கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலா

Page 1
歴量 ) sae "::: 濮? |- |- |- !* 다 - |-**, haesi * si |- ----
*
 


Page 2

) T
. சட்டநாதன்.

Page 3
Ulla a Collection of Short Stories by K Saddanathan 21 Saddanather Road Nallur Jaffna Copyright reserved Printed at Star Line Printers No 2 13 Grand Pass Road
Colombo 14 Cover by Srithar Pichchaiappah Cover Printed by Vijaya Press Price Rupees Sixty
- நன்றி - ஏ. ஜே. ஸ்ரார் மல்லிகை யூனிதர் பிச்சையப்பா நங்கை விஜயா திசை

சட்டநாதனின் சிறுகதைகள்
w s s జిలో நண்பர் க. சட்டநாதனின் சிறு கதைகள் அவ்வப்போது வெளிவரும்போது, அவற்றை வாசித்து, சுவைப்பவர்களில்
தானும் ஒருவன்.
அவருடைய முதல் சிறு கதைத் தொகுதி மாற்றம் 1980 இல் வெளிவந்தது: ஒரிரு கதைகளைத் தவிர, அத் தொகுதி யில் இடம்பெற்ற கதைகள் வெற்றிகரமாக அமைந்தன என நினைக்கின்றேன். பிளிறிக்கொண்டு அட்டகாசம் செய் யும் யானையைப் போலன்றி, மிக அடக்கமாகவும் மனிதத் தன்மையோடும் தனது பாத்திரங்களை நோக்கி அவர் களுடைய உறவுகளினூடாக சமுதாயத்தைப்பற்றி குறிப் பாக யாழ்ப்பாணச் சமுதாயத்தைப்பற்றி நாகுக்காகத் தமது கதைகள் மூலம் சிந்திக்கத் தூண்டினார் ஆசிரியர்.
இத்தொகுதியில் இடம் பெறும் ஐந்து கதைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்கெனவே கிடைத்தது.
அவருடைய முதல் சிறு கதைத் தொகுதி ஏற்படுத்திய மனப்பதிவை இக்கதைகள் மேலும் வலுவாக்கின.
அரும்பு, உலா ஆகிய கதைகளில், ஆசிரியர் குழந்தையின் உணர்வுகளோடு ஒன்றி, அக் குழந்தையின் கண்களினூடாக உலகை நோக்குகின்றார். குழந்தைகளின் அக உலகை நுட்ப மாகச் சித்திரிப்பதில் ஆசிரியர் கைதேர்ந்தவர் என்பதற்கு இக்கதைகள் சான்று.

Page 4
வித்தியாசமானவர்கள் வித்தியாசமான கதைதான். இது வும் உலாவும் யாழ்ப்பாண வாழ்க்கை முறையைப் பொறுத்த வரை, சிலருக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தக்கூடிய, விரும் பத்தகா உட்புறத் தோற்றத்தை (Semy Side) வாச கர்களிடையே அருவருப்பை ஏற்படுத்தாமல் உணர்த்துகின் றன. அருவருப்போ, வெறுப்போ ஏற்படாததற்குக் கார ணம், ஆசிரியர் தனது பாத்திரங்களை மனிதாபிமானக் கண்கொண்டு நோக்குவதே. இதனால் அப்பாத்திரங்கள் மீது வாசகர்களின் உள்ளத்தில் பரிவு ஏற்படுகின்றது.
எம்மை இரட்சிக்க வந்தவர்கள் எம்மை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்திய அவலத்தை, கவளம் வெளிப் படையான சுலோகப் பிரசாரம் எதுவுமின்றி மனதைத் தொடும் வகையில் உணர்த்துகின்றது.
தனது வரம்பிற்குள், பக்குவம் ஓர் குழந்தை ஏற்படுத்தும் மனோ நிலை மாற்றத்தை வெற்றிகரமாகச் சித்திரிக்கின் நிறது.
மென்மையான உணர்வுகளை கலை நயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெறு வதால், ஈழத்துச் சிறுகதை உலகில் சட்டநாதன் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார்.
O
யாழ்ப்பாணம். ஏ. ஜே. கனகரத்தினா. 09.01, 1992.

எனது ஜெயத்துக்கு

Page 5
தரிசனம்
பக்குவம்
தளம்பல்
அரும்பு ஒதுக்கம்
கவளம்
வித்தியாசமானவர்கள்
96)

தரிசனம்
மெலிதாக விலகியிருந்த கதவின் நீக்கலில் அவள் இருப்பது இவனுக்குத் தெரிந்தது.
அவளது கைகளில் ஏதோ புத்தகம். 'இவளுக்கு இந்தப் பித்து இன்னும் தீர்ந்தபாடு இல்லையோ?" என நினைத்த வன்-கதவை நெருங்கி, மெதுவாகத் தட்டினான்.
மிகவும் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்ததால், அந்த ஓசை அவளிடம் எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
கதவு மிக அருகாமையிலிருந்தும், தன்பால் அவள் கவனம் கொள்ளாதது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

Page 6
"இவள் முன்னைக்கு இப்பொழுது பருத்திருக்கிறாள். பூசி 'யது போலிருந்த தசைகளில் ஒரு இறுக்கம், சேர்ந்தாற் போல ஒரு தளர்ச்சியும் கண்டிருக்கிறது" - என நினைத்த வன், நெற்றிக்கு மேலாக அவளது கூந்தலில் சற்று நரை யோடி இருப்பதையும் அவதானித்தான்.
எதையுமே தீர்மானத்துடன் ஒதுக்கி விடும் அவளது இயல்பு அவனுக்கு நினைவு வர, சற்றுப் பதட்டமடைந்தவனாக, கதவை மீண்டும் சற்றுப் பலமாகத் தட்டினான்.
அவள் விழி உயர்த்தி, சிறிதாகத் திரும்பி, இவனைப் பார்த்தாள். பார்த்தவள், எழுந்து வந்து கதவைத் திறந்து, இவன் உள்ள்ேவர வழி தந்து நின்றாள்.
உள்ளே வந்தவனை அவள் நன்றாகவே பார்த்தாள்.
‘ஒரு ஆணுக்குரிய மனப் பக்குவங்களை இவன் கொண் டிருக்கவில்லை. எனினும், கம்பீரமாக இருந்தவன். ஏன்.? ஏன் இப்படி உடலும் மனமும் சவலை தட்ட, அழுக்குப் படிந்த உடைகளுடனும், பல நாட்கள் முகச் சவரம் செய்யாமலே முரட்டுத்தனமாய் வளர்ந்து அடர்த்தி கொண்ட தாடியுடனும். ஒ! அந்தக் கண்கள். வைர மணிகளாய் ஒளிரும் அந்தக் கண்கள்! தீட்சண்யம் குன்றி . ஒளியிழந்து.'
அவள் இவனைப் பார்த்தபடியும்; இவன் அவளைப் பார்த்த படியும் ஒரு சில நிமிடங்கள் மெளனத்தில் கரைந்தன.
"உட்காரும்படி கூடச் சொல்லாமல் இதென்ன பார்வை.
இதென்ன நிதானம்...!"
அவனது மனசு அலுத்துக் கொள்கிறது.
2

'இல்லை. ஏழு வருஷங்களுக்குப் பிறகு. என்ன இப் படித் திடீரென இந்தப் பக்கம்?"
"உன்னை. இல்லை. இல்லை. மலரைப் பார்க்க வேணும் போலை ஆசையா இருந்தது."
"உண்மையா......? என்னையும் மலரையும் பார்க்கவா வந்தது?"
"இவளது குரலில் இழைவது கோபமா. ... ஏளனமா?
இவள் மாறவில்லை. இத்த்னை ஆண்டுகள் இடை வெளியின் பின் கூட, இவளில் எதுவித மாற்றமுமில்லை
*
"இருங்களன்."
அவளது அந்த வார்த்தைகளையே எதிர்பார்த்தவன் போல, உடனடியாக உட்கார்ந்து கொண்டவன்.அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எட்டி எடுத்துப் புரட்டினான். சிரமத்துடன் அதன் தலைப்பை மனப்பாடம் செய்வது போலச் சற்று உரக்கவே படித்தான்: . . . ...
*“Lil ?ofGabriev”
"என்ன ஜேம்ஸ் ஜொய்ஸ்ஸா..? பிரஞ்சா. ரஸ்ஸி யனா? என்ன நாவல்...?
அவள் முகத்தைச் சற்றுக் கைகளால் மறைத்தபடி, மெலி தாக நகைத்தாள். அவனது அறியாமை, அவள் அறிந்த ஒன்றுதான். ‘எழுத்து, இலக்கியம் பற்றி எதுவித அறிவோ ரசனையோ இல்லாது. யந்திரம் போல வாழ்ந்தவன்தானே இவன், என நினைவு கொண்டவள்; அவனுடன் ஒர் இரண்
3

Page 7
டாண்டு காலம் வாழ்ந்த அந்த அவலம் மிகுந்த வாழ்வை நினைவு கொண்டாள்.
இவள் அவனைத் திருமணம் செய்தபொழுது இவளுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது தான் இருக்கும். அந்த இளம் வயதிலேயே இவள் விடலைப் பருவப் பெண்களிற்கே யுரிய கனவுகளிலிருந்து விடுபட்டவளாகவும், அதற்கு மாறாக வாழ்க்கை பற்றிய தரிசனம் மிக்கவளாயுமிருந்தாள்.
இதற்கெல்லாம் காரணமாய் இருந்தவரே இவளது தந்தை
தான். அவர் கற்றுத் தந்தவைபோக, அவர் வீட்டில் சேமி
த்து வைத்திருந்த புத்தகச் செல்வங்கள் இவளை மிகுதியும் ஞானமுடையவளாக்கியது.
அவள், அப்பாவின் புத்தக ஷெல்ஃபிலிருந்துதான் பாரதி யையும், புதுமைப்பித்தனையும், மெளனியையும், ஜானகி ராமனையும் பரிச்சயம் செய்து கொண்டாள். படிப்பது, அதையொட்டிய ரசனையில் திழைப்பது, அவளது வாழ்க் கையின் இன்னொரு பகுதியாக ஆகியிருந்தது.
திருமணநாளன்று இரவு, கட்டிலுக்கு இவள் பாலும் பழமும் ஏந்தி-அவன் சினிமாவில் பார்த்து ரசித்த மாதிரி, கனவுக ளோடு-வராமல் சாதாரண "நைட்டி"யுடன் ஏதோ புத்தக மொன்றைக் கையில் ஏந்தி வந்தது, இவனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது.
"என்ன இது கையிலை...?"
"வேள்வித் தீ. நல்ல நாவல். படிக்கிறியளா?”
இவன், அவள் எதிர்பார்க்காதவகையில் - இங்கிதமில்லா மல், சற்று முரட்டுத் தனமாக-அந்தப் புத்தகத்தைப்
4.

பிடுங்கித் தூர வீசிவிட்டு, இவளை அணைத்துக் கொண்
t-fT6ðf.
"டாம் இட்." என்று மெதுவாக முனகியவள், அடுத்த கணம் தன் தவறை உணர்ந்து, நாக்கைக் கடித்துக் கொண் டாள்.
அன்று, அவள் வேள்வித் தீ படிக்கவில்லை. மலரிலும் மெல்லிய விஷயங்கள், அங்கு தீ படர்ந்து கருகியதான உணர்வினைத் தான் அவளுக்குத் தந்தது.
அந்த முதல் அனுபவம் அவளுக்கு இன்னொரு விஷயத்தை பும் உணர்த்தியது. அவனுக்குப் புத்தகமென்றாலே மிகுதி யான அலர்ஜி என்பதுதான் அது. ... •
அதன் பின், இவள் அவனில்லாத சந்தர்ப்பங்களில் தான் மிகுந்த ரகசியமாகவும், ஒரு வகைப் பதட்டத்துடனும் புத்தகங்களைப் புரட்டுவாள்.
அவன் ஒரு வகை அதிகாரத்துடனேயே, இவள் படிப்பதை நாகரிகமில்லாமல் தடுத்து வந்தான். அத்துடன், புத்தகம் படிப்பதே பழுதான ரசனை என்றும், அதற்குச் செலவிடும் நேரத்தையும் பணத்தையும் ஏதாவது பயனுள்ள வேலை யில் ஈடுபட்டுச் செலவிடலாமே என்றும் அவன் அபத்தமாக வாதிடவும் செய்தான்.
அவன் பயனுள்ள வேல்ை என்று கூறுவதெல்லாம்-இவள் அவனுக்கு விதம் விதமாய்ச் சமைத்துப் போடுவதையும், அவனது ஆடைகளைக் கழுவிப் போடுவதையும், அவன் அழைத்துச் செல்லும் மூன்றாந்தர சினிமாக்களையும், நாட கங்களையும் பார்த்து விட்டு "நன்று நன்று' என்று அவனது மலினமான ரசனைக்கு ஒத்தடம் கொடுப்பதையும்; அதற்கு மேலாக, அவன் சொல்லுகிற மாதிரியெல்லாம் இவள் அரை
5

Page 8
குறை ஆடைகளோடோ அல்லது ஆடையில்லாமலோ இரவு பூராவுமே-சில சமயங்களில் பகலிலும் கூட இவனுடன் உறவு கொள்வதைத்தான்; என்பதை இவள் பூரணமாக உணர்ந்திருந்தாள்.
"என்ன ஏதென் குடிக்கிறியளா? கோப்பி தரட்டுமா..?" என்று கேட்டவள், உள்ளே சென்று, அதிக கோப்பித் தூள் போடாமல்; ஆடை நீக்கிய பால் கொஞ்சம் சேர்த்து, சிறிது சீனியும் சேர்த்து, இவன் விரும்பிய வண்ணம்இவனுடன் மனைவியாக ஓர் இரண்டாண்டு காலம் வாழ்ந்த வாழ்க்கையை நினைவு கூர்வது போல-கோப்பி போட்டுத் தந்தாள். அதை வாங்கிக் கொண்டவன், கிளாசையும் கோப்
பியையும் மாறி மாறிப் பார்த்தான்:
"என்ரை கிளாஸ். ஏழாண்டுக்குப் பிறகும் உடையாமல் பத்திரமாக..."
'உங்களைப் போல என்னாலை எதையுமே போட்டு உடைக் கத் தெரியாது".
அவள் கண்களில் திரட்சி கொண்ட நீரை மெதுவாக முகம் சாய்த்து மறைத்துக் கொண்டாள்.
"கோப்பி கூட இண்டைக்குத் தான் குடிச்சது போலை யிருக்கு’ என்றவன், திடீரென ஏதோ நினைத்துக் கொண்ட வனாய் கேட்டான்:
“இப்பை நகுலேஸ் இஞ்சை இல்லையா...?"
அவன் ஏற்கெனவே கேள்விப்பட்ட விஷயம் தான். ஆனா லும் ஏனோ அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
6

'இல்லை."
அந்த வாழ்க்கை, தான் விரும்பாமலேயே சம்பவித்ததற்கு அவள் துயருற்றவள் போல, மனக் கலக்கத்துடன் இவனைப் பார்த்து நின்றாள்.
திருமணமான புதிதில்-ஒரு சமயம் இவள் அவனுடன் கொழும்புக்குப் போன பொழுது, சர்வதேச திரைப்பட விழா ஒன்று ரீகல் திரையரங்கில் நடப்பதை அறிந்து, இவனை வரும்படி அழைத்தாள். அதில் ஓரிரு படங்களை யாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் மிகக் கொண் டிருந்தாள். நல்ல திரைப்படங்கள் பற்றி அவள் படித்திருந்த அளவுக்குப் பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் பெற்றிருக்க வில்லை.
அவள் பார்த்த கலைத்தரம் வாய்ந்த முதற் திரைப்படம் ரேயின் 'அபுசன்சார் தான். அந்தப்படம் தொற்றவைத்த உணர்வின் திருப்தியோடு வெளியே வந்தவளை இவன், மிகவும் மோசமான, மொழி புரியாத படத்திற்குத் தன்னை அழைத்து வந்தது பற்றியும், அவளது ரசனை மிகவும் மட்டமானது என்ற தொனிப்படவும் சொல்லியதோடு அமையாது, ஓர் அமெரிக்கப் படத்தின் பெயரைச் சற்றுத் தவறுதலாக உச்சரித்தபடி - அதைப் பார்த்திருக்கலாம்", என்று சொன்னான்.
இவள் உண்மையில் அவன்பால் மிகுந்த பரிவு கொண்டு, "நல்லது எது என்று புரிந்து கொள்ள முயற்சியுங்கள்", என்றாள்.
இது அவனுக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும். அவன் கோபமடைந்தவனாய்:

Page 9
"பெரிய இவ. அவவின்ரை ரசனையும் மண்ணாங் கட்டியும். இப்படி அட்டை ஊர்ர மாதிரிப் படமெடுக்க எவனுக்குத் தெரியாது. சரியான டல்லா. ஒரு பாட்டு ... ஒரு டான்ஸ். எதுவுமே இல்லாமல்.’’.
அவர்களது உரையாடல் தடைபடும் வண்ணம்:
“ஹலோ. குரு. என்ன இந்தப் பக்கம். சிவாஜி படம் எதுவுமே புதிசா ஓடெல்லையா?*
'இல்லை மச்சான். இவள் ஏதோ சொல்லிறாளெண்டு வந்தா. ஒரே அறுவைப் படமாப் போச்சு...”*
அவன் மனைவி மீது குற்றம் சுமத்தினான்.
'உன்ரை மிஸ்ஸிஸா. வணக்கம்...”* என்றவன், தொடர்ந்து கேட்டான்:
'உங்களுக்குக் கலைப்படங்களெண்டா பிடிக்குமா...?"
இவள் மெலிதாகப் புன்னகைத்தவாறு, பிடிக்குமென்றாள்.
"நேற்றைய படம் பார்த்தீர்களா?"
"யப்பானியப் படம். அக்கிராகுரோஸோவாவுடை ligi ... அது தானே?"
"டைரக்ட்டர் பேரெல்லாம் தெரியுதே!'
"இல்லை. அவரைப் பற்றிப் படித்திருக்கிறன். இது தான் நான் பார்த்த முதல் படம்...!"
அவள் மறைக்காமல் உண்மை பேசியது அவனுக்குப் பிடித் திருந்தது.
8

"நாளை ஐசன்ஸ்ரைனுடையது. தவறாமல் வந்து பாருங்க ... "த ஸ்ரைக்' என்ற படம்’’.
கூறியவன், திடீரென விடை பெற்றுக் கொண்டு வெளியே
போனான்.
அவளுக்கு இவனை விட்டுவிட்டு, அவனோடு போய், நாளை அவனுடன் வந்து, ‘த ஸ்ரைக்" படம் பார்க்க வேண்டும் போலிருந்தது.
மறுநாள், அவள் விருப்பங் கொண்டிருந்த பொழுதும், "த ஸ்ரைக் பார்க்க முடியாமலே போய் விட்டது. இந்த நிலமை மிகவும் கொடுமையானதாகவே அவளுக்குப் பட் டது. தனது சுதந்திரமின்மையையும், தான் விரும்பும் எதை யுமே செய்ய முடியாமல் போவதையும் நினைத்து மிகவும் கவலையும் கலக்கமும் கொண்டாள்.
அந்த நிகழ்ச்சியின் பின்னர், இரண்டு நாள் கழித்து, “குரு இருக்கிறானா?", என்று கேட்டபடி நகுலேஸ்வரன் வந் தான்.
வந்ததுமே, "த ஸ்ரைக்' பார்த்தீர்களா?' என்றுதான் கேட்டான்.
இவளுக்குப் பெருமைக்காகவேனும் பொய் சொல்ல வராது. "இல்லை' என்றாள்.
"சே. யூ ஹாவ் மிஸ்ட் ஏ கிரேட் ஃபில்ம்', என்றவன், "குரு எங்கே’’ என்று மீண்டும் கேட்ட போது தான் இவள் தன்னுணர்வடைந்தாள்.
தன்னை மறந்து, லயித்துப் போக இவனில் அப்படி என்ன இருக்கிறது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

Page 10
உயரமாக, சிவப்பாக, பொசு பொசுவென்று தாடி வளர்த் துக் கொண்டு, இடை இடையே தன்னிச்சையாகச் சிரித்த படி, தலை கொள்ளாது சடைத்து வளர்ந்த தலைமுடியை, நெற்றியில் வந்து விழும் பொழுதெல்லாம் புறங்கையால் ஒதுக்கியபடி, இவளது உயரத்திற்கே குனிந்து வந்து, அவன் இலக்கியம் பேசியது இவளுக்குப் பிடித்துப் போய்விட்டது.
அவன், கணவனுடைய நண்பன் என்ற ஸ்தானத்திலிருந்து, இவளது நெருங்கிய சிநேகத்திற்கு உரியவனானது இவள் உணராமலேயே நடைபெற்றது.
நவீனமான எந்த விஷயத்தையுமே அவன் தெரிந்து வைத் திருந்தான். கலை இலக்கியம் பற்றி ஆழ்ந்து அக்கறையுடன் பேசியவன்-அரசியலும் பேசினான். இலங்கையின் இனச் சிக்கல் பற்றியும், அதற்குத் தீர்வாக எதனையுமே தரத் தயங்கும் நமது பூர்ஷ்வா தலைமை பற்றியும், அதன் போலி நியாயங்கள் பற்றியும், இவளுக்குப் புரிகிறமாதிரியும் மனம் ஒப்பி ஏற்கும் விதமாயும் அவனால் பேச முடிந்தது. அதே சமயம் பிரஞ் திரைப்படங்களைப் பற்றிப் பேசும்பொழுதுபத்மா சுப்பிரமணியத்தையும், ஷேச கோபாலனையும், அவன் தெரிந்து வைத்திருப்பது, இவளுக்கு மிகவும் பிடித்த மாய் இருந்தது.
இதுவரை ஏதோ கரடுமுரடான பாதையில் நடந்து வந்தது போலவும், இவனது வருகையும் தோழமையும், வெல்வெட் விரிப்பில் நடப்பது போன்ற சிலிர்ப்பையே அவளுக்குத் தந்தது.
ஞான சூனியமான, எதற்குமே சிடுசிடுக்கும்-இங்கிதமில் லாத கணவனது உறவுகளிலும் பார்க்க இந்த உறவு,
இந்தத் தொடர்பு எல்லாம் அவளுக்குப் பிடித்தமானதாகவே இருந்தது.
- 10

ஆனால், அந்த வாழ்வையே கொச்சைப்படுத்துவது போல அவளது கணவனே இவளை இடித்துரைத்த பொழுது இவள் மிகுந்த கூச்சமடைந்தாள்.
இவளுக்கும் நகுலேசுக்கும் தொடுப்பாம்.
“என் கண்முன்னாலையே இப்படிக் கூத்தடிக்க உனக்கு வெக்கமாயில்லை? ஏதேதோ அவன் பிதற்றினான்.
அவள் அப்பொழுது இரண்டு மாதக் கர்ப்பமாயிருந்தாள்.
"ஏன் அவசரப்படுவான் நிச்சயமானதும் சொல்லலாமே", என இருந்தவளுக்கு இந்தப் பேச்சுக்குப் பின் ‘இவனிடம்
போய் இதையெல்லாமா சொல்லவேணும்..." என்று ஒரு வகை வீம்பு மேலிட, பேசாமலே இருந்தாள்.
ஆனால், அவளில் ஏற்பட்ட மாற்றங்களை இவனாகவே அறிந்தபொழுது, மிகுந்த சந்தேகம் கொண்டு, "லபோ லபோ' என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண் டான். நகுலேசின் கருவைத் தான், சோரம்போய் இவள் சுமந்து திரிகிறாள் என்று சத்தம் வைத்தான்.
அதனோடு அமையாது, நகுலேஸ் ஒரு சமயம் வந்தபொழுது, அவனை வாசற்படியிலேயே நிறுத்தி வைத்து, "நண்பனது மனைவியை பெண்டாள மனசு வருமோ...?" என்று கூச்சலிட்டான்.
எல்லாமே, மிகவும் கோமாளித் தனமாகவும், நாடகத் தன்மை மிக்கதாகவும், ஒரு மூன்றாந்தர சினிமாவில் வரும் அருவருப்பு மிக்க காட்சி போலவுமே அவளுக்குத் தோன்றி tLuğ5I.
இந்தச் சினிமாத் தனமெல்லாம் இவனில் ஊறிப்போனதற் குக் காரணமுண்டு என்பது இவளுக்குத் தெரியும். ‘இவன்
11

Page 11
வாழ்வின் மதிப்புகளைச் சினிமாவைக் கொண்டே அளவிடு பவன் தானே", என நினைவு கொண்டவள், இந்த அசட்டுப் பிறவியுடன் வாழ்வதிலும் பார்க்க, தனித்தே இருந்துவிட ஆசை கொண்டாள்.
ஒரு சந்தர்ப்பதில் இவள் அவனிடம்:
'உங்களது சந்தேகங்களுக்கு எதுவித ஆதாரமும் இல்லை உங்களுக்கு என்னிலை விருப்பமில்லையெண்டால் தாராளமாகப் பிரிந்து போகலாம்', என்றாள்.
“போகத்தான் போறன். உன்னோடை. உந்த ஊத்தை
எனக்கு என்ன வேலை. என்றவன், மலர் பிறக் கும் வரை அங்கேயே தங்கிவிட்டது அவளுக்கு ஆச்சரிய மாக இருந்தது.
குழந்தை இவனது சாயலைக் கொண்டு பிறந்தது இவனது எதிர்பார்ப்புக்களை மோசம் செய்திருக்க வேண்டும். குழந்தை பிறப்பதற்கே காத்திருந்தவன் போல-தனது சாய லைக் கொண்டிருந்தும், சிறு சிறு சந்தேகம் இவனைக் குடைய-இவன் மிகுந்த குரோதம் கொண்டு, பெற்றவள், பச்சை உடம்புக்காரி என்று கூடப் பார்க்காமல், அவளை மிகக் கொடூரமான முறையில் உதைத்தான்.
"குழந்தையின் கண்கள் நகுலேசின்ரை மாதிரியே இருக்கு இடது உதட்டோரத்திலை இருக்கிற அந்த மச்சம், அதுகூட அசலா அவன்ரை மாதிரியே...", என்று கூறி. அவளையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்த பின்னர்காலம் தாழ்த்தி இப்பொழுது வந்திருப்பது:
‘மலரைப் பார்க்கவா..? இல்லை. மனமே மரத்துப் போய் ஒதுக்கி விட்ட விஷயங்களைத் தொட்டுக் காட்டி
சுகந்தேட வந்திருப்பானோ..??
12

அதை நினைத்ததும் அவளால் தாளமுடியவில்லை, சிரிப் பாய் வந்தது. அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
‘என்ன... என்ன...ஏன் இப்பிடிச் சிரிக்கிறை?"
'இல்லை. மலர் உங்கடை பெண்ணென்பதை நிச்சயப் படுத்தியாச்சுப் போலை. அதுக்கு, உங்களுக்கு ஏழு வருஷம் பிடிச்சிருக்கு...'
"ஏன்... ஏன் அப்பிடிச் சொல்லிறை?*
"அந்தச் சந்தேகம் தானே நம்மைப் பிரிச்சு வச்சது.... அது கூட ஒரு வகையிலை நல்லதாய்ப் போச்சு. கனவு கள் கலைய இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது நல்லது
S. 9
தான
*நான் கனவிலை நினைக்காத ஒரு வாழ்வை நீங்கள் கற்பிதம் செய்து. என்னை விட்டுப் பிரிந்த பின்பு. கற்பிதமானதே நிதர்சனமாகி விடுவது எவ்வளவு துயரம் தருகிற விஷயம்’.
“என்ன... துயரமா? நீ நகுலேசோடை சந்தோஷமாக இருக்கேல்லையா?*
“எதற்குமே ஆணில் சார்ந்திருக்கும் பெண்ணுக்கு. மகிழ்ச்சி, சந்தோஷமென்பதெல்லாம் கைகூடுமா? உங்க ளைப் பிரிந்த பின்பு. எனக்கு வயிறு இருந்ததே. மலர், அந்தப் பிஞ்சு. துடித்திருக்க என்னாலை பொறுத் திருக்க ஆகுமா? சரியோ தப்போ, நீங்கள் தான் எனது முதல் காசு மரம். பாதுகாப்பு. வாழ்க்கை. கன்னி கழித்த உத்தமர். தெய்வம்'.
குரலில் ஏளனம் இழைய, அவள் தொடர்ந்தாள்:
13

Page 12
“ஏதோ மிடுக்கிலை. தவறான புரிதலுடன் சென்று விட்ட உங்களை என்னாலை தடுத்து நிறுத்த முடியேல்லை. இதோ, இப்பொழுது. காலம் கடந்து எனக்குக் கிடைத் திருக்கும் இந்த வாத்தி உத்தியோகம், அப்பொழுது இருந் திருந்தால் நகுலேசு என்ற பொய்மை எனது வாழ்விலை குறுக்கிடாமலே இருந்திருக்கும்'.
"பொய்மையா? என்ன..! என்னாலை நம்ப முடி யேல்லை...”*
"எனக்குப் பசித்தது. மலருக்கும் பசித்தது. இலக்கியம் அது இதெல்லாம் இரண்டாம் பட்சமாய்ப் போன பொழுது தான். நகுலேஸ் திரும்பவும் எனது வாழ்விலை குறுக் கிட்டான். அப்பொழுது அவன் தனியார் கம்பெனி ஒன் றிலை விளம்பரப் பகுதி முகாமையாளராக வேறு இருந்தான். கைநிறையச் சம்பளம் வாங்கினான். தனித்திருந்தவளுக்கு அவனது துணை வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் பொரு ளாதாரக் காரணங்கள் தான். வயிறு குளிர்ந்தது. மீண்டும் இலக்கியப் பேச்சு, கலைத் திரைப்படங்கள், மதுரை சோமு வின் கச்சேரி. பாலேந்திராவின் நாடகங்கள். ரி.வி. யில் லெஸ்ட்டரின் படங்கள். இந்தச் சுகங்களுக்கெல்லாம் துணை யாய் இருந்தவன் தனது சுகத்தையும் நினைத்து என்னைத் தொட்டபொழுது, வருத்தத்துடன் உங்களைத்தான் நினை த்துக் கொண்டேன். அன்று கையையும் காலையும் ஒருவித அபிநயத்துடன் ஆட்டிக் கொண்டு "நண்பன் மனைவியைப் பெண்டாளலாமோ?", என்று குதித்தவர் இதைப் பார்ப் பதற்கு இல்லையே என்று'.
மிகுந்த சிரத்தையுடன் அவள் சொல்லிவர, இவனோ எது வித சலனமும் அற்றவனாய், உபகதை கேட்கும் தோரணை யுடன் இருந்தது. அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்னைத் தொட்ட நாளிலை இருந்து நகுலேசுக்கும் புத்தி மாறிப்போச்சு. உங்களைப் போலத் தான் அவனும் தனது
14

