கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணச் சரித்திரம்

Page 1
JAFFNA F
BY
A, MOOTOOTAM
யாழ்ப்பாணக்
ஆ. முத் அத் த ப்
செய்த
இரண்டாம்
THE NAVALAR PR
All Rights R
1915

ISTORY.
lékteremtmastek ~~~
BY PILLAY.
ச்சரித்திரம்.
BSS, JAFFNA.
Reserved.
விலை சதம் 60,

Page 2

முதற்பதிப்பு முகவுரை.
ாழ்ப்பாணத்திலேயுள்ளார்க்கு, யாழ்ப்பாணத்தி னது பூர்வோத்தா சரித்திரத்தையறிவது, அவ சியமும் ஆனந்தமுமாம். யாழ்ப்பாணத்தைப் பூகோளபடத் திலே கோக்கும்போது அது கடுகுப்பிரமாணமாய்த் தோன் றினும், அதன் சரித்திரத்தை நோக்கும்போது, பெரிய தேச ங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமை யுடையதாயிருக்கின்றது. யாழ்ப்பாணஞ் சிறிதேயாயினும் அ திலிருந்தரசியற்றிய சிலவரசர், தமது பராக்கிரமத்தினலே இலங்கைமுழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சோ ழநாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிகொண்டிருக் கின்றர்கள் என்ருல், அதன் சரித்திரப்பெருமை கூறவும் வேண்டுமோ. 1505 ல் இலங்கைக்கு வந்த பறங்கிக்காரர் இல ங்கையில் அநேகநாடுகளைச் சிங்களவரசர்பாற் கவர்ந்தபின்ன ரும் நூறுவருஷஞ்சென்றே யாழ்ப்பாணத்தைப் பிடித்தார் கள். அவர்கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் கிருவகிக்க வியலாது தோற்முேடிஞர்கள் என்பர். சமாதானமாகி யாழ்ப் பாணததாசன்பாற் போர்ச்செலவு பெற்றுக்கொண்டு மீண்ட னரென்பது பறங்கிச்சரித்திரகாரர் கூற்று. எப்படியாயினும் யாழ்ப்பாணத்தாசர் தமது நாட்டைப் பறங்கிக்காரர் காலத் திலுங் கைவிடாது நூறுவருஷம் ஆண்டார்களென்பதுண்மை. பறங்கிக்கா சரோடு பொருது கிருவகிக்கவாற்ருத சிங்களவர சர் சிலர், யாழ்ப்பாணத்தரசரிடம் அடைக்கலம்புகுந்தார்கள் என்பது இலங்கைச் சரித்திரத்தாற் றுணியக்கிடத்தலின், பற ங்கிக்காரர் காலத்தும் யாழ்ப்பாணம் வலிய அரசுடையதா யிருந்ததென்பது திண்ணம்.
இத்துணேச்சிறந்த யாழ்ப்பாணவரசு இற்றைக்கு இரண் டாயிரம் வருஷத்துக்குமுன்னர் (161 B, C.) அரசுசெய்த ஏலேலன் காலத்திலே தொடங்கியது. இடையிடையே அர

Page 3
4.
சின்றிச் சிலகாலமும், வழிவழியாசோடு நெடுங்காலமும், பின்
னருமிடையிடையே சிங்களவரசு சிலகாலமும், பின்னரும் தமிழரசு வழிமுறையாகச் சிலகாலமுமாக 1700 வருஷம் சுவ தேசவாசு நடந்தது. அதன்மேற் பறங்கியரசு 40 வருஷமும், ஒல்லாந்தவாசு 150 வருஷமும் நடந்தொழிய, 1796ல் ஆங்கில வாசுவந்து கடக்கின்றது. இப்படியே யாழ்ப்பாணம் ஏறக்கு
றைய 2000 வருஷ சரித்திரமுடையது.
யாழ்ப்பாணப் பூர்வசரித்திரத்துக்கு ஆதாரநூல்களாயிப் போதுள்ளன வைபவமாலையும் கைலாசமாலையுமே. அவையுஞ் சொரூபத்திரிந்துவிட்டனவாய்த் தோன்றுகின்றன. பறங்கிக் காரர் காலமுதலாகப் பிற்காலத்துச் சரித்திரம் பறங்கிக்கார ராலும் ஒல்லாந்தராலும், ஆங்கிலேயர்காலத்துச் சரித்திரம் ஆங்கிலேயராலுமெழுதப்பட்டிருங்கின்றன. பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் தமது கொடுங்கோன்மையைக் குறைத்தும் திரி த்தும் எழுதியிருப்பதால் அது முழுதும் உண்மையெனக் கொள்ளப்போகாது. வைபவமாலைக்கு முன்னே வையைபாட லென ஒரு சரித்திரமிருந்தது. அஃதகப்படவில்லை. கர்ணபா சம்பரிய கதையும் இக்காலத்தார்க்கு வினேதம் பயவாமை யால் கேட்பாருமில்லை. சொல்வாருஞ் சுருங்கினர். மருதங்கட வெலையிலே P. W. D, கிளாக்காயிருந்த் ம.ா. மா. பூரீ. அம்பல வாணர் கெக்கரியாக் கிராமத்திலே ஒரு சிங்களவீட்டிலிருந்து தாம் டெற்ற கடலோட்டுக்காதைப்பிரதியைச் சிலகாலத்துக்கு முன்னே எனக்கு உபகரித்தனர். அதிலிருந்தகப்பட்ட செய் யுளே யாழ்ப்பாடி பரிசுபெற்ற காலத்தை நிரூபித்தது. அதுவு மன்றி இன்னும் அநேகவிஷயங்கள் யாழ்ப்பாணச் சரித்திரத் திற்கு இன்றியமையாதனவாயகப்பட்டன. இதற்குமுன்,யான் சென்னையில் வசித்தகாலத்திலே 1887ம் இu) காஞ்சீபுரத்திலே பூரீமத் மாசிலாமணி தேசிகரிடத்திலே யாழ்ப்பாணத்தைப்பற் றிய சில குறிப்புகளுள்ள ஒரேடிருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றேன். அவர் அதனைக் காட்டுதற்கு ரூபா ஐம் பது கேட்டார். அது பெருந்தொகையென விடுத்து இரண்டு வருஷத்தின் பின்னர் அவர் வீட்டுக்கு மீண்டுஞ் சென்றேன். அவ்வமையம் பணச்செலவின்றி அவ்வேட்டுப் பிரதியை ஆரா

5
யவாய்த்தது. அஃதொரு புரோகிதக் குறிப்பு. அதனேடு இ ருபத்தேழு ஏடுகளிருந்தன. எல்லாம் ஒரு பழைய பிராமணப் புரோகித குடும்பத்துக் குறிப்பேடுகள். ஆராய்ந்தவிடத்தகப் பட்ட விஷயங்களையெல்லாம் மூன்று நாளிற் குறித்துக்கொ ண்டு மீண்டேன். அக்குறிப்புக்களே இந்நூலுக்குப் பெரிதும்
உபகாரமாயின.
அச்சங்குளம் உடையார் ம. மா. பா. பூரீ. மணியாத்தினம் ஒரேட்டுப்பிரதியனுப்பினர். அதிலும் சாதிவரிசையைப்பற்றி அநேகவிஷயங்கள் அகப்பட்டன. பூரீமத். விசுவநாதசாஸ்திரி யார் எழுதிவைத்த பலகுறிப்புத் திரட்டொன்றகப்பட்டது. அதிலும் சில அரியகுறிப்புக்களகப்பட்டன. கர்ணபாரம்பரிய சரித்திரங்களும் வட்டுக்கோட்டை பூரீமத். நா. சிவசுப்பிரம ணியசிவாசாரியரிடத்தும், மகாவித்துவான் ஆறுமுக உபாத் தியாயரிடத்தும், கத்தோலிக்க பாதுகாவலப் பத்திராதிபர் ம. ஈ. மா. பூரீ. தம்புப்பிள்ளையிடத்தும் சில கேட்கப்பட்டன. @apooro, Boake's Mannar, Ribeiro's Ceilao, Obeyesekere's Ceylon History, + Captain H. Suckling's Ceylon, Brito's Jaffna. History, Sketches of Ceylon History by P. Arunachalam முதலிய நூல்களும் அகப்பட்டன. அவைகளும் இச்சரித்திர த்திற்குதவியாயின.
நூலியற்றுமருமை நூலியற்றினேரேயறிவர். இந்நூல் யாத்துக்கொண்ட கஷ்டம் எனக்கே தெரியும். நூலிற்குற்றங் தெரித்தலோ எளிது. குற்றங்தெரிக்கப்படாத நூலுமோ இல் லையென்னலாம். யான் அறிந்தவரையிலும் எனக்கெட்டியவ ரையிலும் எனக்கியன்றவரையிலும் இந்நூலை ஆராய்ந்தே செ ய்தேன். இதிற் கூறப்பட்டனவெல்லாம் நூலாதாரமும் கன்ன பரம்பரை யாதாரமும் என தறிவாதாரமுமுடையன. யாழ்ப் பாணச்சரித்திரமொன்றியற்றவேண்டுமென நெடுநாட்கொண் டகாதலால் அதுசம்பந்தமாக என தாராய்ச்சியிற் பட்டனவற் றையெல்லாஞ் சேர்த்து நூலாக்கினேன். குற்றம்போக்கிக்கொ
ள்ளத்தக்கனவற்றை உலகம் கொள்ளுக.
* இது Rev. Father S. ஞானப்பிரகாசர் O. M. 1. அவர்கள் தந்தது.

Page 4
6
இந்நூலை அச்சிட்டு வெளிவிடும்பொருட்டு வலிந்து ரூபா ஐஞ்அாறு உபகரித்தவர் சிங்கப்பூர்ப்பகுதியிலே குவாலாலம் பூரிலே கோட்டுத் துவிபாஷகராயிருக்கும் பூரீமான். கா. தம் பாபிள்ளையவர்கள். இவருடைய ஜனன வூர் தமிழாசர்காலத் திலே பிரதமமந்திரிக்கு வாசஸ்தானமாயிருந்த யாழ்ப்பாணம் திருநெல்வேலி. இவர் ஒல்லாந்தர்காலத்திலே தோம்பதிகார மாயிருந்த பழங்குடி வேளாண்டலைவர் ராமநாதபிள்ளைவழி த்தோன்றல். இவர் இந்திக்கல்லூரி மூலநிதிக்கு ரூபா ஆயிரம் வழங்கிய பரோபகாரி. வித்தியாபிவிருத்தியிலே போபிமான முடையவர். இவருடைய வித்தியாபிமான சின்னமாக இந்நூ லை அவர்க்குச் சமர்ப்பித்துப் பிரகடனஞ்செய்கின்றேன். இவ
ருடைய வண்மைக்கிணையும் கைமாறுங் காண்கின்றிலேன்.
இந்நூலிலேயுள்ள சித்திரப்படங்களெல்லாம் மானிப்பா ய்த் தொல்குடித்தீபமாகிய ம. ரா. பா. பூரீ. சு. கனகரத்தினம் (M. S. K. Lawton) அவர்கள் அமைத்தன. இவருக்கும் பிர திகள் தந்துதவிஞேர்க்கும் எனதிதயபூர்வகமான நன்றி கூறு கின்றேன்.
யாழ்ப்பாணம், ந்தம்பிப்பிள்ளை நாவலர்கோட்டம் 5.gs55. Di Ludant ČøT.
GUD • }2 1912 ל-22
இரண்டாம்பதிப்பு
முகவுரை.
முதற்பதிப்புப் பிரதிகள், விலையேற்றமாயிருந்தும் விரை வில் விலையாயினவாயினும் அநேகர்க் கெட்டாதுபோயின. யா வரும் வாங்கி வாசித்து ஆநந்திக்குமாறு இது சிறுவிலைப்பதிப் பாகச் செய்யப்பட்டது. இப்பதிப்பில் அநேக விஷயங்கள் புதியனவாகச் சேர்க்கப்பட்டன.
நாவலர்கோட்டம்,
யாழ்ப்பாணம்,
6-8-1915.
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை,

ப  ைழ ய யாழ்ப்பாணச்சரித்திரநூல்கள். 兴
வைபவமாலை-இஃது ஒல்லாந்தர் காலத்திலேயிருந்த மயில்வாகனப்புலவரால் வசனநடையிலே செய்யப்பட்டது. இதனைச் செய்வித்தோன் மேக்கறான் என்னும் ஒல்லாந்த தேசாதிபதி.
கைலாயமாலை-இதுசெய்தவர் முத்துராசகவி. இது பத் தியரூபம். சொன்னயம் பொருணயமுடையது. இஃது ஆறு முககாவலரவர்கள் தமையனர் புத்திரர் பூரீமத். த. கைலாயபி ள்ளையவர்களால் அச்சிடப்பட்டது. இது மிகப்பழைய நூல்.
பரராசசேகரனுலா-இதுவும் ஒருபழைய பத்திய ரூபமா னநூல். செய்தார்பெயர் நிச்சயமாகத் தெரியவில்லை. மனப்பு விமுதலியார் செய்ததென்பர். இஃது அகப்படவில்லை.
இராசமுறை-இது பறங்கிக்காார் காலத்துக்குச் சிறிது முந்திச் செய்யப்பட்டது. செய்தார் யாரெனத் தெரியவில்லை. இதுவும் அகப்படவில்லை.
வையைபாடல்-பரராசசேகரன் காலத்திலே யுள்ளதெ ன்பர். செய்தவர் வையாபுரிஐயர். இதுவும் சிலசெய்யுள் தவிர அகப்படவில்லை.
பின்னையநான்கும் பழைய நூலென்பது மேல்வருஞ்செய் யுளாலறியப்படும்.
உாராசர்தொழுகழன்மேக்கெறாஉனென்ருேது முலாந்தேசுமன்னனுாைத்தமிழாற்கேட்க வரராசகைலாயமாலைதொன்னூல்
வரம்புகண்டகவிஞர்பிரான்வையாபாடல் பரராசசேகரன்றன்னுலாவுங்காலப்
படிவழுவாதுற்றனசம்பவங்கடீட்டுங் திரராசமுறைகளுக்தேர்ந்தியாழ்ப்பாணத்தின்
செய்திமயில்வாகனவேள்செப்பினுனே.

Page 5

யாழ்ப்பாணச்சரித்திரம்.
யாழ்ப்பாணம். அது யாழில் வல்ல ஒருபாண னுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டமையின் யாழ்ப் பாணமெனப்படுவதாயிற்று.
மணற்றி * என்பது அதன் பூர்வநாமம். அது பின்னுளில் மணற்றிடல் எனவும் வழங்கிற்று. இம் மணற்றி என்னும் பெயர் இறையனர்அகப்பொருள் உதாரணச்செய்யுட்களில் வருகின்றது.
அதன் வடககும் கிழக்கும் வங்காளக்குடாக் கடலும், தெற்குப் பூநகரிக்கடல், பண்ணைக்கடல்க ளும், மேற்குக் கோடிக்குடாக்கடலும் எல்லையாம்.
அஃது இலங்கையின் வடபாகத்தேயுள்ள ஒரு துவீபகற்பம். அதன் அயலிலே காரைதீவு, வேல ணைத்தீவு, புன்குடித்தீவு, அனலைதீவு, நயினதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளுமுண்டு. இவைகளெல்
லாம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தனவேயாம்.
பூர்வத்தில் இந்நாடு ஒரு சிறந்த நாடாயிருந்து பின்னர்க் கடல்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அது திடராகி மணல்கொண்டு காலவடைவில் மீண் டும்நாடாயிற்று. முன்னெருகாற் கடல்கொண்டழிங் ததென்பது இங்கிலத்தின் கீழேயுள்ள கற்பாறைகளி லே சிப்பிகளும் நத்தைகளும் பதிந்து கல்லாய்க்கிட த்தலாலும், வடகரையிலே கடலினுள் நெடுந்தூரம் கற்பாறைகள் காணப்படுதலாலும் துணியப்படும். இதற்கு ஆதாரப்பார் கருங்கற்பாறை. (Boake's Mannar.)
% மணற்றி என்பது “மாந்தையொடு மணற்றிகொண்ட வல்விசயன் றனக்குமனை வகுத்தலாலே.” என்னுஞ் சாதிமா லைப்பாட்டாலும் வருகின்றது.
பெயரும் GUuitä
56t
பூர்வ நா
LDD
நில வியல்பு.

Page 6
UGOptu
šifo?M.
臀
ofov)
to
நில
வளம்.
2 யாழ்ப்பாணச்சரித்திரம்.
வங்காளக்குடாக்கடல் இடைவிடாது யாழ்ப் பாணத்தின் வடகரையைத் தாக்கிக்கொண்டிருத்த லால் அக்கரை உயர்ந்து எதிர்தாக்கிக்கொண்டிருக் கின்றது. முன்னெருகாலத்திலே யாழ்ப்பாணத்தின் வடகரைமுழுதும் மலைத்தொடராயிருந்து பின் கட லாற்ருக்குண்டு அழிந்துபோக, எஞ்சியுள்ள அதன் அடிவாரமே இப்போது கீரிமலையெனப்படுவதென்று கூறுவர். அம்மேட்டுகிலத்திற் சுவறிய மழைநீர், நன் னிாருவியாகிப், பள்ளமாகிய கடற்கரையிற் பலவிட ங்களிலே சுரந்தோடுகின்றது. இவ்வருவியில் ஸ்கா னஞ்செய்த ஒருமுனிவர் தமது கீரிமுகநோய் நீங்க ப்பெற்றமையால் இவ்விடம் கீரிமலையெனப்பட்டது. இந்த அருவிகளிலே ஸ்நானஞ்செய்வோர் அநேக நோய்கள் தீரப்பெற்றுத் திடகாத்திரம் பெறுகின்மு ர்கள். கீரிமலையிலிருந்த பூர்வசிவாலயமும் அம்மலை
யோடு கடல்வாய்ப்பட்டது.
சிலபாகம் மணற்பாங்காகவும், சிலபாகம் களிப் பாங்காகவும், சிலபாகம் செம்மண்பாங்காகவும், சில பாகம் சொரிகற்பாறையாகவும் உள்ளது. இங்கே ஐந்துமுதல் இருபது முழம்வரையும் ஆழமாகத் தோண்டப்பட்ட கிணறுகளிலேநன்னீருண்டு. LD60tp ஆவணிமுதல் மார்கழிவரையும் காலமழையாகவும், பங்குனி சித்திரையிலே அகாலமழையாகவும் பெய் யும், காலமழைக்காலத்திலே நெல் வாகுகளும், மற் றக்காலங்களிலே தின குரக்கன் முதலிய தானியங் களும் விளைவிக்கப்படும். வாழை, கமுகு, கிழங்கு, காய்கனி, புகையிலை முதலியவைகள் தோட்டங்க ளிலே கிணற்றுநீரால் வளர்க்கப்படும். மணற்பாங்கி லே தென்னந்தோப்புக்களும், மற்றவிடங்களிலே பனந்தோப்புக்களும் வளர்க்கப்படும். கடலிலே சங்
கும, மற்றெத்தேயத்திலும் அரிதாகிய வலம்புரிச்ச
ங்கும், தெளிந்துருண்டு பிரகாசந்தரும் முத்தும் குளிக்கப்படும்.

யாழ்ப்பாணச்சரித்திரம். 3
இலங்கை ஈழமேயாயினும் வடபாகமும் கீழ் பாகத்தி லொருபகுதியும் ஈழமண்டலமெனப்படும். யாழ்ப்பாணம் ஈழமண்டலத்தி லொருபகுதியாம். சேர சோழ பாண்டி மண்டலங்களோடு ஈழமண்டல முமொன்முகும். சேர சோழ பாண்டி மண்டலங்க வளினPன்றுமே சனங்கள் ஈழமண்டலத்திற் குடியேறு வாராயினர். இவர்கள் குடியேறுமுன் இவ்வீழமண் டலத்தைக் கைக்கொண்டிருந்தவர்கள் நாகர்கள். சங்கப்புலவருளொருவராயிருந்த முடிநாகராயரும் இந்நாகர்குலத்தவரே என்பர். அவர்கள் ஒருஜாதி மனுஷர். அவர்களைவென்று ஈழநாட்டைக் கைக் கொண்டவர்கள்,சேர சோழ பாண்டிமண்டலங்களெ ன்னுங் தமிழ்நாட்டிலிருந்து வந்த தமிழர். அவர்கள் தமக்கு இராசதானியாய்க் கொண்டிருந்த நகரம் மாதோட்டம். அவர்கள் குடிகொண்ட மற்முெரு நகரம் திரிகோணமலை, மாதோட்டத்திலேயுள்ள தி ருக்கேதீச்சாம் என்னும் சிவாலயமும், திரிகோண மலையிலுள்ள சிவாலயமும் பண்டுதொட்டு இவர்க ளாற் பரிபாலிக்கப்பட்டு வந்தன. இச்சிவாலயங்க ளும் சங்கும் முத்துமே தமிழரை அவ்விடத்துக் குடிகொள்ளுமாறு கவர்ந்த காரணங்களாம்.
மாதோட்டம் முன்னுெருகாலத்திலே மிகச்சிற ந்த செல்வநகரமாயிருந்தது. ாோமர் கிரேக்கர் என ப்படும்யவனர், தம்மரக்கலங்களோடு இங்கே வந்து, தந்தம் முத்து இலவங்கமுதலியன பண்டமாற்றிச் செல்வாராயினர் என்ருல் மாதோட்டத்தின் பெரு மை கூறுவதென்ன. அது சிற்பத்தில் வல்லதபதிக ளுக்கும் உறைவிடமாயிருந்தது. இங்கே காந்தக் கோட்டையும் ஒன்றிருந்ததாகக் கூறுவர். பின்ன ளில் ஏலேலனுமிங்கே ஒரு கோட்டை கட்டினன். மாதோட்டத்திற்குத் தெற்கேயுள்ள குதிரைமலையும் மணிபுரமும் தமிழ்ச்சிற்றரசரால் ஆளப்பட்டுவந்தன.
மாதோட்டத்திலிருந்த சிற்றரசர்கள், ஒருகாற் பாண்டியருக்கும் ஒருகாற் சோழருக்கும் மாறிமாறி
ஈழமண் LOsb.
நாகர் கள்.
ufతీ குடிகள்.
மாதோ
ட்டம்.
தமிழரசு

Page 7
தமிழரசு.
மாருதப் பிரவாக வல்லி.
குதிரை LD26).
உக்கிரசி ங்கன்திரு
மணம்.
4. யாழ்ப்பாணச்சரித்திரம்.
த்திறையரசர்களாயிருந்தார்கள். சிலகாலங்களிலே பாண்டியரும், சோழரும் அதனைநேரேகைக்கொண் டும் அரசுசெய்துவந்தார்கள். விஜயன் இலங்கைக்கு அரசனதற்குமுன் பன்னெடுங்காலமாக ஈழநாட்டை த்தமிழரே * ஆண்டுவந்தார்கள். கிலமாயிருந்த திரு க்கேதீச்சரத்தை விஜயன் புதுக்குவித்தவனன்றிப் புதிதாக அமைத்தவனல்லன். ஈழநாட்டுக்குத் தெற் கேயுள்ள சிங்களதேசத்தை அக்காலத்தில் முற்றும் ஆண்டுவந்தவர்கள் யக்ஷரும் காகரும், யக்ஷரும் நாகரும், ஆதியிலாசுசெய்த இராவணனுக்குப் பரி வாரமாக இருந்து சுருங்கிய யக்ஷர் நாகர்களுடைய சந்ததியார். அது கிற்க, ஈழமண்டலத்துத் தமிழ ருக்கும் பாண்டிநாட்டாருக்கும் இடையிடையே பகைமூண்ட காலங்களிலே அவர்களுக்குப் போர்க் களமாயிருந்தவிடம் மணற்றியாம். (யாழ்ப்பாணம்) மணற்றியில் அந்தப்பகுதி இன்னும் களபூமி என் னும் பெயரால் வழங்குகின்றது. ஆதலால் மணற்றி நெடுங்காலம் குடியில்லாத நாடாகவிருந்தது. அக் காலத்திலே சோழராசன் புத்திரியாகிய மாருதப்பி ரவாக வல்லி, தனக்குற்ற குதிரை முகமென்னும் நோயினுலே வருந்துங்காலத்தில், கீரிமலையிலேயுள் ள சிற்முற்றில் ஸ்நானஞ்செய்யின் அந்நோய் நீங்கு மென்று ஒரு முனிவர் சொல்ல, அவ்வாறே தன்பரி வாரங்களோடு சென்று அத்தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து அங்நோய் நீங்கப்பெற்ருள். அவ்விடம் அது காரணமாகக் குதிரைமலை 0 என வழங்கிற்று. அம் மலை பின்னுள் வீழ்ந்ததுபோலும். அவளும் அவள் பரிவாரங்களும் அவ்விடத்திலே சிறிதுகாலம் வசித் தார்கள். அப்பொழுது கதிர்காமம் என வழங்குங் கார்த்திகேய கிராமத்தில் அரசுசெய்திருந்த உக்கிா சிங்கராஜனும் அச்சிற்றற்றிலே ஸ்தானஞ்செய்தற்
x Journal of the Royal Asiatic Society, Ceylon Branch 1848, p. 73.
o Captain H. Suckling's Ceylon. Vol. 1, p. 180,

யாழ்ப்பாணச்சரித்திரம். 5
கு அவ்விடம் வந்தான். அவன் அவளைக்கண்டு அவ ள்மீது தணியாப் பெருங்காதலுடையனகி அவளைப் பெரும் பிரயாசத்தோடிசைவித்து மணமுடித்துக் கொண்டு சிறிது காலம் அவ்விடந்தங்கிப் பின் அவ ளோடு தன் இராசதானிக்குச் சென்முன்.
அவள் அமைப்பித்த சுப்பிரமணியாலயபூசைக் கும் அருச்சகர்களுக்கும் கந்தரோடையென வழங் கும் இடத்தைச்சமர்ப்பித்துத் திருத்தி நெல்விளைநில மாக்கி அவர்களுக்குப் பிரமதாயமாகக்கொடுத்தாள். அவளோடுவந்த தளபதியாகிய மகாவிட்டன்என்பவ னை,அக்கோயிலைநடாத்தும் சர்வாதிகாரியாக்கி மாவி ட்டபுரமென இப்போது வழங்கும் இடத்திலிருத்தி ள்ை. சோழியர் வசித்தவிடம் சோழியபுரமெனப் பட்டது. அது சுழிபுரமெனப் பின்னர் மருவி வழ ங்குவதாயிற்று. மாளிகை கட்டப்பட்டவிடம், பின் னர்நாழில் பழையநகரமெனப் பொருள்படும் தொல் புரமெனப்பட்டது. மகா விட்டன் வசித்த விடம் மா விட்டபுரம் எனப்பட்டது. கந்தசுவாமியின்பொரு ட்டு விடப்பட்ட இடம் கந்தரோடையெனப்பட்ட து. ஒடை-குள வெளி. மாளிகையிருந்தவிடம் இன் றும் மாளிகைத் திடரெனப்படுகின்றது.
கீரிமலையிலிருந்த உன்னதமலையும் அதனருகே யிருந்த சிவாலயமும் கடல்வாய்ப்பட்டதன்பின்னர் இதுவே தமிழர் குடியேறிய முதன்முறையாம். இ ங் வனங் குடியேறிய தமிழரும் நெடுங்காலம் நிலை கொள்ளவில்லை. மாருதப்பிரவாக வல்லிக்குப்பின் இ வ்விடம் நெடுங்காலம் குடியில்லாத நாடாயிருந்த தாதல் வேண்டும். கடல்கொள்ளுமுன்னே நளமகா ராசாவந்து கீரிமலையிலே தங்கிப்போனுன் எனத் தகழிணகைலாச மான்மியங் கூறுகின்றது. எனவே அச்சம்பவம் நிகழ்ந்து பல யுகங் கழிந்தனவாதல் வேண்டும். அதுகிற்க,
கந்த (Sir TeodL.
மாவிட்ட
ւկITւ0.
தமிழர் ழ தறகுடி யேற்றம்

Page 8
விஜயன்,
விசயை.
sửguđr முடிபுனை
56v).
சிங்கள UTGoes.
6 யாழ்ப்பாணச்சரித்திரம்.
இற்றைக்கு 2454 வருஷத்துக்கு முன்னே (543 B. c.) மகததேசாதிபதி, தனது மகன் விஜயன் என்பவனை, அவன் துர்க்குணங் காரணமாகத் தன து நாட்டை விட்டோட்டினன். அவனும் அவன் தோழர் எழுநூறு காளையரும் மரக்கலமேறி இலங் கைக்கரையை அடைந்தனர். அங்ஙனம் அடைந்த துறை இலங்கைக் கீழ்கரையிலுள்ள துறையென் றும் மேல்கரையிலுள்ள துறையென்றும் துணிய வியலவில்லை. இப்போது புத்தள்மெனப்படும் இட த்துக்கு அணித்தான தம்பபண்ணே என்னுங் துறை யில் வந்திறங்கினர்களென்பது மகாவமிசமென்னும் சிங்களசரித்திரம். விஜயன் வந்திறங்கிச் சிலதினத் திலே, அங்காள் இலங்கையில் அந்தப்பாகத்தை அர சுசெய்திருந்த யக்ஷத்தலைவன் புத்திரியாகிய குவே னியைக் கூடி, அவள்மூலமாக அப்பகுதியரசையுங் கவர்ந்தான். பின்னர் மாதோட்டப்பகுதியிலே சிற் றரசுசெய்திருந்த தமிழ்த் தலைவனேடு நட்புக்கொ ண்டு அவன்மூலமாகப் பாண்டியனிடம் தூதுபோ க்கித் தனக்கு ஒரு புத்திரியைத் தருவதோடு தன் துணைவர்க்கும் எழுநூறு கன்னியரையும் அனுப்பு ம்ாறு வேண்டினன். அவ்வேண்டுகோளுக் கிணங்கிப் பாண்டியன் சன் புத்திரி விசயையையும் பிரதானி கள் புத்திரிகளாகிய எழுநூறு கன்னியரையும் பரி வாரங்களோடுமனுப்பி மாதோட்ட நகரிலேதானே
மணமுற்றுவித்தான்.
அதன்பின்னர் விஜயன் இலங்கைக்குச் சக்கர வர்த்தியாகி முடிபுனைந்து ஒருநகரமும் அமைப்பி த்து முப்பது வருஷஞ் செங்கோலோச்சினன். பாண் டிராசாவின் சம்பந்தத்தினுல் மாதோட்டத்தையும் திரிகோணமலையையுங் தலைநகரங்களாகவுடைய ஈழ நாட்டுத் தமிழ்மக்களும் விஜயன் குடைக்கீழடங்கி னர். விஜயனும் அவன் குடிகளும் கைக்கொண் ட்ொழுகிய சமயம் சைவசமயமே, சிங்களபாஷை,

யாழ்ப்பாணச்சரித்திரம். 7
தமிழ்ச்சொல் சிறிதும் சம்ஸ்கிருத பிராகிருதச்சொ ற்கள் பெரிதுமாகக் கலந்துண்டாகிய ஒரு மிசிரபா ஷை, எலுவென்பது சம்ஸ்கிருத பிராகிருதம் மிக அருகிக்கலந்த சிங்களம். எலுவென்டது ஈழமென்ப தன் மரூஉ. இப்பாஷையே விஜயன் வருமுன்னும் இலங்கையின் தென்பாகத்துள்ள யக்ஷ நாகர்களா லும் வழங்கப்பட்டது. மகதநாட்டிலிருந்துவந்து அரசு கைக்கொண்ட விஜனும் அவன் வமிசத்தோ ரும் அப்பாஷையையே வழங்கினர். மதுரையிலிரு ந்து வந்த நாயக அரசர் வழங்கியதும் அப்பா
ஷையே.
சிங்களத்துவீபமென்னும்பெயர் இலங்கைக்கு ஆங்குள்ள பட்டையால் வந்தது. சிங்களம்-பட் டை. அது கறுவாப்பட்டை (லசஷ்மண வைத்திய ரென்பவர் செய்த சம்ஸ்கிருத அகராதியிற்காண்க.)
ஈழம் என்பது சிங்களம் என்பதன் சிதைவு.
விஜயனுக்குப்பின் வழிமுறையாக இலங்கை பதினெருவரால் அரசுசெய்யப்பட்டது. பன்னிரண் டாம்.அரசன் அசேலன். அவன்காலத்திலே (205B.C) ஏலேலன் என்னும் ஒர் இராசகுமாரன் தொண்டை நாட்டினின்றும் பெருஞ் சேனையோடு வந்து திரி கோணமலையிலிறங்கி, அநுரதபுரஞ்சென்று அந்தக ரத்தை வளைத்துக் கொடிய யுத்தஞ்செய்து அவனை வென்று இலங்கைக்கரசனனுன். ஏலேலன், கல்விய றிவு, நடுகிலைதவருதநீதி, பொறை, அருள், ஆண்மை முதலிய இலக்கணம் அமைந்தவன். தனது நாட்டி லுள்ள குடிகளைத் தன் அருமைமக்களென உரிம்ை யோடும் பாதுகாப்பவன். எவ்வுயிரையுந் தன்னுயிர் போலக் காப்பவன். எச்சமயத்தவரையும் அவ்வச் சமயநெறியில் கிறுத்துபவன். தனது சமயமாகிய சைவசமயத்தையும் அவன் முறைப்படி பரிபாலிப் பவன். அவன் இலங்கையிலே முக்கியமானவிடங் களிலே முப்பத்திரண்டு கோட்டைகளும் அநேக
சிங்களத் துவீபம்.
அசேலன்.
ஏலேலன்.

Page 9
LU au TGofắs குளம்.
பசுக்கன் றைக்கொ ன்ற தன துமகனே க்கொ cg)6ा-
8 யாழ்ப்பாணச்சரித்திரம்.
பெளத்த சைவாலயங்களும அமைப்பித்தான். அ வன் பெளத்த குருமாரும் சைவாசாரியரும் “எம்ம
’ என்று கொண்டாடச் செங்கோ
ரசன் எம்மரசன்' ல்செலுத்தியவன். அநேக குளங்களைக் கட்டி நெல் விளைவை விருத்திசெய்தவன். பவானிக்குளம் என் னும் பெரியகுளத்தைக் கட்டுவித்தவனும் அவனே. பவானிக்குளமென்பது வவனியாக்குளமென வழங் குகின்றது. அவன் நாடெங்கும் வித்தியாசாலைகளும் வைத்தியசாலைகளும் அமைத்து முறையே கல்வியை யும் உயிர்களையும் பரிபாலித்தவன். பாணருக்கும் வித்துவான்களுக்கும் பெருநிதி வழங்கும் வள்ளல்.
ஏலேலனைச் சிங்களசரித்திரகாரர் நீதியிலேமது ச்சக்கரவர்த்தி எனப்பாராட்டுவர். அவன் தனதுசய னமண்டபத்திலேயுள்ள கட்டிற்காலிலே ஓர் ஆராய் ச்சிமணிகட்டி அதனை அசைத்தடிக்கும்பொருட்டுக் கயிற்றைமாட்டிச் சுவர்த்து வாரத்தினலே வெளியி லே தூங்கவிட்டிருந்தான். முறையீடுள்ளவர்கள் எக் காலத்திலும் அதனை இழுத்து அவ்வாராய்ச்சியை அடிக்க, அவன் உடனே ஒடி வெளியே வந்து அவ ர்கள் குறையைக் கேட்டுத் தக்கவாறு நீதிபுரிபவன். ஆதலால் அவன் இராச்சியத்தில் முறைகேடென்பது மிக வரிது. ஒருநாள் அவன் மகன் இரதத்திலேறி வே ட்டையாடி மீண்டுவரும்போது அவன் கண்ணுக்குப் புலப்படாமல் ஒரிளங்கன்று அவ்விரதத்தின் சில்லில் அகப்பட்டாைபட்டிறந்தது. அச்செய்தியைக்கண்ட தாய்ப்பசு அலறிக்கொண்டோடிப்போய் ஆராய்ச்சி மணிக்கயிற்றை வாயிலே கவ்வி யிழுத்தடித்தது. அரசன் ஓடிவந்து இதன் கருத்தென்னவென்று மங் திரிமாரை நோக்கி வினவி, அவர்களால் நடந்ததை அறிந்து, உயிருக்குயிர் வாங்குதலே முறையெனத் துணிந்து, மந்திரிமாருஞ் சுற்றமுங் தடுக்கவுங் கே ளாணுய், அப்பசுவின் துயரத்தை எவ்வாறு என் கண்
ணுற் பார்ப்பேன் எனக்கூறித் தன் மகனை அப்பசுவி

யாழ்ப்பாணச்சரித்திரம். 9
ன்முன்னேதானே தன்தேர்க்காலின் கீழிட்டுக்கொ ன்முன். இன்னும் அவன் பால் விளங்கிய துல்லிய நீதிசம்பவங்கள் அனேகம். நீதிநெறியினுல் அவன் கீர்த்தி உலகெங்கும் பரவியது. அவனுடைய கொ டைப்புகழ் பரவாத தேசமில்லை. கேளாத செவியி ல்லை. பாராட்டாத நாவில்லை.
இவ்வாறு அரசியற்றுநாளிலே, தொண்டைநா ட்டிலே அந்தக கவிவீரராகவ னென்முெரு யாழ்வல் லானிருந்தான் அவன் தன் மனையாளோடு சண்டை யிட்டுக்கொண்டு ஈழமண்டலம் போகிறேனென்ன, அவள் “வளநாடும் மழகளிறும் வாங்கிவரப்போ கின்றீரோ” என்முள். “இவள் என்னை அவமதித் என அவன் மனத்துண் மதித்துத் தன் பரிச னத்தேர்டும் ஈழநோக்கி வழிக்கொண்டு மரக்கலமே றி மணற்றியிலிறங்கிப்போய் அநுரதபுரத்தையடை ந்தான். அங்கே இராசதரிசனத்துக்குச் சமயம்பார் த்துச் சபாமண்டபத்திற் புகுந்தான். அவன் வரவும் அவன் இயல்புமுணர்ந்த ஏலேலன், அந்தகர் முகத் தில் அரசர் விழித்தலாகாதென்னும் வழக்கம்பற்றித் திரைமறைவிலிருந்து அக்கவிவாணனை உபசரித்
தாள்’
தான். அஃதுணர்ந்த கவிவாணன்,
நரைகோட்டிளங்கன்றுதல்வளநாடுசயந்தளிப்பான் விரையூட்டுதார்ப்புயன்வெற்பீழமன்னனென்றேவிரும்பிக் கரையோட்டமாகமாக்கலம்போட்டுனைக்காணவந்தாற்
றிாைபோட்டிருந்தனையேலேலசிங்கசிரோமணியே.
என்னும் செய்யுளைப் பாடினன்.
ஏலேலன் அதனைக்கேட்டு அதிசயவசத்தணுகி,
“இக்கவிவாணர் பிறவிக்குருடராயிருப்பினும் அகக்
கண்ணினற் காணும் பெருவல்லமை யுடையராதலி
ன் அவர்முன்னே நாம் திரையிட்டிருத்தல் தகாது”
என மதித்துத், திரையை நீக்குவித்து அவன் வரலா
2
uri Lig.
சபாம ண்டபம்
புகுதல்.
பிரபந்த வரங்கே
ປີ່pຕໍ່.

Page 10
நாடும்யா ?னயும் பெறல்.
10 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ற்றை வினவினன். கவிவாணன் தான்பாடிவந்த பிர பந்தத்தைப் பாடித் தன் யாழ்வல்லபத்தையுங் கா ட்டினன்.
அரசன் செவியும் மனமுங் குளிர்ந்து கவிவா ணனது கல்விச் சாதுரியத்திலும் யாழ்மாதுரியத்தி லும் மயங்கி, அவனைப் பெரிதும் புகழ்ந்து கொண் டாடி வேண்டியதைக் கேட்க, என் முன். தன்மனை வி சொல்லி அசதியாடியதைக் கவிவாணன் எடுத் துக் கூறினன். அரசன், நீ விரும்வியபடி மணற்றி யையும் ஒரு யானையையும் ஒரு பல்லக்கோடு பரிச னங்களையும் கொள்கவெனக் கூறிப் பல வரிசைக
ளோடு பெருங் திரவியமுங் கொடுத்தான்.
யாழ்ப்பாடி அரசனுக்கு ஆசிபல கூறி அவற் றைப் பெற்றுக்கொண்டு மணற்றியை நோக்கி மீண் டான். அவன் சிவபூசை பண்ணியே போசனஞ் செ ய்பவன். அக்காலத்திலே அநுரதபுரியிலிருந்து மண ற்றிக்குவரும் மார்க்கத்திலே வழிப்போக்கர் தங்கு தற்கு வசதியான மடங்கள் சத்திரங்களில்லை. அது பற்றி அவன் தன் பல்லக்கை வசதியான புளியமர நிழல்தேடி நிறுத்தும்படி தன் போகிகளுக்குக் கட் டளைபண்ணியிருந்தான். அவ்வாறே பகலிலும் இர
விலும் புளியமாகிழல் தேடித் தங்கி வருவானுயி
னன். ஒருநாள் பல்லக்குச் சுமப்போர் தக்க புளிய மரநிழல் காணுது நெடுந்து மஞ் சுமந்துசென்றர்கள். கவிவாணன் “பூசைக்கு நாழிகையாயிற்றே இது எ வ்விடம்” என்று அடிக்கடி வினவினன். அவர்களும் “புளியடி புளியடி’ என்று கூறி விரைந்து நடந்து ஒரு புளியைக் கண்டு, அம்மரத்தடியில்ே பல்லக்கை இறக்கினர்கள். அந்த இடம் இன்றும் பல்லக்குப் புளியடி என்று வழங்குகினறது. ‘எவ்விடம் எவ் விடம் புளியடி புளியடி’ என்ற பழமொழியும் கவி
வாணன் காரணமாக வழங்குவதாயிற்று.

யாழ்ப்பாணச்சரித்திரம். 11
இவ்வாறு மணற்றியில் வந்துசேர்ந்த கவிவான ன் மணற்றியெங்குஞ் சுற்றிப்பார்த்து நல்லூருக்குச் சமீபத்திலே தனக்கொரு மாளிகையும் அதன் குழ லிலே தன் பரிசனங்களுக்கு வீடுகளும் அமைப்பித் துச் சில்நாள் வசித்தான். அவன் இங்காட்டில் முத லில் வெட்டுவித்த குளம் இப்போது தூர்ந்ததாயி னும் இன்றும் பாணன் குளம் என வழங்கப்படுகின் றது. சில நாளாயினபின் கவிவாணன் மீண்டு தன து தேசஞ்சென்முன். பிரிந்த துயரத்தால் மிக வரு ந்தியிருந்த மனைவி அவன் வரவுணர்ந்து எதிர்சென் று பாதங்களில் வீழ்ந்து பணிந்து தழுவிப் பேருவ கையுற்ருள். இருவரும் போசன மருந்திப் பேசிக் கொண்டிருக்கும்போது, முன்னுளிருவர்க்கும்யாக்கையொன்முகமுயங்கினமால் பின்னுட்பிரியன்யிரியை x யென்முயினம்பேசலுறும் இந்நாட்கொழுநன்மனைவியென்ருயினமின்னமுமோர் சின்னளிலெப்படியோவையயிேன்றுசெப்புகவே. என்னுமிக்கவியைக் கவிவாணன் மனைவி கூறி, இன் னுமென்னே விட்டுப்பிரிய மனம்பொருங்துவிரோவெ ன்று கண்ணீர் சொரிந்தாள்.
யாழ்ப்பாணன் அவளை ஆற்றி இனி உன்னைவி ட்டுப் பிரியேன் எனத் தேற்றி, அடுத்தநாள் தொ ண்டைமானிடஞ் சென்று தான் பரிசாகப் பெற்ற மணற்றியிற் குடியேற்றுதற்கு இராஜதந்திரம் வல் லமந்திரி பிரதானிகளும் ஒரு சிறு சேனையும் தால் வேண்டுமென்று வேண்டினன். தொண்டைமான் நீர்கூறிய அந்நாட்டைத்தவிர வேறியாது பரிசாக ப்பெற்றிரென்முன். அதற்கு யாழ்ப்பாணன், "
இம்பர்வாழேலேலனை யேபாடி
என்கொணர்ந்தாய்பாணுகீயென்முள்பாணி
* இருவரும் பிரிந்தமையால், பிரியன் -பிரிவினையுடைய வன், பிரியை - பிரிவுடையவள்.
* ஈழராமனையே பாடியென்றும் பாடம்,
o நல்லூரில் மாளிகை கட்டல்.
UT 6xarrer
o
561stin.
யாழ்ப்
fig-dial
தேசத்து க்குமீளல்.
தொண் GOL BDAT னைத்தரி

Page 11
குடிகள் வருதல்.
பட்டாபி ஷேகம்.
2 யாழ்ப்பாணச்சரித்திரம்.
வம்பதாங்களபமென்றேன்யூசுமென்முள்
மாதங்கமென்றேன்யாம்வாழ்ந்தேமென்ருள்
பம்புர்ேவேழமென்றேன்றின்னுமென்முள்
பகடென்றேனுழுமென்முள்பழனந்தன்னைக்
கம்பமாவென்றேனற்களியாமென்முள்
கைமாவென்றேன்சும்மாகலங்கினளே.
என்று கூற, தொண்டைமான் அதுகேட்டு மிகமகி ழ்ந்து மெச்சி, நீர்பெற்ற நாட்டின் வளத்தைக் கூறு கவென்முன். பாணன் அங்கிலவளங்களைக் கூறிவரு ம்போது, உப்புச் செய்கை 1ண்ணபபடாது இயற் கையாகவே படுகின்றதென்றும், அவவுப்பு அபரிமி தமாகப்பட்டு வருஷங்தோறும் அழிந்துபோகின்ற தென்றுஞ் சொன்னன். அதுகேட்ட தொண்டை மான், அவ்வுப்பை எனக்குத் தருவீராயின் உமக்கு வேண்டுங் குடிகளைத் தருவேன். அவ்வுப்பைத் திர ட்டுதற்கும் வேண்டும்போதமைத்தற்கும் வேண்டும் ஏவலாளரையும் மரக்கலங்களையும் யானே அனுப்பு வேன் என்முன். யாழ்ப்பாணன் மகிழ்ந்து அதற்கி சைதலும், தொண்டைமான் அவனுக்கு வேண்டுங் குடிகளையும் மந்திரியொருவனையும் பிரதானிமுதலி யோரையும் ஒரு சிறு படையையும் கொடுத்து அ வனே அனுப்பிவிட்டு, உப்புக்காக மரக்கலங்களையும் உப்பமைப்போரையும் அக்கருமத்துக்கோ ரதிகாரி யையும் பின்னர் அனுப்பினுன்.
யாழ்ப்பாணன் அக்குடிகளை மரக்கலங்களிலே ற்றிக்கொண்டு தன் மனைவியோடும் மந்திரி பிரதானி சேனையோடும் மீண்டுவந்து நல்லூரிலே வசித்தான். நல்லநாளிலே யாழ்ப்பாணன் பட்டாபிஷேகமும்பெ ற்றுத் தனது நாட்டுக்கு யாழ்ப்பாணமென்னும் பெ யரும் வழங்கினன். அவன் தனக்கு மந்திரியாகவந்த சேதிராயனுக்குப் புத்தூரென்று பின்னர் வழங்கப் பட்ட இடத்தைத் திருத்தி அவ்வூரை அவனுக்குக் கொடுத்தான். அது புதிதாக அமைக்கப்பட்ட ஊ ராதலின் புத்தூரெனப்பட்டது. கிலவளம் நீர்வள

யாழ்ப்பாணச்சரித்திரம். 13
ஞ்சோதித்து அநேகவிடங்களைக் காடுகெடுத்து தா டாக்கி நெல்விளைவிக்கவுங் தொடங்கினன்.
அதன்பின்னர்த் தொண்டைமானுடைய மரக் கலங்களும் வங், ன. உப்பேற்றும்பொருட்டு ஒருகா ல்வாயும், மரக்கிலங்கள் தங்குதற்கு ஒரு துறையும் அவன் அனுப்பிய சனங்களால் அமைக்கப்பட்டன. அச்சனங்கள் உப்பளத்துக்குச் சமீபத்திலே குடி கொண்டார்கள். அச்சனங்கள் உப்பெல்லாவற்றை யுந்திரட்டிக்காலங்தோறும் அம்மரக்கலங்களிலேற்றி அனுப்பிவந்தார்கள். அம்மரக்கலங்கள் மீண்டுவரும் போது, நெல், கறிச்சம்பாரம், வஸ்திரமுதலியன கொண்டுவந்து யாழ்ப்பாணத்திலுள்ள தொண்டை மான்சனங்களுக்குக் கொடுப்பதுமன்றி மற்றைச் சனங்களுக்குங் கொடுத்துப் பண்டமாற்றி மீளும். தொண்டைமான் ஏவலாளரால் அமைக்கப்பட்ட கால்வாய் தொண்டைமானுறு என இன்றும் வழங் குகின்றது. தொண்டைமானது கருமாதிகாரியாகிய வீரப்பராயனிருந்தவிடம் இன்றும் வீரப்பராயன் குறிச்சி எனப்படுகின்றது. தொண்டைமான் கரும மாக வந்த சனங்கள் பெரும்பாலும் தொண்டை நாட்டின் வடபாகத்திலிருந்து வந்தவர்கள். அவ்ர் கள்குடிகொண்டபகுதி வடமராட்சியெனப்பட்டது. அவர்கள் பாஷை தெலுங்கு. அதுபற்றியே யாழ்ப் பாணத்திலே கடவு பிச்சுவாய்க்கத்தி (பீச்சாக்கத்தி) முதலிய தெலுங்குச் சொற்கள் வழங்குவவாயின. அவர்கள் விஷ்ணுவை வழிபடுவோர். அதுபற்றி வல் லிபுரமென்னுங் குறிச்சியிலே ஒரு விஷ்ணுவாலய முண்டாவதாயிற்று. வவ்லியதேவன அதிகாரஞ்செ ய்தவிடம் வல்லிபுரமெனப்பட்டது. ராயன், தேவ ன், கிழான், மழவன் என்னும் சிறப்புப்பெயர்கள் அந்நாள் வேளாளர்க்குரியன. தெலுங்குபாஷையும் தெலுங்குநாடும் வடுகெனப்படும். அதுபற்றியே அ ங்காட்டிலிருந்திங்குவந்து குடிகொண்ட வடமரை
兴
காடுகெ டுத்துநா டாக்கல்.
தொண் 6) go)g.
வீரப்ப Ar A u Jgir .
(6) DIT
亡é。
விஷ்ணு
a Taoui

Page 12
வடுகர்.
கோவி பர்.
சிவிகை
Aurif.
சித்திவி நாயகான லயம்.
யாழ்ப்
Iræner
கொடி.
14 யாழ்ப்பாணச்சரித்திரம்.
வடுகரென்று கூறுவர். அவ்வடமருள்ளே போகியர் ஒருதொகையினர். இடையராகியி கோபிகர் பெரு ம்பாலார். கோபிகர் பிற்காலத்திலே கோவியரெனப் பட்டார்கள். கோபிகரைப்போலவே உப்பமைக்கும் பொருட்டு வந்த அளமரும் பெரும்பாலார். போகிய ருட்சிலர் யாழ்ப்பாணனுக்கும் சிலர் வீரப்பராயனு க்கும் சிலர் சேதிராயனுக்கும் சிவிகையாட்களாகிச் (சிவிகையார்) சிவியாரெனப்பட்டார்கள். நல்லூர் இராஜதானியிற் குடிகொண்ட சிவிகையார் பின்வங் ததமிழரசரோடு வந்து தமக்குரிய குடிமைகளுடன் கிராமங்கொண்டவர்கள்.
யாழ்ப்பாணனும் சேதிராயனும் கல்வியிலே சிற ந்தவர்களாதலின் தமது குடிகளுக்கு நெல்விளைவு குறையாவண்ணம் நிலங்களைத் திருத்தியும், குளங் கள் கால்வாய்களை வெட்டியும் நாட்டைத் திருத்தி யதோடு, நாட்டிலே கல்லொழுக்கமும், ஒற்றுமை யும், ஈசுரபத்தியும் அபிவிருத்தியாகுமாறு ஒரு பா டசாலையும், புரோகிதராகத் தம்மோடு வந்த கச்சிக் கணேசையர் கொணர்ந்த சித்திவிநாயகரையும் ஒாா லயம் வகுத்துத் தாபித்தனர். இதுவே யாழ்ப்பாடி காலத்தில் உண்டாகிய விக்கிகேசுராலயம். இது நல் லூரில் எவ்விடத்திலிருந்ததென்று தெரியவில்லை. சிவியாதெருவில் இப்போதுள்ள சித்திவிநாயகரால யத்திலுள்ள விக்கிகேசுரமூர்த்தி அதுவேபோலும். நெல்லுப்பயிரோடு செங்தமிழ்க்கல்விப் பயிரையும் யாழ்ப்பாணத்தில் முதன்முதல் வளர்த்தவன் யாழ் ப்பாடியே. அவன் தொடங்கிய முகூர்த்தவிசேஷ மாக யாழ்ப்பாணத்திலே அவ்விருபயிரும் அபிவிரு த்தியாகிக்கொண்டே வருகின்றன. யாழ்ப்பாடியு டைய கொடி யாழைக் கையிலேந்திய சயமகட்கொ டி. அது மிதுனக்கொடியெனவும் படும். அதுவே சங்கிலியரசனிறுதியாகவுள்ள யாழ்ப்பாணத்து அர சரெல்லாங்கொண்ட கொடியாம். யாழ்ப்பாடி சா யிலே தொண்டைமண்டலத் துயர்குடிச் சைவ வே

யாழ்ப்பாணச்சரித்திரம். 15
ளாண்முதலி. யாழ்ப்பாடியினது திருவுருவச்சிலை * யைப் பின்வந்த அரசர் தமது கோட்டைவாயிலிலே நாட்டிப் போற்றிவந்தனர். அது கிற்க.
யாழ்ப்பாடி S எழுபது வருஷம் அரசுசெய்து தன் சுற்றமும் குடிகளும் வயிறலைத்திரங்கப் பரகதி யடைந்தான். அவனுக்குப்பின் சேதிராயனும் ஆண் சந்ததியின்றி இறந்தான். தொண்டைநாட்டரசன கிய தொண்டைமானுடைய சனங்களாய் யாழ்ப் பாணத்திலிருந்தோர் தொண்டைநாட்டிலிருந்து ஒ ருவர்பின்னெருவராய் வரும் உப்பதிகாரிகளால் ஆ ளப்பட்டு வந்தார்கள். யாழ்ப்பாடி குடிகள் அரசின் றி நெடுங்காலம் வாழ்ந்தனராயினும் அவருட் பயிரி டுங் குடிகளே சந்ததிசெய்து, தொகையிற் பெருகி னர். இராசசேவை செய்தும் அரண்மனைக்கு வே ண்டும் காருக கம்மியத் தொழில்கள் புரிந்தும் வாழ் ந்தோர் அரசனின்மையால் தொண்டைமண்டல மு தலிய தேசஞ் சென்றனர். ஆயினும் நெடுங்காலம் யாழ்ப்பாணம் நாட்டுத்தலைவரால் ஆளப்பட்டு வங் திதி.
சேதிராயன் சந்ததியில் வந்த ஒரு கன்னிகை யைப் பொன் பற்றியூரிலிருந்து வந்த மழவராயன் என்பவன் மணம்புரிந்திருந்தான். அவன் யாழ்ப்பா ணம் அரசின்றிக் கெடுவதைக் கண்டு ஒரிராசகுமா ானை நாடிக் கொண்டுவருமாறு சோழநாட்டுக்குச் சென்றன். அங்கே சோழன் புத்திரனுெருவன் மது ரையிலே கல்வி பயின்று வருகின்முனென்பது கே ட்டுச் சோழராசாவினது அனுமதியோடு மதுரைக்
* யாழ்ப்பாடி திருவுருவச் சிலையொன்று யாழ்ப்பாணத் தில் ஒரு பிரபல ஸ்தானத்தில் அமைத்துவைத்தல் நம்மவர் கடனம்.
S யாழ்ப்பாடியாகிய அந்தக கவிவீரராகவனும் வேறு. இற்றைக்கு 250 வருடத்துக்குமுன்னிருந்த கவிவீரராகவனும் வேறு. பிங்கிய முத்தமிழ்க் கவிவீரராகவமுகலியாரும் வேறு.
யாழ்ப் பாடிஇற நீதது.
உப்பதி காரி.
அரசின்
றிநாட்டு த்தலைவ ராளல்.
Dipast шсãт.

