கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவின்கலைக்கு ஓர் கலாகேசரி

Page 1


Page 2

கவின்கலக்கு ஓர் கலா கேசரி
இரசிகமணி கனக, செந்திநாதன்
குரும்பசிட்டி, சன்மார்க்க.சபை

Page 3
சன்மார்க்க சபை வெளியீடு : 37 ஒகஸ்ட், 1974
விலை: ரூபா 3-OO
திருமகள் அழுத்தகம், சுன்னகம்

பதிப்புரை
உலகியலிலும் மெய்ந்நெறியிலும், சென்ற நாற்பது வருடங்களாகத் தொண்டு செய்து வரும் சபை குரும்பசிட்டி சன்மார்க்க சபை. அது தன் முக்கிய நோக்கங்களில் ஒன்ருகச் சிறந்த நூல்களையும் வெளியிட்டு வந்திருக்கிறது. இதுவரை முப்பத்தாறு நூல்களை அது வெளியிட் டுள்ளது. Y.
'கவின் கலைக்கு ஒர் கலாகேசரி" என்ற இந்த நூல் கலைஞர் ஆ. தம்பித்துரை அவர்களது கலைத்தொண்டுபற்றிய நூலாகும். கலாகேசரி அவர்கள் சன்மார்க்க சபையின் முக்கிய உறுப்பினர். அதற்காக, அவரை உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்த நூலை நாம் வெளியிடவில்லை, அவர் அடக்கமானவர்; விளம்பரம் வேண்டாதவர். ஈழம் நன்கு அறிந்த கலைஞர். இந்த நூலால் அவரது புகழ் ஏறிவிடப் உேபாவதில்லை.
ஆனலும் அவரது வாழ்க்கையில் இருபத் தைந்து வருடத்தைச் சிற்பம், தேர், வாகனம், எழுத்து, பிற நல்ல தொண்டு என்பவற்றுக்கே செலவ்ழித்தார். அப்படிப்பட்ட கலைஞரைத் தக்கபடி சன்மானித்து வாழ்த்த வேண்டியது நன் மனதுடையோர் கடன். எனவே, அவரது

Page 4
νi
தொண்டின் வெள்ளிவிழாவைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், அன்னரது பலவகைப்பட்ட முயற்சிகளை, செயற்பாடுகளை, கலைவன்மையை எடுத்துக்காட்டும் நூல் ஒன்றையும் வெளியிட விரும்பினுேம்.
அவரது கலை வாழ்க்கையைச் சரியானபடி ஆய்ந்துணர்ந்து எழுதக்கூடியவர் இரசிகமணி கனக. செந்திநாதனே என எண்ணி இந்தப் பொறுப்பை அவரிடம் விட்டோம். ஏற்கெனவே கலாகேசரி தம்பித்துரை அவர்களின் தந்தையார் சிற்பாசாரியார் திரு. வி. ஆறுமுகம் அவர்களைப் பற்றிக் "கலைமடந்தையின் தவப்புதல்வன்" என ஒரு நூலை ஆக்கி அளித்துள்ளார்; அது மாத்திர மல்ல, அவர் இந்த நாட்டுப் பெரியோரை, எழுத்தாளர்களை, கலைஞர்களை நன்கு அறிமுகம் செய்தும் வைத்துள்ளார். அப்படிப்பட்ட ஒருவர்தான் கலாகேசரி பற்றி எழுதுதல் பொருத்தமுடைத்து.
இரசிகமணி எழுதிய இந்த நூல் கலாகேசரி யின் பலவகைத் தொண்டை, சிற்பத் திறனை, கலை வாழ்க்கையை நன்கு சித்திரிக்கிறது. இந்த நூலை எழுதி உதவிய இரசிகமணி கனக. செந்திநாதனுக்கும், அழகாக அச்சிட்டுதவிய சுன்னகம், திருமகள் அழுத்தகத்தினருக்கும் எம் நன்றி உரியது.
உண்மையான ஒரு கலைஞரைத் தக்கபடி நீங்கள் உணர்வீர்களானல் அதுவே இந்த நூலை வெளியிட்டதன் பேறு என நாம் அகமகிழ்வோம்.
சன்மார்க்க சபையினர் குரும்பசிட்டி, 1-8-74,

ள்ளே.
பக்கம்
1. காண்மினுே ! காண்மினே !! 1 2. சிற்பங்கள் பேசுகின்றன 5 3. கலைமடந்தையின் புதல்வன் 9 4. பரம்பரைக் கலை-பார்த்துப்பழகும் கலை 13 5. கண்டிப்பான தந்தையும்
- கண்ணியமான அதிபரும் 17 6. சித்திரப் படிப்பில்
என் சிந்தையைக் கவர்ந்தவர் 21 7. மறக்கமுடியாத மகாஜனக் கல்லூரி 25 8. கண்டறியாதன கண்டேன் 3. 9. கலாகேசரியின் நூல்கள் 35 10. சிறுவர் சித்திரம்
துரிதநடை போடுகிறது 41 11. அம்பாளை வணங்கினேன்
அனைத்தும் சித்திக்கிறது 47 12. நினைவில் நிற்கும் பிறவேலைகள் 53 13. தேர்-தேர் அமைப்புக்கள்
--சுதுமலை அம்பாள் தேர் 14. தேன் சிந்தும் மலர்

Page 5
* வாழ்வு சிறிது
வளர்கலை பெரிது '

கல்ாகேசரி ஆ. தம்பித்துரை அவர்கள்

Page 6

1. காண்மினுே! காண்மினே!
கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத
லோரிறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
யூற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருகா லூன்றி
வண்டு பாடச் சுடர்மகுட மாடப் - பிறைத் துண்ட மாடப் புலித்தோலு மாடப் - பகி ரண்ட மாடக் குலைந்தகில மாடக் - கருங் கொண்ட லோடுங் குழைக் கோதையோடுங் - கறைக் கண்ட ஞடுந்திறம் காண்மினே! காண்மினே!
"கறைக் கண்டன் ஆடுந் திறம் காண் மினே!காண்மினே!” என்று குமரகுருபரர் எம்மையெல்லாம் அழைக்கின்ருர், தாம் கண்ட அளப்பிலா ஆனந்தத்தை நீங்களும் சற்றே பார்த்து அனுபவியுங்கள் என்று கூவி அழைக்கிருர். எம்பிரானது ஆட் டத்தை 'வண்டு பாடச் சுடர் மகுட மாட என்று தொடங்கி ஐந்து,வரிகளில் அப்படியே படம்பிடித்துக் காட்டுகிருர்,

Page 7
- 2 -
நடனம் நம் கண்முன்னே நடப்பது போலச் சொற்கள் வேகமாக வந்து விழு கின்றன. சொற்கள் செய்யும் மாய வித்தையைக் கண்டு நாம் ஆஹா என்று பூரிப்புக் கொள்கிறேம். பாடிய பக்த ரோடு நாமும் ஆடத் தொடங்குகிருேம்.
இப்படிப் பக்தர்களும் புலவர்களும் தம் ஈடற்ற கவிதைகளால் நம்மை எல் லாம் வேருெரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிருர்கள். இதே காட்சியைக் கல் லில் வடிக்கும் சிற்பி தமது சிற்றுளியால் தத்ரூபமாக வடித்துக் கண்டோரைப் புளகாங்கித மடையச் செய்கிருர். பேரா சிரியர் கல்கி அவர்கள் "நம் தந்தையர் செய்த விந்தைகள் " என்ற கட்டுரையில் எழுதிய ஒரு சிறு குறிப்பு இது:- "இந்தப் பழம் பெரும் நாட்டில் நம் தந்தையர் சில விந்தைகளைச் செய்திருக்கிருர்கள். அவற்றை அறியும்போது நம் மூச்சினில் சக்தி பிறப்பது மட்டுமல்ல மூச்சே நின்று விடும் போன்ற ஆச்சரியத்தில் மூழ்கி விடுகிருேம்.? தமிழ்நாட்டுக் கோவில் களைத் தரிசித்து அவற்றின் சிற்ப வேலைப் பாடுகளைப் பார்த்தவர்கள் கல்கியின் எழுத்தை அப்படியே ஒப்புக்கொள்வார் கள் என்பது திண்ணம் கல்லிலும் கவி தையிலும் வடித்த இந்தக் காட்சிகள் யாழ்ப்பாணத்தில் அதிகம் இல்லை. தமிழ்
நாட்டில் உள்ளவை போன்ற பெரிய

- 3 -
கோவில்களே இங்கு இல்லாதபோது இவற்றிற்கு இங்கு இடமேது ?
இந்தச் சிந்தனையில் நான் மூழ்கி யிருக்கும்போது தற்செயலாக " " கறைக் கண்டனர் ஆடும் திறத்தையும், காளி தேவி ஆடும் காட்சியையும் ஒரு கலைஞ ரது வீட்டிலே மரச்சிற்பமாகக் கண்டுஅழகே உருவாகக் கண்டு அதிசயித்தேன். என் மனத்திரையில் “வண்டு பாடச் சுடர் மகுடமாட ‘ என்ற பாடல் மிதந்து வந்தது.
ஆ ! எவ்வளவு அழகாக அந்த நட னத் திருக்கோலத்தை-ஊர்த்துவ தாண் டவத்தை - அவர் சிற்பமாகச் செதுக்கி யிருக்கிருர் என்று வியந்தேன். கல்லிலும் சொல்லிலும் உள்ள அதே அழகை எப் படி மரத்திலும் கொண்டுவர முடிந்தது? என்று அதிசயித்தேன்.
இதனல் ஒரு முடிவுக்கு வந்தேன். **ஆற்றின்கீழ் ஒடும் அரும் ஊற்றைப் போல இங்கு போற்றும் கலைகள் இன் னும் பூண்டற்றுப் ப்ோகவில்லை. அவற் றைப்பற்றி எடுத்துச் சொல்ல ஆட்கள்தா னில்லை’ #? କଁ? மற்றவர் களைப்பற்றி நீ ஏன் க்கிருய்? உனக்குத் தமிழில் இந்தக் கலைஞரைப் பற்றி நீ எழுதினுல் என்ன? என் மனமே என்னைக் கேட்டது.

Page 8
- 4 -
நாலு காதற் சிறுகதைகளும் ஐந்து புதுக் கவிதைகளும் எழுதிவிட்டுத் தலை நிமிர்ந்து ஏன் நான் எழுத்தாளனில்லை யோ? என்னைப்பற்றி ஒரு வரி எழுதபேச - கசக்குதா? என்று கேட்போரை எனக்குத் தெரியும். இதோ இந்தக் கலை ஞர் அவர் பெயர் தம்பித்துரை - கலா கேசரி என்ற பட்டம் பெற்றவர். வட மாகாணச் சித்திர வித்தியாதிகாரி-ஐந்து நூல்களின் ஆசிரியர். பத்துத் தேர்களை உருவாக்கியவர். சிறுவர் சித்திரக் காட்சி கள் மூலம் பல சாதனைகளைச் செய்தவர், அருமையான சிற்பக் கலைஞர். வாகன வேலையில் தனித்தன்மை கொண்டவர். அதிகம் பேசாதவர். அடக்கமே உருவா னவர். நல்ல கலைஞர்களைப் போற்று பவர். மரபை மீருமல் ஏதாவது புதுமை செய்யலாமா? என்று சிந்திப்பவர்-அவ ரைப்பற்றி எழுதுவது எனத் தீர்மானித்து
விட்டேன்.
பக்தர் ஒருவர் சிவபிரானின் நடனத் தைக் காண்மினே! காண்மினே !! என அழைத்தார். அவ்வளவு தகுதி எனக் கேது ? எனினும் கலைஞரது அகவாழ் வைக் காண உங்களை அழைக்கிறேன்.

நந்தாவில் மனேன்மணிஅம்பாள் தேர்ச் சிற்பம்
(துர்க்கை)

Page 9

2. சிற்பங்கள் பேசுகின்றன
கறைக்கண்டன் ஆடும் சிற்பத்துக் காகவும் காளியின் நர்த்தன சிலைக்காக வும் ஒரு நூலா-ஒரு பேட்டியா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. யாழ்ப்பாணம்-பலாலி நெடுஞ்சாலையில் வயாவிளான் மத்திய கல்லூரி இருக்கும் இடத்தில் இருந்து மேற்கு நோக்கி ஒரு தெரு செல்கிறது. குரும்பசிட்டிக்குச் செல்லும் தெரு அது. அதன் வழியே வாருங்கள் அரை மைல்-இரண்டு திருப் பங்களை-தாண்டி வந்தால் தெருவின் தெற்குப் பக்கத்தே ' கலாகேசரி கலா லயம் இருக்கிறது - இப்போதுதான் தொடங்கப்பட்டு அரைகுறையாக இருக் கிறது. வாகன வேலை நடைபெறுவதால் அதன் உடல் கால்-தலைப் பாகங்கள் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கின்றன. உள்ளே ஆங்கிலம்-சம்ஸ்கிருதம் -தமி ழில் சிற்ப சித்திர சம்பந்தமான நூல்கள் அடங்கிய அலுமாரி ஏராளமான சிறுவர் படங்கள் வைக்க இடமில்லாமல் அறை ன்ய நிரப்பிக்கொண்டிருக்கின்றன. வா னெலிப் பெட்டி மென்மையாகப் பாடிக் கொண்டிருக்கிறது, மெல்லிய உளியின் சத்தம் கேட்கிறது, கலாகேசரி தம்பித் துரிை வேலைசெய்துகொண்டிருக்கிருர், மாலை ஐந்து மணி, மஞ்சள் நிறவெயிலின் பின்னணியிலே மதுரை மீனுகூதியம்மன்

Page 10
--س-۔ 6 --س۔
சிற்பத்தை அவர் உருவாக்கிக் கொண் டிருக்கிருர்; தூரத்தே சிற்பத்தை வைத்து விட்டு அதன் அழகை அனுபவித்துக் கொண்டிருக்கிருர்.
அப்போதுதான் நான் படிகளில் ஏறி விருந்தைக்கு வருகிறேன். 'இரசிக மணியா? வாருங்கள் வாருங்கள்’’ என வரவேற்கிருர் கலாகேசரி. ‘என்ன ஆறு மாதமாக அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வேலை மும்முரமோ’’ என் கிறேன் நான்.
"ஆமாம், இது வேலையல்ல. ஒரு யோகம். காலை எழுந்து இரண்டு மூன்று பள்ளிக்கூடங்களைப்பார்த்துவிட்டு நான்கு மணிபோல இந்த வேலைக்குத் தொடங்கு கிறேன். பிறகு இரவு பத்து மணிவரை ஒரே வேலைதான். ஒவ்வொரு சிற்பமா கக் கற்பனை செய்து உளிகொண்டு வேலை செய்யும்போது என்னையே மறந்துவிடு கிறேன். சிலநேரம் உணவையே மறந்து விடுகிறேன். இந்தச் சிலைகளை நான் ஆக்க வில்லை. என்னிடம் இருக்கும் ஏதோ உணர்வு ஒர் ஆவேசம் ஆக்குகிறது. நான் என்னை இழக்கிறேன்; இவற்றை இரசிக்கிறேன்; இவற்றுடன் பேசுகிறேன். அதனல் ஆறு மாதங்களாக வெளி உலகத் தொடர்பை விட்டுவிட்டேன்' என்கிருர் அவர். *ル
நான் அவர் வடித்த சிலைகளைப் பார்க்கிறேன்.

-- 7 -ང་མ་
ஒரு சிற்பமா ? இரண்டு சிற்பமா ? இல்லை. பத்து இருபதா? நம்பமாட்டீர் கள். அறுபத்திரண்டு சிற்பங்கள்! ஆம். அறுபத்திரண்டு தெய்வீக உருவங்கள் !! தான் செய்து கொடுக்கப்போகும் சுதுமலை அம்மனின் சித்திரத்தேர் ஒன் றுக்காக-அவர் இரவுபகலாகக் தனியே இருந்து கற்பனையில் மூழ்கி வடித்தெடுத்த சிற்பங்கள் அவை.
அவை ஒவ்வொன்றும் தங்கள் கதை களைப் பேசுகின்றன. அழகொழுகச் சிரிக் கின்றன. ஆர்ப்பரித்த மூர்க்கத்தோடு போரிடுகின்றன.
தேரின் நடுவில் வைக்கப்போகும் பூமாதேவியின் அழகுதானென்ன !
திருவானைக்காவில் யானையும் சிலந்தி யும் வழிபட்ட காட்சி,
திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் கொடுக்கும் அழகு,
சம்பாநதிக்கரையில் அம்பாள் தவ இருக்கை,
சரவணப்பொய்கையில் அறுமுகன் ஆறு குழந்தைகளாக வளரும் திருக் கோலம்,
மீனுகதி திருக்கல்யாணம்,
முருகனுக்கு அம்பாள் வேல்கொடுத்த srit "G).