மீசை முளைத்த தனத்தை பறை கொட்டத் துவங்கினான். நளினம், நாகரிகம் எல்லாமே முகமூடிதான். திரைகிழிய, அவனது சொரூபம் தெரிந்தது. இந்த வாத்தி உத்தியோகம் போன வருஷம் தான் எனக்குக் கிடைச்சது. இது கிடைக் கிறவரைக்கும் அவன் ஆண். நான் பெண். அவன் உழைத் துப் போடிறவன்; நான் எதிர்பார்த்திருப்பவள். நான் அவன் சொற்படி நடக்க வேண்டாமோ?*
மனதில் கனன்று கொண்டிருந்த அனைத்தையுமே கொட்டி விட்ட திருப்தியுடன், அவள் அவனைப் பார்த்தாள்.
அவனோ, அசிரத்தையாக எதிலோ கவனங் கொண்டதான பாவனையுடன் இவளைக் கேட்டான்:
'மலர் எங்கை...?*
"சினிமாவுக்குப் போயிருக்கிறாள்...”*
"சினிமாவுக்கோ? குழந்தையைத் தனியாகவா விட்டனி
ל 9 כ
"அடேயப்பா, மகளிலை அக்கறை பரவாயில்லையே'.
LL SSLS SLS SLS SLSS LLL S L0LS S L0L S YSS LLLLS SYS S L0LS S SLL SLLLS SLSL S L0LS LLS SLLS S LLLLL LL
அவனது மெளனம் இவளைக் காயப்படுத்தி இருக்க வேண் டும். அவள் அமைதியாகச் சொன்னாள்:
"பக்கத்து வீட்டுப் புஷ்பத்தோடை போனவள். இப்ப வந்திடுவாள். அதுசரி, வந்தது தான் வந்தையள். சாப்பிட்டு விட்டு. அவளையும் பாத்திட்டுப் போக antib” .
அவன் எதிர்பார்க்காத உபசரிப்பு.
S

Page 13
"இந்தாருங்க இந்த "அல்பத்தைப் பாருங்க...' என்று, தனது-அவனுடன் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பின்னானஓர் ஏழு ஆண்டு கால வாழ்க்கையைச் சொல்லக் கூடிய "அல்பத்தை" இவன் கையில் தந்து ‘குசினி'ப் பக்கம் போனாள்.
இவனுக்கு முருங்கைக் காய்க் கறியென்றால் அதிக விருப்ப மென்று நினைத்தவள், அந்த இரவு நேரத்தையே பொருட் படுத்தாமல் இரண்டு காய் ஆய்ந்து, நல்ல சொட்டுப் பாலில் கூட்டுக் கறி வைத்தாள். முட்டை அவித்தாள். பால் சொதி யும் வைத்துவிட்டு, இவனைக் கூடத்தில் என்ன செய்கிறான் என எட்டிப் பார்த்தாள்.
அவன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான். பிரயாண அசதி யாக இருக்கலாம் என நினைத்தவள், உள்ளே வந்து இடியப் பம் அவித்தாள்.
இவள் இடியப்பம் அவித்த பொழுது, 'அம்மா’, என்றபடி மலரும் ஓடி வந்தாள்.
புஷ்பம் கேற்றடியில் நின்றே விடை பெற்றுக் கொண்டாள்.
இவன் வந்திருப்பது பற்றி ஏனோ புஷ்பத்திற்குச் சொல்ல வேண்டும் என்று இவளுக்குத் தோன்றவில்லை.
கூடத்திற்குள் காலடி எடுத்து வைத்த மலர்-அந்நியன் ஒருவன் இருப்பதைக் கண்டு-ஒரு சமயம் தடுமாறி, பின் தாயாரின் கால்களை ஒடி வந்து அணைத்தபடி நின்றாள். அவளது பார்வை தடுமாறுவதைக் கண்டு இவள்:
'உன்ரை அப்பா... ! ? என்றாள்.
16

"அப்பர்வோ?’* மலரால் அதை நம்ப முடியவில்லை. அவ ளது விழிகள் அதைத் தான் உணர்த்தின.
மலரையே வைத்தகண் வாங்காது வாஞ்சையுடன் பார்த்த படி இருந்தவனை ‘சாப்பிடலாமா?’ என அழைத்தாள்.
சாப்பாடு, டைனிங் டேபிளில் ரெடியாக இருந்தது.
அவனுக்குப் பரிமாறியபடியே அவனைப் பார்த்தவளுக்கு, ஏனோ அப்பொழுது நகுலேசின் நினைவு வந்தது.
‘ஒரு அதிதி மாதிரி வந்த இவனுக்கு அன்புடன் சமைத்துப் போட்டாலும். எதிலுமே பட்டுக் கொள்ளாமல் தூர நின்று, எப்படி ஒரு அந்நியனுடன் பேசுவது போலப் பேச முடிந்தது. எதற்கெடுத்தாலும் தான்தான் முதன்மையான வன் என்ற முனைப்புடன், இங்கிதமே இல்லாமல் இயங்கிய வன் சகலதையுமே இழந்தது போன்று என்னை நாடி வந்திருப்பது.?’
‘இவன் நளினமில்லாத, புடம் போடாத ஒரு பிறவியாக இருந்த போதிலும், கனிவுடன், பவ்வியமாக ஏதோ ஒரு வகையான தீவிரத் தன்மையுடன் என்மீது அன்பு பாராட்டி னான். நகுலேஸ் இதற்கெல்லாம் முரணாக, ஒரு திட்டத் துடன் ஆக்கிரமித்தது, அசூசை கொண்டது, ஒரு அறிவு சார்ந்த துணையாகக் கொள்வது போலப் பாவனை பண்ணி, மிகவும் பகைமை கொண்டதெல்லாம் ஏன்.?
கசப்பானவை நினைவுக்கு வர, தனது கோப்பையில் இருந் ததை உண்பதற்கே மனமொப்பாதவளாய் இவனையே பெரி தும் உபசரித்தாள்.
சாப்பிட்டபின், இவனுக்கு வெற்றிலை தந்தாள். அவளும் வெற்றிலை போட்டுக் கொண்டாள்.
17

Page 14
"உங்களுக்கு அவசரமில்லை என்றால் இன்று தங்கி நாளை போகலாம். இந்த இருட்டிலை போக வேண்டாம்...", என்று கூறியவள், இவனுக்கு முன் அறையில் படுப்பதற்குச் சகல வசதிகளும் செய்து தந்தபின், மலரையும் அழைத்துக் கொண்டு தனது அறைக்குப் போனாள்.
தனிமையில் விடப்பட்ட இவன், அவள் இன்று எப்படியும் தன்னிடம் வருவாள் என்ற எதிர்பார்ப்புகளுடன் காத்திருந் தான்.
இவனை மட்டுமல்ல, நகுலேசையும், ஏன்-எந்த ஒரு ஆணினது தொடர்புகளையுமே அவள் வேண்டாமென வெறு த்து ஒதுக்கிவிட்டதை இவன் அறிந்திருக்க நியாயமில்லை தான்.
'83
18

பக்குவம்
எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் அந்தத் தவறு நடந்து விடுகிறது. சைக்கிளைப் பூட்டப்போன போதுதான் அதை அவன் அவதானித்தான்.
சைக்கிளில் பூட்டில்லை.
அவனது வாகனம் மிகவும் பழையது. றலி. எழுபத்திரெண் டாம் ஆண்டு நூற்றி நாற்பது ரூபாய்க்கு வாங்கியது.
"பழசு" என்றால் திருட்டுப் போகாதா என்ன? பயம் காரண மாக அவனாகவே ஒரு பூட்டை-ஒன்றரையடிச் சங்கிலி,
19

Page 15
அதே அளவிலான சிவப்பு இறப்பர் ஹோர்ஸ், பழைய பாட் லொக் ஆகியன கொண்டு-தயார் செய்து கொண்டான்.
அந்தப் பூட்டு, சைக்கிளுக்காகத் தயாரிக்கப்பட்டது. என்றாலும், வீட்டில் அவனது மனைவி பல தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்திக் கொண்டாள்.
இரவு வேளைகளில் கோழிக் கூடு பூட்ட-முன் கேற் ஆமைப் பூட்டு கைபிசகாக எங்காவது மாறி வைக்கப்பட்டுவிட்டால் -கேற்றைப் பூட்ட என்று அது அவளுக்குப் பயன்பட்டது.
இரவு கூட, கோழிக் கூடு பூட்ட அவள் எடுத்தது இவனுக்கு ஞாபகம் வந்தது.
மனைவியை மனதால் வைதபடியே செய்வதறியாது விழித்த வனுக்கு, பொறி தட்டியது போல் அந்த யோசனை தோன்றியது.
"பக்கத்திலை. ஆற்ரையன் வீட்டிலை சைக்கிளைப் போட்டால் பத்திரமாய்க் கிடக்கும்.’
சைக்கிளை உருட்டியபடி பிரதான வீதிக்கு வந்தான். அவனது மனசுக்குப் பிடித்த மாதிரி வீடு எதுவுமே இல்லா தது போலத் தோன்றியது. ஒரு கணம் தயங்கியவன், ஒற்றை கேற் போட்ட, அந்தச் சிறிய வீட்டை எட்டிப் பார்த்தான். ஒருவரும் இல்லை. யோசனை ஏதுமற்றவனாய் சைக்கிளை உள்ளே உருட்டினான்.
அப்பொழுது;
அவள், அந்தப் பெண் குழந்தை-ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும்-எதிரே வந்தாள். அவள் கறுப்பாயிருந் தாள். கையும் காலும் சுள்ளி சுள்ளியாயிருந்தன. முகத்தில்
20

மட்டும் ஒரு திரட்சி, களை, கண்கள் பெரிதாய், சதா சிரித்தபடி இருந்தன. இவனை மிகுந்த பற்றுதலோடு பார்த்
தாள்.
முதற் பார்வையிலேயே அவளை இவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. அழிந்துபோன சிவப்புப் புள்ளிச் சீத்தைச் சட்டை போட்டிருந்தாள். "என்ன?’ என்பது போல அவள் மிகுந்த கனிவுடன் இவனைப் பார்த்தாள்.
"சைக்கிளுக்குப் பூட்டில்லை. அதுதான். இதிலை விட்டிட்டுப் போகலாமா...? பக்கத்திலை செத்தவீடு, போக வேணும்.'
சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டி னாள்; அந்தக் குட்டி இளவரசி,
**வீட்டிலை பெரியாக்கள்...?*
'அம்மா கடைக்குப் போயிட்டா..."
அவள் அம்மா என்றது எஜமானியையா? பெற்ற தாயையா...?
அவனுக்குக் குழப்பமாக இருந்தது. கேட்கவும் துணிவு கொள்ளாதவனாய் சைக்கிளை வீட்டின் கிழக்குச் சுவரோர மாய்-"சீற் சீமெந்தில் உரசாத வாகில் பக்குவமாய் விட்டுவிட்டு நகர்ந்தான்.
சாவீட்டில், சொந்த பந்தங்களை விட, பரந்தாமனின் சக ஆசிரியர்களும் அவனிடம் கற்ற மாணவ மாணவியருமே நிறைய இருந்தார்கள்.
இப்படி ஒரு அகால முடிவு அவனுக்கு வந்தது இவனுக்குக் கவலையாக இருந்தது.
21

Page 16
'முப்பத்தொரு வயதில் சா வருவது எவ்வளவு கொடுமை. அவனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே எவ்வளவு நெருக்கமான உறவு தளிர் கொண்டது. திருமணம் கூட இரண்டொரு மாதத்தில் என்றிருந்ததே. எல்லாமே அவனளவில் ஏன் பொய்த்துப் போய் விட்டன..."
"அவனது ஆர்வம், சிரத்தை, மாணவர்களின் தன்மைக் கேற்ப கற்பிக்கும் பக்குவம், எல்லாமே ஒரு துப்பாக்கி ரவையின் முன்னால் அர்த்தமிழந்து போவதென்றால்.’
குரொஸ் ஃப்பயரிங்கில்தான் அவனுக்கு இந்த முடிவு வந்தது என்பது பலரது அபிப்பிராயம். “இல்லை. இல்லை. ஏதோ தொடர்பாம் அதனால்தான்.", என்ற குசுகுசுப் பும் இருந்தது.
“எதுவோ..? என்ன காரணமோ...? அவனது மரணம் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. துயரம் தருவதாக இருக் கிறது."
தலைவாசலில்-சற்று உள்ளே, பெட்டியுள்-அவன் நெடுங் கிடையாய்க் கிடந்தான். அவனைப் பார்த்ததும் நெஞ்சிலும் முகத்திலும் பட்டென யாரோ பலமாக அறைந்தது போல் ஓர் உணர்வு இவனுள் படர்ந்தது. சக மனிதன் என்ற அளவில், அந்த மரணத்தின் கொடுமை இவனையும் பற்றிக் கொண்டது. இவன் கலக்கமுற்றவனாய் அவனது உடலைப் பார்த்த கையோடு வெளியே வந்து உட்கார்ந்து கொண் டான்.
இவன் வெளியே வந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அவ னது இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியது. சுடலை வரை போவதா விடுவதா என்று இரு மனப்
பட்டபோது, பசுபதிதான் இவனை இழுத்துக் கொண்டு போனான்.
22

"இரத்த வெடிலும் பிண வாடையும் தான் இந்த மண்ணின் விதியாகிவிடுமோ..? இயல்பு தப்பிய இந்த வாழ்வுஎத்தனை காலம் நீடிக்கப் போகிறது."
மதியம் திரும்பிய வேளையில் எங்கோ தூரத்தில் வானொலி யில் பூபாளம்!
'இது என்ன அபத்தம். எல்லாமே ஒழுங்கற்று தலை தடுமாறியதான நிலை ஏன்.? இயல்பும் இசைவும் பிறழ்ந்த இந்த வாழ்வு ஒழுங்குபடுவது எப்போது...? எல்லாமே தூரத்துக் கணவாய் ஆகிவிடுமோ..."
பிரதான வீதியில் ஏறியதும் இவனுக்குச் சைக்கிளின் ஞாப கம் வந்தது. அந்தச் சிறிய வீட்டின் பக்கம் பார்வை சென் றது. சைக்கிள் விட்ட இடத்தில் அப்படியே பத்திரமாக இருந்தது.
இந்தத் துயரங்களிடையே சைக்கிள் பற்றிய நினைப்பு இவனை வெட்கமுறச் செய்தது.
நீல வானமும், கருங்கடலும், பூமியும் தழுவி நின்ற பெரு வெளியில்தான் அந்தச் சுடலை இருந்தது.
பரந்தாமனின் உடலைத் தீ நாக்குகள் தழுவியபோது இவ னது தேகம் லேசாக நடுங்கியது. கண்கள் பனித்தன. உள்ளத்து உணர்வுகள் அனைத்துமே உறைந்து போனதான நிலை. இவன் பசுபதியைப் பார்த்தான். அவன் யாருடனோ கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தான்.
"பசுபதியை ஏன் எதுவும் தொடவில்லை!"
சுடலையை விட்டு வெளியே வந்த போது மழை பிடித்துக்
கொண்டது. இவன் பசுபதியின் குடையினுள் ஒதுங்கிக் கொண்டான்.
23

Page 17
‘பாஸிங் கிளவுட்ஸ் மச்சான். மழை விட்டிடும்...”*
"இந்த வாழ்வு. இதன் அர்த்தம் எல்லாமே நகரும் முகில் கூட்டம்தானா?”
மரணம், வாழ்வு பற்றிய விசாரம் தொற்றிக் கொண்டது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
பசுபதி களைப்பற்று, சளசளத்தபடி வந்தான். அப்படியெல் லாம் இவனால் இருக்க முடியவில்லை. சிறகொடிந்தது போல மனசு படபடப்பற்று இருந்தது. இந்த ஒடுக்கம், மனசுக்கு இதமாயிருந்தது.
மழை விட்டதும் கிழக்கு வானில் பொட்டுப் பொட்டாய் நீல வானம் தெரிந்தது. வானம் எவ்வளவு விரைவாக நிர்மலமாகி விட்டது.
மனசின் அழுத்தங்கள் யாவும் லேசானது போல அவன் உணர்ந்தான்.
பிரதான வீதிக்கு வந்ததும் அவன் பசுபதியிடம் விடை பெற்றுக் கொண்டான்.
சைக்கிள் ஞாபகம் வந்தது.
“காற்றுக் கீற்றுப் போய்க் கிடக்குமோ...? அந்தப் பிள்ளை. அவளது தம்பி. வால்வ்ரியூப்பைத் தொட் டுக் கிட்டுப் பார்த்து..."
ஏதோ கனவு கலைந்தது போலவும், மீண்டும் இயல்பான சூழலில் காலூன்றியது போலவும் அவனுக்கு இருந்தது.
24

சோர்வு நீங்கிய பாடாய் இல்லை. சைக்கிள் வைத்த வீட்டை அடைந்த போது அங்கு அவனுக்கு அதிசயம் காத்திருந்தது.
சைக்கிள் மழையில் நனையாத படிக்கு, பக்குவமாய் "ஸன்
சேட்டின் கீழ், முன்புறமாக எடுத்து வைக்கப்பட்டிருந்தது.
"யாருடைய வேலை இது. அந்தக் குழந்தைதான் எடுத்து வைத்திருப்பாளோ..? சிரமமாக இருந்திருக்குமே. சைக்கிளை எடுக்கும்போது எதிர்ப்பக்கமாகச் சரிந்து அவளுக்கு அடிகிடி பட்டிருந்தால். அல்லது உருட்டும் போது உடம்பில் உரசல் ஏதாவது..."
இவன் சைக்கிளை எடுத்தபோது, ஈரக்கையைத் தனது சீத்தைச் சட்டையில் துடைத்தபடி ஓடிவந்தாள்.
'மழை பெய்தது. அதுதான்.”
'மழை பெய்தால் என்னம்மா..? உனக்கு ஏன் இந்தத் தொந்தரவு...”*
“தொந்தரவா. எனக்கா?’’,
அவள் உதடு நெகிழச் சிரித்தாள்.
உடைந்து போன உள்ளம் நிரவல் பெற்றுப் பரவசம்கொள்ள,
அவளை வாஞ்சையுடன் பார்த்தான்.
வாழ்வின் அர்த்தமே அவள் என்பது போலவும், உயிர்ப் பசையின் தொடர்ச்சியை ஒரு சுடராய் அவள் தாங்கி
நிற்பது போலவும் அவனுக்குத் தோன்றியது.
25

Page 18
நன்றிப் பெருக்குடன், செல்லமாக அவளது தலையை வரு டியபடி, இவன் விடை பெற்றுக் கொண்டான்.
இவன் கேற்றைத் திறந்து, சைக்கிளை எடுத்தபோது சைக்கிள் கேற்றுடன் அடிபட்டுக் கொண்டது.
"கவனம். பார்த்தெடுங்க.. காலிலை அடிபடப் போகுது."
திரும்பிப் பார்த்தான். கன்னங் குழியச் சிரித்தபடி அவள் நின்றாள்.
வெளியே வந்த பின்புதான் குழந்தையின் பெயரைக் கேட் காமல் விட்டது மனதில் பட்டது.
“எதுவுமே தாமதமாய்த்தான் உங்களுக்கு...!"
மனைவி அடிக்கடி கூறுவது ஞாபகம் வந்தது.
"கொழும்புத்துறைப் பக்கம் வந்தால், மீளவும் ஒருமுறை இந்தக் குழந்தையைப் பார்க்கவேணும், பேரைக் கேட்க வேணும்...", என்று அவனுக்குத் தோன்றியது.
மனம் பரவசம் கொண்டு சிறகு விரித்ததான உணர்வு. பரந்தாமனின் மரணம் தந்த உளைச்சல் சிறுகச் சிறுக நீங்கியதான நிலையில் எல்லாமே அவனுக்கு அழகாக இருந்
தன.
அவனுக்கு முன்பாக, எதிரே வந்து, அவனைக் கடந்து, சைக்கிளில் சென்ற பெண் பிள்ளையின் லாகவம். சுமக்க முடியாத சுமையைச் சுமந்து செல்லும் சிறுவனின் முகம்
26

காட்டும் முதிர்ச்சி, தோளோடு தோள் கை போட்டு சைக்கிள்களில் சமாந்தரமாய் உலா போகும் சீருடை அணி ந்த கல்லூரி மாணவர்களின் குதூகலம். பஸ்ரியன் சந்தியில் திரும்பிய பஸ்ஸில், கணமே தெரிந்து மறைந்த அந்தப் பெயர் தெரியாத, எங்கோ எப்பொழுதோ பார்த்துப் பிரி யப்பட்ட அழகியின் முகம். எல்லாமே அவனுக்கு மகிழ்ச்சி யைத் தந்தன.
உலகின் அழகுகள் அனைத்தையும் வாரிக் கொட்டிக் கொண்டதான ஓர் அனுபவ விகாசம் அவனுள் செறிவு கொண்டது.
தன்னை மறந்தவனாய், சாருகேசி ராகப் பாடலொன்றை முணுமுணுத்தபடி, சைக்கிள் பெடலை அழுத்தி மிதித்தான். சைக்கிள் இயல்புக்கு மீறியதான வேகம் கொண்டது. இவ
னுக்குக் காற்றில் மிதப்பது போலிருந்தது.
S9
27

Page 19
தளம்பல்
அவள் திரும்பிப் பார்த்த பொழுது, இவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்தாள். நேரே பார்ப் பதற்குக் கூச்சப்பட்டு அவள் குனிந்து கொண்டது இவனுக் குப் பாவனையாய் இருந்தது.
அவளது மடியில் கிடந்த குழந்தை விழிப்புக் கண்டு விம்மியது. அவள் மார்பு முடிச்சை நெகிழ்த்தி அதற்குப் பால் கொடுத் தாள். மார்பில் புதையுண்ட குழந்தை மறுபடியும் அழுதது. அவளும் அழுதாள்.
இவனுக்கு இதெல்லாம் ரசிப்பாய் இருந்தது. குழந்தையை முரட்டுத்தனமாய்த் தூக்கிப் பக்கத்தில் கிடந்த கந்தலில்
28

போட்டவள், தகரப் பேணி ஒன்றோடு ரீக்கடைக்குப், போனாள்.
ரீக்கடை கோயில் பின் வீதியில் இருந்தது.
அவள் போனதும் இவன் எழுந்து வந்து, குழந்தைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதை ஆதரவாகத் தட் டிக் கொடுத்தான்.
அப்பொழுதும் குழந்தை அழுதது.
ரீயுடன் வந்தவள் இவனை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த் தாள். அவளைப் பார்த்து இணக்கமாகச் சிரித்தவன்,
ஒதுங்கி அவளுக்கு இடம் தந்தான்.
குழந்தையை மடியில் கிடத்தியவள்-அதற்கு ரீ பருக்கி னாள்.
‘என்ன பிளேன் ரீயா..?
ம்.
'பால் வாங்கியரட்டா... குடுப்பியா...?
LL LLLLSSY LS SLLLL SLLS LL SSL SLLSL SLLL SLSLS S L Y S0SS LLLLSSY LL L SLL 0L S SLL SYS LLLL
"அப்ப நான் வாங்கியாறன்..."
"வேண்டாம்." அவள் அவசரமாக மறுத்தாள்.
29.

Page 20
இவன் சலிப்புடன் எழுந்து, கோயிலின் முன்பாக இருந்த கிணற்றுக் கட்டில் அமர்ந்து கொண்டாள்.
மெலிதாக இருள் படரத் தொடங்கியது. கோயில் மண்ட பத்திலிருந்த மங்கிய விளக்கொளியில் அவள் இவனுக்குத் தேவதை போலிருந்தாள்.
தேவதை கறுப்பா இருக்குமா...? இருக்குமென்றுதான் அவனுக்குத் தோன்றியது.
முன்பணி, பனியின் ஊதல் அவனது நாசித் துவாரங்களை
யும், காதுகளையும் முற்றுகையிட, அவனுக்கு இழுப்புக் கண்டது.
அவன் அவஸ்தையுடன் எழுந்து வந்து, மண்டப்த்தின் உள் ளாக உட்கார்ந்து கொண்டான். கழுத்தைச் சுற்றியிருந்த துவாய்த் துண்டால் காதுகளை மூடிக் கட்டிக் கொண்டான்.
அவனுக்கு, சுவாசிப்பதற்கே சிரமமாக இருந்தது. மரணம் அருகே வந்து, அலைக்கழித்தது. ஆனால் மரணம் வர வில்லை. அது அவனுக்குத் துக்கமாக இருந்தது.
லேசான இருமல்; சிறிது சிறிதாகக் கூடியது. அதனை அவனால் றிறுத்த முடியவில்லை. தொடர்ந்து இருமிக் கொண்டேயிருந்தான். இருமும் பொழுது உடல் அதிர்ந்து விழும் ‘ரிதிம்" அவனுக்குப் பிடித்திருந்தது.
திடீரென எழுந்தவன், தடுமாறி விழப்போன பொழுது, இவள் ஓடிச் சென்று தாங்கிக் கொண்டாள். அவன் மெது வாக-அவளது கைத்தாங்கலில் கோயில் மண்டபத்தை விட்டு வெளியே வந்து, நுரை நுரையாகச் சத்தி எடுத்தான்.
30

* * Graffrଜor இது. இந்த வயசிலை உனக்குத் தொய்வா ..?", அவள் கேட்டாள்.
"ஹ"ம்." அவனால் பேச முடியவில்லை.
அவள், அவனை ஆதரவாகக் கோயிலினுள் அழைத்துச் *சென்று படுக்க வைத்தாள்.
"சூடா ஏதன் குடிக்கிறியா..?*
՛ ՛ւb....
அவன், அவளுக்குச் சில்லறை கொடுத்தான்.
அவள், தனது தகரக் குவளையை எடுக்கப் போனபொழுது, இவன், "அது வேண்டாம். ஒரு பேணியிலை வாங்கி யாவன்...' என்றான். .
அவளுக்கு ஏதோ உள்ளே பட்டென்று உடைவது போலி ருந்தது.
"நான் சரியான அழுக்குத்தான்; ஆனா, மனசு அப்படி யில்லை. பிச்சைக்காரியெண்டு நின்ைச்சியா...? நான் பிச்சை எடுக்கேல்லை. எடுக்கவும் மாட்டன். அப்படி வளரேல்லை. உன்னைப்போலை கசங்காமலிருக்கேலுமே, ஏதோ உடுத்த துணியாவது மானத்தை மறைக்க எனக்கு இருக்குதே. அது போதும்."
அவள் அதிகம் பேசுவதாகப்பட்டது. அது, அவனுக்குக் கூச்சமாக இருந்தது. கூச்சத்துடன் அவளை நிமிர்ந்து பார்த் தான்,
அவள் மிகவும் நலிந்து போயிருந்தாள். உடை அழுக்கேறிக் கந்தலாக இருந்தது; மெலிதாக உயர்ந்து வளர்ந்து ஒரு
3.

