கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓர் இதயம் அழுகிறது

Page 1
உயன்வத்ை
843 - 12. Garr-rifir vifaa
ro||LI5) ரீே ஒரு ப்ரியநி
 
 


Page 2
மலையக கலை இலக்கியப் பேரவை காப்பாளர்களின்
an
நல வாழ்த்துக்கள்!
ப்ரிய நிலா ஆசிரியர் திரு. உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் முதலாவது சிறுகத்ை தொகுதியான "ஓர் இதயம் அழுகிறது" நால் வெளியிடுவது கண்டு நாம் பெருமகிழிச்சி யடைகிறோம்.
தமிழ்ப்பணியில் தன்னையே முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ரம்ஜான் அவர்களின் இலட்சியப் பணி எதிர்காலத்தில் வளர்ந்தோங்கவும் மென் மேலும் இத போன்ற படைப்புக்கள் மலரவும் எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிந்திட பிரார்திப்பதுடன், அவரது முயற்சிகள் அனைத்தம் வெற்றி பெற எங்கள் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுக்கொள்கிறோம்.
அன்புடன் றுநீ லங்கா சிகாமணி, ஜனசேவா சிரோன்மணி, நாகலிங்கம் இரத்தின சபாபதி அகில இலங்கை சமாதான நீதவான், காப்பாளர், மலையக கலை இலக்கியப் பேரவை.
ஜனசேவா சிரோன்மணி
எஸ். முத்தையா .P
காப்பாளர், மலையக கலை இலக்கியப் பேரவை.
 
 
 

ஓர் இதயம் அழுகிறது
சிறுகதைத் தொகுப்பு
எழுதியவர் : "செளதுல் 9 numm" உயன்வத்தை றம்ஜான்.
உரிமைப் பதிப்பு :
முதற் பதிப்பு 1996 - ஜூலை பிரதிகள் 1000
வெளியீடு - ப்ரிய நிலா
ஆசிரிய பீடம் : 193, உயன்வத்தை, தெவனகல, யூரீ லங்கா.
அட்டைப்படம் : M.T.M. SÐ46016rð gaffluusi
அச்சுப் பதிப்பு : M.J.M. f605 Life மாவனல்லை.
ISBN 955-96060-0-X வி 40/
லை 40/-

Page 3
கருத்துரை
தமிழ் இலக்கிய உலகில் சிறுகதையின் பிறப்பு மிகவும் பிற்பட்டதேயானாலும் அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் பாரியவை. உரை நடை வளர்ச்சிக் கட்டத்தில் மிகச் சிறந்த பிரதிபலிப்புகளில் ஒன்றாக இருக்கும் சிறுகதைகள் மனித மனங்களை மிக இலகுவாக ஈர்க்கக் கூடியன. இதே போல் சிருஷ்டிகர்த்தாக்களால் சிறுகதை உத்தி மூலம் பல நுணுக்கமான விடயங்களை தெட்டத் தெளிவாக படம் பிடித்துக் காட்ட முடிகிறது.
தமிழிற் தோன்றிய சிறுகதைகளுக்கு குறுகிய கால
வரலாறுதான் உண்டு. ஆனால், அதன் ஆழம் நிரந்தரமானது. தமிழ் நாட்டுச் சிறுகதைக் கர்த்தாக்களைப் போல இலங்கை மணித் திரு நாட்டினி சிறுகதைக் கர்த் தாக் களும் சிறுகதைத்துறைக்குப் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர்; செய்தும் வருகின்றனர். இவ்வகையில் இன்று மற்றுமொரு ம்ைற்கல்லாக அமைவதே, ஜனாப் றம்ஜானின் இந்த "ஓர் இதயம் அழுகிறது" என்ற சிறுகதைத் தொகுதியாகும்.
எத்தனைதான் ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தாலும் அவை நூலுருப் பெரும் பொழுதே எழுத்தாளனுக்கு விஸ்தீரனமான ஓர் இடத்தை இலக்கிய உலகில் பெற்றுத் தருகின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. இந்த அடிப்படையில் உயன்வத்தை றம்ஜான் அவர்களின் இந்த முயற்சி நற்பயன் அளிக்கும் என்று நம்புகின்றேன்.
இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் காலத்துக்கு காலம் வெளிவந்தவை; ஒலிபரப்பப்பட்டவை. இதில் அடங்கியுள்ள ஒன்பது சிறுகதைகளும் உயன்வத்தை றம் ஜானினி சிந்தனையோட்டத்துக் கும் சமுதாய நோக்கங்களுக்கும் பதச் சோறுகளாக அமைகின்றன.

அமைதியாக இருந்து தம்மாலியன்ற இலக்கியப் பணியை ஆற்றும் அவரது அமைதிப் போக்கையே கதைகளிலும் காணலாம்.
சீதனப் பிரச்சினை, வெளிநாட்டு வேலை மோகத்தால் ஏற்படும் குடும்பப் பாதிப்புகள், சமூகத்திலே இலக்கியவாதிகள் படும் அல் லல கள் என்பவற்றையே பொதுவாகக் கருப் பொருளாகக் கொணி டு தமது ஆக்கங்களை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். கலை, இலக்கியங்கள் வெறுமனே பொழுதுபோக்குகளாக அமையாமல் ஏதோ ஒரு வகையில் ஒரு சிறிதாவது மனித வாழ்க்கைக்கு மனித மனங்களின் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்கும் உதவ வேண்டும் என்ற நோக்கு கொண்ட என் போன்றவர்களுக்கு இச் சிறுகதைத் தொகுப்பு நல்ல கருவூலமாகிறது. விஷேடமாக 'சரித்திரம் தொடர்கிறது, மலடி", மஜீதா விதவையானாள் 'ஓர் இதயம் அழுகிறது' என்ற கதைகள் நம் சமூகத்தின் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவை பல ஆயிரக்கணக்கான அபலைகளின் கதை; பல ஆயிரக்கணக்கான ஆண்களின் தான்தோன்றித்தனமான செயல்களின் பிரதிபலிப்பாகும்.
இத்தகைய கதைகளின் மூலம் ஜனாப் றம்ஜானின் பணிகள் தொடரட்டும்.
நஜ்முல் அதீப் -
நயிமா சித்தீக். (B.A)
ஸாஹிரா தேசிய பாடசாலை,
கம்பளை.
14 - 12 - 1995.

Page 4
என் உரை
புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கே கால வெள்ளோட்டத்தில் சிக்கி நாம் சிந்தனையை சதா ஏதாவதொன்றில் அலை மோத விட்டுக் கொண்டே வருகின்றோம்.
இச் சிந்தனை அலைகள்தான் சமூக, கல்வி, பொருளாதார அரசியல் அமைப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனவென்றால் மிகையாகாது.
ஒவ்வொருவருக்கும், இறைவன் ஒவ்வொறு விதமான ஆற்றலைக் கொடுத்தும் சிலர் உதாசீனம் பண்ணி, பின்பு கவலைப்படுகின்றனர். இது நாம் கண்கூடாக காணக் கூடிய ஒரு நிகழ்ச்சியாகும்.
எழுத்துத் துறையில் எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது, என்னுள் இருந்த வாசிப்புப் பழக்கமேயாகும். பள்ளிப் பருவத்திலிருந்தே ஏற்பட்ட இந்தப் பழக்கம், என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன்.
என் வாழ்க்கையில் ஏற்பட்ட பலதரப்பட்ட மோதல்கள், வெற்றி, தோல்விகள், சமூகப் பிரச்சினைகள், என் குடும்ப வாழ்க்கையில் கூட சர்வ சாதாரணமாக ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போதெல்லாம் மன ஆறுதலுக்காக எது உதவுவது என்று கேட்டால், வாசிப்பதும், எழுதுவதும் தான் என்று மனம் விட்டுக் கூறுவேன்.
நான் எதை எதையோ எல்லாம் சொல்ல ஆசைப்பட்டேன். சிந்தனையில் எழுகின்ற கருத்துக்களை சமூகத்தின் முன்வைக்க முற்பட்ட போதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்கின் ததை போலாகியது.

இன்றைய சமுதாய அமைப்பு மனிதனை பட்டம், பதவி, பணம் என்று எடை போட பழக்கப்பட்டு விட்டது. எனவே, கருத்துக்கள், கண்ணோட்டங்கள் ள்வ்வளவு தெளிவாக இருந்தாலும், அவற்றை ஏற்றுக் கொள்ளவும், சிந்திக்கவும் போதிய ஆரோக்கியத்தன்மை நம் மத்தியில் குறைந்து விட்டது. ஆகவே தான், கற்பனையில் உதித்த சில நிகழ்ச்சிகளையும், கண்களால் கண்டும், கேட்டும், அசந்து போன சில நிகழ்ச்சிகளை இணைத்தும், சில மூட நம்பிக்கைகளாலும், பிடிவாதப் போக்குகளாலும், அவசர முடிவுகளாலும் ஏற்படுகின்ற விபரீதங்களை சிறு கதைகளாக எழுதி சமூகத்தின் முன்வைக்க ஆசைப்பட்டேன்.
இதுவரை எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு கதைகளில் ஒரு சிலவற்றை நூலுருவில் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாகும்.
இங்கே தரப்பட்டுள்ள சிறு கதைகள் பத்து வருடங்களுக்கு முன் எழுதியவை.
என்றோ ஒரு நாள் இவை நூலுருவில் வரவேண்டுமென்று, வசதி வாய்ப்புக்காகக் காத்திருந்தவை. இவற்றை நூல் உருவில் வெளிக் கொணர இருந்த ஏக்கத்தை பலரிடம் வெளிப்படுத்திய போதும் எனது உணர்வுகளையும், ஏக்கங்களையும் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
என்றாலும் பிரசவ வேதனைக்கு ஒப்பான இந்த ஆசையைக் கைகூடச் செய்ய வேண்டுமென்று அடிக்கடி இறைவனிடம் பிரார்த்தித்த நேரங்கள் பலவுண்டு. அப்பிரார்த்தனைகளின் பிரதி பலிப்பாகவே இவ்வெளியீட்டைக் கருதுகிறேன்.
ஆக, இத்தொகுப்புக்கான கருத்துரையொன்றை வழங்கிய மலையக இலக்கியத் தாரகை, நஜ்முல் அதீப் நயீமா சித்தீக் அவர்களுக்கும் எனது சிறுகதைகளை தினகரனில் "இதய கோலங்கள்" பகுதியில் அடிக்கடி பிரசுரித்து உற்சாகப்படுத்தி, வளர்த்துவிட்ட, தினகரனின் இன்றைய பிரதம ஆசிரியர்

Page 5
எஸ். அருளானந்தன் அவர்களுக்கும், ஆசிரியர் பற்றி குறிப்பை எழுதிய பேராதனைப் பல்கலைகக்கழக விரிவுரையாளர் அல்ஹாஜ் M.I.M. அமீன் அவர்கட்கும், பிரதிகளை பிரதி பண்ணித்தந்த சோதரி M.Z.F பஸினா அவர்கட்கும், ஒப்புதல் பார்த்துக் கொடுத்த இளைப்பாரிய அதிபர் M.H.A. ஸலாம், கேகாலை மாவட்ட ஆசிரிய ஆலோசகர் M. நஜிபுல்லாஹற் அவர்கட்கும், M.H.M. அஸ்ஹர் ஆசிரியர் அவர்கட்கும் கணனி அச்சுக் கோர்வை செய்து இறுதி ஒப்புதல் பார்த்து உதவிய LDIT660T6)606) ACSCCOMPUTER PRINTINGS g5Tu60Tg55ITObis(5ub அச்சிட்டு உதவிய M.I.M. OFFSETPRINTERSதாபனத்தாருக்கும் அட்டைப் படத்தை வரைந்து உதவிய MTM. அனஸ் ஆசிரியர் அவர்கட்கும் எனது எழுத்துப் பணிக்கு சளைக்காமல் ஒத்துழைப்பு நல்கி வரும் என் மனைவிக்கும் இச்சிறுகதைத் தொகுப்பை வெளிக்கொண்டு வர முயற்சித்த போது உற்சாகமூட்டிய வாசக இதயங்களுக்கும் எனது நன்றிகள்.
எல்லாப் புகழும் அல்லாஹவுக்கே
இந்நூல்! என் வாழ்க்கைப் போராட்டங்களைக் கண்டு கண் கலங்கிய எனது தாய்க்கு சமர்ப்பணம்.

ஒர் இதயம் அழுகிறது : 0D
சரித்திரம் தொடர்கிறது
உயன்வத்தை நம்ஜான்
அவன் அதை நினைக்கும் போது எப்படி எப்படியெல்லாமோ கற்பனை பண்ணிக் கொண்டான். சிலர் பள்ளி வாழ்க்கையின்போதும், வேறு சிலருக்கு இளமைப் பருவத்திலும் பல விதமான குடும்ப வாழ்க்கையை அடிப்படையாக் கொண்ட கற்பனைகள் ஏற்படுவதுண்டு. இக்கற்பனைகள் படிப்படியாக உள்ளத்தில் பதிந்து விட்டால், அது அவர்கள் வாழ்க்கையின் முடிவுக்கே இழுத்துச் சென்றுவிடுகிறது என்பதை ஒரு சிலரே உணர்கின்றனர். நிறைவேறாத ஆசைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தை எவ்வழியிலும் ஈடுசெய்ய முடியாததோர் நிலை அநேகருக்கு ஏற்படுவதன் மூலம் வாழ்ககையைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டவர்கள் வரிசையில் நிஜாமும் ஓர் மா பாவி என்றே சொல்ல வேண்டும்.
ஸனிராவின் வசீகரமும், அவள் காட்டிய இனிமையான குணங்களும், உறுதியான, ஆரோக்கியமான சகவாசங்களும் மிகத் தூய்மையானதாகவே தென்பட்டன. பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில், கிராம அபிவிருத்திப் பணிகளில், நற்பணி இயக்கங்களில் தனது பங்களிப்பை தங்கு தடையின்றி செலுத்தி வந்தான் நிஜாம். அது அவனுக்கு சமூகத்தின் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கை ஏற்படுத்தியது. ஸ்னிராவுக்கு அவன் மேல் ஏற்பட்ட இரக்கத்திற்கு அது ஒரு தனி தராதரமாகும்.
அநேகருக்கு அவனின் துடிப்பும், துணிவும் பிடிக்காவிட்டாலும் கூட, திறமை, ஆர்வம், புத்துணர்வுடன் செயற்படும் போது அதனை யாராலும், தடுத்து நிறுத்தவோ, தட்டி விடவோ முடியாது. இத்தகைய போக்கு அநேகமாக சமூக உணர்வும், மனிதாபிமான சிந்தனையும் உடையவர்களிடம் மட்டுமே காண முடிகிறது.

Page 6
g?/i' = 635ünub 48953ğı
பணத்திமிரால், அதிகார வெறியின் மோகத்தால், பரம்பரை பரம்பரையாக ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற கர்வத்தினால், சமூகத்தில் தலை காட்ட முற்படும் பிற்போக்குவாதிகளுக்கு நிஜாமின் துடிப்பு பெரும் தலையிடியாகவே இருந்தது.
ஸனிராவின் குடும்பம் வாழையடி வாழையாகவே கிராமத்தில் ஏக ஆதிக்கம் செலுத்துவதாகவே இருந்தது. புதுத் தலைமுறையினரின் ஆதிக்க வெறி, அவர்களுக்கு எரிச்சலாக இருந்த போதிலும், கால நீரோட்டத்தின் போக்கு, சமுதாயத்தில் புது மாற்றங்களை எதிர்பார்க்கின்றது என்ற ஆரோக்கியமான சிந்தனையை முன்வைக்க, தன் பேனாவைப் பயன்படுத்துவதில் அக்கறை உள்ளவளாக இருந்தாள் ஸ்னிரா. "எழுத்தாளனின் பேனா முனையிலிருந்து சிந்தும் ஒவ்வொரு துளி மையும், தியாகிகளின் இரத்தத்தைவிட மேலானது.", "எழுத்தாளன் சமூகத்தின் கண்ணாடி" என்பன போன்ற யதார்த்தமான கருததுக்களை அவள் ஜீரணித்துக் கொள்ள கூடியவளாக இருந்தமையால், துணிச்சலுடன் புதுச் சமூகமொன்றைக் காண முயன்று கொண்டிருக்கையில், நிஜாமிடம் இயற்கையாகவே இருந்த திறமைகளோடு, எழுத்துத் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தவறவில்லை. வானொலியிலும், பத்திரிகைகளிளும், புரட்சிகரமான கருத்துக்களை அள்ளி வீசினான். பதவிகளுக்காகச் சமூகத்தை காட்டிக் கொடுத்து, வயிறு வளர்க்கும், புல்லுருவிகளைப் பற்றியும், காலங் கடந்த சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை மெருகூட்டும் வேஷதாரிகளையும், காலம், நேரம் பார்த்து, பச்சோந்திகளாக உருமாறி, சமூகத்தைக் கூறுபோட நினைக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும், அவர்களின் போக்குகளுக்கும் , சவாலாகத் தன் பேனா வைப் பயன்படுத்தினான் நிஜாம்.
இவற்றைக் கண்டு சகித்துக்கொள்ள முடியாதவர்கள் கொக்கரித்தனர். பணத்தினாலும், அதிகாரத்தினாலும், அடக்க
 

*ஓர் இதயம் அழுதிறது
முடியாதவற்றை, புத்தி ஜீவிகள் மத்தியில் தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவதன் மூலம் ஏற்படுத்தலாம் என்ற உண்மையை எத்தனை பேர் தான் யோசிக்கின்றனர்?
சில பத்தாம் பசலிகள் நிஜாமையும், ஸனிராவையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தி, அடக்கியாள எண்ணி, கிசு கிசுக்களைப் பரப்பி ஸனிராவின் குடும்பத்துக்குக் களங்கம் விளைவிக்க முற்பட்டனர்.
வறுமையின் பிடியில் சிக்கியிருந்த நிஜாமையும், அக்கிராமத்தின் பெரும் புள்ளியின் மகளான ஸனிராவையும் இணைத்து, கதைகளைக் கட்டி, அவர்களின் முற்போக்குச் சிந்தனைகளுக்குத் தடைபோட எத்தனித்தனர்.
காஸிம் முதலாளி மகளை பல விதமாகப் பேசிப் பார்த்தார். அவளின் துணிச்சலும், மன ஓர்மையும் அவர்களைத் தலை குனிய வைத்தன.
"வாப்பா, உலகம் ஆயிரம் சொல்லட்டுமே. நாறிப்போன, ஊறிப்போன பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் இன்றைய கால கட்டத்திற்குத் ஒத்து வருவனவாக இல்லையே! அன்று பெண்கள் படிக்கக் கூடாது என்றார்கள். மதக் கல்வியைக் கூட, வீட்டிலேயே சொல்லிக் கொடுத்தார்கள். அதுவும் வசதி படைத்தவர்களால் மட்டுமே அப்படிச் செய்ய முடிந்தது.
இல்லாதவர்கள் கதி என்னவானது? எனது குடும்ப நிலையையும் ஏழ்மையானதாக இருந்திருந்தால், என் கதியும் அதுதானே! அன்று சட்டங்களைப் போட்டவர்களும், சமூகத்தை எட்டிப்பார்க்கத் துடித்த புதுத் தலைமுறையினரின் ஆர்வத்தைத் தடுத்து, சுய நல விரும்பியான சில பேர்வாழிகள் தான். அவர்களை சமூகத்தில் ஸ்திரப்படுத்திக் கொண்டனர். பாமர மக்கள் ஏமாளிகளாகி விட்டனர். அன்று "பெண்கள் வெளியே செல்லக்கூடாது; படிக்கக்கூடாது" என்று சட்டம் போட்டவர்களின் பிள்ளைகள் இன்று சட்டத் கல்லு iம் சர்வ கலாசாலைகளிலும், கிெனழுரிலும் கடந்து

