னை வேறு படுத்திக்கொண்டு, கிராம சேவகரும், அவர் கடாட்சத்தைப் பெற்ற கையாட்களும், உணவுப் பொருள் க்ளைப் பங்கீடு செய்வதில், மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டி ருக்கின்றனர். கிராம சேவகர் பெயர்களை இராகமெடுத்து வாசிக்க, பொது மக்கள் ஒவ்வொருவராக வந்து உணவுப் பொருள்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். கிராம சேவ கரின் சட்டம் எவ்வித எதிர்ப்புமின்றி, அமுலாகிக் கொண்டி ருக்கிறது. அவர், சர்வாதிகாரி போல், தலை நிமிர்ந்து நிற் கிறார். அவரின் கடாட்சம் பெற்ற கையாட்கள், விசை யேற்றி விட்ட இயந்திரம் போல், சுழன்று கொண்டிருக் கின்றனர்.
"நாசமத்துப் போவான், ஏழை எளியதுகளுக்கு கீவு மந்து மனமிரங்கிக் கொடுத்த சாமானையிம், எவளவு அறும் பாக் கொடுக்கான்"
"ஓங்கா ராத்தா. அவன்ட ஊட்டுச்சாமான கொடுக் கிறாப் போல குடுக்கான், பிச்சைக்கு வந்ததிலயே, ஹறவாப் போவான், மிச்சப்புடிக்கானே.இவன்ட புள்ள குட்டிகள் நல்லாரிக்குமா..?"
 

புயலும் பசியும் 鼻昂
"எங்கிட நெருப்பு அவனச் சும்மா உடமாட்டா.எரியிற நெருப்பில, எண்ணய ஊத்துறாப் போல, எங்கிட பேர வெச்சி, விதான எல்லாத்தையிம் சுறுட்டப் பாக்கான் இப்ப, எல்லாச் சாமானுக்கும், கடக்காரனுகளோட வெல பேசிரிப்பான்."
"இதெல்லாம் எங்கிட தலயெழுத்து, இதயெல்லாம், போய் நாங்க ஆரிட்ட செல்லலாம்? வேலியே பயிர மேஞ்சா, எப்பிடி பயிரு நல்லா வரும்?"
நிவாரணச் சாமான்களுக்காகத் தவமியற்றிக் கொண் டிருக்கும் இருபெண்கள், கிராம சேவகரின் அநியாயத்தை மனம் நொந்து பேசிக்கொள்கின்றனர். பசியின் கொடுமை பரந்து கிடக்கிறது. அதன் வேதனையைத் தாங்க முடியாமல், மக்கள் கண்ணிரும் கம்பலையுமாக நிற்கின்றனர். எங்குமே பரிதாபம்.
கிராமசேவகர் ஜனரிலேயே பெரிய பன க் கா ர ர், அவருக்கு அரசியல் கைப்பொம்மை, அது, அவருக்காக எதை யும் செய்யக் காத்துக்கிடக்கிறது. அத்திமிரில், அவர் ஊரில் காடைத்தனத்திற்கும், காவாவி வேலைகளுக்கும் முடிசூடா மன்னன், இன்று அவரே சட்டத்தின் பாதுகாவலர். அவரை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத ஏழ்மையில், பொது மக்கள் ஊமையாகி நிற்கின்றனர். மக்கள் அவர்களுக்குள் ளேயே புழுங்கிக் கொண்டிருந்தனர். கிராம சேவகர் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அவர் காரியாலயத் தினுள்ளே மூடை மூடையாக மாவும், பருப்பும் அடை பட்டுக் கிடந்தன.
"எவளவு மாவும், பருப்பும் சும்மா கிடக்கு. இதுக்குள்ள கிள்ளிக் கிள்ளி வெக்கானே. இவளuபிம், வெச்சிக்கிற்ரு என்னயப்போறானோ? இவனுமொரு மனிசனா?"
"எங்கிட பேரால ஒழைக்க இவனுக்கொரு நல்ல சந்தர்ப்பம் அதுதான், இந்த மா தி ரி கிள்ளிக் கிள்ளி வெக்கான்",
"எங்கிட வகுத்தில அடிச்சா, இவன அல்லா சும்மா உட LDTLLTgÄ7"* .

Page 19
முத்து மீரான் சிறுகதைகள்
"அல்லாக்கு பயந்தா, இந்த மாதிரி அநியாயத்த GF i aurresurat?”"
'அரசன் அண்டறுப்பான், தெய்வம் நிண்டறுக்கும்"
கிராமசேவகரின் செய்கையில் வெறுப்புற்று, இரண்டு வயோதிபர்கள் மனம் நொந்து கொள்கின்றனர். பசியின் வேகத்தில், கிடைத்ததைப் பெற்றுக் கொள்ளும் ஆவலில் மக்கள் முண்டியடித்துக் கொள்கின்றனர். எரிந்து கொண்டி ருக்கும் ஏழைகளின் வயிற்றில் கிராமசேவகரின் கையாட்கள் எண்ணெய் வார்த்துக் கொண்டிருக்கின்றனர். உணவுப் பொருள்கள் இருந்த மாதிரியே இருக்கின்றன. கிராமசேவ கரின் இதழ்கள் புன்னகை புரிகின்றன.
மக்கள் பேயறைந்தவர்களாகப் பெட்டிகளையும் தட்டு களையும் கைகளில் ஏந்திக் கொண்டு நிற்கின்றனர். பசியின் கொடுமைக்கு ஈடு கொடுக்க முடியாமல், தாய்மார்களோடு வந்த குழந்தைகள் சிணுங்கிக் கொண்டிருக்கின்றனர். எரிந்த காடுபோல், காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஊர், சோபை யிழந்து அமைதியாகக் கிடக்கிறது.
கிராமசேவகரின் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி, அவர் நினைத்தபடி எல்லாம் அணுப்பிசகாமல் நடந்து கொண்டிருக்கிறது. களத்தில் வெற் றிக் களிப் போடு முன்னேறிக் கொண்டிருக்கும் வீரனைப் போல், தன் திட்டத் தில் வெற்றி நடை போடும் அவர் ஒரு பிரபல்யமான சமூக சேவகர். பொதுமக்களுக்காகச் சேவை செய்து கொண்டி ருக்கிறார்!
மக்களுக்கு இருக்க வீடில்லை, உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை. எல்லாமே பயங்கரப் புயலுக்கு இரை யாகி விட்டன. அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த, அப் பயங்கர நிகழ்ச்சியை, அவர்களால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எறும்புகளைப் போல் சேர்த்து, பாதுகாத்து வைத்த செல்வங்கள், கஷ்டப்பட்டுக் கட்டிய வீடுகள் எல்லாமே கனவாகி, கனவின் நிழலாகிப் போய் விட்டன.

புயலும் பசியும் ፡ሃ
அழிந்த வட்டை போல் இருக்கும் ஊரில் முறிந்த மரங் களும், சிதைந்த வீடுகளும், உடைந்த சுவர்களுமே மிஞ்சிக் கிடந்தன. இவைகளைப் பார்த்து மக்கள் அழுதனர். ஆனால், தன்னைப் பார்த்து அழும் மக்களைப் பார்த்து அழ முடியாமல், ஊர் சோகமே உருவாகி அமைதியாகக் கிடந் தது பாவம்! அதன் பொலிவையெல்லாம் புயல் அள்ளிக் கொண்டு போய் விட்டது.
"என்ன செய்யலாம். இதெல்லாம் நம்முட தலவிதி. அச்சிமாசம், என்ர மூத்த மகளுக்குக் கலியாணம் முடிக்க எல்லா வேலயிம் செஞ்சிரிந்தன். நம்முட காசீன் வாவாட்ட ரெண்டாயிரம் கடன் வாங்கித் தான் வீட்டையிம் முடிச்சன். நம்முட எல்லா எண்ணத்திலயிம் அல்லா, இப்பிடி மண்ணப் போடுவானெண்டு ஆருக்குத் தெரியிம்."
"அந்த நெருப்ப கிளப்பாத புள்ள. அத நெனச்சா, மனமெல்லாம் பத்தி எரியிது. என்ற குடும்பக் கயித்தம் ஒனக்கு செல்லியா தெரியணும்.ஏ தோ வாயக்கட்டி வகுத்தக் கட்டி குருவி சேக்கிறாப் போல சேத்து, அந்த ஊட்டக் கட்டினன். கடசில ஊடுமில்ல, ஒண்டுமில்ல, எல் லாமே போச்சி...?? v
நிவாரணப் பொருள்களுக்காகக் காத்துக் கொண்டிருக் கும் இரு பெண்கள், தங்கள் வாழ்வில் ஏற்பட்ட துர்ப்பாக் கிய நிகழ்ச்சியை இரை மீட்டுக் கொள்கின்றனர். எத்தனை எண்ணங்கள், எத்தனை கனவுகள். எல்லாமே புயலாகி விட் டன. இன்று மக்களின் நினைவுகள் எல்லாமே புயலாக வீசுகின்றன.
'விதானயார் அளவ நிறுவயக் கொஞ்சம் நறுவிசாப் பாருங்க. பொதுச் சொத்த எ டு த் த வங் க, ஒரு நாளும் நல்லாரிக்கேலா..."
"ஆர்ராவன், பெரிய ஏசெண்டுத் தொரமாதிரி கதக்கிற? விடிஞ்சும் பத்து மணியாப்போச்சி, கொடலுக்க பச்சத் தண்ணியிம் எடுக்காம, வேல செய்யிறன், இதுக்குள்ள, எனைக்கு புத்தி செல்ல வந்திற்ராரு. இஞ்ச கூடக் குறய ஆரும் கதச்சா, பொலிசிக்குத் தான் போஜிங்க..”*

Page 20
yPig uforraio Puyasan Sardo
"சட்டமெல்லாம், ஒங்கிட கைலேயே இரிக்கிறாப் போல பேசாதிங்க. எங்களுக்கும் சட்டம் தெரியிம்"
"டேய் மம்மது. அவனப்புடிச்சி வெளிய தள்ளி, கதவப் பூட்டுடா."
நீரின் அமுக்கத்தில், விம்மிக் கொண்டிருந்த குளம் உடை கிறது. இளைஞனொருவனது நேத்திரங்களின் அக்கினி ஜுவாலையில், கிராம சேவகர் எரிந்து சாம்பராகிக் கொண்டிருக்கிறார். சத்தியத்தை ஜீரணிக்க, முடியாமல், அவரின் எண்சாண் உடம்பு துடிக்கிறது. மக்கள் மத்தியில் ஆரவாரம். கிராம சேவகரின் காரியாலயம் போர்க் களமாகிறது.
"டேய், ஒரு சாமானும் குடுக்காம எல்லாத்தையிம் இழுத்து மூடுங்கடா. இவன ஒரு கை பாக்காம, நான் இன் டைக்கு ஒண்டும் செய்யிறல்ல. என்னப் பத்தி இவன், என்ன நெனச்சிற்ரான்? நான் மலயச் சுமந்த சாமி.”*
பொருள்களின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. கிராம சேவகர், தனது காரியாலயத்தை இழுத்து மூடி விட்டு, எல்லோரையும் வெளியே போகுமாறு கத்திக் கொண் டிருக்கிறார். அவரின் சட்டமும், அதிகாரமும் அவரையே கபளிகரம் செய்கின்றன. பசியின் வெம்மையில் மக்கள் ஒல மிடுகின்றனர்.
"இவன்ட கணக் கொண்டு பாக்காம, நான் ஒண்டும் தர மாட்டன். இஞ்ச நிண்டு என்ர விசறக் கிளப்பாம எல்லாரும் போயிருங்க”*
"அப்ப, ராவைக்கு நாங்க என்னத்த’ திங்கிற ?? "மண்ணத் திண்டு, மழத்தண்ணியக் குடிங்க. நீங்க செத்தா, எனைக் கென்ன கொ றஞ் சா போயிரப் போகுது."
"விதான மரியாதயாப் பேசு, இல்லாட்டி இஞ்சரிந்து ஊட்ட போக மாட்டாய்"
"அவனப் புடிங்கடா...”*

புயலும் பசியும் 盛9
'ஆர்ரா புடிக்க வாறவன்? எவனுக்குடா தைரிய மிரிக்கு? வாங்கடா பாப்பம்."
களத்தில் இளைஞனின் கை ஓங்கி நிற்கிறது. நீதிக்காக போரிட்டுக் கொண்டிருக்கும் இளைஞனின் புயங்கள் துடிக் கின்றன. வாழ்க்கையில் எல்லாவற்றையும் பறி கொடுத்து, ஒரு சாண் வயிற்றுக்காக, கண்ணிர் விட்டுக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில், அவன் தலை நிமிர்ந்து நிற்கிறான். புயலின் கோரப் பசிக்குப் பெற்ற தாயையும், உடன் பிறந்த சகோதரிகளில் இருவரையும் இரை கொடுத்து, ஏங்கி நிற்கும் அவனுக்கு, உலகமே வெறுத்தது.
கிராம சேவகர், பூட்டிய காரியாலயக் கதவைத் திறக்க வில்லை. அவரின் பிடிவாதம் மீண்டும் மீண்டும் இறுகிக் கொண்டே இருந்தது. மக்கள் குமுறினர். எங்குமே பசியின் கோர தாண்டவம். கிராம சேவகரின் உள்ளம் கசியவில்லை. பதிலுக்கு மக்கள் கண்கள் கசிந்தன.
போர்க்களம், உக்கிரமடைகிறது. துடித்துக் கொண் டிருந்த இளைஞன், ஒரே பாய்ச்சலில் பாய்ந்து, கிராம சேவகரின் கையிலிருந்த திறப்புக் கோவையைப் பறித் தெடுத்து, காரியாலயத்தைத் திறந்து, அங்கே பதுக்கி வைக் கப்பட்டிருந்த மாமூடைகளையும், மற்றச் சாமான்களையும் எடுத்து, வெளியே போடுகிறான். கிராம சேவகரின் கடாட் சம் பெற்ற கையாட்களும், இளைஞன் பக்கம் சேர்ந்து விட் டனர். கிராம சேவகர் திகைத்து நிற்கிறார்.
பாவம், கிராமசேவகரின் இதயத்தில் கடும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. அவர்கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே என்ற ஏமாற்றத்தில், பொலீசுக்குப் போகிறார்.
இளைஞன் எதையும் எதிர் நோக்கத் தயார் என்ற உறுதியில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள் களை. மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் இயந்திரம் போல் சுழன்று கொண்டிருக்கிறான். மக்கள் பசியின் முன் அவை யெல்லாம் எம்மாத்திரம்?

Page 21
புதிய உலகம் ஜனிக்கிறது! (1)
உழைப்பின் ஜீவநாதம், கணக்கப்பிள்ளையின் அட்சரத் தின் வழியே ஜனித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் மத்தியில் கோடை காலப் புழுக்கம்.
"அகமது"
தொண்ணுாறு ரூபாய்
காசீம் வாவா"
நூறு ரூபா எழுபத்தைந்து சதம். "அலியார் லெவ்வை",
எழுபத்தைந்து ரூபா ஐம்பது சதம். "உதுமா லெவ்வை'
ii ,
கணக்கப்பிள்னை பெயர்களை வாசித்து சம்பளத்தைச் சொல்ல, முஸ்தபா முதலாளி அணுப்பிசகாமல் பணத்தைக் கொடுத்து, புத்தகத்தில் கையொப்பத்தை வாங்கிக் கொண் டிருக்கிறார். "முதலாளி எனக்கு, என்ர சம்பளத்தோடு ஒரு அம்பது ரூபா கூடச் சேத்து தாங்க. இந்தக் காச அடுத்த மாசச் சம்பளத்திலே தந்திர்ரன்"
சம்பளக் காசை வாங்கவந்த ஆதம்வாவா, ஐம்பது ரூபா காசுக்காகத் தன் வெற்றிலைச் சாறேறிய சூத்தைப் பற்கள் எல்லாவற்றையும் வெளியே காட்டி, கூனிக் குறுகி நிற் கிறான்.
"இப்ப காசிலப்பா. இந்தமுற நூலுக்கும் கொடுக்கக் காசில்லாம இருக்கு. வேற ஆரிடமாவது பார்த்துசுழயமாறிப் பாரு, வாற மாசம் பார்ப்பம்."
ஆதம் வாவாவின் அணுங்குப் பிடியில், ஐஸ் கட்டியைத் தூக்கி வைப்பதில் முஸ்தபா முதலாளி சுறுசுறுப்படைகிறார்.

