கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூவுதும் மலரே

Page 1
தூவுதும்
ஈழத்
குழுஉ இ
கலவானிை அச்சக

மலரே
துக்
றையனுர்
ம், யாழ்ப்
ாழ்ப்பாணம்

Page 2
தூவுதும்
ஈழத்
குழுஉ இ
கலைவாணி அச்சகம்

மலரே
துக்
றையணுர்
யாம்ட்
ாழ்ப்பாணம்

Page 3
முதற் பதிப்பு 1962
எல்லா உரிமையும் ஆக்கியோனுக்கே.
Kalaivani Printing Works, Jaffna. (389-62)

தொகுப்புரை
இக்காலத்திலே கவிதை பெருவழக்கான இலக்கிய? வடிவமாக விளங்குகின்றது என எவருந் துணிந்து கூறமாட்டார். உரைநடை சிறப்புற்று விளங்கும் காலமிது. எனினும், மனித வாழ்விற் காணப்படுஞ் சுவையான நிகழ்ச்சிகளையும் அவற்றின் விளைவாக உள்ளத்திலே தோன்றும் உணர்வுகளையும் சுருங்கிய" முறையில் வெளியிடுவதற்குக் கவிதை ஏற்ற சாதனமா கவே விளங்குகின்றது. அறிவுலகிலே கவிதை ஓரளவு புறக்கணிக்கப்பட்டாலும் உணர்வுலகில் அது தனது நிலையை யிழக்கவில்லை என்பதில் ஐயமில்லை. கல்லார்க் குங்கற்றவர்க்கும் களிப்பைக் கொடுக்கும் பொருளா கக் கவிதை மிளிர்கின்றது. ஒசையின்பத்திற் கவிதையை அனுபவித்து நாத வெள்ளத்தில் மிதக்கும் கல்லாதவ ரும் இன்றைய உலகிலிருக்கின்றனர். நவில் தொறும் கவிநயம் காணும் இரசிகரும் இல்லாமலில்லை. கவிதை யின் எதிர்காலம் என்ன என்னுங் கேள்வி இலக்கிய மாணவரிடையே அடிக்கடி கேட்கப்படுகின்றதாயினும், விஞ்ஞானம் மலிந்த மேற்கு நாடுகளிலும் இன்று கவிதை செழித்து வளருவதைக் காணும்போது கவி தையின் வலிமை பற்றிய ஐயம் எம்மனதை விட்டு அகன்று விடுகின்றது.
நெடும்பாடல்களையும், பல்லாயிரக்கணக்கான செய் யுட்களையும் கொண்ட காப்பியங்களையும் ஆற அமர விருந்து சுவைப்போர் தொகை இன்று அருகிக் காணப் 44டலாம். ஆணுல், அது கவிதையின் குற்றமன்று. இரு தாம் நூற்ருண்டிலே தமிழ்க் கவிதைக்குச் சில கவி ஞ்ர்கள் புத்துயிர் அளித்துக் காத்தனர் என்பது உண்மை. அரசியற்றுறையிலும் சமுதாயத்துறையி’ அலும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கள் மக்கள் மனிதைக் கவர்ந்தபடியால் அத்துறைகளில் ஏற்பட்ட அனுபவ”

Page 4
w
உணர்ச்சிகளைச் சிறிய பாடல்களில் வெளியிட்டனர் பல புலவர்கள். எளிமையும் உணர்ச்சிச் செறிவும் அவற் றின் உயிர்நாடியாக அமைந்தன. ஆனல், செய்யுளின் முற்ருன இலக்கணம் அதுதான் என்று நாம் கொள்ள
முடியாது.
செய்யுள் என்பது அது தோன்றும் மொழியினின் றும் தனித்தெடுக்க முடியாததொன்று. ஒரு மொழி யின் அமைப்பு, அம்மொழியிலுள்ள இலக்கியப் பரப்பு அவ்விலக்கியத்தின் வளம், தனிப் பண்புகள் ஆகியவற் றினுல் செய்யுள் அல்லது கவிதை பாதிக்கப்படுகின்றது.
இந்நூலிலுள்ள செய்யுட்கள் ‘இக்காலக் கவிதை கள்” என்ற குறுகிய வரம்புக்கு உட்படாதனவாகத் தோற்றும். பாடலின் அடியெல்லைகளால் மட்டுமன் றிச் சொல்லாட்சியினுலும் இச் செய்யுட்கள் இக்காலக் கவிதைகளினின்றும் வேறுபடுகின்றன. அது வெளித் தோற்றமே. செய்யுட்களைப் படிக்கும்பொழுது அவை நமது வாழ்க்கை, நமது நாடு முதலியவற்றையே உரிப் "பொருளாகவும் கருப்பொருளாகவும் கொண்டு விளங்கு
கின்றன என்பது புலணுகும்.
உரைநடையிலே இக்காலத்தில் எழுதப்படும் சிறு கதை அல்லது குறுநாவல் முதலியன எடுத்தாளும் கதைகள், சம்பவங்கள் போன்றவற்றைக் கவிதைப் பொருளாக ஆக்கும் பொழுது கதைப் பாடல்கள் தோன்றுகின்றன. இத்தகைய இலக்கிய வடிவங்களுக் குக் காவிய இலக்கணம் எதுவும் இருப்பதாகக் கூற முடியாது. தொல்காப்பியர் இத்தகைய செய்யுட்களைத் தமது பேரிலக்கண நூலிற் கூறிள்ளாரோ என்று ஆராய் வதும் வேண்டற்பாலதொன்ருக எமக்குத் தோன்ற
காவிய இலக்கணங்களை மனதிற் கொள்ளாமற் கூற எடுத்துக் கொண்ட கதையின் வளர்ச்சியை மாத்

w
திரம் முக்கியமானதாகக் கொண்டு இயற்றப்படும் இத்த கைய கதைப்பாடல்களை ஆங்கில நூல்வல்லார் “Narati"we Poems” ‘கதை கூறும் செய்யுட்கள்" என்பர். செய் யுள்வடிவிலே நிலவிவந்த தமிழ் நாட்டுக் கதைகள் பல *வும் இவ்வகையைச் சார்ந்தன எனக் கொள்ளுதல் அமைவுடையதாம்.
இந்நூலாசிரியர் ஈழத்துக் குழுஉ இறையனுர் அவர்கள் பல்வேறு காலப்பகுதிகளிலெழுதிய செய்யுட் கள் அநந்தம். தனிப் பாடல்களாகவும், பதிகங்களா கவும் மொழிபெயர்ப்புக்களாகவும் உரையிடையிட்ட பாட்டுக்களாகவும் நூற்றுக்கணக்காண செய்யுட்களை அவர் இயற்றியுள்ளார்.
அவற்றுள் நான்கு கதைப்பாடல்கள் இத் தொகுதி யிலே இடம் பெற்றுள்ளன. "தீவெட்டிக் கள்ளர்* *விந்தைமுதியோன்", "சீதனக் காதை” “பாணர் புர வலன்” ஆகிய நான்கு கதைப்பாடல்களும் பலவழிகளில் சிறப்புடையன. இந்நூலாசிரியர் இயற்றிய நானுடகம், இருநாடகம் முதலிய நாடகங்களையும், காதலியாற்றுப், படை என்னும் நூதன இலக்கியத்தையும், ஈழத்து வாழ் வும் வளமும் என்னும் கட்டுரை நூலையும் படித்திருப்பவர் கள் அவற்றை இயற்றிய ஆசிரியரை இக்கதைப் பாடல் க்ளிலும் இனங்கண்டுகொள்வர் என்பது உறுதி. பொது வாக யாழ்ப்பாணப் பகுதியில் இன்று காணும் காட்சி களையும், சிறப்பாக நூலாசிரியரின் இளமைக்காலத் திலே பருத்தித்துறையிலே கண்டிருக்கக் கூடிய நிலை மையையும் ஆசிரியரது பல படைப்புக்களிலும் பல விதத்திற் காணலாம். “இளங்கவிஞன் தன் கவிதை யிலே ஆழ்ந்து விட்டான்” என்று இந்நூலாசியர் எழு தியுள்ள “பூஞ்சோலை” என்னும் நாவலிலே ஒரு வாக் யம் காணப்படுகின்றது. ஆசிரியர் தனது இளமைக் காலப் பசுமையான நினைவுகளை உயரிய இலக்கியங்க ளோகப் படைத்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

Page 5
Wi.
நாடகம், நாவல், கதை, கட்டுரை, கவிதை சமூக வியல்ஆராய்ச்சி, மொழியாராய்ச்சி ஆகிய பலதரப்பட்ட துறைகளில் நுழைந்து அறிவுப் பணிசெய்துவரும். ஆசிரியர் எழுதும் பெரும்பாலான படைப்புகளிலே, பிறந்து வளர்ந்த மண்ணின் வாசனை கமழுகின்றது என்பது அவர் நூல்களைப் கற்றேர் யாவருக்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். தமது நாடகங்களிலே பருத். தித்துறைப் பகுதியிற் சில ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய பேச்சுத் தமிழை அவர் பயன்படுத்தியுள்ள" தையும் நாம் இதற்குச் சான்ருகக் கொள்ளலாம்.
“தீவெட்டிக் கள்ளர்’ என்னும் பாடலிலே “உடை யார், விதானை, மணியம் முதலா அரச வேலை பார்ப் போர்’ செல்வாக்குடன் விளங்கிய காலத்திலே இருந்த கள்ளர் கூட்டம் ஒன்றன் கதையைக் கூறுகிறர் ஆசி’ ரியர். “வல்லைவெளி’ என்பது வடமராட்சிப் பகுதியில் மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடா நாடெங்கும் பிரசித்தி பெற்ற இடமாகும். அதனை மறக்கமுடியாச் சித்திர மாகத் தீட்டுகின்றர் ஆசிரியர். பாடல் முழுவதற்குமூ, டாக மெல்லிய நகைச் சுவை இழையோடுவதையுங்" காணலாம். இதுவும் ஆசிரியரது இலக்கியப் பண்புக. ளில் முக்கியமான தொன்ருகும்.
*விந்தைமுதியோன்' என்னும் பாடல் எகிப்து தேசத்திலே பண்டு நிகழ்ந்த கதை யொன்றனைப் பொருளாகக் கொண்டது; உணர்ச்சி வளம் மிக்கது.
“சீதனக் காதை’ ஓர் அங்கத நூல் என்றே கூறி விடலாம். கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை எழுதிய *மருமக்கள் வழி மான்மியம்’ என்னும் நூலுக்கு இணை யானது எனக் கூறுவதில் தவறிருக்காது. சமுதாயக் கொடுமைகளுள் ஒன்ருன சீதனத்தைப் பற்றிச் செம் பொருள் அங்கதமாகக் கூறும் இக்கதைப் பாடலிலே பாத்திரிவார்ப்புச் சிறப்புற அமைந்துள்ளது. ஆசிரிய ரது நகைச் சுவை பொங்கிப் பொழிகின்றது இந்நூலில்.

vii
*விரைந்தே சென்று வீட்டினை அடைந்து
கால்முகங் கழுவிக் கடவுளைத் தொழுதுபின் இராத்திரி உணவு இயல்புடன் உண்டிடக் .கடுகுவர் சைவாள் காப்பிக் கடைக்கே கூப்பன் காலம் குளிர்மையாச் சாப்பிட முடியா தாகையால் முனைந்தே ஆங்கண் அலுமாரி தன்னில் கொலுவா யிருக்கும் கோதுமை மாவிற் குழைத்துமே அவித்த புட்டுட னிட்டலி புகழிடி யப்பம் சுட்டுமே லடுக்கிய தோசை வகையும் :வடையுடன் முறுக்கு வளமார் கேசரி
மைசூர்ப் பாகும் மணமுறு ஒமப்பொடி கடித்தாற் பல்லுத் தெறிக்கும் பகோடா கப்பலுங் கதலியுங் கவின்பெறு மானை பன்றி இதரை பகரரு சுகந்தல்
ஆகிய பலவகை அருமைசேர் வாழைப் பழங்கள் முதலாம் பார்த்திடுங் கணமே - Jéfuil&sOT GluuogŮLHuh.................. 99
என்று சொல்லோவியந் தீட்டியுள்ளார். “பாணர் புரவலன்” என்னும் பாடல் மட்டக்களப்புப் பகுதி யில் வாழ்ந்த பெருந்தகையாளர் ஒருவரைப் பற்றியது. மட்டக்களப்பு மாநில வாழ்க்கையைத் தழுவுவதாக அமைந்துள்ளது.
ஈழத்து மக்கள் வாழ்க்கையை அனுதாபத்துடனும் மனிதாபிமானத்துடனும் தீட்டியுள்ள குழுஉஇறைய ஞரின் சில கதைப்பாடல்களை நூல்வடிவிலே தொகுத்து வெளியிடுவதிற் பெருமகிழ்ச்சியடைகின்ருேம். இச் "செய்யுட் தொகுதியைத் தொடர்ந்து மேலும் பல தொகுதிகளை வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.
தொகுத்தோன்.

Page 6
முனனுரை
இளமை தொடக்கம் என் எண்ணங்களைப் பாட்டு மூலம் சொல்ல எனக்கு ஆசை. ஒரளவிற்குத் தமிழ றிவு வந்த காலத்திலே என் ஆசிரியப் பெருந்தகை ஆரி யதிராவிட மகாபண்டிதர் புலோலி, ம. முத்துக்குமாரசாமிக்குருக்கள் அவர்கள் யாப்பருங்கலக் காரிகையைச் சொல் லித்தந்தார்கள். அதனைப் படிக்குந்தோறும் என்னைப் பாட்டுக்கள் பாடும்படி ஊக்குவித்தார்கள். அக்காலந். தொடக்கம் எனக்குப் பாட்டிலே ஒரு தனி விருப்பு. இந்நாட்களில் மாணவர்களுக்குக் கட்டுரை எழுதக். கற்பிப்பது போலவும், மேடைப் பேச்சுப் பேசப் பயிற் றுவது போலவும் அந்நாட்களிலே பாட்டியற்றப் பழக் குதல் மரபு. அதன் விளைவாக மனதிலே உயர்ந்த அரிய உணர்வு என்று எதனைக் கருதினரோ அதனைப் பாட்டிலே கூறுவதிலேயே ஆத்மதிருப்தி கண்டனர். அக்காலக் கல்வி முறையின் பயணுகப் பாட்டுப் பாடு தல் ஒரு பொழுது போக்காக அமைந்தது எனக்கும்.
இக்காலத்திலே நாவல் சிறுகதை முதலியவற்றின் மூலம் சமுதாய ஊழல்களையும் ஒழுக்க நெறியையும் எழுத்தாளர் உலகத்தார்க்குத் துலக்கிக் காட்டுவது போல, நானும் சமுதாயத்திற்காணும் உயரிய பண்பு களை மட்டுமன்றித் தாழ்ந்த நிலைகளையும், இன்பதுன் பங்களையும் பாட்டிலே தீட்டிக் காட்டுவதில் உளநிறைவு கண்டேன். பாட்டின் மூலம் சிரிக்கலாம் ; பாட்டின் மூலம் அழலாம். சிரிப்பதிலும் பார்க்க அழுதலே கூடிய சுவையைக் கொடுக்கும். என் வாழ்வில் நகையும் அழு கையும் அதிகமாய் எழுந்த காலங்களிற் தீட்டிவைத்த வையே இப்பாடல்கள். இவை எனக்கு இன்பத்தை ஊட்டின ; இன்றும் ஊட்டுகின்றன. ஏனையோர்க்கும். இன்பத்தை ஊட்டுமோ அறியேன். படித்தறிவோர் காண்க !

ix
இந்நூலைப் படிபெயர்த்தெழுதியும் அச்சேறுங்கால் ஆயோலை தூக்கியும் உதவிபுரிந்த நண்பர்க்கு என் உள்மார்ந்த நன்றி. இந்நூலைத் தொகுத்தோன் அம்ப லத்தான். மிகக் குறுகிய காலத்தில் நூலைக் கவின் பெற அச்சிட்டுத் தந்தோர் கலைவாணி அச்சகத்தோர். அவர்க்கும் என் நன்றி உரித்தாகுக.
யாழ்ப்பாணத்துப்
பருத்தித்துறை 9- mையர்ை.
13-4-1962 (Ֆ(Լք இறையணு

Page 7
பொருளடக்கம்
தொகுப் புரை
முன்னுரை
உரிமை தமிழ்த்தாய் வணக்கம் சீதனக் காதை விந்தை முதியோன் பாணர் புரவலன்
தீவெட்டிக் கள்ளர்
iii : : :
viii .
Χί
54
8)
88

உரிமை
நண்பர்நா கப்பர் நலஞ்செறி நட்புக்கு நண்ணும் உரிழைக் குறி.

Page 8
தூவுதும
தமிழ்த்தாய்
(வண்ணக ஒத்தாழி
தரவ
மன்புலவர் தொழுதேத்த ம தொன்மைநெறி பிறழாது செ மன்பதைகள் நவிலுதற்கு வ இன்னுலகிற் பலமொழிகள் பன்னவுமே மறைந்து செ6 துன்னிநின்று துலங்கிடுமெம்
தாழில் பண்டைநாள் முடிதரித்துப் மண்டலந் தலைவணங்க மருவ கொண்டமுத் தமிழ்மன்னர் கெ கெண்டையங் கண்ணுய்நீ
சங்கத்து மருவிநின்ற தகைச
துங்கமிகு மிறைவன்ருள் தெ
டிங்கமுடை யின்பாக்கள் பொ
ங்குபுகழ்ப் புலவோரும்
நன்றுநின்று தளங்கிசைநின் மன்றுபொலி நடனங்கள் வள அன்றிநின்று தெவிட்டாத து என்றுமென்றுஞ் சிறப்பணவி
2

மலரே
வணக்கம்
சைக் கலிப்பா)
m
ருவினிய வனப்புடனே Fாலற்கரிய நடைசெறிந்து ளமைமிகு செம்மையுடன் இருந்தவிடம் தெரியாது லப் பகரரிய சீர்மலிந்து துகளில்லாத் தமிழன்னுய்;
பலவேந்த ரடன் முருக்கி
பரிய புகழ்படைத்துக் ாற்றமொடு வழியொழுகக் கெழுமலுற்றுத் திகழ்ந் (தனையே
ான்ற பெரியரன்றித் ாழுதுயர்ந்த அடியவரும்
லிவுடனே பாடிநின்ற போற்றநின்று பொலிந்த oor (uu; வண்செவிக்கு ளமுதூட்ட
முடனே யிருவிழிக்குத்
தைந்தசீர் இன்புகொட்ட பி எழிலுடனே விளங் (கினையே;

Page 9
2 துாவுதும் மலரே
அராகம்
ஒதரு மெழிலுறு முயர்கவி யணிநிறை
திருவுடை வியனழகினை
மேதகு புலவரென மிகுபொது வறிவரொ
எளிததி லறிபொருளினை
தீதறு மிறைநெறி கருதியெ விழைபவர்
புகலுறு பலகுறியினை
சீர்தகு முலகினி லுயருறு பொருளெலா
நிறைவொடு மிளிர்திருவினை;
அம்போதரங்கம்
(நாற்சீரீரடி) அரும்பவிழ் முறுவலாய் பெருந்திறல் நினைந்துநின்னைப் பொருந்தியே வழுத்தியாம் புகலிசைநீ கேட்டிடுதி திங்கள்போ லின்முகத்தாய் திருவுடைநின் பேரிளமை தங்கியே வழுத்திடுமெம் தண்மொழிநீ கேட்டிடுதி:
(நாற்சீரோரடி)
தலைப்பண்பு திகழ்ந்திடுமால் நின்றனது செவ்வியினல்; பிறமொழிக ளொழிந்திடுமால் நின்மக்கள் திண்மைய (தால்; வளங்கள்பல வோங்கிடுமால் வாழ்தமிழ மாந்தருள்ளே; நலங்கள் நனி செறிந்திடுமால் நாடுதமிழ் நாட்டினுள்ளே;

தமிழ்த்தாய்வணக்கம்
(முச்சீரோரடி)
திசைமொழி சேர்ந்தன நாட்டில் திருவினைக் கவர்ந்தன வலிதாய்; அசைந்தது நின்னிலை சிறிதே; அருமை குலைந்தது சின்னுள்; புலவர் கண்டனர் விரைந்து புரவல ரேங்கினர் குழைந்தே; அடித்தது நின் புயல் சுழன்றே; ஆர்ப்பரித் தெழுந்தனர் நின்மகார்;
(இருசீரோரடி)
கவிபல பொழிந்தனவொருபால் காவிய நிறைந்தனவொருபால்; உரைகள் செறிந்தனவொருபால்; உரைநடை மலிந்தனவொருபால்; *சொற்பொழி வெழுந்தனவொருபால்;
சொற்போட்டி நிகழ்ந்தனவொருபால்; கழகங்கள் கூடினவொருபால் கலைமன்று சேர்ந்தனவொருபால்; தமிழ்ப்பண் ணிசைத்ததொருபால் தமிழ்நட நடித்ததொருபால் நவீன நவின்றனவொருபால்; நன்மறை பகன்றனவொருபால்; அறநெறி அறைந்ததொருபால் அருண்மொழி விளம்பியதொருபால் பழமை நாட்டியதொருபால்; புதுமை ஓங்கியதொருபால்.

Page 10
4 துாவுதும் மலரே
(தனிச்சொல்) எனவாங்கு
சுரிதகம் மன்னுமுன் புதல்வர் வளம்பல பெருக்கித் துன்னிடுந் தளர்வைத் தொடர்ந்தோட் டினரால் பண்டைப் பெருந்நிலை மண்டியே திகழ்ந்து
கொண்டுபல் கலைசெறி கோதில் சீர் விளக்காய் விளங்கிடும் பெருமையை விழைந்து
துளங்கலில் லடிக்குத் தூவுதும் மலரே.

சீதனக்காதை
உலகத் தீரே உலகத் தீரே நலமிகப் படைத்து நல்வள மிளிரும் புவிதனிற் செல்வம் போற்றிப் பெருக்கி நலிவிலா வாழ்வு பொலிவுடன் வாழும் உலகத் தீரே உலகத் தீரே அன்னை மீரே அன்னை மீரே தந்தை யீரே தந்தை யீரே பெண்மக வீன்று பெருங்களி யுடனே நண்ணிடு மெந்தம் நலமொளிர் வீட்டின் நன்கலம் பெற்ருேம் நங்குலம் விளங்க மாசறு பொன்ஞம் மகளைப் பெற்றனம் என்று மகிழ்ந்தே ஏமுற் றிருக்கும் தந்தை யீரே தந்தை யீரே பல்சான் றீரே பல்சான் றீரே கற்பென் கண்மணி காத்துப் புரக்கும் நற்புவி மாதர் நலமிகப் போற்றும் பல்சான் றீரே பல்சான் நீரே ஏழையான் இயம்பும் இன்னலைச் சிறிது கேட்குதிர் விழைந்து கூறுவன் அதனை இப்புவி மீதே எழிலுறு செல்வக் குடிதனிற் பிறக்கக் கொடுக்கும் முற்பவ நல்வினை யிலாதேன் பல்லிட குழக்கும் வறுமையிற் பிறந்து சிறுமை யுற்றேன் ஏழையேன் பட்ட இருமிடி தன்னைக் கூறுவன் கேட்பீர் கூறுவன் கேட்பீர் நல்வளம் செறிந்து மன்பொருள் படைத்து

Page 11
6 தூவுதும் மலரே
வாழ்பெருங் குடியில் வந்து பிறவாது பட்ட பெருந்துயர் பகரக் கேண்மின் என்னரு மகட்கே எழில்பெறு மணவினை ஆற்றச் சீதனம் போற்றிக் கொடுக்க இயலாத் தன்மையால் அன்னவ டனக்கு நிகழ்ந்த இன்னலும் நிலையிலாத் தமியேன்” கொண்ட அவலமும் கூறக் கேண்மோ.
2 ஈழமண் டலத்தே ஏர்வளம் பொலியும் யாழ்ப்பா ணத்தினில் இயல்பொடு விளங்குமீ பட்டின மொன்றிற் பான்மைசேர் குடியில் வந்து பிறக்கும் வல்வினைப் பட்டேன் என்குடி முன்னுேர் எழிலொடு வாழ்க்கை பின்னமில் லாது போக்கின ராயினும் யானிவ் வுலகினில் உயிர்த்திடும் பொழுதில் முன்செய் வினையோ பன்ன வறியேன் எம்குடி தாழ்வுற் றேழ்மைஎய் தியது தீவினைக் கஞ்சித் தேருநல் லறிவு படைத்து வாழ்ந்த பண்புடை மாந்தர் ஆகையி னுலகினில் ஆன்ற தீ வழியால் தம்முடைக் கீழ்மை செம்மைசெய் துயர்த்தச் சிறிதும் நோக்காச் செயிர்தீர் குணத்தோர் வாய்மையே பூணுய் வளமொடு புனைந்தோர் அதனல், மேவிடுஞ் செல்வர் ஏவிடும் பணியைப் பின்னமில் லாது பேணிநன் காற்றி மானங் காத்து மருவுதம் வாழ்நாள்

சீதனக்காதை
கோதிலா வழியாற் கொண்டு கழிக்கும் தொழில் செய் மாந்தராய்த் துய்த்துவாழ்ந் தனரே.
3
இருகண் மணிபோல் எங்கள் பெற் ருேர்க்குப் பெண்க ளிருவேம் பிறந்தனம் மகிழ யானே யவருள் இளையாள் ; மூத்தாள் தன்பெயர் முத்துப் பிள்ளை யாகும் என்பெயர் அன்னப் பாக்கிய மென்பர் உரிய பருவம் வந்துநன் கெய்தலும் என்ற னக்கை ஏரம்பு என்னும் வளமுடை யாற்கு வாழ்க்கைப் பட்டனள் மணவினை யாற்றி மன்னுபல் லாண்டு மக்கள் பெருது வருந்தித் தவித்தனள் வதிந்தெமி மூரில் வளமுற விளங்கும் தெய்வங் களுக்குத் தேர்பலி யிட்டனள் முருகன் விழைந்து மொய்ப்புட னமரும் செல்வச் சந்நிதி சேர்ந்துபாற் செம்பு நேரீ ராண்டு நேர்ந்தே யெடுத்தனள் அத்தகை நையும் மெத்தவத் தோட்கு முருகன் விரும்பி மொய்ம்புட னுேக்கி இருபெண் குழந்தைகள் ஈந்தன னருளால் அவருள் திருவனை மூத்தோள் தனக்குத் தெய்வ யானை யெனும்பெய ரியை பொடு கொடுத்தனர் இளையாள் தன்னை வள்ளி நாயகி என்னும் பெயரிட் டினிதழைத் தனரே.

