கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாதவி மடந்தை

Page 1
MADHAVI MADANTAI
A TAMIL PLAY BASED ON CILAPPATIKARAM
By
LAN KAIYARKONE
""HIFLIMIAEAL FF|-S5 CHUNINAKAM
Copyright Price:
 

-- - ܠܐ 5 ܒܬܐ - ܒ -- -- ܒܬܐ ܠܐ * 、
s
-

Page 2

மாதவி மடந்தை
(சிலப்பதிகாரத்தைத் தழுவிய ஒரு மேடை நாடகம்)
* இலங்கையர்கோன்' எழுதியது
சுன்னுகம் : திருமகள் அழுத்தகம்
பதிவுரிமை) 1958 [ୱ୍ଥିର) :

Page 3
உரிமை
சிலப்பதிகாரமும் சிலப்பதிகாரக் கதையும், அதன் வெவ்வேறு திரிபுகளும், தமிழர்களின் பொதுச் செல்வம். ஆனல், மாதவி மடக்தை ’ என்ற இந்த மேடை நாடக நூலின் தலைப் பெயரும், காட்சி அமைப்புக்களும் வசனங்களும் நாடக ஆசிரியரின் உரிமை. இந்த உருவத்தில் நாடக மாக நடிக்க விரும்புபவர்கள், அல்லது இந்த வசனங்களை உபயோகித்து சினிமா ' படம், ரேடியோ ' நாடகம் முதலியன செய்ய விரும்பு பவர்கள், எழுத்தில் நாடகாசிரியரின் அனுமதி பெற்றே செய்தல் வேண்டும். இந்த உரிமைகள் பதியப்பெற்றுள்ளன. இது சம்பந்தமான கடிதப் போக்குவரத்துக்கள், சுன்னுகம், “ ஈழகேசரி’ப் பத்திரிகை அதிபர் மூலம் செய்துகொள்ளலாம்.

8F LD ñt I Lu 600T ib
கன்னிமையும் கவினும் என்றுமே அழியாத தமிழ் அணங்கிற்கும் தமிழ் பேசும் அத்தனை பேருக்கும் இந்த காடகம் சமர்ப்பன மாகிறது.

Page 4
பாத்திரங்கள்
1C.
11.
12.
13. 14. 15. 16. 17.
18, 19. 2O
21. 22. 23. 24. 25. 26. 27.
நாடகத்தில் தோற்றும் கிரமப்படி
சேரலாதன் - சேரநாட்டு மன்னன் சேரன் செங்குட்டுவன் - அவனுடைய மூத்த மகன் இளங்கோ - அவனுடைய இரண்டாவது மகன் நிமித்திகன்
சேரமாதேவி - நற்சோணை சீத்தலைச்சாத்தனுர் - தமிழ்ப் புலவர் மாநாய்க்கன் - பூம்புகார் வணிகன் ; கண்ணகியின்
தந்தை கண்ணகி மாசாத்துவான் - கோவலனின் தந்தை கோவலன்
கெளசிகன் - கோவலனின் நண்பன்
பெருமனக்கிழத்தி - கோவலனின் தாய் ஆடல் ஆசிரியன்
LD56s
வசந்தமாலை - மாதவியின் தோழி கரிகாலன் - சோழ மன்னன் கவுந்தியடிகள் - ஒரு சமணத் துறவி மாதரி - மதுரையில் உள்ள இடைக்குலப் பெண் ஐயை - மாதரியின் மகள்
பொற்கொல்லன்
உதவியாளன்
பாண்டியன் நெடுஞ்செழியன் கோப்பெருந்தேவி - நெடுஞ்செழியனின் மனைவி முதற் காவலன்
இரண்டாம் காவலன்
மதுராபுரித் தெய்வம்
குறவர் தலைவன்
யாழ் ஆசிரியன், தண்ணுமை ஆசிரியன், காவலர்கள் இடைக்குலப் பெண்கள், குறப்பெண்கள் - முதலியோர்.

முன்னுரை
Tென் இளவயது முதற் கொண்டே சிலப்பதிகாரத் தின் மேல் ஒரு ஆசை. நாடகப் பண்பைப் பொறுத்த மட்டில், மேனுட்டு மொழிகளில் நாடக மன்னர்கள் எனக் கொண்டாடப்படும் ஷேக்ஸ்பியர், ஈயூஜின் ஒநேல், பேர்னட் ஷோ, கேதே முதலியவர்கள் எல்லாம் இளங்கோ விற்கு ஈடானவர்கள் தான். ஆனல் இளங்கோ, நாடக மேடையை மனதிற் கொண்டு தம் காவியத்தை எழுத வில்லையே என்று நான் கினைத்த நாட்கள் பல உண்டு
உண்மையான நாடகம் மேடைக்கு என்று எழுதப்பட வேண்டுவதில்லை. அது மக்கள் மனத்திற்கு என்று எழுதப் படல் வேண்டும் என்பது சிலப்பதிகாரத்தைத் திரும்பத் திரும்பப் படித்ததனுல்தான் தெரியவந்தது எனக்கு, இருந் தும், மேடையில் நடிக்கப்படும் நாடக பாணி என்று ஒன்று உண்டே, அதன்படி சிலப்பதிகாரத்தை இக்கால மேடைக்கு உகந்த ஒரு நாடகம் ஆக்கவேண்டும் என்பது என்னுடைய எத்தனையோ காள் ஆசை, ஆவல்.
அதன்படி எவ்வளவோ பணிவுடனும் பயத்துடனும் இந்த முயற்சியில் ஈடுபட்டேன். அது நல்லதோ கெட்டதோ என்பது நீங்கள்தான் கூறவேண்டும்.
இந்த நாடக முயற்சிக்கு, பேரறிவும் நல்ல மனமும் உள்ள பல பெரியோர்களுடைய ஆசியும் அன்பும் எனக்கு வேண்டி இருந்தது. அவை எனக்கு நிறைவாகவே கிடைத் தன. ஈழத்துத் தமிழ் அறிஞர் சு. நடேசபிள்ளை அவர்கள், அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பகுதிப் பேரா சிரியர் டக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள், இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் டக்டர் க. கணபதிப்பிள்ளை அவர்கள், கொக்குவில் டக்டர்

Page 5
vi
வ. பொன்னையா அவர்கள், திரு. ஏ. வி. மயில்வாகனம் அவர்கள், “ ஈழகேசரி’ ஆசிரியர் திரு. இராஜ அரியரத் தினம் அவர்கள் முதலிய பலர் ஆசிகள் தந்தார்கள்; அன் பும், தங்கள் பெரிய மனங் கொண்ட மட்டுந் தந்தார்கள். என்னைத் தமிழ் எழுத்துத் துறையில் ஈடுபடுத்தியவர் களில் மிக முக்கியமானவர் காலஞ்சென்ற ஈழகேசரி பொன்னேயா’ அவர்கள். அவர் ஆரம்பித்து வைத்த திருமகள் அழுத்தகத்தார் இந்த நாடக நூலை வெளியிடுகின் ருர்கள். அதில் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டவர்கள் திரு. கோ. அப்பாக்குட்டி அவர்களும், திரு. மு. சபாரத் தினம் அவர்களும் ஆவர்.
இதை எட்டு அங்கங்களில் ரேடியோ நாடகமாக ஒலி பரப்பிய இலங்கை வானுெலித் தமிழ்ப் பகுதியினருக் கும், இதை அச்சிடுவதற்குத் தகுந்த முறையிற் பிரதி செய்து தந்த என் மனைவிக்கும் நான் கடமைப்பட்டவன்.
இவர்கள் எல்லோருக்கும், ஐஊக்கம் அளித்த மற்றும் பலருக்கும் நான் நன்றி கூறி அமைவதா என்ன? அமை யாது.
இதோ மாதவி மடங்தை”. இனி நீங்களும் அவ ளும் பட்டது பாடு!
இலங்கையர்கோன் ?

ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் திரு. சு. நடேசபிள்ளை, B.A., B.L., F.R. E. S. அவர்கள் அளித்த அணிந்துரை
ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்கள் என்று சொல்லப் படுவனவற்றுள் சிலப்பதிகாரம் தனிச் சிறப்புடையது. அது நாடகக்காப்பியம் என்று வழங்கப்பெறும். பண்டைக் காலத்து நாடகத் தமிழைப்பற்றி நாம் செவ்வனே அறிந்துகொள்வதற்கு இயலாவிடினும், அதைப்பற்றி ஒருவாறு அறிவதற்குச் சிலப்பதிகாரம் துணை செய்கின்றது. சிலப்பதிகாரத்திற் கூறப்படும் சரித்திரம், நாடகச் சுவைகள் பொருந்தியதாக விளங்குகின்றது. இச் சரித்திரம் பல நூற்ருண்டுகளாக நடிக்கப்பட்டு வந்துள்ளது.
இக்காலத்துக்கு ஏற்ற முறையில் இதை நடிப்பதற்கு உதவியாக இலங்கையர்கோன்’ அவர்கள் 'மாதவி மடந்தை” என்ற ஒரு நாடகத்தை இயற்றி அளித்துள் ளார்கள். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை அமைத் துள்ள முறையைப் பெரும்பாலுக் தழுவியே இக் நாடகம் எழுதப்பட்டிருக்கின்றது. இயன்றவரையில் சிலப்பதிகாரத்தின் சுவையைக் காட்டி, அக் காப்பியத்தின் பெருமையை இக் காடகம் புலப்படுத்துகின்றது. சிலப் பதிகாரத்திற் கூறப்பட்ட காதைகள் சுருக்கப்பட்டு, இந் நாடகத்தில் இருபத்தாறு காட்சிகளாக அமைகின்றன. சிலப்பதிகாரத்திலுள்ள வரிப்பாட்டுக்களுள் சில ஆங்காங்கு இந் நாடகத்தில் விரவி வருகின்றன.
நடிப்பதற்குரிய நடையில் இந் நாடகம் எழுதப்பட் டிருக்கிறது. நாடகம் வேகமான கதியிற் செல்கின்றது. நாடகத்துக்குத் தகுந்த உரைநடையை இந் நாடகத்திற் காண்கின்ருேம். இந் நாடக ஆசிரியரது உரைநடை தெள்ளிய நீரோடை போல் இருக்கின்றது. இவ் வுரை கடை பாராட்டுதற்குரியது.
இத்தகைய நாடக நூல்கள் பலவற்றை இலங்கையர் கோன் எழுதுவதற்குத் தமிழ் மக்கள் ஆதரவு காட்டு வார்களென்று எதிர்பார்க்கிறேன். இராமநாதன் கல்லூரி, சு. நடேசபிள்ளை சுன்னுகம், 1-3.58.

Page 6
அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ஆராய்ச்சிப் பகுதித் தலைவர் டக்டர் அ. சிதம்பரங்ாதன் செட்டியார், M. A. அவர்கள் அளித்த மதிப்புாை
திரு. இலங்கையர்கோன் ? அவர்கள் எழுதியுள்ள * மாதவி மடந்தை” என்ற நாடகம் நல்ல இனிய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் காவியத்தைத் தழுவி இந்நாடகம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச் சிக்குரியது. இடையிடையே நல்ல செய்யுட் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருபத்தாறு காட்சிகளில் முடியும் இந்நாடகம் நல்ல அவையினர் முன்னே நடித்துக் காட்டும் நிலையில் உள்ளது ; படிக்கப் படிக்க இன்பம் பயப்பது.
அ. சிதம்பரநாதன் அண்ணுமலைப் பல்கலைக் கழகம் அண்ணுமலைநகர் 21-3-58

காட்சி 1
திரை அகல்கிறது)
நடு மேடையின் பின்புறத்தே உள்ள இரண்டு சிம்மாசனங்களில் சேரலாதனும் சேரமாதேவியும் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள ஒரு தவிசில் சேரன் செங்குட்டுவன் அமர்ந்து இருக்கிருன். அந்தத் தவிசில், கை சாய்ந்தபடி இளங்கோ நிற்கிருர் . இடப்புறம் முன்மேடையில் நிமித்திகன் நிற்கிருன். இடப்புற வாசல், வலப்புற வாசல் இரண்டிலும் காவலர்கள்.
சேரலாதன் :- (வெகுண்டு எழுந்து யாது கூறினே நிமித்திகா ? நிமித்திகம் கூற வந்த நீ என் செவி களில் நாராசத்தைப் பாய்ச்சிவிட்டாயே! போ !
இக்கணமே ! நீ அந்தணன் ஆகையால் உன்னைத் தண்டனை செய்யாது விடுத்தோம். போ! போ!
(நிமித்திகன் வணங்கிவிட்டு இடப்புற வாசல் வழி யாகப் போகிருன்)
சேரன் செங்குட்டுவன் :- எந்தையே! நாளும் கோளும் நிலைகண்டு கற்றுணர்ந்த நிமித்திகன் உண்மையே கூறினன்.
சேரலா - எது உண்மை? தமையன் நீ இருக்க, நின் தம்பி இளங்கோ எமக்குப்பின் அரசுகட்டில் ஏறு வதா உண்மை ? தமிழ் அரசர் மரபிலேயே இதுகாறும் கடந்திராத புது மரபு இது! (சிரித்து) எது உண்மை?
சேரமாதேவி :- அமருங்கள் நாதா !
(சேரலாதன் தன் சிம்மாசனத்தில் அமர்கிருன்)

Page 7
2 மாதவி மடந்தை
சேரன் செங் :- இம் மணிநாட்டின் அரசனுவதற்கு என்னிலும் பார்க்க என் தம்பி தகைமை மிக்கவன் ; அவன் மனதிலே எந்நேரமுங் குடிகளின் நலனைப் பற்றிய கவலை: அவன் கண்களிலே கருணை, கல்வி வீரம் எல்லாக் திகழ்கின்றனவே! அவன் சகல கலா பண்டிதன் ! அவன் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் !
சேரலா :- போதும், (உரத்து) போதும்! நீயுமா? இந்தப் பாழும் நிமித்திகன்தான் கூறினன், நீ இருக்க உன் தம்பிக்கு அரசென்று மிக உரத்து நீயுமா?
சேரன் செங் :- எந்தையே கவலே வேண்டாம். எனக் கும் என் தம்பிக்கும் உடல்கள் இரண்டே தவிர உயிரும் உள்ளமும் ஒன்று என்பது மன்னராகிய தாம் அறியாததா? இவன் அரசனுணுல் என்ன? நான் அரசனனுல் என்ன ? இரண்டும் ஒன்றுதான்!
சேரலா :- கின் தாய் கற்சோணையின் மணி உதரத்தில் பூத்த முதல்மலர் நீ! (விம்மி) நீ இருக்க உன் தம்பி அரசாள்வதா? அதை நான் சகியேன். நின் அன்னை தான் எப்படிச் சகிப்பாள்.
இளங்கோ : - எந்தாய், கவலை வேண்டாம் ! தாம் கவலை
யுற கான் சகிப் பேணு ? அல்லது எம் அன்னையின் மனம் நோகத்தான் சகிப்பேனு ?
சேரலா - மைந்த !
சேரன் செங் :- தம்பி!
இளங்கோ : விதி வலிது! நாளுங் கோளும் அறிந்த நிமித்திகன் விதியை ஆய்ந்து எனக்கே தனி அர சுரிமை என்ருன். தமிழ் அரச மரபு தமையனுக்கே அரசுரிமை என்கின்றது. ஆனல் விதியை வெல்வதும்

5rLg 1 ャン 3
ஒன்று உண்டு ! அது மதி தமிழ் அரச மரபு காப் பாற்றப்பட வேண்டும். அண்ணனுக்கே அரசுரிமை ! எனக்குத் துறவு! (தன் உடைவாளைக் கழற்றி நடு மேடையில் எறிகிரு ர்.1
சேரலா : (அலறி) என்ன செய்யத் துணிந்தாயடா என்
கண்மணி ' (மயங்கி வீழ்கிறர்.)
சேரமாதேவி :- (எழுந்து இளங்கோவைக் கட்டி அணைத் துக்கொண்டு விக்கி அழுது என் இளைய திருமகனே, என்னடா செய்யத் துணிந்தாய் நீ?
இளங்கோ :- (தாயின் கரங்களை விலக்கிவிட்டு) வாழ் வுக் தாழ்வும் அறிக்கு, அன்பும் அறிவுஞ் சுரந்து, மன்பதை காக்கும் மன்னனின் மனைத்தலைவியாய், குடிமக்களின் தாயாய், புலவர்களின் பாடல் ஒவிய மாய், புரவலர்களின் தெய்வமாய், சேரகாட்டின் கண் கண்ட திருமகளாய்த் திகழ்ந்த என் அன்னையா ஏதும் அறியாப் பெண்டிர்போல இப்படிக் கரைந்து அழுவது? அம்மா, தமிழ் அணங்கு என்னை மையல் செய்து அழைக்கின்ருள். அவளுக்கு நான் தமிழ்ப் பாவினல் மாலைகள் புனேய வேண்டும்.
சேரன் செங் :- என்னடா செய்யத் துணிந்தாய் நீ ? இதோ எம் தந்தையின் சோகத்தைப் பார்! (உரத்து தாயின் கண்ணிரைப் பார்.
இளங்கோ :- (சிரித்து அண்ணு, நீ பூமகளின் மன் னன்! நான் தமிழ்மகளின் அடிமை! இதோ அருகி லுள்ள குணவாயிற் கோட்டத்தில் இருந்து தமிழும் பாடி அருக அறமுஞ் செய்வேன் !

