கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பலஸ்தீனக் கவிதைகள்

Page 1
மஹ்மூட் தர்வீஷ் பெளசி அல் அஸ்மார் றஷிட் ஹூசைன்
சலீம் ஜாப்ரூன் தெளபீக் சையத் அந்தொப்னே ஐபாடு
பலஸ்தீனக் கவிஞர்களின்
30 கவிதைகள்
பத்வா துகான் சமீஹ் அல் காசிம் மூயின் பசைசோ

பகம் நூற்றுண்டுகளின் முன் நான் ஒரு கவிஞன் கவிஞன் Irell, Eir. சித்தர்கள் பலரின் ாத்தியில் இருந்தேன்.
இன்று
இருபதாம் நூற்றுண்டி
புரட்சி வெடிக்கும் எரிமனே ஆனேன்.

Page 2

பலஸ்தீனக் கவிதைகள்
தொகுப்பு எம். ஏ. நுஃமான்
வாச வெளியீடு-11

Page 3
பலஸ்தீனக் கவிதைகள்
தமிழாக்கம்: எம். ஏ. நு: மான், இ. முருகையன்
வெளியிடு: வாச வெளியிடு, வாசகர் சங்கம், நூறி மன்ஸில், கல்முனை-6, இலங்கை.
அச்சு: சித்திரா அச்சகம் , 310, மணிக்கூட்டு வீதி, யூாழ்ப்பாணம் ,
மூதற் பதிப்பு: நவம்பர் 1981
00 م10 . ز} ز6th an சிறப்புப் பதிப்பு ரூ. 15:00
Palastheenak Kavithaikal
a colicction of Palestinian Poems in Tann il Translation.
Translated from English by M. A. Nuhman and R. Murugaiyan
Edited and published by M. A. Nuhman for Vaasa Veliyeedu, Readers’ Association Noori Manzil, Kalmumai-6, Sri Lanka,
First Edition: November, 1981.
Printed at: Chitra Achchakam, 310, Clock Tower, Road, Jaffna.
Price: Rs. 10-00 Special Edition: Rs. 15-00

சில குறிப்புகர் iy பலஸ்தீனக் கவிதைகள், முன் னுரை 1, மஹ்மூட் தர்வீஷ் 8, பெளசி அல் அஸ்மார் 19, றளிட் ஹீசைன் 22, சலிம் ஜூப்ருன் 26, தெளபீக் சையத் 28, அந்தொய்னே ஐபாரு 34, பத்வா துகான் 39, சமீஹ் அல் காசிம் 44,

Page 4
சில குறிப்புகள்
சமகாலப் பலஸ்தீன :ொலாறு அதர்மத்தினதும் அநீதி பினதும் அவற்றுக் கெதிரா 60 போராட்டத்தினதும் வரலா முகும். 1917ல் பலஸ்தீன சனத்தொகை ஏழு லெட்சமாக இருந்தது. இதில் 574,000 பேர் அரபு முஸ்லிம்கள், 70,000 பேர் கிறிஸ்தவர்கள், 56,000 பேர் யூதர்கள். பலஸ்தீன மொத்த நிலப்பரப்பில் 2 சத வீதத்தை மட்டுமே யூதர்கள் வைத்திருந்தனர். ஆணுல் 1948ல் அராபியர் 1,415,000 ஆக வும் யூதர்கள் 759,000 ஆகவும் அதிகரித்தனர். அதாவது முப்பது ஆண்டுகளுக்குள் அ பியரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிக்க, யூதர்கள் பதின்மூன்று மடங்கு அதிக ரித்தனர். ஐரோப்பிய யூதர்களின் அபரிமிதமான குடியேற் றமே இதன் காரணமாகும்.
சியோனிசத்தினதும், பிரித்தானிய, அமெரிக்க ஏகாதி பத்தியங்களதும் கூட்டுச் சதியினல் பலஸ்தீன மண்ணில் இஸ்ரவேல் உருவாக்கப் பட்டபோது 156,000 பலஸ்தீன அராபியர் மட்டுமே தங்கள் சொந்தத் தாயகத்தில் தங்கி யிருக்க அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் அகதிகளாகத்
1W

துரத்தப்பட்டனர். முதலாவது அரபு - இஸ்ரவேல் யுத்தத் தின் மூலம் பலஸ்தீன நிலப்பரப்பில் 77சத வீதத்தை இஸ் ரவேல் அபகரித்துக் கொண்டது. 1949ல் இஸ்ரவேலின் சனத்தொகை 1,173,900 ஆகும். இதில் 86.4 வீதம் யூதர் கள். 13.6 வீதம் மட்டுமே அராபியர். திட்டமிட்ட யூத குடியேற்றத்தினுலும், வன்செயல்களினுலும் பலஸ்தீன அரபு மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து துரத்தப் பட்ட தன் விளைவே இது.
தொடர்ந்து பிரயோகிக்கப் பட்டு வந்த வன்முறைகள் மூலமே பலஸ்தீன மக்களின் தாயகம் அபகரிக்கப்பட்டது. 1948 டிசம்பருக்கும் 1949 பெப்ரவரிக்கும் இடைப்பட்ட மூன்று மாத காலத்துள் மட்டும், ஆயுதம் தாங்கிய சியோ னிச குழுக்கள் பலஸ்தீன மக்களைத் தங்கள் சொந்த நிலத்தில் இருந்து துரத்தும் நோக்குடன் இரண்டாயிரத்துக்கும் அதி கமான வன்செயல்களைப் புரிந்தனர். பெண்கள், குழந்தை கள், முதியோர் உட்பட நூற்றுக்கணக்கான கிராமவாசி களைக் கொன்றுகுவித்தனர். இத்தகைய வன்முறைச் சம்ப வங்களால் முதலாவது அரபு - இஸ்ரவேல் யுத்தம் தொடங்கு வதற்கு முன்னரே சுமார் இரண்டரை லெட்சம் பலஸ்தீன மக்கள் தங்கள் தாய் நாட்டை விட்டுச் சென்றனர். 19481949 யுத்தத்தில் 250 அரபுக் கிராமங்கள் முற்ருக அழிக்கப் பட்டன. ஜபா, லித்தா, அக்றே, பெய்சன் ஆகிய நகரங் கள் கைவிடப்பட்டன. சுமார் ஒன்பது லெட்சம் பலஸ்தீனர் அகதிகளாயினர். 1967ல் நடைபெற்ற இஸ்ரவேலின் ஆக்கிர மிப்பினுல் மேலும் 525,000 பேர் அகதிகளாயினர். 1967க் கும் 1970க்கும் இடைப்பட்ட மூன்ருண்டுகளுள் 700 அரபு நகரங்களும் கிராமங்களும் அழிக்கப்பட்டன. பல்லர் பிரக் கணக்கான அராபியர் துரத்தப்பட்டனர்.
இன்று பலஸ்தீன மக்கள் மரணத்துள் வாழ்வு தேடு கின்றனர். அபகரிக்கப்பட்ட தங்கள் தாய் நாட்டுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடுகின்றனர். அவர்களது போராட்டம் சியோனிசத்துக்கு எதிரானது மட்டுமல்ல; ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதுமாகும். அவ்வகையில் பலஸ் தீன விடுதலைப் போராட்டம் உலகெங்கும் விடுதலேக்காகப் போராடும் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆகவே தான் அநீதியின் பக்கம் நிற்பவர்களைத் தவிர உலக மக்கள் அனைவரும் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை
V

Page 5
அங்கீகரித்துள்ளனர்; அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டு மென்று கோருகின்றனர்.
2
பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆத ரவு வழங்கும் முகமாகவே இப்போது இக்கவிதைத் தொகு தியை வெளியிடுகிறேன். இக்கவிதைகள் பலஸ்தீன மக்களை நேரடியாகப் புரிந்து கொள்ள நமக்கு உதவும். இக்கவிதை களில் வெளிப்படும் அவர்களது உண்மையான உள்ளத் துணர்ச்சி நமது நெஞ்சைத் தொடும் என்றே நம்புகிறேன்.
இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் பலஸ் தீன விடுதலைப் போராட்டத்துடன் நேரடியான தொடர் புடையவை. இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள பிரிக்கமுடியாத உறவை இக்கவிதைகள் பகிரங்கப் படுத்துகின்றன. பலஸ்தீன மக்களின் துயர் நிலையையும், விடுதலைப் போராட்ட உணர்வையும் இவை பிழிந்து தரு கின்றன. அவர்களின் ஆளுமையையும் அபிலாசைகளையும், உணர்ச்சியின் ஆழத்தையும் திடசித்தத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் இவை சொற்களில் வடித்துத் தருகின்றன. கவிதை அவர்களின் உணர்ச்சியின் ஊற்ருகவும் வடிகாலாக
r
ம் இதில் காண்கிருேம் . இக் கவிஞர்
வும் இருப்பதை :
கன் துப்பாக்கியை அல்ல, பேனே தூக்கிய கொமாண்டோக்"
களாகவே காட்சியளிக்கின்றனர்.
இத்தொகுப்பிலே , பிரபலமான ஒன்பது பலஸ்தீனக் கவிஞர்களின் முப்பது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இக் கவிதைகள் அனைத்தும், பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இந்திய அலுவலகம் 1967ல் வெளியிட்ட Forever Palestine என்னும் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பில் இருந்து தேர்ந் தெடுக்கப் பட்டவை. இத் தொகுப்பில் உள்ள கவிதைகளுள் சமீஷ்ற அல் காசீமின் ஏழு கவிதைகளையும் எனது வேண்டு கோளுக்கு இணங்க நண்பர் முருகையன் மொழிபெயர்த்து உதவிஞர். அவருக்கு என் நன்றி. ஏனைய இருபத்திமூன்று கவிதைகளும், பலஸ்தீனப் போராட்டக் கவிதைகள் பற்றிய கடாகர் மியின் கட்டுரையும் என்னுல் மொழி பெயர்க்கப்
பட்டன. முடிந்த அளவு ஆங்கில மொழி பெயர்ப்புக்கு விசுவாரமாகவே தமிழாக்கத்தை அமைத்துள்ளோம்,
VI
 
 
 

மிகச் சிறந்த கவித்துவ வளமுடைய உலக மொழிகள் சிலவற்றுள் அரபு மொழியும் ஒன்று என அறிஞர் கூறுவர். அரபுக் கவிதையை ஆங்கில மொழி பெயர்ப்பு மூலம் தமி ழுக்குக் கொண்டுவரும் போது மூலக் கவிதையின் வீச்சும் வேகமும் மூன்ருவது மொழியிலும் அவ்வாறே இருக்குமென்று ஒருபோதும் எதிர் பார்க்க முடியாது. அதையும் மீறி இத் தொகுப்பிலே பலஸ்தீனக் கவிஞர்களின் விரு?ர்ந்த உணர்ச் சியை நாம் ஒரளவு தரிசிக்க முடிகிற தென்ருல் அதற்குக் காரணம் மொழிபெயர்ப்பின் சிறப்பு அல்ல, மழுங்கடிக்க முடியாத மூலக்கவிதையின் சிறப்பேயாகும் என்றே நான் கூறுவேன். சிரமம் பாராது, இத்தமிழாக்கத்தை ஆங்கில மொழி பெயர்ப்புடன் ஒப்புநோக்கி ஆலோசனைகளும் திருத் தங்களும் கூறிய யாழ் - பல்கலைக் கழக ஆங்கிலத் துறை யைச் சேர்ந்த நண்பர் ஏ. ஜே. கனகரத்தினு அவர்களுக்கு என் நன்றி உரியது.
இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் சில அவ்வப்போது தினகரன், சமர், அக்கினிக் குஞ்சு, அக்னி, இன்கிலாப் முதலிய சஞ்சிகைகளில் வெளிவந்தன. இவற்றின் ஆசிரியர் களுக்கும் எனது நன்றி. இந்நூலின் அட்டையில் இடம் பெறும் ஒவியத்தை வரைந்த பெயரறியா பலஸ்தீன ஒவிய ருக்கும் , நூலின் பெயரை அழகுற எழுதி உதவிய சேர னுக்கும் என் நன்றி.
இறுதியாக, இந்நூல் வெளியிட்டுக்குப பல்வேறு வகை யில் உதவி புரிந்த நண்பர்களுக்கும், தொடர்ந்தும் எமது வெளியீட்டு முயற்சிகளுக்கு நட்போடு ஒத்துழைப்பு வழங்கும் சித்திரா அச்சக உரிமையாளர் திரு. ம. மரியதாஸ் அவர் களுக்கும் அச்சக ஊழியர்களுக்கும் என் நன்றி என்றும் உரியது.
எம். ஏ. நுஃமான் தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம், இலங்கை.

