கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பலஸ்தீனக் கவிதைகள்-சென்னை2000ஃமான்

Page 1
( ) (
|W. |W.
| .|
s.:) )
 

sae,Ä |- | || .│ │ │ │ │ │ │ │ │ │ │ │ ,|*)s.|-%o/|- s.|-// | || || ...*A | ---- | 落 |W
------|- \, |-:|- 嘎|-:}·|-saesae\, )%// ±//%· %.
//
|
s.歴·s ||-**)\, WW//|W% ||-|\,
|)||////
|

Page 2

Øരക്രിസ്ത്ര് ബിസ്മെ
േ. ബ്രി, തൂമേ
െ മത്സു് ശ്രിമിര്മ്

Page 3
PALESTINAK KAVITHAKAL (Tamil) An Anthology of Palestinian Poems in Tamil Translation
Edited and Translated From English
MA NUHMANC) Department of Tamil, University of Peradeniya, Peradeniya, Sri Lanka.
The last seven poems of Smith al Qasim are translated by R. Murugaian
First Edition - November 1981 Revised and enlarged second edition: November 2000
Published by - Moondravathu Manithan Publication 37/14, Vauxhall Lane, Colombo - 2, SriLanka. Tel: 302759 e-mai thirdman (Cà rediff.com
Sole Distributors in India : Adaiyalam, H-15/193, 2nd Floor, Karupur Road, Puthanatham - 621 31 0. Tel: 0433273444 e-mail adaiyalam (Qyahoo.com
Cover Painting: DER HÖRENDE
Type setted by: Safa Graphics, Madurai - 625 020.
Printed at : %ld (, Chennai - 4.
Size : Dmy 1 x 8
Pages 164
Paper : 18.6 Kg Natural Shade Maplitho
Price 2OOOO

பலஸ்தீனக் கவிதைகள் ஒர் அறிமுகம்
கடாகர்மி
அரேபியக் கலாசார மரபில் எப்போதும் கவிதை ஒரு முக்கியப்பாத்திரம் வகித்து வந்துள்ளது. இஸ்லாத்திற்கு முந்திய காலத்திலிருந்து அது கலையாக மட்டுமன்றி ஒரு வாழ்க்கை முறையாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு இனக்குழுவும் தனக்கே உரிய கவிஞர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் தங்கள் குழுக்களின் தலைவர்களைப் புகழ்ந்தோ அல்லது தங்களுக்கு எதிரான இனக்குழுக்களை இகழ்ந்தோ கவிதைகளை இயற்றினார்கள். அக்கால வாழ்க்கை முறை நாகரீகமானதாக இருக்கவில்லை. அவர்களின் கவிதைகள் உள்ளூர்ச் செய்திகளையும் பாலைவன வாசிகளான அரேபியரின் கற்பனைக்குரிய நட்சத்திரங்கள், மணல்வழி, ஒட்டகம் முதலியன வற்றையும் பற்றியதாகவே இருந்தன. அக்காலக் கவிதைகள் தாளில் எழுதப்படவில்லை. ஆனால் அதற்கென்றே உரிய சிலர் அக் கவிதைகளை மனப்பாடம் செய்து தேவையான போது பாடிக்காட்டக்கூடியவர்களாக இருந்தனர். இவ்வினக் குழுக் கவிஞர்கள் மிகுந்த செல்வாக்கானவர்களாகவும் இருந்தனர். ஒரு இனக்குழுவை இகழ்ந்து பாடப்பட்ட ஒரு கவிதையே இரண்டு குழுக்களுக்கிடையே பயங்கரமான யுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதும் உண்டு.
ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாத்தின் வரவுடன் அரேபியர்கள் தங்கள் மொழியை மிகவும் நேசிக்கத் தொடங்கினார்கள். புனித நூலாகிய குர்ஆனும் அரபு மொழியிலேயே உள்ளது. குர்ஆன் இறைவனின் உண்மையான வார்த்தை என்றே முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர். இக் காரணத்தினால் முன் எப்போதையும் விட மொழி முக்கியமானதாக மாறியது. கவிதை அழகியல் வெளிப்பாட்டுக்குரிய பிரதான ஊடகமாகக் கருதப்பட்டது. அரேபிய சாம்ராஜ்யம் ஸ்பானியாவிலிருந்து "சமர்க்கந்து" வரை பரவிய, அரேபிய வரலாற்றின் பொற்காகலமாகக் கருதப்படும் 8ம், 9ம் 10ம் நூற்றாண்டுகளில் ஒவ்வொரு கலீபாவின் அரண்மணையிலும் பெருந்தொகையான தொழில் முறைக் கவிஞர்கள் இருந்தனர். இக்கவிஞர்கள் கலீபாவைப் புகழ்ந்து பாடி பெறும் பரிசில்கள் மூலம் வாழ்க்கை நடத்தினர். கலீபாவின் கவனத்தைக் கவர்வதற்காக ஒரே நேரத்தில் 50, 60 கவிஞர்கள் போட்டியிட்டு மோதிக் கொள்வார்கள்.

Page 4
இக்காலகட்டத்தில் மிகப் பிரபலமான சில அரபுக் கவிஞர்கள் தோன்றினார்கள். ஒவ்வொரு அரபு பாடசாலையின் மாணவனும் இப்போது இவர்களின் கவிதைகளைப் படிக்கவும் பாடவும் செய்கின்றான். இக்காலகட்டத்திலேதான் ஆரம்ப அரசியல் கவிதைகள் தோன்றின. சாம்ராஜ்யத்தில் குழப்பம் மிகுந்த காலங்களில் அரசியல் கருத்துக்களையும், அபிப்ராயங்களையும் வெளிப்படுத்தும் கவிதைகள் பெருமளவில் இயற்றப்பட்டன. உதாரணமாக, ஒன்பதாம் நூற்றாண்டில் கலீபா ஹாரூன் அல் றசீதின் மரணத்தின் பின்னர் அவரது இரண்டு மக்களுக்கும் இடையே சிம்மாசனத்திற்கான போரட்டம் நிகழ்ந்த போது இவ்வாறு அரசியல் கவிதைகள் பல தோன்றின. அத்தகைய கவிதைகள் அரசியல் சூழ்நிலைகளை பொறுத்து தோன்றிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருந்தன. ஆயினும், அக்காலகட்டத்தில் அவை அதிகமாக கவனிக்கப்படவில்லை.
இந்த நூற்றாண்டின், ஆரம்பத்திலிருந்துதான் காத்திரமான அரசியல் கவிதைகள் அரேபியர்களிடையே தோன்றத் தொடங்கின. அரேபிய சாம்ராஜ்சியத்தின் பிரகாசம் நீண்ட காலத்திற்கு முன்பே மங்கத் தொடங்கிவிட்டது. அரேபியர்கள் துருக்கியின் அதிகாரத்தின் கீழ் இருந்தனர். இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் ஆரம்பித்த அரேபிய தேசிய உணர்ச்சியின் எழுச்சியுடன் அரசியல் கவிதைகளிலும் ஒர் புதிய அலை தொடங்கியது. தேசிய உணர்ச்சியை அக்கவிதைகள் பிரதிபலித்தன. ஒரு நாட்காலை பெய்ரூத் மக்கள் விழிந்தெழுந்ததும், அரேபியர்கள் தங்களைத் துருக்கியின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளத் தூண்டும் கவிதைகள் தங்கள் நகரச் சுவர்களில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர். இத்தகைய கவிதைகள் விரைவாக அரபு உலகம் முழுவதிலும் எழுதப்படத் தொடங்கின. அரேபியர்கள் பண்டைய இனக்குழு நாட்களில் துலங்கியதைப் போல கவிதையின் அழைப்பிற்குச் செவிகொடுக்கத் தொடங்கினார்கள்.
துருக்கிய அதிகாரிகள் இதைப் பார்த்துக்கொண்டே இருக்கவில்லை. அவர்கள் பழிவாங்கத் தொடங்கினார்கள். கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கவிஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள்; கொலை செய்யப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; அல்லது சிறையிடப்பட்டார்கள். உதுமானிய சாம்ராச்சியம் இறுதியில் முறியடிக்கப்பட்டது. அரேபியர்கள் அதன் அதிகாரத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அரபுக் கவிதை அடக்கப்பட்ட அல்லது அரபுக்கவிஞர்கள் தங்கள் படைப்புகட்காகத் துன்பம்
ഗഠ൬ ക്രിയില്ക്ക് / 4

ലഠ( ( / 5
அனுபவித்த இறுதிச் சந்தர்ப்பமாக அது இருக்கவில்லை. பலஸ்தீனர்கள் அரபு உலகில் வேறுயாரும் அதைப்பற்றி உணர்ந்து கொள்வதற்கு முன்பே சியோனிச அபாயத்தைப் பற்றிய தங்களது பயத்தையும் அனாதரவான நிலையையும் 1920லேயே எழுதத் தொடங்கிவிட்டார்கள். அத்தகைய கவிதைகள் 1930இல் குறிப்பாக 1936ம் ஆண்டு நிகழ்ந்த பலஸ்தீனப் பொது வேலைநிறுத்தக் கிளர்ச்சிக் காலகட்டத்தில் பெருமளவிலும் சக்தி வாய்ந்ததாகவும் வெளிவந்தன. பிரித்தானிய அதிகாரிகள் அதைஅடக்க முயன்றனர். கவிஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். கிளர்ச்சியூட்டும் கவிதைகளைத் தாங்கிவரும் எந்த ஒரு பலஸ்தீனச் செய்திப்பத்திரிகையும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தத் தணிக்கை முறை 1930இன் இறுதியில் நடைமுறைக்கு வந்தது; 1940லும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. பலஸ்தீன இலக்கியத்தின் எழுச்சியை நசுக்குவதற்கு பிரதம தணிக்கையாளராக பிரிட்டிஷ் அரசாங்கம் ஹேபேட் சாமுவேலின் மகனை நியமித்தது குறிப்பிடத்தக்கது. இவர் தனது தகப்பனைப் போலவே பூரணமாக சியோனிச இயக்கத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவர் என்பது பிரசித்தம்.
1948க்குப் பின்னர் துர்ப்பாக்கியம் தற்காலிகமாகப் பலஸ்தீன மக்களின் மேல் கவிழ்ந்தது. அவர்களுடைய வாய்சாலகம் தற்காலிகமாக மெளனமடைந்தது. அதனிடையே அவர்கள் நாடுகடத்தவும் துரத்தவும் பட்டார்கள். அத்தகைய சிக்கல்களுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். எவ்வாறெனினும் அரபு உலகின் எல்லா இடங்களிலும் அவர்களது வழிவந்த கவிஞர்கள் பலஸ்தீனத் துன்பியலினால் விழித்தெழுந்து அரேபியர்களை ஐக்கியப்படவும், கொள்ளையடிக்கப்பட்ட நாட்டைத் திரும்பப் பெறவும் கோரிக் கவிதைகள் படைக்கத் தொடங்கினார்கள். 1950ல் பலஸ்தீனக் கவிதைகள் திரும்பவும் மீட்கப்பட்டுப் புதிய உக்கிரத்துடன் எழுதப்படத் தொடங்கின. 1956ல் ‘கபர்கசம்' என்னும் சிறிய பலஸ்தீனக் கிராமத்தின் அப்பாவி மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்று குவித்தனர். இந்த நிகழ்ச்சி பலஸ்தீனருக்கு ஆத்திரமூட்டியது. அவர்களது கவிதை வெஞ்சினங் கொண்டதாகவும் உக்கிரமான சர்ச்சைக்குரியதாகவும் மாறியது. இதன் பெறுபேறாக இஸ்ரேல் அதிகாரிகளின் மிருகத்தனமான அடக்குமுறையின் ஒரு புதிய அலை தோன்றியது. அவர்களுக்கு முன்னிருந்த துருக்கியர்களைப் போலவே இந்தப் புதிய தலைமுறைக் கவிஞர்களை அவர்கள் சிறையில் இட்டார்கள். நாடு கடத்தினார்கள். வீட்டுக்காவலில் வைத்தார்கள்; அல்லது அவர்களை

Page 5
மெளனமாக இருக்கச் செய்ய முயன்றார்கள். இவ்வாறு நாடு கடத்தப்பட்ட கவிஞர்களுள் ஒருவர்தான் கமால்நாசர். இறுதியில் இவர் பெய்ரூத்தில் வசிக்கச் சென்றார். ஆயினும், 1973ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இஸ்ரேலர்களினால் இவர் கொல்லப்பட்டார்.
1960ல் புதிய பலஸ்தீனக் கவிஞர் குழு ஒன்று தோன்றியது. இவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். பெரும்பாலும் இஸ்ரேலின் அதிகாரத்தின் கீழ் வாழ்பவர்கள். ஆக்கிரமிப்பின் கொடிய துன்பங்களைத் தவிர வேறு எதையும் தங்கள் வாழ்நாளில் அறியாதவர்கள். ஒரு புதிய சங்கற்பத்தையும் ஒரு புதிய அறைகூவலையும் தங்கள் கவிதைகளில் வெளிப்படுத்துபவர்கள். மஹ்மூட் தர்வீஷ், சமிஹ் அல் காசிம், தெளபீக் சைய்யத் போன்ற இத்தகைய கவிஞர்களுடன் போராட்டக் கவிதை மறுபிறப்பு எடுத்தது. முந்திய யுகத்துக் கவிதையில் காணப்பட்ட துன்பியல், விதியின்மீது இளைஞர்களின் வெற்றிப் பேரிகையாக மாற்றப்பட்டது. இவர்களின் கவிதைகள் வீடற்றநிலை, அபகரிப்பு, தாய்நாட்டின் மீதுள்ள காதல் என்பவற்றைப் பேசுகின்றன. எனினும், அதே சமயம் போராட்டத் துணிவு, பூரண சங்காரத்தை எதிர்த்து நிற்றல், மனிதாபிமானமற்ற அந்நிய ஆட்சியை நிராகரித்தல் ஆகியவற்றையும் அவை பேசுகின்றன. இக்கவிதைகளினூடே ஒரு உறுதிப்பாடும் மனவெழுச்சியும் பரவி உள்ளன. அரேபியர்களின் மொழி மீண்டும் ஒருமுறை அவர்களது அறைகூவலையும் ஏக்கத்தையும் உச்சமாக வெளிக்காட்டுகின்றது.
இஸ்ரேல் இக்கவிஞர்களை நசுக்குவது, பலஸ்தீன மக்களைச் சங்காரம் செய்வதற்கு எடுக்கும் பிறிதொரு முயற்சியாகும். அதாவது அவர்களது கலாசாரத் தனித்துவத்தை அடக்குவதன் மூலம் இதைச் சாதிக்க முயல்கிறார்கள். 1948 முதல் இஸ்ரேல் பலஸ்தீனர்களை ஏதோ ஒரு வழியில் அழித்துவிடுவதற்கு முயற்சிசெய்து வருகின்றது. அதன் மூலம் அவர்களது நாட்டின் உரிமையைக் கவர்ந்ததற்குரிய நேரடியான சாட்சியத்தை அகற்றிவிட முடியும் என்று இஸ்ரேல் கருதுகின்றது. அவர்களால் பழிவாங்கப்படும் அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் கூட அது உதவும் என்று இஸ்ரேல் கருதுகின்றது. அரபு அகதிகள் என்ற பெயரில் அண்மையிலுள்ள அரபு நாடுகளில் குடியேறுவதன் மூலம் பலஸ்தீனர்கள் மறைந்து போவார்கள் என்று இஸ்ரேல் ஆரம்பத்தில் நம்பியது. அதன் அடிப்படையில் அப்படி ஒரு பகுதியினர் இருந்தார்கள் என்பதை உலகம் மறந்துபோகச் செய்வதற்கான பிரச்சார முறைகளைத் தொடங்கினார்கள். மேலை நாடுகளில் பலஸ்தீன், பலஸ்தீனர் என்ற சொற்கள் உபயோகத்திலிருந்து
ലഠഭൈ ക്ലൈ" / 6

ലഠ൬ (് / 7
அகற்றப்பட்டன. இஸ்ரேலின் பாடசாலை மாணவர்களுக்கு, அவர்களுடைய பெற்றோர் அவர்களுடைய நாட்டை நிரப்புவதற்குத் திரும்பிவரும் வரைஅவர்களது நாடு மனிதர்கள் இல்லாத நிலமாக இருந்து வந்ததாகக் கற்பிக்கப்பட்டது. முக்கியமான இஸ்ரேல் தலைவர்கள் எல்லோரும் 1948க்கு முன்னரே அங்கு வசிப்பதற்கு வந்துவிட்டார்கள், சண்டையிட்டார்கள்; கொன்றார்கள். ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களைத் துரத்தினார்கள். ஆனால் அவர்கள் தான் பலஸ்தீன மக்கள் என அப்படியாரும் இருக்கவில்லை என்று இப்போது கூறுகின்றார்கள்.
பலஸ்தீனப் போராட்ட இயக்கத்தின் எழுச்சியுடன் இப்பிரச்சாரம் தோல்வியடைந்தது. குறிப்பாக 1967ம் ஆண்டு யுத்தத்திற்குப் பின்னர் அது முற்றிலும் சாத்தியமற்றதாக மாறி விட்டது. இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்கள் பலஸ்தீனர்களின் சொந்தப் பிரதேசங்களே என்பதை இஸ்ரவேல் மக்களே தெளிவாகக் கண்டார்கள். ஆகவே, பலஸ்தீனர்களைச் சங்காரஞ் செய்யும் முயற்சியில் இஸ்ரேல் முழு மூச்சாக ஈடுபட்டது. சிரிய, லெபனானியக் கிராமங்களிலும் அகதிகள் முகாம்களிலும் விமானத்தாக்குதல்களும், இராணுவ நடவடிக்கைகளும் மிகவும் அதிகரித்தன. மேலும் போரட்ட இயக்கத்தை அழித்தொழிக்கும் தனது முயற்சியில் உதவுவதற்கு ஜோர்தான், லெபனான் தலைவர்களை இஸ்ரேல் நிர்ப்பந்தித்தது.
பலஸ்தீனக் கவிஞர்கள் மீதும், எழுத்தாளர் மீதும் திணிக்கப்பட்ட் கட்டுப்பாட்டை நாம் இந்தப் பின்னணியில் வைத்தும் நோக்க வேண்டும். பலஸ்தீன ஆன்மாவை, முற்றிலும் அதற்கேயுரிய விசேட குண இயல்புடன் மீள் உயிர்ப்படைய அனுமதிக்க முடியாது; அனுமதித்தால், இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு மீள் எழுச்சி என்பது மட்டுமன்றி யூத அரசின் பலவீனமான தொடர்புகளை அச்சுறுத்துவதாகவும், அது இருக்கும் என்பது இஸ்ரேலரின் கருத்து. இஸ்ரேல் மக்களில் அனேகர் நடைமுறையில் அனுசரிக்காத ஒரு மதத்தைத் தவிர இஸ்ரேலுக்கு அதற்கேயுரிய சொந்தக் கலாச்சாரமோ, புகழ்ச்சிக்குரிய ஒரு வரலாறோ, பங்குகொள்வதற்குரிய சம்பிரதாயங்களோ, தேசிய இசையோ, தேசிய உடையோ, தேசிய சமையல் முறையோ கூட இல்லை என்பதை இஸ்ரேல் தலைவர்கள் நன்கு அறிவார்கள். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக இஸ்ரவேலர்கள், பிரதேச அரேபியக் கலாச்சார அம்சங்களைப் பெற்றுக் கொண்டு, அதையே தங்கள் சொந்தக் கலாசாரம் என்று அழைக்கின்றனர். இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அண்மைக்

Page 6
காலத்தில் இஸ்ரவேலின் கலாசார அம்சங்கள் என்று அறிமுகப் படுத்தப்படுவன எல்லாம் இவ்வாறு வந்தனவேயாகும்.
இஸ்ரேலின் கலாசாரப் பஞ்சமும், இஸ்ரேலர்களின் குறைவான பிறப்பு விகிதமும், அரேபியர்களின் சக்திவாய்ந்த கலாச்சாரத் தனித்துவம் வந்தேறியவர்களான தங்களை ஒரு நாள் முற்றாக விழுங்கிவிடும்; பலஸ்தீனர்களல்ல, தாங்களே சங்காரம் செய்யப்படுவோம் என்ற ஒரு உண்மையான ஆதங்கத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். Jewish Chronicle என்ற சஞ்சிகையில் (மே 4, 1973) இஸ்ரேலின் ஆறாண்டு கால ஆட்சிக்குப்பின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமை பற்றி அபா இபான் கொடுத்த ஒரு பேட்டியில் இந்தப் பயம் பிரதிபலித்தது. அவர் சென்னார் :
"எங்கள் வெற்றியினால் பாதிக்கப்படாது அரேபிய தனித்துவம் எங்களதைப் பார்க்கிலும் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கின்றது. நாங்கள் அவர்களது சமூக நடத்தையில் அதிக பாதிப்பைச் செலுத்தவில்லை. நப்லஸ் அல்லது துல்கறம் என்னும் இடங்களுக்குப் போகும் யாரும் அங்கு அதிகமாக ஏதும் நடந்திருப்பதைக் காண மாட்டார். இஸ்ரேலின் பிரவேசம் வலுவற்றதும் நொய்மையானதுமாக இருப்பதும் 'அராபியம் மிக ஆழமானதாகவும் இறுகியதாகவும் இருப்பதுமே இதன் காரணமாகும். அவர்கள் நமது சமுதாயத்தின் மீது அதிக பாதிப்பைச் செலுத்தி இருக்கிறார்கள். தனது தனித்துவத்தைப் பேணிக் கொள்வதற்காக இஸ்ரேல் சமூகம் அரேபியர்களிடம் இருந்து அதிகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு நம்மிடம் இருந்து தேவைப்படும் பாதுகாப்பை விட நமக்கு அவர்களிடம் இருந்து அதிக பாதுகாப்புத் தேவைப்படுகிறது"
அவரது கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளாது இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களால் துரத்தப்பட்ட மக்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க முயல்வதனால் இஸ்ரேலர்கள் ஒரு தனித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அபா இபான் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
- Arab Palestinian Resistence, Volume VI, No.3, March, 1974.
ലഠ൬ ക്രമത്സു് / 8

மஹ்மூட் தர்வீஷ் வாக்குமூலம் / தூரத்து நகரில் ஒரு அன்னியன்/ அலைந்துகொண்டிருக்கும் கித்தார் இசைஞன் / பலியாள் இலக்கம் 48 / முதல் சந்திப்பு / சங்கீதம் 3 / மனிதனைப்பற்றி /ஒலிவ மரச் சோலையில் இருந்து ஒரு குரல் / பலியாள் இலக்கம் 18 / சிறை / மலையடிவாரத்தில் குதிரைகள் கனைக்கின்றன / இயலும் போதெல்லாம் வாழ்வை நேசிக்கிறோம் / பாடகன் / சீற்றம் / மனிதருக்குரிய பாடல் / நான் பிரகடனம் செய்கிறேன் / எதிர்ப்பு / நம்பிக்கை / இரங்கற்பா
பெளசி அல் அஸ்மார்
ஒரு யூத நண்பனுக்கு / ஏனெனில் நான் ஒரு அராபியன்
றவீட் ஹ"சைன் நரகத்துப் பூக்கள் / அலுகோசு / எனது தாயகம் ஆசியா / இலக்கணப் பாடங்கள் / முதலாவது காதலன்
சலீம் ஜ"ப்றான் துரத்தப்பட்டவன் / தூக்கில் தொங்கும் ஒர் அராபியன்/ மழையின் L1fTL –56öT
தெளஃபீக் சையத்
என்னிடம் இருப்பதெல்லாம் / அடுத்து என்ன? / சாத்தியமற்றவை / ஓ பத்தாயிரம் கைதிகளே
அந்தொய்னே ஜபாறா சமாதான நதியும் போர்த் துப்பாக்கிகளும்
ലഠ൬ ജൂല്ക്ക് / 9

Page 7
ലഠ൬ (് / 10
சமீஹ் அல் காசிம்
காதல் கவிதைகள் / அறியப்படாத மனிதனின் கதை / வவ்வால்கள் / தளபதியின் சொத்து / போதை / நான் உன்னைக் குற்றஞ் சாட்டவில்லை / போரின் புதல்வர்கள் / சுவர்க் கடிகாரம் / வங்குறோட்டானவனின் அறிக்கை / சத்தியம் / சிறையிலிருந்து எழுதும் கடிதம் / இருபதாம் நூற்றாண்டு / றாஃபாச் சிறுவர்கள் / டீங்காய் உடையணிந்த ஐநா மனிதர்கள் அனைவருக்கும் / இஸ்ரேல் யூதன் ஒருவனுக்கும் அராபியன் ஒருவனுக்கும் இடையே உரையாடல்
மூயின் பசைசோ
இந்த உலகம் / றிம்பாட்டுக்கு / வீதிப் பயண விளக்குகள் / ஷபாவுக்கு அலாவுத்தீனின் விளக்கு / காலடிச் சுவடுகள் /எதிர்த்து நில்
நிசார் கப்பானி
பின்னடைவு நூலுக்கு எழுதிய அடிக்குறிப்புகள் / ஆட்சியாளரும் ஊர்க்குருவியும் / நான் துயரப் புகைவண்டி
ஃபத்வா துக்கான்
போதும் எனக்கு / உருவாதல் பற்றிய பாடல் / என்றென்றும் பலஸ்தீன் / வெள்ளப் பெருக்கும் விருட்சமும் / ஏசுநாதருக்கு
அமீனா கசக்
நாடு கடத்துதல் / ஆயிஷாவுடன் என் கடைசி நாள்
ஹனான் மிக்காயில் அஷ்றாவி
கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து / புதைத்துக் கொல்லுதல்
சுலஃபா ஹிஜாவி
அவனது படம் / மரணதண்டனை
லைலா அல்லூஷ்
ஒரு புதிய படைப்பு
சல்மா கத்றா ஜய்யூசி
1968 ஜூன் 5