Page 8
4 மாதவி மடங்தை
சேரமா :- நெற்றிமேற் புரளும் இந்தக் கருஞ் சிகையைக் களைந்தெறியப்போகின்ருயா ? இப் பொன்னுடை எல்லாம் விலக்கிவிட்டுக் காவி உடை அணியப் போகின் ருயா? (அழுது என் இரு கண்களே போல் அன்பு அறிவு வீரச்சுடர்கள் என் இரு மைந்தர்களென்று இறுமாந்திருந்தேனே! என் கண்க ளில் ஒன்று அவிந்து போனுல்.
இளங்கோ - (சிரித்து) நான் அவிந்தா போய்விட்டேன்? இதோ நெடுங் குன்றுபோல் நிற்கின்றேனே! இராச போகத்தில் இருந்த பற்றுக்களை ஆடை களைவது போலக் களேந்து எறிந்துவிட்டேன். ஆனல், தமிழ் மகள் மேற் கொண்ட பற்றும் (குரல் கம்மர் என்னே ப் பத்துமாதஞ் சுமந்து ஈன்று, பாலோடு அறிவையும் அன்பையும் ஊட்டி வளர்த்த கின்மேற்கொண்ட பற்றும்.
சேரமா - மைந்த என் கண்ணே (அழுகிருள்
இளங்கோ - (இடப்புறம் முன்மேடைக்கு வந்து, விக்கி) என் அன்னய் ! நீ வாழ்வாயாக! அண்ணு, உன் செங்கோல் தழைப்பதாக !
சேரமா :-கின் தமிழ்ப்பணி சிறக்க (அழுகிருள்
சேரன் செங்: கின் துறவுஞ் சிறக்க (அழுகிருன்)
இளங்கோ :- (இடப்புறம் போய்க்கொண்டே வாழ்க
தமிழ் அணங்கு! வாழ்க அருகன் அறம் !
(திரை 1

காட்சி: 2
(திரை அகல்கிறது) (இளங்கோ துறவுடையில் ஏடும் எழுத்தாணி யுங் கையுமாக நடு மேடையில் அமர்ந்திருக்கிருர். அவருக்கு வலப்புறஞ் சீத்தலைச் சாத்தனர் உட் கார்ந்திருக்கிருர்.) * இளங்கோ - தாங்கள் இவ்வளவுதூரம் என்னை நாடி வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. மதுரையில் தமிழ்ச்சங்கம் எப்படியோ?
சீத். சாத் :- தங்களை இன்று கண்டதே என் மனதிற்குப் பெரும் நிம்மதி. அரசர்கள் புலவர்களை ஆதரிப்பார் கள்; ஆனுல் அரசர்களே பதவியைத் துறந்துவிட்டுத் தாங்களே புலவர்கள் ஆவார்கள் என்பது என் மன திற்குப் புதுமை. என் தலையைத்தான் பார்த்திருப் பீர்களே. எனக்குப் புலமை எளிதில் வருவதில்லை. ஆகையினுல் ஏட்டைக் கையில் வைத்துக்கொண்டு என் தலையை எழுத்தாணியாற் புண்படச் செய்திருக் கிறேன்.
இளங்கோ - எனக்குப் புலமை இலகுவில் வந்துவிட்டது என்று நான் எண்ணுகிறேன். ஆனல், தங்களைப் போல வேதனைப்பட்டுத் தலையைப் புண்படுத்தியுங்கூட வருவதுதான் உண்மைப் புலமை என்பது என் எண் ணம். தாங்கள் சொன்னீர்களே கண்ணகி என்ற கற்புடை மாதின் கதை. அதனை நான் ஒரு காவிய மாகப் பாடிவிடலாமோ என்று ஆசைப்படுகிறேன்.
சீத். சாத் - செய்யுங்கள் 1 செய்யுங்கள் 1 அதிலே மூன்று அரசர்களின் வாழ்க்கையும் வருவதினுல் அரச வாழ்வு எதுவென்று அறிந்த தாங்களே அதைப் பாடத் தகுதியுள்ளவர்கள். நானே ஏழை; எனக்கு அவை புரியா.

Page 9
6 மாதவி மடத்தை
இளங்கோ - ஆம் புலவரே, தாங்கள் கூறிய கண்ணகி
யின் கற்புக்கதை என் மனதை மிகவும் கவர்ந்து விட்டதே.
சீத். சாத் :- தாங்கள் மனம் வைத்துவிட்டால் அது எம்
தமிழ் அன்னைக்கு வாய்த்த ஒரு பேறு ! இளங்கோ - எத்துணைக் கற்பு 1 எத்துணைப் பத்தினி !
ஆம், கற்புடை மங்கையரை உலகமெல்லாம் போற்றும் என்பதும், விதி யாதினும் வலிது என்பதும் அறம் பிழைத்த அரசனே அந்த அறமே கொல்லும் என் பதும் அடிப்படையாகக்கொண்டு சிலப்பதிகாரம் என் னும் பெயரோடு ஒரு பாட்டுடைக் காவியம் ஆக்கத் துணிந்துவிட்டேன் புலவரே. இதோ தங்கள் அன் போடு காப்புச் செய்யுள்.
சீத். சாத் :- பாடுங்கள். இளங்கோ -
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான் ! ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான் ! மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற் கவணளிபோல் மேனின்று தான்சுரத்த லான் ! பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோ டோங்கிப் பரந்தொழுக லான் !
(விணை இசை பின்னணியாக
(திரை 1

காட்சி 3
(திரை அகல்கிறது)
(மாநாய்க்கன் திண்டிற் சாய்ந்து கொண்டு வெற் றிலை போடுகிரு ர். அவர் மகள் கண்ணகி அருகில் நிற்கிருள்.
LDFT (5T :- (Go F (typ 6)(o? fi ]
கண்ணகி :- அப்பா, தங்கள் தொண்டை கட்டிக் கொண்டதோ? (சிரிப்பு அல்லது தாங்கள் ஏதாவது பேசவேண்டுமா?
மாநா - (செருமி) ஒன்றுமில்லை.
கண் :- ஒன்றுமில்லை என்று தாங்கள் சொன்னல், ஏதோ இருக்கிறது என்றுதான் எண்ணக்கிடக்கிறது, அப்பா !
மாநா - மகளே, நீ வடமீன் பார்த்திருக்கிருயோ ?
கண் - ஆம் அப்பா! அருந்ததி யென்ற கற்புடை மங்கையின் புகழ்க் கோலத்தைத்தானே குறிப்பிடு கிறீர்கள் !
மாநா - ஆம் மகளே; அந்த அருந்ததியின் கற்புப் போன் றது உன் கற்பு என்று பெண்கள் எல்லோரும் பேசிக்
கொள்கிருர்கள்.
கண் :- (நாணமாக) போங்கள், அப்பா!
மாநா :- தாமரை மலர் பார்த்திருக்கின்றயோ ?
கண் :- அதுதான் நிறைந்து கிடக்கின்றதே எங்கள்
தடாகம் எல்லாம்.

Page 10
8 மாதவி மடந்தை
மாகா - அந்தத் தாமரைப்பூவில் வீற்றிருக்கும் திருமகள் போல நீ அழகாக இருக்கின் ருயாம் என்று, அதுவும் நகர்ப்பெண்கள்தான் பேசிக்கொள்கிருர்கள் !
கண் :- போங்கள் அப்பா, வாய்படைத்த பெண்கள் எதையுந்தான் பேசிக்கொள்வார்கள் ! அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ?
மாநா - நீ திருமணஞ் செய்யவேண்டும். உனக்கு மணப் பருவம் வந்தெய்தியது; எனக்கோ முதுமைப்பருவம்.
மாசாத்துவான் : (மேடையின் இடப்புறம் வெளியே)
மாநாய்க்க, மாநாய்க்க !
மாநா :- (எழுந்துநின்று) வர வேண்டும் வரவேண்டும்! கண்ணகி, மாசாத்துவான் வைசியருக்கு வாய்பூச வெற் றிலை கொண்டு வருவாய் ! (மாசாத்துவான் வலப் புற மேடையில் தோன்ற, கண்ணகி இடப்புற வாயில் வழியாக உள்ளே போகின்ருள்)
மாசா :- பேச்சை வளர்ப்பானேன்? என் மகன் கோவல னுக்கு தங்கள் மகள் கண்ணகியை மணம்பேசி வந் தேன்.
மாநா :- அமருங்கள் (மாசாத்து வான் உட்காருகிருர், ! தங்கள் மகனுடைய புகழ்தான் இந்தப் பூம்புகா ரெல்லாம் பரந்திருக்கின்றதே, செவ்வேள் போன்ற அழகும் வீரமும் உடையவனன்ருே ?
மாசா :- அவனுக்குத் தங்கள் மகள் கண்ணகியை .
மாநா - மகிழ்வுடன் தந்தேன் ! அது என் பெரும்
பேறு.
(திரை )

காட்சி 4
(திரை அகல்கிறது) (கோவலனுங் கெளசிகனும் நடு மேடையிலுள்ள கம்பளத்தின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண் டிருக்கிருர்கள். இருவருக்கும் நடுவே தாம்பூலத் தட்டு.) கோவ:- இப்படி எத்தனையோ பெண்கள் ஆடல் கற்றுக்கொள்ளுகிருர்கள். அரங்கேற்றமுஞ் செய்து கொள்ளுகிறர்கள் ! இந்தப் புது ஆடல் மடந்தையின் பெயர் யாதென்று கூறினுய்? கெளசி :- மாதவி ! கோவ :- மாதவி-மாதவி பெயர் என்னவோ அழ காகத்தான் இருக்கிறது. மாதவி ! எங்கோ முன் அறிந்துகொண்ட பெயர்போலவும். ஆனல் அவள் ரூபம் எப்படியோ ? கெளசி - பார்த்தால் பிரமித்துவிடுவாய் ! கோவ :- அவள் ஆடல் ? கெளசி :- அப்படியே மதியை மயக்கிவிடும். கோவ :- அவள் பாடல்?
கெளசி :- உன் உயிரையே மாட்டி இழுத்துவிடாதா !
யாழும் குழலும் தேனும் பாலும் எல்லாமே அவள் குரலிடம் பிச்சைகேட்க வேண்டும் ஏனப்பா இவ் வளவு பதற்றம் ? இன்னும் ஓராண்டுக்குள் அவள் அரங்கேற்றம் நடக்க இருக்கிறது. எங்கள் மன்ன னுடைய கொற்றவையில் ! அப்பொழுது, நீயே சென்று கண்டு, கேட்டு, உன் சித்தம் அது ஆனல் கிரிப்பு உண்டு உற்று உணர்ந்தும் கொள்ளலா DIT
tdir - 2

Page 11
O மாதவி மடந்தை
(மேடையின் வலப்புறம் மாசாத்துவான் தலைப் பாகையைக் கழற்றிக் கையிற் பிடித்தபடி சிரிப் போடு தோன்றுகிருர், மாசாத் :- (உரத்து ஆச்சி - ஆச்சி ! (கோவலனையுங் கெளசிகனையுங் கண்டதும் திடுக்குற்று, வலப் புறம் முன்மேடையில் நிற்கிருர், கோவலனுங் கெளசிகனுந் திடுக்குற்று எழுந்து நிற்கின்றனர்.)
கோவ:-- அன்னை, உள்ளேதான் இருக்கிருள்.
மாசாத்:- கோவல, ஒரு நற்செய்தி! ஒரு மங்கள
மான செய்தி
(இடப்புறம் இருந்து பெருமனைக்கிழத்தி மேடை மேல் வருகிருள்..)
பெருமனைக்கிழத்தி:- என்னையா தேடினிர்கள்? அந்த
மங்களமான செய்தி என்ன?
மாசாத் :- உன் மைந்தனுக்கு மகள் பேசித் திருமணத் திற்கு நாளும் கியமித்துவிட்டேன். என் நண்பன் மாநாய்க்கனின் மகள் கண்ணகி.
கோவ: - அப்பா, என் சம்மதம் இல்லாமல்.
பெரு-மனை-கிழ - அப்பா உன் நலனை மனதில் வைத்துத் தான் இப்படித் தீர்மானஞ் செய்திருப்பார். நானும் அந்த நங்கையை அறிவேன். அவள் மாசில்லாள்; உனக்கு எவ்வகையிலும் ஏற்றவள். நீ இதற்குத் தடை சொல்லக்கூடாது என் மகனே !
கோவ:- சரி, ஆச்சி
uDTFT 5 – மகிழ்ந்தேன் (இடப்புறம் போய்க்கொண்டே) மகனே, மீ பெரும் பாக்யவான் ! கண்ணகி எம்

காட்சி 4 - 1 1
இல்லத்தில் திருமகளே போன்று விளங்குவாள். (கோவலனைத் தோளில் தட்டிவிட்டு, பெருமனைக் கிழத்தியைப் பார்த்து இனி மணவினை முடிந்த தும், எம் மைந்தனையும் மகளையும் மனையறம் புகுத்த வேண்டிய ஏற்பாடுகளை இப்பொழுதே நீ தொடங்க வேண்டாமா ?
பெரு-ம-கிழ :- அது ஒன்றும் பிரமாதம் இல்லை ! ஆனல் இவர்களை வேறு மனைக்கு அனுப்பிவிட்டுத் தாங்க ளும் நானும் இந்தப் பெரு மனையில், புதிதாக மன யறம் படுப்பதா?
சிரித்தபடி இருவரும் இடப்புறம் வாசல் வழி um st' Gum 6)g ffssir.]
கோவ:- (மேடையில் நடந்துகொண்டே இனி எனக்
குத் திருமணம் கைவிலங்கு, (உரத்து கால் விலங்கு !
கெளசி :- அதெல்லாம் தக்க பருவத்திற் செய்யவேண் டியது தானே, அப்பா ! உனக்கோ வயது பதினெட்டு ஆகிறது.
கோவ:- (நடுமேடையில் நின்று கெளசிக! அந்தக் கணிகை மாதின் பெயர் யாதென்று கூறினுய்?
கெளசி - என்னப்பா உன் திருமணம் முடியமுன்னரே, கணிகை மாதைப்பற்றி நினைக்க ஆரம்பித்துவிட்டாயே! அவள் பெயர் (உரத்து) மாதவி!
கோவ:- மாதவி-மாதவி-(நடந்துகொண்டேமாதவி.
(திரை]

Page 12
காட்சி. 5
மங்கள வாத்யமும் நாதஸ்வரமும் மனிதக்குரல்க ளும் சேர்ந்து இரண்டு நிமிஷம் வரை கேட்கின்றன. அதன் பிறகு திரை அகல்கிறது. இடம் மாநாய்க் கன் இல்லம். மேடையின் பின் மத்தியில் கோவல னும் கண்ணகியும் மணக்கோலத்துடன் இருக் கிருர்கள். கோவலன் அருகே மாசாத்துவானும் பெருமனைக்கிழத்தியும் நிற்கிருர்கள். கண்ணகிக்கு அருகில் மாநாய்க்கன், கெளசிகன், தேவந்தி வேறு சில ஆண்களும் பெண்களும் மேடையின் இடப்புறம் குவிந்து நிற்கிறர்கள். சிவப்பு வர்ணச் சேலை அணிந்த மூன்று பெண்கள் கண்ணகியையும் கோவலனையும் சுற்றிவந்து தங்கள் கையில் உள்ள தாம் பாளங்களில் இருந்து அவர்கள் மேல் மலர்க ளைத் தூவுகின்ருர்கள். அதன் பிறகு மங்கள வாத் யம் (நாதஸ்வரம்) ஒலித்து ஒய்கிறது; சிறு அமைதி.
பெருமனைக்கிழத்தி:- (நடு முன் மேடையில் நின்று வாழ்க நும் மணம் 1 வாழ்க நும் மன அறம்! இன்று மண வாழ்வு ஏற்றுக்கொண்ட எம் மைந்தனும் மகளும், உயிரும் உடலும் போல், நகமும் சதையும் போல், அணைத்த கை அகலாமல், அன்பு என்றும் திரியாமல் மங்கள வாழ்வு வாழ்வீர்! (கோவலனும் கண்ணகியும் எழுந்து நிற்கின்றனர். ஞாயிறுக் திங்களும் (குரல் கம்ம திருமகளும் காமகளும் பூமகளும் நும் மனை வாழ்வை வளம்பெறச் செய்யட்டும் ! சகல மங்களங் களும் உங்களுக்கு வாய்க்கட்டும் !
(மங்கள வாத்யம் ஒலிக்கிறது.
(மெதுவான திரை

காட்சி 6
(திரை அகல்கிறது)
(பின் நடு மேடையில் உள்ள இரட்டை ஆசனத் தில் கோவலன் உட்கார்க் து இருக்கிருன். அதன் அருகே வலப்புறம் கண்ணகி நிற்கின்ருள். இடப் புறம் முன் மேடையில் உள்ள ஒரு முக்காலியின் மேல் சந்தனம் பன்னீர் வெற்றிலை ஊதுவர்த்தி முதலிய மங்கலச் சின்னங்கள்.
கோவ:- கண்ணகி !
கண்ணகி :- என் ஸ்வாமி! கோவ:- உன் நுதலின் அழகைக் கண்டவுடன் எனக்கு
ஓர் எண்ணம் தோன்றுகிறது. கண் :- (சிரித்து கூறுங்கள் பார்க்கலாம். கோவ:- உன் நுதல் பிறை மதியை ஒத்திருக்கின்றது. அதனுற் பிறையைச் சடையிற் தரித்த மகா ருத்ரன் உனக்குக் கடமைப்பட்டிருக்கிருன். கண் :- (நாணி தலை கவிழ்ந்து) பரிகாசமா பண்ணுகி
நீர்கள், நாதா ! கோவ :- (எழுந்து கண்ணகியின் முகவாயைத் தன் வலக் கையினல் நிமிர்த்தி அதுமட்டுமா? மன்மத இனுடைய கருப்பு வில்லின் வளைவு உன் புருவம். இந்திரனுடைய வச்சிராயுதம் உன் இடை!
கண் - (விலகிக்கொண்டு இடப்புறம் முக்காலி அருகிற்
சென்று கொண்டே, நாணமாக போங்கள்
கோவ:-- (தொடர்ந்து அருகில் வந்து சிரித்து இன் னும் கேள். அமிழ்தினும் அமிழ்தாகிய உனக்கு இந்திரனே அடிமைப்படவேண்டியதுதானே! அவன் மட்டுமா? தமிழ்க் கடவுள் முருகன்கூடத் தன்

Page 13
14 மாதவி மடக்தை
னுடைய வேலாயுதத்தை உனக்குக் கண்களாகத் தந்திருக்கிருன்.
கண் :- (வலப்புறம் திரும்பி, கோவலனைப் பார்த்து
ஸ்வாமி.
கோவ :- சூரனைக் கொன்ற அவனுடைய வேல் போன்ற உன்னுடைய கண்கள் என்னை இப்பொழுது கொல் வதைக் கண்டால் அவன் மகிழமாட்டானு?
கண் :- நாதா! ஏதேதோ பேசுகின்றீர்களே.
கோவ:- இது மட்டுமா? இன்னும் கேள். மயில் உன் சாயலைக் கண்டு நாணும் ; அன்னம் உன் நடையைக் கண்டு நானும் ; கிளிகள் உன் குரல் கேட்டு நாணும்.
V
கண் :- இந்த வெற்றுரை எல்லாம் யாருக்கு வேண்டும்? தங்கள் அன்பு ஒன்றே என் கிரந்தர பாக்யம், என் ஸ்வாமி.
கோவ:- வெற்றுரையா? நன்று சொன்னப்.
கண் :-என் பிழை பொறுப்பீர்கள், என் ஸ்வாமி ! தங்கள் காதல், இப்பிறவியில் மட்டும் என்ன இனி வரும் பிறவிகளில்கூடத் தொடர்ந்து இருக்கவேண்டும்.
கோவ :- அதில் ஐயமா? தாமரை மலரில் நீர்த்துளிகள் நடமிடுவதுபோல உன் கண்களில் கண்ணிர்த் துளிகள் மல்குகின்றனவே! கலங்கவேண்டாம். என் காதல் கடல்அனயது; எனக்கும் உனக்கும் உயிர் ஒன்றல்லவோ? தாழ்ந்து புரளுகின்ற கருங் கூந்தலை உடைய பெண்ணே! (பாடுகிமுன்].

