கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண வைபவ மாலை

Page 1
யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பான வரலாற்றைக் கூறும் இந்நூல் ஏறக்குறைய ஆண்டுகளின் முள் எழுதப்பட்டது. மாதகல் மயில்வாக எனப் புலவரால் எழுதப்பட்ட இவ்வரிய நூல் 18ஆம் ஆண்டி லேயே சென்னையில் முதன்முதலாக அச்சிடப்பட்டது.
முதலியார் குல.சபாநாதன் அவர்கள் இந்நூலிற்கு எழு திய பாடபேதங்களுடனும் ஆராய்ச்சிக் குறிப்புரைகளுடனும் 1-ல் முதற் பதிப்பு வெளிவந்தது. இரண்டாம் பதிப்புல்ே வெளியாது. தற்போது ஆண்டுகளின் பின்னர் மூன்றாம் பதிப்பு வெளிவருகிறது.
யாழ்ப்பானத்தை ஆட்சி புரிந்த மன்னர்களின் சரித்தி ரத்தை ஆராய்ந்து அறிதற்குத் துளை செய்யும் ஆதாரநூல்கள் கச் சிவ அவற்றில் தமிழில் வித்துவக் குடும்பத்தில் தோன் றிய ஒருவரின் தெளிவான வசனநடையில் சரிந்திரமுறையில் எழுதப்பட்டதால் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்நூல் முக்கிய இடம்பெறுதற்குரியது சரித்திர ஆராய்ச்சியாளர்க்கும் மானவர்க்கும் பிறருக்கும் இது பயன்படத்தக்க நூலாகும்.
 
 
 
 
 
 
 
 

گل سمي" A / / / / / / / اس گھر گھر کے

Page 2
மாத மயில்வாகன
எழுதி
யாழ்ப்பாண ை
முதலியார் குல.ச (பல பிரதி ரூபங்களைக் எழுதிய ஆராய்ச்சி
இந்து சமய கலாசார அ

கல் னப் புலவர் நிய
bIII),
பாநாதன் அவர்கள் கொண்டு பரிசோதித்து க் குறிப்புகளுடன்)
லுவல்கள் திணக்களம்

Page 3
மூன்றாம் பதிப்பு:சித்திரை 1995
இ திருமதி குல.சபாநாதன்
விலை: இலங்கை ரூ.35/-
 ിഖീ
இந்துசமய அலுவல்கள் திணைக்களம் 9ம் மாடி, காப்புறுதி இல்லம் 21, வக்சோல் வீதி, கொழும்பு - 2
அச்சு:குமரன் பப்ளிசர்ஸ்

பொருளடக்கம்
மூன்றாம் பதிப்பின் முன்னுரை
அணிந்துரை
முகவுரை
நூலாசிரியர் வரலாறு
யாழ்ப்பாண வைபவமாலை ஆராய்ச்சி
நூல்
1 -96

Page 4

V
மூன்றாவது பதிப்பின் முன்னுரை
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அரிய தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிடும் பணியினை மேற் கொண்டுள்ளது. அந்த வரிசையில் கோணேசர் கல்வெட்டு என்னும் நூல் 1993-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தட்சண கைலாசபுராணம் என்னும் நூலும் தற்போது அச்சில் உள்ளது. இதுபோன்ற அரியநுண்களுள்ஒளிர யாழ்ப்பாணவைபவ மாலை" என்னும் நூ ைதிணைக்கள வெளியீடாக வெளியிட்டு வைப்பதில் நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின் றோம்.
மாதகல் மயில்வாகனப் புலவர் என்பவரால் வசன நடை யில் எழுதப்பட்ட இந்நூல் 1884-ஆம் ஆண்டு முதன் முதலாக அச்சு வடிவில் வெளிவந்தது. அதன் பின்னர் 1916, 1927-ஆம் ஆண்டுகளில் சிற்சில திருத்தங்கள், மாற்றங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.
1949-ஆம் ஆண்டு புலவர்குல.சபாநாதன் அவர்கள் இந்நூ லைப் பதிப்பித்தார். இவரது பதிப்பில் ஆராய்ச்சிக் குறிப்புக் கள் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்க்கும் வர லாற்று மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய இந்நூலின் பிரதி கள் இன்று கிடைப்பதற்கு அரிதாய் உள்ளன.
யாழ்ப்பானத்தின் சிறப்பினையும் மன்னர்கால சரித்திரத் தையும் உணர்த்தும் இந்நூலில் வரலாற்று அம்சங்களும் கர்ண பரம்பரையான பெளராணிக அம்சங்களும் இணைத்து எழுதப் பட்டுள்ளன.
இத்தகையதொருஅரியநூலைதிணைக்களத்தின் சார்பில் புதிய பதிப்பாக வெளியிட்டு வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். திணைக்கள வெளியீடாக வெளியிட அனு மதித்து உதவியதிருமதி. சபாநாதன் அவர்களுக்கு எமது நன்றி யைத் தெரிவிக்கின்றோம். க.சண்முகலிங்கம் பனிப்பாளர் Qßgsldu கலாசார அலுவல்கள், திணைக்களம் 1995.04.03.

Page 5
V
அணிந்துரை
இலங்கையில் தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுத் தங்கள் ஆதிக்கத்தைப் பரவச் செய்த வரலாறு தமிழகச் சரிதத்தில் ஒரு முக்கியப் பகுதியாகும். யாழ்ப்பா ணத்தில் தமிழரசர் பாரம்பரியமாக ஆண்டு வந்ததோடு, போர்த்துக்கேயர் என்ற பறங்கியர் இலங்கைக்கு வருவதற்கு முன், சிங்கள மன்னரும் தங்களுக்குத் திறை செலுத்துமாறு மேன்மையுற்று விளங்கினர். யாழ்ப்பாண மன்னர்களின் சரித் திரத்தை ஆராய்ந்து அறிதற்குத் துணை செய்ய்ம் ஆதார நூல்கள் கைலாய மாலை, வையா பாடல், யாழ்ப்பான
வைபவமாலை என்பன.
இவற்றுள் யாழ்ப்பாண வைபவ மாலை விரிவானது: தெளிவான வசன நடையிலுள்ளது. தமிழில் சரித்திர முறை யில் எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிலவே. ாழ்ப்பாண 6D6 வமாலை இவ்வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறுதற்குரியது. இதன் ஆசிரியர் யாழ்ப்பா ணத்தில் ஒரு சிறந்த வித்துவ குடும்பத்தில் தோன்றிய மயில் வாகனப் புலவராவர். இவர் ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அக்காலத்தில் கன்ன பரம் பரையாக அறிந்த வரலாறுகளை இவர் கைலாய மாலை, வையா பாடல் என்ற நூல்களிற் கூறப்பட்ட செய்திகளோடு இயைத்து, யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலை எழுதி யுள்ளார் என்பது தெரிகிறது.இதிலுள்ள வரலாறுகள் யாவும்

சரித்திர உண்மைகளாகக் கொள்வதற்கில்லை. ஆயினும், இந்நூல் சரித்திர ஆராய்ச்சியாளர்க்கும் மிகவும் பயன்படத்
தக்கது. . . . . . . . . .
இந்நூல் இதுகாறும் திருத்தமான முறையில் அச்சிடப்ப டவில்லை. அச்சிடப்பட்ட பிரதிகளும் இப்பொழுது கிடைப் 35 அருமையாய் விட்டது; இந்நிலையில் யாழ்ப்பாண வர லாற்றாரய்ச்சித் துறையில் அதிக ஆர்வத்துடன் உழைத்து வருகின்ற அறிஞர் திரு.குல.சபாநாதன் அவர்கள், இந்நூ லைச் செவ்வனே பரிசீலனை செய்து, பல ஆராய்ச்சிக் குறிப் புகளுடன் பதிப்பிக்க முன் வந்தது மிகவும் பாராட்டற்குரிய தாகும். இவ்வாராய்ச்சிக்குறிப்புகள் இந்நூலுக்கு ஒருதனிச்சி றப்பைத் தருவன. திரு. சபாநாதன் அவர்கள் செய்துள்ள இவ்வரும்பணி, யாழ்ப்பாணச் சரித்திரத்தை ஆய்ந்தறியு மாறு பலருக்கும் ஊக்கம் அளிக்கும் என்பது திண்ணம்.
இராமநாதன் கல்லூரி, சுன்னாகம், 9.6.49 சு.நடேசபிள்ளை

Page 6
VIII
முகவுரை
யாழ்ப்பாண வைபவ மாலை என்னும் சரித்திர நூல் முதன் முதல் வட்டுநகர்திரு.WW.சதாசிவப்பிள்ளை அவர் களால், 1884-ஆம் ஆண்டு சென்னையில் அச்சிடப்பட்டது. முதற் பதிப்பிலேயே பதிப்பாசிரியர் தாமாக ஒரு பகுதி யினை எழுதிச் சேர்த்துவிட்டார். அப்பகுதி இந்நூலின்இறுதி யில் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மேற்படியூர் திரு. சி.பாலசுப்பிரமணிய சர்மா அவர்கள் இந்நூலிற் சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும் “யாழ்ப்பாண வைபவம்" என்னும் பெயருடன் 1916ல் அச்சிட்டார்கள். இதன் இரண்டாம் பதிப்பு, சங்கானை திரு.சு.பொன்னுச்சா மிப்பிள்ளையவர்களால் 1927ல் வெளியிடப்பட்டது. வைப வமாலையின் ஆங்கில மொழிபெயர்ப்பு நியாயவாதி சி.பிறிற்றோ (C.Britto) அவர்களால் கி.பி. 1899-ல் அச்சி டப்பட்டது. பிற்காலத்தில் இந்நூற்பதிப்புகளும் கையெழுத் துப் பிரதிகளும் கிடைப்பது அரிதாகி விட்டது. இந்நிலைமை யினைக் கண்டு கவன்ற முதலியார்செ.இராசநாயகம் அவர் கள் லண்டன் மாநகரத்து நூதனப் பொருட்சாலையில் கீழைத் தேச நூல் நிலையப் பகுதியில் இருந்த வைபவமாலைப் பிரதியினை வரவழைக்க முயன்றார்கள். அக்காலத்தில் அவர்கள் இலங்கைச் சரித்திரச் சுவடிப் பாதுகாப்புச் சபை usair (Historical Manuscripts Commission) it 9 risis56. ராய் இருந்தமையால், அச்சபை மூலம் லண்டனிலுள்ள கையெழுத்துப் பிரதியின் படப்பிரதியை (Photostat Copy) எடுப்பித்தார்கள். பின்னர் அதனைப் பிரதி செய்து அச்சிடக் கருதினார்கள். அதற்குரிய எழுத்து வேலை முழுவதையும்

சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வீட்டுக்குச் சென்று யானே செய்து வந்தேன். அத்துடன் இந்நூலுக்கு அடிக்குறிப் புகளையும் அவர்களுடைய மேற்பார்வையின் கீழ் யான் எழுதினேன். இந்நூல் பாகம் பாகமாக 1939-ஆம் ஆண்டில் "இலங்கை வித்தியாசமாசாரப் பத்திரிகை” யில் வெளிவந் தது. அப்பொழுது முதலியார் அவர்கள் என் அடிக்குறிப்புக ளைப் பற்றிப் பின் வருமாறு எழுதினார்கள்
'இந்நூல் மாணவர்க்கும் பிறர்க்கும் பல்கால் உதவி செய்யுமெனவோர்ந்து எனது நூலையும் பிற சரித்திராசிரியர் ஆராய்ச்சியாளர் கொள்கைகளையும் வைத்தாராய்ந்து, கொழும்பு வித்தியா கந்தோரில் ஒர் எழுத்தாளரும், தமிழறி ஞரும், நுண்ணறிவாளரும், ஈழநாட்டுப் புலவர் வரலாறு தொகுக்கும் பணியைச் செய்து வருபவருமாகிய திரு.குல. சபாநாதன் அவர்கள் குறிப்புரையுமொன்று எழுதி உதவியி ருக்கின்றார்கள். அக்குறிப்புரை இந்நூலைத் தெள்ளி வடித் துச் செய்திகளை ஒருவாறு உள்ளபடி அறிவித்தற்குப் பேருத வியாயிருப்பதை இந்நூலை வாசிப்போர் இனிது அறிவர்."
முதலியார் அவர்கள் இந்நூலுக்கு ஏற்ற ஆங்கில மொழி பெயர்ப்பினையும் சேர்த்து வெளியிடக் கருதி அப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக அம் மொழி பெயர்ப்புப் பூரணமாவதற்கு முன் அவர்கள் 17140-ல் இவ்வுலக வாழ்வை நீத்து இறைவன் திருவடி நிழலை அடைந்தார்கள். பின்னர் முதலியார் அவர்களு டைய சிரேஷ்ட புதல்வர்திரு.இ.நாயகம் அவர்கள் இம்மொ ழிபெயர்ப்பு வேலையைப் பூர்த்தி செய்யுமாறு என்னைப் பணித்தார்கள். அங்ங்னமே அதனைச் செய்து முடித்தேன்; ஆனால் அதனைத் தனி நூலாகப் பின்னர் வெளியிடக் கருதி இந்நூலுடன் சேர்க்காது நீக்கி விட்டேன்.

Page 7
சில வருடங்களுக்குப் பின்னர் யான் சென்னைக்குச் சென்றிருந்த பொழுது திரு. தி.த.கனகசுந்தரம் பிள்ளை அவர்களின் புதல்வர் திரு. க.ராஜேஸ்வரன் அவர்கள் வீட் டுக்குச் சென்றிருந்தேன். யாழ்ப்பாண வைபவமாலைப் பிரதி எங்கேயாவது கிடைக்குமோ?’ என அவர்களை உசா வியபோது அவர்கள் தம் தந்தையார் தேடிப் பேணி வைத்தி ருந்த ஏட்டுப் பிரதியைத் தந்தது மட்டுமன்றி, வைபவமாலை முதற்பதிப்புப் பிரதியொன்றையும் தந்துதவினார்கள். முன் னொரு போதும் அறிமுகமில்லாத என்னிடம் இத்தகைய கிடைத்தற்கரிய பொருளை நம்பித் தந்த திரு. க.ராஜேஸ்வ ரன் அவர்களின் பெருந்தன்மையை யான் என்றும் மறக்கவி யலாது! இப்பெருந்தகையாளர்க்கு எனது மனமார்ந்த நன்றி யைச் செலுத்துங் கடப்பாடுடையேன். இவ்விரண்டினையுங் கொணர்ந்து யான் வைத்திருந்த பிரதியுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பாட பேதங்களைக் குறித்துக் கொண்டேன். பின் னர்த் திரு. அ.சதாசிவப் பிள்ளை அவர்கள் தாம் எழுதிய 'பாவலர் சரித்திர தீபகம்’ என்னும் நூலில் மயில் வாகனப் புலவர் வரலாற்றைக் கூறுமிடத்து, "வைபவமாலையை 'உத யதாரகை”ப் பத்திரப் பிரதிகள் பலவற்றில் முன் அச்சடிப்பித் திருக்கிறோம்,' என்று எழுதியிருப்பதைக் கண்டேன். எனவே, கொழும்பு அரசினர் புராதன சாஸன சேமிப்புச் சாலையில் (Government Archives) பழைய 'உதயதாரகைப் பிரதிகளைத் தேடிப் பார்த்தேன். அதிருஷ்டவசமாக வைப வமாலை வெளிவந்த பிரதிகள் அங்குக் காணப்பட்டன. அவற்றிலுள்ள பாடபேதங்களையும் குறித்துக்கொண்டேன். இது சம்பந்தமாக நண்பர் மு.இராமலிங்கம் அவர்கள் அதிக உதவி புரிந்தார்கள்.
இந்நூலைப் பாடபேதங்களுடனும் குறிப்புரையுடனும்

X
வெளியிடுவதற்கு முன்னர் நல்லூர், வண.சுவாமிஞானப் பிரகாசருடைய அபிப்பிராயத்தையும் அறிவது நன்றெனக் கருதி, அதனை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். சுவாமி யவர்கள் அதனைப் பார்வையிட்டுச் சில திருத்தக் குறிப்பு களை எழுதியதுமன்றி, 1940-ஆம் ஆண்டில் எனக்கெழு திய கடிதமொன்றில், தாங்கள் எழுதிய அடிக்குறிப்புகள் தங்கள் சரித்திர ஆராய்ச்சி வன்மையை நன்கு புலப்படுத் துகின்றன. பட்சபாதமின்றி அபிப்பிராய பேதங்களை நடுநின்றாராய்ந்து காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. இந்நூல் வெளிவரும் நன்னாளை நான் ஆவலுடன் எதிர் பார்த்தவண்ணமிருக்கின்றேன்" எனக்குறிப்பிட்டார்கள். ஆனால், சுவாமியவர்கள் 22.11.47ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்கள். சுவாமியவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் இந்நூலை வெளியிட முடியாதிருந்தமை எனக்குத் தீராத கவலையை உண்டாக்கிற்று. பின்னர்ச் சுவாமியவர்கள் எழு திய Kings ofaffna என்னும் ஆங்கில நூலைப் பார்வையிட் டுச் சில குறிப்புகள் எடுப்பதற்காக அந்நூற் பிரதியொன்றைத் தேடியலைந்த பொழுது திரு. ஆர்.சி.பிறக்ரர் அவர்களிடம் ஒரு பிரதியிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர்கள் வீட்டுக் குச் சென்றேன். அவ்வறிஞர் அந்நூலைத் தந்துதவியது மன்றி, யாழ்ப்பாணச் சரித்திர சம்பந்தமாகத் தம் அபிப்பிரா யங்களையும் தெரிவித்தார்கள். அவற்றையும் அடிக்குறிப் பிற் சேர்த்துள்ளேன்.
மட்டான பண வருவாயுள்ள என்போலியர்கள் நூல் களை வெளியிடுதல் எங்ங்ணம் இயலும் எனக் கருதிக்கவன் றிருந்த பொழுது, "ஈழகேசரி அதிபர் திரு.நா.பொன் னையா அவர்கட்கு இவ்விஷயத்தை எழுதி உசாவினேன். "கையெழுத்துப் பிரதியை அனுப்பினால் அச்சிட்டு வெளியி

Page 8
X
டலாம்,' என அவர்கள் மறுமொழி எழுதினார்கள். இஃது எனக்குப் பெரிய ஆறுதலைத் தந்தது. ஈழநாட்டிலே பல தமிழ் நூல்கள் வெளிவரக் காரணகர்த்தாவாயிருந்த அவர் களே இந்நூலையும் வெளியிட முன் வந்த பெருந்தொண் டிற்கு யான் மட்டுமன்றித் தமிழுலகமே கடமைப்பட்டுள்ளது என்பது கூறாதேயமையும்.
இந்நூலுக்கு ஓர் அணிந்துரை எழுதித்தருமாறு பரமேஸ் வரக் கல்லூரித்தலைவரும் யாழ்ப்பாணச் சரித்திர ஆராய்ச்சி அறிஞருமாகிய திரு.சு.நடேசபிள்ளை அவர்களை வேண் டினேன். பல வேலைகட்கிடையில் எனது வேண்டுகோளை மறுக்காது அணிந்துரை எழுதித் தந்த இப்பெருந்தகையா ருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
மயில்வாகனப் புலவர் அவர்களுடைய வாழ்க்கை வர லாற்றுக் குறிப்புகள் சிலவற்றைத் தந்துதவிய இந்து சாதனப் பத்திராதிபர் பண்டிதர் திரு.ம.வே.திருஞான சம்பந்தப் பிள்ளை அவர்களுக்கும், இந்நூலின்கண் சில திருத்தங்கள் செய்வதற்கு வேண்டிய உதவி புரிந்த பண்டிதர்திரு. அ.சிற் றம்பலம், பீ.ஏ. அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. இந்நூலின் அச்சுப் பிரதியைப் (Proof) பார்ப்ப தில் எனக்கு உதவியாயிருந்த அன்பர் திரு. அ.க.சுப்பிரம ணியம் அவர்களுக்கும் இந்நூலை விரைவில் வெளியிட உதவியாயிருந்த திருமகள் அழுத்தக அலுவலகத்தார்க்கும் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. கொழும்பு, வெள்ளவத்தை, குல.சபாநாதன் 31.549

இரண்டாம் பதிப்பு முகவுரை
இந்நூலின் முதலாம் பதிப்புப் பிரதிகள் செலவாகி விட்டமையால் இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிட முன்வந்த சரஸ்வதி புத்தக சாலை அதிபர் பிரம பூரீ.சி.பத்மநாப குருக்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைச் செலுத்தும் கடப்பாடுடையேன். இந்நூலைப்பாட புத்தகமாக அமைத்து எமக்கு ஊக்கமளித்த இலங்கைப் பல்கலைக்கழகத் தாருக்கும், யாழ்ப்பான ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கத்தாருக் கும் எனது உளங்கனிந்த நன்றியுரியதாகுக.இதனைச்செவ்வனே அச்சிட உதவிபுரிந்த திரு.எம்.ஆர்.அப்பாத்துரை அவர்களுக்கும், அச்சுப்பிரதி களை ஒப்புநோக்கிப் பல திருத்தங்களைச் செய்து உதவிய வித்துவான் மே.வீ.வேனுகோபாலப் பிள்ளை அவர்களுக்கும் எனது நன்றியுரியதா குக. வெள்ளவத்தை, இங்ங்ளம் 30.6.53. குல.சபாநாதன்
இந்நூலாசிரியராகிய , மயில்வாகனப் புலவர் வரலாறு இப்புலவர் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்புக் கோயிற்பற் றைச் சேர்ந்த மாதகற்கிராமத்திலே பிறந்தவர்.இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணியம் எனவும், தாயார் பெயர் சிதம்பரம் எனவுங் கூறுப. கண்டியரசன் மீது கிள்ளை விடு தூது பாடிய மாதகல் சிற்றம்பலப் புலவரின் சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர் இளமையில் தம்

Page 9
XIV
மாமனாரிடம் கல்வி கற்றுச் சிறந்த பாண்டித்தியமடையலா னார், 'வையா என்னும் புலவர் மரபில் உதித்தவர். அது,
நெய்யார்ந்த வாட்கைப் பரராசசேகரன்பேர்நிறுவி
மெய்யாக நல்ல கலைத்தமிழ்நூல்கள் விரித்துரைத்த
வையாவின் கோத்திரத்தான்மயில் வாகனன் மாதவங்கள் பொய்யாத வாய்மைப்புலியூரத்தாதி புகன்றனனே." என்னும் புலியூரந்தாதிச்சிறப்புப் பாயிரச்செய்யுளாலறியப் படும். இச்செய்யுள் வரதபண்டிதர் பாடியதெனப் பொது வாக நம்பப்படுகின்றது. வையா என்னும் புலவர் சயவீரசிங் கையாரியன் எனப்படும். ஐந்தாம் செகராசசேகரன் காலத் தில் (கி.பி.1380 - 1414) சமஸ்தானப் புலவராய்க் கீர்த்தியு டன் விளங்கினார். இவர் வையாபாடல், பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை என்னும் நூல்களின் ஆசிரியர். . . . . . . . .
மயில்வாகனப் புலவருடைய வரலாறு திரு. அ.சதாசி வப் பிள்ளையவர்கள் எழுதிய 'பாவலர் சரித்திர தீபகம்’ எனும் நூலிலும், திரு. அ.குமாரசுவாமிப் புலவர் அவர்கள் எழுதிய 'தமிழ்ப்புலவர் சரித்திரம்' எனும் நூலிலும், வயா விளான் திரு. க.வேலுப்பிள்ளையவர்கள் வெளியிட்ட "யாழ்ப்பாண் வைபவ கௌமுதியிலும், வித்துவான் பிர மயூரீ சி.கணேசையர் அவர்கள் எழுதிய ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம்' எனும் நூலிலும் சுருக்கமாகக்
யாழ்ப்ப ர்ணம், வண்ணை வைத்தீஸ்வரசுவாமி கோயி லைக் கி.பி.1787ல், கட்ட ஆரம்பித்து, 1791-ல் திருப்ப ணியை முடித்துக்கும்பாபிஷேகமும் செய்வித்த தர்மப்பிரபு

XV
வாகிய வண்ணை வைத்தியலிங்கச்செட்டியாரும் மயில் வாகனப் புலவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இவ்விரு வரும், இந்தியாவினின்றும் யாழ்ப்பாணத்தில் வந்திருந்த கூழங்கைத் தம்பிரானிடம் ஒருங்கு கற்றனர். கூழங்கைத் தம்பிரான் ஒரு பாடத்தை ஒரு முறையன்றி இரண்டாமுறை சொல்லிக் கொடாரென்றும் வைத்தியலிங்கச் செட்டியார் ஒரு முறையிற் கிரகிக்கத்தக்கவரல்லரென்றும், மயில்வாக னப் புலவர் ஒரு முறையில் கிரகிக்கத்தக்க சிறந்த ஞாபக சக்தியுடையவரென்றும், அதன்ால் தம்பிரான் சொல்லிக் கொடுக்கும்பாட்த்தை மயில்வாகனப் புலவர் ஒரேமுறையிற் கிரகித்து வைத்தியலிங்கச் செட்டியாருக்கு மீளச் சொல்லிக் கொடுப்பாரென்றும் சரிதாசிரியர் சிலர் கூறுவர். இதனால், மயில்வாகனப் புலவர் சிறந்த ஞாபகசக்தியுடையவர் என் பது புலனாகின்றது. . . .
மயில்வாகனப் புலவர் காலம்: கல்வளையந்தாதி, மறைசையந்தாதி, பறாளை விநாயகர் பள்ளு,கரவை வேலன்கோவை முதலிய நூல் களை இயற்றிய நல்லூர்சின்னத்தம்பிப்புலவரும்,சிவராத் திரி புராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடுதூது, அமுதாகரம், பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற் றிய வரத பண்டிதரும், மயில்வாகனப் புலவரும் ஒரே காலத்தினர் எனச்சரித்திராசிரியர் கருதுகின்றனர். மயில்வா கனப் புலவர் இயற்றிய யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலின் சிறப்புப்பாயிரச் செய்யுளில்,மேக்கறுன் எனும் உலாந்தேசு மன்னன் பெயர் குறிப்பிடப்படுதலால், அது கி.பி.1736-ல் கொம்மந்தோராயிருந்த இயன் மாக்காரா அவர்களையே குறிக்குமெனக் கருதி, இப்புலவர் காலமும்

Page 10
XM.
18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியாகுமென யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டார்கள். காலஞ்சென்ற பிறக்ரர் திரு. வ.குமாரசுவாமி அவர்கள் ஆங்கில 'இந்து சாதனப் பத்திரிகையில், 1934-ஆம் ஆண்டில் எழுதிய 'சின்னத்தம்பிப் புலவர் காலம்’ எனும் கட்டுரையில் இக் கொள்கையினை விரிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
மயில்வாகனப் புலவர் அவர்களின் பிற்காலச் சீவியத் தையும் அவரது காலத்தையும் கரவை வேலன் கோவை பதிப்பித்த பிரமயூரீ தி.சதாசிவ ஐயர் அவர்கள் அரிதில் முயன்று ஆராய்ந்து, அப்பதிப்பில் வெளியிட்டிருக்கிறார் கள். அதனை ஈண்டெடுத்துக் காட்டுதல் பொருத்தமுடைய தாகுமென நம்புகிறோம்.
"கி.பி.1805-ஆம் ஆண்டில் வைத்தியலிங்கச்செட்டி யார் தம் ஆஸ்திகளைப் பற்றிய மரண சாதனப் பத்திரம் பிறப்பித்தார் என்பது அப்பத்திர வாயிலாகவே இன்றும் நாமறியக் கிடக்கின்றது. அங்ங்னம்பத்திரம் பிறப்பித்த பின் செட்டியார் பெரும்பொருள் எடுத்துக் கொண்டு, வேண்டிய பரிசனங்களுடன் தம் தோழராகிய மயில்வாகனப் புலவரை யும் அழைத்துக்கொண்டு, காசிக்குப் பிரயாணமானார். வழி யிலும் காசிப்ப்தியிலும் பல தருமத்தாபனங்கள் செய்து, அங் குச்சிறிது காலத்திற் செட்டியார்காலகதியடைய, மயில்வாக னப் புலவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து, மேலும் சில காலம் வாழ்ந்திருந்தனர். அப்போது அவராலெழுதப்பட்ட கந்தபுராண ஓலைச் சுவடி ஒன்று இப்பொழுதும் மாதகலில் அவர் வ்ழித்தோன்றலாகிய ஒருவரிட்ம் இருக்கின்றது.அவ்
வேட்டின் இறுதியில் முந்தினகையெழுத்திலேயே,

xvil
"ஈசன் மைந்தன் புராண மெழுதினோன் தேசுலாவுதிருவளர் மாதையூர் மாசிலாமணி மாமகன் மைந்தனாம் காசி காண்மயில் வாகன யோகனே."
என்னுஞ் செய்யுள் எழுதப்பட்டிருக்கின்றது. இச்செய்யுளால் மயில்வாகனப் புலவர் காசிக்குச் சென்று மீண்ட சம்பவம் நன்கு தாபிக்கப்படுகின்றது. 1814-ஆம் ஆண்டில் மாதகற்ப குதியில் பெருவெள்ளம் ஒன்று நிகழ்ந்ததென்றும், அவ்வெள் ளத்தையும் அதனால் நிகழ்ந்த சேதத்தையுங் குறித்து ஓர் அம்மானை மயில்வாகனப் புலவராற் பாடப்பட்டதென்றும் அவர் வழித்தோன்றலாயுள்ளோர் கூறக் கேட்டலின், மயில் வாகனப் புலவர் கி.பி.1814-ஆம் ஆண்டில் வாழ்ந்திருந்தா ராகல் வேண்டும். ஆகவே,அவர் செய்த "யாழ்ப்பாண வைப வமாலை' என்னும் சரித்திர நூல், கி.பி.1736-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தென்னுங் கொள்கை எவ்வாறு பொருந்தும் என்பது அறிஞர்கள் ஆராயத்தக்கது. 1736-ல் மயில்வாக னப் புலவரும் சின்னத்த்ம்பிப் புலவரும் பத்து வயதுக்குட் பட்ட சின்னஞ்சிறுவர்களாகவே இருந்திருப்பார்கள்." இவ் வறிஞருடைய கொள்கைப்படி மயில்வாகனப் புலவர் காலம், 18-ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியெனக் கரு இடமுண்டு.
மயில்வாகனப் புலவர் வண்ணை வைத்தியலிங்கச் செட்டியார் காலத்தில் வாழ்ந்தவராதலின், இப்புலவர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19-ஆம் நூற்றாண் டின் ஆரம்பத்திலும் இருந்திருக்க வேண்டுமென முதலியார் இராசநாயகம் அவர்கள் கருதி, அவ்விஷயம் பற்றி ஆங்கில

Page 11
XVI
இந்துசாதனப் பத்திரிகையில் (29.10.34) ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டார்கள். பிரமழரீ தி.சதாசிவ ஐயர் அவர்கள் கொள்கையும் இதற்கு ஆதரவளிக்கின்றது. அதனை மேலே காட்டியுள்ளோம். 'தமிழ்ப் புலவர் சரித்தி ரம்' என்னும் நூலினை 1916-ஆம் ஆண்டில் வெளியிட்ட சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் அவர்களும், மயில்வா கனப் புலவர் சரிதத்தில், 'காலம் ஏறக்குறைய நூறு வருடங்க ளுக்கு முன் என்பர்,' எனக் கூறியிருத்தலும் இக்கொள் கைக்கு ஆதரவளிக்கின்றது. இன்னும் “யாழ்ப்பாண வைபவ கெளமுதி” என்னும் நூலில், இப்புலவர் காலத் தைப் பற்றி விவரிக்குமிடத்து, 'மயில்வாகனப் புலவர் வைபவ மாலையை இயற்றிய காலம், 1736 வரையிலென மெஸ்.விருத்துரை (Britto) கூறிப் போந்தார். ஆயின், வைத் தியலிங்கச் செட்டியாரோடு அவரைக் கூழங்கைத் தம்பிரானி டம் பாடங்கேட்டவராகச் சொல்லும் ஐதிகத்தின்படி அந்நூலி யற்றிய காலம் இன்னும் ஐம்பது வருஷம் வரையிலென்றா லும் பிற்பட்டதேயாக வேண்டும்,' எனக் கூறப்பட்டிருத்த லும் ஈண்டு ஒப்பிட்டு நோக்கற்பாற்று. ஆயின், அரசாங்க சாஸன பாதுகாப்பு நிலையத்திலுள்ள (Archives) டச்சுக் காலத்துப் பத்திரங்களில் 1706-ஆம் ஆண்டில் பீற்றர் மாக் காரா என்பவர் பிசுக்கால் அதிகாரியாக யாழ்ப்பாணத்தில் g(5,55.Tir (Pieter Macare - Independent Fiscal of the Jafna Pattamin 1706) என்னும் குறிப்புக் காணப்படுதலால், இவரு டைய கேள்விப்படியே மயில்வாகனப் புலவர் 1706ல் வைப வமாலையை இயற்றினார் எனத் திரு. வ.குமாரசுவாமியவர் கள் இந்து சாதனப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன் filib gf)ü19L. (SeiroIIITit. (A Peep into Dutch Archives in

XX
Ceylon by V.Coomaraswamy B.A. - 'Hindu Organ' of 3.2.1936). காலியில் கொம்மந்தோராயிருந்த இயன் மாக் காரா யாழ்ப்பாணச் சரித்திரத்தில் நாட்டமுடையவராய் இருந்தார் என்பது பொருத்தமற்ற கூற்று என்பதைப் பிள்ளை யவர்கள் ஒத்துக் கொண்டு, மயில்வாகனப் புலவர் வைபவ மாலையை இயற்றிய காலம் 1706-ஆம் ஆண்டென்றே கொள்கின்றார். ஆனால், பிசுக்கால் அதிகாரியாயிருந்த ஒரு வனை உலாந்தேசு மன்னன் என மயில்வாகனப் புலவர் குறிப்பிட்டிருப்பாரோ என்பது ஐயத்துக்கிடமானது. எனி னும், அவ்வதிகாரியையே உலாந்தேசு மன்னன் எனப் புனைந்துர்ையாகப் பாடியிருத்தல் கூடுமெனக் கொள்ள லாம். அங்ங்னமாயின், மயில்வாகனப் புலவர் காலம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியெனக் கொள்ளல் வேண் டும்.
எனவே, மயில்வாகனப் புலவர் காலம் 18-ஆம் நூற் றாண்டின் முற்பகுதியெனக் கொள்வர் ஒரு சாரார். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி யும் எனக் கொள்வர் பிறிதொரு சாரார். சிறப்புப் பாயிரத்திற் கூறப்பட்டுள்ள மேக்கறுன் என்பவர் யார் என்பதைத் திட்ட மாக அறிந்து கொள்ளும் வரை, மயில் வாகனப் புலவர் காலத்தையும் திட்டமாகக் கூறல் கஷ்டமானது. எனினும், வண்ணை வைத்தியலிங்கச் செட்டியாரும் மயில்வாகனப் புலவரும் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டனர் என்று கூறப்பட்டாலும், செட்டியாருடன் காசி யாத்திரை செய்த மயில்வாகனப் புலவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து மேலும் சில காலம் வாழ்ந்திருந்தனர் என திரு. தி.சதாசிவ ஐயர் அவர்கள் தக்க சான்றுடன் நிறுவியிருத்தலாலும், மயில்வாக

Page 12
XX
னப் புலவர் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனக் கொள்
வதே சாலப் பொருத்த முடையதென்பது எமது கருத்து. மயில்வாகனப் புலவர் இயற்றிய நூல்கள்
(1) புலியூரந்தாதி. புலியூரென்பது சிதம்பரத்துக்கு வேறொரு பெயர். இவ்வந்தாதி மயில்வாகனப் புலவரின் செய்யுள் யாக்குந் திறனை நன்கு புலப்படுத்துகின்றது. இதற்கு பூரீ ம.க.வேற்பிள்ளையவர்கள் சிறந்ததோர் உரை எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். இந்நூலிற் காணப்படும் சிறப்புப் பாயிரம் வரத பண்டிதர் பாடியதென்பர்.
(2) ஞானாலங்காரரூப நாடகம்: இஃது ஆன்ம தத்து வங்களை உருவக அலங்காரம் செய்து பாடிய நாடக நூல். இஃது அச்சிடப்படவில்லை.
(3) காசியாத்திரை விளக்கம்: இது புலவரவர்கள் காசிக்குச் சென்று திரும்பிய பின்னர் எழுதியது. இதன் ஏட் டுப் பிரதியொன்று செல்லரித்து வாசிக்க முடியாத நிலைமை யில் முதலியார் இராசநாயகம் அவர்கள் வசம் இருந்தது. பின்வருஞ் செய்யுள் அதன் சிறப்பாயிரம் போலும்:
"பிறக்கமுத்தி தருந்தலத்தாற் கினிய (னென)
வருநம்பி பெரியோன் பிள்ளை சிறக்கமு(த்தி த)ந்தருளுந்தலங்களெலாம் வலங்(கொள்ள)ச் சிறுமை நூக்கி ம(றக்க)முத்தியாய்ந்துணர்வோன் வையாவின்
(வழிம)யில்வா கனவே ளிண்டு இறக்கமுத்தி தருந்தலயாத் திரை நூலை
மண்ம(திக்க) வியம்பி னானே."