புதிய உலகம் ஜனிக்கிறது 战1
"முதலாளி என்ர பெண்சாதிக்கு நிறமாசம். இதனால் நீங்கதான் எப்படியாவது ஒதவி செய்யணும். எங்களுக்கு நீங்க ஒதவி செய்யாட்டி, இந்த ஊருக்க வேற ஆரு ஒதவி செய்யப்போறான்? இல்லங்காம பாத்துத் தாங்க."
அரும்பு மலர்ந்து கொண்டிருக்கிறது. ஆதம் வாவா, நம் பிக்கையின் விளிம்பில் சுழன்று கொண்டிருக்கிறான். பாவம் அவன் பெண்சாதி தலைப்பிள்ளைத்தாச்சி. அதிலும் வயதும் குறைந்தவள். இந்நிலேயில் தன் பெண்சாதிக்கு என்ன ஆகுமோ, எப்படிப் போருமோ என்ற ஊமைப் பயம், எதுக் கும் கையில் ஒரு ஐம்பது ரூபா இருந்தால் எல்லாவற்றிற்கும் நல்லது என்று கூறிய தன் பக்கத்து வீட்டுப் பாத்து முத்துக் கிழவியின் ஆலோசனையைத் தேவவாக்காக நம்பியே, இன்று அவன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறான். ஆதம்வாவா பிராயம் அறிந்த காலந்தொட்டு இன்றுவரை முஸ்தபா முதலாளியின் நெசவு நிலேயத்தில்தான் வே3ல செய்து வருகிறான். நூல் சுற்றும் வேலையோடு ஆரம்பித்து, இன்று ஒரு நாளுக்கு நாலு சாறனுக்கு மேல் நெய்யக் கூடிய திறமையான தொழிலாளி என்ற பட்டத்தோடு வாழ்ந்து வரும் இவன், உலகில் சொந்தமென்று சொல்வதற்கு யாருமே இல்லாத அநாதை. இவனுடைய பிறப்பைப்பற்றி, ஊரில் யாருக்குமே தெரியாது. இவன் வாழ்க்கையே ஒரு புதிர் 1
எந்த நேரத்தில் எவர் எதைச் சொன்னாலும், மனங் கோணாது செய்து கொடுக்கும் பண்புடைய இவனை எல் லோரும் அன்புடன் விரும்பி நண்பனாக்கிக் கொண்டனர். இவன், குழந்தைகள் தொடக்கம் பெரியவர்கள் வரை எல் லோருக்கும் இனிய நண்பன். ஒரு தறியோடு நெசவுத் தொழிலை ஆரம்பித்து இன்று, நூறு தறிகளுக்கு அதிபதி யாகி கார் லொறிகளோடு காட்சியளிக்கும் முஸ்தபா முத லாளியின் உயர்ச்சிக்கு மூலகாரண கர்த்தாவான ஆதம் வாவா இவ்வூரிலேயே மிகவும் திறமையாக நெய்யக் கூடிய தொழிலாளி. இளம் வயதிலிருந்தே தன் முதுகுத் தோலை முஸ்தபா முதலாளியின் சுகபோகத்திற்காகச் செருப்பாகத் தைத்துக் கொடுத்து, எலும்பும் தோலுமாய் நிற்கும் இவன்,

Page 22
32 முத்து மீரான் சிறுகதைகள்
ஐம்பது ரூபாவுக்காக, இன்று ஐந்தாறு பாடாக மடிந்து இரந்து நிற்கும் காட்சியில், சக தொழிலாளிகள் இதயம் புழுங்கி நிற்கின்றனர்.
வாழ்க்கையில் பிடிப்பற்றுக் கிடந்த ஆதம்வாவாவுக்கு, முஸ்தபா முதலாளியே மனமிரங்கித் திருமணம் முடித்து வைத்தார். முதலாளியின் வீட்டில் வேலைக்காரியாக வந்து, அவர் அருந்தவப்புதல்வனால் கருக்கொண்ட கதீஜாவை, ஆதம் வாவாவுக்குக் கட்டாயத் திருமணம் முடித்து வைத்த பெருமை இவரையே சாரும். புழுவால் அரிக்கப்பட்ட அத்திப் பழத்தைப் பெருமையுடன் பெற்றுக் கொண்ட ஆதம்வாவா வுக்கு முஸ்தபா முதலாளி, இன்றும் தெய்வமே. வாழ வேண்டிய வனப்பு நிறைந்த பருவத்தை யெல்லாம், மாற் றான் ஒருவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, திக்கற்று திராணியற்று நிற்கும் ஆதம்வாவாவுக்குத் தன் பக்கத்து வீட்டுப் பாத்துமுத்துக் கிழவியின் நினைவுவர மீண்டும் முதலாளியிடம் பணத்திற்காக மண்டியிடுகிறான்.
"முதலாளி ஒங்கிட கால் ரெண்டிலையும் உழுந்தன். போன மாசம் சோதிச்ச டாக்குத்தரம்மா, சில வேள புளியந் தீவு ஆசிபத்திரிக்கு கொண்டுபோக வந்தாலும் வருமெண்டு சென்னா, புள்ளயிம் தலகீழாக் கிடக்கெண்டும் சென்னா. இதையெல்லாம் நெனச்சா எனக்கு என்னமோ பயமாக் கிடக்கு. அல்லா ஒங்களுக்கு நன்மயத் தருவான். எனக்கு இல்லங்காம ஒரு அம்பது ரூபாக் கா சிதாங்க."
சத்தியம் பிம்பமாகி விட்டது. ஆதம்வாவா இடுப்பை வளைத்து, வலக்கையால் பிடரி மயிர்களைத் தடவி, இடக்கண்ணால் முதலாளியின் வலக் கையைப் பார்த்து, அனல் போன்ற பெருமூச்சுகளை விட்டு ஏங்கி நிற்கிறான். பணி பெய்கிறது, குளிரால் எரிமலை வெடிக்கிறது. எங்கும் பயங்கரம். நாலா பக்கமும் அக்கினி ஜுவாலைகள்!
"சும்மா கரச்சல் கொடுக்காமல் அங்கால போப்பா, எனைக்கும் நிறய வேலையெல்லாம் கிடக்கு. ஒன்னப்போல

புதிய உலகம் ஜனிக்கிறது
பத்துப் பேருக்குப் பாவத்துக்கு இரங்கி, பணத்தைக் கெடுத் துக்கு போனால் என்ர கெதி என்ன? நீங்க கேக்கிற நேர மெல்லாம் அள்ளிக் கொடுக்க நான் என்ன சீதக்காதியா? ஒன்ட சம்பளத்தில இருந்து மிச்சமா ஒருசதம் கூட என்னால தர முடியாது. இந்தா, ஒன்ட சம்பளம், நீ என்னென் டான செஞ்சிக்க"
எழுபது ரூபாவை ஆதம் வாவாவின் கைகளில் திணித்து விட்டு முஸ்தபா முதலாளி தன் மக்காத் தொப்பியைக் கழற்றி, துவாயால் மொட்டைத் தலையில் குமிழ்ச் சிரிப்புக் காட்டும் வியர்வைத் துளிகளைத் துடைத்து, மீண்டும் தொப்பியைத் தலையில் போட்டுக் கொள்வதில் மகிழ்ச்சி யடைகிறார்.
காந்தம் விசைக் கோட்டிலிருந்நு தடுமாறிக் கொண்டி ருக்கிறது.
எங்கும் அமைதியின் ஜீரணிப்பில், ஞாலம் துயில் கொள்கிறது, −
சம்பளத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் தொழி லாளர்களின் நேத்திரங்களெல்லாம் தலைகுனிந்து, பனிக்கும் கண்களோடு பரிதாபமாக நிற்கும் ஆதம்வாவாவை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.
பாவம்! அவன் மெழுகாகி விட்டான்.
"வாப்பா மச்சான் கேட்ட றேடியோ வந்திரிக்காம், அத எடுக்க ஐநூறு ரூபா காசி வாங்கிற்று வரட்டாம்."
முஸ்தபா முதலாளியின் இளைய மகன் ஒட்டமும் நடை யுமாக வந்து பணம் கேட்கிறான். மறுகணம் எவ்வித பேச்சு மின்றிப் பெட்டியிலிருந்து ஐநூறு ரூபாவை எடுத்து மகனின் கையில் கொடுத்துவிட்டு, மீண்டும் மக்காத் தொப்பியைச் சரி செய்து கொள்கிறார். வில் நாணிலிருந்து பறக்கும் அம்பு போல் பணத்தைப் பெற்றுக் கொண்ட முதலாளியின் இளைய மகன், பறந்து கொண்டிருக்கிறான்.

Page 23
34 முத்து மீரான் சிறுகதைகள்
பூகம்பம் வெடிக்கிறது.
இதுவரை, எல்லாவற்றையும் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆதம்வாவா சீறி எழுகிறான்.
*முதலாளி ஒங்கிட உயர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கண்டு நான் மிச்சம் சந்தோஷப் பர்றன். இதக்கெல்லாம் முழுக்காரணம் என்னைப் போன்ற தொழிலாளிகள்தான் என்பத மறந்திராதங்க. நாங்க சிந்திய வேர்வதான், இப்ப ஒங்களுக்கு காரும், லொறியுமாக ஓடுது. நாங்களும் ஒங்களப் போல அல்லாட படைப்புத் தான். ஒங்களுக்கிரிக்கிற ஆசையிம் பாசமும் எங்களுக்கும் இரிக்கத்தான் செய்யிது, எங்கிட மனம் பத்தின, நீங்க ஒரு நாளும் நல்லா இரிக்க மாட்டீங்க. எங்களையும் நீங்க மனிசனப் பாருங்க. எங்களுக்கும் உணர்ச்சி இரிக்கிறத நீங்க மறந்திராதங்க." ஆதம்வாவா தன் ஆத்தி ரத்தை யெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டு நெசவாலையி லிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறான்.
'இதெல்லாம் எனக்கும் தெரியும். கணக்குக்கு மேல ஒரு சதக் காசிம் என்னால கொடுக்கமுடியாது. விரும்பினா வேலைக்கு வா, இல்லாட்டி போ. இப்ப வேலைக்கா ஆளில்ல, சும்மா வாயால சென்னாப் போதும் ஆயிரம் பேர் வேலைக்கு வருவான்'
முஸ்தபா முதலாளி நரியைப் போல் ஊளையிட்டுக் கொண்டு, வேலையில் இயந்திரமாகின்றார். கணக்கப் பிள்ளை விசையேற்றி விட்ட பம்பரம் போல் சுழன்று கொண் டிருக்கிறார். சம்பளத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், நாளையென்ற புது உலகத்தை நாடி, சுவடுகளை உறுதியுடன் வைத்துக் கொண்டிருக்கும் சக தொழிலாளி ஒருவனை விழிகளை மூடாது பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
(2)
விடியச் சாமம். ஊரெங்கும் ஒரே பரபரப்பு. மட்டக் களப்பு வைத்திய சாலைக்குப் பிரசவத்திற்காகக் கொண்டு

புதிய உலகம் ஜளிக்கிறது 36
சென்ற ஆதம்வாவாவின் மனைவி இரவு இறந்துவிட்ட துயரச் செய்தி காட்டுத்தீபோல் பரவிக் கொண்டிருக்கிறது. பாவம்! இறந்த மனைவியின் "மையத்தை வைத்திய சாலை யிலிருந்து, ஊருக்குக் கொண்டு வருவதற்கு வசதியற்றுஆதம் வாவா அழுது கொண்டிருக்கிறான். அப்பொழுது, அவன் பக்கத்து வீட்டுப் பாத்துமுத்துக் கிழவி', 'தம்பி! நீஇப்படியே இரிந்தா லாவு மவுத்தான மையத்த ஆரு எடுத்துக்கு வாற? இந்தா, இதில நூறு ரூபாக் காசு இரிக்கு. இது நான் என்ர மையத்துச் செலவுக்கு பிச்சடுத்து சேத்த காசி. இதக் கொண்டு போய், உன்ர பெண்சாதிட மையத்து கொண்டு வா." என்று சேலைத் தலைப்பில் பக்குவமாக முடிந்து வைத்திருந்த பணத்தை அவிழ்த்துக் கொடுத்து விட்டுப் பெருமூச்சு விடு கிறாள்.
வாழ்க்கையின் இன்பத்தை நுகரத் தொடர்ந்து, அதன் பரீட்சையில் தோல்வி கண்ட ஜீவாத்மாவின் உடம்பைச் சுமந்து வர, வாழ்ந்து கழித்த ஜீவனொன்று துடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் சக்தியால் முஸ்தபா முதலாளி யின் நெசவாலை வெறிச் சோடிக் கிடக்கிறது. அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லோரும் ஆதம்வாவாவின் வீட்டில் சோகத்தின் பிரதி பிம்பங்களாகக் குந்திக் கொண்டி ருக்கின்றனர். அவர்கள் மத்தியில் புதிய உலகமொன்று ஜனித்துக்கொண்டிருக்கிறது.

Page 24
பெளர்ணமி நிலவில் உணர்ச்சிகள் துடிக்கின்றன எழில் கொஞ்சும் கண்டி மாநகரம் வெண்ணுடை தரித்து, புதுப்பொலிவுடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது, இளவேனிற் கால வானந்தில் ஊர்ந்து கொண்டிருக்கும் வெண்ணிலவின் ஒளியினால் படர்ந்து கிடக்கும் மலைத் தொடர்கள் பளிங்கெனப் பளிச்சிடுகின்றன. அமைதியாக வீசிக் கொண்டிருக்கும் மந்த மாருதம், பச்சை பசேலென்று கிடக்கும் தேயிலைச் செடிகளின் இளந்தளிர்களைத் தடவிக் கொடுத்து, தாலாட்டிப் பாடிக் கொண்டிருக்கிறது. எங்கும் இயற்கையின் இன்பக் கிளர்ச்சி.
பாவம் எண்ணற்ற இன்பங்களை இதயத்திலே சுமந்து எழில் வானம்பாடி போல் சிறகடித்துப் பறக்க வேண்டிய சாந்தி மட்டும் சோகமே உருவாகி உதிரும் பணியையும் பொருட்படுத்தாது, வீட்டு முற்றத்தில் அமைதியாகக் குந்திக் கொண்டிருக்கிறாள். பளிங்குச் சிலைபோன்ற அவ்வழகியின் முகத்தில் கரை காண முடியாத கலக்கம். அனல் போன்ற பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருக்கும் அவ்வழ கியைப் பார்த்து கண்டிமா நகரமே அழுவது போல் இருக் கிறது.
சாந்தியால் அழ முடியவில்லை. அவள் இதயதாபங்கள், உள்உந்தல்கள் யாவும் ஊமையாகிவிட்டன. அவள் தன் வாழ்க்கையில் எதையெல்லாமோ எதிர்பார்த்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்தவை எதுவுமே கிடைக்கவில்லை. எல் லாமே பூஜ்ஜியமாகிவிட்டன. கால ஓட்டத்தில் அவள் எண் ணங்கள் முடமாகி விட்டன. மனித வாழ்க்கையில் அடைய முடியாதவைகளை, அவள் எதிர் பார்க்கவில்லை. எண்ணங் களின் முடிவுகள் இனிமையாக இருக்கவேண்டுமென்று தான் அவள் எதிர்பார்த்தாள். ஆனால், அவள் தந்தையின் விடாப்பிடி, அவளின் எண்ணங்களைச் சுக்கு நூறாக்கி விடு

Guartori aved asnitsd446stirper 8ሃ
மென்று அப்பேதை என்றுமே நினைத்த தில்லை. அவள் இளமைக் காதல், தன் தந்தையின் கைகளினாலேயே முட மாகி விடுமென்று, அவள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
சாந்தியின் தந்தை பேராதனைச் சர்வகலாசாலையில் மனோ தத்துவப் பேராசிரியராகக் கடமையாற்றிக் கொண் டிருக்கிறார். ஒரே ஒரு பிள்ளையான சாந்திக்கு, அவள் தந்தை எந்தக் குறையுமே வைக்கவில்லை. அவள் இதயம் வேண்டுவதையெல்லாம், அவர் அன்புடன் அளித்து வந்தார். பெற்றோரின் இனிய அணைப்பில் சாந்தியின் வாழ்க்கை களங்க மற்ற நீரோ.ை போன்று அமைதியாக ஓடிக்கொண் டிருந்தது.
ஒருநாள், தன் தந்தையைப் பார்க்க வந்த பேராதனைப் பல்கலைக்கழக மாணவனான சத்தியனிடம் தன் உள்ளத் தைப்பறி கொடுத்த சாந்தி, சதா அவனின் அன்புக்காகவே தவித்துக் கொண்டிருந்தாள். இவர்களின் இனிய காதல், பேராதனைப் பூங்கா தொடக்கம், அமைதியாக ஒடிக்கொண் டிருக்கும் மகாவலி தீரம் வரை செழித்து வளர்ந்தது. காலொன்று ஊனமான சத்தியன், படிப்பில் வீரனாக இருந் தான். தத்துவத்தைச் சிறப்புப்பாடமாகப் படித்துக் கொண் டிருந்த அவனுக்குத் தந்தை இல்லை. வறுமையின் கைப் பொம்மையான அவன் தாய்தான் ஒரே ஒரு ஊன்று கோலாக இருந்தாள்.
காலதேவனின் பவனியில் இவர்கள் காதல், சாந்தியின் பெற்றோர்களுக்குத் தெரியவந்தது. ஏழ்மையின் சின்னமான சத்தியனுக்கு, தங்கள் ஒரே ஒரு செல்வப் புதல்வியைக் கட்டிக் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. அதிலும் சத்தியன் சாதியில் குறைந்தவன். ஆனால், வாழ்க்கையின் கீழ் மட்டத்தில் கிடந்து தவித்துக்கொண்டிருக்கும் சத்திய னுக்கு, சாந்தி ஒரு ஜீவநதியானாள். அவளை அவனால் மறக் கவோ அல்லது துறக்கவோ முடியவில்லை. எப்படி இருந்தா லும் சாந்தியின் பெற்றோரை மட்டும் அவனால் திருப்திப் படுத்த முடியவில்லை. அவன் அவர்களுக்கு வேம்பாகவே

Page 25
8 முத்து மீரான் சிறுகதைகள்
இருந்தான். சத்தியனை அவர்கள் தங்கள் மருமகனாக கற் பனை பண்ணிப் பார்ப்பதற்கே மனம் கூசினார்கள். தங்கள் மகளின் காதலினால் அவர்கள் கெளரவமும், மதிப்பும் குறைந்து போய்விடும் என்று அஞ்சினார்கள். சாதியில் குறைந்த ஓர் ஊனப் பையனைத் தங்கள் மகளுக்குக் கட்டிக் கொடுக்க அவர்கள் வெட்கப்பட்டார்கள் . இதனால், சர்வ கலாசாலையில், தத்துவத்தைச் சிறப்புப் பாடமாகப் படித் துக் கொண்டிருந்த சத்தியனின் நண்பனான குமார் என்ற பையனைத் தங்கள் புதல்விக்குக் கலியாணம் பேசி எல்லா வற்றையும் முடித்துக் கொண்டார்கள். குமார் பணக்காரப் பையன். அதிலும், உயர் சாதியில் பிறந்தவன்,
குமாரின் பெற்றோர்கள் பணத்தையும், கெளரவத்தை யும் பெரிதாக மதித்து, உடனே திருமணத்திற்கும் வாக்குக் கொடுத்து விட்டனர். குமார், எவ்வளவு சொல்லியும் அவன் பெற்றோர்கள், அவன் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வில்லை. போலிக் கெளரவத்திற்காகவும், பணத்திற்காகவும் ஒரு கூட்டைப் பிரித்தெறிய அவன் உள்ளம் விரும்பவில்லை. அவன் இதயம் வாழ்க்கையின் போலிகளை வெறுத்தது. சமுதாயக் கிழிசல்களைக் காறி உமிழ்ந்தது; மனித சமுதாயத்தை மேலாக மதித்தது; சத்தியனுக்காகவும் அவன் புனிதமான எண்ணங்களுக்காகவும் வாழ்த்தியது.
சமுதாயப் பார்வையிலிருந்து வெகு தூரம் சென்று கொண்டிருக்கும் குமாரின் உள்ளம், புத்தபெருமானின் புனித போதனைகளால் நிறைந்து, அவன் பாதச் சுவடு களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் உண்மையினை அவன் பெற்றோர்களும், சாந்தியின் பெற்றோரும் எங்கே அறியப் போகிறார்கள்? அவனுக்கு வாழ்க்கையின் சூத்திரங்கள், பூஜ்ஜியமாகி விட்டன. அவன் நாடுவதெல்லாம் அமைதி. போதி மாதவனின் பாதக் கமலங்களில் சங்கமமாகி விட்ட அவன் எண்ணங்கள் யாவுமே எவராலும் அறிய முடியாத
புதிர்.