காட்சி 6 15
ராகம் : கானடா மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே யரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே யென்கோ ! அலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ ! யாழிடைப் பிறவா இசையே யென்கோ !
கண் :- என் நாதா ! என் போல் பாக்கியவதி யாரும் இல்லை. இந்த இன்பம், இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும். என் ஸ்வாமி (அழு கிருள்.
(வேகமான திரை)

Page 14
காட்சி: 7
(நார்ட்டிய இசை, மாதவி நடு மேடையில் நின்று ஆடுகிருள், மேடையின் இடப்புறம் ஒரு வீணையும் மிருதங்கமும் வாசிக்கப்படுகின்றன. வலப்புறம் அண்ணுவி (ஆடலாசிரியன்) கையில் தாளத்தோடு நாட்டிய வர்ணங்கள் பாடுகிருர். பின்னணியாக வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், நாட்டியம் ஐந்து நிமிஷம் வரை நடந்து ஓய்கிறது. இசையும் ஒய்கிறது.)
ஆடலாசிரியன் - மாதவி, இனி நீ நடனக் கலையிற் கற் றுக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. பாடலாசிரிய னும் நீ இசைக் கலையைப் பூரணமாக அறிந்து கொண்டுவிட்டாய்” என்று கூறிவிட்டான். இனி உன் கலேயின் அரங்கேற்றம்.
இடப்புறம் இருந்து வசந்தமாலை வருகிருள்.1
வஸந்தமாலை - ஆடலையும் பாடலேயும் கூறினிர்கள், மாதவியின் அழகைப்பற்றி ஒன்றும் கூறவில்லையே?
ஆடலா : - அதிற் கூறவேண்டியது என்ன இருக்கின்றது? இயற்கையாகவே ரதியும் தோற்றுவிடும் அழகை மாதவிக்குக் கொடுத்துவிட்டானே பிரமன்,
மாதவி:- அதை மேலும் சுடர்விடச் செய்ய நீ இருக் கின்றயே, வஸந்தமாலா என் அழகு ஆசிரியை ! (சிரிக்கிருள்.
வஸந்த :- இனி அடுத்த வாரம் மன்னன் கரிகாலன் சபையில் உன் அரங்கேற்றம் ! அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் எல்லாஞ் செய்தனையோ ?
மாதவி - அவைகளை மறப்பேனே? அரங்கமைப்போன், யாழாசிரியன், குழலாசிரியன், பாடலாசிரியன், மற்று,

காட்சி 7 7
இதோ ஆடல் ஆசிரியன். எல்லோரும் தத்தம் பணி களை நிறைவேற்றத் தத்தம் இடங்களில் அமர்ந்திருப் பார்கள். மன்னன் தன் ஆசனத்தில் அமர்ந்ததும் ஆரம்பிக்கும் என் ஆடல் !
ஆடலா :- அவைகளில் குறைகள் ஏதும் நேராது, மாதவி தோன் ஒரு வேளை சபையைக் கண்டு கலங்கி.
வஸந்த :- மாதவியின் மனத்திடம் நான் அறியாததா?
அவள் எதற்கும் அஞ்சாள் !
ஆடலா - மற்றை, நகர் அழைப்பு முடிந்ததோ ?
மாதவி :- அதையும் நான் மறக்கவில்லை. நகர்ப் பறை
அறைவோன் காளையே ஆரம்பித்துவிடுவான்.
(திரை)
ህእዙ ÷ 3

Page 15
காட்சி: 8
(கண்ணகி முக்காலியின் மேலுள்ள தட்டின் மேல் மலர்களை அடுக்கி வைக்கிருள். தேவந்தி அவளுக்கு உதவி செய்கிருள்.
தேவந்தி:-மாலை மங்கும் சமயமாகிவிட்டது : நின் நாதன்
இன்னும் வந்திலனே.
கண் :- ஈழத்திலிருந்து எம் நாவாய்கள் உணவுகொண்டு வந்தன. அவற்றைப் பார்வையிடப் புகார்த்துறைக் குப் போனர். அவர் நண்பன் கெள சிகரும் போனர். வந்துவிடுவாரடி இன்னும் சில வினடிகளில் தீபங்கள் ஏற்றிவிட்டாயோ?
தேவந்தி:- மறந்தே போய்விட்டேன். இதோ! (இடப்புறம் போகிருள்-வலப்புறம் கோவலனும் கெளசிகனும் மேடைமேல் தோன்று கிருர்கள்.1
கோவ :- கண்ணகி !
கண் - ஸ்வாமி, வரவேண்டும். (நமஸ்கரிக்கிருள்
நாவாய்கள் செவ்வனே வந்து சேர்ந்தனவா ?
கோவ :- ஈழத்து நாவாய்களுடன் கடாரத்து நாவாய்க ளும் வந்தன. அதனுல் கொஞ்சம் தாமதமாகி விட்டது!
கண் - கடாரத்து நாவாய்களில் என்ன பண்டம்
வந்தது?
கோவ: பொன்னும் மணியும் அகிலும் ஆம்பரும் வந்தன. இனி எம் செல்வப் பெருக்கிற்குக் குறை ஏதும் இல்லை. ஆனல் வேறு குறை ஒன்று. . .

காட்சி 8 19
கண்:- அது என்ன ஸ்வாமி ?
கெளசி:- (சிரித்து உம் இல்லத்தில் சிறு மதலை பேசி, குறு நடை பயிலும் குழந்தைகள் வேண்டும். அது தானே கோவல?
கோவ :- ஆம் ! (சிரித்து) அது இனி என் கண்ணகியின்
தயவன் ருே ?
கண்ணகி : (நாணி) போங்கள். அமருங்கள் இப்படி. இதோ தாகத்திற்குப் பானங் கொண்டு வருகிறேன்.
(இடப் புறம் மேடையை விட்டுப் போகிருள். வலப் புறம் மேடைக்கு வெளியே பறையறை வோன், பறையறைந்து உரத்துக் கூறுகின்றன் : * பன்னிரண்டாண் டெய்தி ஆடல், பாடல், அழகு இம்மூன்றிலும் இணையில்லா மாதவி மடந்தைக்கு நாளை மாலை அரசன் சபையில் அரங்கேற்றம் ! எல்லோருந் திரண்டு வாருங்கள் '-பறை)
கோவலன் :- (விறைத்துநின்று கேட்டனையோ கெளசிக!
கெளசிகன்:- ஆம் ! நான் முன்பு ஒருநாள் கூறினனே மாதவி என்று. அந்த நாடக மடந்தையின் அரங் கேற்றம்.
கோவ: (தன்னை மறந்து மேடையில் நடந்து.) மாதவி!
ஆ மாதவி! என்ன அழகான பெயர்.
கண்ணகி :- (இடப் புறம் ஒரு தட்டில் இரு பாத்தி ரங்களுடன் மேடைமேற் தோன்றி இருவருக்கும் பானம் வழங்கி கேட்டீர்களா? நாளே யாரோ கணிகை மாதின் நாட்டிய அரங்கேற்றமாம்! தாங்கள் போவதில்லையா?

Page 16
20 மாதவி மடக்தை
கோவ :- (திடுக்குற்று) நகரத்திலே இப்படி எத்தனை
நாடக மடந்தையர்? எத்தனை அரங்கேற்றங்கள்?
கண்ணகி :- தாங்கள் கட்டாயம் போகத்தான் வேண் டும். ஆடலேயும் பாடலையும் தாங்கள் பார்த்து மகிழ வேண்டும்.
கோவ:- உன்னை இதுகாறும் பிரிந்தறியேன். (சிரித்து) இந்த அற்ப கணிகையின் ஆடலுக்கும் பாடலுக்கு மாகப் பிரிவேனுே ?
கண் :- எனக்காகவேனும் தாங்கள் போகத்தான்
வேண்டும்.
கெளசி : கோவல ! உன் மனைவியே கூறும்பொழுது.
கோவ :- சரி, கண்ணகி நீ போகவேண்டும் என்று பணித்தால் கான் போய்த்தானே ஆக வேண்டும்!
கண் :- (சிரித்து ஆடலையும் பாடலையும் சுவைப்ப தென்று, அந்த நாடக மடக்தையின் அழகையும் சுவைக்க கினைத்து விடாதீர்கள்.
( எல்லோரும் சிரிக்கிருர்கள் 1
(திரை)

காட்சி : 9
(மேடையின் வலப்புறம் கோவலன் முதலான பலர் உட்கார்ந்திருக்கிருர்கள். இடப்புற பின் மேடையில், யாழோன் குழலோன் தண்ணுமை யோன் ஆடல் ஆசிரியன் நால்வரும் இருக்கின் ருர்கள். மேடையின் நடுவில் மேடையை ஒட்டி ஒரு சிறு வெண்திரை. இடப்புறம் ஒரு சிம் மாச னம். திரை அகன்றவுடன், மேடைக்கு வெளியே பெரும் பேரிகை முழக்கம் ! அதைத் தொடர்ந்து * வாழ்க கரிகாலன் வாழ்க தமிழ்' என்ற பல குரல்களின் வாழ்த்தொலி, மேடையில் உள்ள அனைவரும் எழுந்து நிற்கின்றனர். இடப்புறம் கரிகாலன், கம்பீரமாக மேடைமேற் தோன்றி
சிம்மாசனத்தில் உட்கார்கிருன். அ வ னை த் தொடர்ந்து வந்த ஈட்டி தாங்கிய இரு காவலர்கள் சிம்மாசனத்தின் பின் நிற்கின்றனர். ம ன் ன ன்
அமர்ந்ததும் மேடையில் இருந்த மற்ற எல்லோ ரும் பழையபடி அமர்கின்றனர். நாட்டிய இசை மெதுவாக ஆரம்பிக்கின்றது.1
கரிகாலன் - (கம்பீரமாக) ஆரம்பிக்கட்டும் மாதவி
மடந்தையின் நடனம் !
(நடுவில் இருந்த சிறுதிரை திடீரென்று விலகு கின்றது. பின் நடு மேடையில் மாதவி பரதநாட் டிய உடையுடன் நிற்கிருள். மன்னனை நோக்கிக் கைகுவித்துத் தலை தாழ்த்தி வணங்குகிருள். உடன் ஆடல் ஆசிரியன் உச்ச ஸ்தாயியில் வர்ணம் பாட ஆரம்பிக்கிருன் மிருதங்கமும் வீணையுங் குழலும் இசைக்கப்ப்படுகின்றன. மாதவி நாட்டியம் ஆடு கின்ருள் - பத்து நிமிஷம் வரை.

Page 17
22 மாதவி மடந்தை
கரிகா - மகிழ்ந்தோம்! எம் சோழவளநாடு ஒன்றுதான் இத்துணை கலைப் பண்பு வாய்ந்த ஒரு ஆடல் கணிகை யைத் தோற்றுவிக்கவல்லது. வாழ்க தமிழ் அணங்கு!
(சபையில் இருந்து கரகோஷம்
மாதவி:- (மன்னன் முன்னிலையில் வந்து வணங்கி) மன்னர் மன்னவ! (குரல் கம் ம) இந்த ஏழை ஆடல் மாதைப் புகழ்ந்து தாங்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு என் உயிரும் உள்ளமும் திளைக்கின்றன.
கரிகா - (சிரித்து) ஏன் உன் உடல் திளைக்கவில்லையா? ஆனல் உன் கலையை மெச்சினுேம்! இதோ இந்த மாலையைப் பரிசாக ஏற்றுக்கொள்வாய்.
(முத்துமாலையைக் கொடுக்கிருன், மாதவி வணங் கிப் பெற்றுக்கொள்கிருள்).
மாதவி:- உய்ந்தேன், மன்னர் பெரும !
கரிகா :- இக் கணிகையின் ஆடலும் பாடலும் நன்று? வழமைப்படி இவளுக்கு ஆயிரத்தெண் களஞ்சு பொன் பரிசாக வழங்கப்படட்டும் ! (எழுந்து காவ லர் பின் தொடர இடப்புறம் போகிருன். மேடை யில் உள்ள அனைவரும் எழுந்து நின்று, (*சோழன் கரிகால் பெருவளத்தான் வெல்க! அவன் வீரம் தழைக்க ! வாழ்க அவன் கொற்றம்! வாழ்க தமிழ்!" என்று ஆரவாரிக்கிருர்கள். அதை அடுத்து இடப் புறம் பெரும் பேரிகை முழக்கம், எழுந்து தேய்ந்து மறைகிறது ! சபையோர் கலைந்து மேடையை விட்டு அகல்கின்ருர்கள். 1
கோவ:- (வலப்புற வாசல் நோக்கி தயங்கித் தயங்கி நடந்து, வலப்புற வாசல் வழியாகப் புோகிருன். மாதவியும் வசந்தமாலையும் பின் நடு மேடையில் தனியே நிற்கின்றனர்.)

காடசி 9 3
uDTgså: வசந்தமாலா ! இதோ அரசன் தந்த மாலை !
வஸந்தா:- மாலையே ஆயிரத்தெண் களஞ்சு பொன்
பெறுமே ?
மாதவி - நன்றே கூறினய் வசந்த மாலா ! இந்த மாஜலயை வீதியிற் சென்று விலைகூறி விற்பாய் ! ஆயிரத்தெண் களஞ்சு பொன் கொடுத்து இதை வாங்கக்கூடிய செல்வன் எவனே அவன் இதைக் கொண்டே எனக்கு மாலே குடலாம் ' என்று விலை கூறுவாய். எவன் அவ்வளவு பொன் கொடுக்கின் ருனே, அவனே இங்கு உடன் அழைத்து வருவாய்!
வஸந்த :- மாதவி! உனக்குச் சித்தப் பிரமை ஏற்பட்டு
விட்டதா என்ன !
மாதவி : என் சித்தம் அப்படி! என் ஆணையை நிறை
வேற்றுவாய். (உரத்து போ!
(திரை

Page 18
காட்சி 10
(நகர் வீதி. கோவலன் சித் தப்பிரமை கொண் டவன்போல் நடக்கிருன், அவன் பிரமையில் மாதவி யின் நாட்டியத் தோற்றம் தென்படுகிறது. (பெருமூச்சு விடுகிருன்.) வலப்புறம் மேடைக்கு வெளியே வஸந்தமாலாவின் குரல், ' மாதவிக்கு மன்னன் அளித்த மாலை ! இதை ஆய்பிரத்தெண் களஞ்சு பொன் விலைகொடுத்து வாங்கக்கூடிய செல் வன் உண்டா இந்தப் பூம்புகாரில் ?' என்று கூவு கிறது. கோவலன் திடுக்குற்று நின்று பிறகு தயங்கு கிருன், வலப்புறம் வசந்தமாலை மாலையைக் கையி லேந்தியபடி மேடையில் தோன்றுகிருள் .1
வஸந்த - மாலையோ மாலை !
கோவ:- என்ன வல்வினையோ (பின் நடுமேடை யில் மாதவியின் நடனத் தோற்றம் அவன் கண்க ளில் மறுபடி தோன்றுகிறது.)
வஸந்த :- மாலையோ மாலை! (சிரித்து செட்டியாரே
உமக்கு இந்த மாலை வேண்டுமா?
கோவ :- ஆம், எனக்கு இந்த மாலையும் வேண்டும் ; மாதவி மடந்தையும் வேண்டும். உடனே அழைத் துச் செல்வாய் என்னை அவள் மனைக்கு !
(பின் நடு மேடையில் கோவலன் கண்களுக்கு மாதவியின் நடனத் தோற்றம் தோன்றியபடியே இருக்கிறது. அதையே விறைத்துப் பார்க்கிருன்-1
வஸந்த :- (சிரித்து) என்ன செட்டியாரே, தங்களுக்கு
ஏதாவது உன்மத்தமோ ?
கோவ :- (திடுக்குற்று மாதவி. மாதவி!

