கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலை

Page 1
இ இவ்வளவே இது தான் இருபதாம் து றாண்டு.
 
 
 

தமிழாக்கம்
エ。

Page 2
IIIs
அடோனிஸ் க
தமிழர்
GF). SF6u(
தேசிய கலை இல

ᏈᎠ6Ꭷ
விதைகள் சில
ாக்கம்
சேகரம்
க்கியப் பேரவை

Page 3
தலைப்பு
ஆசிரியர்
முதல்பதிப்பு
அச்சு
வெளியீடு
விநியோகம்
T66)
சி. சிவசேகரம்
1999 பங்குனி
டெக்னோ பிரின்ட், தெஹிவளை
தேசிய கலை இலக்கியப் பேரவை
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிரைவேட்) லிமிடட் 44, 3வது மாடி, கொழும்பு மத்தியகூட்டுசந்தைத்தொகுதி,
கொழும்பு - 11. தொலைபேசி : 335844 ஃபக்ஸ் , 333279

பதிப்புரை
A.
"ஒரு சிறுவனின் முகத்தைத் தாங்கிய சவப்பெட்டி
ஒரு காக்கையின் வயிற்றின் மேல் எழுதிய புத்தகம் ஒரு மலருள் மறைந்திருக்கும் காட்டு விலங்கு ஒரு பித்தனின் சுவாசப்பையால் மூச்சு விடும் பாறை
இவ்வளவே
இது தான் இருபதாம் நூற்றாண்டு '
இக்கவிதைத் தொகுதியில் பலஸ்தீனக் கவிஞன் அடோனிஸ் எழுதியுள்ள கவிதைகளில் ஒன்றுதான் இது.
ஆம், இந்த இருபதாம் நூற்றாண்டை கடந்து கொண்டிருக்கிறோம். மனித இருப்பே நெருக்குதலுக்கும் நிட்டுரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு விட்ட அவலம்.
இந்த நூற்றாண்டு எமக்கு விதித்த விதியென்பது இடப்பெயர்வு, நிச்சயமின்மை, விழுமியங்களின் விசும்பல்; என்றிவ்வாறாக தன் முகத்தை நடைபாதையில் தேய்த்தபடி. மனிதர், நடைபாதை மிது சுட்டெரித்த கரித்துண்டுகள்' என தீய்ந்தபடி/
ஆம். இந்த நூற்றாண்டுக்கு விடை கொடுக்கத் தயாராவோம். அடுத்த நூற்றாண்டை வரவேற்க அவைனரும் ஒன்றிணைவோம்/
பலஸ்தீன மண்ணில் பாதம் பதித்தபடி நடைபயில்வோம்.
கவிஞர் அடோனிஸ் Bெய்ரூத் நகரின் வழியாக அங்கு எங்களை அழைத்துச் செல்கிறார்.

Page 4
கவிஞர் எம்.ஏ. நுஃமான் பலஸ்தீனக் கவிதைகளை தமிழில் முதலில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கவிஞர் சிவசேகரம் 'பணிதல் மறந்தவர் தொகுதியில் வேறு கவிஞர்களையும் கவிதைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஈழத் தமிழ்ப் புலமையாளர் ஒரு சிலர் அமெரிக்காவையும்
பிரித்தானியாவையும் ஆங்கிலத்தையும் அண்ணாந்து பார்த்து
'உலகமயமாதல்’ என்ற அடிமை விசுவாசத்தை மக்கள் மீது திணிக்கும் அபத்தம் உருவாகியுள்ள இன்றைய சூழலில்,
கவிஞர் சிவசேகரத்தின் மொழிபெயர்ப்பில் உருவாக்கப்பட்ட இந் நூல், சர்வதேசியச் சூழலின் விரிவையும் உண்மையையும் எமது அனுபவமாக்கி விடுகிறது.
ஒளிவட்டத்துள் புதைந்து போயுள்ள உதிரிப் புலமை யாளர்களிடமிருந்து தமிழை மீட்டு மக்களிடம் கொண்டு சென்று மக்கள் இலக்கியம் படைக்கும் தேவை இன்று எமக்கு ஏற்பட்டுள்ளது.
இன்பத் தேன் வந்து பாயட்டும் மக்கள் காதினிலே/
அரபு அனுபவம் ஈழத்தின் அனுபவமாகட்டும்/
அரபுக் கவிஞன் அடோனிஸ் ஈழக்கவி ஆர்வலர்களைத் தடுத்தாட்கொள்ளட்டும். அப்போது கூடுவிட்டுக் கூடுபாயும் அற்புதத்தை நாம் கண்டுகளிப்போம்.
எழுதுவோம் - விமர்சிப்போம் - கலந்து பேசுவோம் - புத்தகப் பண்பாட்டுச் சூழலை நேசிப்போம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி கொழும்பு - 12.
O4. O3. 1999

அடோனிஸைத் தமிழாக்குவது
அடோனிஸைப் பற்றி நான் அறிந்தவை பெருமளவும் 1995ல் எழுதிக் காலச்சுவட்டுக்கு 1996 மட்டில் அனுப்பி 1997ல் வெளியாகியுள்ளன. மிகச் சுருக்கமாகச் சிறிது
(நோர்வே) சுவடுகட்கும் எழுதினேன். அடோனிஸின் பாலை
1992-93 அளவில் என்னால் தமிழாக்கப்பட்டு 1994ல் சுவடுகளில் வந்தது. ஒருசில கவிதைகள் (கனடா) தாயகத்திலும் ஐரோப்பியச் சிற்றேடுகளிலும் வந்தன. 1997ல் காலச்சுவட்டில் வந்தவற்றுள் மூன்று, அதே ஆண்டு, மொழிபெயர்ப்பாளர் பெயர் குறிப்பிடாமல், கனடாவிலிருந்து வந்த ழகரம்' என்ற சஞ்கிகையில் வந்துள்ளன. (அநியாயஞ் சொல்லக்கூடாது, 'கொடுத்து உதவிய காலச்சுவட்டுக்கு நன்றி கூறியுள்ளார்கள். ஆனால் 'காலச்சுவடு என் பேரைக் கொடுக்க மறந்ததாக நான் எண்ண இடமில்லை.) நன்றியுடன் காலச்சுவடு கட்டுரையை இத் தொகுதியிற் தருவதன் மூலம் விரிவான ஒரு முன்னுரையை என்னாற் தவிர்க்க முடிகிறது.
இதில் உள்ள கவிதைகள் பெங்குவின் வெளியிட்ட "சமகால அரபுக் கவிதை' என்ற தொகுப்பினின்றும் 'ஒரு தேசப்படத்திற்குப் பலியானோர்’ என்ற தொகுப்பினின்றும் நல்ல மொழிபெயர்ப்பாளரும் பெண் கவிஞருமான லேனா ஜய்யூஸி (Lena Jayyus) வழங்கிய ஒரு தொகுப்பினின்றும் பெறப்பட்டன. நியூயோர்க்கிற்கு ஒரு சவக்குழி விரிவான குறிப்புக்களுடன் லேனா ஜய்யூஸி ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தது. 1970 வாக்கில் எழுதப்பட்ட இக்கவிதையை நான் 1996 அளவிலேயே முதலிற் கண்டேன். அடோனிஸ் ஒரு ஷியா முஸ்லிம் என்பதும் அங்குதான் தெரியக் கிடைத்தது. அந்த நீண்ட கவிதையில் அவரது உலக

Page 5
நோக்கும் வெளிவெளியாகவே தென்படுகிறது. ‘வசன கவிதை' என்ற வகையில் அடக்கக்கூடிய அக் கவிதையில் வோல்ற் விற்மனின் பேர் அடிக்கடி வருவதும் பொருத்தமாகவே உள்ளது. நான் மேலதிகமாக வழங்கியுள்ள சில குறிப்புக்கள் பலருக்குத் தேவையற்றனவாக இருக்கலாம். அவர்கள் என்னைப் பொறுத்தருள்க. கவிதையின் VIம் பகுதி ஆங்கில மொழியாக்கத்தில் முற்றாக விடுபட்டிருப்பதால், விடுபட்ட பிற பகுதிகளுடன் அதுவும் விடுபட்டுள்ளது.
அடோனிஸின் 'பாலை முதலில் இருபகுதிகளில் வந்தது. அது திருத்தி எழுதப்பட்ட பின்பும் இரு பகுதிகளாகவே வந்தது. முதலில் வந்ததினின்று சில நீக்கப்பட்டு அவற்றினிடத்தில் வேறு குறுங் கவிதைகள் சேர்க்கப்பட்டன. அவை நீக்கப்பட்ட காரணம் எனக்குத் தெரியாது. ஆயினும் அவற்றின் கவித்துவமும் உள்ளடக்கமும் கருதி அவற்றை இங்கு மூன்றாவது பகுதியாக்கித் தந்துள்ளேன்.
முன்பு நான் செய்த தமிழாக்கங்களில் இருந்த சில பிழைகள் நீக்கப்பட்டுள்ளன. அதனால், நீக்கப்பட வேண்டிய பிழைகள் இனி இல்லை என்றாகிவிடாது. குறைகள் சுட்டிக் காட்டப்படுவது எதிர்காலத்தில் அவ்வாறானவை நிகழாது தடுக்க உதவும். 1995ல் வந்த தர்விஷின் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியில் தர்விஷ"க்கு இழைக்கப்பட்ட கொடுமை பகையாளிக்குக் கூட இழைக்கப்படக் கூடாதது. ஒழுங்காகத் தமிழோ ஆங்கிலமோ கவிதையோ தெரியாதவர்களால் தமிழில் ஆங்கில மூலம் கவிதை மொழி மாற்றம் செய்யப்படுவது வருந்தத்தக்கது. எனவே தான் குறைகள் சுட்டிக்காட்டப்படுவது முக்கியமாகிறது.
அயற் பேர்களை ஒலிப்பிறழ்வு அதிகமின்றித் தமிழ்ப்படுத்தி
எழுதும் தேவையை நான் ஏற்கிறேன். இந்தத் தொகுதியில் என் தீர்வை நடைமுறைப்படுத்தியும் உள்ளேன். ஏற்கெனவே

பழக்கப்பட்ட f- ஃப போன்றவற்றையும் முடிந்தவரை t=ற் அல்லது ட் என்ற பிரதியீட்டையும் பாவித்துள்ளேன். சில நன்கு பழக்கப்பட்ட சொல் வடிவங்களை அனுசரிக்க வேண்டி மாற்றங்கள் தவிர்க்கப்பட்டுமுள்ளன. காலச்சுவடு
கட்டுரையில் கை வைக்கவில்லை.
1995 அளவில் அடோனிஸ் கவிதைகளைப் பிரசுரிக்க வந்த ஒரு புலம்பெயர்ந்தோர் வெளியீட்டு நிறுவனம் சொல்லாமலே பின்வாங்கியதும் எல்லோரதும் நன்மைக்கே என இன்று தெரிகிறது. நூலை வெளியிட முன்வந்த தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் கணனி அச்சிட்டுப் பதிப்பிக்கும் நண்பர் தியாகராஜாவுக்கும் இதன் வெளியீடு
பற்றி மிகுந்த ஆர்வங் காட்டிய நண்பர் தேவராஜாவுக்கும்
என் நன்றிகள்.
சி. சிவசேகரம்
பேராதனை
1 1 . O2. 1999

Page 6

L III606) முற்றுகையிடப்பட்ட Bெப்ருத்தின் நாட்குறிப்பு
நகரங்கள் சிதறுகின்றன
இத் தரை ஒரு புழுதி மண்டலம் இந்த வெளியை மணக்கக் கவிதையால் மட்டுமே இயலும்
★ ★ ★
அவனுடைய வீட்டுக்கு வழியில்லை - முற்றுகை
தெருக்கள் அனைத்தும் மயானங்கள்
தூரத்தே அதிர்வுண்ட நிலவொன்று அவனது வீட்டுக்கு மேலாகத் தூசி இழைகளிற் தொங்குகிறது
★ ★ ★
நான் சொன்னேன். இத் தெரு எம் வீட்டுக்குக்
கொண்டு செல்லும். அவன் சொன்னான். இல்லை, நீ போக முடியாது.
தன் குண்டுகளை எனை நோக்கி நீட்டினான்.
நல்லது, ஒவ்வொரு தெருவிலும்
எனக்கு வீடுகளும் நண்பர்களும் உளர்
r ytr xr
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
1.

