கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போர்க்குரல்

Page 1
இந்நூல்
அறிந்தோ அறியாமலோ புறக்கணிக்கப்படும் கீழ்த்திசை இலக்கியங்களின் மேன்மையை இக்கதைகள் தமிழுலகுக்கு அறிவிக்கும்.
மிகச்சிறந்த நவீன இலக்கியங்களுக்கு மேற்கு நாடுகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும் என்பதை இத் தொகுப்பு தகர்த்துவிடும்
புரட்சி இலக்கியங்கள் எத்தகைய கலைத்தன்மையுடன் இருக்கமுடியும் இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும்.
e


Page 2

போர்க்குரல்
லூ சுன்
தமிழில் : கே. a Gawrogi
பொதுமை வெளியீடு Garaivaar - 600 017

Page 3
முதற் பதிப்பு 1981
பதிப்புரிமை: பொதுமை வெளியீடு
16, மங்கேஷ் தெரு
GFairaga600 017.
பி. ஆர் வி. பிரஸ், சென்னை-600 005.

பதிப்புரை
சீனப் புரட்சி எழுத்தாளர் லூ சுன் தோன்றி நூருண்டு கள் நிறைவதையொட்டி, அவரது சிறுகதைகளை ஒரே தொகுப்பாக முதல்முறையாகத் தமிழில் வெளியிடுவதில் மகிழ்வடைகிழுேம்.
இத்தகைய சிறப்பான முயற்சிக்கு முழு முதற் காரண மாக இருப்பவர் இலங்கை எழுத்தாளரான திரு. கே.கணேஷ் அவர்கள். அவர் "ஹோ சிமின் கவிதைகள்" உட்பட பல வெளிநாட்டுப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த் துள்ளார். அவரது கடுமையான உழைப்பின் விண்வாகவே இச்சிறுகதைத் தொகுப்பு தமிழ் மக்களுக்குக் கிடைக்கிறது. அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம்.
மேலும் இந்நூலை வெளிக்கொணர தம் அரிய ஆலோ சனைகளையும் உதவிகளையும் வழங்கிய தோழியர். சகு அவர் களுக்கும், பிழைகள் திருத்தி உதவிய தோழர் பா. சிங்கராய ருக்கும், நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டுத்தந்த பி.ஆர்.வி. அச்சகத் தொழிலாளர்களுக்கும், உரிமையாளருக்கும் நம் நன்றிகள்.
லூ சுன்னைப் பற்றி ஒரு அருமையானதும் விரிவானது மான அறிமுகவுரையை வழங்கியிருப்பவர் தோழர். எஸ். வி. ராஜதுரை அவர்கள்.
திரு. கணேஷ் மூன்ருண்டுகளுக்கு முன்பே முடித்துவிட்ட மொழிபெயர்ப்புகளில் மேலும் சில கதைகளும் உள்ளன. சில காரணங்களால் அவை இத்தொகுப்பில் இடம் பெறவில்லை. இத்தொகுப்புக்குக் கிடைக்கும் வரவேற்பு, லூ சுன் னின் படைப்புகள் மேலும் பலவற்றைத் தமிழுலகுக்கு அளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடும்.
பொதுமை வெளியீடு

Page 4
பொருளடக்கம்
லூ சுன்னெப் பற்றி i
போர்க்குரல்-முன்னுரை லூ சுன் ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள் 10 குங் இசிை 29 அருமருந்து 37 மறுநாள் w - 5 ஒரு நிகழ்ச்சி 62
fair ayudas 68 எனது பூர்வீக வீடு ' 82.
ஆகியூவின் உண்மைக் கதை 99
கிராமத்து இசை நாடகம் 182

நூறு ஆண்டுகள் முடியப் போகின்றன லூ சுன் தோன்றி. புகழ் பெற்ற இச் சீனப் புரட்சி எழுத்தாளரைப் பற்றி மாவோ குறிப்பிட்டார்:
"சீனத்தின் பண்பாட்டுப்புரட்சியின் தலமைத் தளபதி
யான லூ சுன் ஒரு மாபெரும் இனக்கியவாதியாக மட்டு
மல்ல, ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் புரட்சியாள ராகவும் திகழ்ந்தார். அவரி விட்டுக்கொடுக்காத நேர் மை கொண்டவராக இருந்தார்.அண்டிப்பிழைப்பதும், அடிமை மனப்பாங்கும் அவரிடம் சிறிதும் இருக்க LLLLLL zLLLLLLLLT LLTTLLTCCTLTTLT TLT 0LTTT auDL Gau SADASaupasu ushuru afavoSÓLupiðAeg. Gasaris தின் மிகப்பெரும்பான்மையான மக்களின் பேராளராக 6 )oitias ar aidir, uasaidir Gara leau-addie eilifierary (rAbUGADS, yang குருளிைபோலம் தாக்கியவரி; பண்பாட்டுத் துறையில் அவர் அனேவரிலும் துணிச்சல் Áldas, Áso Parrar, Ás a-pSarribs (Assu

Page 5
afரராக, நம் வரலாற்றில் ஈடினையற்ற வீரரர்கத் திகழ்ந்தவர். அவர் மேற்கொண்ட பாதை, சீனத்தின் புதிய தேசியப் பண்பாட்டின் பாதையாகும்.”
1881ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 25ஆம் நாள் சீன நாட்டின் செகியாங் மாநிலத்தைச் சேர்ந்த ஷாவோஸிங் என்ற ஊரில், அரசாங்க அதிகாரிகள் குடும்பத்தில் பிறந்த லூ சுன், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். வி.ா முயற்சியும் கடின உழைப்பும் கொண்ட அவரது தாய் இவர் பள்ளியில் நுழ்ைவதற்குக் காரணமாயிருந்தார். இவரது இயற்பெயர் சென் ஷா-ஜென். அவரது தாயின் பெயர் லூ. தாயின் பெயரானலுவிலிருந்தே லூ சுன் என்ற புனை பெயர் பிறந்தது, இளம்பருவத்திலேயே அசாதாரணமான அறிவுக் கூர்மையை வெளிப்படுத்திய லூ சுன், சீனச் செம்மை இலக்கியங்கள்:வரலாறு ஆகியவற்றை ஆழ்ந்து கற்றதுடன், கிராமிங்க் கலைகள், ஓவியங்கள், நாடோடிப் பாடல்கள் முதலியவற்றிலும் அளவற்ற ஆர்வம் காட்டினர். அவரே சித்திரங்களையும் வரைவதுண்டு. இளம் வயதில் அவருக்கு வாய்த்த நண்பர்கள் பேருந்பாலும் எளிய நேர்மையான உழவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இத் தகைய நட்பும்தொடர்புமே லூ சுன் தன் வாழ்நாள் முழுதும் பேணிப் பாதுக்ாத்த உழைப்பாளிம்க்கஞ்ட்ன் உயிருள்ள தொடர்பு என்திற்கு துவக்கம்ாக ஆர்மேந்தன. வெளி நாட்டு ஏகாதிபத்திய “சக்திகளின் ஆதிக்கமும் நசிந்து
- ఢి.
போன நிலவுடமைச் சமூக அமைப்புலே லூே சுன்னைப்
புரட்சிப்'ப்ரின்த்யில்லுேத்தின.
: : ಓ ಫ್ಲಿ.
. அவரது 18ஆம் வயதில், பூதன் தேய்வயிற்றைக்கட்டி வாயைக்கக் கேமித்துக்கெடுத்த ஈடுபாலர்களுடன் நான்திங்களிைஅடைந்து காற்பூடிை புஜிற்சிக் கழகத்தில் சேர்வதற்கானதுழைவுத் தேர்வுை எழுதி ஆதில் ஜெம்றியும் பெற்ருர்ஆனல்இந்தநிறுவனம் அவூருக்குப்பிடிக்கவில்லை. எனவே அடுத்த ஆண்டு அவுர் கியாங்குழன் இராணுவப் பயிற் சிக்கழகத்தைச் சேர்ந்த ரயில்வுே மற்றும் சுரங்கப் பள்ளியில்
 
 
 

iii
சேர்ந்தார்; இதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் உல்க இலக்கியங்கள் பலவற்றிையும் விஞ்ஞான நூல் களையும் படிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது. 1901 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற இவருக்கு ஜப்பானில் படிப் பதற்கு அரசு உதவித் தொகை கிடைத்தது. அடுத்த ஆண்டு அவர் ஜப்பானுக்குப் புறப்பட்டார். ஜப்பானில் உள்ள சென்டாயில் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க நேர்ந்த போதுதான் அவர் பைரன், ஷெல்லி, ஹெய்ன், புஷ்கின், லெர்மென்டோவ், மீக் கீவிஸ், பெடோஃபி ஆகிய புரட்சிக் கவிஞர்களின் படைப்புகளைப் படித்தார். அங்கு ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொண்டார் , நலிவடைந்த தாயகத்துக்குத் தன் மருத்துவக் கல்வி உதவி புரியும் என்று எண்ணிய லூ சுன்னை எழுத்தாளனக மாற்றச் செய் ததுஒரு நிகழ்ச்சி. 1906ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்நிகழ்ச்சியை, லூ சுன் தனது முதல் சிறுகதைத் தொகுபடிக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிருர். மருத்துவக் கல்லூரியில் பர்க்கும் போது சீனர்கள் சம்பந்திப்ப்ட்ட படம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு லூ சுன்னுக்குக்கிட்டியது. ༢༧འི་
"அதில் ஒரு சீனன் கயிற்றினுல் கட்டப்பூண்டிருக்க வேறு பலர் அலனைச் சுற்றி நின்று.கொன்டிருந்தனர்.அவர்களெல் வாழ்நல்ல பலசாலிகள், ஆனல் உண்ர்ச்சியற்றவர்களாய்த் காணப்பட்டனர். கைகள் கட்டப்பட்டுள்ள பேர்வழி
ரஷ்யர்க:கு உதவியூஒற்ற்ன் எனவுமஜ்வ்ர்களுக்கு
இஜ்"ஆ"
அவ்னுக்குப்
:: நிற்குக்ஜீனர்கள் நிகழ்ச்சி ஷ்ேக்கை பார்க்கக் கூடியிருப்பதாகவும் படவிரீண்க்றியது ( *-பள்ளிப்டிேருஷ்கரிடிை முடிவுக்குள்ம்நாள்:கோக்கியோ சென்று விேேவன்டிடக்ாரணம்டிவத்தைவிர்பிரர்த்தபின்ன? மருத்துவிக்க ைஅன்ன்ைவர முக்கிலுமல்லன்ேன ஜஸ்னக்குத் இத்ான்றியதே.?0 க்விவற்ற * பிற்ன்ோக்கர்ள ஒரு நிாட்டு மக்கள், ன்ன்ேவளவுதான்வலிவும்.உடல்தவழ்க் ஐகொண்டவர்

Page 6
iv
களாக இருந்தாலும், அவர்கள் உதாரணப் பொருள்களாக நிலவவும் அல்லது இத்தகைய உதவாக்கரைக் காட்சியைப் பார்த்து நிற்பவர்களாகவுமே சேவை செய்ய (tpւգամ): நோயினல் அவர்களில் எத்தனைபேர் மாண்டாலும் அது வருத்தத்துக்குரியதாக இருக்கத் தேவை இல்லை. ஆகவே எல்லாவற்றையும்விட முக்கியமானது அவர்களது மனப் பாங்கை மாற்றுவதே. அதுமுதல், இலக்கியமே அதற்கேற்ற சாதனம் என உணர்ந்தேன். இலக்கிய இயக்கத்தை வளர்க்க முடிவு செய்தேன்.
1909 இல் தாயகம் திரும்பிய லூ சுன், பள்ளியாசிரிய ராகப் பணியாற்றினர். 1911 ஆம் ஆண்டுப் புரட்சியை மனமார வரவேற்ற லூ சுன், புரட்சியில் பங்கேற்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார். 1912 ஆம் ஆண்டு எனக் குடியரசின் தற்காலிக அரசில் அவர் கல்வி அமைச்சில் ஓர் உறுப்பினராக்கப்பட்டார்.
ஆனல் சன் யாட்ெைசன் தலைமையில் நடந்த 1911 ஆம் ஆண்டுப் புரட்சி மிகவிரைவில் தோல்வியடைந்தது. சீன முதலாளி வரிக்கத்தாலும் குட்டி முதலாளி வரிக்கத்தாலும் தலைமை தாங்கப்பட்ட இப்புரட்சி, சிங் வமிச ஆட்சியைத் தூக்கியெறிந்து 2000 ஆண்டுகளாக நிலவிய நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு முடிவு கட்டியது. "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற முழக்கத்தை உயர்த்திப்பிடித்த இப் புரட்சி விரைவில் தோல்வியில் முடிவடைந்தது. ஏனெனில் இப்புரட்சிக்குத் தகலமை தாங்கியவர்கள் சீன மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலோரான பரந்துபட்ட உழவர் திரளினரைத் சார்ந்திருக்கவில்ல. உறுதியான Baptif திருத்தத்துக்கான திட்டம் இவரிகளிடம் இல்லை. ஏகாதி பதிதியச் சக்திகளை முற்றிலுமாகத் துடைத்தெறியும் வலிவும் இவர்களிடம் இல்லை. எனவே ஏகாதிபத்திய சக்திகளுக்குப் பணிபுரிந்த பல்வேறு புத்தப் பிரபுக்கள், அரசியல்வாதிகள் 45Gaunrfair கரகிகளுக்கு அதிகாரம் சென்றடைந்தது. atas பிரபுக்கள் தனித்தனி குட்டி அரசுகள் உருவாக்கிக் கொண்

W
டார்கள். ஒருவருக்கொருவர் போரிட்டனர். தமது செல் வாக்குப் பகுதிகளை விரிவுபடுத்திக் கொள்வதில் ஏகாதிபத்திய வாதிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர். இத்துடன் அரைக் காலனிய அரை நிலமானிய ஒடுக்குமுறைகள் பெருகின. பண்பாட்டுத் துறையில் கடந்த காலத்தை உயர்த்திப் பிடிக் கும் நசிவுக்கருத்துக்கள் பரவலாயின.
இச்சூழல் லூ சுன்னைக் கடுமையாக வாட்டியது. ஏறத் தாழ ஆறு ஆண்டுகள் அவர் மனதில் கொந்தளிப்புகள் நிறைந்திருந்தன. இதனல்தான் இலக்கியம் வகிக்கின்ற பங்கையே மறுதலிக்கக்கூடிய அளவுக்கு லூ சுன் சென்ருர். 1917 ஆம் ஆண்டில் ராணுவக் கல்வி நிலயம் ஒன்றில் அவர் ஆற்றிய உரை ஒன்றில் கூறினர்: "நான் சலிப்புற்றிருக் கிறேன். இருந்தும் துப்பாக்கியை ஏந்தும் நீங்கள், இலக்கியம் பற்றி அறிய அவாக் கொண்டுள்ளீர்கள். ஆனல் நானே துப்பாக்கி வேட்டுகளின் சத்தத்தையே கேட்க ஆர்வங் கொண்டுள்ளேன். ஏனெனில் துப்பாக்கி வேட்டுகளின் சத்தம் இலக்கியத்தைவிட கேட்பதற்கு நன்றக இருக்கும்.”
1919 ஆம் ஆண்டு மே 4-ஆம் நாள் இயக்கம் தொடங்கி, நாடுமுழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பேரலைகள் சுழன்றடித்த போதுதான், லூ சுன் தனக்கு வகுக்கப்பட்ட பாதையைத் தெளிவாகப் பார்க்கத் தொடங்கினர். ஏற்கனவே அவரிமீது 1917 ஆம் ஆண்டு மாபெரும் இரஷ்யப்புரட்சியின் தாக்கம் ஏற்பட்டிருந்தது.
1918 ஏப்ரவில்தான் அவர் தனது முதல் சிறுகதையான "பைத்தியக்காரனின் குறிப்புகள்” எழுதினர். இக்கதை "புதிய இளைஞர்’ என்ற ஏட்டில் வெளிவந்தது. சீனத்தில் மார்க்சியக் கருத்துகளே முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஏடு இதுதான். நவீன சீன இலக்கியத்தின் துவக்கமே இச் சிறுகதைதான் என்று கூறலாம். எண்ணற்ற சிறுகதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும், நினைவுக்குறிப்புகளும் எழுதிய லூ சுன், ஏராளமான பிறநாட்டு இலக்கியப் படைப்புகளை

Page 7
vi
சீனத்தில் மொழிபெயர்த்தார். என இலக்கியத்தின் வரலாற்றை எழுதினும். நுண்கலக%ள ஊக்குவித்தார். ար ஒவியங்களை (wood ேே8) பரவலாக்க நேரடியான முயற்சிகள் மேற்கொண்டார். சீனச் செம்மை இலக்கியங்களில் அவர் பெற்றிருந்த புலமை,உலக இலக்கியங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த ஈடுபாடு, உழைக்கும் மக்களுடன் அவருக்கிருந்த நெருக்கமான பிணைப்பு, புரட்சிகரக் கருத்துகளின் தாக்கம் ஆகியவை லூ சுன்னை ஈடினையற்ற கலைஞராக்கின.
1928 இல் அவர் ஓர் இலக்கிய ஏட்டை நிறுவி, மார்க்சிய லெனினியத்தைக் கற்கத் தொடங்கினர். மார்க்சிய இலக் கியக் கோட்பாடுகள் பற்றிய நூல்களை (பிளக்கனேவ், லூனசார்ஸ்கி ஆகியோர் எழுதியவை) யும் கார்க்கி, ஃபத யேல், ஃபர்மனேவ், கோகல், க்ளாட்கோவ், ஷோலக்கோவ் போன்ற இரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழி பெயர்த்தார்.
லூ சுன்னின் சாதனைகள் இலக்கியத்துடன் நின்று விட வில்லை. பொதுவுடமைக் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு லூ சுன், கட்சியால் துவக்கப்பட்ட மக்கள்திரள் இயக்கங்களில் பெரும் பங்காற்றினர். இடதுசாரி எழுத் தாளர் கழகத்தையும், சீனசுதந்திர கழகத்தையும் நிறுவுவதில் முதன்மைப் பங்கு வகித்த லூ சுன், சன் யாட்-சென்னின் மனைவியார் தலைமையேற்றிருந்த சீனமக்கள் உரிமைக் கழகத் திலும் முன்னணியில் பங்கு வகித்தார். . در صدد
பொதுவுடைமைக் கட்சியாளருக்கும் முற்போக்காளர் களுக்கும் எதிராக சியாங்கே ஷேக் அவிழ்த்துவிட்ட "வெள்ளைப் பயங்கரம்.தலைவிரித்தாடிய நாட்கஜில் மறைந்து வாழவேண்டிய "கட்டாயத்துக்குள்ளான லூ 菇 ஒருபோதும் உறுதிதலழுவில்லை. புரட்சிகரப் புண்பாட்டு ஜ்க்கிய முன்ன ணியைங் லாதுகாத்து நின்ற அவர், பிற்போக்குக் கோழிந், தாங், புரட்டு எழுத்தாளர்களின் குரலை ஒடுக்கச்செப்த் முயற்சிகளை முறியடித்தார். V ༣ །

vji
ஜப்பானுக்கு எதிராக தேசிய அளவில் ஏற்பட்ட ஐக்கிய முன்னணியைச் சீர்குலைக்க ட்ராட்ஸ்கியவாதிகள் ழேற் கொண்ட சதிகளே அம்பலப்படுத்தி, சீனப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கைகளே முன்னெடுத்துச் சென்றர். காச நோயால் அவதியுற்று 1936 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் நாள் காலமான லூ சுன் தனது ஆற்றல்கள் அனைத்தையும், விடுதலையும் மாண்பும் பெற்ற ஒரு புத்துலகை உருவாக்குவ திலேயே செலவிட்டார். s
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒன்பது சிறுகதை களும் அவற்றுக்கு லூ சுன் எழுதிய முன்னுரையும் "போர்க் குரல்’ என்ற தலைப்பில் 1923 ஆம் ஆண்டு முதன்முதலாக சீனத்தில் வெளியிடப்பட்டன.
நலிவுற்ற சமூகம் ஒன்றில் வாழ்கின்ற துர்ப்பாக்கியசாலி கள் பற்றிய இக்கதைகள்"சில தீமைகளை அம்பலப்படுத்தவும், அவற்றின் மீது மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அவற்றுக்குத் தீர்வு காணவும் லூ சுன்னல் எழுதப்பட்டவை. இவர்களது துயரங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் லூ சுன், இவர்களை ஒடுக்கும் சக்திகளைக் கடுமையாகத் தாக்குகிருர், அவர்களுக்குள்ளே மறைந்து கிடக்கும் பேராற்றலை சுட்டிக் காட்டுகிருர், பல்லாயிரமாண்டுகளாக அவர்களைச் சுரண்டி வரும் ஒடுக்குமுறை அமைப்பு, இச்சுரண்டலை நியாயப்படுத்து வதற்கும் சுரண்டலுக்கு ஆளானவர்களே இந்த அமைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கும் பயன்படுத்திய பிற் போக்குக் கருத்துக்களை அம்பலப்படுத்துகிருர்,
தோல்வி மனப்பான்மை, சமுதாயத்தில் உள்ள மேட்டுக் குடியினருக்குத் தலைவணங்கிப் போகும் அடிமை மனப் பான்மை, ஒடுக்குபவனுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக தன்னையொத்தவர்களிடமே நலிந்தவன் மோதுகிற நிலை இவற்றையெல்லாம் லூ சுன் கலைத்தன்மையுடன் விளக்குகிருர். நலிவுற்ற சீனச் சமூகத்தையும், கருத்தாலும் கரத்தாலும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களையும்,உழைக்கும்

Page 8
vi
மக்களைச் சார்ந்து நிற்காத புரட்சியின் தோல்வியையும் "ஆகியூவின் உண்மைக் கதை” என்ற அழியாப் படைப்பில் தான் மிகச்சிறப்பாகச்சித்திரிக்கிருர் லூ சுன் .ஆயினும் ஆகியூ போன்றவர்களின் புரட்சித்தாகம் அடங்கிவிடவில்லை. அவர் கள் கொதித்தெழுந்து நசிந்துபோன அமைப்பைச் சுக்குநூருக உடைத்தெறிவர் என்ற ஆலேசமிக்க செய்தியையும் லூ சுன் சொல்லாமலில்லை. இவ்வகையில் அவர் கதைகள் புலம்பல் இலக்கியங்களல்ல. லூ சுன்னின் கருத்தில் "புலம்பல் இலக்கியங்கள் ஒருவனது முனகலேயும் விரக்தியையும் வெளிப்படுத்தும் அதே வேளையில் அடக்கி நசுக்குபவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பையும் வழங்கிவிடுகின்றன."
அறிந்தோ அறியாமலோ புறக்கணிக்கப்படும் கீழ்த்திசை இலக்கியங்களின் மேன்மையை இக்கதைகள் தமிழுலகுக்கு அறிவிக்கும்.
மிகச்சிறந்த நவீன இலக்கியங்களுக்கு மேற்குநாடுகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும் என்பதை இத் தொகுப்பு தகர்த்துவிடும்.
புரட்சி இலக்கியங்கள் எத்தகைய கலைத்தன்மையுடன் இருக்க முடியும், இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத் துக்காட்டாக விளங்கும். - - .
சென்னை, 28-2-8 s எஸ். வி. ராஜதுரை

எபோர்க்குரல்29 என்ற தலைப்பில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுர்ை.
இளைஞனக இருந்தபொழுது நானும் பல கனவுகள் கண்டதுண்டு. அவற்றில் பல நாளடைவில் மறந்துபோயின. இது குறித்து நான் ஒன்றும் வருத்தப்படுவதற்கில்லை. பழமையை நினைவுபடுத்திக் கொள்வதில் சில சமயங்களில் மகிழ்ச்சி ஏற்படலாம், சில சந்தர்ப்பங்களில் தனிமை உணர்வும் தோற்றுவிக்கப்படலாம். தனிமையான கடந்த காலங்களின் வெற்றுத் தோற்றங்களைப் பிடித்துத் தொங்கு வதில் ஒன்றும் பயனில்லை. ஆனல் என்னைப் பொறுத்த வரையில் தொல்லை என்னவென்றல் என்னல் எல்லா வற்றையும் மறக்கமுடிவதில்லை. எனது நினைவில் அழிக்க முடியாதவை இக்கதைகளாக உருவாயின.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, ஏறக்குறைய ஒவ் வொரு நாளும் ஒரு வட்டிக் கடைக்கும், மருந்துக் கடைக்கு மாக நடந்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும் என்பது நினைவில்லை. ஆனல் மருந்துக்கடையிலிருந்த முகப்பு மேடையின் உயரமும் என் உயரமும் ஒரே அளவாக இருந்தன. வட்டிக்கடையினது மேடை என்னைவிட இருமடங்கு உயரம், துணிகளையும் சிறு சிறு நகைகளையும் எனக்கு இரண்டு மடங்கு உயரமான மேடை யில் கொடுத்து அவர்களால் அலட்சியத்துடன் கொடுக்கப் ஆட்டணத்தைவுரங்கி என்னளவு உயரமுள்ளமேடைக்குச்

Page 9
2 போர்க்குரல்
சென்று பல காலமாக நோயுற்றிருந்த எனது தந்தைக்கு மருந்துகளை வாங்குவேன். வீடு திரும்பியதும் மேலும் பல வேலைகளிருக்கும். மருந்துச் சீட்டளித்த மருத்துவர் மிகவும் பேர்போனவராதலால் அவர் அபூர்வமான மருந்துகளையே பயன்படுத்தினர். குளிர்காலத்தில் தோண்டி எடுக்கப்பட்ட சோற்றுக் கற்றழைவேர், மூன்றுண்டுக்காலம் பணியில் நனைந்த கரும்பு, இரட்டை விட்டில்கள், அர்திசியா. இத்தகைய அபூர்வமான பொருள்கள். ஆனல் எனது தந்தையின் நோயோ அவர் இறக்கும்வரை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டுதான் போயிற்று.
நல்ல செல்வாக்கான நிலையிலிருந்து வறுமை நிலைக்கு இறங்கியவர்கள் அப்போக்கிலேயே உண்மையான உலகைட் புரிந்துகொள்வார்கள் என நான் நம்புகிறேன். நான்கிங்கி லுள்ள கியாங்நான் கப்பற்படைப் பயிற்சிப்பள்ளிக்குச் சென்று படிக்க நான்விரும்பினேன். ஒருக்கால் இடமாற்றத்தையும் புதிய முகங்களைக் காணவும் நான் விரும்பியது காரணமாகவும் இருக்கலாம். என் விருப்பத்தை திறைவேற்ற எட்டு டாலர் கள் கடன் வாங்குவதைத்தவிர அம்மாவுக்கு வேறுவழி இருக்க வில்லை. அந்தக்காலத்தில் பழம் இலக்கியங்களைப்பயின்று அரசுத்துறைத் தேர்வுகளை எழுதுவதுதான் வழக்கம். ஆகவே அம்மாவும் அழுதாள். 'வெளியூர் விஷயங்கள்" படிப்பவர்கள் வெறும் உதவாக்கரைகள் என்று மிகவும் ஏளனமாகக் கருதப் பட்டார்கள். வேறு ஒன்றும் செய்யமுடியாமல் தங்கள் ஆன்மாக்களை வெளியூர் பிசாசுகளுக்கு விற்றவர்கள் எனக் கருதப்பட்டார்கள். தவிரவும், என்னைப் பிரிவதும் அவளுக்குக் கவல் தந்தது. இருப்பினும் நான் நான்கிங் சென்று கியாங் நான் போனேன். அங்கேதான் முதன்முறையாக இயற்கை விஞ்ஞானம் கணிதம், நிலவியல், வரலாறு, சித்திரம், உடற் பயிற்சி போன்ற வகுப்புகளைப்பற்றிக் கேள்விப்பட்டேன். உடலியல் பற்றிய பாடம்போதிக்கப்படவில்லை. ஆயினும் நாங் கள் மர எழுத்துக்களால் அச்சிடப்பட்ட பதிப்புகளான "மனித LLLLLTTTTTTLL TT LLLLLL LSSE SCLLTS LLTTLTTTLLLL

முன்னுரை : 3.
பற்றிய கட்டுரைகள்” போன்ற நூல்களைக் கண்டோம். எனக்குத்தெரிய, மருத்துவர் அக்காலத்தில் பேசிய விதத்தை யும் அவர்கள் கொடுத்த மருந்துக் குறிப்புகளையும் மீண்டும் நினைவுபடுத்தி, தற்சமயம் நான் புரிந்து கொண்டவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும்பொழுது, அம்மருத்துவர்கள் ஒன்றும் புரியாதவர்களாக இருக்கவேண்டும் அல்லது வேண்டுமென்றே நடந்து கொண்ட அயோக்கியர்களாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். அவர்களால் துயரமடைந்த நோயாளிகளின் மீதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீதும் அனுதாபப்படத் தொடங்கினேன். மொழிபெயர்க்கப்பட்ட வரலாறுகளிலிருந்து ஜப்பானின் புத்தெழுச்சி, பெரும்பாலும் ஜப்பானில் மேலை நாட்டு மருத்துவமுறை புகுத்தப்பட்ட பின்னரே தோன்றியது என்பதையும் படித்திருக்கிறேன்.
இத்தகைய நோக்கங்களே என்னை ஜப்பானிலுள்ள ஒரு மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு இழுத்துச்சென்றது. நான் சீன திரும்பியதும் தந்தையைப்போல் தவருக வைத்தியம் செய்யப்பட்டவர்களைக் குணப்படுத்துவேன்; போர்மூண்டால் நான் படைமருத்துவனகப் பணிபுரிந்து, அதேசமயம் எனது நாட்டுமக்களின் மறுமலர்ச்சியின் நம்பிக்கையை வலிவு படுத்தலாமெனவும் அழகிய கனவொன்று கண்டேன்.
இப்பொழுதெல்லாம் நுண்ணுயிரியல் கற்பிக்கள் த்தகைய மேம்பாடான முறைகள் கையாளப்படுகின்றனவோ எனக்குத் தெரியாது. ஆனல் அக்காலத்தில் கிருமிகளைக் காட்டுவதற் காக ஸ்லைடுகள் பயன்படுத்தப்பட்டன. விரிவுரை சிக்கிரம் முடிந்துவிட்டால் நேரத்தைச் சரிகட்டுவதற்காக போதகர் இயற்கைக் காட்சிகளையோ செய்திகளையோ காட்டுவார். அச்சமயம் ரஷ்ய-ஜப்பான் போர்நடைபெற்ற காலம், எனவே பலபோர்க்காட்சிகள் காட்டப்பட்டன. தானும் விரிவு ரைக்கூடத்தில் மற்ற மாணவர்களுடன் கைத்தட்டலிலும் ஆரவாரங்களிலும் கூடச்சேர்ந்து கொள்ள நேர்ந்தது. எனது சொந்த நாட்டவர் பற்றிய படங்கள் LaBritait smru Lu'Lu வில்லை. ஆனல் ஒருநாள் சில சீனர்கள் சம்பந்தப்பட்ட படம்

Page 10
4. போரிக்குரல்
காட்டப்பட்டது. அதில் ஒரு சீனன் கயிற்றினுல் கட்டப் பட்டிருக்க, வேறுபலர் அவனைச் சுற்றி நின்று கொண்டிருந் தனர் .அவர்களெல்லாம் நல்ல பலசாலிகள். ஆனல் உணர்ச் சியற்றவர்களாய்க் காணப்பட்டனர். கைகள்கட்டப்பட்டுள்ள பேர்வழி ரஷ்யர்கட்கு உதவிய ஒற்றன் எனவும், மற்றவர் களுக்கு எச்சரிக்கையாக இருப்பதற்காக ஜப்பானியப் படையினர் அவனது தலையை வெட்டப்போவதாகவும், அவனுக்குப் பின்னுல் நிற்கும் சீனர்கள் நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்கக் கூடியிருப்பதாகவும் படவர்ணனை கூறியது.
பள்ளிப்பருவகால முடிவுக்குள் நான் டோக்கியோ சென்று விட்டேன். காரணம், படத்தைப் பார்த்த பின்னர், மருத்து வக்கலை அவ்வளவு முக்கியமல்ல என எனக்குத்தோன்றியதே. வவிவற்ற பிற்போக்கான ஒரு நாட்டுமக்கள் எவ்வளவுதான் வலிவும் உடல்நலமும் கொண்டவர்களாக இருந்தாலும் அவர் கள் உதாரணப் பொருள்களாக நிலவும் அல்லது இத்தகைய உதவாக்கரைக் காட்சியைப் பார்த்து நிற்பவர்களாகவுமே சேவை செய்யமுடியும்; நோயினுல் அவர்களில் எத்தனைபேர் மாண்டாலும் அது வருத்தத்துக்குரியதாக இருக்கத் தேவை யில்லை. ஆகவே எல்லாவற்றையும் விட முக்கியமானது அவர் களது மனப்பாங்கை மாற்றுவதே. அதுமுதல், இலக்கியமே அதற்கேற்ற சாதனம் என உணர்ந்தேன். இலக்கிய இயக் கத்தை வளர்க்க முடிவுசெய்தேன். டோக்கியோவில், பலசீன மாணவர்கள், சட்டம், அரசியல் அறிவு, பெளதிகம், இரசாய னம், பொறியியல், காவல்துறைப் பயிற்சியுங்கூடப் பயின் றனர். ஒருவர்கூட இலக்கியமோ நுண்கலையோ பயிலவில்லை. இத்தகைய பொருத்தமற்ற சூழ்நிலையிலும்கூட ஒத்தமனப் போக்குடைய சிலரைக் காணக்கிடைத்தது எனது பெரு வாய்ப்பே. எங்களுக்குத் தேவையான வேறுசிலரையும் ஒன்று கூட்டி விவாதித்தபின் எடுத்த முதல் முடிவு, ஒரு சஞ்சிகை தொடங்குவதே, அதன் தலைப்பு புத்தெழுச்சியைக் குறிப்பிடு வதாக இருக்க வேண்டும் என்று எண்ணினுேம், நாங்களும் பண்டைய இலக்கியத்தில் மூழ்கியவர்களாக இருந்ததால் *புதுவாழ்வு’ எனப் பெயர் சூட்டினுேம்.

முன்னுரை 5
வெளியிடும் தான் நெருங்கியதும், எங்கள் சஞ்சிகைக்கு எழுதி உதவி இருந்தர்ைகள் விலகிக் கொண்டனர். பின்னர் எங்கள் நிதியும் திருப்பி எடுக்கப்பட்டுவிட்டது. இறுதியில் எஞ்சியவர் நாங்கள் மூன்றுபேரேதான். எங்களிடமோ செப் புக்காசும் கிடையாது. ஒரு அவகேடான நேரத்தில் சஞ்சிகை யைத் தொடங்கியதால் அதன் தோல்வி குறித்து யாரையும் இயல்பாகவே குறைகூறுவதற்கில்லை. ஆயினும் பின்னர் நாங்கள் மூவரும்கூட பிரியவேண்டியிருந்தது. எங்களது எதிரி காலக் கனவு மறைய நேர்ந்தது. இங்ங்னமாக எங்கள் "புதுவாழ்வு” சிதைவுற்றது.
பின்னரே இத்தகையமுயற்சிகளின் பயனற்ற தன்மையை உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் ஒன்றையும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவனது ஆலோசனைக்கு ஒப்புதல் கிடைத் தால் அவன் ஊக்கம் பெறுகிருன் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டால் அதை அவன் எதிர்த்துப் போராடவேண்டும் எனப் பின்னர் உணர்ந்தேன். ஆனல் எல்லையற்ற பாலைவனம் ஒன்றில் ஆதரவற்றவனுய் கைவிடப்பட்டதைப் போல, அவனுக்கு உண்மையிலேயே அவலத்தைத் தருவது, தன்னேடு வாழ்கிறவர்களிடையே தான் எழுப்புகிற குரல், ஒப்புதல் அல்லது எதிர்ப்பு என்ற எவ்வித எதிர்விளைவையும் பெருமல் போவதுதான்.
இத்தகைய தனிமை உணர்வு நாளுக்குநாள் எனது உள்ளத்தை பெரிய நச்சுப்பாம்பு போல வளைத்து நசுக்கியது. காரணங்காணமுடியாக் கவலையிலுங்கூட எனக்கு வெறுப்பு ஏற்படவில்லை, ஏனெனில் தனது அறைகூவலின்மூலம் மக்களை ஒன்று திரட்டும் வலிமை கொண்ட வீரன் நானல்ல என்பதை இவ்வனுபவங்கள் எனக்கு உணர்த்தின.
ஆயினும் என்ன வேதனையில் ஆழ்த்திய தனிமையை நான் ஒழித்துக் கட்ட வேண்டியிருந்தது எனவே காலத்தை
அனுசரித்தும், பழமையை நாடியும் என் உணர்ச்சிகளை மழுங் கடிக்க பலவித வழிமுறைகளைப் பயன்படுத்திப் பார்த்தேன்.

Page 11
6 போர்க்குரல்
அப்படியும் தனிமையும் துயரமும் அதிகரிக்கவே செய்தன. அவற்றை நினைவுபடுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. அவை என்னுடனேயே மறைந்து போக விரும்புகிறேன்; எனினும் எனது உணர்ச்சிகளை மழுங்கச்செய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை எனக் கூறமுடியாது-எனது இளமைக் கால உற்சாகமும் ஆர்வமும் மறைந்தன.
ஷெனாஷிங் விடுதியில் மூன்று அறைகள் உள்ளன. அங்கு வாழ்ந்த ஒரு பெண், முற்றத்திலிருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கேள்வி, அம்மரத்தின் கிளைகள் யாருமே ஏறமுடியாத உயரம் வளர்ந்திருந்தபோதி லும். அறைகள் வெறிச்சோடிக் கிடந்தன. சில ஆண்டுக்காலம் நான் இங்கு குடியிருந்து தொன்மைக்காலக் கல்வெட்டுகள் பலவற்றைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்க்க வருபவர் வெகுசிலரே. இந்தக் கல்வெட்டுகளில் அரசியல் பிரச்சினைகளோ சிக்கல்களோ இருக்கவில்லை. இவ் விதமே வாழ்க்கை அமைதியாகக் கழிந்துவிட வேண்டும் என்பதே எனக்கிருந்த அவா. கோடைஇரவுகளில் கொசுக்கள் மிக அதிகமாக இருக்கையில், நான் மரத்தடியில் அமர்ந்து விசிறியவாறு அடர்த்தியான இலைகளின்ஊடே தெரியும் ஆகாயச் சிதறல்களைப் பார்த்துக்கொண்டே இருப்பேன் . அப்போது மாலையில் வெளிக்கிளம்பும் கம்பளிப் பூச்சிகள் பணியில் விரைத்து என் கழுத்தின்மீது விழும்.
எப்போதாவது ஒருமுறை என்னுடன் பேசிச்செல்வதற் காக எனது பழைய நண்பர் சின் ஷின்-யீ வருவார். உடைந்த மேசையின் மேல் தனது தோற்பையை வைத்துவிட்டு நீண்ட அங்கியை அகற்றியவாறு, என் முன் அமர்வார். அவரைப் பார்த்தால், கடிக்க வந்த நாய்களைச் சமாளித்து ஓடிவந்த வேகத்தில் இதயத்துடிப்பு அதிகமானவரைப் போலத் தோன்றும். {
நான் பிரதி செய்த கல்வெட்டு எழுத்துக்களைப் பார்த்த பின் "இவற்றையெல்லாம் பிரதி செய்வதால் என்னலாபம்?” என்று ஒரு நாள் இரவு மிகுந்த அக்கரையுடன் வினவினர்.

முன்னுரை
“ஒரு வித லாபமுமில்லை.” "அப்படியானுல் பிரதி செய்வானேன்?" "குறிப்பிடத்தக்க காரணம் ஏதும் இல்லை” "நீங்கள் ஏதாவது எழுதலாமே?.” எனக்குப் புரிந்தது. அவர்கள் "புதிய இளைஞர்”* என்ற சஞ்சிகையை நடத்திவந்தார்கள்.ஆனல் அதற்கு இதுவரை எவ் வித சாதகமான அல்லது வேறுவிதமான எதிர்விளைவு இருந்த தாகத் தெரியவில்லை. அவர்களும் தனிமையில் தத்தளித்தார் களென எனக்குப் பட்டது. இருந்தும் நான் கூறினேன்: '
“ஒருபோதும் தகர்க்க முடியாத, பலகணியற்ற ஒரு இரும்பு வீட்டைக் கற்பனை செய்யுங்கள். அங்கு விரைவில் மூச்சுத்திணறிச் சாகப் போகின்ற பல மனிதர்கள் ஆழ்ந்து தூங்குகின்றனர். அங்கு அரைகுறைத் தூக்கத்திலுள்ள ஒரு சிலரை நீங்கள் பெரிய கூச்சலிட்டு எழுப்பினுல், தவிர்க்க முடியாத சாவின் வேதனையை அவர்கள் அனுபவிக்குமாறு செய்கின்றீர்கள். இதனுல் அவர்களுக்கு உதவி செய்வதாகக் கருதுகிறீர்களா?”
"ஆனல் சிலர் விழித்தெழுந்து விட்டதால்,அந்த இரும்பு வீட்டைத் தகர்க்கமுடியுமென்ற நம்பிக்கைக்கு இடமில்லை என்று நீங்கள் கருதமுடியாது.”
உண்மை. எனது சொந்தக் கொள்கை ஒரு புறமிருக்க நம்பிக்கையை என்னல் துடைத்தெறிய முடியவில்லை. ஏனெனில் எதிர் காலத்தில்தான் நம்பிக்கை இருக்கிறது. அத் தகைய எதிர்காலம் உண்டு என்ற அவரது உறுதியான கருத்தை எனது சான்றுகளைக் கொண்டு என்னல் மறுதளிக்க முடியவில்லை.எனவே நான் எழுதுவதற்குச் சம்மதமளித்தேன். அதன் பலனே எனது முதல் கதை ‘ஒரு பைத்தியக்காரனின்
* அக்காலத்துப் பண்பாட்டுப் புரட்சி இயக்கத்தில் செல்
வாக்கு செலுத்திய சஞ்சிகை.

Page 12
8 போர்க்குரல்
குறிப்புகள்". அதிலிருந்து, நண்பர்களின் வேண்டுகோளுக் கிணங்க, அவ்வப்போது சிறுகதைகள் எழுதிவந்த நான்,அவை பன்னிரண்டைத் தாண்டியவரை எழுதுவதை நிறுத்தவில்லை.
ஆயினும் எனது கடந்தகாலத் தனிமைத் துயரத்தை தான் முற்றிலும் மறந்து விடவில்லை . ஆதலால் தனிமையாக சவாரிசெய்யும் போர் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, சில சமயங்களில் அவர்களை நான் கூவி அழைப்பதுண்டு.இதன் நோக்கம்அவர்கள் மனச்சோர்வடையக்கூடாது என்பதுதான் எனது குரல் துணிச்சல் உடையதாகவோ, துக்கம் நிறைந்த தாகவோ, வெறுக்கத்தக்கதாகவோ, கேலிக்குரியதாகவோஎவ்விதம் இருப்பினும் நான் கவலைப்படப் போவதில்லை. ஆனல் அது ஒரு போர்க்குரலாக இருப்பதால் நான் எனது தளபதியின் ஆணைகளுக்கு அடிபணிந்தே தீரவேண்டும். அதனுல்தான் நான் பலமுறை விஷயங்களைக் குறிப்பால் உணர்த்துகிறேன். எடுத்துக்காட்டாக, "அருமருந்து” என்ற கதையில் சித்திரிக்கிற மகனின் கல்லறையில் மலர்வளையம் எங்கிருந்தோ வந்ததாக எழுதுகிறேன். "மறுநாள்” என்ற கதையில் நான்காவது ஷானின் மனைவி தனது சிறிய பையன் பற்றிய கனவுகள்ஏதும் காணவில்லை என்று நான் கூறுவதில்லை. ஏனெனில் எங்களது தலைவர்கள் அன்று தோல்விமனப்பான் மைக்கு எதிராக இருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் இளைஞனுக இருந்தபோது இன்பக்கனவுகள் கண்டு கொண்டிருந்ததைப் போலவே, இப்போது தாமும்அவற்றைக் கண்டு கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, நான் அனுபவித்த கசப்பான தனிமையைத் தொற்றவைக்க விரும்பவில்லை.
Tெனது சிறுகதைகள், கலைப்படைப்புகள் என்ற தரத் திலிருந்து மிகவும் தள்ளியிருப்பவை என்பது இப்போது தெளிவு.இருப்பினும் இன்னும் அவை கதைகள் என்று கருதப் படுவதையும், ஒரே நூலில் தொகுக்கப்படுவதையும் நான் பெரும்பேருகக் கருதுகின்றேன். இத்தகைய பேறு எனக்கு சங்கடத்தைத் தந்தாலும், "மனிதர் உலகில் அக்கதைகளுக்

முன்னுரை 9
கான வாசகர்கள் தற்போதைக்கேனும் இருக்கிருர்கள்’ என் பதை எண்ண மகிழ்ச்சி ஏற்படுகிறது.
மேற்குறித்த காரணங்களால் எனது " இச்சிறுகதைகள் ஒரே தொகுதியாக மீண்டும் அச்சிடப்படுவதால்"போர்க்குரல்" என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
டிசம்பர் 3, 1922 பீக்கிங்.

Page 13
ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள்
சகோதரர்கள் இருவர்-அவர்கள் பெயரை இங்கு குறிப்பிடத் தேவையில்லை-தான் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற காலத்தில் எனது நெருங்கிய நண்பர்களாக இருந் தனர். பல ஆண்டுகளாக 'அவர்களைப் பிரிந்து இருந்ததால் தொடர்பு விட்டுப்போயிருந்தது. சிறிது காலத்துக்கு முன் அவர்களில் ஒருவன் மிகவும் நோயுற்றிருப்பதாகக் கேள்வியுற நேர்ந்தது. எனது பழைய வீட்டிற்கு மீண்டும் செல்லவேண்டி இருந்ததால் போகும் வழியில் இறங்கி அவர்களைப் பார்த்துச் செல்ல எண்ணினேன். ஆயினும் அவர்களில் ஒருவனையே காணமுடிந்தது. நோயுற்றவன் தனக்கு இளையவன் எனக் கூறினன் இவன்.
"இத்தனைத் தொலைவிலிருந்து எங்களைக் காண வந்ததற் காகப் பாராட்டுகிறேன். ஆனல் சில நாட்களுக்கு முன் தம்பி குணமடைந்து அரசாங்க வேலை ஏற்க வேறு ஒரு ஊருக்குப் போய்விட்டான்” என்றன். பின்னர் சிரித்தவாறே தனது தம்பியின் நாட்குறிப்புகள் இரண்டை என்னிடம் தந்து இதைப் படித்தால் அவனது பழைய நோயின் போக்கைப் புரிந்து கொள்ளலாம் என்றும், நண்பன் ஒருவனிடம் இதனைக் காட்டுவதால் ஒன்றும் தவறில்லையே என்றும் கூறினன். அந்த நாட்குறிப்புகளை வாங்கிச் சென்று படித்துப்பார்த்ததில் இளையவன் மனப்பிராந்திக்குட்பட்டிருப்பதாகத் தெரிந்தது. எழுத்துக்கள் குழறுபட்டும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி யம் காணப்பட்டன. பல இடங்களில் கன்னபின்ன என

ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள் l வரையப்பட்டிருந்தது. தவிரவும் தேதிகள் எதுவும் குறிக்கப் படவில்லை. எனவே மையின் நிற, எழுத்து வேறுபாடுகளைக் கொண்டு இவை ஒரே சமயத்தில் எழுதப்படவில்லை எனப் புலனுகியது. சில பகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லா மலும் இல்லை. அவற்றில் சில பகுதிகளை மருத்துவ ஆய்விற்குப் பயன்படுத்துவதற்காக பிரதி செய்து கொண்டேன். குறிப்பு களில் இருந்த முரண்பாடுகள் எவற்றையும் நான் மாற்ற வில்லை. குறிப்பிட்ட பேர்வழிகள் அனைவரும் வெளியுலகில் பிரபலமற்ற நாட்டுப்புறத்தவர்களாக இருப்பினும் அவர் களது பெயரை மட்டும் மாற்றியிருக்கிறேன். தலைப்பைப் பொறுத்த வரையில் அவன் உடல் நலமடைந்து தேர்ந்தபின் அவனே சூட்டியதுதான், அதனை நான் மாற்றவில்லை.
இன்றிரவு நிலா மிகுந்த ஒளியுடன் காட்சியளிக்கின்றது
முப்பது ஆண்டுகளாக அதை நான் கவனித்ததில்லை.
எனவே அதை நோக்கியதும் என்றுமில்லாத உற்சாகம் தோன்றியது. கடந்த முப்பது ஆண்டுகளாக நான் இருளில் ஆழ்ந்திருந்ததை உணரத் தொடங்குகிறேன்; எனினும் தான் இப்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிடில் ஏன் அந்த செள வீட்டு நாய் என்னையே இரண்டுமு ை பார்க்க வேண்டும்.
எனது அச்சத்திற்குக் காரணம் இருக்கிறது.
இன் றிரவு நிலவே இல்லை. இது எதற்கோ நல்லதற் கில்லை எனத் தோன்றுகிறது. இன்று காலை எச்சரிக்கையுடன் வெளியே சென்ற பொழுது திரு. செளவின் பார்வையில் ஏதோ விசித்திரம் தென்பட்டது. என்னைக் கண்டு அவர் அச்சமுற்றது போலவும் அவர் என்னைக் கொல்ல நினைப்பது போலவும் தோன்றியது. அங்கிருந்த மற்ற ஏழெட்டுப் பேர் வழிகளும் என்னைக் குறித்தே குசுகுசுத்துப் பேசுவது போல

Page 14
12 போர்க்குரல்
ருந்தது. நான் அவர்களைப் பார்த்துவிடுவேனே என அவர்கள் அஞ்சுவதாகத் தோன்றியது. நான் கடந்து சென்ற பலரும் அப்படித்தானிருந்தனர். அவர்களில் குரூரமானவன் என்னைப் பார்த்து இளித்தான். அவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டார்கள் என்ற உணர்வு தோன்றவே தலை முதல் கால் வரை உதறலெடுத்தது.
எனினும் நான் அச்சமின்றி வழிநடந்து சென்றேன். என் முன் நின்ற குழந்தைகளின் கூட்டம்கூட என்னைப்பற்றிப் பேசுவதாகத் தோன்றியது. அவர்கள் கண்களின் பார்வை கூட செளவின் பார்வைபோல்தான் இருந்தது. அவர்களது முகங்களும் பயங்கரமாக வெளுத்திருந்தன. இச்சிறுவர்கள் என்மீது வஞ்சினம் கொண்டு இங்ங்ணம் நடந்து கொள்ளும் வகையில் நான் என்ன குற்றம் செய்தேன் என அறியேன். "என்ன குற்றம் செய்தேன் செல்லுங்கள்” என என்னையறி யாது கேட்கிறேன். ஆனல் அவர்களோ ஓடி விடுகின்றனர்.
என் மீது திரு. செள ஆத்திரப்படும்படி நான் என்ன கெடுதல் செய்தேன் என எனக்கே புரியவில்லை. தெருவில் நடமாடும் மக்கள்கூட என்மேல் ஏன் கோபம் கொள்ள வேண்டும்? ஏதோ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திரு. கு சியூவின்* பழங்கணக்குப் புத்தகத்தை மிதித்ததையும் அதனுல் அவர் என் மீது வெறுப்புற்ருர் என்பதையும் தவிர நான் எதுவும் குற்றம் புரிந்ததாக நினைவில்லை. திரு. செள விற்கு அவரைத் தெரியாது. இருந்தாலும் இச்சம்பவ* அவர் காதில் விழுந்து சாலையில் செல்லும் மனிதர்களுடன் சேர்ந்து கொண்டு சதியாலோசனை செய்து என்னைப்பழிவாங்க எண்ணு கிருர் போலும். இந்தச் சிறுவர்களுக்கு என்ன வந்தது? அந்தக் காலத்தில் இவர்கள் பிறக்கக்கூட இல்லையே? அகிங்ணமிருக்க அவர்கள் ஏன் இப்படி இன்று என்னைக் கண்டு அச்சப்படுவது
* குசியு என்பதற்கு சீன மொழியில் பழங்காலம்” என்று பொருள். சீனத்தில் நிலவிய நிலமான்ய ஒடுக்குமுறை யின் நெடுங்கால வரலாற்றையே லூசுன் குறிப்பிடுகிருர்,

ஒரு பைத்தியக்காரனின் குறிப்புக்கள் 13
போலவும் என்னைக் கொலை செய்ய விரும்புபவர்கள் போலவும் விதித்திரமாக நடந்துகொள்ள வேண்டும்? உண்மையில் எனக்கு இதெல்லாம் பயமாகவே இருக்கிறது.
ஆமாம், எனக்குப் புரிகிறது. இவர்கள் தங்கள் பெற்றேர் கள் மூலம் அதனைக் கேள்விப்பட்டிருக்கலாம்
எனக்கு இரவில் தூங்க முடிவதில்லை. ஒன்றைப் புரிந்து
கொள்வதாக இருந்தால் அதைப்பற்றி ஆழ்ந்து ஆராய வேண்டும்.
நீதிபதியின் கெடுபிடிக்கு உள்ளானவர்கள், உள்ளூர் பெருந்தன்க்காரர்களிடம் அறை வாங்கியவர்கள், காவலாளர் களால் அழைத்துச் செல்லப்பட்ட பெண்களின் கணவர்கள், கடன்காரர்களின் தொல்லைகளின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ள நேரிந்த பெற்றேர்களை, உடையவர்கள்இந்த மக்களிடம் நேற்று ஏற்பட்ட பீதியும், ஆத்திரமும் அச் சம்பவங்கள் நடந்த காலத்தே அவர்களிடம் ஏற்பட்டதைக் காட்டிலும் அதிகம்.
எல்லாவற்றையும்விட வேடிக்கை என்னவென்றல் தெரு வில் சென்ற பெண்ணெருத்தி தன் மகனை மொத்தி, "குட்டிப் பிசாசே! எனது ஆத்திரம்தீர உன்னை வாய்நிறைய கடித்துத் தின்றுவிடலாமென்று தோன்றுகிறது” என்று கூறியவாறு என்னையே நோக்கினள். நான் திடுக்குற்றுத்தடுமாறினேன். அப்போது அந்தக் குரூர முகம்படைத்த கோரப்பல் கொண்ட மக்கள் அனைவரும் வெறித்தனமாகச் சிரித்தனர். சென் பெரியவர் முன்னே வந்து என்னை வீட்டுக்கு இழுத்துச் சென்ருர். w
அவர் வீட்டுக்கு இழுத்துச் சென்ருர், வீட்டிலுள்ளவர் களும் என்ன முன்பின் அ றியாதவர்கள்போல காட்டிக் கொண்டார்கள். அவர்களின் கண்களும் மற்றவர்களது

Page 15
14 போர்க்குரல்
போலவே இருந்தன். நான் H4க்கும் அறைக்குள் நுழைந்த தும், ஏதோ கோழிக்குஞ்சையோ வத்தையோ அடைப்பது போல் வெளியில் கதவை அடைத்துவிட்டனர். இந்நிகழ்ச்சி என்னை மேலும் அதிர்ச்சியுறச் செய்தது.
சில நாட்களுக்கு முன் ‘ஓநாய்க்குட்டி கிராமத்திலிருந்து எங்கள் குத்தகைக்காரர் ஒருவர் விளைச்சல் பாதிப்பைப்பற்றி அறிவிப்பதற்காக வந்தவர் என் அண்ணனிடம் தங்கள் கிரா மத்தின் பெயர்போன போக்கிரி அடித்துக் கொல்லப்பட்டா னெனவும், சிலர் உடனே விவனது இதயத்தையும் Fቸሠräuuዞh எடுத்து எண்ணெயில் வறுத்துத் தங்கள் தைரியத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தின்முரிகள் எனவும் கூறினர். தான் இடைமறித்து விசாரித்ததும் குத்தகைக்காரரும் அண்ணனும் என்னை வெறித்துப் பார்த்தார்கள். அன்று அவர்களது கண்களின் தோற்றம், இன்று வெளியிலிருந்தவர் களைப்போலவே இருந்தன என்பதை உணர்ந்தேன்.
இதனை எண்ணும் பொழுது உச்சிமுதல் உள்ளங்கால்வரை உதறல் எடுக்கிறது.
மனிதர்களைத் தின்னும் இவர்கள் என்னையும் தின்பார்கள்.
'உன்னை வாய்நிறையக் கடித்துத் தின்பேன்" என்ற பென்னும், அந்தக் குரூர முகமும் கோரப் பற்களும் கொண்ட வர்களும், குத்தகைக் காரர் குறிப்பிட்ட கீதையும் நிச்சயமாக ஏதோ இரகசியச் சமிக்ஞையாகத் தோன்றுகின்றன. egyali களது பேச்சில் நஞ்சு தோய்ந்திருப்பதையும், அவர்களது திகைப்பில் கொடியவாள் முனைகளையும் காண்கின்றேன். அவர் களின் பற்கள் பளபளக்கின்றன: அனைவருமே மனிதனைத் தின்பவர்கள்.
நான் அப்படிஒன்றும் கெட்டவனுக இல்லாவிடினும் திரு. கு சியாவின் பழங்கணக்குப் புத்தகங்களை மிதித்த காவிலிருந்துநிலமை சரியில்ல. என்கு புரிந்து கொள்ளவே முடியாத இரகசியங்கள் அவர்களிடம் இருந்ததுபோல்

ஒரு ஸ்பத்தியக்காரனின் குறிப்புகள் 5
தோன்றியது. அவர்களுக்கு யார்மீதாவது கோபமாக இருந் தால் அவனை நடத்தைகெட்டவன் எனப்பழிகூறினர். எனக்கு ஞாபகம் வருகிறது என்அண்ணன் கட்டுரை வரையக் கற்றுக் கொடுத்த பொழுது, எப்பேர்ப்பட்ட நல்ல . மனி தனையும் நான் மறுதலேயாகக் கூறி கெட்டவனென்று எழுதினல் அவன் அக்கூற்றினை வரவேற்பான்; கெட்டவர் செய்கைக்கு நான் அங்கீகாரமளித்தால், அவன் சபாஷ்! உருப்படுவாய்"என்பான்.இவர்களது இரகசிய எண்ணங்களைத் தான் நான் எப்படி உணர முடியும்-குறிப்பாக அவர்கள் மக்களைத் தின்னத்தயாராக இருக்கும் நிலையில்!
இதனைப் புரியவேண்டுமானல் எல்லாமே தீர்க்கமாகக் கவனிக்கப்படல் வேண்டும். முற்காலத்தில் மக்கள் பெரும் பாலும் மனிதர்களைப் புசித்தார்கள் என்பதாக ஏதோ கொஞ்சம் ஞாபகத்திற்கு வருகிறது.இதனைத் தட்டிக்கொட்டி ஆய்ந்தேன். ஆயினும் எனது வரலாற்று ஏட்டுத் தேடலில் ஆண்டு வரிசைக்கிரமமாக இல்லாது ஒவ்வொரு பக்க முழுமையுமே “கண்ணியம் கட்டுப்பாடு”என்ற சொற்கள் கிறுக்கப்பட்டிருந்தன.எனக்குத் தூக்கம் வராத காரணத்தால் இவ்வரிகளினூடே தோன்றும் உட்பொருளை அறியும்வரை நள்ளிரவு நெருங்கும்வரை ஆழ்ந்து படித்தேன். புத்தகம் முழுவதுமே 'மனிதனைப்புசி” என்ற இந்த இரு சொற்களே நிரம்பியிருந்தன.
V காலையில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
ஒருதட்டில் மரக்கறிகளையும் மற்ருெரு தட்டில் அவித்த மீனையும் கொண்ட பகலுணவைச் சென் பெரியவர் கொணர்ந் தார். மீன்களின் கண்கள் வெளுத்து இறுகிப்போயிருந்தன. அவற்றின் வாயும் மனித இனத்தைத் தின்ன விரும்பும் அந்த மக்களின் வாய்போலவே தோன்றியது. சில கவளங்கள் உண்டதும் அந்த வழுவழுப்பான துண்டங்கள் மீன்துண்டரி களா அன்றி மனிதத்துண்டங்களா எனப்புரியவில்லை. அந்த அாகவருப்பான எண்ணத்தால் குமட்டல் எடுத்தது.

Page 16
6 Guntířákejováy
"சென் பெரியவரே, எனக்கு மூச்சுத் திணறுகிறது தோட்டத்தில் உலாவ விரும்புகிறேன் என அண்ணனிடம் கூறுங்கள்" என்றேன். பெரியவர் சென்னும் ஒன்றும் கூருது வெளியில் சென்று உடன் திரும்பி வெளிக் கதவைத் திறந்து aal Litri.
நான் அசையவில்லை.என்னை அவர்கள் நிச்சயமாகப் போக விடமாட்டார்கள் என்பதை உணர்ந்து, அவர்கள் என்னை எப்படி நடத்துகின்றர்கள் என்பதைக் கவனிக்கத்தொடங் கினேன். ஒருகிழவரை முன்னல் போகவிட்டு அண்ணன் மெது வாக நடந்து வந்தான். அவனது கண்களில் கொலைத்தோற்ற மிருந்தது; அதனை நான் ஏதும் கண்டுவிடுவேனே என எண்ணித் தலையைத் தாழ்த்திக்கொண்டான். தனது கண்ணுடிகளின் விளிம்பு வழியாகச் சாடையாக கவனித்தான்.
'இன்று நீ நல்ல குணமடைந்திருக்கிருய் போலிருக் கிறதே”என்ருன் அண்ணன்.
"ஆம்" என்றேன்.
*திரு. ஹோவை உன்னைப் பரிசோதிக்கும்படி கூறி அழைத்து வந்திருக்கிறேன்” என்ருன் அண்ணன்.
“சரி” என்றேன் நான். எனினும் நிச்சயமாக இக்கிழவன் மாறுதோற்றத்துடன் வந்துள்ள ஒரு கொலைகாரன் என்பது எனக்குத் தெரியும் எனது நாடிகளைப் பரீட்சிக்கின்ற சாக்கில் நான் எவ்வளவு கொழுத்திருக்கிறேன் என எடைபோடப் பார்க்கிருன். அதனுல் எனது மாமிசத்தில் அவனுக்கும் பங்கு கிடைக்குந்தானே! இருப்பினும் நான் அஞ்சவில்லை. நான் மணி தர்களைப் புசிக்காவிட்டாலும் அவர்களைவிடத் துணிச் சலுள்ளவன். அவர்கள் ' என்ன செய்வார்கள் என்பதைக் கவனிப்பதற்காக எனது இரு முஷ்டிகளையும் நீட்டினேன். கிழவன் கீழமர்ந்து கண்னை மூடிக்கொண்டு சிறிது யோசித்து விட்டுப்பின் கண்களைத்திறந்து "கற்பனைச் சவாரி விடாதே
சில நாட்களுக்கு ஓய்வு எடு,எல்லாம் சரியாகிவிடும்”என்ருன்.

ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள் in
* கற்பனைச் சவாரி விடாதே சிலநாட்களுக்கு ஓய்வு எடு நான் கொழுத்துவிட்ட்ால் இயல்பாகவே அவ்ர்கள் உண்பதற்கு அதிக உணவு கிடைக்கும். அதனல் எனக்குப் பயனென்றும் இல்லையே. அப்படியென்ருல் "எல்லாம் சரியா இது ஒப்புடி? இவர்களெல்லாம் மனித மாமிசத்தைப் புசிக்க விரும்பிய உள்ளெண்ணத்தை மறைத்துக் கொண்டு,துணிந்து உடன்செயலாற்ருது வாளாயிருப்பதை எண்ணி எனக்கு எக்க ஆக்கமாக சிரிப்புத்தான் தோன்றுகிறது. இந்த வேடிக்கையை நினைத்தால் ஒகோகோ எனப்பெரிதாகச் சிரிக்கவேண்டு மெனத் தோன்றுகிறது. இந்நகைப்பிலே அச்சமின்மையும் நேர்மையும் விளங்குவதை உணர்கிறேன். எனது துணிச் அலையும் நேர்மையையும் கண்ட கிழவனும் அண்ணனும் பீதியடைந்து வெளிறி விடுகின்றனர்.
தான் தைரியசாலியாக இருப்பதால் எனது துணிச்சக அவர்களும் கொஞ்சம் பெறுவதற்காக என்னைத்தின்ன மேலும் ஆவலாக இருக்கின்றனர். கிழவன், வாயிலைக் கடப்பதற்கு முன் அண்ணனிடம் தாழ்ந்த குரலில் "உடனே தின்று தீர்க்க வேண்டும்" என்றன். அண்ணனும் சம்மதத்துடன் தலையசைத் தான். ஒகோ, நீயும் இச்சதியில் உடந்தைதான? இந்தற் திடீர் கண்டுபிடிப்பு என்னைத் திடுக்குறச் செய்தாலும் நாள் எதிர்ப்ார்ப்பதைவிட ஒன்றும் அதிகமில்லை. என்னைத் தின்ப்தில் அண்ணனும் ஒரு பங்காளி .
அண்ணன் ஒரு மனித மாமிசம் தின்பவன் நான் மனித மாமிசத்தைத் தின்னும் ஒருவனின் தம்பி என்னை மற்றவர்களும் உண்ணலாம், இருப்பினும் நால் மனித மாமிசத்தைப் புசிப்பவன் ஒருவனின் தம்பி.
இச்சில நாட்களாக நான் மீண்டும் சிந்திக்கத் தொடங்கு இறேன். ஒருக்கால் இவன் மாற்றுருக்கொண்ட "கொக
காரணுக இல்லாது உண்மையான மருத்துவனுகவும் இருக்ம் Burr. - 2 . .

