கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிறைவேறாத ஆசைகள்

Page 1


Page 2
பூரீ லங்கா முஸ்லிம் எஸெம்பிலித் தலைவர் சேவா ஜோதி ஹ"சைர்
யூசுப் வாழ்த்துகிறார்
猴
செளத்துல் உம்மா உயன்வத்தை இரணி டாவது சிறுகதைத் தொகுதியான "நிறைவேறாத ஆசைகள்"
றம் ஜானின்
வெளிவருவது கண்டு மகிழ்சி
அவரது எழுத்துப்பணி சமூகத்திற்கு நற்பயனளிக்க வேண்டுமென பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
யடைகின்றேன் .
sp76opdFii lų&FLÚ B.Sc. (Eng.), Ceg, MIC தலைவர் ரீ லங்கா முஸ்லிம் எஸெம்பிலி,
பேராதனைப் பல்கலைக் கழக
கவுன்சில் உறுப்பினர்.
கொடை வள்ளலும் சமூகத் தொண்டருமான
அல்-ஹாஜ் ஹாசீம் உமர் வாழ்த்துகின்றார்
ப் ரிய நரிலா சஞ்சிகையின் ஆ சரி Tரியர்
"நிறைவேறாத ஆசைகள் " சிறுகதைத் தொகுதிக்கு வாழ்த்துச் செய்தி யொன்றை வழங்குவதில் மகிழ்ச் சியடைகின்றேன்.
தமிழ் வளர்ச்சியில் பேரார்வம் கொண்டு கிராமப்புரத்திலிருந்து இலக்கியப்பணி புரியும் ஜனாப் றம்ஜானின் முயற்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
சமூகப் பிரச்சினைகளை கருக்களாகக் கொண்டு அவர் படைக் கும் படைப் புக் கள் சமூகத்திற்கு பெரும் பயனுள்ளதாக அமைய வேண்டும். சமூக உணர்வுகளைத் தூண்டும் வகையில் இன்னும் சிறந்த படைப்புக்கள் நம் மத்தியில் மலர வேண்டும். அவரது பணி தொடர வேண்டும் என்று பிரார்த்தித்து ஆசித்து வாழ்த்துகின்றேன்.
அகப்-ஹாஜ் ஹாசீம் உமர்
 
 

சிறுகதைத் தொகுப்பு
எழுதியவர் :
"செளத்துல் உம்மா" உயன்வத்தை றம்ஜான்
உரிமைப் பதிப்பு :
முதற் பதிப்பு 1998 ஜூன்/ஜூலை பிரதிகள் 1000 வெளியீடு - ப்ரிய நிலா
ஆசிரிய பீடம்
193, உயன்வத்தை, தெவனகல, றி லங்கா.
அட்டைப் படம்
கலீல்கண்டு, எம்.ரீ.எம். அனஸ் அச்சுப் பதிப்பு
M.J.M. Offset Printers, மாவனல்லை
ISBN 955-96060-1-8
gigao 30/=

Page 3
முகவுரை
சுமார் 25 வருடங்களாக எழுத்துலகில் நிலைத்திருக்கும் உயன்வத்தை ரம்ஜானின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்புக்கு முகவுரை எழுதுமாறு அவர் என்னை அன்புடன் வேண்டிக் கொண்டபோது அதற்கு என்னிடம் என்ன தகைமை இருக்கிறதென ஒருகணம் யோசித்தேன். அதேவேளை என் இல்லம் தேடி வந்து அவர் இட்ட அன்புக் கட்டளையை என்னால் எப்படி மறுக்க முடியும். எனவே, ஒரு வாசகன் என்ற என் தகைமையை வைத்து சில வரிகளை எழுதத் துணிந்தேன்.
ஒரு சர்க்கஸ்காரன் பல வாகனங்கள் நிரம்ப சாதனங்களையும், மனிதர்களையும், மிருகங்களையும் ஏற்றிச் சென்று கூடாரங்களும் மேடைகளும் அமைத்து ஒரு பிரமாண்டமான அரங்கில் தனது கலையை விருந்தாக்குகிறான். மண்டபம் நிறைந்த மக்கள் மகிழ்ச்சியோடு ரசித்து வானைப் பிளக்க கரகோசம் செய்கிறார்கள் ஒரு வித்தைக்காரன் ஒரேயொரு சிறு பெட்டியில் ஒரு சில பொருட்களை எடுத்துக் கொண்டு போய் "ழேஒடயேறி மணடபம் நிறைந்த மக்களை மெய சிலிர்க்க வைத்து, அங்களது மகோன்னத பாராடடையும் கரகோசத்தையும் பெறுகிறான்; இதில் நண்பர் உயன்வத்தை றம்ஜான் ஒரு வித்தைக்காரர். குறைந்தீவுலுங்கடுேநிறைந்த சாதனை புரிந்தவர்; நிறைந்த மனம் உடையவர். இவை அவ்ரிடம் நிலைத்த பண்புகள்.
1960ம ஆண்டில் தினகரன் பாலர் கழகப் பகுதியில் எழுத ஆரம்பித்த றம்ஜான் 1985ல் முதலாவது சிறுகதைத் தொகுப்புக்கு பங்களிப்புச் செய்தார். "வாசமிலா மலரிது" அவரது வாழ்விற்கு வாசமூட்டியது. கடந்த பத்து ஆண்டுகளாக "ப்ரிய நிலா" வைத் தனது ப்ரிய நிலாவாகக் கொண்டு அதனைப் பிரியாமல் இருந்து வருவது அவரது மற்றுமொரு சாதனை. இப்பத்திரிகை பல வெளியீட்டு விழாக்களைக் கண்டுவிட்டது. இவரது திறன்களை பாராட்டும் வகையில் மாவட்ட ரீதியிலும் தேசிய ரீதியிலும் பணமுடிச்சுக்களும், விருதுகளும், பட்டங்களும் பெற்றிருப்பது நாடறிந்ததே.
இன்று எழுத்து ஊடகம் இலத்திரனியல ஊடகங்களோடு போட்டி போட்டு முன்னேற வேண்டிய ஒரு சூழ்நிலையில் நண்பர் உயன்வத்தை றம்ஜான் தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை வெளியிடுவது சக எழுததாளர்களுக்கும் ஒர் உந்து சக்தியாக திகழ வேண்டும் என்பது என் பேரவா.

இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் நாம் அன்றாடம் சந்திக்கும் கதாபாத்திரங்களையும், அன்றாடம் கேள்விப்படும் சம்பவங்களையும் எதிர்கொள்கிறோம். வறுமையின் கொடுமை இக்கதை மலர்களை இணைக்கும் நாராக உள்ளது. கதைகள் நேரடியாக இஸ்லாமிய போதனைகளாக இல்லாவிடினும் இஸ்லாமிய வரம்புகள் மீறப்படும் போது எழும் விபரீதங்களை படம் பிடித்துக் காட்டுகின்றன. "இப்படியும் ஒரு சோதனை" "விதி வரைந்த பாதையிலே" என்பன ஒர் ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில் மூன்றாவதாக சைத்தானும் இருக்கிறான் என்ற நபி மொழிக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
கதைத் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும் நண்பர் றம்ஜானின் ஆக்கங்களாக இருந்தாலும் கதைக்குக் கதை மொழி நடையிற் காணப்படும் தளம்பளை என்னால புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் தனக்கென ஒரு மொழிநடையை அமைத்துக் கொண்டு தொடர்ந்து அதனைக் கையாண்டு தனது முத்திரையை இன்னும் ஆழமாகப் பதித்துக் கொள்வது நன்று. எல்லாக் கதைகளும் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்வதாக உள்ளன.
இலங்கை முழுவதிலும் உள்ள தமிழ எழுத்தாளர்களையும அடிக்கடி சந்தித்து அவர்களது சுகநலம் விசாரித்து அவர்களது சுகதுக்கங்களில் கலந்து கொள்ளும் இனிய சுபாவம் உள்ளவர் நண்பர் உயன்வத்தை றம்ஜான். அவரது வெற்றிக்கு இதுவும் ஒரு ஊன்றுகோல்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வகையில் உயன்வத்தை றம்ஜானின் வாழ்க்கைத் துணைவியார் ஜமீலா 1ழுதுவதிலும் அவருக்குத் துணையாக இருப்பது மற்றுமொரு ஊன்றுகோல் என்பதை அவரது கையெழுத்துப் பிரதிகளை வாசித்தும் றம்ஜானுடன் உரையாடியும் அறிந்து கொண்டேன்.
நண்பர் உயன்வத்தை றமஜானின் மேலும் பல ஆக்கங்கள் நூலுருவம் பெறவேண்டுமென வாழ்த்துகிறேன்.
பத்ருள் மில்லத் ஜே.எம். காஸிம், 246/1 றம்புக்கனை வீதி, மஹவத்தை, மாவனல்லை.
TP : 035 - 47155
1998.04.28.

Page 4
என்னுரை
என் இனிய இதயங்களே!
முதலில் எம் முள் தெளிவான சிந்தனையும் உள்ளத்தில் நல்லெண்ணங்களும் மனச்சாந்தியும் உண்டாவதாக என வல்ல நாயனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எனது "ஓர் இதயம் அழுகிறது" என்ற முதலாவது சிறு கதைத் தொகுதியை வாசகர் மத்தியில் உலாவர விட்டு நீண்டதோர் இடைவேளைக்கு முன் இன்னுமொரு சிறுகதைத் தொகுதியை உங்கள் மத்தியில் பவனிவரச் செய்ய முடிந்தது என்றால் அந்த வல்ல நாயனின் கிருபைக்குப் பின் வாசகர்ளாகிய நீங்கள் தந்த கைதட்டுதல்களேயாகும்.
நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள வாசகர்கள் எனது முதற் தொகுதியைப் படித்துவிட்டு நேரடியாகவும் கடிதங்கள் மூலமும் தந்த உற்சாகம் என் பேனாவை இன்னும் ஊன்றி எழுதத்தூண்டியது என்பதை மனம் விட்டுக் கூறுகிறேன்.
நான் பல்கலைக்கழகம் சென்றவனோ பட்டம் பெற்றவனோ அல்ல. இறைவன் அளித்த அருட்கொடையை பல்வேறுபட்ட சமூக பொருளாதார குடும்பப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மேற்கொண்ட பயிற்சிகள் காரணமாகவும் தொடர்ந்து செய்து வந்த முயற்சிகளுக்கு வெகுசன தொடர்பு ஊடகங்கள் எவ்வித வேறுபாடும் காட்டாது கொடுத்த பங்களிப்புகள் மூலம் வாசகரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டேன்.
எனவேதான், எழுத்துத்துறையில் எதிர்நீச்சல் அடிக்கும் சக்தி எனக்கு ஏற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் நான் சாதாரண மனிதன், என்ற நினைப்பில் இருந்துகொண்டே இந்த எழுத்து முயற்சிகளில் உலா வருகின்றேனே தவிர, ஏதும் பெரிதாகச் செய்துவிட்டேன் என்ற நினைப்பில் அல்ல. ஆனால், நானும் என்னால் இயன்றதோர் பணியை மனித சமுதாயத்திற்கு, என்னிடமுள்ள வளத்தைக் கொண்டு, ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே எழுதுகின்றேன். என் எழுத்துப் பணியால் எனக்கு ஏற்படும் சகல திருப்திகளும் அல்லாஹக்கு உரித்தானதாகும். "அல்ஹம்துலில்லாஹ்”.
எனது இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுதியில் இடம் பெறும் கதைகள் அத்தனையுமே, இன்று சமூகத்தில் யதார்த்தமாக நடைபெறுகின்றவை. இக்கதைகளுள் சில உண்மைச் சம்பவங்களும், அவற்றோடு இணைந்த கற்பனைகளும் உள்ளன. எது எப்படி இருப்பினும்,

இவற்றில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களும் சில சம்பவங்களும் என் கற்பனையேயன்றி யாரையும் குறிப்பிடுவன அல்ல. ஆக இதைப் படித்து முடிக்கும் போது, இவற்றுள் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் சமூகத்திற்கு ஒரு செய்தியைக் கொடுப்பதாக உள்ளது என்று முழு மனதோடு ஏற்றுக்கொண்டால் அதுவொன்றே என் முயற்சிக்கு கிடைக்கும் பிரதிபலனாகக் கொள்வேன்.
எனவே, எனது இரண்டாவது நூலான "நிறைவேறாத ஆசைகள்” என்ற இந்நூல் வெளிவருவதற்கு ஆலோசனைகளையும் கருத்துரை யொன்றையும் வழங்க, உற்சாகப்படுத்திய "பத்ருல் மில்லத்” ஜனாப் ஜே. எம். காஸிம் அவர்கட்கும், என்னைப் பற்றிய குறிப்பை எழுதிய பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷட விரிவுரையாளர் திரு துரை மனோகரன் அவர்கட்கும் என்றும் என் எழுத்துப் பணிகளுக்கு ஆசீர்வாதமும் நல்வாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும சளிப்பின்றி வழங்கி ஊக்குவிக்கும் மலையக கலை இலக்கிய பேரவை காப்பாளர்களான சேவாஜோதி, றுலங்கா சிகாமணி, அகில இலங்கை சமாதான நதவான் நாகலிங்கம் இரத்தின சபாபதி, ஜனசேவா சிரோன்மணி, சேவாஜோதி, அகில இலங்கை சமாதான நீதவான் எஸ். முத்தையா அவர்கட்கும், நல்லாசி வழங்கி உற்சாகமூட்டிய சமூகத் தொண்டர், கொடைவள்ளல் அல்-ஹாஜ் உமர் ஹாசீம் அவர்கட்கும், ரீலங்கா முஸ்லிம் அமைப்பின் தலைவரும், பொறியியலாளர் சேவாஜோதி ஹசைர் யூஸப் அவர்கட்கும், மலையக மூத்த எழுத்தாளா, தமிழ் மணி க.ப சிவம் அவர்கட்கும், வாழ்த்துரை வழங்கிய அன்புமாமணி இர. மோகன் சமாதான நீதவான் அவர்கட்கும், அட்டைப் படத்தை வரைந்துதவிய ஆசிரியர்களான கலீல்கண்டு, எம்.எம். அனஸ் அவர்கட்கும் ஒப்புதல் பார்த்துக் கணணி அச்சுக்கோர்வை செய்துதவிய LDs, 6.6016)606) AKEPS Computer Center Éq660Tigligib s36G 6hlupsiduu எம்.ஜே.எம. பிரிண்டர்ஸ் ஸ்தாபனத்தாருக்கும் எப்பொழுதும் எனது எழுத்துப் பணிக்குக் கைகொடுத்து வரும் எனது நேசம் நிறைந்த என் துணைவியாருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். புகழ் அனைத்தும் அல்லாஹற்வுக்கே.

Page 5
இந்நூல் எனது இனிய வாசகர்களுக்குச்
சமர்ப்பணம். s ーニ
 
 
 
 
 
 
 
 
 
 

Sõ23Gaasta 3% 2DJa af Cl)
நிறைவேறாத ஆசைகள்
உயன்வத்தை றம்ஜான்
அப்துல்லாஹ் நானாவுக்கு அப்பொழுது வயது அறுபத்தைந்தைத் தாண்டி இருந்தது. எதையும் சற்று சிந்தித்து, நிதானத்தோடு செய்கின்ற பழக்கம் அவருக்கு இருந்தது.
இது ஊர் அறிந்த உண்மை. அல்ஹம்துலில் லாஹி ஒன்பது ஆண்மக்களை குறைவில்லாமல் பெற்றிருந்த அவருக்கு மகளொன்று இல்லையே என்ற குறையிருந்தாளும் கூட வெளிக்காட்டவில்லை. என்றாலும், அவரது மனைவியான சுபைதாவுக்கு அது பெரும் குறையாகவே இருந்தது. தான் வயதாகும் காலத்தில் நோய் வாய்ப்படும் நேரத்தில் "தன்னைத் தூக்கபிடிக்க, வெளிக்குக் கரைக்குக் கூட்டிப்போக யார் தான் இருக்கிறாங்க" என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பாள்.
என்ன சுபைதா அலலாஹவுக்கு தெரியாமயா ஒன்பது பிள்ளைகளை தந்தான். இப்படியெல்லாம் ஈமான் மறந்த பேச்சுக்களைப் பேசாதீங்க. இப்படி மனைவிக்கு ஆறுதல் கூறுவார் அப்துல்லாஹற் நானா.
எல்லோரும் வளர்ந்து ஆளாகிவிட்டாலும் கூட இன்னும் தனிமரங்களாகவே இருந்தனர். எல்லோரும் அவர்களுக்கு ஏற்ற தொழில்களையுய செய்து கொண்டிருந்தனர். என்றாலும், அவர்களின் விருப்புக்களுக்கு ஏற்ப குடும்பமாகி இருக்க காண்பதில் தாயின் எதிர்பார்ப்புக்கள், பேராசைகள் அவர்களுக்கு தடைக்கற்களாக இருந்தன. பெரிய குடும்பம் வேண்டும்; கொழுத்த பணம் வேண்டும்; வசதி வாய்புக்கள் அப்படி இப்படி என்று பெருத்த ஆசைகள்.
பெற்றவர்களின் உள்ளங்களை புண்படுதத விரும்பாததால், அவர்கள் விருப்பத்துக்கே அதனைவிட்டு வைத்தனர்.
தன்மக்களின் வயதை ஒத்தவர்கள், அவர்களோடு படித்தவர்கள், குடும்பமாகி குழந்தைகளோடு இன்பமாக வாழ்வதைக் காணும் அப்துல்லாஹற் நானாவின் உள்ளம் கலங்கத்தான் செய்தது. ஆனால் மனைவியின் பிடி, உடும்புப்பிடியாயிற்றே!
ஒரு நாள் தொழுதுவிட்டு எழுந்த சுபைதாவின் உள்ளத்தில் திடீரென ஓர் நினைப்பு மெதுவாக அப்துல்லாஹற் "ானாவை நெருங்கி " என்னங்க எனக்கு சும்மா ஒரு யோசனை வந்திச்சு" என்னது? என்று கேள்விக்

Page 6
a562a3Gapaanyo 325 apa-asasari C2O
குறியோடு மனைவியை நோக்கினார். "மூத்த மகனுக்கும் வயதாகிட்டுது, ஓங்களுக்கும் அடிக்கடி அங்க, இங்க புடிக்குது, வலிக்குதுன்னு முணுமுணுக்கிறீங்க" ஆமா, நம்ம புள்ளகளுக்கும், தாத்தா, தங்கச்சி, என்று யாரும் இல்லை, எங்களுக்கும் ஏதாச்சும் எண்டா பாக்க, கேக்க ஒரு பொம்புளப்பிள்ளை மாதிரி வராது. அதனால மூத்தமகனுக்கு ஒன்டு ஆகிறவரைக்கும், நம்ம தங்கச்சிட பாத்திமாவ கொஞ்ச நாளைக்கு நம்மளோட விட்டுடச் சொன்னா என்ன..? என்ற போது,
"நல்ல யோசனைதான் ஆனா அவ விரும்புவாவா ? எதுக்கும் நாளைக்கு போய் பேசிப் பார்க்கிறன்" என்று சொல்லிவிட்டு எழுந்து சாப்பிடத் தயாரானார் அப்துல்லாஹற் நானா.
அப்போது குத்தூஸ் மாமா, அவர்கள் வீடடுக்குள் நுழைவதைக் கண்ட சுபைதா, என்னங்க "நம்ம குத்தூஸ் மாமா வாராரு, ஏதாச்சும் விசயம் இருக்கும்"
ஆ. வாராரா?"
"ஆமா வாராரு."
"என்ன தொர, என்ன யோசனை?"
"வாங்க குத்தூஸ் udstuDT, sk6ötsot FIDT&GmJub?"
"உங்க மகனுக்கு ஒரு நல்ல இடம் பார்த்திருக்கிறேன். படிச்சவ, முனு பாசையுய தெரியும். பணம், ரொக்கம் கிடையாது, புள்ளைட பேருக்கு ஐந்து ஏககர் காணிய எழுதித்தருவாங்க, என்ன சொல்றீங்க..?"
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சரி யோசித்துப் பார்த்துச் சொல்லுங்க, நான் வாறன், என்று கூறி எழுந்த போது, சரி குத்தூஸ் மாமா ஏதாவது ஒன்று நடக்கனுமே. மூணு நாள் கழித்து இந்தப் பக்கம் வாங்களேன், என்று அவரை அனுப்பிவைத்தனர்.
சில தினங்கள் கழிந்தன. சுபைதா திடீரென நோய்வாய்ப்பட்டாள். என்ன சங்கடமான நிலை! எத்தனை ஆண்மக்கள் இருந்தாலும் ஒரு பெண்ணைக் கவனிக்க ஒரு பெண்ணால்தான் முடியும். சுபைதா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் பலித்தாற்போல். இப்பொழுதுதான், தான் விட்ட பிழையை உணர அவள் ஆரம்பித்தாள்.

Sšoagasasngs ge aeras 6ī C3D
இப்பொழுது மூத்த மகன் ரமீஸ், "உம்மா இப்ப என்ன செய்யிரதென்டு எனக்கொண்டும் விளங்கல்ல.
அப்பொழுது. அனுதாபத்தோடும் வேதனையோடும் அவன் முகத்தைப் பார்த்து "மவன் அன்டக்கி, குத்தூஸ் மாமா வந்து உன்ற விஷயமாக
வாப்பாட்ட பேசிட்டுப் போனாரு" !
"உம்மா இப்ப அது இல்ல பிரச்சினை, அத பிறகு பார்ப்பம். இப்ப ஓங்கட நிலைதான்."
"மவன் கவலைப்படாதீங்க, அல்லாஹற் சுகமாக்குவான்"
"உம்மா ஒரு வேலை செஞ்சா என்ன?"
"என்னப்பா. "
"நாங்க ஒரு முற எங்கட மாமி வந்து அவங்கட ஜெஸிமாவ எங்ககிட்ட வச்சிக்கொள்ள சொன்னாதானே! இப்ப விடமாட்டாங்களா" என்றபோது சுபைதாவின் கண்கள் கலங்கின.
அன்டைககு அவங்க கேட்ட போது.
என்று பேசி முடிக்கும் முன், "நான் போய் பார்த்திட்டு வாறன்" என்று நம்பிக்கையோடு புறப்பட்டான்.
இப்பொழுது அவள் இதயம் ஆயிரம் கதைகள் சொல்லிற்று. ரமீஸஸுக்கு வந்த நல்ல இடங்களையெல்லாம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுத் தட்டிக் கழித்தேன். அப்போதே வந்த நல்ல இடமொன்றை முடிச்சிருந்தா, இன்னைக்கி, மருமக்கள், பேரன், பேத்திகளோட எவ்வளவு சந்தோஷமாய். ஆ.ஹற் என்று அந்த நோய்ப்படுக்கையிலும் கற்பனையில் மூழ்கினாள் சுபைதா.
ரமீஸைக் கண்ட ஜெஸிமா, அவனை அன்போடு வரவேற்றாள். "வாங்க மச்சான்; மாமி, மாமா, மச்சான் எல்லாரும் சொகமா இருக்காங்களா?" என்று முடிக்குமுன் "சொல்றேன் எங்க மாமி, மாமா." என்னும் போதே மாமி ரமீஸை வரவேற்றாள். w
"என்ன நீண்ட காலத்துக்கு பொறகு வந்திருக்காரு. என்ன காக்கா? இருக்கும் கலியாணத்துக்ககுச் சொல்ல வந்திருக்கிறார்" என்று

Page 7
1532o2/13:Gâ56bwysengys 325 629&ar=y 627 C4)
ஜெஸிமாவின் தாயார் எண்ணிக் கொண்டார். அப்பொழுது அவள் மனதில் பழைய சம்பவமொன்று ஞாபகத்தில் வந்தது. அவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்ட முடியாத ஒரு கட்டத்தில் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாமற் போன ஜெஸிமா வேதனையால் வெதும்பிக் கொண்டிருந்தபோது மன ஆறுதலுக்காக, ஒரு மாற்றத்துக்காக, அவளை ரமீஸ் வீடடில் விடக் கேட்டபோது, "இங்க ஆண் பிள்ளைகள் உள்ள இடம்" என்று காரணம் காட்டி, தட்டிக் கழித்தது ஞாபகத்துக்கு வந்தது.
ரமீஸ், வந்த விஷயத்தைச் சொல்லத் தொடங்கினான். "மாமி, ஒரு முக்கிய தேவைக்காகத்தான் வந்தேன். உம்மாவுக்கு சுகமில்லாம இருக்காங்க. பொம்பிள துணையில்லாம இருக்கிறது கஷ்டம். அதனால. ஜெஸிமாவ கொஞ்ச நாளைக்கு எங்க வீட்டில..." என்று இழுத்தான்.
"மகன் இந்த நேரத்தில நாங்க என்ன சொல்றதுன்னே தெரியல்ல. மாமாவும் வீட்ல இல்ல. இருந்தாலும், உங்கட இந்த இக்கட்டான நிலையில் உதவாட்டி நம்ம சொந்த, பந்தத்தில பிரயோசனமில்ல. ஆனா, மவன் ஏதும் யோசிக்காம கவலைப்படாம நான் சொல்றதக் கேக்கணும்" என்று அந்தப் பழைய சம்பவத்தைக் கூறினாள். "அப்ப நீங்களெல்லாம் சின்னப் பையன்கள் இப்ப வளர்ந்தவங்க இல்லையா?"
"மாமி நீங்க சொன்னது சரி. இப்ப என்ன செய்ய முடியும்?" இப்ப நீங்க ஜெஸிமாவைக் கூட்டிட்டு போனதைப் பத்தி ஒன்றுமில்ல. ஆனா அவளும் நாளைக்குக் குடும்பமாகி வாழ்க்கைப்பட வேண்டியவளில்லையா?"
"மாமி நீங்களும், மாமாவும் சம்மதிச்சா ஜெஸிமாவின் சம்மதமும் இருந்தா நானே அவளைக் கட்டிக்கொள்றேன். எனக்கு வருகிறவ, என் தாய்க்குத் துணையாக ஒத்தாசை குடுக்க வேண்டும். எனக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிற உம்மாவுக்காக என்ன செய்தாலும் போதாதே. என்ன சொல்றீங்க மாமி" தாயினதும், மகளினதும் கண்கள் கலங்கிவிட்டன.
"மவன் நாங்க இன்றைக்கே உங்க உம்மாவைப் பார்க்க உங்களோடு புறப்படுறோம். ஜெஸிமாவையும் விட்டுட்டு வர்றேன். முதல்ல உம்மாட சுகத்தைக் கவனியுங்க" என்றபோது ரமீஸின் கண்கள் நீரைச் சொரிந்தன.
பலவித எண்ணக் குவியல்களோடும், மனநிறைவோடும் தாயின் ஆசீர்வாதம் பெறவும், வாழ்க்கை பெறவும் அவளின் நீண்ட கால ஆவலொன்றை நிறைவேற்றவும் போய்ச் சேர்ந்தபோது சுபைதாவைச் சுற்றி ரமீஸின் சகோதரர்கள் நின்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் முகங்கள் வாட்டமுற்று, கண்கள் கலங்கியிருந்தன.