பெளர்ணமி நிலவில் உணர்ச்சிகள் துடிக்கின்றன 39
(2)
அன்று ஞாயிற்றுக்கிழமை, பேராதனைப் பூங்கா மக்கள்
வெள்ளத்தால் நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது. அங்கே களங்கமற்று அமைதியாக ஒடிக் கொண்டிருக்கும் மகாவலி கங்கையின் தீரத்தில் சாந்தியும், சத்தியனும் குந்திக் கொண்டி ருக்கிறார்கள். மலர்களையும், இலைகளையும் உருட்டிக் கொண்டு, மகாவலி கங்கை ஊர்ந்து கொண்டிருக்கிறது.
சாந்தி"
"என்ன சத்தியன்???
"என்னைப் பொறுத்த வரையில், நான் இன்றும் புனித
மானவன்தான். உனக்காகவும், உன் நல்வாழ்வுக்காகவும், நான் எதையும் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
**சத்தியன்."
"சாந்தி, என்னைப் பற்றி நீ அறிவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாவற்றையும் நீ அறிந்திருப்பாய். உண்மை யிலேயே, நான் உனக்குத் தகுதியற்றவன். என்னுடைய ஏழ்மையில் உன்னை நான் விரும்பி இருக்கவே கூடாது. என் காலைப்பார்! இந்த முடவனுக்கு உன்னைப் போன்ற ஓர் அழகி ஒரு போதுமே பொருத்தமில்லை."
சத்தியன், என்னை ஏன் வீணாகப் போட்டுச் சித்திர வதை செய்கிறீர்கள்? என்னை உங்களுக்குப் பிடிக்கா விட் டால் கூறுங்கள், உடனே மகாவலியில் குதித்து விடு கிறேன்."
"சாந்தி! நீ சந்தோஷமாக வாழவேண்டுமென்பது மட் டும் போதாது. உன் பெற்றோர்களும் உன்னைப் போன்று சந்தோஷமாக வாழவேண்டும். இதுதான் என் ஆசையெல் 6Q)rTub...ʼʼ
'அதற்காக...???
"நீ என்னை மறந்து, என் நண்பன் குமாரையே திரு மணம் செய்து கொள். அவன் மிகவும் நல்லவன். இந்த முட

Page 26
40 முத்து மீரான் சிறுகதைகள்
வனைக் கட்டிக் கொண்டு காலமெல்லாம் கஷ்டப்படுவதைக் காட்டிலும், நீ அவனோடு வாழ்வது எவ்வளவோ மேல்"
'போதும் உங்கள் உபதேசம் எனக்கு எவரைப் பற்றியும் கவலையில்லை. நீங்கள் ஒரு சீவல் தொழிலாளியின் மகனாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் எல்லாரும் மணி தர்கள் தான். எனக்கு ஒரு கடவுள் இருப்பாரேயானால் அவர் உங்களுக்கும் இருக்கட்டும். என் போன்ற உயர்சாதிகளுக்கு மட்டும்தான் அவர் இருந்தால், எனக்குச் சாதியும் வேண் டாம், கடவுளும் வேண்டாம். நான் விரும்புவதெல்லாம் புனிதமான உள்ளத்தைத்தான்.அந்த உள்ளம் உங்களிடம் இருக்கிறது.அதுவே எனக்கு வேண்டும்."
ogrige!"
எங்கும் ஒரே குளிர், சாந்தியும், சத்தியனும் நடந்து கொண்டிருக்கிறார்கள். கண்டிமா நகரம், அமைதியாகிக் கொண்டிருக்கிறது. படர்ந்து கிடக்கும் மலைத் தொடர் களையும், விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களையும் பனிப்படலங்கள் அமுக்கிக் கொண்டிருக்கின்றன.
சித்திரை மாதக் குளிரால் இளந் தளிர்கள் தளர்ந்து கிடக்கின்றன. மாலை மயக்கம். பல்கலைக் கழக அக்பர் விடுதியின் முன்னால் குமாரும், சத்தியனும் பேசிக் கொண்டி ருக்கிறார்கள்.
"நண்பா உண்மையிலேயே நீ இறுதி முடிவுக்கு வந்து of L(Turt?'"
"சத்தியன்.என்னால் எந்தப் போலி வாழ்க்கையுமே வாழ முடியாது; மனிதன், மிகக் கேவலமானவன். சுயநலக் காரன். தன் சுயநலத்திற்காக, மனித வாழ்க்கையின் அடித் தளத்திலேயே வெடிப்பை உண்டாக்கி விட்டான். கடவுளைத் தன் இச்சைப்படி மாற்றிக் கொண்டான். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று உயர்த்திக் கொள்ளும் மனிதனால், அவன் உள்ளத்தை மட்டும் உயர்த்திக் கொள்ள முடிய வில்லையே. சீ! கேவலம் எனக்கு இந்த வாழ்க்கையே வேண்

பெளர்ணமி நிலவில் உணர்ச்சிகள் துடிக்கின்றன 4t
டாம். கருணையே உருவமான புத்த பெருமானின் போதனை களால் நிறைந்து வழிந்து கொண்டிருக்கும் என் இதயம், இனி அவனுக்கே சொந்தம். அத் தூயவனின் உருவம் பதிந் துள்ள என் இதயத்தில், இனி எந்த உருவத்தையுமே என் னால் பதிக்க முடியாது, என் பெற்றேரின் சுய நலத்திற் காக, நான் ஒரு பெண்ணின் வாழ்வைப் பாழாக்க விரும் பவே இல்லை."
"நண்பா! நீ வாழ வேண்டிய பருவங்கள் இன்னும் இருக்கின்றன."
"எல்லாவற்றையும் என் மனம் அழித்து விட்டது. நண்பா, உன்னால் எனக்கொரு சிறு உதவி செய்யமுடியுமா?"
"சொல்லப்பா...”* "நீ, எதைப் பற்றியும் யோசியாமல், சாந்தியைத் திரு மணம் முடிக்க வேண்டும்."
*'é5LDntif!’’ "உன் திருமணத்தை, நான் கண்குளிரப் பார்க்க வேண்டும். அழிந்து கொண்டிருக்கும் ஒரு போலிச் சமுதா யத்திற்கு நீ யொரு சவாலாக இருக்க வேண்டும். உன் பாதச் சுவடுகளால் அச் சமுதாயமும், அதன் ஈனத்தனங் களும் நசுங்கி அழிய வேண்டும். செய்வியா..?"
**செய்கிறேன் நண்பா!' "மிக்க மகிழ்ச்சி. சமயவாதிகளாலும், பிற்போக்குவாதி களாலும் உருவாக்கப்பட்டு, அவர்களின் அசூசையான ஆத் மாக்களின் இற்றுப்போன இதயராகங்களாக குமிழ் விட்டுக் கொண்டிருக்கும் ஈனத்தனங்களும், குருட்டுக் கொள்கை களும், அவர்களுக்குள்ளேயே சமாதியாகட்டும். வாழ்க்கை எல்லோருக்கும் இனிக்கட்டும். அதிலும், நாளைய உலகின் ஒளிவிளக்கான உனக்காக அது, மகிழ் வுட ன் வழி யிடட்டும்."
"நண்பா! சாதியும் ஒன்றே, குலமும் ஒன்றே, எங்கள் சக்தியும் ஒன்றே. புனிதனான போதிமாதவன் எங்கள் எல்

Page 27
42 முத்து மீரான் சிறுகதைகள்
லோருக்கும் ஒளியாகட்டும். உன் எண்ணங்களும், சிந்தனை களும் புனிதமாவதற்கு என் வாழ்த்துக்கள், உன் ஒவ்வோர் அடிச்சுவடும் உலக மக்களின் ஒற்றுமைக்காகவும், ஒழுக்கத் திற்காகவும். பதியட்டும. தர்மமே உன் துணையாகட்டும்."
"நன்றியப்பா,'
(3)
பேராதனைப் பல்கலைக் கழகம் சாந்தமே உருவெடுத்து மோனத் தவமேற்றிக் கொண்டிருக்கிறது. சித்திரை மாதக் குளிரின் ஆட்சி, எங்கும் வியாபித்துள்ளது. நீண்டு விளங்கும் மலைத் தொடர்கள் பனிப்படலங்களால் மூடிக்கிடக்கின்றன. குமாரும் சத்தியனும் களங்கமற்ற உள்ளங்களோடு விடுதிக் குள் நுழைகின்றனர்.
பேராதனைப் புகைவண்டி நிலையத்தில் பிரயாணிகள் நிறைந்துள்ளனர். எங்கும் குளிர். கொழும்புக்குச்செல்லும் இரவுக் கடுகதிப்புகைவண்டி நீண்டுகிடக்கும் தண்டவாளங் களை விழுங்கி வந்து, நிலையத்தில் நின்று பெருமூச்சு விடு கிறது.
அங்கே, பிற்போக்குவாதிகளினாலும், இரக்கமற்ற சமய வாதிகளினாலும் சமைக்கப்பட்ட கறள் படிந்த சமுதாய மொன்றின் சலனசித்தத்தின் மேல், ஆழமாகத் தங்கள் சுவடு களைப் பதித்து, சாதிப்பித்தர்களும் மூடச்சழக்கர்களுமற்ற ஒரு புதுச் சமுதாயத்தைத் தேடிப் புறப்படப்போகும் இளந் தளிர்களான சாந்தியும், சத்தியனும் புகை வண்டியின் மூன் றாம் பெட்டி ஒன்றில் மன உறுதியுடன் ஏறி, குளிரில் கலங்கி நிற்கும் கண்டி மா நகரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கள். அவர்களின் பெட்டியருகில், குமார் என்ற இளம் பெளத்த சந்நியாசி சாந்தமே உருவாகி நின்று கொண்டிருக் கிறார். அவர் நேத்திரங்கள் தீட்சண்யமான ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அதில் கலக்கமே இல்லை. கொழும்புக் கடுகதிப் புகைவண்டி பேராதனை நிலையத்தை விட்டுப் புறப்பட்டு நீண்டு கிடக்கும் தண்டவாளங்களை

பெளர்ணமி நிலவில் உணர்ச்சிகள் துடிக்கின்றன A9
மூச்சுப் பிடித்து விழுங்கிக் கொண்டிருக்கிறது. மறுகணம், அமைதியே உருவான இளம் பெளத்த சந்நியாசி, நேத்திரங் கள் குளங்களாக, பேராதனைப் புகைவண்டி நிலையத்தை விட்டு, களங்கமற்று ஒடிக் கொண்டிருக்கும் மகாவலி கங்கை யின் தீரத்தில், சித்திரை மாதப் பெளர்ணமி நிலவில் மூழ்கி, கம்பீரமாக நிற்கும் போதி மாதவனின் புனிதத் தலமான தலதா மாளிகையை நோக்கி மெதுவாக நடந்து கொண்டி ருக்கிறார்,

Page 28
பாவம் அவர்கள் பொதுநலவாதிகள்
J
புதுமையைத் தே டி, ஊ ரி ன் நன்மைக்காகவும், புகழ்ச்சிக்காகவும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பூரண உதவியுடன், மண் ஒழுங்கைகளாக இருக்கும் பாதைகளுக்குச் சிரமதான அடிப்படையில் களிமண் பரப்பி கிறவல் போட்டுக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஒரே குதூகலம்.
எல்லோரும் ஒற்றுமையுடன் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். நவீன விஞ்ஞான வளர்ச்சி யின் வெற்றிக்கு, கறுப்புக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் அக்கிராமத்தில், சமுதாய முன்னேற்றம் மொட்டவிழ்ந்து கொண்டிருக்கிறது.
சிரமதான அடிப்படையில் வேலை செய்து கொண்டிருக் கும் தொண்டர்களுக்கு அரசாங்கம் மாவும் பருப்பும் மீன்டின் களும் இலவசமாகக் கொடுப்பதற்குத் தாராளமனப்பான்மை யுடன் முன்வந்திருக்கிறது. தொண்டர்கள் உற்சாகத்தில் இயந்திரம் போல் சுழன்று கொண்டிருக்கின்றனர்.
கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும் காரியதரிசியும் உறுப்பினர்களும் தொண்டர்களோடு, தோளோடு தோள் நின்று உஷார் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் ஏழைகளின் தோழர்கள்; பயனுள்ள சமூக சேவையாளர்கள். தகிக்கும் வெயிலையும் சட்டை செய்யாது ஊரின் நலமே தங்கள் நலனென்ற ஒரே நோக்கில் உழைத்துக் கொண்டிருக்கும் கிராம அபிவிருத்திச் சங்க ஊழியர்களை ஊர்மக்கள் வாழ்த்தினர்; போற்றினர். அவர்கள் முற்போக்கு வாதிகள்,

பர்வம் அவர்கள் பொதுநலவாதிகள்
பெருமனங் கொண்ட உழவுயந்திரச் சொந்தக் கார" களின் ஒத்துழைப்புடன், தொண்டர்கள், பல மணல் ஒழுங்கைகளைக் கிறவல் றோட்டுகளாக மாற்றி விட்டனர். ஓய்வு ஒழிவின்றி உழவுயந்திரங்கள் வயல் வெளிகளிலிருந்து மண்ணைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கின்றன.
கொட்டப்பட்ட களிமண்ணைத் தொண்டர்கள் ஒழுங் காகப் பாவிக் கொண்டிருக்கின்றனர். உற்சாகமிகுதியால், வயோதிபர் ஒருவர் பழைய பல்லவியொன்றினை இராக மெடுத்து மீட்டிக் கொண்டிருக்கிறார்.
சமுதாய மாற்றத்தின் உறுதியான அடிச்சுவடுகளுக் கிடையில், பழைய சிந்தனைகளும், எண்ணங்களும் நசுங்கிக் கொண்டிருக்கின்றன. புதுமை சிரிக்கிறது.
வாழ்க்கையோடு மட்டுமல்லாது, குமிழ் விட்டுக் கொண் டிருக்கும் பொருளாதாரச் சிக்கலோடும் எதிர் நீச்சல் போட் டுக் கொண்டிருக்கும் கிராமத்துத் தொண்டர்களின் சிரம தானப் பணியைப் பார்வையிடுவதற்காக உதவி அரசாங்க அதிபர், கிராம சேவகருடன் வந்த போது கிராம அபிவிருத் திச் சங்கத்தலைவரும், காரியதரிசியும் அவரை வாழ்த்திப் போற்றி வரவேற்றனர். தங்களின் சேவையைக் கொடி யேற்றுவதற்காக விழாவொன்றும் நடந்தினர்.
விழாவில் உதவி அரசாங்க அதிபர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பணியையும், அதன் உத்தியோகத்தர்களின் சேவையினையும் வாயாரப் புகழ்ந்து பாராட்டினார்.
"ஐயா, எங்களுக்கு மா, பருப்பு, மீன் டின்களெல்லாம் எப்ப தருவீங்க**
பேசிக் கொண்டிருந்த உதவி அரசாங்க அதிபரிடம் இளைஞனொருவன் தன் இதயத்தைக் குடைந்து கொண் டிருந்த விடயத்தை கேட்டு விட்டு விடைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். இளைஞனின் கேள்வியை மனதார வாழ்த்தி, மற்றத் தொண்டர்களும் ஏங்கி நிற்கின்றனர்.