Page 7
ஓர் இதயம் அழுகிறது
சென்று, வெளிநாடுகளில் கூட வேலை செய்கின்றார்கள். ஆனால், அந்தச் சட்டங்களுக்குப் பயந்து அடங்கி, ஒடுங்கிப் போன எத்தனையோ குடும்பங்கள் நாசமாகின என்று தெரியுந்தானே வாப்பா. காஸிம் முதலாளி திகைத்து நிற்க, தன் கருத்துக்களை தெட்டத் தெளிவாக, அமைதியாக சொல்லிக் கொண்டிருந்தாள் ஸனிரா.
இவற்றையெல்லாம் காஸிம் முதலாளியின் உள்மனம் ஏற்றுக்கொள்ளத்தான் செய்தது. ஆனால் அவரிடம் ஊறிப்போயிருந்த கண்மூடித்தனமான போக்குகள், பிடிவாதக் குணம் இக்கருத்துக்களை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதை ஸ்னிரா நன்கு விளங்கிக் கொண்டாள்.
"மகள், இந்தக் காலம் புள்ளைங்க பெத்தவங்களுக்கு புத்தி சொல்கிற காலந்தான்; நிறையப் படிச்சிட்டாங்க; அதனால பெரியவங்க, சின்னவங்க என்கிற மட்டு, மரியாத இல்லாம போச்சி. கேட்காதவங்க கிட்டயெல்லாம் பேச்சி கேட்கவும், தரம் கொறஞ்சவங்களோட, சரி சமனாக பழகவும் தொடங்கிட்டாங்க. "அது சரி இனிமே அந்த நிஜாமோட எந்தப் பேச்சும் வச்சுக்கொள்ளக் கூடாது. திெரிஞ்சுதா." என்று காஸிம் முதலாளி கேட்க, ஸ்னிரா திடுக்கிட்டாள்.
"வாப்பா. நீங்க ஏன் இப்படி பேசுறீங்க. நான் உங்க மக வாப்பா; என்னை நீங்க நம்பமாட்டீங்களா? உங்க முகத்தில் கரி பூச நானும் விரும்புவேனா? அந்த நல்ல மனுஷன ஏன் தப்பா நினைக்கிறீங்க. பெத்த மகளைப் பார்த்து, நீங்க இப்படி பேசினா, ஊர் பேசாமலா இருக்கப் போகுது"? என்று ஸனிரா வேதனையோடு கூறியது அவரின் மனதைத் தொட்டது. "வாப்பா, நிஜாம் ஏழைதான். ஆனா அவருடைய குண நலன்கள் தங்கமானவை."
"ஸ்னீரா அவ்வளவு தூரம் போயிட்டியா" அப்ப ஊர் சொல்றதில என்ன பிழையிருக்கு, இதெல்லாம் நீ பேப்பரிலயும், ரேடியோவிலயும், எழுதவும், பேசவும் போனதால வந்த வினை.
 

ஓர் இதயம் அழுதிறது
இனிமே நீ யாருக்கும்; எந்தப் பேப்பருக்கும் எழுதுரதில்ல. யாரையும் இங்கு வரவும் வழி வைக்காதே. சொல்லிட்டேன்; நீ படிச்சது போதும்" என்று சீறினார்.
அவளிடம் சில முற்போக்குத் தன்மைகள் இருந்ததோடு, தன்னடக்கமும், மனோ வலிமையும் நிறைய இருந்தன. நேர்மைக்கும், உண்மைக்கும் என்றும் அழிவில்லை என்பதை உணர்ந்தவளாக, வேதனையோடு மெளனமானாள்.
வாசலில் தபாற்காரனின் சைக்கிள் மணியோசையைக் கேட்டு, வெயியே வந்தார் காஸிம் முதலாளி. அவரிடம் இரண்டு கடிதங்களை நீட்டினான். ஒன்று ஸ்னிராவுக்கு வந்திருந்தது.
கோபத்துடன் கடிதங்களைப் பிரித்துப் படித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து, ஸனிராவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வரும்படி அழைப்பு வந்திருந்தது. பட்டம், பதவி, புகழ் என்றால் முதலாளிக்கு சொல்லவா வேண்டும். அந்தக் கிராமத்தில் இதுவரை யாருக்கும் கிட்டாத வாய்ப்பல்லவா தன் மகளுக்கு கிட்டியுள்ளது என்பதை நினைக்கும் போதே அவரது உள்ளம் குளிர்ந்தது. ஆனால் சற்று நேரத்துக்கு முன் ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு, மனக்களிப்பை இப்போது எப்படி வெளியே காட்டிக் கொள்வது என்ற தர்ம சங்கடமான நிலை ஒருபுறம்; எதிலும் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லி விட்டு, எப்படி விட்டுக் கொடுப்பது என்ற மனப்போராட்டம் மறுபுறம்.
"ஸனிரா. என்னன்டு பாரு" மெளனமாக, கடிதத்தைப் பெற்றுப் படித்தவளின் முகம் மலர்ந்தது. "வாப்பா. எனது பேச்சொன்றை ஒலிபரப்பு செய்ய, நாளைக்கு வரச் சொல்லியிருக்கு, நாளைக்கே ஒலிபரப்பும் செய்கிறாங்களாம். ஆனா. என்ன பயன், நீங்க தான் என்னை ஒன்றுக்குமே போக வேணாம் என்று சொல்லிட்டீங்களே. என்று கவலையோடு சொல்லிவிட்டு, உள்ளே போக முயன்ற போது.
"ஸனிரா. இங்க வாம்மா. நீ என்ன பேசப்போற."?

Page 8
"ஒன்றுமில ல வாப் பா. . . . அதெல லாம் கேக் க, பெத்தவங்களுக்கே ஆசை இல்லாட்டி, யாருக்கும் சந்தோஷம் இருக்க வேண்டாம், அதற்கு நான் கொடுத்து வைக்கல்ல." "இல்ல புள்ள நீ என்ன புரிஞ்சுக்கல்ல, நம்ம அந்தஸ்து, கெளரவம் இது களப் பாத்து பொறாமப் பட்ட வங்க, வேதனைப்பட்டவங்க எத்தனையோ வழிகளால கெட்ட பெயர வாங்கித்தரப் பார்த்தாங்க. கடைசியில உன்ட பெயர வச்சி கதை கட்டப் பார்க்கிறாங்க.
அதனால தான் நான். "வாப்பா, ஊர் வாய மூட எங்களால முடியாது. நீங்க என்னை நம்பினா போதும். இந்த முறை மட்டும் அனுமதி தாங்க .
காஸிம் முதலாளிட மகள் நாளைக்கு ரேடியோவில பேசுதாமே. இது கிராமம் முழுக்க பேச்சாக இருந்தது.
இதைக் கேள்விப்பட்ட நிஜாமும் ஸனிரா வீட்டுக்கு வந்த போது, ஸனிராவின் தாய் அன்புடன் வரவேற்றாள். காஸிம் முதலாளியும் அன்று தான் நிஜாமுடன் கதைத்தார்.
அன்போடு, அமைதியாக, அடக்கமாக, கனிவாக காஸிம் முதல்ாளியோடு சில நிமிடங்கள் பேசினான் நிஜாம். அவனிடம் அடக்கமும், அன்பும், மனிதனை மதித்துப் பழகும் தன்மையுமிருந்தது. அவனோடு உரையாட காஸிம் முதலாளிக்கு ஆசை ஏற்பட்டது. புத்தி ஜீவிகள் எப்போதும் ஆரோக்கியமான கருத்துக்களை வெளிப்படுத்துவதுண்டு. கிராமத்தின் பிரச்சினைகள் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது, ஸனிரா திகைப்பால் நின்று, "பிரதர். இருங்க" என்று அமைதியாகப் பேசினாள்.
காஸிம் முதலாளிக்கு புதுத் தெம்புடன் அவள் முகத்தைப் பார்த்த போது, அவள் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டார்.
 

ஓர் இதயம் அழுகிறது:
"யாரோட நாளைக்குப் போறிங்க?" "வாப்பாவோடதான் போகனும்" இடையில் குறுக்கிட்ட காஸிம் முதலாளி, "மவன் எனக்கு அங்கெல்லாம் போய் பழக்கமில்ல; நீங்களும் எங்களோட வரலாமே."
"இல்ல முதலாளி" பரவாயில்ல வேற யாரும் போறதில்ல நீங்க வாங்க. ஸனிரா இறைவனை நன்றியுடன் பிராத்தித்தாள். யா அல்லாஹற் நீயே பெரியவன். எவ்வளவு பெரிய சந்தேகத்தை நிவர்த்தி செய்து, தெளிவாக்கி வைத்தாய், உனக்கே எல்லாப் புகழும். என்று புகழ்ந்தாள்.
அன்று அவளின் குரல் இலங்கை வானொலியில் ஒலித்தபோது, அந்தக் கிராமமே வியந்தது.
வாலிபர்களைத் தட்டி விட்டாள். கண்மூடித்தனமாக, சமுதாயத்தில் குருடர்களாக, சந்தர்ப்பவாதிகளாக இருப்பதையும், "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்று வாழத் துடிக்கும் பெண்மணிகளின் வாழ்க்கைச் சுவடுகளைச் சுட்டிக் காட்டினாள்.
இன்று பெண்கள் கேவலமாக நடத்தப்படுவதையும், அதற்குக் காரணமாக இருப்பவர்களும் பெண்கள் என்பதையும் இடித்துரைத்தாள். ஆண்மையுள்ள ஒவ்வொரு இளைஞனும், சமுதாயப் பற்றுள்ள ஒவ்வொரு ஜீவனும் தத்தம் அந்தஸ்து, போலி கெளரவம் என்பதை மறந்து பட்டம், பதவி, சொத்து, சுகம் என்ற வரட்டுப் போக்குகளைக் கிள்ளி எறிந்து விட்டு, நாம் மனிதர்கள் என்ற ஒரே நோக்குடன் செயற்பட வேண்டும். இன்று எம்மை வாட்டிக் கொண்டிருக்கும் சீதனப் பேயை விரட்ட வேண்டுமனால், எந்தப் பெண்ணையும், சீதனம் வாங்கி கட்டுவதில்லை, எந்த ஆணுக்கும் சீதனம் கொடுத்து வாழ்க்கைப் படுவதில்லை." என்று ஒவ்வொரு இளைஞனும், யுவதியும் ஆணித்தரமான முடிவுக்கு வர வேண்டும் என்று ஆக்ரோஷமாகப் பேசினாள்.

Page 9
ஒர் இதயம் அழுகிறது
கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாது. "அந்த முதலாளியின் மகளா இப்படிப் பேசினாள். இது நடக்கக் கூடிய காரியமா?" இப்படிப் பலவாறாக பேசப்பட்டது.
சில தினங்கள் கழிந்தோடின. அவளின் அந்த ஆவேசமான கருத்துகள் செயற்பட முண்ணனியாக தன் தந்தையை அணுகி, "வாப்பா, இந்தக் கிராமத்தின் சரித்திரத்தை மாற்றிய பெருமை எனக்கிருக்கட்டும். எனது பேச்சுக்களும், கருத்துகளும் உயிர் உள்ளனவாக அமையட்டும். என்னை நீங்கள் விரும்பிய ஒருவனுக்கு மனம் முடித்து வைக்கலாம். அப்பொழுது காஸிம் முதலாளியின் கண்கள் பனிந்தன. "ஸனிரா நீ சமுதாயத்தின் கண்கள மட்டுமல்ல. என்ட கண்களையும் திறந்திட்டாய். உனக்குப் பொருத்தமானவர் நிஜாம்தான்.
வாப்பா. உண்மையாகவா. ஆம்! சரித்திரம் படைத்தாள். இலட்சியவாதிகள் ஒன்று சேர்ந்தனர். புரட்சி நாதம் கிராமமெங்கும் ஒலித்தது. சரித்திரம் தொடர்ந்தது!!
 

சுன்னத்தொன்று ஹயாத்தாகிறது
உயன்வத்தை ரம்ஜான்
அன்று மாலை அஸர் தொழுகையின் பின் பள்ளி முற்றத்தில் பெரியார்களும், சிறுவர்களும் ஒன்று கூடியிருந்தார்கள். பள்ளி முஅத்தினும் மிகவும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடி ஆடி எதை எதையோ செய்து கொண்டிருந்தார்.
வருடத்தில் ஒரு முறை பள்ளி வாசலுக்கு வெள்ளை அடிப்பதும் சுற்றிவர சுத்தம் செய்வதும் மிக முக்கியமானதொரு பணியாக்கப்பட்டது. அங்கு மட்டுமென்ன அக்கிராமத்தின் சகல வீடுகளுக்கும் வெள்ளை அடித்து சுத்தம் செய்து விறகு, ஆடு, கோழி என்று முன்கூட்டியே சேகரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
ரபீயுல் அவ்வல் தலைப்பிறையைப் பார்க்க விஷேட ஏற்பாடுகள். கிராமப்புறமாக உள்ளபடியால் மின்சார வசதியும் இல்லாமையால் காய்ந்த ஒலைகளை ஒன்று சேர்த்து, கட்டிச் சேர்ப்போரும் சிறு குப்பி விளக்குகளை முன் கூட்டியே தயார் செய்து கொள்வதும் சிறப்பம்சங்களாகும். இவைகள் கந்தூரிக்கென்று சிறுவர்கள் செய்யும் ஒரு செயல்.
பள்ளியின் மினாரா உச்சியில் பிறையைத் தாங்கிய பச்சைக் கொடியை முஅத்தின் ஏற்றி விட்டார். அதனைத் தொடர்ந்து மெளலவியார் பாத்திஹா ஒத நார்ஸாக்கள் வழங்கப்பட்டன. இது ஊர் கந்தூரிக்கான அறிவிப்பாகும். அந்தக் கிராமத்தின் டிரஸ்டியும் அதைத் தொடர்ந்து குடிசை கோபுரம் எல்லா வீடுகளிலும் பெருமானார் பெயரால் புகழ் பாடி அன்னதானம் வழங்குவதும், வீடுகளுக்குக் கொடுப்பதும் ஒரு விஷேட நிகழ்ச்சி ஆகும். குறிப்பாகப் பெண்களே மிக பயபக்தியோடு, சுத்தமாக மெளலுாத் நடைபெறும் இடங்களுக்குச் சென்று கை உதவிகளைச் செய்வார்கள். ஆண்களும் மிக அச்சத்தோடு ஒன்று கூடி விதவிதமான ராகங்களோடு மெளலூத் ஷரீபை ஒதுவார்கள்.

Page 10
ஒர் இதயம் அழுதிறது
இவ்வாறு நடைபெறும் இந்நிகழ்ச்சிகளை கண்டு, கலந்து கொள்ள உற்றார், உறவினர் அழைக்கப்படுவதும், ஒரு சிறப்பம்சமாகும். மஜ்லிஸ் நடக்கும் இடத்தில் மேல்கட்டி கட்டி குத்துவிளக்கேற்றி, பன்னீர் தெளித்து, சந்தனம் பூசி சாம்பிராணிப்புகையோடு அவ்விடத்தை வசீகரப்படுத்துவதும், இடையில் கோப்பி, சர்பத், கற்கண்டு, பேரீத்தம்பழம் ஒதுபவர்களுக்கு வழங்குவதும் மெளலுாத் நடக்கும் போது நடைபெறுகின்ற சில்லறை நிகழ்ச்சிகள்.
அன்று ரபீயுல் அவ்வல் பிறை பன்னிரெண்டாம் நாள். வீடுகளில் எல்லாம் வழக்கத்துக்கு மாறாக உள்ளேயும் வெளியேயும் அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வீதியெங்கும் ஒரே சனக்கூட்டம்.
நாளை விடிந்தால், ஊர் பள்ளிவாசலில் மாபெரும் மீலாத் விழா நடைபெற உள்ளதால், அதற்கு முன் தர்பாரான ஏற்பாடு. பழங்கால பழக்க வழக்கங்களில் ஊறிப்போன பலருக்கு இந்த நிகழ்ச்சிகளில் நம்பிக்கை, பக்தி, அதிலும் பிரதம டிரஸ்டி பெளஸ் ஹாஜியாருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்தக் கிராமத்தின் பெரிய மனிதர், பணத்தால் மட்டுமல்ல உடலமைப்பிலும் அப்படியே.
அவரை எதிர்த்துப் பேச யாருமில்லை. அவர் வைத்தது தான் சட்டம். கடுகடுத்தவராக இருந்தாலுங் கூட சிறு பிள்ளையாக கந்தூரி நாட்களில் நடந்து கொள்வார். ராஜா, மவன், தம்பி என்ற வார்த்தைகள் அடிக்கடி அடிபடும். இவையெல்லாம் இந்த கந்தூரி சீஸனில் மட்டுமே.
காலம் கடந்த சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் இன்று பற்பல காரணங்களால், சமூகத்தை விட்டு ஓடிப்போய்க் கொண்டிருக்கின்றன. அறிவு வளர்ச்சியின் காரணமாக வேலைப்பழுக்கள் அதிகரித்து விட்டன. சமூகம், சமூகம் என்று கூறிக் கொண்டு "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என நடந்து கொண்ட காலம் மலையேறி விட்டது. அறிவின்
 