Page 12
$ தூவுதும் மலரே
4 இவ்வண்ண மக்கை இல்லறம் நடாத்தலும் என்னையென் மாமிதன் எழிலுறு மகளும் அத்தான் றனக்கே யருமண முடித்தனர் மன்னு சில்லாண்டு துன்னியே கழிதலும் பன்னிடு மனையறம் பண்பொடு விளங்கப் புதல்வ ரிருவரைப் பெற்றெடுத் தனமால் எனினும் , என்னருங் கணவர் தன்னுள மிகவும் பெண்மக வொன்றைப் பெற்றே வளர்க்க ஆசைமேற் பட்டே ஊசலா டியதால் என்றனக் கவ்வணம் பெண்மகப் பேறு இல்லா ததினுல் அருகினி லிருக்கும் அக்கை வீட்டுப் பக்கம் சென்று வனப்புட னுேடி வயங்கித் திரியும் வள்ளி நாயகியும் மகவினைக் களியொடு மார்போ டனைத்து மாண்புற வெடுத்தே அன்பு பாராட்டி இன்பமாய்த் திரிவர் அக்கா ரணத்தால் அப்பெண் மகவாம் வள்ளி நாயகியும் மருவியெம் வீட்டில் என்னிரு புதல்வர் தம்முட னென்றம் வளர்ந்து வந்தனள் வளர்பிறை போலே
5
சிறிது காலம் சென்றதன் பின்னே அக்கை கணவன் அத்தான் றனக்கு முன்போற் ருெழில்கள் மொய்ம்புட ஞற்ற யாதோ நோயா னியல்வலிக் குறைவால்

சீதனக்காதை
முடியாது போயது மிடிமிக வந்ததால் அதனுல், சிறுதொழி லாற்றிச் சிறுக வருபணம் குடும்பங் காக்கக் கூடுபல் செலவைத் தாங்க முடியாது தத்தளித் தணர்காண் அத்தகு வேளை தக்கவென் கணவர் வள்ளி நாயகியை வீட்டி லெம்முடன் வைத்தே தமது மகவென விழைந்து வளர்த்து வந்தனர் மன்னுபே ரன்புடன் அந்நாள் தொடக்கம் அண்டியே யவட்கு வேண்டுஞ் செலவுகள் விருப்பொடு செய்தனர் இன்னணம் வள்ளி நாயகி யெம்மனை வதிந்தா ளெம்மொடு வளரும் தக்கவெம் மகளாய்ச் சலிப்பின்றி மகிழிந்தே,
6
எந்தம் புதல்வ ரிருவரும் செந்தமிழ்ப் பள்ளி சென்று படிக்க லாயினர் மருவி ஐந்தாம் வகுப்பு முடிந்தபின் நுண்ணிய வறிவு கொண்டுளேர ராயினும் உடல்வலி மிகமிக உடையோ ராயினும் ஓங்கிடு மாங்கில மோதுகல் லூரி அடைந்து படித்திட ஆன்ற மிகுபணம் எம்மிட மிலாத ஏழைமை யறிந்தென் கணவர் நலிந்து கலுழிந்து துயரொடு ஆங்கிலப் படிப்பு மடையுநற் பதவியும் பணமுடை மாந்தர்தம் பண்புடைப் புதல்வர் தமக்கே ஈங்கு சால்புடைத் தாகும்

Page 13
தூவுதும் மலரே
அரசர்க் குரித்தே அருங்கல மென்ப்ர் அன்னது போலப் பின்னமில் லாங்கிலக் கல்வி செல்வர்தம் காளையர்க் காகும் அன்றே கையடித் தன்றே யருந்தும் எம்போற் ருெழில்செய் எளியோர்க் காகுமோ வெறுங்கை முழத்தை யாங்ாங்ன மளந்திடும் என்று பலவா றெண்ணி வெய்துற்றே என்னரும் புதல்வ ரிருவர் தம்மையும் கொழும்பு மாநகரிற் குலவுமோர் கடைக்குக் கணக்குக ளெழுதவும் கடைத்தொழில் செய்யவும் சிறுசம் பளமாய்ச் சேர்பொருள் குறித்துப் பலதுள்ளி யெனினும் பகரரு வெள்ளமாய் ஒன்று சேர்ந்துநன் கொழுகுதல் போல எங்க ளருமிடி அகற்றுமா லென்று பங்க மின்றியங் கனுப்பினர் பகர்ந்தே.
7
இவ்வணம் புதல்வர்தம் செய்திக ளாதலும் வள்ளி நாயகிதான் வண்மையாய்த் தமிழைப் பள்ளி சென்று பண்பொடு படித்தனள், செல்வர்தம் புதல்வியர் செறிந்து வண்டியில் ஆங்கிலப் பள்ளி அடைந்து கற்கும் செய்திகண் ணுற்றுச் சேர்ந்துவீ டொருநாள் எந்தனை நோக்கி அன்பர் மொழிந்தனர் இஞ்சார் கேள் நீ என்மனத் தெழுதரும் எண்ண மொன்றை எடுத்துனக் கியம்புவன் எந்தம் புதல்வர் ஈட்டரும் பொருளைத் தேடுதல் குறித்துத் திகழ்பெருங் கடைகள்

சீதனக்காதை for
அடைந்தனர் பணத்தைத் தடையிலா துழைத்து, முறையா யெமக்கு முன்னியனுப்புவர் அன்றியும் இன்னும் அருவலி யெனக்குக் குறைவிலா துண்டு கோதையே கேண்மதி மன்னு திருக்கணு மலைதனை நோக்கிச் சண்டைத் தளத்துச் சார்ந்து பல்வேலை தேடிச் சென்றதன் செய்தியா லிங்குக் கூலிக் காரர் தேடக் கிடையார்
அதனுல், கூலிப் பிழைப்புக் கொண்டுவாழ் வோர்க்கிங் கூரிற் பிழைப்பும் ஒன்றிடும் அதிகம் கவனமா யிருந்தால் மிகுபணம் சேர்க்கலாம் அத்தகை சேரும் ஆசறு பணத்தொடு வள்ளி நாயகியை வளமுட ஞங்கிலப் பள்ளி தனக்குப் பண்போ டனுப்ப எந்த னுள்ளம் உந்திடு மென்னை மேவியெம் புதல்வர் மேலாய் ஆங்கிலக் கல்வி பயிலக் கனதன மிலாது போய தென்னவென் புந்தி வருந்தும் பொடியள் படிப்பிற் கெடியரென் றவரைத் தேர்ந்து சட்டம்பி சின்னையர் பலமுறை எனக்கெடுத் தியம்பினர் இயலுறு களிப்பொடே என்னயான் செய்குவன் ஏந்திடு பணப்பொரி என்கையிற் சிறிது மிலனது போயது பாங்கா யாங்கிலம் பயிற்றி இருக்கலாம் பள்ளத் தெருவிற் குள்ள முருகர் மைந்தன் சமயம் மாறி வளமுடன் பாதிரி பொறுப்பிற் பகரிடு மாங்கிலப்

Page 14
真2 துாவுதும் மலரே
பள்ளி சென்று படிக்கிரு னென்று பலரு மூரிற் பறைவர் பண்புடன் அத்தகை யாமும் அமர்ந்தே யாற்றிப் புதல்வர் தம்மைப் பெருத்திடு முத்தி யோகங் களிலே யுயர்த்தி யிருக்கலாம் எனினும் பிச்சை எடுத்துழன் றலும் முன்னுேர் வழியை விடுத்திட லாகா தென்றியா னெண்ணியே எல்லாம் விடுத்தனன்; ஆணுல் சிறுவர் அனுப்பும் சிறுபணத் தோடும் கூலியால் யானும் கோதிலா துழைக்கும் பணத்தையுஞ் சேர்த்துப்பான்மையாய் முயன்ரூல் வள்ளி நாயகியை வளர்ந்திடு மாங்கிலக் கலைபயிற் றிடுவம் கருதியே நாமும் அன்றியும், குழந்தை தனக்குக் கோதில் திருமணம் நல்ல இடத்து நாடி முடிக்க இந்த நாளி லேர்தரு மாங்கிலக் கல்வி வேண்டும் கருதியே தையல் பல்வகை தைக்கவும் பழகிடல் வேண்டும் நவிலிடு முடைகள் நாகரி கத்துடன் உடுக்கப் பழகியும் ஒர்ந்துதம் கணவர் தமிமோ டாங்கிலந் தடுதடுக் காது பண்பொடு பேசவும் பழகிடல் வேண்டும்
அதனுடன், அக்கை பாருத்தை அருமைத் தனையன்

சீதனக்காதை I応
தகவுறென் மருகன் சந்திர சேகரன் ஆங்கிலப் பள்ளியில் ஆரும் வகுப்புப் படித்து முடித்துப் பாசும் பண்ணி விட்டன னென்று விளம்பின ரத்தான் ஈராண் டோர்வகை இழுத்துப் படித்தால் எட்டாம் வகுப்புத் தட்டிலா முடித்துப் பாசு பண்ணினுல் பகரிடும் கவுண்மேந் அதுத்தி யோகம் ஒன்றனை எடுப்பன் கோழிமேச் சாலும் கோறண மேந்துக்கு மேச்சுத் திரிதல் மேன்மையோ வன்ருே ஆகையின், வள்ளி நாயகியை வளமுட ஞங்கிலப் பள்ளிக் கனுப்பிப் படிப்பிப் போமெனின் சந்திர சேகரன் தனக்குக் கட்டிக் கொடுத்துப் பிள்ளையைக் கோதிலா நிலையில் வைத்து நாமும் மகிழக் காணலாம் அன்னவன் றனக்கு பின்னமில் லாவகை மணவினை யாற்ற மாண்புறு பெண்பிளை இனத்தா ருக்குள் யாவரு மீங்கிலை அன்றியும் அவனும் அடிக்கடி வீடு வந்து வந்து வனப்பொடு வள்ளி நாயகி தன்னுடன் நனிபே ரன் பொடு கூடிப் பழகுதல் நாடிநீ காண்குதி ஆகையா லவளை ஆங்கிலப் பள்ளி அனுப்பிப் படிக்க அன்பொடு வைப்பநாம் காசுதன் கயிட்டம் கருத்தில் வைக்கொணு பிள்ளைதன் வாழ்வதைப் பெரிது நாம் போற்றியே வேண்டிய செய்குதல் யாண்டுமெங் கடனும் என்று மொழிந்தனர் என்றன் கணவரே.

Page 15
14 தூவுதும் மலரே
8
இவ்வணங் கணவர் இயம்பலும் யானும் நன்றுளத் தோர்ந்து நவின்றன னவர்க்குத் தமிழ்தனை விடுத்துத் தகவொடெமி மங்கையர் மேவியிங் கிலிசு விரும்பிப் படித்தல் விளம்பிடி னெனக்கு விந்தையாய்த் தோன்றும் ஆடவ ரிங்கிலி சமர்புறக் கற்குதல் கருதிநல் லுத்தியோ கத்துக் கல்லவோ பண்டுபோற் பணிகள் பாங்கா யாற்றிடின் போதிய வூதியம் போந்திடா தென்றும் சார்ந்து மிகுபணம் சடுதியிற் சேரா தென்றும் பணமிசை இரும்பே ராசைப் பட்டுநை மாந்தர் தொட்டவிப் புது வழி பண்பொடு வாழும் பாவையர்க் காகுமோ நாட்டிலே வாழும் மாந்தர் மேலாக மதிக்கத் தம்மை மண்ணுள் நொதுமலர் சட்டை தொப்பியைத் தொட்டுமே லணிந்து விளங்கா வகைமொழி விழைந்து பறைந்து மக்களை யுறுக்கும் மாசுறு வழிதனைத் தேடி யா டவர் தேரு மாங்கிலம் தண்ணளியுருவாய்ச் சார்ந்தவெம் அரிவையர் தகவொடு படிக்கச் சாலுமோ சொல்லுதிர் வேலைத் தளத்து வேண்டிடு முடையும் பூண்டதம் பணிக்கு வேண்டிடு மாங்கில மொழியையும் பேசி மேவிநாள் முழுதும் கடமை யாற்றிக் களைத்து வீடு வந்திடு மாடவர் வான்களை நீங்கிடச் சாதிக்கியல்பாம் தமிழைப் பேசியெம்

சீதனக்காதை 5
பண்டைப் பெரியோர் பான்மையின் வாழுதல் வெளியே முடியா தெனினு நம் வீடு மட்டி லாயினும் மருவியாம் ஆற்றுதல் இயற்கை யல்லவோ இயம்புதிர் எனக்கு ; மக்கடம் மில்லம் மாண்புற அவர்க்கு . மேவுநல் லரணென விளம்புவர் பெரியர்
பண்டு நம் முன்னுேர் படைத்த நல்வாழ்க்கை வெளியில் முடியா தாயினும் வீட்டிற் கழித்தின் புறலெம் கடனுே வில்லையோ மங்கையர் தமக்கும் தங்கிடு மாங்கிலம் நாடிப் பயிற்றியும் தேடியே யவர்க்கும் ஆங்கில வாழ்க்கை அமைத்தும் வைப்பமேல் ஆடவர் பெண்டிர் ஆகிய இருவரும் ஆங்கிலம் பேசி ஆங்கில வாழ்க்கை நடத்தினெம் முன்னுேர் நலமோ டாற்றிய வாழ்க்கை யெங்கே வான்றமிழ்க் கலைகள் வளர்த லெங்கே வனப்புறச் சிறுவர் வண்மைத் தமிழ்வழி வளர்த லெங்கே 3 அன்றியு மொன்று நான் அன்பொடு கூறுவன் அடுத்த வீட்டிலெம் அம்மாச்சி சொன்னுள் . கொழும்பி லேழாண்டு குலவியே வாழ்ந்தவள் அவ்வூர் வதியும் எவ்வமில் சிறுவர் தமிழ்மொழி யறியார் தக்கநல் லாங்கிலம் ஓயாது பேசுவர் ஒர்ந்துநல் லாங்கில உடைக ளனிந்துகொண் டுயராங் கிலராய் வனப்பொடு திரிவர் வளம்பெறு கல்வியும் படிப்ப தாங்கிலப் பள்ளியி லாகும் வராது தமிழவர் வாயினிற் சிறிதும் என்றெடுத் தவளும் எனக்குக் கூறலும்

Page 16
6 துாவுதும் மலரே
உடனே யானும் உளந்தனி லோர்ந்தே ஆங்கில ராக அமைவுறு மோர்வழி போலுமீ தென்று புந்தியி லெண்ணித் துன்றிடு சிறுவர் தன்னிற மென் ன தமிழர் நிறமோ தகைபெறு மாங்கிலர் வெள்ளை நிறமோ விளம்புதி யெனக்கென அவர்க்கு மெமக்கும் வேற்றுமை யீங்கிலை கரிய நிறமே காரிகாய் காண்மதி இன்னணம் அவளும் பன்னலு மெண்ணுவள்” இவ்வகை யாங்கில வாழ்வு வாழ்ந்தும் ஆங்கிலம் பேசியும் அவர்தம் நிறமோ மன்னு வெண்மையாய் மாறிட விலையென விந்தையா யிருந்தது விளம்புவல் தகவோய் கையா லெந்தம் அருமக டனக்கோ . ஆங்கிலம் வேண்டாம் ஆன்ற தமிழ்மொழி வீட்டிலே வைத்து விழைந்து பயிற்றுவம் பிள்ளை யுத்தி யோகம் பார்க்கப் போகின் றனளோ போந்தோர் மகனைக் கட்டிக் கொண்டு கருதிநல் இல்லறம் நடாத்தப் போகும் நங்கை தானே இல்லற நடாத்தவு மெழிலொடு குழந்தை ஈன்று வளர்க்கவுந் தாங்குறு மாங்கிலம் வேண்டுமோ சொன்மதி விளங்க வெனக்கே ஆகையால் ஒரிப் புதுமுறை ஒன்றும் வேண்டாம் முன்பு வாழ்ந்தவெம் முன்னுேர் வழியே சிவசிவா வென்று சும்மா கிடப்போம் என்று பலவா றியம்பினன் யானே.

சீதனக்காதை 1τ
9 அம்மொழி தம்மைச் செம்மையாய்க் கேட்டுக் கணவ ரென்றனைக் கனன்று நோக்கி மூடமே சிறிதும் முற்போக் கில்லா மடமையே கலனுய் மயங்கிக் கிடக்கும் நாட்டுப் புறமே நகர வாசமில் மந்த மதியே யெந்தனைக் கேளாய் நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறி வென்பது பெரும்பே தமைத்தே என்று பெரியோ ரெடுத்து மொழிந்தது பொய்யிலை யென்று பேதாய் தெளிந்தேன் பிள்ளை தன்னைப் பேருயர் நிலையில் வைப்பதற் காகச் செப்பிய மொழிதனைச் சிறிது முணர்ந்திலை செய்குவன் யாதனை இந்நாள் முறையில் இயம்பாய் பிள்ளையை வளர்த்தே எடுக்க முடியுமோ வுன்னுல் கல்வி தன்னைக் கருதாது விடினும் இந்த நாளுக் கேற்ற வாறு பழக்கி எடுக்கப் பகராய் முடியுமோ வீட்டை விட்டு வெளியே செல்லா உன்றனக் கிந்நாள் உலக மிருப்பது தெரியுமோ நவிலு தேர்மதி யில்லோய் தொடுத்திந் நாளில் உடுப்பது போலச் சேலைதா னுடுக்கச் செப்பமாய் முடியுமோ பணுட்டுத் தட்டுப் போன்ற பட்டணஞ் சேலைக் காலம் தூரப் போயது விதம்விதப் பட்டு விதம்விதப் பொட்டுடன் உடுக்குங் காலம் ஒர்ந்திடாய் இன்று நகையிந் நாள்முறை தகவொடு போட @dror றனக்கு நேரிழாய் தெரியா

Page 17
18. தூவுதும் மலரே
பட்டணங் காப்புத் தட்டி யணியும் காலம் போயது கனத்தபேர் நகைகள் நாகரி கத்தொடு நன்கெடுத் தணியும் காலமிப் போது சால நடக்கும் ஒற்றைக் கையி லிரட்டைக் காப்பை அணிந்து மற்றதில் அழகுசேர் இறிசிலெற்றுக் கட்டுங் காலம் கழுத்தினி லெனிலோ உனைப்போற் பாரம் தனையேற் றலிலை சின்னச் சங்கிலி சொன்னது கேட்கும் அதாஅன்று w மஞ்சள் குளித்துத் துஞ்சி வாணுள் கழித்த லில்லைக் கழுவிநற் சோப்பால் பவுடர் பலவகை பண்பொடு போட்டுப் பின்னுமே தனையோ மன்னிய விதழ்க்கும் சொக்குத் தமக்கும் தோமறப் பூசுவர் நண்ணயிமீ முறைகள் நாகரி கத்தொடு பண்ண வுனக்குப் பான்மைகள் விளங்கா ஆகையின் , பண்டைக் காலம் போஒல் இல்லை இன்றைய இளைஞர் இவ்வகை பழகிய இளமங் கையரை நலிவொடு தேடி மணக்க வேண்டி மறுகுவ ருள்ளம் அதனுல் வள்ளிநா யகியைச் சொல்லிய வண்ணம் ஆங்கிலப் பள்ளி அனுப்புவன் திண்ணம் என்ற னெண்ணம் ஏதும் தடுத்திடின் கவனம் சண்டை கனன்று செய்குவன் சார்ந்தவென் மருகன் சந்திர சேகரன் பிள்ளை தனக்குப் பின்னே ரங்களில்

சீதனக்காதை 1s
ஏபீ சீடி இனிவந் தீங்கே
சொல்லிக் கொடுப்பன் கோதாய் கேண்மோ என்று மொழிந்தா ரென்ற ஞயகரே.
10
எந்தன் கணவர்தம் இன்னரு மருகன் சந்திர சேகரன் சால்பொடு படித்தே எட்டாம் வகுப்புத் தட்டின்றி முடித்தனன் பின்னு மீராண்டு பேணியே பயின்று கெட்டித் தனமாய்க் கெழுமியே நாளும் மூச்சாய் முயன்று முழுவதும் படித்துச் சிறந்த பாசுடன் சீனியர் வகுப்பை முயற்சி திருவினை முன்னியே ஆக்கும் என்று முதியோ ரியம்புதற் கிணங்க ஈற்றில் முடித்தனன் இயல்புறு தகவாய் அந்தச் செய்தி அடைதலும் ஆங்கே ஊரார் போற்றினர் உறவினர் உசாவினர் அவன்றனைப் பள்ளியில் அன்பொடு பயிற்றிய உவாத்தி மாரும் உள்ளங் குளிர்ந்தனர் பெற்றேர் மகிழ்ந்தனர் பெருமிதங் கொண்டனர் உற்றதன் மருகனை உலகினர் போற்றக் கேட்டஎன் கணவரும் கிளர்ந்துளம் பொலிந்தே ஒகைக் களியுடன் ஒர்ந்துகொண் டாடினர் இந்தச் செய்தி எய்திய நாள்முதல் எங்கள் வீட்டில் இடைவிடா மகிழ்ச்சி மச்சாள் பாருத்தை மகிழ்வுடன் தனையனை எங்கள் இல்லமி இட்டே வந்து பெருமிதக் களியொடு பெருகிடு மன்புடன் ஆசை மொழிகள் அன்பொடு பேசி

Page 18
20 தூவுதும் மலரே
விருந்து கொண்டாடி வதிந்தனள் விழைந்தே வள்ளிநா யகியும் மல்குதன் தனையனும் வளமுடன் ஆங்கண் மகிழ்வுடன் பேசிக் களிப்புடன் கலந்தே யிருப்பதைக் கண்டனள் இரும்பேர் உவகையால் எழுச்சி மிகவே ஒதுவள் நமக்கிங் கோதுபேர் விருப்பொடு வளமுடன் தம்பியும் வள்ளிநா யகியும் ஓங்கு கல்யாணம் உயர்வுற முடிக்கும் அந்நாள் தன்னை அண்டியே பார்க்க என்னிரு கண்ணும் இரும்பே ராசை கொண்டே தயங்கும் கோதிலென் னுள்ளம் அந்தநாள் தன்னை அடியனேன் காண அப்பனே கதிரை அமர்ந்துவாழ் தேவே என்னுயிர் தன்னை இயல்புறக் காவாய் அத்திருக் காட்சி கண்டதின் பின்னர் எந்த ஞவி இன்பமாய்ப் போகும் இந்தநல் வரத்தையே இன்று நான் ஐயனே முருகனே உன்னை மொய்ம்புடன் வேண்டுவன் என்றே நவின்று இருகரம் கூப்பி வானை நோக்கி வணங்கினள் நின்றே இந்தப் பேச்சை இங்ங்னங் கேட்டு யாமெல் லோரும் இன்புற் றிருந்தோம் சந்திர சேகரன் சார்ந்தோர் பக்கம் கிடந்தவோர் புத்தகம் தொடர்ந்தே நோக்கிக் கொண்டே யிருந்தனன் குளிர்ந்துளம் மிகவே வள்ளிநா யகியோ மறுகிநா ணெய்திக்
குனிந்த முகத்துடன் கூட்டத் திருந்து குலாவிடு மெந்தமைக் குறிப்பாய் நோக்கி
ஒடியோர் புறத்தில் ஒளித்தனள் விரைந்தே.