ΧΧΙ
இவர் வரதபண்டிதர் செய்த சிவராத்திரி புராணத்துக் கும் சிறப்புப்பாயிரக் கவி ஒன்று அளித்துள்ளார். அது வரு மாறு:
'பரத ராசனுய ரசல ராசன்மகள் பங்கனன்புதரு பண்புசேர் விரத ராசசிவ நிசியி னீள்சரித மிகவிளங்கிட விளம்பினான் கரதராசனைய மொழியரங்கனருள் கருணைமாரி நிகர்பரு ணிதன்
வரதராசன்மறை வான ராசன்மிகு மதுர வாசு கவிராசனே." இவர் சின்னத்தம்பிப் புலவர் பாடிய கல்வளையந்தா திக்குச் சிறப்புப்பாயிரக் கவி ஒன்று அளித்துள்ளார். அது வருமாறு:
"செம்பொற் குவட்டினிற் பாரதந்தீட்டிய கோட்டினன்சீர்க் கம்பக் கரிமுகன் கல்வளை வாழுங்கணபதிக்கு நம்பற்கினியமுச்சங்கத்து நூலென நல்லைச்சின்னத் தம்பிப் புலவனல் லந்தாதி மாலையைச் சாற்றினனே." (4) "யாழ்ப்பாண வைபவமாலை" என்பது யாழ்ப்பா ணச் சரித்திரத்தைக் கூறும் வசன நூலாகும். இது வைபவ மாலையெனப் பெயர் பெறுதலின், பத்திய ரூபமான நூலாயி ருத்தல் கூடுமென ஐயுறுவாருமுளர். "யாழ்ப்பாணப்பதிவர லாறுரைத்தமிழாற் கேட்க' எனுஞ் சொற்றொடர் இந்நூலின் சிறப்புப்பாயிரத்துட் காணப்படலாம். இது கத்திய ரூபமான நூலென்பது பெறப்படும்.
நூல் இயற்றப்பட்ட வரலாறு:
"உரராசர் தொழுகழன்மேக் கறுனென்றேதும் உலாந்தேசு மன்னனுரைத் தமிழாற் கேட்க

Page 13
XXII
. யாழ்ப்பாணத்தின் செய்திமயில் வாகனவேள் செப்பி னானே."
என வரும் சிறப்புப்பாயிரச் செய்யுளால் இந்நூல் இயற்றப் பட்ட வரலாறு நன்கு புலனாகின்றது. சிறப்புப் பாயிரத்திற் கூறப்படும் மேக்கறுன் எனும் பெயர் யாரைக் குறிக்கும் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்காண்க.
யாழ்ப்பாண வைபவ மாலை ஆராய்ச்சி
இந்நூலிற் காணப்படும் இரு சிறப்புப் பாயிரங்களுள் 'உரராசர் தொழுகழல்' எனத் தெர்டங்கும் செய்யுள் வரத பண்டிதர் பாடியது என்பதும், "ஒண்ணலங்கொள்' எனத் தொடங்கும் செய்யுள் சின்னத்தம்பிப் புலவர் பாடியதென்ப தும் பூரீவ.குமாரசுவாமியவர்களது மதமாகும். மயில்வாக னப் புலவர் தாம் எழுதிய வைபவமாலை' எனும் நூலுக்குக் (1) கைலாயமாலை, (2) வையா பாடல், (3) பரராசசேகர னுலா, (4) இராசமுறை என்னும் நூல்களையே ஆதாரமாகக் கொண்டாரென்பது சிறப்புப்பாயிரச் செய்யுளால் நன்கு புலப்படும். இந்நூல் நான்கும் தமிழரசர் காலத்தையே விளக் குவன.
மயில்வாகனப் புலவர் இந்நூலில் யாழ்ப்பாடி வரலாறு வரை வையாபாடலைத் தழுவியும், கூழங்கைச் சக்கரவர்த்தி யின் கீழ் யாழ்ப்பாணக் குடியேற்றம் வரை கைலாயமாலை யைத் தழுவியும், யாழ்ப்பாணத்தரசர்களின் வரிசை பரராச சேகரன் வரலாறு ஆகிய இவைகளை இராச முறையினையும் பரராசசேகரன் உலாவையும் தழுவியும் எழுதியுள்ளாரென வண, சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் குறிப்பிடுகின்றார் கள். போர்த்துக்கேயர் கால வரலாற்றுக்கும் ஒல்லாந்தர் கால

XXIII
வரலாற்றுக்கும் மயில்வாகனப் புலவர் தாம் கேள்விப்பட்ட வற்றையும் கன்ன பரம்பரையினையும் ஆதாரமாகக் கொண்டு தலை தடுமாற்றமான கூற்றுகள் பலவற்றைப் புகுத்தி விட்டார். இவர் சிறந்த புலவரன்றிச் சரித்திராசிரியர் எனக் கருத இடமில்லை. எனினும், இராசமுறையும் பரராச சேகரனுலாவும் வெளிவாராதிருக்கும் வரை, யாழ்ப்பாண வைபவமாலைதான் யாழ்ப்பாணத்தரசர்களின் வரலாற்றை விளக்கிக் காட்டும் தீபமாய் மிளிர்கின்றது.
இந்நூலிற் காணப்படும் சரித்திர முரண்பாடுகளையெல் லாம் வண, சுவாமி ஞானப்பிரகாசர் as Guiscit "The Ceylon Antiquary and Literary Register (Volume VI Part III)" Gigib Fé5éa)5ugdi) GTQ95u 'Sources of the Yalpana Vaipava Malai’ எனும் கட்டுரையில் காணலாம். மேலும், அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Kings of Jaffna எனும் நூலிலும், யாழ்ப்பாண வைபவ விமரிசனம்' எனும் நூலிலும் விரிவா கக் காணலாம். அங்ங்னமே முதலியார் இராசநாயகம் அவர் கள் ஆங்கிலத்தில் எழுதிய 'Ancient Jaffna எனும் ஆங்கில நூலிலும், யாழ்ப்பாணச் சரித்திரம்' எனும் தமிழ் நூலிலும் விரிவாகக் காணலாம். இவற்றிற் காணப்படும் முக்கியக் குறிப்புகளையெல்லாம் இந்நூலிலும் அடிக்குறிப்பாகக் காட் டியுள்ளேன். அவற்றை யெல்லாம் ஈண்டெடுத்துத் தொகுத் தெழுதுவதாயின், இவ்வாராய்ச்சி அளவின்றி விரியுமாத லின், குறிப்பிடாது விடுகின்றேன். இந்நூலை ஏடுகளிற் பிரதி செய்தவர்களும் பதிப்பித்தவர்களும் தம் கருத்துகளையும் இடைச் செருகலாகப் புகுத்தி விட்டனர். அவற்றை இயன்ற வரை நீக்கியே இந்நூலை வெளியிட முயன்றுள்ளேன்.

Page 14
XXIV
இப்பதிப்பில் எடுத்துக்காட்டிய நூற்பெயர்கள்
முதலியவற்றின் குறிப்பு விளக்கம்:
பி-ம் - பிரதிபேதம் தி.த.க.பிரதி - திரிகோணமலை த.கனகசுந்தரம்
பிள்ளை பிரதி.
T - யாழ்ப்பாணச் சரித்திரம் - முதலியார்
செ.இராசநாயகம்.
யா.வை.வி. - யாழ்ப்பாண வைபவ விமரிசனம் -
வண. சுவாமி ஞானப்பிரகாசர். இ.ஆ. - இடப்பெயர் ஆராய்ச்சி - திரு.
SW.குமாரசுவாமி அவர்கள். உதா.பிரதி - உதயதாரகைப் பிரதி.
யா.வை. கெளமுதி - யாழ்ப்பாண வைபவ கௌமுதி - வயா விளான், திரு. க.வேலுப்பிள்ளை அவர் கள்.

யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பாண வைபவமாலை
சிறப்புப்பாயிரம்
a. உரராசர் தொழுகழன்மேக் கறுனென்றோதும்
உலாந்தேசு மன்னனுரைத் தமிழாற் கேட்க வரராச கைலாய மாலை தொன்னூல்
வரம்புகண்ட கவிஞர்பிரான் வையா பாடல்
a. இச்செய்யுளொன்றுதான் பெரும்பான்மையாக வழக்கிலுண்டு.
1. இந்நூல் பூரீமான் த.கைலாசபிள்ளை அவர்களால் 1906-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. பூரீமதி க.ராஜ ராஜேசுவரி அம்மை யார் எழுதிய அரும்பதவிளக்கம் பிண்டப் பொழிப்பு என்பவற்றையும், முதலியார் இராசநாயகம் அவர்கள் எழுதிய ஆராய்ச்சி முன்னுரையி னையும், பூரீமான் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் 1907-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பினையும் ஒருங்கு சேர்த்து, இந்நூல் பூரீமான்சே.வெ.ஜம்புலிங்கம் பிள்ளை அவர்களால் 1939- ஆம் ஆண்டு மீட்டும் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. (நூலா சிரியர்: முத்துராச கவிராசர்)
2. இந்நூல், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியர் பூரீமான் JWஅருட்பிரகாசம் அவர்களால் 1921-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட் டுள்ளது. இது பூரீமான் இ.து.சிவானந்தர் அவர்களாலும் 1922-ஆம் ஆண்டு பினாங்கில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூல் உரைநடையில் 'வையா எனும் நாட்டு வளம்" என்ற பெயருடன் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களால் 1921-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக் கின்றது.

Page 15
யாழ்ப்பாண வைபவமாலை
பரராசசேகரன்றன் னுலாவுங் காலப்
படிவழுவாதுற்றசம்ப வங்க டீட்டுந் திரராச முறைகளுந்தேர்ந்தியாழ்ப்பாணத்தின் செய்திமயில் வாகனவேள் செப்பி னானே. ஒண்ணலங்கொள் மேக்கறுனென் றோதுபெயர்
பெற்றவிற லுலாந்தே சண்ணல் பண்ணலங்கொள் யாழ்ப்பாணப் பதிவரலா
றுரைத்தமிழாற் பரிந்து கேட்கத் திண்ணிலங்கு வேற்படையான் செகராச
சேகரன்றொல் லவைசேர் தொன்னூல் மண்ணிலங்கு சீர்த்திவையா மரபில்மயில் வாகனவேள் வகுத்திட்டானே.
1. இந்நூல் வெளிவந்திலது
b, பிரித்தானிய நூதன சாலையில் உள்ள பிரதியிலிருந்து பிரதி செய்து முதன்முதலாக வெளியிட்டவர் முதலியார் இராசநாயகம்
saufset frauf (Hindu Organ 29.10.34)
இச்செய்யுள்களின் வரலாறு விளங்கவில்லை. இவற்றைப் பாடினோர் யாவர் எனத் துணிந்து கூற முடியவில்லை. முதலாம் செய்யுளைப் பாடியவர் வரதபண்டிதர் எனவும், இரண்டாம் செய் யுளைப் பாடியவர் சின்னத்தம்பிப்புலவர் எனவும், காலஞ்சென்ற பூரீமான் வ.குமாரசுவாமி அவர்கள் கருதினார்கள். புலவர் மூவ ரும் ஒரே காலத்தவர் என்பது உண்மையெனினும், பாடினோர்
வரலாறு துணிந்து கூற முடியவில்லை.

uuript'currewRT BODeall JenuLorrespea) 3.
யாழ்ப்பாண வைபவமாலை
இராட்சதர் கிரேதத்திரேதத்துவாபர உகங்களென்னும் முதல் மூன் றுகங்களிலும் இலங்கையை இராட்சதர்கள் அரசாண்டார்க ளென்று இதிகாச புராணங்கள் கூறுகின்றன. இராவணசங்கா ரம் முடிந்த பின், இவ்விலங்கை அரசாட்சியைத் தசரதராம னாற் பெற்ற விபீஷணன், கலியுக முற்கூற்றிலும் அரசியற்றி, நாராயண மூர்த்தியின் உத்தரவு பெற்று வைகுந்த பதவியில் தேகமுத்தி அடைந்தானென்றும், அவன் நீங்கிய பின் வேற்ற ரசரின் கீழ்க் குடிகளாயிருப்பது நெறியல்லவென்று இராக்க தக் குடிகளாயுள்ளோரனை வரும் இலங்கையை விட்டு வலசை வாங்கினார்களென்றுஞ் சொல்லுவது கன்னபரம்
பரை.
விஜயன் இற்றைக்கு 2400 வருஷங்களுக்குமுன் இவ்விலங்கை நாடு, யானை, கரடி, புலி, மிருகங்கள் சஞ்சரிக்கும் பெரு
வனாந்தரமாயிருந்து. அவ்வனாந் தரத்திற் சில வேடரே யன்றி, யாதொரு மானிட சீவனும் இருந்ததில்லை.
1. கிரேதயுகம் - 17.28,000 வருடங்கொண்டது
திரேதயுகம் - 92,96,000 துவாபரயுகம் - 8,64,000
2. இராட்சதர் - இயக்கர்.
3. இச்சரித்திரம் எழுதிய காலம் கி.பி.1790க்கு முன் பின்னாய் இருக்க
வேண்டும்.

Page 16
4. யாழ்ப்பாண வைபவமாலை
அக்காலத்திலே வங்கதேசத்துச் சத்திரிய மரபிற்பிறந்து இலாட தேசத்தை அரசாண்ட சிங்கவாகுவின் குமாரன் விஜ யன் என்பவன் மகா துஷ்டனாயிருந்ததனால், அவனைப் பிதாவாகிய சிங்கவாகு துரத்திவிட, அவன் புறப்பட்டு அங் குமிங்கும் போக, ஒருவரும் இடங்கொடாததனால், அவன் காசிக்குப் போய் அங்கேயிருந்தான்.
ஆசாரியர்
அவ்விடத்தில் விஜயகுமாரனுக்கு, "நீ இலங்கை நாட் டின் மத்தியிலுள்ள கதிரை மலையிற் போயிரு, அந்த நாடு உனக்குரியது," எனச் சொப்பனத்தில் உத்தரவு கிடைத்தத னால், அவன் நீலகண்டாசாரியர் என்னுங் குருவை அழைக்க, அவர் தமது பத்தினியாகிய அகிலாண்ட வல்லி யம்மாளையும், புத்திர புத்திரிகளையும், மருமக்களையுங் கூட்டிக் கொண்டு வந்து தன் பரிவாரங்களுடன் கதிரை மலை யிற் சேர்ந்தான்."
குடியேற்றம்
அக்காலத்தில் இலங்கையிற் குடிசனங்கள் யாருமில்
லாததனால், விஜயராசன் குடிகளை அழைத்துக்
1. புத்த தேவர் நிருவானதசையை அடைந்தநாளில் விஜயன்இலங் ன்கயிலிறங்கினான். (மகா:54). விஜயன்இலங்கையில் இறங்கிய விடம் மாந்தை அல்லது கீரிமலையாகும் (யா.ச.9). பிற்காலத் தில் சிங்கைநகர் என வழங்கிய வில்லிபுரத்திலுமாயிருக்கலாம். 2. இலங்கைத்தீவில் இயக்கர்,நாகர் எனும்பூர்விகக்குடிகள்பரவியி ருந்தார்கள் (மகா: 3,7). இவர்கள் திராவிட வகுப்பைச் சார்ந்தவர்
கள். சைவ சமயத்தினர்கள்.

யாழ்ப்பாண வைபவமாலை 5
குடியேற்றக் கருதிப் பல முயற்சிகளைச் செய்து பார்த்தான். இலங்கை இராட்சத நாடாயிருந்ததனால், 'அவ்விடத்துக்கு வரமாட்டோம்' என்று கன்னியாகுமரி தொடங்கி இமய மலை பரியந்தமிருந்த அனைவரும் மறுத்துப் பேசினார்கள். அக்காலத்திலே மகதநாட்டுச் சனங்கள் அநேகர் புத்த சமயத் துக்குட்பட்டதனால், மகதராசன் அவர்களை அந்நாட்டை விட்டுத் துரத்திவிட, அவர்களிற் சிலர் இமயமலைக்கு வடதி சையிற் போயிருந்தனர். பலர் பிரமபுத்திர நதியைக் கடந்து கிழக்கே போய், பிரம்மதேசத்தைச் சேர்ந்த சீயம் முதலிய நாடுகளில் அலைந்து திரிந்தார்கள். அந்தச் செய்தியை விஜ யராசன் அறிந்து, அவ்விடஞ்சென்று, அவர்களிற் பல குடி களை அழைத்து வந்து, இலங்கையினெத்திசையிலுங் குடி யேற்றி, நகரப் பிரதிஷ்டைசெய்து, அரசாட்சியை ஆரம்பித் தான். அந்தப் புத்தர்கள் சிங்களம் என்னும் பெயருள்ள இலங்கையிற் குடியேறினதாற் சிங்களர் எனப் பெயர் பெற் றார்கள்.
1. இச்செய்தி மகாவமிசம் முதலிய சிங்கள நூல்களில் இல்லை.
2. இலங்கையில் வசித்த நாகரும் இயக்கரும் 'எலு" என்று இக்காலத் திற் பிழைபட வழங்கப்படும். 'FEp' என்னும் நிறைவற்ற பாஷையே பேசி வந்தார்கள். அதனால், இலங்கைக்கு 'ஈழம்" என்றும், "ஈழமண்ட லம்’ என்றும் பெயர் உண்டாயின. 'ஈழம் 'சீழம்' என மருவிச் 'சிஹழம்' ‘சிங்களம்' என மாறியது (யா.ச.ப.11), எலு' பாஷை தமிழின் பாகத மென்பர் சுவாமி ஞானப் பிரகாசர். ヘ*
3. பூர்வீகச் சிங்களருட் பெரும்பாலார் திராவிடரும், மிகச் சிறுபா
லார் மகதநாட்டினருமாவர். சிங்களருடைய நடையுடை பாவனைகள்

Page 17
6 யாழ்ப்பாண வைபவமாலை
நாற்பெருங்கோயில்
குடிகளை வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தினால் விஜயராசன் சமய வழிபாட்டைக் குறித்துச் சனங்களுக்கு இஷ்டங் கொடுத்திருந்துந் தன் சமயாசார வொழுக்கத்தைத் தவறாமற் காத்துக் கொண்டான். அரசாட்சியை ஆரம்பிக்க முன்னமே விஜயராசன் தன் அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நாலு திக்கிலும் நாலு சிவாலயங்களை எழுப்பிக் கொண் டான். கீழ்த்திசைக்குத் தம்பலகாமத்துக் கோணேசர் கோவிலைநிறுவி°மேற்றிசைக்குமாதோட்டத்திற்பழுது பட்டுக் கிடந்த திருக்கேச்சுரர் சிவாலயத்தைப் புதுப்பித்து, தென்றிசைக்கு மாத்துறையிற் சந்திரசேகரேச்சுரன் கோவிலை எழுப்பி, வடதிசைக்குக் கீரிமலைச் சாரலில் திருத்தம்பலை எனும் பதியிலே திருத்தம்பலேச்சுரன், திருத்தம்பலேசுவரி கோவில்களையும், அவைகளின் சமீ பத்திலே கதிரையாண்டவர் கோவிலையும் கட்டுவித்து அவ்வாலயங்கட்குப் பூசனை நடாத்தும்படியும் நீலகண்டா சாரியரின் மூன்றாங்கு மாரன் வாமதேவாசாரியன் என் னும் காசியிற் பிராமணனையும் அவன் பன்னியாகிய
சமயம் முதலியன தமிழர்களுடையவற்றைப் பெரும்பாலும் ஒத்திருக் கின்றன. இவர்களுடைய மொழி தமிழும் மகதநாட்டு மொழியுங் கலந்த தொன்றாம் (பிறிற்றே). சிங்களர் திராவிட மக்கட் கணத்தைச் சேர்ந்த வொரு பிரிவினர் (மனுஷ பரம்பரை- Pedigee of Man - ஆசிரியர்
Gapäkasidio - Prof. Hackel)
1. விஜயன் பாண்டியவரசனின் மகளை மணந்தானென மகாவமி சம் குறிப்பிடுகின்றது. இவனும் சைவ சமயத்தவன் எனக் கொள்ளல் சரித்திரத்தோடுமுரணாகாது இயைந்து நிற்றல் காண்க.
2. பி-ம். புதுப்பித்து.

யாழ்ப்பாண வைபவமாலை 7
விசாலாட்சியம்மாளையும் அழைப்பித்து அக்கிரகாரம் முத லிய வசதிகளுங்கொடுத்துஇருத்திவைத்தான். அக்கோவில் அவ்விடத்துத் தோன்றிய காரணத்தால், அந்தக் கிராமம் கோவிற்கடவை எனப் பெயர் பெற்றது.
நகுலமுனி
முற்காலத்திலே நகுலமுனி என்னும் ஓர் இருடி அங் குள்ள மலைச்சாரலிலே சில காலந்தங்கியிருந்து தீர்த்தமாடி வந்த பொழுது தன் முகத்துக்கிருந்த அங்கவீனம் நீங்கிப் போனது கண்டு, அத்தல விசேடத்தையுந் தீர்த்த மகிமையை யுங் குறித்து வியப்புற்று, அவ்விடமே தனக்குத்தவஞ்செய்த தற்கேற்றவிடமென்று அம்மலை முழைஞ்சிலே வாசஞ் செய்து கொண்டிருந்தார். அம்முனிவனுக்குக் கீரிமுகம் மாறிய காரணத்தால், அம்மலையைக் கீரிமலை என்பார் கள். விஜயராசன் அவ்விடத்திற் சிவாலயங் கட்டுவித்த பின் நகுல முனிவர் அவ்வாலயங்களிற்றங்கியிருந்து வழி பாடு பண்ணி வந்தார். அதனால், திருத்தம்பலேச்சுரர் கோவிலை நகுலேசுரர் கோவிலென்றும் திருத்தம்
1. கிரி என்னும் வடசொல்லும் அதன் பொருடரும் மலை என்னுந் தென்சொல்லுஞ்சேர்ந்துகிரிமலை என்னும் நாமம்ஆக, அந்நாமம்காலக் கிரமத்திற் கீரிமலை என்று விகாரப்பட்டு வழங்கலாயிற்றென்று விளம்பு GITObСротi. (9).-g. Lš.1319ČJSl(98) Biges/606) - Suthuvala-vala - sand!
aff - clinsene coracena.
நாகுலம் எனும் இதன் பழைய நாமம் நகுலமென மருவிப் பின் தமிழில் கீரிமலையென்றாயிற்று. (யா.ச. பக்.3)
2. தி.த.க. பிரதி "நகுலம் என்பது கீரி' என்பதுஞ் சேர்க்கப்பட் டுள்ளது.

Page 18
8 யாழ்ப்பாண வைபவமாலை
பலேசுவரியம்மன் கோவிலை நகுலாம்பிகையம்மன் கோவிலென்றும் பெயரிட்டு வழங்கி வந்தார்கள். விசயரா சன் திருப்பணி நிறைவேற்றி முடித்த பின் பிரயாணப்பட்டுத் தன்னிராச்சியம் முழுவதையும் சுற்றிப் பார்த்துக் கொண்டு கதிரை மலையைச் சேர்ந்தான்.
விஜயன் மரணம்
அவன் அதன் பின்பு தம்மனா என்னுமிடத்தை இராச தானியாக்கித் தன் மனைவியையும் இரண்டு குழந்தைகளை யும் தள்ளிவிட்டுப் பாண்டி நாட்டுப் பெண்ணொருத்தியை விவாகம் பண்ணிச் சிலவருஷ காலம் அரசாண்டு, புத்திர சந்தானமில்லாமல் இறந்து போனான். அவன் மந்திரிஇராச்சி யத்தைத் தளம்ப விடாமல், ஒரு வருஷங் காப்பாற்றி, பின்பு விஜயராசனின் சகோதரன் குமாரனாகிய பாண்டுவசு என்ப வனை அழைத்து வந்து, அரசனாக்கினான். இவன் குலத்தில் அரசர் அதன் பின் அநேகந் தலைமுறையாக இவ்விலங்கை நாட்டை அரசாண்டு வந்தார்கள்.
குளக்கோட்டன் வருகை
சாலிவாகன சகாத்தம் 358-ஆம் வருஷத்திலே (கி.பி.436) மனுநீதி கண்ட சோழன் மகன் குளக்கோட்டு மகராசன் யாத்திரை பண்ணித் திருக்கோணேசர்
1.'மனைவி இயக்ககுலக் குவேனி' என மகாவமிசம் குறிப்பிடுகின் றது.
2. இவன் பாண்டியன் மகளையல்ல, இலங்கையிலுள்ள நாக கன்னி கையை மணமுடித்தான் என்பர் இராசநாயக முதலியார் (யா.ச. பக்.11)

யாழ்ப்பாண வைபவமாலை 9
மலையிற் சேர்ந்து, கோணேசர் சிவாலயத்தைத் தரிசித்துத் தம்பலகாமத்திற் பழுது பட்டுக் கிடந்த கோணேசர் சிவாலயத் தைப் பழுது பார்ப்பித்து அக்கிரகாரம் முதலிய வேலைகள் அனைத்தையும் திருத்துவித்துக் கொண்டிருந்தான்.
பாண்டுவின் ஆட்சி
அக்காலத்திலே கண்டி நாட்டிலிருந்து இலங்கையை அரசாண்டபாண்டு மகாராஜன் மணற்றிடர் என்று அழைக் கப்பட்ட இந்நாட்டில் வந்திருந்தான். இவ்விடத்திற் குடியி ருந்த சிங்களரிற் சிலர் கீரிமலைக்குச் சமீபமாயிருந்த கரை துறைகளிற் குடியிருந்த முக்குகரென்னும் வலைஞரைக் கொண்டு மீன் பிடிப்பித்து உணக்குவித்துக் கண்டி நாடு முத லிய நாடுகளுக்குக் கொண்டுபோய் வியாபாரம் பண்ணுவது வழக்கமாயிருந்தது.
முக்குகள்
உசுமன், சேந்தன் முதலிய முக்குகத் தலைவர்கள் வேலையாட்களை வைத்து மீன் பிடிப்பித்துக் கொண்டு வந் தார்கள். சிங்களவர் நிழல் வசதிக்கும் தண்ணீர் வசதிக்குமாக அங்குள்ள சிவாலயங்களிற்றங்கி அக்கோவிற் பிரகாரங்க ளில் மீனைக் காயப்போட்டும், திருக்கிணறுகளில்
1. பி-ம். அநுராதபுரத்திலிருந்து
2. இவன் காலம் சிங்கள நூல்களின்படி கி.பி.491 ஆகும்.

