கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசியவாதமும் தமிழர் விடுதலையும்

Page 1
இன்றைய சூழலில் யாரிடம் சரியான கருத்
துக்கள் சென்றடைய வேண்டுமே அந்த மக்களுக்குரிய வகையில் கட்டுரைகள் வொன்றும் சுற்றி வளைக்காமலும் அல்லது சொல்லாடல்மாயாஜாலம்காட்டதும்நேரிடை ாகவும் துல்லியமாகவும் 55. LILJAJIG67 (AJ GF கின்றன. நம் நாட்டுத் தமிழ் சூழலில் அறிவு ஜீவிகள் se fia. La repa 3 fue நிலைகளில் இருந்துதூர விலகி நின்று வெறு னே தொழில்சார்எல்லைகளுக்குள்ளும் சுய பூச்சி, கயலாபம் வெறும் Löಕ್ಲಿಕೆ நாடியும் குழப்பகரமான கருத்துகளுக்கு ஆட்பட்டும் இருந்து வரும் நிலை காணப்படுகின்றது. இன்றைய பூகோளமயமாதல் என்னும் ஏகாதி பத்தியநிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சமூக அரசி ல் இலக்கியத்தளங்களில்நவீனத்துவத்தின் பெயரால் குழப்பகரமான கருத்துக்கள் பல பரப்பப்படுகின்றன இந்நிலையில் மாக்சிச நிலைப்பட்ட கருத்துக்களை தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைத்து வருவதில் சிவசேகரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க தாகும் அந்த வகையில் இந்நூல் முக்கியத் துவம் பெறுகின்றது என்பது "Signa: a)LTa5 ITAgy. 1
 

தேசியவாதமும்
தமிழர் விடுதலையும்
சி.சிவசேகரம்
புதியயூமி வெளியீட்டகம்

Page 2

தேசியவாதமும்
தமிழர் விடுதலையும்
சி.சிவசேகரம்
புதியயூமி வெளியீட்டகம்

Page 3
தலைப்பு
ஆசிரியர்
முதற்பதிப்பு
அச்சு
வெளியீடு
விநியோகம்
தேசியவாதமும் தமிழர் விடுதலையும்
சி. சிவசேகரம்
1999 ஐப்பசி
டெக்னோ பிரின்ட் தெஹிவளை புதியயூமி வெளியீட்டகம்
புதியபூமி வெளியீட்டகம் 47, 3sugh uossig. கொழும்பு மத்தியகூட்டுசந்தைத்தொகுதி, கொழும்பு - 11.
ரூபா. 20.00

பதிப்புரை
இலங்கையில் தமிழ்த் தேசியவாதம் என்பது தமிழர் விடுத லையை வென்றெடுக்கச் சாதகமான அம்சங்களைக் கொண்டிருப் பதற்குப் பதிலாக பாதகமான செயற்பாடுகளையே முன்னிறுத்தி வளர்ந்து வருகின்றதென்பது நிதர்சனமாகும்.
தமிழர் விடுதலை எனப் புறப்பட்டோர் தமிழர் விடுதலையை முதன்மைப்படுத்திப் போராட்ட வியூகங்களை வகுப்பதற்குப்பதிலாக மக்களை அடிமைப்படுத்தவும், எதிரிகளுடன் இணைந்து அவர்கள் தயவில் ஜனநாயக வழிப் போராட்டங்களை முன்னெடுக்கவும் துணிந் துள்ளனர்.
"தோழர் ஸ்டாலினின் வரையறைக்குள் அடங்காத மக்கள் சமூகத்தின் தலைவிதி என்ன? என்பதன் அகநிலை ஆய்வு முடிவாக நவீன தமிழ் தேசியர்கள் சிலர் பின்வருமாறு முடிவுக்கு வருகின்றனர். ‘தேசம் பற்றிய சிந்தனை என்பதனைப் பிரதேசத்துடன் குறுக்கை கூடாது." “பொதுவான வரலாற்று உணர்வுடைய மக்கள் சமூகம் தேசமாக உருப்பெறுகிறது என்பதே தேசம் பற்றிய நவீன சிந்தனை யாகும்."
இத்தமிழ்த் தேசியப் பிரியர்கள் பரதேசிகள், நாடோடிகள் யாவருக்கும் தேசம்அவசியம் என்று தீர்ப்புக் கூற முன்வரும் அவலமும் நேர்ந்து வருகிறது என அஞ்ச வேண்டி உள்ளது. இவர்கள்தான் சியோனிச தமிழ் தேசியம் முளைவிட்ட வேளையில் இஸ்ரேலின் உதாரணத்தை “தேசியவிடுதலைக்கு பயன்படுத்தியவர்கள். 'ஏகாதிபத் தியம்" என்ற அரசியல் பதத்தை சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள முதலே 'சிங்கள ஏகாதிபத்தியம்" என வாய்ச் சவடால்கள் புரிந்தவர் கள். அதன் விளைவுகளையே இன்று இந்நாட்டுப் பொதுமக்கள் யாவரும் அறுவடை செய்கின்றனர். ஆண்ட பரம்பரை மீண்டுமொரு

Page 4
முறை ஆள நினைப்பதில் என்ன குறை" எனக் கவிபாடி தேசியத்தின் பழமைக் குப்பைகளைக் கிளறி சோழ மன்னரின் பொற்காலக் கனவு களில் சமகால சுயநிர்ணயத்தைப் புரிந்து கொள்ள முயன்று தோற்ற வர்கள்.
எனவேதான் தமிழர் தேசத்தைக் காணும் பணியில் தமிழர் தேசத்துக்கு வெளியே அயலவர்கள் - ஏகாதிபத்தியவாதிகள் தயவில் தமிழர் தேசம் காணும் கனவில் மூழ்கியுள்ளனர்.
தமிழர் விடுதலை என்பது சமனான சுயர்நிர்ணயம் பற்றிய பரந்த அரசியல் விஞ்ஞான வியாக்கியானத்தின் மூலம் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய பாடமாகும்.
அரசியல் என்பது அர்த்தமற்றது என பொது மக்களின் வெகு ஜனப் பங்களிப்பை தமிழர் அரசியலில் நிராகரிக்கும் உதிரிப் புலமை யாளர்கள் சிலர், அந்நியர் தயவில் அரசியல் தீர்வைக்காணும் ஜாம்ப வான்களையோ வீரதீரர்களையோ தேடும் அவலம் நமது தமிழ்ச் சூழலில் ஏற்பட்டு விட்டது.
வியாபார நோக்கில் நிறுவப்பட்ட தொடர்பூடகத் தகவல் களில் மட்டுமே அரசியல் ஆய்வுகளை நடாத்த முயலும் அவலச் சூழல் மாற்றப்பட வேண்டுமெனில் 'விடுப்பூக்க வியாக்கியானங்கள் தேடு வதை விடுத்து தமிழர் விடுதலையை மையப்படுத்தும் அரசியல் பாட த்தை கற்பதற்கும் மக்கள் மத்தியில் பரந்த விவாதங்களை தோற்று விப்பதற்கும் இந்நூல் உதவும் என நம்புகின்றோம்.
அரசியல் வெளியீடுகளின் தொடர்ச்சியாக இந்நூலை வெளி யிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
நூல் பற்றிய மனம் திறந்த விமர்சனங்களை வரவேற்கின்றோம்.
47, மூன்றாம் மாடி, புதியயூமி வெளியிட்டகம் கொழும்பு மத்திய சந்தைக்
கட்டிடத் தொகுதி,
கொழும்பு -11

முன்னுரை
உலகளாவிய ரீதியில் தேசியவாதம் பல்வேறு நிலைகளில் இன்று முன்னெடுத்து நிற்கின்றது. குறிப்பாக மூன்றாம் உலக நாடு களில் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் இடம் பெற்றும் வருகின்றன. தேசியவாதம் சில நூற்றாண்டுகளின் முன்பு தோற்றம் பெற்றிருப்பினும் முடிவுறப் போகும் இன்றைய நூற்றாண்டில் தான் அதன் முழுமையான அம்சங்களையும் விளைவு களையும் பரந்தளவில் காணமுடிகின்றது. அதுமட்டுமன்றி இத் தேசிய வாதம் தோற்றுவித்துள்ள சிக்கலான பிரச்சினைகளுக்கும் கடுமையான கேள்விகளுக்கும் அவற்றின் மூலமான சவால்களுக்கும் எதிர்வரப் போகும் நூற்றாண்டு உரியவாறு பதிலிறுக்க வேண்டிய பொறுப் பினையும் எதிர்கொள்கின்றது.
நமது நாட்டில் தேசியவாதம் எவ்வாறு தோற்றம் பெற்று எத்தகைய வடிவங்களுக்கூடாக வளர்ச்சி கண்டு இன்றைய யுத்த நிலையை அடைந்திருக்கிறது என்பதே ஒரு நூற்றாண்டு காலப்பட்டறி வாகின்றது. கொலனித்துவத்திற்கு எதிராகக் கருப்பெற்ற தேசிய வாதம் மிதவாதவழிகளில் வளர்ச்சி பெற்று சுதந்திரம் என்பதற்குப் பின் தீவிர சிங்களத் தேசியமாகி பேரினவாத வடிவெடுத்துக் கொண் டது. அவ்வாறே மிதவாதத் தமிழ்த் தேசியவாதம் வளர்ச்சி பெற்று இறுதியில் ஆயுதம் ஏந்திய போராட்டமாகியது. இன்றைய யுத்த முனையிலே ஒருபுறத்தில் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறை நிற்க மறுபுறத்திலே அதனை எதிர்த்து தமிழ்த் தேசியவாதம் ஆயுதப் போரா ட்ட வடிவிலே நிற்கின்றது.
இந்நிலையிலே மாக்சிச லெனினிசவாதிகளும் அவர்கள் சார்ந்த கட்சிகளும் தேசியவாதத்தை மிகவும் தெளிவுடன் நோக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேசிய

Page 5
வாதத்தின் தோற்றம் வளர்ச்சி இன்றைய நிலை என்பனவற்றை வரலாற் றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் நோக்குகிறார்கள். சமூக முரண்பாடுகளின் அடிப்படையாக அமைந்துள்ள வர்க்கப் போராட் டத்தின் வழியாகவே தேசியவாதத்தைக் காணுகின்றனர். மனிதர்கள் இனம், மொழி, மதம், நிறம் காரணமாக ஒருவரை மற்றவரிடம் இருந்து பிரிப்பதும், ஒருவருக்கு எதிராக மற்றவர் பகையாளி ஆக்கப்படுவதும் தேசியத்தின் பெயரால் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்மூலம் ஆளும் அதிகார வர்க்கங்கள் தமது வர்க்க இருப்புக்கும் உயிர் வாழ்வுக்குமுரிய ஊட்டச் சத்தை இடையறாது பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் போராட்டத்தின்மூலம் நிகழக்கூடிய சமூக மாற்ற நிகழ்வுப் போக்கினை பின்தள்ளிக் கொள்வதற்கு தேசியவாதத்தை தகுந்ததோர் கருவியாகக் கொள்கின்றனர்.
தேசியவாதிகளும் மாக்சிசவாதிகளும் முரண்படுகின்ற அடிப்
படையிலான விடயம் தேசிய ஒடுக்குமுறையை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது மட்டுமன்றி அதனை எதிர்த்த போராட்டம் எத்தகைய வழிகளில் முன்னெடுக்க வேண்டும் என்பதிலுமாகும். மாக்சிச லெனி னிசவாதிகள் ஒடுக்கும் பெரும் தேசிய வாதத்தையும் ஒடுக்கப்படும் மக்களது தேசியவாதத்தையும் ஒரே நிலையில் வைத்து நோக்குவ தில்லை. அவர்கள் எப்பொழும் ஒடுக்கப்படும் மக்களின் பக்கமே தம்மை வைத்துக் கொள்வர். ஆனால் ஒடுக்கும் பேரினவாதத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு தேசியவாதத்தின் குறுகிய எல்லைகளைக் கொண்ட போராட்டத்தினால் இயலாது என்பதே அவர்களது நிலைப் பாடாகும். அத்துடன் தேசியவாதத்தினுள் புதைந்து காணப்படும் வர்க்க குணாம்சத்தை வெளிக் கொணர்ந்து காட்டுவதன் மூலம் தேசியவாதத்தின் இயலாமையை சுட்டிக் காட்டுகிறார்கள்.
மூன்றாம் உலக நாடுகளில் தேசியவாதத்தை முன் தள்ளி அந்நாடுகளின் மக்களிடையே மோசமான பிளவுகளையும் ஒருவரை ஒருவர் எதிர்த்த பகையுணர்வுகளையும் வளர்த்ததில் உள்நாட்டு ஆளும் அதிகார சக்திகளுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதி களுக்கும் பெரும் பங்கு உண்டு. மூன்றாம் உலக நாட்டு மக்கள் ஏகாதி பத்திய சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு எழுவதைத் தடுக்கவும் உலகில் சோசலிஷத்தின் மீதான மக்களது நம்பிக்கையினத்தை வளர்க் கவும் தேசியவாதத்தை பல்வேறு நிலைகளிலும் வடிவங்களிலும் முன்தள்ளி வந்துள்ளனர். பின் நவீனத்துவக் கருத்தியல் தேசியத்தை

ட்யர்த்தி நிற்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து ஆளும் அதிகார வர்க்கங்களுக்கு தனது சேவையை வழங்குகின்றது. இவை அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் மூலமான சமூக மாற்றத்தைத் தடுக்கும் தடை அரண் களாகவே முன்நிறுத்தப்பட்டன.
இந்நிலையிலே தேசியவாததின் அடிப்படையையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் மக்கள் விளங்கிக் கொள்ளும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் தேசியவாதத் தினுள் அடங்கியிருக்கும் சாதக பாதக அம்சங்களை பகுத்தறிந்து கொள்வது அவசியமாகின்றது. தேசியவாதத்திற்கு இருக்கும் எல்லை களையும் அதனால் எந்தளவு தூரத்திற்கு சாதகமான பாதையில் பயணி க்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக்கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதை தூர நோக்குடன் கண்டு கொள்வது தேவையாகின்றது. ஏற்கனவே சிங்கள, தமிழ்த் தேசிய வாதங்களின் மூலம் பெற்றுக் கொண்ட பட்டறிவுகள் தற்போது முஸ்லிம், மலையகத் தேசியம் பற்றிய விவாதங்களிலும் ஆழ்ந்த கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.
இத்தகைய ஒரு அடிப்படையான தேவை கருதியே தேசிய வாதமும் தமிழர் விடுதலையும் என்னும் இந்நூல் தொகுக்கப்பட் டிருக்கிறது. தேசியவாதம் பற்றி நமது நாட்டிலும் நம்மவர்கள் வாழும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் அவ்வப்போது எழுப்பப்பட்ட கேள்வி களுக்கும் விவாதங்களுக்கும்மாக்சிச லெனினிசமாஓசேதுங் சிந்தனை நிலைப்பட்ட விளக்கமாகவே இந்நூலின் கட்டுரைகள் அமைந்து ள்ளன. வெவ்வேறு சந்தர்ப்பங்களின் நண்பர் சி.சிவசேகரம் எழுதிய இக்கட்டுரைகளில் சில புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர் களால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகளில் வெளிவந்தவைகளாகும். இந்நூலில் இடம்பெறும் ஐந்து கட்டுரைகளில் இறுதியான கட்டுரை அண்மையில் எழுதப்பட்டது. இக்கட்டுரைகளை ஒவ்வொன்றினதும் கனதியும் பெறுமதியும் சமூக அரசியல் ஆர்வம் மிக்க அனைவருக்கும் விளங்கக்கூடியதொன்றாகும். சிவசேகரத்தின்மார்க்சிசப் பார்வையின் ஆழமும் அதனை இலகுவாகவும் தமது நாட்டு நடைமுறை அனுபவங் களின் ஊடாக எளிமையாக எடுத்து விளங்கிச் செல்லும் மொழி தடையும் கவனத்திற்குரியதாகும். இன்றைய சூழலில் யாரிடம் சரியான

Page 6
கருத்துக்கள் சென்றடைய வேண்டுமோ அந்த மக்களுக்குரிய வகையில் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சுற்றிவளைக்காமலும் அல்லது சொல்லா டல் மாயாஜாலம் காட்டாதும் நேரிடையாகவும் துல்லியமாகவும் விடயங்கள் பேசுகின்றன. நம் நாட்டுத் தமிழ் சூழலில் அறிவுஜீவிகள் என்போரில் பலர் சமூக அரசியல் நிலைகளில் இருந்துதூர விலகி நின்று வெறுமனே தொழில் சார் எல்லைகளுக்குள்ளும் சுய உயர்ச்சி, சுய லாபம் வெறும் புகழ்ச்சி நாடியும் குழப்பகரமான கருத்துகளுக்கு ஆட்பட்டும் இருந்து வரும் நிலை காணப்படுகின்றது. இன்றைய பூகோள மயமாதல் என்னும் ஏகாதிபத்திய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமூக அரசியல் இலக்கியத் தளங்களில் நவீனத்துவத்தின் பெயரால் குழப்பகரமான கருத்துக்கள் பல பரப்பப்படுகின்றன. இந்நிலையில் மாக்சிச நிலைப்பட்ட கருத்துக்களை தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைத்து வருவதில் சிவசேகரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க தாகும். அந்த வகையில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது என்பது மிகையாகாது.
இன்றைய சமகாலச் சூழலில் இந்நூலில் இடம்பெறும் கட் டுரைகள் பரந்த படிப்பிற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் உள்ளாக வேண்டும். சரியான கருத்துக்கள் பெறப்படவும் அவை நடைமுறையில் பரந்துபட்ட சமூகநீதிக்கான போராட்டத் திற்கும் சமூக மாற்றப் பாதைக்கும் வழிகாட்ட வேண்டும் என்பதே இக் கட்டுரை களின் அடிப்படையாகும். தேசியவாதமும் தமிழர் விடுதலையும் என்னும் இந்நூல், மேலும் அரசியல் தளத்தின் பயனுள்ள பல நூல்கள் வெளிவர ஒரு தூண்டுகோலாக அமையும் என நம்புகின்றேன்.
சி.கா.செந்தில்வேல் கொழும்பு 25.08.99

சமுதாயமும் ஜனநாயகமும் தனிமனித சுதந்திரமும்
தனிமனித இருப்பைச் சமுதாயத்தின் இருப்பினின்று வேறுபடுத்திப் பார்க்கும் தனிமனிதவாதக் கண்ணோட்டம், தனி மனிதர்களது நலன்களைச் சமுதாயத்தின் நலன்களை விட உயர் வானதாகக் காட்டுகிறது. அதன் ஒரு அந்தத்தில், தனிமனிதர்கள் தமது நலன்களைப் பேணுவதன் மூலமே சமுதாயம் முன்னேறுகிறது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இங்கே மனிதரின் சுயநலம் போற்றத் தக்க பண்பாகக் காணப்படுகிறது. நெறிப்படுத்தப்படாத, தளையற்ற முதலாளித்துவக் கோட்பாடாகவும் அரசின் குறுக்கீடற்ற முதலாளித் துவ உற்பத்தி முறையாகவும் மேலை நாடுகளில் கடந்த இரண்டு தசாப்தங்களாகப் புத்துயிரூட்டப்பட்ட இந்த முதலாளித்துவத் தனிமனிதவாதக் கோட்பாடு, பிரித்தானியாவில் மாGறெற் தச்சர் ஆட்சியிலும் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் சித்தாந்தத்திலும் முக்கியத்துவம் பெற்றது. இதன் பயங்கர விளைவுகளை மேலை நாட்டுச் சமூகங்கள் இப்போது தான் உணருகின்றன. ஆயினும், ஏகபோக முதலாளித்துவம் ஆதிக்கத்தில் உள்ளவரை, எவர் அரசாங் கத்தில் தலைமை ஏற்றாலும், உண்மையான அதிகாரம் ஏகபோக முதலாளிகளுடையதே. இதற்கான ஆதாரங்களை அன்றாட நிகழ்வு களிலும் நாம் காணமுடியும். இக்கட்டுரையின் நோக்கம் முதலாளித் துவத்தின் கீழ் நிகழும் ஜனநாயகச் சீரழிவை ஆராய்வதல்ல. எனவே முற் குறிப்பிட்டவை தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்பன பற்றிய பிரமைகள் பற்றிய ஒரு எச்சரிக்கையாகவே கூறப்பட்டன.
ஜனநாயகம் என்பது சமுதாய அமைப்பிற்குப் புறம்பாகவோ அதனின்று சுயாதீனமாகவோ உள்ள ஒன்றல்ல. சிலர் கருதுவது போல

