கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிழலின் அருமை

Page 1


Page 2
ஆஸ்திரேலியாவிலிருந்து
இறக்குமதிசெய்யப்பட்ட திறமான பல்கன்சீஸ், பட்டர்.
மேலும் - ஸ்டார் பிரான்ட் சுவைகள்,
நிறமூட்டும் சாயங்கள்
QUALITY, IMPORTED AUSTRALIAN
FALCON CHEESE & BUTTER.
FALCON TRADING (Pte) LTD.,
334, T. B. Jayah Mawatha,
COLOMBO - ()
Tophone : 597151-7
AALALALALALALALLAAAAALAAAAALLALAMLALAMMLAMALALALALALAAAAALLAALLLLLALMLALALALAL
as STAR BRAND FLAVOURS AND COLOURS
AMM Lq LLLLLLLAALLLLLALLLL AALLLAAL LLLLSLLLLLLLALAL MMq AAASLLALAMLMALAL LMLLALLLL AALL LALALMLL LALSLqqLS SMLMLMLTLA LMLALALLLLLLL


Page 3
NILALIN ARUMA
(Short Stories)
by P. M. PUNYAMEEN, B. A. (Cey.) 13, Udatalawinna Madige, Katugastota, Sri Lanka.
Author of:
THEWAIKAL
(Mini Stories)
9 All righr reserved.
First published in March, 1986.
Twenty eighth publication of THAMIL MANRAM,
GALHINNA, KANDY, Sri Lanka.
Printed at :
Catholic Press, Batticaloa.

எனது கிராமமான
உடத்தலவின்னை மடிகேயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்; கிராமத்தின் இலக்கிய முயற்சிகளுக்கு முன்னுேடியாகவும், வழிகாட்டியாகவும் நின்று இலக்கியச் சேவை புரிந்தவரும்; அ?னத்திலங்கை இஸ்லாமிய மாணவர்களது குறைகளைந்த “இஸ்லாம் மத பாட நூலாசிரியரும்; அதேநேரம், பன்னூலாசிரியரும்: அமைதியாகவும், ஆர்ப்பாட்டமில்லாமலும் மார்க்கப் பணிபுரிந்த இறை ஊழியரும்; ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்து முஸ்லிம் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றிய
சமூக சேவகருமான - மர்ஹ9ம் டாக்டர் ஏ. எம், கனி அவர்களுக்கு
இந்நூல்
öf LD if I LI 60O ib

Page 4
உள்ளே.
l. சின்னச் சின்னக் கோபங்கள்
2. சலனங்கள்
3. குருடர்கள்
4. அர்த்தமற்ற வாதங்கள்
5. நிழலின் அருமை
6. புதிய நம்பிக்கைகள்
- 7. முழுமையைத் தேடும்
முழுமையற்ற உள்ளங்கள்
8. ஓர் உதயம் அஸ்தமிக்கிறது
9. சில ஏக்கங்களும்,
ஓர் எதிர்பார்ப்பும்
17
26
34
A0
45
54
61
- 67

மனம் விட்டுச்
சில நிமிடங்கள்.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்:
இன்று உங்கள் கரங்களில் தவழுகின்ற இந்தச் இறுகதைத் தொகுதியில் இட்ம்பெற்றுள்ள ஒன்பது சிறுகதைகளும், இலங்கை, இந்திய வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் மூலம், இலக்கியத் தாய்க்கு என்னல் வழங்கப்பட்டவை as Garv.
'நிழலின் அருமை" - புதுமை சாராத் தல்ப்பு தான். ஆயினும், இத்தொகுப்பிற்கென நான் தேர்ந்தெடுத்தவைகளுள், அரைவாசிக்கும் மேற் பட்ட கதைகள், ஏதோவொரு வகையில் நிழ லொன்றின் தேவையினை வலியுறுத்துவனவாக என் சிந்தையில் உறைத்ததாலேயே இந்த மகுடத்தை எனது சிறுகதைகளின் தொகுப் பிற்கு அணிவித்துள்ளேன்.
என் இலக்கியப் பட்ையல்களை அவ்வப்போது ஏற்றுப் பிரசுரித்தும், ஒலிபரப்பியும், எனது உணர்விற்குத் தெம்பூட்டிய இலங்கை, இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகள், மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையை யும் நாள் மறப்பதற்கில்லை.
பல சோதனைகளுக்கு மத்தியிலும், கண்டி "கல்ஹின்னைத் தமிழ் மன்றம்" தமிழ் இலக் கியத்தின் வளர்ச்சிக்கு அயராது ஆற்றிவரு கின்ற பணி அளப்பரியது. இந்த அடிப்படை

Page 5
யில், கல்ஹின்னைத் தமிழ்மன்ற நிர்வாகியான சட்டத்தரணி அல்ஹாஜ். எஸ். எம். ஹனிபா B. A. (ce.) அவர்கள், இலக்கியத்தை நேசிக் கும் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற் றிருப்பவர். இந்த ரீதியில், கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் மற்றுமொரு வெளியீடாக 'நிழலின் அருமை அமைவதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியுறுகின்றேன். எனது சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகவுருவில் வெளியிடப் ԱՄ6ճմ சம்மதத்தோடு ஆவணசெய்த அல்ஹாஜ் எஸ் எம். ஹனீபா அவர்களுக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
குறிப்பாக, "எனது சிறுகதைகள், ஒரு தொகுப் பாக வெளிவர வேண்டும்? எனத் தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டியதோடு மட்டுமன்றி இந்தத் தொகுப்புநூலுருப்ப்ெறும் இந்திக் கட்டம்வரை, என்ஞேடிணைந்த பல சிரமங்களை யும் எதிர்நோக்கிய எனது ப்ரிய நண்பர் ஜகுப். அஸ்ரப் ஹாஷிம் (தேசிய கவுள்ளில் வை.எம். எம். ஏ8 - மாளிகாவத்தை) அவர்களுக்கும் என் மனக்கிடங்கில் நிரந்தர இடம் உண்டு.
மற்றும் இப் புத்தகத்தை அழகிய முறையில் அச்சிட்டு உதவிய அச்சகத்தினர்; அழகுறு முகப்புப் படத்தை வரைந்தளித்த ஒவியர் சிறுவயது முதலே எனதிலக்கிய முயற்சிகளுக்கு ஊன்றுகோலாக இருந்து ஊக்கமளித்துவந்த எனதருமைப் பெற்றேர்: என் இலக்கிய (1pանն களின் வடிகாலாகவும், உற்ற துணையாகவு மிருந்து, பல குடும்ப்ப் பொறுப்புகளுக்கு மத்தி யிலும் சிரமத்தோடு இணைந்தவகையில் எனது சிறுகதைகளைப் பிரதிபண்ணித்தந்த என் "logné”, - இவர்கள் அனைவரையும் என்றும் ftsinrar நன்றிக் கண்ணுடன் நோக்குகின்றேன்,
அன்புடன் புன்னியாமீன் 23. உடத்தலவின்ன மடிகே, கட்டுகாஸ்தோட்டை,
Gvinas.

Oriji GAT பபுரைகள்.
مہبربریہ۔سی۔۔۔۔۔۔۔۔۔۔۔ع۹
Hன்னியாமீன் தமிழை வளர்க்கும் முஸ்லிம் எழுத்தாளர் அரங்கில் நிச்சயம் இடம்பெறவேண்டியவர்.
O “தேவைகள்' அணிந்துரையில்
சட்டத்தரணி திரு. ஆர். சிவகுருநாதன் M.A. (Cey) (பிரதம ஆசிரியர் - தினகரன்)
★
இலங்கை, இந்திய வார ஏடு, மrசிகைகளில் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற பல்வேறு வடிவங்களில் தன் உள்ளத்து மூச்சுக்கு எழுத்துருக் கொடுத்துள்ளார். இவரின் உள்ளத்தின் அடித்தளத்தில் குமுறிக் கொத் தளித்துக்கொண்டிருக்கும், தான் வாழும் சமூகத்தைப் பற்றிய உணர்வுகள் ஆழமான கருத்து முதிர்வு கொண் டவை.
C ஜனுப். எம். ஐ. எம். முஸாதிக் B.A. (Cey) (முன்னுள் 'தினகரன்" உதவி ஆசிரியர்)
yk
புன்னியாமீனின் சிறுகதைகளில் இழையோடும் எளிய நடையும், நிதானமான போக்குமே இவரது இலக்கியத் தின் ஸ்திரங்கள். தன் சமுதாயத்தை அலைக்கழிக்கும் அவலங்களை நிழற்படம்போல் நெஞ்சங்களில் பதியவைப் பது இவரது திறமைக்குச் சான்று,
O ஜனுப். எம். அஸ்ரஃப் ஹாஷிம்
(தேசிய கவுன்ஸில் வை. எம். எம். ஏ.)
★ 女

Page 6
மண்ணில் கால்வைத்து, விண்ணில் தலைவைத்திருக்கும் கற்பளுவாதியல்ல; புழுதியில் கால்பதித்து, நிலத்திலே பார்வை பதித்துள்ள படைப்பாளி. காதல் இல்லையேல், கதையே இல்லை எனும் கலைஞர் மத்தியில் தலவின்ளே மண்ணில்ே களமமைத்து, அதன் வாழ்க்கை ஜீவத் துடிப்பை வடிவமைத்துத் தருகின்ற எங்கள் தலைமைப் படைப்பாளி, தலவின்னெத் தாயின் கலைப்புத்திரன். எங்கள் மண்ணின் மைந்தர் இவர்.
o ggol. g. 6Tsis. 6Tib. usi B.A. (Cey.) உடத்தலவின்னை.
Yr
இவரது பிரசுரமான சகல கதைகளையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும்கூட, சில கதைகளை யேனும் இரசித்துணரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கருப்பொருளுக்கு இவர் கொடுக்கும் அழுத்தத்தை விடவும், இலகுநடையில் கதையைக் கூறவரும் பாங்கு இலயிக்கத்தக்கது.
o கலாநிதி செல்வி. எஸ்.பரிமளா, M.Sc, Phd. தமிழ்நாடு, இந்தியா,
★
வெளிவந்த வெளிவராத இவரது கதைகளைப் படித்த
தன்மூலம் இவரது புதிய உத்திகளைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
O திரு. பாமா ராஜகோபால்
(தினகரன் - 1979)
Yr Yr

சின்னச் சின்னக் கோ பங்கள்.
மெல்லென வீசிக்கொண்டிருந்த இளங் காற்றில், அவனு டைய கேசங்கள் அசைந்தாடிக்கொண்டிருந்தன. அவற்றைக் கைகளால் கோதிச் சரிசெய்துகொண்டு, படிக்கட்டின்மேல் அமர்ந் திருந்த அவன் வலது காலின்மேல் இடது காலைத் தூக்கிப் போட்டபடி அந்தக் குழந்தைகளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. சுற்றிவரக் கிளைகள் பரப்பி முற்றத்திற்கே நிழல் சுொடுத்துக் கொண்டிருந்த "ஜேம் மரத்தின் "எல்பீஸியா கம்புகளால் கட்டப்பட்டு, இலைகளால் கூரையாக வேயப்பட்டு உருப்பெற் றிருந்தது ஒரு குட்டிக்கடை, சிரட்டைகளிரண்டை இரு பக்கங் களிலும் கம்பொன்றில் கட்டித் தொங்கவைத்து கடைச் சாமான் களாக. இலைகளை வெற்றிலேயாகவும், மண்ணைச் சீனியாகவும், மணலை அரிசியாகவும், சிறிய கற்களைச் சர்க்கரையாகவும் நினைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருந்த முதலாளிக்கு வயது சுமார் நாலு இருக்கலாம். கடையில் இன்னும் சாமான்கள் இருந்தன. காட்டு இலைகள், பூவகைகள், சாதி தெரியாத காய்கள், பழங் கள், பட்டைகள்.
கடைக்குப் பக்கத்திலே வீட்டுத் திண்ணையில் ஒரு குட்டி வீடு. மூன்று கற்களை வைத்து, அடுப்புச்செய்து அதில் ஒரு சின்னப் பானையில் நெருப்பின்றி விறகுகளால் மாத்திரம் மண் அரிசி சோருக வெந்துகொண்டிருந்தது. சோறு வெந்துகொண்டிருந்த அடுப்போடொட்டி இன்னுமோர் அடுப்பையும் செய்துகொண் டிருந்தாள் பக்கத்து வீட்டு ஐந்துவயதுச் சிறுமி மஸிரா.
"தாத்தா. நா. சோறு ஆக்குறேன். நீங்க கறி செய்றி
ul Joint... ?''
-س- 9 --

Page 7
"கறிக்கு ஒன்றுமில்லே தங்கச்சி. நான் அடுப்பக் கட்டிட்டு தம்பியிட கடக்கிப் பொயிட்டு கறிக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வந்து ஆக்குறேன். சரிதானே'
'சல்லி ஈக்குதா தாத்தா..?" அடுப்புக்குப் பக்கத்திலிருந்த, மற்றுமோர் பானையிலிருந்து சிறுசிறு கற்களைக் கொடுத்து "கருப்பட்டி நூறு வாங்கிட்டு வாங்க.." - இது ரிஷ்மியா தங்கச்சி,
கையில் ஒட்டிக்கொண்டிருந்த மண்ணை கவுணில் துடைத்த படி, தங்கச்சி தந்த கற்சல்லிகளை எடுத்துக்கொண்டு கடைக்கு ஒடிஞள் மஸிரா.
இடுப்புக்குக் கீழே இழுகிக்கொண்டிருந்த காற்சட்டையைச் சரிசெய்துகொண்ட முதலாளி பரீன், மளிராவைப் பார்த்து தனக்கே உரித்தான குழந்தை மொழியில் கேட்டான், “தாத்தா. என்ன வேணும்?"
மஸிரா தம்பி. எனக்குக் கறிக்கு ஏதாச்சும் வேணும்.
என்ன ஈக்குது? பரீன் : பருப்பு., புளியங்கா., பட்டுக்கா., வாழக்கா.,
வட்டக்கா. மளிரா : வாழக்கா நூறு எவ்வளவு ? பரீன் ஆறுவா. மஸிரா : கூடத்தானே தம்பி. பரீன் ஐஞ்சி தாங்க. கையிலிருந்த சிறு கற்களை 'ஒன்டு, ரெண்டு, மூணு." எண்ணிக்கொடுத்தாள் மளிரா. பரீன் அதை எடுத்துச் சிரட் டைத் தராசுடன் இருந்த பழைய ‘ஹார்லிக்ஸ்" போத்தலில் போட்டுக்கொண்டு, செவ்வரத்தைப் பூக்களைச் சிரட்டைத் தராசி யின் ஒரு சிரட்டையிலும், மறு சிரட்டையில் சர்க்கரையாக இருந்த கல்லையும் வைத்து, “சரி. தாத்தா இந்தாங்க வாழக்கா.’- என்ருன்.
"நான் சோறு கறி செஞ்சி வைக்கிறன். சாப்பிட வந் துடுங்க."
"சரி." தலையை ஆட்டினன் பரீன். V புகைந்துகொண்டிருந்த சிகரட்டை வீசிவிட்டு, படிக்கட்டில் அமர்ந்துகொண்டிருந்த அவளுல் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்தக் குழந்தைகள் எப்படியெல்லாம் விளையாடுகின்றன? அவை
- 10 -

களுக்குத் தனிக்கடை, தனிவீடு, தனிக் குடித்தனம். கொஞ்ச நேரம் இந்தக் குழந்தைகளையே பார்த்துக்கொண்டிருந்தால் மன துக்கு எவ்வளவு இனிமையாக இருக்கின்றது?
இந்தக் குழந்தைகளின் சிரிப்பில் கவர்ச்சி இருக்கின்றது. விரசமில்லை. பேச்சில் இனிமை இருக்கின்றது - பேதமையில்லை. அவைகளிடம் போட்டியில்லை, பொருமையில்லை, கயமை இல்லை, வேறுபாடுகள் இல்லை. "ம். இந்தக் குழந்தைக் காலத்தின் மகத் துவம்தான் எவ்வளவு? இனி அது வருமா..?" தன் குழந்தைப் பருவத்தை நினைக்க மங்கலான அந்த வடிவங்கள். நீண்ட பெருமூச்சொன்று அவனை அறியாமலே விடை பெற்றுக்கொண் ه ار -ا
குழந்தைகள் இன்னும் விளையாடிக்கொண்டிருந்தன. இடுப்பில் கட்டப்பட்டிருந்த கறுப்பு நாடாவைத் தவிர மேனியில் வேறு எதுவித துணிகளுமில்லாமல் பிறந்தமேனியோடு "நைஸ் பிஸ்கட்டைச் சப்பிச் சப்பி தத்தித் தத்தி நடைபயின்று கொண்டிருந்த குட்டித்தம்பியைப் பார்த்து தாத்தா "வா தம்பி. விளையாடுவம்." என்ருள். ܗܝ
"தா. தா. ம். தின். ரீ." கையிலிருந்த பிஸ்கட்டை நீட்டி தம்பி சிரித்துக்கொண்டே சொன்னுன் **ம். தின்.""
*நீ தின்னு தம்பி. நான் சோறு ஆக்குறேன். ஆக்கி ஒனக்கும் தாரேன்"
தம்பி சிரித்தான். அப்போதுதான் முளைத்துக்கொண்டிருந்த பாற்பற்கள் அவ னைப் பார்த்துச் சிரித்தன,
முதலாளிக்குப் பசி வந்துவிட்டதுபோலும், "தாத்தா., சோறு ஆக்கிட்டீங்களா?" சப்தமாகக் கேட்டான் பரீன். "இன்னம் கொஞ்சம் நில்லுங்க தம்பி. சோறு வெந்துட்டுது. டக்னு போட்டுத் தந்துடுரேன். ப்பூபூபூபூ. சரியான வேருக் குது."
மஸிரா அவளுடைய தம்பியைக் கூட்டி வந்தாள்.
"தாத்தா. பசிக்குதே."
பலா இலையைப் "பிளேட்"டாகப் பாவித்து அதில் பாளை யிலிருந்து மண் சோற்றையும், நறுக்கப்பட்ட செவ்வரத்தைப் பூக்கறியையும் வைத்துக் கொடுத்துவிட்டு "பரின் தம்பி. வாங்க சோறு ஆக்கிட்டோம்." கூப்பிட்டாள் மஸிரா.
- 11 -

Page 8
"தாத்தா. கடயில ஒருத்தருமில்ல." * அப்ப நில்லுங்க.. கடக்கி நா கொண்டாந்தாரேன்."" "தா. தா. நெக்கும். நெக்கும். சோ. தா.' "நில்லு ராஜா." *இதக் கடயில குடுத்துட்டு வந்து தாரேன்.' **தம்பி. சோறு." "தா. த். தா." குதப்பிக்கொண்டிருந்த பிஸ்கட்டை வீசிவிட்டு வந்த நிர் வாணத்தம்பி, மளிரா பக்கத்தில் அமர்ந்துகொண்டு 'தா. தா. நெக்கும். சோ." பானையை இழுத்தான். அடுப்பாக இருந்த மூன்று கற்களில் ஒரு கல் இழுபட "ஐயோ 1. கொஞ் சம் இறி. நான் தாரேன்.' பெரியவர்கள் முகத்தில் பாய்ந்து விழுவது என்பார்களே. அதுபோல பாய்ந்து விழுந்தாள் மஸிரா,
"ம். தா." அதைத் தம்பி பொருட்படுத்தியதாகத் தெரிய வில்லை. ஒன்றையும் கேளாதவன்போல் பிறந்தமேனித் தம்பி பானைக்குள் கையைப்போட்டு மண்ணை எடுத்து. வாயருகே கொண்டுபோனுன்.
குழந்தைகளையே பார்த்துக்கொண்டிருந்த அவன் இன்னும் அப்படியே இருந்தான். நீலவானில் கார்மேகங்கள் குடிபெயர ஆரம்பித்துவிட்டன. களங்கமற்றிருந்த அந்த வான்வெளியில் சில கீற்றுக்களின் பிரதிபலிப்புக்கள். எங்கோ ஒரு வீட்டின் சுவர்க் கடிகாரம் 'டாங். டங். டாங்.." என ஒலியெழுப்பிஅதற்குமேல் தொடரமுடியாமல் அமைதியாகிவிட்டது. இப் போதுதான் இரண்டரைக்கு வரவேண்டிய பஸ் தாமதித்து விட்டதே.
இந்தத் தாமத்தை எப்படியாவது சரிசெய்து கொள்ளவேண் டும். ! என்ற நோக்குடனே என்னவோ வேகமாக - மிகமிக வேகமாக வந்துகொண்டிருந்தது. சரியாகச் சூரியனுக்குக் கீழாக கார்மேகப் படையொன்று ஊர்ந்து பயணம் செய்ததால், சூரிய னின் பிரகாச ஒளி மங்கலாக. 'ஒ. இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை பெய்யப்போகிறதுபோல." எழுந்து சாரத்தைக் கட்டிக் கொண்ட அவன் பழையபடியே படிக்கட்டில் அமர்ந்துகொண்
T6.
வாயருகே மண்ணைக் கொண்டுபோன மகனின் உம்மா கோபமாகத் தட்டிவிட்டாள். "என்ன டீ. உன்ட கண் பொட்டயாவா இருக்குது. ? இவன் மண்ணத் திங்கப்பாக்குருன்.
- 12

நீ சும்மா கல்லுழியப்போல ஈக்குரியே." ஹிதாயா மாமி பக்கத்து வீட்டு மளிராவைப் பார்த்துக் கேட்டான்.
**காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பார்களே.'- உண்மைதான். அதேநேரம் ஏனைய குஞ்சுகளை தன் குஞ்சோடு ஒப்பிடும்போது உதவாக்கரைகளாக நினைப்பது சரியென ஹிதாயா மாமி நினைத்திருக்கவேண்டும்.
மஸிராவுக்கு ஏங்கி அழவேண்டும்போல் இருந்தது. தன் தம்பியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். "நான் என்ன தவறுசெய்தேன். ஏன் ஆண்டி இப்படி ஏசுருங்க. தம்பிக்கு நாநா மண்ணக் குடுத்தன். அவனத்தானே எடுத்து வாயில
போடப் பார்த்தான்."" மஸிராவை அறியாமலே அவள் விழி களில் இருத்து பொல பொலவென நீர்த்துளிகள் உதிர்ந்தன.
"ஆ. ண். டி.'
"என்னேட என்னடி பேச்சு." "ஆண்டி. நா. நான்."" "பேசாதே. இனிமே என்ட புள்ளகளோட விளையாடின ஒன்பட கைய முறிச்சிடுவேன். சிறுக்கி."
பல்கீஸ் மாமிக்கு இது கேட்டிருக்கவேண்டும். "என்ன?. என்ன சொன்னுய். ம். உனக்கு என்னடீ அவ்வளவுக்கு ஒசக்கப் பொயிட்டுது. ?"
பல்கீஸ் மாமி - மஸிராவின் உம்மா. வீட்டு முற்றத்தில் பலகையொன்றைப் போட்டுத் தன் தங்கச்சியின் தலையைப் பார்த்துக்கொண்டிருந்த மாமி வாரிய தலையை முடித்துக் கட்டா மல், சரிந்த முந்தானையை இழுத்துப் போட்டுக்கொண்டு வேலிப்
பக்கமாக வந்து "என்னடீ. உன்ன நான்.' பேச்சுத் திக்கியது.
"என்னடீ. என்ன செஞ்சிடுவாய்., ?" **உன்ன..”*
மஸிரா அழுதழுது வந்தாள். 'எல்லாம் உன்ஞலதான்டீ. உனக்கு நான் எத்தனை தடவ சொல்லியிருப்பேன், அந்த நாய் கள்ள புள்ளகளோட பொயிட்டு விளையாடாதே, விளையாடா ”.....56goJھG
"என்னடீ சொன்னுய்..?" நிலத்தில் உரசிக்கொண்டிருந்த பாவாடையை இடுப்பில் சொருகிக்கொண்டு ஹிதாயா மாமி சில அசிங்கமான வார்த்தை
- 13 -