Page 17
18 そ போர்க்குரல்
ஒாம். இம்மருத்துவனின் மூதாதையரான, விஷிசென்° தன் நூலில் மனித மாமிசம் அவித்துச் சாப்பிடக்கூடியது எனக் கூறியிருக்கிருர், அப்படி இருக்கையில், மனித இறைச்சி உண் ணப்படுவதில்லை என்று இன்னும் எப்படிக் கூறமுடியும்?
அண்ணனைப் பொருத்தமட்டில் தான் ஐயமுறுவதற்குரிய போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. எனக்கு அவன் பாடம் போதித்த நாட்களில் அவன் வாயாலேயே "தின்பதற்காக மக்கள் தங்கள் பிள்ளைகளையும் பரிவர்த்தனை செய்து கொள் வார்கள்” எனக்கூறியிருக்கிருன். ஒருமுறை ஒரு கெட்டவணைக் குறிப்பிடும்பொழுது அவன் கொல்லப்படவேண்டியவன் எனக் குறிப்பிட்டதுடன், அவன் "சதையைதின்று அவன் தோக யுறித்துப் பாய்ாக விரித்துப் படுக்கவேண்டும்’ எனப் பழம் பாடல் வரியொன்றை எடுத்துக் கூறினன். அப்பொழுது சிறுவனக இருந்தேன். சிறிதுநேரம் என்இதயம் படபடத்தது. அன்று ஒருநாள் ஓநாய்க்குட்டி கிராமத்திய குத்தகைக்காரன் மனிதனின் இதயத்தையும் ஈரலையும் தின்பதைப்பற்றிக் குறிப் பிட்டபொழுது அண்ணன் வெறுமனே தலையசைத்தான். அவனும் எப்பொழுதும் கொடுமை உள்ளமுடையவன்தான், போலும். தின்பதற்காகப் பிள்ளைகளை பரிவர்த்தஜன செய்து கொள்ளலாமென்ருல் யாரையும் பரிவர்த்தனை செய்யலாம், யாரையும் தின்னலாந்தானே. முன்னெல்லாம் அவன் கூறும் விளக்கத்தை பேசாது கேட்பேன்.ஆனல் இப்பொழுது அவன் விளக்கம் தருகையில் அவனது உதட்டின் விளிம்பில் மனிதக் கொழுப்பு இருப்பதன்னியில் அவன் இதய முழுமையுமே மனிதர்களைத் தின்னும் எண்ணமே நிலவுவதாகத் தெரிகிறது. -
vi கன்னங்கரிய இருள். பகலோ இரனோ என்பதனை தான் அறியேன். செள வீட்டினரது நாய் மீண்டும் குரைக்கத் இதாடங்குகி {Dֆl, . * . . .
:*(518-1593 ஆண்டுகளில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற சீன மருத்துவர்) - -

ஒரு பைத்தியக்காரனின் 芭றிப்புகள் 9
சிங்கத்தின் சிற்றம், முயலின் கோழைத்தனம், நரியின் தந்திரம்.* V−
V
அவர்கள் போக்கு எனக்குப் புரிகிறது; ஒரேயடியாக அரையும் அவர்கள் கொல்ல விரும்புவதில்லை, துணிவது மில்லை. அதனல் விளையும் பலன்களை எண்ணிப் பார்த்திருச் கன்ாம். பதிலாக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என் உயிரை தானே மாய்த்துக்கொள்ளும்படித் தூண்டும் வகையில் சூழ்ச்சிபுரிகின்றர்கள். சில நாட்களாக தெருவில் நடமாடும் ஆண்பென் அனைவரின் நடத்தைகளையும்அண்ணன் நடத்தை யையும் கவனித்தால் வெளிப்படையாகப் புரிகி றது. மனிதன் தன் இடைக்கச்சையைக் கழற்றி உத்தரத்தில் கட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ளும் முறையையே அவர்கள் மிகவும் விரும்புகிறர்கள். அங்ங்ணம் நடந்தால் தாங்கள் கொலைக் குற்றத்திற்கு ஆளாகாமல் மனப்பூர்வமாக இறந்தவனை விருந்து சாப்பிடலாமென எண்ணுகின்றனர். அதனல்தான் அவர்கள் மகிழ்ச்சிப் பூரிப்பில் கெக்கலிக்கின்றனர்; அதே சமயம் அம்மனிதன் சாவை எண்ணி பயந்தோன்றி மெலிவடைந்தாலும் அதற்கும் அவர்கள் இசைவு தெரிவித் துத் தலையசைக்கிருர்கள். "...
செத்ததன் மாமிசத்தைத்தான் அவர்கள் உண்கிருசி. கள் பயங்கரத் தோற்றமும் கொடிய கண்களையும் கொண்டி கழுதைப்புலி, செத்தவிலங்குகளின் மாமிசத்தை மட்டுமே புசிப்பதாக ஞாபகம். பெரிய எலும்புத் துண்டங்களைக்கூட கக்கலாக்கிப் பொடி செய்து விழுங்கிவிடுமாம். இதைப்பற் றி மவதில்:எண்ணிவே உதறல்:ண்டுக்கிறது. கழுதைப்புலி ஒதாச் கட்கு உறவு இனம்; ஒநாய்கள் நாயினத்தைச் சார்ந்தவை:
ஆன்ஜெருநாள் இளவின் வீட்டிலுள்ள நாப் என்னப் மூெத்நோக்கிமித, அதுவும் இந்தச் சதியில் சம்ப்ந்தழ்
பட்வேர்க்ளது துண்வன்ப்ோலும், கிழவினிேன் கண்க்குக்

Page 18
20 போர்க்குரல்
ழ்ேநோக்கியவையாக இருந்தாலும், அவனின் உள்நோக்கத் தை நான் புரியாது ஏமாந்துவிடவில்லை.
மிகவும் வருத்தத்துக்குரியவன் என் அண்ணன்தான். அவனும் ஒரு ஆண்மகன் தானே. அவன் ஏன் அச்சப்பட வில்லை, மற்றவர்களுடன் அவனும் சேர்ந்துகொண்டு என்னைத் தின்ன ஏன் சதி செய்கிருன்? ஒருக்கால்பழக்க தோஷத்தால், தான், புரிவது பெருங்குற்றம் என்பதை உணரழுடியாது போயிற்ருே? அல்லது தவறு என்று உணர்ந்திருந்தும் அச் செயலைப் புரிவதற்காகத் தன் உள்ளத்தைக் கடுமையாக்கிக் கொண்டானே? ་་་་་་་་་་་་་་་ ༣ :
மனிதனைத் தின்பவர்களைச் சபிக்கும்பாேது என் அண்ணனுடன் துவங்குகிறேன். மனிதஉள்ன் விலக்கும்சங் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கும்போதும் அவனி" லிருந்தே தொடங்க விரும்புகிறேன்.
- V
உண்மையில் இத்தகைய சர்ச்சைகள் அனைத்தும் ஏற் கனவே அவர்களது கொள்கையில் ஊறியிருக்கவேண்டும், !
திடீரென எவனே வந்தான். அவனுக்கு இருப்து வயது இருக்கலாம். அவனது தோற்றத்தை நன்கு கவனிக்கவில்ல. அவன் முகமெல்லாம் சிரிப்பு. ஆனல் என்னைக்கண்டு தலையசைத்தபொழுது மட்டும் அது போலிப்புன்னகையாகத் தோன்றியது. நான் அவனைப் பார்த்து "மனித ஊனத் தின்பது நியாயமா?” எனக்கேட்டேன். s
அவன் சிரித்தவாறே "பஞ்சமில்லாத காலத் தில் ஒருவன். அப்படி மனித மாமிசத்தை உண்ணமுடியும்?" என்று பதில்
உடனே நான், அவனும் அந்தத் திருக்கட்டத்தைச, சேர்ந்தவனே என்பதை உணர்ந்தேன். இருப்பினும்,

கித் பைத்தியக்காரனின் கு றிப்புகள் 21
fail ச்சக வரவழைத்துக் கொண்டு, மீண்டும் என து
, "ansa,-AèurtuiDrr?"
"இத்தகைய கேள்விகளையெல்லாம் கேட்பதன் காரணம் என்ன? நீதான்.தமாலிஷ விரும்புகிருயா. இன்று எல்லாம் நன்முக இருக்கிறது."
*எல்லாம் நன்முக இருக்கிறது. நிலவும் நன்முக ஒளிர் கிறது. எனினும் நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன். அது Arrauiomr?” 文
く。 அவன் தடுமாறியதுபோல் தோன்றினன் 'തൂ."
எனப் பிதற்றினன். m
"൮ அப்படியானுல் ஏன் இன்னும் அப்படிச் செப்
கின்றர்கள்?
எதைப் பற்றிப் பேசுகிருப்?”
"நான் எதைப்பற்றிப் பேசுகிறேன? ஓநாய்க்குட்டிக் கிராம்ப் பகுதிகளில் இந்நாட்களில் மனிதர்களைத் தின்கிருர் களாம். புதிய சிவப்பு மையினல் புத்தகங்களில் எல்லாம் எழுதியிருக்கிறதே.*
அவனது தோற்றமே மாறி வெளிறியது. என்னைத் துரு விப் பார்த்தவாறு அப்படி இருக்கலாம். எக்காலமும் அப்படித்தான் இருந்திருக்கிறது.” என்ருன்.
எப்பொழுதும் இருந்திருக்கிறது என்பதால் நியாயமாகி «ስG9uወm?”
"இத்தகைய விஷயங்கள் குறித்து உன்னுடன் பேச மறுக் திறேன். எப்படியானலும் இவை குறித்துப் பேசக் கூடாது.
ய்ார் இது குறித்துப் பேசினுலும் தவறுதான்”
நான் எகிறிதின்று என் கண்களை அகல விரித்தேன். ஆனல் அம்மனிதனே மறைந்தேவிட்டான். வியர்வையில்

Page 19
22 རྐན་་་་་་་་་་་་་་་་་་ போர்க்குரல் தனேந்துவிட்டேன். அவன் அண்ணனைவிட வயதில் குறைத் தவன். இருந்தும், அவனும் இவர்களுக்கு உடந்தைதான். அவனும் அவனது பெற்றேர்கள்ால் கற்பிக்கப்பட்டவகைத் தான் இருக்கவேண்டும். அவனும் தன் மகனுக்கும் கற்பித் திருப்பானே என அஞ்சுகிறேன. அதனல்தான் குழந்தைகள்
கூட என்னைக் கொடூரமாகப் பார்க்கிருர்கள்.
X
மனிதர்களை உண்ணவேண்டும். அதேசமயம் தங்களே யாரேனும் தின்றுவிடுவார்களோ என அவர்களிடையேயும் அச்சம். அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் ஆழ்ந்த சந்தேகம் வேறே.
இத்தகைய எண்ணச் சுமைகளையெல்லாம் இரிைகள் ஒழித்துவிட்டு தன்முக வேலைசெய்து நடந்து, உண்டு உறங்கி நிம்மதியாக வாழ்ந்தால் வாழ்க்கை எவ்வளவு செளக்கியமாக இருக்கும்?இந்த ஒரே வழியைத்தான்.அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனலும் தந்தையர் மக்கள், கணவன் மனைவியர், சகோதரர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பரம் பரை எதிரிகள், ஒருவருக் கொருவர் அறிமுகமில்லாதவர்கள் *ன்ன இந்தச் சதிக்கூட்டத்தில் சேர்ந்த அனைவருமே ஒருவருக் கொருவர் பயங்காட்டி, இம்முறையைக் கைக்கொள்வதைத்
தடுத்து விடுகிறர்கள்.
Χ
இன்று அதிகாலை அண்ணனைக் காணச் சென்ே றன்.அவன் வீட்டு பெட்டகசாலைக்கு வெளியேவானத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். நான் அவன் பின் சென்று, க்வனுக்கும் கதவுக்குமிடையே நின்றுகொண்டு என்றும் மில்லாத அமைதியுடனும் மரியாதையுடனும் பேசினேன்: '
*அண்ணு, உன்னிடம் சில விஷயங்கள் ப்ேசவேண்டும்."

ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள் 笃3
அக்ரி:என்ன அது? என்று:உடனே என்னை நோக்கித் தகலானத்தவாறு கேட்டான்.
இன்ன விஷயந்தான். இருந்தாலும் சொல்லுவதற்குத் தயக்கமாக இருக்கிறது. அண்ணு ஆதிகால மனிதர்கள் அனை வரும் துவக்கத்தில் மனித மாமிசம் தின்றிருக்கக் கூடும். பின்னல் அவர்கள் கண்ணுேட்டம் மாறியதன் காரணமாக சிலர் இப்பழக்கத்தை நிறுத்தினர். அவர்கள் நல்லவர்கள் ஆக முயற்சி செய்ததால் நல்ல மனிதர்களாக, உண்மை மனிதர் க்ளாக ஆகிவிட்டார்களோ? ஆனலும் சிலர் இன்னும் மனித 'மாமிசம் உண்கிருர்கள்-மனித மாமிசம் தினுைம் மிருகன் கனப் போலவே சிலர் மீன்களாகவும், பறவைகளாகவும், குரங்குகளாகவும் இறுதியில் மனிதர்களாகவும் மாறியுள் ளனர். சிலர் நல்லவர்கள் ஆக முயற்சி செய்யாமல் இன்னும் மனித மாமிசம் தின்னும் மிருகங்களாகவே இருக்கிருர்கள். மனிதனைத் தின்னும் கூட்டம் தின்னமல் இருப்பவர்களைப் போர்க்கும்போது எவ்வளவு வெட்கப்பட வேண்டும் குரங்கு "களுக்கு முன் மனிதமாமிசம் தின்னும் மிருகங்கள் வெட்கப்படு :வதைக் காட்டிலும் இது அதிகமாக இருக்கவேண்டும். -
"பழைய கால வரலாற்றில் யியா தன் மகனைசி சமைத்து இயே, செளக ஆகியோரிகட்குப் படைத்ததாகக் குறிக்கப் பட்டிருக்கிறதல்லவா? ஆயினும் சொர்க்கமும் உலகமும் பான் குவால் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து ஓநாய்க்குட்டி கிராம மனிதன்வரை, மனிதர்கள் ஒருவரை ஒருவர் புசித்துக் கொண்டுதானே இருக்கிறர்கள்? யியாவின் மகன் காலத்தி
பழங்காலப் பதிவேடுகளில் சித்திரிக்கப்படும் ஒருநிகழ்ச்சி: பியா என்பவன் தன் மகனைச் சமைத்து சி நாட்டு பிரபு ஹுவான் என்பவனுக்குப் படைத்தான். ஹவான் பிரபு கி.மு 685 முதல் 643 வரை நாட்டை ஆண்டவன். சியே என்பவனும் செள என்பவனும் இதற்கு முந்தியகாலத்தில் இருந்த கொடுங்கோலர்கள். இங்கு இம்மூவரையும் குறிப் பிடுவதில் பைத்தியக்காரன் ஒரு தவறு செய்துள்ளான்.

Page 20
24 m போரிக்குரல்
விருந்து ைவிலின்சு காலம் வரை இதுநிகழ்ந்து கொண்டு தானே இருக்கிறது? ஸ்" வி-லின் காலந்தொட்டு ஓநாய்க் குட்டி கிராமத்தில் பிடிபட்ட மனிதன் காலம்வரை இது நடந்து கொண்டுதானே வருகிறது? சென்ற ஆண்டு ஒரு குற்றவாளிக்குப் பட்டணத்தில் மரணதண்டனை அளித்தார் கள். அவனது குருதியில் ரொட்டித்துண்டு ஒன்றை ஊற வைத்து ஒரு காசநோயாளி உறிஞ்சினன். ** :
"இவர்கள் என்னையும் தின்னப் பார்க்கிறர்கள். உன்னல் மட்டும் தனிப்பட்டு ஒன்றும் செய்ய முடியாது, இருப்பனும் இதில் நீயேன் சேரவேண்டும்? இந்த மனித மாமிசம் திணிை கள் எதையும் செய்யத் துணிவார்கள். இன்று என்னைத் தின்ருல் நாளை உன்னை. ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற கூட்டத்தினரை உண்பார்கள். ஆனல் உன் வழிமுறை களை உடனே சிறிது மாற்றினல் அனைவருக்கும் அமைதி கிட்டும். தொன்று தொட்டு இப்பழக்கம் வழக்கமாக இருந் தாலும் நாம் நல்லவர்களாகச் சீர்திருந்தி சிறப்பு முயற்சி எடுத்து இதை நிறுத்த வேண்டுமென்று கண்டிப்பாக கூறினு லென்ன? அண்ணு, நிச்சயமாக உன்னுல் இப்படிக் கூறமுடியுற் தானே? அன்று குத்தகைக்காரர் குத்தகையைக் குறைத்துக் கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டாயல்லவா?”
முதலில் இகழ்ச்சியாகப் புன்னகைத்தான். உடனே அவன் கண்களில் கொலைத்தோற்றம் எழுந்தது. அவர்களின் இரகசி
க ஸ்வி-வின் என்பவர் சிங் வம்சத்தின் (கிபி 1644-1911) இறுதியில் வாழ்ந்த ஒரு புரட்சியாளர். மஞ்சுமிைச் அதிகாரியைக் கொன்றதற்காக இவர் 1907ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவரது இருதய மும் ஈரலும் உண்ணப்பட்டன. * தமனித இரத்தம் காகநோயைக் குளப்படுத்தும் ஈன்ற ஒரு ஐதிகம் நிலவியது. இதன் காரணமாக, ஒரு சுற்றவாளியின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதும் தண்டனை நிறைவேற்றுபவன் இரத்தத்தில் நனைக்கப் பட்ட அவித்த ரொட்டியை விற்ப்ான்.

ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள் 25
யத்தைதான் வெளியிட்டதும் அவன் முகம் வெளிறிவிட்டது. வாசலுக்கு சிவளியே திரு செளவும் அவரது நாயும் உள்ளிட்ட ஒரு மனிதக்கூட்டம் நின்று தலையை நீட்டிப் பார்த்திக் கொண்டிருந்தது. அவர்களில் எல்லோரது முகத்தையும் புர்க்க முடியவில்லை. முகத்தைச் சிலர் துணியால் மூடி ந்ேதிருந்தனர். சிலர் தங்கள் சிரிப்பை அடக்கிக கொண்டு விெளிறிப்போய் குரூரமாக காட்சி தந்தார்கள். இவர்கள&ன *கருமே மனிதனைத் தின்னும் கூட்டத்தைச் சேர்ந்தவ்ர்கள் ஆற்ான் என்பதை நான் அறிகிறேன். ஆயினும் அவர்கள் அண் கருமே ஒரேவித எண்ணங் கொண்டவர்களல்ல என்பதையும் உணர்கின்ே. சிலர் பரம்பரையாகத் தோன்றிய பழக்க வழக்கத்துக்கு உட்பட்டவர்களாதலால் மனிதன் தின்னப் படுபவனே என எண்ணினர்கள். சிலர், அப்படி மனிதர்களைத் தின்பது சரியல்ல என உணர்ந்தார்கள். இருந்தாலும், அசி செயலைச் செய்து கொண்டிருந்தார்கள். அத்தகையோர் எங்கே மக்கள் தங்கள் உள்ளக்கிடக்கையை அறிந்து கொன் கார்களோ என அஞ்சிஞர்கள். அதனுல்தான் நான் எதுவும் குறைகூறினுல் கோபமடைகின்றர்கள். இருப்பினும், அவரி கள் நச்சுத்தனமான, பல் வெளியே தெரியாதவாறு புன்ன கையைக் காட்டுகிருர்கள்.
திடீரென அண்ணன் வேறியுடன் உரத்தகுரலில் கத்தி முன்:"எல்லோரும் வெளிச்செல்லுங்கள் பைத்தியக்காரனைப் பார்ப்பதும் ஒரு வேடிக்கையா?”
அவர்களது சூழ்ச்சியின் ஒரு பகுதியை உணர்ந்தேன். தாங்கள் வகுத்த திட்டத்தை அவர்கள் சிறிதும் மாற்றிக் கொள்ள விரும்புவதாகத் தெரியவில்லை. எனக்குப் பைத்தியக்காரப்பட்டம் கட்டிவிட்டார்கள்.பின்னல் என்கன்த தின்ன வேண்டியிருந்தால் எவ்விதத் தொல்லையுமில்லை பல்லவா? யாரும் குறை கூறுவதற்குப்பதில் நன்றிதுல்லவா செலுத்துவார்கள். எங்கள் குத்தகைக்காரர் குறிப்பிட்ட போக்கிரி ஒருவனை கிராமமக்கள் தின்றதாகக் கூறப்படும் சம்பவமும் இத்தகைய ஒரு சாக்குப் போக்குத்தான். இவை யெல்லாம் வழிவழியாக வந்த தந்திரமுறை.

Page 21
போர்க்குதற்
கோபத்துடன் பெரியவர்சென்னும் வந்தார்.இருப்பினும் என்வாயை அவர்களால் அடக்க முடியவில்லை. அவர்களுக்குச் சொல்லவேண்டியவற்றைச் சொல்வியே விட்டேன்.
"நீங்கள் மாறவேண்டும். அதுவும் மனப்பூர்வமாக மாற வேண்டும். இனிமேல் எதிர்காலத்தில் இவ்வுலகத்தில் மனித மாமிசத்தைத் தின்பவர்கட்கு இடமில்லை" என்றேன்.
*நீங்கள் ம்ாழுவிட்டால், நீங்கள் எல்லாரும் ஒருளி மற்ருெருவரால் உண்ணப்படுவீர்கள். ஏராளமானேர் பிறந்த போதிலும் அவர்கள் உண்மை மனிதரால் துடைத்தெறியப் படுவார்கள்-வேட்டைக்காரர்களால் ஒநாய்கள் கொல்லப் படுவதைப்போல; காட்டுவிலங்குகளைப் போல!”
பெரியவர் சென் எல்லாரையும் விரட்டி அனுப்பினர்" என் அண்ணன் போய்விட்டான். எனது அறைக்குத் திரும்பிச்செல்லுமாறு பெரியவர் சென் எனக்கு அறிவுரை கூறினர். அறை கன்னங்கரேலென்று இருண்டிருநதது. உத்தரங்களும் என் தலைக்குமேல் குலுங்கின. சிறிது நேரம் குலுங்கியதற்குப் பிறகு அவை பெரிதாயின. அவை என் தல் மீது மொத்தமாக விழுந்தன.
பளு அதிகமாக இருந்ததால் என்னல் நகரமுடியவில்ல். நான் சாகவேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம். பகு போலியானது என்பது எனக்குத்தெரியும். எனவேதான் தான் வியர்வை கொட்டக்கொட்ட என்னை விடுவித்துச் கொண்டேன். ஆனல் நான் இதைச் சொல்லவ்ேண்டி யிருந்தது. "நீங்கள் உடனடியாக மாறவேண்டும். மனப் பூர்வமாக மாறவேண்டும். எதிர்காலத்தில் மனிதனத் 'தின்பவர்களுக்கு உலகில் இடமே இல்லை என்பதை நீங்கள்
தெரிந்து கொள்ளவேண்டும்.
Χ பகலவனின் ஒளிவிழவில்லை. கதவு திறக்கப்படவில்ல். நாளேக்கு இருவேளை சாப்பாடு. . . . .

ஒரு புைத்தியக்காரனின் (35 றிப்புகள்
உணவுண்ணப் பயன்படுத்தும் குச்சிகளைக் கையிலெடுத் அண்ணன் நினைப்பு தோன்றியது. தங்கை இறந்தது இக்கு வந்தது. எல்லாம் அவனல்தான். அவளுக்கு 鑿豫பாழுது ஐந்தே வயதுதான். அவளது அழகிய, பரிதாபத் தாற்றம் என் கண்கள் முன்னே நிற்கிறது. அம்மா கண்ணீர் வீடுேக்கொண்டிருந்தாள். அவளை அழாதே என அண்ணன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தான். அக்குழந்தையை "அவனே ஒருக்கால் தின்றிருக்கலாம். அதனல் ஏற்பட்ட குறைவுணர்வால் அவள் அழுகையைக் காண அவனுக்கு வெட்கம் தோன்றியிருக்க வேண்டும் ஏதாவது வெட்க மான்
உணர்வு அவனுக்கு இருந்திருந்தால்.
தங்கையை அண்ணன்தான் தின்முன். அம்மா இதை வணர்ந்தாளோ என்னவோ தெரியாது. -
அம்மாவுக்கும் தெரியாமலிருந்திருக்காது. ஒப்பாரியில் அவள் அதையெல்லாம் அப்பட்டமாகக் கூறவில்லை. அதை யெல்லாம் எதற்காகக் கூறவேண்டும் என அவள் எண்ணி யிருக்கலாம். எனக்கு நான்கு அல்லது ஐந்து வயதாக இருந்த சமயம் அது. குளிர்ச்சியான உள்ளறையில் அமர்ந்திருத்த பொழுது என் அண்ணன் கூறியவை இப்பொழுது நினைவுக்கு வருகின்றன.ஒருவனிடம் பெற்றேர் நோயுற்றிருந்தால் அவன் மகன் தனது சதையில் சிறிதைச் சமைத்துக் கொடுத்துதான் சிறந்த மகன் என்பதை நிலைநாட்டவேண்டும் என்ருன். அம்மாவும் இக்கூற்றுக்கு மறுப்புக் கூறவில்லை. ஒரு துண்டைத் தின்ருல் முழுமையும் தின்னத் தடையென்ன? இப்படியிருக்க ஒப்புக்கு ஒப்பாரிவைப்பதை எண்ணினல் என் இதயக் குருதியே பீரிடுகிறது. இதுதான் இதில் உள்ள அசாதாரண மான விஷயம்
Χ இதை நினைக்கவே சகிக்கவில்லை.
நாலாயிரம் ஆண்டுகள் மனிதனின் மாமிசத்தைத்தின்று வளர்ந்தவர்கள் வாழ்ந்த இடத்திலே இத்தனை ஆண்டு காை

Page 22
? 'C' ); €l unTrifâespfdo
மோக நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதை இப்பொழுது தான் என்னல் உணரமுடிகிறது. தங்கை இறந்த காலத்தில் வீட்டுப் பொறுப்பை அண்ணன் அப்பொழுதுதான் ஏற்றிருந் தான். யார் கண்டார்கள், அவளது மாமிசத்தையும் எங்கள் சாப்பாட்டில் எங்களுக்குத் தெரியாமலே அவன் கலந்திருக் - asamrith. М
தங்கையின் மாமிசத்துண்டங்கள் பலவற்றையும் நான் கூட அறியாமல் உண்டிருக்கலாம். அடுத்த கட்டம் என்னுடையது தான்.
நாலாயிரமாண்டு மனித மாமிசம் உண்ட வரலாற்றுக்குப் வின்-முதலில் இதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது இருந் திருந்தாலும்-இத்தகைய மனிதர்களிடம் என்னை யொத்த ஒருவன் முகங்கொடுத்து எப்படி உறவாடுவது?
X s
மனிதர்களைத் தின்றிராத குழந்தைகள் இன்னும் எஞ்சி விருக்கலாம்; அக்குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.
grupé 1918.

•: ச்சென்னிலுள்ள மதுக்கடைகளின் அமைப்பு முறைக்ேச அன்ர்தி. தெருவைப் பார்த்ததாக நேர்கோணத்தில் மேடை இருக்கும். அதன்மேல் வெந்நீர் தயாராக இருக்கும். அதில் மதுரசத்தைச் சூடாக்கிக்கொள்வார்கள்.மத்தியானமும் மாக தேரங்களிலும் வேலைமுடிந்து திரும்புகையில் மக்கள் ஒரு கோப்பை மதுரசம் வாங்குவார்கள். இருபதாண்டுகளுக்கு முன் அதன் விலை நான்கு செப்புக் காசுகள்; இப்பொழுதோ, பத்து செப்புக் காசுகள்.மேடையின் பின்னலிருந்து சூடாகக் சாப்பிட்டு ஓய்வுபெறுவார்கள். மேலுமொரு காசுக்கு ஒரு தட்டு உப்பிட்ட மூங்கில் குருத்தோ அல்லது கருஞ்சிரக ஆாசனை யூட்டப்பட்ட மொச்சையோ வாங்கி மதுரசத்துடன், உண்பார்கள். கூடுதல் கொடுத்தால் இறைச்சி கிடைக்கும்: ஆயினும் இத்தகைய பெரும்பான்மை வாடிக்கைக்காரர்க்ள் குட்டை அங்கி அணியுய இனத்தவர்களே. சிலரே இவற்றை வாங்கச் சக்திபடைத்தவர்கள்.நீண்ட அங்கிஅணிந்தவர்களோ அடுத்துள்ள அறையில் மதுரசத்தையும் உணவையும் கட்டளையிட்டுப் பெற்று சாவகாசமாகக் குடிப்பதும் உண்பது மாக இருப்பார்கள். .
பட்டண வாயிலினருகிலுள்ள மதுக்கடையில் நான டணியாளனகப் பன்னிரண்டாவது வயதில் சேர்ந்தேன். நீண்ட அங்கி அணிந்தவர்கட்குச் சேவைசெய்யுமளவு போது மான புத்திசாலித்தனம் உள்ளவன்'போன்று நான் தோற்ற டிவிக்கவில்லை என்று மதுக்கடைக்காரன் கூறினன். எனவே முன்னலுள்ள அறையில் பணிசெய்தேன். குட்டை ஆக்கி அணிபவர்கள் பலர் திருப்தியடைந்தாலும் அவர்களில் சினி, தொல்லை கொடுப்பவர்களாக இருக்கத்தான் செய்தனர். பாற்திரத்தில் மஞ்சள் மதுரசத்தை ஊற்றிதேடிேல்

Page 23
30 போர்க்குரல்
பொழுது எங்கு தண்ணீர் கலக்கப்பட்டுவிடுகிறதோ என்ற ஐயத்தில், அதனை தாங்களே பரிசீலனை செய்யவேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களின் கூரிய பார்வையில் தண்ணீர் கலப்பது சிரமம்; எனவே சிலநாள் கழித்து நான் இத்தொழிலுக்குத் தகுதியிலலை என முடிவு கட்டிவிட்டான் என் எசமானன். நல்ல வேளையாக முக்கிய மான ஒருவர் என்னைச் சிபாரிசு செய்திருந்ததால் என்னை வேலையைவிட்டு நீக்கவில்லை. பதிலாக மதுரசத்தைச் சூடாக் கும் சொரத்தில்லாத பணிபுரிய நேரிட்டது.
அதற்குப்பின் நான் நாள் முழுவதும் மேடைக்குப் பின் விருந்து எனது பணியைச் செய்தேன். இந்தவேலையை நான் ஒழுங்காகச் செய்தாலும் அது சலிப்பூட்டுவதாகவும் பயனற்ற த்ாகவும் எனக்குப்பட்டது. எங்கள் எஜமானே குரூரப்பாசி வையுடையவன். வாடிக்கைக்காரர்களோ சிடுச்டுப்புள்ளவர் கள். எனவே நாங்கள் உற்சாகமாக இருப்பதற்கில்லை. கும் இ-சி குடிக்கும் விடுதிக்கு வரும்பொழுதுதான் நான் சிறிது சிரித்து மகிழவேன். அதனல்தான் அவரை இன்றும் ஞாபகம் வைத்திருக்கிறேன்.
நீண்ட அங்கி அணிந்தவர்களில் குங் மட்டும்தான் நின்று கொண்டு மதுரசம் குடிப்பவர். தடித்த, நெடிய உடல் உடையவர் அவரது முகத்தின் மடிப்புகளுக்கிடையே தழுக் புகள் காட்சியளிக்கும். அவர் அங்குமிங்குமாக நரைமுடி பரவிய நீண்டபரட்டைத்தாடி வைத்திருந்தார். அவர் நீண்ட அங்கி அணிந்திருந்தாலும் அது அழுக்காகவும் கிழிசலுடைய தாகவும் இருந்தது. பத்து ஆண்டுகள்ாகஅதுதண்ணீரையோ தையலையோ கண்டிருக்காது. பண்டிதச் சொற்கள் அதிகமாக உபய்ோகிக்காததால் அவர் சொல்லும் வார்த்தைகளுக்கு அர்த்தர் புரிவதில்ல்ை. குங் என்ற இயற்பெயருடைய அவரை சிறுவர் புத்தகங்களில் உள்ள குங் இ-சி என்ற பட்ப் ப்ெயரிலேய்ே அழைக்கத் தொடங்கினர்கள். அவர் மதுக்கட்ை வந்தல்ட்ந்த்தும் எல்லாரும் அவரை நோக்கி நகைக்கக் ಘಳಿ: பார்ாஸ்து கூம்பிட்டு, -

gê 3
ஆரன்ன குங் இசி,” உங்கள் முகத்தில் புதுக்காயங்கள் தெரிகின்றனவே” எனக் கிண்டல் செய்வார்கள். ". . . . 'ஐக்கிண்டல்களை லட்சியம் செய்யாமல் gi Guaவரு ல் வந்து இரண்டு கோப்பைகள் சூடேறிய மதுரசமும் கீஞ்ஞ்சீரக வாசனையூட்டிய மொச்சையும் கொண்டு வரும் படிக்கூறுவார். இவற்றுக்கு ஒன்பது செப்புக்காசுகள் கொடுப் hர். சிலசமயங்களில் சிலர் வேண்டுமென்றே உரத்த குரலில் றுேவர்கள்: r '
'மறுபடியும் திருட்டில் இறங்கி விட்டாயா"
காரணமில்லாமல் ஒரு மனிதனின் நல்ெைபயரை ஏன் கெடுக்கிறீர்கள்?’கண்களே அகலவிரித்தவாறு அவர்கேட்பார். 'பூ, மகா நல்ல பெயர் தவறிப்போப்விட்டது.முந்தா நாள் உன்னை ஹோ வீட்டில் புத்தகம் திருடியதற்காகக் கட்டிவைத்து உதைத்ததை நான் என் கண்ணுல் ssäGLGaar.”
குங் முகத்தில் சிவப்பேறும்; அவரது நெற்றி தரம்பு புஓடக்கும் எதிர்ப்பைத்தெரிவிப்பார்:"புத்தகம் எடுப்பதைத் திருட்டாகக் கருதமுடியாது. புத்தகத்தை எடுப்பது அறிவாளி களின் செயல்; அதைத் திருட்டு என்று கூறமுடியுமா” அதைத் தொடர்ந்து கன்பூசியஸ் மூதுரையான "அறிவாளி வறுமையிலும் செம்மையாக இருப்பான்” என்பதையும் மேலும் சில மேற்கோள்களையும் எடுத்துக் கூறுவார். கடை யிலுள்ள அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்வார்கள். குங்இ-சி இலக்கியங்கள் படித்ததுண்டு. எனினும் அரசுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனவும் பலர் வாய்மொழி, முல்ம் அறிந்தேன். வாழ்க்கையை நடத்த முடியாமல் அவர். அவர ஏழையாகி முடிவில் பிச்சைக்காரநிலைக்கே வரவேண்டி : தது. நல்லவேண் அவர் கையெழுத்து நன்ருயிருக்கும்) ஏதோ நகல் எழுதிச் சம்பாதித்துப் பிழைத்துக் கொள்வார்.4 அஞ்லும் அவரிடம் சில குறைகள் உண்டு. குடிப்பதும், சேம் பலும். சில நாட்களில் புத்தகங்கள், காகிதம்,எழுதுகேல்ஸ்

Page 24
3. போர்க்குர்ல்
மை அனைத்தையும் எடுத்துக்கொண்டு அநேகமாகக் காஞரம்ல் போய்விடுவார். இது அடிக்கடி நடந்ததால் பிரதி செய்யும் வேலையை யாரும் கொடுப்பதில்லை. வேறு வழியில்லாததால் அவர் அவ்வப்போது இத்தகைய சில்லறைத் திருட்டுகள் புரிய நேரும். மதுக்கடையில அவர் நடந்துகொள்ளும் விதமே மிகவும் சீரியதாக இருக்கும். கடன் தீர்க்காமலிருப்பதில்.ை கையில் பணம் இலலாதபொழுது பாக்கிவைப்பவர்ககால் குறிப்புப் பலகையில் எழுதிவைப்போம். எப்படியும் 9s மாதத்துக்குள் பாக்கியைத் தீர்த்து விடுவாராதலால் மீண்டும் பலகையிலிருந்து அவர் பெயரை அழித்துவிடுவோம்.
: . . . . .
அரைக்கோப்பை மதுவை உண்டதும் அவர் தன்னில் வடைவார். அந்நேரத்தில் யாராவது கேட்பார்கள்; "குறி இ-சி. உங்களுக்கு உண்மையிலேயே படிக்கத் தெரியுமா?" த்ெதகைய கேள்விக்ள் அவமானப்படுத்துவதாகக் கருதி மெளனமாக இருந்தால், அவர்கள் அவர்கள் ம்ேலும், தொடர்ந்து,"அதென்ன நீங்கள் அதிகாரிகளுக்கான பரீட்சை, யில் கீழ்ப்பிரிவில்கூடத் தேறவில்லையே?’ என்பார்கள்,
s
அதைக் கேட்டதும் குங்கிற்கு மனக்கஷ்டமாகவிருக்கும், முகம் வெளுத்து வாய் அசையும். ஆனல் அது மற்றவர்" களுக்குப் புரியாத மூதுரைகள் எதையாவது வழங்கும். எல்' லோரும் மீண்டும் ஈலுங்கச் சிரிப்பார்கள் மதுக்க.ை முழுவதுமே குதூகலத்தில் மூழ்கும். ... . .
அம்மாதிரி சந்தர்ப்பங்களில் எஜமானனின் திட்டு கிடைக்காதாகையால் நானும் சேர்ந்து சிரிப்பேன். எஜமானனே சிரிப்பை வரவழைப்பதற்காக இத்தகைய கேள்விகளைக் கேட்பதும் உண்டு. அவர்களிடம் பேசுவதில், பயனில்லை என்று கண்ட குங், சிறுவர்களாகிய எங்களிடம் பேச்சுக்கொடுப்பார். ஒரு நாள் என்னைப் பார்த்து," நீ பள்திற். கம்போயிருக்கிருயா?” என்று கேட்டார். "ஆம்" என்று கயசைத்தேன். "சரி, உன்னைச் சோதித்துப் பார்ப்போம் கருஞ்சிரதம்-இதில் எந்த "ர" போடுவாய்"

குள் இசி 33
'இந்தப் பிச்சைக்காரன என்னை சோதிப்பது" என்று எனக்குத் தோன்றியது. ஆகையால் நான் ஒதுங்கிச் சென்று அலட்சியமாக இருந்தேன். சிறிது நேரங்கழித்து அக்கறை யுடன்=
*உனக்கு எழுதத் தெரியாதா? நான் எழுதிக்காட்டு கிறேன். நன்முய் ஞாபகம் வைத்துக்கொள் தெரிகிறதா! இந்த எழுத்துக்களையெல்லாம் நீ நன்குரக ஞாபகத்தில் வைத் துக் கொள்ள வேண்டும். என்றைக்காவது நீ சொந்தமாகக் கடைவைத்தால், உனது கணக்கை நீயே எழுத அவை உனக்குப் பயன்படும்.”
நானெங்கே கடைவைக்கப் போகிறேன் என்று எனக்குத் தோன்றியது. எனது எஜமானனும் கருஞ்சீரகக் கணக்கு எழுதுவதை நான் பார்த்ததில்லை.வேடிக்கையாகவிருந்தாலும் எரிச்சலூட்டுவதாக இருந்ததால் நானும் அக்கறையற்றவனுக *உங்களை யார் ஆசிரியராக ஏற்க விரும்புவார்? இடையின ரகரந்தானே போடவேண்டும்?” என்றேன்.
குங்கிற்கு மகிழ்ச்சி தோன்றியது. இரண்டு நீண்ட விரல் நகங்களால் மேஜையைத் தட்டியவாறே "சரி, சரி” என்று தலையை ஆட்டினர். இரண்டுவித ரகர, றகரங்கள் இருக் கின்றன தெரியுமா உனக்கு?’ நான் பொறுமை இழக்கத் தொடங்கினேன். முகத்தைச் சுளித்தவாறு நகர்ந்தேன். குங் இசி மதுவில் விரலைவிட்டு மேடைமேல் எழுத்தை எழுதத் தொடங்கினர். தான் சிரத்தை காட்டாதிருக்கவே பெருமூச்சுவிட்டு பெரும் ஏமாற்றமடைந்தவரானர்.
சுற்றிலுமுள்ள சிறுவர் சிறுமியர், சிரிப்பைக் கேட்டதும் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக குங் இசியைச் சூழ்ந்து கொள்வார்கள். கருஞ்சீரக வாசனையூட்டிய மொச்சையில் ஒவ்வொன்றை அவர்கட்குக் கொடுப்பார். சாப்பிட்டபின்னும் சிறுவர்களின் கண்கள் கோப்பையை நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். மயக்கத்துடன், கோப்பையை மூடியவாறே கீழே குனிந்து அவர்களை நோக்கி "இங்கு அதிகம் இல்லை.
3 است . "LJm)

Page 25
34 போர்க்குரல்
எனக்கே போதாது” என்பார். மீண்டும் நிமிரிந்து மொச்சை களைப் பார்த்துவிட்டு" "ஆமாம் போதாதுதான். உண்மை யாகவே போதாதுதான்” என்பார். உடனே குழந்தைகளும் கெக்கலி கொட்டிக்கொண்டு சென்றுவிடும்.
குங் இசியுடன் பொழுது நன்ருகக் கழிந்தது. அவர் இல்லாமலும் கழியத்தான் செய்தது.
ஒரு நாள் நடுப்பணிக்காலத் திருவிழாவிற்கு முன்னல் மதுக்கடைக்காரன் மிகவும் தீவிரமாகக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். சுவரிலிருந்த பலகையை எடுத்து *குங் இசியைப் பல நாட்களாகக் காணவில்லை. இன்னும் பத்தொன்பது காசுகள் பாக்கி இருக்கிறது” என்று கூறிய போதுதான் பலநாட்களாக அவரைக் காணவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.
"அவன் எப்படி வருவான்? சென்றமுறை கிடைத்த அடியில் கால் நொறுங்கவிட்டதே' என்று ஒரு வாடிக்கைக் காரன் கூறினன்.
ogl-t-rlo
'மறுபடியும் திருடத்தொடங்கினன். இம்முறை மாநில அதிகாரியிடமே திருடத்தொடங்கி விட்டான். அங்கே தப்பிக்கமுடியுமா?’
"அப்புறம் என்ன ?”
"வேறு என்ன, கால் உடைந்தது.”
"ஆமா, அதற்குப்பிறகு?”
*பிறகு..யார்கண்டது செத்திருக்கலாம்.”
மதுக்கடைக்காரன் மேலும் கேள்விகேட்கவில்லை. ஆனல் மெதுவாகக் கணக்கைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
நடுப்பனிக்காலத் திருவிழாவுக்குப் பின் பணிக்காற்றின் குளிர் மேலும் அதிகரித்தது. பனிக்காலம் தொடங்கியது.

குங் இ-சி 35
தணப்பின் பக்கத்தில் நான் இருந்தாலும் கனமான சட்டை ஒய நான் அணியவேண்டியிருந்தது. ஒருநாள் மாலை கடை காலியாக இருந்த சமயம், நான் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த பொழுது ஒரு குரல் காதில் விழுந்தது.
"ஒரு கோப்பை மதுவைச் சூடாக்கு”
குரல் மெல்லியதாக இருந்தாலும் பழக்கமானது போலிருந்தது. மேலே பார்த்தபொழுது ஒருவரையும் காண வில்லை. எழுந்து நின்று கதவுப்புறம் நோக்கினேன் மேடைக்குங்கீழே வாயிலை நோக்கியவாறு குங் இசி அமர் , திருப்பதைக் கண்டேன். அவர்முகம் விகாரமாகவும் மெலிந்து மிருந்தது பார்க்கப் பயங்கரமாகவிருந்தது. கந்தல் சட்டை அணிந்திருந்த அவர், தனது முதுகோடு சேர்த்து வைக்கோல் கயிற்றினல் கட்டப்பட்டுத் தொங்கிய பாயின்மேல் சம்மண மிட்டு அமர்ந்திருந்தார். என்னைக் கண்டதும் பேசத் தொடங்கினர்.
'ஒருகோப்பை மதுவைச் சூடாக்கு.”
அந்தநேரத்தில் எனது எஜமானன் மேடையின்மேல் குனிந்து "யார் குங் இசியா? இன்னும் பத்தொன்பது காசுகள் பாக்கியிருக்கிறதே’ என்ருன். ሩ
'gy gir...... அடுத்தமுறை தீர்த்துவிடுகிறேன்” எனக்கூறி துக்கத்துடன் மேலே நோக்கியவாறு "இந்தாருங்கள் ரொக்கம். மது நன்முக இருக்கவேண்டும்” என்ருர்.
மிதுக்கடைக்காரனும் வழக்கமான ஏளனச்சிரிப்புடன் "குங் இசி மறுபடியும் திருடத் தொடங்கிவிட்டாயா?’அதை மறுதளிக்காது மற்றவர் சாதாரணமாக, *உங்கள் தமாஷ் பரவாயில்லையே” என்ருர்,
"தமாஷா? நீ திருடவில்லையா? உன் காலை யார் உடைத்தது?” “நான விழுந்துவிட்டேன்’ என மெல்லிய குரலில் குங் கூறினர். "நான் கீழேவிழுந்து காலை உடைத்துக்

Page 26
36 போர்க்குரல்
கொண்டேன்” விஷயத்தை மேற்கொண்டும் தொடர்ந்து கேட்காது நிறுத்தும்படி கெஞ்சிக் கேட்பதுபோல் அவரது பார்வை இருந்தது. இதற்குள் பலர் சுற்றிக்கொண்டனர். எல் லோரும் நகைக்கத்தொடங்கினர். நான் மதுவைச் சூடாக்கி வாயிலருகே சென்று கொடுத்தேன். தனது கிழிந்த சட்டைப் பையிலிருந்து நான்கு காசுகளை எடுத்து எனது கையில் வைத்தார். அப்பொழுது அவரது கைகளில் சேறு நிறைந்திருந் ததைக் கண்டேன். அதஞல் ஊர்ந்து நடந்து வந்திருக்க வேண்டும் என யூகித்தேன். உடனே அவர் மற்றவர் கேலிக் கும் கிண்டலுக்குமிடையே மெதுவாகத் தனது கைகளினல் ஊர்ந்து வெளிச்சென்றர்.
அதன் பிறகு பலநாட்களாக குங்கைக் காணவில்லை. ஆண்டு முடிந்து மதுக்கடைக்காரன் பலகையைக் கீழெடுத்துப் பார்த்தபொழுது "குங் இசி இன்னும் பத்தொன்பது காசுகள் பாக்கி வைத்திருக்கிருன்’ என்றன். ஒடத்திருவிழாக் காலத் திலும் அதையே கூறினன். ஆணுல் நடுப்பணிக்காலத் திருவிழா வந்தபொழுது அவன் அதுபற்றிப் பேச்சே எடுக்கவில்லை. மீண்டும் ஒரு புதிய ஆண்டு பிறந்தும் அவர் தென்படவே இல்லை.
அதன்பின் நாங்கள் அவரைக் காணவில்லை. ஒருக்கால் குங் இசி இறந்திருக்கலாம்.
Lorri ë 1919.

அருமருந்து
b.
இலையுதிர் காலத்து விடியற்காலை நேரம். நிலா மறைந்து விட்டது. பகலவன் இன்னும் தலைகாட்டவில்லை. வானம் ஒரு கருநீலக் கம்பளமாகக் காட்சியளித்தது. இரவுநேர சஞ்சாரிகளைத் தவிர மற்றவரெல்லாம் தூங்கிக் கொண்டிருந் தனர். கிழச்சுவான் திடீரெனத் தனது கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். தீக்குச்சியைப் பற்ற வைத்தவாறு எண்ணைச் சிக்கேறிய விளக்கை ஏற்றினன் . அது தேநீர் விடுதியின் இரு அறைகளிலும் மங்கலான வெளிச்சத்தைப் பரப்பியது.
"என்ன நீங்கள் இப்பொழுது போகின்றீர்களா?"என்று கிழவி கேட்டாள். உள்ளே சின்ன அறையில் இருமல் ஒலி கேட்டது. W
*ஹகும்.”*
தனது உடையை அணிந்து கொண்டே கேட்டுக்கொண் டிருந்த சுவான், கையை நீட்டியவாறு எங்கே, எடு” என்ருன்.
தலையணைக்கு அடியில் கையினல் துழாவிப் பார்த்தவாறு வெள்ளி நாணயங்கள் அடங்கிய ஒரு பொட்டலத்தைக் கையில் தந்தாள். நடுங்கியவாறே கிழச்சுவான் அதை வாங்கிக கொண்டு சட்டைப் பையை இருமுறை தட்டிப் பார்த்துக் கொண்டான். பின்னர் காகித விளக்கு ஒன்றைப் பற்றவைத்து மற்றவிளக்கை அனைத்து விட்டு உள்ளறைக்குச் சென்றன். சலசலப்பு. அதைத்தொடர்ந்து இருமல் ஒலி. அமைதி மீண்டும் திரும்பியதும் கிழச்சுவான் மெதுவாக அழைத்தான்: "மகனே!. நீ எழுந்திருக்காதே. அம்மா கடையைப் பார்த்துக் கொள்வாள்.”

Page 27
38 போர்க்குரல்
பதில் இல்லை; கிழச்சுவான் தன் மகன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதாக முடிவு செய்தான், எனவே தெருப்பக்கம் சென்றன். இருட்டில் மங்கலான தோற்றத் தைத்தவிர மற்றென்றும் கண்ணில் தென்படவில்லை. அவன் நடக்கும்போது பாதங்கள் மீது லாந்தர் விளக்கொளி விழுந்தது. அங்குமிங்கும் நாய்கள் தென பட்டன. ஒன்று கூடக் குரைக்கவில்லை. வீட்டுக்குள் இருந்ததைவிட வெளியே குளிர் அதிகம். இருப்பினும் கிழச் சுவாலான் உள்ளம் உற்சாக மடைந்தது. ஏதோ ஒரு காயகல்பத்தை உண்டவனைப்போல இளமை உணர்ச்சியைப் பெற்றன்; எட்டிநடைபோட்டான். சாலை மேலும்தெளிவாகத் தெரியத் தொடங்கியது; ஆகாயம் மேலும் பிரகாசமடைந்தது.
நடையிலேயே ஆழ்ந்திருந்த கிழச்சுவான், தனக்கெதிரே குறுக்குத்தெருவைக் கண்டதும் திகைத்து நின்றன். பிறகு சிலஅடிதூரம் திரும்பிநடந்து- ஒரு மூடப்பட்டிருந்த கடையின் தாழ்வாரத்தின்கீழ் வந்து நின்றன். சிறிது நேரத்தில் அவனது உடல் சில்லிட்டது.
"ஒரு கிழவன் போல இருக்கிறது.*
"குஷியாக இருக்கிருனே.”
கிழச்சுவான் மீண்டும் நடக்கத் தொடங்கினன். கண் திறந்து பார்க்கையில் பலர் நடந்து செல்வதைக் கண்டான், ஒருவன் இவனைத் திரும்பிப் பார்த்து உற்று நோக்கினன். அவனை நன்முகப் பார்க்க முடியாவிட்டாலும், அம்மனிதனது கண்களில் பட்டினி கிடந்தவனுக்கு உணவைக் கண்டால் ஏற்படும் பேராசைப் பார்வை இருந்தது தெரிந்தது. லாந்த ரைப் பார்த்தான். அது அனந்து போயிருப்பதைக் கண் டான். சட்டைப் பையைத் தட்டிப் பார்த்துக் கொண்டான். அந்தப் பொட்டலம் பத்திரமாக இருந்தது. சுற்று முற்றும் நோக்கினன். பல விசித்திரப் பேர்வழிகளைக் கண்டான். இரண்டு மூன்று பேர்களாக எதையோ பறிகொடுத்தவர்கள்

அருமருந்து 39
பேர்ல நடமாடிக் கொண்டிருந்தனர். நன்முகப் பார்த்த பொழுது அவர்கள் ஒன்றும் விசித்திரமாகத் தென்படவில்லை. அப்பொழுது அங்கு சில படைவீரர்கள் நடமாடுவதைக் பணித்தான்.அவர்களது சீருடைகளில் முன்னும்பின்னுமுள்ள வண்ணிற வட்டம் தொலை தூரத்திலிருந்தே தெளிவாகத் தரிந்தது. கிட்டநெருங்குகையில் சீருடைகளின் சிவப்பு ஒரமும் கண்ணுக்குப் புலனகியது. அவர்கள் அரசாங்க ராணுவப் படையினர் எனத் தெரிந்தது. அடுத்த கணம் ஒரு கூட்டம் தடதடவென்று நெருக்கிக்கொண்டு வந்தது. ஏறகனவே அங்கு இருந்த சிறுகுழுக்கள் திடீரென ஒன்று சேர்ந்து முன்னேக்கிச் சென்றன. நாற்சந்திமுனை அருகே வந்ததும் திடீரென நின்று சிறுசிறு கூட்டங்களாகி, அரைவட்டங்களாக நின்றனர்.
கிழச்சுவானும் அத்திசையில் நோக்கினன். ஆயினும் அவன் ஜனங்களின் முதுகைத்தான் காணமுடிந்தது. தங் களால முடியுமளவு தலையை நீட்டிக்கொண்டு, கண்ணுக்குப் புலப்படாத கரங்களால் தூக்கப்பட்ட வாத்துகளைப் போல அவர்கள் தோற்றமளித்தார்கள். சிறிது நேரம் நிசப்தம். பின்னர் ஒரு ஒசை. கூட்டத்தினிடையே ஒரு சலசலப்பு தோன்றியது. பின்னல் அக்கூட்டம் தள்ளிக்கொண்டு கிழச் சுவான கீழே தள்ளுகின்ற அளவு முண்டியடித்துக் கொண்டு பின்வந்தது.
"ஏய், பணத்தை முதலில் வை. நான் சாமானைத் தருகிறேன்.”அவன்முன் நின்ற, முழுதும் கறுப்புடை அணிந்த ஒருவன் கேட்டான். அவன் கண்கள் கட்டாரிபோல் இருந்தன. கிழச்சுவான் பயந்து கூனிக்குறுகி விட்டான். அவன் தனது முரட்டுக் கரத்தை கிழவனிடம் நீட்டியவாறு மறுகையில் ஆவி பறக்கும் ரொட்டிச்சுருளை வைத்திருந்தான். அதிலிருந்து செந்துளிகள் தரையில் சொட்டின.
அவசர அவசரமாக தன் பணத்தைத் துழாவினன். பின்னர் நடுங்கியவாறே அதனைக் கொடுக்கப் போனன்.

Page 28
40 போர்க்குரல்
ஆயினும் அந்தப் பொட்டலத்தை வாங்க அவனுக்குத் தைரிய மில்லை. மற்றவன் பொறுமையிழந்து கோபத்துடன் “எதற் காகப் பயப்படுகிருய்? இதை வாங்கிக்கொள்” என்று கத்தினன். கிழச்சுவான் மேலும் தயங்கவும் கறுப்புடை அணிந்திருந்தவன் தனது விளக்கைச் சுற்றிய மறைப்புக் காகிதத்தைக் கிழித்து சுற்றிக் கொடுத்தான். அதலைக் கிழச் சுவான் கையில் திணித்து, அவன் கையிலிருந்த வெள்ளி நாணயங்களைப் பறித்தவாறே லேசாக நோட்டமிட்டான். பின்னர் திரும்பிக் கொண்டே “கிழட்டு முட்டாள்.” என முணுமுணுத்தான்.
“யாருடைய நோய்க்கு?” என்று யாரோ கிழச்சுவானிடம் கேட்பது போல் அவனுக்குத் தோன்றியது. அவன் பதில் கூறவில்லை. அவனது கவனமெல்லம் பொட்டலத்தின் மீதே இருந்தது. ஏதோ பூர்வீகச்சொத்தைத் தாங்கிச் செல்வதைப் போல் ஜாக்கிரதையாக தூக்கிச் சென்றன். இவ்வுயிரைத் தன் வீட்டிலுள்ளவனுக்கு அளித்து மகிழ்ச்சியடையப் போகிருன். சூரியன் உதித்திருந்தது; நேராக வீட்டுக்குச் செல்லும் பரந்த சாலையின்மீதும்,அவனுக்குப்பின்னல் இருந்த குறுக்குச்சாலையில் மங்கலான பொன்னிறத்தில் 'புராதன மாளிகை” என்ற எழுத்துகள் பொறிக்கப்படடிருந்த உளுத்துப்போன பெயர்ப் பலகை மீதும் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது.
கிழச்சுவான் வீடு திரும்பியதும், அவன் கடை சுத்த மாக்கப்பட்டிருந்ததைக் கண்டான். வரிசையாகத் தேனீர் மேஜைகள் பளிச்சென்றிருந்தன. வாடிக்கைக்காரர்கள் இன்னும் வரவில்லை. சுவரோரம் இருந்த மேசையில் அவன் மகன் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது நெற்றியில் வியர்வை முத்துக்கள் நிலைபெற்றிருந் தன. கோடுபோட்ட மேல்சட்டை முதுகுத் தண்டை ஒட்டிக் கொண்டிருந்தது. தோற்பட்டை எலும்புகள் முன்னே

அருமருந்து al
துருத்திக் கொண்டிருந்தன. அவற்றின் இடைப் பகுதி ஒரு தலை கீழான கவட்டையைப் பதித்ததுபோல் தோன்றியது. இதைக் கண்ணுற்றதும் இதுவரை விரிவடைந்திருந்த கிழச் சுவானின் புருவங்கள் மீண்டும் சுருங்கிவிட்டன. அவனது மண்வி சமையலறையிலிருந்து அவசர அவசரமாக வெளியே வந்து எதிர்பார்க்கும் தோரனையில் உதடுகள் நடுங்கக் கேட்டாள்.
"கிடைத்ததா?” **ஆம்.” இருவரும் சமயலறைக்குள் நுழைந்து சிறிது நேரம் கலந் தாலோசித்தனர். கிழவி வெளியே சென்று ஒரு உவர்ந்த தாமரை இலையை எடுத்து வந்து மேசை மீது விரித்தாள். விளக்குத் தாளால் சுற்றப்பட்டிருந்த சிவப்புச் சுருளை அவிழ்த்து அதனுள் இருந்ததை தாமரை இலைக்குமாற்றினன். சிறுவன் சுவான் சாப்பிட்டு முடித்துவிட்டான், அவன் தாய் அவசரமாக:
*அங்கேயே உட்கார்ந்திரு சுவான் இந்தப் பக்கம் வராதே’ என்ருள்.
அடுப்பில் தீயைச் சரிசெய்தபின் கிழச்சுவான் பச்சைப் பொட்டலத்தையும், சிவப்பும் நீலமுமான விளக்கைச் சுற்றி யிருந்த காகிதத்தையும் ஒரே காலத்தில் தீயிலிட்டான். செந்தீப்பிழம்பு சுடர்விட்டது. கடைமுழுவதுமே ஒரு வித விசித்திர மணம் கமழ்ந்தது.
*நல்ல மணமாக இருக்கிறதே! நீங்கள் என்ன சாப்பிடு கின்றீர்கள்?" கூனன் வந்திருந்தான் தேனிர்க்கடைக்கு: எல்லோர்க்கும் முதலிலே வந்து கடைசியில் போகும் பேர்வழி அவன். தட்டுத் தடுமாறி ஒரு மூலையில் கிடந்த நாற்காலியில் வீதியை நோக்கியவாறே அமர்ந்தான். அவன் கேள்விக்கு ஒருவரும் பதில் தரவில்லை. e
*அவல் கஞ்சியோ?” அதற்கும் பதில் இல்லை. கிழச்சுவான் அவசர அவசரமாக அவனுக்குத் தேனிர் தயாராக்குவதற்காக வெளியேசென்ருன்.

Page 29
42 போர்க்குரல்
'தம்பி சுவான், இங்கேவா" தாய் மகனை உள்ளறைக்கு அழைத்து நடுவிலே முக்காலியைப் போட்டு சிறுவன அமர்த்தினள். பின்னர் தட்டில் வட்டமான கறுப்புப் பொருளைக் கொணர்ந்து அனுசரனையுடன் கூறினுள்:
'இதைச் சாப்பிட்டுவிடு. எல்லாம் சுகமாகிவிடும்.”
சிறுவன் சுவான் அந்த அருமையான பொருளை கையினல் எடுத்துப் பார்த்தான். தன் உயிரையே தனது வகையில் வைத்திருப்பது போன்ற ஒரு விசித்திர உணர்ச்சி அவனுக்குத் தோன்றியது. ஜாக்கிரதையாக அதனைப் பிளந்தான். கருசிய துண்டிலிருந்து வெள்ளாவி கிளம்பியது. அதனை அகற்றியதும் உள்ளே அவித்த வெள்ளை ரொட்டிச்சுருள் இரு கூறுகளாக இருந்தது. விரைவில் அதைச் சாப்பிட்டு முடித் தான். அதன் மணம் மறைந்துவிட்டது; தட்டு காலி யாகியது. அவனது இருமருங்கும் தாயும் தந்தையும் அக்கம் பக்கமாக நின்றனர். அவன் மீது அவர்கள் எதையோ செலுத்துவதைப் போலவும், அதேசமயம் அவனிடத்தினின்று எதையோ வெளியில் எடுத்து எறிவது போலவும் அவர்கள் பார்வை இருந்தது. அவனது சிறு இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. தனது நெஞ்சில் கைகளை அழுத்தியவாறு மீண்டும் இருமத் தொடங்கினன்.
'தூங்கு, எல்லாம் சரியாய்விடும்” என்ருள் அவன் தாய்.
பணிவுடன் சிறுவன் சுவான் இருமி இருமித் தூங்கி விட்டான். மூச்சு சாதாரணமாக வரும்வரை கிழவி காத்திருந்து பார்த்துவிட்டு ஒட்டுப் போட்ட போர்வையினல் போர்த்திவிட்டாள்.
ைேடயில் கூட்டம் மொய்த்திருந்தது. கிழச்சுவான் சுறுசுறுப்பாகப் பணிபுரிந்தான். வாடிக்கைக்காரர்கள் ஒவ் வொருவருக்கும் தேனீர் தயாரிப்பதற்காகக் கையிலே பெரிய

அருமருந்து 43 செப்புக் கெட்டிலைத் தூக்கிக் கொண்டு திரிந்தான். அவன் கண்களின் கீழே இருண்ட வளையங்கள் தோன்றியிருந்தன.
"சுவான பெரியவரே!.என்ன உடலுக்குச் செளகரியக் குறைச்சலா? என்ன கோளாறு?’ என்று தாடி நரைத்தவன் கேட்டான்.
"ஒன்றுமில்லையே."
“ஒன்றுமில்லையா?.நீ சிரிக்கு விதத்தைப் பார்த்தால் அப்படி ஒன்றும் இருக்காது போலத்தான் இருக்கிறது. ラう。 தாடிக் கிழவன் பேச்சைத் திருத்திக் கொண்டான்.
"சுவான் தாத்தா ஒடியாடித திரிகிருர், அவ்வளவுதான்’ என்ருன் கூனன். 'அவர் மகனுக்கு மட்டும்.” அவன் பேசி முடிப்பதற்குள் அகன்ற தாடையுடைய ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் பித்தான் போடாத கபில நிறச் சட்டை யணிந்திருந்தான். அதனை அரைகுறையாக ஒரு கபில நிறக் கச்சையால் இடுப்பில் கட்டியிருந்தான். கொலைககளத்தி லிருப்பவர்களின் உடை அது. அவன் நுழையும்போதே கிழச் சுவானிடம் சத்தம் போட்டுக் கேட்டான்:
"அவன் சாப்பிட்டுவிட்டான? இப்பொழுது தேவலையா? கிழவா நீ பெரிய அதிர்ஷ்டசாலி. என்ன அதிர்ஷ்டம் என் கிருய் எனக்கு மட்டும் விஷயங்கள் இவ்வளவு விரைவாக தெரிந்திருக்காவிட்டால். 99
ஒரு கையில் கெட்டிலைத் தாங்கி மறுகையை மரியாதை யுடன் நேராகப் பக்கவாட்டில் வைத்தவாறு கிழச்சுவான் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான். பொதுவாக அங்கிருந்த அனைவருமே மரியாதையுடன் கேட்டுக் கொண் டிருந்தனர். கண்களுக்குக் கீழ் கருவளையம் படர்ந்திருந்த கிழவியும் சிரித்தவாறே வெளிவந்தாள். அவளது கையில் தேயிலை நிறைந்த கோப்பை இருந்தது. அதனுள் ஆலிவ்வுகம் சேர்த்துப் புதிதாக வந்தவனுக்காக கிழச்சுவான் கொதி நீரை ஊற்றித் தேனிர் தயாரித்தான்.

Page 30
44 போர்க்குரல்
அகன்ற தாடைக்காரன், “இது உத்திரவாதமான ஒளிச் சை, மற்ற சிகிச்சை போலல்ல" என் று உறுதியாகக் கூறினன். “g L mressi கொண்டுவந்து சூடாகவே சாப்பிட்டாய்விட்டது என்பதை நினைத்துப்பர் 99
“ஆமாம் ஆமாம். காங் மாமா உதவியில்லாமல் அது எங்களுக்குத் கிடைத்திருக்குமா? கிழவி அவனைப் பெரிதும் பாராட்டி நன்றி கூறினள்.
“இப்படி உடனுக்குடன் சாப்பிட்டால் நிச்சயமான இனந்தான்! மனித ரத்தத்தில் தோய்ந்து ஊறின ரொட்டியைச் சாப்பிட்டால் எத்தகைய காசநோயையும் சிகப்படுத்திவிடலாம்."
“காசம்” என்ற வார்த்தையைக் கேட்டதும் கிழவிக்கு சிறிது நிலதடுமாறி முகம் லேசாகக் கறுத்தது. இருந்தும் வலிய புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ஏதோ சாக்கிட்டு அவ்விடத்தை விட்டு அகன்ருள். அதற்கிடையே அந்த கபில அங்கி அணிந்திருந்தவன் உச்சக் குரலில் அலட்சியமாகப் பேசிக் கொண்டிருந்தான். உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தூக்கம் கலந்து எழுந்து இருமத் தொடங்கி விட்டான்,
"உனது பையன் சுவானுக்குப் பெரிய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஆமாம். அவன் வியாதி நிச்சயமாக முழுமையாக குணமாகிவிடும். அதுதான் கிழவன் சுவான் வாயெல்லாம் சிரிப்பாக இருக்கிறன்.”அவன் அவ்வாறு பேசிக் கொண்டிந்தபொழுது நரைத்த தாடிக்காரன் அந்த கபில அங்கிக்காரன் அருகே சென்று தனிந்த குரலில் கூறினன்.
*திருவாளர் காங், இன்றைக்கு மரணதண்டனை விதிக்கப் பட்ட ஆசாமி ஷியா குடும்பத்தவனமே அவன் um 60prunr? அவனுக்கு ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டது?
"வேறு யார், அந்த விதவை ஹியாவின் மகன்தான். அந்த இளம் போக்கிரிதான்.??