as 22asata2nagngays s25 aparas at C 5 D
ரமீஸ் தாயை நெருங்கி குனிந்து, 'உம்மா, உம்மா' என்றபோது மூடியிருந்த விழிகள் மெல்லத் திறந்து அவனை நோக்கின. அவளால் ஏதும் பேச முடியவில்லை.
அப்பொழுது "மதினி, இந்தா பாருங்க ஜெஸிமா வந்திருக்கா. உங்களுக்கு என்ன வேணும்? இனிமேல் ஜெஸிமா உங்க பக்கத்திலேயே இருந்து உங்களப் பார்த்துக் கொள்வா." என்று பேசிய போது, அவள் கண்கள் ஜெஸிமாவைத் தேடின.
"மாமி, மாமி நீங்க ஒன்னும் யோசிக்காம தூங்குங்க. நான் உங்க கிட்டேயே இருப்பேன்" என்று அவள் தலையை வருடினால் ஜெஸிமா.
மாலை மயங்கி, இரவாகிக் கொண்டிருந்த போது, லேசாக பெய்யத் தொடங்கிய மழை நடுநிசியின் போது பலமாகப் பெய்யத் தொடங்கியது. பலத்த காற்றோடு, இடி மின்னலும் தொடர்ந்தது.
சுபைதாவின் கட்டிலிலேயே படுத்துக் கொண்டிருந்தவர்களும் நாற்காலியில் சாய்ந்திருந்தவர்களும் பதற்றத்தோடு விழித்துக் கொண்டனர். சுபைதாவும் மெல்ல முனங்கினாள். அவள் உடல் நெருப்பாக கொதித்தது. அத்தோடு, வாந்தி எடுக்கவும் தொடங்கினாள். எல்லோரும் பதறினர். வெளியே இறங்க முடியாதபடி கடும் மழையும், காற்றும், சில நிமிடங்களுக்குள் அவள் நிலைமை மோசமாகியது. பக்கத்தில் கண்ணிரோடு அமர்ந்திருந்த ஜெஸிமா சுபைதாவின் காதுக்குள் ஓதிக் கொண்டிருந்தாள்.
ரமீஸ் குனிந்து "உம்மா, உம்மா, என்ன உம்மா, பேசுங்க உம்மா" என்றான் அழுதுகொண்டே.
சுபைதாவின் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்துகொண்டிருந்தது. மெதுவாக கண்களைத் திறந்தவள், ஜெஸிமாவின் கைகளையும், ரமீஸின் கைகளையும் இறுகப் பிடித்து தன் முகத்தோடு சேர்த்துக் கொண்டதோடு, நிம்மதியோடு கண்களை மூடிக்கொண்டாள்.
(முற்றும்)

Page 8
Sapasa 62 wasngas sa aparusai G6D
அவன் ஒரு பைத்தியம்
உயன்வத்தை றம்ஜான்
அவன் குடும்பத்தின் தலை மகனாய்ப் பிறந்ததில் பெருமைப்பட்டான். பிறந்ததில் பொறுப்புக்கள் நிறைந்த அந்த ஸ்தானத்தைச் சிலர் வெறுக்கலாம். ஆனால் இவனோ சந்தோசப்பட்டான். இளம் பராயத்திலேயே பெற்றோரை இளந்த போதும் கடின உழைப்பால் சகோதரிகளின் வாழ்வை ஒளிமயமாக்க வேண்டும் என்பதே அவனின் ஒரே குறிக்கோளாக இருந்தது. அவர்களுக்காகவே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.
அண்ணன் வாழ வைப்பான் என்று நிலையான எண்ணம் சகோதரிகளின் மனதில் வேரூன்றி இருந்தமையால் பெற்றோர்களின் இழப்பு உள்ளங்களை வருத்திய போதிலும் எந்தக் குறையும் விளங்கா வண்ணம் அவன் அவர்களை கவனித்தமை உள்ளத்தில் அமைதியையும் நிம்மதியையும் கொடுத்தது.
மூத்தவளான ரமீஸா அடக்கமும், அன்பும், சாந்தமும் நிறைந்தவள். இளையவர்களான இரு சகோதரிகளினதும் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை கொண்டமையால் அவர்களின் கல்வித்தேவைகளைக் குறைவின்றி நிறைவேற்றி வந்தவன் நாட்கள் செல்லச்செல்ல சகோதரிகளின் இளமைப் பருவம் வீணே கழியக்கூடாது; அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும்; அனாதையாகி விட்டோமே என்ற எண்ணம் வளரவிடக் கூடாது என்பதைப் பற்றியே அடிக்கடி தன்னுள் எண்ணிக்கொண்ட இர்பான் கடும் முயற்சியின் காரணமாக தொழில் வாய்ப்பொன்றையும் பெற்று மூத்த சகோதரியின் கண்காணிப்பிலே சகோதரிகளையும் விட்டுப் புறப்பட்டான்.
அமைதியும் நிதானமும் எதையும் பொறுப்புடன் பொறுமையுடன் செய்யும் தன்மையுடையவனாக இருந்தமையால் அதிகாரிகளின் அன்பையும் பெற்றுக் கொண்டிருந்தான்.
சூழல் மனிதனின் பழக்கவழக்கங்களை மாற்றிவிடும் தன்மை வாய்ந்தது. எவ்வளவு நல்ல மனிதனும் சில நேரங்களில் மோசமான சூழல் காரணமாக தீயவனாக மாறிவிடுகிறான். ஆனால், இர்பான் இதற்கு நேர்மாறாக இருந்தான். இதனால், உயர் அதிகாரிகளினதும் கவனத்தைக் கவர்ந்தான். அவர்களின் பொழுது போக்குப் பகுதிக்கு உதவியாளனாக

Z5ăC>yr>(Gaxưns roz5 s>g, Goocarat5 

Page 9
JáSá243Gabras rag5 spa. ápa-az56lni C8)
படித்தவள் பாதை மாறிப்போகலாமா? பரீனாவை அன்புடன் கடிந்தாள், அதட்டிப்பார்த்தாள், எச்சரித்தாள். ஆனால், பருவக்கோளாறு அவள் காதுகளைச் செவிடாக்கி, கண்ணிர் மல்க ரமீஸா கெஞ்சியது பரீனாவின் இதயத்தை நெகிழ வைக்கவில்லை. இந்த நிலையைத் தொடர்ந்தால், நான் கடமை தவறியவளாகிவிடுவேன்; அண்ணன் வந்து கேட்டால் எப்படி அவர் முகத்தைப் பார்ப்பேன்? என்று பலவாறாகச் சிந்தித்தாள். பரீனாவின் போக்குத் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், புத்திகள் கூறி கடிதம் ஒன்று எழுதும் படியும் இர்பானுக்கு கடிதம் எழுதினாள் ரமீஸா.
கடிதம் கண்ட இர்பான் தடுமாறினான். வயது வந்த எல்லா ஆண்களும் பெண்களும் நெறி தவறாமல் கட்டுப்பாடாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இளம் உள்ளங்கள் வெகுவிரைவில் கவர்ச்சியில் வெளித்தோற்றத்தில் இனிக்கும் மொழிகளில் மயங்கிவிடும். இதற்குத் தன் தங்கையும் விதிவிலக்காக முடியாதென்று எண்ணியவன் அன்பும் அறிவுரைகளையும் கூறி பதில் கடிதமொன்று எழுதினான். நிச்சியமாக பரீனா அதைப் பார்த்து தவறுகளை உணர்பவள்; திருந்துவாள் என்ற நம்பிக்கை அவன் நெஞ்சில் இழையோடியது.
நாட்கள் சில கழிந்தன. இர்பானுக்கு பரீனாவின் கடிதமொன்று பதிவுத் தபாலில் வந்திருந்தது. அவன் அதை ஆவலுடன் பிரித்துப் படித்தான்.
ஆருயிர் அண்ணா,
உங்கள் பாசம் நிறைந்த மடல் கிடைத்தது. ஆனால், அண்ணா காலம் கடந்துவிட்டது. எம் வாழ்வைப் பசுமையான பூஞ்சோலையாக்க, நீங்கள் வறண்ட பாலைவனம் சென்றீர்கள். அநாதைகளான எம்மை வாழவைக்க, எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியில் எந்தக் குறையும் வைக்காது கண் போல் பாதுகாத்தீர்கள். ஆனால், உங்கள் ஆசைகளையும், கனவுகளையும் கற்பனைக் கோட்டைகளையும் நான் தகர்த்து விட்டேன். என் வாழ்க்கையை நானே பாலைவனமாக்கிக் கொண்டேன். அன்புச் சோதரியின் அறிவுரைகளை மதிக்காமல், அழுது கெஞ்சியதை உதாசீனம் செய்து, கயவன் ஒருவனின் ஆசை வார்த்தைகளுக்கும், அழகான தோற்றத்திற்கும் மயங்கி அண்ணா அதை எழுதவே கை கூசுகிறது. சொற்ப நேர இன்பத்திற்காக உயிரிலும் மேலான மானத்தையே இழந்து.

AS 32A1GG 62. As a 25 sesaourasad 9
சுமைதாங்கியாக அவனால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறேன். தாந்தோன்றித்தனமாக திரிந்த எனக்கு இந்த தண்டனை ஏற்றதுான். என் அன்பு அண்ணா இனியும் இந்த உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை. உத்தமரான உங்களுக்கும் என் சகோதரிகளுக்கும் இனியும் என்னால் களங்கம் ஏற்படக் கூடாது. உங்கள் புனிதமான முகத்தைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை என்னை மன்னித்து இப்படி ஒரு சகோதரி இருந்தாள் என்பதையே மறந்து விடுங்கள். போகிறேன்.
இப்படிக்கு, தங்கை பரீனா.
சிரமத்துடன் உடலும் உள்ளமும் பதற படித்து முடித்தவன் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோடியது. அவனால் இதை நம்ப முடியவில்லை. என் உடன்பிறந்தவளா இப்படி எழுதியிருக்கிறாள்? ஐயோ! பரீனா! நான் யாருக்காக வாழ்ந்தேன்? யாருக்காக நாடு விட்டு நாடு வந்து உழைத்தேன்? என் சகோதரிகள் செல்லமாய் சுபீட்சமாய் சிரித்து வாழும் காட்சியைக் காண என் உள்ளத்தில் கனவுகளை ஆசையாக வளர்த்தேனே? எல்ல. மே கானல் நீர்தானா? நான் பட்ட பாட்டிற்கு எல்லாம் கிடைத்த பலன் ஏமாற்றம்தானா? அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை; தன் ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை; கதறினான், புலம்பினான்.
"ஐயோ! பரீனா நீ அவசரப்பட்டுவிட்டாயம்மா? ஏன்? இந்தக்கோர முடிவுக்கு வந்தாய்?" என்று கதறியவன், திடீரென்று சுய நினைவுக்கு வந்தவன் போல் வெறி பிடித்தவன் போல் மாறினான் சாந்தமே உருவான அவன் கண்களிலே குரோதம். முகம் சிவந்தது. தன் உடன்பிறந்தவளின் வாழ்வை பாழ்படுத்தியவன் கழுத்தை நெறித்து இரத்தத்தைக் குடிப்பேன் அவனை வாழவிடமாட்டேன் என்று ஆவேசமாக கத்தியவன் அறையை விட்டு வெளியே ஓடினான்.
அவன் எங்கே ஓடினான்? அது அவனுக்கே தெரியாது. ஏனென்றல் அவன் இப்போது ஒரு பைத்தியம்!!
(முற்றும்)

Page 10
LLLL0A0A0ALLAAAAALLAALLAAAAALLAAS S AAAAA AAAA A S
அலைகள் ஓய்ந்த போது
உயன்வத்தை றம்ஜான்
கடலின் அலைகள் ஒய்வதில்லை. அலைகளின் ஒசைகள் 'சலாஷ்' 'சலாஷ்' என்ற ஓசையை எழுப்பிய வண்ணமேயிருக்கின்றன. அவ்வோசைகள் சில பொழுதுகளில், மனித வாழ்க்கைக்கு எச்சரிக்கைகளாகவும் படிப்பினைகளாகவும் அமைந்துவிடுகின்றது. தொடர்ந்து வரும் போராட்டங்களும், தோல்விகளும், ஏமாற்றங்களும் மனித வாழ்க்கையில் சகஜமாக நிகழும் நிகழ்ச்சிகள். ஆனால், அத்தகைய நிகழ்ச்சிகளைக் கண்டு அஞ்சி, ஒதுங்கி வருவோரும், வாழ்க்கையை வெறுத்து, மனம் போன போக்கில் வாழ முற்படுவோரும் அனேகர் உள்ளனர்.
ஆனால், நிதான புத்தியும் ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும், இளமையிலேயே, இயற்கையிலேயே நிசாமிடம் அமைந்திருந்தது. கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு தனக்கென ஒரு தொழிலையும் தேடிக்கொண்டான். கட்டுப்பாட்டுடனும், கணணியத்துடனும், பண்புடனும் நடந்து கொண்டமையால் சக ஊழியர்களுக்கும் அவன்பால் கூடுதலான பற்றும் பாசமும் இருந்தது. புகையிரதப் பகுதியில் காசாளராகக் கடமை புரிந்த நிசாமுக்கு தினமும் பணத்தை வங்கியில் சேர்க்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தமையால் கடமையுணர்வோடு நடந்துகொண்டான்.
நிசாமின் அடக்க ஒடுக்கமான நடவடிக்கையில் மஸதாவுக்கு ஒரு பிடிப்பு. அவனது கணக்குகளைத் மஸீதாவே பதிவு செய்து வந்தாள். ஒரே காரியாலயத்தில் கடமையாற்றுபவர்கள், மனம் விட்டுப் பேசிக் கொள்வது சகஜம்தான். ஆனால், இங்கே அது நடக்க்வில்லை.
மஸதா அழகானவள். கவர்ச்சியான தோற்றத்துடன், பெண்களுக்கே உரிய நற்குணங்களும் அமைந்தவளாகவே இருந்தாள். குடும்பம் என்ற வாகனத்தில் ஜாம் ஜாம் என்று பிரயாணம் செய்ய வேண்டும்; நாலு பேர் போற்ற குடும்பம் நடத்த வேண்டும்; அதற்கான நிலையான உறுதியான சாரதியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆசை, ஆர்வம் அவளிடம் நிறைய இருந்தன. வாழ்க்கைப் பயணமானது தினசரி நாம் பிரயாணம் செய்யும் மோட்டார் வாகனம் போன்றதல்ல; ஒரு வாகனம்
 

திரை9ைே2த sessoarasafi si D
நம்மை உதாசீனம் செய்து விட்டுப் போகும் போது பிரிதொன்றுக்குத் தாவக் காத்திருக்கும் நிலையாாக அமையக்கூடாது. உடல், பொருள் ஆகிய அனைத்தையும் அர்பபணித்து கண்ணிறைந்த ஒருவனைக் கரம் பிடித்து காலமெல்லாம் அவனுடனேயே வாழ வேண்டும் என்ற இலட்சியமும் கொள்கையும் மஸ்தாவின் உள்ளத்தில் வேரூன்றி
இருந்தது. எனினும், அப்பொறுப்பைப் பெற்றோரிடமே விட்டுவிட்டாள். காலச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. கனிகள் குலுங்கும் மரத்திற்குக் கல்லடிகளும், பொல்லடிகளும் பறவைகளும் தேடிவருவது இயற்கையே.
நிசாமின் தன்மைகளை, கொள்கைகளை பெற்றோர் நன்கு உணர்ந்திருந்த போதிலும் காலம், நேரம், சூழல், மனிதனை மாற்றிவிடுவது இன்று சர்வ சாதாரண விடயம் என்பதை மறந்துவிடவில்லை. உரிய காலத்தில் அறுவடை செய்யாத பயிர்கள் நாசமாகிவிடுவதை உணர்ந்தவர்கள் அன்றோ. நிசாமின் தாய் நிசாமிடம் "மகன் எங்களுக்கு இபபோது வயத கிவிட்டது; நாங்கள் உனது குடும்ப வாழ்க்கையை பார்க்க வேண்டாமா? உனது தந்தையின் ஆசையும். அதுதான். ஒரு நல்ல இடமாக பார்ப்போமே" என்று ஆவல் பொங்கக் கேட்டாள். நிசாமினால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.
தன்னைப் பெற்று வளர்த்து, ஆளாக்கிப் படிக்க வைத்து சமூகத்தில் ஒரு நல்ல பிரஜையாக உருவாக்கiய அன்புப் பெற்றோரின் ஆசைகளை நிராகரிப்பதும் சரியல்ல என்ற நினைவுகள் உள்ளத்தில் உருவாகின. அன்புடன் தாயை நோக்கி உம்மா உங்கள் வேண்டுகோள்களையும், ஆசைகளையும் நான் என்றுமே நிராகரித்தது கிடையாதே, இன்னும் இரண்டொரு மாதத்தில் டிபார்ட்மென்ட் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பொன்றும் இருக்கின்றது; இரண்டும் முக்கியமானவைகளே! ஆகையால். நிசாமின் தாயின் உள்ளம் குளிர்ந்தது; ஆவலுடன் மகனை நோக்கி "என்ன நிசாம் உன் மனதில் இருப்பதை எங்களிடம் சொல் உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி."
நிசாம் மெதுவாக தலைகுனிந்த வண்ணம் பேசினான். "நான் ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுவரை அவளிடம் எதுவுமே கதைத்ததில்லை. என்னைப் பற்றியும் அவளுக்குத் தெரியாது. நான் விலாசம் தருகிறேன்"
நிசாமின் தந்தை பக்கீர் நானா, அவ்விலாசத்தைத் தேடிச் சென்று, கதைத்துக் கொண்டிருக்கையில் மஸீதா அடக்கமாக தலையில் முக்காடிட்டவளாய் விட்டுக்குள் நுழைந்த ஸ். எதிர்பாராத மஸதாவைக் கண்ட பக்கீர் நானாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவளது அடக்க

Page 11
Sázo2 mascarsonnas neys S2áØJFJE5Saīf . C12D
ஒடுக்கமான தோற்றத்தைப் போன்றே உள்ளமும் தூயதாக இருக்கும் என்று உறுதியாக நம்பினார். தன் மகனின் தெரிவு பிரமாதம் என்று யூகித்த வண்ணம் சம்பிரதாயப்படி பெண் பார்த்தபின் மாப்பிள்ளை பார்க்கலாம் என்ற முடிவுடன் விடைபெற்றுச் சென்றார்.
வழக்கம் போல் வேலைக்குச் சென்று வந்த மஸீதா வார இறுதியில் இரண்டு நாட்கள் விடுமுறை பெற்றுக்கொண்டு வந்தாள். அவள் உள்ளத்தில் ஆயிரம் ஆயிரம் எண்ண அலைகள் மோதின. மாப்பிள்ளை
யார்? எப்படிப்பட்டவர்? படித்தவரா? பண்புள்ளவரா? என்று கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன.
இக்காலத்தில் பணத்திற்கும் அழகிற்கும் ஆடம்பரமான உடைகளிற்கும் மயங்கித் தங்கள் செல்வங்களையும் அவர்கள் வாழ்வையும் பாழ்படுத்திய பெற்றோர்களை நிறையக் கண்டிருக்கிறான். தன் பெற்றோரும் இப்படி ஏமாந்துவிடுவார்களோ, எப்படி இருக்குமோ என்னவாகுமோ என்ற ஏக்கம் இப்படி பலவாறான எண்ணங்கள் அவனை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தன. தன் தந்தைக்கும் மணமகளை நன்கு பிடித்துவிட்டது என்பதையும் உணர்ந்தான்.
தன் மகன் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் திருமணத்தை இரண்டொரு வாரத்தில் நடத்த வேண்டுமென்ற யோசனையை பக்கீர் நானா மஸதாவின் தந்தையான காஸிம் நானாவிடம் சொன்னபோது அவர் உடனே சம்மதித்து விட்டார் வரதட்சணை எதுவும் வேண்டாமென்றும் கூறியதால் காஸிம் நானா சுணக்க விரும்பவில்லை.
மறுநாள் வழமைபோல் வேலைக்குச் சென்றாள் ഥണ്ഡ"ക്രt. நிசாமும் வழக்கம்போல் வந்து பணத்தை முதலீடு செய்துவிட்டுப் போய்விட்டான்.
மஸ"தாவின் மிக நெருங்கிய தோழிகளான லதாவையும் வசந்தியையும் கண்டு தன் திருமண விடையத்தைக் கூறிவிடத் துடித்தாள். அவர்கள் இருவரும் வெவ்வேறு பிரிவுகளில் கடமையாற்றுவதால் டெலிபோன் மூலம் 'லன்ச்' இடைவேளையின் போது சந்திக்க விரும்புவதாகக் கூறியவள் "ஒரு "ஸ்வீட் நியூஸ்' கேட்கத் தயாராயிருங்கள்" என்று கூறி போனை வைத்தாள் மஸதா.
 
 

நி2றதவேநாத eazzazi C13)
பன்னிரண்டு மணிக்கு லதாவும் வசந்தியும் வெகு ஆவலோடு மஸீதாவை சந்தித்தனர். "என்னடி இரு நாளா காணல்ல ஏதும் சுகயினமா." என்று கிண்டலாகக் கேட்டாள் லதா. x
"இல்லடி மிக முக்கியமான விஷயம் உங்க ஒருத்தரையும் அழைக்க முடியல்ல திடீர் ஏற்பாடு" எனக் கூறி முடிக்கும் முன் "முடிச்சிட்டியா" என்றாள் வசந்தி. "பொறுடி; அப்படியொன்றுமில்லை; டெடி சொல்றத தட்டவும் முடியாது; எப்படியான இடமோ பயமாயிருக்குடி நல்ல இடமா இல்லாட்டி டெடி சம்மதிச்சிருக்கமாட்டாரு; ஒரு வீக்ல கல்யாணம் ஏற்பாடாயிருக்கும் போலிருக்கு" என்று மஸதா கூறி முடிக்கும் முன் 'கன்கிரஜியுலேஷன்ஸ்' "யாருடி அவர்? எந்த ஊர்? என்ன பெயர்?" என்று ஆவலோடு கேட்டனர் லதாவும் வசந்தியும்,
"உன்ற ஊர்தான்டி; பெயர் மிஸ்டர் நிசாம்" "என்ன நிசாமா? அந்தப் போக்கிரியா? கசாப்புக் கடைக்காரரின் மகனா? என்று கர்ஜித்தாள் வசந்தி, "நீ ஒரு பைத்தியம் உன் பொன்னான வாழ்வைப் பெற்றோர் சொல்லைக் கேட்டு பாழாக்கிக்கொள்ளப் பார்க்கின்றாயா? அவனாலதானே நானும் ஆறு மாதத்திற்கு முண் கொழும்பு வந்தேன்" என்றதைக் கேட்டு மஸதா திடுக்கிட்டாள்.
வசந்தி நீ சொல்வதெல்லாம் உண்மையா..?
"மஸ்தா. தயவு செய்து அவன் பெயரை இன்னுமொறு முறை சொல்லாதே; ஏமாந்துவிடாதே." என்று கலங்கினாள் வசந்தி.
"யா அல்லாஹற் இது என்ன சோதனை; இப்படியான ஒரு இழிநிலை எனக்கு ஏற்பட நான் என்ன பாவம் செய்தேன்" என்று ஏங்கி அழுதாள் மஸஉதா. அவளால் இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளை அன்புடன் அணைத்துக் கொண்ட லதா "ஏன்டி சின்னப்பிள்ளை மாதிரி அழுகிறாய்? பேச்சி வார்த்தைதானே முடிந்துள்ளது தாலியா கட்டிவிட்டான்? குழப்பிவிடாதே பக்கத்திலுள்ளவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்" என்று ஆறுதல் கூறினா: மஸீதா தன்னைப் தேற்றிக் கொண்டாள். வார இறுதியில் வீடு போக இருந்தவள் அன்று மாலையே சென்றுவிட்டாள்.

Page 12
C4O
வீட்டில் கல்யாணம் கலை கட்டியிருந்தது. எல்லோரும் கலகலப்பாக காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். "உண்மை தெரியாமல் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கின்றனர்; நெஞ்சு நிறைய ஆசைகளுடன் இருக்கும் பெற்றோரின் முகத்தைப் பார்ப்பதெப்படி? உணமையைச் சொல்வதெப்படி?" என்று உள்ளம் போராட சிந்தித்தாள் மஸதா. ஆனால், திருமணம் என்பது கண்ணாம்பூச்சி விளையாட்டல்லவே!
தி2ந3வேந3ாத ஆசைகள்
"அது ஆயிரங்காலத்துப் பயிரன்றோ..? கண்ட கண்ட இடமெல்லாம் படுக்கையறையாக்கிக் கொண்டவனுக்கு மனைவியாவதைவிட இறப்பதே மேல்" என எண்ணி வருந்தினாள். தன் தந்தையிடம் கல்யாணத்தை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போட்டால் என்ன என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவரோ. இது போன்றதொரு சம்பந்தம் எம்மைப் போன்றவர்களுக்கு கிடைக்க நாம் புண்ணியம் செயதிருக்க வேண்டுமம்ம ? திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் நடந்தே ஆகனும்" என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார். மஸீதா செய்வதறியாது நின்றாள்; அமைதியின்றித் தவித்தாள்.
சிந்தனையில் மூழ்கியிருந்தவள் ஏதோ முடிவுக்கு வந்தவள் போல் எழுந்து சில உடைகளையும் தஸ்தாவேஜுகளையும் எடுத்துக் கொண்டு மூன்று தினங்களில் வருவதாகக் கூறி வழமைபோல் வேலைக்குத் திரும்பி விட்டாள்.
பக்கத்திலுள்ள தபால் கந்தோருக்குச் சென்று ஒரு வார லீவுக்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டு லதாவையும் வசந்தியையும் மாலையில் சந்திப்பதாக அறிவித்துவிட்டே சென்றாள்.
குறிப்பிட்டபடி, மாலையில் சிநேகிதிகளைச் சந்தித்தாள். "என்ன மஸதா, உன் அப்பா என்ன சொல்கிறார்? விபரத்தை சொன்னாயா என்றாள்." "லதா, விதி என் வாழ்வோடு விளையாட ஆரம்பித்து வி டது, திருமணம் நடந்தே தீரும் என்று டெடி சொல்லிவிட்டார். என்னால் எதுவும் சொல்ல முடியல்ல அனாதையாகிவிட்டதன் கொடுமையை இப்பதாண்டி உணர்கிறேன், என் தாய் உயிரோடு இருந்திருந்தால் என் நெஞ்சின் வேதனைகளை உணர்ந்திருப்பார்; எனக்காக டெடியிடம் வாதாடி இருப்பாங்க; என்ன செய்வது நான் கொடுத்துவைத்தவளல்ல" என்று கண்ணிர் மல்கக் கூறினாள்.
 