Pri 63pburio 49ugês 11
தாக்கம் மனிதனின் சிந்தனையில் ஏற்படுத்தியுள்ள சிந்தனைப் போராட்டம், பாமரர்கள் மத்தியிலும், பழமை விரும்பிகள் மத்தியிலும் மூட நம்பிக்கையில் ஊறிப்ப்ோனோர் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதென்றால், அதற்கு மாற்றுக் கருத்தில்லை.
அன்று நம் முன்னோர் ஏற்படுத்திய சில சமய, சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் அன்று தேவைப்பட்டவை தான். இல்லையெனில், இன்று கட்டுக்கோப்பான, ஒழுக்கமுள்ள, சமுதாய அமைப்பை நாம் இலேசாகக் கண்டு கொள்ள (ՔլգաՈ5l.
ஆனால் இன்று, ஒரு வீட்டின் எல்லா வாசல்களும் திறக்கப்பட்டுள்ளது போன்று, அறிவானது, ஆய்வானது விரிவாகி நாலா பக்கங்களிலிருந்தும் தெளிவான சிந்தனைகள் வெளியாகி, புதுத்தலைமுறையினர் மத்தியில் விளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
பெளஸ் ஹாஜியாரின் மகன் இர்சாத், முற்போக்குவாதி, புதிய தலைமுறையினரின் அறிவு பூர்வமான அமைப்புகளில் ஈடுபாடு கொண்டவர். சமூகத்தில் காணப்படுகின்ற பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும், போலி வேடம் போட்டு சமூகத்தின் துரோகிகளாக உள்ளோர்களை இணங்காட்டி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனை கொண்ட இர்சாதின் சிந்தனையால் எழுந்த எண்ணங்கள் பல. வெறும் போதனைகளாகவும், போலி சிந்தனைகளாகவும் இருப்பதனால், சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாதென்பதை அவன் அறிந்திருந்தான். மாற்றம் ஒன்றைக் காண வேண்டும் என்ற உணர்வும், போராட்டம் நடத்துவோர் மத்தியில் மாற்று முறைகளும் இருக்க வேண்டும் என்ற இர்சாதின் சிந்தனை ஆரோக்கியமானதே.
தந்தையின் முரட்டுப் போக்கும், அதிகாரத் துணிச்சலும், போலி நம்பிக்கைகளும், ஒரு போதும் தனக்கோ, தனது குடும்பத்துக்கோ பெயரையும் புகழையும் செல்வத்தையும்

Page 11
2 ஓர் இதயம் அழுகிறது
தேடித்தரப் போவதில்லை, என்று பலமுறை தாயிடம் கூறியுள்ளான்.
எப்பொழுதும் தாய்மார்கள் பிள்ளைகளின் புரோக்கர்கள் தானே கட்டிய கணவரின் கட்டுப்பாடுகள் கட்டுருக்கமாக இருப்பினும், குழந்தைகளின் தேவைகளுக்காக தந்தையிடம் வாதிடும் பண்பு எல்லாத் தாய்மார்களிடமும் உண்டு. இர்சாதின் போக்குகளை அவதானித்து வந்துள்ள அவன் தாய் மர்சூனா, அவனுக்காக பலமுறை கணவரிடம் பேசிய போதெல்லாம், "இந்தக் காலத்துப் பொடியன்கள் அப்படித்தான். அது கூடாது, இது கூடாது என்பாங்க! அப்படிச் செய்யனும், இப்படிச் செய்யனும் என்பாங்க! இதுக்காக வருசம் வருசமா செய்து வார காரியங்கள விட்டிட முடியுமா? இதனால வரப்போர பலாய்கள இவன்களுக்குத் தெரியுமா? பேசாம இருங்க, அவன்ட கலியான விஷயமா நான் கேட்டதுபத்தி ஏதாச்சும் சொன்னானா? என்று மனைவியைப் பார்த்து கேட்டவர், மகன் வருவதைக் கண்டு உள்ளே போனார்.
எப்போதும் காரியக்காரர்கள் திட்டம் தீட்டி செயல்படுவதில் கெட்டிக்காரர்கள். இர்சாத், சிந்தனையில் ஆழ்ந்தான். இந்த மீலாத் தினத்தில் ஒரு புதுமையைச் செய்ய வேண்டும். ஆரோக்கியமான சிந்தனைகள் சமூகத்தின் மத்தியில் எழ வேண்டும். வெறும் அலங்காரங்களும், அனாச்சார பழக்க வழக்கங்களும், போலி நம்பிக்கைகளும் வேறோடு அறுபட்டுப் போக வேண்டும். இவையெல்லாம் ஆர்பாட்டங்களாலும், வெறும் போதனைகளாலும் காலத்துக் ;கொவ் வாத விவாதங்களால் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.
தந்தையின் குரல் அவனது சிந்தனையைக் கலைத்தது. "மவன் நாளைக்கு வீட்ல நிறைய வேலயிருக்கு, உம்மாவுக்கும் உதவியாயிருக்குமே மாமியை கந்தூரிக்கு அழைக்க வேணும். வாங்க போயிட்டு வருவோம்" என்று இர்சாதையும் அழைத்துக் கொண்டு பெளஸ் ஹாஜியார் புறப்பட்டார்.

ஓர் இதயம் அழுகிறது 13
ஒரு முறை அவரது சகோதரி, தன் மகள் பாத்திமாவை இர்சாதுக்கு மணமுடித்து வைத்தால், குடும்பப் பிணைப்பு இன்னும் இறுக்கமாகுமே. என்று கேட்டபோது, பெளஸ் ஹாஜியார் தங்கச்சி எங்கட நில உனக்குத் தெரியும் தானே. நாலு பேர் முன்னிலைல எப்படி. என்று தனது பணத்தின் வலிமையைப் பற்றி நினைவுபடுத்தியதையும், பின் வறுமைப்பிடியிலிருந்து விடுதலை பெற வெளிநாடு சென்று வந்து, நிறைய சொத்துக்கள், பணம் என்று சேர்த்த பின் மீண்டும் தனது மகளை இர்சாதுக்கு பேசிய போது "வெளிநாடு சென்ற பெண்னை என் மகனுக்கு மனைவியாக்க முடியாது" என்று பெளஸ் ஹாஜியார் கூறியதைக் கேட்டு தன் மாமி வேதனைப்பட்டு அழுததையும், இர்சாத் மறந்து விடவில்லை. இப்போது அச்சிந்தனையும் இர்சாதின் மனதில் அடிக்கடி தோன்றியது. அன்று பாத்திமா வெளிநாடு சென்று தேடிய பணத்தால், அவளின் திருமணத்தையும் முடித்த இர்சாதின் மாமியின் வாழ்க்கையில், மீண்டும் புயல் வீசியது. நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத சூழலில் பாத்திமா கணவனை இழந்தது மட்டுமன்றி, கட்டிய துணியோடு அகதி முகாமில் குடியேறியதையும் கேள்விப்பட்டிருந்தான்.
மூளை முடுக்குகளெல்லாம் நுழைந்து, கிடுகுகளால் மறைக்கப்பட்டிருந்த அகதி முகாம் முற்றத்தில் வாகனம் போய் நின்றதும், சிறுவர்கள் ஓடி வருகிறார்கள். பெரிய தலைகள் வெளியே வருகின்றன. பெண்கள் முக்காடிட்ட முகங்களை மெல்ல வெளியே நீட்டிப் பார்க்கின்றனர். "யாராவது ஏதாவது கொடுக்கத்தான் வந்தாரோ" என்ற நினைப்பு அவர்களுக்கு. வாகனத்தை இனங்கண்டு கொண்ட பெளஸ் ஹாஜியாரின் சகோதரி, அங்கே வந்து "வாங்க நானா, வாங்க மவன்" என்று பாசத்தோடு குடிசையினுள் அழைத்தாள். அவளது நலிந்த உடை, களையிழந்த முகம், சோர்ந்து போன உடல், இவற்றைக் கண்ட பெளஸ் ஹாஜியாரின் உள்ளம் துடித்து,

Page 12
ஒர் இதயம் அழுகிறது
கண்கள் கலங்கின. இதனைக் கண்டவள், "நாநா, அல்லாஹற் எங்கள சோதிக்கிறான். இது எங்கட விதி" என்று சொன்னாள், வீட்டுல மதினி எல்லாம் சுகமாக இருக்கிறாங்களா? கந்திரி ιDπεrLDπόβσ...... என்றவாறு இர்சாதைப் பார்த்து "என்ன மவன் சுகமா இருக்கீங்களா?" என்ற போது இர்சாதின் இதயம் வேதனையால் குமுறிக்கொண்டிருந்தது. ஒரு கிராமத் தலைவரின் சகோதரி அகதி முகாமில் பல செளகரியங்களோடு, வசதியாக சகோதரர் சுகித்திருக்க, உணவுக்காகவும், உடைக்காகவும், உறைவிடத்துக்காகவும் போராடும் சகோதரியின் நிலை பரிதாபமானதல்லவா? மனச்சாட்சி தட்டிக் கேட்டது. அப்போது "மாமா, மச்சான்" என்று மெதுவாகக் குரல் கொடுத்து வரவேற்றாள் பாத்திமா.
"எங்க சின்ன மவள் எங்க போனா" என்ற போது "நானா அவளும் கொஞ்சமாவது படிக்கனுமே. இந்தக் காலத்துல புள்ளகளுக்கு வேறு எதத்தான் கொடுக்க முடியும் நம்ம பக்கத்து வீட்ல இருக்கிற மாஸ்டர், அகதிகளாக வந்தவங்க பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாரு, சின்ன மவளும் போறா" என்ற போது,
"என்ன புள்ள படிச்சு இவ என்னதான் செய்றது. ஒரு இடத்தைப் பார்த்துக் கட்டிவைச்சா என்ன"
"நானா, இப்பதான் அவளுக்கு வயது 17 ஆகுது. மூத்தவள் கலியாணங் கட்டி மூணு மாசம் கூட. என்று கூறி முடிக்காமல் விம்மினாள்.
அப்போது இர்சாதின் தலை சுற்றியது. மாமியின் வார்த்தைகள் அவன் உள்ளத்தை சுட்டுப் பொசிக்கின. ஆண்டவனின் சோதனைகள் இப்படியும் அமைந்து விட வேண்டுமா?
"மாமி நாங்க வந்தது, வாப்பா வழமை போல இந்த வருசமும் கந்தூரிக்கான ஏற்பாடுகளைச் செஞ்சிட்டாங்க, உங்களையும் கூட்டிப் போகத்தான் வந்தோம். அது மட்டுமில்ல. இது நான் இப்ப, இந்த நிமிசம் எடுத்த முடிவு.

ஒர் இதயம் அழுகிறது
"வாப்பா, என்ன மன்னிச்சிடுங்க, கந்தூரி, கத்தம், பாத்திஹா இவையெல்லாம் மனுசன மனுசனாக்க, மக்களோடு மக்கள் உறவாட, ஒன்று சேர்ந்து வாழப் பழகச் செய்த ஏற்பாடுகள் தான். ஆனா இன்டைக்கு அது நடக்கல. இவங்க எங்க ரத்தம் என்பதால இவங்கல அழைக்க வந்தோம்.
நாளைக்கு நம்ம வீட்டுச் சாப்பாட்ட சாப்பிட வருபவங்க யாரு. அவங்க இவங்களப் போல. எத்தனை பேர் வருவாங்க! ஆண்டவன் இன்னும் எங்கள சோதிக்கல்ல.
அப்போது, பேசமுடியாதவராய், அதிர்ந்து போனவராய், மகனின் முகத்தை தந்தையும் மற்றவர்களும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
"வாப்பா பாத்திமா மதினி விரும்பினா நான் இந்த மீலாத் தினத்தில. நம்ம வீட்லவச்சி பெருமானாரின் முன்மாதிரிய நினைவூட்ட ஆசைப்படுகிறேன்."
மச்சான் நான். விதவ. உங்கட நில என்ன..? "உங்கட நில என்ன. நீங்க யாரு என்டு பரிதாபமா பேசல்ல. அன்டைக்கு கதீஜா நாயகியை நாற்பது வயதாக இருக்கும் போது மணமுடித்த இருபத்தைந்து வயசு வாலிபரான அண்ணலார் வயது குறைந்தவராக இருக்கவில்லையா?" என்று மனநிறைவோடு கூறிக்கொண்ட போது,
"தங்கச்சி இப்படி ஒரு மகனப் பெற்ற மகிழ்ச்சியை இப்பதான் உணர்ரன், எல்லாம் அவன் செயல் புறப்படுங்க போவோம்" என்றதும்,
ஆனந்தக் கண்ணிரைத் துடைத்தவாறு மாமா அல்லாஹ்வை இரண்டு ரக்காஅத்து தொழுது விட்டு வாரோம் அதற்கிடையில் தங்கச்சியும் வந்திடுவா என்ற போது இர்சாத் "யா அல்லாஹற் என் தந்தையின் மனதில் இப்படியானதொரு மாற்றத்தை ஏற்படுத்திய உனக்கே எல்லாப் புகழுர்(ஏன்று மனதுக்குள் புகழ்ந்து கொண்டான். சுன்னத்தொன்று ஹயாத்தானதென்று ஊர்மக்கள் பேசிக்கொள்ள வழி பிறந்தது.

Page 13
ஓர் இதயம் அழுகிறது
D609.
உயன்வத்தை றர்ஜான்
நான். மலடியா..? நான். மலடியா..? நான். மலடியா..? இது அவளின் உள்ளத்தில் அடிக்கடி மோதிக்கொண்டிருக்கும் குமுறல்.
"ஏம்மா உனக்கு குழந்தை இல்லையா" என்ன, இன்னும் ஒன்னுமில்லையா? ஏன்டி, அவருக்கு என்ன ஆச்சி? இது அவளின் நண்பிகள், உறவினர்கள், அயலவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள். சிலருக்கு இப்படிப் பேசி, கேள்விக் கணைகளைத் தொடுத்து வேடிக்கை பார்ப்பதில் கொள்ளை இன்பம். இன்னும் சிலர், இப்படிப் பேசி மமதைப்படுவார்கள்.
இப்படியான சில பண்புகள், பிறரின் உள்ளங்களைப் புண்படுத்திக் கசக்கிப் பிழிவதை ஏனோ அவர்கள் உணர்வதில்லை.
"என்னப்பா, உன் பொண்டாட்டிக்கு என்ன நடந்து போச்சி" கல்யாணம் என்று ஊரையே கூட்டினாயே. இன்னும் ஒரு குழந்தையைக் காணோமே!
"எவ்வளவு காசு, பணம் இருந்தும் என்னசெய்ய..! ஒரு புள்ள இல்லாத விடும் ஒரு வீடா?"
கிழவனான பிறகா புள்ள பொறக்கப்போகுது? இது அவனின் நண்பர்கள் வேடிக்கையாக, ஆனால் அர்த்தத்துடன் கேட்ட கேள்விகள்.
மனிதன் எவ்வளவுதான் கற்றறிந்தவனாக இருந்தாலும், சிந்தனை மிக்கவனாக இருந்தாலும், சில பொழுதுகளில் அவனது வார்த்தைகள் ஏற்படுத்துகின்ற விபரீதங்கள் சாதாரணமானவைகள் அல்ல.
அறைக்குள் நடக்கும் அந்தரங்கங்களை, பகிரங்க இடமொன்றில் நடத்த முற்படும்போது, ஏற்படுகின்ற விபரீதங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதே போன்று ஒருவனது
 

ஓர் இதயம் அழுகிறது
அந்தரங்க வாழ்க்கைப் பிரச்சினைகள் பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் பொழுது, அதனை எந்த மனிதனாலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது. அதன் தாக்கம் பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அன்று தனது நண்பனொருவனின் மகனின் பிறந்த தினத்துக்கு அழைக்கப்பட்டிருந்தமையினால் பல சாட்டுகளைச் சொல்லி தவிர்த்துக்கொள்ள முயன்றும், முடியாதவர்களாய், அதில் கலந்துகொண்டனர் அமீரும், பாத்திமாவும்.
இப்போதெல்லாம் பிறந்த நாளைக் கொண்டாடுவது பஷனாகிவிட்டது. அந்நியர்களின் பழக்கவழக்கங்கள், வரட்டு வேதாந்தங்கள், ஊறிப்போன ஆரோக்கியமற்ற சம்பிரதாயங்கள், பின்பற்றப்படாவிட்டால், அது பரிபூரணமான வைபவமாக இல்லாத நிலையாகிவிட்டதால், சகல ஒழுங்குகளும் அங்கே செய்யப்பட்டிருந்தன.
பிறந்ததினக் கொண்டாட்டம் ஒரு குழந்தைக்கல்ல. குழுமியிருந்த அத்தனை குழந்தைகளுக்குமோர் வரப்பிரசாதமாக அமைந்தது. வண்ண வண்ண உடைகள், கலகலவென்ற சிரிப்பொலிகள், சின்னஞ் சிறுவர்கள் இசைக்கேற்ப நடனமாடிக்கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் முகங்களிலே பெருமிதம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
அமீரின் நண்பர்கள் பல விதமாகக் கேலிகள் பேசினர். பாத்திமாவையும் பெண்கள் குழு விடவில்லை. அது ஒரு தனி வேடிக்கைதான். சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அமீர் நிதானமாக நடந்துகொண்ட போதிலும் அவனது உள்ளத்தில் எரிமலைகள் வெடித்தன.
பாத்திமாவினாலும், தோழிகளின் கிண்டல்களைப் பொறுக்க முடியவில்லை. உள்ளம் துடித்தது. உடல் சோர்ந்தது. சமாளித்தாள். ஆனால் அகத்தின் அழகு முகத்தில் தெரியாமல் போகாதே கொண்டாட்டமும், கும்மாளமும், முடிய எல்லோரும் கலைந்து சென்றனர். அமீரும், பாத்திமாவும் தங்கள் காரில்

Page 14
(8) ஓர் இதயம் அழுகிறது
ஏறிக்கொண்டனர். கணவன், மனைவியாக இருந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டவர்களாக நடந்துகொண்டனர். நிலைமையைச் சமாளிக்க காரிலுள்ள வானொலியை இயக்கினார் அமீர். "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை. " என்ற பாடல் கணிரென ஒலித்தது. அவர்களது மனநிலையை ஒத்திருந்தது அப்பாடல்
பாத்திமா திடீரென சிரித்து விட்டாள். இஞ்சிதின்ற நிலைக்குள்ளான அமீர் பாத்திமாவை முறைத்துப் பார்த்தான். அடிக்கடி அவளைப் பார்த்து நீ ஒரு மலடி, நீயும் ஒரு பெண்ணா? என்று குற்றம் சுமத்தும் அவனின் பேச்சுக்கள் அவளை உறுத்தத் தொடங்கியது.
"நான் குழந்தைச் செல்வத்தைப் பெற விரும்பாதவளா? அவர் என் உணர்ச்சிகளை உணராதவரா?"
"அவரின் விருப்பத்திற்கு என்னை எப்படியெல்லாம் பயன்படுத்த ஆசைப் பட்டாரோ, அதற்கெல் லாம் நான் இசைய மறுத்தேனா. ?" இந்த நினைவுகள் அவள் உள்ளத்தை வருத்தி கண்களில் நீரை வரவழைத்தன. விம்மி விம்மி அழுதாள். அமீரோ சற்றேனும் இரக்கமில்லாதவனாக தன் பாட்டில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். வீட்டு முற்றத்தில் கார் நின்று, "கெட் அப்" என்ற அமீரின் குரல் ஆவேசத்தோடு ஒலித்தபோது தான் வீடு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தாள் பாத்திமா.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அமீரின் மனநிலையில் பெருத்த மாற்றம் குடும்ப வாழ்க்கையில் தான் ஏமாந்து விட்டேனா என்ற சோக உணர்வு, வழக்கமான பேச்சுக்கள், கலகலப்பு யாவும் மறைந்து கொண்டிருந்தன.
தொட்டதற்கெல்லாம் பாத்திமாவிடம் சீறி விழுந்தான். பொங்கி எழும் வேதனை அலையை ஒரு பெண்ணால் எத்தனை நாட்களுக்குத்தான் அடக்கிக் கொள்ள முடியும்?