Page 29
40 முத்து மீரான் சிறுகதைகள்
அடுத்த திங்கட்கிழமை உங்களுக்கு எல்லா சாமான்களும் உடன் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். உங்கள் கிராம அபிவிருத்திச் சங்கம், இந்தச் சாமான்களையெல்லாம் எடுத்து திங்கட்கிழமையே விநியோகிக்கும்.
உதவி அரசாங்க அதிபரின் உறுதி மொழியுடன் விழா முடிகிறது. தொண்டர்கள் மீண்டும் சிரமதானப் பணியில் ஐக்கிய மாகின்றனர்.
'தம்பி ஐயா சொன்னபடி எங்கிட சாமானையெல்லாம் நறுவிசா எடுத்துத் தந்திரனும் பசியின் சிசு ஜனிக்கிறது.
"அதப் பத்தியெல்லாம் நீங்க ஒன்றுக்கும் கவலைப் படாதீங்க"
சிசு, தாலாட்டப்படுகிறது. "இப்படித்தான் போன முறையிம் எங்கிட, பழைய தலைவரும் காரியதரிசியும் சென்னாங்க. கடைசியில் ஒரு மண்ணும் கிடைக்கல்ல"
ஏமாற்ற மடைந்த சிசு மீண்டும் அழுகிறது. "நாங்க சொன்னாச் சென்னபடி நடப்போம். ஏழை களின் சொத்து எங்கிட சந்ததிக்கும் ஹறாம்."
தாலாட்டின் இராகம் கணக்கிறது. "என்னமோ, இனி ஓங்கிட இஷ்டம், அழுத சிசு, தூங்கி விட்டது. வேலை செய்து கொண்டிருந்த ஏழையொருவனுக்கும், சங்கத் தலைவருக்கு மிடையில் நடைபெற்ற பேச்சு முடி வடைகிறது. தலைவர் தலை நிமிர்ந்து, நாலாபக்கமும் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வாய் கிராமத் தின் உயர்ச்சியே தன் உயர்ச்சி என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.
சிரமதான வேலைகளையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டு, உதவி அரசாங்க அதிபரும் கிராம சேவகரும் போய்விட்டனர். சங்கத் தலைவரும், காரியதரிசியும்

பாவம் அவர்கள் பொதுநலவாதிகள் d
தொண்டர்கள் மத்தியில் பொதுநலத்தைப் பற்றிக் கோடு கிழித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முத் திரை குத்தப்பட்ட பொதுநலவாதிகள். அவர்களுடைய சேவையின் கொ டி க ள் வானளாவப் பறந்து கொண்டி ருக்கின்றன.
"இந்த முற, எங்களுக்கு இருபது றாத்தலுக்குக் குறையா மல் ஒவ்வொரு ஆளுக்கும் மாக் கிடைக்கும்."
"பருப்பும் அப்படித்தான் கிடைக்கும்."
ஏதோ இந்தப் பெரியவனுகள் எங்கிட பங்கில் கிள்ளி எடுக்காமல் இரிந்தால் போதும்."
"அதெல்லாம் இந்த முற நடக்காது. ஏனென்றால், எங் கிட சங்கத் தலைவர் நல்லகொணமான பொடியன் அவருக்கு அந்தக் கள்ளத்தனமெல்லாம் தெரியாது."
"அது மெய்தான் இவரு தங்கமான புள்ள. மத்தவன்ட சொத்தில் கடைசி மட்டும் கை வைக்க மாட்டாரு".
சிரமதானப் பணியின் புனிதத் தன்மையைப் பூரணமாகப் புரிந்து கொள்ள முடியாத இரு ஏழைத் தொண்டர்கள், தங் கள் உள்ளக் கிடக்கைகளைப் பரிமாறிக் கொள்ளுகின்றனர், பாவம் அவர்கள் மாவுக்கும், பருப்புக்குமாகவே சிரமதானம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் ஏழ்மையின் முன்னால், எல்லாமே பசியாகி விட்டன.
மாவையும், பருப்பையும் மையமாக வைத்து, கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் சிரமதானத்தை மும்முரமாக்கிக் கொண்டிருக்கின்றனர். சூரியன் எக்காள மிட்டுச் சிரிக்
கிறான்!
(2)
சிரமதானப் பணிகளெல்லாம்முடிந்து, மணல் ஒழுங்கை களாக இருந்த பாதைகளெல்லாம், இன்று கிறவல்றோட்டுக் களாக மாறிச் சிரித்துக் கொண்டிருக்கின்றன.

Page 30
4. முத்து மீரான் சிறுகதைகள்
ஆனால், வேலைகள் முடிந்து இரண்டு கிழமைகளுக்கு மேலாகியும், மாவும், பருப்பும் கிடைக்காமல் தொண்டர்கள் அழுது கொண்டிருக்கின்றனர். சங்கத் தலைவரும், காரிய தரிசியும் சதா அரசாங்க அதிபரைத் திட்டினர். எல்லாமே பூஜ்ஜியம்.
"என்ன தம்பி, எங்கிட சாமானெல்லாம் இன்னமும் வரல்வியா?"
"இன்னம் ஒரு சாமானும் வரல்ல. வந்தா நாங்க வைத் துக்கா இரிக்கப் போறம்?"
"எங்கிட நெருப்பு உங்களையெல்லாம் சும்மா விட rt T".
"உங்களுக்கு மட்டும்தான் கதைக்கத் தெரியுமென்று கதைக்காதிங்க, எங்களுக்கும் கதைக்கத் தெரியும்".
"நீங்களெல்லாம் படிச்சவங்க, எங்களையெல்லாம் பார்க்க உங்களுக்கு நல்லாக் கதைக்கத் தெரியும் தான். அதுக்காக நாங்க, பேசாம இருக்கலாமா?"
"இப்ப அப்படி யாரு சென்னாங்க? என்னத்துக்கு வீண் கதையெல்லாம். இன்னமும் எங்களுக்கு சாமான் கிடைக் கல்ல. சாமான் கிடைச்சா அறியத்தருவம் வாங்கி."
"அதையும் நாங்க பார்க்கத்தான் போகிறோம். எங்க ளுக்கும் ஏசன்டுத் துரையின் கந்தோரு தெரியும்".
தெரிஞ்சா அங்கே போய்க் கேளுங்க". கிராம அபிவிருத்திக் கந்தோர் போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கிறது. மக்கள் கொதிக்கின்றனர். தலைவரும், காரியதரிசியும் கந்தோரைப் பூட்டி விட்டுப் போகின்றனர். அவர்கள் தொண்டர்களை அடக்க, பொலீசுக்கு போகிறார் கள்

ாவம் அவர்கள் பொதுநலவாதிகள்! 속9
3.
ஊரெல்லாம் ஒரே பரபரப்பு. சிரமதானத்தின் மூலம் றோட்டுக்கள் அமைத்த ஏழைத் தொண்டர்களுக்குக் கொடுப் பதற்காக, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மா மூடைகளை ம், பருப்பு மூடைகளையும் கள்ளத்தனமாக விற்று, கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கிராம அபிவிருத்தித் தலைவரையும்,
காரியதரிசியையும் பொலீசார் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள், மக்கள் கொதிக்கின்றனர். பாவம் அவர்கள்
பாதுநலவாதிகள் !

Page 31
அவள் கனவுகள் உயிர் பெறுகின்றன!
எனக்கு வயசி முப்பதுக்கு மேலதான் இருக்கும். எங்கிட
குடும்பத்தில் நான்தான் மூத்த புள்ள எனைக்கு கூடப் பொறந்த ரெண்டு தங்கச்சிமாரும் கலியாணம் முடிச்சி, இப்ப அவங்களெல்லாம் புள்ள, குட்டிகளோடு சந்தோசமா இருக்கி றாங்க. எனைக்குத்தான் இன்னமும் கலியாணமே முடியல்ல. எனைக்கு கலியாணம் முடிச்சி வைக்க எங்க உம்மாவும், வாப் பாவும் எவளவோ கஷ்டப்பட்டாங்க. ஆனா, என்னுடைய தோசம்தான் ஒண்டுமே சரிவரல்ல. எனைக்கும் கலியானம் முடிக்க ஒரே ஆசைதான். என்ன செய்யலாம்! ஆசையைத் தந்த அல்லா, எனைக்கு அழகைத்தராமல் காகக் கறுப்பாப் படைச்சிப்போட்டான். கறுப்பாப் படைச்சவன் கொஞ்சம் பணத்தையாவது தந்திருக்கக் கூடாதா? எனைக்குத்தான் ரெண்டுமே இல்லாமல் போயிற்றே. அவன் மட்டும் என்மேல் இரக்கம் காட்டிருந்தா எனைக்கு இந்த நிலை வந்திருக்குமா?
இப்ப, நான் எங்கு உம்மாவோடுதான் இருக்கிறேன். வாப்பா மகுத்தாகி பத்து வருசத்துக்கு மேலாப் போச்சு, அவராவது இந்த நேரத்தில் இருந்திருந்தால், எங்களுக்குப் பெரிய ஆறுதலாக இருந்திருக்கும். யாரு செய்த கருமமோ, அவரும் போயிற்றாரு எல்லாம் எங்கிட தலையெழுத்து, எந்த நேரமும் உம்மாக்கு என்னைப்பற்றித்தான் ஒரே கவலே, எனைக்கும் இதில் கவலைதான். ஆனா, யாரு கவலைப் பட்டும் என்ன புண்ணியம். தானென்ன வெள்ளையாகவா மாறி விடப் போகிறேன். இல்லாட்டி எனைக்கென்ன சுவீப்பா விழப் போகுது? இந்த உலகத்தைப் பற்றி நினைச்சா எனைக்கு நெஞ்செல்லாம் பத்தி எரியிது. எங்களைப் போல பருவ நெருப்பில் கிடந்து கருகிக் கொண்டிருக்கும் ஏழைச் குமருகளைப் பற்றி கொஞ்சமாவது நினைச்சிப் பார்க்காத இந்த உலகம் அழிஞ்சி போகணும். இப்ப அழியாட்டியும் எங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவள் கனவுகள் உயிர்பெறுகின்றன! 5i
கிட பெருமூச்சால், என்றைக்காவது ஒருநாள், இந்த உலகம் அழியத் தான் போகுது.
நான் எவளவெல்லாம் நினைச்சிருந்தன் தெரியுமா? எனனக்கும் கலியானம் முடிஞ்சி, என் வயிற்றிலையும் ரெண்டு மூணு பிள்ளைகள் பொறந்து, அதுகளிர சீறு சிறப் பெல்லாம் பாக்கவேணுமென்று, எத்தனை மனக்கோட்டை யெல்லாம் கட்டிக் கொண்டிருந்தன். என் எல்லா எண்ணங் களுமே கனவாப் போச்சு, எனைக்கு கலியானம் முடிந்தால் அயாத்துநபி அப்பாட தலத்திற்கு பணியாரமும், உறட்டியும் கொண்டு வருவேனென்று உம்மா எவ்வளவு நேத்தியைத் தான் வைத்தா, எந்த நேத்திக்கும் எதுவுமே நடக்கல்ல எல்லா நேத்தியும் வைத்தமாதிரித்தான் இருக்கு. ஆனா எனைக்குத்தான் விசம் போல வயசி ஏறிக்கொண்டே போகுது. எல்லாருக்கும் உதவி செய்யிற அயாத்து நபி அப் பாவும் எங்களைக் கைவிட்டுப் போட்டாரு. இதையெல்லாம்
நினைச்சிப் பார்த்தா எனைக்கு அழுகை தான் வருகுது.
எங்கு உம்மாக்கும் இப்ப வயசாப் போச்சு. கண்ணெல் லாம் நல்லாப் புகைஞ்சி பார்வையும் மங்கிப் பெயித்து. இத னால் முந்தியப் போல ஒடியாடி எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டிலேயே இருக்கிறா. எனைக்கு காக்கா தம்பி யாருமே இல்லை. இதனால் எங்களுக்கு இப்ப, பெரிய கஷ்டம். இவளவு காலமும் உம்மாதான் உழைத்து என்னை யும் காப்பாத்திக் கொண்டு வந்தா. ஆனா, அவ பாயில விழுந்த பிறகு, நான் தான் அவக்கும் துணை. நான் இப்ப, கதிரு பொறக்க வயலுக்க போயிற்றுவாறன். சில நேரம் புல்லுப் புடுங்கையும் போவன். இதுகளால்தான், எங்கள் ரெண்டு பேரின் கனாயத்தும் ஒருமாதிரிப் போகுது.
எங்கு உம்மா பிச்சைச் சம்பளத்திற்கு எத்தனையோ வித்திசம் எழுதிப் போட்டும் ஒன்றும் சரிவரல்ல. அதாவது கெடச்சிருந்தா, அவட வெத்திலை பாக்குச் செலவையாவ التي தாக்காட்டி இருக்கும். எங்கிட குறிச்சி விதானையிடம் இதைப் பற்றி எங்கு உம்மா செல்லாத நாளே இல்லை

Page 32
5. முத்து மீரான் சிறுகதைகள்
இந்தக் க்ாலத்தில் ஏழைகளைப் பற்றி யாருக்குத்தான் கரிசனை இருக்கு?
எங்களுக்குச் சொந்த வீடுவளவெல்லாம் கிடையாது" எங்களுக்கு சொந்தமாக இருந்தவனவில், ரெண்டு குடில் களை வைத்து தங்கச்சிமாரு ரெண்டு பேரையும் ஒருமாதிரி ஒப்பேற்றிப் போட்டோம். இப்ப நானும், உம்மாவும் காசீம் கிளாக்கரின் கொளணி வளவில் ஒரு சின்னக் குடிலை வைத்துக் கொண்டு இருக்கிறம். காசீம் கிளாக்கர்தான் எங்கிட பெரிய பள்ளி ரஸ்டிப் போட்டுத் தலைவர். இவருக்கு எங்கிட ஊருக்குள்ள பெரிய மதிப்பு. அவரு எதை நினைச் சாலும் செஞ்சி போடுவாரு, அவரை யாருமே எதிர்க்கிற தில்லை. சொல்லப் போனா, அவருதான் எங்கிட ஊருக்கு gur Tajo T.
கிளாக்கருக்கு நாலஞ்சி கலியானம். எல்லாக் கவியாணத் நிலையும் புள்ள குட்டிகள் கூடக் குறையக் கிடக்கு. ஆனா, முறைப்படி காவின் எழுதின கவியாணம் ஒன்றுதான். இந்தக் கலியானத்தில் பிறந்த மூத்த பொம்பிளைப் பிள்ளைக்கு கவியானம் முடிச்சிக் கொடுத்திட்டார். அந்தப் பிள்ளைக்கு ரெண்டு பிள்ளையும் இருக்கு. கிளாக்கரின் வீட்டில் ஏதும் பொறுப்புச் சறுப்பென்றால், நானும் உம்மாவும் போய்த் தான் உதவி ஒத்தாசைகளைச் செய்வோம். இதனால் கிளாக்கரின் வீட்டில் நடக்கிற சுத்தம் பாத்திஹா தொடக் கம் கலியானம் வரைக்கும் நாங்கதான் எடுபிடி ஆட்கள். நாங்கரெண்டு பேரும் இல்லாமல் அவர்ர வீட்டில் எதுவுமே செப்ப மாட்டாங்க
ஆவருக்குள்ள கிளாக்கரென்றால் எல்லோருக்கும் நல்ல பயம், அவருக்குக் கோபம் வந்தால் பிறகு ஒன்றையும் பார்க்கமாட்டாரு. போன மாசம் எங்கிட ஆளரில் ஒரு விஷயம் நடந்து போச்சு. எங்கிட வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற மம்மக்காசீன்ட ர்ெண்டாவது மகள் யாருக்கோ புள்ளய உண்டாயிற்றாள். இதனால், பெரிய கரச்சலாப் போயிற்று. பாவம் மம்மக்காசீனுக்கு ஊருக்கேயே முகம் நீட்ட முடியா

அவள் கனவுகள் உயிர்பெறுகின்றன:
ல் போச்சு. எங்கே போனாலும், எல்லாரின் வாயிலையும் இந்தக் கதைத்தான். கடைசியில் விஷயம் எங்கிட பெரிய பள்ளிக்கும் பெயித்து. இனி என்ன செய்யி ற. கிளாக்கர்தான் இந்த வழக்கையும் விளங்கினாரு விளங்கி நோம் ஆதம் வாவாவின் மூத்த மகன்தான் வந்து போனதாக பொடிச்சி சத்தியம் பண்ணினாள். ஆனா அவன், தான் போக்வில்லை யென்று ஒரே புடியாக மறுத்துப் போட்டான். கிளாக்கர் வளவோ செல்விப் பாக்தாரு, அவன் கிளாக்கரையும் மதி ாமல் பேசிப் போட்டான். அவன். ஆதம்வாவாட வீட்டுக் கும் போய் வந்ததாக எத்தனையோ பேர் சாட்சியும் கூடச் சென்னாங்க எதுக்கு அவன் அசையல்ல. "பாவம், ஒரு குமரின் நெருப்பு உன்னைச் சும்மா விடாது. அந்தப் விள்ளையை காவீன் எழுதிரு" என்று ஒரு நாளுமே கெஞ்சாத
கிளாக்கர் கெஞ்சினாரு அவன் கிளாக்கரையுமே எதிர்த்துப்
போட்டான். கடைசியில் அவருக்கு நல்லாக் கோபம் வந்
சிற்று. பிறகென்ன, புடிச்ச புடிவிலேயே ரெண்டு பேருக்கும்
பெரிய பள்ளியிலேயே வைத்து காவின் எழுதிப் போட்டாரு.
தமரு காரியமென்றால் அவரு எப்பொ தும் அப்படித்தான்.
tந்தக் குமரையும் கண்கலங்க விடமாட்டாரு. குமரு காரிய
மன்றால் அவர்தான் எங்கேயும் முன்னுக்கு நிற்பார்.
இவரின் மனசைப் போல மனசி, இந்த ஊருக்க வேறு யாருக்
தத்தான் இருக்கப் போகுது..?
கிளாக்கர்தான் எங்கிட ஊரு தப்லீக் ஜமா அத்துக்கும் மீர்- இஸ்லாம் சமயத்த அவரு கரைச்சிக் குடிச்சிருக்காரு. வரிடம் யாருமே பேசித் தப்ப முடியாது. அவரு ஒரு றிவுக் கடல் வருகிற ஹஜ்ஜிக்கு மக்காவுக்குப் போப்புறாரு வரு மக்காவுக்குப் போகிறதற்கு என்ன குறைதான் அவ இக்கு இருக்கு. அவரு செல்வச் சீமான், அந்தச் சீமான்ட ஆயிச அல்லா நீட்டி வைக்கனும்,
கிளாக்கர் எங்கிட வீட்டுக்கு அடிக்கடி வந்து போவாரு. ாற நேரமெல்லாம் என்னைப் பார்த்து உனக்கு கவியாணம் ன்று முடிச்ச பிறகுதான் நான் கறுப்பாக இருந்தாலும் ன்று சொல்லுவாரு அவருக்கு என்னோடு அவளவு விருப்