அருமருந்து 45 :அன்ை பேச்சை எல்லோரும் ஆவலுடன் கேட்பதை அறிந்ததும் அவனுக்கு மேலும் உற்சாகந் தோன்றியது. தாடை துடித்தது. மேலும் குரலை ஏற்றித் தொண்டை கிழியக் கத்தினன்.
*அந்தத் திருட்டுப்பயல் உயிரோடு இருக்கவே விரும்ப ல்ல். ஏனே வாழவே விரும்பவில்லை. இந்த தடவை எனக்கு *றும் கிடைக்கவில்லை. அவனிடமிருந்து கழற்றப்பட்ட டைகளைச் செங்கண்ணனன சிறைக்காவலன் எடுத்துக் கொண்டான். நமது கிழச் சுவான் அதிர்ஷ்டக்காரன். அடுத்தது மூன்ரும் மாமன் ஷியாவாகும். அவன் இருபத்தைந்து வெள்ளிப் பணங்களைத் தானே அமுக்கிக் கொண்டான்-ஒரு சதங்கூடச் செலவழிக்கவில்லை.”
நெஞ்சில் கையை அழுத்தியவாறு சிறுவன் சுவான் தொடர்ந்து இருமிக்கொண்டே உள்ளறையிலிருந்து மெது வாக வெளியேவந்தான். சமையலறைக்குள் சென்று பழைய சோற்றைக் கோப்பையில் நிரப்பி அதில் வெந்நீரை விட்டு உட்கார்ந்து சாப்பிடத்தொடங்கினன். அவனை நெருங்கிய தாயும் மெதுவான குரலில் "உனக்கு இப்போது தேவலையா மகனே? இன்னும் பசிக்கிறதா?’ எனக்கேட்டாள்.
'உத்திரவாதமான சிகிச்சை” என்று சிறுவனைப் பார்த் தவாறு கூறிய காங், சுற்றியிருந்தவர்களுக்குப் பிரசங்கம் செய்யத் தொடங்கினன்: "மூன்றும் மாமன் ஷியா கெட்டிக் காரன். அவன் தகவல் தெரிவிக்காமலிருந்திருந்தால் அவன் ; குடும்பத்தினருக்கும் மரணதண்டனை அளித்து, அவன் சொத்தையும் பறிமுதல் செய்திருப்பார்கள். அதற்குப் பதிலாக என்ன கிடைத்தது? வெள்ளிப்பணப் ! அந்த இளைஞன் பொல்லாத போக்கிரி. சிறைக்காவலனைக்கூடக் கிளர்ச்சி செய்யுமாறு தூண்டிவிட்டான்.”
*அப்படியொன்றுமில்லை! விஷயமென்னவென் ருல-.”
என்று கூட்டத்திலிருந்த இருபது வயதை எட்டிய இளைஞ னுெருவன ஆத்திரத்துடன் பதில் கொடுத்தான்:

Page 31
46 போர்க்குரல்
*அந்தப் போக்கிரி இளைஞனின் வாயை அடக்குவதற்காக செங்கண்ணன் சென்றன். இளைஞனே அவனிடம் சரளமாகப் பேசத் தொடங்கிவிட்டான். அவன் மஞ்சு சாம்ராஜ்யமே தனக்குத்தான் சொந்தம் என்ற தோரணையில் பேசினன் நன்முக யோசியுங்கள்: இத்தகைய அபத்தப் பேச்சுகள் சரிவரு மா? செங்கண்ணன் அறிந்திருந்ததெல்லாம் இளைஞனது வீட்டில் கிழத்தாய் ஒருத்தி இருக்கிருள் என்பதை மட்டும் தான். அவ் இளைஞன் இவ்வளவு மோசமான ஏழ்மையில் இருப்பான் எனச் செங்கண்ணன் எதிர்பார்க்கவில்லை. அவனி டமிருந்து வேறு எதையும் கறக்கமுடியவில்லை. சின்னப்பயல் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொண்டதால் அவனுக்கு நாலைந்து அறை விட்டுவிட்டான்.”
செங்கண்ணன் நல்ல குத்துச் சண்டைக்காரனல்லவா? அவன்விட்ட அறை மிகவும் பலமாகத் தானிருக்கும்!” என்று மூலையிலிருந்த கூணன் குஷியாகக் கூறினன்.
*அடிஉதைக்கெல்லாம் அந்த சொத்தைப்பயல் பயப்பட வில்லை. தான் பரிதாபப் படுவதாகக் கூறவும் செய்தானும்!”
அந்த மாதிரிப் பயல்களை உதைப்பதில் பரிதாபமென்ன இருக்கிறது” என்ருன் நரைத்தாடி,
it is புரிந்து கொண்ட லட்சணம் இதுதான்’ என்ருன் காங்; “சிறைக்காவலன் செங்கண்ணனைப் பார்த்து அந்த இளைஞன் தான் பரிதாபப்பட்டானும்."
கேட்டவனுக்கு என்னவோ போலாகிவிட்டது. ஒருவரும் பேசவில்லை. சிறுவன் சுவான் சோற்றைத்தின்று முடித்தான். அவனுக்கு வியர்வை கொட்டத் தொடங்கியது. தலையில் சூடு ஏறியது.
விஷயத்தை உடனடியாகப் புரிந்து கொண்டவன் போல செங்கண்ணனைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன் என்ருனு அந்தப்பயல்? அவனுக்கென்ன கிறுக்கா? என்று நரைத்தாடி கூறிஞன்,

அருமருந்து 47
18ஆமாம். அவனுக்குக் கிறுக்கு பிடித்திருக்கவேண்டும்” என்ருன் இருபது வயது இளைஞன்.
அங்கு இருந்தவர்களின் பேச்சும் சலசலப்பும் உயிர் பெற்றன. இந்தச்சந்தடியில் சிறுவனின் இருமல் ஒலியும் சேர்ந்து கொண்டது. காங் அவனருகே சென்று முதுகைத் தட்டியவாறு கூறினன்:
'நிச்சயம் சுகமாகும். இப்படி இருமாதே சுவான். உத்திரவாதமான சிகிச்சையாக்கும் அது.”
"கிறுக்குத்தான் பிடித்திருக்கும்” என்று கூனனும் ஒத்தூதிக் கொண்டிருந்தான்.
V . மேற்கு வாயிலுக்கு வெளியே நகரத்தின் மதில்சுவலர யடுத்த நிலம் பொது நிலமாகத்தான் முதலில் இருந்தது. அதில் வளைந்து வளைந்து செல்லும் குறுக்குப்பாதை ஒரு நிரந் தரமான எல்லைக் கோடாகி விட்டது. பாதையின் இது புறத்தே மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் சடலங் களும், சிறையில் கவனக் குறைவால் இறந்தவர்களது சடலங் களும் புதைக்கப்பட்டன. பாதையின் வலதுபுறத்தில் அனதை களின் சடலங்கள் புதைக்கப்பட்டன. கல்லறைக்குமேல் குவிக் கப்பட்டிருந்த மண்மேடுகள் செல்வந்தனின் பிறந்தநாளன்று வரிசையாக வைக்கப்படும் ரொட்டிச் சுருள்கள் போல் காட்சி யளித்தன.
அந்த ஆண்டு சிங்மிங் திருவிழாக்காலத்தில் அசாதாரண மான குளிர் நிலவியது.அது இறந்தவர்களின்கல்லறைகளுக்கு உறவினர்கள் வணக்கம் தெரிவிக்கும் காலம். காற்ருடி மரங் களின் துளிர்கள் கூட, சிறு தானியமணி அளவுதான் இருந்தன. விடிந்தபின் சிறிது நேரம் கழித்து, கிழச்சுவானின் மனைவி நான்கு தட்டுகளில் கறிவகைகளையும் ஒருகோப்பை சோற்றையும் புதியகல்லறையருகே வைத்துவிட்டு ஓலமிட்டு அழுதாள். அவள் காகிதப் பணத்தை கொளுத்தியபொழுது, எதற்காகவோ கயத்திருப்பது போல தலைக்கிறக்கம் பிடித்து

Page 32
48 போர்க்குரல்
உட்கார்ந்திருந்தாள். அவள் எதற்குக் காத்திருந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. மெல்லிய காற்று அவளது குட்டை முடியை அலைபுரளச் செய்தது. சென்ற ஆண்டைவிட அவளுக்கு நரை கூடியிருந்தது.
கந்தலுடை தரித்த தலைநரைத்த வேருெரு கிழவி பாதையில் வந்து கொண்டிருந்தாள். கையில் வட்டமான வெப்புநிற அரக்குக் கூடையைத் தூக்கிக் கொண்டுவந்தாள். அதிலிருந்து காகிதப்பணச்சுருள் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் தட்டுத்தடுமாறி நடந்துவந்தாள். கிழச்சுவானின் மனைவி கீழே அமர்ந்து தன்னைப் பார்ப்பதைக் கண்டு அவள் சிறிது தயங்கினள். அவனது வெளிறியமுகத்தில் வெட்கம் பரவியது. இருந்தும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இடதுபக்கமுள்ள கல்லறைகுக் கடந்துசென்று, கூடையை இறக்கி வைத்தாள்.
அந்தக் கல்லறை சிறு சுவானின் கல்லறைக்கு நேர்எதிர்ப் புறத்தில் இருந்தது. இரண்டுக்கும் இடையே பாதை மற்றவள் நான்கு தட்டு உணவையும் ஒருகோப்பை சோற்றையும் எடுத்துப் படைத்ததையும் பிறகு எழுந்து நின்று காகிதப் பணத்தைப் பொசுக்கி ஒப்பாரிவைத்ததையும் கிழச்சுவானின் மனைவி கவனித்தாள். அந்தக் கல்லறையில் அவ்ளது மகனும் இருக்கிருன் போலும் என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள். இவளிலும் வயதான அக்கிழவி நோக்கம் ஏது மின்றி சில அடிகள் எடுத்துவைத்து சுற்று முற்றும் வெற்றுப் பார்வை வீசினள். திடீரென நடுக்கம் பிடித்து, பின்னேக்கித் தள்ளாடி, மயக்க முற்று விழுந்தாள்.
துக்கம் தாங்காமல் கிழவி பைத்தியம் பிடித்து விடுவாள் என எண்ணிய கிழச் சுவானின் மனைவி எழுந்திருந்து பாதையின் குறுக்கே சென்று அமைதியாகக் கூறினள் "வருத்தப்படாதே வீட்டுக்குப் போவோ h வா."
மற்றவள் வெற்றுநோக்கோடு உற்றுப் பார்த்து "அதோ அதென்ன பார்த்தாயா?” என்று கிசுகிசுத்தாள்.

அரும்ருந்து 49 அவள் சுட்டிய திசையை நோக்கிய கிழச்சுவானின் toarea, தன் எதிரே உள்ள கல்லறை இன்னும் முழுமையாகப் புல்முன்த்து மூடப்படவில்லை என்பதைக் கண்டாள். இடை யிடையே அழுக்குமண் திட்டுத்திட்டாகத் தெரிந்தது ஆனல் கன்னமாகப் பார்த்தபொழுது திட்டின்மேல் சிவப்பு மலர் களாலும் வெள்ளை மலர்களாலும் உருவாக்கப்பட்ட பூவளை யம் ஒன்று இருப்பதைக் கண்டாள்.
இருவருக்குமே கண்பார்வை மட்டம் இருப்பினும் அவர் களால் இந்த சிவப்பு வெள்ளை மலர்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. மலர்கள் அதிகம் இருக்கவில்லை. ஆனல் வட்டமாக வைக்கப்பட்டிருந்தன. அவை புத்தம் புதிய மலர் களாக இல்லையென்ருலும் அழகாக, வரிசையாக வைக்கப் பட்டிருந்தன. சிறுவன் சுவானின் தாய் திரும்பிப் பார்த்து, தனது சொந்த மகனின் கல்லறையைக் கண்டபோது மற்றக் கல்லறைகள், மேல் இருந்தவை போலவே, குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் சிறிய, வெளிறிய மலர்கள் மட்டுமே அக்கல் லறையைச் சுற்றி இருப்பதைக் கண்டாள். வெறுமை உணர்வு தோன்ற, மலர்வளையத்தைப் பற்றிய அவள் சிந்தனை அறுந்தது
இதற்கிடையே மற்றக்கிழவி கல்லறை அருகே சென்று நெருங்கிப் பார்க்கலானள். 'அவற்றுக்கு வேரில்லையே??? என்று தனக்குத் தானே கூறினுள். இவை இங்கே முளைத் திருக்க முடியாது. இங்கு யார் வந்து வைத்திருக்கக்கூடும்? குழந்தைகள் இங்கு விளையாட வருவதில்லை. நமது உறவினர் களோ ஒருவர்கூட இங்கு ஒருபோதும் எட்டிப் பார்த்ததிலலை. என்ன நடந்திருக்கும்?” அவளுக்கு வியப்பு தாங்கவில்லை. திடீரென கண்ணிர் பெருக்கெடுத்தது. ஓலமிட்டு அழுதாள்.
"மகனே, உனக்கு எல்லாரும் தீங்கு செய்துவிட்டார்கள். நீ மறக்கவில்லை. உனது அளவுக்குமீறிய துக்கத்தைக் குறிக் கத்தான் இந்த அடையாளம் காட்டினயோ?”
சுற்றுமுறறும் பார்த்தாள். இலையற்ற மரக்கிளையில் அமர்ந்திருந்த ஒரு காகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.
Gunt. — 4

Page 33
50 போர்க்குரல்
பின் தொடர்ந்து சொன்னுள்: "அவர்கள் உன்னைக் கொன்று விட்டார்கள் என்பதை நான் அறிவேன்; அதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் ஒரு நாள் வந்தேதீரும். மேலே உள்ள வன் அதைப் பார்த்துக் கொள்வான். அமைதியாகக் கண்னை மூடிக்கொள். நீ உண்மையில் இங்கிருந்தால், நான் புலம்புவது உன்காதில் விழுந்தால், ஒரு அறிகுறியாக இந்தக் காக்கையை உனது கல்லறையின்மேல் பறக்கச்செய்.”
தென்றல் வீசி ஓய்ந்தது. காய்ந்த புற்கள் செப்புக்கம்பிகள் போல நெட்டுக் குத்தலாக நின்றன. ஒரு மெல்லிய சப்தம் காற்றில் அதிர்ந்து தணிந்து, மறைந்தது. எங்கும் மரண அமைதி. காய்ந்த புல்தரையில் நின்று மேலிருந்த காக்கையை இருவரும் பார்த்தனர். காக்கை வலுவான மரக்கொம்பில் இரும்புச் சிலைபோல ஆடாது உட்கார்ந்திருந்தது.
நேரம் சென்றது. இளையவரும் முதியவருமாகப் பலர் கல்லறைகளைப் பார்க்க வந்தனர்.
ஏதோ மனத்தினின்றும் பெருஞ்சுமை நீங்கியதாகக் கருதிய கிழச்சுவான் மனைவி புறப்படத் தயாராகி, "வாருங் கள் போகலாம்” என்று மற்றவளையும் அழைத்தாள்.
மற்றவள் பெருமூச்செறிந்தாள். சோற்றையும் மற்ற உணவுகளையும் சுரணையின்றிக் கையிலெடுத்தாள். கணநேரத் தயக்கத்துக்குப்பின் மெதுவாக நகர்ந்தவாறே தனக்குள்ளாக முணுமுணுத்தாள்:
*இதற்கு என்ன அர்த்தம்?”
ஒரு முப்பதடிகூட சென்றிருக்க மாட்டார்கள். காகம் பெரிதாகக் கரைவது காதில் பட்டது. திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தனர். காக்கை தன் சிறகை விரித்துப் பறப்பதற்குத் தயாராகி, பிறகு தூரத்தே அடிவானத்தை நோக்கி அம் பெனப் பறந்து செல்வதைக் கண்டனர்.
gigá) 1919

மறுநாள்
ზ. *,
*ஒரு பேச்சு மூச்சில்லை-அந்தக் குழந்தைக்கு என்ன கோளாருே?"
3 செம்மூக்கன் குங் மஞ்சள் நிற மது நிறைந்த கிண்ணத் தைக் கைகளில் ஏந்தியவாறே அண்டை வீட்டைப் பார்த்து தலையைக் காட்டிப் பேசினன்.
நீலவண்ணன் ஆவூ தனது கிண்ணத்தைக் கீழே வைத்து விட்டு மற்றவனின் முதுகில் ஓங்கிக் குத்துவிட்டான்.
"ஆமா.. பழையபடியும் உன் இரக்க குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டாயா?
லூச்சன் ஒதுக்குப்புறமான ஊரானதால் கொஞ்சம் கர்நாடகம்தான். மாலை அறிவிப்பைக் கேட்டதுமே அவ்வூர் வாசிகள் தங்கள் கதவுகளை மூடிப் படுக்கைக்குப் போய்விடு வார்கள். நடுச்சாம வேளையில் இரண்டே வீட்டுக்காரர்கள் மட்டும் தான் விழித்திருப்பார்கள். ஒன்று, சில குடியர்கள் குஷியாக வட்டமிட்டுக் களித்துக்கொண்டிருக்கும் சுபிட்ச மதுக்கடை, மற்றது நான்காவது ஷானின் மனைவி குடியிருந்த வீடு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை இழந்த அவள், தன்னையும் தனது மூன்றுவயது மகனையும் காப்பாற்ற நூல் நூற்றுப் பிழைக்கவேண்டியிருந்தது. அதனல் அவள் ஒவ்வொரு நாளும் நேரம் கழித்தே உறங்கினுள்
பலநாட்களாகவே நூற்கும் சத்தம் இல்லை என்பது உண்மை. நடுச்சாமம்வரை விழித்திருப்பவர் இருவீட்டினர் மட்டுமே. எனவே கிழ குங்கும் அவனைச் சேர்ந்தவர்களும் மட்டுமே, நான்காவது ஷானின் மனைவி வீட்டிலிருந்து வரும் ஓசையையும் அல்லது நிசப்தத்தையும் உணரமுடியும்.

Page 34
52 போர்க்குரல்
குத்து வாங்கிய கிழ குங் ஒருவாய் மதுவைக் குடித்து விட்டு குஷியாக நாட்டுப் பாடலொன்றின் மெட்டில் சீட்டி யடித்தான்,
அதேநேரத்தில் நான்காவது ஷானின் மனைவி தனது படுக்கையின் விளிம்பில், தனது செல்வக் களஞ்சியமான பாவோ-எர்ரைக் கையிலேந்தி உட்கார்ந்திருந்தாள். தரையில் ராட்டினம் ஓய்ந்து கிடந்தது. மங்கிய விளக்கொளி பாவோஎர்ரின் முகத்தில் விழுந்தது. காய்ச்சல் துடிப்புக்கிடையே நீலம்பூத்த தோற்றத்தை எடுத்துக் காட்டியது.
*கோவிலில் பூ கட்டிப்போட்டுப் பார்த்துவிட்டேன். சாமிகளை எல்லாம் தவருது வேண்டிக் கொண்டேன். உத்திர வாதமான சிகிச்சையையும் அவன் எடுத்துக் கொண்டிருக் கிருன். அப்படியும் அவன் சுகமடையாவிட்டால் நான் என்ன செய்ய?" "டாக்டர் ஹோ ஷியோ-சியனிடந்தான் காட்ட வேண்டும். ஒருக்கால் இரவில் மட்டுமே அவன் உடல்நிலை மோசமாக இருக்கும் போலிருக்கிறது. நான் விடிந்ததும் காய்ச்சல் தணிந்து மீண்டும் தாராளமாக மூச்சுவிடலாம். நிறைய வியாதிகள் இப்படித்தான்.”
நான்காவது ஷானின் மனைவி ஒரு அப்பாவி. ஒருக்கால்” என்ற சொல் எத்தனை பயங்கரமானது என்பது அவளுக்குத் தெரியவில்லை. இந்த ஒருக்கால்” என்பது இருப்பதால் பல கெட்ட விஷயங்கள் நல்லவையாகவும், நல்லவை கெட்டவை யாகவும் முடிகின்றன. கோடைகால இரவு குறுகியது. கிழ குங்கும் மற்றவர்களும் பாடி ஓய்ந்ததும் கிழக்கே வானம் ஒளியுடன் வெறிச்சிட்டது. பலகணிச் சந்தின் வழியாக காலைக்கதிரவனின் ஒளி கசிந்து விழுந்தது.
நான்காவது ஷானின் மனைவிக்கு காலைப்பொழுதுக்காகக் காத்திருப்பது மற்றவர்களைப்போல் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நேரம் மிக மெதுவாகவே ஊர்ந்து சென்றது. வே.எர்ரின் மூச்சு ஒவ்வொன்றும் ஓராண்டுக் காலம் நீடிப்பது போல் தோன்றியது. இப்போது ஒருவாறு வெளிச்

மறுநாள் 53
*மும் பரவியது. தெளிவான பகலொளி, விளக்கின் வெளிச் சத்தை விழுங்கியது. பாவோ-எர் மூச்சுத் தடுமாறும்பொழுது அவனது நாசிகள் துடித்தன.
தான்காவது ஷானின் மனைவி குமுறிவந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். அழுவது கெட்ட சகுனம் என்பது அவளுக்கு தெரியும். ஆனல் என்ன செய்வது என்ற வகையறி யாது இருந்தாள். டாக்டர் ஹோவிடம் எடுத்துச்செல்வதைத் தவிரவேறு வழியில்லை. அவள் ஒரு அப்பாவியாக இருக்கலாம், எனினும் அவளிடம் தன்னம்பிக்கை நிறைய இருந்தது. எழுந்து நின்று கைப்பெட்டியிலிருந்த பதின்மூன்று வெள்ளி நாணயங்களும் நூற்றெண்பது செப்புக் காசுகளுமான தனது சேமிப்பு முழுவதையும் எடுத்துக் கொண்டாள். எல்லாவற்றை யும் தனது சட்டைப்பையில போட்டதும் கதவைச் சாத்தி, பாவோ-எர்ரை வேக வேகமாக டாக்டர் ஹோவின் வீட்டுக்கு எடுத்துச் சென்ருள்.
காலை நேரமானதால் ஏற்கனவ்ே நான்கு நோயாளிகள்
அமர்ந்திருந்தனர். நாற்பது வெள்ளிச்சதங்களைக் கொடுத்து பதிவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டாள். பாவோசளர் ஐந்தா வதாகச் சோதிக்கப்பட்டான். டாக்டர் ஹோ குழந்தையின் நாடிகளைச் சோதிப்பதற்காகத் தனது இரண்டு விரல்களை நீட்டினர். அவரது நகங்கள் நான்கு அங்குல நீளமிருந்தன. நான்காவது ஷானின் மனைவி 'நம் பாவோ-எரின் ஆயுசு கெட்டி அவன் உயிர் பிழைத்து விடுவான்’ என்று உள்ளூர நினைத்தாள். ஆனலும் அவளால் பதற்றமடையாமல் இருக்க முடியவில்லை. பதற்றத்துடன் கேட்காமலும் இருக்க முடிய வில்லை
'டாக்டர், பாவோ, எர்ருக்கு என்ன கோளாறு?”
"சீரணப் பாதையில் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது."
**ரொம்பக் கடுமையோ? அவன்.”
**இந்த இரண்டு மருந்து சீட்டுகளை முதலில் வாங்கு.”

Page 35
54 போர்க்குரல்
"அவன் மூச்சுவிடத் தடுமாறுகிருன், நாசிகள் துடிக்கின் றன.”
*தீ என்ற மூலகம் உலோகம் என்ற மூலகத்தின் சக்தியை அடக்கி விட்டது. *
மேற்கொண்டு வாக்கியத்தை முடிக்காது கண்களே மூடிக் கொண்டார். நான்காவது ஷானின் மனைவியும் அதற்குமேல் ஒன்றும் கேட்க விரும்பவில்லை. டாக்டருக்கு எதிரில் உட்கார்ந்திருந்த முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் இதற்குள் மருந்துசீட்டுகளை எழுதி முடித்தான்.
காகிதத்தின் மூலையில் இருந்த எழுத்துக்களைச் சுட்டிய விாறு "முதலிலிருப்பது குழந்தைச் சஞ்சீவி மாத்திரைகள்; ஷியா குடும்பத்தினரின் இரட்சிப்புக் கடையில் மட்டுமே இவை கிடைக்குர்’ என்று கூறினர்.
நான்காவது ஷானின் மனைவி காகிதத்தை வாங்கிக் கொண்டு, யோசித்தவாறே வெளி நடந்தாள். அவள் ஒரு அப்பாவிதான். இருந்தாலும் ஹோவின் வீடு, மருந்துக் கடை, தனதுவிடு மூன்றும் முக்கோணநிலையில் உள்ளது அவளுக்குத் தெரியும். ஆகவே வீட்டுக்குப் போய் திரும்பி வருவதை விட, முதலிலேயே, மருந்து வாங்கிக்கொண்டே போய்விடு வது எளிது என எண்ணினுள். இரட்சிப்புக்கடைக்கு தன்னல் இயன்ற அளவு விரைந்து சென்ருள். உதவிப் பணியாளனும் தனது நீண்ட நகங்களை உயர்த்தியவாறு அக்காகிதக்குறிப்பை படித்தபின் மெதுவாக மருந்தை ஒரு காகிதத்தில் சுற்றித்
* நெருப்பு, மரம், பூமி, உலோகம், நீர் என்ற ஐந்து மூலகங்கள் இருப்பதாக பண்டைச் சீனர்கள் கருதினர். உலோகத்தை நெருப்பு வெல்ல முடிந்தது. மரபுவழி சீன மருத்துவர்களும் இருதயம், நுரையீரல்கள், ஈரல், மண் ணிரல், நீரகம் ஆகியவை, ஐந்து மூலகங்களுக்கு இனே யானவை என்று கருதினர். இருதயக் கோளாறு நுரை யீரல்களைப் பாதித்துள்ளது என்று இங்கு டாக்டர் ஹோ கூறுகிருர்.

மறுநாள் 55
தந்தான். பாலோ-எர்ரைக் கையில் ஏந்தியவாறு ஷானின் மனைவி காத்திருந்தாள். பாவோ-எர்ரோ தனது குறுங்கரத் தினை நீட்டி தனது தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண் டான். இதற்கு முன்னர் இவன் இப்படி செய்ததே இல்லையா தலால் தாய் பீதியடைந்தாள்.
இப்போது சூரியன் ஒரளவு மேலேறியிருந்தான். கையில் குழந்தையையும் மருந்துப் பொட்டலத்தையும் தூக்கிச் செல்லச் செல்ல பாரம் கூடிக்கொண்டே போவதுபோல் தோன்றியது குழந்தையும் அடிக்கடி புரளவே, போகும் வழியும் மிக நீண்டது போன்ற உணர்வேற்பட்டது. சாலை யோரத்தில் ஒரு பெரிய வீட்டின் வாயில்படியருகே சிறிது ஆர அமர்ந்தாள். அவளது உடலோடு ஆடை ஒட்டியிருந்தது. தான் வியர்வையில் குளித்திருப்பதை உணர்ந்தாள். ஆனல் பாவோ-எர் ஆழ்ந்து தூங்குவதுபோலத் தோன்றியது. மீண்டும் அவள் எழுந்து மெதுவாக நடக்க முயன்றபொழுது அவன் மிகவும் கனப்பதாகத் தோன்றியது. அவளுக்குப் பின் புறமிருந்து ஒரு குரல் கேட்டது
"நான்காவது ஷானின் மனைவியாரே, நான் அவனைத் தூக்கிக் கொண்டு வருகிறேன்.” நீலவண்ணன் ஆவுவின் குரல்போல இருந்தது. நிமிர்ந்து பார்த்து, அது ஆவுவின் குரலேதான் என்பதை உறுதி செய்து கொண்டாள். அவன் தூக்கக் கலக்கத்துடன் அவளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.
இந்த நேரத்தில் தனக்கு உதவ யாரேனும் வரமாட்டார் களா என்று அவள் ஏங்கினள். ஆனல் ஆவுவை அப்படிப்பட்ட அனதரட்சகணுக ஏற்க அவள் விரும்பவில்லை. ஏதோ திடீரென்று வந்துசேர்ந்த உதாரகுணத்துடன்.தன் உதவியை வற்புறுத்தினன். பலமுறை மறுதலித்தவள் முடிவில் ஒத்துக் கொண்டாள். பாவோ-எர்ரை அவன் அவளது மார்பூடாகத் தூக்கும் பொழுதும் அவள் அவனது கையில் அளிக்கும்

Page 36
56 போர்க்குரல்
பொழுதும் அவளது மார்பகத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது. வெட்கத்தால் கன்னம் முழுதும் சிவந்தது.
இருவருமே இரண்டரை அடி இடைவெளியில் நடந்து சென்றனர். ஆவு ஏதோ கூறினன். அதில் பெரும்பகுதிக்கு நான்காவது ஷானின் மனைவி பதிலிறுக்கவில்லை. அதிக தூரம் போயிருக்கமாட்டார்கள்; அதற்குள் தான் அந்த நேரத்தில் ஒரு நண்பனுடன் உணவுண்ண வருவதாக ஏற்பாடு செய்திருப்பதால் போகவேண்டும் என்று கூறி, குழந்தையை மீண்டும் அவளிடம் தந்துவிட்டான். பாவோ-எர்ரை அவள் மீண்டும் வாங்கிக் கொண்டாள். நல்லவேளை, வீடும் கிட்டி விட்டது. ஒன்பதாவது மாமி வாங் தெரு ஓரத்தில் உட்கார்ந்திருப்பது கண்ணில்பட்டது. அவள் சத்தமாகக் கேட்டாள்:
*நான்காவது ஷானின் மனைவியே, குழந்தைக்கு எப்படி இருக்கிறது? டாச்டரைப் பார்த்தாயா?”
“பார்த்தோம்.உங்களுக்குத்தான் நிறைய அனுபவம் இருக்கிறதே, நீங்கள் பார்த்துச் சொல்லுங்களேன்.?”
*?Lib سo 66
**என்ன?”
th.’
பாவோ-எர்ரைச் சோதித்த வாங் மாமி, இரண்டுமுறை
தலையை அசைதிதாள் பிறகும் இரண்டு முறை தலை போட்டினள்.
1ாவோ-எர் மருந்தைச் சாப்பிடும் பொழுது பிற்ப கலாகிவிட்டது. தாய் விடாது கவனித்தாள். பையன் முன்னை விட அமைதியாக இருந்தான். மாலையில் அவன் திடீரெனக் கண் திறந்து "அம்மா!”என அழைத்தான். அப்புறம் மீண்டும் கண்களை மூடித் தூங்குவது போலிருந்தான். சிறிது நேரம் தூங்கியிருப்பான், அதற்குள் அவனது நெற்றியிலும் நாசி

மறுநாள் 57
முனையிலும் முத்துமுதிதாக வியர்த்தது. அவனது வியர்வை த்ரியின் விரல்களில் பிசின் போல ஒட்டியது. பீதியடைந்து அவனது மார்பைத் தொட்டுப்பார்த்ததும் தேம்பியழத் தொடங்கினுள்.
அவன் அமைதியுற்றதும் அவனது மூச்சு முற்ருக நின்று விட்டது. அவளது தேம்பல், ஒலமாக மாறியது. உடனே அக்கம்பக்கத்தார் திரண்டனர். அறைக்குள் வாங் மாமி, நீலவண்ண ஆவு போன்ருேரும், அறைக்கு வெளியே சுபிட்ச மதுக்கடை முதலாளி, செம்மூக்கன் குங் போன்ற மற்றவர் களும் நின்ருர்கள். வாங் மாமி, ஒரு சுருள் காகி தநாணயங்களை கொளுத்த வேண்டுமென்று கூறினள். பின்னர் அன்று கூடமாட உதவி செய்தவர்களின் சாப்பாட்டுச் செலவுக்காக இரு முக்காலிகளையும் ஐந்து உடைகளையும் எடுத்துச்சென்று அடகுவைத்து இரண்டு டாலர்கள் கடன் வாங்கி நான்காவது ஷ்ானின் மனைவி கையில் கொடுத்தாள்.
சவப்பெட்டி தான் முதல் பிரச்சினை. நான்காவது ஷானின் மனைவியிடம் மேலும் ஒரு ஜோடி வெள்ளிக் காதணியும் தங்கமுலாம் பூசிய வெள்ளிக் கொண்டை ஊசியும் எஞ்சியிருந்தன.இவற்றை சுபிட்ச மதுக்கடை முதலாளியிடம் அடகுக்காகக் கொடுத்து, பாதி ரொக்கத்துக்கும் பாதி கடனுக்கும் சவப்பெட்டி வாங்கும்படிக் கூறினள். நீல வண்ணன் ஆவு கையை உயர்த்தி வலுவில் ஒத்தாசை அளிக்க யத்தனித்தான். வாங் மாமி அவனது உதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. மறுநாள் சவப்பெட்டியைத் தூக்கு வதற்கு மட்டுமே அவனை அனுமதித்தாள். "கிழட்டுநாய்” எனத் திட்டியபடி ஆத்திரத்துடன் உதட்டைப்பிதுக்கியவாறு நின்றன். வெளியே போன முதலாளி, அன்று மாலை திரும்பி வந்து சவப்பெட்டி சிறப்பாகச் செய்யவேண்டியிருப்பதால் மறுநாள் காலேவரை கிடைக்காது எனக் கூறினன்.
முதலாளி திரும்புவதற்குள் மற்ற உதவியாளர்கள் அங்கு தங்கள் சாப்பாட்டை முடித்தனர். லூச்சன் பழங்காலப்

Page 37
58 போர்க்குரல்
Linr6ösiu?ả) அமைந்த ஊராதலால் அவ்வூர்வாசிகள் நேரத்திலேயே படுக்கைக்குச் செல்ல தத்தம் வீடுகளுக்குப் போய் விட்டனர். ஆவு மட்டும் சுபிட்ச மதுக்கடை மேடை யில் சாய்ந்து குடித்துக்கொண்டிருக்க, கிழகுங் ஏதோ ஒரு பாட்டைக் குளறிக் கொண்டிருந்தான்.
அப்போது நான்காவது ஷானின் மனைவி கட்டில் விளிம்பில் அமர்ந்தவாறு புலம்பிக் கொண்டிருந்தாள். பாவோஎைர் மெத்தைமேல் கிடந்தான். தரையில் ராட்டினம் ஓய்ந்துபோய்க் கிடந்தது. நீண்டநேரத்துக்குப் பின், கண்ணீர் முழுவதும் வற்றியதும் கண்களை அகல விரித்து நாற்புறமும் ஆச்சரியத்துடன் நோக்கினுள். இவையெல்லாம் நடந்திருக்காது! இது ஒரு கனவே” என எண்ணினுள் "இதெல்லாம் ஒரு கெட்ட கனவுதான். படுக்கையில் பாவோ-எரி என் அருகே சுகமாக உறங்க நாளைக் காலையில் நான் எழுவேன். அவனும் என்னுடன் எழுந்து 'அம்மா’ எனக் கூவி, விளையாடப் புலிக்குட்டிபோல் குதித்து ஒடுவான்.”
கிழவன் குங் பாடுவதை நிறுத்தி கிராம்ப நேரமாகிறது. சுபிட்ச மதுக்கடையின் விளக்குகளெல்லாம் அணைக்கப்பட்டு விட்டன. நான்காவது ஷானின் மனைவி வெறித்து நோக்கிய வாறு அமர்ந்திருந்தாள். நிகழ்ந்தவற்றையெல்லாம் அவளால் நம்பமுடியவில்லை. சேவலொன்று கூவியது, கிழக்கே வானம் வெளுத்தது. பலகணிகளின் சந்துகளின் ஊடே இளங்காலை யின் ஒளி கசிந்தது.
படிப்படியாக விடியற்காலைப் பொழுதின் வெள்ளிக் கதிர்கள் செப்பு நிறமாக மாறின. பகலவன் கூரையின் மேல் பிரகாசித்தான். நான்காவது ஷானின் மனைவி வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டு திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறக்க ஓடினுள். யாரோ ஒருவன் முதுகுச் சுமையோடு நிற்க, அவன் பின்னல் வாங் மாமி நின்று கொண்டிருந்தாள்.
ஓ, அவன் சவப்பெட்டியைக் கொண்டு வந்திருக்கிருன்!

மறுநாள் 59
நான்காவது ஷானின் மனைவி தனது பாவோ கூஎர்ருக்காக, ஒன்றையும் மறக்காமல் தன்னல் முடிந்தவரை எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தாள். முதல் நாள் காகித நாணயக் கோர்வையைக் கொளுத்தினுள். இன்று காலை பெளத்த பிரார்த்தனை நூலான கருணை மந்திர நூல்கள் நாற்பத்தொன்பதை எரித்தாள். அவனைப் பெட்டிக்குள் வைக்குமுன் நல்ல புத்தாடை அணிவித்தாள். அவனுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுப் பொம்மைகளான களிமண் பொம்மை, இரு சிறு மரக்கிண்ணங்கள், இரண்டு கண்ணுடிக் குப்பிகள் ஆகியவற்றைத் தலையணைக்கருகில் வைத்தாள். வாங் மாமி கைவிரல்களால் எண்ணி எண்ணிப் பார்த்தும் எதையும் மறந்ததாக அவளுக்குப் படவில்லை.
அன்று நாள் முழுவதுமே நீலவண்ணன் ஆவு அப்பக்கம் தலேகாட்டாததால் சுபிட்ச மதுக்கடை முதலாளி,நான்காவது ஷானின் மனைவிக்காக 210 செப்புக் காசுகள் கூலிக்கு இரண்டு சுமை தூக்கிகளை அமர்த்திஞன். அவர்கள் பிணத்தை பொது மயானத்துக்குத் தூக்கிச் சென்று குழியும் வெட்டினர். வாங் மாமி அவளுக்குச் சமையல் செய்ய துணை புரிந்தாள். உதவி செய்தவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு உணவளிக்கப் பட்டனர். கதிரவன் விரைவில் தான் சாயப்போவதை உணர்த்தினன். வந்திருந்த விருந்தாளிகள் தாங்களும் விடை பெற்று வீடு திரும்ப வேண்டுமென்பதை உணர்த்தினர்அனைவரும் வீடு திரும்பினர்.
நான்காவது ஷானின் மனைவிக்கு முதலில் தலை சுற்றியது. சிறிது நேர ஓய்வுக்குப்பின் சரியாகி விட்டது. தற்பொழுது ஏதோ ஒரு விசித்திரமான நிகழ்ச்சி நடந்திருப்பதாக அவளுக் குத் தோன்றியது. தனக்கு அதற்குமுன் நடந்திராத ஒரு போதும் நடக்கக்கூடாது என்று தான் கருதிவந்த ஒன்று நடந்துவிட்டதை அவள் உணர்ந்தாள். யோசிக்க யோசிக்க அவளுக்கு வியப்பு அதிகரித்தது. அந்த அறையில் திடீரென மெளனம் குடிகொண்டதுதான் அவளுக்கு எல்லாவற்றையும் விட ஆச்சரியமானதாகப்பட்டது.

Page 38
60 போர்க்குரல்
அவள் எழுந்திருந்து விளக்கைப் பற்றவைத்தாள். அந்த அறை மேலும் நிசப்தமாகத் தோன்றியது. அவள் தட்டுத்தடுமாறி கதவை மூடச் சென்ருள், திரும்பி வந்து கட்டிலின்மேல் அமர்ந்தாள். தரையில் இராட்டினம் ஓய்ந்து போய்க் கிடந்தது. ஒருவாறு சமாளித்து சுற்றுமுற்றும் கவனித்தாள். அவளால் எழுந்து நிற்கவோ உட்காரவோ முடியவில்லை. அந்த அறையில் நிசப்தம் நிலவியது. மட்டு மல்ல, அது அதிகரித்து விட்டதாகத் தோன்றியது. அதில் நிறைந்திருந்த பொருள்களெல்லாம் வெறுமையாகத் தோன் றின. அந்த அறையின் விசாலம் அவளை நெரித்தது. சூழ்ந் திருந்த வெறுமை அவளை மூச்சுவிட முடியாதவாறு அழுத் தியது.
தன் பாவோ-எர் உண்மையிலேயே இறந்தே விட்டான் என்பதை இப்போது உணர்ந்தாள். அந்த அறையை ஏறிட்டு பார்க்க விரும்பாதவளாய் அழுது புலம்பவும், சிந்திக்கவும் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள். தான் நூற்றுக் கொண்டிருக்கும்பொழுது எப்படி பாவோ-எர் தன்னருகில் சீரகம் கலந்த கடலையினைக் கொறித்தவாறு உட்கார்ந்திருப் பான் என்பதையும் எண்ணிப் பார்த்தாள். அவனது சின்னஞ் சிறு கருவிழிகளை அவள் ஊடுருவிப் பார்க்கும் பொழுது அவன் *அம்மா’ என அழைத்து, "அப்பா பலகாரந்தானே விற்றர். நானும் பெரியவஞனதும் அவரைப்போலவே பலகாரம் விற்று நிறைய நிறையப் பணம் சம்பாதித்து-எல்லாத்தையும் உன் னிடம் தருவேன்” எனக் கூறியவை நினைவுக்கு வந்தன,
அத்தகைய நேரங்களில் அவள் நூற்ற ஒவ்வொரு அங்குல நூலும் விலைமதிப்புள்ளவையாகவும் உயிர்பெற்றவை யாகவும் தோன்றின. ஆல்ை இப்பொழுதோ? அவள் அப்பாவி எனக் கூறினேனல்லவா, ஆகையால் நிகழ்காலத்தைப் பற்றி அவளால் சிந்திக்க முடியவில்லை. அவளால் என்ன தீர்வைக் காணமுடியும்? அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அந்த அறை மிகவும் நிசப்தம் குடிகொண்ட அறை, மிகப்பெரிய அறை, வெறுமை சூழ்ந்த அறை என்பது மட்டும்தான்.

pp5meit 6
அவள் அப்பாவிதான். ஆயினும் செத்தவர் மீள்வதில்லை என்பதையும் அவள் அறிந்திருந்தாள். பாவோ-எர்ரை அவள் இனி ஒருபோதும் பார்க்கப் போவதில்லை. பெருமூச்சு விட்ட வாறு "பாவோ-எர் இன்னும் அங்குதான் இருக்கிருய், எனது கனவுகளில் உன்னைக் காண்பேன்" என்ருள். பின்னர் கண்களை மூடி, உடனடியாகத் தூக்கம்வரும் என்று நம்பி, தன் பாவோ -எர்ரைக் காணவிரும்பினள். அந்த விரிந்த பரப்பில், வெறுமையில், அந்த மெளனச் சூழ்நிலையில் அவளது மேல் மூச்சு அவள் காதில் தெளிவாக விழுந்தது.
கடைசியில் நான்காவது ஷானின் மனைவி தூக்கத்தில் ஆழ்ந்தாள். அறை முழுவதிலும் அமைதி நிலவியது; செம்மூக்குக் குங்கின் பாடல் ஓய்ந்திருந்தது. சுபிட்ச மதுக்கடையிலிருந்து அவன் தள்ளாடியவாறே உச்சஸ்தாயில் பாடினுன்:
"தனிமையில் வாடுகின்ருய் என் அன்பே.*
நீலவண்ணன் ஆவு, கிழ குங்கின் தோளை அழுத்திப் பிடிக்க, தட்டுத்தடுமாறி இருவரும் கும்மாளமிட்டு தோளிணைந்து சென்றனர்.
நான்காவது ஷானின் மனைவி உறங்கினள். கிழ குங்கும். மற்றவர்களும் சென்று விட்டனர். சுபிட்ச மதுக்கடைக் கதவு பூட்டப்பட்டுவிட்டது. லூச்சன் அமைதியில் ஆழ்ந்தது. இரவுப் பொழுது மட்டும், மறுநாள் காலையாக மாறவேண்டும் என்ற ஆர்வத்துடன், நிசப்தத்தில் பயணம் சென்று கொண்டிருந்தது. இருளில் மறைந்து கொண்டிருந்த ஒரு சில நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன.
gosi, 1920

Page 39
ஒரு நிகழ்ச்சி
நான் எனது கிராமத்திலிருந்து தலைநகருக்கு வந்து ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டன. அதற்குள் "நாட்டு நடப்பு"எனக் கூறப்படும் பல நிகழ்ச்சிகளை நான் கேட்கவும் பார்க்கவும் நேர்ந்ததுண்டு. ஆனல் அவற்றில் ஒன்றுகூட என் உள்ளத் தைத் தொட்டதாகக் கூறுவதற்கில்லை. அவை என்மீது ஏற்படுத்திய செல்வாக்கை வரையறுத்துக் கூறுமாறு என்னிடம் கேட்டால், அவை எனது எரிச்சலை அதிகப்படுத் தின என்றும், வெளிப்படையாகக் கூறப்போனல் அவை மேன் மேலும் மனிதரை வெறுக்கும் நிலைக்கு என்னைத் தள்ளின என்றும் கூறலாம்.
ஆயினும், ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டும் எனக்கு முக்கியத் துவம் வாய்ந்ததாக அமைந்தது. வெறுப்புணர்விலிருந்து என்னைத் தட்டியெழுப்பி எனது உள்ளத்தில் என்றும் பசுமையாக நிலைபெற்று விட்டது.
அது 1917-ஆம் ஆண்டின் பணிக்காலம், குளிர்கால வாடைக்காற்று கடூரமாக வீசிக் கொண்டிருந்தது. இருப் பினும் வயிற்றுப்பாட்டைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத் தால் நான் வெள்ளெனக் காலையில் எழுந்து வெளியே செல்ல நேர்ந்தது. சாலையில் ஓர் ஆள் அரவம் கூட இல்லை. தென் வாயிலுக்கு என்னை ஏற்றிச்செல்ல வாடகைக்கு ஒரு ரிக்ஷாவைப் பிடிப்பதற்குள் பெரும்பாடாய்ப் போய்விட்டது. சிறிது நேரத்தில் காற்றும் தணிந்தது. இப்போது தெருப் புழுதியை எல்லாம் காற்று அடித்துச் சென்று, சாலைவழியைச் சுத்தமாக விட்டுச் சென்றிருந்தது. ரிக்ஷாக்காரன் தனது நடையைத் துரிதப்படுத்தினன். தென்வாயிலை நெருங்குகின்ற

ஒரு நிகழ்ச்சி 53
சமயத்தில், சாலையைக் கடக்கவந்த யாரோ ஒரு ஆள் எங்கள் ரிக்ஷாவில் மோதிக் கீழே மெல்ல விழுவதைக் கண்டோம்.
அது கந்தலணிந்த ஒரு நரைத்த தலைப்பெண். நடை பாதையிலிருந்து எச்சரிக்கையின்றி எங்களுக்கெதிரே சாலை யைக் கடக்க வந்தாள். ரிக்ஷாக்காரன் ஒதுக்கி ஒட்டினன். ஆயினும் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த அவளது பித்தானில்லாத, கிழிந்த மேலாடை ரிக்ஷாவின் நுகத்தில் மாட்டிக்கொண்டது. நல்லவேளையாக ரிக்ஷாக்காரன் அதற்குள் ரிக்ஷாவை மேலே தூக்கிப்பிடித்ததால் தப்பினள். இல்லாவிட்டால் அவள் பயங்கரமாக கீழேவிழுந்து பலத்த அடிபட்டிருப்பாள்.
அவள் தரையில் விழுந்து கிடந்தாள். ரிக்ஷாக்காரன் நின்று விட்டான். அக்கிழவிக்கு அடி ஏதும் பட்டுவிட்டதாக நான் நினைக்கவில்லை அதோடு இச்சம்பவத்தை வேறு யாரும் பார்த்துவிட்டதாகவும் தெரியவில்லை. ஆகவே இவன் இதில் தலையிடுவதை நான் விரும்பவில்லை. இதனல்அலன் தொந்தர வில் மாட்டிக்கொள்வதோடு என் பயணத்தையும் சுணக்கி விடுவான் போலிருக்கிறதே என எண்ணினேன்.
'அதெல்லாம் சரி, வண்டியை விடு!” என்றேன். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவேளை நான் சொன்னது காதில் விழவில்லை போலும். வண்டியைக் கீழே நிறுத்திவிட்டு அக்கிழவியை மெல்லத் தூக்கி நிறுத்தினன். அவளை ஒரு கையால் தாங்கிக் கொண்டு,
"சரியாகி விட்டதா?’ எனக்கேட்டான். "அடிபட்டுவிட்டது.”
நான் உள்ளுாற ள்ண்ணலானேன்: நீ மெதுவாக விழுந்த தைத் தான் நான் கண்டேனே உனக்கெப்படி அடிபட்டிருக் கும்? அவள் நடிக்கிருள். இது எனக்கு வெறுப்பூட்டியது. இந்த ரிக்ஷாக்காரன் தானே வலியப்போய் மாட்டிக் கொண்டான். அவனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும்

Page 40
64 Guntrifike råv
வேண்டும். தப்பித்துக்கொள்ள அவன்தான் வழிபார்த்துக் கொள்ள வேண்டும்
ஆனல் கிழவியின் பதிலைக்கேட்டு அவன் வினடிகூடத் தயங்கவில்லை. அவள் கையைத் தாங்கியவாறே மெதுவாக முன்னுல் நடத்திச்சென்ருன். நான் வியப்படைந்தேன். எனக் கெதிரே தூரத்தில் ஒரு காவல்நிலையத்தைக் கண்டேன். பெருங்காற்று வீசிக் கொண்டிருந்ததால் காவல் நிலையத்துக்கு வெளியே ஒருவரும் தென்படவில்லை. எனவே வாயிலை நோக்கி கிழவியை ரிக்ஷாக்காரன் அழைத்துச் சென்றன்.
ஒரு விந்தையுணர்வு எனக்குள்ளே திடீரென எழுந்தது. திரும்பிச் சென்று கொண்டிருந்த அவனது புழுதிபடிந்த உருவம் அந்நேரத்தில் விசுவரூபமெடுத்ததைப் போல் தோன்றியது. தொலைவில் அவன் செல்லச் செல்ல அவனது உருவம் நீண்டு வளருவது போலிருந்தது. கடைசியில் என் சிரத்தை உயர்த்தி அவனைப் பார்க்க வேண்டியிருந்தது. அதே நேரத்தில் அவன் என்மீது பலமாக அமர்ந்து, எனது உயர்ந்த ரகக் கம்பளி ஆடைக்குள் மறைந்து கொண்டிருந்த எனது குறுகிய ஆன்மாவை அழுத்தித் திக்குமுக்காடச் செய்வது போலவுமிருந்தது. காவல் நிலையத்துள்ளிருந்து ஒரு போலீஸ் காரன் வெளியே வரும்வரை ஆடாது அசையாது உட்கார்ந் திருந்தேன். எனது ஜீவநாடி ஒடுங்கியதைப் போலிருந்தது. பிறகு ரிக்ஷாவிலிருந்து கீழிறங்கினேன்.
போலீஸ்காரன் என்னருகே வந்து "வேருெரு ரிக்ஷாவை அமர்த்திக்கொள்ளுங்கள். இதற்குமேல் அவனுல் இழுக்க முடியாது’ என்ருன்.
மறுபேச்சுப் பேசாது எனது மேல் கோட்டிலிருந்து சில செப்பு நாணயங்களைக் கைநிறைய எடுத்து போலிஸ் காரனிடம் கொடுத்து 'தயவு செய்து அவனிடம் கொடுத்து விடுங்கள்” என்றேன்.
காற்று முற்ருக ஓய்ந்துவிட்டது. ஆயினும் சாலையில் யாதொரு சந்தடியுமில்லை. நடந்துசெல்கையில் எனது சிந்தனை

ஒரு நிகழ்ச்சி 65
ஒடியது. என்னைப் பற்றிச் சிந்திக்கவே கூசினேன். சற்றுமுன்பு நடந்தவை ஒருபுறமிருக்க, நான் கைநிறைய செப்புக்காசுகள் அள்ளிக் கொடுத்ததன் தோக்கமே எனக்குப் புரியவில்லை. அது என்ன வெகுமதியா? அந்த ரிக்ஷாக்காரனின் தரத்தை மதிக்க எனக்கு என்ன தகுதி? எனக்கே என்னல் பதில்கூற முடியவில்லை.
இப்பொழுதும்கூட இந்த நிகழ்ச்சி என் மனத்தில் பசுமை யாக உள்ளது; என் மனத்தை உறுத்தி என்னை நானே ஆராய வைக்கிறது. அக்காலத்து அரசியல், ராணுவ நிகழ்ச்சிகளை சிறுவயதுக் காலத்தில் நான் உருப்போட்ட உயர் இலக்கியங் களைப்போல முற்றிலுமாக மறந்து விட்டேன். இருப்பினும் இந்த நிகழ்ச்சி மட்டும் மீண்டும் மீண்டும் திரும்பி வருகிறது. அது உண்மை வாழ்வில் நடந்ததைக் காட்டிலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது என்னை வெட்கமுறச் செய்கிறது. என்னே நாளே சீர்படுத்திக் கொள்ளுமாறு தூண்டுகிறது. புதிய மனத்திண்மையையும் புதிய நம்பிக்கையையும் ஊட்டுகிறது.
gで &o 1920.
GBLunt. — 5

Page 41
விண் அமளி
ஆற்றின் கரையருகே இருந்த மண் குடிசைகளின் மேல் விழுந்த பரிதியின் ஒளிமிக்க மஞ்சள் கதிர்கள் மங்கி மறைந்து கொண்டிருந்தன. ஆற்றங்கரையருகே இருந்த மரங்களின் காய்த்த இலைகளால் ஒருவாறு வறண்ட காற்றை சுவாசிக்க முடிந்தது. அவற்றிற்குக் கீழே சில வரிவிழுந்த கொசுக்கள் ரிங்கரித்துப் பறந்து கொண்டிருந்தன. ஆற்றங் கரையருகே இருந்த குடியானவர் வீடுகளின் சமையற்கட்டுப் புகை போக்கிகளிலிருந்து வந்த புகை அடங்கிக்கொண்டிருந் தது. பெண்களும் குழந்தைகளும் தங்கள் கதவுகளின் முன்னல் தண்ணீர் தெளித்து மேடைகளையும் தாழ்ந்த முக்காலிகளையும் வரிசையாகப் போட்டுக் கொண்டிருந்தனர். மாலைநேர உணவுக்கு நேரமாகி விட்டது என்பது கூருமலே விளங்கும்.
முதியவர்களும் ஆடவர்களும் தாழ்வான முக்காலிகளில் அமர்ந்து வாழையிலே விசிறிகளால் விசிறிக்கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் அங்குமிங்குமாக ஒடிக் கொண்டும் மரத்தடிகளின் கீழ் அமர்ந்து, சிறு கூழாங் கற் களால் விளையாடிக் கொண்டுமிருந்தனர். பெண்கள் அவித்த சிறு கரு மொச்சையையும் சுடச்சுட தாளித்த சோற்றையும் கொணர்ந்தனர். உல்லாசப் படகொன்றில் சென்று கொண்டிருந்த அறிவாளிகள் சிலர் இக்காட்சியைக் கண்டு கவிதைபொழியத் தொடங்கினர்; "கவலையே இல்லாத வாழ்க்கை” என வியந்தனர்: "இதல்லவா உண்மையான கிராமிய ஆனந்தம்” என்று கூறிக்கொண்டனர்.
கிழவி திருமதி. ஒன்பது-ராதிதல் கூறியவை அவர்கள் காதில் விழவில்லை. விழுந்திருந்தால் இம்முடிவுக்கு அவர்கள் எந்திருக்கமாட்டார்கள். கிழத் திருமதி ஒன்பது ராத்தல்

வீண் அமளி 67
மிகுந்த கோபத்துடன், கிழிந்துபோன வாழை விசிறியை தனது முக்காலிக்கால்களின் மீது அடித்துக்கொண்டு இருந்தாள்.
*எழுபத்தொன்பது விருஷ்ம் நான் வாழ்ந்தது போதும். இந்தக் குடும்பம் இப்படிச் சீரழிவதைப் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டது. ஒரேயடியாக செத்துத் தொலைந்தால் தேைைல. இரவுச் சாப்பாட்டுக்கு எல்லாம் தயாராகிவிட்டது. அவர்கள் இன்னும் வறுத்த மொச்சைகளை நொறுக்கிக் கொண்டிருக்கிருரிகள்- வீட்டையும் வாசலையும் தின்றே தீர்த்து விடுவார்கள் போலிருக்கிறது” எனக் கூச்சலிட்டாள்.
அவளது கொள்ளுப் பேத்தி ஆறு-ராத்தல் கைநிறைய மொச்சைகளுடன் ஓடிவந்தவள், நிலைமையை உணர்ந்து நேரே ஆற்றங்கரைப்பக்கம் ஓடி ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டாள். இரட்டைப்பின்னல் போட்ட சிறிய தலையை நீட்டியவாறு 'சாகாத கிழமே!” என்று கத்தினள்.
கிழத்திருமதி ஒன்பது-ராத்தலுக்கு அத்தனை வயதானுலும் காது செவிடாகவில்லை. ஆயினும் சிறுமி கூறியவை அவள் காதில் விழாததால், "ஆமாமா-ஒவ்வொரு தலைமுறையும் முன்னதைவிட மோசம்” எனத் தனக்குத் தானே முணுமுணுத்தாள். «°. •ʻ ', x
அந்த கிராமத்துத் தாய்மார்களிடம் ஒரு விசித்திரமான பழக்கமிருந்தது. குழந்தைகள் பிறந்தவுடன் அவற்றை எடைபார்த்து, அவற்றின் எடையளவையே பெயராக வைத்து விடுவார்கள். தனது ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழாவுக்குப் பின்னர் திருமதி ஒன்பது-ராத்தல் சிறுகச்சிறுகக் குற்றம் கண்டுபிடிக்கத் தலைப்பட்டாள். தனது இளமைக் காலத்தில் கோடைகாலம் இப்படித் தகிக்கவில்லை என்றும், அப்போதெல்லாம் மொச்சைகள் கெட்டியாக இருக்கவில்லை எனவும் அடிக்கடி குறைகூறத் தொடங்கினள். சுருக்கமாகச் சொன்னல் அவளேப் பொறுத்தவரை தற்கால உலகத்தில்

Page 42
68 போர்க்குரல்
ஏதோ தீவிரமான குறை இருக்கிறது. ஆறு-ராத்தல் காரி பிறக்கும் போது அவள் தன் முப்பாட்டனை விட மூன்று ராத்தல் குறைவாகவும் தகப்பன விட ஒருராத்தல் குறை வாகவும் இருக்கக் காரணம்வேறு இருக்கமுடியுமா? இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? "ஆமாம்; ஒவ்வொரு தலை முறையும் முன்னதைவிட மோசமாகிறது” என விடாது அழுத் திக் கூறுவாள். W
அவளது பேரனின் மனைவி திருமதி ஏழுசராத்தல் கூடையில் சோற்றை அப்போது கொணர்ந்தாள். அதை மேசை மீது தடாலென்று வைத்து கோபத்துடன் கூறினுள்: "பழையபடி ஆரம்பித்து விட்டாயா பாட்டி ஆறு-ராத்தல் பிறக்கும் பொழுது ஆறுராத்தல் ஐந்து அவுன்சு எடையுளள வளாகத்தானே இருந்தாள்- இல்லையா? உங்கள் குடும்பம் பயன்படுத்தும் தனிப்பட்ட தராசு குறைவாகத்தான் எடை காட்டும் போலும். அதில் ஒரு ராத்தலுக்குப் பதினெட்டு அவுன்சு பிடிக்கும் போலும். சரியான பதினறு அவுன்சு தராசாக இருந்திருந்தால் ஆறுராத்தல் காரி ஏழு ராத்தலுக்கு மேல் எடையுள்ளவளாக இருந்திருப்பாள். பாட்டனும் பாட்டியும் அவர்களது பெயர்களுக்கு ஏற்ருற்போல் ஒன்பது ராத்தல், எட்டுராத்தலாக இருந்திருப்பார்களென நான் நம்ப வில்லை. ஒருவேளை அவர்கள் அக்காலத்தில் பதினறு அவுன்சுத் தராசைப் பயன்படுத்தியிருக்கலாம்.”
*ஒவ்வொரு தலைமுறையும் முன்னதைவிட மோசம்!”
திருமதி. ஏழு-ராத்தல் இதற்குப் பதிலளிக்கும் முன்னர் தெருச்சந்தின் முனையில் தனது கணவன் வருவது தென்படவும் தன் தாக்குதலை அன்ைமீது திருப்பி சாடத் தொடங்கினுள் : "சோம்பேறிப் பயலே, ஏன் இவ்வளவு தேரம் கழித்து வருகிருய்? இவ்வளவு நேரம் எங்கே போய்த் தொலைந்தாப்? இரவுச் சாப்பாட்டைச் சாப்பிட எங்களை இவ்வளவு நேரம் காக்க வைப்பதுபற்றி நீ கவலைப்படு , Scyuir?”

வீண் அமளி 69
கிராமத்துவாசியாக இருந்தவன் எனினும் எப்போதுமே அவன் தன்நிலையை மேம்படுத்தவே விரும்பியவன். பாட்டன் காலத்திலிருந்து மூன்று சந்ததியில் எவருமே கலப்பைதுரக்கிய தில்லை. தனது தந்தையைப் போலவே இவனும் ஒரு படகில் வேலை செய்து வந்தான். இப்படகு காலையில் லூச்சனை விட்டுப் புறப்பட்டு நகர்ப்புறம் சென்று மாலையில் திரும்பும். இதன் காரணமாக நாட்டு நடப்பெல்லாம் இவனுக்கு நன்ருகத் தெரிந்திருந்தது. எடுத்துக்காட்டாக, மின்னல் தேவதை ஒரு பூரானைத் தாக்கிக் கொன்றது எங்கு, எங்குஒரு கன்னி ஒரு பேயைப் பெற்றெடுத்தாள் என்பதெல்லாம் இவனுக்குத் தெரிந்திருந்தது. ஊரிலும் அவனுக்கு மதிப்பு. ஆயினும் இவன் குடும்பத்தினர் கிராமவழக்கத்தை ஏற்றுக் கொண்டு கோடைகாலத்தில் இரவு சாப்பாட்டு வேளையில் விளக்கை ஏற்றுவதில்லை. இதனுல் நேரம் கழித்து விடுதிரும்பி ஞல் பேச்சு வாங்கிக் கட்ட வேண்டி வரும்.
ஏழு-ராத்தல் தந்தவாய் முனையும் கலப்பு உலோகத் தாலான கிண்ணமும் பொருத்தப்பட்ட ஆறடிக்குமேல் நீள முடைய புள்ளியிட்ட மூங்கில் குழாயை ஒரு கையில் பிடித் திருந்தான். தலே குனிந்தவாறே மெதுவாக நடந்துவந்து குட்டைமுக்காலி ஒன்றில் அமர்ந்தான். இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி சிறுமி ஆறு-ராத்தலும் மெதுவாக வெளியில் வந்து அமர்ந்தாள். அவனிடம் பேச்சுக் கொடுத் தாள். ஆனல் அவன் பதிலேதும் சொல்லவில்லை.
"ஒவ்வொரு தலைமுறையும் முன்னதைவிட மோசம்” எனக் கிழவி ஒன்பது-ராத்தல் முணுமுணுத்தாள்.
ஏழு-ராத்தல் மெதுவாகத் தன்தலயை உயர்த்திய
வாறே பெருமூச்சுடன் கூறினன்: "சக்கரவர்த்தி மீண்டும் சிம்மாசனம் ஏறிவிட்டார்!”
திருமதி ஏழு-ராத்தல் ஒருகணம் திகைத்துப் போனுள். பிறகு செய்தியை எடுத்துக்கொண்டு "ரொம்ப நல்லது

Page 43
70 போர்க்குரல்
அப்படியென்ருல் பலருக்குப் பொது மன்னிப்பு வழங்குவார் கள் அல்லவா?’ என வியந்தாள்.
“எனக்குச் சடை இல்லையே..” என்று ஏழு ராத்தல் மீண்டும் பெருமூச்செறிந்தான்.
"சடை இருக்கவேண்டும் என்று சக்கரவர்த்தி நிபந்தனை விதித்திருக்கிருரா?
"அப்படித்தான்.”
திருமதி ஏழு-ராத்தல் மிகவும் கவலைப்பட்டாள்.
"உனக்கு எப்படித் தெரியும்?’ என மலைப்புடன் கேட் Irait.
"சுயிட்ச மதுக்கடையில் எல்லாரும் அப்படித்தான் சொல்கிறர்கள்.?
நிலைமைகள் மோசமடைந்துள்ளன என்பதைதி திருமதி. ஏழு-ராத்தலுக்கு அவளது உள்ளுணர்வு உணர்த்தியது. ஏனெனில் சுபிட்ச மதுக்கடையில் நாட்டு நடப்பு எல்லாவற் றையும் தெரிந்துகொள்ளலாம் என்பது திருமதி. ஏழு-ராத்த லுக்கு நன்ருகதி தெரியும். ஏழு ராத்தலின் சவரம் செய்யப் பட்ட தலையை அவள் கோபத்துடன் பார்த்தாள். வெறுப்பும் வருத்தமும் ஏற்பட்டன. மிகுந்த விரக்தியுடன் ஒருதட்டில் சோற்றைப் பரிமாறி தடாலென அவன் முன்னுல் வைத்த வாறு "இந்தா, சீக்கிரம் சாப்பிடு. அழுவதால் சடை வளர்ந்து விடப் போகிறதா என்ன?’ எனக் கூறினுள்.
கதிரவன் தனது கடைசிக் கதிர்களையும் திரும்ப எடுத்துக் கொண்டான். கருமைபடர்ந்த வெளி மெல்லமெல்லக் குளிரத் தொடங்கியது. மண்தரையில் தட்டுகளும் உணவருந்தப் பயன்படுத்தும் குச்சிகளும் உராயும்ஒலி கேட்டது. சாப்பிட் க் கொண்டிருந்தவர்க்ளின் முதுகில் வியர்வைத்துளிகள் அரும் பின. மூன்று கிண்ணம் சோற்றைக் காலிசெய்திருந்த திருமதி ஏழு-ராத்தல், அப்போது அண்ணுந்து பார்த்தபோது அவள்

eisiwr syu oedd 7.
கண்ட காட்சி இதயத்தைப் படபடக்க வைத்தது. மெழுகுமர இலைகளின் சந்தினூடே ஒற்றைப் பலகைப் பாலத்தைக் கடந்து, குட்டையான கொழுத்த உருவம் கொண்ட திரு. சாவோ வந்து கொண்டிருப்பதைக் கண்டாள். அவன் தனது நீண்ட நீலநிறப் பருத்தி அங்கியை அணிந்திருந்தான்.
திரு. சாவோ அண்டைக் கிராமத்திலிருந்த செழுமை மதுக்கடையின் உரிமையாளன். பத்து மைல் சுற்று வட்டாரத்துக்குள் பெயர்பெற்ற பெரியதனக்காரன்; கொஞ்சம் எழுத்து வாசனை உள்ளவன். இந்தப் படிப்புவாசனை கடந்தகாலப் பெருமையை அவனுக்கு ஏற்றியது. சிங்ஷெங்டான்* உரை எழுதிய "மூன்று அரசுகளின் மான்மியம்” என்ற நூலின் பல பாகங்களை வைத்திருந்தான். அவற்றை ஒவ் வொரு வார்த்தையாக படித்துக் கொண்டிருப்பான். அவனல் ஐந்துபுலித்** தளகர்த்தாக்களின் பெயர்களை நினைவிலிருந்து சொல்லமுடியும். தவிர ஹ"வாங்-ஷாங், ஹான்-ஷெங் எனவும், மாசெள, மெங்சீ எனவும் அழைக்கப்பட்டனர் என்ற விவரங்களும் தெரியும். புரட்சிக்குப் பின்னர் தனது சடையை தலை உச்சியில் முடிந்து, தாவோ மார்க்கத் துறவி போல் வைத்துக்கொண்டு செள-யுன் மட்டும் இன்று உயிருடனிருந்திருந்தால் நிலைமை இப்படிச் சீர்கெட்டிருக் காது' என பெருமூச்சுடன் கூறுவான். திருமதி ஏழுராத்தலின் கண்பார்வை கூர்மையானது. தற்பொழுது திரு. சாவோ தாவோ மார்க்கத் துறவிபோல் தனது தலைமுடியை வைத்துக் கொள்ளவில்லை என்பதைக் கண்டு கொண்டாள். திரு. சாவோ, முன்பக்க முடியை மழித்துத் தன் சடையைத் தொங்கவிட்டிருந்தான். இதிலிருந்து சக்கரவர்த்தி அரியனை ஏறியுள்ளார் என்பதையும், இனிமேல் சடைவைத்திருப்பது இன்றியமையாததாகக் கருதப்படும் என்பதையும், ஏழு
* கிபி 1609-1661 காலத்தில் வாழ்ந்த இலக்கியவிமர்சகர்.
**ஷலி அரசு (கி.பி. 221-263) காலத்தில் புகழ்பெற்ற
ஐந்து தளகர்த்தர்கள்.

Page 44
72 போர்க்குரல்
ராத்தலுக்குப் பெரும் ஆபத்து ஒன்றிருக்கிறது என்பதையும் உணர்ந்தாள். திரு. சாவோ இந்த நீண்ட பருத்தி ஆடையை ஏதாவது விசேஷ காரணமின்றி அணியமாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். கடந்த மூன்றுண்டுகளில் அவளுக்குத் தெரிந்து திரு சாவோ அந்த ஆடையை இரண்டு முறிைகளே அணிந்திருந்தான்: அவனது எதிரி ஆஸ" அம்மை நோயுற்ற போது ஒருமுறையும், தனது மதுக்கடையை நொடிக்கச் செய்த திரு. லூ மரணமடைந்தபோது இரண்டாம் முறையும் திரு, சாவோ இந்த ஆடையை அணிந்திருந்தான். இது மூன்ருவது தடவை. எனவே அவனுக்கு மகிழ்ச்சியும் அவனது எதிரிகளுக்கு அழிவும் அளிக்கக்கூடிய ஏதாவது நிகழ்ச்சியாகத் தான் இருக்கவேண்டும்.
இரண்டாண்டுகளுக்கு முன் தன் கணவன் குடிவெறியில் திரு. சாவோவை வேசைமகன்' எனத் திட்டியது திருமதி. ஏழு-ராத்தலின் நினைவுக்கு வந்தது. தனது கணவனுக்கு நிகழவிருக்கும் ஆபத்தை அவளது உள்ளுணர்வு எச்சரித்தது. அவளது நெஞ்சு படபடத்தது.
திரு. சாவோ தங்களைக் கடந்து செல்கையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்துநின்று உணவருந்த பயன்படுத் தும் குச்சிகளால் தங்கள் சோற்றுத் தட்டுகளே பிளவுகோலி னல் சுட்டியவாறு தங்களுடன் சாப்பிடும்படிஅழைத்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறியவாறு அவர்களை சாப்பிடும்படி கூறி விட்டு நேரே ஏழுரைாத்தலின் மேசையை நோக்கிச்சென்ருன் திரு சாவோ. உடனே ஏழு-ராத்தலின் குடும்பத்தினர் எழுந்து நின்று மரியாதை செய்தனர். திரு. சாவோ புன்னகையுடன் *சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள்* என்ருன். அதேசமயம் மேசை யிலுள்ள சாப்பாட்டையும் ஒரு நோட்டம் விட்டான்.
"அந்த உலர்ந்த காய்கறிகள் நல்லமணம்-விஷயம் தெரியுமா உங்களுக்கு?* திரு. சாவோ ஏழு -ராத்தலுக்குப் பின்பக்கமும் திருமதி ஏழு-ராத்தலுக்கு முன்பக்கமுமாக நின்முன்.

