கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பறாளை விநாயகர் பள்ளு

Page 1
கணபதி து?
പ്രീണ് ഖിBITL
யாழ்ப்பாணத்து சின்னத்தம் பிட் இயற்றியது
வட்கோை அ சிவகுருநாதன் விரும்பியப குறிப்புரை, தலமகிமை மு
திருமயிலை சே. வெ. ஜம்புலிங்
அவர்களால்
வித்தியாதுபாலன அ பதிப்பித்தது

கர் பள்ளு
நல்லூர் ப் புலவர்
s
அவர்கள்
2. Pதலியவற்ருேடு
கம் பிள்ரை
அச்சகத்தில்

Page 2
உள் ளு  ைற
பக்கம். பதிப்புரை " 8 . . . . ஆசிரியர் சரித்திரம் 8 - 8 ... 5 பருளைத் தல மகிமை ... . . . . . 7 கோயிற்பரிபாலனம் . 19 பள்ளுச் சிறப்பு முதலியன்' . 14 நூல் as 8 · 3 ugasr (ApGBösñi இரத்தினத் திரயம் ...་ 64
முதற்பதிப்பு 1889. 2. 1932. 3-1, 1956.
உரிமை சுழிபுர சங்கத்தினருக்கேயாம்.
வித்தியாதுபாலன அச்சகம், கெ. 800, தங்கசாலேத் தெரு சென்,

பதிப்புரை
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்' விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமரத் தன்மையினுற் கண்ணிற் பணிமின் கனிந்து.
இப்பிரபந்தம் பண்டைநாளில் ஏட்டுப்பிரதியாயிருந்த போது யாழ்ப்பாணத்திலுள்ளவர்களால் சிரமத்தோடு பெற்றுப் படிக்க நேர்ந்தது. இதனை மீக்க சுழிபுரம் ச. சிவப் பிரகாச பண்டிதர் தமது நண்பர் வே. இரத்தின பிள்ளை யின் வேண்டுகோளின்படி பல ஏட்டுப்பிரதிகளைப் பசி சோதித்து விரோதிD) (1889) சென்னையில் அப்ப்ே கிருந்த சபாபதிநாவலரின் சித்தாந்த வித்தியாதுபாலன் யங்கிரசாலையில் அச்சிட்டு முதன் முதல் வெளியிட்டார்.
. ,
அப்பதிப்புப் பிரதிகள் மறைந்தமையால் பிரசோற் பத்திடு) (1932)ல் யான் இரண்டாம் பதிப்பாகக் : பமுளைத்தலமகிமை, ஆசிரியர் சரித்திாம், s ள்ளுச்சிறப்பு முதலியவற்றேடு எனது நண்பரும், சபாபதி கோவலரின் மருகரும், முதற்பதிப்பை அச்சிட்ட சிவப் பிரகாச பண்டிதரின் தமையனர் குமாாருமாகிய அ. சிவ குருநாதன் மலேய சுழிபுர ஐக்கிய சங்கத்தினரிடம் பெற்ற 'பொருளுதவிகொண்தி சென்னையில் அச்சிடலானேன்.
நாளடைவில் அப்பிரதிகள் செலவானபடியால் அங் துரல் இறந்துபடாமற் காப்பதற்காக கண்பர் கடத்த சில
|ண்டுகளாகப் பெருமுயற்சி ச்ெய்தனர். staura-facier, சில சிவநேயர்களோடு கூறி வற்புறுத்தினர். சுழிபுர

Page 3
(4)
சங்கத்தினருக்கு விண்ணப்பித்தனர். இவரது விடா முயற்சிக்கு அவர்கள் இணங்கி மூன்ரும் பதிப்பைத் - தங்கள் செலவில் அச்சிடுவதாகப் பொருளுதவி புரிந்தனர். அவர்களுக்கும் நண்பர் சிவகுருநாதனுக்கும் பாஞ்சோதிப் பிரான் திருவருள் பாலிப்பாராக.
இச்சீரிய நூலுக்கு அரும்பதக் குறிப்புரையும் பள்ளுச் சிறப்பும் எழுதியுதவிய நண்பர்கள் திருவாவடு துறை ஆதீனவித்துவான் திருநெல்வேலி சிதம்பர ராம விங்கம் பிள்ளை, சென்னைத் தமிழ்ப்பண்டிதர் கொ. இராம லிங்கத்தம்பிரான் ஆகிய இருவரும் இம்மூன்ரும்பதிப்பைக் காணுமற் சிவபத மடைந்தமைக்கு வருந்துகிறேன்.
பருளைத்தலமகிமை நண்பர் வடகோவை அ. சிவகுரு நாதனல் புதுப்பிக்கப்பட்டது. ஆசிரியரின் சரித்திரம் சுன்னகம் குமாரசுவாமிப்புலவரின் புலவர் சரித்திரத்தைத் தழுவி எழுதியதாகும். r
இங்கன்முயற்சியில் யான் இருமுறை ஈடுபடும்படி தேர்ந்தமைக்கு கணபதியை வாழ்த்தித் துதிக்கின்றேன். இந்நூற்பதிப்பு மேலும் மேலும் வருவதாக அப்பதிப்பு களைச் சுழிபுரச் சங்கத்தினர் உரிமை பாராட்டி வெளி யிடுவாராகவும். இந்நூல் வேளாண்மையைச் சிறப்பிப்ப தால் இதனைப் பள்ளி மாணவரும் பிறரும் படித்தி
pät ja f. w
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்ல்ை கண்டீர் பழுதுண்டு வேரூேர் பணிக்கு. திருமயிலை. }
மன்மத, தைப்பூசம்.
சே. வே. ஜம்புலிங்கம் பிள்ளை.

சின்னத்தம்பிப் புலவர் சரித்திரம்
இவரூர் யாழ்ப்பாணத்துள்ள கல்லூர். குலம் வேளா ளர் குலம். சமயம் சைவம். காலம் இற்றைக்கு 180 வருடங்களுக்கு முன்னென்பர். இவர் அக்காலத்து உலாந்த அரசினாாற் பாராட்டப்பட்ட பிரபுக்களுள் ஒருவரும், யாழ்ப்பாணத்திற் கல்வியை விருத்தி செய்த தமிழாசர் களுள் முதன்மையரான பரராசசேகரன் செகராச சேகரன் என்னும் இரு சகோதரர் வமிசத்திற் ருேன்றி னவரும், தமிழ் வித்துவானுமாக விளங்கியவருமான வில்லவராய முதலியாருக்கு மைந்தர். கலைமகளருளாற் கவி பாடுந்திறம் இளைமையிலேயே வாய்க்கப் பெற்றவ ரென்பர். இவர் ஏழு வயசளவில் வில்லவராய முதலியார் வீடு யாது என்று வினவி வந்த புலவரொருவர்க்கு விடை யாக அவர் வாசலிடைக் கொன்றை மரம் கிற்றலை அடை யாளமாகச் சுட்டிக் கூறி அதனையும் வருணித்து வெண்பா ஒன்று பாடினவர். அவ் வெண்பாவாவது:
பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும் தன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம்-மின்பிரபை விசுபுகழ் நல்லூரான் வில்லவரா யன்கணக
வாசலிடிைக் கொன்றை மரம்.
வில்லவராயர் வசித்த இடம் கல்லூர் வில்லடித்தெரு வாளிகையாம். சட்டை நாதர் கோயிலுக்கு மேற்கிலுள்ள கொண்டலடி வைரவகோயில் என்னும் இடத்தில் புல்வர் பிாமசாரியாக வாழ்ந்தனரென்ப.
இவர் இயற்றிய வேறு நூல்கள்: மறைசை யந்தாதி, 4ண்வளை பந்தாதி, காவை வேலன் கோவை, கானுமத்திரி

Page 4
கும்மி முதலியன. மறைசை யந்தாதி வேதாரணியேசுரர் மேலது. இது இவர்தம் பதினைந்தாம் ஆண்டிற் சிதம்பா தரிசனம் செய்து மீளுங்கால், வேதாரணியத்திற் பாடப் பட்டதென்பர். கல்வளை யந்தாதி சண்டிருப்பாயிலே கல்வளையிலிருக்கும் விநாயகர் மேலது. இது, இவர் தந்தை யாரால் தொடங்கப்பட்டு விடப்பட்டிருந்ததை இவரால் முடித்துப் பூர்த்தி செய்யப்பட்டதென்பர். கான்றவ வேலன் கோவை யாழ்ப்பாணத்திலே கரவெட்டியிலே செல்வரா யிருந்த வேலாயுதப் பிள்ளை என்னும் பிரபு மேலது. நாலுமந்திரிகும்மி சண்டிருப்பாய்வேலுப்பிள்ளை யால் 1934ல் அச்சிடப்பட்டுளது. இப்பிரபந்தங்களினல் இவர் பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் இலக் கணங்களையும் இனிதுணர்ந்தவர் என்பது புலப்படுகின்றது.
இவர் தமிழ்ப் புலமைக்காக அக்காலத்துப் பிரபுவாய் விளங்கிய வண்ணுர்பண்ணைக் கணேசையரென்பவரால் பண்டாாக்குளம் என்னும் ஒர் வயல் இவருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட தென்பர். இவர் காலத்தில் விளங்கிய தமிழ்ப் புலவர்கள். கூழங்கைத் தம்பிாான், சித்தாந்த சாபம் - சொக்கலிங்க தேசிகர் 4 முதலியோர், விநாய்கப் பெருமான்மீது இரு பிரபந்தங்கள் பாடி யிருப்பதால் இவருக்கு அப்பெருமான் உபாசனமூர்த்தி போலும்
* இப்புலவர்கள் விளங்கிய காலம் கி. பி. 1790 என்ப.

பருளைத் தல மகிமை
யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு வடமேற்கில் சமுத் திரக் கரைக்குச் சமீபத்தில் தொல்புரம் சோழியபுரம்ென் இரண்டு ஊர்கள் இருக்கின்றன. இாண்டுக்கும் இட்ைபீல் உள்ள தூரம் ஒரு மைல். தொல்புரமென்பது பழைல் ஆசாரங்களை அநுட்டித்தவர்கள் இருந்ததிகுல் வந்த பெயரென்றும், ச்ோழியபுரமென்பது இந்திய்ாவிலிருந்த சோழியர் இருந்ததினல் வந்த பெயரென்றும், சோழியர் புரம் சுழிபுரமென மருவியதென்றும் சொல்லுகிருர்கள். சுழிபுரம் முற்காலத்திய செந்தமிழ்க் கல்விக்கும் சைவா சாாத்திற்கும் உறைவிடமாக இருந்தது. இந்தச் சுழிபுரத்தி லுள்ளது பருளாய் என்னும் இடம் பருளாய் என்பது பருளை என மருவியது. x
திசைமழுவனென்னும் ஒரு சிற்றரசன் அரசு செய்த இடம் இதற்குச் சமீபத்திலுள்ளது என்பர். இந்த இடம் இப்போது மழுவைக்காடு என்று சொல்லப்படும். இந்த இடத்தில் திசைமழுவன் காலத்தில் விளங்கிய சம்பேகான் என்னும் சிவாலயம் இருந்த இடம் அழித்துகிடப்பதை இப்போதும் காணலாம். இன்னும் இதற்குச் சமீபத்தில் பூரீராமபிரான் பாதம் வைத்த காரணத்தால் திருவடி நிை
எனப் பெயர் பெற்ற ஒரு ஸ்தலம் இப்போதும் வழிபடப் பட்டு வருகின்றது. இத்தலம் யாழ்ப்பாணத்தக் கிரி மலையைப்போல் மூர்த்தி தலம் தீர்த்த விசேடங்கள் பெற்றது. இங்கேதான் பருளை விநாயகர் முரூகர்கோயில் களின் தீர்த்த உற்சவங்களும் பொன்னலைக் ருெஷ்ணன் கோயில் தீர்த்த உற்சவமும் கொண்டாடப்படுவன. சம்புத்

Page 5
(8)
துறை * இன்ருெரு கடற்றுறைமுகமும் இதற்குச் சமீபத்தி லுண்டு. *
இந்தப் பருளையில் ஒரு விநாயகராலயம் தமிழாசர் காலத்திற் கட்டப்பட்டிருந்தது. போர்த்துக்கேச அரசினர் மற்றைச் சைவாலயங்களை இடிக்கிற காலத்தில் இதனையும் இடிக்கத் தொடங்க, ஒரு காகம் வந்து இடிப்பித்த அதிகாரியினுடைய கண்ணைக் கொத்தி இடிக்க விடவில்லை. அதனல் அப்பிள்ளையாருக்குக் கண்ணைக் கொத்திக் காக்கைப் பிள்ளையார் என்று பெயர் வழங்கலாயிற்று. விநாயகரால யத்திற்குச் சமீபமாக முருகாாலயமும் ஒன்றுளது. இவ் விரண்டாலயங்களும் இருக்குமிடம் வயல் சூழ்ந்த மருத கிலம்.
இவ்விநாயகர் கோயில் காலகதியில் கிலமடைந்
திருந்தது. ஐம்பது அறுபது வருடங்களுக்குமுன் ஒரு வாறு புதுப்பித்துக் கும்பாபிஷேகம் முதலியன தடை பெற்றுள்ளன. இன்னும் நடைபெற வேண்டிய திருப்பணி வேலைகளுள்ளன. அவற்றுள் கோயிலுக்கின்றியமையாது வேண்டும் களஞ்சியம் மடப்பள்ளி இரண்டும் நெடு நாளாய்க் கிலமடைந்திருக்கின்றன. இதுவரை எவரேனும் இவைகளைத் திருத் திக் கட்டிக்கொள்ளாமையினுல் போலும் மலேய சுழிபுர ஐக்கிய சங்கத்தார் பொதுதன்மை
சு சம்புத்துறை என்பது இந்தியாவிலிருந்து கொண்டுவந்த சிவலிங்கம் இறக்கப்பட்ட துறைமுகம் என்பர். இதற்குச் சமீபத் தில் மாதகல் என்னும் ஊர் உள்ளது. உமாதேவியின் திருவுரு வச்சிலே என்று பொருள்படும். மாது - கல் கிறுவிய இடம் இப் போது மாதகல் என மருவியதென்பர். சம்பு - சுகஞ்செய்பவன்.
சம்புகல் மாதுகல் கடலோரத்தில் இருந்தன என்றும் GaleFirdaui.

(9)
கருதிக் களஞ்சியம் மடப்பள்ளி வேலைகளை நிறைவேற்று தற்கு நன்கொடையாகப் பொருளுதவி செய்ய நிச்சயித் திருப்பது. இது இங்கே குறிப்பிடத் தக்கதொரு நற்செய்தி யாகும். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் பொதுசன வழி பாட்டுக்கும் நன்மைக்குமுரிய இக்கோயிற் காரியங்களைக் கிரமிந்தவருது நன்முக நடத்தும் பொறுப்புடைய பரிபால கரும் உபயகாரரும் மற்றும் அபிமானிகளும் அறிவொற் றுமையோடு கலந்து ைெடி சங்கத்தார் செய்யப்போகும் தொண்டினை வியந்து இப்பொது 'விஷயத்தில் அவர்க ή ளுக்கு ஊக்கமுண்டாகச் செய்தல் நன்மும்,
மேலும் பருளை விநாயகர் முருகர் பவனிவரும் தேர், விநோதமானது. முன்னுளில் வடதேசத்துச் சிற்ப, விற்பன்னர்களால் அழகுபெற அமைக்கப்பட்ட சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டு விளங்குவது. ஆயினும் இப்போது திருத்தப்படவேண்டியதாயிருக்கிறது. மலேய சுழிபுர ஐக்கிய சங்கத்தின் ஆதரவில் திருப்பணிகளுக்காகத் திாட்டப்படும் நிதியிலிருந்து இத்தேர்த்திருப்பணியாகிய புனருத்தாாண் சற்கருமம் செய்தற்கு வேண்டும் நன் முயற்சி நடைபெறுவது வியக்கத்தக்கது.

Page 6
கோயிற்பரிபாலனம்
“என்கடன் பணிசெய்து கிடப்பதே" என்பது சமய குரவர் திருவாக்கு. அதற்கேற்ப, பரிபாலகர் பூசகராவார். சமயக் கல்வியறிவு ஒழுக்கம் ஆசாரம் அனுஷ்டானம் தியாகம் உண்மை என்னும் பண்பினுல் தகுதியுடையாாய்: வழிபடும் அடியார்களுக்கு. நல்வழிகாட்டிப் பொது நோக் குடன் பொது நலங்கருதிக் கோயிற் கருமங்களைச் சிாத்சை யோடு தொண்டாகச் செய்தல் கடனுகும். இப்படி விதி முறைகளைப்பேணிக் கிரமந்தவருது பூசனை வழிபாடுகள் கடைபெறும் திவ்வியதலங்கள் திருக்கோயில்களெனப் போற்றப்படும். அத்தகைய திருக்கோயில்களையுடைய காட்டில்தான் கால மழைபெய்யும்; பலவளங்களும் பெருகி காடு செழிக்கும்; பொது நன்மைகள் விருத்தியாகும்; குடிகள் சுகமாய் வாழ்வர்.
ஆற்றரு கோய்மிகு மவனி மழைகுன்றும் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான் திருக் கோயில்க ளானவை சாற்றிய பூசைகள் தப்பிடிற் முனே.
முன்னவஞர் கோயிற் பூசைகள் முட்டிடின் மன்னற்குத் தீங்குள வாரிவளங் குன்றுங் கன்னங் களவு மிகுத்திடுங் காசினிக் கென்னருனர்தி யெடுத்துரைத் தானே.
--திருமந்திரம்.
கோயிற் பரிபாலனம் முறைகேடாக நடப்பதனுற் போலும் மேற்குறித்த குறைகளே இக்காலத்தில் எங்கும் மலிந்து காணப்படுகின்றன. இன்னும் கோயில்களுக்குரிய தருமச் சொத்துக்கள் அங்குமிங்கும் துர்விகியோகம் செய்யப்படு:

(11)
தலைக் காணலாம். ஆலயங்களின் பரிபாலனம்* நன்முறை யில் கடிவாமை இதன்காரணமாகும். திருக்கோயிலில்லாத திருவித்ரரைப்போல, கோயில் தருமச்சொத்துக்களைப் பேணிப் பாதுகாக்கப்படாத திருவிலூரும் அடவிகாடேயா மென்பதும் நோக்கத்தக்கது. உதாரணமாக, பருளைப் பிள்ளையார் கோயிலுக்குரிய தருமக் காணிகளுள் சுழிபுரம் செட்டிகுறிச்சியில் வளவுக்காணி ஒன்றுள்ளது. இது நெடுங்காலமாய் பாதுகாப்பில்லாது கோயில் தருமத்துக்கு, ஒருவகையிலும் பிரயோசனமில்லர்து பாழாய்க்கிடக்கிறது இப்படியாக டிை கோயிலுக்குரிய காணியுண்டென்று இப் போது பரிபாலகராய் இருப்பவருக்குத் தெரியுமோ என்ப ஆம் சந்தேகம். இந்தக்காணியைக் கவனித்து அறுக்கை: யாக வேலிபோட்டுக்கொண்டு பனை முதலிய வான்பயிர்களை" உண்டாக்கிப் பார்வை செய்துவருதல் நன்று. இனிவருங் காலத்தில் அதன் புரோசனங்களைக் கோயிலுக்குபயோக. மாகும்படி செய்யலாம்.
மேலும் இந்த இடத்திலுள்ள சிவன்கோயிற் GFrš: துக்களும் பிறதருமச் சொத்துக்களும் சீர்கெட்டிருப்பதைக் காண்லாம். கோயிற் பரிபாலனம் ஒழுங்காயிருந்தால் தருமச்சொத்துக்கள் அதர்மவழியில் வீணுய் ஒழியுமோ?
**ய்ாழப்பாணத்துக் கோயில்கள் மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கின்றன. சைவசமயத்துக்கு சேர்ந்துள்ள பொல்லாக்கு களுள் எங்கள் கோயில்களுக்கு சேர்ந்துள்ள பொல்லாங்கு மிகக் கொடியது? என்பதும், “கோயில்களும் தருமச் சொத்துக்களும் சன்முகப் பரிபாலிக்கப்படாது சீர்கெட்டிருக்கும்போதி, திருத் தப்பட்டுள்ள இச்து அறகிலேயச் சட்டமின்றியமையாத eyavaduo tjerar as dåva), FL'Llib (a fine piece of legislation) Graiirus vis”
சைவப்பெரியார் பூரீ சு. சிவபாதசுந்தாம் அவர்கள் கிருத்து.