Page 6
துயரம் எங்களை ஆடவர் ஆக்கிற்று
நாம் போரிடல் வேண்டும்
 
 
 

பலஸ்தீனக் கவிதைகள்
அரேபிய கலாசார மரபில் எப்போதும் கவிதை ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வந்துள்ளது. இஸ்லாத்திற்கு முந்திய காலத் திலிருந்து அது ஒரு கலேயாக மட்டுமன்றி ஒரு வாழ்க்கை முறை யாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு இனக் குழுவும் தனக்கேயுரிய கவிஞர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் தங் கள் குழுக்களின் தலைவர்களேப் புகழ்ந்தோ அல்லது தங்களுக்கு எதிரான இனக்குழுக்கஃt இகழ்ந்தோ கவிதைகள் இயற்றினும் கள். அக்கால வாழ்க்கை முறை நாகரிகமானதாக இருக்கவில்லை. அவர்களின் கவிதைகள் உள்ளூர்ச் செய்திகளையும் பாலைவன வாசி களான அரேபியரின் கற்பனைக்குரிய நட்சத்திரங்கள், மணல்வெளி, ஒட்டகம் முதலியனவற்றையும் பற்றியதாகவே இருந்தன. அக் காலக் கவிதைகள் தாளில் எழுதப்படவில்லை. ஆனுல், அதற் கென்றே உரிய சிலர் அக்கவிதைகளை மனப்பாடம் செய்து தேவை யானபோது பாடிக் காட்டக்கூடியவர்களாய் இருந்தனர். இவ் வினக் குழுக் கவிஞர்கள் மிகுந்த செல்வாக்கான வர்களாகவும் இருந்தனர். ஒரு இனக்குழுவை இகழ்ந்து பாடப்பட்ட ஒரு கவி தையே இரண்டு குழுக்களுக்கு இடையே பயங்கரமான யுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைவதும் உண்டு.

Page 7
7ம் நூற்ருண்டில் இஸ்லாத்தின் வரவுடன் அரேபியர்கள் தங்கள் மொழியை மிகவும் நேசிக்கத் தொடங்கினர்கள். அவர் களின் புனித நூலாகிய குர்ஆனும் அரபு மொழியிலேயே உள் ளது. குர்ஆன் இறைவனின் உண்மையான வார்த்தை என்றே முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர். இக்காரணத்தினல் முன் எப் போதையும்விட மொழி மிகவும் முக்கியமானதாக மாறியது. கவிதை அழகியல் வெளிப்பாட்டுக்குரிய பிரதான ஊடகமாகக் கருதப்பட்டது. அரேபிய சாம்ராச்சியம் ஸ்பானியாவிலிருந்து 'சமர்கந்து’ வரை பரவிய, அரேபிய வரலாற்றின் பொற்கால மாகக் கருதப்படும் 8ம், 9ம், 10ம் நூற்ருண்டுகளில் ஒவ் வொரு க லீ பா வி ன் அரண்மனையிலும் பெருந்தொகையான தொழில் முறைக் கவிஞர்கள் இருந்தனர். இக்கவிஞர்கள் கலீ 1ாவைப் புகழ்ந்து பாடிப்பெறும் பரிசில்கள் மூலம் வாழ்க்கை நடத்தினர். கலீபாவின் கவனத்தைக் கவர்வதற்காக ஒரே நேரத் தில் 50, 60 கவிஞர்கள் போட்டியிட்டு மோதிக்கொள்வார்கள்.
இக்காலகட்டத்தில் மிகப் பிரபலமான சில அரபுக் கவிஞர் கள் தோன்றினர்கள். ஒவ்வொரு அரபுப் பாடசாலை மாணவ லும் இப்போது இவர்களின் கவிதைகளைப் படிக்கவும் பாடவும் செய்கின்றன். இக்காலகட்டத்திலேதான் ஆரம்ப அரசியல் கவி தைகளும் தோன்றின. சாம்ராச்சியத்துள் குழப்பம் மிகுந்த காலங் களில் அரசியல் கருத்துக்களையும் அபிப்பிராயங்களேயும் வெளிப் படுத்தும் கவிதைகள் பெருமளவில் இயற்றப்பட்டன . உதார000 மாக 9ம் நூற்ருண்டில் கலிபா ஹாரூன் அல் றசீதின் மரணத்தின் பின்னர் அவரது இரண்டு மக்களுக்கும் இடையே சிம்மாசனத் துக்கான போராட்டம் நிகழ்ந்தபோது இவ்வாறு அரசியல் கவி தைகள் பல தோன்றின. அத் தகைய கவிதைகள் அரசியல் சூழ் நிலைகஃப் பொறுத்துத் தோன்றிக்கொண்டும் மறைந்து கொண் டும் இருந்தன. ஆயினும், அக்காலகட்டத்தில் அவை அதிகமாகக் கவனிக்கப்படவில்லை.
இந்த நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்துதான் காத்திரமான அரசியல் கவிதைகள் அரேபியர்களிடையே தோன்றத் தொடங் இன. அரேபிய சாம்ராச்சியத்தின் பிரகாசம் நீண்டகாலத்திற்கு முன்பே மங்கத் தொடங்கி விட்டது. அரேபியர்கள் துருக்கியின் அதிகாரத்தின் கீழ் இருந்தனர். இந்த நூற்றண்டின் தொடக்க ஆண்டுகளில் ஆரம்பித்த அரேபிய தேசிய உணர்ச்சியின் எழுச் சியுடன் அரசியல் கவிதைகளிலும் ஓர் புதிய அலை தொடங்கி
2

யது. தேசிய உணர்ச்சியை அக்கவிதைகள் பிரதிபலித்தன. ஒரு நாட்காலை பெய்ரூத் மக்கள் விழித்தெழுந்ததும், அரேபியர்கள் தங்களைத் துருக்கியின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளத் தூண்டும் கவிதைகள் தங்கள் நகரச் சுவர்களில் எழுதப்பட்டி ருப்பதைக் கண்டனர். இத்தகைய கவிதைகள் விரைவாக அரபு உலகம் முழுவதிலும் எழுதப்படத் தொடங்கின. அரேபியர்கள் பண்டைய இனக்குழு நாட்களில் துலங்கியதைப்போல கவில: யின் அழைப்பிற்குச் செவிகொடுக்கத் தொடங்கினர்கள்.
துருக்கிய அதிகாரிகள் இதைப் பார்த்துக்கொண்டே இருக் கவில்லை. அவர்கள் பழிவாங்கத் தொடங்கினர்கள். கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கவிஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள்; செய்யப்பட்டார்கள்; நாடு கடத்தப் பட்டார்கள் அல்லது சிறைபிடப்பட்டார்கள். உதுமா னிய சாம்ராச்சியம் இறுதியில் முறியடிக்கப்பட்டது. அரேபியர் கள் அதன் அதிகாரத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டனர், ஆனல் அரபுக் கவிதை அடக்கப்பட்ட அல்லது அரபுக்கவிஞர் கள் தங்கள் படைப்புகட்காகத் துன்பம் அனுபவித்த இறுதிச் சந்தர்ப்பமாக அது இருக்கவில்லை. பலஸ்தீனர்கள் அரபு உலகில் வேறுயாரும் அதைப்பற்றி உணர்ந்து கொள்வதற்கு முன்:ே சியோனிச அபாயத்தைப் பற்றிய தங்களது பயத்தையும் அஞ) தரவான நிலையையும் பற்றி 1920லேயே எழுதத் தொடங்கிவிட் டார்கள். அத்தகைய கவிதைகள் 1950இல் குறிப்பாக 1936ம் ஆண்டு நிகழ்ந்த பலஸ்தீனப் பொதுவேலைநிறுத்தக் கிளர்ச்சிக் காலகட்டத்தில் பெருமளவிலும் சக்தி வாய்ந்ததாகவும் வெளி வந்தன. பிரித்தானிய அதிகாரிகள் அதை அடக்க முயன்றனர். கவிஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டரர்கள். கிளர்ச் சியூட்டும் கவிதைகளைத் தாங்கிவரும் எந்த ஒரு பலஸ்தீனச் செய் திப்பத்திரிகையும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தத் தரிைக்கை முறை 1930இன் இறுதியில் நடைமுறைக்கு வந்தது; 1940லும் தொடர்ந்து கடைப்பிடிக்கப் பட்டது. பலஸ்தீன இலக்கியத்தின் எழுச்சியை நசுக்குவதற்கு பிரதம தணிக்கையாளராக பிரிட்டிஷ் அரசாங்கம் ஹேடேட் சாமுவேலின் மகனை நியமித்தது குறிப்பி 1.த்தக்கது. இவர் தனது தகப்பனைப் போலவே பூரணமாக சியோ னிச இயக்கத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர் என்பது பிரசித்தம் ,
1948க்குப் பின்னர் துர்ப்பாக்கியம் தற்காலிகமாகப் பiஸ்லோ
மக்களின்மேல் கவிந்தது. அவர்களுடைய வாய்சாலகம் தற்கானி கமாக மெளனமடைந்தது. அதனிடையே அவர்கள் நாடுகடத்த
3

Page 8
வும் துரத்தவும் பட்டார்கள். அத்தகைய சிக்கல்களுடன் போரா டிக் கொண்டிருந்தார்கள். எவ்வாறெனினும் அரபு உலகின் எல்லா இடங்களிலும் அவர்களது விழிவந்த கவிஞர்கள் பலஸ்தீனத் துன்பியலினுல் விழித்தெழுந்து அரேபியர்களை ஐக்கியப்படவும், கொள்ளையடிக்கப்பட்ட நாட்டைத் திரும்பப் பெறவும் கோரிக் கவிதைகள் படைக்கத் தொடங்கினர்கள். 1950ல் பலஸ்தீனக் கவிதைகள் திரும்பவும் மீட்கப்பட்டுப் புதிய உக்கிரத்துடன் எழு தப்படத் தொடங்கின. 1956ல் ‘கபர்கசம்" என்னும் சிறிய பலஸ்தீனக் கிராமத்தின் அப்பாவி மக்களை இஸ்ரவேல் ராணு வத்தினர் கொன்று குவித்தனர். இந்த நிகழ்ச்சி பலஸ்தீனருக்கு ஆத்திரமூட்டியது. அவர்களது கவிதை வெஞ்சினங் கொண்ட தாகவும் உக்கிரமான சர்ச்சைக்குரியதாகவும் மாறியது. இதன் பெறுபேருக இஸ்ரவேல் அதிகாரிகளின் மிருகத்தனமான அடக்கு முறையின் ஒரு புதிய அ?ல தோன்றியது. அவர்களுக்கு முன்னி ருந்த துருக்கியர்களைப் போலவே இந்தப் புதிய தலைமுறைக் கவிஞர்களை அவர்கள் சிறையில் இட்டார்கள். நாடு கடத்தினர் கள். வீட்டுக்காவலில் வைத்தார்கள்; அல்லது அவர்களை மெளன மாக இருக்கச் செய்ய முயன்ருர்கள். இவ்வாறு நாடு கடத்தப் பட்ட கவிஞர்களுள் ஒருவர்தான் கமால்நாசர். இறுதியில் இவர் பெய்ரூத்தில் வசிக்கச் சென்(ஒர். ஆயினும், 1973ம் ஆண்டு ஏப்பி ால் மாதம் இஸ்ரவேலர்களினுல் இவர் கொல்லப்பட்டார்.
1960ல் புதிய பலஸ்தீனக் கவிஞர் குழு ஒன்று தோன்றியது. இவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். பெரும்பாலும் இஸ்ரவே வின் அதிகாரத்தின் கீழ் வாழ்பவர்கள். ஆக்கிரமிப்பின் கொடிய துன்பங்களைத் தவிர வேறு எதையும் தங்கள் வாழ்நாளில் அறியாத வர்கள். ஒரு புதிய சங்கற்பத்தையும் ஒரு புதிய அறைகூவலே யும் தங்கள் கவிதைகளில் வெளிப்படுத்துபவர்கள். மஹ்மூட் தர் வீஷ், சமிi) அல் காசிம், தெள பீக் சைய்யத் போன்ற இத்தகைய கவிஞர்களுடன் போராட்டக் கவிதை மறுபிறப்பு எடுத்தது. முந் திய யுகத்துக் கவிதையில் காணப்பட்ட துன்பியல், விதியின் மீது இளைஞர்களின் வெற்றிப் பேரிகையாக மாற்றப்பட்டது. இவர் களின் கவிதைகள் வீடற்றநிலை, அபகரிப்பு, தாய்நாட்டின் மீதுள்ள காதல் என்பவற்றைப் பேசுகின்றன. எனினும் அதே சமயம் போராட்டத் துணிவு, பூரண சங்காரத்தை எதிர்த்து நிற்றல், மனிதாபிமானமற்ற அந்நிய ஆட்சியை நிராகரித்தல் ஆகி பவற்றையும் அவை பேசுகின்றன, இக்கவிதைகளினூடே ஒரு உறுதிப்பாடும் மனவெழுச்சியும் பரவி உள்ளன, அரேபியர்களின்
4