Page 19
1 O யாழ்ப்பாண வைபவமாலை
தண்ணீர் அள்ளவுந் தொடங்கினதனால் அங்கிருந்த பிராம ணர்கள் கோவில்களைப் பூட்டிக் கொண்டு அப்புறத்தே ஒதுங்கி விட்டார்கள். கோவில்களிற் சில காலம் பூசை இல்லா மலிருந்தது. அதையறிந்து பாண்டு மகாராசன் கீரிமலைச்சா
டனை செய்து, முக்குகக் குடிகளை அவ்விடத்தை விட்டுத்
அவ்விடத்தை விட்டு மட்டக்களப்புக்குப் போய்ப் பானகை, வலையிறவு என்னுமிடங்களில் இருந்தார்கள். சில குடிகள் மாத்திரம் இந்நாட்டிலுள்ள மறு துறைகளிற் போய்க் குடியிருந்தார்கள். அது முதல் உசுமன் துறை, சேந் தன் களம், வலித்தூண்டல் முதலிய இடங்களில் முக்குகக் குடிகள் இருந்ததில்லை.
குளக்கோட்டன் - பாண்டு மகாராசன் இந்த முகாந்திரத்தினால் இவ்விட மிருக்க, அவன் மனைவி குளக்கோட்டமகாராசன் கோணேசர் கோவிற்றிருப்பணி நிறைவேற்றுஞ் செய்தியைக் கேள்விப்பட்டுக்கண்டியிலிருந்த சிலசேனைகளை நீங்கள் போய் அந்தக் குளக்கோட்டனை இந்நாட்டினின்று துரத்தி விட்டு வாருங்கள்' என்றனுப்பி விட்டாள். அந்தச் சேனை கள் தம்பலகாமத்திற் போய், அவ்விடத்திற்கு குளக்கோட்ட ரசன் நிறைவேற்றும் பெரிய வேலைகளையும் அவனுடன் நின்ற சேனைத் திரளையும் அரசன் அச்சேனா வீரர்களை நோக்கி,
1. பி-ம். அநுராதபுரத்திலிருந்த

யாழ்ப்பாண வைபவமாலை 11
"ஏன் வந்தீர்கள்?' என்ன, அவர்கள், "மகாராசனே, இந்தத் திருப்பணிக்கு வேண்டிய பொருள் யாதேனும் தேவையென் றால், விசாரித்துக் கொடுத்து விட்டு வாருங்கள் என்று எங் கள் அரசி அனுப்ப, வந்தோம்,' என்றார்கள். அப்பொழுது மகாராசன் அவர்களை நோக்கி, ‘வேண்டிய சகல வஸ்துக்க ளும் என்னிடத்திற் சம்பூரணமாயிருக்கின்றன; யாதொன்றும் வேண்டியதில்லை; உங்கள் சேமாதிசயங்களை விசாரித் தேன் என்று உங்கள் இராணிக்கு அறிவியுங்கள்,' என்று சொல்லி அச்சேனை முழுவதற்கும் உச்சிதமான விருந்து கொடுத்து அனுப்பினான். அவர்கள் திரும்பிப் போய், அவ் விடத்திலே நடந்த செய்தி அனைத்தையும் அறிவித்துத் தாங் களுண்ட விருந்திற் பரிமாறிய பதார்த்தங்களின் மதுரத்தை யும் வியந்து பேசினார்கள். இராசாத்தி அந்தச் செய்தியைக் கேட்டு யாதொரு பேச்சுமின்றி இருந்தாள்.
குளக்கோட்டு மகாராசன் திருப்பணியை நிறை வேற்றி, அவ்வாலயப் பணிவிடைகளை நிறைவேற்றுவதற் கும், கோணேசலிங்கத்துக்குப் பூசனை புரிவிப்பதற்கும் செலவு வரவுகளுக்காக ஏழு நாடுகளில் வயல் நிலங்கள்ை யுந் தோப்புகளையும் ஏற்படுத்தி, அவைகளிற் பயிரிட்டு வருமானஞ் செலுத்தும்படி வன்னியர்களை அழைப்பித் துக் குடியிருத்தித் தன் நாட்டுக்கு மீண்டான்.
1. இக்கூற்றினை நம்பக்கூடாதென்பர் முதலியார் இராசநாயகம் அவர்கள். (யா.ச.பக். 24)

Page 20
12 யாழ்ப்பாண வைபவமாலை
அந்நாள் முதல் அவ்வருமானங்களால் ஆலயப் பணி விடைகளும், அந்தணர் அக்கிரகாரங்களும், மடங்களும் சம்பிரமமாகச் சிறந்து விளங்கின. சில காலத்தின் பின் குளக் கோட்டு மகாராசன் தேக வியோகமானான். அதன்பின் மேற்கூறிய ஏழு நாடுகளிலும் பயிர்க் குடிகளாயிருந்த வன் னியர்கள் மிகவும் பெருகியிருந்தார்கள். பாண்டி நாட்டிலி ருந்து ஐம்பத்தொன்பது வன்னியர்களும் வந்து அவர்களு டனே கூடினார்கள். குடிசனங்கள் வர வரப் பெருகி அதிகப் பட்டமையால், அரசாட்சியின்றி வெகு விதக் கலகங்கள் பலகாலும் நேரிட்டன. அவ்வேழு நாடுகளின் வருமானங்க ளும் கோணேசர் கோவிலுக்குச் செல்வனவேயன்றிக் கண்டி நாட்டரசருக்கு அந்நாடுகளால் யாதொரு நயமுமில்லாமை யால், கண்டி நாட்டு அரசர்கள் அந்நாடுகளைப் பராமுகம் பண்ணி விட்டார்கள். அக்காலத்திலே சந்திரவன்னியனும் வேறு அநேக குறுநில மன்னரும் ஒருவரின் பின் ஒருவராகத் தோன்றி அழிந்த பின் அவ்வன்னியர் அனைவரும் ஒத்தி ணங்கித் தங்கள் சாதியிற்றலைப்பட்ட ஏழு பேரைத் தெரிந்து, அவ்வேழு நாடுகளுக்குந் தலைவராக்கி, அவர்கள் கீழ் அமைந்திருந்தனர். வன்னியர் ஆண்டு வந்ததனால் அவ் வேழு நாடுகளும் வன்னிய நாடுகள் எனப் பெயர் பெற் றன. அது முதல் அவ்வேழு தலைவரின் சந்ததியார் சுயேச் சைப்படி ஆண்டு வந்தனர்.
சாலிவாகன சகாத்தம் 515-ஆம் (கி.பி.593) வருஷத் திலே இலங்கையரசனாயிருந்த அக்கிரபோதி மகாராசன்,
1. முதலாம் அக்கிரபோதியின் காலம், சிங்கள நூல்களின்படி, கி.பி.564-597 ஆகும்.

யாழ்ப்பாண வைபவமாலை 13
அவ்வன்னியர்கள் தாங்களும் அரசர்களென்னும் எண்ணங் கொள்ளப் பார்த்ததை அறிந்து, அவ்வன்னியர்களின் அதிகா ரத்தைக் குறைத்துத் தன் ஆணையைச் சரியாகச் செலுத்தி வந்தான். அதுமுதல் அவ்வன்னியர்கள் நாட்டதிகாரிகளாய் மாத்திரம் ஆண்டு வந்தார்கள்.
உக்கிரசிங்கன்
சாலிவாகன சகாத்தம் 717-ல் (கி.பி.795) விஜயராச னின் சகோதரன் மரபிற் பிறந்த உக்கிரசிங்கன் என்னும் அரசன் வடதிசையிலிருந்து பெருந்திரளான சேனைகளைக் கொண்டு வந்து போராடிச் சில தலைமுறையாய் இழந்து போனஇவ்விலங்கை அரசாட்சியில் அரை வாசி வரைக்கும் பிடித்துக் கதிரை மலையிலிருந்து அரசாண்டு வந்தான். தென் னாடுகளை வேற்றரசன் ஆண்டுவந்தான்.
இவ்வுக்கிரசிங்க மகாராசனுக்குச் சிங்கத்தையொத்த முகமும் மானிட தேகமுமிருந்தன. இவன் நகுலேசர் கோவி லைத் தரிசிக்கக் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி, முற்காலத்' திலே சோழராசன் தான் தீர்த்தமாட வந்திறங்கியிருக்கும் காலத்திலே மாளிகை கட்டுவித்திருந்த வளவர்கோன் பள் ளம் என்னும் இடத்திலே பாளயமிட்டிருந்தான்.
1. உக்கிரசிங்கன் அரசுக்கு வைபவமாலை கொடுத்தோதுகின்ற 717-ஆம் சக வருஷத் தொடக்கம் பொருந்தாது (யா.வை.வி. பக் 48) இவன் கலிங்கதேசத்திலிருந்து வந்தவனோ, அல்லது விஜயனுடன் வந்து சிங்கபுரத்திற் குடியேறிய தலைவனோ? (யா.ச.28)

Page 21
操
14 யாழ்ப்பாண வைபவமாலை
தொண்டைமான் வரவு அவன் அவ்விடத்தில் வந்திருப்பதையும், கரண வாய், வெள்ளப்பரவை முதலிய இடங்களில் நல்லுப்புப் படுஞ்செய்தியையும் தொண்டை நாட்டை அரசாண்ட தொண்டைமான் என்னும் அரசன் கேள்விப்பட்டுப் பரிவா ரங்களுடன் கீரிமலைச் சாரலில் வந்திறங்கிச் சந்தித்து, அந் நாட்டில் விளையும் உப்பிலே தனக்கு வேண்டியவளவு வரு
டந்தோறும் விலைக்குக் கொடுக்கவும், உப்புப் படுமிடத்துக்
குச் சமீபத்திலே மரக்கலங்களைக் கொண்டுபோய் உப்பேற்ற வும், மாரி காலங்களில் மரக்கலங்களை ஒதுக்கிவிட்டு நிற்க வும் வசதியாக வடகடலில் ஓர் ஆறு வெட்டுவித்துக்கொள்ள வும் உத்திரவு கேட்டான். உக்கிரசிங்க மகாராசன் உத்தரவு கொடுக்கத் தொண்டைமான் அங்கிருந்த சிற்றாற்றை மரக்க லங்கள் ஒடத்தக்க ஆழமும் விசாலமும் உள்ளதாகவும் ஒதுக் கிடமுள்ளதாகவும் வெட்டுவித்துத் தன்னூருக்கு மீண்டான். அது முதல் இதுவரைக்கும் அவ்வாறு தொண்டைமானாறு என்று அழைக்கப்படுகின்றது.
வன்னியர் அடக்கம்
உக்கிரசிங்க மகாராசன் அதன்பின் கதிரை மலைக்குத் திரும்பினான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர் ஏழு பேரும் எதிர்கொண்டு வந்து, தாங்கள் வன்னி நாடுகளைத் திறைகொடுத்து ஆள உத்தரவு
1. பி-ம். அவ்விடமிருக்க

யாழ்ப்பாண வைபவமாலை 15
கேட்டனர். அரசன் தன்னிராச்சியமெங்கும் தன் ஆணையே செல்லவுந் தனக்கு வரவேண்டிய திறையைக் கோணேசர் கோவிலுக்குக் கொடுக்கவும் உடன்பாடு பண்ணுவித்துக் கொண்டு கதிரை மலையிற் சேர்ந்தான்.
மாருதப்பிரவல்லி இவை சம்பவித்த எட்டாம் வருடத்திலே சோழ தேசாதி பதியாகிய திசையுக்கிரசோழன் மகள் மாருதப்பிரவல்லி என்பவள், தனக்கிருந்த குன்ம வியாதியினால் மெலிந்தவ ளாய், வியாதியை வைத்தியர் ஒருவருஞ் சுகமாக்க முடியாத தனால், இனித் தீர்த்த யாத்திரையாதல் செய்து பார்த்தால் சுகம் வரவுங்கூடும்', என்றெண்ணிக் காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து புறப்பட்டு, அங்குமிங்கும் போய்த் தீர்த்தமாடி வரு கையில் சாந்தலிங்கனென்னும் ஒரு சந்நியாசி கண்டு, "உன் வியாதி பண்டிதர் ஒருவராலுங் குணமாக்கத் தக்கதன்று. நீ இப்பொழுது எடுத்த முயற்சியே உனக்குச் சுகம் தரத்தக்கது. இலங்கையின் வடமுனையிலே கீரிமலை என்றொரு மலை யுண்டு. அது சமுத்திர தீரத்திலுள்ளது. அங்கே உவர்ச்சல் மத்தியிற் சுத்த தீர்த்தமும் மலையருவித் தீர்த்தமுங் கலந்த உத்தம தீர்த்தம் ஒன்றுண்டு. அது உலகத்திலுள்ள எந்தத் தீர்த்தங்களிலும் முக்கிய தீர்த்தமாயிருக்கின்றது. அதிலே நீ போய் நீராடிச் சில காலந் தங்கியிருந்தாற் சுகமடைவாய்'
1. மாருதப்பிரவல்லி உள்ளபடி மாறுதலடைந்த ஆடகசவுந்தரியே யாம். (யா.வை.வி. பக்.12)

Page 22

யாழ்ப்பாண வைபவமாலை 17
யும், அத்தீர்த்தத்தில் ஆடித்தனக்குக் கீரிமுகம் மாறின செய்தி யையும் அம்முனிவர் சொல்லக் கேட்டு,மிக்க சந்தோஷத்து டன் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனை செய்து வந்தாள். சில காலத்தில் அவளுக்கிருந்த குன்மவலியுந் தீர்ந்து, குதிரை முகமும் மாறிற்று. மாறவே, மாருதப்பிரவல்லியின் யெள வன சொரூபத்தைக் கண்டவர்கள் ஆச்சரியங் கொள்ளாதி ருந்ததில்லை.
வந்திறங்கினதுறை காங்கேசன்துறை என்று அழைக்கப்பட்டு, இப்பொ ழுது கசாத்துறை என்னும் பெயர் பெற்றிருக்கிறது.
"இரண்டாம் உகத்திலே இராவணன் தானொருவனேயன்றி வேறொருவரும் இராவண வீணையைத் தொடவும் படாதென்று உறுதி யான கட்டளை பண்ணியிருந்த பொழுது சித்திராங்கதன் என்னுமொரு கந்தருவன், தானும் அவ்வினையை வாசிக்க நெடுங்காலம் பேராசை கொண்டிருந்தவன், தசரதராமனால் அவ்விராவணனுடைய இருபது கைகளும் அறுந்து விழுந்த சமயத்திலே அவ்விணையைக் கவர்ந்து கீரிம லையில் வந்திறங்கி, அவ்வியாழைப் பிரபலப்படுத்தினான். அதனாலில் விடம் காந்தருவநகர் என்றும், வீணாகராக்கியம் என்றும் வழங்கப்பட்
-3.
“மூன்றாமுகத்திலே நிடதநாட்டிலிருந்து அரசு புரிந்த நளனென் னுஞ் சூரியகுலராசன், சூதாடி அரசிழந்து, வனவாசஞ் செய்து திரிந்த பொழுது கலியினால் தனக்கு வந்த இடரை நீக்க வேண்டுமென்ற ஆவலு டனே இலங்கையிலிலுள்ள கோணேசர் சந்நிதானத்துக்குவந்தான். அங்கி ருந்த பெரியார் அவனை நோக்கி, “நீ கீரிமலைக்குப் போய் அங்குள்ள கண்டகி தீர்த்தத்திலாடி, நகுலேசர் தரிசனையும் செய்தால், உன் கலி தொலையும்' என்று சொல்ல, அச்சொற்படி அவன் செய்தான். அப்பொ ழுது நகுலேசர் பிரசன்னமாகி அவனை நோக்கி, நீ வேண்டிக் கொண்ட படி செய்தேன்; போ' என்றருளிச் செய்து, தம் கையில் அக்கினியையும் தாமணிந்திருந்த சர்ப்பத்தையும் நோக்கி, "நீங்கள் போய்நளச்சக்கரவர்த் தியை வழியிலேயே சந்தித்து, அவனைப் பிடித்த கலியிடரை நீக்கி வாருங்கள்,' என்றுத்தரவு பண்ணினார். அப்படியே நளச்

Page 23
18 யாழ்ப்பாண வைபவமாலை
அக்காலத்திலே கதிரை மலையிலிருந்து உக்கிரசிங்க மகாராசன் நகுலேசர் கோவிலைத் தரிசிக்க மூன்றாந்தரம் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி, வளவர்கோன் பள்ளத்திற்பா ளையம் போட்டிருந்தான். அவன் மாருதப்பிரவல்லியை நகுலேசர் சந்நிதானத்தயலிலே கண்டு, அவள் பேரழகினால் மயங்கி, மிகுந்த ஆச்சரியங் கொண்டு, தான் அவளை விவா கஞ் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.
சக்கரவர்த்தி போகும் வழிக்கெதிரே அவ்வக்கினி ஒரு சுவாலையாயெ ரிய, அச்சர்ப்பம் அச்சுவாலைக்குள்ளே விழுந்து வருந்துகிற பாவனை போலத்துடிக்க, அதைக் கண்டு அச்சக்கரவர்த்தி பரிதாபப்பட்டு, அச்சர்ப் பத்தின் பிராணனை இரட்சிக்க வேண்டுமென்று முயன்று, அதனை அச்சு வாலையினின்றும் விலக்கி விட்டான். விலக்கி விட்டவுடனே அச்சர்ப் பஞ் சினந்து பாய்ந்து அவனைக் கடித்தது. அப்பொழுது அவன் தேகம் முழுவதும் குட்டம் பிடித்து அவனழகைக்கெடுத்தது. அப்பொழுது நளச் சக்கரவர்த்தி மனங்கலங்கி, "நான்செய்த நன்மைக்கு எனக்குக் கிடைத்த கைம்மாறிதுவா? சர்ப்பந் தன் சுயகுணத்தைக் காட்டிற்றே! நான் இதற் கென்ன செய்யலாம்' என்று எண்ணாததெல்லாம் எண்ணி வருந்துகை யில், அச்சர்ப்பம் ஒரு பிராமணனாகி நின்று, அவனை நோக்கி, "ஒய் சக்கரவர்த்தியே, பயப்படாதே. நான் நகுலேசரணிந்திருக்குஞ்சர்ப்பாபர ணம். அந்நகுலேசர் நீ செய்த வழிபாடு கண்டிரங்கி, உன்னை வருத்து கின்ற கலியிடரை நீக்கி வருமாறு எனக்குந் தாமேயிருக்கும் அக்கினிக் குங் கற்பித்ததில் யாம் வந்தோம். உன்னை, இன்னானென்று ஒருவரும் அறியாதபடி நீ சில காலம் வேற்றுருவமைந்திருக்க வேண்டுமாதலால், அவ்வேற்றுரு உனக்குக் கிடைப்பதற்காகவே உன் உடலிற்றீண்டினேன். இவ்வேற்றுரு வேண்டுமென்று நீ விரும்புங் காலத்தில் உனக்குக் கிடைக்
சொல்லி, அவனுக்குவிடைகொடுத்துச்சர்ப்பமும் அக்கினியும்நகுலேசர் சமூகத்தை அடைந்தன.

யாழ்ப்பாண வைபவமாலை 19.
மாவிட்டபுரம்
மாருதப்பிரவல்லி தனக்குக் குதிரை முகம் நீங்கின காரணத்தினாற் கோவிற்கடவை என்னுங் குறிச்சிக்கு மாவிட்டபுரம் எனப்பெயர் சூட்டி அவ்விடத்திலே கந்தசு வாமி கோவிலைக் கட்டுவிக்க ஆரம்பித்து, அதற்கு வேண் டிய சகல வஸ்துக்களும் விக்கிரகங்களும் பிராமணரும் வரும்படி பண்ண வேண்டுமென்று பிதாவாகிய திசையுக் கிர சோழனுக்குத் திருமுகம் அனுப்பினாள். அப்
"இது நடந்தேறிச் சில காலம் சென்ற பின் தரும புத்திர மகாராச னின் தம்பியாகிய அருச்சுனன் தீர்த்த யாத்திரையைப் பண்ணித் தென்றி சையைநோக்கி வரும் பொழுது இத்தலத்திலும் வந்திறங்கி, இங்குள்ள கண்டகி தீர்த்தத்திலாடி, நகுலேசர்.சிவாலயத்திற் சேர்ந்து, சுவாமி தரிசன முஞ் செய்தான். அப்பொழுது நகுலேசர் நகுலாம்பிகையுடனே பிரசன்ன மாகி, அவனுக்கு வேண்டிய வரங்களுங் கொடுத்து அருள் சுரந்து அனுப்பி வைத்தார்.
'நாலாவதான இக்கலியுகத்திலும் அநேக தவத்திகளும் பெரியோ ரும் மூர்த்தி தலம் தீர்த்தமென்னும் முச்சிறப்புக்களையும் நோக்கி, இவ்வி டத்துக்கு யாத்திரை பண்ணுகிறார்கள். இவ்வுலகத்தில் இந்த நாட்டைக் கீரிமலை நாடென்றும் மணற்றிடலென்றுஞ்சொல்வார்கள். இது மகாபுண் ணிய தலம். நீ இத்தீர்த்தத்திலாடிச் சிவாலய தரிசனஞ் செய்தால், உனக் குள்ள பிணியும் நீங்கி, உன் குதிரை முகமும் மாறும்,' என்று சொல்லி இப்படியே இந்தத் தல விசேடத்தையும்.
1. இதற்கு வேறு பொருள் கூறுவாருமுளர். பரவை வழக்கிலுள்ள 'மாவட்டபுரமே புராதன நாமமென்பர். அதனை 'மஹாவட்டபுரம்' என் னுஞ் சிங்களப் பெயரின் திரிபென்று சொல்வர். (மஹா- பெரிய, வட்ட - விஸ்தாரம், ஆலமரம் - இ.ஆ. பக்.132)

Page 24
2O யாழ்ப்பாண வைபவமாலை
ணிக் கொண்டு இலங்கையிலேயுள்ள கீரிமலை நாட்டுக்கு அனுப்புவதற்குத் தில்லை மூவாயிரரில் ஒருவரைத் தன்னி டத்துக்கு அனுப்பி வைக்கும்படி சிவாலயத் தலைவனுக்கு கட்டளை அனுப்பினான். அப்பொழுது சிவாலயத் தலை வன், ‘பிராமணர் தோணியேறுவதும், இலங்கையிற் குடியி ருப்பதும் மகா தோஷமாயிருக்க, அரசன் இப்படிக் கட்டளை யனுப்பியிருக்கிறானே! நான் இதற்கென்ன செய்யலாம்!' என்று பயந்து, தில்லைச் சிவாலயத்திலே மூன்று நாள் பட் டினி கிடந்தான். அப்பொழுது கனவிலே, கீரிமலைச் சாரலா னது அங்குள்ள புண்ணியதீர்த்தத்தினாலுஞ் சிவாலய மகத்து வத்தினாலும் மகா திவ்விய தலமாகவேயிருக்கின்றது. காசி யிற் பிராமணரும் அங்கேயிருக்கிறார்கள். பிராமணர் தங்கள் நியமநிட்டை வழுவாமற் செய்வதற்கு மரக்கலங்களில் இராத் தங்காமல் ஏறலாம். நகுலமுனிவன் அத்தல விசே ஷத்தை நோக்கி அவ்விடத்திலிருந்து தவம் பண்ணும்போதே அத்தல விசேடத்தைக் குறித்து யோசிக்க வேண்டியதென்ன? யாதொரு யோசனையுமின்றி அனுப்பலாம்,' என்று உத்த ரவு கிடைத்தது.
பெரியமனத்துளார் வருகை
அப்பொழுது சிவாலயத் தலைவன் பெரிய மனத்து ளார் என்னுந் தீட்சிதரைச் சோழராசனிடம் அனுப்பி வைக் கச்சோழராசன் சகல தளவாடங்களையுங் கந்தசுவாமி, வள் ளியம்மன், தெய்வநாயகியம்மன் விக்கிரகங்களையும் பெரிய மனத்துளார் கையில் ஒப்புவித்து அனுப்பி வைத்

யாழ்ப்பாண வைபவமாலை 2.
தான். தீட்சிதர் அவைகளையுங் கொண்டு “காசாத்துறை"
என்னுந் துறையில் வந்திறங்கினார். கந்தசுவாமி விக்கிரகம் வந்திறங்கின காரணத்தால், அந்தத் துறைக்குக் காங்கேசன் துறை என்று பெயராயிற்று.
மாருதப்பிரவல்லியின் மண நிகழ்ச்சி
ஒருநாளிரவில் மாருதப்பிரவல்லிதேவாலயத்திருப்ப ணியைப் பற்றிய ஆலோசனையுடன் சப்பிரமஞ்சத்திற் சாய்ந்து விழிப்பாயிருக்குஞ் சமயத்திலே அர்த்தசாம வேளையில் உக்கிரசிங்க மகாராசன் பாளையங்களையும் அரணிப்பான சேனைக்காவல்களையும் கடந்து, அவளி ருந்த பாளையத்தினுட் புகுந்து, அவளையெடுத்துத் தன் பாளையத்திற்குக் கொண்டு போய் வைத்துக் கொண்
மாருந் தோழிமாருங் காவற் சேனைகளும் அவளைக் காணா ததனால் மனங்கலங்கித் தேடிப்போய் உக்கிரசிங்க மகாரா சன் பாளையத்தில் இருந்த செய்தி அறிந்து, அவனிடத்திற் சென்று, "நாங்கள் என்ன செய்யலாம்?' என்று கேட்க,
நீங்கள் போய் இந்தச் சுபசோபனச் செய்தியைப் பிதா மாதா வுக்கறிவியுங்கள்' என்று சொல்லி, வழிச் செலவுக்குப் பொருளுங் கொடுத்தனுப்பி விட்டான். பின் உக்கிரசிங்க
னபடியால் 'காயாத்துறை" எனப்பட்டுக் காசாத்துறை எனத் திரிந்தது.
2. காங்கேயன் எனும் அதிபன் ஒருவன் இருந்தமையால் உண்டாய பெயரென்பாருமுளர்.

Page 25
22 யாழ்ப்பாண வைபவமாலை
ராசன் கதிரை மலைக்குப் போக யோசித்த போதுமாருதப்பி ரவல்லி கந்தசுவாமி கோயிற்றிருப்பணி நிறைவேற்றி, முத லாம் உற்சவச் சிறப்புக் கண்டால் அல்லாமல், அவ்விடத்தை விட்டுப் போகப் பிரியமில்லை என்றதனால், அப்பிரயா ணத்தை நிறுத்தித் திருப்பணியை நிறைவேற்றி, ஆனி உத்தி ரத்தினன்று துவசாரோகணந் தொடங்கி உற்சவத்தை நிறை வேற்றிக் கொண்டு, கதிரை மலையிற் சென்று, விவாகச் சடங்கையும் நிறைவேற்றி, சகல செளகரியங்களையும் அனு பவித்திருந்தான்.
பெரிய மனத்துளாரின் விவாகம்
தில்லையிற்பெண் எல்லை கடவாததால், பெரிய மனத்துளார் விவாகமில்லாதவராய் வந்திருந்தார். அவர் சாம்பசிவ ஐயரின் மகள் வாலாம்பிகையை (பி-ம். வாலாம் பெண்) விவாகஞ் செய்து, அப்பெண்ணுக்குத்தில்லை நாய கவல்லி என்று பெயரை மாற்றிக் கந்தசுவாமி கோவிற்றென் புறத்திலுள்ள அக்கிரகாரத்தில் வாசஞ் செய்து தன் பணிவி டையை நிறைவேற்றி வந்தார். பிராமணக் குடும்பங்கள் இரண்டும் ஒரு குடும்பமாகி இருதிறத்துக்கோவில்களுக்கும் ஒருவரே விசாரணைத் தலைவரானார்.
இது நிற்க, கதிரை மலையிலிருந்த உக்கிரசிங்கராசன் சில காலத்தின் பின் செங்கடக நகரியை இராசதானி
1. சிங்கைநகர் என்னும் பெயரை மயில்வாகனப் புலவரோ, அவ ருக்குப் பின் ஏடெழுதியவர் எவரோ, "செங்கடகநகர் என்று மாற்றி விட்டனர். (யா.ச.பக். 29)

யாழ்ப்பாண வைபவமாலை 23
யாக்கி அங்கிருந்து அரசாண்டு வருங்காலத்தில் மன்மதன் போன்ற ரூபமும் சர்வ ராசலட்சணங்களும் உடையனாய், சிங்கத்தின் வாலையொத்த வாலுடனே ஒரு குமாரனும் அவ னுடனொரு பெண்ணும் பிறந்தார்கள். அவ்விருவருக்கும் நரசிங்கராசன் என்றுஞ் சண்பகாவதி என்றும் பெயரிட்டார் கள். அவர்களுக்கு விவாகம் நிறைவேற்றி, நரசிங்கராசன் என்னும் பெயர் படைத்த வாலசிங்கராசனுக்கு முடிசூட்டி அரசாள வைத்து மரணமடைந்தான். வாலசிங்க மகாராசன் செயதுங்கவரராச சிங்கம் என்னும் பட்டத்துடன் முடிசூட் .பெற்று. அரசாட்சியை ஒப்புக் கொண்டான் لابا
வீரராகவன்
அக்காலத்திலே சோழநாட்டிலிருந்து இரண்டு கண் ணுங் குருடனாகிய கவி வீரராகவன்' என்னும் யாழ்ப்பா ணன், செங்கடக நகரியிலிருந்து அரசாட்சி செலுத்தும் வால சிங்கமகாராசன் பேரிற் பிரபந்தம் பாடிக் கொண்டு போய் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக்
1. யாழ்ப்பாடியின் வரலாறு சமூலமாய் நிஷேதிக்கப்படல் வேண் டும் என்பர் சுவாமி ஞானப்பிரகாசர். (யா.வை.வி. பக்.19)
திரு. இராசநாயக முதலியார் அவர்கள் இவ்வரலாற்றினை முற்றா கத் தள்ளாது பிறிதொருவற்றான் ஏற்றுக்கூறியிருக்கின்றனர். (யா.ச.பக். 30) இவ்வறிஞரது கொள்கைப்படி யாழ்ப்பாடி (பெயர் தெரியவில்லை) பெற்ற ஊர் கரையூரும்பாசையூரும் - Ibid. கலிங்கவரசர் 10 -11 - ஆம் நூற்றாண்டில் சிங்கை நகளிலிருந்து அரசாண்டிருப்பதால் . யாழ்ப்பா ணன் அரசாண்டான் என்பதும், பாண்டிமழவன் சோழவரசகுமாரனைக் கொணர்ந்தானென்பதும் புனைந்துரை. (யாசபக். 37)

Page 26
24 யாழ்ப்பாண வைபவமாலை ج
கேட்டு மிக்க சந்தோஷம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் இந் நாட்டைக் கொடுத்தான்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்று பெய ரிட்டு, இவ்விடத்தில் வந்திருந்து, வடதிசையிற் சில தமிழ்க் குடிகளை அழைப்பித்துக் குடியேற்றி, இவ்விடமிருந்த சிங்க ளவர்களையும் அவர்களையும் ஆண்டு, முதிர்வயதுள்ளவ னாய் இருந்து இறந்து போனான். அக்காலத்திலே சிங்களவ ரும் பிறரும் இந்நாட்டை அரசாளக் கருதித் தமிழ்க் குடிகளை ஒடுக்கியதால், தமிழ்க்குடிகள் மீண்டும் தங்கள் நாட்டுக்குப்
போய் விட்டார்கள்.
1.இதுவே முதலியார்இராசநாயகம் அவர்களது மதமுமாம். (யா.ச. பக். 30, 253-254) சிங்களர் நல்லூருக்குவைத்தயாப்பாநே. யாப்பாபட் டுநே" என்னும் பெயரே பிற்காலத்தில் யாழ்ப்பாணம் என மருவியதெ னத் திரு. SW.குமாரசுவாமியவர்களும் (இ.ஆ.பக். 130), சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களும் கருதுகின்றார்கள். (யா.வை.வி. பக்.18)
"யாழ்ப்பாணம்' எனும் பெயர் 15-ஆம் நூற்றாண்டுச் சிங்களநூலிற் றான் முதன்முதற் காணப்படும்.
14-ஆம் நூற்றாண்டிறுதியில் இருந்தவராகக் கருதப்படும் அருண கிரிநாதர் "யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய பெருமாளே” எனக் குறிப்பிட்ட இடம் யாழ்ப்பாணத்தையே குறித்ததென்றும், அதனால் யாழ்ப்பாணம் எனும் பெயர் தமிழ்ப் பெயரெனவுங் கொள்வர் ஒரு சாரார். அருணகிரிநாதர் குறித்த இடம் எருக்கத்தம்புரியூர் என்பாருமு ளர். எங்ங்ணமாயினும், அருணகிரிநாதர் குறிப்பிட்ட தலம் ஈழநாட்டின் கண்ணதேயென்பது வலியுறின், யாழ்ப்பாணம் எனும் சொல் சிங்களப் பெயரடியாகப் பிறந்த தேனுங் கொள்கை வலியிழந்துபடும்.

யாழ்ப்பாண வைபவமாலை 25
மழவன்
இந்த நிலைபரத்தில் யாழ்ப்பாணம் கொஞ்சக் காலம் தளம்பிக் கொண்டிருக்கையில், சிங்களக் கலகத்துக்கு எடுப டாமல் இருந்து, காலம் விட்டு வந்த பொன்பற்றியூர் வேளா ளன் பாண்டி மழவன் என்னும் பிரபு மதுரைக்குப் போய் அவ்விடத்திலேசோழநாட்டிலிருந்து வந்துஇராச உத்தியோ கத்துக்கேற்ற கல்வி கற்றுக் கொண்டிருந்த திசையுக்கிர சோழன் மகனாகிய சிங்ககேதுவுக்கு மருமகனான சிங்கை யாரியன் என்னுஞ் சூரியவமிசத்து இராசகுமாரனைக் கண்டு, யாழ்ப்பாணத்தின் நிலைபரத்தை அறிவித்து, இவ் யாழ்ப்பாணத்தை அரசாட்சி செய்ய வரவேண்டுமென்று கேட்க, சிங்கையாரிய ராசன் மறுத்துப் பேசாமற் பாண்டிம ழவன் கேள்விக்கு உடன்பட்டு, கல்வியறிவிலும் புத்தி விவேகத்திலும் எவர்களும் வியந்து கொள்ளத் தக்க உத் தண்ட வீரசிகாமணியாகிய புவனேகவாகு' என்னும்
1. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டிய இப் புவனேகவாகு யாழ்ப்பாணவரசனின் மந்திரியல்லனென்றும் 15-ஆம் நூற்றாண்டு மத்தி யில் சிங்களவரசனால் அனுப்பப்பட்டு யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டு, நல்லூரை இராசதானியாக்கி அங்கே 16 வருடம் அரசாண்டி ருந்த செண்பகப் பெருமாள் என்றும் இராசநாயக முதலியார் கூறுவர். (யா.ச. 75-77)
இவ்விஷயம் பற்றி Hindu Organ (1933) பத்திரிகையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் ஈழகேசரியில் (25.938) வெளியிட்ட தமிழ் நூல்களில் யாழ்ப்பாணம்" என்னும் கட்டுரையினையும் ஈண்டு ஒப்பிட்டாராய்ந்து உண்மை காண்க.