ஓர் இதயம் அழுகிறது 9
கட்டிய கணவனின் கடுஞ் சொற்களால், பாரா முகம் கட்டழகியான அவளை உருக்குலையச் செய்தது. பொழிவிழந்த முகத்துடனும், மெலிந்த உடலுடனும் சோகமே உருவாக மாறிய அவளைக் கண்டவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
ஒரு நாள் பாத்திமாவுடன், பாடசாலையில் ஒன்றாகப் படித்த நிஜாம், அவள் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்துவதைக் கேள்விப்பட்டு, அவள் இல்லம் வந்த போது, பாத்திமா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். பாடசாலையில், அவளுக்கு பல வழிகளிலும் படிப்பு சம்பந்தமான விடயங்களில் மிகவும் உதவியாக இருந்துள்ளதை அவள் இனி னும் மறந்துவிடவில்லை.
பாத்திமாவின் உருக்குலைந்த கோலத்தைக் கண்ட அவன், பல குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கலாம் என்ற எண்ணத்தில் "சிஸ்டர் எங்க உங்க குழந்தைங்க" என்று கேட்டபோது, அவள் முகம் வெளிறியது. நீண்ட பெருமூச்சுடன் தலை கவிழ்ந்தாள். கண்ணிர் கன்னங்களைக் கோலமிட்டது. எதையோ உணர்ந்து கொண்டவராக கதையை மாற்றினார் வந்தவர்.
வீட்டை நோட்டமிட்டார். பெரிய வீடு மூன்று குடும்பங்கள் வசிக்கலாம், என்பதை உணர்ந்து கொண்டவராக என்ன இவ்வளவு பெரிய வீட்டில யாரையும் காணல்லையே . இந்த ஊர்ல ஒரு ஆபீஸ் அறை எடுக்க எவ்வளவோ முயற்சித்தேன். கிடைக்கல. இங்கே ஒரு அறை வாடகைக்கு எடுக்க முடியுமா? என்று மெதுவாகக் கேட்டார். பாத்திமாவினால் எதுவும் பேச முடியவில்லை. நீங்கள் என் கணவரைக் கண்டு கதைத்தால், நல்லது என்று சுருக்கமாகக் கூறியவள், அவருக்கு தேநீர் தயாரிக்க உள்ளே சென்றாள்.
இப்பொழுது பாத்திமாவின் மனதில் இன்னுமொரு இடி விழுந்து விட்டது போன்றிருந்தது. தன் கணவனோ அடிக்கடி நாகம் போன்று சீறி விழுவார். தனக்கொரு குழந்தை இல்லை என்ற மன வேதனைதான் அவரின் மனக்குறையாக இருந்தது

Page 15
ஒர் இதயம் அழுகிறது
அடிக்கடி வீட்டினுள் உண்டாகும் வெடிப்புக்கள் நிச்சயம் தம்மைக் காட்டிக் கொடுத்துவிடும். இந்நிலையில் நான் வெட்கப்படவேண்டியவளாக வேதனைப்பட வேண்டியவளாக நேரிடும். அதே நேரத்தில் தன்னோடு பள்ளியில் படித்த போது உடன் பிறந்த சோதரர் ஒன்றைப் போன்று பழகியவன் உதவி கேட்டு வந்துள்ள நேரத்தில் மறுப்பதா என்ற மனப் போராட்டம் பிறிதொரு புறம்.
தேநீர் கோப்பையோடு அவனருகே வந்து நின்ற போது தாங்ஸ்" என்று கூறியவாறு தேநீர் கோப்பையை பெற்றுக் கொண்டவர் அவளைப் பார்த்தபோது அவளின் உருக்குலைந்த உடல் சோர்ந்த முகம், மிரண்ட பார்வை , இவையெல்லாம் எதையோ உணர்த்துவது போன்றிருந்தது. ஆனால் தனியாக ஒரு பெண் இருக்கும் போது அவளிடம் எதையாவது கேட்டு பேச்சை வளர்ப்பது முறையல்ல என்பதைக் கருத்திற் கொண்டு அவளது கணவனைக் கண்டு பேசிக் கொள்வோம் என்ற முடிவில் அங்கிருந்து வெளியேறிய சில தினங்களுக்குள் பாத்திமாவின் குடும்ப நிலைகளை உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.
நாட்கள் உருண்டோடின. அடிக்கடி அவள் கணவனோடு மனம் விட்டுக் கதைக்க விரும்பினாலும் கூட ஆண்களின் மனநிலை என்னவென்று தெரியாமல் எதையும் கதைப்பது பிழையாகிவிடுமோ என்ற நினைப்பும் தான் நல்ல காரியமொன்றைச் செய்யப்போய் நடக்கக் கூடாத எதுவும் நடந்து விட்டால் . என்ற பயமும் அவனுக்கிருந்தது.
எப்படியிருந்த போதிலும், அவர்கள் மீதிருந்த அனுதாபம் நிஜாமுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. தன்னாலியன்ற ஆலோசனைகளைக் கூறி, அவர்களுக்கிடையில் அடிக்கடி ஏற்படுகின்ற கசப்பான உணர்வுகளை நீக்கிவிட வேண்டுமென்ற அவா அவனுள் அதிகரித்தது.

ஒர் இதயம் அழுகிறது
குடும்ப சுகாதார அதிகாரியான நிஜாமுக்கு, இத்தகைய பிரச்சினைகளுக்கு உள்ளாகியவர்களோடு உறவாடி பரிகாரம் கண்ட அனுபவம் நிறைய உண்டு.
இன்று சில மனைவிமார்களும், மாமிமார்களும்தான் ஏன் சில கணவர்களும் கூட திருமணமான சில மாதங்களுக்குள் மனைவி கர்ப்பமாக வேண்டும், தன் மனைவி குழந்தைப் பாக்கியம் உள்ளவள் என்று தன் உற்றார், உறவினர்கள் அறிய வேண்டும் என்றெல்லாம் சிந்திப்பதுண்டு. ஆனால் இறைவன் யார் யாருக்கு எப்படி எப்படியெல்லாம் குழந்தைப் பாக்கியத்தை அளிக்க உள்ளானோ என்று யார்தான் அறிவார்? இச் சிந்தனைகள் நிஜாமின் நினைவில் எழுந்து மறைந்தன.
அன்றொரு நாள் பிரதேச சுகாதாரப் பிரச்சினைகள் சம்பந்தமாக நிஜாமின் பேட்டியொன்று வானொலியில் இடம்பெறவிருந்ததால் அனைவரும் வானொலிக்கருகில் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பேட்டி முடிந்ததும் முஸ்லிம் நிகழ்ச்சியில் கொத்பாப் பிரசங்கம் நடைபெற்றது. இன்று எண்ணற்ற பிரச்சிகைள், கஷ்டங்கள், நஷ்டங்கள், மனவேதனைகள் என்று நம் சகோதரர்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இஸ்லாம் நோன் பைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும், ஸக்காத்தைக் கொண்டும், அன்னதானங்களைக் கொண்டும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் பரிகாரம் கண்ட காலமொன்றுண்டு. ஆனால் இன்று சாத்து, மாத்து என்றும் நூல் கட்டுதல் என்றும் ஸியாரம், காணிக்கை என்றும் சமயத்திற்கு மாற்றமான காரியங்களை மேற்கொண்டு ஈமானுக்கு விலை பேசுகின்றனர். ஆனால் தஹஜ்ஜத் தொழுகை இருக்கின்றதே இத்தொழுகையின் மகத்துவம் என்னவென்று எம்முள் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளனர் என்ற போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

Page 16
ஓர் இதயம் அழுகிறது
அப்போது பாத்திமாவின் உள்ளத்திலும் இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றியது. தனக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாத குறையை இறைவன் இத் தொழுகை மூலம் தீர்த்து வைப்பானென்று அசைக்க முடியாத நம்பிக்கை ஒளி அவள் இதயமெங்கும் பரவியது. இரு கரமேந்தி இறைவனிடம்
"யா அல்லாஹற் இத் தொழுகையை நான் இடைவிடாது தொழுகிறேன் எனக்குத் தாயாகும் பாக்கியத்தைத் தந்தருள்வாய் நாயனே . ". என்று மனமுருகி வேண்டி நின்றாள். இனிமேல் அந்த நம்பிக்கை ஒளியில்தான் அவள் வாழ்க்கை தொடரப் போகிறது.

ஓர் இதயம் அழுகிறது :
மஜீதா விதவையானாள்
"உயன்வத்தை ஹர்ஜ7ணி
"பெண் பாவம் பொல்லாதது" என்பார்கள். "திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்" என்பார்கள். திருமணம் செய்து கொண்டவன் தனது கடமைகளுள் அரைவாசியைப் பூர்த்தி செய்தவனாகின்றான் என்று சொல்லப்படுகின்றது. இத்தகைய ஆழமிக்க கருத்துக்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் ஒர் ஆணையும், பெண்ணையும் இணைத்துச் செய்யப் படுகின்ற ஒப்பந்தம்.
இன்று திருமணங்கள் என்பன கண்ணாம் பூச்சி விளையாட்டுக்கள் போன்று அமைந்து விட்டன. பொறுப்புக்கள் தெரியாது, அதன் மகத்துவம் பற்றி உணராது திருமணங்கள் மனித சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்துகின்ற அமைப்பு, சுதந்திரம், கட்டுப்பாடு, ஒழுக்க உயர்வு பண்பாட்டு வளர்ச்சிகள் பற்றி சிந்திப்பதை இன்றைய இளைய தலைமுறையினர் எண்ணிப்பார்க்கத் தவறி விடுகின்றனர். இதன் பயனால் இன்று காதிக் கோடுகளில் கைகட்டி நிற்கும் காட்சியைப் பார்க்கின்றோம்.
இவற்றுக்கெல்லாம் பொறுப்புள்ளவர்கள், கடமைப்பட்ட வர்கள், உரிமையுடையவர்கள் விழிப்புணர்வோடு, பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளாமையே காரணம் என்றால் மிகையாகாது.
அப்போது மஜீதா வயது பதினெட்டை எட்டிக் கொண்டிருந்தாள். துள்ளி விளையாடும் பருவம். அவளின் வயதுக்கேற்ப துடிதுடிப்பு. எதையும் அவசரமாக முடிவெடுக்கும் குணம், பெற்றாரின் ஒரே செல்வ மகளாய் இருந்தமையால் கட்டுப்பாடற்ற சுகந்திரமும், எதைச் சொன்னாலும் செய்து கொடுக்கும் பண்பும் பெற்றோரிடமும் இருந்தபடியால் செல்லமாகவே வளர்ந்தாள்.

Page 17
24 ஒர் இதயம் அழுகிறது
அளவு கடந்த பாசம், கட்டுபாடற்ற சுதந்திரம் எத்தனை ஆபத்தானது என்பதை இன்று எத்தனை பேர்தான் உணர்கின்றனர்.
மஜீதாவின் வாழ்வில் வீசிய புயல், அது புயலல்ல, சூறாவளி, அதுவும் கஷ்ட நஷ்டம், துயரம் என்னவென்று தெரியாதவளின் வாழ்க்கையில் சூறாவளி என்றால் கேட்கவும் வேண்டுமா?
இப்றாஹீம் நாநாவின் மாயவலையில் சிக்கி, தன் ஒரே மகளை நஜீபுக்குத் திருமணம் செய்து வைத்து, வருடம் ஒரிரண்டுதான் கழிந்தன. நஜீப் அதிகம் படித்தவனல்ல. ஆனால் "நிறை குடம் தழம்பாதென்பதற்கேற்ப" அதிகம் பேசி எதிலும் மாட்டிக்கொள்ளாமல் நிதானமாகவே நடந்து கொண்டான். விறுவிறுவென எதையும் பேசி முந்திக்கொள்பவனாகவே இருந்தான்.
இத்தகைய பழக்க வழக்கங்களால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். மாங்கல்யம் பறிபோய் வாழ்க்கை சீர்குலைந்து, கணவன் மனைவி என்ற பந்த பாசம் மறைந்து, தாந்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் காட்சிகள் இன்று சமுதாயத்தின் மத்தியில் நிறைந்து விட்டன. இவற்றுக்கெல்லாம் மூல காரணம் பெற்றோரின் கணி மூடித்தனமான கண்காணிப்புக்களே ஆகும்.
மஜீதா தனிக்குடித்தனம் நடத்த அவரசப்படா விட்டாலும், நஜிப் அவசரப்பட்டான். அதற்கும் நியாயம் இருந்தது. எப்போதும் தனது பெற்றோரினர் , சகோதர, சகோதரிகளின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மனைவியின் முற்போக்கு தன்மைகளை மட்டம் தட்டுவதில் அவனுக்கு பரம திருப்தி. இந்நிலைக்கு அவனைத் தள்ளி விடுவதில் இனபந்துக்கள் மும்முரமாகவும் இருந்தனர். காலச்சக்கரம் உருண்டோடியது, மனைவி என்ற ஸ்தானத்தில் அடிக்கடி இடி முழக்கங்களுடனான கடும் புயலும், மழையும் பெய்யத்தான் செய்தன.

ஓர் இதயம் அழுகிறது"
பாச மகளின் சோக நிலையைக் கண்டு, பெற்றோர் மனமும், கண்களும் கலங்கின. அடிக்கடி அவர்கள் பிரச்சினைகளில் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.
விடுமுறை தினமான அன்று, மஜீதாவின் பெற்றோர் அவள் வீடு வந்த போது, மகள் கண்கலங்கி, வீடும் அல்லோல கல்லோலப்பட்டிருப்பதைக் கண்டு திகைத்தனர்.
மஜிதா என்னம்மா இது? நாங்க வார நேரமெல்லாம் ஏதாவதொன்று.
"என்ன ஏதாவது, நீங்க செஞ்சு வைச்ச கல்யாணத்துல எண்ட வாழ்க்கையே மண்ணாய் போச்சி, இன்னும் என்ன நடக்கனும். ?" என்று சீறி விழுந்தாள்.
அந்த வார்த்தைகள் இருவரையும் சுட்டுப் பொசுக்குவது போல் இருந்தது. எதைப் பேசினாலும், பெற்ற மனமல்லவா? பிள்ளை மனம் கல்லானாலும், பெற்ற மனம் பித்தல்லவா?
"மவள், அவசரப்படாதீங்க குடும்ப வாழ்க்கை என்றால் இப்படித்தான். போகப் போகச்சரியாகி விடும். இப்படியெல்லாம் பேசக்கூடாது."
"வாப்பா எனக்கு மாப்பிள்ளை தேடித்தாங்க என்று கேட்டேனா?" உங்கட பாரம் குறையட்டும் என்று, அவர்ட வாப்பாட பேச்சுக்கு மயங்கி என்ன பலியாக்கிட்டிங்க வாப்பா. நான் இனி. என்று மேலும் பேச முடியாமல் விம்மினாள்.
ஏம்மா, நீ என்ன சின்னக் குழந்தையா, இப்படியெல்லாம் பேசி எங்கள வேதனைப்படுத்தாதே. நீ நினைக்கிற மாதிரி உனக்கு துரோகம் செய்ய இந்தக் காரியத்தை செஞ்சிட்டோம் என்று வாய் கூசாம பேசுரியே. எப்போது நீ கேட்டத நாங்க மறுத்திருக்கிறோம்? நீ விரும்பாதத கட்டாயப்படுத்தி விரும்பு வச்சோமா? உனக்கு என்னதான் நடந்துச்சுன்னு சொல்லேன்! "அவ சொல்லத் தேவையில்ல, நான் கொலிறேன். மஜீதாட கணவன் ஒரு குடிகாரன், பொய்யஞ்கட்இருப்பார்ட பேச்சைச் கேட்டு நடப்பவன். உனக்கு அவனோட குடும்பம் விருப்பமில்லதானே?"

Page 18
ஓர் இதயம் அழுகிறது
"அடப்பாவி மருமகனுக்கு மாமி கொடுக்கிற பட்டமா இது? வெக் கமில்ல, அப்ப மஜீதாட கணவனோட வாழ வேண்டாமென்டு யோசன சொல்லவா இங்க வந்தீங்க" சீறி விழுந்தார் மஜீதாவின் தந்தை.
"நீங்க சும்மா இறீங்க, அவர விட்டா வேற மாப்பிள்ளைக்கா பஞ்சம்." பச்சைக் கிளியை வளர்த்து பூனைக்கிட்ட குடுத்த மாதிரி இவன்ட கையில கொடுத்திட்டோம், இனி உனக்கு இப்படி ஒரு வாழ்க்க தேவையில்லை. உடனே புறப்படு" என்று மஜீதாவின் தாய் முடிக்குமுன் "சீ மூடுங்க வாய, ஒரு தாய் சொல்ற பேச்சா இது" என்றார் தந்தை.
"வாப்பா, ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குக் தான் தெரியும். நான் நடத்த கெட்டவளாம், செல்லமாக வளந்தவளாம், என்னோட வாழ்வதால அவர் நரக வேதனை அனுபவிக்கிறாராம். இப்படி எல்லாம் பேசும் போது நான் எப்படி. என்று சொல்லி அழுதாள் மஜீதா.
கேட்டீங்களா. இன்னும் கேக்கனுமா? என்ன புள்ள இப்படிப் பேசுறிங்க. நீங்க ஐந்து நேரமும் தொழுவீங்க. நான் காலையில் எழுந்ததும், புக்கியைத் தேடி ஒடுவேன். எந்நேரமும் கையில் ரேஸ் பேப்பர். எல்லோரும் ஜம்மாவுக்குப் போவாங்க நான் அந்த சோமபாலட கடையில டாம் போட்டோட இருப்பேன். நோம்பு காலத்துல நீங்க தராவீஹற் தொழுறப்போ நான் குரட்டை விட்டு தூங்குவேன். அப்போதெல்லாம் உங்களுக்கு என்ன விட்டிட மனம் வரல்லையா? என்ற போது அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
"மவள் மஜீதா, இப்ப என்ட நிலை என்ன? என்ட நடத்தை என்ன? நான் எப்படி மாறினேன்? யாரும் வந்து எனக்கு பயான் பண்ணல்ல, புத்தி சொல்ல வரல்ல, என்னை ஒதிக்கி வச்சாங்க இந்தா இருக்கிறாவே. உங்கட உம்மா. இவதான் என்ன இந்த நிலைக்கு மாற்றினா."
 