Page 7
அது சர்வாதிகாரத்தின் பூரண எதிர்மறையுமல்ல. மேலை நாடுகளின் ஜனநாயகக் கோட்பாடுகளை மட்டுமன்றி, அவற்றின் ஜனநாயக நடைமுறைகளையும் குருட்டுத்தனமாக அங்கீகரிக்கும் போக்கு நம் ஆய்வறிவாளரிடையே பரவலாக உள்ளது. அதன் கோர விளைவு களைப் பல மூன்றாமுலக நாடுகளில் நாம் கண்டுள்ளோம். இவ்வாறே தனிமனித சுதந்திரம் பற்றிய நமது சிந்தனைகளும் மேலை முதலாளித் துவச் சிந்தனைகளின் பாதிப்பிற்குட்பட்டனவாகவே உள்ளன. தனி மனித நலன்கள் சமுதாய நலன்களுடன் முரண்படும் சூழ்நிலைகளில் தனிமனித இருப்பும் சமுதாயத்தின் இருப்பும் நெருக்கடிக்கு உள்ளா கின்றன. சமுதாயப் பொறுப்பற்ற தனிமனிதவாதம், சமுதாயத்தின் சீரழிவுக்கு வழிகோலுகிறது. தனிமனித நலன்கள்பற்றிய அக்கறையற்ற சமுதாய அமைப்பும், சமுதாயத்தின் சிதைவுக்கே வழிகோலுகிறது. தனிமனித சுதந்திரத்தைத் தனிமனிதவாதத்துடன், அதாவது தனிமனித நலன்களைச் சமுதாய நலன்களினின்று பிரித்து மேம்படுத்திக் காட்டும் போக்குடன், குழப்பிக் கொள்வது சிறிது ஆபத்தானது. ஆயினும் முதலாளித்துவதாராண்மை வாதிகள் வலியுறுத்தும் தனிமனித சுதந்திரத் தில் இப்பண்பு மிகுதியாக உண்டு. இவற்றைவிட, முதலாளித்துவ ஜனநாயகமும் தனிமனித சுதந்திரமும் பிரிக்க முடியாதவாறு ஒன்றோ டொன்று ஒட்டியிருப்பதாக கருதுகிற ஒரு போக்கும் உள்ளது.
எனவே ஜனநாயகம், தனிமனித சுதந்திரம் என்பவற்றின் சமுதாயச் சார்பான தன்மை பற்றியும் அவற்றிடையேயான உறவின் தன்மை பற்றியும் சிறிது கவனிப்பது நல்லது. முதலாளித்துவ சமுதாயத் தின் வேறுபட்ட போக்குகள் இவற்றை எவ்வாறு கருதுகின்றனஎனவும் சோஷலிஸக் கண்ணோட்டத்தில் இவை எவ்வாறு கருதப்படக்கூடும் எனவும் சமூக சீர்திருத்தவாதிகள் இவற்றை எவ்வாறு கருத முனை கின்றனர் எனவும் சிறிது கவனிப்போம்.
ஜனநாயகம் பற்றிய வரைவிலக்கணங்கள் எவ்வாறு இருப் பினும் ஜனநாயக அரசு என்ற கோட்பாடு அரச அதிகாரம் என்ற கோட்பாட்டை உள்ளடக்குகின்றது. எல்லாருடைய விருப்புகளையும் நிறைவு செய்யும் அமைப்பாக ஜனநாயக அரசு அமைய முடியாது. எனவே எவ்வகையிலோ பெரும்பான்மையின் சர்வாதிகாரம் என்ற பண்பு அங்கு வந்து பொருந்திவிடுகிறது. பலசமயங்களில் இது பெரும்பான்மையின் சர்வாதிகாரமாக இல்லாமல் பெரும்பான்மையின்

சார்பில் அல்லது பெரும்பான்மையின் பேரிலான சர்வாதிகாரமாகவும் அமைகிறது. பெரும்பான்மை எனப்படுவது தேசிய இனம், சாதி, மதம், பிரதேசம், மொழி, அரசியல் சார்பு, வாழ்க்கை முறை என்பவற்றுள் எதையும் தனது பிரதான பண்பாகக் கொண்ட ஒன்றாக அமையக்கூடும். வேறுபட்ட குழுக்களின் நலன்களிடையே எழும் முரண்பாடுகளை ஜனநாயக அரச இயந்திரத்தின் துணையுடன் தீர்க்க முயலும் போது ஜனநாயகத்தின் வடிவில் செயற்படுவது பெரும்பான்மையின்பேரிலான சர்வாதிகாரமே. இங்கு ஜனநாயக அரசு என்ற கோட்பாடு, தன்னுள் இருக்கும் ஒரு சர்வாதிகாரப் பண்பை வெளிப்படுத்துகிறது.
மறுபுறம் முதலாளித்துவ ஜனநாயகம் தனது ஜனநாயகப் பண்பை வலியுறுத்தும் போக்கில் கருத்துச் சுதந்திரம், கருத்துப் பரிமாற்றச் சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்துகிறது. இதன் விளைவாக கருத்துப் பரிமாற்றக் கருவிகளான பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் சுதந்திரமும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை நடத் தும் சுதந்திரமும் ஏற்புடையனவாகின்றன. இந்தச் சுதந்திரங்கள்: ஒருபுறம் அரசஅதிகாரத்துடன் முரண்பட்டாலும், ஜனநாயகம் என்கிற தோற்றத்தை தந்து எதிர்ப்புணர்வின் வடிகல்களாக இயங்கும் அளவில், அரசியல் சமுதாய அமைப்பை தொடர்ந்தும் பேணுவதில் ஒரு பய னுள்ள பங்கை வகிக்கின்றன. அரசின் இருப்பு மிரட்டலுக்குள்ளாகும் போது ஜனநாயகத்தின் நலன்களின்பேரிற் கூட இச் சுதந்திரங்கள் பறிக்கப்படலாம். முற்குறிப்பிட்ட சுதந்திரங்களைத் தனிமனித சுதந் திரத்துடன் இணைத்துக் காட்டும் போக்கு முதலாளித்துவ சமுதாயத் தில் மிகுதியாக உண்டு. ஆயினும், நடைமுறையில், கருத்துப் பரிமாற லுக்குப் பொருளாதார வலிமை அவசியமாகிறது. பல சந்தர்ப்பங்களில் ஒரு வாணிப நிறுவனத்தினதோ அரசியற் பண்புட்ையந்ஒரு நிறு வனத்தினதோ ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, இங்கு தனிமனித சுதந்திரம் என்பது பணவலிமையுடைய தனிமனிதர்களது சுதந்திரமாக அல்லது நிறுவன வலிமையுடையவர்களது சுதந்திரமாக மட்டுமே செயற்பட முடியும். எனவே, முதலாளித்துவச் சமுதாயமொன்றில், கருத்துப் பரிமாறலிலும் அரசியற் பிரசாரத்திலும் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் நலன்கள் வெளிவெளியாகவோ மறைமுகமாகவோ பெரும் பங்கு வகிப்பது தவிர்க்க இயலாதது.

Page 8
இன்றுவரை, முதலாளித்துவ ஜனநாயக அமைப்புக்களில், வெகுஜனக்கருத்துப் பரிமாறலின் மீது முதலாளித்துவத்தின் ஆதிக்கம் கூடி வந்துள்ளதேயொழியக் குறைந்துள்ளதாகக் கூற இடமில்லை. பத்திரிகைகளிலும் ஒலிபரப்பு, ஒளிபரப்பு அமைப்புக்களிலும் தனி யொரு நிறுவனத்தின் ஆதிக்கத்தைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேலை முதலாளித்துவ நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள போதிலும் வெகுசனத் தொடர்பின் பெரும்பகுதி ஒரு சிலரது கைகளிலேயே தொடர்ந்தும் இருக்கின்றமை பற்றி நாம் அறிவோம். எனவே சுரண்டும் சிறுபான்மையின் நலனுக்காகச் செயற்படும் இக் கருவிகளும் அரச யந்திரமும் தமது இருப்புக்கு மிரட்டலாக அமையும் கருத்துக்களை மூடிக்கட்டுவதிலும் திரிப்பதிலும் தமது வலிமையைப் பூரணமாகவே பிரயோகிக்கின்றன. சாரமும் சமுதாய அக்கறையும் இல்ல்ாத விவ காரங்களில் மக்களது கவனத்தைத் திருப்புவதும் இவர்களது உபாயங் களுள் அடங்கும்.
அரசியல் மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் கருவியாகக் காட்டப்படும் முதலாளித்துவ பாராளுமன்ற (மற்றும் ஜனாதிபதி) தேர்தல் முறை, பிரசார வலிமை மீது மிகவும் தங்கியுள்ளது. தேர்தல் தொகுதி எவ்வளவு விசாலமானதோ அவ்வளவுக்குப்பணவலிமையும் நிறுவன வலிமையும் தேர்தலின் முடிவுகளைப் பாதிக்கின்றன. மக்க ளால் வெறுக்கப்படும் ஆட்சிகள் எவ்வாறு தேர்தல்களில் வெல்ல முடிகிறது என்பதையும் அவை தோற்கடிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் அவற்றை மீளவும் ஆட்சிக்குக் கொண்டு வருவதில் நிதியும் நிறுவன மும் எவ்வளவு மும்முரமாக இயங்குகின்றன என்பதையும் நாம் அறிவோம். அதைவிட, மூலதனத்தின் நலன்கட்குச் சிறிது பாதகமாக வேனும் ஒரு ஆட்சி செயற்படுமாயின், அதைக் கவிழ்க்கும் ஆற்றலைக் காட்டியும் வேறு வகைகளில் மிரட்டியும் முடியுமானால் விலைக்கு வாங்கியும் வசப்படுத்தும் தன் ஆற்றலை இலங்கை போன்ற ஏழை நாடுகளிலும் அமெரிக்கா உட்பட்ட வலிய முதலாளித்துவ நாடுகளி லும் மூலதனம் வெளிப்படுத்தியுள்ளது. இந்தளவில், கருத்துப் பரி மாற்றச் சுதந்திரம் போன்று, ஜனநாயகத் தேர்தல் முறையும் ஜனநாய கத்தை மறுதலிக்கின்றதேயொழிய வலுப்படுத்தவில்லை.
எனவேதான், பெருமளவுக்கும், ஒடுக்கப்பட்ட பெரும் பான்மையான மக்களது நலன்களைச் சார்ந்திருக்கும் சிந்தனைகளும்

சிறுபான்மைப் போக்குக்களாக்கப்படுகின்றன. இவற்றை வலுப் படுத்திப் பரவலாக்கிக் கொள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தின் கருவிகளைப் பயன்படுத்துவது ஒரளவுக்கேனும் சாத்தியமாயும் அவசியமாயும் உள்ளது. எனவே முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் இயலுமான அளவுக்குச் சலுகைகளையும் உரிமைகளையும் வென் றெடுக்கும் போராட்டங்கள் முக்கியமாகின்றன. அதேவேளை, ஜன நாயகம் என்ற கருத்தாக்கம் திரிக்கப்பட்டுத் தொழிலாளரது உரிமைப் போராட்டங்களைப் பலவீனப்படுத்தவும் பயன்படுகிறது. உடலுழை ப்பு, தொழில்நுட்பம், ஊதியத்திலும் வேலையின்தன்மையிலும் உள்ள ஏற்றத் தாழ்வுகள் என்பனவற்றின் அடிப்படையில், தொழிலாளர்களி டையில் உள்ள வேறுபாடுகளை இங்கு முதலாளித்துவம் பயன்படுத்து கிறது. எந்தவொரு வேலை நிறுத்தமும் ஒரு சிறுபான்மை பெரும் பான்மையை மிரட்டித் தன் நலன்களைப் பெருக்கும் காரியமாகவே முதலாளித்துவ ஜனநாயக நாடுகளிற் காட்டப்படுகிறது. பாராளுமன்ற சோஷலிஸக் கட்சிகளும் இதற்குப் புறநடையல்ல.
முதலாளித்துவ ஜனநாயகம் விசேஷமாக ஒரு தனிமனித சுதந்திரத்தை மிகவும் வலியுறுத்துகிறது. அது ஒரு சிலர் லாபம் ஈட்டுவதற்கான சுதந்திரம், தனியாருடைய சொத்துடைமைச் சுதந்திரம், மனிதரை சுரண்டிச் செல்வந்திரட்டி ஆதிக்கஞ் செலுத்தும் சுதந்திரம். அந்தச் சுதந்திரத்தைப் பேண உதவுமளவுக்கு ஜனநாயகம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அந்தச் சுதந்திரம் மிரட்டப்படும் போது, அதைக் காக்க ஒவ்வொரு ஜனநாயக உரிமையும் மிரட்டலுக்கு ஆளாகிறது. பிற தனிமனித உரிமைகளும் மிரட்டலுக்கு ஆளாகின்றன.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மைக் கருத்துக்கு முக்கியத் துவம் வழங்குவதால், கொள்கையளவில், ஒவ்வொரு நிலையிலும் பெரும்பான்மையின் நலன்களும் கருத்துக்களும் ஆதிக்கம் செலுத்து வதற்கு இடமுண்டு. நடைமுறையில், சொத்துடைமை உற்பத்திச் சாதனங்கள் மீது ஆளுமை என்பவற்றையுடைய சிறுபான்மை மட்டும் விதிவிலக்காகிவிடுகிறது. மற்றப்படி சிறுபான்மையினரது உரிமைகள் பெரும்பான்மையினரது உரிமைகட்குக் கீழ்ப்பட்டவையாவது தவிர்க்க இயலாததாகிவிடும். ஒரு ஜனநாயக சமுதாயம் எவ்வளவுக்கு எவ்வளவு பெரிய அளவிற் செயற்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தனி மனித உரிமைகளும் சிறுபான்மையினரது நலன்களும் மிரட்டலுக்கு

Page 9
உள்ளாக இடமுண்டு. மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகளை இயல்பான வையாகவும் அவசியமானவையாகவும் கருதும் ஒரு கண்ணோட்டத் தில் இது பிரச்சினைக்குரியதல்ல. ஏனெனில் முதலாளித்துவ ஜன நாயகம் என்பது பெரும்பான்மையை எவ்வாறு ஒரு சிலர் தமது நலன்கட்கு ஏற்ப ஆட்டிவைக்கக் கூடும் என்பதிலேயே தங்கியுள்ளது. தேசியவாதம், இனவாதம், நிறவாதம், மொழிவெறி, மதவெறி, சாதியம், பிரதேசவாதம் போன்று எதை வேண்டுமானாலும் அரசியல் ஆயுதமாக்குவதற்கு அதிகாரத்தில் உள்ள சிறுபான்மை தயங்காது. அதன் மூலம் அது தன்னைப் பெரும்பான்மையாகக் காட்டிக் கொள் கிறது. எனவே ஜனநாயகம் என்ற பேரிலேயே சமுதாய ஒடுக்குதல் இயலுமாக்கப்படுகிறது.
சமுதாயத்தில் தனிமனித இருப்பு என்பது, சமுதாய வரையறை கட்கு உட்பட்டே அமைகிறது. இந்த வரையறைகள் ஒரு சீராகவும் முன்கூட்டியே தீர்மானித்தவாறும் அமைவன அல்ல. ஒவ்வொரு மனிதரதும் தனிப்பட்ட நிலவரங்களும் சமுதாயச் சூழலும், இவ் வரையறைகளைத் தீர்மானிக்கின்றன. சில வேளை மனிதர் இவ் வரையறைகளை மீறக்கூடும். ஆயினும் தனிமனித நலன்கள் சமுதாய நலன்களுடன் கடுமையாக முரண்படுமிடத்துச் சமுதாயத்தின் இருப்பு மிரட்டலுக்கு ஆளாகும் நிலைமைகளின் கீழ், தனிமனித சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாகவே விதிக்கப்படுகின்றன.
மனித சமுதாயத்தின் வளர்ச்சி தனிமனித இருப்பைச் சமு தாயத்துடன் நெருக்கமாகப் பிணைத்துள்ளது. அதுமட்டுமன்றிச் சமுதாயங்களின் சுயாதீனமான இருப்பும் வரையறைக்குட்பட்டுள்ளது. சமுதாயங்கள் ஒவ்வொன்றும் தம் அயலில் உள்ள சமுதாயங்கள் மீது மட்டுமன்றித் தொலைவில் உள்ள சமுதாயங்கள் மீதும் தங்கியிருக்கும் நிலைமை இன்று நம்முன் உள்ளது. இவ்விதமான உறவின் விருத்தியின் போக்கில் மனித சமுதாயங்களின் மேம்பாட்டுக்கு மட்டுமன்றிப் பெரும் அழிவுக்கும் வழி ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தனிமனித ரும் சமுதாயக் குழுக்களும், ஒரளவுக்கேனும், தமது சுதந்திரத்தை இழந்தே உலக சமுதாயத்தில் தமது இருப்பைப் பேண முடிகிறது. முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாகத் தம்முன்மிகுதியான தெரிவு கள் இன்று இருப்பதாகக் கருதுவோர், இத்தெரிவுகளின் வரையறை க்குட்பட்ட தன்மையையோ, இத் தெரிவுகள் தம்மால் நிர்ணயிக்கப் பட்டவை அல்ல என்பதையோ கவனிப்பதில்லை. இங்கு முக்கிய
s

துனது எதுவெனின் உலகில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் பெரும் துர்ன்மையின் முன்னுள்ள தெரிவுகள் தனிமனிதர் என்ற அளவிலும் சமுதாயக் குழுக்கள் என்ற அளவிலும் குறுகி வருகின்றன என்பதே.
மேலை முதலாளித்துவ நாடுகளின் ஜனநாயகத்தையும் தனி மனித சுதந்திரத்தையும் பேண மூன்றாமுலக நாடுகளின் மக்களிற் பெரும்பாலானோர் தமது அடிப்படைச் சுதந்திரங்களை இழக்க வேண்டியுள்ளது. மனித உரிமைக் கோட்பாடுகளும் ஜனநாயகக் கோட்பாடுகளும் மூன்றாமுலகின் மீது தமது அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு வசதியானமுறையில் மேலை முதலாளித்துவ நாடுகளால் பிரயோகிக்கப்படுகின்றன. எனவே, நம்முன்னுள்ள கேள்வி, ஒடுக்கப் பட்ட நாடுகளதும் மக்களதும் நலன்கட்கு ஏற்றவாறு ஜனநாயகத்தை யும் தனிமனித உரிமைகளையும் நாம் எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதாகும்.
மனித சமுதாயங்களின் வரலாற்று விருத்தி வேறுபடுகிறது.
சமுதாயங்களில் உள்ள மரபுகளும் மனித உறவுகளும் வேறுபடு கின்றன. எனவே தனிமனித சுதந்திரம் என்பது ஒவ்வொரு சமுதாயச் சூழ்நிலைக்கும் ஏற்ப வேறுபடும் அதேவேளை, சமத்துவமான மனித உறவுகளையுடையதும் பிறப்பின் அடிப்படையிலும் பால் அடிப்படை யிலும் ஏற்றத்தாழ்வற்றதுமான ஒரு எதிர்காலச் சமுதாயத்தைக் கருத் திற் கொண்டு தனிமனித சுதந்திரம் பற்றிய பார்வையை நாம் வலியுறு த்த முடியும். தனிமனிதருக்கும் சமுதாயத்துக்கும் இடையில் முரண் பாடுகள் உள்ளன. தனிமனிதவாதம் வலியுறுத்த முற்படும் பகைமை க்கு இடமின்றிச் சமூக நலன்களையும் தனிமனித நலன்களையும் இணைப்பது இயலும். மனிதரின் சமுதாயத்தன்மையும் தனித்துவமும் ஒன்றை ஒன்று ஆதரிப்பதோ எதிர்த்து நிற்பதோ, சமுதாயங்களில் எத்தகைய மனித உறவுகள் வலியுறுத்தப்படுகின்றன என்பதை யொட்டியது.
ஜனநாயகம் என்பதும் சமுதாயத்தின் தன்மையையொட்டியே விருத்திபெறுகிறது. ஏற்றத் தாழ்வுகளை வலியுறுத்திப் பேணும் சமுதாயத்தில், ஜனநாயகம் என்பது ஒடுக்குமுறையை வசதிப்படுத்தும் ஒரு கருவியாகவே செயற்பட இடமுண்டு. மனிதரின் சமத்துவம், சமவாய்ப்பு, சமநீதி என்பனவற்றை ஏற்காத ஒரு சமுதாயத்தில் ஜனநாயகம் என்பது வெறும் பம்மாத்துத்தான். உலகில் வர்க்க
S

Page 10
சமுதாயம் உள்ளவரை, அரசுகள் இருப்பது தவிர்க்க இயலாதது. அரசு என்பது அடக்குமுறையின் கருவி. எனவே ஜனநாயக அரசு என்பதும் ஒரு வகையான சர்வாதிகாரத்தின் வடிவமே, சர்வாதிகாரம் எவருடை யது என்பது தான் பிரச்சனைக்குரிய விடயம். பாட்டாளிவர்க்க அரசு தொழிலாளர் விவசாயிகளின் அரசு என்பனவும் சர்வாதிகாரங்களே. இவற்றினுள்ளும் ஜனநாயகம் உள்ளது. அது பேணும் நலன்கள் நாம் அறிந்த முதலாளித்துவ ஜனநாயகத்தினின்று வேறுபட்டவை. அதன் அதிகார அமைப்புக்களும் வேறுபட்டவை. எந்த ஜனநாயக அமைப்பும் சீரழிய இடமுண்டு. முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவு ஃபாஸிஸ் மாகலாம். பாட்டாளிவர்க்க அரசின் சீரழிவு புதிய அதிகார வர்க்க மொன்றின் தோற்றத்துக்கும் முதலாளித்துவ மீட்புக்கும் வழிவகுக்க லாம். அண்மை வரலாற்றினின்று நாம் நிறையவே கற்றுள்ளோம். எனவே ஒடுக்கப்பட்ட மக்களது நலன்களைப் பேணுமாறான சமுதாய மாற்றமும் அதையொட்டிய ஜனநாயகமும் எவ்வாறு அமைய வேண் டும் என்பது பற்றி நாம் மேலுஞ் சிந்திக்க வேண்டும்.
மத்தியப்படுத்தப்பட்ட அரசு அதிகாரத்தை அவசியமாக்குகிற பல காரணிகள் உலகில் உள்ளன. ஏகாதிபத்தியமும் அதன் யுத்த
மிரட்டலும் உள்ள வரை, ஒடுக்கப்பட்ட மக்களும் ஆயுதமேந்த வேண்டிய
தேவை உள்ளது. மூன்றாமுலக நாடுகள் தமது இறைமையைப் பாதுகாக்கும் தேவை உள்ளது. ஆயினும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட அதிகாரமும் வலிய அரசும் மட்டும் இப்பாதுகாப்புக்கு உத்தரவாதங்கள் அல்ல. அவை பரந்துபட்ட மக்களின் நலன்கட்கும் உழைக்கும் மக்களது அதிகாரத்துக்கும் உடன்பாடானவையல்ல. அதிகாரப்பரவல்ாக்கம் வெகுஜன அதிகாரத்துக்கு அவசியமான ஒரு கருவி. அது ஜனநாயக அதிகாரத்தின்அலகுகளைச்சிறியனவாக்குகிறது. இதன்மூலம் மக்களின் பங்குபற்றல் நேரடியான ஒன்றாகிறது. அதற்கும் மேலாகச் சிறுபான்மை யினரின் குரல்களை, அவர்கள் எத்தகைய சிறுபான்மையாயினும் எந்தப் பரிமாணத்தினராயினும், மற்றவர்கள் கேட்க இயலுமாக்குகின்றன. இவ்வாறான அதிகாரப் பரவலாக்கமும் சுயநிர்ணயத்தின் விரிவுபடுத் தலும் ஜனநாயகத்தை வலுப்படுத்திப் பெரும்பான்மைக்கும் சிறுபான் மைக்குமிடையிலான முரண்பாடுகளையும் தனிமனிதருக்கும் சமுதாயத் துக்கும் உள்ள முரண்பாடுகளையும் சுமுகமானவையாக்க உதவும். V.
16/7/96