Page 11
- R -
இவை ஒவ்வொன்றும் நமது பழைய புராணக் கதைகளையே பேசுகின்றன.
இவை மாத்திரமா? புவனேஸ்வரி, தட்சணுமூர்த்தி, மனேன்மணி, கைலாச வாகனம், கஜகெளரி, நவமணிச்சக்திகள், விநாயகர், மகிஷாசுரமர்த்தனி, மதுரை மீனுகூழி என்பன அழகொழுகச் செதுக்கப் பட்டிருக்கின்றன.
இவை மட்டுமல்லாமல் பிரம்மாஞான சரஸ்வதி; மன்மதன்-ரதி; விஷ்ணு --மகாலட்சுமி, ஊர்த்துவ தாண்டவம் (சிவன் நடனம்-காளி நடனம்-தும்புருநந்தி) என்பவை கூட்டங் கூட்டமாகச் செதுக்கப்பட்டுப் பார்ப்போரைப் பர வசப் படுத்துகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலே விசுவ கர்மாவின் அழகான சிற்பம்.
ஆம், அது ஒரு சிற்பப் பூஞ்சோலை, சிற்பவனம்.
அவற்றை ஒவ்வொன்ருகக் காட்டி அவற்றிலுள்ள நுட்பங்களை விளக்கினர் கலாகேசரி. ஒவ்வொரு தெய்வத்தி னதும் அங்க அமைப்புக்கள் ஆயுதங்கள் . ஆடை ஆபரணங்கள் அவை சம்பந்த மான செய்திகள் எல்லாவற்றையும் அவர் சொல்லும்போது பிரமிக்கிருேம். தெய்வச்சிலைகள் பேசுவது இருக்கட்டும். அதை ஆக்கிய சிற்பியைப் பேச வைப் போம்.

சிற்பாசாரியர் வி. ஆறுமுகம் அவர்கள்

Page 12

3. கலமடந்தையின் புதல்வன்
“உங்கள் தந்தையார்-குடும்பம்பற்றிமுதலில் சொல்லுங்கள்’’ என்கிறேன் நான், கலாகேசரி சிரித்துக்கொண்டே * கலைமடந்தையின் தவப்புதல்வன் ’ என்ருெரு சிறிய புத்தகத்தைத் தாங்கள் தானே எழுதி வெளியிட்டிருக்கிறீர்கள். அதில் உள்ளவற்றைவிட வேறு என்ன சொல்ல இருக்கிறது?’ என்கிருர் .
*** கலை மடந்தையின் தவப் புதல்வன்’ (ஆறுமுகம் ) பற்றியும் கலாகேசரியின் கைவண்ணம் பற்றியும்-தந்தை மகன் இருவர் பற்றியும்-எழுதச் சந்தர்ப்பம் கிடைத்ததே, என் பாக்கியம்' என்கி றேன்.
‘'என் தந்தையார் உயர்ந்த கலைஞர். அந்தக் காலத்தில் ஆறுமுக சிற்பாசாரி யார் என்ருல்- அவர் செய்த தேர், வாக னம் என்ருல்-தனி மதிப்பு இருக்கத்தான் செய்தது. அவருடைய புகழுக்கு முன் நான் எம்மாத்திரம் ?' என்கிருர் கலா கேசரி அடக்கமாக, அவர் தன்னுடைய தந்தைமேல் வைத்திருக்கும் அ ன் பு வெறும் தந்தை-மகன் அன்பு அல்ல. பேசும்போதெல்லாம் தந்தையாரின் கலை -தனித்தன்மை-மனிதர்களுக்குத் தலை வணங்காத குணம், தன்னை இத்துறை யில் ஈடுபடச் செய்த முயற்சிகள் பற்றி

Page 13
- 10 -
அடிக்கடி குறிப்பிடுகிருர், அரிய நிகழ்ச்சி களை எல்லாம் சொல்கிருர், கேட்கும் எனக்கு, "அவர் மகனுகப் பிறக்க என்ன தவம் செய்தேனே நான் அறியேன்" என்று அவர் உள்ளம் பேசுவது கேட் கிறது.
திருநெல்வேலி ஆறுமுகம் சிற்பாசாரி யார் என்ருல் தேர், வாகனம் சம்பந்தப் பட்டவர்களுக்கு எல்லாம் நன்கு தெரியும். யாழ்ப்பாணத்திலே புகழ் பெற்ற புலவர்களையும் உரையாசிரியர்களையும் பெற்றெடுத்த பெருமை சாவகச்சேரிப் பகுதிக்கு உண்டு. அப்பகுதியைச் சேர்ந்த ஊராகிய மட்டுவிலிலே 1891ஆம் ஆண்டு பிறந்தவர் ஆறுமுக சிற்பாசாரியார். இளமையிலே தமது குலத் தொழிலைப் பழகிக் கொண்டு தமிழ்நாடு சென்ருர், அங்கே தஞ்சாவூர் நாராயணசாமி ஸ்தபதி அவர்களிடம் சிற்பவேலைகளின் நுணுக்கங்களைப் பழகிக்கொண்டார்.
அவர் சுழிபுரத்தில் விவாகம் செய்து கொண்டாலும் திருநெல்வேலியையே இருப்பிடமாகக் கொண்டார். அவர் அமரத்துவம் அடையும்போது வயது 73. ஆறுமுக சிற்பாசாரியார் செய்த தேர் களில் பெரும்புகழ் தந்த தேர் வீரமா காளியம்மன் கோவில் தேராகும். அவ ரது காலத்துக்குமுன் யாழ்ப்பாணத்தில் அநேகமாக அடித் தளம் மாத்திரம்

ー l l ー
வேலைப்பாடுடன்கூடிய தேர் கள் தான் இருந்தன. பின்புதான் மேல்பண்டிகை யோடு செய்யப்பட்ட தேர்கள் உருவா கின. வீரமாகாளியம்மன் தேர் உருவா கியபொழுது அப்போது தேசாதிபதியாய் இருந்த சேர் அன்டுறு கால்டிகொற் அவர் கள் அதைப் பார்வையிட வந்திருந்தார். கலைஞர் ஆறுமுகம் பாயும் சிங்கம் ஒன்றை அவருக்குப் பரிசளித்தார். உடனே தேசாதிபதி தனக்குத் தெரிந்த தமிழில் **இது சிங்கம், என்னை இங்கு அழைத்து வந்தவரும் தளையசிங்கம், இதைச்செய்த நீரும் ஒரு சிங்கம்' என்று பாராட்டினர். அதோடுமட்டும் நிற்கவில்லை. கொழும்பு திரும்பியவுடன் ஒரு நற்சாட்சிப் பத்திர மும் அனுப்பிவைத்தார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இது :-
குயின்ஸ் ஹவுஸ், கொழும்பு
16-6-41
கனம்பொருந்திய தேசாதிபதியவர்களின் வேண்டுகோளின்படி இதனைத் தங்களுக்கு அறியத்தருகிறேன்,
கடந்த மாதத்தின் இறுதி நாட்களில் கனம் தேசாதிபதியவர்கள் வீரமாகாளியம்மன் கோவி லுக்கு வியஜம் செய்தபோது அங்குள்ள புதிய தேரின் " எழிலான இன்பமூட்டும் அமைப்பும் உருவமும் தன் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்த தெனக் குறிப்பிட்டார்.

Page 14
- 12 -
அதனுடைய விசேட அலங்காரங்களும், வேலைத்திறமையினல் வெளியிடப்பட்ட கலை நுட்பங்களும் உயர்ந்த கைப்பணி விற்பன்ன பின் திறனை வெளிக்காட்டுகிறதென்பது அவரது முடிவாகும்.
ஒப்பம்
சென்ற ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக னங்களையும் எட்டுத் தேர்களையும் செய்து முடித்தவர் கலைஞர் ஆறுமுகம். தேரில் அமைக்கப்பட்ட யாளிகளும் குதிரை களும் எடுப்பான தோற்றமுடையவை; தனித்தன்மை வாய்ந்தவை. வாகனங் களில் அவர் சில புதுமைகளைப் புகுத்தி யிருக்கிருர். சோடிக் குதிரை, சோடிச் சிங்கம், சோடி இடபம் என்பவற்றை முதலில் செய்தவர் அவர்தான். மூன்று குதிரைகள் சேர்ந்த வாகனங்கள், சில்லுக ளோடு கூடிய நல்லூர் கைலாசவாகனம், இணுவில் சிவகாமி அம்மன் கோவிற் சுழலும் சூரன் என்பவை அவரது புது மைப் படைப்புக்கள்.
இப்படியான கலை மடந்தையின் தவப்புதல்வனது புகழை அவர் மகன் அடைவதென்பது சுலபமான "காரிய மல்ல. அப்படியிருந்தும் கலாகேசரி அதைச் சாதித்தேவிட்டார்.

4. பரம்பரைக்கலை-பார்த்துப் பழகும் கலை
கலாகேசரி ஆ. தம்பித்துரையிடம், 'இந்தக் கலையை எப்படிப் பழகினிர்கள்? தந்தையாரிடமிருந்தா? அல்லது தமிழ் நாட்டுக்குப் போய் அங்குள்ள சிற்பாசாரி யார் யாரிடமாவது இருந்தா?’ என்று
கேட்கிறேன்.
அவர் பதில் சொல்லிக்கொண்டு வரும்போது கலாயோகி ஆனந்தக்குமார சுவாமி அவர்கள் ஓர் இடத்திற் குறிப்பிட் டிருப்பது என் ஞாபகத்துக்கு வருகிறது. அவர் பரம்பரைக் கலைக்கல்வியைப்பற்றி எழுதியிருப்பது இது :-
'உண்மையான வேலைத்தலத்திற் கைவினை மாணவன் பயிற்றப்படுவ தோடு வளர்க்கவும் படுகிருன். அவன் தன் தந்தையின் சீடனுமாகின்றன். அவன் இந்த நிலைமைகளை இழக்க நேரிடின் உலகிலுள்ள எந்தத் தொழிற் க்ல்வியும் அதற்கு ஈடுசெய்ய முடியாது. வேலைத்தலத்தில் ஆரம்பமுதல் தொ
ல் முறை, உண்மைப் பொருளோடும் உண்மை நிகழ்ச்சிச் சூழலோடும் தொடர்புள்ளதாகப் பணிசெய்வதன் மூலமும் கற்பிக்கப்படுகிறது. அங்கு கற்பிக்கப்படுவது தொழில்முறை மட்டு

Page 15
مس- 14 –س۔
மன்று, வேலைத்தலத்தில் வாழ்க்கையே உளது. அது மாணவனுக்கு உளப் பண் பாட்டோடு வாழ்க்கையின் அடிப்ப டைத் தத்துவங்களின் அறிவையும் அளிக்கிறது. கலைக்குத் தொழில்முறை யைக் காட்டிலும் இவையே இன்றி
யமையாதன* .
ஆம், இதே கருத்துப்படத்தான் தன் சிற்ப வேலையைப்பற்றிக் குறிப்பிட்டார். "எனது தகப்பணுர் இருதார மணமுடை யவர். இரு மனைவியரும் சகோதரிகள். முதல் மனைவிக்கு ஒரு பெண்குழந்தை. இரண்டாம் தாரமாக என் அன்னையை அவர் மணந்தார். நாங்கள் ஏழு பேர் அவரின் பிள்ளைகள்; பெரிய குடும்பம். அதில் நான்தான் மூத்த மகன் ; நான் பிறந்த திகதி 5-5-32.
'நான் இளமையிலே தேகசுக மற்றவன். ஏழு வயது நடக்கும்போது நான் பக்கத்தில் உள்ள சைவப் பாட சாலைக்குப் படிக்கப் போனேன். 4ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும்போது ( 1941ஆம் ஆண்டு) வீரமாகாளியம்மன் கோவில் தேர்வேலை தொடங்கிவிட்டது. 'மத்தியானம் சாப்பிட்டவுடன் வேலைத் தலத்துக்கு வா’ எ ன் று தகப்பனர் கட்டளையிட்டுவிட்டுக் காலையிற் போய் விடுவார்.பாடசாலைஇரண்டுமணியளவில் விட்டதும் சாப்பிட்டதும் சாப்பிடாதது

- 15 -
மாக வயல்வெளியினுாடாக ஒரு மைல் தூரமுள்ள இடத்தைத் தாண்டி வேலைத் தலத்துக்கு ஒடிப்போய்விடுவேன். அங்கே பெரிய வேலை ஒன்றும் நான் செய்வ தில்லை. எடுபிடி வேலைபோல ஏதாவது உதவி செய்வேன். ஆனல் தகப்ப்னர் செய்கிற சிற்ப வேலைகளையும், மற்றை யோர் செய்யும் கடைசல் வேலைகளையும் பார்த்துக்கொண்டிருப்பேன். இந்தக் கலை சொல்லிக் கொடுத்து வரும் கலை அல்ல; பார்த்துப் பார்த்துப் பழகும் கலை; சிறு வயது முதல் (எனக்கு அப்போது வயது 9) கூர்ந்து அவதானிக்கும் கலை. சிரத்தை யோடு பார்த்துப் பழகிப் பிற்காலத்தில் தானே செய்துபார்க்காவிட்டால் இந்தச் சிற்பக் கலை கைவராது. அதிலும் ஐந்து பத்து வருடங்களிலும் இதைப் பூரண மாக அறிந்துவிட முடியாது. இப்போது எனக்கு வயது 42. கிட்டத்தட்ட 30 வருடமாக இத்துறையில் ஈடுபட்டு வரு கிறேன். இன்னும் இத்துறையில் பூரண வெற்றியீட்டினேன் என்று சொல்ல முடி யாது’. அவர் சற்று ஒய்கிருர்,
நான் விடயத்துக்கு மீண்டும் வரு கிறேன். 'தகப்பனரிடம் ஆரம்பக் கலை யைப் பயின்ற நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போய் (தகப்பனரைப்போல) இக்கலையின் நுணுக்கங்களை அறிந்திருக்கலாமே'. இது
என் கேள்வி.

