கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிலவிலே பேசுவோம்

Page 1

ான்.கே.ரகுநாதன்

Page 2
நிலவிலே ே
என். கே. ர
விற்பன உ
coffi፴፰፥

பசுவோம்
குநாதன்
Irfan L :
29.

Page 3
முதற்பதிப்பு: செப்டம்பர் "2ே. (c)
விலை ரூபாய் இரண்டு
இலங்கையில் கிடைக்குமிடம் :
பாரதி புத்தக சாலை, ேே, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.
மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு, சென்ன்-14,

முன்னுரை
'நிலவிலே பேசுவோம்"-என்ற அழகிய தலைப்புடன் கூடிய இச்சிறுகதைத் தொகுதியைத் தரும் என். கே. ரகு நாதன், ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர்.
முதன்முதலில் இவருடைய சிறுகதையொன்றினே நான், 1951ம் ஆண்டில் வாசித்தேன். "சுதந்திரன்" பத்திரிகையில் நான் கடமையாற்றி வந்த காலம் அது. வாரத்தோறும் பிர சுரத்துக்கேற்ற கதைகளே நானே வாசித்துத் தெரிந்தெடுப் பது வழக்கம். இது அவ்வளவு இன்பமான பொழுதுபோக் கல்ல. நல்லது, கெட்டது, இரண்டும் கெட்டான் என்ற பிலுள்ள சகல கதைகளேயும் வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒரு மூடை பதரை நாள் முழுவதும் துழாவி ஒரு நெல்லேப் பொறுக்கி எடுப்பது போன்ற வேலே. சில சமயம் ஒரு முழுநாள் வேலேகூட வியர்த்தமாகிவிடலாம். இப்படி, நான், ஒரு நாள் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தபோது స్ట్ குண்டுமணி கிடைத்தது. அதுதான் நிலவிலே பேசு
வாம்" என்ற இப்புத்தகத்தின் தலுேப்புக்குரிய சிறுகதை
பாகும்.
யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிக்கொடுமை, எப்பொழு
மே என் மனதை வருத்திவரும் ஒரு விஷயமாகும். அக்
:ே புத்தம் புதிய கண்ணுேட்டத்துடன், கலேயழ கோடு, சோகம் ததும்பும் ஒரு நையாண்டிநடையில் சிறுகதை யாகச் சித்தரித்திருந்தார் ஆசிரியர். நீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படும் மக்களுக்கு, நன்மை செய்வதாகப் பசப்பிக்கொண்டு வரும் "பெரிய ஜாதித் தலைவர்கள் சிலரின் உள்ளத்தின் இருண்ட மூலேகளில், என்ற விரி யன் பாம்பு இன்னும் சுருண்டு கிடக்கிறதென்பதை, ஏளனத் தோடு அவர் சுட்டிக்காட்டியிருந்த முறை எனது மனதைக் கவர்ந்தது. "மதுவிலுக்கு என்ற உயர்ந்த இலட்சியத்தைக் கூட, தம் சாதிவெறிக்குச் சாதகமாக உபயோகிக்கனாம்" என்ற அவரது கருத்து என் சிந்தனையைத் தூண்டியது. முடி வில், 'வெள்ளி நிலவில், பால்ம்னலில் பேசுவோம்" என்று கதையில் வரும் பெரியவர் சொல்லும்போது, "என் வீட்டுக் குள் நீங்கள் புகமுடியாது" என்ற அவரது சாதித்திமிரின் தடிப்பு அப்படியே பளிச்சிடுகிறது. நல்ல கருத்து அதை அவர் சிறுகதைக்குரிய அமைதியுடன் கையாண்டிருந்த முறையும் சிறப்பாய் இருந்தது .

Page 4
ரகுநாதன், இலக்கிய யாத்திரையில் இன்று அதிக தூரம் முன்னேறி விட்டாலும், நான் படித்த அவரது முதலாவது கதை, என் மனதில் மிகவும் அழுத்தமாகப் பதிந்து கிடக்கிறது. என் முன்னே விரிந்து கிடக்கும் அனுரது சிறுகதைத் தாகுதியில் அவரால் எழுதப்பட்ட பதினுேரு கதைகள் காணப்படுகின்றன. அவற்றை இங்கு விரிவாகத் தனித்தனி யாக விமர்சிப்பது எனது நோக்கமல்ல. அது இங்கு அவசிய முமல்ல. ஆனூல், அவரது கதைகளின் பொதுவான சிறப் பியல்புகள் இவைதான் என்றுமட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முதலாவதாக, அவரது கதைகளில் நாம் காண்பது அவ ரது சமுதாயப் பிரக்ஞைப்ாகும். எந்த மனிதனும் சமுதா யத்தின் ஒரு அங்கமாகத்தான் விளங்குகிருன், எழுத்தாள ணும் விதிவிலக்கல்வ. அவனும், தான் அங்கமாயிருக்கும் சமு தாயத்திற்குத் தனது கடமையைச் செய்யவேண்டியவனே! ரகுநாதனின் பல சிதைகள்-ஏன்? அனேகமாக எல்லாமே என்று கூடச் சொல்லிவிடலாம்-சமுதாயப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முற்போக்குத் கதைகளாகவே இருக்கின்றன. தீண்டாமை ஒழிப்பு, வகுப்பொற்றுமை, வேஃபில் ஐாது திண் டாட்டத்தால் ஏற்படும் இன்னல்கள், கூட்டுறவியக்க ஊழல் கள், பிரஜா உரிமைச் சிக்க்ல்கள் போன்ற சமுதாய விஷயங் க3ள பிரசாரத் தொனியற்ற, உருவத்திலும் உள்ளடக்கத்தி லும் சிறந்த றுகதிைகளாகப் படைத்து இந்நூலில் தந்துள்ளார்.
இரண்டாவதாக, இவர் கதைகளில் நான்காணும் பண்பு, அவர் தாம் வாழும் சமுதாயத்தில் அன்ருடம் காணும் பாத் திரங்களே வைத்துத் தமது கன்தகளேப் புனேத்திருப்பதாகும். இந்த இடத்தில் ஈழநாட்டில் சமீபகாலமாகக் கிளம்பியுள்ள தசிய இவிக்கியம் என்ற கோஷத்தைப்பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கைத் தமிழ் ಕ್ಲಿಸಿದ್ಲಿ தமது நாட்டின் சூழலேப் பிரதிபலிக்கும் கதைக எழுத வேண்டும் என்பது, இவ்வியக்கத்தின் முக்கிய குறிக்கோ ளாகும். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் இக் தோஷம், வலுவுள்ள இலக்கிய இயக்கமாக மலர்ந்துள்ள தென்ருலும், இக்கோனம் எழும்புவதற்கு முன்னரே, விரல் விட்டு எண்ணக்கூடிய சில எழுத்தாளர், இந்தத் துறையில் தாமாகவே முயன்று வந்தனர். ரகுநாதன் கதைகளில் அன்று தெர்ட்டு இன்று வரை இவ்வம்சம் தலே தூக்கி

நிற்கிறது என்பதை இக்கதைத்தொகுதியை வாசிப்பவர்கள் நன்கு தெரிந்து கொள்ளலாம்.
நான் இங்கு கூறிய இந்த இரு அம்சங்களேயும் ஒரு சேர எடுத்து ரகுநாதன் கதைகளைப்ப்ற்றிக் கூறுவதாஜல், அவர் சமுகப் பிரக்ஞை கொண்ட தேசிய் இலக்கியத்தைப் படைத் திருக்கிறர் என்று கூறலாம்.
ரகுநாதன் கதைகளிலே ஒரு கனவு ஊடுருவிக் கிடக் கிறது. இனபேதம், சாதிபேதம், மதபேதம், வர்க்கபேதமற்று
ரு "உலகத்தைப் பற்றிய கனவுதான் அது. உலகத்தின் றந்த சிந்தனேயாளர் சகலரும் கண்ட அந்தப் பூங்கனவு இவ்
எழுத்தாளர் உள்ளத்திலும் வியாபித்துக் கிடப்பதை நாம் காண்கிறுேம். அந்தக் கனவுக்கே தம் கலேயை அர்ப்பணித் திருக்கிருர் அவர். அவரது அழகிய தமிழ்நடை, இக்கனவு களே நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
கனவு என்றதும், நடவாதது என்று அர்த்தம் கொள் வார்கள் சிலர். ஆணுல் "கனவுகளேவிட யதார்த்தமானது வேருென்றுமில்லே" என்று மனுேதத்துவ அறிஞர்கள் கூறு வார்கள். "ஒரு மனிதனின் உண்மையான உருவத்தை, அவன் காணும் கனவுகளேப் போல வேறென்றும் காட்ட மாட்டாது" என்பது, நவீன மனஇயலின் முடிவு. தினம் தினம் நன்வாகிக்கொண்டுவரும் மனிதகுலத்தின் இப்பெரு கனவுதான் ரகுநாதனின் கனவும்.
முன்னுரையை நீட்டி முழக்குதல் அவர் கதைக்கும் வாச கர்களுக்குமிடையே சுவர் எழுப்புவதாகும். முன்னுரை எழு துபவர், வாசகர்களே வாசலிலே காக்கவைத்து விடக்கூடாது என்ற கருத்துடையவன் நான். முன்னுரையால் சலிப் படைந்த வாசகர், மாளிகையுள் புகாமலுே திரும்பிவிடலாம் என்ற அச்சமல்ல. புத்தக ಆಳ್ಗಣ್ಣ°: பொறுத்தவரை யில், இந்த ஆபத்துக்கு இடமில்லே, சவிப்படைந்த வாசகர் இரண்டு பக்கங்களேத் தட்டிவிட்டு'உள்ளே புகுந்துவிடலாம்.
அனேகமாக எனது வர்சகரும், அப்படியே ஏற்கனவே புத்தகத்துள் புகுந்திருக்கக்கூடும். அப்படிப் புகுந்து வாச கருக்கு, அங்கே சிந்தனேயைத் தூண்டும் சிறந்த சிறுகதை விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லே.
கொழும்பு,
O-8-62, அ. ந. கந்தசாமி,

Page 5
சில வார்த்தைகள்
ஈழத்து இலுக்கிய சரித்திரத்தின் பொற்காலம் என்று சம்பந்தப்பட்டவர்களால் வர்ணிக்கப்படும் "மறுமலர்ச்சி"க் கட்டத்துக்குப் பின்னர், இலக்கியச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், பாராட்ட ரசிகனும், வழி காட்ட விமர்சகனும் இல்லாத சூழ்நிவேயில், மனதில் இலக்கி யத்தைப் பற்றிய எதுவித வரையரையுமின்றி, எனது சின்னஞ் சிறு கிராமத்திலிருந்து நான் சிறு கதைகள் எழுத ஆரம் பித்தேன். அப்படி எழுதப்பட்ட கதைகளிலிருந்து சமீப காலம்வரை நான் எழுதிய கதைகள் சிலவற்றைத் தொகுத்து இந் நூலில் தந்துள்ளேன்.
இத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளே நான் சீர்ப்படுத்திக் கொண்டிருந்தபோது, என் எழுத்தாள நண்பர் சிலுர், கதைகளில் வரும் உரையாடல்களே, பேச்சு வழக்குத் தமிழில் - மண்வளச் சொற்களில் - மாற்றியமைக்கும்படி ஆலோசனை கூறினர். இலக்கியம் வளர்ந்து வந்த பாதை யைத் திரித்துக் காட்டுவது பிழை என்று கருதுபவனுகையால் நான் அதைச் செய்யவில்லே.
இதிலுள்ள முதலாவது கதை, மிக மும்முரமாக மது விலக்குப் பிரசாரம் செய்து வந்த ஒரு இயக்கத்தினரின் பத்தி ரிகைக்கு அனுப்பப்பட்டு, "பிரசுரத்துக்குத் தகுதியற்றது" என்று முத்திரை குத்தப்பட்டுத் திரும்பி வந்த பெருமை யுடையது. "இலட்சிய நெருப்பு' என்னும் கதை ஈழத்தின் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட எழுத்தாளர் என்று போற்றப்படும் சி. வைத்தியலிங்கம் அவர்களால், "ஈழகேசரி' வெள்ளிவிழா மலரில் "உள்ளப் பெருக்கு" என்ற தலேப்பில் எழுதப்பட்ட கதையின் கருத்தை மறுத்து, அதே கதையின் தொடர்ச்சியாக, அதே பாத்திரங்களே வைத்து உருவாக்கப்

பட்டது. கதையின் ஆரம்பத்தில், சற்றுத் தெளிவின்மை காணப்படுவதற்கு அதுவே காரணமாகும்.
இக்கதைகள், ஏற்கனவே சுதந்திரன், வீரகேசரி, ஈழ கேசரி, சமூகத் தொண்டன், தேசாபிமானி, ஆகிய பத்திரி கைகளில் வெளியானவை. அவற்றின் ஆசிரியர்களுக்கு
நன்றி.
எழுத்துலகில் அடியெடுத்து வைத்த காலந்தொட்டே முற்போக்கு இலக்கியக் கொள்கையைக் கட்டி வளர்த்துவரும் பழம் பெரும் எழுத்தாளர் அ. ந. கந்தசாமி அவர்கள், ஆஸ் பத்திரியில், நோய்ப் படுக்கையிலிருந்து கொண்டும், சிரமத் தைப் பாராது இந்தாலுக்கு முன்னுரை எழுதியுதவிஞர். அவருக்கு என்நன்றி உரியது. வணக்கம்.
கொழும்பு.
3I-8-'6ይ என். கே. ரகுநாதன்

Page 6
சமர்ப்பணம்
உயிரும் உணர்வுமூ ட்டி என்ன மனிதனுக்கிய அன்னேக்கு

‘நிலவிலே பேசுவோம்!”
பாவேயிலே மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே ஆண் சிங்கம்போலத் தோன்றி, மதுவினுல் ஏற்படும் தீமைகளேயும், அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தையும், அதற்கான வழி வகைகளே யும் அள்ளி விளாசி, இடையிடையே காந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான் வந்திருந்தார் பூஜீமான் சிவப்பிரகாசம் அவர்கள்.
அப்போது மணி எட்டு இருக்கும். அவருக்குப் பசி அத்துடன் கூட்டத்திற் பேசிய களேப்பு வேறு.
சாப்பிட்டு முடி ந் த தும், அறுசுவையுண்டியின் ருசியில் நாவைத் திளேக்கவிட்டபடியே, உள்ளே இருந்த "ஓர் குலம்" பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். விருந்தையின் மூலேயொன்றின் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த மின்விளக்கின் ஒளியில் பத்திரிகையைப் புரட்டிப் படிக்கத் தொடங் கினுர்,
ஒரு பத்திகூட வாசித்திருக்கமாட்டார். வெளியே, வாசற்பக்கமாகச் சிலர் பேசுவது கேட்டது. பத்திரிகை

Page 7
1()
யில் படிந்திருந்த பார்வையைத் திருப்பி அங்கே நோக்கினூர்.
யாரோ பத்துப் பன்னிரண்டு பேர்கள்-நசித்துப் போன கூட்டம்-அதாவது உழைத்தாற்ருன் உணவு' என்ற நிலையிலிருக்கும் உழைப்பாளி வர்க்கம் அவர் களில் ஒருவன், தயங்கித் தயங்கி இவரண்டை வந்தான். மற்றவர்கள் அங்கேயே நின்றுவிட்டார்கள். சிவப்பிர காசம் எழுந்து இரண்டடி முன்னே நடந்து, வந்தவனே உற்றுப் பார்த்தார்.
"அடடே! நீயா கந்தா என்ன சேதி?" என்ருர்,
உங்களைக் காணவேண்டுமென்று வந்தோம். இந்த மதுவிலக்கு சம்பந்தமாக." என்று தயக்கத்துடன் சொன்னுன்.
"ஆகா! அதற்கென்ன, நல்லாய்ப் பேசலாமே!" என்று சொன்னூர் சிவப்பிரகாசம்,
இன்னும் சிலர் வந்திருக்கிருர்கள். அப்படியானுல் அவர்களேயும் கூப்பிட்டு."வார்த்தையை முடிக்காமல் வாசற் பக்கம் திரும்பி, அங்கே உள்ளவர்களேக் கூப்பிட எத்தனித்தான் அவன்.
சிவப்பிரகாசம் ஒரு கணம் திக்குமுக்காடிஞர். மன திலே ஒரு பரபரப்பு-தடுமாற்றம்! தலேயைச் சொறிந்து நெற்றிப் புருவங்களே உயர்த்தி ஏதோ யோசஃன செய் தவர், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தார்.
வேண்டாம் கந்தா, கூப்பிடாதே இதெல்லாம் இரண்டாம் பேர் அறியக்கூடாத விஷயங்கள். மண்வி மக்களென்ருலும் இந்தக் காலத்தில் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக் கிறதென்று யாருக்குத் தெரியும்? அதோ பார் வெளியே

l
நல்ல நிலவு அத்துடன் பால்போன்ற மணல், அங்கே போய்ப் பேசிக்கொள்ளலாம்; வா!' என்று அவன் பதிலே எதிர்பாராமலே, கீழே இறங்கி நடந்தார். அவன் பின் தொடர்ந்தான்.
பின், வாசலில் நின்றவர்களேயும் அழைத்துக்
கொண்டு, சற்றுத் தூரம் போய் ஒரு நல்ல இடத்தில் அமர்ந்து பேசினுர்கள்.
வந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். கள் சேர்ப்பது அவர்கள் தொழில். ஊர் முழுவதும் "மது ஒழிக" என்ற கூச்சல், இந்த நிலையிலே அவர்கள் கதி.?
மது ஒழிப்புக் கூட்டத்திலே, சிவப்பிரகாசம் கார சாரமாகப் பேசியதை அவர்களும் கேட்டார்கள். எனவே, அவரிடமே வந்து சேர்ந்தார்கள். தமது ஜீவப் பிரச் னேக்கு ஆலோசனை கேட்பதற்கு.
"...நாங்களும் மதுவிலக்குக்கு ஆதரவு தருகிருேம். மதுவினுல் உலகத்துக்கே ஆபத்து என்பது நமக்குத் தெரியும். நமக்குக்கூட அது ஒரு மகிழ்ச்சியான தொழி வல்ல ஊர் மக்களிடம் வசை கேட்கிருேம் "எக்ஸைஸ்" உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்துக்குமேலே "கிம்பளம்" கொடுத்தும் ஒளித்தோடுகிருேம்.அது மட்டுமா? ஒவ் வொரு நொடிப்பொழுதும் உயிரைப் பணயம் வைத்துத் தான் நாம் வாழவேண்டியிருக்கிறது. ஆகாயத்தை அளாவி நிற்கும் மரங்களில் இருக்கும்போது, நமது நிலை மையை எண்ணிப் பாருங்கள். மிகப் பயங்கரமான தொழில்தான் என்ருலும் - " என்று இழுத்தான். அங்கு வந்திருந்த ஒரு வாலிபன்.
"ஏன் இழுக்கிருய்? சொல்லு தம்பி" என்று வற்புறுத்தினூர் சிவப்பிரகாசம்,

Page 8
12
"நமக்கு வேறு தொழில் வேண்டுமே" சிவப்பிரகாசம் சிரித்தார். "இதென்ன பிரமாதம்? இந்தப் பரந்த உலகத்தில் தொழிலுக்கா பஞ்சம்?" என்ருர்,
எத்தனையோ தொழில்கள் இருக்கின்றனதான் என்ருலும் நாம் செய்வது சாத்தியமா?"
ஒரன்?" "ஒரு தேனீர்க் கடை வைத்தால் யாராவது நம்மிடம் வந்து தேனீர் குடிப்பார்களா? அல்லது ஒரு பலசரக்குக் கடை வைத்தாற்கூட நம்மிடம் வந்து சாமான் வாங்கு வார்களென்பது என்ன நிச்சயம்? ஏன் ஒரு இரும்புக் கடையில்கூட நம்மவர்களே வேலைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்களே இரும்புப் பொருட்களில் தீட்டு ஒட்டிக் கொள்ளுமென்று அதிகம் வேண்டாம் என்ன நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கூலியாக வைத்துக்கொள்ளுங்கள் என்ருல் சம்மதிப்பீர்களா? இந்த நிலைமையில்." என்று அந்த வாலிபன் மிகவும் உணர்ச்சியுடன் பேசிவிட்டு அவர் முகத்தைப் பார்த்தான். அப்போதும் அவர் சிரித்தார்.
அப்படிச் சொல்லாதே தம்பி அதெல்லாம் வேறு விஷயம். இவைதான் தொழில்களா? வேறு கைத் தொழில் செய்கிறது"
வாலிபன் பேச வாயெடுத்தான். அவனத் தடை செய்துவிட்டு இதுவரை மெளனமாக இருந்த ஒரு நடுத்தர வயதினன் கோபத்துடன் கேட்டான்.
ஆமாம் அதெல்லாம் வேறு விஷயங்கள். உங்களுக் கென்ன எத்தனையோ சொல்வீர்கள். இதோ பாருங்கள் நான் இருக்கிறேன். எனக்கு இப்போது ஐம்பது வயதா

1.
கிறது. இந்த வயதில் நான் வேறு புதுத் தொழில் பழகித் தேர்ச்சியடைவதற்கும் காலன் வந்து என் கழுத் தில் கயிறு போடுவதற்கும் சரியாயிருக்கும். தொழில் பழகுகிற காலத்திலே நல்ல ஊதியம் கிடைக்குமா? அவ்வளவும் நானும் என் பெண்டாட்டி பிள்ளேகளும் பட்டினி கிடக்கவேண்டியதுதான்! அப்படித்தானே உங்கள் திட்டம்?"
சிவப்பிரகாசம் ஆபத்தான கட்டத்தில் அகப்பட்டுக் கொண்டார். எனினும் சமாளித்துக்கொண்டு. "ஆத்திரப் படாதீர்கள்! நீங்கள் ஒருங்கே திரண்டு உங்கள் தேவைகளே அரசாங்கத்திடம் கேளுங்கள். நீங்கள் கள்ளுச் சேர்க்க வேண்டாம். கருப்ப நீர் இறக் குங்கள். ஒரு சீனித் தொழிற்சாலே நிறுவித் தரும்படி உங்கள் தொழில் அமைச்சரைக் கேளுங்கள், கவனிக்கா மல் விட்டுவிடப் போகிறர்களா?" என்று நொண்டிச் சமாதானம் கூறினுர்,
கூட்டத்திலிருந்து ஒரு புதிய எழுச்சிக் குரல் கேட்டது.
"அதொன்றும் வேண்டாம். மதுவினுல் நன்மையோ தீமையோ நமது சாதி கொஞ்சம் முன்னேறி வருகிறது. அது உங்களுக்குப் பிடிக்கவில்லே. ஆனபடியால்த்தான் மதுவிலக்கு வேண்டுமென்கிறீர்கள். நீங்கள் மதுவை ஒழியுங்கள். காந்தி மகாத்மாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே எங்கள் வாழ்வைப் பறியுங்கள். நாங்கள் பசி கிடந்து சாகிருேம். நீண்டாமை ஒழிய வேண்டுமென்று மகாத்மா காந்தி சொன்னுரல்லவா? நாம் ஒழிந்துவிட் டால் தீண்டாமையும் கொஞ்சம் ஒழிந்துவிடும். உங்க ளுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய். அதே நேரத்தில்

Page 9
14
ஜின்"னும், "பிரண்டி"யும் மருந்துக் கடைகளில் விலைப் படட்டும், மருந்து என்ற பெயரில்"
"சைச்சை இது தவருனவாதம்! அப்படி எண்ணவே తోLTశ్రా!"
பின் எப்படி எண்ணுவது? காந்தியின் பெயரைச் சொல்லி மது ஒழிக்கக் கிளம்பிவிட்டீர்களே. முதலில் தீண்டாமையை ஒழிக்க வேண்டாமா?" என்றது அந்தக் குரல்.
சிவப்பிரகாசம் சிலேயாய்விட்டார். இப்படிப் பேசு வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லே,
வந்தவர்கள் எழுந்தார்கள். "நாங்கள் போய் வருகிருேம். சிந்தித்து நல்லதைச் செய்யுங்கள். "மதுவிலக்கு அவசியம் வேண்டும்" அதே நேரத்தில் நாம் மகிழ்வுடன் வாழவேண்டும். இந்த அடிப்படையிலே தொண்டாற்றுங்கள். உங்களுடன் நாமும் சேர்ந்துகொள்கிருேம்" என்று சொல்லிவிட்டு நடந்தார்கள்.
வெளியே நல்ல நிலவு-அங்கே போய்ப் பேசிக் கொள்ளலாம்" என்று சிவப்பிரகாசம் சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு அதிக நேரம் செல்லவில்லே.
11

காரியதரிசி
கிடையை இழுத்துப் பூட்டிவிட்டு, வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு, ராமலிங்க வாத்தியார் நடை யிறங்கினுர், ஆறு மணிக்கு மேலாகி விட்ட 'மைம்மல் பொழுது இரண்டு அடி நடந்ததும் எதிரே மோத வருவது போல வந்த செல்லமணியின் தோற்றத்தைக் கண்டு நின்ருர், அது செல்லமணியல்ல -கடை வாசலில் வஃளந்து நின்ற பூவரச மரம் அவருக்கு வெட்கம் தாங்க முடியவில்லே. "அட வெறும் பிரமைதானு?" என்று எண்ணிக்கொண்டு மேலே நடந்தார் செல்லமணியாகி வந்து தன்னே மோதி மண்டையைப் பிளக்க இருந்த பூவரச மரத்தை நினைத்து இலேசாகச் சிரித்துக் கொண்டார்.
கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. செல்லமணி தான் குங்குமச் சிமிழ் திறந்து, கேலியாகச் சிரித்த வண்ணம் அவர் மனக்கண் முன்னே ஓடிவருகிருள்.
"என்ன வாத்தியாரே அவரைத் திருப்பி அனுப்பி விட்டீர்களே! நீங்கள் கடையில் இருப்பதாக அறிந்து தானே அனுப்பினேன். ஏன்? நாலு ருத்தல் மா கொடுத் தனுப்பினுல் என்ன குறைஞ்சிடும் ?"
"பின்னே என்ன செய்வது செல்லம்? காரியதரிசி யாக இருந்துகொண்டு நானுகவே ஒழுங்குகளே மீறுவதா? கூப்பன்காரருக்கே மா காணுது. அப்படியிருக்க."

Page 10
1.
"ஆமா பெரிய ஒழுங்கைக் கண்டுவிட்டீர்கள்." "செல்லம் ஏன் அப்படிச் சொல்கிருய்?" "பின்னே எப்படிச் சொல்வது? பிறன் பெண்சாதி யைக் கண்டு இச்சைப்படக் கூடாதென்பது மனிதனுழுங்கு நீங்கள் அதுக்கு மேலேயே போய்விட்டீர்கள். அப்படி என்ருல் நீங்கள் மனிதன் இல்லேயா வாத்தியாரே?"
"ப்ோ செல்லம், கேலி பண்ணுதே" "ஆமாம் உங்களுக்குக் கேலியாய்த்தான் இருக்கும். எனக்குப் பெரிய வேதனை. என்னேப் பெற்று வளர்த்த தாய்க்கு நாளேக்குத் திவஷம். நாலு பணியாரம் படைக் கலாமென்று இருந்தேன் முடியவில்லை."
"என்ன, என்ன? திவஷமா? சாப்பாட்டுக்கு வழி யில்லாமே மனுஷன் திண்டாடும்போது அதுதான் ஒரு குறைச்சல்? நீ படைக்கிற பணியாரத்தை உன் அம்மா வந்து சாப்பிடத்தான் போரு-வெறும் முட்டாள் தனம்"
"அடடே! நீங்கள் சூனுமானப் பிரசாரகர் என்பதை மறந்துவிட்டேன் வாத்தியார் மன்னிச்சிடுங்கோ ஆனுல் ஒரு விஷயம். என்னைப் பெற்றவள் இல்லாவிட்டால் நான் இல்லே. நான் இல்லையென்ருல் உங்க பாடு."
"ஊ" என்று குனிந்தார் வாத்தியார். காலிலே நறுக் கென்று தைத்த முள்ளேப் பிடுங்கி எறிந்துவிட்டு வளைந்து கிடந்த பனேக் கூடாகக் குனிந்து நிமிர்ந்து அப்பால் நடந் தார். செல்லத்தையும் அவள் துடுக்குத்தனமான பேச் சையும் நினைத்துச் சிரித்துக்கொண்டார். என்ருலும் மனதிலே உள்ளூரப் பயம்!
மனதிலிருந்து செல்லமணியின் தோற்றம் மறைந்து போனதும், மாலேயிலே நடைபெற்ற சம்பவத்தை நினைவு படுத்திக்கொண்டார்.

17
கடையிலே கூப்பன் புத்தகமும் கையுமாக நாவேந்து பேர் கூடி நிற்கிருர்கள். வாத்தியாரின் கையிலே இருந்த பென்ஸில் "பில்" புத்தகத்தின் மேல் கர கர என்று நெளி கிறது. அரிசி, மா, சீனி என்று வந்தவர்கள், ஒருவர் பின் ஒருவராகச் சொல்லிக்கொண்டே இருக்கிருர்கள்.
வேலாயுதம் வருகிருன், செல்லமணியின் "தாலி கட்டிய" கணவன், சமய சந்தர்ப்பம் தெரியாத அப்பாவி.
"வாத்தியார் நாலு ருத்தல் மா வேணும். நம்ம சம்சாரத்தின் தாயின் திவஷம் நாளேக்கு. அதுக்கு." என்று இழுத்தாற்போல் சொல்கிருன்,
வாத்தியார் நிமிர்ந்து பார்க்கிருர், கழுத்துப் பட்டை எலும்பு இரண்டும் புடைத்து நிற்க, வாத்தியாரின் பதிலே எதிர்பார்த்து, கண்களே அவர் மேலே குவித்து நிற்கிருன், வேலாயுதம், வாத்தியாருக்கு மிகவும் வேண்டிய 5ዎûዃ வருக்குவேண்டியவன். என்ருலும் என்ன செய்வது? வழக் கத்தை மீறி ஒரு அவுன்ஸ் மா கொடுத்தாற்கூட அங்கே வந்து நிற்கிறவர்கள் எல்லோரும் வாத்தியாரின் மண்டை யைப் பிய்த்துப் பிடுங்கிவிடுவார்கள்.
"வேலாயுதண்ணே நான் என்ன செய்வது? மா இல்லே கூப்பன்காரர்களுக்கே காணுது-"
"எப்படியாவது பார்த்துக் கொடுத்தீர்களென் ரூல்."
"பார்த்தென்ன, பார்த்து ஒரு பொட்டு வைக்கிற மா கூடத் தர இயலாது. கோபித்துக்கொள்ளாதே."
வேலாயுதம் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்புகிருன் ,

Page 11
18
வாத்தியாரின் சிந்தனே கலேகிறது. "உம் இதற்கு நான் என்ன செய்வது?" என்று மனதுக்குள் முணுமுணுக் கிருர், நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்படுகிறது. நடை யைத் துரிதப்படுத்துகிருர்,
குள்ளமான தோற்றம்; சங்கக் கடையின் காரியதரிசி என்ற காரணத்தாலோ என்னவோ பஞ்ச காலத்திலும் கூட நல்ல வாட்ட சாட்டமான உடலமைப்பு: தீட்சண்ய மான கண்கள்-அந்த ஒளிமிகுந்த கண்களேத் தவருன பாதையில் திருப்பி, எந்நேரமும் திருட்டுத்தனமான பார்வை அரையிலே மல் வேட்டி, முழங்கால்வரை நீண்டு தொங்கும் வெள்ளே ஜிப்பா இடது கையிலே ஒரு உயர்தர "ரிஸ்ட் வாட்ச்". இத்தியாதி இலக்கணங்களுக்குரியவர் தான் ராமலிங்க வாத்தியார்,
கிராமத்துச் சங்கக் கடைக்கு மனேஜர் ராமலிங்க வாத்தியாரல்ல; அவர் அந்தக் கடையின் காரியதரிசி
மனேஜர் மதியாபரணத்துக்கு இரண்டு நாட் களாகச் சுகமில்லை; ஜுரம், அந்தக் கடையை மோட்ச லோகம் என்று எண்ணியிருக்கும் ஜனங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்களோ, என்னவோ, மனேஜருக்கு வருத்தம் ஏற்பட்டபோது ராமலிங்க வாத்தியாருக்கு விடுதலேயாகி யிருந்தது.
வாத்தியாருக்கு கிராமத்திலே நல்ல கிராக்கி, ஊமை யர்கள் சங்கத்துக்கு செவிடன் தலைமை வகிப்பதுபோல அல்ல. இந்த நாட்களில் எது அறிவு? அமானுஷ்யமான காரியங்களச் சாதிப்பவர்களுக்குத்தானே தி ற  ைம கொடுக்கப்படுகிறது. அதுபோல வாத்தியார் மனுஷன் அல்ல, அமானுஷ்பன்!