சீதனக்காதை 2.
1 முன்னரென் கணவர் முனைந்துதான் இயம்பிய வாறே வள்ளி நாயகி தன்னைப் பெண்கள் ஆங்கிலம் பெருகவே பயிலும் பள்ளி யொன்றிற் பண்புறச் சேர்த்தனர் வீட்டிலே நாளும் விரும்பியே சந்திர சேகர னவட்குச் சீருடன் ஆங்கிலம் சோர்வற நன்கு சொல்லிக் கொடுத்தனன்
அதனுல், வள்ளிநா யகியும் வளமுறப் பள்ளியில் வகுப்பில் முதலாம் பிள்ளையாய் விளங்கினள் சிலவாண்டு போயதும் செப்பமாய் அவளும் ஆங்கிலம் பேசவும் அருமையாய் யதனைத் தப்பிலா தெழுதவும் சால்பொடு பயின்றனள் மருவியிந் நாள் வளர் நங்கையர் போலவள் தமிழைப் படித்தலும் தகவொடு பேசலும் “பாசன்" அன்றெனக் கூசியே விடாது விருப்புடன் அதனை மேவியே மிகவும் பள்ளியிற் பெரிதாய்ப் பலரும் மெச்சப் படித்துக் கொண்டனள் பண்புடன் விரைவாய் அன்றியும், அருமையாய்க் கணக்கோ டல் சிப் பிருவும் சீயோ மெத்திரி திகழும் திரிகளுே மெத்திரி ஆய மேலாம் கணக்கும் பிசிக்குக் கெமித்திரி பெருமைசேர் போத்தனி சியோ கிறயியும் செப்பிடு லொகிக்கும் முதலாம் சயன்சுகள் முறையாய்க் கற்றனள் இலத்தீன் கிறீக்கும் இயல்புறு பிறென்சும் பிரித்தன் தன்ணுெடு பின்னமில் உரோம

Page 19
22 துாவுதும் மலரே
கிரேக்க மடங்கிய கேடில் லுலோக சரித்திர மெல்லாம் சார்ந்தே படித்தனள் இதுவன்றி அவளும் இயல்பொடு பள்ளியில் சுகாதா ரமீ புகல் தோமறு கலையும் உலவிடு மிந்நாள் டொமெத்திச் சயன்சும் படித்துக் கொண்டனள் பள்ளியில் மேலாய் பாவைப் பிள்ளையைப் பதனமாய் எடுத்தே சட்டை பலவகை தைத்துப் போட்டுச் சரிபிழை பார்த்துச் சார்பாய் எடுக்கி பரம்புலேற் றரினுள் பதனமாய் வைத்துச் சிறுகத் தள்ளி மறுகியே வந்து சீராட்டி ஓராட்டிச் சிறப்புச் செய்யும் பிள்ளை வளர்க்கப் பேணிடு முறையாம் தொலைவிலாப் படிப்புகள் சொல்லிக் கொடுத்தனர் அன்றியும், நகர மாந்தர் நவின்றிடு முறையாய் உணவுப் பண்டம் உயர்வுறச் சமைக்கச் சட்டம்பி யம்மா சால்புறப் பயிற்றிடப் பார்த்தே யவற்றைப் பழகிக் கொண்டனள் பலவித சூப்பும் பண்புறு கேக்கும் வண்சுவைக் கிறிலும் வளமுறு புடிங்கும் முள்ளி கற்ருனி மொய்மிபுறு சலாத்தும் வீட்டில் அவளும் விருப்பொடு செய்து தின்ன எமக்கும் முன்னியே தருவள் கணவ ரதனைக் கருதிச் சுவைத்துப் பேணியே மகளிற் பெருமிதங் கொண்டு கரிச்சட்டி பானையிற் காய்ச்சிநீ அளிக்கும் ஆனமுஞ் சோறும் அமைந்திடு கறியும் நிகரிலை இந்தப் புகரறு பொருட்கே

சீதனக்காதை 23
ஆகையின் நீயும் அமர்ந்தே அவளுடன் சேர்ந்திப் பண்டம் செய்திடப் பழகி இனியென் றனக்குத் தந்திடப் பாராய் என்றே எனக்கும் பலமுறை இயம்புவர் இத்துடன், தையற் படிப்பைத் தகவுறு பள்ளியில் மெத்தப் பயிற்றினர் மேவியே யவட்கால் கனவிலுங் கண்டு கேட்டறி யாத விதம்வித வகையாய் மெசினிற் தைக்கப் பழக்கிக் கொடுத்தனர் பல்வகைத் திணிசாய் கண்கவர் கவுன்கள் கருதுநல் சாக்கெற் கமிசு புலெளஸ் கனத்தபேர் புருெக்குப் பாவாடை தாவணி பலபே ருடைகள் தைத்தும் அவற்றில் தகைசால் பூக்கள் போடவும் தெரிந்து கொண்டனள் நன்ருய் நாகரி கத்தோடு நலம்பெற முறையாய் உடுக்கப் பயிற்றியும் விட்டனர் பள்ளியில் மன்னியே ஆங்கர் துன்னிடு மேனைய இளமங் கையர்போல் இனிதா யுலாவ வேண்டுசப் பாத்தும் மேவுகான் பாய்க்கும் அனுப்பிடும் வண்ணம் அண்டியே கொழும்பில் வாழுமெம் மகார்க்கு வரைந்தனர் கணவர் அவரும் அவற்றை அன்புடன் வாங்கி அனுப்பி வைத்தனர் அருமையாய் அவளும் பள்ளியிற் போந்து பயிலுறு மேனைய அருமங் கையரோடு அணிந்தே திரிவள் எனினும்,
வீடுவந்து விருப்பொடு வதியும் பொழுதினில் அவற்றைப் புறத்தே வைத்துக்

Page 20
24 தூவுதும் மலரே
கணவர் அதற்குக் கனன்றே ஏசினும் மறந்து விடுவள் மருவியென் மங்கை இப்படிக் கல்விகள் இத்தகை முறையாய்ப் படிக்கவும் உடுக்கவும் பன்னிடு முறையில் நகர மாந்தர் நாடிடும் வகையாய்ப் மேனட்டு வாழும் மேலோர் போன்றே வாழ்க்கை முறைகள் வதிந்து பழகவும் எந்தன் மகட்கே என்னருங் கணவர் ஆசைப் பட்டு அள்ளிக் கொட்டிய பணத்தின் கணக்குப் பகர்ந்திடப் போமோ மருவிப் பள்ளியில் மாண புறப் படித்தே ஈரெட் டாண்டில் எட்டாம் வகுப்பாம் சூனியர்க் கிளாசைத் தேரமறச் சேர்ந்தனள் அவ்வாண் டிறுதியில் அருமையாய்ப் பயின்று சோதனை யெடுத்துச் சொலற்கரு திறமாய்ப் பாசு பண்ணினள் பாருளோர் புகழ அதன்பின், மேலும் பயிற்றிட மேவிடு மிகுபணம் வேண்டு மெனவே எண்ணிச் சொல்லுவர் எம்மா லியன்றதை இனிது நாம் செய்து முடித்தனம் போதும் மொய்ம்புறு கல்வி ஆனல், மருவியே விளங்கும் மாண்புறு பெண்களுக் கெத்தகைப் படிப்புகள் இருந்திடு போதிலும் மெத்தவின் னழகு மேவிய போதிலும் இந்த நாளில் நந்தம் காளையர் பொருளை வாங்காது பொருந்தியே கட்டார் ஆதனமும் வேண்டாம் பூதனமும் வேண்டாம் சிங்கார நாச்சியார் வந்தாலே போதும்

சீதனக்காதை
என்றுளம் நொந்தே இளமங் கையர்பின் ஒடியே யவரை ஒர்ந்து கட்டிய காலமோ எங்கள் நாளையி லாகும் மேவுமிந் நாள்முறை வேறெனக் காண்மதி ஆகையின், உழைத்திடு பணத்தை ஒன்ருய்க் கூட்டிச் சீதனம் இனிமேல் சேர்த்தலெமி கடனும் என்றே எனக்கெடுத் தியம்பிய பின்னர் வள்ளிநா யகியைப் பள்ளி செல்லாது மறித்தனர் வீட்டில் மாண்பொடென் கணவரே.
12
சீனியர்ச் சோதனை தேறிய பின்னர்ச் சந்திர சேகரன் சார்ந்து மேலுக்குப் படித்தற் கேற்புடைப் பகருயர் கல்லூரி ஆங்கள் வூரில் அமைந்திலா ததஞல் பட்டணஞ் சென்றே படித்திடல் வேண்டும் ஆனல் அதற்கோ அருபணம் மிகவே வேண்டுங் காணுதிர் விரும்பியே கற்றிட ஏழைக் குடும்பத் தேரிளஞ் சிறுவர் நுண்மதி நுழைபுலம் படைத்தோ ராயினும் கையிலெ காசு கனத்தில் லாவிடின் உயர்படிப் பென்றதை உன்னவும் போமோ பணத்தைப் படைத்த பான்மைசேர் மாந்தர் தம்முடைச் சிறுவர் தகைவுறு புத்தி இல்லா மந்த மதியுளோ ராயினும் பணத்தை யஸ்ளிப் பலமாய் இறைத்தே ஏதோ வழியால் இயன்று முனைந்து மதியுளோ ரென்று மண்ணுளோர் மெச்சப்

Page 21
26. அாவுதும் மலரே
பேருயர் பட்டம் பெற்று மேலாம் எம்பி யாயும் எய்துவர் நாளில் பணத்தின் பலந்தான் பகரவும் பெறுமோ ஆகையின், பணம்படைத் தில்லாக் குடியிற் பிறந்த சந்திர சேகரன் தானு மெங்கே தகுபெரும் படிப்புத் தந்திடு மாபெரும் பட்டணத் துள்ள பள்ளிதா னெங்கே பணமில் லாதவர் பிணமலோ உலகில் அதனுல், தன்னுடை நிலைமை துன்னியே யறிந்து சந்திர சேகரன் சால்பொடு வீட்டில் புத்தி நுட்பம் பொருந்தினுே ஞகையில் இலண்டன் உயர்தர இலங்கிடு சோதனை எடுக்கத் துணிந்தனன் இயல்பொடு கற்றனன் ஈதிவ் வாரு யிருந்திடு காலை மச்சாள் பாருத்தை மருவியெம் மனையில் வந்தொரு நாளவள் தங்கி யிருந்தே எங்களோ டுசாவி ஏர் பல செய்திகள் பேசிக் கொண்டு போகிடும் வேளை மகன்றனைப் பற்றி மகிழ்வோ டுரைப்பாள் மேட்டுத் தெருவில் மேவி இருக்கும் சின்ன முருகர் சேர்ந்துவீ டோர் நாள் மகனை யினிமேல் மாண்புறு முயர்தரக் கல்வி பயிற்றவேன் கருதிட வில்லை வளமுறு பையனும் வன்மைசால் கெட்டிக் கார னென்று கருதுவர் ஊரில் சீனியர் வகுப்புச் சிறந்து பாசு பண்ணியும் நீவிர் பார்த்து மேற்படிக்க

சீதனக்காதை 27.
விடாது விட்டுக் கொண்டே னிருப்பது கருதரு பல்கலைக் கழகத் தவனை வைத்திடின் மெத்த விழைந்து படித்துப் பீஏ எம்ஏ முதலாம் பேர்பெறு பட்டம் பெற்றே பான்மையாய்த் திகழ்வன் அத்தகை நிலையை அமைந்து பெற்றிடின் வானுேர் போற்றும் வளம் பெறு மெய்ந்நிலை இப்பூ வுலகில் இவர்ந்துமே கொடுக்கும் சீர்பெறும் பெரிய சிவில் சே விசுவாம் மெய்த்தகு சோதனை மேவியே பாசு பண்ணுவன் திடமிது பகரவும் மேண்டுமோ அப்பெரு நிலைதான் அண்டியே வந்திடின் இப்பூ வுலகில் இந்திரன் போல விளங்கித் திகழுவன் மேதினி போற்ற மாந்தர் யாவரும் மருங்குவந் தேற்ற முடியுடை வேந்தன் போலே மொய்ம்புடன் அமர்ந்திட அவன்றன் ஆணைப் படியே மக்கள் யாவரும் வணங்கியே நிற்பர் இந்தரு நிலையை இந்திர போகமென் றெண்ணியே செல்வர்தம் ஏற்றரு காளையர் அடைந்திட நனிபெரும் ஆவல்கொண் டுழல்வரி வானுயர் பட்டணம் வாழ்ந்திடு செல்வர்தம் மனைவியர் தங்கள் மாண்புடைச் சிறுவர் பள்ளிபோய் அரிவரி படித்திடும் தினத்தே தங்கள் குதலையர் தாரணி போற்றும் அரும்பெறற் பதவி அளிசிவில் சேவிசாம் பென்னம் பெரிய பேருயர் சோதனை பாசுபண் ணுகவெனப் படர்ந்துளம் பொங்கி பத்தி யோடு பரவசப் பட்டே

Page 22
28 துாவுதும் மலரே
அவர்தம் தலையிற் றங்கை வைத்தே ஆண்டவன் அருள்கென ஆசீர் வதிப்பர் அத்தகைப் பெரிய மெய்த்தகு நிலையை நின்றன் தனையன் நினைந்திடு நீயும் அடைந்திட முடியும் ஆண்டவன் அருளால் : அன்றேல், கொழும்பு மாநகரிற் குலவுலோக் கொலிச்சில் போயவன் படித்தால் பிறக்கிரு சியாகலாம் வழக்குகள் பேசலாம் வளங்கள் பெருக்கலாம் உண்மையாய் உழைத்தால் உலகோர் போற்றுக் பெரியோ ஞகியும் பேர்பெற் றுலாவலாம் அன்றியும், இந்நிலை யிருந்தே இயன்று படித்தால் அப்புக் காத்தாய்த் தப்பின்றி வரலாம் ஆங்குமோ நல்ல பாங்காய் முயன்றல் -சுப்பிறியங் கோட்டுத் தோமறு ராசா ஆகவு மோரிடம் வாகா யுண்டுகாண் அன்றியும், வேறு மொருவழி விரும்பிடி னுண்டு பொருந்திடு வைத்தியம் பயின்றிடு கல்லூரி போந்து படித்துத் தேர்ந்து வந்தால் *கோறண மேந்திற் கோதில் டாக் குத்தராய்ப்
பெருத்த சம்பளம் விருப்புறப் பெற்றுப் பொலிந்தே பணத்தொடு புகழ்மிக் கிருக்கலாமீ குணப்பெருங் குன்றெனக் கெழுமியில் வூர்வாழி மாந்தர் பலரும் மகிழ்வொடுன் மகனைப் *பேசிக் கொள்ளுவர் பெருமைபா ராட்டித்
தாயினும் மிக்க தயவுளோன் சிகிச்சை செய்தலே தகுமெனச் சொல்லுவர் பண்டை

சீதனக்காதை
ஆயுள் வேத நூலோர் ஆதலின் அவனே யிந்த அருநிலை வகிக்கத் தகுந்தவ னென்று சாற்றுவன் திடமாய் ஆயினும், இந்த நாளில் இருந்திடு முறையில் வைத்தியக் கலையை விழைந்து படிப்போர் அப்படி யன்றென அக்கை நீ அறிந்திடு கண்டவர் கடியவர் கருதியே ஆங்கில மருத்துவக் கல்வியை மருவிடும் பணத்தின் பலத்தாற் கற்றுப் பாசுகள் எய்தி வைத்தியஞ் செய்ய வதிவர் நம்நாட்டில் அவர்குண மெஷ் வணம் ஆயு மிருக்கலாம் தத்கவர் தகவிலர் என்பதோ இல்லை அதனுல், நோய்வாய்ப் பட்டு நையுறும் மாந்தர் அவர்கை தன்னில் அகப்பட் டாலோ அவர்கதி அரோகரா என்றே எண்ணிடு நோயாளி தன்னைப் பார்த்திட ஒருசலார் ஆசுப் பத்திரி அடைந்திட ஒருசலார் பெசலிற் றுடனே பேசிட ஒருசலார் சேருமொப் பறேசன் செய்திட ஒருசலார் என்றிவ் வகையாய் எழிலுறு பணத்தை அள்ளி அள்ளி இறைத்திடல் வேண்டும் செத்த பின்னரும் சேர் சலார் வாங்குவர் இத்தகைப் பெரியோர் இனியகைப் பட்டே ஏழைகள் படும்பா டெண்ணவும் படுமோ ஆகையால், நின்மகன் போல நற்குணம் படைத்தோர்" இந்தப் பதவியை இயல்பொடு வதிந்தால்

Page 23
30 ஆாவுதும் மலரே
எளியோர் பெரியோர் என்பதில் லாது எல்லோர் தமக்கும் ஒருசம ஞக வைத்தியஞ் செய்து மன்னுயிர் பேணித் தமக்கென வாழாப் பிறக்குரி யாளராய் நாட்டிற் திகழுவர் நல்வளம் பெருக்கி ஆகையா லவனை அருமைசேர் மருத்துவக் கல்லூரி சென்று கற்றிட வைப்பியேல் நாடு தனக்கு நன்மை செய்து விளங்குவை நீயும் விருப்புடன் கேளாய் அதனுல், இவ்வகை யான் புகல் ஏத்தகு வழிகளில் ஏதினை யாகிலும் ஏற்றுச் செய்குதி வீணிலே பையனை விட்டுநீ இராதே என்று முருகர் பன்னிட எனக்கே அன்றன் ருடே அரும் பெற லுணவுக் கரும்பாடு பட்டே அலைந்து திரியும் ஏழைக ளெமக்குநீர் எடுத்து மொழியும் பேறுகள் பெறற்குப் பெருங்கல்வி பயின்றிடப் பணத்துக் கெங்குநாம் பகரிடாய் போகுவம் கைப்பண மின்றியிக் கருமம் முடியுமோ வெறும்வாய் மென்று வீணிலேன் சப்புவான் ஆற்றக் கூடிய தாற்றலே கடனும் மனக்கோட்டை கட்டின் வரும்பயன் உளதோ செய்ய இயன்றது செய்தலெமி கடனும் என்றிவ் வாறுநான் பன்னிடு வேளை ஏனக்கை இவ்வா றியம்புவான் கேளாய் எத்தனை யோபேர் ஏந்திடு பணத்தொடு பையனைப் பலமுறை பார்த்து வாயூறி அவனை மருகளுய் அண்டிப் பெற்றிட

சீதனக் காதை 3.
ஆசைப் பட்டே அலமரு கின்றர் சொன்ன வுடனே சொலற்கரு மிகுபணம் அவன்றன் படிப்புக் கன்போ டளிக்க ஆயத்தமாக அமர்ந்துநிற் கின்றர் -என்றிவ் வண்ணம் எடுத்து நவின்றனர்.
இந்த மொழிகளை இயல் பொடென் கணவர் கேட்டபி னவட்குக் கிளர்ந்துமே மொழிவார் அக்கை நீ யவன்றன் ஆசைப் Gudd2OTs கொஞ்சமுங் கேட்டே ஏமாற வேண்டாம் ஆசைப் பேச்சைக் கூசாது பேசி மோசம் செய்யும் மொய்ம்புளோ ருலகில் எத்தனை யோபேர் இருத்துவாழ் கின்ருர் நம்பினுல் அவர்தம் பேச்சினை நாமும் ஈற்றிலே தெருவில் நின்றிடல் வேண்டும் அதனுடன், பிறர் கைக் காசு பெற்றுநா மவனைப் படிப்பித் தோமெனும் பண்பில் பழிமொழி எந்தம் குடிக்கே இழிவினைக் கொடுக்கும் ஆகையின் அதுவெமக் கற்பமும் வேண்டாம் பையனிப் போதினிற் படிக்கிரு னேதேர பின்பு நாம் பார்ப்போம் பின்னர் நடப்பதை ஒன்றிலும் ஆத்திரம் ஒன்றுதல் கூடா தென்றே யவடனக் கியம்பினர் விழைந்தே.
13
இலண்டன் சோதனை எடுப்பதற் காகச்
சந்திர சேகரன் முந்துறக் கிளர்ந்து பற்பல பொத்தகம் பண்பொடு வாங்கி
முனைந்து படித்தனன் முற்பட நினைந்தே

Page 24
32 அாவுதும் மலரே
முந்திப் பள்ளியில் மொய்ம்பொடு பயிற்றிய உவாத்தி மார்தமை ஊக்கமா யடைந்தே அதையிதைக் கேட்டும் அண்மிப் படித்தனன் சிற்சில வேளையில் சேர்ந்துதன் பள்ளியில் உவாத்தி மார்சிலர் வாராது விட்டால் அயிட்டின் வேலையும் அன்பொடு பார்ப்பன் இவ்வணம் முயன்றே இருந்திடு காலை கிளந்திடு கவுண்மேந்துக் கிளறிக்கல் சோதனை நடந்திடு மென்று நலம்பெறு புதினம் நவின்றது காணுதிர் நாடியே விரைவில் அன்னதை அறிந்ததும் அவனுமோ விழைந்தே உள்ளம் வைத்து நல் லுசாராய்ப் படித்தனன் சோதனை வந்ததும் சோர்விலா தெடுத்துப் பாசும் பண்ணினன் பலரும் மெச்சிடச் சிலமா தங்கடாம் சென்றது மவனைக் கொழும்புமா நகரில் விளங்கு திறைசேரிக் கந்தோர் தனக்கு வந்திடும் வண்ணம் உத்தி யோக முறைதனில் ஒர்நாள் உயர்தரு கடிதம் ஒன்று வந்ததுகாண் அந்தச் செய்தியை அவன்ருய் அறிந்ததும் கடிதம் கைதனிற் கருத்தொடு கொணர்ந்தே எந்தன் கணவருக் கெடுத்தே இயம்பினள் வனப்போ டதனை வள்ளிநா யகியும் தந்தை தனக்குத் தகவுடன் படித்து விளக்கிக் கூறினள் விழைந்துளம் பொங்க வீட்டி லுள்ளவர் விருப்புட னதனை அறிந்ததும் மகிழ்ந்தே ஆனந்த முற்றனர் உடனென் நாயகர் உள்ளம் குளிர்ந்து வள்ளிநா யகியைக் கொண்டுதா னுடனே

சீதனக்காதை 3C
மருதானை யிடேசனில் வந்தே தம்பியைக் கூட்டிக் கொண்டுபோய் வீட்டிலே வைத்து வேண்டிய பணிவிடை விருப்பொடு செய்து வைத்திடும் வண்ணம் வித்தார மாக மகிழ்ந்தே எந்தம் மக்கள் தமக்கு விரைந்தொரு கடிதம் வரைந்தே போட்டனர்
தமக்கை கைதனில் மிகுபண மிலாததால் ஓடி யாடி ஒன்றிடு பணத்தைச் சேர்த்தபின் அவளிடம் சென்றே யடைந்து இறயிலிற் போகத் திக்கற்று வாங்கவும் சூற்றுத் தைக்கவும் சோடிசப் பாத்து வாங்கவும் மற்றும் வந்திடு செலவுகள் பண்ணவும் போதிய பின்னமில் தொகையைக் கொடுத்தே யுதவினர் குளிர்ந்துளம் மிகவே.
14 சந்திர சேகரன் வந்துதான் கொழும்பில் சேர்ந்ததும் எந்தன் மைந்தர் மகிழ்ந்து கூட்டிச் சென்று கோதில் தம்வீட்டில் வைத்தே யவற்கு வளமொடு வேண்டிய வயதிகள் எல்லாம் வாகாய்ச் செய்தனர் குறித்த நாளதில் குலவிடுங் கந்தோர் அடைந்தே அவனும் அமர்ந்துதன் வேலை ஆர்வத் துடனே சோர்வ தில்லாது பார்க்கத் தொடங்கினன் பண்பொடு களித்தே பின்னே ரங்களில் துன்னியே மைத்துனர்
4