இரண்டாம் பதிப்பின் முன்னுரை
பலஸ்தீனக் கவிதைகள் முதலாம் பதிப்பு 1981 நவம்பரில் வெளிவந்தது. அத்தொகுதியில் 9 கவிஞர்களின் 30 கவிதைகளே இடம்பெற்றன. இப்போது வெளிவரும் திருத்தி விரிவாக்கப்பட்ட இந்த இரண்டாம் பதிப்பில் 15 கவிஞர்களின் 71 கவிதைகள் இடம்பெறுகின்றன. நிசார் கப்பானியும், ஃபத்வா துக்கான் தவிர்ந்த ஏனைய ஐந்து பெண் கவிஞர்களும் இத்தொகுதியில் புதிதாக இடம்பெறுகின்றனர். மொத்தம் ஆறு பலஸ்தீனப் பெண் கவிஞர்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும். நிசார்க் கப்பானி பிறப்பால் ஒரு பாலஸ்தீனர் அல்ல எனினும் அவரது கவிதைகள் பலஸ்தீனப் போராட்டத்தின் வெளிப்பாடுகளே என்ற வகையில் இத்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
பலஸ்தீனக் கவிதைகள் வெளிப்படையான அரசியல் சார்வுடையவை. இது பலஸ்தீனப் படைப்பாளிகளின் வாழ்நிலை அனுபவத்தின் அடிப்படையில் அமைவது. அவர்களின் ஒவ்வொரு உயிர்க்கணுவும் அன்றாட அரசியல் சங்கிலியால் பிணிக்கப்பட்டுள்ளது. அவர்களால் அதிலிருந்து தப்பமுடியாது. பலஸ்தீனக் கவிதைகளை ஒருமித்துப் படிக்கும்போது அவை எல்லாமே ஒரே பொருளை வெவ்வேறு குரலில் பேசுவதுபோல் நமக்குத் தோன்றக் கூடும். அடக்குமுறைக்கு அடிபணிய, மறுக்கும், நாடற்று அகதியாக்கப்பட்டவர்களின் அவலமும் ஆவேசமும் அவ்வாறுதான் ஒலிக்கும் போலும், கவிதையை இலக்கியத்தை சமூக அரசியல் இயக்கங்களிலிருந்து வேறுபிரித்து அதைத் தன் உள்ளுணர்வின் குரலாகப் பூஜிக்கும் சில தமிழ் நாட்டுப் படைப்பாளிகளுக்கு, விமர்சகர்களுக்கு அல்லது வாசகர்களுக்கு இந்தக் கவிதையின் குரல் ஒரு நெருடலாக, கவிதைக்குப் புறம்பான வெற்றுக் கோசமாகக்கூடத் தோன்றக்கூடும்.
ലഠ൬൪ ൯൬൭് / II

Page 8
ലഠ൬ ജൂല്പു് / 12
இதற்கு மறுதலையில் ஈழத்துப் படைப்பாளிகள், வாசகர்களைப் பொறுத்தவரை இது அவர்களின் உணர்வின் குரலாக அவர்களின் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது. கடந்த இருபது ஆண்டுகளுள் பலஸ்தீனக் கவிதை சமகால ஈழத்துப் படைப்பாளிகள், வாசர்களைப் பொறுத்தவரை இது அவர்களின் உணர்வின் குரலாக அவர்களின் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது. கடந்த இருபது ஆண்டுகளுள் பலஸ்தீனக் கவிதை சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபுக்குள் உள்வாங்கப்பட்டதன் பின்னனி இதுதான். உலகின் எந்த ஒரு மூலையிலும் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடும் மக்களின் குரலாகவும் பலஸ்தீனக் கவிதையின் குரல் ஒலிக்கின்றது எனக் கூறுவது தவறல்ல.
கடந்த பத்து ஆண்டுகளுள் பலஸ்தீன, அரபுக் கவிதைகள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுட் சில தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பண்ணாமத்துக் கவிராயரின் காற்றின் மெளனம் (1996), சி. சிவசேகரத்தின் பணிதல் மறுத்தவர் (1994) பாலை அடோனிஸ் கவிதைகள் (1999), யமுனா ராஜேந்திரனின் 25 கவிதைகளும் 500 கமாண்டோக்களும் (1994) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர்கள் மொழிபெயர்த்த கவிதைகளுட் சில எனது மொழிபெயர்ப்பிலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இம்மொழிபெயர்ப்புகளில் காணப்படும் வேறுபாடுகள் கவனத்துக்- - குரியன. ஒரு கவிதையைப் பத்துப்பேர் மொழிபெயர்த்தால் பத்து வேறுபட்ட கவிதைப் பிரதிகள் கிடைக்கும் என்று நிச்சயம் சொல்லலாம். சில சொற் தேர்விலாவது இவ்வேறுபாடு காணப்படும். ஒருவரது மொழிபெயர்ப்பு மற்றவரின் மொழிபெயர்ப்பு போலவே அமைவதற்குரிய சாத்தியம் அரிதாகும்,
உதாரணமாக இத்தொகுப்பிலுள்ள மஹ்மூட் தர்வீஷின் வாக்குமூலம் என்ற கவிதை யமுனா ராஜேந்திரனின் தொகுப்பில் விசாரணை என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு நோக்குவது சுவாரசியமான அனுபவமாக அமையும். பலஸ்தீனக் கவிதைகள் முதலாம் பதிப்பில் இடம்பெற்ற இதே கவிதையின் எனது மொழிபெயர்ப்புக்கும் இப்போது இந்த இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றுள்ள எனது மொழிபெயர்ப்புக்கும் இடையேகூட அதிக வேறுபாடுகள் உள்ளன. இதற்கு மூலமாகப் பயன்படுத்திய ஆங்கில மொழிபெயர்ப்புகளில் காணப்படும்

வேறுபாடுகளே இதற்குக் காரணமாகும். முதல் பதிப்பில் உள்ள மொழிபெயர்ப்பு பி. எஸ். சர்மா பதிப்பித்த Forever Palestine என்னும்
தொகுப்பில் investigation என்ற தலைப்பில் உள்ள ஆங்கில
மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் பதிப்பிலுள்ள மொழிபெயர்ப்பு டேனிஸ் ஜோன்சன் டேவிஸின் நூலில் dentity Card என்ற தலைப்பிலுள்ள மொழிபெயர்பையும் ஒப்புநோக்கித் திருத்தி விரிவாக்கப்பட்டது. முதல் மொழிபெயர்ப்பாளர் கவிதையின் சில பகுதிகளை மொழிபெயர்க்காது தவிர்த்துள்ளார். ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலத்தின் சில பகுதிகளை நீக்கும் அதிகாரம் உடையவரா என்ற கேள்வி நியாயமானது. சில காரணங்களால் ஒரு மொழிபெயர்ப்பாளர் அவ்வாறு செய்ய நேர்ந்தாலும் அது பற்றிக் குறிப்பிடும் கடப்பாடு அவருக்கு உண்டு என்பதே எனது நிலைப்பாடு
ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மொழிபெயர்ப்புப் பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார். இப்பிரச்சினைகளைத் தாண்டிச் செல்வது எளிதல்ல. மொழி. பெயர்ப்பாளனின் தத்தளிப்பு நிரந்தமானது என்பதே என் அனுபவம். எந்த ஒரு மொழிபெயர்ப்பும் முழு நிறைவானதல்ல. இழப்புகள் இல்லாத மொழிபெயர்ப்பு சாத்தியம் அல்ல என்றே தோன்றுகிறது. மொழிபெயர்ப்புக் குறைபாடுகளையும் மீறி இக்கவிதைகள் நிமிர்ந்து நிற்கின்றன என்றால் பலஸ்தீன மக்களின் துன்புற்ற ஆன்மாவின் உண்மையான குரலாக இவை ஒலிப்பதே காரணம் என்பேன்.
இத்தொகுப்பை வெளியிட முன்வந்த மூன்றாவது மனிதன் பதிப்பகத்திற்கும், நண்பர் எம். பெளசருக்கும் என் நன்றிகள்.
எம். ஏ. நுஃமான் 4-11-2OOO
ലഠ൬ ജൂല്പു് / 13

Page 9
ലonക്രേ ക്ലൈവ്ലേ / 14
முதலாம் பதிப்பின் முன்னுரை
சமகாலப் பலஸ்தீன வரலாறு அதர்மத்தினதும் அநீதியினதும் அவற்றுக் கெதிரான போராட்டத்தினதும் வரலாறாகும். 1977ல் பலஸ்தீன சனத்தொகை ஏழு லெட்சமாக இருந்தது. இதில் 574,000 பேர் அரபு முஸ்லிம்கள், 70,000 பேர் கிறிஸ்தவர்கள், 56,000 பேர் யூதர்கள், பலஸ்தீன மொத்த நிலப்பரப்பில் 2 சதவீதத்தை மட்டுமே யூதர்கள் வைத்திருந்தனர். ஆனால் 1948ல் அராபியர் 1,415,000 ஆகவும் யூதர்கள் 759,000 ஆகவும் அதிகரித்தனர். அதாவது முப்பது ஆண்டுகளுக்குள் அராபியரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிக்க, யூதர்கள் பதின்மூன்று மடங்கு அதிகரித்தனர். ஐரோப்பிய யூதர்களின் அபரிமிதமான குடியேற்றமே இதன் காரணமாகும்.
சியோனிசத்தினதும், பிரித்தானிய, அமெரிக்க எகாதிபத்தியங்களதும் கூட்டுச் சதியினால் பலஸ்தீன மண்ணில் இஸ்ரவேல் உருவாக்கப்பட்டபோது, 156,000 பலஸ்தீன அராபியர் மட்டுமே தங்கள் சொந்தத் தாயகத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் அகதிகளாகத் துரத்தப்பட்டனர். முதலாவது அரபு இஸ்ரேல் யுத்தத்தின் மூலம் பலஸ்தீன நிலப்பரப்பில் 77 சதவீதத்தை இஸ்ரவேல் அபகரித்துக் கொண்டது. 1949 ல் இஸ்ரேலின் சனத்தொகை 1,173900 ஆகும். இதில் 864 வீதம் யூதர்கள். 13.6 வீதம் மட்டுமே அராபியர். திட்டமிட்ட யூத குடியேற்றத்தினாலும், வன்செயல்களினாலும் பலஸ்தீன அரபு மக்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்ட தன் விளைவே இது.

தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வந்த வன்முறைகள் மூலமே பலஸ்தீன மக்களின் தாயகம் அபகரிக்கப்பட்டது. 1948 டிசம்பருக்கும் 1949 பெப்ரவரிக்கும் இடைப்பட்ட மூன்று மாத காலத்துள் மட்டும். ஆயுதம் தாங்கிய சியோனிச குழுக்கள் பலஸ்தீன மக்களைத் தங்கள் சொந்த நிலத்தில் இருந்து துரத்தும் நோக்குடன் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வன்செயல்களைப் புரிந்தனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் உட்பட நூற்றுக்கணக்கான கிராமவாசிகளைக் கொன்றுகுவித்தனர். இத்தகைய வன்முறைச் சம்பவங்களால் முதலாவது அரபு இஸ்ரேல் யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே சுமார் இரண்டரை லெட்சம் பலஸ்தீன மக்கள் தங்கள் தாய் நாட்டை விட்டுச் சென்றனர். 1948 - 1949 யுத்தத்தில் 250 அரபுக் கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. ஜபா, லித்தா, அக்றே, பெய்சன் ஆகிய நகரங்கள் கைவிடப்பட்டன. சுமார் ஒன்பது லெட்சம் பலஸ்தீனர் அகதிகளாயினர். 1967ல் நடைபெற்ற இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் மேலும் 525,000 பேர் அகதிகளாயினர். 1967க்கும் 1970க்கும் இடைப்பட்ட மூன்றாண்டுகளுள் 700 அரபு நகரங்களும் கிராமங்களும் அழிக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்கான அராபியர் துரத்தப்பட்டனர்.
இன்று பலஸ்தீன மக்கள் மரணத்துள் வாழ்வு தேடுகின்றனர். அபகரிக்கப்பட்ட தங்கள் தாய் நாட்டுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடுகின்றனர். அவர்களது போராட்டம் சியோனிசத்துக்கு எதிரானது மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதுமாகும். அவ்வகையில் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் உலகெங்கும் விடுதலைக்காகப் போராடும் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆகவே தான் அநீதியின் பக்கம் நிற்பவர்களைத் தவிர உலக மக்கள் அனைவரும் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்துள்ளனர், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று கோருகின்றனர்.
பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவே இப்போது இக்கவிதைத் தொகுதியை வெளியிடுகிறேன். இக்கவிதைகள் பலஸ்தீன மக்களை நேரடியாகப் புரிந்து கொள்ள நமக்கு உதவும். இக் கவிதைகளில் வெளிப்படும் அவர்களது உண்மையான உள்ளத்துணர்ச்சி நமது நெஞ்சைத் தொடும் என்றே நம்புகிறேன்.
இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்துடன் நேரடியா ன தொடர்புடைய  ைவ. இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள பிரிக்கமுடியாத
ലഠ൬ ( / 15

Page 10
ലഠ൬ ജൂല്പു് / 16
உறவை இக்கவிதைகள் பகிரங்கப்படுத்துகின்றன. பலஸ்தீன மக்களின் துயர் நிலையையும், விடுதலைப் போராட்ட உணர்வையும் இவை பிழிந்து தருகின்றன. அவர்களின் 'ஆளுமையையும் அபிலாசைகளையும், உணர்ச்சியின் ஆழத்தையும் திடசித்தத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் இவை சொற்களில் வடித்துத் தருகின்றன. கவிதை அவர்களின் உணர்ச்சியின் ஊற்றாகவும் வடிகாலாகவும் இருப்பதை நாம் இதில் காண்கிறோம். இக் கவிஞர்கள் துப்பாக்கியை அல்ல, பேனை தூக்கிய "கொமாண்டோக்களாகவே காட்சியளிக்கின்றனர்.
இத்தொகுப்பிலே, பிரபலமான ஒன்பது பலஸ்தீனக் கவிஞர்களின் முப்பது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் அனைத்தும், பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இந்திய அலுவலகம் 1967ல் வெளியிட்ட Forever Palestine என்னும் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுள் சமீஹ் அல் காசீமின் ஏழு கவிதைகளையும் எனது வேண்டுகோளுக்கு இணங்க நண்பர் முருகையன் மொழிபெயர்த்து உதவினார். அவருக்கு என் நன்றி. ஏனைய இருபத்திமூன்று கவிதைகளும், பலஸ்தீனப் போராட்டக் கவிதைகள் பற்றிய கடாகர்மியின் கட்டுரையும் என்னால் மொழிபெயர்க்கப்பட்டன. முடிந்த அளவு ஆங்கில மொழி பெயர்ப்புக்கு விசுவாசமாகவே தமிழாக்கத்தை அமைத்துள்ளோம்.
மிகச்சிறந்த கவித்துவ வளமுடைய உலக மொழிகள் சிலவற்றுள் அரபு மொழியும் ஒன்று என அறிஞர் கூறுவர். அரபுக் கவிதையை ஆங்கில . மொழி பெயர்ப்பு மூலம் தமிழுக்குக் கொண்டுவரும் போது மூலக் கவிதையின் வீச்சும் வேகமும் மூன்றாவது மொழியிலும் அவ்வாறே இருக்குமென்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. அதையும் மீறி இத்தொகுப்பிலே பலஸ்தீனக் கவிஞர்களின் வீறார்ந்த உணர்ச்சியை நாம் ஒரளவு தரிசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் மொழிபெயர்ப்பின் சிறப்பு அல்ல, மழுங்கடிக்க முடியாத மூலக்கவிதையின் சிறப்பேயாகும் என்றே நான் கூறுவேன். சிரமம் பாராது, இத்தமிழாக்கத்தை ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்புநோக்கி ஆலோசனைகளும் திருத்தங்களும் கூறிய யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையைச் சேர்ந்த நண்பர் ஏ. ஜே. கனரத்தினா அவர்களுக்கு என் நன்றி உரியது.
எம். ஏ. நுஃமான்

ലഠ൬ ജൂല്ക്ക് / 17
மஹ்மூட் தர்வீஷ்
மஹ்மூட் தர்வீஷ் பலஸ்தீனத்தில் அக்றே என்ற நகருக்குக் கிழக்கேயுள்ள பிந்வா என்ற கிராமத்தில் 1941ல் பிறந்தார். 1948ல் அக்கிராமம் ஏனைய கிராமங்களைப் போலவே இஸ்ரேலர்களால் முற்றாக அழிக்கப்பட்டது. தர் வீஷ் பெற்றோ ருடன் லெபனானுக்குக் குடிபெயர்ந்தார். ஒரு வருடம் கழித்து அவர்கள் கலிலீயில் குடியேறினர். தர்வீஷின் பாடசாலைக் கல்வி ஒழுங்கற்றது. 1971ல் அவர் இஸ்ரேலை விட்டு வெளியேறி கெய்ரோவில் வாழ்ந்தார். 1972 முதல் அவர் பெய்ரூத்தில் வாழ்ந்து வந்தார். பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அரபு நாடுகளிலும் பிறநாடுகளிலும் அவர் அதிகம் பயணம் செய்துள்ளார். ஜனரஞ்சக இசைக் கலைஞர்களுக்கு நிகரான ஒரு பிரபலம் அவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். அன்றையப் பலஸ்தீனக் கவிஞர்கள் மத்தியில் தர்விஷே அதிக பிரபலம் பெற்றவர்.
அவரது முதல் கவிதைத் தொகுதியான சிறகிழந்த பறவைகள் 1960ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து பல தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு.
ஒலிவம் இலைகள் (1964), பலஸ்தீனத்திலிருந்து ஒரு காதலன் (1966), இரவின் முடிவு (1967), கலிலீயில் பறவைகள் இறக்கின்றன (1970), நான் உன்னைக் காதலிக்கிறேன் நான் உன்னைக் காதலிக்கவில்லை (1972), ஏழாவது தாக்குதல் (1975), திருமணங்கள் (1977).
1969ல் ஆசிய ஆப்பிரிக்க எழுத்தாளர் அமைப்பு அவருக்கு தாமரை விருது வழங்கிக் கெளரவித்தது.

Page 11
வாக்குமூலம்
எழுதிக்கொள் இதனை நான் ஓர் அராபியன் எனது அட்டையின் இலக்கம் 50,000. எட்டும் குழந்தைகள் உள்ளனர் எனக்கு ஒன்பதாவது அடுத்த கோடையில் கோபமா உனக்கு?
எழுதிக்கொள் இதனை நான் ஓர் அராபியன் தொழிலாளருடன் கற்கள் உடைக்கிறேன் கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன் எனது எட்டுக் குழந்தைகளுக்கும் ரொட்டித் துண்டினைப் பெறுவதற்காக புத்தகம் ஒன்றைப் பெறுவதற்காக
ലഠ൬ ജൂല്പു് / 18

ലെ ക്രമത്സു് / 19
ஆயினும் கருணை கேட்டு நான் இரந்திட மாட்டேன் உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ் முழந்தாள் இட்டு நான் பணிந்திட மாட்டேன் கோபமா உனக்கு?
எழுதிக் கொள் இதனை
நான் ஓர் அராபியன் பேர்புகழ் அற்ற ஒருவனே நான் மூர்க்க உலகில் நிலைபேறுடையவன் கோபச் சூழலில் அனைத்தும் இயங்கும் ஒரு நாட்டின் புதல்வன்
காலம் பிறக்க முன்
யுகங்கள் உதயமாக முன் சைப்ரஸ் மரங்களுக்கும் ஒலிவ் மரங்களுக்கும் முன் களைகள் முதிர்ச்சியடைய முன்
ஆழச் சென்றன எனது வேர்கள்
எனது தகப்பன் ஓர் எளிய உழவன் குலவழி அற்ற உழவன் என் பாட்டன் எனது வீடு ஓர் வைக்கோல் குடிசை பட்டங்கள் அற்ற வெறும் பெயர் எனது
எழுதிக் கொள் இதனை
நான் ஓர் அராபியன் எனது தலைமுடி மிகவும் கறுப்பு எனது கண்கள் மண்ணிறமானவை எனது அரபுத் தலையணி அதைத் தொடுவோரின் கைகளைப் பிராண்டும்

Page 12
எனது விலாசம்: மறக்கப்பட்ட ஓர் தூரத்துக் கிராமம் அதன் தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை அதன் மக்கள் வயல்களில் உழுவோர்
கல் உடைக்கும் இடத்திலும் உழல்வோர்
எழுதிக் கொள் இதனை
நான் ஓர் அராபியன் என் முன்னோரின் திராட்சை வனத்தை திருடிக் கொண்டவன் நீ
நான் உழுத நிலத்தை என் குழந்தைகளை திருடிக் கொண்டவன் நீ எனக்கும் எனது பேரர்களுக்கும் நீ விட்டு வைத்தவை இப் பாறைகள் மட்டுமே
அனைத்துக்கும் மேலையும் இதனையும் எழுது யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும் பட்டினி வருத்தும் போதிலோ என்னைக் கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்
கவனம்
எனது பசியை அஞ்சிக் கவனமாய் இருங்கள்
எனது சினத்தை அஞ்சிக் கவனமாய் இருங்கள்.
ലഠ൬൪ ൯൬് / 20

ലO(് ബഭ്രൂ / 21
தூரத்து நகரில் ஒரு அந்நியன்
நான் இளைஞனாயும் அழகனாயும் இருந்த போது ரோஜா என் இல்லமாய் இருந்தது அருவிகள் என் கடல்களாய் இருந்தன
பின்னரோ,
ரோஜா ஒரு காயமாய் மாறிற்று அருவிகள் தாகமாயின
நீ அதிகம் மாறிவிட்டாயா? இல்லை, அதிகம் இல்லை காற்றைப் போல எங்கள் வீட்டுக்கு நாங்கள் திரும்பிவரும்போது எனது நெற்றியை உற்றுப்பார்
ரோஜா ஒரு ஈச்சை மரமாக இருப்பதைக் காண்பாய் அருவிகள் வியர்வையாய் இருப்பதையும் காண்பாய் நான் முன்பு இருந்ததைப் போலவே இளைஞனாயும் அழகனாயும் என்னைக் காண்பாய்

Page 13
அலைந்து கொண்டிருக்கும் கித்தார் இசைஞன்
முன்பு அவன் ஒரு ஓவியன் ஆனால் ஒவியங்களோ
சாதாரணமாக கதவுகள் எதையும் திறப்பதில்லை அவற்றை உடைத்து நொறுக்குவதும் இல்லை சந்திரனின் முகத்தைவிட்டுத் திமிங்கலத்தைத் துரத்திவிடுவதும் இல்லை
费
(ஓ என் நண்பனே, ஓ கித்தாரே தூரத்துச் சன்னல்களுக்கு என்னைக் கொண்டுசெல்)
முன்பு அவன் ஒரு கவிஞன் ஆனால் கவிதையோ, கப்பலின் தளத்தில் இருந்து அவன் ஜாஃபாவைப் பார்த்தபோது “ நினைவில் கசங்கி மடங்கியது
(ஒ என் நண்பனே, ஓ கித்தாரே தேன் நிறக் கண்களிடம் என்னைக் கொண்டுசெல்)
முன்பு அவன் ஒரு படைவீரன் ஆனால், ஒரு எறிகுண்டுத் துணுக்கு அவனது முழங்காலை நொறுக்கி விட்டது அவனுக்கு அவர்கள் பரிசொன்றை அளித்தனர் பதவி உயர்ச்சியும், ஒரு மரக்காலும்
ലഠ൬൪ ൯" / 22

ലഠ൬ ക്രമത്സു് / 23
(ஒ என் நண்பனே, ஒ கித்தாரே
தூங்கும் நாடுகளுக்கு என்னைக் கொண்டுசெல்)
இனி வரும் இரவுகளில் கித்தார் இசைஞன் வருவான் படைவீரர்களிடம் மக்கள் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டிருக்கும் போது நாம் பார்த்திராத ஓர் இடத்தில் இருந்து கித்தார் இசைஞன் வருவான் மக்கள் சாட்சிகளின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது கித்தார் இசைஞன் வருவான் நிர்வாணமாக அல்லது உள்ளாடைகளுடன்
கித்தார் இசைஞன் வருவான் நான் பெரிதும் அவனைப் பார்க்கிறேன் அவனது வாத்திய நரம்புகளின் இரத்த வாடையைப் பெரிதும் முகர்கிறேன் நான் பெரிதும் பார்க்கிறேன் அவன் ஒவ்வொரு தெருவிலும் நடந்து கொண்டிருப்பதை நான் பெரிதும் கேட்கிறேன் அவன் ஒரு புயல்போல ஒலமிடுவதை
நன்றாகப் பார்
அது ஒரு மரக்கால்
கவனி
அதுதான் மனித மாமிசத்தின் இசை
சந்திர கிரகணத்தின் போது சந்திரனை திமிங்கிலம் சாப்பிடுகிறது என்பது ஐதீகம்
* கப்பலின் தளத்தில் இருந்து அவன் ஜாஃபவைப் பார்த்த போது என்ற
தொடர் இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு கடல் மூலமாக யூதர்கள் பலஸ்தீனத்திற்குள் கொண்டுவரப்பட்டதைக் குறிக்கிறது.