Page 16
- 16 -
‘எங்கள் வீட்டுநிலை அ ப் போ து செல்வமுடையதாக இல்லை. நா ங் க ள் வாகனம், தேர், மஞ்சம் முதலியவற்றைச் செய்ப வர் க ள். ஓரளவு கலையோடு தொடர்புகொண்டவர்கள். அப்படிப் பட்டவர்களுக்கு வறுமைதான் சொத்து. என்னைத் 'தமிழ்நாட்டுக்கு ஏன் போக வில்லை?" என்று கேட்கிறீர்கள்? எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. பக்கத்திலுள்ள பரமேஸ்வராக் கல்லூரிக்கே பணம் கட்ட வேண்டும் என்று என் தகப்பனர் அனுப்ப வில்லை. 5ஆம் வகுப்புப் படித்ததும் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் படிப்பிக்கும் கல் வியங்காடு செங்குந்த துவிபாஷா பாட சாலைக்கு அனுப்பப்பட்டேன். அங்கே எட்டாவது வகுப்புவரை படித்தேன்.
* படிப்போடு நின்றுவிட்டீர்களா? அல்லது சிற்பத்துறையிலும் க வ ன ம் செலுத்தினிர்களா?’’ இப்படிக் கேட்கி றேன் நான்.
கலாகேசரி தன் இளம் வயது ஞாபகங்
களை மனத்திரையிற் கொண்டுவந்து பெரு மூச்சு விடுகிருர்,

வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயக் கடா வாகனம்

Page 17

5. கண்டிப்பான தந்தையும்
- கண்ணியமான அதிபரும்
“என்ன பெருமூச்சு விடுகிறீர்கள்?* என்று கேட்கிறேன் நான்.
**இந்தக்காலத்தையும் அந்தக்காலத் தையும் எண்ணப் பெருமூச்சுத்தான் வரு கிறது. "கசக்கிப் பிழிந்தான்’ என்று ஒரு வசனம் தமிழில் இருக்கிறதல்லவா? அதற்கு உதாரணம் நான். என் தகப்பனர் என்னை வேலையில் * கசக்கிப் பிழிந்தேவிட் டார்’’ என்று தொடங்கினர் கலாகேசரி.
எனக்குப் பாரதியாரின் சுயசரிதை யில் சில வரிகள் ஞாபகம் வருகின்றன. பாரதியார் தமது இளமைக் காலத்தைப் பற்றிப் பாடும்போது பின்வருமாறு பாடுகிருர்,
* வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சிநான் வீதி ஆட்டங்கள் யாதினும் சேர்கிலேன் * தூண்டு நூற்கணத் தோடு தனியணுய்த்
தோழமை பிறி தின்றி வருந்தினேன்? கலாகேசரிக்குப் பாடசாலையில்தான் எழுத்தும் படிப்பும். வீட்டிலோ உளியும் பொல்லும் மக்கும் வாகனங்களுமாக இருந்தன.
2

Page 18
- 18 -
அவர் கூறுகிருர் :-
'அந்தக்காலத்தில் தேர்வேலை குறை வாக இருந்தாலும் வாகன வேலைக்குக் குறைவில்லை. எங்கள் வீட்டில் எப்போ தும் ஏதாவது ஒரு வாகனவேலை நடந்து கொண்டிருக்கும். வீரமாகாளியம்மன் கோவில் தேர்வேலையில் வெறும் பார்வை யாளனுக இருந்த என்னை-ஒரே தாவலில் (ஒரு வகையில் பார்த்தால் அனுமான் பாய்ச்சல்தான்) வாகன வேலைக்குத் தயா ராக்கினர் என் தகப்பனர். வாகனங்க ளின் பெருவெட்டு வேலையைத் தகப்பனர் செய்தால் மக்கு வைத்தல் வர்ணம் பூசு தல் முதலிய வேலைகளைப் பிறர் செய்வது வழக்கம். இடையிடையே இந்த வேலை களைச் செய்பவர்கள் வராமல் நின்று விடுவதுமுண்டு. எனவே, என்னை அந்தத் தொழில்களைப் பழகுமாறு ஊக்கப்படுத் தினர். காலையிலும் பாடசாலை விட்ட பின்பும் இதே வேலைகளை அவரின் மேற் பார்வையிற் செய்தேன். விளையாட்டு, ஊர்சுற்றல், திருவிழா, படம்பார்த்தல் என்பன கிடையவே கிடையாது. வேலைஎப்போதும் வேலை; எந்நேரமும் வேலை. இதுவே தந்தையாரின் தாரக மந்திரம். இந்த வாகன வேலைகளோடு அனலைதீவு ஐயனர்கோவிற்  ைக லா ச வாகனம், புத்தூர் சிவன்கோவில் தேர் முதலிய வேலைகளும் நடைபெற்றன. புத்தூர் சிவன்கோவில் தேர்வேலை 1946ஆம் ஆண்

- 19 -
டளவில் நடைபெற்றது. அந்தத் தேர் வேலையில் ஒரளவு பங்கெடுத்துக்கொண் டேன். இந்தக் காலகட்டத்தில் வர்ண வேலையோடு சிற்பம் செதுக் கு த ல், வாகன உருவம் அமைத்தல் ஆகியனவும் செய்யத் தொடங்கி விட்டேன். எஸ். எஸ். சி. படிப்பதற்காகப் பரமேஸ்வராக் கல்லூரிக்கும் அனுப்பப்பட்டேன்."
"எட்டாம் வகுப்போடு குலமுறைத் தொழிலில் ஈடுபடுத்தாமல் தந்தையார் மேலும் படிப்பித்ததற்கு ஏதேனும் காரணமிருக்கிறதா?’ என்ற என் வின வுக்கு விடையாக அவர் சொன்ன பதில் இது :-
* வீரமாகாளியம்மன் தேர்வேலை நடந்துகொண்டிருக்கும்போது அப்போ தைய கவர்னர் அதைப் பார்க்க வந்தா ரல்லவா? அவர் பேசிய ஆங்கிலம் என் தந்தையாருக்கு விளங்கவில்லை. அக் காலத் தமிழ்ப் பெருமக்களும் ஆங்கிலம் பேசுவதே சிறப்பு என்று கருதி வந்தனர். தான் படியாமல் விட்டாலும் தன் மக்க ளாவது சிறிது ஆங்கில அறிவைப் பெறு வது நல்லது என்று கருதியிருக்கலாம். எல்லோரும் இலவசமாகப் படிக்கும் வாய்ப்பை அரசாங்கம் அளித்தும் இருந் தது. இவைதான் காரணங்களே அல்லா மல்-தம் மக்கள் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை ** என்ருர் கலாகேசரி.

Page 19
- 20 -
'பரமேஸ்வராக் கல்லூரியில் உங்கள் படிப்பு' என மீண்டும் ஞாபகப்படுத்தி னேன்.
‘‘1950ஆம் ஆண்டளவில் பரமேஸ் வராக் கல்லூரியிற் சேர்ந்தேன். எஸ். எஸ். சி. சித்தியடைந்து ஏச். எஸ். சி. வகுப்பில் ஒரு வருடம் இருந்தேன். அங்கேதான் பண்புமிக்க அதிபர் சிவபாத சுந்தரம் அவர்களைக் கண்டேன். பண்புமிக்க என்ற சொல்லை நான் சும்மா சொல்ல வில்லை. அவர் என் வீட்டு நிலையைச் சரியாக உணர்ந்து காலையில் பிந்திச் சென்ருலும் மன்னித்தார். அப்போது நல்லூர்க் கைலாச வாகன வேலை நடந்து கொண்டிருந்தது. எனவே மாலையில் அரை மணி நேரம் முன்னதாகப்போக நான் கேட்டாலும் விட்டுவிடுவார். இந்தச் சலுகைக்காக நான் அவரைப் பண்பு மிக்கவர் என்று கூறவில்லை. ஒரு சந்தர்ப் பத்தில் எனக்கு அரசாங்க உத்தியோகம் வர இருந்தபோது என்னை அவர் கூப்பிட்டு "சிற்பத்துறையில் மு ன் னே நி குலத் தொழிலை-தேர், வாகனம் செய்யும் வேலையையும் பகுதி நேரங்களிற் செய்யக் கூடிய வகையில் உள்ள உத்தியோகத்தைப் பார்க்க வேண்டும் என வற்புறுத்தினர்’.
'ஈழத்திலே தலைசிறந்த ஆங்கிலப் படிப்பாளி. உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசாத அதிபர். அவரை என் வாணுளில் என்றும் மறக்கமாட்டேன்.

நீர்கொழும்பு சித்திவிநாயகர் ஆலய அழகிய இரதமும் ஸ்தபதி கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்கள் கெளரவிக்கப்பெற்ற நிகழ்ச்சியும்

Page 20

8. சித்திரப் படிப்பில்
என் சிந்தையைக் கவர்ந்தவர்
“மரச் சிற்பங்களும் வாகனங்களும் செய்யத் தொடங்கிய நீங்கள் ஏன் சித் திரம் படித்து ஆசிரியர் ஆனிர்கள்?" இது என் கேள்வி.
கலாகேசரி கூறுகிருர்:-
'சிற்பம்-சித்திரம்-நாட்டியம் என்ற மூன்று கலைகளும் தொடர்புடையவை. ஒரு தேர்ந்த சிற்பி சித்திரக்கலையை நன்கு பயின்றவனுக இரு த் த ல் வேண்டும். அத்தோடு நாட்டிய முத்திரைகளையும் அவன் அறிந்திருத்தல் நல்லது. விஷ்ணு தர்மோத்தரம் என்ற சிற்ப நூ லில் **நிருத்தம் சித்திரம் பரம்சித்ரம் மடம் " என்று கூறப்பட்டிருக்கிறது. சிலப்பதி காரத்திற்கூட இவை ஒருங்கிணைந்தே பேசப்படுகின்றன. சிற்பத்தில் லளித உணர்வை வெளிப்படுத்துவதற்கு ஒவி யத்தில் உள்ள ரேகை லயங்களும் நட னத்தில் உள்ள பாவமுத்திரைகளும் சேர வேண்டும். அல்லது உருவத்தின் கை, கால் என்பவை பாவத்தோடு தெரியாமல் வெறும் பிண்டப்பொருளாகவே இருக் கும். நான் சித்திரத்தை மட்டும் கற்க வில்லை. இரண்டு வருடம் ஒரு தேர்ந்த

Page 21
நாட்டியக் கலைஞரிடம் நாட்டியத்தையும் பயின்றுள்ளேன்' .
“இவற்றை எல்லாம் படிக்கத் தந்தை யார் தூண்டுகோலாக இருந்தாரா? எப் போதும் வேலைசெய்விப்பதையே கருத்தில் கொண்டாரா ? ? என்று கேட்கின்றேன்.
அதற்கு அவர் பதில் சொல்கிருர் :-
**நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கைலாய வாகனம் செய்துகொண்டிருக் கும் போதே நான் சம்பளம் பெறும் தொழிலாளியாகிவிட்டேன். என் தந்தை யார் வாங்கும் சம்பளத்துக்கு அடுத்த உயர்ந்த சம்பளம் எனக்குத்தான். எஸ். எஸ். சி. சித்தியடைந்து விபரம் தெரிந்த வாலிபணுகியும் விட்டேன். எப்படியான வேலையை வீட்டிற் செய்தாலும் மாதா மாதம் நிரந்தர வருமானமுடைய ஒரு தொழில் பார்க்கவேண்டும் என்ற ஆசை யும் எனக்கிருந்தது. பரமேஸ்வராக் கல்லூரியிற் படிக்கும்போது நாடகம், சித்திரம் ஆகிய துறைகளில் புகழ்பெற்ற -பிற்காலத்தில் வானெலியில் நாடகப் பகுதிக்குப்பொறுப்ப்ாயிருந்த-சான(சண் முகநாதன்) அவர்களிடம் சிலகாலம் சித்திரம் கற்கும் பேறு எனக்குக் கிடைத் தது. எஸ். எஸ். சி. பரீட்சைக்கு நான் அதை ஒரு பாடமாகவும் எடுத்து உயர்தர பிரிவிற் சித்தியும் அடைந்தேன். எனவே சித்திர ஆசிரியணுகி யாழ்ப்பாணத்துக்

- 23 -
குள்ளேயே வேலைசெய்வது என்று தீர்மா னித்து விட்டேன். என் தந்தையாரும் இதனை ஒப்புக்கொண்டார். குலத் தொழி லோடு உத்தியோகமும் பார்க்கவேண்டும் என்ற எண்ணமுடைய எனது தாயாருக் கும் அது உகந்ததாக இருந்தது.”
** அப்பால் யாரிடம் சித்திரம் படித் தீர்கள்???
'அப்போது "வின்ஸர் ஆர்ட் கிளப்" என்ற தாபனம் சித்திரத் துறையில் நல்ல வேலை செய்து வந்தது. யாழ்ப் பாணத்தில் சித்திர வித்தியாதரிசி யாய் இருந்த எஸ். ஆர். கனகசபைதான் அதன் ஸ்தாபகர். அவருடைய பெயரை உச்சரிக்கவே நான் கூச்சப்படுகிறேன். உண்மையான ஒவியக் கலைஞர் அவர். தன் கடமையோடு நின்றுவிடாமல் சித் திரக் கலையை இந்தப் பகுதியில் வளர்க்க அரும்பாடுபட்டார். அந்த ஸ்தாபனத் தின்மூலம் அநேகம் தமிழாசிரியர்களைச் சித்திரத்தில் தேர்ச்சிபெறச் செய்தார். ஆங்கிலம் படித்து சிறிது ஓவியம் தெரிந் தவர்களுக்கு விசேட வகுப்புக்கள் நடாத்தி ஆங்கில - சித்திர ஆசிரியர் பரீகூைடியில் சித்தியடையச் செய்து கல்லூரிக்ளில் சித்திர ஆசிரியர்களாக்கினர். நெடுங் காலம் நடைபெற்ற அந்தத் தாபனத்தில் 1953-1954ஆம் ஆண்டுகளில் யாழ்ப் பாணம் கன்னியர் மடத்தில் நடைபெற்ற

Page 22
- 24 -
வகுப்பில் நான் சேர்ந்து படித்தேன். தேர்ந்த ஓவிய ஆசிரியர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வகுப்பை நடாத்தினர் கள். எஸ். ஆர். கே. அவர்கள் இடை யிடையே வந்து ஒவியத்தின் நுணுக்கங் களைப்பற்றிப் போதனை செய்வார். கீறப் பட்ட ஓவியங்களைப் பார்த்துக் குறிப்புக் கள் கூறுவார். என்னைச் சிற்பாசாரியார் ஆறுமுகத்தின் மகன் என்று அறிந்ததும் தட்டிக்கொடுத்து "தந்தையின் புகழைக் காப்பாற்றத் தவறிவிடாதே" என்று ஊக்கப்படுத்தினர். அவரைப்போல உற் சாகமாக-நகைச்சுவையுடன் கண்டித்து வேலைவாங்கி -சித்திரக்கலையை வளர்த்த பெருமகனை நான் காணவில்லை. யாழ்ப் பாணத்தில் உள்ள சித்திர ஆசிரியர் களில் பெரும் பகுதியினர் "வின்சர் ஆர்ட் கிளப் பெற்றெடுத்த செல்வங்கள்; எஸ். ஆர். கே. யால் வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் உண்ணும் உணவு எஸ். ஆர். கே. தந்தது. அவர்களின் கலைப் படைப் புக்கள் எஸ். ஆர். கே. தந்த சொத்து. இதை உணர்ந்த பலர் இன்றும் அவருக் குத் தலை வணங்குகிருர்கள். என் தந் தைக்குப் பின் நானும் அவருக்குத் தலை வணங்குகிறேன்.""

உசன் கந்தசுவாமி கோயிற் சிங்காசனம்

Page 23

7. மறக்கமுடியாத
மகாஜனக் கல்லூரி
“எஸ். ஆர். கே. அவர்களைப்பற்றிக் கூறும்போது ஒரே உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறீர்களே. ஒரு விஷயம் உங்களுக் குத் தெரியுமா? நானும் அவருடைய சீடன்தான்’ என்கிறேன் நான்.
*" என்ன? சொல்லுங்கள் சொல்லுங் கள்’’ என்கிருர் அவர்.
**ஆமாம், நானும் 1944ஆம் ஆண் டளவில் “வின்சர் ஆர்ட் கிளப்"-கில்னர் கல்லூரியில் நடாத்திய சித்திர வகுப்பில் முப்பது வாரங்களாகப் படித்து சித்திரத் தராதரப் பரீகூைடியில் தேறிப் பத்திரம் பெற்றவன். அப்போதே எஸ். ஆர். கே. அவர்களது ஒவியத் திறமையையும் அதை வளர்க்க அவர் பட்டபாட்டையும் அறி வேன்’ என்கிறேன்.
'அதுதான் சித்திரம் சிற்பம் முத லியவைபற்றி உங்களால் ஒரளவு எழுத முடிகிறது. சித்திரம்பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதிய நான்கு கட்டுரைகளை வாசித்து மிருக்கிறேன்" என்கிருர் அவர்.
* ‘எங்கள் பேச்சுக்கு அப்பால் போவ தாக இருந்தாலும் ஒரு விடயம் சொல்

Page 24
லட்டுமா? நீங்கள் எஸ். ஆர். கே. பற்றிச் சொல்லும்போது என் மனத்தில் எழுந் தது இது' என்று கூறி நிறுத்தினேன்.
**சொல்லுங்கள்" என்கிருர் அவர் .
**1930 - 1955 என்பவற்றுக் கு இடைப்பட்ட கால்நூற்ருண்டின் யாழ்ப் பாணத்தைக் கலை சம்பந்தமாகப் பாருங் கள். ஒவியத்துக்காக எஸ். ஆர். கே. பாடு பட்டார்; சங்கீதத்துக்காகப் பரம் தொண்டு செய்தார்; தேர், வாகனம் மூலம் சிற்பக் கலயை வளர்த்தார் ஆறுமுகம்; சமயத்துக்கா கப் பாடுபட்டார் சிவபாதசுந்தரம்; கவிதை யாகப்பொழிந்தார்சோமசுந்தரப்புலவர். மேடைப் பேச்சாளராக விளங்கினர் மகா லிங்கசிவம்; ஆரியதிராவிட சங்கம் கண்டு பண்டிதர்களே உற்பத்தி ஆக்கினர் சதாசிவ ஐயர்; ஆராய்ச்சிப் பேரறிஞராக விளங்கினர் ஞானப்பிரகாசர், இலக்கண இலக்கிபக் கட லாக விளங்கினர் கணேசையர்; கதாப் பிரசங்கத்தில் தன்புகழ் நிறுவினர் மாணிக் கத் தியாகராசர், கலவிமர்சகராகத் திகழ்ந் தார் கலைப்புலவர் நவரத்தினம்; சிறந்த பத்திரிகையை நடாத்திக் காட்டினர் ‘*ழ கேசரி" பொன்னையா; நல்ல தவில் வித்துவ ணுகப் புகழ்பெற்ருர் காமாகூரிசுந்தரம்; பெரிய நடிகராகப் பேர் பெற்ருர் பபூன் செல்லையா; எல்லாவற்றுக்கும் மேலாக மேடைத்தல்வராக அறிஞர் சு. நடேசபிள்ளை திகழ்ந்தார்.