Page 13
இராசகு Lost prair புறப்ப டல்.
நல்லூ 66.
o
தொண் டைநாட் டுப்பிரபு க்கள் வரவு
16 யாழ்ப்பாணச்சரித்திரம்.
குப் போய்ப் பாண்டியனுக்கு விண்ணப்பஞ் செய் தான். பாண்டியன் அக்கோமகன அழைத்து, மழ வராயன் விண்ணப்பத்தைக் கூறி, அவன் மனக்கரு த்தை உசாவினன். கோமகன் அதற்கிசைய, பாண்டியன் அவனையும் அவன் தேவியையும் வே ண்டும் பரிவாரங்களும் சிறுசேனையும், திரவியமுங் கொடுத்தனுப்பினன். அவன் புறப்பட்டுத் திருவா ரூருக்குச் சென்று தந்தையிடஞ் சிலநாள் வைகின ன். அதற்கிடையில் மழவராயன் தொண்டைநாட் டுக்குப் போய், குடும்பத்தோடு சில் பிரபுக்களையும் அவர்களோடு பயிரிடுங் குடிகளையும், காருககம்மியர் களையும், ஏனையசாதிக் குடிகளையும், கொண்டுவரு வேனென அவ்விராசகுமாரன்பால் விடைபெற்றுச் சென்று, அநேக குடிகளை மரக்கலங்களிலேற்றியனு ப்பிவிட்டு மீண்டு திருவாரூரை அடைந்தான்.
உடனே இராசகுமாரனும் தந்தைபால் விடை பெற்று அவன் கொடுத்த வரிசையோடு கோடிக்கரை வழியாக யாழ்ப்பாணத்தை அடைந்து, இங்குள்ள குடிகளும் நாட்டுத் தலைவர்களும் எதிர்கொண்டுபச ரிக்கச்சென்று நல்லூரை அடைந்தான். தொண்டை நாட்டினின்றும் புறப்பட்ட பிரபுக்கள், தங்கள் பத் தினிமார் கடல்யாத்திரைக்குடன்படாரெனக்கண்டு, தொண்டைநாட்டிலுள்ள பெண்ணையாற்றில் மரக்க லமேறி அக்கரை சென்று மீள்வோமென அவரை வஞ்சித்துக் கொண்டுபோய்ப், பெண்ணையாற்றுத்து ற்ையிலே மரக்கலத்திலேற்றித் தாமுமேறி இரவெ ல்லாமோடி விடிய வந்து, யாழ்ப்பாணத்திலே இப் போது பண்ணைத்துறை யெனப்படும் துறையிலே இறங்கினர். அவர் பத்தினிமார் தாமேறிய பெண் ணையாறும் யாழ்ப்பாணக்கடலும் ஒன்றுபோலிருப் பது கண்டு இஃதெவ்விடமென்றபோது, பெண்ணை த் துறையென்றமையால் அதுமுதல் அத்துறை பெ ண்ணைத்துறை (பண்ணைத்துறை) எனப்படுவதாயி ற்று. அதுகிற்க.

யாழ்ப்பாணச்சரித்திரம். 17
நல்லூரையடைந்த இராசகுமாரன் ஒாலங்கா ரமான பெரிய மாளிகையும் அரணும் மதிலும் அக ழியும் சிங்காரவனமும் அமைப்பித்து, மந்திரி பிர தானிகளுக்கு மாளிகைகளும், அந்தணர் வணிகர் வேளாளர்களுக்கு இருச் கையும், விதிகளும் யானை ப்பந்தி குதிரைப்பந்திகளும், யானே குதிரையேற்றச் சாரிவிதிகளும் செய்வித்து நல்லூரைச் சிறந்த நகர மாக்கினன். நகரத்துக்குக் கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், மேற்கே வீரமாகாளிகோ யிலையும், தெற்கே கைலைவிநாயகராலயத்தையும்,வட க்கே சட்டநாதர் கோயிலையும் கட்டுவித்தான். தன து புரோகிதராகிய கங்காதர ஐயருக்கும் அவர் பன் னியார் அன்னபூரணியாருக்கும் ஏனைய அந்தணரு க்கும் அக்கிரகாரங்களும் அமைப்பித்தான். அதன் பின்னர் ஓர் ஏரி தோண்டுவித்து, யமுனையிலிருந்து அந்தணரைக்கொண்டு காவடிகளில் எடுப்பித்த தீர் த்தத்தை அதில்விட்டு, அதற்கு யமுனையேரியெனப் பெயரிட்டான். இது நிகழ்ந்தது கலி 3000 ல், (B, C, 101.)
இவ்வாறு அவன் நகரத்துக்கு வேண்டுவனவெ ல்லாம் அமைத்தபின்னா, மகுடாபிஷேகத்துக்கு நா ள்வைத்து, மிக்க சம்பிரமத்தோடு நகரமும் நாடும் களிகொள்ள மழவராயன் முடிஆாக்கிக் கொடுக்க, கங்காதர ஐயரால் விதிப்படி மகுடமும் சிங்கை ஆ ரிய சக்கிர வர்த்தி என்னும் பட்டமும் குட்டப்பட் டான். அக்காலத்தில் அநுரதபுரத்தில் அரசுசெய் திருந்த சோழகுலவேந்தனும் அச்சபைக்கு வந்தா ன். அந்தணர்க்கும் ஏனைய பாத்திரர்க்கும் நிலங்கள் சர்வமானியஞ் செய்யப்பட்டன. பொன் வாரி வழ ங்கப்பட்டன. அன்னதானம் வஸ்திரதானங்கள் அ ளவின்றிச் செய்யப்பட்டன. நாடெங்கும் பெரு விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். நகரமாந்தர்கள்
3
அக்கிர &bsT fò.
யழனை Gusf.
சிங்கை ஆரிய சக் கிரவர்த்
முடிசூட்டு

Page 14
மந்திரி.
top Gal ராயன்.
நாசிங்க தேவன்.
சம்பக மாப்பா
s சந்திர Gafas ruor ப்பாணன்.
函Q阿曲J町 udr.
18 யாழ்ப்பாணச்சரித்திரம்:
பட்டத்து யானையை அலங்கரித்து, அதில் அரசனை ஏற்றி நால்வகைச் சேனையும் முன்னும் பின்னுஞ்செ ல்ல, மந்திரி பிரதானி முதலிய அங்கங்கள் புடை சூழ நகரப்பிரவேசஞ் செய்வித்தார்கள். விதிகளிலே தோரணங்களிட்டுப் பூரணகும்பம் வைத்து உபசரி த்து வாழ்த்தி வணங்கித் துதித்தார்கள்.
இதுமுடிந்த பின்னர் அரசன் மதுரையிலிருந் து வந்த உயர்குடிப் பிராமணுேத்தமரும் மகாபண் டிதருமாகிய புவனேகவாகு என்பவரை மந்திரியாக் கி அவரை நல்லூரிலேயே வசிக்குமாறு செய்தான். வேங்கடகிரியைத் தனக்குச் சன்மஸ்தானமாகவு ō) பொன்பற்றியூர்ப் பாண்டிமழவனை (மழவரா யனை) யும் அவன் தம்பியையும் அவன் மைத்துனன் செம்பகமழவனையும் திருநெல்வேலியிலிருத்தினன். அவன் மேழிக்கொடியுடையவன். பெருங் கொடை வள்ளல் வறியார்க்குஞ்செல்வர்க்கும் பேதம்பாாாது
விருந்தருத்துபவன்.
காவிரிப்பூம்பட்டினத்தைத் தனக்குப் பிறந்த வூராகவுடையவனும், துளுவவேளாண்டலைவனும், குவளைமாலையுடையவனும், பெரும் பண்டிதனும், வித்தியாவினேதனும், உலகெங்கும் பரந்த புகழ்ப டைத்தவனும், கற்றவர்க்குப் பெருகிதி வழங்கும் தியாகியுமாகிய நரசிங்கதேவனை மயிலிட்டியென வழ ங்கும் மயிலம்பட்டியிலிருத்தினன். வாலிநகர் வே ளாண்டலைவனும் மேழிக்கொடியுடையவனும் மன்ம தசொரூபனும், முத்தமிழ்ப் புலமையிற் சிறந்தவனு மாகிய சம்பகமாப்பாணனையும், அவனுறவினணுகிய சந்திரசேகரமாப்பாணனையும், சீரகமாலையுடையவ னும் வேளாண்செட்டியுமாகிய கனகராயனையும் கு ன்ருத நீர்வளமும் கிலவளமுஞ் சிறந்த தெல்லிப்பள் ளியென வழங்கும் தல்லிப்பள்ளியிலேயிருத்தினன் (மாருதப்பிரவாகவல்லி தனது நோய் நீங்கி இளமை

யாழ்ப்பாணச்சரித்திரம் 19
யும் அழகுமுடையவளாய் விளங்கியகாலத்தில் சங்கி யவிடம் இதுவாதலின் தல்லிப்பள்ளியெனப்பட்ட து) தல்லி-இளமையுடையவள். பள்ளி-சிற்றார்.
அதன்பின்னர்க் கோவலூர் வேளாளனும், மே ழிக்கொடியும், குவளைமாலையும், பெரும் பராக்கிரம மும் கல்வியுங் கட்டழகுமுடையவனுமாகிய பேரா யிாவனைக், கரும்புங் கமுகும் வாழையும் கெல்லுஞ் செழித்தோங்கும் வளமுடைய இணுவில் என வழ ங்கும் இணையிலியில் இருத்தினன். அதன்பின்னர்க் கச்சூர் வேளாளனும், கற்பகதருவினையொத்த கொ டைக்கையும, குவளைமாலையும், பெருஞ்செல்வமும், கட்டழகும், பெரும் பராக்கிரமமுடையவனும் சிவ பக்தியிலே இணையில்லாதவனுமாகிய நீலகண்டனெ ன்பவனையும் அவன் தம்பியர் நால்வரையும் பச்சிலை
ப்பள்ளியிலிருத்தினன்.
அதன்பின்னர்ச் சிகிரிவேளாளனும் குவளைமார் பனும், கல்வி, செல்வம், மெய்யுரை, உபசாரம், ஊக் கம், தோற்றம், அழகு என்பவற்றினற் சிறந்தவனு மாகிய கனகமழவனையும் அவன் தம்பியர் நால்வரை யும் புலோலியென வழங்கும் ஊரிலிருக்குமாறு பணித்தான்.
அதன்பின்னர்க் கூபகத்து வேளாளனும், குபே ரனேப்போலப் பெருஞ் செல்வனும், கற்றவர்க்கு மா ரிபோல் வழங்கும் பெருவள்ளலும், குவளைமாலையும் மேழிக்கொடியு முடையவனுமாகிய கூபகேந்திரனை அவன் உறவினனும் பெருந் தருமவானுமாகிய நாா ங்கதேவனேடு சிறந்த நகரமாகிய தொல்புரத்திலிரு க்குமாறு அநுமதி செய்தான்.
அதன்பின்னர்ப் புல்லூர் வேளாளனும், வில்வி
த்தையில் அர்ச்சுனனும், போரில் வீமனும், கொ டையிற் கன்னனும், பொறையிலுங் கீர்த்தியிலும்
பேராயிர
வன்.
நீலகண்
6.
கனகமழ
கூபகே
ந்திரன்.

Page 15
தேவாா Gs is or
மண்ணுடு கொண் டழதலி.
தனிநாய கழ தலி.
g 6V)GV)
வன்.
பன்னிர ண்டு அதி காரம். தளபதி இமயான மாதாக்
bG சம்பக na STå శ్రీడ. வெற்றி மாதாக் கன்.
20 யாழ்ப்பாணச்சரித்திரம்.
தருமனும் போன்றவனும் நவரத்தினமழுத்தியபொ ன்முடியுடையவனுமாகிய தேவராசேந்திரனேக் கோ யிலாக்கண்டியிலிருக்குமாறு பணித்தான்.
அதன் பின்னர்த் தொண்டைநாட்டு வேளாள னும் குவளை மாலை மார்பனும் சிறந்த தமிழ்ப்பிரபந்த மாகிய ஏரெழுபதுகொண்டு கம்பனுக்குக் கனகமா ரிபொழிந்த குல முதல்வனும்ாகிய மண்ணுடுகொண் டமுதலியை இருபாலையிலிருக்குமாறு பணித்தான். அதன்பின்னர்ச் செய்யூர்வேளாளனும், இந்திரனை ப்போன்ற செல்வனும் குவளைமாலைமார்பனும் சத்தி யத்திலே சிறிதுங் தவழுதவனும், இருமரபுந்துய்யவ னும், குன்முத பெருங் கீர்த்திப்பிரதாபனுமாகிய தனிநாயகமுதலியை நெடுந்தீவுக் கதிபதியாக்கினன்.
அதன்பின்னர் வஞ்சிநகர் வேளாளனும் மிக்க பராக்கிரமமும் கல்வியுமுடையவனுமாகிய பல்லவ னை அவன் உறவினராகிய இருபிரபுக்களோடு வெளி நாட்டுக்கதிபதிகளாக்கினன். (வெளிநாடென்பது பூ நகரி, பல்லவராயன் கட்டு, பொன்னவெளி என்னு மூன்று கிராமமுமா ம்.)
இவ்வாறு அரசன் யாழ்ப்பாண நாட்டைப் பன் னிருபகுதிகளாக்கி, நல்லூருக்கு மந்திரியையும், திரு நெல்வேலி முதலிய பதினெரு பகுதிகளுக்கும் மேற் கூறியவாறு பதினெருவரையும் அதிகாரிகளாக்கின ன். அதன்பின்னர் வடதிசைக் காவலுக்கு ஒருதள த்தையும், அதற்குப் பெரும் பராக்கிரமசாலியாகிய இமையாணனைத் தளபதியாகவும், கீழ்த்திசைக்கா வலுக்கு ஒரு தளத்தையும், அதற்கு இமயத்திலும் கீர்த்தி நிறுத்திய பெரும் போர்வீரனுகிய சம்பகமா தாக்கனைத் தளபதியாகவும், தென்றிசைக் காவலு க்கு ஒரு தளத்தையும், அதற்கு அதிசூானகிய வெற் றிமாதாக்கனைத் தளபதியாகவும், மேற்றிசைக்காவ லுக்கு ஒருதளத்தையும், அதற்கு வல்லியமாதாக்க

யாழ்ப்பாணச்சரித்திரம் 2.
னென்னும் மகாவீரனத் தளபதியாகவும் நியமித் தான். அநேக போர்செய்து வெற்றிபடைத்த மகா விரதங்திரியாகிய வீரசிங்கனைச் சேனபதியாக்கிக் கஜ ரத துரக பதாதிகளை அநேகபகுதிகளாக்கித் தகுதியானவிடங்களிலே வைத்தான். இவைகளை ஊரகக்காவலாக நிறுத்தி ஊர்ப்புறக்காவலாத நாரா யணன் என்பவனைத் தானத்தலைவனுக்கி அவனுக் குக்கீழ் ஒருதானையையும், வேலன் என்பவனைத் தானத்தலைவனுக்கி அவனுக்குக்கீழ் ஒரு தானையை யும், இப்போது நாரந்தனை வேலணை எனவழங்குமி டங்களில் வைத்தான். நாராயணன் தானே இருந்த விடம் நாரந்தனையெனவும், வேலன்தானை இருந்த விடம் வேலணையெனவும் மருவிவழங்குகின்றன. அ துபற்றியே அங்குள்ளதுறை ஊர்காவற்றுறையெ னப்பட்டதுமாம். ஊருத்துறையெனக் கொண்டு ப ன்றித்துறையெனப் பொருள் கொள்வாருமுண்டு.
இவ்வாறு சிங்கைஆரியசக்கரவர்த்தி தனது நா டும் அரசும் காப்புக்குறைவு சிறிதுமில்லாதிருக்குமா று வேண்டியவைகளெல்லாம் வகுத்தான். அதன் மேல் தானியத்தால் தனது நாடு முட்டுருவண்ணம் புதிதாக அநேகவிளையுட்களையும் குளம் பாய்கால்வ டிகால்களையும் அமைத்தான். தமிழை வளர்க்கவும் அதுவாயிலாகத் தனது நாட்டிலே அறிவை வளர்க் கவும் ஒரு தமிழ்ச்சங்கமும் அமைத்தான். அச்சங் கத்தாருக்கு மானியமாகச் சங்கவேலி (சங்குவேலி யென வழங்குகின்றது.) என்னுங் கிராமமும் சங்க த்தார் வயலும் அவனல் விடப்பட்டன. மநுநீதியே தனது நாட்டில் கைக்கொள்ளத்தக்கதென்றும் ஆ ணைசெய்தான். V
இவ்வாறு தனது நாடும் அரசும் செவ்வே நடை பெற்று வருவது கண்டு அரசன் மகிழ்ந்து வாழுநா ளிலே ஒருநாளிரவு, பிரமவிட்டுணுக்களுக்குமெட்
வல்லிய மாதாக்
சேனுபதி வீரசிங்க
நாரந் தன.
வேலணை.
pafas வற்றுறை
நாடுதி த்தல்.
தமிழ்ச் சங்கம். சங்குவே .9ܘ சங்கத்
Sifau tu

Page 16
áPaura
கங்காதர ’க்குருக்கள்.
22 யாழ்ப்பாணச்சரித்திரம்.
டாத சச்சிதானந்த சொரூபியாகிய சிவபெருமான் சத்திசமேதராய் மானுடத் திருமேனிகொண்டு கன விற்முேன்றித் தமது பெயர் “கைலாசநாதன்” என் றருளிச்செய்து மறைந்தருளினர். அரசன் தன்னைச் சிவபெருமான் ஆட்கொண்டருளினரெனத் துணி ந்து மற்றநாளுதயத்தில் மந்திரியோடு கலந்து நல்ல நாளில் சிவாலயமொன்றமைக்கத் தொடங்கினன். ஆகமப்படி விசித்திசாலங்காரமான சிவாலயமும், தேவிகோயிலும், பரிவாரதேவர் கோட்டங்களும், சிறந்த யாகமண்டபமும், களஞ்சியம் மடைப்பள்ளி திருக்குளம் முதலியனவும், சித்திரகோபுரங்களோ டு மதில்களும், நந்தவனம், அக்கிரகாரம், வேதாத் தியயனமண்டபம் அன்னதான சத்திரமுதலியன வும், தேரும் தேரோடும் வீதிகளும் அமைப்பித்தா ன். நான்மருங்கும் தாமரைத்தடாகங்களும் அவைக ளைச்சுற்றிச் சிறந்த படித்துறைகளும் அவைகளுக் கருகே தோரணமண்டப மேடைகளும் இடையி ட்ையே சிறந்த மரக்காக்களும் அமைப்பித்துத் தே வநகரமெனும்படி செய்தான். கேதாரத்துக்குத் திரு முகமனுப்பி மன்மதன் பூசித்த சிவலிங்கமுமெடுப்பி த்து இராமநாதபுரத்துச் சேதுபதிக்கு ஒலைபோக்கி அவனல் அனுப்பப்பட்ட காசிப்பிராமணுேத்தமரா கிய கங்காதரக்குருக்களால் ஸ்தாபனம்பண்ணி எ னையமூர்த்திகளையும் பிரதிட்டைசெய்து பெருஞ்சிற ப்புடன் கும்பாபிஷேகஞ் செய்வித்தான். அரசன் இவ்வாறு பெரும் பக்தியோடு செய்துமுடித்த கோ யிலிலே சிவபெருமானும் கைலாசநாதரென்னுந் திரு நாமத்தோடு நல்லூரை மூன்முங் கைலாசமாகக்கொ ண்டு திருக்கோயில்கொண்டருளி அவனுக்கும் அவ ன்தேயத்துக்கும் திருவருள் பாலிப்பாராயினர். (இ க்கோயில் விவரணமும் கும்பாபிஷேக வைபவமும் கைலாசமாலையிற் பரக்கக் காணலாம்.)
மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே தமிழ்நாட்டுள் ள இராசகுமாரரும் படைவீரர் புத்திரரும் படைத்

யாழ்ப்பாணச்சரித்திரம். 28
தொழில்பயில விரும்பும் ஏனையரும் அர்த்தசாஸ்தி ரம் யுத்தசாஸ்திரம் தருமசாஸ்திர முதலியன பயி ல்வதற்கொரு கழகமுமிருந்தது. அங்கே கல்வி பயி ன்ற இரர்சகுமாரர் சிலர், சிங்கையாரியன் யாழ்ப்பா ணத்துக்குப் புறப்பட்டது கண்டு தாமும் இலங்கை யைக் கைக்கொண்டாளக் கருதிப் பெரும்படை சே ர்த்துக்கொண்டு வந்து, மாதோட்டத்திலிறங்கி அ ணிவகுத்துச் சென்று அநுரதபுரத்தை வளைந்து கொடிய யுத்தம்பண்ணி அரசனை முதுகிடச்செய்து அரசுகைக்கொண்டு அதனைத் தம்முட் பங்கிட்டு அ ரசியற்றிவருவாராயினர். ஆகவே சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தில் அரசுசெய்யத் தொடங்கிய கால த்தில் இலங்கையும் தமிழரசர் கைப்பட்டது. அவ ருள் ஒருவனே சிங்கையாரியன் பட்டாபிஷேகங் கா ண வந்திருந்தவன்.
(B. c.60) சிங்கையாரியன் இவ்வாறு நெடுங் காலம் அரசுசெய்திறக்க அவன் மகன் குலசேகரசிங் கை ஆரியன் அரசு கைக்கொண்டான். அவன் தனது நாட்டில் குளங்கள் வாய்க்கால்களைத் திருத்தி, அ நேக காடுகளையும் விளையுட்களாக்கி, அரசுக்கும் கு டிகளுக்கும் வருவாய் அதிகரிக்குமாறு செய்து குடி களையுஞ் செவ்வே பாதுகாத்து வந்தான். அவனுக் குப்பின் அவன்மகன் குலோத்துங்க சிங்கைஆரியன் அரசனனன். "அவனும் அவன் தங்தையைப்போல வே நிலங்களைத் திருத்தியும் குடிகளை நல்வழியிற் செலுத்தியும் அரசுசெய்து அதிவிருத்தாப்பியதசை யிலிறந்தான்.
அவனுக்குப்பின் விக்கிரமசிங்கை ஆரியன் சக்க ாவர்த்தியானன். அவன்காலத்திலே வியாபாரத்தின் பொருட்டு யாழ்ப்பாணத்திற் குடிகொண்டிருந்த சிங்களருக்கும் தமிழருக்கும் சமயபேதம்பற்றி ஒரு
கலகமூளச், சிங்களர் தமிழர் இருவரைக் கொன்று
Og T F5
in Tit கழிகம்.
குலசேக ரசிங்கை ustiftus க்கிரவர்
த்தி.
குலோத் துங்க சிங்கை urução
விக்கிரம சிங்கை யாரியன். சிங்களர் கலகம்.

Page 17
வரோதய சிங்கை
யாரியன்.
மார்த்தா ண்டசிங் கையாரி யசக்கிர
வர்த்தி.
வன்னியர் குளக்கோ
t-cär.
கோணேச ர்கோயில்.
24 யாழ்ப்பாணச்சரித்திரம்.
பலருக்குச் சரீாவூறுஞ் செய்தார்கள். அக்கலகத்து க்குக் காரணனுயிருந்த புஞ்சிவண்டா வென்பவனை யும் அவன் குழாத்தினர் அறுபத்தேழு பேரையுங் கொலைசெய்வித்து மற்றவர்களைச் சிறையிலிட்டொ றுத்தான். அதனல் சிங்களர் அரசன்மீது வெறுப் புடையராயிருந்தும் ஒருவாறடங்கியொழுகினர்.
அவனுக்குப்பின் அவன்மகன வரோதய சிங் கையாரியன் சக்கரவர்த்தியானன். அவன்காலத்தி லே சிங்களர் வியாபாரத்தின்பொருட்டுத் தொகை யானேர் வந்து குடிகொள்வாராயினர். அதுகண்டு அரசன தனது பிரசைகளுள்ளே சமயதூஷணஞ் செய்து கலகம் விளைப்போர் யாவரேயாயினும் கொ டியதண்டம் பெறுவர் என ஒரு விதிவகுத்துப் பிர சித்தஞ்செய்து யாவரையும் தத்தநெறிகடவாமல் ஒழுகுமாறு செய்து நெடுங்காலமரசியற்றினன்.
அவனுக்குப்பின் அவன்மகன் மார்த்தாண்ட சிங்கையாரியன் அரசனனன். அவன் அரசும் செவ் வே நடந்துவரும்போது வன்னியர் பொருமையாற் கலகங்கள் செய்யத் தலைப்பட்டனா. அதுகண்டு அ ரசன் அவர்களையொறுத்தடக்கி நெடுங்காலம் நல்ல ரசு புரிந்தான்.
வன்னியர் வரலாறு சிறிது கூறுதும். மனுநீதிக ண்ட சோழன்மகன் மகன் குளக்கோட்டன் என்ப வன் திரிகோணமலையிலுள்ள சுவாமியைத் தரிசனஞ்
செய்ய ‘அங்கேசென்றன். அப்பொழுது மலைமேலிரு
ந்த அவ்வாலயம் பழுதுற்றிருந்தமையால் அதைப் புதுக்கிக் கோபுரங்களைத்திருத்தி அநேகமண்டபங்க ளையும்கட்டி அற்புதாலங்காரமான ஆலயமாக்கினன். அவ்வாலயம் கித்திய 5ைமித்திகங்களுக்கு முட்டுற் றிருந்தமையால் அதற்குவேண்டிய விளைநிலங்களை அமைத்து அங்கிலங்கள் நீர்வளம்பொருந்தி எக்கால UPL விளைவுகொடுக்குமாறு மகத்தான ஓர் ஏரியைى

யாழ்ப்பாணச்சரித்திரம். 25
யும் கட்டினன். அவ்வேரியாற்பாயுகிலம் 17000 அ மணவிதைப்பாடு. இத்துணைப்பெரிய கிராமத்தை விளைவிக்க மருங்கூர் முதலியவிடங்களிலிருந்து ஐம் பத்தொரு வன்னியஜாதி குடும்பத்தவர்களையும் அ வர்க்குத் தலைவனுகத் தனியுண்ணுப் பூபாலவன்னிய னையுமழைத்து அங்குக் குடியேற்றினன். இது கிக ழ்ந்தது கலியுகம் 512 இடபமாசம் 10 ந் தேதி திங் கட்கிழமை. மற்றெவர்க்கும் எண்ணுதற்கும் செய்த ற்குமரிய இப்பெரிய குளத்தையும் கோயிலையுஞ் செய்தமையால்" இவ்வ0 சன் குளக்கோட்டன் எனப் பட்டான். கோட்டம்-கோயில்.
இதன்பின்னர்ப் பாண்டியன் தன் மகளை விஜய னுக்குப் பாரியாக அனுப்பியபோது அவளுக்குப் பரிவாரமாக வந்தவர்களுள்ளும் வன்னியர்கள் பலர். பின்னும் வன்னியர் அறுபதின்மர் வந்தார்கள். அவ ர்களுள்ளே சிங்களரோடு கலந்து திசாபதிகளானுர் சிலர். ஏனையர் யாழ்ப்பாண அரசுக்குட்படாத இட ங்களிலே குடிகொண்டார்கள்.
யாழ்ப்பாணவரசுக் குட்படாத இடங்களாதலி ன் அவை அடங்காப்பற்றெனப்பட்டன. இவ்வன்னி யர்கள் மதுரை, திரிசிரபுரம், தஞ்சை முதலியவிட ங்களிலிருந்து நானுசாதியிலும் வறியர்களாயிருந்த குடிகளை வரவழைத்துக் குடியேற்றினர்கள். அக்கு டிகளுக்கெல்லாம் இவ்வன்னியரே ஆங்காங்கும் தலைவராய் அவர்களை ஆண்டுவந்தார்கள். வன்னியர் கள் ஆண்டுவந்தமையால் வன்னிநாடெனப்பட்டது. யானையிறவுமுதல் பவானிக்குளம் வரையும், மனணு ர்முதல் திரிகோணமலைவரையும் அடர்ந்தோங்கிப் பெருவனமாய்க் கிடக்கும் 8ாடுமுழுதும் இவ்வன்னி யர்காலத்திலே செந்நெல் விளையும் வயல்களாயிருந் தது. அதனல் வன்னியர்களும் அவர்களுடைய குடி
களும் குறைவில்லாதவர்களாய் வாழ்ந்தார்கள். அச்
தனியுண்
ணுப்பூபா லவன்னி ujair.
பின்வந் தவன்னி யர்.
வன்னிக் குடியேற்
வன்னிய ர்அரசு.

Page 18
முத்துக் வி.
கடற்ப
Gaq-UU
F.
கண்ணகி
நெடுந்தீ வில்யுத்த
மீகாமன்
ö亡品。
26 யாழ்ப்பாணச்சரித்திரம்.
செல்வத்தால் வன்னியர் செருக்குற்று யாழ்ப்பாண த்தரசரைப் பகைத்துமிருப்பாராயினர்.
மார்த்தாண்ட சிங்கையாரியன் முத்துக்குளிக் குங் கடலையுந் தனதாக்கி முத்துக்குளிப்பித்து வங் தான். அக்கடலைக் காக்குமாறு ஒரு கடற்படையும் நெடுந்தீவிலே வைத்தான். அக்கடற்படைக் கதிப னக ஒரு பரதவத்தலைவனே வைத்து அவனுக்கு வெ டியரசன் என்னும் பட்டமளித்தான். (வெடியரசன்வெளியரசன் என்பது பொருள். வெடி-வெளி) ے{/ வன் இடங்கள்தோறும் மரக்கலங்களையும் போர்வி ரர்களையும் துணைத்தலைவர்களையும் வைத்துக் காத்
துவந்த்ான்.
இவன் காலத்திலே காவிரிப்பூம் பட்டினத்துப் பெருவணிகனுகிய மாநாய்கன் தன் மகள் கண்ணகிக் குச் சிலம்பு செய்தற்கு இரத்தினங்கொண்டுவருமா று கரிகாற்சோழன் அநுமதியோடு மீகாமன் என்ப வனையும் படைவீரரையும் ஒரு மரக்கலத்திலேற்றி அனுப்பினன். மீகாமன் நெடுந்தீவையடைதலும், வெடியரசன் தனது அநுமதியின்றித் தனது காவ லூக்குள் எப்படி வந்தாயெனச் சினந்து அவனைப் போருக்கழைத்து யுத்தஞ்செய்யத் தலைப்பட்டான். திருவடிகிலையிற் காவல்செய்திருந்த கடற்படையோடு வீரநாராயணனும், கீரிமலையிலிருந்த படையோடு போர்வீரகண்டனும், மயிலைப்பட்டி முதலியவிடங் களிலிருந்த ஏரிலங்குருவன் முதலிய துணைவரும் தம்மரக்கலப்படைகளோடு விரைந்துசென்று வெடி யரசனுக்குத் துணையாகிக் கொடிய யுத்தஞ் செய் தும் வீரநாராயணன் உயிர்துறந்தான்.
அதற்கிடையில் மார்த்தாண்ட சிங்கையாரியன் தூதனுப்பிப் போரொழிவித்து, மீகாமனை மணிபுரம் போக வழிவிடுக்குமாறு ஆஞ்ஞாபிக்க, அவனும் அ விவிடஞ்சென்று மணிகள் பெற்று மீண்டான். இவ்

யாழ்ப்பாணச்சரித்திரம். 27
வரலாறு கடலோட்டுக்காதையிற் பரக்கக்காணலாம். வெடியரசனென்னும் பட்டங்கொண்டபாதவர்வமிச த்துப் பரதவர். பரதவருள் முக்கியராயிருந்தமை யின் முக்கியரென்றும், பட்டங்கட்டிகளென்றும் பி ன்னுளில் விளங்குவாராயினர். முக்கியரும் திமில ரும் மற்றை வலைஞரிற் கடலோட்டு வல்லவர்களுமே யாழ்ப்பாணத்தாசர்க்கெல்லாம் கடற்படை செலுத் துபவர்களாயிருந்தார்கள். அவர்கள் மாலுமி சாஸ்
திரத்தோடு யுத்தசாஸ்திரமுங் கற்றிருந்தார்கள்.
மார்த்தாண்டசிங்கையாரியனுக்குப்பின் அவன் மகன் குணபூஷண சிங்கையாரியன் அரசு கைக்கொ ண்டான். அவன் தனது தங்தையிலும் சிறந்தவனு கிக் குடிகள் குறைகிறிதுமின்றி வாழுமாறு பயிர்த் தொழில் கைத்தொழில் கல்வி மூன்றையும் விருத்தி பண்ணினுன். இவனே யாழ்ப்பாணத்தில் கைக்கோ ளரைக் காஞ்சீபுரத்திலிருந்து வரவழைத்து யாழ்ப் பாணத்தாருக்கும் இலங்கையிலுள்ளாருக்கும் வே ண்டிய வஸ்திரங்களை நெய்யுமாறு செய்தவன். யாழ் ப்பாணத்திலே பருத்தி விளைவித்தவனுமிவனே. சா பவேலைக்காரரையும் சித்திரகாரரையும் வரவழைத் தவனுமிவனே. அவுரி இம்யூறல் முதலிய சாயப்பூ ண்டுகளை விருத்திபண்ணினவனும் இவனே. சித்திர காரரைக்கொண்டு அரசிருக்கை மண்டபமுழுதும் சித்திரங் தீட்டுவித்துத் தோகைவிரித்தாடும் மயில்
வடிவச்சிங்காசன மொன்றியற்றுவித்தவனுமிவனே."
இவன் காங்கேயனென்னும் போர்வீரனத் தொண் டைநாட்டினின்றும் வரவழைத்துத் தனது சேனைக் கெல்லாம் அதிபதியாக்கினன். அடியார்க்கு நல்லா னென்னும் பண்டிதசிரோமணியை வரவழைத்துத் தனக்கு முதல்மந்திரியாக்கினன். அம்மந்திரியால் ஊர்கடோறும் குளங்களும் பாடசாலைகளும் அறுப த்துமூன்று நாயன்மார்க்கும் ஒருமடாலயமுமமைப்
பித்தான். மந்திரி தன்பெயரால் ஒருகுளமும் இரா
ழக்கியர்.
56tah ணசிங் கையாரி யசக்கிர
வர்த்தி.
மயிற்சிங்
EST FaTứh
அடியார் க்குதல் லார்.

Page 19
ps Tudi
as 0.
காங்கே
யன்றுறை.
வீரோத யசிங்கை யாரியன்.
வன்னியர் கலகம்.
சோழன் படையே ບໍ່pນີ້.
Lindir Grif gr யிரங்குடி களைச்சி
றைசெய் துமீளல்,
கயவாகு சோழநா ட்டிற்ப
டையேற்
28 யாழ்ப்பாணச்சரித்திரம்.
சாபெயரால் ஒருகுளமும் அமைப்பித்தான். அறு பத்துமூவர் மடமிருந்தவிடம் நாயன்மார்கட்டென வழங்குகின்றது. இராசாவின் குளம் ஆரியகுளமெ ன வழங்குகின்றது. அடியார்க்குகல்லான் குளம் இ ன்றும் அவ்வாறே வழங்குவதோடு கன்னதிட்டிக் கு ளமெனவும் படுகின்றது. காங்கேயன் என்னுஞ் சே ணபதி இருந்தவிடம் காங்கேயன்றுறையெண் வழங் குகின்றது.
இவன் நெடுங்காலம் அரசாண்டிறக்க அவன் மகன் விரோதய சிங்கையாரியன் அரசனனன். அவ ன்காலத்தில் வன்னியர் சிங்களரைத் துணையாகக் கொண்டு கலகங்கள் விளைப்பாராயினர். விரோத யன் வன்மையுள்ள ஒருசிறு படையோடு சென்று அவர்நாட்டையுங் கொள்ளையிட்டு அவரையுஞ் சா ண் புகுவித்தான். அவ்வளவில் வன்னியர் செருக் கொழிந்ததாயினுந் தோற்முேடிய சிங்கள அதிகாரி கள் காலங்தோறுங் கலகஞ்செய்துகொண்டுவந்தனர். அக்காலத்திலே சோழன்* இலங்கைமேற் படையெ டுத்துவந்து வீரோதய சிங்கையாரியனைத் துணைக் கொண்டு இலங்கையரசனுகிய வங்கநாசிகனேடுகொ டிய யுத்தஞ்செய்து அவனைத் தோல்வியடைவித்து, திறையாகப் பெருகிதியும் புத்தகமண்டலமும் பன் னிராயிரங் குடிகளும் பெற்றுக்கொண்டேகினன். புத்தகமண்டலம் புத்தரது கையிலிருந்த பிக்ஷாபா த்திரம். அது புத்தரது பல்லுப்போலப் பெளத்தர் களுக்குப் பெறுதற்கரிய பெருகிதி. சோழன் வெற் றிகொண்டு மீண்டமை சிங்களருக்கு ஆறப்புண்ணு கி அவர் மனத்தை மூன்றுவருஷம் வருத்திற்று. மூ ன்மும்வருஷத்தின்மேல் இலங்கையரசனுகிய கயவா கு போரிற் சிறிதும் பின்னிடாத ஒரு பெருஞ் சே னேன்யத் திரட்டிக் கொண்டுபோய்ச் சோழநாட்டிற் படையேற்றிச் சோழனை வென்று இலங்கையிலிரு ந்து கொண்டுபோன திரவியங்களையும் பன்னீராயிர ங்குடிகளையும் மீட்டதுமன்றி மேலும் பன்னிராயி
* கரிகாற்சோழன்.

யாழ்ப்பாணச்சரித்திரம். 29
ரங் குடிகளைச் சிறைசெய்துகொண்டு மீண்டான். வி ரோதய சிங்கை பாரியன் கயவாகுவைச் சரணடைந் து திறையாச6,னன். கயவாகு சோழநாட்டிலிருந் தகாலத்தில் கண் ணகியினது தெய்வத்தன்மையைக் கேட்டுணர்ந்து அவட்கு அங்கு அரசரால் விழாவ ணிநடாத்தல் போலத் தானும் தனது நாட்டில் அவ ட்குக் கோயிலமைத்து விழாவணி நடாத்தவெண் ணித் த்னது நகருக்கு மீண்டவுடன் கோயிலமைத் துப் பெருவிழாச் செய்தான். (A.D. கிறிஸ்தUல்) 115 ல் தனது நாடெங்கும் அவட்குக் கோயிலும் விழாவுஞ்செய்தல் வேண்டுமெனத் திருமுகம் விடுத் தான். அவ்வாறே யாழ்ப்பாணத்தில் விரோதய சிங்கையாரியனும் பத்தினிக்கடவுளாகிய கண்ணகி க்கு ஊர்கடோறும் கோயிலமைத்து விழா வயர் வித் து வந்தான். வேலம்பாவையிலுள்ள கண்ணகிகோ யிலே அக்காலத்திலே முதலில் அமைக்கப்பட்டது. அதற்குப்பின் கட்டப்பட்டவைகளே களையோடை
அங்கணுள் கடவு முதலிய விடங்களிலுள்ளன.
விரோதயசிங்கன் நெடுங்காலமாசியற்றிச் சந்த தியின்றி இறக்க, யாழ்ப்பாணத்தாசு சிங்கள அர சர் கைப்பட்டது. அவர்கள் அக்காலத்திலே காடா ய்க்கிடந்த அக்ேகவிடங்களைச் சிற்றார்களாக்கி மது ரை திருச்சிராப்பள்ளி தொண்டி திருநெல்வேலி நக ாங்களிலிருந்து வந்து மாதோட்டப்பகுதிகளிற் கு டிகொண்டிருந்தவர்களை அங்குகின்றும் நீக்கி இங் கே குடியேற்றிஞர்கள். அவர்களாற் குடியேற்றப்ப ட்டவிடங்கள் சிங்களப்பெயரால் வழங்குகின்றன. அவை மானிப்பாய், சண்டிருப்பாய், கோப்பாய், சுன்னகம், மல்லாகம், கொடிகாமம், குராவத்தை, சித்தாவத்தை, கற்பொக்கணை, உடுவில், கோண்டா வில்,கிொக்குவில், மிரிசிவில்முதலியன. இவைசிங்கள அதிகாரகாலத்திலுண்டாகிய சிற்றார்களாம். சிங்கள அரசர்காலத்திலே புத்த கோயில்களும் பாஞ்சாலை
யாழ்ப் LUFTGROOT iš தில்கண் ணகிகோ யில்கள்.
is at
as to
பின்னுங் குடியேற் றல.
சிங்களச் சொல் லால்வழ ங்கும் speIfiou பெயர்
A.

Page 20
யாழ்ப் பாணத் திலேயுத் தகோ யில்.
பாண்டி பகுமா fredir.
露莎画h சேனன்.
சிலாகா லன்சிவா லயங்களை யும் நூல்க ளையுமழி 泻版eo...
80 யாழ்ப்பாணச்சரித்திர்ம்.
களும் சிலவுண்டாயின. சண்டிருப்பாயிலோரிடம் இன்றும் புத்தர்கோயிலடியென வழங்குகின்றது. அவர்களால் சில சைவாலயங்களும் அழிக்கப்பட் டன. கந்தரோடையிலும் புதைந்துகிடந்த புத்த விக்கிரகமொன்று சிறிதுகாலத்துக்குமுன்னே வெ ளிப்பட்டது. அவர்களால் அநேக குளங்களும் வெ ட்டப்பட்டன. வில் என்பது சிங்களத்தில் குளம்,
சிங்களவரசர் கைப்பட்டகாலமுதல், யாழ்ப்பா ணம் இடையிடையே நல்லாசராலும் நல்லதிகாரிக ளாலும் ஆளப்பட்டுவந்ததாயினும், குடிகள் தமிழா சின்மையால் பெரிதும் வருந்தியிருந்தார்கள்.
A, D, 433. பாண்டியகுமாரனும் துணைவர் கால் வரும் பெரும் படையோடு இலங்கையில் வந்து பெ ரும் போர்புரிந்து வெற்றிமாலை குடி இலங்கை முழு
தையுங் கவர்ந்து இருபத்தேழுவருஷம் அரசு புரிங்
தனர்.
459 ல் தத்துசேனன் என்பவன் தமிழரை வே ரறக் களைந்து இலங்கைக்கு எகசக்கிாாதிபதியான ன். தமிழர் வந்து தாக்காவண்ணம் ஒரு கடற்படை யும் அமைத்து இலங்கையின் காற்றிசையிலும் வை த்தான்.
A, D. 543 ல் சிங்களவரசனகிய சிலாகாலன் சிவாலயங்களையெல்லாங் தகர்த்துச் சைவாகமங்கள் வேதங்கள் தமிழ்நூல்கள் என அகப்பட்டவற்றை யெல்லாங் தேடி எரியூட்டினன். யாழ்ப்பாணத்துத் தமிழ்ச்சங்கத்துச் சரசுவதி மகாலயத்தையுங் தேடி அக்கினக்கிரையாக்கி அங்கிருந்த அரிய தமிழ்நூல் களையெல்லாம் சாம்பராக்கினன். இதன்பின்னர்ச் சிங்கள இராசா குடும்பங்களில் உட்பகை விளைந்து ஒருவர்க்குரியவரசை ஒருவர் கவரப் பலவகை உபா யங்களுங் தேடுவாராயினர். அதனுல் தமிழருடைய சகாயம் இராசகுமாாருக்கு இன்றியமையாததாயி

யாழ்ப்பாணச்சரித்திரம். 31
ருந்தது. படைத்துணே புரியவும், படைநடத்தவும், மந்திரி, பிரதானிபதங்களுக்கும் தமிழரையே தேட வேண்டியவர்களானர்கள். அதனல் தமிழர்கள் இல ங்கையில் தொகையாலும் அதிகாரத்தாலும் மேற் பட்டார்கள். ஒரொருகாலத்தில் இராசப்பிரதிநிதிக ளாகவுஞ் சிலர் இருந்தார்கள். பொட்டுக்கூத்தன் என்பானெரு தமிழப்பிரபு சிங்கள அரசர் இருவரு க்கு முடிசூட்டி அவரைப் பாதுகாத்து வந்தான். அவனைக் கொல்லுமாறு வஞ்சச்சூழ்ச்சிசெய்த அரச னுக்கஞ்சி அவன் தனது நண்பனுெருவனுடைய வீ ட்டிலொளித்திருந்தான். அதனை அரசனறிந்து அங் நண்பனை வினவுமாறழைத்தபோது அவன் தன்னி டம் அடைக்கலம் புகுந்தவனக் காட்டுதலும் தகா து, அரசனுக்குப் பொய்யுரைத்தலுங் தகாது என வெண்ணி நஞ்சுண்டுயிர்விட்டான். அஃதுணர்ந்த பொட்டுக்கூத்தனும் என்பொருட்டுயிர்விட்ட மித்தி ரனேடு யானும் போவேன் என்று நஞ்சருந்தி உயிர் துறந்தான். இவர்களுடைய பெருங் தகைமையும் சிநேகவியல்பும் வியக்கற்பாலன.
அதன்பின்னர் வீரதேவசோழன் ஒரு படை யையும் தனது சேனபதியையும் அனுப்பி யுத்தஞ் செய்து இலங்கையைத் தனதாக்கிச் சிறிதுகாலம் திறைகொண்டான். (Tennent 1. 390)
மூன்றும் பூரீ. சங்கபோதி (A. D. 702) தமிழ்ப் பிரசைகளையும் சமமாக அன்புடன் ஆண்டுவந்தான். அவன் தான் புத்தசமயியேயானலும் தனது தமிழ் ப்பிரசைகளுள்ளே வைஷ்ணவர்களுமிருந்தமையால் அவர்கள் வழிபடுதற்கு விஷ்ணுவாலயமில்லாதிருந்த மைகண்டு அவர்க்கொன்றமைத்துக் கொடுத்தான். ஊர்கள்தோறுமுள்ள சிவாலயங்களையும் பரிபாலித் அவந்தான்.
A. D. 769 அளவில் தமிழ்ப்பிரசைகள் அதிகா ாத்தால் அபிவிருக்கியுற்றவாாய் அநுர கபுர முதல்
தமிழர் அதிகாரம்
Gurr (6
க்கூத்தன்
பெருந்த
56).
வீரதேவ சோழன்.
பூரீசங்க போதி.
விஷ்ணு
வாலயம்

Page 21
ச.ம் அக் கிரபோ
UT 6ẩu q
LGT
வீrவரே ந்திரன்.
சந்திரசே கரபாண் டியன்ப டைத்து 2ao Gs
ه 69-t
சயசிங் கையாரி uJør.
Lirado (g யனுக்கு Beris S&N) யிடல்.
நீலகண் டஐயர்.
82 யாழ்ப்பாணச்சரித்திரம்.
வடநாடெங்கும் தமதாணையே செலுத்துவாராயி னர். அதுகண்டு நான்காம் அக்கிரபோதி என்னுஞ் சிங்களவரசன் புல நுவரையென வழங்கும் புலஸ்தி யநகரத்தைத் தனக்கு ராஜதானியாக்கிக்கொண்டு அநுரதபுரியினின்றும் நீங்கினன். நீங்க அங்நகரம் ஒளிமழுங்கிற்று.
A, D. 840 ல் பாண்டியன் ஒரு சேனையையும் தனது சேனுபதியையும் அனுப்பி வடக்கிலிருந்த தமிழப் பிரதானிகளைத் துணைக்கொண்டு இலங்கை யரசனை வென்று இலங்கை முழுதையுந்தன தாக்கித் திறைகொள்ளப் பொருந்திக்கொண்டு பெருந்திரவி யமுங் கவர்ந்தான். அச்சேனுபதி மீளும்பொழுது வீரவரேந்திரன் என்பவனை வடநாடாகிய வன்னிப் பற்றுக்கும் யாழ்ப்பாண நாட்டுக்கும் அதிபதியாக்கி மீண்டான்.
A, D. 952 ல் சந்திரசேகர பாண்டியன் சோழ னுக்கஞ்சியோடி இலங்கைக்கு வந்தான். இலங்கை அரசனகிய தர்மபாலன் (Dappula) அவன் அன் போடுபசரித்து அவனுக்கு வேண்டுவதெல்லாஞ்செ ய்தும் படைத்துணை புரிய இயலாதவனுயினன். அப் பொழுது இராசகுடும்பத்திலே உட்பகையிருந்த மையால் பிரதானிகள் படைத்துணைபுரிவது கூடா தென்முர்கள். அதுகண்டு பாண்டியன் யாழ்ப்பாண த்திற் சிற்றரசுசெய்திருந்த சயசிங்கையாரியன் பாற் சென்று அவனைப் படைத்துணை கேட்டான். அவன் அதற்கிசைந்து ஒருசிறு படையோடு அவனைத் தொ டர்ந்துசென்று மதுரையை வளைந்து மூன்று நாட் கொடிய யுத்தஞ்செய்து சோழனை வெற்றிகொண்டு பாண்டியனுக்கு அரசு கிலையிட்டுப் பெருங் திரவிய மும் பெருஞ் சேனையும் உபகாரமாகப் பெற்றுப் பா ண்டியன்பால் நீலகண்டஐயர் என்னும் மந்திரியை யும் பெற்று மதுரைச் சொக்கேசரை வழிபட்டுத் திருச்செந்தூருக்குச் சென்று அங்கெழுந்தருளியிரு

யாழ்ப்பாணச்சரித்திரம், 33
க்கும் முருகக்கடவுளைத் தரிசித்து அருள்பெற்றுக் கொண்டு மீண்டான். மீண்டபின்னர் நீலகண்டைய ர்க்குப் புவனேகவாகு என்னும் பட்டமளித்து அவ ரைக்கொண்டு யாழ்ப்பாணத்தாசைப் பழமைபோற் செவ்விதாக வகுத்து நடாத்தினன். புவனேகவாகு சிவாலயத்தையும் அர மக்ன முதலியவைகளையு5 திரு த்தி முன்போலலங்காரமாக்கி கல்லூரைச் சிறந்த நகரமாகப் புதுக்கி அங்கே அாதனப் பிரதிஷ்டையா கக் கந்தசுவாமி கோயிலையுங் கட்டுவித்தார்.
“இலகியசகாத்தமெண்ணுற்றெழுபதாமாண்டதெல்லை யலர்பொலிமாலைமார்பனம்புவனேகவாகு நிலமிகும்யாழ்ப்பாணத்துநகரிகட்டுவித்துநல்லைக் குலவியகந்தவேட்குக்கோயிலும்புரிவித்தானே.”
(கைலாயமாலை)
*இலகியசகாத்தமெண்னூற்முேடெழுபத்துநான்கி னலர்திரிசங்கபோதியாம்புவனேகவாகு நலமுறும்யாழ்ப்பாணத்துநகரிகட்டுவித்துநல்லூர்க் குலவியகந்தனர்க்குக்கோயிலொன்றமைப்பித்தானே.”
(விசுவநாதசாஸ்திரியார்சம்பவக்கு றிப்பு)
சயசிங்கனும் தனது நாட்டுக்கு நெல்விளைவு முதலியன குறையாதிருக்கும்வண்ணம் காடு திருத் திப் புதுச்செய்களும் குளங்களும் வாய்க்கால்களும் இடங்கள்தோறும் மாடுகளுக்கு மேய்சசல்கிலங்க ளும் கேணிகளும் அமைத்து நெடுங்காலம்ாசுசெய் தான். ஊர்கடோறும் நீதிசபைகளையும் தண்டாதிகா ரிகளையும் நியமித்துக் கொலை களவு அதிக்கிரமமுத லிய தீமைகளை இல்லாதொழித்தான்.
இவன் காலத்திலே இங்கேயுள்ள சோழநாட்டு
வேளாளரும் பாண்டிநாட்டுவேளாளரும் தொண்
டைநாட்டுவேளாளரும் துளுவவேளாளரும் தமமு
ட்கலந்து பெண்கொள்ளவும் கொடுக்கவும், இராச
5
மந்திரிபு வனேக வாகு.
நல்லூர் ப்புற Gastro டையுங் கந்தசு 6lauf கோயிலு š5’tquu காலம்.
சாதியா ຫຼື rກນີ້.