Page 25
34 தூவுதும் மலரே
தமீமுடன் சென்று தகமைசேர் கொழும்பு மாநகர் தன்னை மகிழிவொடு சுற்றுவன் அன்னவர் தம்மொடு ஆர்ப்புறு கோல்பிசு நாடொறும் அவனும் நலிவிலா தடைந்து காற்றினை வாங்கியும் கடற்கரை உலாவியும் ஆங்கண் இருக்கும் ஆசனத் தமர்ந்து கடலை வாங்கிக் கவினுறக் கொறிப்பன் வந்து வரிசையாய் வரைந்தே நிற்கும் வளமுறு மோட்டோர் வண்டித் திரளையும் அவற்றி னுார்ந்தாங் கடைந்திடு வனிதையர் உடுப்பையும் நடையையும் ஓங்குபேர் எழில்மிகு வதனந் தமையும் மருளொடு நோக்கியென் மைந்தர் தமக்கு மகிழ்வுடன் சிறப்பாய் ஆகா அருமைகாண் அருமைமா நகர்தன் வாகாய் உண்கண் வனிதையர் கூட்டம் அவர்தமைப் போல அழகுளோர் எந்தம் ஊரினில் யாங்கணும் காணுதல் அரிதாம் அவர்தம்,
கட்டழகும் இமை வெட்டழகும் பொட்டழகும் சேலைக் கட்டழகும் மெட்டழகும் கொண்டைக் கட்டழகும் குலுக்கழகும் மேனி மினுக்கழகும் எங்கணும் இதுவரை பார்த்ததே யில்லை மயிலோ இவரின் மருவுமின் சாயல் குயிலோ இவரின் குலவுமின் ஓசை அன்னமும் இவரிடை மென்னடை பயிலும் என்று பலவா றெடுத்தெடுத் துரைப்பன் காளையர் தம்மொடு கன்னியர் கூடி

சீதனக்காதை
ஒருவர்மே லொருவர் ஒன்றிடு காதலாற் சொக்கிய உளத்தொடு சோடியாய்ச் சேர்ந்து புல்வெளி தோறும் பொருந்திடு க்ளியுடன் மறுகி மறுகி மயங்கியே திரியும் வனப்பதைப் பார்த்து மறுகுவ னுள்ளம் கோதிலா திவ்வணம் கூடியே அவர்கள் பேசியும் நோக்கியும் பெருகிடு மன்பொடு இருப்பர் நெடுநேரம் இன்பமாய்க் களித்தே அதன்பின், விரைந்தே சென்று வீட்டினை யடைந்து கால்முகங் கழுவிக் கடவுளைத் தொழுதுபின் இராத்திரி உணவு இயல்புடன் உண்டிடக் கடுகுவர் சைவாள் காப்பிக் கடைக்கே கூப்பன் காலம் குளிர்மையாய்ச் சாப்பிட முடியா தாகையால் முனைந்தே ஆங்கண் அலுமாரி தன்னில் கொலுவா யிருக்கும் கோதுமை மாவில் குழைத்துமே அவித்த புட்டுட னிட்டலி புகழிடி யப்பம் சுட்டு மேலடுக்கிய தோசை வகையும் வடையுடன் முறுக்கு வளமார் கேசரி மைசூர்ப் பாகும் மணமு ருேமப்பொடி கடித்தாற் பல்லுத் தெறிக்கும் பகோடா கப்பலுங் கதலியுங் கவின் பெறு ஆனை பன்றி இதரை பகரரு சுகந்தல் ஆகிய பலவகை அருமைசேர் வாழைப் பழங்கள் முதலாம் பார்த்திடுங் கணமே பசியினை யெழுப்பும் பண்புறு பண்டம் பாங்காய் அவரும் பலமுறை நோக்கி

Page 26
36 தூவுதும் மலரே
வேண்டிய பொருளை விரும்பியே எடுத்துச் சட்டினி சாம்பார் தொட்டுமே நன்றயச் சுவைத்துங் கடித்தும் மென்றுந் தின்றும் வயிற்றை நிரப்பி வான்பசி களைந்து கோதுமை அரிசியைக் கூட்டி இடித்த கோப்பி குடித்துக் கொண்டுவெண் சுருட்டைப் பழுதை யெடுத்துப் பற்ற வைத்தும் அருகினி லிருந்தே அளறுமி றேடியோ தன்னிற் பாட்டும் தகவுறு மேளக் கச்சேரி கேட்டும் கருத்தொடு சண்டைப் புதினந் தன்னை நிதானமாய்க் கேட்டும் படுக்கை நேரம் வந்திடும் வரையும் களித்து வீடுபின் கவின் பெற அடைவர் சிற்சில நாளில் சேருயர் சினிமா சென்றே யடைந்து திகழுறு படங்கள் பார்த்து மகிழ்ந்து பகிடிகள் பண்ணி வீடு வந்து நாடியே சேர்வர் இடைக்கிடை சூவும் இருந்திடு நூதன சாலையுஞ் சேர்ந்து சால்பொடு நோக்குவர் இவ்வணம், மைந்தரும் மருகனும் மருவியே கொழும்பில் ஒன்றுசேர்ந்து வாழ்ந்தனர் களியுடன் பலமாதங்கள் பண்பொடு பொலிந்தே.
15
சந்திர சுேகரன் திறம்பட வேலையைப் பலமா தங்கள்தான் பார்த்துமே வருதலும் நத்தார் விடுமுறை நாடிவந் ததுகாண்

சீதனக்காதை, 37
அவ்வுயர் நாட்களை எவ்வமில் அவனும் ஊரினிற் சென்றே உல்லாச மாகக் கழித்திட எண்ணினன் கழிபேர் உவகையால் மாண்புறு தாய்க்கவன் மாதந் தோறும் மகிழ்ந்தே அனுப்பிய மகிமைசேர் பணத்தின் மிகுதியில் தனக்கு வேண்டிய செலவுகள் பண்ணியே மிஞ்சிய பண்புறு பணத்தால் தன்தாய் தனக்கும் தகவோ டெனக்கும் எவருங் கருத்தொடு எண்ணியே வாங்கும் காடு வெட்டிக் கவின் பெறு சேலைகள் இரண்டினை வாங்கினன் எழுந்த பேரன்பால் அன்றியும், சோப்புப் பவுடர் சீப்புக் கண்ணுடி கிளிப்பொடு கெயர்ப்பின் கிளர்தவா லுறையும் இறைட்டிங் பாட்டும் இன்புறு பட்டுச் சாறியும் ஒன்று சார்ந்தே வாங்கி வள்ளி நாயகி தனக்கென நினைத்துப் பெட்டிக் குள்ளே பெருமையோ டடியில் பொடியள் தமக்குப் பேசாது வைத்தனன் அதனுடன் அப்பிள் அருங்கொடி முந்திரிப் பழமும் கிசுமுசு பகரரு வற்றலும் பேரீச் சம்பழம் பெட்டிவிசுக் கோத்தும் முதலாம் பொருட்கள் முறையாய் வாங்கி ஊரினில் வீட்டி லுள்ளோர் தமக்குக் கொண்டுதான் வந்தனன் குலவிடு மிறெயிலில் மகன்வந்து சேர்ந்ததும் மச்சாள் தனக்கு வந்திடு களிப்புப் பகர்ந்திட முடியுமோ மாமன் தனக்கும் மட்டிலா மகிழ்ச்சி

Page 27
3. துாவுதும் மலரே
நேரந் தவருது நிகரிலா உணவு தேடியே தாயும் சீராய்க் கொடுப்பள் வள்ளி நாயகியைக் கொண்டுபின் நேரங்களில் திப்பின் தின்னத் திறம்படு கேக்கும் பலகா ரங்களும் பண்ணி யவற்குக் கொடுத்தின் புறுவள் கொண்டபே ரன்பால் அவனைமுன் பள்ளியில் அன்பொடு பயிற்றிய சட்டம்பி மாரும் சார்ந்து வந்தே ஆசிகள் கூறி அன்பொடு பேசிப் புகழ்ந்தவன்பெருமையைப்போற்றியே செல்லுவர் பக்கத் திருந்த பள்ளிச் சிருரும் மேவுறு மயலவர் தாமுமே மேவிச் சிறப்புகள் பேசிச் சேர்ந்து விளையாடி இன்பமோ டளாவி இருந்துகொண் டாடுவர் இப்படிச் செய்திகள் இருந்திடு காலையில் சந்திர சேகரன் தன்னுயர் கந்தோர் அடைந்து வேலையைத் தொடர்ந்து செய்ய நாளது வந்தது நத்தார் ஒழிந்தது இதற்கிடை யவனும் என்றன் மகளுடன் எவரு மறியாமல் இரகசிய மாகப் பேசி யவடன் பெருமைபா ராட்டி வேலையில் உயர்ந்ததும் விரும்பியே உன்னைக் கட்டுவேன் என்று கடவுளர் பேரில் சத்தியம் செய்து கொடுத்தனன் விழைந்து பின்னரெம் மெலோர்க்கும் நல்லுரை கூறிப் பிரிந்து சென்றனன் பின்னமில் கொழும்பே.

சீதனக்காதை 3.
6
சிலவாண் டாகக் சந்திர சேகரன் தன்னுடை வேலையைத் தகவுடன் பார்த்து வந்திடு பொழுதினில் வளம்பெறு கிளறிக்கல் உயரிடுஞ் சோதனை ஒன்றுவந் ததுகாண். அதனை யெடுத்தே அமைவுறச் சித்தியும் எய்தினன் அதனுல் ஒருபடி உயர்ந்தனன் சிலமா தங்களில் திகழ்ந்திடு மட்டக் களப்பினித பொலியுங் கச்சேரி தனக்கு மாற்றமும் வந்தது மருவிடும் உணவுக் களரி தன்னில் கண்ணியம் மிகுத்திடும் முதலாம் கிளாக்கராய் முடுகுபணி யாற்றிட அதஞல்,
அப்பேர் ஊரில் அறிந்தோர் தனக்கோ எவரும் இலையே என்றுதான் எண்ணி இருந்திடு வேளை எழில் பெறு தன்னூர் வாழ்கயி லாயர் வளமொடக் கச்சேரியில் சிறப்பராய்க் கடமை சீருடன் பார்ப்பது மனதிற் பட்டது மகிழ்ந்தே அவனும் அடித்தனன் தந்தி அங்குபோய்ச் சேர்ந்தனன் அவரும் அவனை அன்புடன் ஏற்று வேண்டிய வசதிகள் விருப்புடன் செய்து தம்மிலம் தனிலே தங்கிட வைத்தனர் சந்திர சேகரன் சார்ந்து கச்சேரியில் ஏஎவ் சீக்கீழ் இருந்திடு முதற்கிளாக் காகிக் கடமை ஆற்றினன் முறையாய் அரிசியை ஏற்றி அங்கு மிங்கும் எடுத்துச் செல்ல இயன்றிடு பெமிற்றுக்

Page 28
40 தூவுதும் மலரே
கொடுத்தனன் முறையாய்க் கோதில் அவனைப் புகழ்ந்தனர் போடிமார் போற்றினர் ஊரவர் இருட்டுச் சந்தையில் இரும்பணந் தேட அலைந்தே உழலும் அன்பில் மாக்கள் தம்மைத் தவிரத் தகவொ டனைவரும் கருத்தினி லவனை விருப்பொடு போற்றினர் நாட்டினில் வசிக்கும் மாந்தர் எல்லோரும் பெருத்திடு சண்டையால் பேணும் சோற்றுக்குத் தவண்டை யடித்துத் தத்தளித் திடுகையில் பனையால் விழுந்தே நைந்திடு மொருவனை
மாடேறி மிதித்து வருத்துதல் போல குட்டை யப்பான் கொடும்பல் வான்படை நெடுங்கடல் தாண்டி முடுகிப் பறந்து இலங்கை யடைந்தே இருந்திடு போர்த்தளம் திகழ்ந்து விளங்கும் திருக்கொ னுமலை குலவிடு வளநிறை கொழும்புமா நகரம் ஆகிய இடங்களை அணுகியே வந்து இரைந்து வானிற் சுழன்று சுழன்று சொரிந்திடு குண்டுகள் விரிந்து பரந்து இடியிடித் ததுபோல் வெடித்துப் பறந்து சொல்லொணுக் கயிட்டம் பல்வகைச் சேதம் விளைத்தன வூரில் மேவியோர் கணத்தில் அதனுல், அரிசிப் பஞ்சம் பரந்தது நாட்டில் அதனைக் கண்டு அலமர லெய்திக் கிடைத்திடு மரிசியை யுடையவர் உள்ளவர் எவர்க்குமே சரியாய் ஈய்ந்திடல் வேண்டிக் கூப்பன் கடைகள் கூட்டுற முறையில்

சீதனக் காதை 4.
நாட்டினி லெங்கணுமி நாட்டினர் அரசினர் காய்ச்சினுற் கூழ்போற் கரைந்திடு மியல்புடை யப்பான் அரிசியை இருந்திடு கூப்பன் கடைகளுக் கவரும் கணக்காய்க் கொடுத்தனர் மட்டக் களப்பில் மன்னிடும் அரிசியைத் தின்றிட விழைந்து திகழுமஷ் வூரவர் கூப்பன் அரிசியைக் கொள்ளாது விட்டுத் தம்மூர் அரிசியைத் தாமயின் றிடவே இருட்டுச் சந்தையில் பெருத்திடு விலையைக் கொடுத்து வாங்கிக் குறைத்தனர் பசியை போடி மாரும் புகல்தம் பணத்தை அள்ளிப் பெருக்கத் துள்ளி விழுந்து கள்ளக் கணக்கினைக் கவுண்மேந் துக்குக் குறைத்துக் காட்டி குவிந்திடு நெல்லை கள்ளச் சந்தையில் மெள்ள விற்றனர் வியாபா ரியரும் விரும்பியே வாங்கி உலொறிகளி லேற்றி ஓடிச் சென்று இலங்கிடு மிறப்புர்த் தோட்டந் தமக்கும் கொழும்பு மாநகர் மேவியே வாழும் பணமிகப் படைத்த தனபதி களுக்கும் யாழ்ப்பா ணத்தினில் இருந்து பொருள்விற்று ஈரொட்டு வணிகம் இயல்பொடு செய்து சுருக்க வழியால் சூழ்ந்து பணஞ்சேர்க்கும் வணிகர் தமக்கும் வளமுடன் விற்றனர் இம்முறை யறிந்து செம்மைசேர் அரசினர் விளைந்திடு மூரில் இருந்திடு நெல்லை அங்கு மிங்கும் அகற்றிடல் தகாதெனத் தடைபிறப் பித்தனர் தடுத்திடு பரியர்

Page 29
42, ஆாவுதும் மலரே
பலவற்றை யாங்கணும் பலமாய் நாட்டினர் அதனுல் மட்டக் களப்பைத் தொட்டிடும் பகுதியில் யாங்கணும் பரியர்கள் ஓங்கிநின் றனவால் கல்முனை தன்னுெடு கருது கல்லாறு கல்லடி கிரான்குளம் பிள்ளை யாரடி செங்க லடியொடு கரடிய ஞறு முதலிய விடங்களில் முன்னியே பரியர் கட்டியே எழுப்பிக் காவல் காத்தனர் நடுவே ஒருதுலா நாடிடு முருேட்டை மறித்து நின்றது குறித்துமே யதனைத் தண்டு மிண்டுத் தடியடி இராமர் பலர் நின்றங்கே பார்த்துக் காத்தனர் பறந்தே ஒடும் பலவிதக் காறும் ஊர்ந்தே சென்றிடும் உரம்பெறு லொறியும் நகர்ந்து சென்றிடும் மாட்டு வண்டியும் வசுவொடு சைக்கிள் முதலிய யாவும் ஓடி வந்து நாடியப் பரியரில் தாழ்ந்து நின்று தடுத்திடும் துலாவின் அருகினில் வந்து அண்டி நின்றிடுமால் உடனே அவற்றுள் ஒருவர்பி ஞெருவராய்த் தடுத்து நின்ற தடியடி மிண்டர் வண்டிக் குள்ளே பாய்ந்து புகுந்தே ஏற்றி வந்த மூட்டை முடிச்சு பெட்டி கடகம் பெருத்திடு உமலொடே இறங்குப் பெட்டியும் எழிலார் தலையணை முதலாம் பொருட்களை முனைந்தே ஊசியால் குற்றியும் நசித்தும் காலால் உருட்டியும்

சீதனக்காதை 4$
குலுக்கியும் பிரித்தும் குடைந்தும் பார்ப்பர்காண்" எனினும், கள்ளப் பெமிற்றுகள் மெள்ளவாய் எடுத்தும் மேலதி காரிகள் மேவியே செல்லுமி ஊர்திக் குள்ளே ஒழித்து மறைத்தும் குற்கே சுக்குட் சுளுவாய் வைத்தும் உண்மைப் பெமிற்றில் பலமுறை சேர்த்தும் காவலோர் தமக்குக் கைக்கூலி கட்டியும் அறிமுகக் காவலர் செறிந்தே நிற்கும் வேளை தன்னில் விரும்பி எடுத்துக் கொண்டு சென்ற கொளற்கரு மரிசி ஊர்க ளெங்கணும் ஓங்கிப் பரந்தது அரசினர் அறிந்தனர் ஆழ்ந்து யோசித்தனர் ஊழலை நீக்க உபாயந் தேடினர், அதனுல், உத்தி யோகத்தை உறுதியாய்ப் பார்க்கும் பலரைத் தெரிந்து பரியரில் நிறுத்தினர் ஒந்தாச்சி மடத்தில் ஓங்கிடு பரியர் தன்னிற் சந்திர சேகரன் தங்கி வேலையை முறையாய் விறுக்கொடு பார்த்தனன் மெள்ளக் குறைந்தது கள்ள மார்க்கற்றே.
17
மச்சாள் பாருத்தை வந்துவீ டொருநாள் எந்தன் கணவரைத் தன்னரு கழைத்துத் தம்பியோர் கடிதம் தகவுடன் எனக்குப் போட்டி ருந்தனன் போற்றியே யதனை வாங்கி வாசித்துப் பார்த்திடும் போதில்

Page 30
துரவுதும் மலரே - 04ته
இடீயா ருேவென் றுலகோர் போற்றும் மணிய காரன் மாண்புறு சோதனை எடுத்துப் பாசு பண்ணி வந்துளேன் என்றே எழுதி இருந்த தென்றனள் நாமதைக் கேட்டு நன்கு மகிழ்ந்தோம் கணவர் தாமும் கணக்கறக் களித்தனர் அப்போ தவளென் அன்பரை நோக்கி இனிமே லவனை இப்படிச் சும்மா விட்டே இருத்தல் விளம்புவன் தகாது கலியாண முடித்திடும் காலம் அவனுக்கு வந்து விட்டது வளமுடன் ஒருத்தியைக் கட்டி வைத்தல் பெற்றேர் கடனும் வேண்டும் பருவத்தில் விளம்பிடு பயிரைச் செய்யாது விட்டால் சேதமே வந்திடும் மட்டக் களப்பில் தனியாய் அவனை விட்டுக் கொண்டே யிருத்தல் சரியிலை காதிற் பட்டது கனத்தவோர் செய்தி குள்ள முருகர் கோயிலில் இன்று கண்டென் அருகிற் கருத்தொடு வந்தே எந்தனை நோக்கி இன்பமாய் மொழிந்தார் அக்கையுன் மைந்தன் அம்பல வாணப் பிறக்கிருசி வீட்டில் பெருத்த சீதனம் வாங்கிக் கொண்டு வள மொ டவர்மகள் பிரேம குமாரியைப் பின்னமில் வதுவை செய்கிற னென்று செப்புவர் அயலோர் மெய்யோ இந்த மேன்மைசேர் செய்தி என்றவன் சொல்ல எதிர்த்தியான் அவனை என்னபேய்க் கதையிதை இயம்புவாய் வீணில்

சீதனக்காதை
ஊரிற் பேச்சை உண்மையென் றெடாதே அப்படி யொன்றுஞ் செப்புதற் கில்லை அங்கு முடிக்க அரியவென் மகனை விடவும் மாட்டேன் விரும்பிடின் நமீபெனக் கூறலும் யானும் குறிப்பாய் அவனும் ஏன் நீ இப்படி எனக்கும் ஒழிக்கிருய் ஊர்வாயை முட உலைமுடி போதுமோ சீதனத் தொகையும் தீர்த்து முடிந்ததாம் உந்தன் பேச்சு விந்தைகாண் எனக்கோ
96. றியும், மட்டக் களப்பில் மருவியே உன்மகன் அம்பல வாணர்தம் அருமைத் தமையன் சிருப்பர் கைலாயர் சீர்பெறு வீட்டினில் தங்கி யிருத்தல் எங்குமே தெரியும் சிறப்பர் கொடுத்திடும் செலவிற் படித்தே மணிய காறன் வளமுறு சோதினை எடுத்துச் சித்தி எய்தி ஞணும் இந்தச் சங்கதி இனிநீ மறைக்க எண்ணுதல் வேண்டாம் எமக்கெலாந் தெரியுமி என்றவன் கூறினன் எம்பிநீ கேளாய் அன்றியும், மட்டக் களப்பில் சட்டம்பி வேலை பார்த்திடும் பொடியள் பண்பொடிவ் விடுதலை தன்னில் வந்து தனிமையாய் எனக்குத் தம்பியைப் பற்றிய மொய்ம்புறு செய்திகள் பலப்பல எடுத்துப் பகர்ந்து போயினர் அதணுெடே, அவ்விடந் தன்னில் அண்டியே அவற்கும் கலியாணப் பேச்சும் கணக்க நடக்குதாம்

Page 31
is தூவுதும் மலரே
போடிமார் பலரும் புகழ்ந்தே அவனைப் பலகா ரங்களும் பகர்தயிர்ப் பானையும் வாழைக் குலையும் வளம்பெறு தேனும் காவிற் கொண்டு கருத்தொடு சேர்ந்து மணவினைப் பேச்சு மாண்புடன் ஆற்றுவர் அன்றியும், முதலி யாரும் மூச்சாய் மகளுக்குக் கட்ட விரும்பிக் கருத்துவைத் துளராம் அதனெடு அவ்வூ றடையும் எவ்வமில் இளைஞர் பலரும் அங்கே பாங்காய் விழைந்து திரும்பிடா தாங்கு திருமணம் முடித்துத் தங்கி விடுவர் தமர்தமைப் பிரிந்து மட்டக் களப்பில் மருவு மண்ணுக்கு யாழ்ப்பா ணத்தின் இளைஞரை இழுக்கும் சத்தி இயல்பாய்ச் சார்ந்தே உண்டுகொல் அதாஅன்று
மட்டக் களப்பார் மந்திர வித்தையில் வல்லவ ரென்று சொல்லுவர் யாங்கும் மருந்து சூனியம் மாயப் பொடியொடு பாயொட்டி மந்திரம் பகரரு வசியம் குறளி விட்டுக் கூரையைப் பிடுங்குதல் காளியைக் கொண்டு கல்லா லெறிதல் மாரணம் தம்பனம் மன்னுகாய் வெட்டுதல் செய்கை செய்து பில்லியை யேவுதல் கரடேறி கூளி கரையாக்கன் பேச்சியும் சுடலை மாடன் துயர் செய் பிடாரி முதலிய பேய்களை முறைப்படி சுடலையில்