Page 9
களால் பல்கீஸ் மாமியைப் பார்த்து ஏச இருவரது வாய்த்தர்க் கத்திலும் சூடு பிடித்துவிட்டது.
அதைக்கண்டு நாலைந்து வீட்டுக்காரர்கள் இவர்களை வேடிக்கை பார்க்க 'வித்தல்" ஒரமாகக் கூடிவிட்டார்கள்.
*"அடியே. உன்ட புருஷன் "ஸ்ரைக்" போட்டுட்டு தின்டுக்க வழியில்லாம இருந்த நேரத்தில நாங்கதான்டீ ஒனக்கும் ஒன்ட புருஷனுக்கும் திங்க தந்தோம். அதயெல்லாம் மறந்துட்டாய்.” ஆமா. பெரிசா திங்கத் தந்தாய். உன்ட புருஷனுக்கு யாருடீ "ஜொப்" எடுத்துக்குடுத்த. அன்டக்கி என்ட புருஷன் அதிகாரிட்ட கூட்டிட்டுபோய் ஒன்ட புருஷன "ரெக்மன்ட்” பண்ணியிருக்காட்டி நீ இன்டக்கி புன்ளகளத் தூக்கிண்டு தெரு வீதிகளில் திரியவேண்டியதான்டீ"
இன்னும் என்னென்னவோ, எத்தனையோ கதைகள் சந்திக்கு வந்தன.
- தின்ற கதை - உடுத்த கதை - கலியாணம் செய்த கதை - இளமைக்காலக் கதை இப்படியாக எங்கோ ஆரம்பித்த கதை எங்கோ போய்க் கொண்டிருந்தது.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பெரியப்பாவுக்கு ஏதோ போலாகி இருக்கவேண்டும். அந்தப் பகுதியிலே எல் லோரும் மதிக்கும் ஒரு மனிதர்தான் பெரியப்பா, எல்லோருக்கும் வாப்பாவைப் போன்றவர். அவருக்கு வயது சுமார் தொண் னுாறு இருக்கலாம். பெரியப்பா சொன்ன எந்தவொரு விஷயத் தையும் அது நல்லதோ, கெட்டதோ அந்தப் பகுதியில் ஒருவரும் தட்டிக்கழிக்கமாட்டார்கள்.
படிக்கட்டில் இறங்கி இரண்டு மாமிமாரையும் சமாதானம் செய்ய முயன்ருர் பெரியப்பா.
மாமிமார் அழுதுகொண்டே பெரியப்பாவிடம் முறையிட "அங்கால போறிங்கள புள்ள. இல்லாட்டி.." பெரியப்பாவுக்கு நல்ல கோபம் வந்துவிட்டது;
'ஏதோ பெரியப்பா சொல்றதுக்காகப் போறன்." பல்கீஸ் மாமி மெதுவாக நகர்ந்தாள். மாமியின் முகம் சிவந்திருந்தது. வாய்க்குள்ளே ஏதோ திட்டிக்கொண்டாள் ஹிதாயா மாமியும் அப்படியேதான்.
- 14 -

படிக்கட்டில் அமர்ந்திருந்த அவன் இன்னும் எழுந்திருக்க வில்லை. கொஞ்சநேரத்துள்ளாக நடந்துமுடிந்த சம்பவங்கள் அவன் உள்ளத்தை குடைந்துகொண்டிருந்தன. பாதை வழியே சுருட்டுப் புகைத்தபடி போய்க்கொண்டிருந்த அ ப் பா விட ம் நெருப்புக்கேட்டு - தன் கையிலிருந்த சிகரட்டைப் பற்றவைத்துக் கொண்டான்.
இந்தப் பெரியவர்கள் எவ்வளவு மோசமாக நடந்துகொள்கி ருர்கள் ?
தன் பிள்ளை செய்த ஒரு காரியத்திற்காக - மாற்ருன் பிள் ளேயை ஏசி, அன்பாகச் சாதிக்கவேண்டிய ஒரு விஷயத்தை அதி காரத்தால் சாதிக்க முயன்றதால். - இனி பக்கத்து வீடுகளுக் கிடையே மனஸ்தாபங்கள் வளரப் போகின்றன. "ஷே. ஷே. அறிவுகெட்ட ஜென்மங்கள்." அவன் தனக்குள்ளேயே நொந்து கொண்டான்.
இவைகள் நடந்து முடிந்து பத்துப் பதினைந்து நிமிஷங்கள் இருக்கலாம்.
ஹிதாயா மாமியின் இளையமகள், பல்கீஸ் மாமியின் வீட் டுப் பக்கமாகப் போய் மெதுவாக எட்டிப்பார்த்தாள். மளிரா புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஸ். ஸ். தாத்தா. ஸ். தாத்தா. வாங்க விளையாடுவம்'
ரிஸ்மியா தங்கச்சியைப் பார்த்து மெதுவாகச் சிரித்த மளிரா மறைந்து மறைந்து வெளியே வந்து 'ஏழா தங்கச்சி. உங்கட உம்மா கண்டா ஏசுவாங்க.." என்ருள்.
'ஏசமாட்டாங்க தாத்தா. வாங்க..”*
'ம். ஹ"சம். ஏழா."
வேலியோரத்தில் இருந்த செவ்வரத்தைப் பூவைப் பறிக்க மஸிரா கையை நீட்ட- “வாங்க தாத்தா..” என்று மளிராவின் கையைப் பிடித்து ரிஷ்மியா இழுக்க வெளியே வந்த ஹிதாயா மாமி இதைக் கண்டுவிட - ‘என்னடீ. கண்ட கண்ட நாய் கள்ள கையைப் புடிச்சி என்னடீ பெரிய கத. இரு உன்ட கைய வெட்டி கொச்சீக்கா போட்ட்டாத்தான் எனக்கு நிம்மதி.’ ஹிதாயாமாமி மகளை இழுத்துக்கொண்டுபோக.
- குழந்தைகள் விழி கலங்க.
“ “2 b... torr, ... ””
ஆண்டவனுக்கே கோபம் வந்துவிட்டது போலும்,
- 15 -

Page 10
* * losjtsj Fifi'...””
உண்மையைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் கார் மேகங்கள் இடியாய்த் தமது ஆத்திரத்தைத் தெரிவித்து குழந் தைகளோடு சேர்ந்து தானும் கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டன.
- மீண்டும் "பeர்ர்ர்ர்." கண்கூச படிக்கட்டில் அமர்ந்திருந்த அவன் அப்போதுதான் எழுந்தான். அந்த அறியாமைக்காக வருந்திக்கொண்டிருந்தது அவன் உள்ளம்,
பொழிந்துகொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் அவன் தன்பாட்டில் வீதியில் இறங்கி நடக்கலானன்,
女 大 大
சிந்தாமணி - பெப்ரவரி 1982.
- 16 -

d a 3)I h 5 at
சின்னஞ்சிறு "ரோஜிக் குட்டிக்கு வயது எப்படியும் ஆறி லிருந்து ஏழுக்கு இடையிலாகத் தானிருக்கவேண்டும். வயதை விடக் கூடிய வளர்ச்சியில் ரோஜி பார்ப்பதற்கு அழகாக இருந் தாள்.
செந்நிறமேனி. அந்தச் செம்மைக்கு மெருகூட்டுவதைப் போல கட்டையாக வெட்டப்பட்ட சுருள் சுருளான கருப்புத் தலைமயிர். விழிகளிரண்டும் பெரிதாக. விழி சிமிட்டும்போது புருவங்களின் வளைவே ஒரு தனிக்கவர்ச்சி. பிஞ்சுக் கரங்களில் தங்க வளையல்கள் தளதளக்க அவளது நடையே அபிநயம். சுருக்கமாகச் சொல்லப்போனல் நிறைவான குழந்தையொன்றுக் குரிய சகல அம்சங்களும் அவளிடத்தே ஒருங்கே அமைந்திருந்தன.
ரோஜியைக் காணும் யாருமே கொஞ்சநேரமாவது கொஞ்சி விளையாடாமற் போகமாட்டார்கள். அவ்வளவு குழந்தைத்தனம் அவளில் தெரியும்.
ரோஜிக் குட்டியின் வீடு சுமாரான வீடுதான். என்ருலும் சகல தேவைகளும் அடங்கிய அழகிய வீடு. வீட்டுக்குள்ளே இள நீல நிற சோபாக்கள் வீட்டிலுள்ளவர்களின் அந் த ஸ் தை க் காட்டிக்கொண்டிருந்தன. சோபாக்களின் நடுவே நின்ற சிறிய "டீப்போ’வில் அழகான வண்ணவண்ணக் காகிதப் பூக்கள், மின்விசிறிக் காற்றில் மெதுவாக அசைந்தாடிக்கொண்டிருந்தன. விசிட்டிங் ரூமோடு சேர்ந்த சிறிய ஹாலில் ரோஜியின் "டெடி", ரோஜி இம்முறை வீட்டுக்கு வந்ததன் பிறகு வாங்கிவந்த "டைனிங் டேபிள் செட் பளபளத்தது. டைனிங் டேபிளிலும், ரோஜியின் "மம்மி "பிளவ வாசி"ல் அழகான பூக்களை ஒழுங்கு படுத்தி வைத்திருந்தாள்.
ரோஜி டைனிங் டேபிளின்மேல் இருந்த அந்தப் பூக்களை முகர்ந்து பார்த்தாள். ஒன்றிலும் வாசனையில்லை. எல்லாம் வாசமே இல்லாத பூக்கள். "சேச்சே." ரோஜிக்கு ஏதோ
- 17 ܘܚ

Page 11
போலாகிவிட்டது. என்ன நினைத்தாளோ.ஹோலிலிருந்து இறங்கி வாசல் வரைக்கும் வந்து மெதுவாக வெளியே எட்டிப்பார்த்தாள்.
வீட்டுக்கு வெளியே முற்றத்தின் இருமருங்கிலும் கட்டை யாக வளர்ந்திருந்த சில வெள்ளை ருேஜாச் செடிகளில் நாலைந்து மொட்டுக்கள் இதழ் விரித்து, இவ்வுலகைப் பார்க்கும் ஆசையில் அவளைப் போலவே அழகாக இருந்தன. அந்த மொட்டுகளின் இதழ்கள் விரியும்வரை ரோஜியால் பொறுமையாக இருக்க முடியவில்லைபோலும், மெதுவாகச் சென்று ஒரு மொட்டைப் பறித்து, மறு மொட்டைப் பறிக்கையில் முள்ளொன்று ரோஜி யின் கையில் தைத்துக்கொண்டது.
"ஊய்ய்."
பறித்த மொட்டை நிலத்தில் போட்டுவிட்டு, இடது கை பால் முள் தைத்த கையின் நடுவிரலை நசுக்கிக்கொண்டே விர லைப் பார்த்தாள். ஒரு சிகப்புப் பொட்டைப்போல இரத்தம். "ஆயம்மா" கண்டுகொள்ளக் கூடாது. உடுத்திருந்த கவுன உயர்த்தி, கவுணின் உள்பக்கமாக இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு விரலை வாய்க்குள் போட்டு உறிஞ்சினுள்.
"ஆயம்மா கண்டுகிட்டா. மம்மிக்கிட்ட சொல்லுவாங்க. அப்புறம் மம்மி ஏசுவாங்க.." பிளவ வாசில் மணக்கின்ற பூக் களைச் சொருகி வ்ைக்கின்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, மறு படியும் உள்ளே நுழைந்தாள்.
ரோஜி, டவுனிலிருந்த பெரிய "கன்வன்ட் ஒன்றில் "போடிங்' கர்கிப் படித்துக்கொண்டிருந்தாள். 'வெகேஷனில் தான் வீட் டுக்கு வருவாள். ரோஜி வீட்டுக்கு வந்துவிட்டால் ஆயம்மா முகத்தை 'உம்'மென்று வைத்துக்கொள்வாள். அது ஏன் என்று தான் ரோஜிக்கு இன்னும் புரியவில்லை
சட்டையொன்றும் போட்டுக்கொள்ளாமல் ரோஜியின் தம்பி ஏதோ தன்பாட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் பக் கத்தில் வெற்றுத் தகரங்களும் ஏதேதோ பழைய சாமான்களும் கத்தியொன்றும், இன்னும் இரண்டொரு காட்டு இலைகளும் இருந்தன. இடதுகையால் கத்தியைப் பிடித்து இலையொன்றை சின்ன்ச்சின்னத் துண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்தான் தம்பி, "சீச்சிச்சீ. அசிங்கம் தம்பி. சட்ட போட்டுக்குங்க." ரோஜி சொன்னுள் அது சும்மா இருந்துவிட்டது:
- 18 -.

'தம்பி. மம்மி வந்தாங்கன்ஞ அடிப்பாங்க தம்பி. பூச் சட்ட போட்டுக்குங்க. நீங்க. நல்ல தம்பியெல்ல."
எந்தவொரு பொருளைக் கண்டாலும் தம்பிக்கு விளையாட எடுத்துக் கொடுத்துவிடவேண்டும். இல்லாவிட்டால் அழுது புரண்டு நிலத்திலே தலையை அடித்துக்கொள்வான். நேற்றும் அப்படித்தான். டெடி டெலிவிஷன் போட்டுப் பார்த்துக்கொண் டிருக்க, அதில் வந்த குரங்குக் குட்டியைக் கேட்டு, பெரிய ரகளையே பண்ணிவிட்டான். படுசுட்டி அவன்.
தம்பிப்பாப்பா ரோஜியைப் பார்த்துக் கையை அசைத்து விக்ாயாட அழைத்தான். வாயில் விரலைப்போட்டு உறிஞ்சிக் கொண்டிருந்த ரோஜிக்கு தம்பியைப் பார்க்க பாவமாக இருந்தது. சோபா மேலிருந்த தம்பியின் சட்டையை எடுத்து தம்பிக்குப் போட்டுவிட்டபடி, 'தம்பி. என்ன விளயாடுறிங்க.." என்று அன்போடு கேட்டாள்.
'ம். கா. வா...' தம்பிக்கு இதற்குமேல் பேச வராது. மம்மிக்கு மட்டும்தான் தம்பி பேசுகிற மொழி விளங்கும். "கா" என்பான், ‘வா" என்று சொல்வான் அவ்வளவுதான் தம்பிக்குத் தெரியும்.
குனிந்து நிலத்திலிருந்த கத்தியை எடுத்து பானுவின் கை யில் வைத்துவிட்டு, முளேத்திருந்த இரண்டு பற்களும் தெரி அழகாகச் சிரித்தான் தம்பி. w
தம்பிக்குத் தெரியாமல் கத்தியை எடுத்து மெதுவாக கவுனுக் குப் பின்ஞல் மறைத்துக்கொண்டாள் ரோஜி. 'க. த்தீ." தம்பி கத்தியைத் தேடினன். "மம்மி இருக்கிற நேரங்களில் என் முல், மம்மி கத்தியைக் கையில் தொடக்கூட விடமாட்ட்ாங்க ஆன. ஆயம்மா இருக்கிருங்களே. அவங்களுக்கு அதைப்பத்திக் கொஞ்சம்கூட கவலேயே இல்ல. தம்பி அழுதாகா. விளையாடச் சொல்லி கத்திய எடுத்துக் கொடுப்பாங்க.." அவள் நினைத்துக் கொண்டாள்,
ஆயம்மாவுக்கு வீட்டிலே பெரிய வேலை என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. மம்மி ஆஃபீஸுக்குப் போய்விட் டால் தம்பிப்பாப்பாவைப் பார்த்துக்கொள்ளவேண்டும்; வீட் டைப் பார்த்துக்கொள்ளவேண்டும்; ஏதாவது "லஞ்ச்" சமைக்க வேண்டும்; அவ்வளவுதான்.
ரோஜி இம்முறை வீட்டுக்கு வந்தபிறகு ஒன்றைமட்டும் தெளிவாகப் புரிந்துகொண்டாள். "மம்மி இருக்கிற நேரங்களில்
.ܚ- 19 -

Page 12
என்றல், ஆயம்மா நல்ல ஆயம்மா மாதிரி நடந்துக்குவாங்க. தம்பியோடயும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாங்க, தம்பி அசிங் கம் பண்ணிட்டா கையால அள்ளிண்டுபோய் வீசிட்டு, தம்பியக் கழுவி பவுடர்போட்டுப் பூச்சட்ட மாட்டி அன்போட அணைச் சுக்கொண்டு இச் கொடுப்பாங்க. மம்மி முன்ஞல ஆயம்மா என்னுேடயும் அப்பிடித்தான் நடந்துக்குவாங்க. ஆஞ. மம்மி ஆபீஸுக்குப் போயிட்டா ஆயம்மாவ பார்க்கவே சகிக்காது. முகத்தைத் தொங்க வைச்சிட்டு எந்நேரமும் 'உம்'முனு கோபமா இருப்பாங்க. அவங்க சரியாக ஒனனப்போல."
ஆயம்மாவை நினைக்க நினேக்க, கோபம் கோபமாக வந்தது ரோஜிக்கு.
தளர்நடை நடந்து அங்குமிங்குமாகச் சென்ற தம்பி கத்தி யைத் தேடினன். 'தம்பி தத்தித்தத்தி நடக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறன்.” ரோஜிக்கு நன்ருக ஞாபகம், சென்ற முறை ரோஜி வந்தபோது தம்பி நன்முகத் தடித்திருந்தான். ரோஜியால் தம்பியைத் தூக்கக்கூட முடியவில்லை. ஆனல் இம் முறை தம்பி நன்ருக மெலிந்திருக்கிறன். தம்பி நடக்கும் அழ கைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்போலத் தோன்றி யது ரோஜிக்கு. ܝܗܝ
**கத். தீ. கத்தீ. தா."
ரோஜியின் கவுண் இழுத்து இழுத்து தம்பி அடம்பிடித் தான.
"என் கிட்ட இல்ல தம்பி. * எப்படியோ தம்பி கத்தியைக் கண்டுகொண்டான். "கத்திய வைச்சிடுங்க தம்பி. மம்மி வந்தா அடிப்பாங்க.” தம்பியின் கையிலிருந்த கத்தியை ரோஜி பறிக்கப் பார்க் கையில். தம்பியின் கைவிரல் கொஞ்சம் வெட்டுப்பட்டு விட்டது. "ம். மா. ஆ." தம்பி சத்தமாக அழ ஆரம்பித்தான். ரோஜிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ** என்னுலதானே தம்பியின் கை வெட்டுப்பட்டிரிச்சி.' நினைக்க நினைக்க ரோஜிக்கு தம்பியோடு சேர்ந்து அழவேண்டும் போல இருந்தது;
தம்பியின் அழுகை கேட்டு சமையலறையிலிருந்து ஓடோடி வந்த ஆயம்மா விரலிலிருந்து வடிந்த இரத்தத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.
- 20

தம்பி விசும்பி விசும்பி அழுதான். ' என்னடீ செஞ்சிட்டாய் புள்ளய.?" ரோஜியின் அணைப்பிலிருந்து விடுபட்ட தம்பி ஆயம்மாவின் சேலைத் தலைப்பில் அணைந்துகொண்டான்.
'சனியன். சும்மா இருந்தாத்தானே. அங்கால போடி. எல்லாம் உன்னலதான்" முறைத்துக்கொண்டே ரோஜியைத் தள்ளிவிட்டுத் தம்பியைத் தூக்கிக்கொண்ட ஆயம்மா, சமய லறைக்குள் நுழைந்தாள்.
ரோஜிக்கு அழுகை அழுகையாக வ்ந்தது. எப்படியோ கட்டுப்படுத்திக்கொண்டாள்.
உள்ளே சென்ற ஆயம்மா வேண்டாவெறுப்போடு தம்பியின் விரலைத் துடைத்து "கோப்பிப் பொடி'யைக் காயத்தில் வைத்து அழுத்த. தம்பி இப்போது பெரிதாக அழுதான்.
'சனியன். அழாம இரிடா. எனக்கென்ன கர்மம். உன்ட அழுகைய அமத்தவா நான் இங்க வந்திரிக்கேன்." ஆயம்மா இறைந்தாள்.
“th... ton... h. Loft.“ ஆயம்மாவின் சிலுசிலுப்பு தம்பிக்கு விளங்கினுல்தானே ? அவன் ஆயம்மாவின் சேலைத்தலைப்பை இழுத்து, மார்பில் முகம் புதைத்து விசும்பி விசும்பி அழுதுகொண்டேயிருந்தான்.
ரோஜிக்கு ஏதோ போலாகிவிட்டது.
"மம்மி ஆபீஸுக்குப் போகாம இருந்தாங்கன்ஞ. இப்ப தம்பிக்குப் பால் கொடுப்பாங்கதானே ?' ரோஜியை அறியா மலேயே அவளது விழிகளிரண்டும் கசியத்தொடங்கின.
'பாவம் மம்மி. மம்மி ஆபீஸுக்குப் போகத்தான்வேணும். ஏன் நாள் படிக்கிற ஸ்கூல்ல கூட, மம்மியப்போல எத்தன "மிஸ்"கள் படிச்சித் தாராங்க. அவங்கள்லாம் அவங்கட பாப் பாக்களப் பார்த்துண்டு வீட்டுலே இருந்தாங்கன்ன என்னப் போல ஒருத்தருக்கும் படிச்க ஏலாமப் போகுமே." அந்தச் சின்ன மனது எண்ணுயது. மம்மி ஆபீஸுக்குப் போவதும் ரோஜிக்கு நியாயமாகவே தெரிந்தது.
தம்பி இன்னும் அழுகையை நிறுத்திவிடவில்லை; ஆயம்மாவுக்கு நன்முகக் கோபம் வந்துவிட்டது.
- 21 -

Page 13
"இப்புடி. இறி சனியன்' தூக்கிக்கொண்டிருந்த தம்பியை நிலத்தில் தூக்கியெறிவதைப்போல இறக்கிவிட்டு, பரண் மேலி ருந்த "டின்"னிலிருந்து பால்மாவை எடுத்து, கோப்பையில் போட்டுக் கரைத்தாள்.
'எனக்கே வந்த சனியன்கள்."
தம்பி தத்தித் தத்தி வந்து ரோஜியை மறுபடியும் அணைத் துக்கொண்டான்.
'தம்பி. அழாதீங்க தம்பி. நம்பி. மம்மி வந்தாகா. மம்மிக்கிட்ட சொல்லி. ஆயம்மாக்கு நல்ல அடி வாங்கிக் கொடுக்கிறேன். என் தம்பியெல்ல. அழவேணும். தங்கத் தம்பி." - அவன் இன்னும் அழுதுகொண்டே இருந்தான்.
"சொல்லுவே. அது தானேடீ உனக்கேலும்." ஆயம்மா சத்தமாக எதிலேயோ கோப்பையை வைத்துவிட்டு உரக்கச் சொன்னுள்.
மேசை மேலிருந்த “பிள்வ வாசை எடுத்து ஆயம்மாவுக்கு அடிக்க வேண்டும் போல இருந்தது ரோஜிக்கு. புருவங்களைச் சுளித்துக் கொண்டு முறைத்துப் பார்த்தாள். ரோஜியின் அந்த முறைப்பு ஆயம்மாவுக்குப் புதிது. கடுகடுத்த முகத்தோடு வந்த ஆயம்மா "என்னடி முறைக்சிறே. . ம்...' என்று கேட்டுக் கையை ஓங்கிஞள். ஆயம்மாவின் நான்கு விரல்களும் கன்னத் தில் பதிய, ரோஜியின் கன்னம் செக்கச் செவேரெனச் சிவந்து விட்டது.
"இப்ப சொல்லு' கன்னத்தை தடவிய படியே ரோஜி பற்களை நறநறவென்று கடிக்க, பொசுக்கிவிடுவதைப் போல பார்த்தாள் ஆயம்மா.
ரோஜி அழ வேண்டும் என்று ஆயம்மா விரும்பினுளோ என்னவோ, ரோஜி மட்டும் அழவேயில்லை.
★
மாலையாகிவிட்டது:
மம்மி களைத்துப் போய் வீட்டுக்கு வந்தாள். மம்மி வரும் வரை வாசலோரமாகக் காத்திருந்த தம்பி ஒரே தாவலில் மம்மி யின் அணைப்பிற்குள் போய் சேலைத்தலைப்பை இழுத்தான். எந்த நாளும் போல இப்படித்தான் மம்மி வரும்வரை காத்திருந்து
- 22 -