6567 autoan 73
*சக்கரவர்த்தி மீண்டும் அரியணை ஏறிவிட்டார்”என்ருன் ஏழு-ராத்தல்.
திரு. சாவோவின் பேச்சைக்கேட்ட திருமதி ஏழு-ராத்தல் புன்சிரிப்பை வலிய வரவழைத்தவாறே "சிம்மாசனத்தில் சக்கரவர்த்தி அமர்வதால் ஒரு பொதுமன்னிப்பு வழங்கப் படுமோ?” என்று கேட்டாள்.
*பொதுமன்னிப்பா?...எல்லாம் உரிய காலத்தில் வரும்.” சட்டென்று திரு. சாவோ அதிகாரக்குரலில் 'என்ன, ஏழுராத்தலின் சடைக்கு என்ன கதியாயிற்று?அதுதான் முக்கியம். நீண்ட* முடியினர் காலத்தில் என்ன நடந்தது என்பது உங் களுக்கெல்லாம் தெரிந்த விஷயம்; முடியைக் காத்தால் தலை போகும் தலையை காக்க முடிபோகும்..”*
ஏழு-ராத்தலும் அவன் மனைவியும் புத்தகங்கள் ஏதும் படித்ததில்லை. எனவே இந்த சரித்திரச் சான்றுகள் அவர் களுக்கு ஏறவில்லை. எனினும் திரு. சாவோ போன்ற படித்த வர் இதைக் கூறியதால் நிலைமை மோசமானவையாகவும் Lor fibsmo முடியாதவையாகவும் இருக்கவேண்டும்போல் தோன்றியது. காதுகளில் ரீங்காரம் ஒலித்தது. மேற் கொண்டு வேறு வார்த்தைகள் பேசமுடியாதவராயினர்.
*ஒவ்வொரு தலைமுறையும் முன்னதைவிட மோசம்”- ஓய்ந்து போயிருந்த கிழவி திருமதி. ஒன்பது-ராத்தலும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திரு. சாவோவிடம் பேசினுள் *இக்காலக் கிளர்ச்சிக்காரர்கள், அனைவரின் சடைகளையும் வெட்டிவிடுகின்றனர். இதனுல் ஆடவர்கள் பெளத்தர்கள் மாதிரியும் தெரிவதில்லை தாவோ மார்க்கத்தினர் மாதிரியும் தெரிவதில்லை. பழைய கால கிளர்ச்சிக்காரர்கள் இப்படிச்
* 1851-1867 உழவர் புரட்சித் தைப்பிங் படை சிங் வமிச பரம்பரை தோன்றியதும் சீன ஆண்மக்கள் நெற்றிக்குமேல் முடியை மழித்து. சடைவளர்க்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். தைப்பிங் படையினர் முடிவெட்டாது வளர்த்ததால் நீண்ட முடியினர் என அழைக்கப்பட்டனர்.

Page 45
74 போர்க்குரல்
செய்தனரா? எழுபத்தொன்பது ஆண்டுக்காலம் நான் வாழ்ந்தது போதும். அக்காலக் கிளர்ச்சியாளர்கள் தங்கள் பாதங்கள்வரை தொங்கிய சிவப்புப்பட்டுத் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்.இளவரசர்கள் ஒரு பக்கமாகத் தொங்க விடப்பட்ட மஞ்சள் பட்டுத் தலைப்பாகை அணிந்திருந்தார் கள். மஞ்சள் பட்டு, சிவப்புப்பட்டு, மஞ்சள் பட்டு.நான் வாழ்ந்தது போதும்.எழுபத்து ஒன்பது.”
எழுந்து நின்ற திருமதி. ஏழு-ராத்தல் முணுமுணுத்தாள்: *என்ன செய்வது? எங்கள் குடும்பம் பெரியது. முதியவர் களும் சிறுவயதினரும் அவர் வருவாயில்தான் வாழ்கின் றனர்.”*
"ஒன்றும் செய்வதற்கில்லை” என்று தலையை ஆட்டிய வாறே பதிலளித்தான் திரு. சாவோ. "சடையில்லாதிருப்பதற் குரிய தண்டனை பற்றி ஒரு புத்தகத்தில் தெளிவாக, வரிவரி யாக எழுதப்பட்டிருக்கிறது. ஒருகுடும்ப அளவு பெரிதோ சிறி தோ அதை மாற்றிவிட முடியாது.”
அது புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டதும் திருமதி. ஏழு-ராத்தல் உண்மையிலேயே நம்பிக்கை தளர்ந்தாள். தனக்கேற்பட்ட பதற்றம் ஒரு புறமிருக்க, திடீரென ஏழு-ராத்தலின் மீது வெறுப்பு ஏற்பட்டது. தனது உணவருந்தும் குச்சியை அவன் மூக்கு நுனிக்கு நேர் காட்டியவாறே, "நீதான் பாதை வெட்டினப். அதன் வழி நீயே நட. கிளர்ச்சிக் காலத்தில் படகை எடுத்துக் கொண்டு வெளியேபோகாதே, நகர்ப்புறம் போகாதே என்று கூறியதைக் கேட்டாயா? அப்படிச் சொல்லியும் மீறிப் போனுய். என்ன நடந்தது? உன் நல்ல செழுமையான கருப்புச் சடையை அவர்கள் கத்தரித்து விட்டார்கள். இப்போது பார்வைக்குப் பெளத்தணுகவும் தெரியவில்லை தாவோ மார்க்கத்தினனுகவும் தெரியவில்லை. நீயே பாதை வெட்டினுய், நீயே அதில் நடக்க வேண்டியதுதான்.

வீண் அமளி 75.
அதற்காக எங்களையெல்லாம் ஏன் வம்பில் இழுக்க வேண்டும் சிறைக்கைதிப் பிணமே.”*
திரு.சாவோ அங்கு வந்திருப்பதைக் கண்டதும் கிராமத்து மக்கள் சீக்கிரமே இரவு உணவை முடித்துவிட்டு ஏழுராத்தலின் மேசையைச் சுற்றிலும் கூடினர். ஊரின் மதிப்புக் குரிய பிரஜையாகிய தான், பொதுமக்கள் முன்னல் திட்டு வாங்குவது எவ்வளவு அவமானம் என்பதை ஏழு-ராத்தல் உணரத் தொடங்கினன். எனவே தலையை மெதுவாக மேலே உயர்த்தியவாறு கூறினன்:
*இன்றைக்கு ஆயிரம் சொல்லுவாய். ஆன ல் அன்றைக்கு.”
'சிறைக் கைதிப் பிணமே.”*
வேடிக்கை பார்த்து நின்றவர்களில் விதவை பா-இ மட்டும் இளகிய உள்ளம் கொண்டவள். தனது கணவனின் சாவுக்குப் பின் பிறந்த, இப்போது இரண்டு வயதாகியுள்ள குழந்தையைச் சுமந்தவளாய், திருமதி ஏழு-ராத்தல் பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். நிலைமை முற்றி விட்டதை உணர்ந்ததும் அமைதியை நிலை நாட்ட விரைவாக முயன்ருள்:
"அது சரிதான் திருமதி ஏழு-ராத்தல், எதிர்காலத்தை முன்கூட்டியே உணர்ந்துகொள்ள மனிதர்கள் என்ன தேவதைகளா? அந்தகாலத்தில், சடையில்லாமல் இருப்பதால் என்ன கேவலம் என்று நீ கூறவில்லையா? தவிரவும் அதற்குள் என்ன அரசாங்க மேலிடத்திலிருந்து உத்தரவா வந்து விட்டது?.”
அவள் பேசி முடிப்பதற்குள் திருமதி. ஏழு- ராத்தலின் செவிகள் ஜிவ்வென்று சிவப்பேறின. உணவருந்தும் குச்சியை விதவையின் மூக்கு துணியை நோக்கித் திருப்பியவாறே *இல்லை,நான் ஒருபோதும் சொல்லவில்லை" என்ருள். 'ந்ான் ஒரு மனிதப் பிறவிதானே, இல்லையா? என்ன சொல்கிறீர்கள்

Page 46
76 போர்க்குரல்
திருமதி, பா. இ? நான் என்ன மடத்தனமாகவா பேசி இருப்பேன்? அது நடந்தபோது முழுசாக மூன்றுநாள்கள் அழுதுகொண்டிருந்தேன். யாரை வேண்டுமானலும் கேட்டுப் பாருங்கள். இந்தக் குழந்தை ஆறு-ராத்தல் கூட அழுதாள்.” ஆறு-ராத்தலும் அப்போதுதான் ஒரு பெரிய கிண்ணம் நிறைய சோற்றைத் தின்று முடித்துவிட்டு மேலும் கேட்டு வெற்றுக் கிண்ணத்தை நீட்டினுள். கோபத்திலிருந்த திருமதி ஏழு-ராத்தல் உணவருந்தும் குச்சியால் குழந்தையின் இரட்டைச் சடையின் மீது குத்தியவளாய், 'சனியனே உன்னையார் வரவிட்டது” என்று கூச்சலிட்டாள்.
ஆறு - ராத்தலின் கையிலிருந்த வெற்றுக்கிண்ணம் தரையில் விழுந்து ஒசையெழுப்பியது. அது ஒரு செங்கல் முனையில் மோத ஒருபெரிய துண்டு சிதறிவிழுந்தது. ஏழுராத்தல் குதித்தெழுந்து உடைந்த கிண்ணத்தை பொறுக் கினன். துண்டுகளை ஒன்றிணைத்தவாறு "மூதேவி” எனத் திட்டினன். ஆறு-ராத்தலுக்கு விட்டஅறையில் அவள் கீழே சாய்ந்தாள். ஆறு-ராத்தல் அங்கேயே அழுது கொண்டு நிற்கவும், கிழவி திருமதி. ஒன்பது-ராத்தல் சிறுமியின் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு, *ஒவ்வொரு தலைமுறையும் முன்னையதைவிட மோசம்” என முணு முனுத்துக் கொண்டே சென்ருள்.
இப்போது கோபப்படுவது பா-இயின் முறை: "குழந்தையைப் போய் அடிக்கிருயே, திருமதி ஏழு-ராத்தல்” எனக் கத்தினுள்.
திரு. சாவோ புன்முறுவலுடன் இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஆனல் விதவை பா-இ "அரசாங்க மேலிடத்து உத்தரவு ஏதும் வரவில்லை” எனக் கூறியதும் அவனுக்குக் கோபம் மூண்டது. மேசையருகில் வந்து. "குழந்தையை அடிப்பதால் குடிமுழுகாது, பேரரசுப் படையினர் இங்கு எந்த நேரத்திலும் வந்து சேர்வார்கள். பேரரசைக் காக்கிறவர் தளபதி சாங்தான் என்பதை

வீண் அமளி 77
அப்போது தெரிந்துகொள்வீர்கள். தளபதி சாங் முப்பேரரசுக் காலத்தைச் சேர்ந்த சாங்-ஃபெய்யின் வழித்தோன்றல். அவரது ஈட்டி பதினெட்டு அடி நீளம் உள்ளது. அவர் பத்தாயிரம் பேரை ஒரே மனிதராக எதிர்த்து நிற்கும் துணிச்சலுள்ளவர். அவரை எதிர்த்து நிற்க யாரால் முடியும்? கண்ணுக்குப் புலப்படாத ஒரு பெரிய ஈட்டியைக் கையில் பிடித்து நிற்கும் பாவனையில் தன் வெறும் கைகளை உயர்த்திய திரு. சாவோ, பாஇையை நோக்கிச் சென்று *உங்களால் அவருக்கு ஈடுகொடுத்து நிற்க முடியுமா?* என்று கேட்டான்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்த விதவை பா-இ சினவெறியேறி நடுங்கிக் கொண்டிருந்தாள். ஆணுல் திடீரென்று திரு. சாவோ கண்ணை உருட்டி விழித்தவாறு முகத்தில் வியர்வை சொட்ட தன்னை நோக்கிச் சாடவருவதை கண்டதும் உதறல் ஏற்பட்டது. மேலும் பேசத் துணிச்சலில் லாதவளாய் அங்கிருந்து திரும்பி ஓடிவிட்டாள். திரு சாவோ வும் அவ்விடத்தை விட்டு அகன்ருன். அவனுக்கு வழிவிட்ட கிராமத்தவர்கள், பா-இ தலையிட்டதைக் கண்டித் தனர். தங்கள் சடையினை முதலில் கத்திரித்துவிட்டு பிறகு மீண்டும் அதை வளர்க்கத் தொடங்கியுள்ள சிலரோ திரு. சாவோவின் கண்களில் படாதவகையில் வேகமாக மற்றவர்களுக்குப் பின்னல் ஒளிந்து கொண்டனர். எனினும் உன்னிப்பாய்க் கவனம் செலுத்தாத திரு சாவோ, கூட்டத்திைைரத் தாண்டி மெழுகு மரங்களைக் கடந்து சென்றன். விடைபெறுவதற்கு முன்னுல் "அவருக்கு உங்களால் ஈடுநிற்க முடியுமா” எனக் கூறியவனுய் ஒற்றைப்பலகைப் பாலத்தில் தாவிச் சென்றன்.
கிராமத்தவர்கள் வாய்பேசாது நின்றவாறு தங்கள் தங்கள் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தனர். தங்களால் சாங் ஃபெயிக்கு ஈடு நிற்க முடியாது என்பதை உணர்ந்தனர். எனவே ஏழு-ராத்தலின் வாழ்க்கை முடிந்த விஷயமே என முடிவுகட்டினர். அரச நீதியை மீறிய ஏழு-ராத்தல், நகரத்துச் செய்தியைக் கூறிய பொழுது அந்த நீண்ட சுங்கானைப்

Page 47
i8 போர்க்குரல்
பிடித்துக் கொண்டு ஆணவமாகப் பேசியிருக்க வேண்டிய தில்லை என்று எண்ணினர்கள். ஆகையால் அவன் சட்டத்தை மீறியதில் அவர்களுக்கு ஒருவகையில் மகிழ்ச்சிதான். அவர்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளிப்படையாகக் கூறவிரும் பினலும் என்ன சொல்வது எனப்புரியாது தடுமாறினர். ரீங்காரமிட்ட கொசுக்கள் அவர்களது வெற்றுக் கைகளை உராய்ந்தவாறு மெழுகு மரங்களுக்கும் கீழே மொய்க்கச் சென்றன. கிராமத்தார் தங்கள் வீடுகளே நோக்கிக் கலந்து சென்றனர். கதவுகளைச் சாத்திப் படுக்கச்சென்றனர்.தனக்குத் தானே முனகியவாறே திருமதி ஏழு-ராத்தலும் தட்டுகளை ஒன்றுசேர்த்து மேசைகளையும் முக்காலிகளையும் வீட்டுக்குள் எடுத்துச் சென்று கதவைச் சாத்திப் படுக்கச் சென்ழுள்.
ஏழு-ராத்தல் உடைந்த கிண்ணத்தை உள்ளே எடுத்துச் சென்ருன், பிறகு வாசற்படியில் அமர்ந்து புகைக்கத் தொடங்கினன். அவன் மனக் குழப்பமடைந்திருந்ததால் புகையை இழுத்து வெளியில் விட் மறந்தான்.தந்த வாய்முனை கொண்ட புள்ளிகளிட்ட ஆறடிக் குழாயின் புகையிலைக் கிண்ணத்திலிருந்த நெருப்பு கரிந்தது. விஷயம் முற்றி ஆபத்தான கட்டத்தை எட்டி விட்டதைப்போலத் தோன்றியது. தப்புவதற்கான வழிவகைகளைக் கண்டறிய அவன் முனைந்தான். அவனது எண்ணங்கள் அனைத்தும் அவிழ்க்க முடியாத குழப்பமுடிச்சுகளாகத் தோன்றின. *சடைகள், ஒ சடைகள்? பதினெட்டடி நீள ஈட்டி ஒவ்வொரு தலைமுறையும் முன்னதை விடமோசம் சக்கரவர்த்தி சிம்மா சனத்தில் ஏறிவிட்டார் உடைந்த கிண்ணத்தை நகரத்துக்கு எடுத்துச் சென்று ஒட்டவைத்து விடவேண்டும். அவருக்கு ஈடு யார்? புத்தகத்தில் அது எழுதப்பட்டிருக்கின்றது. மூதேவி..”
மறுநாள் விடியற்காலை ஏழு-ராத்தல் வழக்கம்போல் பட குடன் நகரத்துக்குச் சென்றன். மாலையில் தனது புள்ளியிட்ட ஆறடி மூங்கில் குழாயுடனும் சோற்றுக் கிண்ணத்துடனும்

வீண் அமளி 79.
லூச்சனுக்குத் திரும்பினன். இராச்சாப்பாட்டின் போது, திருமதி. ஒன்பது - ராத்தவிடம் தான் கிண்ணத்தை ஒட்டவைத்துக் கொண்டுவந்ததைத்தெரிவித் கான். உடைசல் பெரிதாக இருந்ததால் பதினறு செப்பு இனப்புகள் போட்டு ஒட்டவைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொன்றுக்கும் மூன்று காசுவீதம் நாற்பத்தெட்டு காசுகள் ஆயின.
*ஒவ்வொரு தலைமுறையும் முன்னதைவிட மோசம்” எனக் கிழவி திருமதி ஒன்பது-ராத்தல் எரிச்சலுடன் கூறினள். 'நான் வாழ்ந்தது போதும், ஒரு இணைப்புக்கு மூன்றுகாசுகள்! முந்திக் காலத்திலெல்லாம் விலைகள் இவ்வளவு மோசமில்லை. எங்கள் அந்தக்காலத்திய இணைப்புகள் மிகவும்உறுதியானவை; இவைபோல் இல்லை. ஆ.அந்தக்காலம். எழுபத்து ஒன்பது
99
ஆண்டுக்காலம் வாழ்ந்துவிட்டேன் .
இதன் பிறகும், ஏழு-ராத்தல் தொடர்ந்து நகரத்துக்குத் தினமும் சென்று வந்துகொண்டிருந்தாலும், அவனது வீட்டில் நிம்மதியற்ற தன்மை நிலவியது. இப்பொழுதெல்லாம் கிராமத்தவர் பெரும்பாலோர் நகர்ப்புறச் GoFingeduu அவனிடம் கேட்பதில்லை. அவனிடமிருந்து ஒதுங்கியே சென் றனர். திருமதி ஏழு-ராத்தலும் எப்போதும் கோபத்துடன் இருந்தாள். அவனை 'சிறைக் கைதி’ என்றே எப்போதும் அழைத்தாள்.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அவன் நகரத்திலிருந்து திரும்பிவந்த சமயம் தன் மனைவி அத்திபூத்தாற்போல நல்ல மனுேநிலையில் இருப்பதை ஏழு-ராத்தல் கண்டான். "நகரத் தில் எதுவும் கேள்விப்படவில்லையா?” என அவனைக் கேட்டாள்.
*இல்லை. ஒன்றுமே இல்லையே."
*சக்கரவரித்தி அரியணை ஏறிவிட்டாரா?”
"அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லையே."
"சபிட்ச மதுக்கடையில் இது குறித்து யாரும் ஏதும் sa palababaur?”

Page 48
80 போரிக்குரல்
**இல்லையே, ஒன்றும் சொல்லவில்லையே."
"சக்கரவர்த்தி மீண்டும் ஆட்சிக்கு வருவாரெனத் தோன்றவில்லை. நான் திரு. சாவோவின் மதுக்கடையைக் கடந்து வந்தபொழுது அவர் உட்கார்ந்து புத்தகம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவரது சடை உச்சந்தலையில் முடிச்சிடப்பட்டிருந்தது. அதோடு அவர் அந்த நீண்ட அங்கியையும் அணிந்திருக்கவில்லை."
2 , 9 LLGGLLLLLLSLLLLLLLL LLLLLLLL00L0LLLLLLL 000LLLSLLSLLLLLLLS
*சக்கரவர்த்தி அரியணை ஏறமாட்டார் என நினைக் கிருயா?”
"ஒருக்கால் அப்படித்தான் இருக்குமென எண்ணு இறேன்.”
இப்பொழுது ஏழு-ராத்தலிடம் அவனது மனைவியும் ஊராரும் மீண்டும் பரிவுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்கின்றனர். கோடைகாலத்தில் அவனது குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு வெளியே உள்ள மண்தரையில் இரவு உணவைச் சாப்பிடத்தான் செய்கின்றனர். அந்தப்பக்கமாகச் செல்வோர் எல்லாரும் அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கின் றனர். சில நாட்களுக்கு முன்னர் திருமதி. ஒன்பது-ராத்தல் தனது எண்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினள். வழக்கம் போல் முணுமுணுக்கிருள் எப்போதும் போல் திடகாத்திரத்துடன் இருக்கிருள். ஆறு-ராத்தலின் இரட்டைச் சடை இப்பொழுது நீண்ட ஒற்றைச் சடையாக மாறியிருக் கிறது. அவள் பாதங்களை இப்போதுதான் குறுக்கத்தொடங்கி யிருக்கிருர்கள்
ஆ சீனப் பெண்களின் பாதங்களே மரக்கட்டைகளுக்கு இடையில் வைத்துக்கட்டி, பாதங்களை வளரவிடாமல் குறுக்குவது சீனவில் நெடுங்காலமாக இருந்து வந்த பழக்கம். குறுகிய பாதங்களைக் கொண்டு பெண்கள் வேகமாக ஓட முடியாது. அவர்களின் தடை "அன்னநடை? யாக இருக்கும். இது ஆணுதிக்கம் மிகுந்த திலமானியச் சமுதாயத்தின் கொடுமையான பழக்கம், சீனப் பொது வுடமைக் கட்சி இப்பழக்கத்துக்கு முடிவு கட்டியது.

வீண் அமளி
ஆயினும் திருமதி ஏழு-ராத்தலுக்கு அவள் கூடமாட ஒத்தாசை செய்து வருகிருள். பகினறு ஒட்டுப் போட்ட தோற்றுக் கிண்ணத்தைத் தூக்கிக் கொண்டு மண் தரையில் குதிபோட்டுக் கொண்டிருக்கிருள்.
அக்டோபர் 1920,
GuT. - 6

Page 49
எனது பூர்விக விரு
கொடிய குளிரைப் பொருட்படுத்தாமல், எழுநூறுகல் தொலைவுக்குமேல் பயணம் செய்து, இருபது ஆண்டுகளுக்கு முன் விட்டகன்ற என் பூர்வீக வீட்டுக்குத் திரும்பிவந்தேன்.
அது பணிக்காலத்தின் கடைசிப்பகுதி. எனது பூர்வீக வீட்டை நெருங்கும் சமயத்தில் வானத்தில் மேகம் கவிந்திருந் தது. நாங்கள் பயணம் செய்த படகின் மேல்தளத்துக்குள் குளிர்வாடை வீசியது. மூங்கில் தடுப்பிலிருந்த துவாரங்களின் வழியாகப் பார்க்கும் பொழுது, மக்கள் நடமாட்டமில்லாது வெறிச்சோடிக் கிடந்த கிராமங்கள் மங்கலான வானத்தின்கீழ் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன. நான் மனச் சோர்வுற்றேன்.
ஓ! இருபது ஆண்டுகளாக என் நினைவில் நிறைந்திருந்த எனது பூர்வீக இல்லம் நிச்சயமாக இது அல்ல!
என் நினைவிலிருந்த பூர்வீகவீடு கொஞ்சம்கூட இப்படி இருந்ததில்லை. எனது பூர்வீக இல்லம் இதைவிடச் சிறப்பாக இருந்தது. அதனுடைய தனிப்பட்ட கவர்ச்சியை நினைவுகூரு மாருே, அன்றி அதன் அழகை வருணிக்கும்படியோ நீங்கள் என்னிடம் கேட்டால் அதைப்பற்றிய தெளிவான நினைவோ, வர்ணிப்பதற்கான சொற்களோ "என்னிடம் இல்லை. நானுக ஒரு நியாயம் கூறிக்கொண்டேன் வீடு எப்போதும் இப்படித் தான் இருந்தது. அது சீர்படுத்தப் படவில்லை என்பது உண்மைதான் என்ருலும் நான் கற்பனை செய்வதுபோல் அவ் வளவு மோசமானது அல்ல. மாறியிருந்தது என் மனேநிலை மட்டுமே; காரணம், பிரமைகள் ஏதுமின்றி நான் கிராமத் துக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.

எனது பூர்வீக வீடு 83
இம்முறை நான் இங்கு வந்ததற்கு ஒரே நோக்கம் கிராமத்திலிருந்து விடைபெற்று வருவதற்குத்தான். பல ஆண்டுகளாக எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்து வந்த வீடு ஏற்கனவே வேறு ஒரு குடும்பத்துக்கு விற்கப்பட்டுவிட்டது. ஆண்டு இறுதிக்குள் கைமாறிவிடும். எனவே புத்தாண்டு நாளுக்கு முன் நான் அங்கு விரைந்து சென்று, பரிச்சயமான பூர்வீக வீட்டுக்குப் பிரியாவிடைகூறி, பழைய சொந்தஊரை விட்டு மிகத் தொலைவிலுள்ள நான் வேலை செய்யும் இடத் துக்கு என் குடும்பத்தை அனுப்பியாக வேண்டும்.
மறுநாள் விடியற்காலை எனது வீட்டு வாசலை அடைந் தேன். காற்றில் ஆடிய காய்ந்த கூரைப் புற்களின் முறிந்த தண்டுகள், இந்தப் பழம்வீடு கைமாறுவது தவிர்க்க முடியா மல் போனது ஏன் என்பதைத் தெளிவுபடுத்தின. எங்கள் நெருங்கிய பங்காளிகள் பலர் ஊரைவிட்டே சென்றிருக்கக் கூடுமாதலால் வீட்டில் அசாதாரணமான அமைதி நிலவியது. நான் வீட்டை அடைந்த நேரத்தில் வாயில்படியில் காத்திருந்த அம்மா என்ன எதிர்கொண்டு அழைத்தாள். அவளைப் பின்தொட்ர்ந்து எனது எட்டுவயது மருமகன் ஹங்கெர் ஓடிவந்தான்.
அம்மா மகிழ்ச்சியோடிருந்தாலும், ஏதோ ஒரு கவலை உணர்வை அவள் மறைக்கவும் முயன்ருள். ஒய்வெடுத்துக் கொண்டு சிறிது தேநீர் அருந்தும்படியும், இடமாற்றலைப் பற்றிப் பின்பு பேசலாமென்றும் கூறினுள். இதுவரை என்னைப் பார்த்திராத ஹ"ங்கெர் தொலைவிலிருந்து என்னைக் கவனித் துக் கொண்டிருந்தான். * */
கடைசியில் இடமாற்றலைப் பற்றித்தான் பேச்சுவந்தது. வேறிடத்தில் வாடகைக்கு வீடு எடுத்திருப்பதையும், ஒருசில மேசை நாற்காலிகளை வாங்கியிருப்பதையும் கூறினேன். மேற்கொண்டும் தட்டுமுட்டுச் சாமான்கள் வாங்க, வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் விற்பது அவசியம் என்றும் கூறினேன். அம்மா ஒத்துக் கொண்டாள். சாமான்கள் அனைத்தும் கட்டிவைக்கப்

Page 50
34 போர்க்குரல்
பட்டிருப்பதாகவும், எடுத்துச் செல்ல முடியாத சாமான்களை ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் கூறினள். விற்ற சாமான் களுக்குப் பணம் கிடைப்பதுதான் சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தாள்.
"ஓரிரண்டு நாள் நீ ஒய்வெடுத்துக் கொண்டு, நம் உற்ருர் உறவினர்களையெல்லாம் போய்ப் பார்த்தபின் புறப்படலாம்” என்ருள் அம்மா.
g 99 "தவிரவுப் ஜூன்டு இருக்கிருன். அவன் இங்கு வரும்போ தெல்லாம் உன்னை விசாரிப்பான். உன்னை மீண்டும் பார்க்க மிகவும் விரும்புகிருன். நீ எப்போது வருவாய் என்பதைச் சொல்லியிருக்கிறேன். அவன் எந்த நேரமும் வரலாம்.”
இதைக் கேட்டதும் எனது உள்ளத்தில் ஒரு விசித்திரக் காட்சி தோன்றியது. கருநீல வானிலே தங்கநிலா தொங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் பசும் தர்ப் பூசனிபடர்ந்த கடற்கரை, தர்ப்பூசணிக்கு மத்தியில் கழுத்தில் வெள்ளிச்சங்கிலி அணிந்த பதினென்று பன்னிரண்டு வயதுடைய சிறுவன். இவன் கவர்க்கோலால் தனது பலமனைத்தையும் கொண்டு ஒரு பெருச்சாளியைக் குத்த முனைகிருன். அது அவன் கால்களுக்கிடையே தப்பிஓடுகிறது.
இந்த பையன்தான் ஜுன்டு. நான் முதன்முதலாக அவனச் சந்தித்த பொழுது அவனுக்குப் பத்து வயசுக்குக் கொஞ்சம் அதிகமிருக்கும். அது முப்பது ஆண்டுகளுக்குமுன்பு. அப்போது அப்பாவுமிருந்தார். நாங்கள் நல்ல நிலையிலிருந் தோம். எனவே செல்லப் பிள்ளையாகத் திரிந்தேன். அந்த ஆண்டு நீத்தார் நினைவுப் பூசையை ஏற்றுநடத்தும் பொறுப்பை ஏற்கவேண்டியது எங்கள் குடும்பத்தின் முறையாக வந்தது. இது முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையே வாய்ப்பதால் அது முக்கியத்துவமுடையதாக இருந்தது. முதல் மாதத்தில் மூதாதையர் சிலைகள் வைக்கப்பட்டு அவற்றுக்கு

எனது பூர்வீக வீடு 85
உணவு படைக்கப்படும்.பூசைப்பாத்திரங்கள் விலையுயர்ந்தவை ஆனதாலும், வழிபாட்டுக்கு ஏராளமானேர் வருவதனலும் திருட்டுப் போகாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டியிருந் தது. எடுகள் குடும்பத்துக்கு ஒரே ஒரு பகுதிநேர ஊழியனே இருந்தான் (எங்கள் மாவட்டத்தில் தொழிலாளர்களை நாங் கள் மூன்று பிரிவினராகப் பிரித்தோம். ஒரு குடும்பத்துக்கே ஆண்டு முழுதும் ஊழியம் செய்பவர்கள் முழுநேர வேலையாட் கள். நாள்கணக்கில் கூலிக்கு எடுக்கப்படுபவர் நாள் கூலியாள். சொந்த விவசாயம் செய்து கொண்டு, எப்போதாவது புத்தாண்டு நாட்களிலோ, திருவிழாக் காலத்திலோ, குத்தகை வசூலிக்கும் காலத்திலோ வந்து ஒரு குடும்பத்துக்கு மட்டும் வேலை செய்பவர்கள் பகுதிநேர ஊழியர்கள்.)செய்யவேண்டிய வேலை நிறைய இருந்ததால் பூசைப் பாத்திரங்களைப் பார்த்துக் கொள்ள தன் மகன் ஜூன்டுவை வரவழைப்பதாக எங்கள் பகுதிநேர ஊழியன் கூறினன்.
அப்பா இதற்குச் சம்மதித்தபோது, எனக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஜுன்டுவைப் பற்றி அதற்கு முன் நான் கேள்விப் பட்டிருந்தேன். அவனுக்கும் ஏறத்தாழ என் வயது தான். அவன் இடைச்செருகல் மாதத்தில் பிறந்தவன். அவனது ஜாதகக் கணிப்பின்படி ஐந்து மூலகங்களில் பூமா என்ற மூலகம் அவனுக்கு வாய்க்கவில்லை. எனவே அவனுக்கு ஜுன்டு (இடைச் செருகல் பூமி) என்ற பெயரிட்டார் அவன் தந்தை. ஜூன்டு சிறு பறவைகளைக் கண்ணிவைத்துப் பிடிப் பதில் சமர்த்தன்.
என்றைக்கு புத்தாண்டு வரும் என தினமும் காத்துக் கொண்டிருந்தேன். புத்தாண்டு நாளன்றுதான் ஜூன்டு வருவ தீாக இருந்தது. ஆண்டின் கடைசி நாளன்று ஜுன்டு வந்திருப் பதாக அம்மா கூறினுள். நான் அவனைக் காண பறந்தோடி னேன். அவன் சமையலறையில் நின்று கொண்டிருந்தான். வட்டவடிவமான சிவந்த முகம். தலையில் கம்பளிக் குல்லா. அவன் கழுத்தில்கிடந்த வெள்ளித் தாயத்து அவன்மீது அவன் தந்தை கொண்டிருந்த பாசத்தை உணர்த்தியது. அவனைக்

Page 51
86 போர்க்குரல்
காலன் கொண்டுபோய் விடுவான் என பயந்து, சாமிகளையும் புத்தர்களையும் வேண்டி கழுத்துச் சங்கிலியில் தாயத்து போட்டிருந்தான். அவனுக்குக் கூச்சம் அதிகம், என்னிடம் மட்டுமே பயமின்றிப் பழகினன். ஒருவரும் இல்லாதபொழுது என்னுடன் பேசுவான். எனவே சிலமணி நேரத்தில் நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
அப்போது நாங்கள் என்ன பேசினேமோ தெரியாது. ஆனல் ஜ"ன்டு உற்சாகத்துடன் காணப்பட்டான் என்பது நினைவிலிருக்கிறது. பட்டணத்துக்கு வந்த நாள் தொட்டு பல புதிய விஷயங்களைப் பார்த்ததாகக் கூறினன்.
மறுநாள், பறவைகள் பிடிக்குமாறு அவனைக் கேட்டுக் கொண்டேன்.
"அதுமுடியாது. நிறைய பணி விழுந்த பின்தான் அது சாத்தியமாகும். அங்கே நான் நிறைய பனி விழுந்ததும் மண்ணை அகற்றி தரையைச் சுத்தமாக்கி ஒரு முறத்தை சிறிய குச்சியால் தூக்கி நிறுத்தி, அதற்கும்கீழ் தானிய உமியைத் தூவுவேன். பறவைகள் அதைத் தின்னவரும். அப்போது குச்சியில் கட்டியிருந்த கண்ணியை இழுப்பேன். முறம்சாய்ந்து அக்குருவிகள் மாட்டிக் கொள்ளும். பலவிதமான பறவைகள், காணுங்கோழி, மரங்கொத்தி, காட்டுப்புழு, நீலக்குருவி. 3 se எனவே பனிகொட்டும் காலத்தை ஆர்வத்தோடு எதிர் பார்த்திருந்தேன். s
அடுத்த தடவை "இப்போது மிகவும் குளிராக இருக்கிறது” என்ருன் ஜான்டு. "கோடை காலத்தில் எங்கள் ஊருக்கு நீ வரவேண்டும். பகல்நேரங்களில் கடற்கரை சென்று சிப்பிகளைத் தேடிச்செல்வோம். பச்சை, சிவப்பு, பேய்ச் சிப்பி, புத்தர்கை என்று பலவகைச் சிப்பிகள் உள்ளன. நானும் அப்பாவும் தர்ப்பூசணிகளைப் பார்க்கப் போகும்போது நீயும் வரலாம்.”
99
"திருடர்களைப் பிடிப்பதற்கா?

எனது பூர்வீக வீடு 87
'இல்லை. வழிப்போக்கர்கள் தாகத்துக்காக ஒரு தர்ப்பூசனியை எடுத்தால் அதைத் திருட்டு என்று இங்குள்ள வர்கள் கருதமாட்டார்கள். நாங்கள் வளைக்கரடி, முள்ளம் பன்றி, பெருச்சாளி போன்றவற்றுக்காகத்தான் காவல் செய் வோம். நிலாக்கால இரவு வேளையில் பெருச்சாளிகள் தர்ப் பூசணியைக் கடிக்கும் சத்தம் கேட்டால் கவர்க்கோலைக் கை யிலேந்தி ஓசைப்படாது பதுங்கிச் செல்வோம்.”
பெருச்சாளிகள் பற்றி அப்போது எனக்கு ஏதும் தெரி யாது. இப்போதும் எனக்கு அதுபற்றி அதிகம் தெரியாது. ஏதோ அவை சிறு நாய்கள் போன்ற கொடூரமான பிராணி களாக இருக்கலாமென எண்ணினேன்.
'அவை மனிதர்களைக் கடிப்பதில்லையா?”
'கையில் கவர்க்கோலிருக்கிறது. அங்கே போய் அதைக் கண்டதும் குத்த வேண்டியதுதான். அது தந்திரமான பிராணி. நம்மைக் கண்டதும் ஓடி வந்து நம் கால்களுக் கிடையே புகுந்து ஓடிவிடும். அதன் முடி எண்னைபோல வழு வழுப்பாயிருக்கும்.” . .
இத்தகைய விந்தைப் பொருள்கள் இருப்பதை நான் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை. கடற்கரையில் கிடக்கும் வான வில் போன்று பல நிறங்களில் சிப்பிகள்; ஆபத்தான வரலாற் றைக் கொண்ட தர்ப்பூசணிகள் எனக்குத் தெரிந்திருந்த தெலலாம் காய்கறிக் கடைக்காரனிடம் அவை விற்பனைக்குக் கிடைத்தன என்பதுதான்.
‘எங்கள் கடற்கரையில் பெரிய அலைகள் வந்து மோதும் போது அவற்றேடு ஏராளமான குதிக்கும் மீன்கள் வரும்: தவளைகள்போல் அவற்றுக்கு இரு கால்கள் இருக்கும்.”
இத்தகைய விந்தை விஷயங்கள் அடங்கிய செல்லக்களஞ் சியம்தான் ஜூன்டுவின் உள்ளம். எனது மற்ற நண்பர்களின் கண்ணுேட்டத்தில் இவை இருந்ததில்லை. அவர்களுக்கு இவற்றைப் பற்றி ஏதும் தெரியாது. ஜூண்டு கடற்கரை

Page 52
88 போர்க்குரல்
அருகே வாழ்ந்து வந்தான். அவர்கள் பார்க்க முடிந்ததெல் லாம் மதில் சுவருக்குமேல் ஆகாயத்தின் நான்கு மூலைகளையும் தான்.
துரதிஷ்டவசமாக, புத்தாண்டு நாளுக்கு ஒரு மாதத் துக்குப் பிறகு ஜூன்டு வீட்டுக்குத் திரும்பிச் செல்லவேண்டி யிருந்தது. என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சமையலறைக்குச் சென்று அழ ஆரம்பித்தேன். அங்கிருந்து வெளியேவர மறுத்தேன். கைடசியில் அவன் அப்பா அவனத் தூக்கிக் கொண்டு சென்ருர், சிறிது நாட்களுக்குப் பிறகு, அவன் தன் தந்தையின் மூலம் சிப்பிகள் அடங்கிய பொட் டலம் ஒன்றை எனக்குக் கொடுத்தனுப்பினன். நானும் ஓரிரு முறை அவனுக்கு வெகுமதிகள் அனுப்பினேன். ஆனல் நாங் கள் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கவேயில்லை.
இப்போது என் அம்மா அவனைப்பற்றிக் குறிப்பிடவே, இந்த இளமைக்கால நினைவு மின்னல் ஒளி போல உயிர் பெற் றெழுந்தது. எனது பூர்வீக வீடு என் காட்சியில் இருப்பது போல தெரிந்தது. நான் கூறினேன்:
"மிகவும் நல்லது. அவன் எப்படியிருக்கிருன்?”
"அவன?.அவன் அப்படி ஒன்றும் செளகரியமாக இல்லை” என்ருள் அம்மா. பிறகு கதவுக்கு வெளியே பார்த்த வாறு கூறினள். "அதோ அந்த ஆட்கள் இங்கு மறு படியும் வருகிருர்கள். நமது தட்டு முட்டுச் சாமான்களை வாங்க விரும்புவதாகச் சொல்கிருர்கள். ஆனல் உண்மையில் எதைப் பொறுக்கி மடுத்துக்கொள்ள முடியும் என்பதைப் பார்க்கவே விரும்புகிருர்கள். நான் போய் அவர்களைக் கண் காணிக்க வேண்டும்.”
அம்மா எழுந்திருந்து வெளியில் சென்ருள். பெண்கள்
பலர் பேசுவது வெளியிலிருந்து கேட்டது. ஹாங்கெரைக் கூப்பிட்டு அவனுடன் பேச்சுக் கொடுத்தேன். அவனுக்கு

எனது பூர்வீக வீடு 89
எழுதத் தெரியுமா என்றும் இந்த இடத்தை விட்டுச் செல்
வதில் அவனுக்கு மகிழ்ச்சியா என்றும் st Gl-6i.
நாம் ரயிலில் செல்வோமா?” ஆம். ரயிலில்தான் செல்வோம்.” படகில் செல்வோமா?” “முதலில் ஒரு படகில் செல்வோம்.”
"ஓ! இதைப் பாருங்கள். எவ்வளவு ஒரு நீண்ட மீசை இருக்கிறது இதற்கு.” திடீரென ஒரு விந்தையான கிரீச் சிட்ட குரல் கேட்டது. W
நான் திடுக்குற்று ஏறிட்டுப் பார்த்தேன். ஐம்பது வயது மதிக்கத்தக்க துருத்திக் கொண்டிருந்த கன்ன எலும்புகளும், மெல்லிய உதடுகளும் கொண்ட ஒரு பெண் இடுப்பில் கைகளை வைத்தவாறே என் முன் நின்று கொண்டிருந்தாள். வடிவ கணிதக் கருவிப் பெட்டியில் உள்ள ஒரு கவராயத்தைப்போல கால் சட்டை அணிந்திருந்த கால்களை அகல விரித்து நின்றி ருந்தாள். அவள் மேலாடை ஏதும் அணிந்திருக்கவில்லை.
நான் மிகவும் திகைத்து நின்றேன்.
"என்னைத் தெரியவில்லையா? உன்னத் தூக்கி வளர்த்த வள் நான்.”
எனக்கு மேலும் திகைப்புண்டாகியது. நல்ல வேளையாக என் அம்மா அப்போதுதான் உள்ளே வந்து என்னிடம் கூறினுள்.
*அவன் ரொம்பநாளாக வெளியூரில் இருந்தான். உன்னை அவன் மறந்துவிட்டதற்கு அவனை மன்னித்துவிடு” என்று அவளைப் பார்த்துக் கூறிய அம்மா, "இந்த சாலைக்கு மறு புறத்தில் இருக்கிற திருமதி. யாங்கை நினைவில்லையா உனக்கு?" என்று என்னிடம் கேட்டாள். 'அவள் ஒரு அவரைக் கடை வைத்திருக்கிருள்.”

Page 53
90 போர்க்குரல்
எனக்கு அப்போது ஞாபகம் வந்தது. நான் சிறுவனுக இருந்தபோது சாலைக்கு மறுபுறமிருந்த அவரைக் கடையில் நாள் பூராவும் உட்கார்ந்திருந்த திருமதி யாங் நினைவுக்கு வந்தாள். அவளை எல்லோரும் "அவரைக் கடை அழகி" என்று அழைப்பது வழக்கம். ஏனெனில் அவள் தன் முகத் துக்கு நிறைய பவுடர் பூசிக் கொள்வாள். இப்போது தெரி வதுபோல் அவளது கன்ன எலும்புகள் முன்பு துருத்திக் கொண்டிருக்கவில்லை. அவளது உதடுகளும் அப்போது இவ்வளவு மெல்லியதாக இருக்கவில்லை. மேலும் அவள் எப் போதும் உட்கார்ந்து கொண்டு இருந்ததையே நான் பார்த்த தால், கவராயம் போன்ற தோற்றத்தை அப்போது நான் கண்டதில்லை. அவளால்தான் அவரைக் கடையில் நல்ல வியாபாரம் நடந்தது என்று அப்போது எல்லோரும் கூறுவார் ள். ஆனல் ஒரு வேளை அன்று நான் மிக இள வயதினனுக இருந்ததால் அவள் என்னிட்ம் எவ்வித பதிவையும் ஏற்படுத்த வில்லை போலும். எனவே பிறகு அவளை முற்றசு மறந்துவிட் டேன். ஆயினும் இப்போது அந்தக் கவராயம் மிகவும் எரிச் சீலோடும் மிகுந்த அலட்சியத்தோடும் என்ன நேர்க்கினுள். அந்த பார்வை நெப்போலியனைத் தெரியாத பிரெஞ்சுக் காரனையோ, வாஷிங்டன அறிந்திராத ஒரு அமெரிக்கன யோ ஒருவன் பார்ப்பதைப் போல இருந்தது. அவள் ஏளன மாக முறுவலித்து என்னைக் கேட்டாள்:
“ஓ, மறந்து விட்டாயா? ஆமாம், நான் உன் பார்வை யில் படுவதற்குத் தகுதியற்றவளாக இருக்க வேண்டும்.”
“நிச்சயமாக இல்லை.நான்.? எழுந்து கொண்டே தடு மாற்றத்துடன் கூறினேன்.
*அப்படியானல் நான் செல்வதைக்கேள் தம்பி சுன். உனக்குப் பணம் சேர்ந்துவிட்டது. இந்த தட்டுமுட்டு சாமான்களை எடுத்துச் செல்வது பெரும்சுமை. எனவே இந்தப் பழைய சாமான்கள் அநேகமாக உனக்குத் தேவைப் படாது. எனவே பேசாமல் எனக்குக் கொடுத்துவிடுவதுதான்

எனது பூர்வீக வீடு 9.
தல்லது. எங்களைப் போன்ற ஏழைகளுக்கு இவை பயன் ա@ .** P
"நான் பணக்காரணுகி விடவில்லை. நான் வேறு சிலவற் றை வாங்க இவற்றையெல்லாம் விற்முக வேண்டும்.”
'நீ ஒரு உபரிய அதிகாரியாகியிருக்கிருய். அப்படி யிருந்தும் பணக்காரணுகவில்லை என்கிருய். இப்போது நீ மூன்று வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டிருக்கிருய். வெளியில் செல்லும்போதெல்லாம் உன்னை ஒரு பெரிய பல்லக்கில் எட்டுபேர் தூக்கிக் கொண்டு போகிறர்கள். அப்படியிருந்தும் நீ பணக்காரணுகவில்லை என்கிருயா? ஏய், என்னிடம் எதையும் நீ மறைக்க முடியாது.”
என்னுல் பதில் ஏதும் சொல்ல முடியாது என்பதை அறிந்து நான் மெளனமாக இருந்தேன்.
"இதோபார், உண்மையில் பணம் சேரசேரத்தான் மனிதர்கள் மேலும் மேலும் கஞ்சத்தனம் பிடிக்கிருர்கள். கஞ்சத்தனம் பிடிக்கப்பிடிக்கத்தான் அவர்களுக்கு மென் மேலும் பணம் சேர்கிறது” என்று கவராயம் கூறினள். இதைக் கூறிக்கொண்டே அவள் எரிச்சலுடன் திரும்பி மெதுவாக நடந்து என் அம்மாவின் கையுறைகள் இரண்டை போகிறபோக்கில் தன் சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டு சென்ருள்!
இதன்பிறகு அக்கம்பக்கமிருந்த சொந்தக்காரர் ஏராள மான பேர் எங்களைப் பார்க்க வந்தார்கள். அவர்களை உபசரிப்பதுடன் சாமான்களை எடுத்துக்கட்டும் வேலையையும் சிறிது கவனித்தேன். இவ்வாறு மூன்று நான்கு நாட்கள் கழிந்தன. குளிர்நிறைந்த பிற்பகல் ஒன்றில் நான் பகலுணவுக்குப் பிறகு உட்கார்ந்து கொண்டு தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். யாரோ வருவதை உணர்ந்து தலையைத் திருப்பிப் பார்த்தேன். வந்தது யாரென்பதைப் பார்த்ததுமே என்னை யறியாத பரபரப்பு ஏற்பட்டது. விரைவாக எழுந்து அவனை வரவேற்கச் சென்றேன்.

Page 54
92 போர்க்குரல்
6šsacir ஜூன்டு. ஆனல் பார்த்தவுடன் அவன் 8°ன்டுதான் என்பது எனக்கு தெரிந்தாலும், என் நினைவி விருந்த ஜூன்டு அல்ல அவன். அவன் முன்னைப்போல இரு மடங்கு வளர்ந்திருந்தான். முன்னைப் போலவே சிவப்பாக இருந்த அவனது வட்டமுகம் குழிவிழுந்திருந்தது. கன்னத்தில் ஆழமான கோடுகளும் சுருக்கங்களும் நிறைந்திருந்தன. அவனது கண்களுமே அவனது தந்தையின் கண்களைப்போல் விளிம்புகள் தடித்துச் சிவந்திருந்தன. இது கடற்கரை ஓரமாக வேலைசெய்கிற, நாள்பூராவும் கடல்காற்றில் உலவுகிற குடியானவர்கள் பலருக்குப் பொதுவாக அமைந்துள்ள அம்சம். அவன் அழுக்குப்படிந்த தொப்பியும், ஒரு லேசான கோட்டும் அணிந்திருந்தான். அதனல் அவன் உடல் முழுதும் குளிரால் தடுங்கிக் கொண்டிருந்தது. அவன் கையில் காகிதப் பொட்ட லமும், நீளமான சுங்கானும் வைத்திருந்தான். என் நினைவில் இருந்ததைப் போல அவனது கரம் கொழுகொழுவென்று சிவப்பாக இருக்கவில்லை. ஊசியிலமரப் பட்டைபோல கரடு முரடாகவும் சொரசொரப்பாகவும் இருந்தது.
மகிழ்ச்சிப் பெருக்கில் எனது உணர்ச்சிகளை வெளியிடாது தீவித்தேன். என்னல் சொல்ல முடிந்தது இதுதான்
'g ஜூன்டு-நீதான?
அதன் பிறகு எத்தனையோ விஷயங்களைப்பற்றி நான் . பேசவிரும்பினேன். நான் பேசவிரும்பிய விஷயங்கள் ஒரு ஆரத்திலுள்ள முத்துக்களைப் போல அடுத்தடுத்து உதிர்ந் திருக்கும்; காட்டுக் கோழிகள், குதிக்கும் மீன்கள், சிப்பிகள், பெருச்சாளி.ஆனல் எனக்கு வாயடைத்து விட்டது; எண்ணியதையெல்லாம் என்னல் சொற்களாக வடிக்க முடியவில்லை.
மகிழ்ச்சியும் வருத்தமும் முகத்தில் கலந்து தோன்றிட அவன் நின்றுகொண்டிருந்தான். அவனது உதடுகள் அசைந்தன. ஆனல் ஒலி எதுவும் வரவில்லை, கடைசியில் 905

எனது பூர்வீக வீடு 93.
மரியாதைத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு அவன் தெளிவாகக் கூறினன்:
oетguonrGaw I..."
என்னை மின்னல் தாக்கியது போல உணர்ந்தேன். ஏனெனில் எங்கள் இருவருக்கிடையே எத்தகையதொரு வருந்தத்தக்க கனமான சுவர் எழுப்பப்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொண்டேன். ஆயினும் என்னுல் ஏதும் சொல்ல முடியவில்லை.
அவன் தலையைத் திருப்பி யாரையோ அழைத்தான்:
*ஷ"ய்-ஷெங் எஜமானனுக்கு பணிந்து வணக்கம் சொல்.” பிறகு தனது முதுகுக்குப்பின் ஒளிந்து கொண்டிருந்த ஒரு சிறுவன இழுத்து வந்து முன்னுல் நிறுத்தினன். இவன் இருபது ஆண்டுகளுக்கு முன்னுல் ஜுன்டு எப்படி இருந்தானுே அதேபோல இருந்தான். ஆனல் வித்தியாசம் என்னவென்முல் இச்சிறுவன் மேலும் வெளுத்துப்போய், மேலும் ஒல்லியாக இருந்தான். அத்துடன் அவன் கழுத்தில் வெள்ளிச்சங்கிலி ஏதுமில்லை.
“இது எனக்கு ஐந்தாவது பையன். இவன் இதுவரை பெரியமனிதர்கள் யாரையும் பார்த்ததில்லை. அதனுல்தான் ரொம்பவும் வெட்கப்படுகிருன்.”
எங்கள் குரலைக் கேட்டதாலோ என்னவோ அம்மா ஹ?ங்கெருடன் கீழே இறங்கி வந்தாள்.
"கடிதம் சிலநாட்களுக்கு முன் கிடைத்தது அம்மா. எஜமான் திரும்பி வருகிருர் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என்ருன் ஜூன்டு.
"ஆமாம், நீ ஏன் இவ்வளவு மரியாதை காட்டுகிருய்? நீங்கள் இருவரும் அன்று விளையாட்டுத் தோழர்கள் அல்லவா?" என்ருள் அம்மா குதூகலத்துடன். "நீ முன்பு எப்படிக் கூப்பிடுவாயோ அதுபோலவே "சுன் தம்பி’ என்றே இப்போதும் அழைக்கலாமே.”

Page 55
94. ப்ோர்க்குரல் "ஓ, போங்கம்மா நீங்கள்.அதெல்லாம் மரியாை தக் குறைவான செயல். அப்போது நான் சிறுவனக இருந்தேன். இந்த விஷயமெல்லாம் எனக்குப் புரியாது.? அவன் இதைச் சொல்லும்போதே ஷாய்-ஷெங்கை முன்னல் வந்து பணிந்து வணக்கம் கூறுமாறு செய்தான். ஆல்ை சிறுவன் வெட்கப் பட்டு தந்தைக்கு முன்னர் அப்படியே நின்றன்.
"ஒ, இவன்தான் ஷ"ய்-ஷெங்கா? உனது ஐந்தாவது மகன?” என்ருள் அம்மா. "நாங்கள் எல்லோரும் அந்நியர் கள். எனவே அவன் கூச்சப்படுவதற்காகத் திட்டாதே. ஹங் கெர், இவனை விளையாட வெளியே அழைத்துச்செல்.??
இதைக்கேட்டு ஹாங்கெர், ஷ"ய்-ஷெங்கிடம் சென்றன். ஷ~ய்ஷெங்கும் சிறிதும் தயக்கமில்லாமல் அவனுடன் வெளியில் சென்றன். ஜூன்டுவை உட்காருமாறு அம்மா சொன்னள். சிறிது தயக்கத்துக்குப் பிறகு அவன் உட்காரிந் தான். அவனது நீண்ட சுங்கானை மேசை மீது சாத்திவைத்து விட்டு, காகிதப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுக் கூறிஞன்
*பணிக்காலத்தில் கொண்டுவருவதற்கு விசேஷமாக ஏதும் இல்லை. இருந்தாலும் நாங்களே காயவைத்த அவரை இது. தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் &Buurt.”
அவனது சொந்த விஷயங்கள் எல்லாம் எப்படி என்று கேட்டேன். அவன் வெறுமனே தலையை அசைத்தான்.
“நிலைமை ரொம்ப மோசம். எனது ஆருவது மகன் கூடக் கொஞ்சம் ஒத்தாசை புரிகிறன். ஆனலும் எங்களுக்கு போது மான அளவு உணவு இல்லை.பாதுகாப்பு ஏதும் இல்லை. எல்லாவித ஆட்களும் பணம் கேட்கிருர்கள் என்ன எப்படி என்ற விதிமுறையே இல்லை.அதோடு அறுவடை யும் மோசம். பயிர் விளைவிப்பது நாங்கள். ஆனல் விளைச்சலை விற்க எடுத்துச் சென்ருல் ஏராளமான வரிகளைச் செலுத்த வேண்டி யுள்ளது. இதனுல் நஷ்டம்தான் மிச்சம். வி ற்பதற்கு முயற்சி செய்யாவிட்டாலோ, நிலைமைகள் மேலும் மோசமாகி விடும்...??

எனது பூர்வீக வீடு 95
அவன் தலைனய ஆட்டிக் கொண்டே இருந்தான்,ஆயினும் அவனது முகம் முழுவதும் சுருக்கங்கள் விழுந்திருந்தும் கூட, அவற்றில் ஒன்று கூட அசையவில்லை. அவன் ஒரு கற்சிலையைப் போல் தோன்றினன். அவன் மிகுந்த வேதனையுடன் இருந்தாலும் அதை வெளியிட முடியாதவனக இருந்தான். சிறிது நேர அமைதிக்குப் பிறகு அவன் தனது சுங்கான எடுத்து மெளனமாகப் புகைக்கத் தொடங்கினன்.
அவனுடன் பேச்சுக் கொடுத்ததிலிருந்து அவன்வீட்டில் அதிக வேலையிருப்பதையும் மறுதாளே அவன் திரும்பவேண்டி யிருந்ததையும் அம்மா அறிந்து கொண்டாள். அவன் மதிய உணவு சாப்பிடாததை உணர்ந்து சமையலறைக்குச் சென்று அவனுக்கு வேண்டிய அளவு சோறு சமைத்துக் கொள்ளும் படி கூறினுள்.
அலன் வெளியே சென்றதும் அவனது கடின வாழ்க்கையை எண்ணி நாங்களிருவரும் தலையை அசைத்துக் கொண்டோம். பல குழந்தைகள், பஞ்சம், வரிகள், போர் வீரர்கள், கொள்ளைக்காரர்கள், அதிகாரிகள், நிலப்பிரபுக்கள் அனைவரும் அவனை நசுக்கிப் பிழிந்து எடுத்தார்கள். நமக்கு தீ தேவையில்லாத பொருள்களில் அவன் எதை விரும்புகிருகுே அதையெல்லாம் எடுத்துக் கொள்ளட்டும் என்று அம்ம கூறிவிட்டாள்.
அன்றுமாலை அவன் பல சாமான்களைப் பொறுக்கி எடுத்து கொண்டான்: இரண்டு நீண்ட மேசைகள், நான்கு நாற்காலிகள், துபக்கால், மெழுகுவர்த்திச் சட்டம், ஒரு தராசு வீட்டிலுள்ள சாம்பல் தன் நிலத்துக்கு உரமாகப் பயன்படும் என்று அதனையும் கேட்டான். நாங்கள் போன பின் படகைக் கொணர்ந்து அதை எடுத்துச் செல்வதாகக் கூறினன். W
அன்றிரவு மீண்டும் நாங்கள் பேசினுேம். விஷேசமாக ஏதும் பேசவில்லை. மறுநாள் காலை ஷ"ய்-ஷெங்குடின் அவன் சென்றுவிட்டான்.

Page 56
96 போர்க்குரல்
ஒன்பது நாட்களுக்குப்பின் நாங்கள் பயணப்பட வேண்டி வந்தது. ஜூன்டு காலையில் வந்தான். ஷாய்-ஷெங் அவனுடன் வரவில்லை. படகைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு ஐந்து வயசுப் பெண்னே மட்டும் அழைத்துக் கொண்டு வந்திருந் தான். நாள் முழுவதும் வேலையில் ஈடுபட்டிருந்ததால் பேசிக் கொள்ள வாய்ப்பில்லை. பலபேர் பார்க்க வந்தார்கள். சிலர் எங்களை வழி அனுப்பி வைக்கவும் வேறு சிலர் சாமான்களை அப்புறப்படுத்த உதவவும் சிலர் இரண்டையும் செய்யவும் வந்துகொண்டே இருந்தனர். படகு புறப்படும் பொழுது மாலைப்பொழுது நெருங்கிவிட்டது. அதற்குள் வீட்டிலுள்ள எல்லா பழைய, அழுக்குப் படிந்த, சிறிய பெரிய, மிருதுவான கரடு முரடான சாமான்கள் எல்லாம் அப்புறப்படுத்தப் Lull-607.
ஆரியன் மறையும் நேரத்தில் நாங்கள் புறப்பட்ட பொழுது ஆற்றின் இருகரையிலும் தோன்றிய பசும் மலைகள் ஆழ்ந்த கருநீலம் பாரித்து படகின் பின்புறம் மறைந்து கொண்டிருந்தன.
ஹாங்கெரும் நானும் படகின் பலகணி ஒரம் சாய்ந்தவாறு வெளியில் மறைந்து கொண்டிருந்த காட்சிகளை ஒன்ருகப் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென அவன் கேட்டான்: 'மாமா, நாம் எப்பொழுது ஊருக்குத் திரும்புவோம்?? 'திரும்புவதா? புறப்பட்டுக் கொஞ்ச தூரம்கூட போக வில்லை, அதற்குள் திரும்புவதா?”
*இல்லை. ஷ"ய்ஷெங் தன் வீட்டுக்கு வரும்படி அழைத் திருந்தான்.” ஆர்வமிக்க பார்வை புலப்பட தனது கரிய கண்களே அகலத் திறந்தான்.
அம்மாவும் நானும் கவலையடைந்தோம். ஜான்டுவின் பெயர் பழையபடியும் அடிபட்டது. நமது குடும்பம் மூட்டை கட்டத் தொடங்கியதுமே அவரைக்கடை திருமதி. யாங் தினமும் வந்து கொண்டிருந்தாள் என்றும் முதல் நாள்

ாேன்து பூர்வீக வீடு 97
ஒரு டஜன் கோப்பைக்ளையும் தட்டுக்ளையும் சாம் பலுக்குள்ளிருந்து கண்டெடுத்ததாகவும், அவற்றை ஜுன்டு தான் சர்ம்பலை எடுத்துச் செல்லும் போது கீொண்டு போக வசதியாக ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்று பழி சுமத்தினள் என்றும், இந்தக் கண்டுபிடிப்பால் புளகாங்கிதம் அடைந்த அவள், வீட்டிலிருந்து கோழிக் கூட்டை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாள் என்றும் அம்மா கூறினுள். (எங்கள் பகுதியிலுள்ள கோழி வளர்ப்பவர்கள் பயன்படுத்தும் மரக் கூடு இது. கூட்டுக்கு உள்ளே கோழித்தீனி வைக்கப்படும். கோழிக்ன் கலைகள்ை நீட்டி தீனி கொரிக்கல்ாம். ஆனல் நாய்களால் அவற்றைப் பிடிக்கமுடியாது. அவை கண்களில் வெறி தொனிக்க கோழிகளைப் பார்த்துக்கொண்டு நிற்கலாமே தவிர வேறேதும் செய்யமுடியாது). அவள் க்ர்லின் அளவை நினைக்கும் போது, அவ்வளவு வேகமாக அவ்ளர்ல் ஒடமுடியும் என்பதைப் பார்க்க வியப்பாக இருந்ததாம்.
எனது பூர்வீக் வீடு மேன்மேலும் என் பின்னல் ம்றைந்து கொண்டே இருந்தது. பழைய குன்றுக்ளும் ஆறுகளும் படிப் படியாகப் பின்ன்டைந்து தொலைவில் மறைந்து கொண்டிருந் தன. இதில் என்க்கு வருத்தம் ஏதுமில்லை. என்து தோழர் களிடமிருந்து என்னை வெட்டிப்பிரித்துவிட்ட, கண்ணுக்குதி தெரியாத ஒரு உயர்ந்த சுவர் என்னைச் சுற்றி எழும்பியிருப் பதைப் போல் உணர்ந்தேன். இது எனக்கு மிகவும் வேதனை யளித்தது, தர்ப்பூசணிகளுக்கிடையே விெள்ளித் தாயத்துடன் காட்சியளித்த சிறிய வீரனின் காட்சி முன்பு பக்ல்வெளிச்ச்ம் போல் மிகத் தெளிவாகத் தோன்றியது. ஆனல் இப்போதேர் அளவு திடீரென மங்கலர்கி எனது வேதனையை அதிக்ரித்து விட்டது.
அம்மாவும் ஹாங்கெரும் தூங்குகிருர்கள். நான் படகுக்குக் கீழே நீர் சலசலக்கும் ஓசையைக் கேட்டுக் கொண்டே படுத்திருந்தேன். நான் என் பாதையில் சென்று கொண்டிருப் பதை அறிந்தேன். ஜான்டுவுக்கும் எனக்குமிடையே இத்தகைய த்டைகளிருந்த போதிலும், குழந்தைகளிடையே
Guntrř. - 7

Page 57
98 போர்க்குரல்
ஒருங்கிணைப்பு இருப்பதையும், இப்போது ஹாங்கெர் ஷ"ய் ஷெங்கை நினைப்பதையும் சிந்தித்துப் பார்த்தேன். அவர்கள் எங்களைப் போல் தமக்குள் தடைகளை வளரவிடமாட்டார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் ஒன்ருக இருக்க விரும்புவதால், உணர்வு மழுங்கும்வரை என்னையொத்த செக்குமாட்டு வாழ்க் கையோ அல்லது ஜூன்டுவைப் போன்று கஷ்ட வாழ்க்கை யோ அவர்களுக்கு ஏற்படக்கூடாதென நான் விரும்புகிறேன். அல்லது மற்றவர்களைப்போல் சக்தியனத்தையும் சிதறடிக் கும் வகையில் காலத்தைக் கழிப்பதையும் நான் விரும்ப வில்லை. நாம் ஒரு போதும் அனுபவிக்காத ஒரு புதிய வாழ் வை அவர்கள் பெறவேண்டும்.
நம்பிக்கைக்கு வழிதோன்றியதும் திடீரென அச்சம் தோன்றியது. தூபக்காலையும் மெழுகுவர்த்திச் சட்டத்தையும் ஜூன்டு என்னிடம் கேட்டபொழுது, சிலை வழிபாடுகளை அவன் இன்னும் நிறுத்தவில்லையே என்றும், அவற்றை தன் மனதிலிருந்து அப்புறப்படுத்தவில்லையே என்றும் நினைத்து குலுங்கக் குலுங்க சிரித்தேன். ஆயினும் நான் இப்போது நம் பிக்கை என்று கருதுவது என்னுள்ளே தான் தோற்றுவிக்கும் ஒரு சிலைதானே? ஒன்று தான் வித்தியாசம்: அவன் விரும் பியதோ அவன் கைக்கு எட்டுவதாக இருந்தது, ஆனல் நான் விரும்புவதோ எளிதில் கிட்டுவதாக இருக்கவில்லை.
நான் துயில் ஆழத் தொடங்கிய போது என் எதிரே பச்சைப் பசுங் கடற்கரை பரந்து விரிந்தது.மேலே தங்க நிலா கருநீல வானில் தொங்கிக் கொண்டிருந்தது. மனதில் சிந்தனை ஒடியது: நம்பிக்கை என்பது நிலவுவதாகச் சொல்லமுடியாது; அது நிலவவில்லை என்றும் கூறுவதற்கில்லை. அது பூமிக்குக் குறுக்கில் உள்ள பாதைகள் போன்றது. உண்மையில் தொடக்கத்தில் பூமியில் பாதைகள் இருக்கவில்லை. பல மனிதர்கள் ஒரே வழியாக நடந்து சென்ருல் அங்கு பாதை
ஒன்று தோன்றும்.
ஜனவரி 1921

ஆ கியூவின் உண்மைக் கதை
அத்தியாயம் 1
முன்னுரை
ஆகியூவின் உண்மைக் கதையை எழுத வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் நினைத்ததுண்டு. நான் எழுத விரும்பும் போதெல்லாம் எனக்கு அச்சம் தோன்றும். காரணம், எழுத்தின் மூலம் புகழடைபவர்களில் ஒருவனல்ல நான். அமரத்துவம் பெற்ற மனிதனின் செயல்களை அமரத்துவம் பெற்ற பேணுவால்தான் பதிவுசெய்ய முடியும். எழுத்தின் மூலமாக அம்மனிதனைப் பற்றி பின் சந்ததியினர் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லது அம்மனிதனின் மூலமாக அவ்வெழுத்தைப் பின் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும்-இறுதியில் எதனல் எது தெரியப்படுத்தப்பட்டது என்ற ஐயம் எழவேண்டும் என்னை ஏதோ பேய் ஒன்று ஆட்கொண்டதைப் போல ஆகியூவின் கதையை எழுத வேண்டும் என்ற எண்ணம் திரும்பத் திரும்ப எனக்கு ஏற்பட்டது.
அழியாக் காவியம் என்ற நிலையை எட்டமுடியாத இப்படைப்பை நான் எழுதத் தீர்மானித்துப் பேணுவை கையிலெடுத்த உடனேயே, இதிலுள்ள சிக்கல்களை உணர்ந்தேன். முதலில் உருவான பிரச்சினை: இதற்கு என்ன பெயர் சூட்டுவது? கன்பூஷியஸ் கூறினர்: “பெயர் சரியான தாக இல்லாவிட்டால், சொற்கள் உண்மையானவையாக இரா.” இம்மூதுரையைப் பிசகின்றிப் பின்பற்றவேண்டும். மனிதர்களின் வரலாறுகளில் பணிவகையுண்டு அதிகாரபூர்வ மான வரலாறுகள், சுயசரிதைகள், அங்கீகாரம் பெருத

Page 58
00 போர்க்குரல்
வரலாறுகள், புராணக் கதைகள், வரலாற்றுச் சேர்க்கைகள் குடும்ப வரலாறுகள், குறிப்புகள்.
ஆனல் இவற்றில் ஏதும் எனக்கு ஒத்து வர்வில்லை. அதிகார பூர்வமான வரலாறு?” இத்தகைய ஒரு வரலாறு, அதிகாரபூர்வமான வரலாறுகள் சிலவற்றில் காணப்படும் பல புகழ்பெற்ற மனிதர்களின் கிர்ல்ாறுக்ளுடன் சேர்த்துக் கொள் ளப்படாது என்பது வெளிப்படை. ‘சுயசரிதை?” ஆ கியூ நானல்லவே? இதை "அங்கீக்ாரம் பெருத வரலாறு” என்று அழைப்பதாக வைத்துக்கொண்டால் "அங்கீகாரம் பெற்ற வரலாறு எங்கே?” என்ற கேள்வி எழாதா? "புரர்ணக்கதை’ என்று சொல்வது சாத்தயமில்லை. ஏனெனில் ஆகியூ புராண பாத்திரம் அல்ல வ. "வரலாற்றுச் சேர்க்கை” எனக் கூறலாமோ? ஆனல், ஆகியூவின் "சுருக்கமான வரலாறு” ஒன்றை எழுதுமாறு தேசிய வரலாற்றுக் கழகத்துக்கு அதன் தலைவர் எவரும் உத்திரவிடவில்லையே. அதிகாரபூர்வமான இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் 'சூதாடிகளின் வாழ்க்கை கள்" ஏதும் இடம் பெறவில்லை என்ருலும், பிரபல எழுத் தாளர் கான்ன்டாயில் 'ர்ோட்னி ஸ்டோன்”* என்ற நாவல் ள்முதியிருப்பது உண்ம்ைபல்லவா? ஆஞ்ல் ஒரு பெரிய ழுேத்தாளர் இதையெல்லாம் எழுதலாம் எனக்கு இது சரிப்பட்டு வருமா? இன்ரி, ‘குடும்பவரலாறு” என்பது ஒன்றுண்டு. ஆனல் நான் ஆகியூவின் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான என்பது எனக்குத்தெரியாது.இப்படிப்பட்ட ஒரு பணியை என்னிடம் ஆ கியூவின் குழந்தைகளோ பேரப் பிள்ளைகளோ ஒப்படைக்கவில்லை. “குறிப்புகள்” என்று நான் சொல்லலாமா? ஆகியூ பற்றிய முழுத்தகவலும் இல்லை என்ற ஆட்சேபனை எழக்கூடும். சுருக்கமாகச் சொன்னல் இது உண்மையில் ஒரு“வாழ்க்கை”.ஆனல் தெருவில் மூட்டைகள் தூக்கிச் சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளின் மொழி யிலேயே இதை நான் எழுதுவதால், இப்படைப்புக்குப் பிரமிப் * ககர்டிகளின் துண்ைவரலாறுகள்” என்ற ப்ெபரில் v, ..., ந்ே: 8 இந்த

ஆகியூவின் உண்மைக் கதை O
பூட்டும் பெயர் சூட்டத் தயாரில்லை நான். எனவே "மூன்று வழிபாடுகள்- நான்கு சிந்தனைப்பள்ளிகள்** என்பனவற்றில் சேர்த்துக் கொள்ளப்படாத நாவலாசிரியர்களின் கூற்றன "இத்தகைய வர்ணனைகள் போதும், உண்மைக்கதைக்கு வருவோம்” என்பதிலிருந்து கடைசி இருசொற்களை எடுத்து அதையே என் படைப்புக்குத் தலைப்பாக வைத்து விடுகிறேன். இத்தலைப்பு "சித்திர எழுத்துகளின் உண்மைக் கதை’** என்ற பண்டைக்கால நூல்தலைப்பின் சாயலைக் கொண்டிருந் தால் அது என் தவறல்ல.
என்னை எதிர்கொண்ட மற்ருெரு சிக்கல், இத்தகைய சரிதை கீழ்க்காணும் வகையில் தொடங்கியாக வேண்டும்: “இன்னர் இவர், இவருக்கு இப்படி ஒருபெயர் உண்டு, இவர் இன்ன ஊரைச் சேர்ந்தவர்” ஆனல் ஆகியூவின் குடும்பப் பெயர் என்ன என்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது. முதலில் அவனது குடும்பப்பெயர் சாவோ என்று சொல்லப் பட்டது. ஆனல் மறுநாள் இதில் மீண்டும் குழப்பும் ஏற்பட் டது. இதற்குக் காரணம் உண்டு. ஊர்ப் பெரிய மனிதரான திரு சாவோவின் மகன் மாவட்டத்தேர்வில்*** வெற்றிய மூன்று வழிபாடுகள்: கன்பூசிய தெறி, பெளத்தம், தாவோ நெறி ஆகியவை. ஒன்பது சிந்தனைப்பள்ளிகளில் கன்பூசியக்கொள்கை, தாவோ நெறி, சட்டநெறி, Gorr யிசநெறி மற்றும் ஐந்துநெறிகள் அடங்கியிருந்தன. இவற்றில் எதையும் சாராத நாவலாசிரியர்கள், மரியா தைக்குரியவர்களாகக் கருதப்படவில்லை. ** சிங்வம்ச காலத்தைச் சேர்ந்த (கி. பி. 1644-1911)
ஃபெங் வு என்பவர் எழுதிய நூல். * *** அன்றைய சீனவில் நெடுங்காலமாக அரசாங்கப் பணி களுக்காக நடத்தப்பட்டு இந்த தேர்வுகளுக்குரிய பாடங் கள் பண்டைய சீனஇலக்கியங்கள், கன்பூசிய அறநூல்கள், சமய இலக்கியங்கள் முதலியவையாகும். சுருக்கமாகச் சொன்னல் பழைமைக் கருத்துகள் நிறைந்த 'பண்டிதர்" களே அரசாங்கப் பணியில் பெரும்பாலும் இடம் பெற்ற னர். நிலமான்ய அமைப்புமுறைக்கு உகந்த இத்தேர்வு முறை காலலுழக்கொழிந்த பிஜகும்கூட பின்பற்றப்பட்டு
ጰጅ
இந்தது.