சீதன்க்காதை 4勒
மடைபல பரப்பி மந்திரஞ் சொல்லி ஒமீகமீ நீமென உச்சாடனம் பண்ணி வாலாயஞ் செய்து வசியப் படுத்தித் தமிமொடு முரணிய சத்துரு தமக்கும் அணைக்கக் கருதிய ஆட்கள் தமக்கும் இவற்றை யழைத்தே ஏவி விட்டுத் தம்முடைக் கருமமீ தடையிலா தாற்றுதல் ஆகிய வன்மைகள் அவர் தமக் குண்டென :இயம்புவர் பலரும் யாழ்ப்பா ணத்தினில் பொய்யோ மெய்யோ யானிதை யறியேன் ஆகையால், ஒருகுடிக் கொருதனிக் கொக்காரை போல இருந்தி டென்தனையனை இத்தகை ஊரில் நெடுக விட்டுக் கொண்டே யிருக்கப் பாராய் தம்பி பதறிடு மென்மனம் கலியாணம் பேசும் கனதன மாந்தரென் மகனைத் தட்டி மயக்கி எடுக்க என்னென்ன செய்வரோ பன்னிட அறியேன் ஆகையால் அவனையென் அருகினில் விரைந்து வந்திடும் வண்ணம் வரைந்தே ஞெருதவால் வந்திலன் இதுவரை தம்பிநீ விரைந்து எந்தன் உடலம் ஏதோ நோயால்
மிக்க வருந்தும் மேலுமெம் நிலையோ அபாயத் துக்கிட மாக விருக்கும் என்ருெரு தந்தி இன்றே யடித்திடு பின்னர், வந்த உடனே வள்ளிநா யகியைக் கொண்டு சோறு கொடுத்தே அவரின்

Page 32
தூவுதும் மலரே
மணவினை காண்போம் மகிழ்ந்தே நாமும் என்றென் கணவருக் கியம்பினள் முனைந்தே,
18
தந்தி பெற்றதும் சந்திர சேகரன் கணமுந் தரியாது கடுகியே விரைந்து வீடு வந்து மேவிச் சேர்ந்தனன் சுகமாய்த் தாயும் சுற்றியே உலாவித் திரிவதைக் கண்டு வியந்துபின் அவளை ஏனிவ் வகையாய் எனக்குநீ தந்தி அடித்தனை என்றே ஆவலாய்க் கேட்டனன் கண்டுநான் உன்னைக் கனகாலம் என்று. காணவே நினைந்து கருத்துவைத் ததனை அடித்தேன் எனவே அன்பொடு கூறினள். அடுத்தநாள் வீடு அண்டியே வந்து எந்தன் கணவருக் கெடுத்தே அவளும் தம்பியென் மகனை நான் தயவாய்ப் பார்த்து மகனே எனக்கும் வயதாய்ப் போச்சுது சாக முந்தியோர் பேரப் பிள்ளையைக் கண்டிட விழைந்து கவலுமென் உள்ளம் கல்யாணம் முடிக்கும் காலமும் உனக்கு வந்து விட்டது வளமார் ஒருத்தியைக் கட்டுதல் வேண்டும் திட்டமாய் எண்ணு மருவுமென் மருமகள் வள்ளிநா யகியும் உனையே நெடுக உன்னியே குமராய்க் காத்துக் கொண்டு கருத்தாய் இருக்குது கையோடு கையாய் கலியா ணத்தை
வருகிற நாளில் வளமொடு முடித்திடு

சீதனக்காதை 49
என்றுநான் இயம்பலும் இருந்துமே அவனும் சிறிது நேரம் சிந்தனை செய்து நன்றுகாண் இந்த நவிலரு சூழ்ச்சி இதற்கோ தந்தி கொடுத்தனை என்று செப்பி விட்டுச் சொல்லுவன் பின்னும் அம்மா உன் சொலுக் கட்டி கூறினேன் என்று நினைந்து ஏசிடல் வேண்டாம் தட்டிப் பேச வேண்டிய விடத்தில் தட்டிப் பேசுதல் தவறிலைக் காணுதி முந்திய பொடியனென்று நீஎன்னை நினைத்திடல் வேண்டாம் நீடுபேர் படைத்த உத்தியோ கத்திலுயர்ந்தே விட்டேன் தகுதியும் உயர்ந்தே சால்பொடு திகழும் அதனுல், அதற்கு வேண்டிய அமைந்திடு வழியால் குறைவிலா வாழ்க்கை நிறைவொடு நடாத்தல் வேண்டுமன்ஞய் விரும்பியே யானும் அருந்தன மின்றேலதுமுடி யாது வறிய குடும்பத்து வந்துதித் துள்ளேன் அம்மான் மகளை ஆசை பாராட்டிக் கட்டுவ ஞகிற் கனத்திடு செலவுக்குத் தட்டுப் பட்டுத் தத்தளித் திடுவன் சேர்ந்தோர் செம்புச் சல்லியுமவர்கையில் இல்லை யென்றே எமக்கெலாந் தெரியும்
ஆளுல்
பணத்தைப் படைத்த பலதன வான்கள் வந்து வந்து எந்தனை அணுகி
5

Page 33
50 துாவுதும் மலரே >
அந்த மில்லா அரும்பெறற் செல்வமுமி தங்கச் சிலைநிகரறென் மகளும் உன்றன் அடிகலுடன்படின் வைப்பன் என்று மொழிந்து என்கால் வீழ்வர் அப்படி இருக்க இப்படிநீசொல்லும் கலியா ணத்தைக் கட்டுவ ஞகில் பெருத்திடு வாழ்விற் பேரிடர்ப் படுவன் என்றுமே யவனுமியம்பிடு வேளை எனினும் தம்பி எழில்மிகுமுன்றன் மச்சாள் வள்ளி நாயகி தன்னைக் கட்டினுற் சாரும் காணருஞ் சிறப்பே ஒன்றுக்குளொன்றயொருமித்து வாழ்ந்தால் பேரும் புகழும் பெருமையும் பெருகும் காசின் தொகையைக் கருதிடல் வேண்டாமி அதனல், ஏதோ அவர்தாமியன்று கொடுப்பதை அன்பாயேற்றே அவர் மேலிரங்கிடு பாவம் அவளுங் கோதிலுன் மாமன் மகளே என்று மனத்தில் வைத்திடு என்று யானுமெடுத்துக் கூறலும் அவனுஞ் சற்றே ஆலோ சித்துப் பின்னுமென் றனுக்கு முன்னியே சொல்வன் சரிநானவளைச் சால்பொடு கட்டுவன் உரக்க மாக ஒருபதி ஞயிரம் உறுவாய் சீதனம் ஒர்ந்து நீ வாங்கிக் கொடுத்திடென்று கூறிஞனவனும் அம்மொழி தன்னைச் செம்மையாய்க் கேட்டே என்றன் கணவரியம்புவர் அவட்கே

சீதனக்காதை 5.
அப்படி யாயி னக்கை நீ யதனைத் தருகுவமென்று தம்பிக்குச் சொல்லிடு மைந்தர் கொழும்பில் மிச்சம் பிடித்த பணத்தொடு நானும் பதனமாய் வைத்த சிறுதொகை எல்லாம் சேர்த்துமே எடுத்து எஞ்சிய தொகைக்கு இருந்திடு வடலிக் காணியுமெங்கள் கருதுநல் வீடும் ஈடு வைத்து ஈட்டிய பணத்தைச் சீதன மாகச் சிறப்பாய் வழங்குவன் என்றே கணவர் இசைத்தலுமவளும் அப்படி யாயினுவன வெல்லாம் சீக்கிர மாகச் செய்து முடித்திடாய் ஏனெனில்,
மணிய காரன் வளம்பெறு வேலையை ஏற்றிடல் வேண்டுமிரண்டு மாதத்தில் வேலையை ஏற்குமுன் விரைந்தே மணத்தைச் செய்திடல் வேண்டுமாம் சீராய் அறிந்துகொள் மணத்தினை முடித்த மாந்தர் தமக்கே அந்த வேலை அளிக்கப் படுமெனச் கவுண்மேந் தாரின் கட்டளைச் சட்டமாம் என்றவள் மொழிய இனியவென் கணவர் அக்கை நீ யதனுக் கலமரற் படாதே ஒருமா தத்திலோர்ந்திடு சீதனம் சேர்த்துக் கொடுத்துச் சிறப்புறென் மகளைக் கட்டாயம் நானும் கட்டிக் கொடுப்பன் என்று கூறினரியல் பொடென் கணவரே.

Page 34
邪8 அாவுதும் மலரே
19 கொழும்பினில் வாழும் கோதிலெம் மைந்தரைத் தந்தி கொடுத்துச் சட்டென ழைத்துப் பலவா றெண்ணிப் பண்புடனவரிடம் இருந்த பொருளை ஒருங்கு சேர்த்தும் நாங்கள் சேமித்த நலமுறு பணத்தைக் கூட்டித் திரட்டியும் குறைந்திடு தொகைக்கோ ஈடுகள் வைத்துத் தேடியே எடுக்க அங்குமிங்குமலைந்து திரிந்து பணமிகப் படைத்தோர் படிகளி லேறியும் பலவித மாகப் பணத்தைப் புரட்டி விளம்பிய தொகையை விரும்பிச் சேர்த்திட அன்பர் பட்ட அருமிடி தன்னைச் சாற்றிட எனக்கோ ஆற்றலில்லையால் மாதமுஞ் சென்றது மன்னிடும் மருகன் சொன்ன தொகையில் பன்னு ராயிரம் குறைந்தது காணுதிர் கூட்டியே எடுக்க ஆவ லாக அக்கப் பாடுகள் பட்டுத் திரிந்தனர் பதறிக் கவன்றனர் இடையில், சிருப்பரி கைலாயர் சீர்பெறுந் தம்பி அம்பல வாணப் பிறக்கிருசி தனக்குப் பிரேம குமாரியைப் பேணமாய் அழைத்துக் கொண்டு மட்டக் களப்புக் கொருமுறை வந்துபோ வென்று மாயமாய்த் தந்தி அடித்தனரென்றும் அயல்தனி லுள்ளவர் கூறினர் வந்து குலவியே எமக்கால் அதன்பின்,

சீதனக்காதை
சிலநாள் சென்றதும் தெரிந்தது தெளிவாய்ச் சந்திர சேகரன் சார்ந்து பிரேம குமாரி தன்னைக் கொழுத்த சீதனம் வாங்கிக் கொண்டு மணமுடித் தானெனச் சிருப்பர் கைலாயர் தின்னது குடியாது சேர்த்து வைத்த செப்பரு மலட்டுச் சொத்தும் வந்து சொகுசாய் அடைந்ததாம் என்ருெரு செய்தியும் எட்டிப் பரந்ததால் இதனை யறிந்த எந்றன் மகளும் மகிழ்ந்தனள் போல மறைத்துத் திரிந்தனள் பின்னர், ஒருநாள் அவளுமோர்ந்துதன் படுக்கையில் இருந்து கொண்டே எந்தனைக் கூவி அம்மா எந்றன் நெஞ்சினுளடைக்குது வந்தென் னருகில் மருவி நின்றுகொள் என்று கூறலுமெழுந்தென் கணவரும் அவள்நிலை கண்டு அலமர லெய்தி வைத்தியர் வீடு விரைந்து சென்றனர் வந்துபின் பார்த்தனர் மடிந்தே அவளும் படுக்கையிற் கிடந்தனள் பார்த்துக் கலுழிந்து மயங்கி விழுந்தனர் மண்ணிற் புரண்டனர் ஏங்கி ஏதோ எந்றனை அழைத்துச் w சொல்ல முயன்றனர் சொல்லுமுன் சோர்ந்து கண்கள் மூடின கைலாயஞ் சேர்ந்தனர் திகைத்தவண் யாமும் தேம்பிப் புலம்பவே.
முற்றிற்று

Page 35
54
விந்தை முதியோன்.
(1) உலகினர் போற்றும் ஓங்கிடு தொல்சீர் நலமிகச் செறிந்து நன்கு விளங்கும் எகித்தென் பேருடை ஏருறு தேஎத்துச் சிறந்திடு பல்பொருள் செறிந்து நெருங்கி இலகுறு கடைகளும் அழகுறு வீதியும் வலனுடை வேந்தன் வளமா விரிகையும் நகர மாந்தர் நன்மா டிகளும் திகழுறு சிறப்பொடு சேர்ந்துசேண் பொருந்து கீர்த்தி வாய்ந்த கைரோ நகரம் பாரோர் விரும்பும் பல்வளம் மிளிரும்; அதாஅங்கண் தெருத்தெருத் தோறும் திரிந்து பிச்சை வாங்கி யுண்டு வாணுள் கழிக்கும் நல்கூர் மாக்கள் தொல்லார் குழாஅத்துள் தந்தைதா யில்லான் தனியனுேர் சிறுவன் பருடி யென்னும் பண்புடைப் பெயரோன் துயரென் நிலைமை உலகத் திருத்தல் காணு வுள்ளக் கழிபே ருவகையன் கண்டோ ருள்ளம் கொண்டு பிணிக்கும் அறியாப் பருவச் சிறியநற் குழவி வீதி தோறும் விழைந்து திரிந்து தண்ணளி மாந்தர் தவரு திட்டுழிக் கொண்ட பிச்சை உண்டு வளர்ந்து வந்தான் பேர்நகர் வாழும் ஏனை வறிய ஏர்மகார் போலென்.

விந்தைமுதியோன் 55
(2) சின்னஞ் சிறுபணி முன்னி யியற்றும் பன்னிடு பருவம் துன்னி வந்ததும் கடைத்தெரு வாங்கண் கருதுபல் பண்டம் மிடைந்து விற்கும் மேவுநல் வணிகர் இட்டிடு சில்பணி தொட்டுநன் காற்றி முட்டில் லாது முனைந்து நடந்துழி வணிக ஞெருவன் மனதி லிரங்கி வனப்புறு தன்னுடை வளம்பெறு கடைக்கு வாயிலின் னின்று வாயில் காக்கும் வாயி லாளஞய் வைத்தனன் பருடியை அத்தகைப் பணியை ஒத்துநன் காற்றி வந்திடு வேளை நத்தியே பருடியும் நெடிது முயன்று நெடுங்கணக் கெழுதப் பயின்று கொண்டனன் பண்பொடு படித்தே; அதனுல் பருடிதன் நேர்மைப் பாங்கினை யறிந்த வணிகர் தலைவன் பணியுறு மவனைத் தங்குதன் கடைக்குத் தருகணக் கெழுதும் கணக்க ஞகக் கருதி யமைத்தனன் ; ஈங்கனம் பருடி இயலுறு பணியைச் சிறிதும் தவருன் செய்திடு போதினின் வணிகன் பருடியை வந்தடைந் தோர் நாள் கண்ணி ராருக் கலுழு முகத்துடன்
என்பணி தன்னை எள்ளள வேனும் தவரு தாற்றும் தகவுறு குழந்தாய்! இனிநீ யென்ஞ்ே டிருக்க வேலா பிறிதோர் தலைவனைப் போய்நீ யடைந்து கடமை செய்யக் கருதிடு மைந்த,

Page 36
56 ஆாவுதும் மலரே
என்னிட மிருந்த ஏர்பொருள் முழுவதும் தொலைந்து போயதென் துன்புறு செய்தி வந்ததின் றெனக்கு வருத்தம் செய்தது; வார்பரி வாழும் வண்கணர் கப்பற் கொள்ளைக் காரர் கொன்டென் கப்பலை ஏகின ரென்றே யானறிந் தனணுல் என்பண மொழிந்தேன் என்றெழில் நின்றதால் அந்தோ கெட்டேன் அரியவென் மகளை யாது செய்வேன் யாங்கன மவளை மணவினை யாற்றி மகிழ்வொடு காப்பேன் ? தங்குவழி யறியேன் தத்தளிக் கின்றேன்” என்று வணிகன் இரங்கி யரற்றலும் பருடி யவனைப் பணிவொடு நோக்கி "ஐயா வணிகவென் னன்புடைத் தலைவ எளியேன் றன்னை நீ அருகனென் றெண்ணின் நின்மக டன்னை யானே மணப்பன் அன்னுள் பொருட்டாய்த் துன்புறேல் சிறிதும்; அதாஅன்று, என் சிறு பணியை இயற்றிச் சேர்த்த பொருள்சிறி துண்டு பொருந்தியென் னிடத்தே, அப்பொரு டன்னை அருமுத லாக ஒப்புட னெடுத்தே ஒர்ந்துளம் பொருந்தி இருவே நாமும் ஒருவே மாக வணிகஞ் செய்திடின் வான்பணம் முன்போல் பெருக்கி வளர்க்கப் பெரிதுஞ் சான்றிடும் என்றியா, னெண்ணும் எழில் பெறு தலைவ நின்னுளம் யாதோ நேர்வுறு மீறியேன்” என்று பரிவாய் எடுத்து மொழிதலும் வணிகனும் கேட்டு நனியா ராய்ந்து

விந்தைமுதியோன்
C54. தன்னுட்ன் மருவியே வணிகம் ஆற்ற விசைந்தனன் ஆர்பொரு வீட்டவென்.
(3)
சிறுபணி யியற்றிச் சிறுகச் சேர்த்த பருடிதன் கைப்பணம் பகரத் தகுந்த தொகையன் றெனினும் துன்னுநல் வழியான் ஆய்ந்து வணிகம் ஆற்றின ஞதலின் தொடங்கிய திங்கள் முடிந்திடு முன்னர் வணிகந் திரும்பவும் வளர்ந்தோங் கியதால் 3 அவ்வணம் விளைந்த செவ்வியைக் கண்டு வணிகனும் மகளை மகிழ்ந்து முற்பட்டே அவன் மே லாற்ருக் காதல் பொருந்தி ஏக்குற் றிருந்த நீக்கறு பருடிக்குக் கொடுத்தா னருமனைக் கிழத்தி யாக 3 ஓராண் டகவை ஒழிந்த பின்றை ஒமா ரென்பெய ரோங்கிய மைந்தனைப் பன்னிடு குணத்தோன் பருதனப் பருடியும் , பெற்றன ஞகிப் பெருமகிழ் வுடனே உற்ற நல் லறங்கள் ஒருவா தீட்டினன் சிலநா விரிவ்வகை சென்ற தன் பின்னர் வணிகர் தலைவனும் வணிகத் தொழிலைப் பருடிதன் கையிற் பகர்ந்தொப் படைஇ இல்லத் திருந்தே இளநன் மகவொடு களித்துநன் காடிக் காலங் கழித்தனன் ; , அதாஅன்று, பருடி தனக்கோ பண்பொடு வணிகமீ ஓங்கிய சீருடன் வீங்கி வளர்ந்துபேர் அளவில் லூதியம் ஆர்ந்து செறிந்ததால்:

Page 37
58 தூவுதும் மலரே
அன்னே னளிக்கும் அரும்பொரு டமைப்பெற இரவலர் திரளாய் ஈண்டிவந் தணர்காண் அன்னேர் யார்க்கும் அளவிலாப் பொருளைப் பின்ன முருது பெருகக் கொடுத்தும் பொருவில் பருடிதன் பொருள்குறைந் திலதால் இன் சொலான் பருடி எவர்க்கு முதவி செய்தே களிக்கும் செயலோன் காணுதிர் சிறுமையிற் பிறர்தம் சிறுபணி யாற்றிய சின்மை நிலையைச் சிறிதும் மறந்திலன் தன்கடை வந்து சார்ந்த விரவலர் தம்மைச் சிறிதும் தவிரா தவர்க்கு வாரிப் பொருளை வளம்பெறக் கொடுப்பன் ; இத்தகைச் செயலோன் இரவலர்க் கன்பனைக் கைரோ மக்கள் களிப்பொடு நோக்கினர்; நன்மக ஞேமார் நான்காண் டானதும் மாமனைச் சிலகால் வணிகத்து வைத்து நபிநா யகத்தின் மாண்புடை நகராம் மக்கம் குறித்து யாத்திரை சென்றனன்; அந்நாள் முதலா அன்புடைப் பருடியைக் கச்சியார் பருடியென் றன்போ டழைத்தனர்; மக்கம் சென்ருேர்க் கித்தகை நாமம் ஒக்கக் கொடுத்தல் உலகோர் வழக்கென்.
(4) மக்கமா நகர்க்கி யாத்திரை முடித்தபின் கச்சியார் பருடிதான் கனதனந் தேடியும் உள்ளம் நிறைவுறீஇ நல்லன்ப ஞகியும் மன்பதை தமக்கு மாரு தருளிடும் குணவா ஞகக் கெழுமி விளங்கினன்

விந்தைமுதியோன் 59
மிகுபண வரவும் மிகுபணக் கொடையும் தகவிளங் கியதால் தண்ணளி யான்கண் முதிர்ந்திடு வயதான் முதுமகன் வணிகன் வதிந்த மெய்விட்டு வானுல கடைந்தனன்; அதனல் வணிக ரீைட்டிய வளர்நிதிக் குப்பையும் நீக்க மில்லாது நிகரில் லவற்கே வந்தெய் தியதால் வான்பொருட் குவையொடு, கச்சியார் பருடிதன் கணக்கில் செல்வம் நச்சி யளவிடல் மாந்தர்க் கெளிதோ, அத்தகை யறிந்த எத்தேஎத் தோரும் நாடி யவனிடம் நட்போ டமர்ந்தனர்; மொரக்கோ தொட்டே அவுக்கா னித்தான் தேயம் வரைக்கும் திகழ்நர வேந்தர் அவன்ற னட்பினை அடைய விழைந்தன; திரிப்பொலி காக்கும் ஏமீர் தானும் தன்மக டன்னைக் கச்சியார் மகளும் ஒமார் தனக்குத் திருமண முடிக்க மணம்பே சினனுல் மாகச்சி யாருடன் அன்னுேன் ருனும் அதற்கிசைந் தனனே. அதனுல் உழிையர் முதலா எண்ணிலா வீரர் பரிவா ரமதாப் படர்ந்தவற் சூழ ஒட்டகம் பலமேல் ஒளிர் பொலக் குவையும் பட்டொடு பற்பல பணிகடன் றிரளும் ஏற்புறு பாலை வனத்தினுக் கூடாச் சென்று திரிப்பொலி சேர்ந்தன ஞேமார்; ஆங்க ணவற்கும் ஏமீர் தன்மகள் பாத்திமா தனக்கும் பல்வகைச் சிறப்பொடு

Page 38
●● துாவுதும் மலரே
வரைவினை விழவு வனப்புட னடந்ததால்; சின்ன ளேமீர் சீருறு மவைதனில் ஓமார் மகிழ்வோ டோங்கி யிருந்தபின் பதினே ழாண்டு பகர்ந்திடு மகவையின் மன்னு திரிப்பொலி மாண்பொடு வந்து திருமண முடித்துத் தேர்ந்திடு காதற் களிமகி ழழகியாம் காரிகை தன்னைத் திருவுறு கைரோ மருவி வாழும் தந்தை கச்சியார் தகவுறு மனைக்கே இட்டுச் செல்கவென் றியம்பினர் பெரியோர், அத்தகை யிசைந்து நற்றகை யோமார் கைரோ திரும்பினன் களிப்பொடு பொருந்தி: கருதிடும் பெரியோன் கனதனக் கிழவோன் மக்கடந் தலைவன் மாண்ட திரிப்பொலி ஏமீர் தன்னே டியற்று மணத்தினைக் களித்துப் போற்றிக் கச்சியார் தானுமி உவகை கடந்த உள்ளத் தினணுய்க் கைரோ வாழும் இரவலர் பலர்க்கும் அன்னக் கொடைகள் அன்புட னளித்து வறுமை வாழ்க்கை பொருந்தி வாழும் கணவரை யிழந்த காரிகை யார்க்கும் தந்தைதா யிலாது நொந்திடு மகார்க்கும் மிகுபொரு ஸ்ரீந்து மேவிப் புரந்தனன்; அன்றியுந் தன்மகற் கருமணக் கொடையாய் ஈந்திடு நோக்குடன் இருந்தொழி லொன்றைத் தொடங்கி யாற்றினன் தொகுபொரு வீட்டவென்.
(5)
பொருந்திடு மணற்குவை செறிந்திடு மெகித்து மலிந்திடு வெயிலான் வதங்கிடு தேயம்;

விந்தைமுதியோன் si
அத்தே யத்தின் அருந்தவப் பேற்றன் நைலென் பெருநதி நீர்நிறைந் தூடே பெருகி யோடிப் பேர் நலங் கொழிக்கும் 3 அப்பேர் நதியின் அருநீ ரருது கரைக டோறும் கல்லா லெடுத்துக் குளம்பல வாக்கிக் கொழுநீர் சேர்த்தே இருகரை தோறும் வயல்பல வமைத்துப் பைங்கூழ் விளையும் பெருநஎ டாக்க விழைந்து முயன்றனன் விழுமியோன் பருடி: அத்தகைப் பணியை ஆற்றி முடித்திடின் பால சான்ற பண்பில் நிலங்கள் மருதமாய் மாறி மன்னுதா னியம்விளை கொழுநில மாகக் கொழித்துச் செழித்திடும்: அதனுற் கூலம் அருகிடா தெகித்து பல்வளம் நிறைந்து பைங்கூழ் பெருகிடும் எனப்பல மாந்தர் எண்ணியே மகிழ்ந்து கச்சியார் தன்னை நச்சியே போற்றினர்; எகித்து தேஎத்தே எழிலொடு செங்கோல் செலுத்தி மன்பதை சிறப்புறக் காக்கும் கலிப்பன் ருனும் பெருமகிழ் வெய்தித்
நிறைந்திடின் என்பெரு நாட்டின் சல்வம் நிறைந்து குடிக ஞயர்ந்திடும், குடிக ஞயர்ந்திடிற் கோன்வளம் பெருகும் என்றுதா னெண்ணி இன்புட னேத்தினன் கச்சியார் பருடிதன் கருத்து முற்றுற ; அதன்பின், இத்தகைத் தொழிலை ஏந்தல் தொடங்கலும் வெகுபொரு ளாங்கண் வேண்டிவந் ததுகாண் அதனுல்