Page 21
கொடி போல இருந்தாலும் அவள் மிகவும் வரட்சியாக இருந்தாள். அந்தக் கறுத்த உடம்பில் ஏதோ ஒன்று இவனை கொக்கி போட்டு இழுத்தது. அது எது?
அது அவளது அழகிய கண்கள் இவனிடம் அவை கொஞ்சின. அந்தக் கண்களையே பார்த்துக் கொண்டு இவனுக்குச் சாக லாம் போல் இருந்தது.
அவனது பார்வையின் விஷமத்தைத் தாளாமல், இவள் எழுந்த பொழுது, "நீயும் ஏதன் வாங்கிச் சாப்பிடு. குழந்தைக்கும் பால் வாங்கியாவன்', என்று மேலும் இவன் பணம் தந்தான்.
ரீக்கடையிலிருந்து அவள் திரும்பி வந்தபொழுது, இவன் களைப்பு மிகுதியால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்ப மனமில்லாமல் அருகே உட்கார்ந்து கண் இமைக்காமல் அவனையே பார்த்தாள்.
இளசாய் அரும்பு கொள்ளும் மீசை. நெற்றியில் சரிந்து அலையாய்ப் படர்ந்து கிடக்கும் தலைமுடி. ஏதோ ஒரு பசிய தளிரை நினைவுபடுத்தும் நிறம். இவையெல்லாம் அவளுக்கு அவன்பால் ஒரு பிடிப்பை ஏற்படுத்தின.
அவளுக்கு அவனது தலையை ஆதரவாகக் கோதிவிட வேண் டும் போலிருந்தது. இழுத்து மடியில் போட்டுக் கொண்டு ஒரு தாலாட்டுப் பாடிக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. அப்படி ஒரு குழந்தைத்தனம் அவனில் வழிந்தது.
கழுத்தோரங்களில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. தனது அழுக்குச் சேலையால் கழுத்தைத் துடைக்கப் போன வள், ஒரு கணம் தயங்கி, பின் துடைத்தாள். அவளது ஸ்பரிசம் அவனை விழிப்புக் கொள்ள வைத்தது.
32

அவள் வாங்கி வந்த தேனீரை இவன் பருகினான். அவள் பாணும் வாங்கி வந்திருந்தாள். அதனை இவன் தேனீரில் தோய்த்துச் சாப்பிட்டான். மிகுதிப் பாணை இவளுக்குத் தந்தான்.
பாணைச் சாப்பிட்டவள், குவளையிலிருந்த பாலைப் பத்திர மாக மூடி வைத்துவிட்டு, குழந்தையின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.
இவன் வெளியே-கோயில் முகப்பிலிருந்தபடி பீடி பற்றி னான்.
"என்ன இது. இப்படிக் கொளகொளண்டு இழுக்குது. பீடி குடிக்கிறை. குளிலை இராமை உள்ள வா. வந்து படு'.
இவன் பீடியில் கடைசித் தம் இழுத்தபின்தான் உள்ளே வந்தான். வந்து மண்டபத்தின் தூணில் சாய்ந்தபடி அவ
ளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"உன்ரை மனசு நோகுமாப் போலை ஏதன் சொல்லிப்
போட்டனே...? என்ரை மனசே சரியில்லை. அது தான் அப்படி நடந்திட்டன். நானும் உன்னைப்போலதான் ஒருவகையிலை அனாதை... ஐயா, அம்மா, தங்
கச்சி எண்டு எல்லாருமிருந்தும் அவையோடை இருக்கேலா மைத்தான் இப்படி வந்திட்டன். இது எனக்குப் பிடிக்குது, சொந்தம். அந்தச் சுயநலங்சளிலை இருந்து தூரப்பட்டு . தனிச்சு நிக்கிறது எவ்வளவு சுகமாயிருக்குது...”*
அவனது பேச்சு அவளது துயரைக் கிளறி இருக்க வேண்டும்.
அவள் குலுங்கி அழுதாள்.
"இவளுக்கு என்ன. என்ன நடந்து விட்டது..?
33

Page 22
அவளது துயரை இவன் புரிந்து கொள்ள முயற்சித்தான்,
அவளது அந்தத் துயர்! .
சதாசிவத்திற்கு வழிவியாபாரம். கண்டியிலிருந்து புகை யிலை, சுருட்டு என்று எடுத்துச் சென்று சிங்களக் கிராமங் களில் விற்று வந்தான். வருஷத்தில் ஒருமுறையாவது இவன் ஊர்ப்பக்கம் வந்து போகாமல் விடுவதில்லை. ஊர்ப்பக்கம் வருவதே இவளைப் பார்ப்பதற்குத்தான். சொந்த மச்சாள். சுலபமாகவே அவள்பால் இவனுக்குப் பிரியம் வந்தது. பிரியம் காதலாய் மலர்ந்தது. கட்டுக்களை மீறிய காதல் அவர்களுடையது. அவளுக்கு ஐயா, அம்மா இல்லை. அவ னுக்கு ஆச்சி மட்டும்தான்.
"இதையெல்லாமா ஆச்சியிடம் சொல்லுவது..." என்று அவன் பேசாமலே இருந்து விட்டான்.
ஒரு சமயம் இவன் ஊர்வந்து திரும்பும் பொழுது அவளும் இவனுடன் ரயிலேறிவிட்டாள்.
கண்டியில், நெருங்கிய சிங்கள நண்பர் ஒருவரது வீட்டில்ஒரு அறையே சகலமுமாக-அவர்கள் தாம்பத்தியம் நடத்தி னார்கள்.
இரண்டாண்டுகள் அவர்கள் இருவரும் என்னமாய் வாழ்ந் தார்கள். சுகம், சுவை எல்லாமே அதில் நிரம்பி வழிந்தது. அந்த வாழ்வு தந்த கணியாக ஓர் ஆண் குழந்தை அவர்களது மடியில் தவழ்ந்தது.
இந்த வாழ்வுக்கு ஒரு முடிவு போலத்தான் அந்த ஆவணிக் கலவரம் வந்தது. பொதுவாக இனக்கலவரம் மலையகத்
தைத் தொடுவதில்லை. இம்முறை அசுர பலத்துடன் மலை
34

யகத்தையும் தாக்கியது. உண்மையும் பொய்யுமாய் காற்று வாக்கில் வந்த செய்திகள் கலவரமாய் உருக் கொண்ட போது, கண்டியில் இரத்தக் களரியே ஏற்பட்டது.
வழி வியாபாரத்துக்குப் போன சதாசிவம்-அவளுடைய சதா-திரும்பவில்லை.
கைக்குழந்தையுடன் தவித்த அவளுக்கு அந்தத் துயரச் செய்தியைத் தாங்கி வந்தது, அவனது இனிய நண்பன் பியசிறீதான். கலவரம் உக்கிரமாக இருந்தபடியால் அவனது உடலைத்தானும் அவளால் தரிசிக்கமுடியாமல் போய்விட் டது. பியசிறீ தான் தனது நண்பனை அடக்கம் செய்த துடன். இவளையும் குழந்தையையும் காப்பாற்றும் நிலைக் குத் தள்ளப்பட்டான்.
பியசிறீ என்ற அந்த மனிதன் இல்லை என்றால்-அவளும் குழந்தையும் மலையகத்தில் தேயிலைச் செடிகளுக்கு உர மாகியிருக்க வேண்டியது தான்.
'உன்ரை மனிசன் செத்தாப்பை. உவன் பியசிறீ யோடையே இருந்தனி! அவன் உன்னைக் கெடுக்கேல்லையே .தனிச்ச பொம்பிளயளை உவங்கள். உந்தச் சிங்களவர்
விட்டுவைக்கேல்லையாம்?"
அவன் கீழ் உதட்டைக் கடித்து, கண்களை இடுக்கி விஷமத் தனமாகச் சிரித்தான்.
அவளுக்கு அவனது பேச்சும் சிரிப்பும் கொச்சைத்தனமாகப் பட்டது. அவள் திடீரென்று பக்கத்திலிருந்த தகரக் குவளை யைத் தூக்கி அவனை நோக்கி வீசினாள். குவளை அவனது மூக்கில் பட்டுக் கீழே உருண்டது. குவளையில் இருந்த பால் நிலத்தில் சிந்தியது.
35

Page 23
இவன், அவளைப் பார்ப்பதற்கு அச்சங் கொண்டு, எழுந்து கிணற்றடிக்குப் போனான். அங்கிருந்தபடி அவளைப் பார்த் தான். அவள் நிலத்தில் கவிழ்ந்து கிடந்து விம்முவது இவ னுக்குத் தெரிந்தது.
பீடி பற்றிக் கொண்டவன், வெகு நேரம்வரை கிணற்றடியில் இருந்தான். அவள் அயர்ந்து தூங்குவதைக் கண்டு, எழுந்து உள்ளே வந்து படுத்துக் கொண்டான்.
அவள் விழித்த பொழுது அவன் அங்கு இருக்கவில்லை. கிணற்றடியைப் பார்த்தாள். அங்கும் அவனில்லை. இவளுக் குத் தவிப்பாயிருந்தது. இந்தத் தவிப்பே ஒரு வகையில் அவளுக்கு வியப்பாகவும் இருந்தது.
"என்ன, இந்தப் பொடியனுக்கா. இந்த மனசு இப்படி மாயுது! அவளது உணர்வுகள் விழிப்புக் கொண்டன.
புலரியின் மெல்லிய வசீகரம். எங்கிருந்தோ மல்லிகையும் பிச்சியும் றோசாவும் குழம்பி மணத்தன. இவள் முற்றாக விழிப்புக் கண்டு, திமிர் முறித்து எழுந்து உட்கார்ந்து கொண்டாள். எதேச்சையாக அவளது பார்வை பட்ட இடத்தில் அவன் வந்து கொண்டிருந்தான். கையில் இவளது தகரக் குவளையும்; பொட்டலமும்.
இவளை நெருங்கி வந்தவன், குவளையை அவளிடம் தந்து, "குழந்தைக்குப் பாலைக் குடு...' என்றான்.
குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.
பாலை வாங்கி மூடி வைத்தவள், "அதென்ன கையிலை ...?" என்று கேட்டாள்.
"தோசையும் சம்பலுமிருக்கு. முகத்தைக் கழுவு சாப்பிடு
வம்" p
36

இரவு இருந்த தொலைவு அவர்களிடம் இப்பொழுது இருக்க வில்லை. ஒரு நெருக்கம் இயல்பாய் அவர்களிடையே முகிழ்த்
தது.
அவள் எழுந்து போய், கோயிலைச் சார்ந்திருந்த, கை ஒழுங்கையில் ஒண்டுக்கிருந்தாள். யாரோ வருவது போலச் சலனப்பட, பதட்டத்துடன் எழுந்தவள், கிணற்றடிப்பக்கம் போய் முகம் கழுவி விட்டு வந்தாள்.
பார்சலைப் பிரித்து, தோசையை எடுத்துச் சம்பலும் போட்டு இவனுக்குக் கொடுத்துத் தானும் சாப்பிட்டாள்.
"அப்பொழுது அவன் கேட்டான்:
"உன்ரை மனிசன் செத்தது உனக்கு உடனை தெரியுமா
...?' '
"தெரியும்."
"நான் இஞ்சை வரமுந்தி மாமிக்கும் செய்தி வந்திற்று'.
அவளது குரல் இறுக்கமுற்றது.
''LDITLSurr...?' '
"அவற்றை தாய். அவ சுண்ணாகத்திலைதான் இருக்கிறா. கலவரத்தோடை என்னையும் குழந்தையையும் பியசிறீதான் வவுனியா வரை கொண்டு வந்து விட்டது. வவுனியாவில யிருந்து வந்த நான் நேர மாமீற்றைத் தான் போனன். மாமி முகங் கொடுத்துக் கதைக்கேல்லை. முந்தியே மாமிக்கு எங்கடை சடங்கிலை அவ்வளவு விருப்பமில்லை. தன்ரை ஒரே பிள்ளையைத் தட்டு மறிச்சதா சொல்லும்...".
37

Page 24
"ஓ! அப்ப இது காதல் கலியாணமே!’’.
"அப்படி யெல்லாமில்லை. ஏதோ அதிலை விருப்பம். அது என்னை ஏமாத்தேல்லை.
'ஏமாத்தேல்லையோ...??? அவளது துயரைக் கிளறி ரணமாக்கினான்.
"அதின்ரை போக்காலமாக்கும். அது போயிட்டுது. என்னை இப்படித் தவிக்க விட்டிற்று. மாமியோடை என்னாலை இழுபறிப்பட முடியேல்லை, வாய்க்கு வாய் நூறு தரம் அறுதலி. அறுதலி... எண்டு நச்சரிக்கும்’
"அதின்ரை நாக்கு வளைப்பு எப்பவும் எனக்கு ஒத்துவராத ஒண்டு. பேசாமை இஞ்சை வந்திட்டன். இரண்டு நாளா இந்தக் கோயில் மடம்தான் கதியெண்டு கிடக்கிறன்'.
"என்ரை கதையைப் போலைத்தான் உன்ரை கதையுமிருக் குது’’
"என்ன என்ரை கதைபோலையா...?’’
அவள் அவனது கதையை அறிந்து கொள்வதில் ஆர்வங் கொண்டாள்.
அவன் சொன்னான்:
"நான் தண்டச் சோறாம். உலக்கை மாதிரி வளர்ந்தும் குடும்பத்துக்கு உதவாத தற்குறியாம். என்ரை அப்பன் எட்டுப் பெத்து வைச்சிருக்குது. ஏழு பெட்டையள். நான் மட்டும்தான் பொடியன். அதுவும் தலைச்சன். அந்தப் பெட்டையளூக்கெல்லாம் நான்தான் உழைச்சுப் போட வேணுமாம். சடங்கு செய்து வைக்க வேணுவாம். அதுதான்
38

ஆம்பிளைக்கழகாம். ஏதோ படிச்சுப் பாத்தன், படிப் பேறேல்லை. கூலி வேலை செய்து எனக்குப் பழக்கமில்லை. ஐயாதான் கூலி வேலை செய்தது. இப்ப ஏதோ வாரத்துக் குக் கமம் எடுத்துச் செய்யிது. அந்தக் கமத்துக்குக் கூட நான் போறதில்லை. அது அம்மாவுக்கும் ஐயாவுக்கும் வலு கோவம். என்னைப் பிடிச்சு வெளியிலை விட்டிற்றினை. இப்ப, இதோ உன்னோடை இருக்கிறன். நாளைக்கு எங்கை, யாரோடையோ. ஏதோ காலம் போனால் சரிதான்’’.
அவனது பேச்சு அவளுக்கு எரிச்சலூட்டியது.
"என்ன இப்படிக் கதைக்கிறை? உழைப்புப் பிழைப்பெண்டா ஏன் உனக்குச் சலிச்சுப் போகுது. சின்னப் பையன். எள்ளெண்டா, எண்ணெயா நிக்கிற வயசிலை. கிழடு தட்டின வேதாந்தம் பேசிறை.
"என்ன, சின்னப் பையனா..? இருபது வயசாகுது..?
"இருபதுதானே. என்னைவிட மூண்டு வயது குறைச் சல்**.
அவள் எழுந்து கிணற்றடிக்குப் போய் கையலம்பிவிட்டு வந்து, குழந்தைக்குப் பால் பருக்கினாள்.
அவளையே பார்த்தபடி இருந்த அவன் கேட்டான்:
"நீ இப்படியே இந்தக் கோயில் மடத்தில் கிடந்து என்ன செய்யப் போறை?’’.
அவள், அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவனைப் பார்த்துக் கேட்டாள்:
"நீ என்ன செய்யப் போறை?"
39

Page 25
"நான் என்னெண்டாலும் செய்வன். நீ குழந்தையை வைச் சுக் கொண்டு பெரும்பாடு படப்போறை...”*
“என்ரை பாடு என்னோடை, உன்ரை வழியைத் சொல்
SP 9
66t
"என்ன பெரிய வழி, எங்கை இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாப் போதாதா. நான் கிளிநொச்சிக்குப் போகலா மெண்டிருக்கிறன். எனக்குத் தெரிந்த பொடியனொருவன் அங்கை கமம் செய்யிறான். தங்கராசா எண்டு பேர்’.
"அங்கை கமத்திலை வேலை செய்யேலுமே...? நான் கூட அங்கை வந்திடுவன். ஆனா கையிலை மடியிலைதான் ஒண்டுமில்லை".
"காசுதானே நான் தாறன், கடனாத் தான்; திருப்பித் தாவன்...!"
நிறுத்தி நிறுத்தி அவன் பேசினான்.
அவள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவனது மனம் தவித்தது.
கிளிநொச்சிக்குப் போவதில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந் தது. அதுவும் அவனுடன் போவதில் ஒரு கிளர்ச்சி, அவளது அடி மனதில் சிலிர்த்துப் பரவியது. திடீரென நினைத்துக் கொண்டாள்:
'இவனை. இவனை நம்பிப் போகலாமா? இப்போதை க்கு இவனை நம்பிப் போகலாம். ஒரு ஆணின் நிழல் எப்போதும் பாதுகாப்பான ஒன்றுதான்’!
40

அந்தப் பாதுகாப்பைக் கருதியாவது அவள் அவனுடன் போகத் தீர்மானித்தாள்.
கிளிநொச்சி அவர்கள் இருவரும் முன்பின் அறியாத பூமி. அது அவர்களுக்கு வாழ்வு கொடுக்குமா? கொடுக்கும் என்று தான் அவர்கள் நம்பினார்கள்.
தங்கராசாவின் கமத்துக்குப் பக்கத்தில், அவனும் அவளும், ஒரு அரை ஏக்கர் காடு வெட்டித் துப்பரவு செய்தார்கள். கமத்தின் மேட்டுப் பாங்கான பகுதியில் ஒரு குடிசையும் போட்டுக் கொண்டார்கள்.
எல்லாம் தங்கராசாவின் தயவில்தான் நடந்தது. அவன் இவர்களுக்கு விழுந்து விழுந்து உதவினான். கைமாற்று வேறு தந்தான்.
‘இதெல்லாம் எதற்கு... எதற்கு...?’’
அவளது மனசு பரிதவித்தது. லேசாய் பயமும் கொண்டது. ஆனால் இவனோ அதனை நட்பு என்று கருதினான்.
வெட்டித் துப்பரவு செய்த நிலத்தில் கட்டை பிடுங்காமல், உழுந்து விதைத்தார்கள். இரண்டிலைப் பயிராய் அது முளை கொண்டிருந்தது. குடிசையின் முன்பாக வெண்டியும் பூசணியும் போட்டார்கள். கூரையில் சுரை படர்ந்தது. நாலு நிரை வாழையும் போட அவர்கள் தவறவில்லை.
எல்லாம் அவள் ஆர்வம் கொண்டு செய்ததுதான். அவளது இயக்கம் அவனையும் இயங்க வைத்தது.
இவன் குழந்தையோடு இருக்க, அவள்தான் காலையிலும் மதியத்திலும் தங்கராசாவின் கமத்திலிருந்து தண்ணீர்
41

Page 26
இழுத்து வந்து பயிர்களுக்கு ஊற்றுவாள். இன்று கூட நீர் இழுத்து மாய்ந்த களைப்போடு குடிசைக்குள் நுழைந்தவள் அங்கு, அவன் குழந்தைக்குப் பக்கத்தில் தூங்குவதைக்கண்டு, குழந்தையையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளுக்கு, அவனுமொரு குழந்தை மாதிரித்தான் தோற்ற மளித்தான். அவனது முகத்தைப் பார்த்ததும் இவளுக்கு உழைப்பின் அசதியெல்லாம் பஞ்சாகி விடுகிறது.
இப்படி ஒரு பிரீதி அவன்பால் இவள் கொள்வது வியப் பானது தான்.
அவள் குழந்தையைத் தூக்கியபொழுது, இவன் விழித்துக் கொண்டான்.
‘போய் முகத்தக்ை கழுவீற்று வா...! பால்க் கஞ்சி வைச் சுத் தாறன். ராவும் ஒண்டும் சாப்பிடாமைப்படுத்திற்ரை
9
குழந்தைக்குப் பால் கொடுத்துக் கிடத்தியவள். அரைப் பேணி ஊர்ப்பச்சை போட்டு, தேங்காயைச் சொட்டுப் பாலாய்ப் பிழிந்து கஞ்சி காய்ச்சினாள்.
கஞ்சி கொதித்துவர, இவனும் குளித்துவிட்டு வந்து நின் றான்.
“தங்கராசா எங்கையோ வரம்பு கட்டெண்டு சொல்லிச்சுது. நீயும் போவன்.”
"நான் போகெல்லை, இஞ்சை கமத்திலை களை பிடுங்கப் போறன்.”
அவள் அதற்குமேல் அவனை நிர்ப்பந்திக்கவில்லை. அவன் களை பிடுங்கவும் மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும்.
42

அவனுக்கு இந்த வேலைகளெல்லாம் பிடிக்காதவை. அவ னுக்குப் பிடித்ததெல்லாம், சனிக்கிழமைதோறும் தங்கராசா வின் கமத்திலும் அக்கம் பக்கத்திலும் விளையும் காய்கறி களை வாரச் சந்தையில் போட்டு விற்பனை செய்வதுதான்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்தோ இருபதோ, அவன் அவளிடம் கொண்டு வந்து கொடுப்பான்.
அதில், அவள் இரண்டு ரூபா எடுத்துத் தருவாள். இவன் படம் பார்க்கப் போவான்.
அவளும் சில வேளைகளில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இவனுடன் படம் பார்க்கப் போவாள்.
அப்படிப் படம் பார்த்துவிட்டு வந்த ஒருநாள் இரவுதான் அது இவர்களிடையே நடந்தது.
இரவு அவள் எதுவும் சமைப்பதில்லை. பகல் சமைப்பதில் இரவு எடுத்து வைத்துக் கொள்வாள்.
அவர்கள் சாப்பாட்டை முடித்துக் கொண்டு முற்றத்துக்கு வந்த பொழுது இவன்தான் உடைபட்ட குரலில் ஏதோ சொன்னான். அது அ வ ளு க் குத் தெளிவாகவில்லை. “என்ன..?’ என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தாள். அவ னும் பார்த்தாள்.
பார்வைகள் ஒன்றை ஒன்று அணைந்தன.
"என்ன அப்படிப் பார்க்கிறை...?*
"ஏன் பார்க்கப் படாதோ...? அவ பாக்கலாம். நான் தான் பார்க்கப்படாது'.
43

Page 27
அவள் அதற்கு எதுவும் பேசாமல் வாழையடியில் கிடந்த சட்டி பானையளைக் கழுவி எடுத்துக் கொண்டு குடிசைக்குள் போனாள்.
அவளது பலஹினத்தை அவன் புரிந்து கொண்டது அவளுக் குப் பயமாக இருந்தது.
அவள் வெளியே வருவாளென இவன் எதிர்பார்த்தான். அவள் வரவில்லை.
‘தவம். இஞ்சை வாரும்...! இஞ்சை வந்து நிலவைப் பாரும். எவ்வளவு வடிவாயிருக்கு...'
புதுக்குரல், புதிய அழைப்பு.
அவன் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. இன்று
அழைத்தான், அந்த அறைப்பு அவளைப் பரவசப்படுத்தியது, நெஞ்சு லேசாகப் படபடத்தது.
**பொறு, சீலை மாத்திற்று வாறன்’’.
இதைக் கேட்டதும் இவன் என்ன நினைத் தானோ? திடீ ரென எழுந்து குடிசைக்குள் போனான். அவள் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை. அவன் அருகே வருவதைக் கண்ட அவள் தலை கவிழ்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
சேலை நெகிழ்ந்த நிலை, மேல்சட்டை அரைகுறையாக
அவளது தோள்களில் சரிந்து கிடந்தது. அவன் குனிந்து அவளது கழுத்தின் பின்புறத்தில் முத்தமிட்டான்.
அவள் நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவளைப் பேசவிடாமல், அவன் அவளது கண்கள், உதடுகள் என மாறி மாறி
தீராத காலதலுடன் முத்தமிட்டான்.
44

அவள் அ:ை பாது, அவனது அசைப்புக்கெல்லாம் இசைந்து போனாள். இவன் வழிதேட அவள் வழிகாட்டினாள்.
'இது எப்படி. எப்படி என்னாலை முடிஞ்சது...'
நினைவுகள் அவளை நெருடின. நெஞ்சு மிகுந்த பாரமாய்க் கனத்தது.
அன்று இரவு அவள் துரங்கவில்லை. குடிசையின் மூலையில் கிடந்து விம்மி விம்மி அழுதாள். விடிந்த பொழுதும் அவளது அழுகை ஓயவில்லை. ஏதோ பாவப்பட்டது போல் ஒரு மனப் பிராந்தி அவளை வருத்தி அழுத்தியது. நிம்மதி யில்லாமல் அவள் தவிப்புற்று; குடிசைபை விட்டு வெளியே வரத் தயக்கம் கொண்டாள்.
, பெரும் பொழு
அவனும் அவளைப் பார்ப்பதற்கு அ தைக் குடிசைக்கு வெளியிலேயே கழித்தான்.
அன்று அவள் எதுவும் சாப்பிடவில்லை. அதனால், இவனும் சாப்பிடாமலிருந்தான். குழந்தைக்கு மட்டும் பால் வாங்கி வந்து பருக்கினான்.
மறுநாளும் அதே கதைதான். பச்சைத் தண்ணிகூட வெறும் வாயில் படாமல் கிடந்தாள். இவனால் அப்படி இருக்க
முடியவில்லை. சாப்பட்டை அவளுக்குத் தெரியாமல் கடை
r
யில் வைத்துக் கொண்டான்.
* *
இந்த மெளன நாடகம் அனுெக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. அதைக் கலைக்க விரும்பியவனாய் அவளை நெருங்கி மிகுந்த சொந்தமுடன்:
'இது பிழையெண்டு நினைக்கிறையா..? இதிலை என்ன பிழை. உன்ரை மல சன்தான் மோசம் போயிட்டுதே.
45

Page 28
அதையே நினைச்சு நினைச்சு நீயேன் அழிஞ்சு போறை. உனக்கு என்னிலை விருப்பமிருக்கு. அப்பவும் ஒரு தயக் கம். ஒரு தடுமாற்றம். உதையெல்லாம் உடைச்செறிஞ்சிட்டு, உனக்கு நீயே துரோகம் பண்ணாமை நடவன். உன்னை நான் முடிச்சதா நினையன். ஒரு மஞ்சள் கயிறோ, இல்லை ஒரு பவுண் தாலியோ என்னாலை கட்ட முடியாதா?’’
அவள் அவனது வார்த்தைகளை நம்பினாள். அவனை நம்பி னாள். அந்த நம்பிக்கைகளுடன் அவனைப் பார்த்தாள்.
இவள். இவள் யாசித்து நிற்பதை என்னால் நிறை வேற்ற முடியுமா?’ அந்த நினைப்பு அவனைச் சங்கடத்தி லாழ்த்தியது.
அவள் அன்று வெளியே போகாமல் அவனையும் குழந்தை யையும் தழுவிக் கிடப்பதில் நிம்மதி கண்டாள். அப்படி ஒரு வாழ்க்கை அவளுக்குத் தேவையாக இருந்தது. அதன்பால் மிகுந்த பற்றுக் கொண்டாள். அந்தப் பற்றுதல் அவளுக்கு வாழ்க்கையை மிகுந்த அர்த்தமுடையதாக்கியது.
"என்ன பெலத்த யோசனையிலை ஆழ்ந்திட்டை. கஞ்சியை ஊத்து ஆறப்போகுது...!" அவன் கேட்டான்.
"கஞ்சி நல்லாயிருக்கா...? சம்பலோடை ஊறுகாயும் தொடன்!”*
"உன்ரை கைபட்டது எது நல்லா இல்லாமையிருக்கு..." அவன் அவளை அணைத்து அவளது முகத்தில் அரும்பியி " ருந்த வியர்வையைத் துடைத்து விட்டான்.
அவளுக்கு வாழ்க்கை இனித்தது.
O
46

காலம் கால்முளைத்தது போல எவ்வளவு வேகமாக விரை கிறது. அவளும் இவனும் கிளிநொச்சி வந்து பத்து மாதங் களுக்கு மேலாகி விட்டன; இந்தப் பத்து மாத காலமும், விட்டு விடுதலையாகிய இரு சிட்டுக்களின் அனுபவம் அவர் களுடையதாகியது.
கட்டற்ற சுகம். சுதந்திரம்.
வாழ்வின் உள் இழைகளை திடமான ஆண்மையின் வீறாப் புடன், அவன் அதிரச் செய்த அழகு இவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆணும் பெண்ணும் இப்படியெல்லாம் இருக் கலாம் என்பதெல்லாம் இவனோடு வாழ்ந்ததில் தான் அவள் புரிந்து கொண்டாள்.
"ஓ! இந்த வாழ்க்கை இந்த ஜென்மத்திற்குப் போதும்'. என நினைவு கொள்வாள்.
இவ்வளவு மகிழ்ச்சியும் நிறைவும் மிக்க வாழ்க்கையின் சோபி தங்கள், ஒரு மாலைக் கருக்கலில் கலைந்த பொழுது; இவள் இடிந்து போனாள்.
தங்கராசாவின் கமத்துக்குப் பின்னால், கொய்யா மர மொன்று பழுத்துச் சிலிர்த்துக் கிடந்தது. கொய்யாப்பழ மென்றால் இவளுக்குக் கொள்ளை ஆசை. இவள் பழம் பறிக்கப் போனபொழுது -
தங்கராசாவின் தங்கை ரஞ்சி, இவனது கழுத்தில் மாலை யாய்ப் படர்ந்து, ஏதோ ரகசியம் பேசினாள். அதைக்கேட்டு, இவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
"அப்படி என்ன சிரிப்பு! இவளுக்கு வாயில் கிடந்த கொய் யாப்பழம் கசந்தது. கண்கள் பனித்துவிட, திடீரென ஒரு
புதரில் ஒதுங்கி மறைந்து கொண்டாள். அவளுக்கு அவர் களைப் பார்ப்பதற்கே கூச்சமாக இருந்தது.
47

Page 29
அவன் இப்பொழுது தன் பங்குக்கு ரஞ்சியின் காதைக் கடித்தான்.
அவன் அப்படி என்ன சொல்லியிருப்பான்? ரஞ்சிப் பெட்டை சிணுங்கலுடன் குலுங்கி, உடலைக் குறுக்கி அவனது மார் பினில் புதைந்து.
இவளுக்கு எரிதணலை மேலெல்லாம் கொட்டியது போலிருந் தது. அங்கு நிற்பதற்கே பிடிக்காமல் ஓட்டமும் நடையுமாய் குடிசைக்கு வந்தவள், குழந்தையைத் தூக்கி வைத்துக், கொண்டு மாறி மாறி ஆசையுடன் முத்தமிட்டாள்.
“எனக்கு நீ. நீமட்டும்தான் சொந்தம்...'
உணர்ச்சிகள் வடிந்த நிலையில், நிதானமடைந்த அவள் திடீரென சதாசிவத்தை நினைவு கொண்டாள்.
அவனுடன் வாழ்ந்த அந்த வாழ்க்கை எவ்வளவு பெருமிதம் நிரம்பியது.
இவளை ஒரு பொருட்டாக மதித்துப் பேசியது. கருத்துக் களைக் கேட்டது. மதித்தது. எல்லாம் இவளுக்கு இப் பொழுது பெருமையாக இருத்தது.
அவன் இவளோடு மனைவி என்ற அளவில் கொண்ட உறவு களில் கூட, விட்டுக் கொடுத்துப் பெற்றுக் கொண்டதும், புரிந்து கொண்ட அநுசரிப்புகளும், ஆணின் அதிகாரங்கள் தோலுரிய - உண்மையான ஆண் மகன் இவன்தான் என அவன் நடந்து கொண்டதும், இவளுக்கு இப்போதைய இந்த வாழ்க்கையின் மீது அதீதமான வெறுப்பையே ஏற் படுத்தியது.
எந்த ஆணை ஒரு பாதுகாப்பென இவள் நம்பினாளோ அவன் மிகவும் கேவலமாக நடப்பது”. இவளது இருப்பை
48

யும், சமூக மதிப்புகளையும் சிதறடித்து விட்ட கொடுமையை இவள் உணர்ந்து,
'அவன் இன்று வரட்டும். வரட்டும்’, என மனதளவில் கறுவிக் கொண்டாள்.
அவன் வந்தபொழுது இவள் கேட்டாள்;
‘என்ன...? ரஞ்சி இளசு. அது தான் பிடிச்சிருக் காக்கும். என்னை ஏமாத்தினது போலை அந்தப் பெட் டையையும் ஏமாத்திப் போடாதை."
SLSLS L0 S L S 0S S S0 SLL S S0S SS SS SSSSS S SLSL S SL S SLSL SL SL SL SL S SLS LSL S SLSS SS SSLSL
‘என்ன....? நான் கேக்கிறன் நீ விளங்காத மாதிரிச் சாலம் விடுறை’’.
'ஏதோ விளையாட்டா அது பேசினதைப் பார்த்திட்டு
‘ஓம். ஓம். விளையாட்டுத்தான். நீ அதிலை சொக்கிப்போய் தேன் குடிச்ச நரியாட்டம் நிண்டதை என்ரை இரண்டு கண்ணாலையும் பாத்தன்.'
‘சரி பாத்தாச்செல்லா...? இப்ப என்ன செய்யச் சொல் லிறை...? நான் நானாகத்தானிருக்க விரும்பிறன். நீ சொல்லிற மாதிரியெல்லாம் இருக்க என்னாலை முடியாது.”*
"அப்ப ஏன் இஞ்சை என்னோடை இருக்கிறை. அவ ளிற்றை... அந்தப் பெட்டை ரஞ்சீற்ரை போயிடன். Guit. ''
அது அவனுக்குப் பிடிக்கவில்லை. மிகுந்த கோபத்துடன் கீழிறங்கி வந்து, அவளைக் கேவலமாகச் சீண்டினான்.
49