 

"அழாதே மஸதா, நாம் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் உன்னை எங்கள் உடன் பிறந்தவளாகவே எண்ணியுள்ளோம்; உன் கண்கள் கலங்குவதை எங்களால் சகிக்க முடியாது; உன் வாழ்வு சீரழிந்து போவதை எங்களால் அனுமதிக்க முடியாது; உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் உன்னை என் அண்ணன் மூலம் வெளிநாட்டுக்குத் தொழில் ஒன்றுக்கு உன் திருமணத்துக்கு முன் அனுப்பிவைக்கின்றேன் சம்மதமா?" என்று கேட்டு முடிக்கு முன் "லதா, நல்ல ஐடியாடீ, இன்னும் சிறிது நேரத்தில் அண்ணன் வந்திடுவார்"
"வா டீ சாப்பிடலாம்" என்று மஸதாவை கூட்டிப் போனாள்.
மஸதாவுக்கு வியப்பாகவும், திகைப்பாகவும் இருந்தது. தனக்காக, தன் தோழிகள் எடுக்கும். சிரமத்தை எண்ணி வியந்தாள். மனதில் பலவிதமான எண்ண அலைகள் முட்டி மோதின.
தாயை இழந்தபோதிலும், குறை தெரியாது கண்போன்று காத்து, தன் தேவைகளை, ஆசைகளை மறுப்புத் தெரிவிக்காது நிறைவேற்றி, வளமான வாழ்வுக்கு வழிகாட்டியாக கல்வியையும் அளித்துப் பாதுகாத்த அன்புத் தந்தையையும், உற்றார் உறவினர்கமையும் பிரிந்து கண்ணுக்கெட்டாத் துாரத்தில் வேதனைச் சுமைகளோடு கடமையாற்றப் போவதா? சிநேகிதிகளின் கோரிக்கையை நிராகரிப்பதா? விடை காணாமல் தடுமாறினாள். சிந்தனை வயப்பட்டவள் அப்படியே அயர்ந்து தூங்விட்டாள்.
லதாவும், வசந்தியும் பரிதாபத்தோடு அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்னர். எதிர்பார்த்திருந்தது போன்று வசந்தியின் அண்னன் வந்தார். வசந்தி அவள் அண்ணனிடம் முழு விபரங்களையும் கூறி முடித்தாள். ஏற்கனவே, கசாப்புகடைக்காரனில் மகன் நிசாமைப் பற்றி நன்கு தெரிந்திருந்த கிருஷ்ணன் அதிர்ந்து போனான். "மஸதாவை அந்தப் போக்கிரிக்கா? நோ. நோ அது நடக்கக்கூடாது.
"எங்கே உன் பிரன்ட்? நான் அவவோடு பேசணும்" என்றான். மஸதாவை அழைத்து வந்தனர். கண்கள் கலங்கியிருந்தவளைப் பார்த்துக் கிருஷ்ணன் "சிஸ்டர் நான் எல்லாம் கேள்விப்பட்டேன். கவலைப்படாதீங்க, நிங்க விரும்பினா உங்களுக்கு உதவத் தயாரயிருக்கேன்; உங்க வேதப்படி நமது உணவு, எங்கெல்லம் தூவப்பட்டிருக்கோ அதை அங்கெல்லாம் போய் பொருக்கத்தான் வேண்டும்; எந்த இடமும் நமக்கு நிரந்தரமல்ல;

Page 13
JSæ2gsGFæJgsr:5 sÆ, æD-FassI7 C16)
வாழ்க்கையும் நிரந்தரமில்ல; விதி நம்முடன் விளையாடும்போது நாம் சோர்ந்துவிடாமல் மதியால் வெல்ல முயற்சிக்க வேணடும்; இது எந்த மதமும் ஏற்றுக்கொள்ளும் உண்மை; அந்த நிசாமைப் பற்றி எனக்குத் தெரியும்; சரி இனி விசியத்துக்கு வருவோம்; டுபாயில் நல்லதொரு தொழில் வாய்ப்பிருக்கிறது; கம்பெனியொன்றில் வரவேற்பாளராக கடமையாற்ற ஒருவர் தேவை; இன்னும் மூன்று தினங்களுக்குள் அனுப்ப வேண்டும். இஷடமானால் எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்கிறேன்" என்றவன் பதிலுக்காக அவள் முகத்தைப் பார்த்தான்.
"பிரதர் நீங்கள் மூவரும் எனக்காக எடுக்கும் சிரத்தைக்கு எப்படி நன்றி சொல்வதென்றே புரியவில்லை. இந்த இக் கட்டான சூழ்நிலையிலிருந்து தப்புவதற்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஆகையால். " மேலே பேச முடியாமல் தொண்டையடைத்தது. •
வழமைபோல் நிசாம் பணத்தடன் வங்கிக்குச் சென்றபோது அங்கே மஸ"தாவின் ஆசனத்தில் வேறொருவர் அமர்ந்திருந்தார். புதுமுகமாக இருந்தபடியால் வழக்கத்தை விட விரைவாக காரியங்களை முடித்துக் கொண்டு வெளியேறிவிட்டான். "இன்னும் சில தினங்களில் புதுப் பெண்ணாகப் போகிறவள் லீவில் இருக்கிறாளாக்கும்" என்று நினைத்த
வண்ணம் தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினான். t
திட்டப்படி எல்லா ஒழுங்குகளுடனும் மஸதா விமானம் ஏறினாள். தன் அன்புத் தந்தையை, உயிரினும் இனிய தோழிகளை, உறவினர்களை பிரிந்த வேதனையும், நிம்மதியான தொழிலை விட்டு திக்கெட்டாத் தூரத்தில் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதே என்று கலங்கினாள். லதாவுக்கும் வசந்திக்கும் துக்கம் நெஞ்சையடைத்தது.
என்றாலும் பெரும் துன்பத்திலிருந்து தன் தோழியைக் காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதி உள்ளத்துக்கு ஆறுதலளித்தது.
நாட்கள் நகர்ந்தன. வாரமொன்றும் ஆகிவிட்டது. நடக்கவிருந்த திருமணம் மணப்பெண் இல்லாததால் தடைப்பட்டதாலும், ஆவலுடன் பக்கீர் நானா செய்த ஒழுங்குகள் சிதைந்ததினால் ஏற்பட்ட ஏமாற்றமும் நிசாமை மட்டுமல்ல இரு குடும்பங்களையும் பெரும் தாக்காத்திற்குள்ளாக்கியது மட்டுமன்றி மஸீதாவின் தந்தையான காஸிம் நானாவைப் பெரிதும் பாதித்தது.

நிசாமினால் கடமைகளையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. முகத்தில் கல கலப்பின்றி, ஒளியின்றி இயந்திரமாக உலாவினான். மஸதாவினிடத்தில் வேலை செய்பவரிடம் "இந்த இடத்தில் முன்பு வேலை செய்த மிஸ் இப்போ எங்கே வேலை செய்கிறாங்க?" என்று கேட்டான். "ஒ. மிஸ் மஸதாவா, அவங்க லீவில் போனவ இன்னும் திரும்பல்ல. ஆனால், அவட பிரன்ஸ் லதாவும், வசந்தியும் மேல் மாடியில் இருக்கிறாங்க. விசாரித்துப் பாருங்க" "ஒகே, மிஸ். தேங்ஸ்" என்று கூறியவன் மாடியை நோக்கி விரைந்தான்.
மேலே வாசலில் இருந்த பையனிடம் இருவரைப் பற்றியும் கேட்டு சந்திக்க விரும்புவதாகக் கூறினான். "சரி சார். நான் போய்ச் சொல்கிறேன். பத்து நிமிடத்தில் டீ டைம். வெளியே வருவாங்க"
"மெடம், உங்களை ஒருவர் சந்திக்க வந்துள்ளார். பிரைவேட்டாகப் பேசனுமாம். வெளியே இருக்கிறார்" என்றதைக் கேட்டதும் வசந்தி திடுக்கிட்டாள். மஸதாவின் உறவினராக இருப்பாரோ என்ற சந்தேகம். "சரி. நான் இருபது நிமிடங்களில் வருவதாகச் சொல்" என்றாள்.
சில நிமிடங்களில் வசந்தி வந்து நிசாமை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றாள். "யேஸ். உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று சாந்தமான குரலில் கேட்டாள். "ஒரு முக்கிய தகவலைப் பெறவே வந்தேன்." என்றதும் என்ன தகவல்? என்று கேள்விக்குறியோடு அவனைப் பார்த்தாள்.
"முதலாம் மாடியில் கெஷியராக இருந்த மிஸ் மஸதா இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று அறிய விரும்புகிறேன். நீங்க அவரின் பெஸ்ட் பிரன்ட் என்றும் அறிந்தேன். தயவுசெய்து தெரிந்திருந்தால் சொல்வீர்களா?" என்றவன் என் பெயர் நிசாம் என்று கூறி முடிக்குமுன் "என்ன நிசாமா?" என்று வியப்போடு வாயைத் திறந்தாள். "யூ ஆர் நிசாம் கசாப்புக் கடைக்காரனின் மகனான கொலைப்பாதக நிசRல் நீர்தானா?" என்று கோபத்தோடு அவனை நோக்கினாள். தன் தோழியைத் தங்களிடமிருந்து பிரித்தவனின் முகத்தைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது.
நிசாம் திக் பிரமை பிடித்தவன் போல் நின்றான். அவன் உடம்பெல்லாம் வியர்த்தது, வெட்கம், கோபம் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. ஒரு பெண் இப்படிக் கேவலமான முறையில் அதுவும் படித்த, பண்புள்ள பெண் இப்படிப் பேசுவதென்றால்.

Page 14
"மெடம் ப்ளிஸ் கொஞ்சம் மெதுவாகப் பேசுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்" என்று மெதுவாகக் கேட்டான். ஏளனமாக அவனைப் பார்த்தவள் "என்ன ஒன்றும் புரியவில்லையா. ஆமாம், இப்போது ஒன்றும் விளங்காதுதான். அந்தப் பேதையின் வாழ்வில் மண்ணைத் தூவிவிட்டு இன்னும் என்ன திட்டத்தோடு இங்கே வந்திருக்கிறீர்கள்" என்று பொறிந்து தள்ளினாள்.
நிசாமுக்கு தலையெல்லாம் எரிவது போல் இருந்தது. அப்படியே அவள் கன்னத்தில் அரைந்துவிடலாம் போல் தோன்றியது. எனினும், பொறுத்துக் கொண்டான்.
அங்கே கேட்ட ஆரவாரம் பக்கத்து அறைகளில் சிலரின் செவிகளுக்கு எட்டியதும், முன்டியடித்துக் கொண்டு அங்கே வர, அவர்களில் ஒருவர், நிசாமின் கைகளை பிடித்துக்கொண்டு "என்ன மிஸ்டர்” என்று மிரட்ட முயன்றபோது வசந்தி இடைமறித்து "நோ நோ அப்படியொன்றுமில்லை" என்று கூறவே அந்த அரவம் கேட்டு லதாவும் அங்கு வந்தாள். நிசாமையும் வசந்தியையும் மாறி மாறி பார்த்தவள் "என்ன வசந்தி இங்கே குழப்பம்" என்றாள். "என்ன லதா ஏன் இவரை உனக்குத் தெரியாதா? மஸ்தா விடயமாக நீ சென்ன நிசாம்தானே இவன்" என்றபோது பதறிப் போன லதா, ஓ.நோ.நோ. வசந்தி நான் சொன்ன நிசாம் இவரில்லை.
"என்ன இவரில்லையா. என்ன சொல்கிறாய்? அப்படீன்னா அந்த கசாப்புக்கடைக்காரரின் )கனில்லையா இவர்.?"
"ஓ. என்ன இது. எல்லாம் குழப்பமாக இருக்குதே." என்றபோது
சூழ்ந்திருந்த எல்லோரும் நிசாமை உற்று நோக்கினர்.
லதா எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் "வசந்தி நாம் தப்புக் கணக்குப் போட்டுவிட்டோமா? நான் சொன்ன நிசாமில்லை இவர். என்ன காரியம் செய்து விட்டோம்.?" என்றவள் மேலும் பேசமுடியாமல் விக்கித்து நின்றாள்.
 
 

வளமான வாழ்வை அமைத்துக் கொள்ள துடித்தவளின் இலட்சியக் கனவுகளை கனவாக்கியே விட்டோமா? முன் பின் யோசியாமல் ஆராய்ந்து பாராமல் எடுத்துக் கொண்ட முடிவு விபரீதமாக முடிந்ததை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்தனர் இருவரும்.
நிசாம் அங்கு நிலவிய போராட்டத்தைக் கலைக்கும் முகமாக நிதானமாக பேசினான். "மிஸ் வசந்தி வெள்ளம் பெருக்கெடுத்தோடும் போது பெய்த மழையைப் பற்றி சிந்திப்பதில் பயனில்லை. ஒரே பெயரில் இரு உருவங்கள் செய்த விளையாட்டை விளங்கிக் கொள்ள முடியாமையினால் ஏற்பட்ட வினை இது. சிநேகிதி மேல் கொண்ட அதிக அன்பினால் நீங்கள் இருவரும் செய்த உதவி உதவாக்கரையாகிவிட்டது. அவளைக் கண்டு பிடிக்க வேண்டும். தயவு செய்து மஸதா இருக்கும் இடத்தை சொல்லி விடுங்கள்" என்று பரிதாபமாகக் கேட்ட நிசாமைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது அவ்விருவருக்கும்.
"மிஸ்டர் நிசாம் உங்கள் மனம் புண்படும் விதத்திலும், மரியாதைக் குறைவான முறையிலும் நடந்து கொண்ட என்னை மன்னியுங்கள். மஸPதாவின் மேல் கொண்டுள்ள உண்மையான அன்பினால் சிந்திக்காமல் தவறான முடிவு செய்துவிட்டோம்"
"சரி, அது இருக்கட்டும் இப்போ மஸ்தா எங்கே?" என்று பதறினான் நிசாம். நடந்தவற்றை நிசாமிடம் விளக்கியபோது நிசாம் பதறினான். வசந்தி என்ன காரியம் செய்துவிட்டீர்கள்? என் வாழ்க்கையோடு மட்டுமல்ல பல உயிர்களுடனும் விளையாடிவிட்டீர்களே? இதனால் எத்தனை பேர் அவமானத்தையும் மன வேதனைகளையும் அனுபவிக்கிறார்கள் என்று சற்றேனும் உணர்ந்தீர்களா? மனிதாபிமனாமற்ற முறையில் அல்லவா நடந்துள்ளீர்கள்" என்று நெஞ்சுருகக் கூறினான்.
நிசாமின் பதற்ற நிலை அவர்கள் உள்ளத்தை உருக்கியது. "மிஸ்டர் நிசாம், தயவு செய்து கவலைப்படாதீர்கள். எப்படியோ தவறு நடந்துவிட்டது. நாங்கள் அறிவீனமாக நடந்துகொண்டதால், எத்தனை உள்ளங்கள் பதறித் துடிக்கின்றன என்பதை இப்போதுதான் உணர முடிகிறது. இதற்குப் பரிகாரம் கண்டேயாக வேண்டும். உங்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்கும் பொறுப்பு இனி எம்முடையது" என்று இருவரும் கூறியதைக் கேட்டு நிசாம் உண்மையிலேயே நெகிழ்ந்து போனான்.

Page 15
Asadassavaanas is straoagrassrif C20)
அவர்களின் திட்டப்படி மறுநாள் மாலை குறிப்பிட்ட விலாசத்தில் அவர்களைச் சந்திக்க முடிவுசெய்த பின் நிசாம் சிந்திக்கலானான். அங்கேதான் மஸதா இருப்பாளா? அவளை மறைத்துவைத்துவிட்டு வேடிக்கை காட்டுகிறார்களா? பெண்களை நம்பவே முடியாது என்றெல்லாம் அவன் மனம் பலவாறாக எண்ணியது.
மறுநாள் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று அழைப்புமணியை அழுத்தினான். எதிர்பாராத விதமாக நெருங்கிப் பழகாவிடினும் அடிக்கடி சந்திக்கும் நபர் ஒருவர் "கம் இன் மிஸ்டர் நிசாம்" என்று கதவைத் திறந்தபோது, திடுக்கிட்டான். வசந்தியும், லதாவும் வந்து ஹலோ இவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஆனால், யாரென்று தெரியாதல்லவா?.
"மிஸ்டர் கிருஷ்ணாவை முன்பே தெரியும். ஆனால், இங்கே என்ன சம்பந்தம் என்பதுதான்.?"
"அவர் எனது சகோதரர், இவருக்கு எல்லா விடயங்களும் தெரியும். இந்த நிகழ்வுக்காக அவர் மிகவும் வருந்துகிறார்." என்று கூறி முடிக்குமுன் மிஸ்டர் நிசாம் நடந்த விஷயங்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். எது நடந்தாலும் அந்த மேலான இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடக்காது. இந்த நம்பிக்கை நம் ஒவ்வொருவரிடத்திலும் உள்ளது. "டோன்ட் வொறி" அன்று மஸ்தாவின் மனதில் ஏற்பட்டிருந்த வேதனைகளையும் வெறுப்புத்தன்மையும் அதனால் அவள் வாழ்வையே முடித்துக்கொள்ளும் அளவுக்கு முயற்சித்த போதுதான் நான் அந்த ஏற்பாட்டைச் செய்தேன். இல்லாவிட்டால் மஸதா இன்று உயிரோடு இருக்கமாட்டாள் என்று கூறிமுடித்தான் கிருஷ்ணன்.
"F நீங்கள் அவளைக் காப்பாற்றுவதற்காகச் செய்த முயற்சிதான் அது என்பதை உணர்கிறேன். இனி எப்படி அவளைக் காண்பது? என்ன செய்வது? சொல்லுங்கள் மிஸ்டர் கிருஷ்ணா?" என்று பதறினான் நிசாம்.
"ஓகே நிசாம், டுபாயில் உள்ள ஸ்தாபனம் ஒன்றுக்கு முகாமையாளர் பதவிக்கு ஒருவர் தேவை. ஒரு வாரத்துக்குள் போக வேண்டும். ஏற்கனவே ஒருவரை தெரிவு செய்து, எல்லா ஒழுங்குகளும் செய்தாயிற்று. ஆனால், நேற்று வசந்தி மூலம் உங்கள் கதையை கேட்ட பின், ஒரு காரணத்தைக் கூறி அவரைத் தடுத்து விட்டேன். உங்களைக் கேட்காமலேயே. நீங்கள் அந்தப் பதவிக்கு போகலாம். மஸீதா அந்தக் கம்பனியில்தான்

A532AGGao AGngs sezó aberesó7f
இருக்கிறா", "என்ன அங்கேயா..?" என்று வியந்நவன், கிருஷ்ணனின் கைகளை இறுகப்பிடித்து "நிச்சயமா நிச்சயமா. நான் போகிறேன்" என்று கண்ணிர் மல்கக் கூறினான்.
லதாவும், வசந்தியும் நிம்மதியாக மூச்சுவிட்டனர். கைதவறிப்போன பொருள் கிடைத்தது போன்றதோர் உணர்வு அவர்கள் உள்ளத்தில் ஊடுறுவிச் சென்றது.
நிசாம் டுபாய் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கிருஷ்ணன் செய்தான். விமான நிலையத்துக்கு புறப்படு முன் வசந்தி நிசாமிடம் லதாவுக்கு கடிதம் ஒன்றைக் கொடுத்தாள். அப்போது நிசாம், "மிஸ் வசந்தி தயவு செய்து எக்காரணம் கொண்டும் நான் ஏன் அங்கு செல்கிறேன் என்றோ நான்தான் அவளுக்கு நிச்சயமிக்கப்பட்டவன் என்பதையோ மஸீதா அறியக் கூடாது” என்ற உறுக்கமான வேண்டுகோளோடு புறப்பட்டான்.
விமானத்தின் வேகத்தோடு நிசாமின் எண்ணங்களும் போட்டிபோட்டுக் கொண்டு விரைந்தன. இதுவரை நடந்து முடிந்த ஒவ்வொரு சம்பவமும் மனத்திரையில் நிழலாடின.
காதலித்தவுடன், கைகோர்த்தவுடன் கண்ட இடங்களில் எல்லாம் உலாவுவதிலும், கொஞ்சிக் குலாவுவதிலும் பொழுதைக் கழிக்கும் கன்னியரும், காளையரும் இன்று ஏராளம். ஆனால், நிசாம் அதற்கு மாறாக மஸஉதாவை விரும்பியும் அவளிடம் சொல்லாமலேயே மனக்கட்டுப்பாட்டுடன் மரியாதையாக நடந்து கொண்டதோடு பெற்றோரின் விருப்பத்தோடு அவளைப் பார்த்துப் பேசித் திருமணம் செய்ய எண்ணியதையும், அதன் பின்னால் நடந்த போராட்டங்களையும் பிறகு ஏற்பட்ட மனப் போராட்டங்களையும் நினைத்துப் பார்த்தான். அதே பொழுதில் தான் மேற்கொண்டிருக்கும், போகும் காரியத்திலும் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ என அஞ்சினான்.
விமானத்திலும் புதுமையான அனுபவங்கள் விமானப் பணிப் பெண்கள் ஒவ்வொரு பிரயாணிகளின் தேவைகளுக்கேற்ப உபசரித்துக் கொண்டு இருந்தனர். மேலும், விமான நிலையத்தில் கட்டியணைத்து முத்தமிட்டு கண்ணிரும் கம்பலையுமாக பிரிந்தவர்க்ள் விமானத்தில் ஏறியதும் அப்பப்பா என்ன கொண்டாட்டம் பஸ் வண்டிக்குள் ஏறியது போல் கடையொண்றினுள் புகுந்துவிட்டது போல் நடந்து கொண்டனர். பணிப்பெண்களாக போகிறவர்கள் தான் இப்படிக் கும்மாளம் இடுவது எமது முஸ்லிம் பெண்கள் இப்படி அனாகரிகமான முறையில் அந்நிய

Page 16
ந2றச்வநாத ஆசைகள் 22
நாட்டவர்ளும் இருக்கும் விமானத்தில் நடந்து கொள்ளுவது அசிங்கமாகவும் வேதனையாகவும் இருந்தது நிசாமிற்கு.
விமானம் டுபாய் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதாக விமானப் பணிப்பெண் அறிவித்துக் கொண்டிருந்தாள். நிசாமின் உள்ளம், இனம் புரியாத ஒரு உணர்வில் தவித்துக்கொண்டிருந்தது.
விமானம் தரை தட்டியது. சகபிரயாணிகளுடன் நிசாமும் பிரயாணப் பொதிகளைப் பரிசோதிக்கும் இடத்தில் அவற்றை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன் தன்னை அழைத்துச் செல்ல ஏஜன்ட் வந்திருப்பார் என்று சுற்றுமுற்றும் பார்த்தான். தூரத்தில் வெள்ளை உடையில் அரபி ஒருவர் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். வந்தவர் "யூ ஆர் மிஸ்டர் நிசாம் ஆர்ன்ட் யூ" என்று ஆங்கிலத்தில் கேட்டார். மகிழ்ச்சி பொங்க "யேஸ். ஒப் கோஸ்” என்றவன் அவரது கைகளை பிடித்துக் குலுக்கினான்.
அவனது பாஸ்போட்டை பார்த்துவிட்டு கடுங் குளிராக இருந்தது எங்கும் பனி மூட்டம் குளிரினால். நிசாம் குளிர் கடுமையாக இருக்கிறது அல்லவா நாளடைவில் சரியாகிவிடும். என்று ஏயர் போட் ரெஸ்டுரண்டுக்கு அவனை அழைத்துச் சென்றான். "காப்பி சாப்பிடுவோம் குளிருக்கு இதமாக இருக்கும்" என்று கூறி காப்பிக்கு ஆடர் கொடுத்தான்.
காப்பியை குடித்து விட்டு அரபியின் கார் இருக்கும் இடத்திற்கு வந்து காரில் ஏறிக் கொண்டனர். காரில் ஏறியதும் உடம்பு உஷ்ணமாவதையும் உணர்ந்தான். காருக்குள் ஹிட்டர் இயங்கிக் கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடத்தை இருபது நிமிடங்களுக்குள் வந்தடைந்தனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி விட்டு நாளை காலை எட்டு மணிக்கு வந்து கூட்டிப் போவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார்.
புது இடம் புது சூழல் மாற்றமான சீதோஷ்ண நிலை எல்லமே ஏதோ ஒரு விதி மயக்கத்தையும் சோர்வையும் கொடுத்தமையினால் எதையும் சிந்திக்கும் சக்தி அற்றவனாய் உடைகளை மாற்றிக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது கையில் காப்பிக் கோப்பையுடன் ரூம் போய் நின்றான். காப்பியை பெற்றுக் கொண்டு அவனிடம் ஆங்கிலத்தில் இங்கு தன்னைக் கூட்டி வந்தவரைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டதும் நிம்மதியாக இருந்தது.