* ஒரே குரலிற் பேசுவதிலுள்ள வில்லங்கம்
Rழத் தமிழர் சார்பாகப் பேசும் உரிமை எவருடையது என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது. ஈழத்தமிழர் அனைவரும் ஒரே குரலிற் பேசவேண்டும் என்ற ஆதங்கம் பழையது. எப்போதும் இருந்து வந்துள்ள பிரச்சனை, அந்தக் குரல் எவருடையதாக இருக்க வேண்டும் '. என்பது தான். இன்றைய சூழலில் விடுதலைப் புலிகள் அந்தக் குரலுக்கு உரிமை கொண்டாடலாமா என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது. அதனோடு சேர்ந்து, விடுதலைப் புலிகளின் ஜனநாயக மறுப்பும் மனித உரிமை மீறல்களும் பற்றிய கேள்விகள் எழுகின்றன. சிலர் அவர் களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கிறார்கள். வேறு சிலர் அவர் களைப் ஃபாஸிசவாதிகள் என்கிறார்கள்.
தமிழீழ விடுதலை இயக்கங்களும் கடந்த பல ஆண்டுகளுள் வெகுதூரம் பயணஞ் செய்து விட்டன. ஆயினும் அதிகம் முன்னேறி யுள்ளதாகக் கூறுவது கடினம். மாக்ஸியவாதிகளைத் துரோகிகளாகவும் இன விரோதிகளாகவும் அடையாளங் காட்டியவர்கள் பலர் இன்று பேரினவாத அரசினதும் இந்திய மேலாதிக்க ஆட்சியாளர்களதும் தயவிற் தங்கியிருக்கிறார்கள். இது மட்டுமன்றி இனஒழிப்புப் போரில் அரசபடைகளுடன்ஒத்துழைக்கிறவர்களும் உள்ளனர். தமிழீழம் என்ற கோரிக்கை பாரிய முறையில் விடுதலைப் புலிகளால் மட்டுமே முன் வ்ைக்கப்படுகிறது. பிரிவினை தவிர்ந்த நியாயமான தீர்வுகளை எல் லாம் பத்து வருடங்கள் முன்பு ஏளனஞ் செய்த இயக்கத் தலைமைகள் தம்து சுவடுகளை மணலால் மூடிவிட்டு, ஐக்கிய இலங்கை என்ற அமைப்புக்குள் என்ன கிடைக்கும் என்று தடுமாறிக் கொண்டிருக் கிறார்கள். இவர்களிடமிருந்து பிரிந்த சில சாய்மனைக் கதிரைப் போராளிகள் மட்டும் விடுதலைப் புலிகளை நிராகரித்துத் தமிழீழத்தை வ்ென்றெடுப்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Page 11
தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் இரண்டு முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று தமிழின விடுதலை, மற்றது ஜனநாயகம். இவை தொடர்பான ஆய்வுகளிற் தமிழ்த் தேசியவாதத்தின் சில முக்கியமான பண்புகள் கவனிக்கப் படுவதில்லை. எனவே அவற்றை நினைவூட்டுவது பயனுள்ளது எனக் கருதி இக்கட்டுரையை எழுதுகிறேன். தமிழ்த் தேசியவாதம் தன்னை அடையாளப்படுத்துவதில் கண்ட பிரச்சனைகளும் அதன் தலைமை களது சனநாயகப் பண்பும் பற்றியே இங்கு அதிக கவனம் எடுக்கப்
படும்.
தேசியவாதத்தினுள் அடக்குமுறையின் கூறுகளும் உள்ளன. சில வரலாற்றுச் சூழல்களில் தேசியவாதம் மனித சமத்துவக் கோட் பாடுகளால் வழி நடத்தப்பட்டுள்ளது. இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டங்கள், தேசிய விடுதலை, மேலாதிக்கத்திற்கும் ஏகாதி பத்தியத்துக்கும் எதிராக ஒரு நாட்டின் இறைமையைப் பேணும் செயற் பாடுகள் போன்றவற்றிற் தேசியவாதம் முற்போக்கான முறையில் இயங்க முடியும். இத்தகைய விடுதலை சார்ந்த வரலாற்றுப்பணிகட்குப் புறம்பான நிலைமைகளில், அது தனது குறுகிய பார்வையை முதன் மைப்படுத்திப் பிற்போக்குச் சக்தியாகச் செயற்படுகிறது. சிங்களப் பேரினவாதமாயினும் ஜேர்மன் ஃபாஸிஸ்மாயினும் இத்தகைய குறுகிய பார்வையால் உந்தப்பட்டே பிற மக்களை ஒடுக்க முற்பட்டன. தேசிய விடுதலை இயக்கங்களுள்ளும் இக் குறுகலான பார்வை சாத்தியமான ஒன்றே. தேசியம் அடிப்படையான ஒரு சமூகத்தன்மை என்று கருதும் எவரும் இத்தகைய குறுகிய பார்வைக்குத் தம்மை உரியவர்களாக்குவது
எளிது.
இலங்கையிற் தமிழ்த் தேசிய உணர்வின் தோற்றம், சிங்களப் பேரினவாதத்தின் வளர்ச்சியின் விளைவானது. இலங்கையின் சுதந் திரம் வரையிலான காலத்திலும் அதற்குச் சிறிது பின்னருங் கூடத், தமிழர்களது பிரதிநிதிகளாக இருந்தோர், யாழ்ப்பாண வேளாளருள் ஒரு அற்பச் சிறுபான்மையினரது நலன்களைப் பற்றிய அக்கறை உடையவர்களே. இலங்கைக்குச் சர்வசன வாக்குரிமையை வழங்கு வதற்கு பிரித்தானிய எசமானர்கள் ஆலோசித்த போது, அதை இவர்க ளிற் கணிசமானோர் எதிர்த்தனர். பெண்களும் தாழ்த்தப்பட்ட சாதி யினரும் வாக்குரிமை பெறுவதை இவர்கள் எதிர்த்ததில் வியப்பில்லை. ஆயினும், இன்றும் இவர்களைத் தமிழர்கள் அனைவரதும் நலனுக்

காகப் போராடிய தலைவர்களாகவும் சனநாயகவாதிகளாகவும் பலர் கொண்டாடுவதே வியப்புக்குரியது.
இந்த வேளாள மேட்டுக்குடி ஆதிக்கச் சிந்தனை மட்டக் களப்பு, வன்னிப் பகுதி மக்களைத் தாழ்வானவர்களாயும், மேற்குக் கரையோரத்துத் தமிழ்க் கத்தோலிக்க மக்களைத் தம்மில் ஒரு பகுதி யினர் அல்லாதவராயும், மலையக மக்களை அந்நியராகவும் கருதியது. இவர்களது சனநாயகம் இந்தச் சிறுபான்மையினரது நலன்களை உறுதிப்படுத்தும் ஒரு உத்தியாக அல்லாது வேறெதுவுமாக இருக்க வில்லை. 1948 ல் மலையகத் தமிழர் வாக்குரிமையற்றோராக்கப்பட்ட போது தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்தோரால் 1949ல் உருவாக்கப் பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியால் இந்த மனோபாவத்திலிருந்து விடுபட இயலாமலே இருந்தது. அந்த நேரத்தில் எஸ்.ஜே.வி.செல்வ நாய்கம் இன்று அவர்களுக்கு, நாளை நமக்கு" என்று கூறியதற்காகத் தீர்க்கதரிசி எனப் போற்றப்பட்டார். அந்தத் தீர்க்கதரிசனத்துள் ருக்கும் ஒரு முக்கியமான சொல் அவர்கள்'. யாழ்ப்பாண வேளாள نژ',', மேட்டுக்குடிகளைப் பொறுத்தவரை, மலையக மக்கள் அன்றும் இன்றும் அவர்கள் தான்.
சிங்களம் மட்டுமே அரச கருமமொழியாகும் என்று இலங் கையின் பிரதான சிங்களத் தேசியவாதக் கட்சிகள் இரண்டும் பிரகட னம் செய்து 1956ல் பொதுத் தேர்தலில் இறங்கும் வரை (அன்று அம்பாறையையும் உள்ளடக்கிய) மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் இரண்டுமே வேரூன்ற முடியவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களை அரசியல் அடிப்படையில் ஒன்றிணைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.அரசகருமமொழிச்சட்டமே எனலாம். சிங்களம் அரச கரும மொழியானாற் தமிழ் அழியும், தமிழினம் அழியும் என்று பிரசாரம் செய்யப்பட்டாலும், தமிழரசுக் கட்சித் தலைமையின் அக்கறை, தமிழ் மொழி மட்டுமே பேசும் பரந்துபட்ட மக்களது நலனை விட, ஆங்கிலம் படித்து ஆங்கிலத்திற் கருமமாற்றுவோரது நலன்களையே சார்ந்திருந்தது. இலங்கையிற் தமிழ் மொழிக் கல்வியின் விருத்தியில், இலவசக் கல்வியும் தாய் மொழிப் போதனையும் பற்றி எடுக்கப்பட்ட அரச தீர்மானங்களி னளவுக்குத், தமிழ் தேசியவாதக் கட்சிகளது பங்களிப்பு அமைய வில்லை எனலாம். தமிழரசுக் கட்சியைச் சார்ந்து உருவாகிச் செயற் பட்ட தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம், இலங்கைத் தமிழ்

Page 12
ஆசிரியர் சங்கம் போன்ற அமைப்புக்கள், நடுத்தரவர்க்கத் தமிழர்களது நலனை வலியுறுத்தின. இவற்றின் செல்வாக்கு 60களின் முற்பகுதியில் இருந்தளவுக்கு, அதன் பின் எப்போதுமே இருக்கவில்லை.
1949ல் மலையகத் தமிழர் பிரச்சினையைக் காரணங் காட்டி உருவான தமிழரசுக்கட்சி, 1957ல் ஏற்பட்ட பண்டார நாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கையில் அப்பிரச்சனையைத் தற்காலிகமாக ஒதுக்குவதற்கு உடன்பட்டது. 1960களில் அக்கட்சி மலையகத்திற் தனக்கு ஆதரவான ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க முற்பட்டுத் தோல்வி கண்டது. இவ்வாறே, வடக்கு கிழக்கின் முஸ்லிம் மக்களைத் தன் தலைமைக்குக் கீழ்க் கொண்டு வருவதிலும் அது தோல்வி கண்டது. கட்சியின் பேரில் பாராளுமன்ற ஆசனங்களைப் பிடிக்கும் இவர்களது தேவையை அறிந்த முஸ்லிம் பிரமுகர்கள், இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி, தமிழ் வாக்காளர்களது ஆதரவுடன் தமது போட்டியா ளர்களைத் தோற்கடித்துத் தருணம் வாய்த்த போது ஆளுங்கட்சிக்குத் தாவியது 1956, 60 தேர்தல்களின் பின் நடந்தது. இங்கே நிகழ்ந்த தவறு முஸ்லிம் சமூகத்தினதாகச் சிலராற் காட்டப்பட்டாலும், உண்மையில் தமிழரசுக் கட்சி முஸ்லிம்களது பிரச்சனையைக் கருத்திற் கொண்டு தனது அரசியலை விருத்தி செய்யவில்லை என்பதே முக்கியமான
உண்மை.
1949ல் தமிழரசுக்கட்சி உருவான போது முன்வைக்கப்பட்ட சமஷ்டிக் கொள்கை, மலையகத் தமிழரது சுயாட்சியையோ முஸ்லிம் களது விருப்பு வெறுப்புக்களையோ கணிப்பில் எடுக்கவில்லை. அது மட்டுமன்றிப், பிற தேசிய சிறுபான்மைகளது நலன்கள் பற்றிய அக்கறையும் அக்கட்சியிடம் இருக்கவில்லை. சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவாகச் சிங்கள முற்போக்குச் சக்திகளினதும் வட்க்குக் கிழக்கு மாகாணத் தமிழர் அல்லாத பிற தேசிய இனத் தலைமைகளினதும் ஆதரவைத் திரட்டும் தேவையை அது உணரவில்லை. ஏனெனில், இக் கட்சியின் சிந்தனை தமிழ்க் காங்கிரஸின் தமிழ்த் தேசிய உணர்வின் முக்கிய குறைபாடுகளினின்று விடுபடவில்லை. 1956ம் ஆண்டு வடக் குக் கிழக்கு மாகாணங்களில் இக் கட்சி பெற்ற அமோகமான வெற் றியையடுத்து, மூதவை உறுப்பினராகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இவர்களாற் தெரியப்பட்டார். ஆயினும், 1977 வரை, யாழ்ப்பாணத்தின் 40% தொகையினரான பிற்படுத்தப்பட்ட சாதி களைச் சேர்ந்த எவருமே தமிழரசுக் கட்சியினது சார்பிலோ தமிழ்க்
 

காங்கிரஸ் சார்பிலோ தேர்தலில் நிற்கவில்லை. இந்த மக்களுக்காகப் போராடிக் குரல் எழுப்பினோர் இடதுசாரிகள் மட்டுமே. தமிழரசுக் கட்சியின் மூதவை நியமனம் கூட, வடக்கிற் தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது உரிமைகளை வலியுறுத்த முற்பட்ட பின்னரே நிகழ்ந்தது.
1965ல் இரண்டு முக்கிய தமிழ்க் கட்சிகளும் யூ.என்.பி. ஆட்சியின் பங்காளிகளாயின. வடக்கில் 1966ல் வெடித்தெழுந்த தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை நசுக்குமாறு குரல் கொடுத்தவர் தமிழரசுக்கட்சியின் ஒரு முக்கியஸ்தரான அமிர்தலிங்கம். இதன்மூலம் தமிழ்த் தேசியவாதத்தின் அன்றைய சாதிய அடையாளத்தை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
1957ல் திருகோணமலையிலிருந்து பிரித்தானியத் துறைமுகத் தளமும் கட்டுநாயக்கவிலிருந்து விமானத்தளமும் அகற்றப்படுவதைத் தமிழ்த் தேசியவாதிகள் எதிர்த்தனர். உழுபவர்கட்கு அதிக உரிமை வழங்குமாறு உருவாக்கப்பட்ட நெற்காணிச் சட்டத்தையும் அவர்கள் யூ.என்.பியுடன் சேர்ந்து எதிர்த்தனர். இவை எல்லாம், எந்த வர்க்கங் களது நலன்சார்ந்து இவர்கள் இருந்தனர் என்பதையே காட்டின.1961ல் பெற்றோலியக் கம்பனிகள் தேசியமயமாக்கப்பட்ட போதும் தமிழ ரசுக்கட்சி எதிர்த்துவாக்களித்தது. இவர்களது மாக்ஸிய எதிர்ப்பு, ஒரு புறம், தமிழ் மேட்டுக்குடிகளது நலன்கள் பற்றிய அக்கறையால் ஏற் பட்டது. மறுபுறம், வடக்கில் இவர்கட்கு மாற்றுச் சக்தியாக இயங்கிய வர்கள் இடதுசாரிகளே என்பது ஒரு முக்கிய காரணம்.
இடதுசாரிகள் மீது அபாண்டம் சுமத்தி, அவர்களைச் சிங்கள வர்களது எடுபிடிகளாகவும் தமிழ்த் துரோகிகளாகவும் காட்டுவதில் தமிழரசுக் கட்சியின் பிரசாரக் கருவிகள் மும்முரமாகவே செயற் பட்டன. இடதுசாரிக் கட்சிகள் இலங்கை தழுவிய கட்சிகளாக இருந் ததும் சிங்களப் பேரினவாதத்தின் எழுச்சியும் 1960களிற் பாராளுமன்ற இடதுசாரிகளின் அரசியற் சந்தர்ப்பவாதமும், சகல இடதுசாரிகள் மீதும் இவர்கள் சேறு பூசுவதற்கு வசதியாயிற்று. பண்டாரநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவு பற்றியும் 1961ல் சத்தியாக்கிரகத்தின் போது இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் அனுதாபமும் பற்றியும், இன்று கூடத் தமிழ்த் தேசியவாதிகள் பேசுவதில்லை. 1957ல் தமிழரசுக் கட்சியின் சிறு பிள்ளைத்தனமான பூரீஎதிர்ப்பு" இயக்கம் சிங்களஇனவெறியர்களது

Page 13
காடைத்தனத்துக்குத் தூபமிட்டது. 1961 சத்தியாக்கிரகம் எதுவித முன்னேற்பாடும் இல்லாது தொடக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கச்சேரி வாயிலில் பொலிஸாரின் மூர்க்கத்தனத்தால், அரசு தமிழ்ப் பொது மக்களது பகையைச் சம்பாதிக்கவும் சத்தியாக்கிரக இயக்கம் பரவவும் நேர்ந்தது. அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்ததும் போராட்டம் முடங்கிவிட்டது. இப்போராட்டத்தையொட்டி ஆரம்பிக் கப்பட்ட தமிழரசுத் தபாற் சேவை, தமிழரசுக் கட்சி கேட்டது சமஷ்டி
யல்ல பிரிவினையே என்ற சிங்களப் பேரினவாதப் பிரசாரத்துக்கு வலிமை சேர்த்தது. இந்த இரண்டு நடவடிக்கைகளிலும், தமிழரசுக் கட்சிக்குள் இருந்த ஒரு சிறுகுழுவினர் தலைவர்களது கலந்தாலோ சனையின்றி நடந்து கொண்டதன் விளைவாகவே, அவசியமற்ற தவறுகள் நேர்ந்தன. அதேவேளை, இப்போராட்டங்களை மக்கள் போராட்டங்களாக வளர்த்தெடுக்கும் ஆற்றல் தமிழரசுக் கட்சிக்கு இருக்கவில்லை.
தமிழரசுக் கட்சியின் அரசியற் தலைமை கொழும்பைத் தள மாகக் கொண்டு இயங்கிய ஒரு குழுவிடமும் யாழ்ப்பாணத்து மேட்டுக் குடிகளின் பிரதிநிதிகளிடமுமே இருந்து வந்தது. பேரளவிற், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டாலும், அரசியற் தீர்மானங்கள் யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகளது நலன்களை ஒட்டியே எடுக்கப்பட்டன. 1960களின் முற்பகுதிவரை, நடுத்தர வர்க்கத்தினரான அரச ஊழியர், ஆசிரியர்கள் போன்றோரது செல்வாக்கு தமிழரசுக் கட்சிக்குள் அதிகரித்தாலும், 1965ல் அக்கட்சிஐ.தே.கவுடன் அதிகாரப் பகிர்வுக்கு இணங்கியபிறகு, படித்த, உத்தியோகம் பார்க்கிற, பணக்காரச் சாதிமான்களது ஆதிக்கம் மேலும் ஓங்கியது. 1965ல் மந்திரிப் பதவியை ஏற்கத் தமிழரசுக் கட்சி உடன்பட்ட பின்பு, மக்களாற் தெரிந்தெடுக்கப்பட்ட எவருமே பதவி ஏற்பது இல்லை எனழுடிவுசெய்து, கொழும்புக் கனவானானமு.திருச் செல்வத்தை அமைச்சராக்கினார்கள். இதன் பின், இக்கட்சி ஒரு வெகுஜன ஸ்தாபனமாகவும் மக்கள் போராட்ட இயக்கமாகவும் தன்னைக் காட்டிக் கொள்வது கூட இயலாது போயிற்று. இதன் விளைவாக, 1970ல் தேர்தலிற், தன் வரலாற்றில் முதற் தடவையாக, இக்கட்சி, தான் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம் வீழக் கண்டது. குறிப்பிடத்தக்க விதமாக, அமிர்தலிங்கம் தனது சொந்தத் தொகுதி யிலேயே தோற்கடிக்கப்பட்டார்.
 