19
இந்த அமானுஷ்யம்தான் செல்லமணியை அடிபணியச் செய்தது பாவம் அவள் என்ன செய்வது? அவள் கணவன் உடலாலும், உள்ளத்தாலும் நோஞ்சான் பேர் வழி, சோம்பேறி
罪
வாத்தியார் வீட்டுக்குப் போனபோது நன்ருய் இருட்டிவிட்டது. முகத்தைக் கழுவி, தாய்கொடுத்த தேனீரை அருந்திவிட்டு வெளிக்கிளம்பினுர்,
குறிப்பறிந்து நடக்கும் சேவகன்போல அவர் கால்கள் இதய அங்கலாய்ப்புக்குப் பணிந்தன. முடுக்கிவிட்ட மின் சார யந்திரம்போல செல்லமணியின் வீடுவரை கொண்டு போய்ச் சேர்த்தன.
மிகவும் குள்ளமான உருவம்; உக்கி ஒடிந்துபோன ஒலே வேலிக்கு மேலே தஃவயை உயர்த்திப் பார்த்தார்.
செல்லமணி வீட்டிலே ஆக இரண்டே இரண்டு உருப் படிகள்தான் அவளும், அவள் கணவன் வேலாயுதமும். மண்ணுல் செய்யப்பட்ட அரைச் சுவரிலே மண்ணெண் ணெய் விளக்கு எரிந்துகொண்டிருந்தது; வழக்கமாக வேலாயுதம் தன் உடலைச் சாய்த்துக் கிடக்கிற கயிற்றுக் கட்டிலிலே ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டு, செல்லமணி ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். வேலா யுதம் பாவம், எங்கோ வெளியே சென்றிருந்தான்.
கண்களில் ஒளியைத் தேக்கி, செல்லம் படித்துக் கொண்டிருக்கிற புத்தகத்தைக் கூர்ந்து கவனித்தார் வாத் தி யார். அது திருக்குறளல்ல - கண்ணகி பெருமையைச் சொல்கிற சிலப்பதிகார வசனமுமல்ல. ஒரு எட்டணுக் குப்பை. ஆபாசமான தலேப்பு பார்க்கச் சகிக்காத அட்டை

Page 12
2.)
அது இராமலிங்க வாத்தியாரின் அன்பளிப்பு. இந்தப் புத்தகத்துக்கு "தூண்டில்" என்று பெயர் வைத்திருந்தால் ரொம்பவும் பொருத்தமாயிருக்கும்.
வாத்தியாரின் உள்ளம் எகிறிக் குதித்தது. வேலா யுதம் இல்லை; இருந்திருந்தால் அவன் படுக்கிற கட்டிலில் அவள் படுத்துக்கொண்டு, அந்தப் புத்தகத்தை அத்தனே அக்கறையோடு படிப்பாளா? இத்தனே ஒய்யாரமாகத் தான் துவண்டு கிடப்பாளா?
மெல்ல உள்ளே நுழைந்து, "செல்லம்" என்று குரல் கொடுத்தார். புத்தகத்தின் பக்கங்களிலே காதலன், காதலியைத் தாவியஃணத்து, அவள் இதழ்களிலே தன் உதட்டைப் பதித்து.என்னவோ நடக்கிறது இதனுல் அந்தக் காட்சியிலே தன்னே மறந்து கிடந்த செல்லத்துக்கு வாத்தியாரின் குரல் கேட்கவில்லே.
வாத்தியார் துணிந்து மேலும் உள்ளே இரண்டடி வைத்து, செல்லம், கூப்பிட்டது கேக்கலேயா, என்ன அவ்வளவு சுவராஸ்யம்?" என்று கேட்டார். செல்லம் துடித்துப் பதைத்து எழுந்து, இருளோடு இருளாய் நிற்கிற அந்த உருவத்தைப் பார்த்தாள். உடனேயே புரிந்துகொண்டாள். புத்தகத்திலே படித்த கட்டத்துக் கும் இந்த "உண்மைக்கும் எவ்வளவு ஒற்றுமை உள்ளத் திலே கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்களைப் படித்து மனது கிளுகிளுத்துக் கொண்டிருந்தபோது, அதற்கு அனுகூலமாக வாத்தியார் வந்திருப்பதைக் காணும் போது அவள் இதழ்களில் மோகனம் நெளிந் தோடியது: கண்களிலே ஒரு காந்த ஒளி
என்ருலும் மாலேச் சம்பவத்தை நினேத்துக்கொண் டாள். பெட்டியுங் கையுமாக ஒரு நாலு ருத்தல் மாவுக்கு இங்கிருந்து நெடுந்தூரம் சென்ற கணவனைத்

21
திருப்பி வைத்தவரல்லவா அவர்? இதை நினைத்தபோது அவள் உள்ளம் புழுங்கிற்று. "என் உயிரைக்கூட உனக் காகத் தருவேனே" என்று சொன்ன வாத்தியாரா நாலு ருத்தல் மா தர மறுத்தார்?"
செல்லம் விளக்கைத் தூக்கி சுவர் மறைவில் வைத் தாள். செல்லத்தையும், அவள் இருந்த இடத்தையும் இருள் அப்பிக் கொண்டது. வாத்தியார் துணிந்து கூரைக்குள்ளே குனிந்து அந்தக் கயிற்றுக் கட்டிலிலேஅவளுக்கு அருகில் உட்கார்ந்தார் செல்லம் சற்றுத் தள்ளி அமர்ந்துகொண்டாள்.
"அண்ணன் எங்கே செல்லும்?" என்று மெதுவாகக் கேட்டார் வாத்தியார்.
"சந்தைக்குப் போச்சுது இன்னும் காணுேம். கெதியா வந்துடும்" என்ருள் அவள்.
"செல்லம் அண்ணன் மா கேட்டு வந்தார். கொடுக்க முடியல்லே-நீ கோவிப்பாய் என்று சொல்விப் போக வந்தேன்" என்ருர் வாத்தியார்.
செல்லத்தின் உள்ளம் பலவித ரஸங்களினுல் விகா ரப்பட்டுப் போய், ஒரு தனி நிலேமைக்கு வர முடியாமல் தத்தளித்தது.
"பரவாயில்லே" என்று இதழ்கள் தவறுதலாக அசைந்தன.
"என்ன செய்வது செல்லம், ஒரு துளி மா கூட எடுக்க முடியாது. எடுத்தால் நிச்சயமாக எங்காவது தாக்கும். அதுவும் தவிர நான் காரியதரிசியாக இருந்து கொண்டு. "என்று இழுத்தார்.

Page 13
22
"அதனுல்தான் நானும் அனுப்பினேன்" என்றுள் அவள். அவள் சொல்லி முடிப்பதற்குள் வெளியே படலேக்கு நேரே சத்தம் கேட்டது.
"ணே! பட&லயைத் திற-ஓடிவா" சந்தைக்குப் போன வேலாயுதம் தன் மாமியாரின் திவஷத்துக்கு வேண்டிய சகல சாமான்களேயும் வாங்கி, தலையிலிருந்து கையிருகத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்துபட&லக்கு வெளியே நந்திமாதிரி வழிமறித்திருந்தான்.
வாத்தியார் பாடு தர்ம சங்கடமாய்விட்டது. வெளியே ஓடுவதற்கு வழியில்லே. செல்லமும் திகிைத்துப் போனுள் கட்டில் விட்டிறங்கி வாத்தியாரை ஒளித்து வைப்பதற்கு முயற்சிப்பதற்கிடையில், வேலாயுதத்தின் குரல் மறுபடியும் ஓங்காரித்தது.
சனேய் சொன்னது கேக்கலேயா? தலே எரியுது"
செல்லம் படலைக்கு ஓடினுள். படஃலயைத் திறந்து கணவனின் கையிலிருந்த சாமானே வாங்கிக்கொண்டு அவன் முன்னும் தான் பின்னுமாகத் தயங்கித் தயங்கி வந்தாள். சாமான்களே இறக்கி வைத்ததும், இத்தனே நேரமும் வலியெடுத்த முதுகைப் போடுவதற்காக வேலாயுதம் கட்டிலுக்குப் போனவன், அங்கே வெள்ளே வெளேறென்ற உருவம் சிலேபோல இருப்பதைப் பார்த்து பின்வாங்கினுன்.
1 யாரடி அது" என்று குரல் கொடுத்துக்கொண்டு அருகில், சுவர் மறைவில் கிடந்த கைவிளக்கை எடுத்து அந்த உருவத்தின் முகத்துக்கு முன்னே நீட்டினுன். வாத்தியாரின் தீட்சண்யமான விழிகள் அந்த ஒளியிலே மின்வெட்டின. செல்லத்தின் உள்ளத்தையும் உடலேயும் பிய்த்துக் கொண்டு பதில் வருவதற்கிடையில் வாத்தியார் பதில் கொடுத்தார்.

ዷ8
"அது நான் அண்ணே ராமலிங்கம்! எவ்வளவோ நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்"என்று தட்டுத் தடுமாறிக் கொண்டே சொல்லி முடித்தார்.
வேலாயுதத்துக்கு மாலேச் சம்பவத்தின்பின் வாத்தி யாரிலே பொல்லாத கோபம். அந்தக் கோபத்தை வாத்தி யார் தன் ஒளிமிகுந்த கண்களால் விழுங்கிவிட்டார்.
"ஏன்? என்ன விஷயம்?"-இது வேலாயுதம்,
"கிட்ட வாங்க-சொல்கிறேன்" என்று கூறிக் கொண்டே வாத்தியார் அங்குமிங்கும் பார்த்தார். பின் வேலாயுதத்தின் காதோடு குனிந்துகொண்டு ஏதோ இரகசியமாகச் சொன்னுர்,
அடுக்களேயிலிருந்த செல்லமணியின் காதுகளில் அந்த வார்த்தை தேன் பாய்ச்சிற்று.
இரவு பத்து , மணிக்குமேல் இரண்டு உருவங்கள் இருளோடு இருளாக சங்கக் கடையை நோக்கிப் பேர்ய்க் கொண்டிருந்தன.
翻 藝
ஜ"ரம் சுகமாகி பழையபடி பதவி ஏற்ற அந்தச் சங்கக் கடையின் மனேஜர் மதியாபரணம், கிழமையின் முடிவில் மா வாங்குவதற்கு வந்த ஒரு ஏழைப் பெண்ணுக் குக் கையை விரித்தார்.
"வேளேயிலே வந்திருக்க வேணும். இனி என்ன செய்வது அடுத்த கிழமைதான் தரலாம்" என்ருர், அருகிலிருந்த காரியதரிசி பூரீமான் ராமலிங்க வாத்தி
யார்.
P

Page 14
சொத்து
அவள் வாய்விட்டுக் கதறவில்லை. எதிர்காலத்தை யிட்டு அவள் தன் இதயப் படுதாவில் தீட்டிய கனவுச் சித்திரங்களைக் கரைத்துவிட்டு வருவதுபோல, கண்களில் கண்ணிர் பெருகிக் கொண்டிருந்தது.
"நீயின்றி நானில்லே" என்று அன்பு ததும்ப, அவள் கூந்தல வருடியபடி, வாத்ஸல்யத்துடன் அவன் சொன்ன சொல் இன்னும் அவள் காதுகளில் , ஒலித்துக்கொண் டிருந்தது. ஆணுல் அவள்தான் தனியே இருந்தாள் அவனைக் காணுேம். அந்த அமுதமொழி இன்று நஞ்
சாய்ப் போய்விட்டது.
காலேயிலே வெறும் தேநீர் மட்டும் அருந்திவிட்டு வேலே தேடப் புறப்பட்டவன்-அப்படிச் சொல்லிப் போனவன்- அவளைத் தவிக்கவிட்டு மறைந்துவிட்டான்.
வேலேக்கு விண்ணப்பம் செய்துவிட்டு சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்த கோபாலன் வாய்க்கால் கரையிலே வளர்ந்த பசலைக் கொடிபோல "மொழு ம்ொழு" என்று வளர்ந்திருந்த பார்வதியைக் கண்டு அவள்மேல் உள்ளத் தைப் பறிகொடுத்தபோது தன் எதிர்காலத்தைப்பற்றி எண்ணுமலிருக்கவில்லே.

25
எஸ். எஸ். வி படித்த வாலிபன், இன்றில்லை என்ருல் நாளேயாவது ஒரு வேலே கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தான்.
பார்வதியை அவள் பெற்ருேர் யாரோ ஒரு பனக் காரணுக்கு இரண்டாந்தாரமாகக் கொடுக்கதிருந்தார்கள். பார்வதியின் பெற்ருேருக்கு அந்தக் கல்யாணத்தில் பரம திருப்தி-அவர்களுக்கிருந்த கடனை வரப்போகிற மாப்பிள்ளை அடைப்பதாக ஒப்புக்கொண்டிருந்தான். ஆணுல் பார்வதியின் ஒப்புதலே யாராவது எதிர்பார்க்கவே யில்லே.
பார்வதிக்கு இந்தக் கல்யாணத்தில் துளிகூட விருப்ப மில்லே. ஆனுல் பெற்று வளர்த்த தாய் தந்தையர்க்காகத் தன்னைத் தியாகம் செய்ய இருந்தாள்.
郵
பார்வதி கிராமத்துப் பெண் தன் சக்திக்கேற்ற வரை படித்தவள் புத்திசாலி புத்திசாலிதான் என்ரு லும் தடுமாறிப் போனுள்.
சஞ்சலம் மிகுந்த உள்ளத்தோடு இருந்த போது தான், கோபாலன் அவள் அடுத்த வீட்டுக்கு வந்த சாக்கில் அவள் உள்ளத்திலும் புகுந்தான். ஒரு கன்னிப் பெண்-பெற்று வளர்த்த தெய்வங்களுக்கு என்றுமே துன்பமிழைக்கக் கூடாது. ஆணுல், அவள் துணிந்து கோபாலனுடன் கிளம்பிவிட்டாள். அவனுக்கு ஒரு வேலே கூட இல்லை; என்றலும் அவளே அழைத்துப் போக அவனும் தயங்கவில்லே!
量 量
பட்டணத்திலே மணிமேகலை வசிக்கவில்லை; அவ ளுடைய பிக்ஷாபாத்திரம் கூட எந்தக் குப்பைத் தொட்டி
5- مثل

Page 15
፰ñ
யிலும் கிடக்கவில்லே. இருந்தால், கோபாலனுக்கும் பார்வதிக்கும் தினம் சாப்பாடு கிடைத்திருக்கும். அங்கே பஞ்சமும் பட்டினியும்தான் உத்தம நண்பர்களாக உலாவித் திரிந்தன.
பிறந்த மேனியோடு இருக்கக் கூடாதென்பதற்காக, பார்வதியின் தந்தை அவள் காதிலே ஒரு தங்கத் தோடு போட்டிருந்தார். கோபாலன் கையிலே கிடந்த கடி யாரத்துக்கு, அவன் படிக்கிற காலத்தில் அவன் தந்தை ஒரு தங்கச் செயின் போட்டிருந்தார். இரண்டும் மொத்தம் 250 ரூபா பெறுமதி வாய்ந்தவை!
"இன்று வரும் நாளே வரும்" என்று கோபாலன் வேலேயை எதிர்பார்த்திருந்த மூன்று மாதங்களில் அந்த இரண்டு உருப்படிகளும் உருத்தெரியாமல் மறைந்து விட்டன. அப்புறம் தனக்குத் தெரிந்த நண்பர்கள் சில ரிடம் "கொஞ்ச நஞ்சம்" கடன் வாங்கி அந்த இளம் தம்பதிகள் காலத்தை ஒட்டினூர்கள். வீட்டு வாடகை, தொழில் தேடித்தரும் கந்தோரில் ஒன்றன்மேலொன்முக அடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் பத்திரங்கள்போல மேலே, மேலே ஏறியது.
நகை நட்டை விற்று மூன்று மாதம்-கடன் வாங்கி மூன்று மாதம்-இப்படி ஆறுமாதங்கள் எப்படியோ ஒடி மறைந்தன.
ஒரு நாள்
பார்வதி தலேயைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்தாள்.
கோபாலன் நாலுபணம் சம்பாதிக்கவில்லேயே தவிர நல்லதும் கெட்டதுமாக நாலு நூல்களேப் படித்த அறிவின் துணை கொண்டு, தன் சிந்தனே அகராதியைப் புரட்டி

"பார்வதி வாந்தி எடுப்பதற்கு என்ன அர்த்தம்" என்று பார்த்தான்.
"பார்வதிக்கு மூன்று மாதம்" என்று தெட்டத் தெளிவாகப் பொருள் விளங்கிற்று. பார்வதி அவனைப் பார்த்துச் சிரித்தாள். அதன் அர்த்தம், "நீங்கள் சரியான ஆள்தான்" என்பது. பதிலுக்குக் கோபாலனும் அவளேப் பார்த்துச் சிரித்தான். அதன் அர்த்தம், "நான் என்ன செய்வது? இப்படி வருமென்று எதிர்பார்க்கவில்லை" என்பதாகும்.
மறுநாள் விடிந்ததும் பார்வதி தேனீர் போட்டுக் கொண்டுவந்தாள்.
"இதைக் குடியுங்கள் சாப்பாட்டுக்கு ஒன்றுமில்லை. கடவுள் கண் திறந்தால் மத்தியானம் பார்ப்போம்" என்ருள்.
"சாப்பாடு வேண்டாம் டீ மட்டும் போதும். ஒரு ஆபீஸிலே ஏதோ வேக்கன்ஸி" இருப்பதாகச் சொன் ஞர்கள்-பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி, அந்த மகயைக் குடித்துவிட்டு கோபாலன் நடையிறங் கினுன். அவ்வளவுதான்!
அப்புறம் அவன் திரும்பி வரவேயில்லே. கன்னிப் பெண்ணேக் கைப்பிடித்து அழைத்துவந்து, அவளுக்கு வேறு சுமையைத் தந்துவிட்டு அவள் வாழ்விலிருந்தே அவன் மறைந்து போனுன்.
罹 量
"கண் நிறைந்த கணவன்" என்று எண்ணிக்கொண்டு ஒரு வேலேயில்லாத வாலிபனேக் காதலிப்பதிலும் பார்க்சு
வாழ்வின் எல்லேக் கோட்டில் நிற்கிற ஒரு கிழத்தைக்

Page 16
28
கூடக் கட்டித் தொலேக்கலாம்" என்று பட்டினத்தில் தன் நிற்கதியை நினைத்து பார்வதி ஏங்கினுள்.
இனி அவளுக்கு வாழ்வேது? வீட்டுக்குத்தான் போக முடியுமா? இல்லே-கோபாலன் அமர்த்திக் கொடுத்து விட்டுப் போன வீடுதான் சாசுவதமா? வீட்டுவாடகைக்கு வந்து கழுத்தை நெரிப்பானே!
நீ அவள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாள். இந்தப் பட்ட ணத்தைவிட்டு வேருெரு பட்டினம். அங்கே. ளுக்கு ஒரு வீட்டில் கூலிவேலே கிடைத்தது. பாத்திரங்கள் கழுவுவது, மா இடித்துக் கொடுப்பது, நெல் குற்றுவது. இப்படி இந்த வேலைகளின் காரணமாக அவளுக்கு உணவு கிடைத்தது. மாதத்தில் ஐந்தாறு ரூபா பணமும் கிடைத்தது.
உறங்குவதற்குப் பட்டினத்தின் ஒதுக்குப்புறத்திலே ஒரு குடிசைகூடக் கிடைத்தது.
அவள் தேய்ந்துகொண்டிருந்தாள் ஆனுல் அவள் வயிற்றிலே இருந்த குழந்தை வளர்ந்துகொண்டே இருந்தது.
பஸ்ஸை மறித்து ஒரு பெண் ஏறினுள். இளம் வயது. நாகரீகமாக உடுத்தியிருந்தாலும் அது இயற் கையாகத் தெரியவில்லை. முகம் கன்றிச் சிவந்திருந்தது. உடல் முழுதும் வேதனையின் ரேகைகள்! பார்த்தால் பச்சைப் பிள்ளேத் தாச்சி மாதிரி. கையிலே ஒரு அழ கான சூட்கேஸ்
பஸ்ஸுக்குள்ளேதான் உலகம்! சீனுவிடமிருந்து அரிசி வாங்கியதைப் பற்றிய பிரச்ஃனயில் ஒடு

፳፪]
நாலந்து பேர். எகிப்தில் நாப்ே ஆட்சியைப் பற்றி இரண்டொருவர் - பழையனூர் பச் சை ய ப் பா எழுதிய புதிய நாவல் "பகற் கனவு" பற்றிய சர்ச்சையில் ஒரு இலக்கியக் கோஷ்டி-புதியதாகத் திரையிடப்பட்ட பேராசிரியை" என்ற படத்தில் நடித்த மல்லிகா தேவியின் நடிப்பைப்பற்றியும் அந்த அம்மையார் ஆண்டவிஷயத்தில் அதிக "கஞ்சத்தனம்" செய்யாமல், கொஞ்ச மாவது தாராளமாக நடந்துகொண்டதுபற்றியும் விமர் சிக்கும் ஒரு கலரிவர்க்கம்.
இத்தீன தொல்லேகளுக்கிடையில் அந்தப் பெண் &ணச் சிலர்தான் கவனித்தனர். கடைசி ஆசனத்தில் இருந்த ஒரு வாலிபன் சற்று அதிகமாகவே பார்த்தான்.
அவள் கையோடு தூக்கி வந்த சூட்கேஸ் அவன் கவனத்தை அதிகம் கவர்ந்தது.
காரணம்
அந்தப் பெண்தான் பார்வதி அந்த வாலிபன் கோபாலன். மலரும் மணமும் போல பிரிக்க முடியாத வர்களென்றிருந்து, இன்று இரு துருவங்களாகிவிட்ட வர்கள். அந்தச் சூட்கேஸ் கோபாலனுடையது. அவளே விட்டு ஓடி வரும்போது, அவளிடமே விட்டுவந்த தாவர சங்கமச் சொத்து
ஐந்தாறு மைல் வந்ததும் பஸ்ஸை மறித்து அந்தப் பெண் இறங்கினுள். மறந்து விட்டாளோ என்னவோ கொண்டுவந்த சூட்கேஸை எடுத்துப் போகவில்லே டிரை வரும் கவனிக்கவில்லை. கண்டக்டர் யாரோ ஒரு கிழவரி டம் யோக்கியத்தனமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
அவள் விட்டுப் போன அந்தச் சூட்கேஸுக்கு அந் தப் பஸ்ஸில் உரிமையானவன் கோபாலன். உண்மை யில் அது அவனுடைய சொத்துத்தானே!

Page 17
BO
தான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் கோபாலன் எழுந்து சூட்கேஸை எடுக்கப் போனுன். ஆணுல்
சட்டப்படி அவனுக்குச் சொந்தமான அந்தப் பொருளுக்கு இன்ைெருவன் உரிமை கொண்டாடினுன், "என்ன தம்பி கண் தெரியவில்லையா? வேறு எங்கே யாவது வைத்திருப்பாய். வடிவாய்ப் பார்" என்று உறுத்து நோக்கினுன் அந்த ஆசாமி.
"என்னப்பா பகிடி பண்ணுகிருயா?" என்று ஆத் திரப்பட்டடான் கோபாலன்.
"ஏண்டா. எங்காவது திருடப் போவதுதானேஎன் பெட்டியிலே ஏன் கையைப் போடுருய்?" என்று இந்தச் சாக்கடைச் சமுதாயம், "ரெளடி"யாக உருவாக்கி விட்ட அந்த ஆசாமி உறுமினுன்.
அரசியல்-சினிமா-இலக்கியம்போன்ற சர்வ உல கிலும் சஞ்சரித்தவர்கள் இப்போதுதான் திரும்பிஞர்கள். ஆணுல் அவர்களுக்கு அதைத் தீர்த்துவைக்க வழியேது?
"பையனுடையது போலே இருக்கு" என்ருர் ஒருவர்.
"ஏன்-எழுதியிருக்கோ?" என்ருர் மற்றவர். "அப்படிக் கேளுங்க. மற்றவன் அப்படி ஒன்று வைச்சிருக்கப்படாதோ?" என்ருர் மூன்றுமவர்.
இவர்களின் விசாரனை இப்படி இருக்க, அந்த இரு வருமே காரசாரமாகப் பேசிக்கொண்டார்கள். யாரா வது ரெளடி என்ருல் கோபாலனுக்குப் பயம்தான் என்ரு லும் இத்த விஷயத்தில் அவன் துணிந்து நின்ருன்.
டிரைவர் பாடு சங்கடமாய்ப்போய்விட்டது. அவர் களின் வார்த்தை தடிப்பேறி கைகால் துடிப்பதற்

3.
கிடையில் நல்ல வேண்யாக, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். அந்தச் ருட்கேஸையும் அதற்கு உரிமை கொண்டாடும் இருவரையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு பஸ் வண்டி தன் கடமையில் முன்னேறியது.
羁 譬 醇
"உன் பெட்டியிலே என்ன வைத்திருக்கிருய்?"என்று அதிகாரத் தொனியில் விசாரணையைத் தொடங்கிஞர் இன்ஸ்பெக்டர்.
ஆசாமி ஒரு கணம் தயங்கினுன். ஆணுலும் தைரி யத்தை வரவழைத்துக்கொண்டு. "இரண்டு சாரம், மூன்று சேட், புத்தகம்." என்று எதையோவெல் லாம் அடுக்கிக் கொண்டு போனுன்.
"நீ என்ன வைத்திருக்கிருய்?" என்று கோபாலனே நோக்கிக் கேள்வி தொடுத்தார் இன்ஸ்பெக்டர்.
அவனும் சற்றுத் தயங்கினுன். ஆணுலும் தைரிய மாக, "எதையும் சொல்ல வேண்டியதில்லே ஸார். உள் பெட்டியிலே என் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது என்னுடைய சொத்து ஸார்" என்ருன்.
"சாவியைக் கொடு."
இந்தக் கேள்விக்கு இருவருமே பதில் சொல்லவில்லே. ஒருவரையொருவர் பார்த்து முழித்தார்கள்.
"திருட்டு ராஸ்கல்கள் ! சாவி இல்லே-பெட்டியைக் கொண்டு வந்துட்டான்கள்-அதற்கு உரிமை வேறே" என்று உறுமினுர்,
பெல்ட்"டிலே தொங்கிய கத்தியை எடுத்துப் பூட்டில் நுழைத்துத் திருகினூர், "டக்"கென்று அது விடுபட்ட சத்தம் கேட்டதும் எல்லோரும் கவனமாக

Page 18
82
அதைப் பார்ப்பதற்கு தயாராயிருந்தனர். ரெளடிக்குப் பயம் மனம் "திக் திக்" என்றது. கோபாலனுக்கு ஒரு அசட்டுத் துணிவு-பெட்டி எப்படியோ அவனுடையது தானே!
இன்ஸ்பெக்டர் பெட்டியைத் திறந்தார்.
உள்ளே
கழுத்தை நெரித்து முறிக்கப்பட்ட ஒரு பச்சிளங் குழந்தை அதன் மூக்கிலிருந்து புது ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இன்ஸ் பெக்டர் குழந்தையைப் பார்க்கவில்லே-பெட்டியின் உள்பக்கத்தைப் பார்த்தார் வாசித்தார்.
"வி. கே. கோபாலுன்"
கண்களிலே கோபக் கனல் பறக்க கோபாலன் பக்கம் திரும்பினுர் இன்ஸ்பெக்டர். அவ ன் கண்களிலே கண்ணிர் பெருகிக்கொண்டிருந்தது- அது கண்ணீரல்ல; எதிர்காலத்தையிட்டு அவன் தன் இதயப் படுதாவில் தீட்டிய கனவுச் சித்திரங்களேக் கரைத்துவிட்டு வருகிற காட்டாற்று வெள்ளம்
"உண்மையைச் சொல் நீதானே கோபாலன்?" இன்ஸ்பெக்டரின் கன் வி யி லே பச்சாத்தாபம் தொனித்தது.
"ஆம்" என்ருன் கோபாலன். பதிலிலே வயிரம் பாய்ந்துவிட்ட உறுதி தெரிந்தாலும் குரல் தழதழத்தது: தொண்டை அடைத்துக்கொண்டது.
தனியே தவிக்கவிட்டு வந்த பார்வதி அவன் நெஞ் சத்துள் புகுந்து அ  ைடத் து க கொண் டா ளோ என்னவோ..?"
1952

* சாம்ராட் "
விட்டபுரத்து மென்தளிர் வெற்றிலயுடன் பிரசித்திபெற்ற தாவடிப் புகையிலேயையும் உள்ளே தள்ளிக் குதப்பிக்கொண்டு, ஒரு பீடியைக் கொளுத்தி இரண்டு "தம்" இழுத்துவிட்டு "சில்வண்டு" எனப் புனேபெயர் பூண்ட "இலக்கிய சாம்ராட் பூரீமான் சிதம்பரம் பிள்ளே அவர்கள் எழுத உட்கார்ந்துவிட்டா ரென்றுல் தமிழ் நாட்டுக்கு யோகம் பிறந்துவிட்டது என்றுதான் அர்த்தம் "சில்வண்டு" என்று அவர் புனேபெயர் கொண்டிருப்பதிலிருந்து ஏதாவது எக்கச் சக்கமாக எண்ணிவிடப் போகிறீர்கள். கடதாசி என்ற சதுக்கல் நிலத்தில், தாம் "சில்வண்டு" என்ற காரணத் தால் பேணு என்ற துளைகொம்பினுல் உழுது தள்ளி விடுவாரென்ருே, அல்லது தமிழ் நாட்டு ரசிக கோடி களின் காதுகளே குடைசல் எடுத்து விடுவாரென்ருே யாரும் தவருக எண்ணிவிடாதீர்கள். தமிழ் நாட்டுக் "கதாமோகன்"கள் அத்தனே பேரையும் தமது உடைந்த பேணு முனேயினுல் ஆட்கொண்டுவிட்ட அரும்பெரும் எழுத்தாளர் அவர்.
எழுதுவதற்கென்று எழுத்தாளர் "சில்வண்டு" துணிந்து உட்கார்ந்து விட்டாரென்ருல், பிறகு அதை எழுதி முடிக்காமல் உயிர் போக நேரிடினும் எழும்பவே

Page 19
84
மாட்டார். "கற்பனேக் கன்னி" அவரைக் கண்டு காத ஆாரம் ஒடமாட்டாள். லாயக்கற்றவர்களல்லவா எழுந்து அங்குமிங்குமாக உலவி அவளேப் பிடிக்க ஓடுவார்கள். ஆணுல் நமது சில்வண்டுவுக்கோ என்ருல் அது வேறு விஷயம்தான்! அந்தக் "கன்னி" இவரைக் கொஞ்ச வந்து விடுவாள். எனவே எழுதுவதென்ருல் அவருக்கு "பாயசம்' சாப்பிடுவதுமாதிரி. ஒ டிந்து போ ன பேணுவால், உடைசல் பிடித்த எழுத்துக்களே அடுக்கி, என்னவெல்லாமோ 'பம்மாத்து" வேலை செய்து சிருஷ் டித்து விடுவார். அந்தச் சிருஷ்டிக்குப் பெயர் சிரஞ்சீவி" இலக்கியமாம்!
இத்தனைக்கும் அவர் புகழ் பரவுவதற்குக் காரணம் அவர் தமது சிரஞ்சீவிக் கதைகளில் கையாளும் தத்து வார்த்தங்களும், உண்மைப் படப்பிடிப்புக்களும்தான் என்ருல் மிகையல்ல! நாமெல்லாம் கனவிற்கூட எண்ண முடியாத தத்துவங்களேயெல்லாம் மனுஷர் என்ன மாதிரித்தான் நாகுக்காகவும், சரளமாகவும் விளாசித் தள்ளிவிடுகிருரோ, எல்லாம் "இலக்கிய தேவதை"க்குத் தான் வெளிச்சம், அப்பப்பா கம்பன்கூடப் பிச்சை வாங்க வேண்டும். "அழகுப் புதையல்கள்" அவர் கண்களில் பட்டுவிட்டாற்போதும் அப்படியே தமது பேணு முனேயினுல் பிய்த்துப் பிடுங்கிவிடுவார்.
இவைகளே மட்டும் சொல்லிவிட்டால் அவர் புகழுக்குக் காரணம் கூறியதாகாது; அது உண்மையு மல்ல இவையெல்லாம் அவருடைய உயர்ச்சிக் கடலில் சிறு துளிகள் உண்மையான உணர்ச்சிக்குக் காரணம் வேறு இருக்கிறது. அதுதான் அவர் தம் "எழுத்து வாழ்க்கை" முழுவதுமே நல்ல நல்ல காதற் கதைகளே எழுதிக் குவித்து தமிழ் நாட்டு "திடீர்க் காதலர்"களின்

85
இதயத்திலும் இனம் சேராத "இன்பப் புதையல்" அள்ளிக் கொட்டியது
"காதல் கதைகளைத் தவிர வேறு ஏதுவுமே எழுத முடியாதோ?" என்று சில கையாலாகாத எழுத்தாளர் கள் வரட்டு வேதாந்தம் பேசுகிரு.ர்கள். "முட்டாள்"கள்! உலகின் ஜீவராசிகள் முழுவதுமே "காதற் கொள்ளை'யில் மயங்கிக் கிடக்கும்போது காதலைத் தவிர வேறு எதை எழுதுவது?" என்பது நமது "சில்வண்டின்" அசைக்க முடியாத அபிப்பிராயம்
இந்த எழுத்தாளர்களே பலரகம், மக்களுக்காக எழுதுபவர்கள், இலக்கியத்துக்காக எழுதுபவர்கள். தமக் காக எழுதுபவர்கள், காசுக்காக எழுதுபவர்கள் இப்படிப் பலர் இருக்கிருர்கள். ஆனுல் நமது சில்வண்டை எந்த ரகத்தில் சேர்த்துக் கொள்வதென்பது பிரிக்க முடியாத பிரச்சின
வாழ்நாள் முழுதுமே சலப்பில்லாத காதல் கதை களே எழுதி, அதன் சக்தியை அக்குவேறு ஆணி வேருகப் பிய்த்து அதன் தன்மைகள், பண்புகள் எல்லாவற்றையுமே அலசி ஆராய்ந்தவர் நமது சில்வண்டு காதல் என்பது ஒரு கட்டாந்தரை அதை உழுது உழுது உள்ளே இருப் பவை எல்லாவற்றையும் அம்பலப்படுத்திவிட்ட அவர் தமது காதல் மனேவி கனகாம்பரத்தைக்கூட வெறுத்து விட்டாரென்ருல் அவருக்கு இலக்கிய ஆக்கத்திலிருக்கிற ஈடுபாடு எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
"சில்வண்டு" சிதம்பரம் பிள்ளேயாயிருந்து கல்லூரி யில் படித்துக்கொண்டிருக்கும்போதே நமது பூமிதேவி யின் ஆக்ஞைப்படி நாளொன்றுக்கு ஆயிரம் இறப்பும், ஆயிரத்தொரு பிறப்புமாக பிறந்து இறந்துகொண்