- 27 -
"இப்படிப் பல துறைகளிலும் பேர் பெற்றவர்களை இந்தத் தலைமுறை அறி யுமா ? இவர்களைப்பற்றி அறியவேண் டாமா ? இதைப்பற்றி ஏன் ஒருவரும் சிந்திக்கவில்லை' என்று கேட்கிறேன்.
கலாகேசரி கூறுகிருர்:- 'நீங்கள் சொல்வது உண்மை. வெறும் சரமகவியோடும் சிறு நூல்க ளோடும் நின்றுவிட்டார்கள். அவர்க ளைப்பற்றி அறியாத இளம் தலைமுறையி னர்க்குச் சென்றகாலத்தின் பழுதிலாச் சிறப்பை எடுத்துக் கூறுவது அவசியம். அது பெரியவர்கள் கடமையுங்கூட. அது இருக்கட்டும் என் விஷயத்துக்கு வருகி றேன். நான் 1954ஆம் ஆண்டு ஆங்கில சித்திர ஆசிரிய தராதரம் பெற்றேன். என் வாழ்வில் சிற்ருெளி தோன்ற ஆரம் பித்துவிட்டது.
'நான் ஆசிரியத் தராதரம் பெற்ற தும் பரமேஸ்வராக் கல்லூரி அதிபரும் என்னல் நன்கு மதிக்கப்பட்டவருமாகிய திரு. சிவபாதசுந்தரமவர்களைச் சந்தித்து அக்கல்லூரியிலேயே வேலைதரும்படி கேட் டேன். அவர் அங்கு இடமில்லை என்று கூறியதோடு தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் இடமிருப்பதாகவும், அங்கு போய் வேலைசெய்யும்படியும் கூறினர். அவர் சொல்லியபடியே மகாஜனக் கல் லூரிக்கு விண்ணப்பம் செய்தேன். நேர்

Page 25
- 28 -
முகப் பரீகூைடி வைத்து என்னைச் சித்திர ஆசிரியராக எடுத்துக்கொண்டார்கள். 1955ஆம் ஆண்டு ஆவணி மாதம் நாள் ஆசிரியணுக மகாஜனக் கல்லூரியில் கால் வைத்தேன். '
“ ‘நானும் முப்பது வருடங்களுக்கு மேலாகச் சாதாரண தமிழ்ப் பள்ளிக் கூடங்களிற் கடமை செய்தவன்தான்; ஆனல் என் அநுபவமும் கல்லூரியில் நீங்கள் சித்திர ஆசிரியராக இருந்து உங்க ளுக்கு ஏற்பட்ட அநுபவமும் வித்தியாச மாக இருக்கும். அதைப்பற்றிச் சிறிது சொல்லுங்கள்’’ என்ற என் வினவுக்குக் கலாகேசரி பதில் சொல்கிருர்:-
**1955ஆம் ஆண்டு தொடக்கம் 1967ஆம் ஆண்டு மார்கழி வரை பதின் மூன்று வருடங்கள் மகாஜனக் கல்லூரி யிற் கடமை ஆற்றினேன். அந்தக் கால கட்டம்தான் மகாஜனக் கல்லூரி பெரிய கல்லூரியாகி, பல்கலைக்கழகப் பரீகூைடி களில் முதன்மை பெற்று, கட்டிடங்க ளால் அகன்று, விளையாட்டுக்களில் புகழ் பெற்று, நாடகங்களில் அகில இலங்கைப் பரிசுகள் பெற்று, தன் பெருமையை நிலை நாட்டிய காலம். என் காலத்தில் அதிப ராய் இருந்தவர் கல்லூரியை நிறுவிய துரையப்பாபிள்ளையின் மகன் தெ. து. ஜயரத்தினம் அவர்கள். கண்ணியம் என்ற ஒரு சொல் தமிழில் இருக்கிறதே.

- 29 -
அது ஜெயரத்தினம் அவர்களுக்காகப் பிறந்ததோ என்று நான் எண்ணுவ துண்டு. தான் கண்ணியமாக இருந்த தோடு மாத்திரமல்ல, சக ஆசிரியர்களை யும் கண்ணியமாக நடாத்தினர். உடன் ஆசிரியர்களும் பட்டம், பதவி, தகைமை இவற்றைப் பாராமற் குடும்ப பாசத் தோடு பழகினர்கள். ஒவ்வொரு துறை யிலும் நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் கவிதை, நாடகம், சிறுகதை, நாவல் முதலிய துறைகளிற் கைவந்தவர்கள். பழங்கால இலக்கியத்தை நன்கு பயின்ற வர்கள். எல்லோரும் கூடிப் பேசிப் பழகி வந்தபடியால் கல்லூரியில் தொண்டு என்வரை மகிழ்ச்சியாகவே இருந்தது.
‘மாணவர்களைப் பொறுத்தவரை தான் சிறிது சங்கடம் ஏற்பட்டது. ஆரும், ஏழாம், எட்டாம் வகுப்புவரை சித்திரத்தைப் பயின்ற மாணவன் எஸ். எஸ். சி. வகுப்பில் கால் வைத்தவுடன் விஞ்ஞான பாடங்களையே அவாவி நின் ருனே யொழியச் சித்திர பாடத்தைப் படிக்க விரும்பவில்லை. அப்படிச் சித்திரம் சங்கீதம் முதலியவற்றைப் படிப்பது குறைவான படிப்பு என்ற எண்ணம் தலை தூக்கி நின்றது. எனினும், என்னிடம் மேல்வகுப்புவரை படித்த மாணவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிருர்கள். பலர் நுண்கலைக் கல்லூரிவரை போயிருக் கிருர்கள். பலர் சிறந்த ஒவியர்களாகவும்

Page 26
- 30 -
‘போட்டோ கலைஞர்களாகவும் விளங்கு கிருர்கள். அவர்கள் என்னிடம் இன்றும் மரியாதை காட்டுகிருர்கள். ஓர் உதா ரணம்: சென்ற வருடம் கொழும்பு நுண்கலைக் கல்லூரிக்குத் தெரிவுசெய்யப் பட்ட மாணவர்களில் மூன்றுபேர்தான் தமிழ்ப்பிள்ளைகள். அவர்களுள் ஒருவர் குரும்பசிட்டி ஆசிரியர் மு. க. சுப்பிர மணியம் அவர்களின் மகன் சிவகுமாரன். அவர் தான் தெரிந்தெடுக்கப்பட்டதை ஒட்டி ஒரு தேநீர் விருந்து நடாத்தினர். அந்த வைபவத்தில் அவர் என்னைப் பாராட்டிப் பேசியது ஒருபுறமிருக்க, அவர் காட்டிய குருபக்தியைக் கண்டு வியப்புற்றேன். என் வாழ்வில் இது ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சி.
‘‘மகாஜனக் கல்லூரி தொடர்ந்து நான்கு வருடங்களாக அகில இலங்கைக் கல்லூரி நாடகப் போட்டிகளில் முதற் பரிசைப் பெற்றதென்ருல் நடிகர்திறமை, கதாசிரியர் திறமை, இவற்றேடு மேடை அலங்காரம், ஒப்பனை இவற்றினும் திறமை உள்ளதாக விளங்கியதே கார ணம். இவற்றில் கணிசமான பங்கு எனக்குண்டு. இன்னும் பெற்ருேர்தின விழா, ஸ்தாபகர்தினவிழா இவற்றிலெல் லாம் ஈடுபட்டு முகப்புச் சித்திர வேலை களில் என் பங்கைச் செலுத்தியிருக்கி றேன். மகாஜனக் கல்லூரித் தொடர்பை என்னுல் மறக்க முடியாது.'

8. கண்டறியாதன கண்டேன்
“நீங்கள் உங்கள் கலை யை விருத்தி செய்ய என்னென்ன முயற்சிகள் எடுத்துக் கொண்டீர்கள்?’ என்ற கேள்வியை நான் கலாகேசரியைப் பார்த்துக் கேட்டேன்.
அவர் சொன்ன பதில் இது :-
" நான் ஆசிரியனுக வந்தபிறகு கல் லூரிக்குப் போய்வரச் சுகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் குரும்பசிட்டியில் உள்ள பெரிய தாயாரது இல்லத்தில் தங்கி னேன். 1955இல் இருந்து இன்றுவரை -பதினெட்டு வருடங்களுக்கு மேலாக - இங்கேயே தங்கி வருகிறேன். எனக்கு எதுவித கஷ்டமும் நேராமல் தாய்க்குத் தாய்போல அவர் என்னைப் பாதுகாத்து வருகிருர், ஆசிரியர் உத்தியோகம் வந்த வுடனே என் கையிலும் பணம் வரத் தொடங்கிவிட்டது. அதை வீண்செலவு செய்யாமற் சேமித்து 1956ஆம் ஆண்டில் இந்திய சுற்றுப் பிரயாணத்தை மேற் கொண்டேன் "'.
'தமிழ்நாட்டுக்குமாத்திரம் போனிர் களா? அல்லது வட இந்தியாவரை சென் நீர்களா?" இது என் கேள்வி.
**சிற்பம், சித்திரம் என்பவற்றைக் கண்டு அவற்றின் நுட்பங்களைத் தெரிந்து

Page 27
- 32 -
கொள்ளவேண்டும் என்ற ஆசையில் ஒரு மாதம் முழுவதும் தனியே தமிழ்நாடு தொடக்கம் மைசூர், கல்கத்தா, டெல்கி, பூணுவரை சுற்றுப்பிரயாணம் செய்தேன். ஒவ்வொரு கோவிலிலும் அந்தக் காலச் சிற்பிகள் செய்த கைவண்ணத்தைகல்லிலே வடித்த கலைவண்ணத்தைக் காணும்பொழுதெல்லாம் நாம் எவ்வளவு சிறியவர்கள் - கற்றுக்குட்டிகள் - என்ற எண்ணம்தான் மேலெழுந்து நின்றது. மதுரை மீனுகூதியம்மன் கோவிலையும் தஞ்சைப் பெரிய கோவிலையும் பார்க்கப் பார்க்க நெஞ்சு பூரித்தது. வட இந்தியப் பெருங் கோவில்கள் தென்னிந்தியக் கோவில்கள் போல் அமையாமல் நாம் படைக்கும் தேர் உருவத்தில்-ஒரளவில் தாமரை மொட்டு உருவத்தில்-இருப் பதை அவதானித்தேன். சித்திரக்கலை யைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. மொத்தமாகச் சொன்னல் "கண்டறியா தன கண்டேன்’ என்ற தேவார வரியைத் தான் என்னுற் கூறமுடியும்' என்ருர்
goint.
அவர் இப்படி மொத்தமாகக் கூறி யது மாத்திரமல்ல ஒவ்வொரு கோவிலின் அமைப்பையும் சிற்ப சித்திர வேலையை யும் விபரித்தும் கூறினர்.
அடுத்தநாளும் எங்கள் பே ட் டி தொடர்ந்தது.

- 33 -
"தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி களைத் தவிர வேறுமொழிகளும் ஏதாவது கற்றிருக்கிறீர்களா?*
"இலண்டன் பரீகூைடி ஒன்றுக்காகத் தமிழ், சம்ஸ்கிருதம், சித்திரத்தின் சரித் திரம் என்ற மூன்றையும் பாடங்களாக எடுக்கத் தீர்மானித்தேன். சம்ஸ்கிரு தத்தைப் பிரபல வியாகரண மகோபாத்தி யாயர் சீதாராமசாஸ்திரிகளிடம் ஒழுங் காகக் கற்றுவந்தேன். படித்துக்கொண்டு வரும்போது பரீகூைடிக்குப் படிக்கும் எண் ணம் போய்விட்டது. அந்த மொழியின் ஆழமும் சுகமும் வசீகரமும் என்னை ஆட் கொண்டு விட்டன. சிற்பம் சம்பந்த மான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் ஏராள மாக உள்ளன என்று கேள்வியுற்றேன். சாஸ்திரிகளோ அறிவின் ப்ொக்கிஷம்; தங்கமான மனிதர். சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் நாகர லிபியி ல் அம் மொழியை நன்கு வாசித்து விளங்கும் அளவுக்குப் படித்து முடித்தேன். மானசா ரம், சிற்பரத்தினம், சுக்கிரநீதி, ஆயாதி சிற்பசாஸ்திரம் போன்ற நூல்களை வாசித்து அறிவைப் பெருக்கிக்கொண் டன். ' கண்டறியாதன கண்டேன் " என்று இதையும் சேர்த்துக் கூறலாம்.
சம்ஸ்கிருத மொழியோடு கொஞ்சம் பிரான்சு மொழியும் கற்றுக்கொண்டேன். மேல்நாட்டுச் சித்திரத்தின் சரித்திரத்தில்
3

Page 28
- 34 -
விசேட அறிவைப்பெற அவாவுகின்ற எவ ரும் ஆங்கிலத்துடன் பிரான்சோ, ஜெர் மன் மொழியோ அவசியம் அறிந்திருத்தல் வேண்டும். எனவே, எனக்குப் பிரான்ஸ் மொழி அதிகம் தெரியாதுவிட்டாலும் கொஞ்சம் விளங்கக்கூடியதாகப் பயின் றிருக்கிறேன். 1962ஆம் ஆண்டு சித்திர ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக இலங்கை நுண்கலைக் கல்லூரியினர் நடாத் திய சிற்ப ஒவிய டிப்ளோமா பரீட்சை யிலும் சித்தி பெற்றேன்’ என்ருர்,
ஆசிரியத் தொழிலிலும் பிறமொழிக் க ல் வி யிலும் ஈடுபட்டிருக்கும்போதும் உங்கள் குலத்தொழிலைச் செய்தீர்களா?
1952-1955ஆம் ஆண்டுக் கிடையில் அதாவது சித்திர ஆசிரியனுக வரும் வரை யில் கோப்பாய் வட க் கு கந்தசுவாமி கோவில் தேர், உரும்பராய் கற்பகப் பிள்ளையார் கோவில் தேர் - இவற்றின் சிற்பப் பகுதிகளை நானே தனியே செய்து முடித்தேன். நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் குரும்பசிட்டியில் இருந்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்தான் வீடு செல்வேன். அங்கு பாரம்பரிய தொழிலில் ஈடுபடுவேன். அந்த நாட்களில் வாகன வேலைகள்தான் மிகுதி. நல்லூர் கைலாயப் பிள்ளையார் கைலாய வாகனம் குறிப் பிடத்தக்கது. இதில் எனக்குப் பெரும் பங்கு உண்டு.

*ஒவியக்கலை நூல் வெளியீட்டு விழாவில் அதிபர் எஸ். சிவபாதசுந்தரம் அவர்கள் முதற்பிரதியைப் பெறுகின்றர்.
கொக்குவில் - நந்தாவில் மனுேன்மணி அம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டவிழாவில், முன்னுள் காணிநீர்ப்பாசன அமைச்சின் நிரந்தரக் காரியதரிசி திரு. ம. யூரீகாந்தா அவர்கள் கலாகேசரி பட்டத்தைச் சூடுகிறர்.