Page 7
ஒரு சிறுவன் எந்தக் குருதி பற்றிப் பேசி நண்பர்களிடம் குசுகுசுத்தானோ அந்தக் குருதியின் தெருக்கள்: வானில் எஞ்சியுள்ளவை தாரகைகள் எனப்படும் சில பொத்தல்களே
★ ★ ★ நகரின் குரல் மென்மையானது தன் கனவுகள் பற்றி இரவினிடம் சொல்லித் தன் நாற்காலியைக் காலைக்கு வழங்கும் ஒரு சிறுவன்போல
நகரின் முகம் ஒளிர்கிறது.
★ ★ ★
சாக்குகளில் மனிதரைக் கண்டனர் தலையில்லாமல் ஒருவர் நாவும் கைகளுமில்லாமல் ஒருவர் நசுக்கப்பட்டு ஒருவர் பேர்களின்றி மற்றையோர் உனக்கென்ன பைத்தியம72 தயவுசெய்து இதைப்பற்றி எழுதாதே
★ ★ ★
புத்தகத்தின் பக்கமொன்றிற் குண்டுகள் தம்மைக் காண்கின்றன தீர்க்கதரிசனமுள்ள வாக்கியங்களும் பண்டைய ஞானமும் தம்மைக் காண்கின்றன மாடங்கள் தம்மைக் காண்கின்றன கம்பள வார்த்தைகளின் இழைகள் நினைவு ஊசியூடு நகரின் முகத்தின்மீது செல்கின்றன
★ ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
2

காற்றில் உள்ள
கொலைஞன் நகரின் புண்ணில் நீந்துகிறான் நமைச் சூழும் அனைத்தையும் தனது பேராற் தனது குருதிசொட்டும் பேராற் குலுக்கும் வீழ்ச்சியே அப் புண். வீடுகள் தம் சுவர்களின் நீங்குகின்றன நான்
நானல்லன்
★ ★ ★
நீ செவிட7யும் ஊமையாயும் வாழ்வது ஏற்கப்படுங் காலம் வரக்கூடும், ஒருவேளை அவர்கள் உன்னை முணுமுணுக்க அனுமதிக்கக்கூடும் மரணம், வாழ்க்கை, மறுஜன்மம்
உனக்குச் சாந்தி கிடைக்கட்டும்
★ ★ ★
தெங்கின்கள்ளின்று பாலையின் அமைதி. ஆதியனவரை தன் வயிற்றைக் கடத்திக் கொணர்ந்து அகதிகளின் தோள்களின்மீது துயிலுங் காலை.
ஆதியவற்றினின்று விதிகள், ராணுவ வாகனங்கள், படைகளின் குவிப்பு.
ஆதியவற்றினின்று முஸ்லிம்களதும் அவிசுவாசிகளதும் குருதிநிறைந்த குண்டுகள். ஆதியவற்றினின்று குருதியும் வியர்வையும் சீழாய் வழியும் இரும்புத் தசைகள்.
ஆதியவற்றினின்று கோதுமைக்காகவும் பசுமைக்காகவும் உழைப்போர்க்காகவும் ஏங்கும் வயல்கள் ஆதியவற்றினின்று நம் உடல்களைச் சுவர்களாற் சூழ்ந்து
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
3

Page 8
நம்மீது இருடிைவீசுங் கோட்டைகள். ஆதியவற்றினின்று வாழ்வு பற்றிப் பேசி வாழ்வை உணர்த்தும் மரணங்கள் பற்றிய கட்டுக்கதைகள். ஆதியவற்றினின்று படுகொலையும் படுகொலையுண்டோரும் படுகொலை செய்தோருமான பிரசங்கம். ஆதியவற்றினின்று இருள் இருள் இருளினின்று நான் சுவாசிக்கிறேன். என்னுடலை ஸ்பரிசிக்கிறேன். உன்னையும் அவனையும் என்னையும் பிறரையும் தேடுகிறேன்.
என் முகத்திற்கும் குருதிகொட்டும் இச்சொற்கள்.
ஆதியவற்றுக்கும்
நடுவே என் மரணத்தைத் தொங்கவிட்டேன்.
Xr r ~
நீ காண்பாய்
அவன் பேரைச் சொல்வாய் அவன் முகத்தை வர்ணத்தில் வரைந்தேன் என்பாய் அவனிடம் உன் கையை நீட்டுவாய் அல்லது எந்த மனிதனையும் போல் நடப்பாய் அல்லது முறுவலிப்பாய் அல்லது நானொரு காலம் துயருற்றேன் என்பாய் நீ காண்பாய்
அங்கே
தாயகம் இல்லை.
★ ★ ★
கொலைச் சம்பவம் நகரின் வடிவத்தை மாற்றிவிட்டது
இந்தப் பாறை, எலும்பு இந்தப் புகை, மக்களின் சுவாசம்.
* ★ォ
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
4

அனைத்துமே அவனது நாடு கடத்தலைப் பாடுவன
ஒரு குருதிக்கடல் - * பனிப் புகாரிற் படுகொலையின் அலைகள் மீது மிதந்து செல்லும் அவற்றின் நாளங்களை விட இக் காலைப் பொழுதுகளிடம் வேறெதை எதிர்பார்க்கிறாய் 2
★ ★ ★
இரவில் அவளுடன் துணையிரு,
இரவில் அவளுடன் மேலும் அதிக நேரம் இரு மரணத்தைத் தன் மடிமேற் கிடத்தி அவள் தனது நாட்களைப் புரட்டினாள் -
பழைய தாள்களைப் போல அவளது நிலப்பரப்பின்
இறுதிப்பக்கங்களை வைத்துக் கொள். பொறிக் கனல்களின் நாடகமொன்றில் அவள் தனது சொந்த மண்ணிற் புரள்கிறாள், அவள் மேனியில் அழுகின்ற மக்களின் தழும்புகள்
★ ★ ★
நமது மண்ணில் விதைகள் பரப்பப்பட்டுள்ளன. எனவே இந்தக் குருதியினதும் நமது கற்பனையின் ஊட்டமிகும் வயல்களதும் இரகசியத்தைக் காப்பாற்று.
பருவங்களது விறுவிறுப்பையும் வான்வெளியின் மின்னலையும் பற்றித்தான் சொல்கிறேன்
★ ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
5

Page 9
B குர்ஜே சதுக்கம்
(முறிந்த பாலங்களிடம் தமது இரகசியங்களைக்
குசுகுசுக்கும் கல்வெட்டுக்கள்.) BDர்ஜே சதுக்கம்
(நெருப்பிலும் தூசிலும்
தன்னையே தேடுகின்ற ஞாபகம்) BDர்ஜே சதுக்கம்
(காற்றுத் துடைத்து இழுத்துச் சென்ற
ஒரு திறந்த பாலைவனம்.) BDர்ஜே சதுக்கம்
(பிணங்களின் அசைவைக் காண/
அவற்றின் அங்கங்கள் புறச் சந்தொன்றில்/ அவற்றின் பிசாசுகள் புறச் சந்தொன்றில்/ அவற்றின் பெருமூச்சு உனக்குக் கேட்கும். ஒரு குறளி வித்தை) 89ர்ஜே சதுக்கம்
(கிழக்கிலும் மேற்கிலும்
நிற்கும் கிலெற்றின்களும் தியாகிகளும் பாதுகாவலர்களும்.) BDர்ஜே சதுக்கம்
(கரவான் சுவடுகள்:
பண்டிகையைத் தொடக்கி வைக்கும் வாசனைச் சாம்பிராணியும் கஸ்தூரியும்.) Bஅர்ஜே சதுக்கம்
(கரவான் சுவடுகள்:
பண்டிகையைத் தொடக்கி வைக்கும் இடியும் வெடிப்பும் மின்னலும் குறையும்.) BDர்ஜே சதுக்கம்
(இந்த யுகத்தை நான்
இந்த இடத்தின் பேரால் அழைத்துள்ளேன்)
★ ★ ★
a.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
6

- பிணங்களா இடிபாடுகளா
Bெய்ரூத்தின் முகம் ?
- மணியொலியா மனிதரின் அலறலா?
- ஒரு நண்பன்?
- நீ நண்பன்?
- நீ2 ஹலோ எங்கேனும் சென்றிருந்தாய72 இப்போதுதான் திரும்பினாய72 என்ன புதினம் 2
- அவர்கள் அயல்வீட்டான் ஒருவனைக் கொன்றார்கள்.2
விளையாடிக் கொண்டு/ - உனது தாயக் கட்டைகள் இன்று வலியன - அதிர்ஷ்டம்
இருள்
சொற்களை இழுத்துச் செல்லும் சொற்கள்
★ ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
7

Page 10
2
எனது யுகம் பச்சையாகவே எனக்குச் சொல்கிறது: நீ இவ்விடத்துரியவனல்ல. நானும் பச்சையாகவே பதில் சொல்கிறேன். நான் இவ்விடத்துக்குரியவனல்ல, உன்னை விளங்கிக் கொள்ளவே முயல்கிறேன் நான் இப்பொழுது ஒரு மண்டையோட்டின் ஆரணியத்துட் காணாமற் போன ஒரு நிழல்.
★ ★ ★
தொலைவு சுருங்குகிறது, ஒரு யன்னல் பின்வாங்குகிறது பகலொளி என்பது மாலைப் பொழுதைத் தைப்பதற்காக
என் சுவாசப்பைகள் கத்தரித்த ஒரு நூலிழை
★ ★ ★
என் வாழ்வுஞ் சாவும் பற்றி நான் சொன்னதெல்லாம் என் தலைக்குக் கீழுள்ள கல்லின் நிசப்தத்தில் மீள நிகழ்கிறது
★ ★ ★
நான் முரண்பாடுகள் நிறைந்தவனா? அது சரிதான்.
இப்போது நானொரு செடி நேற்று நெருப்பிற்கும் நீருக்குமிடையே இருந்தபோது நானோர் அறுவடை
இப்போது நானொரு ரோஜ7வும் எரிகின்ற கரியும்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
8