Page 33
4. முத்து மீரான் சிறுகதைகள்
ாம். நான் கறுப்பாக இருந்தாலும் நல்ல முகவாக்கென்று செல்லுவார். அவர் அப்படிச் செல்லும் போது, என் உடம் பெல்லாம் புல்லரிச்சுப் போகும். எனைக்காக இந்த உலகத் தில் இரக்கப்பட அவராவது இருக்கிறாரே என்று என் மனசி நிறைஞ்சி போகும்.
ஒரு நாள், கிளாக்கரின் மூத்த மகளுக்கு வருத்தமென்று போன உம்மா, அங்கேயே படுத்திற்றா. வீட்டில் நான் மட்டும்தான் தட்டத் தனிய கொறுவான் பெட்டி மாதிரி இருந்தன். பொடு பொடென்று மழையும் கூடத் தூறிக் கொண்டிருந்தது. எனைக்கு நித்திரையே வரல்ல. செரு சாமம் இருக்கும். கிளாக்கர் வந்து என்னை எழுப்பினாரு. அவரு உம்மாவைத்தான் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாரு என்ற எண்ணத்தில் நானும் கதவைத் திறந்து பார்த்தேன். இப்படி, உம்மா சுணங்கினால் பல முறை கூட்டிக் கொண்டு வந்து இருக்கிறார். இதனால் நான் சந்தேகமே படவில்லை. அன்று நான் கதவைத்திறந்ததான் தாமதம், அவர்டக்கென்று வீட்டுக்க வந்திற்றாரு, எனைக்கு கையும் ஒடல்ல. காலும் ஒடல்ல. உடம்பெல்லாம் நெருப்பாப் பெயித்து. நான் எவள வெல்லாம் கெஞ்சிப் பார்த்தன். எதையுமே அவரு கேட் கல்ல. என்னைக் காவின் எழுதப் போறதாக என் தலை யிலேயே அடிச்சி சத்தியம் பண்ணினாரு. பிறகு எனைக்கு எதுவுமே தெரியல்ல. என் வாழ்க்கையில் இந்த முப்பது வருசமா, நான் எந்தச் சுகத்திற்காக இரவும் பகலும் தவிச் சேனோ, அந்த இனிய சுகம் என்னையே தின்று போட்டு.
இன்று இந்தப் பொல்லாத உலகத்தின் கண்களுக்கு காகக் கறுப்பியாகவும், அசிங்கமான பொறுக்கியாகவும் இருந்த என் வயிற்றிலையும் ஐந்து மாசக் கருவொன்று துடித்துக் கொண் டிருக்கு. இதைக் கண்டு, பொறுக்க முடியாமல், இந்த ஊரும் உலகமும் என்னைப் பார்த்து சதா வேசை என்று வசை செல்லுது. இந்த உளரையும் உலகத்தையும் பார்த்தால் எஃனக் குச் சிரிப்புத்தான் வருகிது. நான் எதைத் தேடி இரவும், பகலும் கண்னர் விட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த நேரம் என்னைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்திக்காத இந்தக் கையா
!? 1ょ村の

அவள் கனவுகள் உயிரிபெறுகின்றன! 岛昂
லாகாத உலகமும், உண்ரும் இப்போதெல்லாம் சதா என்னைப் பற்றியே சிந்திக்கிறது. இதனால், என்னை ஊராலேயே விலக்கி வைக்க, கிளாக்கரிடம் செல்லி இருக்கிறாங்க. அவரு தானே றஸ்டிப் போட் தலைவர். காழியாரும் கூட.
வாற வெள்ளிக்கிழமை, என்னையும் எங்கு உம்மாவை யும் பெரிய பள்ளிக்ரு வரச்செல்வி காழியாரு துண்டு அனுப்பி இருக்கிறாரு. இந்தப் பிள்ளைப் பாக்கியத்தைத் தந்த கிளாக்கரே, என் வயிற்றில் வளர்ர பிள்ளைக்கு வாப்பா யாரென்று கேட்கப் போறாரு. என் பிள்ளைக்கு வாப்பா கிளாக்கர்தான் என்று சென்னா, இந்த ஊரும், உலகமும் நம்பயா போகுது..? அப்படிச் சென்னாலும், அவரென்ன என் பிள்ளைக்குப் பதிவா வைக்கப் போறாரு..?
எனைக்கு எதைப் பற்றியும் கவலையே கிடையாது. இந்த உலகத்தில் எது சீரழிஞ்சி போனாலும் பரவாயில்லை. என் பிள்ளை மட்டும் சீரழிஞ்சி போகாமல் இருந்தால் போதும். ஏனென்றால், என் பிள்ளையைக் கொண்டுதான், இந்தச் சீரழிஞ்சுபோன உலகத்தையும் சமூகத்தையும் சீராக்க வேணும். இந்த ஏழைக் கறுப்பியைப் பற்றி அந்த அல்லாக்கு நல்லாத் தெரியும்.

Page 34
இதயம் அழுதுகொண்டே இருக்கிறது
வாழ்க்கையின் பாதிப் பகுதியைத் தனிமையில் அனல் போன்ற பெரு மூச்சுகளுக்கு இரை கொடுத்து, இறுதித் துணையான பென்சனோடு, இன்னும் சில மணித்தியாலங் களில் கொழும்புமா நகரத்தை விட்டுப் பிரிந்து, துர்ப்பாக்கி யம் பிடித்த அநாதைக் கிழவனாக, என்னைப் பெற்று வளர்த்து பேணிக் காத்துப் பெரியவனாக்கிய என் தாயகத் திற்குச் செல்வதற்காக, மட்டக்களப்புப் புகைவண்டியை எதிர்பார்த்து, கோட்டை நிலைய இரண்டாம் மேடையில் சோர்ந்து நிற்கிறேன்.
சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன், எங்கோ பிறந்து கொழும்புமா நகருக்கு ஆசிரியனாக வந்த என் இள மைப் பொலிவில் சங்கமமாகித் தன் காந்த விழிகளால் என் னைக் கட்டிப் பிணைத்து, கற்பனைக்கெட்டாத அற்புத ஜாலங்களையெல்லாம் என் முன்னே காட்டி, இறுதியில் என்னை இப்பரிதாப நிலைக்கு ஆளாக்கிவிட்டுத் தன் பெற் றோரின் ஆசைப்படி யாரோ ஒருபணக்காரனை மணந்து இன்பமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் என் காதலியின் புகைப்படத்தைத் தவிர, என் அந்திம கால வாழ்க்கைக்கு நான் எதையுமே சேர்த்து வைக்கவில்லை.
பூத்துக் குலுங்கிப் புதுமணம் வீசவேண்டிய என் வாழ்க் கையை மொட்டிலேயே கசக்கி எறிந்து விட்டுச் சென்ற அவள் படம் மட்டும் தான் இன்று என்னிடமிருக்கும் ஒரே ஒரு சொத்து. என்வாழ்க்கையை மாயையாக்கிச் சென்ற அவள் புகைப்படத்தைப் பார்த்துப் பார்த்து, சதா அழுதே என் இரண்டு நேத்திரங்களும் குழிவிழுந்து, ஒளிமங்கிப் போய் விட்டன. இன்றும், பதினாறு வயதுப் பருவ மங்கையாக

இதயம் அழுதுகொண்டே இருக்கிறது s?
கோல விழியும், குறுஞ்சிரிப்புமாய் இருக்கும் அவளின் படத் தில்தான் எனக்கு இவ்வயோதிபப் பருவத்திலும் எவ்வளவு ஆசை, பற்று. வாழ்க்கையில் என்னை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட அவளின் நினைவுகளுக்குத்தான் எவ்வளவு சத்தி!
முதலாம் மேடையில் "யாழ்தேவி புகைவண்டி பட மெடுத்தாடும் நாகம்போல் சீறிக் கொண்டிருக்கிறது. அங்கே ஓர் இளைஞன் முதலாம் வகுப்புப் பெட்டியொன்றில் தன் தாயோடு அமர்ந்திருக்கும் அவன் காதலிக்கு, வாயில் தன் கைவிரல்களை வைத்து முத்தமளித்து விடை கொடுக்கும் காட்சியில் என் உள்ளம் குழைந்து, சுமார் இருபது வருடங் களுக்கு முன் ஒருநாள் இரவு, கோட்டைப் புகைவண்டி நிலையத்தில் வைத்து, என் இதயத்தைச் சுக்கு நூறாக்கிச் சென்று விட்ட என் காதலிக்கு நான் அளித்த விடை என் மனக் கண்முன்னே நிழலாடுகின்றது.
இரவு ஏழுமணி, கல்லெறிபட்டதேன்கூட்டைப் போன்று கோட்டைப் புகைவண்டி நிலையம், பிரயாணிகளின் நெரிச லால் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நான் இரண்டாம் மேடையில், என்னில் மலர்ந்து எனக்கே சொந்தமென்ற நிலைக்கு வந்துவிட்ட என் இதயவெள்ளியை அவள் ஊருக்கு வழியனுப்புவதற்காக நிற்கிறேன். அவளின் பிரிவுத்துயரை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
புகைவண்டிகள் தண்டவாளங்களை விழுங்குவதும், விழுங்கிய பின் பெருமூச்சு விடுவதுமாக இருக்கின்றன. நான் என் இதய வெள்ளிக்காக வாங்கி வந்த "கூற்றினும் வலிது" என்ற மாப்பசானின் நாவலை அவள் கையில் அளித்து விட்டுப் பெருமூச்சு விடுகிறேன். எங்களுக்கிடையில் என்று மில்லாத மெளனம்!
"இன்று போனால், எப்போது திரும்பி வருவீங்க?" குமுறிக் கொண்டிருக்கும் குளத்து நீர் கட்டை உடைத்துப் பாய்வது போல், இதுவரை பொறுமையுடனிருந்த என் இதயம் மெளனத்தைக் கலைக்கிறது.

Page 35
98. முத்து மீரான் சிறுகதைகள்
'வருகிற இருபதாம் திகதி கட்டாயம் வந்திடுவோம்" என் கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் போல், விடையைக் கூறிவிட்டுத் தன் தாயின் முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிகின்றாள். அவளின் விடையை உறுதிப்படுத்து வதுபோல் அவள் தாயும் சேர்ந்து, பக்கவாத்தியம் மீட்டி விட்டு, எங்கள் இருவரையும் விட்டு, ஒதுங்கி நிற்கிறாள்.
'உன்னைக் காணாமல் எப்படித்தான் இருக்கப் போகி GipGarr?'"
தொண்டையில் சுழித்து வரும் என் துயர வார்த்தை களில் மனம் கசிந்து, அவள் துடிக்கிறாள்.
"அந்தத் துயரம் உங்களுக்கு மட்டும்தானா? உங்களைப் பிரிந்து என்னால் ஒரு நிமிடமும் இருக்க முடியாது என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? எப்படியாவது மூன்று கிழமைக்குப் பல்லைக் கடித்துக் கொண்டிருங்கள். இருபதாம் திகதி கட்டாயம் வருவேன்".
பதிலைக் கூறிவிட்டு, என்னை நோக்கிக் கெஞ்சி நிற் கிறாள். அன்பொழுகும் அவள் சமாதான வார்த்தைகளுக்கு என் மனம் அடிமையாகிறது.
'ஊரில் வைத்து உன் தந்தை வேறு யாருக்கும் உன்னைத் திருமணம் செய்து வைக்க ஆயத்தம் செய்தால்."
என் தொண்டை தொடர்ந்து பேச முடியாமல் இடை யில் அடைத்துக் கொள்கிறது.
அவளின் தந்தை, அவளுடைய முறைப் பையனொருவ னுக்கு அவளைத் திருமணம் செய்துவைக்க, மூன்று வருடங் களுக்கு முன்பே வாக்குறுதி அளித்து விட்டதாகவும், இத னால் எங்கள் இருவருக்கிடையில் வளர்ந்து விட்ட உறவை அழித்துக் கொள்ளும்படியும் சதா அவளை நச்சரித்துக் கொண்டிருப்பதாகவும் என்னிடம் அவள் அடிக்கடி கூறி அழுது கொண்டே இருப்பாள்.

இதயம் அழுதுகொண்டே இருக்கிறது 昂伊
இந்நிலையிலும் அவளின் அசைக்க முடியாத மன உறு தியை நம்பித்தான், நானும் ஒளியை நாடிச் சுற்றித் திரியும் விட்டிலைப் போன்று சதா அவளையே சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன்.
"நீங்கள் எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம். என் வாழ்க்கையில் உங்களைத் தவிர நான் யாரையுமே திருமணம் செய்யப் போவதில்லை. என் தந்தையென்ன, இந்த உலகமே ன்ன்னை எதிர்த்தாலும் எனக்கு இனி நீங்கள்தான் கணவன். அப்படி என் தந்தை எனக்குக் கட்டாயத் திருமணம் செய்ய முயன்றால், அத்திருமணம் என் பிணத்திற்குத்தான் நடக் கும். பெண்ணில்லாமல் நடந்த திருமணத்தை நீங்கள் எப் போதாவது கண்டதுண்டா? இந்த நிமிடம் நீங்கள் என்னை அழைத்தாலும், எவ்வித பேச்சுமின்றி உங்கள் பின்னால் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை. இது எங்கள் புனிதமான காதலின் மேல் சத்தியம். ஆண்டவனுக்காக என்னை நம்புங்கள்".
கன்னங்களில் உருண்டுவரும் கண்ணீர்த் துளிகளைப் புறங்கையால் துடைத்துக் கொண்டு விம்முகிறாள். என்னால் அவளின் முகத்தைப் பார்ப்பதற்கே முடியவில்லை. பாவம் அவள் அடம்பிடித்தழும் குழந்தையாகவே மாறி விட்டாள்.
"உன்மேல் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் என் குடும்பத்தினரையும், என் காலடிகளில் வந்து குவியும் கணக் கற்ற செல்வங்களையும் உன்பொருட்டு உதவி எறிந்து விட்டு, உன்னையே சுற்றி அ  ைல ந் து கொண்டிருப்பேனா? உனக்காக, என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றுப் பேணி வளர்த்த என் தாயையே பார்க்காமல் விரதம் பூண்டு வாழும் என் மனநிலையைப் பற்றி நான் சொல்லியா நீ தெரிந்து கொள்ள வேண்டும்? எனக்கு இனி நீதான் எல்லாம். என் வாழ்க்கையின் இன்பமும், துன்பமும் உன் கையில்தான் இருக் கின்றன. உலகில் காதல் சிலருக்கு ஒரு விளையாட்டு, ஆனால் எனக்கு அது ஜிவமரணப் போராட்டம். ஏன் என் றால், என் வாழ்க்கையில் உன்னைத்தான் நான் காதலித்

Page 36
O முத்து மீரான் சிறுகதைகள்
தேன். உன்னிடமிருந்து தான் அதன் இன்பங்களைப் பெற்றேன். இனி என் வாழ்க்கையில் உன்னைத்தவிர வேறு யாரையுமே என்னால் காதலிக்க முடியாது. இந்நிலையில் உன்னை நான் இழந்தால், எனக்கென்று ஒரு வாழ்க்கை இந்த உலகத்தில் மலரவே மாட்டாது. இது என்னைப் பெற்றவளின்மேல் ஆணை".
என் உறுதியான வார்த்தைகளைக் கேட்டு அவள், என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறாள். அன்றலர்ந்த தாமரையை வென்றிருந்த அவள் முகத்தில் களங்கமோ, கலக்கமோ இல்லை. அவளுக்குத் தான் என்மேல் எவ்வளவு ஆசை
'இறைவா! எங்கள் இருவரையும் எப்படியாவது வாழ்க் கையில் இணைத்துவிடு".
என்னையறியாமலே என் இதயம் ஆண்டவனிடம் பிரார்த்திப்பதில் பூரிப்படைகிறது.
2
படமெடுத்து ஆடிக்கொண்டிருந்த "யாழ்தேவி புகை வண்டி ஒரே மூச்சாகத் தண்டவாளங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. மறுகணம், என் இதயத்தில் பசுமரத் தாணி போல் பதிந்து இரவும் பகலும் என்னைச் சோகப் பெருங்கடலில் மூழ்கடித்து, சதா என் வாழ்  ைவ யே சிதைத்துக் கொண்டிருக்கும் என் கடந்தகால நினைவுகள், என் குழிவிழுந்த கண்களிலிருந்து கசிந்து வரும் கண்ணிர்த் துளிகளினால், சிதைந்தழிகின்றன. எங்கும் ஒரே சப்தம்! அன்று, ஊருக்குச் சென்ற அவள் கொழும்புக்கு மீண்டும் திரும்பி வரவே இல்லை. ஆனால், சதா அவளின் நினைவாக வாடி உருக்குலைந்து கிடந்த எனக்கு, மூன்று கிழமை களுக்குப் பிறகு, 'கலங்காதீர்கள் கட்டாயம் வருவேன்" என்று என்வாழ்வையே கலக்கிவிட்டுச் சென்ற அவள், யாரையோ தன் ஊரில் திருமணம் முடித்துவிட்ட துயரச் செய்தி மட்டும்தான் கிடைத்தது. புனிதமான என் காதலை

இதயம் அழுது கொண்டே இருக்கிறது 6.
உருட்டி விளையாடும் பகடைக்காயாக நினைத்துவிட்ட அவளை, இந்த வயோதிப வயதிலும் அவளின் உருவத்தை மட்டுமே பதித்து வைத்து, அவளையே கனவிலும் நினைவி லும் மானசீகமாகக் கற்ப  ைன பண்ணிப் பண்ணி விம்மி வெதும்பிக் கொண்டிருக்கும் என் மனம் அவள் எங்கிருந் தாலும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றே இரங்கிக் கொண்டிருக்கிறது.
என் வாழ்க்கையில் தான் எத்தனை மேடு பள்ளங்கள்! அன்று நான் அவளுக்கு அளித்த விடை, என் காதல் வாழ் வின் இறுதி விடையாக இருக்கும் என்று கனவிலும் எண்ண வில்லை. காதலில் இன்றும் குழந்தையாகவே அழுதுகொண் டிருக்கும் என்னை ஏமாற்றிவிட்டு, மாற்றானொருவனுடன் பன மொத்து வாழ்வதற்கு எப்படித்தான் இதயம் அவளுக்கு இடமளித்ததோ? இன்றும், இக்கேள்விக்கு விடையைத் தேடித்தேடி என் இதயம் தவித்துக்கொண்டே இருக்கிறது. மட்டக்களப்புப் புகை வண்டி இரண்டாம் மேடையில் நின்று பெருமூச்சு விடுகிறது. மறுகணம், என்னை இன்றும் ஒன்றுமே அறியாத அப்பாவிக்குழந்தையாக நினைத்து, எனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் என் வயோதிபத் தாய்க்கு அன்பு மகனாக, பசுமை நிறைந்த நினைவுகளை எல்லாம் மனதிலே தாங்கியபடி, என் சிறிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு, இரண்டாம் வருப்புப் பெட்டி ஒன்றில் ஏறி அமர்ந்து, என்னை இருபத்தைந்து வருடங்கள், பெற்ற தாயைப் போல் பேணிக்காத்த கொழும்பு மாநகரத்தைக் கடைசி முறையாகப் பார்க்கிறேன். என்னையறியாமலே என் கன்னங்களில் ஒரு வித ஸ்பரிசம்.