Page 22
34. யாழ்ப்பாணச்சரித்திரம்.
குடும்பத்துக்குப்பெண்வேண்டிய காலத்தில் இங்கான் குவகுப்பு வேளாளரிடத்தும் பேதம்பாராது கொள் ளவும் இராசகட்டளே யுண்டாகவேண்டுமென்று கொ ல்லிமழவன் என்னும் வேளாண் பிரபு அரசன்பால் வேண்டினன். அரசன் புவனேகவாகுவோடு குழ்ச் சிசெய்து இராசகுடும்பத்தார் வழக்கம்போலப் பட் டத்துப்பெண்ணே இராசகுடும்பத்திலும், மற்றைய பத்தினிமாரைத் தொண்டைமண்டலத்து வேளாண் முதலிகளிடத்துமே கொள்ள ததக்கதென்றும், வே ளாளர்களும் ஏனைய சாதிகளும் தங்கள் தங்கள் குல த்தினுள்ளேயே கொள்ளக்க டவரென்றும், தங்கள் தங்கள் குலப்பெயர்களைச் சாசனங்களில் தப்பாதெ ழுதிவரக்கடவரென்றும், கட்டளை செய்தான். வே ளாண் முதலிகள் (தொண்டைமண்டலத்து வேளா கார்) கொண்டையும், சோழியவேளாளர், பாண்டி வேளாளர், துளுவவேளாளர் வேளாண்செட்டிக ளும் பினகுடுமியும, கம்மாளர் பின்குடுமியும் பூனூ லும மடிகிச்சமில்லாத வுடையும், மற்றைய சாதிகள் எல்லாம் கன்னக்குடுமியும் மலையாளத்தார் முன்கு டுமியும், முதலிகள் வண்டிககடுக்கனும், மற்றைவே ளாளர் முத்துக்கடுக்கனும், செட்டிகள் ஒட்டுக்கடு க்கனும், மற்றைச்சாதிகள் மெல்லிய தக்கையும் திரி த்தல்வேண்டுமெனறும் கட்டளையிட்டான். இவர் இன்ன வகுப்பினர் என்பது எளிதில் யாவரும் அறிந் தொழுகுவதே இதன் நோக்கமாம். இம்முறையெல் லாம் தமிழரசுபோய்ப் போர்த்துக்கேய அரசு வர , , , அதன்ற் கலக்குண்டு, அதுவும்போகி மேல்வந்த உ ಬ್ಲ್ லாந்த அரசால தலைதடுமாறி, இப்போதுள்ள புண் BoTAM) ணயவரசாகிய ஆங்கிலவரசுக்காலத்தில் தேய்ந்து மாறினவாயினும், அச்சின்னங்களிற் சில ஒரோவிட . نام
ங்களில் இன்றுங் காணலாம்.
தமிழரசு போன பின்னர்த் தாழ்ந்த வகுப்பினர் மேல் வகுப்பினரைப் போலக் கொண்டைகட்டவும்

யாழ்ப்பாணச்சரித்திரம். 35
கடுக்கனணியவும் தலைப்பட்டனர். அதன் பின்னர் எல்லாரும் பின் குடுமிவைக்கத் தலைப்பட்டார்கள். இப்போது அதுவும் நாகரிகமல்லவென்று முண்டித த்தை மேற்கொண்டுவருகின்றனர். அதுகிற்க, இவ்வ ரசனே புகையிலையை யாழ்ப்பாணத்தில் முதலில் உற்பத்திபண்ணின வன். இவன் அப்பயிர்ச்செய்கை
யில் வல்லவர்களை மலையாளத்திலிருந்து வரவழைத் து இங்கே குடியேற்றி அதனை விருத்திசெய்தான் என்பர். இதனைப் பறங்கிகள் கொண்டுவந்தார்கள் என வுங் கூறுவர்.
A, D. 1013 ல் சிங்களவரசனுடைய குடும்பத தில் உட்பகை மூண்டு இருதிறப்பட்டு ஒருவரோ டொருவர் யுத்தஞ்செய்வாராயினர். அப்பொழுது இலங்கையிலிருந்த தமிழ்ப் பிரதானிகளும், யாழ்ப் பாணத்தரசனுங் கூடித் திரண்டு, சிங்களவரசனுக்கு மாருயெழுந்து பொருதாரையெல்லாம் எதிர்த்துப் பொருது, சிங்களவரசனுக்கு இராச்சியத்தைகிலையி
- if doit.
பத்துவருஷத்தின்மேல் சோழன் படையெடுத் துவந்து இலங்கைவேந்தனகிய நான்காம மிகிந்த னே வென்று சிறைசெய்து, அவனையும் அவன் குடும் பத்தையும் சோழதேசங்கொண்டு மீண்டான். சோ முன்றுணை வருள் ஒருவன் புலஸ்தியநகரிலிருந்து பி ாபுராசாவாக (சோழனுடைய பிரதிகிதியாக) முப்ப துவருஷம் அரசு புரிநதான். அப்பொழுது யாழ்ப் பாணமும் அவன்குடைக்கீழிருந்தது, (Knighton 128. 130.)
A, D. 1025 ல் மாமூது கஸ்னி என்னுந் துருக் ககலககாரன் இந்தியாவில் நுழைந்து கோயில்களை இடித்து அங்கிருந்த திரவியங்களைக் கவர்ந்தும் சன [ଧିasଥିତt வெட்டியுஞ் சிறைசெய்தும் வருத்தியகாலத் கில், அவனபடைக்கஞ்சி அநேகர் இலங்கையில் வங்
புகையி 26૭,
தமிழர் சி ங்க ளர்க் குத்துணை புரிதல்.
சோழ வ 重击。

Page 23
கூர்ச்சர ’ı Garruo ணர்.
பராக்கி ரமவாகு
அவன்தி க்குவிஜ tuử).
பராக்கிர
மவாகு asseh.
tData6dšr.
36 யாழ்ப்பாணச்சரித்திரம்.
து ஒதுங்குவாராயினர். அவருட் பிராமணர் சிலர் யாழ்ப்பாணத்தில் வந்தொது ங்கினர். இவர்கள் கு ச்சிலியப் பிராமணரெனப்படுவர். இவர்கள் மரபினர் இவரென விசுவநாதசாஸ்திரியாரெழுதிய சம்பவக் குறிப்பினுலறியலாம்.
A, D. 1164 ல் பராக்கிரமவாகுவென்னும் உத்த மவேந்தன் இலங்கைக்குச் சக்கிர வர்த்தியானன். அ வன் பராக்கிரமத்தாலும், நீதியாலும், தருமத்தா லும் உயிர்கள்மேல் அருளினலும், இராஜதந்திரத் தாலும், குடிகளுக்கு வேண்டுவதையெல்லாம் நாடி ச்செய்யும் ஊக்கத்தாலும், சோர முயற்சியாலும் தனக்கு கிகர் வேறில்லாதவன். இவன் பிரமதேசத் தில் படையேற்றி அத்தேசத்தையும் தனதடிப்படுத் தியவன். பாண்டிநாட்டை வென்று திறைகொண்ட வன், சோழநாட்டை வென்று அங்குங் தன்கோல் செல்ல வைத்தவன். அவன் தனது முத்திாையோடு காசு டாண்டி சோழ ஈழ மண்டலங்களெங்கும் வழ ங்க வைத்தவன். குளங்கள் ஏரிகள் கால்வாய்கள் ஆயிரக்கணக்காக அமைத்தவன். பெளத்தாலயங் கள் சைவாலயங்கள் எல்லாங் திருத்தி விதிப்படிகடா த்துவித்தவன். யாழப்பாணத்த ரசகனத் திறைகொ ண்டு தனது திக்குவிஜயங்களுக்கெல்லாம் துணையா கக்கொண்டவன். இவ்வரசன் காலத்திலே இராமே ச்சரம் இலங்கையோடு சேர்த்தாளப்பட்டது. இவ ன் சோழநாட்டிலும் தனது திக்குவிஜய ஞாபகசின் னமாகப் பராக்கிரமபுரமென ஒருநகரம் வழங்குமா
றுஞ் செய்தான்.
A, D 1225 ல் மாகன் என்னுந் தமிழரசன் கலி ங்கதேசத்திலிருந்து பெரும்படையோடு வந்து போ ர்செய்து இலங்கை முழுதையுங் தனதாக்கினுன். ஈற் றில் யாழ்ப்பாணத்தையுங் கைக்கொண்டு இருபது வருஷம் அரசுசெய்து இலங்கைக் குடிகளை வருத்தி அவர்களிடத் துள்ள தெல்லாங் கவர்ந்ததுமன்றிப்

யாழ்ப்பாணச்சரித்திரம். 37
பெளத்தாலயங்களையும் விகாரங்களையு மழித்தும் கன்னியர்களை மானபங்கஞ்செய்தும் கிஷ்ரேனனன்,
A, D. 1260 ல் பாண்டியகுலக் கோமகனெருவ ன்வந்து சயவீரசிங்கை ஆரியசக்கிரவர்த்தி எனப் பட்டமும் முடியுஞ் குடி யாழ்ப்பாண நாட்டுக் கரச னகி மிக்க பராக்கிர்மமும் நீதியுமுடையன யாசியற் றுவானுயினன். முத்துக்குளிக்கு முரிமையைப்பற் றி இலங்கையரசனுகிய புவனேகவாகுவுக்கும் இவ னுக்கும் விவாதமுண்டாயிற்று. அதனல் இருவரும் படையெடுத்துப் பெரும்போர் செய்து தம்படைவீ ரர் பல்லாயிரவரை மடிவித்தனர். அவ்வளவிலும் தணியாது பொருதபொழுது சயவீரசிங்கை ஆரிய சக்கிரவர்த்தியே வெற்றிமாலை கொண்டான். இலங் கைமுழுதுக்கும் இவனே அரசனனன். சிங்கள அர சர்க்குச் சீவாத்தினம்போன்ற புத்தரது பல்லையுங் கவர்ந்து பாண்டியனுக்குபகரித்தான். பன்னிரண்டு வருஷத்தின் பின் இவன் மூன்மும் பராக்கிரமவாகு வைத் தென்பகுதி அரசனுக்கி அவனேத் திறைகொ டுத்தாளும்படி பொருந்திக்கொண்டு யாழ்ப்பாண த்தில் நெடுங்காலம் நல்லரசு புரிந்திருந்தான். பராக் கிரமவாகு பாண்டியனை வேண்டிப் புத்ததசனத்தை ப்பெற்றன். சயவீரசிங்கனுக்குப்பின் குணவீர சிங் கையாரியன் அரசனனன். அவன் காலத்தில் தென் னிலங்கையரசன் வழக்கப்படி திறைகொடாது ம றுக்க, இவன் அவ்வரசனேப் போரில்வென்று அநேக நாடுகளைக் கவர்ந்து யாழ்ப்பாண அரசுக்குட்படுத்தி அரசு செய்தான். இவ்னுடைய வீரத்திறலைக்கேட் டு மதுரையாசனும் படைத் துணை கேட்க, ஆங்கும் ஒருபடையை அனுப்பி அவனுக்கும் வெற்றிமாலை சூட்டி அதற் கர்சப் டெருந் திரவிய மும் கன்ன டர் சிலரையும், சிவிசை யார் சிலரையும், மறவர் சிலரையும், வில்லியர் சிலரையும், வேடர் சிலரையும்
பெற்றன். மறவரை மறவன் புவி விலிருத்தினன். வே
Fu asfa
சிங்கை uur fus F க்கிரவர்
த்தி.
பாரியச க்கிாவர் த்தி.
பாண்டி பனுக்கு ப்படை

Page 24
துரும்பர்
38 யாழ்ப்பாணச்சரித்திரம்.
டரை வேடுவன்கண்டியிலிருத்தினன். இவ்வரசனே தனது நகரத்துக்கும் நாட்டுக்கும் அவசியமான அ நேக தொழிலாளரைக் கொணர்ந்தவன். கன்னடர் இருந்த விடம் மாவிட்டபுரத்திலே கன்னடியதெரு வென வழங்குகின்றது.
இவன் தனது நகரத்து வீதிகளைத் தினந்தோ றும் சுத்திசெய்யும்பொருட்டுத் துரும்பரை (தொ ம்பரை) வரவழைத்து நகரத்துப் புறஞ்சேரியிலிருத் தினன். இத்துரும்பர் அந்நாளிலே பந்தங்களோடு இராப் பத்துநாழிகைக்குமேல் நகரத்து வீதிகளிற் பிரவேசித்து அவைகளை அலகிட்டுச் சுத்திசெய்து குப்பை சலதா ரையழுக்கு முதலியவைகளை அகற்று வார்கள். அவர்கள் பகற்காலத்திலே வீதியிற் பிர வேசித்தலாகாது. அதுபற்றியே அச்சாதியார் இற் றைக்கு ஐம்பதறுபது வருஷத்துக்கு முன்னும் இர விலே விதியிற் குள்கொண்டு சஞ்சரிக்கும் வழக்க முடையராயிருந்தார்கள். தமிழரசர் போயொழிந்த பின்னர்த் துரும்பர், பள்ளர் நளவர் பறையர்களுக் கு வஸ்திரம் வெளுக்கும் தொழிலை மேற்கொண்டு அதனையே செய்துவருகின்றர்கள். அவர்கள் தொ ழில் அசுத்தமான தொழிலாயும் அவர்கள் இயல்பி லே சுசியில்லாதவர்களாயு மிருந்தமையால் அவர்க ள் பகற்காலத்திலே நகரத்துவீதிகளிலே சஞ்சரித்த லாகாதென்றும், இரவிலே சனங்கள் அடங்கியபின் னர்ப் பந்தங்களோடுமே பிரவேசித்துத் தெருக்களை ச்சுத்திசெய்தல் வேண்டுமென்றும் கட்டளைபெற்றி ருந்தார்கள். இராக்காலத்தில் அவர்கள் பந்தத்கோ டுசெல்லவேண்டுமென்றது அப்பந்தத்தின் சூட்டின லே அவர்கள் சரீரத்திலுள்ள அசுத்தம் நீங்குவதோ டு அவர்கள் கையிட்டு வாரும் அழுக்குக் குப்பைக
ளிலிருந்தெழு5 துர்க்கந்தம் அவர்களைத் தாக்காம
லுமிருத்தற்கே யாம். அக்காலத்திலே சுடுகாடு இடு காடுகளுக்குப் பக்கத்தே நகரத்தழுக்குக்களைக்கொ ண்டுபோய்த் தினந்தோறும் தகித்தற்கு மலக்கா

யாழ்ப்பாணச்சரித்திரம். 39
டென்றும் ஒன்றிருந்தது. அங்கேயே நகரத்தழுக் கெல்லாம் கொண்டுபோய் இத்துரும்பாாலே தகித் தொழிக்கப்படுவதாம். அவ்விடம் பறைச்சேரிவெ ளியிலிருந்தது. அதுவே துரும்பருக்குப் பழமை யான இருக்கையுமாம். இந்நாள் நாகரிகத்திலும் அ ந்நாள் நாகரிகம் நகராரோக்கியவிஷயத்தில் சிறந்த தென்பது இதனுல் துணியப்படும்.
நல்லூர் நகரத்திலே ஒவ்வொரு சாதிக்கும் ஒவ் வொரு வீதியிலிருந்ததென்பது தெரிகின்றது. அந்த ணர்க்கொரு தெருவும், செட்டிகளுக்கொருதெரு வும், வேளாளர்க்கொருதெருவும், கன்னருக்கொரு தெருவும், தட்டாருக்கொருதெருவும், கைக்கோளர் க்கொருதெருவும், சாயக்காரருக் கொருதெருவும், தையற்காரருக் கொருதெருவும், உப்புவாணிகருக் கொருதெருவும், சிவிகையார்க் கொருதெருவுமாக இப்படி அறுபத்து நான்கு தெருக்களிருந்தன. இந நகரத்தினுள்ளே தீண்டாச்சாதிகளாகிய அம்பட் டர், வண்ணர், பள்ளர், நளவர், பறையர், துரும்பர்
முதலியோருக்கு இருக்கையில்லை. அவரெல்லாம்
புறஞ்சேரிகளிலேயே வசித்தார்கள். அவர்கள் தெர
ழிலும் சரீரமும் இயல்பிலே சுத்தியில்லாதனவாயி ருத்தல்பற்றிச் சுத்தியுடையராலே தீண்டத்தகாத வரானர்கள். இவ்வகையொழுக்கத்தினலேதான் டே திமுதலிய கொள்ளைநோய்கள் தமிழரசர்காலத்தி லே இல்லாதன. இலங்கையிலே கிறிஸ்தவருஷம் (A. D.) 1816 க்குமுன் பேதியென்பது தெரியாத வொருநோயாம்.
இவ்வரசன்காலத்திலே விளங்கிய விகடகவி தி ருவம்பலவன். யாழ்ப்பாணத்த ரசரிடத்திலே விளங் கிய விகடகவிகளுள்ளே இவன் மிக்க பெயர்படை த்தவன். மற்றையோர் பெயர் பிற்காலத்திலே கேட் கப்படாது மறைந்துபோக இவன்பெயர் மாத்திரம்
da LT 5 F.S.
திருவம்ப
Av6AJ Gör.

Page 25
40 யாழ்ப்பாணச்சரித்திரம்.
இன்றும் கின்றுலவுகின்றது. இவன் வசித்தவிடம் கோண்டாவில் என்னுங் கிராமம். இவனிருந்தமன திருவன் புலம் என வழங்குகின்றது. இவன் மகா பண்டிதன். ஐயுருவகை எவ்வேடமுந் தரிக்க வல்ல வன். எவரையும் எத்துக்க கிலையிலும் தன்வசமாக் கிக் குடர்குலுங்க நகைத்து மகிழ்ந்து கொண்டாடு ம்படி செய்யும் பேராற்றலுடையவன். ஒருநாள் அ ரசன் வேட்டைமேற் சென்றவன் உரியகாலத்தில் மீளாதிருந்தான். அது கண்ட தேவி அரசனுக்கு யாது சம்பவித்ததோவென்று மனம்பதைத்திருந்தா ள். அஃதறிந்த திருவன் குறத்திவேடந் தரித்து அங் தப்புரஞ்சென்று குறிசொல்லி, அரசனுக்கு யாதுமி டையூறில்லை. இன்னும் இரண்டு கடிகையில்வருவார் என்று தேற்ற, தேவி அவளை அரசன் வருங்காறும் இருக்குமாறு கட்டளையிட்டாள். திருவனுமுடன் பட்டிருந்தான். அரசனும் குறத்தி சொன்ன நேரத் தில் வந்து சேர்ந்தான். அரசன் வந்த வுடன் தேவி தன்னைத் தேற்றிய குறத்தியினது சாமர்த்தியத்தை யெடுத்துக்கூறிப் பரிசாக ஒரு பட்டுச்சேலையும் பத் துப் பூவராகலும் கொடுத்தாள். அரசனும் அங்கு நடந்ததைக் கேட்டு மகிழ்ந்து தானுமொரு சேலை யும் பத்து வராகனுங்கொடுத்துக் குறத்திக்கு விடை கொடுத்தான். குறத்திவேடம்பூண்ட திருவன், மகா ராஜாவே, குறச்சாதிப் பெண்கள் பொழுதுபோகு முன் தங்கள் குடிசைபோய்ச் சேர்வது வழக்கம். தேவியினது கட்டளை கடக்கமாட்டாது தங்கிவிட் டேன். எனது நாயகனே மகா கோபி. யாதுசொன் லுைங் கேளான். அடியேனேத் தக்கதுணையோடனு ப்புமாறு பிரார்த்திக்கின்றேன் என்ன, அரசன் உன் நாயகன்ே வரவழைத்து அவனேடுன்னே அனுப் புவேன் என்று கூறினன். திருவன் மகாராசாவே எனதுநாயகன் ஒருவருக்கும் அகப்படமாட்டான். அவன் திருவம்பலவன் என்ன, அரசனுங் தேவியும் உண்மையுணர்ந்து, இவன் நம்மையெல்லாம் மயக்

யாழ்ப்பாணச்சரித்திரம். 41
கினன் என்றதிசயித்துக் குடர்குலுங்க நகைத்து மெச்சினர்.
வருஷங்தோறும் வருஷப்பிறப்புக்கருமமுடித்த பின்னர், ஏர்மங்கலகருமத்தை அரசன் தன் பரிவார த்தோடு பொன்னின்கலப்பையைத் தானே தோளில் தாங்கிக்கொண்டு அரமனைக்குக் கிழக்கேயுள்ள வய லிற்சென்று, தனது நாடு நன்மழையும் கல்விளைவுமு டையதாய் விளங்கவேண்டுமென்று பிரார்த்தித்துக் கடவுளை வழிபட்டுச் செய்து முடிப்பன். அவ்விழா வணிகாணுமாறு நாற்றிசையினின்றும் பிரதானிக ளும் பிரபுக்களும் வந்து கூடுவர்.
குணவீரனும் ஒராண்டில் இவ்வாறு ஏர்மங்க லமுடித்துக்கொண்டு பிரதானிகளும் பிரபுக்களும் தற்குழ மீண்டு அரமனையையடைந்தான். அப்போ து திருவன் பொய்க்கையொன்று செய்து கட்டிக் கொண்டு மூன்று கையணுய் எதிரே வந்து வணங்கி னன். அரசன் இஃதென்னவென்ன, திருவன் கை விசேஷம் என்பதை அறிவிக்க இவ்வாறு வந்தேன் என்முன். அன்றுஏர்மங்கலமுடிந்தவுடன் கைவிசேஷ முகூர்த்தம் வைக்கப்பட்டமையால் திருவன் இதுசெ ய்தான் என யாவரும் குடர்குலுங்க நகைத்துக்கொ ண்டாடினர். அரசன் திருவனுக்கே அன்று கைவி சேஷம் விசேஷமாக வழங்கிப் பின்பு ஏனையோர்க் கெல்லாம் வழங்கினன். கைவிசேஷவழக்கம் குண வீர சக்கிரவர்த்தி புதிதாக அமைத்த வழக்கம் என்றும் அக்காலமுதல் யாழ்ப்பாணத்தில் -yas a ழங்கிவருகின்றதென்றும் கூறுவர்.
குணவீரசிங்கையாரியனுக்குப்பின் அவன் தம் பி அரசனுஞன். (A D. 1410) ல் அளகேசுவான் (ஆரும்பாாக்கிாமவாகுவின் சேகுபதி) தான் பிறவி யிலே தமிழஞயிருந்தும் சிங்கள இராசகுடும்பத்தில்
கைவி சேஷம்.
அளகே சுவாள்.

Page 26
ஆரியசக் கீரவர்த் 3Gaur6
யுத்தம்.
பிலத்து a TJůb.
ரியசக்
ரவர்த் திகொலை புண்டது.
Lurráiás சமவாகு
DSdr.
42 யாழ்ப்பாணச்சரித்திரம்.
விவாகஞ்செய்துகொண்டு இலங்கைக்குப் பிரபுராசா வாயினமையால் தனது இராச்சியத்துக்குச் சீவாத் தினமாகவுள்ள புத்ததசனத்தைக் கவர்ந்த ஆரியசக் கிரவர்த்தியை அடக்கவெண்ணி இருபது வருஷமாக ப்படைகூட்டியும் அரண்கள் அமைத்தும் ஆயத்தஞ் செய்துகொண்டு போருக்கு எழும்படி அறை கூவி குன். ஆரியசக்கிரவர்த்தியும் போருக்காயத்தஞகிப் பெருர்ேப்படையோடும் நிலப்படையோடும் அள கேசுவரனுடைய இராசதானியை நோக்கிப்போய்க் கொழும்பிலும் பாணந்துறையிலும் சேனைகளையிறக் கி அவனுடைய சேனயை எதிர்த்து வீரத்திறலோ டு யுத்தஞ்செய்தான். அளகேசுவரன் ஆரியசக்கிர வர்த்தி சேனைகளையெல்லாம் நெருப்பினையெதிர்த்த பஞ்சாக்கினன். ஆரியசக்கிரவர்த்தி முதுகிட்டு யாழ் ப்பாணத்தை அடைந்து தொண்டைமானுற்றருகே யுள்ள பிலத்துவாரமண்டபத்தில் ஒளித்தான். பில த்துவாாவாயிலிலே ஒரு மண்டபமும் சிறுமாளிகை யுமிருந்தன. இப்பிலத்துவாரம் ஆபத்துக்குதவுமா று முன் தமிழாசரால் அமைத்துவைக்கப்பட்டது. இதன் உள்வாய் சுண்ணந்தீற்றிச் சித்திரமெழுதப்ப ட்டிருந்ததென்பர். அதுவும் மண்டபமும் பிற்கால த்தில் சிதைக்கப்பட்டனவாயினும் பிலம் இன்றுமி ருக்கின்றது. அஆதி மண்டபமென்னும் பெயரால் ճաtք ங்குகின்றது. பராக்கிரமவாகுமகன் அவனத் தொ டர்ந்து சென்று நல்லூரை வளைந்து எதிர்த்த சே னையையெல்லாம் வாள்வீரரைக்கொண்டு சங்காரஞ் செய்து நகரத்து வீதிகளையெல்லாம் இரத்தவெள் ளம் பாயும் ஆறுகளாக்கி முடிவில் அரசனையுங் தே டிக்கொன்று அவன் மனைவிமக்களைச் சிறைசெய்து கொண்டு போய்த் தனிது தங்தையிடம் ஒப்புவித் தான.
அதன்மேல் அக்குமாரனே யாழ்ப்பாணத்துக் கு அரசனுகிச் சிறிதுகாலம் அரசுசெய்தான் என ராஜாவளி என்னுநூல் கூறுகின்றது. இவ்வாரிய சக்

யாழ்ப்பாணச்சரித்திரம். 43
கிரவர்த்தியின் இயற்பெயர் விளங்கவில்லை. அதன் மேல் குணவீரசிங்கையாரியன் இறக்கும்போது கை க்குழந்தையாயிருந்த கனகசூரிய சிங்கையாரியன் அவனை வென்று சக்கிரவர்த்தியானன். இயல்பிலே இவன் தெய்வபக்தியும் சீவகாருண்ணியமுமுடைய வன். குடிகள் செய்யும் பிழைகளைப் பலமுறைபொ றுப்பவன். அதஞல் வன்னியர் சிங்களரைத் துணைக் கொண்டு அவனைக் கொலைசெய்ய முயன்முர்கள். ஒரி ரவு சேனுபதியையும் தம்வசமாக்கிக்கொண்டு அவர் கள் ஆயுதபாணிகளாய் அாமனைக்குள் நுழைந்தார் கள். அஃதுணர்ந்து அரசன் தன் தேவியையும் புத் திரர் இருவரையுங் கொண்டு அரமனைப் புறக்கதவா லோடித் தோணியேறிப் போய்த் தொண்டைநாட்டி லுள்ள திருக்கோவலூரை யடைந்தான். அங்கே அவன் தனது பிள்ளைகளை ஒரு வித்தியாகுருவிட மொப்புவித்துத் தன் பத்தினியோடு காசியாத்திரை மேற் சென்முன். அங்கே விசுவநாத சுவாமியையும் விசாலாகூதியையுந் தரிசித்து வணங்கிக்கொண்டு, மீ ண்டு தெற்கிலுள்ளி தலங்களைத் தரிசித்துத் திருக் கோகர்ணத்தையடைந்து அங்கே பதினெருவருஷங் தவங்கிடந்தான். ஒருநாள் அவனுக்குச் சுவாமி வெ ளிப்பட்டு ‘இனி உனது கருத்து கிறைவேறும்” என் றருளிச்செய்தனர். அதுகேட்டு அவன் மனம் பூரித் துச் சுவாமியை வணங்கி மீண்டு மதுரையையடைந் து அங்குள்ள அரசர்களிடத்துப் படைத்துக்ணயும் பொருளும் பெற்றுக்கொண்டு திருக்கோவலூருக்கு ச்சென்முன், புத்திரரைக் கண்டான். புத்திாருங் தங் தைதாயிருவரையுங் தழுவி, “இனி எமது இராச்சி யத்துக்கு மீளுவோம் அரசைப் போர்செய்து மீட் ப்போம்” என்றனர். அதுகேட்டு ஆகங்த மீதூரப் பெற்ற தங்தை, தனது புத்திரரை வளர்த்து ஏனே யகல்வித்துறைகளோடு வில்வித்தை முதலிய துறை களையும் கற்பித்த ஆசிரியனுக்கு முகமனுரைத்துத் தகூகிணையுங் கொடுத்து அவன்பால் விடைகொண்டு
கனகசூரி யசிங்கை tLuaTifau alF க்கிரவர்
莎弼·
asséo aur த்திரை.
திருவருள்
பெறல்.
படைத்

Page 27
L I T U ATg சிங்கன் வெற்றி.
கனகசூரி имейт Фуп
சுமீட்டது.
44 யாழ்ப்பாணச்சரித்திரம்.
புத்திரரை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக் கு மீண்டான். இதற்கிடையில் பதினேழுவருஷம் அரசுசெய்த விஜயவாகு சிங்களக்குடிகளை வரவழை த்து அவர்களுக்குப் பலவகை அதிகாரங்களையுங் கொடுத்துப் பெளத்தமதத்தையும் சிங்களவுடைக டையையும் விருத்திபண்ணித் தமிழ்க்குடிகளை உ பேசுழித் தரசியற்றியதோடு கொடிய வரிகளும் வா ங்கி யாழ்ப்பாணத்தை வருத்திவந்தான். இவனல் வருத்தமுற்றிருந்த தமிழ்க்குடிகள் கனகசூரியசிங் கையாரியன் பெரும்படையோடு மேலைவாயிலில் வங் தானெனக் கேட்டு, இன்ருேடெமது பீழை தீர்ந்த தென்றெண்ணி ஆநந்தக்கூத்தாடினர். விஜயவாகு தனது சேனையை விரைந்து திரட்டி அணிவகுத்துக் கொண்டெதிர்த்தான். சிறிதுநேரம் இருதிறச்சே னையும் எதிர்த்து ஒன்றற்கொன்று தோல்வியின்றிக் கொடிய யுத்தஞ்செய்தபோது கனகசூரியசிங்கையர் ரியன் மூத்தகுமாரன் பரராசசேகரன் வாட்படை தாங்கி விஜயவாகுவினது சேனையுட் புகுந்தான். பு குந்தவன் வாள் வித்தையைக் கண்ட விஜயவாகு சே னே முதுகிட்டது. அதுகண்டு விஜயவாகுவும் ஒரு வாளாயுதத்தைக் கையிலே தாங்கிக்கொண்டு பகை வர்சேனையுட் புகுந்தான். பரராஜசிங்கன் அதுகண் டு தன்னை வளைந்த சிறுபடையைப் பிளந்துகொண்டு சிங்கம்போற் பாய்ந்து விஜயவாகுவை விண்ணுலக டைவித்தான். அவ்வளவில் சிங்கள வீரரெல்லாம் ஒட்டெடுக்க வெற்றிமாலை தமிழரசனுக்காயிற்று.
அதன்மேற் கனககுரிய சிங்கையாரிய சக்கிரவ ர்த்திநகரமும் நாடும் வாழ்த்திவணங்கச் சிங்காசனப தியானன். சிங்களப் பிரதானிகளும் அதிகாரிகளும் சிங்களக்குடிகளும் வன்னியரும் ஊரைவிட்டகன்ற ர்கள். கனகசூரிய சிங்கையாரியன் மந்திரி பிரதான களைத் தனது மகன் பரராசசேகரனேடுசாவி கியமி த்துச் செங்கோல் செலுத்தினன்.

யாழ்ப்பாணச்சரித்திரம் 45
இவன் முன் பகைவருக்கஞ்சி இரவிலோ ட (f யன்றபோது தன்னையும் மனைவியையும் புத்திரன் պւհ பகைவர்கைப்படாவண்ணம் காத்துப் பல்லக்கி லிட்டு மிக்கவிரைவிற் கொண்டுபோய்க் களவிற்ருே ணியேற்றிய சிவிகைத்தலைவனை வரவழைத்து “நீ எ ம்மிடத்து மிக்க விசுவாசமுடையணுயிருந்தமையால் உன்னே எனது புத்திரனுகப் பாவித்தாம். அதற்க றிகுறியாக அப்புத்திரன்பெயரை உனக்குப் பட்ட மாகத் தந்தாம். இனிமேல் உன்பெயர் பரராசசேக ாக்கூறியான் என வழங்குவதாக” என்று ஆஞ்ஞா பித்து, நீ ஒரு மூச்சிலோடி எல்லையிடும் இடத்தையு முனக்கு மானியமாக வழங்கினமென்முன். அவனவ் வாமுேடிப் பெற்றவிடமே சிவியாதெருவென்பர். கூ றியான் இராசாவாவுகூறிச் சிவிகை முன்செல்லுங் க ட்டியங்காரன். அரசன் தன்னை மீளவும் பட்டம்பெ ற்ருளுதற் கநூ கூலமாகத் தோணியேற்றிச் சென்ற முக்கியத்தலைவனுக்குப் பட்டங்கட்டியென்னும் வரி சைப்பெயரீந்தான். கனகசூரியசிங்கையாரியசக்கிரவ ர்த்தி தனக்கு மூப்புங் தளர்வும் வந்தது கண்டு தன் மகன் பரராசசேகரனுக்கு முடி சூட்டினன். இளைய குமாரனுகிய சகராசசேகரன்ன இளவரசனுக்கினன்.
பரராசசேகரன் முடிசூடமுன் சோழமாசன் புத்திரியாகிய இராசலக்குமியை விவாகஞ்செய்தான். இரண்டாம் பத்தினியாகப் பாண்டிமழவன் மரபில் வந்த அரசகேசரியினது புத்திரியாகிய வள்ளியம் மையை மணம்புரிந்தான். வைப்பாட்டியாக மணக் குடியிலிருந்து மங்கத்தம்மாள் என்பவளையுங்கொ ணர்ந்தான். அவன் முடிசூடியபின் பட்டத்துத்தே வி வயிற்றில் சிங்கவாகு பண்டாரம் என இருவர் புத் திரர் பிறந்தார்கள். வள்ளியம்மைவயிற்றில் பரநிரு பசிங்கனும், அவன் தம்பியர் இருவரும் ஒருபெண் ணும் பிறந்தார்கள். மங்கத்தம்மாள் வயிற்றில் சங் கிலியிென்ருெரு புத்திரனும் பரவையென்ருெரு புத்
T ITTF சேகரக்
கூறியான்
எனும்பட்
fè o
சிவியா தெரு.
பட்டங்க ட்டி எனு ம்பட்டம்
14辽J卿 超开 சேகான்
சிங்கவா குபண் LIT Tib.
சங்கிலி,

Page 28
F 85 TF சேகரன்.
ஊர்தோ றும் பாட &fnäkv8
町击a姆
Disc)
.
நூல்களை இயற்று வீத்தல்.
இரகுவ மிசம்.
旺压J町母F சேகரம்.
Lf sfsso சேகாம்.
46 யாழ்ப்பாணச்சரித்திரம்.
திரியும் பிறந்தார்கள். அரசன் இப்புத்திரசையெல் லாம் அன்போடு வளர்த்துக் கல்வியிலும் யுத்தவித் தையிலும் வல்லவர்களாக்கினன். அவருள் சங்கிலி யென்பவன் ஆண்மையிலும் படைக்கலப்பயிற்சியி அலும் சிறந்து சாதுரியமும் கபடோபாயமும் வல்ல
வணுய் விள ங்கினன்.
சகராசசேகரன் கல்வித்துறையெல்லாம் கடை போகக் கற்ற மகாபண்டிதன். அவன் ஊர்கடோறும் பாடசாலைகள் அமைத்து அங்கே சிறுவர்களையெல் லாம் கல்விபயில்வித்தான். சோழ பாண்டி தொண் டைமண்டலங்களினின்றும் பண்டிதர்களை வரவழை த்து ஈழநாட்டிலுள்ள புலவர்களோடு நல்லூரில் ஒரு தமிழ்ச்சங்கம் அமைத்தான். யாழ்ப்பாணத்திலிரு ங் த சரசுவதிமகாலயத்தில் இல்லாத வடமொழி தெ ன்மொழி நூல்களையெல்லாம் தமிழ்நாட்டினின்றும் வரவழைத்து வைத்தான். அநேக நூல்களைப் பண் டிதர்களைக்கொண்டு புதிதாக இயற்றுவித்தான். அ வர்க்குப் பரிசிலும் வழங்கினன். பாகிருபசிங்கன் சகோதரியை மணம்புரிந்தவனும் வித்துவ சிரோம ணியுமாகிய யசகேசரி (அரசகேசரி) யைக்கொண்டு இரகுவமிசமென்னும் வடமொழிநூலை, அஃதியற்றி யகாளிதாசன் கீர்த்திப்பிரகாசமும் மழுங்குமாறு பொருழாளமும் சொல்வனப்பும் வர்ணனைகளும் மி க்குப்பொலிய மொழிபெயர்த்து விருத்தப்பாவாற் பாடுவித்தான். அதனை நல்லூர்ச் சங்கத்தில் அரங் கேற்றிப் பின்னர்த் தமிழ்நாட்டிலும் பிரசித்தியெய் துவிக்கவேண்டித் திருவாரூர்ச் சங்கத்திலும் அரங் கேற்றி அச்சங்கத்தாரெல்லாம் சிரமிசைக்கொண்டு பாராட்டச்செய்தான். சானும் சகராசசேகரமென் னுமொரு சோதிடநூலை விருத்தப்பாவாற் செய் தான். பரராசசேகரமென ஒரு வைத்திய நூலும் தனது தமயனுகிய அரசன்பெயரினலியற்றி அவனு க்குச் சமர்ப்பித்து அவன் பெயரையும் வியாபிக்கச்

யாழ்ப்பாணச்சரித்திரம். 47
செய்தான். வித்தியாவிஷயமாக அடிக்கடி இராமே ச்சாஞ்சென்று அங்கே பண்டிதர்களோடு கலந்து
மீளுவான். இவன் செய்தி இங்ங்னமாக,
பரராசசேகர சிங்கையாரிய சக்கிரவர்த்தி தன து அரசியற்கருமத்திற் கண்ணுங்கருத்துமுடையன யிருந்தான். அவன் நீதியும் பராக்கிரமமுமுடைய வன். அவன் யாழ்ப்பாணத்தை முப்பத்திரண்டு வட் டமாகப் பிரித்து முப்பத்திரண்டு தண்டாதிகாரிக ளையும் அவ்விடங்கடோறும் வியவகாரவிசாரணைக் கு ஐந்து பிரபுக்கள் கூடிய பஞ்சாயமெனப்படுஞ் சபைகளையும் தாபித்தான். சேனைகளையும் கடற்ப டையையும் பலப்படுத்திக் கிரமமாக அரசுசெய்து வந்தான். யாழ்ப்பாணத்திலே ஒரு பெரிய அன்னச த்திரம் பரராசசேகரனுலும் இராமேச்சரத்திலே ஒர ன்னசத்திரம் சகராசசேகரனுலு மமைக்கப்பட்டன.
சகராசசேகரன் பரராசசேகரனேக்கொண்டு கி ராமங்கள்தோறும் வைத்தியசாலைகளமைத்து அங் கே, குடிகளுக்குமாத்திர மன்று ஆடுமாடுகளுக்கும் மருந்துமுணவுங்கொடுத்துவருமாறுசெய்தான். அவ் வைத்தியசாலைகளுக்கு வேண்டும் மருந்துகள் மூலி கைகள் எல்லாம் சகராசசேகரன் தனது அரமனையி லிருந்து காலங்தோறும் அனுப்பிவந்தான். p6 a) 5 களையெல்லாம் தனது சிங்காரத் தோட்டத் தருகே ஒரு தோட்டம் வகுத்து அங்கே உற்பத்திபண்ணிப் பாதுகாத்துவந்தான். இமயத்திலிருந்தும் அநேக மூலிகைகளை எடுப்பித்து நாட்டி வளர்த்தான். அத் தோட்டத்துக்கு மருத்துமாமலைவனமெனப் பெய ருமிட்டான். அது கள்ளியங்காட்டிலிருந்தது. அங் குற்பத்திசெய்யப்பட்ட ஓரினவாழை இன்றும் மரு த்துமாமலைவாழையெனப்படும். இலங்கையின் மற் றெப்பகுதியிலும் அகப்படாத சில மூலிகைகள் அ வ்விடத்தில் இன்றும் அகப்படுகின்றனவென்பர்.
ாண்வே
வைத்தி
Lu FMT &ão.
மருத்து LosTLD2s) வனம்.

Page 29
சுபதிரு ஷ்டழனி
வருங்கா லநிகழ் .
48 யாழ்ப்பாணச்சரித்திரம்.
இப்படிப் பரராசசேகரன் அரசுசெய்துவரு கையில் சுபதிருஷ்டமுனிவரென்பவர் அவன் சபை ககு வந்தார். அவன் எழுந்தெதிர்கொண்டு வணங்கி அவரையுபசரித்திருத்தியபின் அவரைப் பார்த்து, “அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழு மென்றறியப் பேராசையுடையேன். தேவரீர் திரிகா லமுமுணர்ந்த மூர்த்தியாதலின் திருவாய்மலர்ந்தரு ளவேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்தான். அ வர் அரசனே நோக்கி, ‘புருஷோத்தம, நீ புண்ணிய வான், நீ இருக்கும்வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன்மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண் டாங்குமாரன் வெட்டுண்டிறப்பான். இரண்டாம்பத் தினி வயிற்றிற் பிறந்தவன் சங்கிலியின் மாயவலைக்கு ட்பட்டு அரசை அவன் கையிற் கொடுத்திடுவான். சங்கிலி கொடுங்கோலோச்சித் தன்னரசை அங்கிய தேசவாசிகளாகிய பறங்கியர்கைக்கொடுத்திறப்பன். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத் தைப் பரப்பிக் கொடுங்கோலோச்சி நாற்பது வருஷ ம் ஆளுவர். அவரை ஒல்லாந்தர் வென்று சமயவிஷ் யத்தில் அவரைப்போற் கொடியராகி நூற்றிருபது வருடம் அரசுசெய்வர். அதன்மேல் மற்முெருதேச த்தார் (புகைக்கண்ணர்-ஆங்கிலேயர்) வந்து ஒல் லாந்த ரை ஒட்டி நீதியாக அரசுசெய்வர். உன் சந்த திக்கு அரசு ஒருகாலத்தும் மீள்வதில்லை” என்ருர், இதுவே சாரமான கல்வெட்டொன்று திரிகோணம லைத் தம்பத்திலுமுள்ளது. அது மிகவும் பழமையா னது. பிற்காலத்தாரால் ஏடுகளில் மாற்றப்பட்டுத் திரிபுபெற்றுள்ள வைபவமாலைக் கூற்றுப்போல்வத 60T.g.
* 'முன்னுட்குளக்கோட்டன்மூட்டுந்திருப்பணியைப் பின்னுட்பறங்கிபிடிப்பானே-பொன்னரும் பூனைக்கண்செங்கண்புகைக்கண்ணர்போய்மாற "மானேவடுகாய்விடும்.'

யாழ்ப்பாணச்சரித்திரம். 49
* இதனை வையா (வையாபுரி ஐயர்) பாடல் என்பர். வையாபுரிபாடல் பொய்யாதென்பது பழ மொழி. வையாபுரி ஐயரென்பது அவர் இயற்பெயர். அவர் பிராமண சங்கியா சி. அவர் சுபதிருஷ்டர் சீட ராகிய சித் தையர் என்பவருக்குச் சீடர். சித்தையர்
இருந்து தவஞ்செய்தவிடம் சித்தன்கேணியென வழ ங்குகின்றது. சித்தன்கேணிக் கிராமத்திலே அவர் இருக்கும்வரையில் விஷப்பாம்புகள் செல்லுவதும் விஷங் தீண்டியிறப்பவரும் இல்லையாம். வையாபுரி ஐயர்சீடர் கோவியத்திருமேனியுடைய கொற்றனர்.
அவர்சீடர் பெரியதம்பிஐயர். அவர்கொற்றனர்
கொடுத்த மூலிகையை உண்டு நரை திரை (plu96ör
றி நூற்றிருபது வயசில் இளமையோடிறந்தவர். அவ ருக்கு நான்கு பார்ப்பாரப் பெண்களும், நான்கு வே ளாளப்பெண்களும், நான்கு கோவியப் பெண்களு மாகப் பன்னிருவர் பத்தினிமார் ஏககாலத்திலிருந் தார்கள். இவருடைய அற்புத இளமையை நோக்கி யே “பெரியதம்பி ஐயர் வாலிபத்திலே’ என்னும் பழமொழி வழங்குவதாயிற்று. பெரியதம்பி ஐயர் இருந்த வீடு வண்ணைச் சிவன்கோயிலுக்குத் தென் பாரிசத்தில் இன்றுமிருக்கின்றது. அவர் சந்ததியா ருமங்கேயிருக்கின்றர்கள்.
ஆங்கிலேய அரசு நீங்குமெல்லையிற் கைலாயநா தர் கோயில் முன்போலப் புதிதாக அமைக்கப்படு மென்றும், அதுவே அதற்கறிகுறியாமென்றும், அம் முனிவர் கூறினரென வுங் கூறப்பட்டிருக்கின்றது. வடுகர் என்றது தெலுங்கரையன்று. பூனைக்கண்ணர் செங்கண்ணர் புகைக்கண்ணர் என்று ஒவ்வொரு சா திமக்களைக் குறிசெய்திருத்தலால் வடுகென்பதும் ஒரு குறியாதல்வேண்டும். வடுகென்றது குறள்வடி வுடைய சாதியாரைப்போலும்.
7

Page 30
பிருகதீசு agrdir
கோயிற் றுாபிக்கு
side9.
50 யாழ்ப்பாணச்சரித்திரம்.
தஞ்சாவூர்ப் பிருகதீசுவரன் கோயிற் கர்ப்பக்கி ருகத்துத் தூபியிலே * உருநாட்டு வேலைப்பந்தியி லே தமிழரசர்களுடைய உருவவரிசை யிறுதியிலே 5ான்குசாதியாசருடைய வடிவம் அமைக்கப்பட்டி ருக்கின்றன. அவற்றுள் தொப்பிக்காரர் வடிவமும் ஒரு குறள்வடிவமுமிருக்கின்றன. இத்தொப்பிக்கா ாரது வருகையை, இற்றைக்கு ஆயிரம் வருஷத்துக் குமுன்னே இத்தூபியை அமைத்த தபதி உணர்ந் து சித்திரித்தது போதிசயத்துக்கிடமாயிருக்கின்ற து. இதுவும் இக்கல்வெட்டை வலியுறுத்துகின்றது. ஐரோப்பியர் இந்தியா இலங்கைப் பகுதிகளுக்கு இற்றைக்கு நானூறு வருஷத்துக்குமுன் அஃதாவ து (A, D, 1505) ல் வந்தார்கள். அதற்கு முன்னர் அவர்களுடைய வடிவம் இதுவென்று இந்திய இல ங்கை வாசிகள் கனவிலும் அறியார்கள். அங்கின மாகவும் ஆயிரம் வருஷத்துக்கு முன்னர் உணர்ந்து அவர் வடிவத்தைத் தீட்டிய தபதியின் செய்கை நம் மவர்க்கு மாத்திரமன்று, அதனைக் காணும் ஐரோப் பியர்க்கும் அதிசயம் பிறப்பிக்கின்றது. அதுகிற்க.
அவ்வருங்காலசம்பவத்தை முனிவர் கூற, அ தன்னக் கேட்டிருந்த அரசன் சிறிதுஞ் சஞ்சலப்படா து, “விதி அதுவாயின் அதனைக் கடக்கவுந் தடுக்க வும் யாவராலாகும்’ என்று கூறி அவர்ை வணங்கி
வழிவிடுக்க, அவரும் அவனை வாழ்த்திப் போனர்.
அதன்பின்னர்ச் சங்கிலி தனது துஷ்டத்துணை வரோடுசூழ்ச்சிசெய்து, பரராசசேகரனுடைய மூத் தபுத்திரனுகிய சிங்கவாகுவைக் கொலைசெய்துவிட் டால் அரசு தனக்குரியதாய் விடுமென்று துணிந்தா ன். துணிந்தபடி சமயம்பார்த்திருந்து ஒருநாள் நஞ்
* இதுபோலச் சிறந்த தூபி தென்னிந்தியாவில் இல்லை. இதன் உயரம் 195 அடி, இஃது ஆயிரம் வருஷத்துக்குமுன் Ga0T as Luli-g). Tanjore Gazetteer.

யாழ்ப்பாணச்சரித்திரம். 51
சிட்டுக் கொன் முன், சங்கிலியினது செயலென ஒரு சிங்கவா வருஞ் சந்தேகங்கொள்ளவில்லை. அரசன் தனது இ குவைத் ளையகுமானகிய பண்டாரத்தை இளவரசனுக்கி அ வனிடத்தில் அரசை ஒப்புவித்து மூத்தமகன் இறங் றது. த சோகத்தை மாற்றுமாறு தீர்த்தயாத்திரைமேற் பண்டா சென்று கும்பகோணத்தையடைந்தான். அப்பொ !
w w . 9 II Fcăr ழுது மகாமக காலமாயிருந்தமையால் சோழனும் கும்பகோ அங்கே போனன். பரராஜசேகரனேடு போயிருந்த னம்போ சங்கிலி தனது இரதத்திலேறி உலாமேற்சென்று மீ தல், ளும்போது சோழனுடைய இரதம் எதிர்ப்பட்டது. சங்கிலி தனது இரதத்தை விட்டிறங்கிச் சோழனுக்
குச் செய்யவேண்டிய வழிபாடுகளைச் செய்யாமலும்
1. பரராசசேகரராசா. 2. பண்டாரம். 3. பரநிருபசிங்கம். 4. சங்கிலி.
வழிவிலகாமலும் இரதத்தை எதிரே நிறுத்திச் சோ முனைவழிவிடச் சொன்னன். சோழன் சங்கிலியினது

Page 31
Files சிறைப் LU L-6Š.
| || Д. Т. Г. . . சேகான் சிறைப் படல்.
பரநிருப சிங்கன் சோழ னேச்சி 6opાઉs9 ட்டுத்தந் தைதம் பியரை மீட்டது.
G F Typ đổr
திறை கொடுத்
பாதிருட சிங்க?ன ஏழ்ாதிப னுக்கல்.
52 யாழ்ப்பாணச்சரித்திரம்.
விபரீத வொழுககத்தைக் கண்டு கோபங்கொண்டு அவனைப் பிடித்துச் சிறையிலிடுவித்தான். அதுகே ட்டுப் பரராசசேகரன் சோழன் பாற்சென்று அவனை விடும்படி கேட்டான். சோழன் ‘உன் வைப்பாட்டி மகனைக்கொண்டு என்னை அவமதித்தாய்” என்று
சினந்து அவனையுஞ் சிறையிலிடுவித்தான்.
அதுகேட்டுப் பாகிருபசிங்கன் தான் கொண்டு சென்ற படையைத் திரட்டிக்கொண்டுபோய்ச் சோ ழனைப் ப்ோருக்கழைத்தான். சோழனும் போருக் கெழுந்து மூன்றுநாள் யுத்தஞ் செய்தான். நான்கா நாள் பாகிருபசிங்கன் தனது சரீரத்திலே மூன்றுகா யசேதம் பெற்றும் மிக்க குரத்தோடு யுத்தஞ்செய் து சோழனைச் சிறைசெய்து தனது தந்தையோடு தம்பியையுஞ் சிறைமீட்டான். மூன்று மாசத்தின் மேல் சோழனைப பரராசசேகரனுக்குத் திறையரச னுக்கி அவனைச் சிறைவிடுத்துப் பெருந்திரவியத் தோடும் புதுச்சேனையோடும் மீண்டான். சோழனும் நெடுங்காலம் திறைகொடுத்துவந்தான்.
பரராசசேகரன் நல்லூருக்கு மீண்டவுடன் பர நிருபசிங்கன் காட்டிய பராக்கிரமத்துக்காக அவனை மெச்சி, அவனுக்குக் கள்ளியங்காடு, சண்டிருப் பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம் என்னும் ஏழு கிராமங்களையுங் தாமிரசா சனஞ்செய்து கொடுத்து அக்கிராமங்களுக்கு அதி பதியாக்கி அநேக இராசவரிசைகளுமீந்தான். அது சங்கிலிமனத்திடை ஆருவழலை மூட்டிவிட்டது. மூ ட்டியுங் காட்டாதொழுகினன்.
பரகிருபசிங்கன் வைத்தியத்தில் மகாபண்டி தன். அவன் புகழைக் கேட்டு இலங்கையரசன், “எனது தேவியை நெடுங்காலம் வருத்தும் கொடிய குலைநோயை இது சண்டவுடன் வந்து தீர்த்துப்போ கவேண்டும்” என்று அவனுக்கு கிருபம் அனுப்பி

யாழ்ப்பாணச்சரித்திரம். 53
ஞன். அவன் உடனே சென்று ஒருநேர மருந்தினல் அந்நோயைத் தீர்த்தான். அரசன் “இவ்விலங்கை பிலும் தென்னுட்டிலுமுள்ள வைத்திய சிகாமணிக ளையெல்லாம் தலைகுனியவைத்த இக்கொடிய சூலை யைத் தீர்த்த உனது சாமர்த்தியம் மெச்சத்தக்கது. உனது பெயர் இனிமேல் பரநிருபசிங்கவைத்தியரா சேந்திரன் என வழங்குவதாக’ என்று கூறி அருே கவரிசைகளும் யானைகளும் இரத்தினச்சிவிகையுங் கொடுத்தான். அன்வகளைப் பெற்றுக்கொண்டு பரங்
ருபசிங்கன் மீண்டு யாழ்ப்பாணத்தையடைந்தான்.
இஃதிங்ஙனமாக, சங்கிலி பரநிருபசிங்கன் வர முன்னே பண்டாரசக்கிர வர்த்தியைக் கொலைசெய் து அரசைத் தான் கவர்ந்துகொள்ள எண்ணி, ஒரு நாள் பண்டாரம் பூந்தோட்டத்திலே கிராயுதணுய்த் தனியே உலாவி கின்றதைக்கண்டு ஒடி அவனை வெட் டிக்கொன்றுவிட்டு அரசைக் கைக்கொண்டான். மு துமையாலே தளர்ந்த தந்தையாகிய பரராசசேகா
னும் அவனுக்கு அஞ்சி எதிர்பேசாதிருந்தான்.
பரநிருபசிங்கன் வந்தவுடன் இச்செய்தியறிந்து கோபாவேசங்கொண்டு வாளையுருவிப் போருக்கெழு ந்தான். அதுகண்டு சங்கிலி அவன் பாதங்களில் வி ழ்ந்து வணங்கி, ‘ஐயகேள்! யான்செய்தது பிழை யேயாயினும் அதுசெய்தம்ைக்கு நியாயமுண்டு. உனது அற்றமுணர்ந்து வன்னியர்கள் அண்ணனுரை (பண்டாரத்தை) க் கொலைசெய்து, பின் என்னையும் எமது தங்தையையுஞ் சிறைசெய்து அரசு கைக்கொ ள்ள வஞ்சச்சூழ்ச்சிசெய்து செய்த ஆயத்தங்களைக் கண்டு, அண்ணனுருக்கதக்ன விண்ணப்பஞ்செய் தேன். அவர் அதனே நம்பாது நடந்தனர். ஏற்ற காலம்பார்த்து வஞ்சவன்னியர்கள் அவர் தமியராய் நந்தவனத்தில் நின்றபோது அவரைக்கொன்முர்கள். பின்னர்த் தந்தையைச் சிறைசெய்ய முயன்றபோது
இலங் 6}35!!][[f சன்தே விக்குச் சூலைதீர் த தல,
சங்கிலி Lil Giċċar LT ாத் தைக் கொன்று அரசனு தல்.

Page 32
હFાh869
பரநிருப னைமந்தி ரியாக்க
சங்கிலி துரோ கம்,
54 யாழ்ப்பாணச்சரித்திரம்.
அவர்களை யான் தமியணுய் எதிர்த்து வாளுருவி ஒட் டிவிட்டுத் "தந்தையாரது தளர்ச்சியைக் கண்டன் ருே இவர்கள் இவ்வாறு துணிந்தார்’ என நினைத்து யான் அரசு கைக்கொண்டேன். உனதநுமதியின்றி அரசு கைக்கொண்டது உனது நன்மையை நோக்கி
யேயாம். அதுவே யான் செய்த பிழை; அதனைப்
பொறுத்தருள். இனி நாமிருவேமும் ஒத்தாசுசெய்
வேமாணு ல் பகைவருக்கஞ்சவேண்டுவதில்லை. என்
னேப் பெயரளவில் அரசனுக் வைத்துக்கொண்டு அர சை நீயே மந்திரியாகவிருந்து நடாத்துவாயாக, அர சிறையைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்வேம். உனக் குரிய ஏழுகிராமங்களுக்கும் நீயே அரசனகவிருப் பாயாக’ என்று கபடவிண்ணப்பஞ்செய்து அவனே மயக்கினன். பரநிருபசிங்கனும் மயங்கி வாளை உறை யிலிட்டு, அவன் கேள்விக்கிசைந்து, தனது மகன் பரராசசிங்கனை ஏழுருக்குமரசனுக்கித் தான் சங்கி லிக்கு மந்திரியானன்.
இந்தமுறையாக அரசு சிறிது காலம் நடந்தது. சங்கிலிமனத்திற் பேராசையென்னுங் குடிகேடன் புகுந்தான். சங்கிலி சேனபதிக்கும் படைத்தலைவரு க்கும் பெருநிதிகளை வாரிக்கொடுத்து அவர்களைத் தன்வசமாக்கினன். அரசிறையிற் பாதியைப் பங்கி ட்டுப் பரநிருபசிங்கத்துக்குக் சொடுத்துவந்த வழக் கத்தையொழித்து அவனுக்குச் சம்பளமாக ஒரு தொகை கொடுக்கத் தலைப்பட்டான். பரராசசிங்க
னே ஏழுரரசன் என்னும் பதத்தினின்றும் நீக்கினன்.
பரராசசேகரராசாவும் பாகிருபசிங்கமும் அவ ன் மகன் பரராசசிங்கமும் தங்களுக்குச் சங்கிலிசெ ய்த வஞ்சனைகளையெண்ணியெண்ணி மனம் புண்ணு யினர்கள். அவர்கள் படையெடுத்துச் சங்கிலியை அடக்கவோவென்முல் சேனுபதியையுஞ் சேனைகளை யும் சங்கிலி தன் வசமாக்கிக்கொண்டமையால் இய

யாழ்ப்பாணச்சரித்திரம். 55
லாதவர்களானர்கள். ஆகியும் பரராசசேகரன் தான் சோழன்பாற் கொண்ட திறயை மேலனுப்பாவகை அவனுக்கு கிருபம் போக்கித் தடுத்தான். அது கேட்டுச் சோழனுமுவகை பூத்தான். (இச்சோழன் AG5 Firgig gif,551 tility. (Tanjore Gazetteer) by ச்சுதப்ப்னுதல் வேண்டும். அவன் நாகபட்டினத்தில் பாரசீகரோடு யுத்தஞ்செய்ததாகக் கூறப்பட்டிருக் கின்றது. பரராசசேகரன் என்னும் பெயரைச் சிலா சாசன விற்பன்னர் பாரசீகர் என விபரீதமாக வாசி
த்தா ராதல்வேண்டும்.)
அதன்பின்னர்ப் பரராசசேகரன் தன்னிடத்து ள்ள திரவியங்களையும் முடி முதலிய அரிய ஆடர ணங்களையும் சங்கிலிக்குத் தெரியாமல் அகற்றிக் கொண்டுபோய்ப் பிலத்துவாரத்தில் சேமித்துவை த்துவிட்டு, ஒருதொகைத் திரவியத்தோடு திருக்கே
தீசர்ஞ் சென்று அங்கே சுவாமிதரிசனம்பண்ணிக்
கொண்டு இராமேச்சரஞ் சென்முன். அங்கே சித்தி ரக்கான்மண்டபமும் கர்ப்பக்கிருகமும் பழுதுற்றி ருப்பக் கண்டு அவைகளைப் புதுக்குமாறு அத்திர வியத்தைத் தனது மந்திரியிடங்கொடுத்து அவனை அங்கே வைத்துவிட்டு மீண்டான். இவன் மீளுமுன் திருக்கேதீச்சராலயத்தையும் பாலாவியின் மேற்குக் கரையையும் கடல்கொண்டழித்தது. இது நிகழ்ந் தது 1540 ல் என்பர். அதன்மேலும் பூசை ஒருவா று நடந்துவந்தது. A, D. 1589 ல் பூசை நிறுத்தப்ப ட்டது. (விசுவநாதசாஸ்திரியார் சம்பவக்குறிப்பு.)
யாழ்ப்பாணத்தரசர்களாகிய ஆரியசக்கிர வர்த் திகளெல்லாம் திரிகோணமலை திருக்கேதீச்சரம் இ ராமேச்சரம் என்னும் இம்மூன்று தலங்களையும் தி னங்தோறும் ஒவ்வொன்முக முறையே தரிசித்து உச்சிப்போசனஞ்செய்யும் கியமமுடையராயிருந்தா ர்கள் எனறும், அதற்காக பந்திர அன்னப்பறவை
சோழ 2sm落配 றைநீக் 856)
L如辽J唯呼 சேகரன் தன்திரவி யங்களை மறைத்
இராமே ச்சாழம் u பாணத் தாசரும்.