Page 30
'நீ பியசிறீயோடை படுத்த நாய்தானே. இண்டைக்கு என்னோடை. நாளைக்கு தங்கராசனோசட. அந்தத் தடியன் உன்னை வளைய வளைய வாறதும். . . ஐஞ்சு பத் துக் கடன் தாறதும் உன்னிலை கண்வைச்ச கள்ளத்திலை தான்'
‘'நீ சரியான ஆம்பிளையா இருந்தா, நானேன் போய் அவனிட்டை இவனிட்டை கையேந்திறன். உன்னைப் போலை பெட்டச்சியையே எதுக்கும் எதிர்பார்த்தா, எல் லாம்தான் நடக்கும்'.
'அவ்வளவு துணிவாடி உனக்கு.. பன்னாடைப் பரத்தை'.
அவன் திடீரென உன்மத்தம் கொண்டவனாய், அவளைத் தலைமுடியில் பற்றித் தர தர என இழுத்துவந்து, குடிசை க்கு வெளியே போட்டு உதைத்தான். அந்த நிலையிலும் அவள் உறுதி குலையாமல்:
"பூ. ஆண்தனமா! இப்படிச் செய்த உடனை நீ ஆம்பிளையாயிடுவையா...?"
அவனது தன்முனைப்புகளையே அவள் சீண்டிக் கால்களின் கீழ்ப் போட்டு மிதிப்பதுபோல் பேசினாள்.
அவன் அங்கு நிற்பதற்கே தயங்கியவனாய் வெளியே
போனான்.
உணர்வுச் சுழிப்பின் ஆழத்திலிருந்து இவள் விடுபட்ட பொழுது அவன் அங்கு இல்லை என்பதையும், இருண்டு வெகு நேரமாகிவிட்டதென்பதையும் உணர்ந்து, பதைப் புடன் விளக்கேற்றினாள்.
50

விளக்கேற்றியவள், அவன் வரவைப் பார்த்திருந்தாள். அவன் வரவில்லை. விடியலின்போதும் வரவில்லை.
இவளுக்கு லேசான பயம், பெண்ணுக்கே உரிய பயம்; பொறாமை கலந்த பயம் தோன்றியது.
‘இவன். என்னைக் கிளப்பினதுபோலை. ரஞ்சியைக் கூட்டிக்கொண்டு ஓடிற்றானோ?*
அவனது உறவே வேண்டாமென்ற நிலையிலும், இந்தப் புதிய உறவைத் தடுத்தே தீருவதென்ற தீவிரத்துடன், மிக வும் உணர்ச்சிவசப்பட்டவளாய், தங்கராசா வீட்டுக்கு அவ சர அவசரமாக ஓடினாள்.
அங்கு இவனில்லை. தங்கராசா இருந்தான். அவன் அமர்க் களமாய் இவளை வரவேற்றான். அவனது குதூகலம் இவ ளுக்குச் சலிப்பையே தந்தது.
"இவரைப் பார்த்தையா?*
"இவரைத்தான்’’.
"ஓ! அவனா? அவன் ஆராவது பொம்பிளைக்குப் பின் னாலை போயிருப்பான்’’.
உள்ளே லேசான விசும்பல். வீட்டுக் கதவின் மறைவிலிருந்து ரஞ்சி விசுக்கென உள்ளே போய்க்கொண்டிருந்தாள்.
‘ரஞ்சி போகேல்லை.", மனம் லேசாகக் குதூகலித்தது. அந்தக் குதூகலம் அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவள் மனம் ரஞ்சிக்கு ஆறுதல் சொல்லத் துடித்தது.
S1

Page 31
அவளது துயரம் இப்பொழுது ரஞ்சியின் துயரமாகியிருக் கிறது.
அவள் திடீரெனத் திரும்பிக் குடிசையை நோக்கி நடந்தாள்.
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த தங்கராசா, ஆணுக்கேயுரிய வேட்கைகளைச் சுமந்தவனாய், அவளைப் பின் தொடர்ந்தான்.
அவள் திரும்பிப் பார்ப்பதற்கு அச்சங் கொண்டாள்.
வாழ்க்கையில் இந்தளவு தளம்பியது போதும். இனியும் அவள் இன்னொருவனுடன் பந்தப்பட மாட்டாள். அப்படி ஒரு நிலை வந்தாலும் அதை எதிர்த்து நிற்க உறுதி பூண்டவளாய், குடிசையை அடைந்து, ஆர்வத்துடன் குழந் தையைத் தூக்கினாள்.
குழந்தை சிரித்தது.
அந்தச் சிரிப்பு, இவளுக்கு, சதா சிவத்தை நினைவூட்டியது.
தங்கராசாவின் காலடி ஒசை குடிசைக்கு வெளியே பல மாகக் கேட்டது. அவள் நெஞ்சு லேசாகப் படபடத்துக் கொண்டது. அவள் குழந்தையை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அது அவளுக்குத் தெம்பாக இருந்தது.
8
52

அரும்பு
காரில் இருந்து இறங்கி, விசும்பலோடு வந்தாள். மனசைக் கரைய வைக்கும் விசும்பல். என்னைக் கண்டதும், ஒர் இளந்துள்ளலுடன், கால்கள் நிலத்தில் பாவாமல் ‘அப் போய்’ எனப் பாய்ந்து வருபவள் இன்று 'ஸ்கூல்பாக்” தரையில் இழுபட, மிகவும் தளர்ந்து போனவளாய், பார்வை சூனியத்தில் நிலைகொள்ள வந்தாள். விசும்பல் ஒயவில்லை. இடையிடை இருந்தது. என்னை நெருங்கியவள் தனது உயரத்துக்கு என்னோடு நின்று, எனது கால்களைக் கட்டிப் பிடித்தபடி நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் சோகம் அப்பிக் கிடந்தது; நீர் பள பளத்தது.
'என்னம்மா...?’’, என்றதும் விசும்பல் உடைந்து அழு
கையாய் மாறியது.
53

Page 32
உள்ளே ஏதோ வேலையாக இருந்த தேவி:
"என்ன ராஜி. என்ன?", என்று பதட்டத்துடன் வந்தாள்.
"ராஜி பேர் வேண்டாம் அம்மா.. எனக்கு வேண்டாம்!"
குழந்தை, கெஞ்சுவது போலத் தாயைப் பார்த்தாள்.
"என்ன செல்வம்?', குழந்தையை அணைத்துக் கொண்ட தேவியின் குரல் தழைந்து மறுகியது.
குழந்தை இடது கை மணிக்கட்டுக்கு மேலாகப் புறங் கையைக் காட்டினாள்.
அந்தப் பட்டுச் சருமத்தில், செவ்வரி படர்ந்த தழும்பு. உள்ளங்கையைப் புரட்டிப் பார்த்தேன், அதிலும் அடித்ததற் கான அடையாளம்.
"இந்தச் சிசுவை. பாலனை. பிரம்பால் அடிக்க மனம் வருமே...? பிரம்பா...? சிறு தடியாகக்கூட இருந்திருக்கலாம். கள்ளித் தடியாக... பட்டதும் சுரீ ரென்று. காயம் வருகிற மாதிரி. என்ன கொடுமை யிது!’
என் கண்கள் பனித்து விடுகின்றன.
"ஆர் இந்த ரீச்சர். ராட்சசி. குழந்தை குட்டி இல்லாத வளா? பிள்ளையை இப்படி, நார் நாரா வார்ந்திருக் கிறாளே!"
"இப்பவும் இப்படி ஒரு ஆசிரியையா...? அவளுக்குக் குழந்தையை அடிக்க வேண்டுமென்று இருந்திருக்காது.ஏதோ
54

ஒரு வேகத்தில், தன்னை மறந்து செயற்பட்டிருக்கலாம். இல்லை, ஒரு "சாடிஸ்ராக' - அந்த இயல்புகள் அவளது அடி மனதில் குரூரமாகப் படிந்து கிடக்கிறதோ...??
நினைவுகளை மீறி ஏனோ அப்பொழுது மிஷன் பாடசாலை யில் எனக்குப் பாடம் கற்றுத்தந்த, செல்லம்மா ரீச்சரின் ஞாபகம் வந்தது.
சற்றுப் பருமனான உடல்வாகு. தங்க பிரேம் கண்ணாடி. மனசைத் தொட்டுப் பேசும் கண்கள். சிரித்தால் பேச்சே வேண்டாம் என்றிருக்கும் ஒரு இதம், பரபரக்காத நிதானம். சிரத்தை.
"என் பிள்ளைக்கு மிஸ் செல்லம்மா மாதிரி ஒரு ரீச்சர் ஏன் இல்லாமல் போய்விட்டது?"
மனசு கரைந்து தவித்தது.
"ஏன் ரீச்சர் ராஜியை அடிச்சவ?*
நான் கேட்டதும் குழந்தை தாயின் பிடியிலிருந்து விடுபட்டு என் அருகே ஓடிவந்து, எனது உதடுகளைத் தனது பூவிரல் களால் அழுத்தி மூடியவாறு கூறினாள்:
"அந்தப் பேர் வேண்டாம் அப்பா. வேண்டாம்'.
குரலில் துக்கம் கனத்துக் கிடந்தது.
மெதுவாக அவளை அணைத்தபடி, "என்ன? என்ன நடந் தது சொல்லம்மா...' என்று கேட்டேன்.
“எனக்கு ஒண்டும் தெரியாதாம். முழு மக்காம் களிமண் தான் தலையிலை இருக்காம், அந்த ரீச்சர் திட்டினாப்பா'.
55

Page 33
**ஏனம்மா... ...?’’
"என்ரை பேரை எழுதெண்டு சொன்னா, எழுதினனா எழுதினது பிழை, பிழை, வடசொல் எழுது, வடசொல் எழுதெண்டு அடிச்சாப்பா. வடசொல்லெண்டா என் னப்பா?’’
“தெரியாதெண்டாக் காட்டித்தாறது. அதுக்கு இப்படியா குதறி எடுப்பாள் அந்தக் கூறுகெட்ட."
குமுறிய தேவி, ராஜியைத் தூக்கிக் கொண்டு உள்ளே
போனாள்.
உள்ளே எட்டிப் பார்த்தேன். தாய் மகளது காயங்களுக்கு எண்ணெய் தடவிக் கொண்டிருந்தாள். 'மஞ்சள் மாவும் சேர்த்தனியா?’ என்று மட்டும் கேட்டு விட்டு, நான் மாடிக்குப் போனேன்.
சுந்தரராமசாமியின் 'பள்ளம் தொகுதியில் மூழ்கியிருந்த பொழுது.
y 9
"அப்பா மேலை வரட்டா..?’’ ராஜியின் குரல்.
ராஜி மாடிப் படிகளில் “தட தட' என ஒடி வந்தாள்.
‘தங்கச்சி பார்த்துப்போ, ஓடாதை. விழுந்திடுவை!’
நொடிக்கு நூறு தரம்-ராஜி, ராஜி” என்று மாயும் தேவி, குழந்தையின் பேர் விஷயத்தில் உசாரானது எனக்கு ஆச் சரியமாயிருந்தது.
‘ராஜி என்ற பெயர் இனி இந்த வீட்டில் ஒலிக்காதோ . ராஜி பெயர் வேண்டாமென்றால் இனி என் பிள்ளையை
என்ன பெயரால் அழைப்பது?"
56

"குழந்தையின் மனதில் வேர்விட்டு ஆழமாகவே பதிந்து விட்ட இந்த உணர்வை எப்படி நீக்குவது'.
'குஞ்சு சாப்பிட்டாச்சா?*
"சாப்பிட்டாச்சு", என்றவள் ஓடிவந்து, எனது மடியிலேறி உட்கார்ந்து கொண்டாள்.
‘என்ன படிக்கிறீங்க அப்பா? லிற்றில் ரெட் றைடிங் ஹ"சட்டா. ஸ்நோ வைட்டா, என்ன புத்தகமப்பா?*
நான் படிப்பதெல்லாம் அவளது புத்தகங்கள் என்பது அவ ளது நினைப்பு.
*பிள்ளைக்கு நித்திரை வருகுது... படுப்பமா!'
மத்தியானம் சாப்பிட்டதும் ஒரு சிறு தூக்கம் போடுவாள்
ராஜி.
““வேண்டாமப்பா. ரி.வி. போடுங்க".
**ரி.வி. யிலை ஒண்டுமில்லையம்மா’’.
'இல்லை போடுங்க', அடம் பிடித்தாள்.
ரி.வி. யில் நிகழ்ச்சி எதுவும் இருக்கவில்லை.
**செல்வா. ரீகல். போடுங்க*.
"இல்லையம்மா’’
அமைதியாக வந்து எனது கதிரையில் ஏறி, மேசையில் தொற்றி உட்கார்ந்து கொண்டாள்.
57

Page 34
“என்ன புத்தகம் அப்பா இது? மட்டை பளபளெண்டு வடிவா இருக்கு'.
"நீயே படிச்சுச் சொல்லம்மா’’.
ப. ஸ். ள... ம். பள்ளம். பள்ளமெண்டா என்
னப்பா?*
“பள்ளமெண்டா பள்ளம் தான்’’.
அவளுக்கு அந்தப் பதில் திருப்தி தரவில்லை.
எழுந்து கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்துக் கொண்
டாள்.
"வாம்மா வந்து படு'.
கட்டிலில் ஏறித் தானாகப் படுத்துக் கொண்டாள். படுத்த சில நிமிடங்களில் அவள் அமைதியாகத் துயில் கொண்டாள்.
ராஜி ஆறு மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டாள். கையில்
இருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவளைப் பார்த் தேன்.
"சிச்சா அப்பா", வெட்கம் கலந்த இளஞ் சிரிப்புடன் நெளிந்தாள்.
"ஆறு வயதாப் போச்சு இன்னுமா...?*
எனக்கு ஆறு வயதா? இல்லையப்பா! ஐஞ்சு வயதுதான் முடிஞ்சிருக்கு', திருத்தம் சொன்னாள்.
58

"அப்பாவுக்கு எத்தனை வயது?"
"நாப்பத்தைஞ்சு'.
"அம்மாவுக்கு?*
'முப்பத்தி ஏழு’’.
"ரகுச் சித்தப்பாவுக்கு?"
"நாப்பத்திரண்டு'.
'சித்திக்கு?*
'முப்பத்தைஞ்சு'.
"விஜியக்காவுக்கு?"
**தெரியாதம்மா’’.
"குட்டியக்காவுக்கு?’’
"தெரியாது, போதும் போதுமம்மா’’
அவளை நன்றாகத் துடைத்து விட்டு, தேவிக்குக் குரல் கொடுத்தேன். தேவி மாடி ஏறிவந்து குழந்தையை அழைத் துப் போனாள்.
சற்றைக்கெல்லாம், ராஜியின் குரல் பக்கத்து வீட்டில் நீட்டி முழங்கியது.
விஜியக்கா, குட்டியக்கா, இரத்தினக்கா, மணியக்கா, மகேஸ்
அக்கா, இரத்தினண்ணா, ஆனந்தனண்ணா, ஜெயாண்ணா என்று வயது வித்தியாசம் பாராது-ஒவ்வொருவரும் எழு
59

Page 35
பது முதல் இருபது வயதுக்கு இடைப்பட்டவர்கள்அண்ணா முறை, அக்கா முறை வைத்தழைத்துச் சமா வைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த சமாவில் அவர்கள் - அந்தப் பெரியவர்கள், தேன் குடித்த நரியாட்டம் கிறுங்கி இருப்பது எனக்குத் தெரிகிறது.
"குழந்தைகள் தெய்வ அம்சம் என்பது எவ்வளவு உண்மை! இதைக் கூடப் புரிந்து கொள்ளாத அந்த ரீச்சர், சோக் பீஸும் கையுமா படிப்பிக்க வந்தா மட்டும் போதுமா? பாலர் வகுப்புப் பயிற்சி அது இதெண்ட பவுசு வேறை"
நெஞ்சு படபடத்துக் கொண்டது.
O
கீழே தேவி சாப்பிடுவதற்கு அழைத்தாள்.
‘மணி எட்டிருக்குமா” என நினைத்தபடி கீழே படியிறங் கினேன்.
ராஜி தாயின் மடியிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“என்ன சாப்பாடம்மா?’ ராஜியைக் கேட்டேன்.
"இடியப்பம், சொதி, சிக்கின்'
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, டைனிங் ரேபி ளில் ஏறியிருந்து என்னிடம் நாலு வாய் சாப்பிட்ட பின் தான் அவளுக்குத் திருப்திப்பட்டது.
சாப்பாடு ஆனதும் எட்டு இருபத்தைந்துக்கு ரி.வி. யில் தர்மசேன பதிராஜாவின் மாயமந்திர ரெலி டிராமா பார்ப் பதற்கு மாடிக்குச் ன்ெறேன். மொழி தொந்தரவு தந்த
60

பொழுதும், பார்ப்பதில் ஆர்வமிருந்தது. முறையான படப் பிடிப்பு. சில ஃபிறேம்ஸ், நல்ல சினிமாவைப் பார்க்கிற பிரமையைத் தந்தது. பதிராஜ் நல்ல கலைஞர்.
நாடகம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ராஜி மாடிக்கு வந்தாள், ஒரிரு நிமிடங்கள் என்னுடன் ரி.வி. பார்த்த ராஜி, பொறுமை இழந்தவளாய் எனது கழுத்தில் தொங்கிய மஃப்ளரைப் பிடித்து இழுத்து, தனது முகத்துக்கு நேராக எனது முகத்தை வைத்துக் கன்னத்தில் செல்லமாக முத்த மிட்டாள்.
** என்னம்மா?*
**ரி.வி. வேண்டாம் வாங்கப்பா......
அவளது அழைப்பை ஒதுக்க முடியவில்லை. நான் அவளுக் குப் பாடம் சொல்லித் தர வேண்டும். எவ்வளவு முக்கிய மான வேலை இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு அவளுடன் இருக்க வேண்டும். அந்த மணித் துளிகள் அவ ளுக்கு மட்டுமே சொந்தம்.
படிப்பு கட்டிலில் தான் நடைபெற்றது. கட்டிலில் ஏறி உட்கார்ந்து, தலை அணைகளை, தான் சாய்ந்து கொள்ள வாகாகச் சரி செய்து, குட்டி இளவரசி மாதிரி கம்பீரமாக அவள் உட்கார்ந்து கொண்டாள்.
அவளது ஆங்கிலப் புத்தகங்கள் சிலவும், தமிழ்ப் புத்தகமும் கட்டிலில் திறந்த நிலையில் பரப்பப்பட்டன. அதற்கு என் உதவி அவளுக்கு வேண்டும். இன்று அவளே புத்தகங்களை எடுத்துப் பரப்பினாள். உடனே படிக்கவும் ஆரம்பித்தாள்.
படிக்கும் போது ஒரு ஒழுங்கு முறை அவளிடம் உண்டு. வலது பக்கமிருந்து ஆரம்பித்தால் - கீழாக வந்து, மேலே
செல்வாள். பக்கங்களைப் புரட்டும் போதும் ஒரு நடை
61

Page 36
முறையைப் பின்பற்றுவாள். மாற்றம் எதுவும் செய்யக் கூடாது. குழந்தையின் போக்கிற்கே விட்டு விடுவது அவளுக் குப் பிடித்தமாய் இருக்கும். ஏதாவது மாற்றம் செய்தால், "அது பிழையப்பா, இப்பிடி இப்பிடித்தான்’ என்பாள்.
ஆங்கில வாசிப்பை முடித்து நிமிர்ந்தவள், ஆங்கில, தமிழ் எழுத்துக்களை, மூச்சு விடாமல் ஒப்பித்தாள். பின்பு எண் கள் கணிதம், வாய்ப்பாடு மட்டும் அவள் வயதுக்கு அதிகம் என்று சொல்லித் தரவில்லை. நிறங்களையும், ருசிகளையும் அவள் தெரிந்து வைத்திருந்தாள்.
பாட நடுவில் தேவி பால் கொண்டு வந்தாள். பாலை வாங்கிப் பருகியபடி, "கதை சொல்லுங்க" என்றாள்.
முயலும் ஆமையும் கதை சொன்னேன். அவளுக்குத் திடீ ரென்று முயல் எப்படி இருக்குமென்ற சந்தேகம் வந்து விட்டது. படம் போட்டுக் காட்டும்படி கேட்டாள்.
படம் போட்டுக் காட்டினேன்.
'முயலுக்குக் காது இத்தினி சின்னனா? பெரிசாக் கீறுங்க
." என்றாள்.
காதைப் பெரிதாக்கினேன்.
"ஒட்டகம் கீறுங்க..."
“Fif?... ” ”
"முதுகு நல்லா இல்லை.", விமர்சனம் செய்தாள்.
"யானை, பூனை, கோழி, கார், வண்டில்’ தொடர்ச்சி யாகச் சொன்னாள்.
62

எல்லாவற்றையும் போட்டுக் காட்டினேன்.
"போதும், போதுமப்பா...' எழுந்து சோம்பல் முறித்த படி நின்றாள்.
"பிள்ளைக்குத் தூக்கம் வருகுது’’, குரல் கொடுத்ததும் தேவி வந்து அவளைத் தூக்கிச் சென்றாள். அன்றைய பொழுது அத்துடன், அவளுக்கு ஆகிவிட்டது.
ராஜி பெயர் குழந்தையை அதிகமாகவே பாதித்து விட்டது என்று தெரிந்தும் - காலையில் எழுந்ததும், மனைவி ராஜி, ராஜி' என்று கரைந்தது எனக்கு மிகுந்த எரிச்சலூட்டியது.
"தேவி! குழந்தை பாடசாலை நிகழ்ச்சியை மறக்க வேணும்,
அதுவரை அந்தப் பெயரைச் சொல்லி அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம்”, என்றேன்.
மனைவி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.
“இரண்டு குழந்தைகள் எனக்கு’ என நினைப்பதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
கண்ணாடி முன் தன்னை அலங்கரித்துக் கொண்டு நின்ற ராஜிக்கு - மனைவி தலைவாரிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது, ஹெலியோ விமானமோ பறக்கும் ஓசை கேட்டது.
மனைவி பதட்டமடைந்தவளாய், “பொம்பர் போகுது போலை”, என்றாள்.
63

Page 37
ராஜி முகத்தைக் கோணலாக நெழித்து, 'பொம்பர் இல்லை யம்மா, பொம்மர், பொம்மர்’, என்று திருத்தம் சொன் னாள். பின் என்னை நோக்கியவள்:
"பொம்மர்தானே சரியப்பா. அம்மாவுக்கு ஒண்டுமே தெரியாது...", என்று கேலியாகச் சொல்லிவிட்டு, பக் கத்து வீட்டுக்குப் போகப் படி இறங்கினாள்.
வாயடைத்துப் போய்நின்ற தேவி கேட்டாள்:
"பிள்ளைக்கு இண்டைக்கு ஸ்கூல் இல்லையோ. பள்ளிக்குக் கள்ளமோ?’, திரும்பிய ராஜியின் கண்களில் நீர் முட்டி வழிந்தது.
"அந்த ஸ்கூல் வேண்டாம், அந்த ரீச்சர் வேண்டாம் அம்மா’’.
"சரி சரி. நீ போய் விளையாடு, நாளைக்கு வேறை ஸ்கூல் பாப்பம்' என்று கூறிய நான், அவள் படியிறங்கிப் போவதைப் பார்த்தபடி நின்றேன்.
கந்தோரில் இருந்த பொழுது ராஜி முன்னாலும் பின் னாலும் இருப்பது போல ஒரு நிழலாட்டம். இவ்வளவு பிரியம் ஏன் என்று மனம் அடித்துக் கொண்டது.
அப்பா அந்தப் பேர் வேண்டாம் என்ற விசும்பல். விசும்பல் உடைந்து கனதியான அழுகையாக உருக் கொண்டது. மனசில் ஏதோ பாரம் அழுத்த, குழந்தையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அரை நாள் லீவு போட்டு விட்டு வீட்டுக்குப் போனேன். ராஜி தூங்கிக் கொண்டிருந்தாள்.
64

குழந்தையை வைத்தகண் வாங்காது பார்த்து நின்ற என்னை நெருங்கிய மனைவி; ܓ
‘ராஜிக்கு வேற பாடசாலை பாருங்க” என்றாள்.
தேவி எனது எண்ணத்தையே பிரதிபலித்தது மனசுக்கு இதமாயிருந்தது.
கந்தோருக்குப் போதற்கு முன்னதாக, ராஜியை அவளது புதிய பாடசாலை வரை கொண்டு விடுவது என்ற எண்ணத் துடன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றேன்.
கோயில் வீதியில் சென்ற பொழுது, "அப்பா வேகமாக ஒடுங்க', என்றாள்.
ஸ்கூட்டரின் வேகத்தைச் சற்று அதிகப்படுத்தினேன்.
“பூ இதுதானா உங்க ஸ்பீட் என்றாள்'.
இன்னும் சற்று வேகப்படுத்தினேன்.
"வேண்டாமப்பா. வேண்டாம். ஸ்பீட் கூடிப் போச்சு, பயமாயிருக்கு' என்றவள், என்னைத் திரும்பிப் பார்த்து, “எனக்குச் சைக்கிள் ஒட, ஸ்கூட்டர் ஒட, கார் ஒடச் சொல்லித் தருவியளா?' என்றாள்.
*சொல்லித்தாறனம்மா! என் பிள்ளைக்கு இல்லாததா'.
'ஹெலிக் ஹொப்டர், பொம்மர், அவ்ரோ எல்லாம் ஓட வேணும்'.
65

Page 38
"எல்லாம் ஒடலாம். என் பிள்ளை ஜான்ஸிராணியாக்கும்", என்றேன்.
அவள் என்னைப் பார்த்து, திருப்தியுடன் முறுவலித்தாள்.
பாடசாலை வந்ததும் இறங்கிக் கொண்டாள். அதிபரது அறைக்குள் அவளை அழைத்துச் சென்றேன். அதிபர் இவ ளைப் பார்த்ததும் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினார். அவருக்கு இதமாகச் சிரித்து வைத்தாள்.
பாலர் பிரிவு ஆசிரியையுடன் கதைக்க வேண்டும் என்றேன். அவரது அனுமதியுடன் உள்ளே சென்றேன்.
ஆண்டு ஒன்று ஆசிரியையைப் பார்த்ததும் செல்லம்மா ரீச்சரின் நினைவு வந்தது. இரட்டை நாடி உடம்பு. தங்க பிரேம் அல்ல. வெள்ளிப் பிரேம் கண்ணாடி. சிரித்தபொழுது வரிசையான வெள்ளைப் பற்கள் ஒளிர்ந்தன.
ராஜியை அவர் அன்புடன் வரவேற்றார்.
ராஜி, எங்களிடமிருந்து பிய்த்துக் கொண்டு, குழந்தை களுடன் ஒட்டிக் கொண்டாள்.
நான் நடந்த விபரம் அனைத்தையும் கூறி, அவளைப் பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உண்டு என்று அவரிடம் விடை பெற்ற பொழுது:
*உன்ரை பேர் என்ன?"
9 9
LLL L S LS S 0LS SSSS SSSLS SSLL SSL SLS S SL SLL SLL S LLL LLLL S SSYSS SS0SSL
"இவவுக்குப் பேர் இல்லைப் போலை!"
“லலிதாவா, ராணியா, சந்திரா, விஜி.?* "அவ பேர் ராஜி.' என்று ஆசிரியை விடைதந்தார்.
66

ரீச்சரையும், என்னையும் மாறிமாறிப் பார்த்த என் பெண் "அப்பா' என்று விசும்பியபடி என்னை நோக்கி ஓடி வந்தாள் ஆசிரியை இடையே வந்து அன்புடன் அவளது கண்களில் அரும்பியிருந்த கண்ணிரைத் துடைத்தபடி:
**கெட்டிக் காரியெல்லா இந்தச் சின்னக் குட்டி", என்று அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டார்.
'நீங்கள் பயப்படாமல் போய் வாருங்கள். 11.30 க்கு வகுப்பு முடியும், வந்து மகளைக் கூட்டிப் போகலாம்", என்றார்.
'இன்றும் அரைநாள் லீவு போடவேணும்" என்னும் நினைப் புடன் ஸ்கூட்டரை ஸ்ராட் செய்தேன்.
தூரத்தில் ராஜி நீர் மல்கிய கண்களுடன் என்னையே பார்த்தபடி நின்றாள். 11.30 க்கு முன்னதாகவே நான் பாடசாலைக்குப் போனேன். ராஜி பிள்ளைகளுடன் கலந்திருப்பதை என் னால் காண முடிந்தது.
பாலர் பிரிவு விடும் வரை ஒதுங்கி நின்றேன். குழந்தை
என்னைக் கவனியாது தனது படிப்பில் ஆழ்ந்திருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது.
மணியடித்ததும் பிள்ளைகள் குதூகலமாக வெளியே வந் தனர். ராஜி ரீச்சரிடம் ஏதோ கேட்டு விட்டு வெளியே வந்த பொழுது, ஆசிரியையும் உடன் வந்து:
'உங்கள் பிள்ளை கெட்டிக்காரி. எதையும் அவளால் சுலப மாகக் கிரகித்துக் கொள்ள முடிகிறது'.
"அப்படியா. சந்தோஷம்", அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
67