நிறைவேறாத ஆசைகள் :
மறுநாள் காலை, அரபி வந்து அவனை ஒரு பெரிய கட்டடத்துக்கு அழைத்துச் சென்றார். "வாருங்கள் மிஸ்டர் நிசாம்" என்று வரவேற்பறையை நெருங்கியவர் "மிஸ். மிஸ்டர் அப்துல்லா வந்து விட்டாரா?" என்று கேட்டபோது "யேஸ். சார்" என்று கூறி தலை நிமிர்ந்தவள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் "நீங்க. நீங்க இங்க எப்படி எப்ப வந்தீங்க..?" என்றாள் இதைக் கண்ட அரபியும் "ஒ. யூ. நோ ஹிம்?" என்று கேள்விக் குறியுடன் அவளை நோக்கினார்.
"சரி போய் பொஸ்ஸ"டன் பேசிவிட்டு வாங்க. மிக ஆறுதலாகக் கதைப்போம்." என்றபோதும் நிசாம் மிகப் பொறுமையோடு எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், மஸாதாவைக் கண்டதும், அதுவும் இவ்வளவு சீக்கிரம் கண்டதும், அவன் மனதில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் அளவே இல்லை.
என்ன நோக்கத்திற்காக அவன் நாட்டை விட்டு புறப்பட்டானோ அந்த நோக்கங்கள், ஆசைகள், எண்ணங்கள், இவற்றை நிறைவேற்றிக் கொள்ள அவள் துடித்த துடிப்புக்கள் ஆர்வங்கள் உள்ளத்தில் இருந்த போதிலும் அதை அவளிடம் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், இருந்தாலும் கூட அவளது மனதில் ஏற்பட்டிருக்கும் கரையை அகற்றுவகதான் அவனது குறிக்கோள்.
நிசாம் தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டு, மறுநாள் முதல் வேலையை மேற்கொள்ளும் முடிவுடன் மஸ"தாவை நோக்கி வந்தான்.
"ஹலோ எப்ப வந்தீங்க வங்கியில நல்ல தொழிலையும் விட்டுவிட்டு?" என்று இழுத்தான். "ஒ. அதுவா மிஸ்டர் நிசாம் அது பெரிய கதை. இப்போ நேரம் போதாது பிறகு பேசுவோம்ே" என்றாள். அவள் சிரித்தாலும் அவள் முகத்தில் சோகத்தின் சாயல் இழையோடிக் கொண்டிருந்தது. கண்கள் கனிவாக அவனை நோக்கின.
"இப்ப எங்கே தங்க ஏற்பாடு பன்னப்போறிங்க. என் விளா கராமாவில் தான் உள்ளது. உங்களுக்கு வேண்டுமானால் எனது லொஜ்ஜிலேயே தங்கிவிடலாம். புறம்பான, எல்லா வசதிகளுடன் சில அறைகள் காலியாக உள்ளன" என்று மஸதா கூறியபோது. நிசாமின் உள்ளத்தில் அவனை அறியாமலேயே இன்ப உணர்ச்சி உண்டானது. எப்படியானாலும், நாடுவிட்டு நாடு வந்தவர்கள் தம் தாய் நாட்டினரை காணும்போது உறவினர்களை, நண்பர்களை காணும் போது, ஒரு புது வகையான பாசம், பற்றுதல் ஏற்படுவது இயற்கையே.

Page 17
தி2ேறதவேந3ரத ஆசைகர்ை C24)
அன்று அரை நாள் லிவுடன் நிசாமையும் அழைத்துக் கொண்டு, தனது விளாவை நோக்கிப் புறப்பட்டாள். கணல் கக்கும் வெயில் அத்தோடு பாலை வனத்தின் காற்று, தூசியை வாரி இறைத்து. தன் அபாயத்ததைக் காட்டிக் கொண்டு இருந்தது.
நிசாம் "என்ன மிஸ், வெறும் மணல் தரையாகவே இருக்கிறதே. மரம் மட்டைகள் அறவே கிடையாதா? எப்படி இந்த உஷ்ணத்தை சகித்து மக்கள் வாழ்கிறார்கள்?" என்று பேச்சை ஆரம்பித்தான்.
"ஆமாம் மிஸ்டர் நிசாம் சூடு, குளிர் காற்று போன்ற காலத்தின் கோலங்களை இன்னும் நிறைய காணப் போகிறீர்கள். பழக்கப்பட்டு விட்டால் இட்ஸ் வெரி சிம்பள்" என்று கூறி முடிக்கவும், இறங்க வேண்டிய இடம் வரவே டக்ஸியை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
அது ஒரு சாதாரண விளா அல்ல. பத்துக் குடும்பங்கள் வாழக் கூடிய இரண்டு மாடி வீடு. இவ்வளவு பெரிய வீட்டில் இவள் மட்டுமா என்று யோசித்த வண்ணம் உள்ளே நுழைந்தவன் திகைத்தான். ஆகா! எவ்வளவு பெரிய வீடு, அழகான வீடு பல விதமான அலங்காரப் பொருட்களுடனும் , பெரிய வேலைப் பாடுகளுடன் கூடிய தளபாடங்களுடனும் பெரிய திறைச் சீலைகள், அலங்கார விளக்குகளுடனும் ஒரு இன்ப லோகமாகத் தோன்றியது. வெளியே இருந்த உஷ்ணம் இல்லை; இதமான குளிர் உடலை வருடியது; பார்ப்பதற்கு ஒரு குட்டி மாளிகைதான்.
நிசாமை அமரும்படி சொன்ன மஸதா, "நிசாம் என்ன குடிக்கிறீங்க, சூடாகவா, கூலாகவா" என்றாள். "கூல் நன்றாக இருக்கும்" என்று அவளே கூறிய வண்ணம் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஆப்பிள் ஜூசை எடுத்துப் பரிமாறினாள்.
இருவரும் சிறிது நேரம் கம்பனியைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் கதைத்தனர். பிறகு சிறிய இடைவேளைக்குப் பின் "ஆமா எப்படி இந்த ஜொப்புக்கு வந்தீங்க? ஏன் இருந்த வேலையை விட்டீங்க?" என்று தன் மனதை குடைந்து கொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள் மஸ"தா.

நிறைவேநாத ஆசைகர்ை : (25)
நிசாம் சிரித்துக் கொண்டே "நல்ல சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்? அது சரி உங்களுக்கு எப்படி இங்க வர சான்ஸ் கிடைத்தது?" என்று அவளை மடக்கினான். அது உங்கள் பதிலிலேயே உள்ளதே என்று சிரித்தவண்ணம் கூறினாள் மஸதா.
நாட்கள் நகர்ந்தன நிசாமிற்கு அந்த விளாவிலேயே தனி அறை சகல வசதிகளுடன் கிடைத்தது. இருவருக்குமான சமையலை மஸதாவே தயாரித்தாள்.
இரு இளம் உள்ளங்கள், இளமையின் இனிய ராகங்களை மீட்டிப் பார்க்க ஆசைப்படும் வயதினர் வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்பட்டுத் தட்டுத் தடுமாறி நிற்பவர்கள் ஊமைக் காதலர்கள். விடுமுறை நாட்களையும், மாலைப் பொழுதுகளையும் ஒன்றாகவே கழித்தாலும் உள்ளங்கள், உணர்ச்சிகள் ஆசைகள் ஒரு கட்டுகோப்புகுள்ளேயே அடங்கியிருந்தன.
மஸதா சில நேரங்களில் பலத்த சிந்தனையுடனும் சோர்ந்து போன முகத்துடனும் காணப்படுவதை அவதானித்த நிசாம் லதாவையும் வசந்தியையும் பற்றி இலேசாக் கேட்டுப் பார்ப்போமா என்று யோசித்ததுண்டு.
மனச்சாட்சி இருக்கிறதே அது மிக பொல்லாதது நீதிபதியின்றி நியாயங்களை எடுத்துச் கூறுவது தவறு செய்தவர்களை சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து கொண்டிருப்பது அதன் போராட்டத்தின் முன் யாவரும் தலைவணங்கியே ஆகவேண்டும்.
"ஆகையால், துணிந்து ஒருநாள் மஸதாவிடம், நான் உங்களிடம் மிக முக்கியமான விஷயம் ஒன்றைக் கேட்க ஆசைப்படுகிறேன் கேட்கலாமா..?” என்று கேட்ட போது, அவள் சற்று யோசித்துவிட்டு, "இதுவரை இல்லாத விஷயம் என்ன?" என்றாள்.
"ஒரு தாய் பத்து மாதத்துக்கு மேல் வயிற்றில் பிள்ளையை சுமக்க முடியாது! அது போல் ஒரு உண்மையை எவ்வளவு காலம்தான் மறைத்துக் வைத்துக் கொள்ள முடியும்.?"
"என்ன இன்று புதிராகப் பேசுகிறீர்கள்? த.வு செய்து தத்துவம் பேசாமல் விஷயத்தை சொல்லிவிட்டால் முடிந்த 5' என்றாள்.

Page 18
JA5 áZV2A3ã62 LMGs I, 75 S2ázØ

Page 19
as aloascap gray5 sea, 62drazas 62if Ꮹ28Ꭰ
சரீபின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் திருப்தியாக இல்லாதிருப்பதை சரீனா உணர முற்பட்டாள். பொருளாதாரத்தை சீர்படுத்திக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டான். அடிக்கடி நாட்டின் நிலவும் அமைதியற்ற நிலை தொழில் முன்னேற்றத்துக்கும் தடையாக இருந்தது.
ஜெஸிராவும் சாதாரண தரத்தோடு பள்ளியிலிருந்து விலகிவிட்டாள். "பெண்கள் அதிகம் படித்து என்ன பயன்” என்ற மூடக்கொள்கையும் அவளின் பெற்றோர் மனதில் ஓரளவு இருந்ததோடு பொருளாதார சிக்கலும் அதற்கு உடந்தையாகிவிட்டது.
இப்போது ஜெஸிரா கன்னிப்பருவத்தின் விளிம்பில் புது மலராக மலர்ந்திருந்தாள். இன்று அழகிருந்து என்ன பயன்? குடும்பம் கோத்திரம் எப்படித்தான் இருந்த போதிலும் "பணம் இல்லாதவன் பினம் என்பதுதானே" வேதாந்தமாகவுள்ளது. ஜெஸிராவை யாருக்காவது மணம் செய்து கொடுக்கும் பல முயற்சிகளைச் செய்த போதிலும் பலன் கிட்டாததைக் கண்ட சரீப், சரீனாவை வெளிநாட்டுக்கு அனுப்பி குடும்பச் சுமையைக் குறைக்கலாமா எனறு யோசித்தான். அவள் விரும்பாத ஒரு காரியத்தை எப்படிச் சாதிக்க வைப்பது என்பது பெரும் பிரச்சினையாகவிருந்தது. சில நேரங்களில் வெளிநாடு சென்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறியுள்ளதைப் பற்றியும் அவர்கள் தற்போது செளகரியமாக வாழ்வது பற்றியும் அடிக்கடி சரீனாவிடம் கதைத்தபோது கணவனின் கருத்து என்னவென்பதை அவள் ஓரளவு புரிந்து கொண்டாள். அப்போதெல்லாம் பாட்டி உயிரோடிருக்கும் போது சொன்னவை ஒன்றின் பின் ஒன்றாக நினைவுத் திரையில் நிழலாடின.
"கணவனே கண் கண்ட தெய்வம்", "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷண்", என்ற நம் முன்னோரின் போதனைகளும் அவள் நெஞ்சத்தை மென்மேலும் மென்மையாக்கின. அதன் கருத்தை உணர்ந்து இன்னும் நாம் ஊமையாக இருக்கக் கூடாதென்று எண்ணியவளாய், "இந்தாங்க, ஜெஸிராவுக்கும் வயதாகிவிட்டது நாங்க ஒன்றும் யோசிக்காம இருந்தா எப்படி?" என்று கதையை ஆரம்பித்தாள். "சரீனா நானும் அதைத்தான் யோசிச்சேன். ஒரு ஆண்பிள்ளை இல்லாத

நிறைவேநதரத ஆசைகர்ை C29)
குறை இப்போதுதான் புரிது. பிரச்சினைகள் கூடும் என்றுதானே நாங்கள் குடும்ப வாழ்வில் கட்டுப்பாட்டைப் பார்த்தோம். ஆனால், இன்னும் பிரச்சினை குறையவில்லையே. இறைவன் நாட்டப்படியே எல்லாம்" என்ற போது அதைப்பத்தி பேசி என்னதான் ஆகப் போகுது? இனிமேலாவது ஏதாவது செய்வதற்கு வழியப்பரருங்க” என்றால் சரீனா.
"சரீனா நீங்க. விருப்பமென்டா. என் நண்பன் ஒருவர்ட உதவியால டுபாய் போக ஏற்பாடு செய்ய முடியும். பல்லக் கடிச்சுக் கொண்டு இரண்டு வருஷம் இருந்திட்டீங்க என்டா ஜெஸிராவ எங்கட மனம் போல வாழ வைக்கலாம்! என்ன சொல்லுறீங்க..?"
இரண்டு நாட்கள் பலவாறு சிந்தித்த சரீனா ஜெஸிராவின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு வெளிநாடு செல்ல முடிவு செய்தாள்.
காலச்சக்கரம் தங்கு தடையின்றி உருண்டோடியது. சரீனாவும் இரவு பகலாய் உழைத்தாள். வெளிநாட்டு மோகத்தின் தன்மைகளை அப்போது தான் உணர ஆரம்பித்தாள்.
பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்களல்லர், என்றாலும் கடின உழைப்புக்கு பழக்கப்பட்டவர்களுமல்லர். எல்லா இன்பங்களையும் துறந்து தியாக உள்ளத்தோடு கண்களுக்கெட்டாத் தூரத்தில் முன்பின் அறியாதவர்கள் மத்தியில் தொழில் செய்யும் போது பல சிரமங்களை எதிர் நோக்கத்தானே வேண்டும்!
நேரத்துக்கு உண்ண முடியாத, உறங்க முடியாத, களைத்தாளும் சிறிது ஓய்வெடுக்க முடியாத ஒரு சூழ்நிலையில், பாசம், கருணை, பச்சாதாபம் சிறிதுமற்ற சூழலில் நாட்களை கடத்தினாள் சரீனா.
கிடைத்த பணத்தை சுலை சுலையாக கணவனுக்கு அனுப்பினாள். அரபிகள் காட்டு மிராண்டித் தனமான போக்குகளையுடையவர்கள் என்பது மக்களின் சாதாரண நோக்கு. இதனை நன்கு உணர்ந்திருந்தமையால் மிகக் கட்டுப்பாட்டுடன் இறைபக்தி மிக்கவளாய் நடந்து கொண்டாள். அது அவளுக்குப் பாதுகாப்பை அளித்தது.

Page 20
ASa2a3632 nanata25 g2s appag-asari GO
சரீனாவின் உழைப்பு, சfபைத் தட்டிக் கொடுத்தது. வாழ்க்கைச் சக்கரம் அமைதியாக சுழன்று கொண்டிருந்தது. வீட்டில் மனைவியில்லாத குறை மிகவும் பாரமாகத்தான் இருந்தது.
"மனைவியின் அருமை அவள் இல்லாத போதுதான் தெரியும்" என்பார்கள். அது உண்மைதான். பெண்கள் பொறுமையானவர்கள், தங்கள் தேவைகளை, ஆசைகளை கணவனிடம் கூட அச்சத்தினாலும் கூச்சத்தினாலும் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் ஆண்களோ..?
தனிமை ஒரு சுமையாக இருந்தமையால் தனியார் கம்பெனியொன்றில் பாதுகாப்பதிகாரியாக வேலைக்கமர்ந்து ஜெஸிராவை பக்கத்து வீட்டு சமீனாவின் பாதுகாவளில் விட்டுச் செல்வதைப் பழக்கமாக்கிக் கொண்டார்.
இரண்டொரு மாதங்கள் ஓடி மறைந்தன. சரீபின் நடத்தையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருப்பதை மகள் ஜெஸிரா அவதானித்து வந்தாள். சில இரவுகள் வீட்டுக்கு வராமலேயே இருந்திருக்கின்றான். இது அவளுக்கு சற்று மனக்கலக்கத்தைக் கொடுத்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சரீப் தள்ளாடித் தள்ளாடி வருவதைக் கண்டாள். ஜெஸிரா சுபஹத் தொழுக்ைகுத் தயாராகிக் கொண்டிருந்தவள் விரைவில் தொழுதுவிட்டு தந்தையின் அறைக்கு வந்தாள். அங்கே சரீப் கட்டிலில் சாய்ந்திருந்தான். கண்கள் சிவந்து, தலைமுடியும் கலைந்து கிடந்ததைக் கண்டவள் அதிர்ச்சியுற்றாள், "வாப்பா. என்ன வாப்பா இது. இனி நீங்க. வேலைக்குப் போக வேண்டாம்" என்று கண்கள் கலங்கக் கூறினாள். "இல்ல மகள் நேத்து நீண்ட நேரம் வேல; கொஞ்சம் களைப்பா இருந்திச்சி கொஞ்சம். குடிச்சிட்டன். இனிமே. இனிமே இப்படி நடக்காதம்மா" என்று கூறிவிட்டு தலையைக் குனித்துக் கொண்டான்.
அவசரமாகத் தேனிர் தயாரித்துக் கொடுத்தாள். அதை வாங்கி சிறிது குடித்து விட்டு படுத்துக் கொண்ட சரீப் பகல் உணவுக்கும் எழுந்திருக்க வில்லை. மாலையில் எழுந்து குளித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டான்.
நடந்த எதையும் சரீனாவிடம் அவன் காட்டிக்கொள்ளவில்லை. மறு நாளும் இரவில் அதே நிலையில் வந்தவன் பக்கத்து வீட்டிலிருந்த ஜெஸிராவோடு வெளியேயிருந்தே இரண்டோரு வார்த்தைகள் பேசிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டான். ஆனால், பெண்களை. அதனால் தானே

JASáZD2A3 af SDJAG UTJ5 S25 áz02.JP-35677 O31)
கடலின் ஆழத்தை அளவிட்டாலும், பெண்களின் உள்ளத்தை அளவிட முடியாதென்பர். தந்தையின் நடவடிக்கைகளை அவதானித்து வந்த ஜெஸிராவினால் அவற்றை அடக்க முடியவில்லை.
நிலைமையை விளக்கித் தாய்க்கு எழுதினாள். அதைக் கண்ட சரீனா பதறினாள். குடும்பச்சுமையைக் குறைக்க மகளை நல்லதொரு இடத்தில் வாழ்க்கைப் படவைக்க எல்லாவித உணர்ச்சிகளையும் தியாகம் செய்து விட்டு மரக்கட்டையாக இங்கு வாழ்கிறேன்.
அதைப்பற்றியெல்லாம் சிந்திக்காது இப்படி சீர்கெட்டு வாழ்கிறாரா. என்று கலங்கினாள். இப்போது அவளால் ஒழுங்காகக் கடமைகளைச் செய்ய முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்றைச் செய்து எஜமானிடம் திட்டு வாங்கினாள். அவள் ஏதே குழப்பத்தில் இருப்பதை எஜமானினாலும் உணர முடிந்தது.
சில தினங்கள் கழித்து வந்த கடிதங்கள் வழக்கத்துக்கு மாறாக எழுதப்பட்டிருந்ததையும் தன் மீது ஏதோ குற்றம் சாட்டப்படுவது போன்றும் இருந்தது. அவற்றிற்கு பதில் வரையாமல் தடுத்தாள்.
சரீப் வழமையாக வேலைக்குப் போய் வந்த நிலை இடைக்கிடை தடைப்படுவதை ஜெஸிராவும் அவதானித்ததோடு பக்கத்து வீட்டு சமீனாவும் சந்தேகக் கண்கொண்டு நோக்கினாள்.
"மவ ஜெஸி வாப்பா இப்ப அடிக்கடி வீட்டுக்கு வாரதில்ல. நேரம் கழிச்சும் வாரார்; கொஞ்ச நாளா நானும் கவனிக்கத்தான் செய்றன்" என்ற போது "மாமி. எனக்கு ஒன்றுமே விளங்கல்ல. நான் என்ன. செய்வன்" என்று விம்மினாள்.
இதைக் கேட்ட இர்சாதுக்குத் தலை சுற்றியது. மேலும் எதுவும் கேட்காமல் விரைவாக அங்கிருந்து திரும்பி விட்டார்.
இதை எப்படி வீட்டில் சொல்வது.? ஜெஸிராவுக்குத் தெரிஞ்சா. பாவம், மாடாய் உழைக்கிற மனுஷி அனுப்புகிற பணத்தின் திமிர் இது. இவனும் ஒரு மனுஷனா. என்று எண்ணியவாறு வீடு வந்தவர் ஜெஸிரா தாயிடமிருந்து வந்த மடலை வாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். "மக ஜெஸி உம்மா என்ன எழுதியிருந்தாங்க.?" மாமா, உம்மா திடீர் என்று வருவாவாம், வார செய்தியை வாப்பாகிட்ட சொல்லவோ.

Page 21
5623.652 JAGings5 3925, 6227226562 C32)
"அப்படியா..? ஏன் அப்படிச் சொன்னா..?" பெண்கள் வெட்கம், மானம், மரியாதை என்று அதிகமாக யோசிப்பவர்கள் தகப்பனின் வண்டவாளர்களை அவரிடம் எப்படிச் சொல்வது?.
ஆனால், இர்சாத் அவளுக்குத் தெரிந்ததை விட கூடுதலாக அறிந்துள்ளார் என்பதை அவள் எப்படி அறிவாள்.
"இல்ல மாமா, வாறேன் என்று அறிவிச்சிட்டு வரக்கிடைக்ல்லன்னா ஏமாறுவாங்க என்று நினைச்சி அப்படி எழுதியிருப்பாங்க" என்று ஒன்றும் தெரியாதவளைப்போல் பதிலளித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
கணவன் மனைவி என்ற பிணைப்பு இன்று சர்வசாதாரணமானதோர் நிகழ்ச்சியாகிவிட்டது; நாகரீகம் முற்றிவிட்டது. படாடோபமான வாழ்க்கை பழக்கப்பட்டுவிட்டது. குழந்தைகளை பராமரிக்கும் கட்டாயத் தன்மை இன்று தாய்மார்களிடம் அதிகம் இல்லை. பணம் ஒன்றுதான் எல்லாம் என்ற நம்பிக்கை உள்ளங்களில் வேரூன்றிவிட்டதை மறக்க முடியுமா?
இவையெல்லாம் இன்றைய சமூக அமைப்பிலிருந்து மறைந்துவிட்டன. இந்த இழிவான நிலை ஏற்பட சமூகத்தவர்கள் கண்மூடித்தனமாக நடந்துகொள்வதுதான் காரணம் என்ற நீண்ட பெருமூச்சோடு தன் மனைவி சமீனாவிடம் சரீபின் கதையைச் சொன்னார் இர்சாத். இதைக்கேட்ட சமீனா திடுக்கிட்டாள். குடிப்பது மட்டும்தான் என்று எண்ணியிருந்தோம் இப்படியும் நடக்கிறாரா..? என்று தனக்குள் எண்ணியவளாய் அவர் அடிக்கடி குடிச்சிட்டு வாறார். ஜெஸியும் மிச்சம் கவலையோடு தான் இருக்கா. பாவம் எங்கட ஜாதிக்கு சம்பாதிக்கக் கிடைத்த பெரிய இடம் மத்திய கிழக்குதான். ஒரு புள்ளையா நாங்க எட்டுப்பேர வச்சிக்கிட்டு.
"ஒரு புள்ளக்கிக் கஞ்சி ஊத்த வசதியில்லாம பொண்டாட்டிய அனுப்பிட்டு இந்த மனுசனுக்கு இந்த வயதில என்ன வேலையிது" என்று கவலையோடு சமீனா சொத்தையில் கையை வைத்தாள்.
வழக்கம் போல் தபால்காரனை வழிபார்த்திருந்த போதிலும் ஜெஸிராவுக்குக் கடிதம் இருக்கவில்லை மாறாக சமீனாவுக்கு என்றும் இல்லாதவாறு ஒரு ஏயார்மெயில் கடிதம் வந்திருந்தது. ஜெஸிதான் கடிதத்தை வாங்கினாள். கையெழுத்து தாயின் கையெழுத்தாக இருந்தது கண்டு வியப்புற்றாள். "மாமி இது உம்மாட கையெழுத்து உங்களுக்கு எழுதியிருக்காங்க"

நி2ந3வேற3ாத ஆசைகள் C33)
"எங்க பார்ப்போம்" என்று கடிதத்தைப் பிரித்தாள் சமீனா.
அன்பின் தாத்தா,
இந்தக் கடிதம் ஏன் எழுதுகிறேன் என்று உங்களுக்கு விளக்க அவசியமில்லை. மகள் ஜெஸிராவை நீங்க கண்ணைப் போல கவனிக்கிறீர்கள் என்று எழுதியிருந்தா. ஆனால், என்மனதில் நிம்மதியே இல்லை. தாத்தா நான் இங்க வரக்காரணமே ஜெஸிராவின் எதிர்காலம் சிறப்பாயிருக்க வேண்டும் என்பதுதான. என்றாலும், அவர் நடந்துகொள்ளும் விதம் சரியில்லையென்று கேள்விப்பட்டு பெரிய வேதனையாயிருக்கின்றது; நான் அடுத்தவாரம் வருகிறேன். மகளின் விசயத்தை முடித்துவிடும் ஆசையில்தான் வருகிறேன். நான் வரும் விடையம் பற்றி மகளிடம் மட்டும் சொல்லுங்கள்.
இப்படிக்கு,
தங்கை,
சரீனா
குறிப்பிட்டபடி கடிதம் கிடைத்து சில தினங்களுக்குள் வந்து சேர்ந்தாள் சரீனா. அப்போது இரவு பத்து மணியிருக்கும் வீடு பூட்டியிருந்தது. வாகனச்சத்தம் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தனர்.
சரீனாவைக் கண்ட ஜெஸிரா "மாமி மாமி உம்மா வந்துட்டாங்க" என்று சொல்லிக் கொண்டு ஓடிச் சென்று சரீனாவைச் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். அந்த அழுகை அவள் இதயத்தினுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை வேதனைகளையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. விழிகளில் வழியும் கண்ணிரோடு அவளை அணைத்து முத்தமிட்டாள் சரீனா.
பின் தாத்தா' என்றவாறு சமீனாவை நெருங்கி அன்போடு அணைத்துக்கொண்டவள் "ஜெஸிரா எங்கம்மா வாப்பா..?" என்றாள்.
"வாப்பா இன்னும் வரல்ல உம்மா" என்றவாறு சமீனாவின் வீட்டுக்குள் நுழைந்தாள் ஜெஸிரா.