செல்வநாயகத்துக்குத் தமிழரசுத்தந்தை, தீர்க்கதரிசி, ஈழத்துக் காந்தி போன்ற பல்வேறு தொப்பிகள் அணிவிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் அவரை ஒரு அரசியல் விக்கிரகமாக்கி தமிழரசுக் கட்சிக்கு ஒரு வகையான புனிதத்தை உருவாக்கும் முயற்சிகளே. மோகனதாஸ் காந்திக்கும் செல்வநாயகத்துக்குமிருந்த ஒரு ஒற்றுமை, அவர்களது வர்க்கச் சார்பு. முன்னையவர் அகிம்சையை ஒரு போராட் டக் கருவியாகக் கையாள்வதில் ஒரளவு வெற்றி கண்டவர். பின்னைய வர்அதைப் போராட்டத்துக்குமாற்றுச்சாதனமாகப் பயன்படுத்தியவர். 1970ல் ஐக்கிய முன்னணி மிகுந்த பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய போது செல்வநாயகத்தாற் கூற முடிந்ததெல்லாம் 'இனிக் கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்". இது தான் தமிழரசுக் கட்சியின் போராட்டத்தின் சாராம்சம்.
1970ல் உருவான பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சனை, தரப்படுத்தல், 1974 தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதம், தமிழ் இளைஞர்களின் கிளர்ச்சி, பொலிஸ் அடக்குமுறை, புதிய குடியரசு அரசியல் யாப்பில் சிறுபான்மையினரது உரிமைகளின் பாதுகாப்புக் கான பகுதிகளது நீக்கம் போன்ற பல நிகழ்வுகள், தமிழ் மக்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டத் தொடங்கின. இக் காலகட்டத்தில் மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள் பலர், தோட்டங்கள் தேசிய மயமானதையடுத்துத் தமது இருப்பிடங்களினின்று விரட்டப்பட்டும் வேலைநாட்கள் போதாமையால் வெளியேறியும், வடக்கு நோக்கிப் புலம் பெயர்ந்தனர். இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காணிச் சொந்தக்காரர்களாற் கொடுமையாகச் சுரண்டப்பட்ட போது, இவர் களுக்காகத் தமிழரசுக்கட்சியோ தமிழ்க் காங்கிரஸோ குரல் கொடுக்க வில்லை. காந்தியம் போன்ற சமூக சேவை அமைப்புகளே இவர்கட்கு வாழ்க்கை வசதிகளையும் சொந்த முயற்சியால் முன்னேறும் வாய்ப்புக் களையும் ஏற்படுத்தப் பாடுபட்டன.
தமிழரசுக்கட்சியும் (பின்னர்) கூட்டணியும் சனநாயக அமைப் புகளாகத் தம்மைப் பிரகடனம் செய்தவை. பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தெரிவிற் தொகுதி மக்களதும் கட்சிக் கிளையினதும் கருத்தை விடக், கொழும்பு வாழ் பிரமுகர்களதும் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களதும் கருத்துக்கள் எவ்வளவு முக்கியமாயிருந்தன என்பதை, 1970க்குப் பிற்பட்ட காலத்தில் வட்டுக்கோட்டை, காங் கேசன்துறைத் தொகுதிகட்கான இடைத்தேர்தல் நியமனம் ஏற்படுத்திய

Page 14
பூசல்களினின்று அறியலாம். இது இந்தக் கட்சிகட்கு மட்டுமே உரிய பிரச்சனையல்ல ஆயினும் பாராளுமன்ற அரசியலில் மேட்டுக்குடி மாந்தரின் குடுமிப்பிடி அரசியலின் முக்கியத்துவம் பெரிது என்பதை அண்மையிற் திருகோணமலைத் தொகுதி ஆசனத்திற்கான மோதலின் போதும் கண்டோம். மட்டக்களப்பில் 1977ல் சி.ராஜதுரையைக் கவிழ்ப்பதற்காகக் கூட்டணித் தலைமை எடுத்த முயற்சியின் தீய விளைவுகளையும் கூட்டணி விரைவில் அனுபவித்தது. இந்தத் தேர்தல் அரசியல் என்பது, வெகுசனங்களை ஏமாற்றும் அரசியலே ஒழிய வெகுசன அரசியல் அல்ல என்பதை மக்கள் அறிந்தாலும், பாராளு மன்ற அரசியலுக்கு ஒரு நல்ல மாற்று உருவாகும் வரை, அவர்கள் அதில் ஈடுபடுவது தவிர்க்க இயலாததே. இந்தத் தேர்தல் அரசியல், சன நாயகம் அல்ல. அது ஒரு சனநாயகத் தோற்றம் மட்டுமே. அரசியல், பொருளாதார அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டால் மட்டுமே சனநாய கம் இயலுமானதாகும். இதுவரை தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் கோரிவந்துள்ள பரவலாக்கம் தமது கைகளில் அதிகபட்ச அதிகாரத் தைக் தக்க வைக்கும் பரவலாக்கமேயல்லாது, அதிகாரத்தை மக்களது தளத்திற்கு விரிவுபடுத்தும் பரவலாக்கமல்ல. . .
வன்முறை தொடர்பாகத் தமிழரசுக்கட்சியும் கூட்டணியும் என்ன தான் சொன்னாலும், அவர்களது சாத்வீகப் போராட்டக் கொள்கை அவர்களது இயலாமையின் விளைவேயல்லாது போராட்டப் பாதை பற்றிய தெளிவான பார்வையின் விளைவானதல்ல. நமது சாதி யச் சமூகம் அகிம்சையின் வழி இயங்கிய ஒன்றல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறைக்கு உட்பட்டே வாழ்ந்து வந்தனர். சமூக வன்முறை அன்றாட நிகழ்வாக இல்லாத போதும், அது பற்றிய அச்சம் நிலையான ஒன்றாகவே இருந்தது. அவர்கள் சமூக நீதிக்காக, தனிப்பட்ட முறை யிலோ மக்கள் குழுவாகவோ, குரலெழுப்பும் போதும் செயற்படும் போதும் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இந்த வேளைகளில் எல் லாம், உரிமைக்குரல் எழுப்புவோரைக் கலகக்காரர்களாகவும் தமி ழினத்தின் ஒற்றுமைக்கு ஆப்பு வைப்போராகவுமே தமிழ்த் தேசிய வாதிகளது அன்றைய தலைமை காட்டி வந்துள்ளது. தமிழ் மக்களது உரிமைக்கான போராட்டம் ஆயுதந்தரிக்குமாயின், அந்த ஆயுதங்கள் தேசிய இன ஒடுக்குமுறையை மட்டுமன்றிச் சாதிய ஒடுக்குமுறை உட்பட்ட பிற ஒடுக்குமுறைகளையும்தூக்கி எறியக்கூடும் என்பதையும் தமிழ்த் தேசியவாதத் தலைவர்கள் அறிந்திருந்தார்கள். அதேவேளை
 

தமது அதிகாரத்துக்குச் சவாலாக உருவான அரசியற் தலைவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டபோது அதைக் கண்டிக்கத்தயங்கியதை 1970களிலிருந்து கண்டுள்ளோம். பாராளுமன்ற அரசியற் பேரங்கள் மூலம் தமிழ் மக்களது தேசிய இன உரிமைகளை வெல்லவோ நிலை நிறுத்தவோ இயலாது என்பது தெளிவானபின்னர், தமிழரசுக் கட்சியும் கூட்டணியும் தட்டிக்கொடுத்து ஊக்குவித்த கிளர்ச்சிப் போக்குகள் அவர்களது கட்டுப்பாட்டை மீறி வளர்ந்தன.
முன்குறிப்பிட்ட போக்குகளின் விளைவாக நிகழ்ந்த அரசியற் கொலைகளும் மிரட்டல்களும் கூட்டணியைத் தீண்டும் வரை அவர்கள் அதை கண்டுங் காணாமலே இருந்தனர். ஒரு புறம் தலைமைப் போட்டி யின் விளைவாகவும் மறுபுறம் கூட்டணியின் இயலாமை 1980-81ல் அம்பலமானதன் விளைவாகவும் பிரிந்து சென்ற சந்திரகாசன், ஈழ வேந்தன், கோவை மகேசன் போன்றோர் உருவாக்கிய தமிழீழ விடு தலைக் கூட்டணியும் இந்த வன்முறையைக் கண்டிக்கவில்லை. தமிழ்த் தேசியவாதத்தை எதிர்த்தவர்களை இனத்துரோகிகள்" என்று நிந்தித்த இந்தத் தலைமைகளின் போக்கின் தொடர்ச்சியாகவே 1980களின் முற்பகுதியில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட் டோருக்கு எதிரான மிரட்டல்களும் வன்முறையும் கொலை முயற்சி களும் அமைந்தன. இவற்றின் தோற்றுவாயைத் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுக்குட் தேடவேண்டுமே ஒழிய வெளியில் அல்ல.
கூட்டணித் தலைமையாயினும் பிற மேட்டுக் குடிகளாயினும் இந்த விதமான வன்முறைப் போராட்டத்தின் பொறுப்பை இளைஞர் களின் மீது சுமத்தி விட்டு அதன் விளைவான அரசியல் இலாபத்தைத் தாம் அடையலாம் என்ற எதிர்பார்ப்பு உடையோராக இருந்தனர். இன்று வரையிலும் இந்த மனோபாவம் ஒரு பகுதியினரிடம் தொடர் கிறது. இது ஒரு புறம் இருக்க, மக்கள் ஆதரவுடன் நடக்கும் வெகுஜனப் போராட்டங்களை விட அதிகமாக பாராளுமன்ற அரசியற் பேரங் களையே நம்பியிருந்த தேசியவாதத்தலைமை, இலங்கைக்கு வெளியே ஆதரவைத் தேடத் தொடங்கியது. 1979ன் பின் இலங்கை-இந்திய உறவின் சீர்குலைவு இந்தியாவில் ஒரு வலிய ஆதரவுச் சக்தியை உருவாக்கியது. இந்தியாவின் பிராந்திய அரசியல் நோக்கம் பற்றிய தெளிவு இல்லாமல், கூட்டணி மட்டுமன்றி, பல்வேறு விடுதலைக் குழுக்களும் இந்தியாவின் ஆதரவை நாடின. இதன் பின் ஈழத்தமிழர்

Page 15
களது குரல் இந்திய மேலாதிக்கத்தின் குரலாகவும் ஒலிக்கும் நிர்ப்பத் தம் ஏற்பட்டதை நாம் அறிவோம். விடுதலை இயக்கங்களை, பிரித் தாளும் சூழ்ச்சி மூலம், தனது பூரண ஆதிக்கத்திற் கொண்டுவருவதில் இந்திய அதிகார வர்க்கம் கணிசமான வெற்றியும் கண்டது. இந்திய ஆதரவுடன் வேகமாக வளர்ந்த விடுதலை இயக்கங்களுடன் ஒப்பிடு கையில் விடுதலைப் புலிகள் சுயாதீனமாகவே இயங்கினார்கள் என லாம். இதுவே பிற்காலத்தில் இந்திய அரசுக்கும் விடுதலைப் புலி களுக்கும் இடையிலான முரண்பாட்டின் மூலகாரணமும் எனலாம்.
அயல் நாடுகளின் ஆதரவு பற்றி, முக்கியமாக மேலை முத லாளித்துவ நாடுகளது ஆதரவு பற்றி, தமிழ் மக்களிடையே குறிப்பிடத் தக்களவு மயக்கங்கள் இருந்து வந்துள்ளன. தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்திற்கு எந்த அயல்நாடும் தரக்கூடிய ஆதரவு அதன் தேசிய நலன்களுடனும் இலங்கை அரசுடனுள்ள உறவுடனும் தொடர்பு டையது என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்தியாவின் தலையீட் டைப் பற்றிய எதிர்பார்ப்புக்களை வரவேற்பதில் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளது பங்கு பெரியது. இன்றுங் கூட, ஐரோப்பிய நாடுகளின் குறுக்கீடு பற்றிய சபலம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. இது மட்டுமன்றிப் பிராந்திய வல்லரசுகளின் தலையீடு என்ற விதமான எதிர்பார்ப்பு பல வேறு வகைகளில் எழுவதையும் நாம் காணலாம்.
1983ல் தமிழர் விரோத வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட பின்பு, மேலை நாடுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பொது சன அபிப்பிராயம் வலியதாயிருந்தது. இதனையடுத்து அகதிகள் பெருந்தொகையில் வந்ததும் இலங்கை அரசாங்கத்தின் அண்மைக் காலப் பிரச்சாரத்தின் வெற்றியும் விடுதலை இயக்கங்களுக்கிடை யிலான மோதல்களும் வன்முறையும் மனித உரிமை மீறல்களும் தமிழ் அகதிகள் மீதான பகைமை உணர்வை வளர்க்கவும் விடுதலைப் போராட்டம் பற்றிய அக்கறை குறையவும் உதவின. 1986க்குப்பின் ஐரோப்பிய வலதுசாரி ஏடுகள், முக்கியமாக அதிக விற்பனையுடைய நாளேடுகள், தமிழ் அகதிகட்கும் இனவிடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களை ஊக்குவிக்கும் முறையில் செய்திகளைத் தெரிவு செய்து வெளியிட்டனர்.
ஐரோப்பிய அரசாங்கங்களின் மனித உரிமை அக்கறை அவர்க ளது முதலாளித்துவ நலன்களைப் பேணும் ஒரு கருவியே ஒழிய
26 R

வேறில்லை. இலங்கை அரசாங்கத்தின் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் தென்னிலங்கையில் 1989ல் நிகழ்ந்த போது, ஒருபுறம் கண்டனத் தீர்மானங்கள், மறுபுறம் அரசாங்கம் கவிழாத விதமான ஆதரவு, பின்பு மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றத்துக்குப் பாராட்டு என்ற விதமாக நாடகமாடினார்கள். 1994ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அவர்களது நலன்களைப் பாதிக்காததால், இன்றைய ஆட்சி யும் அவர்களது ஆதரவைப் பெறுகிறது.
தமிழ் மக்களது அடிப்படை உரிமைகட்கும் இன விடுதலைக் குமான போராட்டத்தின் நியாயத்தை மேலை நாட்டு மக்களிடம் விளக்கும் தேவை உள்ளது. மேலை நாட்டு மனித உரிமை இயக் கங்களுக்கும் பிற பொது நிறுவனங்கட்கும் அரசியற் கட்சிகட்கும் தமிழ் மக்களின் நிலையை விளக்கும் தேவை உள்ளது. ஆயினும் விடுதலைப் போராட்டத்தை ஒரு மக்கள் போராட்டமாக வளர்த் தெடுப்பதற்கு மாற்றீடாக எந்த அயல் ஆதரவும் அமைய முடியாது. ஐ.நா.சபையின் தலையீடு, இந்தியாவின் குறுக்கீடு என்பன பற்றிய மயக்கங்கள் நம்மிடையே இன்னமும் மிகுதியாக உள்ளன. நாம் நமது வரலாற்று அனுபவங்களையும் உலக வரலாற்று அனுபவங்களையும் ஆழமாக ஆராயும் தேவையையே இது உணர்த்துகிறது.
தமிழ்த் தேசியவாதிகள் தம்மை யாருடன் இணைத்து நோக்கி வந்துள்ளனர் என்பது அவர்களது அரசியல் முனைப்பை அடையாளங் காட்ட ஓரளவு உதவும். 1950கள் வரையில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்கள் ஈழத்தமிழ்த் தலைவர்களது உதாரண புருஷர்களாக இருந்தனர். 1956க்குப் பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதிப்பைக் காணக்கூடியதாக இருந்தது. 1971ல் இந்திய ஆளும் வர்க்கத்துடனான நெருக்கத்தைத் தமிழரசுக் கட்சி நாடியது. 1971ல் வங்காளதேசப் பிரிவினையில் இலங்கை அரசாங்கத்தின் நடுநிலைமை இந்தியாவுக்கு எரிச்சலூட்டியதை நினைவு கூரலாம். 1980ல் அதிகாரத் துக்கு மீண்ட இந்திரா காந்திக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இருந்த பாரிய முரண்பாடு, கூட்டணியை இந்தியாவுக்கு நெருக்கமாக்கியது: இச் சூழலில், இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளை முடுக்கிவிடுவதில் அக்கறை காட்டியதில் வியப்பில்லை. 1983ன் பின்பு, இந்தியா தமிழீழத்தை விடுதலை செய்யும் என்ற கனவு பல விடுதலைப் போராட்டக் குழுக்களிடம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அமைதி

Page 16
காக்கும் படையின் வருகை வரை, இந்தியா பற்றிய பிரமைகள் வலியன வாகவே இருந்தன.
1960களின் முற்பகுதியில், இஸ்ரேலின் உருவாக்கத்தைத் தமிழரசுக் கட்சிக்குள் இருந்த ஒரு தீவிர தமிழ்த் தேசியவாதப் பிரிவு மிகவுங் கொண்டாடியது. இதன் விளைவாக, லியொனிட் யூரிஸ் எழுதிய "எக்ஸோடஸ்" என்ற நூல் தமிழாக்கப்பட்டுச் சுதந்திரனில் தொடர்கட்டுரையாக வந்தது. 1966ல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் இஸ்ரேல் பற்றிய மோகம் தணிய நேரிட்டது. 19711974 கால இடைவெளியில் அமிர்தலிங்கம் ஈழத்து முஜிபுர் என்று அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. முஜிபுர்ரஹ்மானின் அரசியற் செல்வாக்கின் சரிவும் அவரது கொலையும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தன. பின்னர் அமிர்தலிங்கம் ஈழத்து அரFாத் என்று அழைக் கப்பட்டார். இலங்கையிற் பலஸ்தீன விடுதலை பற்றிய அக்கறையின் வளர்ச்சியில் இடதுசாரிச் சக்திகட்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த அடையாளத்தைத் தமிழ்த் தேசியவாதத்தலைமை நாடியதற்கு, அன்று, தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாகி வளர்ந்த முற்போக்கான போராட்டச் சிந்தனைகட்கும் ஒரு பங்கு உண்டு. பலஸ்தீன விடு தலையுடனும் பிற ஏகாதிபத்திய விடுதலைஇயக்கங்களுடனும் தமிழ்ப் போராளிக் குழுக்கள் கண்ட ஒற்றுமை உணர்வு இன்னமும் தொடர் கிறது. இன்று, விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளில் ஒரு பகுதியினர், எக்ஸோடஸ் ள்ன்ற Rயோனிய நூலைத் தமிழிற் தொட ராக வெளியிடுவது, அங்கு இன்னமும் பழைய பிற்போக்குச் சிந்தனை யின் வேர்கள் உள்ளதையே நமக்குக் காட்டுகின்றது. தமிழ்த் தேசிய வாதம், தனது அடையாளத்தைத், தெளிவாக, உழைக்கும் வர்க்க அடிப்படையில் அமைக்காதளவில், இத்தகைய முரண்கள் எதிர்பார்க்க வேண்டியனவே.
தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடையாளம் இலங்கையின் சிறுபான்மை இன மக்களைப் பெருமளவில் ஒன்று திரட்டும் நோக்கு டையதாக இருந்தது. வேண்டுமானால் இதைத் தென்னிந்தியாவின் திராவிட இனஅடையாளத்துடன் கொஞ்சம் ஒப்பிடலாம். தமிழ்ப் பேசும் மக்களின் வெவ்வேறு பிரிவினர்களின் தனித்துவமானதன்மை களும் குறிப்பான பிரச்சினைகளும் இந்த அடையாளத்திற்குச் சில நெருக்கடிகளைத் தோற்றுவித்தன. தமிழரசுக் கட்சி இந்த அடை

யாளத்தை வலியுறுத்திய போது, யாழ்ப்பாண வேளாள மேட்டுக் குடி களின் வெளிவெளியான அடையாளத்தைக் கொண்ட தமிழ்க் காங் கிரஸினதும் அதற்கு முந்திய பெருங்குடி மக்களதும் தலைமைகளி னின்றும் வேறுபட்ட ஒரு தோற்றத்தை உருவாக்கியது. முன்னைய அடையாளம், தாழ்த்தப்பட்ட சாதியினரின் குரலை மறுத்து, அனை வருக்காகவும் பேசும் உரிமையை உயர்குடித் தலைவர்கட்கு ஒதுக்க முற்பட்டது. தமிழரசுக் கட்சியின் புதிய பரந்துபட்ட தமிழ் இன அடையாளமும் வெகு விரைவிலேயே உதிரத் தொடங்கி விட்டது.
தமிழரசுக்கட்சி கேட்ட சமஷ்டி, வடக்குக் கிழக்கு மாகாணங் களின் அதிகாரத்தைத் தமிழ்ப் பேசும் மக்களின்பேரிலான ஒரு ஆட்சிக்கு உட்படுத்த முயன்றபோது, மலையகத் தமிழர் பற்றிய தீர்வு ஆலோசனை அவர்களிடம் இல்லை என்பது தெளிவாகி விட்டது. முஸ்லிம்களிற் பெரும்பாலானோர் இம் மாகாணங்கட்கு வெளியிலேயே வாழ்ந்தனர். தமிழரசுக் கட்சியின் சமஷ்டித் தீர்வு, இலங்கை முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களின்உரிமைகள் பற்றிய அக்கறை இல்லாததாகவே இருந்தது. 1956 தேர்தல் வெற்றியை அடுத்து நடந்த திருகோணமலை மாநாட்டுக்குச் சற்று முன்பு மட்டக்களப்பு மாவட்டத்திற் தமிழரசுக் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான காரியப்பர் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திடம், நாங்கள் எங்களுக்கு ஒரு 'இஸ்லாமிஸ்தான் வேண்டுமென்று கேட்டால் ஒப்புக் கொள்வீர்களா என்று கேட்ட போது, செல்வநாயகத்தால் மறுக்க முடியவில்லை. இதைக் காரியப்பர் மாநாட்டு மேடையிற் கூறிய போது எல்லாரும் கைதட்டி ஆரவாரித்தாலும், இக்கேள்வி முஸ்லிம்களின் தனித்துவத்தை வலியுறுத்தியது என்பதைத் தமிழ்த் தலைவர்கள் கவனிக் காமல் இருந்திருக்கமுடியாது. ஒவ்வொரு தேர்தலின்முன்பும் வசதியாக ஒரு முஸ்லிம் வேட்பாளரைத் தெரிவதும் தேர்தலின் பின்பு அவர் கட்சி மாறுவதும் முஸ்லிம்களின்நம்பகமற்ற போக்காக விளங்கிக் கொள்ளப் பட்டதேயொழியத் தமிழரசுக் கட்சியால் முஸ்லிம்களது பிரதிநிதியாகச் செயற்பட முடியாமையின்விளைவு என்பது சரியாக உணரப்படவில்லை. 1956க்குப்பின், தமிழரசுக்கட்சித்தலைமை மட்டக்களப்புத்தமிழர்களைத் தன்அரவணைப்புக்குட்கொண்டுவரமும்முரமாக முற்பட்டாலும், աnլpւն பாண விரோத உணர்வு ஒயாததால், எப்படியாவது, தமிழரசுத் தமிழ்த் தேசியவாதத்துக்குமுரணாகநின்ற யாராவது ஒரு தமிழரைமட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்தே வந்தது.
29

Page 17
தமிழரசுக் கட்சித் தலைமை 1965ல் யூ.என்.பி. ஆட்சியில் இணைந்து, 1970 ல் தமிழர்களைக் காப்பாற்றும் பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்த பிறகு, தமிழ் மக்கள் முன்னளவுக்கு அதை நம்பும் நிலைமையில் இருக்கவில்லை. தரப்படுத்தல், 4வது தமிழா ராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதங்கள், புதிய அரசியல் யாப்பு வரைவு போன்றவை தமிழ் மக்களிடையேதாம் ஒரு ஒடுக்கப்பட்ட இனம் என்ற உணர்வை வலியுறுத்தியதாலேயே, ஏதோ வகையிலான போராட்ட ஐக்கியத்துக்கான சூழ்நிலை உருவானது. ஆயினும், 1972ல் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸையும் தொண்டமானையும் மட்டுமன்றி ஐ.தே.க. பிரமுகர்களையும் இணைத்துத் தன்னை வலுப்படுத்த எடுத்த முயற்சி, 1977 தேர்தலுக்கு முன்னமே குலைந்து விட்டது. தொண்ட மானும் ஐ.தே.க. தமிழர்களும் தமது நலன்களைப் பேணப் பிரிந்து போய்விட்டார்கள். 1974ல் தரப்படுத்தல், மாவட்ட அடிப்படையிலான தெரிவு என்ற வடிவு பெற்றவுடன், கிளிநொச்சிக்குத் தனி மாவட்டம் கேட்கப்பட்டது. தமிழரசுக் கட்சி (கூட்டணியும்) காட்ட முயன்ற இன ஒற்றுமையின் வறுமையை இது புலனாக்கியது. 1983 வன்முறையின் பின்னரே வடக்குக் கிழக்கின் தமிழ் மக்கள் ஒன்றுபட்டுப் போராடு வதற்குச் சாதகமான நிலைமை உருவானது.
தமிழ் இன விடுதலைக்கான ஆயுதமேந்திய போராட்டம் விரிவு பெற்ற சூழ்நிலையிற் கூட, அதற்கு முஸ்லிம்களது ஆதரவின் வரை யறைகளைப் போராட்ட இயக்கங்கள் விளங்கிக் கொள்ள இயலாமற் போனதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆயினும், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழ்த் தேசத்தின் ஒரு பகுதியினர், எனவே அந்த விடுதலைப் போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கவும் விடுதலை இயக்கங்களின் ஆணைகளை ஏற்கவும் கடமைப்பட்டவர்கள் என்ற மனோபாவம் இவற்றுள் முக்கியமானது. இதன் விளைவாகவே, தமிழ்முஸ்லிம் உறவுகள் கிழக்கு மாகாணத்தில் சீர்குலைய நேர்ந்தது. இதை எவ்வாறு சீர்செய்வது என்ற தெளிவுதமிழ்த் தேசியவாதிகள் பலருக்கு இன்னும் இல்லை. இன்றுங் கூட, முஸ்லிம்கள் தமிழ்த் தேசிய இனத் தின் ஒரு பகுதி என்று வாதிப்போர் உள்ளனர். அதேவேளை, இந்தப் பிரச்சினையை எளிதாகத் தீர்க்கும் முறையில் முஸ்லிம்கள் ஒரு தேசம் என்று, முஸ்லிம் அரசியற் கட்சிகள் கூடக் கூறத் துணியாதவாறு, வாதிக்கிற முன்னாள் விடுதலைப் போராளித் தலைவர்களும் இருக் கிறார்கள்.

முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தனித்துவத்தை ஏற்று: அவர்களது தேவைகளைத் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணயத் துக்கான போராட்டத்துடன் இணைத்துப் பிரச்சனைகளை அணுகும் மனப்பக்குவம் எந்த விடுதலை இயக்கத் தலைமையிடத்தும் இதுவரை காணப்படவில்லை. எல்லாருக்காகவும் தமது குரலிற் பேகம் மே பாவம் இன்னமும் தொடர்கிற காரணம், தமிழ் தேசியவாதத்தின் சிந்தனை மரபுடன் தொடர்புடையது.
ஆயுதமேந்திய போராட்டத்தையொட்டிய நெருக்கடிக்குத் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அதிகளவில் முகங்கொடுக்க நேரிட்டது. கல்வி உத்தியோகத்துறைகளிற் காட்டப்பட்ட பாரபட்சம் உயர் சாதியினரையும், குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரையுமே பாதித்தது. அரசாங்கத்தின் படைகள் ஏற்படுத்திய நெருக்குவாரமோ சகல தமிழர் களது இருப்பையும் அவர்களது மண்ணிலேயே கேள்விக்கு உட்படுத் தியது. தப்பி ஓடும் வசதிகூடத் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகம் இல்லாததால், விடுதலை இயக்கங்களில் இணைந்து போராடும் நிலை அவர்கட்கு அதிகம் ஏற்பட்டது. நெருக்கடியின் உக்கிரம் அதிகமாக ஆயுதமேந்தியோரில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களது விகிதா சாரமும் அதிகமாகியதை நாம் அறியலாம்.
எவ்வாறாயினும், குறிப்பிட்ட சில இயக்கங்களுட் தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாயிருந்ததன் காரணமாக, 1987ல் அவர்கள் சம்பந்தப்பட்ட இயக்கங்களிடம் அதிகாரம் வந்த போது, பழைய சாதியக் கொடுமைகட்கெதிராகப் பழிவாங்கும் முனைப்புடன் சிலர் செயற்பட்டதால், அரசியல் ரீதியாக அவர்கள் சார்ந்த இயக்கம் விண் பகைமையைச் சம்பாதித்ததையும் நாம் அறிவோம். ஆயினும் சாதியத்தைத் தளரவைக்க அந்த நடவடிகைகள் உதவவில்லை. 1990களில் அரச படைகட்கு எதிராக நின்று போராடும் சக்திகளிடையே, தாழ்த்தப்பட்ட சாதியோர், பெண்கள் ஆகியோரது தொகை அதிகமாகியதன் விளைவாகச், சமூக ரீதியாகச் சில முக்கிய மான மாற்றங்கள் இயலுமாயின. ஆயினும் தமிழ்த் தேசியம் பேசும் மேட்டுக் குடிகளிடையேயுள்ள சாதித்தடிப்பு இன்னமும் அகலவில்லை என்பது கசப்பான ஒரு உண்மை. அவர்கள், தமிழர்களது விடுதலைப் போராட்டம், தமிழர் அனைவருக்காகவும் பேசும் அவர்களது குரலை மறித்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள். இதன் விளைவாகவே,

Page 18
இதுவரை போராடியது போதும், இனிக் கெஞ்சி மன்றர்டியாவது சமாதானத்துக்கு வருவோம் என்றவாறான வாதங்கள் சிலரால் முன் வைக்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகள் ஒரு வெகுஜன இயக்கமல்ல. அவர்களது அணுகுமுறை ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதுமல்ல. போராட்டச்சூழலும் அதன் பல்வேறு நிர்ப்பந்தங்களுமே அவர்களைப் பொதுமக்களது கருத்தை மதிக்குமாறு செய்து வந்துள்ளது. அவர்களது அணுகுமுறை, அடிப்படையில், ராணுவப் பார்வையை உடையது. அவர்களது தவறுகளைவிட அதிகளவில் அரசாங்கப் படைகளது கொடுமைகள் மக்களைப் பாதிக்கின்றன. நியாயமான தீர்வு ஒன்றை இயலாதவாறு செய்வதில் இலங்கை அரசாங்கங்களது பங்கே பெரியது. இச் சூழலிற், போர் மூலமே தீர்வை அணுகும் நிலை மேலும் தொடர் கிறது. ஆயினும், போர் தீர்வைக் கொண்டுவரப் போவதில்லை. இலங்கை மக்கள் அனைவருமே சமாதானத்தை நாடுகிறார்கள். ஆயினும் அரசியற் தலைமைகள் அதற்கு மாறாகவே செயற்படு கின்றன. இது நமது சனநாயகம் எவ்வளவு போலியானது என்பதையே காட்டுகிறது. போரின் முடிவு மேலும் மேலும் சனநாயகத்தின் மீதே தங்கியுள்ளது. இந்த வகையில், சமாதானத்துக்கான ஒரு வலிய சனநாயக இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ளது.
அரசின் இன ஒழிப்பு யுத்தம் உள்ளவரை, அதற்கு எதிரான போராட்டமும் ஆயுதமேந்தும் தேவையும் தவிர்க்க முடியாதவை. அதே வேளை, நாட்டின் அரசியலைச் சனநாயகப்படுத்தி அதிகாரப் பரவ லாக்கத்தை வலியுறுத்தும் ஒரு புதிய சனநாயக இயக்கத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. தென்னிலங்கையில் இது சமாதான இயக்கமாகவும் வடக்குக் கிழக்குப் பகுதியில் இது விடுதலை இயக் கத்தைச் சனநாயகப்படுத்தும் நடவடிக்கையாகவும் விரிவுபடுத்தப்பட வேண்டி உள்ளது.
தேசிய இனப்பிரச்சினை ஆயுதத்தீர்வையே நாடும் வரை, தீர்வு பற்றிப் பேசுவோர் போரிடும் படைகள் மீது ஆளுமை உள்ளோராக இருப்பது தவிர்க்க இயலாதது. அவர்களது நலன்கள் மக்களது நலன் களாக இல்லாத அளவிற் போர் நீடிக்கும் என்பதை நாம் உணர்வோம். கடந்த பதின்மூன்று ஆண்டுகாலப் போரினின்று நாம் கற்க வேண்டிய

பாடங்களுள் முக்கியமாவது ஜனநாயகம் தொடர்பானது. அது இல்லாமல் எந்தத் தேசிய இனத்திற்கும் நன்மை இல்லை.
காலங்காலமாகப் பிளவுண்ட ஒரு சமுதாயம் ஒரே குரலிற் பேசமுடியாது என்பதையும் அவ்வாறு ஒரு குரலை உருவாக்க முனை யும் போது பெரும்பாலானோரது நலன்கள் புறக்கணிக்கப்படக் கூடும் என்பதையும் நாம் மனதில் இருத்துவது அவசியம். மக்கள் தமது குரலை உயர்த்திப் பேசும் வரை அவர்களது குரல்கள் களவாடப்படவும் பறிக்கப்படவும் நேரும். ஒரே குரலிற் பேசுவதை வலியுறுத்துவோர், இன்றுவரை அந்த முயற்சியின் தீய விளைவுகளை எண்ணிப்பார்ப்பது நல்லது. பரந்துபட்ட மக்களின் பல்வேறு குரல்களிடையே உள்ள ஒற்றுமைகளை அடையாளம் கண்டு அதை வலியுறுத்துவதன் மூலமே நியாயத்துக்கான போராட்டத்தை வலிமைப்படுத்தவும் அதற்கான ஆதரவை விரிவுபடுத்தவும் இயலும்,
03.11.96 (தேடல், கனடா)

Page 19
சுட்டதேசியமா சுடாத தேசியமா?
தேசியம் பற்றிய விவாதம் இலங்கையில் மட்டுமன்றிப்புலம் பெயர்ந்த தமிழர் நடத்தும் ஏடுகளிலும் சில காலமாக நடைபெறுகிறது. விவாதத்தின் முனைப்பு ஏட்டுக்கு ஏடு வேறுபட்டு இருந்தது வியப்புக் குரியதல்ல. தேசியத்தை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் நோக்காமல் ஒரு குறிப்பிட்ட அரசியற் சமுதாய நெருக்கடியை வைத்து ஆராய்வதன் ஆபத்துக்களை இவ்விவாதங்களிற் சில புலப்படுத்தின. 'தேசியமா, ஃபாஸிஸ்மா’ என்ற விதமான விவாதம், இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்பற்றவை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு சில காலமாக நடந்தது. இவ் விவாதத்தின் நோக்கம் குறிப்பிட்ட ஒரு இயக்கத்தை ஃபாஸிஸ் சக்தி என்று அடையாளங் காட்டி அதை நிராக ரிக்கும் தேவை சார்ந்ததாகவே தென்பட்டது. தேசியசக்தி என்பது முற்போக்கானது என்றும் ஃபாஸிஸம் எவ்வாறோ அதனின்று வேறு பட்ட பிற்போக்குச்சக்தி என்றுங்காட்டும் இம்முயற்சி, தேசியவாதத்தி னின்றே ஃபாஸிஸம் எழுகிறது என்ற வரலாற்று உண்மையை மூடிக் கட்ட முற்பட்டது. v
இன்னொருபுறம், தேசியவாதமா, வர்க்கப் பேராட்டமா’ என்ற விதமாக விவாதத்தை வளர்க்கும் முயற்சிகள் தொடர்கின்றன. “வர்க்கப் போராட்டம் என்ற கோட்பாட்டுக்கு இனி இடமில்லை. தேசியமே அடிப்படையானது" என்ற விதமான வாதங்கள் மாக்ஸியத்தையும், மாக்ஸிய லெனினிய இயக்கங்களையும் தாக்கும் நோக்குடனேயே முன்வைக்கப்பட்டன. பெண்ணியத்தின் பேரால், மாக்ஸியம் பெண் ணுரிமைக்கு எதிரானது என்று பிரசாரஞ் செய்யும் சில மேட்டுக்குடி மாதரின் இலக்கும் இவ்வாறாகவே இருந்தது. இன்று, தலித்தியத்தின் பேரால், சாதி முரண்பாடுகளையே அடிப்படையானவையென வலி யுறுத்த முனைவோருட் சிலர் வர்க்க முரண்பாடுகளை நிராகரிக்க

முற்படுவதையும் நாம் காணலாம். இங்கெல்லாம், குறிப்பிட்ட ஒடுக்கு முறைகளை மட்டுமே அடையாளங் காணுகின்றவர்கள், அவற்றுக்கு அடிப்படையாக உள்ள சமுதாய அமைப்பையும் உற்பத்திஉறவுகளையும் இவற்றின் சர்வதேசப் பரிமாணத்தையும் முற்றாகவே தவற விடுகின்ற னர். இதுகுறுகியகாலத்தில் அவர்கட்கு வசதியானது.ஆயினும் முடிவில் சமுதாயஒடுக்குமுறைக்கு எதிரானபிரதானபோராட்டத்தைப் பலவீனப் படுத்துவது.
தேசியவாதத்தை அழகுபடுத்தி அது தன்னளவிலேயே முற் போக்கான ஒன்று என்று காட்ட முனைவோர் உள்ளனர். இவர்களுள் ஒரு பகுதியினர், தேசியவாதத்தைத் தம் சுரண்டும் வர்க்க நலன்களுடன் நெருக்கமாகப் பிணைத்துள்ளவர்கள். அந்த நலன்களைப் பொறுத்த வரை தேசியவாதம் மிகவும் அவசியமானது எனினும் அவர்களால் எவ்வளவு தூரத்திற்குத் தேசிய நலன்களைப் பேண முடிகிறது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம். அது இங்கு உடனடியாக முக்கியமான தல்ல. மறுபுறம், தேசிய இன ஒடுக்குதலின் விளைவாகத் தேசிய விடுதலையை ஆதரிக்கும் பலரிடையே தேசியம் பற்றியும் வர்க்க முரண்பாடுகட்கும் தேசியப் பிரச்சனைக்கும் உள்ள உறவு பற்றியும் சில தெளிவினங்கள் உள்ளன. இடதுசாரிகளைத் தமிழ் இனவிரோதிகளாகச் சித்தரித்து வந்துள்ள அரை நூற்றாண்டுக்கால அரசியல் வரலாற்றின் சுமைகளில் இதுவும் ஒன்று. இதன் பின்னணியிலே தேசியவாதம் தொடர்பான சில கேள்விகளை நாம் நம்மையே கேட்டுக்கொள்வதும் தேசியவாதம் பற்றிய மாக்ஸிய நிலைப்பாடு எவ்வாறு அமையக்கூடும் என்று ஆராய்வதும் பயனுள்ளது.
தேசம் என்ற அடையாளம் வரலாற்றில் மிகவும் அண்மைக் காலத்தினது. முதலாளியத்தின் வரவை அடுத்தே ஐரோப்பாவில் தேசிய அரசு என்ற கோட்பாடு உருவாயிற்று. தேசம் என்பதற்கான வரைவிலக் கணங்கள் குறிப்பான அரசியற் பிரச்சினைகள் சார்ந்தே எழுந்தன. சமகாலத் தேசிய அரசுகளும் அவை சார்ந்த தேசியக் கோட்பாடுகளும் உருவாகுமுன் மக்கள் பல்வேறு விதங்களில் தம்மை அடையாளங் கண்டனர். இனம், மொழி, மதம், பிரதேசம், சாதி, வம்சாவழி என்பன மட்டும் அல்லாமல் ஊர்களும் தொழில்களும் கூட மனித சமுதாயப் பிரிவுகளை அடையாளங் காட்டின. எந்த வேறுபாடு முதன்மை பெறு கிறது என்பது ஒவ்வொரு சமுதாயத்தினதும் குறிப்பான வரலாற்றுச்

Page 20
சூழலை ஒட்டியது. மதங்களின் பேரால் வேறுபாடு கொண்ட சமூகங்க ளுள், மதங்களிடையிலான சுமுக உறவு இருந்துள்ளது. அவ்வாறே பல மொழிகளைப் பேசும் வேறுபட்ட சமூகப் பிரிவினர் ஒருங்கிணைந்த சமுதாயங்கள் உள்ளன. பல வகைகளிலும் ஒற்றுமையிருந்தும் இணைய முடியாதிருக்கும் சமுதாயங்கள் உள்ளன. லத்தின் அமெரிக்காவில் தேசங்கள் எவ்வாறு உருவாயின என்பதை ஐரோப்பாவில் தேசங்கள் உருவான சூழ்நிலையுடன் ஒப்பிட்டால் தேசம் என்பதன் தெளிவினமான தன்மையை நாம் காணலாம். ஆபிரிக்காவின் தேசங்கள் கொலனித்துவ எசமானர்கள் வரைந்த எல்லைகளால் உருவானவை. ஒரேமொழியையும் மதத்தையும் பகிரும் அரபு நாடுகள், கொலனித்துவத்தாற் கூறு போடப் பட்டு உருவானவை. அதேவேளை, குர்திஷ் தேசிய இனம் தனக்கென ஒரு அரசு இல்லாதவாறு மூன்று நாடுகளிடையே கூறுபோடப்பட்டது.
தேசியப் பிரச்சினை சுய அடையாளந் தொடர்பான பிரச்சினை என்பது உண்மை. இந்த அடையாளம் எவ்வளவு தூரம் இயல்பானது, எவ்வளவுதூரம் மக்களது நலன் தொடர்பானது என்பது ஒருபுறமிருக்க, தேசியம் உலகெங்கும் ஒரு முக்கியமான அரசியற் பிரச்சினையாக உள்ளது என்பதை நாம் அறிவோம். பிரச்சனையின் தன்மையும் கூர்மை யும் வரலாற்றுக் காரணங்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இன ஒடுக்கலும் அடையாளத்தின் மறுப்பும் தேசிய உணர்வின் தோற்றத் தையும் வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளன. மிகவும் சிக்கலான ஒரு இன, மொழி, பண்பாட்டுச் சேர்க்கையால் இந்தியத் துணைக் கண்டத் தின் மீது இருந்த நூற்றாண்டுக் கால கொலனி ஆதிக்கம், குறுகிய கால அளவிலேனும், இந்தியர் என்ற அடையாளத்தை அங்கு முதன்மைப் படுத்தியது. அரசியல் விழிப்புடைய இந்தியர்கள், இந்தியாவை அன்று ஒரு தேசமாகவே கண்டனர். இவ்வாறான உணர்வு, அவர்கள்து இன வாரி, மொழிவாரியான அடையாளங்களை நிராகரித்து எழவில்லை." 1947ல், பாரிய பண்பாட்டு வேறுபாடுகளின் அடிப்படையில் இல்லாமல், இந்தியா, மத அடிப்படையிலேயே இரண்டு நாடுகளாகப் பிரிந்ததற்குக் காரணம், மத அடிப்படையிலான ஒடுக்கல் பற்றிய முஸ்லிம் உயர் வகுப்பினரது அச்சமே. இதைப் பிரித்தானிய ஆட்சி பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்த முயன்றதும் உண் மையே. திராவிடர் என்ற அடையாளம், கொலனி ஆட்சியில் மாநிலங் கள் அமைக்கப்பட்டிருந்த முறையால் ஊக்குவிக்கப்பட்டது. பார்ப்பன
ரது ஆதிக்கத்திற்கு எதிரான பிற உயர் சாதித் தென்னிந்தியர் (முக்கிய

மாகத் தமிழர்) கொண்டிருந்த பகை உணர்வு ஆரிய துவேஷமானது. இந்தத் திராவிடத் தேசியத்தால் வெகு காலம் தாக்குப்பிடிக்க முடியாத மைக்கு மொழிவாரித் தேசியத்தின் எழுச்சி ஒருமுக்கிய காரணம்.
இந்திய ஆளும் வர்க்க நலன்கட்காக இன்று தம் மண்ணையும், வாழ்க்கை முறையையும் பறிகொடுத்துவரும் பழங்குடிச் சமூகங்கள், தமது இருப்பை உறுதிப்படுத்தப் போர்க்கோலம் பூண்டுள்ளன. இந்தி யாவின் பல்வேறு இனங்களிடையே சாதி, மதம், மொழி, பிராந்தியம் என்பனவற்றின்அடிப்படையிலான உணர்வுகளும்தமதுதணித்துவத்தை வலியுறுத்தும் தேவையும் எழுந்துள்ளன. இதன் காரணங்களுள் பொரு ளாதாரத் தேவைகளும் வர்க்க நலன்களும் முக்கியமானவை. இந்தி - இந்து தேசியவாதத்தின் பின்னால் நிற்கும் சக்திகள் சாதியத்தையும் பேணுகின்றன. அவர்களது எதிரி ஏகாதிபத்தியம் அல்ல. (இலங்கையில் உள்ள பெளத்த-சிங்கள இனவெறியர்களான ஜாதிக சிந்தனய, ஹெல உருமய குழுவினர் போன்றோருக்கும் இது பொருந்தும்). இவர்கள் பிற சிறுபான்மையினரது அடையாளத்தை மறுத்தும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பிற்படுத்தப்பட்டோராகவே பேணுவதன்மூலமும் இந்தியா வின் பல்வேறு தேசிய இனங்கட்கும் இனப்பிரிவுகட்குமிடையே மோதல்களை ஊக்குவிக்கிறார்கள். இந்து - முஸ்லிம் மோதலாயினும், சாதிப் பூசலாயினும், கன்னடர் - தமிழர் மோதலாயினும், அதற்குப்பின் னால் இருந்து இயங்கும் சக்திகள் நிச்சயமாக இடதுசாரிகளல்ல.
ஈழத் தேசியம் பற்றிப் பேசுகிற போது, சங்கிலியன்காலத்துடன் 69C05 வரலாற்றுத் தொடர்ச்சியைக் காணும் பழக்கம் இன்னமும் இருக் கிறது. இன்று நமக்கு முன்னால் உள்ள தமிழ்த் தேசியம், சிங்களப் பேரினவாதத்தின் விளைவாக உருவானது எனலாம். இதன் தோற்றத் திற்குத் தமிழ் அதிகார வர்க்கத்தின் நலன்களுக்கும் சிங்கள அதிகார வர்க்கத்தின் நலன்கட்கும் இடையில் இருந்து வந்த முரண்பாடுகளின் பங்களிப்பு முக்கியமானது. ஆயினும், தமிழர் என்ற அடையாளம், அண்மை வரை, ஒரு தேசிய அடையாளமாக இருக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய பல்வேறு சுய அடையாளங்கள் நெடுங்காலமாக இருந்து வந்தவை தான். யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகள் தமது நலன் களைத் தமிழர் என்ற அடையாளத்தின் பேரிற் பேணிவந்த போது, அது தன்னளவிலேயே தேசியத்தன்மை பெறவில்லை.அதிகாரவர்க்கங்களி டையிலானபோட்டி, சிங்களப் பேரினவாத அரசியல் மூலம் இனஒடுக்க
7