Page 39
ஸ்கூட்டரில் ஏறியது முதல் ராஜி எதுவும் பேசாமல் ஆழ்ந்த யோசனையிலிருந்தாள்.
“என்னம்மா பேசாமல் பெலத்த யோசனை. எந்தக் கோட் டையைப் பிடிக்கப் போறை?"
"குழப்பாமை இருங்கப்பா".
"என்ன, இந்தப் பிஞ்சு யோசிக்கிறது", என்று நினைத்துக் கொண்டேன்.
ராஜி, ஸ்கூட்டர் நிற்பதற்கு முன்னதாகவே பாய்ந்து இறங்கி "அம்மோய்' என்று அழைததபடி வீட்டிற்குள்ளே ஓடினாள்.
தேவி, ராஜி குரலைக் கேட்டதும் உடனே வெளியே வந் தாள்.
"அப்பா நீங்களும் வாருங்க', என்றாள் குழந்தை. இரு வரையும் கதிரையில் உட்காரவைத்து, தனது ஸ்கூல் "பாக்கை திறந்து, கொப்பியை எடுத்து, பென்சிலால் நிதா னமாக ராஜி என்று எழுதினாள்.
"என்னம்மா இது!"
"ரீச்சர் சொல்லித் தந்தவ அப்பா”*
கண்களை இடுக்கி, சிறிதாக முறுவலித்தாள்.
தேவியைப் பார்த்தேன்; அவள் கண்கள் பனித்திருந்தன.
எனக்கு ஏனோ அப்பொழுது எனது அருமை ஆசிரியை மிஸ் செல்லம்மாவின் ஞாபகம் வந்தது.
'88
68

ஒதுக்கம்
இரண்டு நாட்களாக அவனால் எதுவுமே செய்ய முடிய வில்லை. நிதானந் தப்பி, எதிலுமே கவனம் கொள்ளாத பதட்டம். உள்ளிருந்த முழுமை சரிந்து நழுவியதான பிரமை. வேலைக்கு இன்று போய்வந்தாகிவிட்டது. நாளை போக முடியுமா? அவனுக்குப் பயமாக இருந்தது.
இன்று, வேலை முடிந்து வந்தவன், முகங்கூடக் கழுவிக் கொள்ளாது, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். இது, ஒரு வகையில் அவனுக்குப் பாதுகாப்பாக இருந்தது.
திடீரென இப்படி ஒதுக்கமானது அவனுக்கு வியப்பாக இருந்தது. கூச்சமாகவும் இருந்தது.
69

Page 40
நேற்று முன்தினந்தான் அந்தத் தீர்மானத்தை இவர்கள் தங்கள் சங்கத்தின் சார்பாக எடுத்துக் கொண்டார்கள். தாய்ச்சங்கம்கூட இவர்களை பொது வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளுமாறு பணித்திருந்தது.
ரெயில்வே ஊழியர்களில் ஒரு பகுதியினர் ஏற்கனவே வேலை நிறுத்தத்தில் குதித்துவிட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து அரச எழுதுவினைஞர்சளும் ஏனைய தொழிற் சங்கங் களும் களத்தில் இறங்கிய செய்தி, இவர்களுக்குக் கிடைத் திது
இதற்குப் பின்புகூட, சும்மா இருப்பதா? என்று இவர்கள் "கொமிட்டி'யைக் கூட்டி ஆலோசித்தார்கள். கொமிட்டிக் கூட்டத்திற்கு எட்டுப் பேர்தான் வந்திருந்தார்கள். அதில் இவனும் அமைப்புச் செயலாளர் என்ற ரீதியில் கலந்து கொண்டான்.
கூட்டத்தில் எதையுமே அதிகம் வெளிக்காட்டாது, தொட் டுத் தோய்த்துக் கொள்ளாது, எல்லாருமே கவனமாக நடந்து கொண்டார்கள். இருந்தும், அங்கொன்றும் இங் கொன்றுமாகப் பலவீனமான, உடைபட்ட சில குரல்கள் ஒலிக்கவே செய்தன.
“இந்த மாதச் சம்பளத்தை எடுத்துப்போட்டு “ஸ்ரைக் பண்ணினா என்ன?"
"நான் "எக்ஸ்ரென்சனி’லை இருக்கிறன், என்னாலை ஏலாது!"
"இதை, இந்த யோசனையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டாலென்ன?*
“வேலை போனாப் போனதுதான். உவங்கள் திருப்பித் தரவா போறாங்கள்?"
70

'சிவா, தேவா, தியாகு, குணம், டயஸ் இவைதான் ஸ்ரைக் பண்ணுவினை".
கூட்ட முடிவில், எல்லாருமே ஒரு முடிவுக்கு வந்தது போல வும், வராதது போலவும், கூடிக் கூடிப் பேசிவிட்டுப் பிரிந்து போனார்கள்.
ஜூலை இருபத்திரண்டு வசதியான நாள் என்பது மட்டும் அவர்களது நினைவில் தங்கிவிட்டது.
அவன் விழிப்புக் கண்டபோது, மாலை ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. முடிந்தவரை அவன் வீட்டிலேயே இருக்க விரும்பினான். வெளியே போவதுகூட ஆபத்தாக இருக்கலா மென நினைத்தான்.
வெளியே போனாலும் முதலில் சந்திப்பவனே இவனை இழுத்து வைத்து “ஸ்ரைக்' பற்றித்தான் கதைப்பான் என் பது இவனுக்குத் தெரியும்.
இவனிடம் இதை விட்டால் வேறு பேச்சே இல்லை என்பது போல அவர்கள் பேசுவது, இவனுக்கு மிகுந்த எரிச்சலையும் சலிப்பையுமே தருகிறது.
கிணற்றடிவரை சென்று, முகம் அலம்பி வந்தவன், தங்கை தந்த தேனீரை வாங்கிப் பருகியபடி அவளைப் பார்த்துக் கேட்டான்:
"அண்ணை ஸ்ரைக் பண்ணிறது இந்துவுக்கு விருப்பமே?"
"என்னண்ணை இது. இதுக்குப்போய் இப்பிடி அழுவார் மாதிரி...”*
அவள் காலியான பேணியை எடுத்துக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.
71

Page 41
அவனுடன் இதுபற்றி மனசைத் தொட்டுப் பேச ஒருவருமே இல்லாதது போலிருந்தது.
காலையில் அப்பா பார்வையிலேயே கேலியைத் தொற்ற
வைத்துக் கொண்டு வருத்தியது மாதிரி இருந்தது. இப் பொழுது தங்கை ஒரு வார்த்தையிலேயே அவனை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்விட்டாள்.
அம்மாதான் ஏதோ சற்றுப் பரிதவித்தது மாதிரி இருந்தது. ஆனால், அதுவும் விளக்கமேதுமில்லாத பரிதவிப்பு.
அவனுக்கு அப்பொழுது ஏனோ சந்திராவின் ஞாபகம் வந் தது. அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
சந்திராவை அவன் சந்தித்தது ஆறு மாதங்களுக்கு முன்பு தான். கச்சேரியில், காணிக் கந்தோரில் ஏதோ பதிவு விஷய மாகப் போனவன்; அலுவல் முடியாமலேயே திரும்பிய பொழுது, சந்திராதான் உதவிக்கு வந்தாள்.
பத்து நிமிடத்தில் அவள் அலுவலை முடித்துத் தந்தது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
“இதற்குத்தானா நாலு நாட்கள் அலைந்தது" அந்த நினைப்பே அவனுக்கு வெட்கமாக இருந்தது.
எதற்குமே முனைப்பேதுமில்லாமல் ஒதுங்கி, ஒதுங்கிப் பழகி விட்ட சுபாவம் அவனது. அப்படிப்பட்டவனுக்கு அவளது சுறுசுறுப்பு நிரம்பப் பிடித்தது.
சுச்சத்துடன் சந்திராவைப் பார்த்தான். அவள் இவனைப் பார்த்துக் கேட்டாள்:
72

"இந்து எப்படி இருக்கிறாள்?"
"இந்துவைத் தெரியுமா?"
"இந்துவையும் தெரியும், இந்துவின்ரை அண்ணரையும் தெரி պւհ՚
அவன் சிரித்தான்.
அவளும் சிரித்தாள்.
அந்தச் சிரிப்புக்கு வஞ்சகம் செய்யாமல் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். பிரியமாகச் சிரித்துக்கொண் டார்கள். பேசிக்கொண்டார்கள்.
ஒரு சமயம் அவள் இவனைத் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். முதலில் சிறிது தயக்கம் கொண்டபொழுதும், அவளது அழைப்பை ஏற்று, ஒரு மாலைப்பொழுதை அவ ளுடனேயே இவன் கழித்தான்.
இவன் அவளைத் தேடிப் போனபொழுது, அவள் மட்டும் தான் வீட்டில் இருந்தாள். ஏதோ எழுதியபடி இருந்தவள், வெளியே வந்து இவனைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அறை அடக்கமாக இருந்தது. அது அவளது 'ஸ்ரடி மட்டும் தான் என்பது இவனுக்குத் தெரிந்தது. சுவர்களுக்கு மிக மெலிதான நீல வண்ணமே பயன்படுத்தப்பட்டிருந்தது. ஜன்னலுக்கு அருகாமையில் ஒரு ஸோஃபா ஒய்வாகப் படுத்தபடி படித்துக்கொள்வதற்காக இருக்கலாம்.
கிழக்குச் சுவரோரமாக அவளது மேசை. அதில் அழகிய "ரேபிள் லாம்ப்' மேலாக, சுவரில் முண்டாசு பாரதி.
73

Page 42
அறையின் இடது புறமாக இரண்டு அலுமாரி நிறைந்த புத்தகங்கள். y,
அவள் வாசிப்பது இவனுக்குச் சந்தோஷமாயிருந்தது. இவனே, அதிக அளவு வாசிப்புப் பழக்கமுடையவன்தான்.
இவள் வாசிப்பதோடு எழுதவும் செய்கிறாள் என்பதை அவளது மேசையில் பரத்திக்கிடந்த எழுத்துப் பிரதிகள் அவனுக்கு உணர்த்தின.
"இதென்ன ரேட் யூனியன் விஷயமெல்லாம் எழுதுப்படுகுது! இந்த ஈடுபாடுமிருக்கே...?'
"ஏன் இருக்கப்படாதோ?’ எனச் சிரித்தவள், இவனிடம் மேசையில் கிடந்த புத்தகமொன்றைத் தந்து, "படியுங்கள் இதோ ஒரு நிமிஷத்திலை வாறன்’ என்று உள்ளே சென்றாள்.
அவள் கோப்பியும் கையுமாக வந்து, அவனை உபசரித்த பொழுது, அவன் புத்தகத்தில் ஆழ்ந்து போயிருப்பதை அவதானித்தாள்.
"லற்றின் அமெரிக்கன் ரைட்டிங்ஸ் கிடைப்பதேயில்லை. இந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டுத் தரலாமா?"
"புத்தகம் இரவல் தாறFல்லை'
"எனக்குமா?"
"எனக்குமா என்றால்... , உங்களுக்கு மட்டும் அப்படி என்ன 'ஸ்பெஷல்?"
LL LLLL LL 0 S L S S 0L S SSLSSL SLL 0S LL LLL SL LSL SLL LSL L0SL LL S SS SL SS SLLLL LLSL

முகம் கருமை கொள்ள, மெளனமாக அவன் புத்தகத்தை மேசை மீது மூடி வைத்தான்.
"இதென்ன தொட்டாற் சுருங்கித்தனம்? என நினைத்த அவள் புத்தகத்தை எடுத்து, அவனது கைகளில் தந்து "படித்துவிட்டுத் தாருங்கள்’ என்றாள்.
அவளது உதடுகளில் தேங்கி நின்ற சிரிப்பு அவனைத் தொட் டிருக்க வேண்டும்.அவன் நிமிர்ந்து அவளைத் தீர்க்கமாய்ப் பார்த்தான்.
“பட்டுப் போன்ற பார்வையால் தொட்டழையும் இந்தப் பெண் கொஞ்சம் கறுப்புத்தான். ஒற்றை நாடி உடம்பு. வதவதவென்று குழைவான வளர்த்தியும் செழுமையும். நாசி, கண், புருவம், மார்பு எல்லாமே பிடித்துப் பிடித்து வைத்தது போல ஒரு வார்ப்பு. இவளைப் போல யாரையோ எங்கோ பார்த்த ஞாபகம்’.
யாரென்று நினைவு கொண்டதும் அவனுக்குப் புல்லரித்தது. ஊர்க் கோயில் அம்மன் அவளது சாயலில்...
"போதுமா...?’’
** என்ன...?’’
"இல்லை, பார்த்தது போதுமா என்றேன்".
"எதை?*
"இந்தப் பெட்டையைத்தான். இந்த மைக்கறுப்பிலை அப்படி என்ன மண்டிக் கிடக்குது சொக்கிப்போக? பார்த்
தது போதும். ஏதன் கொஞ்சம் பேசுங்களேன்’’.
"பார்ப்பதே போதும்."

Page 43
'இதென்ன ஸில்லியா. ஸென்ரிமென்ரலா...'
"அங்கை மட்டும் என்ன வாழுதாம். கண்கலங்கி, மனசே கரைஞ்சு போற மாதிரி".
"மனசுமட்டுமா? அவளது உதடுகள் துடித்தன. அவன் அவளது உதடுகளைத் தனது விரல்களால் அழுத்தமாகவே ஸ்பரிசித்தான்.
உணர்ச்சி வசப்பட்ட அந்த நிலையிலும் எல்லைகளை மீறாத அவனது நிதானம் அவளுக்குப் பிடித்திருந்தது.
அன்றைய சந்திப்பு, உணர்ச்சி வசப்படுவதற்கு மட்டுமல்ல, நிதானமாகப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளவும் அவர் களுக்கு உதவியது. ஒரே மாதிரியான ரசனையும் ஈடுபாடும் அவர்களை மேலும் நெருக்கம் கொள்ள வைத்தன. இருந் தும், உடன் புரிகிற மாதிரியான ஒரு ஒதுக்கமும், உள் வாங்கலும் அவனுடனேயே ஆகியிருப்பதை இவள் கவனம் கொண்டாள். காதல் வசப்பட்டிருந்த அவளுக்கு இது அவ் வளவு பெரிதாகத் தோன்றவில்லை. அவனுடன் வாழும் வாழ்க்கையில், பழக்கத்தில் எல்லாமே சரியாகிவிடும் என நினைத்தாள்.
வெகு நேரம்வரை பேசிக்கொண்டிருந்தவர்கள், பிரிய மன மில்லாமல் அன்று விடை பெற்றுக்கொண்டனர்.
சேட்டை மாட்டிக்கொண்டு சந்திராவைப் பார்த்துவரப் புறப்பட்டான்.
தெருவில் இறங்கியதும் சிவராசாதான் சின்னச் சிரிப்புடன் எதிர்ப்பட்டான்.
76

"மச்சான் இருபத்திரெண்டை மறந்திடாதை. கருங்காலி எண்ட பேர் வந்திடும்."
சிவராசா சிரிக்கும்பொழுது தெரிந்த தெத்திப்பல்லைத் தட்டி அவனது கையில் தரவேண்டும் போலிருந்தது இவனுக்கு.
"சிவராசா எங்கையோ அவசரமாய்ப் போறான் போலை?
இழை இழையாய்ப் பிரித்து, உள்ளே; இன்னும் உள்ளே, இவனை அவன் பார்க்காமல் போனது, இவனுக்கு நிம்மதி யாயிருந்தது.
"ஹ"ம். இவ்வளவு பலவீனங்களோடை என்ன தொழிற் சங்கம் வேண்டிக் கிடக்குது? இந்த விசர் வேலையளை விட்டுவிட்டுப் பேசாமை இருக்கிறதுதான் நல்லது’.
"வழியிலை எவனைக் கண்டாலும் இழுத்து வைத்து, சோஷ லிசம் பேசினது இப்படி ஒரு பொறியிலை வசமாய்ச் சிக்கிறதுக்குத்தானா?
கனத்த மனசுடன், மில்லடி ஒழுங்கையில் இறங்கி நடந்தான். ஒழுங்கையின் கிழக்குச் சாய்வில் வையிரவகோயில் தெரிந் தது. கோயிலை நெருங்கிச் சூலத்தைத் தொட்டுக் கும்பிட்
டான்.
நா உலர்ந்து, தொண்டைக் குழியினுள் ஏதோ திரட்சி கொள்ள, இவனது கண்கள் பனித்து விடுகின்றன.
பட்ட வேம்பையும் சூலத்தையும் மும்முறை சுற்றி விந்தவன், சித்திரைக்குப் பொங்கல் வைப்பதாக நேர்த்தி வைத்துக்
கொண்டான்.
இந்த வையிரவரிடம் இவன் எத்தனை தரம் நேர்த்தி வைத்திருக்கின்றான். பிஞ்சு விரலால் அரிச்சுவடியைத்
77

Page 44
தொட்டுப் 'படிப்புத் தா" என்று கேட்டபோது, அம்மா சன்னி வந்து உயிரோடு மன்றாடியபோது, பரீட்சையில் தேறியபொழுது, உத்தியோகம் வந்தபோது, சந்திராவை மோகித்தபோது.
‘'எதுக்கு இந்த நேர்த்தி - பொங்கல் எல்லாம். பழ செல்லாம் ஞாபகம் வந்ததும் அவனுக்கு வெட்கமாய்ப் போய்விட்டது.
நிதானமாய் நடந்து, அவன் மதவடியில் திரும்பியபொழுது, சந்திராவின் வீடு தெரிந்தது.
வீட்டில் சந்திரா இருந்தாள். அவள் மிகுந்த பரிவுடன் வரவேற்றது இவனுக்குத் தென்பாக இருந்தது. சரியான இடத்தில் வந்து நின்றது போலிருந்தது. மனசு முட்ட முட்டக் கிடப்பதையெல்லாம் அவளிடம் ஒரே கொட்டாகக் கொட்டிவிடத் துடித்தவன், எதை எப்படித் தொடங்குவது எனத் தயக்கம் கொண்டான்.
சந்திராதான் முதலில் பேசினாள்:
"என்ன நாளைக்கு 'ஸ்ரைக் தானே?"
அவளது வார்த்தைகளை நேராகவே வாங்கிக்கொள்ள விரும் பாதவனாய், அவளை நெருங்கி வந்து, அவளது கரங்களைத் தனது கரங்களில் வாங்கியபடி:
"இதை.. இந்த விசர் வேலையை விட்டிட்டுப் பேசாமை வேலைக்குப் போறதுதான் நல்லது’.
"பட்டென உள்ளிருந்து ஏதோ ஒன்று இரத்தம் பொசியப் பொசிய அறுபட்டது போலிருந்தது அவளுக்கு.
78

"இப்படி ஒரு முரணா!' என நினைத்தவளது முகம் கருமை படர இறுக்கம் கொண்டது.
இப்படிப் பேச உங்களுக்கு வெக்கமில்லை?"
கூர்மையாகவே அவளது வார்த்தைகள் வெளிவந்தன.
"தீர்க்கமாகவே எதையும் செய்யும் இவளிடம் எனது இய லாமையை, கையாலாகாத்தனத்தைப் பறை கொட்டுவதா?”
மெளனமாகவே அவளைப் பார்த்தான்.
"இந்தச் சின்ன விஷயத்துக்கே உதறல் எடுக்கும் உங்களுடன் இனியும் ஒரு உறவா..? ஒட்டுதலா?’ என்பது போலிருந் தது அவளது பார்வை.
'இது சின்ன விஷயமா?"
“பெட்டைத்தனமானவர்களுக்கு இது பெரிய விஷயந்தான். நாளைக்கு வேளைக்கே பள்ளிக்கூடத்துக்குப் போங்க. போய்க் கையெழுத்துப் போடுங்க".
அவளது வார்த்தைகள் அவனை நிலைகுலைய வைத்தன. மிக நெருக்கமாயிருந்த சந்திரா, மிக மிகத் தொலைவு பட்டது போலவும், தான் ஒரு பக்கமாக அடித்து ஒதுக்கப் பட்டதுபோலவும் அவனுக்குத் தோன்றியது. சிரசிலிருந்து நுனிக்கால்வரை வியர்வை கொள்ள - அவளைப் பார்த்து விடை பெறுவதற்கே அச்சம் கொண்டவனாய் வெளியே வந்தான். வீடு திரும்ப மனமில்லாமல் கால்போன போக் கில் நடந்தான். நடப்பது அவனுக்குச் சிரமமாக இருக்க வில்லை. சுகமாக இருந்தது. எதையுமே கவனம் கொள் ளாது. வெகு தூரம் நடந்தான். பக்கத்தில் கடலோசை, 'செட்டிபுலப்பக்cமோ என நினைத்தான். தொலைவில்
79

Page 45
பள்ளிவாசல் தெரிந்தது. மிக நெருக்கமாக அடங்கி எரியும் தீ நாக்குகள். மனித நிணம் நெருப்பில் கருகும் வாடை. சுடலை மடத்தடியில் நிற்பதை உணர்ந்தவன், பயம் ஏது மில்லாமல் எரியும் சிதையை வெறித்துப் பார்த்தான். சிதை யின் தீ நாக்குகளின் நடுவில் சந்திரா! இவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தபடி எரிந்து உருகுவதுபோல் இருந்தது. திடுக்குற்றவனாய் சுடலையை விட்டு வெளியே வந்தான். மாதா கோயில் வரை வேகமாக வந்தவன்-குறுக்குப்பாதை யில், சாட்டியால் நடப்பதற்குத் தயங்கி-வீதி வழி நடந் தான.
சந்திராவிடமிருந்து விலகி வந்தபொழுது, புலன் ஒடுங்கிய நிலையிலேயே வந்திருக்க வேண்டுமென நினைத்துக் கொண் டான்.
வீடு வந்து சேர்ந்தபொழுது, இரவு பத்து மணிக்கு மேலாகி யிருந்தது.
அம்மாவுக்காக ஏதோ சாப்பிட்டதாகப் பேர் பண்ணியவன், தனது அறையினுள் சென்றுமீண்டும் முடங்கிக் கொண் டான்.
‘எதையுமே சுலபமாகப் பார்ப்பது, செய்வது, சந்திராவின் இயல்பாகி விட்டிருக்கிறது. அவளை நம்பி. அவளது உழைப்பை நம்பித்தான் அவளது பெற்றோர்கள் இருக் கிறார்கள். இருந்தும், அவளால் முடிவது என்னாலை ஏன் முடியாமலிருக்கிறது! அப்பாவின் வியாபாரம் - அரிசி மொத்த வியாபாரம் என்ற அரண்கூட எனக்குத் துணிவைத் தரவில்லையே. இந்தத் துணிவின்மையெல்லாம் சந்திரா கூறுவதுபோல் எனது தற்பாதுகாப்பு உணர்வின் பலவீன மான வெளிப்பாடுதானா? இந்த நடுத்தர வர்க்க மனோ பாவத்தை உதறினால்தான் உங்களுக்கு இந்தச் சந்திரா கிடைப்பாள் என்று அவள் அடிக்கடி கூறுவது பலிதமாகி விடுமோ??
80

அவனுக்குப் பயமாக இருந்தது. தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. கண்கலங்கி அழுகை வந்தது. உதடுகளைக் கடித்தபடி எழுந்தவன், ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தான். நிலவொளி நிர்மலமாயிருந் ჭნჭjl •
*சந்திரா இப்ப தூங்கியிருப்பாளா? இருக்காது. ஏதாவது படித்துக் கொண்டிருப்பாள்".
அழுத்தமாகவே அவனோடு ஆகியிருந்த ஏதோ ஒன்று கரை ந்து நீங்கியதான உணர்வு அவனை வருத்தியது.
அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான். ஹோலில், வெறும் சீமெந்துத் தரையில் அம்மா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 'அம்மா பாவம்' என நினைத்தவன், மீண்டும் வந்து படுத்துக்கொண்டான்.
காலையில் பாடசாலைக்குப் போனபொழுது, அவனுக்கு முன்னதாக அதிபர் வந்திருந்தார். கையெழுத்துப் போட்டு விட்டு * கெமிஸ்றி லாப் பில் போய் அடைந்துகொண்டான். இயன்றவரை பாடங்களை லாப்பிலேயே வைத்துக்கொள் ளத் தீர்மானித்துக்கொண்டான்.
பண்டிதர், தங்கராசா, சம்பு, எஸ்.கே., வி.எஸ்., சண் எல்லாருமே இவனை எட்டிப் பார்த்துக் கீழ் உதட்டில் தேக்கிய சிரிப்பை ஏளனமாக உதிர்த்துவிட்டுப் போனது போல இவனுக்குத் தோன்றியது.
வனிதா ரீச்சர் மட்டும் மிகுந்த பரிவுடன் லாப்பினுள் வந்து, மனசையே தொட்டுப் பார்த்து, "ஸ்ரைக் பண்ணேல்லைப் போலை. அதுதான் நல்லது’, என்று கூறிவிட்டுப் போனாள்.
8.

Page 46
‘இந்த வனிதா மாதிரி ஏன் சந்திரா இருக்கக்கூடாது?’ என்று ஒரு கணம் அவனது மனம் அடித்துக்கொண்டது.
காலையில் பாடசாலைக்கு வருவதற்கு முன்பாகச் சந்திரா வைப் பார்க்கத்தான் விரும்பினான். ஆனால் அதை-அந்த எண்ணத்தை அவன் மாற்றிக் கொண்டான். சந்திராவிடம் இது பற்றித் தொடர்ந்து பேசுவதே அவனுக்கு அபத்த மாகப்பட்டது. அவளிடம் எதைப் பற்றிப் பேசினாலும் அவனது நானை காயப்படுத்துவதிலேயே அவள் முனைப் பாக இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
‘புத்தியும், சாதுரியமும் மிகுந்த இந்தப் பெண்ணை, காதல் அது இதென்று பிசக்கியதே தனது தவறுதானோ?’ என ஒரோர் சமயம் அவன் நினைத்துக் குழம்பவும் செய்தான்.
அவளது நினைவுகளிலேயே மனசு கரைவது அவனுக்கு வியப்பாக இருந்தது.
பாடசாலை முடிந்த கையுடன், சக ஆசிரியர்களைக்கூடச் சந்திக்க விரும்பாதவனாய், பஸ் பிடித்துக்கொண்டான்.
பஸ்ஸிலிருந்து இறங்கி நாலடி வைக்கவில்லை. எதிரே சந் திரா. இவன் அவளை எதிர்பார்க்கவில்லை. சட்டென உறைந்துபோனான். இவனையோ இவனது உணர்வு களையோ கண்டுகொண்டதாக அவள் காட்டிக் கொள்ள வில்லை. வேகமாகவே நடந்து, இவனைக் கடந்து, அப்பால் அவள் போனாள். இவன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்பொழுது வனிதா ரீச்சரின் நினைவு ஏனோ வந்தது. அவளது அகன்ற கண் களில் இருந்து பிரவகிக்கும் பரிவு இவனுக்கு எப்பொழுதுமே இதமானதுதான்.
அவன் வீடு சேர்ந்தபொழுது, இந்துதான் ஓடிவந்து, "சந்திரா வந்தவ அண்ணை’ என்றாள்.
S2

இவனால் எதுவுமே பேச முடியவில்லை.
தங்கையை நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்கள் கலங்கி இருந்தன.
'சந்திரா ஸ்ரைக்கிலை நிக்கிறா. நாளைக்காவது நீ ஸ்ரைக் பண்ணன்?’’
"ஸ்ரைக் பண்ணிறதா? ஆருக்காக வனிதாவுக்காகவா?"
‘என்ன, வனிதாவா!
'இல்லை. இல்லை. சந்திராவுக்காகவா என்று கேட் цгт6йт” ”.
இந்து ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்தபடி நின்றாள்.
வனிதாவின் கண்கள்-சந்திராவின் கண்களிலும் பார்க்க
நல்ல வடிவு என அவன் அப்பொழுது நினைத்துக் கொண் டான்.
84

Page 47
கவளம்
சிவராமலிங்கம் எழுந்து உட்கார்ந்து கொண்டார். வயிறு புகைந்தது. "சோறு தின்று எத்தனை நாட்கள்...?? அவரால் ஞாபகம் கொள்ள முடியவில்லை. சிவகாமியைத் திரும்பிப் பார்த்தார். குழந்தை பாயுடன் சுருண்டுபோய்க் கிடந்தாள். மத்தியானம் யாரிடமோ யாசித்த காறல் புளுக் கொடியலைக் கொடுத்தார், குழந்தை நன்னிப் பார்த்து விட்டுத் துப்பி விட்டாள்.
நெஞ்சில் குவிந்து குமையும் துயரம். அவரால் தாள முடியவில்லை.
84

'ஆன்மா வசமிழந்து, இயக்கமேதுமில்லாமல், ஒடுங்கிய நிலையில், அகதி முகாங்களில் எத்தனை நாளென்று அடைந்து கிடக்கேலும். குப்பை கூளமாய் சிதம்பி..."
அவருக்குச் சந்தைப் பக்கம் போக வேண்டும் போலிருந்தது. போய்க் கீரை விற்க வேண்டும் போலிருந்தது.
தண்டு முற்றாத முளைக் கீரை கேட்டுவரும் வைரமுத்து
வாத்தியார். பசளி மட்டும்தான் வேணும்..” என்று வந்து நிற்கும் விசாலாட்சி. "இரண்டலக்கு கருவேப்பிலை தாருங்க மாமா. தனது கரிய விழிகளால் பிரியமாய்த்
தொட்டுப் பேசி வளைய வரும் சிவத்தின் இளம் மனைவி வடிவு. ‘பொன்னாங்காணி இருக்கா தாத்தா...?’ பட்டுப் பாவாடையில் அழுக்குப் பட்டுவிடுமோ எனும் முன் ஜாக் கிரதையுடன் அதனை சிறிதாகத் தூக்கியபடி வந்து நிற்கும் பரமு ஐயரின் பேத்தி ராஜி, "வல்லாரைப்பிடி தாருங்க சிவம்.” என்று கீரைக்கட்டு முழுவதையும் கிளறி, ஒரு பிடி மட்டும் எடுத்துக் கொண்டு பேரம் பேசும் கொண்டலடி ஞானமுத்து.
‘வாழ்வோடு அழியாமலே ஐக்கியமாகிவிட்ட இந்த மனிதர் கள் எல்லாரும் எங்கே சிதறுண்டு போயிருப்பார்கள். எந்த அகதி முகாமிலிருப்பார்கள். நல்லூரிலா? சிவன் கோயிலிலா? அல்லது ஊரைவிட்டு, உறவைவிட்டுப் பாது காப்புத்தேடி எங்கே இடம் பெயர்ந்திருப்பார்கள். மீளவும் இவர்களை எல்லாம் அ*மும் மு மும் மலரச் சந்தையில் ஒரு சேரப் பார்க்க முடியும் ...? கீரைப்பிடிகளைப் பிரித்துப் போட்டு விட்டுப் பிரியமாய் அவர்களது வரவுக்காகக் காத் திருக்க முடியுமா...?
அவருக்குத் தொண்டை அடைத்துக் கரகரத்தது. கண்களில் திரண்ட நீரைத் தோளில் கிடந்த துண்டால் அழுத்தித் துடைத்துக் கொண்டார்.
85