Page 33
திருக்கே
நீச்சாம்.
திருக்கே åt For பரிபால
ce
56 யாழ்ப்பாணச்சரித்திரம்.
யொனறு வைத்திருந்தார்களென்றும், அவவனனப பறவையிலேறியிருந்து யந்திரத்தை முறுக்க அஃது அங் தரத்தெழுந்து செலுத்தியவழியில் ஆகாயத் திற் பறக்குமென்றும், அதைக்கொண்டே மூன்று நாழிகையில் இராமேச்சரதரிசனமுடித்து மீண்டுவ
ருவரென்றும், அந்த யந்திரப்பறவையைக்கொண்
டே பரநிருபசிங்கன் கண்டியரசனிடம் போய் மீண் டானென்றும், அதனைச் சங்கிலி பொருமையாற் கவர்ந்து அக்கினிக்கிரையாக்கினுனென்றும் கூறுவர் இராமேச்சரத்திற் சுவாமிக்கு அபிஷேகத்துக்குத் தினந்தோறும் நெடுந்தீவிலிருந்து பாலும், பூசைக் குக் கச்சைத்தீவிலிருந்து பூவும் யாழ்ப்பாணத்தாச ரால் அனுப்பப்பட்டன. நெடுந்தீவிற் பசுக்கிடையும், கச்சைத்தீவில் நந்தவனமுமிருந்தன. பசுக்கிடையிரு
ந்தமையால நெடுந்தீவைப் பறங்கிக்காரர் பசுத்தீவு
(Cow Island) or air ut T if u9 at i.
திருக்கேதீச்சரம் பூர்வம் கேதுவென்னும் 51-5 ராசனல் கிருமிக்கப்பட்டது. இராவணனுக்குப்பின் இயக்கரும் நாகர்களுமாசு செய்தார்கள். விசயரா சன் இலங்கைக்கு இற்றைக்கு இரண்டாயிரத்தை ஞ்ஆாறு வருஷங்களுக்குமுன் வந்தபோது இவ்வா லயங் கிலமாயிருந்ததென முன்னுங் கூறினும், மகா வமிசமும் அவ்வாறே கூறுகின்றது. அற்ருயின் இ தன் பழமை இத்துக்ணயதென்று கூறவேண்டா.
இது விஜயராசனல் சீரணுேத்தாரணஞ் செய் து கும்பாபிஷேகம் பண்ணப்பட்டது. பின்வந்த அ ரசர் பெரும்பாலும் பெளத்தர்களாயிருந்தமையால் இவ்வாலயத்தைப் பரிபாலியாது விட்டார்கள். இத னைப் பெரும்பாலும் பரிபாலித்து வந்தவர்கள் மா தோட்டத்து வேளாளர்கள். இதனை இடையிடை யே இலங்கையரசரும் யாழ்ப்பாணத்தா சரும் திரு த்திவந்தார்கள். திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் இவ்வாலயத்தைப் பாடியகாலத்தில் இத்தலமிருந்த

யாழ்ப்பாணச்சரித்திரம். 57
மாதோட்டங்களினது பொலிவு மிகப்பெரிதாயிருங் ததென்பது அவர்பதிகத்தால்* நன்முக விளங்குகி ன்றது. அவர்காலம் இற்றைக்கு நாலாயிரம் வருஷ த்துக்கு முந்தியது. இற்றைக்கு இரண்டாயிரம்வரு ஷத்துக்கு முன் விளங்கிய சுந்தரமூர்த்திநாயனர் தாம்பாடியருளிய தேவாரத்திலும் இங்நகரத்தின் பெருவளத்தையும் அதன் துறையிலே வாணிகத்தி ன்பொருட்டு வந்து நெருங்கிக்கிடக்கும் மாக்கலங்க ளின் தொகுதியையும் குறித்திருக்கின்ருர், அக்கோ யிலிருந்தவிடத்துக்குச் சமீபமாக இப்போது சிறிய சிவாலயமொன்று நூதனப்பிரதிஷ்டையாகச் செய் யப்பட்டிருக்கின்றது. அதுங்ற்க,
A. D. 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவனைத் தலைவனுகக்கொண்டு, காலியை அடைந்தனர். (இல ங்கை மாகாளிக்குரியவிடம் காலியெனப்பட்டது.) அப்போது தர்மபராக்கிரமவாகுவென்பவன் தென் இலங்கையரசனுய்க் கோட்டைக்காடென்னு நகரத் திலிருந் தரசியற்றுவானுயினன். போர்த்துக்கேயர் அவன் பால் பண்டசாலை கட்ட விடைகொண்டு கொ ழும்பிலே கோட்டையொன்று கட்டினர். போர்த் துக்கேயரைப் பறங்கிகளென்பது அக்காலந்தொ
兴 பூவுளானுமப்பொருகடல்வண்ணனும்புவியிடந்தெழுந் தோடி, மேவிநாடிநுன்னடியிணைகாண்கிலாவித்தகமென்னகு ம், மாவும்பூகமுங்கதலியுநெருங்குமாதோட்டநன்னகர்மன்னி த், தேவிதன்னெடுந் திருந்துகேதீச்சரத் திருந்தவெம்பெருமா னே. (திருஞானசம்பந்தர்)
அங்கம்மொழியன்னாவரமார்தொழுதேத்த வங்கம்மலிகின்றகடன்மாதோட்டநன்னகரில் பங்கஞ்செய்தபிறைகுடினன்பாலாவியின்கரைமேல் செங்கண்ணாவசைத்தான்றிருக்கேதீச்சாத்தானே.
(சுந்தரமூர்த்திநாயனர்) 8
தேவா ாம்.
போர்த் துக்கே
யர்-பற ங்கிகள்.
தர்மப mrarāiġar மவாகு
பறங்கி கள்கோ ட்டைகட் டல்.

Page 34
துருக்கர்.
பறங்கிக ரூம்துரு க்கரும்யு த்தம்.
புவனேக வாகுமா ணம்
தர்மபா ல?னக்கி றிஸ்தவ னுக்கல்.
மன்னுருக் குக்கிறில் தகுருவரு
• له6
58 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ட்டவழக்கு. துருக்கர் சிலர் ஒருபடையாகத் திர ண்டு காதர்வாவா என்பவனத் தலைவனுகக்கொண்டு மரக்கலங்களிலேறிச் சலாபத்தை யடைந்தார்கள். அவர்களைத் தர்மபராக்கிரமவாகு படை எதிர்த்துக் காதர்வாவாவைக் கொன்று வீரரைச் சிறைசெய்து கோட்டைக்காட்டுக்குக் கொண்டேகிற்று. 1517 ல் துருக்கர் மீண்டுமொருபடையோடு பறங்கிகள் கட் டிய கோட்டையை வளைந்தனர். அப்படையைப்பற ங்கிகள் முரிந்தோடத் தாக்கினர். 1520 ல் மீண்டுங் துருக்கர் ஒருபடையோடு வந்து அக்கோட்டையை வளைந்தனர். அப்பொழுதும் தோல்வியுற்றனர். அ தன்மேல் பறங்கிகள் தமது சமயத்தைப் பரப்பத் தொட்ங்கினர். சிங்கள அரசனுகிய புவனேகவாகு வினது மகன் தர்மபாலனைக் கிறிஸ்தவனுக்கித் தம் மெண்ணமெல்லாம் முடிக்கும்பொருட்டுப் புவனே கவாகுவைத் தற்செயலாகச் சுட்டபாவனையாகச் சு ட்டுக்கொன்றனர். பின்னர்த் தர்மபாலனைக் கிறிஸ் தவனுக்கினர். அதுகண்டு அவன் பிரதானிகளுஞ் சிலர் கிறிஸ்தவராயினர். அதுகாறும் மேற்சாதியார் கீழ்ச்சாதியாரை விவாகஞ்செய்யும் வழக்கமில்லை. அ தனையும் மாற்றிக் கீழை மேலாகவும் மேலைக் கீழாக வும் வைத்தனர். இவையெல்லாம் புவனேகவாகுவி னது துர்ப்பலத்தால் இலங்கைக்குவந்தகேடுகளாம்.
பறங்கிகள் மெல்லமெல்ல அநேக விடங்களைக் கவர்ந்து தமதாக்கித் தம்மரசு செலுத்தினர். பறங் கிகள் 1543 ல் மன்னருக்கு ஒரு கிறிஸ்த குருவை அனுப்பி அங்குள்ள கடையர் சிலரைக் கிறிஸ்தவ ராக்கினர். மன்னர் பாழ்ப்பாணத்தரசுக்குட்பட்ட தாதலின் சங்கிலி மன்னருக்குச்சென்று கிறிஸ்த குருவை அங்குகின்றுமோட்டிக் கிறிஸ்தவர்களாயி னேரையுங் தண்டித்து ‘இனி மன்னரிலே கிறிஸ்த குருமார் அடிவைத்தால் கொடியதண்டம் பெறு வர்” என்றும் ஆஞ்ஞை செய்தான். அவன் அங்கு

யாழ்ப்பாணச்சரித்திரம். 59
கின்று மீண்டபின்னர்த் தூற்றுக்குடியிலிருந்து கிறி ஸ்தகுருவொருவர் வந்து கடையரனேவரையும் கிறி ஸ்தவராக்கினர். அதுகேட்டுச் சங்கிலி கோபாவே சங்கொண்டு சென்று தன்னுணைகடந்து கிங்தை புரிந் த அறுநூறுபேருக்குக் கொலைத்தண்டம் விதித்தா ன். அவர் கொலையுண்ட செய்தியைக் குருவானவர் தப்பியோடிச் சவேரியாரென்னும் மகாகுருவுக்கு அ றிவித்தார். 1548 ல் கோவையிலிருந்து சவேரியார் வந்து மன்னுரிலிறங்கியும் சங்கிலியின் ஆணையைக் கடக்க மன்னர்வாசிகள் பிரியப்படாமையால் அங்கு கின்றும் புறப்பட்டு யாழ்ப்பாணத்தையடைந்து சங் கிலியைக்கண்டு அவனப் பறங்கியரசனேடு உறவா டும்படி கேட்டார். அவன் அதற்கிசைந்தான்போ ன்று நடித்து ஒரு தூதனைக் கோவைக்கனுப்பினன்.
கோவை அரசன் அத்தூதனை மரியாதையோ டேற்றுத் தனது நட்புக்கறிகுறியாகச் சிலபொருள் களோடு ஒரு கிருபமும் அனுப்பிஞன். சிலகாலங் கழித்துப் பறங்கிகள் ஒருகோயில்கட்ட இடங்கேட் டனர். சங்கிலி அது கூடாதென அவரை ஒட்டிவி ட்டான். சவேரியார் அவ்வளவில் மனஞ்சலித்து இ லங்கையைவிட்டுச் சீனதேசஞ்சென்று அங்கே கா ங் தன் பட்டினத்தில் 1552 ல் தேகவியோகமாயினர்.
அதன்பின்னர்ப் பறங்கிகள் நெடுங்காலம் பே சாதிருந்து 1564 ல் ஒருபடையோடு யாழ்ப்பாணத் தையடைந்தனர். சங்கிலி சமாதானம் பேசிப் பதி னுேராயிரம் பவுனும் சில அரிய கிதிகளுங் கொடுத் தான். அவ்வளவிற் பறங்கிகள் மீண்டனர். அதன் பின் சங்கிலி தனது குடைக்கீழ் வாழ்ந்த சிங்களர் சாவகர் வன்னியர்கள் மேலும் ஐயங்கொண்டு அவர் களையுங் தனது நாட்டைவிட்டோட்டினன். சாவகர் இருந்தவிடம் சாவகச்சேரியென வழங்குகின்றது. இச்சாவகர் முன் யாழ்ப்பாணத்தில் அரசுசெய்த வி சயவாகுவால் படைவீரராகக் கொண்டுவந்து குடி
65 அறுநூறு கிறிஸ்த வரைக் கொன் 四莎i·
சவேரி பார்.
சவேரி யார்சீன ஞ்சென்
Fides பறங்கிக GenCS சமாதா GTo
சாவகர்.

Page 35
ਹੈ06u66 பர்வரவு
49வன்னி tuits Les ல்மாளல்.
கரைப் பிட்டி வ Girafuu çŠr.
60 யாழ்ப்பாணச்சரித்திரம்.
யேற்றப்பட்டவர்கள். சாவகன்கோட்டையிலும் சி லர் இருந்தார்கள். அவ்விடம் இப்போது சாவாங் கோட்டையென வழங்குகின்றது. (சாவகர்-யாவுகர்)
இச்சமயத்தில் பாண்டிநாட்டிலிருந்து ஐம்பது வன்னயர் தமது மனமக்களோடு புறப்பட்டுவந்த னர். அவருள் நாற்பத்தொன்பது வன்னியர் நெடுங் தீவுக்குச் சமீபத்திலே மரக்கலங்கவிழ்ந்திறந்தனர். அவர் மனைவிமாரும் ஒருவன்னியனும் அவன் மனை வி அம்மைநாச்சியும் அவர் ஏவலாட்களும் வேறு மர்க்கலத்திலேறிவந்தமையால் அவர்கள் க்ஷேமமா க யாழ்ப்பாணத்தையடைந்தார்கள். இறந்தவன் னியருடைய மனைவிமார் தமது ஏவலாட்களோடு யாழ்ப்பாணத்திலே பலவிடங்களிற் குடிகொண்டு வறியராய்க் காலங்கழித்தார்கள்.
எஞ்சிய வன்னியன கந்தரோடையிலே தங்கி
ன்ை. அவன் சங்கிலிபடையிற் சேர்ந்து சிறு தலைவ
னகிக் கரைப்பிட்டியிலிருந்தான். அவனுடைய ப டையில் அறுபது நம்பிகளிருந்தார்கள். அவருள் ஒருவனுடைய புத்திரியைக் கரைப்பிட்டிவன்னி யன் கற்புச்சிதைத்தான். அதுகேட்டு அங்கம்பி அவ் வன்னியனைக் கொன்முன். அவன் மனைவி அம்மை நாய்ச்சி அச்சோகத்தால் வாளையெடுத்துத் தறகொ லைசெய் துயிர்விட்டாள். (கம்பி-ஆண்டிகளுள் ஒரு சாதி)
இதனைக் கேள்வியுற்ற சங்கிலி தண்டாதிகா ரியை அனுப்பி, அந்நம்பியைக் கொலைசெய்வித்து மற்றநம்பிகளைப் படைச்சேவகத்தினின்றும் விலக் கிக், கரைப்பிட்டி வன்னியனுக்குப் புத்திரரில்லா மையால், அவன் திரவியத்தையும் அரசுக்குரியதா க்கினன். படைச்சேவகத்தினின்று விலக்கப்பட்ட நம்பிகள் அடுத்த சான்முரக்குப்பத்துக்குப் போய்ச் சான் முர்தொழிலைமேற்கொண்டு, நளவரென்னுஞ் சா

யாழ்ப்பாணச்சரித்திரம். 6.
தியாராயினரென்பர். நறவர் என்னுஞ் சொல்லே நள வர் எனத் திரிந்து வழங்குகின்றது. நறவு-கள். கள் விற்போர் எனபது அதன்பொருள். அவர்கள் முத லிற் கட்குடகு சுமந்து சென்று விற்றுப் பின் மர மேறுந் தொழிலையும் பயின் முராதல்வேண்டும். சா ன்ருர் யாழ்ப்பாண நாட்டின் கீழ்பாகமாகிய பச்சிலை ப்பள்ளி முதலியவிடங்களில் இன்றும் மரமேறுபவ ர்களாகவே வாழ்கின்றனர். மேல்பாகத்துச் சான் முர், தந்தொழிலை இங்நம்பிகளும் பள்ளரும்கவர்ந்து கொண்டமையால், செக்காட்டி எண்ணெய் விற்குக் தொழிலை மேற்கொண்டனர் பள்ளர் ஆதியிற் பயி ரிடும் பண்ணையாட்களாகவே வந்தார்கள். பின்னு ளில் வேளாளர் பெருகிச் சிறுகிலமுடையராகித் தா மே உழுதுண்டு வாழ்வாராயினர். வேளாளர் உழு துண்டுவாழ்வாரும் உழுவித்துண்பாருமென இருவ கையர். உழுவித்துண் பார் சிலரும் உழுதுண்பார் பலருமாகப் பள்ளர் பண்ணையாளாகிய தொழிலை விடுத்து மரமேறுங் தொழிலைக் கைக்கொண்டனர். (சாற்முர்-சான்றர்) சாறு-கள், அது நிற்க,
சங்கிலியினது ஒழுக்கமும் அரசுமுறையும் சனங்களுக்கு அருவருப்பாயின. அவனுக்கு அதி காரமும் சுவாதீனமும் அதிகரிக்க அவன் கொடு மையும் அதிகரிப்பதாயிற்று குடிகளோ அவன் கொடுங்கோன்மையைப் பொறுக்கமுடியாதவராய்ப் பரநிருபசிங்கன்பாற் சென்று முறையிட்டழுதார் கள். பரநிருபசிங்கன் அவர்களைக் காப்பதற்கும் அவர்கள் குறைகளைத் தீர்ப்பதற்கும் பல உபாயங் களையுங் தேடினன். சங்கிலிக்குப் பலமுறையும் புத்தி கூறினன். அவன் நட்பினரைக் கொண்டும் நன்மதி புகட்டினன். ஈற்றில் அவன் குருவைக்கொ ண்டும் வரற்பால கேடுகளை எடுத்துபதேசித்தான். எல்லாம் செவிடன் காதில் ஒதிய மந்திரமாயிற்று.
ஈற்றில் பரநிருபசிங்கன் தான், கெடினும், தன்குடி
நளவர். 西四auf...
&#া ষ্ট্ৰেীgাঁ”
பள்ளர்.
Ganu Qatar G.
சங்கிலி Gastr06i
(ể5íTđổi

Page 36
மடைப்
Li as as it
மறவர்.
62 யாழ்ப்பாணச்சரித்திரம்.
கள் கேடுமுதிருத்தலே தக்கதெனத் துணிந்தான். பறங்கிகளைக்கொண்டு புத்தி புகட்டுவதே இனிக்க ருமமென முடித்தான். அவ்வாறே பறங்கிப் பிரதி நிதியோடு நிருபமூலமாக நட்பாடி வந்தான்.
இப்படியிருக்குஞ்சமயத்தில், பாகிருபசிங்கன், தன்னைச் ச்ங்கிலி நஞ்சிட்டுக்கொல்லச் சூழ்ச்சிசெய் திருக்கின்றனெனக் கேட்டுத், தனது மடைப்பள் ளிக்குச் சங்கிலி அரமனையிலிருந்து எவரும் செல் லலாகாதெனக் கட்டளையிட்டான். அவன் இராசபக் திக்குரிய உயர்குலவேளாளருள்ளே விசுவாசமுள்ள வர்களைத் தெரிந்தெடுத்து, மடைப்பள்ளியதிகாரி கள், உக்கிமாணகாரர்களாக நியமித்து, முன்னிரு ந்தவர்களையெல்லாம் நீக்கினன். அம்மடைப்பள்ளி அதிகாரிகள் உக்கிராணகாரர்களுக்கு இராசமடை ப்பள்ளியாரென்றும், தனது குமாரனுடைய மடை ப்பள்ளியாருக்குக் குமாரமடைப்பள்ளியாரென்றும் மந்திரசங்கத்தாருடைய மடைப்பள்ளியுத்தியோக த்தருக்குச் சங்கமடைப்பள்ளியாரென்றும், பொது” மடைப்பள்ளியுத்தியோகத்தருக்குச் சர்வமடைப்ப ள்ளியாரென்றும் பட்டமளித்தான். இராசமடைப் பள்ளியாரும் குமாரமடைபபள்ளியாருமே பரநிருப சிங்கனுக்கும் அவன் மகன் பாராசசிங்கனுக்கும் உறுதிச்சுறறமாய் விளங்கினர்கள்.
இப்படியிருக்கையில், மறவன்புலவிலிருந்த மற வர்கள், கிராமங்களிற் புகுந்து களவு செய்யவுங் கொள்ளையிடவுங் தொடங்கினர்கள். அவர்கள்செய் தி சங்கிலி செவிப்பட, அவன் உடனே அவ்விடஞ் சென்று அவர்களைப் பிடித்துச் சிறையிலிட்டான். சிலர் தப்பியோடிப் பாண்டியன் * தாழ்வுக்காட்டில் ஒளித்தார்கள். இதனுல் அவ்விடம் அக்காலத்திலே அடர்ந்த காடாயிருந்ததாகத் தெரிகின்றது. இடை
* முன்னே பாண்டியன்வந்து போர்செய்து தோற்றுத் தாழ்ந்தவிடம்.

யாழ்ப்பாணச்சரித்திரம். 63
யிடையே சங்கிலி இவ்வாறு குடிகளுடைய துன்ப த்தை கிவிர்த்திசெய்தானுயினும், அவன் அரசு பெ ரும்பாலும் கொடுங்கோன்மையுடையதா யிருந்த மையால், அநேக குடிகள் “கொடுங்கோன் மன்னர் வாழுநாட்டிற் கடும்புலிவாழுங் காடுநன்றே" என் அறு அவன் நாட்டைவிட்டு நீங்கிச் சோழநாடும் சிங்களநாடும் நோக்கிச் சென்றனர். அது நிகழ்ந்து சிலநாளின்மேல் பாண்டிநாட்டிற் கொடிய பஞ்ச மொன்றுண்டாயிற்று. அதனல் அங்கிருந்து அகே ககுடிகள் புறப்பட்டுத் தோணியேறி யாழ்ப்பாண த்தையடைந்து அரசன் அநுமதியோடு பலவூர்க ளிலுங் குடியேறினர்கள். இச்சமயத்தில் தொண் டைநாட்டிலிருந்து பன்னிரண்டு கருணிகரும் தங் குடும்பங்களுடன் வந்து சேர்ந்தார்கள். அவர்களு க்குச்சங்கிலியரசன் அப்போது காடாயிருந்த கரண வாயைக் கொடுத்தான். அவர்கள் பரம்பரைச் சை வவேளாளருள் ஒருபகுதியார். அவர்களை உடுப்பி ட்டியைச்சேர்ந்த பன்னிரண்டு குறிச்சிக்கும் கரு ணிகராக்கினன். (கருணிகர்-கணக்கர்) கருணிகர் வாயில் என்னும் பெயர் கரணவாயென மருவிவழ ங்குகின்றது. கருணிகர்கள் தமிழரசு போனபின்ன ர்ச் சைவ குருக்கள் மாராகிப் பெருஞ் சிறப்பும் செ
ல்வமுமுடையாாய் விளங்குகின்றனர்.
ஒருநாள் வடமராட்சிச் சனங்களுள்ளே உண் டாகிய ஒரு சலகத்தை விசாரித்துத் தீர்க்குமாறு சங்கிலிபோய் மீண்டுவரும்போது வாச்சியகாரர் கள் ளியங்காட்டெல்லையில் வாச்சியத்தை நிறுத்தினர் கள். உடனே சங்கிலி வாச்சியத்தை நிறுத்திய கார ணம் யாதென வினவினன். அதற்கு வாச்சியகாரர் “மகாராசாவே, இவ்விடம் பரநிருபசிங்கராசாவு டைய எல்லையாதலின் வழக்கம்போல் நிறுத்தினுேம்’ என்றர்கள். அதுகேட்ட சங்கிலி “பரநிருபசிங்க
புதுக்கு டிகள்.
கருணிகர்
சைவகு ருக்கள்.
alsT ட்சிக் கல
கம்.

Page 37
சங்கிலி
p60s) Gs (6.
பரநிருப சிங்கன் சத்திய ஞ்செய்
காக்கை வன்னிய ன் துரோ கம்.
பறங்கி
64 யாழ்ப்பாணச்சரித்திரம்.
னைத் தொலைத்தாலன்றி இச்சங்கடங் தீராது” என மனத்துளெண்ணிப் பேசாது சென்றன்.
இது நிகழ்ந்து சிலநாளில், சங்கிலி தனது மந் திரிகளுள் ஒருவனகிய அப்பாமுதலியினது புத்திரி யுடைய வடிவழகுகளைக் கேள்வியுற்று, அவளைக்கள விற்கவரக் காலம்பார்த்தும் தூதுபோக்கியு மிருங் தான். அதனை அவள் தனது தந்தைக்கு அறிவிக்க, அவன் அவளைப் பாகிருபசிங்கனுடைய அரமனைக் குக்கொண்டுபோ யடைக்கலம்வைத்து, அவனைகோ க்கி, “வேந்த, என்னேயும் இக்கன்னிகையையும் அ வள் கற்பையும் எனது குடும்பத்தின் பெருமையை யுங் காத்தருள்” என்றழுது விண்ணப்பஞ்செய்தா ன். பாகிருபசிங்கன் அப்பாமுதலிக்கு அபயங்கொ டுத்துச் ‘சங்கிலியினது கொடுமையெல்லாம் பொ றுத்தேன். இக்கொடுமை சிறிதும் பொறுக்கமாட் டேன். அவனை அடக்கத் துணிந்தேன். இதுசெய் யேனுயின் அடைக்கலத்துரோகஞ் செய்தார் புகும் நாகம் புகுவேன்? ன்ன்று சத்தியமுஞ் செய்தான் உடனே ஒரு நிருபமெழுதி “இதனை ஊர்காவறலு றைக் காவல்பூண்டிருக்கும் காக்கைவன்னியனிடஞ சேர்ப்பி? என்று கூறி, அப்பாகையிற் கொடுத்தா ன். அப்பாவும் அதனைத் தனக்கு விசுவாசமுள்ள வொரு தூதனிடங் கொடுத்தனுப்பினன். காக்கை வன்னியன் அதனை வாங்கி வாசித்துப் பரநிருபசிங் கனுக்கு உத்தரமனுப்பிவிட்டு, அடுத்தநாளுதயத் தில் மரக்கலமேறித் தரங்கம்பாடியையடைந்து பற ங்கிப் பிரதிநிதியைக் கண்டு கலந்து, அவர்கள் வரு தற்குக் காலநிச்சயம் பண்ணிக்கொண்டு மீண்டுவந்து யாது மறியாதான்போன்று தன் அதிகாரத்தில் அம ர்ந்தான். -
உரியகாலத்தில் காக்கை வன்னியன் சொல்லிய சூழ்ச்சிப்படி பறங்கிகள் வர்த்தகவேடமிட்டு வினே

யாழ்ப்பாணச்சரித்திரம். 65
தமான பண்டங்களோடு பண்ணைத்துறையில் வந்தி றங்கினர். பறங்கிகள் உடனே சங்கிலியைத் தரிசித் து வணங்கிகின்று, “நாங்கள் வர்த்தகர்கள்; மகா ராசாவுடைய அநுமதிபெற்று இந்நாட்டில் பண்ட ங்கள் விற்கவும் பண்டங்கள் கொள்ளவும் எண்ணிச் சமுகத்தையடைந்தேம்’ என்று விண்ணப்பஞ்செ ய்தார்கள். அதுகேட்ட சங்கிலி “நீங்கள் அங்கிய தேசவாசிகள்; வர்த்தகர் என்கின்றீர்கள். உங்கள் கருத்து வேமுென்ருரயிருக்கலாம். ஆதலால் உங்களை நம்புதல் தகாதகருமம்’ என்ரு?ன். பரநிருபசிங்கன் ‘இவர்கள் கொழும்பிற் கோட்டைகட்டி அரசு செய் யும் பறங்கிகளைச் சேர்ந்தவர்களல்லர். இவர்கள் வர்த்தகர்களே. இவர்கள் எமது நாட்டில் வர்த்தக ஞ்செய்யின் எமது அரசுக்கும் எமது நாட்டுக்கும் நன்மையுண்டாகும். ஆதலால் மருது அநுமதிகொ டுத்தல் நன்று’ என்ரு?ன். சங்கிலி அதற்கிசைந்து அவர்களை நோக்கி, “நீங்கள் கூறுவதுண்மையா ல்ை பகற்காலத்தில் மாத்திரம் எனது நகரத்தில் வர்த்தகஞ்செய்து பொழுதுபடுமுன்னே உங்கள் மரக்கலத்துக்கு மீளுதல்வேண்டும். பொழுதுபட்ட பின்னர் எனது நாட்டிலே தங்கக்காணின் கொடி யதண்டம்பெறுவீர்” என்முன், பறங்கிகள் மகிழ்ந்து வணங்கித் தமது மரக்கலத்துக்கு மீண்டு அடுத்த நாள்முதல் அவ்வாறே வர்த்தகஞ்செய்துவந்தார்கள்.
ஒருநாள், அவர்கள் “இராசா சாந்தமாயினன் இனி அவனை வசமாக்குவோம்” என்று துணிந்து, நல்ல பட்டாடைகளும் வாசனைத் திரவியங்களும் பாத காணிக்கையாகக் கொண்டு சங்கிலி கொலும ண்டபஞ் சென்று வணங்கி, அவைகளை அவன் சமு கத்தில் வைத்து, “இவைகளை அங்கீகரித்தல்வேண் டும்” என்று விண்ணப்பஞ்செய்து கின் முர்கள். சங் கிலி அவைகளை உவந்தேற்முன். அதுகண்டு பறங்கி
9
பறங்கிக ள்விண்
ணப்பம்
சங்கிலி கட்டளை.

Page 38
பறங்கிக ள்வீடுக ட்டஅனு மதிபெ றல்.
பறங்கிக ள்கோட் டைகட் டல்.
side.9
பறங்கிக dirGas Ti”
SNL-60)ш
க்காணல்.
66 யாழ்ப்பாணச்சரித்திரம்.
கள் தமதெண்ணம் கிறைவேறினதென்றகமகிழ்ந்து, “மகாராசர்வே, பகலெல்லாம் உணவின்றி வர்த்தக ஞ்செய்து, இரவிலே எங்கள் கப்பலிற் சென்றுபோ சனஞ்செய்து அங்கேயே கித்திரைசெய்து வருகின் முேம், அது பெருங் கஷ்டமாகவிருக்கின்றது. ஆத லால் கரையிலே ஒரு சிறுவிடு கட்டி அதிலிருந்து வர்த்தகஞ்செய்ய எங்களுக்கு அநுமதி தந்தருள வேண்டும்” என்று விண்ணப்பஞ்செய்தார்கள். அ வ்வாருகுகவென்று சங்கிலி அவர்களுக்கு அநுமதி கொடுத்து இடமுமெல்லையுங் குறித்துவிட்டான். அவ்விடம் இப்போது கோட்டையிருக்குமிடமே. அந்நாளில் அதுவும அதனயலும் மிருகங்கன் சஞ் சரிக்கும் அடர்ந்த காடாயிருந்தன. அவ்வாறே பற ங்கிகள் 1680 ல் அக்காட்டிலே வீடுகட்டுவார்போல மண்ணினல் ஒரு கோட்டைகட்டி, ஆயுதங்களும் வெடிமருந்துகளும் வேண்டியமட்டுஞ் சேகாஞ்செ ய்து, படைவீரரையும் இருத்திக் காலம்பார்த்திரு ந்தார்கள். சங்கிலிக்கு இச்செய்தி சிறிதும் புலப்ப டாவகை வழக்கம்போலப் பறங்கிகள் நகரத்திற்செ ன்று வர்த்தகஞ் செய்து வந்தார்கள்.
ஒருநாள் சங்கிலி வேட்டையாடிக் கடலோர மாகத் தனது பரிவாரத்தோடு குதிரைமேல் வந்தா ன். அவன் பறங்கிகள் கோட்டையையும் கொடியை யுங்கண்டான். புறத்தே வந்த துண்வரை நோக்கி, இஃதென்னவென்முன். அவர்கள் பறங்கிகளுறைவி டமென்முர்கள், சங்கிலி கண்கள் தீயெழச் சிவந்தன. குதிரையைத் தூண்டினன். அக்கோட்டைவாயில் எதிரே வந்தது. பறங்கித்தலைவனும் எதிர்ப்பட் டான். யாது செய்தன? கோட்டைகட்ட அது மதி தந்தார் யார்? என்முன் பறங்கித்தலைவன் சிறி துங் கூசாது நீயே தந்தாய் என் முன் இதனை இ க்கணத்தே இடித்துவிடக் கடவையெனச் சங்கிலி அதட்டினன். பறங்கித்தலைவன் இடிப்பதில்லையென்

யாழ்ப்பாணச்சரித்திரம். 67
முன். சங்கிலி, உனது கபடத்தையும் வீரத்தையும் நாளையறிவேன் எனக் கூறிக் கோபாவேசனுய்த்தன தாமனேசேர்ந்து சேனுபதியை அழைத்து, நாளை உ தயத்தில் பறங்கிகளோடு யுத்தத்துக்கு ஆயத்தன யிருவென்று கட்டளையிடடான். சேனபதியும் தன துபடைகளை அணிவகுத்துக்கொண்டு பேரிகை மு ழங்கவும் வீரர்கள் ஆரவாரிக்கவும் சென்று, வீரமா காளிகோயில் மேலைவெளியிலே கடல்போலப் பாப் பிகின்முன், பறகிகிகளும் தமது சேனயைத் துப்பா க்கி கையிலே தாங்கிச் செல்ல நடத்தி எதிரூன்றி னர்கள்: சங்கிலிபடை அம்புகளையும் கவணினுற் கல் லுகளையும், வலிய வளைகளையும் பிரயோகித்தார் கள். பறங்கிகள் தமது திப்பாக்கியினுற் குண்டுக ளைப் பிரயோகித்தார்கள். இருபக்கத்திலும் அதே
கர் காயசேதமும், சிலர் உயிர்ச்சேதமுமுற்ருர்கள்.
முதல்நாட்போரில் வெற்றிதோல்வி காணுமுன் சூரியன் அஸ்தமயமாயிற்று. இரண்டாநாளும் இவ் வாறு போர்செய்தனர். பறங்கிகள் தமது துப்பாக் கியை இலக்குக்குநீட்ட, ஒவ்வொரு துப்பாக்கிக் கும் ஒவ்வோராள் கின்று திரிவாய்க்கு நெருப்புவை க்க, அவை சில பற்றியும் இலக்குத்தப்பியும் சில பற்ருமலும் பொய்த்தன. சில வெடித்துக் குண்டுக ளைச் செலுத்தின. இதற்கிடையில் அம்புகளும் கவ ண்கல்லுகளும் எறியாயுதங்களும் நஞ்சூட்டிய சட் டிகளும் வளைதடியென்னுஞ் சக்கரங்களும் சங்கிலி படையினின்றும் சென்று தாக்கின. பறங்கிகள் இவற்ருல் தாகஞண்டும் கலங்காது யுத்தஞ் செய்த னர். சங்கிலிபடையுந் துப்பாக்கிக் குண்டுமாரியால் முதனுட் கலங்கியும் இரண்டாநாள் மிக்க தைரிய த்தோடும் ஊக்கத்தோடும் பொருதது. இருபகுதி யிலும் அநேகர் மாண்டனர். மாண்டும் போர் நடக் தது. அவ்வளவிற் சூரியனும் ம்ேல்கடல்வாயாழ்ந் தான். சேனைகளும் தத்தமுறைவிடஞ் சேர்ந்தன.
பறங்கிக
ளூக் சங்கி
கும்
c&
கும்புத்த
ழளல

Page 39
பதினுெ ராநாட் GL-irfif.
பரநிருப சிங்கனு ம்மந்திரி களும்ப ாாழகஞ் செய்தல்
பறங்கித் தலைவன் ldr6ånt
பறங்கிக ள்தோல்
68 யாழ்ப்பாணச்சரித்திரம்.
இப்படியே பத்து5ாள் யுத்தம் நடந்தது. சங் கிலி பத்தாங்ாளில் 1700 பறங்கிகளைக் கொன் முன். பதினுெராநாளிற் சங்கிலி சிறந்த போர்வீரர் 400 பேரைத் தலைப்படையாகத் திரட்டிக்கொண்டு, மற்ற படைகள் பின்செல்ல முன் நடந்தான். பறங்கிகள் துப்பாக்கிப் போரிற் பயனில்லையென்று கண்டு வா ட்போருக் காயத்தமாய் கின்றனர். இருதிறப்படை களுங் கைகலந்தன. சங்கிலி படைவீரர் புலியெனப் பாய்ந்து வெட்டினர். பறங்கிகள் இனி நாம் சரண் புகுவதே தக்கதென்றெண்ணிப் பின்வாங்கத் தலை ப்பட்டனர். அச்சம்யம் தரங்கம்பாடியிலிருந்து பற ங்கிகளுக்குத் துணைப்படிடயொன்று வந்து சேர்ந் தது. அதனல் பறங்கிகள் ஊக்கங்கொண்டு முன் னேக்கி கின்று பொருதனர். பறங்கிகள் போர்க்கள த்துக்குப் பக்கத்தே இருமருங்குமுள்ள காட்டினு ள்ளே மறைந்திருந்து துப்பாக்கியால் பக்கப்படை யைக்கொண்டு குண்டுமாரியும் பொழிவித்தார்கள். சங்கிலியினது படையுங் கவண்கல்லுகளை எதிர்ம ழையாகப் பொழிவித்தனர். அன்றுவரைக்கும் நட ங் த யுத்தத்தில் பரநிருபசிங்கனும் மந்திரிமாரும் யுத் தத்தில் கருத்தின்றியிருந்தமையைச் சங்கிலிகண்டு அதற்குக் காரணமென்னவென்று வினவினன். அவ ர்சள் பறங்கிகளுடைய யுத்தமுறை புதிதாயிருப்ப தால் திகைத்துவிட்டோம் என்ருர்கள். சங்கிலி “உங்கள் வீரத்திறல நன்முயிருக்கின்றது” என்று பரிகசித்து, ‘இனி யாதுக்கும் அஞ்சாதிருங்கள்” என்று கூறிப் போர்மேற் சென்முன், அற்றைநாட் போரில் 2400 பறங்கிகளைக் கொன்முன். ஈற்றிலே பறங்கிப்படைத் தலைவனும் சங்கிலி வாட்படைக்கி ரையாகி மாண்டான். அவன் மாளுதலும் பறங்கிவி ரர் புறங்கொடுத்தோடத் தலைப்பட்டனர். அவர்க ளைச் சங்கிலிவீரர் தொடர்ந்து துரத்தினர். பறங் கிகள் ஒடிக் காட்டில் நுழைந்து மறைந்தனர். சங் கிலியுங் தொடர்ந்து பறங்கிகள் கட்டிய கோட்டை

யாழ்ப்பாணச்சரித்திரம். 69
யில் நுழைந்து, அங்கிருந்த ஆண்பெண் சிறுவர் வயோதிகர் யாவரையும் கொன்று, அங்கிருந்த திர வியங்களையுங் கவர்ந்து கோட்டையையுமிடித்துத் தரைமட்டமாக்கினன். பறங்கிகள் அஃதறிந்து ஓடி
ஊர்காவற்றுறையை யடைந்தனர்.
இங்கே சங்கிலியினது படைவீரர் வெற்றிக்க ளிப்புடையராய் வீரமாகாளிக்குப் பெருவேளவியி ட்டு விழாவணிசெய்வாராயினர். அப்பொழுது நா மிதுசெய்வோம், ந்ாமிதுசெய்தல் வேண்டுமென்று ஒருதிறப்படைவீரர் ஒருதிறப்படைவீரருக்குமுத்த, அவருட் பெருங்கலகமுண்டாயிற்று. சேனபதியும் அச்சமயம் தனது பூசைமேலிருந்தமையால் அக்கல கத்தை அவனுக்கு அறிவிக்கக்கூடாமலிருக்க, சங் கிலி அஃதுணர்ந்து இவ்வேள்வியை இன்றுமுடித்த லாகாது தாளை முடிப்போமெனக் கூறி, அக்கலகத் தையடக்கினன். அஃது அப்படைவீரருக்கு வியச னத்தையுண்டாக்கிற்று. அதுகிற்க,
ஒடிப்போன பறங்கிகள் காக்கைவன்னியனை யடைந்து, “நீ எங்களைப் போருக்கேவிவிட்டுப் பின் னே கின்றுவிட்டன. சங்கிலியால் எமது சேனையிற் பதினுயிரவரும் தலைவனும் மாண்டார்கள். இப்படி வஞ்சச் குதுசெய்தவுன்னைக் கொல்வதே கருத்தாக உன்பால் வந்தோம்” என்றர்கள். அச்சமயம் பரங் ருபசிங்கன் தூதனும் ஒலகொண்டு.அங்கடைந்தான். அவ்வோலையில், “இதுவரையும் வெளிப்படாதிருந் தோம். இனி வெளிப்பட்டுக் கருமம் முடித்தல்வே ண்டும். ஆயத்தமாக வருகுக” என்றெழுதியிருந்த தைக் காக்கைவன்னியன் பறங்கிகளுக்குங் காட்டி னன். பறங்கிகள் உடனே மீண்டு போருக்காயத்த ராகிப் பின்னேசெல்லக், காக்கைவன்னியன் முந்திச் சென்று, விடியுமுன் நல்லூசையடைந்து பாகிருப சிங்கனேடு கலந்து, மீண்டு மாறுவேடம் பூண்டு பற
பறங்கிக Bou u கோட்
GQ GG)
முடித்தல்
பறங்கிக cu asiaST வற்றுறை க்கோடல்
வேள்வி.
பறங்கிக ள்காக் கைவன் வியனை நெருக்கு
•نel
பறங்கிக ள் மீண்டு ہاتھ ناچ த்தஞ்செ ய்தல்.

Page 40
காக்கை வன்னிய
där GFT
dSb.
siésé9 சிறைப் Utla.
சேனுபதி யைக் கொல்
70 யாழ்ப்பாணச்சரித்திரம்.
க்ேெசனேயினுள்ளே புகுந்தான். பறங்கிகள் சேனே குரியோதயத்தில் மேலேக்கோட்டை வாயிலைச்சென் று வக்ளந்தது. அதுகேட்டுச் சங்கிலியும் படைகளை த்திரட்டிக்கொண்டு ஆயத்தமாய்க் கோட்டைவா யிலேயடைந்தான். அதற்கிடையில் பரநிருபசிங்கன் கபடமாகச் சேஞபதியிடம்ஒருவனையலுப்பி, ஒருபா பஞ்சொல்வதற்காக ஒரொற்றன்வந்து கீழைக்கோ ட்டைவாயிலிற் காத்துகிற்கின்முன் என்று அவனு
க்கறிவித்தான். அதுகேட்ட சேனுபதி அவ்வொற்ற
க்ன காடிக் கீழைக்கோபுரவாயிலையடைந்தான். இங் கே காக்கைவன்னியன் வெளிப்பட்டுச் சங்கிலியைக் காணச் செல்வான்போன்று செல்ல, சங்கிலி அவன் வாவைக்கண்டுள்ளம் பூரித்து, ஆருயிர்த் துனேவகு தலின் இச்சமயம் வந்தனையெனக் கள்ளஞ் சிறிது மெண்ணுது எதிரோடித் தழுவினன். வஞ்சத்து ரோகியாகிய காக்கைவன்னியன் தன் கன்னெஞ்சம் சங்கிலியினது உண்மையான அன்புரைக்கும் உபசா ாத்துக்கும் சிறிதும் நெகிழாது கொடிய வயிரமாக, எதிர்தழுவிய கையிரண்டையுங் கொண்டு நெகிழ் விடாது கட்டிப்பிடித்துக்கொண்டான். பறங்கிகள் இக்கொடிய வஞ்சத்துரோகியின் கண்ணேநோக்கிகி ன்றனர். கண்ணுற் குறிகாட்டினன். பறங்கிகள் ஒடி அவனைப் பிடித்துக்கட்டி விலங்கிட்டனர். சங்
, கிலியினது படைவீரர் துடித்து வாளை உறைகழித்
தனர். பாகிருபசிங்கனும் தனது சபதமுடிக்கக் கரு திச் சேனுபதியநுமதியின்றிப் போர் தொடங்கலா
கசதென்று தடுத்தான். அவர்கள் வாளிலிட்ட கை
யோடு சேகுபதி வரவை ஆவலோடெதிர்கோக்கிப் பதைத்து கின்றனர். சேனுபதியும் என்செய்தேன் எனறு மூச்சுவிடாதோடிவந்தான், இடைவழியில் வஞ்சவன்னியன் சூழ்ச்சிப்படி பதிவிருந்த பறங்கி
வீரர் அவனை வளைந்து தமியனுயிருந்தமையால் ஒ வீச்சில் அவன் சிரசைக் கொய்தனர். அதுகண்
சங்கிலிபடை யுடைந்தோடியது. f

யாழ்ப்பாணச்சரித்திரம். 71.
பறங்கிகள் செயபேரி முழக்கிக் கோட்டையி லுள்ளே புகுந்து கொடியுயர்த்தினர். இதனையறி க்த பாராசசேகர சக்கிரவர்த்தி பறங்கிகளுக்குட்பட் டுஅரசாளுவதிலும் காடாளுவதே நன்றெனத் துணி ந்து வன்னிக்காட்டுக்கோடி ஒளித்தான். புறங்கி கள் அவனைத் தேடிக் காணுமையால் அவனிருக்கும் இடத்தை அறிந்து சொல்பவர்க்கு * இறைசால் இ ருபத்தையாயிரம் பரிசாகக் கொடுக்கப்படுமென்று பறையறைவித்தனர். அதுகேட்டு அவனிடத்து மு ன் மந்திரியாயிருந்த ஒரு கன்னெஞ்சப் பார்ப்பான் பொருளவாவென்னுங் கொடிய பேய்வாய்ப்பட்டு வன்னிக்காட்டுக்குச் சென்று ஒரிளநீரும் எலுமிச் சம்பழமுங் கையிற்கொண்டு தேடித்திரிந்தான்.
அரசன் அவனைக்கண்டு கூவியழைத்தான். பார்ப்பான் தேடியபொருள் தானே சிக்கியதென்று மனம்பூரித்து அரசனிடம்போய் ஆசீர்வாதஞ்சொ ல்லிச் சுகம் விசாரித்து இவ்விளநீரை யுண்ணுமெ ன்று நீட்டினன். அரசன் இருகையாலுமேற்றுத் தன் உடைவாளால் அதனைத் திறந்து பருகத்தொ டங்கினன். ஏலுமிச்சம்பழமிருக்கின்றது வாளைத் தாரும் வெட்டிப் பிழிந்து இளநீரில் விடுவேன் என் ஆறு பார்ப்பான் கூற, அரசன் வாழை அவன்கையிற் கொடுத்தான். அவன் அதனை வாங்கிப் பழத்தை வெட்டிப் பிழிந்துவிட, அரசன் இருகையாலுமே ந்தி இளநீரைக் குனிந்து பருகிஞன். குனிந்து பரு கக் காதிகப் புலையணுகிய அப்பார்ப்பான் அவ்வாள் கொண்டு அரசன் சிரசைக்கொய்து எடுத்துப்பொதி செய்துகொண்டு வந்து பறங்கித்தலைவன் கையிற் கொடுத்தான். அவன் அதனேவாங்கி அவிழ்த்துப் பார்த்துப் பிரமித்து, “யாதுசெய்தாய்புலையா” என் று பெருஞ் சினங்கொண்டு, “நீ சிறிதுங் கூசாது செய்த இப்புலைத்தொழிலுக்குத் தரத்தக்க பரிசு இதுவே" எனக்கூறி, உடைவாளையிழுத்து அங்கி லையிலேதானே அவன் சிரசைக் கொய்தான்.
米” இறைசால்-முக்கால் ரூப்ா.
"அவன்
பறங்கி
.
A சேகரன் as T05.
கோடல்.
Taun F’s Lutt" Lus cir Gsrs
• نہ56
Lai பான்சிர சைப் ப றங்கிகள் கொய்

Page 41
sides யைக் கொல் லல்.
72 யாழப்பாணச்சரித்திரம்.
அதன்பின்னர்ப் பறங்கிகள் சங்கிலியை நீதா சனத்தர் சபைமுன்னேயிட்டு,
1. “நீ முடிசூட்டப்படாது இராசாதிகாரஞ்செ ய்தது முதற்குற்றம்,
2. தங்தைக்குரிய அரசைக் கிரமந்தவறிக் கவ ர்ந்தது இரண்டாங்குற்றம்,
3. இராசகுமாரர்களைக் கொலைபுரிந்தது மூன முங்குற்றம்,
4. சனங்களை வருத்தியதும் அறுநூறுபேரை வன்கொலைபுரிந்ததும் நான்காங்குற்றம்’
எனக் குற்றநிரூபணஞ்செய்வித்து அவனைச் சிாச்சே தஞ்செய்து கொல்லுமாறு தீர்ப்பிட்டனர். அவ்வா
றே காளிகோயிற் சங்கிதியில் பறங்கிகள் அவனைச்
சிரச்சேதஞ்செய்து கொன்றனர். அதுகேட்டுச் சங் கிலிதேவி தீவளர்த்து அதிற்பாய்ந்துயிர்விட்டாள். சங்கிலியினதுதேவி, தீப்பாயுமுன் இத்தீவினையிழை த்த காக்கைவன்னியன் மனைவியும் தன்னைப்போ லத் துயரடைதல் வேண்டுமென்றெண்ணி, ஒரு தூ தனேயனுப்பிச் சங்கிலியோடு காக்கைவன்னியனும் பறங்கிகளால் மடிந்தான் என்றவளுக்கு அறிவித் தாள். அதுகேட்டுக் காக்கைவன்னியன் மனைவியும் தீப்பாய்க் துயிர்விட்டாள். பறங்கிகள் சங்கிலிபுத் திரரைத் தாங்கம்பாடிக்கனுப்பி அங்கே வைத்துப் பரிபாலித்து வந்தார்கள். இவ்வாறன்றி அவர்களைக் கோவைக்கனுப்பினர்களென்றும் அங்கே அவர்கள் மகுரிகாநோயினல் மடிந்தார்களென்றும் கூறுவாரு முளர். சங்கிலியைச் சிறைசெய்து கோவைக்கு அ னுப்பிவிட்டுப் பாகிருபசிங்கனுக்குப் பட்டங்கட்டி அரசுசெய்ய விடுத்து மன்னரைமாத்திரம் தமக்கு ரியதாக்கிக்கொண்டு மீண்டனரென்றும், கோவை நகரிலேயே சங்கிலி கொல்லப்பட்டானென்றும் கூறு
வாருமுளர். (Tennent)

யாழ்ப்பாணச்சரித்திர்ம். 73
(Vinea Tabrobanea) af9anfu as T 19T (3 Luaif Lu ir என்னுஞ் சரித்திரம, பறங்கிகள் 1590 ல் யாழ்ப்பா ணத்திலேபடையேற்றிச் சங்கிலியோடு யுத்தஞ்செய் து அவனையும் அவன்மூத்தமகனையும் கொன்று அா சுகைக்கொண்டனரென்றும், 1598 ல் கண்டியரச ணுகிய விமலதருமன் பறங்கிகளோடு யுத்தஞ்செய் து அவர்களை வென்று யாழ்ப்பாணத்தாசைக் கை க்கொண்டு 1620 ம் இuல் வரையும் ஆண்டானென் றும், 1620 ல் பறங்கிகள் மீண்டும் படையேற்றி யா ழ்ப்பாணத்தைக் கைக்கொண்டு அரசுசெய்யத் தொ டங்கினரென்றும், 1826 ல் கண்டியரசன் மீண்டும் படையேற்றி யாழ்ப்பாணத்தைப் பிடிக்குமாறு ஒரு பெரிய சேனையையும் அதற்குச் சேனுபதியாகச் சே வீைராத்தின அத்தப்பற்று முதலியையும் அனுப் பியபோது, பறங்கிகள் அச்சேனையை முதுகிடச்செ ய்தனரென்றும் கூறுகின்றது. எங்ஙனமாயினும் சங் கிலியினது சந்ததி யாழ்ப்பாணத்தில் கிர்மூலப்பட்
டதுண்மையே. கொடுங்கோன்மை குலநாசமென்ப
து உண்மையாய்விட்டது,
அதுகிற்க, பாகிருபசிங்கனும் பறங்கிகளும் (ւք ன்னே இரகசியமாகப் பொருந்திக்கொண்டபடி பற ங்கிகள் பரநிருபசிங்கனத் திறையரசனுக்கி அவன் மகன் பார்ாசசிங்கன அவனுக்குக்கீழ் ஏழுTதிபனு க்கினர்கள். அதன்பின்னர்க் காக்கைவன்னியனுக் குப் பெருந்திரவியமும் ஊர்காவற்றுறை அதிகார மும் வேறு வரிசைகளும் கொடுத்தார்கள்.
பரநிருபசிங்கன் ஒன்பது வருஷம் அரசுசெய்
திறந்கான். அவன் இருக்கும்வரையும் பறங்கிகள்
சமயவிஷயத்திலும் பொருள்விஷயத்திலும் கொடு
ங்கோல் செலுத்தாது ஒருவாறு அதிகாரஞ் செய்து
வந்தார்கள். பரநிருபசிங்கனும் பறங்கிகளுக்கு கட்
10
பாதிருட சிங்கன்
திறைய
s

Page 42
நல்லூர்க் கோட்
st த்தமது GAT F60
5V GavTIMnN க்கல்.
சிவாலய
as 26 of
டித்தல்.
பறங்கிக ள்குடிக ளைவகுத்
74 யாழ்ப்பாணச்சரித்திரம்.
பினனுய்த் தனது சுவாதீனத்தை முற்றும் கழுவவி டாமல் சூழ்ச்சியோடசசுசெய்து குடிகளையுங் காத் துவங்தான். அவன் புறங்கிகளைத் துண்கேட்டபொ ழுது, சமயவிஷயத்திலும் தேசாசாரத்திலும் அவ ர்கள் ஒருவகையிலும் பிரவேசித்தல்ாகாதென்றும், அவர்கள் செய்யுமுதவிக்குத் தனக்குரியதாகிய மன் ஞர் அரசையும் யாழ்ப்பாணத்திலே சுவாதீனாாக வர்த்தகஞ்செய்யு முரிமையையும் அவர்களுக்குக் கொடுப்பதாகவும் பேசிக்கொண்டான். பின்னர் யா ழ்ப்பாணத்தில அவர்கள் பல்லாயிரம் படைவீரரை மடியக் கொடுத்தமையால் திறைகேட்டார்கள். அது நியாயமேயெனப் ப0 கிருபசிங்கன் உடன்பட்டான. அவ்வாறே பறங்கிகள் அவனிறக்கும்வரைக்கும் தம துடன்படிக்கைப்படி நடந்து வந்தனர். அவன் இற ந்தவுடன் அவர்கள் நல்லூர்க் கோட்டையைத் தம து வாசஸ்தானமாக்கினர்கள். புறமதிலை இடித்து அக்கற்களைக்கொண்டு யாழ்ப்பாணத்தில் இப்போ துள்ள கோட்டையைக் கட்டிஞர்கள். சிவாலயம் சுப்பிரமணியாலயம் விநாயகராலயம் என்பவைகளை யெல்லாம் இடித்தார்கள். அங்கிருந்த அரிய நிதிக ளையெல்லாம் கவர்ந்தார்கள். ஆலயங்களைப் பறங்கி கள இடிக்கப்போகின்ருர்களென முன்னருணர்ந்த பூசகர்கள் விக்கிரகங்களையெல்லாம் கிணறுகளிலி ட்டு மண்ணினல் தூர்த்துவிட்டு அவ்விடங்களைவிட் டகன்றனர். அரமனையிலிருந்த திரவியங்களையெல் லாம பறங்கிகள் தமதாக்கினர். சனங்களையெல்லாம் கிறிஸ்தவர்களாகுமாறு நெருக்கினர். அது செய் யாதாரை ஒறுத்தனர். அவர்கள் பொருளைக் கவர்ந் தனர். கிறிஸ்தவராயினருக்குப் பலவித உத்தியோ கங்களைக் கொடுத்தனர். அவர்கள் தண்டத்துக்க ஞ்சி அகத்தே சைவராகவும் புறத்தே கிறிஸ்தவராக வும் நடிப்பார் பலராயினர். கிறிஸ்தசமயப் பிரவே சஞ் செய்யோமென உயிர்விடுத்தாரும் அநேகர். அங்கியதேசஞ் சென்ருரும் அநேகர்:

யாழ்ப்பாணச்சரித்திரம். 75
பறங்கிகள் நல்லூர் அரமனைக்குள்ளிருந்த திா வியங்களைச் சோதிக்கும்போது ஒரு மிகப்பெரிய அரிய வலம்புரிச்சங்கும் அநுமாருடைய தக்தமும் அகப்பட்டன. பறங்கிகள் அச்சங்கைப் பைகோவை யாசனுக்கு ரூபா 6000 க்கு விற்முர்கள். அதுமா ருடைய பல்லேயும் அவ்வரசன் ரூபா 400000 கொ டுப்பதாகக் கேட்டும் பறங்கிகள் அதன்னப் புத்தரது பல்லெனவெண்ணிக் கொடுக்காது தீயிட்டழித்தனர். யாழ்ப்பாணத்தரசர் நெடுங்காலமாக வைத்திருந்த முத்துப்பந்தர் முத்துக்குடைகளையும் எடுத்துக் கோவைக்கனுப்பினர்கள்.
பின்பு பறங்கிகள் நல்லூர்க் கோட்டையையுமி டித்து அக்கற்களைக்கொண்டு பறங்கித்தெருவில் அ நேக வீடுகளும் * மாளிகைகளும் கட்டிஞர்கள். அத ன்பின்னர்க் கிராமங்களிலிருந்த கோயில்களையெல் லாங் தேடியிடித்து அங்கிருந்த விலையுயர்ந்த விக்கிர கங்களையும் திருவாபரணங்களையுங் கொள்ளைகொ ண்டார்கள். பிராமணர்களெல்லாம் அகப்பட்ட வி க்கிரகங்களைக் கிணறுகளிலும் குளங்களிலும் மறை த்துவிட்டு அந்நாட் காடாயிருந்த இடங்களுக்கோ டிக் குடிகொண்டு மறைந்து வாழ்ந்தார்கள்.
பரகிருபசிங்கன் இறந்தபின்னர் அவன் மகன் பரராசசிங்கனப் பறங்கிகள் முதன்மந்திரியாக்கிகு
ர்கள். அவன் கல்வியறிவிலும் ஒழுக்கத்திலும் வி
வேகத்திலும் இராச்சியோபாயத்திலும் மிகச்சிறந்த வன். அதஞல் அவன் பறங்கிகளுக்கும் குடிகளுக் கும உவப்புடையனப் விளங்கினன். பறங்கிகளும் அவனுடைய எண்ணப்படியே பெரும்பாலும் அரசு புரிந்து வந்தார்கள். அவர்கள் அவனை மிக்க கண் ணியமாக நடத்தினர்கள். அவனும் சில்காலத்தில் இறந்தான். இறக்கும்போது தனது குமாரர் எழு வரையும் ஏகபுத்திரியையும் அழைத்துத் தனது கி * இக்கோட்டைக்கற்களில் சிலாசாசனங்கள் சில படிக் கல்லாகப் பறங்கித்தெருப் பழையவீகிகளிலும், கோட்டைமதி லிலும் வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பஜ சாநந்தர் வீட்டிலுள்ளது விசேடமானது.
நல்லூர்க் கோட்
DI GUD: பிடித்து es
sas
9 pro eansgrif as ar
டுக்தோ
-6A).
L』農s價麗邏仔
சிங்கன மத்திரி
யாக்கல்.