இப்போது நான் சூரியனும் நிழலும் நானொரு தெய்வமல்ல
நான் முரண்பாடுகள் நிறைந்தவனா? அது சரிதான்.
★ ★ ★
என் வீட்டு வாயில் சாத்தியுள்ளது. இருள் ஒரு கம்பளம்:
மங்கலான நிலவு கையளவு ஒளியுடன் வருகிறது என் வார்த்தைகள் என் நன்றியைத் தெரிவிக்கத் தவறிவிடுகின்றன.
丈 对 ★
அவன் கதவைச் சாத்தினான்
தன் குதூகலத்தைக் கைப்பற்றுவதற்கல்ல
. தன் சோகத்தை விடுவிப்பதற்கு
★ ★ ★
எது வந்தாலும் அது பழையதாகவே இருக்கும்
எனவே இந்தப் பித்தை விட
வேறேதையும் உன்னுடன் கொண்டு செல்வேற்றானாகவே இருக்க ஆயத்தமாகு.
才 ★ ★
குரியன் உதிப்பதேயில்லை தனது பாதங்களை வைக்கோலால் மூடி நழுவிவிடுகிறது.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
9

Page 11
விடியலின் நெற்றியை மூடுந் தூசு அலுத்து மனிதரின் சுவாசம் அலுத்துவிட்ட ஒரு ரோஜா மலரை அவனது மடிக்கு ஒரு பஞ்சணையாக வைக்க
மரணம் இரவில் வருமென நினைத்தேன்.
★ ★ ★
இரவு இறங்கி வருகிறது (மையிடம் அவன் அளித்த
காகிதங்கள் இவை- மீளாத காலையின் 60 lo) மஞ்சத்தின் மீது இரவு இறங்கி வருகிறது (என்றுமே வராத
காதலனின் மஞ்சம்) இரவு இறங்கி வருகிறது/ (எவரதோ கைகளில் முயல்கள்?
எறும்புகள்2) இரவு இரங்கி வருகிறது (கட்டிடச் சுவர் குலுங்குகிறது.
திரைகளனைத்தும் ஒளிபுகவிடுவன) இரவு இறங்கி வருகிறது, செவி மடுக்கிறது (தாரகைகள்
செவிடானவையென இரவு அறியும், கிளைகளிடம் காற்று உரைத்த எதுவுமே சுவரின் மறுமுனையில் நிற்கும் மரங்கட்கு நினைவிராது) இரவு இறங்கி வருகிறது (யன்னல்களிடங் காற்றுக்
குசுகுசுக்கிறது) இரவு இறங்கி வருகிறது (ஒளி ஊடுருவுகிறது.
அயலவரொருவர் அம்மணமாய்க் கிடக்கிறார்) இரவு இரங்கி வருகிறது (இருவர். ஆடையைப் பிடிக்கும் ஆடை- யன்னல்கள் ஒளிபுக விடுபவை) இரவு இறங்கி வருகிறது (இது ஒரு நப்பாசை காதலர்
எப்போதும் எதைப்பற்றி முறையிட்டனரோ அதைப்பற்றித் தனது காற்சட்டையிடம் நிலவு முறையிடுகிறது) இரவு இறங்கி வருகிறது (வைன் நிரம்பிய சாடியுள் அவன் இளைப்பாறுகிறான். நண்பர்கள் இல்லை, ஒருவன்
தனியே தன் கிண்ணத்துட் புரள்கிறான்)
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
1 O

இரவு இறங்கி வருகிறது (சிலந்திகள் சிலவற்றைச் சுமந்து,
வீடுகட்கு மட்டுமே தொல்லை தரும் பூச்சிகள் பற்றிக் கவலையின்றி. ஒளியின் அறிகுறிகள்: ஒரு தேவதையின் வருகை ஏவுகணைகளோ இன்றேல் ஒரு வரவேற்போ? நமது அயற் பெண்கள் தலயாத்திரை சென்றுள்ளனர்/ குறைந்தளவே மெல்லியராய் மேலும் அகம்பாவிகளாய் மீள்வர்) இரவு இறங்கி வருகிறது (நாட்களின் மார்பகங்களிடையே
நுழைகிறது/ நமது அயற் பெண்களே எனது நாட்கள்) இரவு இறங்கி வருகிறது (அந்த ஸோஃபா/அந்தத் தலையணை; இதுவொரு சிற்றொழுங்கை, இது ஒரு இடம்) இரவு இறங்கி வருகிறது (நாம் என்ன தயாரிப்போம்? வைன்2
மாமிசமும் பாணும் சொதியும் 2 தன் வயிற்றின் ஊண் விருப்பை இரவு நமக்கு மறைக்கிறது) இரவு இறங்கி வருகிறது (சொற்ப நேரம் தனது
நத்தைகளுடனும் அறிந்திராதவொரு மண்ணினின்று வந்த வினோதமான புறாக்களுடனும் பல்வேறு விலங்கினங்களதும் இனவிருத்தி பற்றிய நூலிற் குறிப்பிடப்படாத பூச்சிகளுடனும் விளையாடுகிறான்) இரவு இறங்கி வருகிறது (இடி - அல்லது தேவதைகள் குதிரை
மீது வரும் ஒலியா?) இரவு இறங்கி வருகிறது (அவன் முணுமுணுக்கிறான், தனது
கிண்ணத்துட் புரண்டவாறு)
★ ★ ★
எனது இரவைப்பற்றி எழுத
எனக்கு மை தருவதற்கு ஒரு கிரகத்தை எவர் காட்டுவார்
★ ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
11

Page 12
அவன் ஒரு கவிதை எழுதினான்
(என் எதிர்காலமொரு பாலையென
அவனை எவ்வாறு நம்பவைப்பேன் 2) அவன் ஒரு கவிதை எழுதினான்
(சொற்களின் பாறைத் தன்மையை எவர் என்னிடமிருந்து நீக்குவார்?) அவன் ஒரு கவிதை எழுதினான்
(சகோதரன் ஒருவனை நீ கொல்லாவிடின் நீ இவ்விடத்துக் குரியவனல்ல) அவன் ஒரு கவிதை எழுதினான்
(கேள்விக்கும் கவிதைக்குமிடையே சிக்குண்ட இந்த வெருண்டோடும் மொழியை நாம் விளங்கிக் கொள்வது எவ்வாறு/2) அவன் ஒரு கவிதை எழுதினான்
(அகதி விடியலாற் தன் சூரியனைத் தழுவ இயலுமா?) அவன் ஒரு கவிதை எழுதினான்
(சூரியனின் வதனத்துக்கும் வானத்துக்குமிடையே குழப்பமாகவுள்ளது) அவன் ஒரு கவிதை எழுதினான்
(.../ அவன் சாகட்டும்)
★ ★ ★
நான் பேச வேண்டுமா? எது பற்றி?
எத்திசையில் 2 கடலின் நீலத் தன்மையிற் பறக்கின்ற கடற்கொக்கே
உன்னைக் கேட்கிறேன். நான் கேட்டதாக யார் சொன்னார், நான் கடலை நோக்குவதாகவோ
கடற்கொக்குடன் பேசுவதாகவோ யார் சொன்னார்?
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
12

நான் என்றுமே இருக்கவில்லை நான் என்றுமே நடக்கவில்லை
நான் என்றுமே சொல்லவில்லை.
★ ★ ★
நான் என்னையே மறுத்துரைப்பேன் என் அகராதியிற் சேர்த்துக் கொள்கிறேன்:
நான் என் மொழிக்குரியவனல்ல, என் வாய் ஒரு தடவையேனும் என் வாயாக இருந்ததில்லை ஆ, நாசத்தின் நட்சத்திரமே, இரத்த ரோஜாவே.
★ ★ ★
பாதைக்கு ஒளியூட்டுமாறு நான் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டுக்
காட்டுத்தீயில் எறியப்பட்டிருக்க வேண்டும். நண்பா, களைப்பு, கருணையுள்ள நின் கையைத் தா நின் இரவுகள் என் குருதிவழியும் சூரியனிடம் பறித்ததை
எனக்குத் தா.
★ 欢 ★
பிற விழிகள் நிராகரித்த எதுவும் எனது விழிகளாற் பார்த்துக் கொள்ளப்படும். இது அழிவுக்கு என் நட்பு அளித்த உறுதிமொழி
★ ★ ★
என்னை நான் என்னிடஞ் சரண்கொடுத்து அழிவுக்கும் எனக்கும் என்ன வேறுபாடெனக் கேட்ட பின் நான் கவிஞனின் அதி சிறந்த வாழ்வை வாழ்ந்தேன்:
பதில் இல்லை.
才 ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
13

Page 13
காலத்தின் ஆடையைக் கவிதை கிழித்த பின்னர் கந்தல்களைத் தமக்குரிய இடங்களிற் தைக்குமாறு காற்றுக்களை அழைத்தேன்
★ ★ ★
தனது சுவடுகள் பதிந்த மண்ணன்றி
முத்தாநபியைத் தொட்டது எது? அவன் பலவற்றுக்குந் துரோகமிழைத்துள்ளான்,
தனது பார்வைக்கல்ல.
நீ படைக்கப்பட்டதாலோ உனக்கு உடலொன்று இருப்பதாலோ நீ சாவதில்லை
வருங்காலத்தின் முகம் நீ என்பதனால் நீ சாகிறாய்
★ ★ ★
என் கனவு என் உடலை அலட்சியஞ் செய்யட்டும் என் உடல் மிதக்கும் தன் தூக்கமின்மைக்குத்
துரோகமிழைக்கட்டும்,
★ ★ ★
தமது சுயரூபத்தை மறந்த செம்மறியாடுகளிடம்
அவற்றின் கண்ணாடிகளைக் காட்ட
நான் ஓநாய்களை அழைக்க வேண்டும்.
★ ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
14

நாம் சந்திப்பதில்லை நிராகரிப்பும் நாடுகடத்தலும் நம்மை விலக்கி வைத்துள்ளன. வாக்குறுதிகள் இறந்துவிட்டன, வெளி இறந்துவிட்டது, மரணம் மட்டுமே நமது சந்திப்புத் தளமாகியுள்ளது.
★ ★ ★
தன் சுகந்தத்தைச் சுமக்குமாறு காற்றைத் தூண்டிய மலர் நேற்று மரித்தது.
★ ★ ★
என் அயர்வு பறவைபோற் துயில்கிறது,
நானோ ஒரு கிளைபோலிருக்கிறேன். இப்போது நான் எதுவுமே சொல்லமாட்டேன்,
அதன் துயிலைக் கலைக்க மாட்டேன்.
★ ★ ★
மூடுதிரை இற்றது, மாளிகையின் முகத்தை அணிந்த தீயால்
மொழிபெயர்ப்பாளன் அம்பலமானான்.
欢 ★ ★
ஒரு சிற்றுண்டிச்சாலை - கடல் ஒரு குழந்தைபோற் துயில்கிறது/ இந்த முகத்தை நான் அறிவேன்.
ஹலோ, எப்படிச் சுகம் 21 இந்தக் குரலை நான் அறிவேன்.
'சோதிடன் இன்று இன்னும் வரவில்லை அவனுக்குச் சுகயினமா? போய் விட்டானா?
முன்பின் தெரியாதோர் அவனை ஒரு கிணற்றுட் போட்டனர். ' . / கடல் ஒரு குழந்தைபோற் துயில்கிறது.
★ ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
15