Page 48
"வாழ்க்கை இப்படி நொருங்கிப் போய்விட்டதே...? என நினைத்தவர் சிவகாமியை மீண்டும் பார்த்தார். குழந்தை புரண்டு, நிமிர்ந்து படுத்தாள். அவளது கீழ் உதட்டின் வலது புறமாகச் சிறிய மச்சம்; அவரது மனைவிக்கு இருந்தது போன்ற மச்சம். அசப்பில் குழந்தை அவரது மனைவி சிவகாமி போலவே இருந்தாள். மனைவியின் நினைவாக அவளது பெயரையே பேத்திக்கும் வைத்தபொழுது அவரது மகளால் அதைத்தட்ட முடியவில்லை.
மகள், பர்வதம் குழந்தை பிறந்து மூன்று மாதம் வரை நன்றாய்த்தான் இருந்தாள். முதுகுத் தெண்டலும். குளிர் சுவாதமும் வந்து அவள் படுத்த படுக்கையானபொழுது, அவர் பார்க்காத வைத்தியமில்லை. எல்லாமே கைமீறி அவளும் கைதவறிப் போனபோது, கதறி அழுவதைத் தவிர அவரால் வேறு எதுவுமே செய்ய முடியவில்லை. மருமகன் அருணாசலம் சூடுசொரணையற்ற பிறவி, பூநகரிப் பக்கம் உள்ள கமத்திற்குப் போனவன் திரும்பவே இல்லை.
பட்டியை விட்டுப் போன நாம்பன் திரும்பி வந்த கதை எங்காவது உண்டா?
அங்கு யாரோ ஒருத்தியுடன் குடியும் குடித்தனமுமாய் விட்டான் என்று; ஊர் பேசியதை இவரும் அறிந்து கொண் L-frri .
குழந்தை சிவகாமியின் பொறுப்பு இவரது தலையில் என்று ஆகிப்போனது.
கீரை வியாபாரத்தில் கிடைக்கும் முப்பதோ நாப்பது அவ ருக்கும் குழந்தை சிவகாமிக்கும் போதுமானதாய் இருந்தது. நாலு எழுத்துப் படித்து வைக்கட்டுமே என்று பக்கத்துப் பாடசாலைக்குக்கூட அவளை அவர் அனுப்பி வருகிறார். அவள் ஆண்டு இரண்டில் படிக்கின்றாள்.
86

"கீரை விற்கும் பிழைப்பு என்னுடனாகட்டும், அவளுக்கு வேண்டாம். இன்னுமொரு பத்து வருஷம் உயிரோடு இருந் தால் அவளுக்கு ஒரு வழி காட்டிவிட முடியும். கடவுள் கிருபையிருந்தால் எது நடக்காது. எல்லாம் நடக்கும்.
அவரது மனது சதா இதையே அசை போடும்.
"இஞ்சை கோயிலுக்கு வந்து கனநாளே...?’’
வேலுப்பிள்ளைச் சாத்திரியார்தான் வாயெல்லாம் பல்லாக விசாரித்தார்.
"இரண்டு கிழமையிருக்கும்...'
தலங்காவல் பிள்ளையாரில் அவருக்கு ஒரு பிரீதி. 'உயிர் பிரிகிறதெண்டாலும் பிள்ளையாற்ரை காலடியிலை பிரியட் டும்...", என்ற வைராக்கியத்துடன் கோயில் பக்கம் வந்து விட்டார்.
“கோயில்பக்கம் போறது தான் பாதுகாப்பு.’ என்று ஊரே கிளம்பிய பொழுது இவரால் வீட்டில் ஒண்டியாக இருக்க முடியவில்லை. வீட்டில் இருந்த அரிசி, பருப்பு என்று எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு வந்தார். எல்லாம் முடிந்து விட்டது. கையில் இருந்த முதலும் கரைந்து விட் * /نيسة
நேற்று மதியம்-எங்கோ மரவள்ளித் தோட்டத்தில் கள வாடிக் கொண்டு வந்த கிழங்கை சூரன் சிவசம்பு அறா விலைக்கு விற்றுக்கொண்டிருந்தான். இவரைக் கண்டதும் மரியாதையாக: "இந்தா இதை அவிச்சுச் சாப்பிடம்மான் *’ என்று மாப்பாறிய கிழங்காகப் பார்த்து இவரிடம் தந்தான். அவரால் அதைத் தட்டமுடியவில்லை, வாங்கிக் கொண்டவர்-"காசில்லை" என்றார்.
87

Page 49
"சும்மாவா..? எல்லாம் நேர்சீரானதும் சந்தைப் பக்கம் வாறன் நாலு கீரைப்பிடி தாவன்...”*
களவு எடுத்தே ஜீவிக்கும் அவனிடமும் எங்கோ ஒரு மூலை யில் ஈரமிருப்பதாகவே அவருக்குப் பட்டது. நேற்றுப் பகல் அந்தக் கிழங்கைச் சுட்டு அவரும் சிவகாமியும் வயிற்றைக் கழுவிக் கொண்டார்கள்.
இரவு பட்டினி, காலையில் ஒரு சொட்டு நீர் வாயில் ஊற்றுவதற்குக் கூட வழியில்லாமல் போய்விட்டது.
வாய் ஊறலெடுத்தது. ஒரு துண்டுப் புகையிலைக் காம் பாவது கொடுப்பினுள் அதக்கினால்தான் அவருக்குப் பத்தி யப் படும்போலிருந்தது. ‘வயிற்றுக்கே கிடையாதபோது புகையிலை ஒரு கேடா’ என நினைத்துக் கொண்டவர், தன்னை மறந்தவராய், வாய் விட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
நேற்றுக்காலை நித்திரைப் பாயால் எழுந்த பொழுது "பென்சனியர் கந்தசாமி பட்ட அவஸ்தைதான் அவரை அப்படிச் சிரிக்க வைத்தது.
ஒரு "குறள் சுருட்டைப் பற்ற வைப்பதற்கு அவர் பட்ட பாடு. கைத்தடியை ஒரமாய் வைத்தவர், நிலத்தில் உட்கார முடியாமல் தவழ்ந்து நெருப்புக் கொள்ளியைக் குனிந்து ஊதிக் கணிய வைத்தபடி, சுருட்டை எடுத்து வாயில்வைத்து, தணலை வாய்வரை கொண்டு வந்து, நிமிர்ந்தபொழுது, பின்பக்கத்தால் குடை சாய்ந்து விழப் போனார். இவரது சமயோசிதம் அவரைக் காப்பாற்றியது. தாங்கிக் கொண்ட இவரை அந்தக் கிழவர், பீளை சாறிய கண்களால் நன்றி தெரிவித்துக் கொண்டது இவருக்கு இன்னமும் ஞாபகம் இருந்தது. -
88

"கிழவன் பிடரி அடிபட விழுந்திருந்தால்..." அவருக்கு நினைக்கவே பயமாக இருந்தது.
"உடல் ஆட்டங் கிண்டுவிட்ட இந்த நிலையிலும் இந்தப் பலவீனமா? மனிதர்கள் திருந்தவே மாட்டார்களா..? சுருட்டுப் பற்றாமல் விட்டால் குடியா முழுகிவிடும்."
அவருக்கு எல்லாமே புரியும்படியாய் இல்லை.
வெற்றிலை, சுருட்டு, பீடி, கசிப்பு, கள்ளச் சாராயம் என்று எல்லா வியாபாரமும் வீதியில் நடைபெறுகிறது. ஆனால் ஒரு பருக்கை அரிசியோ, பருப்போ மட்டும்தான் எங்கும் கண்ணில்படமாட்டேன் என்கிறது.
"நல்லூர்-எம். பி. சி. எஸ். 23 உடைச்சு, சனம் அரிசி அள்ளுதாம். அம்மான் நீயும் வாவன்...'
சூரன்தான் சாக்கும் கையுமாக நின்றபடி இவரை அழைத் தான்.
அது அவருக்கு உவப்பாய் இல்லை, கள்ளாமய் எதுவுமே செய்து பழக்கப் படாத கட்டை அவர்.
*சனங்களுக்குப் பசி வந்தால் முறைகேடாய் எதையும் செய்ய முடியுமா...? அவருக்கு அப்படி எல்லாம் செய்ய முடிய
வில்லை. அவரைப் போல இன்னும் சிலபேராவது இருப்பார் கள் என அவர் நம்பினார்.
விறகுகாலை உடைந்து கிடப்பதாகக் கேள்விப் பட்டுச் சனம் கரை புரள்வதாகச் சொன்னார்கள்.
'அரிசி இல்லாமல் விறகை என்ன செய்ய முடியும்...! தந்திக் கம்பிகள், மின்சார லைன் அலுமினியக் கம்பிகள்,
89

Page 50
தண்டவாளச் சிலிப்பர் கட்டைகள் இவற்றை எல்லாம் வீட்டில் குவித்து வைத்துக் குபேரர்களாகி விட முடிந்ததா? இல்லிடத்தை விட்டு தறிகெட்டு ஓடி வரத்தானே முடிந்தது இந்த மடமைக்கு என்ன பெயர். எல்லாமே தலை கீழாய்ப் போனது ஏன்.? இது நேராகுமா... நேராக எத்தனை வருஷங்களாகும்...?’
அவருக்கு மலைப்பாகவும் கவலையாகவும் இருந்தது. உட லும் உள்ளமும் சோர்ந்தவராய் கோயில் கோபுர வாசல் பக்கமாக வெளியே வந்தார்.
ஒவ்வொருவருடைய கைகளிலும் வெள்ளை “லைக் கோன்’ கோழிகள்.
‘துரையற்ரை கோழிப்பண்ணையை உடைச்சுப் போட்டாங் கள், கோழியள் கிடக்கு போய் அள்ளு அம்மான்...'
சூரன்தான் கூறிவிட்டுப் போனான். அவனது கையிலும் நாலு கோழிகள்.
"துரையர் பாவம். பூநகரிப் பக்கம் பயத்திலை குடும்பத் தோடை போயிட்டார். அவரது பண்ணையும் துடைக் கப்பட்டு விட்டது. இதைப் போலை எத்தனை இழப்புகளும் அழிவுகளுமோ...'
எல்லாமே அவருக்குத் துயரம் தருவதாயிருந்தது.
"வேர் அறுபட்ட நிலையில், சொந்த பந்தங்களையும் துறந்து, சிதறுண்டுபோன இந்தச் சனங்கள் மீளவும் சொந்த இடங்களில் போய் அமர முடியுமா...? விடுதலை. விடிவு
. என்பதெல்லாம் தூரத்துக் கனவாய்...?"
அவருக்கு எதுவுமே புரியும்படியாயில்லை.
90

மக்களது துன்ப துயரம் புரிந்தது. அவர்கள் வயித்துக்கும் வாய்க்குமில்லாமல் அலைந்து திரிவது புரிந்தது. களப்பலி யாகும் இளைஞர்களது இழப்பும் தியாகமும் புரிந்தது.
"இந்த ஆழ்ந்த துயரம் முடிவில்லாத ஒரு தொடராக...?
மனம் கருகி வெதும்பினார்.
முன்பு இலங்கை. இப்பொழுது இந்தியப்படை. எந்தப் படை என்றாலும் உயிரும் உடமையும் எவ்வளவு சேதார மாய் விட்டது. அப்பிராணிகளை அழிப்பதில் அவர்களுக்கு அப்படி என்ன ருசியும் ரசனையும். காந்தி பிறந்த பூமி என்று ஒரு பயபக்தி உண்டு அவருக்கு. அந்த இந்தியா தனது ஆன்ம வசீகரம் முழுவதையுமே இழந்து ஒரு இரத்த வெறி கொண்ட ஒநாயாய். எல்லாமே பொய்யாய். நம்பமுடியாததாய்.
அவர் தெரிந்து கொண்டதெல்லாம் அவ்வளவுதான். ஆழ மான அரசியலெல்லாம் எங்கே அவருக்குப் புரியப்போகிறது. எளிமையும் அப்பாவித்தனமும் மிகுந்த மனிதர் அவர்.
இந்தியப்படையில் ஒரு தமிழனாவது தன்னிடம் வசமாக அகப்பட மாட்டானா என்று இருந்தது அவருக்கு.
"ஒய் என்ன காணும். உம்முடைய இரத்தத்தையும் சதையையும் குத்திக் குதறிப் பார்க்கிறீரே. இதில் என்ன நியாயம் இருக்கிறது...' என்று நாலு வார்த்தை அவ
னைக் கிழியக் கிழியக் கேட்க வேண்டும் போலிருந்தது அவருக்கு.
d அடுத்த கணமே தன் உணர்ச்சிகளைச் சமபடுத்தியவராய்;
'இது முட்டாள்த்தனம். ஆமிக்காரன் எவனுமே அயோக் கியனாய்த்தானிருப்பான். துப்பாக்கிச் சனியனைப் பிடிச்ச
9.

Page 51
வன் தமிழனோ, தெலுங்கனோ, சீக்கியனோ எவனாயிருந் தாலும் எல்லாருமே ஒரே ரகந்தான்..."
அவரது உடல் முழுவதும் ஒரு முறை அதிர்ந்து ஓய்ந்தது.
கோயில் முன்னிருந்த கையொழுங்கையில் இறங்கியவர், கோவணத்தை நெகிழ்த்தி, ஒண்டுக்கிருந்தார். உட்கார்ந்த வரால் கையூன்றித்தான் எழுந்திருக்க முடிந்தது.
ஒழுங்கையிலிருந்து மிதந்தவர், கோயில் மேற்கு வீதிக்கு வந்த பொழுது, அவர்கள் தென்பட்டார்கள்.
'ஏன் பிள்ளை குளிச்சாச்சோ...? அவர் முன்பாக, குதூகலத்துடன் வந்த அந்த இளஞ் சோடியைப் பார்த்து இவர் கேட்டார்:
“ஓம் அப்பு...!" பெண்தான் பதில் சொன்னாள்.
அம்மனுக்குச் சந்தனக் காப்புச் சாத்தியது போன்ற குளிர்ச்சி யான தோற்றம். மொழு மொழு என்று இருந்தாள். நாசி மட்டும் சற்றுத் துரக்கலாக, கூர்மை கொண்டு முகத்துக்குப் பொருத்தமில்லாமல் இருந்தது. சிறிய குருவிக் கண்கள். தடித்த உதடுகள். சிரித்தபொழுது அடி முரசுவரை தெரிந் தது. அதுவும் அவளுக்கு அழகாக இருந்தது. தலை முடி உலர வேண்டும் என்பதற்காக அள்ளி முடிக்காமல் தழைய விட்டிருந்தாள். சற்றுக் குள்ளமான உருவம். அவனது தோள் உயரம் கூட அவள் இருக்கவில்லை. மாறாக, அவன் உயரமாக ஆணுக்கே உரிய லட்சணங்கள் அத்தனையும் பொருந்தியவனாய் இருந்தான். அவன் சிரித்தபொழுது, பற்கள் மட்டும் சற்றுப் பெரிதாகவும், சிறிது மிதப்பாகவும் தெரிந்தன.
"இவையள் எங்கடை பக்கத்துப் பிள்ளையஸ் இல்லைப் போலை. எங்கையோ தவறி இந்தப் பக்கம் வந்திருக்
92

கினை. வந்த இடத்திலை போக முடியாமல் அகப்பட டிட்டினை போலை. சடங்கு முடிச்சமாதிரியும் இருக்கு. முடிக்காதமாதிரியும் இருக்கு. எதுவோ. அவையள் இந்த நெருக்கு வாரத்துக்கையும் சந்தோஷமாய்த்தானிருக் கினை. .."
அவர்கள் இவரைக் கடந்து போவதை மிகுந்த வாஞ்சை யுடனும், பரிவுடனும் பார்த்து நின்றார்.
அவருக்கு அவரது பேத்தி சிவகாமியும், மாப்பிள்ளையும் போல ஒரு பிரமை.
எதை நினைத்தாலும் சிவகாமியின் நினைவாகவே வந்து முடிவது அவருக்கு வியப்பாக இருந்தது. அத்துடன், தனது ஆசைகள் நிறைவேறுமா? என்று பயமாகவும் இருந்தது.
மீளவும் கோயில் பிரகாரம் வந்தவர், சுருண்டு படுத்துக் கொண்டார். பசிக்கு ஒரு கவளமாவது கிடைத்தால்போதும் என்று இருந்தது. சிவகாமியை நினைத்ததும் துயரம் முட்டிக் கொண்டு வந்தது. அதை அடக்க முடியவில்லை. விம்மி விம்மி அழுதார். அழுது ஒய்ந்தவர், மனமும் உடலும் சோர்ந்த நிலையில், பசிக் களைப்பால் அலைபட்ட நிலை யில், தன்னை அறியாமல் தூங்கிப்போனார்.
அவர் விழிப்புக் கண்டபோது, இருள் ‘மை’ யாக அடர்த்தி கொண்டிருந்தது. சுட்டிகளும் சிறு சிறு மெழுகுதிரிகளும் கார்த்திகைத் தீப நாளை ஞாபகப்படுத்துவது போல உள் வீதி முழுமையும் ஒளிர்ந்தன. அவரது படுக்கை முன்பாக இருந்த மூன்று அடுப்புகளிலும் ஏதோ கொதித்துக் கொண் டிருந்தது.
“சோறாக இருக்குமோ..? எங்கிருந்தோ சிலருக்கு அரிசி கிடைக்கத்தானே செய்கிறது...!"
93

Page 52
எழுந்தவர், துண்டை உதறித் தோளில் போட்டபடி வெளியே வந்தார். திடீரென அவரது நினைவுப் பொறி யில் அது தட்டியது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது கூட அவருக்கு மறந்து விட்டது. கொண்டலடி வயிரவருக்கு, பொங்கலுக்கு - வருஷப் பொங்கலுக்கென - அவர் பிடி அரிசி போட்டு வைப்பது வழக்கம். அந்த ஞாபகம்தான் அவரை வீடுவரை முடுக்கி விட்டது.
இராமலிங்கம் வீதியை நெருங்கியபொழுது, காக்காய் குருவி
கூடக் கண்ணில் படவில்லை.
"ஆமிக்காரங்கள் நல்லூர்ப் பக்கம் போயிட்டாங்கள் போலை
வீதியில் ஏறியவர், அதனைக் குறுக்காகக் கடந்து, பரமசிவம் வீட்டுப் படலையைத் தள்ளித் திறந்தபடி நடந்தார்.
"இனிப் பயப்படத் தேவையில்லை. ரண்டு வளவு
应 தள்ளி வீடு..."
அவரால் தடைகள் ஏதுமில்லாமல் சுலபமாகவே வளவுப் படலையைத் திறந்து உள்ளே போக முடிந்தது.
வீடு சிறிய மண் குடிசைதான். அதன் முன்பாக ஒரு பலகைக்
கதவு. அது தட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தும் அவருக்குப் பகீர் என அடி வயிறு ஜில்லிட்டது.
உள்ளே போனவர், உடு பிடவை மற்றும் சாமான்கள் சிந்தியிருப்பதைக் கவனம் கொண்டு, அவற்றை அள்ளிக் குவியலாகப் போட்டுவிட்டு, முருகன் படத்தை ஒட்டி இரு ந்த அரிசிப் பானையைத் தடவிப் பார்த்தார், பானை சரிந்து கிடந்தது. அரிசி சிந்தவில்லை. அவர், ஏதோ பெரும் புதையலைக் கண்டது போன்ற மகிழ்ச்சியுடன் அரிசியை எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.
94

கண்களில் நீர் சுரந்தது.
கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டவர், வெளியே வந்து, வீட்டுக் கதவை நன்றாகக் கட்டினார். கிணற்றடிக்குப் போய் முகம் கைகால் அலம்பிக் கொண்டார். ஒரு வாளி தண்ணிர் அள்ளி ஆசை தீரக் குடித்தார். குளிர்ந்த நீர் அமிர்தமாயிருந்தது.
அப்பொழுது நாய்கள் குலைப்பது கேட்டது. ஒரு கணம் புலன் ஒடுங்கியவர், அடுத்த கணம் உசாரானார்.
"உவங்கள், உந்த தொலைந்து போன ஆட்கொல்லியள் வாறாங்கள் போலை..." என நினைத்தவர் - மரங்களின் நடுவே, வீட்டுப் பின் பக்கமாக ஒதுங்கிக் கொண்டார்.
மூச்சு விடுவதே ஆபத்து என்பது போல அவர் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கொண்டார். எவ்வளவு நேரம் அப்படி இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. மெது வாக எழுந்து, அரிசிப் பானையை அணைத்தபடி, "வளவு களுக்குள்ளாலை போறதுதான் புத்தி." என மனனம் பண்ணியவராய் பரமசிவம் வீட்டுப் படலையடியில் நின்று, இராமலிங்கம் வீதியை நோட்டம் விட்டார். எதுவித சில மனுமில்லை. வீதியை ஒரு எட்டில் கடந்து விடலாம். ஆனால், அவருக்கு வரும் பொழுது இருந்த மனத் தைரியம் எங்கோ ஓடி மறைந்து விட்டதான உணர்வு.
"பிள்ளையாரப்பா. நீதான் துணை எனக்கு. அரற்றிய வராய் வீதியைக் கடக்கக் காலடி எடுத்து வைத்தார். அடுத்த கணம், அவரது வலது முதுகுப்புறமாக ஏதோ கிழித்தது போன்ற உணர்வு. வலி எதுவுமில்லை. ஆனால், இரத்தம் பொசு பொசு எனப் பெருக்கெடுத்தது; அவரது தோளில் கிடந்த துண்டு நனைந்து விட்டதை உணர்ந்து கொண்டார்.
95

Page 53
வெடிச்சத்தம் மீண்டும் கேட்டது.
அவர் தன் பலம் முழுவதையும் சேர்த்து வீதியின் மறுபக்கம் பாய்ந்து ஓடினார். ஆனால், அடுத்த வந்த சன்னங்கள் அவரது நெற்றிப் பொட்டிலும் இடது மார்பிலும் துளைத் தன. அடுத்த கணங்களில் நினைவிழந்த அவர்' - சிவகாமி ... மகளே! என்று முனகியபடி சரிந்து விழுந்தார். அவரது கையில் இருந்த பானை நிலத்தில் விழுந்து உருண்டு உடைந் தது. அரிசி சிதறியது.
குழந்தை சிவகாமியின் நினைவுதான் அவரது இறுதி நினை வாக இருந்திருக்குமோ...?
கனத்த சப்பாத்துக்களின் தட தட ஓசை, நான்கு அந்நியப் படையினர் சிவராமலிங்கத்தாரை அண்மித்தனர். அவர் களில் ஒருவன் குற்றுயிராய்க் கிடந்த அவரை முரட்டுத்தன மாகத் தனது சப்பாத்துக் கால்களால் உதைத்துப் புரட்டி னான்.
s
'பூ. ஏ. ரைகர். அன் ஒல்ட் ரைகர். ..!"
அவனது குரலில் ஏளனமும், அகம்பாவமும் குரவையிட்டன. அவனுடன் வந்த மற்ற மூவரும் அவனை ஆமோதிப்பது போல உரத்த குரலில் சிரித்தார்கள்.
* 8 7
96

வித்தியாசமானவர்கள்
"என்ன ரீச்சர். என்ன யோசனை இந்த உலகத்தையே மறந்து...?*
அடங்கிய குரலில் அவன் கேட்டது அவளது மனசைத் தொட்டது. அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
ரகு மலர்ந்த சிரிப்போடு நின்றான். அவனது கண்களும் சிரித்தன. கண்கள் சிரிக்குமா? சிரிக்கின்றனவே!
அவளுக்கு அது வியப்பாக இருந்தது.
"இப்படி ஒரு அழகு, இவனுக்கு. இவனுக்கு எப்படிச் சாத்தியமாகியது? மெலிந்து, உயரமாய். மாங்குருத்து
97

Page 54
மாதிரி ஒரு நிறம். அடர்ந்த மீசை. அளவாகவே திரட்சி கொண்ட உதடுகள். கூர்ந்த நாசி. நெற்றிதான் சற்றுப் பொருத்தமில்லாமல் சிறிதாக... அதுவும் ஒரு வடிவுதான் பெண்மை கலந்த ஆண்மை’.
நினைவுகள் இதமானவை.
‘என்ன ரீச்சர் கண் கலங்கிப் போய்க் கிடக்குது. வீட்டிலை இண்டைக்கும் ஏதேன் பிரச்சனையே? எதையுமே பெரிசா எடுத்துக் குழம்பினால்தான் கவலை. துக்கமெல்லாம்'.
அந்த வார்த்தைகளின் பரிவில் தன்னை இழந்த அவள் நினைத்துக் கொண்டாள்:
‘இவனிட்ம். இந்த ரகுவிடம், எதையுமே நம்பிக்கை யுடன் பகிர்ந்து கொள்ளலாம். நம்பி நடக்க ஒரு ஜீவன். அதுவும் ஆண்’.
இது அதிசயம்தான்.
ஆண்களையே அவளுக்குப் பிடிக்காது. அப்படி ஒரு சூழலும் இறுக்கமும் நிறைந்த வாழ்க்கை அவளுடையது. குடும்ப அளவிலும் குடும்ப எல்லையைத் தாண்டிய நிலையிலும் எந்த ஒரு ஆணிடமும் அவள் நம்பி நெருங்கியதில்லை. அவள் பழகிப் பரிச்சயம் கொண்ட ஆண்கள் அனைவருமே பொய்மையும் போலித்தனமும் நிரம்பியவர்கள்; பெண் என் றாலே படுக்கை அறை விஷயம் மட்டும்தான் என எண்ணும் வக்கரித்த பிறவிகள். இது அவளது அனுமானம்.
இந்த அனுமானங்களுக்கு மாறாக, ரகு வித்தியாசமான வனாகத்தான் இருந்தான். இந்த வித்தியாசமே அவனில் அவளுக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது.
98

சதா குடிப்பதோடு பெண்களுக்காக அலைந்து திரிந்து சொத்து முழுவதையுமே இழந்த தாத்தா.
அம்மாவுடனும், வேலைக்காரியுடனும் ஒரே அறையில் படுக் கும் அப்பா.
மனைவியையும் குழந்தையையும் கார் கராச்சினுள் குடி யிருத்திவிட்டு, யாரோ ஒருத்தியை எங்கிருந்தோ இழுத்து வந்து, தாம்பத்தியம் கொள்ளும் அண்ணை.
செல்லப்பூனை மாதிரி-வயசுக்கு வந்து, இவள் விழிப்புக் கொள்ளுமட்டும்-சதா உரசிக் கொண்டு திரிந்த அத்தான்.
பயிற்சிக் கல்லூரியில் நாலு பேருக்குத் தெரிய மிஸ்ஸிஸ் தங்கத்துரையை வைத்துக் கொண்டிருக்கும் ரஷாக்கின் ஆண் பெண் உறவு பற்றிய தனித்த பேச்சுக்கள். ஆசை அணுகுதல் கள். எதுவுமே, இவளிடம் பலிக்காதென்ற நிலையில்இவளையும் வைத்திருப்பதான அவளது பிதற்றல்கள்.
இந்தப் பின்னணியில்.
ரகு இவளுக்கு நிரம்பப் பிடித்திருந்தான்.
O
கலாசாலையில், பயிற்சி முடிந்த கையோடு இந்தக் கிராமப் புறப் பாடசாலைக்குத்தான் அவள் விஞ்ஞான ஆசிரியை யாக நியமனம் பெற்றாள். பாடசாலையில் கால் வைத்த முதல் நாளே அங்கு நிறையப் "பொலிற்றிக்ஸ்’ இருப்பதை உணர்ந்தாள். ஆசிரியர்கள் இரண்டாகப் பிரிந்து சிண்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதிபர் இடையிற் சிக்கித் திகைத்துப் போய் நின்றார். அதிலெல்லாம் இவள் தன் னைப் பிசக்கிக் கொள்ளவில்லை. எதிலுமே ஒரு தாமரை
99

Page 55
இலைத் தண்ணீர் மனோபாவம்தான். வீட்டுச் சூழலில் அவள் தூரப் பட்டதுபோல, இங்கும் ஒதுங்கி, தனித்து இருப்பது, அவளுக்குச் சுகமாக இருந்தது.
பாடசாலைப் பிள்ளைகளும் இவளது முயற்சிகளுக்கு வளை ந்து கொடுக்காது, போளையடிப்பதிலும், பழம் பொறுக்கு வதிலும், கெந்தி அடிப்பதிலும், கிளித்தட்டு மறிப்பதிலுமே சிரத்தை கொண்டனர். அத்தி பூத்தாற்போல அங்கொன் றும் இங்கொன்றுமாகப் பிரகாசம் காட்டும் குழந்தைகள் கூட, "படிக்கப் பட்டணம் போறன் ரீச்சர்", என்று வந்து நிற்பது இவளுக்கு வருத்தமாய் இருக்கும்.
இந்தச் சூழலில் அவளை நின்று நிதானித்துப் போக வைத் தவன் ரகுதான்.
அவன் விஞ்ஞான கூட உதவியாளனாக அங்கு கடமை யாற்றினான். அவனுடன் அவளது முதற் பரிச்சயமேஅவன்பால் ஒரு மதிப்பையும் ஒரு பிரியத்தையும் அவளுக்கு ஏற்படுத்தியது.
மூன்றாம் பாடவேளை அவள் விஞ்ஞான கூடத்திற்குப் போனபொழுது அவன் சிரித்தபடி வரவேற்றான். மெலி தான, மனசைத் தொடும் சிரிப்பு. என்னை நம்பலாம், கயவாளித்தனம் ஏதும் இல்லை என்கிற சிரிப்பு. யாரையுமே இழுத்து மனசிலை போடுற சிரிப்பு. போட்டுக் கரையிற சிரிப்பு. இவள் அவனையே பார்த்தபடி நின்றாள். இப்படி ஒரு இதம், கனிவு, அனுசரிப்பு அவளது வாழ்க்கையில் இதுவரை நிகழாத ஒன்று; ஒரு ஆணின் வசீகரமே வேம்பாகி விட்ட அவளுக்கு இப்படி ஒரு அனுபவமா?
அந்த உணர்ச்சி, தளம்பல் எல்லாம் ஒரு கணம் தான். அவளது வகுப்பு மாணவர்கள் விஞ்ஞான கூடத்திற்கு இரை ந்தபடி விரைந்து வந்தபொழுது இவளது உணர்வுகள் சமன்
--60t.
100