Page 39
虑2 தூவுதும் மலரே
பற்பல தொழிலின் விட்டதன் பணத்தை எடுத்தன னதிக்கரை இயற்றுதற் காகென்.
(6) அப்பேர் நதிக்கரை அணைதனைக் கட்டும் பகரரு பணிதனைப் பருடி தொடங்கலும் யாங்கணு மவன் பேர் வீங்கிப் பரந்தது தன்னலங் கருதாத் தாவில்பே ராளனென் றெத்திசை யோரும் ஏத்திப் புகழ்ந்தனர்; நீக்கமில் லவன் புகழ் நிலவிடும் போதினின் பருடியோர் ஞான்று பான்மைசேர் தன்மனை வாயலின் வந்து வான்றெரு வழியே மக்கட் கூட்டமும் வனப்புறு வையமும் திரள்திர ளாக வருவது போவது பார்த்துக் களித்து மகிழ் வொடு நின்றனன்; அப்போஒழ்தின் கிழிந்த கந்தை இழிந்த வுடையினன் ஐயமேற் றுண்ணும் முதுமக ஞெருவன்
வந்தவன் முன்னர் மருவியே நின்று *சிலபக லிவ்வூர்த் தங்கவென் றனக்குத்
திருவருள் கூர்ந்தோர் உறைவிடம் தம்மின் பெரும் பொருட் டலைவ, பேதமில் குணத்தோய்” என்று விஞயினன் ஏதமில் லவனை அச்சொற் கேட்டதும் அன்பொடு பருடி
உற்று நோக்கி ஒர்ந்துசில் நேரம் வார்த்தை யாடினன் வருமுது மகனுடன்
முதியோன் றன்னுடை மூதறி வாண்மையும் நலனும் பெருமையும் நாடிக் காண்டலும் கைரோ நகர்தனிற் கருதியே தங்கும் கால மளவும் கவின் பெற வமைத்த

விந்தைமுதியோன் 63
தன்மா விரிகைதனிற் றகவோ டிருக்கவென் றிரந்து கொண்டனன் ஏர்பெறு முதியனை அன்பொடு முதியனும் அதற்கிசைந் தனணுல் மாளிகை யாங்கண் மல்கிடு மழகுடன் விளங்குமோ ரறையின் விளம்பிடு முதியனைப் போற்றி யிருத்தினன் பொங்கிடு மகிழ்வுடன் இத்தகை யறிவோர் ஏகிடிற் றன்னிடம் மெத்த வணங்கி மேவி யவருடன் அளவில் காலம் அளாவிக் கழித்தல் நற்றகைப் பருடிதன் நலமுறு குணனென்.
(7) வந்து பருடிதன் மாளிகை யாங்கண் தங்கிய முதுமகன் சான்றநல் லறிவோன் கிழிந்த கந்தை இழிந்த வுடையினை உடையோ ஞயினும் ஒர்ந்திடி லவன்றன் ஏனை வறியரைப் போன்றுளா னல்லன், மறைந்த வேடத் துறைந்தே யொழுகும் தன்மையன் போலுமென் றையுறற் பாலன் விந்தையொன் றவனுழைக் கண்டுளோர்
(சொல்வர்
உயிரில் பொருளோ ஒன்றையும் தன்னுடை இடது கையா லன்றிப் பற்ருன் -என்பொருட் டாயோ எவரும் அறிந்திலர், உற்றநற் கல்வி உறைந்துளோ ஞயினும் கற்று நூல் தேறிய கவினறி வாளரைச் சால்பொடு தகைக்குந் தன்மைய னல்லன் எழுத்தறி வில்லா ஏழை மாந்தரும் உள்ளம் பிணித்திடும் ஒண்மொழிச் சிருரும்

Page 40
அாவுதும் மலரே
கும்பல் கும்பலாய்க் கோதிலா முதுமகன் தன்னரு கடைந்து சார்ந்திட் டோகையோ உருண்மொழி பருகி அளவிலின் புறுவர் அதாஅன்று,
தனித்து மரநிழல் தங்கிடும் போதும் ஓங்கிடு தோட்டத் அலவிடும் போதும் விலங்கும் புள்ளும் விரும்பிமுற் பட்டுக் கொஞ்ச மேனும் அஞ்சா தவனுடைப் பாங்கர் வந்து பண்பொடு வதிந்திடும்; ஆன்றவிப் பெரியேசன் அமர்ந்து பருடியோ டின்புற் றிருக்கும் எழில் பெறு போதினின் பருடி மகளும் ஒமார் தன்னுடன் கழிபே ரன்பொடு சிறிது மகலா தொருங்கு கூடித் திரிந்தனன் மன்னுயிர்க் கினியன் மாண்புறு முதியனென்,
(8)
முதியோன் றன்னெடு பெரிதும் பயிலுறிஇ ஒமார் பலகலை ஒர்ந்தறிந் தனணுல் தாமுன் கண்ட வியப்புறு பொருட்களும்
முன் னியற்றிய தகைவுறு செயல்களும் ஒகை சான்ற வகையா லவற்குத் தெள்ளிதி அணர்த்தித் திருந்தக் கூறுவன்; ஆங்கவை யாவும் பாங்கா யோமர்ர் உளத்திற் புகுந்துயர் உணர்ச்சியூட் டினவால்; தன்மேல் மிகுந்த தளையுறு மன்பொடு பின்னமில் லாது பேணிப் போற்றி வந்திடும் வேளை வண்மைசே ரவனை இணையோ வுலகில் யாரு மில்லா

விந்தைமுதியோன் 65
தகைமையோ னென்று தானினந் தனனுல் : எனினும், V இத்ததைப் பெரியோன் முற்ற விழைந்திடும் வீண்செய லொன்று விழைந்தில ஞேமார், அஃதோ, மாளிதை நந்த வனத்துப் பரந்து மலிந்து கிடக்கும் மட்கலத் துண்டும் வனைந்த வோட்டின் உடைந்த துண்டும் ஒமார் கையான் ஒருங்கு சேர்ப்பித்து நந்த வனத்துள் நாடியோர் மூலையிற் கிடங்கு வெட்டிக் கீழே தாழ்ப்பன்: அன்னேன் பெருமைக் கதுதகா தென்றே ஒமா ரெண்ணினான் உள்ளத் துணர்ந்தே; அதனுல் உடைந்த வோடும் உடைந்தமட் கலனும் குனிந்த வண்ணம் சரிந்து சேர்ப்பதான் நாரி யுனேந்து நலிவுற் றுள்ளம் கிழவன் றணுது மடைமை யெண்ணிச் சீற்றங் கொள்ளுவன் சிற்சில வேளையின் எனினும்; முதியோன் முன்னுடைப் பெருமை யெண்ணியும் தன் மே லவற்குடை அன்பினை நினைந்தும் கணத்தின் வெகுளி கருதினன் காற்றிப் பெருத்திடு மன்பொடு பேணுவன் முதியன: அன்பிற் குரியோர் அருந்வை செய்யினும் நண்பொடு நோக்கல் நல்லோர் கடனுல் நண்பகல் வேளை நணுகிச் சேர்த்த துண்டு தம்மைத் தோண்டிக் குழியின்

Page 41
$6 தூவுதும் மலரே
அந்தி மாலை ஆரிருள் செறியத் தங்கையா னேதோ ஆங்கவைக் காற்றி மண்ணுன் மூடப் பணிப்பனெந் நாளும்; முதியோ னியற்றும் விதியா தென்ன ஒமா ரறியான் ஓங்கிடு மிருளான் உண்மை யாதென்னின் ஒளித்துநல் முதியோன் தன்வலக் கையாற் தகவொடு துண்டுகள் தம்மைத் தொட்டபின் தாழ்த்துமண் மூடக் குழியிற் போடுவன் போடுமவ் வேளை ஏதோ மாற்றம் இயலுறு மவைக்கு யாதோ வென்னப் போந்தநல் லிருளின் ஒமார் கண்டிலன் ஒர்ந்து ܐܝ யாவும், விந்தையாய் இருந்த தவற்கென்.
9
இவ்வகை நடந்து செவ்விதி னிகழ ஒமார் பதினே ழாண்டுமுற் றெய்தினன்; அத்தகை யானதும் மெய்த்தகை யிளையோன் வரைவினை செய்த திருவனை யாளைத் திரிப்பொலி காக்கும் ஏமீர் மகளைக் காணு மவாவொடு பேணிச் சிந்தனைக் கடலுள் மூழ்கிக் களித்திடும் போது கழிபே ரன்பினன் கருதுநல் முதியோன் உடைந்த மட்கல ஒட்டுத் துண்டுகள் எண்ணிலா வோர்நாள் மண்ணிற் ருழ்த்தபின் ஓங்கிடு கங்குல் வேளையி னுேமார் தன்னரு கடைந்து பின்னமில் லன்போ *டின்றியான் கைரோ ஏர்நகர் விடுத்து வேருேர் பதிக்கு வேண்டினன் போக

விந்தைமுதியோன் 6.
விரும்பி யெனக்கு விடைநீ தருக அசால்புடை மைந்த தீதிலா வோமார்” என்று பரிவோ டெடுத்து மொழிந்தபின் சென்றிடு மவனை நன்றுகு மொழியான் தடுத்தவண் டங்கிடத் தொடுத்து மொழிந்து பெரிதும் வேண்டியும் பேரா தேகினன்; அதஞல், முதியோன் றன்னை முன்னித் தடுத்தல் இனியே லாதென நனியவன் கண்டதும் வழிநடை தனக்கு வேண்டிடு நற்பணம் பணிவுடை யோமார் பன்னிக் கொடுத்தனன்; *அன்புடைக் குழந்தாய் அமர்ந்து நீ கேண்மோ துன்றிடு முலகினிற் துகளுறு மோடும் :உடைமட் கலத்தின் ஒருவிடு துண்டும். r இருந்திடு வரைக்கும் என்றனக் கேன்பணம்" என்று மறுத்தே எடுத்துப் பணத்தை நன்றியுள் ளோமார் நலம்பெறு கையினின் வைத்தவண் நின்று விரைந்து போயினன் மானநற் குணத்தோன் மாண்புடைப் பெரியோன் அதனல், ஒமார் அடைந்திடும் ஒகையோ பெரிதும் குறைந்து போயது கோதிலா னுள்ளம் வருந்தி மிகவும் வாட்டங் கொண்டதென்
(10) م۔ பின்னமில் முதியோன் பெயர்ந்து போன்பின் திங்கள் சிலவுட் சீர்gெறு பருடிக் கருதுயர் பலப்பல அடைந்து வந்தன; அந்நாள்,

Page 42
68 தூவுதும் மலரே
பாரசீ கத்துப் படருமோர் போரான் அவனெடு வணிகம் ஆற்றிய வணிகர் பல்லோர் தம்முடைப் பருதொழி லொழிந்ததால் அதாஅன்று நைலென் நதிக்கு நலிந்து கட்டிய அணையொன்று முறித்திட் டாறு பாய்ந்து பலவிடர் விளைத்தது பகர்தே யத்தே; அதனுல், கெட்டிடு தொழிலைப் பற்றிக் காத்திட மிகுபொரு னிறைத்தனன் மேவிநற் பருடி இருந்திடு தன்பொருள் யாவும் விட்டு வணிகத் தொழிலை நணுகி யாற்றியும் தொலைந்து கெட்டுக் குறைந்து போயது: பின்னர், நண்ணிய துன்பம் எண்ணி யேக்குற்றுப் பருடி பிணியாற் பாயிற் படுத்து நிலமேல் வாழ்வு நீத்தனன் விரைவில், இவ்வண நடத்தலும் ஒமா ரிரங்கி வறிய ஞகி வளர்பனங் குறைந்து சிறிது மின்றித் துன்படைந் தனஞல் . தாயரு மவனுந் தளர்பசி வாட்டக் கொண்ட வணிகலக் குவையும் பட்டும் விற்று விற்று வாழ்நாள் கழித்தனர்; பெருத்திடு செல்வக் களிப்புடை மாந்தர் உருத்திடு வறுமை ஊன்றிவந் திட்டாற் சிறுத்திடு வாழ்க்கை சேர்தலு மியல்பென்.
(11) பலநாள் வறுமைப் படர்துய ருழத்தல் நலமல வென்றுதான் நாடியுய்த் துணர்ந்து

விந்தைமுதியோன் 39
மாளிகை தன்னுள் மருவியே கிடந்த பொருள்சிறி தெடுத்துப் போந்தவை விற்றுத் திரிப்பொலி யாளும் ஏமீர் தன்னுடை அரமனை யடைந்தே ஆங்க ணவனைக் A. கண்டுதன் றுயரைக் களைந்திடு நோக்கொடு பணந்தனைக் கொண்டு பாங்காய் யொட்டகம் ஒன்றை வாங்கி ஒர்ந்திடு பாலை வனத்தைக் கடந்து வளம்பெறச் செல்லத் துணிந்தன னேமார் துயர்தீர் பொருட்டால்; ஆங்ங்னம், மேவியே பலநாள் தாவியே போகி நீண்ட வழியின் மூண்ட பசியொடு மிகுந்திடு களையுடன் மிளிர்ந்திடு திரிப்பொலி நாடதைக் காக்கும் ஏமீர் மாளிகை வாயி லாங்கண் வந்துற் றனணுல்; ஆங்கு காவ லாற்றிடு வீரனை *அரமனை வாயி லருங்காப் பாள! ஒமா ரென்றே எந்றண் யழைப்பர், திரிப்பொலி காக்கும் திகழ்பெரு மேமீர் மன்னவன் மகளை வரைந்தவன் யானே! அன்னுேற் காண அரிதாய் விழைந்து வந்தன ளுகையின் வழியதை யெனக்கு விடுதியுட் போக எனத்தான் கேட்டணன்; சடுதியின் வீரன் கதவினை யடைத்துக் கனலெழு கோபக் கண்ணுெடு நோக்கி *ஏமீர் மன்னன் எங்கள் கோமகன் சில்பணி யாற்றும் சிறியோன் மகளும் நின்றனைக் காணுதல் எம்முறை பேதாய் கருதிவீ க்ணிங்கு காலங் கழியேல்,

Page 43
70 தூவுதும் மலரே
சென்றிடு மூடா நின்றனை வந்திடின் மாளிகைக் குள்ளே மருவிட விடாமல் ஏசித் துரத்த ஏமீர் பணித்தனன்", என்று கூறி ஏசி விரட்டினன் ; மன்னிடு நற்குணம் துன்னிடு மோமார் பன்னிடு மேமீர் தன்னுடைச் செய்கை நினைந்துளம் நொந்து நீடுய ருற்றனன் தான்வரை காதலி அரணுள் ளிருக்கவும் தன்னை யாங்கண் போக விடாது தடுத்த தீச்செயல் கொடிதென வெண்ணி மான வெந்தீ மேவிட வுள்ளம் மாளிகைக் குள்ளினிப் போதல் தகாதென ஒட்டகந் திருப்பி வனத்துக் கூடா வழிவரு களையும் பசியு நோக்கான் அகன்றனன் விரைவில் அருந்துய ரோடென்,
(12)
திரைத்த மேனியள் தீண்டரு வருக்கும் கந்தை யுடையினள் காரெனக் கரியோள் எவ்வகை மாந்தரும் இயல்புட னிரங்கும் வறுமைத் தோற்ற முதியோ ளொருத்தி முக்கா டிட்டு மூடிய முகத்துடன் அற்றை நடுநிசி அரமனைப் புறத்து நின்றுமே வந்து நேருறு வாயிலிற் கண்டிடு மாந்தரைக் கருத்தொடு நோக்கி ஈங்குமுன் வந்த இளையோன் யாங்குக் குறித்துப் போயினன் கோதிலீர் சொன்மின்" என்று வினவிக் கொண்டு திரிந்தனள் ;
அழுக்குப் படிந்து நிறைந்திடு மேனி

விந்தைமுதியோன் 7盘
நோக்கினர் வெறுத்து நீங்கி யகன்று போயினர் மாற்றம் பேசா தொழிந்து அதாஅன்று, பெருத்திடு வறுமைப் பிணியின ளாயினும் சிறுகச் சில்பணம் சேர்த்துளள் போலும்; வந்திடு மிளையோன் போந்திடு திசையை அரிதி லறிந்துதான் அத்திசை நோக்கி விலைக்கோ ரொட்டகம் விரைந்து வாங்கிப் பேரிந் தொருசில போட்டு முடிச்சின் நரைமூ தாட்டி நாடிச் சென்றனள் இளையோன் முன்னர் ஏகிய திசைக்கு வழிப்போந் துன்பும் வன்பசித் துயரும் கெழுமி வருத்திட விழுமியோ ஞேமார் நெடிது தூரம் கடிதாய்ப் போக முடியாக் களையான் முன்னிடு பாலை வனப்பெரும் பரப்பின் வறிது வளர்ந்திடும் சோலை யொன்றிற் சோர்ந்து தங்கினன்; விரைவா யொட்டகம் விழைந்து செலுத்தி வறியநல் முதியோள் வந்தன ளாங்குக் கண்டன ளோமார் கதியிலா நிலையைப் பேசியான் வருந்தும் பான்மைசே ரினையோய் பேணியான் சிற்சில பேரீந்துக்கனி வைத்துளேன் முடிச்சின் வேண்டுமே லதனை நினக்கியான் கொடுப்பன் நேர்பசி நீக்குக, ஏழையான் னின்றனக் கீய்ந்தன ளென்னும் பிழைதனைப் பொறுத்துப் பெருந்தகா புண்மின்” என்று கூறி ஏர்மூ தாட்டி பேரிந் தவற்குப் பேணிக் கொடுத்தனள், பசிதன் களையாற் பகரா தொன்றுமி

Page 44
72 துாவுதும் மலரே
களிப்பொடு முதியோள் கருத்துக் கிசைந்தே உண்டன னவட்கு நன்றிபா ராட்டி : அரிய காலத் தாற்றிடு முதவி சிறிதே யாயினும் சேர்கடல் சூழும் பெரிய வுலகினும் பெரிதென் பொன்மொழி உண்மை யறிந்தனன் ஒமார் தானென்
(13)
பேரீந் துண்டபின் பெறுகளை நீங்கி ஆழ்ந்த சிந்தனையின் அமிழ்ந்தன னகி ஒமா ரிருந்திட ஒருநன் முதியோள் *பாலை வனத்துட் படர்ந்திடு மிளையோய், கைரோ நகர்க்கும் போதியோ சொல்” ல்ென் ஆமா மென்றே அறைந்தன ஞேமார், *ஆங்கட் செல்லின் அருவழி போகும் யானு நின்னுடன் ஏகல் சாலுமோ, கைரோ நகரின் மேவியே வாழ்ந்திடும் என்றன் கணவனை ஏகுவன் காணி, என்று மொழிதலும் எழிலுறு முதியோள், *அங்ங்ன மாகுக அன்புடை முதியோய்”, என்விடை யிறுத்தான் ஏருறு மோமார், இத்தகை யிருவரும் அத்தம் செல்லலுமீ கருதுநல் முதியோள் கவினெடு கதைபல நகைச்சுவை ததும்ப நயமொடு பேசி s இன்பொடு வழித்துயர் இனிதுபோக் கினின்கர்ன் அவடன் மொழியால் அளியுட னுேமார் தன்றுயர் மறந்து தகைசால் களியேர் டொட்டகந் தன்னை ஒட்டிப் போகுழி தானுயர் பருடி தன்மக ஞயதும்

விந்தைமுதியோன் 73
தன்பெருஞ் செல்வ மன்பெரு வாழ்வும் திரிப்பொலி யரசன் திருவணு டன்னை இளமையின் வரைந்தே ஏர்மகிழ் வுற்றதும் Lurryté கத்துப் படர்பெரும் போரான் தந்தை பருடி தன்னுடை வீழ்வும் திருந்தனும் தனித்துயருழந்ததும் தன்றுயர் சிறிது தணித்தற் பொருட்டுத் திரிப்பொலி திகழும் செல்வக் கோமகன் மாமனர் வீடு நாடிப் போயதும் அவன்ற ஞணணையான் அமர்ந்திடு வாயில் நின்று காத்திடும் நிகரில் விரன் தன்னைத் துரத்திப் பன்னிய மொழியும் மொழிந்தனன் யாவும் முதியோ ஞக்கே; அம்மொழி கேட்டுச் செம்மைசேர் a Guardt "திரிப்பொலி வந்துநீ சேர்ந்த செய்தியும் அரசன் நின்றனக் காற்றிய ւյ6ծroւՕպմ, நின்றன் காதலி நிருபன் புதல்வி தானறிந் தனளோ தகவுறு குணத்தோய்" என்று விஞயின ளன்பொடு முதியோள் *விடையவ் வினக்கு விரும்பியே மொழிய இயலா தென்றனக் கேர்பெறு முதியோய் நன்னுத லாட்டி நங்கையென் காதலி அரமனை தன்னுளே அமர்ந்து தங்குவள்: ஆதலின், அரச ஞற்றிய அருநவை யாவும் 曾 அவட்குச் சிறிதும் அறிந்திட முடியா? *ன்று நவின்றனன் எழில்பெறு மோமார், *அரசன் றிருமகள் பெருகிடு மழகியோ கின்றனக் கவள்மேற் றுன்றுமெய்க் காதல்

Page 45
74 தூவுதும் மலரே
உண்டோ சொல்லுதி ஒளிபெரு மிளையோய்” என்றவள் வினவலும் என்றனக் கவள்மேல் பொருந்திடு காதல் புகன்றிட முடியா, மேவுமந் நங்கை மேலே யல்லால் தாவுமென் னுள்ளம் தகவொடு செல்லா நனவி லன்றிக் கனவி லேனும் மங்கையே யல்லான் மற்றேர் கன்னிகை என்னுளந் தன்னின் இடம்பெற வில்லை; அதாஅன்று, காரிகை யவடன் காசறு மழகு மேதினி மீதின் விளம்பிடப் போமோ, வானர மகளிருந் தானவட் கிணையிலை எனப்பன் மாந்தர் எனக்கு மொழிந்தனர் அன்னவட் காண என்னுள மெய்தும் பாடோ விள்ளப் படுமோ முதியோய், என்னுளம் குடிபுகும் ஏந்திழை தன்னை மறத்தல் சாலுமோ மாபெருந் தேவி" என்று விளம்பி ஏங்கின ஞேமார் ; இன்னணம் பேசிப் பன்னெடுந் தூரம் போந்தபின் கைரோ போஒ யடைந்து வளமிகு மோமார் மாளிகை வந்ததும், *என்வழிக் கருந்துணை ஆற்றிய செல்வீ, ஈதே யெம்முடைத் திருவணை மாளிகை ஆங்கண், நல்லோ ளென்ஞய் நலமுட னுன்னைப் பல்லாற் ருனும் பண்பொடு காப்பள், ஆயினு நின்றனக் களிக்கவுணுப்பொருள் தானிலை பெருகத் தாவிலா வீட்டுள் ஆயினும்