Page 7
(12)
தரும நன்கொடையான கோயிற்காணிகளை அலட்சியம் பண்ணி அவம்போகவிட்டிருக்கும் அக்கிரமத்தினுலன்ருே இங்குள்ள மற்றக் காணிகளும் வளங்குன்றிப் பயனில்லாது கிடக்கின்றன. இந்த இடம் முன்னிருந்த கிலைமாறி இங் கிருந்த குடிகளும் குறைந்து போயிருப்பதை இங்குள்ளார் கண்டுங் காணுதவராயிருப்பது கவலைக்கிடமானது. உத்தர வாதமில்லாதவாாய் மனம்போனபடி நடக்கும் பரிபாலகரை நம்பி ஏமாந்து வாளாவிருப்பதை விடுத்து அவரை உத்தச வாதமுடையாாகச் செய்வது வழிபாட்டுக்குரிய பொது மக்களைப் பொறுத்தகடமையாகும்.
கேவல்ம் நிலையில்லாத தற்பெருமை தற்புகழ்ச்சியான விளம்பரம், சுயநலம் என்னும் சிறுமைக்கிலக்காய் அவரவர் அற்பநோக்கம்பற்றி “எனக்கெனக்கென்று” உரிமையும் முகாமையுங் காட்டிக்கொள்ளும் ஆசையினல் போலிவகை யான சிலர் கோவில் என்பதன் மகிமையைப்பற்றிச் சிறிதும் சிந்தனையில்லாது, தவம் செய்தற்குப்பதிலாக, விவகாரங் களில் ஈடுபட்டு அவம் செய்வதில் விண்காலம் போக்குத லால் கோயிற் பரிபாலனம் சீர்கெடும். அதனுல் வரும் பழி பாவத்துக்கஞ்சி, கோயிலுக்குரிய பணிகளில் பேர் ஊக்க முடையாாதல் வேண்டும். அதுவொன்றே உத்தம கைங் கரியமான கோயிற் பூசைகளைக் கிரமப்படி பயபத்தி விசுவாச மாகச் செய்தற்குரிய சைவாசார சம்பிரதாயமுடைய அர்ச்சகர் நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் முறையான கோயிற்பரிபாலனத்துக்குப் பிரதானமாய் வேண்டப்படுவ தொன்ரும்.
முன்னைநாளில் சுழிபுரம் நல்ல கிலையிலிருந்தமையினம் போலும் "தொல்லுலகம் போற்றும் சுழிபுரம்” என இக் நூலாசிரியர் காப்புச்செய்யுளில் கூறினர். இவ்விதமாக

(13)
இந்நகரச் சிறப்பைமட்டும் இக்காலத்தவர் எடுத்துவிதந்து கூறுவது போதியதன்று. தம்முன்னேரைப்போல அதன் நற்கீர்த்தியைப் பலவிதத்திலும் பாவச்செய்ய முயற்சி செய்யவேண்டியதே அவர்கள் பெருங்கடனகும். மற்றும்;
மூர்த்தி தல்ந்தீர்த்தம் முறையாற் ருெடங்கினர்க்கோர் வார்த்தை சொலச்சற்குருவும் வர்ய்க்கும் பராபரமே.
என்று கூறியபடி பிள்ளையார் . முருகமூர்த்தி கோயில் களின் அருகாமையிலுள்ள கேணிகளாகிய நீர்நிலையங்களைச் சுத்தமாக வைக்கவேண்டிய முறைகளைத் தேடி சீர் திருத்தல் அவசியமாகும்.
சுழிபுரம் சங்கத்தார்.

Page 8
பள்ளுச் சிறப்பு முதலியன
*பருளை விநாயகர் பள்ளு” என்னுஞ் சொற்ருெடர் பருளை என்னுந் திருப்பதியில் எழுந்தருளிய விநாயகரைப் பற்றிய பள்ளு அல்லது இசைப்பாட்டு என்று பொருள் படும். பள்ளு என்பது தொண்ணுாற்ருறு பிரபந்திங்க ளுள் ஒன்று. இப்பிரபந்தத்தை உழத்திப் பாட்டு எனவுங் கூறுப. இது வேடிக்கையான நாடகத்தின் பாற்படும்; பள்ளர், கன்மர், கடைஞாாகிய உழவர்களால் மருத கிலத் தில் நிகழும் ஒர் ஊடலாகும். இதன் இலக்கணம்.
*புரவலர் கூறி யவன்வா ழியவென்
றகல்வயற் முெழிலை யொருமை யுணர்ந்தன ளெனவரு மீாைங் துழத்திப் பாட்டே.?
என்ற பன்னிரு பாட்டியற் குத்திாத்தால் அறியலாம்.
உழத்திப் பாட்டின் விளக்கமாவது:-கடவுள் வணக்க முறையே மூத்தபள்ளி, இளையபள்ளி, குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல் முறையே அவர் வரலாறு, நாட்டு வளம், நகர்வளம், குயிற்கூக் கேட்டல், மழை வேண்டிக் கடவுட் பாவல், மழைக்குறி ஒர்தல், மழை பொழிதல், ஆற்றின் வரவு, அதன் சிறப்புக் காண்டல் இவற்றிற் கிடை -யிடை அகப் பொருட்டுறையுங் கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிகளிருவர்முறையீடு, இளையாளை அவனுரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல் வினவல், -፵ጫሠ னது கூறல், ஆயரை வருவித்தல், அவர் வால், அவர் பெருமை கூறல், மூத்தபள்ளி முறையீடு, குடும்பன் கிடையி லிருந்தான்போல வில்,"அவனைத் தொழுவின் மாட்டல், அவள் புலம்பல், மூத்தபள்ளி யடிசிற் கொடுவால், அவன் அவளோடு கூறல், அவன் அவளை மன்னித்தல், கேட்க வேண்டல், அவள் மறுத்தல், அவன் குளுறல், அவள்
 

(15)
அவனை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனப் பரவல், விதை காளை முதலிய வளங்கூறல், உழவருழல், கான் வெருளல், அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவன் எழுந்துவித்தல், அதைப் பண்ணைத் தலைவற்கு அறி வித்தல், நாறு கடல், விளைந்தபிற் செப்பஞ் செயல், கெல் அளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகளுள் ஒருவர்க் கொருவர் எசலென இவ்வுறுப்புக்களுறப் பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்குத் தோன்ற அளவடியாய் முதற்சீர் வெண்சீராய் ஏனைய சீர் முதலசை நிரையன்ச யுற்ற வெண் சீராயும் அல்லது இயற்சீர் வெண்சீர் ஒன்றி வருவதுமான ஒரு கலிப்பாவும் பற்பல சந்தச் சிந்தும் விருத்தமும் விரவிவர இவற்ருற் பாடுவது. இவ்வுறுப்புக் களுள் சில குறைந்து வருதலுமுண்டு. அதற்கு உதார ணம் இந்நூலேயாகும்.
இந்நூலில், ஆன்ருேர் வழக்கின்படி காப்புச் செய்யு ளும், விகாயகர், நடேசர், சிவகாமியம்மையாகிய இவர்களது . துதியும், பள்ளியர் தோற்றமும், பள்ளியர் வரலாறு கூற லும், பள்ளன் தோற்றமும், பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறலும், குலமுறை கிளத்தலும், குயில் கூவுதலும், மழை கேட்டலும், ஆற்றுவரத்தும், பண்ணைக்கார்ன் தோற்ற மும், ஆண்டையை வணங்கலும், விதைவகை கேட்டலும், . முறைப்பாடும், பள்ளன் மூத்த பள்ளியை வேண்டலும், மூத்தபள்ளி ஆண்டையை வேண்டலும், பள்ளன் ஆண் ைேடக்குக் கணக்கொப்பித்தலும், முகூர்த்தங் கேட்டலும், மூத்த பள்ளியிாங்கலும், நாற்றுகடவும், அதன் விளைவும்
ஆறப்பட்டு, கழிக்கரைப் புலம்பல், தலைவன் பொருள்வயிற்
பிரிவில் தலைவி யிாங்கல், தலைவியைப் புகழ்தல், தலைவன் பொருள்வயிற் பிரிந்துழித் தலைவி வருத்தம் பாங்கி கூறல்,

Page 9
(
கற்ருயிரங்கல் முதலிய யிடையே விரவியும் வெண்ப மும், கலிநிலைத்துறையும், கட் பாவும்,கொச்சகமும், சிந்தும் சொற்சுவையும் பொருட்சுை இதில், மீன் வகைகளுட வின் வகைகளும், அக்காலத் பெயர்களும், ஆண்டையைப் வகையும் நன்கு அறியலாம் களும் கூறப்பட்டுள்ளன. சி குறள் முதலிய நூல்களின் 'மழை கேட்டல்' (பா.66) வக்கிரித்தலைக் கூறியதும், 6 மிடத்து “மற்றப் பாம்புக்கு நாணுகமொன்றுண்டே யான யதும், கொழுவைப்பற்றிக் சொன்ன கோவையிலே கொ ணுண்டே’ (பா-90) எனக் பற்றிப் பேசுமிடத்து, “e பொன்னுலையூரிலே வாருங்க எனக் கூறியதும், பருளை வி வளத்தைச் சோதித்து, “ஊ பருளை' (பா-108) என்று சி போன்ற வேறு சில தொ யுள்ளன.
எல்லாச் சிவ சேஷத்தி டென்பர். சில தலங்களில் உருத்திரகணிகையர் பள்ளைட் வழக்கமா யிருக்கின்றது. 8 போற்றப்பட்டு வருவதாகத் ப்ல இதுவரை அச்சிடப்பட6

16)
அகப்பொருட்டுறைகளிட்ை rவும், விருத்தமும், சந்தவிருத்த ட்டளைக் கலித்துறையும், கலிப் விரவப்பெற்றுள்ளன. இந்நூல் வயும் உடையது. b, மாட்டின் வகைகளும், நெல் தில் வழங்கிய பள்ளிகளுடைய் பள்ளிகள் சிறிப்பித்துப்பேசும் சில நீதிகளும் பழமொழி ல புராண கதைகளும், திருக் கருத்துக்களும் காணலாம். என்னுமிடத்து மழைக்கோள் விதை வகை கேட்டல் என்னு ம் பூரத்துக்கும் பகல் வைத்த ண்டே’ (பா-86) எனக் கூறி கூறுமிடத்து, “மாணிக்கஞ் ழுவைத்திருப்பது பார்மின்கா கூறியதும், உழவெருதைப் உழுதகாளை யொன்றுண்டது 5ாட்டுவேனுண்டே’ (பா-91) வீரதேவன் வயலிலுள்ள மண் ற்றுதேன் பொழில்சூழ் தென் மப்பித்துக் கூறியதும், இவை டர்களும் வியக்கற்பாலனவா
ாங்களுக்கும் 'பள்ளு உண் துவஜாவரோகண தினத்தில் பாடிக் காப்பை அவிழ்ப்பது Pல பள்ளுகளே ஆன்றோால் தெரிகின்றது. அவற்றுள்ளும் வில்லை.

Page 10
"பிரணவப் பொருளாம் ெ சரன அற்புதமலர் தலே
 

பருந்தகை ஐங்கரன் i 535i GQ TGD, "*

Page 11
கணபதி பருளை விந
தொல்லுலகம் போற்றுஞ் 8 பல்வளஞ்சேர் பள்ளினிசை மையாழிக் கண்ணன் மலர்க் கையாழிக் கண்ணனே காப்ட பள்ளினிசை - பள்ளுப்பாட் வழி வந்த சாரியை. வில் - இந் மேகம் படியும் ஆழி என்க. நன்மலர்க்கண் - நல்ல தாமரை தல் - உறங்குதல். கையாழிக் கe சக்காப்படையைத் தாங்கிய திரு
ğ5
விகா தக்து தவழ நதிதனி லாம்ப சந்தரஞ் சேரும் பழனப் பரு வந்தெதிர் கின்ற கயமுகன் வைத்து காப்பிள்ளை யென்ன சக்து - சங்கு. சங்கு நதியி ணிலவொளியால் வயலிலுள்ள ஆ அழகு. பழனம் - வயல். சுடர் முகாசுரன். சுடரும், வதைத் என்க. தீயோனகிய கயமுகாசு இந்நூற்குவரும் இடையூற்றை கருத்தாகக் கொள்க.

தி துனை. ாயகர் பள்ளு
ւն ւլ ஈழிபுரம்வா ழைங்கான்மேற் பாடவே-வில்வழங்கு கண் வளர்ந்ததிருக்
o .ெ இசை - பாட்டு. இன் - தவிர் திா தனுசு, மை - மேகம்; அம் ஆழி - கடல். கண் - ്ളn. மலர்போன்ற திருக்கண், வளர் ண்ணன் - வலத் திருக்காத்திலே மால்.
தி
' u ess fir
னணிமலருஞ் முளையிற் முேன்றுகடர் மன்ன வதைத்ததந்த கத் தேகின் றருள்செயுமே. ல் தவழ என்க. அதனது தன் ம்பல் மலர்கின்றது. சுந்தாம் . - பாஞ்சோதி, கயமுகன் - கய ததுமாகிய ஐந்து காப்பிள்ளை *ானை வதைத்த பிசானதலின், அவன் சீக்கி யருளுவனென்பது

Page 12
笼 பருளை விநாயகர் பள்ளு
நடேசர்
சுருதி யின்முத லாகிய காாணர் துளைபொ லிகா வாரண மாமுகர் ܂ܐ .
சுழிபு ரநகர் மேவுப முளையி அலுறைநாதர் கரும ணிவிழி யாளுமை'பாலகர்
கதிரை யின்வடி வேலர்ச கோதரர் கருணை யின்மத தாாையி னுர்பளி னிசையோதச் செரும ருவுத்ரி குலவ ராயுதர்
திரிதி ரிபுர கோபா நாமயர் திகழி ரணிய மேருச ராசனர் பணிகாஞர் பொருமு முவையி னிருரி யாடையர் " .
புரிச டைவளை சோமக லாதார் பொதுவி னினட மாடிய சேவடி மறவேனே
சுருதியின் முதல் - பிரணவம், துளை - துவாரம், துளை பொலிகாம் - துதிக்கை. வாரணம் - யானை. கதிரை - கதிர்காம மென்னுர்திருப்பதி. கருணையின் - இன்-தவிர்வழி வந்த சாரியை. மததாரை - மதமழை. செருவிலே பொருந்திய முத்தலைச் குலம். செரு - போர். வர ஆயுதர்- மேலான படையையுடையவர். திரி திரிபுரம்-மூவுலகங்களிலும் திரியும் முப்புரம்; அவற்றைச் சினர் தவரென்க. அநாமயர்-அகாதியே பாசங்களினிங்கியவர். ஆமயம்பாசம். ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்? என்பது தமிழ் வேதம். இரணியமேரு - பொன்மயமான மகாமேருமலை, “சாசனம்-வில்: அம்பைத் தள்ளுவதென்பது உறுப்புப் பொருள். பணி- பாம்பு; இங்கே ஆதிசேடன்: வாசுகியுமாம். சாண்-வில்லி குண். உழுவை - புலி, புரிசடை - முறுக்குண்ட சடை, வளை சோமகலாதார் - வளைந்த சந்திரகலையைச் குடியவர். பொது - அம்பலம்; இங்கே திருச்சிற்றம்பலம், ஒத மறவேன் என முடிக்க.

பருளை விநாயகர் பள்ளு 황
சிவகாமியம்மை
தோட்டு வாரிச நான்முகன் பேணிய தும்பி மாமுக னம்புவி தாங்கிய சேட்டு மேருவிற் பாரதங் தீட்டிய
தென்ப முளைப் பாஞ்சோதி யன்ன கோட்டு வாாணி கொங்கைப் பெருக்குங்
குழற்சு ருக்கு மணிவாய் முருக்கும்பஞ் சூட்டு சீறடி யுந்துடி நேரிடை
யுடையு மெங்கணு மென்கணி னின்றவே." தோடு - பூவிதழ். வாரிசம் - தாமரை. பேணுதல் - ஈண்டு வழிபடுதல், தும்பி-யானை, சேடு- பெருமை. தீட்டுதல்- எழுது தல். பாஞ்சோதி அன்னை - பாஞ்சோதி விநாயகப்பிரானது திருத்தாய். கோட்டுக்கொங்கை - யானைக் கொம்பு போன்ற கொங்கை. வார் - கச்சு. குழற்சுருக்கு - கடந்தலினது கட்டு. முருக்கு - முருக்கம்பூப்போன்ற இதழ். பஞ்சு ஊட்டு, சீறடி - செம்பஞ்சுக் குழம்பு எழுதப்பட்ட சிற்றடி துடிநேர் இடை - உடுக்கை போன்ற இடை.
நூல்
பள்ளியர் தோற்றம் ۔ ۔ ۔ குத்துமுலைக் குவடுகுலுங் கத்தாள வடம்புரளக் குமுதச்செவ் வாயின்வெள்ளி நகையரும்பத் அத்துவரிக் கயலைவெருட்டிப் பத்திமணிக் குழையொடுமுட் தாாைமணிக் கண்களிாண்டுந் தாவடிசெல்லச் Iyá சித்தியளித் திடுபுகழி புரநக-ருறை-யத்திமுகக் கணபதி
சேடனுகாவா லசைக்கரிய சீரிசைபாடி (பணபதிச் பெத்திசையும் புகழகிதிக் கோனள காபுரியென் றெவரும
மீழமண் டல்ப்பள்ளி கோற்றினளே. (கிக்கு

Page 13
4. பருளை விநாயகர் பள்ளு
குவடு - மலை, தாளவடம் - முத்துவடம், குமுதம் - செங் குமுதமலர். வெள்ளி நகை-வெண்மையான பற்கள். வெருட்டி - அஞ்சவித்து. பத்திமணிக்குழை - வரிசையாகவுள்ள இரத்தி 'னங்கள் அழுத்திச் செய்யப்பட்ட குழையென்னுங் காதணி. தாரை - கூர்மை. தாவடி - போர். தாவடி யோட்டு மயிலிலும்" ‘தண்ல் தாவடி போய் எனவும் 'ஆயிரமக்கடாவடி போயினர்’ எனவும் பிறரும், துணைவரி யம்பகந் தாவடி செல்குழையாள்" என இவ்வாசிரியரும் கூறுமாற்ருல் இஃது இப்பொருட்டத லறிக. கண்கள் இரண்டும் வெருட்டி முட்டித் தாவடி செல்ல என்க. சித்தி - மனுேபிஷ்ட நிறைவு: அஷ்டமாசித்தியுமாம். அத்தி - யானை. பணபதிச்சேடன் - ஆயிரபணு மகுடங்களை புடைய பாம்புகளுக்கு அரசனகிய ஆதிசேடன், அசைக்க அரிய - சொல்ல முடியாத, நாவசைத்தார்’ என்பர் முன்னும். விதிக்கோன் - குபேரன், குலுங்கப் புரள அரும்பச் செல்லப் பாடிப் புகழுமாறு தோற்றினளென்று முடிக்க. இது மூத்த பள்ளித் தோற்றம். (1)
சின்னவிடை நூலிறுமிறு மெனச் சீறடியிற் சிலம்பு புலம்பச்
சிறியதுதற் பிறையணிவட்டச் சுட்டியிலங்கப் பொன்னசலக் குசமதி னவமணிமின்னுதனக் கச்சு நெகிழப் புனைந்தகருங் கொண்டையில்வண்டு புரண்டு நெருங்கச் செந்நெல்வயற் சுழிபுர நகருறை கன்னமதத் திறையவர் பரி சேவடியைத் திக்குநோக்கித் தெண்டம்பண்ணிச் (புரச் சொன்னகிலத் துறுவசி யிவளென வன்னமெனப் பிடியென சோழமண் டலப்பள்ளி தோற்றிஞளே. (கிதிவளர்
இடைநூல் - நூல்போன்ற இடை. இறும் இறும் என - இற்றுவிடும் இற்றுவிடும் என்று. சீறடி - சிறிய அடி. சிலம்பு - காலணி விசேடம். புலம்ப - ஒலிக்க. நுதல் - நெற்றியில். பிறை பணிவட்டச் சுட்டி-பிறைபோன்ற அழகிய வட்டமாகிய நெற்றிச் சட்டி. பொன் அசலம் - பொன்மலை. அது மகாமேரு. மேரு' போன்ற குசத்தில், குசம் - கொங்கை, அது - பகுதிப் பொருள்

பருளை விநாயகர் பள்ளு 5.
விகுதி. நவமணி- நவமணி கோத்து விளங்கும் மாலை. சன்னம்காது. பரிபுரம்-சிலம்பென்னுங்காலணி, தெண்டம் பண்ணுதல்சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தல். சொன்ன நிலம் - பொன்னுலக மெனப்படும் தேவலோகம். உறுவசி - ஊர்வசி யென்னுக் தெய்வப் பெண். பிடி - பெண் யானை. இஃது இளையபள்ளித் தோற்றம், (2) பள்ளியர் வரலாறு கூறல் கோடார் குழலசைய நுதல்வேர் வரும்பியெழத் துடியுங் கொடியுமன்ன மருங்கு னெருங்கக் கோடா னவைகுலுங்க மணிமேகலைக ளார்ப்பக்
குழையுங் கயலுஞ் சென்று நின்முடவே கீடான யேறுசந்த்ர சூடா மணிக்குவந்த
கித்தன்பா பதக்கதையை யாடகக் குன்றை யேடாக வெழுதினேன் றிருநாமம் பாடியாடு
மீழமண் டலத்தினிற் பள்ளி நானே. தோடார் குழல் - பூவிதழ் பொருங்கிய கடந்தல். வேர்வு - வியர்வை. துடி - உடுக்கை. மருங்குல்-இடை, கோடு - உவமை யாகுபெயர். மேகலை - அரைப்பட்டிகை: அஃது எழுகோவை புடையது. காதிற் குழையும் கயல்போன்ற கண்ணும் ஒன்ருே டொன்று சென்று சோ. ஆடப்பாடியாடு மென்க. நீடு ஆன்பெருமை மிகுந்த இடபம்: நீடு ஆனை யெனக்கொண்டு பெருமை மிகுந்த அயிராவனமென்னும் யானை யென்றலுமாம். சந்திா சூடாமணி - சிவபெருமான். சிவபெருமானுக்குப் பிரியம்வாய்ந்த என்க. சித்தன் - அழிவில்லாதவன். ஆடகக்குன்று - மாமேரு. இது மூத்தபள்ளி தன் வரலாறு கூறியது. கேர்ங்கிளம் புதியமுகைக் கொங்கைக் கெளரிமைந்தன்
கூறுபுகழ்க் கல்லாம ஞவசையார் காங்குபணி யைேரயிற்பூட்டு பிரான்பங்கயத்
சாளுக்கல் லாமற்சென்னி சற்றும்வனங்கார்