Page 29

9. கலாகேசரியின் நூல்கள்
0 தையல்வேலைச் சித்திரங்கள்-1 0 தையல்வேலைச் சித்திரங்கள்-2
9 ஒவியக்கலை
0 சிறுவர் சித்திரம்
கு கலாயோகி ஆனந்த கெ.குமாரசுவாமி
என்ற ஐந்து நூல்களின் ஆசிரியர் கலா கேசரி தம்பித்துரை. இவைமாத்திரமல்ல, *யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவி யங்கள்" என்ற அருமையான நூலையும் வெளியிட இருக் கி ரு ர். "கலைகளில் தாமரை’, ‘கலைகளில் அன்னம்(தினகரன்), *கவின்கலைகளில் மங்கலமகரம்(மல்லிகை) என்ற மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிவிட்டு “கலைச்செல்வத்தில் யாளி", "எங்கள் கலைகளில் யானை" என்ற கட் டுரைகளை எழுதி முடித்துள்ளார். இவை ஐந்தும் ஒரு நூலாக்கக்கூடிய பெருமை வாய்ந்தவை. இன்னும் அவர் சிறுவர் சித்திரக் காட்சி மலர்களில் எழுதிய ஆழ மான கட்டுரைகள், மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவிலில் சிற்ப, சித்திர அழகு, நல்லூர்க் கந்தனின் தேர்ச்சிறப்பு,கிராமக் கைத்தொழில்களிற் சிற்ப,சித்திர வேலைப்

Page 30
- 36 -
பாடு, எஸ். ஆர். கே. அவர்களின் ஓவியப் பரம்பரை என நல்ல பல கட்டுரைகளை யும் எழுதியுள்ளார்.
அவரது நூல்களில் 'ஓவியக் கலையை யும் " சிறுவர்சித்திரத்தையும் குரும்ப சிட்டி சன்மார்க்கசபை வெளியிட்டிருக்கி றது. அவற்றின் பதிப்பாசிரியராக நானே இருந்திருக்கிறேன். அவரின் எழுத்துத் துறைக்கு என் தூண்டுதலும் ஒரு காரண மாகும். இதை அவர் மறைக்கவில்லை. ‘ஈழநாடு’ பத்திரிகையின் பேட்டி ஒன்றிலே வெளிப்படையாகக் குறிப்பிட்டுக் கூறியும் இருக்கிருர். எனவே இந்த நூல்கள் பற் றிய அபிப்பிராயங்களைப் பத்திரிகைகள் வாயிலாகவும் பிறபெருமக்கள் வாயிலாக வும் சொல்வதுதான் சரி என நினைக் கிறேன்.
சென்னைமா நகரத்திலிருந்து அறிஞர் அ. மு. பரமா சிவானந்தம் எழுதுகிருர்:- 'தங்கள் நூல்களை ஆழ்ந்து கண்டேன். சிறுவர் சித்திரம் இங்கேயும் நல்ல பயன் தரும் என நம்புகிறேன். அப்படியே மற் றைய ஓவியக்கலையும் நல்ல வரலாற்று அடிப்படையைக் கொண்டு அமைந்துள் ளது. இங்கே ஆசிரியர் பயிற்சி பெறு
வோர்க்கு இவை பாடமாக வைக்க உத

- 37 -
வலாம். இத்தகைய நல்ல நூ ல் கள் இங்கே இல்லை. '
சிறுவர் சித் தி ர ம் என்ற நூலைக் குரும்பசிட்டி சன்மார்க்கசபையில் நடை பெற்ற விழா வில் வெளியிட்டுவைத்து மகாஜனக்கல்லூரி அதிபர் தெ. து. ஜய ரத்தினம் பேசியதாவது:- "மாணவர் களுக்கு இயற்கையாக அமைந்துள்ள சித்திரக்கலையின் நாட்டத்தை மனே தத்துவ வளர்ச்சிகளோடு ஒட்டி எங்ங்ணம் வளர்க்கவேண்டும், அவர்கள் ஆக்கும் சித்திரங்களை ஆதாரமாகக் கொண்டு ஆசிரியர்கள் எங்ங்னம் சித்திரக் கல்விக்கு வழிகாட்டவேண்டும் என்ற சிறந்த முறை யில் எழுதப்பட்ட அரியதொரு கல்வி நூல் சிறுவர் சித்திரமாகும்.'
யாழ்ப்பாண விஸ்வகர்ம மகாசங்கக் காரியதரிசி எழுதுகிருர்:- 'ஓவியக்கலை வெளியீட்டுவிழாகுரும்பசிட்டிசன்மார்க்க சபை மண் ட பத் தில் சென்ற சனிக் கிழமை அதிபர் சிவபாதசுந்தரமவர்க ளின் தலைமையில் நடந்தேறியது என்பதை அறிந்து உள்ளம் பூரித்தேன். கடமையும் உற்சாகமும் சமுதாய உணர்ச்சியும் உங் கள் மனதில் ஊறியிருந்தமையால் எக் காலமும் வெளியிட்டிருக்காத ஒர் அரிய நூலை நீங்கள் எழுதியது எல்லோருக்கும் ஒரு புத்துணர்ச்சியை உண்டுபண்ணு

Page 31
- 38 -
கிறது. விஸ்வகர்ம மகாசங்கம் நீங்கள் புரிந்த பணியைப் போற்றுகின்றது." "தமிழன்’ பத்திரிகை ஓவியக்கலை நூல் சம்பந்தமாக (8-10-61) எழுதிய மதிப் புரையின் ஒரு பகுதி:- -
"கலையின் தத்துவம் முதல் ஒவிய வளர்ச்சி என்பது வரையுள்ள பதினைந்து அத்தியாயங்களில் அத்தியாவசியமான பகுதிகளை ஆசிரியர் விளக்குகிருர், ஆரம் பப் பரிச்சயமுள்ள ஓவியக்கலை மாணவர் கள் படித்துச் சுயசாதனை செய்து தம் அறிவை விருத்திசெய்வதற்கு வாய்ப்பளிக் கக்கூடியதாக நூல் அமைந்துள்ளதை ஆசிரிய உலகம் போற்றவே செய்யும்."
"சிறுவர் சித்திரம்’பற்றித் 'தினகரன்' பத்திரிகை (21-10-62) எழுதியிருப்பது இது:- "பதினன்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள இந் நூலில் விளக்கத்துக்காக 50 படங்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளன. சித்திரம் வரைவதில் சிறுவர் சிறுமியரின் கற்பன சத்தியையும் ஆர்வத்தையும் படிப்படி யாக வளர்க்கும் முறையில் எழுதப்ப்ட் டுள்ளது இந்த நூல். பாடசாலை மாணவர் களுக்கும் உபாத்தியாயர்களுக்கும் மிக்க பயனுள்ள நூல். மொத்தம் 112 பக்கங் களில் தெளிவாகவும் நன்ருகவும் அச் சிடப்பட்டுள்ளது. வண்ணச் சித்திரங்கள் முகப்பை அலங்கரிக்கின்றன.'

"டெய்லி நியூஸ்" என்னும் ஆங்கிலத் தினசரியின் வாரவெளியீடு 6-11-62 இத ழில் "சிறுவர் சித்திரம்’பற்றி எழுதியிருப் பது இது:-
Siruvar Sithiram' is perhaps the first book in Tamil to deal with children's art. The author, Mr. A. Thambithurai, has lucidly set out the basic ideas. The book should prove useful to both students and art-teachers aluke. ..........
இலங்கை அரசாங்கம் தேசிய வீரர் களைக் கெளரவிக்கும் முகமாக முத்திரை களை வெளியிட்டுவருகிறது. அந்த வரிசை யில் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்களுக் கும் கலாயோகி ஆனந்த கெ. குமார சுவாமி அவர் களுக்கும் முத்திரைகளை வெளியிட்டது. நாவலர்ப்ெருமானைப் பற்றி அநேகருக்கு நன்கு தெரியும். ஆனந்த கெ. குமாரசுவாமி பற்றி அநேகர் அறியார். எனவே அவரைப் பற்றிப் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கக்கூடிய முறையில் ஒரு சுருக்க மான நூல் தேவைப்பட்டது. அத் தேவையைப் பூர்த்தி செய்ய முன்வந்தார் கலாகேசரி. அவர் 1971ஐப்பசியில் வெளி யிட்ட நூல்தான் “கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி” என்பதாகும்.

Page 32
- 40 -
இந் நூலைப்பற்றிப் பிரபல எழுத்தா ளர் ஆ. தேவராசன் கூறியிருப்பது இது:-
**ஆனந்தக் குமாரசுவாமியின் பண்பு களும் கோட்பாடுகளும் ஒளிவுமறை வின்றிச் சுருக்கமாக இந்நூலிற் கூறப்பட் டிருக்கின்றன. எழுதத் துணிந்த கருத்தை துணிச்சலோடு எழுதும் பண்பு திரு. தம்பித்துரையிடம்காணப்படுகிறது. கலா கேசரி கலாயோகிக்குத் துரோகம் செய்ய வில்லை. கலைஞன் என்ற முறையில் கலை யோடு மட்டும் கூறி ஒதுங்காது ஆனந்தக் குமாரசுவாமியின் தேசியப் போராட் டப் பணிகளையும் கூறி அவரை முழுமை யுடன் காட்டியிருப்பது போற்றற்குரி யது'. "தையற் கலைப்புத்தகங்கள் பற்றி அமரர் எஸ். ஆர். கே. அவர்கள் கூறி யிருப்பது இது:- "தையல்வேலைச் சித்திரங் கள் இரண்டாம் தொடரைப் பார்த்து மகிழ்ந்தேன். கீழைத் தேசப் பாணியில் எண்ணங்களை அனுசரித்து வரைந்திருப் பன புது மோடியானவை. இத்தனை கால மும் தையல்வேலைப் பற்றேண்கள் அநேக மாக மேலைத் தேசத்தால் வந்தவை. வேற்றுமையான சிறப்பியல்புகள் விதி விலகாது அமைக்கப்படின் அது விரும்பத் தக்கதே. இந்த விதத்தில் இவருடைய முயற்சி மெச்சப்படத்தக்கது.'
கலாகேசரியின் நூல்கள் ஈழத்தின் எழுத்துத்துறைக்குப் பெருமை சேர்ப்பன.
 

மன்னுர் மாவட்ட சிறுவர் சித்திரக் காட்சி மலரிலிருந்து, 24-9-1971

Page 33

10. சிறுவர் சித்திரம்
துரிதநடை போடுகிறது
இந்த நாட்டின்-வடபாகத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் படிக்கும் மாண வர்களின் சித்திர அறிவு முன்னுள் சித்திர வித்தியாதரிசி எஸ். ஆர். கனகசபை அவர்களின் மறைவுக்குப் பிறகு படிப்படி யாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது. சென்ற பத்துப் பன்னிரண்டு வருடங்க ளாகப் பெரிய ஆங்கிலக் கல்லூரிகளில் அப் பாடம் நடைபெற்ருலும் சாதாரண சிறிய தமிழ்ப் பாடசாலைகளில் அது மறக் கப்பட்ட பாடமாகவே இருந்து வந்திருக் கிறது. சித்திரபாடம் ஒரு வேண்டாத பாடமாக, படிப்பியாத பாடமாக நடை முறையில் இருந்தது.
1968ஆம் ஆண்டோடு சிறுவர் சித் திரத்தைப் பிடித்திருந்த இருள் மெல்ல அகலத் தொடங்கிவிட்டது. அதற்கு க் காரணம் கலாகேசரி ஆ. தம்பித்துரை சித்திரவித்தியாதரிசியாக நியமிக்கப்பட் டமைதான். சென்ற ஆறுவருட காலத்தில் அவர் செய்திருக்கும் முயற்சியால் சிறுவர் சித்திரம் துரிதநடை போடுகிறது. ஒரு புத்தூக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரது கலை சம்பந்தமான முயற்சிகளை மறந்து விடலாம். எழுத்துலகச் சாதனையைச்

Page 34
- 42 -
துச்சமாக மதிக்கலாம். ஆனல் இந்த நாட்டுக்கு-வடபாகத்துச் சிறுவர்களுக்குசித்திர ரசனையை ஊட்டி, ஆசிரியர்களை விழிப்புறச் செய்து அக்கலையை வளர்க்கப் பாடுபட்டாரே அதை யாரும் மறக்க முடியாது. அதைச் சரியாகக் கூறவேண்டு மானுல் 'அவர் கடினமான நிலத்தை மெதுவாக ஏனே தானே என்று கீற வில்லை. அடியோடு உழுது புரட்டினர்' என்றுதான் கூறவேண்டும். இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. ஆசிரிய ஞ க இருந்த எனக்கு இது நன்ருகத் தெரியும். அவர் செய்துள்ள அபாரமான வேலையும் எனக்குத் தெரியும். அப்படியிருந்தும் அவர் வாயிலாக அறியப் பின்வருமாறு கேட்டேன்.
**கலாகேசரி அவர்களே! தேர், வாக னங்கள், எழுத்துவேலைகள் பிறமுயற்சிக ளோடு சித்திர வித்தியாதரிசி வேலையும் பார்க்கிறீர்களே. எப்படி அக் கடமையை ஒழுங்காகச் செய்ய முடிகிறது? சிரமமா u6iv&savu unr?””
அவர் பதில் கூறுகிருர்:-
* "நான் 1968ஆம் ஆண்டு தை மாசம் முதல் சித்திரவித்தியாதரிசியாக நியமிக் கப்ப்ட்டேன். அதற்கு முன் சென்ற சில வருடங்களாக வடபகுதிக்குச் சித்திர வித் தி யாத ரிசி நியமிக்கப்படவில்லை. எனவே பல பாடசாலைகளிற் பாடம்

- 43 -
ஏனுேதானே என நடைபெற்றது. எனவே என் வேலை சற்றுக் கடினமாகவே இருந் தது. யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சிறிய பாடசாலைகள், மன்னர், வவுனியா, முல்லைத் தீவுப் ப்குதிகளில் உள்ள பாட சாலைகள் எல்லாவற்றையும் மு த லில் போய்ப் பார்த்தேன். நிலை மை யைப் புரிந்துகொண்டேன். சித் திர பாடம் பழைய முறையிலேயே நடைபெற்று வந்துகொண்டிருந்தது.அது மாணவனுக்கு ஆசை பூட்டும் பாடமாக அமையாமல் சிரமம் கொடுக்கும் பாடமாக, யாரும் படிப்பிக்கும் பாடமாக இருந்தது. இதை அடியோடு மாற்ற எண்ணினேன்.”*
**அதற்காக என்ன செய்தீர்கள்?*
*ஒவ்வொரு கல்விவட்டாரம் தோறும் சித்திரப் புத்தூக்க வகுப்புக்களை நடத்தி னேன். பல சிறுவர் படங்கள்மூலம் இக் காலச் சிறுவர் சித்திரத்தை விளக்கினேன். வெறும் படம் கீறுவதால் பயனில்லை. வர்ணக்காகித ஒட்டுவேலைகள், களிமண், மணல், பசை, மரம், பலகை, அழகுச் சித்திரங்கள்எனப்பலவகைச்சித்திரங்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்துவைத் தேன். இறுதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஐந்து நாட்கள் ஆசிரியர் களும் பல சித்திர வித்தியாதரிசிகளும் தங்கி அருமையானபுத்தூக்க வகுப்பையும்

Page 35
- 44 -
ஓவியக் காட்சியையும் நடத்த ஏற்பாடு செய்தோம். இது மிக்க பலன் தந்தது.
அடுத்து ஒன்பது கல்வி வட்டாரங் களில் சிறுவர் சித்திரக் காட்சியை நடாத் தினேன். 1968 வைகாசியில் காங்கேசந் துறை வட்டாரத்தில் தொடங்கிய இக் காட்சி உடுவில், கோப்பாய், யாழ்ப் பாணம், நல்லூர், வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி, பருத்தித்துறை, மன்னர் (1971 புரட்டாதி) முடிய நடைபெற்றது. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தது 25 பாடசாலைகள் பங்குபற்றின. 500 சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பெருந்தொகையான மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து பார்வையிட்டனர். ஒன்பதுகாட்சிக்கும் அருமையான ஒன்பது சிறுவர் சித்திரக் காட்சி மலர் களை நிர்வாக சபையினர் வெளியிட்டனர். முகப்புச் சித்திரங்கள் மூன்று வர்ணத்தில் அடிக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பிச்சைக் காரி, மற்றதில் பஸ்நிலையம், இன்னென் றில் வண்டிச்சவாரி, பிறிதொன்றில் அழகுச்சித்திரம் என ஒன்பது படங்கள். இவற்றைப் பார்த்தாலே சிறுவர் சித்திரம் இங்கே எப்படி வளர்ந்து வருகின்றது என்பது விளங்கும்' என்ருர் அவர்.
இந்தச் சித்திரக் காட்சிகளைப்பற்றி அவரது மேலதிகாரிகள் கூறிய அபிப்பிரா யங்கள் அவர் கூற்றை நிரூபித்துள்ளன.