விந்தை முதியோன் 7安
ஏதோ வழியால் உன்னைக் காப்போம், நகர்க்குப் புதிய மாது நீ யென்று வருந்தா திருத்தி வள்ளுறு முதியோய், நின்றன் கணவனை நேரினி காணும் அளவு மீங்கே அன்பொடு தங்கிடு வேண்டிய வுதவி ஈண்டியாஞ் செய்ம்" மென ஒமா ரியம்பிட ஒளிபெறு புன்னகை ஒன்று செய்தனள் ஒதுநன் முதியோள்; ஆங்கண் வந்த அருமகன் றன்னை வீங்கிய வன்புடன் விழுமியோ னன்னை ஆர்வ மிக்குறீஇ அணைத்துக் களித்தனன், வழிப்போந் துணையாய் வந்த கிழவியை வான் பெரு மில்லின் வரவேற் றதன்பின் இருவர் தமக்கு மருவிய வழிக்களை ஆற்றநல் லுணவை அட்டுதற் காக அடிசிற் சாலை நொடியிற் சென்றனன் முதியோள் தனையுங் கூட்டியென்
(14)
நாழிகை யொன்று கழிந்த பின்னை அடுக்களை நோக்கி அடிசி லயின்றிடச் சென்றன னேமார் சேர்தலு மரங்கே திகழ்பெரு மழகு செறியிள மங்கை ஒருத்தித் தன்னெடு பொருந்தித் தாயார் அழிநெஞ் சினளாய்க் கழிபே ரோகை நிரம்பிய மொழிகள் வரம்பில பேசி அன்பு நையுறும் அருமகிழ் வுடனே நிற்கக் கண்டனன் நிகரில் விளையோன் ; அடுக்களை புகுந்திடு மவன்றனை நோக்கி உவகைக் கண்ணிர் கலுளு முகத்துடன்

Page 46
குளிவுதும் மலரே
“மடவோய் குழந்தாய் ன்ன்னரு மகனே,
திடமுட னுன்னெடு சேர்ந்து வழிப் போத்த வறிய முதியோள் யாரெனத் தேரா திருந்தவுன் மடமை இருந்தவா றென்னே, அவளே யுன்மாட் டாருறு காதல் கொண்டிடு பொற்புடை அரசிளங் குமரி விளம்பிடு வறியோள் வேடத் துன்னெடு திரிப்பொலி நின்றும் சேர்ந்துதான் வந்த அப்பெரு மகளே அமர்ந்தென் னருகு நிற்கும் சிறுமி மைந்தநீ காண்க, -என்றே யோமார் அன்னை விளம்பினின்
ஆங்கு
போந்த செய்தி ஏந்திப் புகன்றிடின்
நிகரிலா வோமார் நேரில் லெழில்பெறும் ஆண்மையு மழகும் வண்மையு mgólatb
பலநாட் டோறும் பல்லோ ரேற்றக் கேட்டிருந் தனள்ாற் கேடில் LAéror ; அதாஅன்று, o திரிப்பொலி நோக்கிச் சேர்ந்திடு மோமார் அரமனை வாயில் அருகதின் வந்து நின்றிடும் போது ஒன்றியே கண்டனள் ; வந்தவ னேமார் என்ன வறிந்ததும் காதல் பெருகிக் கனன்றவ ளுள்ளம் கோதில் லவன்மேல் மோதிச் சென்றதால் : எனினும், வாயில் "வீரன் வழுத்திய மொழியை அறிந்த போதினில் அழுங்கிய மனத்துடன் திருவினை யிழந்து பெருதுய ரெய்தித் தயங்கிய வோமார் தன்னை மணக்க

விந்தைமுதியோன் ?富
இசையான் றந்தை என்ன வறிந்தனன்; அதனுல் திரிப்பொலி நின்றும் திரும்பிய வோமார் சென்று கைரோ சேர்வதன் முன்னே அன்னேன் றன்னெடு முன்னிச் சேறலே தக்க தென்ன மிக்க விரைவொடு மாளிகை தன்னுள் மருவுமோ ரறைபோய்ப் பட்டுடை யொன்றைச் சட்டெனக் கிழித்துக் கந்தை யென்னும் நிந்தை சேர அழுக்குப் புரள அப்பி யதனை அணிந்து கொண்டு நலிந்த வறிய முதியோள் போன்று கோலஞ் செய்து மாந்தர் சிறிதும் மதித்திடா வண்ணம் முகத்திற் கரிய மையைப் பூசிக் கண்டோர் யாரும் அண்டி வராது வெறுத்துப் போந்திடு வேடஞ் செய்தே மாளிகை நின்று மறைந்துபின் னேடி ஒமார் தன்னை ஓங்கிடு பாலை வனத்துட் தண்டு மருவிப் போயினள் இங்ங்ணம் செய்தி யாவும் நொய்தி னறிந்ததும் யாவரு மகிழ்ச்சி அடைந்தன ராங்கண் சிறிது நேரம் சென்றபின் பத்திமா ஒமார் தன்னை ஓரிடத் தழைத்துப் பிறிது வைத்துப் பேசிடு மிம்மொழி
தந்தையோ வெனக்கும் தகவுறு முனக்குமி ஓங்கிடு மனத்துக் கோம்படை செய்யான் நின்னெடு நிகழ்ந்த என்னுடன் போக்குச் செறிந்திடு வழியால் அறிந்திடு முன்னே

Page 47
*78 தூவுதும் மலரே
இருவேம் யாமும் பெருகிடு மணவினை விரைவி லாற்றல் வேண்டும் நல்லோய்? எனவவ ளியம்பலும் மனமகி ழோமார் மணவினை விரைந்து மகிழ்வோடாற்றினன் மேவிடு பத்திமா வேண்டிக் களிக்கவென்.
(15) திருமண முடித்து மகிழுறு நாளின் வறுமை நினைந்து வன்றுய ருற்று தகவுறு மாளிகை தன்னை விற்றுக் கைரோ நீங்கிக் கருதி யெவரும் அறிய முடியா அயலூ ரொன்றினின் வாழுதல் சால வளமுடைத் தென்றே அன்னை யோடும் அருமனை யோடும் தெள்ளிதி னெண்ணித் தீர்த்தன குேமார்; கடையோர் நாளிற் காதன் மாளிகை தன்னைச் சூழ்ந்து சார்ந்து வளர்ந்திடும் ஒளிருறு சோலை வனப்புப் பார்க்க மனையோ டன்னுடன் மாண்பொடு போயினன் பத்திமா தனக்குப் பாங்கொடு காட்டி "வறுமைசேர் முதியோன் ஒருவ னென்றன
ஒட்டுத் துண்டும் ஒர்ந்த மட்கலத் துண்டுஞ் சேர்த்துத் துகடீ ரிரவி பட்டுக் கங்குல் பரவிடு காலை இவ்விடத் தாழ்க்க ஏவின னங்காய் காணு யோடும் கலமு மீங்" கெனக் கிளந்து காலாற் கிளறிடும் போது பொற்றுண் டொன்று திட்டையி னின்று பறக்கக் கண்டனன் பண்புடைக் குணத்தோன் அதனுல், வியந்த வோமார் நயந்தொரு பாரை

விந்தைமுதியோன் g
கொண்டு மண்ணைத் தோண்டினன் விரைந்தே ஆங்கண், பொன்ளுே டுகளும் பொற்கலத் துண்டும் குவைகுவை யாகக் குவிந்து கிடந்தன; அப்பொழு தோமார் அருநல் முதியோன் :உயிரில் பொருளை ஒருவித் தளுது
வலக்கை கொண்டு தொடாத காரணம் இஃதே போலுமென் றியம்ப மனைவிக் கவளு மத்தகை அருவியப் புற்று “முதியோன் றன்னுடை ததிபெறு வலக்கை
பொற்கல மாக எக்கல மாற்றிடும் பொருவில் மந்திரக் கையது போலும்" என்று காரிகை நன்கு மொழிந்தனள் ஒடுங் கலமும் ஒருங்கு சேர்த்தபின் தந்தை கச்சியார் பருடி தன்னினும் திருமலி செல்வனுய்த் திகழ்ந்தன குேமார் அதனல், கைரோ வாழும் பெருவறி யோர்க்கும் தந்தை பருடி தருபொருள் போலக் கொடுத்து மகிழ்ந்தனன் கோதறு மோமார் அதாஅன்று திரிப்பொலி தேசச் சிறப்புடை யேமிர் *தக்க வோமார் தன்னைப் போலச்
செல்வ மருகனைச் சேரயா னிம்பர் என்னநல் லறமோ இயற்றின னறியேன்: என்று சொல்லி ஏத்தி வழுத்தினன் சீருடை யோமார் ஏருடைப் புகழையென்.
முற்றும்

Page 48
4. பாணர் புரவலன்
*ஆனிரை காவல! அன்புடைக் கோவல என்னுடைக் காதற் கிசைந்தவின் கணவ என்னைநீ பிரிந்தே ஏகிய நாண்முதல் மன்ன வென்றனக்கு மாறத் துயரதைச் செய்திடுஞ் செய்திகள் செப்புத லரிதால் எய்திடு மிடுக்கண் என்னவோ வறியேன் ஆனின் கன்றுகள் அமர்ந்துபா லுண்ணு தேனிற் சொரிந்த தீம்புனற் புல்லை உண்ண நோக்கா துளம் பிறிதாகி ஊதிடும் வேய்ங்குழல் ஓங்குமின் கானம் காதினி லின்புறக் கவின்பரு காதே எண்ணம் பலவோ டினைவன வாகிப் பண்ணிடும் Lשנ{-tניופ பண்பது போல . அசைதலு மிலவாய் அரற்றலு மிலவாய் இன்ன லெய்தி ஏசற வடைந்து அன்னுறு மானிரை துயரடைந் தனவால்; அன்றியும்,
வானமீமிசை வளியயராது கனலிதன்னுடைக் கதிர்பரவாது தாழிதன்னிடைத் தயிருறையாது மோரதன்மிசை நெய்திரளாது கழிமே லாம்பல் கவினுற மலரா அளிதே, ணுரதா தயர்ந்துசோர் வுற்றன பொய்கைத் தடங்களிற் பொற்புறு தாமரை வெய்துற் றலர்ந்து விரைமலர் விரியா காலை வேளையிற் கழனிதன் பக்கல் சாலவே செருக்கித் தாஞ்சிற கலர்த்திக்

பாணர் புரவலன் 8.
கோலவெண் மணல்மேற் கூத்தினி தியற்றிப் பெடையுடன் காதல் பேணிய்ே காட்டும் நடையுடை யின்மயில் நட்ட நவிலா மன்னிள்ங் காபயில் மாங்குயிற் கூட்டம் இன்னிசைக் கீதம் இயலா தடங்கின; அதனுல் கடிதல் மந்து விதிர்விதிர்ப் புற்று வந்திடும் இடர்தான் யாதென் றறியா தேங்க லுற்றே யிறைவனைப் பரவிக் காயும் இலையும் கதலியின் கனியுங் காசுமோர் பணமும் கையில் எடுத்துச் சோதிடங் கூறு மூதாட்டி தன்னை மாசில் மனத்துடன் வணங்கி யடைந்தே *அம்மயா னடைந்த அழிதுய ரீதென துன்னுதுர்க் குறிகள் தொடர்ந்துதோன்றினவால்; காமவே ளொத்த கார்வண் ணழகன் நேமமா யுள்ளம் கவர்ந்தவென் கள்வன் ஆண்டையி னேவலில் அடைந்தனன் விவிலை இன்ன லேதவற் கெய்துமோ வறியேன் ஆகையா லுன்றன் ஆய்தனைப் பரசி ஈங்கியா னுற்ற தீங்கினை நோக்கி நிமித்த காரணம் விளம்புதிர் தாயே!” என்றுயா னரற்றலும் ஏர்மூ தாட்டி ஆய்தனைப் போற்றி அலர்மலர் தூவித் , தூயநற் றீபம் தேவியாட் கேற்றிக் குறைதனைப் போக்க நிறைகுடம் வைத்துப் பணிவுடன் மடைபல பண்புறப் பரப்பி
7

Page 49
82 தூவுதும் மலரே
வேப்பங் குழையும் வெள்ளிப் பிரம்பும் கைதனிற் கொண்டு வெறியாட் டயர்ந்து முன்வரும் செய்திகள் முறையுடன் சொல்லுவாள்? குழந்தாய் நினது கொழுனனுக் குறுதுயர் யாதுமீங் குற்றில இடுக்கண் ணடையேல் ஆணு லந்தோ! அழிதுய ரொன்று தோற்றப் படுமெனத் தோன்றுமா லெனக்கே 3 எனினும், Κ சாந்திகள் செய்து குரவை யாடி
ஆயர்தங் கோனை அமல வண்ணனைக் கூரிய நல்லிதழ்க் கமலக் கண்ணனைக் குவிமுலை யாய்ச்சியர் குரவை யயர்ந்தால் சாந்த மாகும் ஏந்திழா யிதுவென இன்னண மியற்றிக் குரவைதா ஞடியும் மன்னவ இவைதாம் மாறுத லடையா அன்றியும், காரிருள் படர்ந்த கங்குல் வேளையில் வந்து கேட்டான் மனையதின் புறத்தே ஊமூ மென்ன உரக்கக் கூவும் புளிமரக் கொம்பரிற் புக்கினி திருந்தே அளிதே யென்றே யரற்று மொழிபோல் நத்துக் கத்தி நித்தமுங் கவலும் கங்குல் தோறும் கண்டுயி லாது வருதுயர் காட்டி வருந்துவ போல ஆவோ! வென்றே யழுங்கி யழுங்கிச் சுடலைக் குருவி முகட்டினின் வீழும் வேலியின் புறத்தே காளியுங் கூளியுஞ் செத்த பிணத்தின் சிரத்தினைக் கொட்டாய்க்

பாணர் புரவலன் 83
கொட்டி முழக்கிக் கைகொட்டி யாடும்; ஈமக் காட்டில் எரிதரும் தீயைச் சுற்றி வளைந்து சுழன்றடு போது கூகூ வென்று கூவிடும் பேயின் நடுங்கிடு மோதை பிளந்திடும் நெஞ்சை ஏதோ எந்தமக் கெய்துறு தீங்குகள் ஈதே என்னை வாட்டி வருத்துமால் :
பயிலெம் குடில் மேற் கிளைகள் பரப்பிக் குஞ்சு புறங்காக்கும் தண்ணளிப் புறவுபோல் ‘வெயில் மழை யாலுறும் துயரதை யகற்றிக் குருவிக் கூட்டம் கிளைகளிற் செறிந்தே இன்புறத் துயிலும் ஏம விருப்பிடம் வெயிலால் வாடி வருந்திவந் துறையும் ஆனினந் தனக்கோர் ஒப்பி லொதுங்கிடம் அத்தகை சான்ற அளியுடை மரத்தை
வன்கணன் பாவி வன்னெஞ் சுடையோன் புன்ருெழில் தன்னைப் புரிவதில் மகிழ்வோன் கருமண் சட்டிபோல் கன்னங் கறுத்தோன் கள்ளினை மாந்திய கசடர்தங் கண்போல் செக்கச் சிவந்த சினமுடைக் கண்ணினன் ஒள்வாள் போல ஒளிர்வெவ் வாயும் கரேலெனக் கறுத்த காழுடைப் பிடியும் உடைவெங் கோடரி ஒன்றினைக் கொணர்தெம் அந்தோ! வரிய மரமதை யடியில் வெட்டேல் வெட்டேல் ஏன்றுயா னழுது பரிந்து வேண்டவும் பாவி கேளாது வெட்டி முரித்து வீழ்த்திவிட் டனனே:

Page 50
84 துாவுதும் மலரே
அதஞ லெம்முடை யரணுங் குரம்பையும் பண்டைய நிலைபோய் பாழடைந் தனவே; எளியேம் யாமும் ஏதில ராகிப் புகலிட மின்றிப் போம்வழி யறியேம் இத்தகைக் கனவுங் கண்டேன் காதல எத்தகை யிடுக்கண் இயற்றுமோ வறியேன் இவ்வணங் காதலி யியம்பக் கேட்டு மலைவுறு மாயன் மாற்றம துரைப்பான் கற்புக் கருங்கலம் காதலின் கனியே எற்கு மத்தகைத் துர்க்குறி தோன்றின விண்ணினை யளாவும் மலையதன் மேலே கண்ணினைக் கவரும் வேங்கைதன் கிளையிற் தூங்கு மிருஅலின் தேன்பிழிந் தெடுத்துச் செந்தினை மாவைச் சேர்த்துக் குழப்பிக் கித்துட் கள்ளுடன் நித்தலு முண்டு வேங்கை யுதிர்த்த பொடிசே ரமளியில் வெறியுடன் படுத்து வளர்துயி லயர்ந்து மலையே றலக்கண் மாண்புடன் தீர்த்துப் பொன்மக ரந்தப் புழுதியைப் பூசி மின்னு மேனியர் மன்னு குறிஞ்சிக் கன்ன டதனை நீத்தியான் வருகையில் கண்டதுர்க் குறிகள் கணக்கில கண்ணே! கதிரை வேலன் கழலடி வணங்கக் கற்றைச் சடையினர் காவி யுடையினர் பொக்கணப் பையர் பூசுவெண் ணீற்றினர் எடுத்த கோலர் இளைத்த மெய்யர் என்முன் னெதிரே யிருங்கூட் டமதாய் வருதலைக் கண்டே னிதோர் துர்க்குறி

பாணர் புரவலன் 85
எட்டிய காலை எடுக்கு முன்னே
கிட்டியோர் சாரை குறுக்கே நகர்ந்தது மொட்டைத் தலையன் முன்னின் றனனே பின்னுமோர் பார்ப்பான் பின்னற் குடுமியன் என்வழி முன்னே எதிர்த்தன னந்தோ! கன்மா நதியில் நீர்முழுக் காட விரித்த சடையள் வெறுங்குடக் கையள் ஒருத்தி தன்னை அந்தோ! கண்டனன் ! அன்றியும், - வானத்தில் வெள்ளி வளம்புடை பெயர்ந்து செந்தழல் நிறம்போல் எரிந்துகீழ் வீழ்ந்தது இதனுல், - ஏதோ தீது வருமென் றெண்ணி இனைந்து வருந்தி ஏக்க மடைந்து வந்தனன் விரைந்து வாழ்பதி யடைந்தேன்; ஈங்கோ தீங்கு யாதும் இல்லையே யாதோ விடுக்கண் யாரோ வடைந்தார் ஏதோ வந்தது இன்னிழா யறியேன் ; எனினும், S. வாராய் மணியே தேர்வோ மீதைப் பாலை முனையின் பக்கல்தானடைந்தே என்றுதான் பேசி யிருவரு மொருங்கே
கைதனிற் கொண்ட கழியுடன் விரைந்தனர் ஊரின் புறத்தே ஒருங்கே யடைந்தார், ஆங்குளார், யாதும் பேசார் யாவையும் விளம்பார் 9 தீதும் முரையார் நன்றும் உரையார் அசைவிலாப் பாவைபோல் அடங்கிவெ 33
துயிர்த்தே

Page 51
s6 தூவுதும் மலரே
ஆழ்ந்த சிந்தையர் தாழ்ந்த முகத்தினர் வீழ்ந்த தலையினர் போழ்ந்த வாயினர் திசைதிசை தோறும் திகைத்து நின்றனரே. யாதோ வீங்கென் நடந்த செய்தியென் றின்னிசை மொழியாள் முன்னிக் கேட்டலும், யாது முரையார் யாவருஞ் சொல்லார்; ஈறதில், ஆங்கோர் நாணு அமைவுறப் பரிந்து குழந்தா! யின்று கோதில் செல்வர் 1 குழந்தைவுள் ளத்தர்! நனிபல கலத்தர்!. ஏதிலர் தமக்கு ஈறில் தண்ணளி ! வரையா தீயும் வான்புரை வண்கை ! தீதில் நெஞ்சு துளக்கறு மாண்மை! மாசில் பல்கலை மாண வறிந்தோன் தூசி லுள்ளம் தூய்மைக் கரணம்! தன்னுயிர் போல மன்னுயிர் காக்கும் எங்கள் வேந்தன் இருநில முடையான் ! பருத்தித் துறையெனும் பழம்பதி யுடையான் தரும லிங்கத் தகைப்பெருங் குரிசில்; அருமறை மட்டக் களப்புமா நகரில் சடுதியி லிறைவன் தாளடைந் தனணுல்” என்றசொற் கேட்டலும் இன்னிழை மயங்கி அடியற்ற மரம்போல் அலறிவீழ்ந் தனளே *எந்தாய் செல்வ 1 எமைவளர்த் தோனே : வந்த விடரதை வாங்குநற் குரிசில் : எங்க ளாண்டே எந்தமை யுடையோய் ! நெருநனின் னிரையினை நேருடன் பார்த்துப் பெருமகிழ் வடைந்து பெயர்ந்தனை யன்றே1.

பாணர் புரவலன் 87
இன்று நிற் காணேம் இறையடி சேர்ந்தனை: அந்தோ வாழ்வின் நிலைதா னிதோ? கழிந்தது மன்னே 1 கழிந்ததெம் நிதியே!
கழிந்தது மன்னே! கழிந்தது தண்ணளி அடையுமெம் மிடர்களைக் களையும் மன்னே! பெருஞ் சோற்று நல்பத மளிக்கும் மன்னே! பெருநிதி யெல்லாம் பேணிக் கொணர்ந்தெமக் கருளுட னியும் அறக்கடல் மன்னே ! பாத்து ணளிக்கும் பண்பினன் மன்னே! பிணக்கின்றி வாழ்கெனப் பேசுவன் மன்னே! பரிசிலர் வெறுக்கை பண்டிதன் மன்னே ! பாணர் புரவலன் பண்புளன் மன்னே! வறியோ ரென்றும் பெரியே ரென்றும் வேறுபா டறியாது நோக்குவன் மன்னே! நன்மையே யன்றித் தீமை யறியா மேற்கோள் தழி இய வேளவன் மன்னே ! தரும லிங்கத் தண்மதிப் புரவலன் மின்னுது முழங்காது வெள்ளிடி யிடித்தெனச் சென்ருெழித் தனனினிச் செல்சா ரில்லை யாங்குச் செல்வோம் யாரிடம் புகுவோம் ஆங்கவன் மனையினை யடைந்தெம் அல்லலெவ் வாறினி யறைகுவம் யாமே?.
முற்றிற்று.

Page 52
  

Page 53
90 தூவுதும் மலரே
(4) அம்மையன் கந்தனெனு மவர்தலைவன் பேரை அய்யய்யோ கேட்டாலே ஆங்குள்ள மக்கள் நெஞ்சமிக நடுநடுங்கி நெட்டுயிர்த்து நிற்பார் நேரில்லை இவராற்றும் கொடுமைகள் நினைக்கின்.
(5) திண்மையொடு நடுநிசியிற் றீவட்டி ஏந்தி சேர்ந்துபெருங் கூட்டமாய்க் கிராமங்கள் சென்று பண்ணிமிகப் பணம்படைத்தோர் இல்லங்கள்
சார்ந்து
பயமின்றி வீட்டாரைத் துயிலா லெழுப்பி
(6) முற்றத்தில் உரலொன்றை நிமிர்த்தியே வைத்து மூடியே ஆங்கதை வெண்சீலைத் துண்டால்
போற்றித்தம் தலைவனை அதன்மேல் இருத்திப் புகல்வீட்டுக் காரனை அவன்முன் விடுப்பார்;
(7) உள்வீட்டில் உள்ள பெருந் திரவியங்க ளனைத்தும் ஒழியாதே எங்கென்று பயமுறுத்திக் கேட்பார் வன்பொடவன் கூருது பிடிவாதம் பண்ணின் மூடியே கைதனில் நெய்ச்சீலை எரிப்பர்.
(8) இன்னலதைத் தாங்காது செப்பிடுமவ் வேளை இல்லத்தி னுட்சென்று பொருள்களை வவ்வி பின்னமிலாத் தம்பாழி மகிழ்வுடனே சென்று பிரித்தே எடுத்திடுவர் பேதமதில் லாதே.