Page 14
பருளை விநாயகர் பள்ளு
வீங்குகடல் குடங்கைகொண்டான் கரகரீர்பூ
விட்டான்கோ யிலையன்றிச் சூழ்ந்து துதியார்
தூங்குதழை செவியன்பத்திமைத் தொண்டர்வாழுஞ்
சோழமண் டலத்தினிற் பள்ளி நானே.
முகை - அரும்பு. கெளரிமைந்தன்-இங்கே விநாயகப்பிரான், கூறுபுகழ் - கூறப்படும் தகுதிவாய்ந்த சீர்த்தி. பணி - பாம்பு. சென்னி - தலை, வீங்குகடல் - நீர்மிக்க கடல். கடல் குடங்கை கொண்டான் - அகத்தியமுனிவன். குடங்கை - உட்குழிந்தகை" அகத்திய முனிவனது குண்டிகையிலிருந்த காவிரியைப் பூமியிற் பெருகச் செய்தவனென்க. அசையாரும் வணங்காரும் துதியாரு மாகிய பத்திமைத் தொண்டர், விநாயகப் பெருமான் அாையிற் பாம்பணிந்திருத்தலேப் 'படர்தாழ் கச்சைப் பாம்பொடு தழீஇ' என்பதனன் அறிக. காவிரியை அப்பெருமான் பூமியில் விடுத்த வரலாறு கந்தபுராணத்துக் கூறப்பட்டது. இஃது இளையபள்ளி தன் வரலாறு கூறியது. (4) பள்ளன் தோற்றம்
சுற்றுகருங் கச்சைக்கட்டி மாதுளம்பூ வுறுமால்
சோாவிட்டுக் கட்டித்துள்ளு மீசை முறுக்கி வெற்றியாக் குங்குடித்து நீற்றையும்பெ ருக்கப்பூசி
மேல்வளைய லுந்தரித்து விழிகள் சிவந்து பற்றியமண் வெட்டிவைத்துச் சருக்கி நடந்து - தங்கப் -
பாளத்தாற் சமைத்தகொட்டுத் தோளிற்சுமந்தே யெற்றவரு மொற்றைமணிக் கொற்றக்கொம்பன் பண்ணை மீழமண் டலப்பள்ளன் முேற்றி னனே. (பார்க்கு அாையிற் சுற்றப்படும் கரிய கச்சை, உறுமால் - ஆடைவிசே டம். சோர விட்டுக்கட்டி-பிடரிப்பக்கம் தாங்குமாறு விட்டுத் தலையிற் சட்டி. அரங்கு-சாராயம். மேல் வளையல்மணிக்கட்டுக்கு மேலிடத்து அணியப்படும் வளையல். ஒரு மண்வெட்டியைக் கையிற் பிடித்தும் மற்முேர் மண்வெட்டியைத் தோளிற் சுமந்தும்

பருளை விநாயகர் பள்ளு T
வருகின்ருன் என்க. கொட்டு - மண்வெட்டி. பகைவரை எற்று , தற்குப் பயன்படும் ஒற்றைக் கொம்பு, அவனது பண்ணையைப் பார்க்கும் பள்ளன். இஃது பள்ளன் தோற்றம் கூறியது. (5)}
Qasırğasıb
பொய்யூரு மிடைக்கெளரி புதல்வனெழிற் புரிக்கோடு செய்யூருஞ் சுழிபுரத்துச் சேர்ந்தபரு ளையிலுறையு மையூர்முத் தானவள்ளன் மணிநாட்டு வளம்பேசப் பையூருங் களிகிதம்பப் பள்ளியர்கா வசைத்தாாே.
பொய் ஊகும் இடை - பொய்யென்று சொல்லப்படும் இடை. எழில்-அழகு. புரிக்கோடு - புரிகளையுடைய சங்கு. செய் - வயல். மையூர் முத்தானம் - கருநிறம் பொருந்திய மும்மத நீர். அதனை புடைய வள்ளல் பாஞ்சோதி விநாயகப்பிரான். பை - பாம்பின் படம். களிகிதம்பம் - களிப்பைத் தரும் அல்குல். கிதம்பம், அல்குல், கடிதடம் ஒரு பொருட் சொற்கள். இவை இடுப்பின் கீழுள்ள பின்புறத்தைக் குறிப்பன. பஸ்சாத் நிதம்ப: ஸ்த்ரீ சட்பூர் : என்பது அமரகேசரி. (6)
பள்ளியர் தத்தம் காட்டுவளங் கூறல்
போற்று மாதுளை மாணிக்க வித்தைப்
பொதிந்த சோதிக் கணிபல தூக்குங் காற்று வாழை யிலைசென்று மாகத் ... ."
தாணி மேலால வட்ட மசைக்குங் தோற்று மாசினி முட்புறச் செம்பழஞ்
சுட்ட பொன்னின் சுளைபல தூற்று மேற்று வாளை கழுகிற் குதித்திடு
மீழ மண்டல காடெங்க ணுடே. மாணிக்க வித்து - மாணிக்சம் போன்ற விதை. தாறு.குல. மாகத் தரணி - விண்ணுலகம். ஆசினி - பலாவிசேடம். சட்ட பொன்னின் சுளை - உருக்கி ஒடவைத்த பொன்போன்ற இனிய

Page 15
8. பருளை விநாயகர் பள்ளு
அவ. ஏற்று வாளை என்பது கடல்வாழ் சுறவுமேறெனப்படுமே என்பதன் உபலக்கணத்தால் வர்தது. தாக்கும் முதலிய நாள் கினேயும் பெயரெச்சமாகக் கொண்டு ஈழமண்டல நாடென்பத ஞேடு முடிக்க; அன்றி அவற்றை வினைமுற்முகக் கொண்டு அத்தகைய எனச் சொல்லிவிரித்து ஈழமண்டல நாடென்பத குேதி முடித்தலுமாம். பிறவும் அன்ன. (7)
காடெல் லாங்கரி மான்தஞ் சேருங்
கடலெல் லாம்வெள் வலம்புரி யூரு நாடெல் லாங்கதிர்ச் சாலி தழைக்கு
நாம்பெல் லாமிசை யேழை யழைக்கும் விடெல் லாம்வள்ளைப் பாட்டொலி பூணும் விண்
மீனெல் லாந்தண் டலைத்தலை காணுங் தோடெல் லாம்பொறி வண்டுபண் பாடிய
சோழ மண்டல நாடெங்க ணுடே. துரி - யானை, மான்மதம் - சத்தூரி மிருகம். வெள்வலம்புரிவெண்மையான வலம்புரிச் சங்கு. இசையேழி - சப்தஸ்வரம்: இங்கே சம்பூர்ண ராகம். வள்ளைப்பாட்டு - உலக்கைப் பாட்டு. தண்டலை - சோலை: தலை - எழனுருபு. தோடு - பூவிதழ். பொறிபுள்ளி. (8)
கண்ண கன்ற வர்ைத்தலைச் செம்மணிக் காந்தி தூயநந் தாவிளக் கோர்பால் வண்ண வேய்ங்குழ லூதண்ட ராவின்
மணியி னுேசை கறங்குவ தோர்பால் பண்ணை யோதிமக் கூட்டமு மோர்பால்
பவளக் கொம்பிற்கம் பூர்வது மோர்பா லெண்ணி னனில மும்புடை யோங்கிய வீழ மண்டல நாடெங்க ணுடே. கண் - இடம். வரைத்தலே - மலையில். காந்தி - ஒளி. நர்தா - கெடாத, வேய்ங்குழல்-மூங்கிலாற் செய்யப்பட்ட இசைக்குழல்.

பருளை விநாயகர் பள்ளு 9
அண்டர் - இடையர். ஆவின் கழுத்திற் கட்டிய மணி. கறங்குதல்ஒளித்தல்: பண்ணை - வயல், ஒதிமம் - அன்னம். பவளக்கொம்புபவளக்கொடி, கம்பு - சங்கு. குறிஞ்சி, முல்லை, மருதம், செய்த "லென்னும் கானில வளமும் கூறியவாறு. (9)
மின்னுங் காருங் கரும்புமுத் தீனும்விண்
மீனு மீனு மணிமுத்த மீனு முன்னுங் கார்மத வேழமுஞ் சேர்கழை யோங்கல் வேழமு மாரம் பயக்கும் பன்னுஞ் சீதளப் பங்கய ராசியும்
பாண்டுக் கூனற் பணிலமுஞ் செங்கார் துன்னுஞ் சாலிக் குழாமு கிறைந்தொளிர்
சோழ மண்டல நாடெங்கணுடே. மின்னுங்கார் - மின்ன?லச் செய்யும் மேகம். விண்மீன்கூேடித்திரம் போன்ற பெண்கள்: *மாதரொத் தனவுடுத் தோற்றம்" என்பது கந்தபுராணம். உன்னும் - உயர்வாக எண்ணப்படுகின்ற, சேர்கழை ஒங்கல் வேழம் - புனர்பூச நக்ஷத்திரத்தை அளாவிய மூங்கிலாகிய வேழம்: உயர்ச்சியையுடைய முங்கிலுமாம். ஆாம்முத்து. பங்கயாாசி - தாமரைத் தொகுதி. பாண்டு - வெண்மை. கடனற் பணிலம் - வளைவினையுடைய சங்கு. செங்கார் - செவ்விய கார்காலம். சாலி-செந்நெல். இதனுள் முத்துப் பிறக்குமிடங்கள் ஒன்பதும் கூறப்பட்டன. (10)
கோரக் தோய்ந்த வரியஞ்ச னத்தின்
குழம்பு தோய்விழிக் கொம்பனை யார்தா மாாங் தோய்ந்த களபக் கடாசல
மன்ப ஞர்புயக் கந்தினிற் பூட்ட வாரந் தோய்சங் தனமணக் தோய்ந்து
வயங்கு மின்னிசைத் தண்டமிழ் தோய்ந்தே யிரக் தோயு மிளங்தென்றல் வந்தசை யீழ மண்டல நாடெங்க ணுடே.

Page 16
O பருளை விநாயகர் பள்ளு
கோாம் - கஞ்சு. வரி - கண்ணிலுள்ள செவ்வரி. ஆாம் - சந்தனம். கடாசலம் - மதமலை: யானை; இங்கே கொங்கை. கொம்பனையார் தமது கொங்கையாகிய யானையைத் தமது கண வாது புயமாகிய தறியிலே பூட்ட என்க. வாரம் - மலைச்சார்பு. மலையின் அடிவாரத்திலே வளர்ந்துள்ள சந்தனமாங்களின் மணத்தோடு அளாவி. வயங்குதல்-விளங்குதல். ஈரம்-குளிர்ச்சி. சக்தனமணம் தோய்ந்து, தண்டமிழ் தோய்ந்து, ஈரந்தோயும் இளந்தென்றல். (11)
நீரி லேபுண்ட ரீக மரும்பு
கிழவி லேகரு மேதி புறங்கும் வாரி லேவெண் டாள் நிலாவும்
வரம்பி லேசெந்நெற் பூங்குலை சாயும் போரி லேநென் மணிக்குவை சேரும்
பொறியி லேகரும் பாடுங் கரும்பின் அாரி லேகம டங்கண் வளர்ந்திடு
சோழ மண்டல நாடெங்க ணுடே. புண்டரீகம் - தாமரை. மேதி - எருமை. வார் - முலைக்சச்சு. தாளம் - ஈண்டுத் தரளவடம். பூங்குலை - அழகிய குலை. போர் - கெற்போர். பொறி - ஆலை. தார் - அடி. கமடம் - ஆமை. (12)
மஞ்ச ளாவிய மாடங்க டோறும்
மயில்கள் போன்மட வார்கணஞ் குழு மஞ்ச ாோருகப் பள்ளியில் வான்சிறை யன்ன வன்னக் குழாம்விளை யாடுங் துஞ்சு மேதி சுருக்களைச் சீறச்
சுருக்க ளோடிப் பலாக்கனி கீறி யிஞ்சி வேலியின் மஞ்சலிற் போய்விழு
மீழ மண்டல நாடெங்க ணுடே. மஞ்சு - மேகம், கணம்-கூட்டம், அம்- அழகு சசோருகம்தாமரை. வான்சிறை-பெருமை மிக்க சிறகு, சிறகுக்குப்பெருமை

பருளை விநாயகர் பள்ளு 11.
யாவது மென்மை, அன்னவன்னக் குழாம் - வன்ன அன்னக் குழாம் எனக் கூட்டி நிறம் விளங்கிய அன்னத்தொகுதி என் றுாைச்ச. இனிவான் சிறையையுடைய மடவாான்ன அன்னக் குழாம் என்றலுமாம், துஞ்சுதல் - நிலைபெறுதல் அறந்துஞ்சுஞ் செக்சோலையே' என்முற்போல, இங்கு, நீர்நிலையிற் றங்குமென்க. இஞ்சி வேலியின் மஞ்சல்- இஞ்சியை வேலியாகவுடைய மஞ்சல்: இஞ்சியின் வேலியாகிய மஞ்சலென்றலுமாம். (13).
தண்ட பாணி யிறைஞ்சு பதாம்புயத்
தானு நாகன் றிகம்பாத் தூயன் பண்டை நாகணை யானும் விரிஞ்சனும்
பாதஞ் சென்னி யறியாத நம்ப னண்டர் நாயகற் கற்புத மீதென
வரிக ளேந்திய வாலய வெற்பைத் துண்ட வான்கழு கென்றும் வலம்வருஞ்
சோழ மண்டல நாடெங்க ணுடே.
தண்டபாணி - முருகக்கடவுள்: அன்மொழித் தொகை. திசம்பரம் - திக்காடை. நாகணையான் - திருமால்: நாகம் - அம்முக்கெட்டு நின்றது. விரிஞ்சன் - பிரமதேவர். பாதம் சென்னி - கிானிறையாகக்கொள்க. நம்பஞகிய அண்டர் சாயகன். அற்புதம் ஈது எனத் துண்டவான் கழுகு என்றும் வலம் வருமென்று கடட்டுக. அரிகள் - மூங்கில்கள்: சோலைகளு மாம். அண்டம் - மூக்கு கழுகு நீண்ட மூக்குள்ளதாதலின் துண்டவான் கழுகு எனப்பட்டது. வான் - பெருமை. இது திருக்கழுக்குன்றத்தினைச் சிறப்பித்துக் கூறியவாறு. இத்தலம் தொண்டை சாட்டகத்ததேனும், அத்தொண்டைநாடு சோழ சாட்டின் ஒரு பகுதியாய்ச் சோழவாசனற் முெண்டைமானிளக் திரையனுக்குக் கொடுக்கப்பட்டதே யாசலின், அதனைத் தொண்டை சாட்டுத் தலமென்னது சோழநாட்டுத் தலமென்ருர்.

Page 17
2 பருளை விநாயகர் பள்ளு
அருவி யோதை யிழுமெனுங் குன்றி லடைந்த சாரற் குளிர்புன மீதி அருவு சேர்தினைப் பூங்கதிர் மேற்கிளி
யோச்ச் வேண்டிப் புலிநகத் தாலி மருவு வண்குறப் பேதையர் கட்செவி
மாசு ணப்பண நேர்கவண்மீகி விருளி லாத மணிவைத் தெறிந்திடு
மீழ மண்டல நாடெங்க ணுடே.
ஒதை - ஓசை, இழுமெனல் - ஒலிக் குறிப்பு. சாாம் - மலைப்பக்கம். உருவு சேர்தல் - வடிவுமுற்றுப் பெறுதல்: அஃதாவது பயிர்முற்றி விளைதல், ஒச்சல் - ஒட்டுதல். புவி ாகத்தாலி - குறப்பெண்கள் அணியும் ஆபரணம். கட்செவி - பாம்பு: கண்ணே செவியாகவுடையது. மாசுணப்பணம் - பெரும் பாம்பின்படம். கவண் - கிளிமுதலியவற்றைக் கடியுங் கருவி: தட்டை, குளிர், தழலை என்பன இதன் பேதங்கள். கவணில் மணிவைத் தெறிந்திடுமென்க. இருள் இலாத மணி - பிரகாசம் பொருங்கிய இரத்தினங்கள். (15)
மாலை தோறு மிசைவன வண்டுமென்
மாலை நூலிடை யேயுந் துவண்டு மேலை தோறும் பயில்வன சங்கம்
வியன்க முகங்தொ றுந்தமிழ்ச் சங்க மாலை தோறும் பொழிவன சாறுபொன்
ஞன வீதி யரியான் சாறு சோலை தோறு மலர்த்தா திறைத்திடுஞ் சோழ மண்டல நாடெங்க ணுடே.
நூல் இடை - நூல் போன்ற இடை. இடை துவண்டு எயும்.
வே?ல - கடல். சாறு - முன்னது கருப்பஞ்சாறு, பின்னது விழா. இது யமகம். (16)

பருளை விநாயகர் பள்ளு 1器、
d is பைப்ப னிப்பகு வாய்ப்பட்ட திங்களிற் - பாயு மோதக் கடற்கரை தோறு மிப்பி வாயிலின் முத்த மிலங்கிய V, வீழ மண்டல நாடெங்க ணுடே.
பை - பாம்பின் படம். ப்குவாய் - பிளந்த வாய். திறர்தவா யென்றவாறு. திங்களின் - சந்திரன்போல, ஒதம் - அலே. இப்பியின் வாயில் இன் முத்தம் என்க. இன் முத்தம் - மெய்க்கு இனிதாம் முத்து. இது முதல் இருபத்து நான்கும் இாண்டடிச் சிர்துகள். (17)
மாரி மேகந் தவழ்மலைச் சாரலின்
மந்தி வைத்த மணிப்பத்ம ராகஞ் குரி யோதயம் போல விளங்கிய
சோழ மண்டல காடெங்க ணுடே, மாரி - நீர், மந்தி - பெண் குரங்கு. பத்மராகம் - ஒருவகை இரத்தினம். அதன் ஒளி சூரிய உதய ஒளிபோல விளங்கிய தென்க. (18)
பாப்பு மேகலை மங்கையர் போகம்
பயில வேண்டி யிணங்கார் முகத்தை யிாப்ப தேயன்றி வேறிரப் பில்லாத
வீழ மண்டல நாடெங்க ணுடே. மேகலை - அரைப்பட்டிகை. இணங்கார் - ஊடிய பெண்கள். இாத்தல் - யாசித்தல். இதுவும் மேல் வருவதும் பரிசங்கியாலங் காாம். (19) V
வாம மேகலைப் பாவையர் கோவை
வதனம் போல விளங்கிய விண்ணிற் சோமன் மேலன்றி யோர்மறு வில்லாத
சோழ மண்டல நாடெங்க ணுடே.

Page 18
14 பமுளை விநாயகர் பள்ளு
கோவை - உவமையாகுபெயராய் அதரத்தை உணர்த்திற்று. விளங்கிய சோமன். சோமன் - சர்திரன். (20)
வளமை சேர்ந்திடு மூப்பிய லான்முது
மந்தி தாவி மலையிடைப் பாய விளமை மந்தி யுருவடி வாய்விடு
மீழ மண்டல நாடெங்க ணுடே. மூப்பு இயல் - முதுமைத் தன்மை, உருவடிவு - அழகிய வடிவம். (21)
முன்னை நாளிற்பஞ் சானன ரூபன்
முளரி யந்தட மூழ்கிய போதிற் சொன்ன மேனி விளங்கி யெழுந்திடு
சோழ மண்டல நாடெங்க ணுடே. பஞ்சானனம் - சிங்கம்: பஞ்சம் - விரிவு, ஆனனம் - முகம்: விரிந்த முகத்தையுடையது என்பது உறுப்புப் பொருள். பஞ்சானனருபனென்றது சிங்கவன்மனை. முளரி - தாமரை. தடமென்றது சிவகங்கைத் தீர்த்தத்தை. சொன்ன மேனி - பொன்மேனி. இவ்வரலாற்றைக் கோயிற்புராணத்தில் இரணிய வன்மச் சருக்கத்திற் காணலாம்.
அருளதனுற் றடம்படியு மவன்கடமே லருக்கனென விரவுபசுங் கானடைந்த மேருகிரி யெனவிளங்கி யிரணியமா முருவாகி யெழுந்ததுகண் டதிசயித்துப் பரவியது பெயராக யாவர்களும் பயில்வித்தார். என்பது அத்திருவாக்கு. (22)
உரைத்த வாணிந்து காந்தச் சிலைவிட் டுருகு நீர்ப்பிர வாகங்க ளோடி
யிரைத்த வேலைப் புலால்வெடி மாற்றிடு
மீழ மண்டல நாடெங்க ணுடே.