காட்சி 10 25
வஸந்த :-(சிரித்து] ஆம், உன்மத்தம்தான்! கோவலனைக் கடந்து சென்று, உரத்து ஓ! மாலையோ மாலை!
கோவ :- (இடப்புறம் திரும்பி1 இதோ உன் பொன்!
ஆயிரத்து எண் கழஞ்சு பொன் !
(தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறு பையை
எடுத்து வஸந்த மாலையின் காலடியில் வீசுகிருன், வசந்த மாலை அதை எடுத்துக் கையில் ஏந்திப் பார்க்கிருள்.1
வஸந்த - மன்னிக்கவேண்டும்.
கோவ:- பாதகமில்லை! என்னை இப்பொழுதே அழைத் துச் செல் மாதவி மடந்தையின் இல்லத்திற்கு! மாலையை என் கையில் கொடு ! - கொடு !
வஸந்த இதோ! தாங்கள்.
கோவ : நான் கோவலன்! இக்கணமே அழைத்துச் செல்
வாய் என்னை.
வஸந்த (திரும்பி வலப்புறம் நடந்து வாருங்கள் ஸ்வாமி,
வாருங்கள் !
(திரை)
LDsr - 4

Page 19
காட்சி: 11
(மாதவியின் இல்லம், மாதவி அலங்கார பூஷிதை யாய் மேடைமேல் நின்று, கைகளைப் பிசை கிருள்),
மாதவி - மாலை விற்கச்சென்ற வஸந்தமாலை இன்னும் வந்திலளே ! ஆயிரத்தெண்களஞ்சு பொன் கொடுத்து அந்த மாலையை வாங்கி எனக்குச் சூட்டக்கூடிய அவ் வளவு நிறைந்த செல்வன் இந்தக் காவிரிப்பூம் பட் டினத்தில் இல்லாமற் போனல்.
வசந்த :- (வலப்புறம் மேடைமேல் தோன்றி, வாசல் புறம் நோக்கி வாருங்கள் செட்டியாரே, வாருங்கள்! (கோவலன் முத்துமாலையைக் கையில் ஏந்திய வன ய் மேடைமேல் தோன்று கிருன், இவள்தான் கோதை மாதவி! இவர் கோவலன் என்ற பெரும் செல்வர். (கோவலன் நடு மேடைக்குச் சென்று மாலையை மாதவியின் கழுத்தில் அணிகிருன். மாதவி, இதோ உன் ஆயிரத்தெண்களஞ்சு பொன். (தான் கையில் வைத்திருந்த பையை முக்காலியின் மேல் வைக் கிருள்.)
மாதவி - வரவேண்டும் என் செல்வ ! தங்கள் வரவுக் காக நானும் என் மனையும் எத்தனை நாள் ஏங்கித் தவம் கிடந்தோமோ ? இப்படி அமருங்கள்.
(கோவலனை ஒரு ஆசனத்தில் அமர்விக்கிருள்
கோவ - எவ்வளவு அழகாகப் பேசுகின்ருய் பெண்ணே!
குடும்பப்பெண்கள் இப்படி நயமாகப் பேசமாட் டார்களே,

காட்சி 11 27
மாதவி - நான் குடும்பப் பெண் அல்லவே, ஸ்வாமி கான் கணிகை. இன்பம் என் இயற்கை ஆடலும் பாடலும் என் வாழ்க்கை கெறி.
கோவ - ஆயின் கணிகைக்குக் கற்பு என்பது இல்லையோ?
மாதவி :- நான் கணிகையாக இருந்தாலும் கற்புடை மங்கைதான்! ஆனல், குடும்பப் பெண்களைப்போல கற்பு என்ற கனவிற்காக இன்பம் என்ற உண்மை யைத் தொலைத்துவிடக்கூடிய அவ்வளவு பேதை அல்லள் நான் !
கோவ :- கணிகைக்கும் கற்பு உண்டுபோலும் !
மாதவி:- ஆம். தாங்கள் ஒருவர்தான் என் கிரந்தர காதலர். நான் தங்களை முறைப்படி மணஞ் செய்து கொள்ளாவிட்டாலும், நானும் ஒரு பத்தினிதான் ! தங்கள் முகம் அன்றி, இனி வேறு முகம் பாரேன்; தங்கள் அன்பு அன்றி வேறு அன்பு தேடேன் ! (அழுகிருள்)
கோவ:- அழவேண்டாம், என் மட அன்னமே ! உன்
மனம் நான் அறிந்துகொண்டேன்.
மாதவி - இனி தங்களை மகிழ்விப்பதே என் தனிப்பேறு. அதில் நான் இன்பங் காண்பேன். என் ஆடலும், என் பாடலும், என் அழகும், என் உயிரும் தங்க ளுக்கே இன்றுமுதல் அர்ப்பணித்தேன்.
கோவ:- என் ஆரணங்கே.
(நாட்டிய இசை மெதுவான திரை)

Page 20
காட்சி : 12
(கோவலன் இல்லம். கண்ணகி மலர் இழந்த கூந்த லுடன், திலகம் இழந்த நெற்றியினளாய்ச் சாதா ரண நூல் சேலை அணிந்து, துயரமே உருவாய் ஒரு நெடும் ஆசனத்திற் சாய்ந்திருக்கிருள். தேவந்தி அவள் அருகில் நிற்கிருள். குத்து விளக்குப் பின் மேடையில் மங்கலாக எரிகிறது.)
தேவந்தி: - எழுந்திரு கண்ணகி, எத்தனை நாள்தான் இப்படிக் கூந்தலில் பூ இன்றி, நெற்றியில் திலகம் இன்றி, உணவும் உறக்கமும் இன்றி வாழப்போகின் ருயோ ? (பெருமூச்சு) நின் கணவன் நின்னே விட்டுச் சென்று ஓராண்டு ஆகப்போகிறது.
கண்ணகி :- (எழுந்து உட்கார்ந்து அழுது) 15ான் தான் அவரை வலிந்து அனுப்பினேன்-மாதவியின் நடன அரங்கேற்றத்திற்கு! இப்படி வரும் என்று யார் அறிந்தார்கள்?
தேவந்தி:- நகரத்துப் பாணரொடும் பரத்தரொடும் திரிந்து, மாதவி மடந்தையின் பொய் மோகத்திலே சிக்கி, அவள் தரும் பொய் இன்பமே மெய் இன்ப மாகக் கருதி, அருந்ததி நானும் கற்புடைப் பத்தினி யாம் உன்னை மறந்து விட்ட உன் கணவன்.
கண்ணகி :- (எழுந்து நின்று கோபமாக அப்படிக் கூருதே, அப்படிக் கூறதே! என் காதற் கணவனை இப்படித் தூற்றத் துணிந்த உன் காக்கு வெந்து போகாதா.
தேவந்தி:- கண்ணகி.

காட்சி 12 29
கண்ணகி :- இன்னும் ஒருதரம் என் முன்னிலையில் என் கணவரை அப்படித் தூற்றிவிடாதே 1 (மறுபுறம் திரும்பி, கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிருள். பேரறிவாளனும் பண்பு மிக்கவருமான என் கணவனின் உள்ளம் ஏதோ விதிவசத்தால் இப் படிப் பேதலித்துவிட்டது. அவர் என் பிறவிக் காதலர் அவரை நான் பிழை கூறேன். (கோபமாக) வேறு யாரும் பிழை கூறுவதையுஞ் சகியேன் ! (மெதுவாக 1 இதோ பார்த்தாயா? என் இடது கண் துடிக்கிறது. என் கணவர் என்னிடம் திரும்பியே வருவார்.
தேவந்தி:- செல்வம் எல்லாம் அந்தக் கணிகைக்குக் கொடுத்து முடிந்தது போலும் ! அவளுக்கு வேண்டி யது பொருள் ஒன்றுதானே.
கண்ணகி - (மிகவும் கோபமாக) என் கணவனே ஒரு காமுகன் என்ற தூற்றுகின்ருய். இல்லை, ஒருக் காலும் இல்லை! இப்படிச் சொல்லத் துணிந்த நீ கொடியவள். உன் நெஞ்சம் கல்லு, இரும்பு. ( ஆசனத்தின் மேல் விழுந்து புரண்டு அழுகிருள். பெருமனைக்கிழத்தி இடப்புறம் இருந்து ஓடி வந்து கண்ணகியின் அருகில் அமர்ந்து அவள் கூந்தலைக் கோது கிருள்.)
பெருமனை - மகளே, இது என்ன கோலம் ? உன் கண வன் என்றே ஒருநாள் உன்னைத் தேடிக்கொண்டு திரும்பி வரத்தான் போகிருன், செல்வம் எல்லாம் தொலைத்தான்.
கண்ணகி :- (எழுந்து இருந்து செல்வம் யாருக்கு வேண்டும், அம்மா! அவர் எல்லாம் இழந்து

Page 21
3O மாதவி மடக்தை
ஒட்டாண்டியாக வந்தாலும் அதுவே என் பாக் கியம்! [ øy (p 6)(o? sit ]
(வலப்புறம் மேடைக்கு வெளியே பறையறை வோன் பறையறைந்து கூறுகிருன்! 'நகரீர்! இந்திர விழா வந்தது! எல்லோருந் திரண்டுவந்து கட லாடுமின் ! காதல் செய்மின் ! புத்தாடை, புது அணி, புதுமலர் அணி மின் ஆடுமின் 1 பாடு மின் ! இந்திர விழா வந்தது, இந்திர விழா ' .1
பெருமனை - இந்திர விழாவும் வந்தது.
கண்ணகி - எழுந்து நின்று) ஆம் அம்மா, என் இடது கண் துடிக்கிறது! என் நாதன் எப்படியும் என்னைத் தேடிக்கொண்டு வரப்போகிறர். அவர் வரும்பொழுது நான் நெய் இல்லாக் கூந்தலோடும், திலகம் இல்லா நெற்றியோடும் இருத்தல் தகாது. தேவந்தி! என்னை அலங்கரிக்க வேண்டுமே.
பெருமனை - அதுவே வாழும் நெறி! உன் வாழ்வில்
மங்களம் பொலியட்டும் !
(திரை)

காட்சி 13
(மேடையின் பின்புறத்தே கடலையும் நீல வானத்தை யும் காட்ட ஒரு நீலத்திரை மேடையின் இடப் புறம் கோவலன் கைமேல் தலை சாய்த்துப் படுத் திருக்கிருன். நடுமேடையில் மாதவி மேடையின் முன்புறத்தை நோக்கி உட்கார்ந்திருக்கிருள். இரு வருக்கும் நடுவே ஒரு வீணை, ஒரு தட்டில் மலர், சந்தன பாத்திரம், பன்னீர்க்கும்பா, ஊதுவர்த்தி முதலிய மங்கலப் பொருள்கள் இருக்கின்றன. மேடையின் இடப்புறமும் வலப்புறமும் வெளியே ஜனங்களின் ஆரவாரம், வீணை இசை, மிருதங்க இசை முதலியன கேட்கின்றன. அவை ஒய்கின்றன.)
கோவ:-- கடல் ஆடியதும் உன் செவ்வரி படர்ந்த
கண்கள் மேலும் சிவந்துவிட்டனவே !
மாதவி :- செவ்வரியோ, செந்தாமரையோ, எனது வலது கண் துடிக்கிறது. என் நாதா, ஏது விளையுமோ என்று என் நெஞ்சம் கலங்குகின்றதே !
கோவ :- (எழுந்து உட்கார்ந்து) அதுவா ? உன் தோழி மறந்துபோய் உன் வலது கண்ணுக்கு அதிக மையை ஊட்டி இருப்பாள்.
மாதவி :- போங்கள் ! தங்களுக்கு எதற்கும் கேலிதான்! தாங்கள் என்னைப் பிரிந்து போய்விட்டால், என்று நினைக்கும்பொழுதே என் நெஞ்சம் கலங்கு கின்றதே...
கோவ :- பேதாய் ! மலரை மணமும், மதியைத் தண்மை யும், நகத்தைச் சதையும் பிரிந்து போவதை மீ எப் பொழுதாவது அறிந்திருக்கின்ருயா ? என் உடல்தான்

Page 22
32 மாதவி மடந்தை
உன்னை விட்டுப்பிரிய முன்னந்தாலும், என் உயிர் உன் உயிரை விட்டு என்றும் பிரியமாட்டாதே !
மாதவி - மகிழ்ந்தேன் ஸ்வாமி! இதோ நீலக்கடல் ! அதோ காவிரியாறு ! மேலே நீலவானம் ! அது கிறைய விண்மீன்கள் மத்தியிலே முழுமதி இன்று இந்திர விழா. எம் இன்பத்திற்கு இதைவிடச் சிறந்த சூழ்நிலை இனி எங்கே வாய்க்கப்போகிறது?
கோவ :- ஆம். காவிரி ஆற்றிலே கயல்மீன்கள் புரளு கின்றன, சோழநாட்டின் தமிழ்ப் பெண்களின் கண்க ளேப் போல 1 சோழ நாட்டிற்கு நெற் செல்வம் ஈந்து தமிழ் அன்னே யின் புகழும் பலமும் பாடி வருவாள் போல் ஆர்ப்பரிக்கின்றள் காவிரி கங்கை ! உண்மை யில் தமிழ்நாடு, தவம்செய்த காடுதான். அதை வியந்து பாடவேண்டும்போல் தோன்றுகிறது. எங்கே உன் யாழ் ?
மாதவி :- எழுந்து கோவலனின் கையில் யாழை எடுத்
துக் கொடுத்து பாடுங்கள் ஸ்வாமி !
கோவ :- (பாடுகிருன்-ஆனந்த பைரவி1
பொழிறரு நறுமலரே, புதுமணம் விரிமணலே பழுதறு திருமொழியே, பணையிள வனமுலையே முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே யெழுதரு மின்னிடையே யெனேயிடர் செய்தவையே!
திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதடு பொழிலிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே யிருகய லிணைவிழியே யெனயிடர் செய்தவையே

காட்சி 13 3Ց
வளைவளர் தருதுறையே 1 மணம்விரி தருபொழிலே! தளையவிழ் நறுமலரே! தனியவள் திரியிடமே! முளைவள ரிளநகையே! முழுமதி புரைமுகமே ! இளையவள் இணைமுலையே! எனயிடர் செய்தவையே!
மாதவி :- கோபமாகச் சிரித்து) உங்கள் பாட்டு நன்று! காவிரியாற்றை வாக்கில் கொண்டு, வேறு எவளையோ மனதிற் கொண்டு பாடினிர்கள் போலும் 1 இனி நானும் பாடவேண்டும். கொடுங்கள் யாழை ! (எழுந்து யாழைப் பிடுங்கிக்கொள்ளுகிருள்).
கோவ:- எங்கே, பாடு பார்க்கலாம் (எழுந்து மேடை
மேல் நடக்கிருன்.1
மாதவி:- (பாடுகிருள்-இராகம் அடாணு
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி ! கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லா நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி ! இளையிருள் பரந்ததுவே யெற்செய்வான் மறைந்தனனே களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ யுகுத்தனவே ! தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார் நாட் டுளதாங்கொல்! வளைநெகிழ வெரிசிந்தி வந்தவிம் மருண்மாலை !
கதிரவன் மறைந்தனனே : காரிருள் பரந்ததுவே ! எதிர்மலர் புரையுண்க ணெஷ்வநீ ருகுத்தனவே ! புதுமதி புரைமுகத்தாய் ! போனுர்நாட் டுளதாங்கொல் மதியுமிழ்ந்து, கதிர்விழுங்கி, வந்தவிம் மருண்மாலை !
Ig IT 5Lö : 5rn Trši 5 | கைதை வேலிக் கழிவாய் வந்தெம் பொய்த லழித்துப் போனு ரொருவர் பொய்த லழித்துப் போனு ரவர்நம் மையல் மனம்விட் டகல்வா ரல்லர்.
ւon - 5

Page 23
34 மாதவி மடந்தை
கோவ :- (நடுமேடையில் நின்று உரத்து) யாது பாடினய் மாதவி? உன் மனம் வேறு ஒருவன்பாற் சென்றதை இன்று அறிந்தேன் நான்! மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் நீ! (இடப்புறம் போ கிருன்)
மாதவி:- (எழுந்து பின் தொடர்ந்து) 5ாதா, எங்கே
போகிறீர்கள் ?
கோவ:- (இடப்புறம் முன்மேடையில் நின்று திரும்பி மாதவியைப் பார்த்து, மிக உரத்து) என் அன்பை இன்று இழந்தாய் நீ! இனி அவையெல்லாங் கேட்ப தற்கு உனக்கு உரிமை இல்லை. நான் எங்கேனும் போவேன். அருந்ததி நாணும் கற்பின் கொழுந் தாகிய என் கண்ணகியிடம் போவேன்!
மாதவி:- (நெருங்கி வந்து நாதா, என் ஸ்வாமி !
என்ன வார்த்தைகள் ?
கோவ :- (மாதவியை நெட்டித் தள்ள, அவள் நடு
மேடைமேல் * தடால் ' என்று விழுகிருள்.
போ அப்பால்! என் பொருளினையே நீ விரும் பினய், என்னை விரும்பினுய் இல்லை! என் பொருள் தான் உனக்கு முற்ருய்த் தந்துவிட்டேனே! போ!
இடப்புறம் வேகமாகப் போகிருன்)
மாதவி:- (மேடைமேல் கிடந்து அலறி என் நாதா !
என் ஸ்வாமி !
(திரை)

காட்சி : 14
(கண்ணகி கொண்டையில் மலர் அணிந்து, நெற்றி யில் திலகம் இட்டு, தீபம் ஏற்றுகிருள். இடப்புறம் இருந்து தேவந்தி வருகிருள்.)
தேவந்தி: இன்று உன் மங்கள கோலத்தைக் காணும்
போது என் மனம் மகிழ்கிறது, கண்ணகி !
கண்ணகி:- (திரும்பி, திடீரென்று கண்களைக் கைக ளால் மூடிக்கொண்டு அழுது தேவந்தி, ஆனல் நேற்றிரவு கொடியதொரு சொற்பனம் கண்டேன். நானும் என் கணவனும், வேற்றிடம்போய் ஆங்கு அவருக்குப் பெருந் தீங்கு உற, நான் அரசனுேடு வழக்குரைத்து, ஐயோ! அரசனும் மாண்டான். அவன் 5கரும் தீப்பற்றியது. ஐயோ! (அழுகிருள்]
தேவந்தி:- நீ ஏதோ நோன்புகளில் தவறிவிட்டாய்! அதனுல்தான் இந்தத் தீக்கன ! ஒன்றிற்கும் கலங் காதே, கண்ணகி. மீதான் அன்று கூறினேயே, உன் கணவர் எப்படியும் உன்னைத் தேடி வருவார் என்று.
கண்ணகி - (கண்ணீரை முன்தானையால் துடைத்து, சிரித்து) ஆமாம். அவர் எப்படியும் என்னை நாடி வரு வார்! தேவந்தி, நீ அன்ருே உண்மைத் தோழி!
கோவ :- (மேடைக்கு வலப்புறம் நின்று கண்ணகி
கண்ணகி !
தேவந்தி : இதோ, உன் வாக்குப் பலித்துவிட்டது. (கோவலன் இடப்புறம் மேடைமேல் தோன்று கிருன் )

Page 24
36 மாதவி மடக்தை
கண்ணகி :- (அலறி கோவலன் கால்களில் வீழ்ந்து)
ஆ! என் ஸ்வாமி! வந்தீர்களா ?
கோவ:- (கண்ணகியை எடுத்து அணைத்து, குரல் கம்ம1 எழுந்திரு, என் பேதை மட அன்னமே ! நின் மேனி வாட்டம், என் உயிரை வதை செய்கின்றது!
கண்ணகி :- (கோவலனை அணைத்து, ஆசனத்தில் அமர்த்தி, சிரித்து) தங்கள் மேனியுந்தான் வாடி யிருக்கிறதே, என் ஸ்வாமி.
கோவ :- கண்ணகி, நீ கற்பின் தெய்வம். நான், பொய்ம்மையே ஓர் உருவமாக அமைந்த மாதவி மடந்தையோடு அயர்ந்து, என் செல்வம் எல்லாம் தொலைத்தேன். என் வறுமை எனக்கு நாணத்தைத் தருகிறது.
கண்ணகி - எல்லாம் விதியின் பயன் ! அதற்குத் தாங் கள் கலங்கவேண்டாம். என்னிடம் இரண்டு சிலம் புகள் உள்ளன. வேறு இடம் சென்று அவற்றை விற்று, முதலாக வைத்துக்கொண்டு, இழந்த செல் வம் எல்லாம் மறுபடி தேடிவிடலாம்.
கோவ:- (குரல் கம்ம கண்ணகி ! உன் தூய அன்பை மறந்து இதுகாறும் அந்த மாயப் பரத்தையோடு பொய் வாழ்வு வாழ்ந்தேனே 1 ஆம். நாளையே மதுரை செல்வோம். கண்ணே, நீ என்னை மறந்தனையோ?
கண்ணகி :- என் ஸ்வாமி, தங்களை நான் ஒரு கணமும் மறந்திலேன் ! எங்ங்னம் மறப்பேன் ? எம் வாழ்வு கிளைகளாக வந்து ஒன்ருகும் பெரிய ஆறுபோல, வாழ்வுதொறும் வாழ்வுதொறும், ஊழிதொறும் ஊழி