Page 22
சமீனாவின் பிள்ளைகள் மகிழ்ச்சி பொங்க சரீனாவைச் சூழ்ந்துகொண்டனர் "என்ன தங்கச்சி அறிவிச்சாம வந்திட்டீங்க. தெரிஞ்சிருந்தா எயர்போட் வந்திருப்போமே" என்றார் இர்சாத் சிரித்துக்கொண்டே, இல்ல நானா நான் இன்டைக்கி வர இருக்கல்ல. "பொஸ் குடும்பத்தோட லண்டன் போறாரு. லீவில் போய்விட்டு வா என்று அனுப்பிட்டாங்க. அதனாலதான் யாருக்கும் அறிவிக்க முடியாம போச்சு" என்றாள்.
இரவு வெகு நேரம் எதிர்பார்த்தும் சரீப் வரவில்லை. காலை பத்து மணியாகியும் வராததினால், வந்த களைப்பு, மண வேதனைகள் ஆகியவற்றைச் சுமந்து கொண்டு அவனின் வேலை ஸ்தலத்தை இர்சாத் சமீனா ஆகியோருடன் சென்று விசாரித்த போது, இர்சாதைக் கண்ட காவலாளி "என்ன தொர இன்டைக்கு குடும்பத்தோட வந்திட்டீங்க, அவரைப் பார்க்கவா?" என்று கேலியாகச் சொன்னான். சொல்லி முடிப்பதற்குள் சரீப் தனது ஆசை நாயகியின் குடிசையில் இருந்து வெளியே வருவதைக்கண்ட இவர்கள் வாயடைத்து நின்றனர். ஆனால், இவர்களைக் கண்ட போது இஞ்சி தின்ற குரங்கைப்போல்' விழித்தான். சரீனாவைக் கண்டதும் அவன் உடல் நடுங்கியது. வெட்கம், வேதனை, அதிர்ச்சி மூன்றும் விழிகளில் தெளிவாகத் தெரிந்தன.
எந்தவித பேச்சுமின்றி சரீபின் அருகில் சென்று "வாங்க, வீட்டுக்கு போவோம்" என்று அவனை அழைத்துக்கொண்டு காரினுள் ஏறி வீடு வந்து சேர்ந்தனர். வீடு வரும்வரை, யாரும் எதுவும் பேசவில்லை. ஒவ்வொருவரினது உள்ளத்திலும் வேவ்வேறு வகையான போராட்டங்கள்.
நிலைமையை சமாளிக்க முயன்றார் இர்சாத். ம்பி நடந்தது நடந்து போச்சி அதுகள கெட்ட கனவா நினைச்சி மறந்திடுங்க, இனியாவது இப்படியான காரியங்கள் செய்யாதீங்க. தங்கச்சி எல்லாம் சரியாகும்." என்று சமாதானம் செய்தனர் இர்சாதும் சமீனாவும். இடி இடித்து மழை பெய்து ஓய்ந்து தூவானம் கூட விடவில்லை வீட்டு வாயிலில் காரொன்று வந்து நின்றது. ஒரு பெண் தனியே, ஆவேசத்துடன் இறங்கி உள்ளே நுழைந்தாள். "இவங்க யாரு..." என்று சரீனாவைப் பார்த்துக் கேட்டாள். சரீப் மெளனமாய் நின்றான். *

JASK2Al2SiF652 as nargö S2A SZPITrazas. São C35)
சரீனா அமைதியாக "நீங்க யாரு..?" என்று கேட்டபோது "நான் யாருன்னு இவர்கிட்ட கேளுங்க; கல்யாணம் செய்யல்ல எனக்கு ஒருத்தருமில்ல. என்று சொல்லித்தானே இத்தனை நாளும்." என்று கத்தினாள். அப்போதுதான் சரீபின் விளையாடல்களின் விபரீதத்தை உணர்ந்தவள் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தந்தை யார் என்பதை ஒரு வினாடிக்குள் ஊகித்துக்கொண்டாள்.
வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த நிலைமையை சமூகத்தில் தானும் தன் குடும்பமும் பெற்றுக்கொண்ட அனுபவரீதியான நிலை. இப்படிப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனக்கண்முன் படமாயின.
“சீ. இது என்ன சமுதாயம்? இந்தச் சீர்கெட்ட நிலைக்கு தள்ளப்பட்டவர் நான் மட்டுமல்ல. தன் கண்ணால் அங்கு கண்டுகொண்ட இத்தகைய எத்தனையோ நிகழ்ச்சிகள் அவள் மனக்கண்களுக்குக் காட்சிகளாயின.
மகளுக்கு சீர்வர்சை கொடுக்க குடும்பச்சுமையைக் குறைக்க தெர்ந்தெடுத்த முடிவு எங்கு கொண்டுபோய் விட்டதென்பதை ஒரு நொடிக்குள் எத்தனையோ கற்பனைகளை பண்ணிக்கொண்டாள். அக்கம் பக்கங்களில உள்ளவர்களின் அசட்டுப் பார்வைகளுக்கு இலக்காகப் போவதை அவள் மட்டுமல்ல, ஜெசீரா கூட எண்ணி வேதனைப்பட்டாள்.
"உம்மா. இனி. எங்கட வாழ்க்கை." என்று விம்மினாள். அந்த நொடிப் பொழுதுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளை எல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த அவனின் ஆசை நாயகி சிலையாக இருந்தாள். அவளும் ஒரு பெண்தானே கணவனை இழந்தபோது அவள் பட்டவேதனைகள் அனுபவரீதியாக கண்டவள்தானே!. ஒரு பக்கம் அனுதாபம்; மறுபுறம் தன்னை ஏமாற்றி. தாயாக்கிய வேதனை, இன்னோரு புறம் இந்நிலையில் என்ன செய்வதென்றறியாது குழப்பம் அவளைப் பதறவைத்தது.
ஆண்கள் எப்போதுமே தந்திரங்களைக் கையாளுவதில் சளைத்தவர்கள் அல்லர் என்பது உண்மை. அங்கு நடைபெறும் பரிதாபகரமான நிலைகளையெல்லாம் கடுகடுத்த முகத்தோடு அவதானித்துக் கொண்டிருந்த சரீப் கடைக்கண்ணால் அவளைப் போகச் சொன்னதைப் புரிந்து கொண்ட அவளுக்கு ஒரு புது உணர்வு ஏற்பட்டு "நல்லபடி யோசிங்க. நான் வாறேன்" என்று கூறியவாறு அங்கிருந்து நகர்ந்தார்கள்.

Page 23
தி2ேநைேஉர3ாத ஆசைகர்ை C36)
இப்பொழுது என்ன நடக்கப்போகின்றதென்று நடுங்கிக் கொண்டிருந்த அவர்களின் மத்தியில் அமைதி நிலவியது. ஒவ்வொருவரும் முகத்துக்கு முகம் பார்க்க முடியாமல் வெட்கத்தோடும் வேதனையோடும் ஒவ்வொரு பக்கம் நகர்ந்தனர்.
ஜெசீரா ஜன்னல் கம்பிகளுக்கு முகத்தை சேர்த்தவாறு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டாள். சரீனாவுக்கு கணவனிடம் சென்று "என்ன செய்தீர்கள்” என்று கேட்கக் கூட சக்தி இருக்கவில்லை.
தான் செய்த காரியம் தவறென்று எண்ணினாலும் கூட அவ்வளவு தைரியமாக அவள் தன்னைத் தேடிவந்து அவமானப்படுத்தியதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
"பெண்கள் எப்போதும் அவசரப் புத்திக்காரர்கள் தானே. குழப்பங்களைப் பார்த்து ஆத்ம திருப்தியடையும்." ஷெய்தானின் வேலையைப் பொறுமை, கட்டுப்பாடு இல்லாதவர்களுக்குக் கட்டுப்படுத்த முடியாதே!
தான் அங்கு வந்தது பிழை என்று அவள் எப்படி தைரியமாக சொல்ல முடியும்? இதற்கு எல்லாம் காரணம் யாருமல்ல ஜெசீராதான். தன்னைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்த இவள் நடத்திய நாடகம், என்ற திமிரோடு. "அடி ஜெசீரா, உன்னை பார்த்துக்கிறேன்" என்று சவால் விடுவது போன்று, தந்தை என்ற நிலையை மறந்து எச்சரித்து விட்டு வெளியே போனான் சரீப். எரிகிற நெருப்பில் இருந்து எண்ணை வார்க்க முடியாதே!. அவள் வீங்கிப்போன முகத்தோடு இலேசாகப் பார்த்து விட்டு மெளனமானாள்.
சில நாட்கள் கழிந்தன. சரீபின் நடத்தையில் எவ்வித மாற்றமும் இல்லை நினைத்த நேரம் வருவதும் போவதுமாக இருந்ததோடு, குடி வெறியோடும் தென்பட்டான். தான் உழைத்தனுப்பிய ஒரு லட்ச ரூபாயில் ஒரு சதமேனும் இருப்பதாக தெரியவில்லை ஜெசீராவைக் கட்டிக்கொடுப்பதே அவளுடைய ஒரே ஒரு பிரச்சினையாக இருந்தது. அழகு, ஒழுக்கம் எவ்வளவு தான் இருந்தாலும், குடும்பத் தலைவன் போக்கிரித்தனமாக இருக்கும் போது யார்தான் கைகொடுப்பார்கள்.?
அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உரிமை கொண்டாட நிச்சயம் வருவாள். அவனின் தொடர்பு இன்னும் அலளுடன் நீடிப்பதை இருவரும் உணர்ந்துக் கொள்ளத் தவறவில்லை. இப்படியே இருந்துவிட்டாள் தன் கையிலுள்ள சிறு தொகையும் கரைந்து விட்டால் கதி என்னவாகும், என உணர ஆரம்பித்தாள் சரீனா.

5āsā aass segodas arī G37D
"ஜெசி. இனி நம்ம எதிர்காலம் வெளிச்சப்பட வழியில்ல, வாப்பாவை நம்பி எதையும் இனி செய்ய முடியாது. நான் இருந்த இடத்தில உனக்கும் இருக்கலாம். ரெண்டு வருஷம் பல்லக்கடிச்சிட்டிருந்தா, உண்ட வாழ்க்கையை சீராக்கிக் கொள்ள ஏலும்.
"2.-Ló LDT... Es as சொல்றதும் சரிதானி. ஆனா. இல் ல அப்படியொன்றுமில்ல. நான் இருக்கிறேன் தானே.."
சரி ஏதோ ஆண்டவன் வச்சபடி நடக்கட்டும் என்று முடிவுக்கு வந்து சில தினங்களில் தேவையான ஒழுங்குகளைச் செய்து கொண்டு சரீபுக்கு தெரியாமலேயே புறப்பட்டனர் இருவரும்.
ஒரே வீட்டில் தாயும், மகளும் வேலை பார்த்தனர். சில நாட்கள் கழிந்தன. ஜெசிராவின் அழகும், சுறுசுறுப்பான வேலைத் திறமையும் அவளுக்கு பல சலுகைகளைத் தேடித் கொடுத்தன. வீட்டரபியும் தன்
மகள் போன்று அன்பு காட்டினான்.
வீட்டு எஜமானிக்கு நான்காம் குழந்தைக்கான பிரசவ காலம்; தனியார் வைத்தியசாலைக்கு அவள் எடுத்துச் செல்லப்பட்டாள். சரீனாவும் கூடச் சென்றாள். அவள் அங்கு தங்க வேண்டிய நிலை. நீண்ட நேரத்திற்குப் பிறகு அரபி விடு திரும்பினான். ஜெசீரா வழமைபோல் தாய் செய்யும் பணிகளையும் சேர்த்துக் கவனித்துக் கொண்டாள். மறுநாள் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை கிடைத்துவிட்டது. இன்னும் சில தினங்களுக்கு சரீனா ஆஸ்பத்தியில் தங்க வேண்டிய நிலை.
குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் அரபி வழக்கத்துக்கு மாறாக சாப்பிட்டு விட்டு நிம்மதியாக தொலைக்காட்சியில் வீடியோப் படம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தான்.
ஜெசீரா வேலைகளை முடித்துக்கொண்டு படுக்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். பேபி. பேபி. என்றவளை வழக்கமாகப் பேசும் முறையில் அழைத்து "காப்பி கொஞ்சம் வேண்டும்" என்ற போது சில நிமிடங்களில் காப்பியுடன் வந்தாள் அவள். வீட்டில் ஏனையோர்கள் தாயைப் பார்க்கத் திட்டமிட்டு அனுப்பப்பட்டனர் என்பதை அவள் எப்படி அறிவாள்? திடுக்கிட்டாள். வீடியோவில் நீலப்படம் ஒன்றை ரசித்துக்

Page 24
நிறைவேற3ரத ஆசைகள் C38)
கொண்டிருந்தார் அரபி. கையில் இருந்து காப்பிக் கோப்பை விழுந்திடுமோ என்று அஞ்சினாள். அவள் உடல் நடுங்கியது முழு நிறுவானக் கோலத்தில் அசிங்கமான சில காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தான் அரபி.
மெதுவாக காப்பிக் கோப்பையை கையில் எடுத்தவன் மறுகையால் அவளைத் தொடக் குனிந்தான். சூழ்நிலையை உணர்ந்து கொண்ட அவள் பதறினாள்; கதறினாள்; அவளால் எதையும் சிந்திக்க முடியவில்லை மரக்கட்டையானவள் நொடிப்பொழுதில் கலங்கினாள்.
சில வினாடிகள் தான் சென்றன. அவள் சிங்கமானாள், வெறிபிடித்தவளானாள், தான் பெண் என்ற உணர்வை மறந்து தனிமை என்பதையும் மறந்து எதற்கும் துணிந்தவளாய் ஹாய் என்று சாய்ந்து களைப்பாரிக் கொண்டிருந்தவனின் மார்பிலும், முகத்திலும் 'சதக் சதக் என்று கத்தரிக்கோளால் பதம் பார்த்தாள். ஆவேசம் தீர பழிவாங்கிய அவள் அவன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். அவனது மார்பிள் இருந்தும், முகத்திலிருந்தும் பிரிட்டுப் பாயும் இரத்தத்தைக் கண்டு அவள் கண்கள் இருண்டன அந்த வீடே சுழல்வது போலிருந்தது தடார்' என்று மயக்கமுற்று தரையில் விழுந்தவளின் தலை அடிபட்டது.
அவள் மயக்கம் தெளிந்து கண்வழித்த போது . அவள் ஒரு பைத்தியம்.
(முற்றும்)

asapaaprasas sea, aperasar C39)
குடியைக் கெடுத்த குடி
உயன்வத்தை றம்ஜான்
"மாமா எனக்கு இரண்டு நாட்களுக்குள் அவசரமாக பத்தாயிரம் ரூபா தேவைப்படுகின்றது. இல்லையென்றால் என்று வார்த்தைகளை முடிக்காமல் திணறினான்” ரமீஸ்,
மருமகனை காணும் போதே மன வேதனையும் சொல்ல முடியாததோர் வெறுப்பும், கோபமும் கொண்டிருந்த போதிலும் மகளைக் கட்டிக் கொண்டவனாகையால் மனிதாபிமான தன்மையுடன் பொறுத்துக் கொண்டதை அவன் எப்படி உணர்வான்.
தாலாட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பெண் மக்களை பெயரும், புகழும் நிலைக்க கட்டிக்கொடுக்கின்றனர் பெற்றோர்கள். கண்ணே பொன்னே என்று உச்சிமேல் வைத்துப் பாதுகாக்கின்றனர். பண்போடும் பண்பாட்டோடும் வாழந்திட வேண்டுமென்று சம்பிரதாயப்படி சகல அனுஷ்டானங்களையும் செய்வார்கள். ஆனால், ஒருவரின் தலையெழுத்தை யாரால் தான் மாற்ற முடியும்?
ரமீஸ் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பரீதாவின் கடித்தில்
அன்பின் பெற்றோருக்கு,
நான் எதையும் விஷேசமாக எழுதுவதற்கு இல்லை. நான் நலமாக வளமாக வாழவேண்டும் என்றுதான் திருமணம் செய்து வைத்தீர்கள். ஆனால், கண்ணிரும் கம்பலையுமாகத்தான் வாழ்கின்றேன். என் உயிர் எந்த நிமிடமும் பிரிந்து விடலாம் நான் ஒவ்வொரு நிமிடமும் ஈட்டியின் மேல் இருப்பதைப் போலத்தான் இருக்கின்றேன். அவரது குடியிலும் ஏனைய போக்குகளிலும் சற்றேனும் மாற்றமில்லை. பணம் பணம் என்றே பதறுகிறார். என் நிலையிலும் என்னைக் கொன்றுவிடவும் கூடும். இறுதிச்சந்தர்ப்பம் ஒன்று கொடுத்துள்ளேன் என்று எதற்குச் சொன்னார் என்று விளங்கவில்லை. இதற்குமேல் என்னால் எதுவுமே எழுத முடியாது.
என்று எழுதப்பட்டிருந்தது.

Page 25
AS6273 Gapasings ego atopapasai C40D
பத்தாயிரம் ரூபா கேட்டதற்கும் அவளுக்கு கொடுக்கப்பட்ட இறுதிச் சந்தர்ப்பத்திற்கும், ரமீஸின் வருகைக்கும் தொடர்பு இருக்குமோ என்று எண்ணிக் கொண்டார்கள். அறியாத்தனத்தால் சூழ்நிலையின் மாற்றத்தால் மனிதன் தவறு செய்வது இயற்கை. சூழல் காரணமாக மனித மனம் தன்னடக்கம், அச்சம், மார்க்கப்பற்று, நேர்மை போன்ற நற்குணங்களை நழுவி விட ஏதுவாகின்றது. தன் மகளின் இந்நிலைக்கு தனே காரணம் என்பதை உணர்ந்து வேதனைப்பட்டார் தாவூத் நானா.
மாமனாரின் பதிலுக்குக் காத்திருந்த ரமீஸ9க்கு, பரீதாவின் தாய் ஒன்றுமறியாதவர் போன்று உபசரிப்புக்கள் செய்து மரியாதையாக நடந்து கொண்டாள். r
தாவூத் நானா பேச்சைத் தொடங்கினார். "என்ன மவன் திடிர் என்று பத்தாயிரம் கேட்கிறீங்க என்ன செய்வதென்று தான் யோசிக்கிறன். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளுங்க. எப்படியாவது தாறன். அதோட பரீதாவையும் இரண்டு மூன்று நாட்களுக்கு இங்கு கொண்டு வந்துவிடுங்க".
"இல்ல மாமா எனக்கு இரண்டு நாட்களுக்குள் கட்டாயம் வேண்டும். எப்படியும் ஒழுங்கு பண்ணுங்க. பரீதாவை நாளைக்கே கூட்டி வர்றேன்" என்று கூறியவன் எழுந்து போய்விட்டான்.
தாவூத் நானா நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தார். பரீதாவின் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்ட தாக்கங்கள் அவரது மனத்திரையில் நிழலாடியன. அவரது கண்கள் கலங்கின.
படிக்கும் போது அவளுக்கிருந்த திறமைகள் நாலு பேர் மத்தியில் அவளுக்கு இருந்த மதிப்பு எல்லோருக்கும் ச்ெல்லக் குழந்தையாகக் கள்ளங்கபடமின்றி சிரித்து மகிழ்ந்திருந்த நாட்கள் அவளது பண்புகளையும் திறமைகளையும் கண்டு அவளுக்காக எதையும் செய்யத் தயாரான ஹில்மியின் பிடிவாதம் தானே அவளைத் திருமணம் செய்ய வேண்டும்” என்று ஒற்றைக் காலில் நின்று தாவூத் நானாவின் ஆசிர்வாதத்தைப் பெற்றது போன்ற நிகழ்ச்சிகள் அவரது நெஞ்சைக் கலக்க வைத்தது.

நாட்கள் சில கழிந்தன. ஹில்மியின் வாழ்க்கையில் திடீர் முன்னேற்றம் வெளியுலகத் தொடர்புகள் அதிகரித்தன. பணம் வந்து குவிய ஆரம்பித்தது. பரீதாவின் வீட்டாரோடு மிக நெருக்கமாக இருந்த தொடர்பு படிப்படியாக குறையவே ஏமாற்றத்திற்குள்ளான பரீதாவின் வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. புயலைத் தென்றலாக மாற்ற நினைத்து தீடீர் திருமணத்தை ஒழுங்கு செய்தார் தாவூத் நானா. ஆனால், அதன் விளைவுகள். கண்களை மூடிச் சிந்தித்துக் கொண்டிருந்தவரை தேநீருடன் வந்த ஷகீனாவின் குரல் உசுப்பியது.
என்னப்பா செய்கிறது பரீதாவுக்கு அப்படியானதோர் சோதனைக் காலம் வர நாங்கள் என்ன தவறு செய்தோம். நாம் எதைச் செஞ்சாலும் அல்லாஹற்வின் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கும் என்று அடிக்கடி சொல்வாரே. இன்னும் ஒருவரின் துயரம் கண்டு அவள் எப்போதும் சிரித்தது கிடையாதே! பிஞ்சு வயதில் இத்தனை வேதனையா?” என்று ஷகீனாவிடம் வருத்தத்துடன் கூறினார் தாவூத் நானா.
அவ காட்டுகின்ற பொறுமைக்கு நிச்சயமாக ஆண்டவன் நிம்மதியான ஒரு வாழ்வைக் கொடுப்பான். அவளுடைய வயதுக்கு ஏற்ற கஷடங்களையா அவள் அனுபவிக்கிறது? அவளைக் கட்டிக் கொடுத்து மாதம் பத்தாகல்ல; அதற்கிடையில் துணிமணி நகைநட்டாகக் கொடுத்தது இன்று அவளிடம் ஒரு பொட்டுத் தங்கமும் இல்லையே இடையில் இவ்வளவு பிரச்சனைகளையும் தாங்கக்கூடிய மனதை ஆண்டவன் அவளுக்குக் கொடுத்துள்ளானே அது போதாதா? என்று வேதனைப்பட்டாள் பரீதாவின் தாயர் ஷகீனா.
இப்படியும் அப்படியுமாக இரண்டு நாட்கள் கழிந்தன பரீதாவை அழைத்துக் கொண்டு வர முற்பட்டான் ரமீஸ். வர முன்னரே பரீதாவிடம் "ஏய், நான் உண்ட வாப்பாக்கிட்ட பத்தாயிரம் ரூபா கேட்டிருக்கிறன். ஒரு வாரம் கழிந்து பார்ப்போம் என்றார். அந்தப் பேச்செல்லாம் சரிப்படாது; நாளை எப்படியாவது சொல்லிப் பணத்தை வாங்கித் தந்திடனும் இல்லனா நான் இங்க; நீ அங்கேயே இருந்திடலாம்; ஒ. கே! என்று ஆள்காட்டி விரலைக் காட்டி அச்சுறுத்தியபோது தான் அவள் தாய்வீடு செல்வது பற்றி உணர்ந்தாள்.
இப்போது அவள் உள்ளத்தில் நடுக்கம். தனக்கு ஏற்பட்ட எல்லாத் துயரங்களையும் தண்டனைகளையும் அல்லாஹவுக்காக சகித்துக் கொண்டு இருந்த நோக்கமே பெற்றோருக்குச் சுமையாக மாறிவிடக் கூடாது என்பதுதான். கடைசியாக எழுதிய கடிதம் கூட வாழ்க்கையில் நம்பிக்கை இழந்ததன் எதிரொலிதான்.