அடுத்த நாற்பது நிமிடங்களும் மாணவர்களும்அவளும்தான். அன்று புரதம் பற்றிக் கற்பித்தாள். அனுசரணையாக ஓரிரு பரிசோதனைகளையும் செய்தாள். எல்லாவற்றிற்கும் ரகு உதவியாட இருந்தான்.
நாலாம் பாடவேளை அவளுக்கு ஃப்றீ. அவள் ஆசிரிய அறைக்குப் போகாமல் விஞ்ஞான கூடத்திலேயே தங்கி விட்டாள். அது அவளுக்குப் பிடித்திருந்தது. அந்தச் சூழ் நிலை வேண்டிய ஒன்றாகவுமிருந்தது. அதற்கு ரகுவின் உடனிருப்புக் காரணமாயிருக்குமோ?
அன்று மட்டுமல்ல, அதன் பின்பும் ஒய்வு நேரத்தை அவள் இப்பொழுதெல்லாம்-விஞ்ஞான கூடத்தில்தான் செலவிடு கின்றாள். விஞ்ஞான உபகரணங்களைச் சுத்தம் செய்வது, ஒழுங்குபடுத்துவதென்று அவன் செயற்பட, இவளது நேரம் மாணவர்களின் அப்பியாசங்களைத் திருத்துவதில் கழியும். சில சமயங்களில் இருவருமே எதிரும் புதிருமாக உட்கார்ந்து கொண்டு, எதை எதைப்பற்றியெல்லாமோ பேசிக் கொள் வார்கள். அந்தப் பேச்சு, அவர்களிருவரையும் ஒருவரை ஒருவர் புரிந்து, நெருக்கம் கொள்ளப் பெரிதும் உதவியது.
இந்தப் பேச்சும் இருப்பும் ஒரு ஆறுமாத காலமாகத்தான் அவர்களிடையே இருந்து வருகிறது.
"அதுசரி ரகு, நீ தனிச்சு. உன்ரை சித்தியைவிட்டு. இந்த அறைக்கு எப்ப வந்தனி?"
"அப்பா செத்து இரண்டொரு வருஷத்திலை'
"உன்ரை சித்தியின்ரை தொடர்புகளே வேண்டாமெண்டு நீ வந்தது சரியெண்டுதான் எனக்குப் படுகுது. . . . . . Luś
10

Page 56
வயித்தோடை போய்ச் சோத்துப் பானையைப் பாத்தா வெறும் பானையை மூடி வைச்சிற்று, போய்ச் சாப் பிடு எண்டு சொல்லிற சித்தியோட எத்தனை நாள்தான் இருக்லுேம்? அந்தக் கொடுமையை, ஒதுக்களை எல்லாம் நானும் அனுபவிச்சவள்தான் ரகு. y
‘என்ன ரீச்சர் இது!"
‘என்ரை அம்மாவே எனக்கொருவகையிலை சித்தி மாதிரித் தான். அவ என்னை மிகக் கேவலமா நடத்தியிருக்கிறா. அண்ணையும் அக்காவும்தான் அவவுக்கு எப்பவும் பெரிசு. அவையளைத் தலையிலை வைச்சுக் கூத்தடிப்பா. ஒருஸ்ரெப் மதர்லி ட்ரீற்மென்ற், சின்ன வயசிலை எனக்கு நிறையவே கிடைச்சிருக்கு ரகு".
"எங்க தாத்தாவுக்குக் காணி பூமியெண்டு ஏக சொத்து. பாதியை அவர் அழிச்சார். மீதியை அம்மாவுக்கு எழுதி வைச்சார். அவ அப்பாவோடை சேர்ந்து அதையும் அழிச்சுப் போட்டு நிக்கிறா. இரண்டு பேருமே இப்ப என்ரை கையை எதிர்பார்க்கிற நிலமை’.
“உங்க அண்ணர் நல்லாத்தானே இருக்கிறார். ஏதென் உதவலாமே!"
"ரகு, என்ரை ரகு! உனக்கொன்றுமே தெரியாது. புதிசா, இளசா பொம்பிளை இருந்தாத்தான் அவன்ரை மனசு இளகி ஏதென் கொடுப்பான். இருந்தாச் சொல்லன்’’.
'திஸ்இஸ் ரியலி ரூ மச்."
“எது, நான் பேசிறதா? இல்லை எங்கடை குடும்ப விஷ் LLDIT?' '
102

"ரகு, எங்கடை குடும்பமே “பெண்டுகள் விஷயத்திலை அப்பிடி இப்பிடித்தான். அதிலையே சொத்தைக் கரைச்ச வங்களெண்டுகூட என்னாலை சொல்ல முடியும். என்ரை கண்ணாலையே அந்தக் கன்றாவியளையெல்லாம் பார்த் திருக்கிறனே’’.
“எனக்கு அப்ப பத்துப் பதினொரு வயசுதான் இருக்கும். அப்பா கேகாலையிலை புகையிலை வியாபாரம். இரண்டு மாசத்துக்கொருக்கா வீட்டுக்கு வருவார். இப்ப நாங்க இருக்கிறமே வீடு; இதில்லை. அது பெரிய வீடு. பலெஸ் மாதிரி. அதெல்லாம் இப்ப வித்துப் போச்சு. காரிலைதான் அப்பா வருவார். அவரோடை புதிசு புதிசா வேலைக்காரப் பெட்டையள், சிங்களப் பெட்டையள், குஷ"மா எண்டும் மெனிக்கா எண்டும் வருங்கள்’’.
"என்ன இப்பிடிக் கூச்சமில்லாமை பேசிறாளே எண்டு Lustrij;8FgSuurT?’’
"நோ. நோ. அப்படியொண்டுமில்லை’.
"உன்னோடைதான் இப்படி என்னாலை பேசமுடியுது ரகு. இப்பிடிப் பேசிறதே ஒரு ஆறுதலா... ஏதோ மனப்பாரம் குறைஞ்சது போலை இருக்கு. எதைப்பற்றியெல்லாமோ பேசிறம், இந்த 'பெவேற்ரட் செக்ஸ் பற்றிப் பேசினா என்ன குடியா முழுகிப் போயிடும்’.
‘என்ன சொன்னனான். வேலைக்காரி பற்றியெல்லா? அவதான் குஷ"மா வந்து நிக்கிறா. அவ்வளவு சிவப்பு. றோசா நிறம். பட்டுப்போல குளொஸ்ஸியா இருக்கிறா
நான் அவளைப் பிறந்த மேனியாப் பார்த்திருக் கிறனே, அப்பான்ரை அறையிலை. நாலு நாள் கழிச்சு அண்ணை அவளை பாத்ரூமுக்குப் பக்கத்திலை இழுத்து வைச்சுக் கொண்டிருந்தான். அப்ப தாத்தா இல்லை; செத்
103

Page 57
துப் போயிட்டார். இருந்திருந்தா அவரும் அவளை "மொலெஸ்ற் பண்ணியிருப்பார்".
‘வசதி படைச்சவை இப்பிடித்தான். குஷ"மா என்ன. குஷ"மாவின்ரை மகளையும் தொட்டுப் பாக்க ஆசைப்படு வினை."
"இது ஆசையே...? இல்லை ரகு. மிருகத்தனம். மிருகத்தனம், தே ஆர் பாஸ்ராட்ஸ்’’.
அவள் லேசாக விம்மினாள். அவளது அடிமனதில் உறைந்து
விட்ட இந்த உணர்வுகள் அவளுக்குத் துயரம் தருவதாயிருப் பதை அவன் உணர்ந்தான்.
திடீரென எழுந்தவள், முகத்தைக் கைக்குட்டையால் அழுத் தித் துடைத்தபடி ஜன்னலை நோக்கி நகர்ந்தாள். இவனும் அவளுக்குப் பின்புறமாக வந்து நின்று கொண்டான்.
"இந்தச் சின்னப்பெட்டை. மார்பளவு உயரம் én.L.- வராத இந்த உருவத்திலை லயித்துப்போக அப்பிடி என்ன இருக்குது? பொங்கி வழிந்து பூவாயுதிரும் ஒரு கிராமத் தனம். இடையைத் தாண்டி பிருஷ்ட பாகம்வரை அசைந்து அலையும் கூந்தல். துருதுருவென்று நிலை கொள்ளாது புரளும் பார்வை. தரித்து ஓரிடத்தில் நிற்காது பறக்கும் பரபரப்பு. மெல்லிய நிறங்களையே தேர்ந்தணியும் ரசனை. மனசிலை எதையுமே போட்டு மறைக்காமல் வெள்ளைத் தனமாய்ப் பேசிற பேச்சு. இவையா? இல்லை. இதுகளுக்கு மேலாலை மனசும் உடலும் கரைஞ்சு போற மாதிரி உருகும் பரிவா. எது?”
அவனது நினைவுகள் தடைபட, இவள் இடையே பேசினாள்.
"செக்ஸ் இப்பிடி ஒரு வெறுக்கத்தக்க விஷயமா இருக்கே ரகு.”*
104

"இல்லை, அப்பிடி ஒரு முடிவுக்கு நீங்க வாறது எனக்குச் சரியாப் படேல்லை. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழுற வாழ்க்கை மிக உயர்வாக அமையிறதை நான் பார்த்திருக் கிறன். ஆண் பெண் சிருஷ்டியின் அர்த்தத்தை நீங்க சரியான குறுகலாப் பார்க்கிறியள். அப்படி ஒரு சூழ்நிலையிலை
வளர்ந்தது உங்களைச் சரியாய்ப் பாதிச்சிருக்கு. உதுகளை
உதறித் தள்ளிறதுதான் நல்லது ரீச்சர்’’.
'உதறித்தள்ளிறதா? என்னாலை முடியேல்லை ரகு, மனம் 'அது' விஷயத்திலை அச்சமும் வெறுப்பும்தான் கொள்ளுது. அப்பிடி ஒரு ஆசை என்னைச் சுட்டுப்போட்டாலும் வராது போலை இருக்கு. ஏதென் அப்பிடி வந்தா அண்ணை மாதிரி அல்லது அப்பா மாதிரி நானும் எவனையாவது இழுத்து வைச்சிருப்பனே?*
'நீங்க அப்பிடிச் சொல்லிறையள். ஆனால் நடப்பிலை அப்பிடியில்லையே'.
‘என்ன. நீ என்ன சொல்லிறை?"
அவளது பதட்டம் குரலில் தெரிந்தது.
“பாடசாலை மதிலைப் பாத்தியளா?*
"ஒ அதுவா'-"லாப் ரகுநாதனுக்கும் வசந்தி ரீச்சருக்கும் காதல்!ர - குநாதன் வசந்தியை வைச்சிருக்கிறான்."
"அந்தக் கோணல் எழுத்துப் பிரகடனங்களைப் பற்றிச் சொல்லிறயா? பார்த்தனே. ஏதோ மாணவர்களுடைய குறும்பாக இருக்கும். நீயும் பார்த்தனியே? பார்த்ததோடை திருப்திப்பட்டுக்கொள். மனசை அலையவிட்டு அலட்டிக் கொள்ளாதை'.
105

Page 58
"நீ பேசுவது பொய்-என்பது போல அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான்; அந்தப் பார்வையின் சொடுக்கலை அவளால் தாள முடியவில்லை. அவளது உடல் லேசாக நடுக்கமுற்றதை இவன் அவதானித்தான். கண்களும் திடீ ரெனப் பணித்தன. இவை, அவளையறியாமலே நடந்தன. அவள் சிரமத்துடன் மேசையில் பரத்திக் கிடந்த புத்தகங் களைப் புரட்டினாள்.
"என்ன புதிசாப் படிக்கிறை . காசியபனின் ‘அசடு" முல்ராஜின் "கூலி இதென்ன சயன்ஸ் புத்தகங்களாய் வேறு அடுக்கி வைச்சிருக்கிறை'.
"ஜி.எஸ்.கியூ. எடுக்கிறன் ரீச்சர்".
"வெரிகுட். எனக்குக் கூட டிகிறி செய்யலாம் போலை இருக்கு. அதுசரி ரகு, எனக்கு ஏதாவது படிக்கக் கொடேன்’
'டொடோவெஸ்கியின்ரை "இடியட்' இருக்கு, கொண்டு போய்ப் படியுங்கள். நல்ல கதை. இதுவும் பெண் பின் னாலை பித்தாகி அலையிற ஆண்களைப் பற்றின கதை தான். ஆனால், அந்தப் பெண்தான் என்னைப் போலை ஒரு இடியற்ரை மனசிலை போட்டுக் குழம்பிறாள். வாழ்க் கையிலை அவளுக்கு எதுவுமே கிடைக்கேல்லை. ஆணின்ரை ஜெலசியே அவளைச் சாகடிச்சுப் போடுது.”*
"உன்னைப் போலை இடியற்ரா? படிச்சுப் பாத்துச் சொல் லிறன்."
"படிச்சுப் பார்த்துத்தான் என்னைத் தெரிய வேணுமா ffgfgfri ? o.
அவன் வாஞ்சையுடன் அவளை நெருங்கினன்.
民
106

"நோ. நோ. பிளிஸ் என்னை அப்பிடிப் பார்க் காதை ரகு. உன்னை இந்த விஷயத்திலை நான் ஏமாத்த விரும்பேல்லை. குடும்பம், வாழ்க்கை என்பதெல்லாம் எனக் குப் பயனற்றதாய்ப் படுகுது. குறிப்பா செக்ஸ்.அப்பா ! அது இந்த ஜென்மத்திலை வேண்டாம்."
'ஆண் பெண் எண்டாலே செக்ஸ் மட்டும்தானா? பிழை யான மனப் பதிவுகளாலை, வாழ்க்கையின் செளந்தரியங் களையே நீங்க பார்க்க மறுக்கிறியள். இது விசர்த்தனம்.'
"இந்த விசரியை விட்டிற்று வாழ்க்கையின் செளந்தரியங் களைத் தரிசிக்கிற ஒரு பெட்டையைப் பாரேன் ரகு, பிளிஸ் இந்த ஜடம் உனக்கு வேண்டாம்."
அவள் மேலும் அங்கு நிற்பதற்கு விரும்பாதவளாய், ஒரு வகை அச்சத்துடன் அவசர அவசரமாக அவனது அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் போவதையே பார்த்தபடி நின்ற அவனுக்கு, என்ன செய்வது ஏது செய்வதென்று எதுவுமே தோன்றவில்லை.
'இவளை. இவளை... இழப்பது எப்படி?’ என்று அவன் திரும்பத் திரும்ப மனதளவில் கேட்டுக் கொண்டான்.
"என்ன இன்னும் அழுகை ஒயேல்லைப்போலை? கண்ணைத் துடையுங்க ரீச்சர். ஆரும் பார்க்கப் போகினை. வீட்டிலை பிரச்சனையில்லையென்டா நான் நேற்று அறையிலை கேட் டதை நினைச்சுக் குழம்பியளே? உங்கடை விருப்பத்துக்கு மாறா ஏதேன் கதைச்சனானே? பின்னை என்ன? எல்லாத் தையும் மறந்திட்டு உசாராக வகுப்புக்குக் போங்களன்."
"நான் லீவு போட்டிட்டன்."
107

Page 59
‘வீவோ? அப்ப பள்ளிக்கூடம் வந்திருக்கிறயள்!" “வந்தபிறகுதான் லீவு போட்டனான்.'
"அப்ப வீட்டை போறது.'
"வீட்டை போகேலாது. இனிப்போகேலாது ரகு. போறேல்லை எண்ட முடிவோடைதான் வந்தனான்.'
s
"என்ன ரீச்சரிது..? அவன் சற்று அவசரமாகவே
கேட்டான்.
'இது ஒருவகையிலை ஐரணிக்கல்தான் ரகு. நீ நேற்றுத் திரும்பத் திரும்ப உன்ரை விருப்பத்தைத் தெரிவிச்சபொழுது நான்தான் பிடிகொடாமை உனக்கொரு ‘ப்பாட்மச் ஆயி டுவனோ எண்ட பயத்திலை அதைத் தட்டிப்போட்டுப் போயிட்டன். ஆனா, என்னை இனி உன்ரை நிழல்தான் காப்பாத்தவேணும்.'
அவள் விம்மி விம்மி அழத் தொடங்கி விடுகின்றாள். அவள் இப்படி அழுது அவன் பார்த்ததில்லை. அவன் சொன் னான்:
“டோன் பி சிலி. இப்ப என்ன நடந்து போச்சு. நானும் லீவு எழுதிக் குடுத்திட்டு வாறன். முதலிலை அறைக்குப் போவம்."
அவளுக்கு, ஆறுதலாக இருக்கட்டுமேயென்று ஏதோ கூறி விட்டு, அதிபருடைய காரியாலயத்தை நோக்கி அவன் போனான். அவன் அவள்பால் இவ்வளவு அக்கறை கொள் வது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. தன்னில் அக் கறை கொள்ளக்கூடிய ஒரே ஜீவி அவன்தான். அவன்மட்டும்
108

தானென்பது இவளுக்கு உறுதியாகிவிட்ட ஒன்று. அவனைத் தவிர இவளுக்கு ஒருவரும் இல்லைத்தான்.
நேற்றைய தினம், ரகுவுடைய உணர்ச்சிச் சுழிப்புகளுக்குத் தப்பி வீடு வந்தவளுக்கு பெரிய அதிசயமே காத்திருந்தது.
இரண்டு வருஷங்களுக்கு மேலாக வீட்டுப் பக்கம் வராமலிரு ந்த அண்ணை வந்திருந்தான். அக்கா, அத்தான் எல்லா ருமே வந்திருந்தார்கள். எல்லாம் அம்மாவின் ஏற்பாடு என்பது இவளுக்கு விளங்கியது. ஏனென்பதும் விளங்கியது. ஆனால், இவ்வளவு விரைவில் இது நடக்குமென்பதைத் தான் அவள் எதிர்பார்க்கவில்லை.
அவள் வீட்டினுள் காலடி எடுத்து வைத்ததும், அவர்களது பார்வை இவளைச் சூழ்ந்து உறுத்தியதை இவள் உணர்ந் தாள். அதனைப் பொருட்படுத்தாது, தனது அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டவள்; குளிப்பதற்குப் பாத்ரூம் பக்கம் நகர்ந்தபொழுது அண்ணைதான் சொன் னான்:
"வசந்தி இஞ்சை நில். உன்னட்டை ஒரு விசயம் கதைக்க வேணும்'.
இவள், ‘என்ன?’ என்பது போல அவனைப் பார்த்து நின்றாள்.
அக்கா, அத்தான், அப்பா, அம்மா அனைவருமே அங்கு கூடினார்கள்.
அண்ணை தொடர்ந்து கேட்டான்:
"இப்ப நேரம் என்ன எண்டு நினைக்கிறை? ஆறு மணிவரைக் கும் பள்ளிக்கூடத்திலை உனக்கென்ன வேலை? இல்லை,
அந்த அனாதை ராஸ்கல் லாப் ரகுநாதனோடை."
109

Page 60
'படுத்திட்டு வாறன். யேஸ் ஐ சிலெப்ற் வித் ஹிம் .*, அவன் பேசி முடிப்பதற்கு முன்பாகவே பதில் தந்தாள்.
அவளது அந்தப் பதிலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அது அவர்களை அதிரவைத்தது.
அக்கா கூச்சத்துடன் கேட்டாள்: "என்னடி இது வெக்கங் கெட்ட பேச்சு... மட்டு மரியாதையில்லாமை.”*
"என்ன வெக்கமிதிலை. அண்ணை செய்யிறதை, அப்பா செய்ததை நான் செய்தாப் பிழையே?’’
"உண்மையிலை அந்த லாப் அசிஸ்டென்றிலை உனக்கு விருப்பமா? வெளியிலை தலை காட்ட முடியாமை கதையடி படுகுது. எனக்கு நாக்கைப் பிடுங்கிச் சாகலாம் போலை
இருக்கு."
‘விருப்பம். காதலெண்டில்லை. வெறும் உடல் சம் பந்தப்பட்ட. பச்சையாச் சொன்னா செக்ஸ் விசயம் தான்’’.
அவர்களை மேலும் சீண்டி வேடிக்கை பார்க்கவே அவள் அப்படிச் சொன்னாள்.
அண்ணைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடல் பதற எழுந்தவன் அவளது தலைமயிரைப் பிடித்து இழுத்துச் சுவருடன் மோதினான். பலமான அடி தலையில் பட்டதால் நிலைகுலைந்தவள், சுவரோடு உட்கார்ந்து கொண்டாள்.
அந்த நிலையிலும் அவள் அவனைப் பார்த்து நிதானமாக, அவனது நானை'க் காயப்படுத்தும் தோரணையுடன் கேட் டாள்:
110

'அண்ணி சுகமா இருக்கிறாளா? என்ன...நான் கேக்கிறது விளங்கேல்லையே? சின்னண்ணி.ான். கராஜ்சிலை இருக்கி றவளும் பிள்ளை”ளும்தான் இடஞ்சலாக்கும்.'
அவனது பலவீனமான பகுதிகளை இவள் கண்டியதும் அவன் உன்மத்தனாய் அவளது முகத்தில் எட்டி உதைத்தான்.
அத்தானும் அவசர அவசரமாகத் தன் பங்கிற்குக் கையோங் கியபோது அவள் ஏளனமாகச் சிரித்தபடி:
'பாவம் அத்தானுக்கும் அந்தச் செல்லப் பூனை விளை யாட்டு ஞாபகம் வந்திட்டுதுபோலை. அதுதான் இந்தச் சுறுசுறுப்பாக்கும்...!'
"உவளுக்குச் சரியான ஹிஸ்ரீரியாதான். உவளின் 8ர அம ரடங்க உதையுங்கடா! அந்தக் கோவியனிட்டை அப்பிடி என்ன இனிப்பைக் சண்டிட்டாளிந்தப் பரத்தை’’.-அம்மா
**கோவியனோ? --இது அப்பா,
“அவன்ரை அப்பன்ரை அப்பன்ரை அப்பன் சிறுபுலப்பக் கம்." அம்மா தாவாடிக்காரி. இப்படித்தான் அவளால் GL15F முடியுமென்பது இவளுக்குத் தெரியும்.
அவள் அவர்களது முகத்தையே பார்க்க விரும்பாதவளாய், பாத்ரூமுக்குள் சென்று ஷவரைத் திறந்து விட்டாள். உணர் ச்சிகள் சமனாகும்வரை ஷவரில் நின்றவள், குளித்து முடிந்த தும் அறையை அடைந்து, கதவை மூடிக் கொண்டாள். தனிமை அவளுக்கு அப்பொழுது தேவையாக இருந்தது.
சற்று அதிகமாய்த்தான் பேசிப் போட்டனோ... பேச வைச்சா பேச்சு வரும்தானே* அப்பிடிப் பேசினதாலை
தான் அவையள் வாயடைச்சு மூச்சுப் பேச்சில்லாமை இருக்
111

Page 61
கினை. இஞ்ச இருந்து இடிபடுகிறதிலும் பார்க்கத் தனிச்சுப் போறது எவ்வளவு நிம்மதி!'
துயரமான நினைவுகள். அவற்றுடன் சொந்தமேயில்லாத அந்தத் தூரத்துப் பையன் ரகுவின் நினைவுகளும் சேர்ந்து கொள்கிறது.
அது அவளுக்கு உவப்பாயிருந்தது.
அன்று இரவு முழுவதும் அவளால் தூங்க முடியவில்லை. ஏதேதோ நினைவுகளால் அலைபட்டவள், மேசையிலி ருந்த-அவள் அதிகம் நேசிக்கும்-அந்தத் தந்தத்தாலான யேசுநாதருடைய சிறிய உருவத்தையே வெறித்துப் பார்த்த படி இருந்தாள்.
அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஒன்று மட் டும் அவளுக்குத் தெளிவாகியது. இனி இந்த நரலுக்கை இருக்கேலாது என்பதுதான் அது.
விடியும்வரை விழித்தே கிடந்தபடியால் அவளுக்குச் சோம் பல் அதிகமாகவே இருந்தது. சோம்பல் பட்டால் முடியுமா? எழுந்து நன்றாகக் குளித்தவள், சேலையை மாற்றிக் கொண்டு, கூந்தலை நீர்வார முடித்தபடி, தான் அடிக்கடி வெளியே பயணப்படும்பொழுது கொண்டு செல்லும் சூட் கிேசை இழுத்து வைத்துக்கொண்டு-தான் விரும்பியணியும் சேலைகளையும், வேறு சில பொருட்களையும் எடுத்து வைத் துக் கொண்டாள்.
வீட்டில் யாரும் எழுந்த சிலமணில்லை.
அவள், அந்த வீட்டைவிட்டு வெளியேறி விடுவதென்று முடிவு கொண்டது அவளுக்கு வியப்பாகவே இருந்தது. ஒருவருக்கும் தெரியாமல் போவதைத்தான் அவள் முதலில்
112

விரும்பினாள். ஆனால், அவளது இயல்பான வீம்பு அவளை விடவில்லை.
எல்லாரும் விழித்தபின் அவர்களனைவரும் பார்த்திருக்க, வழமையாகப் பாடசாலைக்குப் போகும் நேரம், பாட சாலைக்குப் போவது போலவே இவள் படி இறங்கினாள்.
அவள் காலடி எடுத்து வைத்தபொழுது அண்ணைதான் முன்னே வந்தான்.
*உன்னைக் கை கழுவியாச்சு... இனி இஞ்ச இந்த வீட் டுப் பக்கம் தலை காட்டாதை. இஞ்ச வந்தால் கொலை தான் விழும். கிணறோ குளமோ பாத்துப் போறது உனக் கும் நல்லது... எங்களுக்கும் நல்லது.'
அக்கா ஓடிவந்து, "எங்கையெடி போற' என்று இவளைத் தடுத்தாள்.
'உந்தத் தேவடியாளெங்க போயிடுவாள்...எல்லாம் பள்ளிக் கூடத்துக்குத்தான்.நீபேசாமைஇரு.நீ யோசிச்சாப்போலை உவளை மாற்ற மெடுத்துக் கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போறதுதான் நல்லது' , அக்காவைப் பார்த்து அம்மா சொன்னாள்.
'மாற்றமோ? உந்த விசர்க்கதைகளை விட்டிற்று உங்கடை வேலையைப் பாத்திட்டுப் போங்க. ' கூறியவள், கிடுகிடென வெளியே நடந்தாள். பாடசாலைதான் அவளுக்கு இப் போதைக்குப் பாதுகாப்பான இடம்.
"என்ன இன்னும் ரகு வரேல்லையே.அவனைத்தவிர எனக்கு இனி யாரிருக்கினம். நேற்று அவன்ரை விருப்பத்தை எவ்வ ளவு நிதானமா ஒதுக்கினன். இன்று. இன்று அவன் தான் எனக்குத் தஞ்சமா?"
13

Page 62
அவள் மெதுவாகச் சிரித்துக் கொண்டாள்.
"என்ன? அழுகை மாறிச் சிரிப்பா? நல்லது ரீச்சர். பி சியர்புல். ஒஃபிஸிலை கொஞ்சம் அலுவலா நிண்டிட்டன். லீவு எழுதிக் குடுத்தாச்சு. அப்ப வாருங்க ரூமிலை போய்க் கதைப்பம்.'
‘கதைக்க என்ன இருக்கு. இனியெல்லாமே உன்னோடை தான் ரகு’’.
"உதென்ன...? ஓ மை கோட்...! கையிலை சூட்கேஸ் வேறையா? சோ, யூ காவ் லெவ்ற் யுவர் பீப்பிள் போர் குட்! என்னாலை இதை நம்ப முடியேல்லை ரீச்சர். நேற்று விஸ்வாமித்திர தோரணை, இண்டைக்கு...”*
"அதிலை இண்டைக்கும் மாற்றமில்லை!'
*மாற்றமில்லையோ...? மனசு மாறாமல் உங்களை எனக்கு எதுக்கு ரீச்சர்? சும்மா வைச்சு அழகு பார்க்கவே'- அவன் செல்லமாகக் கேட்டான்.
“ரகு! ஐ வில் றை. . . முயற்சி செய்யிறன். அதுவரை நீ பொறுமையா இருப்பையா? இருக்கவேணும்.'
‘சரி, ஆனா ஒரு பதிவோ மூண்டு முடிச்சோ அவசியமில் லையா? இல்லையெண்டா உங்கவீட்டு ஆக்களின்ரை தொந்
தரவு இருக்கும்.'
"ரகு, யூ ஆர் றியலி வெரி கிறேட்." அவளால் பேச முடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டவளாய், அவனது கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
அவனுடைய அறை பாடசாலைக்குப் பக்கத்தில்தான் இருந் தது. இருவரும் நடந்தே போனார்கள். போகும் வழியில்
114

அவள் நடந்தவை அனைத்தையுமே அவனிடம் சொன்னாள்.
அதற்கு அவனிடமிருந்து வந்த ஒரே பதில்:
"இவையள் இப்பிடித்தான். கற்புக்கற்பெண்டு கதைப்பினை. அந்தக் குஷ"மான்ரை கற்புக்கும், உங்க அண்னை இழுத்து வைச்சிருக்கிற பெட்டையின்ரை கற்புக்கும் ஆரு காவல்? இதெல்லாம் தங்கடை தங்கடையெண்டு வரேக்கைதான் ஏதோ தோல் கூசிற விசயமாத் துடிக்கினை. சொத்துப் பத்தை இழந்து ஆண்டியாய்ப் போனாலும் உவையள் சாதி மான்களெல்லே. இப்படித்தான் கதைப்பினை.'
அறையை அடைந்ததும் அவன் ஜன்னலைத் திறந்து வைத் தான்.
மேசையில் சூட்கேசை வைத்த அவள், அதனைத் திறந்துதந்தத்தாலான அந்த யேசுநாதரையும், ஒரு குங்குமச் சிமி ழையும் வெளியே எடுத்தாள். அடுத்து எடுத்தது ஒரு சிறு பாசுரப் புத்தகம். ஆண்டாளுடைய திருப்பாவை. புத்தகத்
தைக் கண்டதும் இவன்: -
‘தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூபங்கமழ', என்று ஆரம்பித்தான்.
அதனைப் பார்த்த அவள் கேட்டாள்:
'உனக்கு ஆண்டாள் பிடிக்குமா?' '
"பிடிக்கும். s is
'எனக்குப் பிடிக்கும். அழுத்தும் துயரங்கள் கரைய எனக்கு ஆண்டாள்தான் மருந்து.'
115

Page 63
புத்தகத்தை வைத்தவள், குங்குமச் சிமிழை எடுத்துக் கொண்டு இவனை நெருங்கி, "ரகு இந்தக் குங்குமத்தை என்ரை நெற்றியிலை வை...' என்றாள் குழைவாக.
‘ஓ! இந்த சென்ரிமென்ஸ் வேறையா?", என்று சிரித்தவன், குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியிலிட்டான். புருவத் தில் உதிர்ந்த குங்குமத்தையும் துடைத்துவிட்டான்.
அவள் மலர்ந்து சிரித்தாள். நிம்மதியான சிரிப்பு. தன்னை முழுமையாக அவனிடம் தந்துவிடத் துடிக்கும் சிரிப்பு.
ரகு அந்தச் சிரிப்பின் அர்த்தங்களைப் புரிந்தவனாய் மெது வாக, மென்மையாக அவளது கரங்களைப் பற்றி அணைத்த படி கண்களில் முத்தமிட்டான். அவள், சற்றுப் பதட்ட மடைந்தவளாய்:
*நோ. நோ. பிளிஸ் ரகு வேண்டாம் வேண்டாமே," என்று நடுங்கினாள். அதே சமயம் அவளது கண்கள்
பனித்து விடுகின்றன.
அவள் அவனது கைகளிலிருந்து விடுபட்டு, ஜன்னல்வரை சென்று வெளியே வானத்தை வெறித்துப் பார்த்தாள்.
மெளனமாக, அவளைப் புரிந்து கொள்ள முயற்சித்தவனாய் இவன் அவளையே பார்த்தபடி நின்றான்.
அவள் ஜன்னலை விட்டுத் திரும்பி வரும்வரை காத்திருக்கும் உறுதி அவனில் தெரிந்தது.
'80
116.