தீவெட்டிக் கள்ளர் 9.
பருத்தித் துறையை மருவுமோ ரூரின் விதானையார் அங்கு வாங்கிச் சேர்த்த திறைப்பணந் தன்னை நிறைத்துக் கொண்டு கச்சேரி தன்னிற் கட்ட யாழ்ப்பாணம் போந்திட வெண்ணிப் புகலரு காளைகள் பூட்டிய வண்டியிற் புறப்பட் டனர்காண்: நாட்டு நடப்புள்ள நவிலரும் கெடியர் ஒர்ந்து மக்களை அடக்கி யொடுக்கி அரசுக் கடங்கி அமைதியாய் வாழ வைத்திடும் பெரிய வெள்ளைய ரன்பர் அமைத்திடு மரிய அரசினர் தொண்டால் சாற்றிடு பலப்பல சன்மானம் பெற்ற குலமுறை வந்த கோதில் சீமான் கோடி பொருளைத் தேடிய செல்வர் வழியிற் றெருவில் மாந்தர் கண்டால் தோளி லுள்ள சால்வை நெகிழ்த்திக் குனிந்து பலரும் கும்பிடும் கோமான் அவரோ, பணத்தின் மூட்டையை வண்டியி லேற்றி வளமொடு மெத்தையில் வாகா யிருக்க வண்டிக் காரன் வண்டியைத் தட்டி விட்டுக் கொண்டு வேகம தாக வந்து வல்லை வெளியைச் சேர்ந்தனன் விதானை வண்டியை வழியிலே பார்த்தோர் யாவரும் விலகி வணங்கிச் சென்றனர்" நேரமும் இருண்டு நள்ளிரா வாயது பறுவம் வந்து மறுநா ளாகையின் வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல்

Page 54
*2 துாவுதும் மலரே
வானத் திருந்து வளம்பெறு வெண்மதி வண்மையாய் விளங்கி வனப்பொடு நின்றதால் ஒருசில வண்டியைத் தவிரத் தெருவின் மாந்தர்தம் போக்கு வரத்தோ இல்லை பார்த்தவிட மெங்கும் பரவி நிற்கும் நிலாவின் வெளிச்சம் நெஞ்சைக் கவரும் முள்ளிப் புதரில் உள்ள பறவைகள் வாயை அடைத்து வதிந்து தூங்கின சிற்சில வேளையில் கோட்டான் கத்திடும் இவற்றை யன்றி வேருெரு ஒலியும் அங்கே இல்லை அமைதியே எங்கும் வண்டிக் குள்ளே வளமாய்ப் படுத்து *விசன மின்றி விதானையார் தூங்கினர்
அரைநித் திரையில் வண்டிக் காரன் ஆசனத் திருந்து அசைந்த வண்ணம் காளைகள் தம்மை இடைக்கிடை உரப்பினன் வல்லை தடுவே வண்டி வந்ததும் சீழ்க்கை யடிக்குமோர் சத்தம் ஒல்லென -வழியரு கிருந்து வந்ததா லாங்கண்
அப்போஒழ்து வானொடு தண்டு கையிலே தாங்கிய கள்ளர் கூட்டம் கடிதினில் விரைந்து வண்டியை வந்து மறித்துச் சூழ்ந்தது *வண்டிக் காரன் தூக்கங் கலைந்து
பருமர அற்றுப் படுத்துத் தூங்கும் விதானையார் தமிமை விரைவில் எழுப்பினன் *விழித்தே எழுதலும் விதானையார் தம்முடைப் ெேபால்லை எடுத்துப் புகலுவார் உரமாய்

தீவெட்டிக் கள்ளர் 93.
*யாரடா யீங்கு வழிமறித் திடுபவர் அரசினர் தெருவென் றறிதிரோ நீவிரி சட்டென நீவிர் விட்டு நீங்கி ஒடிச் சென்று போகாது விடின் என்ன நடக்கும் என்று தெரியுமோ பொல்லின் வல்லமை ஒல்லென அறிவீர் கோட்டில் வழக்குத் தொடர்ந்து நும்மை ஆறு மாதம் அடைப்பன் சிறையினில் இவ்வாறு விதானை இரைந்தே செப்பலும் கந்தின் பாய்ந்து கையைத் திருகிப் பொல்லைப் பறித்துப் புகலுவன் சீறி *விதானையார் தன்னை வினயமாய்க் கொண்டு. எங்கள் இருப்பிடம் ஏகுவீர் விரைந்து வண்டிக் காரன் தன்னையும் ஆங்கு கொண்டு வருதிர் கோதிலா முறையில் பணத்தின் மூட்டையைப் பதனமாய் எடுத்துக் கொணர்ந்து சேர்ப்பீர் குகையின் அருகில் அதனைக் கேட்டே அங்கம் நடுங்கி விதானை யாரும் விளம்புறு வண்டிக் காரனும் நின்று கதிகலங் கினரே. கள்ளர் பாடியில் கந்தனும் வந்து கவினுறு மாசனம் ஒன்றிற்கம் பீரமாய் அமர்ந்திருந் தனனல் அரசனைப் போன்றே விதானை தன்னை விரைவிலே யாங்கு கொணர்ந்தே அவன்றன் கொலுமுன் விடுத்தனர் பணமூட்டை தன்னைப் பார்த்த கந்தனும் விதானை தன்னை விழித்து நோக்கி "இப்பண மேது யாங்குநீர் இதனை

Page 55
94 தூவுதும் மலரே
வண்டியில் ஏற்றி வன்றுயர்ப் பட்டுக் கொண்டு செல்வீர் கோதிலீர் கூறுதிர்" என்று கந்தன் எழுப்ப விஞவை விதானையார் தானும் விளம்புவர் சினந்தே *கொள்ளை யடிக்கும் கொடுந்தொழி லாள!
நாட்டின் சட்ட நடத்தை யறியாப் பேதாய் ஈதோ அரசர் பெரும்பணம் திறையாய் நாட்டில் திரட்டிய அரும்பொருள் அறியா மையினுல் பறித்துக் கொணர்ந்தனை அரசினர் அறிந்தால் ஆபத்தோ பெரிது உன்பிழை பொறுத்தேன் என்னை நீ விடுகுதி” விதானையா ரிவ்வணம் விளம்பிடக் கந்தன் "நாட்டை ஆளும் வெள்ளையன் தனக்குத் திறையாய்ச் சேர்த்துத் திரட்டிய பணத்தை கந்தன் ஆளும் காட்டு வழியாக எக்கா ரணத்தால் எடுத்துச் சென்றனை குற்றமோ பெரிதெனத் தெற்றென அறிதி நாட்டை ஆளும் வெள்ளையன் தன்னிலும் காட்டை ஆளும் கந்தன் பெரியன் காட்டுவேன் ஈதுன் கண்களாற் காண்மதி” -என்று கந்தன் எடுத்திட வாளினை
விதானை நடுங்கி விதிர்விதிர்ப் புற்று *கந்தா என்னைக் காத்திடாய் ஈங்கு
துன்றியுன் றிருவடி துணையெனத் தொழுதேன் திறைப்பண மிதனைத் தேர்ந்த ஏசண்டர் கைதனில் நானும் கருதிக் கொடாவிடில் அரசர் தண்டனைக் காளா குவனென" விதானையார் அங்கு வினயமாய் நின்று விக்கி விக்கி வீழ்ந்தே அழுதனர்

தீவெட்டிக் கள்ளர் 戰
கந்தன் உள்ளம் கனிந்தே உருகிப் *பெற்றவிப் பணத்தைத் தெற்றமாய் உனக்க்ேர் ஏசண்டர் தமக்கோ இனியான் கொடுத்திடேன் முறிச்சீட் டொன்று முனைந்துன் கையில் தருகுவன் அதனைத் தாவிக் கொண்டு சென்று நீ ஏசண்டர் கையிற் சேர்த்திடு" பின்வருமாறு பேணி எழுதினன் *காட்டை ஆளும் கந்தன்
நாட்டை ஆளும் ஏசண்டர்த் துரையவர் களுக்கு எழுதும் முறிச்சீட்டு. பருத்தித் துறைப்பகுதி விதானையிட மிருந்து எடுத்த பணத்தொகை இறைசால் முந்நூறு இதனைக் கொடுக்க அவர்மறுத் திருந்தால் அவர்தம் தலையே பணயம் இப்படிக்குக் காட்டையாளும் கந்தன்" இம்முறி தன்னை ஏற்றே கொண்டு விதானை யாரும் விழுந்தே அடித்துத், தப்பினேன் தப்பினேன் என்று தா ஏசண்டர் சபைக்கு ஏகினர் சீட்டொர்ே.
3
அக்கா லத்தே ஆண்மையொடு விளங்கிச் சண்டித் தனமாய்ச் சனங்களை வெருட்டி வாழ்ந்த வீர வான்கள் எவரும் காட்டை ஆளும் காவலன் என்று நாட்டு மக்கள் நவின்று பயந்த
கந்தன் தன்னுடைக் கையிற் பட்டுத் தப்பிப் பிழைத்தது சாற்றுதல் அரிதால் எனினும்

Page 56
96 துாவுதும் மலரே
பருத்தித் துரையில் பகர்சந் தையிலே சீலை விற்கும் சிறுதொழி லாளர் சுன்னு கத்தைச் சேர்ந்து வாழும் நால்வர் பறையர் நாளொன்று தன்னில் சீலை விற்றுச் சேர்த்த பணத்துடன் சீலைப் பொட்டளி சுமந்தவ ராகப் பருத்தித் துறையெனும் பட்டின மிருந்து தாம்வாழ் பதிக்குத் திரும்பினர் போகையில் வல்லையி லவரை வழிமறித் திட்ட அம்மையன் கந்தன் அடற்பெருங் கூட்டம் குகையடி வாரம் கொண்டுசென்றனர்காண் கந்தன் அவரைக் கருதியே பார்த்துக் கேள்விகள் பலப்பல கேட்டபின் அவருள் ஒருவன் றன்னை ஒர்ந்துமே பார்த்துச்
சுன்னு கத்துச் சேர்ந்துமுன் ஞெருநாள் அரிதாய்ப் பறையர் ஆடிய கூத்தில் அரசஞய் நடித்த ஆள்யார் நீயோ அன்றுன் கூத்தோ அழகாய் இருந்ததால் இன்றுநீ யதனை எமக்கு ஆடிக் காட்டுவா யாயின் காப்பீ ரும்முயிர்" என்று கந்தன் எடுத்து மொழிந்தான். கேட்டது மதனைக் கிளர்ந்தவர் தலைவன் *நானே அன்று நாடகம் தன்னில் அரசஞய்க் கூத்தை ஆடிய பறையன் தாங்கள், அதனைத் தகவொடு பார்க்க ஈங்கும் ஆடி இன்று நான் காட்டுவன் எனினும் − அரசன் தனக்கோ அரியா சனமும் வாளும் வேண்டும் வளமாய் ஆட

தீவெட்டிக் கள்ளர் 9r
பணியாள் இருவர் பக்கவில் வாளொடு கூட்டாய் நின்று கூத்துப் பெயர்ந்தே ஆடுதல் வேண்டும் அன்புடைப் பெரியோய் அன்றியும் பாங்கரில் அமைச்சன் @C56r பொல்லொடு நின்று புரண்டா டுதலும் வேண்டுங் கூத்தை விளங்கச் செய்ய ஆனல் இவ்வகை அணிகள் ஒன்றும் இல்லா ததனுல் எவ்வகை A5 roups கூத்துத் தன்னை ஏத்தியா டுவதென அவனும் கூற அம்மையன் கந்தன் பொட்டளி ஒன்று புகரரி யாசனம் ஆக ஈங்கே அமையும் சாம்பு! உந்தன் நண்பர் உன் பணி யாளராய் ஆற்றுதல் சால அமையும் என்றே கூறலும் பறையர் கோதிலாத் தலைவன் அதுவுஞ் சாலும் அமைவுறு பெரியோய் எனினும் வாளும் ஏருறு பொல்லும் வேண்டும் அவற்றை விரும்பி யாங்கு பெறுதும் யாமெனப் பேதுற மொழியக் கந்தன் கூறுவன் கவலா தொழிக எந்தம் வாள்களில் மூன்றும் பொல்லும் நூம்தமக் கீகுவன் நுவலரும் கூத்தை ஆடிக் காட்டுதி அமர்ந்து பொட்டளிமேல் கந்தன் கட்டளை காதில் விழுதலும் பறையர் தலைவன் பதைபதைத் தெழுந், வாங்கியே பொட்டளி பாங்கரில் நிமிர்த் வைத்ததன் மேலே வாளொடு வீற்றே இருந்தனன் அருகில் இருபணி யாளர்
8

Page 57
98. குாவுதும் மலரே
வாள்கை யேந்தி வனப்பொடு நின்றனர் பொல்லை ஏந்திப் போந்தே ஒருவன் அருகில் நின்றே அமைச்சனய் ஆடுவன் அவ்வா றரங்கம் அமைவுற்ற காலை கூத்தினை ஆடக் கோமக ஞய்வரும் பறையன் எழுந்து பாடுவ னிவ்வகை : *துவப்பரும் ஈப்பற்றிச் சாற்றுங்கோ - நானும் ஒர்ப்பராய் ஈப்பற்றிச் சாற்றுவேன்”* யாவரும் எழுந்து கூத்துநின் ருடினர் அரசன் கூத்தோ அருமையாய் இருந்தது கந்தன் கூட்டம் களிப்பொடு பார்த்ததும் அருமை அருமை அரசன் கூத்தே ஆடும் வகையும் அளவுறு தானமும் பாவ ராகமும் பன்னுதற் கரிதால் என்னே இதனின் சிறப்பு மழகும் என்று வியந்தும் எண்ண மிழந்தும் அங்காந்த வாயுடன் ஆனந்த சாகர அலையின் சூழலில் அமர்ந்திடு காலையில் பறையர் தலைவன் பறையர் தமக்குப்
*இது இருபொருள் படுங்கூற்று. நீவிர் இருவரும் இவ்வாளைப் பிடித்துக் கொண்டு ஆடுங்கள் நானும் தனிமையாய் நின்று இவ்வாளைப் பிடித்துக் கொண்டு ஆடுவேன்' என்பது வெளிப்படையான கருத்து. *நீவிர் இருவரும் இவற்றைப் பிடித்துக் கொண்டு அடி யுங்கள் அல்லது வெட்டுங்கள் நானும் இதனைப் பிடித் துக் கொண்டு அடிப்பேன் அல்லது வெட்டுவேன் என்பது பறை மொழியிற் படுங் கருத்து. ஈங்கு அவன் கருதியது அவர்மொழியிற்படும் கருத்தே. கந்தன் கூட் டத்தாருக்கு வெளிப்படைக் கருத்தே புரிந்தது. அவ ருக்குப் பறைமொழி விளங்காது.

தீவெட்டிக் கள்ளர்
பன்னிட முடியாக் குறிப்புக் காட்டலும் ஒருங்கு பறையர் ஒட்டம் பிடித்தனர் அச்சு வேலி வச்சு நோக்கிப் பறையர் நால்வரும் பறிஞ்சிடும் போது கந்தன் கூட்டம் கடுகடுப் புந்றே எந்தமைப் பறையர் ஏமாற்றி விட்டனர் என்று துடித்தே எழுந்து துரத்த முயலும் போது இயம்பிடும் பொல் அத் தம்மிட மில்லாது தயங்கி நின்றனர் பறையரோ தப்பிப் பாய்ந்தே ஓடிச் சுன்னு கந்தனைச் சேர்ந்தார் சுகமே.
4.
அம்மையன் கந்தனே டண்டு தீ வட்டிக் கள்ளர் கூட்டம் கருதியே ஒருமுறை இரண்டாய்ப் பிரிந்தே இரவொன் றினிலே தீவட்டி கொண்டு திருடப் போயினர் கந்தன் சென்ற கடுமிறைக் கூட்டம் உடையார் வீட்டினை உடைத்துத் திருடிக் Qasrsir2st யடிக்க நள்ளிரா வேளை சென்று சேர்ந்து திட்டம் வகுத்துப் படலை யறுத்துப் படர்ந்தது வீட்டினுள் வீருெடு பிக்கான் விளம்புங் கோடரி முதலிய கொண்டு மிண்டியே வீட்டின் கதவினை உடைத்துக் தகவோ டுட்புறம் சென்றே ஆங்குச் சயணித் திருந்த உடையார் தம்மையும் ஓங்கிடு மவர்தம் மனைவியோ டவர்தம் மக்க டம்மையும் பணியா ளோடு பிடித்துக் கட்டி

Page 58
100 ஆாவுதும் மலரே
வீட்டு முற்றத்து விடுத்த பின்பு உரலொன் றினையவர் உருட்டி வந்து குப்புற நிறுத்திக் கோதில்வெண் சீலை அதன்மே லிட்டே அழகு படுத்திச் சிங்கா சனம்போற் சீர்பட அமைத்துக் கந்தனை அழைத்துக் கவினுே டேறி வீற்றிருந் தருளி விளக்கம் நடாத்தென ஏனைய கொள்ளைக் காரர் நவில அன்றுயாழ்ப் பாணத் தரசிஜன எவர்க்கும் அடிபணி யாது மிடியிலா தாண்ட வீரச் சங்கிலி வேந்தனைப் போலத் VM தருக்குடன் கந்தன் தன்கை வாளுடன் மிடுக்கோ டுரலின் மேலே இருந்தனன் . அப்போழ்து,
தீவெட்டி கையில் திடமாய் ஏந்திய கள்ளர் கூட்டம் காத்து நிற்க உடையார் தம்மை உற்று நோக்கிப் பணமெங்கு நீயும் பதனமாய் வைத்தனை விரைந்தே அதனை விளம்பாது விடின் இக்கண மென் வாள் இரையாக் கிடுமுனை நீயுமுன் சுற்றமும் நெடிதே யோங்கி 6ճւ՞ (6ւն படலை முன் விளங்கி நிற்கும் ஆல மரத்தின் அடர்கிளை களிலே தொங்குவீர் பரிதி தோன்று முன்னே ஆதலால், புகலுதிர் பணத்தைப் புதைத்து வைத்த இடத்தை ஈங்கோர் இன்னலும் வராதெனக் கநீதன் இருந்து சிங்கம் போல உரப்பலும் உள்ளம் பதைத்தே உடையார்

தீவெட்டிக் கள்ளர் 0.
மேலொன்றும் பறையாது மெய்நடு நடுங்கி உண்மையைக் கூறி உயிர்தப் பினரால் கந்தன் கையில் கருது மிகுபணம் வந்து சேர்ந்தது வளமுறக் கணத்தில் அக்கணந் தன்னில் தொக்கியே மற்றக் கந்தன் கூட்டக் கள்ளர் யாவரும் வந்து சேர்த்தனர் வளமொடு கந்தனை வணங்கி நின்றனர் வாய்கை புதைத்தே அப்போது கந்தன் அமர்ந்தே உடையார் மனைவியார் தம்மையும் மாண்புறு மகளையும் நோக்கி ஈங்கண் வருதிர் என்று சைகையால் அழைத்துத் தங்காய் இன்றிரா எனக்கும் ஈங்கண் இருக்கும் எவர்க்கும் தருவாய் உணவு சமைத்தே இதமாய் வண்மை பொருந்திய பெண்நீ யென்றும் ஏழை எளியோர் எல்லார்க்கும் உணவு சுவையாய் அளிக்கும் தாய்மை உடையாய் என்றும் நின்னை எவரும் சாற்றக் கேட்டுளேன் இந்தக் கிராமம் யாங்கணும் என்று கந்தன் எடுத்துக் கூறலும் உடையார் மனைவி உடனே மகளுடன் அட்டிற் சாலை அடைந்தனள் விரைந்தே. தாயும் மகளும் சமையல் அறையில் வேலைக் காரர் தம்முடன் இருந்து விளம்பிடு சோறு விதவிதக் கறிகள் பல்சுவை பொருந்தப் பாங்குடன் அட்டி முடித்தன ராங்கு முனைந்து நின்றே கந்தனு மவன்றன் கருதுபல் நண்பரும் கூட்டமாய் இருந்து கோதிலாத் தாயக்

Page 59
2. குாவுதும் மலரே
கட்டை யெறிந்து களித்து மகிழ்ந்தும் நாயும் புலியும் நலிவிலா தாடியும் பல்வகைச் சூது பாங்காய் ஆடியும் இவ்வகை யாங்கண் இன்பமாய் நெடிது பொழுது போனது உணரா திருக்கையில் உடையார் மனைவி உள்ளே நின்று வெளியே வந்து வீறுடன் இருந்த கந்தன் தன்னைக் கனிந்த குரலில் அண்ணு அடிசில் அட்டி முடிந்தது அன்புடன் வந்து ஆற்றுக பசியை என்று கூறலும் எழுந்து கந்தன் கூட்டத் தோடு கூடிச் சென்று கிணற்றடி யடைந்து கால்முகங் கழுவி விபூதி தரித்து வினையமாய் நின்று கசிந்துள முருகி கடவுளைத் தொழுகையில் அப்பனே நந்தம் ஆருயிர் மருந்தே ஒப்பிலா இறைவா ஒங்குமெம் அண்ணலே. தப்பித மாகத் தவறுகள் பலயாம் இப்புவி வாழ்வில் ஏந்தலே செய்தோம் அத்தகை யோமை அருளொடு பரிந்து மன்னித் திடுக மாண்புயர் தேவே என்று வணங்கி ஏற்றி விட்டு அட்டிற் கூடம் அடைந்தனர் விரைந்தே கந்தன் அருகில் உடையா ரோடு பந்தித் தலைப்பிற் பாங்காய் இருக்க ஏனைய கள்வர் இருபுறந் தன்னிலும் இதமாய் இருக்கத் தட்டுவந் தன்னில் அட்டிய சோறும் அலகில் கறிகளும் உண்ண்ப் படைத்தனர் உடையார் மனைவியும்

தீவெட்டிக் கள்ளர். 10з
உண்டி மிகவும் உவப்பா யிருந்தது
அதனுல், விரைந்து யாவரும் விரும்பி யுண்டனர் அப்போழ் தினிலே அடுத்த முறையும் சோறு தன்னைச் சோர்விலா தெடுத்துத் தட்டுவம் தன்னில் இட்டனள் மறுமுறை அகப்பையால் ஆங்கண் அருகினிற் சட்டியில் கிடந்த குழம்பைக் கிள்ளி யெடுத்துக் கந்தன் முதலாக் கள்வ ரெவர்க்கும் வண்மையாய் வழங்கினள் வளமொடு தானே கந்தன் பிசைந்து கவினுே டருந்தையில் குழம்பின் சுவைமிகத் திறமா யிருந்தது ஆங்கது கண்டு அகமிக மகிழ்ந்து தங்காய் ஈங்கு தருகுழம் பின்சுவை ஆகா வாய்க்கு அருமையாய் இருக்கும் எப்படி இதனைத் தப்பிலா தாக்கினை என்று கந்தன் இயம்பலும் ஆங்கவள் விந்தை ஏதும் விளம்பிட அண்ணு ஒன்று மில்லை நன்ருய்ப் புளித்த தயிரது கொஞ்சம் சட்டியில் கிடந்தது அதனை எடுத்து ஆக்குங் குழம்புள் விட்டேன் அதுதான் விரும்புமிச் சுவையைத் தந்தது போலும் தகவோ டுண்மின் என்றமொழி கேட்டு ஏங்கிய மனத்துடன் கையினை உதறிக் கருத்துக் கலங்கி என்னடி பிள்ளை இப்படி நீயும் செய்வா யென்று சிறுதும் அறிந்திலன் இன்றுநீ எந்தன் பிழைப்பினைக் கெடுத்தாய் தயிர்தந்த வீட்டில் தப்பிதம் செய்தல்

Page 60
O4 ஆாவுத் ஆகா தென்ற அருமு: கேட்டிட் வில்லையோ ே அறியா மையினுல் ஈங் சோறுண்ட வீட்டிற் ே எங்களுக் "குள்ளே இய என்று கூறி எழுந்து கூட்டத் தாரைக் கூவி இந்த வீட்டில் எடுத்த ஆங்குநீர் திருடி ஈங்கு பொருள்கள் தம்மையும் கொணர்ந்து ஈங்கு குவி கள்வர் அவற்றைக் கடு கந்தன் முன்னல் வந்தி உடையார் மீனையோடு அதனே டவர்மகள் தன் திங்காய் இப்பொருள் ய பரிசிலாய்த் தந்தேன் ட பிள்ளை தனக்கு என் பெ பெருஞ் சீதனமாய்ப் பே நல்ல திருமணம் நலமு கடவுள் கிருபையால் நல்லாய் வாழுதிர் நலம் என்று கூறி இன்பமாய் தன்பெரும் கூட்டம் தன் அழைத்துச் சென்றனன்
(தாவதும் மல
-ത്ത്

ம்மலரே.
து மொழிநீ as IqGor நங்காய் கிதை ஆற்றினய் சாரம் செய்தல் ஆலுவ தில்லை கந்தன்
அழைத்து பொருளையும் கொணர்ந்த
போந்து நீவிர் வித்திடீர் என்றலும் கவே கொணர்ந்து 'த்து வைத்தனர் டையார் தம்மையும் ானையும் அழைத்து ாவையும் உனக்குப் ாங்குடன் பெற்றுப் யர் தன்னுற் |ணிக் கொடுத்து ட குற்றுதி டூழி நீங்கள் பல பெற்றே க் கந்தன் T%Orսյւն ·
அவ்விடம் விட்டே
ரே முற்றும்)
se