Page 43
L-III சிங்கள் áEsruné
Siars
ளூக்குப் பங்கிடல்
கோயில் as2arasigத்தூாழ osáG த்ேதல்.
76 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ராமங்களைப் பிரித்துக்கொடுத்தான். அழகாண்மை வல்லவன்,என்னும் மூத்த குமாானுக்கு நல்லூரை யும் கள்ளியங்காட்டையும் கொடுத்து அவனைத்தன து அரமனையிலிருக்குமாறு கட்டளையிட்டான். அ வ்வாமனையின் மேற்குவாயிற் கோபுரமாத்திரம் இ ன்றும் அழியாதிருக்கின்றது. இரண்டாங்குமாரன கிய தனபாலசிங்கனுக்கு மல்லாகத்தைக் கொடுத் தான். மூன்முங் குமாாணுகிய வெற்றிவேலாயுதனுக் குச் சண்டிருப்பாயைக் கொடுத்தான். நான்காங்கு மாாஞகிய விசயதெய்வேந்திரனுக்கு அராலியைக் கொடுத்தான். ஐந்தாங் குமாாணுகிய திடவீரசிங்ச லுக்கு அச்சுவேலியைக் கொடுத்தான். ஆருங்குமா ாணுகிய சந்திரசேகரனுக்கு உடுப்பிட்டியைக் கொடு த்தான். ஏழாங் குமாாகுகிய இராசாத்தினத்துக் குக் கச்சாயைக் கொடுத்தான். புத்திரியாகிய வேத வல்லிக்கு மாதகலைக் கொடுத்தான். மாதகல் வேளா ண்டலைவனும் பராாசசிங்கன் மடைப்பள்ளியதிபனு மாயிருந்த இராசேந்திரமுதலி மகனே இவளை விவா அவன்பெயர் தனபாலமுதலியென்ப.
பாராசசிங்கன் இறக்கும்விசையும் பறங்கிகள் அவன்பொருட்டாகக் கீரிமலையிலிருந்த திருத்தம்ப லேசுவரன்கோயிலையும் கல்லூர்க்கந்தசுவாமிகோயிலை யுமாத்திரம் இடியாதுவிட்டிருந்தார்கள். அவன் இற க்தவுடன் அவைகளையும் இடித்தொழித்தார்கள். அ வர்கள் இடிக்குமுன்னே கீரிமலையிலிருந்த விக்கிரகங் களை அக்கோயிற் குருக்களாகிய பாசுபாணி ஐயர் ஒரு கிணற்றுளிட்டு மண்ணுல் தூர்த்துவிட்டு அவ் விடத்தினின்றும் நீங்கினர். இப்பிராமணுேத்தமரது சக்ததியார் இன்றுமுளர். நல்லூர்க் கந்தசுவாமிகோ யில் இடிக்குமுன் அதன் மெய்காப்பாளஞயிருந்த சங்கிலியென்னும் சைவப்பண்டாரம் அக்கோயில் விதானங்கள் வரையப்பட்ட செப்பேடு செப்புச்சா சனங்களையுந் திருவாபரணங்களையுங் கொண்டு மட் .க்களப்புக் கோடினன். அங்கிருந்த சிலாவிக்கிரக

யாழ்ப்பாணச்சரித்திரம். 77
ங்கள் தாமிரவிக்கிரகங்களையெல்லாம் அக்கோயிற் குருக்கள் மார் பூதராயர் கோயிலுக்குச் சமீபத்தே யுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதி க்கோடினர். இவ்வளவிலே இடங்கடோறும் உங்கத விசித்திர கோபுரங்களோடும் மதில்களோடும் விளங் கி யாழ்ப்பாணநாட்டைச் சிறப்பித்து நின்றனவும் 1500 வருஷகாலமாகத் தமிழரசரும் பிரபுக்களும் பெருகிதிகொண்டு கிருமித்துப் பாதுகாத்து வந்தன வுமாகிய ஆலயங்களையெல்லாம் பறங்கிகள் கை சிறி துங் கூசாது தகர்த்துச் சித்திரமணஞ் சிறிதுமில் லாத நாடாக்கிவிட்டார்கள்.
அவர்களால் இடிபட்ட விசித்திராலங்காரமான பெரிய ஆலயங்கள் இவைமாத்திரமா! 1622 ல் திரி கோணமலையிலே சவாமிமலைமேலிருந்த மகோந்தத மானதும் அதிவிநோத சித்திர சிற்ப்ாலங்காரங்கள் அமைந்ததுமாகிய கோபுரத்தோடு கூடிய ஏழுமதி லும் அநேக மண்டபங்களுமுடைய சிவாலயத்தை யுந் தகர்த்துவிட்டார்கள். 1552 ல் சீதாவாக்கையில் தினமொன்றுக்கு இர்ண்டாயிரம் சிற்பர்கூடி வேலை செய்தால் இருபது வருஷத்திலும் முடித்தற்கரிய மகத்தான அற்புதாலங்காரமான கருங்கல்லுத் திரு ப்பணியுடையதென்று பறங்கிச்சரித்திரகாரன் தா னே பாராட்டிய சிவாலயததையும் இடித்தொழித் தார்கள். தேவேந்திரபுரமெனக் காலிக்கப்பாலுள்ள இடத்தில் (Dondra) பொன்மயமான சிகரங்களோ கூெடி யுயர்ந்து வானளாவிய கோபுரங்களையும், மூ பொவுடைய தோரண மண்டபங்களையும், அநேக விசித்திரமான உள்மண்டபங்களையு முடையதாய்க் கடல்மேற் செல்வோர் கண்களையுங் கவர்ந்து இலங் கையைச் சிறப்பித்து நின்ற விஷ்ணுவாலயத்தையுங் கைகூசாது இடித்தழித்துவிட்டார்கள். அவர்கள் இலங்கையிலுள்ள செல்வத்தைக் கவர்ந்த துமன்றி
இலங்கையின் செயற்கையழகெல்லாவற்றையும், அ
திரிகோ or LD2a) ਰੰ ਚੰou6 பயம்இடி பட்டது.
சீதாவா க்கைச்சி
வாலயம்
தேவேந்
திரபுரத் துவிஷ்ணு
Gau T6Avuňo

Page 44
Orrsபட்டம்
தீக்கல்.
DET SITå கர்கள்.
78 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ழகைக்கண்டதிசயித்துக் கண்ணிகுலானந்தங்கொ ள்ள அறியாத பிசாசுகள்போல் அழித்து மகிழ்ச்சா ர்கள். அவர்கள் இராச்சிய அவாவும் பொருளாசை பும் கிறிஸ்தசமயாபிமானமுமன்றி, மற்றுதிேயும் கரு னேயும் சிறிதுமில்லாது தமிழ்க்குடிகளையும் சிங்கள க்குடிகளையும் வனமிருகங்கள்போல் மதித்தாசுசெ ய்யத் தலேப்பட்டார்கள்.
பறங்கிகன், இனிமேல்இராசகுடும்பத்தார் தம்
பெயரோடு இராசாவென்னும் பட்டப்பெயரைச்
சேர்த்து வழங்கலாகாதெனத் தடுத்து முதலியெ னத் தஞ்சாதிப்பட்டப்பெயரை யொட்டியே வழங் கல்வேண்டுமெனச் சட்டஞ்செய்தார்கள். அவர்கள் பரராசசிங்கனுக்குக் கொடுத்த முதன்மந்திரி பதத் தை அவன் இறந்தபின்னர்ப் பிறருக்குக் கொடாது நிறுத்தி நான்கு மாதாக்கர்களை கியமித்தார்கள். இ ராசரத்தின முதலிமகனுகிய சோழசிங்கச் சேஞதி சாசமுதலியைக் கீழ்காட்டுக்கு மாதாக்களுக்கிஞர் கள். மேல்நாட்டுக்கு விசயதெய்வேந்திர முதலியை மாதாக்களுக்கிஞர்கள். அழிகாண்மைவல்ல முதலி மகன் இராசவல்லப முதலியைத் தென்பகுதிக்கு மாதாக்களுக்கினர்கள். வடபகுதிக்குத் திடவீரசிங் கமுதலிமகன் குமாரகுரிய முதலியை மாதாக்கஞ
"க்கினுர்கள். இந்நான்கு மாதாக்கர்களும் பறங்கிக
ளுடைய எண்ணப்படி குடிகளை வசமாக்கி அதிகா சஞ்செய்துவந்தார்கள். இக்காலத்திலே சோழநாட் டிலேயுண்டாகிய இராசகலகத்துக்கஞ்சி அங்கிருந் து அனேக வேளாண்குடும்பங்கள் புறப்பட்டு வந்து வட்டுக்கேர்ட்டையிலும் காரைதீவிலும் குடியேறின. (கார்காத்த வேளாளர் என்னுஞ் சொல்லைக் காரைக் கால் வேளாளரென்றும் காரைக்காட்டு வேளாள்ரெ ன்றும் அறியாது வழங்குவர்.)
பறங்கிகள் இவ்வாறரசுசெய்து வருகையில் மீ ன்குத்தகைவிற்று அரசிறையைப் பெருக்கவெண்

யாழ்ப்பாணச்சரித்திரம். 79
ணினர்கள். அக்குத்தகையை வாங்குதற்கு வேளா ளர் பின்னிட்டார்கள். அதுகண்டு கரையார் அதே கர் திரண்டு தம்முள்ளே ஒருவனே அதிகாரியாக்கி அவன்பெயரில் வாங்கிப் பணத்தைச் சேர்த்துக் கொடுத்தார்கள். ஆயினும் பறங்கிகள் எண்ணப்படி பெருந்தொகைக்கு விற்கவில்லை. வேளாளர் அக்குத் தகையை ஏற்றிருந்தால் அவருள்ளே தனவந்தர் அநேகர் இருந்தமையால் எனக்கெனக்கென்று விலை யேறியிருக்கும் எனவெண்ணிப் பறங்கிகள் வேளா ண்மந்திரியிடத்துச் சிறிது வெறுப்புடையராகிக் கரையாருள்ளும் ஒருவன மத்திரியாக்கி அவனுக் குத் தொன்பிலிப்பு குருகுலதாயகமுதலி என்னும் பட்டமுங் கொடுத்தார்கள். கடற்றுறை அதிகார முழுதும் அவனுக்கே கொடுத்தார்கள். அவன் தன க்குக்கீழுள்ள அதிகாரங்கள் கணக்குவேலைகள் கண் காணிவேலைகளை எல்லாம் தன்குலத்தவர்க்கே கொ டுத்தான். அதுகாறும் வேளாளாது அதிகாரத்தால் கீழ்ப்பட்டுக்கிடந்த அக்குலம் இவன் காரணமாகச் சிறப்படையத் தொடங்கிற்று. அவர்களும் அச்சிற ப்பினுல் தமது கிளையினின்றும் பிரிந்து தாமொரு கிளையாகிப் பறங்கிகளுடைய போக்குகளுக்கெல்லா மிணங்க நடந்து வந்தனர். முதலியென்னுஞ் சிறப்பு முதலிப் ப்பெயர் பண்டைக்காலமுதல் வேளாளருக்கே உரி பட்டம். யதாயிருந்தது. பறங்கிகள் அதனைக் கரையாருக்கு மாக்கினர். தமிழரசர் காலத்தில் மந்திரி இலிகிதர் முதலிய உத்தியோகங்களிலிருந்தவர்கள் பெரும்பா லும் வேளாண்முதலிகள். அதுபற்றிப் பறங்கியரசு ஒல்லாந்தவரசுகளிலும் அவ்வுத்தியோக முடையவ ரெல்லாம் முதலியாரெனப்பட்டனர். பின் அவ்வுத் தியோகமும் முதலியுத்தியோகமெனப்பட்டது. வ னனியர் ஆண்ட இடத்துக்கு வன்னியென்னும் பெ யர்வந்தது. அவ்வன்னியரை யடக்கி அவ்வன்னி யைக் கைக்கொண்ட வேளாளர் வன்னியனரெனப் பட்டார்கள். இதுவே வன்னியருக்கும் வன்னியணு வடிவிய ருக்குமுள்ள வேற்றுமை, ணுர்,

Page 45
ஒல்லாந் தர்.
பறங்கிக ன்தோல் .fܘ
$2$ошо?оло
ஒல்லாத் தர்மட்ட க்களப்
புழதலி
யவிடங் 2ary 9 டித்தல்.
80 யாழ்ப்பாணச்சரித்திரம்.
அதுகிற்க, பறங்கிகள் இவ்வாறாசுசெய்துவரு ங்காலத்தில் ஒல்லாந்தர் என்னுமோர் ஐரோப்பிய சாதியார் இலங்கையில் வந்திறங்கி இலங்கையரச னேடுறவாடினா. அவ்வரசன் அநுமதியோடு கொட் டியாரத்தில் அவர்கள் ஒருகோட்டை கட்டினர்கள்.
1812 ல் அக்கோட்டையைப் பறங்கிகள் தகர்த்தார்
கள். பறங்கிகள் திரிகோணமலையிலும் மட்டக்களப் பிலுங் கோட்டைகளைக் கட்டி அரசுசெய்யத் தலைப் பட்டார்கள். அதுகண்டு கண்டியரசன் அவர்களை அங்குகினறுமோட்டிவிட முயன்முன். பறங்கிகள் 218000 பறங்கிப்படையும் 6000 காப்பிரிப்படையும் சேர்த்துக்கொண்டு நாட்டிற் படையேற்றி, நாட்டை யழித்துச் சூறையாடிப் பெண்களைக் கற்பழித்துப் பெருங் கொடுமை செய்தனர். அதுகேட்டுக் கண்டி யரசனுகிய இராசசிங்கன் தன் படையோடு அவர்க ளை எதிர்த்து அவ்வளவு சேனைகளையும் வாளுக்கிரை யாக்கித் தலைகளைச் சேர்த்தடுக்குவித்து மலையாக்கித் தந்தைக்குக் காட்டினன். இதனேடு பறங்கிகளுக் குக் கேடுகாலங் தொடங்கிக் து.
1639 ல் வெஸ்தர்வால்டு என்னும் ஒல்லாந்த தளபதி மட்டக்களப்புக் கோட்டையைப் பிடித்துப் பறங்கிகளை ஒட்டிவிட்டுக் கண்டியரசனேடு துணை யுடன் படிக்கைசெய்து கொண்டான். அவ்வருஷத்து மேமீ" 13வ. திரிகோணமலையையுங் கவர்ந்தான். 1640 ம் (வூடு பெப்ரவரிமீ 8வ ஒல்லாந்தர் பறங்கிக ளையோட்டி நீர்கொழும்பையும் கைப்பற்றினர். அத் தினமே ஒரு தளபதியையனுப்பிக் காலியையும் பிடி த்தனர். அவ்வருஷம் நவம்பர்மீ" 18உ பறங்கிகள் நீர்கொழும்பைப் போரில் மீட்டனர். 1644 ல் ஒல் லாந்தர் நீர்கொழும்பை மீட்டனர். 1855 ம் (u) டிசெம்பர் மீ" 10வ யாழ்பபாணத்துப் பறங்கித்தே சாதிபதியாகிய அந்தோனி அமிமுல் என்பவன் கொ ழும்புக்குச் சென்றவழியில் அவனை ஒல்லாந்தர் பிடி

யாழ்ப்பாணச்சரித்திரம். 8.
த்துச் சிறையிலிட்டார்கள். 1858 ல் ஒல்லாந்தர் கொழும்புக்கோட்டையை ஏழுமாசம் அ டைமதில் (முற்றுகை) செய்து, ஈற்றில்பறங்கிகள் சாண்புக, அ தனையும் பிடித்தார்கள். 1658 ம் டுல் பெப்ரவரிமீ” 22உ மன்னன் ரயும்பிடித்தார்கள். எப்பிரில் மீ 16வ. ஊர்காவற்றுறையையும் பிடித்தார்கள். யாழ்ப்பாண க்கோட்டையையும் மூன்றரை மாசம் மதிலடைத்து வளைந்திருந்து குன்மீ 22உ பிடித்தனர். அதனுள் ளே இருந்த 50 பறங்கிக் குருமாரை இந்தியாவுக்கு அனுப்பினர். யாழ்ப்பாணத்துக் கோட்டையை ஒல் லாந்தர் எளிதிற் பிடித்தமைக்கு அனுகூலியாயிருந் தவன் உலகுகாவலமுதலியென்பவன். அவன் சோ ழநாட்டில் இராசதுரோகக் குற்றத்துக்குத் தப்பி யோடி யாழ்ப்பாணம் வந்து காரைதீவிலே தன்குடு ம்பத்தோடு வாழ்ந்தவன், பெருஞ்செல்வமும் அதி காரமுமுடையவன். பறங்கியதிகாரிகளோடு நண்பு பூண்டிருந்தவன். ஆயினும் அவன் அவர்களுடைய கொடுங்கோன்மை கண்டு பொருகுகி அவ்வாசை நீக்கச் சமயம்பார்த்திருந்தான். அவனே ஒல்லாந்தர் துணையாகும்படி கேட்க அவனும் உடன்பட்டான். சமயம்பார்த்து ஓரிரவு அவன் ஒல்லாந்த தளபதி யைக் கொண்டுபோய்ப் புழைக்கதவால் கோட்டை யினுள்ளே பிரவேசிக்கும்படி செய்தான். அச்சம யம் பறங்கிசள் காவல்விழிப்பின்பொருட்டு ஒரிடத் தில் கூடி ஆடல்பாடல்களிற் பொழுது கழிப்ப்ாராயி னர். அதுகண்டு ஒல்லாந்த சேனை முழுதுங் கோட் டைக்குள் நுழைந்தது. விடியுமுன் ஒல்லாந்தர் தங் கொடியுயர்த்தி உள்ளிருந்த பறங்கிவீரர் அநேகரை வெட்டி அகழிகளிலிட்டனர். எஞ்சினேர் சரண
டைந்தனர்.
விடிந்தவுடன் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தாசு
கைக்கொண்டமைக் கறிகுறியாகப் பெருவிருந்தயர்
See alsTi தர்கொ ழம்பை ப்பிடித் தல்.
யாழ்ப்
பாணம் பிடிபட ဓါ\ပံ.
உலகுகா வலழத
N9.
ஒல்லாந் %a 西听。

Page 46
82 யாழ்ப்பாணச்சரித்திரம்
ந்து விழாக்கொண்டாடி"ஊரெங்கு மதிரும்படி பீர ங்கிகளைக் கொளுத்தினர். ஊரவர்களும் பறங்கியா சால் தாம் அனுபவித்த துன்பமுந் தீர்ந்ததுபோலு மெனக் களிப்படைந்தனர்.
ஒல்லாந்த அரசினர், தாம் இராச்சியங் கைக் கொண்டமையைப் பிரசித்தஞ்செய்து, பறங்கிக்குரு மாரை மறைத்து வைப்போரும் அவருக்கு இடங் கொடுத்துச் சகாயஞ்செய்வோரும் கொலைத் தண் டம்பெறுவரென ஆணைபோக்கினர். அது கண்டு கி ராமங்களிலிருந்த குருமாரும் யாழ்ப்பாணத்தை விட்டகன்றனர். ஒல்லாந்தர் கொடியுயர்த்தியவுடன் தம்து புதியகிறிஸ்துமதத்தை (Protestant Christianity) ப் பிரசங்கித்தனர். இதனை யாழ்ப்பாணத்தி லே முதன்முதற் பிரசங்கித்தவர் பால்டியஸ் பாதிரி (Dr. Baldeus). இவர் அந்நாள்முதல் முப்பது வருஷ த்தில் (1688 ல்) யாழ்ப்பாணநாட்டில் 1,80,000 பே ரைக் கிறிஸ்தவராக்கியதாக விஞ்ஞாபனஞ்செய்தி ருக்கின்றனர். அக்காலத்தில் யாழ்ப்பாணநாட்டில் 5,00,000 சனம் குடியிருந்ததென்பர். தமிழரசர்கால த்திலே ஈழம் ஒருகோடி இலங்கை எண்கோடி ஆக இலங்கைமுழுதும் நவகோடி இராச்சியமென்பது பழமொழி. இதனுண்மைக்கு இலங்கையிலுள்ள ப ல்லாயிரம் ஏரிகளும் கிராமங்களும் காடுமண்டிப் பாழாய்க் கிடத்தலே சான்ருகும். கடைமுறையா ய்க் கண்டியிலிருந்தரசியற்றிய பூரீ. விக்கிரமராசசிங் கனுடைய பெளத்திரனுய்த் தஞ்சாவூர் மானம்பூச் சாவடியில் ஆங்கிலவரசர் பாதுகாப்பிலிருக்கும் gy ழகிய மணவாள சிங்கள ராசா அவர்களும் இலங்கை நவகோடிராச்சியமென்னும் பழமொழி கூறக்கேட் டாம். (மகாநவமிச்சாவடி மானம்பூச்சாவடி என வழங்குகின்றது.)
அதுகிற்க, ஒல்லாந்தர் அரசு செய்யத் தொட
*」○,..○
ங்கியபோது அரசிறைப்பகுதிக்கு அதிகாரியாக .ே

யாழ்ப்பாணச்சரித்திரம், 83
ளாண்டலைவனகிய பூதத்தம்பிமுதலியையும், கிருப ப்பகுதிக்கு அதிகாரியாகக் கரையார் தலைவன் (கு ருகுலத்தலைவன்) ஆகிய மனுவல் அந்திராசியை கிய மித்து அவனுக்குப் பறங்கிக்காரர்போல முதலிப்ப ட்டமளித்தார்கள. இருவரையும் ஒல்லாந்தர் மந்தி ரிமாராகப் பாவித்து அவர்களை வினவியே அரசுசெ ய்துவந்தார்கள். தமது கிறிஸ்துசமயத்தைப் பரவ ச்செய்வதும் கறுவாப்பட்டை முதலிய வியாபாரவ ஸ்துக்களை விருத்திசெய்வதும் போக்குவரவுக்கேற் றசாதனங்களைச் செய்வதுமே அவர்களுடைய அர சுநெறியாகவிருந்தது. அவர்கள் உலகுகாவலமுத லிசெய்த உபகாரத்துக்குப் பெருந்திரவியமும் இ ராசவாயில் முதலியென்னும் உத்தியோகமுங் கொ டுத்தார்கள். நாகபட்டினத்திலிருந்து வந்து ஊர்கா வற்றுறைக் காவற்றலைமை பூண்டிருந்த குருகுலத்த லைவன,கிய புண்ணியாண்டான் செய்த உதவிக்காகக் கொழும்புத்துறையில் ஒரு கிராமத்தைக் கொடுத்
தார்கள்.
பூதத்தம்பிமுதலியும் அந்திராசிமுதலியும் பெ ருகட்புடைய ராய்த் தத்தம்பகுதி அதிகாரத்தைச் செய்துவரும்போது, ஒருநாள், பூதத்தம்பி தனது மாளிகையில் நடந்த விருந்துக்கு அந்திராசியையும் அழைத்தான். அந்திராசி செல்லுதலும் அவனைப் பூதத்தம்பி உபசரித்தழைத்துத் தனிமையானவோ சறையிலே போசனம்படைப்பித்து, அவனுண்ணும்
வரையும் பக்கத்தில் கின்றுபசாரஞ் செய்யுமாறு இ
ரண்டு ஏவலாளரை வைத்துவிட்டு, மற்றவிருந்தின ரை உபசரிக்குமாறு சென்ருன். பூதத்தம்பிமனைவி பந்தி மேல்விசாரணை செய்துகொண்டு போகும்போ து, அத்திராசி இருந்துண்ணும் அறையிலுஞ் சென் று பரிசா சகரையழைத்து, வேண்டிய உண்டிவகைக்
பூதத்தம் பிஅந்தி gal.
ளைக் குறைவின்றிப் படையுங்களெனத் தூண்டிப் போனள். அந்திராசி பிறர்மனைவியரைப் பெற்றதா

Page 47
84 யாழ்ப்பாணச்சரித்திரம்.
யென மதிக்கும் விரதமில்லாதவனுதலின் அவள் முகத்தழகைக் கண்டான். இனிய குரலழகையுங் கேட்டான். அவள் நடையழகையு நோக்கினன். அ வன்நோக்கோடு உள்ளமும் அவள்பாற்செல்லப்பெற் முன். தணியாப் பெருங்காதல் மூளப்பெற்றன். அ வன் அருந்திய விருந்தெல்லாம் அவனுக்கு வேம்பா யிற்று. பரிசாரகர் வினவுக்கு அவன் யாதுங் கூரு அந்திரா து மாமாயிருந்தான். பலகாற் கேட்டபின்னர் அவ சிமுறை என் உணர்வு வந்து போதுமெனக் கூறி எழுந்து வாய் Gas C. சுத்திசெய்துகொண்டு போய் ஆசாரமண்டபத்திலி ருந்து, பூதத்தம்பியோடு பேசிக் கருத்தொருபாலி ருக்கத் தாம்பூலங்தரித்து விடைபெற்று வீட்டுக்கு
மீண்டான்.
அவன் வீடுபோய்ச் சேர்ந்தவுடன், தங்கக் கா சுகளும் வாசனைத்திரவியமும் ஒருபட்டாடையும் ஒரு சந்தனப்பெட்டியிலிட்டு, “இதனைக் கொண்டு போய்ப் பூதத்தம்பி மன்னவி அளகவல்லி கையில் யா ருமறியாவகை கொடுத்து, யான்வந்து கொண்டா டுதற்கு ஏற்றகாலம் யாது’ என்று கேட்டுவாவென ஒரு தூதனிடங் கொடுத்து அவனை அனுப்பினன். அவன் சென்று பூதத்தம்பியில்லாத சமயம்பார்த்து அவள் கையிற் கொடுத்துத் தன் தூதைச் சொன் னன். அஃது அவள் செவியில் உருககிய ஈயநீர்போ லப் பாய்ந்தது. அவள் கொடுஞ் சினங்கொண்டு ஒரு செருப்பையெடுத்து அப்பெட்டிமீது வைத்துக் கட் டுவித்து இதனைக் கொண்டுபோய் அப்பாதகன் கை யிற் கொடுத்திடுகவென்று அத்தூதனையுங் கண்டித் தனுப்பினள். தூதன் நடந்ததைச் சொல்லிப் பெட் டியையுங் கொடுத்தான். அந்திராசி, “உலகமெல் லாமென்னடி வணங்க அளகவல்லிக்குமாத்திரம் ம திப்பில்லாதவனுனேன், என் தூதனும் என்னை மதி க்கமாட்டானே" என வெட்கமும் துக்கமும் மான மும் அாண்ட, ஆருக் கோபமுடையனகி, இவள்

யாழ்ப்பாணச்சரித்திரம். 85
செருக்கை அடக்குவேன்" எனச் சபதமிட்டுச் கமய ம்பார்த்திருந்தான். அளகவல்லி அச்செய்தியைத் தனது நாயகனுக்கு உடனே சொல்லின் பெரும்ப கை விளையுமென்றஞ்சிச் சாந்தமான காலம்பார்த் தறிவிக்க எண்ணியிருந்தாள். இரண்டு மூன்று தின த்தில் அந்திராசி பூதத்தம்பியிடஞ் சென்று ஒரு வெள்ளைக்காகிதத்தை நீட்டிக், “கச்சாய்த்துறைக் குச் சில மரங்களுக்குக் கட்டளையனுப்பவேண்டும், மரம் இத்தனையென்று கணக்குப்பார்த்து உடல்வா சகமெழுதிக்கொள்ளுவேன். பின்பு உமக்குச் சாவ காசமிருக்காது, இதிற் கையெழுத்திட்டுத்தாரும்’ என்ருரன். பூதத்தம்பி அதனைச் சரதமென்றெண் ணிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான். அந்திராசி தன் எண்ணம் முடிந்ததென்று மகிழ்ந்துகொண்டு போய் மாறுகாலிகிதத்தில் உடல்வாசகத்தைப் பற ங்கித்தலைவனுக்கு ஒல்லாந்தரை வெல்லத் துணைபுரி வதாகவெழுதி ஒரு தூதனிடமனுப்பிய பாலனை செ ய்து, அதனைத் தான் ஐயுற்றுப் பிடித்தான்போல நடித்து ஒல்லாந்த தேசாதிபதிக்குக் காட்டினன். தேசாதிபதி அதனுண்மையை ஆராய்ந்து பொய்யெ னக்கண்டு அதனைத் தள்ளினன். அந்திராசி இதனு ண்மையை நானறிவேன் இதுசெய்த பூதத்தம்பியை த்தப்பவிட்டால் ஒல்லாந்தவரசுக்குப் பழுதுண் டாம். என் உயிரும் தப்பாதென் முன். அதற்குத் தேசாதிபதியிணங்கிக் கொலைத்தீர்ப்பிட்டான். ஊர் காவற்றுறையிலே கடற்கோட்டை கட்டுவித்துக் கொண்டிருக்குங் தேசாதிபதி தம்பி, பூதத்தம்பிக் குற்றநட்பினனுதலின், அவனறியின் இத்தீர்ப்பு கி றைவேருதென எண்ணி, அந்திராசி காலதாமதஞ் செய்யாது அவ்விரவிற்றுனே அநியாயமாகப் பூதத் தம்பியைக் கொல்வித்தான். உடனே அளகவல்லியு முயிர்விட்டாள். பூதத்தம்பி மைத்துனனுகிய கை லாய் வன்னியன் அதனையறிந்து கொழும்புக்குச் சென்று பெரிய தேசாதிபதிக்கு நடந்தவைகளைக்
9 š8B er சிவஞ்ச னே.
பூதத்தம் பியைக் கொல்ல

Page 48
அந்திரா சியான
யடித்தி 四莎部eo...
சரித்திர வேறு g (6.
86 யாழ்ப்பாணச்சரித்திரம்.
கூறினன். உடனே அவன் யாழப்பாணதேசாதிபதி யையும் அந்திராசியையும் பிடித்துவருமாறு சேவ கரையனுப்ப, அவர்கள் தேசாதிபதியைக் கப்பல் மார்க்கவும் அநதிராசியைக் கரைமார்க்கமாகவுங் கொண்டு சென்ருர்கள். செல்லும்போது தேசாதி பதி கடலிற்பாய்ந் துயிர்விட்டான். அந்திராசி பண் டாாத்தார் தோப்பென முசலிக்குச் சமீபத்திலுள் ளகாட்டில் யானையடித் தரைத்துக் கொல்லப்பட் டான்.
இவ்விஷயத்தைப் பறங்கிச் சரித்திரகாரராயி னும் ஒல்லாந்த சரித்திரகாாராயினும் விவரமாக எ ழுதினரில்லை. ஒல்லாந்த பாதிரியாகிய பால்டியஸ் என்பவர், ஒரிராசதுரோகச் சூழ்ச்சி தமக்கறிவிக் கப்பட்டதென்றும், அச்சூழ்ச்சியிலே மன்னரா னெருவனும் பூதத்தம்பியும் ஐந்து பறங்கிகளும் ஒரு குருவுஞ் சேர்ந்தார்கள் என்றும், முந்திய எழு வரும் சிலுவையிற் கட்டிக் கண்டத்தைக் கொத்தி யும் நெஞ்சைப் பிளந்து ஈரலைப் பிடுங்கி அவர்கள் முகத்தில் எறிந்துங் கொல்லப்பட்ட்ார்களென்றும், குருச் சிரச்சேதஞ்செய்து கொல்லப்பட்டாரென் றும், அச்சூழ்ச்சியிற் சேர்ந்த இன்னும் பதினெரு வர் அடித்துதைத்துத் தூக்கிலிட்டுக் கொல்லப்பட் டார்களென்றும், அவ்வாறு கொல்லப்பட்ட பிணங் களெல்லாம் சிலுவையினின்றும் தூக்குமரத்தினின் றும் நீக்கிக் கழுகுகளும் பருந்துகளும் விருந்து கொள்ள மரங்களிலே தூக்கப்பட்டனவென்றும், இ ராச துரோகச் சூழ்ச்சியைக் கண்டுபிடித்தவன் மனு வல் அந்திராசிமுதலியென்றுங் கூறுகின் முர்.
இதனல் பாதிரியார் எழுதியதும் ஒல்லாந்தர் இத்தண்டம் புரிந்ததும் அந்திராசியினுடைய வாய் மொழியை நம்பியே என்பதும், இத்தனை உயிர்க் கொலையும் அந்திராசி தன் சபதமுடித்தற்குச் செய்
石 வஞ்சனேயால் வந்ததென்பதும், கன்னபரம்பரை

யாழ்ப்பாணச்சரித்திரம். 87
யாக வருங் கதையே உண்மையினையுடையதென்ப தும், பூதத்திம்பிநாடகஞ் செய்த மாதோட்டத்துச் சு வான்கொஸ்தான்மகன் தாவீது என்பவன் இச்ச ம்பவத்துக்குச் சமீபகாலத்தவனதலால் அவனுண் மையாராய்ந்தே பாடியிருத்தல்வேண்டுமென்பதும், பாடியவன் தானுங் கிறிஸ்தவனுதலின் கிறிஸ்தவனு கிய அந்திராசிமேல் அபவாதஞ் சுமத்த மனம்பொ ருந்தானென்பதும், உண்மையொருபக்கமும் பழி யொருபக்கமுமாக. அரியசம்பவம் எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழ்வது இயல்பேயென்பதும் துணி யப்படும். மேற்சொல்லப்பட்ட பால்டியஸ்பாதிரி யெழுதிய சித்திரவதையாகிய குரூரதண்டத்தை வாசிக்க நெஞ்சம் திடுக்கிடுகின்றது. மனம் அருவரு க்கின்றது. கண்டியரசனுகிய பூரீ. விக்கிரமராசசிங் கன் தனது ராச்சியத்தைப் பிடித்துக்கொடுக்க வஞ் சச் சூழ்ச்சிசெய்த ஏகேலப்பிள்ளையினது மனைவி மக்களுக்குச் செய்த தண்டத்தைக் குரூரதண்ட மெனக் கூறி அருவருப்போர் பால்டியஸ் பாதிரியா லெழுதப்பட்ட ஒல்லாந்தர் செய்தியை நோக்குவா ராயின், அதனிலுங் கொடிய பயங்கரமான அகாக ரிகச்செயல் வேறில்லையெனக்கண்டடங்குவர். இரா சதுரோகத்தினும் பெரியகுற்றமும் அதற்குரியதண் டத்தினுங் குரூாதண்டமும் இல்லை. இவை எல்லாத் தேசத்தாருக்கும் எல்லா இராச்சியத்தாருக்கும் உ
டன்பாடேயாம்.
அதுகிற்க, பூதத்தம்பிக்கு ஏகபுத்திரனே இரு ந்தான். அவன் பெயர் சோதிகா தன். அவன்மகன் பூதனுராய்ச்சி. பூதத்தம்பியினுடைய முன்னேரிட த்தில் புவனேகவாகுவினுடைய பதக்கமொன்றிருந் தது. அப்பதக்கம் அச்சந்ததியார்க்குப் பிதிரார்ச்சி தமாக வந்து பூதனுராச்சியார் காலத்தில் அவரால் கந்தசுவாமிகோயிலுக்குக் கொடுக்கப்பட்டது. அப் பதக்கம் இன்றும் நல்லூர்க் கந்தசுவாமிகோயிலிலி

Page 49
In Tt_I891
யர்ந்த முதலி.
GIFTør கர்,
88 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ருக்கின்றது. அதில் புவன்ேகவாகுவென்னும் பெயர் வரையப்பட்டிருக்கின்றது. பூதத்தம்பியிருந்தவிடம் பூதனுராய்ச்சிவளவென நல்லூர்க் கந்தசுவாமிகோயி லுக்குக் கீழ்பாலிருக்கின்றது.
பூதத்தம்பியும் அந்திராசியும் இவ்வாறு இறந்த பின் உலகுகாவலமுதலியை ஒல்லாந்தவரசினர் மங் திரியாக்கினர். அவனுக்கு மரபாலுயர்ந்த முதலியி னது சகோதரியை விவாகம்செய்து வைத்தனர். மர பாலுயர்ந்த முதலி பறங்கியரசரிடத்துத் தனதிகாரி யாயிருந்தவன். ஒல்லாந்தர் அந்த அதிகாரத்தை அவனுக்குக் கொடுத்தனர். உலகுகாவலமுதலி சில காலத்தில் இறந்தான். ஒல்லாந்தவரசினர் அவனிட த்து மிக்க மதிப்புடையராயிருந்தமையால் அவனு டைய அதிகாரத்தையும் அவனுக்குரிய வரிசைகளை யும் அவன் மகன் இராசதுங்கமுதலிக்குக் கொடுத் தனர். அவன் தன் மாதுலணுகிய மரபாலுயர்ந்த மு தலியினது ஏழுபுத்திரிகளுள்ளே ஒருத்தியை விவா கஞ்செய்தான். அவ்விவாகத்தை ஒல்லாந்ததேசாதி பதியும் பிரதானிகளும் சமுகமாயிருந்து சிறப்போ
டுருடாத்தினர்.
இக்காலத்தில் காயற்பட்டினத்திலிருந்து சில சோனகர் வந்து மிரிசிவில் என்னுமிடத்திற் குடியே றினர்கள். அவர்கள் குடிகொண்டவிடம் உசன் என் னுஞ் சோனகத்தலைவனுக்கு உரியதாயினமையால் உசன் என வழங்குகின்றது. அச்சோனகர்கள் அங் குகின்றுமகன்று சோனகன் புலவிலே சிறிதுகாலம் வைகி, அதுவும்வாய்ப்பாகாமையால், இப்போது நல் லூர்க்கந்தசுவாமிகோயி லிருக்குமிடத்துக்கு ம்ேல் பாகத்திலே குடிகொண்டார்கள். அங்கே ஒரு பள் ளிவாயிலுங் கட்டினர்கள். அப்பொழுது முன் இடி பட்ட கந்தசுவாமிகோயிலை மீளவுங் கட்டுதற்குத் தமிழர் முயன்று சோனகரை அவ்விடத்தினின்றும் நீக்கித் தருமாறு ஒல்லாந்த தேசாதிபதிக்கு விண்ண

யாழ்ப்பாணச்சரித்திரம். 89
ப்பஞ் செய்தார்கள். ஒல்லாந்த தேசாதிபதி அதற்க துகூலஞ் செய்வதாகக் கூறியும் செய்யாது காலம் போக்கினன். அதுகண்டு தமிழர் சோனகரை அவ் விடத்தை விடும்படி கேட்டும் இரந்தும் பார்த்தார் த்தார்கள். முடிவில் அக்கிலத்துக்குப் பெருவில்த ருவதாயுங் கேட்டார்கள். சோனகர் அதற்கும் இ சையாமை கண்டு தமிழர் ஒருபன்றியைக் கொன்று அவர்களுக்கெல்லாம் பொதுவாயிருந்த கிணற்றிலி ட்டார்கள். அதுகண்டு சோனகர் தங்கள் கிலத்தை விற்றுவிட்டு நாவாய்த்துறை (நாவாந்துறை) க்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக்கொண்டு அங்கே குடியேறினர்கள். அது சோன் கதெருவென வழங் குகின்றது. சோனகர்கள் அக்காலமுதல் பெரும்பா லும் வியாபாரத்தையே தமதுதொழிலாகக் கொண் டுவாழ்ந்துவருகின்றர்கள். அவர்களுள்ளே முயற்சி யின்றி இருப்பவர்களைக் காண்பதரிது. அவர்கள் சமயாபிமானமும் ஒற்றுமையும் பெரிதுமுடையவ
ஒல்லாந்த தேசாதிபதிகளிற் சிலர்மாத்திரம் சற்றே ரீதியாய் அரசு புரிந்துவந்தார். அவர்களுள், (Rump) “இாம்பு’ என்பவன் சாதுரியமும் காரு ண்ணியமுமுடையணுய் நீதிசெலுத்தினன். அப்பால் 1739 ல் தேசாதிபதியாய் வந்த (Van Imhoff) “வா ன் இம்மாவ்’ என்பவன் செய்த துரைத்தனமும் சற்றே வியக்கத்தக்கது. அச்சியந்திரசாலையொன்று ஸ்தாபித்துச் சில்புஸ்தகங்கள் அச்சிட்டவனும் இ ாேகுச்சுங்கத்தை ஏற்படுத்தியவனுமிவனே. மற்ருெ ருவன் 1765 ல் தேசாதிபதியான (Balk) “வால்க்” என்பவன். அவன் காப்பி, ஏலம், மிளகு என்னுஞ் செடிகளைப் பிறநாடுகளிலிருந்து கொணர்ந்து நாட் டிக் கிருஷிகத்தை மிகவிருத்திசெய்தான். கறுவாப் பட்டையையும் அமிதமாய்ச் செய்கைபண்ணுவித் தான்.
2
ஒல்லாந் sGs Far திபதிக ன்.

Page 50
தேசாதி பதிகள் aftur Luar
o
F. வாதீன நீக்கல்.
90 யாழ்ப்பாணச்சரித்திரம்.
இனி மற்றைய தேசாதிபதிகளோ மிகக்கொடி யர். சிலர் பரிதானப்பிரியர். வேறுசிலர் அடிமையா ட்களை விற்றும், தனவான்களுக்கு “முதலியார்” "தொன்” என்னும் பட்டப்பெயர்களை விற்றும் பெ ரும்பொருளிட்டிஞர். இன்னும் (Versluys) “வேர் சுலை” என்னுமொரு தேசாதிபதி, “பொருளாவு டையார்க்குப் புன்மலமுமினிது” என்றபடி, பொ ருட்பிராந்தியினல், அரிசிவிலையைக் கண்டமட்டிலு முயர்த்திப் பிறநாடுகளினின்றும் எளியவிலையில் அரி சிதருவித்துத் தானே வைத்துக்கொண்டு விற்றுப் பெரும்பொருளீட்டினன். பஞ்சத்தை கிவிர்த்திசெ ய்யவேண்டியவர் அரசராகவும், இவன் பஞ்சத்தை வலிந்தழைத்து நுழையவிட்டது குடிகள்மேல் வை த்த காருண்ணியந்தானே! இவர்கள் தற்காலத்துள் ளவாறு அக்காலத்திலும் கிராமங்கள்தோறும்கிராமா திகாரிகளையும், ஊர்கள்தோறும் நீதிபதி முதலியோ சையும் கியோகித்து அாசுசெய்துவந்தாராயினும், அவர்கள் செலுத்தியநீதி சுருக்கிக் கூறின் அநீதியே.
இனி மார்க்கவிஷயத்தில் யாது செய்தார்கள்! அவர்கள் தொடக்கத்தில், பறங்கிக்காாரைப்போல் அச்சுறுத்தியாயினும் மதஸ்தாபனம் செய்யாது, குடிகளாயுள்ளவர் வலிந்துபோய்ச் சேர்ந்து கிறிஸ் தவாாதற்கேதுவான கொலைத்தண்டனையும் பிறது ன்பங்களுமாகிய தீய உபாயங்களால் தம்மதத்தைப் பரவச்செய்தார்கள். இவர்கள் வைசேடியக்கிறிஸ் தம் எனத் தகும் "புரோடெஸ்டாண்டு” கிறிஸ்து மதத்தார். பறங்கிகள் சாதாரணகிறிஸ்தம் எனத் தகும் “கத்தோலிக்க” கிறிஸ்தமதத்தார். அம்மத த்திற்கும் இம்மதத்திற்கும் பாம்புக்கும் கருடனுக் குமுள்ள பொருத்தம். ஒல்லாந்தருடைய முதல் கோக்கம், கத்தோலிக்கமதத்தைக் களைந்துவிட்டு அம்மதத்திற்குப் பதிலாகத் தம்மதமாகிய புரோ
டெஸ்டாண்டு மதத்தை நாட்டவேண்டுமென்பதாம்.

யாழ்ப்பாணச்சரித்திரம். 9.
அதுநிற்க, பின்னார்ட்களில் வேறுமோருபாய ஞ்செய்தார். அவர்கள் ஊர்கள்தோறும் பாடசாலை களை ஸ்தாபித்து, அப்பாடசாலைகளுக்கே பிள்ளைக ளை யாவரும் தப்பாதனுப்புதல் வேண்டுமென்றும், அங்கினங் தவறுவார்க்கு அபராதமிடப்படும் என் றும், இராசாங்கத்தில் உத்தியோகமும், வரிக்கு கில ங்களும் பெற விரும்புவோர், வைசேடியக் கிறிஸ்த குருமாரிடம் ஞானஸ்நானம் என்னும் சுத்தோதக புரோக்ஷணம்பெற்ற கிறிஸ்தவராயிருத்தல்வேண்டு மென்றும் விளம்பரஞ்செய்தார். இவைகாரணமாகச் சைவராயிருந்தவரிலும் பெளத்தராயிருந்தவரிலும், சாதியாலுயர்ந்தோரும் தாழ்ந்தோருமாகிய அநேக ரும், பறங்கிக்காரர்காலத்துக் கத்தோலிக்க பரம்ப ரையிலுள்ளாரிற் பலரும், அம்மதம் தழுவினர். இ வர்கள் மாத்திரமா? இல்லை. யாழ்ப்பாணத்திலுள்ள பிராமணரிலுமன்ருே அநேகர் தஞ்சைவசமய லாஞ் சனையாகிய விபூதி உருத்திராக்ஷமுதலியவைகளைத் அறந்து அம்மதப்பட்டார். அற்றேல், அந்நாளில் யாவரோ அம்மதப்படாதவர். இவ்வாற்றுலன்ருே 1888 ல் பால்டியஸ் என்னும் பாதிரி, யாழ்ப்பாண நாட்டில் மாத்திரம் கிறிஸ்தவராயினுேர் தொகை (1,80,000) இலக்ஷத்தெண்பதினுயிரம் எனக் கொ ழும்பில் அக்காலத்திலிருந்து கொடுங்கோலோச்சிய ஒல்லாங்க தேசாதிபதிக்கு அறிக்கைப்பத்திரமனுப் பினர். அவர்களெல்லோரும் "கூலிக்குமார்பறைக் தார்’ போல் சீவனுேபாயத்தினிமித்தம் அவ்வேடம் பூண்டாரன்றி, மெய்ம்மையா லங்ங்னஞ் சேர்ந்தோ
ህ`€N)6ዃ)ff.
ஒல்லாந்தர் தமது அரசுக்கு இறையைப் பெரு க்குமாறு பலவகைச் சூழ்ச்சிகளும் செய்தனர். அடி மையாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் அதிக விலைபெ றலாமெனக் கண்டு, சோழநாடு முதலியவிடங்களி லிருந்து ஏழைச்சனங்களை மரக்கலங்களிலேற்றிவக்
ஒல்லாந் தஅரசிய

Page 51
Lg Tan வரி.
சிலுவை ப்பாகை
LU’L-ửh விற்றல்.
93 யாழ்ப்பாணச்சரிந்திரம்.
து விற்றனர். உயர்ந்த வஸ்திரங்கள் ஆபரணங்களு க்கு வரிவிதித்தார்கள். புதிதாகப் பொன்னகை அ ணிபவர்கள் அரசுக்கு ஒருபகுதி கொடுத்தணியவே ண்ெேமனச் சட்டஞ் செய்தார்கள். அதஞல் அகே கர் பொன்னகைகளை விடுத்து வெள்ளிநகைகளை அ ண்வாராயினர். பலர் காதுகளைக் குத்தித் துவாசஞ் செய்துவிட்டுப் பூஷணமின்றித் திரிவாராயினர். பெ ண்களிற் பெரும்பாலார் கீழ்க்காதன்றி மேற்காதிலே கொப்பு முருகு கன்னப்பூத் துவாரங்களைக் குத்தா து விடுத்தார்கள். மூக்குத்தி இத்து முதலிய துவார ங்களையும் குத்தாது விட்டார்கள். சனங்கள், வரிக் கஞ்சி விலையுயர்ந்த வஸ்திரங்களைத் தரியாது விடுத் தார்கள். அதஞல் யாழ்ப்பாணத்தில் நெடுங்காலம் ஈல்ல வஸ்திராபரணங்கள் அறியாப் பொருட்களா யின. காகரிகமும் குடிபோவதாயிற்று. வரியொரு பக்கம் வருத்துவதாயிற்று. கிறிஸ்தவரல்லாதார் த லேச்சீராத் தரித்தலாகாது. அதஞல் சைவசமயிக ளும் சிலுவைவடிவத் தலைச்சீராவே தரிக்கவேண்டிய வர்களாயினர். வயல்களிலே விளைந்த நெல்லைக் கள த்திற் குவித்து அரசினர் பகுதிகொள்ள வரும்வரை க்கும் அக்காலத்துக் குடிகள் அக்குவியல்மேல் சிலு வைக் குறியிட்டு வைக்கவேண்டியவராயினர். அர சினர் பதினெட்டு இறைசால் பெற்றுக்கொண்டு மு தலிப்பட்டத்தைத் தகாதவர்க்குங் கொடுத்தார்கள்.
பல்லக்குடையவர்களெல்லாம் பெருவரிகொடு த்துவந்தார்கள். அது கொடுக்கத் தவறிஞேரை அ ாசினர் கட்டிவைத்தடித்து வந்தார்கள். அதுகண்டு அநேகர் தம்பல்லக்குவரிசையை விட்டார்கள். வா ழையிலையிற் போசனம்பண்ணலா காதென்றும் தாம் விற்கும் சீனக்கலம் மட்கலம் வட்டில்களிலேயே உ
ண்ணல்வேண்டுமென்றும் அரசினர் கட்டளைசெய்
து அக்கலங்களாலும் பெரும்பொருளீட்டினர்கள். அதனுல் குடிகள் அமாவாசை முதலிய விரததினங்

யாழ்ப்பாணச்சரித்திரம். 98
களிலே இரகசியமாய் இலையிற் போசனஞ்செய்து அவ்வெச்சில் இலைகளைத் தம்விட்டுப் புறக்கூரையி லே செருகி மறைத்து வைப்பார்கள். பிராமணர்கள் தமது பூனூலை மடியினுள் மறைத்துக்கொண்டு தி ரிவார்கள். கோயில்களிலே பறைமேளமும சேமக் கலமும் டமாரமுஞ் சங்குமே வாச்சியங்களாயின. இபபடியே ஒல்லாந்தவரசிகுல் சமயசுவாதீனமும் சனங்களுக்கில்லாது போயிற்று.
இவ்வாறு ஒல்லாந்தர் அரசுசெய்யுங் காலத்தி லே தோபாலச்செட்டியார் என்னுமோர் அகம்படி யர் தமது மனைவியோடு சோழநாட்டினின்றும் வங் தார். அவர் ஒல்லாந்தவரசினரிடத்தில் துவிபாஷிக ராயிருந்த சொச்சிக்கணேசையர் என்பவரையடுத் து அவருடைய சேவகத்திலிருந்தார். கணேசையர் கோபாலச்செட்டியாரைக் காரணமின்றி ஒருகாட் கண்டித்தபோது செட்டியார் அவர் சேவகத்தினி ன்றும் விலகிச் சம்பாாவியாபாரஞ் செய்துவந்தனர். அவர் யாழ்ப்பாணம் வந்தநாள் முதலாக ஒருவிநாய கரை ஒரு வேம்பின்கீழ்வைத்துப் பூசித்துவந்தனர். அவ்விநாயகர் கோயில் இப்போது வேம்படிப் பிள் னையார் கோயில் எனப்படுகின்றது. அவர் ஒலலாந்த தேசாதிபதி வீட்டுக்குச் சம்பாங் சொடுக்கும் வழ க்கமுடையராயினர். தேசாதிபதி பத்தினியார் கோ பாலச்செட்டியாருடைய நேர்மை விசுவாசம் 5ற்கு ணம் நல்லொழுக்கமுதலியவைகளைக் கண்டு அவரி டத்தில் மிக்க அபிமானமுடையராயிருந்தார். அவர் தமக்கு வேண்டும் எந்த விலையுயர்ந்த பொருளையும் கோபாலச் செட்டியார் மூலமாகவே வாங்குவர். அ தனல் கோபாலச் செட்டியாருக்கு மதிப்பு ஊரி லும் தேசாதிபதிவிட்டிலும் பெரிதாயிற்று. கோட் டையிலுள்ளவர்களுக்கும் சேனைகளுக்கும் சம்பா ரம் வஸ்திரம் உணவுப்பண்டங்கள் முதலியனவெல் லாம் கோபாலச் செட்டியாரே கொடுத்துவந்தார்.
Gas a Un லச்செட் டியார்.