காட்சி 14 37
தொறும் ஒன்ருக இயங்குவதொன்றன்ருே ? தாங்கள் எப்பொழுதோ, ஒருநாள் என்னேத் தேடி வருவீர்கள் என்பது நான் அறியாதது ஒன்றல்லவே ! (அழுது கோவலன் முன் மண்டியிட்டு அந்த 5ாள் இன்று வந்தது, என் ஸ்வாமி !
கோவ :- (கண்ணகி தலையை வருடி) ஆம், அதுவும் கான் அறிவேன். (குரல் கம்ம ஆனல் வறுமை வந்துவிட்டதே! (திடமாக நாளையே மதுரை போவோம்.
கண்ணகி :- (எழுந்து நின்று) ஆம், நாளையே மதுரை
போவோம். (இடப்புறம் திரும்பி) தேவந்தி! என் நாதன் வந்துவிட்டாரடி பானம் கொண்டுவருவாய்.
(திரை)

Page 25
காட்சி: 15
(வலப்பக்கப் பின் மேடையில் ஒரு சிறு காளிகோவில். வலப்பக்க முன்மேடையில் சில சிறு புதர்கள். கோவி லின் முன் தீப்பந்தம் கொழுந்துவிட்டு எரிகிறது. திரை அகலும் பொழுது நடு முன்மேடையில் நின்று தேவராட்டி, கையில் வில் லேந்தியவளாய், விரித்த கூந்தலினளாய், வலப்புறம் நோக்கிநின்று தெய்வம் உற்று ஆடுகின்ரு ஸ். இடப்புறம் மேடைக்கு வெளியே உடுக்கை அதிர்கின்றது. ** அம்மா, காளித்தாயே, எங்கள் பிழை பொறுப்பாய்,' என்று பல ஆண் குரல்கள் கெஞ்சி அலறுகின்றன; தேவராட்டி:- (அலறி) ஆ! அஅ-அ-ஆ! (மூச்சு வாங்கி, ஆடி) இன்னுமா பொறுப்பேன் ? கேளுங்கள் கேளுங் கள் தெய்வத்திற்குரிய பலிக்கடன் செய்யாமையி னல் உங்கள் ஊர் பாழ்பட்டது-பாழ்பட்டது ! உங் கள் அம்புகள் கூர்மையிழந்தன - கூர்மையிழந்தன! (அலறி ஆ-அ! மறவர்களே, உங்கள் பகைவர் கை ஓங்கிவிட்டது ! உங்கள் மறத்தொழில் செழிக்க வேண்டுமானுல், உங்கள் பசு வளம் சிறக்கவேண்டு மானல், ஊர்மனைகள் ஓங்கவேண்டுமானல் உடனே தேவிக்குரிய இரத்தப் பலிக்கடனைச் செலுத்துங் கள்--செலுத்துங்கள் ! (இடப்புறம் மேடைமேல் கவுந்தியடிகளுடன் கோவலனும் கண்ணகியும் தோன்று கிருர்கள். கண்ணகி அச்சத்தால் கோவலன் பின் மறைகிருள். அன்றேல், அன்றேல்- (தேவ ராட்டி ஆட்டமும் பேச்சும் ஓய்ந்து நிற்கிருள். வலப்புறம் மறவர்களின் குரல்கள்: ‘செலுத்துகி ருேம் தாயே, செலுத்துகிருேம், கோபம் விட்டு, எங்களை ஆதரி அம்மா'1 கண்ணகி :- (அலறி ஐயோ என்ன பயங்கரமான
காட்சி !

காட்சி 15 39
கவுந்தியடிகள் :- அஞ்சவேண்டாம், மகளே ! இந்த வெறியாட்டம் மறவர்களின் மரபில் உள்ளது. மேலும் கேள். .
தேவராட்டி :- (இடப்புறம் திரும்பி கண்ணகியை உற்
றுப் பார்த்து, அருகில் வந்து ஆ ஆ இவள் கொங்கநாட்டின் செல்வி, குடநாட்டின் அரசி, தென் தமிழ் நாட்டினை எல்லாம் ஆளும் பாவை ! அது மட்டுமா? முற்பிறவியில் செய்த தவத்தில் முளைத்த கொழுந்து போன்ற இவள், உலகம் முழுவதற்குமே மாணிக்கம் போன்று இலங்குவாள்! நீ வாழ்வாயாக ! (வேகமாகத் திரும்பி இடப்புறம் போகிருள்)
கண்ணகி :- என்னைச் சுட்டிக்காட்டிப் பேசினுள் அந் தத் தேவராட்டி ஏதோ விபரீதம், ஏதோ எதிர் பாராத தீங்கு. கவுந்தி:- ஒன்றுமில்லை மகளே. அவள் உன் வருங்காலப்
பெருமையை வாழ்த்திப் போகிருள்.
கண்ணகி - ஆனல் எவ்வளவு பயங்கரமாக இருந்தது அவளது ஆட்டம்! இதற்குமுன் காட்டுவழியில் கள்வர் எதிர்ப்பட்டு மறித்ததும், வப்பப் பரத்தையும் பரத் தனும் எம்மைத் தூற்றியதும், இதற்கு எம்மாத்திரம் ?
கோவலன் - கண்ணகி, உன் கால்கள் அயர்ந்தனவோ? ஆ! மனே மறந்து, உற்ருர் பெற்ருரைத் துறந்து, நாம் பிறந்த பூம்புகாரை இழந்து, அரசன் கோபத் திற்கு அஞ்சி ஓடும் கள் வர்களைப்போல, வைகறை யாமத்தே புறப்பட்டு நடையாக நடந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் !
கண்ணகி - (சிரித்து) தாங்கள் என் அருகில் இருக்கும்
பொழுது எனக்கு அயர்வு ஏது, சோர்வு ஏது? துயரம்தான் ஏது?

Page 26
40 மாதவி மடந்தை
கோவலன் :- (குரல் கம்ம பஞ்சு படினும் கோவும் உன் சீரடிகள், இந்த நெடுவழியின் பருக்கைகளும் கருக் கைகளும் உறுத்துவதை எங்ங்னம் சகித்தனவோ?
கண்ணகி :- (சிரித்து தங்கள் பாதங்கள்தான் கோகின் றனபோலும். ...! தங்களுக்கும் நெடுவழி நடத்து பழக்கம் இல்லையே. .(குரல் கம்ம செல்வத்திற்
பிறந்து, அளப்பருஞ் செல்வத்திற்கு அதிபதியாய் வாழ்ந்த தாங்கள், நாடும் நகரும் இழந்த அரசனைப் போல, கல்லும் முள்ளும் உறுத்தும் பாதையிலே கடு நடையாக. (அழுகிருள்)
கோவலன் :- பேதாய் ! கவலை ஒழிவாயாக ! நான் ஆண் மகன். அத்துடன் கற்பின் கொழுந்தும், என் பிறவிக் காதலியுமாகிய நீ என் அருகில் இருக்கும்பொழுது, இந்த அருஞ்சுரநடையே எனக்குப் பெருஞ் செல் வம். ஆனல் முதியவரான கவுந்தி அடிகளின் பாதங்கள் கொந்துதான் போயிருக்கும்.
கவுந்தி:- இல்லை. சோழநாட்டில் உள்ள என்னுடைய அறப்பள்ளியிலே உங்களைக் கண்டு உங்கள் விபர மெல்லாம் அறிந்தவுடன், மதுரைக்குப் போவதற்கு எனக்கு இளந் துணேவர்கள் கிடைத்ததையிட்டு மகிழ்வடைந்தவள், இந்த உடல் நோவுகளைப் பார்ப் பேனே ? அதுவும் மதுரையில் அறிந்தோரிடம் இன் னும் நூல் பல கற்று, அறிவினை மேலும் ஏற்ற அவாக்கொண்டு போகும் அடியேன் . . இப் பொழுது சோழநாடு கடந்து பாண்டிநாடு அடைந்து விட்டோம். இனி இரவில் நிலவுக் காலம், பகல் ஆறி இரவிற் பிரயாணஞ் செய்வது நன்று என்று எண்ணுகிறேன்.
கோவலன்:
கண்ணகி : } அப்படியே அடிகாள் !
(திரை)

காட்சி: 16
மாதவியின் இல்லம் :
திரை அகலும்பொழுது மாதவி விரித்த கூந்தலின ளாய், திலகம் இன்றி, நகைகள் இன்றி, நிலா முற் றத்திலுள்ள ஒரு மஞ்சத்திற் சாய்ந்திருக்கிருள். வசந்த மாலை மயில் இறகு விசிறியினுல் விசிறு கிருள்.)
மாதவி :- போதும் நிறுத்து 1 சந்தனம் என்று, நெருப் புக் குழம்பை என் மேனியில் அள்ளித் தடவுகின் ருயே. நீ என் மார்பில் அணியும் முத்து வடங்கள் தீச் சுடர்கள் போல் என்னை வதை செய்கின்றன. போடி, அப்பால் !
வசந்தமாலை :- சந்தனத்துடனும் தண்ணென்ற முத்து வடங்களுடனும், ஏன், கிலாவுடனும் தென்றலுட னும் கூட நீ கோபித்துக்கொள்வது நியாயம். ஏனென் ருல், உனக்குக் கோவலர் பிரிவினுல் விரகம் ! ஆனல், உன் துயரத்தைத் தணிக்க முயலும் என் இணுடன் ஏன் கோபிக்கவேண்டும்? உன் கலையிலும் உன் வனப்பிலும் கட்டுண்டு, உன் இல்லமும் உன் உறவுமே இன்பசாகரமாய், உனக்குத் தன் செல்வம் எல்லாம் வாரி வழங்குவதே தன் வாழ்வின் பெறு பேருய் வாழ்ந்திருந்த கோவலரை.
மாதவி - ஏனடி, கான் அவர்மேற் கொண்டிருந்த
மெய்க்காதல். .
வசந்த :-அதை நான் கண்டேனே ? உன் மனதில் என்ன
இருந்ததோ ? .
மாதவி - (கோபமாக போடி, அப்பால் ! நான் வேறு யார்மேலாவது காதல் கொண்டிருந்தேனே? (அழுது] கோவலர் ஒருவர்தான் என் மெய்க்.
Loir - 6

Page 27
42 மாதவி மடக்தை
வசந்த :- காதலர் என்றுதானே கூறப்போகிருய். இருந் தும், அவரைத் துரத்திவிட்டாயே! அவர் உன்னை விட்டுப் பிரிந்த பிறகு, நீ வெள்ளைத் தாழை மடலில் சிறு செண்பகமலர்க் கொழுந்தைச் செம்பஞ்சுக் குளம் பில் தோய்த்து எழுதிக் கொடுத்தாயே ஒரு ஒலை. அதையுந்தான் நான் அவர் கையிற் கொடுத்தேன். * ஆண்களை மயக்கும் எண்வகை மாயமும் அறிந்த நாடகக் கணிகை நீ என்று, அந்த ஒலையை ஏற்க மறுத்து, பிறகு கண்ணகியிடஞ் சென்றதும், நான் கூறக்கேட்டு நீ அறிந்துகொண்டது உண்டே !
மாதவி - இனி என்ன செய்வேன்? அவர் மனைவியுடன் மதுரைக்குப் போய்விட்டாரே! இனி அவரை என்று காண்பேனே ? அல்லது காணுதே இறந்துபடு வேனே ? (அழுகிருள்)
கெளசிகன் :- (வெளியே மேடையின் வலப்புறம்)
மாதவி !
மாதவி - யார் என்று பார் !
வசந்த :- (மேடையின் வலப்புறஞ் சென்று தாங்கள்
ultif ?
கெளசி:- (வலப்புற மேடைமேல் தோன்றி) நான்
கெளசிகன். கோவலனுடைய நண்பன் !
மாதவி :- (மஞ்சத்தைவிட்டு எழுந்தோடிவந்து அழுது, அவசரமாக) ஆ! தாங்கள் கோவலரின் நண்பர் தானே? அவருக்கு என்ன நேர்ந்தது? அவர் எங்கே இப்பொழுது ? அவர் மனைவியுடன் மதுரை போய்ச் சேர்ந்துவிட்டாரா? அல்லது, - அல்லது- (அலறி வழியில் ஏதும் தீங்கு.?

காட்சி 16 43
கெளசி :- அப்படி ஒரு தகவல் இல்லை. உன்னை விட்டுப் பிரிந்து வந்த அன்று இரவே, கண்ணகியுடன் மதுரை நோக்கி நடந்துவிட்டான், என்று நான் கேள்வியுற்றேன்.
மாதவி - என்னைப் புறக்கணித்துவிட்டா?
கெளசி - ஆம்! அவன் கையிலுள்ள அத்தனை பெருஞ் செல்வத்தையும் அபகரித்த உன்னையுந்தான் புறக் கணித்தான்.
மாதவி - ஆனல் கான் ஒருத்திதான் அவருடைய உண் மைக் காதலி என்பதனே அவர் மறந்தனரோ?
கெளசி - பொருள் வேண்டுபவள், எப்படி உண்மைக் காதலி மட்டும் அல்ல, சாதாரண காதலியாகவும் இருக்கக்கூடும் என்பது எனக்குப் புரியாத ஒரு புதிர்.
மாதவி - அவர் பொருளை நான் வேண்டினேனே?
கெளசி :- அவனுடைய தொலைக்கத் தொலையாச் செல் வம் எல்லாம், தோன் தொலைத்தாய், என்று இந்தப் பூம்புகாரில் உள்ளோர் எல்லோரும் பேசிக்கொள் கின்ருர்கள் !
மாதவி:- தானகவே கொண்டுவந்து, கொண்டுவந்து
எனக்கு ஈந்தார். நான் விரும்பினேனே?
வசந்த :- வைரங்கள், ஆபரணங்கள், மாளிகைகள்,
பொன்.
கெளசி :- அவன் ஈட்டி வைத்திருந்த செல்வம் எல்லாம் உனக்கே ஈந்தது மட்டும் அல்லாமல், உன்
னிடம் சிக்கியிருந்த காலத்தில் தன் கடல் வாணி

Page 28
44 மாதவி மடந்தை
பத்தையே கைவிட்டுவிட்டான். கற்பின் கொழுக் தான கண்ணகி என்ருல் இவ்விதம் நேரப் பார்த் திருப்பாளா?
மாதவி :- (சினந்து கண்ணகி மட்டும் கற்பின் கொழுந்து ! நான் கணிகை மாது, அவ்வளவுதானே ! ஏன், வேசி என்றும் சொல்லிவிடுமே ! (அழுகிருள்). கண்ணகி எவ்வளவு கற்பின் கொழுந்தோ அவ்வளவு கற்பின் கொழுந்து நான் ! என் உள்ளத்திலே கோவ லர் ஒருவருக்கே அன்றி வேறு எவருக்கும் எப்பொழு தும் இடம் இருந்ததில்லை ; இனி இருக்கப்போவ தும் இல்லை.
கெளசி :- அது எப்படியோ ? போனவைகளைக் குறித்துக் கவலை அடைவதினுற் பயன் ஒன்றும் இல்லை. இனி ஆவது என்ன? அவன் தந்த செல்வம் அத்தனையும் உன்னிடமே இருக்கின்றது. அதை வைத்துக் கொண்டு செல்வமாக வாழ்வாயாக !
மாதவி :- அவர் மட்டும் வந்தாராணுல் அந்தச் செல்வம் எல்லாம் அவரிடமே ஒப்படைத்து விடுகிறேன். அழுது அவர் அணேப்பை இனி என்று பெறுவேன்!
வசந்த :- அந்தணரே, தாம்பூலம்.
கெளசி :- தாம்பூலம் அணியும் வழக்கம் என்னிடம்
இல்லை.
மாதவி :- தாங்கள் தான் அவர் நண்பராயிற்றே! தாங்க
ளாவது சென்று அவரைத் திரும்ப அழைத்துவரக் கூடாதா? அவர் தந்தை தாயர் உறவினர் மட்டும் அல்ல, இந்தப் பூம்புகாரே, இராமனே இழந்த அயோத்தி போல் வாடுவதையும், அவர் காதலியான

காட்சி 16 45
நான் மேனி பசந்து, துயருற்று வாடுவதையுங் கூறி அவரை அழைத்துவாருங்கள் ! (எழுந்து கெளசிகன் பாதங்களில் விழ எத்தனிக்கிருள்.)
கெளசி :- வேண்டாம் ! வேண்டாம் ! கோவலனுடைய தந்தையே அவனைத் தேடிப் பல இடங்களுக்கும் தூதுவரை அனுப்பியிருக்கிறர். உனக்காக நானும் போகிறேன். எங்கே, ஒரு ஒலை எழுதிக்கொடு.
மாதவி - (பதறி) நான் உய்ந்தேன் வசந்தமாலா,
எழுது கருவிகள் கொண்டுவா; அந்தணருக்கு வழிச் செலவிற்குப் பொன்னும் கொண்டுவா. .
(திரை)

Page 29
காட்சி : 17
இடம் : வனம் (வனத்தைக் குறிக்கப் பின் மேடை முழுவதும் ஒரு வனத்திரை. இட நடுமேடையில் கவுந்தியடிகளும் கண்ணகியும் ஆழ்ந்த நித்திரையில் படுத்திருக் கிரு ர்கள். திரை அகலும் பொழுது, நடுமேடை யிற் படுத் திருந்த கோவலன் எழுந்து உட் கார்ந்து, இடப்புறம் பார்த்து, பிறகு கண்க ளைக் கசக்கிக் கொண்டு எழுந்து நிற்கிருன்.) கோவலன் :- (மெதுவாக இருவரும் ஆழ்ந்து துயில் கின்றனர். யான் சென்று மாலைக் கடன்களை முடித்து. (வலப்புறம் திரும்பி இரண்டு அடி எடுத்து வைக்கிறன். அச்சமயம் வலப்புற மேடை மேல் கெளசிகன் தோன்றி, கோவலனைக் கண்ட வுடன் மலைத்து நிற்கிருன். இட மேடைமேல் ஒளி மங்க, வலமேடைமேல் ஒளி அதிகம் பிரகாசிக்கிறது கெளசிகன் :- (மெதுவாக) இவன்தான் கோவலனே? இளைத்து அயர்ந்துவிட்டான் போலும்; ஆயினும், அவனை ஆய்ந்து பார்க்கவேண்டும். ஒரு மாயச் சொல்லினல் இவனை யார் என்று அறிந்துவிடலாம் ! (பாடுகிருன்)
கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய, மாமலர் நெடுங்கண் மாதவி போன்றுஇவ் அருந்திறல் வேனிற்கு அலர்களைக் துடனே, வருந்தினை போலுநீ, மாதவி. ! கோவலன் :- (திடுக் குற்று மாதவி, மாதவி...!
கெளசி :- என்னை நீ மறந்துவிட்டனேயோ ! கோவலன் :- எனக்கு மறப்பினுற் கவலை இல்லை. நினைப் பினுல்தான் கவலை. ஆகா, கெளசிக ! நீ என்
இளைய வாழ்வின் நண்பனன் ருே ?
கெளசி :- உனக்கு முதுமை வந்து விடவில்லை.
என்றுந்தான் நான் உன் நண்பன் !