6ofio 68ĝosuruib , 4egĥisió
அப்படிப்பட்டவ தன்ட மகள்ட மாப்பிள்ள சரியில்லைன்று அவர வெரட்டிட்டு வீட்டுக்கு வரச் சொல்ற அளவுக்கு மதி கெட்டுப் போயிட்டா!
மவள், நீ இன்னும் சின்னவதான். குடும்ப வாழ்க்கைய பத்தி, உனக்குத் தெரிய இன்னும் காலம் இருக்கு. ஒரு கணவன் செய்ய முற்படுகின்ற காரியத்தை பெண் செய்ய முற்படுகிறாள். கணவனோடு வாழ முடியாதென்றால் அதற்கு வழி விவாகரத்து. ஒரு மனிதன் 'தலாக்' என்று சொன்னால் அர்ஷ" நடுங்குமாம். 'தலாக்' என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிடுகிறது. ஒரு பெண்ணின் மெனி மை யை அழித்துவிடுகிறது. அதைப் பற்றி நினைத்துப்பார்க்கவும் கூடாது. நான் வயதாகி விட்டேன் நீயும் வளர்ந்து விட்டவள். பூப் போன்று உன்னை வளர்த்தேன். சீரும், சிறப்புமாய் வாழ்வதைக் காண ஆசைப்பட்டேன்.
நீயோ. பேசி முடிக்க முன். உள்ளே நுழைந்தான் நஜீப் ஆ. LDPILD!..... மாமி. எப்போ வந்தீங்க. மிச்ச நேரமா? உக்காருங்களேன்!! என்றவன். "மஜி, என்ன ஒரு மாதிரியாக இருக்கீங்க..!! என்றவாறே கையில் இருந்த பையை கொடுத்துவிட்டு அறையினுள் சென்றான். இதுவரை நடந்தது கணவா, நனவா என்று புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் மஜீதாவின் முகத்தில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. மருமகனைக் கண்ட மஜிதாவின் பெற்றோருக்கு ஒரு வித தடுமாற்றம். தன்னைக் கண்ட போது காட்டிய கலகலப்பு, உபசரிப்பு, மஜீதாவிடம் காட்டிய கருணை.
அப்படியானால் மஜீதா சொன்னதெல்லாம். வாய் கூசாமல் தன் மகனைப் போன்ற மருமகனைப்பற்றி, கன்னா, பின்னா என்று பேசிய மஜீதாவின் தாய் முகத்தில் ஈயாடவில்லை.
மணித்தியாலங்கள் சில சென்றன. பகல் உணவும் முடிந்தது. மஜீதாவுக்கு மனதில் குழப்பம். தான் பேசிய பேச்சுக்கள

Page 19
வெறும் வெற்றுப்பேச்சுக்களல்ல. தன் கணவனின் பகட்டான நடத்தையால் தன்னைப் பெற்றார் தப்புக் கணக்கு போடக்கூடாதே என்ற ஏக்கமும் அவள் உள்ளத்தில் எழுந்தது.
"உம்மா இன்று இருந்துவிட்டு நாளைக்குப் போங்க" என்று அன்போடு கூறிக்கொண்ட போது "இல்லம்மா நாங்க போறது தான் நல்லது வீட்டிலேயும்." என்று கூறி முடிக்குமுன் "இல்ல வாப்பா காலையிலேயே போய்விடலாம்" என்றாள்.
"சரி, ஏதாவது லேசாக இரவுக்குச் செய்யுங்க மவள்" என்று கூறி இருக்க முடிவுசெய்தனர். மனதில் பெரும் போராட்டத்தோடு சமையலையும் முடித்துக்கொண்டு, வானொலிக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டனர். அப்போது, முஸ்லிம் நிகழ்ச்சி ஆரம்பமானது. முஸ்லிம் செய்திகள் முடிந்த பின் குத்பா பிரசங்கம் ஆரம்பமானது. அன்றைய பிரசங்கம், இன்றைய நாகரீகப் போக்கில் சிக்குண்டு வாழும் நம் சமூகத்தின் பிற்போக்குத்தன்மைகளை விளக்குவதாக அமைந்திருந்த போதிலும், குறிப்பாக, வெளிநாட்டு மோகத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் செய்யப் போகும், நம் சகோதர, சகோதரிகள், எந்த இனத்தவரானாலும் சரி, சோடி சோடியாகப் போவதும், தொழிலுக்காக போனவர்கள் பிறகு குடும்பமாக வேண்டிய நிலையும், பிறகு பொருத்தமற்றது எனக் காணும் போது, விவாகரத்து செய்வதும், அதனால் ஏற்படுகின்ற விபரீதங்களைப் பற்றியதாகவே இருந்தது. விவாகரத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற இருள் மயமான நிலைமையைத் தெட்டத் தெளிவாக சொல்லப்பட்டபோது பக்கத்தில் அமர்ந்திருந்த மஜீதா ஏதோ தேவைக்காகப் போன்று அவ்விடத்தை விட்டு எழுந்தாள். அதனைப் புரிந்து கொண்ட அவள் பெற்றோர். கடைக்கண்ணால் பேசிக்கொண்டனர்.
அப்பொழுது லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. முன் வாசலில் வாகனம் நின்ற சத்தம் கேட்டு, வெளியே வந்தாள் மஜீதா. அருகே, காருக்கு வெளியே நின்றிருந்த அவள்
 

ஓர் இதயம் அழுகிறது
கணவனின் நண்பர், தங்கச்சி. என்று திணறியபோது, எதையோ புரிந்துகொண்டவள் போல் காரினுள் எட்டிப் பார்த்தாள். அங்கே. பேச்சு மூச்சின்றி, படுகாயங்களுடன் உயிருக்காகப் போரடிக்கொண்டிருந்தான் நஜீப். அக்கோரமான காட்சியை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ராஜா.ராஜா. எனக் கதறினாள். அச்சத்தம், அக்குரல் நஜிபின் காதுகளில் விழ, அவள் பக்கம் கைகளை நீட்டினான். மறுகணம், குடிபோதையிலேயே அவன் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்தான். மஜீதா விதவையானாள்.
23-11-94 மு.நி. ஒலிபரப்பானது.

Page 20
30 ஓர் இதயம் அழுதிறது
சந்தேகம் தெளிவான போது
உயன்வத்தை றம்ஜ/ன்
இன்னும் சில தினங்களில் என் வாழ்க்கையில் என்றுமே
மறக்க முடியாததோர் திருநாள். அந்த நாள் நெருங்கிக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி கற்பனை பண்ணிக் கொண்டே இருந்தேன். நான் என்னை உணரக்கூடிய பருவத்தில் நடந்தவைகள், என் மீது பாசம் காட்டியவர்கள், என் மீது நடந்து கொண்ட முறைகள், பள்ளிப் பருவத்தின் போது ஆசிரிய, ஆசிரியைகள் அன்பு காட்டியமை, சக மாணவ, மாணவிகள் என்னுடன், நான் அவர்களுடன் நேசத்துடன் கொஞ்சி விளையாடிய நாட்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக கற்பனையில் தோன்றி மறைந்தன.
இன்னும் சில தினங்களில் என்னைக் கட்டிக்கொள்ளப் போகும் அந்த மகாராசியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி அவளின் அழகை உச்சி முதல் உள்ளங் கால் வரை அவதானிக்கிறேன். என்ன அவளின் அழகு! திருமணம் முடிந்த புதிதில் சிட்டுக் குருவிகள் போல் உல்லாசமாக வெளியே செல்லும் இளஞ் சோடிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் உபசாரங்கள், கெளரவங்கள், விமர்சனங்கள், கொட்டும் மழையிலும் ஒரே குடையில் ஒன்றிணைந்து செல்லும், மங்கிய மாலைப் பொழுதுகளிலும், இரவுகளிலும் கை கோர்த்த படி உலா வருவதும், சின்னத் தலைவலி வந்தாலும் கூட, மனந்தாங்காது வைத்தியரைத் தேடி ஒடுவதும், புது மயக்கத்திலே செய்யும் விநோதமான செய்கைகள். இவைகள் நிழற்படங்களைப் போல் எண்ணத் திரையிலே அடிக்கடி தோன்றி மறைந்தன. எனக்குத் திருமணமான பின் நானும் இப்படியெல்லாம் நடக்க வருமே! அப்போது நான் எப்படி கூச்சப்படாமல் நடந்து கொள்வேன் என்று எனக்குள்ளேயே கற்பனை பண்ணி உள்ளத்தால் மகிழ்ந்தேன்.

Pri 85zti ap8439 31
ஆம்! நான் கற்பனை பண்ணிய அந்த நாள் வந்து விட்டதும் பெற்றோர் சகோதர, சகோதரிகளின் பாசத் துடிப்பையும், உற்றார், நண்பர்கள். அயலவர்களின் அன்பையும், கேலிகளையும் எப்படி சமாளிக்கப் போகிறேன். என்ற கேள்விக் கணைகளும் உள்ளத்தில் எழுந்தன.
நண்பர் ஒருவரின் திருமணத்தின் போது, பெண் வீட்டுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த வேலையில், நண்பர் தன் பெற்றோரின் கால்களைத் தொட்டு முத்தமிட்டு ஏங்கி அழுவதையும், அவர்களும் அழுத காட்சியும் என் நினைவுக்கு வந்தது. எனக்கு இப்படியான ஒரு கட்டம் குறுக்கிடும் போது, நான் எப்படி நடந்து கொள்வேன் என்ற எண்ணமும் உள்ளத்தில்
உருவானது.
நாளை விடிந்தால் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சுபதினம்.
அந்த அணி புக் குரிய வளிண் அழகுக் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டி அவளை என்னுடையவளாக, என் சொத்தாக உரிமையாக்கிக் கொள்ளும் இனிய தினம். எனக்கு வாய்க்கும் மனைவி எப்படியிருக்க வேண்டும் என்று என் உள்ளத்தில் உருவாக்கியிருந்த இலட்சிய கோலத்தை இன்னும் சில மணித்தியாளங்களுக்குள் கண்ணால் காணப் போகிறேன். நண்பர்கள், உறவினர்கள், பழகியவர்கள் எல்லோரும் வந்து வாழ்த்தினர். உற்சாகப் படுத்தினார்கள். விபரிக்க முடியாத ஒருவகை உணர்ச்சி என்னுள் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில், அனுபவமற்ற, முன் பின் பேசி பழகியராத ஒருத்தியுடன், உடல் வியர்க்க அச்சத்துடனும், ஆசைகளுடனும், ஒரே அறையில் தனித்துக் கழிக்க வேண்டிய சூழ்நிலையில், நான் அவளுடன் பேச வேண்டுமா அல்லது அவள் என்னுடன் பேசுவாளா? சே. ஒரு நாளும் அப்படி பேச மாட்டாள். இவை என் கற்பனை.

Page 21
ஒர் இதயம் அழுகிறது
திருமணச் சடங்குகள் எல்லாம் இனிதே முடிந்துவிட்டன. என்றாலும் திருமண வீடுகளில் இருக்கும் கூச்சல்கள், கேலிப் பேச்சுகள், இசைத்தட்டுக்களின் இரைச்சல்கள் இரவு பத்து மணியாகியும் ஓயவில்லை. எனது மைத்துனர் வந்து நான் களைத்திருப்பதனால், சென்று தூங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொண்டார். பலரும் என் முகத்தைப் பார்ப்பதும், சிரிப்பதும், என்னை அவசரப்படுத்தியதையும் காண எனக்கே வெட்கமாக இருந்தது. அன்று கற்பனையில் மலர்ந்த அரும்புகள் இன்று மலர்ந்து மணம் வீசப் போகின்றன என்ற இனிய நினைவோடு, அறையினுள் நுழைந்தேன். என் மனங் கவர்ந்தவள் ஒரு மூலையில் சிலைபோல் நின்றிருந்தாள்.
அலங்கரிக்கப்பட்ட அந்தத் திருமணக் கோலத்தில் அவள் உருவத்தை இப்போதைய சுபநிலையில் இருந்து பார்க்கிறேன். தலையை குனிந்த வண்ணம் பெருவிரலால் தரையில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். நான் மெதுவாக கட்டிலில் அமர்ந்த வண்ணம் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த காற்றாடி சுழன்று கொண்டிருந்தது. அவள் அசைவதாகவோ தலையைத் தூக்குவதாகவோ தெரியவில்லை.
"பூமியைப் பெருவிரலால் தோண்டுவது கூடாதென்பார்களே!" என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன். அவள் தனக்குள் சிரித்தவளாக வாயில் விரலை விட்டு நகத்தைக் கடித்தாள். "நகத்தைக் கடிப்பதும் கூடாதென்பார்களே" என்று கூறியதும், தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள். அவளை எப்படியும் பேச வைக்க எண்ணி, "ஹலோ கொஞ்சம் தண்ணிர் வேண்டும்" என்றேன். ஆனால் அவள் அசைவதாகவோ, பேசுவதாகவோ தெரியவில்லை. சரி, நானே சென்று தண்ணிர் கேட்டுக் கொள்கிறேன், என்று எழுந்ததும், அவள் என்னை முந்திச் சென்று தண்ணிர் கிளாஸ"டன் வந்தாள். வழக்கமாக நான் படுக்கைக்குச் செல்லுமுன், டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்து வருவது வழக்கம். அது எனக்கு சமீபத்தில்

ஓர் இதயம் அழுகிறது
ஏற்பட்ட வயிற்று நோவொன்றுக்குப் பாவிக்கும் மாத்திரையாகும். அவள் வருவதற்கிடையில் மாத்திரையை விழுங்கிவிட்டேன். தண்ணிருடன் வந்தாள். இரு கைகளாலும், என் முன் நீட்டினாள். நான் அவளது அழகு முகத்தை கனிவுடன் நோக்கினேன். அவளும் என் முகத்தைப் பார்த்தவுடன் சிரித்துவிட்டாள். டம்லரை கையில் வாங்கி கொஞ்சம் தண்ணிரைக் குடித்துவிட்டு, பக்கத்தில் இருந்த மேசையில் வைத்துவிட்டு, அவளுடன் கதைக்க திரும்பியபோது அவள் திடீரென்று என் முகத்தைப் பார்த்தாள். அந்தப் பார்வை அச்சம், நாணத்துடன் பார்க்கும் பார்வையில் லை. அவள் கணிகள் கோபத்துடனும் வெறுப்புடனும் என்னை நோக்கிக் கொண்டிருந்தன. பிறகு கண்கள் கலங்கி, தாரை தாரையாக நீர் வடிந்தது. நான் செய்வதறியாது திகைத்தேன். எண்ணங்கள் மட்டுமல்ல உடம்பெல்லாம் நடுங்கியது; தொண்டை வரண்டது.
"டார்லிங், என்ன ஏதுவும் சுகயினமா? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீங்க? ப்லீஸ் சொல்லுங்க" என்று பல முறை கேட்டும் அவள் பேசவில்லை. இறைவா இது என்ன சோதன, ஏன் என்னை இப்படி முறைத்தாள்? ஏன் அழுகிறாய்? நான் வேடிக்கை பேசியதற்கோ, அவசரப்பட்டு அவளைத் தீண்டியற்கு கோபப்பட்டாளோ, என்னவென்று புரியவில்லையே, என்ற எண்ணமும், இதற்காக அவள் கோபப்பட்டு அழுவதென்றால், நிச்சயம் எனக்கேற்ற மனைவியாக அமைய முடியாது, என்றும் யோசித்தேன்.
அவள் அழுகை ஓய்ந்ததாகவும் தெரியவில்லை. நான் கட்டிலில் அமர்ந்தவாறு எவ்வளவு இனிமையாக, சிரிப்பும் களிப்புமாகக் கழிய வேண்டிய என் முதல் இரவு இப்படிக் கண்ணிருடன் கழிய நேர்ந்ததை எண்ணியவண்ணம், என்னையறியாமலேயே தூங்கிவிட்டேன். நடு நிசியில், திடீரென்று விழித்துக் கொண்ட நான், இன்னும் அவள் உறங்காது, பக்கத்தில் இருந்த நாற்காலியில் தலையை வைத்துக்கொண்டு விம்மி, விம்மி இருப்பதைக் கண்டு ’டும்

Page 22
Pri suid epis
பொறுமையற்றவனாகி விட்டேன். என்ன, இன்னும் தூங்கல்லையா, என்று சற்று கோபத்துடன் கேட்டேன். அவளின் பதில் என்னை திடுக்கிடச் செய்தது. அந்த நடுநிசியில் என் பொறுமையை இழந்து விடாமல் இருக்க முயற்சி செய்தேன். இது ஏன் என்ற கேள்விக்கு விடையைத் தேட என்ன வழி? கதவைத் திறந்து கொண்டு நான் வெளியே சென்று விடவா என்று கூட எண்ணினேன். ஆனால் அந்நேரம் நான் வெளியேறினால் பெரும் குழப்பங்களும், விபரீதங்களும் ஏற்படும். ஆகையால் கோபத்தை அடக்கி, பொறுமையைக் கடைபிடித்தேன். ஏற்கனவே, நான் கட்டிய கற்பனைக் கோட்டைகள், நான் எதிர்பார்த்த இனிய குடும்ப வாழ்க்கை, ஆசைகள் எல்லாம் இடிந்து, குலைந்து போவது போல் தோன்றிற்று. ஆனால் என் நிலையை யாரிடம் சொல்ல. இப்படியே நேரம் கழிய, அதிகாலையிலேயே கதவு இலேசாகத் தட்டப்பட்டது. கண்ணிருடன் அறையை விட்டு வெயியேறிய அவளின் கோலத்தைக் கண்ட வீட்டார் கலங்கிப் போனார்கள். வீடு அமளி துமனிபட்டது. என்னதான் நடந்து விட்டது என்பதை அறியத் தடுமாறினார்கள். சிலர் என்னை ஆறுதல் படுத்தவும், மனதைத் தேற்றவும் முற்பட்டனர். ஆனால் அவர்கள் குறி தவறிவிட்டது என்பதை நாம் இருவரும் மட்டுமன்றோ அறிவோம். அவள் இன்னும் மெளனமாக அழுதுகொண்டிருந்தாள். பேச்சிற்கு பதிலற்று ஊமை போன்றிருக்கும் அவள், எப்படிச் சொல்வது, என்ன செய்வது என்று சிந்திக்கின்றாள் போலும்! ஏன் அவள் மட்டும் தன் எதிர்கால வாழ்க்கைப் பற்றிக் கனவு காணாமலா இருந்திருப்பாள்? தனக்கு வரவிருக்கும் கணவன் ஆயிரத்தில் ஒருவனாக, அன்பும் பண்பும் நிறைந்தவனாக இருக்க வேண்டும் என்பது தானே எந்தப் பெண்ணும் விரும்புவாள்? அந்த அன்புக் கணவனின் அரவணைப்பிலேயே காலம் எல்லாம் கண் களங்காமல் வாழ வேண்டும். அவனின் வாழ்க்கைச் சோலையில் மனம் பரப்பும் மலராக என்றும் வாழ வேண்டும் என்று என் மனைவியுடன் எண்ணற்ற

: , : . . - 63li 835İb 4ərgisi - , " "
கற்பனைகளை தன்னுள் வளர்த்திருப்பாளே! இன்று அந்தக் கற்பனைகள் கலைந்து விட்டனவோ?
இல்லையென்றால், ஏன் அவள் அழ வேண்டும்? நான் என் அறையில் இருந்தாலும், பக்கத்து அறையில் உள்ளவர்கள் ஏதோ இரகசியமாகப் பேசிக் கொள்வது கேட்டது. ஆனால் எதுவும் விளங்கவில்லை. திடீரென்று என் அறையினுள் நுழைந்த என் நண்பனைக் கண்டு திடுக்கிட்டேன். நேற்று என் திருமணத்திற்கு வரத் தவறியதால் இன்று வந்திருக்கிறான். ஆனால் வீட்டின் சூழ்நிலையும், எனது முகத்தோற்றமும் அவனைத் திகைக்கச் செய்திருக்க வேண்டும்! "என்ன சபீக், என்ன இது, உன் முகம் நேற்று திருமணம் செய்தவன் முகம் போல் இல்லையே? வீட்டில் மற்றவர்களின் முகங்கள் கூட வாடியிருக்கிறதே? உன் அறையும் இப்படி அலங்கோலமாகக் கிடக்கிறதே" என்று கேள்விகளை அடுக்கினான்.
அவன் என்னுடன் மிக நெருக்கமாகப் பழகியவன்; என் நிலை அவனுக்கு மனவேதனை கொடுத்ததை முகம் காட்டியது. "இல்லை ரிஷான், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என் எண்ணங்கள், ஆசைகள் எல்லாமே மண்ணாகி விட்டன." நான் என்னை அறியாமல் அழுது விட்டேன் "சே. என்னப்பா இது? குழந்தை மாதிரி. நடந்ததை சொன்னால் தானே புரியும்." நான் மெதுவாக அவனிடம் நடந்தவற்றை விளக்கினேன். சிறிது சிந்தனையில் ஆழ்ந்தவன், என் கரங்களைப் பிடித்துக் கொண்டு அறைக்கு வெளியே வந்து, என் மனைவியின் சகோதரியிடம் அழைத்துச் சென்ற போது, அவளும் அங்கு கண்ணிர் வடித்தபடி நின்றிருந்தாள். பிறகு மெதுவாக, "சிஸ்டர், நான் உங்கள் கணவரின் நெருங்கிய நண்பன்; எனக்கும், உங்களைப் போன்ற சகோதரிகள் இருக்கின்றார்கள். இந்தச் சுபதினத்தில் நீங்கள் இப்படி கண் கலங்கி நிற்பது ஏன்? என் நண்பனின் மேல் என்ன தவறுகளை, குற்றங்களைக் கண்டீர்கள்? அப்படியே இருப்பினும், குற்றம் குறைகள் இல்லாதவர்களே இல்லையே!