பருளை விநாயகர் பள்ளு 5
உரைத்த - மேலாகச் சொல்லப்படும். வான் இந்து - ஆகாயத்திற் சஞ்சரிக்கும் சந்திான். இந்து காந்தச்சிலை - சந்திரகார்தக்கல். அது சந்திான் வரவாற் புனல்பெருக்குவது. பிரவாசம் - வெள்ளம். இரைத்தவேலை-முழங்கும் கடல். புலால் வெடி-புலால் நாற்றம். (28
பகுத்த வந்தணர் சாலக டோறும்
பயிலும் வேதத் தொலிபண்ணை மீதிற் முெகுத்த மள்ளர் குரவையை மாற்றிடு சோழ மண்டல நாடெங்க ணுடே.
சா?ல - ஈண்டு அத்தியயனஞ் செய்யுமிடம். பகுத்தசாலை - இஃது இருக்குவேதம் ஒதுமிடம், இஃது யசுர்வேதம் ஒது மிடம் என்று இங்ஙனம் பகுக்கப்பட்ட சாலே. பண்ணை - வயல். தொகுத்த - கூடிய, குரவை யொலியினும் மறையொலி மிக்கதென்றவாறு. (24),
பண்ணிற் ருேரயப் பொருண்முடிப் புக்கட்டிப் பாடும் பாவலர்க் கீந்திட வென்றே யெண்ணிப் பொன்முடிப் புக்கட்டி வைத்திடு
மீழ மண்டல நாடெங்க ணுடே, பண் - இசை, தோய்தல் - பொருந்துதல். பொருள் முடிப்புக்கட்டி - விஷயத் தொகுதியை அமைத்து. பொன் முடிப்பு - பொற்கிழி. (25)
செல்லுஞ் சென்முடிக் குந்தளக் கண்ணிரு
சேலைப் போன்ற கடைசியர் செய்க்குச் சொல்லுஞ் சொன்முடிப் புக்கட்டி வைத்திடுஞ்
சோழ மண்டல நாடெங்க ணுடே. செல்லும் செல் - (விண்ணில்) செல்லும் மேசம், மேகம்
போன்ற முடியாகிய குந்தளம். முடி - ஐம்பாலிஞென்று. குர்த னம் - பெண்மயிர். குக்தளக் கடைசியரென முடிச்சு. குர்தளத்

Page 19
16 பருளை விநாயகர் பள்ளு
தையும் இரண்டு சேன்மீன்களைப் போன்ற கண்களையுமுடைய கடைசியர். செய் - வயல். சொல்லும் - புகழ்ந்து சொல்லப் படும். சொல் - நெற்பயிர். சொல்முடிப்பு - இங்கே நாற்றுமுடி.
காந்தி சேர்கண் ணிலாதவர்க் குக்கண்ணுங் காட்சி யுந்தந்து சூர்ப்பகைச் செவ்வே
லேந்தல் சேர்கதி ராபுரி சேர்ந்திடு , மீழ மண்டல நாடெங்க ணுடே.
காந்தி-ஒளி. கண்-கண்ணிந்திரியம். காட்சி-அறிவு. குர்சூரபதும்ன். சூர்ப்பசைச் செவ்வேல் எந்தல் - சூானுக்குப் பகை வஞகிய முருகக்கடவுள். கதிராபுரி - கதிர்காமம். (27)
பொங்கு கூளி பிடித்தவர்க் குக்கூளி
போக்கி யிக்கலி மீதினிற் செவ்வேற்
றுங்க முத்தையன் வீற்றிருக் கும்புரிச்
சோழ மண்டல நாடெங்க ணுடே.
கூளி - பேய். இக்கலிமீதில் - இந்தக் கொடிய கலியுகத்தி லும். துங்கம் - பெருமை: வெற்றியுமாம். முத்தையன் - முத்துக் குமாரசுவாமி யென்னும் திருநாமம் பூண்ட முருகக்கடவுள். அப் பெரும்ான் வீற்றிருக்கும்புரி புள்ளிருக்குவேளுர் எனப்படும்" வைத்திசுரன்கோயில். (28)
கயல்வ ாைந்த துவசன் பணிநவ
கண்டி மன்னன் வாாாச சிங்க
னியல்பு டன்றிருச் செங்கோ னடாத்திய
விழ மண்டல நாடெங்க ணுடே.
துவசம் - கொடி, கயல்வாைந்த துவசன் - மீன் வடிவம் எழுதிய கொடியையுடைய பாண்டியன். பணி - வணங்கிய, சவ கண்டி - ஒரூர்: அஃதிக்காலத்துக் கண்டியென வழங்கப்படுவது, வர ராசசிங்கன் - அல்ஆராசன் பெயர். (29)

பருளை விநாயகர் பள்ளு 17
நேரி யன்சாண் புக்க புருவி
னிறைத னக்கு நிறையிற் புகுந்த குரி யன்குடை நீழலிற் றங்கிய
சோழ மண்டல நாடெங்க ணுடே.
நேரியன் - சோழன்; நேரிமலை அவனதாகலான். நிறை பிசண்டனுள் முன்னது அளவு, பின்னது து?லத்தட்டு. சூரியன்இக்குச் சிபிச்சக்கரவர்த்தியைக் குறித்தது: சோழவரசர்க் குரியஆரம்பரையினனதலான், சிபிச்சோழன் சூரியனெப்பட்டான். ()
கான்ற சோதியி னித்திலஞ் சிந்துங்
கரும்பி னிற்குருத் தைக்கதிர்க் கற்றை யீன்ற சாலிக் குழாஞ்சுமங் தோங்கிடு மீழ மண்டல நாடெங்க ணுடே.
கான்ற சோதியின் நித்திலம் - வெளிவிடும் பிரகாசத்தி?ன புடைய முத்து. கதிர்க்கற்றை - கதிர்த்தொகுதி. சாலிக்குழாம் சுமந்தோங்குதலாவது கரும்பினது உயரம் வளர்ந்து நிற்றல். ()
சாதி நாகிளந் தெங்கினிற் சாய்ந்திடு
தண்கு ரும்பையைப் பூகத ராசிச் சோதி யார்பவ ழக்குலை தாங்கிய
சோழ மண்டல நாடெங்க ணுடே.
சாதி - ஈண்டு உயர்வு. சாகிளமை-ஒரு பொருட் பன்மொழி: மிக்க இளமை யென்றவாறு. பூகதம் - கமுகு, ராசி - கூட்டம். பவழக்கு?ல - கமுகின் குலை பழுத்தவழிப் பவழகிறங்கோடலின் அவ்வாறு கூறினர். ‘எண்னர் முத்தமீன்று மரகதம்போற் காய்த்துக், கண்ணர் கமுகு பவழம் பழுக்குங்கலிக்காழி?-என்பது தமிழ்மறை. மேலதற்குரைத் தாங்குாைக்க, (32)
2

Page 20
18 பருளை விநாயகர் பள்ளு
கற்ற நூலுணர் பண்டிதன் மார்பஞ்ச
காவி யஞ்சட் கலைக்கட ருேய்ந்து . . மெற்றை நாளுங்கல் வித்திறம் பார்த்திடு
மீழ மண்டல நாடெங்க ணுடே.
கற்றலின் வேறு உணர்தலாதலின் கற்ற நூலுணர் பண்டி தன்மார்’ எனப்பட்டது. ஒதியுணர்ந்தும் எனத் தேவர் கூறிய தும் அது, மார் - பன்மை விகுதி. பஞ்சசாவியம் தமிழிலேயுள்ள ஐம்பெருங் காப்பியங்கள். அவை சிந்தாமணி சிலப்பதிகார முதலியன. சட்கலை - ஆறு வகைக் கலைகள்: அவை நையாமிக முதலிய வடமொழிச் சாத்திரங்கள். எனவே, அப்பண்டிதர்கள் இருமொழியிலும் வல்லுநராதல் கூறப்பட்டது. எற்றைநாளுங் கல்வித்திறம் பார்த்தலாவது சாந்துணையுங் கற்றல். இதனை, “யாதானு நாடாமா லூாாமா லென்னுெருவன் சாந்துணையுங் கல்லாத வாறு? என்னுங் திருக்குறளாலறிக. (33)
திகந்த மெட்டும் வடகலை தென்கலை
தேர்ந்து தேர்ந்து செழுமலர்க் காவிற் சுகந்த னக்கயற் பூவை பயிற்றிடு
சோழ மண்டல நாடெங்க ணுடே.
திக் அந்தம் - திக்கின் முடிவு. அதன் வரைப்பாவிய வடகலே தென்கலை. அடுக்கு, பலகாலுக் தேர்ந்தமை யுணர்த்திற்று. சுகம்கிளி. தனக்கு அயல்பூவை - தனக்குப் பக்கத்திலிருக்கும் சாகண வாய்ப்பறவை. "கிள்ளை பாடுவ கேட்பன பூவையே "கிள்ளைகள் பாடமுாைப்பன கேட்பன மெய்ப்பூவை என்பன பெரியார்
திருவாக்குகள். (34)
ஆட்டு மூசவி னடுமின் ஞர்பொன்
னணிக லத்தின் மணிதெறித் தோடி யேட்டுக் காவிற் குயிற்றுயின் மாற்றிடு
மீழ மண்டல நாடெங்க ணுடே.

பருளை விநாயகர் பள்ளு 9
மின்னர் - பெண்கள். ஏடு - பூவிதழ். கா - சோலை துயில் - தாக்கம். (85)
வாவி யின்கரைக் கெண்டை குதிக்க
மண்டு கம்பாய்ந்து செந்தா மரைப்பாயற் அாவி யன்னத்தி னித்திரை மாற்றிடு
சோழ மண்டல நாடெங்க ணுடே. வாவி - நீர் கி?ல. மண்டூகம்- தவளை. கெண்டை குதித்தலின் மண்டூகம் பாய்ந்து அன்னத்தின் துயிலை நீக்குகின்றதென்க. தாவி - சிறை. (86)
கோல மாதவி வன்னி மராமாங்
கோங்கு வேங்கை செங்குங்கு மஞ்சாகி யேல மார்கதிர்க் கற்றையை மாற்றிடு மீழ மண்டல நாடெங்க ணடே. கோலமாதவி-அழகிய மாதவி; மாதவி-குருக்கத்தி விசேடம். ஆர்கதிர் - நிறைந்த கிரணம்; வினைத்தொகை. கதிர் - ஈண்டுச் குரிய கிாணம். (37)
ஆலை தாதகி பொன்னிறக் கொன்றை
யரும்பு கூவிளம் பாதிரி புன்னைச் சோலை வான முகிலைத் தரித்திடு
சோழ மண்டல நாடெங்க ணுடே. ஆலை - கரும்பு. தாதகி - ஆத்தி, கூவிளம் - வில்வம். வான முகில் - வானத்திற் செல்லும் மேகம், (88)
கருவ லம்புரிச் செங்கதிர் மாவலி
கங்கை யாறு பெருகிக் காையி னிரும ருங்கினு முத்தங் கொழித்திடு மீழ மண்டல நாடெங்க ணுடே. கருமை-பெருமை. வலம்புரியின் செவ்வியகதிர்கள். மாவ கங்கையென்பது யாற்றின் பெயர். முத்தம் கொழித்தல்-முத்துக் களை வீசுதல். (89).

Page 21
20 பருளை விநாயகர் பள்ளு
வள்ளி யோரிற் கொடைநிறைந் தேநுரை
மண்டி யேவரு காவிரி யாறு துள்ள வாளை பசும்பொ னிறைத்திடு
சோழ மண்டல நாடெங்க ணுடே. வள்ளியோர் - வரையாது கொடுப்போர். இன் - ஐந்தனுருபு; ஒப்புப்பொருளில் வந்தது. வாளைமீன் துள்ளுமாறு காவிரியாறு பொன்னை வீசுகின்றதென்க. இத்துணையும் பள்ளியர் தம் நாட்டு
வனங் கூடறியவாறு, (40)
s
CGI Gibu
ஒளவியநெஞ் சொன்றுமின்றி யன்புபுரி பத்தர்வினைச் செவ்வியகோ டைக்குகிழல் செய்யுமே-வைவேற் அறுதிசெய்குருந் துக்குத் துணையாம் பருளைப் பதியொருகோட் டுக்கற் பகம்,
ஒளவியம்-கோட்டம். அவ்வியநெஞ்சமென் தற்குக் கோட் டம் பொருந்திய மனம்’ என்ருர் ஆசிரியர் பரிமேலழகரும். ஒன் தும் - சிறிதும், செவ்வியகோடை - மிக்க கோடை. துதிசெய் வைவேற் குருந்து என்க. குருந்து - சிலேடையால் மாவிசேட
மும் குழச்தையுமாம்; குழந்தை ஈண்டு முருகக்கடவுள். ஒரு கோடு - ஒற்றைக் கொம்பு. கற்பகம் - ஈண்டுப் பரஞ்சோதி விசாயகப்பிரானைக் குறித்து நின்றது. குருக்தூக்குத் துணையாம் கற்பசும் கோடைக்கு நிழல் செய்யுமென்க. (41).
குலமுறை கிளத்தல்
is gy 1. ஆதி காலத்தி லாருயிர் யாவு
மளித்த ளித்துத் துடைக்கும் பிராட்டி பாதி யம்புலி வாணுதற் சத்திநாற்
பத்து முக்கோண சக்ாவி நோதி

பருளை விநாயகர் பள்ளு 2盘
தூய சோதிப் பனிவரைக் கொம்பெனுங் தோகை தன்னை மணச்ச்ாலை தன்னு ளாய வேதப் பிதாமகன் பேணி
யமையு மோமச் சடங்கு புரிய வென்றி சேர்வெள்ளுவாப்பிட ாேறிய
வேந்த னேமுத லெண்டிசை காப்போர் மன்ற குறுங் அழாய்மவு விப்பணி
வயிரி யூர்ந்திடு வைகுண்ட நாதன் எண்ணில் கோடி வயிரவர் சூழ்ந்திட
வெண்ணில் கோடி யுருத்திரர் சூழப் பண்ண மைந்த பசும்பரி யேழுடைப்
பருதி வானவ ரும்வந்து குழ அண்ட பந்தி யெடுத்துக்கை யம்மானை
யாடு பூத கணங்க ணெருங்கப் பண்டை யூழிக் கனல்விழிச் சோதிப்
பணக னடவிச் சேடனுஞ் சூழச் சித்தர் சாரணர் சூழ்ந்திட நாாதன்
சேருங் அம்புரு யாழிசை பாடப் பத்தி வாணன் குடமுழ வத்துடன் பானு கம்பன் பணில முழக்கக் தேரு நாமகள் சீர்த்தி யிசைக்கத்
திரும டங்தைநன் சேடியு மாக வாரு லாவு, குயத்தின் கவுரியை
வந்து சேவித்துப் பக்கலி னிற்கும் அமய மூன்று மணிவரைக் கண்டத் தலங்கு மங்கல நாணது பூட்டி யிமய ராசன் புனல்வார்ப்ப மால்வரை
யீன்ற பாவை தனக்கைப் பிடித்து

Page 22
22
10.
1.
12.
蓝器。
4.
15.
பருளை விநாயகர் பள்ளு
வேட்ட பின்கதி ராடகப் பூதா
வில்லி யும்வல்லி யும்முறை போதிற் கோட்டு மாவும் பிடியும் புணர்ச்சியிற்
கூடி யேவிளை யாடுதல் கண்டு சத்தி யுஞ்சிவ மும்பிடி யும்மத
தந்தி யாகப் புணர்ந்தவங் நாளின் மத்த மாவத னத்துட னுேங்காா
வண்ண மாய்வந்த ஞானக் குழவி அன்னை தேவி மனேன்மனி கொங்கை
யமுத தாரை பருகிய நேசன் முன்னர் கின்றிகல் குரனை வென்ற
முருக வேட்குமுன் ணுகிய தோன்றல் தந்த தந்தை பரம லுகைத்திடு
தட்டு டைத்தடங் தேரச் சிறுத்தோன் முந்த நெஞ்சி னெவர்கினைந் காலு
முயன்று முன்னின்று காத்தரு ளெம்மான் தூய மூவுல கும்புகழ் விசித்
துதிக்கை வாய்ந்த துதிக்கையொன் றுள்ளான் பாயுந் தானம் படைத்திடு காரணன்
பத்த ரானவர்க் கன்பு புரிவோன்
மார்பின் மூன்றணி நூல்புனை நாதன்
மழலைத் தும்பி குடைகொன்றைத் தாமன் பார தக்கதை யைப்பொற் சிலம்பினிற்
பாணித் தந்தம் பறித்துப் பொறித்தோன்' செறியும் பஞ்ச தருகிழற் சுந்தாத்
தேவர் கோன்புரி பூசனைக் காகக் குறுவன் பாணி காகத்திற் பாணி
குவல யத்திற் பெருகிடச் செய்தோன்

16.
7.
18.
19.
20.
21.
22.
பருளை விநாயகர் பள்ளு 8雾
மோது மோதப் பயோததி மீது
முடக்கு நெட்டெயிற் றுப்பணைச் சேக்கை மாத வன்கொண்ட வன்பணிச் சாபத்தை மாற்றி மேலும் வாந்தந்த வண்ணல் பங்க யங்கனி மாதுளங் கும்பம்
பாப்பு நேமி கதாயுதஞ் சங்க மங்கு சந்தனு வேந்திய பாணிய
ஞகு வாகன மூர்ந்திடு நேசன் அந்த ரத்தரு ணேதயர் கோடி
யருக்கர் போல விளங்குசெம் மேனி யெந்தை வான்சாற் காலத்துச் சந்திர
னென்னத் தோற்றும் வடிவமுங் கொண்டோன் நாக கன்னியர் தான்முெழு மைங்கா
ளுை மெள்ளுண்டை மோதகஞ் சீனி பாகு சர்க்கரை மாங்கனி யீங்கிவை
பார ணம்புரி யுந்தொந்தித் தந்தி செருக்கு மூடிய ராவண வஞ்சனைச்
சேண்பு லத்தெறிந் தாடிய வீரன் மருக்கு லாவுவெண் டாமரைப் பீடிகை
வாழுஞ் சோதி யடியார்க் கெளியோன் மாறெ கிர்ந்து பொருத கயமுக
வாள ரக்கனை விண்டலத் தேற்றித் தேறு கொன்றை யுடன்வாகை வேய்ந்தவன் சில்ல ரிக்கண்ணி வல்லபை பாகன் மானஞ் சேர்விக்ா மாதித்த வேந்தன்
மதிக்க கித்திரைப் பள்ளியிற் சென்று கானஞ் சேர்குழன் மாதை யகற்றுதி t
நாளை யென்று கணுவினிற் சொன்ஞேன்

Page 23
24 பருளை விநாயகர் பள்ளு
28, ஆமை யேன மழுப்படைச் செங்கைய
சாகு ராமர் குறள் சிங்க மச்ச நாம வுேயனென் பானுற் பவித்தவ
பிை யிற்புவ னம்பல பூத்தோன் 24. தண்ட நேமி தனுவொடு வாள்சங்கங்
தாங்கி வேலை யறிதுயில் செய்யுங் கொண்டல் வண்ணன்பொன் ஞலைப் பதியுறை
கோல நீல நெடுமான் மருகன்,
1. அளித்தல் - முன்னது படைத்தல்: பின்னது காத்தல், துடைத்தல் - அழித்தல், சிவபிரான் தன் சத்தியால் முத்தொழி லும் நடாத்தலின் இவ்வாறு கூறினர்.பாதி அம்புலி வாள்.அதுதல்ஆர்த்த சந்திரனையொத்த ஒளிபொருந்திய நெற்றி. அம்மையார் எழுந்தருளிய பீடங்களுள் நாற்பத்து முக்கோண சக்காமும் ஒன்முகலின் நாற்பத்து முக்கோண சக்ாவிநோதி’ என்ருரர்.
2. பனிவரைக் கொம்பு - இமாசலன் புத்திரி. தோகை - இருமடி ஆகுபெயராய் உமாதேவியையுணர்த்திற்று. பிதாமகன்பிாமன். ஒமச்சடங்கு - ஒமக்கிரியை.
3. வெள்ளுவா - (ஐராவதம் என்னும்) வெள்ளையானை. வேந்தன் இந்திரன். எண்டிசை காப்போர் - எட்டுத்திக்குப் பாலகர். அவராவார். இந்திரன், அக்கினி, யமன், கிருதி, வரு ணன், வாயு, குபேரன், ஈசானன். மன்றல் - வாசனை. பணிவயிரிகருடன்; பணி - பாம்பு.
4. எண்ணில் - கணக்கில்லாத. கோடி - ஈண்டு ஒர் எண் ணைக் குறிக்காது பல என்னும் பொருண்மேல் நின்றது. பசும்பரிபச்சைக்குதிசை. பருதி வானவர்? என்றது பன்னிரு சூரியர்களை. 5. அண்டபக்தி - அண்டங்களின் வரிசை. அம்மானை - அம்மனைக் காய். ஆதிசேடன் ஆயிரம்பட முடிகளை யுடையவ ஞதலின்,பனகளுடவிச் சேடன்’ என்ருரர். பணகண+அடவி= பணகனடவி; இது வடமொழித் தீர்க்க சந்தி. பன இனம் - பாம் பின் படக்கட்டிம். அடவி - காடு; ஈண்டு மிகுதி மேற்று.