Page 20
டிருந்த "குப்பாடிப்" பத்திரிகைகளிலெல்லாம் வரும் தொடர்கதைகள், தொடராக்கதைகள், காதற் கதைகள், காமக் கதைகள் எல்லாவற்றையும் ஒரு அட்சரம் கூடப் பிசகாமல் படித்ததனுல் தாமும் ஒரு இலக்கிய "சாம்ராட் டாகவேண்டுமென்று எண்ணிவிட்டார். எதற்கும் தடை போடலாம். எண்ணமென்ற காட்டாற்று வெள்ளத் துக்கும் போடலாமோ? எனவே ஏதோ ஒரு புனை பெயரை வைத்துக்கொண்டு எழுதத் துணிந்துவிட்டார். கல்லூரி மாணவன் கதை எழுதத் தொடங்கிவிட் டால் உருப்பட்ட மாதிரித்தான் மாணவர்கள் "நோட்ஸ்" எழுதிக்கொண்டிருக்கும்போது சிதம்பரம் பிள்ளே, தான் எழுதிக்கொண்டிருக்கும் கதையில் வரும் கதாநாயகியை-தன் வகுப்பில் படிக்கும் கபாலாவைப் பார்த்து வர்ணித்து எழுதிக்கொண்டோ அல்லது ஏதா வது புது "ப்ளாட்" ஒன்று தேடிக்கொண்டோ இருப்பார். ஆசிரியர் கண்களில் இது பட்டுவிட்டால் அவர் சும்மா இருப்பாரா? நோட்டுப் புத்தகத்தைப் பிடுங்கி மேலே வீசுவார். உடனே அது "ஏரோப்ளேனுக" மாறிப் பறக் கத் தொடங்கிவிடும். மறுநாள் அந்தப் புத்தகத்தின் தாள்கள் எல்லாம் ஏதாவதொரு "கதை"யைத் தாங்கிக் கொண்டு நாலு சத முத்திரையுடன் "ஹாய்"யாக "ஆல் சிலோன்-ஜாவிடூர்" செய்யத் தொடங்கிவிடும்.
திடீரென்று "சில்வண்டின் "ப்ரண்ட்சுக்"குள்ளே ஒரு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. "என்னப்பா சில்வண்டு உன் மனைவியைக் கலைத்து விட்டியாமே ஏன்?" என்று அவரு டைய "ஜர்னலிஸ்டு" நண்பர்கள் யாராவது கேட்டுவிட் டாற் போதும். மனுஷன் ருத்திர மூர்த்தியாகிவிடுவார். "கலுேக்குத் தொண்டு செய்ய எவன் முன் வருகி ருணுே அவனுக்குக் கால் கட்டு, கை கட்டு எதுவுமே இருக் கப்படாது. அதுகளெல்லாம் பெரிய "நியூஸன்ஸ்"கள்"

B
"அப்படியானுல் என்னவெல்லாமோ நாம் எழுது கிருேமே இல்லற தர்மத்தைப்பற்றி."
"அதற்காக." என்று குறுக்கே ஒரு குத்துக் கட் டையைப் போடுவார் சில்வண்டு. "எழுத்தாளன் வாழ்க் கையே இதுதான் ஊருக்குபதேசம் அவனுடைய சொந்த வாழ்க்கையைப்பற்றி மற்றவர்கள் கவலேப்படக் கூடாது." என்று மீண்டும் முணுமுணுப்பார் அவர். வந்த வர், "அட பாவி மகனே" என்று வாய் நிறையச் சொல் விக்கொண்டு போவதைத் தவிர ஒன்றுமே இருக்காது.
"எழுத்தாளன் வாழ்க்கையே ஊருக்குபதேசம்" என்று அவர் சொன்னுல் யாருக்கும்தான் ஆத்திரம் வரும், ஆனுல் அதிலே இருக்கிற உண்மை
சில்வண்டு எத்தனேயோ கதைகளே "வாந்தி எடுப்பது மாதிரி" எழுதித் தள்ளியிருக்கிருர்-அவைகளின் மூலம் எத்தனையோ குடும்பங்களுக்குக் கதி மோட்சம் கிடைத் திருக்கும். ஆணுல் அவர் வாழ்க்கை.?
அதுதான் விநோதம். அவர் வேலே எழுதிக் கொண்டே யிருப்பதுதான். எழுதினுல்தானே புகழ் வரும் ? இல்லேயென்ருல் இல்லே இந்நிலையில் அவர் எழுத்துக்கள், அவர் மனேவிக்கு ஆசை வார்த்தை பேசுமா ? காதல் கதை சொல்லுமா ? ஜூனியர் மாப்பா சான் எனப் பேர் பெற்ற சில்வண்டு அவர்களே குறிப் பிடுவதுபோல, "அந்த எழுத்துக்கள் அவள் படுக்கையை அலங்கரிக்குமா ? அவள் கண்ணிரைத் துடைக்குமா ? அவள் இதயதாபத்தைத் தணிக்குமா ?."
எனவே அவள் ஒருநாள் "இந்த எழுத்துக்களேப் பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கி, என் சித்தப்பாவின் குழந்தைகளேப் பார்த்துத் திருப்திப்பட்டுக்

Page 21
38
கொள்ளுகிறேன்" என்று பிரதிக்னே செய்துகொண்டு வெளியேறினுள்.
அப்போதும் அவர் எழுதிக்கொண்டுதான் இருந்தார். எழுத்தாளர் பரம்பரைபக்கேயுள்ள உறுதியான உள்ளம் படைத்த அவர், அவள் போகும்போதுகூடச் சற்றுக் கிலேசப்பட்டாரா ? அதுதான் கிடையாது. ஊதாத துருத்திபோன்ற உடலே முறுக்கிவிட்ட வாழைத்தண்டு போல சற்று வளைத்துத் திருப்பி ஒளி மங்கிப்போன கண் களால் அவளைப் பயங்கரமாக நோக்கி, "போடி தொலேந்தது பீடை என்று இருப்பேன் " என்று ஒரே யொருமுறை மட்டும் முத்து உதிர்ந்ததுபோலச் சொல்லி விட்டு மறுபடியும் தன் வேலையிலேயே ஆழ்ந்துவிட்டார்.
ஆறு மாதங்கள் மாண்டு மடிந்தன. கனகாம்பரம் பிரிந்துபோன அதிர்ஷ்டம் என்றுதான் நினைக்கவேண்டும். "சில்வண்டு'வுக்கு "லக்" அடிக்க ஆரம்பித்தது. மளமள வென்று எழுதித்தள்ளினர் அவர். அதிலிருந்து அவரைப் பற்றி எங்கும் அடிபடத் தொடங்கிவிட்டது. அவரைப் பற்றி மட்டுமென்ன அவருடைய சாகாத வரம்பெற்ற சிரஞ்சீவி இலக்கியங்களைப்பற்றியும்தான் !
எப்படித்தான் இந்த மனுஷன் எழுதித்தள்ளுகிருணுே என்று எல்லோருக்கும் ஒரே அதிசயம். ஒரே அசுரவேகம், "பிரேக்" இல்லாத மோட்டார் ஐம்பது அறுபது என்று போகிற மாதிரித்தான், அவர் எழுதுவாரோ என்னவோ?
சில்வண்டு எழுதிய "காட்டு மோகினி" என்று ஒரு காதல் நாவல் அப்போதுதான் பிரசுரமாகிக் கடை கன்னி யெல்லாம் தொங்கிக்கொண்டிருக்கும். அந்தப் பதிப்பு விற்று முடியாது! திடீரென்று இன்னுெரு புத்தகம் வந்துவிடும். அதற்குப் பெயர் "காதல் வலி' என்ருே

39
"கட்டிலறை" என்ருே இருக்கும். அழகான அமைப்பு முந்நிற அட்டை வார்னிஷ். இப்படியே வாரமொரு காதல் களஞ்சியத்தை வெளியுலகில் நடமாட விடுவார்.
திடீரென்று சில்வண்டுவுக்கு ஒரு "லக்கி சான்ஸ்" அடித்தது. ஒருநாள் தினசரிப் பத்திரிகையைப் புரட் டிப் பார்த்த "சில்வண்டு" தாசர்களெல்லாம் வாயைத் தோணிமாதிரிப் பிழந்து, கண்களே அகல விரித்தது விரித்த படியே இருந்துவிட்டார்கள். அது ஒரு பத்திரிகை விளம்பரம். தமிழ் நாட்டிலேயே முதன்முதல் நிஜப் புகைப்படங்களேயும் உண்மைக் கதைகளேயும் தாங்கி வெளிவந்து, பல்லாயிரக் கணக்கான (பாமர) ரசிக மக்களேத் திணற அடித்து ஆட்கொண்ட "இன்பக் கேணி" என்ற காதற் கதைகளேத் தாங்கி வெளி வரும் அந்தப் பத்திரிகைக்கு புதுமை எழுத்தாளர், புரட்சி சிங்கம் "சில்வண்டு", அவர்கள் ஆசிரியராக அமர்த்தப்பட்டிருப்பதாகவும், வழக்கப்படி எல்லாப் பத்திரிகை முதலாளிகளும் கயிறு திரிப்பதுபோல "பல புதிய அம்சங்களுடன்" வெளிவருவதாகவும் அதில், விளம்பரம் செய்திருந்தார்கள்.
பத்திரிகையின் ஆசிரியனுனதும் "சில்வண்டு" பட்டி னைத்துக்குப் போய்விட்டார். அல்லது பத்திரிகை எப் படி நடக்கும் ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு காலாக இருக்க முடியுமா? அதுவும் தவிர அவர் அங்கு போவதற்கு என்ன தடை இருக்கிறது? கால்கட்டா, கைக்கட்டா? அதைத்தான் ஆறு மாதத்துக்கு முன்பே "அறுத்து" எறிந்துவிட்டாரே.
"இன்பக் கேணி"யின் உரிமையாளர், "சில்வண்டு'வுக்கு ஒரு வீட்டின் மேல் மாடியிலே "இடம்" தேடிக் கொடுத் தார். அழகான ஒரு சிறிய அறை. அதன் முன்னே ஒரு

Page 22
O
சின்ன விருந்தை மாதிரி நிலாமுற்றம் கேட் சு வேண்டுமா? எழுத்தாளன் சிட்டாகப் பறக்கத் தொடங்கி விடுவான்.
■
மாலே நேரம்
காஃலயிலே எழுந்து வந்த, செம்பரிதி அனல் மாறிக் குளிர் நிலவாக-ஒளிப் பிழம்பாக உருவெடுக்க மேற் குக் கடலில் பாய்ந்து கொண்டிருந்தான்-மாலேத் தென்றல் உஸ்ஸ்ஸ்" என்று சீறிச் சலசலத்துக் கொண் டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் அவருக்கு எழுதுவதற்கு ஏதோ பிடித்து உந்திக்கொண்டிருந்தது. அறைக்குள்ளே கிடந்த மேஜையை ஜன்னலோரம் தூக்கிப் போட்டு ஜன்னலேயும் திறந்து வைத்துவிட்டு அவர் எழுதத் தொடங்கினுர்,
அந்த நேரத்திலே அவர் ஒரு "ராஜா'மாதிரி. மாடி வீட்டுச் சீவியம் அங்கே நின்று சுற்றுமுற்றும் நோக் கினுல் கீழே தெரிகிற வீடுகள். அந்தந்த வீட்டு முற்றங் களிலே எல்லாம் "சொடு, சொடு" என்று ஒடியும், ஆடியும், பாடியும்கொண்டிருக்கிற குழந்தைகள் குறுக்கும்நெடுக்கு மாக நடந்து அன்னநடை பயில்கிற மெல்லியர்.
சில்வண்டு' அசுர வேகத்திலே ஒரு "காதல் கதை" எழுதிக் கொண்டிருந்தார். "இன்பக்கேணி இதழிலே தில்வண்டு ஆசிரியராக வந்ததற்கடையாளமாக ஒரு கதை" போட வேண்டாமா? அந்தக் கதை ரசிகர்கள் மனத்திலே "பசுமரத்தாணி"போலப் பதியவேண்டாமா? அதைப் படித்துவிட்டு அவர்கள் சொக்கிப்போய் இருக்க வேண்டாமா? அதனுல் விற்பனையாளர்களிடம் "இருப்புக்" குறைந்து இன்னும் ஒரு ஐம்பது பிரதிகூட அனுப்புங்கள்.

41
இன்னும் ஒரு நூறு பிரதிகூட அனுப்புங்கள் என்றுதந்தி மேல் தந்தி வரவேண்டாமா? அதைப் பார்த்து பத்திரிகை முதலாளி பூரிப்படைய வேண்டாமா? "சில்வண்டு"வின் சம்பளத்தைக் கூட்டிக் கொடுக்க வேண்டாமா? எதற்கும் மேலாக இலக்கிய உலகத்திலே சில்வண்டுவுக்கு நிரந்தர மாகவே ஒரு மாடி வீடு கிடைக்க வேண்டாமா?
எனவே அந்தக் கதையை ஒரு புதுமாதிரி எழுத முனேந்தார் அவர், காதல் கதைதான் ஆணுல் மற்றவர்கள் காணுத பாத்திரங்களைத் தேடிப் பிடித்து, ஒரு நிரந்தர மான பாதையைத் திறந்துவிடுவது
ஒரு எழுத்தாளன் அவனே கதாநாயகன்.
ஒரு வாழா வெட்டிப் பெண்-அவள் கதாநாயகி. இவர்கள்தான் பிரதான பாத்திரங்கள் மற்றவர்கள் நாடக விளம்பரத்தில் காணப்படுவதுபோல சமயோ சிதம்; அஃறிணை உயிர்கள், ஜடங்கள் உட்பட.
கட, கட எனத் தாள்கள் அடிமாறிக் கொண்டிருந் தன. வார்த்தைக்கு வார்த்தை புதுப்புது உவமானங் கள் அவற்றை விளங்க வைப்பதற்கு இலேசான எளிமை யான சொல்லடுக்குகள் பாத்திரங்களேப் பேசவைப்பதில் வாசகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போகுமளவுக்கு சுவையும் பயமும் கலந்த வார்த்தைக் கோர்வைகள்.
அவர் எழுதிக்கொண்டிருந்தார்; திரிபுரமெரித்த சடையனின் பிரளய கால நர்த்தனத்தைப்போல, அத்தனே வேகம், அசுர வேகம்
கதையிலே ஒரு கடிதம் வரவேண்டும். "அவளே நேரில் கண்டு பேசுவதற்கு "அவனுக்குத் துணிவு ஏற்பட வில்&ல; சந்தர்ப்பமும் கிடைக்கவில்லே. எனவே எல்லோ ரும் கையாளுகிறபடி ஒரு துண்டுக் கடுதாசியும் ஒரு
5-3

Page 23
4.
பேணுவுந்தான் அந்நேரத்தில் அவனுக்கு ஆபத்பாந்தவ ணுக உதவுகிறது. நறுக்குத் தெறித்ததுபோல சளசள என்று வளர்த்தாமல் இரத்தினச் சுருக்கமென்பார்களே அதுபோல அவன் எழுதினுன்.
பொய் கதாசிரியர், தான் சிருட்டித்த கதாநாயக னுக்காக எழுதித் தொலேத்தார்.
கண்னே!
நீ வான வீதியிலே பவனி வருகிற நிலவுப் பெண்ணு யிருந்தால் அதன் குளிர் நிலவில் குளித்து மகிழ்வேன்; ஏனென்ருல் போதும் நிறுத்திவிடு" என்று அது சொல்வ தில்லே. அல்லது செடியிலே பூத்துக் கிடக்கிற மலரா யிருந்தால் அதை ஆர்வத்துடன் பறித்து என் ஆசை தீர முகர்வேன். ஏனென்ருல் "மலரைப் பறிக்க நீ யார்?" என்று யாரும் கேட்பதில்லே! ஆனுல் நீ பெண்ணுயிருக் கிருய். அதனுல்தான் நான் உன் எண்ணத்தைக் கேட் கிறேன். மாடப் புருவைப்போல தத்தித் திரிகிற பெண்ணே நீ பேசுவாயா?
சந்திரன்.
கடிதத்தை எழுதி முடித்துவிட்டு அதை ஒருக்கால் திருப்பிப் படித்தார் அவர். அதைப் பெற்றுக்கொண்ட பெண், படிக்கிற மாதிரிக் கற்பனை பண்ணி இலேசாக வாய்விட்டுப் படித்தார். தானுகவே தலேயை ஆட்டி ரசித்தார். அப்படியே திருப்தி ஏற்பட்டு விட்டது அவருக்கு
அந்த மகிழ்ச்சியில் ஒரு பீடி புகைப்பதற்காகத் தீப் பெட்டியை எடுத்து "டப், டப்" என்று தட்டினுர், அதைத் தொடர்ந்து அவருடைய அறைக் கதவிலும் யாரோ "தட்தட்" என்று தட்டினுர்கள்.

43
எழுந்து போய்க் கதவைத் திறந்த "சில்வண்டு", "அட நீங்களா? வாருங்கள்" என்று தன் குச்சிபோன்ற கைகளையுயர்த்தி வணங்கினுர், வந்திருந்தவர் "இன்பக் கேணி"யின் மானேஜர். ஏதோ பத்திரிகை சம்பந்தமான அலுவலால் வெளியே சிறிது தூரம் போய்வர வரும்படி அழைத்தார்.
"அதற்கென்ன நல்லாய்ப் போய்விட்டு வரலாமே!" என்று சொல்லிக்கொண்டே சில்வண்டு துண்டைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினுர்,
"இன்பக்கேணி மானேஜர் அழைத்துப்போன அலுவல் முடிவதற்குள் சுமார் ஏழு மணியாகிவிட்டது. அப்புறம் அவருடைய "அன்பழைப்பின் பேரில் பீச்சுக்குப் போய் இருவருமாக "இலக்கிய சர்ச்சை" செய்தார்கள். பத்திரிகையின் வளர்ச்சியைப் பற்றித் திட்டம் தீட்டினுர் கள். பின், அப்படியே இருவரும், ஒரு ரெஸ்டூரண்டு" க்குப் போய், த&லக்கு இவ்விரண்டு "டோஸ்" அடித்தபின் சாப்பிட்டுவிட்டு பத்திரிகாசிரியர் "சில்வண்டு தம் அறைக்குள் நுழையும்போது சரியாக ஒன்பது மணி யடித்தது.
ஏணுே தெரியாது; தூக்கம் அவர் கண்களே உறுத் திற்று. உடலிலே கொஞ்சம் அசதி அவ்வளவுதான்! "நாளே ஒரு கை பார்க்கலாம்" என்று எண்ணிக் கொண்டே படுத்திவர், சீக்கிரம் நித்திரா தேவியின் அன்புப் பிடியிலே தன்னே மறந்து போய்த் துவண்டு விட்டார். மறுநாள் மாலே மூன்று மணிக்கெல்லாம் ஆபீஸ் என்ற சிறைக் கூட்டுக்குள்ளிருந்து விடுதலே பெற்று தம்

Page 24
4.
'கூட்டுக்குத் திரும்பினுர் அவர். அந்தக் குறைக் கதையை முடிப்பதற்காக "எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிக் கீழே குனிந்தபடியே நடந்துவந்து மாடிப்படிகளில் ஏறினுர், ஏறினுரா? இல்லே! அதற் கிடையில் பயங்கரமான ஒரு குரல் ஒலி அவரைத் தடுத்து நிறுத்திற்று.
"டேப் குரப்புவி" என்று அந்தப் பயங்கரமான குரல் சற்றுத் தடிப்பேறி ஒலித்தது. சில்வண்டு திரும்பிப் பார்த்தார். வாட்டசாட்டமான ஒரு உருவம், செம் மறிக்கடாவின் கொம்புபோல முறுக்கிவிட்ட மீசை, கோவைப் பழம்போல சிவப்பேறிய கண்கள்: வெ ற்றிலே போடுவதனுல் தடிப்பேறிப்போன, நீக்ரோவைப் போன்ற உ த டு கள்.இத் தி யா தி தோற்றத் துடன் ஒருவர் "சில்வண்டை முறைத்துப் பார்த்தபடியே வந்துகொண்டிருந்தார்.
"சில்வண்டு அது வேறு யாரையோ என்று எண்ண மிட்டபடியே தம்பாட்டிலே மீண்டும் முன்னேறி மாடிப் படியில் காலை வைத்தார். அவ்வளவுதான் மீண்டும் அந்த மிரட்டல்,
டேப்'
"சில்வண்டு" அலட்சியத்துடன் திரும்பி அந்த
ஆசாமியை நோக்கிஞர்.
"ஏண்டா முழிக்கிறே நான் என்ன 'தாவணியா" போட்டிருக்கேன் ஆஃளப் பாரு கஞ்சா அடிக்கிற சாமியைப்போல.
இதை அவன் சொல்லி முடிக்கவில்லை. ஆசிரியருக்கு ஆத்திரம் தாங்கவில்லை. குச்சிபோன்ற அந்த உடலில் "குற்றி"போன்ற பெரிய கோபம் எங்கிருந்தோ பொத்திக்

45
கொண்டு குதித்து "ததிங்கினதோம்" போடத் தொடங் கிற்று. மனேவியைக்கூட பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டு "பிருகநஃா"போல இருப்பவரை பெண்களேக் கண்டு முறைத்துப் பார்ப்பதாகச் சுட்டிக் காட்டினுல்.
"யாரையா நீ ஆஃளத் தெரியாமே பேசுறே1 ஜாக் கிரதை' என்று அதட்டினுர் "சில்வண்டு",
"ஏண்டா அதட்டுறே தெரியும்டா உன்னே கோழி பிடிக்கிற கள்ளன்! யோக்கியதையற்ற கழுதை"
"ஒய் மரியாதையாய்ப் பேசும் நான் சாதாரணமான ஆளில்லை; பல்லாயிரக் கணக்கானுேர் படித்து ரசிக்கிற பத்திரிகையின் ஆசிரியர்"
"அதுதாண்டா தெ ரி யு தே ஊருக்குபதேசம் செய்யிறே பத்திரிகையிலே என்னவெல்லாமோ எழுதி விட்டு, இங்கே என்னடான்னு பெண்கள் மானத்துடன் வாழ முடியல்லே."
"ஏய்யா! ஆம்பிள்ளேங்களெல்லாம் யோக்கியதையா நடந்தா இதெல்லாம் நடக்குமா?" என்று பத்திரி கைக்குப் பலம் திரட்டினுர் ஆசிரியர். வந்த ஆசாமி ஆத்திரத்தினுல் பொங்கினுர்,
"என்னடா யோக்கியதையைக் கண்டுட்டாய்? கண்ட பெண்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவது. பின் பத்திரிகை யிலே உபதேசம், அயோக்கிய ராஸ்கல்"
"நாவை அடக்கிப் பேசு ஒய் ! நீதான் அயோக் கியன்!"
சில்வண்டுவின் கடைசிப் பேச்சு இது தொடர்ந்து பேசுவதற்கு அந்த ஆசாமி இடம் வைக்கவில்லே. சில்வண்டுவின் கன்னத்தில் "பட்" என்று ஏதோ விழுந்தது. அவ்வளவுதான் தெரியும். பொத்தென்று

Page 25
4.
கீழே விழுந்தார். விழுந்தா லும் ரோசம் மட்டும் விழவில்லே. சுவரிலே விட்டெறிந்த பந்தைப்போல, உடனேயே துள்ளி எழுந்து தன் சட்டைக் கைகளைச் சுருக்கி விட்டுக்கொண்டு, ஆசாமிமேல் பாய்ந்தார். அதற்குள் வீதியில் போனவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டார்கள். "சில்வண்டு"க்கு அவமானந்தாங்க
"கண்ட பெண்களுக்குக் கடிதமெழுதுவது பின் பத்திரிகையிலே உபதேசம்"
அடியொன்றும் அவருக்குப் பெரிதல்ல; ஆணுல் அந்த வார்த்தை. அதை நினைத்தாலே அவருக்கு என்னமோ போல் இருந்தது. கட்டிய மனேவியையே கை கழுவி விட்டிருக்கும் ஒரு வ&ன ப் பார் த் து இப்படிச் சொன்னூல்.? அதுவும் சாதாரண ஆளல்ல; பலருக்கு உபதேசம் செய்கிற ஒரு பத்திரிகையின் ஆசிரியர்
இந்த வேத கனயை அனுபவித்துக்கொண்டே சில்வண்டு" அன்று வேளேயிலேயே படுத்துவிட்டார்: எண்ணங்களினுல் மலிந்து போய்க் கிடக்கும் அந்த உடலேப் படுக்கையில் சாத்தினர்-உறக்கம் அவ்வளவு கெதியாக வந்துவிடுகிறதா? புரண்டு, உருண்டு கிடந்தார். விளக்குக்கூட ஏற்றவில்லை. இருளிலே இரவு முழுதும் போராடினுர்,
பல வருடங்களுக்குப்பின் விடிவதுபோல கோழி கூவிக் காகங்கள் கீரைந்தன-அப்போதும் அவர் படுக்கை யிலேதான் உறங்காமல் கிட ந்தார். எழும்பவே முடிய வில்லே. உடலிலும் அசதி: உள்ளத்திலும் வேத&ன.
சூரியன் மேலே கிளம்ப, திறந்திருந்த் ஜன்னலினூடே சுரீர் என்று வெயில் பட்டது. இனியும் எழும்பாதிருக்க முடியுமா? ஆபீசுக்குப் போக வேண்டாமா?

4.
ஆபீஸ் என்று நினைத்ததும், அவருடைய உள்ளம் துணுக்குற்றது. நேற்று மாலே அங்கிருந்து புறப்பட்ட போது நந்திகேஸ்வரன் மாதிரிக் குறுக்கிட்ட "கம்போ சிட்டர் "அச்சுக் கோப்பதற்கு "மாட்டர் இல்லை ஸார் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. "இன்று போனதும், நட்சத்திரேயன் மாதிரிக் கச்சை கட்டிக்" கொண்டு நிற்பான்!"
சரி, விட்டுத்தள்ள வேண்டியதுதான். உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் எல்லோருக்கும் இதே கதிதானே நடத்திருக்கிறது. இந்த அடியும் ஏச்சும் ஒரு பிரமாதமா?' என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு, நேற்று மாலை எழுதிக் குறையில் விட்ட கதை யைத் தொடர்ந்து எழுத முயற்சித்தார்.
மேஜையண்டை உட்கார்ந்து, குறையில் விட்டிருந்த பகுதியைப் படிக்கத் தொடங்கினர். கீதா நாயகிக்குக் கதாநாயகன் கடிதம் எழுதியது நினைவுக்கு வந்தது. ஆணுல் கடிதத்தைக் காணவில்லே!
"கடிதம் எங்கே?"
அட பாவி" என்று எதையோ நினைத்துக்கொண்ட ாசில்வண்டு மனதிலே ஐனித்த தைரியத்தை, உடலிலே பரப்பிக்கொண்டு நிமிர்ந்தார். ஆனல் முதுகில் ஏற்பட்ட வலியினுல் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.
இரண்டு தினங்களின் பின், "மாடி அறை வாட கைக்கு விடப்படும்" என்ற விளம்பரப் பலகை யொன்று கீழ்வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டிருந்தது.
12

Page 26
db (OJ fy
யார் யாரையோவெல்லாம் இடை மறித்து வழி கேட்டுத் தெரிந்துகொண்டு குறிப்பிட்ட இடத்தை யடைந்தபோது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாதியற்ற விதவையின் குடிசையைப்போலப் புழுதி மண்டிக்கிடந்த அந்தக் கொட்டிலேப் பார்த்து ஒரு "பாபர் சலூன்" என்று சொல்ல யாருக்குமே துணிவு வராது. ஆல்ை அந்தத் தென்னங்கீற்றுக் கொட்டிவின் முகப்பில் உடைந்த பலகைத் துண்டொன்று தொங்க விடப்பட்டு, அதிலே சுண்ணும்பைக் கரைத்து ஏதோ கோணல் மாணலாக எழுதப்பட்டிருந்தது; அதன் அர்த் தம்'பாரத மாதா பாபர் சலூன்" என்பதாம்.
எனக்கு ஒரே ஆச்சரியம் என்ருலும் மனிதனுக்கு இயல்பாக உள்ள சுபாவத்தின்படி உள்ளே தலையை நீட்டிப் பார்த்தபோது "வாங்க. ." என்று வெளிப் பட்ட அழைப்புக்குரல் என்னைத் திகைக்க வைத்தது. நான் உற்றுப் பார்த்தேன் என் சந்தேகமெல்லாம் மறைந்தது. நான் தேடி வந்த "பாபர் சலூன்" அதுவே தான.
எனக்கு வயது நாற்பது. இதுவரை எத்தனையோ சலூன்களுக்குள் நூழைந்து வெளியேறியிருப்பேன். எல் லாச் சலூன்களிலும் அலங்காரத்துக்காக மாட்டி வைக்

4)
கப்பட்டிருக்கும் படங்களேப்பற்றி நான் விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. முழுச் சீனுவும் சியாங்கே ஷேக் ஆட்சியிலிருந்தபோது அங்கே மலிவாக நடைபெற்ற ஒரு தொழில் விபசாரம்தானும், அதை உலக நாடுகளுக் கெல்லாம் விளம்பரப்படுத்துவதற்காகவோ என்னவோ அங்கிருந்து ஏராளமான சீனத்து சிங்காரிகளின் அரை நிர்வாண-முழு நிர்வாணப் படங்களேயெல்லாம் அச்சி யற்றி வெளியேற்றினூர்கள். சீனு இன்று துண்டாடப் பட்டுவிட்டது. அந்த மலிவான தொழிலும் அருகிக் குறைந்து ஒழிந்துவிட்டது. அந்தப் பரிதாபத்துக்குரிய பெண்களெல்லோரும் நரக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்கள். ஆணுல் அந்தப் படங்களில் பெரும் பான்மையானவை இன்னும் நம் நாட்டு பாபர் சலூன் களில் கண்ணுடிச் சட்டங்களுக்குள் சிறைப் படுத்தப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அத்துடன் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களின் பலநிலைத் தோற்றங்கஃாயெல் லாம் கவர்ச்சிக் கோணங்களில் வைத்துப் பிடித்த படங்கள். அங்கு வருபவர்கள் அந்த நிர்வாணச் சித் திரங்களில் இலயித்துக் கிடக்கும்போது சுலபமாகத் தங்கள் தொழிலே முடித்து விடலாம் என்ற எண்ணம் போலும் !
இந்தச் சலூன்களுக்கெல்லாம் விதிவிலக்காக இருந் தது நான் புகுந்த புகை மண்டிய சலூன். தென்னங் கீற்றினுல் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சலூனின் பக்கங் களில் நான் எதிர்பார்த்திருக்காத படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மகாத்மா காந்தி, லெனின், ஸ்டா லின், நேரு, ராஜாஜி, அண்ணுத்துரை. மா-சே-துங், செல்வநாயகம், பீற்றர் கெனமன், தொண்டமான். பிரபலமான தலைவர்களின் படங்கள் நல்ல முறையில் கிளேஸ் காகிதத்தில் அச்சிடப்பட்டிருந்தன. "பிரபல

Page 27
50
மாக்கப்படாத" தலைவர்களின் படங்கள் செய்திப் பத்திரிகையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.
கிராமங்களிலே ‘குந்து அல்லது "ஒட்டு' என்று சொல்வார்கள் நிலத்திலிருந்து ஒரு அடி உயரம் வரை வளர்ந்த அந்த மண் சுவர்தான் அந்தச் சலூனுக்கு அரண்கள். தென்னுவிராமனுடைய குதிரைக் கொட்ட கையைப் போலிருந்த அந்தக்குடிசையின் தளத்திலிருந்த மேடு பள்ளங்கள் எண்ணமுடியாதவை. அந்த ஒட்டுச் சுவர்கள் பூர்த்தியடையாத வேலேயைப்போல எங்கும் இடிந்தும், சிதைந்தும் காணப்பட்டன.
எனக்கு ஆச்சரியந் தாங்க முடியவில்லே. வந்த காரியத்தை மறந்து அந்தச் சலூனின் முழுத்தோற்றத் தையும் எடை போட்டுக் கொண்டிருந்தேன்.
"என்ன சார் முடிவெட்டுவமா?"
நான் பதில் பேசாமல் கதிரையில் உட்கார்ந்தேன். அதை கதிரை என்று சொல்வதிலும் பார்க்க "நொண்டிக் குதிரை" என்று சொல்வதே பொருத்தமானது. அதன் காலொன்றில் ஏதோ ஊனம் ஏற்பட்டிருக்கவேண்டும். அத்துடன் சம நிலேயற்ற அந்தத் தளத்தின் பள்ளத்தில் விழுந்து முன்னும் பின்னும் ஆடிற்று நானும் சேர்ந்து ஆடினேன்.
எதிரே ஒரு சிறு மேசை. அது கருங்காலியினுற் செய் யப்படாமலே கருப்பு நிறமாக இருந்தது அவ்வளவு அழுக்கு மேசையின் ஒரத்தில் ஒரு சிறு கண்ணுடி நிறுத்தி வைக்கப்பட்டு விழுந்து விடாமலிருப்பதற்காக அதன் மேற்பகுதி தென்னங்கீற்றுத் திட்டியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்தது.

51
நான் அந்த நொண்டிக் குதிரையில் சாவகாசமாக உட்கார்ந்தேன். என் உடலிலே ஒரு அழுக்கு துவாயைப் போட்டுவிட்டு கத்தியை விரித்து அருகிலே மாட்டியிருந்த தோலிலே விசுக்" "விசுக்" என்று மேலும் கீழுமாக இழுத் தான். தீட்டிய கத்தி ஒரு கையிலே, சவுக்கார நுரையைக் குழைத்துத் தாங்கிய "பிரஸ்' மறுகையிலே என் அருகே வந்து அவன் கண்ணுடியைப் பார்த்தான். அவன் கண் கள் அப்புறம் இமைக்கவில்லே. அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். நானும் பார்த்தேன்-இருவரும் பார்த்துக்கொண்டே யிருந்தோம்.
ஒரு கணத்தில் எனக்கு அந்த நிலை புரிந்துவிட்டது. முதலாளித்துவப் பத்திரிகைகளிலே கேவிக்குச் சித்தரிக் கப்படும் "கம்யூனிஸ்ட்"டைப்போல என் தாடியும் மீசையும் தாறுமாருக வளர்ந்து கிடந்தன.
"நீங்கள். என்று அவன் இழுத்தான். தொடர்ந்து அவன் தன் மன எண்ணத்தைக் கேட்டு முடிப்பதற்குள் நான் பதில் சொன்னேன்.
"நான் 'கம்யூனிஸ்ட்" அல்ல; உங்கள் ஊருக்கு மாற்ற லாகி வந்திருக்கும் தமிழ் வாத்தியார்" என்றேன். அவ னுடைய கேள்வியைப் புரிந்து நான் பதில் சொன்னதில் அவனுக்கு ஒரே ஆச்சரியம் தவிர. நான் ஒரு வாத்தி யார் என்று அறிந்தபின் அவனுக்குண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லே. குறைந்த கூலிக்கு மாரடிப்பவன் என் ரூலும், "எழுத்தறிவிக்கும் இறைவன்' என்றல்லவா ஒளவை சொல்லி வைத்திருக்கிருள்.
பெரிய எழுத்துப் புராண நூல்களிலெல்லாம் சோடோபசாரம்" என்னும் ஒரு சொல்லே நான் படித்த துண்டு. அன்று நான் அதன் பொருளே அங்கு கண்டேன்.
ܦܪܨ

Page 28
52
கனக்கும் பழனிச்சாமிக்குமிடையில் ஏற்பட்ட முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது. அப்புறம் அந்தக் கிராமத்திலே பழனிதான் எனக்கு உற்ற துஃணவனுக இருந்தான்.
அது ஒரு பாடாவதிக் கிராமம். அந்தக் கிராமத் லே அவன் வைத்திருந்த சலூன் விசித்திரமானதோற்ற முடையது. அதைப்போல அவனும் ஒரு விசித்திரப் பிறவியாகவே இருந்தான்.
கன்னங்கரேலென்ற தோற்றம். அந்தக் கரிய முகத் திலே எடுப்பாகச் சிரைத்துவிடப்பட்டிருந்த அரும்பு மீசை, உத்தரவாதமான உறுதியை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது. அவனுடைய ஒளி மிகுந்த கண்கள் எதிர்காலத்தைப்பற்றிய தளராத நம் பி க் கை யின் சின்னங்களாகப் பிரகாசித்தன.
முழங்கால்வரை நீண்டு தொங்கும் மல் ஜிப்பாவை மலையாளத்துக்காரனப்போல முழங்கை வரை இழுத்து விட்டுக் கொள்வான். அரையிலே ஒரு சாதாரண வேஷ்டி, இவை தவிர அவன் தன் ஜிப்பாவிலே ஒரு விஜல குறைந்த ஜப்பான் பேணுவைக்கூட வைத்துக் கொள்வதில்ஃல. எளிமையான தோற்றம் ஆடம்பர மற்ற அலங்காரம் டாம்பீகமற்ற வாழ்க்கை !
அந்தக் கிராமத்திலுள்ள நாகரீகமற்ற, பரிதாபத்துக் குரிய ஏழை விவசாயிகளைத் தவிர வேறு புது நபர்கள் அந்தச் சலூனுக்கு வருவதில்லே, தட்டுத் தடுமாறி யாராவது ஒருவர் வந்துவிட்டாற் போதும்; அந்த நபர் அங்கே முக கஷ்வரம் செய்துகொள்வதோ அன்றி. முடி வெட்டிக் கொள்வதோ அதுதான் முதல் தடவையா கவும், கடைசித் தடவையாகவுமிருக்கும்.