Page 14
பலிஆள் - இலக்கம் 48
அவனது நெஞ்சில் ஒரு ரோசாமலர் விளக்கையும் ஒரு நிலவையும்
கண்டனர் அவர்கள்
ଧ୭ର ଚୌt கொலையுண்டு கற்களின் மீது வீசப்பட்டான். அவனது பையில் அவர்கள் கண்டெடுத்தவை சில நாணயங்கள்
ஒரு நெருப்புப் பெட்டி
ஒரு அடையாள அட்டை
அவனது புயத்தில் பச்சைகுத்திய தடங்களும் இருந்தன
அவனது தாயோ அவனை இழந்தாள் ஆண்டு தோறும் அஞ்சலி செய்தாள் அவனது விழிகளில் முட்செடி முளைத்தது இருள் மிக அடர்ந்தது.
அவனது தம்பி இளைஞனாகி வேலை தேடி நகர்ப்புறம் சென்றான் அவர்கள் அவனை சிறையில் அடைத்தனர் அடையாள அட்டை அவனிடம் இல்லை தெருவில் அவனிடம் இருந்ததெல்லாம் ஒரு குப்பைப் பெட்டியும் வேறு சிலவும்
என் தாய்நாட்டின் குழந்தைகளே, இவ்வாறுதான் சந்திரன் இறந்தது.
ലഠ൬൪ ൯" / 24

ലഠരക്രിസ്ത്ര ബല്ക്കു് / 25
முதல் சந்திப்பு
எனது கைகளைப் பலமாய் அழுத்தி மூன்றே சொற்களை மெல்லென மொழிந்தாள் அன்று நான் பெற்ற அரும்பொருள் அவையே
"நாளை நாம் சந்திப்போம்"
பின்னர்
பாதை அவளை மறைத்து விட்டது.

Page 15
இருமுறை முகம் மழித்தேன்
இருமுறை சப்பாத்துகளைத் துடைத்து மினுக்கினேன் நண்பனின் ஷoட்டினை அணிந்தேன் இரண்டு லிறாக்களும் அவளுக்கு இனிப்பும்
#情
எடுத்துக் கொண்டேன்
பால் கோப்பியும் வாங்கிக் கொடுக்க, காதலர்கள் புன்னகை செய்கையில் நான் தனிமையில் இருந்தேன் என்னுள்ளும் ஏதோ சொன்னது
நாமும் கூடப் புன்னகை செய்யலாம்
சிலவேளை அவள் இதோ வந்துகொண்டிருக்கலாம் சிலவேளை அவள் இதை மறந்தும் இருக்கலாம் சிலவேளை. சிலவேளை.
இன்னும் இரண்டு நிமிடமே உள்ளது.
நாலரை மணி அரைமணி நேரம் முடிந்து விட்டது ஒரு மணி நேரம், இருமணி நேரம், நிழல்கள் தாமே நீண்டு செல்கின்றன வாக்களித்தவள் வரவே இல்லை
நாலரை மணிக்கு.
* லீறா - அரபு நாணயம்
* அராபியர்கள் பொதுவாக வெறும் காப்பியே அருந்துவர். பால் கலந்த
கோப்பி விசேட பானமாகக் கருதப்படுகிறது.
ലഠ൬൪ ൯൭" / 26

ലഠ൬ ( / 27
சங்கீதம் - 3
எனது சொற்கள் மண்ணின் சொற்களாய் இருந்த நாளில் நான் கோதுமைத் தாள்களுக்கு நண்பனாய் இருந்தேன்.
எனது சொற்கள் சினத்தின் சொற்களாய் இருந்த நாளில் நான் சங்கிலிகளின் நண்பனாய் இருந்தேன்.
எனது சொற்கள் கிளர்ச்சியின் சொற்களாய் இருந்த நாளில் நான் பூமி அதிர்ச்சிகளின் நண்பனாய் இருந்தேன்.
எனது சொற்கள் பேதி மருந்தின் சொற்களாய் இருந்த நாளில் நான் நன்நம்பிக்கையின் நண்பனாய் இருந்தேன்.
எனது சொற்கள் தேனாக மாறியபோதோ
ஈக்கள்
என் இதழ்களை மூடின.

Page 16
மனிதனைப்பற்றி
அவனது வாயில் துணிகளை அடைத்தனர் கைகளைப் பிணைத்து மரணப் பாறையுடன் இறுகக் கட்டினர் பின்னர் கூறினர் நீ ஒரு கொலைகாரன் என்று
அவனது உணவையும் உடைகளையும் கொடிகளையும் கவர்ந்து சென்றனர் மரண கூடத்தினுள் அவனை வீசி எறிந்தனர் பின்னர் கூறினர்
நீ ஒரு திருடன் என்று
அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும் துரத்தப்பட்டான் அவனது அன்புக்குரியவளையும் அவர்கள் தூக்கிச் சென்றனர் பின்னர் கூறினர்
நீ ஒரு அகதி என்று
தீப்பொறி கனலும் விழிகளும் இரத்தம் படிந்த கரங்களும் உடையவனே இரவு குறுகியது
சிறைச்சாலைகள்
என்றென்றைக்கும் எஞ்சியிரா சங்கிலிக் கணுக்களும் எஞ்சியிரா நீரோ இறந்து விட்டான் ரோம் இன்னும் இறக்கவில்லை அவள் தன் கண்களாலேயே இன்றும் போரிடுகிறாள் காய்ந்து போன ஒரு கோதுமைக் கதிரின் விதைகள் கோடிக்கணக்கில் பசிய கதிர்களால்
சமவெளியை நிரப்பவே செய்யும்.
ലഠ൬ ബില്ക്ക് / 28

Øരക്രേ ഷൂസ്മെ / 29
ஒலிவ மரச் சோலையில் இருந்து ஒரு குரல்
நெருப்பில் கிடந்த நான் சிலுவையில் அறையப்பட்ட போது ஒலிவ மரச் சோலையில் இருந்து எதிரொலி கேட்டது.
நான் காகங்களுக்குச் சொன்னேன் என்னைத் துண்டுகளாய்க் கிழிக்காதீர் ஏனெனில் நான் வீடு திரும்பக்கூடும் வானம் மழைபொழியக்கூடும் இந்த கொடூரமான காட்டை அது அழித்துவிடக்கூடும்.
என் சிலுவையில் இருந்து ஒரு நாள் நான் இறங்கி வருவேன் யாருக்குத் தெரியும் நான் எப்படித் திரும்பி வருவேன் என்று? வெறுங் காலுடனா?
நிர்வாணமாகவா?

Page 17
பலிஆள் இலக்கம் 18
முன்பொரு நாளில் ஒலிவம் தோப்பு பசுமையாய் இருந்தது வானம் நீலத் தோப்பாய் இருந்தது என்அன்பே, அது அவ்வாறுதான் இருந்தது அன்றைய மாலை எது அதனை மாற்றி அமைத்தது?
பாதை வளைவில், அவர்கள் தொழிலாளர்களின் லொறியினை நிறுத்தினர் அவர்கள் எத்தனை அமைதியாய் இருந்தனர்
அவர்கள் எங்களைக் கிழக்கை நோக்கி வட்டமாய்த் திருப்பினர் அவர்கள் எத்தனை அமைதியாய் இருந்தனர்
ஒ என் காதலின் கூடே முன்பொரு நாளில் என் இதயம் நீலப் பறவையாய் இருந்தது என்னிடம் இருந்த உன் கைக்குட்டைகள் அனைத்தும் வெண்மையாய் இருந்தன
என் அன்பே, அவை அவ்வாறுதான் இருந்தன அன்றைய மாலை அவற்றை நிறம் மாற்றியது எது? அன் அன்பே
எனக்கு எதுவும் புரியவே இல்லை
பாதை வளைவில் அவர்கள் தொழிலாளர்களின் லொறியினை நிறுத்தினர் அவர்கள் எத்தனை அமைதியாய் இருந்தனர்
Øക്ര്തക്ര (ക്രിക് / */

ലഠ൬ ജൂല്പു് / 31
அவர்கள் எங்களைக் கிழக்கை நோக்கி வட்டமாய்த் திருப்பினர் அவர்கள் எத்தனை அமைதியாய் இருந்தனர்
என்னிடம் இருந்து நீ எல்லாம் பெறுவாய் நிழலும் உனதே ஒளியும் உனதே திருமண மோதிரமும் நீ வேண்டிய அனைத்தும் ஒலிவம் தோட்டமும் அத்தி மரங்களும் என்னிடம் இருந்து நீ எல்லாம் பெறுவாய்
ஒவ்வொரு இரவும் உன்னிடம் வருவேன் கனவில் ஜன்னலின் ஊடே வருவேன் மல்லிகை மலரை உன்னிடம் எறிவேன் குறை கூறாதே சற்று நான் பிந்தினால் அவர்கள் என்னை நிறுத்தினர் அன்பே
எப்போதுமே ஒலிவம் தோப்பு பசுமையாய் இருந்தது என் அன்பே, அது அவ்வாறுதான் இருந்தது
50 பலி ஆட்கள் மாலையில் அதனை செங்குளம் ஆக்கினர் 50 பலி ஆட்கள்
அன்பே நீ என்னைக் குறை கூறாதே அவர்கள் என்னைக் கொன்றனர் என்னை அவர்கள் கொன்றனர்
என்னைக் கொன்றனர் அவர்கள்
1956ம் ஆண்டு யுத்தத்தின் போது கஃப்ர் காசிம் என்ற இடத்தில் இஸ்ரேல் படையினர் 49 நிராயுதபாணியான கிராம வாசிகளைப் படுகொலை செய்தனர். அப்படுகொலை பற்றி மஹ்மூட் தர்வீஷ் எழுதிய கவிதைகளில் இதுவும் ஒன்று.

Page 18
કોઠop
எனது வீட்டு விலாசம் மாறிவிட்டது நான் சாப்பிடும் நேரமும் மாறிவிட்டது எனது புகையிலையின் அளவும் எனது ஆடையின் நிறமும் எனது முகமும் எனது தோற்றமும் கூட மாறிவிட்டன.
இங்கு என்பிரிய சந்திரன்கூட மாறிவிட்டது மிகப் பெரிதாக, மிக அழகாக பூமியின் மணமும் மாறிவிட்டது அத்தர் போல. இயற்கையின் சுவையும் மாறிவிட்டது இனிமையாக,
எனது பழைய வீட்டின் கூரையின் மீது நான் இருப்பது போலவே இருப்பினும் கூட
ஓர் புதிய தாரகை என் கண்களின்மீது இறுகியுள்ளது.
ലഠ൬ (് / 32

ലഠ൬ ജൂല്പു് / 33
மலையடிவாரத்தில் குதிரைகள் கனைக்கின்றன
மலையடிவாரத்தில் குதிரைகள் கனைக்கின்றன ஒன்றில் ஏறுவதற்கு அல்லது இறங்குவதற்கு
என் சீமாட்டியிடம் என் புகைப்படத்தைக் கொடுக்கிறேன் நான் இறந்த பிறகு சுவரில் கொழுவுதற்காக அவள் கேட்டாள் "அதற்கென்றொரு சுவர் உண்டா?” நான் சொன்னேன் "அதற்கென்றொரு சுவரைக் கட்டுவோம்" "எங்கே எந்த வீட்டில்?" நான் சொன்னேன். "அதற்கென்றொரு வீட்டைக் கட்டுவோம்" "எங்கே? எந்தப் புகலிடத்தில்?”
நாங்கள் சத்தமிட்டோம்
பாடல் பரகசியமாயிற்று
மலையடிவாரத்தில் குதிரைகள் கனைக்கின்றன ஒன்றில் ஏறுவதற்கு அல்லது இறங்குவதற்கு
ஒரு முப்பது வயதுச் சீமாட்டிக்கு அவளது குதிரைவீரனின் படத்துக்குச் சட்டமிட ஒரு நிலம் தேவையா?
கடினமான அந்த மலைச் சிகரத்தை என்னால் அடைய முடியுமா? மலையடிவாரம் ஒரு பாதாளக் கிடங்கு அல்லது முற்றுகைக்குள்ளானது மேலும் பாதையின் மையம் ஒரு திருப்பு முனை ஆ ஓர் உயிர்த் தியாகி பிறிதொரு உயிர்த் தியாகியைக்
கொல்லும் பயணம்
என் புகைப்படத்தை என் சீமாட்டியிடம் கொடுக்கிறேன் உனக்குள் ஒரு புதிய குதிரை கனைக்கும்போது என் புகைப்படத்தைக் கிழித்து வீசு
மலையடிவாரத்தில் குதிரைகள் கனைக்கின்றன ஒன்றில் ஏறுவதற்கு
அல்லது ஏறுவதற்கு

Page 19
இயலும் போதெல்லாம் வாழ்வை நேசிக்கிறோம்
எம்மால் இயலும் போதெல்லாம் நாம் வாழ்வை நேசிக்கிறோம் நடனம் செய்கிறோம் ஒரு மினராவைக் கட்டி எழுப்புகிறோம் அல்லது இரண்டு உயிர்த் தியாகிகள் மத்தியில் வளரும் ஊதாச் செடிகளுக்காக ஈத்த மரங்களை வளர்க்கிறோம் எம்மால் இயலும்போதெல்லாம்
நாம் வாழ்வை நேசிக்கிறோம்.
ലഠ൬൪ ൯൬൭് / 34

ലഠ൬൭ ബീബ്രു് / 35
எங்கள் பயணத்துக்காக ஒரு வானத்தையும் ஒரு வேலியையும் நெய்ய பட்டுப் பூச்சியிடம் ஒரு நூலைத் திருடுகிறோம் ஒரு அழகிய நாளைப்போல் பாதையில் நடந்துசெல்ல மல்லிகைக்கு நம் தோட்டத்து வாயிலைத் திறந்துவிடுகிறோம் எம்மால் இயலும் போதெல்லாம்
நாம் வாழ்வை நேசிக்கிறோம்.
நாம் எங்கெல்லாம் குடியமர்கிறோமோ அங்கெல்லாம் விரைந்து வளரும் தாவரங்களை வளர்க்கிறோம் நாங்கள் எங்கெல்லாம் குடியமர்கிறோமோ அங்கெல்லாம் ஒரு கொலையுண்ட மனிதனை அறுவடை செய்கிறோம் தூரத்து, வெகு தூரத்து நிறத்தினை நாம் புல்லாங் குழலில் இசைக்கிறோம் ஒரு குதிரைக் கனைப்பின் வழியில் நாம் தூசியைச் சுவாசிக்கிறோம்
மேலும் கற்களின் வடிவில் எங்கள் பெயர்களை எழுதுகிறோம் மின்னல் எங்களுக்காக இரவைப் பிரகாசமாக்குகின்றது இரவைச் சிறிது பிரகாசமாக்குகின்றது எம்மால் இயலும் போதெல்லாம்
நாம் வாழ்வை நேசிக்கிறோம்.

Page 20
பாடகன்
ஒரு சிறிய மாலைப் பொழுது ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமம் இரண்டு தூங்கும் விழிகள் முப்பது வருடங்கள்
ஐந்து யுத்தங்கள் காலம் எனக்காக ஒரு கோதுமைத் தாழை ஒளித்து வைக்கிறது
பாடகன் பாடுகிறான் நெருப்பையும் அன்னியர்களையும்
மாலைப் பொழுது மாலைப் பொழுதாகவே இருந்தது பாடகன் பாடிக் கொண்டிருந்தான் அவர்கள் அவனை விசாரித்தனர் நீ ஏன் பாடுகிறாய்? அவர்கள் அவனைக் கைது செய்கையில் அவன் பதில் கூறுகிறான் ஏனெனில் நான் பாடுகிறேன்
அவர்கள் அவனைச் சோதனையிட்டனர் அவனது மார்பில் அவனது இதயம் மட்டும் அவனது இதயத்தில் அவனது மக்கள் மட்டும் அவனது குரலில் அவனது துயரம் மட்டும் அவனது துயரத்தில் அவனது சிறைச்சாலை மட்டும் அவனது சிறைச்சாலையில் அவர்கள் தேடுதல் நடத்தினர் சங்கிலியில் பிணைப்புண்டு கிடக்கும் தங்களை மட்டுமே அங்கு கண்டனர்.
(Poem of the Land (நிலத்தின் கவிதை) என்ற நீண்ட கவிதையின் ஒரு பகுதி)
ലഠ൬൪ ൯൭" / 36

ലഠ൬ കയ്പു് / 37
சீற்றம்
என் இதயத் தாமரைகள் கறுப்பாகி விட்டன என் இதழ்களில் இருந்து சுவாலைகள் பறந்தன.
பசிப் பிசாசுகளே எந்த வனத்தில் இருந்து எந்த நரகில் இருந்து இங்கு வந்தீர்கள்?
என் துன்பங்களுக்கு நான் என்னை அர்ப்பணித்திருக்கிறேன் தேசப் பிரஷ்டத்துடனும் பசியுடனும் நான் கை குலுக்கி இருக்கிறேன் சீற்றம்தான் எனது கை சீற்றம்தான் எனது வாய்
எனது நரம்பின் குருதி சீற்றத்தின் சாறே ஆகவே நான் ஒரு பாடலைப் பாடுவேன் என நீ எதிர் பாராதே அடர்ந்த வனங்களில் மலர்கள் காட்டு மலர்களாகத் தான் மாறுகின்றன
நாட்பட்ட எனது புண்ணுக்கோர் ஆறுதலாக எனது களைத்த வார்த்தையைத் தருகிறேன் இதுவே என் வருத்தம் மண்ணுக்கோர் பெரும் உதை மேகங்களுக்குப் பிறிதொன்று
இது போதும் இப்போது நான் சீற்றமாய் இருப்பதால் ஆனால், நாளை புரட்சி வரும்

Page 21
மனிதருக்குரிய பாடல்
துயரங்களின் தோழர்களே தளையுண்ட நண்பர்களே வாருங்கள் என்றென்றும் தோல்வியுறா அணிவகுத்துச் செல்வோம் நாம் எதையும் இழக்கோம் நமது சவப்பெட்டிகளைத் தவிர
விண்ணகம் நோக்கி நாம் பாடல் இசைக்கலாம் நம்பிக்கைகளை நாங்கள் அனுப்பலாம் தொழிற்சாலைகளிலும் கல்லுடைக்கும் இடங்களிலும் வயல் வெளிகளிலும் நாங்கள் பாடலாம் மறைவிடங்களை விட்டும் நீங்கலாம்
சூரியனைப் பார்க்கலாம்.
அவர்கள் அரபிகள், காட்டு மிராண்டிகள் நமது எதிரிகள் முணுமுணுப்பார்கள்
ஆம் நாங்கள் அரபிகள் நாங்கள் அறிவோம் தொழிற் சாலைகளும் வீடுகளும் மருத்துவ மனைகளும் பாடசாலைகளும் எப்படிக் கட்டுவது என்பதை அறிவோம் குண்டுகளும் ஏவுகணைகளும் எப்படிச் செய்வது என்பதை அறிவோம் இசையும் அழகிய கவிதையும் கூட நாங்கள் இயற்றுவோம்.
ലഠ൬ (് / 38

ലഠ൬ (് / 39
நான் பிரகடனம் செய்கிறேன்
எனது நாட்டில் ஒரு சாண் நிலம் எஞ்சி இருக்கும் வரை என்னிடம் ஒரு ஒலிவமரம் எஞ்சி இருக்கும் வரை ஒரு எலுமிச்சை மரம் ஒரு கிணறு ஒரு சப்பாத்திக் கள்ளி எஞ்சி இருக்கும் வரை

Page 22
ஒரு சிறு நினைவு ஒரு சிறு நூலகம் ஒரு பாட்டனின் புகைப்படம் ஒரு சுவர் எஞ்சி இருக்கும் வரை
அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை கவிஞர்கள் அந்தர் அல்-அப்ஸ் கதைகள் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான யுத்த காவியங்கள் எனது நாட்டில் இருக்கும் வரை
எனது கண்கள் இருக்கும் வரை எனது உதடுகள் எனது கைகள் எனது தன்னுணர்வு இருக்கும் வரை விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்.
சுதந்திரமான மனிதர்கள் பெயரால் தொழிலாளர்கள் மாணவர்கள் கவிஞர்கள் பெயரால்
நான் பிரகடனம் செய்வேன்
கோழைகள் சூரியனின் எதிரிகள் அவமான ரொட்டியினால் ஊதிப் புடைக்கட்டும் நான் வாழும் வரை எனது சொற்களும் வாழும் சுதந்திரப் போராளிகளின் கைகளில் ரொட்டியாயும் ஆயுதமாயும்
என்றும் இருக்கும்.
ഠ൬ ജൂല്പു് / 40

ലഠ൬ ശല്ക്ക് / 41
எதிர்ப்பு
நீ என்னைச் சுற்றிக் கட்டலாம் வாசிப்பதற்கும் புகைப்பதற்கும் நீ தடை விதிக்கலாம் ኣ எனது வாயில் நீ மண் இட்டு நிரப்பலாம் ஆயினும் என்ன?
கவிதை என் துடிக்கும் இதயத்தின் குருதி என் ரொட்டியின் உப்பு கண்ணின் திரவம் நகங்களால் கண் இமைகளால் கத்தி முனையால் நான் அதை எழுதுவேன். சிறைச்சாலையில் குளியலறையில் குதிரை லாயத்தில் நான் அதைப் பாடுவேன்.
சவுக்கடியிலும் சங்கிலிப் பிணைப்பிலும் கைவிலங்கின் வேதனை இடையிலும் நான் அதைப் பாடுவேன்.
போரிடும் எனது பாடலைப்பாட என்னுள் ஒர் கோடி
வானம்பாடிகள் உள்ளன.

Page 23
நம்பிக்கை
உனது பாத்திரத்தில் இன்னமும் சிறிது தேன் எஞ்சி உள்ளது. ஈக்களைத் துரத்து தேனைப் பாதுகாத்திடு.
இன்னமும் கூட உனது வீட்டுக்கோர் கதவுண்டு இன்னமும் கூட உனது வீட்டிலோர் பாய் உண்டு கதவை மூடு குளிர் காற்றில் இருந்தும் உன் குழந்தைகளைக் காப்பாற்று.
மிகமிக மோசம் இக்குளிர் காற்று குழந்தைகள் நன்கு தூங்குதல் வேண்டும்
நெருப் பெரிக்கச் சிறிது விறகு கொஞ்சம் கோப்பி நெருப்புச் சுவாலை
இன்னமும் கூட உன்னிடம் உண்டு.
ലഠ൬ ജൂല്പു് / 42

ഗരക്ര്തക്ര ക്രമേല്പു് / 43
இரங்கற்பா
சென்று திரும்பா என் நண்பனின் கதையை எமது மண்ணிலே
துயருடன் அவர்கள் கூறுகின்றனர்.
அவனது பெயர்.?
அவனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் எம் இதயங்களில் அச்சொல் புனிதமாய் இருக்கட்டும். சாம்பலைப் போல் காற்று அதனையும்
அள்ளிச் செல்ல விடவேண்டாம்
சுகப்படுத்த முடியாத ஒரு காயமாக அவனை எங்கள் இதயத்தில் இருத்துவோம். அன்புள்ளோரே
அனாதைகளே
நான் விசாரப்படுகிறேன் அநேக பெயர்களுள் அவனது பெயரை மறந்து விடுவோம் என்று அஞ்சுகிறேன் அவனை மறக்க நான் அஞ்சுகிறேன் மாரி மழையிலும் புயலிலும் எம் இதயக் காயங்கள் உறங்குதல் கூடும்
என நான் அஞ்சுகிறேன்.