மொழி மீண்டும் ஒருமுறை அவர்களது அறைகூவலையும் ஏக்கத் தையும் உச்சமாக வெளிக்காட்டுகின்றது.
இஸ்ரவேல் இக்கவிஞர்களை நசுக்குவது பலஸ்தீன மக்களைச் சங் காரம் செய்வதற்கு எடுக்கும் பிறிதொரு முயற்சியாகும். அதா வது அவர்களது கலாசாரத் தனித்துவத்தை அடக்குவதன் மூலம் இதைச் சாதிக்க முயல்கிரு?ர்கள். 1948 முதல் இஸ்ரவேல் பலஸ்: னர்களை ஏதோ ஒரு வழியில் அழித்துவிடுவதற்கு முயற்சிசெய்? வருகின்றது. அதன் மூலம் அவர்களது நாட்டின் உரிமையைக் கவர்ந்ததற்குரிய நேரடியான சாட்சியத்தை அகற்றிவிட : யும்
என்று இஸ்ரவேல் கருதுகின்றது. அவர்களால் பழிவாங்கப்படும் அபாயத்தில் இருந்து தப்பித் வும் என்று இஸ்ரவேல் கருதுகின்றது. அரபு அகதிகள் என்ற பெய ரில் அண்மையிலுள்ள அரபு நாடுகளில் குடியேறுவதன் மூலம் பலஸ்தீனர்கள் மறைந்து போவார்கள் என்று இஸ்ரவேல் ஆரம் பத்தில் நம்பியது. அதன் அடிப்படையில் அப்படி ஒரு பகுதியி னர் இருந்தார்கள் என்பதை உலகம் மறந்துபோகச் செய்வதற் கான பிரச்சார முறைகளைத் தொடங்கினர்கள். மேலை நாடுகளில் பலஸ்தீன், பலஸ்தீனர் என்ற சொற்கள் உபயோகத்திலிருந்து அகற்றப்பட்டன. இஸ்ரவேலின் பாடசாலை மாணவர்களுக்கு,அவர் களுடைய பெற்றேர் அவர்களுடைய நாட்டை நிரப்புவதற்குத் திரும்பிவரும்வரை அவர்களது நாடு மனிதர்கள் இல்லாத நில மாக இருந்து வந்ததாகக் கற்பிக்கப்பட்டது. முக்கியமான இஸ் ரவேல் தலைவர்கள் எல்லோரும் 1948க்கு முன்னரே அங்கு
க் கொள்வதற்கும் சுப. அது உத
வசிப்பதற்கு வந்துவிட்டார்கள். சண்டையிட்டார்கள். கொன் ருர்கள். ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கஃாத் துரத்தினர்கள்.
ஆனல் அவர்கள்தான் பலஸ்தீன மக்கள் என அப்படியாரும் இருக் கவில்லை என்று இப்போது கூறுகின்றர்கள்.
பலஸ்தீனப் போராட்ட இயக்கத்தின் எழுச்சியுடன் இப் பிரச்சாரம் தோல்வியடைந்தது. குறிப்பாக 1967ம் ஆண்டு யுத் தத்திற்குப் பின்னர் அது முற்றிலும் சாத்தியமற்றதாக மாறி விட்டது. இஸ்ரவேல் ஆக்கிரமித்த பிரதேசங்கள் பலஸ்தீனர்களின் சொந்தப் பிரதேசங்களே என்பதை இஸ்ரவேல் மக்களே தெளி வாகக் கண்டார்கள். ஆகவே, பலஸ்தீனர்களைச் சங்காரஞ் செய் யும் முயற்சியில் இஸ்ரவேல் முழு மூச்சாக ஈடுபட்டது. சிரிய, லெபஞனியக் கிராமங்களிலும் அகதிகள் முகாம்களிலும் விமானத் தாக்குதல்களும், இராணுவ நடவடிக்கைகளும் மிகவும் அதிகரித் தன. மேலும் போராட்ட இயக்கத்தை அழித்தொழிக்கும் தனது
5

Page 9
முயற்சியில் உதவுவதற்கு ஜோர்தான், லெபனன் தலைவர் களை இஸ்ரவேல் நிர்ப்பந்தித்தது.
பலஸ்தீனக் கவிஞர்கள் மீதும், எழுத்தாளர் மீதும் திணிக் கப்பட்ட கட்டுப்பாட்டை நாம் இந்தப் பின்னணியில் வைத்தும் நோக்க வேண்டும். பலஸ்தீன ஆன்மாவை, முற்றிலும் அதற்கே யுரிய விசேட குண இயல்புடன் மீள் உயிர்ப்படைய அனுமதிக்க முடியாது; அனுமதித்தால், இஸ்ரவேலின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு மீள் எழுச்சி என்பது மட்டுமன்றி யூத அரசின் பலவீனமான தொடர்புகளை அச்சுறுத்துவதாகவும் அது இருக்கும் என்பது இஸ்ரவேலரின் கருத்து. இஸ்ரவேல் மக்களில் அனேகர் நடைமுறையில் அனுசரிக்காத ஒரு மதத்தைத் தவிர இஸ்ரவேலுக்கு அதற்கேயுரிய சொந்தக் கலாசாரமோ, புகழ்ச்சிக் குரிய ஒரு வரலாருே?, பங்குகொள்வதற்குரிய சம்பிரதாயங்களோ, தேசிய இசையோ, தேசிய உடையோ, தேசிய சமையல் முறையோ கூட இல்லை என்பதை இஸ்ரவேல் தலைவர்கள் நன்கு அறிவார்கள். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக இஸ்ரவே லர்கள், பிரதேச அரேபியக் கலாசார அம்சங்களைப் பெற்றுக் கொண்டு, அதையே தங்கள் சொந்தக் கலாசாரம் என்று அழைக் கின்றனர். இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அண்மைக் காலத்தில் இஸ்ரவேலின் கலாசார அம்சங்கள் என்று அறிமுகப் படுத்தப்படுவன எல்லாம் இவ்வாறு வந்தனவேயாகும்.
இஸ்ரவேலின் கலாசாரப் பஞ்சமும், இஸ்ரவேலர்களின் குறை 1ொன பிறப்பு விகிதமும், அரேபியர்களின் சக்திவாய்ந்த கலாச்சாரத் தனித்துவம் வந்தேறியவர்களான தங்களே ஒருநாள் முற்ருக விழுங்கிவிடும்; பலஸ்தீனர்களல்ல, தாங்களே சங்காரம் செய்யப்படுவோம் என்ற ஒரு உண்மையான ஆதங்கத்தை அவர் களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். Jewish Chronicle என்ற ரஞ்சிகையில் (மே, 4, 1973) இஸ்ரவேலின் ஆருண்டு கால ஆட் பிக்குப் பின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமை பற்றி அடா இபான் கொடுத்த ஒரு டேட்டியில் இந்தப் பயம் பிரதிபலித் தது. அவர் சொன்ஞர்:
"எங்கள் வெற்றியினுல் பாதிக்கப்படாது அரேபிய தனித்து வம் எங்களதைப் பார்க்கிலும் மிகவும் பாதுகாப்பாகவே இருக் கின்றது, நாங்கள் அவர்களது சமூக தடத்தையில் அதிக பாதிப் பைச் செலுத்தவில்லை. நப்லஸ் அல்லது துல்கறம் என்னும் இடங்களுக்குப் போகும் யாரும் அங்கு அதிகமாக ஏதும் நடந்
6

திருப்பதைக் காணமாட்டார். இஸ்ரவேலின் பிரவேசம் வலுவற்ற் தும் நொய்மையானதுமாக இருப்பதும் 'அராபியம்" மிக ஆழ மானதாகவும் இறுகியதாகவும் இருப்பதுமே இதன் காரணமாகும். அவர்கள். நமது சமுதாயத்தின் மீது அதிக பாதிப்பைச் செலுத்தி "இருக்கிருர்கள். தனது தனித்துவத்தைப் பேணிக் கொள்வதற் காக இஸ்ரவேல் சமூகம் அரேபியர்களிடம் இருந்து அதிகம் பாது காக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு நம்மிடம் இருந்து தேவைப்படும் பாதுகாப்பை விட நமக்கு அவர் களிடம் இருந்து அதிக பாதுகாப்புத் தேவைப்படுகிறது.’’
அவரது கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளாது இருக்க மாட் டார்கள். ஆனல் அவர்களால் துரத்தப்பட்ட மக்களின் தனித் துவத்தை அழித்தொழிக்க முயல்வதனுல் இஸ்ரவேலர்கள் ஒரு தனித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அபா இடான் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
கடா கர்மி
Arab Palestiniam Resistence, Volum e VI , No. 3, Marcil, 1974

Page 10
மஹ்மூட் தர்வீஷ்
புதுடில்லியில் 1970ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நான்காவது ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் மகாநாட்டில் தாமரை விருது பெற்ற மஹ்மூட் தர்விஷ் ஒரு புகழ் பெற்ற பலஸ்தீனக் கவிஞர். இஸ்ரவேலர் களின் பயங்கரவாதத்தின் கீழ் அவர்களால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் வளர்ந்த வர். 1960ம் ஆண்டில் இருந்து பலஸ்தீனப் போராட்ட இலக்கியத்தின் முக்கிய கவிஞ ராக இவர் திகழ்ந்து வருகிருர், இவரது கவிதைகள் தனித்துவமானவை. இவரது கவிதை நடையும், மொழியும், படிமங்களும் உண்மை உலகில் இருந்து, இவரது சொந்த சமூகத்தில் இருந்து வருபவை.

வாக்கு மூலம்
எழுதிக்கொள் இதனை நான் ஒர் அராபியன், எனது அட்டையின் இலக்கம் 50,000 எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?
எழுதிக் கொள் இதனை நான் ஓர் அராபியன்
தொழிலாளருடன்
கற்கள் உடைக்கிறேன் கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன் எ66 து பாட்டுக் குழந்தைகளுக்கும் முெட்டித் துண்டினேப் பெறுவதற்காக புத்தகம் ஒன்றைப் பெறுவதற்காக ஆயினும் கருலோ கேட்டு நான் இரந்திடமாட்டேன் 2 ல் அதிகாரத்தின் ஆளுகையி முழத்தாள் இட்டு நான் பணிந்திட மாட்டேன் கோபமா உனக்கே?
எழுதிக்கொள் இதனே நான் ஓர் அராபியன் பேர்புகழ் அற்ற ஒருவனே நான் மூர்க்க உலகில் நிலைபேறுடையவன். யுகங்களுக் கப்பால் காலத்துக் கப்பால்
எனது வேர்கள் ஆழச்செல்வன.

Page 11
10
உழவர் குலத்தின் எளிய மக்ன் நான் வைக்கோல் குடிசையில் வாழ்பவன் நான் எனது தலைமுடி மிகவும் கறுப்பு எனது கண்கள்: மண்நிறமானவை எனது அரபுத் தலைஅணி ஆக்கிரமிப் பாளரின் கைகளைப் பிமுண்டும்
அனைத்துக்கும் மேலே தயவுசெய்து இதனையும் எழுது யாரையும் நான் வெறுப்பவன் அல்ல யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல ஆயினும் பட்டினி வருத்தும் போதிலோ, என்னைக் கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்
கவனம்! எனது பசியை அஞ்சிக் கவனமாய் இருங்கள் எனது சினத்தை அஞ்சிக் கவனமாய் இருங்கள்
சிற்றம்
61ன் இதயத் தாமரைகள் கறுப்பாகி விட்டன. என் இதழ்களில் இருந்து சுவாலைகள் பறந்தணி, பசிப் பிசாசுகளே, எந்த வனத்தில் இருந்து எந்த நரகில் இருந்து இங்கு வந்தீர்கள்?
மான் துன்பங்களுக்கு நான் என்னை அர்ப்பணித்திருக்கிறேன் தேசப் பிரஷ்டத்துடனும் பசியுடனும் நான் கைகுலுக்கி இருக்கிறேன். சீற்றம்தான் எனது கை சீற்றம்தான் எனது வாய்

எனது நரம்பின் குருதி சீற்றத்தின் சாவே ஆகவே, நான் ஒரு பாடலைப் பாடுவேன் என நீ எதிர் பாராகே அடர்ந்த வனங்களில் மலர்கள் காட்டு மலர்களாகத்தான் மாறுகின்றன.
நாட்டபட்ட எனது புண்ணுக்கோர் ஆறுதலாக எனது களைத்த வார்த்தையைத் தருகிறேன், இதுவே என் வருத்தம்: மண்ணுக்கோர் பெரும் உதை மேகங்களுக்குப் பிறிதொன்று
இது போதும், இப்போது நான் சீற்றமாய் இருப்பதால் ஆனல் நாளை, புரட்சி வரும்.
ஒரு மனிதனைப் பற்றி
அவனது வர்பில் அவர்கள் சங்கிலிகளைப் பினத்தனர் மானப் பாறையுடன் இறுகக் கட்டினர் பின்னர் கறினர்
ரீ ஒரு கொலைகாரன் என்று.
அவனது உணவையும் உடைகளையும் கொடி களையும் அவர்கள் கவர்ந்து சென்றனர் மரண கூடத்தினுள் அவனை வீசி எறிந்தனர் பின்னர் கூறினர்
நீ ஒரு திருடன் என்று.
ہ
அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும் துரத்தி அடிக்கப் பட்டான் அவனது அன்புக்குரிய காதலியை அவர்கள் கவர்ந்து விட்டனர் பின்னர் கூறினர்
நீ ஒரு அகதி என்று.
ll