Page 26
JAS32gsGaAstys s2saarastaf O42)
மனப்போரட்டங்களுக்கு மத்தியல் தாய்வீடு வந்த போது தன் பெற்றோர் பாசத்தோடு வரவேற்றனர். பத்து மாதங்களுக்கு முன்பு நகையும் நட்டுமாக புகுந்தவீடு போனவள் இன்று மொட்டையாக வந்து நிற்பதை பார்த்தபோது பெற்ற மனம் பற்றி எறிந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஒரு பெண்ணுக்கு நகையும் நட்டும் ஆயிரம் என்றால் கற்பும் நல்லொழுக்கமும் கட்டுப்பாடும் கோடான கோடி என்பார்கள். பரீதாவின் உயர்ந்த பண்புகளே அவளுக்கு அணிகலன்களாக அமைந்திருந்தன.
பரீதாவை விட்டு விட்டு ரமீஸ் வெளியே சென்றபின் "பரீதா என்னம்மா உன் புருஷன் திடீரென பத்தாயிரம் கேட்கின்றார் இந்த நேரத்தில் அந்தப் பெரிய தொகையை நான் எப்படி எங்கிருந்து குடுக்கிறது?” என்றார் அவள் தந்தை.
"வாப்பா எனக்கென்று எவ்வளவோ செஞ்சீங்க? என் வாழ்க்கையில ஏற்பட்ட ஏமாற்றங்களைக் கண்டு கண்கலங்கினிங்க; இரண்டாம் முறையாக வாழ்க்கைப்படனும் எங்கிற ஆசை எனக்கு இருக்கவே இல்லை. என்றாலும், அந்தப் பாவி ஹில்மி இல்லாட்டா வேறு மாப்பிள்ளை இல்லாமலா போயிடும் என்ற ரோஷத்தோடு ஒருத்தரத் தேடித் தந்தீங்க. எல்லாம் அந்த றப்புல் ஆலமின் விருப்பமேயல்லாம எங்கட எண்ணப்படியில்லையே அவர் இனித் திருந்திடுவார் என நான் நினைக்கல்ல” என்று கூறியவள் அடுப்படியை நோக்கி நடந்தாள். அவளைக் கீழும் மேலும் பார்த்த ஷகினா "ஏம்மா மிவும் இளைச்சுப் போயிருக்கியே சாப்பிட முடியலியா ஏதும் விஷேமா..?” என்று கேள்விக் குறியோடு பரீதாவைப் பார்த்தாள்.
"அப்படியொன்றுமில்லை. எனக்கு என் வயிற்றில் குழந்தையொன்று உருவாகக்கூடாது என்றுதான் ஒவ்வொரு நேரமும் பிரார்த்திக்கின்றேன். எனக்குப் பிறக்கும் குழந்தை சமுதாயம் சீ. என்கிற விதமாக இருக்கக் கூடாது. அதனால்தான் எனக்குக் குழந்தை வேண்டாம் என்றேன். சதா காலமும் பொய், சூது, களவு, குடி போன்ற தீய பண்புகளில் மூழ்கிப் போயிருக்கும் ஒரு கணவனிடம் அன்பையும் பாசத்தையும் பரிவையும் எப்படி எதிர்பார்க்க முடியும். ஒரு நல்ல சந்ததியை எப்படி உருவாக்க

"தி23வேர3ாத ஆசைகள் C43)
முடியும்? இப்படியான ஒருவருக்குத் துணைவியாக இருந்து உங்களுக்கு முன்னால் என்ன சொல்ல முடியும்? ஆனால், பெண்ணாய் என்னைப் பெற்ற குற்றத்திற்காக ஒழுங்கான மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்பதற்காக என் குடும்பம் கண்ணிர் வடிப்பதை நான் எப்பவும் விரும்பல்ல” என்று கண்கலங்கக் கூறினாள் பரீதா.
இவற்றையெல்லாம் பொறுமையோடு கேட்டிருந்த பரீதாவின் பெற்றோர் அவளுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்த முயன்றனர்.
இந்தக் குறுகிய காலத்தில இப்படியான பிரச்சினைகளுடன் வாழ நேர்ந்ததென்றால் நீண்ட வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடர்வாள் என்று ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டனர்.
திடீரென்று வீட்டின் முன் வாகனமொன்று வந்து நின்றது பரீதாவுக்கு அறிமுகமான ஒருவர் பதைபதைப்புடன் ஓடி வந்தார். "சிஸ்டர் எங்கே உங்க வாப்பா?” என்று கேட்டபோது தாவூத் நானா வாசலுக்கு ஒடிவந்தார்.
“என்ன தம்பி விசயம்” என்று கேட்ட தாவூத் நானாவிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற நபர் மெதுவாக காதினுள் குசுகுசுத்துபோது "யாஅல்லாஹற்” என்று பதறினார் தாவூத் நானா.
மிதமிஞ்சிய போதையுடன் சென்று கொண்டிருந்த போது ரமீஸ்
வாகனமொன்றுல் மோதிமரணமான செய்தியை பரீதா உணர்ந்து கொள்ள நீண்ட நேரம் பிடிக்கவில்லை.
(முற்றும்)

Page 27
கறை நீக்கிய கண்ணிர்
உயன்வத்தை றம்ஜான்
நசீமுக்குத் திருமணம் முடிந்து மாதங்கள் மூன்று தான் ஆகியிருந்தன. திருமணத்திற்கான ஒழுங்குகளைச் செய்யவும் திருமணத்திற்காகவுமாக அவனுக்கு கிடைத்தது இரண்டு வார லிவேயாகும்.
நெஞ்சில் இனிக்கும் நினைவுகளுடனும் கற்பனைகளுடனும் மனைவியுடன் சில தினங்களே இருந்து விட்டுத் தொலைவில் தொழில் புரியச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தைக் குழப்பியது.
கோழி தன் குஞ்சுகளை அணைத்துக் கொன்டிருப்பது போல தன் பெற்றோரின் அணைப்புக்குள்ளிருந்து விடுபட்டுக் கணவனின் அரவணைப்பில் தஞ்சமடைந்துள்ள மனைவிக்கு போதிக்கப்பட வேண்டிய பாடங்கள் எவ்வளவோ இருந்தன. அனாதையான நசீமுக்கு அது பெரும் வேதனையாக இருந்தது. கட்டிய மனைவியை கலங்காமல் பாதுகாக்க வேண்டும். செய்யும் தொழிலையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும். யாரின் கண்காணிப்பில் மனைவியை வைத்து விட்டுப்போவது என்ற கேள்விகள் அவன் பிரச்சினைகளாகத் தோன்றின. ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற போதிலும் அவன் மனம் அமைதி பெறவில்லை. தன் வளர்ப்புத்தாய் பற்றிய குணநலன்களை நன்கு உணர்ந்த நஸிமுக்கு மனைவியை என்ன பாடுபடுத்துகின்றாளோ என்ற கவலையும் வாட்டியது.
அலுவலகம் சென்ற போது தனது உற்ற நண்பனிடம் தனது மனநிலையை விளக்கினான் நிசாம். நஸிமுக்காக அனுதாபப்பட்டு வாடகைக்கு வீடொன்றை ஒழுங்கு பண்ணிக் கொடுத்தான் அவன். அவன் அழகானவன் பண்புள்ளவன் ஒரு முறை பழகினால் போதும் இலகுவிலே யாரையும் கவரும் சக்தி பெற்றவன். அன்பால் தன்னைச் சார்ந்தவர்களை மயக்கும் நிசாமை உள்ளத்தால் புகழ்ந்தான் நஸிம்.
சில தினங்களின் பின் மனைவி “மரீனாவை தன்னுடன் புது வீட்டில் வாழ அழைத்துக் கொண்டான். நாட்கள் சந்தோஷமாக கழிந்தன. புதுப்பெண்ணாக இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் அவள் கண்ட புதுப்புது அனுபவங்கள், பழக்கங்கள், உள்ளத்தில் உறுதியையும், உற்சாகத்தையும் ஊட்டின. அவள் பழக்கப்படாத சுழ்நிலையில் இருந்த

PASS&2A73A52A23 nzSzö SPAG SØDSAFST5-Saif G45.)
போதிலும் அவளது நற்பண்புகளும் அமைதியான போக்கும் வெள்ளையான உள்ளமும் புதுப்புது உறவுகளை, பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள உதவியது. -
ஆபீஸ் நேரம் முடிந்த பழக்கமுடைய நஸிமுக்கு நேரம் போவதே தெரியாதபடி இனிதாகக் கழிந்தன நாட்கள்.
நிசாமும் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தான். அவர்கள் கதைத்துச் சிரித்து மகிழ்வார்கள். இடைக்கிடை மரீனாவும் களந்து கொள்வாள். குடும்பத்தில் ஒருவனாகப் பழகி வந்தான் நிசாம். மரீனாவின் கலகலப்பான பேச்சு சினம் கொள்ளாத தன்மை கவர்ச்சியான தோற்றம் ஆரவாரமில்லாத, ஆடம்பரமற்ற நடத்தை, இவைகளைக் கண்ட நிசாம் தன் நண்பன் நஸிம் கொடுத்துவைத்தவன்தான் என மகிழ்ந்தான். நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.
பல வருடங்களுக்கு முன் காதலில் தோல்வியுற்று குடும்ப வாழ்க்கையில் வெறுப்புற்றிருந்த நிசாமுக்கு கடந்தகால நினைவுகள் ஆசைகள் படிப்படியாக உள்ளத்தில் துளிர்க்க ஆரம்பித்தன. ஆசைகளை மறப்பதுதான் மன அமைதிக்கு மருந்து என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்குத் தன்னை வஞ்சித்தவளின் நினைவு தொ? ர ஆரம்பித்தது. மரீனாவுடன் கதைக்கும் நேரங்களில் அவன் ஏதோ இனம் புரியாத தடுமாற்றங்களுக்குள்ளானான். அதைத் தவிர்க்க பல முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை. தன் காதல் தோல்வி பற்றி அவன் மரீனா தனியாக இருந்த நேரங்களில் சொல்லும் பொழுது அவள் பரிதாபத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது அனுதாபத்தையும், அன்பையும் புரிந்து கொண்டவன் தனது மிருகத்தனமான எண்ணத்தை அவளிடம் வெளியிட்டான். இதைக் கேட்ட மரீனாவின் உள்ளம் கோபத்தால் குமுறியது. சகோதரன் போன்றும் கணவரின் உயிர்த் தோழன் போன்றும் பழகியவன் பேசும் பேச்சா இது? ஆனால், அவள் நிதானத்தை இழக்கவில்லை முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்.
ஆகையால், இன்னும் சிறிது நேரத்தில் அவர் வந்துவிடுவார். பின் இரண்டு மணி நேரத்தில் வெளியே போய்விடுவார். நீங்கள் மாலையில் வந்து சந்தியுங்கள் என்று பதற்றத்துடன் கூறி அனுப்பிவிட்டாள். என் கணவர் அவன் மேல் எவ்வளவு அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார். அவனும் எத்தனையோ சங்கடமான நேரங்களில் எல்லாம் எமக்கு உதவியிருக்கிறான். அப்படிப்பட்ட தூயவனா இன்று இப்படிப் பேசினான் என்று எண்ணி வேதனைப்பட்டாள் மரீனா.

Page 28
கனவில் கூட தன்கணவனுக்குத் துரோகம் நினைக்காத அவள் தன் உயிர் நண்பனின் அநாகரிகத்தன்மையை அவன் உணராவிட்டால் என்றாவது ஒரு நாள் அதன் விளைவுகள் பயங்கரமானதாக முடியும் என்பதை உணர்ந்தாள். கணவன் இல்லம் திரும்பியதும், வழக்கம் போல் உபசரித்துவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள்.
எப்போதும் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாக இயங்கும் மரீனா அன்று முகம் வாடியிருப்பதைக் கண்டு யோசித்தான் நஸிம். மரீனாவும் நிசாமின் கெட்ட எண்ணத்தைப் பற்றி எப்படித் தன் கணவரிடம் அவர் நம்பும் முறையில் சொல்லுவது என்று தவித்தாள். ”என்ன டார்லிங்? ஏன் இன்று முகம் வாடியிருக்கிறது. உடம்புக்கு ஏதும் வருத்தமா?” என்று, பரிவுடன் அவளிடம் கேட்டான்.
"அப்படி ஒன்றுமில்லை” என்று சொன்னவள் மெல்ல நடந்ததை கணவனிடம் விபரித்தாள். அவள் கண்கள் கலங்கி, உடல் பதறியது. அதைக் கேட்ட நஸிம் உண்மையிலேயே திகைத்தான். தன் மனைவி ஏதும் கனவு கண்டுவிட்டுப் பேசுகிறாளோ என்றும் யோசித்தான்.
ஆனால், அத்தனையும் உண்மை என்ற பின் அவனையே நம்ப முடியவில்லை. தன் சுகதுக்கங்களில் பங்குகொண்டு கஷ்ட நஷ்டங்களில் கைகொடுத்த நண்பனா இப்படிப் பேசினான்? ”மரீனா என்னால் இதை நம்பவே முடியவில்லை. அப்படிப்பட்டவனில்லையே அவன்” எனறான்.
"நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், அவர் திருந்த வேண்டும். மாற்றான் மனைவியை மனதால் நினைப்பதும் பாவம். அது குடும்பத்தை அழிப்பதற்குச் சமம். சூழ்நிலைகளில் மனிதன் மிருகமாகிவிடுகிறான்; தவறுகள் செய்யாதவன் முழு மனிதனாக முடியாது; அவர் தவறை உணர்ந்து திருந்த நாம் வழிகாட்ட வேண்டும். அவரை அன்பினால் திருத்துவதுதான் முறை. இன்று மாலை என்னைச் சந்திக்க வருவார். நீங்கள் அறையினுள் மறைந்திருங்கள். பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” என்று நஸிமை அமைதிப்படுத்தினாள் அவள்.
"நாம் அவருடன் அதிக அன்பும், பாசமும் காட்டியதனால் அதை அவர் தவறாகப் புரிந்து கொண்டதினால்தான் இந்நிலை ஏற்பட்டது. ஒர் உயிர்த் தோழனைப் பறிகொடுப்பதை விட, அவரைத் திருத்தி நல்வழிப்படுத்துவதுதான் நம் கடமை அவள் தொடர்ந்தாள். இல்லை மரீனா நான் அவனை ஒருபோதும் பிரித்துவிடமாட்டேன். இறைவன் அவனுக்கு நல்லெண்ணத்தைக் கொடுக்கட்டும் என்று கூறியவன் அறையினுள் நுழைந்தான்
 

சிறிது நேரத்தில் நிசாம் வீட்டுக்குள் வந்தான். மரீனாவைக் கண்டவுடன் ”ஆம் ஐ லேட்” என்றான். "நோ பிரதர் யூ ஆர் இன் டைம்" என்றாள் அவள். அவன் அவள் முன்னால் வந்து "இதோ இதை உங்களுக்காக த்தான் கொண்டு வந்தேன்” என்ற நிசாம் ஒரு சிறு பார்சலை அவள் முன் நீட்டினான். அதை வாங்கியவள் ஆவேசத்துடன் அவன் முகத்திலேயே விட்டெறிந்து விட்டு பளிர் பளிர் என்று அவன் கன்னத்தில் மாறி மாறி அரைந்தாள்.
அறைக்குள்ளிருந்து புலிபோல் பாய்ந்து வந்த நஸிமும் அவனைப் பலமுறை அரைந்தான். டேய்! நன்றிகெட்டவனே உன்னை சகோதரன் போல் எண்ணிப் பழகியதற்கு நீ எனக்குச் செய்த கைம்மாறு இதுதானா? இவள் உனக்காக எவ்வளவு அனுதாபப்பட்டிருப்பாள். உன்னை மனிதானாக்க வேண்டும் சிறப்புடன் வாழவைக்க வேண்டும் என்று கனவு கண்டாள். உன்னை அவள் உடன் பிறந்தவனைப் போல் கருதிப் பழகினாள். படித்த நீ, பண்புளள குடும்பத்தில் பிறந்த நீ, மாற்றான் மனைவியைத் தீண்ட நினைப்பது பாவம் என்பதை ஏனடா உணரவில்லை? என்று ஆவேசத்துடன் கத்தினான். நான் உன்னுடன் எவ்வளவு காலம் பழகினேன். இப்படியான குணம் ஒருநாளும் இருந்ததில்லையே? என்றவனின் கண்கள் கலங்கிவிட்டன.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு உடல் துடிக்க உள்ளம் துடிக்க நின்றிருந்த நிசாம் தீடீரென்று குனிந்து நஸிமின் கால்களைப் பிடித்துக் கொண்டு "என்னை மன்னித்துவிடு நஸிம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை மிருகமாக்கப் பார்த்தது. என்னைத் திருத்திய என் அன்புச் சகோதரியே நீங்களும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி குலுங்கிக் குலுங்கி அழுதான். அந்தக் கரை படிந்த உள்ளத்தை புனிதமாக்கிக் கொணடு கண்களின் வழியாக வழிந்த கண்ணிரைத் துடைத்தான் நஸிம்.
(முற்றும்)

Page 29
விளையாட்டு வினையானபோதர்
உயன்வத்தை றம்ஜான்
மனிதன் எப்பொழுதும் சுதந்திரத்தை நாடியே வந்துள்ளான். மகிழ்ச்சியான வாழ்க்கையை, கெளரவமான வாழ்க்கை முறையை மனிதன் என்றுமே மிகுந்த ஆர்வத்தோடு விரும்பி வந்துள்ளான்.
சுதந்திரம், உரிமை எனும்போது இவற்றை எல்லோரும் எந்நேரமும் அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். ஆனால், அதற்கான பக்குவம் தம்முள் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பலர் உணர்வதில்லை. இதன் காரணத்தினால் ஏற்படுகின்ற தாக்கங்களை அனுபவம் மூலமே உணர முடிகின்றது. "இளங்கன்று பயமறியாது” என்பார்கள். " துள்ளிய மாடு பொதி சுமக்கும் என்பார்கள்” இவ்வாறெல்லாம் நம் முன்னோர் எழுதி வைத்தது மதுபோதையில் அல்ல என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.
ஆம். அது பளிலாவின் இளமைப் பருவம. அந்த வயதிலேயே அவள் சற்றுத் தலைக்கணம் பிடித்தவளாகவும் இருந்தாள். மாணவியர் மத்தியில் இவள் மேலிருந்த வெறுப்பைக் காட்டிக்கொள்ள முடியாதிருந்த போதும் எதிர்பாராமல் ஏற்பட்ட நிகழ்ச்சி அவள் மீதிருந்த மனத் தாக்கத்தை நிறைவு செய்து கொள்ளவும் அவளை அவமானப்படுத்திக் கொள்ளவும் சில மாணவிகள் முற்பட்டதையும் பளிலாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பிஞ்சு உள்ளங்கள் கொஞ்சிக் குலாவுவதையும் தம்மைப் பற்றிப் பேசப்படுவதையும் பெருமைப்படுவார்கள். ஆனால் அவற்றால் ஏற்படுகின்ற விளைவுகளை எண்ணிப் பார்க்கும்போதுதான் தட்டுத் தடுமாறி நிற்கின்றனர். பளிலாவின் இலட்சியங்கள் பலவாக இருந்தன. அவளின் ஆசைகள் ஒன்றிரண் டல்ல. இவற்றை அவளின் பெற்றார் உணராமலுமில்லை. என்றாலும் காட்டிக் கொள்வதில் பின்நின்றார்கள். பருவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கட்டுப்பாடாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தனர்.
இன்று காலம் மாறிவிட்டது. வளர்ந்து வரும் சமுதாயத்தினர் திடீர் திடீர் என்று முடிவுகள் எடுக்கவும் தமது நிலைமை, குடும்ப நிலைமை, குடும்ப கெளரவம், அந்தஸ்து என்றெல்லாம் ஆய்ந்தோய்ந்து பார்க்கும் காலம் மாறிவிட்டபோதிலும் இப்போக்குகளுக்கெதிராக எதிர் நீச்சல் அடிப்போர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

நதி sea, sofas 67 C49)
நீந்தத் தெரியாதவர்கள் ஆழமான ஆற்றில் இறங்கிவிட்டால் என்ன நடக்கும்? முன்பின் சிந்திக்காமல் பேசும் பேச்சுக்களால் ஏற்படுகின்ற விபரீதம் பற்றிச் சொல்லவா வேண்டும்! பாவம் சின்னச் சின்னக் கோபங்களை மனதில் பதித்துக் கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்திற்கு காரியம் பார்க்கும் பெண்களின் அயோக்கியத்தனத்தால் சிரழிந்த குடும்பங்கள் ஏராளம் அச்சீரழிவுகளைக் கேட்டு, பிறகு மனவேதனைப் பட்டோர் அனேகர்.
கண் கெட்ட பின் ஆரிய நமஸ்காரம் செய்து பயன்தான் என்ன? இதனை இந்தப் பிஞ்சு உள்ளங்கள் எப்படிப் புரிந்து கொள்ளும்?
அன்று சனிக்கிழமை எங்கும் போகாமல் வீட்டிலிருந்த பளிலாவின் தந்தை, அவளின் படிப்பு பாடசாலை வேலைகள் எப்படியிருக்கின்றது என்பதைப் பார்க்க நினைத்து சில புத்தகங்களை புரட்டிப் பார்க்கையில் நாட்குறிப்பேடு கையில் சிக்கியது. சாதாரணமாக அதைப் புரட்டிப்பார்த்த போது திகைத்துப் போனார். அதில் தன் மன எழுச்சிகளை மனம் விட்டு எழுதியிருந்ததைப் படித்த போதுதான் அவளது குணத்தின் உண்மையான தோற்றத்தைக் கண்டுகொள்ள முடிந்தது. ஏற்கனவே , இலேசாக அவர் கேள்விப்பட்டவைகளை சிந்தித்தும் ஆராய்ந்தும் பார்க்காததன் விளைவு இன்று புரிந்தது.
அவரால் கோபத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை. பளிலாவின் கழுத்தை நெறித்துக் கொன்றாலும் அவரது வேதனை தீராதென்ற உணர்வு அவருள் ஏற்பட்டது.
"ஏய் பளிலா, இங்க வாடி.." என்று கத்தினார். அடுக்களையில் வேலையாக இருந்தவள் ஓடி வந்தாள். "ஏய், நீ உண்மையைச் சொல்லாட்டி கொன்னுடுவன். இந்த டயரில என்னடி எழுதியிருக்க?" என்று கர்ச்சித்தார். டயரி என்றதும் விஷயத்தைப் புரிந்து கொண்ட பளிலா ஒன்றும் தெரியாதவள் போல், "என்ன வாப்பா.என்ன எழுதி.” என்று இழுத்தாள்.
"இந்தா இது யார் கையெழுத்து.? சொல்லுடி..? யார் அவன்.? எத்தனை நாளா இந்த நாடகம் நடக்குது..?" என்று கத்தியபோது.
அவள் விம்மினாள். தாரை தாரையாக கண்ணிர் வழிந்தது. "வாப்பா. நான் ஒரு தவறும் செய்யல்ல. ஸ்கூல்ல என்னோட கோலத்தில அவன்ட பேரை சேர்த்து கதை கட்டினாங்க.

Page 30
“ஒகோ. கதை கட்டினாங்க என்பதால உன் டயரி. இப்படி எழுதினியா. அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? என்ன ஏமாத்தப பாக்கிரியா?. உன்ன..” என்ற வண்ணம் அவளின் கழுத்தைப் பிடித்து இழுத்தான்.
“உம்மா. என்று கத்தியவள், விலகிக் கொண்டே மேலும் விம்மினாள்.
"இந்த பார்டி. நீ படிச்சதும் போதும்; கிழிச்சதும் போதும்; பேசாம வீட்ல இரு. உன்ன மாதிரி கேடு கெட்டதுகளாலதான் நல்ல பிள்ளைங்களும் நாசமாகிப் போறாங்க.”
"உன்ன படிக்க வச்சி, ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர நானும், உம்மாவும் எவ்வளவு ஆசையெல்லாம் வச்சோம்; எல்லாத்தையும் மண்ணாக்கிட்டியே..!" என்று முச்சிரைக்கக் கத்தினார்.
“வாப்பா. நான் தெரியாத்தானமா, மடத்தனமா அப்படி நடந்திட்டன். இனிமே, அப்படியெல்லாம் நடக்கமாட்டேன் வாப்பா. சத்தியமா. இல்ல
வாப்பா. என்ன ஸ்கூல்ல இருந்து நிப்பாட்டாதீங்க வாப்பா..” என்று அழுதவண்ணம் கெஞ்சினாள் பளீலா.
இடையில் குறுக்கிட்ட பளிலாவின் தாய் “இந்தாங்க எதுவாயிருந்தாலும் மொல்ல பேசுங்க. நாலு பேர் காதுல விழுந்திட்டா. நம்ம மானம் மரியாத எல்லாம்.? எங்க மானத்த விக்கத்தானே மக துணிஞ்சிட்டா இதுக்கு பொறவு என்ன மானம் மரியாதை...? நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு உடுக்க குடுத்து திண்ணக் குடுத்து தேவையானத வாங்கிக் கொடுத்து படிச்ச அனுப்பினோம். அதையெல்லாம் நினைச்சுப்பார்க்காம காதலாம். கீதலாம்."
"பெத்தவங்கட வேதனைகள, கவிழ்ட நஷ்டங்களை, ஆசைகளை உணராத புள்ள என்னத்துக்கு?"
பளிலாவின் வேதனைகளை பொறுக்க முடியவில்லை உண்மையை மறைக்க முடியவுமில்லை.
“வாப்பா. நான் சத்தியமா நீங்க நெனக்கிற மாதிரி நடக்கல்ல வகுப்பு பிள்ளைகள் விளையாட்டாக அவனையும் என்னையும் இணைச்சி கதை கட்டி தமாஷ பன்னினாங்க. இது எழுதி எவ்வளவோ காலம். இப்ப அப்படி ஒன்னும் இல்ல என்ன மன்னிச்சிடுங்க..” என்ற போது அவரால் ஏதும் பேச முடியவில்லை. சிறிது நேர மெளனத்துக்குப் பின் "இந்தா பார் பாளிலா இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் எச்சரிக்கையும்தான்
 

| 25 é2A3Gá2LaG IIg5 942 ápa-as órí C51)
படிக்கணும் என்ற ஆசை இருந்த மரியாதையா, புத்தியா, நடந்துக்க. இனிமே இப்படி ஏதாவது கேள்விப்பட்டா. அப்புறம் இந்த விட்ட கொலை தான் விழும் காவனமாயிரு” என்று அதற்றிவிட்டு வெளியே போனார்.
பளிலா தனக்கேற்பட்ட இந்தத் தவறை எண்ணி வேதனைப்பட்டாள். தன்னால், தன் செயலால் பெற்றோர் எவ்வளவு துன்பம் அடைகின்றனர் என்பதையும், நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுதுவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் பன்மடங்கென்பதையும் உணர்ந்தாள்.
நாட்கள் உருண்டோடின. காலச்சாக்கரம் மனித வாழ்வின் ஒவ்வெரு வினாடியையும் பயன்படுத்திக் கொண்டே உள்ளது என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.
"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது" என்பார்கள் அச்சுறுத்தல்களும், எச்சரிக்கைகளும் சிலருக்கு துன்பமாகிவிடுவதும் உண்டு. இன்னும் சிலருக்கு அதுவே களங்கரை விளக்கம் போன்று நேர்பாதையைக் காட்டி விடுவது உண்டு.
பளிலா காலநீரோட்டத்தோடு தன் சிந்தனையை களந்துகொண்டாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், தள்னையும் தன் எதிர்காலத்தையும் மேலும், குடும்ப கெளவரம் பற்றியும் எண்ணிப்பார்க்கும் அளவுக்கு சிந்தனைகளை தெளிவாக்கிக் கொண்டாள்.
மேற்படிப்புக்காகத் தனது பழைய ஆழலிலிருந்து வேறு பாடசாலை சேர்ந்தாள். தனக்குள்ளே இருந்த நச்சுத் தன்மை வாய்ந்த குணங்கள் படிப்படியாகக் குறைந்து விட்டதையும், அதை தன் மீது பொறாமைபட்டோரும் குறை கண்டோரும் உணர்ந்து கொள்ளும் வகையில் நடந்து கொண்டாள்.
கல்விச் செல்வம் என்பது உலகச் செல்வங்களில் யாவற்றிலும் மிக மேலானது என்பதோடு இறைவனின் அருட்கொடையும் கூட. அதைப் பெறுபவர்கள் இறைவனின் நல்லருளையும் பெற்றால்தான் அவற்றின் உண்மையான இன்பத்தையும் அடையலாம். அதற்குரிய பக்குவம் அவர்களிடத்தில் அமைவதோடு அத்திசையை நோக்கி மனதையும் காதையும் செலுத்திக் கொள்ள வேண்டும். பெட்டியில் மூடி வைப்பதால் சந்தனம் வாசம் வீசாது; தேய்க்கத் தேய்க்கத்தான் மனம் வீசும். அறிவையும் அனுபவங்களையும் உராய்ந்து பார்க்கும் தன்மை, திறன் அமைய முயற்சிக்க வேண்டும்.