- 45 -
வடமாநிலக் கல்வி அதிபதியாக இருந்த W. D. C. LD5rt giga) grip. So if :
*"எமது சித்திர வித்தியாதிகாரி திரு. ஆ. தம்பித்துரை அவர்கள் ஆற் ற ல் நிரம்பியவர்கள். கல்வி வட்டாரங்களிற் பல இடங்களிலும் சிறுவர் சித்திரக் காட்சிகளை அ  ைமத்து வெற்றிபெறச் செய்தவர். இதனுல் சிறுவர்களது அக வளர்ச்சி ஊக்கப்பட்டது. சரியான முறை யில் அமைக்கப்பட்டது. கஷ்டம் நிரம் பியவேளைகளிலும்கூட அவரிடம் உயர்ந்த கடமை உணர்ச்சியைக் கா ன ல |ா ம். எடுத்த ஒரு முயற்சியை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கக்கூடிய மனஉறுதி அவ ரிடம் உண்டு என்பதை நான் உணரு
கிறேன்.”*
திரு. சி. ஏ. ஞானசேகரம் எழுது கிருர் :
**சிறுவர் சித்திரத்தை ஊக்குவித்துக் கூடிய கரிசனை எடுக்கக்கூடிய சித்திர வித்தியாதிகாரி இன்மையால் யாழ்ப் பாணத்துப் பாடசாலைகளில் இத்துறை யிற் சிலகாலமாகப் பின்தங்கியநிலை ஏற் பட்டிருந்தது. இப்போது புதிய சித்திர வித்தியாதிகாரி திரு. ஆ. தம்பித்துரை அவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இம் முயற்சியில் ஈடுபட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது."

Page 36
- 46 -
“ ‘புத்தூக்க வகுப்புகளையும் சித்திரக் காட்சிகளையும் தவிர இத்துறையில் வேறு என்ன செய்தீர்கள்?’ என் வின தொடர் கிறது.
*யாழ். நுண்கலைக் கழகம் என ஒரு அமைப்பைத் தோற்றுவித்துள்ளேன். யாழ். கனகரத்தினம் மகாவித்தியால யத்திலுள்ள அரசினர் கலைக்கூடம்தான் அதன் தலைமையிடம். காலத்துக்குக் காலம் காட்சி வைப்பதும் நல்ல அறிஞர் களைக்கொண்டு சொற்பொழிவு செய்விப் பதும் அதன் நோக்கம். அறிஞர் ராகவன் அவர்களைக் கொண்டு சித்திரம் சம்பந்த மான பேச்சை நிகழ்த்துவித்தோம். மாண வர்களுக்கு உயரிய சித்திர வகுப்பை வாராவாரம் நடாத்த ஒழுங்கு செய்துள் ளோம். சித்திர ஆசிரியர்கள் என்னேடு மனப்பூர்வமாக ஒத்துழைப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். '
**வேறு ஏதாவது சொல்ல விரும்பு கிறீர்களா?*
**ஆம் ! ஒன்று சொல்லவேண்டும். தனிப்பட்ட ஒரு மனிதரால் இப்படிப் பட்ட காரியத்தைச் சாதிக்க முடியாது. மேலதிகாரிகளும் ஆசிரியர்களும் ஒத்து ழைக்க வேண்டும். பத்திரிகைகள் ஒத்து ழைக்க வேண்டும். ஈழத்துத் தமிழ்ப் பத் திரிகைகள் எல்லாம் இம் முயற்சியில் சற் றுத் தாராளமாக ஒத்துழைத்துள்ளன.”*

களுத்துறை மாவட்ட விஷ்ணு ஆலய முகப்பு அலங்காரச் சிற்பம்

Page 37

11. அம்பாளே வணங்கினேன்
அனைத்தும் சித்திக்கிறது.
"நீயே துணையென்று நான்இருந்தேன் என நீமறந்தால் தாயே எனக்கொரு தஞ்சமுண்டோ ?”.
என்று அல்லும் பகலும் குரும்பசிட்டி அம்பாளை வணங்குபவர் க லா கே சரி. இதனை யாவரும் அறிவர். கருணையே உருவான, கண் கண் ட தெய்வமான அம்பாள், கைகூப்பித் தொழுபவர்க்குச் சகலதும் ஈவாள். இதனை அறிந்த நான், **குரும்பசிட்டி அம்பாளுக்கு நீங்கள் தேர் செய்து கொடுத்ததன் பின்னர் உங்கள் கலைவாழ்வில் ஒளி ஏற்பட்டதில்லையா ?* என்கிறேன்.
அவர் சொல்கிருர் :
‘மகாஜனக் கல்லூரியில் சித்திர ஆசிரி ய ர |ா க ப் பதவி ஏற்ற போதே (1955இல்) நான் குரும்பசிட்டி வாசியாகி விட்டேன். இது என் வாழ்க்கையில் ஒரு திருப்பம். குரும்பசிட்டி ந ன் மக்கள் என்னைத் தங்களில் ஒருவனுகவே கருதிக் கொண் ட ன ர். நல்ல அன்பர்கள் எனது வாழ் க் கை முன்னேற்றத்தில் பங்குகொண்டனர். சன்மார்க்க சபை யார் என்னை அங்கத்தவனுக்கி மேன்மைப்

Page 38
- 48 -
படுத்தினர். எனது இரு நூல்களை வெளி யி ட் டு ம் வைத்தனர். இதனை உண்மையில் என்னல் மறக்க முடியாது. எழுத்தாளர்களும், பேச் சாளர்களும் பொதுச் சேவையில் ஆர்வம் மிக்கோரும் நிறைந்த இந்த ஊரை நான் இருப்பிட மாகக் கொண்டது ந ல் ல தாய் ப் போயிற்று. அதனிலும் பார்க்க எனக்கு நிம்மதி தருவது அம்பாளைப் பூசிப்பதே. அவளை வழிபடாமல் நான் கடமையைத் தொடங்குவதில்லை. எந்த நல்ல காரி யத்தைச் செய்யத் தொடங்குமுன்பும் குரும்பசிட்டி அம்பாளை வணங்கித்தான் தொடங்குவேன். அதனுல் காரியங்கள் இடையூறின்றி முடிகின்றன.
‘‘1964ஆம் ஆண்டில் குரும்பசிட்டி அம்ப்ாளுக்குச் சித்திரத் தேர் செய்யும் வேலை நடைபெற்றது. அப்போது தகப்ப ஞர் இருந்தார். ஆனலும் நோய்வாய்ப் பட்டிருந்தார். அதனுல் நானே தலைமை தாங்கிச் சகோதரக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு அத்தேரை உருவாக் கினேன். அம் பாளின் கருணை: நாம் நினைத்ததிலும் பார்க்க அருமை யாக அத்தேர் அமைந்து விட்டது. அத் தேருக்குப் பலவகையான சிற்ப வேலை களையும், வர்ண வேலைகளையும் நான் செய்திருக்கிறேன். அத்தேரைப் பார்த்த என் தகப்பனர் உண்மையிலேயே மனம்

- 49 -
மகிழ்ந்தார். ஒருமகன் தன் தந்தைக்குச் செய்யும் நன்றி இது தா ன் என்று நானும் மனம் பூரித்தேன்.
'குரும்பசிட்டித் தேர்வேலைக்கு அப் புறம் நீங்கள் செய்த தேர் வேலைகளைப் பற்றிச் சிறிது சொல்லுங்கள். ** இது என் வின.
கலாகேசரி சிறிது சிந்தனையில் ஆழ்ந்தபின் சொல்கிருர் :
"1964 ஆனி மாதத்தில் என் தந்தை யார் மறைவு ஏற்பட்டது. "ஆறுமுக சிற்பாலயம்’ என்ற நிறுவனத்தை நிறுவி னுேம், சிற்பாலயக் கலைஞர்கள் தேர் வேலை களில் மும்முரமாய் ஈடுபடலாயினர். நான் அவற்றை மேற்பார்வை செய்யும் பணியையும் சிற்பவேலைப் பகுதியின் பொறுப்பையும் ஏற்றேன். பண்ணுகம் முருகமூர்த்தி கோ வில் தேர், நீர் கொழும்பு சித்திவிநாயகர் ரதம், நயினு தீவு நாகபூஷணிஅம்மன் - பிள்ளையார் தேர், வண்ணுர்பண்ணை விசுவேசுரப் பிள்ளையார் (ஐயனர் கோவில்) தேர், வண்ணுர்பண்ணை காமாட்சியம்மன் தேர், நந்தாவில் மனேன்மணி அம்பாள் தேர், புன்னலைக்கட்டுவன் ஆயாக்கட வைப் பிள்ளையார் தேர் என்பவை எமது தலைமையிற் செய்து முடிக்கப்பட்டவை.' ‘வெகு வேகமாக-வருடத்துக் கொன் ருக - தேர்வேலை செய்திருக்கிறீர்கள்.
4

Page 39
- 50 -
இத் தேர்வேலைகளில் உங்கள் மனதில் தங்கக்கூடிய சிறப்பு நிகழ்ச்சி ஏதாவது நடந்திருக்கிறதா?’’
*"ஆமாம், எல்லாத் தேர்வேலைகளும் நன்ருய்த்தான் நடைபெற்றன. ஆனல் நந்தாவில் அம்பாள் தேர்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்தத் தேர் வேலை முடிந்ததும் அங்குள்ள தேர்ச்சபை யினர் என்னைக் கெளரவிக்க விரும்பினர். இளம் வயதுடைய நான் (34 வயது) பெரும் பட்டங்களைப் பெறலாமா? என்று தயங்கினேன். ஆனல் அவர்கள் விடவில்லை. நீர்ப்பாசன-நெடுஞ்சாலைப் பகுதி நிரந்தரக் காரியதரிசியாகவிருந்த திரு. ம. பூஜீகாந்தா அவர்களைக் கொண்டு பொன்னடை போர்த்துவித்து, பொற் பதக்கம் அணிவித்து ‘கலாகேசரி’ என்ற பட்டத்தையும் சூட்டுவித்தனர். '
**நல்ல கலைத் தொண்டுக்காக, நல்ல வர் ஒருவரால் வழங்கப்பட்ட பட்டம் நாளிதுவரை வழங்குகிறது; இன்னும் வழங்கும்" என்றேன்.
கலாகேசரி சிரித்தார். அச்சிரிப்பில் பெருமிதம் என்பது துளிகூட இல்லை.
'சகோதரர்களை விட்டு நீங்கள் ஏன் தனியே “கலாகேசரி கலாலயம் அமைத்
தீர்கள்? ஏதாவது . ’’ என்று இழுத் தேன். அவர் சொன்னர் :

- 51 -
"அப்படி ஒன்றும் இல்லை. 1970ஆம் ஆண்டு என் தாயாரும் மறைந்துவிட் டார். திருநெல்வேலிக்கும் எனக்குமுள்ள தொடர்பு குறைந்துவிட்டது."
**இந்தத் தேர்வேலைகளில் மொத்த மாகப் பார்த்தால் அதிகம் ஊதிபம் இல்லை. அத்துடன் ஒவ்வொருவரும் தனித் தனியே இயங்கவும் விரும்பினர். எனவே 'கலாகேசரி கலாலய"த்தை ஸ்தாபிக்க வேண்டி இருந்தது. உறவினர்களான இக் கலாலயக் கலைஞர்கள் நல்ல தரமானவர் கள். இப்போது கலாகேசரி கலாலயத்தி னர் ஒரு குழுவாக இயங்கி வருகின்றனர்.”
**சரி, அப்படியாயின் இத்தேர் வேலையில் ஓரளவு போட்டி LDGOTL 68T60) LD இப்போது ஏற்பட்டிருக்חוL கிறதா?’ என்ற என் கேள்விக்கு,
* 'இல்லை. எப்போதுமே இல்லை. ஏனெ னில் இவ்வேலையிற் பலர் ஈடுபடவில்லை. முன் என் தந்தையார்தான் இந்த வேலை யைச் செய்தார். இப்போது அவரிடமும் என்னிடமும் பழகிய மூன்று குழுக்கள் இவ் வேலையைச் செய்கின்றன. இலங்கை முழுவதற்குமே இம் மூன்று குழுக்கள் தான். தமிழ் நாட்டிலிருந்து இப்போது யாரும் வருவதில்லை. இங்கு வேலை செய் வோர் அனைவரும் சுற்றத்தவர்கள். வருடத்தில் எங்கேயோ மூன்று தேர் வேலைகள் நடைபெற்றுக்கொண்டுதான்

Page 40
- 52 -
இருக்கின்றன. எனவே மூன்று குழுக்க ளுக்கும் வேலை நிச்சயமாக இருக்கும். எங்கள்கலாலயத்தினர் அண்மையில்தான் சுதுமலை அம்பாள் தேரைச் செய்து நிறை வேற்றியிருக்கின்றனர். அது முடியக் குப்பிழான் விக்கினேஸ்வரரது தேர் வேலையை ஆரம்பிக்க இருக்கின்றனர். இப் படி ஒவ்வொருவருக்கும் உண்டு. எனவே போட்டி, பொருமை என்பது இத்தொழி லில் நுழைய இடமில்லை’ என்ருர்.
**தேர், வாகனங்கள் முதலியவற் றைச் செய்விப்பவர்கள் உங்களை நாடி வருகிருர்களா?*
**ஆம். நாங்கள் முண்டி அடித்து ஒடிப்போவதில்லை. நல்ல வாகனங்கள், சிற்ப அமைவுகொண்ட தேர் என்பவற் றைச் செய்ய விரும்புகிறவர்கள் எம்மை நாடி வருகின்றனர். தேர் வேலைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் அவர்களே தருகின்றனர். கூலியை மாத் திரம் நாங்கள் பெற்றுக்கொள்ளுகிருேம். மொத்தமாக இவ்வளவு முடியும் என்று ஒரு மதிப்பீட்டைத் தயாரித்துக் கொடுப் போம், இந்தக் காலத்தில் - பொருள் விலை ஏற்றத்தால் எதையும் திட்டமாக நிர்ணயிக்க முடியாது. நாமும் வஞ்சக மில்லாமல் உழைக்கிருேம். அவர்களும் மனத் திருப்தியோடு தருகிருர்கள். சரி, மிகுதியை நாளை பேசுவோமே" என் கிருர், நான் விடை பெறுகிறேன்.

ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் அவர்களுக்கு யாழ். மக்களால் வழங்கப்பெற்ற வரவேற்பு-ஏடு முகப்பு அலங்காரச் சிற்பம், (சந்தனமரம்) அமரர் திரு. டட்லி சேனநாயக்கா அவர்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பெற்ற அசோகச் சக்கரம் பொறித்த கைப்பிரம்பு (சந்தன மரம்)

Page 41

12. நினைவில் நிற்கும் பிற வேலகள்
“தேர்களும் வாகனங்களும் போக வேறு ஏதாவது சிற்ப வேலைகள் செய் திருக்கிறீர்களா? உங்கள் நினைவில் தங்கக் கூடியதாகப் பொதுமக்கள் அவற்றைப் பார்த்து இரசிக்கக்கூடியதாக, கலை அம்சம் பொருந்தியதாக ஏதாவது இருந் தால் சொல்லுங்கள். அதுவும் பொது மக்களுக்குப் பயன்படும்’ என்றேன் நான்.
கலாகேசரி சொல்கிருர் : **இப்போதைய தலைமுறை கலை அம்சத்துக்கு மதிப்புக் கொடுப்பதில்லை. எது மலிவு என்றே பார்க்கிருர்கள். முற்காலச் சாதாரண வீடுகளிற்கூட கதவு, நிலை, யன்னல் எல்லாம் விதம் விதமான கொத்து வேலைகள் செய்யப் பட்டிருக்கும். பாக்குவெட்டிகளிற்கூட எத்தனை வகை? சுண்ணும்பு வைக்கும் கரண்டகங்கள்கூட கலை அம்சம் நிறைந் திருந்தன. இப்ப்ோது எல்லாம் மலி வைப் பற்றியே சிந்தன. ஆனலும் எனக்குச் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன; அவற்றைச் சரியானபடி பயன்படுத்திக் கொண்டேன். உதாரணமாகச் சிலவற் றைச் சொல்கிறேன் கேளுங்கள்.
**முதன்முதல் விண்வெளியை வலம் வந்த யூரிககாரின் என்ற ருஷ்ய வீரர் ஈழத்துக்கு விஜயம் செய்து யாழ்ப்பா