Page 21
லாக விருத்தி பெற்றதன்மூலமே, தமிழர் என்ற அடையாளம் தனக்கான தேசியத் தன்மையைப் பெற்றது. இன்னமும் மலையகத் தமிழரையும் முஸ்லிம்களையும் இந்தத் தேசத்திற்குட் பொருத்துவது தொடர்பாக உள்ள குழப்பங்களும் முரண்பாடுகளும் தேசம் என்பது இயல்பான ஒரு மனித இருப்பல்ல என்பதையே நமக்கு வலியுறுத்தியது. தேசம் என்பது வரைவிலக்கணங்களாலன்றி வரலாற்று நிர்ப்பந்தங்களாலேயே உருவாகிற ஒன்று என்பதை நாம் மீண்டும் மீண்டுங் காண்கிறோம்.
நல்ல தேசியம் - கூடாத தேசியம், முற்போக்கான தேசியம்பிற்போக்கான தேசியம் என்றவாறான கருத்துக்கள், உண்மையில், தேசியத்தின் முரண்பாடான கூறுகளை அடையாளங் காட்டுவனவே யொழியத் தேசியத்தை வகைப்படுத்தும் வேறுபாடுகளல்ல. ஏனெனில், தேசியம், ஒருபுறம் அடக்குமுறைக்கான கருவியாகப், பிற தேசங்களின் மீது ஆதிக்கம் செலுத்திச் சிறுபான்மை இனப்பிரிவுகளின் அடை யாளத்தை மறுக்கும் பண்பையுடையது. மறுபுறம், தன்னை ஒடுக்குகிற சக்திகளை எதிர்த்துப் போரிடும் விடுதலை வேட்கையையுடையது. ஒரு தேசியவாதி ஏககாலத்தில் இரு பண்புகளையும் வெளிப்படுத்தக் கூடும் என்பதை நாம் (சிங்களப் பேரினவாதத்தின்) இலங்கைத் தேசியத்திலும், தமிழ் ஈழத் தேசியத்திலும் பன்முறை கண்டுள்ளோம். இவ்வாறான பண்பு தேசியத்திற்கு மட்டுமே உரித்தல்ல. எந்த அடையாளமும் மற்றைய மனித சமுதாயப்பிரிவுகளினின்று ஒரு சமுதாயப் பிரிவைத் தனிமைப்படுத்தி, அதன்நலன்களைப் பிறரதுநலன்களினின்றும்பிரித்து முதன்மைப்படுத்தி காணும் போது, சமுதாயப் பிரிவுகளிடையிலான முரண்பாடுகளின் பகைமையான பண்பு மேலோங்க இடமுண்டு. மனிதரதும் அடிப்படையான தேவைகள் நிறைவேற்றப்படாத வரை, தனி மனிதர் என்ற அளவிலும் சமுதாயப் பிரிவு என்ற அளவிலும் ஒவ்வொரு மட்டத்திலும் மனித உறவு மனிதசமத்துவத்தின்அடிப்படை யில் அமையாத வரை, மனிதர் தமது இருப்பை மட்டுமன்றிச் சுய அடையாளத்தையும் பேணும் உரிமை அச்சுறுத்தப்படாத நிலைமை உருவாகும் வரை, மனிதரிடையே உள்ள வேறுபாடுகளின் பகைமை யான பண்புகள் எழுச்சி பெறுவது தவிர்க்க இயலாதது.
மனித சமத்துவம் என்பது எல்லா மனிதரையும் ஒரே அச்சில் வார்க்கும் செயலால் ஆவதல்ல. அவ்வாறு கொள்வதுமாக்ஸியமுமல்ல. மாக்ஸியத்தின் இலக்கு சமத்துவமான சமுதாயம், மனிதரை மனிதர் எவ்வகையிலும் ஒடுக்கிச் சுரண்டாத சமுதாயம், ஆற்றலுக்கு ஏற்ப

உழைப்பும் தேவைக்கேற்ற நுகர்வும் என்றவாறான சமதர்ம சமுதாயம். ஆயினும் அது நம் முன் இல்லை. அதற்காக உழைப்பவர்கள் தம் கண்முன் உள்ள நிசமான உலகைப் புறக்கணிக்க இயலாது. யதார்த்த உலகை அறியாமல் அதை மாற்ற இயலாது. எனவே ஒரு மாக்ஸியவாதி தேசியமோ மதமோ சாதிகளோ ஆணாதிக்கமோ இல்லை என்று பாசா ங்கு செய்ய முடியாது. புரட்சி வந்துவிட்டால் இவை எல்லாமே போய் விடும் என்று கூறி நிஷ்டையில் அமர்ந்து விட முடியாது. சுரண்டற் சமுதாயத்தின் பிரதான முரண்பாடு உற்பத்தி உறவுகள் தொடர்பானது தான். அது சமுதாயத்தை வர்க்கங்களாகப் பிளவுபடுத்துவது உண்மை. அந்த முரண்பாடான அடிப்படையில் கொண்டே பிற முரண்பாடுகள் எழுச்சி பெறுகின்றன என்பதும் உண்மை. ஆயினும், நம் புரட்சி வரும் வரைசும்மாகிடவுங்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போதிக்கிற ஒருவர், நிச்சயமாக நல்ல மாக்ஸியவாதியல்ல.
பகுத்தறிவுக் கண்ணோட்டத்திலும் மனித சமத்துவம் பற்றிய &FID&56) நோக்கிலும் பார்க்கும் போது, மதம் பிற்போக்கானது தான். ஆனால் தனிமனிதரது மத நம்பிக்கைகளை மறுப்பது மாக்ஸியத்துக்கு அவசியமில்லை. தனிமனிதரது மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்குமான சுதந்திரம் எந்த ஒரு தனிமனிதரையும் மாக்ஸியவாதியாக்காமற் போக லாம். ஆயினும் மத அடிப்படையிலான ஒடுக்கு முறைக்கு எதிரான ஒரு கோட்பாடு என்றளவில், அது மனித விடுதலைக்கானகோட்பாடாகிறது. அது, ஈற்றில், மாக்ஸியத்தின் சமதர்ம இலக்குக்கு உதவுகிறது. இது போலவே, சாதி ஒடுக்குமுறை, பெண்ணடிமை, தேசிய ஒடுக்குமுறை போன்ற சகல ஒடுக்குமுறைகட்கும் எதிரான போராட்டங்களிலும் ஒரு மாக்ஸிய்வாதியின் நிலைப்பாடு போராட்டத்திற்கு ஆதரவாகவே அமையமுடியும். இக்கண்ணோட்டத்திலேயே சுயநிர்ணயக் கோட்பாடு மாக்ஸியவாதிகட்கு இசைவான ஒன்றாகிறது.
எந்தவொரு தேசிய விடுதலையும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் குப் பயன்தருமா தராதா என்று கணிப்பிட்டுத்தான் மாக்ஸியவாதிகள் சுயநிர்ணயம்பற்றிமுடிவெடுக்க வேண்டிய தேவைஇல்லை. ஏனெனில் நியாயத்துக்கான போராட்டங்கள், ஈற்றில் ஒன்றையொன்று ஆதரிப் பன. அதைவிட முக்கியமாக, சுய நிர்ணயத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு என்பது தேசியவாதத்தையும் எண்ணிடலங்காத தேசங்களின் தோற்றத்தையும் பிரிவினையையும் ஊக்குவிக்கும் ஒரு காரியமல்ல. எனவே, தேசங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி மாக்ஸிய நிலைப்பாடு

Page 22
கொச்சையான வர்க்கப் போராட்ட வரவு செலவுக் கணக்கிலல்லாமல்
ஒடுக்குமுறைக்கு உட்பட்ட ஒரு மக்களது இருப்பிற்கும் சுய அடையா ளத்திற்குமான உரிமை சார்பாகக் காணப்படுவது பொருத்தமானது.
மாக்ஸியவாதிகள் தேசங்களிடையே ஒற்றுமையை விரும்பு கின்றனர். தேசிய முரண்பாடுகள் பகைமையின்றி நேச முரண்பாடு களாக அமைவதை விரும்புகிறார்கள். பல தேசிய இனங்கள் இணைந்து வாழ்வதை அவர்கள் வரவேற்கிறார்கள். அந்தளவில், அவர்கள் நாடுகள் பிரிவதை விரும்பவில்லை. ஆயினும் இது பிரிந்து போகும் உரிமையை மறுப்பதாகி விடாது. ஒடுக்கப்பட்ட ஒரு தேசமோ தேசிய இனமோ தனது விடுதலைக்குப் போராடுவதை நிராகரிப்பதாகி விடாது. சுய நிர்ணயம் என்பது, தேசிய இனங்களிடையே சமத்துவமான அடிப்படை யில் சுயவிருப்பின் மீதான இணைவை வலிவுபடுத்தும் ஒரு கருவியா கவே அவர்களாற் காணப்படுகிறது. இன்னொரு மனிதனை ஒடுக்கும் ஒரு மனிதனும், இன்னொரு தேசத்தை ஒடுக்கும் ஒரு தேசமும் சுதந்திர மானவை அல்ல. சுய நிர்ணயம் மறுக்கப்படும் போது, தேசிய ஒடுக்கு முறை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனிதரை மனிதர் ஒடுக்குவதை அங்கீகரிக்கும் கோட்பாடாக மாக்ஸியம் அமைய இயலாது.
சுயநிர்ணயம் என்பது, தேசிய இனங்கள் தமது சுய அடை யாளத்தையும் அந்த அடிப்படையில் தமது இருப்பையும் பேணும் உரிமை. ஒருநாட்டின் பல்வேறு இனங்களிடையே சமத்துவம் உள்ள போது, சுய நிர்ணயம் பற்றிய கேள்வியே எழுவதில்லை. எப்போது ஒடுக்கல் தொடங்குகிறதோ அப்போது போராட்டம் தொடங்குகிறது. அதையொட்டியே சுயநிர்ணயம் பற்றிய பிரச்சனை எழுகிறது. மூன்றா முலக நாடுகளைப் பிரித்துப் பிளவுபடுத்த ஏகாதிபத்தியம் விரும்புகிறது. தன் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடுகளில், தேசிய இன ஒடுக்கலைக் கண்டுங் காணாதது போல இருக்கிறது. சில சமயம் உக்கிரமாக ஆதரிக் கிறது. தன் ஆதிக்கத்திற்குத் சவாலாக இருக்கக்கூடிய நாடுகளின் இனங்களிடையே பகைமையை மூட்ட முயல்கிறது. பிரிவினைக்கான போராட்டங்களைத் தூண்டிவிட முயல்கிறது. சிலசமயம் சுயநிர்ணயம் பற்றியும் பேசுகிறது. இந்தளவில் ஒரு மாக்ஸியவாதி, சுயநிர்ணயம் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியந்தான். ஆயினும் பிரச்சினைக்கான தீர்வு சுய நிர்ணயத்தை நிராகரிப்பதல்ல. மாறாகத், தேசிய இனங்கட்கு தத்தமது சுய அடையாளங்களின் அடிப்படையின் பாதுகாப்பான

இருப்பை உறுதிப்படுத்தி அதன் மூலம், தேசிய இனங்களிடையே ஐக்கியத்தை வலுப்படுத்துவதாகும். அவ்வாறானசூழலிற், சுயநிர்ணயம் பிரிவினைக்கான கருவியுமல்ல.
தேசியம் பற்றிய விவாதம், தேசங்கட்கிடையிலான முரண்பாடு மட்டுமே எவ்வகையிலோ முக்கியமானது எனவும் சுயர்நிர்ணயக் கோட்பாடு தேசங்கட்கு மட்டுமே உரியது எனவும் முடங்கி விடுகிற போது, பிற முக்கியமான சமுதாய ஒடுக்குமுறைகள் பற்றிய நமது கவனம் பிசகி விடுகிறது. தேசங்கட்குத் தம் இருப்பைப் பேண உள்ள உரிமை, சகல இனப்பிரிவுகட்கும் இருக்க வேண்டிய ஒரு உரிமை, இது சுய அடையாளத் தொடர்பானது, வாழ்க்கை முறை தொடர்பானது, மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள ஒவ்வொரு இனப் பிரிவுக்கும் உள்ள உரிமை தொடர்பானது. இது மனித சமத்துவத்தின் அடிப்படை யில் அணுகப்பட வேண்டும் அளவுக்குச் சுயநிர்ணயம் என்ற கோட் பாட்டை விரிவுபடுத்தலாம்.
மனிதர் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படுகின்றனரோ, அந்த அடிப்படையிலேயே அவர்கள் போராட நேருகிறது. ஒடுக்குதலுக்கு எதிரான எந்தப் போராட்டமும் நியாயமானது. நியாயமான போராட் டங்கள் ஒன்றையொன்று ஆதரிப்பன. அவை மனித விடுதலைக்குப் பங்களிப்பன. தேசியவாதிகளால் ஒரே ஒரு முரண்பாட்டை மட்டுமே காணமுடிகிறது. தேசிய ஒடுக்குமுறை உள்ள வரை, தேசிய விடுதலைப் போராட்டம் உள்ள வரை, அவர்களால் மற்ற முரண்பாடுகளை அலட்சி யம் செய்ய முடியும். ஆயினும் அவை இல்லாமற் போய்விடுவதில்லை. ஒடுக்குமுறைகட்கு எதிரான போராட்டங்கள் ஒய்ந்து விடுவதுமில்லை. மாக்ஸியவாதிகள் எந்த முரண்பாட்டையும் அலட்சியம் செய்ய முடி யாது. நியாயமான எந்தப் போராட்டத்தையும் நிராகரிக்க முடியாது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவர்களது பங்களிப்பு, அதை முற்போக்கான திசையில் உந்திவிடும் நோக்கத்தால் மட்டுமன்றி, அதைவிட முக்கியமாக, அதன் நியாயத்தாலும் இயலுமாகிறது.
1996
1ι

Page 23
அடையாளப் பிரச்சினையும்
தேசியவாதமும்
தேசிய அடையாளம் என்பது வரலாற்றின்பாற்பட்டது.
அதற்கு நிரந்தரப் பண்பு எதுவும் இல்லை. அது செயற்படும் கால, இடச்சூழல்கட்கு வெளியே அதற்கு எதுவிதமான முக்கியத்துவமும் கிடையாது. தரப்பட்ட ஒரு சமூகச் சூழலில் மனிதர் தம்மை ஒரு குறிப்பிட்ட முறையில் அடையாளம் காணும் நிர்ப்பந்தத்துக்கு ஆளா கின்றனர். இந்த அடையாளங் காணலில் ஒரு பகுதி அகத்தினின்றும் அதைவிட முக்கியமான ஒரு பகுதி புறத்தினின்றும் வருவதை நாம் வரலாற்றில் திரும்பத்திரும்பக் காண்கிறோம்.
தேசிய அடையாளம் பற்றிய பல மயக்கங்கள், வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தேசியத்தைக் காணத் தவறுவதன் விளைவுகளே. தேசிய அடையாளம் ஒரு அரசியற் சக்தியாகச் செயற்படும்போது அதற்கு ஒரு யதார்த்தமான அடிப்படை உண்டு. அதன் நியாயமும் நியாயமின்மையும் ஒருபுறமிருக்க, தேசியவாதத்தின் அரசியற் தேவை கள் அதன் யதார்த்தத்திற்கும் அப்பாலான சில புனைவுகளை உரு வாக்கித் தேசிய அடையாளத்தையும் தேசிய இனத்தையும் தேசிய வரலாற்றையும் தேசிய கலாசாரத்தையும் பிற பொதுப் பண்புகளையும் அதன் வசதிக்கேற்ப வரையறுக்கத் தூண்டுகின்றன. இந்த அடையாள இலக்கணப் பண்புகள், ஒரு கால இடச் சூழலில் உறவு பூணும் மக்க ளிடையே, நாங்கள்-அவர்கள் என்ற வேறுபாட்டைத் தெளிவுபடுத்தப் பயன்படுகிறது. இந்த அடிப்படையில் நோக்கும் போது, நிற அடை யாளம், சாதி அடையாளம், பிரதேச அடையாளம் போன்ற பல அடை யாளங்களுடன் தேசிய அடையாளம் பல பொதுவான பண்புகளைக்
*“和 42

கொண்டிருக்கக் காணலாம். இவ்வாறான அடையாளங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து தனித்துவமான அடையாளங்களாகத் தம்மை வலி யுறுத்திய சூழல்களும் வரலாற்றில் உண்டு.
மேற்கூறியவற்றை வைத்துத் தேசிய அடையாளம் என்பது வெறும் கற்பனை என்றோ மாயை என்றோ ஒதுக்க முடியாதவாறு, தேசியவாதம் சமகால அரசியலிலும் தனது முத்திரையைப் பதித் துள்ளது. தேசியவாதம் என்பது பற்றிய மயக்கங்களுள் ஒன்று, நவீன தேச அரசு என்பதை வரலாற்றில் இருந்து வந்த அரசுகளுடன் 69C05 புறமும் சமூகங்களதும் சமூகப் பிரிவுகளதும் பலவேறு வகையான பொது அடையாளங்களுடன் இன்னொரு புறமும் குழப்பிக் கொள்வ
தாகும.
ஒவ்வொரு தேசமும் மட்டுமன்றித் தேசமென்று தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டப்படும் ஒவ்வொரு சமூகப் பிரிவும் தனக்
தொன்மையையும் வலியுறுத்துமாறு வற்புறுத்தப்படுகிறது. இதன் விளைவாகப் பல மாயைகள் உருவாக்கப்படுகின்றன. காலப் போக்கில் இவை வரலாற்று உண்மைகளாகவும் தேசிய சித்தாந்தத்தின் ஒரு முக்கியமான பகுதியாகவும் நிலை பெறுகின்றன. இதன் விளைவுகளை நாம் பல்வேறு வடிவங்களிலும் காண முடியும்.
தேசிய வரலாறு என்பது தேசம் என்ற ஒன்றன்இருப்பை வரலாற் றில் அடையாளங்காணும் நோக்கிலன்றி, அதன் நிலைப்பை நியாயப் படுத்தும் நோக்கிலேயே அதிகம் பயன்பட்டுள்ளது. மனிதர் தம்மை ஒரு தேசமாக அடையாளங் காணும் நிர்ப்பந்தம் எவ்வாறு ஏற்படுகின்றது என்பது பெரும்பாலும் மறக்கப்பட்டு விடுகின்றது. அதன்பின்னர், அந்த அடையாளத்திற் தமது நலன்களைக் காணும் சமுதாயப் பிரிவினர் அந்த அடையாளத்தைத் தமது வசதிக்கேற்ப குறுக்கவும் விரிக்கவும் முனை வதை நாம் காணலாம். சிலவேளைகளில், அந்த அடையாளத்தை மிகவும் வன்மையாக வலியுறுத்துவதையும் நாம் காணலாம். தேசிய அடையாளத் தின் தன்மையைக் காலத்துடன் மாற்றும் தேவை தேசியவாதத்தின் நெருக்கடியுடன் தொடர்புடையது. இந்த நெருக்கடி, உண்மையில், தேசிய சித்தாந்தத்தைத் தனது நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு சமூகப் பிரிவினது நெருக்கடியாகும்.
is .

Page 24
உலகில் எங்குமே தூய தேசிய இனங்கள் இல்லை. ஏதாவது @@ அடிப்படையில் உலக மக்கள் யாவரும் தேசிய இனங்களாக வகுக்கப்பட முடியும் என்று கொண்டாலுங்கூட ஒரே தேசிய இனத் தைக் கொண்ட நாடுகளையோ, ஏன் பிரதேசங்களையோ கூட, இன்று அனேகமாக எங்குமே நம்மால் அடையாளங்காண முடியாதவாறு, மனிதர்தமது "தேசிய எல்லைகட்கு அப்பாற் பரவிப், பிற தேசங்களுள் ஊடுருவியுள்ளனர். தேசிய அடையாளத்தின் அபத்தமும் நெருக்கடியும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளை ஒட்டி அதிகமாகின்றன. தேச-அரசு என்ற அடையாளத்தால் அதன் எல்லைகட்குட்பட்ட மக்களை ஒன்றுபடுத்த முடியாது போகிறது. தேசியம் மனிதரைமனிதர் ஒடுக்குவதற்கும் மனிதரை மனிதரிடமிருந்து பிரித்துப் பலவீனப் படுத்துவதற்குமான ஒரு கருவியாகும்போது ஏற்படும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தேசியவாதத்திடம் நல்ல தீர்வு இல்லை.
இன்று தமிழகத்தில் தேசியக் கோட்பாடு எதிர் நோக்கும் பல சிக்கல்கள் தேசியவாதம் பற்றியும் தேசியம் பற்றியும் நம்மிடையே வளர்க்கப்பட்டுள்ள சில மயக்கங்களைத் தெளியவைக்க உதவலாம். தேசியம் என்ற அடையாளத்தை அதன் வரலாற்றுக் கால எல்லைக்கு அப்பால் பின்னோக்கி விஸ்தரிக்கும் முயற்சிகள் தமிழ்த் தேசிய வாதத்திற்குரியன மட்டுமல்ல. இந்திய தேசியம் என்ற பேரில் ஒரு விசாலமான இந்திய தேசிய அடையாளத்தை வேதகாலத்திலும் மகாபார தம், ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் காலத்தாற் சிறிது பிற்பட்ட வரலாற்றுநிகழ்வுகளிலும் தேடும் முயற்சிகள், வெளிவெளியான இந்தி - இந்துத்துவப் பிரசாரத்திற்கு மட்டும் உரியனவல்ல. திரைப்படங் களிலும் தொலைக்காட்சிக்கானராமாயணம், மகாபாரதம், சாணக்கியன் போன்ற திரைக்கதைத் தயாரிப்புகளிலும் இந்த இந்திய தேசிய வர லாற்று மாயை உள்ளது. தமிழ்த் தேசியம் சேர, சோழ, பாண்டியர் பற்றியும் முச்சங்கம் பற்றியும் தமிழின் தொன்மை பற்றியுமான புனைவு களை இன்னமும் கைவிடவில்லை. இந்தத் தமிழ்த் தேசிய அடையாளத் தைத் திராவிட அடையாளமாக்கித் தெலுங்கர், கன்னடியர், மலையாளி கள் ஆகியோர் மீது சுமத்த முயன்றதன் விளைவுகளை இங்கு விவரிக்க அவசியமில்லை. எனினும் இந்தியத் தேசிய அடையாளமும் தமிழ்த் தேசிய அடையாளமும் அவற்றுட் பொதிந்துள்ள பேரினவாதப் போக்கு களால் தமது “தேசிய எல்லைக்கக்குட்பட்ட மக்களது அடையாளங் களை மறுக்க முனைவதை நாம் காணலாம்.
4.