மம்மிக்கு "டிரஸ் கூட மாற்றவிடாமல் பால் குடித்துவிட்டுத் தான் தம்பிக்கு மறுவேலை.
மம்மி தம்பியின் தலையை ஆதரவ்ாகக் கோதிவிட்ட படியே 'ஹேன்ட் பேக்" கை சோபாவில் வைத்துவிட்டு சேலைத்தலைப் பைக் களைத்து பால் கொடுக்க,. பாவம் தம்பி. நாட்கணக் கில் பட்டினியில் இருந்தவளைப் போல பாலை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தான். −
ரோஜிக்குத் தெரியும், மம்மியின் "ஹான்ட் பேக்" கில் தனக் கும் ஏதாவது டொபியோ, சாக்லட்டோ இருக்கும் என்று: இன்று மம்மி கொண்டுவரும் ஒன்றைக் கூடச் சாப்பிட விரும் பாமல், சாப்பிடக் கூடாது என்ற வரட்டுப் பிடிவாதத்தில் 'உம்' மென்று ஒரு மூலையைப் பிடித்து உட்கார்ந்து கொண்டாள்.
தம்பியின் தலையையே வருடிக்கொண்டிருந்த மம்மி, ஆயம்மா கொண்டுவந்து தந்த தேநீரை டீப்பேர்வில் வைத்துவிட்டு ஏதோ யோசனையில் சுற்றுமுற்றும் பார்த்தாள்.
எந்த நாளும் போல மம்மி வரும்வரை வாசலில் காத்தி, ருந்து "ஹேன்ட் பேக்" கைப் பறித்துக் கொண்டு, மம்மிக்கு "இச் சென்று முத்தம் கொடுத்துவிட்டு, பிரித்துப் பார்க்கும் ரோஜி இன்னும் வாசல் பக்கமாக வராததுகண்டு மம்மி ஆச்ச ரியப்பட்டிருக்க வேண்டும்.
"ரோஜி." மம்மி அழைத்தர்ள், ரோஜி பேசவில்லை. 'ஆயா. இந்த ரோஜி எங்க போயிட்டா ?" 'ஹி. ஹி..' ஆயம்மா சிரித்துக் கொண்டு "வந்து. வந்து. நோன. தலைவலினு பேபி படுத்துட்டு இருக்குது.' பொய் சொன்னுள்.
'ஏளும். ஏதாச்சும் கொடுத்தீங்களா.."" 'ம். இல்ல நோஞ. ஒன்னுமே வாணும்னு சொல்லிரிச்சி' ''Garg?)...' மம்மி சோ பா வின் மேல் ஒருகாலை மடித்து வைத்துக் கொண்டு தம்பியை வலப்பக்கமாகத் திருப்பி, மார்பை மாற்றிக் கொடுக்க முன்பே 'ம். மா. ' என்று தம்பி குட்டி அழுகை பொன்றையும் அழுதுவிட்டான். "அழாத ராஜா. ம். ' தம் பியை மம்மி மறுபடியும் மார்போடு அணைத்துக் கொண்டு மெது வாகத் தம்பியை ஆட்ட.
- 23

Page 14
"மம்மி பாவம். மம்மிக்கு இந்தத் தம்பி எவ்வளவு கஷ்டம் கொடுக்கிருன்' ரோஜி நினைத்துக் கொண்டாள்.
ஒருவாறு தம்பி மம்மியின் அணைப்பிலேயே தூங்கிவிட்டான். மம்மி எழுந்து தம்பியைத் தூக்கிக்கொண்டு "பெட் ரூமு’க்குள் சென்ருள். மம்மிக்குத் தெரியாமலேயே மம்மியின் சேலைத்தலைப்பு நிலத்தில் உரசிக்கொண்டே சென்றது. தம்பியை அணைத்த படி "பெட்டில் தலையணையைச் சரிசெய்து, தம்பியைப் படுக்கவைத்து குனிந்து தம்பியின் நெற்றியில் "இச் சொன்றைக் கொடுத்து விட்டு சேலைத்தலைப்பைச் சரிசெய்து கொண்டு வெளியே வந்தாள்.
"ரோஜி.' ரோஜி இப்போதும் பேசவில்லை.
"எங்க ரோஜி போயிட்டீங்க..??
'ம். ம். ம்' ரோஜியினுல் அழுகையை அடக்கமுடியவில்லை. விசும்பினுள்.
"ரோஜி. ரோஜி, ஏன் அழுறிக்க.." மூலையில் உட்கார்ந் திருந்த ரோஜியின் தலையைப் பிடித்துப்பார்த்து மம்மி கேட்டாள்.
*ரோஜி. தலை வலிக்கிதா.?"
ʻʻLD... ub..."u8...“ʼ
ரோஜியைத் தூக்கி வந்து சோபாவில் இருத்தித் தன்ஞேடு சேர்த்து அணைத்துக் கொண்டே மம்மி இப்போதுதான் ரோஜி யின் முகத்தைக் கண்டிருக்க வேண்டும். முகம் வீங்கி, விழிகளி ரண்டும் சிவந்து போயிருந்தன.
"என்ன ரோஜி. என்னவாச்சிது.? மம்மி பதறிப் போஞள்.
'இல்ல மம்மி.'
"அப்போ ஏன் அழுறிங்க..?"
“ “ DhLÉS),...” ”
'சொல்லுங்க ரோஜி."
"மம்மி. மம்மி நான் இனி ஸ்கூலுக்குப் போ மாட்டேன் மம்மி" திக்கித்திக்கிச் சொன்னுள் ரோஜி.
"ரோஜீ. என்ன சொல்றீங்க..? அவள் ஆச்சரியத்தோடு கேட்டாள்.
"மம்மி. நீங்க ஆபீஸுக்குப் போனகா. ஆயம்மா தம்பி யோடு கோபமா இரிக்கிழுங்க. நீங்க ஆபீஸுக்குப் போங்க
-- 24 سے

மம்மி. நான் ஸ்கூலுக்குப் போகாம வீட்டுல இருந்து தம்பியப் பார்த்துக்கிறேன்.
"ரோஜி.' "சத்தியமா மம்மி. தம்பிய அழாம பார்த்துக்குவேன். தம்பி அழுதாகா "பிஸ்கட் எடுத்துக் கொடுப்பேன். எந்த நேரமும் தம்பியோட விளையாடிண்டே இருப்பேன். தம்பியை அடிக்கவே மாட்டேன். பில்ரீஸ். மம்மி. இனி நான் ஸ்கூலுக்குப் போகாம தம்பியப் பார்த்துக்கிட்டு வீட்டுலேயே இரிக்கிறேன். மம்மி. பாவம் மம்மி. தம்பி.""
மம்மிக்குப் புரிந்துவிட்டது இன்று வீட்டில் ஏதோ நடந் திருக்கின்றது என்று. அ மை தி யா க ரோஜியை அணைத்துக் கொண்டே கன்னத்தில் ஒரு "இச்" கொடுத்தாள்.
சில நேரங்களில் இன்னும் கொஞ்ச நேரத்தில். ரோஜியின் வீட்டில் பூகம்பமொன்று வெடித்தாலும் வெடிக்கலாம். வெடிக் காமலும் விடலாம்.
★
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் நிகழ்ச்சி - மே 1984.
س- 25- س

Page 15
குருடர்கள்.
“மகேன். மகேன், எழும்பு, மகேன். இன்டக்கி வேலைக் கிப் போகணுமெல்ல. எழும்புவாப்பா..."
உம்மா எழுப்பிக் கொண்டிருந்தா. இந்தக் குளிர்வேளையில் அழகாகப் போர்த்தி மூடிச் சுருண்டு படுத்துக் கொள்வதில்தான் எத்தனை இன்பம் ! எனக்கு எழும்ப மனமில்லை.
'ம்ஹ"ம்" போர்வையை இழுத்து முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டேன்.
உம்மா விடுவதாக இல்லை;
"நீங்க. அங்கால போங்க. எனக்கு எழும்பத் தெரியும்." உம்மாவின் முகத்தில் எரிந்து விழுந்தேன். இப்படித்தான் எந்த நாளும் போல. உம்மா என்னை எழுப்ப வரும்போதெல்லாம் என்னையறியாமலேயே எரிந்து விழுவது வழக்கமாகி விட்டது. பேசாமல் உம்மா அடுப்பங்கரைப் பக்கம் போய்விட்டா. பாவம் உம்மா. நான் வேலைக்குப் போக வேண்டும் என்பதற்காகத் தான் எழுப்புகின்ரு. ஆறு நாற்பத்தி ஐந்துக்குத்தான் கண்டி பஸ்ஸிருக்கும். அதை மிஸ் பண்ணிட்டா, அப்புறம் எட்டு மணிக் குப் புகைரதம். என்ன செய்ய. காலேயோடே எழும்புவதென் ருல் இலேசான காரியமா. என்ன ?
"நாஞ. எழும்புக்க. நேரம் ஆறு அஞ்சாகப் போகுது. இந்தாங்க கோப்பி. ம் . படுத்தது போதும் எழும்புங்க."
"அப்புறம் நீ வந்துட்டீயா ?”
தங்கை விமாரா படுசுட்டி, கோப்பியை மேசையில் வைத்து விட்டு, என் போர்வையை இழுத்துவிட்டு ஓடிவிட்டாள்.
"குரங்கு...”* ஸிமாராவுக்கு நான் என்ருல் உயிர். நான் என்ன சொன் ஞலும் கேட்டுக் கொள்வாள், பொருட்படுத்த மாட்டாள். வீட்
سبب 26 سے

டில் உம்மா, வாப்பா ஏதாவது சொல்லி விட்டால் போதும், விட்டுக் கொடுக்காமல் ஒன்று க் கொன்று பேசுவாள். பெரிய மனுஷியாகியும், இன்னும் ஒரு சின்னக் குழந்தையைப் போல. 'நாஞ. எழும்பப் போறிங்களா. இல்ல தண்ணி எடுத்து வந்து ஊத்தவா ?"
"உன்ன என்ன செய்யிரன் பார்.?" நான் எழுந்து அடுப்பங்கரைப் பக்கம் சென்றேன். என் கையில் அகப்படாமல் கொல்லைக்கு ஓடிவிட்டாள்.
**எப்படியோ. நீங்க எழும்பிட்டீங்கதானே. ?"
**போடி, "" நான் எனக்குள்ளே மெதுவாகச் சிரித்துக்
கொண்டேன்.
"ஸிமாரா. இன்டக்கி நீ ஸ்கூல் போகல்லயா..?" 'போகணும்."
"அப்ப நேரம் சரியெல்ல. ரெடியாகு.
'நான் ரெடி. இன்னம் யுனிஃபாம் மட்டும்தான் மாட்டிக் கணும்.""
- நேரம் ஆறு பத்து.
Jaérprb Ayauspruoras 6tir distráldi &s lcáras&r (ypl.dias ஆயத்தமானேன்.
எங்கள் குடும்பத்தில் நானும் தங்கையும், உம்மாவும், வாப் பர்வும் மொத்தமாக நாலுபேர் மட்டும்தான். வாப்பா கண்டி யிலுள்ள மகாவித்தியாலயம் ஒன்றில் அதிபராகக் கடமையாற் றிக்கொண்டிருந்தார். உம்மாவும் அதே வித்தியாலயத்தில் ஆசி ரியை. நான் கண்டியிலுள்ள "பேங் ஆப் ஸிலோன்” கிளையில் இலிகிதராகத் தொழில் செய்துகொண்டிருந்தேன். தங்கை மட் டும் தொழில் செய்யவில்லை. அவளும் அட்வான்ஸ்லெவல் படித் துக்கொண்டிருந்தாள். படிப்பில் கெட்டிக்காரி. நிச்சயமாக இந்த எக்ஸாமில் பாஸ் பண்ணிடுவான். அவளே எப்படியும் ஒரு டாக் ட்ருக்குப் படிக்க வைக்கவேண்டும்.
முகத்தை வேகமாக அலம்பி, துடைத்துக்கொண்டு டவ்லே இடுப்பில் சுற்றிக்கொண்டேன். முகத்தில் "சேவ்" வளர்ந்து கரடு முரடாக இருந்தது. அதைச் சவரம் செய்யக்கூட நேரம் இல்லை.
தேரம் - ஆறு இருபத்தி ஐந்து.
- 27

Page 16
உம்மா பாணுக்கு "ஜாம் பூசிக்கொண்டிருந்தா. அவ எட்டு மணி புகையிரத்தில்தான் போவா. வாப்பா பிரின்ஸிபலாக இருக்கிறதால, அதிகாரத்தைப் பயன்படுத்தி - வாப்பாவால் உம் மாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த சலுகை அது. உம்மா எட்ட ரைக்கு ஸ்கூல் போகும்வரை வரவு இடாப்பில் சிகப்புக்க்ோடு அடிக்கப்படமாட்டாது.
உம்மா தந்த பாண்துண்டைக் கடித்தபடி, தலையைச் சீவி டிரஸ் மாற்றிக்கொண்டேன். உம்மா "டீ" தந்துவிட்டு ஸிமா ராவின் தலையைப் பின்னிவிட்டா. வெள்ளை கவுன் அணிந்து - இளம் நீல நிறத்தில் வெள்ளைக்கோடு போட்ட 'டை"யைக் கட்டி - வெண்ணிற சப்பாத்தும் அதே நிற மேஸ"சம் போட்டு - ஸ்கூல் யுனிஃபாமுடன் பார்க்கும்போது ஸிமாரா சின்னப்பிள்ளை ஒருத் தியைப்போல இருப்பாள்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி அறிக்கை மூடிந்து - ஈழத்துப்பாடல் ஆரம்பித்துவிட்டது. முன்புபோல இப் போது நான் அவ்வளவாகச் செய்தி கேட்பதில்லை. முன்பென் ருல் நான்கு செய்தியையும் எப்படியாவது கேட்டுவிட்டுத்தான் மறுவேலை. இப்போது செய்தி என்ன சொல்கிறது?.
**விமாரா. போமெல்ல."
'சரி நான.'
டைரியைக் கையிலெடுத்து, பேனையை பாக்கெட்டில் மாட்டிக் கொண்டு, பர்ஸிலிருந்த சல்லியை எண்ணிப் பார்த்தேன். மூன்று பத்துரூபாய் நோட்டுக்களும், இரண்டு - இரண்டுரூபாய் நோட்டுக் களும், சில்லரையும் இருந்தது. ஒரு ரூபாய் சில்லரையைக் கையில் எடுத்துக் கொண்டு, பர்ஸை மூடி பெல்ஸ் பாக்கெட்டில் வைத் துக் கொண்டேன். இப்போதெல்லாம் சில்லரைக்குத் தட்டுப் பாடு. நோட்டைக் கொடுத்தால் கண்டக்டர் முணுமுணுப்பான். உம்மா விமாராவின் முகத்தில் அதிகமாக இருந்த பவுடரைக் கைக்குட்டையால் துடைத்துவிட்டார்.
'உம்மா. போயிட்டு வாரேன்."
"வர்ரேன் உம்மா.""
"அல்லாட காவல்.”*
தங்கையை வழமையாகப் பாடசாலைக்குக் கூட்டிக் கொண்டு போவது நான்தான். வரும்போது உம்மாவுடன் வந்துவிடுவாள்.
வீட்டிலிருந்து கிட்டத்தட்ட நூறுயார் தூரத்தில் பஸ்தரிப்பு நிலையம் இருந்தது. பக்கத்து வீட்டு சோமாவதி அக்காவும், அவ
- 28 -

ளுடைய மூத்த மகன் சுஜித்தும் நின்றிருந்தார்கள், சோமாமதி அக்கா எட்விகேசன் டிபார்ட் மென்டில் வேலை செய்பவள். கடந்த மாதம் வாப்பா மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக அவரிடம் கடன்கோரி நின்ற போது சோமா அக்காவும். சோமா அக்காவின் புருஷனும் நிறைய நிறைய உதவிகள் செய்தார்கள். நான் சோமா அக்காவோடு சிரித்து - கதைத்தேன். ஸிமாராவின் கையில் சுஜித் தொங்கிக்கொண்டான். சுஜித் கண்டியிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றில் மூன்ரும் வகுப்போ, நான்காம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தான்.
நேரம் ஆறு நாற்பத்தி ஐந்து. இன்னும் ஓரிரு நிமிடங்களில் பஸ் வந்துவிடும். ஆறு நாற்பத்தி ஐந்து கண்டி பஸ்ஸில் எப்போதும் போல் சரியான க்ரவுட், ஆபிஸ் வேலைகளுக்குப் போவோரும், கல்லூரி களுக்குப் போகும் மாணவ - மாணவிகளுமே அதிகமாக இருப் பார்கள். அநேகமாக இந்த பஸ் நாங்கள் ஏறும் தரிப்பைத் தாண்டி ஓரிரு தரிப்புகளில் நிறுத்தினுல்கூட அடுத்து நிறுத்தவே மாட்டார்கள். மிதிபலகையில் ஒவ்வொருவரும் தொங்கிக் கொண்டு போவதைப் பார்க்க ஏனே பாவமாக இருக்கும். சில் நேரங்களில் நானும் போவதுதானே. இதேநேரத்தில் இன்னுெரு பஸ்ஸைக் கூடுதலாக போட்டுத்தரும்படி ஸ்பீ.டி.பிக்கும், போக்கு வரத்து அமைச்சுக்கும் எத்தனையோ பெட்டிசங்கள் அடித்துக் கண்ட பலன் பூஜ்ஜியம். அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. கடந்த பொதுத்தேர்தலின்போது எம்மூரில் அதிக மானுேர் வாக்களித்தது எதிர்க்கட்சிக்குத்தான். ஊரிலுள்ள சில ஆளுங்கட்சி அமைப்பாளர்கள்கூட இதைக் கவனிப்பதாக இல்லை. அவர்களுக்கு, அவர்களுடைய சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கும்போது பொதுவேலைக்கு எங்கு தான் நேரம் இருக்கப்போகிறது.
எந்த நாளும் போலவே பஸ் க்ரவுடுடன் வந்தது. அதிர்ஷ்டம் - பஸ் நின்றது. பஸ் கண்டக்டருக்கு என்னைத் தெரியும். நான் கேட்காமலே கண்டி டிக்கட் ஒன்றைத் தந்தான். கையில் ஆயத்தமாக வைத் திருந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தேன். சிரித்துக் கொண்டே பையில் போட்டுக் கொண்டார். ஸிமாராவுக்கும், சோமா அக்காவுக்கும் சீசன் டிக்கட் கஷ்டப்பட்டு இருவரும் பஸ்ஸினுள் நுழைந்து கொண்டார்கள். நான் மிதி பலகையில் தொங்கிக் கொண்டேன்,
- 29

Page 17
முப்பத்தி ஏழுபேரை ஏற்றிச் செல்லக்கூடிய அந்த பஸ்வண் டியில் எப்படியும் தொண்ணுறு பேருக்கும் கூடுதலாக இருந் திருப்பார்கள். முதல் தரிப்பு நிலையமான தொரகமுவையில் ஏறி யோரைத் தவிர அடுத்தவர்கள் எல்லோரும் நின்றுகொண்டு தான் போகவேண்டும். பஸ்ஸில் அமர்ந்து கொண்டு போவோரை விட, நின்றுகொண்டு போ வோர் தான் அதிகம். பெண்கள் நெருங்கி நின்றுகொண்டிருக்கும்போது சில துடிப்புள்ள இளைஞர் கள் உட்கார்ந்தபடி பத்திரிகையையாவது, எதையாவது வாசித் துக்கொண்டிருப்பதைப் பார்க்க ஆத்திரமாக இருக்கும். அது போதாக்குறைக்கு சில ஜோடிகள் அரட்டையடித்தபடி, நின்று கொண்டிருப்போரைப் பார்த்துக் கிண்டல் செய்யும்போது உண் மையில்ே அடிக்கத்தான் கோபம் வரும், என்ன செய்ய? பொது பஸ். மனச்சாட்சி அற்ற அவர்களுக்கும் சில உரிமைகள் இருக் கத்தானே செய்யும்.
இந்த பஸ்ஸில் ஒருநாளைக்குப் போனல்போதும் டிரஸ் எல் லாம் நொறுங்கி அழுக்காகிவிடும். ஒருநாள் அணியும் டிரஸ்ஸை அடுத்தநாள் அணிவதென்ருல் கஸ்டம்தான். எப்படியென்ருலும் - பாடசாலைக்கென்ருல் என்ன? ஆபீஸ்களுக்கென்ருல் என்ன ? நேரத்துக்குப் போயாகவேண்டும். இல்லாவிட்டால் அங்கு வேறு பிரச்சினைகள். பணத்தைக் கொடுத்துக்கூட இப்படியான அசெள கரியங்கள்.
இரண்டு மூன்று தரிப்பு நிலையங்களைக் கடந்து பஸ் சென்று கொண்டிருந்தது. பண்ஸில் ஏறுவதற்காகக் காத்திருந்த பயணி கள், கையைக் காட்டியும், பஸ்நிறுத்தாமல் சென்றதால் அவர் களது முகத்தில் அசடு வழிந்தது. இனி அவர்கள் எட்டுமணி வரை புகைரதத்துக்குக் காத்திருக்கவேண்டியதுதான்.
உடத்தலவின்னை புகைரத நிலையம். யாரும் நிறுத்தாமலேயே பஸ் நின்றது.
புகைரத நிலையமும், பிரதான பாதையும் அருகருகே தான் இருந்தன. புகைரதப் பாதையைக் குறுக்கறுத்து பிரதான பாதை சென்றது. மாத்தளை போகும் புகைரதம் புகைரத நிலை யத்தில் நின்றிருந்ததால் பாதையில் கேட் மூடப்பட்டிருந்தது. எமது பஸ்ஸை டிரைவர் கேட்டடியில் நிறுத்திவிட்டான். மிதி பலகையில் இருந்த நாங்கள் நாலைந்துபேர் இறங்கிக்கொண் டோம். புகைரதம் கடவையைக் கடக்க எப்படியும் இரண்டொரு நிமிடங்கள் செல்லலாம்g
من 30 س

"சீட் பிடித்துக்கொள்ளவேண்டும் என்ற அவசரத்தில் எல் லோரும்போல புகைரதத்தினுள் முண்டியடித்துக்கொண்டு ஏறிக் கொண்டிருந்தார்கள். ஏறவேண்டிய அனைவரும் புகைரதத்தில் ஏறிக்கொண்டனர். புகைரத நிலைய அதிபர் விசிலை ஊத, கடைசிப் பெட்டியில் இருந்த "காட்" பச்சைக் கொடியைக் காட்ட பெரிய சப்த்தத்துடன் புகையிரதம் மெதுவாக நகர ஆரம்பித்தது.
டிரைவர் பஸ்ஸை ஸ்டார்ட் செய்தான். நாங்கள் மறுபடி யும் தொத்திக்கொண்டோம். எங்கிருந்தோ வந்த போலீஸ்காரர் ஒருவரும் எங்களுடன் சேர்ந்துகொண்டார். வந்த போலீஸ் காரன் தொந்திவயிறன். கருத்துத் தடித்துப் பார்க்கப் பயங்கர மாக இருந்தார். அவரால் மிதிபலகையில் நிற்கமுடியவில்.ை
'உள்ளே ஏறுங்கள். மிதிபலகையில் போவது சட்டத்துக்கு விரோதம் அல்லவா..?" ஏறிய போலீஸ்காரன் கூற, கண்டக் டரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. நர்ங்கள் நெருங்கி, நெருங்கி உள்ளே சென்ருேம். "இந்தக் கண்ருவி போலீஸ்காரன் வந்துண்டு. பிடித்துக்கொள்ளக்கூட வசதியில்லை. மிதிபலகையில் போவது தண்டனைக்குரிய குற்றம்தான். தப்பித் தவறியாவது டவுனில் வைத்துப்பிடிபட்டால் இருநூறுரூபாய் அபராதப்பணம் செலுத்தவேண்டிவரும். என்னசெய்ய. உள்ளே நெருங்கி கொண்டிருப்பதைவிட மிதிபலகையில் போவது ஓரளவு செளகரியம். எல்லோரும் உள்ளே ஏற. போலீஸ்காரன் மட்டும் மிதிபலகையில் வசதியாக நின்றுகொண்டார்.
கண்டக்டர் மணியை அடித்தார். டிரைவருக்கு ஒன்றுமே புரியாது. அவன் கண்டக்டரின் கைப்பொம்மைபோல. பஸ் ஓடிக் கொண்டிருந்தது.
வத்தேகெதர சந்திண்யத் தாண்டி பஸ் சென்றுகொண்டிருந்த போது - காக்கி யுனிஃபாம் அணிந்த நாலைந்துபேர் பஸ்ஸை இடைமறித்தனர் - டிக்கட் பரிசோதகர்கள். கண்டக்டரின் முகத் தில் வியர்வைத் துளிகள் அரும்பின.
முதலில் ஏறி ய வ ர் கண்டக்டரின் கையிலிருந்த டிக்கட் உடைக்கும் மெசினை எடுத்துக்கொண்டார்.
**தயவுசெய்து டிக்கட்டை எடுங்க.." சன நெரிசலை யும் பொருட்படுத்தாமல் நெருங்கி, நெருங்கி ஒவ்வொருவராகப் பரி சோதித்தனர்.
நான் டிக்கட்டை எடுத்துக்கொடுத்தேன். சிவப்புப் பென்சி லால் ஏதோ கிறுக்கித் தந்தார் பரிசோதகர்
- 31 -