காட்சி 17 47
கோவலன் - என் காதல் மனைவி கண்ணகியும், கவுந்தி யடிகள் என்ற துறவியும் அருகில்தான் இருக்கிருர் கள். அவர்களை நீ பார்க்கவேண்டுமா ? -
கெளசி :- வேண்டாம் அன்பனே ! கோவலன் - ஆனல் நீ என்னைத் தேடிவந்த காரணம்? கெளசி :- மாதவி அனுப்பினுள் ! நீ அவளை விட்டுப்
பிரிந்த பிறகு அவளுக்கு வாழ்விலே இன்பம் இல்லை யாம் ! இதோ அவளுடைய ஒலை. கோவ :- இது இரண்டாம் ஒலை ! என்னதான் எழுதி
யிருக்கிருள், பார்க்கலாம் ! கெளசி :- அவளுடைய கண்ணிர் எனக்குத் தாங்க வில்லை ! அவளுடைய துயரம் என் மனதை மிகவும் ஏங்க வைத்தது; அவள் சிறியாள்.
கோவ :- ஆயின் கண்ணகி பெரியள் என்கின்ருயோ ? கெளசி :- இல்லை! ஆனல் இதோ அவள் தந்த ஒலை . கோவ :- அவளுடைய ஒலேயிற் கூட அவளுடைய கூக்
தலின் இனிய மணம் நாறுகின்றதே ! (கடிதத்தை வாங்கி வாசிக்கிருன் மாதவியின் குரலில்
பாட்டு. ராகம் : சாரங்க.)
அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனங்கொளல் வேண்டும் ! குரவர்பணி அன்றியும், குலப்பிறப் பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப் பறியாது, கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி! கோவ :- அவ்வளவுதான கூறினுள் ? கெளசி :- ஆம், கோவல பெண்கள் வாய்திறந்து இவ்
வளவு கூறிவிட்டாற் போதாதா ?

Page 30
48 மாதவி மடந்தை
கோவ :- நீ ஏதோ அதிகம் அறிந்துவிட்டவன் போற்
பேசுகின் ருயே? கெளசி :- யான் ஒன்றும் அறியேன். ஆனல் உன் னுடைய தாய் தந்தையரின் துயரமும் உன்மேற் காதல்கொண்ட மாதவி படும் கொடுந் துயரமும் என் னுல் தாங்க முடியவில்லை. அதனுல்தான் இப்படிக் குறுக்கு வழியாக வந்து இவ்விடத்திலாயினும் உன் னேக் காண முடிந்தது. கோவ :- யான் உனக்குக் கூற வேண்டுவதா, என்ன? யான் பிழை செய்துவிட்டேன். என் தாய் தந்தையர் களுக்கு அவர்களின் முதுமைப் பருவத்திற் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாது விடுத்தேன். அவர்களிடங் கூறிக்கொள்ளாது என் மனைவியுடன் வைகறை யாமத்தில் ஊர்விட்டு அகன்றேன். இவைக ளுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக, நீ அவர்களிடஞ் சென்று சொல்; என்னுடைய அன் பையும் வணக்கத்தையும் அவர்களுக்குக் கூறுவாயாக! கெளசி :- நீ வாழ்வாய்! மதுரையில் உனக்குப் புது வாழ்வு வாய்க்கட்டும் ! (வலப்புறம் போகிருன். மேடை முழுவதிலும் ஒளி) கவுந்தி:- (எழுந்து உட்கார்ந்து) யாராவது வந்தார்களா? கோவ :- ஆம் அம்மையே! என் பால்ய நண்பன் ஒரு
வன் வந்தான். கவுந்தி - கண்ணகி இன்னும் அயர்ந்து தூங்குகிறள். வழி நடந்த இளைப்பு ! உன் நண்பன் ஏதாவது சேதி
கொண்டுவந்தானு புகாரில் இருந்து ...? கோவ :- அப்படிப் பிரமாதமாக ஒன்றும் இல்லே,
அம்மையே!
(வேகமான திரை)

காட்சி : 18
இடம் மாதரியின் வீடு.
மேடைக்கு வெளியே இடப்புறமும் வலப்புற மும் பசுக் கன்றுகள் அழும் சப்தம் இடையர்களின் புல் லாங்குழல் இசை. இவை ஒய்கின்றன. திரை அக லும் பொழுது கெளந்தி அடிகளும் கோவலனும் கண்ணகியும் வலப்புறம் மேடைமேல் நிற்கிருர்கள். மாதரி நடு மேடையில் நிற்கிருள். கெளந்தியடி களின் பாதங்களிற் பணிந்து எழுகிருள்.) மாதரி - அடிகாள் 1 வரவேணடும். யார் இவர்கள் ?
கெளந்தியடிகள் :- மாதரி, இவர்கள் இருவரையும் நான் உன்னிடம் அடைக்கலமாகத் தரப்போகின்றேன். ஏதோ சூழ் வினையால் தம் பதி இழந்து, தம் காடிழந்து வந்து நிற்கின் ருர்கள் இந்த மதுரையிலே ! புது வாணிபம் செய்ய வேண்டுமாம். நானே துறவி. அறப்பள்ளி நாடிப் போகவேண்டியவள். அதனல் சீயே இவர்களை ஏற்றுக்கொள் வாய். இனி கீதான் அவர்களுக்குத் தந்தையும் தாயும். இவன் கோவலன் என்ற பூம்புகார் வணிகன். இவள் அவன் மனைவி கண்ணகி.
மாதரி - சோழ நாட்டின் தலைநகராம் பூம்புகாரிலிருந்து பாண்டிநாட்டின் தலைநகராம் இந்த மதுரைக்கு நடந்து வந்திருக்கின்றீர்கள். உங்கள் பாதங்கள் எவ்வளவு நொந்தனவோ ? ( இடப்புறம் திரும்பி உரத்து ) ஐயை, என் மகளே !
ஐயை :- (இடப்புறம் மேடைக்கு வெளியே அம்மா. மாதரி - ஐயை நண்பர்கள் வந்திருக்கின்றர்கள்.
அடைக்கலப் பொருள் அம்மா!
uar - 7

Page 31
50 மாதவி மடக்தை
(இடப்புறம் மேடைமேல் ஐயை தோன்று கிருள்
கெளந்தி:- வா, என் மகளே! இவர்கள் இருவரும்
உங்கள் அடைக்கலம்.
ஐயை :-(கெள ந்தியடிகளின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து) தாயே, தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் அன்ருே ? (எழுந்து கண்ணகியை அணைத்து வாருங்கள் ! (கண்ணகியும் கோவலனும் நடு மேடைக்கு வருகின் ரு ர்கள் ஐயையுடன்.) கெளந்தி:- மாதரி, நான் விடைபெற்றுக்கொள்ளுகிறேன். இவர்கள் இருவரையும் உனது கண்ணின் கருமணி யாய்க் காப்பது உன் கடன்.
(மாதரி விழுந்து வணங்குகிருள். கெளந்தி யடிகள் அவளை ஆசீர்வதித்துவிட்டு வலப்புறம் மேடையை விட்டுப் போகிரு ர்.)
மாதரி - ஐயை, என் மகளே! வழி கடந்து இளைத்தவர்
களுக்கு உடனே உணவளிப்பாய்.
ஐயை - அப்படியே அம்மா. (இடப்புறம் போகிருள்.1
கோவ:- அம்மா உங்கள் அன்பை 5ான் என்றும் மற வேன். இவள் வழி நடந்தறியாள். என் பொருட்டு மனை துறந்து பந்துக்களேத் துறந்து என்னுடன் கடு வழி நடந்தாள். எவ்வளவோ வேதனைகளைச் சகித்துக் காடும் மலையும் என்னேடு கடந்துவந்தாள்.
மாதரி - கலங்கவேண்டாம் மகனே! முதலில் உண
வருந்தி இளைப்பாறுங்கள்.
ஐயை: - (கைகளில் இரு பாத்திரங்களைத் தாங்கிவந்து கோவலனுக்கும் கண்ணகிக்கும் முன் வைத்து) முதலில் உணவருந்துங்கள்.

历TLG 18 5 I
மாதரியும் ஐயையும் இடப்புறம் போகிரு ர்கள்
கண்ணகி : இந்த ஆச்சியின் அன்பு எவ்வளவு பெரியது
அருந்துங்கள் ஸ்வாமி.
கோவ :- (உட்கார்ந்து) இன்று உன் வளையணிக்த கையால் உணவு கிடைக்கப்பெறுவது என் பெரும் பாக்கியம் ! உன் பேரன்பை மறந்து நான் அந்த மாயப் பரத்தையுடன் மகிழ்ந்திருந்தேன்.
கண்ணகி - கலங்கவேண்டாம். விதியை யார் வெல்ல முடியும்? ஆனல் தாங்கள் என்னைப் பிரிந்து மாதவி மடந்தையிடஞ் சென்றிருந்தபொழுது என் மனம் எவ்வளவு நோவடைந்தது? என் உயிரே உடலை விட்டுப் பிரிந்து விடுவதுபோலத் துடித்தது. தங்கள் அன்னையின் துயரைக் குறைப்பதற்காக அவர் முன் என் துயரை மறைத்து வாழ்க்தேன்.
கோவ:- (எழுந்துநின்று மாதவி, ஆ! என் மாதவி! (திடுக்குற்று கண்ணகி, என்ன கூறிவிட்டேன்! நான் பெரும் பாவி கண்ணிருந்தும் கபோதி ! கற்பின் செல்வியாகிய உன்னை மறந்து, களிப்பின் செல்வியாகிய அந்த மாதவிபால் மையல்கொண்டு திரிந்தாலும் உன் அன்பு கொஞ்சமும் குறைய வில்லையே! நான் பெரும்பாவி, (கைகளால் கண் களை மூடிக்கொண்டு அழுகிருன், பிறகு தேறி, பாடுகிறன்.
[ராகம்-மோகனம்) குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமு நீங்கி, நாணமு மடனு நல்லோ ரேத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக

Page 32
52 மாதவி மடக்தை
என்னெடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே! கொடியே : புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே ! கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!
கண்ணகி :- என் ஸ்வாமி, தங்கள் மனங் கலங்குவ தைக் காண என் நெஞ்சம் அதிர்கின்றதே, (கண் களைக் கைகளால் மூடிக்கொண்டு அழுகிருள். பிறகு சிரித்து) என் அன்பு பரத்தையின் அன்புபோல் சில நாட்களிற் சிதைந்துபோவ தொன்றில்லையே கவ லையை விடுங்கள்.
கோவ:- போகட்டும்! இனி நாம் மதுரைக்கு வந்த காரியத்தைக் கவனிக்க வேண்டாமா ? எங்கே உன் சிலம்பு?
கண்ணகி - ஆனல் தாங்கள் உணவு அருந்தவில்லையே!
கோவ :- உணவோ செல்லவில்லை. ! எழுந்து நின்று)
எங்கே சிலம்பு?
கண்ணகி - (காலிலிருந்து கழற்றிக் கொடுத்து சென்று வாருங்கள். உங்களுக்குச் சர்வ மங்களங்களும் உண்டாகட்டும். (சிரித்து) நீங்கள் வரும் வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்பேன்.
கோவ :- (வலப்புறம் முன்மேடையில் நின்று) சென்று
வருவேன், விடைகொடு!
கண்ணகி - (அருகில் போய்1 சென்று வாருங்கள்
ஸ்வாமி.
(கோவலன் கண்ணகியின் தலையை வருடிவிட்டு அவளை அணைத்தபடி வலப்புறம் நடக்கிருன்)

காட்சி 18 53
கண்ணகி :- (திடீரென்று அலறி பொறுங்கள்! (கோவ லனை அணைத்து) எருது இடறி எதிர்த்து வருகின் றதே! ஐயோ !
கோவ:- கலங்காதே! எருது இடறி வந்தால் என்ன, ஏது வந்தால் என்ன , எமக்கு இனி ஏது பயம் ? (கண்ணகியின் முகவாயை வலக்கையால் நிமிர்த்தி) எங்கே, நகைமுகம் காட்டி எனக்கு விடைகொடு.
கண்ணகி - (கண்ணிரிடை சிரித்து சென்று வாருங் கள் ! (மறுபடி குரல் கம்ம சர்வ தெய்வங்களும் தங்களுக்குக் காவலாக வரட்டும் !
(கோவலன் வலப்புறம் போகிருன். கண்ணகி திடீரென்று விம்மி அழுது திரும்பி நடு மேடைக்கு வருகிருள்
(திரை)

Page 33
காட்சி: 19
இடம் மதுரை வீதி.
(பொற் கொல்லனும் அவன் உதவியாளனும் மேடை யின் இடப்புறம் இருந்து நடு முன் மேடைக்கு வந்து பேசிக்கொண்டு நிற்கிரு ர்கள் )
பொற் - கொல்லன் - என்ன செய்வேன் ? நம் அரசியின் சிலம்பு திருப்பிக் கொடுப்பதற்கு வேண்டிய கால மும் போய்விட்டது. இனி தாம்.
உதவியாளன் :- (சிரித்து கைமாற்றி, களவு செய்ததாக
உண்மையைக் கூறிவிடவேண்டியதுதானே !
பொற் - கொ : அட சிக்! மெதுவாகப் பேசு. நாம் சிலம் பைக் கையாடியதை அரசன் அறிந்தால் என் தலை கட்டையிலே புரளவேண்டியதுதான். கையாற் கழுத்தை வெட்டுவதுபோன்று பாவனை செய்கிரு ன்) அதன் பிறகு?
உதவி :- இத்தனை களவு செய்தும் உங்களே ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் இதுகாறும் காப்பாற்றி வந்திருக்கிறது. (உரத்து, சிரித்து) அது இன்னும் காப்பாற்ருமலா போய்விடும் ? (வலப் புறம் மேடைக்கு வெளியே கோவலன் * சிலம்போ சிலம்பு ! என்று கூவுகிருன்.)
பொற் - கொ :- (உதவியாளன் தோளைத் தொட்டு அவனைக் கையமர்த்தி, மெதுவாக இரைந்து கேள் !
(வலப்புறம் மேடைமேல் கோவலன் தோன்றி, கண்ணகியின் சிலம் பைக் கையிலேந்தி)

காட்சி 19 55
கோவ :- சிலம்போ சிலம்பு, செல்விகள் மட்டுமா! அரசி
களும் அணிவதற்கேற்ற - சிலம்போ சிலம்பு !
பொற்-கொ - ஆ! எத்துணை அழகிய சிலம்பு! (அருகில் போய்) இது எம் அரசி கோப்பெருந்தேவி அணிவதற்கேற்ற சிலம்பல்லவா ?
கோவ :- யார் அணிவதென்றலும் எனக்குக் கவலை இல்லை. இது என் மனைவியின் சிலம்பு. பூம்புகாரிற் சிறந்த பொற்கொல்லர்கள் செய்தது. இதை நீ மதிப்பிட வல்லாயோ ?
பொற் - கொ - ஆம், இதை அணியத் தகுதியுள்ளவள் எம் அரசி கோப்பெருந்தேவி ! இதற்குரிய பொன் கொடுத்து வாங்கத் தகுதியுள்ளவன், எம் அரசன், நெடுஞ்செழியன். (கபடமாகச் சிரித்து) அடியேன் அரசனுடைய பிரத்தியேக பொற்கொல்லன். நான் கூறினல் அரசன் உடனேயே ஏற்றுக்கொள்வான்.
உதவியா - ஆம். தங்கள் வார்த்தைக்கு எம் அரசன்
என்ருவது எதிர் வார்த்தை கூறியதுண்டா?
கோவ :- ஆனல். பொற்-கொ:- அஞ்சாதீர்! எம் அரசன் வீதிகளில் உமக் குத் தீங்கு விளையமாட்டாது. இவ்விடத்தில்தானே இருப்பீர். நான் சிலம்பைக் கொண்டுபோய் அரச னிடங் காட்டி வருகிறேன்.
கோவ:- ஆனல், இது எனக்குப் புதிய நகரமாய் இருக்
கிறதே ! உதவியா - பாதகமில்லை! பாதகமில்லை (கபடச் சிரிப்பு கோவ :- சரி கொண்டு செல்வாய்! அதுவரையும் நான்
இவ்விடத்தில்தானே கின் வரவு காத்திருப்பேன்.
(திரை 1

Page 34
காட்சி: 20
இடம் அரண்மனை.
பின் நடு மேடை யில் ஒரு இரட்டை ஆசனத் தில் பாண்டியன் நெடுஞ்செழியனும் கோப்பெருந் தேவியும் உட்கார்ந்திருக்கிரு ர்கள். மேடையின் இடப்புறம் இருந்து மேடை மத்தி வரை ஒரே மாதிரி உடை அணிந்த இருபெண்கள் நாட்டியம் ஆடு கிரு ர்கள். பின்னணியாக நாட்டிய இசை. அது ஒய, நாட்டியமும் ஒய்கிறது. நாட்டியப் பெண்கள் மன்னனையுந் தேவியையும் வணங்கி விட்டு இடப் புறம் போகிரு ர்கள்.) கோப் - தேவி :- காட்டியப் பெண்கள் நன்ருகவே ஆடி
ஞர்கள். பாட்டும் நன்று !
நெடு - செழி - அதுமட்டுமா ? இந்த ஆடல்மகளிரின் கருங் கண்களில் தோய்ந்து நின்ற காதல் பாவத் தையும் கை அசைவுகளில் தோய்ந்து நின்ற மோக பாவத்தையும், கிருத்தம் செய்த சதங்கை அணிந்த செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த பாதங்களில் தேங்கி கின்ற இளமையின் பொலிவையும், பவள வாய் தெறித்த வெண் முத்த நகையின் கவர்ச்சியையும், குயிலின் குரலே வென்ற பாட்டின் இனிமையையும் நீ அறிந்தனையோ ? ஆ மேகம் ஒத்த கருங்கூந்தல், பிறை ஒத்த வெண்ணுதல், துடி ஒத்த இடை. கோ - தேவி:- (எழுந்து கோபமாக) போதும் வர்ணனை! தங்கள் மனம் கொண்ட காட்டிய மாதருடனேயே வாழ்ந்திருங்கள், நான் போகிறேன்.
(அரசி எழுந்து நடுமே டைக்கு வருகிருள்; அர சன் பின் தொடர்கிருன். வலப்புற வாசல் வழி யாக வந்த பொற் கொல்லன் வேகமாக வந்து அரசி யின் பாதங்களில் வீழ்கிருன், அரசனும் அரசியும் நடு மேடையில் திடுக் குற்று நிற்கின்றனர்.