Page 37
இருளுக்கும் நிழலுண்டு
வறுமையின் துன்பப் புணர்ச்சியில் கருவுற்று பிரசவ நோக்காட்டின் வேதனையை வினாடிக்கு வினாடி எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் சிறு ஒலைக் குடிசை. அதன் முற்றத்தில் அலிமாக் கிழவியின் இறுதி யாத்திரைக்குரிய எல்லா ஏற்பாடுகளையும் பெரிய பள்ளிவாசல் மோதீனும், லெவ்வையும் அக்கறையுடன் செய்து கொண்டிருக்கின்றனர், கிழவியின் பக்கத்து வீட்டுக்காரனென்ற நிலையில், இவர் களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுலதில் முந்திக் கொண்டிருக்கிறேன். கிழவியின் அன்புக்குப் பாத்திரமான சிலர், யாத்திரைக்குரிய சில்லறை வேலைகளைச் செய்வதில்; ஆட்டி விட்ட பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கின்றனர். 'தம்பி’ மையத்து வரபோகுது. அந்தச் சந்தக்கக் கொஞ்சம் இப்படிக் கொண்டந்து வெச்சிருங்க.
லெவ்வை அவர்களின் கட்டளைப்படி, அலிமாக் கிழவி யின் பயணத்திற்காக காத்துக் கொண்டிருந்த வாகனத்தைச் சிலர், தூக்கி வந்து திறந்து வைக்கின்றனர். மறுகணம், வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்களையெல்லாம் சுமந்து வாழ்ந்த அலிமாக் கிழவியைச் சக்தக்கில் வைத்து மூடி விட்டு, அழகான வர்ணட் பிடவையொன்றை அதன் மேல் விரித்து, விட்டு மெளனமாகி நிற்கின்றனர்.
ஜனாசாத் தொழுகையும் முடிவுற்றுக் கிழவியின் இறுதி யாத்திரை தொடர்கிறது.
அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ" வஹதஹ" லாஷரீக்க லஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹ" வறகுலுஹ" லா இலாஹ இல்லல்லாஹ" முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்.
சஹாதத்துக் கலிமாவைப் பக்தியுடன் இசைத்து மோதி னும் லெல்வையும் முன் செல்ல நாங்கள் பின் தொடர் கிறோம்.

இருளுக்கும் நிழலுண்டு 63
'தம்பி ! இந்த மணிசிக்கு சொந்தக் காறங்க ஒருவரும் gá65urt?'"
இந்த உலகத்தில் அப்படி யாருமே இல்லையென்றுதான் நினைக்கிறேன். கிழவியின் வரலாறு பற்றி இங்கு யாரும் நன்கு அறிந்திலர். உலகில் எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒரு ஏழைப் பெற்றோரின் இச்சையின் பிரதி பிம்பமாகி, எப் படியோ இவ்வூர் வந்து வாழ்ந்து வந்தாள். கிழவிக்கு காலொன்றும் கையொன்றும் ஊனம். அது கிழவியின் பிற விப் பயனாகும். இதன் பயன் அறுபது வயதைக் கடந்தும் வாழ்க்கையின் பூரண இன்பத்தை அனுபவிக்கமுடியாத துர்ப் பாக்கியவதியாகித் தன் இளமைப் பருவத்தை அனல் போன்ற பெருமூச்சுகளுக்கு இரையாக்கி. கன்னியாகவே வாழ்ந்து வந்தாள்.
"அப்ப, அன்னா மோதினாருக்குப் பக்கத்தில கொள றிக்குப் போற பொடியன் ஆரு தம்பி?" வளர்த்த பாசத்தை விட, அந்தப் பையனுக்கும் கிழவிக்கும் எவ்வித உறவுமில்லை. அவன் பிறப்பில் தான் எவ்வளவு ரகசியம், எத்தனை இன் னல்கள், அவன் வாழ்க்கையே ஒரு பெரும் கதை.இன் றைக்கு ஏழு வருடங்களுக்கு முன் ஒரு நாள் இரவு, பூரணச் சந்திரன் பால் போன்ற அமுத வெள்ளத்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறான். சந்திரனின் ஒளிக் கடலில் மூழ்கி. அலிமாக் கிழவியின் ஒலைக் குடிசையின் ஒரு மூலையில் பக லெல்லாம் தெருத் தெருவாகச் சுற்றிப் பிச்சையெடுத்த களைப்பில், குப்பி விளக்கின் துணையோடு, அலிமாக் கிழவி சோர்ந்து குந்திக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது, பத்து மாத நிறைவுபெற்ற கற்பிணிப் பெண்ணொருத்தி தன் வயிற்றுச் சுமையைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டு குடிசையுள் நுழைகிறாள். பெண்ணின் வரவில் சிந்தை குலைந்த கிழவி செய்வதறியாது திகைக்கிறாள்.
'அம்மா! என்னைத் தவறாக நினையாதீங்க" கடவுளுக்காக முதலில் கொஞ்சம் தண்ணி தாருங்க.."
வந்தவனின் வேண்டுகோளைச் சிரமேற்று அலிமாக் கிழவி தண்ணிரை ஒரு செம்பில் நிறைத்துக் கொடுத்து விட்டு நீண்டதொரு பெருமூச்சு விடுகிறாள்.

Page 38
台垄 முத்து மீரான் சிறுகதைகள்
கிழவியின் வாழ்க்கையில் என்றுமே கண்டிராத முகம், 'நீ ஆரு புள்ள, இந்த லாவயில எங்க போப்புறாய்?' வந்த வளின் பரிதாப நிலையில் அகம் கனிந்து, கிழவியின் கேள்வி உடன் பிறக்கிறது.
*நான் போகுமிடம் எனக்கே தெரியாது. இந்நிலையில் என் வரலாறு உனக்கேன்மா?" குருதியை உறிஞ்சி வரும் அனல் போன்ற பெருமூச்சோடு பதிலையும் உமிழ்ந்து விட்டு. அவள் போவதற்கு ஆயத்தமாகிறாள்.
"கொஞ்சம் பொறுபுள்ள, வாயிலையும் வயித்திலையிமா இரிக்கிற நீ, இந்த நேரத்தில எங்க போப்புறாய்? லாவய மட்டில இஞ்ச இருந்து, விடியச் சாமத்தில போமன."
அலிமாவின் அடிவயிற்றிலிருந்து சுழியோடி வரும் கணி வான வார்த்தைகளில் கட்டுண்ட அவள் பதில் பேசாமல் கிழவியின் பக்கத்தில் அமருகிறாள்.
குஞ்சைப் பாதுகாக்கும் கோழியின் நிலை. "உன்ர புரிசன் எங்க புள்ள, அவங்க உன்னோட வரல்லியr???
உண்மையை அறியத் துடிக்கும் உந்தலில் கிழவி மீண்டும் குழைகிறாள்.
கைக்கொண்ட வேலையைக் கடிதில் முடித்து விட வேண்டு மென்ற மன உறுதி.
"அம்மா, கடவுளுக்காக அதப் பற்றி ஒன்றும் கேளா தீங்க..".
சரஸ்வதியின் வெந்து போன இதயத்திலிருந்து வெளி வரும் வார்த்தைகள், அவள் தொண்டைக் குழியிலேயே சிதைந்து விடுகிறது.
அப்படியெல்லாம் செல்லாத புள்ள, நான் உன்ர பெத்த தாயப் போல, ஒண்டையிம் ஒளியாமச் செல்லுமன. நான் பிச்சைக்காரியா இருந்தாலும் எனைக்கும் இதயமும், பாச மும் இரிக்கு மன. நானும் ஒன்னப் போல ஒரு பொம்புள தானே."

இருளுக்கும் நிழலுண்டு 6.
அலிமாக் கிழவியின் வார்த்தைகளில் அவள் மரம் நெகிழ்கிறது.
"அம்மா, என் சொந்த ஊர் திருகோணமலை, எங்கள் ஊர்த் துறைமுகத்தில் வேலை செய்து வந்த ஒருவரை நான் மனமாரக் காதலித்தேன். அவரும் என்னை விரும்பினார். ஆனால், என் பெற்றோர் எங்கள் உறவை விரும்பவில்லை எந்தத் தடையும் எங்கள் உறவைப் பிரிக்க வலுவற்று விட் டது. எங்கள் காதல் மலர்ந்து என் வயிற்றில் கருவாக உரு மாறியது. கருவின் வளர்ச்சியைக் கண்ட என் காதலர் கலங் கினார். என் பெற்றோர் புழுங்கினர். என்னைக் கரம் பற்ற அவரிடம் மன்றாடினேன்; கால்களில் விழுந்து கெஞ்சினேன். எதற்கும் அவர் மன்ம் கசியவில்லை. என் வயிற்றில் மலரும் பிஞ்சுத் தளிருக்கு கொழு கொம்பைக் கொடுக்க மனமின்றி ஒரு நாள், யாருக்கும் தெரியாமலே மறைந்து விட்டார். ஊராரின் வசைமாரி ஒரு பக்கம், பெற்றோரின் வற்றாத கண்ணீர் மறுபக்கம். இந்நிலையில் அவரைத் தேடி, என் பெற்றோருக்குத் தெரியாமலே புறப்பட்டு வந்தேன். ஆனால், அவர் அளித்த விலாசம் மீண்டும் என்னை வஞ்சித்து விட்டது. வயிற்றிலே நிறைவு பெற்ற கரு. இதன் பிறகும் என் பெற்றோரின் முன் செல்ல, எனக்கு மனம் இடம் தர வில்லை. என் வயிற்றிலே உருமாறும் அவர் செல்வம் என் தந்தை யாரம்மா என்று கேட்பதற்கு முன்பே, என்னையே அழித்துக் கொள்வதென்ற முடிவுக்கு வந்தேன். அந்த முடிவை நாடித்தான் இப்பொழுது போகிறேன்.என்னை இறைவன் மன்னிக்கட்டும்.'
நீதிபதியின் முன் உண்மையைக் கூறி, மன்னிப்புக்காக மன்றாடிக் கொண்டிருக்கும் குற்றவாளியைப் போன்று, கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளைத் தன் முந்தானையால் துடைத்துக் கொண்டு, அவள் அனல் போன்ற பெருமூச்சுகளைக் கக்கிக் கொண்டிருக்கிறாள். அலிம்ாக் கிழவியின் முகத்தில் தாய்மை படர்கிறது.

Page 39
s
ởổ முத்துமீரான் சிறுகதைகள்
'தலயின் நசீய ஆரால்தான் வெல்ல முடியிம், ஒலகத்தில பொழ செய்யாதவங்க ஒரு வருமில்ல புள்ள கசப்பும் இனிப் பும் கலந்ததுதான் வாழ்க்க. என்ன செய்யலாம். நடக்க வேண்டியதெல்லாம் நடந்து போச்சி. இனிப்போனத தினச்சி வருந்துவத உட்டுப் போட்டு, வாறத்தப்பத்தி நல்லா லோசித்து நடக்கிறதான் புள்ள புத்திசாலித் தனம். எங்கன யெல்லாம் படைச்ச அல்லா இரிக்கும் போது ஏன் புள்ள நாங்க வீணாச் சாகனும், இனி எங்கயிம் போகாத மன. என்ர உசிரு இருக்கு மட்டும் உன்ன, என்ர த்ெத புள்ளயப் போல காப்பாத்துவன். இந்தக் கிழவிய நம்பு மகள..”*
அலிமாக் கிழவி ஆணித்தரமான பதிலை உமிழ்ந்து விட்டு, அவளை அன்போடு அணைத்துக் கொள்கிறாள்.
தனக்கு பாக்கியமற்ற ஒரு செயலைச் செய்யும், பிாக்கியம் பெற்ற அவளுக்கு உதவுவதில் அலிமாக் கிழவிக்கு உள்ளப் பூரிப்பு. அன்று அலிமாவின் அன்பில் கட்டுண்டு. அவள் தய வில் வாழந்த அவள் சில நாட்களின் பின் ஒரு அழகான ஆண் மகவை ஈன்று கிழவிக்குத் துணையாக்கி விட்டு காலனோடு இணைந்து கொண்டாள்.
அவள் ஈன்ற குழந்தைதான், இன்று துயரத்தின் பிரதி நிதியாகத் தன், தூய்மையான உள்ளத்தில் இது கால வரை ஏற்றி வைத்திருந்த தீபத்தை இழந்து, இருள் சூழ்ந்த உலகிலே தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறான்.
அஷ்ஹது அன்லாஇலாஹ இல்ல்ைலாஹ" வஹ்தஹ" லாஷரீக்க லஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹ" வறகுலுஹ" லா இலாஹ இல்லல்லாஹ" முஹம்மதுர் protegj660ngo.........
மரண ஊர்வலம், சுடலையை நெருங்கி விட்டதை உறுதிப் படுத்திக் கலிமாவின் ஒலி, வானை முட்டுகிறது.
உலகில் யாருமற்று வறுமையின் கைப்பொம்மையாக காலம் முழுதும் சுழன்று, காணமுடியாத இன்பக் கனவுகளை யெல்லாம் கற்பனையில் கண்டு, தன் நெஞ்சுக் குழியிலே அவைகளைப் புதைத்து வைத்திருந்த அலிமாக் கிழவியின்

இருளுக்கும் நிழலுண்டு 67
உள்ளத்தை, கடலை மண் அமுக்கிக் கொண்டிருக்கிறது. கிழவியின் நினைவுச் சின்னமாகிய இளம் தளிர் சாவல், மீண்டும், மக்களோடு சுடலையைத் துறந்து வருகிறான். பேய் அறைந்தவனைப் போல.மாலை நேரம்.
இருளின் பிடியில் சிக்கி, அலிமாக் கிழவியின் குடிசை தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கே, இருளோடு இருளாக ஒரு மூலையில் சாவல் சுருண்டு கிடக்கிறான். யாருமற்ற அனாதையான ஆக்கிழவிக்காக இன்னுமோர் அனாதை கண்ணிர் கிந்திக் கொண்டிருக்கிறது,

Page 40
அவர்கள் தேவனின் குமாரர்கள்
பொட்டழிந்து, பூவிழந்து, பொலிவிழந்து சோகமே உருவாகி, அனல் போன்ற பெருமூச்சுகளை விட்டுக்கொண்டி ருக்கும் இளம் விதவையைப் போன்று, கிழக்கு மாகாணம் புயலுக்குப் பலியாகி சோபையிழந்து கிடக்கிறது. ஜீவனற்றுப் பரிதாபமாகக் கிடக்கும் கோலத்தைக் கண்டு, வானம் வேதனை தாங்க முடியாமல், கண்ணீர் வடித்துக் கொண்டி ருக்கிறது. எங்களூர் மக்கள் இருக்க இடமின்றி, அரைகுறை யாக இடிந்து கிடக்கும் பாடசாலையொன்றில் அகதிகளாகத் தஞ்சமடைந்து, உணவிற்காக அழுது கொண்டிருக்கின்றனர். எங்குமே பரிதாபம். "நாளைக்கு பின்னேரம் விதானட கந்தோரில் பிடவையெல்லாம் கொடுக்கிறயாம். எல்லாரை யும் நேரத்தோட வரட்டாம்".
இரவோடு இரவாக எல்லாவற்றையும் புயலுக்கு இரை கொடுத்து, கட்டிய கந்தல்களோடு கண்ணீர் விட்டுக் கொண் டிருக்கும் அகதிகள் மத்தியில் கிராமசேவகரின் கட்டளையைக் கிழவியொருத்தி பறைசாற்றிக் கொண்டிருக்கிறாள். வாழ்க் கையில் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் புயலுக்குத் தாரைவார்த்து விட்டு, வீசிய கையும் வெறுங்கையுமாக நின்று உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அவ்வேழை களின் நேத்திரங்கள், சதா பணித்துக்கொண்டிருந்தன. எத்தனை எண்ணங்கள், எவ்வளவு ஆசைகள்.எல்லாமே கனவாகி, கனவின் நிழலாகி, புயலாகிப்போய் விட்டன.
வினாடிக்கு வினாடி அனல் போன்ற பெருமூச்சுகளை விட்டு, உணவிற்காகக் கண்சளைக் கூர்மையாக்கி, ஏங்கிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் முலைகளைச் சூப்பி சூப்பித் தோல்வி கண்ட கைக்குழந்தைகள், பாலுக்காக அலறிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளின் பசிக்காகத் தாய்மை அக்கினி ஜுவாலையில் வெந்து கொண்டிருக்கிறது. எங்குமே ஏழ்மையின் அழுகுரல்.

qanufasair . QaşeAlexshdir (950prrfasehr
"அன்னா, எங்களுக்கெல்லாம் சோறு கொண்டு வாராங்க."
விம்மிக் கொண்டிருந்த குளம் உடைகிறது. பாடசாலை யில் ஏங்கிக் கொண்டிருந்த எல்லா ஏழைகளும், உணவிற் காக முண்டியடித்துக் கொண்டு ஓடுகின்றனர். எங்கும் ஒரே Վթաց մւյ.
"எல்லாரும் வரிசையாக வாங்க."
சோற்றுப் பார்சல்களைக் கொண்டு வந்த சமூக சேவை யாளர்களின் தலைவன், சட்டத்தைச் சமர்ப்பிக்கின்றான், சட்டம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, உடனே அமு லாகிக் கொண்டிருக்கிறது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றனர். பசியின் கொடுமை, தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைக்காக ஜீவ மரணப் போராட்டமிட்டுக் கொண்டி ருக்கும், அவ்வேழை அகதிகள் மத்தியில், புது உத்வேகம்,
"நாங்களெல்லாம் ஏழுபேரு. எங்கிட மாமாவும் எங்க ளோடுதான் இருக்கிறாரு, புயல்ல மரமுழுந்து, அவர்ர கால் முறிஞ்சி நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக பள்ளிக் குடத்துக்குள்ளேயே கிடக்கிறாரு. அவர்ர பார்சலையும் சேர்த்து எட்டுப் பார்சல் தாங்க".
சிறுவனொருவன் பிறந்த மேனியோடு நின்று, ஏன் குடும்பத்தின் எண்ணிக்கையைக் கோடுகிழித்துக் காட்டி" பார்சல்களைப் பெற்றுக் கொள்கிறான். சமூக சேவையாளர் கள் அயராது உணவுப் பார்சல்களை விநியோகித்துக் கொண் டிருக்கின்றனர். V W
*அவன் ரெண்டு தரம் வாங்க வாறான்" பசியின் கொடுமைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், மீண்டும் சோற் றுப் பார்சலுக்காக வந்து வரிசையில் நின்ற பையனொரு வன் சுட்டிக்காட்டி, அந்த இடத்திலேயே அரிச்சந்திரனாகித் தலை நிமிர்ந்து நிற்கிறான்.
"டேய் றாஸ்கல் போடா அங்காலே."