Page 18
பஸ்ஸில் நெருங்கிக்கொண்டிருந்த சிறிய பாடசாலை மாண வர்கள் கஷ்டப்பட்டார்கள். புத்தகம் கொண்டுசெல்லும் பெட் டியைத் திறந்து சீசன் டிக்கட்களை எடுத்துக் காண்பிப்பதில் சிரமம். பரிசோதகர்கள் தமது கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
"டிக்கட்டெக கண்ண."
ஊத்தை பென்யனும், சாரமும் அணிந்திருந்த அப்புஹாமிக் கிழவன் தடுமாறினர்.
"ஐயா. நான் டிக்கட் எடுத்தன்.""
"சரி. டிக்கட்டக் கொடுங்க."
'காணவில்ல்." அப்புஹாமிக் கிழவரின் மேனி மெதுவாக நடுங்கிக்கொண்டிருந்ததுதான் நின்ற இடத்தில் சுற்றும் முற் றும் பார்த்தார். நிலத்தில் கூட இல்லை. அவரையே எல்லோரும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
"கடவுள்மேல் சத்தியமா. நான் டிக்கட் எடுத்தேன்,' "அதெல்லாம் தேவைப்படா. டிக்கட்டை கொடு. இல்ல, தெண்டப்பணமாக நூறுரூபாயுடன் டபல்ட்ரவல் சார்ஜ். இல்ல் பொலிஸ் ஸ்டேஷனுக்கு நட."
நூறுரூபா - போலீஸ் ஸ்டேஷன் - கிழவரின் முகத்திலிருந்து கண்ணிர்த்துளிகள் ஊற்றெடுத்தன.
அப்புஹாமிக் கிழவரை எனக்கு நன்ருகத் தெரியும். என் னுட வாப்பாகிட்ட செட்டிபிகட் வாங்கினவர். கண்ணியமான வர்; நேர்மையானவர். வாழைப்பழ வியாபாரம் செய்யும் அவர் ஒரு சதத்துக்குக்கூட வஞ்சகம் செய்யமாட்டார். அவர் நிச்சய மாக டிக்கட் எடுத்திருக்கத்தான்வேண்டும்.
* 'guur...'' *ம். இறங்கு போலீஸ் ஸ்டேசனுக்கு நடக்கலாம்.' கட்டுகாஸ்தோட்டையைத் தாண்டி பஸ் சென்றுகொண் டிருந்தது. பரிசோதகர் மணியை அடித்து பஸ்ஸை நிறுத்தினர்
என்ன செய்ய. தண்டப்பணம் கட்டுவதற்கு நான் பணம்
கொண்டுவரவில்லை. தாராள மனப்பான்மை படைத்த யாருமே பஸ்ஸில் இருக்கவில்லை.
- 32

பரிசோதகர்கள் அப்புஹாமி கிழவரை இழுத்துக்கொண்டு இறங்கிவிட்டார்கள்.
எவ்வித சலனமுமின்றி பஸ் தன் பயணத்தைத் தொடர்ந்
• ارزرگ
பஸ்ஸினுள் இருந்த ஒவ்வொருவரும் கிழவரைப்பற்றி விமர் சித்துக்கொண்டிருந்தனர். உடத்தலவின்னையில் வைத்து மிதி பலகையில் ஏறிய போலீஸ்காரர்கூட.
"இந்தக் கிழட்டுச் சனியன்கள். டிக்கட் எடுக்க வக்கில் லாட்டி ஏன்தான் ஏறுதுவலோ. இதுகளால எங்களுக்கு லேட்." சட்டத்தை நிலைநாட்டும் போலீஸ்காரர் கூறினர்,
உண்மையிலே போலீஸ்காரர் டிக்கட் எடுக்கவில்லை.
அவரே இப்படிப் பேசுவதென்றல். அந்தப் பரிசோதகர்கள் - பா ர்வை யு ள் ள குருடர்களுக்கு இது விளங்கப்போவதில்லை. போலீஸ் யுனிஃபாம் அவர்களது விழிகளைக் குருடாக்கி இருக்கக் கூடும்.
நான் மனதுக்குள்ளே நொந்துகொண்டேன்.
சட்டம் ஒரு வறட்டுப்பிடி, பணக்காரனுக்கு ஒரு சட்டம்; ஏழைக்கு ஒரு சட்டம்; உத்தியோகஸ்தனுக்கு ஒரு சட்டம்; சட்டத்தை நிலைநிறுத்தும் போலீஸ்காரர் - இன்னும் டிக்கட் இல்லாமால் மிதிப்லகையில் சென்றுகொண்டிருக்கிருர்,
大 大 大
‘தீபம்’ (சென்னை) அக்டோபர் - 1982,
- 33

Page 19
அர்த்தமற்ற வாதங்கள்.
கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் மாலை கடுகதிப் புகைரதத்தில் சனக்கூட்டம் அதிக மாகவே இருந்தது. எப்போதும் இப்படித்தானும். இன்று வெள் ளிக்கிழமையாகையால் வழமையை விடக் கொஞ்சம் கூடுதலாக உள்ளதாம்.
தலைநகர அலுவலகங்களில் கடமை புரிவோர், கடமை முடிந்து வீடு திரும்ப வசதியான புகைரதம். மலையகப் பகுதி களிலிருந்து தலைநகரில் வேலைக்குச் செல்பவர்களும், வியாபாரம் செய்பவர்களும் சனி - ஞாயிறு விடுமுறைக்காக இன்று வீடு திரும்பிக்கொண்டிருப்பார்கள்.
வழமையாகச் செல்லும் அவர்களுக்கு இந்தப் புகைரதத்தில் இந்த நெருக்கமும், இறுக்கமும் பழக்கப்பட்டிருக்கவேண்டும். ஆணுல். என்னைப்போல வருடத்திற்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ சென்று வருபவர்களுக்கு.
உள்ளே நிலைமையைப் பார்க்கும்போது மூச்சுக்கூட விடச் சிரமமாயிருக்கும்போலத் தெரிகின்றதே. சிரமப்பட்டு உள்ளே ஏறிக்கொண்டேன். என்னேடு வந்த நண்பர்கள் மிதிபலகையில் தொங்கிக்கொண்டுபோக பிளாட்பாரத்திலே நின்றுவிட்டார்கள். 'உள்ளே நெருங்கிக்கொண்டு போறதவிட. மச்சான் இது ரொம்பக் குஷியடா...'
நின்றுகொண்டு கஷ்டப்படும் பயணிகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தன்பாட்டில் சொகுசாகக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்களின் கதை - அது ஒரு பெரிய கதை.
حسب 34 ست

குழுக்குழுக்களாய்ச் சேர்ந்து ஆபீஸ் பேக்குகளே மடியில் வைத்துக்கொண்டு சிலர் "காட்ஸ் விளையாடிக்கொண்டிருந்தார் கள். நாட்டு அரசியலையும், சினிமாப் படங்களையும், அரசியல் வாதிகளையும், நடிகர்களையும், குடும்ப விவகாரங்களையும் விமர் சித்துக்கொண்டிருந்த இன்னும் சில குழுக்கள். நெருக்கத்திலும் சுகம் கண்டுகொண்டு காதோடு, உதடு சேர்த்து இரகசியம் பேசிக்கொண்டும், வேர்க்கடலையைக் கொரித்துக்கொண்டும், "இந்தப் புகைரதம் இன்னும் கொஞ்சம் தாமதமாகாதா?’ என ஏங்கிக்கொண்டிருந்த சில ஜோடிகள்:
- இப்படியாகப் பலப்பல ரகங்கள்.
சிலர் ஆசனங்களை ஒதுக்கிக்கொண்டிருந்தார்கள். ஆசனத் தில் ஆளுக்குப் பதிலாக கைட்குட்டைகளும், ஹேண்ட் பேக்கு களும் இடம் பிடித்துக்கொண்டிருந்தன. இந்தக் கூட்டத்தில்கூட இப்படி ஆசனங்களை ஒதுக்கிக்கொண்டு, இங்கிதம் தெரியாமல் இருக்கின்ருர்களே! பெண்கள், வயயோதிபர்கள், குழந்தைகள், ! நோயாளிகள் கஷ்டப்பட்டு நின்றுகொண்டிருக்க நண்பனுக்காக வும், காதலனுக்காவும், காதலிக்காகவும் காத்திருக்கும் இவர்கள்.
- இவர்களும் மனிதர்கள்தான் அங்கே உண்மையான சமத்துவம் நிலவிக்கொண்டிருந்தது. . பாரதி கண்ட பெண்களின் சமஉரிமை அங்கே நனவாகிக்
கொண்டிருந்தது.
அங்கே வர்க்க வித்தியாசம் இல்லை. பால் பிரிவுகள் இல்லை, சாதி வேற்றுமைகள் இல்லை. றிறப் பாகுபாடுகள் இல்லை,
சுமக்கவொண்ணுச் சுமைகளை சுமந்துகொண்டு அந்தச் சுமை களை ஜீரணித்துக்கொள்ள முடியாத நிலையில் ஏக்கப் பெருமூச் சொன்றை விட்டபடி புகைரதம் மெதுவாக நகர ஆரம்பித்தது.
மனச்சுமை தாளாமல் கூரையைப் பார்த்துக்கொண்டே சிகரட் ஒன்றைப் பற்றவைத்துப் புகையை உள்ளிழுத்து ஊதி விடுகிறேன். புகையுடன் கலந்து என் மன உளைச்சல்கள் மறைந்து விட முயல்கின்றன,
தலையைக் கொஞ்சம் யன்னலினூடாக வெளியே நீட்டிப் பாாத்தேன்.
**மை காட்...”*
- 35 -

Page 20
மிதிபலகையில் எப்படியெல்லாம் தொங்கிக்கொண்டு வரு கின்ருர்கள். பார்க்க வேடிக்கையாகவும், அதேநேரம் வேதனை யாகவும் இருக்கின்றது. "யா அல்லாஹ். தப்பித் தவறிக் கை யொன்று விடுபட்டால்." - நினைக்கவே புல்லரிக்கின்றது.
தலையை இழுத்துக்கொண்டேன்.
**டொபி. சிகரட், டெர்பி. சிறுவன் ஒருவன் வியாபா ரம் செய்துகொண்டிருந்தான். 'டொபி ருபியலட ஹதராய்.
Ffrifi...” ”
அவனைத் தொடர்ந்து இன்னெரு வாலிபன் 'ஹா. ரட கஜ". மாத்தியா ரடகஜ" ஒனத. பெகட்டுவக் ரூபியலாய் மாத்தியா' இவர்களுக்கு வியாபாரம் செய்ய வேறிடமே கிடைக்கவில்லையா ?
புகைரதம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. காவிரண்டும் இல்லாத நொண்டியொருவன் நிலத்திலே ஊர்ந்துகொண்டு வந் தான். அவனைக் கண்டு பலர் அனுதாபப்பட்டிருக்கவேண்டும். கொஞ்சம் ஒதுங்கி இடம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவன் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஒருவேளை காலிரண்டும் இருந்தால் அவன் இவ்வளவு கீழ்த் தரமாக இருப்பான ? பாவம் வாழவேண்டும் என்று பிச்சைக் காக அலைகின்றன். இந்தச் சில்லறைகள்தான் அவன் வயிற்றைக் கழுவப்போகின்றன. பக்கட்டைத் தட்டிப்பார்த்தேன். கொஞ்சம் சில்லறைகள் இருந்தன. அதிலொன்றை எடுத்து அவன் டின்னில் போட்டேன். -
**மாத்தியா. யன என கமன்வல தெவி பிஹிட்டய் . ஒபே தூதருவன்ட தெவிபிஹிட்டாய்." - அவனுக்குப் பழக்கப்பட்ட மந்திரம்தான். ஆனலும், அதிலும் ஜீவன் இருந்தது. முன்னே ஊர்ந்துகொண்டு சென்ருன்.
அவனுக்கு எத்தனை ஆசைகள், கனவுகள், இருக்கும். இறை வணின் சித்தப்படி அவன் நொண்டியாக வாழ்ந்தாலும், எப்படி யாவது அவன் வயிற்றைக் காத்துக்கொள்ள முடிகிறது.
- இப்படி, இந்த உலகத்தில் எத்தனை பிறவிகளோ. யா அல்லாஹ் உன்னுடைய படைப்புக்களில்தான் எத்தனை ரகங்கள்?
கருணைக்காக - அவனுக்குப் பலர் சில்லறைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆணுல். வழமையாகப் போகின்றவர்
- 36

களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. 'அவர்களுக்கு கண்டு கண்டு கண் புளித்துவிட்டதுபோலும்." - அவர்கள். தன்பாட்டில் காட்ஸ் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
இன்று காலை கொழும்பு நகரில் நுழைந்தபோது எத்தனை யெத்தனை அனுபவங்களைச் சந்திக்கக் கிடைத்தன ? வீதியோரங் களில் தன் வயிற்றுக்காக எத்தனை ஜீவன்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
பார்வையிழந்த குருடர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக அவர்களுடைய குழந்தைகள், நாலந்து குழந்தைகளுடன் தன் மானத்தை மறைக்க கிழிந்த துணிகளைத் தஞ்சமாக்கிக்கொண்டு, மறைக்கவேண்டிய பாகங்களை மறைக்கமுடியாமல் தவிப்பில் ஏக்கப் பெழுச்சுகளை வெளியிட்டுக்கொண்டிருந்த பெண்மணிகள், தெருநாய்களைப்போல, அவற்றைவிட பரிதாபமான நிலையில், பரிதவித்துக்கொண்டிருக்கின்ற சில சின்னச் சின்னக் குழந்தைகள். - இவைகளெல்லாம் சாதாரண மனிதனின் ஒதுக்குப் பக் கங்கள்.
அவர்களின் முகத்தில்தான் எத்தனையெத்தனை எதிர்பார்ப் புக்கள், ஏக்கங்கள் ! களையிழந்து, ஜீவனற்று இருந்த அந்த முகங்கள், தீடீரென்று என் மனக்கண் முன் தோன்றி மறைகின் றன.
"சாமி. ரெண்டு நாளா சாப்பிடல்லேங்க சாமி, "ரதாச்சும் சில்லறைகளிருந்தாகா கொடுங்க சாமி." அந்த வார்த்தை களில்தான் எத்தனை கருணை.
**மாத்தியா. மாத்தியா..”* எஜமானைக் கண்டால்தான் நாய்கள் வாலை ஆட்டும். இந் தக் குழந்தைகளுக்கெல்லாம் பாதையில் போகும் வரும் எல் லோரும் எஜமான்கள். அவைகள் எல்லோருக்கும் வாலை ஆட் டிக்கொண்டே இருக்கும்.
சிறுவன் ஒருவன் அழகிய மாம்பழமொன்றைக் கடித்துக் கொண்டிருக்கின்றன். அவனைவிடக் கொஞ்சம் திடகாத்திரமான முரடான இன்ஞெரு சிறுவன் அவனை அடித்துவிட்டு அவன் கையிலிருந்த பழத்தைப் பறித்துக்கொண்டு ஓடிவிடுகின்ருன்.
**மாத்தியா. மாத்தியா..." சமுதாயத்தில் கொஞ்சம் வசதியானவர்களைக் கண்டு, கண்டு புளித்துப்போன எமது விழிகளுக்கு இப்படிப்பட்ட காட்சிகளைக்
- 37

Page 21
கிரகித்துக்கொள்ளவே சக்தியில்லை என்பது உண்மைதான். அவர்கள் யார்? எம்மைப்போல் - ஆசாபாசங்கள் நிறைந்த எலும்பாலும், சதையாலும் படைக்கப்பட்ட மனிதர்கள்தானே.
புகைரதம் விாயங்கொடை புகைரதநிலையத்தில்தரித்துவிட்டு, மறுபடியும் தன் பயணத்தைத் தொடர்கின்றது.
அதோ அங்கே -
அவனைப் பார்க்கும்போது எப்படியும் அவனுக்கு வயது இருபத்திநான்கு, இருபத்திஐந்து மதிக்கலாம். பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருக்கின்றன். அவனுடைய கையில் மூன்று இசைக் கருவிகள்.
கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்து புகைரதப் பெட்டியின் நடுவே அமர்ந்துகொண்டே, அவன் கையிலிருந்த 'மெளத்தோகன’ வாயில் சொருகிக்கொண்டு, ரபானையும், இன்னுமோர் கிதார் கருவியையும் இசைத்தபடி இசைமழை பொழிகின்றன்.
செவிகளுக்கு, இனிமையாக இருக்கின்றது. எல்லோர் பார் வையும் அவன் பக்கம் திரும்ப உசாரடைந்த நிலையில் சுறு சுறுப்பாகின்ருன் கொஞ்ச நேரத்தில் இசை ஒய்கிறது.
கருவிகளை அப்படியே வைத்துவிட்டு எல்லோர் முன்னேயும் ரபாண் நீட்டுகின்றன். வந்த நொண்டி - குருடு - ஊமை. எல்லாரையும்விட அவனுக்குச் சில்லறைகள் அதிகமாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. என் முன்னும் ரபான நீட்டுகின்றன்.
அவனுக்குப் பிச்சை கொடுக்க எனக்கு மனமில்லை, அவ ஞெரு திறமைசாலி, இல்லாவிட்டால். ஒரேநேரத்தில் மூன்று இசைக்கருவிகளையும் எப்படி அவனுல் இசைக்கமுடியும் ? அவ னுக்கு நன்முக உழைக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்குப் பிச்சை கொடுப்பதால், நாங்கள்தான் ஒரு பிச்சைக்காரக் கூட்டத்தை, தோற்றுவிக்கின்ருேம். அவன் முகத்தையே கணநேரம் பார்தேன்; "சார்.' ரபான ஆட்டினன், சில்லறைகளும் ஆடின. 'தம்பி, உன்னல் நன்முக உழைச்சி வாழமுடியும். இப்படி ஏன் நாலுபேர் முன்னல கையை நீட்டிக்கிட்டு நிக்கிறே.?"
“ “Fryri...”” - 'உன்னைப்போன்றவர்களுக்குப் பிச்சை தந்து பிச்சைக்கார கூட்டமொன்றை உருவாக்க நான் விரும்பவில்லை."
- 38 -

'சார். இது பிச்சையா. ?? - அவன் என்னை ஒரு மாதிரி யாகப் பார்த்தான். 'இது பிச்சையில்லை சார். உழைப்பு. நான் யாரிடமும் கைநீட்டிப் பிச்சை கேட்கவில்ல. என்ர இசையை ரசிச்சவங்க யாரர்ச்சும் இருந்தால் அவங்க ரசனைக் காகவேண்டி எனக்கு அன்பளிப்புத் தாராங்க. என் இசையை இரசிப்பவர்கள் எனக்குத் தருவது பிச்சையல்ல." ஒரே மூச்சில் பேசிவிட்டு என்னை முறைத்துப்பார்த்தான். 沙
و « -- B ، ،
'நான் நான்தான். நான் உன்னிடம் பிச்சை கேட்கவில்லை. நான் ஒரு கலைஞன். என் திறமையை இரசித்த உன்னிடம் அதற்குரிய ஊதியத்தைத்தான் கேட்டேனே தவிர வெறும் பிச்சை கேட்கவில்லை. உன் பிச்சைக்கார காசை நீயே வைத்துக்கொள்.'
- எல்லோர் முகங்களும் என் முகத்தை நோக்க. நான் சிலையாகி நின்றேன்.
女 ★ 女
தினகரன் - நவம்பர் 1983,
- 39 -

Page 22
நிழலின் அருமை.
"துவிள்கள் துவிங்கள் லித்தில் ஸ்தார்."
ப்ேபிக்கு, பேபியின் பொம்மைப்பாப்பா பாடுற இங்கிலீஜ
பாட்டு நல்லா மனப்பாடம். பேபியின் உம்மர் பொரிங் பொயிட்டு வர்தநேரம் பேபிக்கு ரெண்டு பொம்மைப் பாப்
பாக்கக்ளக் கொன்ட்ாந்து குடுத்தாங்க. ஒரு பாப்பா இங்கிலீஸ்"
பாட்டுப்பாடும். மற்றப்பாப்பா "குட்மோனிங் Lዕሀhùù]......... குட் போனிங் டெடி. யுவ மை பெஸ்ட் பிரண்ட்." அப்படீன்து இங்கிலீஸ்ா பேசும்.
பேபியிட உம்மா "பொசிங்'கியிருந்து வந்த பிறகு ப்ேபி ாங்ககூட சரியாப் பேசிப்பழக மாட்டிச்சி. இப்பவெல்லாம் பேபியின்ட பிரண்ட்ஸ்" அந்த பொம்மைப் பாப்பாக்கள் மட் டும்தான். பேபியிட உம்மா வரிறப்போ, மிச்சம் மிச்சம் சாமா
னெல்லாம் கொண்டுவந்தாங்க. வந்த கையோட பேபிக்கு சொப்பர் பைசிக்கள் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துட்டாங்க.
பேபிக்கு சொப்பர்ஸ் போறண்டாக்கா சரிப்பயம்,
பேபிக்கு மட்டும் எத்தன. கவுன்கள் செவப்பு, நீலம், பச்ச. ப்புடி எத்தன எத்தன் கலர்கள். பேபியிட வாப்பா போடுறது பால பேபிக்கு பெல்ஸ், சேர்ட், பேபியிட துல்லயில் போட்டுக் கிட்டிருக்கிற தொப்பிமாதிரி ஆறு தொப்பி பேபிகிட்ட இருக்கிது.
பேபிகிட்ட மிச்ச மிச்சம் வெளயாட்டுச் சாமான்களும்
கால சுட்டால். "டும் டும்"னு சத்தத்தோட நெருப்பும் பாப்ரு சிக்கிட்டுவரும். பேபியிட சாப்பாத்து இருக்கே. அதுக்குள்ள
கிளி ஒன்று இருந்துக்கிட்டு பேபி நடக்கிறப்போ - அந்தக்கிளி
"கீச் ச்ேசுனு சுத்தும். பேபி வெளயாடுற பந்துல நேரம் பார்க் குற உருாோளTம் இருக்குதாம். பேபியிட கார் இருக்குதே. அது என்னெல்லாம் செய்யிது தெரியுமா? பெட்டரியப் போட்டு
- 40 -
இருக்கி"டள்ே'ட்க்'ஸ் "ஸ்ேரீபே கிட்ட இருக்கிற துவக்குமாதிரி-ரெண்டு துவக்கு அந்த துவக்
 