Page 27
26 யாழ்ப்பாண வைபவமாலை
மந்திரியையும், காசிநகரத்திருந்து வந்த வேதிய குலோத்துங் கனாகிய கெங்காதர ஐயர் என்னுங் குருவையுங் கொண்டு, தனது பரிவாரங்களுடன் பிரயாணப்பட்டு, பாண்டிராசன் வழி விட்டனுப்பி வைக்க, யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி, நல்லூர்ப் பகுதியிலே அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதி, சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன்முகூர்த்தத்தில் அஸ்தி வாரம் போட்டு, நாலுமதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து, மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும், பூங் காவும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்பு டைக் கூபமும் உண்டாக்கி, அக்கூபத்தில் யமுனாநதித் தீர்த்த மும் அழைப்பித்துக் கலந்து விட்டு, நீதிமண்டபம், யானைப் பந்தி, குதிரைப் பந்தி, சேனா வீரரிருப்பிடம் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியிற் பிரமகுல திலகரான கெங்காதர ஐயரும், அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ் செய்வதற்கு அக்கிரகார மும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்குப் பாதுகாப்பாக வெயிலு வந்த பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீரமாகா ளியம்மன் கோவிலையும் வடதிசைக்குச்சட்டநாதேசுவரர் கோவில், தையல் நாயகியம்மன் கோவில், சாலை விநா
1. "தென்றிசைக்குக் கைலைவிநாயகர் கோவிலையும்" (உதா. பிரதி)
குடியேற்றம்: யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பொன் பற்றியூர் வேளாளன் பாண்டிமழவன்கொண்டு வந்த வேளாண் குடிகளுள் பின்னு மொரு பொன்பற்றியூர் வேளாளன் பாண்டி மழவன் இருப்பதைக் கவ னித்த முதலியார் இராசநாயகம் அவர்கள், "பாண்டி மழவன் சென்று குடிகளைக் கொண்டு வந்தான் எனக் கூறுங் கூற்று

யாழ்ப்பாண வைபவமாலை 27
யகர் கோவிலையுங் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்திருந்
தான.
குடியேற்றம்
இங்ங்ணமிருக்கையில், ஒருநாள் புவனேகவாகுவுடன் ஆலோசித்து, சிங்கையாரிய மகாராசன் தமிழ்க் குடிகளை அவ்விடம் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழ்நாட்டர சர்களுக்குத் திருமுகங்கள் எழுதியனுப்பினான். அவ்வரசர் கள் சில குடிகளை அனுப்பி வைக்க, அவர்கள் வந்து சேர்ந் தார்கள். அவர்களுக்குள் ஐந்து குடிமைகளுடனேயும் வந்த பொன்பற்றியூர் வேளாளன் பாண்டி மழவனையும் தம்பி
ஆகாய கங்கையில் மலர்ந்த தாமரையோடொக்கும்." எனக் குறிப்பிடு கின்றார்கள். (யா.ச.பக். 239)
சரித்திரவாராய்ச்சி அறிஞர் திரு. வ.குமாரசுவாமி அவர்களும்
"இருபாலை மண்ணோடு கொண்ட முதலி முடிசூட்டும் உரிமை உடையவருள் முதல்வராகவும், தெல்லிப்பழை கனகராயன்செட்டி துலாபாரதானக் கிரியைக்கு அதிபராகவும், மயிலிட்டி நரசிங்கதேவன் அரசிறை வருமானங்களைப் பொக்கிஷத்திற்கு சேர்க்கும் வரிநிலைக்கள அதிபராகவும் விசேஷ அழைப்புப் பெற்று, கி.பி.13-ஆம் நூற்றாண்டு மத்தியில் யாழ்ப்பாண ஆரிய மன்னர் அரசியலாரம்பத்தில் யாழ்ப்பா ணத்துக்கு வந்து குடியேறியவர்களே என்பதும், ஏனைய பிரபுக்களும் கைலாய வைபவ மாலைகளிற் சொல்லியபடி தொண்டை மண்டலப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்களென்பதும், இராசநாயக முதலியார் சொல்லுகிறபடி மாலிக்கபூரின் படையெழுச்சியால் அல்லோல கல்லோ லப்பட்டு 14-ஆம் நூற்றாண்டில் பல மண்டலங்களிலிருந்து வந்தவர்க ளல்ல என்பதும் மேலே நிகழ்த்திய ஆராய்ச்சியாற் பெறப்பட்ட முடிபு

Page 28
28 யாழ்ப்பாண வைபவமாலை
யையும், மைத்துனனாகிய சண்பக மழவனையும் அவன் தம்பியையும், சிங்கையாரிய மகாராசன் திருநெல்வேலி யிலே குடியிருத்தினான்; காவிரியூர்ப் புரவலாதிதேவனின் மூத்த குமாரனாகிய நரசிங்கதேவனை மயிலிட்டியிலிருத்தி னான், வாவிநகர் வேளாளன் செண்பகமாப்பாணனையும் அவன் ஞாதியாகிய சந்திரசேகரமாப்பாணனையும் கனக ராயர் என்னுஞ் செட்டியையும் தெல்லிப்பழையில் இருத்தி னான்; கோவலூரிலிருந்து வந்த பேராயிரமுடையான் என் னும் வேளாளனை இணுவிலில் இருத்தினான். அவ்வூர் திருத்திப்படாததனால் அவன் அவ்விடத்தை விட்டு
களாம்," எனத் தண்டிகைக் கனகராயன் பள்ளு என்னும் நூலில் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்ட பாகத்தில் திரு.குமாரசுவாமியவர்கள் ஆராய்ந்து முடிபு கட்டியிருக்கின்றார்கள்.
பிள்ளையவர்களுடைய கொள்கைகளை மறுத்து முதலியார் இராச நாயகம் அவர்கள், தங்கொள்கையை நிறுவியிருக்கின்றார்கள். (யா.ச. பக். 239-246).
பிள்ளையவர்களுடைய முடிவுகள் சில வலிந்து கோடல் போலக் காணப்படுகின்றன. இவ்வறிஞர் கூறுவது:
“தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை ஆகிய மூன்று இடங்களி லுங் குடியேறியவர்கள் தொண்டைநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், கனகராயன் செட்டியார் எயிற்கோட்டத்து எயில் நாட்டுச் சிறுகச்சிப் பேட்டையைச் சேர்ந்த காரைக்காட்டினர் எனவும், நரசிங்கதேவர் புலி பூர்க் கோட்டத்துப் புலியூர் நாட்டு மயிலை அல்லது மயிலாப்பூரினர் எனவும், மண்ணாடுகொண்ட முதலியார் ஊற்றுக் கோட்டத்துப் பால நாட்டுப் பாலியூரினர் எனவும் முடிபு கண்டாம்."
"மதுரைக்குப் பாண்டிமழவன் பரிந்து சென்றமையும், அங்கிருந்து செல்வமதுரைச் செழியசேகரன் புதல்வனான சிங்கையாரியன்

யாழ்ப்பாண வைபவமாலை 29
மேலைக் கிராமத்திற்போயிருந்தான்.இராசமுத்திரையும் பல வரிசைகளும் பெற்ற கச்சூர் வேளாளன் நீலகண்டனையும் அவன் தம்பிமார் நாலுபேரையும் பச்சிலைப்பள்ளியிலிருத் தினான். சிகரமாநகர வேளாளன் கனகமழவனையும் அவன் தம்பிமார் நால்வரையும் புலோலியில் இருத்தினான்; கூபகநாட்டு வேளாளன் கூபகார்யேந்திரனையும், புண் ணிய பூபாலனையும் தொல்புரத்தில் இருத்தினான்; புல்லூர் வேளாளன் தேவராயேந்திரனைக் கோயிலாகக் கண்டியில் இருத்தினான்; ஏரெழுபது என்னும் பிரபந்தம் பாடப்பெற்ற உயர்குல வேளாள மரபினனான தொண்டை மண்டலத்து மண்ணொடு கொண்ட முதலி என்பவனை இருபாலை என்னுமூரில் இருத்தினான்; செய்யூர் இருமரபுந்துய்ய தனி நாயகன் என்னும் வேளாளனை நெடுந்தீவில் இருத்தினான்; காஞ்சீபுரத்தில் வந்த பல்லவன் என்னும் பிரபுவையும் இரண்டு துணைப் பிரபுக்களையும் வெளிநாடென்னும் பல்ல வராய கட்டில் இருத்தினான்.
இப்படியே அவ்வப்பிரபுக்களை அவரவர் அடிமைக் குடிகளுடனே அவ்வவ்விடங்களில் இருத்திய பின், வல்லி யமாதாக்கன் என்னும் பராக்கிரம சூரனை மேற்பற்றுக்கும், செண்பகமாதாக்கன் என்னும் சூரிய வீரனைக்
பெருகுபுகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய வந்தமையும் மனோராச்சியத் தின் பாற்படுகின்றன." என்பர் சுவாமி ஞானப்பிரகாசர். (யா.வை.வி. பக்.63)
கயிலாய மாலையிற் குறிக்கப்பட்ட குடிகளை மயில்வாகனப் புலவர் தக்க ஆதாரமின்றித்திரித்துக் கூறிவிட்டனர் என்பது முதலியார் அவர்கள் கொள்கை.
இவ்வாராய்ச்சியாற்பெறும் பயன் சிறிதாதலின். இத்துறையில் மீட்
டும் ஆராயப்புகுதல் வீண்காலப் போக்காகும் என விடுக்க.

Page 29
3O யாழ்ப்பாண வைபவமாலை
கீழ்ப்பற்றுக்கும், இமையானமாதாக்கன் என்னும் உத்தண்ட வீரன்ன வடபற்றுக்கும், வெற்றி மாதாக்கன் என்னும் விசய பராக்கிரமனைத் தென்பற்றுக்கும் அதிகாரிகளாக நிறுத்தி, உத்தண்ட வீரசிகாமணியாகிய வீரசிங்கன் என்பவனைச் சேனாபதியாக்கி, ஒரு சுபதினத்திலே நல்ல முகூர்த்தமிட்டு மகுடாபிஷேகம் பெற்று, நகரிவலம் வந்து, சிங்காசனம் ஏறிப் பூலோக தேவேந்திரனாய் அரசாண்டான். இவ்வரச னுக்கு 905 கை கூழங்கையாயிருந்ததனால், இவனைக் கூழங்கையாரியன்' என்றும், விசய கூழங்கைச் சக்கர வர்த்தி என்றுஞ் சொல்வார்கள்.
1. ஜெயதுங்கனுக்குப் பின் ஆண்டவன் கூழங்கையனல்லன். அவ னுக்குமூன்று நூற்றாண்டுகளுக்குப்பின் பிரபலமடைந்த விஜயகாலிங்கச் சக்கரவர்த்தியாகிய காலிங்கமாகனையே ஏட்டெழுத்தில் கா-வைக்-கூ- வெனவும், லி-யை ள-வெனவும், எழுத்துருவில் மாறுபடக் கண்டு விஜய கூளங்கைச் சக்கரவர்த்தியென வைபவமாலையார் நம்பி, ளகரத் தைச் சிறப்பெழுத்தாக்கி முடித்து விட்டார். (யா.ச. பக்.247)
இம்மதம் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களுக்கும் சம்மதம். முதலி யார் அவர்களது முடிபு மிகப் பொருத்தமானதே. இத்தகைய ஆராய்ச்சி யினை நோக்குந்தோறும் முதலியார் அவர்களது சரித்திரவாராய்ச்சித் திறமையினைக் கண்டு இறும்பூதெய்தாதிருக்க முடியாது.
கி.பி.1215ல்கலிங்கவிஜயவாகுஅல்லது கலிங்கமாகன் என்னும் அரசன் இலங்கை மேற்படையெடுத்துப் பொலன்னறுவையைப் பாழாக்கி, அங்கிருந்தரசாண்ட பாண்டிய குலத்தரசனைக் கொன்று. கி.பி.1236 வரையும் பொலன்னறுவையில் அரசாண்டிருந்தான் என்று

யாழ்ப்பாண வைபவமாலை 31
நல்லூர்க் கோயில் சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக்
கையேற்று நடத்தி வருகையிற் புறமதில் வேலையையுங் கந்தசுவாமி கோவிற்றிருப்பணியையுஞ் சாலிவாகன
மகாவமிசம் கூறும். இவனே சிங்கைநகர் ஆரிய அரசர்களுக்குள் முதலா வதாகச் சக்கரவர்த்திப் பட்டமும் கீர்த்திப் பிரதாபமும் பெற்றவனானபடி யால், விஜயகாலிங்கச் சக்கரவர்த்தி எனவும், பாண்டிய மழவனால் மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட சோழவரசகுமாரனெனவும், அவ னால் நல்லூரிலே முடிசூட்டப் பெற்றவன் எனவும் வைபவமாலை கூறும். (யா.ச.பக், 49)
‘மாகன் வேறு; ஜயவாகு வேறு' என்பது சுவாமி ஞானப் பிரகாசர் அவர்களது கொள்கையாகும். காலிங்கமாகன், விஜயவாகு எனும் இரு வர் தமிழரசர் கலிங்க தேசத்தினின்றும் பெரும்படையோடு வந்தவர்கள் ஒருங்கு வடஇலங்கையை ஆள்வோராய்க் காணப்பட்டனர். ஜயவாகு யாழ்ப்பாண நாட்டை அரசாள, மாகன் 1215-ஆம் ஆண்டு தொடக்கம் புலத்தி நகரில் வீற்றிருந்து தென்னிலங்கை முழுவதையும் தனிக்குடைக் கீழ் அடக்கிச் செங்கோலாச்சினான். (யா.வை.வி. பக்.64)
நேரிட்டது. காலிங்கமாகனுக்கு ஜெயசிங்கவாரியன் என்னும் பெயரிருந் தது போலும்! இதனையே வைபவ மாலையார், விசய கூழங்கைச் சக்கர வர்த்தி என்றார் என்க. காலிங்க ஆரியச் சக்கரவர்த்தி புலத்தி நகரை ஒருவி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலையில், முன் அவ்யாழ்ப்பாண இராச்சியத்தை, மாகமன்னனோடு ஒத்து அரசாண்டிருந்த ஜயவாகு இறந் திட்டான் போலும் ஜயவாகு மாண்ட பின் யாழ்ப்பாண அரசிருக்கையை இனிதாய் (மாகன்) நாட்டினான் என்பதுதான் உண்மை. (யா.வை.வி. பக்.65)
வைபவமாலையிற் கூறிய உக்கிரசிங்கனே இந்த ஜயவாகுவாயின், முதற்கால் சிங்கைநகரை இராசதானியக்கினா னெனவும், மாகனெனும் காலிங்கச் சக்கரவர்த்திஅதனைக் கி.பி.1246-ஆம் ஆண்டளவில் அரண் செய்து திருத்தினானெனவுங் கொள்க. (யாவை.வி. பக்.69)

Page 30
32 யாழ்ப்பாண வைபவமாலை
சகாத்தம் எண்ணுற்றெழுபதாம் வருஷத்திலே புவனேக வாகு என்னும் மந்திரி நிறைவேற்றி முடித்தான்.
விருந்து
சிங்கையாரிய மகாராசனும் புவனேகவாகு" மந்திரி யும் கீரிமலைக்குப் போய்த் தீர்த்தமாடிச் சிவாலய தரிசன முஞ் செய்து கொண்டு, அவ்வாலய விசாரணையை அர சாட்சி விசாரணைக்குள்ளாக்கிக் கொண்டு, கந்தசுவாமி கோவிலில் வந்து, பெரிய மனத்துளாரின் குமாரர் சிதம்பர தீட்சிதரின் மகனார் சின்ன மனத்துளார் விருந்திட உண்டு இளைப்பாறினார்கள். அவ்விருந்து மகாவுசிதமாயிருந்தத னால், புவனேகவாகு அவ்விருந்திற் பரிமாறிய ஒவ்
1. இது கி.பி.1248க்குச் சரியாகும். இது காலிங்கச் சக்கரவர்த்தி சிங்கை நகரைக் கட்டிய ஆண்டாகலாம் (யா.வை.வி. பக்.66)
இவ்விவரத்தைப் பின்பற்றியே,
"இலகிய சகாத்த மெண்னூற் றெழுபதாமாண்ட தெல்லை
அலர்பொலி மாலைமார்பனாம்புவனேகவாகு
நலமிகுந் திடுயாழ்ப் பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே.” என்னுஞ் செய்யுள் எழுந்தது போலும்
2. புவனேகவாகு மந்திரி என்றமை சரித்திர மயக்கம். செண்பகப் பெருமாள் (சம்புமல்குமாரய) நல்லூரிலே கி.பி.1450-ல் ஒரு புதுநகரெ டுப்பித்துச் சிறீசங்கபோதி புவனேகவாகு என்னும் சிங்கள நாமத்தோடு, 17 வருடங்களாக அரசு செய்து வந்தவன்; இவ்வரசனே நல்லூர்க் கந்த சுவாமி கோயிலைக் கட்டுவித்தவன். அக்கோயிற்கட்டியத்தில் இன்றும் இவன் சீறீசங்கபோதி புவனேகவாகு' எனப் புகழப்படுகிறான். (யா.ச. பக். 75)

uurplusr6OUT 6936alueJLDIT606) 33
வொரு பதார்த்தத்திற்கும் ஒவ்வொரு பாட்டுச் சொன்னான். அவற்றுட்சில வருமாறு:
வெண்பா
a. இன்னமுதவிண்டுவினோர்க் கீந்தசெயலன்னதுவாம்
மன்னவனுந்தொக்க வருதினியும் -நன்னரு(ண்)ண அன்னமளித்திந்நாளிலாதரவுதந்துநின்ற சின்னமனத்தான் செயல்.
b, சின்னமனத்தான் செயும்விருந்திற் சாற்றுருசி
அன்னதனை விண்ணோரறிந்திருந்தால் - முன்னலைவாய் வெற்பதனைக்காவியுய்த்து வேலைகடைத்தேயுலைதல்அற்பமெ னத்தன்ரூவரே யாம்.
இப்படியே பாட்டுக்களுஞ் சொல்லிக் கொண்டு தேவா லயத்தைப் பற்றிய ஒழுங்குகளும் பண்ணிக் கொண்டு திரும்
பினான்.
a, பி-ம் விண்டு விண்ணோர்க்கீந்த செயலிதுவாம்.
வருதினியும், திந்நாளில் வாதரவு (வரூதினி -படை)
b. அலை - கடல்; உலைதல்-தளர்தல்.

Page 31
34 யாழ்ப்பாண வைபவமாலை
நல்லூரில் புதுக்கோயில் அமைத்தல் காரியங்கள் இப்படி நடந்தேறி வருகையில் ஒரு நாளிர விற் சப்பிரமஞ்சத்திலே அரசன் சாய்ந்து நித்திரை செய்திருக் கையில், பரமேசுரமூர்த்தி பாருவதிதேவியுடன் கனவிலே தரிசனையாகி உத்தரவு கொடுத்த பிரகாரமாகவே மகா சந் தோஷத்துடனே கைலை விநாயகர் கோவிலயலிலே கயி லாயநாதர் கோவிலையும் கைகலைநாயகியம்மன் கோவி லையும் எவற்றினும் விசேஷித்தவைகளாகக் கட்டுவித்து மூன்று சபைகள், பரிவார தேவர்கள் இருப்பிடம், உக்கிராண சாலை, யாகசாலை, அக்கிரகாரம், தேரோடும் வீதி, மடம், அன்னசத்திரம் இவைகளையெல்லாம் இயற்றுவித்து, பிரமா ቁ ணத்துக்கிணங்கச் சுற்றுமதிலும் கோபுரமும் எழுப்பிக் கேதா ரத்திலே மன்மதன் பூசித்துவந்த ஆதாரலிங்கத்தையும் அழைப்பித்துப் பிரதிஷ்டை செய்வித்துப் பாண்டியராசன் கீழ் முதற்பாளையத் தலைவனாயிருந்து இராமநாதபுரத்தை யாண்ட சேதுபதிக்குப் பாசுரமனுப்பி அழைப்பித்து, கெங்காதரய்யர் என்னும் காசியிற் பிராமணனையே பூசனை நடத்தும்படி வைத்து, அல்லும் பகலும் கைலாயநாதர் திருவ டிகளைத் தியானித்துக் கொண்டு நல்லூர்க் கயிலையில் நெடுங்காலமிருந்து அரசாண்ட பின் தன்
1. இவ்விவரம் கைலாயமாலையிலிருந்தெடுக்கப்பட்டது. அதிற் சொல்லியபடியே முதலரசன்மேல் ஏற்றிக் கூறப்பட்டிருக்கிறது. நல்லூர் இராசதானியான பின் கட்டப்பட்ட கோயிலானபடியால், சிங்கைப் பரரா ஜசேகரன் காலத்தில் (கி.பி.1478 அளவில்) கட்டப்பட்டதென இராசநா யக முதலியார் கூறுவர். (யா.ச. பக்.77)

யாழ்ப்பாண வைபவமாலை 35
குமாரனாகிய குலசேகரசிங்கையாரியனுக்கு முடிசூட்டி வைத்துச் சிவபதஞ் சார்ந்தான்.
குலசேகர சிங்கையாரியன் குலசேகர சிங்கையாரியன் அரசாட்சி முறைகளைத் திருத்திக் குடிகள் பிரியப்படத்தக்கதாகச் சமாதான அரசாட்சி செய்து, தன் மகன் குலோத்துங்க சிங்கையாரியனுக்குச் சிங்காசனத்தை ஒப்புவித்துச் சிவலோகஞ் சேர்ந்தான்.
குலோத்துங்க சிங்கையாரியன் குலோத்துங்க சிங்கையாரியன் வயல் நிலங்களைத் திருத்துவித்து, வருமானங்களை அதிகப்படுத்திக் குடி
1. இவன் கி.பி. 1240-ஆம் ஆண்டளவில் அரசனானான்.
2. இவ்வரசன் கி.பி. 1256-ஆம் ஆண்டளவில் அரசனானான்.
3. மன்னார்க் கடலில் முத்துக் குளிக்கும் உரிமை சிங்கை நகர் அரசருக்கே உரியதாயிருந்தது. இவ்வரசனுக்கும் யாப்பாகுவில் இராச தானிஅமைப்பித்து ஆண்ட முதலாம்புவனேகவாகுவுக்கும் அவ்வுரிமை யைப் பற்றி விவாதம் உண்டாகிப் போர் மூண்டது. குலோத்துங்கன் பெருங்கடற்படையுடன் வந்து, புவனேகவாகுவை வென்று, யாப்பா குவை அழித்துப் புத்தசமயிகளாற் போற்றப்பட்டு வந்த புத்த தந்தத்தைக் கவர்ந்து சென்றான். புவனேகவாகு சிங்கை நகர் அரசனுக்குக் கீழ் ஒரு சிற்றரசனாய்த் திறையீந்து அரசாண்டான். (யா.ச. பக்.55)
கி.பி.1296-ல்யாப்பாகுவில்போர் வலியிழந்த புவனேகவாகுவின் குமாரன் குலசேகரபாண்டியனை அடைந்து தென்னிலங்கைச் சிற்றரசை யும் புத்த தந்தத்தையும் தனக்குக் கொடுக்கும்படி சிங்கை நகர் அரசனா கிய விக்கிரமனுக்கு இயம்புறுமாறு இரந்தான். அவ்வண்ணம் அவனும்

Page 32
36 யாழ்ப்பாண வைபவமாலை
களையுஞ் சந்தோஷப்படுத்திச் சமாதான அரசாட்சி செலுத் தித் தன் குமாரனாகிய விக்கிரமசிங்கையாரிய னுக்கு அர சாட்சியை வைத்துப் பரமபதஞ் சேர்ந்தான்.
விக்கிரம சிங்கையாரியன்: சமயக்கலகம்
இவன் காலத்திலே இங்குள்ள புத்த சமயிகளான சிங்க ளவருக்கும் தமிழருக்கும் சமய காரியங்களையிட்டுப் பெருங்கலகம் உண்டுபட்ட பொழுது சிங்களர் சிலர் தமிழ ரைக் காயப்படுத்தி, இருவரைக் கொலை செய்து, இப்படியே முரட்டுத்தனங்காட்டி நின்றார்கள். அதையறிந்து, விக்கிரம சிங்கையாரியன் அவர்களைப் பிடித்து விசாரணை செய்து, அக்கலகத்துக்குத் தலைவராய் நின்ற புஞ்சிவண்ட என்பவ னையும் வேறு பதினேழு சிங்களவரையுங்கொலை செய்து, வேறு பலரைச் சிறைச்சாலையிலிடுவித்தான். அதன்பின் கல கம் அமர்ந்தது. சில சிங்களக் குடிகள் ஒளித்து இந்நாட்டை விடப் புறப்பட்டார்கள். இவ்விக்கிரமசிங்கையாரின் தமி ழர் மேல் அதிகபட்சம் வைத்து நடந்ததனால் சிங்களவர் இவன்மேற் பற்றுள்ளவர்களாயிருந்ததில்லை.
இயம்பவே அதற்கிசைந்து, விக்கிரமனாற் கொடுக்கப்பட்ட சிற்றரசையும் தந்ததாதுவையும் பெற்றுக்கொண்டு, திறையிறுக்க உடன்பட்டு மூன்றாம் பராக்கிரமவாகுவாக யாப்பாகுவில் அரசனானான். பின்பு இத்திறை அளிப்பதற்கும் யாழ்ப்பாணவரசன் தாக்கிற்கும் பயந்து, சிங்கள அரசர் கள் தங்கள் இராசதானியைக் குருநாக்கலுக்கும் தம்பதெனியாவுக்கும், மலையரணுடையதும் யாழ்ப்பாணத்திலிருந்து அதிக தூரமுள்ளதுமான கம்பளைக்கும் மாற்றிமாற்றி வந்தார்கள். எங்குச் சென்றாலும் சிங்கை நகர் அரசர்களுக்கடங்கியே இருந்தார்கள் என்பதற்கமையமில்லை.
1. இவ்வரசன் கி.பி.1279-ஆம் ஆண்டளவில் அரசனானான்.

யாழ்ப்பாண வைபவமாலை 37
வரோதய சிங்கையாரியன்
இவனுக்குப் பின் இவன் மகன் வரோதய சிங்கையாரி யன் அரசாட்சியை ஒப்புக்கொண்டு, மார்க்க வழிபாடுக ளைக் குறித்த சில கட்டளைகளை ஏற்படுத்தி,இரு திறக்குடிக ளையுஞ் சமாதானப்படுத்தி முறைமையான அரசாட்சி செய்து, தன் குமாரன் மார்த்தாண்டசிங்கையாரியனுக்கு அரசிருக்கையைக் கொடுத்துப் பரகதி அடைந்தான்.
மார்த்தாண்ட சிங்கையாரியன்
மார்த்தாண்ட சிங்கையாரியன் கல்வியும் வேளாண் மையும் விருத்தியாகத் தக்க முயற்சிகளைச் செலுத்தி வன்னி யர்களால் வந்த கலகங்களையும் அமர்த்திக் குடி
1. இவ்வரசன் கி.பி.1302-ஆம் ஆண்டளவில் அரசனானான். 2. இவ்வரசன் கி.பி.1325-ஆம் ஆண்டளவில் அரசனானான்.
இவன் காலத்தில் முகம்மதிய பிரயாணியாகிய இபின் பட்டூட்டா (Ibn Batuta) வந்திறங்கி, அக்கால அரசியற் செழிப்பைப் புகழ்ந்திருக்கின் றான்.
3. வன்னியர்கள் (யா.ச. பக்.51)
சோழ பாண்டிய சேனைகளுடன் வந்த வன்னியப் பிரதானிகளுள் டலர் பனங்காமம், குமாரபுரம், ஓமந்தை, தம்பலகாமம் முதலாமிடங்க ளில் நிலையிட்டனர்; யாழ்ப்பாண - சிங்கள அரசரின் வலி குன்றிய காலங்களில், தாம் தாம் குடியிருந்த இடங்களைத் தாம் தாம் ஆள வேண் டுமென நோக்கங் கொண்டிருந்தனர். இவர்கள் தாமிருந்த இடங்களில் சைவ ஆலயங்களைக் கட்டிச்சைவசமயத்தைப் பரிபாலித்துவந்தார்கள். இவர்கள் வீரம் செறிந்த மக்களாதலின், மிகவும் பிற்காலத்திலும் தங்கள் வலிமையை அடிக்கடி காட்டி வேற்றரசர்கட்கு அடங்காமலும் வாழ்ந்த esso.

Page 33
38 யாழ்ப்பாண வைபவமாலை
களைத் தாய் போலக் காப்பாற்றித்தயாளகுணமுள்ளவனாய் அரசாண்டதனால், அவன் மரணித்தபோது இரு திறத்துக் குடிகளுள்ளும் அவனுக்காகப் பிரலாபியாதவர்களில்லை. அவன் மரித்த பின் அவன் மகன்குணபூஷணசிங்கையாரி யன் முடிசூடி அரசாண்டான்.
குணபூஷண சிங்கையாரியன்
இவன் தன் பிதாவிலும் அதிக தயாளகுணமுள்ளவ னாய்க் குடிகளைப் பாரபட்சமில்லாமல் நடத்தி அரசாட்சி யைத் திறம்படுத்திக் கல்வியும் செல்வமும் வர்த்திக்க முயற்சி செலுத்திப் பூரணவாயுளுடையனாய்த் தன் குமாரன் வீரோ தய சிங்கையாரியனுக்கு இராச்சியப் பொறுப்பை ஒப்பு வித்து, ஆறியிருந்து, சில காலத்தின் பின் தேகவியோகமா
656.
விரோதய சிங்கையாரியன் வன்னியுட்புகல்
விரோதய சிங்கையாரியன் காலத்தில் சிங்களவராற் சில கலகங்களுண்டுபட, அவன் கலகங்களைத்தன் வீரத்தி னாலடக்கி, அக்கலகங்களை, வன்னியர்கள் தூண்டி விட்ட செய்தியறிந்து, வன்னியர்கள் மேற் படையெடுத்து, ஏழு வன்னியையுங்கொள்ளையாடி, அவ்வன்னியர்கள் ஒருபோ தும் அவ்வித எண்ணங் கொள்ளாதபடி செய்து
1. இவ்வரசன் கி.பி.1347-ஆம் ஆண்டளவில் அரசனானான்.
2. இவ்வரசன் கி.பி.1371-ஆம் ஆண்டளவில் அரசனானான் என் பர் முதலியார் இராசநாயகம்.
இவ்வரசன் கி.பி.1344-ஆம் ஆண்டளவில் அரசனானான் என்பர் சுவாமி ஞானப்பிரகாசர்.