Page 59
102 Guntrãespéão
டைந்திருத்தான். அவனது வெற்றியை, சேகண்டிகளை முழங்கி ஊர் மக்களுக்கு அறிவித்திருந்தனர். அப்போதுதான் இரண்டு கிண்ணம் மஞ்சள் நிற மதுவைக் குடித்திருந்த ஆ கியூ, குதித் தாடின்ை. தானும் திரு. சாவோவின் குலத்தைச் சேர்ந்தவன் என்றும், இன்னும் சரியாகச் சொன்னல், தேர்வில் வெற்றி பெற்ற பையனுக்கும் தனக்கும் மூன்று தலைமுறை 360வெளி என்றும் அதனுல் பையன் வெற்றிபெற்றது தனக்கும் பெருமை என்றும் அறிவித்தான். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பலர் அவன் மீது மரியாதை காட்டவும் தொடங்கினர். ஆனல் அடுத்த நாள் கிராமத்தலைவன் திரு சாவோவின் வீட்டுக்கு வருமாறு ஆகியூவை அழைத்தான். ஆகியூவின் முகத்தைப் பார்த்ததும் திரு சாவோவின் முகம் கோபத்தால் சிவந்தது. அவர் ஆகியூவைப் பார்த்து கர்ச்சித் தார்:
'ஆ கியூ, கேடுகெட்ட பயலே! நானும்.நீயும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னுயா?”
ஆகியூ பதில் ஏதும் கூறவில்லை. அவனைப் பார்க்கப் பார்க்க திரு. சாவோவுக்கு கோபம் அதிகரித்தது. அவனைத் தின்றுவிடுவது போல நெருங்கி வந்த அவர் கத்தினர்: "இந்த அறிவு கெட்ட பேச்சைப் பேச உனக்கு எவ்வளவு துணிச்சல் உன்னைப்போன்ற உறவினன் எனக்கு எப்படி இருக்கமுடியும்? உன் குடும்பப் பெயர் சாவோவா?”
ஆகியூ பதில் பேசவில்லை. திரும்பிச் சென்றுவிடத் திட்டமிட்டான்; ஆனல் திரு. சாவோ வேகமாக முன்னல் வந்து கன்னத்தில் அறைவிட்டார். x
*உனக்கு சாவோ என்ற பெயர் எப்படி இருக்கமுடியும்சர்வோ என்ற பெயருக்குள்ள தகுதி உனக்கு உண்டு என்று நினைக்கிருயா?” 3.
சாவோ என்ற பெயருக்கு உரிமை கொண்டாட ஆகியூ முயற்சி ஏதும் செய்யவில்லை. தனது இடது கன்னத்தைத்

ஆகியூவின் உண்மைக் கதை O3
தடவிக் கொண்டே அவன் கிராமத் தலைவனுடன் வெளியே சென்றன். வெளியே வந்த பிறகு கிராமத் தலைவனிடமிருந் தும் வசைமாரியை வாங்கிக் கட்டிக்கொண்டான். அத்துடன் தன்னை இத்தோடு விட்டதற்காக இருநூறு காசுகளையும் கொடுத்தான். இதை அறிந்தவர்கள் அனைவரும் எத்தகைய முட்டாளாக இருந்தால் ஆகியூ இப்படிப்பட்ட உதையை விலைக்கு வாங்கியிருப்பான் என்றனர். அவனது குடும்பப் பெயர் ஆகியூவாக இருந்திருந்தாலும்-அப்படி இருக்கக் காரணம் இல்லை- கிராமத்தில் திரு. சாவோ என்ற ஒருவர் இருக்கும்போது அப்படிப் பீத்திக் கொண்டிருக்க வேண்டிய தில்லை என்பதை அவன் அறிந்திருக்கவேண்டும். இந்நிகழ்ச் சிக்குப் பிறகு ஆகியூவின் பரம்பரை பற்றி எந்தப் பேச்சும் இல்லை. எனவே அவனது உண்மையான குடும்பப் பெயர் என்ன என்பது எனக்கு இன்னும் தெரியாது.
இப்படைப்பை எழுதும்போது நான் எதிர் கொண்ட மூன்ருவது சிக்கல், ஆ கியூவின் சொந்தப் பெயரை எப்படி எழுதுவது என்பதுதான். அவன் உயிரோடு இருந்தபோது,எல் லாரும் அவனை ஆ க்வெய் என்று அழைத்தார்கள். அவன் கால மானபிறகோ ஆ க்வெய் என்ற பெயரை ஒரு ஆள்கூட மீண் டும் குறிப்பிடவில்லை; காரணம் 'மூங்கில் துண்டுகளிலும் பட் டுத்துணியிலும்” பொறித்து வைக்கப்படவேண்டிய* பெயர் களில் அவன் பெயரும் ஒன்று அல்ல என்பது வெளிப்படை. அவனது பெயரைப் போற்றிப் பாதுகாப்பது என்ற பிரச்னை இருக்குமானல் அதற்கான முதல் முயற்சி இக்கட்டுரையாகத் தான் இருக்கமுடியும். எனவே துவக்கத்திலேயே நான் இச்சிக் கலே எதிர் கொண்டிருக்கிறேன். இப்பிரச்னையில் நான் கவன மிக்க சிந்தனை செலுத்தினேன்: ஆ க்வெய்-இதில் "க்வெய்" என்பதை "வாகை” என்ற பொருளில் எடுத்துக் கொள்வதா அல்லது "உயர்குடிப் பிறப்பு" என்ற பொருளில் எடுத்துக் * கிமு மூன்ரும் நூற்றண்டில் வழக்கிவிருந்த சொற்ருெடர்.
பண்டைச் சீனத்தில் மூங்கிலும் பட்டுத்துணியும் எழுது பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டன.

Page 60
194 போர்க்குரல்
கொள்வதா? அவுனுக்கு 'நிலாமாடம்" என்று வேருெரு பெயர் இருந்திருந்தாலோ, அல்லது அவன் நிலாத்திருவிழா" மாதத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தாலோ, "க்வெய்” என்பதை நிச்சயமாக வாகை** என்ற பொருளில் எடுத்துக்கொள்ளலாம். ஆனல் அவனுக்கு வேறு பெயர் ஏதும் இல்லையாதலாலும்- அப்படியே இருந்தாலும், அது யாருக்கும் தெரியாது-வாழ்த்துப் பாக்களைப் பெறுவதற்காக் தனது பிறந்தநாளுக்கு யாருக்கும் அவன் அழைப்பிதழ்கள் அனுப்பாததாலும்,அவன் பெயரை ஆக்வெய்(வாகை)என்று எழுதுவது தன்னிச்சையான செயலே ஆகும். மேலும் அவனுக்கு ஆஃபூ (சுபிட்சம்) என்ற பெயரில் ஒரு மூத்த சகோதரனுே அல்லது இளைய சகோதரனே இருந்திருந்தால், அவுனை ஆ க்வெய் (உயுர்குடிபிறப்பு) என்று நிச்சயமாக அழைக்கலாம். ஆனல் அலுன் ஒண்டிக்கட்டை எனவே அவன் பெயரை ஆக்வெய் (உயர்குடிப்பிறப்பு) என்று அழைப் பதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. "க்வெய்” என்ற ஒலியைக்கொண்ட அசாதாரணமான் மற்ற சொற்கள் அனைத்தும் பொருத்தமற்றவையாக இருந்தன. நான் இப் பிரச்னையை, மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்ற திரு. சர்வோவின் மகனிடம் கூறினேன். ஆனல் அத்தகைய பாண்டித்யம் பெற்ற அவனுக்கே பிரமிப்பு ஏற்பட்டது. ஆயினும், அவனைப் பொறுத்தவரை இந்தப் பெயர்ைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணம், “புதிய இளை ஞர்” என்ற சஞ்சிகையை சென் டு-ஸியு’** கொண்டுவந்து
* சீனநாட்டில் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் பெயர்.
** நிஜாத்திருவிழா மாதத்தில்தான் வாகைப் பூக்கள் மல்ரும். நிலாவில் தெரியும் நிழல் ஒரு வாகை மரம்தர்ன் என்பது சீன மரபு வழிக் கதையிலுள்ள ஐதீகம்.
*** 1880-1942 பீகிங் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்தவர். புதிய பண்பாட்டு இயக்கத்தை வழிநடத்திச் சென்ற "புதிய இளைஞர்? என்ற் மாதப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். " የነ

105 கியூவின் உண்மைக் கதை ܒܸܰ
உள்ளதுதான் என்றும், இதில் அவர் மேற்கத்திய அகரவரிசை யைப் பய்ன்படுத்துமாறு பிரச்சாரம் செய்வதுதான் என்றும் அதன் காரணமாக தேசீயப் பண்பாடு நாசமாகிக்கொண்டு வருகிறது என்றும் கூறினன். வேறு வழியின்றி கடைசியில் எனது மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஆகியூ சம்பந்தப் பட்ட் சட்ட ஆவணங்களைப் பார்க்குமாறு கூறினேன். எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்எனக்கு எழுதிய கடிதத்தில் அந்த ஆவணங்களில் ஆ க்வெய் போன்ற பெயர் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மைதான அல்லது என் நண்பர் முயற்சி ஏதும் செய்யாமல் இப்படி எழுதி விட்டாரா என்பது பற்றிய நிச்சயமின்மை எனக்கு இருந்த போதிலும், பெயர் என்ன என்பதை கண்டுபிடிக்க இந்த வழியைத் தேர்ந்தெடுத்து நான் தோற்றுப்போன பிறகு அதைக் கண்டறிய வேறு வழிமுறைகளையே என்னல் சிந் தித்துப் பார்க்க முடியவில்லை. புதிய உச்சரிப்பு ஒலி அமைப்பு இன்னும் பொதுப்புழக்கத்துக்கு வரவில்லையாதலால் மேற் கத்திய அகரவரிசையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், ஆங்கிலத்தில் எழுதுவது போல, பெயரை ஆ க்வெய் (Ah Quei) என்று எழுதுவதையும், அதை ஆகியூ (Ah O)என்று சுருக்குவதையும் தவிர வேறுவழியில்லை என்றும் நான் கருதினேன். இது "புதிய இளைஞர்” என்ற சஞ்சிகை யைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்குச் சமமாகும். எனவே நான் என்னைக் குறித்தே வெட்கமுற்றேன்; ஆனல் திரு. சாவோவின் மகனைப் போன்ற புலமைப் பெற்றவர்களே எனது பிரச்னைக்குத் தீர்வுவழங்க முடியவில்லை என்கிறபோது, வேறு என்னதான் என்னுல் செய்ய முடியும்?
எனக்கிருந்த நான்காவது சிக்கல்: ஆகியூவின் பூர்வீ கத்தைக் கண்டுபிடிப்பது. அவனது குடும்பப்பெயர் சாவோ வாக இருக்குமானல், மாவட்டங்களைக் கொண்டு மக்களை வகைப்படுத்தும் பழைய வழக்கத்தின்ப்டி, "நூறு குடும்பப்

Page 61
106 போர்க்குரல்
பெயர்கள்”* என்ற நூலில் உள்ள விளக்கக் குறிப்புகளைப் படிக்க வேண்டும். இவ்விளக்கக் குறிப்புகளின்படி சாவோ என்பவன் 'கான்ஸ்" மாநிலத்திலுள்ள டியேன்ஷஅய் என்ற இடத்தைச் சேர்ந்தவன்.” ஆனல் துரதிர்ஷ்டவசமாக, இந்தக் குடும்பப்பெயர் சர்ச்சைக்குரியது. இதன் காரணமாக ஆகியூ வின் பூர்வீகமும் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியாத தாக இருக்கிறது. அவன் வாழ்வின் பெரும் பகுதியை வெய்சு வாங்கில் கழித்தபோதிலும் அவன் வேறு இடங்களிலும் பல முறை தங்கியிருக்கிருன். எனவே அவனை வெய்சுவாங்கைச் சேர்ந்தவன் என்றழைப்பதும் தவறு. இது உண்மையில் வரலாற்றைச் சிதைப்பதாகும் :
எனக்கு ஆறுதல் தருகின்ற ஒரே விஷயம், "ஆ” என்ற சொல் முற்றிலும் சரியானது என்ற உண்மைதான். இது தவமுன ஒப்புமையின் விளைவு அல்ல என்பதும், புலமை மிக்கவர்களின் திறனய்வுக்குத் தாக்குப்பிடிக்கக் கூடியது என்பதும் உறுதி. மற்ற சிக்கல்களைப் பொறுத்தவரை, அவற் றுக்குத் தீர்வு தரும் திறன் என்னைப்போன்ற புலமை பெரு தவர்களுக்கு இல்லை. அவற்றைப் பற்றிய புதிய விளக்கங்களை * வரலாறு, தொன்மைக்காலங்கள் ஆகியவற்றில் ஆழமான வேட்கை”* கொண்ட டாக்டர் ஹமூஷியின் சீடர்கள் எதிர் காலத்தில் தரலாம் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு உண்டு. ஆயினும் அதற்குள், எனது படைப்பான "ஆகியூவின் உண்மைக்கதை" வழக்கிலிருந்தே மறைந்து போயிருக்கும்.
இதுவரை சொல்லப்பட்டவற்றை முன்னுரையாக எடுத் துக் கொள்ளலாம்.
* ஆரம்பப் பாடநூல். இதில் குடும்பப்பெயர்கள் பாட்டு
களாக எழுதப்பட்டிருக்கும். ** இச்சொற்ருெடர், பிரசித்திபெற்ற பிற்போக்கு
அரசியல்வாதியும் எழுத்தாளனுமான ஹூஷி தன்னைத் தானேயுகழ்ந்து கொள்ளப் பயன்படுத்திய ஒன்ருகும்.

ஆகியூவின் உண்மைக் கதை 07
sfigurruth-2
ஆ கியூவின் வெற்றிகளைப் பற்றிய ஒரு
சுருக்கமான விளக்கம்
ஆகியூவின் குடும்பப்பெயர், சொந்தப்பெயர், பூர்வீகம் ஆகியவற்றைப் பற்றிய சந்தேகம் ஒருபுறமிருக்க, அவனது பின்னணி” பற்றியும் கொஞ்சம் சந்தேகம் உள்ளது. இதற்குக் காரணம், வெய்சுவாங் ஊர்மக்கள் அவனது "பின்னணி”யைப் பற்றி ஒருபோதும் சிறிது அக்கறைகூடக் காட்டாமல், அவனது சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டோ அல்லது அவனை வேடிக்கைப் பொருளாகப் பாவித்தோ வந்ததுதான். ஆகியூவுமே இதைப்பற்றி ஏதும் பேசாது மெளனம் சாதித் தான். ஆனல் யாருடனுவது சண்டைபோடும் சமயத்தில் மட்டும் அவன் ஒரு பார்வையை வீசி 'உன்னைக்காட்டிலும் நாங்கள் நல்ல நிலையில் இருந்தவர்கள்தான்! நீ உன்னைப்பற்றி என்னதான் நினைத்துக் கொள்கிருய்?" என்று கூறுவான்.
ஆ கியூவுக்கு குடும்பம் ஏதும் இல்லை. அவன் வெய்சுவாங் கில் காவல் தெய்வத்தின் கோவிலில் வசித்துவந்தான். அவனுக்கு நிலையான வேலையும் ஏதும் இல்லை. அவன் மற்றவர் களுக்காக எடுபிடி வேலைகளைச் செய்து வந்தான்: கோதுமை அறுவடையிருந்தால் அவன் அறுக்கச் செல்வான், அரிசி அரைக்க வேண்டிய வேலை இருந்தால், அதைச் செய்வான்; பரிசலைத் தள்ள வேண்டிய வேலை இருந்தால் அதைச் செய்வான். ஒரு கணிசமான காலத்துக்கு வேலை நீடிக்குமே யானுல் அவன் தனது தற்காலிக எஜமானன் வீட்டில் தங்கிக் கொள்வான். அந்த வேலை முடிந்தவுடனேயே அங்கிருந்து சென்றுவிடுவான். எனவே எப்போதாவது வேலைக்கு ஆள் தேவைப்பட்டால், ஊராருக்கு ஆ கியூவின் நினவு வரும். ஆனல் அவர்களின் நினைவுக்கு வந்தது ஆகியூவின் பணிகளே அன்றி அவனது "பின்னணி”அல்ல. ஒருமுறை உண்மையில் ஒரு முதியவர் கூறினுர்:"ஆகியூ எவ்வளவு நல்ல வேலைக்காரன்”*

Page 62
108 போரிக்குரல்
அந்த நேரத்தில், மேலாடையின்றி, சிரத்தையற்று, ஒல்லியாக ஆகியூ அவரெதிரே நின்று கொண்டிருந்தான். மேலே சொல் லப்பட்டவை உண்மையான பொருளில் சொல்லப்பட்ட வையா அல்லது கேலிக்காக சொல்லப்பட்டவையா என்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனல் ஆகியூ மகிழ்ச்சியில் திளைத்துப் போனன்.
மேலும், ஆகியூவுக்குத் தன்னைப் பற்றிய மிக உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது. வெய் சுவாங் கிராமமக்களை அவன் ஏளனத்துடன் பார்த்தான். அங்கிருந்த இரண்டு இளம் "அறிவாளிகள்’ கூட தனது புன்னகையைப் பெறுவதற்கு அருகதையற்றவர்கள் என்று கருதினன்.இளம் அறிவாளிகளில் பெரும்பாலோர் அரசாங்கத் தேர்வுகளில் வெற்றிபெறக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பது அவனுக்கு ஒரு பொருட்டல்ல. திரு. சாவோ, திரு. சியென் ஆகியோர் கிராம் மக்களின் பெருமரியாதைக் குரியவர்களாக இருந்தனர். அவர்கள் பணக்காரர்கள் மட்டுமல்ல; இளம் அறிவாளிகளின் தந்தையராகவும் இருந்தவர்கள்; அவர்களுக்கு ஆகியூ விசேட மரியாதை ஏதும் காட்டவில்லை. அவன் தனக்குள் நினைத்துக் கொள்வான்: "எனது மக்கள் இதைவிடப் பெரியவர்களா
56)|Tub'
மேலும், பல முறை நகரத்துக்குப் போய் வந்த பிறகு ஆ கியூ மேலும் செருக்குடையவனனன். அதே வேளையில் அவன் நகரமக்கள் மீது கடும் வெறுப்பைக் கொண்டிருந்தான். உதாரணமாக, மூன்றடிக்கு மூன்றங்குலம் உள்ள மரப் பலகையால் ஆன பெஞ்சை வெய்சுவாங் கிராமமக்கள் *நீண்ட பெஞ்சு” என்றழைப்பார்கள். ஆ கியூவும் அதை 'நீண்ட பெஞ்சு” என்பான்; ஆனல் நகர மக்கள் அதை "நேரான பெஞ்சு” என்று கூறுவர். அவன் நினைப்பான்: "இது தவருனது எவ்வளவு முட்டாள்தனமானது" மேலும் பெரிய தலை மீனை எண்ணெயில் பொரிக்கும் போதும், வெய் சுவாங்கிராமமக்கள், அரையங்குலநீளத்துக்கு வெட்டப்பட்ட பூண்டுத தாள்களைச் சேர்ப்பார்கள் நகர மக்களோ சின்னச்

越 கிழ்வின் உண்மைக் கதை 09
வ்ெட்டப்பட்ட பூண்டுத் தாள்களைச் சேர்ப்பார் ன் நினைப்பான், "இதுவும் தவருனது. எவ்வளவு முட் மானது!’ உண்மை, ஆனல் வெய் சுவாங் கிராம ாநகரத்தின் பொரித்த மீன்களை ஒருபோதும் பார்த்
அறிவற்ற பட்டிக்காட்டான்கள்!
"மிகவும் நல்ல நிலையிலிருந்து வந்த" உலகப் போக்கை அனுசரிக்கத் தெரிந்த, 'நல்ல உழைப்பாளியாக” இருந்த ஆகியூ அநேமாக பரிபூரண ம்னித்னக இருந்திருக்கக் கூடும். ஆனல் சில துரதிர்ஷ்டவசமான உடல் குறைகள் இதற்குத் தடையாகிவிட்டன.
இவற்றில் மிகவும் வருத்தப்பட வைக்கக் கூடிய அம்சம், நிச்சயமாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு காலத்தில், கடந்த காலத்தில் அவனது தலையில் சிலஇடங்களில் ஏற்பட்ட படைதான். இவையிருந்தது ஆ கியூவின் தலையில்தான் என்ருலும், அவன் அவற்றை முற்றிலும் மரியாதைக்குரியவை யாகக் கருதவில்லை போலும். ஏனெனில் படை என்ற சொல்லையோ அல்லது அதை ஒதீத வேறு சொற்களையோ பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொண்டான். பிறகு, "பிரகாசம்”, 'ஒளி' என ற சொற்களையும் இன்னும் சில காலம் கழித்து "விளக்கு” 'மெழுகுவர்த்தி” என்ற சொற். களையும் கூட அவன் தடைசெய்யப்பட்ட சொற்க்ளாக்கி விட்டான். எப்போதெல்லாம் தடை மீறப்படுகிறதோ-அது வேண்டுமென்றே செய்யப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும், சரி-அவனுக்குக் கடுங்கோபம் ஏற்பட்டு, தலையிலுள்ள படைத் தழும்புகள் சிவந்து விடும். தன் மனத்தைப் புண்படுத்திய வனைப் பார்ப்பான். அவன் எதிர்த்துப் பேச சக்தியற்றவனுக இருந்தால் ஆகியூஅவன்ைச்சபிப்பான். கிண்டல் செய்த ஆசாமி சண்டை போடுவதில் வலியவனக் இல்லாவிட்டால் அவ்னை ஆ கியூ அடிப்பான். ஆயினும் இதில் விந்தை என்ன வென்ருல், இச்சண்டைகள் அனைத்திலும் தோல்வியடைபவன் ஆ கியூ தான். கடைசியில் அவன் புதிய த்ந்திரத்தைத் ைேகயாளத்

Page 63
10 போர்க்குரல்
தொடங்கினன்: ஒரு கோபப்பார்வை வீசுவதுடன் திருப் திப்பட்டுக் கொள்வான்.
ஆயினும் ஆகியூ இந்த கோபப்பார்வையைப் பயன் படுத்தத் தொடங்கிய பிறகு, வெய்சுவாங் கிராமத்துச் சோம் பேறிகள், அவனை மேலும் கிண்டல் செய்யத் தொடங்கினர். அவனைப் பார்த்தவுடனேயே, பயந்து ஒடுவதுபோல் நடிப் பார்கள் பிறகு கூறுவார்கள்:
"இதோ பார் வெளிச்சம் ஆரம்பித்து விட்டது.”
ஆசியூ வழக்கம்போல இதை எதிர்கொண்டு ஒரு கோபப் பார்வை வீசுவான்.
அவர்களோ கொஞ்சங்கூடப் பயப்படாமல் விடாது கூறுவார்கள்:
YA "இதோபார்-இங்கே ஒரு மண்ணெண்ணெய் விளக்கு,
ஆகியூவால் ஏதும் செய்யமுடியாது. ஆனல் என்ன பதிலடி கொடுக்கலாம் என்று மூளையைக் குடைவான்: 'நீங்கள். கூட தகுதியற்றவர்கள்” என்பான். அந்த நேரத்தில், அவனது மண்டையில் இருந்த தழும்புகள் எல்லாம் புனிதமானவை யாகவும் மரியாதைக்குரியனவாகவும் ே தான்றும். ஆயினும், தாம் மேலே குறிப்பிட்டதுபோல, ஆகியூ உலகப் போக்கை அனுசரிப்பவனல்லவா? தான் விதித்த தடையைத் தானே மீறும் அளவுக்கு வந்து விட்டதை உடனடியாக உணர்ந்து மேலும் எதையாவது சொல்லிவிடுவதைத் தவிர்த்துக் கொள்வான்.
சோம்பேறிகள் இன்னும் திருப்தியடையாது, அவன
விடாது கிண்டல் செய்தால், அது அடிதடியில்தான் முடியும். ஆகியூ தோற்கடிக்கப்பட்டு, அவனது செம்பட்டைச் debt.
* அன்றைய சீனத்தில் ஆண்கள் தலைமுடியைச் சடையாகப் பின்னித் தொங்க விட்டிருப்பது வழ்க்கம். சடையில் மல் இருப்பது கெளரவக் குறைச்சலாகக் கிருதப்பட்டது.

ஆகியூவின் உண்மைக் கதை 11
இழுக்கப்பட்டு, அவனது தலை நான்கைந்து முறை சுவரில் மோதப்பட்ட பிறகுதான், வெற்றி பெற்ற திருப்தியில் சோம் பேறிகள் இடத்தை விட்டு நகர்வார்கள். ஆனல் இதெல் லாம் வெளித்தோற்றம்தான் ஆ கியூ ஒரு கணம் அங்கு நின்று தனக்குள் சொல்லிக் கொள்வான், "என் மகனே என்னைத் தோற்கடித்தது போன்றது இது. உலகம் வர வர எங்கே போய்க் கொண்டிருக்கிறது.” அதன்பிறகு வெற்றிபெற்ற திருப்தியுடன் அவனும் அங்கிருந்து செல்வான். எதையெல்லாம் ஆ கியூ நினைக்கிருணுே அதை மற்றவர் களிடம் பிறகு கட்டாயம் சொல்வான்; எனவே ஆகியூவைக் கிண்டல் செய்தவர்களில் அநேகமாக எல்லோருமே, ஒரு உளவியல் ரீதியான வெற்றியைச் சாதிப்பதற்கு ஆகியூ கை வசம் இருந்த வழிமுறை இதுதான் என்பதை அறிவார்கள். இதன்பிறகு, அவனது சடையை இழுத்து அதைத் திருகுபவர் எல்லாரும் முன்கூட்டியே சொல்வார்கள்: "ஆகியூ,இப்போது ஒரு மகன் அவன் தந்தையை அடிக்கவில்லை, ஒருமனிதன் ஒரு விலங்கை அடிக்கிருன். இப்போது சொல்பார்க்கலாம்: ஒரு மனிதன் ஒரு விலங்கை அடிக்கிருன்”
அப்போது ஆ கியூ அவன் தலை ஒருபக்கமாகச் சாய்ந் திருக்க தனது சடையின் மேல்பகுதியை இறுகப் பிடித்துக் கொண்டு கூறுவான் "ஒரு பூச்சியை அடிக்கிறீர்கள் -போது மா? நான் ஒரு பூச்சி-என்னைவிட்டு விடுங்கள்.”
ஆனல் அவன் ஒரு பூச்சியாக இருந்த போதிலும், சோம் பேறிகள் அவனை விட்டுவிட மாட்டார்கள். அவர்களது வழக்கப்படி பக்கத்திலுள்ள ஏதோ ஒன்றின்மீது அவனது தலையை ஐந்தாறு முறை மோத வைத்துவிட்ட பிறகுதான் அவனை விடுவார்கள். அதன் பிறகு வெற்றிபெற்ற திருப்தியில் இம்முறை ஆகியூ ஒழிந்தான் என்ற உறுதியோடு செல்வார் கள். ஆயினும் பத்து நொடிக்குள் ஆகியூவும் தான் வெற்றி பெற்றுவிட்ட திருப்தியில் நடந்துசெல்வான். தான், "தன்னை திதானே சிறுமைப்படுத்திக் கொள்பவர்களில் முதன்மை

Page 64
12 போர்க்குர்ல்
யானவன்” என்று தனக்குள் கூறிக்கொள்வான். "தன்ன்ைத் தானே சிறுமைப்படுத்திக்கொள்பவன்” என்பதை நீக்கிவிட் டால எஞ்சுவது ‘முதன்மையானவன்" என்பதுதான். அரசாங்கத் தேர்வில் மிகப்பெரிய வெற்றிபெற்றவன்கூட *முதன்மையானவன்"தானே? “நீ உன்னைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிருய்?"
தனது எதிரிகளைச் சமாளிக்க இத்தகைய தந்திரமான உத்திகளைக் கையாண்டபிறகு, சில கோப்பை மது அருந்து வதற்காக ஆகியூ ம்துக்கடைக்கு குஷியாகச் செல்வர்ன். மீண்டும் சில்ருடன் கேலியும் கிண்டலும்; அவர்களுடன் மீண்டும் சண்ண்ட மீண்டும் வெற்றியுடன் திரும்புதல்; காவல் தெய்வத்தின் கோயிலுக்குத் திரும்பிச் சென்று படுத்த்தும் கண்ணயர்தல். அவன்டம் பணம் இருந்தால் சூதாடச் செல்வான். கோஷ்டியொன்று தரையில் உட்கார்ந்திருக்கும். ஆகியூ முகமெல்லாம் வியர்வை வழிய அவர்களுக்கு நடுவே நிற்பான் மிகுந்த உரத்த குரலில் கத்துவான்: "பச்சை ட்ராகன் மீது நானூறு க்ர்சு கட்டுகிறேன்."
சூதாட்டக்கடைக்காரன், அவன் முகத்திலும் வியர்வை வழிய, "இங்கே வை” என்பான். பெட்டியைத்திறந்து பாட்டுப்பாடுவர்ன்: "சொர்க்க வாயில்! மூலைக்கு ஏதும் இல்லை...கீர்த்திப்பாதை மீது பந்தயம் ஏதுமில்லை ஆகியூ வின் பணத்தை இங்கே நகர்த்து!”
"பாதை-நூறுகாசு-நூற்றைம்பது.”
சூதாட்டக் கடைக்காரனின் பாட்டுக்கேற்ப, ஆ கியூவின் பணம் கொஞ்சங் கொஞ்சமாகக் கரைந்து வியர்வை வடிக் கின்ற மற்ற மனிதர்களின் சட்டைப்பைக்குள் போய்விடும். கடைசியில் அவன் கூட்டத்தில் நெருக்கியடித்துக் கொண்டு வெளியேவந்து பின்புறமிருந்து சூதாட்டத்தை பார்க்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு, சூதாட்டம் கலையும்வரை அதில் பிறர் ஆடுவதைபார்த்துக்கொண்டிருப்பான். பிறகு காவல் தெய்

ஆகியூவின் உண்மைக் கதை 13
அத்தின் கோயிலுக்கு அரைமனதோடு திரும்பிச்செல்வான். கறுதாள் வீங்கிய கண்களுடன் வேலைக்குச் செல்வான்.
ஆயினும், 'துரதிர்ஷ்டம் மறைமுகமான நன்மைக்கு வழி குைக்கும்? என்ற பழமொழி ஒருநாள் மெய்ப்பிக்கப்பட்டது. அன் தாட்டத்தில் வெற்றிபெறுகிறதுரதிர்ஷ்டம் ஆகியூ குவாய்த்திருந்தது. கடைசியில் தோல்வியைத் தழுவினன்.
: இது வெய்சுவாங் கிராமத்தில் தேவதைகளின் திருவிழா டந்த மாலைப்பொழுது வழக்கப்படி ஒரு நாடகம் நடந்தது: அதே வழக்கப்படி, நாடகமேடை க்கு அருகே ஏராளமான சூதாட்ட மேசைகள் இருந்தன. சூதாட்ட கடைக்காரனின் பாட்டை மட்டும் கேட்க தயாராக இருந்த ஆகியூவின் கm விேல் மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்த முரசுகள், சேகண்டிகளின் முழக்கம் விழுந்தது.ஆகியூண்ேடும் மீண்டும் நதாட்டத்தில் வெற்றி பெற்றுக்கொண்டே வந்தான். வனது செப்புக்காசுகள் வெள்ளி நாணயங்களாயின; வெள்ளி நாணயங்கள் டாலர்களாயின; அவனது டாலர்களின் எண்ணிக்கை பெருகியது. உத்வேகம் தாங்காமல் அவன் *சொர்க்க வாயில்மீது இரண்டு டாலர்கள்” என்று கத் திஞன்.
யார் சண்டையை ஆரம்பித்தார்கள் என்பதோ, அதற்குக் காரணம் என்ன என்பே தா அவனுக்குத் தெரியாது. வசை மாரிகள், குத்துகள், காலடியோசைகள் எல்லாம் சேர்ந்து அவன் தலைக்குள் ஒரு குழப்பமான ஒலியை ஏற்படுத்தின. அவன் எழுந்து நிற்கும்போது சூதாட்ட மேசைகளும் சூதாடி களும் மாயமாய் மறைந்துவிட்டதைப் பார்த்தான். அவனது உடலின் பல்வேறு பாகங்களும், கீழேதள்ளி உதைத்துப் புரட்டப்பட்டதைப் போல, வலிப்பதாகத் தோன் றியது. ஏராளமாஞேர் வியப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந் தனர். நடக்கக்கூடாதது ஏதோ நடந்துவிட்டதை உணர்ந்து அவன் காவல் தேவதைக் கோயிலுக்குத் திரும்பிச் சென்முன். அவன் மீண்டும் சுய நினைவுக்கு வந்தபோதுதான் தனது டாலர்கள் காணுமல் போனதை உணர்ந்தான். திருவிழாவில்
Gum. — 3

Page 65
14 போர்க்குரல்
சூதாட்ட மேடைகளை நடத்துபவர்களில் பெரும்பாலோர் வெய்சுவாங் கிராமத்தைச் சேர்ந்தவர்களல்ல. அப்படியானுல் அவன் குற்றவாளிகளை எங்கு தேடுவான்?
எத்தனை வெண்மையான, மினுமினுப்பான வெள்ளி நாணயங்கள்! எல்லாம் அவனுடையவை.இப்போது காணு மல் போய்விட்டன. இது தனது மகனே அவற்றைத் திருடி யிருப்பதற்கு நிகரானது என்ற நினைப்பும்கூட அவனுக்கு ஆறுதல் தரவில்லை. தன்னை ஒரு பூச்சி என்று தானே கருதிக் கொள்வதும்கூட ஆறுதல் தரவில்லை. இம்முறை அவன் உண்மையாகவே தோல்வி என்ற கசப்புணர்வை அனுபவித் தான்.
ஆயினும் அவன் இப்போது தோல்வியை வெற்றியாக மாற்றினன். தனது வலதுகையை உயர்த்தி தன் முகத்தி லேயே இருமுறை ஓங்கி அறைந்தான். கன்னம் வலியால் துடித்தது. இந்த அறை விட்டபிறகு அவன் மனத்திலிருந்த பாரம் இறங்கியது.ஏனெனில் அறைகொடுத்தது தானேதான், அறை வாங்கியதோ இன்னெருவன்-அதாவது அவன வேறு யாரோ ஒருவனை அடித்துவிட்டான்-என்ற திருப்தி ஏற். பட்டது. அவன் கன்னம் இன்னும் வலியால் துடித்த போதிலும், தான் வெற்றிபெற்றுவிட்ட திருப்தியில் அவன் படுக்கையில் சாய்ந்தான்.
விரைவில் அவன் தூக்கத்தில் ஆழ்ந்தான்.
அத்தியாயம் 3
ஆகியூவின் ஏனைய வெற்றிகள்
ஆ கியூ எப்போதுமே வெற்றிபெற்று வந்தபோதிலும் திரு. சாவோவிடம் அறைவாங்கும் பாக்கியம் பெற்றபோது தான் உண்மையிலேயே பிரசித்தி பெற்ருன்,

ஆகியூவின் உண்மைக் கதை 5
கிராமத்தலைவனுக்கு இருநூறு காசுகள் கொடுத்துவிட்டு வந்தபிறகு அவன் கோபத்தோடு படுத்தான். பிறகு தனக் குள்ளாகவே சொல்லிக் கொண்டான் “உலகம் இப்போது எங்கே செல்கிறது? பிள்ளைகள் தம் பெற்ருேரை அடிக்கத் தொடங்கிவிட்டார்களே.” பிறகு அவன் திரு. சாவோ வுக்கு உள்ள அந்தஸ்தை நினைத்துப் பார்த்தான். இப் போது அவர் ஆ கியூவின் மகளுகிவிட்டார். இந்த நினைப்பு மெல்ல மெல்ல அவனுக்கு கிளுகிளுப்பைக் கொடுத்தது. அவன் எழுந்திருந்து 'கணவனின் கல்லறையில் இளம் விதவை” என்ற பாட்டுப்பாடிய வண்ணம் மதுக் கடைக்குச் சென்றன். அந்த நேரத்திலும் மற்றவ்ர்களேவிட திரு. சாவோ உயர்ந்தவர் என்பதை அவன் உணராமலில்லை.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அவனுக்கு எல்லோருமே வழக்கத்துக்கு மாறனமரியாதை காட்டுவதாகத்தோன்றியது. இது வியப்புத் தரக்கூடியது-ஆனல் உண்மை. தான் திரு. சாவோவின் தந்தைய்ாக இருப்பதுதான் இதற்குக்காரணமாக இருக்கல்ாம் என்று அவன் நினைத்தான்; ஆனல் உண்மை அதுவல்ல. வெய்சுவாங் கிராமத்தைப் பொறுத்தவரை தாய்க்கு ஏழாவதாக பிறந்த குழந்தை எட்டாவதாக பிறந்த குழந்தையை அடித்துவிட்டாலோ அல்லது லி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் சாங் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன அடித்துவிட்டாலோ அதை யாரும் பெரிதாகப் பொருட் படுத்துவதில்லை என்பது ஒரு நியதி. அடிதடியில் திரு. சாவோ போன்ற முக்கியஸ்தர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டி ருந்தால்தான் அது கிராம மக்களின் பேச்சில் இடம் பெறும் தகுதிபெறும். அடித்தவன் பிரசித்தி பெற்றவனுக இருப்பதன் காரணமாக, அடித்த நிகழ்ச்சி பேசுவதற்குத் தகுதியானது என்று கிராமமக்கள் நினைத்து விட்டார்களேயானல், அடி பட்டவன் கூட சிறிது இரவல் புகழை அனுபவிப்பான்.
தவறு ஆகியூவினுடையது என்பது அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டது. ஏனெனில் திரு சாவோ தவறு செய்வது என்பது சாத்தியமில்லை. தவறு செய்தவன் ஆகியூவாக இருந்

Page 66
6 போர்க்குரல்
தால், ஏன் எல்லாரும் அவனுக்கு வழக்கத்துக்கு மாருண முறையில் மரியாதை செலுத்த வேண்டும்? இதை விளக்குவது கடினமானது. நம்மால் முன் வைக்கக்கூடிய ஒரே கருதுகோள் என்னவென்றல், தானும் திரு சாவோவும் ஒரே குடும்பத் தைச் சேர்ந்தவர்கள் என்று ஆ கியூ சொல்லியிருப்பதுதான் காரணமாக இருக்கலாம்; எனவே அவன் உதைபட்டிருந்தா லும் கூட, அவன் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருந்தா லும் இருக்கலாம் என்று கிராமத்து ஜனங்கள் நினைத்திருக்க லாம். அதனுல் அவனை முன்னைக்காட்டிலும் மரியாதையுடன் தடத்துவது தமக்குப் பாதுகாப்பானது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். வேறு விதமாகச் சொல்வதானல், கன் பூசியக் கோயிலில் படைக்கப்பட்ட மாட்டிறைச்சியை ஒத்ததாக இருக்கலாம் இது படைக்கப்பட்ட பன்றியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைப் போல் இந்த மாட்டிறைச்சியும் ஒரே வகையினத்தைச் சேர்ந்ததாக-அதாவது விலங்கு என்ற மூலாதாரத்திலிருந்தே வந்ததாக-இருந்த போதிலும், கன் பூசியஸ் அதை அனுபவித்துத் தின்ற காரணத்தால் பிற்கால கன்பூசிய நெறியினர் அதைத் தொட்டுப்பார்க்கவே துணி வில்லை.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஆகியூ பல்லாண்டுகள் தன்முக வாழ்ந்தான்.
ஒரு வசந்த காலத்தில் இது நடந்தது: ஆகியூ ஒரு நாள் மகிழ்ச்சி தலைக்கேறிய நிலையில் சென்று கொண்டிருந்தான். ஒரு சுவரருகே, மேலாடை இன்றி வெய்யிலில் உட்கார்ந்து பேன் பிடித்துக் கொண்டிருந்த மீசைக்கார வாங்கைப் பார்த் தான். அவனைப் பார்த்ததுமே ஆகியூவின் உடம்பிலும் அரிப்பு ஏற்படத் தொடங்கியது. மீசைக்கார வாங்குக்கு உடம்பெல் லாம் படை. நீண்ட மீசையும் அவனுக்கிருந்தது. எனவே எல்லாரும் அவனை "சொறிப்படை மீசைக்காரன்”என்றழைத் தனர். "படை" என்ற சொல்லை ஆகியூ ஒதுக்கித் தள்ளிய போதிலும், வாங் மீது அவனுக்கு கடும் வெறுப்பு இருந்தது.

ஆகியூவின் உண்மைக் கதை 7
படையை பர்ரும் அசாதாரணமான ஒன்ருக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று ஆகியூ கருதிய போதிலும், அடர்ந்த மீசை படர்ந்த வாங்கின் கன்னங்கள்தான் உண்மை யில் அசாதாரணமானவையாகவும், வெறுப்பூட்டக்கூடிய தாகவும் ஆகியூவுக்குத் தோன்றின. வாங்கின் அருகில்சென்று ஆகியூ உட்கார்ந்தான் வாங்குக்குப்பதிலாக அங்கு வேறு எந்த சோம்பேறி இருந்திருந்தாலும் ஆகியூ இப்படிஅலட்சிய மாக உட்காரத் துணிந்திருக்க மாட்டான் ஆளுல் மீசைக்கார வாங்கின் பக்கத்தில் உட்காருவதில் அவன் பயப்படுவதற்குக் காரணமே இல்லை. உண்மையைச் சொல்லப்போனுல் அவன் அங்கு உட்கார விரும்பியது, வாங்குக்குக் கிடைத்த கெளரவ மாகும்.
ஆகியூ, உள்துணி கிழிந்துபோன கோட்டைக் கழற்றி ஞன். அதன் உள்பகுதி வெளியே தெரியும்படி திருப்பினன்; அது தண்ணீரைக் கண்டு ரொம்ப நாள் ஆகாததாலோ அல்லது அது கசங்கி இருந்ததாலோ என்னவோ,நீண்டநேரம் தேடியபிறகும் அவனுக்கு மூன்று நான்கு பேன்களே கிடைத் தன. மாருக மீசைக்கார வாங்கோ அடுத்தடுத்து ஒவ்வொரு பேனகப் பிடித்து அவற்றை வாயில் வைத்து டொப் டொப் பென்று நசுக்கினன்.
ஆகியூ முதலில் ஏமாற்றமடைந்தான். பிறகு அவனுக்கு வருத்தமேற்பட்டது. நாசமாய்ப் போன மீசைக்கார வாங் எவ்வளவு பேன் பிடிக்கிருன்! தனக்கு ஒரு சில பேன்களே கிடைத்தன. எவ்வளவு பெரிய அவமானம் இது ஒன்றிரண்டு பெரிய பேன்களைப் பிடிக்க முயன்ருன். ஆனல் அங்கு பெரிய பேன்கள் ஏதும் இல்லை. மிகவும் சிரமப்பட்டு நடுத்தர பேன் ஒன்றைப் பிடித்துத் தன் வாய்க்குள் வெறியுடன் திணித்து, காட்டுமிராண்டிபோல அதைக் கடித்தான்; ஆனல் அது எச்சில் தெறிப்பது போன்ற மெல்லிய ஒலியையே எழுப்பியது. அது மீசைக்கார வாங் எழுப்பிய ஒலியைக் காட்டிலும் ஈனமாக ஒலித்தது.

Page 67
8 GunttáSpá,
ஆகியூவின் படைத்தழும்புகள் எல்லாம் சிவந்தன. தனது மேல்கோட்டைத் தரையில் வீசி காறித்துப்பினன்.
*மயிர் முளைத்த புழுவே!"
"சடைநாயே, நீ யாரடா என்னைத் திட்டுவதற்கு?” மீசைக்கார வாங் கோபம் தொனிக்க ஏறிட்டுப் பார்த்தான்.
சமீப காலமாக ஆகியூ பெற்று வந்த மரியாதையானது அவனது பெருமையை அதிகரித்திருந்த போதிலும், சண்டை பிடிப்பதில் ஊறிப்போன சோம்பேறிகளை எதிர்கொள்ளும் போது அவன் வாய்பேசாத கோழையாக இருந்துவிடுவான். இப்போது அவனிடம் மற்றவனை வம்புக்கு இழுக்க வேண்டும் என்ற அசாதாரணமான உணர்வு ஏற்பட்டது. முடியடர்ந்த கன்னம் , உடைய ஒரு பிறவியா தன்னை இவ்வாறு அவமதிப்பது?
இடுப்பில் கைவைத்து நின்றவாறு ஆகியூ கூறினன்:
"திட்டுக்கு உரியவன் எவனக இருந்தாலும் திட்ட வேண்டியதுதான்.”
வாங்கும் எழுந்து நின்று தனது கோட்டை மாட்டிய வாறே கேட்டான்:
*உடம்பில் திணவெடுக்கிறதா?”
வாங் ஓடிவிடுவான் என்று நினைத்து ஆகியூ தனது முஷ்டியை உயர்த்திக்கொண்டு அவனுக்குக் குத்துவிடு வதற்காக முன்னல் அடியெடுத்து வைத்தான். ஆனல் அவன் முதல் குத்து விடுவதற்கு முன்பே, அவனை வாங் பிடித்து ஒரு இடி இடிக்க, அந்த இடி அவனைத் தள்ளாட வைத்தது. பிறகு மீசைக்கார வாங் ஆகியூவின் சடையைப் பிடித்துக்கொண்டு வழக்கமாக ஆகியூவுக்கு நடப்பதைப்போல அவனது தலையை சுவரோடு மோதுவதற்காக இழுத்துச் சென்ருன்.

ஆகியூவின் உண்மைக் கதை 19
"கெளரவமான மனிதன் தனது சொல்லைத்தான் பயன் படுத்து வானே தவிர கரங்சுளையல்ல" என்று சர்ச்சை புரிந் தான் ஆகியூ, தலை ஒரு புறமாகச் சாய்ந்திருக்க.
மீசைக்கார வாங் கெளரவமான மனிதனல்ல என்பது வெளிப்படை; ஏனெனில் ஆகியூ என்ன சொல்கிருன் என்பதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், அவனது தலையை சுவர் மீது அடுத்தடுத்து ஐந்து முறை மோதினன் ஆகியூ நிலை தடுமாறி இரண்டு கெஜதூரம் போய் விழுந்தான் அதன் பிறகே மீசைக்கார வாங் திருப்தியுடன் சென்றன்.
ஆகியூவின் நினைவைப் பொறுத்தவரை வாழ்வில் அவனுக்கேற்பட்ட முதல் அவமானம் இதுதான். ஏனெனில் மீசைக்கார வாங்கை அவனது மீசைபடர்ந்த அசிங்கமான கன்னங்களின் காரணமாக எப்போதுமே.ஆகியூ கேலிசெய்து வந்தான். ஆனல் உதை வாங்குவது ஒருபுறமிருக்க ஒருபோதும் அவன் வாங்கால் கேலி செய்யப்பட்டதேயில்லை. ஆனல் இப்போது அவன் சற்றும் எதிர்பாராதமுறையில், மீசைக்கார வாங்கிடம் உதைவாங்கி விட்டான். சந்தையில் கிராமத்து இனங்கள் அன்ருெரு நாள் சொன்னது உண்மையாக இருக்கலாம்: பேரரசர் அரசாங்கத் தேர்வுகளை ஒழித்து விட்டார். எனவே ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றுள்ள பண்டிதர்களுக்குத் தேவையில்லாமல் போய்விட்டது.”இதன் காரணமாக சாவோ குடும்பத்தினர் தமக்குள்ள அந்தஸ்தை இழந்திருக்க வேண்டும். இதனுல்தான் ஜனங்கள் தன்னையும் மரியாதையில்லாமல் நடத்துகிருர்களோ? w
ஒரு முடிவுக்கு வர முடியாமல் ஆகியூ அங்கு நின்ருன்
தொலைவிலிருந்து ஆகியூவின்வெறுப்புக்கு ஆளாகியிருந்த மற்ருெரு எதிரி வந்து கொண்டிருந்தான். இவன் திரு சியென்னின் மூத்தமகன். நகரத்தில் வெளிநாட்டவரால் தடத்தப்பட்ட ஒரு பள்ளியில் படித்த பிறகு, அவன் ஜப்பானுக்கு போயிருந்தான் என்று சொன்னர்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவன் திரும்பி வந்த போது, அவன்

Page 68
120 Gurrtëesëb
நிமிர்ந்து* எட்டிநடைபோட்டு நடக்கக் கற்றுக் கொண்டிருந் , தான். அவனது சட்ை இப்போது இல்லை. இதைக் கண்டு அவனது தாய் ஆறுமுறை ஓவென்று அழுதாள். அவனது மனைவியோ மூன்றுமுறை கிணற்றில் விழ முயன்ருள். பிற அவன் தாய் எல்லாரிடமும் சொல்ல ஆரம்பித்தாள்: "அவன் குடிபோதையில் இருந்தபோது எவனே ஒரு அயோக்கியன் சடையைக் கத்திரித்துவிட்டுப் போய்விட்டான். அவனல் இந்நேரம் ஒரு அதிகாரியாகியிருக்க முடியும். ஆனல் அதைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பு சடை மீண்டும் வளரும்வரை காத்திருக்க வேண்டும்.” ஆயினும் ஆகியூ இதையெல்லாம் நம்பவில்லை. மாருக அவன"போவி வெளிநாட்டுப் பிசாசு”* என்றும் "அந்நிய நாட்டிடம் கூலி பெறும் துரோகி” என்றும் அழைத்தான். அவனைப் பார்த்தாலே போதும், ஆ கியூவின் வாய் வசைமாரியை முணுமுணுக்கும்.
அவனிடம் ஆகியூவுக்குச் சிறிதும் பிடிக்காதது அவனது பொய்சி சடையாகும். ஒரு பொய்ச்சடை வைத்திருப்பவனை மனிதப் பிறவி என்று கருதவே முடியாது; மேலும் கிணற்றில் விழுவதற்கு அவன் மனைவி நான்காவது முறையாக முய்ற்சி செய்யாதது, அவள் ஒரு நல்ல பெண் அல்ல என்பதைக் காட்டியது.
இப்போது 'போலி வெளிநாட்டுப் பிசாசு" நெருங்கி வந்து கொண்டிருந்தான். s
'சொட்டைத்தலைக்-கழுதை” முன்பெல்லாம் ஆகியூ தனக்குள்ளாகவே திட்டுவான், யார் காதிலும் விழாதபடி
* நீண்ட அடிவைத்து நடக்கும் வெளிநாட்டுக் காரர்களைப் பார்த்த அக்காலத்துச் சீனர்கள், வெளிநாட்டவன் முழங்கால்களில் மூட்டுகளே இல்லை என்று நினைத்தனர். (சீனர்கள் நடக்கும் தோரணை வித்தியாசமானது.) ** வேண்டாத வெளிநாட்டுக்காரரை வெளிநாட்டுப் பிசாசு" என்று சீனர்கள் அழைத்தனர்.வெளிநாட்டவரை நகல்செய்யும் படித்த சீனர்களை "போலி வெளிநாட்டுப் பிசாசு" என்றழைக்கிருன் ஆகியூ.

ஆகியூவின் உண்மைக் கை த 121
இன்றே அவன்மிகுந்த எரிச்சலுடன்இருந்த காரணத்தாலும், தன் உணர்ச்சிகளைக் கொட்டி விட விரும்பியதாலும் அவனை அறியாமலேயே வார்த்தைகள் வாயிலிருந்து நழுவிவிழுந்தன.
துரதிருஷ்டவசமாக இந்தச் "சொட்டைத் தலையன் பளபளப்பான பழுப்பு நிறத் தடியைக் கையில் வைத்திருந் தான். “செத்தவர்களுக்குத் துக்கம் கொண்டாடுபவன் தூக் கும் தடி" என்று ஆகியூ அதற்குப்பெயர் வைத்திருந்தான். அவனே எட்டிநடை போட்டு வந்து ஆகியூவைக் கீழே தள்ளினன். உடனே அடி விழப்போகிறது என்பதை ஊகித்த ஆகியூ விறைப்புடன் நிற்க அவசர அவசரமாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். எதிர்பாரித்தது போல்வே முதுகில் சுளிர் என்று ஒன்று விழுந்தது. அது தலைக் கேறியதைப் போலத் தோன்றியது. VM
அருகிலிருந்த குழந்தையொன்றைச் சுட்டிக்காட்டி ஆகியூ கூறினுன்: "இவனத்தான் நான் திட்டினேன்.”
søftfl gr6sffl grøftjl
ஆ கியூவின் நினைவைப் பொறுத்தவரை அவனது வாழ் நாளில் ஏற்பட்ட இரண்டாவது அவமானம் இதுதான். அதிருஷ்ட வசமாக விளாசுதல் நின்றதும், இத்துடன் விஷயம் முடிந்துவிட்டது போல அவனுக்குத் தோன்றியது. அவன் நிம்மதியுடன் பெருமூச்சு விடவும் செய்தான். மேலும் அவனது முன்னேர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாக வந்த "மறந்துவிடும் ஆற்றல்” அவனுக்குத் தெம்பூட்டியது. அவன் மெதுவாக நடந்து, சென்றன். மதுக்கடையை நெருங்கியதும் மகிழ்ச்சி அவனிடம் திரும்பி வந்தது.
ஆனல் அப்போதுதான் அவனெதிரே ஒரு புத்த பிக்குணி வந்து கொண்டிருந்தாள். அவள் "சாந்தமான ஆன்மீக மேம்பாடு மடத்தைச்” சார்ந்தவள்.
பிக்குணிகளைப் பார்த்தாலே ஆகியூவுக்குப் பற்றிக் கொண்டுவரும். அதுவும் அவனுக்கு இப்படிப்பட்ட

Page 69
122 போரிக்குர
அவமானங்கள் நேர்ந்த பிறகு ஒரு பிக்குனியைப் பார்க்க நேர்ந்தால் கேட்கவே வேண்டாம். நடந்ததை நினைத்துப் பார்க்கும்போது அவனது கோபம் மீண்டும் தலைதுாக்கியது.
*உன் முகத்தில் விழிக்க வேண்டியிருந்ததால்தான் எனக்கு இந்த நாளெல்லாம் துரதிர்ஷ்டம் வந்தது” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டான்.
அவளைநெருங்கிச் சென்று சத்தமாகக் காறி உமிழ்ந்தான். t“g, girl'
இளம் பிக்குனியோ அவனைச் சிறிதும் பொருட்படுத் தாது தலைகுனிந்து நடந்தாள். ஆகியூ அவளைப் பின்தொடர்ந்து சென்று, புதிதாக மழிக்கப்பட்டிருந்த அவளது தலையைத் தடவுவதற்காக ஒரு கையை நீட்டி, அசடுவழியச் சிரித்துக்கொண்டே "சொட்டைத் தலைச்சி! சிக்கிரம் திரும்பிப்போ. உனது பிக்கு உனக்காகக் காத்து கொண்டிருக்கிருர்.” என்ருன். •
*என்னை ஏன் பிழுண்டுகிருய்?” என்று அதட்டினுள் பிக்குணி, விரைவாக அங்கிருந்து நகரத் தொடங்கிய அவள் முகம் சிவந்தது.
மதுக்கடையில் இருந்த ஆண்கள் கொல்லென்று சிரித் தனர். தனது சாகசத்துக்குக் கிடைத்த பாராட்டைக் கண்ணுற்ற ஆகியூவுக்கு பெருமை தாளவில்லை.
"உன்னே உனது பிக்கு பிருண்டும்போது, நான் ஏன் பிருண்டக் கூடாது?” என்ருன் அவன் அவள் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே.
மதுக்கடையில் இருந்த ஆண்கள் மீண்டும் கொல்லென்று நகைத்தனர். ஆ கியூவுக்கு மேலும் குஷியேற்பட்டது. பாராட்டு தெரிவிப்பவர்களைத் திருப்திப்படுத்த, அவளைப் போகவிடுமுன் மீண்டும் ஒருமுறை மேலும் வலிக்கும்படி கிள்ளிஞன்.

ஆகியூவின் உண்மைக் கதை '123
இந்தச் சந்திப்பில் மீசைக்கார வாங்கையும் போலி வெளிநாட்டுப் பிசாசையும் அவன் மறந்துபோய் விட்டான். நாள்முழுவதும் ஏற்பட்ட துரதிருஷ்டத்துக் கெல்லாம் பழி தீர்த்துக் கொண்ட உணர்வு ஏற்பட்டது. இதில் என்ன விந்தையென்ருல், உதை வாங்கிய பிறகு அவனது இறுக்கம் எவ்வளவு தளர்ந்ததோ, அதைக் காட்டிலும் அதிகமாக இப்போது இறுக்கம் தளர்ந்து பாரமனைத்தும் இறங்கியது போலவும், காற்றில் மிதக்க தான் தயாராக இருப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது.
'ஆ கியூ, புத்திரப்பேறு இல்லாமல் சாகப்போகிருய்” என்று அழுது கொண்டே கூறிய இளம் பிக்குணியின் குரல் தொலைவில் கேட்டது.
மகிழ்ச்சியில் ஆகியூ விழுந்து விழுந்து சிரித்தான்.
மதுக்கடையில் இருந்த ஆடவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்களுக்கிருந்த திருப்தி சிறிது குறைந்து காணப்பட்டது.
அத்தியாயம் 4
காதல் வேதனை
சில வெற்றியாளர்கள் பற்றிச் சொல்லப்படுவதுண்டு: தமது எதிரிகள் புலிகளைப் போலவோ அல்லது கழுகுகளைப் போலவோ கொடுஞ் சீற்றமுடையவர்களாக இருந்தாலன்றி தாம் அடைந்த வெற்றியில் மகிழ்ச்சியடையமாட்டார்களாம்! அவர்களது எதிரிகள் ஆடுகளைப் போலவோ கோழிகளைப் போலவோ பயந்தாங்கொள்ளியாக இருந்தால் வெற்றியில் அவர்களுக்கு நிறைவே இராது. ஆனல் வேறுசில வெற்றி யாளர்களும் இருக்கிருர்கள். தமது எதிரிகள் அனைவரையும் வீழ்த்திய பிறகு-எதிரிகள் வெட்டிவீழ்த்தப்பட்டிருக்கலாம்

Page 70
24 போசிக்குரல்
அல்லது அவர்கள்சரணடைந்து கேவலமாக அடிபணிந்து விட் டிருக்கலாம்-தமக்கு இப்போது எதிரியோ, போட்டியானஞே, நண்பனே யாருமில்லை, தமக்கு தாம்மட்டுமே இருக்கிருர்கள், அதிகாரமிக்கவர்களாக, தன்னந்தனியான, ஆதரவற்ற, துர்ப்பாக்கியமானவர்களாக இருக்கிருர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். பிறகு, தமது வெற்றி தமக்கேற்பட்ட அவலம் என்பதை உணர்வார்கள். ஆனல் நமது கதைத் தலைவன் இப்படிப்பட்ட முதுகெலும்பில்லாதவன் அல்ல, அவன் எப்போதுமே வெற்றியுணர்வு கொண்டிருப்பவன். இது உலகத்தின் இதர பகுதிகளுக்கு மேலாக சீனுவுக்கு இருந்த தார்மீக மேன்மைக்கான ஒரு சான்முக இருக்கலாம்.
ஆ கியூவைப் பாருங்கள். மனச்சுமை நீங்கி பெருமிதம் நிறைந்து பறப்பதற்குத் தயாராக இருப்பதுபோல் நிற்கும் ஆகியூவைப் பாருங்கள். w
இந்த வெற்றியை அடுத்து விந்தையான விளைவுகள் ஏற்படாமல் இல்லை. கொஞ்ச நேரம் அவனுக்கு தான் காற்றில் பறப்பது போலவும், காவல் தெய்வத்தின் கோயிலுக் குள் பறந்து செல்வதுபோலவும் தோன்றியது. அந்தக் கோயிலில் அவன் படுத்ததும் குறட்டைவிடத் தொடங்குவது தான் வழக்கம்; இன்று மாலையோ, கிண்ணை மூடுவதே அவனுக் குச் சிரமமாகத் தோன்றியது. ஏனெனில் அவனது கட்டை விரல், ஆள்காட்டிவிரல் இரண்டிலுமே ஏதோ ஒரு மாற்ற மிருப்பது போலத் தோன்றியது. அவை வழக்கத்துக்கு மாருக மேலும் மென்மையுடன் இருப்பதை உணர்ந்தான். இளம் பிக்குணியின் கன்னத்திலிருந்த மென்மையும் மொழுமொழுப் பும் அவன் விரலில் ஒட்டிக் கொண்டனவா அல்லது அவன் அவள் கன்னத்தில் தன்விரலைத்தேய்த்து அதை மிருதுவாக்கிக் கொண்டான என்பதில் எது உண்மை என்று சொல்வது
சாத்தியமில்லை.
'ஆ கியூ, நீ புத்திரபாக்கியம் இல்லாமல் செத்துப் ©t ሀffጨumrሀዕነ!”

ஆகியூவின் உண்மைக் கதை 125
இச்சொற்கள் ஆகியூவின் காதுகளில் மீண்டும் ஒலித்தன. அவன் நினைத்தான்: "ரொம்பசரி. எனக்கு ஒரு மனைவி வேண்டும்; ஏனெனில் புத்திரபாக்கியம் இல்லாமல் ஒருவன் செத்துவிட்டால் அவனது ஆன்மாவுக்கு ஒரு கிண்ணம் அரிசியைப் படைப்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். எனக்குக் கட்டாயம் ஒரு மனைவி வேண்டும்.” மூதுரை ஒன்று சொல்கிறது: "பெற்ருேருக்கு ஆகாதவை மூன்றுண்டு. இதில் மிகவும் மோசமானது வாரிசுகள் இல்லாமல் போவதுதான்.”* "வாரிசுகள் இல்லாதவர்களின் ஆன்மாக்கள் பசிப்பிடித் தலைவது’** வாழ்வின் அவலங்களில் ஒன்று. இவ்வகையில் அவனது கண்ணுேட்டம் துறவிகள், ஞானிகள் ஆகியோரின் போதனைகளுக்கு உகந்தவகையில் இருந்தது. இப்படிப்பட்ட ஒருவன் பிறகு வெறிபிடித்து அலைந்ததுதான் உண்மையில் பரிதாபத்துக்குரியது.
*பெண், பெண்.”அவன் சிந்தித்தான்.
"பிக்கு பிருண்டு.பெண், பெண். பெண்” அவன் மீண்டும் சிந்தித்தான்.
அன்று மாலை ஆகியூ கடைசியில் எப்போது உறக்கத்தில் ஆழ்ந்தான் என்பதை நாம் ஒருபோதும் அறியப்போவதில்லை. ஆயினும் இதன் பிறகு,அவன் தனது விரல்கள் மிருதுவாகவும் மொழு மொழுப்பாகவும் இருப்பது போல எப்போதும் கருதியிருந்திருக்கக் கூடும்; மனச்சுமை நீங்கியவனுக இருந் திருக்கக் கூடும். "பெண்."அவன் இந்த நினைப்பிலேயே இருந்தான்.
மனித குலத்துக்கு பெண் ஒரு ஆபத்து என்பதை நாம் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
பெண்களால் சீன ஆடவர் நாசமாக்கப்படுகிருர்கள் என்ற துர்ப்பாக்கியமான உண்மை மட்டும் இல்லாதிருந்
* மென்சியஸின் (கி. மு. 372-289) கூற்று.
** ஸோ சுவான் என்ற பழம் நூலில் காணப்படும் கூற்று.