Page 42
---. 54 -
ணத்துக்கும் வந்தார். அவரு க்கு ப் பொது மக்கள் கோலாகலமாக வரவேற் பளித்தார்கள். பனைஒலைச் சுவடியில் அவ ருக்கு வாழ்த்துப்பத்திரம் அச்சடித்துக் கொடுக்கப்பட்டது. அதன் இரு முகப்புக் களையும் சந்தனக் கட்டையிற் பனை, தாமரை, அன்னம் ஆகிய அம்சங் களைக் கொண்டு அலங்காரச் சித்திர வேலைப்பாடாக அமைத்துக் கொடுத் தேன். கலைப்புலவர் நவரத்தினம் போன் ருேர் அந்த வேலையைப் பாராட்டினர்.
**அகில இலங்கைத் தமிழ்க் காங் கிரஸ் தலைவரும், எங்கள் குடும்பத்தின் மீதும் என்மீதும் தனிப்பட்ட முறையில் அபிமானம் உடையவரும் ஆகிய உயர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள், ஐ. நா. சப்ையில் பேருரை நிகழ்த்திவிட்டு யாழ்ப்பாணம் வந்தபோது, அதிவிமரிசை யாக வரவேற்கப்பட்டார். அவருக்குப் பிரியமான கைப்பிரம்புஒன்றைச் சந்தனக் கட்டையிற் செய்து கொடுத்தேன். யாளி முகம் கொண்ட கைப்பிடியில் என் கை வண்ணத்தைக் காட்டியுள்ளேன். எதை யுமே அளவுகடந்து மெச்சாத தலைவர் ஜீ. ஜீ. என்னை ஓரளவு பாராட்டி நன்றி தெரிவித்தார். என் வாழ்க்கையில் நான் அடைந்த பேறு இது என்று சொல்ல லாம். மறைந்த பிரதமர் டட்லி சேன ஞயகா அவர்கள் தமிழ் க் காங்கிரஸ் மகாநாட்டை ஒட்டி யாழ்ப்பாணம்

- 55 -
வருகை தந்தபோது கைப்பிரம்பொன்றை அன்பளிப்பாக அளிக்க ஆசை கொண் டேன். சந்தனக்கட்டையிலான கைப்பிடி: அசோகச் சக்கரத்தையும் சிங்கங்களையும் அதில் செதுக்கினேன்; அருமையாக அமைந்துவிட்டது. கோட்டை மைதா னத்தில் ஏராளமான மக்கள் முன்னிலை யில் அது அளிக்கப்பட்டது. சந்தனக் கட்டையின் வாசனை, கலை நுட்பம் தோன்றச் செதுக்கிய கைப்பிடி பிரதம ரையே மலைக்கச் செய்துவிட்டது. என் னைத் தனிமையில் அழைத்து நன்றி தெரிவித்தார். என் மனம் மகிழ்ந்தது.
* 'இவைகளைத் தவிர யாழ்ப்பாணத் தில், இந்துக்கல்லூரியில் நடாத்தப்பட்ட சித்திர ஆசிரியருக்கான புத் துர க்க வகுப்பை ஆரம்பித்துவைக்க வந்த கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி உடகம அவர்களுக்கு, கலைத் தெய்வமாகிய சரஸ்வதி சிலை ஒன்றை அன்பளிப்புச் செய் தேன். கலாநிதி அதன் கலை அம்சத்தைப் பாராட்டினர். எனது சிற்ப வேலையை நன்கு மதிக்கும் பிரதம சித்திர வித்தி யாதிகாரி பி. எஸ். விஜயரத்தினு அவர் களின் சிபார்சின்பேரில், கழுத்துறை மாவட்டத்தில் உள்ள பெளத்த கோவில் ஒன்றின் விஷ்ணு தேவாலய முகப்பை அலங்கரிப்பதற்கு எட்டுஅடி நீளம் மூன்று அடி உயரமான சிற்ப சித்திர வேலைப்

Page 43
- 56 -
பாட்டை சங்கு, சக் க ர ம், நாமம் என்பவை பொறித்துச் செய்து கொடுத் தேன். பல சிங்களப் பிரமுகர்கள் அதைப் பாராட்டியுள்ளனர்.
**இவற்றைவிட ஊரெழு அன்பர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் சிங்கப் பூரில் உள்ள சப்பரம் ஒன்றை அலங்கரிப் பதற்கு விநாயகர், மகாவிஷ்ணு போன்ற ஐந்து சிற்பங்களை மரத்திற் செதுக்கி வர்ணப்பொலிவுடன் அமைத்து அனுப்பி யுள்ளேன்.
"1973ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில்-கல்விமாநிலங்களுக்கிடையிலான சிறுவர் சித்திரப் போட்டி வழங்கும் வெற்றிக்கேடயங்களை ஒரு புதிய முறை யில் சிற்ப, சித்திர அழகோடு அமைத்துத் தரும்படி, பிரதம சித்திர வித்தியாதிகாரி கேட்டுக்கொண்டார். கலைகளின் தெய்வ மாகிய விஸ்வகர்மாவின் உருவத்தைச் சிற்பசாஸ்திர விதிமுறைக்கேற்ப மகர, தோரண அலங்காரத்துடன் அமைத்து அம் மூன்று கேடயங்களையும் செய்து கொடுத்தேன். அச்சித்திரக் காட்சியை ஆரம்பித்து வைத்த பிரதிக் கல்வி மந்திரி துடாவை அவர்களும், கலாநிதி உடகம அவர்களும்,பிரதம வித்தியாதிகாரி விஜய ரத்தின அவர்களும், முன்னைநாள் பிரதம சித்திர வித்தியாதரிசி பீலிங் அவர்களும் அவற்றைப் பாராட்டினர்கள்.

சுதுமலை யூனி புவனேஸ்வரிஅம்பாள் சிற்பத்தேர் வெள்ளோட்டம்

Page 44

18. தேர்-தேர் அமைப்புக்கள்கதுமல அம்பாள் தேர்
"ஈழத்தின் பல பாகங்களிலும் உள்ள கோவில்களில் இப்போது தேர்கள் செய் யும் ஆவல் பரவலாகக் காணப்படுகின் றது. தேர்களைப்பற்றி அறியும் ஆசையும் பொதுமக்களிடம் தோன்றியிருக்கின்றது. எனவே, அதைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்வது நன்மை பயக்குமல்லவா ' என்று நான் கலாகேசரியிடம் வினவி னேன். அவர் பின்வருமாறு கூறினர் :-
**சக்கரத்தை அடிப்படையாகக் கொண்ட ஊர்திகளுள் தேர் சிறப்பு வாய்ந்தது. இருக்குவேத காலத்திலேயே தேர் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்பது அதன் கடையாணி போன்ற நுண்ணிய பாகங்கள் வேத சுலோகங்களில் கூறப்பட்டிருப்பதன் வாயிலாக அறிகின் ருேம். இதனையே வள்ளுவரும்
'உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருபெருந்தேர்க்கு
அச்சாணி அன்ன ருடைத்து? என்ருர். ஆலயங்களில் மாத்திரமன்றி அரசர்களின் தேவைகளுக்கும் தேர் பயன்பட்டு வந்திருக்கின்றது. தேர் செலுத்துவதில் வல்லவர்களை அதிர தர், மகாரதர் என அழைத்தார்கள்.

Page 45
அயோத்திமன்னனன அஜகுமாரன் பத் துத் திக்குகளிலும் தேர் செலுத்துவதில் வல்லவன் ஆனபடியால் தசரதன் எனச் சிறப்புப் பெயர் பெற்ருன். இந்துமதத் தவர்கள் மாத்திரமல்லாமல் பெளத்தர் களும் தேர்விழாவைக் கொண்டாடியிருக் கிருர்கள். ஐந்தாம் நூற்ருண்டில் இந்தி யாவுக்கு வந்த பெளத்த யாத்திரிகளுகிய பாகியன் பெளத்தமதத் தேர்விழாவைப் பற்றித் தமது நூலின்கண்ணே கூறியிருப் பதன் வாயிலாக இவ்வுண்மை புலனுகின் [Dტl.
** "கொடிஞ்சி நெடுந்தேர்’, ‘கவின் பெறு தேர்', "திண் தேர்’ என்றெல் லாம் சங்க இலக்கியத்திற் சிறப்பித்துக் கூறப்படும் தேரைக்கொண்டு கோயில் களில் தேர்விழா நடாத்துதல் சோழ காலத்திற் பெரு வழக்காகி இருந்தது. ஆனல் விஜயநகர afrt Liburrë glub செழித்திருந்த காலத்திலேதான் தேர்த் திருவிழா தென்னிந்தியாவிற் சிறப்புற்று விளங்கியது. தேர்த் திருவிழா அன்றும் இன்றும் என்றும் ஆலயத்தில் நடை பெறும் சிறப்பான பெரிய விழா என்பது தெளிவு.*
" "தேரை நிர்மாணிக்கும்போது அந் தந்த ஆலயங்களின் அமைப்புமுறைக் கேற்ப அமைக்கும் விதி வழக்கத்தில் இருக்கிறதா ?*

- 59 -
**காயமே கோயி லாகக் கடிமணம் அடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக
எண்ணி இவற்றுக்கேற்ப விதிமுறைப்படி அமைக்கப்பட்டவைதான் எமது ஆலயங் கள் . மனித உடலுறுப்புக்களுடன் தொடர்புள்ள கோயில்களின் தூபிகளின் அளவுக்கும் அமைப்புக்கும் ஏற்பவே சிற் பாசாரியார்கள் தேர்களை நிர்மாணிக் கிருர்கள். தேருக்கும் கோயில் அமைப்பு முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆலயத் தூபி அமைப்புமுறைக்கேற்பத் தேர்கள் செய்யப்படுவது மாத்திரமன்றி தேவதைகளின் இரதங்களின் அமைப்பு முறைக்கேற்ப மத்தியகாலத்தில் கோயிற் கட்டிடக் கலையை நிர்மாணித்துள்ளனர். பிரமாவின் இரதமான " வைராஜம் " (சதுர அமைப்பு), குபேரனது இரதமாகிய * புஷ்பகம் " (நீள்சதுரம்), சிவனுடைய இரதமாகிய 'கைலாய (வட்டம்), வருண னுடைய இரதமாகிய “மாணிக" (முட்டை வடிவம்), இந்திரனுடைய இரதமாகிய * திரிவிஷட்பம் " (எண்கோண வடிவம்) ஆகிய ஐந்து விமானங்களில் இருந்து பிரிந்து கிளையான நாற்பத்தைந்து வித மான கோயில்களை அமைத்துள்ளார்கள். சமராங்கண சூத்திர தானம், ஈசான சிவகுரு தேவபத்ததி ஆகிய நூல்கள் கோயில்களை மூன்று பிரதான பாணிக ளாகப் பிரிக்கின்றன. (1) நா க ரம், (i) திராவிடம், (ii) வேஸரம் அல்லது

Page 46
- 60 -
வாராடம் என்பது ஆகும். தேர் அமைப்பு முறைகளிலும் இது வழக்கில் இருந்து வரு கின்றது. அதாவது சதுரவடிவமான தேரை நாகரம் என்றும், எண்கோண வடிவமான தேரை திராவிடம் என்றும், வட்டவடிவமான தேரை வேஸ்ரம் என் றும் சிற்ப நூல்கள் கூறுகின்றன.
‘'வேஸ்ரபாணியில் அமைந்த தேர் ஆந்திர நாட்டிற் பெருவழக்கில் இருந்தது என்பது காஞ்சிபுராணம் (52) வாயிலாக அறிகின்ருேம்’’.
'நீங்கள் தேரை உருவாக்கும்போது என்ன அம்சங்களையும் விதிமுறைகளையும் பிரதானமாகக் கவனிக்கிறீர்கள் ? **
**தேரின் அமைப்பு தாமரை மொட் டுப் போன்று அழகுடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. தேரிலே சுவாமி வீற்றிருக்கும் தளம் மனிதனது இருதயத் தாமரையையும், தாமரைப் பொகுட்டை யும் குறிப்பதாகும். கடோப நிஷதத் திலே தேர், குதிரை முதலியன முறையே மனிதனது உடல், புலன்கள் ஆகியவற் றுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றன. "மான சாரம் என்ற சிற்ப நூலிலே தேர் இலக் கணம் என்னும் பகுதி உள்ளது. தேரின் அடிப்பாகத்திலே பூலோக வாழ்க்கை, ஆகாய வாழ்க்கை, சுவர்க்க வாழ்க்கை ஆகியவற்றைச் சித்திரிக்கும் சிறந்த பல உருவங்களைக் காணலாம். அரசன் கொலு
 

சுதுமலை யூனி புவனேஸ்வரி அம்பாள் தேரிற் பொறிக்கப்பெற்ற (1) ‘விஸ்வேஸ்வரர்? சிற்பம், (2) 'திருவானைக்காவில் யானையும் சிலந்தியும் பூசிக்கும்’ சிற்பம்
நந்தி மத்தளம் கொட்ட, தும்புரு வீணை மீட்க, கரைகண்டன் ஊர்த்துவத் தாண்டவம் ஆடுவதையும், காளி திருநடனம் ஆடுவதையும் சித்திரிக்கும் சிற்பங்கள்

Page 47

- 6 -
வீற்றிருத்தல், நடனமாதர். காமத்துப் பாலைச் சித்திரிக்கும் பொம்மைகள் ஆகி யன பூலோக வாழ்க்கையையும்; கின்ன ரர் போன்ற உருவங்கள் வான வாழ் வையும் , சிவன், அம்பாள், விநாயகர், முருகன், கணநாதர் முதலிய சிற்பங்கள் சுவர்க்க வாழ்வையும் சித்திரிக்கின்றன. நுண்கலைக்கு இருப்பிடம் போன்ற தேரை அமைக்கும்போது அது எந்தத் தெய் வத்துக்காகச் செய்யப்படுகிறதோ அது அந்தத் தெய்வத்தின் அம்சம் பொருந்த அமைக்கவேண்டும். இத்தகைய தேரின் இலக்கணத்தில் இருந்து கடவுள் பரிவா ரங்களுடன் தமது கோயிலாகிய தேரி லிருந்துகொண்டே ஒவ்வொருவரையும் தேடிவந்து ஆட்கொள்கின்ருர் என்பது இதன் கருத்து.'
* 'இப்போது நீங்கள் செய்துள்ள சுதுமலை அம்பாளின் தேரைப்பற்றியும் அதன் விசேட அம்சங்களைப்பற்றியும் ஏதாவது கூற இருக்கிறதா ?"
‘மேற் கூறப்பட்ட அமைப்பு முறை களுக்கேற்ப தாமரை மொட்டுப்போன்ற அமைப்பிலே சுதுமலை பூரி புவனேஸ்வரி அம்பாளுக்குத் தேர் அமைத்துள்ளோம். எனவேதான் ஏனைய சில ஆலய தேர் களைப் போன்று இதன் பண்டிகை வரி யைக் கூடுதலாக விரிப்பதனலும் வளைப் பதஞலும் தேரின் அடிப்பாகத்தை உடுக்குப் போன்று அமையாமல் தாமரை

Page 48
- 62 -
மொட்டின் அடிப்பாகம் போன்று அமைத் துள்ளோம். சு வா மி வீற்றிருக்கும் தளத்தை முன்பு தாமரைப் பொகுட்டுக்கு ஒப்பிட்டிருந்தோம். அதற்கு அமைய தாமரைப் பொகுட்டின் அடிப்பாகத்தில் இருந்து விரிகின்ற மகரந்த இழைகளைக் குறிப்பதற்குச் சிங்காசனத்தின் அடியில் இருந்து எட்டுச் சிங்கங்களைப் பல்லவ பாணியில் அமைத்திருக்கின்ருேம். இது ஒரு புது முறையானது. இவற்றைவிட இத் தேரிலே அறுபத்திரண்டு சிற்பவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
'ஈழத்துச் சிற்பாசாரியார்கள் செய்த தேர்களுள் இவ்வளவு தொகையான சிற்பங்கள் அமைந்த தேர் இதுவே ஆகும். ஆலயம் என்பது உலகம் முழு வதையும் அடக்குகின்றது. ஆலயம்தான் தேர். எனவே, அம் முழு உலகையும் அமைக்கும்போது கூர்மத்தையும் பூமா தேவியையும் விலக்கிவிட முடியாது. எனவே, இவைகளையும் இத்தேரிலே பொருத்தி இதை முழுமையான ஒன்ருக அமைத்துள்ளோம்.'
கலாகேசரி தம்பித்துரை அவர்களது பெயர் சுதுமலை அம்பாளின் தேருள்ள வரை நிலைத்து நிற்கும் என்பது உறுதி. சிற்ப அமைவுள்ள ஒரு நல்ல தேரைத் தன் வாழ்நாளிற் செய்து முடித்துவிட்டேன் என அவர் மனம் பூரிப்பது முகத்தில் தெரி கிறது. கலாகேசரியின் கலைத்தொண்டு