விட்டு'டா'அங்கே ஒடும். இங்கி ஓடும். முட்டுப்பட்டா "கிரீச் கிரிச்"னு சத்தத்தோட செவப்பு பல்பு பத்தும்,
பேபியி'உம்மாவும், என்ட உம்மாவும் கூடப்பொறந்தவங் களாம். என்ட உம்மா சரியான மட்டும் ப்ய்ந்தவங்க, பேபியிட உம்மாவப்போல சான்ட உம்மாவும் பொரிங்" போளுக்கா. இந்தமாதிரி எனக்கும் எவ்வளவோ சாமான்கள் கொண்டாந்து திருவாங்க. வாப்ப்ா அடிக்கொருக்கா உம்மாவுக்கு சொல்விடு வாரு, 'நீ பொரிங் போளுக்கா இந்தவிட்டு மண்ண்ேயே மறந் திடினும்.'அப்புடின்னு'ச்சே." வாப்பா கூடாத வாப்பா. அவ்ருக்கு என்மேல இரக்கமேயில்ல.
扈 பேபிட வாப்பா பூவாப்பா, பேபிட உம்மா பொரிங் போனதுலயிருந்து வேல்க்கும் போகாம. திவிட்டுக்குள்ளயே குந்துக்கிட்டு பேபிக்கு சமைச்சிக்குடுப்பாரு'அவரே தண்ணி பும் கொண்டுவருவாரு, பேபிக்கு 'ஏ. பீ.சி. எல்லாம் சொல்லிக்குடுப்பாடு.
"பேபியிட உம்மாக்கிட்ட எத்தன்யெத்தன போட்டோக்கள் இருக்கிது தெரியுமா..?பேபி எங்கிட்ட கொண்டாத்து காட் டிச்சி, உம்மாண்டே, வாப்பா' கொண்டார'இங்கிலீஸ்"ப் பேப்பர்ல இருக்கிற வெள்ளக்கார நோஞக்களப்போல. மினி கவுனும், தொப்பியும், போட்டுக்கிட்டு' என்ன பசுந்தா இருக் கிருங்க தெரியுமா..? தம்பிப்பாப்பாவுக்கு வெயில் நேரங்கில்ல' உம்மா உடுப்பாட்டுற உடுப்பப்போல் உடுத்துக்கிட்டு, பேபியிட்' உம்மா குளிக்கிறப்ப" எடுத்த பசுந்தானபோட்டோக்கள் மிச்சம்' இருக்கிது. முந்தியெண்ட்ாக்கா எங்கட'உம்மாவும், பேபியிடர் உம்மாவும் தலையில முக்காட்டப் போட்டுக்கிட்டா கழற்றவே மாட்டாங்க. இப்ப பேபியிட உம்மா தலைமுடிய" கட்டையா வெட்டிக்கிட்டு. 'டிஸ்கோ.வாம். சேச்சே."எங்கட உம்மா சரியான பட்டிக்காடு. அவங்களுக்கு "மொட்"டே தெரியாது. தலையைச்சுத்தி முக்காட்டப் ப்ோட்டுக்கிட்டு. கண்ராவி. '
ந்ஓ: அதோ பேபி என்னக் கண்டும் காணுததுபோல பொம் 器 பாப்பாவை மடியில் வைச்சிக்கிட்டு 'ஏதோ பெரிசா போசித்துக்கொண்டிருக்கிரு. ஹோ. ஹோ."நேத்து உம்மா சொன்ஞங்களே. ப்ேபியக் கொழும்புல பெரிய ஸ்கூல் ஒன்றுல போடிங் பண்ணப்போறதா, கொழும்பு ஸ்கூல்ல எப்படி வின் யாடுறதென்றுதான் பேபி யோசிக்கிறதாக்கும்.
அந்த வெளிநாட்டுப் பொம்மைகளேயே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபேபி அதைத் தாக்கியெறிந்துவிட்டு எழுந்தாள்.
- 41ܶ --

Page 23
நிலத்தில் விழுந்த பொம்மை கிளிப்பிள்ளையைப்போல ""குட் மோனிங் மம்மி குட்மோனிங் டெடி. யுவ மை பெஸ்ட் பிரண்ட்ஸ். என்று சொல்லிக்கொண்டிருந்தது. இதெல்லாம் பேபிக்குக் கேட்டுக்கேட்டு அலுத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
என்ன நினைத்தாளோ தெரியவில்லை - பேடி எழுந்து உள்ளே சென்ருள்.
பேபிக்கு நன்ருக ஞாபகம் : முன்பு பேபியின் வீட்டில் நில இல்லாம், மண்னதத்தான் இருந்தது."ஆல்ை இப்போது. சீமெந்து போட்டு ஜெ? எடுத்து. குவைத்திலிருந்து பேபியின் உம்மா வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் பேபியின் 6urt lui fr சுவர்களுக்கு இளநீல நிறத்தில் பூச்சுப் பூசிஞர். இப் போது உம்மா கொண்டுவந்த மக்காப்ப்டம் நான்கு பக்கச் சுவர்களிலும் தொங்கி வீட்டை மெருகேற்றிக்கொண்டிருந்தது.
பேபி ஷோகேஸைப்' பார்த்தாள்.
எல்லாம் பேபியிட உம்மா கொண்டுவந்த வெளிநாட்டுப் பொருட்கள். சின்னச்சின்ன கொஃபி ஸெட்"டில் இருந்து பெரிய பெரிய "பிளேட்டுக்கள் வரை அழகாக அடுக்கி வைக்கப்படிருந் தன. அதுமட்டுமல்ல. சின்னச்சின்ன விளையாட்டுக் கார்கள், பஸ்கள், கோச்சுகள், அழகான டிரேக்கள், கிளாஸ்கள். இதெல் லாம் உனக்காகத்தான் மக கொண்டாந்தேன்." - உம்மா "ஷோகேஸுக்குள் இருந்த பொம்மைகளுக்குப் பக்கத்தில் தானும் ஒரு பொம்மையாகிச் சிரித்துக்கொண்டிருந்தா .
பேபி இன்னும் பார்த்தாள்.
ஷோகேஸுக்கு மேல் ஸ்டீரியோ டபள் ஸ்பீக்கர் கெசட் ரேடியோக்கள் இரண்டு, நடுவில் பெரிய இருபது அங்குல டெலி விஷன் செட். இரு வாரங்களுக்கு முன்பு பேபியின் உம்மாவும் வாப்பாவும், ப்ேபியோடு போய் கொழும்பு "டியூட்டி ஃபிரீ ஷொப்"பில் வாங்கிவந்த "வீடியோ டெக்"கின் மீது பூனைக்குட்டி ஒன்று படுத்துக்கொண்டிருந்தது.
பேபிக்கு இவற்றில் எதையுமே காணப் பிடிக்கவில்லை.
சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கலண்டரில் ஒர் அன்னை தன் மார்போடு அணைத்தபடி தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள் - பேபி கொஞ்சநேரம் அந்தப் படத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவன் அறியாமலேயே இரண்டு
- 42 -

சொட்டு நீர்த்துளிகள் நிலத்தில் விழ - யன்னலருகே போய் டோட்டியின் வீட்டை எட்டிப்பார்த்தாள். டோட்டியின் உம்மா, டோட்டியை மடியில் வைத்துக்கொண்டு தலையில் 'பேன்" பார்த்துக்கொண்டு இருந்தாள்.
"டோட்டியின் கழுத்தில் மாலையில்லை. டோட்டி புதிய கவுண் போட்டும் இல்லை. டோட்டியின் வீடு பெரிய வீடுமில்லை. அங்கே டெலிவிஷன் இல்லை. கெஷட் இல்லை. வீட்டுக்கு லைட் டும் இல்லை. ஆனலும் டோட்டி எவ்வளவு சந்தோஷமா இருக்கிது. ?"
*டோட்டியிட உம்மா, டோட்டியோட எவ்வளவு அன்பாக இருக்கிருங்க. சேச்சே. என்ட உம்மா. எந்தநேரமும் சொல்லு வாங்க. அவங்க வேல செஞ்ச எடத்துல மூணு தம்பிப்பாப் பாக்களப் பார்த்துகிட்டு இருந்தாங்களாம். அவங்க உம்மா கிட்டதாளும் அணைஞ்சி படுத்துக்குவாங்க. ஆணு. என்ட உம்மா என்ன அணைச்சிக்கிட்டுப் படுத்து எத்த நாளாயிட்டுது. என்ட உம்மா. டோட்டியிட உம்மாவா இருந்தாக்கா எவ்வளவு நல்லா இருக்கும். ?
- பேபி தனக்குள்ளேயே நொந்துகொண்டாள்.
ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்ட பேபி, முற்றத்தில் விண்யாடிக்கொண்டு இருந்த டோட்டியை சத்தமிட்டுக் கூப் பிட்டாள்.
ஓடிவந்த டோட்டி பேபியையே பார்த்துக்கொண்டிருந்து விட்டுச் சொன்னுள். "பேபி. பேபி. ஒங்களுக்கு இந்த கவுண் பசுந்தாயிருக்கு பேபி.'
பேபிக்கு, அது காதில் விழவில்லைபோலும். பேபி டோட் டியையே பார்த்துக்கொண்டிருந்தாள். "டோட்டி. உங்க 2. töLDIT 4 ap.lüb LDIT 67659651unt... ?””
'இல்ல பேபி, எங்கட உம்மா பயந்தவங்க. உங்க உம்மா தான் பூ உம்மா. மறுபடி உங்க உம்மா "பொரிங்" போகப் போருங்களாமே"
"டோட்டி, உம்க உம்மா ஒங்களுக்குச் சோறெல்லாம் ஊட்டியுடுவாங்கல்லியா..?"
"பேபி. உங்க உம்மா பொரிங் போனுக்கா. என்ன கொண்டாரச் சொன்னிங்க, ?"
- 43

Page 24
முற்றத்திலிருந்த மாமரத்தையே கணநேரம் பார்த்துவிட்டு "டோட்டி உங்கட உம்மா உங்கள அணைச்சிக்கிட்டுப் படுப் பாங்கல்லியா..?’ என்று ஏக்கத்துடன் கேட்டாள் பேபி. அந்தப் பேச்சை ஜீரணித்துக் கொள்ளக்கூடிய நிலையில் டோட்டி இருக்க வில்லை. பேபியின் வீட்டிலிருந்த விளையாட்டுப் பொருட்கள், பேபி வீட்டுக்கொடியில் காய்ந்துகொண்டு இருந்த பேபியின் கவுண்கள். இவற்றையே பார்த்துக்கொண்டிருந்தாள், "பேபி. சத்தியமா. உங்க உம்மா பூ உம்மாதான்.""
'இல்ல டோட்டி. என்ட உம்மா அசிங்க உம்மா. உங்கட உம்மாதான் பூ உம்மா. என்ட உம்மா படுக்குறப்போ என்னை அணைச்சிக்கிட்டுப் படுக்கமாட்டாங்க டோட்டி. உங்க உம்மாவப் போல சோறு ஊட்டியுடவும்மாட்டாங்க டோட்டி.." விசும் பினுள் பேபி.
டோட்டி பேபியின் முகத்தைப் பார்த்தாள். பேபியின் கண் கள் இரண்டும் சிவந்து - பேபி அழுதுகொண்டிருந்தாள். 'பாவம். உம்மா "பொரிங் போகப் போறதென்று பேபி அழுகிறதாக் கும்." டோட்டி நினைத்துக்கொண்டாள்.
"அழாதீங்க பேபி, உங்கட உம்மா பொரிங்லயிருந்து மறு படி வர்றப்போ. ஒங்களுக்கு நெறைய நெறைய வெளயாட்டுச் சாமான்கள் கொண்டாந்து தருவாங்கதானே. ?"
'எனக்கு ஒன்றும் தேவையில்ல டோட்டி. உம்மா பொரிங் போளுக்கா. இனி அவங்க வந்தாலும் ஒன்றுதான் வராட்டி யும் ஒன்றுதான் ; டேர்ட்டி. எனக்குச் சோறு ஊட்டியுட, என்னை மடியில வைச்சுக்கிட்டு தலையில பேன் எடுக்க, என்ன அணைச்சுக்கிட்டுப் படுக்க. எனக்கொரு உம்மா வேணும் டோட்டி"
- பேபி ஏங்கி ஏங்கி அழுதாள்.
டோட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை.
女
அஷ்-ஷ9ரா - செப்டம்பர் - அக்டோபர், 1983
- 44 -

III நம்பிக்கைகள்
கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்லும் ரயில், உடத் தலவின்னை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது மழை இலேசாகத் தூறிக்கொண்டிருந்தது. ரயிலில் நான்கு பெட்டி களுக்கும் பொதுவாக இருந்த இரண்டு கதவு வழியாக - இறங்க வேண்டியவர்கள் முண்டியடித்துக்கொண்டு இறங்கி, மழை அதி கரிக்குமுன் வீடுகளுக்குப் போய்விடவேண்டும் என்ற எண்ணத் தில் ஒட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.
மற்றவர்களைப்போல மழைத் தூற் றலுக்குப் பயந்து காதர் ஒடவும் இல்லை - வேகமாக நடக்கவும் இல்லை. வெய்யிலில் காயமுடியுமாஞல், மழையில் நனைந்துவிட்டால் என்ன கரைந்தா போகப்போகின்றேன் என்று நினைத்தானுே - இல்லையோ, எந்த நாளையும்போல தன்னுடைய நீலநிற பேக்கைத் தோளில் மாட் டிக்கொண்டு, நிதானமாக நடந்துபோக முயற்சித்தாலும், அவனை யறியாமலேயே அவனது கால்கள் தள்ளாடின. ஒரு குடிகாரனைப் போல நடந்துகொண்டிருந்தான். "பின்னே என்ன - குடிகாரன் அப்படித்தானே நடப்பான்.”*
அப்பகுதியில் பொதுவாக எல்லோரினதும் விமர்சனத்துக்கு ஆளான ஒருத்தர் உண்டென்ருல், அது நிச்சயமாகக் காதராகத் தான் இருக்கவேண்டும். எல்லோரினதும் பார்வையில் அவனுெரு விசித்திரமான பிறவி - நன்முகப் படித்தவன் - கண்டியிலுள்ள பிரபல தனியார் கம்பனியொன்றில் அக்கவுண்டளுகத் தொழில் பார்த்துக்கொண்டிருப்பவன். நன்ருகக் குடிப்பான். மூன்றரை மணிக்கு வேலையிலிருந்து புறப்பட்டால் நாலரைவரை தவறன யில்தான் இருப்பான். இதைப்பற்றி யாராவது கேட்டால் அவன்
- 45

Page 25
சொல்லும் ஒரே வார்த்தை 'எனது வீக்னஸ்." சில நேரங் களில் அவனைப் பார்க்கையில் அனுதாபமாகவும் இருக்கும். அதே நேரம் கோபமாகவும் இருக்கும்.
ரயில் நிலையத்திலிருந்து "நானூறு, ஐந்நூறு யார் தொலை வில் சங்குமாமாவின் பெட்டிக்கடை இருந்தது. சங்குமாமா கெட் டிக்காரர். வியாபாரத்தில் சூரப்புலி எனப் பெயர்பெற்றவர். சின்னதாய்ப் பெட்டிக்கடையை வைத்துக்கொண்டிருந்தாலும்கூட, அந்தக் கடையாலேயே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வங்கியில் நிலையான சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்திருப்பதெல்லாம் பெரிய கதை.
கடையில் சங்குமாமா, வெற்றிலை வியாபாரம் செய்யும் பாரூக் காக்காவோட கொஞ்சம் கோபமாகப் பேசிக்கொண்டிருந் தார். "எத்தன நாளாச்சிது. இன்டக்கித் தாரேன், நாளக்கித் தாரேன், நாளான்டக்குத் தாரேன்னு எத்தன நாளா ஏமாத் துறது. நீ நெனச்சின்டீக்கிறீயா இந்த கருட்டு, பீடி யாவாரத் தால பெரிசா லாபம் கெடைச்சிடுமென்று.'
தலையைச் சொறிந்துகொண்டே பாரூக் காக்கா, காவிபடிந்த தன் பற்களைக் காட்டியபடி "தாரேன் மாமா. இன்டக்கி மழ பாருங்க.. கட்டாயமா நாளக்கித் தந்துடுறேன்." என்ருன்.
'தந்துடுவே. எப்பதான் மாட்டேன்னு சொல்லியிருக்கே."
இளகிய மாட்டைக் கண்டால் ஏறிச் சவாரி செய்வதுபோல கடையருகே நாலுபேர் இருக்கிருர்களே என்பதைக்கூட மறந்து சங்குமாமா பாரூக் காக்காவின் முகத்தில் பாய்ந்தது - அப்போது தான் கடைக்குச் சிகரட் வாங்கவந்த காதருக்கு ஏதோபோலிருந் தது. கனைத்துக்கொண்டே பேக்கிலிருந்த டையரியிலிருந்து பத்து ரூபா நோட்டொன்றை எடுத்துத் தராசியில் போட்டுவிட்டு 'மாமா. பாரூக் காக்கா ஒங்களுக்கு எவ்வளவு தரணும்.'
'ரெண்டு ரூபா. மகேன்."
'ரெண்டு ரூவா. ஒங்களுக்கு இந்த ரெண்டு ரூவாப்போல ஆயிரம் மடங்கு பேங்குல இருந்து மாசத்துக்கு வட்டிமட்டும் வருகுதெல்ல மாமா. மாமா. பணமிருக்கே அது இன்டக்கிப் பணக்காரன்கிட்ட இருக்கும், நாளக்கிப் பிச் சக் காரன் கிட்ட போயிடும். மனுசன் இருக்கானே. அவனை பணத்தால எடை போட்டுட முடியாது மாமா. பாரூக் காக்கா கிழிஞ்ச சாரத்தை யும், கிழிஞ்ச சட்டையையும் போட்டுண்டீக்குறதுக்கு அவருக்கு
- 46 -

மானமில்ல அப்புடீன்னு கருத்தில்ல. ம். மனுசனிருக்கானே, மனுசனுக்கு மனுசன் செய்யிற சேவையிருக்கே அது ரொம்ப ரொம்ப பொறுமதியானது மாமா. காலாகாலத்துக்கு நிலைக்கக் கூடியது. அதுக்குப் பொயிட்டு, இந்த அற்பக்காசுக்காக நாலு பேர்ர முன்னல கதக்குறது ஒங்களுக்கே நல்லாயிருக்கா."
"இல்ல மகேன். வந்து.' "ம். மூச். மாமா பணத்த சம்பாதிக்கிறத்துக்கு முந்தி, மனுசனச் சம்பாதிச்சி, மனுசன மதிச்சி நடக்கப் பழகிக்குங்க." உள்ளிழுத்த சிகரட் புகையை சங்குமாமாவின் முகத்தில் ஊதி விட்டு, அரைவாசியும் எரியாத சிகரட்டை நிலத்தில் போட்டு பூட்ஸ்காலால் மிதித்தபடியே சங்குமாமாவின் முறைப்புப் பார் வையை உதாசீனம் செய்வதுபோல தன்பாட்டில் நடக்கலாஞன் காதர். −
இவ்வளவுநேரமும் ஒன்றுமே பேசாமல் பல் இழித்துக்கொண் டிருந்த பாரூக் காக்கா காதரின் தலை மறைந்ததும், தலையைச் சொறிந்தபடியே தனக்காகப் பரிந்துபேசிய காதரைச் சுட்டிக் காட்டி மாமாவிடம் சொன்னன். 'பாவம். இன்டக்கிக் கொஞ் சம் கூடவே போட்டிருக்கான் போல."
வெளியே மழை இன்னும் இலேசாகத் தூறிக்கொண்டுதான் இருந்தது.
வெளி ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த காதரின் குழந்தை கள், அவனைக் கண்டதும் வீட்டினுள்ளே ஓடிவிட்டன. வாச லுக்குப் பக்கத்திலிருந்த சாக்கில் காலைத் தட்டிக்கொண்டே தோளில் இருந்த பேக்கை உள்ளே வீசிவிட்டு 'அடி. அடியே யெஸ்மின். எங்கடி பொயிட்டாய்." தன் மனைவி யெஸ்மினைக் கூப்பிட்டான் காதர்.
அடுப்பிலிருந்த கஞ்சி வடித்துக்கொண்டிருந்த யெஸ்மினுக் குக் காதரின் குரல் கேட்டதுமே அவளை அறியாமலேயே இரண்டு கைகளும் நடுங்க ஆரம்பித்துவிட்டன. இன்னும் கொஞ்ச நேரத் தில் என்ன நடக்கப்போகின்றது என்று அவளுக்கு நன்ருகத் தெரியும்.
"அடி. எங்கடி போய்த் தொலைஞ்சாய்." "கொஞ்சம்.நில்லுங்க சோத்துல கஞ்சி வடிச்சிட்டு வாரேன்”
‘கஞ்சி வடிக்கிறீயா. கஞ்சி, உனக்கு புருஷனவிட கஞ்சி தான் முக்கியமாயிட்டுதோ..?"
- 47 -

Page 26
'வா. ரே. ள்.' யெஸ்மினின் குரல் தழுதழுத்தது. சோற்றுப் பானையை மறுபடியும் அடுப்பில் வைத்துவிட்டு, கையில் பட்டிருந்த கரியைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு வெளிஹாலுக்கு வந்தாள்.
"என்னடீ. சொன்னுய். கொஞ்சம் நில்லுங்க. ம். என்ன நிற்கச்சொல்லுற அளவுக்கு உனக்கு இப்ப திமிர் புடிச்சுட் டுதா. ?. ?" பற்களைக் கடித்துக்கொண்டே காதர் கேட்டான். அவளுக்கு அவன் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் யெஸ்மின்.
"என்னடீ. பேசாம இருக்கிருய். இப்ப நீ பெரிய மனுஷினு நெனச்கிண்டீக்கிறியோ.. ?
"நான். நா. நான்.
‘மூடுடீ வாய.அதுக்குள்ள வாயடிக்க ஆரம்பிச்சிட்டீயே. ?” பூட்ஸ் காலைத் தூக்கி அவள் கன்னத்தில் அடித்தான். யெஸ்மின் ஒன்றுமே பேசவில்லை. கன்னத்தைத் தடவிக்கொண்டே மறுபக் கம் திருப்பிக்கொண்டாள். காதர் அவளுடைய தலைமுடியைப் பிடித்திழுத்து இன்னுமோர் அடி. “உம்மா." யெஸ்மினுக்கு 'ஒ. "வென அழவேண்டும்போலிருந்தது. இரண்டு கன்னத்தை யும் பிடித்தபடியே குனிந்து நிலத்தில் குந்திக்கொண்டு அவ னுடைய கால்களைப் பிடித்தாள்.
"பிளிஸ். அடிக்காதீங்க..' என்ன மன்னிச்சிடுங்க. அடிக் காதீங்க..”*
- இவை இன்று நேற்றிலிருந்து அவள் சொலும் வார்த்தை களல்ல. திருமணமாகி எப்போது தனிக்குடித்தனம் நடாத்த ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்து தினமும்போல சொல்லும் வார்த்தைகள்.
யெஸ்மினைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதாஞல் "அவள் ஒரு பொறுமைசாலி” இல்லாவிட்டால்-மாலை நேரங்களில் நன்முகக் குடித்துவிட்டுச் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம். மனைவியோடு மிருகத்தனமாக நடந்துகொள்ளும் காதரின் பொழுதுபோக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இத்தனை துன்பங்களையும் உதறித்தள்ளி சுதந்திரமாய் பிறந்தகத்துக்கே போய் ஒரிரு வருடங்கள் இருக்கும்.
யெஸ்மினின் வாப்பாகூட மகள்படும் வேதனைகளைப் பொறுக்க முடியாமல் மகளை வீட்டுக்கு அழைத்துப்போக ஏழெட்டு மாதங்
- سده 48 سا