Page 71
a26. போர்க்குரல்
திருக்குமானல்,பெரும்பாலான சீன ஆடவர் புனிதர்களாகவும் ஞானிகளாகவும் ஆகியிருக்க முடியும். ஷாங் வமிசம் டாஜி யால் அழிந்தது. செள வம்சத்துக்குக் குழிதோண்டியது பாலோ ஸ்"; சின் வம்சத்தைப் பொறுத்தைைர, இப்படிப் பட்ட வரலாற்றுச் சான்று ஏதும் இல்லை யென்ருலும் கூட, ஏதோ ஒரு பெண்ணுல்தான் அது வீழ்ந்தது என்று நாம் ஊகிப்போமானல் அநேகமாக அதில் பெருந்தவறு இருக் காது. டுங்கோவின் சாவுக்கு டியாவோ சான்* காரணமாக இருந்தாள் என்பது ஒரு உண்மை.
ஆகியூவுமே, தொடக்கத்தில் கெடுபிடியான ஒழுக்கங்களைக் கடைப்பிடித்த மனிதன்தான். அவனுக்கு யாரேனும் ஒரு நல்ல ஆசிரியர் வழிகாட்டியாக இருந்தாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது என்ருலும்,"ஆண்களையும் பெண்களையும் ஒருவரிடமிருந்து ஒருவரை ஒதுக்கிவைத்தல்” என்பதை சிறிதும் பிசகாது கடைப்பிடிப்பவன் என்றே தன்னை எப் போதும் அவன் வெளிப்படுத்தியிருக்கிருன்.அதேபோல இளம் பிக்குணி, போலி வெளிநாட்டுப் பிசாசு போன்ற நெறிபிறழ் பவர்களைக் கண்டனம் செய்யக் கூடிய அறவொழுக்கம் நிறைந்தவனுகவும் இருந்தான். அவனிடம் குடிகொண்டிருந்த கருத்து இதுதான்: "எல்லா பிக்குணிகளும் துறவிகளுடன் க்ள்ளத் தொடர்பு வைத்திருக்க வேண்டும். தனியாக ஒரு பெண் தெருவில் சென்று கொண்டிருந்தாள் என்ருல் அது கெட்ட மனிதர்களைக் கவர்ந்திழுக்கத்தான். ஒரு ஆணும் பெண்ணும் ஒன்ருகப் பேசிக் கொண்டிருந்தால், அது இரு வரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யத்தான்." இத்தகையவர்
* கி. மு. 12 ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த டாஜி, ஷாங் வம்சத்தின் கடைசி மன்னனின் வைப்பாட்டியாக இருந்தவள். கி. மு எட்டாம் நூற்ருண்டைசி சேர்ந்த பாவோ ஸ", மேலை செள வம்சத்தின் கடைசிமன்னனின் வைப்பாட்டி. கி.மு. மூன்ருகி நூற்ருண்டில் ாைழ்ந்த அதிகாரம் மிக்க அமைச்சரான டுங் சோவின் வைப் பாட்டியாக இருந்தவள் டியாவோ சான் என்பவள்.

ஆகியூவின் உண்மைக் கதை 127
க்ளேச் சீர்திருத்தும் நோக்கத்துடன் அவன் கோபப்ப்ார்வை வீசுவான்; அவர்கள் மனம் புண்படவைக்கும் சொற்களைச் *த்தமாகச் சொல்வான் ஆளரவம் இல்லையென்றல் பின்ன விருந்து ஒரு சிறு கல்ல எடுத்து அவர்கள் மீது எறிவான்.
முப்பது வயதை நெருங்கிய, "உறுதியோடு நிற்க** வேண்டிய ஒரு மனிதன், இப்படி ஒரு இளம் பிக்குணியிடம் மனம் பறிகொடுத்து விடுவான் என்பதை யாரால் சொல்ல முடியும்? இத்தகைய உறுதியற்ற மனேநிலை, பண்டைய அறநெறிகளின்படி மிகவும் கேவலமானதாகும்; எனவே பெண்கள் வெறுக்கத்தக்க ஐந்துக்கள் என்பது நிச்சயம். ஏனெனில் இளம் பிக்குணியின் முகம் மிருதுவாகவும் மொழு மொழுப்பாகவும் இல்லாதிருந்திருக்குமானல் ஆகியூ அவளிடம் மயங்கி இருக்கவே மாட்டான் அப் பிக்குணியின் முகம் ஒரு துணியால் மறைக்கப் பட்டிருந்தாலும் கூட இது நிகழ்ந்திருக்காது. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு,ஒரு திறந்த வெளிக் கூத்தைப் பாரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், இவன் பார்வையாளர்களிலிருந்த ஒரு பெண்ணின் காலக் கிள்ளி விட்டான்; ஆனல் அவளது தொடைக்கும் இவனுக்கு மிடையில் அவளது கால்சட்டைத் துணி இருந்ததால் இப்படி பட்ட கிளுகிளுப்பு உணர்வு இவனுக்கு பின்பு ஏற்படவே இல்லை. இளம் பிக்குணி தன் முகத்தைத் துணியால் மூடவில்லை. ஒரு நெறிபிறழ்பவளின் வெறுக்கத்தக்க தன்மைக்கு இதுவும் ஒரு சான்று.
*பெண்.” ஆகியூ சிந்தித்தான்.
கெட்ட மனிதர்களைக் கவர்ந்திழுக்க விரும்புகிற பெண் கள்தான் இவர்கள்” என்று யாரை ஆ கியூ கருதுகிருனே * கன்பூவதியஸ்_கூறினர், தனது முப்பதாவது வயதில் அவர் "உறுதியோடு நின்ற தாக, ஒருவனுக்கு முப்பது எயதாகி விட்டது என்பதைச் சுட்டிக் காட்ட பிற் காலத்தில் "உறுதியோடு நிற்பது ’என்ற சொற்ருெடர் பயன்படுத்தப்பட்டது.

Page 72
128 GLJrošegdo
அவர்கண் உன்னிப்பாகக் கவனித்து வந்தான். ஆஞல் இவனைப் பார்த்து அவர்கள் முறுவலிக்கவே இல்லை. அவனிடம் பேச்சுக் கொடுத்த பெண்கள் சொல்வதை அவன் கவனத் துடன் கேட்டான். ஆனல் இரகசிய சந்திப்பு சம்பந்தமாக அவர்களில் ஒருவர்கூட எதையும் பேசவில்லை. ஆஹா, பெண் கள் வெறுக்கத்தக்கவர்கள் என்பதற்கு இது மற்றெரு உதாரணமல்லவா! அவர்கள் எல்லாருமே ஒரு போலித்தன மான நாணத்தைக் காட்டுகிறர்கள்.
ஆகியூ திரு. சாவோவின் வீட்டில் தெல் அரைக்கும் வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது ஒருநாள் அவன் இரவுச்சாப்பாட்டுக்குப் பிறகு சுங்கான் பற்றவைத்துப் புகைப் பதற்காக சமயைைறத் தரையில் உட்கார்ந்தான். அது வேறு யார் வீடாக இருத்திருந்தாலும் இரவுச்சாப்பாட்டுக்குப் பிறகு அவன் தனது சொந்தக் குடியிருப்புக்குச் சென்றிருப்பான். ஆனல் சாவோவின் குடும்பத்தினர் இரவு உணவை நேரத் திலேயே சாப்பிடுவர். சாப்பிட்ட தற்குப் பிறகு நேரே படுக்கைக்குச் செல்ல வேண்டுமேயன்றி விளக்கை ஏற்றக் கூடாது என்பது விதியாக இருந்தபோதிலும், இந்த விதிக்கு எப்போதேனும் ஒருமுறை விலக்குதி தசப்படுவதுமுண்டு திரு சாவோவின் மகன் மாவட்டத் தேர்வில் வெற்றிபெறு வதற்கு முன்பு தேர்வுக்கான கட்டுரைகளைப் படிப்பதற்காக விளக்கொன்றை ஏற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டான்;எடுபிடி வேலைகள் செய்வதற்காக ஆகியூ இங்கு வந்தபோது, நெல் அரைப்பதற்காக ஒரு விளக்கு ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப் பட்டான். இந்த விதிவிலக்கின் காரணமாகத்தான், வேலையைச் செய்யத் தொடங்குமுன் ஆ கியூ இன்னும் சமயலறையில் புகைபிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடிந்தது.
சாவோவின் இல்லத்திலிருந்த ஒரே பெண்வேலைக்காரி யான அமாவு பாத்திரங்களைக் கழுவி முடித்தபிறகு நீண்ட பெஞ்சின்மீது உட்கார்ந்தாள். ஆ கியூவுடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினுள்:

ஆகியூவின் உண்மைக் கதை 29
“நமது எஜமானி இரண்டு நாட்களாக ஏதும் சாப்பிட வில்லை. காரணம் நம் எஜமானன் ஒரு வைப்பாட்டியை வைத்துக் கொள்ள விரும்புகிருராம்.”
*அடபெண்ணே.அமா வு.இளம் விதவையே." ஆகியூ மனத்தில் எண்ணக்குதிரை பறந்தது.
“நமது இளம் எஜமானி வரப்போகும் எட்டாவது மாதத்தில் குழந்தை பெறப் போகிருள்.”
* பெண்ணே. * ஆகியூவின் சிந்தனை ஓடியது. தனது சுங்கானைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றன்.
"நமது இளம் எஜமானி-”அமாவு அரட்டையைத் தொடர்ந்தாள்.
ஆகியூ திடீரென்று முன்னல்நகர்ந்து அவளது காலடியில் விழுந்தான்: "என்னேடு படுக்கைக்கு வா!"
ஒரு கணம் முற்ருன அமைதி நிலவியது. "ஐயோ!" ஒரு கணம் திகைத்துப்போன அமாவுவுக்குத் திடீரென்று நடுக்கம் பிடித்துக்கொண்டது. பிறகு கூச்சலிட்டுக் கொண்டே வெளியே ஒடினுள். அவளது அழுகைஒலி கேட்டது.
சுவருக்கு எதிரே மண்டியிட்ட நிலையில் ஆ கியூவும் திகைத்துப் போயிருந்தான். இருகரங்களாலும் காலிபெஞ்சை இறுகப்பற்றி மெதுவாக எழுந்து நின்றன். ஏதோ தவறு நடந்துவிட்டது என்பது அவனுக்கு லேசாக உறைத்தது. உண்மையில் அவனே இப்போது நிலைதடுமாறிய நிலையில் இருந்தான். அவசரம் அவசரமாக அவனது சுங்கான இடுப்பில் செருகிக் கொண்டபிறகு, மீண்டும் நெல் அரைக்கச் செல்லத்தீர்மானித்தான். ஆனல்-படார்-அவன் தலைமீது பெருத்த அடி ஒன்று விழுந்தது. அவன் திரும்பிப்பார்க்கை யில், மாவட்டத் தேர்வில் வெற்றிபெற்றவன் ஒரு பெரிய மூங்கில் கழியை கையில் வைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.
Gunt. - 9

Page 73
128 போர்க்குரல்
அவர்கண் உன்னிப்பாகக் கவனித்து வந்தான். ஆனல் இவனைப் பார்த்து அவர்கள் முறுவலிக்கவே இல்லை. அவனிடம் பேச்சுக் கொடுத்த பெண்கள் சொல்வதை அவன் கவனத் துடன் கேட்டான். ஆனல் இரகசிய சந்திப்பு சம்பந்தமாக அவர்களில் ஒருவர்கூட எதையும் பேசவில்லை. ஆஹா, பெண் கள் வெறுக்கத்தக்கவர்கள் என்பதற்கு இது மற்ருெரு உதாரணமல்லவா! அவர்கள் எல்லாருமே ஒரு போலித்தன மான நாணத்தைக் காட்டுகிருர்கள்.
அரு கியூ திரு. சாவோவின் வீட்டில் நெல் அரைக்கும் வேலே செய்துகொண்டிருந்தான். அப்போது ஒருநாள் அவன் இரவுச்சாப்பாட்டுக்குப் பிறகு சுங்கான்பற்றவைத்துப் புகைப் பதற்காக சமயலறைத் தரையில் உட்கார்ந்தான். அது வேறு யார் வீடாக இருந்திருந்தாலும் இரவுச்சாப்பாட்டுக்குப் பிறகு அவன் தனது சொந்தக் குடியிருப்புக்குச் சென்றிருப்பான். ஆனல் சாவோவின் குடும்பத்தினர் இரவு உணவை நேரத் திலேயே சாப்பிடுவர். சாப்பிட்ட தற்குப் பிறகு தேரே படுக்கைக்குச் செல்ல வேண்டுமேயன்றி விளக்கை ஏற்றக் கூடாது என்பது விதியாக இருந்தபோதிலும், இந்த விதிக்கு எப்போதேனும் ஒருமுறை விலக்குத் தரப்படுவதுமுண்டு திரு சாவோவின் மகன் மாவட்டத் தேர்வில் வெற்றிபெறு வதற்கு முன்பு தேர்வுக்கான கட்டுரைகளைப் படிப்பதற்காக விளக்கொன்றை ஏற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டான்:எடுபிடி வேலைகள் செய்வதற்காக ஆகியூ இங்கு வந்தபோது, நெல் அரைப்பதற்காக ஒரு விளக்கு ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப் பட்டான். இந்த விதிவிலக்கின் காரணமாகத்தான், வேலையைச் செய்யத் தொடங்குமுன் ஆ கியூ இன்னும் சமயலறையில் புகைபிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடிந்தது.
சாவோவின் இல்லத்திலிருந்த ஒரே பெண்வேலைக்காரி யான அமாவு பாத்திரங்களைக் கழுவி முடித்தபிறகு நீண்ட பெஞ்சின்மீது உட்கார்ந்தாள். ஆ கியூவுடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினுள்:

ஆகியூவின் உண்மைக் கதை 29
“நமது எஜமானி இரண்டு நாட்களாக ஏதும் சாப்பிட வில்லை. காரணம் நம் எஜமானன் ஒரு வைப்பாட்டியை வைத்துக் கொள்ள விரும்புகிருராம்.”
"அடபெண்ணே.அமா வு.இளம் விதவையே." ஆகியூ மனத்தில் எண்ணக்குதிரை பறந்தது.
“நமது இளம் எஜமானி வரப்போகும் எட்டாவது மாதத்தில் குழந்தை பெறப் போகிருள்.”
"பெண்ணே.” ஆகியூவின் சிந்தனை ஓடியது. தனது சுங்கானைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றன். "நமது இளம் எஜமானி-”அமாவு அரட்டையைத் தொடர்ந்தாள். ..
ஆகியூ திடீரென்று முன்னுல்நகர்ந்து அவளது காலடியில் விழுந்தான்: "என்னேடுபடுக்கைக்கு வா!"
ஒரு கணம் முற்ருன அமைதி நிலவியது. "ஐயோ!"ஒரு கணம் திகைத்துப்போன அமா வுவுக்குத் திடீரென்று நடுக்கம் பிடித்துக்கொண்டது. பிறகு கூச்சலிட்டுக் கொண்டே வெளியே ஓடினள். அவளது அழுகைஒலி கேட்டது.
சுவருக்கு எதிரே மண்டியிட்ட நிலையில் ஆ கியூவும் திகைத்துப் போயிருந்தான். இருகரங்களாலும் காலிபெஞ்சை இறுகப்பற்றி மெதுவாக எழுந்து நின்றன். ஏதோ தவறு நடந்துவிட்டது என்பது அவனுக்கு லேசாக உறைத்தது. உண்மையில் அவனே இப்போது நிலைதடுமாறிய நிலையில் இருந்தான். அவசரம் அவசரமாக அவனது சுங்கான இடுப்பில் செருகிக் கொண்டபிறகு, மீண்டும் நெல் அரைக்கச் செல்லத்தீர்மானித்தான். ஆனல்-படார்!-அவன் தலைமீது பெருத்த அடி ஒன்று விழுந்தது. அவன் திரும்பிப்பார்க்கை யில், மாவட்டத் தேர்வில் வெற்றிபெற்றவன் ஒரு பெரிய மூங்கில் கழியை கையில் வைத்துக் கொண்டு நிற்பது
தெரிந்தது. w
Gurr. - 9

Page 74
30 போர்க்குரல்
“எத்தனைத் துணிச்சல் இருந்தால் நீ.நீ."
பெரிய மங்கில்கழி ஆகியூவின் தோள்களின் குறுக்கே விழுந்தது. தனது தலையை இருகைகளாலும் மறைக்க முயன்றபோது அக்கழி அவனது விரல்மூட்டுகள்மீது விழுந்து கடும் வலியை ஏற்படுத்தியது. சமையலறை வழியாக அவன் தப்பித்து ஓடும்போது அவன் முதுகிலும் ஒரு அடிவிழுந்தது போல் தோன்றியது.
'ஆமை முட்டையே!” தேர்வில் வெற்றி பெற்றவன் கத்தினன். செம்மைச் சீனமொழியில் பின்னலிருந்து சபித் தான். ག
ஆகியூ நெல் அரைக்கும் இடத்துக்கு ஓடிவந்து அங்கே தனியாக நின்றன். அவனது விரல்மூட்டுகள் இன்னும் வலித்தன. 'ஆமை முட்டை”என்ற விார்த்தைகள் இன்னும் காதுகளில் ஒலித்தன. காரணம் வெய்சுவாங் கிராமத்தினர் பயன்படுத்தியிராத சொற்கள் இவை அரசாங்க உ த்தியோகம் ஏதேனும் பார்த்த பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய பதங்கள் இவை. இது ஆகியூவுக்கு மேலும் திகிலூட்டியது: அவன் மனத்தில் அசாதாரணமான ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயினும் இப்போது “பெண்" பற்றிய சிந்தனையெல்லாம் பறந்தோடி விட்டது. இந்த 6hlafaydigith அடிக்கும் பிறகு ஏதோ ஒன்றுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது என்று தோன்றியது. அவன் மீண்டும் மனச்சுமை ஏதுமின்றி நெல் அரைக்கத்தொடங்கினன். கொஞ்ச நேரம் அரைத்த பிறகு அவன் உடம்பில் சூடுஏறியது. சட்டையைக் கழற்று வதற்காக வேலையை நிறுத்தினன்.
சட்டையைக் கழற்றும்போது வெளியே ஒரு கூச்சலைக் கேட்டான். என்ன கலாட்டா நடந்தாலும் அதில் பங்குபெற இவன் எப்போதும் விரும்புவதால், என்ன சத்தம் அது என்பதைக் கண்டறிய வெளியே சென்றன். சத்தம் வந்த திசையை நோக்கி மெதுவாக திரு. சாவோவின் வீட்டு உள் முற் றத்துக்கே சென்றன். அங்கே இருட்டாக இருந்தபோதிலும்

ஆகியூவின் உண்மைக் கதை 13
பலர் அங்கிருப்பதை அவனுல் காண முடிந்தது; இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த சாவோவின் மனைவி உட்பட சாவோ குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். மற்றும் அண்டைவீட்டுக்காரியான திருமதி ஸ்", அவர்களது உறவினர்களான சாவோ பய்ன யென், சாவோ ஸ0-சென் ஆகியோரும் இருந்தனர்.
இளம் எஜமானி அமாவுவை வேலைக்காரர்கள் குடியிருப் பிலிருந்து வெளியே நடத்திக் கொண்டு வந்தாள். அவள் வேலைக்காரியிடம் கூறினள்:
*வெளியே வா.உன் அறைக்குள்ளேயே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்காதே.”
பக்கத்திலிருந்த திருமதி. ஸு கூறினள்: "எல்லாருக்கும் தெரியும்-நீ நல்ல பெண் என்பது. தற்கொலை செய்து கொள்வது என்பதை நீ நினைத்தே பார்க்கக்கூடாது.”
அமா வு பதிலேதும் சொல்லாமல் தேம்பியழுதாள். மற்றவர் காதில் விழாதபடி எதையோ முணுமுணுத்தாள்.
'இது சுவாரசியமானது” என்று ஆ கியூ நினைத்தான். *இந்த இளம் விதவை என்ன குறும்பு செய்யத் திட்டமிட் டிருக்கிருள்?” இதைத் தெரிந்து கொள்வதற்காக அவன் சாவோ ஸு. சென்னை நெருங்கினன். திரு சாவோவின் மூத்த மகன் தன்னை நோக்கி வேகமாக வருவதைத் திடீரெனக் கண்ணுற்றன். அதுமட்டுமல்ல, வருபவன் கையில் பெரிய மூங்கில்கழியும் இருந்தது. இந்த மூங்கில் கழியால் அவனுக்கு அடி விழுந்தது நினைவுக்கு வந்தது. இங்கு நடக்கிற களேபரத் துக்கும் தனக்கும் சம்பந்தமிருக்கிறது என்பதை உணர்ந்து திரும்பி ஓடினன். நெல்லரைக்கும் இடத்துக்குத் தப்பி ஒ விடலாம் என்று நம்பினன். ஆனல் தான் தப்பிச் செல்வதை மூங்கில்கழி தடுத்து நிறுத்திவிடும் என்பதை அவனல் முன் கூட்டியே எதிரிபார்க்க முடியவில்லை; எனவே அவன் மற்ருெரு திசையில் திரும்பி ஒடி சிரமமில்லாமல் பின்புறக்

Page 75
132 போர்க்குரல்
கதவு வழியாகத் தப்பித்தான். வெகுசீக்கிரம் அவன் காவில் தெய்வத்தின் கோயிலை அடைந்தான்.
சிறிது நேரம் உட்கார்ந்திருந்த பிறகு, அவனது தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. அவன் உடம்பெல்லாம் குளிர்ந் திருந்தது. காரணம், அது வசந்தகாலமாக இருந்தபோதிலும் இன்னும் இரவுகளில் மூடுபனி இருந்தது. சட்டையில்லாத முதுகுகளுக்கு அது உகந்ததல்ல. தனது சட்டையை அவன் சாவோ இல்லத்திலேயே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அதை எடுத்துவர மறுபடியும் அங்கு சென்ருல் தேர்வில் வெற்றிபெற்றவனின் மூங்கில் கழி இன்னெருமுறை அவனைப் பதம்பார்க்கும் என்பது அவனுக்கு அச்சம் ஊட்டியது.
பிறகு கிராமத் தலைவன் உள்ளே வந்தான்.
நாசமாய்ப்போன ஆகியூ!" என்ருன் கிராமத்தலைவன். "சாவோ குடும்பத்து வேலைக்காரர்கள்மீது உன்னல் கை வைக்காமல் இருக்க முடியாதோ, கலகக்காரப்பயலே! நீ என் தூக்கத்தைக் கெடுத்தாய் நாசமாய்ப்போனவனே.”
இந்த வசைமாரிக்கு முன் ஆ கியூவால் இயல்பாகவே ஏதும் சொல்லமுடியவில்லை. கடைசியில், அது இராக்கால மாக இருந்த காரணத்தால், இரண்டுமடங்கு கையூட்டை அதாவது நானூறுகாசுகளை அவன் கிராமத்தலைவனுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனல் அவன் கையில் பணம் இல்லை. எனவே தனது தொப்பியை அடமானமாகக் கொடுத்து, கீழ்க்காணும் ஐந்து நிபந்தனைகளை ஏற்றுக் Gastroit Lertail:
1. மறுநாள் காலை ஒருபவுண்டு எடையுள்ள இரண்டு சிவப்பு மெழுகுவர்த்திகளையும் ஒரு கட்டு ஊதுபத்தி களையும் ஆகியூ, சாவோ குடும்பத்தாருக்குக்
கொடுத்து, தனது தவருண செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ஆ கியூவின் உண்மைக் கதை 133
2. கெட்ட ஆவிகளைத் துரத்தியடிப்பதற்காக சாவோ
குடும்பத்தினரால் வரவழைக்கப்பட்ட தாவோ மார்க்கப் பூசர்ரிகளுக்குரிய காணிக்கையை ஆ கியூ செலுத்தவேண்டும்.
3. ஆகியூ, சாவோவின் இல்லத்துக்குள் இனி ஒரு
போதும் அடியெடுத்து வைக்கக்கூடாது.
4. அமா வுவுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அதற்கு ஆ
கியூதான் பொறுப்பேற்க வேண்டும்.
5. தனது கூலியைப் பெறவோ சட்டையை எடுத்துக் கொண்டு வரவோ ஆகியூ அங்கு திரும்பவும் செல்லக் கூடாது.
ஆகியூ எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதில் வியப்பில்லை. ஆனல் அவன் கையில் பணம் தயாராக இல்லை. அதிருஷ்டவசமாக அது வசந்தகாலம்; எனவே தன்னிடமுள்ள பஞ்சுவைத்துத் தைக்கப்பட்ட கனமான போர்வை இல்லாமல் இப்போது காலந்தாட்டமுடியும். அதை அவன் இரண்டாயிரம் காசுகளுக்கு அடகுவைத்து, விதிக்கப்பட்ட நிபந்தனைகளே நிறைவேற்றினன், சட்டையில்லாத முதுகுடன் மண்டியிட்ட அவனிடம் ஒருசில காசுகள் எஞ்சியிருந்தன. கிராமத்தலைவனி டமிருந்து தனது தொப்பியை மீட்க அவற்றைச் செலவிடு வதற்குப்பதிலாக, குடிப்பதிலேயே எல்லாவற்றையும் செல விட்டான்.
உண்மையில், சாவோ குடும்பத்தினர் ஊதுபத்திகளையோ மெழுகுவர்த்திகளையோ கொளுத்தவில்லை. ஏனெனில் எஜமானி புத்தரை வழிபடும் சமயங்களில் பயன்படுத்தட்டும் என்று அவற்றைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டார்கள். அவனது கிழிசல் சட்டை, எஜமானியின் குழந்தைக்கு கோவணம் சுற்றுவதற்காக துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. மீதமாயிருந்த துண்டுகளை அமாவு பாதணிகளில் பயன்படுத்துவதற்காக எடுத்துக்கொண்டாள்.

Page 76
134 போர்க்குரல்
அத்தியாயம்- 5
வாழ்க்கைப் பிரச்சினை
ஆகியூமண்டியிட்டு சாவோ குடும்பத்தினரின்நிபந்தனை களைப் பூர்த்தி செய்தபிறகு, வழக்கம்போல் காவல் தெய்வத் தின் கோவிலுக்குச் சென்றன். சூரியன் அஸ்தமித்திருந்தது. ஏதோ ஒரு குறையை உணரத்தொடங்கினன். மிகக் கவன மான சிந்தனையானது, தன் முதுகில் சட்டையில்லாததுதான் அக்குறை என்ற முடிவுக்கு அவனை இட்டுச் சென்றது. தன்னிடம் இன்னும் உள்ளாடை கிழிந்த ஒரு மேல்கோட்டு இருப்பது நினைவுக்கு வந்தது. அதை எடுத்து மாட்டிக் கொண்டு கீழே படுத்தான். கண்களைத் திறந்து பார்க்கும் போது, மேற்கு மதிலின் உச்சியில் சூரியன் தகித்துக் கொண் டிருப்பதைக் கண்டான். எழுந்து உட்கார்ந்து சபித்தான்: opTsortù Gurro..... 99
எழுந்த பிறகு வழக்கம் போல தெருக்களைச் சுற்றினன். கடைசியில் வேறு ஏதோ குறை இருப்பதை உணர்ந்தான். இது சட்டையில்லாத ஒரு முதுகுக்குரிய உடல் வகையான அசெளகரியத்துடன் ஒப்பிடக் கூடியதல்ல உதை வாங்கிய நாளிலிருந்து வெய் சுவாங்கிலிருந்த பெண்கள் எல்லாரும் ஆகியூவைக் கண்டு கூச்சப்படத் தொடங்கினர். அவனைப் பார்த்ததும் கதவுகளுக்குப் பின்னே சென்று புகலிடம் தேடிக்கொண்டனர். உண்மையில், ஏறத்தாழ ஐம்பது வயதான திருமதி. ஸு கூட மற்றவர்களுடன் சேர்ந்து குழம்பிப் போய் கதவுக்குப்பின் மறைவாள். தனது பதினுேரு வயது மகளை உள்ளே வரும்படி அழைத்துக் கொள்வாள். இது ஆகியூவுக்கு விநோதமாகத் தோன்றியது; 'தேவிடியாள்கள்? என்று திட்டினன். "இளம் பெண்களைப் போல அவர்களுக்குத் திடீரென நாணம் வந்து விட்டது.”

135 கியூவின் உண்மைக் கதை {{ی
ஆயினும் பல நாட்களுக்குப் பிறகு அவன் தனக்கு ஏதோ பெருங்குறை ஏற்பட்டுவிட்டது என்பதை முன்னைக் காட் டிலும் ஆழமாக உணர்ந்தான். முதலாவதாக மதுக்கடையில் அவனுக்கு கடனுக்கு மது கிடைக்கவில்லை; இரண்டாவதாக, காவல் தெய்வத்தின் கோயிலுக்குப் பொறுப்பேற்றிருக்கிற கிழவன் தேவையில்லாதசில வார்த்தைகள் சொல்லிவிட்டான்-ஆகியூ அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதைப் போல; மூன்ருவதாக அவனை வேலைக்கமர்த்த பலநாட்கள் -சரியாக எத்தனை நாட்கள் என்பது அவனுக்கு நினைவில்லையாருமே வரவில்லை. மதுக்கடையில் கடன் கிடைக்கவில்லை என்பதை அவனுல் பொறுத்துக் கொள்ள முடியும்; கோயிலி லிருந்து வெளியேறுமாறு கிழவன் விடாது நச்சரித்து வந்தால் அதைக் கூடப் புறக்கணித்து விடலாம்; ஆனல் அவனை வேலைக் கமர்த்த யாருமே வரவில்லை என்ருல் அவன் பட்டினி கிடக்க வேண்டியது தானே இது உண்மையிலேயே “சபிக்கப் பட்ட நிலைதான்.
இதைத் தாங்க முடியாத நிலைவந்ததும், வழக்கமாகத் தன்னை வேலைக்கமர்த்தும் இல்லங்களுக்கெல்லாம் சென்று காரணம் அறிந்து கொள்ள முயன்றன். திரு. சாவோவின் இல்லத்து நுழைவாயிலைக் கடக்க மட்டும் அவன் அனுமதிக்கப் படவில்லை. ஆனல் சென்ற இடங்களில் எல்லாம் அவனுக்கு விநோதமான வரவேற்பு கிடைத்தது. வெளியே வந்த தெல்லாம் யாராவது ஒரு ஆண்மகன்தான். அவன் ஆகியூவைக் கண்டதும் வெறுப்படைந்தவன் போனத் தோன்றினன். பிச்சைக்காரனைப் பார்ப்பதுபோல் பார்த்து கைகளை ஆட்டிக் கொண்டு சொன்னன்:
"இங்கு வேலை ஏதும் இல்லை, போ போ!”
இது மேன்மேலும் அவனுக்கு வியப்புத்தந்தது: 'முன்பெல்லாம் இவர்களுக்கு எப்போதும் ஒத்தாசைக்கு ஆள் தேலைப்பட்டது; திடீரென்று வேலையே இல்லாமல் போய்விட்டதா! இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது” என்று

Page 77
136 போர்க்குரல்
ஆகியூ நினைத்தான். எச்சரிக்கையுடன் விசாரித்ததில் எப்போதெல்லாம் எடுபிடி வேலை செய்ய அவர்களுக்கு ஆள் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இளைய டியைக் கூப்பிட்டார்கள் என்பதை அறிந்தான். இந்த இளைய டி என்பவன் ஒல்லியான சோனிப் பரதேசிப் பயல். ஆகியூ இவனை மீசைக்கார வாங்கைவிடக் கேவலமானவனக மதித் தான். இந்த இழிபிறவி தனது பிழைப்பில் மண் போடுவான் என்பதை யார் நினைத்திருக்க முடியும்? இம்முறை ஆகியூவின் சினம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சினம் பொங்க நடந்து சென்றபொழுது தனது கரத்தைத் திடீரென உயர்த்திப் பாடத் தொடங்கினன்: 'உருக்காயுதத்தால் சாத்துவேன் உன்னை. 59米
சில நாட்களுக்குப் பிறகு அவன் திரு. சியென்னின் இல்லத்துக்கு முன் உண்மையிலேயே இளைய டி நிற்பதைப் பார்த்தான். "இரு எதிரிகள் சந்திக்கும் போது அவர்களது கண்களிலிருந்து தீ பறக்கும்." ஆகியூ அவனை நெருங்கினன். இளைய டி அசையாது நின்றன்.
"மடக்கழுதை" ஆகியூ சீறினன். வாயில் நுரைதள்ள வெறித்தனமாகப் பார்த்தான்.
*நான் ஒரு பூச்சி-போதுமா..?” என்று இளைய டி கேட்டான்.
இத்தகைய அடக்கமான பதில் ஆகியூவின் கோபத்தை அதிகரித்தது. அவனது கரத்தில் உருக்காயுதம் ஏதும் இல்லை யாதலால், அவனல் செய்ய முடிந்ததெல்லாம் நீட்டிய கரத் துடன் விரைந்துசென்று இளைய டியின் சடையைப் பிடித்தது
* "ட்ராகனுக்கும் புலிக்கும் நடந்த சண்டை” என்ற இசை நாடகத்தில் வரும் வரி இது. இந்த இசை நாடகம் ஷாவோ விங்கில் புகழ் பெற்றிருந்த ஒன்று. ஸாங் வம் சத்தைச் சேர்ந்த சாவோ குவாங்-யின் என்பவருக்கும் மற்ருெரு தளபதிக்கும் நடந்த சண்டையைச் சொல் கிறது இது.

ஆகியூவின் உண்மைக் கதை 137
தான். ஒருகையால் தன் சடையைப் பாதுகாத்துக் கொண்ட இகளய டி, மற்ருெரு கையால் ஆகியூவின் சடையைப் பிடிக்க முயன்ருன். அதனல் ஆகியூவும் தனது சடையைப் பாதுகாக்க ஒருகையை பயன்படுத்த வேண்டியிருந்தது. முன்பெல்லாம் இளைய டியை அவன் பொருட்படுத்தியதே இல்லை. ஆனல் இப்போது அவன் பட்டினியால் வாடியதால் தன் எதிரியைப் போலவே தானும் இளைத்துப்போய் பலகீனமானவனுயிருந் தான். எனவே ஒருவருக்கொருவர் நிகரான பகைவர்கள் சண்டைபோடுவது போன்ற ஒரு காட்சியை அவர்கள் வழங் கினர். நான்கு கரங்கள் இரண்டு தலைகளைப் பிடித்துக் கொண் டன. இருமனிதர்கள் இடுப்பை வளைத்தனர். இது சியென் வீட்டு வெள்ளைச் சுவரின்மேல் அரைமணி நேரத்துக்கும் மேலாக, ஒரு நீலநிற வானவில் வடிவ நிழலைத் தோற்று வித்தது.
கூடிநின்றவர்களில் சிலர் அவர்களைச் சமாதானப்படுத்த, *போதும், போதும்" என்றனர்.
"நல்லது நல்லது” என்றனர் வேறு சிலர்.
ஆனல் இது சமாதானப்படுத்தவா, சண்டைபோடுபவர் களைப் பாராட்டுவதற்கா, அல்லது தொடர்ந்து சண்டை போடத் தூண்டுவதற்கா என்பது நிச்சயமில்லை.
ஆயினும் சண்டை போடுபவர்கள் இருவரும் இதற்கெல் லாம் செவிசாய்க்கவில்லை; ஆகியூ மூன்றடி முன்னெடுத்து வைத்தால், இளைய டி மூன்றடி பின்னல் பதுங்குவான்; எனவே அவர்கள் நிற்பார்கள். இளைய டி மூன்றடி முன்னல் வந்தால், ஆகியூ மூன்றடி பின்னல் பதுங்குவான்; எனவே மீண்டும் அவர்கள் நின்றுவிடுவார்கள். இப்படி அரைமணிநேரம் நடந்த பிறகு-மணி அடிக்கும் கடிகாரங்கள் வெய்சுவாங்கில் இல்லை, எனவே சரியாகவே எவ்வளவு நேரம் என்பதைச் சொல்வது கடினம்; அது இருபது நிமிடங்களாகவும் இருக்க லாம்-இருவர் தலைகளிலிருந்தும் ஆவிபறக்கத் தொடங்கி, இருவர் கன்னங்களிலும் வியர்வை வழியத்தொடங்கியபோது

Page 78
38 Guntrifase,5uváño
ஆகியூ தன் கரங்களைக் கீழே போட்டான். அதேசமயத்தில், இளைய டியின் கைகளும் இறங்கின. ஒரேசமயத்தில் இருவரும் நிமிர்ந்து ஒரே சமயத்தில் பின்னல் செனறு, ஒரேசமயத்தில் கூட்டத்தினிடையே நுழைந்து செல்லத் தொடங்கினர்.
"என்னிடமிருந்து மறுபடியும் வாங்கிக் கட்டப் போகிருய்” என்ருன் ஆகியூ.
"என்னிடமிருந்து மறுபடியும் வாங்கிக் கட்டப் போகிருய்” என்ருன் இளைய டியும்.
காவியத்தன்மை வாய்ந்த இச்சண்டை வெற்றியிலும் முடியவில்லை, தோல்வியிலும் முடியவில்லை என்பது தெளிவு. பார்வையாளர்களுக்குத் திருப்தி ஏற்பட்டதா, இல்லையா என்பதும் தெரியாது. ஏனெனில் யாருமே அபிப்பிராயம் வெளியிடவில்லை. ஆயினும், ஆ கியூவை வேலைக்கு அமர்த்த இன்னும் யாரும் வரவில்லை.
வெது வெதுப்பான ஒரு நாளில், கோடை வருவதை முன்கூட்டியே உணர்த்துவதாகத் தோன்றிய ஒரு மணமிக்க தென்றல் வீசிக்கொண்டிருந்தபோது, ஆகியூஉண்மையாகவே குளிரை உணரத்தொடங்கினன்; அவனுல் இதைத் தாங்கி யிருக்க முடியும். அவனுக்கிருந்த மிகப் பெரும் கவலை, காலி வயிற்றைப் பற்றித்தான். பஞ்சுவைத்துத் ன்தக்கப்பட்ட கெட்டியான போர்வை, தொப்பி, சட்டை எல்லாம் நீண்ட நாட்களுக்கு முன்பே மறைந்துவிட்டன; அதன்பிறகு அவன் தனது மேல் கோட்டையும் விற்று விட்டான். இப்போது அவனிடம் எஞ்சியுள்ளது அவனது காலாடை மட்டுமே: ஆனல் இதைக் கழற்றமுடியாது என்பதைச் சொல்ல வேண் டியதில்லை. அவனிடம் உள்ளாடை கிழிந்த ஒரு மேல்கோட்டு இருந்தது உண்மை; ஆனல் அது ஒரு பைசாமதிப்பு கூடத் தேருது அதைக்கொண்டு பாதணிகளின் அடிப்பகுதியைச் செப்பனிடலாம். சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒருநாள் பணப்பை ஒன்று அகப்படலாம் என்று அவன்

ஆகியூவின் உண்மைக் கதை 139
நம்பிக்கை வைத்திருந்தான்; ஆனல் இதுவரை அதில் வெற்றிபெறவில்லை. இடிந்துவிழும் நிலையிலிருக்கிற தனது அறையில் திடீரென்று ஒரு புதையல் அகப்படலாம் என்றும் அவன் நம்பினுன் அறை முழுவதும் வெறியுடன் தேடினன். ஆனல் முற்றிலும் காலியாக இருந்தது. அதன்பிறகு உணவைத்தேடி அலைய முடிவு செய்தான். sY "
*உணவைத்தேடி" அவன் சாலையில் நடந்துகொண் டிருந்த போது, அவன் தனக்குப் பரிச்சயமான மதுக்கடையையும் தனக்குப் பரிச்சயமான அவித்த ரொட்டியையும் பார்த்தான். ஆனல் அவன் ஒரு நொடிகூட அங்கு நிற்காது, அவற்றின்மீது ஒருகணம்கூட நாட்டம் கொள்ளாது அவற்றைக் கடந்து சென்முன், அவன் தேடுவது இவற்றையல்ல-அவன் எதைத் தேடுகிருன் என்பது அவனுக்கே தெரியாத போதிலும்.
வெய்சுவாங் பெரிய ஊரல்ல. எனவே மிகவிரைவில் அவன் அதைக் கடந்து வந்துவிட்டான். கிராமத்துக்கு வெளியே இருந்த இடங்கள் பெரும்பாலும் நெல்வயல்கள் தான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை இளம் நெற்பயிர்கள் பசுமையாய்க் காட்சியளித்தன. ஆங்காங்கே புள்ளி வைத்தாற்போல் தெரிந்த, உருண்டையாய் கருப்பாய் அசை கின்ற உருவங்கள், வயல்களில் வேலைசெய்யும் உழவர்கள் கிராமப்புற வாழ்வின் ஆனந்தத்தை அறியாத ஆகியூ தன் வழியே சென்றுகொண்டிருந்தான். இது அவனது "உணவுக் கான தேடலி" லிருந்து வெகுதூரம் விலகியிருக்கிற ஒன்று என்பதை அவனது உள்ளுணர்வு உணர்த்தியது. ஆயினும், கடைசியாக அவன் சாந்தமான ஆன்மீக மேம்பாடு மடத்துக்கு வந்து சேர்ந்தான்.
இந்த மடமும் நெல்வயல்களால் சூழப்பட்டிருந்தது. அதன் வெண்ணிறச்சுவர்கள் பச்சைப் பசேலென்ற சூழலில் எடுப்பாகத் தெரிந்தன. பின்புறமிருந்த தாழ்வான மண் சுவருக்கு அப்புறத்தில் ஒரு காய்கறித் தோட்டம் இருந்தது.

Page 79
140 போர்க்குரல்
ஆகியூ ஒருகணம் தயங்கினன் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் கண்ணுக்குத் தென்படாததால் தாழ்வான சுவர்மீது ஏறிஞன். மண்சுவர் சரியத்தொடங்கியது. ஆ கியூ பயத் தால் நடுங்கினன்; ஆயினும் முசுமுசுக்கை மரமொன்றின் கிளையை பிடித்துக் கொண்டு ஏறி அவன் ஒருவழியாக உள்ளே குதித்தான். உள்ளே பலவகையான மரஞ்செடிகொடிகள் இருந்தன. ஆனல் மஞ்சள் நிற மதுரசமோ, அவித்த ரொட்டி யோ, அல்லது சாப்பிடக்கூடிய இதர பொருள்களோ-இவை எவற்றின் அடையாளமும் இல்லை, மேற்குப்பகுதியில் மூங்கில் மரங்கள் இருந்தன. அவற்றில் நிறைய குருத்துகள் இருந்தன. ஆனல் துரதிருஷ்டவசமாக அவை சமைக்கப்படாத குருதி துகள் அங்கு எள்ளும் வளர்ந்திருந்தது. ஆனல் அதில் ஏற்கனவே விதை முற்றியிருந்தது; கடுகுச் செடிகள் பூக்கும் தருவாயில் இருந்தன. அங்கிருந்த சிறிய முட்டைக்கோசுகள் மிகவும் கெட்டியான வையாகத் தோன்றின.
தேர்வுகளில் தோல்வியுற்ற பண்டிதனைப் போல ஆ கியூ மிகவும் வருத்தமுற்ருன். தோட்டத்து வாயிலை நோக்கி மெதுவாக நடந்தான். திடீரென்று மகிழ்ச்சியால் குதித்தான். ஏனெனில் அவனுக்கெதிரே ஒரு டர்னிப் பாத்தி கீழே குனிந்து டர்னிப்புகளைப் பிடுங்கத்தொடங்கியபோது வாயில் கதவுக்குப் பின்னலிருந்து ஒரு உருண்டைத்தலை திடீரெனத் தோன்றியது. உடனடியாக அத்தலை பின்வாங்கியது. அது வேறு யாருமில்லை, இளம் பிக்குனிதான். இளம்பிக்குனி கள் போன்றவர்கள் மீது ஆ கியூவுக்கு மிகப்பெரும் வெறுப்பு இருந்தபோதிலும் "விவேகத்தைக் கடைப்பிடிப்பதுதான் வீரத்தின் சிறந்தபகுதி” என்பதை அனுசரிக்க வேண்டிய நேரங்களும் இருக்கின்றன. அவசர அவசரமாக அவன் நான்கு டர்னிப்புகளைப் பிடுங்கினன். இலைகளைப் பிய்த்து, அவற்றை மடித்து தனது மேல் கோட்டுக்குள் வைத்துக் கொண்டான். இந்த நேரத்தில் ஒரு கிழ பிக்குணி ஏற்கனவே வெளியே நின்றுகொண்டிருந்தாள்.

ஆகியூவின் உண்மைக் கதை 4.
"புத்தர் நம்மைக் காப்பாற்றுவாராக. ஆகியூ டர்னிப் புகளைத் திருடுவதற்காக உன்னை எங்கள் தோட்டத்தில் ஏறிக் குதிக்கச் செய்தது எது?..எவ்வளவு தீங்கான செயல் இது புத்தர் நம்மைக் காப்பாற்றுவாராக!...”
"நான் எப்போது உங்கள் தோட்டத்தில் ஏறிக்குதித்து டர்னிப்புகளைத் திருடினேன்?’ புறப்பட்டுக்கொண்டே அவளைப் பார்த்துக் கொண்டு பதில் கூறினன் ஆகியூ.
"இப்போதுதான்- நீ இதைச் செய்யவில்லையா?” அவனது மேல்கோட்டில் இருந்த மடிப்புகளைச் சுட்டிக் காட்டிய கிழப் பிக்குனி கூறினள்.
இவை உங்களுடையவையா? இவற் றிடம் நீங்கள் கேட்டால் அவை பதில் சொல்லுமா? நீங்கள்.’
இவ்வாக்கியத்தை முடிக்காமலேயே, ஆ கியூ எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக ஓட ஆரம்பித் தான். ஒரு பெரிய கொழுத்த கருப்பு நாய் ஒன்று அவனைப் பின்தொடர்ந்து ஓடிவந்தது. இந்த நாய் முதலில் முன் வாசலில் இருந்தது. இப்போது பின்புறத் தோட்டத்துக்கு அது எப்படி வந்தது என்பது ஒரு மர்மம். ஒரு உறுமலுடன் அது அவனைத் துரத்தியது; ஆ கியூவின் காலை அது கடிக்கப் போகும் நேரத்தில், நல்லவேளையாக ஆ கியூவின் மேல் கோட்டிலிருந்து ஒரு டர்னிப் கீழே விழுந்தது. வியப்புக் குள்ளான நாய் ஒருகணம் நின்றது. இதற்குள் ஆ கியூ முசு முசுக்கை மரத்திலேறி மண்சுவரை அடைந்து, மடத்துக்கு வெளியே கீழே விழுந்தான். டர்னிப்புகளும் கீழே விழுந்து சிதறின. கருப்புநாய் முசுமுசுக்கை மரத்தின் கீழே நின்று குரைத்துக் கொண்டிருந்தது. கிழ பிக்குணி ஜெபித்துக் கொண்டிருந்தாள்
பிக்குணி கருப்புநாயை மீண்டும் வெளியே அவிழ்த்து விடுவாள் என்று பயந்த ஆகியூ டர்னிப்புகளையெல்லாம் சேகரித்துக்கொண்டு ஓடினன். ஒடும் வழியில் சிறுசிறு

Page 80
42 போர்க்குரல்
கற்களையும் எடுத்துக்கொண்டான். ஆனல் கருப்புநாய் மீண்டும் வரவில்லை. கற்களைத் தூக்கி யெறிந்துவிட்டு நடக்கும்போது சாப்பிட்டுக்கொண்டே சிந்தித்தான்: "இங்கு ஏதும் கிடைக்காது. பேசாமல் நகரத்துக்குப் போவதுதான் நல்லது.”
மூன்ருவது டர்னிப்பைத் தின்று முடிக்கும்போது, நகரத் துக்குப் போவது என்ற முடிவு அவின் மனதில் உறுதியாக ஏற்பட்டுவிட்டது.
eligiouTub-6 புனர்வாழ்வும் வீழ்ச்சியும்
அவ்வாண்டு நிலாத்திருவிழா முடியும்வரை வெய் சுவாங் கிராமம் ஆகியூவை மீண்டும் பார்க்கவில்லை. அவன் திரும்பிவந்தது. எல்லாருக்கும் வியப்பளித்தது. இது அவன் இதுதாள்வரை எங்கிருந்திருப்பான் என்பதை யோசிக்க வைத்தது. முன்பெல்லாம் தான் நகரத்துக்குச் செல்லக் drag-all சந்தர்ப்பங்களில் பெரும் உற்சாகத்துடன் கிராம ஜனங்களுக்கு முன்கூட்டியே சொல்லிவிடுவான்; இம் முறை அவன் இவ்வாறு செய்யாததால், அவன் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. காவல் தெய்வத்தின் கோயிலுக்குப் பொறுப்பேற்றிருந்த கிழவனிடம் அவன் சொல்லியிருக்கலாம். ஆனல் வெய்சுவாங் கிராம வழக்கப்படி, திரு. சாவோ, திரு. சியென், மாவட்டத்தேர்வில் வெற்றிபெற்றவன் இவர்களில் யாரேனும் ஒருவர் நகரத்துக்குச் செல்லும்போதுதான் அது முக்கியமான விஷயமாகக் கருதப்பட்டது. போலி வெளி நாட்டுப் பிசாசு நகரத்துக்குச் செல்வதுகூட பொருட்படுத்தப் பட்டதில்லை; அப்படியிருக்க ஆகியூ செல்வதைப் பற்றி யார் பொருட்படுத்துவர்?ஆ கியூவின் சார்பாக இச்செய்தியை கிழவன் ஏன் பரப்பவில்லை என்பதையும், இதன் காரணமாக

ஆகியூவின் உண்மைக் கதை 143
கிராமத்து மக்கள் இதை அறிந்து கொள்வதற்கான வழிகள் ஏதும் இல்லாது போய்விட்டன என்பதையும் இவ்வுண்மை விளக்குகிறது.
ஆனல் ஆ கியூ இம்முறை திரும்பிவந்ததற்கும், முன்பு அவன் நகரத்துக்குச் சென்று திரும்பிவந்து கொண்டிருந்த தற்கும் இடையே பெரும் வேறுபாடு இருந்தது. இம்முறை அவன் போய்விட்டு வந்தது வியப்பு ஏற்படுத்தும் நிகழ்வாக இருந்தது. மதுக்கடைக் கதவுக்கு எதிரே அவன் தூங்கி வழிந்துகொண்டு வந்து நின்றபோது ஏற்கனவே இருட்டத் தொடங்கியிருந்தது. அவன் தனது கச்சையிலிருந்து கை நிறைய வெள்ளி, செப்பு நாணயங்களை எடுத்து மேசைமீது வீசினன். "ரொக்கம்” என்ருன் அவன்; "மதுரசம் கொண்டு வா!” அவன் ஒரு உள்புறம் துணிவைத்துதீ தைக்கப்பட்டிருந்த புதிய கோட்டு ஒன்றை அணிந்திருந்தான். அவனது இடுப்பில் ஒரு பெரிய பணப்பை தொங்கிக்கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது. அந்த பெரும் பாரம் தாங்காமல் அவனது கச்சை நன்ருக வளைந்து தொய்ந்திருந்தது. வெய்சுவாங் கிராமத்து வழக்கம் என்னவென்றல், யாரேனும் வழக்கத்துக்கு மாருண முறையில் தோன்றுவார்களானல் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டுமேயன்றி அவ மதிப்புடன் அல்ல. இப்போது, இங்கே வந்திருப்பது ஆகியூ தான் என்பதை எல்லாரும் தன்ருக அறிந்திருந்தபோதிலும், அவன் கிழிந்த கோட்டு அணிந்திருந்த ஆகியூவிலிருந்து மாறுபட்ட ஆ கியூ, மூதுரை ஒன்று உண்டு. "மூன்று நாட் கள் வேறு இடத்துக்குச் சென்று திரும்பிய அறிவாளியைப் புதிய கண்களுடனேயே பார்க்கவேண்டும்”. எனவே பரிசார கன், மதுக்கடைக்காரன், வாடிக்கையாளர்கள், வழிப் போக்கர்கள் எல்லாருமே மரியாதை கலந்த ஒருவகை சந்தேக உணர்வை இயல்பாகவே வெளிப்படுத்தினர், முதலில் தலையசைத்துக்கொண்ட மதுக்கடைக்காரன்பிறகு பேசினன்:
"வாப்பா ஆகியூ, திரும்பி வந்து விட்டாயா?”

Page 81
44 போர்க்குரல்
"ஆம், வந்து விட்டேன்.” "பணம் சம்பாதித்தாயா.எங்கே? *நான் நகரத்துக்குப் போனேன்." மறுநாள் இச்செய்தி வெய்சுவாங் முழுவதும் பரவியது. கைநிறைந்த பணம், உள்ளே துணி வைத்துத் தைக்கப்பட்ட புதியகோட்டு ஆகியவற்றைக் கொண்ட இந்த ஆ கியூவின் வெற்றிகரமான சாதனையைக் கேட்க எல்லாரும் 'விரும்பினர். மதுக்கடையிலும் தேநீர்க் கடையிலும் க்ோயிலின் முன்புறக் கூரையின் கீழும் இதே பேச்சுதான். கிராமத்து ஜனங்கள் மெல்லமெல்ல விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். இதன் விளைவாக, எல்லாரும் ஆகியூவை ஒரு புதிய மரியாதை யுடன் நடத்தத் தொடங்கினர்.
ஆகியூ கூறியது இதுதான்: அவன் மாநிலத்தேர்வில் வெற்றி பெற்ற ஒருவன் வீட்டில் வேலைக்காரனக இருந் தானும். இதைக் கேட்ட அனைவர் உள்ளத்திலும் ஒரு பயங் கலந்த மரியாதை உணர்வு நிறைந்தது. மாநிலத் தேர்வில் வெற்றிபெற்றவன் பெயர் பய். நகரத்திலேயே இவன் ஒருவன்தான் மாநிலத்தேர்வில் வெற்றி பெற்றவன். எனவே அவனது குடும்பப் பெயரைப் பயன்படுத்த வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. மாநிலத் தேர்வில் வெற்றிபெற்றவன் என்ருல் அது இவனை மட்டுமே குறிக்கும். வெய் சுவாங்கில் மட்டுமல்ல, முப்பது மைல் சுற்று வட்டாரத் திலும் எல்லாருக்கும் இது தெரிந்திருந்தது- அவனது பெயரே 'திரு. மாநிலத் தேர்வில் வெற்றிபெற்றவர்* என்பதுதான் போல. இத்தகைய ஒரு மனிதரின் வீட்டில் வேலை செய்திருப்பது என்பது நிச்சயமாக மரியாதைக்குரியது தான்; ஆனல் ஆகியூ கூறிய வேறு செய்திகள் இவை: அவன் அங்கு தொடர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை; காரணம் இந்த தேர்வில் வெற்றி பெற்றவன் உண்மையில் ஒரு 'ஆமை முட்டை”* தான். ஆ கியூ கூறியதைக் கேட்ட அனை
决赛 இது சீன மொழியில் உள்ள ஒரு வசைச் சொல்

ஆகியூவின் உண்மைக் கதை 145
வரும் பெருமூச்செறிந்தனர். ஆனல் இப்பெருமூச்சில் ஒரு மகிழ்ச்சியுணர்வு இருந்தது. ஏனெனில் இச்செய்தி, அப்பேர்ப் பட்ட ஒரு பெரிய மனிதன் வீட்டில் வேலை செய்வதற்கு ஆகியூவுக்கு உண்மையில் தகுதியில்லே என்பதையும், அதே நேரத்தில் வேலைசெய்யாமல் போனது வருந்தத்தக்க விஷயம் என்பதையும் சுட்டிக் காட்டியது.
தான் திரும்பி வந்ததற்கு மற்ருெரு காரணமும் இருந்தது என்று'ஆ கியூ கூறினன். அதாவது அந்நகர மக்கள் மீது அவனுக்கு அதிருப்தி இருந்ததாம். ஏனெனில் அவர்கள் நீண்ட பெஞ்சை நேரான பெஞ்சு" என்று அழைத்தனர். மீன் பொரிக்க அவர்கள் சின்னச் சின்னதாக நறுக்கப்பட்ட பூண்டுத் தாள்களைப் பயன்படுத்தினர்களாம். மேலும்-இது அவன் அண்மையில் கண்டுபிடித்த உண்மை- பெண்கள் நடக்கும் போது அவர்கள் மிகக் கவர்ச்சிகரமான முறையில் அசைந்து செல்வதில்லை. ஆயினும் நகரத்தில் சில நல்ல விஷயங்களும் இருந்தன: எடுத்துக் காட்டாக, வெப் சுவாங்கில் எல்லோருக்கும் முப்பத்திரண்டு மூங்கில் துண்டுகள்* விளையாட்டுதான் தெரியும். போலி வெளி நாட்டுப் பிசாசு ஒருவனே மா-ஜோங்** விளையாடத் தெரிந்தவன். ஆனல் நகரத்திலோ தெருப்பொறுக்கிகள் கூட மாமஜோங் விளையாட்டை அருமையாக விளையாடுகிருர்கள். இருபதுகூட நிறைந்திராத அந்த இளம் பொறுக்கிகள் கையில் போலி வெளிநாட்டுப் பிசாசை ஒப்படைத்தால் போதும்; அவன் நேரடியாக "நரகத்தின் அரசனுக்கு முன் உள்ள ஒரு சின்ன பேய்போலாக” விடுவான். இதைக் கேட்டதும் அனை வரது முகங்களும் வெட்சத்தால் சிவந்தன.
**uog sor தண்டனை நிறைவேற்றப் படுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று ஆ கியூ கேட்டான். "ஆகா, அது பார்ப்பதற்கு என்ன அருமையான காட்சி தெரியுமா.
案
இது ஒருவகை விளையாட்டு.
** சதுரங்கம் போன்ற மற்ருெரு விளையாட்டு.
Gum. - 10

Page 82
፲4õ - usi, as (5p 6
புரட்சிக்காரர்களே அவர்கள் சிரச்சேதம் செய்யும்போது. ஆகா, என்ன அருமையான காட்சி, என்ன அருமையான காட்சி. ”அவன் தலையை ஆட்டியபோது அவனது எச்சில் நேர் எதிரில் இருந்த சாவோ ஸு-சென்னின் முகத்தில் தெறித்தது. ஆகியூ சொன்ன செய்தி எல்லாரையும் நடுங்க வைத்தது. சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்து விட்டு அவன் திடீரென தன் வலக்கையை உயர்த்தி, தலையை முன்னல் நீட்டி ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்த மீசைக்கார வாங்கின் தோள் மீது கையை வைத்தான்.
"கொல்லுங்கள்” ஆகியூ கத்தினன்.
மீசைக்கார வாங் துணுக்குற்று, மின்னல் வேகத்தில், ஒரு தீக்கல்லிலிருந்து பொறி தெறிக்கும் வேகத்தில் மிக விரை வாகத் தன் தலையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். அங்கே கூடியிருந்தவர்களோ மகிழ்ச்சி கலந்த பயத்துடன் தடுங்கினர்கள். இதன் பிறகு மீசைக்கார வாங் பலநாட்களுக்கு அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை; ஆ கியூவின் அருகே செல்லவே அவன் துணியவில்லை. மற்றவர்களும் அப்படித் தான.
இந்த நேரத்தில் வெய்சுவாங் கிராமத்து மக்களின் கண்களில் ஆகியூவுக்கு இருந்த அந்தஸ்து திரு. சாவோவுக்கு இருந்ததைக் காட்டிலும் அதிகமானதா என்பதை நம்மால் சொல்ல முடியாது என்ருலும், குறைந்த பட்சம் நாம், அது சாவோவுக்கு இருந்த அந்தஸ்து போன்றதே என்பதை பிசகு ஏற்படும் ஆபத்து ஏதுமின்றி உறுதியாகக் கூறலாம்.
சில நாட்களிலேயே, ஆ கியூவின் புகழ் வெய்சுவாங் கிராமத்தின் பெண்களிடையேயும் பரவியது. வெய்சுவாங்கில் கெளரவம் பாராட்டுகிற குடும்பங்கள் சியென், சாவோ ஆகியோரின் குடும்பங்கள் மட்டுமே, மற்றபடி பத்துக்கு ஒன்பது குடும்பங்கள் வறியவை என்பது உண்மையானுலும், பெண்கள் பெண்கள்தானே? அங்கு ஆ கியூவின் புகழ்

ஆகியூவின் உண்மைக் கதை 147
பரவியது என்பது ஒரு அதிசயம்தான். பெண்கள் சந்தித்துக் கொள்ளும் போது ஒருவரிடம் ஒருவர் சொல்வது இதுதான்
"திருமதி ஸு ஒரு நீலநிறப் பட்டுச்சட்டையை ஆ கியூ விடமிருந்து வாங்கினள். அது பழையதுதான் என்ருலும் அதன் விலை தொண்ணுாறு காககள்தான். சாவோ பய்-யென் னின் தாயார் (இது சரியான தகவலா என்பது ஆராயப்பட வேண்டும். ஏனெனில் சாவோ ஸு-சென்னின் தாயார் என்று வேறு சிலர் கூறுகிறர்கள்)சிவப்புநிற வெளிநாட்டுக் காலிகோ துணியாலான குழந்தை உடுப்பு ஒன்றை வாங்கினள். அது புத்தம் புதியது. எட்டு சதவீத தள்ளுபடி போக அதன் விலை முன்னூறு காசுகள்தான்.”
பிறகு பட்டுச் சட்டை இல்லாதவர்களும் வெளிநாட்டுக் காலிகோ துணி தேவைப்பட்டவர்களும் ஆ கியூவிடமிருந்து இவற்றை வாங்க அவனைப் பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வத் துடன் இருந்தனர். இப்போது அவனைத் தவிர்த்துக் கொள் வதற்குப் பதிலாக, அவன் செல்லும்போது அவன் பின்னு லேயே சென்று கொஞ்சம் நிற்குமாறு கேட்டார்கள்.
'ஆ கியூ, உன்னிடம் இன்னும் பட்டுச்சட்டைகள் உள்ளனவா?’ என்று அவர்கள் கேட்பார்கள். "இல்லயா? எங்களுக்கு வெளிநாட்டு காலிகோவும் தேவை. உன்னிடம் இருக்கிறதா?”
இச்செய்தி ஏழைக் குடும்பத்தினர் முதல் பணக்காரர் விடுகள்வரை பரவியது. ஏனெனில் திருமதி ஸு தனது பட்டுச் சட்டையால் மனமகிழ்வுற்ருள். அதைத் திருமதி. சாவோவிடம் காட்ட, திருமதி சாவோ அதற்குத் தன் ஒப்பு தலைத் தந்ததுடன் தன் கணவரிடமும் அதைப் பற்றி உயர்வாகப் பேசினுள்.
திரு. சாவோ இந்த விஷயத்தை அன்று மாலை மாவட்ட தேர்வில் வெற்றி பெற்றவனன தன் மகனிடம் இரவுச் சாப்பாட்டின்போது விவாதித்தார். ஆ கியூவிடம் ஏதோ மர்மம் இருக்கிறது என்றும் தங்களின் கதவு ஜன்னல்

Page 83
48 போர்க்குரல்
களைப் பற்றி மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் கூறினர். ஆகியூவிடம் இ ன் னும் சில பொருட்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது இருவருக் கும் தெரியாது. ஆனல் அவனிடம் நல்ல பொருள் ஏதாவது இன்னும் இருக்க வேண்டும் என்று கருதினர். எனவே குடும்பத்தினர் கூடி விவாதித்த பிறகு, ஆ கியூவிடம் உடனடி யாக விசாரிக்குமாறு திருமதி ஸ"வைக் கேட்பது என்ற முடிவுக்கு வந்தனர். இதன் பொருட்டு மூன்ருவது விதி விலக்கு ஒன்று வழங்கப்பட்டது. அதாவது அன்று மாலை விளக்கு ஏற்றுவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டது.
கணிசமான அளவு எண்ணெய் தீர்ந்தாயிற்று; ஆனல் ஆகியூ வருகின்ற அடையாளமே இல்லை. பொறுமையின்றி சாவோ குடும்பத்தினர் அனைவரும் கொட்டாவிவிட்டனர். ஆகியூவின் கட்டுப்பாடற்ற முறைகள் சிலருக்கு எரிச் சலூட்டின. சிலரோ கோபத்துடன் திருமதி. ஸு மீது பழி சுமத்தினர். திருமதி ஸ" ஆகியூவை வரவழைக்க தீவிர முயற்சி எடுக்கவில்லை என்றனர். அந்த வசந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திபந்தனைகளின் காரணமாக ஆகியூ இங்கு வரத்துணிய மாட்டான் என திருமதி சாவோ கருதி ள்ை. ஆனல் கவலைப்படுவதற்கு இது காரணமாக இருக்கமுடி யாது என்று திரு.சாவோ கூறினர். காரணம்'இம்முறை கான் அவனுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என்ருர். திரு. சாவோ உள்ளுணர்வு கொண்ட மனிதர் என்பதை அவரே மெய்ப் பித்து விட்டது நிச்சயம். ஏனெனில் ஆ கியூ, திருமதி ஸு வுடன் வந்து சேர்ந்தான்.
மூச்சிறைக்க உள்ளே வந்த திருமதி. ஸ்" "தன்னிடம் எதுவுமேஇல்லை என்று ஓயாது சொல்லிக்கொண்டிருக்கிருன்” என்ருள். "என்னேடு வந்து நீயே இவர்களிடம் சொல்லிவிடு என்று சொன்னல் அவன் ஓயாது பேசிக் கொண்டிருக்கிருன்.
நான் அவனிடம் சொன்னேன்.
"ஐயா” என்றழைத்த ஆ கியூ, தாழ்வாரத்தில் நின்று, புன்முறுவல் பூக்க முயற்சி செய்தான்.