அமெரிக்க ஜனுதிபதி ஐஸன்ஹோவர் போர்மோஸா கடலிலிருந்த தனது கப்பற்படைகளே வாபஸ் ஆக்கியதும் தேசீய சீனத்தளபதி-சியாங்கேஷேக் துள்ளி எழும்பினுர், செஞ்சீனுவை " ஒரு கை" பார்த்துவிடுவதாகப் முறுத்தினூர். அந்த ஆக்கிரமிப்பு யுத்தச் செய்தி பத்திரிகையில் வந்த அன்று நான் முன்பின் யோசிக்காமல், என் தலேயைப் பழனிச்சாமியின் கையில் கொடுத்து விட்டேன். உச்சி மயிரை வாரிச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு பழனிச்சாமி என்னேப் படுத்தியபாட்டை நினைத்தால்-அப்பாடா இ ன் று ம் என க் கு ப் பயமாயிருக்கிறது.
"சிங்கத்தின் முன்னே சிறு நரி மானங்கெட்ட ஷேக் மண் கவ்வப்போவது நிச்சயம்.ஹாம்" என்று பழனி உறுமிய உறுமலுேக் கேட்டால் உண்மையாகவே சியாங்கே-ஷேக் மறுபடியும் சீனுவுக்குள் நுழைந்து விடு வாரோ என்று தோன்றிற்று. மயிரைக் கத்தரித்துக் கொண்டிருந்த கத்தரிக்கோலே உயர்த்தி எக்காளம் போட்டபோது, தளபதியின் வழுக்கை மண்டையை நினேத்துச் சந்தோஷப்பட்டேன்.
அந்தக் கிராமத்துக்குச் செய்திப் பத்திரிகை என் ருல் என்னவென்றே தெரியாது. பழனி எங்கிருந்தோ வந்தான்.அவனத் தேடிப் பத்திரிகைகளும் வந்தன. அவன் அவைகளேப் படித்தான்-படித்தவற்றை மேற் கண்டவாறு விமர்சனம் செய்தான்.
தமிழ் வாத்தியார்களுக்கு நம் நாட்டிலே இருக்கிற மானம்தான் எல்லாருக்கும் தெரியுமே எழுத்தறிவிப்ப வனும் இறைவனும் மானங்கெட்ட உத்தியோகம் பிச்சை எடுத்துச் சீவிக்கலாம். "ஆணு", "ஆவன்னு'ச் சொல்லிக் கொடுத்த பையன், "இங்கிலீசு படித்து பள்ளிக்

Page 29
ћи.
கூட இன்ஸ்பெக்டராக வரும்போது எழுத்தறிவித்த கிழட்டு வாத்தியார் படும் பாட்டைப் பார்க்கவேண்டுமே
கண்ருவி
தமிழ் வாத்தியாருக்குச் சம்பளந்தான் குறைச்சல் மற்றப்படி வாழ்க்கையில் ஏற்படக்கூடிய செலவுகள் தொல்லைகள், நெருக்கடிகள் ஒன்றுக்கும் குறைச்சலில்லே. மாதம் முதலாம் தேதியிலிருந்து கடைசித் தேதிவரை கடன் என்ருலும் வகுப்பிலே சிலேட்டு" இல்லாமல் வந்திருக்கும் ஏழைக் குழந்தைக்குச் சிலேட்டு வாங்கிக் கொடுத்து அறங்காக்கத் தவறமாட்டார். இருந்தும் சம்பளத்தில்தான் உயர்ச்சி கிடையாது காரணம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்
காஃல ஒன்பது மணியிலிருந்து மாலே மூன்று மணி வரை கீழ் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை மொத் தம் அறுபத்து மூன்று பிள்ளைகளுக்குத் தாயாய், தந்தை பாய், உற்ற துணைவனுய், ஞானுசிரியனுப் வைத்தியணுய் எல்லாம் இருந்துவிட்டு, அதற்கு மேலும் உலக விவகா ரங்களில் ஈடுபடுவதென்ருல் எனக்கு முடியாது
எனவே பாடசாலை விட்டதும், நேரே பழனிச்சாமி யின் "சவரச்சாலே'க்குப் போவேன்; நாள் முழுவதும் பல திறப்பட்ட மனவேறுபாடுடைய சிறுவர்கள் மத்தியில் உடலாலும் உள்ளத்தாலும் உழைத்த அலுப்புத்தீர பழனியுடன் ஏதோவெல்லாம் பேசிக்கொண்டிருப்பேன். என்னதான் பேசவேண்டுமென்பதில்லே. படித்த ஒரு நூலைப்பற்றியோ, பார்த்த ஒரு படத்தைப்பற்றியோ அல்லது அரசியல் நிலையைப் ப ற்றியோ விமர்சனம் செய் வோம். நானல்ல பழனி அதில் கைதேர்ந்தவன்.
莺 壘

55
மதுரைக்கடுத்த ஒரு கிராமம் அவன் பிறந்த ஊர். அவன் இலங்கைக்கு அதிக நாட்களுக்கு முன்பே வந்து விட்ட காரணத்தால் அவன் எ ப் போது வந்தான், யாருடன் வந்தான், சொந்த ஊரிலே அவனுக்குத் தாய் தந்தையிருக்கின்றனரா என்பதெல்லாம் தெரியாது. ஆணுல் கூலி வேலே செய்து பிழைப்பதற்காக வந்தான் என்பது மட்டும் அவனுக்கு நினைவாக இருக்கிறது.
நாலுவார்த்தை"இங்கிலீசு" படித்தவர்களெல்லோரும் மேசையிலே உட்கார்த்து பார்க்கக்கூடிய உத்தியோகத் துக்காக அலகிருரர்கள். ஆணுல் பழனிச்சாமி அந்த நாலு வார்த்தை "இங்கிலீசு"படித்துவிட்டு, கூலியாக இங்கு வந் தான். தோளிலே கூடை சுமந்துகொண்டு, தேயிலே கொய்யும் வேலேயைத்தான் அவன் எதிர்பார்த்திருந் தான். ஆணுல் அந்த வேல் அவனுக்குக் கிடைக்கவில்லே. மலே நாட்டிலே உள்ள ஒரு தேயிலேத் தோட்டத்தின் வெள்ளே முதலாளி ஒரளவு ஆங்கிலம் தெரிந்த காரணத் துக்காக அவனைத் தனது வீட்டு வேலே செய்வதற்காக அமர்த்திக்கொண்டார்.
பார்க்கப் போனுல் எவ்வளவோ இலகுவான வேலே. இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கும் அட்டைக் கடியைச் சகித் துக்கொண்டு, கடுங்குளிரில் கால்கடுக்க நின்று கொழுந்து பறிப்பதைப் பார்க்கிலும் எவ்வளவோ செளகரியமானது தான். ஆணுல்.?
லண்டனில் உள்ள அமைதியான கிராமமொன்றில், தன் அழகிய மனேவியைத் தனியே விட்டுப், பொருள் குவிக்க வந்த அந்த இளந்துரை தோட்டத்தின் கணக்கப் பிள்ளேயான, ஒரு யாழ்பாணத் தமிழரின் இளம் மனேவியை எண்ணி எண்ணி அமைதியற்றுத் திரிந்தார்.

Page 30
昂巴
தற்செயலாக, எங்கோ ஒரு விருந்தில் சந்தித்த பிற்பாடு ஏற்பட்ட மனக் குழப்பம்.
பாவம் துரைக்குத் தமிழ் தெரியாது. அவர் ஆசை வைத்திருக்கும் அழகிக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது. அதனுல் அந்த வெள்ளே முதலாளி பழனியைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணே ஒருதடவை முத்தமிடத் துடியாய்த் துடித்தார்
பழனிசொன்னுன் :
"தங்கத்தின் வாழ்க்கையைப்பற்றி நான் மிகவும் பரி தாபப்படுகிறேன். பாவம் அவள் அந்த வென்ளேக்காரனே விரும்பினுளோ என்னவோ, ஆணுல் நான் மட்டும் அவ் விருவரையும் பிணேத்துவைக்கும் பாலமாக இருக்க விரும்பவில்லே, அதனுல் அங் கி ருந்து ஓடிவந்து விட்டேன்."
சிறு வயதிலிருந்தே என்னை வளர்த்த நாடு இது: அதனுல் இந்த நாட்டின் வளர்ச்சியிலே எனக்கு மிகுந்த அக்கரையுண்டு. வாக்களிக்க உரிமையற்றவன் எதையும் செய்துவிட முடியாது. எனினும் நான் இந்த நாட்டிற்குச் செய்யக்கூடிய தெல்லாம் இந்தச் சலுன் மூலம்தான். எனக்கு ஒரு ஆசையுண்டு. இந்தச் சலுரனே என்றுவ தொரு நாள் மிக நல்ல நிலைமையில் ஆக்கவேண்டும். இதிலே ஒரு ரேடியோ பாடினுல் அதன்மூலம் இந்தக் கிராமத்து மக்க ளு ம் நானும் மகிழ்ச்சியடைந்தால் போதும். அதுவே நான் செய்யக்கூடிய பெரிய சேவை யாகும். உண்மையைச் சொல்கிறேன். இதுதான் srif உள்ளத்து உணர்ச்சி வாழ்வின் ஒரே கனவு கனவு நன வாகும்நாள் என் வாழ்விலேயே பெரிய திருநாளாகும்."
莺 量 墅

57
இருந்தாற் போலிருந்து திடீரென்று ஒருநாள் சுயபாஷை ஆசிரியர்களின் சம்பளத்திலே கொஞ்சம் கூடு தல் செய்துள்ளதாகப் பத்திரிகையிலே செய்தி வந்தது. அன்று மாலே நான் பழனியின் சவரத் தொழிற்சாலை யிலே உட்கார்ந்து மோட்சப் பாதையைக் காட்டுகிற அந்தப் பத்திரிகைச் செய்தியை வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்துத் தவருவது படித்துக்கொண்டிருந்தேன்.
அந்தக் கிராமத்துக்குப் புதிதாக வந்த ஒரு நபருக் குப் பழனி "தொழில்" நடத்தித்கொண்டே தனது வழக்க மான தோரணையை ஆரம்பித்திருந்தான். அந்த நபருக்கு முடிவெட்ட ஆரம்பித்ததிலிருந்து முக சவரம் செய்வதுவரை, சுயபாஷை ஆசிரியர்களுக்கு அரசாங்கம் செய்துள்ள அநீதியைப்பற்றி சுமார் எண்பத்திநாலு முறைக்குக் குறையாமல் திட்டித் தீர்த்தான். மந்திரி மார்கள் வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்து செலவா கும் தொகையைச் சுட்டிக் காட்டினுன். "மந்திரிமார் களுக்கு மக்களின் நலனிலே கருத்தில்லே. குடிக்கிறர்கள் கும்மாளமடிக்கிருர்கள்" என்றெல்லாம் ஒப்பாரி வைத் தான.
புது மனிதருக்குப் போதும் போதுமென்ருகிவிட்டது. நிச்சயமாக அவர் ஒரு ஆளுங்கட்சி அங்கத்தவரின் வாக் காளரா யிருக்கவேண்டும். அதனுல் பழனியின் பிரசங் கத்தின்போதெல்லாம் அவருடைய முகம் பட்ட பாட்டை அந்தக் கையகலக் கண்ணுடிக்குள் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.
"தொழில்" முடிந்து மனிதர் வெளியேறிப் போனுர், சாமான்களே யெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் ஒழுங் காகவைத்து விட்டு பழனி சாவதானமாக என்னிடம் வந்தான்.
0.-- 4

Page 31
5ხჭ
"என்ன பழனி! நீ இப்படியெல்லாம் "லெக்ஷர்" பண்ணினு உன் தொழில் எப்படி வளரும்?" என்றேன். பழனி என்னேக் கூர்ந்து பார்த்தான். "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்" என்ருன்,
"என்ன சொல்வது? இங்கே உன் தொழில்தானே முக்கியம்?"
"அதற்காக உள்ளதைச் சொல்லவேண்டா மென் கிறீர்களா?"
"இல்லே! தொழில் நேரம் தொழில்-மற்றதற்கெல் லாம் வேறு நேரமிருக்கிறது" பழனி ஆச்சரியமாகச் சிரித்தான்!"வாத்தியார் இது சர்வகலாசாலே" என்ருன். எனக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. உண்மை பொய் இருக்கட்டும். அவனுடைய துணிவான பதிலேக் கேட் டால் யாரும் ஆச்சரியப்படுவார்கள்.
"சரிதான் ஆணுல் ஒரு திருத்தம் உண்டு"என்றேன்.
என்ன?" "சவர கலாசாலே என்றிருக்க வேண்டியது. தவறு தலாக சர்வகலாசாலேயாகி விட்டது"
பழனி வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்தான். நானும் கூடச் சிரித்தேன்.
"சரியாய்ச் சொன்னீர்கள் வாத்தியார் எனக்கு இது பிறப்பால் வந்த தொழிலல்ல. அதனுல் திறமை காணுது. உங்களைப் போன்றவர்களிடத்தில் கற்றுக் கொள்கிறேன். சரியாய்ச் சொன்னீர்கள். சவர கலா சாலேதான்!"
பழனியின் இந்தச் சாதுரியமான பேச்சை நினேத்துக் கொண்டே, அவனுடைய பாரதமாதா பாபர் சலூனுக் குள் நுழைந்தேன்.

"வாங்கோ வாத்தியார், உங்கஃனத்தான் எதிரி பார்த்திருந்தேன்-ஏன் ஐந்தாறு நாட்களாக இந்தப் பக்கம் காணுேமே!" என்ருன், உள்ளே நுழைந்த நான் ஒருகணம் பின்தங்கி நின்றுவிட்டேன். எனக்கு ஒரே ஆச்சரியம். பாபர் சலூன் பழைய பாபர் சலூனுக இருக்கவில்லே-எத்தனையோ திருத்தங்கள்-பக்கங்களுக் கெல்லாம் சலாகை அடிக்கப்பட்டு சாக்கினுல் மறைக் கப்பட்டிருந்தது. தளத்துக்குச் சிமிந்து ஒரு அடி மண் சுவர் இன்னும் கொஞ்சம் வளர்ந்து-வெள்ளே வெளே ரென்றிருந்தது.
"என்ன பழனிச்சாமி, தேவதச்சன் மயன் இந்தப் பக்கம் வந்திருக்கான்போலிருக்கே" என்றேன்.
"காலம் வரும்போது மயன் என்ன, இந்திரன் சந்தி ரன் எல்லோருந்தான் வருவார்கள்"
"அப்படியென்ருல்..?" "என் கனவு நனவாகப் போகிறது வாத்தியார்" இதைச் சொல்லும்போது அவன் முகத்தைப் பார்த் தேன். அப்பாடி எவ்வளவு மகிழ்ச்சி.
"அப்படியா? ரொம்பச் சந்தோஷம்-கனவு எப் போது பவிக்கிறது?"
"உங்களேத்தான் எதிர்பார்த்திருந்தேன். நான் கொழும்புக்குப் போகவேனும், திரும்பி வரும் வரைக் கும் கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்."
"நாம் பேஷாக"
பழனி இரண்டொரு தினம் கழித்து கொழும்புக்குப் பிரயாணமானுன்

Page 32
O
அன்று சனிக்கிழமை, பழனிச்சாமி கொழும் புக்குப் போய் ஏழெட்டுத் தினங்களாகிவிட்டன. இன்னும் அவனேக் காணவில்லேயே என்று யோசித்தபடியே எதிரில் இருந்த பத்திரிகைகளேக் குறிக்ககோளின்றிப் புரட்டிக் கொண்டிருந்தேன். அங்கங்கே காணப்பட்ட பெரிய தலைப்புகளே மேலோட்டமாகப் பார்த்தேன்.
இலங்கை இந்தியப் பிரதமர்கள் சந்திப்பார்களாம். இலங்கை இந்தியப் பிரச்னே சுகமாகத் தீர்ந்துவிடுமாம். தாயும் சேயும் பிரிய முடியாதாம்.
நிருபர்கள் திரித்துவிடும் இந்த அண்டப் புழுகுகளே படித்துக்கொண்டு அப்படியே உறங்கிவிட்டேன். அப் புறம் ஒரு கனவு கண்டேன் அற்புதமான கனவு.
கொழும்புக்குச் சென்ற பழனிச்சாமி திரும்பி வரு கிருன். அவன் வாங்கி வந்த "லெனித்" ரேடியோ பாடுகிறது, பேசுகிறது, உலகச் செய்திகளையெல்லாம் நமக்கு ஒலிபரப்புகிறது.
அவன் வாங்கி வந்த புதிய தளபாடங்கள்ட்ரெஸிங் மேசை, சுழல் கதிரைகள், நிலக்கண்ணுடிகள்எல்லாம்-"பாரதமாதா பாபர் சலூன" அலங்கரிக் கின்றன. எனக்கு ஒரே மகிழ்ச்சி. கிராமத்து ஜனங் கள்-ஆனந்தப் படுகிறர்கள் சிறுவர்கள் இசையைக் கேட்டுத் துள்ளிக் குதிக்கிருர்கள்-பழனிச்சாமி தன் கரிய முகத்தில்-தடித்த உதடுகளேத் திறந்து-பளிச் என்று சிரிக்கிருன் சிரித்துக்கொண்டே இருக்கிறன்.
திடுக்கிட்டுக் கண்களை விழித்தேன். எதிரே தபாற் காரன் ஒரு கடிதத்தை வீசிவிட்டுப் போனுன்

பழனிச்சாமியின் கையெழுத்து. ஆ வலு ட ன் பிரித்துப் பார்த்தேன். அதை முழுதும் படிக்கவில்லே; என் கைகள் நடுங்கின. கண்கள் இருண்டன; தலே சுழன்றது-உலகமே சுழன்றது.
அந்தக் கடிதம் இதுதான்:
அன்பேயுருவான வாத்தியாருக்கு எழுதிக் கொள்வது :
கள்ளத்தோணியில் வந்ததாகச் சந்தேகித்து போலிஸார் என்னேக் கைது செய்திருக்கிருர்கள். அவர்கள்கேட்கும்தஸ்தாவேஜுகளேச் சேகரித்து, நான் இலங்கையில் பலகாலம் வசித்தவன் என்று நிரூபிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்லே, அதனுல், திரும்பவும் நான் அங்கே வருவேன் என்ற நம்பிக்கையுமில்லை. எல்லோருக்கும் வணக்கம் தெரிவிக்கவும்.
அன்புள்ள
பழனிச்சாமி,
1953

Page 33
கண்கள்
"அதோ ராசா'
கேட்டுப் பழகிப்போன கு ர ல், பாசத்தோடு குழைந்து இனிமையாக ஒலித்தது. வந்து நின்ற ரயில் வண்டியிலிருந்து பிதுங்கி, அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்கனி போலச் சிதறியோடிய மனிதக் கூட்டத் திடையே தேடல் போட்டுக்கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன்.
ஓர் இரண்டாம் வகுப்பு வண்டியிலிருந்து சோமு இறங்கிக் கொண்டிருந்தான். அவன் பின்னே, பாதம் வரை நீண்டு அணிசெய்த சீலேயைக் கைகொடுத்து துரக் கிக் கால்களுக்கிடையில் பிடித்துக்கொண்டு ஒரு பெண் அவன் மனேவி ஈஸ்வரி அவள் கன்னங்கரிய விழிகள் எடுத்து வைக்கும் கால்களிலே பதிந்து கிடந்தன.
என் கண்களேயே என்னுல் நம்ப முடியவில்லே ஈஸ் வரியா இவள்? முறுக்கிவிட்ட சாட்டைமாதிரி பின்னிக் கட்டிய கூந்தலும், பாவாடையும் மேலே துண்டுத் தாவணியும் அணிந்து, பட்டினத்து மாடுமாதிரிப் பயமும் வெட்கமுமின்றி ஒடியாடித் திரிந்த ஈஸ்வரியா இப்படி நாகரிக உலகின் ஒரே பிரதிநிதிமாதிரி அழகுத் தேவதையாகி வந்திருக்கிருள்?

ፀ8
"வா, சோமு!" என்று வரவேற்றபடியே அவன் கையிலிருந்த பெட்டியை நான் வாங்கிக்கொண்டேன். ஈஸ்வரி பத்துப் பெற்ற பத்தினிபோல், கைகளிலே சாமான் நிறைந்த பையும், தலையணயும் பிளாஸ்கு மாக, ரயில் வண்டியின் படிகளிலிருந்து இறங்குவதற்குச் சிரமப்பட்டாள். சோமு அவளுக்கு உதவி கொடுத்துக் கொண்டே, என்னே நன்றியறிதலோடு முகத்திலே மகிழ்ச்சி பொங்கப் பார்த்தான்.
"ராசா, கடிதம் கிடைத்ததா?" "கடிதம் கிடைக்காமல், உங்களே வரவேற்க இங்கு
வருவதற்கு நான் என்ன முக்காலங்களு முணர்ந்த முனிவனு?"
பின்னே என்ன? இத்தனை வயது வந்தும் விசுவா மித்திரன் மாதிரி ..." சோமுவின் பின்புறத்திலிருந்து "களுக்" என்று சிரிப்பொலி கேட்டது. அவனுடைய பேச்சில் இழையோடிய அர்த்தத்தைப் புரிந்துகொண்டு ஈஸ்வரி சிரித்தாள். நானும் சிரித்தேன்; அதைவிட எனக்கு வேறு வழியில்லே. சிரித்து முடிவில் ஈஸ்வரி சொன்னுள்:
"ஆமாம்! முனிவன்தான். ஆணுல் முக்காலங்களு முனர்ந்த முனிவரல்ல; முற்றுந் துறந்த முனிவன்!"
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மண்டையிலே சம்மட்டிகொண்டு தாக்கியது போல இருந்தது என் நிலமை. நான் இன்னும் "தனிக்கட்டை"யாக இருப் பதைச் சுட்டிக் காட்டிச் சிரிப்பதிலே ஈஸ்வரிக்கு வேடிக்கை ஆணுல் எனக்கு.
கார் மெதுவாக ஒடிக்கொண்டிருந்தது. சோமு இரவு முழுதும் பிரயாணம் செய்த அலுப்பினுல் சட்டைப்

Page 34
பொத்தான்களேக் கழற்றிவிட்டுக்கொண்டே அயர்ந்து தூங்கிவிட்டான் அவன் அருகிலே கொடி போலத் துவண்டு கிடந்த ஈஸ்வரி "தூங்காமல்" தூங்கிக்கொண் டிருந்தாள். எனக்குக் குறிக்கோளில்ஃU. ஏதோவெல்லாம் சிந்தித்தபடியே-ஓடிக்கொண்டிருந்த மரங்களேயும் வீடு வாசல்களேயும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
"நாமே ஒடிக்கொண்டிருக்கிருேம். ஆனுல் நாம் ஒரே இடத்திலிருப்பதாகவும் செடி கொடிகளும், வீடு வாசல்களும் ஒடிக்கொண்டிருப்பதாகப் பிரமை தட்டு கிறது.
ஈஸ்வரியும் அப்படித்தானு?
அவளுக்காக நான் இன்னும் கல்யாணம் செய்யாம லிருக்கிறேன். ஆணுல் அவள் அதை உணராமல் என்னேக் கிண்டல் செய்வதிலே மகிழ்ச்சியடைகிருள்.
பார்வையை உள்ளே திருப்பி, காரின் உட்பக்கம் மேலோட்டமாகச் சுற்றிப் பார்த்தேன். யதேச்சையாகச் சுதாரித்து வந்த கண்கள், காரின் முன் பக்கத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிறு கண்ணுடியில் நிஃலத்து நின்றுவிட்டன.
என்ன அதிசயம்! அதனுள்ளே "பளிச்" என்று ஒரு மின்வெட்டு. அங்கே ஈஸ்வரியின் குறுகுறுத்த ஒரு சோடிக் கண்கள். அந்தக் கண்கள்-அதன் கருமணிகள் ஆடவில்லே அசையவில்லே-இமைகள், தமது கடமையைத் தவறிவிட்டன. பரிவும், பாசமும், ஏக்கமும் அங்கே பின்னிப் பினேந்தன.
அந்தக் கண்கள்
"உலகத்திலே அதிகமாகப் பேசப்படுகிற பாஷை '&?'

65
கேள்வியைக் கேட்டுவிட்டு, வாத்தியார் மேஜை மேலே கிடந்த பிரம்பை எடுத்து நீட்டி, வனேத்து நிமிர்த்துகிருர், பிரம்பு ஒரு மாணவஃனச் சுட்டுகிறது. அவன் அடக்க ஒடுக்கமாக எழுந்து பதில் சொல்கிருன்.
"ஆங்கிலம்" "முட்டாள் மற்ற ஆள்" "தமிழ்" "கழுதை அடுத்தஆள்-பசுபதி-குணரத்தினம்நடராசா-ராமநாதன்." வாத் தி யார் ஒவ்வொரு வரையும் எழுப்பி விட்டுக்கொண்டே சுற்றி வருகிருர், தொடர்ந்து பதிலும் கிடைக்கிறது.
"கிரீக்.லத்தீன். ப்ரெஞ்ச்.சிங்கனம்." "பிழை.பிழை.பிழை-மடத்தனமான பதில்" குறி பார்த்து நிற்கும் துப்பாக்கி முனேபோல வாத்தி யாரின் பிரம்பு என் முன்னே பயமுறுத்திக்கொண்டு நிற்கிறது.
மெல்ல. பயபக்தியோடு எழுந்தேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். எனக்கு ஒரே பயம்! எல்லோருமே எழுந்து நிற்கிருர்கள். அவர்களுக்கே தெரியவில்லேயென்ருல் எனக்கு எங்கே தெரியப் போகிறது? அப்படியே யோசித் துக்கொண்டு.
பெண்கள் பக்கத்திலிருந்து சிரிப்பொலி-வெள்ளி மணியோசை - கேட்கிறது. வெட்கம் எண்சாணுடம் பையும் ஒரு சாணுய்க் குறுக்க, மெல்லத் திரும்பிப் பார்த்தேன்.
ஈஸ்வரி என்னேப் பரிதர்பத்துடன் பார்த்துக்கொண் டிருந்தாள். அந்தக் கண்களிலே தெரிந்த கனிவுபரிவு-பிரியம்.

Page 35
வாத்தியாரின் பிரம்பு என் பதிலே எதிர்பார்த்துத் திமிறுகிறது. நான் திடீரென்று பதில் சொன்னேன்,
"நயன பாஷை ஸார்"
வகுப்பிலே, "கொல்" என்று வெடித்த சிரிப்பின் ஓங்காரநாதம், முகட்டிலே மோதி எதிரொவித்துத் திரும்புவதற்கிடையில், வாத்தியாரின் பிரம்பு வேலையைத் தீர்த்து முடித்தது; நல்லவேண் அது என்னைக் கொல்'ல வில்லே.
எல்லோரும் சிரித்தார்கள் எல்லோர் கண்களும் சிரித்தன. ஆணுல் ஈஸ்வரியின் கண்கள் மட்டும்.?
அழுதனவா? ஆமாம் அழுதன.
அந்தக் கண்கள்
எங்கள் சன சமூக நிலையத்திலே அன்று பெரிய கூட்டம். யாரோ ஒரு திகர்ப் பிரமுகர் பிரசங்கம் நடத்திக்கொண்டிருந்தார். ஈ. ஸ் வ ரி பெண்களோடு பெண்ணுக முன் வரிசையில் இருக்கிருள். சற்றுத் தூரத்தில் அவளுக்கு நேரே, எதிராக நான்.
பிரசங்கி இச்சையடக்கத்தின் அவசியத்தைப் பற்றித் தெளிவாக-நகைச்சுவையடன் பேசிக்கொண்டே சபை யைச் சுற்றிப் பார்த்தவர், எங்களேப் பார்க்கிருர், நாங்கள், அந்தச் சர்வதேசப் பாஷையான-நயன பாஷையிலே பேசிச்கொண்டிருப்பதையும் பார்த்து விடுகிறர். அப்புறம் அவர் பிரசங்கம் உச்சத்தையடை கிறது.
"கண்கள் தான் பஞ்சேந்திரியங்களிலே மிகப் பொல்லாதிவை கொடியவை. அவைதான் எல்லாப் பாவங்களுக்கும் காரணமானவை.

அப்புறம் சபையிலே "கப்சிப்" தர்பார். எல்லோர் கண்களும், மூக்கு நுனியைப் பார்த்தவண்ணமிருந்தன.
ஆணுல் ஈஸ்வரியின் கண்கள் மட்டும் என்னப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன.
அந்தக் கண்கள்:
நான் போற்றி வளர்த்த கண்கள் இன்று எனக்குச் சொந்தமற்றுப் போய்விட்டன. மாமன் மகளாயிருந்தும் ஈஸ்வரி ச்ோமுவுக்கு மனேவியானுள். ஏ. உலகமே நீ என்றுதான், உயர்வு தாழ்வு பாராட்டாமல் பணத் துக்கும், பட்டத்துக்கும் மதிப்புக் கொடுக்காமல் இயங்கப் போகிருய்?
சோமுவும் ஈஸ்வரியும் தங்குவதற்காக ஏற்கனவே நான் ஒரு வீடு ஒழுங்கு செய்திருந்தேன். அந்த வீட்டு வாசலில் கார் நின்றது. நான் சோமுவைத் தட்டி எழுப்பினேன். அப்போதும் ஈஸ்வரி விழித்துக்கொண்டு தான் இருந்தாள், இறகிழந்த பறவையைப்போல.
ஐந்தாறு நாட்கள் ஓடி மறைந்தன. ஒரு நாள் மாஃல நேரம் புதிதாக வந்திருந்த ஒரு நாவஃலக் கையில் எடுத்துக்கொண்டு கடற்கரைக்குக் கிளம்பினேன்.
வழியிலே ஈஸ்வரியின் வீடு. புறப்படும்போதே கூடியவரை ஈஸ்வரியையோ சோமு வையோ சந்திக்காமல் போகவேண்டுமென்று நினைத்துக் கொண்டுதான் புற ப் பட் டே ன். ஆணுல் முடிவு வேருயிற்று.
நான் தூரத்தில் வரும்போதே, சற்றுத் திறந்திருந்த கதவுக்கிடையில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு ஈஸ்வரி

Page 36
38
என்னேயே பார்த்துக்கொண்டிருந்தாள். என்பாடு சங்கட மாய்ப் போயிற்று, என்ருலும் சமாளித்துக்கொண்டு" அவளேக் காணுதவன் போலே என் பாட்டில் நடந்து கொண்டிருந்தேன்.
வழி குறுகிற்று, ஈஸ்வரியின் வீடு நெருங்கிற்று.
"என்ன ராசா கண் தெரியல்லேப் போலிருக்கு" என்று கேட்டபடியே ஈஸ்வரி சிரித்தாள். நான் திரும்பிப் பார்த்தேன்.
பச்சைக் கரை போட்ட " வெள்ளேச் சேஃலயும், வெள்ளேயிலேயே பச்சை உருட்டுக் கரை தைத்த ரவிக்கையும் அவள் அணிந்திருந்தாள். கழுத்திலே ஒரு முத்துச்சரம் அணிந்திருந்தாள். சரம் குரல் வளேச் சங்கின் கீழே, கழுத்துடன் ஒட்டியிருக்கும்படி இருக்க மாகக் கட்டப்பட்டிருந்தது. அது அவளுடைய நீண்ட கழுத்தின் சரி நடுவில் அமைந்து பார்ப்பவர் கண்களே அவள் முகத்திலே பதிய வைப்பதற்காகவே அணியப் பட்டதுபோல, அவள் முகத்தை விசேஷமாக எடுத்துக் காட்டியது.
ஈரம் காயாத கூந்தலைப் பின் கழுத்துக்கு நேராக ஒரு பச்சை நாடாவினுல் கட்டித் தொங்கவிட்டிருந்தாள். நாடாவுக்கு மேலே ஒரு கத்தை மல்லிகை மொக்குகள். தளரவிட்டுக் கட்டியிருந்ததால், கேசம் சரிந்து அவள் காதுகளைப் பாதி மூடிப் புரண்டு கொண்டிருந்தது.
ஏன் தெரியாமல்? தெரிந்துதான் வருகிறேன்" என்று பதில் கொடுத்தேன்.
பின்னே, நேரே போகிருயே."
"ஆமாம்; கடற்கரைக்கு"

39
"வானம், மப்பும் மந்தாரமுமாயிருக்கு அங்கே யாரும் வரமாட்டார்கள்."
"அது தான் நல்லது எனக்குத் தனிமைதான் வேண்டும்."
திடீரென்று தெருப்புழுதியை அள்ளி இறைத்துக் கொண்டு காற்று வீசியது. தொடர்ந்து இலேசாகத் தூறல் விழுந்தது. கடற்கரைப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, கையிலிருந்த புத்தகத்தைத் தலைக்குப் பிடித்துக்கொண்டு, நான் வீட்டுக்குத் திரும்பி னேன். ஈஸ்வரி என்னேக் கோபத்தோடு பார்த்தாள்.
"ராசா, என்ன இது மழை யி லே எங்கே போகிருய்?"
நான் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கண்கள் என்னேப் பரிதாபமாகப் பரிவுடன் அழைத்தன. மனிதன் என்னவெல்லாமோ நினேக்கிருன் பேசுகிருன் அதை விடக்கூடிய கெதியில் சபலமடைந்து விடுகிருன். நான் ஒன்றும் எதிர்பேசவில்லே. ஈஸ்வரி உள் நுழைந்தாள் நான் பின்தொடர்ந்தேன்.
சோ பா வில் உட்கார்ந்துகொண்டே, "சோமு. எங்கே?" என்றேன்.
"அடடே சொல்ல மறந்துவிட்டேனே. கொழும்பி விருந்து ஏதோ அவசரத் தந்தி வந்தது. காலேயில்தான் விமானத்தில் போயிருக்கிருர், நா ஃள க்கு வந்து விடுவார்."
அப்புறம் எனக்கு அங்கே இருக்க இஷ்டமில்லை. ஈஸ்வரி தேனிர் போட்டுக் கொண்டு வந்தான். குடித்து முடிந்ததும் வீட்டுக்குப் போவதற்காக எழுந்து வாசல் வரை வந்தேன்; காஃல எடுத்துப் படியில் வைத்

Page 37
70
தவன். அப்படியே ஒட்டுக்குள்ளிருக்கும் நந்தையைப் போலத் தலையை உள்ளே இழுத்துக்கொண்டேன். வெளியே நல்ல மழை என் மனதில் ஏற்பட்டிருந்த கலவரத்தில் நான் வெளியுலகையே மறந்துவிட்டேன். ஈஸ்வரி என் அசம்பாவிதமான செய்கையைக் கண்டு "கல கல" என்று சிரித்தபோது எனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லி முடியாது.
"ராசா, என்ன இது? உனக்குப் பயித்தியமா?"
"அப்படி யொன்றுமில்லே ஈசு, நான் கட்டாயம் வீட்டுக்குப் போக வேண்டும்."
"அதற்கு இந்த மழையிலேயா?"
"ஆமாம்; வீட்டிலே அதிகம் தொல்லே அதனுல்."
நான் சொன்னதை முடிக்கவில்லே, ஈஸ்வரி என்ன ஒரக் கண்களால் பார்த்து. முகத்திலே பூத்திருந்த மலரின் செவ்விதழ்களேத் திறந்து சிரித்தாள்.
"ஓஹோ அப்படியா, எனக்குத் தெரியாமலா?"
பிரமாதமாகக் கேலி செய்து விட்டதாகக் கற்பனே பேதைப் பெண். இன்னும் குழந்தை மாதிரி யிருப்பதை யிட்டு நான் மனம் வருந்தினேன். என்ருலும் அவளுக்கு விட்டுக்கொடுக்க என் மனம் துணியவில்லே எதிர் வார்த்தையாடினேன்.
"ஆமாம்; உனக்கு ஏன் தெரியவேணும்? நீதான் எல்லாம் தெரிந்து விட்டதாக நடந்து கொண்டாயே! வீதியிலே சிற்ருடை கட்டி மண் சோறு கறி ஆக்கிப் பரிமாறியதிலிருந்து, கல் லூ சி யிலும், அதற்குப் அப்பாலும் என்னைக் கறங்கடித்துவிட்டு கடைசியில் பணத்துக்கும், பதவிக்கும்."