Page 14
வெளவாலொன்று
வெளிச்சம் இருளானதெனவும் குரியன் சுடுகாட்டுக்கு வழியெனவுங் கூறுகிறது. மேலும் உளறுகிறது.
வெளவால் விழவில்லை,
விடியலின் மடியில் உறங்கிய குழந்தை மட்டுமே விழுந்தது.
★ ★ ★
நீ இந்த நகரோ அந்த நகரோ அல்ல
நீ தரிப்பிடமோ நினைவுகளோ அல்ல/ எல்லைகள் நினது பணயக் கைதிகள்நின் அடிகள் அச்சமுடையன. நீயாக இருந்த வானத்தின் வரலாறுகள்
நிழல்கள், மரிக்கும் தழலின் பொறிச் சிதறல்கள்
欢 对 ★
தன் படைப்புகளால் விழுங்கப்பட்ட ஒரு படைப்பாளி,
அவனது மீதங்களினின்று வழியுங் குருதியுடன் ஒளியும் ஒரு நாடு இது ஒரு புதுயுகத்தின் தொடக்கம்
★ ★ ★
'எனது நாடு எட்டுந் தொலைவிலுள்ளது,
எட்டக்கூடிய மொழியிற் கனி தருகிறது என நான் சொல்லும் ஒவ்வொரு முறையும் இன்னொரு மொழி என்னை வேறொரு மொழிக்கு உதைத்து விடுகிறது.
★ ★ ★
மரங்கள் விடைகூற விடைகூற வளைவன மலர்கள் விடைகூற விரிந்து சுடர்ந்து தம் இலைகளைத் தாழ்த்துவன
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
16

மூச்சுக்கும் பேச்சுக்குமிடையிலான நிறுத்தல்கள் போன்ற வீதிகள் விடைகூறுவன மணல்பூண்ட ஒரு உடல் விடைகூற ஒரு வெட்டை வெளியில் விழுகிறது மையை நேசிக்குங் காகிதங்களும் அட்சரவரிசையும் கவிஞர்களும் விடை கூறுவனர் கவிதையும் விடைகூறுகிறது
★ ★ ★
நான் வாழ்ந்திருந்த நிச்சயம் முழுமையும் நழுவுகிறது. என் ஆசையின் தீப்பந்தங்கள் நழுவுகின்றன. என் புலப்பெயர்வுக்கு ஒளியூட்டிய முகங்களிடையில்
இருந்த யாவும் நழுவுகின்றன. எதிர்காலத்தை எட்டுவதற்கு என் அங்கங்கட்குக் கற்பிக்கவும் பேசவும் ஏறவும் அரிச்சுவடியின் பாதாளத்திலுள்ள தொடக்கத்தினின்று
தொடக்கங்களின் வானத்தில் இறங்கி வர நான் முதலிலிருந்து தொடங்க வேண்டும்.
丸 ★ ★
அவை விழுகின்றன,
மண், புகையாலான ஒரு இழை காலம், புகைப் பாதை வழியே செல்லுமொரு
தொடர் வண்டி. என் வெறி இப்போது இங்கே உள்ளது,
3A//l/, என் அக்கறையின் முடிவு
அது முடியவில்லை. அவை விழுகின்றன,
நான் ஒரு புதிய தொடக்கத்திற்காகத் தேடவில்லை.
★ ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
17

Page 15
3
அவன் புனித யுத்தச் சீருடை அணிகிறான் கருத்துக்களைக் கவசமாய் பூண்டு உலாவுகிறான் அவன் ஒரு வியாபாரி - அவன் துணிமணி விற்பதில்லை மனிதரை விற்கிறான்.
★ ★ ★
அவனை ஒரு கிடங்கிற்குக் கொண்டு போய் எரித்தனர் அவன் ஒரு கொலைகாரனல்லன், அவனொரு சிறுவன்
அவன். அண்டவெளியின் படிகளின் மேலேறி
அதிருங் குரல் அவன். அவன் இப்போது காற்றில் ஒலிக்கிறான்.
★ ★ ★
அந்தகாரம் பூமியின் விருட்சங்கள் வானத்தின் கன்னத்திற் கண்ணிர7யின் இந்தவிடத்தே ஒரு கிரகணம் நகரின் கிளையை அறுத்தது மரணம், நண்பர்கள் அகன்றனர்
★ ★ ★
மேகங்களைச் குடும் ஒளியே, துயிலாத என் தேவனே,
இக் கற்குவியல்
ஏதாக இருந்ததோ அல்லாமல் அதில் என்ன எஞ்சியதோ
அதில் நீ என் தோழனாக இருப்பாயாக
★ ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
18

என் கால்களில் நான் நிற்கிறேன், சுவர் ஒரு வேலி மட்டுமே. தொலைவு குறுகிறது, யன்னலொன்று பின்வாங்குகிறது பகல் வெளிச்சம்
மாலைப்பொழுதைத் தைத்துப்போட என் நுரையீரல் துண்டித்த ஒரு நூலிழை
★ ★ ★
நிலவு எப்போதுமே தன் நிழல்களுடன் பொருதுவதற்காக கல்லாலான தலைக்கவசம் பூண்டுள்ளது.
★ ★ ★
ஒரு செய்தியறிக்கை
காதல் வயப்பட்ட ஒரு பெண் கொலையுண்டது பற்றி ஒரு சிறுவன் கடத்தப்பட்டது பற்றி ஒரு பொலிஸ்காரன் சுவராக வளர்ந்தது பற்றி
★ ★ ★
ஒரு தாரகை குருதியில் அமிழ்ந்ததுதனது நண்பர்களின் காதிற் குசுகுசுத்துப் பேசி ஒரு சிறுவன் சொன்ன குருதி வானில் எஞ்சியுள்ளவை
தாரகைகள் எனப்படுஞ் சில பொத்தல்களே.
★ ★ ★
இப்பாதையிற் கரிதாகப் பிறந்த பகலின் ஒளியே இரவு மனஇருளில்
குரிய ஒளியும் மெழுகுதிரி வெளிச்சமும் ஒன்றேதான்
★ ★ ★
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
19

Page 16
வயல்களில் எழுதப்பட்டுப் பருவங்களாற் கூறப்பட்டதைச் சொல்லலாகாதெனச் சூரியனை நம்பச் செய்வது
தவறு.
★ ★ ★
குர்யை தனது படுக்கையறையைப் பின்னேரத்திற்காகத்
திறக்கையிற்
கடற் கொக்குகள் ஒரு துணியாகத் தோன்றி
வானத்தின் முகத்தை மூடுவன
★ ★ ★
அவன் ஒரு கவிதையில் எழுதியது (எங்கே வீதி
தொடங்குகிறதெனவும் எங்கே எனது நெற்றியை அதன் கதிர்கட்குச் சமர்ப்பிப்பதெனவும் அறியேன்) அவன் ஒரு கவிதையில் எழுதியது (எனது எதிர்காலம் ஒரு
பாலை எனவும் எனது குருதி அதன் மணலின் காலெனவும் அவனை எவ்வாறு நம்பவைப்பேன்) அவன் ஒரு கவிதையில் எழுதியது (சொற்களின் கடுமையை
என்னிடமிருந்து அகற்றுவது யார்?) அவன் ஒரு கவிதையில் எழுதியது (ஒரு சோதரனை நீ
கொல்லாவிடின் நீ இவ்விடத்துக்குரியவனல்ல) அவன் ஒரு கவிதையில் எழுதியது (அடுத்து நிகழவுள்ளது
அவர்கள் எதிர்பாராதது, நினைத்ததற்கு மாறானது) அவன் ஒரு கவிதையில் எழுதியது (உண்மைக்கும்
கவிதைக்கும் இடையிற் சிக்குண்ட இந்த நிலைகெட்ட மொழியை நாம் புரிந்து கொள்வது எப்படி) அவன் ஒரு கவிதையில் எழுதியது (அகதி நிலவு தன்
மெழுகுவர்த்தியைத் தழுவ இயலுமா?)
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
2O

அவன் ஒரு கவிதையில் எழுதியது (குரியனின் வதனத்துக்கும் வானத்துக்குமிடையே குழப்பம் ஏற்படுகிறது) அவன் ஒரு கவிதையில் எழுதியது (. / அவன் சாகட்டும்.)
欢 ★ ★
அவன் இறந்து விட்டான், அவனுக்காக நான் துயரமனுட்டிப்பதா நான் என்ன செய்வது? 'உன் வாழ்க்கை ஒரு வார்த்தை, மரணம் அதன் அர்த்தம்' என்று சொல்வதா? அல்லது 'ஒளிக்கான வழி இருளென்ற வனத்திற் தொடங்குகிறது' என்று சொல்வதா? குழப்பம். இவை யாவும். என்னையொரு குகைக்குள் ஒளித்துவைத்துச் செபத்தாற் கதவுகளை அடைக்கிறேன்
★ ★ 才
கரவான் வண்டித் தொடரை நீங்கினான் அதன் புல்லாங்குழலையும் அதன் கவர்ச்சியையும் மறுதலித்தான்
வாடும் ஒரு ரோஜாவால் அதன் மணத்தின் பால் ஈர்க்கப்பட்டுத்
தனியே வாடினான்.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
21

Page 17
தீர்க்க தரிசனம்
நமது ஆயிரம் வருடத் துயிலினின்று முடமான நமது வரலாற்றினின்று நமது வாழ்வுகளைப் புதைகுழிகள் போற் தோண்டிய ஒரு நாட்டுக்குப் போதையூட்டப்பட்டுக் கொலையுண்ட நாட்டுக்குச்
ཆ་ சடங்குகளின்றி வருகிறதோர் சூரியன்
மணலின் ஷேக்கையும் வெட்டுக்கிளிகளையும்" கொல்கிறது
காளான்கள் போற் காலம் தன் சமதரைகளில் வளர்கிறது
காலம் தன் சமதரைகளிற் சிதைகிறது
கொன்றொழிக்குமொரு குரியன் பாலத்தின் மேலாகத் தெரிகிறது
(அரபு முடியாட்சியினரையும் நாசகாரர்களையும் குறிக்கிறது)
ஏழு தினங்கள்
என் காதலையும் வெறுப்பையும் அம்மா, ஏளனஞ் செய்யாதே ஏழு நாட்களில் நீ ஆக்கப்பட்டாய். அலைகளையும் அடிவானையும்
பாடலின் கீர்த்தியையும் நீ ஆக்கினாய்
என் ஏழு நாட்களோ காயமும் காகமும் ஏனிந்தப் புதிர்கள் நானும் நின்போலக் காற்றும் மண்ணுமே.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
22

தொடக்கவுரை
நானாக இருந்த குழந்தை ஒரு காலம் பழக்கமில்லாத முகமாயிருந்த என்னிடம் வந்தது
அவன் எதுவுங் கூறவில்லை. ஒருவர் மற்றவரை மெளனமாக நோக்கியவாறு ந7ம் நடந்தோம்
ஒரு காலடி
ஒரு அந்நிய நதி
L/Tu/5ag/
நமது பொதுவான மூலங்கள்
நம்மை ஒன்று சேர்த்தன
பூமியால் எழுதப்பட்டுப்
பருவங்களாற் கூறப்பட்ட
ஒரு வனமாக நாம் பிரிந்தோம்
ஒரு காலம் நானாக இருந்த குழந்தாய், முன்னேறு நம்மை இப்போது ஒன்று சேர்த்தது எது? நாம் ஒருவருக்கு ஒருவர் சொல்ல உள்ளது என்ன?
ஒரு பாடல்
இரவின் முடிவே, நீ தொடர்ந்திருந்து
மகிழ்ச்சியில் திளைத்து என் கட்டிலில் ஒரு வித்தைக்காரனாகச் செய்வேன்
என்னிடம் உனைச் சொல்லக் கேட்கிறேன்;
பருவங்களின் முடிவில்
காதல் காதலனுக்குச் சொல்வதென்ன?
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
23