ஆகியூவின் உண்மைக் கதை 49
திரு. சாவோ அவனை நெருங்கி ஏற இறங்கப் பார்த்து *நீ அங்கு பணம் சேர்த்துவிட்டாய் என்று கேள்விப் பட்டேன் ஆகியூ, மிகவும் நல்லது. இப்போது. உன்னிடம் சில பழம் பொருட்கள் இருப்பதாகச் சொல்கிருர்களே. அவை எல்லாவற்றையும் இங்கு கொண்டு வா. நாங்கள் பார்க்க வேண்டும்.இதற்கு வேறு காரணம் இல்லை. எனக்கு வேண்டியது. ** 6raზrლფff.
"என்னிடம் இப்போது ஏதும் இல்லை என்று திருமதி ஸ்" விடம் கூறினேனே.”
"ஏதும் இல்லையா?” திரு. சாவோவால் ஏமாற்றத்தை மறைக்க முடியவில்லை. "அது எப்படி அவ்வளவு சீக்கிரம் எல்லாம் போய்விட்டன?”
“அவை ஒரு நண்பனுடையவை. விற்பதற்கு நிறைய ஏதும் இருக்கவில்லை. சிலர் சிலவற்றை வாங்கினர்கள்.”
*சில பொருட்கள் மீதமாயிருக்க வேண்டுமே?” “இப்போது திரைச்சீலை மட்டும் இருக்கிறது.”
"அப்படியா, அத்திரைச்சீலையைக் கொண்டுவா பார்க்க லாம்” என்றுள் திருமதி. சாவோ அவசரம் அவசரமாக,
"சரி, நீ அதை நாளைக்குக் கொண்டு வந்தால் போதும்” என்ருள் திருமதி. சாவோ. அவளது உற்சாகம் குறைந் திருந்தது. "இனிமேல் உனக்கு ஏதாவது கிடைத்தால், முதலில் எங்களிடம்தான் கொண்டு வரவேண்டும் ஆகியூ.”
*மற்றவர்களை விடக் குறைவாகக் கொடுக்க மாட்டோம் என்பது நிச்சயம்” என்ருன் தேரிவில் வெற்றிபெற்றவன். அவன் மனைவியோ ஆகியூ என்ன சொல்லப் போகிருன் என்பதைக் காண, வேகமாக பார்வையை அவன் மீது திருப்பினுள்.
"எனக்கு ஒரு கம்பளிக் கோட்டு வேண்டும்" என்ருள் திருமதி சாவோ,

Page 84
50 போர்க்குரல்
ஆகியூ தலையசைத்த போதிலும், மிகவும் அலட்சியமாக, கருத்தின்றி நின்றன். எனவே தமது உத்தரவுகளை அவன் மனதில் எடுத்துக் கொண்டான இல்லையா என்பதை அவர் களால் அறிந்துகொள்ள முடியவில்லை. இது திரு. சாவோ வுக்கு ஏமாற்றத்தையும், எரிச்சலையும், கவலையையும் தந்தது. கொட்டாவி விடுவதைக்கூட நிறுத்தினர். ஆ கியூவின் மனப்போக்கு தேர்வில் வெற்றிபெற்றவனுக்குக் கூட ஏமாற்றமளித்தது. அவன் கூறினன்: "இத்தகைய ஆமை முட்டைகளிடம் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவனை வெய்சுவாங்கில் இருப்பதற்கே அனுமதிக்காமலிருக்கு மாறு கிராமத்தலைவனுக்கு உத்தரவிடுவதுதான் மிகச்சிறந்த செயல்.”*
ஆனல் திரு. சாவோ இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆ கியூ இதனல் மனஸ்தாபம் கொள்வான் என்றும், இந்த மாதிரியான ஆகியூவின் தொழிலில் 'கழுகு தனது சொந்தக் கூட்டிலேயே இரை தேடாது” என்ற மூதுரை செயல்படக் கூடியதாக இருக்கலாம் என்றும் கூறினர்: அதாவது அவனது சொந்தக் கிராமத்தினர் கவலைப்படவேண்டியதில்லை. இரவில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தாலே போதும். தேர்வில் வெற்றிபெற்றவனின் மனத்தில் பெற்றேரின் அறி வுரைகள் ஆழப்பதிந்தன. ஆகியூவை வெளியேற்ற வேண்டும் என்ற திட்டதீதை உடனடியாகத் திரும்பப்பெற்ற துடன் எக்காரணம் கொண்டும் தான் சொன்னதை யாரிடமும் ஒப்பிக்கக் கூடாது என்று திருமதி, ஸஅவை எச்சரித்தான்.
ஆயினும் மறுநாள் தனது நீலப்பட்டுச் சட்டைக்கு கறுப்புச் சாயம் ஏற்ற திருமதி. ஸு எடுத்துச் சென்றபோது ஆகியூ பற்றிய மறைமுகக் குற்றச்சாட்டுகளை ஒப்பித்தாள். ஆனல் தேர்வில் வெற்றிபெற்றவன் ஆகியூவை வெளியேற்றி விடுவதைப் பற்றிச் சொன்னதை மட்டும் உண்மையில் குறிப்பிடவில்லை. ஆனல் அப்படியும் அது ஆகியூவுக்கு மிகவும் பாதகமானதாயிற்று. முதலாவதாக கிராமத்தலைவன்

ஆகியூவின் உண்மைக் கதை 51
அவன் வீட்டுக்கு வந்து திரைச்சீலையை எடுத்துக்கொண்டு போய்விட்டான். திருமதி. சாவோ அதைப்பார்க்க வேண்டு மென்று கேட்டாள் என்று ஆகியூ. எவ்வளவோ கூறியும் கிராமத்தலைவ்ன் கேட்கவில்லை. அதுமட்டுமல்ல, மாதாமாதம் தனக்குக் கையூட்டு கொடுக்க வேண்டும் என்றும் அதட்டினன். இரண்டாவதாக, அவன்மீது கிராமவாசிகள் காட்டி வந்த மரியாதையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. அவனைக் கேலிசெய்யும் துணிச்சல் அவர்களுக்கு இன்னும் வரவில்லை. எனினும் கூடுமானவரை அவனைத் தவிர்த்துக் கொண்டனர். இது, "கொல்லுங்கள்!” என்று அவன் முன்பு ஒருநாள் கூறியதைக் கேட்டபோது . அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்திலிருந்து மாறுபட்டது என்ருலும் ஆவிகளிடமிருந்து "மரியாதையுடன் தூர விலகி நிற்றல்" என்ற முன்னுேர்களின் நிலபாட்டை ஒத்ததாக இருந்தது.
ஆயினும் விஷயத்தின் ஆணிவேரைத் தெரிந்துகொள்ள விரும்பிய சோம்பேறிகள் சிலர் அங்கிருந்தனர். அவர்கள் ஆகியூவிடம் சென்று விஷயங்களைக் கவனமாகக் கேட்டனர். எதையும் மறைக்க முயற்சி செய்யாமல் ஆ கியூ கர்வத்துடன் தனது அனுபவங்களை எடுத்துக் கூறினன்: அவன் ஒரு குட்டித் திருடனகத்தான் இருந்தான் என்பதையும்,சுவரேறத் தெரியாதவனக மட்டுமல்லாது வாயில் கதவுகளில் நுழைந்து செல்லத் தெரியாதவனுகவும் இருந்தான் என்பை தயும்,வாயில் கதவுக்கு வெளியே நின்று திருட்டுச்சாமான்களை வாங்கி வைப்பதை மட்டும் செய்துவந்தான் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
ஒருநாள் இரவு அவன் ஒரு மூட்டையை கதவுக்கு வெளியே அப்போதுதான் வாங்கிவைத்தான். திருடர் தலைவன் மீண்டும் ஒருமுறை வாசல் கதவுக்கு உள்ளே சென்றிருந்தான். உள்ளே பெருங் கூச்சல் கேட்டது. ஆகியூ தலைதெறிக்க ஓடினன். அன்றிரவே நகரத்தைவிட்டு ஓடி வெய்சுவாங்குக்கு வந்து சேர்ந்தான். அதன் பிறகு அத் தொழிலுக்கு முழுக்குப் போட்டான். ஆயினும், ஆகியூவின்

Page 85
52 , போர்க்குரல்
பகைமையைத் தேடிக்கொள்வதைத் தவிர்க்க கிராம வாசிகள் மரியாதையுடன் தூர விலகி நின்று வந்ததால், ஆகியூ பற்றிய இந்தச்செய்தி அவனுக்கு மேலும் பாதகத்தை ஏற் படுத்தியது; ஏனெனில் அவன் மீண்டும் திருடத் துணிய மாட்டான் என்பதை யாரால் முன்கூட்டியே அறியமுடியும்? அவனைக்கண்டு பயப்பட வேண்டியதில்லை என்பது அவர் களுக்கு இப்போது தெரிந்துவிட்டது.
அத்தியாயம்-7 புரட்சி
பேரரசர் ஷாவான் துங்கின் ஆட்சியின் மூன்ருவது ஆண்டின் ஒன்பதாவது மாதத்தின் பதினன்காம் நாள்-அதா வது ஆகியூ தனது பணப்பையை சாவோ பய்-யென்னுக்கு விற்ற அன்று-நள்ளிரவில் மூன்ரும் காவலின் நான்காம் மணி யடித்தபிறகு, கருப்புத்தளம் கொண்ட பெரிய படகொன்று சாவோ குடும்பத்தாரின் படகுத்துறைக்கு வந்தது. கிராமதி தினர் நன்முக தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இருட்டில் வந்தது இந்தப்படகு. எனவே அவர்கள் இதுபற்றி ஏதும் அறியவில்லை. ஆனல் மீண்டும் அது விடியற்காலையில் புறப் படும்போது ஏராளமான பேர் அதைப் பார்த்தனர். இந்தப் படகு உண்மையில் மாநிலத் தேர்வில் வெற்றிபெற்றவரின் படகு என்பது விசாரிக்கும்போது தெரிய வந்தது.
இந்நிகழ்ச்சி வெய்சுவாங் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. மதியம் ஆவதற்குள் கிராமத் தினரின் இதயங்கள் படபடக்க ஆரம்பித்துவிட்டன. சாவோ குடும்பத்தினர், படகுவந்த விஷயம்குறித்து மிகுந்த மெளனம் சாதித்தனர். எனினும் தேநீர்க்கடையிலும் மதுக்கடையிலும், புரட்சிக்காரர்கள் நகரத்தைக் கைப்பற்ற வந்து கொண்டிருந் தார்கள் என்றும், மாநிலத் தேர்வில் வெற்றிபெற்றவன்

ஆகியூவின் உண்மைக் கதை 53
கிராமத்துக்கு அடைக்கலம் தேடி வந்திருக்கிறன் என்றும் வதந்தி அடிபட்டது. திருமதி. ஸு மட்டும் வேறு விதமாக எண்ணினள்: அதாவது "மாநிலத் தேர்வில் வெற்றிபெற்ற வன் சில நசுங்கிய பெட்டிகளை வெய்சுவாங்கில் வைத்து விட்டுச் செல்வதற்கு விரும்பினன்; ஆனல் திரு. சாவோ அவற்றைத் திருப்பி அனுப்பி விட்டான்’ என்று கருதினுள். உண்மையில் மாநிலத் தேர்வில் வெற்றிபெற்றவனுக்கும், சாவோ குடும்பத்திலிருந்த மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்றவனுக்குமிடையே சுமுகமான உறவுகள் இல்லை. எனவே பகைமையிலும் அவர்கள் நட்பு பாராட்டுவர் என்று எதிர்பார்த்தல் தர்க்கத்துக்கு முரணுனது. அத்துடன் திருமதி. ஸு, சாவோ வீட்டாரின் அண்டை வீட்டுக்காரி யானதாலும், குடும்ப விவகாரங்கள் பற்றி நன்ருக தெரிந்து வைத்திருப்பவள் ஆனதாலும் இந்த விஷயம் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
பின்னர், "நகரத்து அறிவாளி நேரில் வராவிட்டாலும், சாவோ குடும்பத்துடன் தனக்கிருந்த ஏதோ தூரத்து உறவை குறிப்பிட்டு நீண்ட கடிதமொன்றை அனுப்பினன் என்றும், திரு. சாவோவும் இதுகுறித்து நன்கு சிந்தித்தபின், பெட்டி களைத் தம்மிடத்தில் வைத்திருப்பதால் தமக்குத் தீங்கேதும் நேரிட்டுவிடப் போவதில்லை என முடிவு செய்தார் என்றும், இப்போது அப்பெட்டிகள் அவர் மனைவியின் படுக்கையின் கீழ் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் ஒரு வதந்தி பரவியது. புரட்சிக்காரர்களோ அன்றிரவு நகருக்குள் வெண்ணிறத் தலைக்கவசங்களுடனும் வெண்ணிறக் கவச உடையுடனும் (இது பேரரசர் ஸுங் செங்குக்கு இரங்கல் தெரிவித்தவர்கள் அணிந்த உடை) நுழைந்துவிட்டதாகச் சிலர் கூறினர்.
* ஸுங் செங், மிங் மரபின் கடைசிப் பேரரசர். 1628 முதல் 1644 வரை ஆண்டார். இவர் லி ஸு-செங்கின் கீழான உழவர் கிளர்ச்சிப்படை பீகிங்கை அடையுமுன் தற் கொலை செய்து கொண்டார்.

Page 86
54 போர்க்குரல்
புரட்சிக்காரர் பற்றி ஆ கியூவுக்கு நீண்ட காலமாகத் தெரியும்; அவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டதை இந்த ஆண்டு நேரிலேயே கண்டிருக்கிருன். ஆனல் புரட்சிக் காரர்கள் கலகக்காரர்கள் என்பதாலும், கலகமோ தனக்குத் தொல்லை விளைவிக்கும் என்பதாலும் ஆகியூ எப்போதும் அவர்களை வெறுத்து வந்திருக்கிருன் அவர்களிடமிருந்து ஒதுங்கியே இருந்து வந்திருக்கிருன். முப்பதுமைல் சுற்றளவில் பிரசித்தி பெற்ற மாநிலத் தேர்வில் வெற்றி பெற்றவனையே நடுநடுங்கச் செய்ய அவர்களால் முடியும் என யாரால் நினைத்துப்பார்த்திருக்க முடியும்? இதன் விளைவாக, ஆகியூ வுக்கு ஒரு பரவச உணர்ச்சி ஏற்படாதிருக்க முடியவில்லை. கிராமத்தினருக்கு ஏற்பட்ட பீதி, அவனது பரவசத்தை அதிகப்படுத்தவே செய்தது.
"புரட்சி மோசமான ஒரு விஷயமல்ல" என ஆகியூ நினைத்தான். 'எல்லாரையும் பூண்டோடு ஒழிக்கவேண்டும். அவர்கள் நாசமாகப் போகட்டும்.நானும் புரட்சிக்காரர் களிடம் போய்ச் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.”
சமீப காலமாக ஆகியூ கஷ்ட நிலையில் இருந்து வந்தான்; அவனுக்குப் பெரிதும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இத்துடன் நண்பகலில் வெறும் வயிற்றில் இரண்டு கோப்பை மதுவேறு அருந்தியிருந்தான். இதனுல் அவனுக்கு வெகு சீக்கிரத்தில் போதை ஏறிவிட்டது. சிந்தனையில் மூழ்கி நடந்து செல்லும் போது, தான் காற்றில் மிதந்து செல்வதுபோல் உணர்ந்தான். புரட்சிக்காரர்கள் எல்லாம் தானே, வெய்சுவாங் வாசிகள் அனைவரும் தனது போர்க் கைதிகள் என்ற ஒரு விசித்திரமான உணர்வு திடீரென அவனுக்கு ஏற்பட்டது. மகிழ்ச்சிப் பெருக்கை அடக்கமுடியாத அவனல் உரத்த குரலில் கத்தாம லிருக்க முடியவில்லை;
*கலகம் கலகம்!”
கிராமத்தார் அனைவரும் அவனைக் கிலியுடன் நோக்கினர். இத்தகைய பரிதாபமான பார்வைகளை இதற்குமுன் அவன்

ஆகியூவின் உண்மைக் கதை 155
கண்டதே இல்லை. இப்பார்வைகள் அவனுக்கு கடும் வெயில் காலத்தில் குளிர்ந்த நீர் அருந்தியது போல் புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருந்தது என்வே மேலும் மகிழ்ச்சி பொங்க, கத்திக் கொண்டு நடந்தான்:
“நல்லது . எனக்கு விருப்பமானதை நான் எடுத்துக் கொள்வேன்; எனக்குப் பிரியமானவர்களை நான் நேசிப்பேன்."
*லாலா, லல லா.
“போதையில் நான் இருக்கும்போது என் உயிர் சகோ தரன் செங்கை தவறுதலாய்க் கொன்றதற்கு வருந்துகிறேன். *கொன்றதற்கு வருந்துகிறேன்.ஹா, ஹா, ஹா.”
**லாலா, லலலா, டும் டி டும் டும்!
*உருக்காயுதத்தால் சாத்துவேன் உங்களை.” திரு. சாவோவும் அவர் மகனும் இரண்டு உறவினருடன் தங்கள் வாசலில் நின்றுகொண்டு புரட்சி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தர்ர்கள். தலையைப் பின்புறமாகச் சாய்த்தபடி *லாலா, லல லா, டும் டி டும்!” என்று பாடிக்கொண்டே அவர்களைக் கடந்து சென்ருன் ஆகியூ. அவர்களை அவன் கவனிக்கவில்லை.
"என்னப்பா கியூ" என்று திரு. சாவோ தணிந்த குரலில் குழைவாக அழைத்தார்.
தன் பெயர் ‘என்னப்பா" என்ற வார்த்தையுடன் இணைக் கப்பட முடியும் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதவனுய், ஆகியூ “லா லா” என்று பாடினன். காதில் தவருக விழுந்திருக்கும் என்று கருதி, சிறிதும் பொருட்படுத் தாமல் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்ருன்: "லல லா, டும் டி டும்!”
"என்னப்பா கியூ!” *கொன்றதற்கு வருந்துகிறேன்.
99

Page 87
, 156 போர்க்குரல்
'ஆ கியூ” தேர்வில் வெற்றிபெற்றவன் அவனைப் பெயர் சொல்லியே கூப்பிட வேண்டியதாயிற்று.
அதன் பிறகே ஆகியூ ஒருநிலைக்கு வந்தான். "என்னது?” என்று ஒரு பக்கமாகத் தலையைத் திருப்பிக் கேட்டான்.
"என்னப்பா கியூ . இப்போது . * மீண்டும் திரு. சாவோவுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. "இப்போது நீ பணம் சேர்த்துக் கொண்டிருக்கிருயா?.
"பணம் சேர்ப்பதா? உண்மைதான். எனக்கு விருப்ப மானதை நான் எடுத்துக் கொள்கிறேன்."
*ஆகியூ, பெரியவரே, எங்களைப் போன்ற ஏழை நண்பர்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டா என்ன?.” என்று சாவோ பய்-யென் கவலையுடன் கேட்டார், புரட்சிக் காரர்களின் நிலைபாட்டை வெளிப்படுத்துவதுபோல்.
"ஏழை நண்பர்களா? நிச்சயமாக நீங்கள் என்னைவிட பணக்காரர்தான்” என பதிலளித்தவாறு நடந்துசென்ருன் ஆகியூ.
பேச்சு மூச்சற்று நின்றுவிட்டார்கள் அவர்கள். பின் திரு. சாவோவும் அவர் மகனும் வீட்டுக்குள் சென்றனர். அன்று மாலை விளக்கேற்றும் நேரம்வரை விவாதம் நடைபெற்றது. சாவோ பய்-யென் வீட்டுக்குள் சென்று மடியிலிருந்து பணப் பையை எடுத்து மனைவியிடம் கொடுத்து, பெட்டியின் அடியில் ஒளித்து வைக்கச் சொன்னர்.
கொஞ்சநேரம் ஆகியூவுக்கு, தான் காற்றில் மிதப்பது போல் தோன்றியது. ஆனல் காவல் தெய்வத்தின் கோயிலை அடைந்த வேளையில் மீண்டும் நிதானத்துக்கு வந்தான்.அன்று மாலை கோயிலுக்குப் பொறுப்பேற்றுள்ள கிழவனும் எதிரி பாராவிதமாக நட்புடன் ஆகியூவுக்குத் தேநீர் வழங்கினன். பின் ஆகியூ அவனிடம் இரண்டு தட்டைக் கேக்குகள் கேட் டான். அதைத் தின்றபின் உபயோகப்படுத்திய நான்கு

ஆகியூவின் உண்மைக் கதை 157
அவுன்சு மெழுகுவர்த்தி ஒன்றும் ஒரு மெழுகுவர்த்தித் தாங் கியும் கேட்டான். திரியைக் கொளுத்தி விட்டு, தன் சிறிய அறையில் தனியாகப் படுத்தான். விளக்குத் திருவிழாவில் கண்டதுபோல் மெழுகுத்திரியின் ஒளி அலைவதும் சுடர்வதும் அவனில் விவரிக்க இயலாப் புத்துணர்வையும் மகிழ்வையும் ஏற்படுத்தின. அதனேடு அவனது கற்பனையும் சிறகடித்தது:
புரட்சி? அது வேடிக்கையாக இருக்கும்.ஒருபுரட்சிக் கூட்டத்தினர் வருவார்கள் எல்லாரும் வெண்ணிறத் தலைக் கவசங்களும், வெண்ணிறக் கவச உடையும் அணிந்திருப்பார் கள் வாள்கள், உருக்காயுதங்கள், வெடிகுண்டுகள், வெளிநாட்டுத் துப்பாக்கிகள் இருபுறமும் கூர்மையும் கூரிய முனைகளும் கொண்ட கத்திகள் கொழுவமைந்த ஈட்டிகள் ஆகியவற்றைத் தரித்திருப்பார்கள். காவல் தெய்வத்தின் கோவிலுக்கு வந்து 'ஆ கியூ எங்களுடன் வா, வா? என அழைப்பார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன். 99
*பின் அந்தக் கிராமவாசிகள் எல்லாம் ஒரு பரிதாபமான நிலையில் இருப்பார்கள் மண்டியிட்டுக் கெஞ்சுவார்கள் 'ஆ கியூ, எங்கள் உயிர்களைக் காப்பாற்று!” ஆனல் யார் அதைக் கேட்கப் போகிருர்கள் முதலில் சாகவேண்டியவன் இளைய டியும் திரு. சாவோவும்தான், பின் அந்த மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்றவனும் போலி வெளிநாட்டுப் sfrr:SG th...... ஆனல் ஒரு வேளை ஒருசிலரை நான் விட்டு விடலாம். முன்பு மீசைக்கார வாங்கை விட்டுவிட்டிருப்பேன்; ஆனல் இப்போது அவனையும் விட்டுவிட விருப்பம் இல்ல.
*பொருள்கள்.நேராகச் சென்று பெட்டிகளைத் திறப் பேன்; வெள்ளிப் பாளங்கள், வெளிநாட்டுக் காசுகள், வெளி நாட்டு காலிகோ துணிகள். முதலில் மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்றவனின் மனைவியின் நிங்போ படுக்கையை கோயிலுக்கு எடுத்துச் செல்வேன்; சியென் குடும்பத்தின் மேசை நாற்காலிகளையும் கொண்டு போவேன்-அல்லது

Page 88
53 போர்க்குரல்
சாவோ குடும்பத்தில் உள்ளவற்றைச் சும்மா உபயோகித்துக் கொள்ளலாம். என் ஒரு விரலைக்கூட அசைக்க tontu "G3L_6ör, மாருக இளைய டியிடம் எனக்காக சாமான்களே இடம்மாற்று மாறு கட்டளையிடுவேன். இதில் அவன் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அறை விழும் என்றும் கூறுவேன்.
“சாவோ ஸு-சென்னின் இ&ளய சகோதரி ரொம் அசிங்கம். சில வருடங்களில் திருமதி. ஸுஜூவின் மகள் பார்ப் பதற்கு ட்ைசணமாக வரலாம். போலி வெளிநாட்டுப் பிசா சின் மனைவி.சடையில்லாத ஒரு மணிதனுடன் படுக்கத்தயார். சே! அவள் ஒழுக்கமான பெண்ணுக இருக்க முடியாது. மாவட்ட வெற்றியாளனின் மனைவிக்கோ கண் இமைகளில் தழும்புகள்.ரொம்பகாலமாக அமாவுவை நான் பார்க்க வில்லை. எங்கே இருக்கிருள் என்பதும் தெரியாது அவள் பாதங்கள்தான்-பாவம்-எவ்வளவு பெரியவை.-
ஒரு திருப்திகரமான முடிவுக்கு வருவதற்குள் ஆகியூ குறட்டை விடத் தொடங்கினன். நாலு அவுன்சு திரி அரை அங்குலமே எரிந்திருந்தது அதன் சுடரும் செந்தீ அவனது திறந்த வாயைச் சுட்டது.
“ஆ ஊ’ என்று திடுமெனக் கத்திக்கொண்டு தலையைத் தூக்கி மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஆனல் நாலு அவுன்சு மெழுகுவர்த்தியைக் கண்டதும் படுத்து மீண்டும் உறங்கிப் போனன்.
மறுநாள் காலை மிகப் பிந்தி எழுந்தான். தெருவுக்குச் சென்றபோது, எல்லாம் வழக்கம் போலவே இருந்தது. அவ னுக்கு இன்னும் பசித்தது. மூளையைக் குடைந்தாலும் சிந்தனை ஏதும் தோன்றவில்லை. திடீரென ஒரு யோசனை உதித்தது; மெதுவாக நடந்தான். தெரிந்தோ, தற்செயலா கவோ சாந்தமான ஆன்மீக Glohum6 மடத்தை அடைந் தான.

ஆகியூவின் உண்மைக் கதை 59
வெள்ளைச் சுவரும் பளபளக்கும் கருப்பு வாயில் கதவும் கொண்ட மடத்தில் வசந்த காலத்திலிருந்த அதே அமைதி நிலவியது. ஒரு கண யோசனைக்குப் பின், வாயில் கதவைத் தட்டினன், அப்போது ஒரு நாய் உள்ளேயிருந்து குரைக்க ஆரம்பித்தது. அவசரம் அவசரமாக நாலைந்து உடைந்த செங்கல் துண்டுகளைப் பொறுக்கிக் கொண்டு, மீண்டும் வாயி லருகே சென்று இன்னும் பலமாகத் தட்டினன். கருப்பு வாயில்கதவில் பல லேசான கீறல்கள் விழும்வரை தட்டினன். இறுதியில் யாரோ கதவைத் திறக்க வரும் ஓசையைக் கேட்டான்.
உடைந்த செங்கல்களைக் கையில் வைத்தவாறு, கால்களை அகலப் பரப்பிக்கொண்டு ஆ கியூ கருப்பு நாயுடன் மோது வதற்குத் தயாரானன். மடத்துக்கதவு கிறீச்சலுடன் திறந்தது; எந்த கருப்பு நாயும் வெளியே பாயவில்லை. சுற்றி லும் பார்த்தபோது ஒரு கிழ பிக்குணி நிற்பதைக் கண்டான். "மீண்டும் ஏன் வந்தாய்?" துணுக்குற்ற அவள் பேச்சைத் தொடங்கினுள்.
"ஒரு புரட்சி நடக்கிறது.தெரியாதா உங்களுக்கு?’ என ந்தேகத்தோடு கேட்டான் ஆகியூ,
"புரட்சி, புரட்சி. ஏற்கனவே ஒன்று நடந்துவிட்டது” என்ருள் கிழ பிக்குணி, அழுது சிவந்திருந்தன அவள் கண்கள் 'உங்கள் புரட்சிகளால் எல்லாம் எங்களுக்கு என்ன நடக்கும்
என நீ நினைக்கிருய்?*
"என்ன?” திகைத்தான் ஆகியூ உனக்குத் தெரியாதா? ஏற்கனவே புரட்சியாளர் இங்கு வந்தனர்.” V−
"யாரது?” இன்னும் அதிகத் திகைப்புடன் வினவினன் ஆகியூ.
*மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்றவனும் போலி வெளி நாட்டுப் பிசாசும்தான்.”

Page 89
60 Curridigipidid
இது ஆகியூவுக்கு முழுமையான வியப்பைத் தந்தது. அதிர்ச்சி அடையாமலிருக்க முடியவில்லை அவனல். அவன் ஒடுங்கிப் போனதைக் கண்ட பிக்குனி உடனே வாயில் கதவைச் சாத்தினுள். மீண்டும் ஆ கியூ கதவைத் தள்ளியபோது அவனுல் அதை நகரித்த முடியவில்லை. மீண்டும் தட்டினன், பதிலில்லை.
அது காலையில் நடந்தது. சாவோ வீட்டிலிருந்த மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்றவன் காதுகளுக்கு செய் திகள் விரைவாக எட்டின; அன்றிரவு புரட்சிக்காரர்கள் நகரத்துக்குள் புகுந்து விட்டனர் எனக் கேள்வியுற்றதுமே அவன் உடனடியாக தன் சடையை தலைமேல் தூக்கி முடிந்தான். பின் முதல் காரியமாக சியென் குடும்பத்து போலி வெளி நாட்டுப் பிசாசை பார்க்கச் சென்றன். இதற்கு முன் இருவருக்கும் சுமுகமான உறவு இருந்திருக்கவில்லை. இது, ர்ேதிருத்தங்களுக்காக எல்லாரும் பாடுபட வேண்டிய ஒரு காலம் ஆகையால், அவர்கள் மிகச் சந்தோசமாக உரையாடி ஞர்கள் அந்த இடத்திலேயே தோழர்கள் ஆகிவிட்டார்கள்; கருத்து ஒருமித்த தோழர்களாகி, புரட்சியாளர்களாகி விட உறுதிபூண்டனர்!
கொஞ்சநேரம் தம் மண்டைகளைக் குடைந்து கொண்ட பிறகு, சாந்தமான ஆன்மீக மேம்பாடு மடத்தில் பேரரசர் நீடுழி வாழ்க" எனப் பொறிக்கப்பட்ட ராஜாங்கப் பலகை ஒன்று பிளது என்பதையும், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதையும் நினைவு கூர்ந்தார்கள். அதன் பின் நேரத்தை வீஞக்காமல் மடத்துக்குச் சென்று தம் புரட்சிகர நடவடிக்கைகளைச் செயல் படுத்தினர். கிழ பிக்குனி அவர் களைத் தடுக்கவும் சில வார்த்தைகளைக் கூறவும் முயன்றதால் அவள் சிங் அரசைச் சேர்ந்தவள் எனக் கருதி, அவள் தலையில் ஒரு குச்சியாலும் தம் முஷ்டிகளாலும் நன்முக அடித்தனர். அவர்கள் போன பின் தன்னிலைக்கு வந்த பிக்குனி எல்லா வற்றையும் சோதித்தாள். ராஜாங்கப் பலகை தூளாக்கப்

ஆகியூவின் உண்மைக் கதை 16
பட்டுத் தரையில் கிடந்தது. கருனைத் தேவதை குவான்யின் தலத்துக்கு முன்பு இருந்த விலைமதிப்பு மிக்க ஷுவான் டே தூபக் காலும் காணுமல் போயிருந்தது.
இது ஆகியூவுக்கு பின்னரே தெரிய வந்தது. அந்தநேரம் பார்த்து தூங்கி விட்டதற்காக மிகவும் வருந்தினன் அவர்கள் தன்னை அழைக்க வராதது குறித்தும் துக்கப்பட்டான். பின் தனக்குள் சொல்லிக் கொண்டான்: நான் புரட்சிக் காரருடன் சேர்ந்திருக்கிறேன் என்பது அவர்களுக்கு இன்னும் தெரியாமல் இருக்கலாம்.?
அத்தியாயம்-8 புரட்சியில் சேரத்தடை
வெய் சுவாங் மக்களின் அச்சம் ஒவ்வொருநாளும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. அங்கு வந்த செய்தியி லிருந்து புரட்சிக்காரர்கள் நகருக்குள் புகுந்திருந்தாலும், அவர்களின் வருகை பெரியதொரு மாற்றத்தைச் செய்து விடவில்லை என்பதை அறிந்தார்கள். இன்னும் குற்ற வழக்கு நீதிபதியே மிக உயர்ந்த அதிகாரியாக இருந்தார். அவரது பட்டம் மட்டுமே மாறியிருந்தது. மாநிலத் தேர்வில் வெற்றி பெற்றவனும் ஏதோ பதவி வகிதிதான்-இந்தப் பதவிகளின் பெயர்களை வெய் சுவாங் மக்களால் தெளிவாக நினைவில் வைத்திருக்க முடியவில்லை-அது ஏதோ ஒரு அரசாங்கப் பதவி; பழைய தளபதியின் தலைமையில் தான் ராணுவம் இன்னும் இருந்தது. பயப்படத்தக்க ஒரே காரியம், சில கெட்ட புரட்சிக்காரர்கள், தாம் வந்து சேர்ந்த மறுநாள் மக்களின் சடைகளை வெட்டித் தொந்தரவு விளைவித்தது * மிங் வமிசத்து ஸலவான் டே (HsuanTe)யின் காலத்தில்
(1426-1435) மிக அலங்காரமான வெண்கலத் தூபக்
கால்கள் செய்யப்பட்டன.
CDLur. - 11

Page 90
162 போர்க்குரல்
தான். பக்கத்து கிராமத்திலுள்ள படகோட்டி "ஏழு-ராத்தல்? என்பவன் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டான் என்றும், இப்போது அவனைப் பார்க்கச் சகிக்கவில்கல என்றும் கூறப் பட்டது. ஆயினும், இது ஒரு பெரிய ஆபதிதல்ல, ஏனெனில் வெய் சுவாங் மக்கள் நகரத்துக்குப் போவது மிக அரிது. மேலும் ஒரு நடை போய் வரலாம் என கருதியவர்களும் இந்த வம்பைத் தவிர்ப்பதற்காக உடனடியாகத் தம் எண்ணத்தைக் கைவிட்டனர். தன் பழைய நண்பர்களைப் பார்ப்பதற்காக நகருக்குச் செல்ல வேண்டுமென ஆகியூ நினைத்துக் கொண்டிருந்தான்; ஆனல் செய்தியைக் கேள்விப் பட்டதும் தன் திட்டத்தைக் கைவிட்டான்.
ஆயினும் வெய் சுவாங்கில் சீர்திருத்தங்கள் ஏதும் செய்யப்படவில்லை என்பது தவறு. அடுத்த சில நாள்களில் தம் தலைஉச்சிகளில் சடைககளச் சுருட்டி வைத்துக் கொள்பவர் களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. ஏற்கனவே சுட்டியது போல, முதலில் இதைச் செய்தது இயல்பாகவே மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்றவன்தான்; அதன் பிறகு சாவோ ஸ? -சென்னும் சாவோ பய்-யென்னும்; பிறகு ஆகியூ. அது வெயில் காலமாக இருந்திருந்தால் எல்லாரும் தம் சடைகளை தலையில் சுருட்டி முடிந்ததோ, குடுமிகளாக முடிந்துகொண்தோவியப்பைத் தந்திருக்காது;ஆளுல் இது இலையுதிர்காலத்தின் பின்பகுதி; எனவே சடைக சுருட்டி முடிந்தவர்கள் ஒரு கோடைகாலப் பழக்கத்தை இகலயுதிர் காலத்தில் அனுசரித்தது, ஒரு தீரமிக்க முடிவுக்கு சற்றும் குறையாதது அதிலும் வெய் சுவாதிகைப் பொறுத்தவரை சீர்திருத்தங்களுடன் அத ற்குத் தொடர்பேதும் இல்லை என்று சொல்ல முடியவில்லை. -
சாவோ ஸு-சென்னின் கழுத்தின் பின்புறத்தில் சடையில் லாததைக் கண்ட மக்கள்."ஆ"ஒரு புரட்சிக்காரர் வருகிமூர்? என்ருர்கள்.
இது ஆ கியூவின் மனதில் ஆழப்பதிந்தது. மாவட்ட த் தேர்வில் வெற்றி பெற்றவன் சடையைத் தலையில் சுருட்டி

ஆகியூவின் உன்மைக் கதை 63
முடிந்துகொண்டான் என்பதை ஆகியூ நீண்ட நாட்களாகவே கேள்விப்பட்டிருந்தும், தானும் அதே போல் செய்ய வேண்டு மென்று அவனுக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. சாவோ ஸு- சென்னும் அப்படிசி செய்ததைக் கண்டபோதுதான், தானும் அப்படிச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அவர்களை அப்படியே நகல் செய்ய முடிவெடுத்தான். ஒரு மூங்கில் குச்சியைப் பயன்படுத்தி தன் சடையைச் சுருட்டி தலையுச்சிக்குச் கொண்டு வந்தான். சிறிது தயக்கத்துக்குப் பின் வெளியே புறப்பட்டுச் செல்ல தைரியத்தை மெல்ல மெல்ல வரவழைத்துக் கொண்டான்.
தெருவில் நடந்து செல்லும்போது மக்கள் அவனைப் பார்த்தனர்; ஆனல் யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆகியூ முதலில் மிக வருத்தமடைந்தான், பின் மிகவும் ஆத்திர மடைந்தான். சமீப காலமாக அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. உண்மையில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட இப்போது அவனுக்கு வாழ்க்கை கடினமாக இருக்க வில்லை. மக்கள் அவனை மரியாதையாக நடத்தினர்; கடைக் காரர்கள் இப்போது ரொக்கமாகவே செலுத்தும்படி வற் புறுத்திக் கொண்டிருக்கவில்லை. எனினும் ஆகியூ அதிருப்திய டைந்தான். ஒரு புரட்சி நடந்து விட்டதால், அது இதை விட அதிகமான விஷயங்களை ஈடுபடுத்த வேண்டுமென நினைத் தான். இளையடியைக் கண்டதும் அனைது கோபம் பொங்கி வழிந்தது.
இளைய டியும் தன் சடையை உச்சியில் முடிந்திருந்தான். மேலும் இதைச் செய்ய உண்மையில் அவனும் ஒரு மூங்கில் குச்சியை பயன்படுத்தியிருந்தான். இதைச் செய்யும் துணிவு இளைய டிக்கு இருக்கும் என்று ஆகியூ ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை;அதை அவனல் நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது யார் இந்த இளய டி? அவனை அப்ேபாதே அந்த இடத்திலேயே பிடித்து.அவனது மூங்கில் குச்சியை உடைத்து, அவன் சடையை அவிழ்த்து, தனது தகுதியை மறந்து, தானும் ஒரு.புரட்சிக் காரகை முடியும் என்று அவன் கருதிக்

Page 91
164 5 போர்க்குரல்
கொண்டதற்குத் தண்டனையாக அவன் கன்னத்தில் ஏழெட்டு அறையும் விடவேண்டும் என்ற அளவுக்கு ஆகியூவுக்குச் சினம் மூண்டது. ஆனல் இறுதியில் வெறுமனே அவனைப் பயங்கர முறைத்து, "தூ” எனத் துப்பியதோடு விட்டு விட்டான்.
இந்தக் கடைசி சில நாட்களில் நகருக்குச் சென்று வந்த ஒரே ஆள் போலி வெளி நாட்டுப் பிசாசுதான். 'சாவோ இல்லத்தைச்சேர்ந்தமாவட்டத் தேர்வில் வெற்றிபெற்றவன், பத்திரப்படுத்தப்பட்ட பெட்டிகளைக் கர்ரணமாகக் காட்டி மாநிலத் தேர்வில் வெற்றி பெற்றவனச் சந்திக்கலாம் என நினைத்திருந்தான். ஆனல் தன் சடை கத்திரிக்கப்படக் கூடிய ஆபத்து அவனது சந்திப்பை ஒத்திப்போடச் செய்தது. மிகவும் சம்பிரதாயமான ஒரு கடிதத்தை எழுதி, நகரத்துக்குக் கொண்டு செல்லும்படி போலி வெளிநாட்டுப் பிசாசைக் கேட்டுக் கொண்டான். மேலும் தன்னை சுதந்திரக் கட்சிக்கு அறிமுகப்படுத்தி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டான். போலி வெளிநாட்டுப் பிசாசு திரும்பி வந்ததும், அவன் மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்றவனிடம் நான்கு டாலர் கள் கேட்டான். அதன் பிறகு மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்றவன் தன் மார்பில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை அணிந்து கொண்டான். வெய்சுவாங் மக்கள் அனைவரும் மிகவும் பயந்தனர்; இது ஈச்ச எண்ணெய்க் கட்சியின்* சின்னம் என்றும்ஒரு ஹான் லின் விருதுக்குச் சமமானது இது என்றும் கூறினர்கள். ** இதன் விளைவாக திரு சாவோவின் கீர்த்தி திடீரென உயர்ந்தது. அவரது மகன் முதவில் அரசாங்கத் தேர்வில் வெற்றி பெற்ற போது கூட இத்தகைய * சுதந்திரக்கட்சி வியு தாங்(Zi You Dang) என அழைக்கப் பட்டது. சுதந்திரம் (Liberty) என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ளாத கிராம மக்கள் ஸியு (ZiYou) என்ற சொல்லை ஷியு (ShiYou) என்று உச்சரித்தனர். இதன் பொருள் சச்ச எண்ணெய். ዶ * சிங் வமிச காலத்தில் (1644-1911) வழங்கப்பட்ட
மிக உயர்ந்த இலக்கிய விருது.

ஆகியூவின் உண்மைக் கதை 165
தீர்த்தி ஏற்படவில்லை. எனவே அவர் எல்லாரையும் அலட்சிய *ாகக் கருதத் தொடங்கினர். ஆகியூவைப் பார்க்கும் போது
அனைச் சிறிது புறக்கணிக்கவும் செய்தார்.
தொடர்ந்து தான் புறக்கணிக்கப்படுவதைக் கண் చేసే முற்றிலும் அதிருப்தியடைந்தான். ஆனல் இந்த வெள்ளிப் பதக்கத்தைப் பத் றிக் கேள்விப்பட்டதும், தான் புறக்கணிக்கப்படக் காரணம் என்ன என்பதை solleQ3aur புரிந்து கொண்டான்: புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொண் -siir என்று சொல்வது மட்டும் ஒருவனைப் புரட்சியாளனுக்கி விடப் போதுமானதல்ல; சடையைச் சுருட்டித் தலையில் முடிந்து கொள்வது மட்டும் போதாது; மிக முக்கியமானது புரட்சிக் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்வதுதான். அவனது வாழ்நாளில் ஆ கியூவுக்கு தெரிந்திருந்த புரட்சியா ளர்கள் இருவர் மட்டுமே. ஒருவன் ஏற்கனவே நகரத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டிருந்தான். மற்ருெருவன் போவி வெளிநாட்டுப் பிசாசு. போலி வெளிநாட்டுப் பிசாசிடம் உடனே சென்று விஷயங்ககள விவாதிப்பதை விட்டால், அவனுக்கு வேறு வழியே இல்லை.
சியென்னின் வீட்டு முன் வாயில் கதவு திறந்திருந்தது. ஆகியூபயந்தவாறு உள்ளே நுழைந்தான். உள்ளே போனதும் அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது. காரணம் முற்றத்தின் நடுவே போலி வெளிநாட்டுப் பிசாசு, முழுமை யான கருப்பு நிற உடையில் நின்று கொண்டிருந்தான். அது வெளி நாட்டு உடை என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டு மல்ல, ஒரு வெள்ளிப் பதக்கமும் அணிந்திருந்தான். ஆகியூ வுக்கு ஏற்கனவே பரிச்சயமாயிருந்த தடி அவன் கையிலிருந் தது. மீண்டும் வளர்ந்திருந்த அவனது தலைமுடி அவனது தோள்களின் மீது விழுந்திருந்தது. அது லியு துறவியின் சடாமுடி போல பரட்டையாகி இருந்தது. அவன் எதிரே
சீன மரபுவழிக் கதையில் சொல்லப்படும் சிரஞ்சீவி இவர். அலைபுரளும் தலைமுடி கொண்டவராகச் சித்திரிக் கப்படுபவர்.

Page 92
156 போர்க்குரல்
சாவோ பப்-யென்னும் வேறு மூன்று பேரும் நேராக நிமிர்ந்து நின்று கொண்டிருந்தாரிகள். அவர்கள் எல்லாரும் போலி வெளிநாட்டுப் பிசாசு கூறுவதை மிக மரியாதையுணர் வுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகியூ ஒசைப்படாமல் உள்ளே சென்று சாவோ பய்யென்னுக்குப் பின்னல் நின்றன். வணக்கம் தெரிவிக்க விரும்பிய போதிலும் எப்படிச் சொல்வது என்பது அவனுக்குத் தெரியவில்லை. "போலி வெளி நாட்டுப் பிசாசு” என்று அம்மனிதனை அழைக்க முடியாது என்பது வெளிப் படை. "அந்நியன்” என்பதோ, புரட்சியாளன்”என்பதோ பொருத்தமானதாகத் தெரியவில்லை."திரு. வெளி நாட்டுக் காரரே” என்று அழைப்பதுதான் மிகவும் சிறந்த முறையாக இருக்கலாம்.
ஆனல் திரு. வெளிநாட்டுக்காரர்’ அவனைப் பார்க்க வில்லை.காரணம் அவன் கண்களே உயர்த்தி மிகுந்த உற்சாகத் துடன் பேசிக் கொண்டிருந்தான்:
"எனக்கு உணர்ச்சிகளை அடக்கவே தெரியாது. நாங்க ளிருவரும் சந்தித்துக் கொண்டால் நான் எப்போதும் கூறுவேன். "ஷாங் பெரியவரே, நாம் அதைச் செய்துமுடிக்க வேண்டும்!” ஆனல் அப்போது அவர் "நெய்ன்" என்பார். அது உங்களுக்குப் புரியாத ஒரு வேற்றுமொழிச் சொல். அதைப் புரிந்து கொண்டிருந்தால் நமக்கு என்றே வெற்றி கிட்டி யிருக்கும். அவர் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருந்தார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஹஅபேவுக்குப் போகுமாறு அவர் என்னிடம் திரும்பதி திரும்பக் கூறினர்; ஆனல் அதற்கு நான் இசையவில்லை. ஒரு சிறிய மாவட்ட நகரில் வேலை செய்ய யாருக்கு விருப்பம் இருக்கிறது?. 9
'உம்.உம்”அவன் பேச்சை நிறுத்தட்டுமென்று ஆகியூ காத்துக் கொண்டிருந்தான். பிறகு தைரியத்தை வரவழைத்து வாய்திறந்தான். ஆனல் ஏதோ ஒரு காரணம், திரு. வெளி

ஆகியூவின் உண்மைக் கதை 67
நாட்டுக்காரர் என்று மற்றவனே அழைக்க முடியாமல் தடுத்தது.
பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த நால்வரும் திடுக் கிட்டுத் திரும்பி ஆ கியூவைப் பார்த்து முறைத்தனர். அப்போதுதான் திரு. வெளிநாட்டானும் முதன்முறையாக ஆகியூவைப் பார்த்தான்.
"யாரது?"
o smrGår...”
"இடத்தைக் காலிசெய்” "நான்.சேர விரும்புகிறேன்.”
*வெளியே போடா? திரு. வெளிநாட்டுக்காரர் "துக்கம் கொண்டாடுவோரின் தடியை உயர்த்தியவாறே கத்தினன்.
அதன்பிறகு சாவோ பய்-யென்னும் மற்றவர்களும் கத்தினர்: 'உன்னை வெளியே போகுமாறு திரு. சியென் சொல்கிருரே, உன் காதில் விழவில்லையா?”
ஆகியூ தனது சிரசைப் பாதுகாத்துக் கொள்ள கைகளே உயர்த்தினன். என்ன செய்கிருேம் என்பதை அறியாமலேயே வாயில் கதவு வழியாக ஓடினன்; ஆனல் இம்முறை திரு. வெளிநாட்டுக்காரர் அவனைத் துரத்தவில்லை. அறுபதடி தூரத்துக்கு மேல் ஓடியபிறகு ஆகியூ வேகத்தைக் குறைத் தான். அவனுக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது. ஏனெனில் தான் ஒரு புரட்சியாளனுவதை திரு. வெளிநாட்டுக்காரர் அனுமதிக்கவில்லை என்ருல் அவனுக்கு வேறுகதியே இல்லை. வெண்ணிறத் தலைக் கவசங்களும் வெண்ணிறக் கவச உடை களும் அணிந்த மனிதர்கள் தன்னை அழைக்க வருவ்ார்கள் என்பதை அவன் எதிர்காலத்தில் ஒருபோதும் எதிர்பார்க்கவே முடியாது. அவனது அபிலாசைகள், நோக்கங்கள், நம்பிக்கை எதிர்காலம் அனைத்தும் ஒரே அடியில் சுக்குநூருக்கப்பட்டு விட்டன. இச்செய்தியை ஜனங்கள்.பரப்பி, தன்னை இளம் டி,

Page 93
l68 போரிக்குரல்
மீசைக்கார வாங் போன்றவர்களது கேலிக்குரியவனுக்குவார் கள் என்பது ஒரு இரண்டாம் பட்சமான விஷயம்தான் ஸ்
இப்படி அவன் ஒருபோதும் உடைந்து போனதில்லை. தனது சடையைச் சுருட்டித் தலையில் முடிவதுகூட இப்போது அவனுக்கு அர்த்தமற்றதாகவும் கேலிக்குரியதாகவும் தோன்றியது. பழிக்குப்பழி வாங்கும் உணர்வில் உடனே தனது சடையை அவிழ்த்து விட்டுவிட வேண்டும் என்று துடித்தான்; ஆனல் செய்யவில்லை. மாலைநேரம்வரை அவன் சுற்றியலந்தான். கடனுக்கு இரு கோப்பை மது வாங்கி உண்டபிறகே அவனுக்குத் தெம்பு வந்தது. அவனது மனக் கண்களில் வெண்ணிறத் தலைக்கவசங்களும் வெண்ணிறக் கவச உடைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மீண்டும் தோன்றின. ት '
ஒரு நாள் அவன் இரவில் வெகுநேரம்வரை ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். மதுக்கடையை மூடுகின்ற நேரம் வந்த போதுதான் அவன் காவல் தெய்வத்தின் கோயிலை நோக்கி நடந்தான்.
Lorri-G56) I'
அசாதாரணமான ஒலி திடீரென அவின் காதில் விழுந்தது. அது பட்டாசு வெடியாக இருக்க முடியாது. ஆ கியூவுக்குக் கலாட்டா களேபரங்கள் மிகவும் பிடிக்குமே; மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதென்முல் அவனுக்கு மிகவும் குஷி. சப்தம் வந்த திசையை நோக்கிச் சென்ருன். தனக்கு எதிரே காலடி ஓசை கேட்பது போலத் தோன்றவே, காதைத் தீட்டிக்கொண்டான். அவனெதிரே திடீரென ஒரு மனிதன் ஓடிவந்தான். ஆகியூ அவனைப் பார்த்ததும் அவன் பின்னல் எல்லளவு வேகமாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாகச் சென்ருன். அம்மனிதன் திரும்பியபோது ஆகியூவும் திரும்பி ஞன். ஒரு மூலையில் திரும்பிச் சென்று அம்மனிதன் நின்ற போது ஆ கியூவும் நின்ருன்; அவனுக்குப் பின்னல் யாரும்

ஆகியூவின் உண்மைக் கதை 169
இல்லை என்பதையும், அந்த ஆள் இளம் டி என்பதையும்
கண்டான். ,
"என்ன விஷயம்?" என்ருன் ஆகியூ எரிச்சலுடன். *சாவோ.சாவோ வீட்டில் கொள்ளை நடந்துவிட்டது
.” மூச்சிரைத்தது இளம் டிக்கு, ** « : »
ஆகியூவின் இதயம் படபடத்தது. இதைக்கூறிய பிறகு இளம் டி அந்த இடத்தைவிட்டு அகன்றன். ஆகியூ ஓடினன்; இரண்டு மூன்று முறை நின்றன். ஆயினும் ஒரு விவகாரத்தில் அன்ை நுழைந்து விட்டால் அசாதாரணமான துணிச்சல் அவனுக்கு வந்துவிடும். தெருமுனையிலிருந்து வந்த அவன் காதைத் தீட்டிக்கொண்டு கேட்டான். ஏதோ கூச்சல் காதில் விழுவது போலிருந்தது; அவன் கவனமாகப் பார்த்தான். வெண்ணிறத் தலைக் கவசங்களும், வெண்ணிறக் கவச2உடைகளும் அணிந்திருந்த ஏராளமான ஆட்களைத் தான் பார்ப்பதாக எண்ணினன். அவர்கள் பெட்டிகளையும் தட்டு முட்டு சாமான்களையும் மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்ற வனின் மனைவியின் நிங்போ படுக்கையையும் கூட தூக்கிக் கொண்டு செல்வது போலத் தெரிந்தது; ஆயினும் அவனல் அவர்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவன் பக்கத்தில் செல்ல விரும்பினன். ஆனல் அவன் கால்கள் இருக்கும் இடத்தைவிட்டு அசையவில்லை.
அன்றிரவு நிலா வெளிச்சம் ஏதும் இல்லை. கும்மிருட்டில் வெய்சுவாங் கிராமம் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது. பண்டைக்கால பேரரசர் ஃபூ ஸி* காலத்திய அமைதியான நாட்களில் நிலவியதைப் போன்ற அமைதி இது. தனக் கிருந்த சுவாரசியமனத்தும் நீங்கும் வரை ஆகியூ அங்கேயே நின்று கொண்டிருந்தான், இருப்பினும் அங்கு மாற்றம் ஏதும் நடக்கவில்லை தூரத்தில் மனிதர்கள் அங்கும்இங்கும் பொருட்
家 மிகப் பண்டைக் காலத்தில் சீனத்தில் இருந்ததாக மரபு
வழிக் கதைகளில் கூறப்படும் பேரரசர் இர்ை.

Page 94
70 GLumiševdo
கண்ச் சுமந்துகொண்டு சென்ருர்கள். பெட்டிகளே, தட்டு முட்டு சாமான்களை, மாவட்டத் தேர்வில் வெற்றி பெற்றவ னின் மனைவியின் நிங்போ படுக்கையைச் சுமந்துகொண்டு சென்ருர்கள்.அவனுக்குத் தன் கண்களேயே நம்ப முடிய வில்லை. ஆனல் அவர்களுக்கு அருகே போகக்கூடாது என்று முடிவு செய்து, கோயிலுக்குத் திரும்பிச் சென்றன்.
காவல் தெய்வத்தின் கோயிலில் இன்னும் அதிகமாக இருட்டி இருந்தது. அவன் பெரிய வாயில் கதவை மூடி விட்டு, தடவிக்கொண்டே தன் அறைக்குள்ளே சென்று கொஞ்சநேரம் படுத்திருந்த பிறகுதான், தான் பார்த்தவை தன்னை எவ்வாறு பாதித்துள்ளன என்பதை யோசிக்கத் தொடங்குவதற்கான மனஅமைதி பெற்ருன். வெண்ணிறத் தலைக் கவசங்களும் வெண்ணிறக் கவச உடைகளும் அணிந் திருந்தவர்களும் உண்மையில் அங்கே வந்திருந்தனர் என்பது உண்மை. ஆனல் அது அவனே அழைப்பதற்காக அல்ல; அர்ைகள் ஏராளமான பொருள்களை எடுத்துச் சென்று விட்ட னர், ஆனல் அவனுக்கு அவர்கள் பங்கு கொடுக்கவில்லைபோலி வெளிநாட்டுப்பிசாசுதான் இதற்குக் காரணம். தன் னைக் கிளர்ச்சியில் சேரமுடியாமல் தடுத்தவன் அவன்தான். இல்லாவிட்டால் இம்முறை எப்படி தனக்கு ஒரு பங்கு கிடைக்காமல் இருந்திருக்க முடியும்?
இதை நினைக்க நினைக்க ஆகியூவுக்குக் கோபம் அதிகரித்து அது உச்ச நிலையை அடைந்தது. தலையை விஷமத் தனமாக ஆட்டிக் கொண்டு கேட்டான்: "எனக்கு கிளர்ச்சி ஏதும் இல்லேயா, அது உனக்கு மட்டுந்தான, ஓகோ? நாச மாய்ப்போக, போலி வெளிநாட்டுப் பிசாசோசரி சரி, நீ கிளர்ச்சிக்காரணுகவே இரு சிரச்சேதம்தான் கிளர்ச்சிக் காரனுக்குக் கிடைக்கும் தண்டனை. நான் உளவாளியாக மாறி, உன்னை நகரத்துக்குக் கொண்டுபோய் உன் தலை சீவப் படுவதைப் பார்ப்பேன்-உன்னையும் உன் குடும்பத்தவர் அா வரையும்.கொல்வோம், கொல்வோம்!"

ஆகியூவின் உண்மைக் கதை
அத்தியாயம் 9
மகத்தான முடிவு
சாவோ குடும்பத்தினர் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, வெப்சுவால் கிராம மக்கள் பெரும்பாலோர் மகிழ்ச்சியடைந் தனர். அதேசமயத்தில் அவர்களுக்குப் பயமும் பிடித்துக் கொண்டது. ஆனல் நான்கு நாட்களுக்குப் பிறகு ஆகியூ திடீரென ஒரு நள்ளிரவில் நகரத்துக்கு இழுத்துச் செல்லப் பட்டான். அன்று கும்மிருட்டாக இருந்தது. ஒரு படை வீரர் பிரிவு, ஒரு மிலிஷியா பிரிவு ஒரு போலிஸ் பிரிவு, ஐந்து உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் சந்தடியில்லாமல் வெய் சுவாங் கிராமத்துக்குள் நுழைந்து நுழைவாயிலுக்கு எதிராக ஒரு இயந்திரத் துப்பாக்கியை நிறுத்திவிட்டு, இருளைப் பயன் படுத்திக் கொண்டு, காவல் தெய்வத்தின் கோயிலைச் சூழ்ந்து கொண்டனர். ஆகியூ வெளியே வரவில்லை. நீண்ட நேரம் கோயிலுக்குள் எதுவும் அசையவில்லை. படைதிதலைவன் பொறுமையிழந்து இருபதாயிரம் காசுகள் சன்மானம் வழங்கு வதாக அறிவித்தான். அதன்பிறகுதான் இரண்டு மிலிஷியா வீரர்கள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, சுவரேறிதி தாண்டி உள்ளே துழைந்தனர். உள்ளேநுழைந்த அவர்களது ஒத்துழைப்புடன், மற்றவர்கள் உள்ளே நுழைந்து ஆகியூவை இழுத்துவந்தனர். யந்திரத்துப்பாக்கி இருந்த இடத்துக்கு அருகில் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தபோதுதான் அவன் நிதானத்துக்கு வந்தான். - ܀
அவர்கள் நகரத்தையடைந்தபோது நடுப்பகலாகி யிருந்தது. தன்னை அவர்கள் ஒரு பாழடைந்த நீதிவிசாரனைக் கட்டிடத்துக்குச் தூக்கிச்சென்று ஐந்து அல்லது ஆறு திருப் பங்களுக்குப் பிறகு ஒரு சின்ன அறைக்குள் தள்ளுவதை உணர்ந்தான். உள்ளே அவன் தடுமாறிப்போய் விழுந்தவுட. னேயே, மரக்கிராதிகள் கொண்ட கதவொன்று தடாலென்று

Page 95
172 போர்க்குரல் இழுத்துச் சாத்தப்பட்டது. அறையின் இதர பகுதிகள் ஜன்னலோ கதவோ இல்லாத மூன்று சவர்களைக் கொண் டிருந்தன. எச்சரிக்கையுடன் சுற்றுமுற்றும் பார்த்தபோது, ஒரு மூலையில் வேறு இருவர் இருப்பதை அவன் கண்டான்.
ஆ கியூவின் மனம் சஞ்சலமடைந்த போதிலும், அவன் துயரத்தால் சோர்ந்து விடவில்லை. காரணம், காவல் தெய்வத்தின் கோயிலில் தான் படுத்துத் தூங்கிய அறை இதைக்காட்டிலும் எவ்வகையிலும் மேம்பட்டதாக இருக்க வில்லை. மற்றவர்கள் இருவரும்கூட கிராமத்தார்கள் போலதி தெரிந்தது. அவர்கள் அவனிடம் மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்தனர். தனது பாட்டனர் கொடுக்க வேண்டிய குத்தகைக்காக தன்னை மாநிலத் தேரிவில் வெற்றிபெற்றவன் நெருக்கப் பார்க்கிருன் என்று ஒருவன் சொன்னன்; தன்னை எதற்காக இங்கே கொண்டு வந்தார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்று இன்னெருவன் கூறினன். ஆகியூ இங்கே கொண்டுவரப்பட்டதற்குக் காரணம் என்ன எனக் கேட்கப் பட்டபோது அவன் மிகவும் வெளிப்படையாகக் கூறினன்: *நான் கிளர்ச்சி செய்ய விரும்பியதுதான் காரணம்.”
அன்று பிற்பகல் அவின் கிராதிவைத்த கதவு வழியாக வெளியே இழுத்துச் செல்லப்பட்டு, ஒருபெரும் மதிலுக்குக் கொண்டு வரப்பட்டான். அம்மதிவின் கடைசியில் நன்முகதி தலை மழிக்கப்பட்ட ஒரு கிழவின் அமர்ந்திருந்தான். அவன் ஒரு புத்தத் துறவியென்று ஆகியூ முதலில் எண்ணினன். பிறகு போர்வீரர்கள் காவல்காத்து நிற்பதையும், நீண்ட அங்கியணிந்திருந்த ஒரு டஜன் பேர்வழிகள் இருமருங்கும் நிற்பதையும் பார்த்தான். இவர்களில் சிலர் அக்கிழவனைப் போலவே தலையை நன்முக மழித்துக் கொண்டிருந்தனர். வேறு சிலரோ போலி வெளிதாட்டுப் பிசாசைப்போல தோள் களில் சரிந்திருந்த ஒரடி நீளத் தலைமுடி வைத்திருந்தனர். எல்லாரும் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு அவன்மீது கொடூரப் பார்வை வீசினர். இதன் பிறகுதான்

ஆகியூவின் உண்மைக் கதை 173
அந்த மொட்டைத் தலைக் கிழவன் ஏதோ ஒரு முக்கியமான மனிதனுக இருக்கவேண்டும் என்பதை ஆகியூ அறிந்தான். உடனே அவனது முழங்கால் மூட்டுக்ள்தாமாகவே தளர்ந்தன. அவன் கீழே மண்டியிட்டான்.
*எழுந்து நின்று பேசு மண்டியிடாதே!” என்று நீண்ட கோட்டு அணிந்திருந்தவர்கள் எல்லோரும் கத்தினர்கள்.
ஆகியூ இதைப் புரிந்து கொண்ட போதிலும், எழுந்து நிற்க முடியாதவனக இருந்தான். அவனது உடம்பு குத்த வைத்து உட்காரும் நிலைக்கு அவனையறியாமலேயே கீழே சரிந்தது. அதை நின்றநிலைக்குக் கொண்டுவர முயன்றது. மண்டியிட்டு உட்கார்வதிலேயே முடிந்தது.
"அடிமைப் பயலே. * நீண்ட கோட்டு அணிந்திருந் தவர்கள் வெறுப்புடன் கூறினர். ஆயினும் அவனே எழுத்து நிற்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.
"உண்மையைச் சொன்னல் உனக்குச் சிறிய தண்டனை யுடன் போய்விடும்” என்று மொட்டைத்தலைக் கிழவன், மெதுவான ஆனல் தெளிவான குரலில் ஆகியூவின் மீது தன் பார்வையைப் பதித்துக் கொண்டே கூறினன். "எனக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும். நீ எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டால் உன்னை விட்டுவிடுவேன்.” :
நீண்ட கோட்டினிந்தவர்கள் "ஒப்புக்கொள்” என்று உரத்த குரலில் கூறினர்கள்.
ஒரு கணம் குழம்பிய பிறகு ஆகியூ முணுமுணுத்தான்: 'உண்மை என்னவென்முல் நான்.வரவிரும்பினேன்.”
"அப்படியானல்நீ ஏன் வரவில்லை?” என்று கனிவுடன் கேட்டான் கிழவன்.
போலி வெளிநாட்டு பிசாசு என்னை விடிவில்லை”
"முட்டாள்தனமாகப் பேசாதே பேசுவதற்கான நேரம் கடந்துவிட்டது. உன் கூட்டாளிகள் எங்கே?"