Page 24
அவனது வயது.?
மழையை நினைவு கூரா ஓர் அரும்பு அவன் நிலவொளியில் காதல் பாட்டுப் பாடியதில்லை அவன் காதலிக்காகக் காத்திருந்து கடிகாரத்தை நிறுத்தியதில்லை அவன் அவனது கரங்கள் சுவரருகே யாரையும் தழுவியதில்லை ஓர் உந்தும் வேட்கையை அவன் விழிகள் என்றும் தொடர்ந்ததில்லை அவன் ஒரு பெண்ணை முத்தமிட்டதேயில்லை ஒருத்தியுடனும் சல்லாபித்ததுமில்லை அவனது வாழ்வில் இருமுறை மட்டுமே ஒரு பெண்ணைப் பார்த்து ஆ என வியந்தான் ஆனால் அவளோ அவனைப் பொருட்படுத்தியதில்லை அவனோ முதிரா இளைஞன் அவளை அடையும் வழியை அவன் இழந்தான் நம்பிக்கையையும் அதுபோல இழந்தான்.
எங்கள் மண்ணிலே
அவனது கதையைக் கூறுகின்றனர் அவன் ஓடி மறைந்த போது அவனது தாயிடம் விடைபெற வில்லை
நண்பர்களைச் சந்திக்க வில்லை
அச்சத்தைத் தணிக்கும் செய்தி எதனையும் விட்டுச் செல்லவில்லை வழிபார்த்திருக்கும் அவனது தாயின் நீண்ட இரவுக்கு விளக்கேற்றும்
ഠ൬ ജൂല്ക്ക് / 44

ലഠ൬ ( / 45
ஓர் சொல்லைத்தானும் அவன் கூறிச் செல்லவில்லை அவனது தாயோ ஆகாயத் தோடும் அவனது தலையணை அவனது பெட்டி
என்பவற்றோடுமே பேசுகின்றாள்
அவள் தன் துயர்நிலையில் அரற்றுவாள்.
இரவே
நட்சத்திரங்களே
கடவுளே
முகில்களே பறந்து செல்லும் என் பறவையைக் கண்டீர்களா? சுடரும் இரு தாரகை அவனது கண்கள் இரண்டு பூக் கூடைகள் அவனது கரங்கள் அவனது மார்பு
நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் தலையணை யாகும் காற்றும் மலரும் ஆடும் ஊஞ்சல் அவனது கேசம் பிரயாணத்துக்கு இன்னும் தகுதி பெறாத பிரயாணியைக் கண்டீர்களா? உணவு எடுத்துக் கொள்ளாது அவன் சென்று விட்டான் பசி வரும் போது அவனுக்கு யார் உணவளிப்பார்? அன்னியனான அவனுக்கு வீதி அனர்த்தங்களில் யார் அனுதாபம் காட்டுவார்?
என் மகன்
என் மகன்
இரவே தாரகைகளே தெருக்களே முகில்களே அவளுக்குச் சொல்லுங்கள்

Page 25
எம்மிடம் விடையில்லை கண்ணீரை சோகத்தை கஷ்டங்களை விட பெரியது காயம் உண்மையை நீ தாங்கமாட்டாய் ஏனெனில் உனது மகன் இறந்து விட்டான் தாயே கண்ணிரை முடித்து விடாதே கண்ணிருக்குத் தேவை இருப்பதால் ஒவ்வொரு மாலை நேரத்துக்கும் அதில் கொஞ்சம் வைத்திரு
மரணத்தினால் பாதைகள் நெரிசலடையும் போது உன் மகன் போன்ற பிரயாணிகளால் அவை மறிக்கப்படுகின்றன நீ உன் கண்ணிரைத் துடைத்து முன்னர் இறந்த அன்புக்குரிய அகதிகளின் நினைவுச் சின்னங்களாக
எமது கண்ணீரில் சிறிதை எடுத்துக் கொள்வாய்.
உனது கண்ணீரை முடித்து விடாதே பாத்திரத்தில் சிறிது கண்ணிரை வைத்திரு சிலவேளை
நாளை அவனது தகப்பனுக்காக அல்லது அவனது சகோதரனுக்காக அல்லது அவனது நண்பன் எனக்காக நாளைக்கு எங்களுக்காக
இரு துளிக் கண்ணீரை வைத்திரு
ലഠ൬ ( / 46

ലഠ൬ ക്രയല്ക്കു് / 47
எனது நண்பனைப் பற்றி எமது மண்ணிலே அதிகம் பேசுகின்றனர் எப்படி அவன் சென்றான்? எப்படி அவன் திரும்பவே இல்லை?!
எப்படி அவன் தன் இளமையை இழந்தான்?
துப்பாக்கி வேட்டுகள் அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின தயவு செய்து மேலும் விபரணம் வேண்டாம் நான் அவனது காயங்களைப் பார்த்தேன் அதன் பரிமாணங்களைப் பார்த்தேன் நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
அன்புள்ள நண்பனே அவன் எப்போது வருவான் என்று கேட்காதே மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்
என்று மட்டும் கேள்.

Page 26
பெளசி அல் அஸ்மார்
பெளசி அல் அஸ்மார் புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். கொமன்ரறி என்னும் அமெரிக்க சஞ்சிகையின் 1970 டிசம்பர் இதழில், ஹாவார்ட் பல்கலைக் கழகச் சட்டத் துறைப் பேராசிரியர் அலன் டெர்ஷோவிற்ஸ் என்பவர் அஸ்மார் பற்றி பின்வருமாறு எழுதினார். இக்கவிஞர் 31 வயதுடைய இஸ்ரேல் அரபுப் பிரஜை. இவர் தனது சொந்த இடமான டிட்டாவிலிருந்து கவிதை எழுதி வந்தார். இப்பொழுது டெ மொன் சிறைச் சாலையிலிருந்து கவிதை எழுதுகிறார். நான் சிறைக் கைதிகள் மத்தியில் பெளசியைப் பற்றி விசாரித்தேன். கட்டு மாஸ்தான, வசீகரப் புன்னகையுடன் கூடிய ஒர் உயர்ந்த மனிதர் முன்வந்தார். வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக் காட்டும் பெளசியின் தோற்றத்தில் தன்னம்பிக்கை, உறுதி, நேர்மை ஆகியவை மணம் வீசின. நான் அவரைக் கவனித்ததில் இருந்தும், மற்றச் சிறைக் கைதிகளுடன் அவர் பழகிய முறையிலிருந்தும் பெளசி அல் அஸ்மார் ஒரு தலைவன் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். நீங்கள் ஏன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளீர்கள் என்று நான் பெளசியிடம் கேட்டேன். அவர் என் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டு கூறினார். ஏனெனில் நான் ஒர் அராபியன் என்று. அவரது இக்கூற்று அவர் 1970 செப்டம்பர் மாதம் சிறையிலிருக்கும் போது எழுதிய ஏனெனில் நான் ஓர் அராபியன் என்ற கவிதையில் இடம் பெற்றுள்ளது.
( ഫൂ / 48.

ലഠരക്രേ കല്ക്ക് / 49
ஒரு யூத நண்பனுக்கு
சாத்திய மற்றதை என்னிடம் கேளாதே
நட்சத்திரங்களைக் கொண்டு வரும்படி சூரியனிடம் நடந்து செல்லும்படி என்னிடம் கேளாதே கடலை வற்றவைக்கும்படி பகலொளியைத் துடைத்து விடும்படி
என்னைக் கேளாதே
எனது கண்களை
எனது காதலை எனது இளமை நினைவுகளை அழித்து விடும்படி என்னைக் கேளாதே நான் ஒரு வெறும் மனிதன்

Page 27
ஓர் ஒலிவ மரத்தின் கீழ் நான் வளர்ந்தேன் எனது தோட்டத்துக் கனிகளை நான் புசித்தேன் திராட்சை வனங்களில் வைனை நான் குடித்தேன் பள்ளத் தாக்குகளில் கள்ளிப் பழங்களை
அதிகம் அதிகம் நான் ருசிபார்த்தேன்
எனது செவிகளில் வானம்பாடிகள் பாடல் இசைத்தன நகரங்களிலும் வயல்வெளிகளிலும் வீசிச் சென்ற சுதந்திரக் காற்று
எப்போதும் என்னைச் சிலிர்ப்படைய வைத்தது
எனது நண்பனே எனது சொந்த நாட்டினை விட்டுப் போகுமாறு
நீ என்னைக் கேட்க முடியாது.
ലഠരക്രൈ ക്രയയ്പ് / 50

ലഠ൬ ജൂല്പു് / 51
ஏனெனில் நான் ஓர் அராபியன்
நான் தடுப்புக் காவலில் இருக்கிறேன் ஐயா, அதற்குக் காரணம் நான் ஓர் அராபியன் என்பதே தன் ஆன்மாவை விற்க மறுத்த ஓர் அராபியன்
விடுதலைக்காக எப்போதும் முயன்ற
ஓர் அராபியன்
தனது மக்களின் துயர்களை
எதிர்த்து நின்ற ஓர் அராபியன் நீதியான சமாதானத்தில் நம்பிக்கை கொண்டவன்
ஒவ்வொரு மூலையிலும் மரணத்தை எதிர்த்துப் பேசியவன் ஒரு சகோதரத்துவ வாழ்வைக் கோரி அதற்காக வாழ்ந்தவன்
ஆகவே தான் நான் தடுப்புக் காவலில் இருக்கிறேன் ஏனெனில் நான் போராடத் துணிந்தவன் இன்னும் ஏனெனில் நான் ஓர் அராபியன்.

Page 28
றவீட் ஹ"சைன்
ஹைபாவில் பிறந்த றவrட் ஹ"சைன் (1936-1977) பாடசாலை ஆசிரியராகப் பணிபுரிந்து தன் அரசியல் ஈடுபாடு காரணமாக இஸ்ரேல் அதிகாரிகளால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர். இஸ்ரேல் சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தவர். அல் ஃபஜ்ர் (உதயம்) என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1962ல் இச்சஞ்சிகை தடை செய்யப்பட்டது. 1967 ஜ"ன் யுத்தத்துக்குப் பின்னர் புலம்பெயர்ந்து, நியுயோர்க் நகரில் வறுமையில் வாடிய இவர் அங்கேயே தீ விபத்தில் ஆறந்தார். அரபு ஹீப்று மொழிகளுக்கிடையே மொழிபெயர்ப்புகளும் செய்த இவரது மூன்று கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளன.
ற வீட் ஹ" சைனின் அரசியல் கவிதைகள் படிமங்களாலும் குறியீடுகளாலும் ஆனவை. மூன்று அம்சங்கள் இவருடைய கவிதைகளில் முனைப்பாக வெளிப்படுகின்றன என்பர். முதலாவது, 1948க்குப் பின்னர் இஸ்ரேல் அராபியரின் துயர் நிலை. இரண்டாவது, அரபு மக்களை வஞ்சித்த அரபுத் தலைவர்களுக்கெதிரான கிளர்ச்சி, மூன்றாவது, ஆசிய ஆபிரிக்கத் தேசிய இயக்கங்களுடன் தங்களையும் இனங்காணுதல். 1950களின் ஆரம்பத்தில் இஸ்ரேல் அரபு இலக்கியத்தில் காணப்படாதிருந்த இந்த அரசியல் பிரக்ஞை ஹ"சைனின் கவிதைகளில் நன்கு பிரதிபலிக்கின்றது. ஹ"சைனே இத்தகைய கவிதைகளின் முன்னோடி என்பர்.
ലഠ൬ ജൂല്പു് / 52

ലഠ൬് കല്ക്ക് / 53
நரகத்துப் பூக்கள்
இருண்ட கூடாரங்களில்
சங்கிலிகளில்
நரகத்து நிழலில் எனது மக்களைச் சிறையிட்டுள்ளனர்
வாய்மூடி இரும் என ஆணையிட்டுள்ளனர்
அவர்கள் ஏதும் முறையீடு செய்தால் இராணுவச் சவுக்கால் சாவால் பசியால்
அச்சுறுத்தினர்
அச்சுறுத்தியோர் சென்றனர் ஆயினும் நரகத்தில் மகிழ்வுடன் வாழ்க என்றே அவர்கள் கூறிச் சென்றனர்

Page 29
அந்த அனாதைக் குழந்தைகளை உங்களால் பார்க்க முடிகிறதா? ஆண்டாண்டுகளாக அவர்களும் துயரமும் சகாக்களாய் இருந்தனர் பிரார்த்தித்துக் களைத்தனர் கேட்போர் இன்றி
"குழந்தைகளே யார் நீங்கள்?
இப்படி உங்களை வருத்தியோர் யாவர்?"
"நாங்கள் நரகத்துப் பூக்கள்" என்றனர் அவர்கள்
மனிதர்களாக மதிக்கப்படாத இலட்சோப் லட்சம் மனிதருக்காக இக்கூடாரங்கள் மத்தியில் சூரியன் நிரந்தரமான ஓர் பாதையைச் சமைப்பான் பொன்வாழ்வுச் சிவிகையில் சூரியன் கீழே பவனி வருவான் காதல் பனிநீரால் நரக நெருப்பினை நாங்கள் அணைப்போம்.
ലഠ൬ ക്രമീഘ്ര / 54

ലഠ൬ ( / 55
அலுகோசு
ஒரு கயிறு
ஒரு சுத்தியல்
ஒரு இரும்புக் கம்பி
தாருங்கள் எனக்கு ஒரு தூக்கு மரத்தை நான் ஆக்குதற்காக
எங்கள் மத்தியில் இன்னும் ஓர் கும்பல்
எஞ்சியுள்ளது அவமானத்தை அது சாப்பிடுகின்றது
தலை குனிந்து நடந்து செல்கின்றது அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
நக்கும் ஒருவனை எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்?

Page 30
எனது தாயகம் ஆசியா
எனது தாயகம் ஆசியா அதுவோ காதலின் கண்டம் குருதியின் கண்டம்
உள்ளக் கிளர்ச்சியின் கண்டமும் அதுதான்.
காலம் கடத்துவோர்க் கெதிராய்க் கிளர்ந்தெழும் மனிதரின் கண்டம் அது. நேற்று
பசித்து களைத்து வஞ்சிக்கப்பட்ட எனது மக்களைக் கண்ணெடுத்தும் பாராது என் மதிப்பரும் வளங்களை மட்டும்
வாயூர நோக்கியோர் யாரோ
இன்று ஆசியாவின் கெளரவத்தை அங்கீகரிக்கும் நிலைக்கு ஆளாகியோர் யாரோ
அந்த எஜமானர்களுக் கெதிராய் கிளர்ந் தெழும் கலகக் காரரின் மூசி எரியும் தீச்சுவாலையின் கண்டம் அது.
ஆசியா
அது என் தாயகம்.
ലായ്പ് കല്ക്കു് / 56

ലഠ൬ (് / 57
இலக்கணப் பாடங்கள்
முதலாவது பாடம்:
அவருக்கு அறுபது வயது இன்னும் கற்பிக்கிறார் ஒருமுறை அவர் வகுப்புக்குள் வந்து சொன்னார்.
இலக்கணம் கூறுக. "ஆசிரியர் வந்தார்" அவர் பகடிவிடுவதாக நாங்கள் நினைத்தோம் அதனால் சிரித்தோம் ஆயினும் சொன்னோம் “வந்தார்" வினைச்சொல்
"ஆசிரியர்" ? திடீரென நாங்கள் விளங்கிக் கொண்டோம். ஒரு நொடியில்.
நாங்கள் மெளனமானோம் ஆவர் முணுமுணுத்தல் கேட்டது “வந்தார்" வினைச்சொல்
"ஆசிரியர்" !
அவர் வரவில்லை பொலிஸ் அவரைக் கொண்டு வந்தது. ஆயினும் அவர் கற்பிப்பார்.

Page 31
இரண்டாவது பாடம்
அவருக்கு எழுபது வயதாகும் வரை கூடவே நாமும் வளர்ந்தோம்
எனினும் இன்னும் அவர் கற்பித்தார் உதாரணமாக ஆசிரியர் சொன்னார்:
"என் ஏஜமானன் புரட்சியை கனவு காண்கிறார் ஆனால் போரிடமாட்டார்" தன்னளவில் நூற்றுக்கு நூறு பூரண வாக்கியம் இதற்கு இலக்கணம் கூறு நீயும் ஓர் போராளி ஆவாய்
நாங்கள் ஒன்றும் கூறாது மெளனமாய் இருந்தோம் ஆயினும் எங்கள் மெளனமே போர்புரிந்தது
எங்கள் மெளனம். ஆனால்:
எங்கள் வகுப்பில் தனது கைகளால் பூமிக்கு ஊட்டம் அளித்த ஓர் பையன் இருந்தான் அதன் ஒலிவம் பழங்கள் அவன் வாய் நிறைந்து வழிந்தன அவனது பெயர் அத்னன். நிலம் அற்ற ஓர் உழவன் ஆயினும் அவன் மெளனித்திருக்கவில்லை இல்லை
ஒவ்வொரு துளியிலும் அவன் ஒரு போராளி
ഠരക്ര്തക്ര ക്രസ്മെr / 58

ലഠ൬ ( / 59
அன்று அவன் இலக்கண விதிகளைப் புறக்கணித்தான் கற்பித்தல் தொடர்ந்தான் "எனது எஜமான்" எழுவாய் அல்ல "கனவு காண்கிறார்" ஒரு வினைச்சொல் அல்ல "ஐ" வேற்றுமை உருபால் ஆளப்படுவது "புரட்சி" வேற்றுமை உருபால் ஆளப்படாதது "ஆனால் போரிடாது" . அது சரிதான்
கடைசிக்கு முந்திய பாடம்:
மறுநாள் ஆசிரியர் வகுப்புக்கு வந்தார் ஒரு தோடம் பழத்தின் வெளித்தோல் போல மகிழ்ச்சியாகவும் உயிர்ப்புடனும் எழுபதாயினும் இன்னும் குழந்தை. முகமன் கூறி பின்னர் சொன்னார் "அவர்கள் அத்ைைனச் சிறையில் அடைத்தனர்" மாணவிகளே இதற்கு இலக்கணம் கூறுக
மாணவர்களே இதற்கு இலக்கணம் கூறுக
நாங்கள் கிளர்ச்சியுற்றோம்.
விம்மி அழுதோம்
பின்னர் உரத்த குரலில் கத்திச் சொன்னோம்
"அத்னன்” எழுவாய் "சிறை" செயப்படு பொருள்
இலக்கணத்தையும் அதன் விதிகளையும் தீயில் இட்டோம்
போராளிகளாக மாறினோம்

Page 32
முதலாவது காதலன்
(விசாரணை என்ற நாடகத்திலிருந்து
விசாரணையாளன்:
இந்தக் கவிதையில் நீ தெளிவாகச் சொல்கிறாய்
எனது மனைவி உன்னைக் காதலிப்பதாய்
ലഠ൬൪ ൯ / 60

ലഠ൬ ജൂല്പു് / 61
கவிஞன்
நான் எனது நாட்டைப் பற்றிப் பேசுகிறேன் உனக்கு முன்னர் நான் அங்கிருந்தேன் என்று சொல்கிறேன்
எப்போதும் முதலில் அவள் என்னையே நினைப்பாள்
என்று சொல்கிறேன்,
நீ அவள் கணவனாய் இருக்கலாம் - அதனால் என்ன உனக்கு முன்னர் நானே அவளைக் காதிலித்தேன் அவள் இதயத்தில் முதல் இடம் பெற்றேன்,
நீ அவளுக்கு வாசனைத் தைலம் வாங்கினாலும் அழகிய உடைகள் வாங்கினாலும்
எனக்காகவே அவள் அவற்றை அணிவாள்
நெடுநாள் முன்னர் நான் அவள் மடியில் படுத்துக்கொண்டு சிகரட் புகைத்தேன்
உனது திருமண நாளில் உங்களுக்கிடையில் உனது படுக்கையில் கூட நான் வந்தமர்ந்தேன் நீயே அவளது மணமகன் ஆயினும் என்னையே அவள் அணைத்துக் கொள்வாள் என்னையே அவள் மிகவும் விரும்புவாள் உங்கள் இருவருக்கிடையில் நான் எப்போதும் இருப்பேன் உனக்காக வருத்தப்படுகிறேன் ஆயின் நானே முதல் முதல் அவளை அடைந்தேன்.

Page 33
சலீம் ஜ"ப்றான்
கலிலியில் 1941 பிறந்த சலீம் ஜ"ப்றான், ஹைபா
பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியமும் மத்திய
கிழக்கு வரலாறும் கற்றுப் பட்டம் பெற்றார். 1962ல்
இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கட்சியின் அரபுச் சஞ்சிகையான அல்இத்திஹாத்தில் பணிபுரிந்தார்.
அல் (g)காத் என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும்
செயற்பட்டார். இதயத்திலிருந்து சொற்கள் (1971), வீட்டுக்காவலில் இல்லாத கவிதைகள் (1972), சூரியனின்
தோழர்கள் (1975) ஆகிய கவிதைத் தொகுதிகள்
வெளிவந்துள்ளன.
ലഠ൬ ശല്ക്ക് / 62

ഗുരക്ര്ശ്ല് ക്ലൈ" / 63
துரத்தப்பட்டவன்
எல்லையைக் கடந்து சூரியன் நடக்கும் துப்பாக்கிகள் மெளனமாய் இருக்கும் துல்கறம்மில் ஓர் வானம்பாடி தன் காலைப் பாடலைப் பாடத் தொடங்கும் பின்னர் எழுந்து கிப்புர்ஸ் நகரப் பறவைகளோடு விருந்து உண்ணப் பறந்து செல்லும் தனித்த ஓர் கழுதை யுத்தம் நிகழும் எல்லையின் குறுக்கே ஆறுதலாக நடந்து செல்லும் காவல் வீரர் கவனியா திருப்பர்.
ஆனால் எனக்கோ
என் தாய் நாடே துரத்தப்பட்ட உன் மகனுக்கோ உன் வானத்துக்கும் என் கண்களுக்கும் இடையே எல்லைச் சுவர்களின் பெருந் தொடர் இருந்து
காட்சியை மறைக்கும்.

Page 34
தூக்கில் தொங்கும் ஓர் அராபியன்
தூக்கில் தொங்கும் இந்த அராபியன் சிறுவர்கள் வாங்கி விளையாடத் தக்க
மிகமிக அழகிய விளையாட்டுப் பொம்மை
ஓ நாசி முகாம்களில் இறந்தோரின் ஆன்மாக்களே தொங்கும் இம் மனிதன் பெர்லினில் பிறந்த ஒர் யூதன் அல்ல
தொங்கும் இம்மனிதன் என்போல் ஓர் அராபியன் உங்கள் சகோதரர்கள் அவனைக் கொன்றனர் சியோனில் வாழும்.
உங்கள் நாசி நண்பர்கள்.
ലOല്ക്ക് ക്ലൈ / 64

ലഠ൬ ജൂല്ക്ക് / 65
மழையின் பாடகன்
சந்திரனைத் தழுவிக்கொண்டிருக்கும் என் கிராமத்து மலையிலிருந்து நீ மரங்களைப் பிடுங்கி எறியலாம் சுவர்கள் இருந்த அடையாளம் தெரியாமல் என் கிராமத்து வீடுகளை நீ உழுதுவிடலாம்.
என் இசைக் கருவியை நீ பறிமுதல் செய்யலாம் அதன் தந்திகளைப் பிய்த்தெறிந்து அதன் சட்டகத்தைத் தீயில் எரிக்கலாம்.
ஆனால்
என் இசையின் மூச்சை உன்னால் திணறடிக்க முடியாது.
ஏனெனில் நான் பூமியின் நேசன் காற்றின் பாடகன்
மழையின் பாடகன்

Page 35
தெளஃபீக் சையத்
நசறத்தில் பிறந்த தெளஃபீக் சையத் (1932 - 1994) சிறந்த கவிஞரும் அரசியல்வாதியுமாவார். மாஸ்கோவில் சோவியத் இலக்கியம் பற்றிப் படித்துப் பட்டம் பெற்ற இவர், இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பாலஸ்தீன உரிமைகளுக்காகப் போராடியவர். 1975ல் 67% வாக்குகள் பெற்று நசறத் மாநகர சபை மேயராகத் தெரிவுசெய்யப்பட்டார் என்பது இவரது மக்கள் ஆதரவுக்கு எடுத்துக் காட்டாகும். ருஷ் ஷிய இலக்கியங்கள் பலவற்றையும், துருக்கியக் கவிஞர் நசீம் ஹிக்மத்தின் ஆக்கங்களையும் இவர் அரபில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சொந்தக் கவிதைத் தொகுதிகள் பலவும் வெளிவந்துள்ளன. நான் உன்னுடன் கை குலுக்குகிறேன் (1966) என்ற தொகுதி இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீனப் போராட்டத்தில் ஒரு மைல்கல் எனக் கருதப்படுகிறது.
ലഠ൬ ജൂല്പു് / 66

ലഠ൬൪ ൯൭് / 67
என்னிடம் இருப்பதெல்லாம்
என்தோளில் ஒருபோதும் நான் துப்பாக்கி சுமந்ததில்லை அதன் விசையை இழுத்ததில்லை
என்னிடம் இருப்பதெல்லாம் ஒரு வீணையின் இசைதான் என் கனவுகளை வரைவதற்கு ஒரு தூரிகைதான் ஒரு மைக்குடுவைதான்
என்னிடம் இருப்பதெல்லாம் அசைக்க முடியாத நம்பிக்கைதான் துன்புற்ற என் மக்கள் மீதான
ஒரு முடிவற்ற காதல்தான்

Page 36
அடுத்து என்ன?
அடுத்து என்ன?.
எனக்குத் தெரியாது எனக்குத் தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான்.
காலத்தின் வயிறும் வெளியின் வயிறும் குழந்தைச் சுமையினால் புடைத்து வளைகிறது எனக்குத் தெரிந்ததெல்லாம் உண்மை சாவதில்லை மூர்க்கர்கள் அதனை அடிமைகொள்ளமுடியாது
என்பதுதான்
எனக்குத் தெரிந்ததெல்லாம் எனது நாட்டில் ஆக்கிரமிப்பாளர் நிலைத்திருந்ததில்லை என்பதுதான்.
ലഠ൬ ജൂല്പു് / 68

ലഠ൬ ജൂല്പു് / 69
சாத்தியமற்றவை
ஊசித் துவாரத்துள் யானையைச் செலுத்தலாம் பால் வீதியில் பொரித்தமீன் பிடிக்கலாம் கடலை உழலாம் முதலையைக் கூட மனிதனாய் ஆக்கலாம்
இவையெலாம் உமக்கு மிகமிக எளிது.
ஆயினும் சுடர்விடும் எமது நம்பிக்கை ஒளியினை தொடர்ந்து துன்புறுத்தி அழிக்கலாம் என்பதோ எமது பயணத்தின் ஓர் அடியினைக் கூட தடுத்து விடுவதோ
சாத்தியமற்றது
மந்திர வலிமை உடையவர் நாங்கள் ஆயிரக் கணக்கில் எங்கும் பரந்துளோம் லித்தாவிலும்
றம்லாவிலும்
கலிலியிலும் எல்லா இடமும் நாங்கள் பரந்துளோம்