Page 18
pë u uri?
என் கண்கள் ஒரு வண்ணத்துப் பூச்சிமேல்
அச்சம் என் பாடல்களைக் கசையாலடிக்கிறது
-sif u//7/f?
-ஒரு முயற்சியில் உள்ளதொரு ஈட்டி வழிபாடில்லாமல் வாழும் ஒரு தெய்வம்
மிஹ்யார்", ஒரு அரசன்
ஒரு அரசன், இவன் மிஹ்யார், ஒரு அரசன், இவனது கனவு
ஒரு மாளிகையும் தீயின் தோட்டங்களும்
இறந்து போன ஒரு குரல், இன்று அவனைப் பற்றிச் சொற்களிடம் கூறியது
ஒரு அரசன், இவன் மிஹ்யார், இவன் காற்றின் இராச்சியத்தில் வசிக்கிறான் இரகசியங்களின் நாட்டை ஆளுகிறான்
(மிyறயார் மிஹயார் அல்-டைலாமி (Minyar al-Dalam) என்ற, பாரசீகத்து கவிஞரைக் குறிப்பது. ஒரு வித்தைக்காரராகத் தொழில் தொடங்கி பாக்தாத்தில் மொழிபெயர்ப்பாளரானவர். அடோனிஸ் போலவே ஷியா முஸ்லிமான இவர் பல
மரபு சார்ந்த பார்வைகளைச் சாடியவர்)
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
24

ஆக்கிரமிப்பு
பறவைகள் எரிகின்றன: குதிரைகள், பெண்கள், நடைபாதைகள்:
தமர்லேனின்" கைகளில் ரொட்டித் துணிக்கைகள்,
(தமர்லேன் (Thamarane) திமுர் எனவும் அறியப்பட்டவர், ஜெங்கிஸ்கானின்
வம்சத்தவர்.)
கவலைகள் (ஒரு சொப்பனம்)
பிறந்த மேனியராய் வந்தனர் கன்னமிட்டு வீடு புகுந்தனர் குழியொன்றைத் தோண்டினர் குழந்தைகளைப் புதைத்துப் போயினர்
பொற்காலம்
'அலுவலரே, இவனைக் கொண்டு போம்’- 'ஐயா, எனக்காகத் தூக்குமேடை
காத்திருப்பது தெரியும். ஆயினும் நான் என் அக்னியை வழிபடுங் கவிஞன் மட்டுமே. அதைவிட, நான் Gொல்Gொதாவை* நேசிக்கிறேன்"
'அலுவலரே, இவனைக் கொண்டுபோம்/ இவனிடஞ் சொல்லும் அதிகாரியின் பாதணி உன் முகத்தைவிட அழகானது.
பொன்னாலான பாதணியின் யுகமே நீயே அழகிலும் லீலையிலும் அதியுயர்ந்தனை.
(Gொல் Gொதா (Golgotha) கல்வாரி, ஜெருஸலேம் அருகே யேசு சிலுவையி
லறையப்பட்ட இடம்)
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
25

Page 19
கோபுரம்
ஒரு அயலவன் வந்தான் கோபுரம் அழுதது; அவன் அதை வாங்கி உச்சியிலே
ஒரு புகைபோக்கியை வைத்தான்.
அக்கினி விருட்சம்
கசங்கிய இலைகளின் குடும்பமொன்று ஒரு சுனையருகே விழுந்தது அவை கண்ணிர்த்தேசத்தை வாட்டின
fi/f/ Lib
அக்கினி ஏட்டை வாசித்தன என் குடும்பம் எனக்காகக் காத்திருக்கவில்லை. அவர்கள் நெருப்பையோ அடையாளத்தையோ
விட்டுச் செல்லவில்லை.
பறவை
ஸினின் குன்றின் மீது சமாதானத்திற்காக ஒரு பறவை அழைத்திடக் கேட்டேன்.
அதன் பாடல்கள் நகரின் கடுங்குளிரை கூடிவர அலகுகள் போல்
வெட்டிச் சென்றன.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
26

இலையுதிர்காலத்திற்கு ஒரு கண்ணாடி
இலையுதிர் காலத்தின் சவத்தைச் சுமந்தபடி பெண்ணொருத்தி போவதை நீ பார்த்தாய72 தன் முகத்தை நடைபாதையில் தேய்த்தபடி மழையின் இழைகளால்
பெண்ணொருத்தி ஆடை நெய்வதை நீ பார்த்தாயா?
மனிதர்,
நடைபாதை மிது சுட்டெரித்த கரித்துண்டுகள்
இருபதாம் நூற்றாண்டுக்கு ஒரு கண்ணாடி
ஒரு சிறுவனின் முகத்தைத் தாங்கிய சவப்பெட்டி ஒரு காக்கையின் வயிற்றின் மேல் எழுதிய புத்தகம் ஒரு மலருள் மறைந்திருக்கும் காட்டு விலங்கு ஒரு பித்தனின் சுவாசப் பையால் மூச்சு விடும் பாறை
இவ்வளவே
இது தான் இருபதாம் நூற்றாண்டு
தூக்கிலிடுவோனுக்கு ஒரு கண்ணாடி
நீ ஒரு கவிஞனென்றா சொன்னாய்? நீ எங்கிருந்து வருகிறாய்? உன் சருமம் அருமையானது. தூக்கிலிடுவோனே, நான் சொல்வது கேட்கிறதா? இவனது தலையை நீயே வைத்துக்கொள்.
ஆனால் இவனது சருமத்தைச் சிராய்க்காமற்
கொண்டுவா
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
27

Page 20
இவனது சருமம் எனக்குப் பெறுமதி வாய்ந்தது. இவனைக் கொண்டு போ. உன் வெல் வெற் சருமம்
என் கம்பளமாகும்.
நீ ஒரு கவிஞனென்றா சொன்னாய்?
Bெய்ரூத்திற்கு ஒரு கண்ணாடி
I.
இவ் விதி தனக்குத் துன்பமெனில் ஃபத்திஹா” ஒதும் அல்லது குருசு அடையாளமிடும்
ஒரு LD/து அவளது மார்பின் கீழ் கூனல் வானம்
தனது முனகும் சாம்பல் நாய்களாலும் அணைந்து போன தாரகைகளாலும்
தனது பையை நிரப்பும்
இவ்வீதி வருவோர் போவோரைக் கடிக்கும்
ஒரு மாது அவளது ம7ர்பைச் சூழ உறங்கும் ஒட்டகம். எண்ணெய் ஷேக்குகட்காகப்
A //7(5) lb
இவ்விதி
கட்டிலில் விழும் ஒரு மாது.
(ஃபத்திஹா - பிரார்த்தனை)
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
28

2.
சப்பாத்துக்கள் மிது தீட்டிய மலர்கள்
ஒரு பெட்டி வர்ணங்களாற் சிறையுண்ட
மண்ணும் விண்ணும்
கிடங்கறைகளில்
வரலாறு சவப்பெட்டி போற் செதுக்கப்படுகிறது
மரிக்கும் ஒரு தேசத்தினதோ அல்லது தாரகையினதோ ஒலத்தில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் துயில்வர்
காற்சட்டையின்றி
கம்பளமின்றி
3.
ஒரு மயானம் பட்டியிற் செருகிய ஒரு தங்கப்பை கைகளில் ஒரு இளவரசனோடோ கட்டாரியோடோ
நித்திரையில் வாய்புலம்பும் ஒரு பெண்.
கலிதாவுக்கு ஒரு கண்ணாடி,
7. அலை
கலிதா விரியுங் கிளைகளாற்
குழப்பட்ட சோகம்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
29

Page 21
கலிதா
கண்ணின் நீரால் நாளை அமிழ்த்தும் பயணம் தாரகைகளது ஒளியையும் முகில்களின் முகங்களையும் துரசின் முனகலையும் எனக்குக் கற்பித்த அலைகள்
யாவுமே ஒரு மலர் தாம்
2. நீரின் கீழ்
இரவின் செங்கனிகள் கொண்டு இழையப்பட்ட ஆடைக்குள் உறங்கினே7ம்இரவு கரைந்தது
எமது உள்ளார்ந்த ஜீவன் கிண்கிணிகளின் தாளத்தோடும் நீரின் கீழ்ச் சூரியர்களது மினுங்கலுடனும் பாடிக் கொண்டிருந்தது. இரவு குல்கொண்டிருந்தது.
3. காணாமற் போதல்
. ஒருகால் நான் உன் கரங்களுடன் காணாமற் போயிருந்தேன். என் உதடுகள் ஒரு விசித்திரமான கைப்பற்றலுக்கு ஏங்கி அரவணைப்புக்களால் மோகங்கொண்டிருந்த ஒரு கோட்டை,
நீ முன்னேறினாய்
உன் இடை ஒரு அரசன் உன் கைகள் ஒரு படையின் முன்னறிவித்தல்
உன் விழிகள் ஒரு நண்பனும் மறைவிடமும்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
3O

நாம் இணைந்து ஒருவரில் ஒருவர் தன்னை இழந்து தீக் காட்டுட் புகுந்தோம் - நான் முதல் அடி எடுத்தேன் நீ வழி அமைத்தாய்.
4. சோர்வு
என் அன்பே, பழைய சோர்வு வீடெங்கும் விரிகிறது இப்போது அதற்குத் தண்ணிர்ச் சாடிகளும் உறங்கி மறைய ஒரு பல்கனியும் உள்ளன அதன் பயணங்களில் அதுபற்றி எவ்வளவு கவலையுற்றோம். வீட்டைச் சுற்றி வட்டமிட்டு ஒவ்வொரு புல்லின் தண்டையும், அது பற்றிக்கேட்டு, பிரார்த்தித்து, அதைக் கண்டு கத்தினோம்; 'எப்படி, என்ன, எப்போது 2 ஒவ்வொரு திசைக்காற்றும் வந்தாயிற்று ஒவ்வொரு கிளையும் வந்தாயிற்று ஆயினும் நீ வரவில்லை. '
5. சாவு
அந்தக் கணங்களின் பின்பு அதேநேரம் வருகிறது மீளவும் அதே காலடிகள், மீளவும் அதே விதிகள் அவற்றின் பின்பு வீடு முதுமை எய்துகிறது அவற்றின் பின்பு கட்டில் தனது நாட்களின் தீயை அணைத்துவிட்டுச் சாகிறது
தலையணைகளும் சாகின்றன.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
31