"அது என் தவறல்ல ராசா இந்தப் பாழாய்ப்போன சமுதாயம் செய்த சதி" ஈஸ்வரி, சோபாவிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மினுள் தாரதம்மிய மற்ற என் வார்த்தைகளினுல் அவள் உள்ளம் குலுங்கி யதைப் போல உடலும் குலுங்கிக்கொண்டிருந்தது. ரொம்ப நாட்களாக என் மனதின் அடித்தளத்திலே கிடந்து புழுங்கிக்கொண்டிருந்த இந்தச் சம்பவம் என்னே பறியாமலே மேலும் பேசச் செய்துவிட்டது.
"சமுதாயம்! நல்ல சாட்டு தங்கள் கோழைத் தனத்தை மறைத்துக்கொள்ள சிருஷ்டிக்கப்பட்ட திரை"
ராசா"
ஈஸ்வரி "ஒ" வென்று அழுது விட்டாள். அதற்குக் மேலே நானும் பேசவில்லை. சிறித் தீர்ந்த வான கொட்டுப்போல இருந்துவிட்டேன். அந்த அறையிலே அதன் பின் பயங்கரமான அமைதி நிலவிக்கொண் டிருந்தது. ஆணுல் வெளியே.
மழையும், புயலும், மின்னலும் ஊழிக் கூத்துக்கு உவமை காட்டின. வெகு நேரம் கழித்து, ஈஸ்வரி சோபாவிலிருந்து தஃலயை உயர்த்தினுள். கண்ணிர் வற்றிக் காய்ந்துபோன முகத்தைச் சேலைத் தலைப்பினுல் துடைத்துக்கொண்டே, "ராசா" என்ருள்.
நான் நிமிர்ந்து பார்த்தேன்.
"போனதெல்லாவற்றையும் மறந்துவிடு. இப்போது நீ வீட்டுக்குப் போக முடியாது. மழையும், புயலும் வரவர அதிகரித்துக்கொண்டே வருகிறது. நான் என் கையாலேயே அருமையாகச் சமையல் செய்து வைத்திருக் கிறேன். மறுக்காமல் சாப்பிட்டுவிட்டு, இங்கேயே உறங்கிப் போ!' என்ருள்.

Page 38
72
நான் அவளே. மனது புண்படும்படியாக அதிகமாகப் பேசிவிட்டேன். அதனுல், இந்தக் கட்ட&ளயை முழுப் பலத்துடன் எதிர்ப்பதற்குத் தைரியமின்றித் தயங்கி னேன்; அவள்கூட, எல்லாவற்றையும் மறந்து அழைக் கிருள். எதற்கும் மேலே அந்தக் கவர்ச்சி மிகுந்த
நான் எதிர்த்துப் பேசவில்லை. இருவருக்கும் சற்று முன் நடந்ததையெல்லாம் மறந்து சிரித்துப் பேசி உணவருந்தினுேம், சாப்பிட்டு முடிந்ததும் ஈஸ்வரி, ஒர் அறையைச் சுட்டிக்காட்டி, "அங்கே படுக்கை போட்டு வைத்திருக்கிறேன். நிம்மதியாகப் படுத்துத் துரங்கு " என்ருள். தானும் ஓர் அறையில் நுழைந்து கதவைச் சாத்தினுள்.
ܕܠܐ
"மனிதன், உணர்ச்சிகளால் அலேக்கழிக்கப்படும் போது மிருகமாகிவிடுகிறன்"
இந்தப் பொன் மொழியை நான் அறிந்திருந்தும், அது ஒரு அனுபவசாத்தியமான உண்மை என்பதை அன்றுதான் கண்டறிந்தேன்.
இரவு வெகு நேரத்தின்பின் மழையும் புயலும் ஒய்ந்துவிட்டிருந்தது. வானம் நிஷ்களங்கமாக, பால் நிலவினுல் நிரப்பப்பட்டிருந்தது. வெளியே இலேசாகக் காற்று வீசிக்கொண்டிருந்தது. மழையின்போது ந&னந்து விட்ட இலேகுழைகள் காற்றினுல் அசையும்போது நிலவிலே "பளிச்" "பரிச்"சென்று மின்னின.
அந்த இதமான காற்றும், இனிமையான நிலவும் என் உள்ளத்திலும் உடலிலும் பல காலமாக மக்கிமடிந்து போய்க் கிடந்த இன்ப உணர்ச்சிகளைக் கிளறிவிட்டன. அப்போதெல்லாம், அந்தக் கருநீல விழிகள் என்னைப்

73
பார்த்துச் சிமிட்டிச் சிரித்தன. " வா வா"என்று அழைத்தன, "ஏகோழையே! நினேவு முகம்தான் உனக்குப் பிடிக்குமோ?" என்று பரிகசித்தன. எல்லாம் பெருங் காயம் வைத்த பாத்திரத்தின் குண தோஷம்தான். வெறும் பிரமை.
சொல்ல மனம் துணியவில்லே. சொல்லாமலு மிருக்கவும் முடியவில்லை. அன்று நான் மிகவும் கேவல மாக-அயோக்கியத்தனமாக நடந்துகொண்டேன்.
அவள் தூங்கிக்க்ொண்டிருந்த அறை க்கு ள் நுழைந்து.
ஈஸ்வரி, திடுக்கிட்டு எழுந்து மின் விளக்கைப் பொருத்தினுள். என்ஃனப் பார்த்தாள் நன்முகப் பார்த்தாள்.
"சபாஷ் நீதானு-மிகவும் நல்ல காரியம்" என்று தன்னே மறந்து உரத்துச் சத்தமிட்டாள். உடனே பரி தாபமாக என்னேப் பார்த்தாள். நான் ஆடு திருடிய கள்வ&னப் போல, உடல், வெயர்வையினுல் தெப்பமாக நனந்துபோய் நின்றேன். என்ருலும் மிருகவெறி என்னைப் படாப்பாடுபடுத்திற்று.
சாகப்போகிற ஆட்டுக்கடா, அடித் தொண்டையால் அலறுவதுபோல-அவளிடம் பிச்சை கேட்கும் தோர &ணயில், "ஈஸ்வரி" என்றேன்.
சாராசா, சின்ன வயதிலே நடந்ததெல்லாவற்றையும் மறந்துவிடு. ஐந்தும் மூன்றும் பத்து என்று சொன்ன பருவத்து நிகழ்ச்சிகளை இன்னும் கிளருதே. நான் களங்க மற்றவள் நீயும் களங்கமற்றவன். இருவரையும் களங்கப்படுத்தாதே."
நி.-5

Page 39
74
"ஈஸ்வரி, அந்த "லெக்சர்" எல்லாம் வேண்டாம். உன் பாதங்களில் விழுந்து கேட்கிறேன்."
"சீ-மானங் கெட்டவனே. "அவர்" என் கணவர் மட்டுமல்ல. உன் நண்பருங்கூட என்பதை மறந்து.
"ஈஸ்வரி..."
"தயவுசெய்து வெளியே போய்விடு. இல்லேயென்ருல் உரத்துச் சத்தம் செய்வேன்."
அப்போது அந்தக் கண்கக்ரப் பார்த்தேன் கண்களா அவை? சினம் பொங்கும் நெருப்புக் கோளங்களாக, அவை என்னச் சுட்டெரித்தன.
அப்புறம் என் உடலிலே தெம்பு இல்லை. நடைப் பிணமாக வெளியேறினேன். அந்தக் கணப்பித்தம் எங்கே?
量 를 量
ஈஸ்வரியின் கால்களிலே விழுந்து, அவள் பாதங்களே என் கண்ணிரால் கழுவி மன்னிப்புக் கோர வேண்டும்
நானே ஏமாற்றிக்கொண்டு வஞ்சித்து விட்டதாக எண்ணி ஏங்கினேன். ஆணுல் மன்னிப்புக் கேட்ப தற்குக்கூட அவள் கண்களிலல்லவா விழித்துத்தீரவேண்டி யிருக்கிறது. அதனுல் நான் வெளியே புறப்படத் தயங் கினேன். ஈஸ்வரி பார்த்துவிட்டால்..? எங்குமே போவதில்லை. யாருடனும் அதிகம் பேசுவதில்லை. மனது கூரிய ரம்ப ம் போல அறுத்துக்கொண்டிருந்தது. நானுண்டு என் வேலேயுண்டு. அதைவிட வேறு ஒன்றும் வேண்டாம். நான் பட்ட அவமானம் என் ஏழு பிறப் பிற்கும் போதும், ஐயோ! இந்த நிலைமை எனக்குமட்டு மல்ல-யாருக்குமே வரக்கூடாது.

75
ஒரு நாள் மாவே வேளே.
ஆபீஸிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரே ஈஸ்வரியும் சோமுவும் வந்துகொண்டிருந்தார்கள். ஏதோ சுவையான உரையாடலில் அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். கல, கல என்று சிரிப்பும்-பேச்சுமாக வந்து கொண்டிருந்தனர். எனக்கு ஈஸ்வரியின் கண்களிலே விழிக்கத் தெம்பு இல்ஃல. என் மனச்சாட்சி என்னே எரித்துக்கொண்டிருந்தது. அதனுல் ஒதுங்கி வேறு வழி திரும்ப நினத்தேன் அதற்கிடையில் ஈஸ்வரி பார்த்து விட்டாள்.
"ராசா..!"
என் நிலேமையை வார்த்தைகளிலே சொல்ல முடியாது. கேளாதவன் போலத் திரும்பிப் போய்விடலா மென்று நினைத்தேன்; அதற்கும் முடியவில்லை. ஒரு தவறு. மேலும் பல தவறுகளைச் சிருட்டிக்கிறதாம். அதை நிரூபிக்க எனக்கு மனம் துணியவில்லே.
எண்ணங்கள் முடிவடைவதற்குள் வழி குறுகி வந்து விட்டது. கைக் குட்டையை எடுத்து, வெயர்த்துக் கொட்டிய முகத்தைத் துடைத்துக்கொண்டே, தயக்கத் துடன் நான் "ஈஸ்வரியை நிமிர்ந்து பார்த்தேன்.
அந்தக் கண்கள்இன்னும் அப்படித்தான் இருந்தன. அன்றிரவு பார்த்த மாதிரியல்ல - அந்தக் கொடூரமெல்லாம் மறைந்து, குளிர் நிலவாக பரிவு-பாசம் வாத்ஸல்யம் எல்லாம் ஒருங்கே கட்டிப் புரண்டன.
"ராசா ஏன் வீட்டுக்கு வருவதில்லை. அந்தப் பக்கமே காணுேமே."

Page 40
76
என் உள்ளம் ஒருமுறை நடுங்கிற்று. நான் செய்த துரோகத்துக்கு, இதைவிடக் கொடுமையான தண்டனை இருக்கவே இருக்காது. நான் செய்த தவறு எத்தகைய பயங்கரமானது. பத்தினி வேஷம் போடும் பெண்களா யிருந்தால், என்னேக் காறி உமிழ்ந்திருப்பார்கள். என்னைக் காண-என்னுடன் மீண்டும் பேச அருவருப்படை வார்கள்.
ஆணுல் ஈஸ்வரி. ? இதுதான் பெண்மையா? மன்னிப்புத்தான் ஒருவனத் திரும்பவும் திருத்தி நடக்கச் செய்யுமா? நrநான் தட்டுத் தடுமாறிக்கொண்டு, "வீட்டிலே அம்மாவுக்குச் சுகமில்லை, அதுதான் வரவில்லே-நேரமா கிறது, நான் வருகிறேன்" என்று விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். ஈஸ்வரி அனுதாபத்துடன் சிரித்த சிரிப்பு, என்னைச் சாட்டைபோலச் சுற்றியிழுத்தது. நாலடி சென்று திரும்பிப் பார்த்தேன். ஈஸ்வரியும் பார்த்தாள். அந்தக் கணப்பொழுதில்-உலகப் பிரசித்தி பெற்ற அந்த நயன பாஷையில் பின்வருமாறு பேசிக் கொண்டோம்.
"ஈஸ்வரி, என் தவறு. என் வாழ்நாள் முழும்ைக்கும் போதும். என்னே மன்னித்து விடு என்னை மன் னித்துவிடு "
"மன்னிப்பா, எதற்கு ராசா? நீயே உன் தவறை உணர்ந்துகொண்டாயே, அதுவே போதும், உன் மனச் சாட்சியே உன்னே மன்னித்துவிட்டது. அந்தச் சம்ப வத்தை இருவருமே மறந்துவிடுவோம். போ! நேர
மிருக்கும்போது வீட்டுக்கு வரத் தவருதே"
195

கொள்ளி
திந்தி
நடுங்கும் கரங்களால் அதை வாங்கிப் பிரிக்கும் போதே அவன் முகத்தில் பயங்கரத்தின் சாயல் நிழ லாடியது. உடலெங்குமுள்ள குருதியை யெல்லாம் கணப் பொழுதிலே வாரியடித்தைப்போல முகமெல்லாம் கன்றிச் சிவந்து விகாரமடைந்தது. கண்கள் இருண்டு கொண்டே வந்தன.
தந்தியிலே பொறித்திருந்த எழுத்துக்கள் பயங் கரமாக, வெளிறிப்போன பிணத்தைப் போல.
"ஐயோ, அம்மா" என்று அவன் ஒருமுறை அலறிஞன். ஒரு முறைதான் அதன்பின் அவனுக்கு நி&னவேயில்லை. நல்ல வேளையாக அறிவற்று விழ இருந் தவனே அருகில் இருந்த தலைமையாசிரியர் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
மாலேயில், நிலைமை சற்றுத் தெளிவடைந்திருந்தது. பிரயாணத்துக்கு வேண்டிய ஒழுங்குகளில் தலைமையாசிரி யரும், இரண்டொரு உயர்வகுப்பு மாணவர்களும் ஒத்தாசை செய்து அவனைப் புகையிரத நிலையத்துக்கு அழைத்து வந்தனர். புகை வண்டியில் அவனே ஏற்றிய பின்னர், தலைமையாசிரியர், ஜன்னலோரமாக, வண்டிக்கு

Page 41
78
வெளியே நின்றபடி, "அழாதே ஜோசப் மரணம் மனி தனுக்கு இயற்கையானதுதான் என்ருலும் உன்னைப் பொறுத்தவரை உன் அன்னே இறந்ததைச் சகிக்கவே முடியாது" என்று பரிவுடன் ஆறுதல் கூறினுர், வண்டி, நகரத் தொடங்கியதும் கையை அசைத்து, "கவனமாகப் போய்ச் சேர்" என்று வழியனுப்பினுர்,
தந்தி வந்ததிலிருந்து, அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளேயும் அனுதாபத்துடனும், மிகுந்த அக்கறை யுடனும் அவர்கள் செய்து கொடுத்தார்கள். ஆணுல் அவனுக்கு எதையுமே உணர்ந்துகொள்ளச் சக்தியில்லே; பிரக்ஞையில்வே, உலகமே வெறும் சூன்யவெளியாகத் தெரிந்தது. அவன் காரணமின்றி வைத்த கண் வாங் காமல், எதையெதையோவெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
உலகத்தின் நாகரீக வீதிகளில் எல்லாம், வெறும் நடைப்பினமாக அவன் அலேந்து திரிந்தபோது, ஒரேயொரு பற்றுக்கொடியாக இருந்து வாழ்விலே அவனுக்கு நம்பிக்கையூட்டி ஆறுதலளித்தவள் அன்னை என்ற அத் தெய்வமே அவனுடைய நெஞ்சு வெடிதீது விடும் போலிருந்தது. அந்த அன்புத் தெய்வம் அவனே விட்டுப் பிரிந்துவிட்டாள். பிரதிபலனே எதிர்பாராமலே, அவனுடைய எதிர்கால நலன் ஒன்றையே குறியாக வைத்து இரவு பகலாக உழைத்துழைத்து ஓடாய்ப்போன அந்தத் தாய், இனி அவனுேடு பேசமாட்டாள். அவன் மட்டுமென்ன, அவனும் இனிமேல் அவளைப் பார்க்கவும் முடியாது; பேசவும் முடியாது. ஐயோ! இனி என்றுமே முடியாதே .
அறுத்துக் கொட்டிய ஆரத்திலிருந்து தெறித்துச் சித்றிய முத்துக்களைப்போல அவன் கண்கள் பொல

7ህ
பொலவென்று கண்ணிரைப் பெருக்கின. வேதனேயின் பளுமிக்க அந்தக் கண்ணிர்த்துளிகள் அவன் க்ையிலே தெறித்துச் சுட்டன. அவன் உடம்பு ஒருமுறை குலுங் கிய்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்தவன். மறுபடியும் எதையோ வெறித்து நோக்கினுன் ,
புகைவண்டி வெறும் ஜடம். இரும்பினுலும் மரத்தி ணு,லும் மனிதன் செய்த இயந்திரம். அதற்குச் சிந்திக்கத் தெரியாது; இதயமில்லே, உணர்ச்சிகளுமில்லை. அதனுல் அந்த அமைதியான இரவிலும்கூடப் பயங்கரமான ஓசையைக் கிளப்பிக்கொண்டு தலைதெறிக்க ஒடிக்கொண் டிருந்தது.
ஆணுல் மனிதன். அவனுக்கு எத்தனேயோ தத்துவங்களுக்கும் அப்பாற் பட்ட உண்மைகள் பொதிந்த இதயம் இருக்கிறது. தசையினுலும், நரம்பினுலும், இரத்தத்தினுலும் செய்யப் பட்ட இதயமல்ல; அன்பு, இரக்கம், ஈகை, உண்மை, தியாகம் முதலிய எத்தனையோ பண்புகளாலான இதயம். ஆம் இதயம்தான் மனிதன் மனிதன்தான் இதயம். அவன் இதயம் விம்மி எழுந்து புரண்டது. அலை மோதியது. அம்மாவை நினைத்து நசுங்கியது. அவன், தன் நிச்சயமற்ற வாழ்வுக்கு உறுதுணையாகி நின்றதை எண்ணி ஏங்கியது.
"அம்மா! நீ இல்லை என்ருல் நான் ஏது அம்மா எனக்கு வாழ்வேது அம்மா."
量 譬
பசியும் பட்டினியும், துன்பமும் துயரமும் குமைந்து வாழ்விலே அருவருப்பும் விரக்தியும் மேலோங்கி நின்ற நாட்கள் அவை,

Page 42
BO
ஜோசப்புக்கு அப்போது சிவப்பிரகாசம் என்பது பெயர். பத்திரிகைகளிலே பரீட்சை முடிவு வெளியான அன்று ஜோசப் என்ற பழைய சிவப்பிரகாசத்தின் பெயரும் அதிற் பிரசுரமாகி இருந்தது என்னவோ உண்மைதான். சிவப்பிரகாசத்தைப் போல அவனுடைய வயதுவந்த தாயும் அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந் ததும், "இனி என்ன? அவன் வாழ்வு விடிந்துவிட்டது!" என்று நம்பிக்கை கொண்டதும் உண்மைதான். ஆணுல், அவன் வேலே தேடி அலைந்தபோது, அந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் செல்லாக் காசாகப் போகும் என்று யார் கண்டார்கள்?
சிவப்பிரகாசம், சிறுவயதாய் இருக்கும்போதே அவன் தந்தை இறந்துவிட்டார். அதனுல் அவன் ஆங் கிலம் படிக்கவில்லை, ஆங்கிலக் கல்லூரிகளிலே, "இங் கிலிசு" படித்த துரைமாரும், முகாமைக்காரருமாகச் சேர்ந்து, "உதவிப் பணம்" என்ற திரையில், கேட்டதற் கெல்லாம் கொடுப்பதற்கு சிவப்பிரகாசத்தின் தாய் எங்கே போவாள்; எனவே அவன் கிராமத்துத் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலே தமிழ் படித்தான். எத்தனையோ கஷ் டங்களுக்கு மத்தியில் எஸ்.எஸ்.ஸியிற் சித்தியெய்தினுன், தமிழைப் படித்தவன், தமிழ் ஆசிரியராக வருவதைத் தவிர வேறு வழியேது? ஆசிரியருக்குப் படிக்க அவனிடம் பணம் இல்லை. கிடையாது என்று தெரிந்தும் ஒரு நப்பாசை அவன் வேலை தேடி அலேந்தான்.
அது ஒரு பாடாவதிக் கிராமம். கிராம மக்களின் குடிமனேக்குச் சற்றுத் தள்ளி, மேற்குப் பக்கமாகப் பட்டினத்துக்குச் செல்கிற வீதி, நாளொன்றுக்கு நாலேந்து தடவை அந்த வீதியிலே போகின்ற பஸ்வண்டி யாவது மாட்டுவண்டியாவது சற்று நின்று இளைப்பாறிக்

8.
கொள்ளும். அவற்றில் வருபவர்களும் சற்றுச் சிரமபரி காரம் செய்வார்கள். இந்தக் காரணங்களுக்காக, அங்கே இரண்டொரு தேநீர்க் கடைகள் இருந்தன. ஹோட்டல்கள்" அல்லது "கபே"க்கள் அல்ல. கிடுகினுல் வேய்ந்த கொட்டில்கள்.
அந்த தேத்தண்ணிக் கடை" ஒன்றுக்குப் பலகாரம் தயார் செய்து கொடுப்பதன் மூலம் சிவப்பிரகாசத்தின் தாய், சின்னமாளுக்கு நாளொன்றுக்கு 'நாலு பணம்' மிச்சமாகக் கிடைக்கும். அத்துடன் அவள் தென்னுேலே வாங்கிப் பின்னி வியாபாரம் செய்தாள். அதற்காக அவள் நாள் முழுவதும் உழைக்கவேண்டி யிருந்தது" ஒருநாள் இரண்டு நாளா? சிவப்பிரகாசத்துக்கு வயது இருபது. அவன் ஐந்துவயதாயிருக்கிறபோது தொடங்கிய பிரயாணம், இன்னும் முடிந்தபாடில்லே. ஆணுல், என்ருவது ஒருநாள், சிவப்பிரகாசம் தன்னேக் காப்பாற்று வான் என்ற நம்பிக்கைமட்டும் இருக்கிறது. எஸ்.எஸ்.ஸி. சித்தியடைந்து விட்டானல்லவா?
ஆஞல், வழியெங்கே?
சிவப்பிரகாசம் எத்தனையோ படிகள் ஏறி இறங்கு கிருன், எங்கெல்லாமோ விண்ணப்பங்கள் எழுதிப் பார்க்கிருன். யார் யாரையோ வெல்லாம், பல்லேக் காட்டி உதவி கேட்கிருன்.
சின்னம்மாளும், தன்னை ஓடாகத் தேய்க்கிருள். பலன்.?
量 獸
சின்னம்மாள் முருகன்மீது பக்தி பூண்டவள். வீதியைத் தாண்டிக் கூப்பிடு தூரத்திலே முருகன் கோயில், வெள்ளிக்கிழமை வரத் தவறினுலும், அவள்

Page 43
82
கோயிலுக்குப் போகத் தவ றமாட்டாள். அத்தனே பக்தி அவளுக்கு. தந்தையில்லாத தன் மகத் இத்தனை காலமும் காப்பாற்றி ஆளாக்கி வைத்தது முருகனுடைய அருள் என்பதில் அவளுக்கு எள்ளளவேனும் சந்தேக மில்லே.
அன்றும் ஒரு வெள்ளிக்கிழமைதான்.
சின்னம்மாள், அதிகாஃலயிலேயே கோயிலுக்குப் போனுள். தன் மக%ன முருகப் பெருமானது திருக் கரத்திலே ஒப்புக்கொடுத் து வெகுநேரம்வரை மனம் உரு கினுள் அழுதாள்.
கையிலே அர்ச்சனத் தட்டும் கருத்திலே அருள் வெள்ளமுமாக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக் கும்போது, தூரத்திலே சிவப்பிரகாசம் வருவது தெரிந்தது.
"வாடா, சிவம் இந்த விபூதியைப் பூசிக்கொள். இன்ருேடு உன் கஷ்டமெல்லாம் தொஃலந்துவிடும்" என்று சொல்லிக் கையிலே விபூதியை எடுத்து நீட்டி யவள், திடுக்கிட்டுப் போனுள். "ஏண்டா தயக்கம்? கையிலே என்னது?" என்று சற்று உரமாகக் கேட்டாள் அவள்.
அவனும் இலேசாகச் சிரித்தபடியே, நானும் அப் படித்தானம்மா நினைக்கிறேன். இது வேதப் புத்தகம்" என்று புத்தகத்தைத் தூக்கிக் காட்டினுன்.
'முருகா! இதென்ன சோதனை" என்று கோயி விருக்கும் திசையை நோக்கிக் கத்தினுள். அவள் கண் களிலே கண்ணீர் பெருகியது; அவனும் அழுதான் இருவரும் அழுதார்கள்.

BB
"அம்மா நான் இந்த வருஷம் கட்டாயமாக உபாத்தியாயருக்குப் படிக்கப் போய்விடுவேன். அப்புறம் எங்கள் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும்!"
"அதற்குப் பணமேது?" என்ருள் அவள்.
"ஒரு போதகர் உதவி செய்வதாகச் சொன்னுா அம்மா. அவர் கட்டாயம் செய்வார். இப்போதுகூட அவரைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன்" என்று சொன்னுன் அவன்.
சின்னம்மாளுக்கு அவன் சொல்வது எதுவுமே விளங்க வில்லை. உபாத்தியாயருக்குப் படிப்பதானுல், இரண்டு வருடம் படிக்கவேண்டுமென்று அவள் அறிந்திருக்கிருள். அப்படியானுல் அந்த இரண்டு வருடமும் அந்தப் போதகர் உதவி செய்வாரா? அவளுக்கு அதை நம்ப முடியவில்லே.
"இதென்ன தம்பி, நீ சொல்வது எனக்கு விளங்க வில்லேயே, போதிகர் உனக்கு ஏன் உதவி செய்கிருர்? அவருக்கு அவ்வளவு பணம் ஏது?" என்றெல்லாம் தெளி வாகக் கேட்டாள்.
சிவப்பிரகாசம் ஒரு கணம் தயங்கினுன், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "நான் வேதத்திற் சேர்ந்து விட்டேன் நான் ஏழை என்பதற்காக, அவர்களது சங்கம் எனக்கு உதவி செய்கிறது" என்று பயந்து பயந்து சொல்வி முடித்தான்.
சின்னம்மாள் திடுக்கிட்டுப் போனுள். "இதென்ன கர்மம்" என்று உறுமினுள். அவன் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு மேலும் சொன்னுன். "நான் என்னுடைய பெயரைக் கூட மாற்றிக்கொண்டு விட்டேன். இனிமேல் ஜோசேப்பு என்பதுதான் எனக்குப் பெயர்"

Page 44
சின்னம்மாவின் உடல் பயத்தினுலும் ஆத்திரத்தி ஞலும், முருகனது பேரில் உள்ள நீங்காத பக்தியினுலும் நடுங்கியது. அவள், கோயில் இருந்த திசையை நோக்கிக் கையெடுத்தாள்."அப்பனே, முருகா! என் குழந்தையைக் காப்பாற்று" என்று முறையிட்டாள்.
獸 暑 疆
T ஜேசப் ஆசிரிய கலாசாலையிற் சேர்ந்து நான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டன.
முதலாவது விடுமுறையில் ஒருநாள் இரவு, சாப் பிட்டுவிட்டுப் படுத்த படுக்கையிலேயே வேதத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தான். சாலோமனுடைய சங்கீதம் அது.
"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிருர், நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னேப் புல் உள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்களண்டையில் காட்டுகிருர். சின்னம்மாள் எல்லா வேலைகளேயும் முடித்து வைத்துவிட்டு, அவனுக்கருகில் போனபோது, பின் வரும் வாக்கியம் அவள் காதுகளில் விழுகிறது.
"நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடிந் தாலும், பொல்னாப்புக்குப் பயப்படிேன்." சின்னம்மாள் மெதுவாக அவன் படுத்திருந்த பாயிலே உட்கார்ந்தாள். ஜோசப்புக்கு அளவு கடந்த உற்சாகம். ܕܠܐ
"இதோ பாரம்மா. இதைப் படிக்கும்போது மனதிலே எப்படியோ ஒரு தெம்பு வந்துவிடுகிறது" என்று அந்த வாக்கியத் துக்கு வியாக்கியானம் செய்தான்,

85
சின்னம்மாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதைத் தள்ளுவது, எதைக்கொள்ளுவது என்பதெல்லாம் அவளுக்கு சிக்கலான விஷயம். கண்களிலே கண்ணீர் துளிர்க்கிறது. ஆனந்தக் கண்ணீர். எத்தனையோ வருடங்கள் எதிர் பார்த்திருந்த கனவு. ஆம் இன்னும் சில மாதங்களில் மகன் ஓர் ஆசிரியனுய் விடுவான். அப்புறம் அவன் வாழ்வு ஒளி பெற்றுவிடும்.
எட சிவம் என்னதான் கஷ்டமாயிருந்தாலும் நீ இப்படிச் செய்திருக்கக்கூடாது" என்ருள்.
"என்னம்மா அது?" என்று கேட்டான் ஜோசப்.
எங்கள் பரம்பரையிலே இந்தக் கும்பனிக்கார ருடைய வேதத்தின் மணமே இல்லே!"
"உண்மைதான் அம்மா என்ருலும் இந்தப் பழைய பெருமை நமக்குச் சோறு போடுமா?" என்று அவன் குழந்தைப் பிள்ளேத்தனமாகக் கேட்டுவிட்டான். சின்னம்மாளுக்குப் பொத்துக்கொண்டு கோபம் வந்து விட்டது.
"ஏனடா, இத்தனே காலமாக நமது பாட்டன் பாட்டி யெல்லாம் இப்படித்தான் "சமயம் மாறி"ப் பிழைத்தார்களோ? நீ என்னவென்ருல் உன் அப்பன் வைத்த பெயரைக்கூட மாற்றிவிட்டாயே" என்று சற்றுக் கடினமாகவே கேட்டுவிட்டாள்.
அந்தக் காலம் அப்படித்தான் நடந்தது. ஆணுல் இந்தக் காலத்திலே." என்று முடிக்க முடியாமல் இழுத்தான் அவன்.
சான்னமோப்பா இந்தக் கவிகாலத்தைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. ஏதோ எனக்கு முருகன் விட்ட வழிதான்" என்று பெருமூச்சு விட்டாள். சிறிது