Page 23
36 ஓர் இதயம் அழுகிறது
உங்கள் மணக் கோலத்தைக் காண பெற்றோர், சகோதரர்கள் எவ்வளவு ஆசைகளோடு கஷ்டப்பட்டார்கள்? உங்கள் மகிழ்ச்சியும், நல் வாழ்வுமே அவர்கள் குறிக்கோள். அப்படியிருக்க, இன்று நீங்கள் இப்படியிருந்தால், அவர்கள் உள்ளம் என்ன பாடுபடும். என்ன நடந்திருந்தாலும், பிலீஸ் மறைக்காமல் சொல்லுங்கள். அவளின் சகோதரனும், கண்கள் களங்க, "சொல்லம்மா என்று கேட்டார். அவள் மெதுவாக என் நண்பனை நோக்கினாள். "பிரதர், படிக்காதவளோ, பண்பில்லாதவளோ அல்ல. என் வாழ்க்கைத் துணைவர் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்த்தது அன்பும், கருணையும் நிறைந்தவராக, பண்புள்ளவராக, தீய குணங்கள் எதுவுமே இல்லாதவராக, பெண்மையை மதித்துப் போற்றுபவராக இருக்க வேண்டும் என்பதே. ஆனால். அவள் விம்மினாள். அழாதீர்கள் சிஸ்டர் சொல்லுங்கள்; என்ற போது, சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தவள், "இவர் இப்படியிருப்பார் என்று கனவில் கூட நம்பியிருக்கவில்லை ஆனால், முதலிரவிலேயே மது போதையுடன்." என்று முடிக்காமல் கண் களங்க, அவள் சகோதரனைப் பார்த்தாள்.
"வேறு ஒரு குறையுமில்லை. அப்படியா சிஸ்டர்? என்னை மன்னியுங்கள். ஆனால், இது நிச்சயம் நடந்திருக்க முடியாது. அப்படி நடந்திருந்தால் , நிச்சயம் அது முதலும் , கடைசியுமாகத்தானிருக்கும், என்பதை நான் சத்தியம் செய்து கூறுகிறேன், என்று கூறிவிட்டு என்னிடம் வந்தான்.
நடந்ததைக் கேட்ட நான் ஒரு கணம் திகைத்துத் திணறினேன், உடனே எழுந்து சென்று பெட்டியில் இருந்த மாத்திரைகளில் ஒன்றை வாயில் போட்டுத் தண்ணிர் குடியுங்கள், என்று என் மைத்துனியிடம் கொடுத்தேன். தயவு செய்து வாயில் போடுங்கள், இது ஆபத்தானதல்ல. அவரும் அப்படியே செய்தார். பின் அவரிடம் நெருங்கி நின்று கதைத்தபோது மது வாடை வீசியது. நான் உண்மையை உணர வெகு நேரம் பிடிக்கவில்லை. எனது வயிற்றில் ஒரு வியாதிக்காக

ஒர் இதயம் அழுகிறது"
டாக்டர் தினமும் பாவிக்கச் சொன்னது. இதை நான் சாப்பிட்டுவிட்டு அவளிடம் கதைத்த போது, அந்த வாடையினால் அவள் குழம்பிப் போய்விட்டாள்.
இதை நான் சொன்ன போது என் நண்பனின் முகம் மலர்ந்தது. அவன் எடுத்த முயற்சியில் வெற்றிகண்ட பெருமிதம் ஒரு புறம். என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி மறுபுறம். உடனே என் மைத்துனர் நடந்தவற்றை என் மனைவியிடம் விபரிக்கவே, அவள் தலை நிமிர்ந்து என்னை நோக்க, நானும் அவளை கனிவுடன் பார்க்க, கண்கள் மலர, முகம் சிவக்க நாணித் தலை குனிந்தாள். தன் தவறை மன்னிக்கும் படி என் கால்களைத் தொட்டுக் கெஞ்சினாள்.

Page 24
- விரக்தி
உயன்வத்தை ரம்ஜான்
கண்ணே நீ கலங்காதே, என் உயிரை உன் கையில் பணயமாக வைத்துச் செல்கிறேன். கண்ணியமாய் நடந்துகொள், என்று கண்கள் கலங்க உள்ளம் துடிக்க, வெட்கமோ, கூச்சமோ இன்றி எல்லோரினதும் முன்னிலையில் அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு விமான நிலையத்தினுள் நுழைந்தான்.
"கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்று எண்ணித் துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவத்தின் போது ஏற்படுகின்ற ஆசைகள், மோகங்கள் கட்டுப்பாடற்றவை. குலம், கோத்திரம், சாதி, மதம் என்ற பேச்சுக்கே இடமற்ற அந்த பருவத்தில் உடைக்கும், நடைக்கும் மயங்கி வாழ்வைப் பாழ்படுத்திக் கொண்ட ஆயிரக் கணக்கான இளைஞர் சோடிகளின் கதைகளை ஏராளம் படித்திருக்கின்றோம்.
அப்பொழுது நிஹாரா தட்டெழுத்துப் பரீட்சை ஒன்றிற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அடக்க ஒடுக்கமான பெண்ணான நிஹாரா வழக்கமாக பஸ் தரிப்பு நிலையத்தில் சற்று நேர காலத்துடன் வந்து காத்து நிற்பது வழக்கம். இதைப் பல முறை அவதானித்து வந்த இர்சாத் பஸ் தரிப்பு நிலையத்துக்கு வர ஆரம்பித்து விட்டான்.
சில தினங்களாகத் தனது கையில் 'சகோதரிக்கு' என்ற புத்தகமொன்றை வைத்துக் கொண்டு பஸ் வரும் வரை படித்துக் கொண்டிருப்பான். ஆனால், நிஹாராவுடன் பேச வேண்டுமென்ற ஆசை இருந்த போதிலும் அதனைக் காட்டிக் கொள்ளாது புத்தகத்திலேயே மூழ்கியிருந்தான். ஒரு நாள் எதிர்பாராத விதமாக பஸ்ஸில் ஏறும் போது நிஹாரா சறுக்கி விழ முயன்ற போது, இர்ஷாத் திடீரென்று பாய்ந்து கையைப் பிடித்து உதவினான். நன்றி என்று நாணத்துடன் கூறியவள், உள்ளே அவனுக்குப் பக்கத்தில் காலியாக இருந்த சீட்டில் அமர்ந்தாள்.
 

ஓர் இதயம் அழுகிறது
"பஸ்ஸில் ஏறும் போது சற்றுக் கவனமாக இருக்க வேண்டும் மிஸ்" கொஞ்சம் தவறியிருந்தால்."
"இப்படி நடந்தது முதல் தடவை" என்று தலைகுனிந்த வண்ணம் பதிலளித்தாள் நிஹாரா.
வெளியே இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. நிஹாரா இறங்கும் இடமும் நெருங்கிக் கொண்டிருந்தது. "மழை தூறுகிறதே. எப்படிப் போவீர்கள்?" என்றான் இர்ஸாத். அமைதியாக இருந்தாள் அவள். "மிஸ், இந்தாருங்கள். குடையை எடுத்துக் கொண்டு போங்கள். நாளை வரும் போது எடுத்துக் கொள்ளலாம்." "வேண்டாம், உங்களுக்கு." "பரவாயில்லை நான் அட்ஜஸ்ட்' செய்து கொள்கிறேன்." தாங்ஸ்' என்று கணிவுடன் அவனைக் நோக்கிக் கூறிவிட்டு போய்விட்டாள். இர்ஸாத் இப்போது கற்பனை உலகத்தில் மூழ்கினான். அன்று நடந்த சந்திப்பு மனதில் எத்தனையோ இன்பக் கதைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. நிஹாராவின் இனிய பண்புகள் அவன் உள்ளத்தை மிகவும் கவர்ந்தன. மறு நாள் சந்தித்துக் குடையைப் பெற்றுக் கொண்டான். நாளடைவில் உறவு நெருக்கமாகியது.
நிஹாராவின் நடத்தையிலும், பேச்சுகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவளைக் காட்டிக் கொடுத்தது. இர்ஸாதுடன் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்து, பெற்றோர் கண்டித்தனர். அன்பாகவும் சொல்லிப் பார்த்தனர். ஆனால் மனதாற இர்ஸாதை விரும்பிய நிஹாரா, அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்தாள். பெற்றோரோ, பல வழிகளிலும் அவர்கள் உறவை முறிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தனர். தடைகள், கட்டுப்பாடுகள் அதிகமாகவே எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது திருமணம் செய்து கொண்டனர் அவர்கள். சாதாரண இலிகிதராகத் தொழில் புரிந்த இர்ஸாதின் வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிகள் இருக்கத்தான் செய்தன. எனினும், அவர்கள் வாழ்க்கை சுவை குன்றாத முறையில அமைந்திருந்தது.

Page 25
ஓர் இதயம் அழுகிறது
நாட்கள் மாதங்களாகின. எதிர்பாராத விதமாக வெளிநாட்டுத் தொழில் புரியும் வாய்ப்பொன்று அவனைத் தேடி வந்தது. நிஹாரா முதலில் அவர் போவதை விரும்பவில்லை. எனினும் தாங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி காணும் கனவுகள் நனவாக வேண்டுமென்றால் இந்தப் பயணம் இன்றியமையாதது என்பதை இர்ஸாத் தெளிவாக விளங்க வைத்த போதுதான் அவளால் மறுக்க முடியவில்லை. அன்புடனும் இதயம் நிறைந்த வேதனையுடனும், விழிகள் நீரால் நிறைய விமான நிலையத்தில் இருந்து விடை கொடுத்தான் இர்ஸாத்.
புதுத் தொழில், புதிய இடம், சூழல், புது அனுபவங்கள் இவற்றைப் பற்றி தன் மனைவிக்கு பக்கம் பக்கமாக எழுதுவான் இர்ஸாத். நிஹாராவும் அவனுக்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் எழும் விதத்தில் தவறாது எழுதிக் கொண்டிருந்தாள். வெறுப்புக்களுக்கு மத்தியில் நடந்த திருமணத்தின் பிரதி பலிப்புகள் அவனின் பெற்றோர் உள்ளங்களில் இன்னும் மாறி விடவில்லை. அவளை மகளாக ஏற்றுக் கொள்ளவே மனம் இடம் கொடுக்கவில்லை.
நாட்கள் நகர்ந்து மாதங்களாகின. அடிக்கடி எழுதிக் கொண்டிருந்த இர்ஸாதின் கடிதங்கள் படிப்படியாக குறையத் தொடங்கிவிட்டன. செலவுக்கு அனுப்பும் பணமும் குறைந்து கொண்டே வந்தது. நிஹாரா தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாள். எனினும், இர்ஸாதின் போக்கில் மாற்றம் காணவில்லை. தன்மேல் அன்பையும், பாசத்தையும் அளவின்றி பொழிந்தவனா இப்படி மாறினான் என்று நினைத்து திணறினாள் நிஹாரா. நாளடைவில் கடிதங்களோ, பணமோ வருவது முற்றாகவே நின்று விட்டன. ஒவ்வொறு நாளும் தபாற்காரனை எதிர்பார்த்து காத்திருந்தாள்; அவள் விழிகள் எண்ணங்களை எழுத்தாக வடித்தன.
"என் நெஞ்சில் நிறைந்த துணைவனுக்கு" "உங்கள் பாச மடல் கண்டு மாதங்கள் பல கடந்து விட்டன.

ஓர் இதயம் அழுதிறது
உங்கள் செய்திகளை அறிய வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறேன். என் உள்ளத் துயரைக் கண்டு கண்ணிர் துடைக்க இன்று யாருமில்லையே; உங்க்ளின் அன்புக்கும், பண்புக்கும், அடிமையாகி என்னை பெற்றவர்களைக் கூட மறந்தேனே! அவர்களும் ஊராரும் என்னை எள்ளி நகையாடும் அளவிற்கு ஆளாக்கிவிடாதீர்கள்! கண்ணே, கலங்காதே என் உயிரை உன் கையில் ஒப்படைத்துச் செல்கிறேன் என்று ஆசை வார்த்தைகளையும், உறுதி மொழிகளையும் கூறிச் சென்றீர்கள். இன்று என் நெஞ்சில் எரிமலையை ஏற்படுத்தி விட்டீர்களே! நான் செய்த தவறுதான் என்ன? உங்களை நம்பி வந்த ஒருத்தியை மறக்க முடியுமா உங்களால்? பணம் உங்கள் பண்பை மாற்றி விட்டதா? மனதை மரக்கட்டையாக்கி விட்டதா? இதன் மர்மம்தான் என்ன? என்னை உங்களிடமிருந்து பிரிக்கும் பொருள்களும், எனத்குத் தேவையில்லை. உடனே நாடு திரும்புங்கள். உள்ளதைக் கொண்டு திருப்தியாக வாழ்வோம். என்னை ஏமாற்றிவீடாதீர்கள் என்று உருக்கமாக எழுதினாள்.
வாரங்கள் பல கடந்தும் பதிலைக் காணாத நிஹாரா தன் நிலை மறந்து மேற்கொண்ட அவசர முடிவின் பலாபலன்களை உணரலானாள்; கதறினாள்; நாட்கள் சில நகர்ந்தன. தன் கணவர் பிற பெண்களுடன் கொண்ட தகாத உறவு காரணமாக பல குற்றங்களுக்குள்ளாகி அந்நாட்டுச் சட்டப்படி நான்கு வருடங்களுக்கு சிறைத் தண்டனை வைக்கப்பட்ட பின்னர் தான் தாய் நாட்டுக்கு அனுப்பப்படுவான் என்பதை வெளிநாட்டு தபால் ஒன்றை அவள் படிக்க நேர்ந்த போது கதறினாள்; துடித்தாள்; தன்னை நம்பி உற்றார், உறவினரை வெறுத்து கைபிடித்தவளுக்குக் கொடுக்கும் சன்மானம் இதுதானா? தன்னை கண்ணியமாக வாழச் சொன்னவன் கண்ணியம் தவறியது ஏன்? அந்நிய நாட்டில் சென்று மானத்தையும், மரியாதையையும் இழக்கும் அளவிற்கு உளத்தூய்மை அற்றவனா இர்ஸாத்? கட்டியவளை கைவிட்டு கண்டவர்கள்

Page 26
ஓர் இதயம் அழுகிறது
பின்னே சுற்றுபவர்களுக்கு இந்தத் தண்டனை போதவே 'போதாது. இப்படிப்பட்டவரோடு இனி என்ன வாழ்க்கை என்ற தீர்க்கமான முடிவுடன் குழந்தையையும் எடுத்துக் கொண்டு அவள் தாய் வீடு சென்றாள்.
பெற்றோரை வைத்து, கண்டவன் பின் சென்ற தனக்குத் தண்டனை கிடைத்துவிட்டது என்று தாயின் கால்களில் விழுந்து கதறினாள். பித்தான உள்ளம் கொண்ட தாய், பிள்ளைகள் கஷ்டப்பட்டுத் துடிப்பதைச் சகிப்பாளா? தன் மகளின் பொன்னான வாழ்வு மண்ணாகிப் போவதை எண்ணி உள்ளத்தாள் அழுதாள். மகளையும், குழந்தையையும் அன்புடன் அரவணைத்து ஏற்றுக் கொண்டாள். காலம் விரைந்தோடியது. அம்மா, "அப்பா எங்கே" என்று அடிக்கடி குழந்தை கேள்விகளைத் தொடுக்கும் போது அழுவதைத் தவிர நிஹாராவினால் வேறு என்னதான் செய்ய முடியும் தன் எதிர்காலம் பற்றிச் சிந்தித்த நிஹாரா தன் நண்பனொருவன் மூலம் அலுவலகம் ஒன்றில் தட்டெழுத்தாளராக தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டாள். தொழிலில் காட்டிய திறமை அவளைப் படிப்படியாக உயர்த்தியது. எனினும், கணவனைப் பற்றிய நினைவுகளும், அவனது அனுமதியின்றித் தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் அவளுக்கு சதா உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும் வேதனையாக இருந்தது. ஆனாலும், இனிமேலும் தன் பெற்றோருக்கு பொறுப்புக்களையும், சுமைகளையும் கூட்ட அவள் விரும்பவில்லை. ஆகையால், தன் மகளின் நலன் கருதித் தான் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் தவறல்ல என்றுதான் கருதினாள். தன் பெற்றோரை நிந்தனை செய்த பெரும் பாவத்தை இனிமேல் அவர்களை அன்புடன் பராமரிப்பதால் போக்கிக் கொள்ளலாம் என்ற ஆறுதல் அவள் உள்ளத்தை நிறைத்து நின்றது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக நிறையக் கடிதங்கள் டைப் செய்ய வேண்டியிருந்ததால் ஆபிஸில் தாமதிக்க வேண்டியிருந்தது. தன் கடமையிலே கண்ணுங்கருத்துமாய் இருந்தவளை மனேஜரின் குரல் கலைத்தது. "ஏன் நிஹாரா நெடு நேரம் வேலை செய்கிறீர்கள்? களைப்பாக இருக்குமே; சற்று ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