Page 22
நியூயோர்க்கிற்கு ஒரு சவக்குழி
I
இது வரை பூமி பேரிக்காய்
அல்லால் ஒரு முலை வடிவில் வரையப்பட்டுள்ளது முலைக்கும் நடுகல்லுக்கும் வடிவில்
ஒரு வேறுபாடே உண்டு: நியூ யோர்க், நாலு கால்களுள்ள ஒரு நாகரிகம்; ஒவ்வொரு திசையிலும் கொலையும்
கொலைக்குக் கொண்டு செல்லும் வழியும் ஒவ்வொரு தொலைவிலும் அமிழ்ந்தோரின் முனகல் நியூயோர்க்,
ஒரு பெண்
ஒருகையில், வரலாறெனும் ஆவணம் விடுதலை என அழைக்கும் பழந்துணியைத் தூக்கி மறு கையால் உலகமெனும் குழந்தையின் மூச்சை
அடைக்கும் ஒரு பெண்ணின் சிலை நியூயோர்க்
த7ர் வண்ண மேனி அவளது இடையைச் சூழ ஒரு ஈரமான வார். அவளது முகம் பூட்டப்பட்ட ஒரு சாளரம். வால்ற் விற்மன்” அதைத் திறப்பாரென்றேன்- 'முதலாவது அனுமதிச் சொல்லை நான் உரைத்தேன்' - தூக்கியெறியப்பட்டதொரு தெய்வத்தையன்றி எவருக்குமே அது கேட்கவில்லை. கைதிகளும் அடிமைகளும் கள்வரும் கதியற்றோரும் நோயாளரும் அவரது தொண்டையூடாக வெளிச்சிந்துகின்றனர். அவர்கட்கு வெளியேற முடியாது.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
32

வழியில்லை. Bரூக்லின் பாலம் என்றேன். ஆயினும் விற்மனை வோல் ஸ்ற்றிற்றுடன்" இணைப்பதும் பசும் இலைகளைப் பச்சைத் தாள்களுடன்" இணைப்பதும்
இப் பாலமே.
நியூயோர்க் - ஹாலெம் பட்டாலான கிலெற்றினில்" வருவது யார்? ஹட்ஸன் நதியளவு நீண்ட சவக்குழியொன்றில் நீங்குபவர் யார்? ஏ கண்ணிராலான சுவாத்தியமே, களைத்தயர்ந்த பொருட்கள் அனைத்துமே நீவிர் ஒன்றாக இணைக, ஒரு மஞ்சள், ஒரு நீலம், ரோஜாக்கள், மல்லிகைககள், ஒளி தமது ஊசிகளைக் கூராக்குகின்றன. அவற்றின் தைத்தலில் குரியன் பிறக்கிறது. தொடைகட்கு இடையில் மறைக்கப்பட்டுள்ள புண்ணே நீ தீப்பற்றிக் கொண்டாயிற்றா? மரணப் பறவை உன்னிடம் வந்து விட்டதா, நீ சாவின் இறுதிக் கிலுகிலுப்பைக் கேட்டாயிற்ற72 ஒரு கயிறு, கழுத்து இருளை அணிகிறது, குருதியில் பொழுதின் இருண்மை பாய்கிறது.
நியூயோர்க் - மடிஸன் - பாக் அவென்யூ - ஹாலெம் வேலையை ஒத்த சோம்பல், சோம்பலை ஒத்த வேலை. கடற்பஞ்சு அடைத்த இதயங்கள், ஊதுகுழல்கள் போல் வீங்கிய கைகள், குப்பைகளின் குவியல்களினின்றும் எம்பயர் ஸ்றேற்றின்* முகமூடியினின்றும் தாள்தாளாகத் தொங்கும் நாற்றமாக வரலாறு எழுகின்றது.
குருடானது கண்பார்வையல்ல மூளையே,
வெறுமையானது பேச்சல்ல நாக்கே.
நியூயோர்க் - வோல் ஸ்ற்றிற் - 725ம் தெரு - ஐந்தாவது பாதை மெடூஸா பேயொன்று” ஒரு தோளுக்கும் மற்றதுக்குமிடையே ஏறியது. எல்லாவிதமான அடிமைகளுக்குமான ஒரு சந்தை. கண்ணாடி வீடுகளில் செடிகள் போல வாழும் மனிதப்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
33

Page 23
பிறவிகள். எவரும் என்றுமே காணாத கீழ்மைப்பட்டோர் வெளியின் வலைப்பின்னலுரடு தூசுத் துணிக்கைகள் போல் வடியுண்டு போகின்றனர். - பலியாகி முடிவற்ற வட்டங்களில் சுழல்வோர்,
சூரியன் ஒரு சாவீடு
பகல் ஒரு கரும் பறை.
இங்கே,
உலகமாகப்பட்ட ஒரு பாறையின் பாசிபிடித்த அடிப்புறத்தில், கொல்லப்படவுள்ள ஒரு 'நீக்ரோ' வோ சாகப் போகிற ஒரு பறவையோ அன்றி எவரும் என்னைக் காண்பதில்லை. எல்லையினின்று பின்வாங்கும்போது சிவந்த களிமண் சாடியில் வளரும் செடி உருமாறிக் கொண்டிருந்தது என நான் நினைத்தேன். Bெய்ரூத்திலும் வேறு இடங்களிலும் காகிதங்களை ஆயுதமாய்ப் பூண்டு மனிதரைக் கொறிக்கும் வெள்ளை மாளிகைப் பட்டில் பகட்டாக உலாவரும் பெருச்சாளிகளைப் பற்றியும் அட்சரங்களின் பாலர் பாடசாலையிலுள்ள கவிதைகளை மிதிக்கும் பன்றிகளின்
எச்சங்கள் பற்றியும் வாசிக்கிறேன்.
அரபு தேசப் படத்தைப் பார்த்தேன் ஒரு ஆண் குதிரை அரக்கி அரக்கி அடிவைக்கும் போது காலம் ஒரு குதிரைச் சேணம் போல சவக்குழி நோக்கியே7 இருண்ட நிழலை நோக்கியோ, சாகும் அல்லது செத்துக் கொண்டிருக்கும் ஒரு நெருப்பை நோக்கிச் சாய்ந்து சரிகிறது;
கர்க்குக், " அல்-டஹ்ரானில்" மற்றப் பரிமாணத்தின்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
34

இயைபியலை, ஆபிரிக்க-ஆசியாவின் அரபு நகர அரண்களுள் எஞ்சியிருப்பதை அறிவது. இங்கே பூமி நமது கையில் முதிர்கின்றது. ஹ7/ நாம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகி
2- இந்த வீட்டில் மையை விட வேறெதையும் உடையவனல்லாத ஒருவனையும்
3- இந்த மரத்தில் ஒரு பாடும் பறவையையும் நிறுவுவதற்கு ஒரு முதலாவது, ஒரு இரண்டாவது, ஒரு மூன்றாவது இரகசியப் பணியகங்களை அமைக்கிறோம்.
7- வெளி, கூண்டாலோ சுவராலோ அளக்கப்படுகிறது 2. காலம், கயிற்றாலோ கசையாலோ
அளக்கப்படுகிறது 3- உலகைக் கட்டியெழுப்பும் முறைமை ஒரு
சகோதரன் இன்னொருவனைக் கொல்வதுடன் தொடங்குகிறது 4- சந்திரனும் சூரியனும் சுல்தானின் அரச கட்டிலின்
கீழ் மின்னுகிற இரு நாணயங்கள்
எனப் பிரகடனம் செய்வோம்.
பூமி அளவு பெரிதான, பாசத்தால் மென்மையான அரபுப் பேர்கள் வெறுமனே 'மூதாதையார் அற்று' மின்னும் வேர் பிடுங்கப்பட்ட தாரகையாக 'தன் காலடிகளிலேயே தன்
வேர்களைக் கொண்டதாக... ' மின்னுவதைக் கண்டேன்.
இங்கே உலகப் பாறையின் பாசிபிடித்த அடிப்புறத்தில், வாழ்வென அல்லது என் நாடென நான் அழைக்கும் ஒரு பசுங் குருத்து நினைவிலுள்ளது என நான் அறிவேன். நான் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன். சாவு அல்லது என் நாடு - உறை பனிப் போர்வை போல ஒரு காற்று, மகிழ்வை அழிக்கும்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
35

Page 24
ஒரு முகம், ஒளியை வெளியகற்றும் ஒரு விழி; உன் பற்களில்
நான் என் நாட்டை உருவாக்குகிறேன்.
உன் நகரத்துள் கீழ்ச் சென்று நான் அலறுகிறேன்.
உனக்காக நான் நஞ்சு அமிர்தம் ஒன்றை வடிக்கிறேன்
நான் உன்னை வரவேற்கிறேன் நான் சத்திய வாக்குமூலம் தருகிறேன். நியூயோர்க் எனது நாட்டில் இடை வழியும் கட்டிலும் கதிரையும் தலையும் உனக்குரியன. இரவும் பகலும் மெக்காவின் கல்லும்" திGரிஸின்" நீரும் யாவுமே விற்பனைக்குரியன. நான் பிரகடனம் செய்கிறேன். இருந்தும் நீ பலஸ்தீனத்திலும் ஹனோயிலும் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலும் நெருப்பையன்றி வரலாறே அற்றவகட்கெதிராக முனைகிறாய், போட்டியிடுகிறாய். நான் சொல்கிறேன். பெரிய யோவானின் காலந்தொட்டு நாமொவ்வொருவரும் தம் அறுந்த தலையை ஒரு தட்டில் வைத்துச் சுமந்து இரண்டாவது வருகைக்காகக்
காத்திருக்கிறோம்."
I
சுதந்திரச் சிலைகாள், ஒரு ரோஜாவின் ஞானத்தைப் போலி
செய்யும் ஒரு ஞானத்துடன் மார்பினுள் ஆழச் செலுத்தப்பட்ட
ஆணிகாள், நீவிர் சிதைவுறுக. மீண்டும் ஒருகால்
கிழக்கினின்று கூடாரங்களையும் வானுயர் கட்டடங்களையும்
பெயர்த்தபடி காற்றுத் திடீரென்று வீசுகிறது. இரண்டு
சிறகுகள் எழுதுகின்றன:
மேற்கின் சமவுச்சக் கோடுகட்கிடையே இரண்டாவது அரிச்சுவடி ஒன்று எழுகிறது ஜெருஸலெமின் தோட்டங்களில் ஒரு மரத்தின் கனியே குரியன்.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
36

இவ்வாறே நான் என் சுடர்களைத் தூண்டிவிடுகிறேன். நான் முதலினின்று மீளத் தொடங்குகிறேன். நான் வடிவமைக்கிறேன், வரையறுக்கிறேன்: நியூயோர்க் வைக்கோற் பெண்ணொருத்தி, கட்டில் ஒரு வெற்று வெளிக்கும் இன்னொன்றுக்குமிடையே ஊசலாடுகிறது. அந்தோ/ மேற்தளம் உக்கித் தள்ளுகிறது. ஒவ்வொரு சொல்லுமே வீழ்ச்சியின் அடையாளம், ஒவ்வொரு அசைவும் ஒரு சவள் அல்லது கோடரி. காதலையும் கண்பார்வையையும் செவிப்புலனையும் மணத்தையும் ஸ்பரிசத்தையும் மாற்றத்தையுமே மாற்றுவதற்கு விரும்பும் அமைப்புக்கள் இடப்புறத்தும் வலப்புறத்தும் உள்ளன - அவை காலத்தை ஒரு படலை போலத் திறந்து உடைத்து எஞ்சியுள்ள மணிநேரங்களைப் புனைகின்றன. காமம், கவிதை, ஒழுக்க நெறிகள், தாகம், பேச்சு, மோனம், பூட்டுக்களைத் தடைசெய்ய வேண்டும் அமைப்புக்கள். நான் Bெய்ரூத்திற்கும் அதன் சகோதர தலை நகரங்கட்கும் ஆசை காட்டுகிறேன்,
அவள் தனது படுக்கையினின்று துள்ளியெழுந்து தன் பின்னான நினைவுப் படலைகளைச் சாத்துகிறாள். அவள் நெருங்கி வந்து என் கவிதைகளைப் பற்றிக் கீழே தொங்குகிறாள். கதவுக்குக் கோடரி, யன்னலுக்கு மலர்கள்; ஏ பூட்டுக்களின் வரலாறே நீ எரிவாயாக. Bெய்ரூத்திற்கு ஆசைகாட்டியதாய்ச் சொன்னேன்,
'செயலைத்தேடு, சொற்கள் மரித்துவிட்டன’’ என்கின்றனர் பிறர் சொல் இறந்தது ஏனென்றால் உங்கள் நாக்குகள் உளறும் பழக்கத்திற்காகப் பேசும் பழக்கத்தை கைவிட்டு விட்டன. சொல் 2 சொல்லின் நெருப்பை நீங்கள் அறிய வேண்டுகிறீர்களா? அப்படியாயின் எழுதுங்கள் எழுதுங்கள் என்கிறேன்
உளறுங்கள் என்று சொல்லவில்லை. பிரதி
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
37