Page 45
8.
நேரம் அமைதியாக யோசித்தாள். அதன்பின் அவளே அன்போடு "சிவம்" என்று கூப்பிட்டாள்.
"அம்மா" என்ருன் ஜோசப். "நீ எப்படியாவது நல்லாய் இருந்தால் அதுவே போதும். நான்மட்டும் கண்ணே மூடிவிட்டால் எங்கள் பரம்பரைக்குத் துரோகம் செய்துவிடாதே."
"என்ன இது? கண்டபடி யெல்லாம் உளருதே அம்மா" அவன் குரலில் பயமும் அவதியும் தொனித்தன. சின்னம்மாள் இலேசாகச் சிரித்தபடி, "என்னசிவம் இது நான் என்ன குழந்தையா, இன்னம் கனகாலம் இருக்க? கிழமாகிவிட்டேன். இன்ருே நாளையோ என்றிருச் கிறேன்"
" போதும் அம்மா " என்று அங்கலாய்த்தான் அவன்
"நாம் நினைத்தபடி நடக்கவல்லவை ஏது? எல்லாம் அந்தப் பெருமான் விட்ட வழியே நடக்கும்" என்று அவள் பெருமூச்செறிந்தான். உடனேயே குரலேத்தாழ்த்தி "மறந்து போய்க்கூட உன்ரை வேத முறைப்படி என்னை மண்ணுக்குள் புதைத்துப் பாவம் செய்து விடாடு உன்னுடைய கையாலே கொள்ளி வைத்துவிடு?" என்ருள்.
ஜோசப் இந்த வார்த்தையைப் பொறுக்கமா. டாமல், "அம்மா" என்று கத்திவிட்டான். அவனுக்குப் பயத்தினுல் உடல் முழுவதும் நடுங்கியது. உடனேயே வேதத்தை எடுத்துப் படிக்கத் ெ தாடங்கினுன்.
"நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்."
桔

87
இதை நினைத்து நினைத்து இரவு முழுவதும் ஜோசப் விம்மினுன், அழுது கண்கள் வீங்கிச் சிவந்துவிட்டன. "என்னே ஆளாக்கிய பெருமைக்கு உங்கள் பிள்ளே இதைக்கூடச் செய்யமாட்டானு?" என்று மனத்திற் குள்ளே சத்தியம் செய்துகொண்டான்.
இதோ! அவன் இறங்கவேண்டிய இடம் வந்து விட்டது. நல்லவேளேயாக அந்த ரயிலில் வந்திறங்கு பவர்களே ஏற்றிச் செல்ல நிற்கும் பஸ்ஸும் காத்து நிற்கிறது. வீடு நெருங்க நெருங்க அவனது துயரம் மேலும் மேலும் பெருக்கெடுத்தது. ரயிலிலிருந்து இறங் கியது. பஸ்ஸில் ஏறியது. எதுவுமே அவனுக்குத் தெரிய வில்லே. எல்லாமே ஏதோ ஒரு இயந்திரகதியில் நடை பெறுவதுமாதிரிப் பிரமை, பயங்கரமான கனவு நேற்று இந்நேரம் எங்கோ இருந்தான். இன்று இங்கு வந் திருக்கிறன். எதற்காக?
பஸ் வந்துவிட்டது. இதுதான் கிராமத்தின் கடைத் தெரு. கடைத் தெருவிலே ஒரு மனிதப் பூண்டும் கிடையாது. கடைகள் சார்த்திக் கிடக்கின்றன. கடைக் குப் பலகாரம் கொடுக்கிறவளல்லவா செத்துப்போனுள்? அதனுல் கடையைப் பூட்டித் துக்கம் தெரிவிக்கிருதர்கள். எங்கும் வெறிச்சென்று இருக்கிறது.
அவன் பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்கிருன் ஒடு கிருன் சோர்ந்துபோய்த் தள்ளாடுகிருன்.
"டண் டனக், டண் டனக்" என்று பினப்பறையின் சத்தம் அவன் காதுகளில் விழுந்து, இதயத்திலே சம் மட்டி கொண்டு முழங்குவதைப் போல எதிரொலிக் கிறது.
இதோ அவனது வீடு. இத்தனை காலமும் அவனு டைய அன்னே அவனக் கட்டித் காத்து வளர்த்த வீடு,

Page 46
88
முன்பெல்லாம் அந்தக்குடிசை ஏதோ சொர்க்கம்போலத் தெரியும். இன்று ஐயோ, என்ன பயங்கரம்
தூரத்திலே வரும்போதே யாரோ அவனைக் கண்டு விட்டார்கள். அந்தச் செய்தி கணப்பொ முதிலே எங்கும் பரவுகிறது. "கொள்ளி வைக்கிற பிள்ளே வந்து விட்டான். இனிப் புறப்பட வேண்டியதுதான்"என்று ஒருவன் சொல்லுகிருன். எல்லாரும் அங்கு மிங்கும் துரிதமாக நடமாடுகிருர்கள். படலைக்கு வெளியே ஒரு பக்கத்திலே நாலேந்து பேர் நின்று ஏதோ கட்டுவதும் அலங்கரிப்பதுமாய் இருக்கிருர்கள். தோரணங்கள், கமுகு ஒலேகள், இளநீர்க் குரும்பைகள்.அது வெள்ளைச் சீலே போர்த்த பாடை,
ஜனங்கள் மத்தியிலே பரபரப்புக் கூடுகிறது. பெண்களின் ஒப்பாரி "ஒ ஓ ஒ' என்று உச்சத்துக்கு உயருகிறது. பிணப்பறையின் சத்தம் அதை மிஞ்சு கிறது. s
உள்ளே படலேயோரமாகப் போடப்பட்டிருந்த வாங்கு ஒன்றில், அவனுக்கு "ஞானஸ்நானம்" கொடுத்த பாதிரியார், இரண்டொரு கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். எல்லோர் முகத்திலும் அமைதி. எல்லோர் முகத்திலும் துக்கத்தின் சாயல், எல்லோர் கண்களிலும் ஆவல் அவனேப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல்.
முகத்திலே பயங்கரமான மாற்றம், வீங்கிச் சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிகிறது. ஜோசப் படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழை கிருன், விம்மல் பொருமலாக அழுகை இதயத்திலிருந்து வெடித்துப் பொங்குகிறது. எல்லாரையும் ஒருமுறை சுற்றிப் பார்க்கிருன்,

B4
அவ்வளவுதான்!
பிணத்துக்கருகில் இருந்த அடுத்த வீட்டு அம்மாள் தஃலவிரி கோலமாக ஓடிவந்து, அவன் காலேக் கட்டிக் கொள்கிருள். "என்ரை ராசா உன்னேப் பெத்து வளர்த் தவள் உன்னே விட்டுப் போயிட்டாளேடா ஆ ஆ" என்று ஒப்பாரி வைக்கிருள். அதைத் தொடர்ந்து பல பெண்கள அவனைச் சூழ்ந்து கொள்ளுகிருர்கள்.
அவன் கண்கள் இருளடைகின்றன. எல்லாமே சுழலுவதாகப் பிரமை தட்டுகிறது. "அம்மா ஆ ஆ" என்று அவன் பயங்கரமாக அலறுகிருன். மூர்ச்சித்து விட்டான்.
量 量
ஜோசப் கண் திறந்து பார்த்தபோது, அவனே இத் த&ன காலமாகக் கண்ணிமைபோலக் காத்து ஆளாக்கி வைத்த அன்னே அங்கே இருக்கவில்லே. அவனுக்கு பிரக்ஞை வரும்வரை காத்திருக்காமல் அவளேக் கொண்டு போய் மயானத்தின் எரிசிதையில் வைத்துச் சுட்டுப் பொசுக்கிவிட்டார்கள்
9.

Page 47
நானும் நாங்களும்
விங்க தம்பி, இங்கிட்டு இருக்க ஏலும்"
பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு, ஒவ் வொரு "கம்பார்ட்மெண்"டாக நுழைந்து, நுழைந்து இடம் தேடிக் கொண்டு வந்த நான், திரும்பிப் பார்த் தேன். வயது வந்த ஒரு அம்மாள், ஒரு இளமங்கை, ஒரு வாலிபன் ஆகிய மூவர் மட்டும் இருந்த ஒரு பகுதியிலிருந்து, அந்த அழைப்பு வந்தது. அந்த அம்மாள் தமிழில்தான் பேசினுள். என்ருலும் அந்தப் பேச்சே அவள் ஒரு சிங்களத்தாய் என்பதை எடுத்துக் காட்டிற்று.
ஒரு தாயின் உணர்வோடும், பரிவோடும் அவன் என்ன அழைத்தது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந் தது. உற்சாகத்தோடு, நன்றி தெரிவித்துவிட்டு, நான் அந்த அம்மாளுக்கருகில் உட்கார்ந்தேன்.
அந்த அம்மாளேப்போல, அவ்வளவு வளர்ந்த பெண்களே இதுவரை நான் பார்த்ததே இல்லை. மிகப் பெரிய தோற்றம். ஒவ்வொரு அங்கங்களும் அளவுக்கு மிஞ்சிப் பருத்து. பார்ப்பதற்கே அவலட்சணமாக இருந் தாள். பாவம் தன் கைகளே எடுத்து ஏதாவதொரு பொருளே வாங்குவது கொடுப்பது கூட அவளுக்குப்

9.
பெரும் சிரமமாக இருந்தது. அந்த இளம் பெண்ணேக் கொடி என்று சொன்னுல் உண்மையில் அது மிகை யாகாது. அவ்வளவு மெல்லிய உடற்கட்டும், கொள்ள யழகும் பெற்றுத் திகழ்ந்தாள் அவள். அவனும் அப் படித்தான். ஒற்றை நாடி உடலமைப்பு. உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த முகம்.
வண்டி நகரத் தொடங்கியதும், அந்த அம்மாள் என்னுடன் பேசத் தொடங்கினுள்:
தம்பி, எங்கே போருங்?" "யாழ்ப்பாணம் நீங்கள்..?" "நாங்களுங் யாப்பாணங்தாங்" என்று பதில் வந்தது. தொடர்ந்து, "மிச்சங் நல்லம். எல்லாருங் பேசிக்கிட்டுப் போக ஏலும்" என்ருள் அவள்.
நான், ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத் தேன். உடனே, அவள் எதிரிலிருந்த இருவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். வாலிபனைக் காட்டி, "இவன் நம்ப பிள்ளே!" என்ருள். அப்புறம் பெண்கணப் பார்த்து "அவனும் நம்ம பிள்ளதாங் இவங் கட தங்கைச்சி" என்றுள். பரஸ்பரம் எல்லோரும் சிரித்துக்கொண்டாலும், என் சிரிப்பு நீடித்தது. அதைப் புரிந்துகொண்ட அம்மாள் என்னேப் பார்த்து கணிரென்ற குரலில் சிரித்தபடியே, "நான் தெமிளு மிச்சங் பேச மாட்டேங். அதுதான் தம்பி சிரிக்கிறது" என்ருள். அந்த அம்மானின் பெருந்தன்மை என்னத் திகைக்க வைத்துவிட்டது.
இல்லே அம்மா, நீங்கள் நன்ருகத் தமிழ் பேசுகிறீர் கள்" என்று மிகவும் பரிவுடன் சொன்னேன் நான். இதைக் கவனித்த வாலிபன் என்னேப் பார்த்துப்

Page 48
ህሪ
புன்முறுவல் செய்த வண்ணம், "உங்களுக்குச் சிங்களத் தில் பேச முடியுமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
"இல்லே. சில வார்த்தைகள் தெரியும், சிங்களத்தைப் படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்" என்று மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொண்டேன்.
"அது சுட்டிக் கார்யமில்லே, கொஞ்சம் தெமுள்லே மிச்சங் பேச ஏலும்" என்ருள் தாய்,
"எனக்கும் கொஞ்சம் தெரியும்" என் மு ன் வாலிபன்.
"சந்தோஷம்"
மூவேயில் இருந்த அந்தப் பெண் மிகுந்த நாணத் தோடு என்னேப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள், அவளுக்குத் தமிழ் தெரியுமோ என்னமோ, ஆணுல் நாங் கள் பேசிக் கொண்டிருந்ததன் அர்த்தம் மட்டும் விளங்கி விட்டது என்று தெரிந்தது. இதைக் கவனித்த தாய் மகளுக்காக மொழி பெயர்ப்பு செய்தாள், "அவன் தெமிள் பேசமாட்டாங்"
இனவெறி தன் கோரமான ஸ்வரூபத்தைக் காட்டித் தலே விரித்தாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி காடையர்களும், கிரிமினல் குற்றவாளிகளும் அங் கங்கு தங்கள் கை வண்ணத்தைக் காட்டிக்கொண்டிருந்த காலம் அது. இதை அறிந்து நடுங்கிப் போன எனது தாய், "உத்தியோகம் வேண்டாம் ஊருக்கு வந்து சேர்அதுவே போதும்" என்று கடிதத்துக்குமேல் கடிதம் அனுப்பிக்கொண்டிருந்தாள். நானும், "ஒன்றுக்கும் பயப்படவேண்டாம். இங்கு ஒரு அசம்பாவிதமும் நடக்க வில்லே-நடக்கக்கூடிய நிலமையும் இல்லே" என்று பதிலுக்குமேல் பதில் எழுதிப் பார்த்தேன். கடைசியில்

98
"உடனே புறப்பட்டு வா" என்று தந்தியே வந்துவிட் டது. அம்மாவைப் பொறுத்த வரையில், அது அவ ளூடைய கடைசி ஆயுதம், இனி என்ன செய்வது? ஊருக்குப் போய், அம்மாவைச் சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்லிவிட்டு வர்லாமென்று எண்ணி, ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வருகிற எனக்கு, யாழ்ப் பானம் போய்ச் சேரும் வரையில் பேசிக்கொண்டே போவதற்கு உதவியாக ஒரு சிங்களக் குடும்பமே வருகிறது.
எதிரே இருந்த பெண்ணே அஃனத்துகொண்டே "இவங்கட அக்கா யாப்பாணத்திலேதாங் இருக்கிருங்? அவனுக்கு ஒரு பபா கிடைத்திருக்கிருங். அது சுட்டித் தான் போறங்" என்று சொன்னபோது, நான் அந்த அம்மாளே ஏறிட்டு நோக்கினேன்.
"ஆமா, தம்பி" என்று தான் சொன்னதை ஊர் ஜிதம் செய்தாள் அவள்.
"அவர் என்ன செய்கிருர்" என்றேன் நான் ஆச்ச சரியத்தோடு,
"யாரு, அவங்க புருஷனு?" என்று தன் மயக்கத் தைத் தெளிவுபடுத்தினுள் அவள்.
"ஆமா"
அவள், நாங்கள் இருந்த ஆசனம், மேலே சாமான் வைப்பதற்காகப் பொருத்தப் பட்டிருந்த தட்டு போன்ற மரச் சாமன்களேக் காட்டியபடியே, "இந்தி-அந்து புட்டுவம் எல்லாம் விக்கிற கடே" என்று தடுமாறினுள்,
"வேனிச்சர் ஷொப்" என்று அவளுடைய மகன் விளக்கம் கொடுத்தான்.
"தடை எங்கே இருக்கிறது? டவுணிலேயா?"

Page 49
"ஆமா, ஹொஸ்பிட்டல் ரோட்லே" "கொழும்பிலே நடைபெற்ற காடைத்தனத்திற்குப் பின்னர், அங்கிருந்த தமிழ் மக்களில் அநேகர் யாழ்ப் பாணத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அதே போல், யாழ்பாணத்திலிருந்த சிங்கள மக்களும், தங்கள் பிர தேசங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிருர்கள் என்றும் செய்திகள் வந்தன. ஆணுல், இந்த அம்மாளோ பரு வத்தின் வாசலில் நிற்கிற பெண்ணையும், எதிர் காலத் தைப்பற்றி என்னவெல்லாமோ கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கிற வாலிபனயும் துணிந்து அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் போகிருள்.
நான் நிமிர்ந்து உட்கார்ந்து, உற்சாகத்தோடு கீதை கேட்கத் தொடங்கினேன்.
"அங்கே, அவர்கள் எப்படி பயமில்லாமல் வாழ் கிருர்களா?"
"என்ன தம்பி பயம்? அவுங்களுக்கு அங்கே சீவிக்க ஏலும், அவுங்க மனிசங் மாதிரி இருக்கிறது"
நான் சிரித்தேன். "ஏன் சிரிக்கிறே தம்பி?"
"அவர்கள் மட்டுமல்ல, எல்லாரும்தான்மனிதர்கள்" "இல்லத் தம்பி, மனிசங்களிலே, மிருகம் மாதிரி ஆட்கள் இருக்கும். அவுங்களுக்கு வெசர் வந்தா மணி சனேயே, பிடிச்சுக் தின்னுப் புடுவாங் அம்பாறை வெசயம் பாருங்க, என்ன தம்பி, நாங் சொல்கிறது?"
"சரிதான்" "இங்க பாருங்க தம்பி, ஒங்களுக்கு சிங்கள பாசெ தெரியறது இல்லே. நாங் கொஞ்சம் தெமிளு பேசுவாங்.

95
இப்ப நாங்க ரெண்டுபேரும் மனதிலே இருக்கிறது பேசுருங், நிங்க சிங்கள பாசெ தெரியாதது சுட்டி கவலைப் படருங், நாங் தெமிளு மிச்சம் நல்லாப் பேசப் பாக்கிறது"
"சரி அம்மா! நீங்களும் நானும் அப்படிச் சொல்லு கிருேம், எங்களைப்போல் இன்னும் பலர் சொல்கிருர்கள். ஆனுல் எங்கள் அரசாங்கம்-?"
"அவங்க செய்த வேலைதாங் எல்லாம். இந்தச் சனங்களுக்கு மிச்சம் காரியம் செய்யோணும். அவுங் களுக்கு இன்னும் பசி போனதில்லை. அவங்க வேலே யில்லாம மிச்சம் கஷ்டப் படருங். இங்கே பாருங்க நம்ப பிள்ளே கூட எஸ். எஸ். ஸி படிச்சிருக்கிருங். ஒரு வேஜல இல்லை; முனு வருஷமா வீட்டிலே தான் இருக் கிருங்.."
"அப்படியா?"
இவன் ஒரு ஆள் தானே தம்பி மிச்சம் பேர் ரோட்லே திரியிறது. அது சுட்டி அவங்க கவலே எடுக் கிறது இல்லே. சும்மா இந்தப் பாசெயெப் போட்டு வெஃளயாட்டுப் பாக்கிருங்"
என்ன விளேயாட்டு? ஜனங்கள் அதற்கு மிகவும் முக்கியங் கொடுக்கிறர்கள். அது பற்றி மிகவும் கவலை யெடுக்கிருர்கள்."
"ஆமா தம்பி, மிச்சங் கவலெ எடுப்பாங், நம்ப பாசெ நமக்குப் பெரிசு, ஒங்க மாசெ ஒங்களுக்குப் பெரிசு."
"ஆம், அவனவன் பாஷை அவனவனுக்குப் பெரிது தான்."
"அது சுட்டி, இப்படிச் செய்றது நல்லம் இல்லே"

Page 50
ցՑ
"எப்படி?" "இந்தக் கவர்மெண்டிலே மிச்சம் சிங்கள ஆளுக இருக்கிறது. அது சுட்டிதாங் அவங்க சிங்கள பாசெ கொண்டு வந்தது. அது மிச்சம் நல்வா யில்லே."
"இதனுல் தான் இத்தனே கலவரங்களும் நடை பெறுகின்றன"
"இங்கே பாருங்க, யாப்பாணத்திலே, தெமின் ஆளுங்க எல்லாம் சேர்ந்து, சிங்கள ஆளுங்களைத் திட்டுகிருன், அவங்க நம்ம&ள மறந்து போறது."
"நீங்க சொல்றது விளங்கவில்லே!" "என்ன தம்பி இது நாங் சிங்கள ஆளு. நீங் தெமிள ஆளு. நாங் எல்லாம் மிச்சம் சந்தோஷமா பேசுறது. சேர்ந்து வாறது"
"சரி தான் அம்மா. சந்தோஷமான காரியம்" "இப்டி, நாங் போல மிச்சம் பேர் சிங்கள ஆளுங்க இருக்கிருங். அவுங்க எல்லாம் தெமிழுக்கு "பரிட்டி" கேட்கிறது. அவுங்க ஏங் அப்படிக் கேட்கிருன்?"
"எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டுமென் பதற்காக."
"ஆ" அப்டிச் சொல்லுங்க தம்பி அப்ப, இந்தத் தெமிஞ ஆளுங்க என்ன செய்யோனும்? "பரிட்டி" கேட்கிற சிங்கள ஆளுங்களோடே ஒத்துமைப்பட வேணும்."
நம்ம கர்தய்யா " இருக்கிருங் பாருங்க! அவங் மிச்சம் நல்ல வளிபோருங்" .
வகுப்பு வெறி உக்கி بية ساهمتها இரத்தக்களரி ஏற்பட்ட சபைத்திலும் தானம் தவருமங், இரு இன மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட நஐபிறந்த தமிழ்த் தலங்.

97.
"நான், அவருடைய தொகுதியைச் சேர்ந்தவன் தான்"
"என்ன, தம்பி நீங்க "பொபின்ட் பீற்றுே" ஆளா? ஓ அப்ப, நாங் மிச்சங் (அதிகம்) சொல்ல வேண்டிய தில்லே அவங்க மாதிரி வேலெ செய்யோனும்!"
பொயின்ட் பீட்ருே" என்று சொன்னபோது, அந்த இருசகோதராகளும் ஆச்சரியத்தோடு என்ஃனத் திரும்பிப் பார்த்தார்கள். உடனே, அம்மாள், உரத்த குரலில்ே, நான் பருத்தித்துறையைச் சேர்ந்தவன் என் பதை மிகுந்த உற்சாகத்தோடு சிங்கள மொழியில் அவர்களுக்குத் தெரியப்படுத்தினுள்.
எனக்குப் பூரிப்புத் தாங்க முடியவில்லை. அவர்கள் எல்லோருமே எனது தாயைப் போல, சகோதரர்களேப் போலவே தோற்றமளித்தார்கள்.
"இது என்ன கவர்மெண்ட் தம்பி இதெப் பாக்க, நாங்க நல்ல கவர்மெண்ட் உண்டாக்க ஏலும்" இலங்கை மாதாவைப் போல இருந்த அந்தத் தாய் இதைச் சொன்னபோது நான் ஒளி மிகுந்த கண்களால் அவளே நோக்கினேன்.
ஆமா, தம்பி தெமிளன், சிங்களவன் அப்டி யெல்லாம் பாக்காமே-சண்டை பிடிக்காமே-நாங்க வேலே செய்யோணும். அப்போ அது ஏலும்"
வண்டி கொடிகாமம் ஸ்டேஷனில் நின்றது. நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் எல்லோரி டமும் விடை பெற்று இறங்கிய போது, அந்தத் தீாய் யாழ்பாணத்தில், தன் மகளுடைய வீட்டுக்கு வரும்படி கேட்டுக்கொண்டாள். வண்டி நகரத் தொடங்கிய

Page 51
98
போது, அந்தப் பெண் தன் தாயிடம் சொல்லிய வார்த்தை என் காதுகளில் விழுந்தது:
"அம்மா, மட்ட தெமிள இக்கினக்கண்ட ஆசாவ தீயன்ன"
இ : எனக்குத் தமிழ் படிக்க ஆசையாக
ருக்கிறது.)
சுமார், ஆறு மணித்தியாலம் செய்து கொண்ட அந்தப் பிராயணத்தில், நானும் அவர்களும், எங்கள் வழிப் பயணத்துக்குக் கொண்டுவந்த "கிரிபத்'தையும் இட்டலியையும் கலந்து பரிமாறிச் சாப்பிட்டதும், நான் ஒரு சிங்கள குடும்பத்தோடு சேர்ந்து பிரயாணம் செய்து வந்ததிை, என்னே வரவேற்க ஸ்டேசனுக்கு வந்திருந்த அம்மா பார்த்து வாயைப் பிளந்துகொண்டு நின்றதும் இங்கே முக்கியமல்ல. அழகான அந்தப் பெண்ணேயும், எடுப்பான இளைஞனேயும் மட்டுமல்ல, அளவுக்கு மிஞ்சிப் பருத்துப் பார்ப்பதற்கே அவலட்சணமாயிருந்த அந்த
அம்மாளேக்கூட மறக்க முடியவில்லே
நான், நாங்களே என்றும் மறந்துவிட முடியாது. ஏனென்ருல், நானும் நாங்களும் சங்கமம் ஓர் குலம்
1956

இலட்சிய நெருப்பு
கிராமத்துக்கு வடக்கே கொலு வீற்றிருக்கிற பிள்ளையார் கோயிலில் ஒருநாள் அதிகாலேயில் மணிச் சத்தம் கேட்டது. கலியானமென்ற விவகாரத்தையே யறியாத அந்தத் தெய்வத்தின் திருச் சந்நிதியில் நிழல் கொடுத்து உதவுகின்ற வேப்பமரத்தின் கீழ், உள்ளப் பெருக்கோடு நின்ற தெய்வி தலேயைக் குனிந்து கொடுக்க, ஐயர் நீட்டிய மஞ்சள் கயிற்றை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு அவளது கழுத்தில் முடிந்து நிமிர்வதற்கிடையில் பூரிப்புத் தாங்க முடியாத முருகன், எ ல் லா வ ற்  ைற யு ம் மறந்து, அவளது பட்டுப் போன்ற கன்னத்தில் தட்டிவிட்டான். இந்த வேடிக் கையைத் தங்கள் கடந்த கால நினேவுகளோடு நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்த பூசாரியாரும், பரியாரியாரும் வாய் விட்டுச் சிரித்த சம்பவம், முருகன் தட்டியதனுல் சிவந்துபோன தெய்வியின் கன்னத்தை மேலும் கன்றிச் சிவக்கச் செய்ததோடு மட்டும் நில்லாமல், முருகன் என்ற ஆண் மகனேக் கூடத் தலேயைக்குனிந்து கொள்ளச் செய்துவிட்டது.
"அதுதான் முருகா, வைக்கிற இடத்திலே வைக்க
வேண்டும். மாட்டுக்கு வைத்த அடியைத் திருப்பித் தெய்விக்கே வைத்துவிட்டாயே; அதுவும் இவ்வளவு

Page 52
100
கெதியில்" என்று சொல்லிவிட்டு முத்துப் பரியாரியார் தெய்வியைக் குறும்புத்தனமாகப் பார்த்துச் சிரித்தார். நாலந்து நாட்களுக்கு முன்பு, முருகனுடைய மாடு, தெய்வியின் கீரைப் பாத்தியைத் துவம்சம் செய்துவிட, ஆக்கிரம் தாங்காத தெய்வி அந்த மாட்டுக்கு அடித்து விட்டாள். அதைக் கேட்கப் போன போது, "மாட்டுக்கு வைத்த இந்த அடியை வைக்கிற இடத்திலே வைக்க வேணும்" என்று அவள் துடுக்குடன் பேசியது அப்போது தான் முருகனுக்கு நினைவுக்கு வந்தது.
"எப்பதான் என்ரை கையிலே சிக்குவா எண்டு பாத்துக்கொண்டிருந்தேன். இப்ப வளமா வந்துமாட்டிக் கொண்டு. " என்று இழுத்தபடியே அவளே ஒரக் கண்ணுற் பார்த்துச் சிரித்தான் அவன்.
"போதும் விடுங்க. உங்க வீரப்பிரதாபத்தை அப் புறம் நடத்துங்க!" என்று சற்றுக் குறும்புடன் சொல்லி விட்டு, தெய்வி தலையைக் குனிந்து வலது காற் பெரு விரலால் நிலத்தைக் கிறிக் கொண்டிருந்தாள். அந்தக் குறும்புத் தனத்திற்கும் நாணத்துக்கும் தன்னை அடிமை யாக்கிக்கொண்ட முருகன், பூசாரியார், கையிலே விபூதி யைக் கிள்ளி எடுத்துக் கொண்டு காத்து நிற்பதையும், பரியாரியார் உள்ளம் பூரித்து நிற்பதையும் கவனிக் காமல், அவளேயே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்தச் சம்பவம் நடைபெற்றுச் சிலநாட்களின் பின்னர், காலவெள்ளம், தெய்வியின் ஆத்தையை எங்கோ கண்ணுக்கெட்டாத பிரபஞ்சத்துக்கு அள்ளிக் கொண்டு போய்விட்டது. படுக்கையில் விழுந்து ஆறு மாத காலத்துக்கு மேலாகியும்கூட "என் கண்ணுவைத் தனியே விட்டுப் போகமாட்டேன்" என்று தொண்டை

101
யில் அடைத்துக் கிடந்த ஆத்தைக் கிழவியின் உயிர்ப் பறவை, கம்பீரமாக இறக்கை விரித்துப் பறந்தோடி விட்டது. அவளுக்கு, இந்த உலகத்தில் இனி என்ன தான் வேல், யாரால்தான் கவலே?
தெய்வியின் கண்களிலிருந்து முட்டிப் பெருக்கெடுத் துப் பிரவகித்து வந்த கண்ணிர் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்துவதில் முருகன் எடுத்துக்கொண்ட பிரயாசை கிழவிக்கும் தெய்விக்குமிடையில் உறுதியோடு நின்ற அன்புப் பின்னப்பைப் புலப்படுத்திற்று. முருகன், மர மேறித் தடித்துப்போன தனது வலிய கரங்களால் அவளது கண்ணிரைத் துடைத்தான்.
வாழ்க்கை என்பது "அழுதுகொண்டு நிற்கிற" இருள் படர்ந்த பாதையோடு மட்டும் முடிகிற காரியமா, என்ன? அது இருளிலிருந்து நிலவுக்கும், நிலவிலிருந்து இருளுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது. நிழலிலிருந்து வெயிலுக்கும் வெயிலிலிருந்து நிழலுக்குமாக மாறிக் கொண்டிருந்தது. கோடையிலிருந்து மாரிக்கும் மாரி யிலிருந்து கோடைக்குமாகச் சுழன்று கொண்டிருந்தது
GasTel L. . . . . . . . .
臀
நுங்கும் நுரையுமாக நிறைந்து வழியும் கருப்ப நீர்க் குடத்தைத் தலையில் வைத்த ஒருகையால் தாங்கிய வண்ணம், அதை எச்சிற் படுத்த வைராக்கிய சிந்தையுடன் துரத்திவரும் காகச் சனியனை ஒட்டுவதற் காக மறுகையால் குழைக் கொப்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு, பங்குனி மாதத்துப் படை பதைக்கும் வெயி லில், கணுக்கால் புதையும் கரிமணலில் நடந்துவரும் போது, தெய்விக்கு அந்த வேதனே தாங்காமற் கண்ணீர்

Page 53
102
வந்துவிட்டது. குழைக்கொம்பைப் பிடித் திருந்த கையால் முந்தானயை எடுத்துக் கண்ணீரைத் துடைப் பதற்கிடையிற் காகம் தன் கைவரிசையைக் காட்டி விட்டது. தட்டித்தின்பதையே தொழிலாகக் கொண்ட அந்தப் பறவை மூச்சுப் பிடித்துக்கொண்டு, குடத்தின் விளிம்பிலே ஒரு முறை உந்திக் குதறியபோது, குடம் உதறிக் குலுங்கி, அவள் கழுத்து உள்ளே அமுங்கி விட்டதைப்போலச் சுளுக்கிவிட்டது.
"ஐயோ என்ன பிழைப்பு இது?" என்று வாய் விட்டு அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.
அழாமல் அவள் வேறு என்ன செய்ய முடியும்?
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அவள் பிள்ளேப்பெற்ற வீட்டுக்குள்ளிருந்து துடக்குப் பாயை எடுத்தெறிந்துவிட்டு வெளியே வந்தாள். சுருக்கமாகச் சொல்லப்போஞற் பச்சைப் பிள்ளேத்தாச்சி. சாஃணக் குழந்தையை ஒதுக்கிடத்திலே தடுக்கில் வளர்த்தி இரண்டு பக்கமும் குட்டித் தலே பனேகளே வைத்து அனேத்து மூத்த குழந்தைகள் இரண்டையும் காவலுக்கு வைத்துவிட்டு, "இதோ ஓடியந்துடறேன்" என்று சொல்லி வந்திருக்கிருள். இன்னும் புண் ஆருத உடல், நாலு போத்தல் கொண்டது ஒரு முட்டியானுல், அதைப் போல எட்டு முட்டி கொள்ளும் குடம் நிறைந்த கருப்பநிர்ச் சுமை அந்தப் பச்சை உடலே "உம்" மென்று கொதித்துக்கொண்டிருக்கிற அந்தக் கரி ம ன வில் நசித்துப் பொசுக்குகிறது.
உயிர் துடிக்கிற வேதனை கூடஅவளுக்கு முக்கிய மல்ல. குடிசையிலே கிடத்தி விட்டுவந்த பச்சைக் குழந்தையின் நினைவு. அது 'ங்ஹா ங்ஹா" என்று பிஞ்சுக் குரலில் அழுவதாகப் பிரமை.

103
உண்மையிற் குழந்தை அப்பொழுது அழுது கொண்டு தானிருந்தது
தொட்டிலின் நடுவே கல்லுரலே நிறுத்தி, அதற் குள்ளே வேர்களேயும் பட்டைகளேயும் போட்டு இடித்துக் கொண்டிருந்த முத்துப் பரியாரியாரின் காதில் குழந்தை அமுத சத்தம் விழுந்தபோது, சிறிதுநேரம் அதைக் கவனிக்காமல் இருந்தார். வரவர அழுகைச் சத்தம் உச்சத்துக்குப் போய்க்கொண்டிருந்ததனுல் "குழந்தைக்கு ஏதோ வயிற்று வலிபோல இருக்கு" என்று எண்ணிய படியே விபூதியை எடுத்து நெற்றி நிறையப் பூசிக் கொண்டார். ஒரு துண்டை எடுத்துத் தலேயில் மூண்டாசாகக் கட்டிக்கொண்டார். ஒரு சால்வையை எடுத்து அரையில் வரிந்து கட்டிக்கொண்டார். ஒரு துண்டை எடுத்து ஒற்றைத் தோளிற் போட்டுக் கொண்டே வெளியில் வந்தார். மருந்துப் பெட்டியைத் திறந்து ஒருமுறை பார்த்துவிட்டு அதைத் தன் கக்கத் துக்குள் வைத்துக்கொண்டு தெய்வியின் குடிசையை நோக்கி நடந்தார்.
குடிசையை நெருங்கியபோது தெய்வியும் வந்து சேர்ந்தாள். "என்ன உங்கை, பிள்ளே அழுகுது?" என்று சுமை பொறுக்காமல் பற்களேக் கடித்தவண்ணம் கேட்டுக் கொண்டு பரியாரியார் திறந்துவிட்ட படலக் கூடாக உள்ளே நுழைந்தாள்.
"முதல் இதை ஒரு கை பிடி நயிந்தை" பரியாரியார் கக்கத்துள் இருந்த மருந்துச் செப்பை எடுத்துப் பத்திரமாகத் திண்ணேயில் வைத்துவிட்டுக் கருப்பதீர்க் குடத்துக்குக் கை கொடுத்தார். அதை இறக்கி வைத்ததும் இருவருமாக உள்ளே ஒடிஞர்கள்.
அங்கே.