ஓர் இதயம் அழுகிறது
"நோ, சார் அயெம் ஒகே, தாங்ஸ்" என்றவள், மீண்டும் இயந்திரத்தில் தன் விரல்களை ஒட விட்டாள். ஆனால், மனேஜர் அங்கிருந்து நகர்ந்ததாகத் தெரியவில்லை.
"ஏன் சார் ஏதும் அவசரக் கடிதங்கள் டைப் செய்ய வேண்டுமா? என்றாள் நிஹாரா. இல்லை நிஹாரா; நான் உங்களைப் பற்றித்தான் சொல்ல வருகிறேன்; உங்களது வாழ்க்கையைப் பற்றி நான் கேள்விப்பட்டேன்; உங்கள் மீது எனக்குப் பெரும் அனுதாபமே ஏற்படுகின்றது, என்று விழிகளில் ஆசை பொங்க அவளைப் பார்த்தான். அவனது பார்வையில் உள்ளத்தைப் புரிந்து கொண்ட நிஹாரா உஷாரானாள். என்ன சொல்கிறீர்கள் சார்? என்றாள் திகைப்புடன். ஏன் நிஹாரா புரியவில்லையா?" என்று தோள்களைப் பற்றினான்.
"சீ, எடுங்கள் கையை மாற்றான் மனைவியிடம் இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமில்லையா?" என்று சீறினாள். "வெட்கமா? இதற்கு என்ன வெட்கம் என்றவன், மீண்டும் நெருங்கினான். மானங் கெட்டவனே, நீ சகோதரர்களுடன் பிறக்கவில்லையா? உன்னிடம் இனியும் நான் தொழில் பார்ப்பதா" என்று கத்தியவள், கடிதக் கட்டுக்களை கையில் எடுத்து அவன் முகத்தில் வீசினாள். "நிஹாரா என்னிடமிருந்து தப்ப முடியாது" என்று அவளைப் பிடிக்கத் தாவினான். து. என்று அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள்; வேகமாக ஆபிஸை விட்டு வெளியே ஒடி வந்தாள். வெகு வேகமாக பாதையைக் கடக்க முயன்ற போது விரைந்து வந்த வாகனமொன்று அவளை முட்டி மோதி விட்டுச் சென்றது. இரத்த வெள்ளத்தில் மிதந்தாள் நிஹாரா.
(தினகரன் : 27.12.1984)

Page 27
ஓர் இதயம் அழுகிறது
கனவுகள் நனவாகும் போது!
உயன்வத்தை றர்ஜ/ன்
றஹிமா சுபஹத் தொழுகையை முடித்துக்கொண்டு, யாஸின் கிதாபை கையில் எடுத்து, முத்தமிட்டபின், ஒத ஆரம்பித்தாள். அவளின் குரல் சத்தங் கேட்டு, மூத்த மகள் றதிமாவும் எழுந்து முன்வாசல் கதவைத் திறந்து விட்டு, சுபஹாத் தொழுகைக்காக ஆயத்தமானாள்.
ரஹிமா ஒதி முடித்து விட்டு, விரைவாக அடுக்களைக்குள் நுழைந்தாள். மகள் றதீமா நீண்ட தூரம் படசாலைக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்ய வேண்டியிருப்பதால் தேநீரையும், காலை உணவையும் தயாரிக்க ஆயத்தமானாள்.
கணவரை இழந்து பல வருடங்கள் கழிந்து விட்ட பின்பும்கூட, குடும்பத்தை எந்தவித தடுமாற்றமுமின்றி, பொறுப்பாகக் கவனித்து கடமையைச் செய்து வந்தாள்.
பண்புள்ளவர்கள், பக்குவப்பட்டவர்கள் சுயகெளரவம், குடும்ப கெளரவம் என்று பார்ப்பவர்கள், எந்தக் கஷ்டம் வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். குறிப்பாக, இது கிராமப்புற மக்களிடம் குடிகொண்டுள்ளதோர் பண்பாகும். இன்று கிராமம், என்ற வித்தியாசம் எல்லாம் மாறி, நாகரீக மோகத்தால் எல்லாம் தலைகீழாக மாறி விட்டபோதிலும் கூட, றஹிமா உறுதியாக மிகச் சிரமத்துடனேயே குடும்பத்தை நடாத்தி வந்தாள்.
ஒரு பெண்ணால் எவ்வளவு காலத்துக்குத் தான் குடும்பப் பொறுப்புக்களைச் சமாளித்துக் கொள்ள முடியும்?
றதிமா அழகும், அறிவும் நிறைந்தவளாக இருந்ததோடு, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்ற உயர் பண்புகளோடும் திகழ்ந்தாள். பாடசாலையிலும் அவளுக்கு நல்ல செல்வாக்கு; அதிகாரம், ஆணவம், அகங்காரம் போன்ற நச்சுத் தன்மை வாய்ந்த குணங்களை வெறுத்து வந்தாள்.

ஓர் இதயம் அழுகிறது
அன்று, சனிக்கிழமை; பாடசாலை போகாததால், வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் ரதீமா.
'மவள் உம்மா இருக்கிறாவா? எங்க ஒருத்தரையுமே காணோம் என்று கேட்டவண்ணம் சல்மா தாத்தா உள்ளே நுழைந்தாள். "வாங்க, மாமி வாங்க" "என்ன இந்தப்பக்கம், மிச்ச நாளைக்குப் பிறகு" என்றவாறு சல்மாவை வரவேற்றாள் றதீமா. உள்ளே இருந்த றஹிமாவும் வெளியே வந்து, மயினி வாங்க, எவ்வளவு காலத்துக்குப் பொறகு. வாங்க. உற்காருங்க என்று வரவேற்றாள். "மவள் கொஞ்சம் கோப்பி ஊத்தம்மா மாமிக்கு" என்றாள்.
என்ன றஹீமா செய்திகள். மகள் றதிமாவும் இந்த வருஷத்தோட ஸ்கூலால விலகப் போறதா என்ட மவள் சொன்னா.
"ஒ. மயினி. எந்த நாளும் படிச்சிக்கிட்டிருக்க ஏழுமா. இதுக்கு மேல படிக்க வைக்க நான் விரும்பல்ல. மயினி பொம்பள புள்ளைகள மிச்சம் படிக்க வச்சி என்னதான் பிரயோசனம்" எப்ப இருந்தாலும் இன்னொருத்தரோட வாழ வேண்டிய வங்க. படிச்சிருந்தாலும், இல் லாட்டியும் மாப்பிள்ளைமாரு ஐம்பது, இலட்சம் என்றுதானே ஒத்தைக் காலில நிக்கிறாங்க.
"ஒ. ரஹீமா இந்த ஆம்புளப் புள்ளைகளுக்கு கொஞ்சங் கூட வெட்கமில்ல. படிச்சி, தொழில் செய்யிற பொம்பிளையை மட்டுமில்ல. பணமும் வேண்டும். போதாக்குறைக்கு, வீடு, காணி, என்று இன்னும் எத்தனை எத்தனையோ..!
"மயினி. அதப் பேசாதீங்க. புள்ளைக்கி ஒதப்படிக்கத் தெரியுமா? ஒழுக்கமா இருக்கிறாவா? குடும்பம் எப்படி..? என்று பாக்காட்டியும், பணம் இவை இருந்தாப் போதும் மயினி. இதப்பத்தி பேசி வேலையில்ல." நீங்க. நாங்க கொமரா இருக்கிற போதும், எத்தனையோ பேர், பேசியும், எழுதியும், தான் நடந்தது. இத விட்டுட்டு வேற விசயம் எதுவும் பேசுங்க.

Page 28
ஓர் இதயம் அழுகிறது
அப்போது, ரதீமா கோப்பிக் கோப்பையுடன் வந்தாள். "மாமி, இந்தாங்க கோப்பி குடீங்க" என்றவாறு சல்மா தாத்தாவிடம் நீட்டினாள்.
அதைக் குடித்துக் கொண்டே, "றஹிமா, உன்கிட்ட ஒரு
2ft
விசயம் கேக்கனும் ", "என்ன மயினி.?
"உனக்குத் தெரியுமா. நம்ம றசீத் மாமாட மகன்? சரீப். ஒ. அவரு இப்ப சவூதில இல்ல இருக்காரு. என்ன விஷயம்.?
* இல்ல புள்ள நம்ம மகனுக்கு எழுதியிருக்கிறான். நம்ம றதீமாவைப்பத்தி விசாரிச்சி; ரெண்டு மாசத்தில வாரானாம்; உங்களப்பத்தி தெரியுமாம். அதனால உங்கட விருப்பத்த கேட்டுப் பார்க்க என்ன அனுப்பச் சொல்லி எழுதி இருக்கிறான் "உங்கட யோசின என்ன?" என்றாள் சல்மா தாத்தா.
"மாமி அந்த சரீப் நானா, சவூதி போக முந்தி, என்ட கூட்டாளிட தாத்தா சுல்பிகாவை கட்டிக்கப் போறதா ஒத்தக்கால்ல நின்றாரே..! அவ, அவர் வரும் வரைக்கும் எதிர்பார்த்து இருப்பதாக போன கிழமையும் என்கிட்ட சொன்னாவே."
"அப்படி இருக்க ஏலா புள்ள; அவன் நல்ல பையன். சரி மயினி, அவர் மோசம் என்று நான் சொல்ல இல்ல. ஆனா அப்படி கொமருகள ஏமாத்தப்படாதில்ல.”
"மயினி, ரதீமா இன்னம் சின்னப்புள்ள. வீட்டுள இருந்து வெளியே ஒத்தருடைய கையில கொடுக்க மொத, இன்னும் எத்தனையோ விசயம் படிக்க வேண்டி இருக்கு." அது சரி, ரசீத் மாமாட மகன், சுல்பிகாவோட நட்பு கொண்டிருப்பதா நானும் கேள்விப்பட்டேனே. என்ன சவூதி பணம் கையில் வந்ததும் அந்தக் கொமருக்குக் கொடுத்த வார்த்தைய மறந்துட்டானா? முழு ஊருக்குமே அவன்ட கத தெரியுமே

ஓர் இதயம் அழுதிறது
அவன் வரும் வரைக்கும் தானே அவங்களும் பாத்துக்கிட்டு இருக்கிறாங்க..!
"ஒ. புள்ள, இப்படி ஒரு செய்தி முந்தியிருந்ததுதான். ஆனா இப்ப அப்படி நெனச் சியிருப்பானி என்று எனக்குத்தெரியாது. இன்டைக்கே இத நான் மவனுக்கு சொல்லிடத்தான் போறேன்." என்று சமாளித்துக்கொண்டாள் சல்மா தாத்தா.
நாட்கள் உருண்டோடின; பள்ளி நாட்களின் இனிமையான அனுபவங்கள், தனது நற்பண்புகளால் கிடைத்த மரியாதைகள், தனது திறமையினால் கிடைத்த சிறந்த பெறுபேறுகள் போன்றவை றதிமாவின் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. எப்போதோ ஆசிரியத் தொழிலுக்கு விண்ணப்பித்திருந்த போதிலும், அதனால் பிரயோசனம் இல்லை என்று இருந்தவளுக்கு, பதவியென்று வீடு தேடி வந்த போது, றதீமாவின் மனம் மகிழ்ச்சியால் பூரித்தது.
மரத்தில் பழங்கள் கனிந்துவிட்டால் பறவைகளை அழைக்கவா வேண்டும் காகமென்ன, கிளி என்ன, அணில் என்ன, இப்படி எத்தனையோ வரவேற்பாளர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இதே போன்றுதான் இப்போது 'றதிமா' என்ற மரத்தைச் சுற்றி எத்தனையோ பேர்கள்.
றதீமா ஏற்கனவே ஒர் இலட்சியவாதி, அவளுக்கென ஒரு கொள்கை, போக்கு, பண்பு என்பன இயற்கையாகவே அமைந்துவிட்டன. இதை எத்தனை பேர்தான் உணர்ந்து இருந்தனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை; றதீமா துணி மணிகளைச் சுமந்து கொண்டு கிணற்றுக்குப் போகத் தாயாராகிக்கொண்டிருந்த போது, அங்கே ஹஸன் மாமா, வாசலில் நின்றபடி, "என்ன மகள், குளிக்கப்போறிங்க போல"
"ஆமா மாமா; வாங்க உள்ள; 蟒 ஓங்க் என்றாள் றதீமா. "தங்கச்சி.”நான் உங்ககிட்ட ஒரு விஷயமாத்தான் வந்தேன். சுத்தி வளைக்காம சொல்றன்"

Page 29
மவளும் வளர்ந்திட்டா, உங்களுக்கும் வயசாகுது. காலா காலத்தில ஒரு நல்ல காரியத்தைச் செய்திடனும், இல்லையா"? "ஏன் மாமா எனக்கா. நல்ல யோசினைதான். மாப்பிள்ள என்ன ரேட் கேட்கிறாரு?" சிரித்துக்கொண்டே றதிமா கேட்டபோது, "என்ன புள்ள, மாமாவோட விளையாட்டா. என்று கண்டித்தாள் ரஹீமா"
"இல்ல உம்மா, இப்ப மாப்பிளை மாருக்குத்தேவை பணம் தானே. அதுதான் அப்படிக்கேட்டேன்"
"அப்படிச் சொல்லாதே மவள்; நல்ல ஆளு; மாதம் இரண்டாயிரம் சொளையா எடுக்குறாரு; நல்ல குடும்பம்; உனக்குப் பொருத்தமானவரும்கூட, இருபத்தைந்தாயிம் கேட்கிறாரு; இன்டைக்கி இது மிச்சமில்ல. என்று மாமா கூறிய போது, அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"மாமா, தயவு செஞ்சி கோபிக்காதீங்க. நானே என்னுடைய கல்யாண விஷயமாக பேசுறதாக தப்பா நெனக்காதீங்க. பணம் கேட்கிற மாப்பிள்ளையை இந்த றதீமா கட்டிக்கப் போறதில்ல "இனி இந்த ரேட் கேட்டு வார எந்தப் பேச்சையும் இங்கு கொண்டு வராதீங்க. என்ன மன்னிச்சிடுங்க" என்று கூறி விட்டு, வாளியையும், துணிகளையும் எடுத்துக்கொண்டு கிணற்றுக்குப் புறப்பட்டாள்.
திகைத்துப்போய் பார்த்த ஹஸன் மாமா, பெருமூச்சொன்றை விட்டவாறு, "ஹ"ம். இந்தக் காலத்துப் புள்ளைகள் யாரப் பார்த்தாலும் இப்படித்தான்; என்ன செய்யிறது; காலம் கெட்டுப் போச்சு" என்று கூறியபோது, "இல்ல நானா அதுகள் சொல்ரதில ஒரு பிழையுமில்ல; நம்ம மகளும் மாதா மாதம் அரசாங்க சம்பளம் எடுக்குது; கலியாணம் செஞ்சப் பிறகு மாப்பிள்ளையோடு தானே இருக்கும்; அப்போ என்ன. எனக்கா சம்பளத்தைத் தரப் போறா..?; இப்படிப் படிச்சவங்க, உத்தியோகம் பார்க்கிறவங்க, பணக்காரங்க எல்லாம் "பணம், பணம்' எண்டு கேட்டா, எங்கட ஏளக் கொமர்கள் ட நிலைமையென்ன சாச்சா" ? என்று புலம்பினாள் ரஹீமா.
 

s ஓர் இதயம் அழுகிறது 49
"சரி, சரி உம்மாவும், மகளும் வேண்டியதைச் செஞ்சுக் கொங்க" என்று கூறியவாறு எழுந்து போனார் ஹஸன் மாமா. சில தினங்கள் கழிந்தன. றதீமா வானொலியைக் கேட்ட வண்ணம் ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள். வீட்டு முற்றத்தில் மோட்டார் சைக்கிளொன்று நிற்கும் சத்தங் கேட்டுத் திரும்பிய போது, "என்ன டீச்சர் இன்னைக்கு லீவா? என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் நஸிர்.
"வாங்க, வாங்க. உக்காருங்க. எப்ப வந்தீங்க. உம்மா எல்லாம் சுகமாகயிருக்காங்களா? என்று அடுக்கிக் கொண்டே போனால் றதிமா. "எல்லோரும் சுகம் தான்; எங்க உம்மா உள்ள இருக்காங்களா?" என்றான்.
ஆ. வாங்க மவன். எப்ப வந்தீங்க. என்ன செய்திகள். என்று அன்போடு சுகம் விசாரித்தாள்.
சில வருடங்களுக்கு முன் றதிமாவோடு ஒரே பாடசாலையில் படித்தவன் தான் நஸிர். அப்போதும் நல்ல பழக்க வழக்கங்கள் அவனிடம் குடிகொண்டிருந்தன. இளமையிலேயே தந்தையைப் பறிகொடுத்த போதிலும், குடும்பச் சுமையைக் குறைக்க எண்ணி, பரீட்சை எழுதியவுடன் தொழில் வாய்ப்பொன்றைப் பெற்று, வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றவன், நான்கு வருடங்களின் பின்தான் நாடு திரும்பியுள்ளான்.
சிறிது நேரம் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். பின் நஸிர் சிறிது யோசித்துவிட்டு, "றதிமா. உங்க உம்மாவோடு முக்கியமான ஒரு விஷயமா பேசனும். அதற்கு முன்னால உங்ககிட்டேயும். ஒரு கேள்வி.
கேளுங்களேன்;. நான் திரும்ப சவூதி போற நோக்கமில்ல; தங்கச்சிக்கும் என் பிரண்ட் ஒருவரைப் பேசி முடிச்சிட்டேன்
it
"நல்ல யோசனை...!
"அது மட்டுமல்ல. நானும் ஒரு இடத்தப் பார்த்து வச்சிருக்கன், இரண்டு கலியாணத்தையும் ஒரே நாளில் எடுக்கத்தான்"

Page 30
ஓர் இதயம் அழுகிறது
"வெரி குட், உங்க தங்கச்சிக்கு என்ன கொடுக்கிறீங்க. உங்களுக்கு என்ன எடுக்கிறீங்க.. ?"
இல்ல றதீமா. "எடுக்கிறதுமில்ல, கொடுக்கிறதுமில்ல." "மிகவும் நல்லது. நாங்க என்ன உதவி செய்யனும் சொல்லுங்க.
அப்போது தேநீர் கோப்பையோடு றஹிமாவும் அங்கு வந்தாள்.
"உம்மா, கேட்டீங்களா சேதிய.? ஒ மவள், எல்லாம் கேட்டுச்சு. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா மவள். இவர்ட அப்பா தேடின சொத்தெல்லாம் இண்டைக்கு இருந்தா. அதப்பத்தியெல்லாம் இப்ப பேசி என்ன பயன்..!
சரி, நான் வந்த விஷயத்தைச் சொல்லனுமே. றதீமாவோட செய்தி என்ன. ஏதும் கல்யாண பேச்சுகள் வந்ததா. ?
"மவன் நல்ல இடம் ஒன்று வந்தது. ஆனா பணம் கேட்கிற மாப்பிள்ளைய கட்டிக்கப் போறதில்ல" என்று இவ பிடிவதாமாக இருக்கிறா.
"ஓ அப்படியா றதீமா. சரி, நான் உங்க ரெண்டு பேரையும் வச்சிக் கேட்கிறேன். நான் றதிமாவைக் கட்டிக் கொள்ற யோசனையோடத்தான் வந்தேன். உங்களுக்கு விருப்பம் என்றால்தான்.
றதீமா திகைப்புடன் நஸிரை நோக்கினாள். "என்ன இது g) -60ôï60), Dulu T LID866ôr...
றதீமா ஆச்சரியத்துடன் பார்த்த போது, "ஏன் பார்க்கிறீங்க?" "உங்களிடையே ஆண்களும், பெண்களும், மணமாகாது தனித்தவர்களாய் இருப்பவர்களுக்கு மணமுடித்து வையுங்கள்" (24 132) திருக்குர்ஆனும், மற்றது மணம் புரியுங்கள்; பிள்ளைகளைப்பெற்று சந்ததிகளை விருத்தியாக்குங்கள் என்ற நபி மொழியையும் வெறுமனே
 

ஓர் இதயம் அழுதிநது
போதிப்பதால் ஒன்றுமே நடக்கப்போறதில்ல, தனிப்பட்ட ஒவ்வொருவரும், இந்த முடிவுக்கு வந்தால்தான், படிப்படியாக இந்தப் பிரச்சினை முடியும். அதனால பணம், பணம் என்று வாய் பிளந்து கொண்டிருப்பவங்க பாடம் படிப்பாங்க, கண்ணிரும், கம்பலையுமாக குமர்களும், பெற்றோரும் விடும் ஏக்கப் பெருமூச்சுக்கு முடிவு பிறக்கும். என்ற போது. "ரதீமாவின் கண்கள் தன் இலட்சியம் நிறைவேறுவது கண்டு ஆனந்தக் கண்ணிர் வடித்தது. உள்ளம் அல்ஹம்துலில்லாஹற் என்று இறைவனைப் புகழ்ந்தது.