களுக்கு முன்பு வந்தார். .ஒரு நாற்றைப் பிடுங்கி இன்ணுே ரிட்த்தில் நாட்டும்போது அது கருகிவிடக்கூடாது. முன்பிருந் ததைவிட நன்முகச் செழித்து வளரணும் என்றுதான் அதை வேறிடத்தில் நாட்டுகின்ருேம். ஆனல் உன் புருஷன் உனக்கு உரமாக இருக்கவேண்டாம். இருக்கும் உரத்தைப் பாதுகாக் துக்கொண்ட்ாலே உன்னல வளர்ந்துக்கமுடியும். வா என்னேடு.” ஒரளவுக்கு பொருளாதார வசதிகள் பட்ைத்திருந்த யெஸ்மினின் வாப்பா கூறியதை ஒரேயடியாக மறுத்துவிட்டாள்.
"வாப்பா. வாழ்க்கையில இது சாதாரண விஷயங்கள். ஒரு நாற்றை நட்டதும் அது உட்னடியாக செழித்து வளர்ந் திடனுமென்று வாஸ்தவமில்லை. சில நேரங்களில் நடப்பட்டதும் அது வாடும். கடைசியில் வேரூண்டிவிட்டால். என்ன மன்னிச் சிடுங்க. வாப்பா. அவர நம்பி நீங்க என்ன அவர்கிட்ட ஒப் படைச்சீங்க. ஆரம்பத்தில நீங்க இருந்ததவிட இப்ப நான் அவர நம்பியிருக்கேன். அவர் என்னை அடிக்கிறதென்றல் நிச்சய மாக ஏதோ ஒரு தவறைக் கண்டுதான் அதைச் செய்கிருர், அந்த் உரிமைகூட அவருக்கில்லையா வாப்பா. பிளிஸ். நான் மவுத் தாகுறதானுலும், அவர்ர காலடியில விழுந்துதான் மவுத்தாக விரும்புறேன். எனக்கு நன்முக நம்பிக்கையிருக்கிறது. என்ருவது ஒருநாள் நான் மகிழ்ச்சியாக வாழ்வேன்.'
விழிகளில் வடிந்த நீரைத் துடைத்துக்கொண்டு விரக்தி யாகச் சிரித்தாள் யெஸ்மின். S.
"மகள். நீ படித்தவ. பிடுங்கி நடப்பட்ட நாற்று அந்த இடத்துல வளராட்டி அத இன்னெரு இடத்தில பிடுங்கி நாட் டுவதுதான் வாஸ்தவம்.”*
'இல்ல வாப்பா. அந்தப் புது இடத்தில அந்த நற்று செழித்து வளருமென்று என்ன உத்தரவாதம்." - அதற்குமேல் வாப்பா ஒன்றும் பேசவில்லை. போய்விட்டார். V.
"அவர் அடிக்கட்டும், ஏனென்ருல். அந்த உரிமை அலகுக்கு இருக்கின்றது. என்ருே ஒருநாள் "அவருடைய கை வலிக்கத் தானே செய்யும். அப்போது அவருடைய கையைத் தடவிவிட வாவது நான் இருக்கத்தானேவேண்டும்.'
யெஸ்மின் இருபதாம் நூற்ருண்டுப் பெண்களிலிருந்து மிக வும் மாறுபட்ட்வளாகவே இருந்தாள். சில பெண்கள் யெஸ் மினைப் பார்த்து கேலி செய்வார்கள். “நாகரீகம் தெரியாதவள்.” என்பார்கள், 'கணவனுக்கு கட்டுப்பாடு போட்டால் அவன்
- 49

Page 27
அடிக்கமாட்டான்." இப்படியெல்லாம் சொல்லு வார் க ள். “இல்லை. கல்லாரூலும் அவர் என் கணவன், புல்லானலும் என் புருஷன்." வேற பெண்களைப் பார்த்து யெஸ்மின் பொருமை கொள்ளமாட்டாள். அவர்களுடைய பேச்சுக்களை வலது காதால் எடுத்து இடது காதால் விட்டுவிடுவதைபோல அவ்விடத்திலேயே மறந்துவிடுவாள்.
காதர் குடித்த நேரத்தில்மட்டும்தான் மிருகமாக இருப்பான். ஏனைய நேரங்களில்.
அடுத்த நாள் -
அதிகாலையிலேயே எழுந்துவிட்ட காதர் சலனமற்று அமை தியாக உறங்கிக்கொண்டிருந்த யெஸ்மினின் முகத்தையே பார்த் துக்கொண்டிருந்தான். நேற்று அவன் அடித்த தழும்புகள் அவள் கன்னத்தில் படிந்திருந்தன. பெருமூச்சொன்றை விட்டபடி அவ் ளுடைய தலையை வருடியபோது. அவள் விழித்துக்கொண்டு, அவனைப்பார்த்து மெதுவாகச் சிரித்தாள்:
'ஐ. யேம் சொறி யெஸ்மின்." அந்தரத்தில் எங்கோ அவன் குரல் எழுவதைப்போலிருந்தது.
"டோன் வொரி." - சிரித்துக்கொண்டே யெஸ்மின் கட்டிலை விட்டு இறங்கினுள். இடையில் புடவை தளர்ந்திருந்தது. உள் பாவாடை சற்றே இறங்கியிருந்தது. இறுகக் கட்டினள். புடை வையைச் சரிசெய்தாள். நெற்றியில் வீழ்ந்த கேசங்களைச் சரி செய்துகொண்டு "கொஞ்சம் நில்லுங்க கோப்பி கொண்டா றேன்." சொல்லிவிட்டு குசினிப் பக்கமாக ஒடிஞள். பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த மகன் கண்களைக் கசக்கிக், கசக்கி வந்து "டெடி.." என்று காதரின் மடிமேல் ஏறிக்கொண் t-noir.
சுமார் பன்னிரண்டு மணித்தியாலங்களுக்குள் எவ்வளவு பெரிய மாற்றங்கள் ? காதர் எழுந்து, மகனைத் தூக்கிக்கொண்டு வெளிஹாலுக்கு வந்தான். அந்த வீட்டுக்குப் புதிதாகக் குடி வந் திருந்த சிட்டுக்குருவி ஜோடிக்கு யெஸ்மின் பிரத்தியேமாகப் பெட்டி ஒன்றைச் செய்துவைத்திருந்தாள். அந்தப் பெட்டியில் அமர்ந்தபடி "கீச். கீச்." எனக் கத்திக்கொண்டிருந்தது ஒரு சிட்டுக்குருவி.
"டெடி. டெடி. அந்தக் குருவியப் புடிச்சித் தாங்க டெடி.” மகன் சிட்டுக் குருவியைக் காட்டிக் கேட்டான். "பிளிஸ் டெடி. கொஞ்ச நேரம் வெச்சிண்டீந்துத்து விட்டுடுவேன்." காதர்
- 50 -

மெல்லியதாகச் சிரித்துக்கொண்டே மகனே இறக்கி விட்டுவிட்டு கதவு மூலையிலிருந்த தும்புத்தடியை எடுத்து மெதுவாகத் தட்டி ஞன்.
மறுகணம் -
"கீச்ச்ச்ச்ச்." எனக் கத்திக்கொண்டு நிலத்தில் விழுந்த சிட்டுக்குருவி, துடித்துத் துடித்துக் கொஞ்சநேரத்தில் இறந்து விட்டது. "ஒ. மை காட்."
இப்படி நட்க்குமென காதர் சிறிதும் எதிர்பார்த்திருக்க வில்லை. இறந்த சிட்டுக்குருவியைக் கையிலெடுத்து அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். குசினியிலிருந்து கோப்பி எடுத்துவந்த யெஸ்மின் இறந்து போயிருந்த சிட்டுக்குருவியைக் கண்டதும் "ஐயோ. என்ன நடந்தது." என்று கேட்டபடியே கையிலிருந்த கோப்பிக் கோப்பையை டைனிங் டேபிளில் வைத்து விட்டு அவன் கையிலிருந்த குருவியை எடுத்துப் பார்த்தாள். ""வயிறு கொஞ்சம் பெரிசாயிருக்குதெல்ல. இது பெண் குருவி யாத்தான் இருக்கணும். நான் நெனக்கிறேன் ரெண்டு குஞ்சியும் பொரிச்சிண்டீக்குதுபோல. இப்ப ஏன் இப்படிச் செத்துக் கிடக் குது."
3"நான் நெனக்காம நடந்ததொன்று யெஸ்மின். மகன் கேட்டான் தும்புக்கட்டையை எடுத்து, சும்மா மெதுவாகத் தட்டினேன். விழுந்து செத்திருச்சி."
**பர்வம். படாத எடத்துல பட்டுட்டுதுபோல. இனி அதன் ரெண்டு குஞ்சிக்கும் என்னுகுமோ ..?" பெரிதாகப் பெருமூச்சு விட்டபடி காதரைப் பார்த்தாள். "என்ன செய்ய யெஸ்மின். அடுத்த ஆண் குருவியாவது குஞ்சிகளப் பார்த்துக்கும்.’’ என் முன் காதர். இருந்தாலும் யெஸ்மினுக்கு ஏதோபோலிருந்தது.
இதோ -
இரண்டு மூன்று நாட்கள் சரசரவென ஓடிவிட்டன.
ஞாயிற்றுக்கிழமையாகையால் காதர் வேலைக்குப் போகவில்லை. வழக்கத்தைவிட கொஞ்சம் தாமதித்தே எழுந்து வெளிஹாலுக்கு வந்தபோது ஏதோ நாற்றமடித்தது. திடீரென்று ஏதோ நினை விற்கு வந்தவனப்போல சிட்டுக்குருவிக்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியை எடுத்தான். பெட்டியினுள்ளே இரண்டு சிட்டுக் குருவிக் குஞ்சுகள் அழுகிய நிலையிலிருந்தன. "நான் எவ்வளவு பெரிய தப்பொன்றைச் செய்துவிட்டேன்.’’ மனம் தொந்த வஞக யெஸ்மினேக் கூப்பிட்டான்.
- 51 -

Page 28
"செத்துப் பொயிட்டுதுயெஸ்மின்." “ WANN
இந்தக்குஞ்சுகள்ள கதி என்னுச்சிதி.'யெஸ்மி
”
"ஏங்கி." 靛
ான்னது. ஓ.'காதரின் கையிலிருந்த கூட்டில் அழுகிய நி3லயிலிருந்த குருவிக் குஞ்சுகள் இரண்டையும் பார்த்து 醬 மின் விரக்தியாகச் சிரித்தாள் "செத்துப் பொயிட்டுதெல்ல."
"" I நீக்க சொன்னீங்களே, ஆண்குருவிகவனிச்சி
லங்கின7ஆஞ:அந்த ஆண் குருவியின்டகதி: இல்லாம எங்கேயோபொயிட்டுதெல்ல. இறக்கக் கூடாத
பிர்கள் இறந்துவிட்டன. இனி.'குனிந்துகொண்டாள் யெல்
மின் அவளுக்கு வேதன்ேநெஞ்சை அடைத்தது.'
என்ன யெஸ்மின் இது. சின்னப்
ம்ே. இல்ல.'
"இறந் துபோன குருவிக்காவு T மனம் நோறி
இல்ல."
ங்ர"
என்ன சொல்லுங்க."
"இந்தக் குருவிக் குஞ்சுகள்ல நிலம. எண்பு புள்ளகளுக்கு ஏற்பட்டுடுமோ. அப்புடினு எனக்குப் பயமாயிருக்குதுங்க.'
"யெஸ்மின். என்ன சொல்லுறீங்க நீங்க. 'கையிலிருந்த பெட்டியை நிலத்தில் வைத்துவிட்டு அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான் காதர், *
'ரெண்டு மூணு நாளேக்கு முந்திசிட்டுக்குருவிக்குசும்மா அடிச்சிங்க, கட்ைசியிலஅது படாத எடுத்துல பட்டு செத்துப் ப்ொயிட்டுதெல்ல. தாய்க் குருவி செத்ததால் அதன்'ரெண்டு குஞ்சுகளும் இங்க அழுகிக்கிடக்குது. அதேபோல. நீங்க குடிச் சிட்டு வந்து என்ன அடிக்கிர நேரம் எப்பவாவது'ஆது படாத எடத்தில் பட்டு எனக்கும் அந்தச் சிட்டுத்துருவியின்பக்தி நடந்துட்டுதுண்ணு. என்ட் குழந்தைகளுக்கும் இதே கதிதானே. சுருகக்கூடாத நாற்றுக்கள் கருகிவிட்டன. இனி.'யெஸ்மின் வாய்விட்டே ஏங்கியேங்கி அழுதாள். ”
52
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர நேரத்தில் ஆயிரக்கணக்கான இடிகள் தாக்கியதைப் போலோருப்பிரமையால் உந்தப்பட்ட காதர் "நோ.நோ. அந்தந்ாற்றுக்கள் கருகாது:ை கருதக்கூடாத நாற்றுக்கள்." உறுதிப்ாக்ச் சொன்னபடி நிலத்திலிருந்த பெட்டியை பிரித்து இறந்து அழுகிய நிலையிலிருந்த குஞ்சுகளைக் கையில் எடுத்து
.14:11
அதையே பார்த்துக்கொண்டிருந்தான். מול ח
அவனையறியாமலே அவனுடைய விழிகளும் கசிந்தன. ஏதா
வது ஒரு விடயத்துக்காது இப்படிக் கண் கலங்கியது, அவ
டைய வாழ்க்கையில் இதுதான் முதல் தடவையாக இருக்க வண்டும்.
சிறிதுநேர அமைதியின் பிறகு காதர்யெஸ்மினேப் பார்த்த
பார்வை'என்னே மன்னிச்சிடு. நான் செய்த தவறுக்காக நீ
எந்தத் தண்டனையைத் தந்தாலும் ஏற்றுக்கிறேன்.' என்பதைப் போலிருந்தது.
தன்னைச் சுதாகரித்துக்கொண்ட யெஸ்மின் "தவறுகள் மன்னிக்கப்படவேண்டிய்வை. அந்தத் தவறுகளுக்குத் தண்டன்
ம்ே' என்று சொல்லுர்ம்ல் சொல்லுவதைப்போல அவனுடைய கையிலிருந்த அழுகிய குருவிக்குஞ்சுகன்ப் பழைய படியே பெட்டியில் ப்ோட்டுவிட்டு "டோன் வொரி. வாழ்க் இத்தில் இதுபோன்ற பிரச்சின்னயெல்லாம் சாதாரணமான்து தான்.' என்று உள்ளே சென்ருள்.
அவள் உள்ளத்தில், முதன் முறையாகப் புதிய நம்பிக் கைகள் பிரகாசிக்க ஆரம்பித்துவிட்டன.
*
凸、 “
*,

Page 29
(J6)II6)Ilј 60 (ju6)IDIIIb)
2 GirGT56.
சிரியாக ஐந்து முப்பதிற்கு "ஒரு மூடனின் கதை"யோடு ஆரம்பமாகிய தமிழ்ச்சேவை இரண்டின் "நீங்கள் கேட்டவை' "பட்டுவண்ண ரோஜா'வைச் சந்தித்துவிட்டு மூன்றுவது பாடலில் மலேஷியா வாசுதேவன், சைலஜா துணையோடு "பொன் மானை"த் தேடிக்கொண்டிருந்தது. அநேகமாக இப்போது நேரம் ஐந்து ஐம்பதைப்போல இருக்கலாம்.
இன்று முழுவதும் கதிரவனைக் காணவேயில்லை. கதிரவனைக் காணுமல் கார்மேகங்கள் கண்ணிர்விட்டழுதனவோ, என்னவோ?- இப்போதுதான் மழை ஓரளவிற்காவது ஒய்ந்திருக்கின்றது.
முற்றத்திற்கு வந்து வானத்தை எட்டிப்பார்த்தேன், வானத் தில் “பொன்மானை'க் காணவில்லை. கார்மேகங்கள் தன்பாட்டில் பவனி வந்துகொண்டிருந்தன. "அப்போ. இன்றிரவும் பெரிய மழையொன்றை எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது."
மழை - அது பொழியத்தான்வேண்டும்.
வீட்டுக்குப் பக்கத்தில். குப்பைபோடும் குழியிலிருந்து புற் றிசல்கள் சாரிசாரியாகப் படையெடுத்துக்கொண்டிருந்தன. பிறந் தது முதல் இருளிலே அடைபட்டு இன்று ஒளியைத் தரிசிக்கும் ஆவலில் அவைகள் "நான் முந்தி நீ முந்தி" என்ற நிலையில் ஒன்றையொன்று முண்டியடித்துக்கொண்டு சுதந்திர வெளியில் சிறகடிக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தன.
- 54

நேரத்திற்குத் தங்குமிடங்களுக்குப் போய்விடும் காகங்கள் கூட நேரத்தை மறந்துவிட்டனபோலும். சுதந்திர வெளியை அடையும்போதே 'கா. கா." என கரைந்துகொண்டு புற் நீசல்களை இரையாக்சிக் கொண்டிருந்த அந்தக் காகக் கூட்டங் கள். "சே." - தெருநாய்கள் கூட் அவற்றை விட்டு வைக்கு Sö&hov Gulu...” “”
பாவம் - எவ்வளவோ எதிர்பார்ப்புக்களோடும், ஆவலோடும் வெளிச்ச வெனியைத் தேடிவரும் புற்றீசல்களின் கதை.
- ஒளியோடே சாவதும், புள்ளினங்களுக்கு இரையாவதும் - பல்லிகள், மிருகங்கள், பச்சோந்திகள் இவற்றுக்குத் தீனியா வதும். எப்படியோ ? அவைகள் எல்லாவற்றினதும் கதை இன் னும் ஓரிரு மணித்தியாலங்களில் முற்ருக முடிந்துவிடும்.
இந்தப் புற்றீசல்களில் ஏதோ ஒரு பெரிய தத்துவமே பொதிந்திருப்பதன என்னுல் உணரமுடிகிறது. !
- அது.
குசினியில் உம்மா சின்னத் தங்கச்சியை ஏசிக்கொண்டிருந்தா, "எவ்வளவு நேரமாச்சிது உன்கிட்ட சொல்லி. லாம்பெண்ணய வாங்கிட்டு வரமாட்டிய டீ. இன்டக்கி லைட் போனபோக்கு திரும்பிவார ஜாட இல்ல. லாம்பெண்ண கொண்டராட்டி இருட்டுக்குள்ள குருடு துளாவ வேண்டியதுதான்."
கொஞ்சநேர ஆசையில் தன் உயிரையே மாய்த்துக்கொள் ளும் புற்றீசல்களின் தத்துவ ஆராய்ச்சியை இடை நடுவே விட்டுவிட்டு, வீட்டினுள் நுழைந்தேன். "பவர் கட்டாகி விட் டதுபோலும். இருளின் சாயல் வீட்டினுள்ளே தாண்டவமாட ஆரம்பித்திருந்தது. கனைத்துக்கொண்டே 'என்ன உம்மா.' என்றேன்.
'இல்ல மகேன். பாரேன் இவள. கடைக்குப் போகச் சொல்லி எவ்வளவு நேரமாகிறது. சும்மா கொணுட்டிண்டு ஈக்கிரு. பெரிய கொணுட்டி.."
** என்ன மரீன. p p
"இல்ல நாநா. உம்மாதான் இன்னம் லாம்பெண்ண போத்தலத் தரல்ல."
"ஆமா. உம்மா தராட்டி என்ன எடுத்துட்டுப்போக
வேண்டியதுதானே." மரீனவை முறைத்துப்பார்த்தேன். "இல்ல
- 55

Page 30
நாநா." ராக்கையிலிருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத் துக்கொண்டு அவள் கடைக்கு ஓடிவிட்டாள்.
மரீன என் கடைசித் தங்கச்சி, ஊர் மகா வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். படுசுட்டி - அதே போல படுகெட்டி. பெரிய மனுஷியாவதற்கு முன்னமே, தாவணி போட ஆரம்பித்துவிட்டாள். இன்று நாளைக்குள்ளாக அவள் பருவத்தின் வாயிலை அடைந்துவிடலாம். அப்போ - எனக்கு நான்காவது சுமை ?
எங்கள் குடும்பத்தின் மூத்தமகன், இளையமகன் எல்லாவற் றுக்கும் நான் மட்டும்தான் ஒரேமகன். எனக்கு நான்கு தங்கை கள். என்னைவிட ஒருவயது இளையவள்தான் மஸின, வீட்டோடு வீடாக நின்று - உம்மாவுக்குச் சமையல் செய்வதிலேயே உதவி யாக - காலத்தை ஒட்டிக்கொண்டிருப்பவள். பெண்மையின் நிறைவைத்தேடி, அதை வாய்விட்டுச் சொல்லிக்கொள்ள முடி யாமல், தனக்குள்ளேயே வெதும்பிக்கொண்டிருப்பவள். மஸி ஞவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து எவ்வளவு காலமிருக் கும் என்பது எனக்கு ஞாபகமில்லை. அவளின் முகத்தில் இழை யோடும், பெண்மையின் நிறைவைத் தேடிநிற்கும் ஏக்கத்தின் பரி மாணங்களை என்னுல் சகித்துக்கொள்ளமுடியாது. நீண்ட பெருமூச் சொன்று என்னைவிட்டு விடை பெற்றுக்கொண்டது. மஸினுவைப் பற்றி நினைவுவரும்போதெல்லாம் அந்தப் பெருமூக்சு - அது கட் டாயமாக விடைபெற்றுக்கொள்ளும்.
கடைக்குப்போன தங்கச்சி வந்துவிட்டாள். 'மரீன. அந்த நெருப்புப் பெட்டியைக் கொஞ்சம் கொண் டாந்து தா.”*
சிகரட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டேன். சுருள் சுரு ளாகப் புகையை விட்டபடி நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். மூலைக்குள் இருந்த குப்பி விளக்குகளைத் துப்பரவு செய்து மண் ணெண்ணெய்யை நிரப்பிக்கொண்டிருந்தாள் மஸிரா என் இரண்டாவது தங்கச்சி. அவளுக்கும் வயது இருபத்துநான்கு. திருமணத்துக்குரிய வயதுதான். "தாத்தா எப்போது தன்னு டைய வாழ்க்கையில் புதியதோர் அத்தியாத்தை ஆரம்பித்துக் கொள்வாள். என்னுடைய பட்டோலை எப்போ முதல் பக்கத் துக்கு வரப்போகின்றது." அவளும் காத்திருக்கின்ருள்.
அது அவர்களுடைய தவறில்லை. இப்போதைக்கு என்னு டைய தவறு.
- 56 -

வாப்பா மவுத்தாகுற நேரம் நான்கு தங்கச்சிகளையும் என் கையில் பொறுப்பு விட்டுவிட்டு மவுத்தாப்போஞர். என்ட சக் திக்கெட்டின வரைக்கும் அவர்களை நான் நன்ருகப் பராமரிக்கத் தான் செய்கிறேன். என்ன செய்ய.2 கிடைக்கும் சொற்பச் சம்பளத்தில் என்னுடைய கொழும்புச் செலவுக்கும், வீட்டுச் செலவுக்கும்போக, ஒவ்வொருத்தர் பேரிலும் ஒரு சதத்தை மிச்சம் பிடிப்பது கஷ்டமான காரியம்தான். இந்த நிலையில் நான்கு தங்கச்சிகளையும் கரைசேர்ப்பதென்றல்.
சீதனம் - பெரிய சீ - தனம். என்னுடைய தங்கச்சிகளின் குணத்தை அறிந்து - என்னுடைய நிலையை உணர்ந்து அவர்களைக் கரம் புற்றக்கூடிய ஆண்மகன் ஒருத்தனையும் இதுவரை நான் காணவில்லை - வெறும் கற்பனைக் கதைகளைத் தவிர. என்ன செய்ய. எமது சமுதாய அமைப்பு அவ்வாறு ஆகிவிட்டது.
எனக்கு என்னுடைய மூன்ருவது தங்கச்சி மஸிமாவைப் பற்றி நினைக்கையில்தான் கொஞ்சம் பயமாக இருக்கின்றது. டியுசனுக்கும், அங்கேயும், இங்கேயும் என்று சுற்றுகிருள்: தாவணி போடமாட்டாள், போட்டாலும் ஸ்டைலாகக் 'கல் தாவணி"யைக் கழுத்தில் சுற்றிக்கொள்வாள். நானும் எத்த னேயோ முறை அவளை எச்சரித்துவிட்டேன். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலத்தான். எங்கள் குடும்ப 19ானத் தைக் கப்பலேற்றி விடுவாளோ என்று அவளைப்பற்றி எனக்குப் ւնաւն,
மஸின - மஸிரா - மஸிம்ா - மரீன. இந்த நால்வரினதும் எதிர்காலம் என்கையில். - இவ்வளவிற்கும் நர்ன். கொழும்பில், ஒரு வங்கியில் சாதாரண லிகிதர். நினைக்க தலை சுற்றிக்கொண்டு வருவதைப் போல இருந்தது.
உம்மாவிடம் சொல்லிவிட்டு, கடைப்பக்கமாகப் போய்வர வேண்டுமென நடக்கலானேன்.
★
சுவர்க்கடிகாரம் எட்டுமுறை அடித்தோய்ந்தது. சாப்பிட்ட பீங்கானிலே கையைக் கழுவி, கையைத் துடைத்த படி பாயிலிருந்து எழுந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டேன்"
-57