பருளை விநாயகர் பள்ளு 邪
6, அணன் - வாணசுரன். இவன் சிவபெருமான் சர்சிதி வில் தன் ஆபிாங் கைகளாலும் குடமுழா முழக்குவிப்பவன்.
பானுகம்பன் - பூதகணத் த?லவருள் ஒருவன்; ஆயிரஞ் சிங்க்ன் யுடையவன். கைலேயங்கிரியில் தன்னுயிர வாய்களாலும்சங்கத் தொனி செய்பவன். . . . ' :
7. காமகள் - ಆrFaಣ. திருமடந்தை - இலக்குமி கவுரி
உமாதேவி,
8. மூன்று மணிவரை - மூன்று அழகிய இரேகை, டிங்கல சரண் - தாலிச் சாடு. புனல்வார்ப்ப - நீர் வார்க்க: மால்வரை மீன்ற பாவைதனே - மலையரையன் பெற்ற உமாதேவியை,
9. வேட்டபின் - மணஞ் செய்துகொண்ட பிறகு, ناچاپه பூததவில்லி - பொன்மலையாகிய வில்லையுடைய சிவபெருமான். உறைபோதில்-(கைலாயத்தில்) எழுந்தருளி யிருக்குங்காலத்தில். கோட்டு மா- கொம்பையுடைய ஆண் யானை, $[بو-- பெண்யானை,
10. மததங்தி-மதம் பொருந்திய ஆண் யானைமோ வதனம் யானை முகம், ஒங்காசம் - பிரண்வம். ஞர்னக்குழவில் ஞானமே, திருமேனியாகவுடைய் குழந்தை (விநாயகன்). .
11. மனேன்மனி - உமாதேவி. கொங்கை யமுததர்சை - முலைப்பாலொழுக்கு. " . .
12. தந்தை பாமன்-தந்தையாகிய் சிவபிார்ன். உகைத்தல்செலுத்துதல். திரிபுர்சங்கார காலத்தில் சிவபெருமானது பூமி *தோச்சிறுத்தோன்’ என்ருர், சிவபெருமான் திரிபு தகன்ஞ் செய்யும் பொருட்டுத் தேவர்கள் சமைத்த தேரில் எழுந்தருளும் போது அத்தேவர்கள் விநாயகரை நினையாத காரணத்தால் தேரின் அச்சு இற்றது என்னும், விகிாயக புராணம். :) . .
13. துதிக்கை-முன்னது திதித்தல்; பின்னது தும்பிக்ன்ச் தானம் - மதஜலம்; போக்குாை - கொடை. : *** * * '' ''
14. தும்பி வண்டு. கொன்றைத்தாமன்' தெர்ன்றை மாலையை யணிந்தவன் (விநாயகன்). பொற்சிலம்பு-ஃருமலை,

Page 24
26 பருளை விநாயகர் பள்ளு
பாணி - (தன்) கையால். பறித்து - பிடுங்கி, பொறித்தோன் - எழுதினேன். விநாயகர் தம் கொம்பை முறித்தது ஜேமுகனைக் கொல்லும் பொருட்டேயன்றிப் பாரதம் எழுதும் பொருட்டும் முறித்தனர் என்பது சரித்திரம். அதனை
“முனிசாசன் மாபாரதஞ் சொன்னாள்
ஏடாக மாமேரு வெற்பாக வங்கடர் எழுத்தாணிதன் கோடாக வெழுதும்பிாானைப் பணிக்தன்பு கூர்வாமசோ” என்பத்னனுமுணர்க. M
15. பஞ்சதரு - தெய்வ லோகத்திலுள்ள ஐச்து விருட்சங் கள். அவை: அரிசர்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாசம் என்பன. தேவர்கோன்-இந்திரன். குறுவன் - அகத்தி பன். பண்படியாகப் பிறந்த பெயர்; குறுமை பகுதி. பாணிகர கத்தில் - கையிலுள்ள கமண்டலத்தில்: நிலை மொழியும் வரு மொழியும் வட சொற்களாதலின் இயல்பாயிற்று. பாணி- முன் னது கை; பின்னது நீர். குவலம் - பூமி. சீர்காழியில் இந்திரன் விைத்த நந்தவனத்தின் பொருட்டு அகத்தியர் கமண்டலத்தி லுள்ள நீரை, விநாயகர் காக வடிவமாய்ச் சென்று கவிழ்த்தனர் என்பது புராண வரலாறு.
16. ஒதம் - குளிர்ச்சி. பயோததி - பாற்கடல். முடக்கு நெட்டெயிற்றுப் பணச்சேக்கை என்றது ஆதிசேடனை. எயிறுபற்கள். பனை -பருமை. சேக்கை - படுக்கை. மாதவன் - திருமால். பணி - பாம்பு, பார்வதி தேவியார் இட்ட சாபத்தால் பாம்பின் வடிவுபெற்ற திருமால் விநாயகரைப் பூசித்து அச்சாபத்தை யொழித்துக்கொண்டனர் என்பது விநாயகபுராண வரலாறு,
17. பங்கயம்-தாமரைப் பூ, கனி மாதுளம் - மாதுளங்கனி: கும்பம் - கலசம், சேமி - சக்காம், கதாயுதம் - கதை, சக்சம் - சங்கு. அங்குசம் - தோட்டி, தனு - வில். ஆகுவாகனம் - பெகுச் சாளி வாகனம். --
18. அருணேதயர் - சூரியோதயமாதற்கு முன்தோன்று பவர். இவர் செர்கிறமுடையவர். சாற்காலம் - மாரிகாலம்; (ஐப்பசி கார்த்திசையின் பருவம்). விசாயகப்பெருமாஞர் தம்

பருளை விநாயகர் பள்ளு 5.
அடியார் முன் பவள நிறத்திச்ாயும் பால் வண்ண நிறத்தாாயும். தோன்றுவரென்ப. திருவலஞ்சுழியிலுள்ள விநாயகருக்கு வெள்ளை விநாயகரென்று பெயர்.
19. பாரணம் - உண்ணுதல், தொர்தி - வயிறு,
20. சேண்புலத்து - ஆகாயத்தினிடத்து. கோகர்ணம் என் னுச் திருப்பதியில், இராவணன் கைலையினின்றும் கொணர்ந்த சிவவிங்கத்தின் பொருட்டு, அவனை, விநாயகப்பெருமான் செண்டு போல் ஆகாயத்தில் எடுத்து எறிந்தனர் என்பது புராண வரலாறு. *மருக்குலாவு வெண்டாமரைப் பீடிகை வாழுஞ் சோதி” என விநாயகரைச் சிறப்பித்தமையால் அவருக்கு வெண்டாமரை ஆசனமும் உண்டென்பது போதரும்.
21. வாகை - வெற்றிமா?ல. அரி - செவ்வரி, கருவரி. வல்லபை பாகன் - வல்லபை என்னும் சத்தியை ஒரு மருங்கில்" வைத்துக் கொண்டிருப்பவன்.
22. மாது - விக்கிரமாதித்தன் மனைவியாகிய இலக்கண” சுந்தரி. இவள் விநாயக விரதம் நோற்றமையால், தான் இழந்த பதவியை மீண்டும் பெற்ருள். இக்கதையின் விரிவை விநாயக" புராணத்திற்காண்க.
28. ஆமை - சுடர்மாவதாாம். ஏனம் - பன்றி (வாாகாவ தாாம்). மழுப்படைச் செங்கையர் - பாசுராமர். ரகுராமர் என்பது ராகுராமர் என நீட்டல் விகாரம் பெற்றது. சாமம் - கீர்த்தி. வேயன் ஒன் பானுற்ப வித்தவன் - புள்ளாங் குழலுடைய வஞகிய ஒன்பதாவது அவதாரமாக வந்த கிருஷ்ணன். புவனம் பல பூத்தோன் - பிாமன்.
24. குறள் - வாமனன். கொண்டல் வண்ணன்-திருமால். பொன்னலேப்பதி- யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு வைணவத் திருப் பதி. பார்வதி தேவியார், திருமாலுக்குத் தங்கை முறையாதலின் அவர் மூத்த பிள்ளையாகிய விநாயகனைத் 'திருமாவின் மருகன்”
Gräldryf. − (42),

Page 25
28 பமுளை விநாயகர் பள்ளு
ҳ ", Grš sasi
வேட்டுவன்வா யுண்டுமிழ்ந்த மிச்சிலுவந் தான்புதல்வன் கோட்டுவளஞ் குழும் சுழிபுரத்தி லானைமுக " னட்டுவளம் பேசியபுன் நிவ்விவிழிக் கொம்பனையார் கோட்டுகனை மாவின் குயிலிசையைக் கேட்டாரே.
வேட்டுவன் - கண்ணப்ப நாயனர். மிச்சில் உவந்தான். எச்சிலாகிய இறைச்சியை உண்டு மகிழ்ந்தவன் (சிவபிரான்). கோ"ெ இதழ்; ஆகுபெயராய்ச் சோ?லயை யுணர்த்திற்று, கவ்வி விழி - மான்போன்ற கண், மா - மாமரம். (48)
குயில் கூவுதல்
ஆனே றுயர்த்தகொடி யந்தண அனுவந்ததிரு வாலையம் விளங்கவே கூவாய் குயிலே, ஆனேறு உய்ர்த்த கொடி - இருஷபக்கொடி, அந்தணன் - சிவபிரான், “கொக்தணவும் பொழிற்சோ?லக் கூடங்குயிலே. பிது கேணி, அந்தணனுகி வந்திங்கே யழகிய சேவடி காட்டி? என்பது திருவாசகம்,
, .
தேனே நுகொன்றை யணிசிவனெழுத் தஞ்சுமே செகமீதி னிலைபெறக் கூவாய் குயிலே. எழுத் தஞ்சு - பஞ்சாக்கரம். (45) மீனேறு கடலால போசனன் பரியான வேதங் தழைக்கிடக் கூவாய் குயிலே ஆலபோசனன் - விஷமாகிய உணவையுண்டவன் (சிவ பிசான்). *ஆலங் தானுகங் தமுது செய்தானை? என்னுந் தேவ சத்தை நோக்குக. பரியான வேதம் - வேதக் குதிரை, (46) மானேறு வரிகயன் மங்கையொரு பங்கனர் வாழ்சமய மெய்யென்று கூவாய் குயிலே,

பருளை விநாயகர் பள்ளு 29 -
மான் ஏறு - கலைமான், ஏறு - உவம வாசகமுமாம், நயனம்
க்ண், ம்ங்கை - உமாதேவி. சமயம் - சைவசமயம். (47) பூரிவ்ரை மேலா ரணப்போலி யதனைப் 5.
பொறித்தபெரு மானென்று கூவாய் குயிலே.
பூரிவரை - மேருமலை. ஆாணப்போலி - ஐந்தாம் வேத மென்று சொல்லப்படும் பாரதம். பெருமான் - விநாயகன். (48) .
பேரியென மாலொலி முழங்கிமைய ஆதாப்
பிடிகந்த களிறென்று கூவாய் குயிலே. மால் - மேகம். பூதாப்பிடி - பார்வதி, களிறு - ஆண்யானை (விநாயகன்). (49).
மாான யளித்தகண்ணன் புயங்கப் படிவ மாற்றுபெரு மானென்று கூவாய் குயிலே. மாான் - மன்மதன். கண்ணன் - கரிய நிறத்தையுடைய திரு மால், கண்ணன் என்பது பாகதச் சிதைவு, புயங்கம் வடிவு-பாம்பு வடிவு. ×く ' ' (50) ஆரமணி யாலைவயல் சூழ்தென்ப முளையுறை யைங்கான வாழ்த்தியே கூவாய் குயிலே. ஆரமணி-முத்து மணி ஆலே-கரும்பு; ஆகுபெயர். ஐங்கரன்விநாயகன். (51). ஆயிரம்பகு வாயனந்தனின் வீறுகண்டுயில் வாரிருந்தபொன் ஞல்ையம்பதி வாழவே கூவாய் குயிலே. அனந்தன் - ஆதிசேடன், வீறு -- மற்முெருவருக்கில்லாத சிறப்பு. கண்டுயில்வார் - யோக கித்திரை செய்பவாாகிய தி மால். பொன்னுலை - புன்னலைப்பதி. (52) கோயிலின்னதிகாரமன்றென வீசனன்புறு மாதொடொன்
4. X. . கோணயங்கிரி வாழவே கூவாய் குயிலே. (றிய

Page 26
30 பருளை விநாயகர் பள்ளு
அதிகாரமன்று - அதிகார சபை. கோணயங்கிரி- திரிகோண ம?ல. இது தேவாரம் பெற்ற ஈழநாட்டுத் தலங்களுளொன்று. () ஆயிசுந்தரிசேயர்நன்குடி லேசர்மின்மொழி வேலர்தண்கதி ராபுரந்தனில் வாழவே கூவாய் கூயிலே.
ஆயி - தாய், சுந்தரி சேயர் - உமாதேவி புத்திரர் (gpcsei). நன்குடிலேசர் - கன்முகப் பிரணவத்தையுபதேசித்தவர். கதிரா
புரம் - கதிர்காமம். (54) ஆயிரங்கலை யாயுமண்டல வேதபண்டிக ராயவந்தணர் தேரும் விஞ்சையின் மீறவே கூவாய் குயிலே. ஆயிரங்கலை வேதத்தின் உட்பிரிவை யுணர்த்திற்று. *சாகைமாயிர முடையார்? என்பது தமிழ்மறை. (55) அாந்தோயு மயில்விழிகொள் சிவன்பாதி யுமைபுதல்வ னயன்பேணு பாமனென்று கூவாய் குயிலே. அயில்விழி - வேல்போன்ற கண்கள். அயன் - பிர்மன். பாமன் - முருகன். (56) இாங்காழி புடைவளையும் நிலங்கீறி யுழுதசம ரிளங்கேழல் மருகனென்று கூவாய் குயிலே. கேழல் - திருமாலாகிய பன்றி. (57)
உாந்தாவு தசமகுட தான்சாய விசையினெறிக் துகந்தாடு பெரியனென்று கூவாய் குயிலே, .தசமகுடதான் - பத்து மகுடங்களை யுடையனய இராவணன் ܣܡܝܐ.. • உகந்து-மகிழ்ந்து. பெரியன் - விநாயகன். (58). பாங்காண நொடியில்வினை தவிர்ந்தோட வுலவுமொரு பரஞ்சோதி யிறைவனென்று கூவாய் குயிலே.
பாங்காரண - பரம்பொருளாகியதன்னைத் தரிசிக்க. பாஞ் சோதியிறைவன் - விநாயகர். (59).

பருளை விநாயகர் பள்ளு 31
வரிசைவளர் திரிபதகை மரபினுரி யவர்கிளைகண் மதிசெல்வ மேறவே கூவாய் குயிலே.
திரிபதகை மரபினுரியவர் - கங்கை குலத்தவர் (வேளாளர்). திரிபதகை - கங்கை. கிளைகள் - உறவினர். மதிசெல்வம் -
மதிக்கின்றசெல்வம்; வினைத்தொகை. (60) பரிசகல கலைகியுண ன திபாத விததுரிய பரிகசூல னிவனென்று கூவாய் குயிலே.
பரிசகலகலை - குதிரை லட்சணத்தை யறியும் சகல சாஸ் திாம். அதி - அதிகமான, பரதம்-நடன சாத்திரம். பரிசுகுலன்அசுவ இலட்சணத்தை முற்றும் உணர்ந்தவஞன நகுலன்: இவன்
என்று - விசய ரகுநாயகனென்று. (61) விரியமுத முறுமகுட மருவுமண முகுடமுலை மின்னர் விகாரனென்று கூவாய் குயிலே.
முகுடம் - கிரீடத்தை யொத்த. மின்ஞர் - பெண்களே, விகாரனென்று - விகாரப்படுத்தத் தக்கவனென்று; (விசய
ரகுநாயகன்). (62) தரியலர்கண் மெளலிகுனி விசயாகு நாயகன் சகமதனில் வாழவே கூவாய் குயிலே.
தரியலர்கள் - பகைவர்கள். (63)
கழிக்கரைப் புலம்பல் விரைமலர் மேலறு காலிசை கானிசை மேவுபருளையில்வாழ் வரைகிழி வேலவனினிய சகோதர மதகய மாமுகஞர் கரையொலி வார்கடலேதிரை யேசுற வேகழி யேகயலே புாைமது நீண்மழை யேமய லோபெரிகோதரி கோதரிகே. (தலைவன் பொருள் வயின் பிரிவில் தலவி பீரங்க்ல்) அறுகால் - வண்டு. திரையே - அலையே! ፡‛ சுறவே. சுரு மீனே! மயலோ பெரிது - மயக்கமோ பெரிது. ஒதரிது ஒதரிது -

Page 27
32 Lത്ര് விநாயகர் பள்ளு
சொல்லமுடியாது. அடுக்கு அவலத்தின் கண் வந்தது ஒத அரிது ன்ன்பது ஒதரிது என அகா க்தொக்குகின்றது. (64)
மழைகேட்டல்
GšIš5th
இருநிலத்து வேதியரும் எருழுவே ளாளர்களும் பரிவினுடன் கடல்வருண பகவானைக் கண்டிறைஞ்சி விரிதிரைநீர் வளம்பெருக மேவுமுயிர்ப் பயிர்தழையத் தருமமொடு தரைவிளங்கத் தந்தருளீர் மழையையென்முர். இருகிலத்து-பெரிய வுலகத்தில். பரிவினுடன் 4 அன்புடன்: இன் - சாளியை வருண பகவானை - வருண தேவனை. நீர்வளம் பெருகவும், உயிர்ப் பயிர் தழையவும், தருமங்களோடு உலகம் விளங்கவும் மழையைத் தந்தருளிர் என்ருர் என்க. உயிர் பயிர் - உயிர்களாகியபயிர் எனவும் உயிர்கட்கு ஆதாரமாகவுள்ள பயிர் எனவும் கொள்க. (65)
என்பனசொற் செவிப்புகுத இயல்வருண னேதுசொல்வான் பொன்பயிலுஞ் சீவனுமம் புவிமகனும் வக்கரித்தார்
வன்படைவாள் வலியசுர மந்திரியுந் தெற்கடைந்தான்
நன்பயன்மா மழைகேட்டீர் நாமினியெவ் வாறளிப்போம்.
பொன் பயிலும் சீவன் - பொன் என்னும் பெயர் பெற்ற வியாழன். வியாழனுக்குப் பொன் எனவும் சீவன் எனவும் பெயர் உண்டு. 'தீ நிலாத் தெய்வ மந்திரி யமைச்சன் சிகண்டினன் இரணியன் வேந்தன், கோதிலான் வளப்பா னந்தணன் மன்ற யோன் குருபொன்னன்றமநியன் சீவன், ‘வேதனல் வியாழப் பெயர்’ (சாதக சிந்தாமணி - காலநிகண்டு) என்புதனனுமுணர்க. புவிமகன் - அங்காாகன், அசுரமந்திரி - சுக்கிர்ன், வியாழனும், அங்கார்கனும் வக்கரித்தலும், சுக்கிான் தெற்க டைதலும் மழையில்லாமைக்கு அறிகுறிபாம். இதனை,

பருளை விநாயகர் பள்ளு 密8
*வசையில்புகழ் வயங்குவிண்மீன், றிசைதிரிச்து தெற்கேகினுள்
தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா, மலைத்தலேய கடற்காவிரி?
–LJ GIштић).
என்ற தானு முணர்க. (66) ஆணுலு மோர்மதியிங் கறைந்திடுவ னிர்கேண்மின் தேனுரு மலர்ச்சோலை செழித்தசுழி புரநகரிற் கானுர்மும் மதமழைபெய் கணபதியைக் கைதொழுதால் வானுரு மழைபொழிய வாந்தருமென் றனுப்பினனே.
ஒர் மதி - ஒரு புத்தி. கான் - வாசனை. விநாயகருக்கு யானை முகமாதலால் இருமதமேயாயினும் மிகுதிநோக்கி மும்மத மென்ருர்; அன்றியும், இச்சாஞான கிரியைகளையே மும்மதமாக
வுடையவராதலால், மும்மத மழைபெய் கணபதி” என்ருரர். 'ஒரு
கோட்ட னிருசெவியன் மும்மதத்த ல்ைவாயைங் காத்தன்? என்ருர் பெரியாரும். (67) எண்ணிவிடை கொண்டருளுமிருபிறப்பாளரைமுதலோர் திண்ணமென கினைந்துகொண்டு திருவாய்த்த சுழிபுரத்தில் அண்ணல்பாஞ் சோதிவிகா யகனவலம் வந்திறைஞ்சிப் புண்ணியரே யாங்களுய்யப் புனன்மழைநீர் தருகிரென்ருர்,
இருபிறப்பாளரை முதலோர் - அந்தணரை முதன்மையாகக் கொண்ட வேளாளர். (68) செப்புமொழி தனிவினவிச் செம்பவள மணிமேனிக் கைப்பனையைங் காஞானக் களிறுசுழி புரநகர்வாழ் பைப்பணிகங் கணம்பூண்ட பரஞ்சோதி யருட்கடவுள் மைப்பருவ முகின்மாரி வழங்கமனத் திரங்கியதே.
கைப்பனை - பனைமரத்தை யொத்த துதிக்கை. பணி கங் கணம் - சர்ப்ப கங்கணம். முகில் - மேகம். பாஞ்சோதி யருட் கடவுள் - விநாயகர். இாங்கியது - இாக்கங் கொண்டது. (69)
)