Page 12
12
தீப்பொறி கனலும் உனது விழிகளுக்கும் இரத்தம் படிந்த உனது கரங்களுக்கும்
pË Ja pl:
இரவு அகன்று விடும் எந்தச் சிறையும், எந்தச் சங்கிவியும் எஞ்சியிராது.
நீரோ இறந்துவிட்டான் ஆணுல் ரோம் இன்னும் இறக்கவில்லை. ரோம் தன் கண்களால் தொடர்ந்தும் போரிட்டாள் காய்ந்துபோன ஒரு கோதுமைக் கதிரின் விதைகள் கோடிக் கணக்கான பசிய கதிர்களால் சமவெளியை நிரப்பும்.
மனிதருக்குரிய L6)
துயரங்களின் தோழர்களே தளை யுண்ட நண்பர்களே வாருங்கள். என்றென்றும் தோல்வியுரு? :ணிவகுத்துச் செல்வோம். நாம் எதையும் இழக்கோம் நமது சவப்பெட்டிகளேத் தவிர.
விண்ணகம் நோக்கிநாம் பாடல் இசைக்கலாம் நம்பிக்கைகளை நாங்கள் அனுப்பலாம் தொழிற்சாலை களிலும் கல்லுடைக்கும் இடங்களிலும் வயல் வெளிகளிலும் நாங்கள் பாடலாம். மறைவிடங்களை விட்டும் நீங்கலாம் சூரியனைப் பார்க்கலாம்.
"அவர்கள் அரபிகள், காட்டு பிராண்டிகள்" நமது எதிரிகள் முணுமுணுப் பார்கள் ஆம்! நாங்கள் அரபிகள் நாங்கள் அறிவோம்

தொழிற் சாலைகளும் வீடுகளும் ஆஸ்பத்திரிகளும் பாடசாலைகளும் எப்படிக் கட்டுவது என்பதை அறிவோம். குண்டுகளும் ஏவுகணைகளும் எப்படிச் செய்வது என்பதை அறிவோம் இசையும், அழகிய கவிதையும் கூட நாங்கள் இயற்றுவோம்.
நான் பிரகடனம் செய்கிறேன்
எனது நாட்டில் ஒருசாண் நிலம் எஞ்சி இருக்கும் வரை என்னிடம் ஒரு ஒலிவமரம் எஞ்சி இருக்கும் வாை ஒரு எலுமிச்சை மரம் ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி எஞ்சி இருக்கும் வரை
6)
ஒரு சிறு நினைவு
ரு சிறு நூலகம் ஒரு பாட்டலரின் புகைப்படம் , ஒரு சுவர் எஞ்சி இருக்கும் வரை
ခံ့
அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை கவிஞர்கள் அந்தர் அல் - அப்ஸ் கதைகள் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான யுத்த காவியங்கள் எனது நாட்டில் இருக்கும் வரை
எனது கண்கள் இருக்கும் வரை எனது உதடுகள், எனது கைகள் எனது தன்னுணர்வு இருக்கும் வரை விடுதலைக் கான பயங்கரப் போரை எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்.
l3

Page 13
14
சுதந்திரமான மனிதர்கள் பெயரால் தொழிலாளர்கள், மாணவர்கள், கவிஞர்கள் பெயரால் நான் பிரகடனம் செய்வேன் கோழைகள் சூரியனின் எதிரிகள் அவமான ரொட்டியினல் ஊதிப் புடைக்கட்டும் நான் வாழும் வரை எனது சொற்களும் வாழும் சுதந்திரப் போராளிகளின் கைகளில் ரொட்டியாயும் ஆயுதமாயும்
என்றும் இருக்கும்.
எதிர்ப்பு
நீ என்னைச் சுற்றிக் கட்டலாம் வாசிப்பதற்கும் புகைப்பதற்கும் நீ தடை விதிக்கலாம் எனது வாயில் நீ மண் இட்டு நிரப்பலாம் ஆயினும் என்ன?
கவிதை என் துடிக்கும் இதயத்தின் குருதி என் ரொட்டியின் உப்பு, கண்ணின் திரவம் நகங்களால், கண்இமைகளால் கத்திமுனையால்
அதை நான் எழுதுவேன்.
சிறைச்சாலையில் குளியலறையில் குதிரை லாயத்தில் நான் அதைப் பாடுவேன்.
சவுக்கடியிலும் :ங்கிலிப் பிணைப்பிலும் கைவிலங்கின் வேதனை இடையிலும் நான் அதைப் பாடுவேன்,

போரிடும் எனது பாடலைப்பாட என்னுள் ஓர் கோடி வானம்பாடிகள் உள்ளன.
நம்பிக்கை
உனது பாத்திரத்தில் இன்னமும் சிறிதுதேன் எஞ்சி உள்ளது. ஈக்களைத் துரத்து
தேனைப் பேணு
இன்னமும் கூட உனது வீட்டுக்கோர் கதவுண்டு இன்னமும் கூட உனது வீட்டிலோர் பாய் உண்டு கதவை மூடு குளிர்காற்றில் இருந்தும் உன் குழந்தைகளைப் பேணு
மிகமிக மோசம் இக்குளிர் காற்று குழநதைகள நனகு து நெருப் பெரிக்க சிறிது விறகு கொஞ்சம் கோப்பி நெருப்புச் சுவாலை இன்னமும் கூட உன்னிடம் உண்டு
துரங்குதல் வேண்டும்
இரங்கற்பா
சென்று திரும்பா என் நண்பனின் கதையை
எமது மண்ணிலே துயருடன் அவர்கள் கூறுகின்றனர்.
அவனது பெயர். அவனது பெயரைக் குறிப்பிட வேண்டாம்.

Page 14
இதயங்களில் அச்சொல் புனிதமாய் இருக்கட்டும். சாம்பலைப் போல் காற்று அதனையும் அள்ளிச் செல்ல விடவேண்டாம். சுகப்படுத்த முடியாத ஒரு காயமாக அவனை எங்கள் இதயத்தில் இருத்துவோம். அன்புள்ளோரே, அணுதைகளே நான் விசாரப் படுகிறேன் அநேக பெயர்களுள் அவனது பெயரை மறந்து விடுவோம் என்றஞ்சுகிறேன். அவனை மறக்க நான் அஞ்சுகிறேன் மாரி மழையிலும் புயலிலும் எம் இதயக் காயங்கள் உறங்குதல் கூடும் என நான் அஞ்சுகிறேன்
அவனது வயது . . மழையை நினைவுகூரா ஒர் அரும்பு அவன் நிலவொளியில் காதல் பாட்டுப் பாடியதில்லே அவன் காதலிக்காகக் காத்திருந்து கடிகாரத்தை நிறுத்தியதில்லே அவன்
அவனது கரங்கள் சுவரருகே யாரையும் தழுவியதில்லே.
ஒர் உந்தும் வேட்கையை
ty
அவன் விழிகள் என்றும் தொடர்ந்ததில்:
அவன் ஒரு பெண்ணை முத்தமிட்டதேயில்லே ஒருத்தியுடனும் சல்லாபித்ததுமில்லே அவனது வாழ்வில் இருமுறை மட்டுமே ஒரு பெண்ணேப் பார்த்து ஆ! என வியந்த பின் ஆணுல் அவளோ, அவனைப் பொருட்படுத்தியதில்லே. அவலுே முதிரா இளைஞன் அவளே அடையும் வழி அவன் இழந்தான் நம்பிக்கையையும் அதுபோல் இழந்தான்
எங்கள் மண்ணிலே அவனது கதையைக் கூறுகின்றனர், அவன் ஓடி மறைந்த போது
ஆவன க காயிடம் விடைபெற வில்லே 。து g iQ PD Q、U تھ'' {{نتیج
- s 8; s. 8 YTY * நண்பர்களைச் சந்திக்க வில்லை.
 
 

அச்சத்தைத் தணிக்கும் செய்தி எதனையும் விட்டுச் செல்லவில்லை. வழிபார்த்திருக்கும் அவனது தாயின் நீண்ட இரவுக்கு விளக்கேற்றும் ஓர் சொல்லைத்தானும் அவன் கூறிச் செல்லவில்லே. அவனது தாயோ ஆகாயத் தோடும் அவனது தலையணை, அவனது பெட்டி என்பவற்றேடுமே பேசுகின்ருள்
அவள் தன் துயர்நிலையில் சொல்லுவாள்: "இரவே, நட்சத்திரங்களே, கடவுளே, முகிலே, பறந்து செல்லும் என் பறவையைக் கண்டீர்களா? சுடரும் இரு தாரகை அவனது கண்கள். இரண்டு பூக்கூடைகள் அவனது கரங்கள் அவனது மார்பு நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் தலையணை யாகும். காற்றும் மலரும் ஆடும் ஊஞ்சல் அவனது கேசம் பிரயாணத்துக்கு இன்னும் தகுதிபெருத பிரயாணியைக் கண்டீர்களா? உணவு எடுத்துக் கொள்ளாது அவன் சென்றுவிட்டான் பசிவரும் போது அவனுக்கு யார் உணவளிப்பார்? அன்னியனுன அவனுக்கு வீதி அபாயங்களில் யார் அனுதாபம் காட்டுவார் என் பகன், என் மகன்'
இரவே, தாரகைகளே, தெருக்களே, முகில்களே அவளுக்குச் சொல்லுங்கள்: எம்மிடம் விடையில்லை. கண்ணிரை, சோகத்தை, கஷ்டங்களைவிட பெரியது காயம். உண்மையை நீ தாங்கமாட்டாய் ஏனெனில் உனது மகன் இறந்து விட்டான் தாயே
கண்ணிரை முடித்து விடாதே. கண்ணிருக்குத் தேவை இருப்பதால் ஒவ்வொரு மாலை நேரத்துக்கும் அதில் கொஞ்சம் வைத்திரு.
17

Page 15
18
மரணத்தினுல் பாதைகள் நெரிசலடையும் போது உன் மகன் போன்ற பிரயாணிகளால் அவை மறிக்கப்படுகின்றன. நீ உன் கண்ணிரைத் துடைத்து முன்னர் இறந்த, அன்புக்குரிய அகதிகளின் நினைவுச் சின்னங்களாக எமது கண்ணிரில் சிறிதை எடுத்துக்கொள்வாய்.
உனது கண்ணிரை முடித்து விடாதே. பாத்திரத்தில் சிறிது சண்ணிரை வைத்திரு சிலவேளை
நாளே அவனது தகப்பனுக்காக அல்லது அவனது சகோதரனுக்காக அல்லது அவனது நண்பன் எனக்காக நாளைக்கு எங்களுக்காக இரு துளிக் கண்ணிரை வைத்திரு.
எனது நண்பனைப் பற்றி எமது மண்ணிலே அதிகம் பேசுகின்றனர். எப்படி அவன் சென்ருன் எப்படி அவன் திரும்பவே இல்லை 01ப்படி அவன் தன் இளமையை இழந்தான்
துப்பாக்கி வேட்டுக்கள் அவன் மார் பையும் முகத்தையும் நொறுக்கின தயவு செய்து மேலும் விபரணம் வேண்டாம். நான் அவனது காயங்களைப் பார்த்தேன் அதன் பரிமாணங்களைப் பார்த்தேன் நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
அன்புள்ள நண்பனே, அவன் எப்போது வருவான் என்று கேட்காதே மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள் என்று மட்டும் கேள்.

பெளசி அல் அஸ்மார்
பெளசி அல் அஸ்மார் புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். "கொமன் ரறி என்ற அமெரிக்க சஞ்சிகையின் 1970 டிசம்பர் இதழில், ஹாவாட் பல்கலைக்கழகச் சட்டத்துறைப் பேராசிரியர் அலன் டெர் ஷோவிற்ஸ் என்பவர் அஸ்மார் பற்றிப் பின் வருமாறு எழுதினர். இக்கவிஞர் 31 வய துடைய இஸ்ரவேல் அரபுப் பிரஜை. இவர் தனது சொந்த இடமான டிட்டாவில் இருந்து கவிதை எழுதி வந்தார். இப் பொழுது டெமொன் சிறைச் சாலையில் இருந்து தனது கவிதைகளை எழுதுகிருர், நான் சிறைக் கைதிகள் மத்தியில் பெளசி யைப் பற்றி விசாரித்தேன்; கட்டுமஸ்தான வசீகரப் புன்னகையுடன் கூடிய ஒர் உயர்ந்த மனிதர் முன் வந்தார். வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக் காட்டும் பெளசியின் தோற் றத்தில் தன்னம்பிக்கை, உறுதி, நேர்மை ஆகியவை மணம் வீசின. நான் அவரைக் கவனித்ததில் இருந்தும் மற்றச் சிறைக் கைதி களுடன் அவர் பழகிய முறையில் இருந்தும் பெளசி அல் அஸ்மார் ஒரு தலைவன் என்று என்ல்ை உறுதியாகக் கூறமுடியும். நீங்கள் என் தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ளிர் கள் என்று நான் பெளசியிடம் கேட்டேன். அவர் எனது கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டு கூறினர். ஏனெனில் நான் ஒர் அராபியன் என்று. அவரது இக்கூற்று 1970 செப்டம்பர் மாதம் அவர் சிறையில் இருக் கும் போது எழுதிய 'ஏனெனில் ந7 ன் ஒர் அராபியன்’ என்ற கவிதையில் இடம் பெற் றுள்ளது.