Page 31
இளமையில் சிராஜ் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கல்வியிலிருந்த ஆர்வம் தடைப்பட்டு, விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டு அங்கும் இங்கும் தாந்தோன்றித்தனமாகக் காலத்தைக் கழிக்க நேர்ந்தபோதுதான் விளையாட்டின் விபரத்தை அவனால் உணர முடிந்தது. வகுப்பு மாணவர்கள் விளையாட்டாக அவனையும் பளிலாவையும் இணைத்துக் கதை கட்ட அதனை மனதில் உறுதியாக்கிக் கொள்ள விளைவு வினையாகித் தனது கல்விக்கும் முற்றுப்புள்ளி வைக்க நேர்ந்தமை, தாந்தோன்றித்தனமாக நடக்க நேர்ந்தமை, தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமற் போனதையும் எண்ணி வருந்தினான்.
அவனிடம் இயற்கையாகவே குடிகொண்டிருந்த முரட்டுச் சுபாவம், அவன் உடன்பிறப்பான முஸாபிரின் மரணத்திற்கே காரணமாகி, அதன் விளைவாக சில வருடங்கள் சிறைக் கைதியாக மாறி சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டவனான போதுதான் அவனது பைத்தியக்காரத்தனமான காரியங்களினால் அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதையும் உணர்ந்து வேதனைபட்டான்.
கால நிரோட்டத்தோடு சுழன்றுகொண்டு தனது இலட்சியக் கனவுகளை நனவாக்கிக் கொண்டு வீறு நடைபோட்டுக் கொண்டிருந்த பளிலா, அடிக்கடி தான் சறுக்கி விழப்போனபோது பெற்றோரின் எச்சரிக்கைகளும், அறிவுரைகளும், அச்சுறுத்தல்களும், தன்னைத் திசை திருப்பி நேர்வழிப் படுத்தியதன் காரணமாக தனக்கேற்பட்ட முன்னேற்றத்தின் பெருமையால் தான் மட்டுமன்றி, தன் சமூகம், குடும்பம் பெருமைப்பட உயர்ந்ததோர் ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்ட நன்றிக்கடனை நினைவுபடுத்த அவள் ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்போது பளிலா ஒரு வழக்கறிஞர்; தன் வாழ்க்கையைத் திசை திருப்ப முயன்ற பலர் குடும்பமாகி மனைவி, மக்கள் என்ற குவளயத்தில் லவா லவா என்றும் அப்பாவி முஸாபிர், தன் பருவத்தைப் பாழாக்கிக் கொண்டு “கொலைகாரன்" என்ற பட்டத்தோடு குற்றவாளிப் பட்டியலில் பெயர் பதித்ததையும் எண்ணி வேதனைப்படுகிறாள்.
விளையாட்டு வினையாகி, அவன் வாழ்வே அழிந்தது.
(முற்றும்)
 

தெளிவு
உயன்வத்தை றம்ஜான்
அப்பொழுது அதிகாலை நேரம் ஐந்து மணியிருக்கும். அவளின் நடமாட்டத்தைக் கேட்டு, விழித்துக்கொண்ட ரமீஸ், என்றைக்கும் இல்லாதவாறு "அம்மா, நீ எப்படியம்மா தனியே போவாய்? நானும் உன் கூட வரட்டுமா? என்று எதிர்பாராதவிதமாகக் கேட்ட போது, பாச உணர்வோடு அவனைப் பார்த்தவள் கண் கலங்கிப் போனவளாய், "இல்லை கண்ணே, நான் தனியாகப் போகலே. நம்ம பிரன்ட்ஸோட தானே போறன். நீ கவனமாய் பள்ளிக்கூடம் போய் வரனும் என்ன” என்று கூறியவள், அன்போடு முத்தமிட்டாள்.
குடும்ப வாழ்க்கை மகத்துவமானது, புனிதமானதும் கூட. கணவன், மனைவி என்ற போர்வைக்குள் நுழைந்துவிட்டால், அங்கே வேறெந்த உறவுக்கும் இடம் இராது. அவ்வுறவொன்றேதான் உலகில் இறுதி வரை நிலைத்திருக்கும் உறவு. ஆனால், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று கண்மூடித்தனமாக வாழத் துணிந்துவிட்டவர்கள் வாழ்வு ரிறைக்கூடமாகும்.
சிறப்புடனும், செல்வாக்குடனும் குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்த அவளின் வாழ்க்கை திசை மாறிவிடுமென்ற எண்ணம் கனவிலும் கூட இருந்திராது.
அன்று சனிக்கிழமை. திடீரென்று நோய் வாய்ப்பட்ட தனது தாயை நர்ஸிங்ஹோமுக்குக் கொண்டு சென்றபோது, அவசரமாக இரத்தம் தேவைப்பட்டு பதறிக்கொண்டு நின்ற போது, முன் பின் தெரியாதவர்களாக இருந்தபோதிலும் திடீரென முன்வந்து "சிஸ்டர் என்ன நடந்தது? உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?” என்று துணிச்சலுடன் நபீலாவிடம் வினவிய போதும் முன் பின் அறியாத இவர் ஏன் உதவ நினைக்கிறார்? இவரிடம் என்நிலையைச் சொல்லலாமா? தாயின் உயிரையும் காப்பாற்ற வேண்டும். சிந்தித்துக் கொண்டிருக்க அவகாசமுமில்லை என்று தனக்குள்
எண்ணியவள் ”பிரதர் நீங்கள் யார் என்று தெரியாது, என்றாலும் அன்போடு முன் வந்து உதவ நினைக்கிறீர்கள். நான் ஓர் உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன்.” என்று கூறி முடிக்க முன் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்; சொல்லுங்க என்றான்." என் தாயாருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது. அதனால்.”

Page 32
ASa2A3GSaPJA3 Lg5 s2 a2gfasistä C54)
"இரத்தம் தானே! நான் தருகிறேன்; இப்படியான ஒரு கட்டத்தில் ஒரு உயிருக்கு உதவ கிடைப்பது ப்ெரும் பாக்கியமே.” என்று கூறியவனை ஆச்சரியத்தோடும், நன்றியோடும் பார்த்தாள். அவளின் கண்கள் கலங்கின.
அழகான எடுப்பான தோற்றத்துடன் கவர்ச்சியான உடையில், அடக்கமாகத் தோற்றமளித்த அவளின் தோற்ற்த்தைக் கண்டு கண்கள் மீண்டும் தேடத்தவறுவதில்லை. குழம்பிப் போய் இருந்த நேரத்தில் கூட அவளின் பண்பும், நடத்தையும், சாந்தமான குணமும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. அவனது நடை, உடை, பாவனைகள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதை விளக்கிற்று. அந்த எதிர்பாராத சந்திப்பும், ஆபத்தில் உதவியதும் அவர்களுக்கிடையில் புது உணர்வுகளையும், உறவுகளையும் ஏற்படுத்தியதோடு, அடிக்கடி நிகழ்ந்த சந்திப்புக்கள் பல நிகழ்வுகளுக்கு இளமை ஊஞ்சலாடும் நிலைக்கு வந்தபோது பல கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் தடைகளுக்கு மத்தியிலும் இல்லறப்படகில் ஏறினர்.
நாட்கள் நகர்ந்தன. ஒருத்திக்கு ஒரு சிறந்த கணவனும் ஒருவனுக்கு ஏற்ற ஓர் மனைவியும் கிடைத்துவிட்டால், அதைவிடப் பெரிய பாக்கியம் இந்த ஜென்மத்தில் வேறெதுவுமில்லையென்பதை நிரூபிக்கும் சிட்டுக்களாய் சிறகடித்துப் பறந்தனர். மழலைச் செல்வமொன்றுக்கு த் தாயான அவளின் வாழ்க்கை பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக இருந்தபோதிலும், காலம் செய்த மாற்றங்கள் சந்தர்ப்ப ஆழ்நிலைகள் நஸிமின் வாழ்க்கையில் புதுப் பழக்கங்களை ஏற்படுத்தியது. பூஞ்சோலையில் புயல் வீசியது.
கணவனின் போக்கைக் கண்ட நபீலா துடிதுடித்தாள். தன் இல்லறச்சோலை பாலைவனமாவதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குடும்ப வாழ்க்கை இன்பமும், துன்பமும் கலந்ததுதான் சிறு கருத்துவேறுபாடுகள், பொருளாதாரப் பிரச்சினைகள் எவரது வாழ்விலும் ஏற்படுவது சர்வசாதாரணமே. இவற்றைக் கண்டு அவள் கலங்கவோ வேதனைப்படவோ இல்லை. அதற்குப் பதிலாக வாழ்க்கை என்ற படகில் கணவன் மனைவி என்ற உணர்வு உறுதியானதாகவும் களங்கமற்றதாகவும், வசீகரமானதாகவும் அமைந்திட வேண்டுமே என்று நன்குணர்ந்த அவள் அவனைப் புதுச்சூழலில் ஏற்பட்ட பழக்க

A52asGabaantas s2goat2ag-asari C55)
வழக்கங்களிலிருந்து மாற்றியமைக்க முயற்சித்த போதிலும் தன்னிடம் குடிகொண்ட கெட்ட செயல்களினால் செய்த தொழிலுக்கும் முழுக்குப்போட வேண்டிய நிலை ஏற்பட்டு, அன்றாடத் தேவைகளுக்கே கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டபோது தன் இதயத்துடிப்பும் நின்றுவிடக்கூடாதோ என்று கூட எண்ணி ஏங்கினாள்,நபீலா. குழந்தைக்கு தாயின் காலடியில் சுவர்க்கம் என்பார்கள். பெண்ணுக்கும் கணவனின் பாதத்தடியே சவர்க்கம் என்பதை நன்குணர்ந்த நபீலா, கணவனிடம் கெஞ்சினாள், கதறினாள், சற்றுக் கடுமையாகவும் கூறிப்பார்த்தாள். குடிபோதை இல்லாத நேரங்களில் அன்பாக எடுத்துச் சொன்னாள். ஆனால், அவையெல்லாம் காட்டுக்கு நிலவு காய்ந்தது போல் ஆயிற்று. பலரின் வெறுப்புக்கு மத்தியில் அவள் அமைத்துக்கொண்ட இல்லற மாளிகை இப்படி இடிந்து விழும் என்று கனவிலாவது கருதவில்லையே"
குடும்பச் சுமையை சுமக்கத் துணிந்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள். கணவன் செய்து வந்த அதே வேலையைச் செய்யும் தகைமைகள் தனக்கு இருந்தமையால் அத்தொழிலைச் செய்வதாக ஒப்புக் கொண்டு செய்து வந்தாள்.
ரமீசை அன்புடன் முத்தமிட்டவள் , காலைக்கடன்களை முடித்துக்கொண்டு ஆபிசுக்குப் புறப்பட்டாள். நசீமுக்கு தேவையானவற்றைச் செய்து வைத்து விட்டே அவள் எப்போதும் போவாள்.
மறுநாள் வழக்கம் போல் தயாராகிக் கொண்டிருக்கும் போது நசீமும் எழுந்து குளித்து விட்டு அறைக்குத் திரும்பியவன் உடைகளை மாற்றிக்கொண்டே "நபீலா இன்றைக்கு நானும் உங்களோட வரப் போறன்” என்றபோது ஒரு கணம் திடுக்கிட்டாள். நபீலா "எங்கே?" என்றாள். "உங்களுக்குத் துணையாகத்தான்". "உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நான் தனியாகப் போகல; பிரன்ஸ்களோடதான் போறன்" என்ற போதும் அவன் இணங்கவில்லை. கூட வருவதாகச் சொன்னான். தன் பிரார்த்தனை பழித்துவிட்டது போன்றதோர் நினைப்புடன் இறைவன் கனவை மாற்றிவிட்டான்; அவர் திருந்திவிட்டார் என்ற உள்மனசு மகிழ்ச்சியில் சரி, வாருங்கள் போகலாம் என்றாள்.

Page 33
(:திநைதவேந்தாத ஆசைகள் (56)
பஸ் தரிப்பு நிலையத்தை அடைந்தபோது, அங்கே நின்றிருந்த வசந்தி" "என்ன நபீலா இன்று லேட்டு.? ஒ! இது உன் கணவர்தானே?” என்ற போது திடுக்கிட்டாள் நபீலா, வசந்தி அவனோடு ஆபிசில் காரியதரிசியாகக் கடமை செய்தவள்.
"நான் சந்தேகப்பட்டே இன்று அவளுடன் கூட வந்தேன். நான் இவ்வளவு மோசமா தப்புக்கணக்குப் போட்டு விட்டேனே? சீ.சீ குடும்பத்திற்காக உழைக்க வேண்டியவனானவன் கடமையை மறந்து பொறுப்பை மறந்து மனைவியைத் தவறாக எண்ணியது மடமை. எல்லாமே என் தவறுதான் அவளின் பிரார்த்தனைகள் நிறைந்த கண்ணிர்த்துளிக்கு அல்லாஹற்வின் கருணை கிட்டிவிட்டது. குடியும் தீய அவகாசமும் என்னை மதி மயங்கச்செய்துவிட்டன. இனி மேல் நான் அவற்றை மனதாலும் நாடமாட்டேன்” என்று மனதுக்குள் எண்ணியவன் தெளிந்த மனதோடு ஆவல் பொங்கும் விழிகளோடு தன் அன்புத்துணைவியை வரவேற்க அன்று மாலை வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தான்.
(முற்றும்)
 
 

நிறைவேநாத ஆசைகர்ை (57)
Saff ff.g. Agfab ca, Gafsas.60so Eur?
உயன்வத்தை றம்ஜான்
காலமெல்லாம் காரிருளில் மூழ்கிக் குப்பி விளக்தே தஞ்சமென இருந்த ஆரிபாவின் குடிசை இன்று மின்னொளி விளக்குகளில் திவ்யலோகமாய் காட்சியளிக்கிறது. ஆமாம், ஆரிபாவின் குடிசையில் தங்கள் வீட்டு
மின்சார ஒளி பட்டுவிட்டால் ஏதோ லைட் பில் கூடிவிடுமென்று நினைத்தோ என்னவோ அடிக்கடி வெளி லைட்டை அணைத்துவிடும் அடுத்த வீட்டார் இன்று ஒரு வயரை இழுத்துப் பல விளக்குகளை எரியச் செய்து தங்களது தாராள மனதை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டுடிருந்தார்கள்.
ஒரு வேளைக்கு அரை வயிறு சாப்பிட்டுவிட்டு வயிற்றை அமுக்கிப்பிடித்த வண்ணம் அடுத்த வேளைக்கு என்ன செய்வோம் என்று ஏங்கிய ஆரிபாவின் குடிசையிலிருந்து பரவிக் கொண்டிருந்த நெய் மணமும், கறி மணமும் அயல் வீட்டாரின் மூக்கைத் துளைத்து வயிற்றைக் குடைந்து கொண்டிருந்தன. வந்திருந்த உறவினர்களுக்கு குடிசைக்குள் இடம் போதாமையினால் வெளியே கட்டப்பட்டிருந்த தற்காலிக குடிசையில் அமர்ந்து கொண்டு ஆரிபா தாத்தாவின் பலம் பெருமை பாடும் கெஸெட்டுகளை “ரிவைன்ட்" செய்து “ரிவைன்ட்" செய்து ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். என்ன ஆரிபா தாத்தா வீட்டில் இன்று கலியாணமா? இப்படியெல்லாம் செலவழிக்க யார் இருக்கிறார்கள்?
ஆரிபா என்ன நாதியத்தவளா? நாங்கெல்லாம் இல்ல. கொழும்பு பஜார்ல பேர் வாங்கின மதார் நானாவின் கம்பீரமான குரல், இன்றைய சாப்பாட்டுக்கு ஒரு மூடை சம்பா அரிசி அவர் கணக்கில்தான். "நாங்க மட்டும் சும்மா உடுவோமா” பீர் முஹம்மதைச் சுருக்கிய பீர் காக்காவின் பேய்க் குரல். மாட்டின் ஒரு தொடை அவர் கணக்கிலாம். இத்தியாதி இத்தியாதி செலவுகள் எல்லாத்தையும் ஒருத்தர் பொறுப்பேற்று அசத்தி விட்டார்கள்.
ஆமாம்! இன்று என்ன விஷேசம் என்று இதுவரை சொல்லவில்லையே. இன்று ஆரிபா தாத்தாவின் மூனாம் கத்தம். ஆரிபா தாத்தாவுக்கு இவ்வளவு தாய்பிள்ளைகள் இருப்பது அவர் மெளத்தான பிறகுதான் அயல் வீட்டாருக்குத் தெரிய வந்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வந்த அவள் உயிரோடு இருக்கும் போது அயலவர்கள் இந்த உறவுக்காரர்கள் எவரையும் கண்டதில்லை.

Page 34
25%22A3Gça. As S s2 22Jzas 67 C58)
ஆரிபா தாத்தாவின் மூனாம் கத்தம் அவளது உறவினர்களுக்கு ஒரு பிக்னிக் போல் அமைந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் உறவினர்கள் ஒன்றுகூடி குசலம் விசாரித்து உண்டு கலையும் ஒரு வைபவமாகிவிட்டது. இப்படி அன்றைய இரவை அமர்க்களப்படுத்திய உறவினர்கள் மறுநாள் காலையில் ஒரு சமர்க்களத்தை விட்டு விட்டு ஒருவர் ஒருவராகப் பிரிந்து சென்றார்கள். கத்தத்திற்கு வாங்கிய சாமான்களில் மிச்ச சொச்சங்களைக்கூட அவர்கள் உரிமையோடு தமக்கிடையே பகிர்ந்து கொண்டார்கள்.
கடைசியாக ஒரு கறிவேப்பிளை கட்டு மிஞ்சியிருந்து. அதில் ஒரு இலையைப் பரித்து மணந்து பார்த்த கொழும்பு மாமி, டவுன் பக்கத்தில இவ்வளவு மணமான கறிவேப்பிளை கிடைப்பதில்லை என்று சொன்னா. "மாமி நீங்க கொண்டு போங்க” ஆரிபாவின் மூத்த மகள் இதென்ன? வறுமைக்கேயுரிய அப்பாவித்தனமா? அசட்டுத்தனமா? எல்லாம் போன பின் இது மட்டும் எதற்கு என்ற விரக்தியா?
இப்ாேபது ஆரிபா தாத்தாவின் குடிசை படக்காட்சி முடிந்த பின் இருக்கும கொட்டகைபோல் காட்சியளிக்கிறது. ரசிகர்கள் கலைந்து போனாலும் கொட்டகைச் சொந்தக்காரன் போக முடியுமா? அதுபோல அங்கு இன்னும் நான்கு ஜிலன்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. ஆரிபாவின் மூத்த ~கள் சியாமா மறுமகன் ஹில்மி அவர்களது ஒரே குழந்தை சிபாயா இளைய மகள் றம்ஸியா ஆகியோரே அவர்கள்.
சியாமா, றம்ஸியா என்ற இரண்டு அழகுச் சிலைகளை ஆரிபாவின் கைகளில் பரிசாகக் கொடுத்துவிட்டு அவளது கணவன் இந்த மண்ணுலகை விட்டுப்போய் வருடங்கள் பல கழிந்துவிட்டன. பெண்களின் வாழ்வைக் கெடுக்க ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால், ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முன்வருவோர் எத்தனை பேர்?
ஆரிபா தாத்தாவிற்கு நிரந்தர வருமானம் ஒன்றுமில்லை. பாள்ளிவாசல் ஸக்காத் பணத்தால் கொடுத்த காணியில ஒரு குடிசை கட்டி வாழ்ந்து வந்தா. கலியாணவீடு, கந்தூரிவிடு, மையத்துவிடுகள் வந்தால் போய் வேலை வெட்டி செய்து கிடைத்ததைக் கொண்டு காலத்தைக் கடத்தினா. இரண்டு பெண்பிள்ளைகளையும் அவள் வளர்த்ததாகக் கூறமுடியாது. அவர்கள் வளர்ந்தார்கள். ஆமாம், குப்பபைமேட்டுச் கீரைச் செடிகள் போல மள மளவென்று வளர்ந்து பரவசமூட்டும் பருவக் குமரிகளானார்கள். ஒருத்திக்கு வயது 23 மற்றவளுக்கு வயது 21 ஆகியது.

பக்கத்து வீட்டு ஜவாத் ஹாஜியார் கொழும்பில் பெரிய இரும்புக் கடை. அவரது ட்ரைவராக வேலை செய்தவன் ஹில்மி அடிக்கடி முதலாளியோடு அங்கு வந்து போவான். சியாமாவின் அழகில் மயங்கிய அவன் ஹாஜியாரின் ஆதரவோடு கொடுக்கல் மட்டும் (மஹர்) செய்து வாங்கல் (சீதனம்) எதுவுமின்றி திருமணம் செய்து கொழும்புக்கே கூட்டிச் சென்றான். இந்தத் திருமணத்தை அவனது பெற்றோர் விரும்பாத காரணத்தால் அவனது வருமானத்திற்குத்தக்க சிறிய வீடொன்றை எடுத்துத் தனிக்குடித்தனம் நடத்தினான். இப்போது அவர்களுக்கு சிபாயா என்ற ஒரு வயதுக் குழந்தை.
உண்மையிலே ஆரிபா தாத்தாவின் மறைவால் நிர்க்கதிக்கு ஆளானவள் இரண்டாவது மகள் ரம்ஸியாதான். தாயின் உயிர் பிரிந்ததும் மூர்ச்சித்து விழுந்தவள் இன்னும் தலைதுாக்கவே இல்லை. வாடிய கீரைத்தண்டு போல துவண்டு போனாள். மூன்றாம் கத்தத்தை ஜாம் ஜாம் என்று கொடுத்து தங்களது பரம்பரைப் பெருமையை ஊரறியப் பறைசாற்றிய அந்த நாலு பேர் அந்த ஏழைக் குமர் ரம்ஸியாவின் எதிர்காலம் பற்றி நாலு வார்த்தை பேசவில்லை. ஆனால், சிபாயாவுக்கு அவள் உடன்பிறப்பல்லவா?. இரத்தத்தின் இரத்தமல்லவா?. அனாதையாக அனாதரவாக விட்டுப் போக அவளால் முடியுமா?. தன் கணவரின் அனுமதியோடு அவள் கொழும்புக்குப் புறப்பட்டாள்.
அக்காவின் மனதில் இடமிருந்த அளவுக்கு அவளது வீட்டில் இடமிருக்கவில்லை என்பது அங்கு போன பின்தான் ரம்ஸியாவுக்கு விளங்கியது. ஒரு பெரிய அரையை ஹாட்போட்டினால் பிரித்து ஒரு பக்கம் சமயலறை மறுபக்கம் படுக்கயறை இவ்வளவுதான் அவர்களது வீடு. அப்படியான வீட்டில் மேலதிகமாக ஒரு குமர்ப்பிள்ளை தங்குவது முடியாத காரியம்தான். வேறு வழி.
தங்கையின் வருகை தனது வீட்டில் ஒரு கல கலப்பை ஏற்படுத்தி யிருப்பதை சியாமா உணர்ந்து கொண்டாள். மதினிக்கு முன்னால் வெட்கப்பட்டோ என்னவோ சண்டை சச்சரவு, கடுகடுப்பு எல்லாவற்றையும் நிறுத்திவிட்டான் ஹில்மி. முன்பைவிட சுறுசுறுப்பாக உழைத்தான். சாப்பிட்டுத் தீர்க்க முடியாத அளவு உணவுப் பண்டங்களை வாங்கி வந்தான். அடிக்கடி கோல்பேஸ், தெஹிவளை சினிமாவுக்கெல்லாம் முழுக் குடும்பத்தையும் அழைத்துப் போனான். தாயின் பிரிவை மறந்து அக்காவைத் தாயாகவும் மச்சானை தமையனாகவும் கருதி ரிஸ்மியா அக்குடும்பத்தோடு சங்கமமாகினாள்.

Page 35
JASğZY2A3GS2 VA3 nas S2622&raz:56zī: : C60D
எத்தனை சுகம் இருந்தாலும் ரிஸ்மியாவுக்கு அவளது எதிர்காலம்? கேள்விக்குறியாகவே இருந்தது. மச்சான் தங்கமானவர். என் மீது உயிரையே வைத்திருக்கிறார். ஆனால், பாவம்! எனக்கென ஒரு எதிர்காலத்தை அமைத்துத்தர அவரால் முடியுமா? அக்கா இன்னுமொரு குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள். நாளுக்கு நாள் குடும்பம் பெருகும் போது தொடர்ந்து நான் அவர்களுக்கு சுமையாக இருக்கமுடியுமா? இப்படியான ஓராயிரம் கேள்விகள் அவளைத் தேளாகக் கொட்டின. இரவில் நீண்ட நேரம் நித்திரை அவளை நெருங்கவில்லை.
மூளையிலே தரையில் ஒரு பாயில் சுருண்டு கொண்டு புரண்டு புரண்டு படுத்தாள். ஆனால், தங்கையின் உணர்ச்சிகளை பொருட்படுத்தாத அக்கா தன் கணவனோடு தனது உணர்ச்சிகளை தனித்துக் கொண்டாள். சில சமயங்களில் அவள் செவிகளில் ஒலித்த ஒலிகளும், விழிகளில் நுழைந்த நிழல்களும், மொழிகளில் ஜொழித்த விரசமும அறுவறுக்கத் தக்கதாக இருந்தாலும் அக்காவும், மச்சானும் இனிய இல்லறம் நடத்துவது அவளுக்கு மன ஆறுதலைக் கொடுத்தது. அங்கு பரவிய தீக்கு முன்னால் தன்னைச் சருகாக்கிக் கொள்ளாது வாழைத்தண்டாகவே பேணிப்பாதுகாத்துக் கொண்டாள்.
அந்த இனிய இல்லறத்தின் இரண்டாவது இன்பப் பரிசாகிய மற்றுமொரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக அவள் அன்று அதிகாலை அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். தங்கையைத் தனியே விட்டுச் செல்ல முடியாத காரணத்தால் கடைசி நேரம் வரை பொருத்திருந்து கடும் வருத்தத்தின் பின் ஆஸ்பத்திரிக்குப் போனாள். ஹில்மி அன்று லீவு எடுத்துக்கொண்டு மனைவியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போக நேரகாலத்தோடு வீடு வந்தான்.
ரம்ஸியா, அக்காவுக்கு அனுப்புவதற்காக அவசர அவசரமாக சோறு சமைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த ஹில்மி "என்ன ரம்ஸி கதவத் தொறந்து வெச்சிட்டு குசினில இருக்கீங்க? நாய்கள் நுழைய மாட்டாதா? ஆமா புள்ள எங்கே?” என்று கேட்டான். "சோறு ஆக்கிர வரைக்கும் கரச்சல் என்று பார்வதி அக்கா கொண்டு போனா’ என்றாள். ஆமாம், வறியவர்கள் வாழும் அந்தச் சேரியில அப்படியொரு இன ஒற்றுமை.
 