Page 28
34 பருளை விநாயகர் பள்ளு
சந்தவிருத்தம்
செருகிய தவளக் கணமுகி றமாத்
திரைகடல் சுழியப் புனல்பருகா பொருசிலை பயிலச் சிறைவிசை யுவணப்
புனதுள வரியொத் தொளிகருகா தருமொலி குமுறச் சுழிபுர நகரிற் சகமகிழ் வாதக் கணபதியேர் இருநுத லணிபட் டமதென மின்னி
யெழுந்திசை யெங்கணு மண்டியதே.
தமாம் - ஒசை. பருகா - பருகி. பொரு சிலை - பொருகின்ற வில்; ஈண்டு இந்திர தனுசு, உவணம் - கருடன். அரி - திருமால். சகம்-உலகம். மண்டி எழுந்தது - நெருங்கி எழுந்தது. மண்டியது என்புழியுள்ள விகுதியை எழும் என்பதனேடு இயைத்துப் பொருள் கூறப்பட்டது. ஏர் - அழகு. (70)
கருமயி லாடக் குயிலினம் வாடக்
கவியின மோடக் காடிபுல்வாய் பொருபுலி யாளித் திரள்மரை சாாற்
புறமுழை பதறிக் கிடுகிடவே யருகுழை தவளக் குலமலை தகாத்
தடதிகி ரியின்முத் துதிர்தாவே சொரிமல ரகிலப் பலமா முறியச்
சோவென மாரி பொழிந்ததுவே.
கார் காலத்தில் மயில் மகிழ்தலும் குயில் வாடுதலும் மரபா தலின், ‘கருமயி லாடக் குயிலினம் வாட? என்ருர், சவியினம் - குரங்குக்கூட்டம். புல்வாய் - மான். கிடுகிட - நடுங்க. திகிரி - மூங்கில். அகிலப்பலமரம் - பல அகில் மரம்; அ - சாரியை. சோவென - ஒலிக்குறிப்பு. முழை - குகை. (71)

பருளை விநாயகர் பள்ளு 35
வெருண்டு வரியுடல் சுருண்டு துயில்புரி விடங்கொ ஞாகமு நடுங்கவே உருண்டு நிலமிசை புரண்டு நடைமலை
யுடைந்து விதலையொ டொடுங்கவே மருண்டு குழியத ரிடங்கர் நெளிதா
வரம்பில் வனசார் கலங்கவே இருண்டு புவிமயில் கிழிந்து விடகிரை
யெழுந்து கனமழை பொழிந்ததே. உாகம் - பாம்பு. கடமலை - யானை. வித?ல-நடுக்கம். குழியதர்குழிந்த இடங்கள். இடங்கர்-முதலை, வனசார்-வேடர். புவிமயில்பூமிதேவி. நிரை யெழுந்து - வரிசையாக எழுந்து, (2)
பணபதி சிரமிசை கிலவிய புகழ்பொலி
படிமக ஞதவிய திருமருமான் மனமலி குவளைய மலர்செறி கொடையணி வடகுவ டனபுய வலிமையினுன் இணரவிழ் சிகழிகை வனிதையர் தினமட
லெழுதிய தனுமத னனையனையான் குணதர வராகு நாயக மகிபதி
கொடையென மாரி பொழிந்ததுவே.
பணபதி - ஆதிசேடன், படிமகள் - பூமிதேவி. மருமான் வழித்தோன்றல். குவளையமலர் என் புழி அ- சாரியை. வடகுவடு மேருமலை, இணர்-பூங்கொத்து. சிகழிகை-பூமாலை. தனுமதனனைவில்லேந்திய மன்மதனை. (73)
ஆற்றுவரத்து கிந்து பொருவில் கோணச் சிகாத் தருகிற்
பொழிந்த வெள்ளம் வழிந்துபோய்ப்
பூந்தண் குறிஞ்சி வளைந்து வேடிச்சி
காந்தன் சேவடி வணங்கியே

Page 29
36 பருளை விநாயகர் பள்ளு
குருளை கோளரி வேழக் களபம்
குருட்டு மாசுண முருட்டியே குறவர் குடிலுஞ் சிலையு மிதனுங்
கொண்டு பாலை யடைந்துமேற் பருதி நயனச் சூலக் காளி
பாதம் பணிந்து கழுகுடன் பருந்து நடுங்கக் குாவின் வேரைப் பறித்து முல்லை யடைந்துபூந் திருவின் கொழுநன் சரணம் வணங்கித்
தேங்கு மாயர் பாடியைத் தேடி வெண்டயிர்ச் சாடி சாடிச் சிறந்த மருதம் புகுந்ததே. வெள்ளம் குறிஞ்சியிற் சென்று பாலையையடைந்து பின்னர் முல்லையைச் சார்ந்து மருதம் புக்கதென்பதை இச்செய்யுள் கடறிற்று. கோணச் சிகாம் - திரிகோண ம?லயின் உச்சி. வேடிச்சி காந்தன் - வள்ளி நாயகிக்குக் கணவஞகிய முருகவேள். இவர் குறிஞ்சிநிலக் கடவுள். கோள ரிக்குருளை - சிங்கக்குட்டி. குருளைக் கோளரி என்பது சக்தவின்ப நோக்கி இயல்பாய் கின்றது; முன் பின்னகவக்த ஆரும் வேற்றுமைத் தொகை. வேழக்களபம் - யானைக்கன்று. மாசுணம் - மலைப்பாம்பு. குடில் - குடிசை, சி%ல - வில். இதண் - பாண். பருதி நயனம் - வட்ட மான கண், காளி - பாலைநிலத் தெய்வம். கழுகு, பருக்து - பாலே கிலப்பறவைகள், குரவு - குரா மாம்; இதுவும் அச்கிலக் கருப் பொருள். திருவின் கொழுநன் - இலக்குமி காந்தனகிய திரு. மால்; இவர் முல்லை நிலக்கடவுள். ஆயர்பாடி - இடையர் சேரி. சாடி - முன்னது பாண்டம்; பின்னது மோதி.
வாய்ந்த மருத நிலத்திற் புகுந்து
வயங்கு கண்சதம் பத்தினன் வயிரம் பிடித்த வெள்ளை வாாணன்
வனசத் தாளை வணங்கியே

பருளை விநாயகர் பள்ளு . 37
சேந்த பதுமங் குவளை களைந்து k தேக்கிக் காஞ்சியைத் தாக்கியே
செந்நெற் குலமும் வெண்ணெற் குலமுஞ்
சேர்த்து நெய்த னிலத்திற்போய் ஆய்ந்த வருணன் சாணம் வணங்கி
யடம்பங் கொடியைப் பிடுங்கியே அடிகோண் முண்டகந் தடவு கடலை யடையப் பறித்துப் பவளமுந் தோய்ந்த நித்திலக் குவையும் வாரிச் சுறவுக் குலங்கள் பதறவே சுழித்துத் திரட்டி வெருட்டி யுருட்டித்
அள்ளி வெள்ளம் பரந்ததே.
கண் சதம் பத்தினன் - ஆயிாங் கண்ணஞகிய இந்திரன்; இவன் மருத நிலக்கடவுள். வயிாம் பிடித்த- வச்சிராயுதத்தைத் தாங்கிய, வெள்ளை வாாணன் - வெள்ளையா?னயாகிய 88at it ଛା! தத்தை யுடையவன். சேந்த - சிவந்த, காஞ்சி- காஞ்சி விருட்சம், இது மருதநிலக் கருப்பொருள். வெண்ணெல் - சம்பாநெல். வருணன் - வருணபகவான்; இவன் நெய்தனிலக் கடவுள். அடம் பங்கொடி-கொடி விசேடம்; முண்டகம்-தாழை; இவ்விரண்டும் செய்தனிலக் கருப்பொருள்கள். பரந்தது - (கடலிற்) பரவியது.
குறவை வாளை யுளுவை மயிந்தன்
குப்பு ளாவுடன் திருக்கைமீன் கொழுத்த மடவை தொகுத்த ளிே குமிளா மாசினி செங்கண்ணன் உறுகி ழாத்தி காலை பாலை
யோங்கு திரளி வச்சிர மூட கத்துடன் குடை செப்பவி
யுற்ற நெடுவா லூடகம்

Page 30
38 பருளை விநாயகர் பள்ளு
பறவை யுறவி குளக்கன் முேகைப்
பருந்து வாயன் மட்டிமீன் பாரக் கெண்டை தடியன் சீலா பாரக் கத்தலை யாால்மீன் கறுவிக் கரையில் வழைக ளொதுக்கிக்
கதித்துக் குதித்துப் பாயவே கங்கை யாறு பெருகி வார
காட்சி பாரும் பள்ளிாே.
இச்செய்யுளும், அடுத்த இரண்டு செய்யுட்களும் மீன் வகை களைக் கூறுகின்றன. மயிந்தன், குப்புளா, கீஸ், குமிளா, மாசினி, செங்கண்ணன், கிழாத்தி, காலை, பாலே, திரளி, வச்சிாமூடகம், குடை, செப்பலி, நெடுவாலூடகம், பறவை, உறவி, குளக்கன் ருேகை, பருந்து வாயன், மட்டிமீன், கெண்டை, தடியன், சீலா, அத்தலையாால்மீன் இவைகள் மீனின் பேதங்கள் வழை - சா புன்னை; இது செய்தனிலக் கருப்பொருள். வார காட்சி - வரு கின்ற காட்சியை; வருகிற என்னுஞ் சொல்லின் மரூஉ (6)
தாவு கெளிறு வாரா லாரல்
தகுவெள் ளாால் தும்பையன் சாலு மாம்பழக் கெளிறு சின்னத் தாளங் கறுத்த கெளிற்றுமீன் வாவு கருங்கண் வாளை பவள
வாளை மூக்கன் வாளைகோ வஞ்சி கடியன் பொதியன் கெளிறு வவ்வால் வெள்ளை வவ்வால்மீன் ஒவி னெடிய வாயன் மடவை
யுரிய மணலைக் கூாலோ டோடும் பூனைக்கண் கெளிறு வயலி
னுதிக்குங் காணி யாளனும்

பருளை விநாயகர் பள்ளு 39
பூவின் றடத்தில் வயலிற் பாயப்
புறத்துப் பாயப் பாயவே
பொருது மாவ விகங்கை வார
புதுமை பாரும் பள்ளிாே.
கெளிறு, வாரால், ஆால், வெள்ளாால், தும்பையன், மாம் பழக்கெளிறு, சின்னத்தாளம், கறுத்த கெளிற்று மீன் (கருங் கெளிறு), கருங்கண்வாளை, பவளவாளை,மூக்கன்வாளை,கோவஞ்சி, கடியன், பொதியன் கெளிறு, வவ்வால், வெள்ளை வவ்வால்மீன், நெடியவாயன், மடவை, மண?ல, கூால், பூனைக்கண் கெளிறு, காணியாளன் இவை மீன் வகைகள், மாவலி கங்கை - பருளை நகரத்திற் பாயும் நதியின் பெயர். வார புதுமை என்பதற்கு முன்னுரைத் தாங்குரைக்க. (77)
திருக்கை புலியன் றிருக்கை யாரம்
றிருக்கை கள்ளத் திருக்சைமீன் சிவந்த திருக்கை சட்டித் தலையன் சிறுந் திருக்கை வெட்டியான் தருக்குங் குறிஞ்சித் திருக்கை கருமை தயங்கி ருலொடு வெள்ளிருரல் தண்டைச் சுறவு மொய்மூ ரல்கிளை
தக்கன் பாரைக் கல்லிருரல் உருக்க முடைய கெண்டைக் கிாா
லூர்த்த வெள்ளைவாற் றிருக்கைமீன் ஒலை வாலன் கருங்கண் ணுளன்
ஊரிற் பெரிய மீனெலாம் வருக்க முடைய பூக ராசியின்
மடைத்தலை கத்திப் பாயவே மாவலி கங்கை பெருகி வார
வளமை பாரும் பள்ளிரே,

Page 31
40 பருளை விநாயகர் பள்ளு
இத்செய்யுளில் திருக்கையும் அதன் வகைகளையும், இருரல் மீறும் அதன் வகைகளையும் கூறுகின்முர். ஒ?லவாலன் - மச்ச விசேடம், கருங்கண்ணுளன் என்பதும் அது, வருக்கம் பூகாாசிபாக்குமாத்தின் கூட்டம், பெருகி வார - பெருகி வாய்க்க. வலிமை - (அதன்) வன்மை. பள்ளிபே - பள்ளிப்பெண்களே. பாரும் - செய்யுமென்னும் ஏவற் பன்மை வினைமுற்றுப் புதியன புகுதல். (78) புகழ் த ல்
விருத்தம்
பஞ்சவர்து துரைத்தவன்பொன் னுலை வாழும்
பவளவாய் முகில்மருகன் பனைக்கை நால்வாய்க் குஞ்சாமா முகப்பெருமான் தென்ப முளைக்
கோடொன்முன் மணிவரைப்பூங் கொம்ப னரே நஞ்சுபழ கியவுமது கண்கள்வேலோ
நகைவதனங் குளிர்மதியோ நகைத்தண் கோதை அஞ்சனவார் குழல்பருவ மஞ்சோ வேலை
யம்பவள மோகினிவா யதாங் தானே. பஞ்சவர் தூதுரைத்தவன் - கிருட்டினன். கோடொன்முன்ஒற்றைக் கொம் ன் (விநாயகன்). கொம்பனரே - பூங்கொம்பு போன்ற தலைவியே கோதை - பூமாலை, அஞ்சனம் - கருமை. பருவ மஞ்சோ - கார்காலத்து ம்ேகமோ, அதாம் - உதடு. (79)
பண்ணைக்காரன் தோற்றம்.
சிந்து மாறுகண்ணுஞ் சோகிப் பாகிற் பல்லி னழகுஞ் - சுத்த
மாவளந்த நாழிபோலே வாயி னழகுஞ் சிறுசளி யாற்பெருத்த துள்ளு நாசியுங் - கொட்டை திரித்த பருத்தியின்பைக் கூறை வயிறுங்

பருளை விநாயகர் பள்ளு 4.
கீறிவேறு தசையொட்டி வைத்தி டுகாதுஞ் - சற்றே
கிடுகுகட்டிப் பெற்றமுட்டிக் காலு மாகவே
ஆறுமுக வேலர்துணை யார்வ டிவமோர் - பதி
னறனர்பண் சேரும்பண்ணைக் கார ஞர் வந்தார்.
". . . .
சோகிப்பாகின் - பலகறையின் வெண்மைபோல. நாழி - படி. பைக்கூறை - துணிப்பை;முன் பின்னக வந்த ஆகும் வேற்றுமைத் தொகை. கிடுகு - சட்டப்பலகை. (80)
காதளவு சென்றவிழிக் கஞ்சனங் தீட்டி - மலர்க்
காந்தளங்கை யாடகம்பொற் குடகஞ் சூட்டிக் தாதளவு கோதைக்குமென் கண்ணியுஞ் சூட்டி - முலைச் சந்தனச்சே முட்டிநறுங் குங்குமங் கோட்டிச் சோதிமண்ணி நீலமயில் போலியல் காட்டி - மரைச்
சுந்தாச்சி றடியிற்செம் பஞ்சுவைத் தூட்டி ஆதிபரஞ் சோதிநாத வேத கீதனர் - பண்ணை
யாண்டவரைக் கண்டுதொழ வாரும் பள்ளிாே.
அஞ்சனம் - கண்ணுக்கிடும் மை, குடகம் - வளையல், மரை - தாமரை (முதற்குறை விகாரம்). (81)
ஆண்டையை வணங்கல்
குட்டச்சொறி மேனியாரே கும்பிடுகிறேன் - உப்புக்
கொட்டுப்போல் வயிற்ற ஞரே கும்பிடுகிறேன் சட்டிவைத்த முகத்தனரே கும்பிடுகிறேன் - துரங்கற்
சண்டைக்கடா வழக னரே கும்பிடுகிறேன் கட்டைமூளிக் காதனரே கும்பிடுகிறேன் - மகிக் கார்த்திகைமாங் காய ஞரே கும்பிடுகிறேன் அட்டைவா யுதட்டனரே கும்பிடுகிறேன் - பண்ணை யாண்டவரே யாண்டவரே கும்பிடுகிறேன்.

Page 32
42 பருளை விநாயகர் பள்ளு
கொட்டு - மாப் பெட்டி, தூங்கல் சண்டைச்சுடா - அசை கின்ற போர்க்கடா. மதி கார்த்திகை மாங்காயனரே-கார்த்திகை மாதத்திலுண்டாகும் மாங்காய்போல அருமையானவரே. பண்ணை யாண்டவரே - வயல் நிலத்தை யுடையவரே. ஆண்டவரே - அடிமையாகக் கொண்டவரே. (82) adůu பார்ம திக்க வருஞ்சோழ மண்டலப்
பள்ளி பள்ளனை யுள்ளாக்கி வைத்தபின் ஊர்ம திக்கு நிகர்வத ஞம்புயக்
கொருத்தி மூத்தவ ளாலே யுணர்ந்துமின் கார்ம தித்த குழலிளை யாடன்மேற்
கண்சி வந்து கறுத்தாண்டை சீறவே பார்ம திக்கும் வயற்செய்கை பார்த்துடன்
வருதல் போற்பள்ளன் வருகின் முனே. சோழ மண்டலப்பள்ளி - ஈண்டு இளையபள்ளி. உள்ளாக்கி வைத்த பின் - தன் வசப்படுத்தியபின். மூத்த வளாலே - மூத்த பள்ளியாலே. உணர்ந்து - (ஆண்டை) உணர்ந்து. சீறிட - (பள்ள?னக்) கோபிக்க. (88). விதைவகை கேட்டல் சிந்து பொருப்பி னெல்விதைக் கோட்டையி னீட்டிய பூட்டு காணுகத் தீட்டமுஞ் சிந்தை விருப்பு மேழிக் கலப்பை வகையும் மண்
வெட்டியும் சொர்ணக் கொழுவின் வகையும் கருப்ப வேலிப் பருளையில் வாழுமுக்
கண்ணணுர் பண்ணை மாட்டின் வகையும் இருப்பும் போன செலவுநன் முய்க்கணக்
கேற்றிச்சொல் வீழ மண்டலப் பள்ளா.