யாழ்ப்பாண வைபவமாலை 39 திரும்பினான். அவன் மீண்டு வந்தவுடன் சிங்களக் கலகக் காரர் அவன் காலடியில் விழுந்து, தங்கள் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டிக் கொண்டதனால், அவர்க ளுக்குப் பொறுதி கொடுத்து நன்முகங் காட்டினான்.
மதுரைக்குச் சேறல் அக்காலத்திலே மதுரையிற் சந்திரசேகர பாண்டியனு டனே" சத்துருக்கள் போயெதிர்த்து யுத்தஞ்செய்து இராச்சி யத்தைப் பிடித்துக் கொள்ள, பாண்டியன் ஒளித்து
1. வன்னியர் செருக்கறுக்கத்துணைபுரிந்த ஓமந்தைச் சிறு பிரதானிக் குச் சிற்றரசுப் பட்டமும் வரிசைகள் பலவும் நல்கி, அவனுக்கு ஏனைய வன்னிய பிரதானிகளுக்கதிகாரியாம் பதவியுமீந்தான். (யா.ச. பக்.65)
2. யாழ்ப்பாணவரசனின் உதவியுடன் சுந்தரபாண்டியன் பாண்டிய ரசைப் பெற்றது கி.பி.1310-ல் ஆனதால், இச்செயலை வீரோதய சிங்கை யாரியன் மேலேற்றிக் கூறுவர் முதலியார் இராசநாயகம் அவர்கள். (யா.ச. பக்.59-60)
3. இவன் மதுரைச் சுந்தரபாண்டியன் என்பவர் முதலியார் இராசநா யகம் அவர்கள். "இவன் மாறவர்மன் குலசேகரனின் தர்மபத்தினி மகன். இவன் வீரபாண்டியன் வகித்த செங்கோலைப் பிடுங்கி, மூன்று வருடம் வகித்தான். இவ்வரலாற்றிற் சொல்லப்பட்ட மூன்று வருட அரசு கைக் கொள்ளச் சுந்தரபாண்டியனுக்குப் பக்கத்துணையாய் நின்றதே விரோதய சிங்கையாரியனின் வீரச்செயலென்ப. அங்ங்ணமாயின், இவ்வாரியச் சக் கரவர்த்தியின் ஆட்சிக்காலம்1310 முதல் 1344 ஈறாக34வருடங்களுக்கு மேற்படும். ஆயின், முந்திய குணபூஷணசிங்கையாரியனின்கீழ் இளவர சனாயிருந்த காலையில் அச்செய்தி நிறைவேறியதாயின், ஆட்சிக்காலம் குறைவுள்ளதாகலாம்." (யா.வை. வி.பக்.89-90)

Page 34
4O யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பாணத்துக்கோடி வந்து வீரோதய சிங்கையாரியனி டம் அடைக்கலம் புகுந்தான். அப்போது விரோதய சிங்கை யாரிய இராசன் பாண்டியன்கீழ்பாளையத்தலைவராயிருந்த சேதுபதி முதலான வீரர்களையுங் கூட்டித் தன் சேனைத் திரள்களையுங் கொண்டு மதுரையிற் புகுந்து போராடிச் சத்து ருக்களைத் துரத்திப் பாண்டியனுக்கரசாட்சியை நிலைப்படுத் தித் திரும்பினான்.
வன்னியர் வெறுப்பு
இவன் மறுபடியும் வன்னியர் மேற்கொள்ளையாடவர எண்ணியிருக்கிறானென்று ஒரு பொய்க்கதையுண்டான போது, வன்னியர்கள் பயந்து, கண்டியிராசனிடம் போய்த் தங்களுக்கு உதவி செய்ய வேண்டி நின்றார்கள். அந்தக் கண்டியிராசன், “யாழ்ப்பாணம் எங்கள் முன்னோர் பரிசா கக் கொடுத்த இராச்சியமாயிருப்பதால், நான் அதற்கு விரோ தமாகப் படையெடுத்து என் குலப்பிதாக்களின் பேருக்கு அபகீர்த்தி வருவிக்க மாட்டேன்' என்று மறுத்துச் சொன்னத னால், அவ்வேழு வன்னியர்களும் கன திரவியங்களைக் கொண்டு வந்து விரோதய சிங்கையாரியனைக் கண்டு, நன்முகம் பெற்றுத் திரும்பிப் போய்ப் பயமற்றிருந்தார்கள். வீரோதய சிங்கையாரியன் இளவயதிலேயே மரணமடைந் தான். இவன் போசனஞ் செய்து இரவில் நித்திரையாயிருக் கையில் மரணமடைந்ததனால், இவன் மரணத்தைக் குறித்துப் பல விதமாகப் பேசிக் கொண்டார்கள்.

யாழ்ப்பாண வைபவமாலை 41
செயவீரசிங்கையாரியன்
அவன் குமாரன் செயவீர சிங்கையாரியன் சிறுவய தில் முடிசூட்டி அரசனாய் வந்ததும், மிகு விவேகவானாய்ச் சத்துரு பயமின்றி அரசாட்சியை நடத்திக் குடிகளை இரட் சித்து, வெகு கீர்த்திமானானான்.
1. இவன் கி.பி.1380ல் அரசனானான் என்பர் முதலியார் இராசநாய கம் அவர்கள். எனவே, சகாத்தம் 1380-ஆம் வருஷம் என்பது கி.பி.1380 எனக் கொள்ள வேண்டும்.
இவ்வரசனைப் பற்றி வைபவம்ாலை அதிகம் குறிக்காதிருந்தாலும், பக்க ஏதுக்களால் இவனுடைய சரித்திரம் விரிவாக வெளிவந்து விட்டது.
கம்பளையிலே மூன்றாம் விக்கிரமபாகு என்னுஞ் சிங்கள அரச னுக்குமந்திரியும் படைத்தலைவனுமாயிருந்து பின்பு பிரபுராசாஎன்னும் பதவி பெற்றவனும், வஞ்சி நகரத்து மலையகுலத்தைச் சேர்ந்தவனும் சிங்கள இதிகாசங்களிலே அளகேஸ்வரன் என்றும் அளகைக்கோன் என்றுங் கூறப்படுபவனுமாகிய இவ்வரசன், ஜயவர்த்தனபுரம் என்னுமி டத்தை அரண்படுத்தி, வலி மிகுந்தமையால், ஆரியச் சக்கரவர்த்தி இவ னிடம் திறை வாங்கும்படி அனுப்பிய ஏவலாளர்களை இவன் கொன்று, திறையுமிறுக்காது விட்டான். ஆரியச் சக்கரவர்த்தி இவன் மீது படையெ டுத்து வென்றான். ஆனால், அளகேஸ்வரன் வென்றானெனச் சிங்கள நூல்கூறுகின்றது. கோட்டகம் எனுமூரிற் கண்டெடுக்கப்பட்டசிலாசாசன மொன்றில்.
"சேது
கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப்
பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் - பொங்கொலிநீர்ச்
சிங்கைநகராரியனைச் சேரா வனுரேசர்
தங்கள் மடமாதர் தாம்."
எனும் வெண்பாப் பொறிக்கப்பட்டிருத்தலினாற் சிங்கைநகர் அரசனே வெற்றி பெற்றானென்பதும் இச்சிலை அவ்வெற்றியின் ஞாபகச் சின்ன மென்பதும் முதலியார் இராசநாயகம் அவர்களது மதம் (யா.ச. பக்.69, 69) இப்போரில் அளகேஸ்வரன் இறந்தான் எனவும், சிங்கள அரசர்

Page 35
42 யாழ்ப்பாண வைபவமாலை
கண்டியரசனுடன் பொருதல் அக்காலம் கண்டி நாட்டை அரசாண்ட புவனேக
வாகு முத்துச் சலாபத்தைக் குறித்து இவனுடனே விவாதம் பண்ணி நெருங்கினதனால், இவன் அவனுடனே நெருங்கி யுத்தம் செய்து வெற்றிகொண்டு இலங்கை முழுவதும்
திறையீந்து வந்தார்களெனவும் முதலியார் அவர்கள் குறிப்பிட்டிருக்கின் றனா.
செயவீரசிங்கையாரியனுடைய வரலாற்றைச் செகராசசேகர மாலைச் சிறப்புப்பாயிரச் செய்யுளின் உதவி கொண்டு சுவாமி ஞானப்பி ரகாசர் அவர்கள் துருவித் துருவி ஆராய்ந்திருக்கின்றார்கள். இவ்வா ராய்ச்சியின் பயனை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் எனும் நூலிற் 35T6Rs.
தென்னிலங்கை அரசரைத் திறை கொண்டமை மேற்கூறிய சிலாசாச னத்தால் உறுதிப்படுவதைச் சுவாமி அவர்களும் உடன்பட்டெழுதியிருக் கின்றார்கள்.
செகராசசேகரன், மாற்றானோடு போர்த் தொழிலும் தன் இராச்சிய நற்பரிபாலனமுஞ் செய்து, அரசு கட்டிலில் வீற்றிருந்தனன். தீந்தமிழிலுந் தேர்ந்த நிபுணனாகி 'முத்தமிழ் தேர் செகராசசேகரமன்' எனவும் "சதுர் மறை பயில்வோன்," எனவும் புகழப்படுவதற்குஇலக்காயினான். (செக, மாலை. பக். 35,36)
செகராசசேகர மாலை, செகராசசேகரம் (வைத்தியநூல்) என்னும் இரண்டோடு தசுழிண கைலாசபுராணமும் இவன் காலத்துத் தமிழ் நூல்க ளாகத் தோன்றுகின்றன. (யா.வை.வி. பக்.97)
சிங்கையாரியவரசர் விடையும் பிறையும் பொறிக்கப்பட்ட நான யங்களை இதற்கு முன்னிருந்தே வழங்கி வந்தாலும் இவ்வரசன் காலத் தில் அடிக்கப்பட்டவை அச்சு உருவத்தில் விளக்கமாகவும் அழகாகவும் இருக்கின்றன. (யா.ச.பக்.70)
"சேது" எனும் மொழிபொறிக்கப்பட்ட காசு யாழ்ப்பாணத்தரசர்களு டையதாய் இருக்கக் கூடும் என முதலியார் இராசநாயகம் அவர்கள் குறிப்பிட்டதை, தாம் பின்றொடர்ந்து ஆராய்ந்து

யாழ்ப்பாண வைபவமாலை 43
மிதுன யாழ்க்கொடி தூக்கிச் சாலிவாகன சகாத்தம் 1380 ஆம் வருஷத்திலே இலங்கை முழுவதும் ஒரு குடைக்கீழ் அரசாண்டான் பன்னிரண்டாம் வருஷத்திலே பராக்கிரம வாகு என்பவன் பாண்டியராசனைப் பிணைவைத்துத் திறை தருவேனென்று செயவீர சிங்கையாரியனிடத்தில் இராச்சி யத்தை வாங்கி அரசாண்டு, இவனும் இவன் பின் வந்த அரசருந் திறையிறுத்து வந்தார்கள். இவன் நெடுங்காலம் அரசாண்டு, தன் மகன் குணவீரசிங்கையாரியன் புயத்தில் இராச்சியத்தையேற்றிப் பூலோக வாழ்வை நீங்கினான்.
குணவீரசிங்கையாரியன்
கண்டியரசர் கொடுத்து வந்த திறையை நிறுத்தினத னால், குணவீரசிங்கையாரியன் அவர்கள்மேல் யுத்தஞ் செய்து, சில பகுதிகளைப் பிடித்துத் தமிழ்க் குடிகளை இருத்
தித் தன்னரசாட்சியாக்கினான் மதுரையை அரசாண்ட
உண்மைகளைக் கண்டதாகச்சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் குறிப்பிட் lossairpirifascit. (Ceylon Antiquary Vol.V.Pt. IV) goijalmyrtiujáudoost திருப்பின் இந்தக் காசுகள் சேதுபதிவேந்தர் காசுகளுடன் சேர்ந்து யாழ்ப் பாணத்தரசர்களின் புகழை மழுங்கச் செய்து விட்டிருக்கும்.
1. இச்செயல் யாப்பாகுவிலிருந்தரசாண்ட முதலாம் புவனேகவாகு காலத்திலெனக் கொள்வர் முதலியார் இராசநாயகம். ஆகையால், இது கி.பி.1279க்குப் பின்னரசாண்ட விக்கிரமசிங்கையாரியன் காலமாகும்.
2. இவன் கி.பி.1410 வரையில் அரசனானான்.
இவ்வரசன் அளகைக்கோனார் அல்லது அளகேஸ்வரனோடு பொருது தோற்றோடித் தன் இராச்சியத்தினுள் ஒடுங்கி அடங்க

Page 36
44 யாழ்ப்பாண வைபவமாலை
நாயக்கர்களுக்கும் சில பேருதவி செய்தான். இவன் தன்
பிதாவைப் போலவே சிறந்த அரசாட்சி செய்து, வயோதிக
னாகித்தன்னரசாட்சியைத்தன் மகன் கனகசூரியசிங்கையா
ரியனுக்குக் கொடுத்துச் சொர்க்கமடைந்தான்.
ஒடிப்போதல்
கனகசூரிய சிங்கையாரியன் சிங்களக்குடிகளுக்கு இளக்கங் காட்டி வந்ததனால், அவர்கள் மேலாட்
வேண்டியதாயிற்றென்பர் சுவாமி ஞானப்பிரகாசர். (யா.வை.வி.99102.)
இங்ங்ணம் கூறல் சிங்கள சரித்திர நூலிற் கூறப்பட்ட நிகழ்ச்சியோடு முரணாதிருத்தல் காண்க. எனினும் அளகேஸ்வரன் செயவீரசிங்கையாரி யனாற்றோற்கடிக்கப்பட்டான் என்பர் முதலியார் இராசநாயகம் அவர் கள். இது முன்னரே விளக்கப்பட்டுள்ளது. இவ்வறிஞர் இவ்விஷயம் upf Ceylon Literary Register, Third Series, Vol.II GTgth sé5&anasud) நீண்டதோர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கின்றார்கள்.
இவ்வரசனே இராமேச்சுரக் கர்ப்பக் கிருகத்தை கி.பி.1414ல் கட்டு வித்தவன். திருப்பணிக்கு வேண்டிய கருங்கற்களைத் திருக்கோணமலை யில் வெட்டுவித்து அங்கனுப்பினான் (யா.ச.பக். 72,73)
'பரராசசேகரம்" என்னும் வைத்தியநூல் இவன் காலத்தில் எழுதப் -لعباسكالا
1. இவன் கி.பி.1440 வரையில் அரசனானான்.
2. கோட்டை அரசனாகிய ஆறாம் பராக்கிரமவாகுவின் தத்த புத்திர னாகிய செண்பகப் பெருமாளைத் தனது இராச்சியத்தினின்றும் அகற்றும் நோக்கமாக வன்னியர்களையும் யாழ்ப்பாணவரசனையும் போர் செய்து வென்று வருமாறு அரசன் அனுப்பினான். செண்பகப் பெருமாள் இவ் விரு திறத்தினரையும் வென்றான். அவனை ஆரிய வேட்டையாடும் பெருமாள்' என அரசன் புகழ்ந்து, யாழ்ப்பாணத்தையே

யாழ்ப்பாண வைபவமாலை 45
டங்கொண்டு வன்னியமார்களின் உதவி பெற்றுக் கலகஞ் செய்தபோது, கனகசூரிய சிங்கையாரியன் இரவிலே தன் மனைவி மக்களையும் கொண்டு வடதேசத்துக்கு ஒடிப்போய் விட
விசயவாகு
விசயவாகு" என்னுஞ் சிங்களவன் தானே அரசனெ னத் தலைப்பட்டுத் தமிழ்க்குடிகளை ஒடுக்கித் தமிழரை
உடைநடை பாவனைகளிலெல்லாந் தங்களைப் போலாக
அரசு புரியுமாறு அனுப்பினான். இவன்நல்லூரிலே கி.பி.1450ல் ஒரு புது நகரெடுப்பித்துச் சிறீசங்கபோதிபுவனேகவாகு என்னும் சிங்களநாமத்து டன் அரசாண்டான். இவ்வரசனே நல்லூர்க் கந்தசாமி கோயிலைக் கட்டு வித்தவன்.
இவனையே சிங்கையாரிய மகாராசனின் மந்திரியென மயங்கிக் கூறினர் வைபவமாலையுடையார். இவனைப் பற்றி 25-ஆம் பக்கத்தில் எழுதிய குறிப்புகளையும் நோக்குக. மந்திரியாகிய புவனேகவாகுவேறு: சிறீசங்கபோதி புவனேகவாகு வேறு; பெயரளவில் மட்டுமே ஒற்றுை யுண்டென்பர், திரு. ஆர்.பி.பிறக்ரர் அவர்கள்.
1. ஆரியர் சக்கரவர்த்தி இவ்வமரிற் கொல்லப்பட்டானென இராசா வளி கூறுதல் சிறிதும் பொருந்தாது. இந்நூல் மிகவும் பிற்காலத்தது. ஆயின் சுட்டிய நிகழ்ச்சிகள் நிறைவேறிய காலத்திலேயே எழுதுற்றதா கிய ஒரு சிங்கள நூலால் ஆரியச்சக்கரவர்த்தி ஒளித்தோடியமை நன்றாக நிச்சயிக்கப்படுகின்றது. (கோகில சந்தேசம்)- யா.வை.வி. பக் 105.
2. இவன், செண்பகப் பெருமாள் கோட்டைச் செங்கோலைக் கவர்ந்து கொள்ள விரைந்து செல்லுகையில் தன திடமாய் விட்டுப்போன ஒர் சேனைத் தலைவனாகலாம். (யா.வை.வி.பக். 107)

Page 37
46 யாழ்ப்பாண வைபவமாலை
வேண்டுமென்று பலவந்தம் பண்ணி மாறுதல் பண்ணுவித்து அதற்கமையாதவர்களைத் தண்டித்துப் பதினேழு வருஷம் அரசாண்டான்.
கனகசூரிய சிங்கையாரியன் தன் பிள்ளைகளாகிய பரராசசேகரனையும் செகராசசேகரனையுந்' திருக்கோவ லூரில் இராச குடும்பத்தவர்பாற் கல்வி கற்க வைத்து, யாத் திரை பண்ணும்படி தன் மனைவியுடனே காசி பரியந்தம் திருத்தலந்தோறும் சுற்றித்திரிந்து, திரும்பிக் கோகர்ணச் சிவாலயத்தில் வந்திறங்கி, அவ்விடத்திலிருந்து சில வருட காலம் சிவராத்திரி விரதம் அனுட்டித்தான். அப்படி அனுட் டித்து வருங்காலத்தில் ஒரு நாள் கனவிலே, "நீ மதுரைக்குப் போ, அங்கே உனக்குச் சகாயங் கிடைக்கும்' என உத்தரவு கிடைத்ததனால் விரத உத்தியாபனமும் செய்து, திருக்கோவ லூருக்குப் போய், அங்கே தன் பிள்ளைகள் வளர்ந்தவர்க ளாய்ப் போர்ச் சமர்த்திலும் கல்விப் பயிற்சியிலுஞ் சரீரவழகி லும் அதிகப்பட்டவர்களாயிருக்கக் கண்டு, அளவில்லாத சந்தோஷவானானான். பிதாவைக் கண்ட போதே பிள்ளைக ளின் முகம் சூரியனைக் கண்ட செந்தாமரைப் புட்பங்கள்
1. பரராசசேகரன், செகராசசேகரன் என்பன யாழ்ப்பாணத்தரசர் ஒருவர் பின் ஒருவராய் இட்டுக் கொண்ட சிங்காசனப் பெயர்களாகும். அவ்விதமே பாண்டியரசர் ஜடாவர்மன், மாறவர்மன் எனவும், சோழவர சர் பரகேசரி வர்மன், இராஜகேசரி வர்மன் எனவும் சிங்காசனப் பெயர் வகித்தார்கள். இதையறியாத மயில்வாகனப் புலவர், இவ்விரு பெயர்க ளும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த இவ்விரு சகோதரரின் பெயர்களென மயங்கி எழுதிச் சென்றார் போலும்

யாழ்ப்பாண வைபவமாலை 47
போலாயின. பிள்ளைகள் இருவரும் சத்துருவைச் செயிக்க வும் இராச்சியத்தை மீட்டுக் கொள்ளவும் பண்ணியிருந்த பிரயத்தனங்களைக் கண்டு பிதா மிகுந்த ஆச்சரியங் கொண்டு, அவர்களை முத்தமிட்டு, அங்குள்ள இராச குடும் பத்தாருக்குத் தான் காட்ட வேண்டிய நன்றியறிதல் எல்லாங் காண்பித்து, பிள்ளைகளையுந் தேவியையுங் கூட்டிக் கொண்டு மதுரையிற் போய்ச் சேர்ந்தான். கனகசூரிய சிங் கையாரியன் மதுரையிற் சேர்ந்த பொழுது பாண்டி நாட் டைப் பகுதியாய் ஆண்ட சிற்றரசர் பலரும் சேனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட, அவன் சகல ஆயுதங்களு டனேயும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து, மேற்கு வாசல் வழி யாக நுழைந்தான்.
விசயவாகுவின் மரணம்
விசயவாகு காத்திராத வேளையிற் சேனை வர்க்கத்து டன் இவன் (கனகசூரிய சிங்கையாரியன்) நுழைந்த போதி னும், அவன் சடுதியிற் சேனைகளைக் கூட்டி, அஞ்சாநெஞ்ச னாய் நின்று, பெருஞ்சண்டை பண்ணினான். செகராசசேக ரன் ஓர் அரணிமேற் சண்டை செய்து நிற்கப், பரராசசேகரன் விசயவாகுவின் துணிவையும் அவன் செய்யும் வீரத்தையுங் கண்டு வாட்படையுடனே விசயவாகுவின் போர்முனை மேற் சிங்கம் பாய்ந்தாற்போற் பாய்ந்து சேனைகளையும் விசயவாகுவையும் தன் வாளுக்கிரையாக்கினான். அதைக் கண்டு செகராசசேகரனுடன் எதிர்த்த போர்முனை முரிந்து கெட்டுச் சிதறிப் போயிற்று.

Page 38
48 யாழ்ப்பாண வைபவமாலை
பழைய அரசன் அரசாட்சியை மீளப் பெறல்
பரராசசேகரன் பிதாவை அரசாட்சியில் வைத்துத்தான் தேசவிசாரணை செய்ய முயன்று விசயவாகுவின் கலகத்தி னுடன்பட்ட அநேக சிங்களவரைப்பிடித்துக் கொலை செய் வித்தான். அநேக சிங்களக் குடிகள் தங்கள் குடும்பங்களு டனே யாழ்ப்பாணத்தை விட்டுக் கண்டி நாட்டுப் புறங்க ளிலே போய்க் குடியேறினார்கள். போகாமலிருந்த குடிகள் தமிழருக்கு மிகவும் பயந்து நடந்தார்கள். அதன்பின் பரராச சேகரன் சோழராச வமிசத்தைச் சேர்ந்த இராசலட்சுமியமீ மாள் என்னும் பெண்ணை விவாகம் பண்ணினான். பிதாவா கிய கனகசூரிய சிங்கையாரியன் அவனை முடிசூட்டிச் சிங் காசனத்தில் வைத்துத் தான் இளைப்பாறியிருந்து சில காலத் தின் பின் இறந்து போனான்.
பரராசசேகரன் மனைவி மக்கள்
பரராசசேகரன் பொன்பற்றியூர் வேளாளர் மரபில் முடி தொட்ட வேளாளரென்னும் பாண்டிமழவன் குலத்திற் பிறந்த அரசகேசரியின் மகள் வள்ளியம்மையை இரண் டாம் மனைவியாக்கினான், மணவக்குடியிலிருந்து வந்த மங்கத்தம்மாள் என்பவளை வைப்புப் பெண்ணாக்கினரின். பரராசசேகரனுக்குப் பட்டத்துத் தேவியாகிய இராசலட்சுமி யம்மாள், சிங்கவாகு என்றும் பண்டாரம் என்றும் இரு குமாரரைப் பெற்றாள். இரண்டாந்தேவியாகிய வள்ளி யம்மை என்பவள் பரநிருபசிங்கம் முதலிய நாலு பிள்ளைக ளைப் பெற்றாள். வைப்புப் பெண்ணாகிய மங்கத்தம்மாள்,
1. இவன் கி.பி.1478ல் அரசனானான்.

யாழ்ப்பாண வைபவமாலை 49
சங்கிலி'என்னுமொருவனைப் பெற்றாள். இப்படியே இராச குடும்பம் பெருகத் தொடங்கிற்று."
சகோதரன்
பரராசசேகரன் அரசாட்சி முறையை அதிக விவேக மாக நடத்தி வரச் செகராசசேகரன் கல்வி முயற்சியுள்ளவ னாய்த் தான் வடநாட்டிலும் தென்னாட்டிலுமிருந்து கொண்டு வந்த சகல சாஸ்திரங்களையும் பிரபலப்படுத்தும் பொருட்டு வித்துவான்கள் பலரைச் சேர்த்துச் சபை கூட்டிச் சில நூல்களைச் செய்வித்துத் தானும் சோதிடம் செகராசசே கரம் முதலிய சில நூல்களைச் செய்தான்."
கல்வி வளர்ச்சி
பரநிருபசிங்கத்தின் மைத்துனனும் பரராசசேகரன்
1. இச்சங்கிலியின் வரலாறு மிகவும் சிக்கலாகக் குறிக்கப்பட்டுள் ளது. இந்தச் சங்கிலிக்கும் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற் றிய போது பாலிய அரசனின் பரிபாலகனாயிருந்த சங்கிலிக்கும் சரித்திர மலைவுண்டாக இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். செகராசசேகரன் எனச் சிங்காசனப் பெயர் வகித்துப் பல வருடங்களாக அரசாண்ட இச்சங்கிலி, வைப்புப் பெண்ணின் மகனென்பது பொருந்தாவுரையாகும்.
2. போர்த்துக்கேயர் நூல்களைக் கொண்டு, 'வக்கிரத்துக்குறிபண் டாரம்", "சியங்கேரி என்னும் இரு பெயர்கள் மாத்திரம் அறியக்கிடக் கின்றன.
3. செயவீர சிங்கையாரியன் காலத்தில் இயற்றப்பட்ட நூல்களென இவை முன்னரே கூறப்பட்டிருத்தல் காண்க.
பி-ம்: செகராசசேகரமென்னுஞ் சோதிட முதலிய.

Page 39
5O யாழ்ப்பாண வைபவமாலை
மருமகனுமாகிய அரசகேசரி என்பவன், இரகு வமிசம் என்னும் நூலை வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துப் புராண நடையாகப் பாடித் திருவாரூரிலே கொண்டு போய் அரங்கேற்றிப் பெருங்கீர்த்தி அடைந்தான். இப்படியே யாழ்ப்பாணம் கல்வியறிவிலே தலைப்பட்டுப் பல வித்து வான்கள் அங்குமிங்கும் எழும்பினார்கள். பரராசசேகரனும் செகராசசேகரனும் தங்களுக்குரிய சிங்கையாரியப் பட்டத் தைச் சிங்கை எனச் சுருக்கித் தங்கள் பெயர்களின் முன் நிறுத்திச் சிங்கைப் பரராசசேகரன், சிங்கைச் செகராசசேக ரன் என்றாக்கினார்கள். செகராசசேகரன் சாஸ்திரங்கள் பல வற்றையும் பாண்டிநாட்டிலிருந்தும் ஆதீனங்களிலிருந்தும் அழைப்பித்தெழுதுவிக்க அடிக்கடி சேதுக்கரையிற் போயி ருந்து வந்தான். இராசகுமாரர்கள் கல்வியிலும் படைப் பயிற் சியிலும் தேக வளர்ச்சியிலும் நாளுக்கு நாள் அதிகப்பட்டு வந்தார்கள். அவர்களுக்குள் சங்கிலி என்பவன் கபடசிந்தை யும், கடு விவேகமும், அஞ்சாக் குணமும், துஷ்ட நடையும் உள்ளவனானான். மற்றவர்கள் ஒழுக்கமும் உயர்குணம் முத லிய சுபநயங்களும் உள்ளவர்களானார்கள்.
1. இந்நூல் எதிர்மனசிங்க பரராசசேகரன் காலத்தில் இயற்றப்பட்ட தென்பர் சுவாமி ஞானப்பிரகாசர் (யர்.வை.வி. 110)
இரண்டாம் தமிழ்ச் சங்கம் இவன் காலத்தில் நிறுவப்பட்டதெனவும் இரகுவமிசம் இக்காலத்திற்றான் இயற்றப்பட்டதெனவும் உடன்படுவர் முதலியார் இராசநாயகம் அவர்கள் (யா.ச.பக். 77, 78)

யாழ்ப்பாண வைபவமாலை 51
சுபதிட்ட முனிவர் இப்படியிருக்கும் காலத்தில் ஒருநாள் அகத்தியமுனிவ ரின் பெளத்திரரும், சித்தமுனிவரின் புத்திரருமாகிய சுப திட்ட முனிவர், பரராசசேகர மகாராசனைக் காண வந்தார். அரசன் அவ்விருடிக்குத் தான் செய்ய வேண்டிய ஆசார உபசாரங்கள் அனைத்தையுஞ் செய்து, ஆசனத்தின் மேலேற்றி, அவரை நோக்கி, 'சுவாமி, தேவரீர் என் பிதா வுக்கு வருங்கால சம்பவங்கள்ை அறிவித்திருந்தீர். அவை கள் அடியேனுக்குத் தெளிவாக விளங்கவில்லை. ஆதலால், அவைகளை விவரமாகச் சொல்லி அடியேனுக்கும் இவ்வர சாட்சிக்கும் இனிமேற் சம்பவிப்பவைகளைத் தெளிவிக்க வேண்டும்' என்று கேட்டான். அப்பொழுது சுபதிட்டமுனி வர் அவனை நோக்கி, 'அரசனே, இன்னமுஞ் சில காலம் உணதரசாட்சி சிறப்பாக நடக்கும். முன் முடிசூட்டிய முகூர்த் தம் தப்பிப் போனதனால், உன்னிற்பின் இம்முடியைச் சூடு தற்குப் பிள்ளைகளில்லை," என்றார். அதற்கு அரசன் இரு டியை நோக்கி, "எனக்குப் பட்டத்துத் தேவி பெற்ற பிள்ளை கள் இருவருண்டே? அவர்கள் இல்லாதே போனால் இரண் டாந்தேவி பெற்ற பிள்ளைகளுண்டே? இவர்களெல்லாரும்
1. சுபதிட்ட முனிவரின் வரலாற்றை இடைச்செருகல் எனக் கொள் வர் சுவாமி ஞானப்பிரகாசர். இவ்வரலாற்றில் கூறப்பட்டவற்றுட் சில உண்மைகள் உளவென நிலைநாட்ட முயன்றிருக்கின்றார்கள் முதலியார் இராசநாயகம் அவர்கள். இம்முனிவர் வாக்கின் பிற்பகுதி இடைச்செரு கல் எனவும் குறிப்பிட்டுள்ளார். (யா.ச.பக். 79-82; & Ancient Jaffna, 374-80)

Page 40
52 யாழ்ப்பாண வைபவமாலை
இல்லாமற் போவார்களா?' என்றான். அதற்கிருடி 'அர சனே நீ இத்தனை பிள்ளைகள் உண்டென்பது மெய்யே. அவர்களுட்பட்டத்துக்குரிய மூத்த குமாரன் விஷத்தினாற் கொலையுண்பான்; இளையவன் வாளினால் வெட்டுண் பான்; உன் இரண்டாந் தேவியின் மூத்த குமாரனை வைப்புப் பெண்ணின் மகன் வாய்ப் பேச்சினால் மயக்கி அரசாட்சி யைக் கையாடிக் கொடுங்கோலரசு செலுத்துவான். அவன் செய்யுங் கொடுமைகளைக் குடிகள் தாங்கமாட்டாமற் பொறாமைகொள்வதனாலும் உன் இரண்டாந் தேவியின் மூத்த குமாரனை அவன் வெறுத்துப் பகை கொள்ளப் பண்ணு வதனாலும், அவர்களால் இராச்சியம் அன்னியர் கைவசமா கும்,' என்றார். அதற்கு அரசன், 'அன்னிய இராசர்கள் கையிலிருந்து எப்பொழுது மீளும்?' என்று கேட்க,
பறங்கிக்காரர்
இருடி அவனை நோக்கி, "அரசனே, இவ்விராச்சியம் முதல் முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் சில ஆலயங்களையெல்லாம் இடித்துச் சத்தியவேதத்தைப் பலவந்தமாகப் பரப்பி, நாற்பது வருட காலம் வரைக்கும் கொடுங்கோல் செலுத்தி அரசாட்சி செய்து வருவார்கள்.
உலாந்தேசர் "பறங்கிக்காரரை உலாந்தேச மன்னன் உபாயமா கப் பிடித்து இறப்பிறமாது சத்தியவேதத்தை
1. பறங்கிக்காரர் ஆட்சி கி.பி.1620 - 1658 2. உலாந்தேசர் ஆட்சி கி.பி.1658 - 1796,

யாழ்ப்பாண வைபவமாலை 53
இராசவதிகாரத் தினாற் பரப்பித் தன் சமயவாலயங்களிலே அன்றிச் சிவசமய ஆலயங்களில் மார்க்க வழிபாடு செய்ய இடம் வையாதபடிசனங்களைக் கட்டுப்பாடு பண்ணிச் சிவச மய ஆசாரங்களை முழுதுந் தள்ளிப் போடத்தக்க கட்டாயங் களைச் செய்து, தன் சமயக் கோவில்களைக் கட்டுவித்துச் சமய காரியங்களில் நெருக்கிடை பண்ணியும், அநேக வரி களை வைத்துக் குடிகளை வருத்தியும் நூற்றிருபது வருடத் துக்கு மேற்பட அரசாட்சி செய்வான். அவனிடத்தில் இங்கி லீசு மன்னன் இராச்சியத்தைப் பெற்றுச் சமய காரியங்களிற் பலவந்தஞ் செய்யாமல், எவர்களுக்கும் இஷ்டங் கொடுத்து, எவர்களுந் தங்கள் இட்டப்படி தேவாலயங்களைக் கட்டி முடிக்கத் தடை செய்யாமல் விட்டு, எழுபத்தொன்பது வரு ஷம் அரசு செய்வான். இவன் தன் அரசாட்சி முற்கூற்றிற்போ லப் பிற்கூற்றில் நீதி முறை செலுத்தாதே போவான். இவன் தன் அரசாட்சியை இழந்து போகுங் காலம் நிறைவேறா முன்னமே சிங்கையாரிய மகாராசன் கட்டுவித்த கோவிற்றி ருப்பணிகளும் விஜயராசன் கட்டுவித்த திருப்பணிகளும் பழையபடி நிறைவேற்றமாவதற்கு ஆரம்பமாகும். அவ்வா லயங்களை அநேகர் புகழையீட்டிக் கொள்வதற்குக் கட்டத் தொடங்கி, முன்னிருந்த நிலைபரங் கட்டத்தவறிக் கட்டி உளைந்து போவார்கள். அவ்வாலயங்களில் வடமதில் வாயில் காப்பாக நின்ற சிவாலயம் ஒன்று மாத்திரமே சிவ
1. இவ்வாலயங்களில் நகுலேச்சரமும் திருக்கேதீச்சரமும் முற்றுப் பெற்றன.