Page 31
என் முன்ஞலிருந்த சாய்வு நாற்காலியில் உம்மா அமர்ந்து கொண்டா, ஏதாவதொரு முக்கிய விஷயத்தைக் கதைக்கவேண்டி யிருந்தால் இப்படித்தான் உம்மா என்முன் அமர்ந்துபேச ஆரம் பிப்பா. சிகரட் ஒன்றை எடுத்து எரிந்துகொண்டிருந்த குப்பி விளக்கில் சிகரட்டைப் பற்றவைத்துக்கொண்டு உம்மாவைப் பார்த்தேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த உம்மா ஏதோ கதைக்க வாயை எடுத்தா.
** என்ன உம்மா." - நான் கேட்டேன். 'இல்ல மகேன். வந்து. உன்ட தலைமுடியெல்லாம் பழுத் துண்டு வந்துட்டுதெல்ல. የ
மெதுவாகச் சிரித்தபடி 'இனி என்ன உம்மா. இந்தக் காலத்திலதானே பால் குடிக்கிற புள்ளக்கிக்கூட தல பழுத்துருது.” 'இல்ல. உனக்கு வயசு முப்பத்திரண்டு மட்டுல ஆயிட்டு தெல்ல."
'வருஷங்கள் போயிட்டுண்டு இருக்கிறதப்போல வயசும் போயிட்டுண்டு இருக்குது. அதுல என்னம்மா இருக்கிது.'
**காலா காலத்துல கலியாணம் செஞ்சி வைச்சிருந்தால் புள்ள குட்டிகளோட வாழ்ற வயசு."
**இனி.' "மகேன். போன கெழம ஜெமில் மாமா வந்தாரு. மாத்
தளையில நல்லதொரு பொண் இருக்காளாம். உனக்குப் பொருத்த மானவளாம். வந்து.'
எனக்கு வாய்விட்டே சிரிக்கவேண்டும் போலிருந்தது. "என்ன உம்மா. இங்க யாருக்குப் பயித்தியம் புடிச்சிருக்கு. ஒங்களுக்கா. இல்ல கலியாண புரோக்கர் ஜெமீலுக்கா. ? என்ன நம்பியிருக்கிற நாலு தங்கச்சிகள். நான் கலியாணம் கட்டிக் கிட்டா இவங்க கதி என்னுவுறது."
'அவங்க நலவுக்குமாத்தான்டா சொல்லுறன்."" ‘என்ன நலவு.?' "ஒரு லட்சம் சீதனமாத் தாராங்களாம்." "மை காட். இனி.”* "அந்த சீதனத்த எடுத்து உனக்கு உன் தங்கச்சிகளுக்கு ஏதாவது வழி செய்யலாம்தானே. ?" கதவோரமாக நின்று எம்
- 58 -

பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மளினுவின் முகம் சிவந்து கொண்டுவர, அவள் உள்ளே ஓடிவிட்டாள். ஓ - நாணம் வந்து விட்டதுபோல. எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. உம்மாதான் தொடர்ந்தா. "அவ எஸ்ஸெஸ்ஸி வரயில படிச் சிருக்காவாம். நல்ல மார்க்கப்பற்று உள்ளவவாம். எங்க குடும் பத்துக்கு ஏத்தவளாம்."
"யாரு. புரோக்கர் சொன்னரா. ?" '...' ' 'இந்த புரோக்கர்களுக்கு கதைக்கேலாட்டித்தானே அவங் களுக்கு ஜொப்பே இல்லாமப்போகும். பரவாயில்ல. நீங்க என்ன சொன்னீங்க." W
'உன் கிட்டக் கேட்டுச் சொல்லுறதாகச் சொன்னேன்."
'நீ என்ன சொல்லுருய் மகேன்."" உம்மாவைப் பார்த்தேன். என்றுமில்லாதவாறு இன்று உம் மாவின் முகம் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. உம்மா கற் பண்களில் திளைத்திருக்கிருபோலும்.
- கற்பனைகள், ஆசைகள், யாரைத்தான் விட்டுவைத்துள் ளது. வானத்து நட்சத்திரங்களைப் பறித்துவந்து வைத்துக் கொள்ளவும் ஆசைதான். எனக்குத் திருமணம்செய்து வைத்துக் கிடைக்கும் சீதனப் பணத்தால் தங்கச்சிகளை கரைசேர்த்து விடலாம் என உம்மாகங்கணம் கட்டுவதில் தவறில்லை. நிறை வுேரு ஆசைகளை கற்பனைகளிலாவது நிறைவேற்றிக்கொள்வதில் அவர்கள் இன்பம் அனுபவிக்கின்றர்களே, எனவே - ஆசைப்படு வதில் தவறில்லை. கற்பனைக் கோட்டைகள் கட்டுவதில் தவறில்லை.
"ம். யோசித்துப் பார்ப்பம்." உள்ளே அறையில் மூத்த தங்கச்சி மஸிஞவை மஸிரா ஏதோ சொல்லி சீண்டிக்கொண்டிருந்தாள். "சும்மர். போடி. வாய வெச்சிண்டு."
女
படுத்தும் ஒருமணி நேரத்திற்கு மேலிருக்கும். அங்குமிங்கு மாகப் புரண்டு, புரண்டு படுத்தும்கூட இன்னும் தூக்கம் வருவ தாப் போலில்லை. உம்மா போட்ட அந்தத் திருமணக்குண்டு என்னைப் பொறுத்தவரையில் நியுட்ரன் குண்டைவிட மோச மாகத்தான் இருந்தது. என்று சொல்லவேண்டும் என்ன செய்ய enrih ?
است. 59 --

Page 32
- உம்மா சொன்ன அந்த விஷயம்.
- ஒரு இலட்சம்
- திருமணம்.
- திருமணத்தில் திருமணங்கள்.
- நான் இருக்கும் நிலையில். நான் ஒரு இலட்சத்தின் பெறுமதியில் இருக்கிறேன?
ஒரு இலட்சத்தைத் தரும் அவர்கள் எப்படி இருப்பார்கள். ? பெரிய பணக்காரர்களாக, பரம்பரைப் பணக்காரர்களாக பெரிய மாளிகைகளில் வாழ்பவர்களாக, பெரிய பெரிய கார்களை வைத்திருப்பவர்களாக. என்னிடம் அவள் வந்தால், அவ்ளே அதைப்போல வைத்துக்கொள்ள எனக்குச் சக்தி இருக்கின்றதா..?
ஒரு இலட்சத்தைக் கண்ணை மூடிக்கொண்டு தர அவர்கள் என்ன குருடர்களா ? ஒருவேளை அந்தப்பெண் அ - சிங்கமாக், காகத்தைவிட கொஞ்சம் நிறத்தில் வெளுத்தவளாக. காலில்லாமல், கையில்லாமல், பார்வையில்லாமல், கூணுகவேr, முடமாகவோ. - இவர் க ஞ ம் வாழவேண்டியவர்கள்தானிே. எனக்கு வசதியிருந்தால் இப்படிப்பட்டவர்கன் வாழவைப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை.
ல். என்நிலை.
ఆర్థి தங்கைகளின் நிலை.
- நான் எடுத்த இலட்சத்தைப்போல. என் தங்கைகளுக் கும் இலட்சங்கள் கேட்டால்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. - நான் வாழவேண்டும். - என் குடும்பம் வாழவேண்டும் - என் இலட்சியங்கள் வாழவேள் டும். விபரம் தெரிந்த வயதிலிருந்தே நான் வெறுத்துவந்த ஒன்று என் எதிர்கால வாழ்க்கைக்குக் கைகொடுப்பதானுல். என் இலட்சியத்திற்கு அவமானம், எனக்கு அவமானம், முழு மையற்ற என்னல் முழுமையைத் தேட முயல்வது அபத்தம்.
உம்மா நினைப்பதை நினைக்கட்டும் !
அவர்களுடைய மகிழ்ச்சி திடீரென ஸ்தம்பித்துவிடக் கூடாது. என் சக்தி இருக்கும்வரை சீதனத்தை யோசித்துப் மாட்டேன். அதை எடுக்காமலேயே என் தங்கைகளைக் கரை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
அடுத்தவாரம் உம்மாவிடம் சொல்லவேண்டிய ‘முடியாது” என்ற வார்த்தையை மெதுவாக உச்சரித்துப் பார்த்தேன்.
என்னுல் முழுமையைக் காணமுடியும்.
தினகரன் - பெப்ரவரி 1982
- 60 -

ஓர் உதயம் அஸ்தமிக்கிறது.
““uT அல்லாஹ்.. என்ட புருஷனுக்கு நல்ல ஹிதாயத்தக் கொடுத்தருள்வாயாக..."
கேத்தலில்- தண்ணீர் சூடாக்கிக்கொண்டிருந்த மர்லியா தன் விழிகளிலிருந்து வழிந்த நீர்த்துளிகளைச் சேலைத்தல்ைப்பால் துடைத்துக்கொண்டு மானசீகமாகப் பிரார்த்தித்துக்கொண்டாள்.
"அவர் ஏன் இப்படி மாறிவிட்டார்.. ? நல்லாயிருந்த அவ ரின் இதயத்தில் ஏன் இப்படித் திடீரென பணத்தாசை பிடித்துக் கொண்டது. ?"
கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படித்தான். மர்லியா வின் மனம் ஒரு நிலையிலேயே இருக்கவில்லை.
"கொஞ்ச நாட்களிலிருந்துதாளும் இந்தப் பழக்கம்." அன்று ஆயிஷா மாமி சொன்னதும் மர்லியா நம்பவில்லை. "எண்ட புருஷன்மேல எனக்கு நெறய நம்பிக்கையிருக்கிறது மாமி. அவர் இப்படியெல்லாம் நடந்துக்குவார்னு நான் எதிர்பார்க்கவே யில்ல."
'இல்ல் புள்ள. நான் ஒன்ட நலவுக்குத்தான் சொல்லு றேன். முந்தநாத்து சந்திக்கடையில உன்ட புருஷன் ரேஸ் பேப்பர வைச்சிக்கிட்டு ரேஸ் எழுதினத உன்ட மாமா கண்ணுல கண்டாராம். எதுக்கும் கொஞ்சம் கவனமாகவே நடந்துக்க."
ஆயிஷா மாமி சொல்லிவிட்டுப்போனதை மர்லியா பொருட் படுத்தவில்லை. "அவர் ஏன் குதிரைப் பந்தயத்தில் ஈடுபடனும்.? ஆண்டவன்ட கிருபையால அவருக்கு என்ன குறைவு? மாதம் முடிந்ததும், ஆயிரம் ஆயிரத்தி ஐநூறு என்று சம்பளமாக
- 61 -

Page 33
எடுக்கக்கூடிய அரசாங்க உத்தியோகமொன்றில் இருக்கிருரு. நன்முகப் படித்தவரு. நாலுபேரோட் அந்தஸ்தாகப் பழக விரும்புகின்றவரு. அப்படிப்பட்ட அவர் எப்படி இந்தக் குதிரை மண்ணுங்கட்டியென்றெல்லாம் தொங்கப்போகிறர். ? யாரோ கதை கட்டி விட்டிருக்கிருங்க..."
கேத்தலில் தண்ணிர் சூடாகிக்கொண்டிருந்தது.
மகள் ரிஷான அழுதுகொண்டே வந்து மர்லியாவின் கை யில் தொங்கிக்கொண்டாள். 'உம்மா. நெக்குப் பசிக்குது..."
எப்படியிருந்தாலும் மர்லியாவும் ஓர் சாதாரண பெண் தானே !
அண்மைக் காலத்திலிருந்து தன் கணவனின் போக்கில் ஏற் பட்ட சிலசில மாற்றங்களினல் மர்லியாவின் உள்ளத்திலும் சிறு சந்தேகமொன்று இழையோட ஆரம்பித்துவிட்டது. அவள் கேள்விப்பட்டிருக்கின்ருள் 'சந்தேகம் - என்பது ஒரு சலனப்புழு. ஒருவருடைய உள்ளத்தில் அது ஊடுருவிவிட்டால். அதன்பின் அந்த சந்தேகப் புழுவை "வாய்மை" என்ற மருந்துப் பூச்சால் எவ்வளவுதான் முயன்ருலும் அழிக்கவே முடியாதென்று."
"அவரிடம் இதைப்பற்றி எப்படிக் கேட்பது. அவர் என்ன நினைப்பார். ஒருவேளை அவர் அப்படி நடக்காவிட்டால். அவர்மனம் எவ்வளவு வேதனைப்படும்.""
மர்லியாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆனலும் ஏதர்வது செய்தாகவேண்டும். . .
இரவு கணவன் உறங்கும்வரை காத்திருந்தாள். அவர் உறங்கியதும் அவருடைய பொக்கட்டைப் பார்க்கவேண்டும். அவளது வாழ்க்கையில் என்றுமே செய்யத் துணியாத தொன்று. அதனுலோ என்னவோ அவளையறியாமலே அவளது விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. "யா அல்லாஹ்.. அவருக் குத் தெரியாம இந்த பொக்கட்டைப் பார்க்கிறது ஒரு பாவ காரியம்... என்னை மன்னித்துவிடு...”* −
பொக்கட்டைப் பார்த்தாள். புகையிரத சீசன் டிக்கட், சில பணநோட்டுக்கள் அவளு டைய விழிகளை ஒருகணம் அவளாலேயே நம்பமுடியவில்லை. குதிரை முத்திரையுடன் ஒரு சிறிய பேப்பர்த்துண்டு "ஆண்ட வனே. கண்ணுல் காண்பது பொய். இல்லை. அப்போ
- 62 -

அவ்விடத்திலே அமர்ந்துகொண்டு அவளுக்கு ஏங்கியேங்கி
அழவேண்டும்போல இருந்தது.
ஆனலும். நிதானமாக கொஞ்சம் சிந்தித்தாள். இது போன்ற சர்ந்தப்பங்களில் நிதானத்தை "இழக்கக்கூடாது என்று அவளுக்குத் தெரியும் !
பொக்கட்டைப் பார்த்த விஷயத்தை அவரிடம் சொல்லவே கூடாது. படிப்படியாக குதிரைப் பந்தயத்தின் தீங்குகளை அவ ரிடம் எடுத்துக் கூறவேண்டும். . கடைசிவரை அவர் குதிரைப் பந்தயம் ஆடுவது தெரியாததுபோலவே இருக்கவேண்டும். ஈரமற்ற வார்த்தைகளால், வார்த்தையாடப்போய் பிறகு அது விபரீதமான விளைவுகளை தோற்றுவித்துவிட்டால். மர்லியா தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டாள். ஆனலும் அவள் மனம் நிலைகொள்ள மறுத்தது.
தலைக்குமேல் வெள்ளமே போனபிறகு. இனி.
་་ ★ ★
அன்று... ! கீழ்வீட்டு சரிபு காக்காவோடு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார் மர்லியாவின் கணவன்.
சரிபு காக்கா பேப்பரொன்றை விரித்துக் காபன் பேனையால் ஏதோ ஒன்றைக் குறித்துக் காட்டிக்கொண்டிருந்தார். "பாருங்க தொர. கட்டாயமா நாளைக்கி இந்த நாலு குதிரையும் ‘வின் பண்ணும். போற ஜொக்கி நம்ப பேவரிட் ஆளாச்செல்ல."
சரிபு காக்காவை அந்தப்பகுதியில் எல்லோரும் ஒரு மாதிரி யாகத்தான் பார்ப்பார்கள். எல்லாவிதமான கெட்ட பழக்கங் களும் அவரிடத்தே நிறைந்து காணப்பட்டன,
அந்த சரிபு காக்கவோட இவர் எப்படியெல்லாம் பழகுகின் றர். முன்பென்ருல் சரிபு காக்காவின் பேச்சைப் G3Lu Sfô(69)6ñ)55,. Lகோபம் கோபமாய்வரும். அப்படிப்பட்ட அவரா இப்போது தன் விடயங்களுக்கு ஆலோசனை வழங்குபவராக வைத்திருக்கின்ருர், *தொர. சல்லி போட்டால்தான் சல்லி சம்பாதிக்க (Մ)ւդպւծ. . . “ ’
"நீங்க சொல்லுறது எனக்கு விளங்குது காக்கா. போன மாச சம்பனத்துல நாநூறு - ஐநூறு மண்ணக் கவ்விட்டுது.
--- 63 س

Page 34
ஒபீஸ்ல வேல செய்ற என்ட ஸ்டாப்கிட்டயும் பெரிய தொகை யொன்ற கைமாத்தா எடுத்துத் தோத்திட்டேன்...”*
'அப்படித்தான் தொர இது. நான் சொல்லுறது பொய் யென்ருல் பாருங்க எல்லாம் ஒரேடியா ஒரு நாளைக்குச் சேந்து வரும். என்ன தொர அப்படியே சோர்ந்து பொயிடுறிங்க கையில பணமில்லாட்டா. மனுவுதியிட காதுப்பூவ எடுத்துத்தாங்க. நான் ஈடுவச்சி. உங்களுக்குச் சல்லி கொண்டாந்து தாரேன். எந்தநாளும் ஒன்றுபோல இருக்காது. ஒருநாளைக்கு வந்தாக்கா பத்துப் பவுன்ல செஞ்சி போட்டுறலாமெல்ல. '
女 女 女
சுவர்க் கடிகாரம் ஐந்துமுறை அடித்தோய்ந்தது. முன்பென்ருல் மர்லியா அவர் வரும்வரை வாசலோரமாக நின்று வழிபார்த்துக்கொண்டிருப்பாள். ஆனல். இப்போது அப்படியல்ல. அவளையறியாமலேயே அவரைப்பற்றி ஒருவித வெறுப்புணர்ச்சி அவளது உள்ளத்திலே ஊடுருவுவதை அவள் நன்கு உணர்ந்தாள். நியாயமான - வாஸ்தவமான அந்த உணர் வுகள் ஒரு பெண்ணின் உள்ளத்தில் இழையோட விளைவது தவிர்க்க முடியாததென்ருலும் மர்லியாவிற்கு அது ஒரு பெரிய பாரமாகவே இருந்தது.
அவர் சிரித்துக்கொண்டே வந்தாா. வெகு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் அவர் முகத்தில் சிரிப்பொன்றைக் காணக் கூடியதாக இருந்தது. ஏதோ வீட்டுச் சாமான்களுடன். மிகவும் குதுரகலமாக . .
"நான் ஜெயித்திட்டேன் மர்லியா.. !' அவள் ஒன்றுமே பேசவில்லை. "என்னடீ... நான் என்டபாட்டுக்குப் பேசிக்கிட்டேட் இருக் கேன் நீ உம்னுகிட்டு. *
"என்னங்க. இது உங்களுக்கே நல்லாயிருக்குதா. ?" "என்னடீ. எதச் சொல்லுருப். ?" "என்ட நகையக் கொண்டுபொயிட்டு, ஈடுவச்சி "புகி" போட்டீங்களே... எனக்குத்தெரியும் அந்த நகைய நீங்கதான் வாங்கித் தந்தீங்க... அது பொயிட்டாகூட எப்படியாச்சிம் வாங் கித் தந்திடுவீங்க.. ஆனல்..."
- 64

'' 6T657607 lice....'"
"எங்கட மார்க்கத்தில வெறுக்கப்பட்ட ஒன்ற நீங்க... இப்படி...”*
"இன்டக்கிப் பணம் வேண்டும்டி பணம், மார்க்கம், மண் ணுங்கட்டிண்ணு பார்த்துட்டிருந்தா அது சோறு போடாது. பணத்த எப்படியும் சம்பாதிக்கணும். . . பணமிருந்தால்தான் கூட்டம், குடும்பம், சமூகம், சமுதாயம் எல்லாம் மதிக்கும். '
"அதற்காக...
"அதைப்பத்தி நீ கவலைப்படாதே. எனக்கு ஒன்னக் காப்பாத்தத் தெரியும் !' s
"அது எனக்குந் தெரியுங்க. நீங்க மூட்ட சொமந்து சரி என்னக் காப்பாத்துவீங்க... எனக்கு நல்லாத்தெரியும். அப்படி நீங்க காப்பாத்தினிங்கன்டா கா நான் ரொம்ப - ரொம்ப சந் தோஷப்படுவேன். ஆணுல் மார்க்கத்தில வெறுக்கப்பட்ட ஒரு விஷயத்தால சம்பாதிக்கிறப்போ..."
"மார்க்கம்...'
"அத விட்டுடுங்க... இப்பநீங்க ஈடுவச்ச நகையிருக்குதே
அதனுல கெடச்ச பணத்த தோற்றுப்பொயிட்டீங்கன்னு வச்சிக் குங்க. அப்ப உங்க மனம் எவ்வளவு நோவும். . . இன்டக்கி நீங்க வென்றுகிட்டு வந்திருக்கீங்க - சந்தோஷமாய் இருக்கீங்க. நீங்க வென்ற பணத்த எத்தனபேர் தோத்திருப்பாங்க. அவங் களும் எத்தனையோ எதிர்பார்ப்புக்களோடதான் விளையாடி யிருப்பாங்க... இப்ப அவங்க மனம் எவ்வளவு வேதனைப்படும். அவங்க வேதனையிலதான் நாங்க சந்தோஷமாக இருக்க வேண்டுமா ? ...”*
"அவங்களப்பத்தி நீ கவலப்படாதே."
"என்ன மன்னிச்சிடுங்க. இனிமே இந்த விஷயத்துல
நான் சத்தியமா தலையிடமாட்டேன். ஏன்டால் நீங்க என்ட புருஷன். உங்க வார்த்தைக்கு நான் கட்டுப்படவேண்டியவ. . . அதேநேரம் நீங்க என்னவிட நெறையப் படிச்சவரு - மார்க் கத்தப்பற்றி அறிஞ்சவரு - சமுதாயத்தோட அந்தஸ்தாகப் பழக விரும்புற உங்களுக்கு நான படிச்சித்தரணும்.. ? ஆன கடை சியா ஒன்னுமட்டும் சொல்லுறேன். உங்க அறிவுமேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த விஷயத்துல உங்க அறிவ பயன் படுத்தி யோசிச்சுப்பாருங்க..."
---- 65 س

Page 35
விழிகளைத் துடைத்துக்கொண்ட மர்லியா உள்ளே சென்ருள், 'யா அல்லாஹ்.. என்ட புருஷசனுக்கு நல்ல ஹிதாயத்தைக் கொடுத்துவிடு. " மானசீகமாகப் பிரார்த்தித்துக்கொண்டாள். கொஞ்சநேரத்துக்குமுன்பு அவர் கொண்டுவந்த சமையல் பொருட் களைப் பார்த்தாள்.
இவை "ஹருமாகச் சம்பாதிக்கப்பட்டவை. மார்க்கத்துக்கு விரோதமாக சம்பாதிக்கப்பட்ட இவற்றைத் தீண்டுவதுகூட பாவம். ஆனலும். அவருக்காக இதை சமைத்துக் கொடுக்க வேண்டும்.
மர்லியாவுக்குப் பசித்தது.
டத்திலிருந்த தண்ணீரை வார்த்து மட்மடவென்று குடித் தாள்.
இந்த தண்ணிர் 'ஹரும்" இல்லை - மார்க்கத்தால் வெறுக்கப் படவும் இல்லை.
ஆணுல். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தத் தண் ணிரையே அவள் குடித்துக்கொண்டிருக்கப் போகின்ருளோ..?"
அஷ் - ஷ9ரா - ஜனவரி 1983
- 66 -

சில ஏக்கங்களும் ஓர் எதிர்பார்ப்பும்!
இரம்மியமான அந்த இளங்காலைப் பொழுதினில், வழமை யைப்போலவே, அன்றும் அந்த வகுப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சின்னஞ் சிறுசுகளை வட்டமாக அமர்த் திக்கொண்டு பாரிகா டீச்சர், "பட்டம் விடுவோம், பட்டம் விடுவோம் பாலா ஒடிவா..." பாட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். டீச்சர் சொல்லிக்கொடுப்பதைப்போலவே பிள்ளைகளும் அபிநயத்துடன் தமக்கேயுரிய மழலைக் குரலில் உரத்துப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
பாரிகா டீச்சர் பொறுப்பாக இருந்த அந்த முதலாம் வகுப் பில் மொத்தம் இருபத்திமூன்று பிள்ளைகள் படித்துக்கொண் டிருந்தார்கள். அந்த வகுப்பறைச் சுவரில், புன்னகை தவழும் முகத்துடன் ஒரு அம்மா அருகே கம்பீரமான தோற்றத்தில் ஒரு அப்பா : நாகரிக உடையில் சைக்கிளுடன் ஒரு அண்ணு : நீண்ட பாவாடை சட்டையுடன் ஒரு அக்கா; பந்து விளையாடும் ஒரு தம்பி ; தவழும் பருவத்தில் ஒரு தங்கை : இப்படியாக ஒரு குடும்பமே சிரித்துக்கொண்டிருந்தது. :
மறுபக்கச் சுவரில், ஏ. பீ. ஸி. எழுத்துக்கள், ஆணு ஆவன்ன எழுத்துக்கள் பிரிஸ்டல் போர்டுகளில் கவர்ச்சி காட் டிக்கொண்டிருந்தன. பச்சைப்பசேலெனக் குட்டை மாமர மொன்று, நிறைந்த கனிகளில், ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிடப்பட்டுப் பசுமையாக இருந்தது. ஆங்காங்கே "டிஸ்" கடதாசியில் ஈர்க்கில் இணைத்துச் செய்யப்பட்ட நேர்த்தியான பூக்கள் ஒரு தனியழகைக் கொடுத்துக்கொண்டிருந்தன. மொத் தத்தில் அந்த வகுப்பறையானது காண்போர் மனதைச் சுண்டி யிழுக்கும் வண்ணம் முறைப்படியும், நேர்த்தியாகவும் பாரிகா டீச்சரால் அழகுற வைக்கப்பட்டிருந்தது,
---- 67 مـ