Page 41
முத்து மீரான் சிறுகதைகள்
இரண்டாவது தரம் உணவிற்காக வந்து நின்ற பையனை சமூக சேவையாளர்களின் தலைவன் விரட்டியடிப்பதில் பூரிப் படைகின்றான். அவன் ஒரு நாளைய கொடை வள்ளல்.
உணவுப் பார்சல்களின் விநியோகம் முடிவடைகிறது. மக்கள் மீண்டும் பாடசாலையில் தஞ்சமடைகின்றனர். வாழ் வையே பறிகொடுத்து நிற்கும் அவ்வேழைகளைப் பார்த்து வானம் ஓயாது அழுது கொண்டே இருக்கிறது. பாட சாலையை இருளரக்கன் சூழ்ந்து கொள்கிறான்.
(2)
மகனே! இனி யாரப்பா இந்தக் கிழவியை கவனிக்கப் போறாங்க! என்ர வாழ்க்கைக்கு ஒரே ஒரு தொணையாக இருந்த நீயும் போயிற்றாயே, உன்னைப் பற்றி எவ்வளவு கனவெல்லாம் கண்டிருந்தேன் தெரியுமா? என்ர எல்லா எண்ணத்திலையும் மண்ணைத் தூவிப்போட்டு, பொல்லாத புயல் உன்னைப் பலியெடுத்துப் போயிற்றே. உன்னைப் பலியெடுத்த புயல் என்னைப் பலியெடுத்திருக்கக் கூடாதா. பதினெட்டு வயசிலேயே நீ போவா யென்று நான் கனவுகூடக் காணவில்லையே..இனி யாரடா எனக்குத் தொணை? என்ர ராசா, உன்னைப் பிரிஞ்சி நான் எப்படியடா வாழ்வேன்? போன நீ என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கக் கூடாதா..?
பெற்ற மகனைப் புயலின் கோரப்பசிக்கு இரைகொடுத்து இதயம் வெந்து புலம்பிக் கொண்டிருக்கும் தாயொருத்தியின் கதறல், இருளைக் கிழித்து, பாடசாலையையே கலக்கிக் கொண்டிருக்கிறது. இதைப் போன்று எத்தனையோ இதய தாபங்கள், உள் உந்தல்கள், பரிதாபங்கள் யாவுமே ஒன்று சேர்ந்து இருளில் கலந்து தவிக்கின்றன.
பாவம் இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டு, எது வுமே செய்ய முடியாம்ல், அச்சிறிய பாடசாலை விம்மிக் கொண்டிருக்கிறது. எங்குமே சோகமயம், வானம் அழுது கொண்டே இருக்கிறது.

அவர்கள் தேவனின் குமாரர்கள்
இளங்காலை, பாடசாலை வளவினுள் பல தலைமுறை களைக்கண்டு, செழுங்கிளைகள் பரப்பிச் சென்னி நிமிர்த்தி நின்ற ஆலமரமொன்று புயலுக்கு இரையாகி, பக்கவாட்டில் சரிந்து முறிந்து கிடக்கிறது. சாய்ந்து கிடக்கும் மரத்தில், கோரப் புயலின் கொடுமைகள் அனைத்தையும் அடியோடு மறந்து, சிறுவர்கள் ஏறி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கையை அவர்களாலேயே நம்பமுடியாமல் இருக்கிறது.
"நேற்று, எங்களுக்கெல்லாம் கொடுத்த பாணும் கறி யும் நல்ல ருசிடா. எவ்வளவு பாணும் திங்கலாம்"
"ச் சா.இவ்வளவு காலத்திற்கு அதைப்போல பாணும் கறியும் நான் திண்டதே இல்லை. அவ்வளவு ருசி."
"எல்லாமே புதுப் பாண்டா. நம்முட எம். பியும், விதானையிம் கொழும்பிலிருந்து, பறவக் கப்பலில் எங்கிட ஊருக்கு எடுத்து வந்தவங்க. விதானையார் நல்லவர். இல்லாட்டி இவ்வளவு பாணும் கறியும் சும்மா தருவாரா?"
"இனி நான் இந்தப் பள்ளிக்குடத்தை விட்டு எங்கேயுமே போகமாட்டேன். இஞ்ச இருந்தால்தான் இந்தமாதிரிப் பாணும் கறியும் நிறையக் கிடைக்கும்"
நானும்தான் இனி எங்கேயுமே போகமாட்டேன். எனக்கு வீடே வேணாம்'
"எங்களுக்குத்தான் வீடே இல்லியே..எங்கிடவீடுகளைத் தானே புயல் நல்லா அழிச்சிப் போட்டு, நம்முட வீடுகளை யெல்லாம் புசல் அழிச்சது எவ்வளவு நல்லம் தெரியுமா?"
"புசல் வந்ததுதான் சாங்களுக்கெல்லாம் நல்லது. புசல் வராட்டி, இப்படியான புதுப்பாணும் கறியும் எங்களுக்கெல் லாம் கிடைச்சிருக்குமா? எங்கிட வீட்டையெல்லாம் இப் படிக் கிடைக்குமா?* 'இன்னமும் புசல் வரணும். அப்ப தான் எங்களுக்குக் கூடக்குறைய பானும் கறியும் கிடைக்கு " −

Page 42
ộà முத்து மீரான் சிறுகதைகள்
ஆலமரத்தடியில் விளையாடிக் கொண்டிருக்ரும் இரு சிறுவர்கள், தங்களுக்குக் கிடைத்த திடீர் அதிர்ஷ்டத்தைப் பற்றியும் அதன் இன்பத்தைப் பற்றியும் வாய்குளிரப் பேசிக் கொள்ளுகின்றனர். ஏழ்மையின் கைப்பொம்மைகளாக, வறுமையின் தாலாட்டில் கண்ணயர்ந்து கொண்டிருந்த அவர் களுக்கு இன்று கரை காண முடியாத இன்பம். இவ்வளவு காலமும், அவர்களின் பெற்றோர்களினாலேயே கொடுக்க முடியாதவைகளையெல்லாம், கோரத் தாண்டவமாடிச் சென்ற புயல் அள்னரி வழங்கிக் கொண்டிருப்பதில் பெரு மகிழ்ச்சி. மா, பருப்பு, சீனி, கருவாடு, மீன்டின் யாவுமே இலவசம். இனிய உணவுகளுக்காகப் புயலை வாழ்த்தினார் கள். மனதாரப் போற்றினார்கள்" இன்று அவர்கள் தேவனின் குமாரர்கள்.
(3)
பனித்துக் கொண்டிருக்கும் வானத்தையும் சட்டை செய்யாது, மக்கள் கிராமசேவகரின் காரியாலயத்தில் தவ. மியற்றிக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையைச் சுவைத் துக் களித்த உயர்மட்ட வர்க்கத்தினர், உடுத்துக் கழித்த பழைய துணிகளைக் கிராமசேவகர் கிள்ளி வைத்துக் கொண். டிருக்கிறார். வாழ்க்கையில் கண்ணால் கூடக்காணாத அந்த நவீன உடைகளையெல்லாம் அவ்வேழைகள் மகிழ்வுடன் பெற்று, திருப்தியுடன் போடுகின்றனர். பாவம்' அவர்கள் அடிமைகள்.
நல்ல பிடவை எல்லாத்தையும் விதானை ஒளிச்சிவெச்சிப் போட்டு, கிழிஞ்சதையெல்லாம் தாறான். இவன் நல்லா இரிப்பானா?
"எங்கே, நல்லா இரிக்கப் போறான். எங்களைப் போல ஏழைகளுக்குக் கொடுக்க அனுப்பின பிடவைகளையெல்லாம், இப்படி ஒளிச்சி வைத்தால், எங்கிட நெருப்பு இவனைச் சும்மா விடுமா?"
"நேற்றுராவு, ஒருலொறிப்பிடவை வந்ததாகச் சொன் னாங்க, ஒரு பிடவையையுமே காணல்ல. இந்தக் கிழிஞ்ச

அவர்கள் தேவனின் குமாரர்கள் 73
டி_வையெல்லாம் என்னத்திற்கு உதவும்? என்ர குமரின் மானத்திை மறைக்க ஒரு நல்ல Gaspa Lumra கொடுத் தானா? ஏங்கிட மனம் பத்தி 6T if Sp orgfi, 65"- குடும்பமும்பத்தி எரியணும்'
அவனுக்கென்ன டுசல்வாக்குள்ள அரசியலானின் சொந்தக்காரன் ●西亚岛 திமிரால்தான் இப்படியெல்லா செய்யிறான். இந்த நாளில், கள்ளனுக்கும் கட்ப்படிக்கும் தானே காலம். ஏழைகளின் வயிற்றில் அடித்தால் தானே கெதியாய் னக்காரனாசி வரலாம். எங்களைப் போன்ற ஏழைகளுக்கு நீதியே 6à6ol-Lusigolo நீதி நியாயமெல்லாம் பணக்காரனுக்கு மட்டும்தான்"
rg B58 இல்லாட்டியும் தெய்வ நீதியாவது Gaolėsلوی ، ، கும். அரசன் அன்றறுப்பான்" தெய்வம் நின்றறுக்கும்"
இராம சேவகரின் காரியாலயத்திற் نی L60 ل(!puل புடவை களை வாங்க வந்த இரு பெண்கள் மனம் @5T画@ சலித்துக் கொள்ளுகின்றனர். gRT rt LD சேவகர் ைெடயளித்துக் கொண்டிருக்கிறார் அவர் () என்றுமில்லாத மகிழ்ச்சி.
வாழ்க்கையோடு GuሠTgfft፵-ቇ கொண்டிருக்கும் u uáb அகதிகள் Lys69 புடவைகளுக்காக ஜவமரணப் Gurt grrrl൧൫ഖങ്ങgP urfé@ 年Gá5(p4叫° வானம் விம்மி விம்மி ]ぬあraiw4○*"" சோகத்தின் பிரதி Lፃùbt Jfö الاقو{ھL) {9یے 6Trf6 அம்மக்கள் slig- கந்தல் துணிகளையாவது மாற்றிக் Q5maiag D" இழிந்த துணிகளை ஏற்றுக் ബ8്ങ്
ர். புடவை விநியோகம் gpibapporo நடந்து கொண் டிருக்கிறது"
gagrup சேவகர் ሠmrgዽL] Gurrifica) கண்ணனுக்குத் தன் .-ൺ' தானம் கொடுத்தி கர்ணனாகத் தலைநிமிர்ந்து நிற்கிறார்.
(4)
காலதேவன் இரண்டு இழமைகளை மூச்சுப் L94站g
விழுங்கி 666 பெருமூச்சு ിL'_് கொண்டிருக்கிறான்"

Page 43
雷卓 முத்து மீரான் சிறுகதைகள்
வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து உடுத்த துணி களோடு கலங்கி நிற்கும் புயல் அகதிகளை, நாளையோடு பாடசாலையைக் காலியாக்கும்படி கிராம சேவகர் பணித்து விட்டார். வாழ்க்கையில் விடிவே இல்லாது தவித்து நிற்கும் அவர் அளுக்கு இதுவரை கிடைத்து வந்த எல்லா இவவச உணவுகளும் நிறுத்தப்பட்டு விட்டன. சிங்கும் பசியின் அழுகுரல்.
சரிந்து கிடக்கும் ஆலமரத்தடியில் சிறுவர்கள் சோக உரு வெடுத்து குந்திக் கொண்டிருக்கின்றனர்.
"நாளைக்கு நாங்கள் வீட்டுக்குப் போகணும்டா எங் கிடவிதான எங்களையெல்லாம் போகச் சொல்லிப் போட்டாரு"
"எங்சளுக்குத்தான் வீடு இல்லையே. எங்கிட வீடுகளை தான் புசல் அழிச்சிப் போட்டுதே. இனி நாங்க எங்கடா இருக்கிறது?".
இனி எங்களுக்கு வீடுமில்லை பாணுமில்லை. ஒன்றுமே இல்லை".
"ஏன் எங்கிட கோயில் இருக்கே. இந்த விதானை மாதிரி நம்முட கடவுள் எங்களை யெல்லாம் போகச் சொல்லு மாட்டாரு கடவுள் நல்லவர்ரா."
"பாணும் கறியும்.
"'Fடவுள் தருவாரு"
"இனி புசல் வேணாம் வீடுதான் வேணும்."
வாழ்க்கையில் சரிந்து நிற்கும் சிறுவர்கள் தங்களுக்கு ஏற் பட்ட தோல்வியைத் தாங்கமுடியாமல் சவித்துக் கொள்ளு கின்றனர். நாளையோடு அவர்கள் மீண்டும் புயவை எதிர்த் துப் போராடப் போகிறார்கள். அவர்களின் பசியின் முன்னே சுழன்றுவரும் புயல் ஒரு தாசி.
வானம் வேதனை தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறது!