Page 37
உமது மார்பின்மேல் ஒரு பெருஞ் சுவராய் நாங்கள் இங்கிருப்போம் உமது தொண்டையில் ஒர் கண்ணாடித் துண்டினை ஒரு கள்ளி முள்ளினை நாங்கள் செருகுவோம் உமது கண்ணில் ஓர் எரியும் தழலினை நாங்கள் செலுத்துவோம்
உமது மார்பின்மேல் ஒரு பெருஞ் சுவராய் நாங்கள் இங்கிருப்போம் உமது தவறணையில் தட்டுகள் கழுவி உமது எஜமானரின் கோப்பையை நிரப்பி கரி படிந்த உமது குசினியைத் துப்பரவாக்கி நாங்கள் இங்கிருப்போம்
பசியால் வாடும் எம் சிறுவருக்காக உமது வேட்டைப் பல்லிடை இருந்து ஓர் றொட்டித் துண்டினைப் பறிப்பதற்காக நாங்கள் இங்கிருப்போம்
உது மார்பின் மேல் ஒரு பெருஞ் சுவராய் இங்கு நாம் இருப்போம்
பட்டினி யோடு
கந்தல் உடையுடன் போர்க்குணம் கொண்ட எம் பாடலைப் பாடி தெருக்கள் தோறும் சினத்துடன் குழுமி பாதாளச் சிறைகளை மகிழ்வுடன் நிறைத்து புதிய தலைமுறை வாலிபரிடத்து பழிவாங்கும் உணர்வினைப் பேணி வளர்த்து மந்திர வலியுடன் ஆயிரக்கணக்கில் நாங்கள் எங்கும் பவனி வருவோம்
ലഠ൬ (് / 70

ലOരക്ര്സ്ത്ര ക്രമെ / 71
லித்தாவிலும் றம்லாவிலும் கலிலியிலும் எங்கும் நாங்கள் பவனி வருவோம்
நாங்கள் இங்கிருப்போம் பிறகு செல்வோம் கடலைக் குடிப்போம் கண் இமை வெட்டாக் காவல் வீரராய் எங்கள் நிலமெலாம் எங்கள் மரமெலாம் நாங்கள் இருப்போம்
புளிக்க வைக்கும் நொதியம் போல எமது குறிக்கோள் கனியும் வரைக்கும் நாங்கள் இங்கிருப்போம்
நாங்கள் இங்கிருப்போம் விறைத்த நரம்புடன் இதயத்திலும் நரம்புகளிலும்
சிவப்பு நரகுடன் தாகம் தணிக்க நாம் மலைகளைப் பிழிவோம் புழுதியைக் குடித்துப் பசியினைத் தணிப்போம்
ஆயினும் நாங்கள் நகரவே மாட்டோம்
இங்கு நாங்கள் இரத்தம் சிந்துவோம் இங்கு எமக்கோர் பழமை இருந்தது எதிர்காலம் ஒன்றும் இங்கெமக் குள்ளது வெல்ல முடியாதவர் இங்கு நாங்களே
ஆகவே எனது வேர்களே ஆழச் செல்க ஆழச் செல்க

Page 38
ஓ, பத்தாயிரம் கைதிகளே
என் அன்புக்குரியோரே ஒ. பத்தாயிரம் கைதிகளே உங்கள் குரலோ உறுதிகொண் டெழுந்த உமது மக்களின் உளம் தொடுகின்றது உங்கள் நிலைப்பாடு உறுதிகொண் டெழுந்த உமது மக்கள் தலை நிமிரச் செய்கிறது
உங்களை நாங்கள் ஒருபோதும் மறவோம்
நாங்கள் எல்லோரும் உம்முடன் உள்ளோம் சுதந்திரத்தின் விலையினைச் செலுத்தி நம் தாயகத்தில் சுதந்திரச் சூரியன் உதிக்கும் வரைக்கும் நாங்கள் எல்லோரும் உம்முடன் இருப்போம்
ലഠ൬ ശല്ക്കു് / 72

ലഠ൬ ( / 73
அந்த நாள் வருகிறது அது விரைந்து வருகிறது என் இசைக் கருவியை எடுத்துச் செல்வேன் வீதிகள் தோறும் பாடித் திரிவேன்
என் பட்டின மெல்லாம் கிராமங்கள் எல்லாம்
பரிசுகள் குவியும் விடுதலை பெற்ற என் தாய்நாட்டிற்காக இங்கிருந்து நான் பாடல் இசைப்பேன் எங்கெங்கும் நான் பாடல் இசைப்பேன் அந்த நாள் வருகிறது அது விரைந்து வருகிறது
எனது பேனையை இதயத்தில் தோய்த்து எடுத்துச் செல்வேன் பூவின் இதழ்களில் நான் அதால் எழுதுவேன் பறவைச் சிறகில் நான் அதால் எழுதுவேன் AX காற்றில் நிமிர்ந்த மரக் கொப்புகளில் நான் அதால் எழுதுவேன் எமது பண்ணைகளின்
தொழிற்சாலைகளின்
வாசற் கதவிலும் பாலகர்களின் உள்ளங் கையிலும் புனித வீரரின் நினைவாலயத்திலும் இராணுவ வீரரின் தோள்ப் பட்டையிலும் நான் எழுதுவேன் தொடர்ந்தும் எழுதுவேன் இங்கும் எழுதுவேன் கைப்பற்றப்பட்ட ஜெருசேலமிலும்

Page 39
காசாவிலும் கோலானிலும் எல்லா இடமும் இதை நான் எழுதுவேன்
முன் ஒரு காலம் என் தாய் நாடு கைப்பற்றப்பட்ட அடிமையாய் இருந்தது ஆனால் இன்றோ சுதந்திரம் பெற்றது கைப்பற்றியவன் கழிந்து மறைந்தான் இன்று அவன் வெறும் நினைவு மட்டுமே
நான் வாழ்வேன் உயிர்த்துடிப்புடன் இருப்பேன் அசையும் ஒரு சிறு காற்றில் ஒரு பூவில் ஒரு பச்சைப் புல் இதழில் ஒடும் நீரின் ஒரு சிறு தாரையில் இடையன் ஒருவனின் புல்லாங் குழலில் சூரிய ஒளியில் மெளனத்தில் அசையும் இறக்கைத் துடிப்பில் நான் வாழ்வேன்
உயிர்த்துடிப்புடன் இருப்பேன்
என் மூதாதையரின் தாய்த்திருநாட்டில் இறுதிநாள் வரை நான்மறுபிறப் பெடுப்பேன்
வெற்றியுடனும் சுதந்திர மனிதனின் வைகறையுடனும் எனக்கோர் சந்திப்பு நிகழ இருப்பதால் இறுதி நாள் வரை நான் மறுபிறப் பெடுப்பேன்.
ലവ്ലേ ക്ര(് / 74

ലഠ൬ (് / 75
அந்தொய்னே ஜபாறா
அந்தொய்னே ஜபாறா பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யசிர் அறஃபாத் ஐ. நா, சபையில் முதல் முறை பேசியபோது (1988) இன்று நான் ஒரு ஒலிவம் கிளையையும் விடுதலைப் போராளியின் துப்பாக்கியையும் ஏந்திவந்துள்ளேன். ஒலிவம் கிளை என் கையிலிருந்து விழுமாறு செய்யாதீர்கள் எனக் கூறினார். அன்தொய்னே ஜபாறாவின் இக்கவிதை அப்பேச்சின் தூண்டுதலினால் பிறந்ததாகும்.

Page 40
சமாதான நதியும் போர்த் துப்பாக்கிகளும்
ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனர்களின் முறையீடு
உள்ளங்கைகளில் புறாக்களை ஏந்தி இன்று நாங்கள் உம்மிடம் வந்துளோம் துயில் கலைந்து எழுந்த எங்கள் நாடு பலஸ்தீனத்துடன் நாங்கள் வந்துளோம்
இருபது ஆண்டுகள் நாம் காத்திருந்தோம் பெற்றவை யெல்லாம் வார்த்தைகள் மட்டுமே
வெற்று வார்த்தைகள் மட்டுமே பெற்றோம்
எங்கள் காயங்கள் வலிதருகின்றன எங்கள் எலும்புகள் நொறுக்கப்பட்டன ஆயினும் நாங்கள் உமக்கு நல்கிட வந்துளோம் ஈராக் நாட்டு ரோசாப் பூக்களும் டமஸ்கஸ் நகர நறிய மலர்களும் வானம் பாடியின் இன்னிசைப் பாடலும் சின்னக் குருவியின் பிரார்த்தனைக் கீதமும் காதல் இரவுகள் அனைத்தும் கூட நாங்கள் உமக்கு நல்கிட வந்துளோம்
ലഠ൬ (് / 76

ലഠ൬ ജൂല്പു് / 77
ஆண்டாண்டு காலமாய் அடித்து நொறுக்கிச் சிதறப்பட்ட மக்களாய் வாழ்ந்தோம் பெருந்தன்மையும் வீரமும் மிக்க மக்களே நாங்கள் அனைத்துக் காதலும் பெறுவதற்குரிய அருகதை முழுமையாய் உடையவர் நாங்கள் நட்புடன் வாழ நாங்கள் செய்யும் கடைசி முயற்சி இதுவேயாகும் கையில் நாம் தாங்கிய ஒலிவம் கிளையினை
நிலத்தில் வீச நிர்ப்பந்திக்காதீர்
ஒருபுது ஒழுக்கம் உருவாக்குமாறு உலகிடம் நாங்கள் விண்ணப்பம் செய்கிறோம் மணல் மேடுகளிலும் மலைகளின் மீதும் நாங்கள் வாழ்ந்தவர் என்பதை மறப்பீர் மணல்களை நாங்கள் போற்றினால் என்ன? மரங்களை நாங்கள் மதித்தால் என்ன? பிரகாசமான நட்சத்திரங்களை
எனது சகோதரி கழுவினால் என்ன?
எனது பாட்டி திறந்த கண்களால் வெறித்துப் பார்ப்பதைக் காணும் நிலைமை எனக்கேன் வருவான்? வானத்தை நோக்கி நிர்வாணமாக எனது தாயின் சடலம் கிடப்பதைக் காணும் நிலைமை எனக்கேன் வருவான்? காட்டு வழிகளில் தீர்க்கதரிசிகள் சஞ்சாரம் செய்ததை நாங்கள் பார்த்துளோம் எனது பூமியின் புனித வழிகளில் ஒளிரும் தாரகை தடம்பதித் துள்ளன

Page 41
அநீதியால் துயருறும் எமது மக்கள் காதலின் நட்பின் கீதமே யாவர் எல்லா நாட்டு மக்களிடத்தும் அவர்கள் அன்புக் கரம் இதோ நீட்டினர் அந்தக் கரங்களை வெட்டி விடாதீர்
உடைந்து நொறுங்கிய உள்ளத் துயருடன் உலகில் உள்ள நாடுகளிடத்தில்
முன்பும் நாங்கள் முறையீடு செய்தோம்
ஆயின் நாங்கள் அவர்களின் திறந்த கதவின் வெளியிலே தள்ளப் பட்டோம் உம் மனச்சாட்சி அசையவே இல்லை கசக்கிப் பிழியும் அகதி வாழ்க்கை சுமையாய் எம்மில் சுமத்தப்பட்டது நாடுகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் திறந்த கரங்களால் வரவேற்கப்பட்டன
ஆயின் நாங்களோ ஒதுக்கப்பட்டோம்
எமது இளைஞரின் எமது பெண்களின் எமது சிறார்களின் வேண்டுதல் எல்லாம்
உமது நெஞ்சினை உலுப்பவே இல்லை
பிறகு வந்தது எம் போராட்டம் தியாகங்களும் போர்களும் நிகழ்ந்தன கொல்லப்பட்டோம் காயமடைந்தோம் முறையீடுகள் மிகமிகக் குறைந்தன.
எங்கள் கண்ணீரை நாங்கள் நிறுத்தினோம்.
துப்பாக்கி முழக்கம் சொற்களை விடவும் உரத்துப் பேசின
ലഠ൬ ജൂല്പു് / 78

ഗത്ല് ക്രയയ്പൂ' / 79
நீதிகோரும் எமது மக்களைத் தடுத்திட வேண்டாம்
எமது புண்களைக் கிளறிடவேண்டாம்
ஒநாய்களாக வேட்டைப் பறவையாய் ஒவ்வொரு நாளும் பலியிடப்படுகிற ஆட்டுக் கடாக்களாய் கணிக்கப் படுவதை நாங்கள் வெறுக்கிறோம்
பயங்கர நிலைமை முடிந்திட வேண்டும் எமது புண்ணிய பூமியின் ஊடாய் சமாதான நதி பெருகிடவேண்டும்
என்பதே எமது பிரார்த்தனையாகும்
நீதியும் சமாதானமும் புதியதான ஓர் சிந்தனைப் பாதையும் இவையே எமது வேண்டுதலாகும்
இனக்கொலை புரிந்து கரங்கள் தறித்த கடந்த கால அச்சுறுத்தல்கள் எதையுமே இங்கு உருவாக்கவில்லை
துப்பாக்கி முழக்கமும் யுத்த பேரிகையும் தவிர எதையுமே இங்கு உருவாக்கவில்லை

Page 42
சமீஹ் அல்-காசிம்
சமீஹ் அல்-காசிம் மிகப் பிரசித்திபெற்ற பலஸ்தீன அரபுக் கவிஞர்களுள் ஒருவர். ஜோர்தானில் உள்ள சர்கா என்ற ஊரில் 1939-ல் பிறந்த அவர், றமா, நசறத் ஆகிய இஸ்ரேல் நகரங்களில் கல்வி பயின்றார். சில காலம் இஸ்ரேல் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். ஆயினும், அவரது அரசியல் கொள்கை காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவர் தனது கவிதைகள், அரசியல் நடவடிக்கைகள் காரணமாக பலமுறை வீட்டுக் காவலிலும், சிறையிலும் வைக்கப்பட்டுள்ளார். 1960களின் இறுதி அளவில் (அதாவது அவரது முப்பதாவது வயதில்) அவரது ஆறு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருந்தன. அறபு உலகெங்கும் அவை விரும்பிப் படிக்கப்பட்டன. அதுவரை அவரது இருபத்தைந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளதாக அப்துல்லா-அல் உதாரி (1986) கூறுகிறார். நவீன பலஸ்தீன இலக்கியத் தொகுதி ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்ட சல்மா கத்ரா ஜய்யூசி (1995) அவரது தொகுதிகள் பன்னிரண்டுக்கு அதிகம் என்று கூறுகிறார். இது சரியான எண்ணிக்கை என்று தெரியவில்லை. கவிதைத் தொகுதிகளுக்குப் புறம்பாக அவரது சுயசரிதைப் பாங்கான ஒரு நாவலும், நாடகமும்,
நாட்குறிப்பு ஒன்றும் நூலாக வெளிவந்துள்ளன.
ലഠ൬ ശല്ക്ക് / 80

ലഠ൬ (് / 81
காதல் கவிதைகள்
நான் சனங்களைக் கடந்து செல்கையில் என் குசுகுசுப்பையும் சிரிப்பையும் அவர்கள் கேலி செய்கின்றனர் பைத்தியக் காரத்தனமாய் தன் இளமையை விரயம்செய்யும்
அந்நியனுக்காக அவர்கள் அனுதாபப்படுகின்றனர்.
அன்பே, அவர்களை மன்னித்துவிடுவோம் நீ என் அருகே நடந்துவருவதை அவர்கள் காணவில்லை
அவர்களை மன்னித்துவிடுவோம்.

Page 43
2
நீ என் உள்ளே இருப்பதால் உன்னை எப்படிப் பார்ப்பது என்பதை
எனக்குச் சொல்லித் தா
நான் உனக்கு உள்ளே இருப்பதால் உன்னை எப்படித் தழுவிக் கொள்வது என்பதை
எனக்குச் சொல்லித் தா
உன் துன்பங்களை நான் எவ்வாறு மகிழ்ச்சியாக மாற்றுவேன்? எல்லா ஆசீர்வாதங்களும் உனக்காகட்டும் உன்னை நோக்கி ஒரு நதிபோல் பெருகிவரும் என் கைகளைப் பற்றிக்கொள்
உயர்ந்த காதல் ஒரு தெய்வீக வார்த்தைதான்.
3
என் காலத்தையெல்லாம் குருதியாகச் சிந்தினேன் என் குருதி கொந்தளிப்பாய் இருந்தது என் இடத்தையெல்லாம் குருதியாகச் சிந்தினேன் என் குருதி குழப்பநிலையில் இருந்தது இன்னும் என் பெருமை என்னுடனே உள்ளது ஏனெனில், என் இரங்கற் பாக்களில் நீயும் பங்குகொண்டாய்
என் பாடல்களை ஆசீர்வதித்தாய்
ലഠരക്ര്ത് കല്ക്ക് / 82

ലഠ൬ (് / 83
4
நான் உன்னைக் காதலிக்கிறேன்
உன் காதுக்குள் குசுகுசுத்தேன் நான் உன்னைக் காதலிக்கிறேன்
உரத்த குரலில் கத்தினேன் : நான் உன்னைக் காதலிக்கிறேன்
காலத்தின் தொடக்கமாய் இரு எல்லா வெளியினதும் முடிவுமாய் இரு
5
உன் கை என் கையில்
உன் கண்கள் என் கண்களில்
தாய் நாடு ஒரு புகைவண்டி ஒரு புழுதிச் சுழலையும் செய்தித்தாள் கிழிசல்களையும் பின்னால்விட்டு இடிந்து விழுந்த காலத்தின் எல்லையின் பின்னால்
அது மறைந்து போகிறது
துன்பமும் காத்திருப்பும் நிறைந்த பயணப்பெட்டிகளால் சூழப்பட்டு திரும்பிவரும் ஒரு ஆணையும் பெண்ணையும் பின்னால் விட்டு
அது மறைந்து போகிறது.

Page 44
அறியப்படாத மனிதனின் கதை
பாதையின் முடிவில், ஆம் பாதையின் முடிவில் அவன் நின்றான் ஒரு முந்திரித் தோட்டத்து வெருளிபோல பாதையின் முடிவில் அவன் நின்றான் பச்சை வீதி விளக்கெதிர் நிற்பவன் போல ஒரு பழைய கோர்ட்டை அணிந்துகொண்டு பாதையின் முடிவில் அவன் நின்றான்.
அவனது பெயர் அறியப்படாத மனிதன் வெள்ளை மாளிகைகள் அவன் எதிரே கதவுகளை அடித்து மூடின மல்லிகைச் செடிகள் மட்டும் காதல், வெறுப்பு இரண்டின் நிழலும் படிந்த அவனது முகத்தை விரும்பின
அவனது பெயர் : அறியப்படாத மனிதன் அவனது தேசம் : நாசப் பூச்சிகள், துயரம் என்பனவற்றின்
சுமையின் கீழ் நசுங்கிக் கிடந்தது
ലഠ൬ (് / 84

ലഠ൬ ക്രമില്ക്ക് / 85
ஒரு நாள் அவனது குரல் வெள்ளை மாளிகைகளின் சதுக்கத்தில் ஒலித்தது ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எல்லாம் வெள்ளை மாளிகைகளின் சதுக்கத்தில் கூடினர் அவன் தன் பழைய கோர்ட்டை எரிப்பதைக் கண்டனர்
(அவனிடம் ஒரு பழைய கோர்ட் இருந்தது
வானம் ஒரு பச்சை முகிலால் வீங்கித் தடித்தது ஒரு வெள்ளை முகிலால் ஒரு கறுப்பு முகிலால் ஒரு சிகப்பு முகிலால் நிறமற்ற ஓர் அபூர்வ முகிலால் வானம் வீங்கித் தடித்தது.
அன்று
வானம் மின்னி முழங்கிற்று மழை பொழிந்தது
மழை பொழிந்தது அவனது பெயர்அறியப்படாத மனிதன் மல்லிகைச் செடிகள் மட்டும் காதல், வெறுப்பு இரண்டின் நிழலும் படிந்த அவனது முகத்தை விரும்பின வெள்ளை மாளிகைகளும்
இப்போது அவனை விரும்பின.

Page 45
வவ்வால்கள்
என் ஜன்னலில் வவ்வால்கள் என் வார்த்தைகளை உறிஞ்சுகின்றன என் வீட்டு வாயிலில் வவ்வால்கள் பத்திரிகைகளின் பின்னால், மூலைகளில் என் தலையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தவாறு
என் காலடிகளைத் தொடர்கின்றன
கதிரையின் பின்னால் இருந்து வவ்வால்கள் என்னைக் கண்காணிக்கின்றன புத்தகங்களில், இளம் பெண்களின் கால்களில் என் கண்கள் தரிப்பதைக் கவனித்தவாறு பாதைகளில் என்னைப் பின்தொடர்கின்றன அவை கண்காணிக்கின்றன
தொடர்ந்தும் கண்காணிக்கின்றன.
என் அயலவரின் மாடியில் வவ்வால்கள் சுவர்களில் இலத்திரன் கருவிகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன இப்போது வவ்வால்கள்
தற்கொலை செய்யும் நிலையில் உள்ளன
நான் பகல் ஒளியை நோக்கி ஒரு பாதையைக் கிண்டுகிறேன்.
ലാരക്രൈ ക്ര( / 86

ലഠ൬ (് / 87
தளபதியின் சொத்து (ஏரியல் ஷரோனுக்கு
தளபதியின் மேசையில் ஒரு பூச்சாடி அந்தச் சாடியில் ஐந்து ரோஜாப்பூக்கள் தளபதியின் டாங்கிக்கு ஐந்து வாய்கள் அந்த டாங்கியின் கீழே ஒரு ஐந்து வயதுச் சிறுவன் ஒரு ரோஜாப்பூ
ஒரு சிறுவனும் ஐந்து நட்சத்திரங்களும் தளபதியின் தோளுக்கு அலங்காரம் அவரது பூச்சாடியில் ஐந்து சிறுவர்களும் ஒரு ரோஜாவும் அவரது டாங்கியின் கீழ் ஐந்து சிறுவர்களும் ஐந்து ரோஜாப் பூக்களும் அந்த டாங்கிக்கு எண்ணற்ற வாய்கள்.

Page 46
போதை
பல கடல்கள்
ஆனால் ஒரே ஒரு படகோட்டி தாயே என்னை ஆசிர்வதி
ஒரே ஒரு பதாகை அதற்கெதிராகப் பல காற்றுகள் என் சகோதரி எனக்காக அழு
ஒரே ஒரு உயிர் ஆனால் பல மரணங்கள் என் அன்பே என்னை மறந்துவிடு
ലഠരക്ര(ക്ര ( / 88

ലഠ൬ (് / 89
நான் உன்னைக் குற்றம்சாட்டவில்லை
இந்தப் புயலுக்கு உன் இறக்கைகள் சிறியன நான் உன்னைக் குற்றம் சாட்டவில்லை நீ நல்லவள்
அச்சமுற்றுள்ளாய் மேலும் நான்தான் சூறாவளி புயலில் போராடும் ஒரு இயற்கையாக இருந்து பழக்கம் எனக்கு பின்னர் நானே புயலாக மாறினேன் வெளிச்சம் அற்ற
நிழல்களற்ற
அல்லது புத்திசாதுரியமான ஒரு மொழியற்ற புயலாக மாறினேன்
இப்போது நான் ஒப்புக் கொள்கிறேன் நான் ஓர் இழந்த உலகத்தைச் சுற்றும் ஓர் இழந்த கோள் என்பதை
நான் உன்னைக் குற்றம் சாட்டவில்லை
ஒரு சிறு பூண்டுக்குப் புயலோடு என்ன வேலை?

Page 47
போரின் புதல்வர்கள்
அவனது திருமண இரவில் அவர்கள் அவனைப்
போருக்கு இட்டுச் சென்றனர்
கடினமான ஐந்து வருடங்கள்
சிகப்புத் தள்ளுவண்டி ஒன்றில் படுத்தவாறு ஒரு நாள் அவன் நாடு திரும்பினான் அவனது மூன்று புதல்வர்கள் அவனைத் துறைமுகத்தில் சந்தித்தனர்.
ലഠരക്രിസ്ത്ര ക്രമ( / 90

ലഠരക്രിസ്ത്ര ക്രമീഘ്ര / 91
சுவர்க் கடிகாரம்
எனது நகரம் எதிரியிடம் வீழ்ந்தது எனினும் கடிகாரம் இன்னும் சுவரில் ஓடிக்கொண்டிருந்தது
எனது சுற்றாடல் வீழ்ந்தது எனது பாதையும் வீழ்ந்தது எனினும் கடிகாரம் இன்னும் சுவரில் ஒடிக்கொண்டே இருந்தது.
எனது வீடும் வீழ்ந்து நொறுங்கிற்று எனினும் கடிகாரம் இன்னும் சுவரில் ஓடிக்கொண்டே இருந்தது
பின்னர் சுவரும் வீழ்ந்தது ஆயினும் கடிகாரம் தொடர்ந்தும் டிக் டிக் என்று ஓடிக்கொண்டே இருந்தது.