Page 36
குழந்தைகளுடன் பாரிகா டீச்சர் பழகுவதே தனிரகம், ஒவ்வொரு குழந்தையினதும் மனநிலையை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு, மிகவும் அன்பாகவும், செல்லமாகவும் அவர்களுடன் பழகிப் படிப்பூட்டும் கலையை அந்தப் பாடசாலையின் சக ஆசிரி யர்கள் வியக்காமல் இருப்பதில்லை. "குழந்தைகளோடு பழகும் போது நீயும் ஒரு குழந்தையாகவே மாறிவிடு' என யாரோ ஒரு அறிஞன் சொன்ன கூற்றுக்கேற்ப, பதவி கிடைத்த இந்த மூன்றே வருடத்திற்குள் பாரிகா டீச்சரும் ஒரு குழந்தையாகவே மாறிவிட்டதாக எல்லோரும் வெகுவாகப் பாராட்டுவார்கள்.
அதேபோலத்தான் அந்தச் சின்னஞ்சிறுசுகளும். பாரிகா டீச்சர்மீது உயிரையே வைத்திருந்தார்கள். டீச்சர் ஒருநாளைக்கு வகுப்புக்கு வரவில்லை என்ருல், முகங்களை 'உம்'மென்று வைத் துக்கொண்டு சோர்ந்துபோய் இருப்பார்கள். டீச்சர் சொல்லும் எந்தவொரு வார்த்தையையும் தட்டமாட்டார்கள். டீச்சர் சொல்லிக்கொடுப்பதை வீட்டிலும் பாடம் கேட்டுப் படிப்பார்கள்.
மாணவர்களின் உளநிலையைப் பாதிக்காத வகையில் படிப் பூட்டுவதில் எவ்வளவு தூரத்திற்கு ஆர்வம்காட்டி வருகின்ருளோ, அதேபோலத்தான் ஏனைய விடயங்களிலும், அண்மையில் நடந்த வட்டாரக் கலைவிழாவில், பாரிகா டீச்சர் அந்தப் பிள்ளைகளைக் கொண்டு தயாரித்த '... புள்ளிப்புள்ளி மானே, துள்ளித்துள்ளி ஒடுருய், .." அபிநயப்பாடல் நிகழ்ச்சிக்குப் பாலர் பிரிவில் முதற் பரிசு கிடைத்தது. பாரிகா டீச்சரைப் பற்றிச் சுருக்கமாக... ஒழுங்கு கட்டுப்ாடுகளை மீருத நிலையில் இளம் குருத்துகளின் கல்விக்குப் பலமானதோர் அத்திவாரத்தையிட்டுக்கொண்டிருக்கும் பாரிய பணியினை ஆற்றுகின்ருள் என்ருல் அது நிச்சயமாகப் பொருந்தும்.
முதலாம் வகுப்பிலே ஏனைய மாணவர்களைவிட ஸிஹாரா கொஞ்சம் கெட்டித்தனமாக இருந்தாள் என்றே சொல்லவேண் டும். குறுக்குக்கேள்வி கேட்டுச் சிலவேளை டீச்சரையே திண றடிக்க வைத்துவிடுவாள், அழகாகப் பாடுவாள். அழகாக அபி நயித்து ஆடுவாள். நேர்த்தியாக படங்கள் வரைவாள். ஒரு தடவை ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொடுத்தால்... இன்னுேர் முறை அதை அவளுக்குச் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. அச்சொட்டாக அப்படியே சமர்ப்பிப்பாள். இதனுலோ என் னவோ, லிஹாராமீது பாரிகா டீச்சருக்கு ஒரு தனி ஈடுபாடு இருந்தது.
பிள்ளைகள் இன்னும் பாடிக்கொண்டிருந்தார்கள்.
"பட்டம் விடுவோம். பட்டம் விடுவேர்ம்..
- 68 است.

பாலா ஓடிவா. பாடிப்பாடிப் பட்டம் விடுவோம். பாலா ஒடி வா...'
ஏனே தெரியவில்லை, ஸிஹாரா மட்டும் அந்தப் பாடலைப் பாடுவதற்கு சிரமப்படுவதைப் பாரிகா டீச்சர் கண்டாள். சத்தம் வெளியே வராமல் ஸிஹாராவின் உதடுகள் மாத்திரம் சிரமப் பட்டு அசைவதை உணர்ந்தாள். இப்படித்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஸிஹாராவிடம் / பழைய சுறுசுறுப்பைக் காணமுடியவில்லை. இந்த மாறுதலுக்குக் காரணம் என்ன என்று டீச்சருக்குப் புரியவில்லே. ஒருவேளை அவளுக்கு உடல்நலக் குறைவோ என்று டீச்சர் நினைத்துக்கொண்டாள்.
கொஞ்சநேரத்தில், சேர்ந்து பாடிக்கொண்டிருந்த பிள்ளைகளைப் 'போதும்" என்று சொல்லி நிறுத்திவிட்டு, ஸிஹாராவின் அருகே சென்ற டீச்சர் "இப்போது பாடிய பாட்டைத் தனியே பாடும்படி கேட்க, ஸிஹாரா தடுமாறிஞள். முன்பென்ருல் அப் படியில்லை. டீச்சர் பெயரைச் சொன்னமாத்திரத்தில், உட்னேயே எழுந்துநின்று பாடிவிடுவாள்,
"ஸிஹாரா, இப்ப நான் சொல்லித்தந்த பாட்டைப்
பாடுங்க..."
Lojisfri மறுபடியும் கூற, விஹாரா தயங்கித் தயங்கி எழுந் தாள். "பட் டம் விடுவோ...ம் பட் டம் விடுவோம். . . பாலா ஓடி. வா...'
அவளுடைய குரல் கம்மியிருந்தது. சொல்லிக்கொடுத்த இராகத்தில் பிசகிச் சிரமப்பட்டுப் பாடினுள்.
"பாலா.., ஓடி வா. . பட்டம். பாலா.., ஓடி. . . வா' இதற்குமேல் ஸிஹாரா தொடரவில்லை. விம்மல்களைத்
தொடர்ந்து அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். டீச்சருக்குச் சங்கடமாகிவிட்டது.
**ஸிஹாரா. ஏம்மா அழுவுறிங்க..."
விஹாராவின் தைைய வருடிக்கொண்ட்ே டீச்சர் கேட்டாள். ஸிஹாரா ஒன்றும் பேசவில்லை. குனிந்தவாறே அழுதுகொண் டிருந்தவள். டீச்சரின் முகத்தைப் பார்த்துவிட்டு 'ஓ.." வென்று அழலாஞள்
- 69 -

Page 37
டிச்சர் இதற்குமேல் எதுவும் கேட்கவில்லை. ஸிஹாராவை உட்காரச் கொல்லிவிட்டுத் தன் இருக்கையில்போய் அமர்த்தாள். அவளுக்கு ஒன்றுமட்டும் புரிந்தது. "லிஹாராவுக்கு ஏதோ நடந்துவிட்டது. அது. அது... ?"
இன்னுமே புத்தகத்தின்மீது தலையைப் பதித்துக்கொண்டு விசும்பிக்கொண்டிருந்த ஸிஹாராவைப் பார்க்க ஏனே பாவமாக இருந்தது.
இப்போது பிள்ளைகளின் கவனம் திசைதிருப்பப்பட்டுவிட்டது. அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். விரித்து வைத்திருந்த பச்சைக் கம்பளத்தின் நடுவே, பறக்கும் சின்னஞ்சிறு சிட்டுக் களின் வர்ணஜாலங்கள் - கண்கவர் காட்சியாக... , சின்னக் குழந்தைகளின் சிங்கார விளையாட்டுக்களைப் பார்த்துக்கொண்டே இருப்பதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி.. ? உண்மையிலேயே கள்ளங் கபடமில்லாத, போட்டிபொருமையற்ற வெள்ளைமனம் படைத்த பிஞ்சு நெஞ்சங்களின் நடத்தைகள். யாருக்குத்தான் வெறுப் புத் தட்டப்போகின்றன? சிலநேரங்களில். சுதந்திரப் பறவை களின் உணர்ச்சியைப் பெற்ற இந்த மழலைகள்போல நாங்கள் எந்நாளும் இருந்திருக்கக்கூடாதா என பாரிகா டீச்சர் தன மறந்து சிந்தித்த பொழுதுகள் ஏராளம்.
ஸிஹாராவைப் பொறுத்தமட்டில். பாரிகா டீச்சரின் முயற்சி பலனளிக்கவில்லை. மைதானத்திலும் ஸிஹாராவிடம் வழமையான கலகலப்பு காணப்படவில்லை. பாரிகா டீச்சருக்குப் புதிராக இருந்தது. ஏதோ நினைத்தவளாக, ஹனின டீச்சரிட்ம் பிள்ளைகளைக் கொஞ்சம் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஸிஹாராவை அழைத்துக்கொண்டு மைதானத்தின் ஒதுக்குப்புற மாக இருந்த "ஜேம் மர நிழலுக்குச் சென்ருள். மரத்தடியில் போடப்பட்டிருந்த நீண்ட வாங்கில் அமர்ந்துகொண்ட டீச்சர் ஸிஹாராவின் கரத்தை ஆதரவாகத் தழுவிக்கொண்டு மறுகை யால் அவளது மோவாயைப் பிடித்து நிமிர்த்தினுள்.
'ஏம்மா. லிஹாரா... நீங்க ரெண்டு மூணு நாளா ஒரு மாதிரியா இருக்கிறீங்க... ?"
ஸிஹாரா உடனே பதில் கூறவில்லை. டீச்சரையே இமைக் காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். டீச்சரை அப்படியே இறுகத் தழுவிக்கொண்டு ஏங்கி ஏங்கி அழவேண்டும்போலிருந்தது.
**.co.Frif. . . ”.” "என்னம்மா."
- 70 -

'டீச்சர். நா. படிக்சாக்கா... எனக்கும் டீச்சரப்போல வரேலுமா... ???
இந்தக் கேள்வியை பாரிகா டீச்சர் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, "நிச்சயமா. விஹாரா. நீங்க ஒழுங்காப் படிச்சீங்கண்டா. என்னப்போல டீச்சரா வரேலும்..., டாக்டராகவும் வரேலும்."
"டாக்டர் அங்கிளப்போல வரவும் ஏலுமா டீச்சர்?" "நிச்சயமா ஸிஹாரா. ஒழுங்காப் படிச்சீங்கண்டா... டாக்டராக்கூட ஒங்களுக்கு வரேலும். .'
"ஏன் ஸிஹாரா. இன்டக்கிமட்டும் இப்புடியெல்லாம் கேக்கிறீங்க... ???
எப்போது உருண்டு விழலாம் எனக் காத்திருந்ததைப்போல. ஸிஹ்ாராவின் விழிகளிலிருந்து பொலபொலவென நீர்த்துளிகள் உதிர்ந்தன.
*" என்னம்மா ஸிஹாரா.. ??? "டீச்சர். . . வந்து... வந்து..." ‘என்னம்மா. வெட்கப்படாமச் சொல்லுங்க.." "டீச்சர். இனி. இனி... நான் ஸ்கூலுக்கு... வரமாட் டேன் டீச்சர்...”*
ஸிஹாரா ஏங்கியேங்கி அழ ஆரம்பித்தாள். *ளிஹாரா. . . நீங்க என்ன சொல்லுறிங்க... ?" 'இனி... நா. நா. ஸ்கூலுக்கு வரமாட்டேன் டீச்சர்."
"ஏன் ஸிஹாரா.. ?"
"ஸிஹாரா... என்னம்மா ஒங்களுக்கு நடந்துட்டுது. . . " 'டீச்சர். வாப்பா. வாப்பா நேக்கு. ஸ்கூலுக்கு போக வாணும்னு சொல்லுருரு டீச்சர். . .'
பாரிகா டீச்சருக்கு நன்ருகத்தெரியும் - ஸிஹாராவின் வாப்பா ஹஸன. தூரத்து வழியில் டீச்சருக்கு உறவுக்காரரும் கூடத் தான். ஹஸனப்பற்றி ஊரவர்கள் எல்லோரும்போல ஒருமாதிரி யாகத்தான் கதைப்பார்கள். முன்பிருந்தே அவருக்குக் குடும்பத் தைப்பற்றிய அக்கறையே இல்லையாம். எதையெடுத்தாலும்
- 71 -

Page 38
ஊதாரித்தனமான போக்காம், இப் போது மத்தியகிழக்கு நாடொன்றுக்கு மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, செய்து கொண்டிருந்த "சேல்ஸ்மேன்' வேலையையும் விட்டுவிட்டு ஜாலி பாக இருக்கிருராம். மனைவி அனுப்பும் பணத்தைக்கொண்டு இப்போது குடித்துக் கும்மாளமடிக்கவும், குதிரைப் பந்தயத்தில் ஈடுபடவும் பழகிவிட்டாராம்.
இப்படிப்பட்ட நிலையில், தன் மகளைப் படிக்க வைக்கவேண் டும் படிப்பினுல் நல்ல நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என் றெல்லாம் ஹஸன் எங்கே எதிர்பார்க்கப்போகிருர்? பர்வம். எத்தனையோ கனவுகள், ஆசைகளைப் பிஞ்சுள்ளத்தில் தேக்கிப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம்கொண்ட அந்த இளம் குருத்தின் எதிர்காலம்.. ?
இன்றைய எமது சமூகத்தின் இழிநிலபற்றி நினைக்கும் போது, பாரிகா டீச்சருக்குப் பற்றிக்கொண்டுவந்தது. சில தற் காலிக மாயைகளில் மயங்கி எமது சமூகத்தில் எத்தனை இளம் குருத்துகளின் எதிர்காலம் அவர்தம் பெற்றேராலேயே குழிபறிக் கப்படுகின்றதோ...?
விஹாராவின் அழுகை இன்னும் ஓயயவில்லை. அந்தப் பிஞ்சு மனதிற்கு எவ்விதத்தில் ஆறுதல் சொல்வது என்று புரியாத நிலையில் ஸிஹாராவின் கண்களிலிருந்து வழிந்த நீரைத் தன் கைக்குட்டையால் துடைத்துவிட்டபடி பாரிகா டீச்சர் கேட் Lifeir -
‘லிஹாராம்மா. வாப்பா ஏன் உங்கள ஸ்கூலுக்குப் போக வாணும்னு சொல்லுருரு. ?”
“... டீச்சர் நான் ஸ்கூலுக்கு வந்தாக்கா. என்ட தங்கச் சியப் பாத்துக்க யாரும் இல்லையாம். அதலை ஊட்டிலே இருந்துண்டு தங்கச்சியப் பார்த்துக்கட்டுமாம்."
"அப்படீனு. உங்க வாப்பா சொல்ருரா... ?"
"ob... e5řetíř. , , ""
"டீச்சர் என்ட உம்மா வந்துட்டாங்கன்ன. நேக்கு ஸ்கூலுக்கு வரேலும்தானே டீச்சர். என்ட உம்மா... தங்க உம்மா... அவங்க வந்தாக்கா. என்ன ஸ்கூலுக்குப் போக
வாணும்னு சொல்லமாட்டாங்க..."
பாரிகா டீச்சர் ஸிஹாராவை அனுதாபத்தோடு பார்த்தாள். ஸிஹாராவே தொடர்ந்தாள்.
- 72 -

'இல்ல டீச்சர். என்ட உம்மா தங்க உம்மா இல்ல: இல்லாட்டி என்ண்யும், தங்கச்சியயும் தனிய உட்டுட்டு அவர்க தங்கச்சிக்கு கார்வாங்க பொரிங் போயிருக்கமாட்டாங்களே.'
பாரிகா டீச்சர் ஸிஹாராவின் இருகரங்களையும் இறுகப்பற்றிக் Gos Tewdwl- treir.
* * corri . . .””
"ஸிஹாரா..."
“ ,“ Godjagtri”, “, “””
"சொல்லுங்க ளிஹாரா. நான் உங்கட உம்மாமாதிரி.”
திடீரென்று ஸிஹாராவின் விழிகள் மலர்ந்தன.
*"டீச்சர். அப்படீன்னு. நா... உம்மான்னு கூப்பிடவா... ?"
பாரிகா டீச்சர் ஸிஹாராவைத் தன் மார்போடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
"ஒ. டீச்சர். நேக்கு நீங்க, படிச்சித்தா ரீங்க. தேக்கு நீங்க. பாட்டு சொல்லித்தாறிங்க. என்ளுேட நீங்க ரொம்ப இரக்கமா இருக்கிறீங்க."
"ஸிஹாரா..”*
டீச்சரின் அணைப்பு இன்னும் இறுகியது. டீச்சரின் விழிகளும் ரனே கலங்கிவிட்டன. டீச்சரின் அணப்பில் இனம்புரியாத ஓர் இதத்தை ஸிஹாரா அனுபவித்துக்கொண்டிருந்தாள். −
தாயன்புக்காக ஏங்கும் இந்த ஜீவனின் எதிர்பார்ப்பு சிதைந்துவிடக் கூடாது. படிக்கவேண்டும் என்ற இந்தப் பிஞ் சுள்ளத்தின் ஆர்வம் நசுங்கிவிடக் கூடாது."
பாரிகா டீச்சருக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.
Rஹாராவின் உம்மாவைத் தாயகம் வரவழைக்கவேண்டும்’
ஆளுல்.
அது எவ்வழியில் சாத்தியமாகும்?
அதைத்தான் டீச்சரால் இன்னும் தீர்மானித்துக்கொள் முடியவில்லை:
நா., ஒக்கன. ஒருக்கா
★
அறிவு ஒளி - ஏப்ரல் 1985 (உடத்தலவின்னை - மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மகா வித்தி யாலாய வ்ைரவிழா மலர்)
- 73 -

Page 39
I.
.
13.
தமிழ் மன்றம்
பிரசுரித்துள்ள நூல்கள்
Muslim Contribution to Tamil
- Literature by M. M. Uwise, M.A. (Cey.) இலக்கியத் தென்றல்
- A6)rtig. s. agsSautre issoir Ph. D. (Lond.)
தமிழர் சால்பு
- கலாநிதி சு. வித்தியானந்தன்
மலர்ந்த வாழ்வு
- srub. Grío. Tub. 6nv9souri.
(இவை நாலும் கைவசமில்)ை
மாதுளம் முத்துக்கள் - அன்பு முகையதின்
விலை ரூபா உத்தமத் தூதர் (நாலாம் பதிப்பு)
- 676). Th. ap6 m, B. A. (Cey.) 5.00 உத்தும் நபித்துமாணுே (சிங்களம்)
இரண்டாம் பதிப்பு - எஸ். எம். ஹனிபா. 5.00 உத்தமர் உவைஸ் - எஸ். எம். ஹனிபா 2000 துஆவின் சிறப்பு dbåtav காலத்தின் குரல்கள் - எம். ஸி. எம். ஸஇபைர். இல்ல்ை என் சரிதை - கவிஞர் அப்துல்காதர் லெப்பை, இல்ை இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி - எஸ். எம். ஹனிபா. 15.00 மகாகவி பாரதி (சிங்களம்) - எம். எஸ். ஹனிபா. 5、00 சாயல் (சிறுகதைகள்) - ஜே. எம். ஸாலி, M.A. 10.00 சிறுவர் பாட்டு - சாரணுகையூம். 5.00 கனவுப் பூக்கள் (சமூக நாவல்)
- J. 6). Jytsyai)60LDAs, B. A. (Hons.) 15.00 எங்கள் தாய்நாடு (சிறுவருக்கான கவிதைகள்) 1000
15.00

. உவைஸ் சிறித்த (சிங்களம்)
ஓ, துணைவேந்தர் வித்தி - கலாநிதி அ சண்முகதாஸ்.
0. முத்தாரம் (சமூக எழுச்சிக் கவிதைகள்)
- மெளலவி எம். எச். எம். புஹாரி.
1. காலத்தின் கோலங்கள்
- கவியரசு M. K. M. ஹலீம்தின்
22. கனிந்த காதல் (மட்டக்களப்புக் கிராமிய கவிதை
இலக்கியம்) - புலவர்மனி ஆ. மு. ஷரிபுத்தீன்.
23. சாணக் கூறை - ஜுனேதா ஷெரீப். 24. யூஸ9ப் இஸ்லாம் - சில நினைவுகள்
- அஹமத் முனல்வர். 25. அன்னை இந்திரா - அந்தணி ஜீவா 26. அங்கமெல்லாம் நிறைந்த மச்சான்
– A. P. V. Gstrupsso. 7. இதய மலர் - கவியரசு M. H.M. ஹலீம்தீன்: 28 நிழலின் அருமை (சிறுகதைகள்) - புன்னியாமீன். 29; அவள் நெஞ்சுக்குத் தெரியும்
பிரதிகள் தேவையானுேர்
தபாற் செலவுக்கு ரூபா 2-50 சேர்த்து, முன்பணம் அனுப்பலாம்.
தமிழ் மன்றம், இல், 10, நாலாவது லேன்,
கொஸ்வத்த ரோட், ராஜகிரிய.
0.00
2500
10.00
0.00
10.00
25,00
12.50
10.00
10.00
20.00.
15,00
20.00
(தமிழ் மன்றம் என்ற பெயருக்கே செக், காசுக்கட்டளை ஆகியன
அனுப்பலாம்)
Printed at the Catholic Press, 18, Central Road, Batticaloa.

Page 40

LMLSLALAM MLMqLTLALALALLSM LLALA TTAqALML MLALMTMLAM LTMLALALALALMLM LMLqLMAL MASLLALAL LqL LAL LMSLLAMALL LMLALLMLM
eith Best βαιημίίκεινία
αβ Alhaj Uvais T. Muhaja r^^-,
DIRECTOR OF BRANCHES, 8
National Council of Y. M. M. As
of Sri Lanka.
323, Jumma Masjid Road, Colombo - 10
αβ FAZAL :
i
8
8
Tphone: 92312 122857.
176, GALLE ROAD, BENTOTA.
A 7 4 NAS
Jewellers & Gem Merchants. W,
GALLE ROAL),
BENTOTA. Tphone: 034 - 75143... 09-3043 8
BRANCHI :
(Μίίί βεβέ βαιημίίγιεινέα
MMLSqqLMALAL LqMAJMLMLqLMM MLqLAL MMLSqqM AA MLLqqMM AALMLSLqLM MMLL LLLLLLM M MLqqALM MMLLqM AMMLAiALM MMLMAL AMLL LqqqMA A AL LMLL SLLMMLqS

Page 41
eeS MA SSASLMTLSLLS LSLSLMTTSLLSSLSLM MTTAAL AAS LAAAAS SSMALLSSLS
Sole Imp
PARKER WA
Sole distri
TELSONIC W
алd a kinds of Pedestal &
Radios, Wa gift it
AWAL.
AT WERY (C) MP
Please cont
wholesale
PARKER
160, KEYZE
COLOM
Telephone : 26657, 545244
ir بہی رہی۔ ہم یہی ہم?
CATHOLIC PRES

S eSL TALAL SLL TLLLLLTL TLLTSSLLL SLSLSLM MLTLLLLS SLSL MLLSLLTSLTLALLLL S
orters of
LL CLOCKS
butors of
ALL CLOCKS
also glass Ware
Table Fans, thes and
S.
W BLE
ETITIWE PRICES.
act us for
and retail
RADERS
R STREET,
BO - ,
r", -, -, -, -,-fിച്ചച്ച് പറിച്ചപ്പറ് S, BATTICALOA.
Rs.
5