காட்சி 20 57
பொற் - கொ :- அரசே! தேவியின் சிலம்பைக் களவு
கொண்ட கள்வன் இன்று அகப்பட்டுவிட்டான்.
கோ-தேவி: - ஆ! கள்வன ? அகப்பட்டுவிட்டான?
பொற் - கொ - ஆம் தேவி, கள்வன் அகப்பட்டுவிட்டான். தங்கள் சிலம்புடன் கள்வனை வீதியில் வைத்து வக் தேன். சிலம்பும் அவன் கையிலேயே இருக்கிறது.
நெடு - செழி:- (உரத்து ஹா ! என்ன துணிச்சல் அவ னுக்கு 1 தேவி! நீ கலங்கவேண்டாம். (மிக உரத்து) ஹே காவல! நீ இப் பொற்கொல்லனுடன் சென்று அக் கள்வன உடனே கொலைக்களப்படுத்தி, அரசி யின் சிலம்பைக் கொண்டுவருவாய் ! போ!
திரை)
8 - rפו

Page 35
காட்சி : 21
இடம் வீதி.
(மேடையின் வலப்புறம் கோவலன், இடப்புற மேடை வாயில் நோக்கி நின்று கொண்டிருக்கிருன். திடீரென்று நாட்டிய இசை, இடப்புற மேடை மேல் மாதவியின் காட்டிய ரூபம், கோவலன் கண்க ளுக்குத் தோன்றுகிறது.1
கோவ :- (எழுந்து நின்று ஆ! என் மாதவி! என் மட
மானே! இப்பொழுதாவது வந்தாயா?
(மாதவியின் ரூபம் ஆடி இடப்புறம் மெதுவாக மறைகிறது; வலப்புறம் மேடைமேல் கெளசிகன் தோன்றுகிருன்.
கெளசி :- கோவல!
கோவ :- (திடுக்குற்று வலப்புறம் நோக்கி ஆ!
கெளசிக : இங்கும் வந்துவிட்டாயா? ;
கெளசி :- (கோவலனை அணைத்துக்கொண்டு) அவள் படுத் துயரம் தாங்கமாட்டாமல் மறுபடியும் வந்தேன். நீ இங்கே! அங்கே காவிரிப்பூம் பட்டினத்தில், உன் மாதவி மடந்தை உன்னே கினைத்து ஏங்கி, பாயலும் கண்ணிருமாகக் கிடக்கின்ருள்.
கோவ :- ஆ! என் மாதவி! உன்னை மறந்து நான் எங்ங்ணம் உயிர் வாழ்வேன்? (கோபமாக கெளசிக! அழிந்துபோன இன்பத்தின் ஞாபகம் எனக்கு வேண் டாம் ! நீ ஒரு மூடன்.
கெளசி :- ஏதோ மாதவி என்னை உன்பால் மறுபடி
அனுப்பினுள். அதனுல் வந்தேன்.

m i gF 21 59
கோவ:- (மிக உரத்து போ! போ அப்பால் 1 மாதவி யின் ஞாபகம் எனக்கு வேண்டாம். இன்பங்கள் எல்லாம் தொலைந்து போகட்டும் ! (கெளசிகன் வலப் புற மேடையை விட்டு அகல்கிருன் ஆ! கண் ணகி, உன் அன்பை நான் எங்ங்ணம் மறப்பேன் ? மாதவி, உன் காதலையும், உன் இன்பத்தையும் எங் நுனம் நான் மறந்திருப்பேன். (நடு மேடையில் நின்று அவலமாக இரு புறமும் திரும்பி கண்ணகி, கற் பின் காரிகையே! மாதவி என் இன்பத்தின் எல் லையே! கண்ணகி, மாதவி! கண்ணகி, மாதவி! யான் எங்கே செல்வேன்? ஒருபுறம் கடமை, மறுபுறம் காதல் கண்ணகி, மாதவி ! (அல்லல் உற்று நடு மேடையில் நின்று இடப்புறம் நோக்குகிருன். இடப்புறம் இருந்து பொற்கொல்லனும் உதவியாள னும் வாளேந்திய இரு காவலர்களும் வருகிறர்கள்.
கோவ :- ஆ! வந்தீர்களா ?
பொற்-கொ - கபடமாகச் சிரித்து ஆம் வந்தோம். இதுதானே உன் சிலம்பு ? (தன் மடியில் இருந்த சிலம்பை எடுத்துக் கோவலனிடம் கொடுக்கிருன்.)
கோவ :- ஆம்.
உதவியாளன் :- (பொற்கொல்லனை இடப்புறம் அழைத் துச் சென்று மெதுவாக ஆனல் சிலம்பை ஏன் அரசனிடங் காட்டவில்லை ?
பொற் - கொ - (மெதுவாக காட்டியிருந்தால், அரசன் இவனை விசாரிக்கவேண்டும் என்று சொல்வான். விசாரணையில் என் பொய் அம்பலமாகிவிட்டால் ..? சிலம்பை இவன் கையில் விட்டுவைத்திருந்தால், இவன் சில சமயம் வேறு வீதிகளுக்குப் போயிருக்கக்

Page 36
6 O மாதவி மடந்தை
கூடும். பிறகு இவனை எங்கே தேடுவது ; சிலம்பை எங்கே தேடுவது? (நடுமேடைக்கு வந்து உரத்து) காவல! இவனே கள்வன். இதோ இவன் கையில் இருக்கின்றது அரசியின் சிலம்பு.
கோவ :- (பதறி) என்ன ! இது அரசியின் சிலம்பா ?
இதோ பார்! இது என்.
பொற் - கொ - (உரத்துச் சிரித்து) இது உன் மனைவியின் சிலம்பு என்றுதானே சொல்லப்போகின்றப். உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன்போல் தோன்றுகின்றது; உடன் மனைவியா இச்சிலம்பை அணிபவள் ? (பேய்ச் சிரிப்பு இவனே கள்வன் ! காவலர்களே பற்றுங்கள் இவனே.
கோவ :- ஆ என்ன இது?
பொற் - கொ :- (சிரித்து) இதுவா? இது தன் தேவியின்
சிலம்பு கொண்ட கள்வனே அரசன் பற்றும் முறை புரிந்துகொண்டாயா ?
முதல் காவ :- இவனைப் பார்த்தால் கள்வனைப்போலத் தோன்றவில்லையே! இதில் ஏதோ பிழை நடந்திருக் கின்றது.
பொற் - கொ :- கபடமாகச் சிரித்து கள்வன், எங்காவது கள்வன் போலத் தோன்றுவதுண்டா? (உரத்து) அரசன் ஆணே நிறைவேறட்டும் ! (கோவலன் கையில் இருந்த சிலம் பைப் பிடுங்கிக்கொள்ளு கிருன். உடனே இரண்டாம் காவலன், கோவலன் கையைப் பற்றி இழுத்து மேடைக்கு வலப்புறம் பலவந்தமாகக் கொண்டு செல்லுகிருன்.1

காட்சி 21 6
முதல் காவ :- ஆ! பொறு
(வலப்புறம் கோவலன் வெளியே, "ஐயோ, கண் ண கி’ என்று அலறும் சத்தம் கேட்கிறது. இரண் டாம் காவலன் இரத்தம் தோய்ந்த வாளுடன் வலப் புறம் மேடைமேல் தோன்றுகிருன்.)
பொற் - கொ - அரசனுடைய காவலன் செய்யவேண்டிய கடமை இதுவே! வாருங்கள் போகலாம்.
முதல் காவ :- (உரத்து அட பாவி! என் ஆணையின்றி அவனைக் கொன்றுவிட்டாயே! (குரல் கம்ம1 எம அரசன் செங்கோல் உண்மையில் வளைந்து தான் போய்விட்டதோ ?
பொற் - கொ - கபடமாகச் சிரித்து) அதைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள் ? இதோ அரசியின் சிலம்பு !
அவ்வளவுதான் எனக்கு வேண்டியது. வாருங்கள் போகலாம்.
(திரை)

Page 37
காட்சி: 22
(மேடையில் இடப்புறமும் வலப்புறமும் புல்லாங் குழல் இசை; மாடுகளின் அலறல், மேடையின் இடப்புறம் கண்ணகி ஒரு பாயின்மேல் அயர்ந்து உட்கார்ந்திருக்கிருள். அவள் அருகில் ஐயை உட் கார்ந்திருக்கிருள். மேடையின் இடப்புறம் மாடுகள் அவலமாக அலறும் சப்தம்.)
ஐயை :- (உரத்து) அம்மாவோ, அம்மா.
(மேடையின் வலப்புறம் மாதரி தோன்று கிருள்.
மாதரி - என்ன மகளே ?
ஐயை - மாடுகள் அலறுகின்றன. எம் ஆயத்திற்கு
ஏதோ தீங்கு வரும்போலும் அம்மா.
மாதரி :- இதற்கா கலங்குகின்ருய்? எம் ஆயத்திற்குத் தீங்கு வருவதானல், எம் கண்ணன், எம் அன்புத் தெய்வம் எங்கு போய்விட்டான் ?
கண்ணகி :- (எழுந்து குரல் கம்ம) காலையிற் சென்ற என் நாதன் இன்னும் வந்திலர் என் நெஞ்சு கலங்கு கிறது அம்மா.
மாதரி - (இடப்புறம் வந்து கண்ணகியின் முகவாயைத் தடவி கலங்காதே மகளே. உனக்கும் சேர்த்துத் தான் குரவை ஆடுவோம். அதனுல் உனக்கும் எமக் கும் மங்களங்கள் பல உண்டாகும். (உரத்து ஐயை ! அழைப்பாய் எம் பெண்களைக் குரவைக் கூத்து ஆடுவதற்கு.

காட்சி 22 63
ஐயை :- (வலப்புறம் மேடை அருகிற் சென்று உரத்து எல்லீரும் வாருங்கள். குரவை நாடகம் உடனே தொடங்கவிருக்கிறது! வாரீர்!
கண்ணகி - (அழுது என் நெஞ்சு கலங்குகிறது
அம்மா.
மாதரி :- அம்மா ! மாயவன் அருளினல் உனக்கு எத்
துயரும் நேராது.
குரவைக் கூத்து -இசை ஆரம்பமாகிறது. வலப் புறம் வாசல் வழியாக ஒரேமாதிரி உடை அணிந்த ஏழு பெண்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்து நடு மேடைக்கு வருகிறர்கள்.1
மாதரி - கண்ணகியை அணைத்து மகளே, நீயும் இந்தக் குரவைக் கூத்தைக் கண்டு கேட்டு மகிழ்வாயாக,
(ஏழு பெண்களும் ஐயையும் சேர்ந்து ஆடுகிருர்கள். பின்னணியாகப் புல்லாங்குழல், மிருதங்கம் முத லியன.)
(ஐயை : பாடுகிருள்]
(ராகம் ஆனந்தபைரவி) கன்று குணிலா கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயிற் கொன்றையங் தீங்குழல் கேளாமோ தோழி ! பாம்பு கயிருக் கடல்கடைந்த மாயவன் ஈங்கு5ம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி ! கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைகம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி !

Page 38
64 மாதவி மடந்தை
(நாட்டியம் முடிந்ததும் கண்ணகியைத் தவிர்ந்த மற்றைய பெண்கள் எல்லோரும் கூடி ஒன்ரு க ஏதோ பேசிக்கொள்ளுகிரு ர்கள்) கண்ணகி- தோழி! ஐயை ! (குரல் கம்ம) ஏதோ மெதுவாகப் பேசிக்கொள்ளுகிறீர்களே ? காலையில் என் நாதன் நகர் செல்லும்பொழுது, எருது இடறி வந்ததே ' (அழுகிருள்) மாதரி - மகளே ! இனி உன்னிடம் மறைத்துப் பய னில்லை. உன் நெஞ்சைத் திடப்படுத்திக்கொள்.
கண்ணகி :- ஆ ! (விம்மி விம்மி அழுகிருள்.)
மாதரி - நின் கணவனை அரசியின் சிலம்பு கவர்ந்த கள்வன் என்று கொலைசெய்யக் கருதினனும் அரசன்.
கண்ணகி :- (அலறி நிலத்தின் மேல் வீழ்ந்து) கொன்று
விட்டான் என்றுதான் சொல்லேன் 1 ஐயோ எங்ங் னம் சகிப்பேன் ? (நிலத்தில் உருண்டு) என் ஸ்வாமி என் நாதா! என்னை விட்டு எங்கு சென்றீர்கள். இனி இந்த வாழ்வை கான் எங்ங்னம் தாங்குவேன். (நாட்டியப் பெண்கள் எழு வரும் வலப்புறம் வெளியே போகிரு ர்கள். மாதரி கண்ணகியின் அரு கில் உட்கார்ந்து, அவளை அணைத்து)
DIgfi :- LDs (567
ஐயை :- (மறுபுறம் உட்கார்ந்து கண்ணகியை அணைத்து, உட்கார வைக்க முயன்று) என் தோழி
என் கண்ணகி.
கண்ணகி :- (எழுந்து உட்கார்ந்து) என் கணவனே இழந்தேன் ! அன்பிலா மகளிர்போல அவர் இறந்த

காட்சி 22 65
பின், தீர்த்தங்கள் ஆடி நோன்புகள் நோற்று, உண்டு உடுத்து உயிர் வாழ்வேனே அம்மா, நான் ? எழுந்து நின்று) இந்த உடலும் இந்த வாழ்வும் இனி எதற்கு ?
மாதரி :- மகளே !
கண்ணகி - (மிக உரத்து) எல்லோரும் கேளுங்கள்! கற்புடைப் பெண்டீரே கேளுங்கள்! (வானத்தைப் பார்த்து பகலவனே, நீயும் கேட்பாய் ! என் கண வன் கள்வன ? (அலறி அல்லன், அல்லன் ! அதை இந்தக் கொடுங்கோல் பாண்டியன் முன் காட்டிவிட்டு, நானும் என் நாதனுடன் சுவர்க்கம் புகுவேன். (வேகமாக வலப்புறம் நடந்து மேடையை விட்டு அகல்கிருள்.
மாதரி:- (ஐயையை அணைத்துக்கொண்டு இவள் மாபெரும் பத்தினி 1 என்ன செய்வாளோ? கொடுமை இழைத்த எம் மன்னன் செங்கோல் வளைவதாக.
(திரை)

Page 39
காட்சி : 23
இடம் வீதி (இடப்புறம் இருந்து தலைவிரி கோலமாகக் கண்ணகி புலம்பிக்கொண்டு வருகிருள்.)
கண்ணகி :- தமிழும் அறமும் வளர்த்த மதுரையம்பதியா இது ? என் உயிர் நாதனுடன் இன்பத்தோடு கைகோத்து வந்த என்னைத் தனியள் ஆக்கிய இதுவா மதுரையம்பதி ? இங்குதான ஈசன் மானிட வடிவுகொண்டு அரசனுக அறம் வளர்த்தான் ? இங்குதானு தன் திருவிளையாடல்கள் எல்லாம் செய்தான் ? இதுவா மதுரை-தமிழ் அணங்கு தன் கன்னிமையில் ஆடல் செய்த அரங்கு இதுதான? (அழுது வலப்புறம் போய்) கூடல்மாநகரே ! நீதி வழுவாத சோழர்கள் ஆளும் பூம்புகாரிற் பிறந்த நான், நீதி வழுவிய இந்தப் பாண்டியன் ஆளும் மதுரையிலே என் நாதனைப் பறிகொடுக்க வேண் டுமா ? (மேடையில் வலப்புற வாசல் அருகே போய், அலறி நிலத்திற் புரண்டு அழுது) என் ஸ்வாமி! என் நாதா ! என் காதல 1 தங்களை இந்தப் பிணக் கோலத்திலா நான் காணவேண்டும் ! (விம்மி விம்மி அழுகிருள்) பூம்புகாரில் தங்கள் அன்பை இழந்தேன் ! (உரத்து இந்த மதுரையில் தங்கள் உடலையும் இழந்தேன் ! எழுந்துநின்று அலறி உரத்து) இந்த காட்டில் மன்னன் இல்லையா ? கற் புடைப் பெண்டிர் இல்லையா? (மிக உரத்து, அலறி என் கணவனை ஆராயாமற் கொலை செய்வித்த இக் கொடிய பாண்டியனுடன் கான் வழக்குரைத்தே தீரு வேன் ! (நடுமேடைக்கு வந்து தன் இடதுகாலில் இருந்த ஒரு சிலம்பைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு இடப்புறம் நடக்கிருள்.
(திரை]

காட்சி: 24
பாண்டியன் கொலுமண்டபம்,
(பின் நடுமேடையில் பாண்டியன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். அதற்குமேல் மீன் கொடி. கோப் பெருந்தேவி அருகில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக் கிரு ர். இடப்புறம் இரு மந்திரிகள் ஆசனங்களில் வீற்றிருக்கின்றர்கள். வலப்புறம் மேடைவாசலில் ஈட்டி தாங்கிய இரு காவலர்கள்.
கோ. தேவி :- அரசே ! நேற்றிரவு ஒரு கனவு கண்
டேன். ஆ ! எத்துணைக் கொடிய கனவு !
பாண் :- (சிரித்து) இழந்த சிலம்பு மறுபடி கிடைக்கப் பெற்றதனுல் நீ மகிழ்ச்சியடைந்திருப்பாய். அல்லது என்னிடம் கொண்ட ஊடலினுல் உன் மனம் பேத லிப்பு அடைந்திருக்கும். (மறுபடி சிரித்து அல்லது அதன்பிறகு வாய்த்த கூடலினல் உன் மனம் மயங்கி யிருக்கும். (மிகச் சிரித்து) அல்லது அந்த மகிழ்ச்சி யினல் அதிக உணவு அருந்தியிருப்பாய். (சிரிப்பு
கோ. தேவி :- தாங்கள் சிரிக்கின்றீர்கள் ; ஆனல் என்
மனம் நடுங்குகிறது, பிரபு.
பாண் :- கனவு என்ன என்றுதான் சொல்லேன் ?
கோ. தேவி - எம் வாயில் கடைமணியும், தங்கள் செங் கோலும், தங்கள் செங்குடையும் நின்று நடுங்கின. இரவில் வானவில் தோன்றியது. பகலில் வெள்ளி வெடித்து வீழ்ந்தது . என் மனம் கலங்குகின்றது அரசே!
பாண் - பேதாய். (திடீரென்று மேடையின் வலப்
புறம் வாயில் மணியோசை கேட்கின்றது) ஆ !