Page 48
வங்குறோட்டானவனின் அறிக்கை
என் பாண் துண்டை நான் இழக்க நேரிடினும் என் சட்டையையும் கட்டிலையும் விலைகூற நேர்ந்தாலும் கல்வெட்டியோ சுமை காவியோ தெருக் கூட்டியோ நான் பிழைக்க நேரினும் உன் பண்டசாலையைத் துடைத்து மினுக்க நேரிட்டாலும் குப்பையைக் கிளறி உணவெடுக்கும்படி வந்தாலும் பட்டினி கிடந்து அழுந்த நேரினும் மனிதனின் எதிரியே நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் இறுதிவரை போராடுவேன்.
என் காணியின் கடைசித் துண்டையும் பறித்தெடு என் இளமையைச் சிறைக் கூண்டினுள்ளே புதைத்திடு என் முதுசொத்தைக் கொள்ளையடி என் நூல்களை எரித்திடு என் கோப்பைகளில் உன் நாய்களுக்கு இரைபோடு போ, என் ஊரிலுள்ள கூரைகள் மீது உன் பயங்கர வலைகளை விரித்திடு மனிதனின் எதிரியே. நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் இறுதிவரை போராடுவேன்.
ലഠ൬ (് / 92

ലഠ൬ ബയ്ലേ" / 93
என் கண்ணெதிரே நீ எல்லா விளக்குகளையும் ஊதி அணைத்தாலும் உதடுகளின் முத்தங்கள் அனைத்தையும் உறைவித்தாலும்
என் நாட்டின் காற்றினைச் சாபங்களால் நிறைத்தாலும் என் ஓலமிடும் குரல்வளையை அமுக்கி ஒடுக்கினாலும் என் காசுகள்போல் பொய்க்காசு தயாரித்தாலும் என் பிள்ளைகளின் முகத்து முறுவலைப் பிடுங்கி எடுத்தாலும் இகழ்ச்சி ஆணி கொண்டு என் விழிகளில் அறைந்தாலும் மனிதனின் எதிரியே நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்.
மனிதனின் எதிரியே
துறைமுகங்களில் சைகைகள் உயர்த்தப்பட்டுவிட்டன காற்றெங்கும் அழைப்புக்கள் நிரம்பிவிட்டன எங்கெங்கும் அவை தெரிகின்றன அடிவானத்திலே கப்பற் பாய்களைக் காண்கிறேன் முயன்று, இடர் மீறி, இழப்புக் கடல்களினின்றும் யுலிசசின் கப்பல்கள் மீண்டு வருகின்றன பொழுது புலர்கிறது மனிதன் முன்னேறுகிறான் நான் பொருட்டாக நான் சத்தியம் பண்ணுவேன் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் இறுதிவரை போராடுவேன்
போராடுவேன்.

Page 49
சத்தியம்
ஒன்று இரண்டு மூன்று முன்னேறு முன்னேறு
இந்தக் கரிய யுகத்தின் காமப் பலிபீடங்களில் அடாபிடித் தெய்வங்களுக்கு விடப்பட்ட பலிக்கடாவே
ஒன்று
இரண்டு
மூன்று
ലവ്ലേ ശല്ക്കു് / 94

ലഠ൬ ( / 95
கைகள் கோர்த்தபடி
இருவருமாகப்
பைசாசப் பாதைகள் கடக்கிறோம் தந்தையே, தங்கள் கண்கள் இன்னும் ஒளிர்கின்றன
தங்கள் கால்கள் நிலத்தில் உறுதியாய் உள்ளன
செல்க மனிதனின் நெடிய உழல்விலே ஈடிலாத் துயர்களை எடுத்து வீசுக எமது புதிய விடியல்களை நாம் படைத்திடுவோம்
வீசிய அம்புகள் விழிகளைத் தோண்டின ஆயினும், தந்தையே நான் உங்கள் விடிவிளக்கு விசுவாச நெய்யூற்றி முடியாத ஒளியதனைத் தங்கள் கைகளில் நிரப்புகிறேன்
கொள்ளையர்கள் கவர்ந்தவற்றை நான் மீட்டுத் தருவேன் இது சத்தியம் கடவுளானை, மனிதனாணை
இது சத்தியம்
ஒன்று இரண்டு மூன்று முன்னேறு முன்னேறு

Page 50
சிறையிலிருந்து எழுதும் கடிதம்
அம்மா நண்பர்கள் என்னைத் தேடி வந்து கதவிலே தட்டும்போதெல்லாம் நீ வெம்பிக் கண்ணீர் மல்குவதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன்
ஆனால் வாழ்க்கையின் சிறப்பு என் சிறையிலே பிறக்கிறதென்று நான் நம்புகிறேன் அம்மா என்னை இறுதியில் சந்திக்க வருவது ஒரு குருட்டு வெளவாலாய் இருக்காதென்றும் நான் நம்புகிறேன் அது பகலாய்த்தான் இருக்கும் அது பகலாய்த்தான் இருக்கும்
ലഠ൬ ജൂല്പു് / 96

ലഠ൬ ജൂല്ക്ക് / 97
இருபதாம் நூற்றாண்டு
பல நூற்றாண்டுகளின் முன் வெறுக்கும் பழக்கமே இல்லை எனக்கு எனினும், கொடிய நாகத்தை நோக்கி இளைப்பிலா ஈட்டியை நீட்டவேண்டி வந்தது தீயிடையிருந்து வாளினை இழுத்து (B) பாலின் புத்திகெட்ட படிமத்தின் எதிரே வீசி இருபதாம் நூற்றாண்டின் எலிஜாவாக வேண்டி வந்தது
பல நூற்றாண்டுகளின் முன் எனக்கு சவக்குழி தோண்டும் பழக்கமே இல்லை ஆனால், இன்று என் இதயத்திருந்த

Page 51
பொய்த் தேவுகளைச் சவுக்கினால் அடிக்கிறேன் இருபதாம் நூற்றாண்டில் என் மக்களை விற்ற பொய்த் தேவுகளை
பல நூற்றாண்டுகளின் முன் நான் விருந்தினர் எவரையும் விரட்டியதில்லை ஆனால், ஒரு நாள் காலை கண்களைத் திறந்தால் என்னரும் பொருள்கள் எல்லாம் களவுபோயிருந்தன
என்னுயிர்த் தோழன் தூக்கிலே தொங்கினான்
என்னிளம் பிள்ளையின் பிடரி முழுவதும் இரத்தக் களரி
என் விருந்தினரின் துரோகம் உணர்ந்தேன் என் கதவடியில் கண்ணிகள் புதைத்தேன் கூர்வாள் மாட்டினேன் என் சிறு கத்தியின் எஞ்சிய பகுதிமேல் ஆணையாய் இருபதாம் நூற்றாண்டில் இவ்விருந்தினரில் எவரும் என் வீட்டுள் நுழைந்திடத் தகார் எனும் உறுதியைப் பூண்டேன்
பல நூற்றாண்டுகளின் முன் நான் ஒரு கவிஞன்
கவிஞன் மட்டுமே சித்தர்கள் பலரின் மத்தியில் இருந்தேன் இன்று நான் இந்த இருபதாம் நூற்றாண்டில் புரட்சி வெடிக்கும் எரிமலை ஆயினேன்
ലഠ൬ ജൂല്പു് / 98

ലഠ൬ (് / 99
றாஃபாச் சிறுவர்கள்
பல லட்சம்பேரின் படுகாயங்களை உழுதுகொண்டு பாதை கண்டு தோட்டத்து றோசாக்களை நசுக்க
டாங்கி விடும் அவனுக்கு
இரவு வேளைகளில் வீட்டு யன்னல்களை உடைத்து ஒரு வயலையும் நூதன சாலையையும் எரித்து அதன் சுவாலையைப் பார்த்துப் பாடும் அவனுக்கு
குழந்தையை இழந்த தாய்மாரின் கூந்தலைப் பறித்து திராட்சைத் தோட்டங்களை அழித்து மிதித்து நல்லின்ப வானம்பாடியை நகரத்துச் சதுக்கத்திற் கொலை செய்யும் அவனுக்கு

Page 52
பிள்ளைமையின் கனவுகளை நொறுக்கிடும் விமானமுள்ள அவனுக்கு வானவில்களை ஒடித்திடும் அவனுக்கு இன்றிரவு றாஃபாச் சிறுவர்கள் விளம்புகிறோம் :
கூந்தலை நெய்து படுக்கையில் விரித்தவர்கள் அல்லர் நாம் கொலையுண்ட மங்கையின் தங்கப்பல்லைப் பிடுங்கி அவள் முகத்திலே துப்பினோர் அல்லர் நாம் இனிப்புத் துண்டுகளைப் பறித்துக் கொண்டு வெடிகுண்டுகளை எமக்கேன் தந்தீர்? அரபுக் குழந்தைகளை ஏன் அநாதைகள் ஆக்கினீர்? ஆக்கி, உமக்கேன் நன்றி கூறினீர்?
துயரம் எங்களை ஆடவர் ஆக்கிற்று
நாம் போரிடல் வேண்டும்.
2
வென்றவன் ஒருவனின் துவக்குச் சனியனில் மின்னும் வெயில் அம்மணப் பிணமொன்றாய் அவமதிப்புற்றது குருதி காய்ந்த முகங்களிடை கோபமுற்ற செபமாலை மணிகள்மீது மெளனம் இரத்தம் பெருக்கிற்று சாமுத்திரிகா இலட்சணம் படைத்த வெற்றியாளன் ஒருவன் உறுக்கினான் ! நீ பேசவே மாட்டாயோ? நல்லது
உனக்கினிமேல் ஊரடங்குச் சட்டம்
ലഠ൬ ജൂല്ക്ക് / 100

ലഠ൬ ജൂല്പു് / 101
பின்வருமாறு. அலாவுதீன் குரல் வெடித்துப் பிளந்தது இரை தேடும் பருந்துகளின் பிறப்பினை
இராணுவ வாகனத்துக்குக் கல்லெறிந்தேன் துண்டுப் பிரசுரம் விநியோகித்தேன் சைகை கொடுத்தேன் கையிலே தூரிகை தாங்கி கதிரையை அயல் வீட்டுச் சுவரடிக்குக் கொண்டுபோய் சுலோகங்களை நானே தீட்டினேன் நானே பிள்ளைகளைக் கூட்டினேன் வெளியேறிய அகதிகள் மேல் ஆணையாய் எதிரிகளின் துவக்குச் சனியன் எம்தெருவில் மின்னுமட்டும் எதிர்ப்பதென்று சத்தியம் பண்ணினோம். அலாவுதீனுக்குப் பத்து வயதும் இருக்காது.
3
அக்கேசியா மரங்கள் நசுக்கப்பட்டன றாஃபாவில் படலைகள் பூட்டப்பட்டு கவலையால், அல்லது மெழுகினால் அல்லது ஊரடங்குச் சட்டத்தால் முத்திரையிடப்பட்டன.
(நள்ளிரவின் பின் மீண்ட, காயம்பட்ட ஒருவனுக்குப் பாணும், காயம் கட்டும் துணிகளும் கொண்டு போகவேண்டியவளாய் அச்சிறுமி இருந்தாள். அவள் ஒரு தெருவைக் கடக்க வேண்டும் அங்கு அந்நியரின் கண்களும் காற்றும் துப்பாக்கி வாய்களும் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டிருந்தன.)
அக்கேசியா மரங்கள் நசுக்கப்படுகின்றன ஓர் வெட்டுக்காயம் போல்
றாஃபாவில் வீடொன்றின் கதவு திறந்தது

Page 53
அவள் பாய்ந்தாள் மல்லிகைச் செடியொன்றின் மடியிலே விழுந்தாள் பயங்கரத்தின் பாதையோரம் வந்தாள் ஈச்சமரம் ஒன்று அவள் புகல் ஆயிற்று கவனமாய்.
ஒவ்வொர் அடியாய்.
இப்போது பாய்.
ஒரு காவலாள் விளக்குகளின் பளிச்சீடு
ஓர் இருமல்
யார் நீ?
நில் ஐந்து துவக்குகள் அவள்முன் நீண்டன ஐந்து துவக்குகள்
காலையில் படையெடுப்பாளர் மன்று கூடிற்று அவளைக் கொணர்ந்தனர் ஆமினா
ஒரு குற்றவாளி அவளுக்கு வயது எட்டு.
ലഠ൬൪ ൯ / I02

ലഠ൬ (് / 103
டீங்காய் உடையணிந்த ஐ.நா. மனிதர் அனைவருக்கும்
எங்கணும் இருந்து வந்த மதிப்புடை மணிசர்காள் நண்பகலில் டீங்காய்க் கழுத்தில் இறுக்கிய பட்டிகளும் கிளர்ச்சியூட்டும் சர்ச்சைகளும் இன்றைய எமது யுகத்தில் என்ன பயனைத் தரும்?
எங்கணும் இருந்து வந்த மதிப்புடைப் பெரியோரே என் இதயத்திற் பாசி படர்ந்தது கண்ணாடிச் சுவர்கள் அனைத்திலும் படர்ந்தது கூட்டங்கள் பலவும்

Page 54
பேச்சுக்கள் பலப்பலவும்
ஒற்றர்களும்
வேசியர் மொழிகளும்
அரட்டைகளும் இன்றைய எமது யுகத்தில் என்ன பயனைத் தரும்?
ஓ கனவான்களே குரங்கின் சந்திரன் எப்படியோ திரும்பட்டும் நீங்கள் வாருங்கள் உலகின் பாலங்களை நான் இழந்து வருகிறேன் என் இரத்தம் மஞ்சள் உறுதி மொழிச் சகதியுள் என் இதயம் புதையுண்டது
எங்கணும் இருந்து வந்த மதிப்புடை மாந்தர்காள் என் வெட்கம் கொள்ளைநோய் ஆகட்டும்
என் துயர் ஒரு பாம்பாகட்டும்
எங்கணும் இருந்து வந்த மின்னிடுங் கரியதோற் சப்பாத்துகளே என் சினம் சொல்லில் அடங்காது இந்த யுகம் கோழையானது என்னைப் பொறுத்தவரை.
எனக்குக் கைகளில்லை.
ലഠ൬ (് / 104

ലഠ൬ (് / 105
இஸ்ரேல் யூதன் ஒருவனுக்கும் அராபியன் ஒருவனுக்குமிடையே உரையாடல்
என் பாட்டன் பாட்டியர் அவுஷ்விற்சில் எரிக்கப்பட்டனர்
என் இதயம் அவர்களுடன் உள்ளது. ஆனால் என் உடலிலிருந்து சங்கிலிகளை நீக்கிவிடு
உன் கைகளில் என்ன?
ஒரு பிடி விதை
சினம் உன் முகத்தைச் சிவக்க வைக்கிறது
அது தான் நிலத்தின் நிறம்
உன் வாளை உருக்கி கலப்பையாய் மாற்று
காணி எதுவும் நீ விட்டுவைக்கவில்லை
நீ ஒரு குற்றவாளி
நான் எவரையும் கொல்லவில்லை
எவரையும் ஒடுக்கவில்லை
நீ ஒரு அராபியன் ! நீ ஒரு நாய்
கடவுள் உன்னைக் காப்பாற்றுக அன்பைச் சுவைத்துப்பார்
ஒளிக்கு வழிவிடு

Page 55
மூயின் பசைசோ
காசாவில் பிறந்த மூயின் பசைசோ (1927-1984) ஒரு முக்கியமான பலஸ்தீனக் கவிஞர். கெய்ரோ அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மார்க்சியச் சார்புடைய இவர் தன்னுடைய அரசியல் ஈடுபாடு காரணமாகப் பலமுறை சிறை சென்றும், பல்வேறு அரபு நாடுகளில் அகதியாக வாழ்ந்தும் துன்புற்றவர். ஆசியராகத் தொழில் புரிந்த இவர் ஒரு பத்திரிகையாளருமாவார். இவரது பல கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன, இதயத்தில் பலஸ்தீன் (1965), மரங்கள் வீழ்கின்றன (1966), உன் உடலை மண் மூட்டையாக எடு (1976) என்பன சில: ஒரு சிறந்த கட்டுரையாளருமான இவரது (G) காசா நினைவுகள் (1971) என்ற சுயசரிதை நூலும் பலஸ்தீன நாட்குறிப்புகள் (1969) என்ற கட்டுரைத் தொகுதியும், அதிகம் பேசப்படுகின்றன. சமகாலப் பலஸ்தீன எழுத்தாளர்கள் மீது இவரது தாக்கம் ஆழமானது, என்பது விமர்சகர்களின் அபிப்பிராயம்.
ലഠ൬ ക്രയല്ക്കു് / 106

ഗത്രക്ര്തം കയ്പു് / 107
இந்த உலகம்
இரவின் அமைதியைக் கிழித்துப் பறந்த துப்பாக்கிக் குண்டு
பெருகிய குருதி
இதுதான் பதாஹ் பீறிப் பெருகியது எங்கள் குருதி குருதியின் நிறத்தை நாம் இனங்கண்டு கொண்டோம் நாங்கள் எங்கள் குருதியின் நிறத்தை மறந்து விடும்படி அவர்கள் செய்தனர் நாங்கள் எங்கள் நரம்பிலே பாய்வது தண்ணீர் தாமா? இரத்தமா? என்று சந்தேகிக்கும்படி அவர் செய்தனர்
இதுவரை இங்கே எல்லா நிறங்களும் அறிமுக மானவை யாக இருந்தன பாஸ்போட் அலுவலர் கண்களின் நிறமும் பணத்தின் நிறமும் கறுப்புப் பட்டியல் அனைத்தின் நிறமும் அறிமுக மானவை யாக இருந்தன குருதியின் நிறத்தைத் தவிர
அனைத்தும் அறிமுக மானவை யாக இருந்தன

Page 56
ஆயின் இப்போது அந்தக் குருதி விடுதலை வேண்டிப் பெருகியுள்ளது அதுவே எங்கள் பாதை நெடுகிலும் உழுது சேறுபடுத்தியும் உள்ளது
பதாஹ்,
நாங்கள் குருதி சிந்துவோம் நாங்கள் பணிந்தே அடங்க நினைத்தால் நாங்கள் எங்கள் காயங்களிலே பெருகும் குருதியை நிறுத்தி இருப்போம் உலகின் ஜன்னல் கதவுகளில் எம் குருதி சிந்திக் கறைபடுத்தட்டும் உலகின் முகத்தில் எங்கள் குருதி சிந்தப்பட்ட கறை தெரியட்டும்
இந்த உலகம் நாங்கள் முள்ளுக் கம்பியின் மீது கிடக்கும் வரைக்கும் இந்த உலகின் தலையணையின் கீழ் டைனமைற் ஒன்றை நாம் நிறுத்தி வைப்போம் இந்த உலகம் படுக்கையில் என்றும் ஒய்வெடுக்காது
இந்த உலகம் நீண்ட காலமாய்ப் பலஸ்தீனர்களின் பச்சை இறைச்சியை முள்ளுக் கரண்டியும் கத்தியும்கொண்டு புசித்து வந்துள்ளது இந்த உலகின் காதுகள் யாவும் இந்த உலகின் கண்கள் யாவும்
இந்த உலகின் இதயம் யாவும்
ലെ കല്ക്ക് / 108

ലാല്ക്ക് ക്രയല്ക്ക് / 109
இந்த உலகின் தொண்டைகள் யாவும் வெந்து போன அப்பிள்ப் பழங்கள் ஆக்கிரமிப் பாளரின் கூடையில் இருந்து திருடப்பட்ட அப்பிள்ப் பழங்கள்
உலகின் பெண்ணே உனது குழந்தையின் பொம்மைகளை எம் பொங்கிய குருதி கறை செய்கின்றது உலகின் பெண்னே
உன் அடிச் சுவட்டினை எங்கள் குருதி நிழலிடுகின்றது இப்போது நீங்கள் எம்முடன் இருங்கள் உலகின் ஆண்களே
இப்போது நீங்கள் எம்முடன் இருங்கள்
உலகின் ஆண்களே உலகின் பெண்களே இப்போது நீங்கள் எம்முடன் இருங்கள் கறுப்பு வெள்ளை சிவப்பு மஞ்சள் இனத்து மக்களே இப்போது நீங்கள் எம்முடன் இருங்கள்
மனிதனுக் குரிய கெளரவம் என்பதை நாங்கள் உமக்குப் பெற்றுத் தருவோம் மனிதனின் பிறப்புச் சாட்சிப் பத்திரம் நாங்கள் உமக்குப் பெற்றுத் தருவோம் மனிதன் என்ற பெயரின் மதிப்பை
நாங்கள் உமக்குப் பெற்றுத் தருவோம்

Page 57
றிம்பாட்டுக்கு
றிம்பாட் ஓர் அடிமை வியாபாரியாக மாறி கறுப்புச் சிங்கங்களையும் கறுப்பு அன்னங்களையும் பிடிக்க எதியோப்பியாமீது தன் வலையை வீசியபோது அவன் கவிதையைக் கைவிட்டான் . எவ்வளவு நேர்மையானவன்
அச்சிறு பையன்.
ஆனால் அநேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர் கடும் வட்டிக் கடைக்காரராகினர்
ஆயினும் அவர்கள் கவிதையைக் கைவிடவில்லை
விளம்பர முகவர் நிலையப் பிரதிநிதிகள் போலி ஒவிய விற்பனையாளர்கள்
இவர்கள் கூடக் கவிதையைக் கைவிடவில்லை
ലഠ൬ ജൂല്പു് / 110

ലഠ൬ ജൂല്പു് / 1.11
சுல்தானின் மாளிகையில் அவர்களின் கவிதைகள் கதவுகளாகவும் ஜன்னல்களாகவும் மேசைகளாகவும் கம்பளங்களாகவும் மாற்றப்பட்டன
ஆயினும் அவர்கள் கவிதையைக் கைவிடவில்லை
அவர்கள் புகழப்பட்டனர் விருதுகளும் பட்டங்களும் பெற்றனர் தங்க, வெள்ளிக் கோப்பைகளும் பெற்றனர் ஆயினும் அவர்கள் கவிதையைக் கைவிடவில்லை அவர்களின் கவிதையில் பொலிஸ்காரனின் முத்திரை பொலிஸ்காரனின் காலடித் தடம் ஆயினும் அவர்கள் கவிதையைக் கைவிடவில்லை.
எவ்வளவு நேர்மையானவன் றிம்பாட்.
எவ்வளவு நேர்மையானவன் அப்பையன்.

Page 58
வீதிப் பயண விளக்குகள்
சிவப்பு விளக்கு நில் பச்சை விளக்கு
போ
சிவப்பு விளக்கு பச்சை விளக்கு சிவப்பு விளக்கு பச்சை விளக்கு நில் நில்
C&шт
ലഠ൬ ജൂല്പു് / 112

ലഠ൬൪ ശല്ക്ക് / 1.13
GUTT
சிவப்பு விளக்கு சிவப்பு விளக்கு எங்கே பச்சை விளக்கு?
ஒரு காரில் ஒரு கற்பிணிப் பெண் காரிலேயே அவள் பிரசவிக்கிறாள் பையன் வளர்கிறான்
காதலிக்கிறான்
காரிலேயே மணந்துகொள்கிறான் பத்திரிகைகள் சஞ்சிகைகள் படிக்கிறான் காரிலேயே அவர்கள் அவனைச் சுற்றிவளைக்கின்றனர் காரின் டிக்கியில் அவனைப் போட்டுவைக்கின்றனர் அவனைக் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கின்றனர் அவன் காரின் கண்ணாடியின் பின்னால் ஒரு தியாகியாகச் சாகிறான் கார்ச் சில்லின் கீழ் அவனைப் புதைக்கின்றனர் கார் இன்னும் தெருவிலேயே நிற்கின்றது பச்சை விளக்குக்காகக் காத்து நிற்கின்றது
சிவப்பு விளக்கு நில் பச்சை விளக்கு போ சிவப்பு விளக்கு
பச்சை விளக்கு

Page 59
ஷபாவுக்கு அலாவுத்தீனின் விளக்கு
பூதங்களின் தீவிலிருந்து நான் திரும்பிவருவதாயின் அன்பே உனக்கு பீனிக்ஷ் பறவையை நான் பரிசளிப்பேன்
நமது திருமண மோதிரத்தை மேகத்தால் மூடப்பட்ட பூதத்தின் பொற்குவையை எதிரிகளும் நண்பர்களும் எனக்கு அளித்தவற்றை வீதியில் நான் சேகரித்த பாம்பு முட்டைகளை
ലഠ൬ (് / 114

ലഠ൬ (് / 115
பச்சை நரிகளின் கைவளையல்களை பறவைகளை யாவற்றையும்
நான் உனக்குப் பரிசளிப்பேன்.
ஆனால் அன்பே ராஜாளி ஓர் இறக்கையைக்கூட எனக்குத் தராது பறந்துவிட்டது மேகங்கள் பொற்குவையுடன் குடியகன்றுவிட்டன நமது திருமண மோதிரத்தை பூதம் கொண்டு சென்றுவிட்டது
ஆயினும் நான் இன்னும் காத்திருக்கின்றேன் கூர்முனைப் பாறை தன் இதயத்திலிருந்து மலர்களைச் சொரியும் என்று
முட்கள் கடைசிக் கனியையாவது தரும் என்று.
குலையில் ஒரே ஒரு திராட்சை இன்னும் தொங்கிக் கொண்டுள்ளது
மேகங்களில் ஒரு மழைத்துளியாவது தங்கியிருக்கும் என்று நம்புகின்றேன் விளக்கில் ஒரு ஒளிக்கதிராவது அன்பே ஒரு ஒற்றை ஒளிக்கதிராவது தங்கியிருக்கும் என்று நம்புகின்றேன்
ராஜாளி மலடாக்கப்படவேண்டுமென்று சொன்னவர் யார்? அல்லது இந்த அலைகள்
பிரசவிக்காது என்று சொன்னவர் யார்?
ஷபா - கவிஞரின் மனைவி

Page 60
காலடிச் சுவடுகள்
சகோதரா அவர்கள் என் கழுத்தில் வாளைத் தீட்ட முயன்றாலும் நான் முழந்தாளிடமாட்டேன் இரத்தம் தோய்ந்த என் வாயில் அவர்களது சவுக்கடி விழுந்தாலும் விடியல் மிக நெருங்கிவந்தாலும் நான் பின்வாங்கமாட்டேன் எங்கள் மூர்க்கமான புயலுக்குப் பாலுட்டும் நிலத்தில் இருந்து நான் எழுச்சியடைவேன்
ലഠ൬ ജൂല്പു് / 1.16

ലഠരക്ര(് കല്ക്ക് / 1.17
சகோதரா
உன்னை மண்டியிடச் செய்ய கருணை கேட்டு இரந்திடச் செய்ய
உன் கண் எதிரே
கொலையாளிகள் என்னைக் கொலைக் களத்துக்கு இழுத்துச் சென்றாலும் நான் மீண்டும் சொல்கிறேன் சகோதரா
பெருமை மிக்க உன் தலையை நிமிர்த்தி அவர்கள் என்னைக் கொல்வதைப் பார் என் கொலையாளிக்குச் சாட்சியாய் இரு என் குருதியில் தோயும் வாளுக்குச் சாட்சியாய் இரு குற்றமற்ற எம் குருதியைத் தவிர கொலையாளியை அம்பலமாக்கும் சக்திதான் எது?
இரவில் அவர்களின் துப்பாக்கிகள் தன் பதுங்கு குழியிலிருந்து அவனைக் கடத்திச் சென்றன சிறைக் கூடத்தின் இருட்டறையுள் வீரன் வீசி எறியப்பட்டான் சங்கிலிகளின் மேலே மினுங்கும் ஒரு பதாகைபோல அங்கு அவன் இருந்தான் மிளிரும் எம் எதிர்காலத்தை மூடிய
சாம்பலை எரித்தவாறு.
சங்கிலிகள் ஒளிவிடும் சுடர்விளக்காகின இப்போதும் அந்த வீரன் வாழ்கிறான் அவனது காலடிச் சுவடுகள் ஒவ்வொரு சிறைச்சாலையின் மூடிய சுவர்களுக்குள்ளும் வெற்றிக் களிப்புடன் ஒலிசெய்கின்றன.