Page 52
கூழங் கைத்த ம்பிரான்
வைத்தி பலிங்கச் செட்டி tuum f.
94 யாழ்ப்பாணச்சரி த்திரம்.
அதனல் அவருக்கு வருவாயதிகப்பட்டது. இப்படி யிருக்கையில் கூழங்கைத்தம்பிரான் என்பவர் யாழ் ப்பாணத்தில் வந்து கோபாலச்செட்டியாருக்கு நட் புடையராயிருந்தார். அத்தம்பிரான் திருப்பனக் தாள்மடத்திலிருந்தபோது, அம்மடாதிபதி தம்மு டைய கண்டிகை களவுபோயினமை காரணமாகச் சந்தேகங்கொண்டு அவரைச் சத்தியஞ்செய்யுமாறு கேட்க, அவர் உருக்கிய நெய்யிலே கையிடச்சொ ன்னலுஞ் செய்வேனென்று கூறி, அவ்வாறு கூசாது கையிட்டுத் தன் சத்தியத்தை நாட்டி அதனுற் கை கூழையாகப் பெற்றவர். அவர் தமிழ் இலக்கண இ லக்கியங்களிலும சித்தாந்த சாஸ்திரங்களிலும் மிக் கபாண்டித்தியமுடையவர். சிவபத்தியும் சிவானுபூ
யும் உடையவர்.
கோபாலச்செட்டியாருக்கு ஒரு புத்திரன் பிற ந்தான். அதுகேட்டுக் கூழங்கைத்தம்பிரான் கோபா லச்செட்டியாரிடஞ் சென்று, உன் புத்திரனைத் தூக் கிக்கொண்டுவாவெனருர், செட்டியார் மகிழ்ந்து அ ப்புத்திரனத் தூக்கிக்கொண்டுவந்து அவருக்குக்கா ட்ட, அவர் மிக மகிழ்வோடாசீர்வதித்து, “இப்பு த்திரன் பெருங் கருமங்கள் முடிக்கப் பிறந்திருக்கி முன். அவனைச் செவ்வே பாதுகாத்திடக்கடவாய் அவன்பெயர் வைத்தியலிங்கன்” என்று கூறிப்போ யினர். அப்புத்திரன் மிக்கவழகும் திடகாத்திரமும் நற்குணநற்செய்கைகளுமுடையணுய் வளர்ந்து பன் னிரண்டு வயசடைந்தான். ஒருநாள்செட்டியார் வை த்தியலிங்கனக் கடையில் வைத்துவிட்டுப் போச னஞ்செய்யப் போயினர். அப்பொழுது தேசாதிபதி மனைவியார், கோபாலச்செட்டியார் கடைக்குமுன் னே தமது குதிரைவண்டியை நிறுத்திச் செட்டியா ரெங்கேயென, வைத்தியலிங்கன் எழுந்து போய் ஒரு மாதுளங்கனியை நீட்டி, “இதனைக் கிருபைக. ர்ந்தங்கீகரித்தல்வேண்டும்” ஏன்முன். அதற்கிடை

யாழ்ப்பாணச்சரித்திரம். 95
யில் செட்டியாரும் போசனம் முடித்துக்கொண்டு மீண்டனர். தேசாதிபதிதேவி, இச்சிறுவன் யாரெ ன்ன, செட்டியார் சிறியேன் புத்திரன் என்ருர் தே வி மகிழ்ந்து அச்சிறுவனத் தமது வண்டியிலேற்றி க்கொண்டு தமது வீட்டுக்குச் சென்ருரர். அவருக் குப் புத்திாரில்லாமையால் அன்றுமுதல் இச்சிறுவ னைத் தமது புத்திரனகப் பாவித்து நடாத்தி வந்தனர். போசனநேரத்துக்குமாத்திரம் அவனை அவன் வீட்டுக்கு அனுப்பி, மற்றக்காலமெல்லாம் த மது வீட்டில் வைத்து அவர் தாமே ஒல்லாந்தபா ஷையும் பயிற்றிவந்தனர். பதினெட்டு வயசுவரையும் வைத்தியலிங்கன் தேசாதிபதி வீட்டில் இருந்தான். ஒருநாள் தேசாதிபதி முத்துச்சலாபக் குத்தகை விற்கப்போகிருரெனக் கேள்விப்பட்ட வைத்தியலி ங்கன், தன்னை வளர்த்த தாயாரிடஞ் சென்று, “மு த்துக்குத்தகை வாங்க விருப்புடையேன்; அதனே வாங்குதற்கு உதவிபுரியவேண்டும் அம்மா’ என்ற ன். தேவி முகமலர்ந்து அவனே நோக்கி, ‘அப்பா, நீ குத்தகையேற்று நடாத்துவாயா” என்ன, அவ ன், “அம்மாவுடைய தயை எனக்கிருக்கும்போது நடாத்த வியலாதோ’ என் முன். அதுகேட்ட தேவி ஒரு கடிதம் வரைந்து அவனிடங் கொடுத்து, “இ தனக் கொண்டுபோய்க் கச்சேரியில் உனது வளர்த் ததந்தையாகிய தேசாதிபதியிடங் கொடு” என்றர். அதனை வைத்தியலிங்கன் வணக்கத்தோடு வாங்கிக் கொண்டுபோய் வணங்கிகின்று தேசாதிபதியிடங் கொடுத்துப் பக்கத்தே கின்றன். அதனைத் தேசாதி பதி திறந்து வாசித்து முகமலர்ச்சியோடு அவனே நோக்கிக், “குத்தகை வாங்கப்போகிருடியா’ என்ன, அவனும், ஆம் ஐயா, என்றன். பிரதானமந்திரியா கிய கொச்சிக்கணேசையர் அவனை நோக்கி, ‘என் னடா நீயுங்குத்தகைக்குத் தக்கவனய்விட்டாயோ’ என்ருர். தேசாதிபதி கணேசையர் கேட்டதை அவ தானித்து மனசிலே கோபமுடையணுகி, ஐயரை
வைத்தி ue9ris சீ செட்டி யார்ழத் துக்குளி க்குத்த 656 ங்கல்,

Page 53
முத்துப்
6.
96 யாழ்ப்பாணச்சரித்திரம்.
நோக்கி, “முத்துக்குளிக் குத்தகையை வைத்திய லிங்கச்செட்டி பேருக்கு எழுதி அதற்குப் பிணே யாக என்பெயரை எழுதுக” என்று கட்டளையிட் டான். ஐயர் தேசாதிபதி கருத்தைக் குறிக்கொண்டு யாதும் எதிர்பேசாது குத்தகையை எழுதிவிட்டார். வைத்தியலிங்கச்செட்டியார் அக்குத்தகையை ஏற் றக் கிரமமாக நடத்தி ஓரிலக்ஷரூபாவுக்குமேல் இ லாபம் பெற்ருர். இப்படியே மூன்றுமுறை குத்த கை வாங்கிப் பேரிலாபம் படைத்ததுமன்றிக் குண த்தாலும் கொடையாலும் நல்லொழுக்கத்தாலும் ஈசுரபத்தியாலும் சிறந்து பெரும்புகழும் படைத் தார். இவர் சோழநாட்டிலே சங்கந்தி (சங்கேந்தி) யென்னுமூரிலே பெண்கொண்டவர். இவருடைய தாயார் ஒருநாள் முத்துக் காயவைத்துக்கொண்டிரு க்கும்போது பிச்சைக்காரனுக்கு ஒருபிடி முத்தள் ளி வழங்கினரென்முல் குழைகொண்டு கோழியெறி யும் பெருஞ் செல்வரினும் இவர் பெருஞ் செல்வரெ
ன்பது சொல்லவேண்டா.
ஒருநாள் கூழங்கைத்தம்பிரான் வைத்தியலிங் கச்செட்டியாருடைய வீட்டுக்குச் சென்றபோது, செட்டியாருடைய தாயார் அவரை உபசரித்து அ வர்பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தார். தம்பிரான் அவரை ஆசீர்வதித்து,
“சங்கேந்தி தங்கச்சி தையலென்பா ரிங்கவளும் சங்கேந்தி தங்கச்சி தையலே...அங்கவளைக் கோபாலன் றேவியெனக் கூறுவா ரிங்கவளும் கோபாலன் றேவியெனக் கூறு.”
என்னுஞ் செய்யுளைக் கூறினர். கோபாலச்செட்டி
யார் மனைவிபெயர் தையலாய்ச்சி. அவரும் சங்கேக்
தியிற் பிறந்தவரே.
வைத்தியலிங்கச்செட்டியார் தமக்கொரு சிறந்
தமாளிகை கட்டவெண்ணித் தம்பிரானிடஞ் சென்

யாழ்ப்பாணச்சரித்திரம். 97
று தமது கருத்தை வெளியிட்டனர். அவர் “உன் னே இங்கிலைக்குக் கொண்டுவந்தவர் உனது பரமபி தாவாகிய வைத்தியலிங்கக் கடவுளும் உலகமாதா வாகிய தையல்நாயகித் தேவியாருமன்முே. அவர்க் காலயம் வகுத்தபின்னரே நீ உனக்கு மாளிகை கட் டவேண்டும்” என்றனர். அதுகேட்டசெட்டியார் “அ வ்வாறே செய்வேன்” எனக் கூறித் தம்பிரான் வகு த்தவிடத்தை வாங்கி, வண்ண வைத்தீசுரன் கோ யிலென்று இன்றும் இணையற்று விளங்கும் சிவால யத்தைக்கட்டிக் கும்பாபிஷேகஞ் செய்வித்துப், பற ங்கிக்காரரால் அழித்தொழிக்கப்பட்ட சைவப்பயி ரை மீளவும் காட்டினர். இத்திருப்பணிக்கு யாழ்ப் பாணத்துள்ள ஏனைய பிரபுக்களும் சிறிது பொரு ளும் பூசைக்கு விளைகிலங்களும் தோட்டங்களுமுத வினராயினும், பெரும்பாகமும் வைத்தியலிங்கச்செ ட்டியாரே தமது திரவியங்கொண்டு முடித்தனர். இவருங் தம்பிரானும் யாழ்ப்பாணத்துக்குச் செய்த உபகாரம் யாழ்ப்பாணமுள்ளவரையும் அவர் பெய ரை விளக்கிக்கொண்டேயிருக்கு மியல்பினதாம். செ ட்டியார் சந்ததியார் யாழ்ப்பாணத்திலும் சோழகா ட்டிலுமிருக்கின்றர்கள்.
ஒல்லாந்தர் மாடுகளைக் கொன்று இறைச்சிவிற் றற்கு ஒரிறைச்சிச்சாலை தாபிக்கவேண்டுமென முய ன்றனர். அதற்குத் தமிழ்மந்திரிகளும் குடிகளும் மாமுயிருந்தனர். செத்தமாடன்றி மாட்டைக் கொ ன்று தின்றறியாத பறையரும் அத்தொழிற் குடன் படாாாயினர். அக்காலத்தில் நெடுந்தீவிலுள்ள சில பறையரை ஒல்லாந்தர் தம்மதத்திற் சேர்த்து, அ வர்க்குப் பெரும் வேதனங் கொடுத்துக் கொணர்ந்து அத்தொழிலுக்குடன்படுத்தினர். ஒல்லாந்தர் அச் சாலையை ஊரவர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கோட்டையினுள்ளே அந்தரங்கமானவிடத்தில் வை
3
வண்ணை வைத்தி dial Trap tuửh.
கோ வதை

Page 54
சண்முக நாயகழ தலியார்
ஒானப் பிரகாசர்.
98 யாழ்ப்பாணச்சரித்திரம்.
த்துத் தமது சாதியார்க்குமாத்திரம் உபயோகப்ப த்ெதிவந்தனர். ஒல்லாந்தர் இறைச்சிக்கு என்று கே ட்டால் ஊர்ச்சனங்கள் மாடு கொடுக்கமாட்டார்கள் என்றெண்ணிப் பாலுக்கென்று பசுக்களை வாங்கிக் தொகையாக வளர்த்து அவை ஈனுங் காளைக்கன்று களை வளர்த்துக் கொன்று தின்றுவந்தார்கள். ஈற் றில் பசுக்களையுங் கொன்றருந்திவந்தனர். ஒருநாள் தேசாதிபதியினுடைய வீட்டில் நடந்த ஒரு பெரு விருந்துக்கு ஒரு காளைக்கன்று வேண்டியிருந்தது. தேசாதிபதி அக்காலத்தில் பசுநிரையாலும் ஆளடி மை நெல்விளை நிலமிகுதியாலும் இராசாங்கவுத்தி யோகத்தாலும் சிறந்து விளங்கிய சண்முகநாயக முதலியாரிடம் ஒருகன்று கேட்க, முதலியார் இவ் வீனச்செயலுக்கு உடன்படமாட்டேன் இராசாங் கவுத்தியோகமும் வேண்டாமெனக் கூறி அத்தே சாதிபதி சமுகம்விட்டகன்றனர். தாம் செய்யாவி டினும் கோவதைக்கு அனுகூலியாயிருப்பதும் பெரு ங்கொடும் பாவமெனக் கொண்டு தமது அதிகாரத் தையும் இராசபூச்சியதையையும் துறந்த சண்முக நாயகமுதலியாரது பெருந்தகைமை பெரிதும் பாரா ட்டத்தக்கது. உயர்குடிப்பிறந்தோர் உயிர்போக வரினும் இழிதொழிலுக்கு உடன்படாரென்பது ஆ ன்றேர் வாக்கு. இவர் வழியிலிப்போதுள்ளவர்களும் பெருங்குணம் படைத்தவர்களே.
கோவதைக்கஞ்சிப் பறங்கிக்காரர் காலத்திலே யாழ்ப்பாணத்தை விட்டோடிச் சோழதேசத்தில் வாழ்ந்த பெருந்தகையுமொருவருளர். யாழ்ப்பாண த்திலாசு புரிந்த ஒரு பறங்கித்தேசாதிபதி தன் கீழு ள்ள கிராமாதிகாரிகள் வருஷமொருவராய் ஒவ்வொ ரு காளைக்கன்று கொடுத்து வரவேண்டுமென்று கட் டளையிட்டான். அக்கட்டளைப்படி முதன்முறைக் குரியவராயினர் திருநெல்வேலி ஞானப்பிரகாசர். அ வர் திருநெல்வேலி அதிகாரமும் கல்வியும் பெருஞ்

யாழ்ப்பாணச்சரித்திரம். 99
செல்வமும் பரம்பரைச் “சைவவேளாண் குடியுமு டையவர். அவர் பறங்கித் தேசாதிபதிக்கு இறைச் சிக்கு மாடு கொடுத்து இவ்வூரில் வாழ்வதிலும் இவ் வூரைவிட்டகல்வதே சிறந்த உபாயமாமெனக் கொ ண்டு அவ்வாறே தமதூரை விட்டகன்று சிதம்பரத் தையடைந்து அங்கே துறவறம்பூண்டு வாழ்ந்தவர். அவர் சிவஞான சித்தியாருக்குத் தமிழில் ஒருரை யும் வடமொழியிலே அநேக நூலும் செய்தவர். சித ம்பரத்திலேயுள்ள ஞானப்பிரகாசமென்னும் திருக் குளம் அமைத்தவரும் அவரே.
இக்காரணம்பற்றி வரணித் தில்லைநாதர் என்ப வரும் பறங்கிக்காரரது கொடுங்கோலின் கீழ் வாழ லாகாதெனக்கொண்டு சோழநாட்டையடைந்து ஞா னப்பிரகாசரது பெருமைகளைக் கேள்வியுற்று அவ ர்பாற் சென்று காஷாயம்பெற்றுத் தில்லைநாத தம்பி ரான் என்னும் பெயரோடு விளங்கினர். அவர் சிவா நுபூதியுடையராய்ச் சோழராசாவின் புத்திரிக்குற்ற குன்மவலியை விபூதிசாத்தித் தீர்த்து வேதாரணி யத்திலுள்ள சிவாலயத் திருப்பணிக்காகப் பெருந் திரவியமும் உப்பளமும் இரேகுச்சுங்கமும் பெற் றவர். வேதாரணிய தலவிசாரணையுரிமை வரணிச் சைவர்க்குக் கிடைத்தது அவர் மூலமாகவேயாம். வாணிச் சைவரே இன்றும் வேதாரணிய ஸ்தலவிசா ரணைக் கர்த்தராயிருக்கின்ருரர்கள்.
ஒல்லாந்தரது கொடுமைக்காற்ருது அக்காலத் திலேயே மேல்பற்றிலிருந்து போய்ச் சில குடிகள் வேதாரணியம் சம்போடை சிதம்பரம் முதலியவிட ங்களிற் குடியேறினர்.
அது கிற்க, சண்முகநாயகமுதலியார் தமது உத்தியோகத்தினின்றும் நீங்க, அவருடைய பதத் துக்கு அநேகர் விண்ணப்பஞ்செய்தனர். தோம்பெ ழுதும் பகுதி அதிகாரமுழுதும் சண்முகநாயக மு
தில்லைநா ததம்பி ரான்.

Page 55
ஒல்லாந் ,
566) 8 ns).
தமிழர் ஒல்லாந் துசென் றுகல்வி கற்றல்.
மெல்லோ
100 யாழ்ப்பாணச்சரித்திரம்.
தலியாரே வகித்திருந்தார். அது முடிந்தும் முடி யாமலுமிருந்தது. அதனை முடிப்பதற்காகப் பலர் பரீக்ஷிக்கப்பட்டும் பூரணபோக்கியதை உடையவர் ஒருவரும் அகப்படவில்லை. உயர்தர ஒல்லாந்த கலா சாலையொன்று கொழும்பிலிருந்தது. அங்கே சென் றுகற்றவரினுஞ் சிலர் வரவழைத்துப் பரீக்ஷிக்கப்பட்
டனர். அவருள்ளும் தக்கவர் அகப்பட்டிலர். அது
கண்டு தேசாதிபதி மெல்லோப் பாதிரியாரைக்கொ ண்டு ஐவர் தமிழரைத் தெரிந்தெடுத்து ஒல்லாந்துக் கனுப்பி மூன்றுவருஷம் பலதுறைக்கல்வியிலும் பயி ற்றுவித்தனர். அவருள்ளே இருவர் இறந்துபோக மூவர் பெரும் வித்தியாபட்டங்கள் பெற்று மீண்ட னர். அவர்களுள் ஒருவரே தொன்பிலிப்பு இலங் கைக்கோன் முதலியார். அவரே தோம்பெழுத்தை முடித்தவர். அவர்வமிசத்தரின்னுமுளரோ அருகி னரோவென்பது தெரியவில்லை. ஏனைய மூவருள் ஒருவர் உபசேனுபதியாகவிருந்தனர். ஒல்லாந்தசே னையோடு பிராஞ்சியர் திரிகோணமலையிற் போர்செ ய்தபோது அவர் பிராஞ்சியரைப் போரில் தோற் ருேடுமாறு செய்தவரென்பர். ஒந்தாச்சியென்பவ ரும் ஒல்லாந்த தேசஞ்சென்று வித்தியாபட்டம்பெ ற்று விளங்கினேருள் ஒருவராவர். அவர் வரலாறு வேறென்றுங் தெரியவில்லை.
ம்ெல்லோப்பாதிரியார் கொழும்பிலே ஒர் உயர் குலத் தமிழ்க்குடும்பத்தில் 1720 ம் (uல் பிறந்து ஒல்லாந்த கலாசாலையிற் கற்று வலலவராயினர். தமி ழிலும் சிறந்த பாண்டித்தியம் படைத்தவர். அவரு டைய கல்வியறிவின் வளத்தைக் கண்ட ஒல்லாந்தர் அவரைப் பாதிரியாக்கி யாழ்ப்பாணத்துக்கு அனு ப்பினர். அவரே பைபில் புதிய ஏற்பாட்டைத் தமி ழில் மொழிபெயர்த்தவர். அவர் செய்ததாகக் கூற ப்படும் உவமைப்பாட்டுக்கள் மிகச் சிறந்தவை. அ வர் கூழங்கைத் தம்பிரானுக்குப் போபிமானியாக
விளங்கினவர். 1790 ம் இறந்தனர்.

யாழ்ப்பாணச்சரித்திரம். 101
அக்காலத்திலே குலத்தாலும் செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராயமுதலி யாரென்பவர் ஒருவர் நல்லூரிலிருந்தார். கூழங்கை த்தம்பிரான் இவ்வில்லவராய முதலியார்வீட்டிலே இாாக்காலத்திலே வித்தியாகாலசேஷபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன் தம்பிரான் கால க்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள்சொ ல்லிவந்த பாட்டுக்களையெல்லாம் ஏழுவயதளவில் அவதானம்பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்ருல் அப்புத்திரனுருடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா. ஒருநாள் அப் புத்திரஞர் வீதியிலே கின்று விளையாடிக்கொண்டிரு க்கையில் ஒருபுலவர் வில்லவராயமுதலியார் வீடு எங்கேயென்று வினவ, அப்புத்திரனர். அவரைப் பார்த்து,
பொன்பூச்சொரியும் பொலிந்தசெழுந்தாதிறைக்கும் நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம்-மின்பிரபை வீசு புகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன் வாசலிடைக் கொன்றை மாம்.
என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரன ரை மெச்சி இச்சிறுபருவத்தே இத்துணைச்சிறந்த கவியினலே விடைகூறிய நீ வரகவியாதல்வேண்டு மெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சிமோந்து சென்ற னர். அப்புத்திரனரே சின்னத்தம்பிப்புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ்சென்று தலயாத் திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதிபாடி அரங்கே ற்றினர். அப்போது அவ்வாதீனத்து விததுவானகிய சொக்கலிங்க தேசிகர் என்பவர் சொல்லிய மேல்வ
ருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது.
செந்தா தியன்மணிப் பூம்புலி யூாரைச் சேர்ந்துநிதம் சிந்தா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்
வில்லவ ராயழத
சின்னத் தம்பிப் പുസൈഖ്

Page 56
dog
முத்துழ தலியார்
102 யாழ்ப்பாணச்சரித்திரம்.
நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி காவலன்ர்ே அந்தாதி மாலையை வேதாட வீசர்க் கணிந்தனனே.
சின்னத்தம்பிப்புலவர் மறைசையந்தாதி மாத் திரமன்று கல்வளையங்தாதிமுதலிய வேறுபல நூல் களுஞ் செய்தனர். இவருடைய சந்ததியார் இன்று முளா.
சண்முகநாயகமுதலியார் சகோதரர் சரவண முத்துமுதலியார் யாழ்ப்பாணம் மேல்பற்றுக்குப் பஞ்சாயநீதிபதியாயிருந்தனர். அவர் நீதிவிசாரணை செய்த விடஞ் சத்தியக்காடெனப்படும். அது தொ ல்புரத்திலிருக்கின்றது. அவர்காலத்தில் மகுரிகா ரோகம் மிக்க உக்கிரத்தோடு பரவி ஒல்லாந்த படை வீரருள்ளும் பெரும்பாலாரைத் தாக்கிற்று. அப்ப டைக்கு வீரப்பெருமாள் என்பவன் தலைவனுகவிரு ங் தான். அவன் ஒல்லாந்ததேசாதிபதியிடம் அஆம திபெற்றுக் கோட்டைக்குப் புறத்தே ஒருமாரியம் மன் கோயிலைக்கட்டி விழாச்செய்ய மசூரிகாரோகம் தணிந்தது. சரவணமுத்துமுதலியாரும் தேசாதி பதி அநுமதிபெற்றுத் தொல்புரத்திலும் ஒரு மாரி யம்மன் கோயிலமைத்து விழாக்கொண்டாடி அவ்வூ ரில் மிக்க உக்கிரத்தோடு பரவிய மசூரிகாரோகத் தைச் சாந்திசெய்வித்தனர். அக்கோயிலின்றும் பிர சித்தியோடு விளங்குகின்றது. அக்காலத்தில் காய் கனி பூமடைகள் அன்னமடைகளிட்டே வழிபாடு செய்தனர். அவர் இறந்தபின்னர் அவர் மனைவியார் புண்ணியநாய்ச்சியென்பவர் சிதம்பரத்துக்கு அநேக விளைநிலங்கள் கொடுத்துத் தருமமடங்களும் அமை த்தனர்.
அதுகிற்க, கூழங்கைத்தம்பிரானிடத்துத் தமி ழ் இலக்கண விலக்கியங்களும் சித்தாந்த சாத்திரங் களும் கற்றவர்கள் அநேகர். தம்பிரானிடத்துப் பா டங்கேட்டல் யாவர்க்கும் எளிதாயினும் அவர் ஒரு
முறைக்குமேல் ஒருபாடத்தை ஒருவர்க்குச் சொல்

யாழ்ப்பாணச்சரித்திரம். 103
லார். அவர் சொல்லுமிடத்தும் ஐயந்திரிபறக் கடா விடைகளோடு சவிஸ்தாரமாகவே சொல்வர். இரண் டா முறை கேட்கப்புகின் கொடுஞ்சினங்கொண்ட நாகமாவர். ஒருமுறையிற் கிரகிக்கவியலாதவர் அவ் வாறுசெய்ய வல்லாரோடிருந்துகேட்டு அவர்பால் மீட்டுங் கேட்டுணர்வர். ஒருகாற்கேட்டு முற்றுங்கி ாகித்த மாணக்கருள்ளே மாதகல் மயில்வாகனப்பு லவரும் இருபாலை நெல்லைநாதரும் சிறந்தோர். நெ ல்லைநாதர் எத்துணைப்பெரிய செய்யுளையும் ஒருமு றையிற் கிரகிக்கும் பேராற்றல் உடையவர். சோழ நாட்டிலிருந்து செந்திக்கவி என்பவர் வைத்தியலிங் கச்செட்டியாருடைய புகழ்கேட்டு அவர்மேல் ஒரு பிரபந்தம் பாடி வந்து ஒருநாள் அரங்கேற்றினர். நெ ல்லைநாதர் முதற்செய்யுள் கேட்டவுடன் இது பழை யபாடலன்ருே, நீர் புதிதாகப் பாடிய பிரபந்தத்தை அரங்கேற்றும் என்று செந்திக்கவியை நோக்கிச்சொ ல்ல, செந்திக்கவி திகைத்து எப்படிபென்ருர், நெ ல்லைநாதர் அச்செய்யுளைச் சபையோரெல்லாம் பிர
மிக்க ஒப்பித்தனர். செந்திக்கவி, “இப்பெருஞ்செ.
ய்யுளை இவர் அவதானித்து ஒப்பித்தார். அடுத்த கவியை விரைந்து சொல்வேன்’ என மனத்துள் மதித்து “இதுவும் பழையகவிதானே” என்று கூறி விரைந்து படித்தார். இதுவும் பழைய கவியேயென் று நெல்லைநாதர் அக்கவியை ஒரryரமும் வழுவா தொப்பித்தார். செந்திக்கவி எழுந்து அவரை வண ங்கி அவருடைய அவதான சக்தியைப் புகழ்ந்து பா ராட்டினர். நெல்லைநாதர் செட்டியாரை நோக்கிச் செந்திக் கவிபாடிய பிரபந்தம் பழையகவியன்று; பு திதே. என்னுடைய ஆற்றலை அவர்க்குணர்த்துமா றே அச்செய்யுட்களை அவதானம்பண்ணிச் சொன் னேன். ஐயப்பாடொழிந்து அதனக்கேட்டு அவர் க்குத்தக்க பரிசளித்திடுகவென்முர். செட்டியார் அ துகேட்டு மகிழ்ந்து பிரபந்தத்தை அரங்கேற்றுவி த்து முன்னெண்ணியதிலும் இருமடங்காகப் பரி
மயில்வா கனப்புல வர் நெல் லைநாதர்.
செந்திக் கவி.

Page 57
நெல்லை நாதர்.
சோனுதி ராசமுத
unutfağaın கணப்பு லவர்.
104 யாழ்ப்பாணச்சரித்திரம்.
சில் எடுத்து, “கவிசுரரே! இதிற் பாதியே உமக்கு யான் தாக் கருதியது, நெல்லைநாத பண்டித சிரோ மணிபெயரால் ஒருமடங்கதிகமாகத் தருகிறேன். அதனை அவர் தந்ததாகக் கொள்ளும்” என்று கூறி வழங்கினர். நெல்லைநாதர் கம்பருக்குப் பரிசளித்த பெருந்தகையினது மரபிலுள்ளவர். நெல்லைநாதர் புத்திராாகிய சேனதிராயமுதலியார் ஒல்லாந்த ஆங் கிலபாஷைகளும் வல்ல தமிழ்ப்பண்டிதர். அவர் ஒல் லாந்தவரசிலும் ஆங்கிலவாசிலும் துவிபாஷிகராயி ருந்தவர். நல்லைவெண்பாப் பாடியவர் அவரே. அங் நூல் சொருபஞ் சிதைந்து வழங்குகின்றது. இவர் வமிசத்தார் இன்றுமுளர்.
மாதகல் மயில்வாகனப்புலவர் புலியூரந்தாதி பாடியவர். வைத்தியலிங்கச் செட்டியார் கூழங்கை த்தம்பிரானிடம் பாடங்கேட்டது இம்மயில்வாகன ப்புலவரை நடுவாக வைத்துக்கொண்டேயாம். அவ ருடைய புலமைக்கும் வாக்குவன்மைக்கும் நிகர்கூ றுவதெளிதன்று. அவர் சுன்னகத்து அந்தணர் தில கரும் கவிந்திரருமாகிய வரதராசபண்டிதர் செய்த சிவராத்திரிபுராணத்துக்குச் சொன்ன
“பரதராசனுயரசலாாசனுமை
பங்கனண் புதருபண்புசேர் விரதராசசிவநிசியினீள்சரித
மிகவிளங்கிடவிளம்பினுன் காதராசனையமொழியரங்கனருள்
கருணைமாரிநிகர்பரிணிதன் வரதராசன் மறைவாணராசனியல் மதுரவாசகவிராசனே.”
என்னும் பாயிாம் அவர் வன மையை நன்கு விள க்கும். யாழ்ப்பாண வைபவமாலை செய்தவரும் இம் மயில்வாகனப்புலவரே.

யாழ்ப்பாணச்சரித்திரம். 105
அதுகிற்க, ஒல்லாந்தர் தமது அரசுக்கு அழிவு
தெய்வச்செயலாகச் சீக்கிரம் வருமென்பதை யோ
யாமல் குடிகளிடத்துள்ள பொருக்ளக் கவருதற்குப் பல சூழ்ச்சிகளுஞ் செய்தார்கள். மேளவாத்தியத் தோடு நடக்கும் கல்யாணச்சடங்கு முதலியவைக ளுக்கும் பல்லக்குத் தண்டிகையில் ஊர்கோலம்போ தற்கும் வரிவைத்தார்கள். நாட்டிலுள்ள சாயவே ரையெல்லாம் அற்பகூலி கொடுத்துக் கிண்டிவந்தவ ர்கள் கூலியின்றிக் கிண்டுவித்துத் தம்மிடம் அனுப் பும்படி நாட்டாதிகாரிகளுக்கெல்லாம் கட்டளைபண் ணினர்கள். அவ்வாறு திரட்டுஞ் சாயவேரை நாகப ட்டணமுதலியவிடங்களுக்கனுப்பி விற்றுப் பெரும் பொருளீட்டிவந்தார்கள். அதுசெய்யாத சனங்களை அடித்துச் செய்விக்கும்படி அதிகாரிகளுக்குக் கட் டளையிட்டார்கள். இக்கட்டளையால் ஊரதிகாரிகள் சனங்களை வருத்தவேண்டியவரானர்கள். அதனுல் அநேக சனங்கள் வன்னிக்கோடிப் பண்டாரவன்னி யனிடத்து அடைக்கலம் புகுந்தார்கள். பண்டார வன்னியனுக்கும் சாயவேர் திரட்டுமாறு ஒல்லாந்தர் கட்டளை போக்கினர்கள். அதற்கவன் அதுசெய்ய இயலாதென்று மறுத்தான். அக்காலத்தில் முல்லை த்தீவுநாடு ஒல்லாந்தவ0 சுக்குட்பட்டிருந்ததாயினும் பண்டாரவன்னியனே அதனை ஆண்டுவந்தான். ஒல் லாந்தர் அவனேடு போராடி வெல்லுமிடத்துண்டா கும் பயன் போர்ச்செலவுக்கும் போதாதென உவ ர்த்திருந்தார்கள். அச்சமயம் ஒல்லாந்தருடைய ப டைப்பலமும் குறைந்திருந்தது. இருந்த படைவீர ரும் யுத்தப்பயிற்சி யில்லாதவர்களா யிருந்தார்கள். ஒல்லாந்தவுத்தியோககாாரும் பரிதானப்பிரியராயி ருந்தார்கள். அதனுல் அவர்களுடைய ஆணை செவ் வே செல்லாதிருந்தது. கிறிஸ்தசமயப் பிரவேசஞ் செய்பவருக்கே உத்தியோகமென்ற கட்டுப்பாடும் மெல்ல நழுவுவதாயிற்று. சைவசமயக் கோயில்க
14.
Ecður GOMOTIF.
சாயவேர்
பண்டார வன்னி
6.

Page 58
கலகச் சூ ழ்ச்சி.
சாதிவரி
60). F.
106 யாழ்ப்பாணச்சரித்திரம்
ளும் சிலவிடங்களிலே மெல்ல மெல்லப் பழையவேர் களிலிருந்து முளைத்தெழும்புவனவாயின.
அக்காலத்தில் சனங்கள் கல்யாணச்சடங்கு சாச்சடங்குகளுக்கு வேண்டுமானல் அரசினர்க்குப் பணங்கொடுத்து அநுமதிபெற்றே மேளவாத்தியம் வைக்கவேண்டுமென்று ஒல்லாந்தர் சட்டஞ் செய் தார்கள். இவ்வரிசைகளைப் பண்டுதொட்டனுபவித் துவந்த வேளாளர் முதலிய சாதியார், அச்சட்டத் தைக் கண்டவுடன் மனம் புண்பட்டு ஒல்லாந்தவா சுக்கு மாருகவெழும்பவும் குழ்ச்சிசெய்திருந்தார்க ள். அதற்குத் தங்களுக்குத் துணைச்செய்யும்படி கண்டியரசனிடம் இரகசியமாகத் தூதுமனுப்பினர் கள். அதனைக் கேள்வியுற்ற ஒல்லாந்த தேசாதிபதி அச்சட்டத்தை அழித்துவிட்டு எந்தச் சாதியாரும் தத்தமக்குரிய பண்டைவரிசையோடு வாழலாமென அனுமதிகொடுத்தான்.
பண்டைக்காலத்திலே பிராமணர் விவாகத்துக் கு மேள வாத்தியவுரிமையுடையவர். வேளாளர் செ ட்டிகள் விவாகத்துக்கு மேள வாத்தியமும், சாவுக் குப் பறைமேளமும், இருசடங்குக்கும் நிலபாவா டையும் சங்குதாரை குடமுழவும் மேற்கட்டியும் உ ரிமையாகவுடையர். கோவியர் சாவுக்குமாத்திரம் பறைமேளவுரிமையுடையர். மறவர் அகம்படியர் இ டையர் சிவியார் விவாகத்துக்கு மேளவாத்தியமும் சாவுக்குப் பறைமேளமும் உரிமையாகவுடையர். ஆ ண்டிகள் சங்கவாத்தியமுடையவர். முக்கியர் கரை யார் ஒற்றைச்சங்கவாத்திய வுரிமையுடையர். கம் மாளர் சேகண்டியும் குடமுழவுமுடையர். குயவா குடமுழவுடையர். அம்பட்டர் வண்ணர் தாரையு டையர். மற்றைச்சாதிகளுக்கு ஒருவகை வாத்திய வுரிமையுமில்லை.
பண்டைக்காலத்தில் வேளாளர் செட்டிகளுள் ளும் உழுதுண்டுவாழ்பவர் தவிர, உழுவித்துண்போ

யாழ்ப்பாணச்சரித்திரம். 107
ரெல்லாம் தத்தமிடத்துள்ள பண்ணையாட்கள் எத் தனபெயருளரோ, அத்தனையாட்களை இராசகாரி யத்துக்கு வருஷமொருமுறை பதினைந்து நாளைக்கு அனுப்புதல் வேண்டும். அதுவுமன்றி ஏனைய வேளா ளரைப்போலத் தமது விளைவில் ஆறிலொருகடமை கொடுத்து வந்தார்கள். மறவர் பதினறுமுதல் இரு பத்துநான்கு வயசுவரையும் யுத்தம்பயின்று பின் கிராமக்காவலராகித் தமக்கு இராசாவால் விடப்ப ட்ட நிலத்திற் பயிர்செய்துண்டு வாழ்வதோடு படை த்தொழிலுக்கு வேண்டியகாலத்தில் மீளுதல் வேண் டும். சிவியார் இராசாங்கத்துக்குச்சிவிகையாட்களா கவும் சிவிகைமுன் செல்லுங் கூறியராகவும் அரமனை வாயிலாளராகவும் மாசந்தோறும் ஒவ்வொரு தொ கையினராக மாறிமாறிமுறைப்படி இராசசேவைசெ ய்து வருதல்வேண்டும். அதற்காக அவர்களுக்கு அ *சரால் இறையிலியாக கிலங்கள் விடப்பட்டிருந்தன. உமணர் இராசாங்கத்துக்கு வேண்டும் உப்பமைப்ப வர்களாயிருந்தார்கள்.
ஆண்டிகள் விடிய ஐந்து நாழிகையளவில் நகர ங்களிலும் கிராமங்களிலும சங்கநாதஞ்செய்து சன ங்களைத் துயிலுணர்த்திவருங் தொழிலுக்காக ஒரு மகமையுடையராயிருந்தார்கள். கோயில்களிலும் அ சமனையிலுமுள்ள முறைக்காலம்போக மற்றைக்கால ங்களில் ஊரில் யாசகஞ்செய்து காலங்கழிப்பதோடு மாரியம்மன்கோயில் பிடாரிகோயில்களுக்குப் பூச கராயுமிருப்பர். அவர்களுள்ளே இலிங்கதாரிகளும் வேமுயிருந்தனர். அவர்கள் வலைஞர்முதலிய சாதி யாருக்குக் குருக்கள் மாராவர். அவ்விலிங்கதாரிகள் கன்னடர். அவர்கள் யாழ்ப்பாணத் தரசரிடம் படை த்தொழிலில் அமர்ந்திருந்தவர்கள். பிற்காலத்திற் கதியின்றி ஆண்டிகளோடு கலந்து ஆண்டிகளையும் இலிங்கதாரிகளாக்கி அபேதமாயினர்.
முக்கியர் கரையார் பரதவர் திமிலருள் g) Tit சாவினது கடற்படையிலிருப்பவர்கள் தவிர மற்முே
(STN E
காரியம்,

Page 59
108 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ரெல்லாம் முத்துக்குளிப்புக்காலத்திலே வருஷத்தில் பதினைந்து நாளைக்கு இராசகாரியஞ் செய்யும் கடப் பாடுடையர். தமிழரசர்காலத்தில் மீன்வரியில்லை. அது பறங்கிக்காரர்காலத்திலேயே விதிக்கப்பட்ட து. ஒல்லாந்தரும் அதனைத் திரட்டி வந்தனர். வலை யர், இராசா வேட்டைக்குப் போகும்போதெல்லாம் உடன்போக்குக்குரியர்.
கம்மாளருட்கொல்லரும் தச்சரும் கிராமங்கள் தோறும் இறையின்றி நிலம் விடப்பெற்றர்கள். அவ ர்கள் அக்கிராமத்தாருக்கு வேண்டும் கலப்பை கொ ழு அரிவாள் முதலிய பயிர்த்தொழிற் கருவிகளெல் லாம் கூலியின்றிச் செய்துசொடுக்குங் கடப்பாடு டையவர்கள். வருஷத்தில் எட்டுநாளைக்கு இராச காசியமுஞ் செய்யுங் கடனுடையவர்கள். இரும்பு இலங்கையிலே தென்பாகத்தில் மிகுதியாகவும் யா ழ்ப்பாணத்தில் மட்டாகவும் உருக்கியெடுக்கப்பட் டுவந்தது. பறங்கிக்காரர் அவ்விரும்பைப் பாராட் டிச் சேர்த்து அங்கியதேசங்களுக்கு அனுப்புவர். ஈழத்திரும்பென நெடுங்காலம் பெயர்படைத்தவிரு ம்பு யாழ்ப்பாணத்திற் செய்யப்பட்ட இரும்பே li fò.
கைக்கோளர் சேணியர்களுக்கு யாதொரு கட ப்பாடுமில்லை. கன்னர் தட்டார் கற்சிற்பர் இராசா வுடைய அரமனையிலும் கோயிலிலும் வருஷத்தில் பதினைந்துநாள் வேலைசெய்யுங் கடனுடையர். வண் ணுர் முறைமுறையாக இராசா சென்று தங்குமிடங் களுக்கு மேற்கட்டி கட்டுங் கடனுடையர். குயவர் அரமனைக்கு வேண்டும் மட்கலங் கொடுக்கும் கடனு டையர். கடையர் சுண்ணநீற்றிக் கொடுக்குங் கட னுடையர். புறையர் யுத்தகாலத்திலே சென்று மு ற்பறைகொட்டுங் கடனுடையர். இப்படியே ஒவ் வொரு சாதியாரும் பண்டைக்காலமுதல் வருஷங் தோறும் சில தினங்களுக்கு இராசகாரியஞ் செய்

யாழ்ப்பாணசசரித்திரம். 09
துவந்தனர். அவ்வழக்கம் பறங்கிக்காரர்காலத்தும் ஒல்லாந்தர்காலத்தும் நடந்தது. அஃது ஆங்கிலே யர்காலத்தும் 1810 வரையில் ஒருவாறு நடந்தது. அதன்பின்னர் கிறு தப்பட்டது.
முன்னே கூறப்பட்ட கல்யாணவரிக்கஞ்சி வே தியர் வேளாளர் செட்டியர் முதலியவர்களுள்ளும் வறியராயிருந்தவர்களும் மற்றைச்சாதிகளும் கல்யா ணச்சடங்குகளை யாதொரு மங்கலவாத்தியமுமின்றி இரகசியமாகச் செய்யத் தலைப்பட்டார்கள். பிள்ளை யாரைப் பிடித்து வைத்துத் தேங்காயுடைத்துக் கர் ப்யூரதீபங்காட்டித் தமக்கு ஐக்கியமான பந்துக்க ளைமாத்திரம் அழைத்து அவர்முன்பாகக் கூறை கொடுத்துத் தாலிகட்டுமுரிமை எல்லாச்சாதிக்கு முண்டேயாயினும் பூஷணவரிக் கொடுமையுமொன் றிருந்தமையால் அதற்கஸ்சி ஏழைச்சனங்கள் அஃ தில்லாமலும் கூறையோடுமாத்திரம் விவாகத்தை முடித்துக்கொள்வாராயினர். பள்ளர் பறையர் துரு ம்பர்கள் மாத்திரம் விடிய ஐந்து நாழிகையுண்டென் னுமளவில் விவுாகச்சடங்கு செய்துகொள்ளல்வே ண்டுமென்னும் கட்டுப்பாடு பண்டைக்காலந்தொட் டிருந்தது. அவ்வழக்கம் இன்றும் அவர்களுள்ளே காரணங்கெரியாது பலவிடங்களில் நடந்துவருகின் pg.
யாழ்ப்பாணத்துக்கு ஒல்லாந்தர்செய்த நன்மை களுஞ்சிலவுள். அவர்கள் நெல்விளைவை விருத்திசெ ய்யுமாறு முன்னே தமிழரசரால் வெட்டுவிக்கப்பட் ட குளங்களைத் திருத்தியும், சில குளங்களைப் புதி தாக வெட்டியும் வாய்க்கால்களை வகுத்தும் வந்தா ர்கள். இவற்றையெல்லாம் தாம் பொருள்செலவி டாது குடிகளைக்கொண்டே இராசகாரியமாகச்செ ய்வித்து வந்தார்கள். 1784 ல் மழை குறைந்தது. அடுத்தவருஷம் மழையில்லாது போயிற்று. அத ன்காரியமாகவந்த பஞ்சத்தால் ஊர் மிக வருந்தியது.
இாகசிய விவாகச் சடங்கு.
பஞ்சம விவாகம்

Page 60
ta’ Luar ய்ச்சற்சூ ழ்ச்சி.
tur. 2saruf 06의·
110 யாழ்ப்பாணச்சரித்திரம்.
இக்காலத்திலே குமாாதெய்வேந்திரமுதலியெ ன்பவர் தாம் அராலியிற் சேமித்திருந்த நெற்களஞ் சியத்தைத் திறந்துவிட்டு, வேண்டுவோர் தாம் சுமக் கக்கூடிய நெல்லு வாரிப்போகலாமெனப் பிரசித்த ஞ்செய்வித்து மேல்பற்றுப் பஞ்சத்தைக் காத்தா ரென்பர். இதனை மற்றப் பற்றுக்களிலிருந்த பிரபுக்
களுமேற்கொண்டார்கள்.
அவ்வருஷம் முத்துக்குளிப்பும் வாய்ப்பாகவில் லை. அதுகண்டு தேசாதிபதி சுழிபுரஞ்செல்வநாயகமு தலியார், சரவணமுத்துமுதலியார், புலோலிப் பெரி யிசிங்கநாயகமுதலியார், வேலப்பமுதலியார்முதலிய வர்களையும் யாழ்ப்பாணத்துள்ள பிரபுக்களையும் வர வழைத்து அவர்களோடு யோசித்து நெல்விலையையி றக்கிவிற்கவும், அற்பகூலிகொடுத்து இராசகாரியமா கக் கனகராயனுற்றை யானையிறவுக்கடலைத் தூர்த்து அணேயிட்டு அதன் வழியாகக்கொணர்ந்து யாழ்ப்பா ணத்துவிளைகிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சவும் தீர்மானம் பண்ணினர். கனகராயனுறு பவானி (வவுனியா) க்கு ளத்துக்குச் சமீபத்தினின்றும் பாய்ந்து வடக்கேஓடி யானையிறவுக்கடலிற் கழிவது. அது பூர்வம் தமிழர சர்காலத்திலே கனகராயமுதலியாலே வெட்டப்ப ட்ட ஆறு. அக்காலத்திலே யானையிறவுக்கடல் இ ப்போதுள்ள விரிவாகவிருக்கவில்லை. அவ்விடம் யா ழ்ப்பாணநாடு இலங்கையோடு பொருந்தும் பூசந்தி யாயிருந்தது. அப்பூசந்திவழியாகக் கொண்டுவந்து யாழ்ப்பாணத்து விளைகிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சு மாறே கனகராயமுதலி அவ்வாற்றை வெட்டுவித் தான். அது முற்றுப்பெறுமுன் அவன் இறந்தான். பின்னர் அவ்வாறு தானே பெருகித் துறையை அரி த்துக் கடலாக்கிவிட்டது. ஒல்லாந்தர் அவ்வாற்றை யே திருப்பி நீர்ப்பாய்ச்சுதற்கு முயன்றனர். முய ன்றும் இராச்சியகலகத்தினல் அஃதநுகூலப்பட வில்லை.

யாழ்ப்பாணச்சரித்திரம்.
பறங்கிக்காரரால் கலக்குண்ட தமிழர் வழக்க ங்களும் ஆசாரமுறைகளும் விவகாரமுறைகளும் ஒல்லாந்தவரசால் மீண்டுங் கலங்கின. ரோம ஒல்லா ந்த விவகார முறையே இத்தேசத்துக்குச் சட்ட மாக நெடுங்காலம் வழங்கியதால் ஆங்கிலேயரும்
அதனையே இத்தேசத்துச்குச் சட்டமாக்கினர்.
ஒல்லாந்தர்காலத்தில் கிராமங்கள்தோறும் கிரா மாதிகாரிகளை நியமித்து ஆங்காங்குமுள்ள சனங்க ளை அவர்கள்மூலமாயாண்டு வந்தார்கள். அச்சன ங்களுக்கிடையே வரும் வழக்கு வியவகாரங்களை அவ்வதிகாரிகளே பஞ்சாயமூலமாய்த் தீர்த்துவந் தார்கள். தீர்க்க வகைதெரியாத வழக்குக்களை வா திபிரதிவாதிகளைக்கொண்டு சத்தியஞ் செய்வித்துத் தீர்ப்பார்கள். பண்டுதொட்டு யாழ்ப்பாணத்திலுள் ளவர்கள் பொய் களவுக்குப் பெரிதும் அஞ்சுபவர் கள். பறங்கிக்காரர்காலத்துக்குமுன்னே கள்ளன்றி வேறு மதுபானமில்லை. கள்ளும் பள்ளர் பறையரு க்குணவாக விருந்ததன்றி மதுபானமாக விருக்கவி ல்லை. கள்ளுண்டுகளித்தாரைக் காணின் தமிழரசர் காலத்தில் தண்டாதிகாரிகள் தூதர்பிடித்து விலங் கிட்டு வருத்துவர். கள்வரும் குடியரும் மிகுத்தது பறங்கியரசு தொடங்கியபின்னரே யாம். வியபிசாரம் தமிழரசர்காலத்தில் மிகவரிதாம். அக்குற்றமேற்றப் பட்டோர் காய்ச்சிய இரும்பைக் கையிலேந்திச் சபையிலே சத்தியஞ்செய்து தமதுண்மையை நாட் டவேண்டியவர்களாயிருந்தமையே அதற்குக் கார ணமாம். அக்காலத்தில் பெண்கள் சிலர் இவ்வாறு சத்தியஞ்செய்து கையில் சிறிதும் சுடப்பெருது போனமையைப் பறங்கிக்காரர் தாம் நேரேகண்ட தாகப் பறங்கிச் சரித்திரத்திற் கூறப்பட்டிருக்கி ன்றது.
1780 ம் வூல காரைக்காலிலிருந்து கனகசபைப்
பிள்ளையென்பார் ஒருவேளாண்பிரபு வந்து காரை
பஞ்சா uňh.
Inġi L AT னம்.
08لg(ea! مt 蘇函l益要蘇 தியஞ்செ ய்தல்
&5GT855 பைப்பி ள்ளை.

Page 61
பனங்கா மத்து வ ன்னிச்சி.
112 யாழ்ப்பாணச்சரித்திரம்.
தீவிற் குடியேறினர். அவர் அவ்விடத்திலே கிலம் வாங்கி ஒரு சத்திரமுங் கட்டி அதற்கு விளைகிலிங்க ளும் வாங்கிவிட்டனர் அழிந்தும் அஃது பிள்ளை ம டமென இன்றும் வழங்குகின்றது. ஒல்லாந்தர் அ வரைத் தமது மந்திரிகளுள் ஒருவராக்கி வண்ணுர் பண்ணையில் ஒருமாளிகையும் நிலமுங் கொடுத்தார் கள். அவர் வெட்டிய குளம் நீர்வர் வியெனவும் கட் டிய கோயில் நீர்வாவிவிநாயகர் கோயிலெனவும் வழ ங்குசின்றன. அவர் இருந்த மீாளிகை அதன் அய லிலேயிருந்தது. நீர்வாவிக்குளம் அக்காலம் மிக்க அலங்காரமான படித்துறைகளோடிருந்ததென்பது அதன் இடிகரைகளால் அநுமிக்கத்தக்கதாகவிருக் கின்றது. அதனைப் பழைமைபோலத் திருத்துகின் அது காட்சிக்கினியதும் ஸ்நானத்துக்கு வாய்ப்பா னதும் ஊருக்கலங்காரமுமா யிருக்குமென்பதற்கை யமில்லை. ஊரலங்காரப் பொது நன்மைக்கு முற்படும் பரோபகாரிகள் இக்காலத்தரியர். அதுகிற்க, கனக சபைப்பிள்ளையுடைய விவேகம் நற்குணம் பரோப காரம் நேர்மை முதலியவறறைக் கண்ட ஒல்லாங் தர் அவரிடத்திலே மிக்க மதிப்புடையராயிருந்தார் கள். அதனைக் கண்டு சகியாத மற்றைத் தமிழ்மங் திரிகள் வஞ்சனே முடிந்து அவருக்கும் ஒல்லாந்தர் க்கும் பேதமுண்டாக்கி அவரைக் காரைக்காலுக்கு மீளும்படி செய்தார்கள். அவர் ‘என் மீது குற்றஞ் சிறிதுமில்லாதிருக்கவும் ஆராயாது ஊரைவிட்டு நீங் கும்படி தீர்த்த ஒல்லாந்தரும் என்னைப்போல ம னம் வருந்தி அரசைப் பறிகொடுத்து நீங்குங்காலம் சமீபித்தது. அதற்கறிகுறியாக இன்று செல்கின் றேன்” எனக் கூறித் தமது நிலம் மாளிகைகளையெல் லாம் அற்பவிலைக்கு விற்றகன்முர். அவர் தோணி யேறிய எட்டாநாள் ஒல்லாந்தர் அரசிழந்தனர். கன கசபைப்பிள்ளை சாபமும் காகதாலியமாயிற்று.
இதற்குமுன் 1790 ம் இuல் பனங்காமத்திலே
வன்னியராகவிருந்த நல்லமாப்பாணமுதலியார் ஒல்

யாழ்ப்பாணச்சரித்திரம். 113
லாந்தருக்கு மாமுக இராசதுரோகச் சூழ்ச்சி செய் கின்றரென்று கீழ்நாட்டுச் சிங்களவன்னியனரொரு வர் எழுதிவிடுத்த கிருபத்தைக்கொண்டு ஒல்லாந்தர் அவரைப் பிடித்துப் பன்னீராயிரமிறைசால் (ஒன்ப தினுயிரம் ரூபா) அபராதம் விதித்து அது கொடு க்கும்வரையும் சிறையிலிருக்குமாறு கொழும்புக்க னுப்பினர். அவருடைய நிலங்களையெல்லாம் பிடித் து அங்கிலத்து வருவாய்களை மூன்றுவருஷத்துக்கு க்குத்தகை கூறிவிற்றனர். அக்குத்தகையை வாங்கி அதனுற் பெரும்பொருள்படைத் து விளங்கினவர் பெரிய தாமோதரம்பிள்ளையென்பவர். அவர் வீடு சித் திரக்கட்டுவீடெனப் பன்றிக்கோட்டு விநாயகரால யத்துக்கு முன்வளவிலிருந்து இற்றைக்குச் சிலவ ருடங்களுக்குமுன்னர் அழித்துக் கட்டப்பட்டது. நல்லமாப்பாணமுதலியார் மனைவியார் எல்லைகாவே தநல்லைநாச்சியார். பனங்காமமுதலிய அநேக கிரா மங்களுக்கு அவரே சிற்றரசி. அவ்வரசியை விவாக ஞ்செய்த நல்லமாப்பாணர் செல்வமும் அதிகாரமு முடையாாயினர். எல்லைகாவேத என்னும்பெயர் எ லைசபேத் காதரினுவென்னும் கிறிஸ்தபெபரென்பர். நாச்சியார் என்பது வன்னிச்சிமாருக்குரிய சிறப்புப் பெயர். அது நாயகனர் என்பதன் பெண்பாற்சொ ல்லாகிய நாயகியார் என்பதன் சிதைவு. நாயன் என் பதன் பெண்பாற்சொல்லாகிய நாய்ச்சி நாச்சியென மருவி ஆர்விகுதி பெற்றதெனினும் பொருந்தும். நாயன் நாயகன் என்பன அரசர்க்குரிய பெயர்க ளாம். அதுகிற்கி, நல்லமாப்பாணமுதலியார் சிறை ப்பட்டுக் கொழும்புக்குச் செல்ல, எல்லைகாவேத நல்லைநாய்ச்சியார் யாழ்ப்பாணம் வந்து வண்ணுர் பண்ணையில் வசித்தனர். அவர் தமது நாயகரை மீட் டன்றி நீராடுவதும் முப்போதுண்பதுமில்லையென விரதங்கொண்டிருந்தனர். அதுகேட்ட வைத்தியலி ங்கச்செட்டியார் கொழும்புக்குச் சென்ற பன்னி
15
sešajor ப்பாண 伊莎69,

Page 62
தேறுங் கண்டல்,
5LDfT ps தேவேந் திாழதலி நுளம்ப ாாபழத 69.
114 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ராயிரமுங் கட்டி முதலியாரை மீட்டுக்கொண்டு மீண்டனர். வன்னியனர் அப்பன்னீராயிரத்துக்கும இருபத்தையாயிரம் பனைகளும், தம்மை மீட்டற்கு த்திருவுளங்கொண்டு அநுக்கிரகித்த வைத்தீசுவர சுவாமிக்கும் தையல்நாயகியம்மையாருக்கும் கித்தி யபூசைக்காகத் தேருங்கண்டற் கிராமமுங் கொடுத் தனர். அதுகண்டு அக்காலத்திலே சிருப்பாகவிரு ந்த பூலோகமுதலியாரும் சில திருப்பணிகள் செய் வித்தனர்.
வண்ணைச்சிவாலயத்துக்கும் சிதம்பராலயத்து க்கும் முதன்முதல் விளைநிலமுபகரித்தோர் குமார தேவேந்திரமுதலியும், நுளம்பராயமுதலியுமாவர். இருவரும் அராலியிலே விளங்கியவர்கள். சண்மு கநாயகமுதலியாருக்கும் சரவணமுத்துமுதலியாரு க்கும் பெருநட்பினர். விசுவநாதசுாஸ்திரி யார் எழு திய குறிப்பில் நுளம்பராயரோடு அநேக பிராம ணர் வந்து மேல்பற்றிலே குடிகொண்டாரெனக் கூ றப்பட்டிருக்கின்றது.
நல்லமாப்பாண முதலியாருக்குக் கதிரைநாய்ச் சியார்,குஞ்சிநாய்ச்சியார், அறுமாத்தை5ாய்ச்சியார், வள்ளிநாய்ச்சியார் என நான்கு பெண்களும் கங்தை யாவன்னியனர் என ஒரு புத்திர்ரும் யாழ்ப்பாண த்திற் பிறந்தார்கள். கதிரைநாய்ச்சியாரை முகம்ா லை வயிரமுத்து வன்னியனரும், அறுமாத்தைநாய்ச் சியாரைக் கதிரித்தம்பிவன்னியனரும், வள்ளிகாய்ச் சியாரைத் தியாகவன்னியனரும் விவாகஞ் செய்த னர். இவ்வள்ளிநாய்ச்சியாருடைய மகளை விவாக ஞ்செய்தவர் கதிர்காமவன்னியனர். அவர் புத்திரன ரே 1901 ல் இறந்த வண்டாவயிரமுத்து என்பவர். அவர் இறக்கும்போது வயசு 88. அவர் வேதாந்த நூலுணர்ச்சியிற் சிறந்தவர். அவர் நுவரை வண்டா வென்னுஞ் சிங்களப்பிரபு குடும்பத்தில் ஒருபெண் ணை விவாகஞ்செய்தவர். அவர் ஐந்து வயசுச் சிறுவ

யாழ்ப்பாணச்சரித்திரம். 15
ராயிருக்கையில் அவருடைய தந்தையாரைக் காணு ம்பொருட்டு இரகுநாதமுதலியாரும் ஒரு குருக்க ளும் போயிருந்தார்கள். அவருடைய தாயார் அவ் விருவருக்கும் வெற்றிலைச்சுருள் கொண்டுபோய்க் கொடுவென்று இருகையிலும் இரண்டு சுருள் கொ டுத்தார். அவர் இரகுநாதமுதலியாருக்கு முதற் சென்று ஒருசுருளைக் கொடுத்துவிட்டுக் குருக்கள் பாற் சென்ருரர். அதற்கிடையில் அவருடைய தகப் பஞர் அவரை அழைத்துக் குருக்களுக்கு முதலிற் சென்று கொடாது முதலியாருக்குக் கொடுத்ததெ ன்னபுத்தியென்றுறுக்கினர். அவர் தந்தையை நோ க்கி, “ஐயா, அஃதென்குற்றமன்று; குருக்களுக்கு இருகையாலுங் கொடுக்கவேண்டும். அதுபற்றி ஒரு கரத்திலிருந்த தை முதலிற் கொடுத்துவிட்டு இரு கையாலுங் குருக்களுக்குக் கொடுக்கச்சென்றேன்” என்ருர், அதுகேட்டுத் தந்தையும் குருக்களும் மற் றிருந்தோருஞ் சபா சென்று அவரை மெச்சினர். இ தனுல் அவர் சிறுவயசுமுதல் விவேகியாய் விளங்கி னரென விளங்குகின்றது. அதுகிற்க, வன்னிநாட் டிலேயிருந்த மற்றைய வன்னியனர்களும் ஒல்லாங் தரது கொடுமையாற் பதிவிடுத்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து தமது கையிலிருந்த பொருளையெல் லாம் தமதாளடிமைகளோடு கூடியுண்டுடுத்துத் தொ லைத்து ஒளிமழுங்கினர்.(ஆங்கிலேயர் அரசியல்தொ டங்கியபின்னரும் தேசாதிபதிகள் சில வன்னிச்சி மாரோடு பேசும்போது சிற்றரசர்க்குரிய மரியாதை வாசகத்தோடு விளித்தே பேசுவரென்முல் அவர்கள் நிலை இவ்வள வென்று சொல்லவும் வேண்டுமர்.
இப்பால் ஆங்கிலேயர்காலம் கிட்டியதால, அ வர்கள் வரலாற்றைக் குறித்துச் சிறிதுசொல்வாம். அவர்கள் நாடு இங்கிலாந்து என்னுந்தீவு. இவ்வாங் கிலேயர் இற்றைக்கு 300 வருடங்களுக்குமுன் துரு க்கி நாட்டுடன் மாத்திரம் வர்த்தகத் தொடர்புடை
ஆங்கிலே usias (T லம்.