Page 31
リ
ஓர் இதயம் அழுகிறது
2 11s fallis), W2216)
அன்று சனிக்கிழமை விடுமுறை நாள். வழக்கமாக
விடுமுறை நாட்களில் எல்லா வீடுகளிலும் ஒரு வித கலகலப்பு. பள்ளி மாணவர்கள் முதல் , பாடுபடும் உத்தியோகஸ்தர்கள் வரை, வார இறுதி என்றால் ஒரே கொண்டாட்டம்.
அத்தகையதோர் சூழ்நிலையில் தான் ஆமினா அன்றைய தினசரிகளை புரட்டிக்கொண்டிருந்தாள். திருமணமாகி, பல வருடங்களை எப்படியோ கழித்து "இதுவும் ஒரு வாழ்க்கையா..?" என்ற கேள்விக் குறியோடு வாழ்க்கைப் படகை செலுத்திக் கொண்டிருந்தாள். ஒரே மகளென்ற காரணத்தால், "கண்னே, பொன்னே" என்று கனன் போன்று வளர்த்து ஆளாக்கி, அவரின் கையில் ஒப்படைத்த போது, "என் மகளை உங்கள் கண் போன்று பாதுகாக்க வேண்டும், அவள் செல்லமாக வளர்க்கப்பட்டு, சிறு குழந்தையைப் போல் வாழ்ந்தாள். அவள் கனன் கலங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித்தான் தனிக்குடித்தனம் நடத்த அனுப்பினாள், அவளின் தாய்.
பத்திரிகையை புரட்டியவளின் கண்களில் பட்ட, ஒரு பெண்ணின் தற்கொலை முயற்சி பற்றி செய்தி கண்டு, நீண்டதோர் பெருமூச்சு விட்டாள். அவள் படித்தவள், எதற்கும் அவசர முடிவெடுக்கும் சுபாவமற்றவள். தன் வாழ்க்கையில் கண்ட கசப்பான அனுபவங்களையெல்லாம் உடனுக்குடன் மறந்து, இவையெல்லாம் குடும்ப வாழ்க்கையில் சாதாரணம் என்று எண்ணியே வந்தாள்.
பொறுமை என்பது கடைச்சரக்கல்ல. அப்பண்பு தியாக உணர்வோடு, மனிதாபிமான நினைவுகளோடு உள்ளத்தில்
 

ந்ேதிர் இதயம்சிழு
வளர்த்தது. என்றாலும் எதற்கும் ஒரு எல்லை, நியாயம் என்று உள்ளதே!
பத்திரிகைச் செய்தியை படித்த அவ்ருக்கு அவளது இளமைக் காலங்கள், தனிக்குடித்தனம் நடத்த முன் தாய் சொன்ன வார்த் தைகள் , அவள் அனுபவிக்கின்ற சித்திரவதையான வாழ்க்கை முறை, அவற்றையெல்லாம் பொறுத்துப் பொறுத்துக் கடத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கண் முன் நிழலாடின.
அப்பொழுது, எதிர் பாராதவிதமாக அங்கு வந்த அவளின் கணவன் ஹலீம், இந்த லெட்டரை நல்லா படிச்சிட்டு, "கடைசி முடிவு வேணும்" என்று கூறிவிட்டு, விறுவிறு என வெளியேறினான். வந்ததும், போனதும் ஐந்து நிமிடங்கள் இருக்காது.
அவர் என்ன மாதிரியானவராக இருந்தாலும், வீட்டுக்கு வந்தவர், மகளைக் கரம் பிடித்தவர் என்ற மரியாதையை ஆமினாவின் தாய் காப்பாற்றியே வந்தாள். ஆனால் பிடிவாதக்கார ஜென்மங்களுக்கு இது எங்கே புரியப் போகிறது! ஆமினாவின் தாயாரும் வாழ்க்கைப் புயலில், அடிபட்டு, அலை கழிந்தவள்தான், என்றாலும் அவள் கவலைப்படக் கூடாது, நோயாளியாகிவிடக் கூடாது, என்பதற்காக எல்லாவற்றையும் மறந்து வந்தாள்.
ஆனால், வயதில் முத்தவர்களும், அனுபவத்தில் முதிர்ந்தவர்களும், குழந்தை முழிக்கும் போது, என்ன நடக்கப்போகிறதென்பதை அறிந்துகொள்வார்கள்.
"ஆமினா, என்னம்மா? திடீரென்று வந்த உடனே மருமகன் கோபத்தோட போயிட்டாரு. என்று முடிக்குமுன், இல்லம்மா கடிதம் ஒன்னு தந்துட்டுப் போறாரு நல்லதொரு முடிவு வேணுமாம்; நீங்க ஒன்னும் யோசிக்க வேணாம்மா; நான் நல்ல முடிவு எடுக்கத்தான் போகிறேன்" என்று நிதானமாக, தைரியமாக, ஆனால் பொறுமையை இழந்தவளாகப் பேசிய மகளைக் கண்டு அந்தத் தாயுள்ளம் கலங்கியது.

Page 32
ஒர் இதயம் அழுதிநது
மெதுவாக மன உறுதியோடு கடிதத்தைப் படித்தாள் ஆமினா, "நீ நடத்தை கெட்டவள்; உன்னோடு வாழும் ஓவி வொரு நிமிடமும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன்; உன்னிடமுள்ள அகங்காரத் தன்மைகளும், தாந்தோன்றித்தனமான வாழ்க்கை முறைகளையும் கண்டு நான் வெட்கப்பட வேண்டியவனாகி விட்டேன். ஆகையால், எனது கடைசி முடிவையும் எடுத்து விட்டேன், என்று தாறுமாறாக எழுதியிருந்தான். நீண்டதோர் பெருமூச்சோடு ஆமினா, சற்று யோசித்துவிட்டு, தனது பதிலையும் எழுதினாள்.
"என்னை நடத்தை கெட்டவள் என்று சொன்ன பின் நான் உங்கள் மனைவி என்று கூறிக்கொள்ளும் உரிமையை அழித்துவிட்டீர்கள். என்னுடைய முடிவு என்னவென்று சொல்வதற்கு முன், ஒரு சில வார்த்தைகளை நானும் சொல்ல வேண்டியவளாகி விட்டேன்.
இதுவரை நரக வேதனையை அனுபவித்த உங்களுக்கு இனி எப்படியும் என்னிடமிருந்து மன அமைதி கிட்டாது. இல்லறத்தில் ஒரு பெண்ணிடமிருந்து கிட்டும் மனத்திருப்தியை எதிர்பார்க்க முடியாது என்பதையும் உறுதியாகக் கூறிவிட்டீர்கள். கடிதத்தில் எழுதியவைகள், ஏற்கனவே என்னோடு விவாதித்தவைகள் தானே. உங்களது குற்றச்சாட்டுக்களையும் சந்தேக மனப்பான்மையையும், அதனால் ஏற்பட்ட மனக்கசப்புகளும், வேதனைகளும் எனக்கு ஏற்படுத்திய தாக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
நான், சற்று முற்போக்குத் தன்மை கொண்டவள், படித்தவள் என்ற மமதை பிடித்தவள், தலைக்கணம் கொண்டவள் என்றெல்லாம் குற்றம் சாட்டியுள்ளிர்கள்.
இவற்றையெல்லாம் கேட்டு எண் மனம் எப்படிச் சுடுபட்டிருக்கும் என்று, இன்னுனொருவரால் உணர முடியாது. உங்களோடு வாழ்ந்து நான் மிகவும் நொந்து போயுள்ளேன். உண்மையிலேயே இன்னும் சில நாட்கள் வாழ்ந்தால் உடலால் மட்டுமல்ல மனதாலும் நோயாளியாகி இருப்பேன்.

இவ்வளவு நடந்தும், என்னைப் படாதபாடு படுத்தியும் ஒன்றும் நடவாதது போல் இருந்தேனே ஏன், எதற்காகவென்று ஒரு நிமிடம் சிந்தித்தீர்களா? கணவன் மனைவி என்ற உறவு வெறும் உடற்பசியை மட்டும் தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டது என்பது உங்கள் எண்ணம். ஆனால், திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் கணவனின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் இயந்திரமல்ல பெனன் என்பவள்; அவளுக்கும் ஆசா பாசங்கள், பந்த பாசங்கள், உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் தாண்டி சுயகெளரவம் மனச்சாட்சி என்றெல்லாம் உண்டு.
இப்பொழுது நான் எல்லாவற்றையும் இழந்து நிற்பவள்; எஞ்சியிருப்பது எனது சுய கெளரவம் மட்டும் தான்! அதை நான் கடைசி வரை காப்பேன்! என் எதிர்கால வாழ்வுக்கு அதுவொன்றே போதுமானது. ஆனால், நீங்கள் கட்டிய கதைகள் இருக்கின்றனவே அவை உங்களோடு வாழ்ந்தமைக்காக எனக்கு தந்த பட்டம் பதவிகள் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான வாழ்க்கையொன்றை ஏற்படுத்திக் கொள்ள என்னை ஒதுக்கி விட காட்டியுள்ள காரணங்களை எல்லாம் சகித்துக் கொள்கிறேன் ஒன்றைத் தவிர, நடத்தைக் கெட்டவள்" என்ற வார்த்தைகளைப் படித்த போது தினரிப் போனான். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய எண்ணுவதில் என்ன இலாபம்? இனி எக்காரணங் கொண்டும் ஆமினாவை சமாதானப்படுத்த முடியாதென்பதையும் உணர்ந்தான். தனது அவசரப் புத்தியாய் முன் பின் யோசியாமல் எடுத்த முடிவு. மீண்டும் கடிதத்தைப் படித்தவன் சகிக்க முடியாமல் கசக்கிக் கிழித்து வீசினான்.
தன் குடும்ப வாழ்க்கையோடு விளையாடிய தன் குடும்பத்தினரின் ஆசை நிறைவேறி விட்டது. தன் பெற்றார் உடன் பிறந்தவர்கள் மனம் நோகக் கூடாது என்பதற்காக உங்கள் அரிய பேச்சுக்களைக் கேட்டு பொய்களை நம்பி மனைவிக்குரிய இடத்தைக் கொடுக்கத் தவறியதால் ஏற்பட்ட வபரீதத்தை தவிர்க்க வழியின்றி வருந்தினான்.

Page 33
ஏற்கனவே, அவர்கள் எதிர் பார்த்த ஸ்ரீனாவை மருமகளாக்கிக் கொள்ள முடியாது போன வருத்தத்தைக் காட்டிக்கொள்ள முடியாமல் போன தனது பெற்றாரின் உணர்வுகளைப் படிப்படியாக உணர்ந்துகொள்ள முற்பட்டான்.
இத்தகைய நிலை இவ்வுலகில் யாருக்கும் ஏற்படக்கூடாது; எனது எதிரிகளுக்குக் கூட நிலவக் கூடாது என்று எண்ணி வருந்தினான்.
சில நேரங்களில் ஹலீம் வீட்டுக்குப் போகும் வேளைகளில் என்னப்பா கல்யாணம் கட்டிட்டா பெத்தவங்க, கூடப் பிறந்தவங்க எல்லாம் மறந்திட்டியா? என்ன மவன் வீட்டுப் பக்கம் வாரதேயில்ல?
நானா, உம்மா பாவம் நீ எங்கள எல்லாம் கைவிட்டாச்சி என்று அடிக்கடி சொல்லுவா,
ஒரு முறை நீண்ட நாட்களுக்குப் பின் "எங்காவது தூரியம் பழம் கண்டா கொண்டு வாங்க" என்று ஆமினா சொன்னதும், அன்று விடு திரும்பும் போது, இரண்டு பழங்களைக் கொண்டு வீட்டுப் பக்கம் போன போது, ஒவ்வொருவரும் மாறி மாறி குறை சொன்னதும் போதாக் குறைக்கு அவன் ஆசையோடு கொண்டு வந்த பழங்களை அவர்களாகவே பங்கு போட்டுக் கொண்டதும் அவனது கண் முன் நிழலாடின.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆமினா விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற முயன்றும், குடும்பத்தினரின் தலையீட்டால் அது நிறைவேறாமல் போனதும் , ஆரினா அதனால் ஏமாற்றமடைந்ததையும் எண்ணிய போது உள்ளம் அழுதது. இத்தகைய பின்புத்தித்தனமான சில காரியங்களின் போது, ஆமினா பேசிய சில உருக்கமான வார்த்தைகள் தனது உடன் பிறப்புக்கள் மீது காட்டிய அன்பற்ற உபசரிப்புக்கள், இதன் காரணமாக இருவருக்குமிடையே வாக்குவாதமும், ஆமினாவின் பொறுமையை இழக்கச் செய்யும் வகையில், தான் நடந்து கொண்டதுதான் என்பதை உணர்ந்து வருந்தும் போதெல்லாம், கட்டியவளுக்கு உரிய இடத்தை அளிக்கத் தவறியதுதான் விபரீதத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்தான்.
 

நாட்கள் உருண்டோடின. அன்று ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை தினம் ஆயினா வாரமஞ்சரியைப் புரட்டிக் கொண்டிருந்தாள். "அனாதை இல்லத்திற்கு படித்த பெண் தேவை" என்ற விளம்பரம் அவள் கண்களைத் தொட்டது. விறுவிறு என படித்தவளின் உள்ளத்தில் ஓர் எண்ணம்.
நான் ஒரு தனி மரம் என்னால் சிறப்பான பணியை இந்த அனாதைகளுக்குச் செய்யமுடியும்.
இதற்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நோக்கோடு விண்ணப்பித்தாள். சில தினங்களில் அவள் தகுதிக்கேற்ப தொழில் கிடைத்தது. கடமையைக் கண்ணாகக் கருதி உழைத்தாள். பெற்றோரை இழந்து அரவணைப்பைக் காணாத குழந்தைகளுக்குத் தாய் போல் பணிவிடை செய்தாள். அது அவளுக்குப் பெருமையாக இருந்தது; மனதிற்கு அமைதியைக் கொடுத்தது; காலப்போக்கில் அவ்வனாதை இல்லத்தின் உயர் இடத்தை எட்டிப்பிடித்தாள். பல முக்கிய தேவைகளுக்காக அவள் வெளியே செல்ல வேண்டியிருந்தது. ஒரு நாள் சில சகாக்களோடு வங்கியில் அலுவல் ஒன்றுக்குச் சென்றிருந்தாள். திடுக்கிட்டவளாய். ஒரு நிமிடம் அப்படியே நின்றாள். அவளால் எதுவும் பேச முடியவில்லை. உடன் சென்ற இருவரும் என்ன மெடம் என்றவாறு அவளின் கைகளைப் பற்றினர்.
தன்னை சுதாகரித்துக்கொண்டவள், ஒன்றும் பேசவில்லை. வாங்க போவோம் என்றவாறு குழம்பிய மனதோடு வெளியே வந்தாள்.
அங்கே ஹலீம் அலங்கோலமான உடைகளோடும், தாடி வளந்த முகத்தோடும், மதுவின் மதி மயக்கத்தால் தள்ளாடிய வண்ணம் சென்று கொண்டிருந்தான். ஆமினா விம்மி விம்மி தன் கதை சொன்னாள்.

Page 34


Page 35
-
பரியநிலாவின் ஜன்ாப் நம்g காலம் முத உயன்வத்தை அவர் காபோ பாடம் பயின்ற வாசிக்கும் பழக்கம் உடையவர். கொண்ட தனது எழுத்தாற்ற இலக்கியத்துறையில் பிரவேசித்த சிறுகதைத்துறையில் அதிக ஈ சஞ்சிகைகள் என்பவற்றில் வெளிவந்துள்ளன. இலங்ை சிறுகதைகள் ஒளிபரப்பாகியுள்ள என்ற சிறுகதைத் தொகுதின
|L இவரது இலகாயமுறசகளை நடைபெற்ற ஜனாதிபதி நடமாடு வழங்கி கெளரவித்தனர். முஸ்லி வாழ்வோரை வாழ்த்தும் திட்டத்த Lյլալբլի է բtյլդի բլիլլի 5նք கஹவத்தை சகல இன ஒன்றிய பாராட்டி "சமூக ஜோதி" என்ற தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக மாவட்டத்தில் இலக்கிய ஈடுபாடு ( உருவாக்க தொடர்ந்து பாடு செயலாகும் தனிமையாக நின்று ப்ரிய நிலாவை நடாத்தியுள் முயற்சியுள்ளவர் என்பதைப் புல மற்றொரு ஆக்கம் தான் இப்ப்ெ இச்சிறு கதைத் தொகுதி
அதWர் 'ஐ' அணி தர்ை, அறபு & இளப்ாமிய நர்
ரோநேரிய பல்காபக் கழகம் -
 

ஆசிரியராக அறிமுகமாகியுள்ள
ான் அவர் அவூரது பாடசாலிைக்
கெளரவப் பட்டம் வழங்கினர்.
உழைக்கும் இவர் கேகாலை கொண்ட ஒர் இளம் பரம்பரையை பட்டு வருவது பாராட்டத்தக்க கடந்த எட்டு வருட காலமாகப் எாமை ஒன்றே இவர் விடா ப்படுத்தும் அதனை உணர்ந்தும் iழுது உங்கள் கையில் தவழும்
ராதேனிய
ISBN 955-96060-0-x is