Page 96
174 போர்க்குரல்
*என்னது?."
“அன்றிரவு சாவோ வீட்டைக் கொள்ளையடித்தவர்கள்."
"அவர்கள் என்னைக் கூப்பிடவில்லை. அவர்களாகவே பொருள்களைத் தூக்கிக்கொண்டு சென்று விட்டார்கள்.” இதைச் சொல்லும்போது ஆகியூவுக்கு சினம் பொங்கியது.
"எங்கே போனர்கள் அவர்கள்? இதைச்சொன்னல் நான் உன்னை விட்டுவிடுவேன்” கிழவன் மீண்டும் ஒருமுறை கனிவுடன் சொன்னன்.
“எனக்குத் தெரியாது.என்னைக் கூப்பிட அவர்கள் வரவில்லை.”
அப்போது கிழவன் ஒருசைகை காட்ட, ஆகியூ மீண்டும் கிராதிக் கதவுக்குப் பின்னல் இழுத்துச் செல்லப்பட்டான். மறுநாள் காலை அவன் மீண்டும் ஒருமுறை வெளியே இழுத்து வரப்பட்டான்.
வேறு ஏதாவது சொல்வதற்கு இருக்கிறதா உன்னிடம்?" என்று கிழவன் கேட்டான்.
ஆகியூ யோசித்தான். சொல்வதற்கு ஒன்றும் இருக்க வில்லை. எனவே பதில் சொன்னன், "ஒன்றும் gdahu,
அப்போது நீண்ட கோட்டணிந்திருந்த ஒருவன் ஒரு காகிதத்தைக் கொண்டு வந்து, ஆ கியூவிடம் ஒரு எழுது கோலைக் காட்டி அதை அவன் கையில் திணிக்க முயன்றன். ஆ கியூ உண்மையிலேயே வெலவெலத்துப் போனன். ஏனெனில் ஒரு எழுதுகோலை தன் கையால் தொடுவது அவன் வாழ்நாளிலேயே இதுதான் முதல்தடவை. தாளில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே கையெழுத்திடுமாறு அம் மனிதன் கூறியபோது, எழுதுகோல எப்படிப் பிடிப்பது என்பதை அறியாமல் திகைத்துக் கொண்டிருந்தான் ஆ கியூ,

德 கியூவின் உண்மைக் கதை 175
எழுதுகோலை நடுங்கும் கரத்தால் பற்றியவாறே கூச்சத் துடன் சொன்னன் ஆகியூ: "எனக்கு-எனக்கு-எழுத ரைாது.”
*அப்படியானல், உனக்கு எளிதான காரியத்தைச் செய். வளையம் ஒன்றை வரை!”
ஆகியூ வளையம் ஒன்றை வரைய முயற்சி செய்தான். ஆனல் எழுதுகோலைப் பற்றியிருந்த கரம் நடுங்கியதால், அந்த மனிதன் ஆகியூவின் பொருட்டு காகிதத்தை தரையில் வைத்தான். ஆ கியூ கீழே குனிந்து தனது வாழ்வே வளையம் வரைவதைச் சார்ந்திருப்பது போல் மிகுந்த பிரயாசைப்பட்டு ஒரு வட்டம் வரைந்தான். மற்றவர்களின் கேலிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, வளையத்தை வட்டமாக வரைய உறுதி பூண்டான்; ஆனல் நாசமாய்ப்போன எழுது கோல் கனமானதாக இருந்தது மட்டுமல்ல அவன் விரும்பிய படியெல்லாம் வளைந்து கொடுக்கவுமில்லை. மாமுக அது இங்குமங்குமாக அசைந்தாடியது. வளைவான கோடு, தொடங்கிய இடத்தில் சேரப்போகிறது என்று நினைக்கும் போது பார்த்துதான், மீண்டும் வேறு பக்கமாகப் பிசகி யது. கடைசியில் ஒரு முலாம்பழ விதை வடிவத்தில் போய் முடிந்தது.
தன்னல் ஒரு விட்டவடிவமான வளையத்தை வரையமுடிய வில்லையே என்று ஆ கியூ வெட்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அந்த மனிதன் ஏதும் கூருமல் காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்துப் போய்விட்டான். நிறையபேர் அவனை மூன்ருவது முறையாக கிராதிக் கதவு வழியாக இழுத்துச் சென்றனர்.
இம்முறை அவன் எதைக் குறித்தும் எரிச்சல் படவில்லை. ஏதோ ஒரு சமயத்தில், சிறைக்குள் இழுத்து வரப்படுவதும் வெளியே இழுத்துச் செல்லப்படுவதும் காகிதத்தில் வளையம் வரையுமாறு செய்யப்படுவதும், இந்த உலகில் எல்லாருக்குமுள்ள தலைவிதி என்று கருதினன்; அவனது

Page 97
76 போர்க்குரல்
வளையம் வட்டமாக அமையாததால்தான்,தனது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விட்டது என்று நினைத்தான். ஆயினும், *முட்டாள்களால் மட்டுமே சரியான வளையங்களை வரைய முடியும்”என்ற சிந்தனையைக் கொண்டுதனது மனஅமைதியை மீண்டும் வரவழைத்துக் கொண்டான். இச்சிந்தனையிலேயே அவன் தாக்கத்தில் ஆழ்ந்தான்.
ஆயினும் அன்றிரவு மாநிலத் தேர்வில் வெற்றிபெற்ற வனுக்கு உறக்கம் வரவில்லை. ஏனெனில் அவன் படைத்தலை வனுடன் சண்டை போட்டிருந்தான். திருட்டுப் போன பொருள்களைக் கைப்பற்றுவதுதான் மிகமுக்கியமான விஷயம் என்று இவன் வற்புறுத்தினன். படைத்தலைவனே பொதுமக் களுக்குப் பாடம் புகட்டுவதுதான் மிக முக்கியமான விஷயம் என்ருன். சமீப காலமாக, படைத்தலைவன் மாநிலத் தேர்வில் வெற்றி பெற்றவனே மிகவும் அலட்சியமாக நடத்தத் தொடங்கியிருந்தான். எனவே அவன் தனது முஷ்டியால் மேசையை ஓங்கிக் குத்தியவாறே கூறினன்: "நூறு பேருக்கு அச்சமூட்ட ஒரு ஆளுக்கு தண்டனை கொடு. இதோ பாருங்கள் நான் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக புரட்சிக் கட்சியில் உறுப்பினராக இருக்கிறேன். இதுவரை பன்னிரண்டு கொள்ளையடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன: ஒன்றைக் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. இது என்னை எவ்வளவு பாதிக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இப்போது இந்த சம்பவதி துக்குத் தீர்வு கண்டாகிவிட்டது. ஆனல் நீங்களோ ஒரு பண்டிதரைப் போலவாதிடுகிறீர்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது என் விவகாரம்.”
மாநிலத் தேர்வில் வெற்றி பெற்றவனுக்கு இது மனச் சோர்வூட்டியது. ஆயினும் அன்ை விடாமல் கூறினன் திருட்டுப்போன பொருள்கள் கைப்பற்றப்படாவிட்டால், துனைப் பொது நிர்வாக அதிகாரிப் பதவியிலிருந்து உடனே விலகி விடுவதாகக் கூறினன். "உங்கள் விருப்பம்” என்ருன் படைத் தலைவின்,

கியூவின் உண்மைக் கதை 1ገ7
இதன் காரணமாக் மாநிலத் தேர்வில் வெற்றி பெற்றவன் ன்றிரவு தூங்கவில்லை. ஆயினும் மறுநாள் தனது ாஜினமாக் கடிதத்தை சந்தோஷமாகக் கொண்டு போய்ச் சேர்க்கவுமில்லை.
கிராதிக் கதவுக்கு வெளியே மூன்ரும் முறையாக ஆகியூ இழுத்து வரப்பட்டது, மாநிலத் தேர்வில் வெற்றி பெற்ற வனுக்குத் தூக்கம் வராத இரவுக்குப் பிறகு வந்த மறுநாள் காலையாகும். பெரிய அறையை அவன் அடைந்தபோது, மொட்டைத் தலைக் கிழவன் வழக்கம் போல அங்கு ஸ்டூலில் இன்னும் உட்கார்ந்து கொண்டிருந்தான். ஆசியூவும் வழக்கம் போல் மண்டியிட்டமர்ந்தான்.
கிழவன் மிகவும் கனிவுடன் விசாரித்தான்: "உனக்கு சொல் வதற்கு இன்னும் ஏதாவது இருக்கிறதா?”
ஆகியூ யோசித்தான் சொல்வதற்கு ஏதுமில்லை. எனவே பதில் சொன்னன்: ‘ஒன்றுமில்லை.”
நீண்ட கோட்டும் குட்டை மேல்கோட்டும் அணிந்திருந்த பலர், வெளிநாட்டுத் துணியால் ஆன ஆடையை அவனுக்கு அணிவித்தார்கள். அத்துணியில் கருப்பு நிற எழுத்துகள் சில காணப்பட்டன. ஆகியூவுக்கு பெரும் கவலை ஏற்பட்டது. ஏனெனில் இது துக்கம் கொண்டாடும்போது அணியும் உடை போலவே இருந்தது. இத்தகைய உடையை அணிவது என்பது துரதிருஷ்டமானது; அதேவேளையில் அவனது கைகள் முதுகுக்குப் பின்னல் கட்டப்பட்டன. அவன் பாழடைந்த நீதிமன்றத்திலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டான்.
கூண்டில்லாத வண்டியொன்றில் ஆகியூ ஏற்றப்பட்டான். குட்டை மேல்கோட்டு அணிந்திருந்த பலர் அவனுடன் உட்கார்ந்து கொண்டனர். வண்டி உடனே புறப்பட்டது. அதன் முன்னே ஏராளமான படைவீரர்களும் மிலிஷியா வீரர்களும் வெளிநாட்டுத் துப்பாக்கிகளை ஏந்தி நடந்தனர். இருமருங்கும் வாய்பிளந்து நின்று மக்கள் வேடிக்கை பார்த்
போ - 12

Page 98
178 போர்க்குரல்
தனர். பின்னுல் என்ன இருக்கிறது என்பதை ஆ கியூவால் பார்க்க முடியவில்லை. திடீரென அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது:என்னுடைய தலையும் சீவப்படப் போகிறதா?’ பயம் அவனக் கவ்வியது. எல்லாமே இருண்டு போனது போல் கண்ணுக்குத் தெரிந்தன. தான் மயக்க முற்று விழுவதுபோல் காதுகளில் ஒரு ரீங்கார ஒலிகேட்டது.
கொஞ்சநேரம் அவன் மிகவும் பயந்து விட்டபோதிலும், பிறகு அவன் மிகவும் அமைதியாக இருந்தான். ஏதோ 9BCU சமயத்தில் ஒவ்வொருவரது தலையும் சிவப்படுவதுதான் இவ்வுலகில் எல்லார்க்கும் நேர்கிற தலைவிதி போலும்.
அவனுல் இன்னும் சாலையை இனங் கண்டு கொள்ள முடிந்தது. வியப்படைந்தான். அவர்கள் ஏன் கொலைக் களத்துக்குப் போகவில்லை? பொதுமக்களை எச்சரிப்பதற்காக அவன் தெருக்களின் வழியாகக் கொண்டு செல்லப் படுகிருன் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அது தெரிந்திருந்தால் தான் என்ன? அப்போதும் அவன் நினைத்திருப்பான்: ஏதோ ஒரு சமயத்தில் எல்லாருமே பொ துமக்களுக்கான எச்சரிக் கையாக மாற்றப்படுவது என்பது இந்த உலகில் அவர்களுக்கு உள்ள தலைவிதி.
அவர்கள் கொலைக்களத்துக்குச் சுற்றி வ3 த்துக் கொண்டுபோகிருர்கள் என்பதை அவன் பிறகு உணர்ந்தான். அவனது சிரம் சீவப்படப்போவது உறுதி. அவனை த் தொடர்ந்து எறும்புக் கூட்டம்போல் வருகின்ற மக்களை வருத்தத்துடன் பார்த்தான். சாலேயில் இருந்த கூட்டத்தில் எதிர்பாராவிதமாக அமாவு இவன் பார்வையில் தென்பட் டாள். அவளை ரொம்ப நாட்களாகக் காண முடியாமல் போனதற்கு, அவள் நகரத்தில் வேலை பார்த் துக்கொண்டிருந் ததுதான் காரணமோ?
தான் மனந் தளர்ந்துவிட்டதை எண்ணி ஆகியூவுக்குத் திடீரென வெட்கமுண்டாயிற்று. ஏனெனில் இசைநாடகப்

ஆகிழ்வின் உண்மைக் கதை 179
வரிகள் எதையும் அவன் பாடவில்லை. அவனது சிந்தனைகள் சுழல்காற்றுபோல் சுழன்றன: "தனது கணவனின் கல்லன்ற்யில் நிற்கும் இளம் விதவை" என்ற பாட்டில் போது மான் வீரவுணர்ச்சி இல்லை. "ட்ராகனுக்கும் புலிக்கும் நடந்த சண்டை" என்ற இசை நாடகத்தில் வரும் பாடல் வ்ரியான "கொன்றதற்காக வருந்துகிறேன்” என்பது இரக்க வுணர்வுமிக்கது. "உருக்காயுதத்தால் சாத்துவேன் உன்ன? ள்ன்பதுதான் இப்போதும் மிகச்சிறந்ததாக இருந்தது. ஆனல் அவன் தன் கரங்களை உயர்த்த விரும்பியபோது அவை சேர்த்துக் கட்டப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. எனவே "உருக்காயுதத்தால் சாத்துவேன்” என்பதைப் பாடவில்ல.
'இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நான் மற்ருெரு.”* தனக்கிருந்த சஞ்சலத்தில் ஆகியூமுன்பு யார் கூறும்போதோ கேட்டறிந்த, ஆனல் இதுவரை தான் பயன்படுத்தியிராத ஒரு கூற்றில் பாதியை உச்சரித்தான். "பிரமாதம் ! ? என்று கூட்டத்தினர் ஓநாயின் ஒலம்போல் கத்தினர்.
வண்டி ஒரே சீராக முன்னுேக்கிப் போய்க்கொண்டி ருந்தது. ஜனங்கள் சத்தமிட்டபோது ஆகியூவின் கண்கள் அமா வுவைத் தேடின. ஆனல் அவள் அவனைக் கவனித்த தாகத் தெரியவில்லை. படைவீரர்கள் ஏந்திச்சென்ற வெளி நாட்டுத் துப்பாக்கிகள் மீதே அவள் தன் உன்னிப்பான கவனத்தைச் செலுதிதியிருந்தாள்.
எனவே கூச்சலிடும் கூட்டத்தை ஆகியூ மீண்டு மொரு முறை நோட்டம் விட்டான்.
அப்போது அவனது சிந்தனைகள் சுழல் காற்றுபோல் சுழன்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மலையடிவாரத் 率 "இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் ஒரு பலமிக்க இளைஞனுக இருப்பேன்’ என்பது மரணத் தைத் துச்சமாகக் கருதுவதைக் காட்ட சிரச்சேதம் செய்யப்படுவதற்கு மு ைகுற்றவாளிகளால் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொற்ருெடர்.

Page 99
80 போர்க்குரல்
தில் அவன் ஒரு பசிகொண்டி ஓநாயை எதிர்கொண்டான். அது அவனைத் தின்பதற்காக ஒருகுறிப்பிட்ட இடைவெளியில் பின்தொடர்ந்து கொண்டே வந்தது. அவன் பயத்தால் செத்தேயிருப்பான். ஆனல் அதிருஷ்டவசமாக அவன் கையில் கோடரி ஒன்று இருந்தது. வெய் சுவாங்குக்குத் திரும்பிச் செல்வதற்குத் தைரியம் கொடுத்ததே அதுதான். கொள்ளிவாய்ப் பிசாசுபோல சுடர்விட்டு, தூரத்திலிருந்தே அவன் உடம்பில் துளைத்துச் செல்லக் கூடியதைப் போலத் தோன்றிய கொடூரமான ஆணுல் கோழைத்தனம் தெறித்த ஒநாயின் கண்களை அவனல் ஒருபோதும் மறக்கமுடியவில்லை. ஒநாயின் கண்களைவிடக் கொடூரமான கண்களை இப்போது அவன் கண்டான் மந்தமான ஆணுல் ஊடுருவிப் பார்க்கும் கண்கள் அவை. அவனது வார்த்தைகளைக் கபளிகரம் செய் துள்ள இக்கண்கள், அவனது இரத்தம், சதை ஆகியவற் றுக்கும் மேலான ஏதேவொன்றைக் கபஸ்ரீகரம் செய்ய ஆர் வத்துடன் இருப்பதுபோல் தோன்றியது. இக்கண்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தன.
இக்கண்கள் எல்லாம் ஒரே கண்ணுக இணைந்து அவனது ஆன்மாவைக் கடித்துக் குதறுவது போலத் தோன்றியது.
*உதவி, உதவி”
ஆனல் ஆகியூ ஒருபோதும் இச்சொற்களை உதிர்க்க வில்லை. அவன் கண்களில் எல்லாமே இருண்டன. அவன் காதுகளில் ஒரு ரீங்கார ஒலி கேட்டது. அவனது உடல் முழுவதும் லேசான தூசியைப்போல் சிதறிக் கொண்டிருப் பதைப் போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.
கொள்ளையால் நடந்த பின்விளைவுகளைப் பொறுத்த வரை, மிகவும் பாதிக்கப்பட்டவன் மாநிலத் தேர்வில் வெற்றி பெற்றவன்தான். காரணம், திருட்டுப்போன பொருள்கள் கைப்பற்றப்படவேயில்லை. அவனது குடும்பத்தார் அனைவரு

து கியூவின் உண்மைக் கதை 18
மே மிகவும் வருந்தினர். அடுத்தபடியாக சாவோவின் இல்லத் தினர். மாவட்டத்தேர்வில் வெற்றிபெற்றவன் புகார் கொடுப்பதற்காக நகரத்துக்குச் சென்றபோது அவனதுசடை, கெட்ட புரட்சியாளர்களால் வெட்டப்பட்டது மட்டுமல்ல, அங்கிருந்து தப்பித்துவர இருபதாயிரம் காசுகள் கொடுக்க வேண்டியுமிருந்தது; எனவே சாவோ குடும்பத்தினர் *வருமே மிகவும் வருந்தினர். அக்தநாள் தொட்டு தவிர்கள் வீழ்ச்சியடைந்த ஒரு ராஜவம்சத்தில் எஞ்சி *திற்பவர்களைப் போன்ற மனேநிலையை மெல்ல மெல்ல மேற்
கொண்டனர்.
அந்த நிகழ்ச்சி பற்றிய வர்ணிப்பைப் பொறுத்தவரை வெய் சுவாங்கில் கேள்வி ஏதும் எழுப்பப்படவில்லை. ஆகியூ ஒரு கெட்டமனிதன் என்பதில் யாருக்குமே சந்தேகம் வர வில்லை. காரணம் அவன் சுடப்பட்டானல்லவா? அவன் மோசமானவஞ்க இருந்திருக்காவிட்டால், அவன் எப்படிச் சுடப்பட்டிருக்க முடியும்? ஆனல் நகரத்தில் அபிப்பிராய உடன்பாடு பிாதிக்கப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு திருப்தியில்லை. ஏனெனில் "சிரச்சேதம் செய்வது போன்ற ஒரு அருமையான காட்சியா என்ன சுடப்படுவது?எத்தகைய கேவலமான குற்றவாளியாக இருந்தால்" இசை நாடகத்தின் பாட்டுவரி ஒன்றைக்கூடப் பாடாமல் பல தெருக்கள் வழி யாகப் பவனி வந்திருப்பான் அவன்? அவனைப் பின்தொடர்ந்து சென்றதில் பயனில்லை!
டிசம்பர் 1921.

Page 100
கிராமத்து இசைநாடகம்
நான் கடந்த இருபது ஆண்டுகளில் சீன இசை நாட கத்தைப் பார்க்கச் சென்றது இரண்டே தடவைதான். முதல் பத்துஆண்டுகளில் நான் பார்க்கப் போனதே இல்லை காரணம் அதில் ஆர்வமுமில்லை, பார்க்க வாய்ப்பும் இல்லை. பார்க்க நேரிட்ட இரண்டு முறையும் கடந்த பத்தாண்டுக் காலத்துக்குள்தான். ஆயினும், ஒவ்வொரு முறையும் அதில் எதையுமே பார்க்காமல்தான் திரும்பினேன்.
1913-இல் நான் பீகிங்குக்கு வந்த புதிதில்தான் முதல் முறையாக பார்த்தேன். பீகிங்கிலேதான் மிகச்சிறந்த இசைநாடகம் உள்ளது என்றும், அதைப்பார்த்து அனுபவிக் கத் தவிறக்கூடாது என்றும் ஒரு நண்பர் கூறிஞர். ஒரு இசை நாடகத்தை, அதுவும் விசேஷமாகப் பீகிங்கில் பார்ப் பது சிறப்பாக இருக்குமென எண்ணிய நான், மிகுந்த உற்சாகத்துடன் ஏதோ ஒரு நாடக அரங்குக்கு-இப்போது அதன் பெயர் நினைவில் இல்லை-விரைந்து சென்றேன். நான் சென்றபொழுது நிகழ்ச்சி ஏற்கனவே தொடங்கப் பட்டுவிட்டது. கொட்டகைக்கு வெளியேயும் முரசுகளின் ஓசை கேட்டது. நாங்கள் ஒருவாறு நெருக்கியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்ததும், பலவித வண்ண ஒளிகள் விகசித்தன. மேடையிலே பல தலைகள் தென்பட்டன. நாடக அரங்கை நோட்டம் விட்டபொழுது நடுப் பகுதியில் சில இருக்கைகள் காலியாக இருப்பதைக் கண்ணுற்றேன். நெருக்கி யடித்துக்கொண்டு உட்காரப் போன பொழுது யாரோ ஏதோ கூறினர்கள். காதிலே பலத்த முழக்கொலி அதிர்ந்ததால் அப்பேர்வழி கூறியதைக் காதில் வாங்க மிகச் சிரமப்பட வேண்டியிருந்தது: “மன்னிக்கவும், இந்த ஆசனங் கள் ஏற்கனவே சிலருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”

கிராமத்து இசை நாடகம் 183
நாங்கள் பின் திரும்பிச் சென்ருேம். ஆயினும் பள பளப்பான சடைகொண்ட பேர்வழி ஒருவன் பக்கத்திலிருந்த காலி இடத்தைச் சுட்டிக் காட்டினன். அதுவோ எனது முக்கால் தொடையளவு அகலமும் எனது கால்களின் நீளத்தில் இரண்டு பங்களவு உயரமும் கொண்ட பெஞ்சாகும். முதலில் அங்கு நிற்க எனக்குத் துனிச்சலிருக்கவில்லை. சித்திரவதைக் கருவிகள் சிலவற்றை அந்த பெஞ்சு எனக்கு ஞாபகப்படுத்தியது. என்னையறியாத நடுக்கத்துடன் அங்கி ருந்து விரைவாக அகன்றேன்.
சிறிது தொலை சென்றதும் என் நண்பன், “என்ன விஷயம்?” என்று கேட்டது என்காதில் விழுந்தது.திரும்பிப் பார்த்தபொழுது அவனும் என்னைத் தொடர்ந்து வெளியேறி விந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். அவன் மிகவும் வியப்படைந்தது போல் தோன்றினன். “ஒரு வார்த்தை கூட கூருது வெளியேறி விட்டாயே?” எனக்கேட்டு என் பதிலை எதிர்பார்த்தான்.
"மன்னிக்கவும். காதில் சத்தம் துளைத்துக் கொண்டிருந் ததால் நீ சொன்னது என்காதில் விழவில்லை' என்றேன்.
இந்த நிகழ்ச்சியை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு விநோதமானதாகத் தோன்றியது. ஒன்று இசைநாடகம் மோசமாக இருந்திருக்க வேண்டும் அல்லது நாடக அரங்கு எனக்கு ஒத்துக் கொள்ள்ாததாக இருந்திருக்க வேண்டும்.
எனது இரண்டாவது முயற்சி எந்த ஆண்டில் நடந்தது என்பது எனக்கு நினைவில்லை. ஹஜூபே வெள்ள நிவாரணநிதி சேர்க்கி அப்போது முயற்சிகள் எடுக்கப்பட்டன. அச்சமயம் டான் ஷின்-பெய்" உயிருடனிருந்தார். இரண்டு டாலர் நுழைவுச்சீட்டு வாங்கினல் நிதிக்கு உதவியதுடன், முதல்தர நாடக அரங்குக்குச் சென்று டான் ஷின்-பெய் உள்ளிட்ட நல்ல புகழ்பெற்ற நடிகர்கள் முதன்மைப் பங்கு ஏற்றுள்ள
掌 பீகிங் நாட்டிய நாடகத்தில் புகழ்பெற்ற நடிகர்.

Page 101
184 போர்க்குரல்
நாட்டிய நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது போலாகும். நான் நிதி வசூலித்தவரைத் திருப்திபடுத்து வதற்காகவே சீட்டை வாங்கினேன். இச்சந்தர்ப்பத்தில் ஒர் ஊழியர், கண்டிப்பாக டான் ஷின்டிபெய்யை காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். சில ஆண்டுகட்கு முன்னர் நெருக்கியடித்துக் கொண்டு சென்றதையும், காதைச் செவிடாக்கிய நிகழ்ச்சிகளையும் மறந்தவஞய் நாடக அரங்கு சென்றேன். ஒருக்கால் அவ்வளவு பணம் கொடுத்து அந்த விலையுயர்ந்த சீட்டை வாங்கிவிட்டு அதனைப் பயன்படுத் தாதிருந்தால் பின்னல் நான் மனச் சங்கடப்பட்டிருக்க வேண்டும் என்பது அதற்குப் பாதி காரணமாக இருக்கலாம். டான் ஷின்-பெய் மாலையின் பின்பகுதியில்தான் மேடையில் தோன்றுவார் என்பதையும், அந்த முதல்தர நாடகஅரங்கு நவீனமானதென்பதையும், இருக்கைகளுக்காகத் தடுமாற வேண்டியதில்லை என்பதையும் அறிந்தேன். அந்த நம்பிக்கை யில் ஒன்பது மணிவரை காத்திருந்து பின்னர்தான்சென்றேன். ஆனல் முன்னைய தடவை நடந்தது போலவே எல்லா இடங்களும் நிரம்பிவிட்டன என்பதை அறிந்து ஆச்சரியப் பட்டேன். நிற்பதற்குக்கூட இடம் கிடைக்கவில்லை. கடைசி யில் பின்னலிருந்த கூட்டத்துக்குள் முண்டியடித்துக் கொண்டு பார்த்தபோது ஒரு நடிகன் கிழவி வேடந்தாங்கிப் பாடிக் கொண்டிருந்தான். அவனது வாயின் இரு முனைகளிலும் காகிதச் சில்லுகள் எரிந்துகொண்டிருந்தன. அவனுக்குப் பின்னுல் பேய் உருவம் நின்றுகொண்டிருந்தது. நான் மூளையைக் குடைந்து அப்பாத்திரம் மெளத கல்யாயனின்* தாயாராக இருக்கலாமென யூகித்தேன். ஏனெனில் அடுத்து தோன்றிய பாத்திரம் பெளத்த பிக்கு. நடிகனின் பெயரை அறியாத நான், எனக்கு இடப்புறத்தே நெருக்கி நின்று
* மெளத கல்யாயனன்(மொகலண்ண) புத்தரின் மாணவர். அவரின் தாய் தான் புரிந்த பாவத்துக்காக நரகம் செல்ல நேரிட்டதாகவும், அதிலிருந்து மெளதகல்யாயனன் தம் தாயாரை மீட்டதாகவும் ஐதீகம்.

கிராமத்து இசை நாடகம் 185
கொண்டிருந்த கனாைனைப் பார்த்து அது யாரெனக்கேட் டேன். "குங்யுன் ஃபூ” என்று என்னை ஏளனத்தோடு பார்த் துக்கொண்டே கூறினர். எனது அறியாமையை எண்ணி என்னை நானே கடிந்துகொண்டேன். வெட்கத்தால் முகம் சிவந்தேன். இனிமேற் கொண்டு எக்காரணம் கொண்டும் யாதொரு கேள்வியும் கேட்பதில்லை எனழுடிவு செய்துகொண் டேன். பின்னர் கதாநாயகி ஒருத்தியும் அவளது தோழியும், பின்னர் ஒரு கிழவனும், என்னுல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வேறுசில பாத்திரங்களும் பாடியதைக் கேட்டேன். அதன் பின்னர் ஒரு கூட்டமே சண்டைபோடும் காட்சியும் அதற்கும் பிறகு இரண்டு மூன்று பேராகச் சண்டையிடும் காட்சியும்-ஒன்பது முதல் பத்து மணி வரை, பத்து முதல் பதினென்று வரை, பதினென்றுமுதல் பதினென்றரை வரை என நீண்டு கொண்டே சென்றது. ஆயினும் டான் ஷின்பெய் தோன்றுவதற்கான அறிகுறியே காணுேம்.
* எனது வாழ்க்கையிலேயே இத்தனை பொறுமையுடன் நான் இருந்ததே இல்லை. எனக்கு அடுத்து நின்று கொண்டிருந்த கொழுத்த பேர்வழியின் மூச்சு இழுப்பொலியும் மேடையில்
தோன்றிய கண்டாமணி ஓசையும் முரசு தப்பட்டை ஓசை
களும் பிரகாசமான வண்ணங்களின் சுழற்சியும், அதிகநேரம் ஆகிவிட்டது, இந்த இடம் லாயக்கில்லை என்பதை நான்
திடீரென உணரும்படிச் செய்தன. நான் சுற்றுமுற்றும்
திரும்பியவனப் முண்டியடித்து வெளியில் வர முயன்றேன். நீான் நின்ற இடம் உடனே நிரப்பப்பட்டது என்பதை
உணர்ந்தேன். எனக்கருகில் நின்ற அப்பருத்த கனவான்
தன்உடலின் வலப்பகுதியை அந்தவெற்றிடத்தில் நுழைத்துக்
கொண்டான். இருந்த இடமும் போனதால் வேறுவழியின்றி மற்றவர்களைத் தள்ளிக் கொண்டே கடைசியாகக் கதவுக்கு
வெளியே வந்தேன். நாடகம் பார்க்க வந்தவர்களுக்காகக் காத்திருந்த ரிக்ஷாக்காரர்களைத்தவிர பொதுவாக வெளியிலே
* பீகிங் நாட்டிய நாடகத்தின் மற்ருெரு புகழ்பெற்ற
நடிகர்.

Page 102
186 போர்க்குரல்
ஒருவரும் நடமாடவில்லை. ஆயினும் வாயிலருகில் பத்துப் பன்னிரெண்டு பேர் நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந் தனர். இன்னெரு பகுதியினர் ஒன்றையும் கவனியாது இருந் தனர். ஒருக்கால், காட்சி முடிந்தபின் வெளியே வருகின்ற பெண்களே தரிசிப்பதற்காக காத்திருப்பவர்களோ என நான் எண்ணினேன். டான் ஷி-பெய்யைப் பற்றிய அறிகுறி ஏதும் காணுேம்.
இரவுக் காற்று நன்கு வீசியது; உடல்களேத் துளைத்துச் சென்றது எனலாம். பீகிங்கில் இத்தகைய தூய்மையான காற்றை நானறிய அன்றுதான் முதல்முறை அனுபவித்தேன்.
அன்று இரவே சீன இசை நாடகத்துக்கு விடைகூறிக் கொண்டேன். அதைப் பற்றி மீண்டும் நான் ஒருக்காலும் எண்ணியதே இல்லை. தப்பித்தவறி நாடக அரங்கு வழியாக நடக்கநேர்ந்தாலும் அதைப் பற்றிய எத்தகைய உணர்வும் எனக்குத் தோன்றுவதில்லை. காரணம் நானும் அதுவும் எதிரெதிர்த்துருவத்தில் இருந்தோம்.
இருப்பினும் சிலநாட்களுக்கு முன்னர் நான் ஒரு ஜப்பானிய நூலைப் படிக்க நேர்ந்தது- துரதிருஷ்டவசமாக நூலின் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் மறந்தே போனேன். ஆனல் அது சீன இசை நாடகத்தைப் பற்றிய நூல். சீன இசை நாடகங்கள் டமாரங்களும் ஜால்ராக்களும், கூச்சலும் குதித்தலுமே நிறைந்திருப்பதால் பார்வையாளர் களின் தலையைச் சுற்றச்செய்கிறது என ஒரு அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரங்குகளில் இது காட்டப்படத் தகுதியற்றதெனவும், திறந்தவெளியில் காட்டப்பட்டு, தொலைவிலே இருந்து பார்ப்பதில்தான் ஒரு கவர்ச்சி இருப்ப தாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனது உள்ளத்தில் தோன்றி உருவாகாத ஒரு எண்ணத்தை இச்சொற்கள் உணர்த்தியுள்ளன என்பதை நான் அறிந்தேன். ஏனெனில் ஒருக்கால் நான் முன்னர் எப்போதோ கிராமப்புறத்தில் ஒரு நல்ல இசை நாடகத்தைப் பார்த்த ஞாபகத்தில் அதன்

திராமத்து இசை நாடகம் 87
பாதிப்பால், பீகிங்குக்கு வந்த பின்னர் நாடக அரங்குக்குள் இரண்டுமுறை சென்றிருக்க வேண்டும் என்பதைத் தெளிவா? நினைவில் கொண்டுள்ளேன். என்னவோ நான் அந்தப் புத்தி கத்தின் பெயரை மறந்து விட்டது மனக்குறையா இருக் கிறது. . . . .
நான் அந்த நல்ல இசை நாடகத்தைப் பார்த்தது உண்மையிலே ரொம்ப ரொம்ப" காலத்துக்கு முன்னர், அப்பொழுது எனக்கு பதினுென்ருே பன்னிரண்டோ வயதுக்கு மேலிராது. நாங்கள் வசித்த லூச்சன் பகுதியில் வீட்டுப் பொறுப்பு வழங்கப்படாத மணமுடித்த பெண்கள்.கோடை காலத்தில் தங்கள் பெற்றேர்களின் ஊருக்குச் சென்று தங்கி வருகின்ற சம்பிரதாயம் நிலவி வந்தது. பாட்டி (அப்பாவின் அம்மா) இன்னும் நல்ல திடகாத்திரமாக இருந்த போதிலும், அம்மாவுக்கு விட்டுவேலைகள் சில இருக்கவேல் செய்தன. கோடை காலத்தில் தன் சொந்த வீட்டில் அதிகநாள் தங்க வாய்க்கவில்லை. மூதாதையர் கல்லறைகளைப் பார்த்தபின் சிலநாட்களே அங்கு தங்கமுடியும் அசிசமயங்களில் நானும் அம்மாவுடன் அவளுடைய பிறந்த விட்டுக்குச் செல்வது வழக்கம். அது கட-இலுக்கு அருகிலிருந்த பிங்யென என்ற கிராமமாகும். அது ஆற்றங்கரையருகே அமைந்த ஒதுக்குப் புறமான கிராமம்; அங்கு உழவர், மீனவர் வீடுகளெல்லாம் சேர்ந்து முப்பதுகூடத் தேமுது. ஒரே ஒரு சிறு பல்சரக்குக் கடைதான் இருந்தது ஆயினும் என் கண்களில் அது சொர்க் கமாகத் தெரிந்தது. காரணம் நான் அங்கு மதிப்புக்குரிய விருந்தாளியாகப் பாராட்டப்பட்டது மட்டுமல்ல, அங்கு நான் கவிதை நூல்” படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும் @p4屿应剑·
கூடி விளையாட ஏராளமான நிறுவர் அங்கு இருந்தனர். மிகத் தொலைவிலிருந்தி வந்த விருந்தாளியான என்னுடன்
iബത്ത* ஒனத்தின் மிகத் தொன்மையான கவிதைத் தொகுப்பு
நூல்.

Page 103
188 போர்க்குரல்
அவர்கள் விளையாடுவதற்காகத் தங்கள் பெற்ருேளிடம் அனுமதி பெற்று தமது வேலையை சீக்கிரமே முடித்துக் கொண்டு என்னிடம் வந்தனர். சிறு கிராமங்களில் ஒரு குடும்பத்தின் விருந்தினர் பொதுவாகவே ஊரிலுள்ள அனை வருக்குமே பொதுவான விருந்தினராவர்.நாங்கள் அனைவருமே சம வயதினர்தான். இருப்பினும் உறவு மரியாதையாக அழைப்பதெனில் சிற்றப்பா, பெரியப்பா முறைதான் அமையும். எல்லாருமே ஒரே குலத்தைச் சேர்ந்த பங்காளி களாவர்; எனினும் நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருந் தோம். தப்பித்தவறிச் சண்டை சச்சரவு-ஏற்பட்டு,பெரியப்பா முறை உறவினனை நான் அடித்து விட்டாலும், ஊரிலுள்ள எந்தச் சிறுவர்களோ வயது வந்தவர்களோ"மூத்தவரிகட்கு இழைக்கப்பட்ட அவமரியாதை" எனக் கருதியதில்லை. அவர்களில் நூற்றுக்குத் தொண்ணுாற்று ஒன்பது பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்.
நாங்கள் நாளின் பெரும்பகுதியை மண்ணிலிருந்து புழுக் களேத் தோண்டி எடுப்பதிலும், அவற்றைச் செப்புக் கம்பி களாலான கொக்கிகளில் பொருத்தி ஆற்றங்கரையருகே படுத்துக்கொண்டு இருல்மீன் பிடிப்பதிலுமே செலவிடுவோம். நீர்வாழ் உயிரினத்தில் இருல்கள் புத்தியற்றவை அவை தங்கள் சொண்டுமுனையால் கொக்கியை இழுத்து வாய்க்குள் வலிய மாட்டிக்கொள்ளும் எனவே கொஞ்ச நேரத்திலேயே பெரிய பாத்திரம் நிறைய மீன் பிடித்து விடுவோம். இந்த இருல் மீன்களை அவர்கள் எனக்கே கொடுத்துவிடுவது ழைக்கம், நாங்கள் செய்த மற்ருெரு காரியம் எருமைகளை ஒன்முக ஒட்டிச்செல்வதாகும். இந்த எருதுகளும் எருமை களும் விலங்கினத்தில் உயர்ந்த வகை விலங்குகள் என்ப தாலோ என்னவோ அறிமுகமில்லாதவர்களிடம் அவை பகை உணர்ச்சி காட்டும். என்னை அவை அவமதிப்புடன் நோக்கிய தால் நானும் அவற்றின் அருகில் செல்லத் துணிந்ததில்லை. ஒரு இடைவெளி விட்டே அவற்றைப் பின்தொடர்ந்து தூரத் தில் நின்றுவிடுவேன். இந்தச் சந்தர்ப்பங்களில் நான் மனனம் செய்த பழம்பெரும் பாடல்களை ஒப்புவிக்கக்கூடிய

கிராமத்து இசை நாடகம் 189
தகுதியுடையவன் என்ற உண்மை என் இளம் நண்பர்களிடம் எனக்கு மதிப்பை ஏற்படுத்தவில்லை. பதிலாக அவர்கள் கெக்கலித்து ஏளனம் செய்வார்கள்.
நான் மிகவும் எதிர்பார்த்திருந்தது இசை நாடகம் பார்க்க செள சுவாங்கிற்குச் செல்வதைத்தான். இரண்டு கல் தொலைக்கு அப்பாலிருந்த செளசுவாங், நான் தங்கியிருந்த கிராமத்தைவிடக் கொஞ்சம் பெரியது. தனியாக இசை நாடகம் நடத்துவது சின்னஞ்சிறு கிராமமான பிங்சியெள வுக்கு இயலாததால், ஆண்டுதோறும் இதை நடத்துவதற்கு ஆண்டுதோறும் ஒரு தொகையை செளசுவாங்குக்குக் கொடுத்துவிடும். ஆண்டுதோறும் நாட்டியநாடகம் ஏன் நடத்தவேண்டும் என்பதை அக்காலத்தில் நான் ஆராயப் புகுந்ததில்லை. இப்போது எண்ணிப் பார்க்கையில் இள வேனில் காலப் பின்பகுதித் திருவிழாவுக்காகவோ ஊர்ப் பூசையை ஒட்டியோ நடத்தப்பட்டிருக்கலாம் எனத் துணிந்து கூறமுடிகிறது.
எனக்கு அப்பொழுது வயது பதினென்ருே பன்னிரண் டோ இருந்திருக்கலாம். அந்த ஆண்டில் நான் நீண்டகாலம் ஆவலுடன் எதிர்பார்த் தருந்த நாளும் வந்தது. என்ன துரதிருஷ்டமோ தெரியவில்லை, அன்றைக்குக் காலையில் வாடகைக்குப் படகு கிடைக்கவில்லை. பிங்சியெள கிராமத் தில் காலையில் புறப்பட்டு மாலையில் திரும்பும் ஒரு படகு மட்டுமே இருந்தது. அது பெரிய படகாக இருந்த்தால் அதனை வாடகைக்கு அமர்த்த எங்களுக்குத் தகுதி இருக்க வில்லை. இருந்த வேறு படகுகளோ மிகச் சிறியவை; ஆகவே லாயக்கற்றவை. பக்கத்துக் கிராமத்தவர்களிடம் சென்று விசாரித்தார்கள். அங்கும் படகுகள் இல்லை; ஏற்கனவே அவை வாடகைக்கு அமர்த்தப்பட்டு விட்டன. பாட்டிக்கும் மிகவும் சங்கடமாக இருந்தது. முன்னமே பேசி வாடகைக்கு அமர்த்தாதது குறித்து உறவினர்களைக் குறை கூறினுள். அம்மாவோ லூச்சனில் நடக்கும் இசை நாடகங்கள் இந்தச் சிற்றுார்களில் நடப்பதைவிடச் சிறப்பானவை என்றும்,

Page 104
90 போர்க்குரல்
ஒவ்வோராண்டும் எத்தனையோ நடக்க இருக்க, இன்றைக்கே போக வேண்டுமென்பதில்லை எனவும் ஆறுதல் கூறத் தலைப் பட்டாள். ஆனல் நானே பலத்த ஏமாற்றத்தால் அழத் தொடங்கினேன். இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது பாட்டி வேதனைப்படுவாள் என்றும், வேற்ருள் களுடன் வெளிச்செல்வது சரியல்ல. ஏனெனில் பாட்டி கவலைப்படுவாள் என்றெல்லாம் கூறி அம்மா என்னைச் சமா தானப்படுத்த முயன்ருள்.
மொத்தத்தில் திட்டம் சரிந்தது. பகலுணவுக்குப் பின்னர், எனது நண்பர்களெல்லாம் சென்று இசை நாடகமும் தொடங்கிய பின்னர், நான் முரசுகள் பேரிகைகளின் ஒலி யைக் கேட்பதாகவும், நாடக அரங்கின் முன்னே சோயாப் பால் வாங்கிக் கொண்டு நாடகம் பார்ப்பதாகவும் கற்பனை செய்து கொண்டேன்.
அன்று நான் இருல் பிடிக்கச் செல்லவுமில்ல, சரியாகச் சாப்பிடவும் இல்லை. அம்மா கவலைப்பட்டாள். அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இரவுச் சாப்பாட்டு நேரத்தில் பாட்டியும் எனது நிலையை உணர்ந்து நான் கோபப்படுவது நியாயந்தானென்றும்,தாங்கள் அசிரத்தையாக இருந்துவிட்ட தாகவும் இதற்கு முன்னெல்லாம் விருந்தாளிகள் இப்படியெல் லாம் மோசமாக நடத்தப்பட்டதில்லை எனவும் கூறி வருந் தினுள். உணவு உண்டு முடிக்கவும், இசை நாடகம் பார்த்துத் திரும்பிய இளைஞர்கள் எங்களைச் சூழ்ந்து நிகழ்ச்சிகளை எங்க ளுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். நான் மட்டுமே மெளன மாக இருந்தேன். அவர்களும் பெருமூச்செறிந்து எனக்காக அனுதாபப்பட்டனர். சூட்டிகையான வ்ர்களில் ஒருவனை ஷ"வாங்-ஷிக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது: *அந்தப் பெரிய படகு இருக்குமே? இந்நேரம் எட்டாம் மூத்த மாமாவின் படகு திரும்பியிருக்க வேண்டுமே!" என்றன். இந்த யோசனையை நொடிப் பொழுதில் உணர்ந்து கொண்ட மற்ற பத்துப் பன்னிரெண்டு பையன்களும் படகைச் செலுத்தி என்னையும் அழைத்துச் செல்வதெனத் தூண்டினர்

கிராமத்து இசை நாடகம் 9.
கள். எனக்கு உற்சாகம் தோன்றியது. ஆனல் பாட்டிக்கோ கோபம், நாங்களெல்லாம் சிறுவர்களாதலால் அவளுக்கு நம் பிக்கையில்லை. முதியவர்களெல்லாம் மறுநாள். காலை தத்தம் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்குமாதலால், அவர்களை எங்களுடன் வந்து இரவு முழுவதும் விழித்திருக்கச் செய்வது நியாயமில்லை என்று அம்மா கூறினுள். இத்தகைய இக்கட்டான நிலையில் பிரச்சினைக்குத் தீர்வு கூறுவதுபோல "நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அது பெரிய் படகு. அதோடு தம்பி சுன் ஒரு போதும் அங்குமிங்கும் ஒடிக் குதிக்க மாட்டான். தவிர எங்களுக்கெல்லாம் நீந்தத் தெரியுய!” என்மூன் ஷ"வாங்-ஷி.
அது என்னவோ உண்மைதான். பத்துப் பன்னிரண்டு பேர்களும் தண்ணீரில் மூழ்கித் திரியும் மீன்கள்தான். அதிலும் இரண்டு மூன்று பேர்வழிகள் நீந்துவதிலே நிபுணர்கள்.
பாட்டிக்கும் அம்மாவுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அவர்கள் எதுவும் தடை கூறவில்லை. இருவரும் புன்னகை புரிந்தனர். உடனேயே நாங்கள வெளியில் பறந்து விட்டோம்.
கனத்திருந்த என் உள்ளச்சுமை குறைந்தது. ஏதோ நான் காற்றில் மிதப்பதுபோல் உணர்ந்தேன். நாங்கள் வெளியே வந்ததும் வெள்ளைப்படுதா போடப்பட்ட ஒரு படகு பாலத் தருகே இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். நாங்கள் அதில் குதித்தோம். ஷ"வாங்- ஷி முன் கம்பத்தையும் ஆஃபா பின் கம்பத்தையும் பிடித்துக் கொண்டனர்; சிறுவர்கள் என்னு டன் நடுப்பகுதியில் அமர்ந்தனர். வயது முதிர்ந்தவர்கள் பின் பகுதிக்குச் சென்றனர். எங்களைப் பின்தொடர்ந்து வந்த அம்மா "பத்திரமாகப் போங்கள்" என்று கூறுவதற்குள் நாங் கள் புறப்பட்டு விட்டோம். பாலத்தினின்று உந்தப்பட்டு, சில அடி தூரம் பின்னல் மிதந்து சென்று பிறகு பாலத்துக் கடியில் முன்னேக்கிச் சென்றது படகு. இரண்டு துடுப்புகள் போடப்பட்டன. இரு பையன்கள் வலித்தனர். ஒவ்வொரு

Page 105
92 போர்க்குரல்
லி* தூரத்துக்கு ஒரு முறை மாற்று வைத்துத் துடுப்பு வலித் தனர். அரட்டை சிரிப்பு, கூச்சல்கள் எங்கள் படகின் முகப் பில் மோதும் தண்ணீரில் இரண்டறக் கலந்தன. செளசுவாங் கை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் எங்களது இரு பக்கங் களிலும் மரகதப் பச்சை வயல்களும், மொச்சை கோதுமைப் பயிர்களும் காட்சியளித்தன.
தண்ணீருக்கு மேலாகப் பணித்திரை கவிந்திருந்தது. மொச்சை, கோதுமை வாசனைகள் எங்கள் முகங்களைத் தழுவின. பனித்திரைக்கு ஊடே நிலவொளி மங்கலாகக் காய்ந்தது. தாவிப்பாயும் உருக்கு முதுகு கொண்ட வலிய விலங்கினங்கள் போன்று, தொலைவில் ஏற்றயிறக்கமாக அமைந்த சாம்பல் நிறக் குன்றுகள்,எங்கள் படகு ஓட்டத்தைக் கடந்து விரைந்து ஓடுவது போல் தோன்றின. இருந்தும் எங்கள் வேகம் குறைவு என்றே நான் கருதினேன். துடுப்பை வலித்தவர்கள் நான்கு முறை மாற்றிக் கொண்ட பின்னர் செள சுவாங்கை மேலெழுந்தவாறு பார்க்க முடிந்தது. பாடல் களின் ஒலியும் காதில் விழுந்தது. விளக்குகள் பல கண்ணில் Lull-60. அவை மேடைமேல் உள்ளவையாக இருக்க வேண்டும்; அல்லது அவை மீனவர்களின் விளக்கு வெளிச்ச மாக இருக்க வேண்டும் என நாங்கள் ஊகித்தோம்.
நாங்கள் கேட்ட இசை, ஒருக்கால் குழல் ஒசையாக இருக்கலாம்; வளைந்துவளைந்து சுழன்று மேலும் கீழும் அலைந்து எனது உள்ளத்துக்கு இதமளித்து, அதே வேளையில் கற்பனை உலகில் சஞ்சரிக்கவும் செய்தது. அதோடு இணைந்து மொச் சை, கோதுமை ஆகியவற்றின் வாசனை, ஆற்றங்கரை நாணல் நெடி இவை அனைத்தும் காற்றில் கலந்து என்னை எட்டாத், தொலைவுக்கு இழுத்துச் செல்லும் உணர்வை உண்டாக்கின.
வெளிச்சத்தை நாங்கள் நெருங்குகையில் அவை மீனவர் களின் விளக்குகள்தான் என்பதை உணர்ந்தோம். அப்போது இதுவரை நான் கண்டது செளசுவாங் அல்ல. என்பதை
ஒரு லி என்பது மூன்றில் ஒரு மைல்.

கிராமத்து இசை நாடகம் 93
உணர்ந்தேன். எனக்கு முன்னுல் சவுக்குத் தோப்பு காட்சி யளித்தது. அங்குதான் சென்ற ஆண்டு விளையாடியிருக் கிறேன். அதில் தான் குதிரைக் கற்சிலை பக்கவாட்டில் விழுந் திருந்ததையும் கல்லாலான ஆடு ஒன்று புல்தரையில் மூடப் பட்டிருந்ததையும் அச்சமயம் கண்டேன். அந்தத் தோப் பைக் கடந்ததும் படகு ஒரு திருப்பத்தில் ஒரு சுற்று சுற்றி விட்டு வளைகுடாவில் நுழைந்தது. செளசுவாங் உண்மை யாகவே எங்கள் கண்முன் காட்சியளித்தது.
கிராமத்துக்கு வெளியே ஆற்றேரத்தில் ஒரு காலியிடத் தில் அமைந்திருந்த நாடகமேடை , எங்கள் கண்களைக் கவர்ந் தது. தூரத்து நிலவு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்த அம்மேடை, சுற்றுப் புறங்களிலிருந்து தனித்து எடுப்பாகத் தெரியவில்லை. நான் படங்களிலே பார்த்திருந்த தேவதை உலகம் உயிர் பெற்றிருந்தது போல எனக்குத் தோன்றியது. இப்போது படகு வேகமாக செல்லத் தொடங்கியது. மேடை யில் நின்ற உருவங்களும் பளிச்சிட்ட வண்ண விளக்குகளின் ஒளியும் கண்ணில்பட்டன. நாடகத்தைப் பார்க்கவந்த மக்களுடைய படகுகளின் கருப்புத்தளங்களால், மேடைக் கருகேயிருந்த ஆற்றின் பகுதியே கருப்பாகக் காட்சியளித்தது.
"மேடையருகே இடமில்லை. தூரத்திலேயே இருந்து பார்ப்போம்” என்று ஆஃபா யோசனை கூறினன்.
படகு இப்போது வேகங் குறைந்து மெதுவாகச்சென்றது; நாங்களும் விரைவில் அங்கு வந்து சேர்ந்தோம். சொன்ன படியே மேடை அருகே நெருங்கமுடியவில்லை. மேடையி லிருந்து மிகவும் தள்ளிக் கொண்டு போய் படகை நிறுத்தி னுேம். இது மேடைக்கு எதிரே இருந்த கோயிலுக்கும் படகுக்குமிடையே இருந்த தூரத்தைவிட அதிகம். இது குறித்து நாங்கள் வருத்தப்படவில்லை. வெள்ளைத்தளமுடைய எங்கள் படகு கருப்புத் தளமுடைய அந்தச் சாதாரண படகு களுடன் கலந்துவிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எப்படி யிருந்தாலும் அங்கு இடமும் இருக்கவில்லை.
Gшт. — 13

Page 106
194. Gurriderá
நாங்கள் அவசரமாகப் படகை நிலைப்படுத்திய சமயத்தில் மேடையில் நீண்ட கருப்புத் தாடியுடைய ஒருவன், முக் கோணக் கொடிகள் நான்கை முதுகில் செருகிக் கொண்டு தோன்றினன். கையில் வேலுடன் நிராயுத பாணிகள் பலரு டன் போரிட்டுக் கொண்டிருந்தான். அவன் ஒரு பெயர் பெற்ற கழைக் கூத்தாடி என்றும், ஒன்றுக்குப்பின் ஒன்ருக எண்பத்து நான்கு குட்டிக்கரணம் அடிப்பவன் என்றும் ஷ"வாங்-ஷி கூறினன். அன்றைய பகல் காட்சியில் குட்டிக் கரணங்களே எண்ணிப் பார்த்ததாகவும் சொன்ஞன்.
சண்டைக் காட்சியைப் பார்ப்பதற்காகப் படகு முகட்டில் கூடினுேம், ஆனல் கழைக் கூத்தாடி குட்டிக்கரணம் போட வில்லை. நிராயுதபாணிகள் மேடைக்குள் தலைதெறிக்க ஓடி மறைந்தனர். பிறகு ஒரு பெண் வெளியே வந்து நீட்டி முழக் கிய குரலில் பாடினுள் இரவில் கூட்டம் சேரவில்லை. அதனல் கழைக்கூத்தாடி அலட்சியமாக இருக்கிருன். பார்ப் பதற்குக் கூட்டம் இல்லாவிட்டால் தங்கள் திறமையைக் காட்ட யார் விரும்புவர்?’ என்று ஷ"வாங்கவழி கூறினன். உண்மையே, ஏனெனில் அப்போது பார்வையாளர்கள் அங்கு அதிகம் இல்லை. கிராமத்து மக்கள் மறுநாள் வேலை செய்ய வேண்டியிருந்ததால் இரவு முழுதும் விழித்திருந்து பார்க்க. முடியவில்லை. ஆகவே அவர்கள் எல்லோரும் படுக்கச்சென்று விட்டனர். செளசுவாங்கிலும் சுற்றுப்புற கிராமத்திலுமுள்ள சில சோம்பேறிகள் மட்டுமே அங்குமிங்குமாக எஞ்சி நின்ற னர். கருப்புத்தளப் படகுகளில் உள்ளூர் பிரபுக்களின் குடும்பத்தினர் இருந்தனர். அவர்களுக்கோ நாடகத்தில் அக் கறையில்லை. அவர்களில் பெரும்பாலோர் மேடைக்குக் கீழே கேக்குகள், பழங்கள், பூசணி விதைகள் தின்பதற்காகச் சென்ற னர். ஆகவே அங்கு பார்வையாளர்களே இல்லை என்றே கூறலாம். -
உண்மையில், குட்டிக்கரணங்கள் பற்றி நான் அக்கறைப்பட வில்லை. நான் ஆவலுடன் காண விரும்பியது வெள்ளைத் துணியால் சுற்றிக் கட்டப்பட்ட பாம்புப் பைசாசம் தலையில்

திராமத்து இசை நாடகம் 95
மெல்லிய தடியையொத்த பாம்புத் தலையை இருகைகளாலும் இறுக்கிப் பிடித்துச் சுமந்து தோன்றும் காட்சிதான். அடுத்து நான் எதிர்பார்த்தது. மஞ்சள் ஆடை உடுத்திய தாவும் புலியைத் தான். நான் ரொம்பர்ேரம் காத்திருந்தும் அவை தோன்றவில்லை. சுப்பெண் மேடைக்குள் சென்றுமறைந்தாள். அதன்பிறகு இளைஞன் வேடத்தில் நடிக்கும் படு கிழவன் ஒருவன் மேடைக்கு உடனே வந்தான். எனக்கு மிகவும் களைப்புத் தட்டியதால் எனக்கு சோயாப்பால் வாங்கிவரும் படி குய்ஷெங்கைக் கேட்டுக்கொண்டேன் சிறிது நேரத்தில் அவன் திரும்பி வந்து “கொஞ்சம்கூடக் கிடைக்கவில்லை. அதை விற்கும் செவிடன் போய்விட்டான். பகல்பொழுதில் கொஞ்சம் கிடைத்தது. நான் அப்பொழுது இரண்டு கோப்பைகள் அருந்தினேன். ஒரு குவளை தண்ணீர் கொண்டு வரட்டுமா?’ என்ருன்
நான் தண்ணீர் அருந்தவில்லை. சிரமப்பட்டு சமாளித்துக் கொண்டேன். நான் எதைப் பார்த்தேன் என்று கூறுவதற் கில்லை. ஆயினும் நடிகர்களின் முகங்கள், மெல்லமெல்ல மிக விநோதமானவையாக மாறுவதைப்போல் தோன்றின. அவர்களது முகச்சாயல்கள் எல்லாம் கரைந்து மறைவதைப் போல மங்கின. பெரும்பாலான சிறுவர் கொட்டாவி விட்டனர் பெரியவர்கள் தங்களுக்குள் அரட்டையடித்தனர். சிவப்புச்சட்டையணிந்த கோமாளி ஒருவன் மேடைமேலிருந்த தூணில் கட்டப்பட்டு ஒரு நரைத்த தாடிக்காரனல் விளாசப் படும் காட்சி தொடங்கிய போதுதான் நாங்கள் உணர்வு பெற்று மீண்டும் சிரித்துக்கொண்டே பார்க்கத் தொடங் கினேம். அன்றைய மாலைக் காட்சிகளில் அதையே சிறந்ததாக நான் கருதினேன்.
ஆனல் அந்தக் கிழவி மீண்டும் தோன்றினுள். இந்தப் பாத்திரத்தைத்தான் என்னுல் காணச் சகிக்கவில்லை. குறிப் பாக அவள் பாடுவதற்காக உட்காரத்தொடங்கினல் போச்சு! மற்றவர்களது முகச்சுளிப்பைப் பார்க்கும்போது அவர்களுக் கும் என் கருத்துத்தான் என்பதைக் கண்டேன். தொடக்கத்

Page 107
196 போர்க்குரல்
தில் கிழவி அங்குமிங்குமாக பாடிக்கொண்டே நடந்தாள். பின்னர் மேடையின் நடுவிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். எனக்கு உண்மையிலேயே வெறுப்பு ஏற் பட்டது. ஷ"வாங்-ஷியும் மற்றவர்களும் திட்டத் தொடங் கினர்கள். கிழவி கையை மேலே தூக்கியதும் எழுந்திருக்கப் போகிருள் என நினைத்தேன். அதுவரை நான் நீண்டநேரம் பொறுமையாக அமர்ந்திருந்தேன். நான் எதிர்பார்த்தது போலல்லாது, அவள் கையை மெதுவாக கீழே சாய்த்து முன் பிருந்த நிலையிலேயே அமர்ந்து மீண்டும் பாடத் தொடங்கி விட்டாள். படகிலிருந்த சிறுவர்கள் சிலர் முனகத் தொடங் கினர் வேறுசிலர் கொட்டாவி விட்டனர். கடைசியில் ஷ"வாங்-ஷியாலும் அதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. விடியற்காலவரை அக்கிழவி பாடிக்கொண்டே இருப்பாள் என்று தான் கருதுவதாகவும்,நாம் பேசாமல் அங்கி ருந்துபோய்விடுவது நல்லதுஎன்றும் அவன் கூறினன்.தாங்கள் உடனே ஒத்துக் கொண்டோம். கிராமத்திலிருந்து இங்கு வர புறப்பட்டபோது காட்டிய அதே ஆர்வத்தை இப்போது அங்குதிரும்பிப்போவதற்குப் புறப்படும்போதும் காட்டினேம். ஓரிருவர் படகின் பின்பகுதியை அடைந்து கழிகளைப் பிடித்து சிறிது நேரம் படகைப் பின்தள்ளித் திருப்பினர்கள். கிழட்டுப் பாடகியைத் திட்டியவாறே துடுப்புகளை வலித்து சவுக்குத் தோப்பை நோக்கிப் படகைத் திருப்பினர்கள்.
வானத்தில் நிலா இருந்த இடத்தைக்கொண்டு, நாங்கள் அதிகநேரம் காட்சி பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தோம். செளசுவாங்கிலிருந்து நாங்கள் புறப்பட்ட போது நிலவொளி வழக்கத்தைவிடப் பிரகாசமாக இருந்தது. லாந்தர் வெளிச்சம் நிரம்பிய மேடையைத் திரும்பிப் பார்த்த பொழுது, நாங்கள் இங்கு வந்தபோது இருந்தது போலவே, மெல்லிய இளஞ்சிவப்பு மூடுபனி சூழ்ந்த தேைைதயின் மாளிகை போன்று காட்சியளித்தது. மீண்டும் எங்கள் காது களில் குழலின் இன்னிசை ஒலித்தது. அந்தக்கிழவி பாடி முடித்திருப்பாள் எனக் கருதினேன். ஆயினும், மீண்டும்

கிராமத்து இசை நாடகம் 197
திரும்பிச்சென்று நாடகம் பார்க்க வேண்டும் என்று கூற எனக்கு நா எழவில்லை.
விரைவில் சவுக்குத் தோப்பும் எங்கள் பின்னல் மறைந்தது. எங்கள் படகும் விரைவாகத்தான் சென்று கொண்டிருந்தது. சுற்றிலும் கன்னங்கரேலென்றிருந்ததால் நேரம் அதிகம் கடந்திருக்க வேண்டும் என்பது தெரிந்தது. சிரிப்புக்கும் வசைமாரிக்குமிடையே நடிகர்களைப்பற்றிய விமர் சனம் நடந்து கொண்டிருக்க, துடுப்பைப் பலமாக வலித்துச் செலுத்தினர்கள். அப்போது படகு முகப்பில் மோதிய நீரின் ஓசை துல்லியமாகக் கேட்டது. குழந்தைகள் நிறைந்த சுமையைத் தனது முதுகின்மேல் சுமந்து நுரையைக் கிழித்துச் செல்லும் ஒரு பெரிய வெள்ளை மீன் போல் அந்தப் படகு தோன்றியது. இரவு முழுதும் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் சிலர் தங்கள் பரிசலை நிறுத்தி எங்களை உற்சாகப் படுத்தினர்கள்.
பிங்சியெளவிலிருந்து ஒரு லி தூரம் வந்ததும் எங்கள் படகு மெதுவாக நகரத் தொடங்கியது. துடுப்பைச் செலுத் துபவர்கள் மிகவும் சிரமப்பட்டு வலித்ததால் தாங்கள் சோர்வடைந்து விட்டதாகக் கூறினர்கள். பலமணி நேரம் எகிகளுக்குச் சாப்பிட ஏதும் கிடைக்கவில்லை. இம்முறை குய்ஷெல் ஒரு அருமையான யோசனை கூறினன்: மொச்சைகள் முற்றியிருக்கும். படகில் விறகும் இருந்தது. அவற்றைச் சிறிது அவித்துச் சாப்பிடலாம் என்றன். எல்லாரும் அதை ஆமோதித்தோம். உடனே நாங்கள் கரைநோக்கிப் படை யெடுத்தோம். கன்னங் கரேலென்ற வயல்வெளியில் கொழுத்த மொச்சைகள் நிறைந்திருந்தன.
"ஏய், ஆஃவா இது உங்கள் வயல்; அந்தப் பக்கத்தி லிருப்பது லியுஇ கிழவருடையது. எதில் நாங்கள் கை வைப்பது?” ஷ"வாங்கவிதான் கரையில் முதலில் தாவிக் குதித்தான், கரையிலிருந்து கேட்டவனும் அவன்தான்.

Page 108
198 போர்க்குரல்
நாங்கள் அனைவரும் கரையில் குதித்ததும், ஆஃபா *கொஞ்சம் பொறுங்கள். நான் பார்த்துச் சொல்கிறேன்" என்ருன் அங்குமிங்குமாக நடந்து கொண்டு மொச்சைகளைப் பதம் பார்த்தான்; பின் நிமிர்ந்து நின்று கூறினன்: "எங்கள் மொச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவைதான் பெரிது பெரிதாக இருக்கின்றன.” கூச்சலுடன் நாங்கள் ஆஃபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான வயலுக்குள் சிதறி ஒவ்வொருவரும் கை நிறைய மொச்சைகளைப் பிடுங்கி பட கினுள் வீசினுேம், அதற்கு மேலும் நாங்கள் பிடுங்கினுல் ஆஃபாவின் தாயார் கண்டுபிடித்து விடுவாள், அப்புறம் தொல்லை நேரும் என ஷ"வாங்-ஷி கருதினன்; எனவே நாங் களனைவரும் லியு-இ கிழவரின் வயலில் நுழைந்து ஆளுக்கொரு கைப்பிடி ஆய்ந்தோம்.
பிறகு எங்களைவிட மூத்த பையன்கள் சிலர் மெதுவாகப் படகைச் செலுத்தினர். மற்றவர்கள் படகுக்குப் பின்பக்கம் அடுப்பை மூட்டினர். அவர்களைவிட வயதில் இளையவர்களும் நானுமாகச் சேர்ந்து மொச்சையின் தோலை உரித்துக் கொடுத் தோம். விரைவில் அவை அவிக்கப்பட்டன. சிறிது நேரம் படகு தானுக நகரவிட்டோம். நாங்கள் சுற்றி உட்கார்ந்து விரல்களால் மொச்சைகளைப் பொறுக்கி உண்டோம். உண்டு முடிந்ததும் பானைகளைக் கழுவி முடித்து அடையாளச் சுவடே தெரியாமலிருப்பதற்காக மொச்சைத் தோல்களை ஆற்றில் கொட்டினுேம். எட்டாம் மூத்த மயமாவின் படகிலிருந்த விறகுகளையும் உப்பையும் உபயோகித்ததால் ஷ"வாங்-ஷி கவலைப்பட்டான். கிழவர் ரொம்பவும் புத்திசாலியாதலால் எப்படியும் இதனைக் கண்டுபிடித்து எங்களைத் திட்டுவார் என்று பயம். சிறிது நேர விவாதத்துக்குப் பின், அது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என முடிவு கட்டினுேம். அப்படியே ஏதும் அவர் திட்டினல், சென்ற ஆண்டில் ஆற்றங் கரையிலிருந்து அவர் எடுத்துச்சென்ற சவுக்கு மரக் கிளையைத் திருப்பித் தரும்படிக் கேட்ப தென்றும், முகத்துக்கு

கிராமத்து இசை நாடகம் 199
நேரே "கிழட்டுச்சொறியா” என்று திட்டி விடுவது என்றும் முடிவு கட்டினுேம்
"நாங்கள் எல்லாரும் திரும்பி வந்து விட்டோம்! அசம் பாவிதங்கள் எப்படி நடக்கும்? எல்லாமே சரியாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உத்திரவாதம், தரவில்லையா?” ஷ"வாங்-ஷியின் குரல் படகு முகப்பிலிருந்து திடீரென முழங்கியது.
அவனுக்கு அப்பால் பார்க்கும்பொழுது நாங்கள் ஏற்கனவே பிங்சியெளவை அடைந்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன். யாரோ பாலத்தடியில் நின்று கொண்டிருந் தார்கள். அது அம்மாவேதான். அவளிடந்தான் ஷ"வாங்ஷி அப்படிக் கூறியிருக்கிருன். நான் படகு முகப்புப் பக்கம் நடந்து செல்கையில் படகு பாலத்தின் கீழ் சென்று பின்னர் நின்றது. நாங்களனைவரும் கரையை அடைந்தோம். அம்மாவுக்கோ கடுங்கோபம். ஏன் இவ்வ்ளிவு நேரம் எனக் கேட்டாள். நள்ளிரவு கடந்துவிட்டது. ஆயினும் அவளிடம் சீக்கிரமே மலர்ச்சி திரும்பியது. எல்லாரையும் திரும்பி வந்து அரிசிப்பொரி சாப்பிட்டுச் செல்லும்படிப் புன்னகையுடன் கேட்டுக்கொண்டாள்.
நாங்கள் ஏதேதோ கொஞ்சம் ஏற்கனவே சாப்பிட்டு விட்டோம் என அவளுக்குக் கூறினர்கள். தங்களுக்குத் தூக்கம் வருவதால் உடனே படுக்கப் போவதுதான் நல்லது எனவும் கூறிச் சென்ருர்கள் நாங்களும் அவரவர் இல்லங் களுக்குச் சென்ருேம்.
மறுநாள் நடுப்பகல்வரை நான் எழுந்திருக்கவில்லை. உப்பு விறகு குறித்து எட்டாவது மூத்த மாமாவிடமிருந்து தொந்திரவு ஏதும் இருக்கவில்லை. மாலை நேரத்தில் வழக்கம் போல் இருல் மீன் பிடிக்கச் சென்ருேம்.
"ஷ"வான்-S, நீயும் உன் இளவெட்டுப் போக்கிரிகளும் நேற்று எனது மொச்சையை திருடினீர்கள் அல்லவா ஒழுங்கா கவும் பொறுக்கவில்லை. கொஞ்சத்தை மிதித்து விட்டுப்

Page 109
200 போர்க்குரல்
போய்விட்டீர்கள்.” நான் ஏறிட்டுப் பார்த்தேன். வியும் இ கிழவர் பரிசலில் நின்றுகொண்டிருந்தார். மொச்சையை விற்டுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார் அர்ை. பரிசலுக்கு அடியில் எஞ்சியிருந்த மொச்சைகள் குவியலாகக்
கிடந்தன. W
"ஆமா, நாங்கள் விருந்தினர் ஒருவரை உபசரித்தோம். முதலில் உங்கள் மொச்சையை எடுக்கவேண்டும் என்று நாங் கள் நினைக்கவில்லை, இதோ எனது இருல்களைத் துரத்தி விட்டீர்கள்!” என்முன் ஷ"வாங்-ஷி:
கிழவர் என்னைக் கண்டதும் பரிசல் செலுத்துவதை நிறுத்திவிட்டு மகிழ்வுடன் நகைத்தார். "விருந்தாளியை உபசரித்தீர்களாக்கும்? கண்டிப்பாக செய்ய வேண்டியது
தான்!” நேற்றைய நாடகம் நன்ருக இருந்ததா என்று என்னிடம் கேட்டார்.
ஆமாம்" என்று தலையசைத்தேன். மொச்சை பிடித்திருந்ததா?”
'ரொம்பவும்.” நான் மீண்டும் தலையசைத்தேன்.
கிழவர் மிகவும் மகிழ்ச்சியுற்றதைக் கண்டு நான் வியந் தேன். பெருவிரலை நிமிர்த்தி அவர் கூறினர்: “பட்டணத் தில் படித்தவர்களுக்கு நல்லது கெட்டது உண்மையாகவே தெரியும். நான் மொச்சைகளை ஒவ்வொன்முக பொறுக்கித் தேர்ந்தெடுப்பேன். கிராமத்து ஜனங்களுக்கு நல்லது கெட்டது தெரியாது. மற்றவர்கள் தோட்டத்து மொச்சை போல் என் தோட்டத்து மொச்சை அவ்வளவு நன்முக இல்லை என்று கூறுகிறர்கள். உங்கள் அம்மாவுக்குக் கொஞ்சம் இன்று தருகிறேன். அவர்கள் ருசிபார்க்கட்டும்.” அப்புறம் பரிசலைச் செலுத்திக் கொண்டு போய்விட்டார்.
இரவு சாப்பாட்டுக்கு அம்மா என்னை வீட்டுக்கு அழைத்த பொழுது மேசைமேல் ஒரு பெரிய பாத்திரம் நிறைய அவித்த மொச்சை வைக்கப்பட்டிருந்தது. அவை லியு-இ கிழவரி,

கிராமத்து இசை நாடகம் 201
அம்மாவும் நானும் சாப்பிடுவதற்காக அனுப்பிவைத்த மொச்சைகள். "அவன் சிறு பிள்ளையாக இருந்தாலும் நல்லது கெட்டது தெரிந்தவன். எதிர்காலத்தில் அரசாங்கத் தேர்வுகள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றுவிடுவான். உனக்கு நல்லயோகம் வாய்த்துவிட்டது”என்று அவர் அம்மா விடம் என்னை புகழ்ந்து கூறியதைக் காதால் கேட்டேன். நான் மொச்சைகளை உண்டபோது முதல்நாள் இரவு சாப்பிட்ட மொச்சையின் ருசி இவற்றுக்கு இல்லை என்பதை உணர்ந் தேன்.
இன்றுவரை இதுதான் உண்மை. அன்று இரவு உண்டதைப்போல் அத்தகைய நல்ல மொச்சைகளை நான் ஒரு போதும் சாப்பிட்டதில்லை என்பதும், அன்று பார்த்ததைப் போன்றதொரு இசை நாடகத்தை பின்ஒருபோதும் பார்த்த தில்லை என்பதும் இன்றுவரை நிலவுகிற ஒரு உண்மை.
அக்டோபர் 1922.

Page 110
வாசகர்
இந்நூலைப் பற்றிய மகிழ்வுடன் வரவே
கடிதங்களைத் தயவு வெளியீடு, 16,மங்ே சென்னை-600017 அனுப்பவும்.

களுக்கு
வாசகர் கருத்தை
ற்கிருேம்.
செய்து பொதுமை
கேஷ் தெரு, தி.நகர் என்ற முகவரிக்கு