Page 16
20
ஒரு யூத நண்பனுக்கு
சாத்திய மற்றதை என்னிடம் கேளாதே.
நட்சத்திரங்களைக் கொண்டு வரும்படி சூரியனிடம் நடந்து செல்லும்படி என்னிடம் கேளாதே. கடலை வற்றவைக்கும் படி பகலொளியைத் துடைத்து விடும்படி என்னைக் கேளாதே.
எனது கண்களை,
எனது காதலை , எனது இளமை நினைவுகளை அழித்து விடும்படி என்னைக் கேளாதே. நான் ஒரு வெறும் மனிதன்.
ஒர் ஒலிவ மரத்தின் கீழ் நான் வளர்ந்தேன். எனது தோட்டத்துக் கணிகளை நான் புசித்தேன். திராட்சை வனங்களில் வைனை நான் குடித்தேன் பள்ளத் தாக்குசளில் கள்ளிப் பழங்களை அதிகம் அதிகம் நான் ருசிபார்த்தேன்.
எனது செவிகளில் வானம் படிகள் பாடல் இசைத்தன. நகரங்களிலும் வயல்வெளிகளிலும் வீசிச் சென்ற சுதந்திரக் காற்று எப்போதும் என்னைச் சிலிர்ப்படை வித்தது.

எனது நண்பனே எனது சொந்த நாட்டினை விட்டுப் போகுமாறு நீ என்னைக் கேட்க முடியாது.
ஏனெனில் நான் ஒர் அராபியன்
நான் தடுப்புக்காவலில் இருக்கிறேன். ஐயா, அதற்குக் காரணம் நான் ஓர் அராபியன் என்பதே. தன் ஆன்மாவை விற்க மறுத்த ஒர் அராபியன்.
ஐயா, விடுதலைக்காக எப்போதும் முயன்ற ஒர் அராபியன்.
தனது மக்களின் துயர்களை எதிர்த்து நின்ற ஓர் அராபியன் நீதியான சமாதானத்தில் நம்பிக்கை கொண்டவன். ஒவ்வொரு மூலையிலும் மரணத்தை எதிர்த்துப் பேசியவன். ஒரு சகோதரத்துவ வாழ்வைக் கோரி அதற்காக வாழ்ந்தவன்.
ஆகவேதான் நான் தடுப்புக்காவலில் இருக்கிறேன். ஏனெனில் நான் போராடத் துணிந்தவன். இன்னும் ஏனெனில்
நான் ஒர் அராபியன்
2l

Page 17
றஷிட் ஹ-9 சைன்
றவீட் ஹாசைனின் அரசியல் கவிதை கள் படிமங்களாலும் குறியீடுகளாலும் ஆனவை. மூன்று அம்சங்கள் அவரது கவி தைகளில் முனைப்பாகப் பிரதிபலிக்கப்படு கின்றன. முதலாவது 1948க்குப் பின்னர் இஸ்ரவேல் அராபியரின் துயர்நிலை: இாண் டாவது அரபு மக்களை வஞ்சித்த அரபுக் தலைவர்களுக் கெதிரான கிளர்ச்சி; மூன்ரு வது ஆசிய ஆபிரிக்க தேசிய விடுதலை இயக் கங்களுடன் தங்களையும் இனங்காணுதல், 1950 களின் ஆரம்பத்தில் இஸ்ரவேல் அரபு இலக்கியத்தில் காணப்படாதிருந்த அரசியல் பிரக்ஞை ஹ"சைனின் கவிதை களில் நன்கு பிரதிபலிக்கின்றது. ஹ"சைனே இத்தகைய கவிதைகளின் முன்னேடியாவார்.

நரகத்துப் பூக்கள்
இருண்ட கூட- ாரங்களில் சங்கிலிகளில், நரகத்து நிழலில் எனது மக்களே சிறையிட் டுள்ளனர்.
வாய்மூடி இரும் என ஆணையிட் டுள்ளனர்,
அவர்கள் ஏதும் முறையீடு செய்தால் இராணுவச் ச வுக்கால் சாவால், பசியால்
அச்சுறுத்தினர்.
அச்சுறுத்தியோர் சென்றனர் ஆயினும் ‘நரகத்தில் மகிழ்வுடன் வாழ்க’
என்றே அர்கள் கூறிச் சென்றனர்.
இந்த அணுதைக் குழந்தைகளே உங்களால் பார்க்க முடிகிறதா ? ஆண்டாண்டுகளி11க அவர்களும் துயரமும் சகாக்களாய் இருந்தனர். பிரார்த்தித்துக் களைத்தனர் கேட்போர் இன்றி.
*" குழந்தைகளே யார் நீங்கள்? இப்படி உங்களை வருத்தியோர் யாவர்?' "நாங்கள் நரகத்துப் பூக்கள்'"
என்றனர் அவர்கள்,
23

Page 18
மனிதர்களாக மதிக்கப்படாத
இலட்சோப லட்சம் 1ணிதருக்காக இக்கூடாரங்கள் மத்தியில், பருதி சாஸ்வதமான ஒர் பாதையைச் சமைப்பான் பொன் வாழ்வுச் சிவிகையில் சூரியன் கீழே பவனி வருவான் காதல் பனிநீரால் நரக நெருப்பினை நாங்கள் அணைப்போம்,
அலுகோசு
ஒரு கயிறு ஒரு சுத்தியல், ஒரு இரும்புக் கம்பி தாருங்கள் எனக்கு;
ஒரு துர்க்கு மரத்தை நான் ஆக்குதற்காக,
எங்கள் மத்தியில்,
இன்னும் ஒர் கும்பல்
மஞ்சியுள்ளது. அவமானத்தை அது சாப்பிடுகின்றது. தலகுணிந்து நடந்து செல்கின் 11) եl . அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்.
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனே
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்?
எனது தாயகம் ஆசியா
எனது தாயகம் ஆசியா அதுவோ காதலின் கண்டம் குருதியின் கண்டம் உள்ளக் கிளர்ச்சியின் கண்டமும் அதுதான்.
 

காலம் கடத்துவோர்க் கெதிராய்க் கிளர்ந்தெழும் மனிதரின் கண்டம் அது.
நேற்று பசித்து, களைத்து, வஞ்சிக்கப்பட்ட எனது மக்களைக் கண்ணெடுத்தும் பாராது என்மதிப்பரும் வளங்களை மட்டும் வாயூற நோக்கியோர் யாரோ
இன்று ஆசியாவின் கெளரவத்தை அங்கீகரிக்கும் நிலைக்கு ஆளாகியோர் யாரோ
அந்த எஜமானர்களுக் கெதிராய் கிளர்ந் தெழும் கலகக் காரரின், முசி எரியும் தீச்சுவாலையின் கண்டம் அது.
ஆசியா, அது என் தாயகம்.
25

Page 19
சலீம் ஜுப்றன்
சலிம் ஜ"ப்ருன்மூக்கியமான ஒரு பலஸ் தீனக் கவிஞர். இவரது கவிதைகள் இறுக் கமும் செறிவும் மிக்கவை.

துரத்தப்பட்டவன்
எல்லையின் ஊடே சூரியன் நடக்கும் துப்பாக்கிகள் மெளனமாய் இருக்கும் துல்கறம்மில், ஒர் வானம்பாடி, தன் காலைப் பாடலைப் பாடத் தொடங்கும் பின்னர் எழுந்து கிப்புற்ஸ் நகரப் பறவைகளோடு விருந்து உண்ணப் பறந்து செல்லும் தனித்த ஓர் கழுதை யுத்தம் நிகழும் எல்லையின் குறுக்கே ஆறுதலாக நடந்து செல்லும், காவல் வீரர் கவனியா திருப்பர்.
ஆனல் எனக்கோ,
என் தாய் நாடே, துரத்தப்பட்ட உன் மகனுக்கோ, உன் வானத்துக்கும் என் கண்களுக்கும் இடையே எல்?லச் சுவர்களின் பெரும் தொடர் இருந்து காட்சியை மறைக்கும்.
தாக்கில் தொங்கும் ஒப் அராபியன்
தூக்கில் தொங்கும் இந்த அராபியன் சிறுவர்கள் வாங்கி விளையாடத் தக்க மிகமிக அழகிய விளையாட்டுப் பொம்மை
ஓ, நாசி முகாம்களில் இறந்தோரின் ஆன்மாக்களே, தொங்கும் இம் மனிதன் பெர்லினில் பிறந்த ஒர் யூதன் அல்ல
தொங்கும் இம்மனிதன் என்போல் ஒர் அராபியன். உங்கள் சகோதரர்கள் அவனைக் கொன்றனர் சியோனில் வாழும். உங்கள் நாசி நண்பர்கள்.
,

Page 20
தெளபீக் சையத்
தெளபீக் சையத் பிரபலமான பலஸ் தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர சபை மேயராக 67% வாக்குகளால் @gងៃ செய்யப்பட்டார்.

சாத்தியமற்றவை
ஊசித் துவாரத்துள் யானையைச் செலுத்தலாம் பால் வீதியில் பொரித்த மீன் பிடிக்கலாம் கடலை உழலாம், முதலையைக் கூட மனிதஞய் ஆக்கலாம் இவையெலாம் உமக்கு மிகமிக எளிது.
ஆயினும்
சுடர்விடும் எமது நம்பிக்கை ஒளியினை தொடர்ந்து துன்புறுத்தி அழிக்கலாம் என்பதோ எமது பயணத்தின் ஒர் அடியினைக் கூட தடுத்து விடுவதோ
சாத்திய மற்றது.
மந்திர வலிமை உடையவர் நாங்கள் ஆயிரக் கணக்கில் எங்கும் பாந்துளோம் வித்தாவிலும்
றம்லாவிலும்
கலிலேயிலும்
எல்லா இடமும் ந1ங்கள் பாக்குளோம்.
உமது மார்பின்மேல் ஒரு பெருஞ் சுவாாய் நாங்கள் இங்கிருப்போம் உமது தொண்டையில் ஒர் கண்ணுடித் துண்டினை, ஒரு கள்ளி முள்ளினை, நாங்கள் செருகுவோம். உமது கண்ணில் ஒர் எரியும் கழலி?ன நாங்கள் செலுத்துவோம்.
உமது மார் பின்மேல் ஒரு பெருஞ் சுவராப் நாங்கள் இங்கிருப்போம். உமது தவறணையில் தட்டுகள் கழுவி
29

Page 21
30
உமது எஜமானரின் கோப்பையை நிரப்பி, கரிபடிந்த உமது குசினியைத் துப்பரவாக்கி, நாங்கள் இங்கிருப்போம் பசியால் வாடும் எம் சிறுவருக்காக, உமது வேட்டைப் பல்லிடை இருந்து ஒர் ருெட்டித் துண்டினைப் பறிப்பதற்காக நாங்கள் இங்கிருப்போம்.
உமது மார்பின் மேல் ஒரு பெருஞ் சுவராய் இங்கு நாம் இருப்போம்.
பட்டினி யோடு, கந்தல் உடையுடன், போர்க்குணம் கொண்ட, எம் பாடலைப் பாடி, தெருக்கள் தோறும் சினத்துடன் குழுமி, பாதாழச் சிறைகளை மகிழ்வுடன் திரைத்து புதிய தலைமுறை வாலிபரிடத்து பழிவாங்கும் உணர்வினைப் போரி வளர்த்து, மந்திர வலியுடன்,
-ஆயிரக்கணக்கில் நாங்கள் எங்கும் பவனி வருவோர். லித்தாவிலும்
றம்லாவிலும்
கலிலேயிலும்
எங்கும் நாங்கள் பவனி வருவோம்.
நாங்கள் இங்கிருப்போம் பிறகு செல்வோம்
கடலைக் குடிப்போம் கண் இமை வெட்டாக் காவல் வீரராய் எங்கள் நிலமெலாம் எங்கள் மரமெலாம் நாங்கள் இங்கிருப்போம்.