இந்தியாவில் இந்தித் திணிப்பு முயற்சிகள் இல்லை என்பது பொய். ஆயினும் இந்தியைப் பிற இந்திய மொழி பேசுவோர் மீது திணித்து அவர்களது மொழியையும் மொழி சார்ந்த அடையாளத் தையும் அழிக்க முடியும் என்பதும் பொய்யே. இன்று சகல இந்திய மொழிகட்கும் ஒரு மிரட்டலாக வந்துள்ளது, வணிகமயப்பட்ட ஆங்கில ஊடுருவல். குறிப்பாகத் தமிழகத்தில், தமிழ்ப்பற்று என்பது, மாநில அரசைப் பொறுத்த வரை, இந்தி எதிர்ப்பு என்பதற்கு அப்பால் அடியெடுத்து வைக்கவில்லை. தமிழை வளர்ப்பது பற்றிய தெளிவு தமிழ்த் தேசியவாத அரசியற் தலைமைகளிடம் இல்லை. இன்னமுங் கூடத் தமிழின் தூய்மை பற்றிய குழப்பமான சிந்தனைகள், தமிழை நவீன உலகிற்கு உகந்த மொழியாக வளரமுடியாது தடுக்கின்றன.
தமிழகம் தவிர்ந்த இந்திய மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு ஒரு பெரிய அரசியற் பிரச்சினையாக இல்லை. ஆயினும் மாநிலத்தின் பெரும்பான்மை மொழி பேசுவோரது மொழிப்பற்று நடைமுறையிற் புலனாகிறது. இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கக் கச்சை கட்டி நிற்கும் திராவிடக் கட்சிகள் யாவுமே ஆங்கிலம் தொடர்புமொழி என்ற பேரில் ஆதிக்கம் செலுத்துவதை அங்கீகரிக்கின்றன. தாய்மொழிக் கல்வி பற்றிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று அதிகம் பேசுகின்றன. கர்நாடகத்தில் கன்னடம் கட்டாய மொழியானது பற்றிக் கூச்சலிட்ட தமிழ்த் தேசியவாதிகள், தமது மாநிலத்தில் தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமானதாக்க இதுவரை எடுத்த முயற்சிகள் அற்பமானவையே. பல தமிழ்த் தேசியவாதிகள் ஆங்கிலத்தின்மீது கொண்டுள்ள மோகமும் மயக்கமும் அவர்களது வர்க்கச் சார்பை, மேல்தட்டு வர்க்க நலன் பேணும் பண்பை வலியுறுத்துகிறது. அதேவேளை தமிழகத்தில் உள்ள தமிழரல்லாதார்பற்றியநிலைப்பாடு குழப்பமான ஒரு மனநிலையையே காட்டுகிறது. தமிழ் பேசும் மக்கள் பிற மாநிலங்கட்கும் பிற நாடு கட்கும் புலம்பெயர்ந்து போன பின்பு அவர்களது பரம்பரையினர் தமிழை மறப்பது பற்றிய மனவேதனை தமிழ்த் தேசியவாதிகட்கு உண்டு. தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தமிழிலே பேசவும் எழுதவும் வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுவது கூட ஒரு அளவுக்கு நியாயமானது எனலாம். அதேவேளை, அதேவிதமான ஆசை, தமிழ் நாட்டுக்குள் வந்துள்ள தமிழரல்லாதார் பற்றி அவர்களது மொழி பேசுவோருக்கு இருக்க முடியாதா என்பது அவர்களது அக்கறைக்கு அப்பாற்பட்டது. தமிழர் மீது பிறமொழித் திணிப்பு (ஆங்கிலத்

Page 25
திணிப்பு:தமிழர்தாமாகவே மேற்கொள்ளும் ஒன்று என்பதால் மன்னிக் கப்படக்கூடும்) தவறு என்று தெரிகிற அளவுக்குத் தமிழகத்திலுள்ள தமிழரல்லாதார் மீது தமிழ்த் திணிப்பு நியாயமானதா என்பது பற்றித் தமிழ்த் தேசியவாதிகள் சிந்திக்க விரும்புவதில்லை. தமிழகத்தில் உள்ள மக்களில் 25-30 வீதமானோர் தெலுங்குமொழி பேசியவர்களது வம்சாவழியினர் என்று கூறப்படுகின்றது. அவர்களிற் பெருவாரியா னோர், தமிழையே தமது பிரதான மொழியாகக் கொண்டு விட்டனர். ஆயினும் கணிசமானோர் தம்முட் தெலுங்கிற் பேசுவது உண்டு. இவர் களை விட, வரலாற்றுக் காரணங்களால் தமிழகத்திற்கு வந்து அதைத் தமது நாடாக்கிக் கொண்ட மராத்தியர் போன்ற பல இனத்தவர்களும் உள்ளனர். இவர்கள் பற்றித் தமிழ் தேசியவாதத்தின் நிலைப்பா டென்ன? இங்கேதான் தேசியவாதத்தின் ஜனநாயக விரோத மேலாதிக் கப் பண்புகளை நாம் அடையாளம் காணலாம். தாய்மொழிக் கல்வி யுரிமை எல்லாருக்குமான ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியவாதத்துக்கும் உடன்பாடானதல்ல, இந்தி-இந்துத்துவத்துக்கும் உடன்பாடானதல்ல.
ஆதிக்கம் செலுத்தும் தேசிய இன அடையாளத்தைக் குறிப் பிட்ட தேசிய எல்லைகட்குள் வாழும் பூர்வகுடிகள் உட்பட்ட மற்ற இனப்பிரிவுகள்மீது திணிக்கும் போக்கு ஒருபுறமிருக்க, இந்தப் பொது அடையாளம், அந்தத் தேசிய இனத்தினுள் இருக்கக்கூடிய அடையாள அக வேறுபாடுகளை மறுக்கவும் பயன்படுகிறது. தமிழகத்தின் தமிழ்த் தேசியவாதத்தின் மேலாதிக்க உணர்வின் நெருக்கடியைப் பார்ப்பன எதிர்ப்பும் இந்தி எதிர்ப்பும் ஒரளவுக்குத் தணித்தன. ஆயினும் இவ்வா றான குறுகிய பார்வைகள் தவிர்க்க முடியாமலே தம்மை வெளிப் படுத்தத் தலைப்பட்டன. ஈழத்தில் அநகாரிக தர்மபாலவின் சிங்கள் பெளத்தக் கோட்பாடு எவ்வாறு அதன் தேசிய விடுதலை நிலைப் பாட்டினின்று வளர்ந்து, இனவாத, மதவாதக் கோட்பாடாக மாறியது என்று அறிவோம். யாழ்ப்பாணச்சைவ-வேளாள அரசியலிலும் இவ்வா றான பண்புகள் இருந்ததை அறிவோம். தமிழகத்தின் தனித்தமிழ் இயக்கத்திலும் இவற்றையொத்த குறுகிய பார்வை இருந்தது. தனித் தமிழ் இயக்கத்தின் முற்போக்கான விடுதலைக் கூறுகளை அடை யாளங் காணத் தவறாமலே நாம் அதன் குறுகிய பார்வையையும் அடையாளங் காணலாம். இன்று தனித்தமிழ் இயக்கத்தின் வாரிசு களாகத் தம்மைக் காணுகின்ற சக்திகள், அந்த இயக்கத்தின் நிறைகளை
f

விடக் குறைகளையே அதிகம் தமது கொள்கைகளிற்காட்டுகிறார்களா என்று ஐயுற வேண்டி இருக்கிறது.
மலையாளிகள், மராத்தியர், தெலுங்கர் என்ற அடிப்படையில் சில தமிழ்த் தேசியவாதிகளால் வெறுத்தொதுக்கப்படுவோருட் பலர் தமிழையே தமது அன்றாட மொழியாகக் கொண்டவர்கள். ஆயினும் "யார் தமிழன்?" என்ற கேள்விக்கு ஒரு இனத் தூய்மைவாதக் கருத்தை விடையாகச் சிலர் வலியுறுத்தியமை ஜேர்மன் ஆரிய இனக் கோட்பாட் டையும் தென்னாபிரிக்க வெள்ளை இனக் கோட்பாட்டையும் நினை வூட்டத் தவறவில்லை. இரண்டு தசாப்தங்கள் முன்பு, எம்.ஜி.ராமச் சந்திரனை ஒரு மலையாளி என்று தி.மு.கவினர் தாக்கியபோது, மு.கருணாநிதி ஒரு தெலுங்கர் என்று பதில் தாக்குதல் தொடுக் கப்பட்டது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் ம.பொ.சிவஞானம் தமிழழரல்ல என்றும் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டார். பார்ப்பனர்கள் தமிழரல்லர் என்பது இன்னமும் ஒரு சாராரது நிலைப்பாடு. இது போன்ற உதாரணங்களுக்குத் தமிழகத்திற் பஞ்சமில்லையாயினும் இவ்வாறான தேசிய அடையாளப் பிரச்சினையின் விளைவாகத் தமிழ்த் தேசியவாதம் மேலும் பலவீனமடைந்தது.
ஏற்கெனவே சாதியத்தின் பிரச்சினைகட்கு முகங்கொடுக்க இயலாது சோர்வுற்றிருந்த தமிழ்த் தேசியவாதம் இன்று சாதி அரசிய லையும் சாதிப் பூசல்களையும் தவிர்க்க முடியாது தத்தளிக்கின்றது. இவ்வாறான சாதி அரசியல், தாழ்த்தப்பட்ட சாதியினரது விடுதலைக்கு உதவுவதற்கு மாறாக அவர்களைத் தனிமைப்படுத்திச் சாதி அடிப் படையில் மேலும் பிளவுபடுத்தவே உதவும் என்பது என் மதிப்பீடு. இன்று தமிழகத்தில் சாதி அடிப்படையிலான கட்சிகளது தோற்றமும் செல்வாக்கும் இன்னுஞ் சில காலத்துக்குத் தமிழ்ச் சமுததாயத்தின் அடிப்படையான சமூகப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே உதவும்.
தமிழ் அடையாளம் என்பது பற்றிய தேசியவாதப் பார்வை க்கும் மனித சமத்துவப் பார்வைக்கும் உள்ள அடிப்படையான வேறு பாடு, முன்னையது தமிழரது நலனை மற்ற இனத்தவரது நலன்களை விட உயர்வானதாகக் கொள்வதற்கும் பின்னையது தேசிய இனங்க ளிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்கும் இடையிலானது. தேசிய அடையாளம் என்றும் இன அடையாளம் என்றும் உள்ள அடையாளங்
赣

Page 26
கள் பற்றிய விறைப்பான பார்வைகள் பல விபரீதமான முடிவுகட்கு நம்மை வழிநடத்தக்கூடும். எனவே இந்த அடையாளங்களை அவற்றுக் குரிய அரசியற் சூழலுக்கு ஏற்ப விளங்கிக் கொள்வதும் மனிதரிடையே இனம், மொழி, மதம், பண்பாடு ஆகியவற்றில் புரிந்துணர்வையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்குமாறு பயன்படுத்துவதும் மனித இன மேம்பாட்டுக்கு உகந்தவை. மற்றப்படி, எந்தக் குறுகிய பார்வையும் இன்னும் மோசமான குறுகிய பார்வைகட்கே வழிகோலி எந்த இனத்தி னதும் விடுதலைக்குப் பாதகமாக அமையும் என்பதை நாம் நினைவி லிருந்துவது பயனுள்ளது.
1998 ஏப்ரல் (இன்னொரு காலடி, லண்டன்)
 

விடுதலைக்கான வழி
ந்ெத ஒடுக்குமுறையையும் போராடாமல் முடிவு கட்ட இயலாது. தனது இலக்குப் பற்றிய தெளிவற்ற போராட்டம் திசை தவறுவது'இயல்பானது. வர்க்கங்களாகவே அமைந்துள்ள ஒரு சமு தாயத்தில் வர்க்க அடையாளமற்ற ஒரு விடுதலைப் போராட்டம் இருக்கமுடியாது. தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தின் வரலாற்றை நோக்கினால் அதன் வர்க்கத்தன்மையின் மாற்றத்தை நாம் அடையாளங்காண முடியும்.
தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றுவாய் பற்றிய விவாதங்கள் ஒருபுறமிருக்க, தமிழ் அடையாளத்துடனான அரசியற் தலைமைகளின் வரலாற்றை நோக்கினால் படித்த, சொத்துடமைக்கார வர்க்கத் தலை மையும் அதனோடு நெருக்கமாகப் பிணைந்த சாதிய, நிலவுடைமைக் கண்ணோட்டங்களையுமே நாம் முதலிற் காணலாம். அதற்குள் சமூகச் சீர்திருத்தவாதிகளும் அன்றைய சமூகத்தில் ஆதிக்கஞ் செலுத்திய பழமைவாதச் சிந்தனைகட்கு முரணானமுற்போக்கான சிந்தனைகளும் இருந்தாலும், பொதுவான போக்கு பிற்போக்கான நிலவுடைமைச் சிந்தனைசார்ந்தே இருந்தது. கொலனிய எதிர்ப்பு என்ற முற்போக்கான நிலைப்பாட்டிற் கூடப் பல வேறு அளவுகளிற் பிற்போக்கான சமூகப் பார்வைகள் கலந்து காணப்பட்டன. ஏனெனில், மாக்ஸியம் போலல் லாமல், தேசியவாதம் என்பது முதலாளிய, அதிகார வர்க்கங்களின் நலன்சார்ந்த ஒரு சிந்தனையே.
இலங்கையின் சுதந்திரத்தின் பின்பு தமிழ்த் தேசியவாதம் கொலனிய ஆதிக்கத்துடன் பகைமையற்ற ஒரு நிலைப்பாட்டிலேயே தொடர்வதற்கு அதன்முதலாளிய நிலவுடமை வர்க்கத்தன்மைகள் ஒரு முக்கியமான காரணம். அதைவிடத் தென்னிலங்கையின் ஏகாதிபத்திய

Page 27
விரோத தேசிய முதலாளி வர்க்கமும் தரகு முதலாளி வர்க்கமும் சிங்களப் பேரினவாத அரசியலையே மேலும் வலியுறுத்தியதால் தமிழ்த் தேசியவாதத் தலைமையால் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் புறக்கணித்துச் சிங்கள தேசியவாதத்தையே தமிழ் மக்களின் ஒரே எதிரியாகக் காட்ட முடிந்தது. தமிழ்த் தேசியவாத அரசியலில் நடுத்தர வர்க்கத்தின் குரல் 1956க்குப் பின்பு வலிமை பெற்ற போதும், அரசியற் தலைமை தொடர்ந்தும் தமிழ் மேட்டுக் குடிகளின் குறிப்பாக யாழ்ப் பாணத்தை மையமாகக் கொண்டு செயற்பட்ட வேளாள நிலவுடைமை வர்க்கத்தினதும் கொழும்பில் நிலைகொண்ட ஆங்கிலக் கல்வி பெற்ற ஒரு வசதி படைத்த உயர் நடுத்தர வர்க்கத்தினதும் கைகளிலேயே இருந்து வந்தது. எனவே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங் களின் முனைப்பிலும் தன்மையிலும் பாராளுமன்ற அரசியலையும் அரசியற் பேதங்களையும் தரகு வேலைகளையுமே முக்கியமானவை யாகக் கொண்டிருந்தன. வெகுஜன அரசியல் என்பது இந்தத் தலைமை க்கு அந்நியமான ஒன்று என்பதால் வெகுஜனப் போராட்டங்களைத் தமது தலைமையின் கீழ் கட்டுப்படுத்தக்கூடிய வழிகள் அவர்கட்கு முக்கியமாகின. சத்தியாக்கிரகம், அகிம்சை என்பன போலல்லாது ஆயுதமேந்திய போராட்டங்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை அழித்துவிடும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
பாராளுமன்றத் தேர்தல் அரசியலும் குறுகிய அரசியல் நோக் கங்களை இலக்காகக் கொண்ட சாத்வீகப் போராட்டங்களும் தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க உதவவில்லை. பேரினவாதமும் குறுகிய தேசியவாதமும் ஒன்றுக்கொன்று ஊட்டமளித்து வந்த இச் சூழல் இடதுசாரி அரசியலுக்குப்பாதகமானதுதான். எனினும் தெற்கின் இடதுசாரித் தலைமைகளது சந்தர்ப்பவாதம் அவர்களைத் தெற்கிற் பலமிழக்க வைத்தது. வடக்கிலும் இதன் விளைவாக இடதுசாரிகளது நிலை பாதிப்புக்குள்ளானது. இத்தகைய பின்னணியிலேயே சிங்களப் பேரினவாதத்துக்கு ஒருவிதமானமாக்சியமுகமூடிஅணிவித்து ஜே.வி.பி. தெற்கில் ஒரு வலிய இயக்கமாக வளர்ந்தது.
எவ்வாறாயினும் பாராளுமன்றப் பாதையை நிராகரித்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்திப் போராடியே தமது உரிமைகளை வெல்லலாம் என்று கூறியதோடு அதை நடைமுறைப்படுத்தி சாதியத் திற்கு எதிரான ஒரு வலிய அடியைக் கொடுத்தவர்கள் வடக்கின்
Տ{}

மாக்சிய லெனினியவாதிகளே. இதுவரை இலங்கையில் வெற்றி கரமாக நடத்தப்பட்ட முதலாவது ஆயுதமேந்திய வெகுசனப் போராட் டம் சாதியத்திற்கு எதிரான போராட்டமே. புரட்சிகர வெகுசன அரசி யல், மக்கள் யுத்தம், பரந்துபட்ட போராட்ட ஐக்கியம் என்பன ஆயுதமேந்திய போராட்டம் என்பதின் அளவுக்கு முக்கியமானவை என்பதே இவ் வெற்றியின் பிரதான பாடமாகும்.
இதில் ஆயுதப் போராட்டத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு அதில் சந்தர்ப்பவாத அரசியலையும் இணைத்த ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் தோல்விக்கு அரச ராணுவ வலிமையை விட முக்கியமான காரணி மக்களிடமிருந்து ஜே.வி.பி. தனிமைப்பட்ட நிலையிலேயே இருந்தது என்பதாகும். இதன் பாடங்களை 1987 - 89 கால இடைவெளியிலும் ஜே.வி.பி கற்றதாகத் தெரியவில்லை. அதன் சிங்கள தேசியவாத அணுகுமுறை இன்னும் தொடர்கிறது.
தமிழரசுக்கட்சியின் வழிகாட்டலின் தோல்வியின் தொடர்ச்சி யாக 1971ல் தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் முதலாகப் படிப்படியாக உக்கிரமடைந்து வந்த போராட்டங்கள் அரசின் ஒடுக்கு முறையின் விளைவாக ஆயுதமேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டன. ஆயினும் இந்த இயக்கங்கள் யாவற்றினதும் அரசியற் சிந்தனையின் தோற்றுவாய் தமிழரசுக்கட்சி வழியாக விருத்தி பெற்ற தமிழ்த் தேசியவாதமே. அதன் பலவீனங்கள் இன்றுவரை எந்தத்தமிழ்த் தேசியவாத இயக்கத்தாலும் முற்றாகக் களையப்படவில்லை என்பதை அவர்களது ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் நாம் கண்டு வந்துள்ளோம். இடதுசாரி அரசியலிலிருந்து தொடங்கித் தமிழ் ஈழ விடுதலை அரசியல் பேசி மக்களை வென்றெடுக்க முயன்ற சிலர் தேசியவாத இயக்கங்களுள் இணைந்து அரசியல் ரீதியாகச் சீரழிந்தமை இந்த இயக்கங்களின் வர்க்க நிலைப்பாடு எத்தகையது என்பதையே காட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து கணிசமானவர்களைக் கொண்டிருந்த இயக்கங்களிற் கூடத் தமிழ் தேசியவாதத்திற்கு வழங் கிய அழுத்தமே பெரிதாக இருந்தது. விடுதலை இயக்கங்களுள் இருந்த சாதிய அடையாளங்கள் தமிழ்த் தேசியவாதத்தால் தீர்க்க இயலாத இன்னொரு முரண்பாட்டையே குறித்தன. மாக்ஸியத் தமிழ் தேசிய விடுதலை இயங்கங்களாகத் தம்மை அடையாளக் காட்டியவர்கள் சிறு குழுக்களாகவே தொடர்ந்து இயங்கிச் சிதைந்தனர். தமிழ்த் தேசிய