Page 61
எதிர்த்து நில்
அவர்கள் ஒரு பேப்பரையும் பேனையையும் என் மூக்கெதிரே விசுக்கி எறிந்தனர் என் வீட்டின் திறப்பை
என் கையில் திணித்தனர்
என்னைக் கொண்டு பேப்பரை மாசுபடுத்த அவர்கள் விரும்பினர் பேப்பர் சொன்னது எதிர்த்து நில் என்னைக் கொண்டு பேனையை அவமானப்படுத்த அவர்கள் விரும்பினர்
பேனை சொன்னது எதிர்த்து நில்
என் வீட்டின் திறப்பு என்னிடம் சொன்னது உன் சின்னஞ்சிறு வீட்டின் ஒவ்வொரு கல்லின் பெயராலும் எதிர்த்து நில்
சுவரில் ஒரு தட்டு தறிக்கப்பட்ட ஒரு கையில் இருந்து சுவரின் குறுக்காக வந்த ஒரு செய்தி குறிப்பால் உணர்த்தியது : எதிர்த்து நில்
சித்திரவதை அறையின் கூரைமீது சொட்டு சொட்டாய் விழும் ஒவ்வொரு மழைத்துளியும் அலறியது : எதிர்த்து நில்
ലഠരക്ര(ക്ര ഭ്രൂ / 118

ലഠ൬ ജൂല്പു് / 1.19
நிஸார் கப்பானி
நிஸார் கப்பானி (1932) அரபு உலகின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர். சிரியா நாட்டவர். டமஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். அருபத்தைந்து கவிதைத் தொகுதிகளும் ஒரு சுயசரிதை நூலும் வெளியிட்டுள்ளார். தற்கால அரபு இலக்கிய வரலாற்றில் ஜுன் இலக்கியம் (அல்-அதப் அல்-ஹஜூசைறானி) என அழைக்கப்படும் இலக்கியப் போக்கை (1967-1987) இவரது பின்னடைவு நூலுக்கு எழுதிய அடிக்குறிப்புகள் என்னும் கவிதை தொடக்கிவைத்தது என்பர். முஹ்மூட்தர்வீஷ், சமீ அல் காசிம், றவீட் ஹ"சைன் முதலியோர் இக்கவிதைப் போக்கைப் பிரதிபலித்த முக்கிய பலஸ்தீனக் கவிஞர்களாகக் கருதப்படுகின்றனர். பின்னடைவு நூலுக்கு எழுதிய அடிக்குறிப்புகள் என்ற அவர்து கவிதை 1967ல் முதல்முதல் பிரசுரிக்கப்பட்டது. 1967 ஜ"ன் யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியினால் நொருங்குண்ட தேசத்தின் மனநிலையை இக்கவிதை பிரதிபலிக்கிறது. அரபு உலகம் முழுவதிலும் ஆட்சியாளர்களினால் இக்கவிதை தடைசெய்யப்பட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு அரபு நாட்டிலும் இக்கவிதை களவாகக் கடத்திச் செல்லப்பட்டது, ரகசியமாக அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது, மனனம் செய்யப்பட்டது.

Page 62
பின்னடைவு நூலுக்கு எழுதிய அடிக்குறிப்புகள்
1
நண்பர்களே பண்டைய சொல் மரணித்துவிட்டது பண்டைய நூல்கள் மரணித்துவிட்டன தேய்ந்த சப்பாத்துகளைப் போன்ற ஒட்டைகளைக் கொண்ட நமது பேச்சும் மரணித்துவிட்டது
மரணித்த மனம் தோல்விக்கு இட்டுச் சென்றது
2
நமது கவிதைகள் புளித்துவிட்டன பெண்களின் கூந்தலும்
இரவுகளும்
திரைச் சீலைகளும் சாய்வு நாற்காலிகளும் புளிப்படைந்துவிட்டன எல்லாமே புளித்துப்போய்விட்டன.
ലഠ൬ ക്രയയ്പൂ / 120

ലഠ൬ കല്ക്ക് / 121
துயருற்ற என் தேசமே காதல் கவிதைகள் எழுதும் கவிஞனான என்னை ஒரு நொடியில்
கத்தியினால் கவிதை எழுதும் கவிஞனாக மாற்றினாய்
4.
எமது உணர்வுகள் வார்த்தைக்குள் அடங்காதவை எமது கவிதைகள்பற்றி நாம் வெட்கப்படவேண்டும்
5
கீழைத்தேய வார்த்தை ஜாலத்தால் ஒருபோதும் ஒரு ஈயைக்கூடக் கொல்ல முடியாத அந்தாரிய அகங்காரத்தால் பிடில் இசையால்
முரசொலியால் கிளர்ந்தெழுந்தோம் போரிடச் சென்றோம் தோல்வியடைந்தோம்
6
நமது கூச்சல்
நமது செயல்களைவிட உரத்துக் கேட்டது
நமது வாள்கள்

Page 63
நம்மைவிட உயரமானவை இதுதான் நமது அவலம்
7
சுருக்கமாகச் சொன்னால் நாகரீகத்தின் தொப்பியை நாம் அணிந்திருக்கிறோம் ஆயின் நமது ஆன்மா கற்காலத்தில் ஜீவிக்கிறது
8
சல்லடியும் புல்லாங்குழலும் கொண்டு நீ ஒரு யுத்தத்தை வெல்ல முடியாது
9
நமது அவசரத்தின் விலை
ஐம்பதாயிரம் புதிய கூடாரங்கள்
10
சுவர்க்கம் உன்னைக் கைவிட்டால் சுவர்க்கத்தைச் சபிக்காதே சபிக்காதே சந்தர்ப்ப சூழ்நிலைகளை இறைவன் தான் விரும்புவோருக்கு வெற்றியைக் கொடுக்கிறான் வாள் அடித்துத் தர அவன் ஒரு கொல்லன் அல்ல
ലഠ൬ കല്ക്ക് / 122

ലഠ൬ (് / 123
11
காலையில் செய்தியைக் கேட்பது வேதனைக் குரியது நாய்களின் குரைப்பைக் கேட்பது
வேதனைக் குரியது
12
நமது எதிரிகள் நமது எல்லையைக் கடக்கவில்லை எறும்புகள் போல நமது பலவீனங்களுக்கு ஊடாக அவர்கள் ஊர்ந்து சென்றனர்
13
ஐயாயிரம் ஆண்டுகள் நமது குகைகளில் தாடி வளர்க்கின்றன நமது பண நோட்டு அறியப்படாதது நமது கண்களோ
ஈக்களின் சுவர்க்கமாயின
நண்பர்களே கதவுகளை உடையுங்கள் உங்கள் மூளைகளைக் கழுவுங்கள்
உங்கள் ஆடைகளைக் கழுவுங்கள்
தோழர்களே ஒரு நூலை வாசியுங்கள்
ஒரு நூலை எழுதுங்கள் சொற்களையும் மாதுழைகளையும்

Page 64
திராட்சைகளையும் பயிரிடுங்கள் பணிவிழும் தேசத்துக்குப் பயணமாகுங்கள் நீங்கள் குகைகளில் இருப்பது யாருக்கம் தெரியாது கலப்பின விலங்குகளாகவே நீங்கள் கருதப்படுகிறீர்
14
வெற்று ஆன்மாக்களும் தடித்த தோலும் உடையோர் நாம் மந்திர வித்தையிலும் செஸ் ஆட்டத்திலும்
தூக்கத்திலும் நம் நாட்களைக் கழிக்கிறோம் இறைவன் மனித குலத்தை இரட்சிக்க அனுப்பிய சமூகத்தினர் நாம்தானா?
15
எமது வனாந்திரத்தின் எண்ணெய் வளம் நெருப்புமிழும் ஆயுதமாகி இருக்க முடியும் மரியாதைக்குரிய நம் முன்னோருக்கு நாம் ஒரு களங்கமானோம் நாமோ நமது எண்ணெயைப் பரத்தையரின் கால் விரல் ஊடே
வழிந்தோட விட்டோம்
16
மக்களைக் கயிற்றில் கட்டி இழுத்தவாறு ஜன்னல்களையும் பூட்டுகளையும் உடைத்தவாறு
ലOരക്രൈ ക്രസ്മെ" / 124

ലഠ൬ ജൂല്പു് / 125
வீதிகளின் ஊடாக நாம் எங்கோ ஒடுகிறோம் தவளைகளைப்போல் போற்றிப் புகழ்கிறோம் தவளைகளைப்போல் பிரகடனம் செய்கிறோம் குள்ளர்களை வீரர்களாகவும் வீரர்களை வீணர்களாகவும் மாற்றுகிறோம் பள்ளிவாயில்களில் குறிக்கோளற்று மண்டியிடுகிறோம் கவிதை எழுதுகிறோம் பழமொழி கூறுகிறோம் எதிரியின் மீது வெற்றிக்காக இறைவனையும் இறைஞ்சுகிறோம்
17
சுல்தானை நான் சந்திக்க முடிந்தால் எனக்கு ஆபத்து எதும் நிகழாது என்று தெரிந்தால் நான் அவருக்குச் சொல்லுவேன்
சுல்தான்
உனது வெறிநாய்கள் எனது ஆடைகளைக் கிழித்துவிட்டன உனது உளவாளிகள் என்னைத் துரத்துகின்றனர் அவர்களின் கண்கள் என்னைத் துரத்துகின்றன அவர்களின் மூக்குகள் என்னைத் துரத்துகின்றன அவர்களின் பாதங்கள் என்னைத் துரத்துகின்றன விதியைப் போல் அவர்கள் என்னைத் துரத்துகின்றனர் எனது மனைவியை விசாரிக்கின்றனர்
என் நண்பரின் பெயர்களைக் குறித்துக்கொள்கின்றனர்
சுல்தான்
நீ இரண்டு யுத்தங்களில் தோற்றாய்

Page 65
சுல்தான்
எமது மக்களில் அரைவாசிப்பேர் நாக்கற்றவர்கள் நாக்கற்றவர்களால் யாது பயன்? எமது மக்களில் அரைவாசிப்பேர் எறும்புகளைப்போலும் எலிகளைப்போலும்
சுவர்களுக்கிடையில் அடைபட்டுள்ளனர்
எனக்கு ஆபத்து எதும் நிகழாது என்று தெரிந்தால் நான் அவருக்குச் சொல்லுவேன்
சுல்தான் நீ இரண்டு யுத்தங்களில் தோற்றாய் நீ பிள்ளைகளின் தொடர்பினை இழந்தாய்
18
எமது ஐக்கியத்தை நாம் புதைக்காதிருந்தால் அதன் இளம் உடலைத் துப்பாக்கிச் சனியனால் கிழிக்காதிருந்தால் அது நம் கண்களில் தங்கியிருந்திருந்தால் நாய்கள் நம் தசைகளைக் கடித்துக் குதறியிரா
19
கோபமுற்ற ஒரு தலைமுறை நமக்கு வேண்டும் வானத்தை உழுதுவிட வரலாற்றைத் துடைத்தெறிய நமது சிந்தனைகளைத் தகர்த்தெறிய கோபமுற்ற ஒரு தலைமுறை நமக்கு வேண்டும்
தவறுகளை மன்னிக்காத
ലOരക്ര്ത് ശല്ക്ക് / 126

ലഠ൬ ജൂല്ക്ക് / 127
வளைந்துகொடுக்காத ஒரு புதிய தலைமுறை நமக்கு வேண்டும் ராட்சதர்களின் ஒரு தலைமுறை நமக்கு வேண்டும்
2O
அரபுக் குழந்தைகளே எதிர்காலத்தின் தானியத் தளிர்களே நீங்களே எமது சங்கிலிகளை உடைப்பீர்கள் எமது தலை நிறைந்த அபினைக் கொல்வீர்கள்
மாயைகளைக் கொல்வீர்கள்
அரபுக் குழந்தைகளே ஜன்னல்கள் அற்ற எமது தலைமுறையைப் படியாதீர் நாங்கள் பயனற்றவர்கள் கெக்கரிக் கோதுபோல் பயனற்றவர்கள் எங்களைக் பின்பற்றாதீர்
எங்களை அங்கீகரியாதீர் எங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதீர் நாங்கள் நேர்மையற்றவர்
நாங்கள் ஏமாற்றுக்காரர்
அரபுக் குழந்தைகளே
வசந்தகால மழைத்துளிகளே எதிர்காலத்தின் தானியத்தளிர்களே தோல்வியை வெற்றிகொள்ளும் தலைமுறை நீங்களே
(அந்தாரிய அகங்காரம் . இத்தொடரில் வரும் அந்தார் (கி.பி. 525-615)
இஸ்லாத்துக்கு முந்திய கால அரபுக் கவிஞர். அப்பெயருடைய ஒரு காவிய நாயகன் தோற்கடிக்கப்பட முடியாத வீரனின் குறியீடாவான்)

Page 66
ஆட்சியாளரும் ஊர்க்குருவியும்
என் கவிதைகளை வாசிக்க அரபுத் தாயகம் எங்கும் பயணம் செய்தேன் கவிதை பொதுமக்களின் ரொட்டி என்பதைப் புரிந்து கொண்டேன் சொற்கள் மீன்கள் என்பதையும் மக்களே அவை வாழும் தண்ணீர் என்பதையும்
நான் அறிந்துகொண்டேன்
அரபுத் தாயகத்தில் ஒரு குறிப்புப் புத்தகத்துடன் மட்டுமே நான் பயணம் செய்தேன்
ലഠ൬ (് / 128

ലഠ൬ കല്ക്ക് / 129
பொலிஸ் நிலையங்கள்
என்னை அலைக்கழித்தன ராணுவத்தினர் என்னை அலைக்கழித்தனர் என் சட்டைப்பையில் நான் வைத்திருந்ததெல்லாம் ஒரு ஊர்க்குருவிதான்
ஆனால் அந்த அதிகாரி ஊர்க்குருவியின் கடவுச் சீட்டைக் கேட்டான் சொற்களுக்கும் என் நாட்டில் கடவுச் சீட்டு வேண்டும்
நான் கடவாணைச் சீட்டுக்காகக் காத்திருந்தேன் மணல் மேடைகளை வெறித்து நோக்கியவாறு ஒரே தாயகம்பற்றிக் கூறும் ஒரே மக்களைப்பற்றிக் கூறும் போஸ்டர்களை வாசித்தவாறு
என் கடவாணைச் சீட்டுக்காகக் காத்திருந்தேன்
உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போல என் நாட்டின் கேற்றடியில்
நான் கைவிடப்பட்டேன்
(கடவானைச் சீட்டு - Pass)

Page 67
நான் துயரப் புகைவண்டி
ஆயிரக்கணக்கான புகைவண்டிகளில் நான் பயணம் செய்கிறேன் என் விரக்தியை ஆசனமாக்கி என் சிகறற் புகை மேகத்தில் ஏறி சவாரி செய்கிறேன் என் காதலர்களின் விலாசங்களை என் உடுப்புப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என் நேற்றையக் காதலர்கள் யாரோ?
தன் பாதையில் தூரத்தின் தசைகளைச் சப்பியவாறு தன் பாதையில் வயல்வெளிகளை அழித்தவாறு தன் பாதையில் மரங்களை விழுங்கியவாறு ஏரிகளின் பாதங்களை நக்கியவாறு புகைவண்டி செல்கிறது
வேகமாக வேகமாக . பரிசோதகன் என்னிடம் டிக்கட் கேட்கிறான் என் தரிப்பிடத்தையும் கேட்கிறான் எனக்கு ஒரு தரிப்பிடம் உண்டா? உலகில் எந்த ஹோட்டலுக்கும் என்னைத் தெரியாது என் காதலர்களின் விலாசங்களும் தெரியாது
நானே துயரப் புகைவண்டி நான் நிற்கக்கூடிய இறங்கு தளங்கள் எவையும் இல்லை என் எல்லாப் பயணங்களிலும் என் இறங்கு தளங்கள் வழுவிச் செல்கின்றன என் புகைவண்டி நிலையங்கள்
என்னை விட்டும் வழுவிச் செல்கின்றன
ലഠ൬ ജൂല്പു് / 130

ലഠ൬ ജൂല്പു് / 131
பலஸ்தீனப் பெண் கவிஞர்கள் ஃபத்வா துக்கான்
1917ல் பலஸ்தீனில் நபுலஸ் பிரதேசத்தில் பிறந்த இவர், பிரசித்திபெற்ற பலஸ்தீனக் கவிஞர் இப்றாஹிம் துக்கானின் (1905-1941) சகோதரி. ஆரம்பத்தில் மரபு வழிக்கவிதை வடிவங்களைப் பயன்படுத்தி மனோரதியப் பாங்கான கவிதைகள் எழுதிய இவர், பலஸ்தீனப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் புதுக் கவிதை வடிவத்தைக் கையாண்டு பல்வேறு வகையான தனிமனித, சமூகப் பிரச்சினைகள் பற்றி எழுதினார். காதல், சமூக எதிர்ப்பு பற்றிய பெண்ணிலைவாத வெளிப்பாடுகளுக்கு அடித்தளமிட்ட முக்கியமான முன்னோடிப் பெண் கவிஞர்களுள் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது சொந்தப் பிரதேசமான நபுலஸ் 1967 ஜூன் யுத்தத்தில் சியோனிசவாதிகளிடம் வீழ்ச்சியடைந்த பிறகு எதிர்ப்பு அவரது கவிதைகளின் பிரதான பாடு பொருளாகியது. இதன் பின்னரே அரபுக் கவிதையின் பெரும் சக்தியாக இவர் வெளிப்பட்டார். இவரது முதல் கவிதைத் தொகுதி 1952-ல் வெளிவந்தது. இதுவரை இவரது 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஒரு மலைப் பிரதேசப் பயணம் என்ற இவரது பிரசித்திபெற்ற சுயசரிதை 1985-ல் வெளிவந்தது. 1967 ஜ"ன் யுத்தம் வரையுள்ள இவரது வாழ்க்கை பற்றி இது பேசுகிறது. 1990ல் கவிதைக்கான சுல்தான் உவைஸ் விருதும் இலக்கிய சாதனைக்கான ஜெருசலேம் விருதும் இவருக்குக் கிடைத்துள்ளன.
அநேக பலஸ்தீன எழுத்தாளர்களைப்போல் ஃபத்வா துக்கானும் ஆஸ்ரேலர்களால் சிறையிடப்பட்டார். ஃபத்வா துக்கான் தொடர்ந்து எழுதுவதையும் பிரசுரிப்பதையும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மோஷே டயான் தானே தடைசெய்தார். இவரது கவிதை ஒன்றைப் படித்த பிறகு இது இருபது கமாண்டோக்களுக்குச் சமமானது என டயான் ஆச்சரியப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

Page 68
போதும் எனக்கு
எனது தேசத்து மண்ணில் சாவதே எனக்குப் போதும் அதற்குள் புதைக்கப்படுவது எனக்குப் போதும்
உருகி
அந்த மண்ணுடன் கலந்து மறைந்து போவது எனக்குப் போதும்
L૧ોઢા
ஒரு பூவாக மலர்ந்து என் நாட்டின் குழந்தை ஒன்றினால் விளையாடப்படுவது
எனக்குப்போதும்
என் நாட்டின் அணைப்பில் இருப்பது
எனக்குப் போதும்
எனது தேசத்தின் புனித முற்றத்தில் ஒரு கைப்பிடியளவு புழுதியாய் ஒரு புல்லின் இதழாய் ஒரு பூவாய் இருப்பது எனக்குப் போதும்
ലഠ൬ ശല്ക്ക് / 132

ലഠ൬ (് / 133
உருவாதல் பற்றிய பாடல்
அவர்கள் சிறுவர்கள் கூத்தும் கும்மாளமுமாய்
விளையாடும் சிறுவர்கள்
மேற்குக் காற்றில் வானவில் போன்ற பட்டங்கள் விடுவர் அவர்களது நீல, சிவப்பு, பச்சை நிறப் பட்டங்களை.
சீட்டியும் துள்ளலும் சிரிப்பும் பகிடியுமாய் பெரும் வரலாற்று நாயகர்கள் போல் பாவனை செய்து
மரக் கிளைகளுடன் போரிடுவர்

Page 69
இப்போது திடீரென அவர்கள் வளர்ந்து விட்டனர் ஒரு சாதாரண வாழ்க்கை ஆண்டுகளைவிட அதிகமாக வளர்ந்துவிட்டனர்
மெளனமாய்ப் படிக்கும் பைபிள் அல்லது குர்ஆனைப் போல அன்பின் செய்தியைத் தாங்கிவரும் ரகசியமும் உணர்ச்சியும் மிக்க வார்த்தைகளுடன் கலந்துவிட்டனர்
நிலத்துள் ஆழமாக வேரோடி சூரியனை நோக்கி நிமிர்ந்துயரும்
மரங்களாக வளர்ந்துவிட்டனர்
இப்போது அவர்களின் குரல்கள் நிராகரிப்பின் குரல்களாக அடித்து வீழ்த்தும் குரல்களாக புதியன கட்டி எழுப்பும் குரல்களாக
மாறிவிட்டன
தடை செய்யப்பட்ட எல்லையில் கனன்றெழும் அவர்களின் கோபம் வகுப்பறைகளிலும்
தெருக்களிலும்
நகர் விடுதிகளிலும் சதுக்கங்களிலும் மையம் கொள்ளும்
இருண்ட டாங்கிகளை கல்மாரிகளால்
அவர்கள் எதிர்கொள்வர்
ലഠരക്രിസ്ത് ക്ലൈ" / 134

ലഠ൬ ജൂല്പു് / 135
இரவையும்
அதன் வெள்ளப் பெருக்கையும் மூர்க்கமாய்த் தாக்கி உதய காலத்தின் தூக்குமரத்தை இப்போது அவர்கள் ஆட்டி உலுப்புகின்றனர்
ஒரு வாழ்க்கைக் காலத்துக்கு மேலாக அவர்கள் வளர்ந்துவிட்டனர் வணங்குவோராகவும்
வணங்கப்படுவோராகவும் ஆவதற்காக
அவர்களது கிழிக்கப்பட்ட உடல் உறுப்புகள் நமது மண்ணுடன் கலந்தபோது அவர்கள் வீரமரபுக் கதைகளாகினர் இணைக்கும் பாலங்களாக அவர்கள் வளர்ந்தனர் அவர்கள் வளர்ந்தனர்
இன்னும் வளர்ந்தனர் எல்லாக் கவிதைகளையும் விட
மிகப் பெரிதாக.

Page 70
என்றென்றும் பல்ஸ்தீன்
மேன்மைமிகு மேன்மைமிகு தேசமே இருள் மிகுந்த பெருந்துயர் இரவில் திரிகைக்கல் சுழலலாம் மேலும் சுழலலாம்
ஆயின் உன் ஒளியை அழித்தொழிப்பதற்கு அவற்றால் இயலா அவை மிகச் சிறியன.
ஒ பெரிய தேசமே ஓ ஆழமான காயமே தனிப்பெரும் காதலே நசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து ஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து திருடப்பட்ட உன் முறுவலில் இருந்து $(5-tullஉன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து சிதைவுகளில் இருந்து சித்திரவதையில் இருந்து இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து வாழ்வினதும் மரணத்தினதும் நடுக்கங்களில் இருந்து புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்
அது எழவே செய்யும்
ലഠ൬ (് / 136

ലഠ൬ ( / 137
வெள்ளப் பெருக்கும் விருட்சமும்
பேய்க்குணமுள்ள புயற்காற்று கட்டவிழ்த்து விடப்பட்டபோது முரட்டுத் தனமான கடற்கரைகளில் இருந்து பசுமை நிறைந்த வயல்களின் மீது கறுப்புப் பிரளயம் கக்கப்பட்டபோது
சாத்தான் காற்றினூடே கொக்கரித்தான்
விருட்சம் விழுந்தது விருட்சம் விழுந்து விட்டது புயற்காற்றினால் பெருமைமிகு அடிமரம் முறிந்து சிதைந்தது மரம் இறந்து விட்டது.