Page 40
68 - மாதவி மடங்தை
கோ. தேவி : - (விக்கி) ஏது வருமோ ? (அழுகிமுள்)
கண் :- (மேடைக்கு வலப்புறம் வெளியே உரத்து கோபமாக வாயிலோய் ! வாயிலோய் ! அறிவற்ற வன்; பாவ புண்ணியம் என்ற உணர்ச்சி அற்றவன்; அரசதிே எதுவென்றும் அறியாதவன்-இந்தப் பாண் டியனைக் காண்பதற்கு, ஒற்றைச்சிலம்பு கையி லேந்தி, கணவனையிழந்த ஒரு பெண் வாயிலில் நிற் கின்ருள், என்று உடன் சென்று அறிவிப்பாய் !
கோ. பெரு :- (அழுது) என் நெஞ்சம் கலங்குகின்றதே !
பாண் - கலங்காதே, கலங்காதே ! (உரத்து காவல
வாயிலில் நிற்கும் பெண்ணே உடன் அழைத்து வருவாய்,
(கண்ணகி விரித்த கூந்தலினளாய், நீர் சோரும் கண்ணினளாய், ஒற்றைச் சிலம்பு கையிலேந்தி, வேகமாக வலப்புற வாயில் வழியாக நடு முன் மேடைக்கு வருகிருள்.)
பாண் - வருவாய் பெண்ணே நீர்சோரும் கண்க
ளோடு, எம் முன் வந்த நீ யார் ?
கண்ணகி. ட (கோபமாக நான் சோழ5ாட்டவள் ! (கோபமாகச் சிரித்து கேட்பாய் கொடுங்கோலனே! அன்று, ஒரு புருவின் உயிருக்காக, இரத்தம் பீறிட் டுப் பாய, தன் தொடையின் சதையை அறுத்துக் கொடுத்தானே சிபிச்சக்கரவர்த்தி என்ற கருணையே உருவாக வந்த மன்னவன்; அவன் ஆண்ட சோழநாட் டிற் பிறந்தவள் நான் ! அன்ருெருநாள், ஒரு பசுவின் கன்றிற்காகத் தன் முதல் மைந்தனைத் தன் தேர்ச் சக்க ரத்துள் போட்டு நெரித்துக்கொன்று நீதியை நிலை நாட் டின்னே மனுநீதி கண்ட சோழன்; அந்த மாபெருஞ்

E5T FRA 24 69
சோழ மன்னன் ஆண்ட சோழநாட்டிற் பிறந்தவள் நான் ! நீதியே தம் வாழ்வாக வாழ்ந்த பெருஞ் சோழ மன்னர்களின் தலைநகரமாகிய காவிரிப்பூம் பட்டினம் என் ஊர் ! காவிரிப்பூம் பட்டினத்து வணி கன் கோவலன் என்பான், வறுமையுற்று என் காற் சிலம்பை இந்த மதுரையின் வீதிகளிலே விலைகூறி விற்க வந்தான் அவனை நீ கள்வனென்று கொலை செய்வித்தாய். அந்தக் கோவலனுடைய மனைவி நான் ! என் பெயர் கண்ணகி.
பாண் :- (குரல் கம்ம) ஆனல், கள்வனைக் கொல்வது
கொடுங்கோல் ஆகாதே !
கண்ணகி - என் கணவன் கள் வன ? நேர்மையே அணியாகக் கொண்ட காவிரிப்பூம் பட்டினத்தில் பெரும் வணிகர் மரபில் வந்த என் கணவன் கள் வன? ஆராயாது கொலை செய்வித்தாய், கொடுங்கோல் மன்ன ! உன் தேவியின் சிலம்பு. . ?
பாண் :- முத்துடை அரி !
கண்ணகி - (கோபமாகச் சிரித்து என் காற் சிலம்பு மணி உடை அரி ! இதோ இணேச்சிலம்பு 1 பார், கொடுங் கோலனே ! (தன் கையில் இருந்த சிலம் பை மேடை மேல் ஓங்கி எறிகிருள், மணிகள் தெறிக்கின்றன.)
பான் :- ஆ மோசம்போனேன் ' என் செங்கோல் வளைந்துவிட்டது. இனி நானே கள்வன் பொன் செய் கொல்லனுடைய சொற் கேட்டு என்றும் வளை யாத பாண்டியச் செங்கோலை இன்று நான் வளைய வைத்துவிட்டேன். (எழுந்து நின்று நானே கள் வன் 1 இனி நான் வாழ்ந்தென்ன, வீழ்ந்தென்ன ? (அலறி நிலத்தில் வீழ்ந்து இறக்கிருன்.)

Page 41
per
/
O
மாதவி மடக்தை
கோ. தேவி:- (அலறி எழுந்து) என் கனவு பலித்து
விட்டதே ! என் மன்னு, தாங்கள் நீதிக்காக இறந் தீர்கள்! நான் கற்புக்காக இறப்பேன் ! (கைகளை அகல விரித்து) கான் கற்புடை மங்கை என்பது உண்மையானல் என் உயிர் உடனே என் உடலே விட்டுப் பிரியட்டும் ஆ. (அலறி மன்னன் உட லின் மேல் வீழ்ந்து இறக்கிருள்.)
கண்ணகி :- (உரத்து) மாண்டனை யோ மன்னவா ?
நின் தேவியும் மாண்டன ளோ ? என் நெஞ்சம் கொதிப்பது போல அவள் நெஞ்சமும் கொதிக்க, கணவனை இழந்த என்னைப்போல் வேதனைப்பட , அவள் இன்னும் கொஞ்ச நேரமாயினும் உயிர் வாழ்க் திருக்க வேண்டும் ! (கோபச் சிரிப்பு) என் சினம் இன்னும் அடங்கவில்லை ! இந்தக் கொடுங்கோல் அரசனேடு, அவன் ஆண்ட இந்த மதுரையே அழிந்துபோகட்டும் ! மதுரை அழிந்த சாம்பலிலே நீதி வழுவாத ஒரு அரச பரம்பரை இனிப் புதிதாகத் தோன்றட்டும் ! (கோபச் சிரிப்பு வலப்புறம் திரும்பி நடந்து ஹே ! நெருப்புத் தேவனே இந்த மதுரை நகரத்தை உடனே தீமூட்டிச் சாம்பல் ஆக்கு வாய். அந்தணரும், பெண்டீரும், முதியோரும், குழந்தைகளும் தவிர மற்றைய எல்லோரும் இந்தப் பெருந் தீயிலே வதங்கி மாளட்டும். (கோபச் சிரிப்பு இதோ என் மார்பில் இருந்து சிந்தும் ரத்தம் போல செந்நிறமான நெருப்பு இந்த நகரத்தைக் கொளுத்தி அழிக்கட்டும். (கோபச் சிரிப்பு ஹா ஹ-ஹா ! (வலப்புறம் நெருப்பு எரியும் சப்தம், மனிதர்களின் கூக்குரல், ஒலம்) தீ மூண்டது தீ மூண்டது! (அழுது, மெதுவாக) என் ஸ்வாமி, தங்கள் அணைப் புக் கரம் இன்றி நான் எங்ங்ணம் உயிர் வாழ்வேன்? தாங்கள் இன்றி இப் பூவுலகில் எனக்கு இனி வாழ்வேது? இதோ வந்தேன்.
(வலப்புறம் நடக்கிருள்
(திரை)

காட்சி : 25
இடம் வீதி.
(கண்ணகி நடுமேடையில் நின்று கோபமாகச் சிரிக் கிருள்.)
கண்ணகி ; - ஹ ஹ ஹா !
(மேடையில் தீபங்கள் அணைகின்றன. மறுகணத்தில் அவை மிளிர்கின்றன். அப்பொழுது மதுராபுரித் தெய்வம் கண்ணகியின் பின்புறமாக நிற்கிறது.1
மதுராபுரித் தெய்வம் :- தங்காய்.
கண்ணகி :- என் பின்புறமாக வந்து என்னை அழைக்கும் நீ யார்? (மதுராபுரித் தெய்வத்தை நோக்கித் திரும்புகிருள்.1
மது, பு, தெ :- கோபப்படாதே அம்மா! உன் துயரம் எல்லாம் நான் அறிவேன். நான் மதுராபுரித் தெய்வம். உன் உதிரங்கொட்டும் மார்பை நோக்கி நேரே வரு தல் கூடாது என்றுதான் பின்புறமாக வந்தேன். (சிரித்து) ஆனல் என் நகரை எரித்துவிட்டாயே!
கண்ணகி :- கொடுங்கோல் மன்னன் ஆளும் நகரத்தை
வேறு என்னதான் செய்வது?
மது பு: தெ :- உன் துயர் பெரிது. ஆனல் என் துயரை
யும் நீ கேட்பாய்..?
கண்ணகி :- தெய்வ வடிவுகொண்ட நினக்குமா துயர்?
மது, பு, தெ :- ஆம் மகளே! என் பாண்டியர்கள் ஒரு
பொழுதும் நீதி தவறியது இல்லை.

Page 42
72 மாதவி மடந்தை
கண்ணகி - (கோபமாகச் சிரித்து) எங்கள் சோழ மன்னர்களை விடவா இப்பாண்டியர்கள் மீதி அறிந்த வர்கள் ? ஆனல் இந்தப் பாண்டியன், நெடுஞ்செழி யன் பெரும் பிழை செய்துவிட்டானே.
மது, பு, தெ :- அதற்கும் ஒரு காரணம் உண்டு. முற்
பிறப்பில், உன் கணவன் சிங்கபுரத்து அரசனிடம் பரதன் என்னும் பெயருடன் காவலாளியாக இருந் தான். அப்பொழுது ஒரு நாள் அவனுக்குப் பகை யான அரசன் தேசமாகிய கபிலபுரத்திலிருந்து சங்கமன் என்னும் வணிகனும் அவன் மனைவி நீலி யும் சிங்கபுரத்துக்கு வந்தார்கள். அப்பொழுது பர தன், கபிலபுரத்து ஒற்றன் என அரசனிடம் கோள் முடிந்து சங்கமனக் கொலை செய்வித்தான். சங்கம னது மனைவி நீலி கொடும் சாபம் இட்டாள்.
அதனுல்தான் இப்பிறப்பில் கோவலன் இவ்வாறு “கொலையுண்டான். எல்லாம் விதிப்பயன். அதனல்
நீ கோபந் தணிவாயாக.
கண்ணகி :- இனி என் கதி?
மிது.
பு: தெ - அஞ்சாதே. இன்னும் பதினன்கு நாட்க ளில் நீ உன் கணவனைத் தெய்வ வடிவிற் கண்டு அவனுடன் சுவர்க்கம் புகுவாய்.
(மேடைத் தீபங்கள் அணைகின்றன. மதுராபுரித் தெய்வம் மறைகின்றது. தீபங்கள் மறுபடி மிளிர்
கின்றன. கண்ணகி மேடையில் வலப்புறம் போகிருள்.
கண்ணகி :- என் ஸ்வாமி. (அழுகிருள்)
(மெதுவான திரை)

காட்சி: 26
இளங்கோவடிகள் ஆச்சிரமம்.
(திரை அகலும் பொழுது இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன் இருவரும் நடுமேடையில் நிற் கின்றனர். வலப்புறம் மேடை வாசல் வழியாகக் குறவர் தலைவன் நடு மேடைக்கு ஓடி வருகிருன்.
குறவர் தலைவன் :- மன்ன! எங்ங்ணம் கூறுவேன்? (அரசன் பாதங்களில் வீழ் கிருன். இளங்கோவடிகள் அவனைத் தூக்கி நிறுத்துகிருர் .
சேரன் செங் - ஆ! என்ன கடந்தது? ஏன் உனக்கு
இவ்வளவு பதற்றம் ?
குற, தலை :- எங்ங்னங் கூறுவேன் , மன்ன ! என்
குன்றில் வேங்கைமர நிழலில் வந்துநின்ருள் ஒரு கொங்கை இழந்த ஒரு பத்தினி வானத்தில் இருந்து ஒரு இரதம் வந்தது. அதில் அவள் கணவன் இருந்தான். இப் பத்தினியும் தெய்வ வடிவு பெற்றுக் கணவனுடன் அந்த இரதத்தில் ஏறிக்கொண்டு சுவர்க்கம் போனுள்.
இளங்கோ - ஆம், அண்ணு அவள்தான் கண்ணகி என்ற மாபெரும் பத்தினி. அவள் கற்பையே கான் ஒரு காவியமாகப் பாடிக்கொண்டிருக்கிறேன்.
சேரன் செங் - ஆ! அப்படியா? அவளுக்கு நான் சிலை அமைக்க வேண்டும். இமயத்திலிருந்தே, எம் பகை வர் கனக விசயர் தலைமேல் ஏற்றிக் கல் கொணர்ந்து அப்பத்தினிக்குச் சிலை சமைத்துக் கோயில்கள் ஆக்கு
tc.fr - 10

Page 43
74 மாதவி மடந்தை
வேன். இவ்வண்ணமே செய்யுமாறு எம் இலங்கை நண்பன் கயவாகுவுக்கும் தூது போக்குவேன்.
குற. தலை :- மன்ன, ஒரு வேண்டுகோள் !
சேரன் செங் - கூறுவாய் !
குற, தலை - எம் குன்றில் இருந்து இப் பத்தினி சுவர்க் கம் புகுந்ததனுல், அவள் புகழை எம் குலத்தவரும் பாடி ஆட வேண்டும்.
சேரன் செங் - அங்ங்னமே செய்வாய் !
(குறவர் தலைவன் வலப்புறம் திரும்பிக் கை தட்டு கிருன். ஏழு பெண்களும் உடுக்கை ஏந்திய ஒரு குறவனும் வருகின்ருர்கள். குறக்கூத்து ஆரம்ப மாகின்றது. ஒரு பெண் பாடுகின்ருள். பின்னணி உடுக்கை, புல்லாங்குழல், மிருதங்கம்
பாட்டு
* பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத் தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால் மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே."
சேரன் செங் - உங்கள் கூத்தும் பாட்டும் நன்று!
(குறவர் தலைவனும், பெண்கள் எழுவரும், உடுக் கைக்காரனும் அரசனை வணங்கிவிட்டு வலப் புறம் வெளியே போகிருர்கள்)
இளங்கோ : அண்ணு, எத்துணைக் காப்பியப் பொருள்

in '9, 26 75
சேரன் செங் - (சிரித்து எத்துணேப் புகழ் எம் காட் டிற்கு! (உரத்து) எழுக நம் படை இமயம் கோக்கி! கல் கொணர்வோம், எம் பத்தினிக்கு ! (வேகமாக வலப்புறம் வெளியே போகிருன்.)
இளங்கோ - (ஆழ்ந்த சிந்தனை காட்டும் முகத்துடன் முன் மேடைமேல் நடந்துகொண்டே இந்த மாபெரும் பத்தினியை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, அண்ணு, தன் வட காட்டுப் பகையைச் சாதித்துக்கொள்ள முயல்கிருன். (வேகமாக) கண் ணகி என்ற கற்புத் தெய்வத்திற்கு அவன் கல்லால் செய்யும் சிலைகள் அழிந்துபோனலும், அடியேன் சொல்லால் செய்யும் இந்தச் சிலை என்றும் கின்று நிலவ அருள்செய்வாய், தமிழ் அணங்கே ! (குரல் சிறிது கண்ணீர் கலந்து ஒலிக்கிறறு. நடு முன் மேடையில் நின்று பாடுகிருர்.)
[ராகம்: மத்யமாவதி)
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்! பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் ! தெய்வம் தெளிமின் ! தெளிந்தோர்ப் பேணுமின் ! பொய்யுரை அஞ்சுமின் 1 புறஞ்சொற் போற்றுமின் ஊனுண் துறமின் ! உயிர்க்கொலை நீங்குமின் ! தானம் செய்ம்மின் ! தவம்பல தாங்குமின் ! செய்ந்நன்றி கொல்லன்மின் ! தீநட்பு இகழ்மின் ! பொய்க்கரி போகன் மின் 1 பொருள்மொழி நீங்கன்மின் அறவோ ரவைக்களம் அகலாது அணுகுமின் ! பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின் ! பிறன்மனை அஞ்சுமின் ! பிழையுயிர் ஒம்புமின் !
(திரை மெதுவாசு விழ ஆரம்பிக்கிறது)

Page 44
76
மாதவி மடந்தை
அறமன காமின், அல்லவை கடிமின் ! கள்ளும், களவும், காமமும் பொய்யும், வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் ! இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா ! உள5ாள் வரையாது, ஒல்லுவது ஒழியாது செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின் ! மல்லன்மா ஞாலத்து வாழ்வி ரீங்கென் !
(திரை விழுந்து முடிகிறது)