அவரொரு அன்று பிறந்த பாலகன்
முன்பணிக்காலம். விடியச் சாமத்தின் ஆரவாரம் ஒழிந்து, இளஞ்சூரியன் முகங்காட்டிக் கொண்டிருக்கிறான். படர்ந் திருந்த பனிப்படலங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. வாடைக் காற்று மெதுவாக வீசிக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கையில் நொந்து களைத்து, அதன் எல்லையற்ற சோதனைகளுக்கு முகங்கொடுத்து, சூப்பியெறிந்த கரும்பைப் போன்று. கதிஜா, சோகமே உருவாகி ஆதம்வாவா மரைக் காரின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறாள். சிறு வயதிலேயே கணவனை இழந்து, இளம் வானம்பாடிபோல் இன்பச் சிறகடித்துப் பறக்க வேண்டிய இளமைப் பருவத்தை யெல்லாம் அனல் போன்ற பெருமூச்சுகளுக்கு இரைகொடுத்து எலும்பும் தோலுமாய் நிற்கும் அவள் முகத்தில் தான் எத்தனை சோகம். கரை காண முடியாத கவலையின் பிம்ப மாக நின்று கொண்டிருக்கும் அவளுக்கு, மூன்று குமர்கள், அவர்களில் ஒருத்திக்கு திருமணம், அதற்காக வேண்டித் தான், விடியச்சாமத்திலேயே ஆதம்வாவா மரைக்காரின் வீட்டு வாசலில் வந்து தவம் கிடக்கிறாள்.
"நான் சென்னா எப்பயிம் ஒரு செல்லுத்தான். எனைக்கு ரெண்டு பேச்செல்லாம் பேசிப் பழக்கமில்ல. ஒன்ட வளவுறுதிய மூண்டுக்கு போவெண்டு எத்தன தரம் ஒனக்கிட்ட நான் செல்விருக்கன். என்ர செல்லெல்லாம் ஒனக்கு கிடாமாட்ற மேல்ல மழை பெய்யிற மாதிரி. என்னமோ பெரிசா பெரிய பள்ளிக்கு காயிதம் கொடுத் தியே. இந்த பள்ளி றஸ்டிப் போட்டு என்ன அசைக்க முடி

Page 44
முத்துமீரான் சிறுகதைகள்
யுமா? ஏதோ, அவருக்குத்தான் ஈமான், இஸ்லாம் தெரிஞ் சாப் போல, நம்முட வாஹிது மெளலவி நின்டு கிளம்பிப் பாத்தாரே. என்ர பேருக்கு கிரயம் எழுதின உறுதியை, இவரென்ன அவர்ர வாப்பா வந்தாலும் அசைக்க முடியுமா? இப்ப சட்டப்படி ஒன்ட ஊடு வளவு எனக்கு சொந்தம். ஆனா, இந்த ஊடு வளவ, உனக்கு நான் திருப்பி எழுதித் தாறதா இரிந்தா, என்ர முதலையும், அதக்குரிய ஆதா யத்தையும் சேர்த்து தந்து போட்டு, எழுதி எடுத்திக்கிட்டு போ..எனக்கு ஒன்ட ஊடு வளவு ஆகிறத்துக்கும் ஹறாம். ஒனக்கு நான் இந்த பத்தாயிரம் காசிதந்து, அஞ்சி வரிசத்துக் கும் மேலாப் போச்சு. ஒரு வரிசத்து வட்டி கூடத்தரல்ல, நீ. ஏதோ போனதெல்லாம் போகட்டும்,என்ர முதல் பத்தா யிரத்தோட, வட்டிக்காசி பத்தாயிரத்தையும் சேத்து, இருபதினாயிரத்தையும் கொண்டு தந்து போட்டு, ஒன்ட உறுதிய மூண்டுக்கு போ..! நானும் புள்ளகுட்டிக்காறன். இது என்ர புழைப்பு, நீயும் கொஞ்சம் யோசின பண்ணிப் பாக்கணும்."
வழிந்தோடும் கண்ணிர்த்துளிகளை முற்தானையால் துடைத்து, ஏழ்மையின் அகோரப் பிடிக்குள் சிக்கித் தவித்து நிற்கும் கதிஜாவைப் பார்த்து, கட்டளையைப் பிறப்பித்து விட்டு, ஆதம்வாவா மரைக்கார், கொடுப்புக்களால் வழிந் தோடும் வெற்றிலைச்சாறை, உள்ளங்கையால் துடைத்துக் கொண்டு காறி உமிழ்கிறார்.
ஆதம்வாவா மரைக்காரைத் தெரியாதவர்கள் நிந்த வூரில் இல்லையென்றே கூறலாம். வட்டிக்கு காசி கொடுப் பதில், அவருக்கு நிகர் அவரே தான். இங்குள்ள பெரியவர்கள் தொடக்கம் சிறியவர்கள் வரை, அவரை வட்டி ஆதம்வாவா என்றே அழைப்பார்கள். இவர் எவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தாலும் உடனே, பணம் கொடுப்பவரின் பெயரி லுள்ள வீடு வளவு அல்லது காணியைத் தன் பெயரில் கிரய மாக எழுதி எடுத்துக் கொள்வார். இப்படித்தான் கதிஜா வும், தன் வளவில் ,ஒரு குடில் வைப்பதற்காக, தன் பெயரில் இருந்த ஒரே ஒரு வளவையும் இவருக்கு கிரயம் எழுதிக்

var Jap pds Utad
கொடுத்து விட்டு பத்தாயிரம் ரூபா வட்டிக்கு எடுத்தாள். பாவம் இப்படியெல்லாம் நடக்குமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில், முப்பது வயதைக் கடந்து நிற்கும் தன் மூத்த மகளுக்கு திருமணம் முடிப்பதற்கு ஒழுங்கு செய்து விட்டாள். ஆனால், மாப்பிளை வீட்டார் வீடும் வளவும் சீதனமாகக் கேட்டு கலியாணத்தை முடிக்க மறுக்கிறார்கள். இதனால்தான் ஏதோ தன்னால் முடிந்த அளவிற்கு சேர்த்த பனிரெண் டாயிரம் ரூபாவைக் கொண்டு வந்து, ஆதம்லாவா மரைக் காரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்.
"காக்கா ஒன்டகால் ரென்டையும் புடிச்சன், என்ர புள்ளைக்கு இந்த ஒதவியச் செஞ்சிருகா.என்ர புள்ளட கலியாணம் முடிஞ்ச பொறகு, நான் என்ர சீப்பெலும்ப ஈடு வெச்சாவது ஒன்ட வட்டிக்காசக் கொண்டு தந்திருவங்கா. ஊடு வளவ சீதனமா எழுதிக் கொடுக்காட்டி என்ர புள்ளட கலியாணம் அலைஞ்சி பெயித்திருங்கா.என்ர எத்தின் குமருக்கு இந்த ஒதவியச் செய்தா, ஒன்ன ஒரு நாளும் அல்லாஹ் கைவிட மாட்டாங்கா."
வாழ்க்கையில்; இன்பத்தின் மணத்தைக் கூட நுகர முடியாத துரிப்பாக்கியசாலியான அத் தாயின் உள்ளத்து வேதனையை, உணரமுடியாத ஜடமாக இருக்கும் ஆதம் வாவா மரைக்காரைப் பார்த்து, அவர் நாய் பரிதாப மாக குரைக்கிறது. உண்மையிலே அந்நன்றியுள்ள ஜீவனுக்கு இருக்கும் கருணையுள்ளம், இந்த ஆறறிவு படைத்த மனித மிருகத்திற்கு இல்லையே என்ற துக்கத்தோடு, கதிஜா வெளி யேறிக் கொண்டிருக்கிறாள்.
p વૃ૦ p
இரவு படிந்து, குளிர்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. எங்கும் பனிமூட்டம். துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இளநிலவு பூங்காரம் காட்டுகிறது. ஆதம்வாவா

Page 45
g'AlguBrra folayalaa adh
மரைக்காரி தன் மனைவியின் பிடவையொன்றை எடுத்துப்
போர்த்திக் கொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் மெளலவி
வாஹிது எதையோ பற்றி அக்கறையோடு பேசிக் கொண்டி ருக்கிறார்.
'மெளலவி. எனக்கும் மக்கத்துக்கு போய் அச்சு செய்ய விருப்பம்தான். ஆனா, நம்முட ஊரான் உடுவானா? என்னைத்தான் அவனுகள் வட்டிக்கள்ளன் என்று ஊரா லேயே கழிச்சிப் போட்டானுகளே. நீங்க என்ன மக்கத்துக்கு கூட்டிக்கு போனா, ஒங்களையும் ஊரால கழிக்க மாட்டானு
567 it, , , f''
ஆதம்வாவா மரைக்காரி தன்பேச்சை முடிப்பதற் குள், நாணிலிருந்து விசையேற்றி விட்ட அம்பு போல் மெளலவி வாஹிது தன் பேச்சுத் திறமையை புடம் போடுகிறார்.
“DREDprésmrtfil ansvar? avfrueypu DauDareuog gátsasnr? ßtắis பணக்காரனாக இரிக்கிறதே இந்த ஊரானுக்கு பெரிய எரிச்சல். நீங்க பரம்பரப் பணக்காரன். ஏதோ, நாலு கஷ்டப்படுகிற ஏழைகளுக்கு ஒதவி செய்தா, அதை நாங்க வட்டிக்கு கொடுக்கிறதாகவா எடுத்துக்கிற.? வட்டிக்கு கொடுக்கிறது ஹறாம்தான். ஆனா, நீங்க குத்தகப்படி தானே காசி கொடுக்கிறீங்க. பேசியவன் எதையும் பேசு வான். அதுக்கெல்லாம் காது கொடுத்தா நாங்க வாழவே முடியாது."
மெளலவி வாஹிது, தன் பேச்சினால் ஆதம்வாவா மரைக்காரை மயக்கிக் கொண்டிருக்கிறார். மகுடியில் கண்டுண்ட நாகம் போல், மெளலவியின் ஒவ்வொரு பேச்சுக் கும் அவர், தலையை ஆட்டி, ஆட்டித் தன்விருப்பைத் தெரி வித்துக்கொண்டே இருக்கிறார், வல்லவன் பம்பரம் மணலி

yQwGirir anyády poAA utawa 7.
லும் ஆடும் என்பதுபோல், மெளலவியின் பேச்சு ஆதம்வாவா மரைக்காரைச் சுழல வைத்துக் கொண்டே இருக்கிறது.
"நீங்க ஒதிப்படிச்ச சிதவி. ஒங்களுக்குத் தெரியாத விசயம் இந்த ஒலகத்தில ஏதும் இரிக்கா..? நீங்க ஒதின கிதாப்புகளில் ஒன்டையாவது இந்த ஊரான், கண்ணால கூடக் கண்டிருப்பானா? நான், இப்ப என்ன செய்யணும்? செல்லுங்க அப்படியே செய்யிறன்."
ஆகும்வாவா மரைக்கார் மயங்கி விட்டார். அவர் அன்று பிறந்த பாலகனாவதற்கு மெளலவி விடாது ஒதிக்கொண்டே.
இருக்கிறார்.
'நீங்க என்ர விளம்பரத்த பேப்பரிகளிலே பாதி திருப்பீங்க என்று நினைக்கிறன். இந்த வரிசம் நான் மட்டும் தனியா, ஐம்பது பேர் கொண்ட குறுப்பொன்டு கொண்டு போறன், என்ர குறுப்புக்கு இன்னம் ரெண்டு பேரு தான் தேவ. எத்தனயோ பேர், என்ர குறுப்போடு வர வந்தாங்க? ஆனா, நான் தான் அவங்கள சேக்கல்ல. ஏனெண்டா, என்ர குறுப்பில பெரிய பணக்காரங்களும், படிச்சவங்களும் வாறாங்க. அவங்கிட ரெஸ்பெக்கிற்ரு கொறஞ்சிரக் கூடாது பாருங்க. அதுக்காகத்தான் இந்த விசயத்தில நான் கொஞ்சம் கரக்கிற்ரா இருக்கன். அறம் சரிபில நாங்க தங்கிற ஹோட்டல் தொடக்கம் பிரயாணம் செய்யிற பஸ் அறபாத்தில தரிக்கிற கூடாரம் எல்லாமே ஏர்க்கண்டிசன் தான். எதுக்கும் நீங்க யோசியாம, இந்த முறளன்ர குறுப்பில சேர்ந்து, ஹச்சிக்கு வாங்க. அல்லாஹ் எல்லாத்தையும் ஹயராக்கி வைப்பான்.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கிளிப்பிள்ளை வாக்கில், ஜும்மாவில் ஒப்புவிக்கும் பழைய பல்லவியை, ஒருவாறு சுருதி சேர்த்து வேறொரு ராகத்தில் பாடி விட்டு, தலையில் கிடந்த தொப்பியைக் கழற்றி லேஞ்சியால் துடைத்துக் கொள்கிறார் மெளலவி.

Page 46
podsudort de Papataosas?
(5 ft b (b. On l is sy, வெறி கொண்டோடி வரும் வெள்ளம் போல், மெளலவியின் பேச்சில் கட்டுண்ட ஆதம் வாவா மரைக்கார், அந்த நிமிடமே ஹாஜியாராகி, எல்லோருக்கும் சலாம் கொடுக்கத் தொடங்கி விட்டார்.
'மெளலவி என்ர பேர உங்கிட குறுப்பில எழுதுங்க. மகள் ஹ"ஸ்னா, அலுமாரியத் திறந்து, ஐம்பதாயிரம் ரூபா காசி எண்ணி எடுத்துக்கு வாங்கம்மா. இந்தக்காச அட் வான்சா வெச்சிக்கொள்ளுங்க. ஏதோ, எனைக்கு வாலும், தெரியா தலையிம் தெரியா. எல்லாத்தையும் நீங்க தான் பாத்து செஞ்சி கொள்ளணும்."
அறியாமை சிரிக்கிறது. அறிவு, பணத்தாசையால் அனைத்தையும் இழந்து தவிக்கிறது. "நீங்க ஒண்டுக்கும் யோசிக்க வேணாம். எல்லாத்தையும் நான் பாத்துகிறன்."
ஆதம்வாவா மரைக்காரின் பாவங்கள் அனைத்தும் வாஹிது மெளலவியால் பொறுக்கப்பட்டு, அன்று பிறந்த பாலகனாகி நிற்கும் அவர் முகத்தில் ஹாஜியார்களை இழை யோடிக் கொண்டிருக்கிறது.
மெளலவி வாஹிது, எப்படியோ பத்துப்பேர் சேர்த்து விட்ட மனத்திருப்தியோடு கிடைக்கப் போகும் ஒசி டிக்கட்டையும், முப்பதினாயிரம் கொமிசனையும், மற்ற சலாக்கியங்களையும் எண்ணி மகிழ்ந்து கொண் டு விடைபெற்று வெளியேறிக் கொண்டிருக்கிறார். பெய்து கொண்டிருக்கும் பணியும், வீசிக் கொண்டிருக்கும் குளிர் காற்றும் இனி அவரை என்ன செய்துவிட முடியும்? அவர் தான் பலமுறை ஹஜ்ஜுக்கு குறுாப் கொண்டு போன, அல்ஹாஜியாராச்சே.

ல்வரொரு அன்று பிறந்த பாலகின் 8
டிச்சிப் பொழுது, படிந்திருந்த பணிகள் மறைந்து, இயற்கை சிரித்துக் கொண்டிருக்கிறது. மெளலவி வாஹிதும் அவர் மனைவியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
'676iv607, aunt வட்டி ஆதம்வாவாவும் இந்த வரிசம் ஒங்க ளோட அச்சுக்கு வாறதா ஊருக்க பேசிறாங்க, மெய் தானா?"
போர்க்களம் ஜனிக்கிறது. 'ஏன், அவரு ஹஜ்ஜுக்கு போகக் கூடாதென்டு சட்டம் போட்டா இரிக்கு? காசிக்காறன் போறான், இதப்பத்தி இந்த ஊரானுக்கு என்ன கவல.? இந்த ஊரான்ட எரிச்சலுக்கு மட்டும் குறச்சலே இல்ல...!"
மனைவியின் கேள்விக்கு ஆத்திரத்தோடு பதிலைக் கூறி, விட்டு மெளலவி, தாடியைத் தடவிக் கொள்கிறார்.
'நீங்கதான், வட்டிக்கு கொடுக்கிறதும் ஹறாம், வட்டி வாங்கிறதும் ஹறாமென்டு, ஒவ்வொரு நாளும் பேசிக்கிட்டே இருப்பீங்க. இப்ப, அந்த வட்டியால வந்த காச கைநீட்டி வாங்கிற்ரு வந்து ஊட்டுக்க வெச்சிப் போட்டு, கொமிசன் கணக்குப் பாக்கிறீங்க.ஊரையிம், ஒலகத்தையிம் ஏமாத்தி, ஏழைகளின் வயித்தில மண்ணக் கொட்டித் தன்ர வயிற்றை வளக்கிற வட்டிக்கள்ளன்டகாச, கைநீட்டி வாங்க, எப்படித் தான் ஒங்களுக்கு மனசி வந்திக்கோ..? பணத்திற்காக, பாவி களையிம் பேருக்கு ஆசியாராக்கினா, இந்தப் பாவம் எங்களையெல்லாம் சும்மா விடுமா? பாவம்! இந்தப் பாவி செய்த வேலயால, அவ கதிசா ராத்தாட மகள்ள கலியா ணமே அலைஞ்சி பெயித்து. அந்தப் புள்ளட முகத்தப்பாத் துக் கிட்டு அப்படிச் செய்து போட்டானே. இவன அந்த அல்லாஹ் சும்மா உடுவானா? இவனுக்கெல்லாம் ஒருஹஜ்ஜி அதுக்குப் பொறகு ஒரு அல்-ஆசிப்பட்டம். அல்லாட குர்ஆனையிம், எங்கிட நாயகத்திர அதிதுகளையிம் காசிக் தாக விற்கிறதைப் பாக்கிலும், பிச்செடுக்கப் போறது

Page 47
2 முத்துமீரான் சிறுக்தைகள்
எவ்வளவோ மேல்.சீ! வேலியே பயிரமேயத் தொடங்கினா, எதுக்குத்தான் அந்த வேலியும், பயிரும்."
மனைவியின் தூய்மையான கண்ணாடியில் தன் அழுக்கு நிறைந்த முகத்தைப் பார்ப்பதற்கு திராணியற்று, வாஹிது மெளலவி வெட்கித் தலைகுனிந்து நிற்பது ஆதம்வாவா மரைக்காருக்கு எங்கே தெரியப் போகிறது..?
வாஹிது மெளலவியின் பிரசங்கம் அனைத்தும் உனக் கில்லை, ஊருக்குத்தான் என்ற உண்மை அவர் மனைவிக்கு மட்டும் தெரியாமல் போனது வியப்புத்தான். அவர் தான் முற்றுமறிந்த முழுஞானக் கடலாச்சே. எந்த அழுக்கையும், அந்தக் கடல் ஜீரணித்து விடும்.
(யாவும் கற்பனை)


Page 48
பிரபல எழுத்தாளரும், யரும், இலக்கிய ஆய்வாள
1958ம் ஆண்டிலிருந்து எழுதி வரும் இவருடைய இந்தியாவிலிருந்து வெளிவ மாத ஏடுகளில் வெளிவந்து
பல இலக்கிய போட்டி றுள்ள இவர் சட்டத்துறை உயர்நீதிமன்ற சட்டத்தர6 தாரிசியும், அகில இலங்கை சத்திய ஆணையாளருமாவ
 

யர் பற்றி.
பூரீலங்கா, அம்பாரை
மா வட் டத்  ைத ச் சேர்ந்த நிந்தவூர் முத லாம் குறிச்சி சிக்கந்தர் லெவ்வை சி ன் ன த் தம்பி, மீராசாஹிபு மீரா உம்மா தம்பதி யின் சிரேஷ்ட புதல்வ ரான ஜனாப். எஸ். முத்துமீரான் தமிழ் கூறும் நல்லுலகில் தலை நிமிர்ந்து நிற்கும் கவிஞரும், நாடகாசிரி
Tருமாவார்.
தொடர்ந்து சளையாது
ஆக்கங்கள் பூணூரீலங்கா, ரும் பிரபல்யமான வார, ஸ்ளன.
டகளில் விருதுகள் பெற் பட்டதாரியும் (LL. B.) Eரியும், பிரசித்த நொத் சமாதான நீதவானும்,
T