Page 25
செய்யுங்கள் என்று சொல்லவில்லை, எழுதுங்கள் என்கிறேன். சமுத்திரத்தினின்று வளைகுடா வரை எனக்கு ஒரு பேச்சும் கேட்கவில்லை. நான் ஒரு சொல்லையும் படிக்கவில்லை, கீச்சிடுவது கேட்கிறது. எனவே நான் எவரும் எந்த நெருப்பையும் மூட்டக் காணவில்லை. பொருட்களில் பாரங்குறைந்தது சொல், அது
எல்லாவற்றையும் சுமக்கிறது. செயல் ஒரு திசை, காலத்தின் ஒரு பொழுது. சொல், காலம் அனைத்திற்கும் சகல திசைகளுமாகும். சொல் - கை, கை - கனவு
ஏ நெருப்பே, என் தலை நகரமே உனைக் கண்டறிகிறேன். கவிதையே, உனைக் கண்டறிகிறேன். Bெய்ரூத்திற்கு ஆசை காட்டுகிறேன். நான் அவளை அணிகிறேன், அவள் என்னை அணிகிறாள். சூரிய ஒளிக் கதிர்கள், நாம் அலைந்து நாம் கேட்கிறோம்; படிப்பவர் யார்? பார்ப்பவர் யார்? பேய் உரு டயானுக்குரியது", எண்ணெய் போய்ச்சேர வேண்டிய இடத்துக்குப் போகிறது. கடவுள் என்பது உண்மை, மாஒ சொன்னதிற் தவறில்லை; 'போரில் ஆயுதங்கள் ஒரு முக்கியமான காரணி ஆயினும் அவை தீர்மானமானவையல்ல, ஆயுதங்களன்றி, மனிதனே தீர்மானிக்கும் காரணி இறுதி வெற்றியென ஒன்றில்லை, இறுதித் தோல்வியெனவும் ஒன்றில்லை.
அராபியர்கள் செய்வது போல, நான் இப் பழமொழிகளையும் ஞானவார்த்தைகளையும் பல வண்ணங்களிலும் பொன் ஆறுகள் தமது ஊற்றுக்கண்களினின்று உள்ளே பாயும் வோள் ஸ்ற்றிற்றில் மீளவும் சொன்னேன். அவற்றிடையே,
பலியானோரின் கோடிக்கணக்கான கைகால்களையும்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
38

படையல்களையும் எசமான சிலையிடம் காவி வந்த அராபிய ஆறுகளையும் கண்டேன். பலியான ஒருவனுக்கும் இன்னொருவனுக்குமிடையே க்றைஸ்லர் கட்டடத்தினின்று” கீழே உருளுகையில் படகோட்டிகள் உரக்கச் சிரித்து ஊற்றுக்கண்ணுக்கு மீளுகின்றனர்.
IV
நியூயோர்க், காற்றின் வில்வளைவில் அமர்ந்திருக்கும் பெண்,
அணுவினுந் தொலைவிலான வடிவம் எண்களின் கானகத்தில் அலையும் ஒருபுள்ளி சொர்க்கத்தில் ஒரு தொடையும் மற்றது நீரிலும் சொல், உன் தாரகை எங்கே 2 புல்லுக்கும் இலத்திரனிய மூளைக்குமான" சமர் தொடங்கப் போகிறது. முழுச் சகாப்தமுமே சுவரில் தொங்குகிறது. இங்கே குருதிப் போக்கு, உச்சியில் ஒரு புள்ளி வடதுருவத்தையும் தென்துருவத்தையும் ஒன்றுபடுத்துகிறது. நடுவில் ஆசியா, அடியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு உடலுக்கான இரு பாதங்கள். நான் உன்னை அறிவேன், பொப்பியின் கஸ்தூரியில் மிதக்கும் ஒரு பிணம். நான் உன்னை அறிவேன், மார்போடு மார்பின் விளையாட்டு, நான் உன்னைப் பார்க்கிறேன், பனிக்கட்டி பற்றிக் கனாக் காண்கிறேன். நான் உன்னைப் பார்க்கிறேன். இலையுதிர்காலத்திற்குக் காத்திருக்கிறேன் உன் வெண்பனி இரவைச் சுமந்து செல்கிறது. உன் இரவு மனிதரை இறந்த வெளவால்களைப் போலச் சுமந்து செல்கிறது. உன்னில் ஒவ்வொரு சுவருமே ஒரு மயானம். ஒவ்வொரு நாளுமே ஒரு கரிய தட்டத்தில் ஒரு கரிய ரொட்டியைக் காவிச் சென்று அவற்றுடன் வெள்ளை
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
39

Page 26
மாளிகையின் வரலாறு பற்றித் திட்டமிடும் ஒரு கரிய புதைகுழி தோண்டுவோன்.
அலெஃப் (A) சங்கிலிபோல ஒன்றிணையும் நாய்கள் உள்ளன. கவசத் தொப்பிகளையும் சங்கிலிகளையும் ஈனும் பூனைகள் உள்ளன. எலிகளின் முதுகுகளின் வழியே ஊரும் ஒழுங்கைகளில் வெள்ளைக் காவலாட்கள் காளான்கள் போற்
பெருகுகின்றனர்.
Br (B) குதிரை போல சேணமிடப்பட்ட தனது நாய் முன்செல்ல ஒரு பெண் எமை நோக்கி வருகிறாள். நாயின் காலடிகள் ஒரு அரசனின் காலடிகள், முழுநகரமும் ஒரு கண்ணிர்ப்படை போல அதைச் சூழத் தவழ்கிறது. கரிய தோலுள்ள குழந்தைகளும் முதியோரும் சேரும் இடங்களில், துப்பாக்கிக் குண்டுகளின் குற்றமின்மை செடிகள் போல வளர்கிறது, பயங்கரம் நகரின் இதயத்தைத் தாக்குகிறது.
ம்ே (C)
ஹாலெம் - Bெட்ஃபோர்ட் ஸ்"ய்வ்ஸன்ற்: மணற் குறுணிகள் போல மக்கள் கோபுரத்தின் பின் கோபுரமாக நெருக்குண்ணுகின்றனர், வயதுகளை இழைக்கும் முகங்கள், குப்பை குழந்தைகளை விருந்தாக்குகிறது, குழந்தைகள் எலிகட்கு விருந்தாகின்றனர். வரிவசூலிப்பவர், பொலிஸ்காரர், நீதிபதி என்ற மும்மூர்த்திகளது நீண்ட விருந்து வைபவத்தில் படுகொலையின் அதிகாரம் நிற்கிறது,
கொலைவாள்.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
4O

/ /76i (D)
ஹாலெம் (கரியவன் யூதனை வெறுக்கிறான்) ஹாலெம் (அடிமை வியாபாரத்தை நினைவுகூரும் போது கரியவன் அராபியனை விரும்பவில்லை)
ஹாலெம் Bரோட்வே (மனிதர், பேதி மருந்து போல போதை மருந்து, மதுக் குடுவைகட்குள் ஊடுருவுகின்றனர்)
B ரோட்வே-ஹாலெம், சங்கிலிகளதும் குண்டாந்தடிகளதும் ஒரு திருவிழா, இக்காலத்தின் நோய்க்கிருமிகள். ஒரு குடு, பத்துப் புறாக்கள் தரையில் விழுகின்றன. விழிகள் சிவந்த பனிக்கட்டிகள் நிரம்பி வழியும் பெட்டகங்கள், காலம் என்பது நொண்டி நடக்கும் ஒரு கைத்தடி, முதிய கறுப்பு மனிதா, இளைய கறுப்புக் குழந்தாய், அளவிலாச் சோர்வடையும் வரை போய்க்கொண்டே இரு. போய்கொண்டே இரு, அளவிலாச் சோர்வு, என்றென்றும்
என்றென்றும்.
V
ஹாலெம் நான் வெளியிலிருந்து வரவில்லை. எனக்கு உன் சினம் தெரியும், அது நல்ல ரொட்டி என்று அறிவேன். திடீர் இடியை விட்டால் பஞ்சத்துக்கு வைத்தியம் இல்லை, வன்முறை என்ற இடித் தாக்குதலை விட்டால் சிறைகட்கு முடிவில்லை. ஹோஸ் பைப்புகளிலும் முகமூடிகளிலும் உள்ள தாரின் கீழ், உறையுங் காற்றின் அரச கட்டிலின் மீது சுமக்கப்படும் குப்பைக் குவியல்களில், காற்றின் வரலாற்றைக் காலணி போல் அணிந்து வெளி நோக்கி நடக்கும் காலடிகளில், உன்நெருப்பு முன்னேறுவதைக் காணுகிறேன். ஹாலெம்,
காலம் சாகிறது. நீயே இப் பொழுது,
எரிமலை போல கண்ணிர் உறுமக் கேட்கிறேன்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
41

Page 27
தாடைகள் மனிதரை ரொட்டி போலச் சப்பக் காண்கிறேன். நியூயோர்க்கின் முகத்தைத் துடைத்தழிக்கும் இரேசர் நீ. அதை ஒரு இலைபோல பற்றும் புயல் நீ நியூயோர்க் = சேற்றிலிருந்தும் குற்றச் செயல்களினின்றும் வந்து சேற்றுக்கும் குற்றச் செயல்கட்கும் போகும் சுரங்க ரயில் + ஐ.பி.எம். நியூயோர்க் = பூமியின் ஒட்டில் தாரை தாரையாகப் பைத்தியக்காரத்தனம் வெளிச்சிந்தும் ஒரு துளை. ஹாலெம், நியூயோர்க் அதன் மரண வேதனையில் உள்ளது, நீயே இப் பொழுது.
. VI
ஹாலெமுக்கும் லின்கன் சென்ற்றருக்கும் இடையே அலைந்து திரியும் ஒரு எண்ணாகிய நான் கரிய விடியலொன்றன் பற்களால் மூடப்பட்ட பாலை ஒன்றில் முன்னேறுகிறேன். பனி இல்லை, காற்றும் இல்லை, நான் பேயொன்றை (முகம் முகமல்ல, ஒரு காயம் அல்லது கண்ணர், உடல், அழுத்தப்பட்ட ஒரு ரோஜா மட்டுமே) மார்பில் விற்களும் கணைகளும் தாங்கி வெற்றுவெளி ஒன்றன் மீது பாய ஆயத்தமான பேயொன்றை (பெண் என்பிரா? ஆண72 பெண்-ஆண72) தொடரும் ஒருவன் போலிருந்தேன். மானொன்று அவ்வழிச் சென்றது. அவன் அதைப் பூமி என்றான், பறவையொன்று தோன்றியது. அவன் அதை நிலவென்றான். பலஸ்தீனத்திலும் அவளது சகோதரிகளிடத்தும். செவ்விந்தியனின் மறுபிறப்பைக் காண அவன் விரைகிறான் என்று நான் அறிவேன்.
வெளி என்பது துப்பாக்கிக் குண்டுகளாலான ஒரு நாடா பூமி சவங்களாலான ஒரு திரை ஒரு திணிவிற்குள் அடிவானை அடிவானை அடிவானை
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
42