பருளை விநாயகர் பள்ளு 48。
முக்கண்ணஞர் - விநாயகர்; தந்தைக்குள்ளது போல இவ ருக்கும் மூன்று கண்ணுண்டு என்க. பண்ணை - வயல். ஈழ மண்டலப் பள்ளா - யாழ்ப்பாணத்துப் பள்ளனே, (84)
சிந்து ரத்துணை புள்ளூ ரயன்பணி
தென்ப முளைப் பாஞ்சோதி நாத தந்தி யேறிய வாகனங் தின்று
சமைந்த நெற்கோட்டை யாயிரங் காணும் வந்த பாவலர் வெங்கலி தீர
வழங்குங் கோட்டையோ ரைந்நூறு காணும் இந்த நாளினி லென்பொரு ளாய்வைத்
திருந்த தோர்வட்டுக் கோட்டையொன் ருரண்டே, சிந்துத் துணை புள் - சிவந்த இரண்டு கால்களையுடைய அன்னப்புள். துணை - ஆகுபெயர். துணைப்புள் என்பது துணை புள்ளெனச் சந்தவின்ப சோக்கி மிகாதாயிற்று, பாஞ்சோதி நாத் தந்தி - விநாயகர். வாகனம் - பெருச்சாளி, வெம்கலி - கொடிய துன்பம், வட்டுக்கோட்டை - திரண்ட நெற்கோட்டை; பரு ளைக்கு அருகாமையிலுள்ள ஓர் நகரம். (85) .
தெற்றிக் காளை கழுத்தால் நெரிக்கச்
சிதைந்து போன நுகமொரு கோடி சுற்றிப் பூணுங் கயிற்ரு லழுந்தத்
துளைப றிந்த திருநூறு கோடி இற்றை நானுக மொன்றையுங் காண்கில
னேழு நான்கிலொன் றில்லாத நாளில் மற்றப் பாம்புக்கும் பூரத்துக் கும்பகல்
வைத்த நாணுக மொன்றுண்டே யாண்டே. நுகம் - நுகத்தடி. ஏழு நான்கில் - இருபத்தெட்டில். ஒன்று இல்லாத நாளில் - ஒன்று குறைந்த சாளில்; எனவே இருபத்தேழு சாளில் (இருபத்தேழு நட்சத்திரங்களில்): பாம்புக்கும் - ஆபிலி:

Page 33
44 பருளை வ
யத்துக்கும். பூரத்துக்கும் வைத்த நாள் - நடுவிலுள்ள 4 நுகம் ஒன்றுண்டு என்க, வ ஒன்றேயன்றி வேறு நுகம் க
கத்தி வேலம்பு வில்.
கட்டு வாங்கங் பைத்த பாம்புவன்
பரித்த வீரப் பு முத்து நெல்வயலே முறிந்த கையீ வைத்த மண்வெட்டி மஞ்சிப் பார்க்கி
தெண்டை - ஒர் ஆயுதம். அக்க மாலை கமண்ட மாடல் வெங்கள் திக்கெ லாம்புகழ் வி
தென்ப முளைப் தக்க பண்ணை யுழுதி சாற்றில் மட்டின் மிக்க வீர ரகுநா யக் மேழி யொன்று
இரகு நாயகனுக்கு மே லுள்ள மேழியேயன்றி வேறு
வன்னச் சோதிரீ 6ே
w LDtrég) ளம்பூ
தன்னைத் தானனை ய றம்பி ரான்றன்

விநாயகர் பள்ளு
- பூச நட்சத்திரத்திற்கும். பகல் நட்சத்திரம்; அது மகம். மகமாகிய ானத்திற் செல்லும் நுகம் (மகம்) ண்டிலேன் என்பதாம். (86) லுடன் தெண்டையங் கருந்தா துலக்கை பாசந் திரிசூலம் பாஞ்சோதி மூர்த்தி ாாங் திருத்த ண் டாயிரங் காணும்
“யொன்றுவைத் தேன்மன றேன் காண்கில ஞண்டே.
கட்டுவாங்கம் - தண்டாயுதம். (87)
லம் புத்தக தை யேந்திய மேலோர்
சுஞ் சுழிபுரத் பரஞ்சோதி நாதர் டத் தேய்ந்தன வக் கேயில்லை யானுல் நன்கொடி பண்டு காட்டுவே னுண்டே, நிக் கொடி யாதலின், அக்கொடியி மேழிகண்டிலேன் என்பதாம், (88) லாற்பல மோர்கதிர் ணிவீணே தாங்குக் ான்றென் பருளையிற்
வயலுழு காளை

Page 34
0ク
{{<>}}<只容介又0八只00八只00八兄00八兄00八门>00八只0八兄00八又00八>00八>0
·É II-in fico9log) qinoq9oC9 șỤfigig)
IỆų9Ġ 1999IIẾđĐ-a 1995r.
stocooo log9IIẾđĐIỆ19
名女00八兄00八口00八口00八兄00八兄00<口色 <台(0八兄0
八>00八只00八廿00八又名八只00八口00<门>0<兄0
0C00a00C00C00C00e COOC003d)0C00CON
20C0
 

பருளை விநாயகர் பள்ளு 45 i.
பின்னர்ச் சாலினிற் சங்கினிற் றட்டப் பிளந்து போன கலப்பை யனந்தங் கன்னத் தோர்குண் டலப்பல தேவன்
காத்தி லேயோர் கலப்பையுண் டாண்டே. பலதேவன் - பலாாமன். பலதேவனது கலப்பையேயன்றி) வேறு கலப்பை கண்டிலேன் என்பதாம். & (89).
வேணிக் கங்கையர் காதலர் வாலுளை
வெண்சிங் காசன மேறிய போதர் சேணிற் கண்விஞ் சையர்பணிந் தேத்திய
தென்ப முளை விநாயகர் நாட்டில் ஆணிப் பொற்கொழு வெல்லாம் நிலம்பட்
டழிந்து கூர்மை யகன்ற த னேகம் மாணிக் கஞ்சொன்ன கோவையி லேகொழு
வைத்தி ருப்பது பார்மின்கா னுண்டே.
ஆணிப்பொன் - ஒருவகைப் பொன் (உயர்ந்த பொன்).
மாணிக்கஞ் சொன்ன கோவையில் - மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக்கோவையில். கொழு - காறு; கொளு - கொழு. அஃதாவது, மாணிக்கவாசகர் சொல்லியருளிய கோவையிலுள்ள கொளு (கொழு) வேயன்றி வேறு கொழுக் கண்டிலேன் என்பதாம். கொளு என்பது ளகாழகர பேதத்தால் Os it cap என்முயது. கொளு - துறைக் கருத்து. (90)
செழுகி லாமதிக் கண்ணிச் சடாடவித்
தேவ னருக் கொருகாளை போச்சு வழுவில் கோடி யுருத்திர ரென்றுளர்
வாங்கி னுரந்த மாட்டறி யேனுன் பழுதில்லா காரை யொன்று குளந்தத்தப்
பாய்ந்து போகிய தாலிந்தப் பூமி உழுத காளையொன் றுண்டது பொன்குலை யூரி லேவாருங் காட்டுவே ஞண்டே.

Page 35
46 பருளை விநாயகர் பள்ளு
ஒருகாளை - நந்தி. உழுதகாளை - திருமால். இதனை, “எகுத் துக் கொட்டிலும் பொன் வேய்க் திடச் செய்தேம்* என்பதன லுணர்க. பொன்னலையூர் - ஒர் வைணவத் திருப்பதி. (91)
கொச்சகம்
சிந்தைமதிக் கெட்டான் செழித்தபண்ணை யாண்டவனுக் கிந்தவகை பள்ள ணியம்புமொழி யைக்கேட்டு வந்தகுல மூத்தாள் வறிதுநகை யுந்தோற்ற முந்துகுடும் பன்சரிதை மூதலிக்கத் தொடங்கினளே.
குடும்பன் - பள்ளரிற்றலேவன். மூதலித்தல் - ஒப்புவித்தல்.
முறைப்பாடு
சிந்து பண்பு மீதி யறியாத தூக்குணிப்
பள்ளன் செய்கரு மங்களைக் கேளும் உண்ப துங்குடிப் புங்களிப் புங்கண்
ணுறக்க மும்மிளை யாள்குடி லோடே எண்பொ ருந்துமென் புத்தியுங் கேளான்
யானும் பின்னை யுரைப்பதும் விட்டேன் பெண்பி றந்தது நான்மட்டு மோவிந்தப்
பேச்சை யார்க்கினி விள்ளுவே னுண்டே
துரக்குணிப்பள்ளன் - உரோசமில்லாத பள்ளன். குடில் - குடிசை, விள்ளுவேன் - சொல்லுவேன். (98)
கட்டு நீர்வயற் செய்கையுந் தீண்டான்
கலகப் பள்ளி மயல்வலைப் பூண்டான் பட்டியின் மாட்டைக் கிட்டியும் பாரான்
பழைய தாரமென் றென்னையுஞ் சோான்

பருளை விநாயகர் பள்ளு 47
சட்டைக் காரியை விட்டுப் பிரியான்
சற்றே பிரிந்தா லும்மிங்குத் தரியான் பெட்டிச் சோற்றுக்குங் கள்ளுக்கும் நெல்லெல்லாம் பெட்டியா லஸ்ளிக் கொட்டின னுண்டே. கலகப் பள்ளி - கலகத்தையுடைய இளையபள்ளி. பெட்டி - அளவுக்கருவி. (94)
தூர திட்டியன் னுன்பண்ணை பாரச்
சுமையெண் ணுனிரைத் தூண்டிலிட் டார்க்குப் பார மெல்லா மிதப்பிற்கண் ணுமிந்தப்
பள்ள லுக்குக்கண் பள்ளத்தி மேலே தார மென்றென் கழுத்தின்முன் குளிற் சரடு கட்டிய பாாதம் வைத்தோன் ஆர்- வாாஞ்செய் கோட்டுக்கும் பாட்டுக்கும்
ஆட்டுக் குஞ்சமத் தாயின னண்டே. மிதப்பில் - தக்கையில். பாரதம் - சுமை; ஆகு பெயர். ஆட் டுக்கும்- கூத்தாட்டத்திற்கும்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். சமத்து - சமர்த்து என்பதன் சிதைவு, (95) மஞ்சொத்த குழலா-ளிளையவள்-குஞ்சுக்கு முதலா-கெல்லு மணிவிற்றுத் தட்டான்-கையிற்-பணிசெய்வித் திட்டான் வஞ்சத்துக் குரியா-கற்ற-விஞ்சைக்குப் பெரியா-விட்ட
மருந்துக்குவிருந்தா-கிக்கொண்-டிருந்துட்கிக்கரைந்தான் கஞ்சிக்குப் பிறகே-நின்று-நெஞ்சிக் கொண்டிருப்பா-னவள் காலையும் பிடிப்பா-னவள்சொன்னல்-நாகமும் பிடிப்பான் பிஞ்சுற்ற மதிநே-ரொற்றைக்-கொம்பத்த கரியா-யெட்டிப்
பிடியுங்கைச் சவுக்காற்-கட்டி-யடிமின்கா னுண்டே.
குஞ்சுக்கு முதலா - பறவைக்குஞ்சு முதலாக (பறவைக் குஞ்சு - ஈண்டுக் கோழிக்குஞ்சு) பணி - ஆபரணம். உட்கி -

Page 36
48 ❖፡ பருளை விநாயகர் பள்ளு
நடுங்கி நாகமும் - பாம்பையும். அத்தக ரியாய் - கையையுடைய யானைபோல. கரியாய் என்பது எமஞய் என் புழிப்போல. ஆய் - உவமவாசகம். (96) ஒச்சடி யடித்தா-லென்ன-பேச்சிவன் குடும்பன்-இந்த வூருக்கு மிணங்கான்-தலையாரிக்கும் வணங்கான் பூச்சிய முறையன்-பேச்சுழு படைச்சால்-வழி
புரிவளைக் குலஞ்சேர்-சுழிபுரநகர்ப் பெருமான் (ண்ட ச்சியங் கவர்ந்தான்-எதிர்வரு-பேச்சிகொங் கையின்-பாலு வரிக்கொரு மருகன் பண்ணை நிலைத்திட வேண்டிற் காய்ச்சுலை யடுத்தே-யறத்-தோச்சிடு மிரும்பாற்-பண்ணிக்
கடுவிலங் கிடவே-யினித் தடைசெய்யி ராண்டே.
புரிவளைக்குலம் - முறுக்கினையுடைய சங்குக் கூட்டம், குச் சியம் - நெய்: ஈண்டு வெண்ணெயை புணர்த்திற்று, ஆகு பெயர் முகத்தான்; காரியவாகு பெயர். பேச்சி - பூதகி. அரி - திருமால். பண்ஜண - வயல். காய்ச்சு - ஆசெதுகை. தோச்சிடும் - தோய்க் திடும், மரூஉவொடு போலியும் பெற்றது; இடு - துணைவினை. ()
விருத்தம்
பள்ளணிரு காலினுக்கு விலங்குபூணப்
பண்ணுவித்தா ளென்றிளைய பள்ளி காணு வெள்ளளவு மிாக்கமென்ப திலையோ வாண்டைக்
கென்னபழி யென்றிரங்கிக் குழைந்து போனள் கள்ளவழி யாலீழப் பள்ளிபோந்து
கள்ளும்நல்ல கொழுத்தமறிக் கறியுங் கூட்டிக் துள்ளியுள்ள அகந்தையினும் காவிற்பூண்ட
தொடுவிலங்குப் பள்ளணுக்குச் சோறிட் டாளே.
ஈழப்பள்ளி - மூத்தாள்' ஈழப் பள்ளி சோ றிட்டாள் என்க.()

பருளை விநாயகர் பள்ளு w 49
பள்ளன் மூத்த பள்ளியை வேண்டல்
சிந்து பட்ட நெஞ்சி லடாதன செய்தார்
படாத தெல்லாம் படுவார்க ளென்கை கெட்டி யாயறிந் தேனினி மீயிட்ட
கீற்றை யுங்கட வேணுெருக் காலுக் தொட்ட கோபங் தவிர்கணக் காம்படி
சொல்லுவே னுங்க ளாண்டைக்குச் சொல்லித் தட்டு காற்றளை நீக்குவித் தேயென்னைத்
தாங்கிக் கொள்ளீழ மண்டலப் பள்ளி. தவிர் - ஒழி. கால்தளை - காலிற்பூட்டிய விலங்கு. தாங்கிக் கொள் - எற்றுக்கொள். ஒருக்கால் என்பது உடன்பாட்டொடு முடியின் ஒருக்கால் என இயல்பாயும் எதிர் மறையொடு முடியின் விகாரப்பட்ட எண் மிக்கும் வருதல் வழக்காதென்க, 'அடாது செய்பவர் படாது படுவர்” என்பது பழமொழி. (99) மூத்த பள்ளி ஆண்டையை வேண்டல் கண்ணி லேகாங் தீண்டிவிட் டாலந்தக்
கைவி ரல்தறிப் பார்களு முண்டோ வண்ண மான முலைவிழுந் தாலவ்
வயிறு தாங்கக் கடனல்ல வோதான் அண்ணல் வாரி யுலகத்தி லேயடி
யாத மாடு படியாத தென்கை திண்ணத் திண்ணஞ் சிறியோர் செயும்பிழை
சீரி யோர்பொறுக் கக்கட ஞண்டே. 'கண்ணிலே க சந்தீண்டி விட்டால் அந்தக் கைவிால் தறிப் பார்களுமுண்டோ’ என்னும் கருத்துப்பற்றியே *கண்மலரியற் கைபடாதோ? என்ருர் பிறரும். "சிறியோர் செயும் பிழை சிே யோர் பொறுக்கக் கடன்’ என்பதைச் “சிறியோர் செய்த சிறு
4.

Page 37
50 பருளை விநாயகர் பள்ளு
பிழையெல்லாம், பெரியோராயிற் பொறுப்பது கடனே? என்பத னேடு ஒப்பிடுக. திண்ணம் திண்ணம் என்னும் அடுக்குத் துணியு மேற்று. (100)
ஒறுத்த காற்பய னென்பொறுத் தாருக்
குலக முள்ளள வும்புக ழென்றெ மறுத்த விர்ந்திடு வள்ளுவ ஞர்சொன்ன
மான வெள்ளைக் குறளறி யீரோ வெறுக்கை போது மினியெளி யான்பிழையான்
மேன்மை யாக்கணக் கொப்புத் தருவான் செறுத்த காவலில் வைத்திடு பள்ளனைச்
சேர்த்த காற்றளை மாற்றுவீ ராண்டே. வெள்ளைக்குறள் - குறள் வெண்பா. அஃது, “ஒறுத்தார்க் கொருகாளை யின்பம் பொறுத்தார்க்குப், பொன்றுக் துணையும் புகழ்' என்பதனுலறியப்படும். வெறுக்கை - தண்டனை. காரணத் தைக் காரியமாக உபசரித்தார். ஆண்டே - ஆண்டவனே என் பதன் மகுஉ (101) விருத்தம் ஊசல்வட மூர்சகட முழன்றிடுபம்
பாம்பேய்த்தே ரொத்த வாழ்விற் பாசமிகு மறலிதனக் கீடாக
வருந்தல்பா ராத தேதோ வீசுகதிர்ச் சலஞ்சலங்கண் முத்தநிலா
வொளியெறிப்ப வேரி யேறி வாசமிகு குவளைமலர் சுழிபுரத்தா
லயத்தனுெற்றை மருப்பி குனே. வாழ்வானது மேல் ழோகவும் கீழ் மேலாகவும் மாறி மாறி வருதலின், ‘ஊசல் வடம் என்றும், சகடம் என்றும், அது ஓரிடத்தும் சில்லாது சுழன்று வருதலின் “உழன்றிடு பம்பாம்?

பருளை விநாயகர் பள்ளு 51
என்றும், உள்ளதுபோலத்தோன்றி யில்லதாய் சிற்றலின் "பேய்த்தே சொத்த’ என்றும் கூறிஞர். மறலி - இயமன் வேரிவாசனை. மலர் சுழிபுரம் - விஜனத்தொகை. மருப்பினுன் பாபா சது எதோ என இயையும். (102) பள்ளன் ஆண்டைக்குக் கணக்கொப்பித்தல் சிந்து குட்டைகாம்பன் வெள்ளிக்கண்ணன் குறுங்கழுத்தன்
கூழைவாலன் வெடிவாலன் வட்டச்செவியன் மொட்டைத்தலை மோழைக்காளை புள்ளிக்கறுப்பன் முறிகொம்பன் தறிகொம்பன் சுத்தக்கறுப்பன் பட்டிக்காளை குன்றுமணிக் கண்ணன்மயிலை
பால்வெள்ளை நாரைக்காளை காற்சிலம்பன் 1ča துட்டக்கள்ளன் வளைகொம்ப ஞெற்றைக் கொம்பணுர்பண்
குழ்ந்தபல மாட்டின்வகை சொல்லினே குண்டே.
குட்டை Fாம்பன் முதலிய பெயர்கள் மாட்டின் விசேட வகைகளைத் தெரிவிக்கின்றன. ஒற்றைக் கொம்பன - விநாயகன். பண்ணை - வயல். 6ாம்பன் - இள எருது; நாகு - கிடாரி. 103)
மாட்டுவகை யும்பவளத் தாலுழக் கோலும்
பரிமளச்சந் தனமாத்தாற் செய்பட வாளும்
நாட்டுமணி மேழியுங்கை வச்ா நுகமுஞ்சுட்ட
நல்லபொன்னினலே சமைத்த கொழு வகையும்
சேட்டிளம் பருதியின்ப்ர காச முடையார் தூய
தென்பருளை யன்பர் நண்பர் செய்யுமருளாளர் 1ளிச்
தோட்டுமலர்ப் பொன்னிதழிச் சூட்டர் பண்ணைக்கேவென் சோதிகாஞ்சி லின் வகைகள் சொல்லினே ணுண்டே,
உழக்கோல் என்றது உழவுகோலை; அது முட்சோல். Ul
"வாள் - கலப்பையின் ஒர் உறுப்பு, மேழி - கலப்பை. நுகம் -

Page 38
52 பருளை விகாயகர் பள்ளு
அகத்தடி, கொழு - காறு. பருதியின் - சூரியனைப்போல; இன் - ஒப்புப் பொருளது. நண்பர் - கண்பு; அர் - போலி. அருளாளர் - அருளையுடையவர். காஞ்சில் - கலப்பை. (104) பார்புகழுங் குண்டைச்சம்பா விஞ்சருச் சுனம்பஞ்ச
பாலைபசுங் கர்ப்பூர வாடைக் கறுப்பன் சேருமணல் வாரிகுள வாழை கறுப்பன்
சின்னட்டிப்ொன் னுயகன்சொற் காடைக்கறுப்பன் சீாழ கியவாணன் மங்கா மைக்காத்தான்
செம்பவளச் சம்பாமுத்து மாலைக் குறுவை வார்கருப்பஞ் சாற்றினுற்றல் வீற்றிருப்ப தோர்பண்ணை
வைத்துக்கட்டு வித்துவகை செப்பினே ஞண்டே,
இச்செய்யுளில் நெல்லின் விசேடங்களைக் கூறுகிருர், குள வாழை - ஓர் நெல்லினம். (105)
தலைவன் பொருள் வயிற் பிரிந்துழித் தலைவி வருத்தம் பாங்கி கூறல்
கட்டளேக்கவித்துறை
சங்கத்தை யேந்தும் பாஞ்சோதி நாதர் சயிலமின்னர் புங்கத்தை வாய்ந்த மணிலேப் பார்வை பொலியுமுத்து மங்கத்தி லேற்றிடு தங்கத்திற் பீருமுண்டா யிருக்க வங்கத்தி லேறித் தனந்தேடப் போனவர் வந்திலரே.
சங்கத்தை யேந்தும் பாஞ்சோதிகாதர் - சங்கினைக் கையில் தாங்கிய பாஞ்சோதி விநாயகர். புங்கம்-அம்பு; அத்து - சாரியை, பார்வை - கண்; ஐ- கருவிப் பொருள் விகுதி. பொலிதல் - உகுத் தல்; சொரிதல். முத்தும் - முத்துப் போன்ற நீரும்; உவமையாகு பெயர். அங்கத்தில்-சரீரத்தில். தங்கத்தின்-தங்கத்தைப் போல. Si — LueFlav. avši s uh - up réiš 456Ayub. (106)

பருளை விநாயகர் பள்ளு 莎器
முகூர்த்தங் கேட்டல்
R சிந்து
செம்பருதி வாரமதிற் பூரணை யென்முர்
தேட்கடையென்ருர் சித்த யோகமு மென்ருர் கும்ப முகூர்த்தமென்முர் செம்பொ னுேரையென்ருர்
குஞ்சாக் காணமென்ருர் கூடிப் பெரியோர் தம்பு கலப்பைச்சக்ாம் நன்முய்ப் பொருந்துமென்முர்
நாயக ரெமைப்புரக்கு நாதனுர் நாட்டில் வம்பவிழ்பூம் பண்ணையி லேர்ப்பூட்டி யுழவே
நன்மனத் துடனேபோதி யீழமண் டலத்துப்பள்ளா.
பருதிவாரம் - ஞாயிற்றுக்கிழமை. பூரணை - பெளர்ணிமை. தேட்கடை - மூலநாள். கும்ப முகூர்த்தம் - கும்ப லக்கினம். பொன் ஒரை - தனுசும் மீனமும்; அது குரு இலக்கினம். குஞ்சா கரணம் - காணம் பதினென்றில் ஒன்று; காசகரணம் என்பதன் பளியாய பதம். போதி - போவாய். இச்செய்யுளிற் கடறிய சுப முகடர்த்தத்தில் உழுதால் பயிர் விருத்தியாகு மென்பதாம், (107)
ஊற்று தேன்பொழில் சூழ்தென் பருளை
யுகந்த ஞானப் பரஞ்சோதி தன்னைப் போற்றிக் கொள்ளறி யாமற்பொன் னேரினைப்
பூட்டிச் சால்விட் டுழுகின்ற நேரங் தோற்று மேற்றுக் குறுங்கண்ணன் வாளைமீன் துள்ளிப் பாய நுகத்தை முறித்துச் சிற்றக் காளை வெருண்டுகொம் பாற்குத்தச்
சேற்றிற் பள்ளன் விழுந்தான்கா னுண்டே
குறுங் கண்ணன் - மாட்டின் விசேடம். நுகம் - அகத்தடி. காளை - எருது. கொள் என்பது கொள்ளுதல் என முதனிலைத் தொழிற் பெயர். 108)