96)
அம்மாவின் மடியில் தலைவைத்து - உடலைச் சீமெந்துத் தரையில் கிடத்தி - கால்மேல் கால் போட்டுப் பெரிய மணி சத் தனத்துடன், மது தனது ஆண்டு இரண்டு தமிழ்ப் புத்தகத்தை அவளுக்கு உரத்துப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான்.
சாப்பாடு ஆனதும், இப்படி ஒரு சொகுசும், படிப்பும் அவனுக்குத் தேவைப்படுவது அம்மாவுக்குத் தெரியும்.
அவள், அவனது தலையை வருடியபடி அவனது படிப்பில் ஆழ்ந்திருந்தாள். அப்பொழுது, வெளியே அழுத்தமான அந்தக் குரல் கேட்டது.
117

Page 64
“ “ DTL Dr. . . l ” ”
மிக மெதுவாகக் கூறியவன், எழுந்து - உறைந்துபோய் உட் கார்ந்து கொண்டான்.
புத்தகம் மடங்கித் தூரத்தில் கிடந்தது. அம்மா வெளியே வந்து மாமாவுடன் கதைத்தாள்.
இவன், படியிறங்கி. முற்றத்துக்கு வந்தபோது, இவனைப் பார்த்து மாமா கேட்டார்:
"மது...! நாளைக்குத் தேர். மாரியம்மன் கோயிலுக்குப் போவமா... ???
மாமா இவனோடு இப்படி நின்று, நிதானமாய்ப் பேசிய தில்லை. இந்தப் பேச்செல்லாம் நம்பிற மாதிரி இல்லையே ...? என்பது போல இவன் அவரைப் பார்த்தான்.
மாமா ‘கருகரு' என்று அடர்த்தியான முடி வைத்துக் கொண்டிருந்தார். நாற்பது வயதாகியும் நரை காணவில்லை. மேற்சட்டை இல்லாமல் வெற்றுடம்போடு நின்றார். அடர்ந்த மீசை, உதடுகளை மூடி வளர்ந்திருந்தது. பேசும் பொழுது, மீசைக் கற்றைகளுக்கிடையே முன்பற்கள் மட்டும் லேசாகத் தெரிந்தன.
அவனுடைய "சீஸருக்கு இருப்பது போல, கூரான வேட் டைப் பற்கள் மாமாவுக்கும் இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.
அவர் மார்பு முழுவதும் பச்சை குத்தியிருந்தார். மார்பில்
பெரிய சிங்கம். புயங்களிலும் இரண்டு குட்டிச் சிங்கங்கள். கழுத்தில் நீளமான பொன் காப்பிட்ட புலிப்பல் சங்கிலி.
118 :

மாமா அசப்பில் சிங்கம் மாதிரித்தான் இவனுக்குத் தோன்றி
σΟτΠτri.
மாமா அலுவல் முடிந்து அம்மாவிடம் விடை பெற்றபோது, இவன் அவரைப் பார்த்துக் கேட்டான்:
“பூரீ, தயா மச்சாள் எல்லாரும் கோயிலுக்கு வருவினமா
...?' '
"எல்லாருந்தான்’’.
“ “ DIT If?. . . ?” ”
“வரமாட்டா, துடக்கு...'
'அம்மா...???
'இல்லை. நாங்கள் நாலு பேரும்தான்’’.
இவன் அம்மாவைப் பார்த்தான். அவளுக்கு அவனது துரு துருப்புப் புரிந்திருக்க வேண்டும். "என்ன?’ என்பது போலப்
பார்த்தாள்.
"பூரீயையும், தயா மச்சாளையும் பாக்க வேணும்...'
‘வெய்யிலடா. கவனமாப் போ...' என்றவள்,
அவன் போவதையே பார்த்தபடி நின்றாள்.
O
மாமி வீட்டில் பூரீ மட்டும்தான் இருந்தான். தயா மச் சாளைக் காணவில்லை.
119

Page 65
பூரீ, முயல் குட்டிகளுக்குத் தழை போட்டுக் கொண்டிருந் தான்.
வெண் பஞ்சுக் குவியலாய்க் குட்டிகள். வந்த வேலையை மறந்து, இவனும் குட்டிகளுக்குத் தழை எடுத்துப் போட்
டான். ஞாபகம் வந்ததும் பூரீயைப் பார்த்துச் சொன்னான்:
"நாளைக்கு நாம கோயிலுக்குப் போறம். மாரியம்மன் கோயிலுக்கு...!"
"“தேருக்கா...? உண்மையா?*
பூfயால் அதை நம்ப முடியவில்லை.
"நான், நீ, தயா மச்சாள், மாமா.
"அப்பா வரமாட்டாரடா.பொய்...வரவேமாட்டார்."
"இல்லை, வருவாரடா. வாறணெண்டு சத்தியமாய்ச் சொன்னவர்...”*
பூரீ நம்பவில்லை என்பது மதுவுக்குச் சோர்வைத் தந்தது.
இந்தச் செய்தியைத் தயாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டு மென்ற தவிப்பு அவனுக்கு, பூறீயை முயலோடு "மினக்கெட" விட்டு விட்டு அவன் தனியாகத் தயாவைத் தேடிப்போனான்.
வழியில், மில்லடி ஒழுங்கையில், கடையன் சீமால் ஆச்சி தான் எதிர்ப்பட்டாள்.
"எங்கை. எங்கை என்ரை துரையார் போறார்...?'
"கோயிலுக்கு. மாரியம்மன் கோயிலுக்கு. நாளைக்குத் தேருக்குப் போறம். அதுதான்."
120

ஆச்சியின் காலைக் கட்டிப்பிடித்தபடி கூறினான்.
ஆச்சி வெற்றிலை போட்ட வாயால் அவனை எச்சில் படுத்திவிட்டு நகர்ந்தாள்.
ஊரெல்லாம் உலாவந்து இந்தச் செய்தியைச் சொல்ல வேண் டும் போலிருந்தது மதுவுக்கு.
‘ராஜி அக்கா வீட்டைதான் முதலிலை போவம். அங்கை தான் தயா மச்சாள் நிக்கும்..."
அவன் எதிர்பார்த்தது போல் அங்கு தயா இல்லை. ராஜி, கேதா கூட இல்லை. "பெத்தா தான் கட்டிலில் முடங்கிக் கிடந்தாள்.
பெத்தாவுக்கு எதுவும் முடியாது. பார்வை மட்டு மட்டு, காதும் அரை குறையாகத்தான் கேட்டது.
"பெத்தாவுக்குச் சொல்லுவமா...?’’
மனதில் துருத்தியதை, செயற்படுத்த விரும்பி, அயர்ந்து தூங்கும் பாட்டியைத் தொட்டு உசுப்பினான்.
"பெத்தா. பெத்தா...! நாங்க கோயிலுக்கு. மாரியம் மன் கோயிலுக்குப் போறம். உனக்கு பாக்குரல், பாக்கு வெட்டி, கொட்டப் பெட்டி எல்லாம் வாங்கி வரட்டா.’’
மதுவின் குரல், நீரினாழத்திலிருந்து கேட்பது போலப் பெத் தாவுக்கு இருந்திருக்கவே ண்டும். அவள் திடுக்குற்று, மலர்க்க மலர்க்க விழித்தபடி, இவனைப் பார்த்தாள்.
பெத்தாவுக்கு எதுவுமே தெரியவில்லை, எல்லாம் ஒரே புகை மூட்டமாக இருந்தது.
12

Page 66
"ஆரடா மோனை. எனக்குக் கண்ணும் தெரியேல்லை காதும் கேக்கேல்லை...' கிழவி எழுந்து உட்கார்ந்து
கொண்டாள்.
"இதுக்குச் சொல்லேலாது. ஒண்டும் விளங்காது. சரி
யான செவிட்டுப் புடையன்."
அலுத்துக் கொண்ட மது, ரதி அக்காவின் நினைவு வர, அவளிடம் புறப்பட்டான்.
ரதி அக்கா மெஷினில் ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும்:
y 9
"என்ன...? எங்கடை மதுவனோ வாறது..?
அவள் நெகிழ்ந்து கரைந்தாள்.
திரும்பத் திரும்பச் சொல்லியும், அசை போட்டும், மனப் பாடமாகிவிட்ட அந்த விஷயத்தை ரதி அக்காவிடமும் அவன் ஒப்பித்தான்.
அக்கா எழுந்து உள்ளே போய் அலுமாரியைத் திறந்ததும் இவனுக்குத் தெரிந்தது, அக்கா காசு தரப் போறாளென்று.
அவனது கையில் ஐந்து ரூபாய்க் குற்றி ஒன்றை வைத்த ரதி, அவனை அணைத்து முத்தமிட்டாள்.
‘ரதி அக்காவுக்குத் தான் எச்சில் படாமல் முத்தம் கொடுக் கத் தெரியும்', என நினைத்துக் கொண்டவன், கண்களை இடுக்கிப் பூஞ்சிரிப்பொன்றை உதிர்த்தபடி, அவளிடம்விடை பெற்றுக் கொண்டான்.
122

மில்லடியில் வரும்போது, யோகு அன்ரியின் ஞாபகம் வந் தது. ஆனால், வீதியைக் கடந்து போக அவனுக்குப் பயமாக இருந்தது.
'கார், பஸ் ஏதென் திடீரென வந்து தட்டிப்போட்டால்".
'தூரத்திலை. அரசடியிலை. ஆரது நிற்கிறது. சுதன் சித்தப்பாவா..? வெள்ளையும் சள்ளையுமாய் உடுத்துக் கொண்டு எங்கை போகப் போறார்...??
சித்தப்பாவிடம் இதைச் சொல்ல மதுவின் மனம் பரபரத் தது. அவரை நோக்கி வேகமாக ஓடிப்போனான். பின்னால் ராட்சத உறுமலுடன் பஸ் வந்தது. பயந்த இவன், கானுக் குள் ஒதுங்கிக் கொண்டான். பஸ் இவனைக் கடந்து, சித்தப்பாவின் காலடியில் சரிந்து நின்றது. சித்தப்பா பஸ் ஸில் ஏறிக் கொண்டார்.
மதுவுக்கு அது பெருத்த ஏமாற்றமாய் இருந்தது.
அந்த ஏமாற்றத்தையும், சோர்வையும் போக்க, வீதியைக் கடந்து, யோகு அன்ரி வீடுவரை போக வேண்டும் போலிருந் தது அவனுக்கு.
அன்ரி வீடு பூட்டிக் கிடந்தது. ஆளரவம் இல்லை. இவன் படி ஏறி விறாந்தையில் கிடந்த வாங்கிலில் உட்கார்ந்து
கொண்டான்.
'பள்ளியாலை தவம் மாமா இன்னும் வரவில்லைப்போல . அன்ரி எங்க போயிருப்பா...??
கூடத்துக்கு அப்பாலுள்ள அறையில் ஏதோ சத்தம் கேட் டது. ஆழ்ந்த யோசனையிலிருந்த மது உசாரடைந்தான். வாங்கிலில் இருந்து இறங்கி, அந்த அறையை நோக்கி நடந்தான்.
123

Page 67
கதவு நீக்கலால் உள்ளே பார்த்தான்.
யோகு அன்ரியும் தவம் மாமாவும் கட்டிலில், அன்ரி சிவப் பாய் தம்பலப் பூச்சி மாதிரி. சேலையெல்லாம் குலைந்த
படி. மாமா, கறுப்பா. தேகம் முழுவதும் ரோமம் அடர்ந்து. ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல்.
“சீ... இந்த அன்ரிக்கும், மாமாவுக்கும் வெக்கமேயில்லை.
உதட்டை அஷ்ட கோணமாக்கியவன், அந்த அறையை, அவர்களை-ஏறிட்டுப் பார்க்கக் கூடக் கூச்சப்பட்டவனாய், ஒரு வகை அச்சத்துடன் வந்த வழியே மெதுவாகத் திரும்பி நடந்தான்.
O
இந்துச் சித்தி வீட்டில்தான் தயாவை மதுவால் சந்திக்க முடிந்தது.
மது விஷயத்தைச் சொன்னதும் பட்டாம் பூச்சியின் பட படப்பு தயாவின் கண்களில் தெரிந்தது.
சித்தி வீட்டிலிருந்து அவனும் அவளும்-பூரீயைத் தேடிப்
போனார்கள்.
பூgரீ முயல் கூட்டுக்குப் பக்கத்தில் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தான்.
இவர்களைக் கண்டதும் வந்து சேர்ந்து கொண்டான்.
மூவரும், கூடத்தில் - குளிர்ந்த சீமெந்துத் தரையில் உட் கார்ந்து கொண்டார்கள்.
124

"புதிசா பாவாடை சட்டையிருந்தா நல்லம்...", இது தயாவின் அபிப்பிராயம்.
"நான் வேட்டிதான் கட்டுவன்'-பூg.
"முளைச்சு மூண்டிலை விடயில்லை. உமக்கு வேட்டியே வேணும். வேட்டி கட்டித் தத்துப் பித்தெண்டு நடந்
தால் நல்ல வடிவாத்த னிருக்கும். கழிசான்தான் போட வேண்டும்...”*
தயாவின் தீர்மானமான பேச்சு மதுவினது வேட்டி ஆசை யையும் கருக்கியது.
தயாவை அவர்களால் மீற முடியாது. ஆண்டு ஆறில் படிக்கும் அவளுக்கு; பூரீயும் மதுவும் சிறு பிள்ளைகள். அதனால், அவள் பேசுவதெல்லாம் அவர்களுக்கு வேத வாக்கு.
தயா தொடர்ந்து சொன்னாள்:
“காலையிலை ஏழு மணிக்கு முந்திப் போனால்தான் நல்லது எட்டு மணிக்குச் சாமி தேருக்கு வரும். தேர் வீதி உலா வரேக்கை நிக்க வேணும். சாமிக்குப் பச்சை சாத்தி . தேரிலையிருந்து இறக்கி. வசந்த மண்டபத்திலை அபி ஷேகம் செய்யிறதைப் பார்க்க வேணும்.'
'கடையள் பார்க்கிறேல்லையா...???
ஆவலுடன் பூரீ கேட்டான்.
"பார்க்காமல்...! வீதி எல்லாம் ஒரு சுற்றுச்சுற்றி, ரபர்
வளையல், காற்சங்கிலி, ஒட்டுப் பொட்டு எல்லாம் வாங்க
வேணும்.'
125

Page 68
“எனக்குத் துவக்கு வேணும்...'
மது தனது விருப்பத்தை வெளியிட்டான்.
பூரீ கூறினான்:
“எனக்குக் கலர் கலரா இனிப்பு. பஞ்சு மிட்டாய். . . சூப் புத்தடி. காசு மிஞ்சினா ஒரு அம்மம்மாக் குழலும், விசி லும் வேணும்...'
**சரி. பூரீ உன்ரை உண்டியலைக் கொண்டுவா..!" என் றான் தயா.
பூரீ ஓடிப்போய் உண்டியலை எடுத்து வந்தான். அதை உடைத்து எண்ணிப் பார்த்தார்கள். ஒன்பது ரூபாய் இரு பத்திரெண்டு சதம் இருந்தது.
ரதி அக்கா தந்த ஐந்து ரூபாயை எடுத்து, மது தயாவிடம் கொடுத்தான்.
தயா, தனது வைப்புச் செப்பிலிருந்து ஆறு ரூபாயைச் சேர்த்துக் கொண்டாள்.
மூவரும் முறைவைத்து அப்பணத்தை மாறி மாறி எண்ணிப் பார்த்துக் கொண்டார்கள்.
இருபது ரூபாய் இருபத்திரெண்டு சதம் இருந்தது.
மதுவுக்கு அலுப்பாக இருந்தது. கொட்டாவி விட்டுக்கொண் டான். அம்மாவின் நினைவும் கூடவே வந்தது.
தயாவிடமும், பூரீயிடமும் விடை பெற்றவன், வீடு நோக்கி நடந்தான்.
O 26

மகா வித்தியாலயத்தைக் கடந்து, கிழக்கே திரும்பியதும், அம்மன் கோயில் தெரிந்தது. சனசந்தடியுடன் கோயில் "ஜேஜே என்று இருந்தது.
9 p.
‘என்ன அள்ளு கொள்ளையாய்ச் சனம்...! LDIITTLOFT
முணுமுணுத்துக் கொண்டார்.
அம்மன் கோயிலுக்குச் சற்று முன்பாக, மேற்குச் சாய்வில் ஒரு சிறு கோயில்,
“என்ன கோயிலிது, சின்னதா. வடிவா..?’’, மது மாமாவைக் கேட்டான்.
*சும்மா பேசாமை வாடா. நச்சு நச்செண்டு...”* மாமா
பதில் தராமல் அதட்டினார்.
மாமாவின் அதட்டல் அவனது ஆர்வத்தையும், குதூகலத் தையும் குலைத்தது.
வாயடைத்துப் போன மதுவைப் பார்த்துத் தயா கூறினாள்:
"வைரவர் கோயில். ஞான வைரவர். இஞ்சை தான் அம்மன் வேட்டைத் திருவிழாவுக்கு வாறவ...'
கண்கலங்கிய மது, நன்றியுடன் தயாவைப் பார்த்தான். மனசு கொஞ்சம் லேசானது மாதிரி இருந்தது அவனுக்கு.
வைரவர் கோயிலுக்குப் பக்கத்தில் தீர்த்தக் கேணி.
மாமாவும், தயாவும் கேணியில் இறங்கிக் கால் அலம்பினார் கள். பூரீயையும் மதுவையும் இறங்க வேண்டாம் என்று
மாமா கண்டிப்புடன் கூறிவிட்டார்.
127

Page 69
தயா கேணித் தண்ணீரைக் கைகளில் ஏந்தி வந்து இவர் களது கால்களில் தெளித்து விட்டாள்.
ஆரம்பமே மதுவுக்கு எரிச்சலூட்டுவதாயிருந்தது. அடிவயிற் றிலிருந்து திரண்டு வந்த கசப்பை மிகுந்த சிரமத்துடன் விழுங்கிக் கொண்டான்.
கோயில் வீதியில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்ற தேர் மதுவின் கவனத்தை ஈர்த்தது. தயாவை இழுத்தபடி, தேர்ப்பக்கமாக நகர்ந்தான்.
சிவப்பும் வெள்ளையுமாய் துணிகளாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேர். காற்றசைவில் குலுங்கிச் சிலிர்க்கும் தேர்ச் சிறு மணிகள். தேரின் முன்பாகப் பாயும் நிலையி லுள்ள குதிரைகளின் லாகவம். எல்லாமே மதுவைத் தன் சுயமிழக்கச் செய்தன.
தேர்வரை சென்று ஒரு சுற்றுச் சுற்றி, அதை நெருக்கத்தில் பார்க்க அவனுக்கு ஆசையாயிருந்தது.
"உதென்ன விடுப்பு...? தேரிலை சாமி கூட வரேல்லை .." மீண்டும் மாமாவின் கண்டிப்பும் அதட்டலும்.
மதுவுக்கும் தயாவுக்கும் அது பிடிக்கவில்லை. அவர்களுக்கு, கோபுர வாசலில் படியைத் தொட்டுக் கண்களிலொற்றி, நாலு தெரிந்த முகத்தைப் பார்த்துச் சிரித்து, அவர்களுடன் கொஞ்சலாய் ஒரு செல்லப் பேச்சுப் பேசி, சந்தோஷமாய் கோயில் உள்ளே போக வேண்டும் போலிருந்தது.
தெற்கு வீதிக்கு வந்தபோது பூரி நட்ட கட்டையாய்க் கால் பாவி நின்றான். நின்றவன், தயாவை கைகளால் நிமிண்டி,
மிட்டாய்க் கடைகளைக் கண்களால் சாடை காண்பித்தான்.
128

"எல்லாம் போகேக்கை பார்க்கலாம். இப்ப பேசாமை
வா...', விழிகளால் அதட்டிய தயா, இருவரையும் இழுத்தபடி அப்பாவின் பின்னால் போனாள்.
தெற்கு வாசலால் கோயிலினுள் நுழைந்த மாமா, முதல் வேலையாக, மூவரையும் தென்மேல் மூலையில் - பிள்ளை யார் சந்நிதிக்கு இடப்பக்கமாக இருந்த வாகன சாலைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். வைத்தவர் “அர்ச்சனை செய்திட்டு வாறன், பத்திரமாய் இருங்க பிள்ளையஸ்', என்று நகர்ந்தார்.
"இங்க வாகனங்களோடை வாகனமாய் நாம இருக்க வேண் டியதுதானா..?’’
ஏக்கம் தயாவை அழுத்தியது.
மது கண்கலங்கி விம்மினான். அவனுக்குத் தொண்டை அடைத்திருக்க வேண்டும், பேச்சுத் தடைபட்டுத் தறுமாற, "கெதியா வாருங்க மாமா...", என்று சிணுங்கினான்.
மாமா எதிலுமே பட்டுக் கொள்ளாமல் வேகமாக நடந்து போனார்.
பூg மட்டும் எதுவித பாதிப்புக்கும் உட்படாதவனாய், எழுந்துபோய், வாகனங்களைத் தொட்டுத் தடவி, தப்பும் தவறுமாய் எண்ணி வந்து, "எட்டு வாகனங்கள் அக்கா!", என்று தயாவுக்குக் கணக்குச் சொன்னான்.
மது, காராம் பசு வாகனத்தையே சிறிது நேரம் வைத்த கண் வாங்காது வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.
பசுவின் உடல், தலை மட்டும், அழகான பெண் உருவம். முகத்தில் - நெற்றி நிறைந்த சிவந்த செந்தூரம். தடித்த
129.

Page 70
சிவந்த உதடுகள், காலில் கழுத்தில், மூக்கில் எல்லாம் ஆபரணங்கள்.
மதுவுக்கு அப்பொழுது ஏனோ யோகு அன்ரியின் ஞாபகம் வந்தது. 'அன்ரி மாதிரி. இந்தப் பசுவும் நல்ல வடிவு."
அலையும் மனது நிதானமடைந்ததும் மீளவும் அவனுக்கு மாமாவின் நினைவுகள்.
"பெரியவனாய் வந்து இவரை. இந்த மாமாவை. நெஞ் சிலை ஏறியிருந்து. கழுத்தை நெரித்து. மூச்சுத்திணறத் திணற..."
குரூரமாய் அவனது காயப்பட்ட மனசு வன்மம் கொண்டது. மாமாவை ஏதோ ஒரு வகையில் தண்டிக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. எழுந்து, வாகனசாலையில் காராம் பசுவின் பக்கமாகப் போனவன். கழிசான் ஸிப்பை நீக்கிப் பசுவின் மேல் படும்படி "ஒண்டுக்கு இருந்தான்.
தனது எதிர்ப்பை அவனால் இவ்வாறுதான் காண்பிக்க
முடிந்தது. ‘என்னடா இது. சரியான பாவம் கிடைக் கும்.’’, தயா சொன்னாள். "ஒண்டுக்கு வந்தா என்ன செய்யேலும்...”*
மதுவின் பேச்சு தயாவை அதிர்ச்சியடைய வைத்தது. அவள் விக்கித்துப் போய் எதுவும் பேசாமலிருந்தாள்.
மாமா அங்கு வந்தபொழுது, தயாவின் மடியில் பூரீ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
மது விறைப்புடன் எழுந்து நின்று மாமாவைப் பார்த்துக் கேட்டான்:
130

"எனக்கு அம்மனைப் பார்க்க வேணும். வசந்த மண்ட பம். கொடிமரம். வீதி உலா வாற சாமி. எல்லாம் பார்க்க வேணும்.'
மதுவின் துணிவு மாமாவுக்கு அசாத்தியமாய்ப் பட்டிருக்க வேண்டும்.
அவனது தலையில் நறுக்கென ஒரு குட்டு வைத்தார்.
"உவர் பெரிய மீசை முளைச்ச கொம்பர். சனத்துக்கை
போய் நெரியப் போறாராம். வடுவா பேசாமல் வா தேரிலை சாமி வந்திடும். பாத்திட்டு வீட்டை போவம்...”*
தயாவுக்கு வாய் துருதுருத்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
வீதிக்கு வந்ததும், ஒவ்வொருவர் கையிலும் ஒரு கடலைப் பொட்டலத்தை மாமா வாங்கி வைத்தார்.
மாமாவின் பார்வை படாத வேளை பார்த்து, பொட்ட லத்தை மது தூர வீசி எறிந்தான்.
இதனைக் கண்ட தயா திடுக்குற்றுப் பதட்டப்பட்டாள்.
'மதுவுக்கு இண்டைக்கு என்ன வந்திட்டுது...? இது சரியான சின்ன ரெளடி. சின்ன ரெளடி", என்று,
அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.
அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு எதுவுமே வாங்க வில்லை. "வாங்க முடியாமலே போய்விடுமோ...?, மூவ
ரையும் ஏக்கம் வாட்டியது.
13

Page 71
மாமாவைக் கேட்பதற்கும் அவர்களுக்கு மனம் துணிய வில்லை.
கோபுர வாசலில் ஆரவார ஒசை. நாதஸ்வரத்திலிருந்து மல்லாரியின் தாழிதம்; காற்றுடன் கலந்து பரவிப் பரவச
மூட்டியது.
‘சாமி வெளியாலை வருகுது போலை, கெதியா வாருங்க ...' குழந்தைகளை மாமா துரிதப் படுத்தினார்.
கோபுர வாசலுக்கு அருகாக அழைத்துச் செல்லாமல், தூரத் தில் வைத்தே, அவர்களுக்கு மாமா சாமி காட்டினார்.
தயா கை உயர்த்திக் கும்பிட்டாள். ‘சாமி வடிவா இருக்
, என்று குதூகலித்தாள்.
5t –st LDSS. . .
மது எம்பி எம்பிப் பார்த்தான். சாமி தெரியவில்லை. மனித முதுகுகளும், தலைகளும்தான் அவனுக்குத் தெரிந் தன. V
பூரீயை மட்டும் மாமா தூக்கிக் காண்பித்தார்.
மதுவுக்குத் துக்கமாக இருந்தது. வெடித்து வந்த அழு கையை அடக்கிக் கொண்டான்.
"அதோ.. அதுதான் தேர். அதிலை ஏறி இந்தச் சாமி இந்த வீதியாலை உலா வருவார். சாமியும் பாத்தாச்சு, தேரும் பாத்தாச்சு. நாம இனி வீட்டை போவம்...".
மாமாவின் சொல்லைத் தட்ட வலு இல்லாமல், அவரின் பின்னால் மூவரும் போனார்கள்.
132

ரபர் வளையல், காற் சங்கிலி, ஒட்டுப் பொட்டு, துவக்கு, விசில், கலர் கலரா இனிப்பு, பஞ்சு மிட்டாய் எல்லாமே கனவுபோல அவர்களுக்கு ஆகிவிட்டது.
'அடுத்த வருஷப் அம்மாவோடைதான் வரவேணும் என மது நினைத்துக் கொண்டான்.
தயா மச்சாளைப் பார்த்தான் மது. அவள் தலையில் காலை யில் சூடிய பிச்சிப்பூ மாலை வாடியிருந்தது. கண்களில் நீர் முட்டி மோதிக் கொண்டிருந்தது.
பூரீ அக்காவின் கண்களைத் துடைத்துவிட்டான். மது தயா
மச்சாளின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.
மாமா தனது நீண்ட கால்களை எட்ட எட்ட வைத்து, அவர்களுக்கு முன்னால் வேகமாக நடந்து போனார். அவர் பின்னால், அவரது நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அந்தப் பிஞ்சுக் குழந்தைகளும் தளர்ந்து தடுமாறியபடி
டந்து போனார்கள்.
'89
133

Page 72
"சட்டநாதன் தொகையிற்
சிறந்த சிறு கதைகளை எழு வதில் இவர் காட்டும் அ காரணமாகும். இவரது அே தும், பெண்களினதும் ெ கலைத்துவ வெளிப்பாடாக
"Saddanathan's Strength. See Sensitivity the inner worl Sympathy for his charact
"Saddanaihar is Conscious disintegration of the Nu role of Women in Societ
Journal of Sout Asia
Michigi

குறைந்த, ஆனால் தரத்திற் தியுள்ளார். தரத்தைப் பேணு திசு அக்கறையே இதற்கான னக கதைகள் குழந்தைகளின மன்மையான உணர்வுகளின்
அமைந்துள்ளன."
இரா. சிவச்சந்திரன்
ims to lie in depicting with of the child. His humane ers is infectious."
A. J. Caragrate.
of changing Walues, the clear family and the new y."
H. Asian Literature, Wol. 22
Studies Center
in State University, U. S. Al