புளிக்க வைக்கும் நொதியம் போல
6İLDğl குறிக்கோள் கனியும் வரைக்கும் நாங்கள் இங்கிருப்போம். நாங்கள் இங்கிருப்போம் விறைத்த நரம்புடன் இதயத்திலும் நரம்புகளிலும் சிவப்பு நரகுடன், தாகம் தணிக்க நாம் மலைகளைப் பிழிவோம் புழுதியைக் குடித்துப் பசியினைத் தணிப்போம்
ஆயினும் நாங்கள் நகரவே மாட்டோம்
இங்கு நாங்கள் இரத்தம் சிந்துவோம் இங்கு எமக்கோர் பழமை இருந்தது எதிர்காலம் ஒன்றும் இங்கெமக் குள்ளது வெல்ல முடியாதவர் இங்கு நாங்களே
ஆகவே எனது வேர்களே, ஆழச் செல்க, ஆழச் செல்க!
ஓ, பத்தாயிரம் கைதிகளே
என் அன்புக்குரியோரே, ஓ, பத்தாயிரம் கைதிகளே, உங்கள் குரலே , உறுதிகொண் டெழுந்த உம்து மக்களின் உளம் தொடுகின்றது. உங்கள் நிலைப்பாடு, உறுதிகொண் டெழுந்த உமது மக்கள் தலைநிமிரச் செய்கிறது. உங்களை நாங்கள் ஒருபோதும் மறவோம்.
நாங்கள் எல்லோரும் உம்முடன் உள்ளோம். சுதந்திரத்தின்’ விலையினைச் செலுத்தி, நம் தாயகத்தில்
31

Page 22
32
臀
சுதந்திரச் சூரியன் உதிக்கும் வரைக்கும்
நாங்கள் எல்லோரும் உம்முடன் இருப்போம் அந்த நாள் வருகிறது அது விரைந்து வருகிறது. என் இசைக் கருவியை எடுத்துச் செல்வேன் விதிகள் தோறும் பாடித் திரிவேன்.
என் பட்டின மெல்லாம் கிராமங்கள் எல்லாம், பரிசுகள் குவியும் رவிடுதலை பெற்ற என் தாய்நாட்டிற்காக இங்கிருந்து நான் பாடல் இசைப்பேன் எங்கெங்கும் நான் பாடல் இசைப்பேன் அந்த நாள் வருகிறது. அது விரைந்து வருகிறது.
எனது பேனையை இதயத்தில் தோய்த்து, நான் எடுத்துச் செல்வேன் பூவின் இதழ்களில் நான் அதால் எழுதுவேன் பறவைச் சிறகில் நான் அதல் எழுதுவேன் காற்றில் நிமிர்ந்த மரக் கொப்புகளில் நான் அதால் எழுதுவேன் எமது பண்ணைகளின், தொழிற்சாலைகளின் வாசற் கதவிலும் பாலகர்களின் உள்ளங் கையிலும் புனித வீரரின் நினைவாலயத்திலும் இராணுவ வீரரின் தோள்ப் பட்டையிலும் நான் எழுதுவேன்; தொடர்ந்தும் எழுதுவேன் இங்கும் எழுதுவேன் கைப்பற்றப்பட்ட ஜெருசலேமிலும் காசாவிலும், கோலாவிலும்
எல்லா இடமும் இதை நான் எழுதுவேன்.
 

முன் ஒரு காலம் என் தாய் நாடு கைப்பற்றப் பட்ட அடிமையாய் இருந்தது ஆனல் இன்ருே சுதந்திரம் பெற்றது கைப்பற்றியவன் கழிந்து மறைந்தான் இன்று அவன் வெறும் நினைவு மட்டுமே.
நான் வாழ்வேன்; உயிர்த்துடிப்புடன் இருப்பேன் அசையும் ஒரு சிறு காற்றில் ஒரு பூவில், ஒரு பச்சைப் புல் இதழில், ஒடும் நீரின் ஒரு சிறு தாரையில் இடையன் ஒருவனின் புல்லாங் குழலில் சூரிய ஒளியில், மெளனத்தில் அசையும் இறக்கைத் துடிப்பில் நான் வாழ்வேன்;
உயிர்த்துடிப்புடன் இருப்பேன்.
என் முதாதையரின் தாய்த்திரு நாட்டில் இறுதிநாள் வரை, நான் மறுபிறப் பெடுப்பேன்
வெற்றியுடனும் சுதந்திர மனிதனின் வைகறையுடனும் எனக்கோர் சந்திப்பு நிகழ இருப்பதால் இறுதி நாள் வரை நான் மறுபிறப் பெடுப்பேன்.
33

Page 23
அந்தொய்னே ஜபாரு
பலஸ்தின விடுதலை இயக்கத்தின் தலைவர் யசிா அ)பாத் ஐ. நா. சபையில் முதல் முறை பேசியபோது ‘இன்று நான் ஒரு ஒலிவம் கிஃயையும் சுதந்திர வீரனின் துப் டாக்கியையும் ஏந்தி வந்துள்ளேன். ஒலிவம் கி:ே என் கையில் இருந்து விழுமாறு 3ெய்யாதீர்கள்' என்று கூறினுர், அந் தொப்னே ஜடாமுவின் இக்கவிதை அப்பேச்
《スー
சின் துண்டுதலினுல் பிறந்ததாகும்.

சமாதான நதியும் போர்த் துப்பாக்கிகளும்
ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனர்களின் முறையீடு
உள்ளங்கைகளில் புழுக்களை ஏந்தி இன்று நாங்கள் உம்மிடம் வந்துளோம். துயில் கலைந்து எழுந்த எங்கள் நாடு பலஸ்தீனத்துடன் நாங்கள் வந்துளோம்
இருபது ஆண்டுகள் நாம் காத்திருந்தோம் பெற்றவை யெல்லாம் வார்த்தைகள் மட்டுமே. வெற்று வார்த்தைகள் மட்டுமே பெற்ருேம்.
எங்கள் காயங்கள் வலிதருகின்றன. எங்கள் எலும்புகள் நொறுக்கப் பட்டன ஆயினும் நாங்கள் உமக்கு நல்கிட வந்துளோம். ஈராக் நாட்டு ரோசாப் பூக்களும் டமஸ்கஸ் நகர நறிய மலர்களும் வானம் Tடியின் இன்னிசைப் பாடலும் சின்னக் குருவியின் பிரார்த்தஃனக் கீதமும் காதல் இரவுகள் அனைத்தும் கூட நாங்கள் உமக்கு நல்கிட வந்துளோம்.
ஆண்டாண்டு காலமாய், அடித்து நொறுக்கிச் சிதறப்பட்ட மக்களாய் வாழ்ந்தோம். பெருந்தன்மையும் வீரமும் மிக்க மக்களே நாங்கள். அனைத்துக் காதலும் பெறுவதற்குரிய அருகதை முழுமையாய் உடையவர் நாங்கள். நட்புடன் வாழ நாங்கள் செய்யும் கடைசி முயற்சி இதுவேயாகும். கையில் நாம் தாங்கிய ஒலிவம் கி2ாபினே நிலத்தில் வீச நிர்ப்பந்திக்காதீர்

Page 24
36
ஒருபுது ஒழுக்கம் உருவாக்குமாறு உலகிடம் நாங்கள் விண்ணப்பம் செய்கிழுேம் மணல் மேடுகளிலும் மலைகளின் மீதும் நாங்கள் வாழ்ந்தவர் என்பதை மறப்பீர். மணல்களை நாங்கள் போற்றினல் என்ன? மரங்களை நாங்கள் மதித்தால் என்ன? பிாகாசமான நட்சத்திரங்களை எனது சகோதரி கழுவினல் என்ன?
எனது பாட்டி திறந்த கண்களால்
ஜிலேமை
வெறித்துப் பார்ப்பதைக் காணும் நி எனக்கேன் வருவான்? வானத்தை நோக்கி நிர்வர்ணமாக எனது தாயின் சடலம் கிடப்பதைக்
காணும் நிலைமை எனக்கேன் வருவான்?
காட்டு வழிசளில் தீர்க்ச தரிசிகள் சஞ்சாரம் செய்ததை நாங்கள் பார்த்துளோம். எமது பூமியின் புனித வழிகளில் ஒளிரும் தாாகை தடம் பதித் துள்ளன.
அநீதியால் துயருறும் எமது மக்கள் காதலின், நட்பின், கீதமே யாவர். எல்லா நாட்டு மக்களிடத்தும் அவர்கள் அன்புக் கரம் இதோ j. ៣ រឺ அந்தக் கரங்களை வெட்டி விடாதீர்
உடைந்து நொறுங்கிய உள்ளத் துயருடன் உலகில் உள்ள நாடுகளிடத்தில்
முன்பும் நாங்கள் முறையீடு செய்தோம்

ஆயின் நாங்கள் அவர்களின் திறந்த கதவின் வெளியிலே தள்ளப் பட்டோம் உம் மனச்சாட்சி அசையவே இல்லை கசக்கிப் பிழியும் அகதி வாழ்க்கை சுமையாய் எம்மில் சுமத்தப் பட்டது. நாடுகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்ருய் திறந்த கரங்களால் வரவேற்கப் பட்டன. ஆயின் நாங்களோ ஒதுக்கப் பட்டோம்.
எமது இளைஞரின், எமது பெண்களின் எமது சிறர்களின் வேண்டுதல் எல்லாம் உமது நெஞ்சினை உலுப்பவே இல்லை.
பிறகு வந்தது எம் போராட்டம். தியாகங்களும் போர்களும் நிகழ்ந்தன. கொல்லப் பட்டோம் காயமடைந்தோம் முறையீடுகள் மிகமிகக் குறைந்தன. எங்கள் கண்ணீரை நாங்கள் நிறுத்திைேம்
துப்பாக்கி முழக்கம் சொற்களை விடவும் உரத்துப் பேசின.
நீதிகோரும் எமது மக்களைத் தடுத்திட வேண்டாம். எமது புண்களைக் கிளறிட வேண்டாம்
ஒநாய்களாக, வேட்டைப் பறவையாய் ஒவ்வொரு நாளும் பலியிடப்படுகிற ஆட்டுக் கடாக்களாய் கணிக்கப் படுவதை நாங்கள் வெறுக்கிருேம்.
பயங்கர நிலைமை முடிந்திட வேண்டும் எமது புண்ணிய பூமியின் ஊடாய் சமாதான நதி பெருகிட வேண்டும் என்பதே எமது பிராத்தனையாகும்
37

Page 25
38
நீதியும் சமாதானமும் புதியதான ஒர் சிந்தனைப் பாதையும் இவையே எமது வேண்டுதலாகும்
இனக்கொலை புரிந்து கரங்கள் தறித்த கடந்த கால நும் அச்சுறுத்தல்கள் எதையுமே இங்கு உருவாக்கவில்லை.
துப்பாக்கி முழக்கமும் யுத்தபேரிகையும் தவிர எதையுமே இங்கு உருவாக்கவில்லை.

பத்வா துகான்
பத்வா துகான் மிகப் பிரபலம் வாய்ந்த ஓர் இளம் அரபுப் பெண் கவிஞர். இவர் பிரசித்தி பெற்ற பலஸ்தீன அரபுக் கவிஞர் இப்ருகிம் துகானின் சகோதரி. இவரது பெரும்பாலான போராட்டக் கவிதைகள் 1967 இலும் 1968 இலும் எழுதப்பட்டன. 1968ல் தான் இவரது சொந்த நகரமான 'நப்லஸ் இஸ்ரவேலின் ஆக்கிரமிப்புக்குள் ளாகி வீழ்ச்சியடைந்தது.
அநேக சமகாலப் பலஸ்தீன எழுத்தா ளர்கள் போல் பத்வா துகானும் இஸ்ரவே லர்களால் சிறையிடப்பட்டார். பத்வா துகான் தொடர்ந்து எழுதுவதையும் பிரசுரிப் பதையும் இஸ்ரவேல் பாதுகாப்பு அமைச்சர் மோஷே டயான் தானே தடை செய்தார். பத்வா துகானின் கவிதை ஒன்றைப் படித்த பிறகு ‘இது இருபது கமாண்டோக்களுக்குச் சமமானது" என மோஷே டயான் ஆச்சரி யப் பட்டதாகக் கூறப்படுகின்றது.