Page 63
“955
16 யாழ்ப்பாணச்சரித்திரம்.
யவராயிருந்தார்கள். அப்பால், அஃதாவது 1580ன் மேல் பறங்கிக்காரருடைய முயற்சியையும் அதஞ்ல் அவர்களுடைய உயர்ச்சியையுங் கண்டு, தாமும் அ போல் கீழைத்தேயத் தொடர்புடையவராக வேண்டுமென்று விருப்பங்கொண்டார். அவ்வாறே நான்கு ஆங்கிலேய வர்த்தகர் கீழைத்தேயத்தைகா டி வழிக்கொண்டு சீரியாமார்க்கமாய் இந்தியாவைய டைந்தனர். அவர்களுள் ஒருவர் “அக்பார்’ அரச னிடத்தில் சேவகத்திலமர, மற்றை மூவரிலொரு வர் பஞ்சாப்பிலிறந்துபோக, எஞ்சிய இருவரில் ஒ ருவா துறவியாகிக் கோவையில் கின்றுவிட, மற்ற வராகிய “பிற்க” என்பவர் சீயம் மலாக்கா முத லியவிடங்களுக்குப் போய்ச் சுற்றிக்கொண்டு தம அாருக்கு மீளுகையில், 1589 ம் டு மார்ச்சுமீ” 5உ கொழும்பில்வந்திறங்கினர். இவரே ஆங்கி லேயருள் முதன்முதல் இலங்கையைக் கண்டவர் 6T676).
வரைப்
அப்பால் 2 வருடம் கழித்து, இங்கிலாந்துக்கு அந்நாளில் அரசியாயிருந்த (Elizabeth) எலிசபேத்து என்பவர், பூறங்கிகளுடைய கொள்கைக்கு மாமுய் இந்துசமுதீதிரத்தில் போய் உலாவிவருமாறு சில கப்பல்களைப் பிரயாணப்படுத்திவிட்டார். அவற்றுள் ஒன்று மலாக்காநாடுவரையில் சென்று மீளும்போ து, காலித்துறையில், 1592 ம் இuல் டிசம்பர்மீ” வே வந்து நங்கூரம் பாய்ச்சிற்று. அக்கப்பற்பெ lui (Edward Bonaventure) 6TL-G6).L' GUIT60G6u6ôt சர். இதுவே முதன்முதல் இலங்கைக்கு வந்த ஆங்
கிலேயர் கப்பல் எனலாம்.
இதன்மேல், இந்தியநாடானது, பறங்கிகள் ஒல்லாந்தர் பிராஞ்சியர் ஆங்கிலேயர் என்னுமின்கா ன்கு சூரர் முன் “இது வென்முர்க்குரியது” என்று வைக்கப்பட்டதோர் விலையுயர்ந்த இரத்தினப் பரி

யாழ்ப்பாணச்சரித்திரம். 117
சுபோலாக, அதனைக் கையாடும்பொருட்டு ஆங்கி லிேயர் ஏறக்குறைய 200 வருடம் வரையிற் போரா டி கின்றமையால் இலங்கை அவர்கள் கருத்திற்கு வரவில்லை.
பின்பு 1763 ல் சென்னைத் தேசாதிபதியானவர் இலங்கைமேல் காதல்கொண்டவராய், (Pybus) 60U பஸ் என்னுந் துரையைக் கண்டியரசனகிய கீர்த்தி பூரீ ராசசிங்கனிடம் அனுப்பி ஒருடன் படிக்கைக்குச் சம்மதம் கேட்டார். அதற்கு அரசன் சம்மதப்பட்
டானில்லை.
அப்பால் 1782 ல் ஒல்லாந்துக்கும் இங்கிலாங் துக்கும் போர் மூண்டது. அதுபற்றி, சென்னைத் தேசாதிபதி இலங்கையிலுள்ள ஒல்லாந்த நாடுக ளைப்பிடிக்குமாறு கப்பற்றளபதியாகிய (Sir Edward Hughes) ஹியூஸ் துரையுடன் ஒர் கப்பற்படையை யும், (Sir Hector Munro) LosojGoy 676órgplej5 (8ge) பதியுடன் ஒர் சேனையையுமனுப்ப, அவர்கள் வந்து திரிகோணமலையைப் பிடித்தார்கள். இச்சமயத்தி லும் சென்னைத் தேசாதிபதி ஒரு தூதனை இரா சாதிராசசிங்கனிடத்துக் கனுப்பி, “நீ ஒல்லாந்தரு டன் போர்செய்வையாயின் நாங்களுதவிசெய்வோம் அதன்மேல் நீயும் நாமும் ஐக்கியமாயிருக்கலாம். இ து உனக்குடன்பாடாயின் சொல்லுக” எனறு கே ட்பித்தார். அதுகேட்டு இராசாதிராசசிங்கன், இ வர்களும் பின்னல் நமக்குச் சத்துருக்களாவர்தா மே” என்றெண்ணி உடன்படாது மறுத்தான்.
அடுத்தவருடத்தில் ஒல்லாந்துக்கும் இங்கி லாந்துக்கும் சமாதானமிடைப்பட்டமையால் திரி கோணமலை மறுபடியும் ஒல்லாந்தர்க்கு விடப்பட்
d.
இப்படியிருக்கையில் மீண்டும் 1795 ல் இங்கி லாந்துக்கும் ஒல்லாந்துக்கும் (5ut if தொடங்கிற்ற
áá'Gasr on LD2a) பிடிபட்
- 5
56cml?-II
நசனிடம் தூதனுப Leů.
திரிகோ on 2a) விடப்ப L-5

Page 64
ஹோபா ú“Gssu திபதி.
திரிகோ or Ln2a) լճaձո0ւԳ
டிபட்ட
யாழ்ப் பாணம் நீர்கொ ழம்பு கொழம் புபிடிப ட்டது.
118 யாழ்ப்பாணச்சரித்திரம்.
அப்போது சென்னைத்தேசாதிபதியாயிருந்த ஈரேர் திரப்பட்டமுடைய (Lord Oobart) ஹோபாட்டு ள்ன் uaui (Gen. Steward) 6ivg6JTL (3 Fesopusu. L-Gär ஒரு சேனையை இலங்கைக்கனுப்பினர். அச்சேனபதி உடனே திரிகோணமலையை வளைந்து மூன்று வார மாகக் காவல்செய்து ஈற்றில் கைப்பற்றினன். அப் பால் அவன் ஒரு படையோடு பருத்தித்துறையிலி றங்கி யாழ்ப்பாணஞ் சென்று அதனையும் எதிர்ப் பாராருமின்றிக் கவர்ந்தான். அடுத்த 1796 ல் நீர் கொழும்பையு மவ்வாறு பிடித்தான். அதன்பின்பு கொழும்பைநோக்கி வழிக்கொண்டு கழனியாற்றை யுந்தாண்டி அந்நகரிற்போய் எதிரூன்றினன். அங் கே பெப்ரவரிமீ 16வ. மலாயர் படையொன்று ஒரு பிராஞ்சுத் தலைவனுேடும் வந்து எதிரிட்டுச் சிறிது நேரத்தில் தலைவனையும் மடியவிட்டோட, ஸ்துவா ட்துரை வெற்றிமாலையணிந்து, ஜயபேரிகள், “இல ங்கைநாடரைப் பிணிவிட்டது! பிணிவிட்டது! பிணி விட்டது! கொழும்புநகரும் பிடிபட்டது பிடிபட் டது! பிடிபட்டது!” என்றெலிப்பதுபோல் முழ ங்க, கோட்டைக்குட் சென்று துவஜாரோகணஞ்செ ய்தார். இதன்பின் சின்னுளில் காலியும் பிடிபட்ட து. இவ்வாறே ஒல்லாந்தர் 138 வருடமாகக் கட்டி யாண்டுவந்த கரைதுறைநாடுகள் எல்லாம் ஒருங் கே ஆங்கிலேயருடைய தண்குடைகிழற்கீழ்ப்பட் LõðIT.
இவ்வாறு ஆங்கிலேயருக்கு எளிதில் வெற்றிகி டைத்தற்குக் காரணம் ஒல்லாந்தருடைய முயற்சி யின்மையும் அவர் சேவீைரருடைய ஐக்கியமி ன்மையுமேயன்றி மற்றன்று. கொழும்பில் ஒல் லாந்த தேசாதிபதியாய்க் கடைசியிலிருந்த* “வான் அஞ்சல்பேக்” என்பவனை ஆங்கிலேயர் மேற்சென் று காக்காது விட்டிருப்பரேல், அவனுடைய சேன
* இவன் சிறிதுகாலம் கொழும்பில் ஆங்கிலேயருடைய பாதுகாப்பிலிருந்து பின் தற்கொலைபுரிந்துகொண்டிறந்தான்.

யாழ்ப்பாணச்சரித்திரம். 119
வீரர் அவனைக் கிொன்றிருப்பரென்முல், அவர்களு டைய கீழமைவைப்பற்றிக் கூறவும் வேண்டுமோ! "துற்புத்திமந்திரியால் அரசுக்கீனம்” என்றபடி கீழ மைவில்லாப் படைவீரரால் அவர்கள் அரசுக்கு இவ்வாறு சீக்கிசத்தில் கேடுண்டாயிற்று. இவ்வா றே கொடியரிற் கொடியராகிய ஒல்லாந்தருடைய அ ரசியற்காலம் 1796 ம் (uல் பிப்ரவரிமாசத்தோடு தொலைந்தது. அவர்காலத்தில் வழங்கிவந்த சில சட் டங்கள்மாத்திரம் தற்காலத்தும் பிரயோகத்திலிரு க்கின்றன. தோம்பு, கங்தோர், தரணி முதலிய ஒல் லாந்தச் சொற்கள் இன்றும் வழங்குகின்றன.
ஆங்கிலேயர்காலம்.
O
இவ்வண்ணம் நடுநாடொழிந்த ஏனைய நாடெ ல்லாம் ஆங்கிலேயருடைய கைப்பட்டவுடன், செ ன்னைத் தேசாதிபதியுடைய ஆஞ்ஞைக்குள்ளாகி, “) iš 15 T (8 (East India Company) Gyp i 5 2) öÁFU வர்த்தகக் கூட்டத்தார்க்கு விடப்படத்தக்கதோ, அல்லது இங்கிலாந்தரசுக்கு உபரா சாங்கமாக உப கரிக்கப்படத்தக்கதோ” என்னுங் கேள்விக்கிடணுய் யோசனையில் கின்றது. அன்றியும் ஒல்லாந்தர் 5A DfT தானப்படுங்கால், அவரிடத்தில் மீளவும் ஒப்பித்து விடலாமெனவுமோர் எண்ணம் ஆங்கிலேயர் மனத்
திற்கிடந்தது.
இப்படியிருந்தும், சென்னைத் தேசாதிபதி, இ லங்கை அரசியல்முறையைச் சீரிடத்துணிந்து, செ ன்னையினின்றும், உலகவியலறியாதவனும் சோம்ப னுமாகிய (Mr. Andrews) அந்திரேயஸ் என்னும் ஒர் துரைமகனைச் சகலவித அதிகாரங்களோடும் இலங் கைக்கனுப்ப, அவன் இலங்கையையடைந்து, முன்
னிருந்த இறைதிரட்டிகளெல்லோரையும் நீக்கிப் LH
கிழக்கிந் திய வர்த் தகக்கூ ட்டத் தார்.
Gëg

Page 65
20 யாழ்ப்பாணச்சரித்திரம்.
திதாய்த் தமிழரை கியோகித்து, வரியின்றியிருந்த சுரோத்திரியம் மானியம் முதலிய நிலங்களுக்கு வ்ழ க்கத்துக்கு விரோதமாக வரிகளை விதித்தும், இது போன்ற வேறு தீமைகளையுஞ் செய்தும், காருண்ணி யமற்றவணுய் அதிகாரஞ் செலுத்திவந்தான். இத னேப்பொறுக்க ஆற்ருத சிங்களப்பிரபுக்கள் சிலர், சில ஒல்லாந்தக்குடிகளைத் துணைக்கொண்டு சனங்க குடிகள் ளைத் திரட்டி, கொழும்புக்கும் கண்டிக்கும் இடை *பி. யிலிருந்த அரண்களையெல்லாம் கைப்பற்றிக்சொ ண்டு மற்றையவிடங்களுக்குச் சென்று, அங்கெதிர் த்த ஆங்கிலேயரெல்லோரையும் கொன்றும் காயப் படுத்தியும் முதுகிடச்செய்து சிலநாளாக ஆங்கிலே யருக்குப் பெருங் துன்பஞ்செய்துவந்தார்.
அக்காலத்திலே வன்னிநாட்டிலே மிக்க செல் வமும் அதிகாரமுமுடையணுயிருந்து அவ்விடத்தை பன்- யாண்ட பண்டாரவன்னியனும் படையொன்று சே ாவன்னி . . . d h யன். ர்த்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு மாமுகவெழுந்து, ஆங்கிலேய போர்வீரர் சிலரைத் தாக்கிக் கொன்று எஞ்சினுோை முதுகிடச்செய்தான். சிறிது காலத் தில் ஆங்கிலபடைவீரர் சென்று அவனையும் அவன படையையுங் கொன்முெழித்து அவன் பொருளையெ ல்லாங் கவர்ந்தார்கள். ஈற்றில் ஆங்கிலேயர், சிறுபா ம்பாயினும் பெருங்கோல்கொண்டடிக்க வேண்டுமெ ன்றபடி, ஒரு சேனையோடும் சிங்களவரை எதிர்த்து, தம்ப்க்கத்தில் பலரையிறக்கக்கொடுத்தும் ஆண்மை விடாது அச்சிங்களப்படையைச் சுட்டு வெட்டிப் பிடித்தடித் துதைத்து வதைத்துக் குத்தி மொத்தி எற்றிப் பற்றி வெற்றிகொண்டு போதும்போதுமென் முேடச் செய்தார்.
இதனைக் கேள்வியுற்ற சென்னைத் தேசாதிபதி யாகிய (Lord Hobart) ஹோபார்ட் நரேந்திரர் (Colonel De Meuram) தெமியூமுன் என்னும் படை

யாழ்ப்பாணச்சரித்திரம். 21
த்தலைவனை அக்கலகவிசார்ஃணயின்பொருட்டு இல ங்கைக்கனுப்பினர். அவனும் இலங்கைக்கு வந்து அதன் விருத்தாந்தங்களையெல்லாம் ஆதியோடந்த மாகச் சென்னைக்கெழுதியனுப்பினன். அதுகேட்ட தேசாதிபதி காலந்தாழ்க்காது உடனே இலங்கை யை இங்கிலாந்து ராசாங்கத்துக்கு உபராஜாங்கமா க்கினன். அதன் . இங்கிலாந்தில் அரசுவீற்றிருந்த மூன்ரும் ஜார்ச் அரசர் மகிழ்வோடங்கீகரித்து அத னே ஆளும்படி கார்து (Governor North) என்பவ ரைத் தேசாதிபதியாக அனுப்பினர்.
அவர் 1798 ம் (uல் அக்டோபர் மீ" இலங்கை வந்து சேர்ந்து தேசாதிபத்தியங் கைக்கொண்டார். அவர் தெமியூமுன் என்பவருடைய எண்ணப்படி சிங்களநாடுகளிலே அதிகாரிகளாயிருந்த தமிழரை நீக்கிச் சிங்கள அதிகாரிகளையே வைத்தனர். இதற்
கிடையில் ஒல்லாந்தக்குடிகள் தாங்கள் , அனுபவி
த்த சுவாதீனங்களைக் கைவிட மனம் பொருந்தாது ஆங்கிலேயருக்கு மாமுகக் கலகஞ்செய்ய முயன்ற னர். யாழ்ப்பாணத்திலும் சிலவொல்லாந்தர் அதற் குடன்பட்டனர். அவுரோடு சில வன்னியரும் கூடி னர். அஃதுணர்ந்து நார்து தேசாதிபதி அவர்களு டைய வீடுகளையும் நிலங்களையுங் கவர்ந்துகொண்டு ஊரைவிட்டோட்டினர். அவ்வளவில் அவர்களுமட ங்கினர்கள். ஆங்கிலேயர் ஒல்லாந்தரைப்போலத் தென்னமரங்களுக்கும் ஏனைய பழவிருக்ஷங்களுக் கும் மரமொன்றுக்கு ஓரணு வரிவிதித்துக் கண்டிப் பாக வாங்கிவந்தனர். வரிதிரட்டிவந்த தமிழுத்தி யோகஸ்தர் கொடுமையால் மீண்டுங் குடிகள் கலக ங்கள் விளைப்பாராயினர். அக்கலகங்களுக்குக் கார ணாாயிருந்த உத்தியோகஸ்தர்களையெல்லாம் நார் துதேசாதிபதி விசாரித்து அவர்களை உத்தியோகத் தினின்றும் நீக்கினர். கர்னல்பார்பட் என்பவர் வட
6
இலங் GU52L. garsar ka, மாதல்.
நார்து தேசாதி பதி.
ஒல்லாந் தக்குடிக
‘ள்கலகம்
பழவரி.

Page 66
அதிகாரி ள் ஒழக்
122 யாழ்ப்பாணச்சரித்திரம்.
மாகாண அதிகாரியாக கியமனம்பெற்று யாழ்ப்பா ணத்துக்கு வந்தார். அவருக்கு உதவி அதிகாரிக்ள் அமில்தார் எனப்படுவர். மன்னர், முல்லைத்தீவு, வவ னியா, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்வாவற் றுறை என்னுமிடங்களில் ஒவ்வோர் அமில்தார் இ ருந்து இறைதிரட்டி வந்தார்கள. ஒவ்வோர் அமில் தாருக்கும், எழுத்துக்காான், மணியகாரன், ஆராய் ச்சி, சராப்பு, கணக்கன், கொத்த வால், கண்காணி, பதினைந்திருபது சேவகர்கள், ஒருவிளம்பரப் பறை யன் என்னுமிவ்வளவு வேலைக்காரிருந்து கருமம்பா ர்ப்பர். அந்தநாளில் அமில்தாருக்குச் சம்பளம் ரூ. 75. எழுத்துக்காரனுக்கு (கிளாக்) ச்சம்பளம் ரூ. 18. 50. சாாப்பு சம்பளம் ரூ. 11. 25. கொத்தவால் கணக்கன், ஆராய்ச்சி, மணியகாரன் இவர்களுக்கெ ல்லாம் தனித்தனி ரூ. 8. 25. சேவகர்க்கு ரூ. 2.75. பறையனுக்கு ரூ. 1, 50. இந்தச் சம்பளவிகிதங்கள் சிற்சிலபகுதிகளிலே கூடியுங் குறைந்துமிருக்கும்.
அந்நாளிலிருந்த மாகாண அதிகாரிகள், அமி ல்தார்கள். அவர்களுக்குக் கீழ்ப்பட்ட உத்தியோக ஸ்தர்கள் யாவரும் மிக்க நேர்மையுடையராயிருந் தார்களென்றெண்ணவிடமில்லை. அவர்கள் வியாபா ாமுஞ்செய்து பொருளீட்டி வருவார்கள். கர்ணல்பா ர்பட் என்பவரும் தேங்காய்க் கொப்பரை எள்ளு முதலியன வாங்கி அங்கியதேசங்களுக்கனுப்பி வி யாபாரம்பண்ணி வந்தாரென்முல் மற்றையோர்செ ய்தி கூறவும் வேண்டுமோ? பார்பட்டுக்கு இவ்வியா பாரத்தில் அனுகூலியாயிருந்தவர் மன்னர் அமில் தார் சுப்பாாயபிள்ளையென்பவர். யாழ்ப்பாணத்தி லே பொன்னம்பலமுதலியார் கர்ணல்பார்பட்டுக்கு இவ்வியாபாரத்தில் கூட்டாளியாயிருந்தனர். இவர் மானிப்பாயிலிருந்தவர்.
நார்துதேசாதிபதி இலங்கைச் சுதேசிகளுக்கு உயர்தர ஆங்கிலக்கல்வி பயிற்றுமாறு 1799 ம் டு

யாழ்ப்பாணச்சரித்திரம். 123
டிசெம்பர்மீ" 15வ. மகாவித்தியாசாலையொன்று ஸ் தர்பித்தனர். அவ்வித்தியாசாலைக்குச் சிங்களர் தமி ழர் பறங்கிகள் என்னுமுத்திறத்தாரும் தம்மக்களை அனுப்பிக் கல்வி பயிற்றுவாராயினர்.
இதற்கு முன்வருஷம் கண்டிநாட்டரசனகிய இராசா திராசசிங்கன் சந்ததியின்றி இறந்தான். மு தன்மந்திரியாகிய பிலாமைத்தலாவை என்பவன் அ வ்வரசனுடைய கொழுந்திமகனுகிய கண்ணசாமி யென்பவனுக்கு முடிசூட்டி பூரீ விக்கிரமராசசிங்க ன் என்னும் பட்டப்பெயருமளித்தான். இறந்த அ ரசனுடைய பட்டத்துத்தேவிக்குச் சகோதரனும் அப்பட்டத்துக்குத் தகுதியுடையவனுமாகிய முத் துச்சாமியென்னுங் கோமகன், ஒருகாலம் யுத்தஞ் செய்து பட்டத்துக்கு வழக்கிடுவானென்றெண்ணி, முதன்மந்திரி அவனைக் கொல்லப் பல குழ்ச்சிகள் செய்தான். அஃதுணர்ந்து முத்துச்சாமி நார்துதே சாதிபதியிடம் போய்த் தனது குறையைச் சொன் னன். நார்துதேசாதிபதி முத்துச்சாமிக்கு அபயங் கொடுத்து, மெய்காப்பின்பொருட்டு ஒரு சிறு தள முங் கொடுத்து அவனை யாழ்ப்பாணத்துக்கு அனுப் பிஞர். முத்துச்சாமி இங்குவந்து சிறிதுகாலங் தங்கி னன். அவன்வந்து வசித்தவீடு கோட்டைக்குள்ளே யிருக்கும் இராசமாளிகை.
அவன் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது அ வனைக் கொடிய நாகமொன்று தீண்டிற்று . அநேக விஷவைத்தியர் தீர்க்கமுயன்றும் விஷந்தீராது தலை க்கேறிற்று. வைத்தியத்தில் இணையில்லாத இருபா லைச்செட்டியாருடைய பெயர் எங்கும் வியாபித்தி ருந்தும் அந்நாளில் சிறுவயசினராயிருந்தமையால் அவ0ை முதலிலே இராசமாளிகையார் அலட்சிய ஞ்செய்தார்கள். மற்றைவைத்தியர்கள் கைவிட்ட பின்னர் இராசமாளிகையார் செட்டியாரிடஞ் செ ன்று அவரையழைத்தார்கள். அவர் ஒரோலைநறுக் கெடுத்து அதில் இருபாலைச்செட்டி என்றெழுதி
மகாவித் uraf
முத்துச் Fstify a
F.
இருபா ಜ#GF ட்டியார்.

Page 67
விசுவநா is ar fâs)
፳፻.
முத்துச்
Frussor
சணுதல்.
124 யாழ்ப்பாணச்சரித்திரம்.
“இதனேக் கொண்டுபோய் அக்கோமகன் முன்னே வையுங்கள் விஷந்தீர்ந்துவிடும்” எனக்கூறிக் கொ டுத்தார். அவ்வாறு செய்ய விஷந்தீர்ந்து கோமக னும் கித்திரைவிட்டெழுந்தான்போலெழுந்தான். அ வன் இருபாலைச்செட்டியாருக்குத் தந்தப்பல்லக்கும் அநேக வெகுமானங்களும் அனுப்பினன். செட்டி யார், “நாழியரிசியும் நான்குமுழமும் போதுமென் று விரதம்பூண்டவெனக்கு இவையெல்லாம் துன்ப மாம். என்னைத் துன்பத்துக்காளாக்கவேண்டாமெ ன விண்ணப்பஞ்செய்கின்றேன்” என்று கூறி அ வைகளைத் திருப்பிவிட்டார்.
இதற்குச் சிலநாளைக்குமுன் முத்துச்சாமிக் கோமகன் விசுவநாதசாஸ்திரியாரை அழைத்துத் தனக்குப் பட்டங்கிடைக்குமோ கிடையாதோவெ னத் தனது சாதகத்தை ஆராய்ந்து பார்த்துச் சொ ல்லுமாறு கேட்டான். சாத்திரியார், “பட்டங்கிடை க்கும்; அதுவும் சமீபத்திலே கிடைக்கும்; பட்டத் துக்கு முன்னும் பின்னும் அரிபகையுண்டு” என் முர். அதுகேட்ட கோமகன், என்ன பகைவந்தாலும் பட்டம்வந்தாற் போதுமென்று மகிழ்ந்து, அவருக் குத் தக்கவெகுமானமும் ராஜசோதிடரென்னும் ப ட்டமுமளித்தான். முன்னும்பின்னும் அரிபகையெ
ன்பதற்கு, முன்னே அரிபகை பாம்புப்பகை என
வும், பின்னே அரிபகை தலையரியும்பகை எனவும் பொருளாம். சாஸ்திரியார் சொல்லிய சிலதினங்க ளிற் கோமகனே நாகந்தீண்டிற்று. அது தீர்ந்தவுட
ன் கோமகன் சாஸ்திரியாரை அழைத்து மீண்டுஞ்
சில பரிசுகள் வழங்கினன்.
அதனபின்னர் ஆங்கிலேயர் முத்துச்சாமியை யாழ்ப்பாணத்தினின்றும் அழைத்துக்கொண்டுபோ ய், 1808 ம் (uல மார்ச்சுமீ 8வ. கண்டிநகரில் மிக்க சம்பிரமத்தோடு முடிசூட்டிக் கண்டியரசனுக்கி, அ

யாழ்ப்பாணச்சரித்திரம். 125
வஞேடு ஒருடன்படிக்கையுஞ் செய்நுகொண்டனர். சில்தினங்களின் பின்னர், முன் ஆங்கிலேயர்க்கஞ்சி ஒளித்தோடியூ பூரீ விக்கிரமராசசிங்கனென்னும் அ ரசனுடைய மக்கிரியாகிய பிலாமைத்தலாவையின து வஞ்சவலையில் நார்து தேசாதிபதி அகப்பட்டுத் தாம் முன்னே முத்துச்சாமியரசகுேடு செய்த உட ன்படிக்கையை மாற்றி, முத்துச்சாமியை இராசப தத்தினின்று நீக்கவும், விக்கிாமராசசிங்கனை மீண் டுங் கண்டியரசனுக்கவும், முத்துச்சாமிக்கு வருஷ மொன்றுக்கு ரூபா முப்பதியினுயிரங் கண்டியரச ன்கொடுத்துவரவும், முத்துச்சாமி யாழ்ப்பாணத் திலே ஒரிராசமாளிகைகட்டி இராசமரியாதையோடு அதிலிருக்கவும் புதியவுடன் படிக்கைசெய்தார். அ தன முத்துச்சாமியோடு கலவாமல் நார்துதேசாதி பதி தாமாகவே செய்தார். இது தேசாதிபதியின து நேர்மையின்மையை விளக்குகின்றது.
இப்படிச்செய்தும் பிலாமைத்தலாவையினது வஞ்சச் சூழ்ச்சியால் 1803 ம் வருஷம் குன்மாசம் 26 ங் தேதி ஆங்கிலபடையும் முத்துச்சாமியும் கண் டியரசன் கைப்பட, சிங்களமந்திரி ஆங்கிலசேணுப தியை நோக்கி, முத்துச்சாமியை எங்களிடமொப் புவித்தால் உங்களையெல்லாம் உயிர்பிழைக்க விடு வோமென்றச்சுறுத்தி, முத்துச்சாமியைக் கைப்பற்றி க்கொண்டுபோய் அரசன் முன்னிலையில் விட்டான். அரசன் முத்துச்சாமியை உடனே சிரபங்கஞ் செய் வித்தான்.
இதற்குச் சிலவருஷங்களுக்கு முன்னே தஞ் சைச் சமஸ்தானத்தில் மந்திரியாயிருந்த துளசிரா யருக்கு சாயசகாராயிருந்த கரந்தட்டான் குடி மு த்துச்சாமிப்பிள்ளையென்பவன் துருக்ககலகத்துக்கு அஞ்சிக் கண்டிக்குப்போக யாழ்ப்பாணமார்க்கமாய் விந்தான். அவன் தன்னை இன்னனென்றறிவிக்காது யாழ்ப்பாணத்திற் குடிகொண்ட சோழதேசத்தார்
முத்துச் Saruð Gass 2a)
புண்டது
முத்துச்
sarufu? árðaw.

Page 68
ser GS Gaisardo டைச் Gafë aps resura.
196 யாழ்ப்பாணச்சரித்திரம்.
விடொன்றிலே சிலகாலக் தங்கிப் பின்னர்க் கண்டி சமஸ்தானத்தையடைந்து அங்கிருக்கையில், த்ங் கும் யுத்தங் தொடங்கியதால் கொழும்புக்குச் செ ன்று யாழ்ப்பாணத்துக் குடும்பமொன்றில் விவாகஞ் செய்து, ஆங்கிலபடைத்தலைவனேடு கட்புக்கொண் டு, படைக்குவேண்டும் பண்டங்கள் கொடுக்கும் உ த்தியோகம்பெற்றுப் பெரும்பொருளிட்டி வாழ்க் தான். முத்துச்சாமிராசா யாழ்ப்பாணம் வந்திருங் தபோது முத்துச்சாமிப்பிள்ளைக்குத் திருமுகமனு ப்பி அவனை வரவழைத்துத் தனக்குத் துணையாயி ருக்கும்படி கேட்டுத் தன்னேடிருத்தினன். முத்து ச்சாமிராசா கண்டிக்கு மீண்டபோது முத்துச்சா மிப்பிள்ளையும் கொழும்புக்கு மீண்டான். மாக்டோ வல் சேனுபதியும் நார்துதேசாதிபதியும் இம்முத் துச்சாமிப்பிள்ளையிடத்தில் மிக்க விசுவாசமுடைய ராயிருந்தார்கள். மன்னரில் அமில்தாராக அங்காளி லிருந்த சுப்பாாயபிள்ளை முத்துச்சாமிப்பிள்ளைக் குச் சகோதரிபுத்திரன். முத்துச்சாமி புத்திரன் ஆ றுமுகசாமி 1815 ல் கண்டியரசன் சிறையாகி வே லூருக்குச் செல்லும்போது கொழும்பில் அவனுக் குவேண்டுமுதவிபுரிந்தான். அவன் மகன் குமாரசா மிமுதலி.
அதுநிற்க, 1800 ம் டு கோமாரியால் வடமா காணத்திலுளள மாடுகளெல்லாம் பரிநாசப்பட்டன. அதனுல் குடிகளடைந்த நஷ்டம் மிகப்பெரிது. உழ வுக்கு மாடில்லாமையால் பயிர்ச்செய்கையும் அவ்வ ருஷம் குன்றியது. அவ்வருஷத்திலேயே நாட்டுக் கோட்டைச் செட்டிகள் யாழ்ப்பாணத்திலே முதன் முதலாக நெல்லுவாணிகஞ் செய்யத் தொடங்கினர். அவர்கள் நாகபட்டினம் முத்துப்பேட்டை முதலிய விடங்களிலிருந்து தோணிகளிலும, வன்னிகாட்டி லிருந்து பொதிமாடுகளிலும் 5ெல்லுககொண்டுவக் து பண்டசாலைகளில் வைத்து விற்றுவந்தார்கள்.

யாழ்ப்பாணச்சரித்திரம். 27
அவ்வருஷம் முத்துக்குளிப்பும் வந்தது. அத ற்கு அச்சமுத்திரத்திலுள்ள சுருக்கள் குளிகார ரைத் தாக்காமல் அவைகளை வாய்கட்டும் பொரு ட்டு வழக்கம்போல மந்திரவாதிகளை அரசினர் அ ழைத்தார்கள். அம்மங்திரவாதிகளுள்ளே சிலர் கத் தோலிக்க மதத்தினராயிருந்தமையால் அவர்களைக் கத்தோலிக்கி குருமார் அம்மந்திரத்தொழில் செய் யாது தடுத்தனர். அதனை அரசினர் அறிந்து குரு மாரைக் கண்டித்து மந்திரவாதிகளைத் தமது தொ ழிலை வழக்கம்ப்ோலச் செய்துவருமாறு கட்டளையி ட்டனர். இச்சுமுவாய்கட்டுமந்திரத்திலே யாழ்ப்பா ணத்து முக்கியரும் மயிலிட்டிக் கரையாருஞ் சிறந் தவர்கள். அக்காலத்தில் முத்துக்குளிக்குச் செல்லு ம் இம்மந்திரவாதிகள் ஒவ்வொருவருக்கும் சம்ப
ளம் ஏழரைப்பறை நெல்லு.
அதுகிற்க, அவ்வருஷத்தில் முத்துக்குளியால் அாசினர்க்கு இரண்டிலக்ஷ ரூபா கிடைத்தது. அக் குளிப்பில் சிப்பிவாங்கிய முத்துச்சாமிப்பிள்ளையும்
மகனும் பெருங்தொகைப் பொருள்படைத்தார்கள்.
1805 th alCDjali (Sir Thomas Maitland) (5ud யிற்லண்ட் என்பவர் தேசாதிபதியாகவும், லஷிங்ட ன் என்பவர் சுப்பிறீங்கோட்டுத் தலைமைதிேபதியாக வும், றட்னி என்பவர் கலோனியல் செக்கிறிற்றேறி (லிகிதர்) ஆகவும் கியமனம் பெற்றுவந்தனர். இத் தேசாதிபதிகாலத்தில் யாதோர் யுத்தமுமின்றி இ லங்கைமுழுதும் அரசியல் சீராக நடப்பதாயிற்று. 1806 ம் வருஷம் ஆடிமாசத்தில் யாழ்ப்பாணத்தில் ஊர்கள்தோறும் *விதானமார்கள் கியமிக்கப்பட்டா ர்கள். அக்காலத்தில் அரசினர் பெரும்பாலும் குல த்தாலும் குணத்தாலும் செல்வாக்காலும் சம்பத் தாலும் சிறந்தவர்களையே விதானமாராக கியமித்
தார்கள். அவர்கள் கலகம் சண்டை களவு அதிக்கிர
* விதானன் விகானை என மருவிற்று.
கறுவாய் கட்டிகள்
விதானே Lnrif.

Page 69
நகைவரி நீக்கம்.
உப்புவரி
28 யாழ்ப்பாணச்சரித்திரம்.
மமுதலிய முறைகேடுகள் சம்பவியாவண்ணம் ஊ ரைச் செவ்வே பாதுகாத்துவந்தார்கள். இத்தேசா திபதியால் பறங்கிக்காரர் காலமுதல் வ்ாங்கப்பட் டுவந்த நகைவரி 1806 ம் வருஷம் அக்கிரமமான வரி யென்று சீக்கப்பட்டது. அதுகண்டு யாழ்ப்பாண முழுதும் தேசாதிபதியையும் ஆங்கிலவரசியலையும் புகழ்ந்து கொண்டாடிற்று. இந்நகைவரிக் குத்தகை யை நடாத்திவந்தவர் பெரிய தாமோதாம்பிள்ளை யென வண்ணுர்பண்ணையில் அந்நாளில் விளங்கிய வர். ܚ ܫ • -
இத்தேசாதிபதிகாலத்தில், முன்னே வாய்த்த படி வாங்கப்பட்டவரிகளைச் சட்டப்படி கூடாம லும் குறையாமலும் வாங்கும்படி கட்டளை செய்ய ப்பட்டது. நெல்லுப் பத்திலொருபகுதி கொள்ளப் பட்டது. பறையொன்று இரண்டுபணமாக விற்று வந்த உப்புப் பன்னிரண்டுபணமாக்கப்பட்டது. கள் ளுவரியுஞ் சாராயவரியும் குத்தகையாக விற்கப்பட் டது. அக்காலத்தில் இவைகளால் அரசுக்குவந்த இறை மிகவும் அற்பமே.
பறங்கிக்காரராலும் ஒல்லாந்தராலும் தாழ்வெ ய்திய சாதிசமயநிலைகள் ஒல்லாந்தவரசின் கடைக் கூற்றிலே ஒருவாறுதலையெடுப்பனவாயின. ஆயினும் வெளிப்படையாய் நிலவத்தொடங்கியது ஆங்கில வாசு வந்த நாள்முதற்முெட்டேயாம். குடிகளும் தத்தம் வருணுசாரத்தையும் சமயாசாரத்தையும் சுயேச்சையாகக் கைக்கொண்டொழுகுஞ் சுவாதீ னம் ஆங்கிலவாசாற் கொடுக்கப்பட்டது. முன்னர் க்கோயில் போலாது கொட்டில்போல் இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படத்தொடங் கின. ஆராதனைகள் வாத்தியகோஷங்களோடு நடக் கத்தொடங்கின. இடித்த கோயில்களை மீளக் கட் டிக்கொள்ளும்படி ஆங்கிலவாசு வந்தவுடன் அநும திகொடுக்கப்பட்டது. கிலமுங் கொடுக்கப்பட்ட

யாழ்ப்பாணச்சரித்திரம். 129
து. சைவாலயங்களுக்கு "அர்ச்சகர்களும் அரசின ரால் கியமனம் பெற்றர்கள். அவர்களுக்குரிய மரி யாதைகளும் வரிசைகளும் ஆணேப்பத்திரமூலமாகத் தேசாதிபதி கைச்சாத்தோடு வழங்கப்பட்டன. இங் நுனம் அங்காளில் தேசாதிபதி கைச்சாத்தோடு கிய மன கிருபம் பெற்ருருள்ளே முதல்வர் ஈல்லூர்க் கந்தசுவாமிகோயில் அர்ச்சகர் சிகிவாகனஐயர் ዛዻ திரராகிய வாலசுப்பிரமணியஐயர். இவருக்கு கிய மனபத்திரம் 1807 ம் வGல் ஜனவரிமீ 5வ, தேசாதி பதி தோமாஸ் மேற்லண்ட் (கவணர்) அவர்களாற் கொடுக்கப்பட்டது. அப்பத்திரம் இன்றும் அவர் சந்ததியாரிடமுளது. வித் திவ்ான் அப்புக்குட்டி ஐயரெனப்படுபவர் இவ்வையரே. தற்காலம் பிரசி த்தியுற்று விளங்கும் உபயவேதாகம பண்டிதர் கன கசபாபதிஐயர் இவர் தெளகித்திார்.
இதுகாறும் கிராமாதிகாரிகள் எண்ணப்படி நடாத்தப்பட்டு வந்த குடிகள், ஆங்கிலவரசர் வரி களை வாங்குங் கிரமத்தாலும் நீதியாலும அன்பின லும் வசீகரிக்கப்பட்டவர்களாய் இவ்வரசே தரும ராச்சியமென்று சொல்லத்தொடங்கினர்கள்.
1812 ல் பிரவுன்றிக்குப்பிரபு தேசாதிபதியா னர். கண்டியரசனது மந்திரிமார்செய்தி வஞ்சனை யால் ஆங்கிலேயருக்கும கண்டியரசனுக்கும் கொ டியயுத்தம் மூண்டது. ஆங்கிலேயர்சேனை அநேக ரை மர்ளக்கொடுத்தும் அஞ்சாதும் தளராதும் யுத் தஞ்செய்து கண்டியரசனை 1815 ம் வருஷம் பிப்ர வரிமாசம் 18 ந் தேதி சிறைசெய்து கண்டிநாட்டை க்கைக்கொண்டது. அவ்வளவில் இரண்டாயிரத்தை ஞ்லூறு வருஷம்வரையில் அடியடியாக வந்த சிங் களவரசுபோய் ஆங்கிலவரசு நிலைகொள்ளத் தொ டங்கியது. இதனேடு இலங்கை முழுதும் ஆங்கில
17

Page 70
Mr. Hooper
நவக்கீரி,
180 யாழ்ப்பாணச்சரித்திரம்.
வாசுக்கடங்கியொழுகத் தலைப்பட்டது. ஆங்கிலே யர் யாழ்ப்பாணத்திலும் கச்சேரி இராணுவசர்லை நீதிசாலை முதலியவிடங்கள் கட்டினர்கள். வடமா காண அதிகாரியாகக் கூப்பர் துாைவந்தார். அவர் ஊரிலேயுள்ள பிரபுக்கள் தங்கள் அடிமையாட்களை வருத்தி இராப்பகல் வேலைகொள்வதைத் தடுத்துக் கிரமமாக நடாத்தும்படி செய்தனர்.
1824 ம் வருஷம் பாண்ஸ்பிரபு தேசாதிபதி யானுர். அவர்காலத்தில் ஊர்கள் தோறும் போக்கு வாவுக்குரிய மார்க்கங்களைத் திருத்தினர். ஊர்களி லே கள் வரால் வருந்துன்பங்களைக் குறைத்தனர். ஊரிலே தலைமைக்காரர் குடிகளை வருத்தாமல் வரிக ளை வாங்கும்படி விதித்தனர். இவர் புத்தூரிலே நவ க்கீரி என்னுமிடத்திலுள்ள கிலா வரையென்னும் வ ற்ருத வாவியை நீர்ப்பாய்ச்சலுக்கு உபயோமாம்ப டி அமைக்குமாறு ஒரு பெரிய நீராவியந்திரத்தை வரவழைத்து பாண்ஸ்துரையைக்கொண்டு பரீக்ஷிப் பித்தனர். அவ்வியந்திரத்தால் எட்டுநர்ள்வரையும் இறைத்தும் அந்நீர்நிலை சிறிதும் குறையவில்லை. மு டிவில் அந்நீர்நிலையின் கீழே கந்தக நீரிருத்தல்ால் அது பயிர்களுக்கு உதவாத நீரெனத் தள்ளினர். இந்நீர்நிலையினது ஆழம் 144 அடி, அகலம் முப் பதடி இது இடியேறுவிழுந்துண்டானதென்று பா 619. Lucio (Baldeus) 3, Dais is 5 (Sir E. Tennent) டெனண்டு பண்டிதர் கூறுகின்ருரர். பூரீராமர் தமது சிேனைக்கு நீரூட்டும்பொருட்டுத் தமது வச்சிராஸ்தி ரம் விடுத்து இந்நீர்நிலையை யுண்டாக்கினரென்பது கர்ணபரம்பரை இடியேற்றை ஒருவாறெடுத்து ஆ யுதங்களிலமைத்துக் கொள்ளும் வன்மை நம்பூர்வ ஆரியர்க்குண்டென்பது பழைய சரித்திரங்களாலே துணியப்படும். அதுவே வச்சிராயுதமெனப்படுவ தாம். பால்டியஸ்பாதிரியார் இடியேற்ற லுண்டாய து என்று கூறியது இக்கர்ணபரம்பரையைக் கொ ண்டுபோலும், அதுகிற்க,

யாழ்ப்பாணச்சரித்திரம். 3.
1818-19 ல் இலங்ஸ்கயில் முதன்முதல் பேதி ன்ோய் தோன்றிப் பரவி இலங்கைமுழுதையுங் கல க்கியது. அப்போது மாரியம்மன் கோயில்கள்தோ அறும் பெரும்விழாவும் பூசைகளும் சிறப்புறகடந்தன.
1823 ல் வட்டுக்கோட்டைச் செமினேரி என் லும் ஆங்கில கலாசாலை அமெரிக்கன் மிஷன் என் னும் சங்கத்தாராற் ருபிக்கப்பட்டது. 1816 ல் அ மெரிக்கன் பாதிரிமார் யாழ்ப்பாணம் வந்தனர். இவ ர்கள் தமது கிறிஸ்தசமயத்தைப் பரப்புதற்குப் பல வாறு முயன்றும் தக்கவாறு பயன்படாமையால் கலாசாலையே தக்க உபாயமாமெனத் துணிந்து இ க்கலாசாலையைத் தாபித்தார்கள். அங்கே அநேகர் சென்று வேதனமின்றிக் கல்விகற்றுப் பெரும்பண் டிதராயினர். அதனேடு கிறிஸ்தவருமாயினர். அவ ர்கள் இராசாங்க உத்தியோகம்பெற்றும் விளங்கு வாராயினர். அவருட் சிலர் கிறிஸ்தமதத்தை விடுத் து மீண்டுஞ் சைவசமயத்தைத் தழுவினர். ஒருசிலர் அங்கே கல்விகற்றுப் பண்டிதராகும்வரையும் நாட் போக்கிக் கிறிஸ்தசமயத்திற் பிரவேசியாது திரும் பினர். 1824 ல் அவ்வமெரிக்கன் பாதிரிமாராலே உ டுவிற் பெண்பாடசாலையும் தாபிக்கப்பட்டது. அங் கும் அநேக பெண்கள்போய் அன்னவஸ்திரம்பெற் றுக் கல்விகற்பராயினர்.
செமினேரியிலே இங்கிலிஷோடு தமிழ்நூல்க ளையுங் கிரமமாகக் கற்பித்து வந்தார்கள். அங்கே ஆங்கில வானசாஸ்திரத்தோடு தமிழ்ச் சோதிடநூ ல்களும் கற்பித்துவந்தார்கள். பஞ்சாங்ககணனத்து க்கு அராலி விசுவநாதசாஸ்திரியாரும் இச்செமினே ரியாருக்கு உதவியாயிருந்து அவர்மூலமாக ஆங்கில
ராசாங்க சோதிடரென்னும் பட்டமும் பெற்றர்.
1829 ல் டைக் துரை (P, A, Dyke) கவண்மேந் து ஏசண்டாக வந்தனர். அவர் வந்தது முதல்
பேதி நோய்.
வட்டுக் Gaso டைச் செமீ Garáf.
GLJ air
TFs
விசுவநா தசாஸ்
டைக் துரை.

Page 71
139 யாழ்ப்பாணச்சரித்திரம்.
யாழ்ப்பாணம் பலவகையாலுந் திருத்துவதாயிற்று. எந்தக்கிராமத்துக்கும் எளிதிலே போய்வாத்தக்கமா ர்க்கங்களைத் திறந்து கற்படுத்து அலங்காாவிதிகளா க்கினர். அம்மார்க்கங்களின் இருமருங்கும் கிழல்த ரும் விருஷங்களை நாட்டினர். மார்க்கங்களுக்கருகே கள்வர் பதுங்கியிருத்தற்கிடமாயிருந்த தூறுகளை யெல்லாம் வெட்டினர். வழிச்செல்வோர் தங்குதற் கு வசதியான சாவடிகளும் நீருண்ணக் கிணறுகளு ம் வேண்டியவிடங்களில் அம்ைத்தனர். வெள்ளக் தங்கிக் கிராமங்களை அழிவுசெய்யாவகை பாய்கால் களையும் மதகுகளையும் வகுத்தனர். யாழ்ப்பாணத் துக் கச்சேரித் தோட்டத்தைச் சிங்காரவனமாக்கி னர். அகதிகளுக்கும் வறிஞர்களுக்கும் ஆபத்பாங் தவசங்கமும் தருமவைத்தியசாலையுங் தாபித்தனர். ஆபத்பாந்தவசங்கம் இன்றும் நடைபெறுகின்றது. இச்சங்கத்தில் எத்தனையோ அகதிகள் மாசந்தோ றும் சீவனுமிசம் பெறுகின்ருர்கள். தருமவைத்திய சாலை இப்போது அரசினர் வைத்தியசாலையாய் நட க்கின்றது.
அவர் மீன்வரி சாயவேர்வரிகளை நீக்குவித்த னர். மகுரிகாரோகம் பேதிநோய்கொள்பவர்க்குப் பிாத்தியேகமான வைத்தியசாலைகளைத் தாபித்தனர். ஊரிலுள்ள குறைமுறைகளையும் அதிக்கிரமங்களை யும் தாமே எவருமறியாமற் சென்று ஆராய்வர். வி த்தியாசாலைகளை ஊர்தோறுந் தாபித்து நடாத்து வோருக்கு வேண்டுந் துணையெல்லாஞ் செய்வர். கச் சேரிக்குச் சமீபமாகவும் ஒரு வித்தியாசாலை இவர் திரவியசகாயங்கொண்டு நடந்துவந்தது. சுதேசிகள் வியாபாரத்தாலும் உத்தியோகத்தாலு முயரவேண் டுமென்பது இவர்விருப்பு. பறங்கிக்காரர் ஒல்லாங் தர்களது பரம்பரையிலுள்ளவர்களே இராசாங்க வுத்தியோகமெல்லாம் பெற்றுவந்தனர். இவர்கால த்தில் சுதேசிகளாகிய தமிழரே அவ்வுத்தியோகங்க

யாழ்ப்பாணச்சரித்திரம். 133
ளைப் பெறுவாாாயினர். பெயர்படைத்த சவிரிமுத் து முதலியார், தெல்லிப்பழைக் கனகரத்தினமுதலி ார் என்போர் இவரிடத்திருந்து உத்தியோகத்தில் விளங்கினர். இவர்காலத்திலே வட்டுக்கோட்டைச் செமினேரியிற் கற்று வல்லவராகிச் சென்னையில் மு 9éb (B. A.) பட்டம்பெற்று அங்கே சிறந்தவுத்திاتی யோகத்திலமர்ந்து விளங்கினுேர் விசுவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளையென்பவர்கள். செமினேரி மா ஞக்கருள்ளே உள்ளூரில் விளங்கினவர் எமதாசிரி யராகிய (Mr. Nevins) சிதம்பரப்பிள்ளையும், ஊர் காவற்றுறை நீதிபதி கதிர்வேற்பிள்ளையும், (Mr. Arnold) சதாசிவம்பிள்ளையும் மார்ட்டின் மேர்வின் முதலியோருமாவர். ஆங்கிலங் தமிழ் வடமொழிப் பயிற்சிமூன்ருனுஞ்சிறந்த ஆன்றநூற்புலவர்களாகிய இவர்கள் பெருமையை அறியாதார்யார்! அதுகிற்க,
டைக் துாைவந்த காலமுதல் ஊர்த்திருத்தத்தி
ற்கும் குடிகளுடைய க்ஷேமத்துக்கும் வேண்டிய
வைகளையெல்லாம் ஆராய்ந்து செய்துகொண்டே வருவாராயினர். அப்படிவருங்காலத்திலே யாழ்ப் பாணத்துப் புகையிலைக்கு மலையாளத்திலே பிரிய முண்டாயிற்று. மலையாளத்துக்கும் யாழ்ப்பாணத் துக்கும் புகையிலைத் தொடர்பு தமிழரசர் காலத் திலுண்டானது. அது பறங்கிக்காரர் ஒல்லாந்தர்க ளால் சிறிதுசிறிதாக விருத்தியுற்று ஆங்கிலேயர் காலத்திலே பெருவிருத்திபெற்றது. மலையாளத்து க்கு வேண்டும் புகையிலை முழுதும் கொடுப்பதாக அத்தேசத்து இராசாவோடு பொருத்தச்சாதனம் பண்ணிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து பெருக் தொகையாக அனுப்பிப் பெருகிதிபடைத்தோர் ஆ றுமுகச்செட்டியாரும் அவர்புத்திரர் முத்துவேலுச் செட்டியாருமே. அக்காலத்தில் அவர்களோடு சேர் ந்தும் பின்னர்த் தனித்தும் இவ்வியாபாரத்தைப் பெரிதாக ஈடாத்திப் பெயர்படைத்தவர் கொக்கு
புகையி லைவியா turr Th.
புகையி 2aafur பாரிகள்.