Page 54
104
அழுத குழந்தையைத் தேற்றுவதற்காகப் போச்சியிற் கரைத்து வைத்த பனங்கட்டித் தண்ணிரைப் பருக்கும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று வயதுப் பையன். அதைக் குழந்தையின் மூக்கிலும் வாயிலும் கொட்டி வைத் திருத்தான். குழந்தை மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. இந்த அவலநிலையிலுங்கூட, போச்சியைத் தானே பிடித் துப் பருக்க வேண்டுமென்று இரண்டாவது குழந்தை செய்த அடத்தில் சிலே துணியெல்லாம் தாறுமாருசக் கிடந்தது.
ாஜயோ இது என்ன?" என்று குழறியபடி மண்டை யில் அடித்துக்கொண்டு தெய்வி குழந்தையைத் தூக்கி னுள், "என்ரை ராசா..!" என்று அழத் தொடங்கிவிட் டாள். பரியாரியார் நிதானத்துடன் குழந்தையை அவனிடமிருந்து வாங்கினூர், தோளில் இருந்த துண்டை எடுத்து அதன் மூக்கிலும் வாயிலும் வழிந்த பனங்கட்டித் தண்ணீரை இலேசாகத் துடைத்துக்கொண்டே "சி அழாதே தெய்வி, குழந்தைக்கு ஒண்டுமில்லே-அழுது
ஆத்தப் போச்சு இந்தா பாலேக் கொடு" என்ருர்,
என்ரைராசா, இங்கை வானே இந்தப்பாவி உன்னே எங்கை விட்டெட்டுப் போனவள்?" என்று அங்கலாய்த்த படியே குழந்தையை மார்போடு அனேத்துக்கொண்டாள் அவள்.
அவளுடைய கண்களிலிருந்து உருண்டு விழுந்த நீர்த் துளியின் உஷ்ணத்தைப் பொறுக்கமாட்டாத குழந்தை
டஜல நெளித்துக்கொண்டே மார்பைச் சுவைத்தது.
நாலந்து வருஷங்களுக்கு முன்னர், குடிவெறியினுல் நிகழ்ந்த அசம்பாவிதங்களினுல் முருகன் தனது உடலி 'லும் உள்ளத்திலும் பட்ட அடியின் வேதனை தாங்காது

105
குடிசையிலே தனிமையாயிருந்தபோது இரவோடு இர வாக அவனுக்கு ஆறுதல் சொல்லி வந்த தெய்வி தனது அப்பன் தினமும் குடித்துவிட்டுச் சாமங்கழிந்து வேளேபில் வந்து தன் தாய்க்கு உதைத்த வேதனே நிறைந்த கதையைச் சொல்லிக் குடிப்பவர்களில் தனக்குள்ள வெறுப்பைக் காட்டியபோது அவன் அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லே.
புதுமோகமாக இருந்தாலும் சரி, தெய்வியின் இலட் சியத்தில் தானும் பங்குகொள்ள வேண்டுமென் றிருந்தாலும் சரி இன்பத்திற் கிறங்கிப் போயிருந்த அந்தக் கண நேர உற்சாகத்தில், "இனிமேல் நான் கீள் அருந்த மாட்டேன்" என்று தெய்விக்குக் கைபோட்டுக் கொடுத்ததுமட்டுமல்லாமல்"கள் இறக்கவும்மாட்டேன்" என்றும் சபதம் செய்து கொண்டான்.
தோட்டம் செய்வதற்கு முருகனுக்குச் சொந்தந்திலே நிலமில்லை. இரண்டொரு வருடம் குத்தகைக்கு நிலம் எடுத்துப் பயிர் நட்டான். அது பயனளிக்கவில்லே நிலச் சொந்தக்காரனுேடும் ஒத்து வரவில்லே. எனவே மண் வெட்டியை ஒரு மூலேயில் போட்டுவிட்டு கத்தியை நன்ருகத் தீட்டி ஒரு தள நாரை முடிந்துகொண்டு மறு படியும் பனமரத்தில் ஏறத் தொடங்கினுன். பனமரத் திலிருந்து அவன் கள் இறக்கமுடியவில்லே. முட்டியிலே காரச்சுண்ணும்பைத் தடவி பானேயிலிருந்து சொட்டும் போதே அதில் உள்ள மதுப்பொருளே அழித்துவிட்டுஇனிமையான கருப்ப நீராக இறக்கினுன்.
இறக்கிய கருப்ப நீரையெல்லாம் பெரிய பெரிய ஒஃவக் குடுகுகளில் ஊற்றித் தூக்குத்தடியின் இருபுறத்திலும் போட்டுத் தானே தூக்கி வந்தான். அவனுக்குத் தெய்வி மேலே உயிர். அதனுல் குடத்திலே ஊற்றித் தானே சுமக்
நி.-7

Page 55
1()
கிறேன் என்று அவள் கேட்டபோதெல்லாம் மறுத்துவிட் டான். ஆணுல் இந்த ஆசையும் மோகமும் எத்தனை நானேக்குத்தான் நின்று பிடிக்கும்? அல்லது அவனே எல்லாக் கஷ்டங்களேயும் அனுபவிப்பதற்குத் தெய்வி மட் டும் விடுவாளா? அப்பா எத்தனை பயங்கரத் தொழில் வானே முட்டிக்கொண்டிருக்கிற கொப்பில்லாத மரங் களிலே ஏறி இறங்குவதுடன் நில்லாது இறக்கிய கருப்ப நீரைக் காவிக்கொண்டு வருவதற்குக்கூட அனுமதிப்
UTGITT?
எங்களுடைய செப்புக் காசிற்கூட களிம்புகிடையாது; அது தங்கம் தண்ணீரைக் காய்ச்சிக் கல்லாக்கியதுவேர்வையைப் பொன்னுக்கியது" என்று தெய்வி அடிக்கடி பெருமையோடு சொல்லிக் கொள்வது என்னவோ உண்மைதான் என்ருலும் அதற்காக அவள் அடையும் கஷ்டங்கள்.பாடுகள்.
காலேயிலிருந்து இரவு வரை பெரிய பெரிய கட்டை களேயெல்லாம் காளவாய் அடுப்புக்குத் தள்ளி எரித்து அந்த அக்கினிச் சுவாலேயிலே தானும் வெந்து, கருப்ப நீரைப் பாணியாக்கி, பாணியைப் பனங்கட்டி யாக்குவ தென்ருல் முடிகிற காரியமா? எறும்பிலிருந்து, காகம், கோழி உட்பட நாய், பூண் வரை எல்லாப் பிராணி களிடமிருந்தும் பாதுகாத்து, அதை விற்றுப் பண மாக்கினுற் கை நிறைவதில்லே. குடிசைத் தொழில்களே அரசாங்கம் பாதுகாக்கிற வேடிக்கையை விட, பனங்கட்டி காய்ச்சுகிற வீடுகளிலும், தேநீருக்காகச் சீனி வாங்குகிற இலட்சணம் மிகப் பெரிய வேடிக்கை. பனங்கட்டித் தொழிலுக்கு உள்ள மதிப்பு அவ்வளவு.
தெய்வி சென்ற மாதம் பிள்ளைப் பெற்றுக் கிடந்த போது அவளேப் பார்ப்பதற்கு அண்டை அடுத்த வீட்டார்

O
களும், சுற்றத்தார்களும் வந்தார்கள். அவர்கள் வழக்கப்படி வெற்றிலே பாக்கு உட்பட, அரிசி காய்பிஞ்சு எல்லாம் கொடுத்துவிட்டுப் போனுர்கள். அப்படி வந்தவர்களில் ஒருத்தி வீரனுடைய மனேவி கண்ணி,
அவள், அத்தனே பெரிய நகைகள் எதுவும் அணிந் திருக்கவில்லைத்தான். என்ருலும் நல்ல புடவை யுடுத்திக் கொண்டு கச்சிதமாக வந்திருந்தாள். அரிசிப் பெட்டியை இறக்கிவைத்து மடியிலிருந்த பத்து ரூபாய் நோட்டொன் றையும் எடுத்துக் கொடுத்துவிட்டுப் போனுள்.
அவள் கணவன் வீரன் கள் இறக்கி விற்கிருன், "அப்படி இப்படி" ஒன்றும் பணம் புரளாவிட்டா லும் வேளேக் கஞ்சியோடு உடுதுணிக்கும் துறைச்சவில்ஃ. நல்லது கெட்டது என்று ஒரு காரியம் வரும்போது கொடுத்துதவ ஐந்து பத்து ரூபாயும் இருக்கிறது.
ஆணுல் தெய்வியோ..?
அவள் கவியாணஞ் செய்து ஐந்து வருஷங்களது விட்டன. அவள் வாழ்க்கையிலே கண்ட முன்னேற்ற மெல்லாம் மூன்று குழந்தைகளுக்குத் தாயா ை. டதைத் தவிர வேருென்றுமில்லே. பிள்ளைப் பெற்ற பெண், தன்னைத் தேற்றிக்கொண்டு எழும்புவதற்கு வேண்டிய சாமான்கள் தான் ஒன்றும் இல்லை. என்ருலும் அதை அன்றன்று வாங்கப் பணமாவது வேண்டாமா?
குழந்தைகளுக்கு வேளா வேளேக்கு உணவுக்கு வழி யில்லை. நல்ல துணிமணி கிடையாது. தலேக்கு வார்க்க எண்ணெய் கூட இல்லாததால் அவர்கள் பரீட்டைத் தலைகளோடு திரிந்தார்கள்.
முருகன், மழையென்று புயலென்று பாராமல் நெஞ் சடித்து உழைத்து விட்டு ஒழிந்த வேண்களித் கூவிப்பிழைப்

Page 56
08
புக்குப் போனுன், உழைப்பாளிகளின் பரம்பரையிலே வந்த அவனுக்கு எந்தத் தொழில்தான் தெரியாது. வேலி யடைப்பு, கதியால் வெட்டு வீடு வேய்ச்சல்.
晕 量
திருவாளர் வேலுப்பிள்ளே வீட்டிலே கலியான ஆச வாரம் அமர்க்களப்பட்டது. அவருடைய செல்வமகள் அன்னலட்சுமிக்குக் கலியாணம்,
வேலுப்பிள்ளை செல்வாக்குள்ள மனிதர். சிறந்த சமூக சேவையாளர். காந்திப்பக்தர். அந்தக்கிராமத் திலேயுள்ள சனசமூக நிலையத்தின் தலைவர்: மதுஒழிப்புப் பிரசார சபையின் நிர்வாகசபை அங்கத்தவர்.
கலியாணம் வெகு ஆடம்பரமாக நடைபெற இருந் ததால் நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் நேரத்தோ டேயே வந்து கூடி விட்டார்கள். மணப் பெண்ணுடைய அண்ணன் முருகானந்தம் தன் மனேவி தேவியுடன், கொழும்பில் உள்ள தன் சினேகிதர்களேயும் கூட்டிக் கொண்டு வந்திருந்தான்.
அங்கே முருகனுக்கு வேலே கிடைத்தது. வேலுப் பிள்ளை முத்துப்பரியாருக்குத் தூரத்து உறவு. எனவே பரியாரின் சிபார்சின்பேரில், பந்தல் போடுவது, செத்தை அடைப்பதுபோன்ற வேலைகளைச் செய்யும் பொறுப்பு முருகனுக்குக் கிடைத்தது.
வெளிமுற்றத்தில் உள்ள வேலைகளே எல்லாம் முடித்து விட்டு, கொல்லேப் பக்கமாக விழுந்து கிடந்த செத்தையைச் சீர்பண்ணப் போன முருகன், அந்தப் பக்கமாக இருந்த அறையொன்றில் நாலேந்துபேர் இருந்து கும்மாளமடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டுப் போனுன்.

109
அங்கே ஆண்களும் பெண்களுமாக இருந்தவர்கள் கொழும்பு நண்பர்கள். அவர்கள் எந்தவித கூச்சநாச்சமு மின்றி வியவஸ்தையுமின்றிக் குடித்துக் கொண்டிருந் தார்கள். ஆமாம், உயர்ந்த ரகக் குடிவகைகள்.
முருகன்களும், தெய்விகளும் இலட்சிய நெருப்பிலே விழுந்து, பொசுங்கிக் கொண்டிருக்கிறர்கள் முருகானந் தங்களும் தேவிகளும் அதன் அனலிலே குளிர் காய்கிருர்கள்

Page 57
காவியத்தின் மது அருந்தி.
வின் மனதிலே பெரிய போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. சாவதைத் தவிர வேறு வழியில்லே என்று தோன்றியது. காரணம்: காதலில் ஏற்பட்ட முறிவு. ஏமாற்றம்.மோசடி.
சென்ற வருடம் நடைபெற்ற ஒரு களியாட்ட விழாவில் அவளே முதன் முதலாகச் சந்தித்தேன். கதாசிரியன் என்ற காரணத்தால் அந்த அனுபவத்தையும் அடைந்துவிடவேண்டுமென்று மனம் துடிக்க, ஒரு இருபத்தைந்து சதத்தை விட்டெறிந்துவிட்டு, "மெரிக்கோ ரவுண்"டின் மரக் குதிரையொன்றில் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்தேன். அவள் எனக்கருகில் இருந்த மரக் குதிரையிலிருந்தாள். விசித்திரமான குதிரைச் சவாரி.
நான் மேலே போனுல் அவள் கீழே நான் கீழே வந்தால் அவள் மேலே. இப்படிச் சுழன்று கொண்டிருந்த போது அவள் தஃல கிறுகிறுத்து மயங்கிவிட்டாள். சுதாரித்துக்கொண்டு, விழ இருந்தவளே நான் என் தோள்மீது சாய்த்துக்கொண்டேன்.பலருடைய பணத்தை யெல்லாம் ஏப்பம்விட்ட கிறுக்கிலே, ராட்டினம் தன்னே மறந்து அகரத்தனமாக சுழன்றுகொண்டிருந்தது. நல்ல வேளே? நான் அந்த நேரத்தில் அவளுக்கு உதவி செய்யு

111
வில்லையென்றல், கணப்பொழுதிலே அவள் குதறி எறியப்
பட்டுக் காயமடைந்திருப்பாள்.
அப்புறம் என்ன நடந்திருக்கும் என்பது உங்கீ ளுக்குத் தெரிந்த விஷயம். எங்களுக்குள் காதல் உதய மாகிவிட்டது. காதல் என்ருல் சாதாரண காதல் அல்ல தெய்வீகக் காதல், ஆபத்து நேரத்திலே தன் பொன் னுடலே என் தோன்மீது சாய்த்தவள். வாழ்நாள் முழுவதும் சாய்ப்பதாகச் சொல்லிவிட்டாள்.
நான் பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரை எழுதி அனுப்பி, அதிலிருந்து கிடைக்கும் "சம்மானத்தில் வயிறு வளர்ப்பவன். அவள் பெரிய இடத்துப் பெண். தினம் தினம் புதுப் புது அழகுடனும், பலப்பல வர்ண அலங் காரங்களுடனும் காட்சியளிப்பாள். அவளுக்கும் எனக்கும் இடையில் உள்ள அந்தஸ்து மலேக்கும் மடுவுக்கு மிடையிலுள்ள வித்தியாசம் என்ருலும், கா த ல் அல்லவா? காதலுக்கு எந்த நேரமும் தளுக்கும் மினுக்கும் வேண்டுமே! அதனுல் நான் எந்த வகையிலும் அவளுக்குக் குறைந்தவனல்ல என்று காட்டிக்கொள்ள வேண்டுமென் பதற்காக என்னவெல்லாமோ செய்யவேண்டியிருந்தது. என் இயல்புக்கு மேலாக அடிக்கடி தலே வாரிக்கொள் வது, பவுடர் பூசிக்கொள்வது. முகசுவரம் செய்து கொள்வது, உடை மாற்றிக் கொள்வது முதலிய காரியங்களில் ஈடுபட்டேன். பணத்திலே கிடந்து புரளும் அவளுடைய ஆசாபாசங்களேயெல்லாம் அறிந்து கொண்ட அனுபவசாலிபோல நான் அவளோடு பழகி னேன். எழுத்துப் பயிற்சியினுல் கிடைத்த அனுபவ ஞானத்தின் துணைகொண்டு அவள் சிந்தும் வார்த்தைகளே யெல்லாம், கவிநயம் பொருந்தியவையாக அல்லது காவிய ரஸஃன மிகுந்தவையாக மதிப்புக் கொடுத்ததோடு, என்

Page 58
112
வார்த்தைகளுக்கும், நடையுடை பாவனேகளுக்கும் அவளும் தகுந்த மதிப்புக் கொடுக்கவேண்டும் என்று முயற்சித்தேன். இப்படி எவ்வளவு காலத்திற்குத்தான் ஒருவன் ஈடு கொடுக்க முடியும்?
ஒரு வருஷ காலம்.
இந்தக் காலத்தில், அவள் என் உடல், பொருள் ஆவி எல்லாவற்றையும் மூட்டைப் பூச்சியைப்போல உறிஞ்சி என்ஃனச் சக்கையாக்கி, நூலிலே ஊசலாடுகிற உயிராக வைத்துவிட்டு மறைந்துவிட்டாள். நாம் இருவரும் கல்யாணஞ் செய்துகொண்டு சந்தோஷமாக வாழும்வரை நிம்மதியில்லேயென்று காதல் முறுக்கின் புதுவேகத்திலே சொன்னவள், இன்று கண்ணெடுத்துப் பார்க்கவும் மறுத்துவிட்டாள். இனி நான் எங்கே? அவள் எங்கே? அவளுக்கு ஒரு "யங்கி மைனர்' கிடைத்திருக் கிருன். இனி நான் எதுக்கு? இந்த நாய் எதுக்கு?
எனக்குப் பெரிய அவமானம்; அவள் என்னேக் கல்யா னம் செய்யவேண்டாம்-காதலித்தது மட்டும் என்னவோ உண்மைதான் என்பதையாவது ஒப்புக்கொண்டால், என் மனதுக்கு அதுவே பெரிய ஆறுதலாக இருக்கும் போல் இருந்தது.
நான் வெறி பிடித்தவன்போல அவள் வீட்டுக்கு ஒடினேன். அருவருப்பான ஆவேசம் மிகுந்த என் தோற் றத்தைக் கண்டதும், அவள் பயந்து போய், தாயின் முந்தானேயைப் பிடித்துக்கொண்டு குழந்தைபோல ஒளிந்து விளேயாடினுள்.
"யாரம்மா இவன்? முழிக்கிற முழியைப் பார்க்கவே பயம்மாயிருக்கே" என்று அவள் அம்மாவின் உதவியை நாடினுள்.

118
"யார்டா திருட்டுப் பயலே, இங்கே உனக்கு என்ன வேலே போடா வெளியே" என்று அந்த அம்மாள் புரிந்த கர்ச்சனேயில் நான் வெலவெலத்துப் போனேன். பேசுவதற்குக்கூட சக்தியற்றுவிட்ட நான். அவளே நோக்கிக் கையைக் கையை நீட்டினேன். அவ்வளவுதான்! ஹாலிவுட் நட்சத்திரத்தைப்போல, அவள் போட்ட கூச்சலில், அந்த வீதி முழுதும் அந்த வீட்டுக்குள்ளே திரண்டுவிட்டது.
அப்புறம் என்ன நடந்திருக்கும்?
என்னே நையப் புடைத்துவிட்டாார்கள் என் முதுகுத் தோலே உரித்துவிட்டார்கள். இதெல்லாம் காணுதென்று முகத்திலே காறி உமிழ்ந்து, வீதியிலே தள்ளிவிட் டார்கள்.
நான் வீதியிலே நடக்கிறேன். அவமானம், அவ மானம், அவமானம் தற்கொலேயை தவிர நான் செய்த "குற்றத்துக்கு" வேறு விமோசனமே கிடையாது. எனக்கு இனிமேல் வாழ்வு எதற்கு? எப்படியாவது என் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற நினேவே மேலோங்கி நிற்கிறது. ஆம். குளம், கயிறு, விஷம், தண்டவாளம் இவைகளில் ஒன்றே போதும் என்னே ஈடேற்றுவதற்கு. குளம். கயிறு.விஷம். தண்ட
வானம்.
திடீரென்று ஏதோ இருள் சூழ்ந்து என்ன அப்பிக் கொண்ட மாதிரித் தெரிந்தது; மின்னல் மின்னி மறைந்தது மாதிரிப் பளிச்சிட்டது. "கீரீச்" என்று பயங்கர மான சத்தம். "ஆ" என்று ஜனக்கூட்டம். ஒரே குரலில் அலறுகிறது. அது கணத்தில் மக்கி மடிந்து தேய்ந்து போகிறது. அவ்வளவுதான். என் தலே "பொடுக்" என்று முறித்துப் போட்டது மாதிரி விழுகிறது.

Page 59
14
ஆம் நான் செத்துவிட்டேன். கணப்பொழுதிலே மாண்டு மடிந்துவிட்டேன், வானத்திலே நீச்சலடிப்ப தாக நினத்துக்கொண்டு, வீதியிலே உருண்டு வந்த ஒரு ராட்சத மோட்டாரின் உணர்ச்சியற்ற சக்கரங்கள், என் மார்பை அழுத்தி என் உயிரைப் பறித்துவிட்டன. எத்தனேயோ ஆசைக் கனவுகளேயும், பசிய நினேவுகளேயும் பத்திரப்படுத்தி வைத்திருந்த மார்பு.
மரண விசாரனே அதிகாரி விபத்து" என்று வழக்க மான பல்லவியைப் பாடிவிட்டார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நான் செய்துகொண்டது என்னவோ தற் கொலேதான். தற்கொலேப் பாதையில்தான் நான் அடி யெடுத்து வைத்தேன். காதலித்தேனல்லவா?
軒 輕
கணப் பொழுதிலே அதிவிசித்திரமான மாற்றம் நிகழ்ந்து விட்டது; நான் புது உலகத்துக்கு வந்து வீட்டேன்; புதுவிதமான உணர்ச்சிகள் பெற்றுவிட்டேன்.
உடல் முழுவதும் இலேசாக இருக்கிறது. கால்கள் நிலத்தில் பாவவில்லே இறக்கைகளுமில்லை. ஆனூல் நினேத்த மாத்திரத்திலே நினேத்த இடமெல்லாம் சுற்றி வரலாம் போலப் பிரமை ஏற்படுகிறது.
சற்றுமுன்னர் நான் அடைந்த அவதி அல்லது மனவேதளே மறந்துவிட்டது. நினேவுச் சுவட்டைப் பிடித்துக்கொண்டு எஃகி, எஃகி மேலேறித் தொடர்பு படுத்திப் பார்க்கிறேன். அப்பப்ப எவ்வளவு மாற்றம். ஏதோ ஒரு பயங்கரமான சக்தியின் சுழிப்பிலே மயங்கிக் கிடந்தேன். இதயம் வெடித்துவிடுமளவுக்கு முட்டி மோதிக் கிடந்தேன் பேச்சு மூச்சற்றுக் கிடந்தேன்; கண்கள் இருண்டு கிடந்தேன்; காதுகள் அடைத்துக்

11
கிடந்தேன்; பித்தனுகி இருந்தேன்; பிணமாகி இருந் தேன். அதாவது மனிதனிலே பித்தன் மனிதனுக இருக்கும்போதே பிணம்-நடைப்பிணம்
எல்லாம் மாற்றமடைந்து விட்டன. புதிய உலகம், புதிய உருவம், புதிய உணர்ச்சிகள்.எனக்குத் திடீ ரென்று அற்புதமான ஆசைகள் முளைவிட ஆரம்பித்தன. பூலோகத்திலே இருக்கும்போது TIL FULLT GYr மனிதன் போல் நடந்துகொண்ட மனிதன் நான். எனக் குச் செயல் தெரியாது நன்ருகப் பேசத் தெரியும். இலக்கியத்திலே திருட்டுச் செய்தாவது முன்னுக்கு வர வேண்டுமென்று ஆசைப்பட்டவன். பத்திரிகைகளேப் பரப்பிவைத்து அதற்கு நடுவில் "ஸோபா'வைப் போட்டுப் படுத்துக்கொண்டு ஒன்று விடாமல் படித்துத் தீர்ப்பேன். அப்புறம் அழகாக வாய்ப்பந்தல் போடுவேன். அவ்வளவுதான் அதற்குமேல் எதுவுஞ் செய்யத் தெரியாது. நான் கரத்தால் உழைப்பவனல்லன் கருத் தால் உழைப்பவன் அதிமேதாவி,
இப்படியே பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் பலநாடுகளேப்பற்றியும் படித்ததிலிருந்து ஏற்பட்ட ஆசை இது: "பலநாடுகளேயும் சுற்றிவர வேண்டும். பலநாட்டு மக்களோடும் பழகவேண்டும். அந்தந்த நாடுகளில் உள்ள அற்புதங்களே யெல்லாம் கண்டு களிக்கவேண்டும்."
பூலோகத்திலே இதற்கெல்லாம வசதி ஏது? கரத்தால் உழைப்பவர்களே கஞ்சிக்கு வழியின்றித் தவிக்கும் போது, கருத்தால் உழைப்பவன் நாடு சுற்றி வருவ தெங்ங்ணம்? பணம் வேண்டுமே பேசாமல் இருந்து விட்டேன்.
நனவிலி மனத்தில் மண்டிக் கிடந்த இந்த ஆசைகள், இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் புதிய சந்தர்ப்பத்தை

Page 60
11
உணர்ந்ததும் கிளர்ந்தெழுகின்றன. உண்மைதான்! என்ன கஷ்டம் பணம் வேண்டியதில்லே எந்தநாட்டு மக்களோடும் பேசுவதற்குப் பாஷைத் தடை யீடில்லே. அல்லது ஒரு நாட்டுக்குள் நுழைவதற்கான "விளா" என்ற வேதனை இல்லை. "கள்ளத்தோணி" என்று பிடித் தடைக்க சட்டமெதுவுமில்லே.
சுதந்திர புருஷன். எங்கும் பறந்து திரியும் வானம் பாடி எங்கும் போகலாம்; எங்கும் வரலாம். கேட்க
TUI Trf?
நான் பூலோகத்திலே தமிழன். நான், என் தாய்ப் பாலோடு உண்டது தமிழ், என்அழுகைக்கு குரலேத்தணித் தது தமிழ். எல்லாம் தமிழ்தான். தமிழனது வீரப் பிரதாபங்களேப் பற்றியும் தமிழ் நாட்டின் வளத்தைப் பற்றியும் காது புளிக்குமளவுக்குக் கேட்டிருக்கிறேன்: நூல்களில் படித்திருக்கிறேன். ஆணுல் பார்த்ததில்லே. முட்டைக்குள் இருந்த குஞ்சு, அந்த முட்டைக் கோது தான் உலகம் என்று நினைத்ததாம். ஆணுல் நான் பிறந்து வளர்ந்த இடத்தை உலகம் என்று நினைக்க முடியுமா?
எனவே உலகம் முழுவதையும் பார்க்க வேண்டும் முதலில் தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டும் அதிலும் ஈழத்தில் உள்ள தமிழ்நாட்டைப் பார்த்துவிடுவது அவ சியம் என்று தோன்றுகிறது.
நான் யாழ்ப்பணத்திலேயுள்ள பருத்தித்துறை என்னும் ஊரில் பிறந்தவன். அதனுல் யாழ்ப்பாணம் பழகிப்போன சங்கதி. தண்ணீர்பட்ட பாடு என்பார் களே, அதுதான். கதாசிரியன் என்ற காரணத்தால் சந்துகள் பொந்துகள் எதையும் விடமால் துருவித் துளேத்துவிட்டேன். அப்படித் துளேத்ததற்குக் காரணம்

11
பல. இரண்டை மட்டும் சொல்கிறேன். ஒன்று ஆங் கிலத்திலே "ப்ளொட்" என்று சொல்லப் படுகிற கதைக் கரு தேடுதல். மற்றது: பத்திரிகையிலே என் கதை வெளிவந்த நாட்களில் வாசகர்கள் என்னேப் பார்த்து அறிந்து கொள்வதற்காகவும், கதையைப் படிக்காத நண்பர்களுக்கு அதைப் "படித்துக் காட்டி" அறிமுகப் படுத்துவதற்காகவும் கதிைவந்த பத்திரிகையின் பக்கத் தைப் பிரித்துக் கையில் பிடித்துக்கொண்டு அஃலதல், இதனுல் யாழ்ப்பாணம் தள்ளுபடி.
அப்புறம் எங்கே போக வேண்டும்?
ஆம். கிழக் கே போகவேண்டியது. மட்டக் களப்புக்குத்தான்.
量 置
பூரண நிலவு.
பாற்குடத்தைச் சரித்துவிட்டதைப்போல Fsur வெள்ளம் பூமியெங்கும் வழித்து தேங்கி நிற்கிறது. இதோ! இதுதான் மட்டுநகர்வாவி, நிலவின் ஒளியிலே வாவியிலே நிறைந்து நிற்கிற நீர் பளபளக்கிறது. இரவின் பரிபூரணமான அமைதியிலே இளந்தென்றல் தாலாட்ட "ஜலக் ஜலக்" என்று அலேகள் இலேசாக அடித்துக் கொள்ளுகின்றன-அல்ல; முத்தமிடுகின்றன.
அழகும் உறுதியும் வாய்ந்து கம்பீரமாகக் காட்சி யளிக்கும் அந்த நீண்ட நெடும் இருப்புப் பாலத்தின் பக்க அனேயொன்றிலே, கால்களேக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டு நான் ஒய்யாரமாக இருக்கிறேன். என்ன சந்தோஷமான சுகானுபவம் மனது கிளுகிளுக் கிறது. என்னதான் சொன்னுலும் மனிதன் அதிர்ஷ்ட

Page 61
18
சாலிதான். தன்னந் தனியணுய் யாரும் அறியாமல், என்னுள்ளே நாணுகி நின்று அனுபவிக்கிறேன். ஆணுல் மனிதன்.
எங்கிருந்தோ இலேசான சோக கீதம் ஒன்று காற்றிலே மிதந்து வருகிறது. தூரத்திலே ஒலிப்பதால் வார்த்தைகள் புரியவில்லே. ஆணுல் இதய நரம்புகளே மீட்டி ஒலிக்கிற கீதம். இதயத்தின் அடித்தளத்திலே யிருந்து விம்மி எழுந்து சுழன்று சுழன்று விண்ணிலே பரவிச் செல்லுகிறது.
ஆ பாடும் மீன்களா இப்படிப் பாடுகின்றன? ஆம். இசையா மகளிர் அல்லது நீரா மகளிர் என்றழைக்கப் படுகின்ற பாடும் மீன்கள்தாம் இப்படி இன்னிசை யெழுப்புகின்றன. அல்லது வேறு யார்? அதுவும் இந்த நள்ளிரவில்.
பாட்டின் ஓசை மேலும் மேலும் நெருங்கி வருகிறது. என்ன ஆச்சரியம்! அந்த வார்த்தைகள் கூடத் துல்லியமாக என் காதுகளில் விழுகின்றன.
" காதல், காதல், காதலென்றே"
சந்தேகமே இல்லை. தமிழ்தான் தமிழோசைதான் கேட்கிறது. பாடும் மீன்கள் பாடுவதைக் கேட்பது அத்தனே இலேசான காரியமல்ல வென்பதுடன் அந்த ஒலி ஒருவித தொனியே தவிர வேறெதுவு மல்ல என்றல் லவா நான் அறிந்திருக்கிறேன்! அப்படியானுல் அதைப் பாடுவது யார்? அந்த ஜலமோகினிகள்தான் இப்படித் தமிழில் பாடுகிருர்களோ.ஆம், இன்று பூான நிலவு. இந்த நிலவின் மது வருந்தி, அதன் போதையிலே கிறங்கி, தம்மை மறந்த லயந்தன்னில்.

119
நான் ஆடாமல், அசையாமல் சிற்பி வடித்த கற் சிலே போல இருக்கிறேன். பாடுவது யார் என்பதைத் தீர்க்கமாக அறிந்துவிட வேண்டுமென்ற துடிப்பு. அந்தச் சோகத்தின் குரல் வரவர என்னேக் கிட்டிச் சேர்கிறது. ஏக்கத்தின் பிரதிபலிப்பாக-நீரஃலகளின் பின்னணியோடு பாட்டு முழுவதும் இழைந்து இழைந்து காற்றிலே பரவுகிறது.
" காதல், காதல், காதலென்றே
காவியத்தின் மது அருங்தி, பேதை மாந்தர் மடிகின்ருர்;
பெரிதும் வாழ்வில் ஒடிகின்ருர்"
சாட்டையினுல் என்னேச் சுற்றி வளத்துச் சொடுக்கு வதுபோல் இருக்கிறது. நிச்சயமாக இது பாடும்மீன் அல்லவே அல்ல. என்னேப்போல கானல் நீரை நம்பிக் கெட்டழிந்து போன ஒரு மானின் குரல். ஞானக்குரல் அல்ல இது வாழ்விலே காதலே நம்பி ஏமாந்துபோன ஒரு பேதையின் அனுபவக் குரல்.
பாட்டு நின்றுவிடுகிறது. தூரத்திலே, பாலிலே குளித்தெழுந்த மங்கையொருத்தி நிலவைப் பிரித்துத் துகிலுடுத்து வருவது தெரிகிறது. நீரின்மேல் நடப்ப தாகப் பிரமை, ஆணுல் நீரிலே அவளது கால்கள் படிய வில்லே. மெல்லிய தென்றலினுல் தாள லயத்தோடு பம்மிப்பம்மி எழும் நீரலேபோல நீரின் மேலேயே அலேந்து அலேந்து வந்தவள் திடீரென என்னேப் பார்க்கிருள். நானும் அவளோடு அவளேப் பார்க்கிறேன். அப்புறம் என் கண் இமைப்பதை மறந்துவிடுமோ என்ற சந்தேகம், அத்தனே அழகு! பாரதியின் பாடலொன்று நினைவிலே ஒளிருகிறது.