Page 41
54 யாழ்ப்பாண வைபவமாலை
கடாட்சம் பெற்ற ஒருவனால் முதன்முதல் நிறைவேறும். மற் றைய ஆலயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றமா கும். எல்லா ஆலயங்களிலும் விசேஷமாகிய கைலாயநாதர் கோவிலும் கைலை நாயகியம்மன் கோவிலும் முன்னிருந் தபடி கட்டியெழுப்புதற்குக் கைலாயநாதராற் பூரணகடாட் சம் பெற்றுக் கொள்பவர்களே முயல்வார்கள்.
ஆங்கிலேயர் "இங்கிலீசு மன்னன் எழுபத்தொன்பது வருஷம் அர சாண்ட பின் பிராஞ்சிய இராசனும் உலாந்தேசு மன்னனும் இராச்சியத்தை அவன் கையிலிருந்து கபட தந்திரமாகப் பிடித்துக் கொழும்பிலிருந்து அரசாளுவார்கள். அப்பொ ழுது வாலசிங்கம் வெளிப்பட்டு அவர்களிடத்தில் வரு வான். வரவே, அவன் கையில் இலங்கை அரசாட்சி முழுவ தையும் ஒப்புவித்துத் தங்கள் நாட்டுக்குப் போவார்கள். அதன் பின்பு பூலோப(க) சிங்கசக்கரவர்த்தியின் மகன் ஆரிய சிங்கச் சக்கரவர்த்தி, கன்னியாகுமரி தொடங்கி இமயமலை பரியந்தமுள்ள ஐம்பத்தாறு தேசங்களையும் ஒரு குடைக்கீழ் அரசாளுவான். உன் சந்ததியாருக்கு இனி ஒருபோதும் அரசாட்சி வருவதில்லை," என்று சொல்லி, சுபதிட்ட முனிவர் எழுந்து போனார். இப்படி உறுதி வாக் காவே சொன்ன போதிலும், சுபதிட்டமுனிவர் தனக்கு விவ
1. கைலை விநாயகர் கோவிலும் (உத. பிரதி)
2. இவ்வாக்கு இடைச்செருகல்: அன்றியும், கணக்கும் பிழைபட்டு விட்டது.
3. தி.த.க. பிரதி: "கேதாபுரியையாளும்."

யாழ்ப்பாண வைபவமாலை 55
ரித்துச் சொல்லிய வாக்குகளை அரசன் நம்பினவனும் நம்பா தவனுமாயிருந்தான்.
இராசகுமாரன்
சில காலத்தின் பின் இராசாவின் முதற்குமாரன் சடுதி மரணமுண்டுபட்டு இறந்து போனான். சங்கிலி நஞ்சூட்டிக் கொன்றானென்பது ஒருவருக்குந் தெரியாதே போயிற்று. மூத்த குமாரன் இறந்து போக, அரசன் தன் இளைய குமாரனா கிய பண்டாரம் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி வைத்துத் தீர்த்தமாடுவதற்குப் பரிவாரங்களுடனே,
அரசன் கும்பகோணத்துக்கு யாத்திரை செய்தல்
கும்பகோணத்துக்கு யாத்திரை பண்ணினான். சோழ தேசத்தரசனும் மகாமகத்தீர்த்தமாடுவதற்குப் பரிவாரங்க ளுடன்அவ்விடத்தில் வந்திருந்தான். அவ்விடத்தில் அச்சங் கிலி செய்த குழப்படியினால் அவனையும் பரராசசேகரனையும் பரிவாரங்களையும் அவ்வரசன் பிடித் துச் சிறையில் வைத்தான். படை சேனைகளுடன் பின்னாகப் போன பரநிருப சிங்கம் அதைக் கேள்விப்பட்டுப் போய்ச்
1. தஞ்சாவூர் அரசனென்பர் முதலியார் இராசநாயகம் அவர்கள் (யா.ச.பக்.82)
பரராசசேகரன்கும்பகோணத்துக்குப் போனவிடத்தில், சோழ இராச னோடு போராடி வென்ற கதை உப கதையே. எங்ங்னமெனில், சோழ இராச்சியம் விஜயநகர எழுச்சியின் முன்னே இருந்தவிடமும் தெரியா மல் அழிந்தொழிந்து போயினமையால்; அன்றியும், தீர்த்த யாத்திரைக்கு வேற்றுத்தேசம் போனானொருவன்அத்தேச அரசனைப்பொருது வென் றானென்பது சிறிதும் பொருந்தாததொரு கூற்றாம் (யா.வை.வி. பக்.111)

Page 42
56 யாழ்ப்பாண வைபவமாலை
சண்டை ஆரம்பித்துக் கடும்போர் பண்ணுகையிற் பரநிருப சிங்கத்துக்கு வலுவான காயங் கிடைத்தது. அப்படியிருந் தும், அவன் அந்தக் காயங்களையும் எண்ணாமல், வீராவே சங் கொண்டு போராடி, அவ்வரசனைப் பிடித்துச் சிறையி லிட்டுப் பரராசசேகரன் முதலானவர்களைச் சிறையிலிருந்து நீக்கி, மூன்று மாதம் அங்கேயிருந்து, தனக்குப் பட்ட காயங்க ளையும் மாற்றினான். அப்பொழுது சோழநாட்டரசன் தன் இராச்சியத்தைத் தான் ஆளும்படி விட்டால் திறையிறுப்ப தாக வேண்டிக் கொள்ள, அவனிடத்தில் அதற்கேற்ற பிணை வாங்கிக் கொண்டு இராச்சியத்தை ஒப்புவித்து விட்டு யாழ்ப் பாணத்துக்குத் திரும்பினான்.
பரநிருபசிங்கன் ஏழு கிராமங்களைப் பெறல்
யாழ்ப்பாணத்திற் சேர்ந்தபோதுபரராசசேகரன் பரநி ருபசிங்கத்தை அழைத்து, அவனுக்குக் கணவரிசைகளுஞ் செய்வித்து, மிகவுங் கனப்படுத்தி, கள்ளியங்காடு, சண்டி ருப்பாய், அராலி, அச்சு வேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம் என்னும் ஏழு கிராமங்களைச் சொந்தமாகக் கொடுத்துச் செப்புத் தகட்டிலே பட்டயமும் எழுதிக்
1. இவ்வேழு கிராமங்களும் ஒரு சேர ஒரிடத்தனவாயின், அதன் ஆளுகையைத் தன் மகனுக்கு நல்கி அதிபதியாக்கினானென்பது நம்பதக் கதாகும். ஆனால், போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின் இவ்வேழு கிராமங்களுக்கும் ஏழு அரச குடும்ப மக்களை அதிபதிக ளாக்கியபடியால், இக்கிராமங்கள் அவர்களுக்குத் தந்தை வழிவந்த உரி மைப் பொருள்கள் என்பதைக் காட்டவே இக்கதை எழுந்தது போலும் (யா.ச. பக்.83)

யாழ்ப்பாண வைபவமாலை 57
கொடுத்து, அரசாட்சியின் இரண்டாம் அதிகாரமுடையவனு மாக்கினான். அது சங்கிலிக்கு மன நோவாயிருந்தும், அவன் வெளிக்குக் காட்டாமல் அடக்கிக் கொண்டான்.
அவனது வைத்தியத் திறமை
அக்காலத்திலே கண்டியிராசன் மனைவி பண்டிதர்கள் அநேகரால் மாற்ற முடியாத வயிற்று வலிய்ால் வருந்தினத னால், அவ்வரசன் நல்ல வைத்தியன் ஒருவனை அனுப்பும் L-Jlq Lugyres Gas-assy மகாராசனுக்குப் பாசுரமனுப்பினான். அவ்வியாதி மாற்றுதற்குப் பரநிருபசிங்கம் செய்த சூட்சத் தைக் குறித்துக் கண்டியிராசன் ஆச்சரியங் கொண்டு அவ னுக்குத்தான் செய்ய வேண்டிய உபசாரங்கள் எல்லாஞ் செய் தனுப்பி வைத்தான். VA
சங்கிலி சிங்காசனத்தைக் கைப்பற்றல்
அக்காலத்தில் ஒரு நாள் பண்டாரம் என்னும் இளவர சன் பூஞ்சோலை சுற்றிப் பார்த்து வருகையிற் சங்கிலி மறை விலே நின்று வாளினால் வெட்டிக் கொலை செய்து, இராச்சி யந் தனக்கென்று முன்னின்றான். அவன் தன் உயிரையுஞ் சிதைப்பானென்னும் பயத்தினாலே பரராச மகாராசன் பேசாதே ஒதுங்கிவிட்டான். அது கண்டு பரநிருபசிங்கம்,
1.பி-ம். 'பரராசகேரன்பரநிருபசிங்கத்தையே அனுப்பிவைத்தான். பரநிருபசிங்கம் வியாதியை ஒரே ஒளஷதத்தினாலே மாற்றினான்." (உ.தா. பிரதியும், தி.த.க. பிரதியும்)

Page 43
58 யாழ்ப்பாண வைபவமாலை
நானிருக்க, இராச்சியம் இவனுக்கெப்படிக் கிடைக்கும்?" என்று தன் வலிமை காட்ட முயன்றான். அதையறிந்து, சங் கிலி பரநிருபசிங்கத்திடத்திற் போய், "கேளும் அண்ணா, நாம் இருவரும் சகோதரராயிருக்கவே இராச்சியம் நம்மிருவ ருக்கும் பங்கென்பதற்குத் தடையில்லை. நாமிருவரும் பகை கொண்டாடி நின்றால், வன்னியர்கள் இராச்சியத்தைப் பறித் துக் கொள்ளப் பார்ப்பார்கள். அப்படி வாராதபடி இப்போ தைக்கு நான் இராசனென்றும் நீர் மந்திரியென்றும் இருந்தா ளுவோம்; இனிமேல் வேறொழுங்கு பண்ணிக் கொள் வோம். இராச்சிய வருமானம் இரண்டு பேருக்கும் பங்காக வேயிருக்கும். உமக்கு எங்கள் பிதாவினாற் கிடைத்த தேசவ திகாரத்தை உமது மகன் பரராசசிங்கத்துக்குக் கொடுத்து விட்டு என்னுடனே கூடிக் கொண்டாற் பெருங்காரியங்க ளெல்லாம்நிறைவேற்றலாம்" என்று சொல்லி வாய்மயக்குக் காட்டி வசப்படுத்தப் பரநிருபசிங்கம் இதற்கிணங்கி, மந்திரி உத்தியோகத்துக்கு ஏற்பட்டான்.
சில காலத்துக்குள்ளே சங்கிலி சேனைகளைத் தன் வசப்படுத்திப் பெலத்துக் கொண்டு பரநிருபசிங்கத்துக்குப் பங்கிட்டுக் கொடுத்துவந்த பங்கையும் பரராசசிங்கத்துக்குக் கொடுத்திருந்த தேசாதிகாரத் தலைமையையும் நிறுத்தி, மந் திரி உத்தியோகத்துச் சம்பளம் மாத்திரம் கொடுக்கத் தொடங் கினான். "இன்று முதலாக நீர் திறை கொடுக்க வேண்டிய
1. சங்கிலி கி.பி.1519ல் இராச்சியத்தைக் கைக் கொண்டான்.

யாழ்ப்பாண வைபவமாலை 59
தில்லை' என்று பரநிருபசிங்கம் பாசுரமெழுதிச் சோழநாட் டரசனைத் தடுத்தான்.
பறங்கிக்காரர்
அந்நாட்களிற் பறங்கிக்காரர் மன்னாரில் வியாபாரம் பண்ணி வரத்துப் போக்காயிருக்கையில் அவர்கள் செய்த உபதேசத்தினால் அறுநூறு குடிகளிற் சனங்கள் சத்தியவேதத் திற் சேர்ந்தார்கள்." அதைக் கேள்விப்பட்டவுடனே சங்கிலி இராசன் அந்த அறுநூறு வீட்டுக்காரரையும் பெண் ஆண் குழந்தையென்னும் பேதம் பாராட்டாமல் அனைவரையும் வெட்டுவித்தான்."
சிங்களவரைத் துரத்தல்
யாழ்ப்பாணத்திற் பல இடங்களிலும் இருந்த புத்த சம யக் கோவில்களையெல்லாம் இடிப்பித்துச் சிங்களக் குடி களை முழுதாகத் துரத்தி விட்டான். அந்தச் சிங்களக்குடிகள்' ஒன்றாகிலும் இருந்ததில்லை.
1. அந்நாட்களில் சோழவரசு இருக்கவில்லை. 2. பிரான்சிஸ் சவேரியார் என்னும் கத்தோலிக்க குரு தென்னிந்தி யாவிலே பரதவர்களுக்குச் சுவிசேஷ சேவை செய்து வருங்கால், தம் பெயரையுடைய பரதவக் குரு ஒருவரை மன்னாருக்கனுப்பி, அங்கிருந்த கடையர்களுள் 600 பேரைக் கி.பி.1543ல் கிறிஸ்தவர்களாக்குவித்தார்.
3. இப்பெருங்கொலை நிகழ்ந்தது 1544-ஆம் வருஷம் மார்கழி மாசத்திலாகும்.
4. கண்டிநாட்டிலும் வன்னியிற்காட்டிலும் போயொதுங்கினார்கள். அது முதல் யாழ்ப்பாணத்தில் சிங்களக்குடிகள் (தி.த.க. பிரதி)

Page 44
60 யாழ்ப்பாண வைபவமாலை
யாவுகர்’
முன் விசயவாகுவின் கீழ்ப் போர்ச் சேவகராய் இருந்த யாவுகச் சேனையிலே கொலைக்கும் இராச தண்டனைக்கும் தப்பியிருந்த சில யாவுகக் குடிகள் சாவாங்கோட்டையிலும் சாவுகச்சேரியிலும் இருந்தார்கள். அவர்களையும் துரத்தி விட்டான்.
49. வன்னியர்களின் மரணம்
அந்தக் காலத்தில் நாற்பத்தொன்பது வன்னியர்மார் தென்னாட்டிலிருந்து மரக்கலமேறி வருகையில் நெடுந் தீவிற் கடலில் அமிழ்ந்து போயினர். அவர்களின் மனைவி மக்க ளுங் கரைப்பிட்டி வன்னியனும் அவன் மனைவி அம் மைச்சி நாச்சியாரும் வெவ்வேறு மரக்கலங்களிலே கன திரவியங்களுடனே வந்திறங்கினார்கள். அவர்களுட்கரைப் பிட்டி வன்னியன், ஓடைக்குறிச்சி என்னும் கந்தரோடை யிலே வீடு கட்டிக்கொண்டு மற்ற வன்னியர்கள் வரும்போது கூடிக்கொண்டு போகலாமென்று இருந்து விட்டான். மற்ற வன்னியர்கள் நெடுங்காலமாக வரக்காணாததால், வன்னிச் சிகள் அங்கங்கே வீடு கட்டிக் கொண்டு தங்கள் தலைவர்க ளின் வரவைப் பார்த்து வேலைக்காரரின் உதவி பெற்று அங்கங்கேயிருந்தார்கள்.
நம்பிகள்
* கரைப்பிட்டிவன்னியன்கீழ் அறுபது கத்திக்காரநம்பி
கள் சேவகராயிருந்தார்கள். அந்த நம்பிகளுள்
1. குலோத்துங்க சிங்கையாரியன் 13-ஆம் நூற்றாண்டில் யாப்பா குவை அழித்த பொழுது சிறையாகப் பிடிக்கப்பட்ட யாவுகர் (யா.ச.பக். 86)

யாழ்ப்பாண வைபவமாலை 61
தலைநம்பியின் மகளைக்கரைப்பிட்டிவன்னியன் கற்பழித் தான். அதை அவள் தகப்பன் அறிந்து, மறுநாள் அவ்வன்னி யன் தேவ வழிப்ாடு செய்து கொண்டிருக்கையில் அவனைக் கொலை செய்தான். அவன் கொலையுண்ண, அவன் மனைவி அம்மைச்சி நாச்சியார் வயல் வெளியிலோடித் தான் எங்கே போகலாமென்றறியாமல், தற்கொலை செய்தி றந்தாள். நம்பித் தலைவனும் இராசவிசாரணைக்குள்ளாகிக் கொலையுண்டான். வன்னியர் கையிலிருந்த திரவியம் சங் கிலி இராசனுக்காயிற்று. மற்ற நம்பிகள் சீவனத்துக்கு வழி யில்லாததனாலே சாணாராக் குப்பம்" என்னும் அயற்கிரா மத்திருந்த சாணாருக்குப் பணிவிடைக்காரர்களாகிப் பனை யேறுந் தொழில் பயின்று, பின்பு அத்தொழிலைத் தங்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.
நளவர்?
அந்த நம்பிகள் தங்கள் குலத்தை விட்டு நழுவினதால்,
அவர்கள் பெயர் நளுவரென்றாய், இக்காலம் நளவரென்றா யிற்று.
மறவர்
இராமநாதபுரத்திலிருந்து சில மறவர் வந்து மறவன் புலவிற் குடியிருந்து, உள் நாடுகளில் வந்து பெருங்களவு - Al
1. சாணாரக்குப்பம் மாகையப்பிட்டியைச் சேர்ந்தது.
2. நளவரும் சிங்கள மரமேறிகளே, சிங்கள மரமேறிகள் காலில் தளை போடாது மரங்களில் ஏறிப்பின் இறங்கும்போது நழுவி வருகின்ற படியால், நழுவர் எனப்பட்டு, அப்பதம் நழவராய், நளவராயிற்று - uT.s.lus.85, 86

Page 45
62 யாழ்ப்பாண வைபவமாலை
நடத்தினதால், அவர்களிற் பலரைப் பிடித்துச் சங்கில் இரா சன் கொலை செய்வித்ததனால், மிச்சமான பேர்கள் பன்றி யந்தாழ்வு என்னுங் காட்டுக்குள்ளே போய்க் குடியிருந்தார் கள்.
சங்கிலி பரநிருபசிங்கத்தை வெறுத்தல்
அக்காலத்தில் வடதேசத்திலும் தென் தேசத்திலும் பெரும்பஞ்சமுண்டானதனாற் பல சாதியான குடிகளுக் குள்ளே ஒரு பெருங்கலகமுண்டான பொழுது அக்கல கத்தை அடக்கச் சங்கிலி இராசன் அவ்விடத்துக்குப் போய்த் திரும்பி வருகையில் இருபாலை எல்லை கடந்தவு டனே வாத்தியகாரர் வாத்தியத் தொனியை நிறுத்தினார்கள். நிறுத்தினதற்குக் காரணம் என்னவென்று அரசன் கேட்க, 'இது பரநிருபசிங்கத்தின் இடமாயிருக்கின்றதனால் உத்தர வின்றித் தொனி செய்யப் பயந்து விட்டோம்,' என்றார்கள்.
1. 'குடிகளும் ஈடுபட்டு வந்து இங்குமங்குங் குடியிருந்தார்கள். அந்நாட்களிலே வடமிறாட்சிப் பகுதியிலிருந்த குடிகளுக்குள்ளே” (தி.த.க. பிரதி)
2. இவ்விடத்தில் அத்துவக்காத்து பிறிற்றோ அவர்களின் மொழி பெயர்ப்பின்படி அதிகம் வித்தியாசம் உண்டு. "வடதேசத்திலும் தென்றே சத்திலும் பெரும்பஞ்சம் உண்டானதன் பொருட்டுத் தென்றேசத்துப் பல் வேறு குடிகள் புதிதாக வந்து குடியேறினமையால், அரசனின் கொடுங் கோன்மை காரணமாகக் குறைந்த குடிசனத் தொகை ஒருவாறு சமன்பட் டது. அந்நாட்களில் வடமிறாட்சிப் பகுதிகளிலிருந்த குடிசனங்களுக் குள்ளே ஓர் பெருங்கலகமுண்டுபட." என விரித்துக் கூறப்பட்டிருக்கின் றது. ஆயின் இக்குடியேற்றத்தைப் பற்றி 1916-ஆம் ஆண்டு வெளிவந்த பிரதியிலும் குறிப்பிடப்படவில்லை.

யாழ்ப்பாண வைபவமாலை 63
அதன்மேற் சங்கிலி கள்ளியங்காடு முதலிய ஏழு கிரா மங்களையும் பரநிருபசிங்கத்தின் கையாற்பறிக்க யோசித் தும் செப்புப் பட்டமாயிருந்ததனால் முடியாதே போயிற்று. முடியுஞ் செங்கோலும் பரராசசேகர மகாராசன் கையில் இருந்ததினால், சங்கிலி முடியின்றி அதிகாரஞ் செலுத்தி வந்தான். பரராசசேகரன் வன்னியமாரைத் துணையாகக் கொண்டு, பரநிருபசிங்கத்துக்கே முடி சூட்ட எண்ணங் கொண்டிருந்தான். சங்கிலி வேறு முடி தேடிச் சூட்டிக் கொள்ள ஆலோசித்தும், கலகம் நேரிடுமென்று பயந்து, அப் போதைக்கு அந்த எண்ணத்தை நிறுத்தி விட்டுப் பரநிருப சிங்கத்துக்கும் பரராசசேகரனுக்கும் வன்னியமாருடனே அதிக கொண்டாட்டம் நடப்பதையறிந்து, தான் நிறுத்தி வைத்த வருமானப் பங்கை மறுபடியும் பரநிருபசிங்கத்துக் குக் கொடுக்கவும் கிராம அதிகாரத்தைப் பரராசசிங்கத்துக் குக் கொடுக்கவும் சம்மதித்துச் சமாதானம் பண்ணிக் கொண் டான். பரநிருபசிங்கத்துக்கும் மகனுக்கும் இராசாக்களுக்கு ரிய நாமங்கள் இருந்ததினால், அந்தப் பெயர்களுக்கு ஒவ் வொரு பட்டத்தையுஞ்சூட்டி, வித்தியாசமாக்கிவிட ஆலோ சித்து, வடதிசை வேளாளருக்குரிய முதலிப் பட்டத்தை அவர்கள் பெயர்களின் இறுதியிற் சேர்த்து, பரநிருபசிங்க முதலி, பரராசசிங்க முதலி எனத் தானெழுதி வைத்துக் கொண்டதுமல்லாமல், ஒரு தினத்திற் பரராசசிங்கத்தை அழைத்து, "உன் பிதாவுக்கும் உனக்கும் சகல கிராமங்கள் மேலும் அதிகாரம் கிடைத்திருக்கின்றது. உங்களிற்பின் உங் கள் சந்ததியாருக்கும் இவ்வதிகாரம் தலைமுறை தலைமுறை

Page 46
64 யாழ்ப்பாண வைபவமாலை
தோறும் நிலையாகவே நிற்கும். ஆதலால், உங்கள் பின் குலத்தாருக்கு ஒரு பட்டஞ்சூட்டி வைக்க விரும்புகிறேன். அதென்னவென்றால், ஐந்நூறு கிராமத்துக்கே தலைமை பெற் றது மடப்பம் அளித்தல் - காப்பாற்றுதல், மடப்பத்தை அளிப் பதால் மடப்பளியென்பதாம்,' என்றான். அதைப் பரராச சிங்கம் தன் பிதாவுக்கறிவிக்க, அவன், ‘எப்படிப்பிதற்றினா லும் பிதற்றட்டும். வரவர இருந்தறியலாம். நீ உன் அலுவ லைப் பார்,' என்றான். அதன்பின் சங்கிலி சேனைகளையும் ஆயுதங்களையும் அதிகம் அதிகமாகச் சேர்த்து, வரவரப் பெலத்துக் கொண்டான்.
இளைப்பாறிய அரசன் திரவியத்தைப் புதைத்தல் காரியங்கள் இருக்கிற நிலைபரத்தைக் கண்டு பரராச சேகர மகாராசன் தன்னிடத்திலிருந்த சேம திரவியத்தை இராக் காலத்திலே யானைகளில் ஏற்றிக் கொண்டு போய், வன்னி நாட்டைச் சேர்ந்த ஒரு பெருங்காட்டுக்குள்ளே
1. மடப்பளி: கலிங்க தேசத்து மடப்பளியூரினின்று வந்த அரச குடும்பத்தவர்களே மடப்பளியார் என்று வழங்கப்பட்டனர். (யா.வை.வி. பக்.148 - 149. யா.ச.பக். 117) நூலாசிரியர் கூறியதை நிலை நாட்டுவர் சில சரித்திராசிரியர், மடப்பளியென்னும் மொழியை மடைப்பள்ளியாக்கி, அரசகுடும்பங்களுக்குச் சமையல் செய்தவர்களின் சந்ததியார் எனக் கூறுவாருமுளர்.
மடப்பம்; 500 கிராமங்களுக்குத் தலையூர் எனச் சதுரகதாரியிற் கண்டது. இம்மொழியிலிருந்தே மடப்பள்ளி யென்னுஞ் சொல் பிறந்த தென்பது வைபவமாலையார் கூற்றுப் போலும்!

யாழ்ப்பாண வைபவமாலை 65
தன் முன்னோர் திரவியஞ் சேமித்து வைத்த இடத்திலே சேமித்து வைத்துச் செங்கோலையும் முடியையும் அவ்விடத் திற் கூட வைத்து உன்மத்த வயிரவனையும் காவல் வைத் துத் திரும்பி வந்து தன் மாளிகையில் இருந்து விட்டான்.
அரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி பரநிருபசிங்கமும் சங்கிலியும் ஒருவரோடொருவர் வெளிக்குச் சந்தோஷவான்கள் போலக் காட்டியும் உள் ளெண்ணத்திலே ஒருவரை ஒருவர் சதிப்பவர்களாகவேயி ருந்தார்கள். சங்கிலியின் கொடுமை வரவரத் தலைப்படத் தொடங்கிற்று.
அர்ச். சவேரியார்
சத்திய வேதத்திற்சேர்ந்த அறுநூறு குடிகளைச் சங்கிலி இராசன் மன்னாரில் வெட்டுவித்ததனால், சவேரியார் என் னும் பறங்கிக்காரர். பறங்கிக்காரரை யாழ்ப்பாணத்தில் ஊடா டப்பண்ணவும், தம் சமயத்தை நாட்டவும் அவாவுள்ளவ ராய்த் திரிந்தார் அந்நாட்களிற் பரநிருபசிங்கத்துக்கும் சங் கிலிக்கும் பகை நேரிட்டிருப்பதைக் கேள்விப்பட்டுச் சவேரி யார் பரநிருபசிங்கத்துடனே எழுத்து மூலமாய்க் கொண் டாட்டமானார். பரநிருபசிங்கம்இனிமேல்இராச்சிய அதிகா ரம் தனக்கு வரமாட்டாதென்று கண்டுகொண்டு
1. சவேரியார் சங்கிலி மன்னனிடத்திற்போய்த் தம் மதத்தைப் போதிப்பதற்கு உத்தரவு கேட்டும் அரசன் இடங்கொடுக்கவில்லை.

Page 47
66 யாழ்ப்பாண வைபவமாலை
இராச்சியத்தைச் சங்கிலி கையிலிருந்து பறித்து, அன்னிய ராசனுக்குக் கொடுக்க எண்ணங் கொண்டான்.
அப்பா மகளின் கற்புக்குப் பங்கம் இப்படியிருக்குங்காலத்திற் சங்கிலிதன் மந்திரிமாருள் ஒருவனாகிய அப்பா என்பவன் மகள் மிகவும் அழகுள்ளவ ளாய் இருந்ததனால், அவளைக் கற்பழிக்கும் நோக்கம் கொண்டிருந்தான். அதை அவள் பிதா அறிந்து, பரநிருபசிங் கத்தினிடத்தில் வந்து, தன் மானத்தைக் காப்பாற்றித்தர வேண்டுமென்று அழுதான். பரநிருபசிங்கம், 'நீ பயப்ப டாதே, நான்காப்பாற்றி வைப்பேன்," என்று திடஞ்சொல்லி, ஓர் ஒலையெழுதி, "இதைக் காக்கை வன்னியன் கையிற் கொண்டு போய்க் கொடு, அவன் ஊர்காவற்றுறையில் வந்திறங்கியிருக்கிறான்,' என்று சொல்ல, அப்படியே அவன் கொண்டு போய்க் கொடுத்தான். காக்கை வன்னி யன் அதை வாசித்துப் பார்த்துக் கொண்டு, “நீ உன் மகளைப் பரநிருபசிங்கத்தின் வீட்டில் அடைக்கலமாக வைத்து விட் டுப் போய் உன் அலுவலைப் பார். நான் சற்றிடம் போய் வந்து எல்லாம் பார்த்துக் கொள்வேன்' என்று
1. அக்காலத்தில் யாழ்ப்பாண அரசனைப் பயப்படுத்தலாமென நினைத்து நெடுந்தீவில் வந்திறங்கியவன் போர்த்துக்கேயரின் படைத்த லைவனாகிய மாட்டின் அப்பொன்சோதே செளசா (Martin Aponso de Sousa) என்பவனாவன். அவனிடம் உதவி கேட்கப் போன பரநிருபசிங் கத்திடமிருந்து விலையுயர்ந்த முத்துக்களையும், சங்கிலியிடமிருந்து 5000 பர்தாங்கு அளவினதான திரவியத்தையும் பற்றிச் சென்றனன். (யா.ச.பக். 92)

யாழ்ப்பாண வைபவமாலை 67
சொல்லி, பரநிருபசிங்கத்திற்கு வதில் ஒலையுங் கொடுத்த
னுப்பி விட்டான். வன்னியன் சொற்படியே அப்பா என்ப வன் பரநிருபசிங்கத்தினிடத்திலே ஓலையையுங் கொடுத் துப் பெண்ணையும் அடைக்கலம் வைத்தான்.
பறங்கியர் வியாபாரிகளென்ற சாட்டில்
வருதல்
உடனே காக்கை வன்னியன் தரங்கம்பாடிக்குப் போய், அங்கே பறங்கிக்காரரைக் கண்டு, "யாழ்ப்பாணம் பிடித்துத் தருவேன், வாருங்கள்,' என்றான்; அவர்கள் அவன் பேச்சை நம்பாததனாற் சத்தியம் பண்ணிக் கொடுத் தான். அப்பொழுது பறங்கிக்காரர் வியாபார முகாந்தரத்தில் வருபவர்கள் போலப் பண்ணைத் துறையில் வந்திறங்கிச் சங்கிலியிடத்திற்போய்த் தாங்கள் வியாபாரஞ் செய்ய உத்த ரவு கேட்டார்கள். அதற்குச் சங்கிலி சம்மதியாதே போனான். அப்பொழுது பரநிருபசிங்கமும் மந்திரிமாரும் ஒருமித்து நின்று, "இப்படிப்பட்ட வியாபாரம் இந்த நாட்டுக்கவசரமா கத் தேவையாகவேயிருக்கின்றது. இந்த வியாபாரம் நடந்தே றினால், இவ்விடத்திற்கிடையாத நூதனப் பொருள் அனே கம் நாங்கள் பெற்றுக் கொள்ளலாம்,' என்று மேன்மேலுஞ் சொல்லச் சங்கிலி ஒருவாறுடன்பட்டு, 'இவர்கள்
1. தரங்கம்பாடியில் போர்த்துக்கேயர் இருந்தமை, காக்கை வன்னி யன் ஊறாத்துறைக்கு வந்தமை, அப்பா அவனுக்கு ஒலை கொண்டு சென்றமை ஆதிய விவரங்களெல்லாம் தடுமாற்றமே (யா.வை.வி.பக் 118)