Page 26
40
举 ܀ ܪܹܦ݁ܶܐ . ܀ என்றென்றும் பலஸ்தன்
மேன்மைமிகு
மேன்மைமிகு தேசமே, இருள் மிகுந்த பெருந்துயர் இரவில் திரிகைக்கல் சுழலலாம் மேலும் சுழலலாம்
ஆயின் உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு அவற்ருல் இயலா; அவை மிகச் சிறியன.
ஒ பெரிய தேசமே, ஒ ஆழ்ந்த காயமே, தனிப் பெரும் காதலே,
நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து திருடப்பட்ட உன் குழந்தைகளின்சிரிப்பில் இருந்து சிதைவுகளில் இருந்து சித்திர வதையில் இருந்து இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து வாழ்வினதும், மரணத்தினதும் நடுக்கங்களில் இருந்து புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்
அது எழவே செய்யும்
வெள்ளப் பெருக்கும் விருட்சமும்
பேய்க்குணமுள்ள புயற் காற்று கட்டவிழ்த்து விடப்பட்ட போது, முரட்டுத் தனமான கடற்கரைகளில் இருந்து பசுமை நிறைந்த வயல்களின் மீது

கறுப்புப் பிரளயம் கக்கப் பட்டபோது சாத்தான் காற்றினுள்டே கொக்கரித்தான்: * விருட்சம் விழுந்தது விருட்சம் விழுந்து விட்டது புயற்காற்றினல் பெருமைமிகு அடிமரம் முறிந்து சிதைந்தது. மரம் இறந்து விட்டது.
‘விருட்சமே, விருட்சமே மரணிக்க முடியுமா உன்னுல்? சிவப்புச் சிற்ருறுகள் கேட்டன. பிரிய விருட்சமே, இளம் கிளைகளின் திராட்சை ரசத்தினுல் உனது வேர்கள் செழிப்படைந் துள்ளன. பிரிய விருட்சமே அராபிய வேர்கள் இறப்பதே இல்லே, அவை
பாறைகளேத் துளைத்து ஆழமாய்ச் செல்வன. ஆழ நிலத்திலே, அவை தம் வழியினைக் கண்டறி கின்றன.
விருட்சமே, விருட்சமே நீ வளர்வாய். உனது இலேகள் பசுமையாகவும், செந்தளிப்பாகவும் சூரிய ஒளியில் திடீரெனத் தளிர்க்கும். சூரியன் வரைக்கும் இலைகளின் இடையே சிரிப்பொலி கேட்கும் மகிழ்ச்சிப் பெருக்கு நம் தாயகம் நோக்கி திரும்பி நடக்கும்
தாயகம் நோக்கி
தாயகம் நோக்கி
41

Page 27
42.
ஏசுநாதருக்கு
பிரபுவே, பிரபஞ்சத்தின் தந்தையே, இவ்வாண்டு, ஜெருசலேத்தின் உற்சவங்கள் வதை செய்யப் படுகின்றன.
பிரபுவே,
உங்கள் தினத்தில் எல்லா மணிகளும் மெளனமாய் உள்ளன. ஈராயிரம் ஆண்டுகளாக அவைகள் ஒலித்தன இடையரு தொலித்தன.
ஆனுல் இன்ருே
ஊமைகளாக்கப் பட்டன அவைகள்.
மண்டபங்கள் இருளடைந்துள்ளன. இருட்டு அனைத்தையும் மூழ்கடித்துள்ளது. வேதனை வீதியில் நடக்கிறது ஜெருசலேம். சிலுவையின் மீது ஜெருசலேம் புலம்புகிறது. இத்திர வதையின் கரங்களில் சிக்கி ஜெருசலேம் குருதி சிந்துகிறது .
எனது பிரபுவே
வேதனேக்கு எதிராக உலகின் கதவுகள் மூடி விட்டன உலகம் இறுகிப் பாறையாய் விட்டது. சூரியனின் கண்கள் தோண்டப் பட்டன. காணுமல் போயிற்று உலகம் கிழிந்து சிதைந்தது உலகம்.
எனது பிரபுவே ஜெருசலேத்தின் அவலத்தைக் கழுவித் துடைக்க இந்த உலகம் ஒரு மெழுகுவர்த்தி தானும் உயர்த்தவில்லை. ஒரு துளிக் கண்ணிர்தானும் சிந்தவில்லை.

எனது பிரபுவே திராட்சைகளைப் LuJITLDifli i Luari
வாரிசுகளைக் கொன்றுவிட்டனர்.
பாவ உலகில் பர்வப் பறவைக்குச் சிறகு முஃாத்தது. ஜெருசலேத்தின் புனிதத்தை அசூசைப் படுத்த அது பறந்து சென்றது.
ஒ பிரபுவே,
ஜெருசலேத்தின் மகிமையே, வேதனைக் கிணற்றில் இருந்து இரவின் ஆழ்ந்த குழிகளில் இருந்து துயரத்தின் மிக இருண்ட கிடங்கில் இருந்து ஜெருசலேத்தின் புலம்11ல் உம்மிடம் வருகிறது.
பிரபுவே
கருணை காட்டுங்கள் ஜெருசலேத்தின் மீது கருணை காட்டுங்கள் இந்தக் கசப்பான கிண்ணத்தில் இருந்து அதனைக் காப்பாற்றுங்கள்.
43

Page 28
சமீஹ் அல் காசீம்
சமீஹ் அல் காசீம் பிறிதொரு முக்கிய மான பலஸ்தீனக் கவிஞர். இவரது கவிதை கள் இஸ்ரவேல் சிறைகளில் இவர் சிறை இருந்ததன் விளைவாகப் பிறந்தவையாகும்.
சமீஹ் அல் காசீம் தனது தாய் நாட் டினதும் தனது மக்களினதும் கதையை ஆற்றலுடன் கூறுகிருர், "அராபியத்தை' அவர் உயர்த்துகிருர், பலஸ்தீன நிலைமை களை அவர் விபரிக்கிறார். அநீதியை நிந்திக் கிருர்,

வங்குறேட்டானவனின் அறிக்கை
என் பாண் துண்டை நான் இழக்க நேரிடினும் என் சட்டையையும் கட்டிலையும் விலைகூற நேர்ந்தாலும் கல் வெட்டியோ சுமை காவியோ தெருக்கூட்டியோ நான் பிழைக்க நேரினும் உன் பண்டசாலையைத் துடைத்து மினுக்க நேரிட்டாலும் குப்பையைக் கிளறி உணவெடுக்கும்படி வந்தாலும் பட்டினி கிடந்து அழுந்த நேரினும் மனிதனின் எதிரியே,
நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்.
என் காணியின் கடைசித் துண்டையும் பறித்தெடு, என் இளமையைச் சிறைக் கூண்டினுள்ளே புதைத்திடு, என் முதுசொத்தைக் கொள்ளையடி, என் நூல்களை எரித்திடு, என் கோப்பைகளில் உன் நாய்களுக்கு இரைபோடு, போ, என் ஊரிலுள்ள கூரைகள் மீது உன் பயங்கர வலைகளை விரித்திடு
மனிதனின் எதிரியே நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்.
என் கண்ணெதிரே நீ எல்லா விளக்குகளையும் ஊதி அணைத்தாலும் உதடுகளின் முத்தங்கள் அனைத்தையும் உறைவித்தாலும்
என் நாட்டின் காற்றினைச் சாபங்களால் நிறைத்தாலும் என் ஓலமிடும் குரல்வளையை அமுக்கி ஒடுக்கினலும் என் காசுகள் போற் பொய்க்காக தயாரித்தாலும் என் பிள்ளைகளின் முகத்து முறுவலைப் பிடுங்கி எடுத்தாலும் இகழ்ச்சி ஆணி கொண்டு என் விழிகளில் அறைந்தாலும்
45

Page 29
46
மனிதனின் எதிரியே, நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் இறுதிவரை போராடுவேன்.
மனிதனின் எதிரியே துறைமுகங்களில் சைகைகள் உயர்த்தப்பட்டுவிட்டன. காற்றெங்கும் அழைப்புகள் நிரம்பிவிட்டன. எங்கெங்கும் அவை தெரிகின்றன. அடிவானத்திலே கப்பற் பாய்களைக் காண்கிறேன். முயன்று, இடர் மீறி, இழப்புக் கடல்களினின்றும் யுலிசசின் கப்பல்கள் மீண்டு வருகின்றன. பொழுது புலர்கிறது; மனிதன் முன்னேறுகிருன். அவன் பொருட்டாக நான் சத்தியம் பண்ணுவேன்நான் விட்டுக்கொடுக்கமாட்டேன் இறுதிவரை போரர் டுவேன்
போராடுவேன்.
சத்தியம்
ஒன்று, இரண்டு, மூன்று, முன்னேறு முன்னேறு
இந்தக் கரியயுகத்தின்
காமப் பலிபீடங்களில் அடா பிடித் தெய்வங்களுக்கு விடப்பட்டபலிக்கடாவே,
ஒன்று,
இரண்டு,
மூன்று,
கைகள் கோத்தபடி
இருவருமாகப் பைசாசப் பாதைகள் கடக்கிருேம் தந்தையே, தங்கள் கண்கள் இன்னும் ஒளிர்கின்றன. தங்கள் கால்கள் நிலத்தில் உறுதியாய் உள்ளன.

செல்க. மனிதனின் நெடிய உழல்விலே ஈடிலாத் துயர்களை எடுத்து வீசுக. எமது புதிய விடியல்களை நாம் படைத்திடுவோம்.
வீசிய அம்புகள் விழிகளேத் தோண்டின. ஆயினும், தந்தையே, நான் உங்கள் விடிவிளக்கு விசுவாச நெய்யூற்றி முடியாத ஒளியதனைத் தங்கள் கைகளில் நிரப்புகிறேன்.
கொள்ளேயர்கள் கவர்ந்தவற்றை நான் மீட்டுத் தருவேன். இது சத்தியம். கடவுளானே, மனிதனுணை இது சத்தியம்.
ஒன்று, இரண்டு முன்று, முன்னேறு முன்னேறு
சிறையிலிருந்து எழுதும் கடிதம்
அம்மா , நண்பர்கள் என்ஃணத் தேடி வந்து கதவிலே தட்டும்போதெல்லாம் தாயே, நீ வெம்பிக் கண்ணீர் மல்குவதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன்.
ஆணுல் வாழ்க்கையின் சிறப்பு, என் சிறையிலே பிறக்கிறதென்று நான் நம்புகிறேன் அம்மா என்னை இறுதியில் சந்திக்க வருவது ஒரு குருட்டு வெளளா லாய் இருக்காதென்றும் நான் நம்புகிறேன்.
47

Page 30
48
அது பகலாய்த்தான் இருக்கும் அது பகலாய்தான் இருக்கும்.
இருபதாம் நூற்றண்டு
பல நூற்ருண்டுகளின் முன் வெறுக்கும் பழக்கமே இல்லை எனக்கு எனினும், கொடு நாகத்தை நோக்கி இளைப்பிலா ஈட்டியை நீட்டவேண்டி வந்தது. தீயிடையிருந்து வாளினை இழுத்து (B)பாலின் புத்திகெட்ட படிமத்தின் எதிரே வீசி இருபதாம் நூற்ருண்டின் எலிஜாவாக வேண்டி வந்தது.
பல நூற்ருண்டுகளின் முன், எனக்கு, சவக்குழி தோண்டும் பழக்கமே இல்லை. ஆணுல், இன்று, என் இதயத்திருந்த பொய்த்தேவுகளைச் சவுக்கினுல் அடிக்கிறேன். இருபதாம் நூற்ருண்டில், என் மக்களை விற்ற பொய்த் தேவுகளே
பல நூற்ருண்டுகளின் முன், ந1மன் விருந்தினர் எவரையும் விரட்டியதில்லே. ஆணுல், ஒரு நாட்கால கண்களைத் திறந்தால், என்னரும் பொருள்கள் எல்லாம் களவுபோயிருந்தன.
என்னுயிர்த் தோழன் தூக்கிலே தொங்கினுன்.
என்னிளம் பிள்ளையின் பிடரி முழுவதும் இரத்தக் களரி.
என் விருந்தினரின் துரோகம் உணர்ந்தேன். என் கதவடியில் கண்ணிகள் புதைத்தேன் . கூர் வாள் மாட்டினேன். என் சிறு கத்தியின் எஞ்சிய பகுதிமேல் ஆஃணயாய், இருபதாம் நூற்ருண்டில் இவ்விருந்தினரில் எவரும் என் வீட்டுள்
நுழைந்திடத் தகார் எனும் உறுதியைப் பூண்டேன்.