Page 28
வாதத்தை மக்களுக்கு வழங்குவதில் தமிழ்த் தேசிய முதலாளியத்தை விடச் சிறப்பாக மாக்ஸியவாதிகள் என்று கூறப்பட்டோரால் இயங்க முடியவில்லை என்பது கண்கூடான உண்மை.
1987ல் இந்திய ராணுவத்தின் வருகையோடு தமிழர் விடுதலை இயக்கங்களின் முழுமையான அரசியல் ரூபம் தமிழ் மக்களுக்குத் தெளிவானது. எந்த விதமான சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போர்க் குரல் எழுப்பினார்களோ அதைவிட மோசமான சந்தர்ப்பவாதிகளாகப் பல்வேறு இயக்கத் தலைவர்களும் படுவேகமாகவே சீரழிந்து தமக்குப் பின்னால் அணிதிரண்டவர்களையும் அரசியல் ரீதியாகச் சீரழித்தனர்.
இத்தகைய ஒரு பின்னணியில் இனஒடுக்கலுக்கும் இன ஒழிப் புக்குமான பேரினவாத அரசின் போர் தொடர்கிறது. இதன் விளை வாகத் தமிழ் மக்கள் தங்களது இருப்பை நிலை நாட்டுவதற்காக வேனும் ஆயுதமேந்திப் போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் போர்ச் சூழல் போராட்டத்தின் வர்க்கக் குணாம்சத்தை முக்கியமான சில வழிகளில் மாற்றத்துக்குள்ளாக்கியது. போரினின்று தப்புவதற்கான தேவை காரணமாக ஏற்பட்ட புலப்பெயர்வில் வசதி படைத்தோர் தம்மைப் பாதுகாப்பான தொலைவுகட்குக் கொண்டு செல்ல முடிந்தது. வர்க்க அடிப்படையில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள், வடக்கில் முக்கியமாகச் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட் டோர், தமது வாழ்விடங்களிலோ அவற்றை அண்டிய பகுதிகளிலோ தங்கியிருக்க வேண்டி இருந்தது. இதன் விளைவாக இந்த இனஒடுக்கல் யுத்தத்தின் நேரடியான பாதிப்பு அவர்கள் மீதானதே. எனவே விடுதலைக்கான போராட்டம் படிப்படியாக அவர்கள் மீதே தங்கி யிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையில் தமிழ்த் தேசிய வாதத்தின் வர்க்க அடையாளத்தை முற்றாகவே மாற்றியது இன்றைய இன ஒடுக்கல் யுத்தமே. எனினும் விடுதலைப் போராட்டத்தின் தலைமைத்துவம் அந்த வர்க்கப்பண்பை இன்னமும் சரியாக உள் வாங்கிக் கொள்ளவில்லை. தேசிய முதலாளிய அரசியலின் எச்சங் களும் சிறுமுதலாளிய (குட்டி 89ஷ"வா) சிந்தனைகளும் இந்தத் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் மீது ஏற்றப்பட்ட வரலாற்றுச் சுமைகள். விடுதலைப்புலிகளது அரசியல் எதிர்காலமும் போராட் டத்தின் எதிர்காலமும் தவிர்க்க முடியாமல் இந்த வர்க்க அடையாளத்
S

தின் மீதே தங்கியுள்ளன. வெகுஜன அரசியல், மக்கள் யுத்தம், போரா ட்ட ஐக்கியம் போன்ற கருத்துக்களின் வழிப்பட்ட ஒரு விடுதலைப்
விடுதலையைப் பெற்றுத்தர முடியும்.
இந்தப் பின்னணியில் விடுதலைப் போராட்டம் தொடர்பாக எழுகிற சில முக்கியமான கேள்விகளை நாம் நோக்குவோம்.
தேசிய இனப்பிரச்சினைக்குச் சமாதானத் தீர்வு காண முடியாதா?
இப் பிரச்சினைக்குத் தனித் தமிழீழம் தவிர்ந்த வேறு தீர்வு இல்லையா?
இன்றைய விடுதலைப் போராட்டம் வெறுமனே வடக்குக் கிழக்கு மக்களது போராட்டமாகத்தான் இருக்க வேண்டுமா?
மூன்றாந் தரப்பு மத்தியஸ்த்தின் மூலம் தீர்வுக்கு வழி உண்டா?
சர்வதேசிய மட்டத்தில் ஏகாதிபத்திய ஊடுருவலும் மேலாதிக்கமும் உக்கிரமாகியுள்ள ஒரு சூழ்நிலை யில் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் தாக்கம் என்னவாயிருக்கும்?
இன்றைய யுத்தத்தின் பிரதான காரணி பேரினவாத ஒடுக்கு முறை. இந்த ஒடுக்குமுறை, ஒரு இன ஒழிப்பு யுத்தத்தின் தன்மையை, 1977ல் ஒரு வலிய ஏகாதிபத்தியச் சார்பான ஆட்சி நிலைகொண்ட பின்னரே எட்டியது. ஏகாதிபத்தியம் இனஒடுக்கலை ஏற்பதோ எதிர்ப் பதோ எந்தவிதமான அறத்தின் அடிப்படையிலும் இல்லை. இதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
தேசிய இன ஒடுக்கல் காரணமான யுத்தம் இன்று இந்த நாட்டின் அதி முக்கியமான பிரச்சினையாக உள்ளது. தேசிய இனப் பிரச்சினையே இன்று மிக அவசியமானதீர்வை வேண்டியுள்ள சமுதாய முரண்பாடாக உள்ளது. ஆயினும் அதன் தீர்வு பிற சமூகப் பிரச்சினை களினின்று இலகுவாகப் பிரிக்கக்கூடிய ஒன்றல்ல. தனியே அதன்தீர்வு

Page 29
தானாகவே மற்றைய பிரச்சினைகளின் தீர்வுக்கு வழியமைக்கப் போவதும் இல்லை. எனவே தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு நாட்டை எதிர்நோக்கியுள்ள அடிப்படை முரண்பாட்டின் தீர்வையும் மனதிற் கொண்டு அமைய வேண்டும்.
தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் வரலாறு மீண்டும் நமக்குக் கற்பித்துள்ள முக்கியமான பாடம் ஏதெனின் வர்க்க நலன் கட்கு அப்பாற்பட்ட தேசிய, தேசிய இன நலன்கள் என்று எதுவும் இல்லை என்பது தான். எனவே தான் தேசிய இன விடுதலை என்பது பிரதான எதிரியைச் சரிவர அடையாளங்கான வேண்டியது அவசிய மாகிறது. சிங்கள- பெளத்த பேரினவாதமும் ஏகாதிபத்தியமும் இன்று ஒரே தரப்பில் நிற்கின்றன. பெருவாரியான சிங்கள மக்களும் இந்தச் சுரண்டற்காரர்களாற் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பேரின வாதிகளின் யுத்தம் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் மீது கடுமையான சுமைகளை மேலும் ஏற்றுகிறது.
முற்கூறியவை சமாதான வழியிலான ஒரு நியாயமான தீர்வை அவசியமாக்குகின்ற காரணிகள். பிரிவினை மூலம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. மாறாக அது புதிய பரிமாணங்களை மட்டுமே பெறும். எனவே தான், சகல தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான சுயாட்சி அமை, ப்புக்களும் அதிகாரப் பரவலாக்கமும் என்பது நிலைக்கக்கூடிய ஒரு நல்ல தீர்வாக முடியும். உடனடியான சூழலில் வடக்குக் - கிழக்கு மாகாணஇணைப்பிற்குள் இத்தகைய சுயாட்சிகள் மூலம் தமிழரல்லாத தேசிய இனங்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் பிற பிரதேசங்களில் சிறுபான்மையினரது குடிப்பரம்பலுக்கு ஏற்றவிதமான சுயாட்சிகள் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் முடியும். *
தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்கள் பற்றியும் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் பற்றியும் விதைக்கப்பட்டுள்ள பகைமை விதைகளின் அறுவடையைத் தேசியவாதிகள் தங்களதுநலன்கட்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். எனினும், இன்றைய யுத்தம் தேசிய வாதத்தின் அரசியல் வறுமையை வேகமாக அம்பலப்படுத்தி வருகி றது. சிங்கள மக்களுடைய பிரதான எதிரிகள் தமிழர்களோ முஸ்லிம் களோ அல்ல என்ற உண்மை இன்று பரவலாக உணரப்பட்டு வருகிறது. எனவே தான் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பேரில் இன
" .ܬܟ
S.

ஒடுக்கல் யுத்தத்தைத் தொடருகிற தேவை ஏற்பட்டுள்ளது. ஒடுக்கப் பட்ட சிங்கள மக்கள் மத்தியில் பாராளுமன்ற அரசியல் பற்றிய நம்பிக்கை தளர்ந்து வருகிறது. அவர்கள் மத்தியிலுள்ள முற்போக்குச் சக்திகளால் தைரியமாக இன்று போருக்கு எதிராகவும் சுயநிர்ணயம் பற்றியும் பேசமுடிகிறது. இன்றைய தமிழின விடுதலைப் போராட்டம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதால் நன்மை இல்லை. கடந்த காலத்தின் குறுகிய தேசியவாத அணுகுமுறைகள் மூலம் மலையக முஸ்லிம் மக்களைப் பகைத்துக் கொண்டதன் விளைவுகளைக் தமிழ் இன விடுதலைச் சக்திகள் தமது கருத்திற் கொண்டு இலங்கையின் பிறபாகங்களிலுள்ள முற்போக்கு சக்திகளுடன் ஐக்கியத்தைப் பேண முயலவேண்டும்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் சில முக்கியமான பாடங்கள் முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களது போராட்டங்கட்கும் பயனுள்ளவை. நாட்டில் ஒடுக்குமுறைக்கு எதிரான பிற போராட் டங்களினின்று தனிமைப்படுகிறதன்மையும் சினேக முரண்பாட்டைப் பகை முரண்பாடாகக் காணுகிற போக்கும் அதிதீவிரநிலைப்பாடுகளும் எவ்வாறு ஒரு நியாயமானபோராட்டத்தைப் பலவீனப்படுத்துகின்றன என்பதை ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அத் தவறுகளைத் தாமும் செய்தே கற்க வேண்டியதில்லை.
முஸ்லிம்களுக்கும் சிங்களப் பேரினவாதத்திற்கும் உள்ள முரண்பாடு இன்று கூர்மையடைகிறது. வியாபாரப் போட்டிக்கு ஒரு இனவாதச் சாயம் பூசும் முயற்சிக்கு சிங்கள பெளத்த பேரினவாத வெறியர்கள் என்று கூறக்கூடிய அமைப்புக்களது செயற்பாடு மட்டுமே காரணமல்ல. சிங்கள பெளத்த பேரினவாதம் முதலாளிய சிறு முதலா ளிய சிந்தனைகளை வெகுவாக ஊடுருவியுள்ளது. இதன்விளைவாகவே இனவாத அரசியல் இன்று பல தளங்களிலும் முனைப்புடன் உள்ளது. மறுபுறம் தமிழ்த் தேசியவாதத்திற்கும் முஸ்லிம்கட்கும் இருந்த முரண் பாடு 1983க்குப் பிறகு தணியும் வாய்ப்பு இருந்தது. ஆயினும் தமிழ்த் தீவிரவாத இயக்கங்களது நடைமுறை காரணமாக மறுபடி மோசமடை ந்து இந்திய ராணுவத்தின் வருகையின் பின் தமிழ் - முஸ்லிம் சமூக உறவைக் கூடக் குலைக்கும் நிலைக்கு இறங்கியது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையைத் தமிழ்த் தேசியவாதச் சிந்தனையின் ஒரு பின்விளைவாகவே நாம் கருத வேண்டும்.
s
s

Page 30
மேற்கூறிய போக்கின் விளைவாக முஸ்லிம் தேசிய உணர்வு கிழக்கு மாகாணத்தில் வேகமாக வளர்ச்சி பெற்றது. தமிழ் - முஸ்லிம் தேசியவாத முரண்பாடுகளைப் பேரினவாத அரசாங்கமும் நன்கு பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளை மேலும் சீர்குலைக்க முற்பட் டது. முஸ்லிம்கள் மத்தியிலே இன்று தமது இன அடையாளத்தை வலியுறுத்தும் போக்கு மேலோங்கி உள்ளது. இதை வெறுமனே மத அடையாளமாக்கி மதவாதச் சிந்தனைக்கு முழுச் சமுதாயத்தையும் ஆட்படுத்தும் ஒரு போக்கு அயல் ஆதரவால் ஊக்குவிக்கப்படுவதை நாம் அறிவோம். மறுபுறம் இத்தேசிய உணர்வைத் தங்களது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தும் பல்வேறு போக்குக்களையும் நாம் காண்கிறோம். முஸ்லிம்களின் தேசிய இன நலன்களைப் பேணுவதற் குரிய சுயாட்சிகள் தேவை என்பது மாக்ஸிய லெனியவாதிகளது நிலைப் பாடு. ஆயினும் இவை முஸ்லிம் குடிப்பரம்பலைக்கணிப்பிற்கொண்டே அமைய முடியும். முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகள், தமிழ ருடன் ஒப்பிடத்தக்க விதத்தில் வாழும் பகுதிகள், தமிழரிடையே சிறுபான்மையாக வாழும் பகுதிகள், சிங்களவரிடையே சிறுபான்மை யாக வாழும் பகுதிகள், கொழும்பு, கண்டி போன்ற நகரச் சூழல்கள் யாவற்றுக்கும் பொதுவான ஒரு சுயாட்சி அமைப்பு இருக்க முடியாது. முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு பகுதிக்கான சுயாட்சியால் பெரும்பான்மையான முஸ்லிம்களின் பிரச்சினையை எவ்வகையிலும் தீர்க்க முடியாது. எனவே முஸ்லிம்களின் இருப்புப் பற்றிய பிரச்சினை ஒரு புறம் அகில இலங்கையிலும் வாழும் முஸ்லிம்களது குறிப்பான தேவைகளது அடிப்படையிலும் மறுபுறம் பிற தேசிய இனங்களது பிரச்சினைகள் பற்றிய கவனத்துடனுமே அணுகப்பட வேண்டும். இன்று திட்டமிட்டு ஊக்குவிக்கப்படும் தீவிரவாதப் போக்குகளும் அதே அளவுக்கு சந்தர்ப்பவாதத் தலைமைகளும் முஸ்லிம் மக்களது தேசிய இன உரிமைக்கான நியாயமான போராட்டத்தைப் பலவீனப்
படுத்துவனவே.
மலையக மக்களது தேசிய உணர்வு பேரினவாத ஒடுக்கு முறையால் தூண்டப்பட்டு வளர்கிற அதேவேளை, மலையகமக்க ளிடையே வடக்குக் கிழக்கின் தமிழர்களுக்குப் பகைமையான ஒரு பார்வையும் தூண்டிவிடப் பட்டு வருகிறது. இது மலையக முதலாளிய வர்க்கம் தனது வசதிக்காகச் செய்கிற ஒரு காரியமாகும். மலையக மக்களை ஒடுக்குகிற பேரினவாத அரசாங்கங்களுடன் குலாவிக்

கொண்டே மலையக மக்களை மற்றத் தேசிய இனங்களிடமிருந்து தனி மைப்படுத்திச் சந்தர்ப்பவாத அரசியற் கூட்டணிகளை அமைக்கிற போக்கு மலையக இளைஞர்களிடையே ஏமாற்றத்தையும் விரக்தி யையும் தூண்டிவிட்டுள்ளது. இவர்களிடையே அரசியற் தெளிவுடன் பிரச்சினைகளை நோக்குகிறவர்கள் மாக்சியச் சிந்தனையை நாடுகின்ற னர். இன்னொரு சாரார் தெளிவற்ற நிலையில் தொடர்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினரிடையே தீவிரவாதப் போக்குகள் ஊக்கு விக்கப்படுகின்றன.
வடக்கு - கிழக்கின் போராட்டம் பற்றிய கற்பனாவாதப் புனைவுகளால் கவரப்பட்டுத் தீவிரவாதத்தை நோக்கிச் செல்கிற இளைஞர்கள் ஒரு தெளிவானஅரசியல் வழிநடத்தலின்கீழ் அவ்வாறு செய்கிறார்களா? அப்படியானால் அது மலையகத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய எத்தகைய பார்வையைக் கொண்ட அரசிய லாயிருக்கும்? வெகுஜனங்களைச் சாராத அரசியலோ போராட்டமோ என்றும் வெற்றிபெற முடியாது.
எனவே மலையகத்தில் தீவிரவாத வன்செயல்களால் கவரப் படுவோர் தமது அரசியல் நிலைப்பாடு பற்றித் தெளிவாக ஆராய வேண்டும். இதற்கு மாக்சிய லெனினியவாதிகள் அவர்கட்கு வழி காட்ட வேண்டும். சிங்களப் பெளத்த பேரினவாதத்துக்கு எதிரான சகல நல்ல சக்திகளும் ஒன்றுபடுத்தப்படுவதன் தேவை உணரப்பட வேண் டும். இந்த ஒற்றுமையில் சகல சிங்கள முற்போக்குச் சக்திகளும் உள்ளடங்கும். இன விடுதலைக்கான பாதையும் குறுகிய தேசிம் வாதத்தின் அடிப்படையிலான தீவிரவாதத்தின் பாதையும் முற்றிலும் வேறானவை. இந்த வாலிபர்கள் தவறாக வழிநடத்தப்படுவது தவிர்க் கப்படாவிடின் ஜே.வி.பி. 1971, 1987-89ல் சிங்கள இளைஞர்களை வினேகாவு கொடுத்த மாதிரியான ஒரு நிலைமை மலையக இளைஞர் கட்கும் நேரலாம். இதைத் தடுப்பது சகல முற்போக்குச் சக்திகளதும் முக்கிய கடமையாகும்.
சிங்கள பெளத்தப் பேரினவாதச் சக்திகள் பல்வேறு அந்நிய ஆதிக்கச் சக்திகளது ஆதரவுடன் இயங்குவதைப் பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. சிங்கள பெளத்தம் என்ற பேரில் மொழி, மத அடிப்படையிலான சிறுபான்மையினரை ஒடுக்குகிற இப் போக்கு உண்மையில் சிங்கள பெளத்தர்களை ஏகாதிபத்தியவாதி
57

Page 31
கட்கும் மேலாதிக்கவாதிகட்கும் காட்டிக் கொடுக்கிற துரோகமே.
இத்தகைய துரோகம் எந்தத் தேசியவாதமும் தன் சமூகத்திற்கு இழைக் கக் கூடிய ஒன்று என்பதை நாம் மறக்கலாகாது.
தமிழ்த் தேசியவாத வரலாற்றின் இன்னொரு தீய அம்சம் அந்நியர் தயவில் தங்கியிருப்பதாகும். பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகள் மீதான நம்பிக்கை 1950கள் வரை மட்டுமன்றி அதன் பின்ன ரும் தமிழ்த் தேசியவாதத் தலைவர்கள் மத்தியில் இருந்தது. இந்தியக் குறுக்கீடு பற்றிய எதிர்பார்ப்புக்கள் தமிழரசுக் கட்சிகள் காலத்தில் தொடங்கி பல்வேறு விடுதலை இயங்கங்களின் வளர்ச்சிக் காலத்தில் உச்சத்தை எட்டி 1987ல் ஒரு நல்ல பாடத்துடன் நொறுங்கின. ஆயினும் இன்றும் இந்தியா பற்றிய சபலங்களும் இந்திய மேலாதிக்கவாதிகளின் உள் முரண்பாடுகளைத் தமது நலன்கட்காகப் பாவிக்கலாம் என்ற நப்பாசையும் ஒழியவில்லை என்பதற்கான சான்றுகள் உள்ளன.
பொஸ்னியா, கொஸொவோ விடயங்களிற் போன்று அமெ ரிக்க வழிகாட்டலிளான குறுக்கீட்டை நம்புவோரும் உள்ளனர். அமெரிக்க - நேற்றோ குறுக்கீட்டின் நோக்கங்கள் ஒருபுறம் இருக்க, அதன் விளைவுகளைப் பற்றி நாம் அறியாதவர்களாக இருக்க முடி யாது. தமிழ் - சிங்களத் தேசிய இனங்களிடையிலான முரண்பாட்டை அயலார் குறுக்கீடு மூலம் தீர்க்கும் முயற்சி, எந்தவிதமான தேசிய இன ஒடுக்கல் இன்றைய போருக்கு ஆதாரமாக உள்ளதோ அதைவிட மோசமான வலிமையான ஒரு ஒடுக்குமுறைக்கு நாட்டின் சகல தேசிய இனங்களையும் உட்படுத்தும் என்பதை நாம் மறக்கலாகாது.
நம்முன்னுள்ள உடனடியான கடமை இந்தக் கொடிய போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதும் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நிலைக்கக் கூடியதுமான ஒரு தீர்வைக் காணுவதுமாகும். தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள போரை அவர்களால் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வர முடியாது. இலங்கை அரசாங்கத்தின் வெறுப்பு இந்த இடத்தில் மிக முக்கிய மானது. எனவே யுத்தத்திற்கு முடிவு, சுய நிர்ணயத்தின் விரிவான பிரயோகம் என்ற அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஜனநாயக உரிமைகட்கும் மனித உரிமைகட்கும் உண்மையான மதிப்பு என்ற கோரிக்கைகளின் மீதான ஒரு பரந்துபட்ட வெகுஜன இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்த ஐக்கியத்தின் மூலம் ஏகாதி
$器

பத்திய ஊடுருவல், பன்னாட்டுக் கம்பனிகளின் ஆதிக்கம், தனியார் மயம்ாக்கல், தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை, திறந்த பொரு ளாதாரம் போன்ற தீமைகட்கு எதிராக வெகுஜனங்களை ஒன்றுபடுத்தி முழு நாட்டினதும் எதிர்காலத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களது இனவிடுதலையை மலையகத் தமிழரினதும் முஸ்லிம்களினதும் விடுதலையின்றோ சிங்கள மக்களது விடுதலையினின்றோ பிரித்து நோக்குவது ஒவ்வொரு விடுதலை இயக்கத்தையும் பலவீனப்படுத்துவதாகும். உண்மையில் ஒடுக்கு முறைகட்கெதிரான சகல போராட்டங்களும் நேரடியாகவும் மறைமுக மாகவும் உலகளாவிய முறையில் ஒன்றையொன்று ஆதரிக்கின்றன. இதனாலேயே விடுதலைப் போராட்டங்களில் வெகுஜனத்தன்மையும் பரந்துபட்ட ஐக்கியமும் பல்வேறு வகைகளில் முக்கியமாகின்றன.
10.8.99