- 63 -
பற்றிய சம்பாஷணை முடிவிடத்தை அடை கிறது. ஒரு உண்மையான கலைஞனுேடு, கலைத்தெய்வத்தை மனமார வணங்கும் உத்தம புருடனேடு பேசும்போது ஏற் படும் மனமகிழ்ச்சி என்னுட் குவிகிறது. *கோதகன்ற தொழில் உடைத்தாகிக் குலவு சித் திர ம் கோபுரம் கோவில் ஈதனைத்தின் எழிலிடை உற்ருள்’’ எனப் பாரதி கலைமகளைப்பற்றிப் பாடுகிருர், அவள் உண்மையான கலைஞர்தம் உள்ளத் தெழுச்சியாலேதான் தோற்றம் அளிக் கிருள். அக்கலைமகள் எங்கும் கொலு வீற்றிருக்கக் கலை கள் வாழவேண்டும்; கலைஞர்கள் ஒளி பெறவேண்டும்.
கலாகேசரியிடம் வி ைட பெற்று வீடு திரும்புகிறேன். அப்போதும் அவர் என்னுடன் நிகழ்த்திய பேச்சுக்களே நிழ லாடுகின்றன.
அவர் தமது தேர், சிற்பம், சிறுவர் சித்திரம், நூல்கள், பிற கலைத்தொண்டு கள் பற்றி எல்லாம் சொன்னரேயொழி யத் தன் குடும்ப வாழ்க்கையைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. ஏதோ செயற் கரிய வேலையைச் செய்ததாக "டமாரம் அடிக்கவில்லை. யாரையேனும் தாழ்த்தி ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. தமிழ் நாட்டுச் சிற்பிகளைப்பற்றிப் பேசும்போது கூட, நயினுதீவு அம்பாளுக்குத் தேர் அமைத்த சிற்பாசாரியார் அவர்களிட மும், மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்

Page 49
- 64 -
துக்குக் கருங்கல்லிற் சிற்பம் அமைக்கும் கலைஞரிடமும் உள்ள திறமையை அவர் வெளிப்படையாகவே புகழ்ந்தார். அவர்க ளிடமிருந்து இந்நாட்டுச் சிற்பக் கலை ஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விட யங்கள் எவ்வளவோ உண்டு என்றும் கூறினர்.
ஆணுலும் தன்னம்பிக்கை உள்ள கலாகேசரி இப்போது உருவாகி வரும் தேர்கள், வாகனங்கள், சிற்பங்கள் ஈழத்தின் புகழை நிலைநாட்டப் போது மானவை என்றே கருதுகிருர். இப்போது சங்கீதம், நாட்டியம், எழுத்துத் துறை, மேடைப் பேச்சு எல்லாவற்றிலும் முன் னேறிக்கொண்டு வரும் நாம் சித்திரம், சிற்பம் ஆகிய துறைகளிலும் விரைவில் முன்னேறியே தீருவோம் என்ருர்.
இந்த அரசாங்கம் சங்கீதம், நாட்டி யம், சித்திரம் போன்ற அழகியற் பாடங் களுக்கும், சிற்பவேலை, மரவேலை, நெசவு வேலை போன்ற தொழில் முன்னிலைப் பாடங்களுக்கும் முக்கியத்துவ மளித்துள் ளமை வரவேற்கத் தக்கது. நல்ல கலைஞர் களைப் பெற இது உதவும் என்பதும் அவரது கருத்து.
இந்த நாடு விழிப்படைந்து துரித கதியில் செல்லும் இவ்வேளையில் கலைகள் வாழ்க! நம் கலைஞர்கள் வாழ்க! கலா கேசரி வாழ்க என்று போற்றுவோமாக!

யாழ்ப்பாண வட்டார சிறுவர் சித்திரக் காட்சி மலரிலிருந்து. 14.10.1968

Page 50

14. தேன் சிந்தும் மலர்
கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர் களைப் பற்றி அவர் செய்துவரும் கலைத் தொண்டு பற்றி என்னுடைய அபிப்பிரா யத்தையும் அவருடைய பேட்டியையும் கலந்து எழுதி முடித்துவிட்டு மனப்பூரிப் படைகையில் பத்திரிகைகளும், அறிஞர் களும் அவரை ஊக்கப்படுத்தி மேலும் மேலும் அவர் தொண்டு வளர எழுதிய, பேசிய வார்த்தைகள் என்மனதில் மிதக் கின்றன. உண்மையான கலைஞனை இனம் கண்டுகொள்ள இவை உதவும். எனவே, அவற்றிலிருந்து கொய்த மலர் களை இங்கு சமர்ப்பிக்கின்றேன்:
*உங்களது கலைக் கட்டு  ைரகள் தொகுக்கப்பெற்றும் புத்தகமாக வெளி யிடப்பட்டும் பல வகையான மக்களாலும் முதற் தரமானதென்றும், பாடப்புத்தக மாக உபயோகிக்கக்கூடிய தென்றும் ஏற்றுக்கொள்ளப்பெற்றமையை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றேன்.”
ஜீ. ஜீ. போன்னம்பலம், கியூ, ஸி. 罗á一9一星96五
米 米 宗
“மரத்துக்கு உயிர்கொடுத்து அதனைப் பேசவைக்கும் சக்தி இந்த மனிதப்
5

Page 51
- 66 -
"பிரம்மா'வுக்கு உண்டு. இவர் கைப் பட்ட இடங்களெல்லாம் கலையம்சம் கொண்டவையாகவே இருக்கக் காண லாம். காலத்தையும் வென்று நிற்கக் கூடிய விதத்தில் இவர் படைத்த சிற்பங் கள் கதை பேசுகின்றன. கலைத் தெய் வத்தின் காலடிக்குத் தன்னை அர்ப்பணித் துக் கலைவாழ்வு வாழும் கலாகேசரி தம்பித்துரையை எவ்வளவு புகழ்ந்தா லும் தகும். கலாகேசரி தம்பித்துரை உருவாக்கிய அழகுச் சிற்பங்களின் திறனை அறியவேண்டுமென்ருல் அவர் செய்த தேர்களைப் போய்ப் பார்க்க வேண்டும். அத்தேர்களில் அவர் செதுக்கிய சிற்பங் கள் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளு கின்றன’’.
* ஈழநாடு வாரமலரில் 30 - 2-6 7 பாமா ராஜகோபால்
米 来 来
*" கலை பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு வரும்போதுதான் அதன் சிறப்புப் பரிணமிக்க முடியும். இன்று வாழ்கின்ற நம்மவரிற் பலர் தமது மரபுக் குரிய உயர்ந்த தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களையே நாடிச் செல்லுகின் றனர். நம் மூதாதையர் கட்டிக்காத்து வந்த உயரிய பாதையிற் செல்லாமல் ஒதுங்குகின்ற மனப்பான்மை நம்மை விட்டு அகலுமானல் நிச்சயமாக நாம் உயர முடியும். திரு. த ம் பித்து  ைர

- 67 -
ஆங்கிலக் கல்வி கற்று உத்தியோகத்தில் உயர்வுற்ற போ தி லும் அவர் தனது தந்தையாரின் கலையாக்கத்தைக் கைக் கொண்டதன் காரணமாக கலைதான் அவரை நிலைநிறுத்துகின்றது'.
பரமேஸ்வரக்கல்லூரி அதிபர் 0-04-68 சி. சிவபாதசுந்தரம்
k 来源 米汉 ‘மகாஜனக் கல்லூரியில் பல வருடங் களாகச் சித்திர ஆசிரியராகக் கடமை யாற்றிய திரு. ஆ, தம்பித்துரை அவர்கள் இப்பொழுது வடமாகாணச் சித்திர வித் தியாதரிசியாகப் பதவி உயர்வு பெற்றுள் ளார். இவர் இப்பொழுது பிரதானமாகச் சிறுவர் சித்திரக் காட்சிகளை ஆங்காங்கே நடாத்த ஏற்பாடு செய்து வருவது வர வேற்கத்தக்கதாகும். இவர் ‘ஒவியக்கலை", “சிறுவர் சித்திரம்' ஆகிய நூல்களின் ஆசிரி யர். யாழ்.இலக்கிய வட்டம், குரும்பசிட்டி சன்மார்க்கசபை ஆகியவற்றின் உறுப் பினர். இவரது பதவி உயர்வு குறித்து வெற்றிமணி பெருமிதமடைகிறது’.
5-04 - 68 - ஆசிரியர், ‘வெற்றிமணி'
宋 米 。朱 **உலகில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் குழப்பநிலையில் இருக் கிருர்கள். சிறுவயதில் நல்ல சமநிலைக் கல்வி பெருததால் வயதுவந்ததும் இளை ஞர்கள் அல்லற்படுகின்றனர். இதுவே

Page 52
- 68 -
இளைஞரைப் பிடித்துள்ள இந்த நோய்க் குக் காரணம். பெற்ருேரும் ஆசிரியரும் அளிக்கின்ற பயிற்சியும் கல்வியும் குழந் தையைத் தெய்வத்தின் அருள் ஒளியில் அமரச் செய்ய வேண்டும். சிறுவர்களது அகவளர்ச்சிக்கு ஏற்ற சித்திரப் பயிற்சியை அளித்தால் அதன் உள்ளம் வளர்ச்சி யுறும்; அழகுறும் பூரணத்துவமடையும்; கலை வளம்பெறும். நா ட் டி ல் பெரு நன்மை உண்டாகும். எனவே இப்படி யான சிறுவர் சித்திரக் காட்சிகள் மூலம் சிறுவர் மனதைச் சமநிலைக்குக் கொண்டு வரப் பாடுபடும் திரு. ஆ. தம்பித்துரை அவர்கள் பாராட்டுக்குரியவர் என்பதில்
சந்தேகமில்லை’.
யாழ்-மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ரி. முருகேசம்பிள்ளை 29-06-68
米 水 米
*" சித்திரக் கலையில் ஒரு மறுமலர்ச் சியை இப்பகுதியில் ஏற்படுத்தத் துணிந்து நிற்கிருர் எமது சித்திர வித்தியாதரிசி திரு. ஆ. தம்பித்துரை. அவர் எண்ணத் தின் அடிப்படை மிக ஆழமானது. சிறுவர் சித்திரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி ஞல்தான் வருங்கால சமுதாயம் ஒரு சிறந்த கலையுலகிற் சஞ்சரிக்க முடியும் என்பது எனது கருத்து. அல்லாமலும் கலையை உணர்ந்தவன்தான் பண்பான

- 69 -
பிரஜையாகவும் வாழ முடியும். பண் பைப் பேணிப் பாதுகாக்கச் சமுதாயம் தானுக வளச்சியடையும். தூய்மையான எண்ணங்களைப் பிரதிபலிப்பதுதான் சிறுவர் சித்திரம்'.
வடமாநில வித்தியாதிபதி 14 - || 0-68 எஸ். தணிகாசலம்
米 朱 米
‘'சிறுவர்களிடம் ஒரு வெண்கட்டியோ அல்லது கரித்துண்டோ அகப்பட்டுவிட் டால் அவர்கள் தங்கள் பாட்டில் தாறு மாருகக் கீறித்தள்ளுவார்கள். இந்தக் கிறுக்குதல்களையே அலங்காரச் சித்திரங் களாக அமைத்துவிடலாம். வளைவு கோடுகளைக்கொண்டு கடலின் அலைகளை யும், புகையின் சுருளையும், பட்சிகள் பறத்தலையும், தவளைகள் பாய்தலையும் காட்டலாம். அவ்வாறே கோட்டுத் துண்டுகளினல் மழை பெய்தல், புல் முளைத்தல் போன்ற கருத்துக்களையும் அலங்காரச் சித்திரத்தின்மூலம் சித்திரிக் கலாம் எனச் சிறுவர்களின் அழகுணர்ச்சி பற்றிக் கலாகேசரிதம்பித்துரை அவர்கள் மிகத் துல்லியமாக விளக்கியிருக்கிருர், இத்தகைய காட்சிகள் சிறுவர்களிடையே தன்னம்பிக்கையை மலரச் செய்து அவர் களின் தனித்துவத்தை வளரச் செய்கின் றன. சிறுவர்களின் கற்பனை வளத்தை யும் அழகுணர்ச்சியையும் விருத்திசெய்ய வடமாநிலக் கல்விப்பகுதியினர் சிறுவர்

Page 53
- 70 -
சித்திரக் காட்சிகளை ஏற்படுத்தி வருவது நல்லதொரு கலைப்பணியாகும்'.
சிந்தாமணி"யில் 18.03-69 'gો. મિ.”
"இன்று இந்த நுண்கலைக் கழகத்திற்கு வரும் பேறு பெற்றேன். ஈழநாட்டில் உள்ள இந்தக் கலைக் கழகத்தில் தமிழ் மக்கள் ஆவலுடன் ஒவியப்பயிற்சி பெற்று வருவதைக் கண்டு மகிழ்ந்தேன். திறமை மிக்க ஒவியக்கலை வல்லுனரான திரு. ஆ. தம்பித்துரை அவர்கள் தலைமையில் இயங்கும் இந்தச் சித்திரக் கழகம் நீடூழி வாழப் பிரார்த்திக்கின்றேன்.”*
சாந்தான்குளம் நுண்கலைச் செல்வர் அ. இராகவன் 69-سے 9 ح۔ 21
米 米
'சித்திரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக் கான கலந்துரையாடல் வகுப்பை ஆரம் பிக்கும் இவ்வேளையில் பல கண்காட்சி களையும், சித்திரப் புத்தூக்க வகுப்புக் களையும் நடாத்திச் சித்திரக் கல்விக்குப் புது மெருகு கொடுத்துவரும் சித்திரக் கல்வி அதிகாரி கலாகேசரி ஆ. தம்பித் துரை அவர்களின் ஆக்கத்தையும் ஊக்கத் தையும் பெரிதும் பாராட்டுகின்றேன்.' வடமாநிலக் கல்வி அதிபதி
02-03-73 தி. மாணிக்கவாசகர்

சன்மார்க்க சபை வெளியீடுகள்
நூல்கள் :
அப்பர் புகழ் மாலை திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி சிவபுராணம் தோத்திரத் திரட்டு பாராயணத் தோத்திரத் திரட்டு கோளறு பதிகம் திருமுருகாற்றுப்படை தோத்திரங்கள் உமையம்மை திருப்புராணம் - அம்பாள்
திருவூஞ்சல்
d
பாட நூல்கள் :
1. இலக்கிய மஞ்சரி 4ஆம் புத்தகம் 2 5ஆம் 3. சைவ சமய போதினி 2ஆம் 39 4. s 3ஆம் s 5 岑窦 4ஆம் s 6 s 5ஆம் sy 7 s 6gйо s
பிற நூல்கள் :
1. சைவ நற்சிந்தனைகள் (சமயம்)
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை 2. மத்தாப்பு (குறுநாவல்)
- ஈழத்து எழுத்தாளர் ஐவர் 3. ஒவியக் கலை (கலை)
- கலாகேசரி ஆ. தம்பித்துரை 4. சிறுவர் சித்திரம் (கலை)
- கலகேசரி ஆ தம்பித்துரை

Page 54
5. நமசிவாய மலர் 6. கடுக்கனும் மோதி 7. நாவலர் அறிவுை 8. குரும்பசிட்டி அம்
9. குரும்பசிட்டி விந
10. பாலர் விருந்து
11. சன்மார்க்க சபை -
12. கூப்பிய கரங்கள் 13. நவக்கிரக தோத்
ang Gua) :
1. திரு. நா. பொன்
வாழ்க்கை வரலா
2. கலை மடந்தையின்
3. மாவிட்டபுரத் திரு
一ü响
சன்மார்க்க இளைஞர்
1.
2. 3.
சீசரின் தியாகம் (! அன்னபூரணி ( பாடசாலை நாடகம்
- திரு ஒரே ஒரு தெய்வ

ii
ரமும்
இரசிகமணி கனக. செந்திநாதன்
- இரசிகமணி கனக. செந்திநாதன் பாள் பதிகம்
- அருட்கவி சீ. விநாசித்தம்பி ாயகர் பத்து - கவிஞர் வி. கந்தவனம், B. A. 'கவிதை)
- வ. இளையதம்பி 30ஆவது ஆண்டு
நிறைவு விழா மலர் (நாடகம்) ரு ஏ. சி. பொன்னுத்துரை, B A. திர மாலை
- அருட்கவி சீ. விநாசித்தம்பி
னயா அவர்கள்
- கலப்புலவர் க. நவரத்தினம் தவப் புதல்வன் இரசிகமணி கனக. செந்திநாதன் த்தல வரலாறு மயூரீது ஷண்முகநாதக் குருக்கள்
சங்க வெளியீடுகள் : சிறுகதை)-இரா. கனகரத்தினம் சிறுகதை) 3
. ஏ. ரி. பொன்னுத்துரை, B. A.
ம் (குறுநாவல்)
- க. சிவகுமாரன்