பல நூற்ருண்டுகளின் முன் நான் ஒரு கவிஞன் : கவிஞன் மட்டுமே. சித்தர்கள் பலரின் மத்தியில் இருந்தேன். இன்று நான் இந்த இருபதாம் நூற்ருண்டில், புரட்சி வெடிக்கும் எரிமலை ஆயினேன்.
றஃபாச் சிறுவர்கள்
பல லட்சம் பேரின் படுகாயங்களே உழுதுகொண்டு 1தை கண்டு, தோட்டத்து ருேசாக்களே நசுக்க டாங்கி விடும் அவனுக்கு, இரவு வேளைகளில் வீட்டு யன்னல்களே உடைத்து ஒரு வயலேயும் நூதன சாலேயையும் எரித்து அதன் சுவாலேயைப் பார்த்துப் பாடும் அவனுக்கு, குழந்தையை இழந்த தாய்களின் கூந்தலைப் பறித்து, இராட்சைத் தோட்ட ங்களை அழித்து மிதித்து நல்லின் 11 வாடினர் 11 ல!! நகரத்துச் சதுக்கத்திற் தொஃ:ெ ப்யும் அவனுக்கு
பிள்ளேமையின் கலவுகளை நொறுக்கிடும் விமானமுள்: அவனுக்கு, வான வில்களே ஒடித்திடும் அவனுக்கு,
இன்றிரவு w
ருஃபாச் சிறுவர்கள் விளம்புகிருேம்:
ஆத்தலை நெய்து படுக்கையில் விரித்தவர்கள்
:ல்லர் , தார். கொலையுண்ட மங்கையின் தங்கப்பல்லேப் பிடுங்கி அவள் முகத்திலே துப்பினுேர் அல்லர் நாம் , இனிப்புத் துண்டுகளைப் பறித்துக்கொண்டு வெடிகுண்டுகளே எமக்கேன் தந்தீர்? அரபுக் குழந்தைகளை ஏன் அநாதைகள் ஆக்கிணிர்?
; ; :. .یہ ۔۔۔. -۔ ۔۔۔ ۔۔ ...... "s子 2 ஆக்கி, உமக்கேன் நன்றி கூறினீர்!
துயரம் எங்களை ஆடவர் ஆக்கிற்று நாம் போரிடல் வேண்டும்
49

Page 31
5
II
வென்றவன் ஒருவனின் துவக்குச் சனியனில் மின்னும் வெயில், அம்மணப் பிணமொன்ருய் அவமதிப்புற்றது; குருதி காய்ந்த முகங்களிடை கோபமுற்ற செபமாலை மணிகள் மீது மெளனம் இரத்தம் பெருக்கிற்று சாமுத்திரிகா இலட்சணம் படைத்த வெற்றியாளன் ஒருவன் உறுக்கினுன் நீ பேசவே மாட்டாயோ? நல்லது: உனக்கினிமேல் ஊரடங்குச் சட்டம் - பின்வருமாறு . . அலாவுதீன் குரல் வெடித்துப் பிளந்தது: இரை தேடும் பருந்துகளின் பிறப்பினை.
இராணுவ வாகனத்துக்குக் கல்லெறிந்தேன் துண்டுப் பிரசுரம் விநியோகித்தேன், சைகை கொடுத்தேன் கையிலே தூரிகை தாங்கி,
கதிரையை அயல் வீட்டுச் சுவரடிக்குக் கொண்டுபோய், கலோகங்களை நானே திட்டினேன் நானே பிள்ளைகளேக் கூட்டினேன். வெளியேறிய அகதிகள்மேல் ஆஃணயாய், மாதிரிகளின் துவக்குச் சனியன் 61ம் தெருவில் மின்னு மட்டும் எதிர்ப்பதென்று சத்தியம் பண் எனினுேம்.
அலாவுதீனுக்குப் பத்து வயதும் இருக்காது.
III
அக்கேசியா மரங்கள் நசுக்கப்பட்டன. முஃபாவில் படலைகள் பூட்டப்பட்டு, கவலையால், அல்லது மெழுகினல் அல்லது ஊரடங்குச் சட்டத்தால் முத்திரையிடப்பட்டன.
(நள்ளிரவின் பின் மீண்ட, காயம்பட்ட ஒருவனுக்குப் பானும் காயம் கட் டும் துணிகளும், கொண்டு போக வேண்டியவளாய் அச் சிறுமி இருந்தாள். அவள் ஒரு தெருவைக் கடக்க வேண்டும். அங்கு அன்னியரின் கண்களும், காற்றும், துவக்கு வாய்களும் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டிருந்தன.)

அக்கேசியா மரங்கள் நசுக்கப்படுகின்றன. ஓர் வெட்டுக்காயம்போல்,
ருஃபாவில் வீடொன்றின் கதவு திறந்தது
அவள் பாய்ந்தாள் மல்லிகைச் செடியொன்றின் மடியிலே விழுந்தாள். பயங்கரத்தின் பாதையோரம் வந்தாள் ஈச்சமரம் ஒன்று அவள் புகல் ஆயிற்று கவனமாய். ஒவ்வோர் அடியாய். இப்போது பாய. ஒரு காவலாள்
விளக்குகளின் பலரிச்சீடு
ஒர் இருமல்
uin si sš?
ஐந்து துவக்குகள் அவள்முன் நீண்டன, ஐந்து துவக்குகள்.
காலையில், படையெடுப்பாளர் மன்று கூடிற்று அவளைக் கொணர்ந்தனர்.
ஆமி)ை
ஒரு 'குற்றவாளி
அவளுக்கு வயது எட்டு.
"டீங்காய்' உடையணிந்த ஐ. நா. மனிதர் அனைவருக்கும்
எங்கணும் இருந்து வந்த மதிப்புடை மணிசர்காள், நண்பகலில் உங்காய்க் கழுத்தில் இறுக்கிய பட்டிகளும் கிளர்ச்சியூட்டும் சர்ச்சைகளும் இன்றைய எமது யுகத்தில் என்ன பயனைத் tics, th?
எங்கணும் இருந்து வந்த மதிப்புடைப் பெரியோாே என் இதயத்திற் பாசி படர்ந்தது. கண்ணுடிச் சுவர்கள் அனைத்திலும் படர்ந்தது. கூட்டங்கள் பலவும்
第球

Page 32
52
பேச்சுகள் பலப்பலவும் ஒற்றர்களும் வேசியர் மொழிகளும் அரட்டைகளும் இன்றைய எமது யுகத்தில் என்ன பயனைத் தரும்?
ஓ, கனவான்களே, குரங்கின் சந்திரன் எப்படியோ திரும்பட்டும் நீங்கள் வாருங்கள்! உலகின் பாங்களை நான் இழந்து வருகிறேன் என் இரத்தம் மஞ்சள் உறுதி மொழிச் சக்தியுள் என் இதயம் புதையுண்டது.
எங்கணும் இருந்து வந்த மதிப்புடை மாந்தர்காள், என் வெட்கம் கொள்ளைநோய் ஆகட்டும் என் துயர் ஒரு பாம்பாகட்டும். எங்கணும் இருந்து வந்த மின்னிடுங் கரியதோற் சப்பாத்துகளே, என் சினம் சொல்லில் அடங்காது. இந்த யுகம் கோழையானது என்னைப் பொறுத்தவரை. எனக்குக் கைகளில்?ல.
இஸ்ரவேல் பூதன் ஒருவனுக்கும் அராபியன் ஒருவனுக்குமிடையே உரையாடல்
‘என் பாட்டன் பாட்டியர் அவுஷ்விற்சில் எரிக்கப்பட்டனர் ‘என் இதயம் அவர்களுடன் உள்ளது. ஆல்ை என் உடலிலிருந்து சங்கிலிகளை நீக்கி விடு" * உன் கைகளில் என்ன?”
‘ஒரு பிடி விதை' * சினம் உன் முகத்தைச் சிவக்கவைக்கிறது." * அது தான் நிலத்தின் நிறம்’ *உன் வாளை உருக்கி கலப்பையாய் மாற்று' *காணி எதுவும் நீ விட்டுவைக்கவில்?ல. 'நீ ஒரு குற்றவாளி' *நான் எவரையும் கொல்லவில்லை, எவரையும் ஒடுக்கவில்லை’ * நீ ஒரு அராபியன் ; நீ ஒரு நாய்" ‘கடவுள் உன்னைக் காப்பாற்றுகஅன்பைச் சுவைத்துப்பார்; ஒளிக்கு வழிவிடு'

மூயின் பசைசோ
மூயின் பசைசோ காசாவில் பிறந்த பலஸ்தீனக் கவிஞர். பலஸ்தீனப் போராட்ட இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளுள் இவரும் ஒருவர். 1970 நவம்பரில் புது டில் லியில் நடைபெற்ற நான்காவது ஆசிய ஆபி ரிக்க எழுத்தாளர் மகாநாட்டில் மஹ்மூட் தர்வீஷ் உடன் இவரும் கலந்து கொண்டார்.

Page 33
54
இந்த உலகம்
இரவின் அமைதியைக் கிழித்துப் பறந்த துப்பாக்கிக் குண்டு
பெருகிய குருதி
இதுதான் பதாஹ் ,
பீறிப் பெருகியது எங்கள் குருதி. குருதியின் நிறத்தை நாம் இனங்கண்டு கொண்.ோம்.
நாங்கள், எங்கள் குருதியின் நிறத்தை மறந்து விடும்படி அவர்கள் செய்தனர். நாங்கள், எங்கள் நரம்பிலே பாய்வது தண்ணிர் தாமா? இரத்தமா? என்று சந்தேகிக்கும்படி அவர் செய்தனர்.
இதுவரை இங்கே எல்லா நிறங்களும் அறிமுக மானவை யாக இருந்தன. பாஸ்போட் அலுவலர் கண்களின் நிறமும் பணத்தின் நிறமும், கறுப்புப் பட்டியல் அனைத்தின் நிறமும் அறிமுக மானவை யாக இருந்த5
குருதியின் நிறத்தைத் தவிர அனைத்தும் அறிமுக மானவை யாக இருந்தன.
ஆயின் இப்போது, அந்தக் குருதி விடுதலை வேண்டிப் பெருகியுள்ளது. அதுவே எங்கள் பாதை நெடுகிலும் உழுது, சேறுபடுத்தியும் உள்ளது.
பதாஹ் ,
நரங்கள் குருதி சிந்துவோம் நாங்கள் பணிந்தே அடங்க நினைத்தால் நாங்கள் எங்கள் காயங்க ளிலே பெருகும் குருதியை நிறுத்தி இருப்போம். உலகின் ஜன்னல் கதவுகளில் எம் குருதி சிந்திக் கறைபடுத்தட்டும். உலகின் முகத்தில்
 

எங்கள் குருதி சிந்தப்பட்ட கறை தெரியட்டும் இந்த உலகம்! நாங்கள் முள்ளுக் கம்பியின் மீது கிடக்கும் வரைக்கும் இந்த ஐ லகின் தலையணையின் கீழ்
"டைனமைற்’ ஒன்றை நாம் நிறுத்தி வைப்போம்.
இந்த உலகம், படுக்கையில் என்றும் ஒய்வெடுக்காரு. இந்த உலகம், நீண்ட காலமாய்ப் பலஸ்தீனர்களின் பச்சை இரைச்சி: முள்ளுக் கரண்டியும் கத்தியும் கொண்டு புசித்து வந்துள்ளது. இந்த உலகின் காதுகள் யாவும் இந்த உலகின் கண்கள் யாவும் இந்த உலகின் இதயம் யாவும் இந்த உலகின் தொண்டைகள் யாவும் வெந்து போன அப்பிள்ப் பழங்கள் ஆக்கிரமிப் பாளரின் கூடையில் இருந்து திருடப்பட்ட அப்பிள்ப் பழங்கள்.
உலகின் பெண்ணே , உனது குழந்தையின் பொம்மைக% சம் பொங்கிய குருதி கறை செய்கின்றது. உலகில் பெண்ணே, உன் அடிச் சுவட்டினே
1ங்கள் குருதி நிழலிடுகின்றது. இப்போது நீங்கள் எம்முடன் இருங்கள் .
கின் ஆண்களே இப்போது நீங்கள் எம்முடன் இருங்கள்.
உலகின் ஆண்களே, உடலகின் பெண்களே, இப்போது நீங்கள் எம்முடன் இருங்கள் கறுப்பு, வெள்ளே, சிவப்பு, மஞ்சள் இனத்து மக்களே, இப்போது நீங்கள் எம்முடன் இருங்கள் மனிதனுக் குரிய கெளரவம் என்பதை
55

Page 34
56
நாங்கள் உமக்குப் பெற்
மனிதனின் பிறப்புச் ச1
நாங்கள் உமக்குப் பெற்
R
மனிதன் என்ற பெயரில் நாங்கள் உமக்குப் பெற்
எதிர்த்து நில்
அவர்கள்
ஒரு பேப்பரையும் பே% என் மூக்கெதிரே விசுக்கி என் வீட்டின் திறப்பை
என் கையில் திணித்தன
என்னைக் கொண்டு 1ே1ப்பரை மாசுபடுத்த ப்ேபர் சொன்னது: எ என்னைக் கொண்டு
பேனையை அவமானப்படு
டேனை சொன்னது எதி
01ல் விட்டின் திறப்பு ( உன் சின்னஞ்சிறு வீட் ஒவ்வொரு கல்லின் பெ
நீ எதிர்த்து நில்
J வரில் ஒரு தட்டு,
நறிக்கப் பட்ட ஒரு ை சுவரின் குறுக்காக வந்த குறிப்பால் உணர்த்தியது
சித்திரவதை அறையின் சொட்டுச் சொட்டாய் ஒவ்வொரு மழைத்துளிய எதிர்த்து நில்

றுத் தருவோம். ኳ ாட்சிப் பத்திரம் றுத் தருவோம். ன் மதிப்பை
றுத் தருவோம்
1யையும்
எறிந்தனர்.
அவர்கள் விரும்பினர்
திர்த்து நில்
அவர்கள் விரும்பினர்
நில்
ான்னிடம் சொல் ம0 து
இன் பராலும்
கயில் இருந்து
ஒரு செய்தி து: எதிர்த்து நில்
கூரைமீது விழும் ம் அலறியது;