Page 72
கிறிஸ்தச ங்கத்தார் முயற்சி.
இறுழக
நாவலர்.
184 யாழ்ப்பாணச்சரித்திரம்.
வில் அருணசலம். காலியில் புகையிலை வியாபாரத் தைப் பருப்பித்தவர் திருநெல்வேலி அம்பலவாண்ர் புத்திரர் கார்த்திகேசர்,
டைக் துரை காலத்திலேயே நெடுங்காலமாக ஊர்கடோறும் மறைந்துகிடந்த சைவாலயங்கள் பிர காசிப்பனவாயின. எங்கெங்கே ஆலயங்களோ அங் கங்கெல்லாம் (முேட்டு) தெருக்களை வகுத்துக்கொ ண்டுபோய் விடுத்து அவைகளை விளக்கமாக்கினர். அமெரிக்கன் மிஷன் வெஸ்லியன்மிஷன் சேர்ச்சுமிஷ ன் என்னும் மூன்று கிறிஸ்த சங்கத்தாரும் இவர் காலத்திலேயே வித்தியாசாலைகளைத் தாபித்தும் கோயில்களைக் கட்டியும் ஊர்கடோறும் போதகர் களையனுப்பியுந் துண்டுப்புத்தகங்கள் கொடுத்தும் தம்து கிறிஸ்தமதத்தைப் பாப்புவாராயினர். அவ ர்களுடைய வித்தியாசாலையில் உபாத்தியாயர்களாக விரும்புபவர் கிறிஸ்தவராதல்வேண்டுமென்றும் அவ ர்களுக்கு விசேஷ சம்பளங்கொடுக்கப்படுமென்றும் விஞ்ஞாபனஞ்செய்து அநேகரைக் கிறிஸ்தவர்களா க்கிஞ்ர். சுகமாகவுலாவிச் சனங்களோடு -ல்லாபி த்துவிட்டு மாசமுடிவிற் சம்பளம்பெறும போதக வேலையை விரும்பித் தமது பயிர்த்தொழிலை வீசிவி ட்டுக் கிறிஸ்தவராயினரும் பலர். பாதிரிமார் சிவதூ ஷணங்களை வரைந்து துணடுகளும் துண்டுப்புத்தகங் களும் பல்லாயிரக்கணக்காக அச்சிட்டு எங்கும் பர ப்புவாராயினர். இவ்வாறு பாதிரிமார் செய்துவரும் முயற்சியைக்கண்ட பூநீலபூரீ. ஆறுமுகநாவலர் மனம் பதைத்துத் தாமும் துண்டுகளும் புத்தகங்களுமச் சிட்டுச் சைவசமயத்தின் மகத்துவத்தை நாட்டுவா ராயினர். சைவபாடசாலைகள் தாபித்துச், சைவபா லபாடங்களும், சைவவினவிடைகளும், நிகண்டு இ லக்கணம் பாரதம் கந்தபுராணம் திருக்குறள் முத லியவைகளும் அச்சிட்டு, சைவத்தையும் தமிழ்க்க
ல்வியையும் வளர்க்குநோக்கமாகப் பரப்பினர். அத

யாழ்ப்பாணச்சரித்திரம். 135
ஞல் தமிழ்க்கல்வியிலும் சைவசமயத்திலும் அபி மானம் யாழ்ப்பாணமெங்குமுண்டாவதாயிற்று. ஆ றுமுகநாவலாவர்களும் அதுகண்டு, தமது பொரு ளையுங் காலத்தையும் கருத்தையும் சைவசமயவிரு த்திக்கும் தமிழ்வளர்ச்சிக்குமாகவே சமர்ப்பித்து, நைஷ்டிகப் பிரமசரியத்தையே பெருவாழ்வாகக் கொண்டனர். அக்காலத்தில் அவர் கருத்திற்கொ ண்டு முடிக்கமுயன்ற பரோபகாரகருமங்களுள்ளே அவர்காலத்துக்குப் பின்னர்ப் பலித்தோங்கியது இ ந்துக்கல்லூரி. மற்முென்று கீரிமலைச் சிவன்கோயில் அவர்செய்த முயற்சியைக் கண்டு யாழ்ப்பாணத்தி லே இடங்கள்தோறும் சைவத் தமிழ்வித்தியாசாலை களும் சைவ ஆங்கிலவித்தியாசாலைகளும் ஆங்காங் குமுள்ள பிரபுக்களால் தாபனமாகி நடைபெறுகி ன்றன. சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அவ்வூர்க் கனகர்த்தினமுதலியாருடைய முயற்சியேயாயினும் அம்முயற்சிக்குங் காரணமாய்கின்றது ஆறுமுகநா வலரது சித்த சுத்தியும் சிவபக்தியுங் கூடிய இருத யகமலத்தெழுந்த நன்முயற்சியேயாம். அவர் கரு தியபடி நிறைவேருதது நல்லைக் கந்தசாமிகோயிற் கருங்கற்றிருப்பணியொன்றுமே. முற்கூறிய முச்ச ங்கத்துப் பாதிரிமார்செய்த பிரசண்ட முயற்சிக்கு நாவலர் செய்த முயற்சி சிறிதேயாயினும் நன்மனத் தோடுஞ் சிவபத்தியோடுஞ் செய்த முயற்சியாதலின் அஃது எதிர்கின்று பொருது அப்பிரசண்டமுயற்சி யின் பலனை அற்பமாக்கிவிட்டது. அவர் பிறவாதிரு ந்தால் யாழ்ப்பாணத்திலே தமிழும் சைவமும் பா திரிமார் முயற்சியால் பரிநாசப்பட்டிருக்கும். அவ ாாலெழுந்த சைவாபிமானம் பணைத்து இப்போது ஆயிரம் பராசையினையுடைய பெருவிருக்ஷமாய்விட் டது. அதுகிற்க,
1848 ம் (uல் தலைவரிச்சட்டம் விதிக்கப்பட்ட
து. 18 வயசுக்கும் 60 க்கும் இடைப்பட்ட வயசு
தலைவரி ப்பனம்

Page 73
சட்டநித
at F
36 யாழ்ப்பாணச்சரித்திரம்.
டையோர் வருஷங்தோறும் “முேட்டு’ வேலைக்கா கப் பதின்மூன்று பணமும் நான்கு வெள்ளைச்சல்லி யும் செலுத்துதல்வேண்டும். அஃதியலாதோர் முே ட்டில் 6 நாள் வேலைசெய்தல் வேண்டும். இச்சட்டம் வந்தவுடன் யாழ்ப்பாணத்துச் சனங்கள் அவ்வரி யைக் கஷ்டப்பட்டுச் செலுத்தினர். சிங்களர் தாம் செலுத்துவதில்லையென்று திரண்டு கண்டி குருகிக லை முதலியவிடங்களிற் பெருங்கலகம் விளைத்தனர். விளைத்தோர் ஆங்கில படைவீரரைக்கண்டு ஓடியட
ங்கினர்.
1833 ம் (uல் சட்டநிரூபணசபை (பிரமாணவி திசபை) சட்டநிறைவேற்றச்சபை (பிரமாணகிதிச பை) இரண்டுங் தாபனமாயின. சட்டநிரூபணசபை, உத்தியோக அங்கத்தவரும், பிரபு அங்கத்தவரா கிய சனப்பிரதிகிதிகளும் கூடியசபை. இச்சபைக்கு முதன்முதலிலே 1835 ம் வருஷம் தமிழர் பிரதிநிதி யானவர் கெளரவ பொன்னம்பலமுதலியார். இவரு க்குப்பின் 1846 முதல் 1861 ம் வருஷம் வரையும் தமிழர் பிரதிநிதியாயிருந்தவர் கெளரவ எதிர்மன் னசிங்கமுதலியார். இருவரும் மானிப்பாயைப் பிற ந்தவூராகவுடையவர். அவருக்குப் பின்னர் 1862 ல் கெளரவ Sir குமாரசுவாமி தமிழர் பிரதிநிதியானுர், அவருக்குப்பின் 1879 ல் இப்போது இலங்கைவாசி கள் தெரிவுப்பிரதிநிதியாக 1912 ல் சட்டநிரூபண சபையிற் பிரவேசம் பெற்று விளங்கும் கெளரவ பொ. இராமநாதன் தமிழர் பிரதிநிதியாகி 1892 வரையிலிருந்தனர். அதன்பின்னர்க் கெளரவ டக் டர் றக்குவிட் என்பவரும் பிரதிநிதியாயினர். இவர் களும் மானிப்பாயைச் சார்ந்தவர்களே. அவருக்கு ப்பின் கெளரவ அ. கனகசபை பிரதிநிதியாயிருக்கி ன்முர். இவர் பன்னுலையைத் தமதுாராகவுடையவர். இவரெல்லாம் யாழ்ப்பாணமாதீன்ற புத்திராத்தின ங்கள். அதுகிற்க,

யாழ்ப்பாணச்சரித்திரம். 37
1845ம் வருஷம் பேதிநோய் யாழ்ப்பாணத்திற் பிர்வேசித்துப் பல்லாயிரஞ் சனங்களைக் கொள்ளை யிட்டது. 1855 ல் மீண்டும் அந்நோய் புகுந்து யா ழ்ப்பாணத்துச் சனங்களைப் பாதித்தொகையுண் டெனப் பட்சித்தது. அவ்வருடத்துப் பேதிபோல் உக்கிரநோய் முன்னெருகாலத்துங் தோன்றியதில்
லையென்பர்.
இந்நோய் ஊரை வாட்டியபோது, டைக் துரை வறிய சனங்களுக்கு மருந்து உணவு வஸ்திரங்க ளோடு பணமுங்கொடுத்து உதவிபுரிந்தும், ஊர்கள் தோறுஞ் சென்று அவ்வவ்வூர்கிலையை விசாரித்தும் வருவார். அவர் யாழ்ப்பாணத்தின்மீது கொண்ட பெரும்பற்றுக்காரணமாகத் தமக்குக் கிடைக்கக்கூ டியதாய்வந்த சாசலிகிதபதத்தையும் வேண்டாமெ னத் தள்ளினரென்ருல் அவருடைய பரோபகார வியல்பைக் கூறவும் வேண்டுமோ. தாம் இறப்பதும் யாழ்ப்பாணத்திலேயேயென்று தீர்மானித்துக்கொ ண்டிருந்தனர். அப்படியே அவர் 1887 ம் இ0 அக் டோபர்மீ 7வ. தமது கோப்பாய்ச் சுகக்கிருகத்தில் இறந்தனர். அவர் இறந்த செய்தி கேட்டு யாழ்ப் பாணத்திலே கண்ணீர்விடாதவர் யார் அவர் இற ந்து நெடுங்காலமாகியும் அவர் பெயரைக் கேட்ட வாய்க்கேட்டு இக்காலத்துச் சிறுவரும் பாராட்டுவ ரென்முல் அவர் படைத்த கீர்த்தி யாழ்ப்பாணமுள் ளவரையும் மங்காதன்முே. அவர் நோய்கொண்ட பொழுது அந்நோய்க்கு வைத்தியஞ்செய்தவர் யாழ் ப்பாணத்தில் ஆங்கிலண்வத்தியத்தைத் தமிழிற் கற் பித்தும் மொழிபெயர்த்தும் பரவச்செய்து வைத்தி யசித்தியிலும் இனியகுணத்திலும் பெரும்பெயர் படைத்த டக்டர் கிறீன் பாதிரியார். அவர் மானிப் பாயிலே அமெரிக்கன்மிஷன் வைத்தியசாலைக்கு அ திபராக நெடுங்காலமிருந்தவோருத்தமர்.
18
டைக் துாைஇ றந்தது.
Spißdir வைத்தி

Page 74
5 GUbang ந்துரை.
138 யாழ்ப்பாணச்சரித்திரம்.
டைக் துரைக்குப்பின்னர் றசல்துாைவந்து இர ண்டு வருடத்திலே கண்டிக்குச் செல்ல, துவைன்க் துரை 1869 ம் டுல் செப்டெம்பர் மீ" கவண்மேந்து ஏசண்டாக வந்தனர். இவரும் டைக் துரையுடைய வழிவழியே அதிகாரஞ்செய்துவந்தனர். அவரும் அ நேக முேட்டுக்களும் சந்தைக்கட்டடங்களும் அமை த்தனர். இலங்கையையும் இந்தியாவையும் இராமர் பெருங்கடலடைத்துப் பெருஞ் சேதுபந்தனமிட்டி ணைத்ததுபோலக் காரைதீவையும் யாழ்ப்பாணத் தையும் இவரும் சிறுகடல் தூர்த்துச் சிறிய சேதுப ந்தனமிட்டிணைத்தனர். இங்தன்மைக்கு யாழ்ப்பாண த்தார் துவைனந்துரையை எங்காளும் போற்றுங் கடப்பாடுடையர், நெடுங்காலம் இச்சிறுபரவைக்க டலைக் காலாற்முண்டிவந்த சனங்கள் துவைகனந்து ரை செய்த நன்மையால் இப்போது இரவிலும் பக லிலும் இராசவீதியிற் செல்வார்போற் செல்லுகின் றனர். இச்சிறியசேது ஏறக்குறைய ஒன்றரை மைல் நீளமுடையது. மாட்டுவண்டிகள் குதிரைவண்டிகள் “மோட்டக்கார்’ ரதங்கள் அடிக்கடி இதன்மேற் சென்று மீளுகின்றன. புதியவர் புகுந்தால் மீளுதற் கரிதாய்ச் சந்துப்பின்னலாய்க் குடிநெருங்கிக் கிட ந்த சோனகதெருவை இவர் சதுரங்கமனை போலக் குறுக்குநெடுக்குமாக அநேக தெருவீதிகளை வகுத்து விளக்கமாக்கினர். புலான்மணநீங்காது நாறிப் புழு த்தொழுகும் பாழ்ங்குடிசைகள் நிறைந்து கொள் ளைநோயைக் கூவியழைக்கு மியல்புடையதாயிருந்த காைபூரையும் குறுக்குமறுக்குமாக அநேக தெரு க்களைத் திறந்து திருத்தினர். கண்டிமார்க்கத்தைக் கற்படுத்தி ஆனையிறவுப்பாலத்தை முடித்து மாத்த க்கும் யாழ்ப்பாணத்துக்கும் தபால்வண்டிப்போ க்குவரவையுண்டாக்கினர். யாழ்ப்பாணத்திலே அ
நேக ஊர்களிலே தபாற்சாலைகளைத் திறந்தனர்.
இதற்கிடையில் யாழ்ப்பாண வாசிகள் அநேகர் ஆங்கிலக்கல்வியிலும் சட்டநாலுணர்ச்சியிலும் வல்

யாழ்ப்பாணச்சரித்திரம். 139
லுநராய் கியாயதுரந்தர பரீசைடியிற் சித்திபெற்று ஒழுக்கத்தாலுஞ் சிறந்து விளங்கினர். அவருள்ளே முதலில் விளங்கினவர் முத்துக்கிருஷ்ணர்.
சுதேசிகளுட் கல்வியொழுக்கங்களாற் சிறந்த வர்க்கு உயர்ந்த இராசரீகபதங்களும் கொடுக்கப்படு மென்று நமது மகா காருண்ணிய மகிமாவதி விக் டோரியா அரசியார் செய்த விஞ்ஞாபனப்படி கோ ப்பாய் அம்பலவாணத்துரையும், உடுப்பிட்டி கதிர் வேற்பிள்ளைத்துரையும் நீதிபதிகளாக்கப்பட்டனர்.
து வைனந்துரை காலத்தில் யாழ்ப்பாணத்துக் குப் புகைாதப்பாதை அமைத்துத் தரும்படி யாழ் ப்பாணவாசிகள், லிட்டன் சுவாமியார், அப்புக்கா த்து நாகலிங்கம், நீதிபதிதம்பு, கிறவுண் பிறக்டர் காசிப்பிள்ளை முதலியோர்கூடிய ஒருசபை மூலமாக அரசினரைக் கேட்டார்கள். யாழ்ப்பாணம் வியாபா ரவிருத்தியிற் குன்றிவிடுமென்றஞ்சித் துவைனந்து ரை அதற்கு மாமுயிருந்தனர். அரசினரும் அஃதவ சியமன்றென மறுத்தனர். மேற்கூறிய இருப்புப்பா தைச் சபையாரோ விடாது விண்ணப்பஞ்செய்து கொண்டிருந்தனர்.
1896 ல் துவைனந்துரைக்கு “5ைட்” பட்டஞ் சூட்டப்பட்டது. அதன்பின்னர் இவர் தமதுத்தி யோகத்தினின்றும் இளைப்பாறி யாழ்ப்பாணத்தி லேயே குடிகொண்டு தமது காலத்தைப் போக்கிவ ருகின்றனர். இவர் மற்றைய ஆங்கிலேயரைப்போலப் பொருளிட்டிக்கொண்டு தமது தேசஞ் செல்லாது தாமீட்டிய பொருளையெல்லாம் யாழ்ப்பாணத்துக் குப்பயன்படும்படிசெலவிட்டுவருகின்றனர். இவரும் டைக் துரையைப் போல யாழ்ப்பாணத்தாரிடத்து மிக்க அபிமானமுடையவர்.
இவருக்குப்பின்னர் பிஷர் துரை கவண்மேந்து ஏசண்டாயினர். அவர்காலத்திலே தேசாதிபதி றி
முத்துக்கி ఏ6rt.
சுதேசதீ
திபதிக ள்.
இருப்பு LT தைவி ண்ணப்
D
Fest துரை.

Page 75
புகைாத ப்பாதை திறபட்ட
ஐவேர்ல்,
பிஷர், லூயில், பிறைல்
560) f disci.
பிறீமன் துரை.
140 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ச்சுவே பிரபுவினது காருண்ணிய செவியில் யாழ்ப் பாணப் புகைாதப்பாதை விண்ணப்பம் ஏறுவதர்யி ற்று. அவர் தேசாதிபதியாய் வராதிருந்தால் யாழ்ப் பாணம் புகைாதப் பாதையைக் காண்பதரிது. ق۔y வர் சீமையில் இலங்கை மந்திரியோடு யாழ்ப்பாணப் புகைாதப்பாதை விஷயமாகப் பெரும்வாதப்போ ாாடி அவர் அநுமதிபெற்றனர். அதன்மேல் யாழ்ப் பாணப் புகைாதப்பாதை தொடங்கப்பட்டு 1902 ல் உள்ளூர்ப் புகைாதப்பாதையும்; 1905 ம் வருஷார ம்பத்தில் கொழும்புப் புகைரதப்பாதையும் திறக்கப் பட்டன. இந்தப் புகைாதப்பாதையைத் தமக்கா க்கிக்கொடுத்த நன்றிக்கு றிச்சுவே தேசாதிபதியின் பேரால் யாழ்ப்பாணத்தார் ஒரு மகாமண்டபம் நக ரமத்தியில் அமைத்திருக்கின்றர்கள். முன்னுளில் கரைமார்க்கமாக ஒரு மாசத்திற் சென்றடையுங் கொழும்பு இப்போது ஒருபகலில் அடையப்படுகி ன்றது.
பின்பு ஐவேர்ஸ்துரையும் அவருக்குப்பதிலாக பிஷர்துரையும் பின்பு ஐவேர்ஸ்துரையும் அவருக்கு ப்பின் லூயிஸ்துரையும் அவருக்குப்பின் பிறைஸ் துரையும் ஏசண்டாயினர். அவருக்குப்பின் கவ மேந்து ஏசண்டாய் வந்திருந்தவர் தருமது ரை என்று யாழ்ப்பாணமுழுதுங் கொண்டாடும் பி
ண்
மீமன்துரை. ஐவேர்ஸ்துரையும் லூயிஸ்துரையும் தங்கடமைகளைக் குறைவற நடாத்திவந்தனர். பிறை ஸ்துரை சனங்களோடு கலந்து அவர்களுடைய கு றைமுற்ைகளைக் கேட்டா ராயும் லளிதகுணமில்லாது தங்கடமையைமாத்திரம் தம்புத்திக் கெட்டியபடி பார்க்கும் கண்டிதகுணமுடையவராதலின் யாழப் பாணத்தாருக்கு உவப்புடையராய் விளங்கவில்லை. இவருக்குப்பின் வந்த பிறீமன்துரை சனங்களு
டைய குறைமுறைகளை நாடியறிந்து அவைகளைத்
தீர்க்குங் தயாளகுணம் வாய்ந்தவர். வறியவர்களைக் கண்டால் அவருக்குப் பொருளுதவும் பெருங்சரு

யாழ்ப்பாணச்சரித்திரம். 141
னேயுடையவர். யாழ்ப்பாணத்துப் புக்கையில்க்குத் திருவனந்தபு'ந்திலே கண்டி 1 க்கு ரூபா 90 ஆக விருக்த தீர்:ை 1910 ம் இ இந்திய ராச்ாங்கத் தாரால் ரூபா 900 ஆகவுயர்த்தப்பட்டது அது கேட்டவுடன் யாழ்ப்பாணம் “இனி கம்புகையிலை திருவனந்தபுரத்தில் விலையாகாதே! யாதுசெய்வோ ம் ஊனும் உடையுக் தந்தெம்மைக் காக்குஞ் சீவ ாத்தினம் திருவனந்தபுரஞ் செல்லும் புகையிலைய ன்ருே” என்றாற்றியழுவதாயிற்று. அது கேட்ட பிறீமன்துரை மணம்பதைத்து உத்தமதேசாதிபதி யாகிய (Sir H. E. McCallum) மக்கலம் அவர்களுக் கு ஊர்கிலையைத் தாமும் விண்ணப்பஞ்செய்து சன ங்களையும் விண்ணப்பஞ் செய்யுமாறு தூண்டினர். அதுகேட்ட தேசாதிபதி மகாமந்திரியாருக்கு யாழ் ப்பாணநிலையைக் குறித்து கிருபம் போக்கினர். யா ழ்ப்பாணவாசிகளும் தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தனர். தேசாதிபதி பின்னருந் தந்திமூலமாக மகாமந்திரியாரோடு வாதாடி அத்தீர்வையைப் ப ழைமைபோல ரூபா 90 ஆக்குவித்தனர். அதுகேட் யொழ்ப்பாணவாசிகள் ஆநந்தக்கூத்தாடிப் பிறீமன் துரையையும் தேசாதிபதியையும் நெஞ்சாரவாழ்த் தினர். போற்றினர். இன்னும் போற்றுவர். என்று ம்போற்றுவர். இத்தேசாதிபதியே தமிழர்க்குள்ள ஒரு பிரதிகிதியோடு இன்னுமொரு பிரதிநிதியையும் சிங்களர்க்கு மேலுமொருபிரதிநிதியையும், இலங் கைவாசிகளுக்குத் தெரிவுப்பிரதிநிதியாக ஒருவரை யும் வைத்தல்வேண்டுமென மகாமந்திரியாருக்கெழு தி அநுமதிபெற்றவர். அவ்வாறே இப்போது சட்ட நிரூபணசபையின் தமிழர் பிரதிநிதியாக இருவரும் இலங்கைவாசிகள் பிரதிகிதியாக ஒருவரும் இருக்கி ன்ருர்கள. தமிழர் பிரதிகிதியாகவிருப்பவர்கள் கெள ரவ அ.கனகசபையும் கெளரவ க.பாலசிங்கமுமாவர். பிந்தியவருடைய பதத்திலிருந்தவர் இறந்துபோன கெளரவ திசைவீரசிங்கம் என்பவர்.
புகையி డిసెt
தேசாதி பதிமக்க லம்,
Lor கள் தொ
use) க்கூட்டி til 5.

Page 76
J TLD si ps girlsar diffT).
பிறீமன் துாைடு யல்பு.
142 யாழ்ப்பாணச்சரித்திரம்.
இலங்கைவாசிகள் தெரிவுப்பிரதிநிதியாக வி
ற்றிருப்பவர், இலங்கை, இந்தியா, இங்கிலந்து,
அமெரிக்கா தேசங்களிலே தமது புகழ் கிறுவிய பிர சண்டவாக்கியும் சபாாஞ்சித சிங்கமும் தத்துவஞ்ா னியும் பிரபுசிகாமணியுமாகிய கெளரவ பொ. ராம நாதன். இப்புருஷோத்தமரை அறியாதார்யார் இ வர் யாழ்ப்பாணத்துப் பெண்மக்களுக்கு உயர்தரக் கல்வி பயிற்றும்பொருட்டு மருதனுர் மடத்தடியிலே இலக்ஷக்கணக்கான பெருகிதி செலவிட்டு அமைத்த கலாசாலைத் தருமத்துக்கு இணைகூறவும்போமோ! அத்துணையலங்கார விஸ்தாரமாளிகை நாமெங்கும் கண்டதில்லை. இத்துணைப் பரோபகார தாதாவைக் கண்டதுங் கேட்டதுமில்லை. இக்கைமாறு கருதாப் பரோபகாரம் யாழ்ப்பாண வாசிகளால் என்ருயினும் மறக்கற்பாலதன்று.
பிறீமன் துன்ா சனங்களிடத்திலே மிக்க அன் பும் இரக்கமுமுடையர். ந்ல்வழியிலே கடக்கும்படி சனங்களுக்குப் புத்தி கூறுவர். பயிர்த்தொழிலை வி ருத்திபண்ணும்படி தூண்டுவர். மழை வேண்டுமா ணுல் நல்லொழுக்கமும் தெய்வபத்தியுமுடையவர்க ளாய் நடவுங்கள். உங்கள் கோயில்களைச் செவ்வே நடத்திவாருங்கள். கோயில்களை அழியவிடாதிருங் கள் என்றிவ்வாறு புத்தி கூறுவர். யாவரோடும் மல ர்ந்த முகத்தோடுமே பேசுவர்.
“காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லனல்லனேன்
மீக்கூறுமன்னனிலம்.” என்னுங் குறளுக்கிலக்கியமாயினர் இவர் ஒருவரே. இவருக்குப்பின்னர் வானும் கம்பர்லண்டும் வெஸ்டி ங் என்பவரும், சிறிதுசிறிது காலம் எசண்டாகவிரு ந்தனர். இப்போது ஏசண்டாகவிருப்பவர் ஹார் ஷ்பருே (B. Horsburgh) என்பவர். இவர் தமிழிலும் பாண்டித்தியமுடையவர். சாந்தமும் நீதியுமுடைய வர். அதுகிற்க,

யாழ்ப்பாணச்சரித்திரம். 143
பூர்வகிலையையுங் தற்காலகிலையையும் ஆராய் வfம். ஆதியில் யாழ்ப்பாடியும் தமிழரசரும் கல் லொழுக்கமும் நற்குடிப்பிறப்புமுடையரையே தெரி ந்தெடுத்து வந்து யாழ்ப்பாணத்திற் குடியேற்றி ஞர்கள். பெருங்குடிகளெல்லாம் தொண்டைநாட் டினின்றும் வந்தவர்கள். தொண்டைநாடு சான்றே ருடைத்து என்பது ஒளவைவாக்கு. தொண்டைநா ட்டுக்குரியதாகிய அப்பெருங்குணம் அங்கிய அரசும் அங்கிய சமயமும் வந்து தாக்கித் தேய்த்தும் முற். முய்த் தேய்ந்துபோகாது இன்னும் விளக்கமாயிரு ப்பது பிரத்தியக்ஷம். தாம் வறியராயிருப்பினும் தம் மிடத்துவரும் அகதி பரதேசிகளுக்கு இயன்றதை க்கொடுத்துண்ணும் குணம் யாழ்ப்பாணத்தாருக்கு இயல்பாயிருப்பது அவர் தம் பழைய பெருங்குடி யியல்பன்முே. ஆதியில் வந்து குடியேறிய பெருங் குடிகளெல்லாம் கல்வியும் செல்வமும் ஈகையும் ஆ ண்மையும் மெய்யுரையுமுடையர்கள். அவ்வடிப்ப ட்ட இயல்புபற்றியே யாழ்ப்பாணத்தார் விவேக மும் கல்விவிருப்பமுமுடையராய் இன்றும் விளங்கு கின்ருர்கள். ஆண்மைக்குணம் இன்னுமிருக்கின்றது. மெய்யுரையும் முழுதுங் குன்றவில்லை. பறங்கிக்கார ரும் ஒல்லாந்தரும் அரசுசெய்த இருநூறுவருஷ காலமும் தமது சமயத்திற் பிரவேசிக்கும்படி பெ ருந்துன்பங்கள் செய்து குடிகளை வருத்தினர். அத ற்காற்றது அச்சமயத்தைக் கைக்கொண்டார்போ லப் புறத்தே நடித்தும் அகத்தே சைவசமயிகளா யேயிருந்தார்கள். பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் தமது சமயத்தின்மேற்கொண்ட போபிமானம்பற்றி மற்றைச்சசமய ஆலயங்களையும் சமயநூல்களையும் கல்விநூல்களையும் எரியூட்டியழித்தார்கள். அழித் தும் நம்முன்னுேர்கள் சைவத்திலும் சமயநூல்களி லும் கல்விநூல்களிலும் வைத்த அசையாப் போன் பினலே அவற்றை இரகசியத்திற் பாதுகாத்து வந்த
னர். அங்ங்ணம் அவர்கள் பாதுகாத்து வையாதிரு
யாழ்ப் பாணத் தார்இய 6^LH.

Page 77
கல்வி தெய்வ பத்தி.
தொழில்
அரசியல்
144 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ப்பாேல் யாழ்ப்பாணம் சைவமணமும் தமிழ்க்கல்
வியும் சிறிதுமில்லாத நாடாயிருக்கும்.
தமிழரசர்காலத்திலே தமிழ்ச்சங்கமும் அச்சங் கத்தொடர்புடையனவாய் ஊர்கள்தோறும் வித்தி யாசாலைகளுமிருந்தன. சைவாலயங்களுக்கு கிலங்க ளும் வேண்டும் பொருள்களுமிருந்தன. உரியகாலங் களிலே கித்தியநைமித்திகங்தள் நடந்து வந்தன. கு டிகளிடத்திலே ஆறிலொருகடமை கொள்ளப்பட்டு வந்தது. கெல்விளைவு முதலிய பயிர்த்தொழில்களு க்கு வேண்டிய நீர்நிலைகள் பாய்கால் வடிகால்கள் முதலியன அரசரால் அமைத்தும் காலந்தோறும் திருத்தியுங் கொடுக்கப்பட்டுவந்தன. அக்காலத்தி லே மன்னர் மாதோட்டம் முதலிய பகுதிகளும் யா ழ்ப்பாணவாகக் குட்பட்டிருந்தமையால் யாழ்ப்பா ணத்துக்கு நெல்லினுற் குறைவில்லாதிருந்தது. மா தோட்டத்தில் இரண்டாயிரஞ் சாலியர் நெய்தன ரென்முல் வஸ்திரத்தொழில் எவ்வளவு என்பது சொல்லவும் வேண்டுமோ.
ஊரிலே கள்வர்பயமென்பது அங்நாளிலே சிறி துமில்லை. ஊருக்கு ஒவ்வொரு தலையாரியாக ஊர்க ள்தோறும் தலையாரிமாரை அக்காலத்தில் வைத்தி ருந்தார்கள். ஊரிலே களவுபோகுமிடத்து அத்த லையாரிமாரே உத்தரவாதிகளாயுள்ளார். ஆதலால் அக்காலத்திலே கள்வர் பயமில்லை. அதுவுமன்றிக் களவுசெய்வாருக்குத் தேசத்தை விட்டகற்றல் கை வாங்குதல்முதலிய கொடிய தண்டங்களுமிருந்தன. அவ்வச்சாதியாரும் தத்தம் தொழிலையும் வரிசைக ளையும் தவருமற் கைக்கொண்டொழுகி வந்தார்கள். ஆகவே ஊரிலேசமாதானமும் ஒற்றுமையுமிருந்தது. அவ்வச்சாதியாருக்கும் அவ்வவ்வூரிலே ஒவ்வொரு நாட்டாண்மையுடையருமிருந்து தத்தம் சாதியாள
ருக்குள்ளே வரும் வேறுபாடுகளைத் தீர்த்தடக்கி

யாழ்ப்பாணச்சரித்திரம். 145
வந்தார்கள். அவரால் தீராத வழக்குக்களை ஊர் தோறுமுள்ள பஞ்சாயத்தார் முன்னிலையிலே தீர் த்துக்கொள்வர். அவர்க்குங் தீர்த்தற்கரிதாய் வரும் வ்ழக்குக்களே இராசசபைக்கு விடுவர். இக்காலம் போல அக்காலத்திலே பிறக்டர் அட்வொக்கேற் என்னு கியாயவாதிகளில்லை. பொருட்செலவுமில்லை. ஒருவழக்குக்காக.நெடுங்காலங் தந்தொழிலையும் கை ப்பொருளையுஞ் செலவிட்டு அலையவேண்டியதுமி (,
அந்தக்காலத்திலே வண்டி குதிரைகள் ஊர்க ளில் கிடையா. செல்வரும் அதிகாரிகளும் பல்லக் கிற்போய் வருவர். பாரம் ஏற்றிப்போதற்கு மாத் திரம் வண்டிகள் ஊர்கள் தோறு மிருந்தன. அக்கா லத்திலே குதிரைமீதும் யானைமீதும் ஏறிச் செல் பவர் பிரபுக்களும் அரசரும் படைவீரருமேயாவர். பண்டங்களைக்கொண்டு செல்வதற்குப் பொதிமாடு களுமிருந்தன. வண்ணுர் வஸ்திரப்பொதிகளைச் சும ந்து செல்லுதற்குக் கழுதைகளும் வைத்திருந்தார்
Salt,
தமிழரசர்காலத்திலேயிருந்த நாகரிகமும் வே று, இப்போதுள்ள நாகரிகமும்வேறு. அக்காலத்தி லே குடிகளுக்கு வேண்டிய போக்கியப்பொருள்கள் மிகச்சிலவே. அன்னவஸ்திரம் வீடு மாடு பணம் வி ளைகிலம் குரு கோயில் இவ்வளவுமிருந்தாற்போதும். இப்போதுள்ளார்க்கு அலங்காரமாளிகையும், வர்ண ப்பட்டாடைகளும், தூங்குமஞ்சங்களும், சித்திரால ங்காாாதங்களும், கண்ணுடிவிளக்குக்களும், பளிக்கு ப்பாத்திரங்களும், காலுக்கு விநோதமான பாதரட் சைகளும், கைக்கு விலையுயர்ந்த கோலும் குடையும், உடம்புக்குச் சிறந்த சட்டைகளும், அதற்குப் பூட் டப் பொன்னினலே தறிகளும், கடிகாரச் சங்கிலிக ளும், புகைச்சுருட்டுக்கும் பொடிக்கும் வெள்ளிப்பா ணிகளுமாக இன்னோன்ன எண்ணிறந்த போக்கிப்ய
19
வாகனங் கள்.
புதியதா கரிகம்.

Page 78
6) pu நாகரிகம்
பூர்வ வ ழக்கம்
146 யாழ்ப்பாணச்சரித்திரம்.
பொருள்கள் வேண்டும். அக்காலத்துள்ளார் பசியை த்தணித்து நல்ல புஷ்டியைத் தரும் சாதாரணவுண வுகளையே நாடிச் சிறுவர் முப்போதும் ஏனையோர் இருபோதுமாக உண்டுவந்தார்கள். இடையிலே அக்காலத்தில் உண்ணும் வழக்கமும் உண்ண நேர மும் காண்பதரிது. பதினறு வயசுக்கு மேற்பட் டோரெல்லாங் தந்தொழில்மேற்கென்று போசன காலத்துக்கே மீள்வர். விவாக்ம் பெருமபாலும் இ ருபத்துநான்கு வயசளவிலேயுே செய்வர். பெண்க ளும் பெரும்பாலும் பதினறளவிலேயேசெய்வர். சீத னத்துக்கு அக்காலத்தில் மல்லாடுவதில்லை. தத்தம் இனத்தைவிட்டுப் பிரிந்துபோவதில்லை. பெரும்பா லும் சுகதேகிகளாய்ச் சந்ததியுடைய ராய் ஆண்மை சத்தியம் நல்லொழுக்கமுடையராய் வாழ்ந்தார்கள். தானதருமமும் ஈசுரபக்தியுமுடையராயிருந்தார்கள். அக்காலத்திலே வியபிசாரம் மதுபானம் சூதாடல் குடும்பத்துக்குத் தீராத வசைத்தொழிலாம். விரதங் கள் சிவாலயவழிபாடு புண்ணியசரித்திரங்கேட்டல் குருவிசுவாசம் இவையெல்லாம் கிரமம்ாகக் கைக் கொள்ளப்பட்டுவந்தன. இவற்றல் நன்மழை பொ ழிந்தது. ஊரிலே நோய்கள் குறைவாயிருந்தன.
அக்காலத்திலே நம்மவர்க்கு மேலடுக்குமாளி கைகள் இல்லாதிருக்கவில்லை. உங்ாத கோபுரங்களி ல்லாதிருக்கவில்லை. சிறந்த வீதிகளில்லாதிருக்கவில் லை. சிறந்த நகரங்களில்லாதிருக்கவில்லை. நகரத்துவி திகள் சுத்தியில்லாதிருக்கவில்லை. விதிகளிலே காவ லில்லாதிருக்கவில்லை. (Obeyesekere's History of Ceylon.)
அக்காலத்திலே பிள்ளைக்குத் தாயே மூன்றுவ ருஷத்துக்குக் குறையாமற் பாலூட்டி வருவாள். அ தனுல் பிள்ளை நோய்கொள்ளாது சரீர காந்தியும் பல முமுடையதாய் வளரும். ஐந்தாம்வயசிற் பிள்ளை யைப் பள்ளிக்கூடத்தில் வைப்பர். பதினறுவயசுவ

யாழ்ப்பாணச்சரித்திரம். 147
ரையும் கல்வி கற்பிப்பர். அதன்மேலே தத்தமக்கு ரிய தொழிலை மேற்கொள்ளுவிப்பர். இருபத்துநான் களவில் விவாகஞ் செய்விப்பர். அதுமுதலாக அவன் இல்லறத்தை நடத்துவன். தாய் தந்தையரைப் பய பக்தியோடு பாதுகாத்து வருவன். அவர்க்குரிய கடன்களையெல்லாம் தப்பாது செய்வன். அக்காலத் தார் நூறுவபசுக்குமேல் வாழ்ந்தார்கள் எனப் பிளி of (Pliny) in Daui. (Obeyesekere's History of
Ceylon, page 53) இக்காலம் நம்மவர்களுள்ளே மே
லைத்தேச நாகரிம்பெற்றவர்கள் தமது பிள்ளைகளுக்கு க்கடவுள் கொடுத்த பாலையுங் கொடாது சீமைப்பா லைக் கொடுத்து வளர்ப்பதோடு வருஷத்துக்கொரு பிள்ளை யீன்று தாமும் சரீரபலமற்று அப்பிள்ளைகளை யுங் துர்ப்பலப்படுத்தி வருகிருரர்கள். இப்பிள்ளைக ளால் தேசமுய்வதெப்படி! இப்பிள்ளைகள் தாய்தந் தையரிடத்திலே பற்றுடையராயிருப்ப தெப்படி? தாயினது பாலை யருந்தாத பிள்ளைக்குத் தாயினிடத் திலே பற்றுவருவதெப்படி?
சரீரம் பலத்து ஆண்மையுடையராவதெப்படி? சங்கிலி பறங்கிகளோடு யுத்தஞ்செய்தகாலத்திலிரு ந்த போர்வீரரெல்லாம் பெரும்பாலும் யாழ்ப்பாண த்து வீரரன்ருே. அவர்கள் போராண்மையில் மிக்க வல்லவர்களெனப் பறங்கிக்காரரே புகழ்ந்திருக்கின் முர்கள். பறங்கிகள் வெற்றி அவர் வீரத்திறலால் பெற்றதொன்றன்று. காக்கை வன்னியன் குதாற்பெ ற்றதன்முே. இலங்கைமுழுதையும் வெற்றிகொண்டு சிங்களவரசரிடம் திறைகொண்ட யாழ்ப்பாணத்தர சனுக்கு வெற்றி கொடுத்தவர் யாழ்ப்பாணத்துப் போர்வீரரன்ருே. அவ்வீரர்வழியில் வந்த மக்களெ ல்லாம ஆண்மையும் சரீர காந்தியுமில்லாத துர்ப்பல ஜாதியாயிருப்பதற்குக் காரணம் பறங்கிகளதும் ஒல் லாந்தர துங் கொடுங்கோலின் கீழ்க் கிடந்து நெடுங் காலமரைபட்டுச் சுவாதீனமிழந்து மெலிந்தமையே
! If I Dð,
ularpú' பாணத் தார்வீ ாம்.
தற்கால துர்ப்ப லம்.

Page 79
148 யாழ்ப்பாணச்சரித்திரம்.
பறங்கிக்காாரும் ஒல்லாக்தரும் வந்து யாழ்ப் பாணத்தைக் கைக்கொண்டு கொடிய வரிகளாலும், சிறைத்தண்டத்தாலும், கொலையாலும், அடியாலும், கொள்ளையாலும் இருநூறுவருஷகாலமாக வாட்டி யதால், குடிகளெல்லாம் உள்ளத்தாலும் ஒழுக்கத் தாலும் உடம்பாலுந் தளர்த்து, மெலிந்து, ஆங்கிலவ ரசுவந்தபின்னர்த் தழைப்பாராயின்ர். தழைத்தும் தமது பழைய நாகரிகத்தைத் தொடரவறியாது ஒல் லாந்தர் காட்டிய வழிவழியே சென்று, மேலைத்தேச நாகரிகத்திற் கொள்ளவேண்டியதைமாத்திரங் கொ ள்ளாது, முற்றுங் கொள்ளத் தொடங்கித் தமது பூர்வகன்னிலையைக் கைவிடுகின்றனர். பூர்வான்னிலை யை நோக்கித் திரும்புமிடத்தன்றி கம்மவர் உலகில் ஒரு சனமாக மதிக்கப்படமாட்டார். உணவும்உடை யும் மற்றைய போக்கியப்பொருள்களும் நமது தே உண்மை சத்திலேயே பூர்வம் மலிந்து கிடந்தன. அக்காலத் நாகரிகம் தில் நம்மரசும் நம்தேசமுமாயிருந்தன. இக்காலத் தில் உணவுக்கும் உடைக்கும் மற்றைய போக்கியப் பொருளுக்கும் அங்கியுதேசத்தையே நோக்கியிருக் கின்முேம், அவையெல்லாம் நமது தேசத்தில் முன் போல விருத்தியாகுங்காலமே நாமுண்மையான நா கரிகமுடையராவோம். அதுகாறும் நாமடைந்திருக் கும் நாகரிகம் மெய்ம்மையான நாகரிகமாகாது. போ லிநாகரிகமேயாம்.
ஒல்லாந்தவரசு பறங்கியரசுகளில் நமக்குக் கன விலும் சுயாதீனங்கிடைக்கவில்லை. ஆங்கிலவாசில் நம க்குக்கிடைத்திருக்கும் சுயாதீனம் எத்துணேப்பெரி
dituris து. அதுபோல ஒருகாலத்தும் வாய்க்காது. இவ்வா arůb. சுபோலும் தருமராச்சியம் உலகத்தில் இல்லை. நாம் நன்னிலையை அடையவேண்டுமென்பது கம்மையா ளும் மகாகாருண்ணிய மகிமாவது ஐந்தாம் ஜ்ார்ச்சு வேந்தர் விருப்பு. காம் பயிர்த்தொழில் கைத்தொ ழில்களை நன்முக அபிவிருத்திபண்ணுதல் வேண்டும்.

யாழ்ப்பாணச்சரித்திரம். 149
அதுசெய்யாதவிடத்து நமது தேசம் செல்வம்பொ ருந்திய தேசமாய் விளங்காது. கல்விக்கழகங்களை நம்பொருட்டு அரசினர் தாபித்தும், தாபிப்போருக் குப் பொருளுதவிபுரிந்தும், கல்வியிலே மிக்க சித்தி யுற்றுச் சீமைக்குச் சென்று கற்க விரும்பும் மாணுக் கருக்குப் பொருளுபகாாஞ்செய்தும், அவ்வாறுசெ ன்று கற்றுச் சித்தியுற்ருர்க்கு நல்லுத்தியோகங்கள் கொடுத்தும், உயர்தா இராசரீக சேவைக்குக் கற்று வல்லு5 ய் வந்தவருக்கு ஆங்கிலேயர் பெறுதற்குரி யபதங்களைப் பேதம்பாராது கொடுத்தும் வருகின் முர்கள். உயர்தர இராசரீகபதம் பெற்றுச் சட்டநிரூ பணசபையிலும் சட்டகிறைவேற்றச்சபையிலும் அ ங்கத்தவராகிவிளங்கிய தமிழ்ப்பெருந்தகை கெளரவ Sir பொ. அருணுசலம். இவரே தமிழருள்ளே இப் பெரும்பதம் பெற்றவர். இவர் ஆங்கிலக்கல்வியி லும் சீமையில் (M. A.) எம். ஏ. பட்டம் பெற்றவர்.
நம்மவர்க்குப் பரோபகாரகுணம் பண்டுதொட் டது. தமிழரசர்காலத்திலே அவ்வவ்வூரிலேயுள்ள பிரபுக்களால் ஆங்காங்கும் கோயில்களும் குளங்க ளும் கேணிகளும் தருமமடங்களும் அமைக்கப்பட் டன. சிதம்பரம் இராமேச்சரம் முதலிய ஸ்தலங்க ளுக்கு கிலங்கள் விட்டிருக்கின்றனர். இந்தியாவி லும் அநேக சத்திரங்கள் கட்டினர். மனப்புலிமுத லியார் சத்திரமெனக் கோடிக்கரையிலுள்ளது யாழ் ப்பாணத்தாரால் அமைக்கப்பட்டது. பூர்வம் காசி பரியந்தம் இடையிடையே பல சத்திரங்கள் யாழ் ப்பாணத்தாராற் கட்டப்பட்டன. அவற்றுக்கு மூல தனங்களும் வைக்கப்பட்டன. அவற்றை அங்கு வைக்கப்பட்ட தருமகர்த்தர்களினது சந்ததியார் பரிபாலியாது அழியவிட்டனர். கயாவிலே நாரா யண கட்டமென்பது யாழ்ப்பாணத்து வீரநாராயண முதலியாராற் கட்டப்பட்டதென்பர். இத்தகைய பரோபகாரகுணம் இருநூறு வருஷம் பறங்கிக்கார
ஆங்கில வாசின் AscravoLD.
LGTLI காரம்.

Page 80
சத்திரங் கள்.
150 யாழ்ப்பாணச்சரித்திரம்.
ருக்கும் ஒல்லாந்தருக்கும் கீழேகிடந்து, அசையுண் டும் அடிய்ற்றுப்போகாதிருந்து ஆங்கிலேயவரசின் றண்ணியகிழலிலே தழைத்து விளங்குகின்றது. கீரி ரிமலையில் இப்போது அநேக சத்திரங்கள் பலரா அலும் கட்டப்ப்ட்டிருக்கின்றன. அவற்றுள் விசேட மானது கதிர்வேற்சமுப்பர் சத்திரழ். அடுத்தபடியி லுள்ளது சித்தங்கேணி வைத்தியலிங்கம் சத்திரம். அடுத்தது தொல்புரம் கிருஷ்ணபிள்ளை சத்திரம். இவர்கள் பரோபகாரம் மிகவும் பாராட்டப்படத் தக்கது.
யாழ்ப்பாணத்துச் சைவமாணக்கர் கத்தோலிக் ககல்லூரியிலும் "சுண்டிக்குழிக்கல்லூரியிலும் வட்டு க்கோட்டைக் கல்லூரியிலும் வேம்படிக்கல்லூரியி லூம்சென்று தஞ்சமயசுவாதீனமின்றிக் கற்றுவந்த னர். கத்தோலிக்க கல்லூரிமாத்திரம் சைவமாணக்க ரைச்சமயவிஷயத்தில் மனமடிவின்றி நடாத்திவந்த து. சைவசமயிகளுடையபுத்திரருக்குஒராங்கிலக்கல் லூரியில்லாதிருப்பது பெருங்குறையெனக் கண்டு ஆ றுமுகநாவலரால் ஒராங்கிலவித்தியாசாலை தாபிக்கப் பட்டது. அவ்வித்தியாசாலைக்குப் போதிய மூலதன ஞ்சேராமையால் அது வீழ்வதாயிற்று. சிலகாலத் தின்பின்னர் அட்வகேட் நாகலிங்கம் என்னும் பெரு ந்தகையால் இந்துக்கல்லூரி தாபிக்கப்பட்டது. அவ ருக்குப்பின்னர் அதனை இப்போதுள்ள கன்னில்ைக் குக் கொணர்ந்தவர் பிரக்டர் வி. காசிப்பிள்ளையென் லும் பரோபகார சீலர். இக்கல்லூரியை மாத்திரம ன்று இன்னும் பல வித்தியாசாலைகளைத் தமது கை ப்பொருள்கொண்டு தாபித்தும் நடத்தியும் வருகி ன்ருர், இவருடைய வித்தியாபிமானமும் உண்மைப் பரோபகார விருப்பும் அறியாதார் யார்! இவரே சித் திவிநாயகராலயத்தைப் பெருந்தொகைப் பொருள் செலவிட்டுக் கற்றிருப்பணியாகக் கட்டுவிப்பவர்.

யாழ்ப்பாணச்சரித்திரம். 151
இந்துக்கல்லூரி ஸ்தாபனமானபின்னர் ஆங்கா ங்குஞ் சைவாங்கிலபாடசாலைகள்தோன்றி நடைபெ றுகின்றன. மானிப்பாய் இந்துக்கல்லூரி சீமைத்தர வர் வே. சங்கரப்பிள்ளை என்னும் புண்ணியசீலரால் பெரும்பாலும் தமது கைப்பொருள் கொண்டு தாபி க்கப்பட்டது. அதுவுஞ் செவ்வேகடந்து வருகின்றது
தமிழரசர்காலத்திலே வேளாளருக்கு ராயன் அதிராயன முதலி என்னும் வரிசைப்பட்டப்பெயர் குட்டப்பட்டன. பறங்கிக்காரர்காலத்திலே ராயன் அதிராயன் என்னும் பட்டங்களைக் கொடுக்கின் ரா சாவென்றெண்ணப்படுவார்களெனத் தள்ளித் தங் கள் பாஷைக்குரிய தொன் என்பதை முதலியென்ப தோடு சேர்த்துச் சிலருக்குச் சூட்டினர்கள். பின் னர் அப்பட்டங்களை விலைக்குப் பலசாதிகளுக்கும் விற்று அதனுற் பொருளிட்டினர்கள். ஒல்லாந்தரும் அவ்வாறே பட்டங்களை விற்றுப் பொருளீட்டினர்.
இப்போது நம் ஆங்கிலவரசினர் கல்வியாலும் பரோபகாரத்தினுலும் இராசவிசுவாசத்தினலும் கல் லொழுக்கத்தினலும் சிறந்தவர்களுக்கு நைட்பட் டம், சி. எம். ஜி. பட்டம், அதிகாரபட்டம், இராச வாயில் முதலியார்ப்பட்டம், முதலியார்ப்பட்டம், சமாதானநீதிபதிபட்டமுதலியன சூட்டிவருகின்றர் கள். இப்பட்டங்கள் பறங்கிக்காரரும் ஒல்லாந்த ரும் விற்ற விலைப்பட்டங்கள் போன்றனவல்ல. பாத் திரமறிந்தளிக்கும் பட்டங்களாம். நைட்பட்டம் அதிராயன் என்னும் பட்டத்துக்குச் சமமானது. சி. எம். ஜி. பட்டம் ராயன் என்பதற்கு நிகரானது. நம்மவருள்ளே முதன்முதல் நைட்பட்டம் பெற்ற
வர் (சேர்) குமாரசுவாமி. சி. எம். ஜி. பட்டம் பெற்ற
வர் கெளரவ பொ. DJ TuD(5 frogait. அதிகாரபட்டம் பெ ற்றவர் யாழ்ப்பாணம் தலைமைமணியம்தம்பாபிள்ளை. முதலியார்ப்பட்டம் பெற்றிருப்பவர் கச்சேரிச் சரு
பட்டங்
6.

Page 81
152 யாழ்ப்பாணச்சரித்திரம்,
ப்பு * உயரப்புலம் சின்னிையாமுதலியார், இலங்கை நாயகமுதலியார், சபாரத்தினமுதலியார் முதலி யோர். முதலியார்ப்பட்டத்தோடு சமாதான நீதிப திப்பட்டம்பெற்றவர் நுவர எலியாவிற் பிரபல்லியார் யிருக்கும்நாகநாதமுதலியார், T.C. சங்கரப்பிள்ளை, M. தம்பு, C. ஈமசிவாயம் முதலியோர். இந்தியாவிற் பஞ்சம் புகுந்தபோது அதன் நிவிர்த்திக்காகப் பெ ரும்பொருள் சேகரித்தனுப்பிய பரோபகார சீலரா கிய் இந்நாகநாதமுதலியார், மேல்நாட்டிற் பிரபல முற்றிருந்த சரவணமுத்துமுதலியார் சண்முகநாத முதலியார் வழித்தோன்றல். சமாதான நீதிபதியோ டு கெளரவ தண்டாதிகாரபட்டமும் பெற்றுவிளங் கிய கோப்பாய் மயில்வாகனத்துக்கு இவர் மருகர். இராசவாயில் முதலியார்ப்பட்டம் பெற்றிருப்பவர் பாம்பரைப் பண்டிதராகிய சிற். கைலாசபிள்ளை. இ வர் மனப்புலிமுதலியார் வழித்தோன்றல்,
யாழ்ப்பாணத்தார் எத்தேசத்திற் சென்றிருக் தாலும் அங்கங்கெல்லாம் பிரபலமுற்று விளங்கும் இயல்புடையர். மலையாளத்திலே மகாநீதிபதியாயி ருந்த செல்லப்பாபிள்ளை யாழ்ப்பாணமாதீன்ற புத் திராத்தினங்களுள் ஒருவர் என்பதும் வண்ணுர்ப ண்ணையிற் பிரசித்தியுற்ற குடியிலுள்ளவர் என்ப தும் யாவருமறிவர். அரியநாயகம்பிள்ளை, சவுந்தர நாயகம்பிள்ளை, சரவணமுத்துப்பிள்ளை, ராய்பக தூர் முருகேசபிள்ளை, ராய்பகதூர் வில்லியம்ஸ்பிள், ளை, . ஹென்ஸ்மன் இவர்கள் இந்தியாவிற் படை
* இணையிலியில் ஆதியிற் குடிகொண்ட வேளாளர் சங் ததியார் தமது விளைநிலத்துக்குச் சமீபமாக வசிக்குநோக்க மாகச் சென்றிருந்த கிராமம் உயர்வுப்புலமெனப்பட்டு இப் போது உயரப்புலமென வழங்குகின்றது. ஆனைக்கோட்டைக் குப் பூர்வநாமம் இதுவே. மானிப்பாய்க்குப் பூர்வநாமம் பெரி யபுலம், சுன்னகத்துக்குப் பூர்வநாமம் மயிலணி. சண்டிருப் பாய்க்குக் கல்வளை.

யாழ்ப்பாணச்சரித்திரம். 153
த்த கீர்த்தியை அறியாதார் யார். இவர்களும் யாழ் ப்பாணத்து இரத்தினங்களன்றே. சீமையிலிருந்து கொண்டு இலங்கை இந்தியாவின் பழைய சித்திர விநோதக் கைத்தொழிலை அபிவிருத்திடண்ணும் பொருட்டு அநேக விஷயங்களும், இந்தியாவிஷய மாக அநேக வாதங்சளும் எழுதிவரும் ஆனந்த கு மாரசுவாமி யாழ்ப்பாணத் தொடர்புடையசன்ருே. இன்னும் சிங்கப்பூர்ப்பகுதி முதலிய தூரதேசங்களி லே சென்றிருந்து யாழ்ப்பாணமாதை விளக்கும் புத் திராத்தினங்கள் எத்தனையோ பலர்.
இவ்வாருகக் காடுகொண்டு நாடுவாரற்று நெடு ங்காலங்கிடந்த இந்நாட்டை, ஒரந்தகன்தான்செய்த நன்முயற்சியாற் பரிசாகப்பெற்றுக் குடியேற்றித் தி ருத்திச் சிறந்தநாடாக்கி, அதிலே நல்லரணையுடைய நகரமைத்து இராசதானியாக்கி, வேற்றரசரும் வண ங்கப் பன்னூறுவருஷம் அரசுகிலையிட்டுத் தன்பெய ரை உலகுள்ளவரைக்கும் அழியாது வைத்ததும், அங்ங்ணம் வாய்த்த பெருமையால் தருக்குற்ற குடி களும் அரசும் தமது அறநெறிகடந்து தாமசகுண த்தை மேற்கொண்ட கன்மத்தால் வேற்றரசர் கைப் பட்டுத் துன்புற்று வருந்தியதும், பழையநல்வினை விசேடத்தால் ஆங்கிலவாசு வந்து நமக்கு அபயங் தந்து செங்கோல் நடாத்துவதும், அதனல் நாம் ப ழைய சுவாதீனம் பெற்றுத் தழைத்துவருவதும் இச்சரித்திரத்தை வாசிப்போர் ஊன்றிச் சிந்திக்கத் தககன.
யாழ்ப்பாணமாதா மேன்மேலும் சிறப்புற்று நீ ழிேவாழி. ஆங்கிலவரசும் மகாகாருண்ணிய மகிமா வது ஐந்தாம் ஜார்ச்சு வேந்தரும் நீழிேவாழி.
Na 27NN 20

Page 82
154
யாழ்ப்பாணத்தின் பூமியமைப்பு.
Jaffna.
யாழ்ப்பாணம்.
un6xar añ).—Sand.
& L-6)-Sea.
56o Ti56ò -Coral.
6, 6r 600T di 56-Limestone.
Liaolpus, air ará, 3,6-Old Limestone.
செம்பூரான்கல்-Laterite.
-øy (6 ig5ÜLu Ti -- Gneiss.
Fu iš 35 ổd-Granite.
ச்ே கீரிமலை கடல்மட்டத்தின்மேல் 40 அடி உயரம், யாழ்ப்பாணம் பொதுவாகக் கடல்மட்டத்தின்மேல் 9 அடி உயரம்.

10. 11.
13.
14.
15. 16. 7.
18. 19. 20. 2. 22. 23. 24. 25.
27.
28,
55
தொண்டைமண்டலத்திலிருந்துவந்த பெருங்குடிகள்.
GLIEui.
பாண்டிமழவன் சம்பகமழவன் நரசிங்கதேவன் சம்பகமாப்பர்ணன் சந்திரசேகரமாப்பாணன் கனகராயன் பேராயிரமுடையான் நீலகண்டன் வில்லவன் பதுமாாயன் வேமன்னன் தேவமல்லன் பூதராயன் கனகமழவன்
கூபகன் புண்ணியபூபாலன் தேவராயன் மண்ணுடுகொண்டமுதலி தனிநாயகமுதலி பல்லவன் காலிங்கராயன் மணிமார்பன் கோபாலராயன் இரகுநாதமாப்பாணன் நாராயணதேவன் அத்திமாப்பாணன் மணவாளமுதலி வீரநாராயணன்
pati.
பொன்பற்றியூர்
a காவிரியூர் வாலிநகர்
கோவலூர் கச்சூர்
警》
y கீழ்க்கோட்டம் களங்தை இெரி கூவம்
9ر புல்லூர் காஞ்சி செய்யூர் காஞ்சி
குடிகொண்டவிடம்.
திருநெல்வேலி.
மயிலிட்டி. தெல்லிப்பழை.
t
s இணையிலி (இணுவில்). பச்சிலைப்பள்ளி.
sp
s
9. கல்வளை
மயிலனி. புலோலி, தொல்புரம்,
99 க்ோயில்ாக்கண்டி, இருபாலை, நெடுந்தீவு. வெளியூர். கட்டோடை, புத்தார்.
&55F4Fflur. பெரியபுலம், காரைதீவு.
u 6)Te'. வெளிநாடு. LDITassé.

Page 83
26.
30. 31.
32. 33. 34.
35.
37.
GLuf.
சேதிராயன் செயராசசேகரமுதலி விட்டதேவன் உலகுகாவலன் புண்ணியபூபன் விகாயகபூபன் வீரவாேந்திரன் இராசவரதுங்கன் கனகசூரியன்
இராசகுரியன்
56
குடிகொண்டவிடம்.
மாதகல் மாவிட்டபுரம்.
9.
99
y நல்லூர். மாதோட்டம். மல்லாகம்,
s
 

சாதி. வேளாளர் பரதேசிகள் மடைப்பள்ளியார் மலையகத்தார் செட்டிகள் பிராமணர் சோனகர் தனக்காரர் குறவர் பரமபா 3ausri பள்ளிவிலி செம்படவர் கடையர் rauffעJ_ו ஒடாவி (சிங்கள) சானருரா கன்ஞர் தட்டார் யானைக்காரச்சான்முர் கயிற்றுச்சான்ருர் கரையார் முக்கியர் திமிலர்
157
1790 இல் ல் தலைவரிக்காக எடுத்த 16 வயசு முதல் 70 வயசுக்குட்பட்ட ஆடவர் தொகை,
தொகை, 1570 1949 5528 1240 1667 639 492 388 87 8 660 96 4. 35
34
37 63 337 70 36 3009 59 576
கோட்டைவாயில்நளவர் 265
கோட்டைவாயிற்பள்ளர்
மறவர் Litaoat if
வேட்டைக்காரர்
20 49 7 6
சாதி. தொகை. வலையர் 7 வர்ணகாரா 27 வண்ணுர் 857 தந்தகாரர் 2. சாயக்காரர் 118 தச்சர் 536 சேணியர் 00 கைக்கோளர் 379 குயவர் 86 கடையற்காரர் 16 குடிப்பள்ளர் 155 சாயவேர்ப்பள்ளர் 53 தம்பேறுநளவர் 66 தம்பேறுப்பள்ளர் 9. குளிகாரப்பறையர் 7 பறங்கி அடிமை 8 கொல்லர் 407 தவசிகள் 192 அம்பட்டர் 50 கோவியர் 429 தமிழ்வடசிறை 279 நளவர் 237 பள்ளர் 359 பறையர் 767 துரும்பர் 5. எண்ணெய்வணிகர் 2 சாயவேர்ப்பள்ளர் 367 சாயவேர்ப்பறையர் 208
அர்ச்கோயில்பறையர்
3

Page 84
5
1796 ல் யாழ்ப்பாணத்திலிருந்த
அமில்தார். துவிபாஷிகர்-கோவிந்தமு பேஷகார்-கணேசஐயர். சம்பிரதி-அருணுசலபிள்: கணக்கப்பிள்ளை. உலாந்தாதுவிபாஷிகர்-ஒ! சேவகர். தோம்புக்கணக்கப்பிள்ளைகொத்தவால்-நிச்சிங்கமுதி சமுப்பு-விஜயரத்தினமுத
குமாஸ்தாக்கள்.

8
சுதேசவுத்தியோகஸ்தர்கள்.
தலியார்.
ளே.
ந்தாச்சி.
-ராமலிங்கமுதலியார்.
நலியார். லியார்.