Page 39
54 பருளே விரு
பள்ளன்பண்ணை மீது 6 பள்ளி பரிதவித்து துள்ளிவிழி நீர்சொ ரிய சோதிமுலைப் பந்தி கள்ளவிழ்பூங் கோதை கனன்மெழுகி னு குள்ளிமருந் தீட்டின் பு
குறையோவென்
மூத்த பள்ளி-பெரிய மனை பந்து - முலையாகிய பங் து; உரு குள்ளி-இளைய மனைவி. நாச்சிய அபிராமி, மாகேசுவரி, கெளட் சாணி, காளி.
இரங்கல்
தேன்கிடந்த தொடையா6ே வான்கிடந்த புகழானே மை யூன்கிடந்த மெய்தளர்ந்தே என்கிடந்தா யென்னகுறை
மலேகிடந்த - மலையை ெ ஒவியம - சித்திாம்.
கண்ணனுதற் கண்ணனருள் விண்ணினிடி மின்ஞமல் வி துண்ணறிவு முயிர்ப்புமின்றி பண்ணைவகை தமைப்போங்.
காரி - வயிரவர். ஐயனு உயிர்ப்பு - மூச்சு. பண்ணை வை

ாயகர் பள்ளு
விழவே-மூத்த
முகத்திலறைத்து வே-யழுதழுது
கி லடித்துக் குலைய-விழுந்தெழுந்து ருகி யிளைய மயக்கோ-நாச்சிமார்தங்: றழுதி ரங்கினுள், rவி. பரிதவித்து- வருக்தி. முலைப் வகம். கோதை - கூந்தல், இளைய மார்-சத்த தேவிகள்; அவராவார்:
மாரி, நாராயணி, வாராகி, இச்தி (109)
- கொச்சகம்
ன தேடரிதாங் கண்மணியே லகிடந்த தோளானே யோவியம்போல் வயலணையில் யின்னதென்று சொல்லாயே.
'யாத்த; கிடந்த - உவமவாசகம்.
(110).
காரியைய ஞர்குறையோ ழ்ந்ததையா வென்புகல்வேன் யொடுக்கமுட னிகிடந்தாற். து பாாபபவராா காபபவராா.
ர் - சாத்தஞர் (அரிகா புத்திார்) சதமை - வயலின் வகையை, (111)

Page 40
哆0八兄00八兄00八>0<>{{八>0}女Q}<>{八兄{八兄00八兄00八>0<只0八兄0\八兄00八兄00八兄00八>
·ọ9 @ @ @ @ Qi ugi
り<ニ00<=00<>00ー→00<ニ(0<ニ00<ニ00<ニ00<ニ00<ニ00<トリミ
{}<门>{{<门>(0八门>{0八门>(今八门>(0八门>{0八只令凸>{{<门>{{人口>{0八门>{0套门>{0八兄(0八门>00吾又令凸>(0八女0
a
SOCOCC0 C000)CO3C00C0
 

பருளை விநாயகர் பள்ளு '55
கொங்கை யுரந்தடியாக் குழன்முடியாக் காலத்தே மங்கலநா ணெனக்கணிந்து வரைந்ததுவு மறந்தனையோ பங்கவயற் செய்கைசெய்யப் பாஞ்சோதி காக்குமென்று செங்கையினிர்தெளித்திடவேதெளிந்துபள்ளலெழுந்தனனே உாம் - மார்பு. தடியாக் காலத்து - புடைக்காத காலத்து. குழல் முடியாக் காலத்து - கடந்தல் முடிக்கப்படாதி காலத்து காலத்து என்பது தடியா என்பதனேடும் இயைக்கப் பட்டது. பங்கம் - சேறு. (112) Ga Gb ur சுத்தர்பணிங் தேத்துஞ் சுழிபுரத்து வீற்றிருக்கும் அத்த பாஞ்சோதி யண்ணலே-கைத் தலத்துச் குலங் திரித்துமுணங் தோன்முல காலமெனக் காலன் வரும்போது கா.
சுத்தர் - மனத் தூய்மையோர். அத்த - பிதாவே அண்மை விளி. முதல் வேற்றுமை அத்தன். முனம் தோன்று ஆலகாலம் என - திருப்பாற் கடல் கடைந்த காலத்துத் தோன்றிய கொடிய விடம் போல. காலன் - யமன். (1 1勢 சிந்து உழுது பாம்படித்தேன் சாலி விதையை
உண்மைபொலி நன்முகூர்த்தங் தன்னில் விதைத்தேன் அளவாய் முளைத்தபின்பு நீரைப் பாய்ச்சினே
னம்புயனும் மாதவனும் போற்றித் துதிக்கும் மழகளி முனபாஞ் சோதிப் பெருமான்
வழங்கு கருணையின் வளர்ந்த காற்றைத் தொழுது நடும்வடிவு காண வாரும் v
சொல்லவந்தேன் காணும்பண்ணைக் 5 Tyt ண்ைடே. சாலி விதை - செல் விதை. தொழுது - விசாயக%னக் தொழுது; இந்திர தெய்வத்தைத் தொழுது எனவுமாம்; நிலமக ளைத் தொழுது என்றலும் ஒன்று. கடும் வடிவு - எடுகின்ற அழகு. பண்ணைக்காரன் - பள்ளர் தலைவன். (114)

Page 41
56 பருளை விநாயகர் பள்ளு
நற்ருயிரங்கல் விருத்தம் காமன்மகிழ் மைத்துனனுர் பொன்னலைப்
பதியிலுறை காயா மேனி மாமன்மகிழ் மருமகனுர் சுழிபுரம்வாழ் பாஞ்சோதி வரதர் நாட்டிற் பூமகள்கேள் வனையனைய காளையுடன் தழல்வடவை பொங்கு கானிற் சேமநிதி மங்கலமான் சீறடிவைத் தெவ்வாறு செல்கின் முளே. காளை - தலைமகன். கானில் - பாலை நிலத்தில். மங்கல மான் - மங்களகரமான மான் போன்ற தலைவி; மான் - உவமை யாகு பெயர். சீறடி = சிறுமை + அடி உவமைப் பொருள்களைச் சிறுகின்ற அடி எனினுமாம். (115)
நாற்று நடவு சிந்து திங்க ளாடப் பணியு மாடத்
திருச்ச டாடவி யாடவே செறிந்த கனகக் கடுக்கை யாடச்
சிந்து ரத்துரி யாடவே அங்கை மான்மழு வாட வம்புலி யாவ மாட மன்றினில் ஆடி னுரவர் சேய்ப முளை
யமர்பரஞ் சோதி வயலுளே கொங்கை யாட மகரக் குழையுங்
கொப்பு மாடச் சுரும்பினக் கோவை யாடக் கோதை யாடக்
கோலமுத் தார மாடவே

பருளை விநாயகர் பள்ளு 57
சங்க மாடச் சரிக ளாடக்
தனத்திற் கச்சசைங் காடவே தயங்கு நாற்றை யொருவர்க் கொருவர்
தள்ளி நடவாரும் பள்ளீரே. கடுக்கை - கொன்றை மா?ல. சிந்து ரத்து ரி- யானைத்தோல். மன்று - கனகசபை. மன்றினிலாடிஞர் - நடராசப்பெரு மான். சேய் - பிள்ளை. சுரும்பினக்கோவை - வண்டின் வரிசை, கோதைகூடக்தல், சங்கம் - சங்குவளையல்; அம் - சாரியை (ஆகுபெயர்)" சரிகள் - கருவளையல். பள்ளிரே - பள்ளப் பெண்களே. வாரும் என்பதில் உம் - முன்னிலை வினைமுற்று விகுதி புதியன புகுதல் என்பதாம். (116)
சின்னி வன்னி ந்ாகி யேகி
திருவி யுருவி குருவியுஞ் சேவி யாவி பூவி யேவி
செல்லி தன்னுடன் வல்லியும் பொன்னி கன்னி வேலி பாலி
புளுகி சிவப்பி கறுப்பியும் புலிச்சி கலிச்சி விரி சூரி
பூமி யுடன்ே சோமியும் பன்னு சுருதி முனிவர்க் குரிய
பரன்ப முளைப் பதியில்வாழ் பவள மேனியன் வயலில் காற்றைப்
பாடி நடவாரும் பள்ளிாே. சின்னி முதலியவை பள்ளச்சிகளின் பெயர். (117)
மருதி டைத்தவழ் பசிய வித்தக
மாக தப்புயல் மருகனுர் வலவை பக்கலி லுறையு முத்தம
மதக யத்திரு வதனனர்

Page 42
58 பருளை விநாயகர் பள்ளு
சொருகு கொத்தல ரள்க முக்கணி
யுமைய வித்திடு புதல்வனுர் சுழிபு ரப்பதி யால யப்பரஞ் சோதி நாயகர் வயலுளே யிருவி பூழிக்கயல் சுறவு கிட்டுற
விால ணரித்தொகை பிறழவே யிடத்திற் முெடுத்து முடித்த நாற்றை
யெடுத்து நாங்க ணடச்செய்தோம் வெருவி முட்பொதி பலவி னிற்கனி
சிதற லான்மிகத் திருக்குடன் விழுந்து மீன்கள் குதித்துப் பாயும் விதத்தைப் பாரும் பள்ளீரே. மரகதப்புயல் - திருமால். வலவை - வல்லபைதேவி. கயம் - யானை, வதனம் - முகம். முக்கணியுமை - மூன்று கண்களை புடைய உமாதேவி (முக்கணி - காளி) சுறவு விழிக்க யலைத் தம் மினமெனக் கருதிக்கிட்டுற என்க. சுறவு - மருதநிலச் சுறவு என்க.
தண்ணென் தொடைய விதழிப் புங்கவன் தந்த கூரொற்றைக் கொம்பனர் தாாணிப் புவன பூரணப் பரம காரணப் பொருளு மாயினர் வண்ணஞ் சிவந்த புரத்தினர் தொந்தி வயிற்றின் முப்புரி நூலினர் மஞ்சு குழ்பொழிற் றென்ப முளையில்
வாழ்பாஞ் சோதி வயலுளே பண்ணி னிசைந்த சொல்லி லேறுதல் வில்லி லேயிணை வில்லிலே முலை பல்லிலேமுலை வல்லி லேயரைப்
பணத்தி லேமஞ்சண் மணக்கிலே

பருளை விநாயகர் பள்ளு 59
கண்ணி லஞ்சனத் தீட்டி லேறுதற்
குட்டி லேகுழைத் தோட்டிலேகுழற் காட்டி லேயிசைப் பாட்டிலேதலை
யாட்டி முனடி பள்ளிாே. தொடையல் - பூ மாலை, புங்கவன் - சிவன், சிவந்த புரத்திஞர் - சிவந்த திருமேனியை யுடையவர்; பவளமேனி யாாதலின் இங்ஙனங் கடறினர். தொந்திவயிறு - தொப்பை வயிறு. மஞ்சு - மேகம். இணைவில் என்றது புருவத்தை. முலைப் பல் - முல்லையரும்பை யொத்த பல் முல்லை என்பதன் இடைக் குறை விகாரம். மு?லவல் - முலே பாகிய சொக்கட்டான்காய். அரைப்பணம் - அல்குல். நு தற்சுட்டு-செற்றிப்பட்டம். குழைத் தோடு, குழையோடு சோடு; குழை, தோடு இவைகள் காதணி. குழையாகிய தோடு எனினுமமையும். குழற்காடு - உருவகம்ஆட்டிருரன் - ஆட்டுகிருரன் என்பதன் சிதைவு, (119)
தேடிப் பொருளைப் புதைத்துக் கொழித்துத்
தெளித்துக் குழைத்து வடித்தநூல் தெள்ளு காவ ருள்ள மேலுறை
தேவ னுர்திரி கோவனுர் வாடிச் சிறுகு மிடைப்பு லோமசை
மகிழ்நன் பூசித்த வாதணுர் மண்ட லம்புகழ் தென்ப முளை வாழ்பாஞ் சோதி வயலுளே கோடி வளைந்த கரும்பு ரூாங்
குனிக்கு மிந்திர சாபமாக் கொடிம ருங்குன்மின் னுக வேறுதல்
குழவிப் பிறையி னிலங்கவே யாடிச் சரிந்த கோதை மேகங்க
ளாகத் தாளக் கோவையை யாலிக் குலமென்று பீலிக் குலமயி லாலிப் பதைப்பாரும் பள்ளிரே.

Page 43
60 பருளை விநாயகர் பள்ளு
பொருளை - உண்மைப் பொருளை. தேடி - ஆராய்ச்து. நாவர் - ஈண்டு மெய்யடியார். திரிகோவனுர் - மூன்று கண்ணை யுடையவர்; (கோ - கண்). புலோமசை - இந்திராணி. புரூாம்புருவம். இந்திர சாபம்-இந்திரதனு. மருங்குல்-இடை, குழவிப் பிறை - இளம்பிறை. ஆலிக்குலம் - மழைத் துளியின் தொகுதி: ஆலாங்கட்டியின் தொகுதியுமாம். ஆலிப்பதை - ஆரவாரிப்பதை.
நாளுங் கலியைத் துரப்பதே யன்றி
நாளை வாவென் றுரைத்திடான் நம்பி னேர்க்கருள் தருத யாபரன் வெம்பி னேர்க்கரி யேறனுன் வாளின் றடக்கைச் சந்த்ர சேகா மாணு முதலி வாழவே வாந்தங் துதவு தென்ப முளை
வாழ்பாஞ் சோதி வயலுளே தாளிற் பதும ராகச் சுவடு
தயங்கு சுப்பிரம் பதியவே சருவிச் சருவி யொருவர்க் கொருவர்
தயங்கு நாற்று நடுகைக்கே மீளத் திரும்பிப் பள்ளனைப் பார்த்து
வெண்ணகைத் தாளங் காட்டவே வெருவிப் பங்கயங் குவியக் காவிகள்
வெடிப்பதைப் பாரும் பள்ளிரே.
கலி - வறுமை. வெம்பினுேர் - பகைத்தோர். அரியேறு - ஆண்சிங்கம். சந்திரசேகர மானமுதலி-ஒர் வள்ளல். பதுமாாகச் சுவடு - பதுமரேகை. சுப்பிரம் - ஒளி: வெண்மையுமாம். சருவிச் சருவி - மிக நெருங்கி; (சருவுதல்-செருங்குதல்). வெண்ணகைத் தாளம் காட்ட என்றது சிரித்த?ல. பற்களின் ஒளியைச் சந்திரிகை யென்று தாமரை குவித?லயும் கீலோற்பலங்கள் மலர்தலையும் (121)
பாருங்கள் என்ருரர்.

பருளை விநாயகர் பள்ளு 6.
அத்தி மணிச்சுடி கைத்துயி விற்பயில்
பச்சை முகிற்கொரு மருகன ாத்தி முகத்தவர் கித்தர் விழித்திரி
யற்புத வித்தகர் வயலுளே முத்து முலைச்சிய சக்கு வலைச்சிய
ாற்ற விடைச்சியர் நடுகைக்கே முத்தை யனத்திாண் முட்டை யெனச்சிறை
கட்டி யணைக்குது பள்ளிரே. அத்தி - பாற்கடல். சுடிகை - உச்சி, முடி. இங்கே (ஆதி சேடன்) உச்சி. பச்சைமுகில்- திருமால்; அன்மொழி. அத்தி - யானை. விழித்திரி- மூன்று கண்; திரிவிழி என மாறுக. முத்து - முத்துமாலே ஆகுபெயர். அக்குவலைச்சியர்-சங்காலாகிய வளையலை யுடையவர்; - வளைச்சியரென்பது வலைச்சியர் என லகரளகர ஒற்றுமையால் நின்றது. அன்னத்திாள் - அன்னக்கூட்டம். சிறை - சிறகு, அணைக்குது - அணைக்கிறது என்பதன் சிதைவு. ()
வடிக்குஞ் சகல கலைகள் போற்றும் வள்ள லைங்கா னுட்டிலே தெரிக்குங் கழனிப் பயிர்கள் வளர்ந்து
செறிந்து விளைந்து சரிந்தவே. ஐங்கரன் - விநாயகன். செறிந்து - நெருங்கி, சரிந்த - - சாய்ந்த அன் - சாரியையின்றி வந்தது. (123)
தேன்பயி லுந்தடஞ் சோலைப்பெருங்
தென்பருளையி னதன்றிகழ் வான்செறி யும்பண்ணே மீதேகதிர்
வாய்க்குங்குலைச் செந்நெருனே

Page 44
·ፋm2 பருளை விநாயகர் பள்ளு
கூன்பிறை நேரிரும் பாலே மள்ளர்
கொய்து செய்தே வைக்கும்வேலைக் கான்செறி தாமரைப் பூமே லன்னங்
கண்டுயில் பாரும் பள்ளிாே. குலேச்செந்நெல் - நெற்கு?லகளையுடைய செந்8ெற்பயிர். கடன்பிறைநேர் இரும்பு - வளைந்த பிறையை யொத்த அரிவாள்; இரும்பு - கருவியாகு பெயர். (124) கொந்தவிழ் தாமப் பொற்முெடை யான்மத
குஞ்சா வானனமுடையா னனு கூலன்
நிரி குலன் றரு பாலன் Làor நூலன் கந்தனை வாய்த்திடு துணையா னன்பர்
கருத்திலேயன் றிணையான் றழை காதன் றெய்வ
நாதன் சிவபோதன் றிருநாட்டில் செந்துவர்க் காய்க்குலை கனத்தேய் வயற்
செந்நெற் குழாங் குயத்தாலே யரிதிரம் மரி தீரம் மரி தீரம் மெனு நோம் வெந்திறல் வேலை யடர்க் கேவரி
மேவு கயற்கண்ணியாரே வாழை மேற்றிண்
குலைத் தாற்றின் கவி யேற்றத் தனைப் பாரீர். திரிகுலன் - சிவன். குயத்திால் - அரிவாளால், அரிதீர் - அரிவீர்; அரிவீர் என்பது அரிதீர் எனத் துச்சாரியை பெற்றது; அடுக்குவிாைவின் மேற்று. கவி - குரங்கு, (125)
வீறுயர் பாரதக் கதைநூ லம்பொன்
மேருவிற் றீட்டிய பெருமான் றிாை
யாறணி சேகரன் மருமா னுனை
மாமுகன் தன்றிரு நாட்டிற்

பருளை விநாய்கர் பள்ளு 65
காறகை யாவெழு சாவிப் பசுங்
காயடி யோதையைக் கண்டே வயற் சேறளை மீன்குதித் தறுமீன் மட்டுஞ் சேர்வது பாரும் பள்ளிரே.
ஆறு அணி சேகரன்-கங்கையைத் தரித்த சிரசையுடையவன் (சிவபெருமான்). கால் தகையா - காற்றைத்தடுத்து. சாலிப் பசுங்காய் - நெற்பயிரின் முதிர்ந்த நெற்குலே. அறுமீன் - ஆால் மீன் (ஆகாயத்தில் தோன்றும் நட்சத்திரம்). (126)
(இறுதியில் சில பாக்கள் சிதைந்தன)
பருளை விநாயகர் பள்ளு முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.

Page 45
பூநீலபூரீ சப மைத்துனரு ச. சிவப்பிர
பருளை முருக திருவனர் கமலகன் மலரு திகிரியை முதலையில் இருவரு மடிமுடி துருவி விருள்கெட வெழும குருவென வழிபடு குறு
குணமுள தமிழியல் சுருதியின் முடிவினின் எ சுழிபுர நகருறை சு கருவினின் வருதலை யொ
கடுகிமுன் வருதலை மருவிய மலையென வருக மாயினின் வழிசெலு விருதிரு வடியெண் துள யிமையவ டருசா வ சுருதியின் முடிவினின் வ சுழிபுர நகருறை சு. தருகிழ லாசுசெய் மகபதி தமதிடர் களையமுன் அருவமு முருவமு மருவு றறைநவ வடிவமுன திருவரு ளறுமுக சாவண திகழ்தரு குகவென சுருதியின் முடிவினின் வ சுழிபுர ககருறை சு.
* மன்ன? என்பதன் ெ

ாபதி நாவலாவர்கள் ம் மாணுக்கருமாகிய காச பண்டிதரவர்கள்
Li fT (p. tu ச் இரத்தினத் திரயம்
தறை பவனுங் 0 விடுமொரு முகிலும் னர் மலைய
னுதல்விழி வருவோய் முனிக் கருணற்
வான்முறை யருள்வாய் பருமொரு பொருளே ார்குல பதியே. (1) ாழியம படர்கள் ஈசியிரு கனக ன மடவார் லு மனமதை யொழிகின் மன% வருள்வாய் வணபவ குகனே ருமொரு பொருனே ார்குல பதியே. (2) கி முதலோர்
னான்விழி வருவோய் ரு வமுமென்
னரியவொர் சொருப
பவமெய் யடிமைகொண் டருள்வாய் ருமொரு பொருளே ார்குல பதியே. く (8)
தாகுக்கும் வழித் தொகுத்தல்.