 

yr A5 32oo 13 Gérasbour 13 tan gys 3226 62o-oleur-yez5 627 C6)
"ரம்ஸி அலுப்பாயிருக்கு ஒரு டி போடுங்களேன்” என்று சொன்ன ஹில்மி முன் கதவைத் தாழிட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டான். "இந்தாங்க மச்சான் டீ” ரம்ஸியா குசினியிலிருந்து குரல் கொடுத்தாள். கொஞ்சம் கிட்டக் கொண்டு வந்து தந்தா கால் தேஞ்சு போகுமா? பாவம் வேடன் தூவும் நெல்மணிகளைக் கண்டு புறாக்கள் பறந்து வரும்போது அவன் கையில் வலை இருப்பது அவற்றுக்குத் தெரியாதல்லவா. அப்பாவி ரம்ஸியாவும் டீயைக் கட்டிலருகில் கொண்டு. போனாள்.
"அதை மேசையில் வைங்க ஆறட்டும்" என்ற ஹில்மி மறுகணம் அவள் மீது தாவி அரவணைத்தான். இதனைச் சிறிதும் எதிர்பாராத ரம்ஸியா அதிர்ந்து போனாள். தனது முழுப்பலத்தையும் கொண்டு தன்னை விடுவித்துக் கொண்டாள். "மச்சான் எனது தாத்தா மட்டும்தான் உங்களுக்குப் பெண்சாதி நானல்ல" என்றாள். ஹில்மியின் முரட்டுக் கரங்கள் அவளது கரங்களை இறுகப்பற்றின. "மச்சான் ஓங்க பெண்சாதியின் சகோதரிதானே என்று இப்படி நடக்கிறீங்க. நானே உங்கட சகோதரியா இருந்தா..?”
"அதுவேற இதுவேற தானே"
"இஸ்லாம் அப்படிச் சொல்லல்ல மச்சான்; மனைவி உயிரோட இருக்கையில அவ சகோதரிய திருமணம் செய்வதே ஹராம் என்று இஸ்லாம் சொல்லுது. அப்படியானா ஒங்க மனைவிட சகோதரி உங்க சகோதரி என்றுதானே அர்த்தம்” “இந்தா ரம்ஸி உம்மா வாப்பா இல்லாத ஒரு அநாதைய ஒரு வருஷமா வெச்சிக் காப்பாத்தினதுக்கு நன்றி செலுத்துற லட்சணமா இது?” மச்சான்! என்னப் பார்த்தீங்க, கேட்டீங்க அதுக்கு நன்றியா இவ்வளவு பாரதுTரமான பிரதிபலனை எதிர்பார்ப்பீங்கன்னு நான் கனவிலயும் எதிர்பார்க்கல்ல. "இந்தா ரம்ஸி! வீணா பிடிவாதம் பன்னாதே! உன் தலையைப் பிழந்தாவது என் ஆசையை நிறைவேற்றிக்காம விடப்போறதில்ல" என்று பக்கத்திலிருந்த தாழ்ப்பாள் கம்பைத் தூக்கினான். "யா அல்லாஹற்! என்னைக் காப்பாற்று” என்று அலறினாள் ரம்ஸியா.

Page 36
அப்போது தடதடவென யாரோ முன் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு பதறிப்போன ஹில்மி கதவைத் திறந்தான். பள்ளிவாசல் மோதினார் வசூலுக்காக வந்திருந்தார். மன்னிக்கனும் தொரே முன்கதவு சாத்தியிருந்திச்சி திரும்பிப்போகப் பார்த்தேன். அப்பதான் ஏதோ சத்தம் கேட்டிச்சு” ”அது. அது. ஒன்னுமில்ல மோதின்சா. நான். வந்து." தடுமாறினான் ஹில்மி. "எனக்கொன்றும் சொல்லாதீங்க எல்லாம் விளங்கிப் போச்சு. அல்லாஹற்வைப் பயந்த அந்த அப்பாவிப் பெண்ணைக் காப்பாத்த அல்லாஹற்தான் என்ன இங்கே அனுப்பியிருக்கிறான்; அவ உங்களுக்குப் பாரமாயிருந்தா சொல்லுங்க சட்டப்டி நானே மனைவியா ஏத்துக்கிறேன்" என்றார் மோதினார். தைரியமாக உள்ளே இருந்து கேட்ட விம்மல் அவரது யோசனையை ஆமோதிப்பதுபோல் இருந்தது.
(முற்றும்)
 
 

நி2ந3வேந3த ஆசைகர்ை C63)
விதி வரைந்த பாதையிலே
உயன்வத்தை றம்ஜான்
அப்போது அவளுக்கு வயது 16 மட்டுமே. அவளின் துள்ளி விளையாடும் அந்த இனிய இளமைப் பருவத்தைப் பதம் பார்க்கத் துடித்த கண்கள் ஒன்றிரண்டல்ல. வயதுக்கேற்ற தோற்றம், உயரம், அங்க அமைப்புக்களோடு, இனிமையான குரலும், அமைதியான அடக்கமான பண்புகளும் அவளது தனிச் சொத்துக்கள்.
அனேகரிடம் கண்டு கொள்ள முடியாத இந்தப் பூரணத்துவமான தன்மைகள் இவளிடம் மட்டும் எப்படிக் குடிகொண்டன என்பதும் ஓர் வினாதான். ஒருவரின் நற்பண்புகளுக்கும், நன்னநடத்தைகளுக்கும் அவரின் அழகு பாதகமாக அமைவதுண்டு. அதன் தாக்கம் அனேகரின் வாழ்க்கையைக் குட்டிச்சுவராக்கிய சரித்திரங்கள் ஏராளம். இதனாலேதான் "அழகு ஒரு பயங்கர ஆயுதம்” என்று முன்னோர் சொல்லிச் சென்றனர் போலும்.
அனேகருக்குப் பல சாதகமான வாய்ப்புக்கள் கிட்டும் போது, எல்லாவற்றையும் அழித்திடக்கூடிய ஒரு குறையையும் கூட இறைவன் அமைத்துவிட்டுள்ளதையும் நாம் பார்க்கின்றோம். அதையும் நம் கண்களுக்குப் படிப்பினையாக அமையவே செய்துள்ளான் போலும்.
ஆனால், ஷாமிளாவின் வாழ்க்கையில் அது அப்படியாக அமைய வில்லை. அவள் சிறியதாக இருக்கும் போதே மனதுக்குள் நொந்து கொண்டாள்.
"உம்மா: என்ன உம்மா, வாப்பா இப்படி எந்த நாளும் குடிச்சிட்டு வந்து இப்படி ஆடினா எப்படி? வாப்பாவுக்கு என்னதான் வந்திருக்கு?” என்று அடிக்கடி கேட்பதுண்டு. அப்போதெல்லாம் அந்தப் பிஞ்சு மனசு எவ்வளவு வேதனைப்படுது என்று அந்தத் தாய் நன்றாகவே உணர்ந்து கொள்வாள். மூத்த சகோதரன் வாப்பாவின் நடத்தையில் கோபங் கொண்டு பல வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டே ஓடிவிட்டான்.

Page 37
E ada sadarai C64)
ஷாமிலாவிற்குப் படிப்பில் நிறையவே ஆசை இருந்தது. தோட்டப் பகுதிகளில் கல்வி கற்று முன்னுக்கு வந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே.
அநேகமானவர்கள் ஆரம்பப் படிப்பை முடித்துக் கொண்டு, தாய்மார்களோடு வேலைக்குச் செல்வது வழக்கமாகிவிட்டதால் பணத்தின் மீது ஏற்பட்ட ஆசையும், வாழ்க்கையில் ஏற்பட்டு இருந்த நிம்மதியும் எதிர்காலத்தை, பற்றி சமூதாயத்தை பற்றி, இனத்தைப் பற்றி, தம்மை பற்றி எதையுமே சிந்தித்துப் பார்க்கும் ஆசை அவர்களுக்கு இருக்கவில்லை. அதனால்தான் மலையகத்துச் சிறுவர்கள், கல்வி கேள்விகளில் விளிப்படையவில்லை என்ற நினைப்பு ஷாமிலவிற்கு அடிக்கடி ஏற்படுவது உண்டு.
இக்காலகட்டத்தில் இம்மாற்றங்ளுக்கெல்லாம் காரணமாயிருந்த தம்பித்துரை மாஸ்டர் காலை முதல் மாலை வரை, மாடு போன்று. உழைத்து, வீடு வந்த சேரும் நிலைகளைக் காணும் போதெல்லாம், தன் மனசுக்குள் இருக்கின்ற ஆசைகள் மண்ணாகிப் போய்விடுமே, இருந்த ஒரே சகோதரனும் வாப்பாவின் நடத்ததையில் ஊரைவிட்டே ஓடிவிட்டான். இப்படி நடந்திட்டா குடும்பத்தின் நிலை என்னவாகும். என்று எந்நேரமும் யோசித்துக் கொண்டே இருந்தாள்.
பள்ளிக் கூடத்தில் இலக்கியப்பாடம் அவளுக்கு பிடித்தமாக இருந்தது. தம்பித்துரை மாஸ்டரின் பாடம் இலக்கிய வகுப்பிலிருந்த மாணவ, மாணவிகளுல் கெட்டிக்காரியாக இருந்த ஷாமிலாவை ஒரு முறை தம்பித்துரை மாஸ்டர் அழைத்து, "ஷாமிலா, உமக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமே.” என்ற போது
"என்ன விஷயம். சேர்?"
"நான் உன்னக் கணக்கா கவனிச்சன், இந்த பாடசாலையில் உமக்கு யாருமில்ல, உண்ட தகப்பனப் பத்தியும் எனக்குத் தெரியும் உண்ட திறமைகளைப் பத்தி உன்னப் பெத்தவங்களுக்கு தெரிந்து வைக்க நியாயமில்லை, நேரமுமில்லை. நான் இந்த பாடசாலையிலிருந்து போக முன்னம் ஒருத்தரையாவது நல்ல நெலமைக்கு வர வழி செஞ்சிட்டுப் போகணும்.

562ag Gapag nagsis 325 apata5 6ati C65)
நாங்க உழைக்கிற உழைப்புக்குக் கிடைக்கிற ஊதியத்தால வெறுமனே காலத்தக் கழிச்சாப் போதாது. நம்ம சேவ காலத்துல, குறைஞ்சது இரண்டு பேரையாவது இலக்கியப் போக்குடையவர்களாக ஆக்க வேண்டும். இது என்ற நீண்ட நாள் ஆசை மட்டுமல்ல, இன்றைய காலத்துல இப்படியானதொரு பகுதியில ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தோனும் ஷாமிலா"
"சேர். எனக்கு . ஒன்டுமே வெளங்கல்ல சேர்.
"தங்கச்சி, இப்ப உமக்கு எதையும் சாதரணமாகப் புரிஞ்சி கொள்கிற சக்தி உண்டு. நான் இங்க வந்த பிறகு எத்தன பையன்கள் படிப்ப முடிச்சிட்டு, அப்பா அம்மாவோட வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க! இப்படியே நடந்திட்டா மழைக்கும், வெயிலுக்கும் தம் உடம்ப பழியாக்கி கொண்டிருக்கிற இந்த சமூகத்துக்கு எப்போதான் விடிவு வரப் போகுது? உங்களைப் போல ஒரு சிலராவது நல்லாப் படிச்சி, நல்ல நிலைக்கு வரணும். உமக்குப் படிப்பிலே நல்ல ஆர்வம் இருக்கறத நான் பார்த்திருக்கிறன், நாளையிலிருந்து அதிபர்ட அனுமதியோட உம்மையும் டியூஷன் வகுப்பில் சேர்த்து கொள்ள யோசிக்கிறேன்"
"சேர், உங்கட டியூஷன் வகுப்புல வெளி மாணவர்கள் தானே.?”
"பரவாயில்ல, உம்மை போல இன்னும் நாலு பேர் இருந்த இந்தப் பள்ளி கூடத்திலே மட்டுமல்ல மலையகத்திலே ஒரு மாற்றத்தைக் காண வழி ஏற்படலாம்."
"நிச்சயமா சேர். ஆனா, எனக்கு ஒரு கவலை.
"எனக்குத் தெரியும் தங்கச்சி, உங்க வாப்பாவப் பத்தி இல்லியா?”
"ஆமா சேர்”
“இது உமது வீட்டில் மட்டுமல்ல. தோட்டத்தில் இருக்கிற எல்லா வீடுகளிலேயும் உள்ள நிலைதான். இந்த நிலையத்தான் மாத்தனும் ; அதற்கு உம்மைப் போன்றவங்க உருவாக வேண்டும்; இப்ப அவங்களைச்
சமைக்க முடியாது; நாங்கதான் சமைய வேண்டும்”
இக்கருத்துக்கள் அவளின் அடி மனதில் ஆழப்பதிந்தன.

Page 38
காலங்கள் உருணி டோடின. தன்னைச் சேர்ந்தவர்களும் , ஏனையவர்களும், காலை முதல் மாலை வரை மாடாய் உழைத்து, உழைத்து இந்த நாட்டில், ஏன் உலகத்தில் அதி உயர்ந்தவர்கள் எல்லாம் ஜாம் ஜாம் என்று டாம்பீகமாய் வாழ வழிவகுப்பார்கள்.
அதிகாலையில், கதிரொலி உலகை ஆட்சி செய்யும் முன்பே, கடுங்குளிரிலும், கூடை சுமந்து அணிஅணியாய் தோட்டங்களுக்குப் படையெடுக்கும் இவர்களின் நிலமை மாறாதா? நம் காலமும் இப்படித்தான் கழிய வேண்டுமா? இது நாம் பிறக்கும் போதே கேட்டு வந்த வரமா? இப்படி எண்ணிப்பார்க்கத் தவறவில்லை ஷாமிலா.
காலம் பொல்லாதது. மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கு காலம் தடைபோட வில்லை. உணர்ச்சி, ஆசை ஆர்வம் இவை எல்லாம் மனிதனுக்கு ஏற்படும் சுபாவங்கள், ஆனால், எல்லோராலும் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. என்றாலும், ஆழ்ந்த சிந்தனையும், சமுதாய உணர்வும் உள்ளவர்கள் நிதமும் வாய்புக்களைத் தேடிக்கொண்டே இருப்பர். அந்த வகையில் மனோகரனும் தம்பித் துரை மாஸ்டரின் சிஷயன்தான். காலத்தின் தேவைகளைப் பற்றி அடிக்கடி மனம் விட்டு மனோகரனோடு அவர் பேசுவதுண்டு. அவனுக்கும் நிறைய மன வேதனைகள் இருக்கத்தான் "ெ:ய்தன. அவன் கூட அடிக்கடி தனது சிந்தனை முத்துக்களை எழுத்தில் போடுவதில் ஆர்வம் உள்ளவனாக இருந்தான்.
இன்று சாதி, சமயம், குளம், கோத்திரம் என்று எல்லாம் பிரித்துப் பார்க்கும் பழக்கம் உள்ளமைதான் பலதரப்பட்ட பிரச்சினைகள் உருவெடுக்கக் காரணம் என்பது அவனது யூகம். இத்தகைய மனோநிலையின் தாக்கத்தை மக்கள் மத்தியில் வைப்பதற்குத்தான் தன் பேனாவை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்திப் பொதுக் கருத்துக்களை முன்வைக்க துனிந்து நின்றான்.
காலநீரோட்டத்தோடு, கலப்புற்ற ஷாமிலாவின் ஆற்றல்கள், முயற்சிகள் ஏற்பனவாகவே அமைந்திருந்தன. தம்பி துரை மாஸ்டரின் திட்டமிடப்பட்ட இலட்சியங்கள் நிறைவேறுவது கண்டு அவள் மகிழ்ச்சி அடைந்தாள். அடிக்கடி கவியரங்குகள், பட்டிமன்றங்கள், இலக்கியச் சந்திப்புகள் நடைபெற்ற காலத்தின் கோலங்களை சமூகத்தில் ஆறிப்போன, நாரிப்போன பழக்க வழக்கங்கள் சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கருக்களாகக் கொண்டு எழுதியும், பேசியும், பாடியும் திருப்திக்கேற்ப வழிகாண முற்பட்டனர்.
 
 

நி2றதவேந3ாத ஆசைகள் C67)
சில பொழுதுகளில், ஷாமிலாவின் முயற்சிகளைக் கண்டு, தோட்ட துரைமார்கள், உயர் அதிகாரிகள் கூட "இது நம்ம தோட்டத்துப் பெட்டையடா’ என்று பேசிக் கொண்டனர். அடிக்கடி நாம் தோட்டக் காட்டான், நாம் கள்ளத்தோனியர், லயத்தவர், நாம் உழைப்பாளிகள், நாம் கூலியாட்கள் என்றெல்லாம் தம்மையே தாம் இழிவாக்கிப் பார்க்கும் போது ஏனைய சமூகத்தினரும், வர்க்கத்தினரும் அப்படி நினைக்காமலா இருக்கப் போகிறார்கள்!
ஏன் இந்த இழிவான மனநிலை, என்ற கேள்வியை அவளின் படைப்புக்கள் மூலம் எடுத்துக்காட்டித் தட்டியெழுப்ப முயன்றாள் ஷாமிலா. நம் முன்னோர்கள் செய்யாத தவறை நாமும் செய்ய முடியாது. இப்ப நம்மவர் தோட்டகாட்டார் அல்லர், கூலியாட்கள் அல்லர்; நமக்கு நாகரீகம் உண்டு; அறிவும் உண்டு; அந்தக் காலம் மலையேறி விட்டது. இது எமது நாகரீக வளர்ச்சிக்கு முகவுரை எழுதும் காலமென்று படித்தவர்கள் மத்தியிலும் பாமரர்கள் மத்தயிலும் உணர்த்த முயன்றாள் அவள். "நீ படிச்சது போதும், உம்மா வாப்பாட வேலைக்குப் போ” என்று மாணவர்களை மட்டம் தட்டி, சமுதாயத்தைச் சோம்பேறிகளாக்கி, சுய இன்பம் கண்டவர்களின், சரித்திரங்கள் இன்று தரித்திரங்களாக மாறிவிட்டதைப் பார்க்கின்றோம்.
தானும் தன் குடும்பமும் என்று வாழப் பழகியவர்கள் விட்ட தவறுகளின் காரணமாக பல தலைமுறைகள் நாசமான சரித்திரங்களைப் பார்க்கின்றோம். இந்நிலை மாற வேண்டும். இதற்கான திட்டமிடப்பட்ட புத்தி ஜீவிகள் நம் மத்தியில் உருவாக வேண்டும் என்ற அவா, தம்பித்துரை மாஸ்டரின் சிந்தனையில் ஏற்பட்ட விளைவை ஷாமிலாவும், மனோகரனும் நிறைவு செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.
காலங்கள் உருண்டோடின. இளைஞர்கள் மத்தியில் புதுப்பொழிவு, உணர்வு, ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தன. குடியும், கூத்தும் கும்மாளமும் ஆக இருந்தவர்கள் மத்தியில் எதிர்பாராத மாற்றங்கள் தெரிபட ஆரம்பித்தன. ஒருவருக்கொருவர்
உதவிகொள்ளவும், மற்றவர்களின் கஷட, நஷ்டங்களைக் கண்டு அனுதாபப்படவும் ஆரம்பித்தனர். கிராமங்கள் தோறும், பலதரப்பட்ட கூட்டங்களைக் கூட்டித் தோட்டத்து மக்களின் வாழ்க்கையில் மற்றங்கான முயற்சிகள் மேற்கொள்ள மனோகரனும், ஷாமிலாவும் முயற்சித்த போது அவர்களைச் சுற்றிக் கைகொடுக்கப் பலரும் முற்பட்டனர்.

Page 39
இக்காலகட்டத்தில் இம்மாற்றங்களுக்கெல்லாம் காரணமாயிருந்த தம்பித்துரை மாளிப்டர் இளைப்பாறிச் செல்லும் காலமான போது, என்றுமில்லாதவாறு முதன்முறையாக பிரிப்ாவிடையொன்றினை ஏற்பாடு செய்யும் முயற்சியை மனோகரனும் ஷாமிலாவும் ஏற்பாடு செய்து கெளரவிக்கும் போது மாஸ்டர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில், "குடியும், கூத்தும், கும்மாளமும் மட்டுமன்றி நாளைய தலை முறையினரைப் பற்றி சிந்திக்காமல் வாழ்ந்த உங்கள் மத்தியில் எதிர்பாராத மாற்றமொன்றினை ஏற்படுத்திக்கொண்டுள்ளிர்கள், இத்தகையதோர் நிலை ஏற்பட வேண்டுமென்ற அவா என் மனதில் இப்பாடசாலைக்கு வந்த நாள் முதற் கொண்டே இருந்து வந்துள்ளது. இன்று நகர்ப்புறங்களில் டாம்பீகமாக வாழ்கின்ற மக்களின் சகல முன்னேற்றங்களுக்கும் காரணம் உங்களைப் போன்ற பாமர மக்களின் உடல் உழைப்பொன்றேயாகும். ஆனால், நகர்ப்புறங்களை எட்டிப் பார்க்கும் பாக்கியத்தைக் கூட உங்களில் அனேகர் இன்னும் பெறவில்லை. இந்நிலை மாற வேண்டும். உங்கள் குழந்தைகள் உயர் கல்வியைப் பெற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அப்போதுதான் உங்களுக்குரிய விடிவை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இன்று இத்தகையதோர் கூட்டத்தைக் கூட்டி, உங்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற விழிப்புணர்வைக் காணக் காரணமாயிருந்த இப்பள்ளி மாணவர்களாகிய மனோகரனினதும், ஷாமிலாவினதும் முற்போக்குச் சிந்தனையே காரணமாகும்.
இவ்வாறு நீண்டதோர் பிரசங்கத்தையே செய்த மாஸ்டரின் உருக்கமான கருத்துக்கள் அங்கிருந்தோருக்கு இன்னும் உற்சாகத்தை ஊட்டிற்று.
கால நேரம் பார்க்காமல், மறுமலர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த இருவருக்குமிடையில் ஏற்பட்ட நெருக்கம், இறுக்கமாகி ஒருவர் பிரிய முடியாத பரிதாப நிலைக்காளானார்கள். வருடங்கள் பல கழிந்தன. தத்தம் மதக் கோட்பாடுகள் வேலியாக அமைந்ததால் இணையவும் முடியாது, பிரியவும் முடியாத நிலையில் தத்தம் வாழ்க்கையை பொதுப்பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
(முற்றும்)
_ெteபு.
 
 
 
 
 
 
 
 

மலையகக் கலை இலக்கியப் பேரவைக் காப்பாளர்களின் நல் வாழ்த்துக்கள்
ப்ரிய நிலா ஆசிரியர் உயன்வத்தை நம்ஜானின் இரண்டாவது சிறுகதைத் தொகுதிக்கும் நல்வாழ்ந்துக் கூறுவதில் அக மகிழ்சியடைகிறோம்.
முதல் சிறுகதை வெளிவந்து மிகக் குறுகிய காலத்திற்குள் இன்னுமொறு சிறுகதைத் தொகுதியை நம் கைகளில் தருவதில் அவர் கொண்ட முயற்சியை பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்.
அவரது எழுத்துப் பணி தொடரவும் எதிர்காலத்தில் இன்னும் பல படைப்புக்களை வெளிக் கொணரவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக என வாழ்த்துத் தெரிவிக்கிறோம்,
சர்வஜெயறி, சேவாஜோதி, பூரிலங்கா சிகாமணி, அ. இல. சமாதான நீதவான், நாகலிங்கம் இரத்தின சபாபதி,
ஜனசேவா சிரோன்மணி, சேவாஜோதி, சர்வஜேயரீ, அ.இல. சமாதான நீதவான், எஸ். முத்தையா
அன்புமாமணி இர, மோகன், அகில இலங்கை சமாதான நீதவான் வாழ்த்துகிறார்
தமிழ் வளர்ச்சியில் பேரார்வம் கொண்டு பெரும் பணியாற்றிவரும் ப்ரியநிலா ஆசிரியர் மாவனல்ல்ை உயன்வத்தை றம்ஜான் அவரது படைப்புக்களைக் கொண்ட சிறுகதைநூல் "நிறைவேறாத ஆரைகள்" வெளிவருவது கனன்டு பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். அவரது பணிகள் அனைத்தும் |ஆண்டவன் அருளால் வளர்க! வாழ்க!! வெல்க!!! என |பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
இர மோகன், நாகலிங்கம் ஜூவலர்ஸ், கோழும்பு வீதி,
4:3ள்:

Page 40
ஆசிரியரைப் பற்
தமிழிற் சிறுகதை இன்று ெ பெற்றுள்ளது. இலங்கைத் தமிழ் துறையும் குறிப்பிடத்தக்க வளர்ச் எப்தியுள்ளது. இலங்கையில் சிறுகதையாசிரியர்கள் தமது வாயிலாகத் தம்மை இனங்காட்டி பல சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்த வனன்னம் உள்ளன.
இலங்கையில் பல்வேறு சிறுக விளங்குபவர் உயன்வத்தை றம்ஜ ஆசிரியராகவும் சிறுகதை எழு அண்மையில் சிறுகதைத் தொகு பெரும்பான்மைச் சிங்கள மக்கள் ெ கொண்டு தமிழ்ப்பணி செய்பவராக
இப்போது பத்து சிறுகதைகளை உ6 ஒன்றினை அவர் வெளிக்கொணர உயன்வத்தை றம்ஜான் முளப்லிம் தமது கதைகளைப் படைக்க முன மென்மேலும் தரமான சிறுகதைக தமது படைப்பாற்றல் தொடர்பான எதிர்காலத்தில் மேலும் புலப்படுத் வரவேற்புக்குரியது.
மலையகத்தின் நுழைவாயிலான ம ஒரு சஞ்சிகையாசிரியராகவும் சிறு உலகில் உலாவரும் இவரது முயற்
துரே թ.ւք լք։ LII பேரா: 1998. ISBN 155-57 - 1-8
Cover Designed & Printed:
M. J. M. OFFSET PRINTERS-MAWA

]றி
பருவளர்ச்சி ச் சிறுகதைத் சி நிலைப்பை
LIEU FJ LITTLJI படைப்புக்கள் வந்துள்ளனர். இலங்கையிஸ்
தை ஆசிரியர்களுள் ஒருவராக ான். ப்ரியநிலா" என்ற சஞ்சிகையின் த்தாளராகவும் விளங்கும் அவர், தியொன்றையும் வெளியிட்டுள்ளார். சறிந்து வாழும் பிரதேசத்தில் வாழ்ந்து E அவர் விளங்குகின்றார்.
ள்ளடக்கிய தமது சிறுகதைத் தொகுதி முனைந்துள்ளமை வரவேற்புக்குரியது.
மக்களின் வாழ்வியற் பின்னணியில் பனந்துள்ளார். எதிர்காலத்தில் அவர் ளைப் படைக்க முன்வரவேண்டும், ஜருமையையும் ஆற்றலையும் அவர் த வேண்டும். அவரது எழுத்தார்வம்
ாவனல்லையிலிருந்து துணிச்சலோடு கதை எழுத்தாளராகவும் இலக்கிய சி வரவேற்கக் கூடியதொன்றேயாகும்.
மனோகரன், ந்துறை கலாநிதி நனைப் பல்கலைக்கழகம்,
| 4.
ELLATP O35-1855