Page 48
68 யாழ்ப்பாண வைபவமாலை
பகற் காலத்தில் நாட்டுக்குள் வந்து வியாபாரம் பண்ணிக் கொள்ளலாம். இராக்காலம் ஊருக்குள் நிற்கக் கூடாது. தோணிகளிலே போய்த் தங்க வேண்டும்,' என்று உத்தரவு கொடுத்தான். சில நாளாக வியாபாரம் அப்படியே நடந்தேறி வந்தது. அப்படி நடந்து வருகையிற் பறங்கிகள் சில பட்டுப் புடைவைகளும் பல நூதன வஸ்துக்களுங் கொண்டு வந்து சங்கிலி இராசனுக்குக் கொடுத்து, நன்முகம் பெற்றுக் கொண்டு, "மகாராசனே, நாங்கள் தோணிகளிற் சமையல் போசனம் பண்ணுகிறதும் நித்திரை செய்கிறதும் மிகுந்த வருத்தமாயிருக்கின்றது. ஆதலால் நாங்கள் தங்கியிருக்க வும் வியாபாரப் பொருள்களைச் சேகரிக்கவும் கடலோரத் திலே ஒரு வீடு கட்டிக் கொள்ள உத்தரவு கிடைக்க வேண் டும்,' என்று கேட்டார்கள். அதற்குச் சங்கிலிராசன், "நாட் டுக்குள்ளே கட்டக் கூடாது; கடலோரத்திலேதான் கட்டிக் கொள்ளலாம்'என்று உத்தரவு கொடுத்தான்.
கோட்டை கட்டுதல்
அவ்வுத்தரவைச் சாட்டாகக் கொண்டு பறங்கிகள் மண் ணால் ஒரு கோட்டையைக் கட்டி முடித்து, அதிலே
1. "கடலோரத்திலே" - தி.த.க. பிரதி.
2. பரநிருபசிங்கன்தூண்டுதலால் போர்த்துக்கேயருக்குவியாபாரம் செய்ய இடங்கொடுத்தான் என்பதும், காட்டுநடுவே அவர்கள் கோட்டை கட்டியிருப்பதைச் சங்கிலி வேட்டம் போன காலத்திற்கண்டு கோட் டையை இடிப்பித்து அவர்களையும் வெளிச் செல்லக் கட்டளையிட்டான் என்பதும், அப்போது அவர்கள் இவனுடன் போர் செய்தார்கள்

யாழ்ப்பாண வைபவமாலை 69
படைசேனைகளையும் ஆயுதங்களையும் நிறைத்து வைத் தார்கள். அவ்விடத்துக்குத் தென்புறங் கடலும் மற்ற மூன்று புறமும் பெருங்காடுமாயிருந்ததனால், அங்கே மனிதப் போக்குவரவு இல்லாமலிருந்தது. அதனால், அந்தச் செய்தி அரசனுக்கு வெளி வாராமற் போயிற்று. காரியம் இப்படி நிறைவேறிச் சில காலத்தின் பின் சங்கிலிராசன் வேட்டையா டுதற்குக் காட்டினுட்புகுந்து அங்குமிங்குஞ்சுற்றி வருகையிற் கோட்டை கொத்தளத்தையுங் கொடிகளையுந் தூரத்தே கண்டு திகைத்தவனாகி, அவ்விடத்திற்போய், அங்குள்ள ஆயுதங்கள் அனைத்தையுங் கண்டு, "நீங்கள் இவ்விதமாகச் செய்ய உத்தரவு தந்தவன் ஆர்?" என்றான். "அரசனே, நீர்தான்,' என்றார்கள். "நீங்கள் தங்குவதற்கு ஒரு சிறிய வீடு கட்டிக் கொள்ள உத்தரவு தந்தேனேயொழிய, இப்படிக் கோட்டை கட்ட நான் உத்தரவு தந்ததில்லை. இப்பொழுதே பிடுங்குங்கள்' என்றான். அதற்குப் பறங்கிகள் உடன்படாத தனால் யுத்தமுண்டாக எதுவாயிற்று.
என்பதும் ஆதாரமற்ற வெறுங்கதைகள். (யா.ச.பக்.101)
சோனகர் பண்ணைத்துறையிற் கட்டிய பண்டகசாலைகளைப் பறங் கியர் கட்டியவை எனவும், பறங்கியர் அவற்றை அழிக்கச் சங்கிலி அழித் தானெனவும், காக்கோ (அல்லது காக்கா) என்னுமிளவரசனைக் காக்கை வன்னியன்எனவும் பல மாறுதலான கதைகளைவரைந்ததோடமையாது, பல வருஷங்களின் முன் இறந்துவிட்ட சங்கிலியை 1591லும் அரசாளுப வனாகக் காட்டிற்று. சங்கிலி காலத்துப் பறங்கியரின்போரையும் அவனுக் குப் பின் நான்காவதாய் ஆண்டவனுடைய காலத்துப் போரையும் ஒன் றாக்கி விநோதமான யுத்த சரித்திரமொன்றை ஏற்படுத்தி விட்டது. (யா.வை.கெளமுதி, பக்.56)

Page 49
7Ο யாழ்ப்பாண வைபவமாலை
யுத்தம்
யுத்தம் நடப்பிப்பதற்கு நல்லூர்க் கோட்டையின் மேற்கு வாசற்புறத்தே வீரமாகாளியம்மன் கோவிலுக்கு முன்னாகவிருந்த வெளியையே இடமாக நியமித்துக் குறித்த நாளிலே யுத்தத்தை ஆரம்பித்துப் பதினொரு நாளாக நடத்தி னார்கள். பறங்கிகள் துப்பாக்கிச் சூத்திரத்தைக் கையிற் கொண்டு, அணியணியாய் நின்றார்கள். தமிழர் வாள் முத லான படைக்கலங்களைக் கொண்டு நின்றார்கள்.இரு திறத்த வர்களுக்கும் படையொழுக்கங்கள் ஒன்றுக்கொன்று வித்தி யாசமாய் இருந்ததனால், ஒழுங்கான, யுத்தம் நடந்ததில்லை. பறங்கிகள் ஒருவர் துப்பாக்கிச் சூத்திரத்தை நீட்டி இலக்குப் பிடிக்க, மற்றொருவர் பற்று வாய்க்கு நெருப்பு வைக்கச் சில முறைகளிற் பற்றுவாய் புகைந்து வெடித்திராதிருக்க, சில முறைகளில் வெடி தீர்ந்து ஆட்களைக் காயப்படுத்தியும் கொலை செய்தும் நெருங்க, தமிழர் வாள் முதலிய
1. 'அரசன் பலவந்தம் பண்ணித் துணிந்து முடியாதே போயிற்று. பறங்கிகள் முரட்டுத்தனங்காட்டி நின்றதினால்' - தி.த.க.பிரதி.
2. நல்லூரிலே கி.பி.1560-ம் ஆண்டு சங்கிலிக்கும் போர்த்துக்கேய ருக்குமிடையில் நடந்த யுத்தத்திற்கும், கி.பி.1620ல் பாலியவரசனுக்குப் பரிபாலகனாயிருந்த சங்கிலியுடன் நடத்தின யுத்தத்திற்கும் மலைவு. முதற் சண்டையில் சங்கிலியே வெற்றியடைந்தான். இரண்டாம் போரில் சங்கிலி பிடிபட்டுக் கோவை நகரிற் சிரச்சேதஞ் செய்யப்பட்டான்.

யாழ்ப்பாண வைபவமாலை 7i.
படைக்கலங்களுடன் அஞ்சாமல் மேல் விழுந்து வெட்டி வரச் சேனைகள் இளைத்துப் போன வேளைகளிற் சங்கிலி இராசனும் அவனுக்குத் துணை வீரராய் நின்ற நானூறு பராக் கிரமசாலிகளும் முன்னணியிற் பாய்ந்து கடும்போர் செய்து சேனை(யின்) களைப்பை மாற்றப் பறங்கிகள் ஏழாம் நாளிற் போரிலே அபசெயப்பட்டு, 'இனியென் செய்வோம்! சங்கி லியிராசன் கையில் அகப்படுவதேயொழிய வேறு கதி யில்லை," என்று மனம் தத்தளித்துக் கொண்டு நின்ற சமயத் திலே அந்தப் பறங்கிகள் தங்களுக்குத் தரங்கம்பாடியில் துணைச்சேனை வந்து சேர்ந்ததைக் கண்டு, மறுபடியும் மனத் தைரியங் கொண்டு, நெருங்கி யுத்தஞ் செய்தார்கள். துப்பாக் கிச் சூத்திரங்கள் பற்றுவாய் புகைந்து புகைந்து இடைக்கிடை தாமதங்கள் நேரிட்டதனால், அப்பறங்கிகளும் வாட்படை கொண்டே பெரும்பாலும் யுத்தஞ்செய்ய வேண்டியதாயிருந் தது. வாள் யுத்தம் நடந்தேறி வருகையிற் பறங்கிகள் மறை வில் நின்று துப்பாக்கிச் சூத்திரங்களாற் சுட்டு அமடு பண்ண முயன்றார்கள். அதுகண்டு தமிழர் கவண் கல் முதலிய ஆயு தக் காவல்களையேற்படுத்தி அந்த அபாயத்தை மாற்றினார் கள்.
பரநிருபசிங்கமும் மந்திரிமாரிற் பலரும் பெருமுயற்சி செய்யாதிருப்பதைக் கண்டு சங்கிலியிராசன் அவர்களைக் கோபித்துப் பரநிருபசிங்கத்தின் மேற் பெருங்குறை
1. "பறங்கிகளின் சேனை குறைவுபட்டது" - தி.த.க. பிரதி.

Page 50
72 யாழ்ப்பாண வைபவமாலை
கூறினான். அதற்குப் பரநிருபசிங்கம், "இது நாம் பயின்றி ராதபுதுப் போராயிருப்பதனால், எங்கள் சமத்து இந்தவிடத் திலே செல்லாது' என்றான். அரசன் சிரித்துப் பரிகாசம் பண்ணி, "நானும் உங்களைப் போலவே இந்தப் போரை இதற்கு முன் ஒரு போதுங் கண்டறியாதவன். நான் பண்ணும் போரைப் பார்த்து நில்லுங்கள்,' என்று சொல்லித் துணை வீரவான்களுடனே பறங்கிச் சேனையிற் புலிகள் பாய்ந்தாற் போலப் பாய்ந்து, பத்தாம் நாளன்று 1700 பேருக்கதிகப்பட வெட்டி விழுத்தினான்.
பறங்கியரின் தோல்வி
பதினோராம் நாளையிற் போரினின்று 1400 சனங்க ளுஞ் சேனைத் தலைவனும் விழ, பறங்கிகள் முரிந்து கெட் டோடினார்கள். சங்கிலியிராசன் திரும்பிப் போய்ப் பறங் கிக்காரர் கட்டுவித்த கோட்டைக்குள் நுழைந்து, காயப்பட்ட வர்களும் போருக்கு அற்றையிற்றினம் வராமல் நின்றவர்க ளுமாகிய அனைவரையுங் கொன்று, கோட்டையையும் இடித்துப் பரவிவிட்டுப் பறங்கிகளின் திரவியங்களையெல் லாம் கொள்ளையிட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான்.
1. 9-lb. 2400
2. "சங்கிலியிராசன் பறங்கிச் சேனைகளைத் துரத்திக் கொண்டு போக, அவர்கள் காடுகளுக்குள்ளே நுழைந்து மேற்குத் திக்கை நோக்கி ஓடினார்கள். அப்பொழுது" - தி.த.க. பிரதி.

யாழ்ப்பாண வைபவமாலை 73 சங்கிலியின் புத்தியற்ற செய்கை
சேனைகள் தங்கள் போர் வெற்றி கொண்ட சந்தோஷத் துக் களியாட்டுக் கொண்டாட்ட மதுவெறியில் மூர்க்கங் கொண்டு ஒருவரையொருவர் அடிக்கவும் வையவும் தலைப் பட்டதனால் பெரிய ஆரவாரம் உண்டாயிற்று. அதை அடக் கும்படி அரசன் ஆட்களை அனுப்பிப் பார்த்தும் அடக்க முடியாதே போனதனால், அரசன் மிகுந்த கோப உக்கிரத்து டனே புறப்பட்டுப் போய், அவர்களுக்குச் சமைத்து வைத்த போசனங்களை எடுப்பித்து நிலத்துக்குள்ளே வெட்டிப் புதைப்பித்தான். இந்தச் செய்கை சேனைகளுக்கெல்லாம் பெருவெறுப்பை உண்டாக்கிற்று. சேனைத்தலைவன் வீரமா காளியம்மன் கோவிலிலே தன் நியமம் முடித்துக் கொண்டு நின்றதனால், அவ்விடத்திலில்லை.
பறங்கிகள் மீண்டும் போருக்கெழுதல்
பறங்கிகள் அபசெயப்பட்டோடினதையுந் தாங்கள் அந் தரங்கத்திற் செய்த சகாயம் வாயாமற் போனதையுங் குறித் துப் பரநிருபசிங்கம் மிகுந்த விசனமடைந்து, காக்கை வன் னியனுக்கு ஒலையனுப்பி, இனிவெளியாய் நின்று பறங்கிக ளுக்குத் துணை செய்யத் தனக்குதவி செய்யும்படி கேட்ட னுப்பினான். அந்த ஒலை காக்கை வன்னியன் கையிற் சேரமுன்னமே போரில் முரிந்தோடிய பறங்கிகள் ஊர்காவற்
1. காக்கு எனும் சேனாதிபதி தன் மாமனான அரசனைத் தேடிப் போய்ப் புத்தி கூறியதை மாற்றிக் காக்கை வன்னியன் அரசனைப் பிடித் துக் கொடுத்தானென்றது. சரித்திர மலைவு, காக்கு எனப்

Page 51
74 யாழ்ப்பாண வைபவமாலை
றுறையிற் போய்க் காக்கை வன்னியனைப் பிடித்து, ' உன்னை நம்பி நாங்கள் போரில் ஏற்பட்டு 16000 சனத்துக்கு மேற்படச் சாகக் கொடுத்தோம். நீ எங்களை அழைத்து வந்து யாதொரு சகாயமுஞ் செய்யாமல் உன் பாட்டிலே திரிந்தபடி யினாலேதான் இந்த நட்டம் எங்களுக்கு வந்தது. நீ எங்க ளுக்கு இந்த மோசஞ் செய்ததனால், இப்பொழுது உன்னைக் கொலை செய்வது எங்கள் தீர்மானம்,' என்று நெருங்கினார் கள். அப்படி நெருங்கிய சமயத்திற் பரநிருபசிங்கம் அனுப் பிய ஒலை வந்து சேர்ந்தது. அவ்வோலையை வாசித்த பொழுது பறங்கிகளுக்கு மனத்திருப்தியுண்டாயிற்று.
நகரை முற்றுகையிடல்
காக்கை வன்னியன் பரநிருபசிங்கம் எழுதியபடியே பறங்கிகளை மறுபடி போருக்கணிவகுத்து வரும்படி சொல்லி, நல்லூருக்குப் போனான். இவன் இரவிலே போய்ப் பரநிருபசிங்கத்தைக் கண்டு சகல ஆலோசனைகளும் பண் ணிக் கொண்டு மறைந்திருக்க, மறுநாட்காலமே பறங்கிகள் பல அணிகளுடனேயும் மேற்கு வாசலை வளைத்து கொண் டார்கள். அந்தச் செய்தி அறிந்து, சங்கிலியிராசன் சடுதியிற்
போர்த்துக்கேயர் காட்டுவது இயற்பெயரோ, அன்றிப் பட்டப் பெயரோ அறிகிலோம். Gargo என்பது அவர் பாஷையில் கொன்னையன் எனப் பொருள்படும். (யா.வை.வி. 144)
மயில்வாகனப் புலவர் பறங்கியர் காலத்து யாழ்ப்பாண அரசர்க ளைப் பற்றி வரைந்து வைத்தனவெல்லாம் தலைதடுமாற்றமான தப்பறை களேயன்றிச் சரித்திரமல்ல. (யா.வை.வி. பக். 144)

யாழ்ப்பாண வைபவமாலை 75
சேனைகளைத் திரட்டி மேற்கு வாலிற் போனான். சேனைகள் அணியாய் நிற்கத்துணைச்சேனையுடனே அரசன் முன்னணி யில் நின்றான்.
காக்கை வன்னியனது நம்பிக்கைத் துரோகம்
அந்த வேளையிற் காக்கை வன்னியனும் சேனைக ளுக்குள் நுழைந்து, சமீபத்தில் நின்றான். பரநிருபசிங்கம் தான் காக்கை வன்னியனுடன் சொல்லியிருந்தபடியே தூரத் தில் வாய்ச்சமர்த்துள்ள ஒருவனை நிற்க வைத்து, வேறொரு வனைச் சேனாதிபதியிடத்தில் அனுப்பி, "இந்தப்போரைக்கு றித்து உமக்கோர் அந்தரங்கஞ் சொல்லும்படி உம்மை ஒரு வன் தேடிக்கொண்டு நிற்கிறான்' என்றறிவித்தான். சேனாதி பதி அந்தச் செய்தியறிய வெகு ஆவலுடன் விரைந்து போனான். அப்பொழுது அங்கே நின்றவன் சேனாதிபதியின் மனதைக் கவரத்தக்க பேச்சுக்களை வருவித்துப் பேசிச் சேனாதிபதியைத் தன் வாய்ச் சாமர்த்தியத்தினால் தடுத்து நிற்க, காக்கை வன்னியன் தனது உடையை மாற்றிச் சுயகோ லத்துடன் அரசன்முன் வெளிப்பட்டான். வன்னியனைக் கண்டவுடன் அரசன் எதிர்கொண்டோடி, "இப்பொழுது தான் உன் மனதில் என்மேற்றயவு பிறந்து எனக்கு உதவி செய்ய வந்தாயோ?" என்று சொல்லி அவனைக் கட்டி முத்த மிட்டான். வன்னியனும் அரசனைக் கட்டி முத்தமிடுபவன் போலத் காட்டிப் பிடித்த பிடி விடாமற் பிடித்துக் கொண் டான். வன்னியன் பிடித்த பிடி விடாமல் நிற்கப் பறங்கிப் படைகள் அரசன் மேல் ஓடி வந்தார்கள். பறங்கி வீரர்கள் ஓடி வருவதைக் கண்டு தமிழ்ச் சேனா வீரர் ஆயுதங்களை எடுத்

Page 52
76 யாழ்ப்பாண வைபவமாலை
துப் போராட முயன்றார்கள். அப்படி அவர்கள் முயல்வ தைக் கண்டு, "சேனாதிபதியின் உத்தரவின்றி ஒருவரும் ஆயுதந் தொடவொண்ணாது' என்று பரநிருபசிங்கம் தடை பண்ணினான். அப்பொழுது சேனா வீரர்கள் 'ஆயுதமெ டுக்க உத்தரவில்லையே! உத்தரவில்லையே!' என்று சத்த மிட்டுக்கொண்டு அரசனையும் வன்னியனையும் அந்த நிலையில் விட்டு ஓடிப்போனார்கள். பறங்கிகள் யாதொரு தடையுமின்றி சங்கிலியிராசனைப் பிடித்து விலங்கிட்டுச் சேனாதிபதியைத் தொடர்ந்து பிடித்து வாளினாற் கொலை செய்து, கோட்டை கோபுரங்களையெல்லாம் ஒப்புக் கொண் டார்கள்.
பழையவரசன் மரணம்
இந்தச் செய்தியை அறிந்தபோதே பரராசசேகர மகாரா சன் கையில் வாளுடன் வன்னியிற்காட்டுக்கோடிப் போனான். "அவ்வரசனைப் பிடித்துத் தருபவனுக்கு 25,000 இறைசால் உபகாரம்தருவோம்", என்று பறங்கிகள் கூறினார் கள். அதை அறிந்த சங்கிலியின் மந்திரிகளில் ஒருவனாகிய பிராமணன், அரசன் ஓடிப்போன குறிப்பையறிந்திருந்தவன், இளநீரும் எலுமிச்சம் பழமுங்கொண்டு வன்னியிற்காட்டி னுள் நுழைந்து அங்குமிங்கும் தேடிக்கொண்டு வருகையில் அரசன் கண்டு எதிராக ஓடி வந்து உபசாரவார்த்தை
1. இதிற்சொல்லப்பட்ட சங்கிலி பாலிய அரசனுக்குப் பரிபாலகனா யிருந்தவன். இப்போர் கி.பி. 1620-ல் நடந்தது.

யாழ்ப்பாண வைபவமாலை 7ץך
சொல்லப்பார்ப்பான் இளநீரைத் திறந்து அரசன் கையில் வாளை வாங்கி எலுமிச்சம்பழத்தை அறுத்து அதற்குட்பி ழிந்து குடிக்கக் கொடுத்தான்.அரசன் குனிந்து நின்று குடிக் கும் பொழுது பிராமணன் அவன் தலையை வாளினால் வெட்டிக் கொண்டு வந்து பறங்கிகள் கையிற் கொடுத்தான். 'இராசனை உயிருடன் பிடித்துத் தருபவனுக்கு உபகாரம் தருவோம் என்று நாங்கள் கூறியிருக்க, நீ அவ்வரசனைக் கொன்றதுமன்றி அவன் உனக்கு செய்த நன்றியையுங்கொன் றாய், ஆதலால், உன்னையும் கொலை செய்வதே நியாயம்' என்று சொல்லி அவனையுங்கொலை செய்தார்கள்.
சங்கிலி மரணம் பறங்கி இராசன் சங்கிலி யிராசனை நீதாசனத்தின் முன்னிறுத் விசாரணை செய்து அவன் முடி சூட்டி
1. பி-ம் பறங்கிகள்.
2. இவ்வரசனைக் கொலை செய்ததாகக் குறிப்பிட்ட மை சரித்திர மலைவு.
கி.பி 1519 தொடக்கம் செகராசசேகரன் என்னும் பட்டத்துப்பெயரு டன் ஆண்ட சங்கிலிக்கும், கி.பி. 1615-ல் ஆண்ட சங்கிலி குமாரனுக்கும் வேற்றுமையறியாது இவ்விருவருடைய செயல்களையும் மலைவுதர வரைந்துள்ளார்.
புவிராச பண்டாரம் பறங்கிச் சேனாதிபதி சமூகத்திற் கொண்டுவரப் பட்டு, இராசதுரோகத்தின் நிமித்தம் தலையிழந்து சாக, அவனுக்கு ஓர் கால் நூற்றாண்டுக்கு முன் இறந்தொழிந்தவனான சங்கிலியே வெட்டுண் டான் என்றதும் அச்சங்கிலியின் அரசையும் இவன் அரசையும் ஒன்றாக் கிக் கூறியதும் ஒரு மாறுபாடு. (யா.வை.வி.பக்-143)

Page 53
78 யாழ்ப்பாண வைபவமாலை
அரசாட்சி செய்யாதவனாதலாலும், பிதாவுயிருடன் இருக் கப் பிதாவின் சம்மதத்துக்கு விரோதமாகக் கலகம் பண்ணி முடிக்குரிய ராசகுமார்களை அநியாயமாகக் கொலை செய்த பாதகனாதலாலும், நீதி தவறிக் கொடுமைகள் அநேகஞ் செய்து குடிகளை வருத்தியவனாதலாலும், அவனைக் கொலைத் தீர்ப்புக்குள்ளாக்கிச் சமீபத்திலிருந்த ஒரு கோவில் வாசலிலே நிறுத்திக் கொலை செய்தார்கள். சங்கிலி கொலை யுண்டானென்பதைக் கேட்ட போதே அவன் மனைவி தற் கொலை செய்திறந்தாள். அவன் பிள்ளைகளைப் பறங்கி மன்னன் தரங்கம்பாடிக்கு அனுப்பி வைத்துக் காக்கை வன் னியனுக்குச் செய்ய வேண்டிய சகல உபசாரங்களுஞ் செய்த னுப்பி விட்டான்.
நல்லூர்க் கோட்டையைப் பறங்கியர் அழித்தல்
இப்படியே காலயுத்தி ஆண்டு ஆனிமாதம் யாழ்ப்பா ணம் பறங்கியரசாட்சிக்குள்ளாயிற்று. பறங்கிகள் அரசாட் சியை ஒப்புக்கொண்டு, நல்லூரிற்றானே இருந்து கொண்டு, தங்கள் கருமங்களை நடத்திப் பிறக்கோட்டை மதில்களை இடிப்பித்து, அக்கற்களைக் கொண்டு போய்க் கடலோரத் திலே சங்கிலியிராசன் இடித்துப் பரவிவிட்ட தங்கள் கோட் டையை மறுபடி கற்கோட்டையாகக்கட்டி, அதன் கீழ்ப்புறத் திலே வீடுகளையும் அரசாட்சி மண்டபங்களையுங் கட்டு வித்து, குடிகள் சமீபத்தில் வீடு கட்டி வந்திருக்கும்படி வசதி
யும் பண்ணினார்கள்.

யாழ்ப்பாண வைபவமாலை 79 இராசத் துரோகிகட்கு உபகாரம்
இவ்வரசாட்சி தங்களுக்குக் கிடைக்கும்படி பரநிருப சிங்கம் செய்த உதவிக்காக அவனுக்குச் சொந்தமாக ஏழு கிராமங்களையும் நல்லூர் மாதகல் என்னும் இரண்டு கிரா மங்களையும் பெருந்தொகையான பணத்தையும் முன்னிருந் தபடியே மந்திரியத்தியோகத்தையுங் கொடுத்து, அவன் குமாரன் பரராசசிங்கத்துக்குக் கிராமவதிகாரத்தையுங் கொடுத்துப் பறங்கிகள் அவ்விருவரையும் கனப்படுத்தி வந் தார்கள். பரநிருபசிங்கத்தை யும் மகனையும் பறங்கிகள் வசப்படுத்திக்கொண்டபோதே பறங்கிகள் அரசாட்சி பெலத் துக் கொண்டது.
சைவ சமயத்தவர்க்கு இடர் விளைத்தல்
அதன் பின் பறங்கிகள் சமய காரியங்களிற் கையிட்டுச் சிவாலயங்களையெல்லாம் இடிப்பித்துச் சத்திய வேதத் தையே பரப்பிக்கொண்டார்கள். தமிழரசாட்சியாரால் நல்லூ ரிலுங்கீரிமலைச் சார்பிலுங்கட்டியிருந்த கோவில்கள் மாத்தி ரம் பரநிருபசிங்கம் இருக்குமளவும் வழங்கி வந்தபடியே வழங்கலாமென்று உத்தரவு கிடைத்தது.
பரநிருபசிங்கனின் மரணம்
பறங்கியரரசாட்சி தொடங்கி ஒன்பதாம் வருடத்திலே பரநிருபசிங்கம் சிவபதமடைந்தான். பறங்கிகள் அவன் மர ணத்துக்காகத் துக்கங் கொண்டாடி, அவன் பிரேதத்துக்குச் செய்ய வேண்டிய முறைப்படி சடங்குகள் எல்லாஞ் செய்வித்

Page 54
8O யாழ்ப்பாண வைபவமாலை
துத் தகனம் பண்ண இடம் கொடுத்தார்கள். அதன் பின் பறங்கிகள் பரராசசிங்கத்தை ஆலோசனைத் தலைவ னாக்கி, சங்கிலியிராசன் எழுதி வைத்தபடியே பரராசசிங்க முதலி என்னும் அவன் குலத்துக்கு மடப்பள்ளி என்னும் பட்டஞ்சூட்டி, அவனையும் பிதாவை நடத்தினதுபோற் கனப்படுத்தி நடத்தி வந்தார்கள்.
பரராசசிங்க முதலிக்கு மரணகாலஞ் சமீபித்த பொழுது அவன் தன் குமாரர் ஏழு பேரையும் வரவழைத்துத் தனது ஆஸ்திகளைப் பங்கிட்டு, நல்லூரையுங் கள்ளியங் காட்டையும் அழகாண்மை வல்லி முதலி என்னும் மகனுக் காக்கி, அவனை நல்லூரிலுள்ள தன் மாளிகையில் இருத்தி னான். தனபாலசிங்க முதலி என்னுங்குமாரனுக்கு மல்லா கத்தைக் கொடுத்து, அதிலிருத்தினான். வெற்றிவேலாயுத முதலிக்கு சண்டிப்பாயைக் கொடுத்தான். விசயதேவந்திர முதலிக்கு அராலியைக் கொடுத்துத் திடவிரசிங்க முதலிக்கு அச்சு வேலியைக் கொடுத்தான். சந்திரசேகரமாப்பாண சிங்க முதலிக்கு உடுப்பிட்டியைக் கொடுத்தான். இராயரத் தின முதலிக்குக் கச்சாயைக் கொடுத்தான். இவ்வேழு ஆண் பிள்ளைகளுமன்றி, வேதவல்லி என்னும் ஒரு மகளுமிருந் தாள். அவளுக்கு வேளாளர்குலத்தில் விவாகஞ்செய்வித்து, மாதகல் என்னும் ஊரைக் கொடுத்தான்.
சைவர்களுக்கு இடர் விளைத்தல்
பரராசசிங்க முதலி இறந்த பின் பறங்கிக்காரர் தாங்கள் இடியாமல் விட்டிருந்த ஆலயமெல்லாம் இடிப்பித்தார்கள்.

யாழ்ப்பாண வைபவமாலை 81
அப்பொழுது பரசுபாணி ஐயர் என்னும் பிராமணன் கீரிம லைச்சாரலிலுள்ள தேவாலயங்களின் தட்டு முட்டுக்களை யும் விக்கிரங்களையும் கிணறுகளிற்போட்டு மூடி வைத் தான். கந்தசுவாமி கோவிற் பணிவிடைக்காரனாயிருந்த (சங் கிலி என்னும்) பண்டாரம் அத்திசையில் ஆலயங்களைக் குறித்த (பூதபவுவிக) சம்பவங்களும் ஒழுங்கித் திட்டங்க ளும் அடங்கிய செப்புப் பட்டயத்தைக் கொண்டு மட்டக்க ளப்புக்கு ஓடிப்போனான். பரராசசிங்க முதலி மரணம டைந்த பின் கெங்காதரஐயர் வமிசத்துப் பிராமணக் குடிகள் நல்லூரை விட்டு நீர்வேலியிலும் வடமிறாட்சியிலும் போய்க் குடியிருந்தார்கள்.
மாதாக்கரை நியமித்தல்
அக்காலத்திலே பறங்கிக்காரர் தமிழரசரைப் போலவே தாங்களும் மாதாக்கர்களை வைத்து நடத்தக் கருதி இராயரத் தின முதலி மகன் சோழசிங்கச் சேனாதிராய முதலியைக் கீழ்ப்பற்று மாதாக்கனாகவும் விசயதெய்வேந்திர முதலியை மேல் பற்று மாதாக்கனாகவும், அழகாண்மை வல்லி முதலி மகன் இராசவல்லப முதலியைத் தென்பற்றுக்கு மாதாக்கனாகவும், திடவிரசிங்க முதலி மகன் குமாரசூரிய முதலியை வடபற்றுக்கு மாதாக்கனாகவும் வைத்து அர சாட்சி செலுத்தி வந்தார்கள்.
1. பி.-ம் (அ) "பண்டாரம் என்பவன்." (ஆ) “குமாரசாமி என்னும் பண்டாரம்".
2. கைலாயமாலையிற் கண்ட செய்தியைப் பின்பற்றியது போலும்

Page 55
82 யாழ்ப்பாண வைபவமாலை
அக்காலத்திலே காரைக்கால் முதலான பல இடங்களிலி ருந்து பல குடிகள் வந்து வட்டுக்கோட்டையிலுங்காரை தீவு முதலிய தீவுகளிலும் குடியேறினார்கள்.
முதன்முதற் பறங்கிக்காரர் சாலிவாகன சகாத்தம் 1428-ஆம் வருஷமாகிய பரிதாபி வருஷத்திலே இலங்கை யில் வந்து வியாபாரம் பண்ணப் பராக்கிரமவாகு மகாராச னிடத்தில் உத்தரவு பெற்று, வரத்துப் போக்காயிருந்தார்கள். கர வருஷம் ஆடி மாதத்தில் அப்பொது சவேரியார் முத லான பறங்கிக்காரர்களாற் சத்தியவேதத்திற் சேர்ந்த அறுநூறு "வீட்டுக்காரரையும் சங்கிலியிராசன் கொலை செய்வித்தது மன்மத வருஷம் வைகாசி மாதத்திலேஃபரநிருபசிங்கத்தின் வழியாய்ச் சவேரியாரென்னுஞ் சத்தியவேதக்குரு சங்கிலியி ராசனுடன் கொண்டாட்டமானார். சகாத்தம் 1503 சுபகிருது வருஷத்திலே பறங்கிக்காரர் வீடு கட்ட உத்தரவு பெற்றது."
1. ஐயவர்த்தன கோட்டையில் தர்மபராக்கிரமவாகு ஆண்ட காலத் தில் (1505-1509) போர்த்துக்கேயர் கப்பல் ஒன்று இலங்கைக்கரையை sol-555.. gásÚLuppanavalci Quuui Don Lourence de Almeida என்பது. இதிற் குறிப்பிட்ட வருஷம் இரத்தாசுவி வருஷம் போலும்
2. சுபகிருது வரும் போலும் -
3. பி -ம். சோபகிருது வருஷம் (கி.பி.1543-44)
4. உலாந்தேசக் கப்பலொன்று கி.பி. 1602-ஆம் வருஷம் ஆணி மாதம் மட்டக்களப்புத் துறைமுகத்தை அடைந்தது. கப்பற்படைத்தலை வன்oris Van Spibergen. ஆகையால் இவ்வருஷம் சுபகிருது வருஷமா

யாழ்ப்பாண வைபவமாலை 83
உலாந்தேசர்
இரத்தாகூவி வருஷம் தைமாதத்தில் உலாந்தேசர் இலங் கைக்கு வந்து, கண்டிநாட்டிற் சேர்ந்து, விமலதர்மராசனுடன் சிநேகிதமாகிப் படைத்துணையாவோமென்று சொல்ல, அவன் அவர்களை அணைத்துக் கொண்டாட்டமானான். கண்டியிலிருந்து துரத்தப்பட்ட இராசனின் மகளைப் பறங்கி கள் மன்னாரில் வைத்து வளர்த்து, அவளுக்குத்தொன்கத்தி ருனாள் என்று பேரிட்டிருந்தார்கள். மற்ற வருஷத்திலே பறங்கிகள் அத்தொன்கத்திருனாளுக்குக் கண்டியரசாட்சி யைப் பிடித்துக் கொடுப்போமென்று நெருங்கின போது விம லதருமராசன் உலாந்தேசரைத் துணையாகக் கொண்டு பறங் கிப் படைகளை முரிய வடிவத்துத் துரத்தித் தொன்கத்திரு னாளை விவாகம் பண்ணிக்கொண்டான். அட்சய வருஷத் திலே உலாந்தேசு கப்பற்சேனாதிபதியும்’ சேனைகளிற் பல ரும் மது வெறி கொண்டு விமலதருமராசனை
யிருத்தல் வேண்டும். விமலதர்மராசனுடைய ஆட்சிக் காலம் கி.பி. 1592-1604.
Marcellus de Boschowar GT6örguib šis šasiryGT 8-3-1612&o கண்டியை அடைந்தான். இவனுடன் அரசன் உடன்படிக்கை செய்திருந் தும் சேனரத்துக்குப்படைத்துணைபுரிய எடுத்த முயற்சிபலிக்கவில்லை. 1. சங்கிலி போர்த்துக்கேயரைத் தோல்வியுறச் செய்தது. கி.பி. 1560-ல். எனவே, சகாத்தம் 1503 என்பது இதன்கண் பொருத்தமில்லாதி ருக்கின்றது.
2. இச்சம்பவம் கி.பி. 1594ல் நடந்ததாகும். 3. இங்குச் சொல்லப்பட்ட கப்பற்சேனாபதி சீபால்ட் தேவேர்ட் என்னும் ஒல்லாந்தனாவன். இச்சம்பவம் க.பி. 1603-ல் நடந்ததாகும். ஆகையால், அட்சய வருஷம் என்பது பொருத்தமற்றது.