Page 62
1ይ0
اللICLPلیے +++ = = = = =+ "" ஊற்றி&னயொத்த இதழ்களும்-நிலவு ஊறித்ததும்பும் விழிகளும்-பத்து மாற்றுப் பொன்னுெத்த நின்மேனியும்.
பயாரது மீரானு?" என்று குரல் கேட்டுத் திடுக் கிட்டுப்போன நான் சமாளித்துக்கொண்டு பதில் சொன்னேன்.
தி "இல்லை. ஒரு வழிப்போக்கன். சும்மா ஊர் சுற்றித்
ரிகிறேன்."
என் பதிலைக் கேட்டதும், ஏற்கனவே ஏதோ துயரத் தின் சாயை படிந்து கிடந்த அவளது மதிவதனம் மேலும் துவண்டு போவதைக் கவனித்தேன். அவள் தலே குனிந்த வண்ணம் இலேசாக முணுமுணுத்தது என் காதில் விழுந்தது.
இனிமேல், அவர் எங்கே வரப்போகிருரர்?"
யார், யாரைச் சொல்கிறீர்கள்?" என்று நான் என்ன மறந்து கேட்டதும், அவள் திடுக்கிட்டுப் போனுள்,
இல்லை! நா.ன் . ஒரு பைத்தியம். ஏதோ உளறி விட்டேன்" என்று சமாளித்தாள்.
செத்துப் போன கதாசிரியன் என்ருலும் பழக்க தோஷம் எந்தப் பிறவியிலும் ஒட்டிக்கொள்ளும்போலிருக் கிறது. அவளது இதயக் கடலின் ஆழத்திலே துயரம் நிறைந்த மர்மங்கள் மண்டிக் கிடக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு வெகு ே நரமாகவில்லே. அவளது உள்ளத்துணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அவளேப் பற்றிய எல்லா விபரங்களேயும் அ றிந்து கொள்ள ஆசைப் பட்டேன்.

1ዴ1
நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு, "யார் நீ?" என்று கேட்டேன்.
ஒரு கணம் அவள் தயங்கினுள். நாணம்குமிழிட இலே சாகச் சிரித்தபடியே, "என் பெயர் ராஜேஸ்வரி ராஜேஸ் என்றுதான் எல்லோரும் அழைத்தார்கள்" என்ருள்.
"யார், யார், ராஜேஸ்வரியா? அக்கரைப்பற்று ராஜேஸ்வரி நிதானு?" என்று நான் அங்கலாய்த்தேன். அவள் பெருமூச்செறிந்தபடியே "ஆம், துரதிர்ஷ்டம் பிடித்த அந்தப் பெண் நான்தான்" என்று பதில் அளித்தாள்.
"ஓ! அதுதான் மீரானே விசாரித்தாயோ? பாவம் உன்னேப்பற்றி நான் ரொம்ப அறிந்திருக்கிறேன்" என்றேன்.
வெட்கம், வேதனே, அவமானம் ஆகிய உணர்ச்சியக்ல களுக்கிடையில் சுழிந்துகொண்டு அவள் ரஸவிகாரமான நிலையில் நின்ருள்.
"ரொம்ப அறிந்திருக்கிருயா? அது எப்படி? அது சரி, உன்னே எனக்கு யார் என்று சொல்லவில்லையே?" என்று கேங்டாள் அவள்.
"எல்லாம் சொல்கிறேன். எங்காவது வசதியான ஒரு இடத்தில் உட்காரவேண்டும். இது இருவருக்குமே இடைஞ்சலான இடம். நான் குனிந்து குனிந்து பார்க் கிறேன். நீ நிமிர்ந்து நிமிர்ந்து பார்க்கிருய். இருவருக்கும் கழுத்து வலிக்கப் போகிறது."
அவள் மெல்லெனச் சிரித்தது என்காதுகளில் வெள்ளி மணியோசை போல விழுகிறது.
"To Logister'
நி.-9

Page 63
122
சுற்றிலும் வெண்மையான மணற்பரப்பு. மலர்களின் நறுமணத்தை ஏந்தி, இளந்தென்றல் மன திலே இனி மையை நிறைக்கிறது. முந்திரி மரமொன்றின் கீழே கையைத் தலேக்குயரமாக வை த்துக்கொண்டு கால்களே நீட்டிப்படுத்திருக்கிறேன் நான். எதிரேஅவள். தமிழ்ப் பெண்களுக்குரிய பண்பெலாம் நிறைந்து, கால்களே ஒரு புறம் சரித்து மடக்கி தங்கச்சிலபோல அடக்க ஒடுக்கமாக இருக்கிருள். வான் முகட்டுக்கு ஏறிய முழுநிலவு அவளுடைய அழகிய வதனத்தை மேலும் மெருகிட்டுக் காட்டுகிறது. பூத்துக் குலுங்கி நிற்கும் முந்திரி மலர்களில் மது அருந்திய வண்டுகள் போதை மிகுதியால் "வொய்" என்று இன்னிசை மீட்டுகின்றன.
அந்த இன்னிசையைப் பின்னணியாக வை த்துக் கொண்டு, நான் என்ன அறிமுகப்படுத்தியதும், அவள் திடுக்கிட்டுப் போனுள்.
"என்ன ஆச்சரியம் இது யாழ்ப்பாணத்தவன யிருந்தும் கூட என்னைப்பற்றி ரொம்ப தெரியும் என் கிருயே, எப்படித் தெரிந்தது?" என்ருள்.
ஓகோ! உனக்கு எதுவுமே ெ தரியாதுபோலிருக்கிறது.
உன்னைப்பற்றியெல்லாம் பத்திரிகையிலே போட்டுப் பிரபலப்படுத்திவிட்டார்கள். உன் சின்ன வயதுப் புகைப் படத்தைக்கூட போட்டிருந்தார்களே!" என்றேன்நான்.
"பத்திரிகையிலா? புகைப்படத்தைக்கூடவா?" என்று அங்கலாய்த்தாள் அவள்
11ஆம். அதுமட்டுமல்ல. நீயும் மீரானும் ஒருவருக் கொருவர் எழுதிய கடிதங்களைக் கூடப் பத்திரிகையில் போட்டிருக்கிருர்கள்."
இதைக் கேட்டதும் அவள் வேதனையோடு சிரித்தாள்.

12
மீரா னு க் கு ம் ராஜேஸுக்குமிடையில் இருந்த தொடர்பு அவள் சிரிப்பிலும் பேச்சிலுமிருந்து உறுதிப் பட்டது. ஆணுல் இதுவரை அவள் அதைப்பற்றி "பிடி கொடுத்துப்" பேசமலிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கேட்கப் பயம், அவள் என்ன நிலைமையில் இருக் கிருனோ.
சிறிது நேரம் யோசித்துவிட்டு அவள்தான் மீண்டும் பேசினுள்.
"அது சரி; ஏன் அப்படிப் பத்திரிகையில் போட் டார்கள்?"
"உளுத்துப்போன சாதி சமயக் கொள்கைகளேக் கட்டிக் காப்பதற்காக உயர்வான காதலுக்குக் குறுக்கே நிற்கிற நமது பெற்ருேருக்குப் புத்தி புகட்டுவதற்காக வாயிருக்கலாம். அத்துடன் காதலிப்பவர்களுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை."
"காதலும் கத்தரிக்காயும்" என்று அருவருத்தாள் அவள். அப்படிச் சொன்னபோது எனக்கும் மனதிலே ஏதோ திருப்தியாய் இருக்கிறது சூடுபட்ட பூனே நான், ஆணுல் எனது காதலுக்கும். அவளது காதலுக்குமிடையில் எவ்வளவு வித்தியாசம் என்ன என் காதலியே வெறுத்து விட்டாள். அவளேயும் அவனேயும் யார் வெறுத்தார்கள்? அவர்களாகவே அந்த உலகை வெறுத்துத் தற்கொல் செய்து கொண்டார்கள். அப்படியிருக்கும்போது இந்த உலகத்திலே கூட காதல் என்றல் ஏன் இத்தனே வெறுப்பு? "ஏன் இம்படிச் சொல்கிருய்? அதுதான் சற்று முன்னர் நீ அப்படிப் பாடினதற்குக் காரணமோ?" என்று கேட்டேன் நான்.
"ஆம், காதல் என்பது கவிஞனது கைவண்ணம்; காவிய மலரிலே பனிக்கிற மது. அது மனிதருக்கு ஏற்ற தல்ல."

Page 64
124
* "Bh"
"அது காவியச் செடியிலே மலர்கிற அற்புதமான ஆனுல் ஆபத்தான மலர். அதைச் சூட்டிப் பார்க்கலாமே தவிரச் சூடிப் பார்க்க இயலாது."
"ஏன்"
இதோ! என்னைப் பார் நான் அதற்கு உதாரணம்."
"ஏன், உனக்கு என்ன இப்போது? அங்கு வாழப் பிடிக்கவில்லையென்று இங்கு ஓடிவந்தாய். பிறகென்ன? இங்கு வாழ்கிருய்தானே"
"வாழ்வு" என்று அவள் அலட்சியமாகச் சிரித்தாள். "இனி எனக்கு ஏது வாழ்வு" என்று அங்கலாய்த்தாள். சிறிது நேரம் மெளனமாய் இருந்துவிட்டு, "வாழ ஆசைப் பட்டு நானுகவே இங்கு ஓடி வந்து அடைபட்டுக் கிடக் கிறேன்; எனக்கு வாழ்வளித்த சிறை இது" என்ருள். நான் எதைக் கேட்க அஞ்சினேனே, அதற்கு அவளாகவே வழி அமைத்துக் கொடுத்தாள்.
பஏன்? மீரான் எங்கே?" என்று தயக்கத்துடன் கேட் டேன் நான். இதைக் கேட்- தும் அவள் கண்களிலே நீர் துளிர்த்தது. அதைக் கைவிரலால் துடைத்துக்கொண்டே, பெண்களைக் கண்டு ஆண்களும், ஆண்களைக் கண்டு பெண்களும் மயங்குவது எந்த உலகத்திலும் இருக்கத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. மீரான் இதற்கு விதி விலக்காகவில்லை."
நீ சொல்வது எனக்கு விளங்கவில்லே!" என்றேன் நான்.
பவத்து இரண்டு நாட்களின் பின் எங்கோ போனுர் அப்புறம் வரவேயில்லை. எங்காவது போயிருப்பார்" என்ருள். அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தபோது நான் ஆச்சரியமடைந்தேன். ஒரு குடும்பப் பெண்ணுக்

125
குரிய பண்போடு, அவன் "சென்ற பாதை"யைச் சூசக மாகத் தொட்டுக் காட்டிய அவளது புத்திசாலித்தனத்தை என்னுல் வியக்காமலிருக்க முடியவில்லே. எழுந்திருந்து உட்கார்ந்து, ஆச்சரியத்தோடு, என் கண்களே அகல விரித்துக்கொண்டேன்.
அவள் தொடர்ந்து சொன்னுள்:
"எனக்கு இனிமேல் வாழ்வு கிடைக்காததைப்பற்றிக் கவலேயில்லே. ஆஞல் என்னேப்போல இன்னும் பலர் ஏமாந்துவிடக் கூடாதே என்பதுதான் என் கவலே. காதலில் மட்டுமல்ல, எத்தனேயோ பல காரியங்களில் மதம் குறுக்கிடும் மொழி குறுக்கிடும்; இனம் குறுக்கிடும். அதற்காக வாழ்வை அழித்துவிடக்கூடாது. காதல் என்பது காணல் நீர், அது கண்ணுல் காண முடியாத உருவெளித் தோற்றம்.
"வாழ்வு தனியே காதலில்மட்டும் தங்கிநிற்கவில்லே. வாழ்விலே காதல் ஒரு பகுதியே தவிர, காதலே வாழ் வல்ல. வாழ்விலே எத்தனேயோ காரியங்கள் செய்ய
இருக்கும்போது, காதலுக்காக ம டி ந் து விடுவது பேதமை"
" காதல், காதல், காதல்
காதல் போயிற், காதல் போயிற்சாதல், சாதல், சாதல்."
என்று ஒருவன் பாடியிருக்கிருனே, இதற்கு என்ன சொல்கிருய்?" என்று குறுக்கிட்டேன் நான்.
"கவிதை வெறியிலே எழுந்த பாட்டு இது. இது பாடி அனுபவிக்கத்தான் உகந்ததேயன்றி, வாழ்ந்து அணு பவிக்க உகந்ததல்ல. எனக்கு, ஒரு கவிஞர் பாடியிருப்பது நினைவுக்கு வருகிறது.

Page 65
1ይû
" அவனியொரு நாற்சங்தியாகும் வங்த
ஆட்களெல்லாம் வழிப்போக்கர் ஆவர்; அங்கே எவரெவரோ வருவார், பின் பிரிந்து போவார்"
"காதலும் இப்படியானதுதான். காதல் ஒருமுறை தான் வரும் என்பார்கள். அது என்னுல் நம்பக் கூடிய தாய் இல்லே. அதற்காக யாரும் ஒழுக்கத்தை உதாசீனம் செய்யவேண்டுமென்று நான் சொல்லவில்லை. இஷ்ட மானுல் மறுமுறையும் காதலித்து வாழ முடியும், காதல் கிடைக்கவில்லையென்ருலும் எதுவும் குறைந்துவிடாது. காதல்தான் வாழ்வா?"
அவள் சொல்லி முடித்து விட்டுப் பெருமூச்செறிந் தாள். நான் சற்று நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு; "இதையெல்லாம் எதற்காக என்னிடம் சொல்கிருய்?" என்று கேட்டேன். அவள் சிரித்தபடியே, "நீதான் எழுத்தாளன் ஆயிற்றே; இதை அங்கு எடுத்துச் சொல்வதன்மூலம் உனக்கு ப் பணம் கிடைக்கும். ஜனங்களுக்கு ஏதாவது நன்மையும் கிடைக்கும்" என்ருள்.
தூரத்திலே யாரோ பேசிச்கொண்டு வருவது கேட்டது. அவர்கள் பின்புறத்திலிருந்து வந்தார்கள் ராஜேஸ் அவர்களே ஊன்றிக் கவனிப்பது அவள் கண் ணுெளியிலிருந்து தெரிந்தது. நானும் திரும்பிப் பார்த்தேன்.
யாரோ வருகிருர்கள் இருவர்; ஆணும் பெண்ணு மாக இணைந்து கைகோர்த்தபடி வருகிருர்கள்.
அவர்களேப் பார்த்துவிட்டுத் திரும்பிப் பார்க் கிறேன். என்ன ஆச்சரியம் ராஜேஸைக் காணவில்லே அவள் மாயமாக மறைந்துவிட்டாள்.

12
எழுந்து நின்று அவள் போன திசையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். வந்தவர்கள் என்னே வழிவிலத்திப் போகிருர்கள். அவர்கள் பேசிச் செல்வது, தெளிவாக என் காதில் விழுகிறது.
"எப்போதும் என்னுடனேயே இரு கண்ணே எங்கும் போகாதே! உன்னைப் பிரிந்து வாடும் கணப் பொழுதும் எனக்கு, யுகப்பொழுதாக - கற்பகோடி காலமாக இருக்கிறது."
மீரான், உன்னேப் பிரிவது என்னுலும் முடியவில்லை என் உயிரைப் பிரிவதுபோலவே இருக்கிறது."
அவ்வளவுதான் எனக்கு அங்கு நிற்கப் பிடிக்க வில்லே. நான் வந்த காரியம் வேறு இத்தனே நேரமும் புரிந்த செயல் வேறு. என் பிரயாணத்தைத் தொடங்கு கிறேன்.
暫
அழகு மயக்கம், கருத்து மயக்கம், போதை மயக்கம் என்றெல்லாம் சொல்கிருர்களே. இது எதுவோ தெரி யாது. ராஜேஸ் என்னே ஒரு மனிதன் என்று நினைத்து விட்டாள். அதனுல்தான் போலும், தன் வாழ்வின் கதையை எழுதும்படி எனக்குப் பணித்திருக்கிருள்.
நான் செத்துப்போன கதாசிரியன். கதை எழுதுவ தாவது பத்திரிகையில் போடுவதாவது
1956

Page 66
கதவுகள் !
செல்லத்துரை அன்று விடிவதற்கு முன்பாகவே
எழுந்துவிட்டான். எழுந்துவிட்டாளுவது? உறங்கினு லல்லவா எழும்புவதற்கு? இரவு முழுவதும் அவனுக்கு உறக்கமே வரவில்லே.
அன்று, அவன் நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குப் போவதற்கு எண்ணியிருந்தான். அதனுல் அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிப் பெருக்கினுல்தான் அவன் உறங்கவே முடியவில்லை. நினைவுக்குமெட்டாத நீண்ட நெடுங்காலமாக நந்திக்குமேல் ந ந் தி கள் மறைத்து நிற்க, தாழுக்குமேல் தாழ் போட்டுப் பூட்டி வைத்திருந்த கோயில் திருக்கதவு அகலத் திறந்து எல்லோருக்கும் வழிவிட்டு நிற்கிறது. உள்ளே, கர்ப்பக் கிருஹத்தில் வள்ளி-தெய்வானே சமேதரராய் வீற்றி ருக்கும் சுப்ரமண்யக் கடவுளுடைய திவ்யஸ்வரூபத் திருக் காட்சியை நேருக்குநேர் தரிசித்து, சrஷ்டாங்கமாக விழுந்து வணங்கப் போகிருன் "இந்தத் தமியேனின் பாபங்கண் யெல்லாம் நிர்மூலம் செய்து, கஷ்டங்களி விருந்து எனக்கு விடுதலே கொடு அப்பனே" என்று வேண்டப் போகிருன். எப்படி அவனுக்கு உறக்கம் வரும்?
அவன் ஒரு கள்ளிறக்கும் தொழிலாளி.

1:9
கந்தசாமிகோயில், தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்கு வதற்கெனத் திறந்துவிடப்பட்ட செய்தியைக் கேள்விப் பட்டபோது முதலில், அவனுல் அதை நம்ப முடியவில்லே. ஆனுல் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்திருந்த செய்திகளேயும், திறப்பு விழாக் காட்சிகளையும் பார்த்தபோது ஒரு கணம் அவன் தன்னே மறந்து போனுன். அவன் உடலெங்கும் புல்லரித்தது. பத்திரிகையைக் கண்களில் ஒற்றிய வண்ணம், ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். அப்புறம், தனது கிராமத்துப் பிள்ளேயார் கோயிலேயும் நினைத்துக் கொண்டான். தன் ஜென்ம பூமியிலே யுக யுகாந்திரமாக வீற்றிருந்த தெய்வம்-கத்தி முனேயிலே கழைக் கூத்தாடு வதுபோன்ற அவர்கள் ஜீவனத் தொழிலுக்கு உத்தர வாதமளித்துக் காக்கிற தெய்வத்தின் திருச்சந்நிதானம் திறந்து விடப்படும் நாளே எண்ணிப் பரவசமடைந்தான்.
செல்லத்துரை வரகவியல்ல, அருட்கவியுமல்ல. அடித் துக் கிறுக்கியாவது ஒரு பாட்டெழுத முடியாத துரதிஷ் டப் பிறவி. பிள்ளேயார் கோயில் திறப்பு விழாவின் போது, அவன் நெஞ்சுருகி நெக்குருகிப் பாட என்ன செய் வான்? பரணிலே புகைமண்டிக்கிடந்த திருவாசகப் புத்தக மொன்றை எடுத்துத் துடைத்து. பரீட்சைக்குப் படிக்கிற மாணவனப்போல, ஏதோ ஒரு திருவாசகத்தை மனனம் செய்துகொண்டான். நல்லூர்க் கந்தசாமி கோவிலேத் திறந்த புண்ணியவான்கள், நமது நாட்டுக்கும் வருவார் கள் எங்கள் கோயிலேயும் திறந்து வைப்பார்கள்" என்று அவன் தினந்தோறும் எதிர்பார்த்திருந்தான் நாட்களே எண்ணிக்கொண்டே காத்திருந்தான்.
நாட்கள் நகர்ந்தன; வாரங்கள், மாதங்களாக உயர்ந்தன,

Page 67
130
பிள்ளேயார் கோயிலேத் திறந்துவைக்க எந்தப் புண்ணியவான்களும் வரவில்லே. வழக்கம்போல, ஐயர் வந்தார், திறந்து பூஜை வைத்தார் போனுர். அவர் தினந்தோறும்தான் வந்து திறக்கிருர், அவர் திறந்த கதவுகளுக்கூடாக யார் போக முடியும்?
செல்லத்துரை கடைசியில் பொறுமை இழந்து போனுன். பிள்ளேயார் கிடந்தார்-அந்தக் கோயிலைத் திறக்கிற நேரம் திறக்கட்டும். முதலில், நல்லூருக்குப் போப், கந்தசாமிகோயிலே வணங்கிவிட்டு வரலா மென்று தீர்மானித்தான். திறந்த கதவு சாத்திக் கொண்டுவிடும் என்று பயந்தானுே என்னவோ..!
書 馨 量
தீட்டி எடுத்த கத்தியும், முட்டியுமாகப் புறப்பட்டு அவசர அவசரமாக அவன் தொழிலே முடித்துக் கொண்டு திரும்பும்போது பொழுது விடிந்து கொண் டிருந்தது. நேரம் ஒன்றும் அதிகமாகி விடவில்லே. என்ருலும் நல்லூர்க் கந்தசாமி கோயில் எங்கே, பருத்திதுறையிலே ஒரு மூஃலயில் உள்ள அவனது வராத்துப்பளைக் கிராமமெங்கே? பஸ் பிடிப்பதற்கே ஒரு மைல் நடக்கவேண்டும். அப்புறம் கடகடத்துப்போன பஸ்ஸிலே இருபதுமைல் பிரயாணம் செய்ய வேண்டும். கூடியவரை முதற் பூஜைக்கே போகவேண்டும்.
வீட்டில் நுழைந்தபோது சின்னம்மா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது அஃணப்பிலே,
குழந்தை ராணி தன்னை மறந்து தூங்கினுள். வெள்ளே யுள்ளம் எதை நினைத்துக் கனவு காண்கிறதோ
இரண்டு நாட்களுக்கு முன்னர், கோயிலுக்கு வரும்படி சின்னம்மாவைக் கேட்டபோது அவள் மறுத்து

131
விட்டாள். கோயிலுக்குப் போவதற்கு அவளுக்கு நகை ஏது?
"எங்காவது இரவல் வாங்கித் தருகிறேன், வா" என்று செல்லத்துரை கெஞ்சிக் கேட்டான்.
"இரவல் நகை வாங்கிப் போட்டுக் கொண்டுதான் தெய்வ சந்நிதானத்துக்குப் போகவேண்டுமென்று என் த&லயிலே எழுதியிருக்கிறதா?" என்று சின்னம்மா சொல் வதற்குள் அவள் கண்கள் குளம் கட்டிவிட்டன. அப்புறம்: கோயிலுக்குப் போக வேண்டுமென் றெண்ணியிருந்த திட்டத்தைச் செல்லத்துரை மாற்றிக்கொள்ளப் பார்த் தான். ஆணுல் அவள் விடவில்லை. முட்டி நின்ற கண் னிரைப் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டு, சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, "ஈசன் அருள் உண்டானுல், எப்போதாவது, நல்லாயிருக்கும்போது எல்லோருமாகப் போகலாம்.இப்போ, குழந்தைக்காகவாகுதல் போயிட்டு வாருங்கள்" என்று அவள் பிடிவாதம் பிடித்தாள்.
செல்லத்துரை, ஒருகணம் சின்னம்மாவைப் பரிதாபத் தோடும், பாசத்தோடும் பார்த்துக்கொண்டு நின்முன். பின், அவளேத் தட்டி எழுப்பினுன் குழந்தையை எழுப்பி, ஆயத்தஞ்செய்யும்படி சொல்லிவிட்டுக் கிணற் றண்டைக்குப் போனுன், குளித்து முழுகிவிட்டு வந்த போது, குழந்தை, முகங்கழுவிப் புதுச்சட்டை போட்டுக் கொண்டு முற்றத்தில் நின்று கூத்தாடியது; சின்னம்மா தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தாள்.
செல்லத்துரை, விரைவில் உடுத்துக்கொண்டு, சைவப் பழம் மாதிரி விபூதி சந்தனமெல்லாம் பூசி அலங்கரித்துக் கொண்டு வெளியே வந்தபோது, சின்னம்மா, அவனிடம் சிரித்துக்கொண்டே, தேநீரை நீட்டினுள்,

Page 68
132
அவன் கணப்பொழுதில் திகைத்து நின்றன் என்ரு லும் சமாளித்துக்கொண்டு, "என்ன சின்னம்மா இது? கோயிலுக்குப் போகும்போது தேத்தண்ணி குடித்து விட்டுப் போவதா?" என்ருன்,
"ஏன், எல்லோரும் வயிறு நிறையச் சாப்பிட்டுத் தானே போகிருர்கள்!" என்றுள் அந்தப் பேதைப்பெண்.
இதற்காக எல்லோரும் அதைச் செய்யவேணுமா?" என்று சொல்லிக்கொண்டு தேநீரை வாங்கிக் குழந் தைக்குப் பருக்கப் போனுன்,
"அவள் குடித்துவிட்டாள்" என்று சொல்லியபடியே மடியில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் செல்லத்துன்ர யிடம் கொடுத்தாள் சின்னம்மா. பாவம் அந்தப் பணத் தைச் சேகரிப்பதற்காக அவள் எத்தனே நாள் பசி கிடந் தாளோ? என்னதான் கஷ்டமடைந் தாளோ.
செல்லத்துரை அவளே வாத்சல்யத்துடன் பார்த்தி படியே குழந்தையைத் தூக்கிக் தோளிற் போட்டான். சரி, மத்தியானமே வந்துவிடுவேன். ஏதாவது சமைத்து வை; கோயிலுக்குப் போகிறேன் என்பதை ம றந்து விடாதே" என்று அவள் தூய கறியாக்க வேண்டுமென் பதை நினைவுபடுத்திவிட்டு வெளியே நடந்தான்.
பஸ்ஸிலிருந்து இறங்கும்போதே அவன் உடல் முழு வதும் புல்லரிக்கத் தொடங்கியது. குழந்தையை இறக்கிக் இழேவிட்டுவிட்டு சால்வையை எடுத்து அரையில் கட்டிக் கொண்டான். அன்று வெள்ளிக்கிழமையாதலால் கோயி வில் ஜனங்கள் நிறைந்திருந்தார்கள். அரோஹரா என்ற சத்தம், பக்தர்கள் பாடுகின்ற ஓசை கண்டா மணியின் நாதம், சிறுவர்களின் கூக்குரல் இத்தியாதி கூட்டுக் குரலு -67 கர்ப்பூரம்-சாம்பிராணி ஆகியவற்றின் வாசனை

133
எல்லாம் சேர்ந்து அவனுக்கு ஒருவித புத்துணர்ச்சியை உண்டாக்கிற்று. என்ருலும் பயம் போகவில்லே.
பத்திரிகைகளிலே படித்தாயிற்று நாலுபேர் சொல் விக் கேட்டாயிற்று. என்ருலும் பயம் விடவில்லை. நானு வது கோயிலின் உட்பிரகாரத்திலே நுழைவதாவது? என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. "உலகமே சேர்ந்து என்னேச் சதிசெய்து கொல்லப் பார்க்கிறதோ?" என்று அவன் குழப்பமடைந்தான். யாராவது நம்மவர் கள்-தெரிந்தவர்கள் அகப்படமாட்டார்களா என்று அங்கலாய்த்தான். என்றுலும் ஒரு துணிவு. அமானுஷ்ய மான சக்தி அவனை வழிநடத்திற்று. "என்னதான் வந்து விடும்? வந்தாலும் கடவுள் சந்நிதானம்தானே" என்று தன்னேச் சமாளித்துக்கொண்டான்.
குழந்தையைக் கையில் பிடித்துக்கொண்டு, பயமா பத்தியா என்று இனந்தெரியாத தயக்கத்துடன் அவன் உள்ளே நுழைந்தான். அங்கே கோடி தீபங்களின் மத்தி யிலே ஜகஜ்ஜோதியாகத் திவ்வியப் பிரகாசத்துடன் விளங்கிய சுப்பிரமணியக் கடவுளின் திருக்கோலததைக் கண்டதும் அவனேயுமறியாமல் ஏதோ ஒரு சக்தி அவன் நரம்புகளெங்கும் பாய்ந்து குமுறியது."அப்பனே முருகா! சுப்ரமண்யா" என்று கதறியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினுன். அவன் பக்தனுகி விட்டான். பக்தனுக்கு "நான்" என்ற நிலையும்நினேவும் ஏது? மனனம் செய்துவந்த திருவாசகத்தைக்கூட மறந்துபோனுன், தன் கஷ்டங்களையெல்லாம்சொல்லிக் கண்ணீர்சிந்தினுன்.
அவன் சுயநினைவு பெற்று எழுந்திருந்தபோது வெகு நேரமாகிவிட்டது. முடிச்சிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து ஐயரிடம் கொடுத்து அர்ச்சனே செய்வித்தான். அந்த அர்ச்சனைப் பொருட்களே, ஐயரிடமிருந்து பெற்றுக்

Page 69
134
கொள்வதற்கிடையில், குழந்தை அவன் வேட்டித் தலைப்பைப் பிடித்திழுத்த வண்ணம் சிணுங்கியது.
குழந்தைக்குப்பசி வயிற்றைக் கிள்ளியது. "பசிக்குது அப்பா, அப்பம் வாங்கித் தா" என்று அது அழத் தொடங்கிவிட்டது.
குழந்தை பசி பொறுக்க முடியாமல் அழுதது. அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு எதிரே நடந்தது அங்கே.
பலவித பட்சணங்களை யெல்லாம் பரப்பி வைத்துக் கொண்டு கடைகள் திறந்துகிடந்தன. அந்தக் கடைகளே நெருங்கியபோது, அந்தப் பட்சணங்களின் வாசனை மூக்கைத் துளைத்தது. செல்லத்துரை குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஒரு கடைக்குள் நுழைந்தான். ஒரு மேசைக்கரையோரமாகப் போய் உட்கார்ந்தான். குழந்தையை ஒரு நா ற்காலியில் உட்காரவைத்தான்.
என்ன வேணும்? என்ன தின்னப் போகிருய்?" என்று அவன் குழந்தையைக் கேட்டான். குழந்தை நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தது. அது தன் வாழ்க்கையிலே கண்டறியாத பலகாரங்களை யெல்லாம் பார்த்துக் குழம்பியது.
இட்லி சாப்பிடுறியா?"
I LhJ"
இட்லி வந்தது. குழந்தை அதைப் பிய்த்துச் சாப்பிடத் தெரியாமல் திண்டாடியது. செல்லத்துரை குழந்தைக்கு உதவி செய்தான் தானே அதைப் பிசைந்து குழந்தைக்கு ஊட்டினுன்
கடையிலே, தேநீர் அடிக்கிற சத்தம் திண்னங்கள் ஒன்ருேடொன்று மோதுகிற ஒலி, சிப்பந்திகளின்

135
நடமாட்டம், அவர்கள் சிற்றுண்டிகளின் பட்டியல் ஒப்புவிக்கும் இரைச்சல், "கணக்கென்ன?" என்ற முதலாளியின் விசாரனே இவற்றைப் பின்னணியாக்கி யார் யாரோ வருகிறர்கள்: போகிறர்கள்.
குழந்தைக்கு இட்லியைப் பிசைந்து ஊட்டிய வண்ணம், சிந்தையை முருகன் கழல்களில் சுழல விட்டுக்கொண்டிருந்த செல்வத்துரை, "யா ர து, செல்லனு?" என்ற குரல் கேட்டுத் திரும்பினுன். அப்படியே திடுக்கிட்டுப் போனுன். எதிரே நின்றது, ஊர்க்காரர், உயர்ஜாதிக்காரர். அவரது முகத்தில் அவமான உணர்ச்சி பீறிட்டது கண்கள் சிவப்பாக மாறின.
"எப்போதிருந்து இது?" என்று அவர் மறுபடியும் கேட்பதற்கிடையில் அவனேச் சுற்றி ஒரு கும்பல் திரண்டு விட்டது. வாயில் இட்லியை வைத்துக் குதப்பிக் கொண்டிருந்த குழந்தை, கும்பலேக் கண்டு பயத்தால் அழுதது. அதனுல் குதப்பிய இட்லி விக்கி, மூச்சடைத்துக் கண்ணீர் வழிந்தது.
காசுப்பெட்டியில் இருந்த முதலானி நிதானமாக எழுந்து வந்தார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
"பட்" என்று ஒரு சத்தம்.
போடா வெளியே ராஸ்கல்,"
செல்லத்துரை கன்னத்தைக் கைகளால் அழுத்திக் கொண்டு, "முருகா" என்ருன்.
குழந்தை பயங்கரமாக வீறிட்டு அழுதது.

Page 70
1.
அந்தத் திமிர்தான் அ கடை" என்று கூட்டத் மிட்டார்கள்.
குழந்தையை இரு சை கொண்டு அவன் வெளிே அழுகைச் சத்தம் அந்த மு எதிரொலித்தது

Bû
வர்களுக்கு இது கோயிலல்ல; திலிருந்த யாரோ சத்த
களாலும் வாரி எடுத்துக் ப வந்தான். குழந்தையின் ருகன் சந்நிதானம் முழுதும்

Page 71
நிர்வே பேசுவோம் புடன் கூடிய இச்சிறு கன
ஆசிரியர்களில் ஒருவர்.
ஆசிரிய
யுடன் எழுப்பட்ட முற்
கிடக்கிறது. இன பேதம்
க்க பேதமற்ற
॥ கண்ட அந்த பங்கனாபு திரம் வியாபித்துக் கிடப்ப
அந்தக்
ਪ॥
நன்கு |L S S S S S S S S S S S SS SS SS S S S S * ■■轟
 

SL SLS S S S S S LS S LS LSLSLSSL SL L S L SL SLS S L LSLS
தத் தொகுதியைத் தரும்
கொழும் விவேகானந்த
கப் பணிபுரிபவர்
நகள் சமுதாயப் பிரக்கரு போக்குக் கதைகளாகவே
ஒரு கன வு மாடுருவிக்
|L
இவ்வேழுத்தாளர் உள்ளத் தை நாம் காண்கிருேம். யை அர்ப்பணித்திருக்கிறர் மிழ் நடை, இக்கனவுகள்ே
S S SLSLS S LSSLSS SLSS SLSS SLSLS SLS S S S SSLSL S LSS LLS