Page 71
விருட்சமே விருட்சமே மரணிக்க முடியுமா உன்னால்?
சிவுப்புச் சிற்றாறுகள் கேட்டன
பிரிய விருட்சமே இளம் கிளைகளின் திராட்சை ரசத்தினால் உனது வேர்கள் செழிப்படைந் துள்ளன பிரிய விருட்சமே அராபிய வேர்கள் இறப்பதே இல்லை அவை பாறைகளைத் துளைத்து ஆழமாய்ச் செல்வன ஆழ நிலத்திலே அவை தம் வழியினைக் கண்டறிகின்றன
விருட்சமே விருட்சமே
நீ வளர்வாய்
உனது இலைகள் பசுமையாகவும் செந்தளிப்பாகவும் சூரிய ஒளியில் திடீரெனத் தளிர்க்கும் சூரியன் வரைக்கும் இலைகளின் இடையே சிரிப்பொலி கேட்கும் மகிழ்ச்சிப் பெருக்கு நம் தாயகம் நோக்கி திரும்பி நடக்கும்
தாயகம் நோக்கி
தாயகம் நோக்கி
ലഠ൬ (് / 138

ലഠ൬ (് / 139
ஏசுநாதருக்கு
பிரபுவே பிரபஞ்சத்தின் தந்தையே இவ்வாண்டு ஜெருசலேத்தின் உற்சவங்கள் வதை செய்யப்படுகின்றன
பிரபுவே
உங்கள் தினத்தில் எல்லா மணிகளும் மெளனமாய் உள்ளன ஈராயிரம் ஆண்டுகளாக அவைகள் ஒலித்தன இடையறாது ஒலித்தன
ஆனால் இன்றோ
ஊமைகளாக்கப்பட்டன அவைகள்
மண்டபங்கள் இருளடைந்துள்ளன இருட்டு அனைத்தையும் மூழ்கடித்துள்ளது வேதனை வீதியில் நடக்கிறது ஜெருசலேம் சிலுவையின் மீது ஜெருசலேம் புலம்புகிறது சித்திர வதையின் கரங்களில் சிக்கி ஜெருசலேம் குருதி சிந்துகிறது
எனவு பிரபுவே வேதனைக்கு எதிராக உலகின் கதவுகள் மூடிவிட்டன உலகம் இறுகிப் பாறையாய் விட்டது சூரியனின் கண்கள் தோண்டப்பட்டன காணமால் போயிற்று உலகம் கிழிந்து சிதைந்தது உலகம்

Page 72
எனது பிரபுவே ஜெருசலேத்தின் அவலத்தைக் கழுவித் துடைக்க இந்த உலகம் ஒரு மெழுகுவர்த்தி தானும் உயர்த்தவில்லை ஒரு துளிக் கண்ணீர்தானும் சிந்தவில்லை
எனது பிரபுவே திராட்சைகளைப் பராமரிப்பவர்
வாரிசுகளைக் கொன்றுவிட்டனர்
பாவ உலகில் பாவப் பறவைக்குச் சிறகு முளைத்தது ஜெருசலேத்தின் புனிதத்தை அசூசைப் படுத்த அது பறந்து சென்றது
ஓ பிரபுவே
ஜெருசலேத்தின் மகிமையே வேதனைக் கிணற்றில் இருந்து இரவின் ஆழந்த குழிகளில் இருந்து துயரத்தின் மிக இருண்ட கிடங்கில் இருந்து ஜெருசலேத்தின் புலம்பல் உம்மிடம் வருகிறது
பிரபுவே
கருணை காட்டுங்கள் ஜெருசலேத்தின்மீது கருணை காட்டுங்கள் இந்தக் கசப்பான கிண்ணத்தில் இருந்து அதனைக் காப்பாற்றுங்கள்
ലഠ൬ ( / 140

ലഠ൬ (് / 141
அமினா கசக்
ஆங்கிலத்தில் எழுதும் பலஸ்தினக் கவிஞர் அமீனா கசக் 1960 ல் நியூஸிலாந்தில் பிறந்தவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். நியூஸிலாந்துப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் பட்டம் பெற்ற இவர், இசை, ஒவியம், எழுத்தணிக் கலை ஆகியவற்றிலும் ஆர்வம் உடையவர்.

Page 73
நாடு கடத்துதல்
அவர்கள் என்னைப் பிடிக்க வருமுன் நான் என் குரலை எடுத்து உதயத்தின் கீழ் மறைத்து வைத்தேன்
ஆகையால் இரத்தம் ஒழுகும் என் வாயை என் முறிந்த கைகளை பார்வையற்ற என் விழிகளை மட்டுமே அவர்கள் கண்டுபிடித்தனர் ஏமாற்றத்தை வளர்த்துக் கொண்டு என் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும்
அவர்கள் சென்றனர்
ലഠ൬ ശല്ക്കു് / 142

ലഠ൬ (് / 143
என் குரலின் ஒசை இடிமுழக்கம் போல அவர்களின் தலைகளைப் பிளந்தது அவர்களின் நாளங்களின் ஊடே
எனது துயரம் பீறிட்டுச் சென்றது
பின்னர் இரத்தம் ஒழுகும் என் வாயை என் முறிந்த கைகளை பார்வையற்ற என் விழிகளை எடுத்து உலகின் விழிம்புக் கப்பால் வீசி எறிந்தனர்
ஆகையால் அவர்களிடம் நான்
என் குரலை விட்டுச் சென்றேன்
அது என் தாய் நாட்டின் மீதான
காதல் பாடல்களைப் பாடுகிறது
ஒருபோதும் அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது தழுவிக்கொள்ள முடியாது உரிமைகொள்ள முடியாது

Page 74
ஆயிஷாவுடன் என் கடைசிநாள்
இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்
காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று இரவின் வானத்துள் வீசியது சந்திரன் நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது
சொல்வதற்கு உன்னிடம் நிறைய இருந்தன ஆனால் மெளனம் நம்மைச் செவிடாக்கியது வேதனையால் மெளனித்து ஜெருசலேம் தன் குழந்தைகளைப் புதைப்பதைப் பார்த்தவாறு நாம் உட்கார்ந்திருந்தோம்
அந்தச் சிறிய புதைகுழியில் நான் எனது கையை வைத்தேன்
ஒரு கண்ணிர்த் துளியை வழியவிட்டேன்
ലഠ൬ ശല്ക്ക് / 144

ലഠ൬ (് / 145
நாம் இருவரும் கவனித்ததைப் போல் அது மிகவும் சிறியது ஊர்க் குருவியின் உடைந்த சிறகுகளையும் இரத்தம் தோய்ந்த தலையையும் எனது மென் துப்பட்டியால் போர்த்தினேன்
ஜெருசலேத்தின் துயரத்தின் கரையில் முஅத்தீனின் அழைப்பு ஒலித்தபோது அதை நான் மக்காவை நோக்கித் திருப்பி வைத்தேன்
இப்போது மெளனமாக அசைவற்றுக் கிடக்கும் ஊர்க் குருவியைப்போல் அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர உனக்கு ஒருபோதும் சுதந்திரம் இருந்ததில்லை
பலஸ்தீன் மீதுள்ள உனது காதல் ஆகாயத்தைக் கொழுத்தி உயிர்ப்பிக்கும் படிக்கு வலிக்கும் உன் உடலை நீ பூமியின் விழிம்பின்மீது வைத்தாய்
இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்
காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று வானங்களுக்குள் வீசியது
சந்திரன் நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது

Page 75
ஹனான் மிக்காயில் அஷ்றாவி
ஹனான் மிக்காயில் அஷ்றாவி ஆங்கிலத்திலும் அறபு மொழியிலும் எழுதும் ஒரு முக்கிய பலஸ்தீனப் பெண்கவிஞர். அரபுக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.
ലഠ൬ ജൂല്പു് / 146

ലഠ൬ ജൂല്പു് / 147
கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து
நாளை கட்டை அவிழ்ப்பார்கள் எனக்கு யோசனையாக இருக்கிறது எஞ்சியிருக்கும் என் ஒற்றைக் கண்ணால் அப்பிள் பழத்தின் ஒரு பாதியை மட்டும் தோடம் பழத்தின் ஒரு பாதியை மட்டும் என் தாயின் பாதி முகத்தை மட்டும்தான்
என்னால் பார்க்க முடியுமா?

Page 76
துப்பாக்கிக் குண்டை நான் பார்க்கவில்லை என் தலைக்குள் வெடித்த அதன் வலியை மட்டுமே உணர்ந்தேன் பெரிய துப்பாக்கியுடன்
நடுங்கும் கைகளுடன் கண்களில் ஒரு வெறித்த பார்வையுடன் அந்த ராணுவ வீரன் என் மனதில் அழியாதிருக்கிறான் அதைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை
என் மூடிய கண்களால் இவ்வளவு தெளிவாக அவனைப் பார்க்க முடியுமென்றால் எங்கள் தலைகளுக் குள்ளே நாம் இழக்கும் கண்களை ஈடுசெய்ய
இன்னும் ஒரு சோடிக் கண்கள் உள்ளன போலும்
அடுத்த மாதம் என் பிறந்த நாளுக்கு முற்றிலும் புதியதோர் கண்ணாடிக் கண் எனக்குக் கிடைக்கும் சிலவேளை பொருட்கள் நடுவில் தடித்தும் வட்டமாயும் தெரியக்கூடும் நான் விளையாடும் கண்ணாடிக் குண்டுகள் ஊடே உற்றுப் பார்த்திருக்கிறேன் அவை உலகத்தை வினோதமாய்க் காட்டும்
நான் கேள்விப்பட்டேன் ஒன்பது மாதக் குழந்தை ஒன்றும் ஒற்றைக் கண்ணை இழந்ததாக
என்னைச் சுட்ட ராணுவ வீரன்தான் -
தன்னை உற்றுப் பார்க்கும்
ലഠ൬ ജൂല്പു് / 148

ലഠ൬ (് / 149
சின்னஞ் சிறுமிகளைத் தேடும் ஒரு ராணுவ வீரன் தான்அவளையும் சுட்டானோ என்று
எனக்கு யோசனையாக இருக்கிறது
நானோ வளர்ந்தவள்
கிட்டத்தட்ட நாலு வயது
போதிய அளவு நான்
வாழ்க்கையைப் பார்த்துள்ளேன் ஆனால் அவளோ சின்னக் குழந்தை எதுவும் அறியாச் சின்னக் குழந்தை
(றஷா ஹெவ்சிய்யே 1988 மார்ச் மாதத்தில் ஒரு கண்ணை இழந்தாள். இஸ்ரேல் வீரன் ஒருவன் றப்பர் குண்டுகளால் சுட்டபோது அவள் கண்ணை இழக்க நேர்ந்தது. அச்சமயம் றமல்லாவுக்கு அண்மையில் உள்ளஅல்-பிறெஹ் என்ற ஊரில் தன் பாட்டியின் வீட்டு மாடியில் றஷா நின்றுகொண்டிருந்தாள். அச்சமயம் அதே போன்று வேறு இரண்டு குழந்தைகளும் (இருவரும் 9 மாத வயது உடையவர்கள்) ஒவ்வொரு கண்ைைன இழந்தனர். இன்ரிபதா இயக்கத்தின் ஏழாவது மாதத் தொடக்கத்தில் சுமார் 40 பேர் இதேபோல் பாதிக்கப்பட்டனர்.)

Page 77
புதைத்துக் கொல்லுதல்
இந்த இடம் நடுகைக்கு ஏற்றதல்ல
இங்கு நிலம் காய்ந்து வரண்டு தரிசாய் உள்ளது காய்ந்த இலைகளின் ஊசி முனைகள் கீறி விறாண்டுகின்றன
நான் கண்களை மூடுகிறேன் புழுதி என் தொண்டையை அடைக்கிறது நிலம் இவ்வளவு பாரமாய் இருக்குமென்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை
ലഠ൬ ജൂല്പു് / 150

ലഠ൬ ജൂല്പു് / 151
சிலவேளை எனது கரம் ஒன்றை நான் வெளியே நீட்டக் கூடும் ஒருநாள் என் புதைகுழியைக் கடந்து செல்லும் ஒருவன் பின்னிரவு வேளைகளில் காட்டப்படும் திகில் படங்களில் வருவதுபோல் உயிரற்ற ஒரு கையை விரல்கள் பாதி சுருண்டு விரிந்த ஒரு உள்ளங் கையைக் கண்டு அலறுவான்
அன்று நான் சாகவில்லை
வேறு எதுவோதான் செத்தது
தன் இருளின் அறிவை
நொதிக்க விட்டவாறு
அழுகி நாறும் புதைகுழியில்
அது இன்னமும் கிடக்கிறது
(1988 பிப்ரவரியில் நப்லஸ்"க்கு அண்மையில் உள்ள சலீம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இசாம் ஷபீக் இஷ்தையே, அப்துல் லத்தீப் இஷ்தையே, முஹ்சின் ஹம்துன், முஸ்தபா அப்துல் மஜீத் ஹம்துன் ஆகிய நான்கு இளைஞர்களை
இஸ்ரேல் ராணுவத்தினர் உயிருடன் புதைத்தனர். படையினர் சென்றபின் கிராமவாசிகள் அவர்களின் சடலங்களைத் தோண்டி எடுத்தனர்)

Page 78
சுலஃபா ஹிஜாவி
1934ல் நபுலஸில் பிறந்த இவர், தன் இளமைக் காலத்தின் பெரும் பகுதியைப் பக்தாத்தில் கழித்தார். காசிம் ஜவாட் என்ற ஈராக் நாட்டுக் கவிஞரைத் திருமணம் செய்த இவர், பக்தாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியமும் giraffailurgylb sppoif, Review of the Centre for Palestenian Studies சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவராகப் பணிபுரிந்தவர். அரபு, ஆங்கில மொழிகளுக்கிடையே நிறைய மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். Poetry of Resistance of Occupied Palestine (1969) GT GåT Lug, g) Guř ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிதைத் தொகுப்பு. 1977ல் பலஸ்தீனப் பாடல்கள் என்ற இவரது சொந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
ലഠ൬ (് / 152

ലഠ൬ (് / 153
அவனது படம்
அவனது சடலம்
தூக்குமேடையில் காற்றில் அசைந்துகொண்டிருக்கையில் அவனது படம் இன்னும் சுவரில் தொங்குகிறது வெதுவெதுப்பாகவும் பிரகாசமாகவும்
தயவுசெய்து கவனி காற்றுக்கு அது ஒரு திறந்த அடையாளம்
ஓ காற்றே அவனது உடலின் காயங்களைத் தடவிக்கொண்டு நான்கு திசைகளுக்கும் நீ செல்கையில் தூங்கும் குழந்தைகளை எழுப்பிவிடாதே அல்லது காத்திருக்கும் நட்சத்திரங்களுக்குச் சொல் கொலைக்கள வீதியில் அவர்கள் அவனைத் தூக்கிலிடும் போது அவனது படம் சுவரில் இன்னும் தொங்குகிறது வெதுவெதுப்பாகவும் பிரகாசமாகவும்

Page 79
மரண தண்டனை
இரவில் படையினருக்குக் கட்டளை வந்தது எங்கள் அழகிய கிராமம் செய்த்தாவை அழித்திடுமாறு
செய்த்தா
மரங்களின் மணமகள் முகை அவிழும் மலர்ச் சோலை காற்றுகளின் தீப்பொறி
இருளில் வந்தனர் படையினர் கிராமத்தின் புதல்வர்
மரங்கள்
வயல்கள்
மலரா முகைகள் அனைத்தும் புகலிடம் தேடி செய்த்தாவை இறுகப்பற்றி அணைத்து நின்றன
"கட்டளை இதுதான் விடியமுன்னர் செய்த்தா அழிக்கப்படும் எல்லாரும் வெளியேறலாம்"
ലഠ൬൪ ൯൭് / 154

ലഠ൬ ജൂല്പു് / 155
ஆயினும் நாங்கள் இறுகப்பற்றி அணைத்து நின்றோம் பாடினோம் செய்த்தா எங்கள் பூமி பூமியின் இதயம் நாம் அதன் கிளைகள்
எனினும் மக்கள் வீழ்ச்சி அடைந்தனர் சிறிது நேர எதிர்ப்பு பின்னர் இரவுகளின் எல்லை தாண்டி அழிவற்ற ஒரு அணைப்பாக மட்டும் செய்த்தா எஞ்சி இருக்கிறாள்
வினாடிகளில் அவள் கற்குவியலானாள் ஒரு சிறு அடுப்புக்கூட மிஞ்சவில்லை மனிதரும் கற்களும் அரைக்கப்பட்டு புழுதியாய் மாறினர் சாத்தியமற்றதின் வெளிச்சத்தில் என்றைக்குமாகத் தூவிக் கலந்தனர்
இப்போது மாலை வேளைகளில் எமது காற்றின் பாடலில் சமவெளிகள் மேலாக தன் கருஞ்சிவப்புத் தீப்பொறிகளைக் கனலவிட்டவாறு செய்த்தா எழுகிறாள் காலையில் செய்த்தா
வயல்களுக்குத் திரும்புகிறாள்
டியூலிப் மலர்களைப்போல் செய்த்தாவில் இரவுதான் காலை இரவுதான் காலை

Page 80
லைலா அல்லுரஷ்
1948ல் பிறந்த லைலா அல்லூஷ் ஓர் இஸ்ரேல் பிரஜையாகவே வாழ்ந்துவருகிறார். தன் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்ந்துவரும் இவருடைய கவிதைகள் ஆக்கிரமிப்பின் அனுபவங்களைப் பேசுவன. திறந்த காயத்தின் மீது வாசனைத் திரவியங்கள் (1971) வறட்சியான ஆண்டுகள் (1972) முதலிய கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
ലഠ൬൪ ൯" / 156

ലഠ൬ ജൂല്പു് / 157
ஒரு புதிய படைப்பு
நான் ஜூனில் பிறந்தேன்
அதனால்தான் என் கண் இமைகள்
முட்களால் அடையாளம் இடப்பட்டுள்ளன
அதனால்தான் நான் என் கண்களில் இருந்து வேதனை மிகுந்த இரவை அகற்ற உதயத்திற்காய் காத்திருக்கிறேன்

Page 81
நான் ஜூனில் பிறந்தேன்
அதனால்தான்
என் பெயரை மாற்ற அலுகோசு முயன்றுகொண்டிருக்கிறான் அவன் தன் மீசையை நறுக்கிக்கொண்டு என் சிறையின் வெடிப்புகளைக் காவலிடுகிறான் என் தசையினைப் புசிக்க வேட்கைகொண்டலையும்
விலங்குகளுக்காக திறந்த வெளியை விட்டுவைத்திருக்கிறான்
நான்பிறந்தது ஜூனில்
அதனால்தான் அவர்கள் திருடிய என் உடைகளாலும் என் சப்பாத்துகளாலும்
என் கோட்டினாலும் ஓராயிரம் வெருளிகளை உருவாக்கி நஞ்சூட்டிய அம்புகளை அவற்றுள் செருகி என் நிலம் எங்கும் நட்டுவைத்துள்ளனர் என் பாட்டனின் வாளை ஒளித்துவைத்துள்ளனர் அவரின் எச்சங்களை
என் கண் எதிரே விலைகூறி விற்கின்றனர்
ஜூனில் நான் பிறந்தேன் நான் மீண்டும் ஜூனிலே உயிர்பெற்று வந்தேன்
அதனால்தான் உதயத்துக்காகக் காத்திருக்கிறேன்
ലOല്ക്ക് ബ്രിബ്നു് / 158

ലഠ൬ ജൂല്പു് / 159
நரம்புகளோடும் தசையோடும் கண்களோடும்
காத்திருக்கிறேன்
அதனால்தான்
இன்னும் நான் குழந்தைகளைப் பெறுகிறேன் சித்திரவதை இரவில் விலங்குகளிடம் இருந்து என் உணவைப் பாதுகாக்கிறேன்
மேலும் அதனால்தான் என் பண்டைக்கால ஒலிவம் கிளை படைப்பின் நடுக்கத்தினால் இருபது ஆண்டுகளின் பின் என் கையில்
ஒரு நெருப்புச் சவுக்காக மாறி மீண்டும் விழிப்புற்று எழுந்தது

Page 82
சல்மா கத்றா ஜய்யூசி
ஜோர்த்தானில் பிறந்த ஜய்யூசி தன் சிறுபிராயத்தை அக்றேயிலும் ஜெருசலேத்திலும் கழித்தவர். பெய்ரூத் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் அறபு, ஆங்கில மொழிகளைப் பயின்ற இவர், லண்டன் பல்கலைக் கழகத்தில் அறபு இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். பல்வேறு அறபு, அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியையாகப் பணிபுரிந்த ஜய்யூசி ஆசிரியத் தொழிலைக் கைவிட்டு 1980ல் PROTA (Project of Translation from Arabic Literature) 67 6öTg9y lib sgy60) LDlugou நிறுவினார். அந்நிறுவனம் இதுவரை 15 நூல்களை Gaugifu'll Gairangi. Trends and Movements in Modern Arabic Poetry என்ற இவரது நூல் 1977 ல் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இவர் ஆங்கிலத்தில் தொகுத்து Gn6j6ĥu97uo L — Anthology of Moderm Palestinian Literature (1922) என்னும் நூல் பலஸ்தீன இலக்கியத்தை அறிந்துகொள்ள விரும்புவோர்க்குப் பெரு விருந்தாகும். இப்போது பலஸ்தீனக் கவிதைகள் இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றுள்ள அனேக கவிதைகள் இவரது தொகுதியிலிருந்து தெரியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ലഠ൬ ശല്ക്ക് / 160

ലഠ൬ ബില്ക്ക് / 161
1968 ஜூன் 5
கடந்த ஜூன் என் இதயத்தின் இறுதி நாளத்தையும் வெட்டிவிட்டது
என் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? வெட்கப்படத்தக்க எனது இறுதிச்சடங்கு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?
இறந்தவர்கள் தெருவில் பிறந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டு பின் புதைக்கப்பட்டதுதான்
இதில் வேடிக்கை
இளமைக் கனவுகள் போல சவப் பெட்டியும் தொலைந்து போகட்டும் என்றே நான் விரும்புகிறேன்
எனது மரணத்தைப் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்த நச்சுக் கோப்பையைப் பற்றி மரணத்தின் மீது காதல் கொண்ட அந்த மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?
ஆம் நீ கேள்விப்பட்டிருக்கிறாய் அவர்கள் அவனை என்னருகே கிடத்துகையில் என்னைப் புதைப்பதை உனது சவச்சாலைப் பொறுப்பாளி
பார்த்துக் கொண்டிருந்தான்

Page 83
பயன்பட்ட நூல்கள்
கவிதைகளும் கவிஞர்கள் பற்றிய குறிப்புகளும் பின்வரும் நூல்களில் இருந்து பெறப்பட்டன. நூலாசியர்களுக்கு நன்றி.
Abdullah al-Udhavi, (Ed), (1986) Modern Poetry of the Arab World, Penquin Books.
Mahmood Darwish, (1980) The Music of Human Flesh (Selected and translated by Denys Johson Davies), Heinemann London and Three Continents Press, Washington, D.C.
Salma Khadra Jayyusi, (Ed.) (1992) Anthology of Modern Palestinian Literature, Colombia University Press, New York.
Sharma, PS. (Ed) (1976) Forever Palestine, A collection of Palestinian Resistance Poems, P.L.O. (India) Office, New Delhi.
ലഠ൬ (് / 162


Page 84
போராடுவதற்கான நியாயங்கள் திசைகளிலும் இன்னும் இருந்து அதுவரை போராட்டங்கள் வெ. எடுத்துச் செல்லப்படுவதையும் சக்திகளாலும் தடுத்து நிறுத்திவி மெய்ப்பிக்கும் மண்ணும் மனி: பலஸ்தீனமும் பலஸ்தீன மக்
நீதி கேட்டுப் போராடி வரும் ட உலகம் இன்னும் நீதி வழங்கிலி தொடர்ச்சியாக நீடித்து வரும் பாலஸ்தீனப் போராட்டம் பல
கைமாறிக் கொண்டே செல்கிற
ஈழத்திலும் இதுதான் வரலாறா யதார்த்தம் மனிதாபிமானிகை ஆனாலும் ஆதிக்க சக்திகளுக்கு போராடுவதற்கான நியாயம் ஈ நாள் அதிகரித்தே வருகிறது அ வேறுபாடு உணரப்படாததை ந பதிவு செய்து வைத்திருக்கிறது
எம்.ஏ. நுஃமானின் மொழி டெ பதிப்பிக்கப்படும் இத் தொகுதி இன்றும் நமது குரலாகவே இரு இத் தொகுதி பதிப்பிக்கப்படுவ
நோக்கமாகும்.
 

i பூமிப்பந்தின் சகல
கொண்டே இருக்கின்றன. படிப்பதையும் அது முன்
எந்த ஆதிக்க ட முடியாது! இதை தர்களும்தான்
களும்,
லஸ்தீனர்களுக்கு இந்த
Lelläjaa. gla)älä போராட்டமாக உள்ள சந்ததிகளுக்கும்
芭l
கிவிடுமோ என்ற ா அச்சுறுத்துகிறது. து எதிராக ழத்து மண்ணில் நாளுக்கு அனுபவச் சூழலில் அதிகம் மது இலக்கியச் சூழலும்
பயர்ப்பில் தொகுக்கப்பட்டு யிலுள்ள கவிதைகள் நக்கிறது என்பதுதான் தன் உள்ளார்ந்த