Page 56
84 யாழ்ப்பாண வைபவமாலை
கொண்டு விமலதருமராசனை நிந்தனை செய்த பொழுது அவ்வரசன் அவர்களனைவரையுங் கொலை செய்தான். அப்பொழுது உலாந்தேசர் அவ்விடத்தை விட்டுக் கொழும் புக்குச் சமீபமான இடத்திலே போய் ஒரு கோட்டை கட்ட ஆரம்பித்தார்கள். அந்த முயற்சியைப் பறங்கிகள் குழப்பி விட்டதனால், அவர்கள் அவ்விடத்தை விட்டு இலங்கையின் வடதிசையில் வந்து பொறுத்துக் கொண்டார்கள்.
தென்மார்க்கர் (Danes) சகாத்தம் 1533-ஆம் வருஷத்திலே தென்மார்க்கர் கப் பலேறி இலங்கையில் வந்துசேர்ந்து, இராசாக்களுடன் கொண்டாட்டமாகவும் படைத்துணை செய்யவும் வருவோ மென்றார்கள். அரசன் அதற்கு உடன்படாமையால், அவர் கள் திரும்பித் தங்கள் நாட்டிற்குப் போய்விட்டார்கள். இது நடந்துநாலு வருஷத்தின் பின் விளம்பி வருஷத்திலே பறங் கிக்காரர் யாழ்ப்பாணக்கோட்டை கட்டத்தொடங்கினார்கள்.
அதற்கு மூன்று வருஷத்தின் பின் திரிகோணமலையிலும்
1. இச்சம்பவம் பின் சொல்லப்படும் தென்மார்க்கரைக் கருதும். 2. தென்மார்க்கர் கண்டிக்கு வந்தது கி.பி. 1620ல் ஆகும். சகாத்தம் 1533ல் அன்று. கண்டியரசன் அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு திருக்கோணமலையிற் கோட்டை கட்ட இடங்கொடுத்தான். ஆனால், பறங்கிகள் அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
3. விளம்பி வருடத்தில் பறங்கிகள் யாழ்ப்பாணத்தைப் பிடித்தார்க ளென்றும், காலயுத்தியில் ஒல்லாந்தர் பிடித்தார்களென்றும் மயில்வாக னப் புலவர் மாற்றி எழுதிவிட்டனர். வைபவமாலைக்

யாழ்ப்பாண வைபவமாலை 85
மட்டக்களப்பிலும் கோட்டைகளைக் கட்டினார்கள். பரா பவ வருஷத்தில் பறங்கிகள் யாழ்ப்பாணத்துக் கற்கோட்டை யைக் கட்டி முடித்தார்கள். அடுத்த வருஷங்களில் திரிகோண மலை, மட்டக்களப்பு, நீர் கொழும்பு முதலான இடங்களைப் பறங்கிகள் கையிலிருந்து உலாந்தேசர் பிடித்து நீர்கொழும்
பைப் பறிகொடுத்தார்கள்."
சய வருஷம், கார்த்திகை மாதம், 31-ஆந் தினத்தன்று யாழ்ப்பாணத் தேசாதிபதியாயிருந்த அந்தோனி
கைப்பிரதியொன்றிற் காணப்படும் செய்யுள்களில்
"பெருமையுடன் காலயுத்தி ஆனி மாதம் பிலிப்பனெனும் பறங்கிகளை யரசை யாண்டு' "உதிக்கின்ற விளம்பிதனிலானி மாசம் ஒன்பதினி லுலகுபுகழ் உலாந்தே சண்ணல்"
-Ancient Jaffna, p. 375 ሎw
என வருதலால், அவ்விரு ஐரோப்பிய சாதியாரும் யாழ்ப்பாணத்தைப் பிடித்த காலம் நன்றாய்த் தெரிந்திருந்தது. காலயத்தி கி.பி. 1618-1619க்குச் சரி. விளம்பி ஆண்டு கி.பி. 1658-59க்குச் சரி: பிடித்த காலமும் அதுவே. பறங்கிகள் கோட்டைக் கட்டத் தொடங்கினது கி.பி. 1620ல் ஆகும்.
1. திருக்கோணமலைக் கோட்டை கி.பி.1624-லும் மட்டக்களப்புக் கோட்டை கி.பி. 1628லுங் கட்டப்பட்டன.
2. பிரபவவருஷமாயிருக்கலாம். அவ்வருடம் கி.பி. 1627-க்குச் ss.
3. மட்டக்களப்பைக் கி.பி.1638லும், திருக்கோணமலையைக் கி.பி. 1639லும், நீர்கொழும்பை 1640லும் ஒல்லாந்தர் தம் வசப்படுத்தினார்கள்.
4. நீர்கொழும்பை ஜனவரி மாசத்திற் பிடித்துநொவம்பர் மாசத்திற் பறிகொடுத்தார்கள்.
5. கி.பி. 1654-க்குச் சமம் ஆயின். இந்நிகழ்ச்சி கி.பி. 1656ல்
ஆதலின், ஒரு வருடங்கழிந்த துர்முகி வருடம் போலும் இவனே ஊறாத் துறையிலும் ஒரு கோட்டை கட்டியவனானவன்.

Page 57
86 யாழ்ப்பாண வைபவமாலை
அமீறால் என்பவன், மன்னாரிலிருந்து கொழும்புக்குப் போன போது உலாந்தேசர் அவனைப் பிடித்துச் சிறைப்படுத் தினார்கள்.
மன்னாரைப் பிடித்தல்
காலயுத்தி வருஷம், மாசிமாதம், 1-ஆந் தேதியில் உலாந்தேசர் மன்னாரைப் பிடித்துக்கொண்டார்கள். பங்குனி மாதம் தொடங்கி யாழ்ப்பாணத்தைச் சூழவரப் பலவிடங்களி லும் சேனைத் திரள்களை நிறுத்தி முற்றுகை போட்டார்கள். அந்த மாசக்கடைசியில் ஊர்காவற்றுறை வழியாகக் காரை தீவிலும் இறங்கினார்கள். சில காலத்துக்கு முன்னேஉலகுகா வல முதலி என்னுமோர் உயர்குல வேளாளன் சோழநாட்டி லிருந்து இராச கலகத்திலேற்பட்டு இராசதண்டனைக்குத்தப் பியொளித்தோடி வந்து காரைதீவிலே களபூமி என்னும் இடத்திலே பெருஞ்செல்வனாயிருந்தான். அந் உலகு காவ லமுதலி அவ்விடத்தில் வந்திறங்கின உலாந்தேசருக்குச் சகல வசதியுங் கொடுத்து அனுசரித்திருந்தான். அப்படியிருக் கையில் உலாந்தேசர் இராச்சிய வளப்பங்களைக் குறித்து அவனிடத்திற் கேட்டுக் கொண்டு யாழ்ப்பாணத்துக்குக் கோட்டையைப் பிடிக்கப் போய், நுழைவற்கு உபாயமென்ன
1. மன்னாரும் யாழ்ப்பாணமும் ஒரே ஆண்டில் ஒல்லாந்தராற் கைப் பற்றப்பட்டன. எனவே, முன்னர்க்குறிப்பிட்டவாறு யாழ்ப்பாணம் இவர் கள் ஆளுகைக்குட்பட்டது கி.பி. 1658ல், ஏவிளம்பி வருஷக் கடைசிப் பகுதியில் யாழ்ப்பாணம் வந்து, விளம்பி வருஷத்தில் ஆனிமாதம் வெற்றி பெற்றனர். (21st June 1658) சகாத்தம் 1571ல் அன்று. 1581ல்.

யாழ்ப்பாண வைபவமாலை 87
என்று கேட்டார்கள். அப்பொழுது உலகுகாவலமுதலி' அவர்களை நோக்கி, "நான் சொல்லுந்தினத்தில் என்னுடன் வருவீர்களாகில், உங்களை வசதியாகக் கொண்டு போய் விடுவேன்." என்றான். அவன் சொற்படி உலாந்தேசர் ஒருப் பட்டுத் தங்கள் சேனைகளையும் அணியங்கலங்களையும் அவ்விடத்திலே திட்டம் பண்ணியிருந்தார்கள். இப்படி மூன் றரைமாத காலம் இருந்தபின்*உலாந்தேசர் ஒருநாளிரவிலே பறங்கிக்காரர் காவல் காத்து விழிப்பாயிருக்கும் நோக்கத்தி னால் நடன சங்கீத வினோதராயிருந்த சமயத்தில், அர்த்த சாம வேளையில், உலகுகாவலமுதலி வழிகாட்டத் திறந்தி ருந்த கள்ளவாசல் வழியாக நுழைந்து போய்க் கோட்டை யைப் பிடித்துக்கொண்டார்கள். பொழுது விடிந்த பின் கடலி லும் கடலோரத்திலும் அநேக பறங்கிப்பிணங்கள் கிடப்பதை யும் உலாந்தேசர் பெருங்களிப்புக் கொண்டாடுவதையுங் கண்டவர்கள் திகைப்படைந்தார்கள். இப்படிச் சாலிவாகன சகாத்தம் 1571-ஆம் ஆண்டு, ஏவிளம்பி வருஷம், ஆனி மாதம் 1-ஆந்தினத்திலே யாழ்ப்பாணம் உலாந்தேசர் ஆட்சி யின் கீழாயிற்று.
1. இவர் இவ்வளவு எளிதாகப் பிடித்துக் கொடுத்தார் என்றமை சரித்திரப் பொருத்தமில் கூற்றாம்.
2. ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை 3 மாசம் முற்றுகை யிட்டே பிடித்தார்கள்.
3. 84-ஆம் பக்கம் 3-ஆம் அடிக்குறிப்பினைப் பார்க்க. 4.பி-ம். விளம்பிவருஷம் புரட்டாதிமாதத்தில் கால வாராய்ச்சியில் திறமையற்ற இந்நூலாசிரியர் சிற்சில இடங்களில் வருஷங்கள்ையும் சரி யாகக் குறிப்பிட்டிருக்கின்றார். -

Page 58
88 யாழ்ப்பாண வைபவமாலை
அரசாட்சி ஒப்புக்கொண்ட உடனே உலாந்தேசர்
முதன்முதல் இறப்பிறமாது வேதத்தை நுழைவித்தார்கள்.
பூதத்தம்பியும் அந்திராசியும்
கயிலாய வன்னியன் சகோதரியை விவாகஞ் செய்தி ருந்த பூதத்தம்பி முதலியும் மனுவேல் அந்திராசி முதலி என்னுங் குருகுல வலைஞனும் உலாந்தேச அரசாட்சியா ருக்கு அரசிறை லிகித முதலிமாரான்ார்கள். தேசாதிபதி, அந் திராசிமுதலிக்கு மகாநண்பனாயிருந்தான். தேசாதிபதியின்
1. "உலாந்தேசராட்சியார் யாழ்ப்பாணத்தில்' - தி.த.க. பிரதி.
2. யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கைப்பட்டுப் பல நாட்கள் கழியுமுன், ஒல்லாந்தரைக் கொன்று வேரறத் தொலைக்க வேண்டுமென்னுமோர் அந்தரங்கச் சூழ்ச்சி யாழ்ப்பாணத்தாரிடமிருப்பதாக மனுவேல் அந்தி ரேடா என்னுஞ் சிங்கள முதலி கண்டு வெளிப்படுத்தினான். இச்சூழ்ச்சித் தலைவரான பதினான்குபேர்கொலை செய்யப்பட்டனர். அவர்களுடன் டெரன்லூவிஸ் பூதத்தம்பிஎனும் யாழ்ப்பாண முதலியாரும் இச்சதியா லோசனைக் கூட்டத்தலைவராயிருந்தனர்.மயில்வாகனப் புலவர் கன்ன பரம்பரையை ஆதாரமாகக்கொண்டே பூதத்தம்பி கதையை எழுதியி ருக்க வேண்டும். (யா.ச.பக். 171-172)
இக்கதையை பூரீமான் அ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் தாம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரத்தில் மிகவும் விரிவாகக் குறிப்பிட்டிருக் கின்றனர். (பக். 101-54).
ஆயின், யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆசிரியரும், Notes on Jaffna எனும் நூலாசிரியரும் இவ்வரலாற்றை மறுத்துத் தம் மதத்துக்கேற் பக் கதையினை விவரித்திருக்கின்றனர். இங்ங்ணம் இவ்வரலாற்றைப் பற்றி இரு வேறு கொள்கைகளுள்.

யாழ்ப்பாண வைபவமாலை 89
தம்பி பூதத்தம்பி முதலிக்குப் பிராண சிநேகனாயிருந்தான். ஒரு நாள் பூதத்தம்பி முதலி அந்திராசி முதலியைத் தன்
வீட்டிற்கழைத்து விருந்திட்டான். அவ்விருந்திலே பூதத் தம்பி முதலி மனைவியின் பேரழகைக் கண்டு அந்திராசி
முதலி விகார மயக்கங் கொண்டவனாய், வீட்டுக்குத் திரும் பிப்போய், மறு நாள் ஓர் அள் அனுப்பி, 'நீ என்னுடனே சிநேக இணக்கமாயிருக்கச் சம்மதித்தால், நான் உனக்குக்கன திரவியங்களும் நீ விரும்பும் எந்தெந்தப் பொருள்களும் தருவேன்', என்று கேட்டனுப்ப, அவள் அந்திராசி முதலி யையும் வைது பேசித் தூது வந்த ஆளையுந் துடைப்பத்தி னால் அடித்துத் துரத்திவிட்டாள். அந்தக் காரணத்தினால், அந்திராசிமுதலி, "அரசாட்சிவேலைக்கு மரங்கள் அழைப் பிக்கக் கச்சாயத்துறைமுகத்துக்குக்கட்டளை அனுப்ப வேண் டும். இதற்குக் கையொப்பம் வைக்க', என்று வெள்ளைப் பத்திரத்தில் பூதத்தம்பி முதலியைக் கொண்டு கையொப்ப மிடுவித்து, அதிலே கோட்டைபிடிக்க இன்னின்ன உதவிகள் செய்வேனென்று பறங்கிக்காரருக்கு பூதத்தம்பி எழுதின தாக எழுதி, அதைப் 'பூதத்தம்பி முதலி கொடுத்தனுப்பக் கொண்டு போன ஆளிடத்திற்பறித்தேன்' என்று அவ்வந்தி ராசி முதலி தேசாதிபதி கையிற் கொடுத்தான். தேசாதிபதி விசாரணை செய்து அது பொய்க் குற்றச்சாட்டென்றறிந்தும் அந்திராசியின் வேண்டுதலுக்காகப் பூதத்தம்பி முதலியைக் கொலை செய்வித்தான். தேசாதிபதியின் தம்பி
1. "அந்திராசி முதலிக்கும் பூதத்தம்பி முதலிக்கும் பகையுண்டுபட் இக்கொண்டது ஒரு தினத்திலே" - தி.த.க. பிரதி.
2. "அவ்வேளையிற்" - தி.த.க. பிரதி.

Page 59
90 யாழ்ப்பாண வைபவமாலை
கடற்கோட்டைகட்டுவித்துக்கொண்டு ஊர்காவற்றுறையில் இருந்தான். விளம்பி வருடம் புரட்டாதி மாதத்திலே இக் கொலையைக் குறித்துக் கைலாய வன்னியன் கொழும் பேறி வழக்காடின போது தேசாதிபதியையும் அந்திராசியை யும் வரும்படி கட்டளை வந்தது. அவர்கள் போம்பொழுது தேசாதிபதி கடலில் விழுந்திறந்தான். அந்திராசி முதலியை யானையிடறிக் கொன்றது.*
இன்னமும் அவ்வருஷத்திலே ஊர்க்காவற்றுறையிலே வெள்ளப் பெருக்கினால் வெகு மனிதரும் மிருகங்களும் இறந்து போனார்கள்.
உலாந்தேசர் உலகுகாவலமுதலிக்குக் கன திரவியங் களை உபகாரமாகக் கொடுத்து, மரபாலுயர்ந்த முதலியின் சகோதரியை விவாகஞ் செய்வித்துக் கொடுத்து, அவனுக்கு வாசலுத்தியோகமும், மரபாலுயர்ந்த முதலிக்கு முன்னிருந் தபடி திரவியசாலைத் தலைமையுங் கொடுத்து, உலகுகா வல முதலி இறந்த பின் அவன் மகன் இராயதுங்க முத லிக்கு மரபாலுயர்ந்த முதலியின் குமாரத்திகள் ஏழுபேரில்
1. பி-ம். இருந்தமையாற் றன் சிநேகிதனுக்கு உற்றவிடத்துதவி செய்யக் கூடாதவனாயிருந்தான்.
2. பூதத்தம்பி கொலையுண்டது 1658-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் எனவும், அந்திராசி 1659-ஆம் ஆண்டிலும் உயிருடன் இருந் தமை டச்சுத் தேசாதிபதிகளின் அறிக்கைப்பத்திரங்களால் அறியக்கிடக் கின்றமையால், அவன் கொழும்புக்குப் போகும் வழியில் இறந்தான் என்பது பொருத்தமற்ற கூற்றெனவும் சில சரித்திராசிரியர் கருதுகின்ற னர். இஃது இன்னும் ஆராயத்தக்கது.

யாழ்ப்பாண வைபவமாலை 91
ஒருத்தியை விவாகஞ்செய்வித்து அவன் நடத்தி வந்த உத்தி யோகத்தை அவனுக்குக் கொடுத்தார்கள். மரபாலுயர்ந்த முதலி இறந்த பின் அவன் பெண் மக்கள் ஏழு பேரில் ஒருத்தியை விவாகஞ்செய்த பூலோக முதலி என்பவனுக் குத் திரவியசாலைத் தலைமையையும் வேறு சில தத்து வங்களையும் கொடுத்தார்கள். 8
சோனகர்
அக்காலத்திலே சந்தச்சாய்பு என்பவனால் மகம்மது மார்க்கத்தவர்களாக்கப்பட்ட தமிழ் வமிசத்தவர்களான சில சோனகக் குடிகள் காயில் பட்டணம் முதலிய இடங்களிலி ருந்து வந்து தென்மிருசுவில் என்னும் ஊரிலே குடியிருந்து, சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள், முகாவில் என்னுமிடங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரம் பண்ணிக் கொண்டு, தாங்களிருந்ததென மிருசுவிலுக்கு உசனென்று
பேருமிட்டார்கள். சில காலம் அவ்விடத்திலிருந்து, அவ்வி டம் வசதிப்படாததனால், அந்தச் சோனகக் குடிகள் அவ்வி டத்தை விட்டு, நல்லூரிற் கந்தசுவாமி கோயிலிருந்த இடத் திலே வந்து குடியிருந்தார்கள். சோனகர் அதிலே குடியிருந் தாற் கந்தசுவாமி கோவில் கட்ட வருங்காலத்திற்றடையா யிருக்குமென்று நினைத்துத் தமிழர் கூடி அவர்களை அவ்வி டத்தை விட்டுப் புறப்படுத்தத் தெண்டித்துப் பார்த்துங் கூடா மற் போயிற்று. 'அந்த நிலங்களுக்கு அதிக விலை தரு வோம். எங்களுக்கு விற்று விடுங்கள்', என்றுங் கேட்டுப்
பார்த்தார்கள். சோனகர் அதற்குஞ் சம்மதிக்க வில்லை. யாதொரு இணக்கத்துக்குஞ்சோனகர் சம்மதியாதே போனத னால், அந்தத் தமிழர் பன்றியிறைச்சியைக் கொண்டு போய்

Page 60
92 யாழ்ப்பாண வைபவமாலை
அவர்கள் தண்ணீர் குடிக்கும் கிணறுகளிற் போடுவித்தார்கள். பன்றியிறைச்சியைக் கண்டவுடனே சோனகர் அழுது புலம் பிப் பசிபட்டினியாய்க் கிடந்து, ஆற்றாமல், ஈற்றிலே தமிழரு டனே தங்கள் பெருநாட்களிலே தாங்கள் வந்து தங்கள் சமய வழிபாடு செய்யத் தடைபண்ணாதிருப்பதற்கு ஓர் உடன் படிக்கை எழுதுவித்துக்கொண்டு, கிடைத்த விலையையும் வாங்கிக்கொண்டு போய், நாவாந்துறைக்குக் கிழக்குப் பக்க மாகக் குடியேறினார்கள்.
பள்ளர்
அந்த நாட்களில் ஒரு பெருங்கலகமுண்டுபட்டதனால், கலகத்துக்குப் பயந்து, சில விட்டுணு சமயப் பிராமணக்குடிக ளுஞ் சிவசமய பிராமணக் குடிகளும், உத்தரகோசமங்கை என்னுமிடத்திலிருந்து ஆணும் பெண்ணுமாகக் காரைதீவில் வந்திறங்கி, அங்கே குடியிருந்தார்கள். சோழ நாட்டிலிருந்த சில பட்குடிகள் வேளாளரின் கீழ்ப்பயிர்க் குடிகளாயிருந்து பிழைக்கலாமென்றெண்ணி வந்திறங்கித் தாங்கள் எண்ணி வந்தபடி பிழைக்க இடங்காணாததனாற் சில குடிகள் தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள். சிலர் சாணாரைப் போற்பனை யேறுந் தொழிலைப் பயின்றார்கள். நளவரும் பள்ளரும் பனையேறத் தொடங்கிக்கொண்டதனாற் சாணாருக்குப் பிழைப்புக் குறைந்தது. அதனாற் சில சாணார் வெள்ளைக்கா ரர் வீடுகளிலே ஆணும் பெண்ணுமாகப் பணிவிடைகளில் ஏற்பட்டுச் சீவியம் பண்ணினார்கள். சிலர் வலை வீசிப்
1.
பிழைத்தார்கள்..
1. சிலர் எண்ணெய் வாணிகத்தாற் சீவியம் பண்ணினார்கள். -- தி.த.க.பிரதி.

யாழ்ப்பாண வைபவமாலை 93
கோவியர்
இது நிற்க, முன் வந்த பள்ளர் நளவரிற் பிழைப்புக்கு வழியில்லாதிருந்தவர்கள், தங்களை வேளாளர் முதலானவர் களுக்கு அடிமையாக எழுதிக்கொடுத்திருந்தார்கள். முன் னாட்களிலே சில வறிய குடிகள் தங்களைக் கோவில்களுக்கு அடிமைகளாக எழுதிக் கொடுத்துக் கோவிற்பணிவிடை செய்து சீவனம் பண்ணிக் "கோவிலார் என்று அழைக்கப் பட்டு இருந்து, பின்பு "கோவியர் எனப் பெயர் பெற்றார்கள்.
பறங்கிகள் அரசாட்சியைக் கைப்பற்றின காலத்திலே கோவில்களெல்லாம் இடிபட்ட பின் கோவிலெசமான்கள் அந்தக் கோவியச் சிறைகளைப் பிறர்க்கு விற்பனைப் பண் ணியிருந்தார்கள். பிற்காலத்தில் வடதேசத்திலிருந்து சில சிறைகள் வடசிறைக்கோவியம் என்னும் பேரால் விலைப்
LLTT35GT.
உலாந்தேசரசியல்
இப்படியே சிறை விற்பனவு கொள்வனவு வரவர அதி
கப்பட்டது கண்டு, உலாந்தேச அரசாட்சியார் அந்த
1. கோவியர், கொவியர் (Govyas) என்னுஞ்சிங்களவேளாளரென வும், சங்கிலி காலத்தில் சிங்களரை யாழ்ப்பாணத்தினின்று அகற்றிய போது, தமிழ் வேளாளக் குடும்பங்களுக்கு அவர்கள் அடிமைகளானார்க ளெனவும் முதலியார் இராசநாயகம் கூறுவர். கோவியர் அடிமைகளானா லும், வேளாளருக்குச் சாதியிற் குறைந்தவரல்லரென அவர்களுக்கிடை யில் இன்னும் நடக்கும் வழக்கமொன்றைக் காட்டியுள்ளார். கோவியர், நளவர், தனக்காரர் என்னுஞ் சாதியார் சிங்களர் என்பதற்குச் சான்றாகப் பெண்கள் தாமுட்டுக்குஞ் சேலையின் உள் தொங்கலைத் தோளிற்போடு வது சிங்கள வழக்கம் எனவுங் கூறுவர். (யா. ச. பக். 85-86)

Page 61
94 யாழ்ப்பாண வைபவமாலை
விற்பனவு கொள்வனவைத் தங்கள் அதிகாரத்தின் கீழாக்கித் தங்களுக்கு வருமானத்தை உண்டாக்கினார்கள். இறப்பிற மாது சமயமேயன்றி, மற்றொரு வேதமும் வழங்காமல், அதி காரத்தினாற்றடுத்து, யாழ்ப்பாணத்தை முப்பத்திரண்டு கோவிற்பற்றுகளாகப் புகுத்து, ஒவ்வொரு பற்றுக்கும் ஒவ் வொரு கோவில் கட்டுவித்து, அக்கோவில்களிலே தங்கள் சமயக் குருவானவரை நியமித்து, அனைவரும் அந்தக் கோவில்களிற் போய் அறிவு கேட்கவும் கலியாணம் கைப்பி டிக்கவும் மற்றச் சடங்குகள் எவைகளையுந் தங்கள் சமய விதிப்படிதான் செய்யவும் வேண்டுமென்று அவ்வுலாந்தேச அரசாட்சியார் பலவந்தம் பண்ணி வந்தார்கள்; பல வரிகளை ஏற்படுத்தி, அரசாட்சி வருமானத்தையும் பெருக்கிக் கொண் டார்கள்.
சிவியார்
போகிச்சாதியாரிற் சில குடிகள், தமிழரசரைச்சிவிகைக ளில் வைத்துக் காவ அழைக்கப்பட்டிருந்தவர்கள், பெருகிச் சிவியாரென்றொரு சாதியாயிருந்தார்கள். அவர்கள் சிவிகை காவுங் கோவியருங்குடிமைகளுந்தங்கள் தங்கள் ஒழுங்குப் படி சிறப்புச் செய்யவும் வரிசையை ஏற்படுத்தி, அவ்வரி சையை அவ்வரிசைப்பத்திரம் பெற்றவர்களேயன்றி மற்றொ ருவருஞ் செய்யவொண்ணா தென்றுங் கட்டளை, வரிசைப் பத்திரம், பட்டக் கடதாசி என்னுமிவைகளால் அதிக
1. பறங்கிகள் அதிகமாய்த் தாங்கள் இடித்தழித்த சைவக் கோவில் கள் இருந்த இடங்களிலே தங்கள் கோவில்களைக்கட்டினார்கள். ஒல்லாந் தரும் அக்கட்டடங்களையே தங்கள் கோவில்களாகத் திருத்தி உபயோ கித்தார்கள்.

யாழ்ப்பாண வைபவமாலை 95
பருமானங்களை அரசாட்சிக்கு வருவித்தும், தங்கள் சம பமே எங்கும் நிலைபெற வேண்டுமென்னுங் கருத்துடனே அவ்வுலாந்தேசக்காரர் இதுவரைக்கும் ஆட்சி செய்து வருகி றார்கள்.
பறங்கி அரசாட்சி விருத்தம் திருமருவு யாழ்ப்பாண நாட்டை யாண்ட
சிங்கையாரியன்குலத்தைத் தீங்கு செய்து பெருமையுடன் காலயுத்தியானி மாசம்
பிலிப்பனெனும் பறங்கிகிளை யரசை யாண்டு குருநெறியு மனுநெறியுமில்லா தாக்கிக்
கொடுமையுடன் நாற்பஃதாண்டளவும் போக்க உருமருவு முதயகிரி யிரவி போல ',
வுலாந்தேசு மன்னவன்வந் துதிப்பன் றானே. 1.
உதிக்கின்ற விளம்பிதனிலானி மாச
மொன்பதனி லுலகுபுகழ் உலாந்தே சண்ணல் மதிக்கின்ற மனப்பறங்கி கிளையை யெல்லாம்
வாள்வலியா லுயிர்தொலைத்து வாரியள்ளிக் கொதிக்கின்ற தென்கடலிலடைய வீசிக்
கோட்டையொப்புக் கொண்டேற்றுக் கொடியுந் தூக்கித் துதிக்கின்ற யாழ்ப்பாண நகரி தன்னிற் m
சோதிதிகழ்மணிமகுடஞ் சூட்டு வானே.” 2 சூட்டியபின்னூற்றின்மே லையெட் டாண்டு
தொல்வினைபோல் வல்வினைகளெல்லாஞ் செய்து ஈட்டுபொருளுள்ளதெல்லாங் கவர்ந்து தேடி
யிடர்விளைத்து யாவரையுமிழிகோ லாக்கிக்
1. பி-ம் சூட்டினானே.

Page 62
96 யாழ்ப்பான
கூட்டுறுமின் மினிவீழ்ந்தக் கி கெரள்கையென வவன் நாட்டுபுகழ் யாழ்ப்பாண நாெ நன்மைபெற நல்லரசு ந நல்லரசு நடத்திவிட்டா னனை நன்றாக விராக்கதக் கன் வல்லபுகழிங்கிலேசர் எழுபத் வருஷமர சாண்டுமனு நீ தொல்லைவரி குடிகளுக்குச் ச தொன்மைபுகழ்ப் பிரஞ்ச் மல்லல்வள நாடுவவ்வி வால
மகிபனுக்கு மணிமகுடம் (சில பிரதிகளில் 4-ஆம் செய்
அச்சிட்ட பிரதியி
இலகிய சகாத்த மெண்ணு
றெழுபதா மாண்ட அலர்பொலி மாலை மார் னாம்புவனேக வா நலமிகும் யாழ்ப்பாணத் நகரிகட்டுவித்து ந குலவிய கந்த வேட்குக்
கோயிலும் புரிவித்
CUPyD
1. பி-ம் சைவநெறி

2006lIL. IEIDT6:2(S)
னியின் மாய்ந்த குலமு நாசமாக டங் கெங்கும் டக்குந் தானே. வோ ருக்கும் னி தொட்டு
தொன்பான் தி தப்பித் iமத்து நாளில் ஈபிறர் துணைவ ரோடும்
சிங்க வழங்கு வானே.
யுள் காணப்படவில்லை.)
லுள்ள செய்யுள்
Tf) தெல்லை