நோக்கி அலையாடும் ஒரு அணு நான் என உணர்ந்தேன். முடிவிலாத் தொலைக்குள் நீளும் சமாந்தரமான பள்ளத்தாக்குகளுக்குள் நான் இறங்கினேன். பூமி உருண்டையானது என்பதையும் ஐயுறத் தொடங்கினேன்.
நியூயோர்க்கை அடைப்புக் குறிகட்குள் போட்டுவிட்டுச் சமாந்தரமான ஒரு மாநகரில் நடந்தேன். என் பாதங்கட்குப் போதுமான வீதிகள் கிடைத்தன. வானம் விழியினதும் மனதினதும் மீன்களும் மேகங்களின் விலங்குகளும் நீந்திய ஒரு குளமாயிருந்தது. இராக் குயிலின் உடை அணிந்த ஒரு காக்கை போல ஹட்ஸன் நதி சிறகடித்தது. பெருமூச்செறிந்தவாறு தன் புண்களைச் சுட்டிக்காட்டும் ஒரு குழந்தை போல விடியல் வந்தது. இரவை அழைத்தேன். அது பதில் கூறவில்லை. அது தன் கட்டிலைச் சும்ந்து சென்று நடைபாதையிடம் சரணடைந்தது. பின்பு அது தன்னை அதிமென்மையான காற்றொன்றாற் போர்த்துக் கொண்டது. காற்றின் மென்மை எத்தகையதெனின் அதனைச் சுவர்களும் தூண்களும் தனிர வேறெதும் மீறவில்ல. ஒரு கூக்குரல், இரண்டு, மூன்று. நீரில்லாக் குளத்துள் குதித்த, பாதி விளைந்த தவளை போல, நியூயோர்க் தயங்கி நின்றது. லின்கன், இதுதான் நியூயோர்க் முதுமை எனும் கைத்தடியில் ஊன்றியவாறு செயற்கைப் பூக்களை விரும்பி நினைவுப் பூங்காக்களில் நடைபயிலும், வாஷிங்ட்டனின் பளிங்குக் கற்களில் உன் வடிவத்தைக் கண்டுகொண்ட போது நினைக்கிறேன்; உன் அடுத்த புரட்சி எப்போது வரும் 2 என் குரல் ஓங்குகிறது; பளிங்கின் வெள்ளையினின்று, நிக்ஸனிடமிருந்து", காவல் நாய்களிடமிருந்து, வேட்டை நாய்களிடமிருந்து லின்கனை விடுதலை செய்க. அவர், புதிய விழிகளுடன், கறுப்பு இனத் தலைவர் அலி இBன் முஹம்மது" வாசித்ததையும் மாக்ஸ"ம் லெனினும்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
43

Page 28
மாஒ ஸ்ேதுங்கும் வாசித்தவற்றையும் பூமியை மீளக் கண்டுபிடித்து அதைச் சொல்லுக்கும் குறிக்கும் இடையே வாழ அனுமதித்த அற்புதமான பித்தன் அல்-நிஃப்ஃபாரி* வாசித்ததையும் வாசிக்கட்டும். ஹோ சி மின் வாசிக்க விரும்பியிருக்கக் கூடியதையும் அவர் வாசிக்கட்டும்.
உர்வா இBன் அல்-வார்த்* 'நான் என் உடலைப் பல உடல்களிடை பங்கிடுகிறேன். ' உர்வாவுக்கு பக்தாத்தைத் தெரியாது. அனேகமாக, அவர் டமஸ்கஸ் போக மறுத்திருக்கலாம். தன்னுடன் சாவின் சுமையைப் பகிர்ந்த இன்னொரு தோளான பாலை வனத்திலேயே அவர் தங்கினார். 'என் காதலி' என அவர் அழைத்த ஒரு மானின் குருதியில் தோய்த்த சூரியனின் ஒரு பகுதியை, எதிர்காலத்தை நேசித்தவர்கட்காக அவர் விட்டுச் சென்றார். அது தனது கடைசி வீடாக இருக்க வேண்டும் என்று அடிவானுடன் 2 / 671 / / ///i.
லின்கன், இதுதான் நியூயோர்க் வாஷிங்ட்டன் மட்டுமே ஒரே பிம்பமாகத் தெரியும் ஒரு கண்ணாடி, இதுதான் வாஷிங்ட்டன்: இரண்டு முகங்களை, நிக்ஸனையும் உலகின் கண்ணீரையும், பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி, கண்ணின் நடனத்தில் இணைகிறேன். நான் எழுதுகிறேன். போவதற்கு இன்னுமொரு இடம் உண்டு, ஏற்று நடிப்பதற்குரிய பாகம் ஒன்று இன்னும் உண்டு. ஒரு புறாவாக மாறும், ஒரு வெள்ளமாக மாறும் இக் கண்ணின் நடனத்தை நான்
நேசிக்கிறேன். 'பூமிக்கு ஒரு வெள்ளம் எவ்வளவு அவசியம்/'
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
44

VIII
புறப்படும் வேளைக்கு முன்பு, காலையில் அலறியபடி விழித்தேன். நியூயோர்க்/ குழந்தைகளை வெண்பனியுடன் குழைத்து இக்காலத்தின் கேக்கைச் செய்கிறீர்கள். உங்கள் குரல் ஒரு ஒக்சைடு", ரசாயனத்தின் பிடிக்கு அப்பாலான ஒரு நஞ்சு, உன் பேர் தூக்கமின்மையும் மூச்சுத் திணறலும். மத்திய பூங்கா தனக்குப் பலியாவோருக்கு ஒரு விருந்தை அளிக்கிறது. அதன் மரங்களின் கீழ் நீங்கள் இறந்தோரின் ஆவிகளையும் குருதி சொட்டும் கட்டாரிகளையும் காணலாம். மொட்டைக் கிளைகளை விடக் காற்றுக்கு எதுவுமில்லை, மறிக்கப்பட்ட பாதையை விடப் பயணிக்கு ஏதுமில்லை. காலையில் அலறியவாறு எழுந்தேன். நிக்ஸன் இன்று எத்தனை குழந்தைகளை கொன்றாய்?
- 'இந்த விடயம் முக்கியமானதல்ல' (கலி)* - 'ஒரு பிரச்சனை இருப்பது மெய்தான். ஆயினும் இது எதிரியின் எண்ணிக்கையைக் குறைக்கிறது என்பதும் உண்மையில்லையா (ஒரு அமெரிக்கப் படைத் தளபதி) நியூயோர்க்கின் இதயத்துக்கு நான் வேறு ஒரு அளவை எப்படி வழங்க முடியும்? இதயமும் தனது எல்லைகளை விரிக்கிறதா? ஜெனரல் மோட்டர்ஸும் சாவும் ஒன்றேயாக உள்ள நியூயோர்க். 'மனிதரின் இடத்தை நெருப்பால் பிரதியிடுவோம்' (மக்னமாரா)* அது புரட்சிவாதிகள் நீந்தும் கடலை வற்றச் செய்யும். 'மண்ணைப் பாலைவனமாக்கி அதை அமைதி என அழைக்கின்றனர்' (ற்றவிற்றஸ்)" விடியுமுன் விழித்து விற்மனை எழுப்பினேன்.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
45

Page 29
IX
வால்ற் விற்மன், மன்ஹற்றன் விதிகட்கு மேலான காற்றில் உமக்கான கடிதங்கள் பறப்பதைக் காண்கிறேன். ஒவ்வொரு கடிதமும் பூனைகளாலும் ந7ய்களும் நிறைந்த ஒரு வண்டி, பூனைகளதும் நாய்களதும் காலம் இருபத்தோராம் நூற்றாண்டு. மனிதர் இல்லாதொழிக்கப்படுவர். இப்போது அமெரிக்காவின் காலம்/
விற்மன்
மன்ஹற்றணில் நான் உம்மைக் காணவில்லை, எல்லாவற்றையும் கண்டேன். நிலவு யன்னல்களுடு வெளியே வீசப்படும் ஒரு உமி, சூரியன் ஒரு மின்சாரத் தோடம்பழம். தனது கண்ணிமைகள் மிது சாய்ந்து நிற்கும் நிலவு போல வட்டமான ஒரு கரிய வீதி ஹாலெமினின்று வெளியே தாவும் போது அதன் பின்னால் தாரால் ஆன நெடுஞ்சாலை நெடுகலும் ஒளியைத் தெறித்த ஒரு ஒளி இருந்தது. கிறீனிச் கிராமத்தை அந்த மற்றைய லத்தின் பகுதியை" எட்டியபோது அது ஒரு செடி G, то வாடி அழிந்தது.
விற்மன், 'கடிகாரம் நேரத்தை அறிவிக்கிறது' (நியூயோர்க் - பெண் என்பது கழிவுப் பொருள், கழிவுப் பொருளென்பது சாம்பலை நோக்கி நகரும் காலம்). 'கடிகாரம் நேரத்தை அறிவிக்கிறது (நியூயோர்க் - அமைப்பு - பவ்லொவ்", போரானது போராகப் போராக உள்ள இடத்தில் மக்கள் பரிசோதனைக்குப் பயன்படும் நாய்கள்) 'கடிகாரம் நேரத்தை அறிவிக்கிறது (கிழக்கிலிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. ஒரு குழந்தை தனது குருதியிலேயே எழுதியுள்ளது. அதை வாசிக்கிறேன். பொம்மை இனிமேலும்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
46

புறாவல்ல. பொம்மை ஒரு பிரங்கி, ஒரு இயந்திரத் துப்பாக்கி, ஒரு றைஃபிள் துப்பாக்கி. குரிய வெளிச்சமுள்ள வீதிகளிலுள்ள சவங்கள் ஹனோயை ஜெருஸலெமுடனும் ஜெருலலெமை நைலுடனும் இணைக்கின்றன).
விற்மன்,
'கடிகாரம் நேரத்தை அறிவிக்கிறது, நான் நீர் கண்டிராதவற்றைக் கண்டு அறிந்திராதவற்றை அறிவேன்'. தீவுகள் போலத் தனித்தனியான கோடிக் கணக்கானோரின் சமுத்திரத்தில் மஞ்சள் நண்டுகள் போல அருகருகாக அடுக்கப்பட்ட பெட்டிகளாலான பெரும்பரப்பின் மீதாக நகருகிறேன்; ஒவ்வொன்றுமே இரண்டு கைகளும் இரண்டு பாதங்களும் சிதறிய ஒரு தலையும் கொண்ட ஒரு தூண்.
நீ : 'ஏ குடியகன்றவனே, நாடு கடத்தப்பட்டவனே, குற்றவாளியே' w நீ அமெரிக்க வானங்கள் அறியாத பறவைகளால்
அணியப்படும் ஒரு தொப்பியை விடப் பெரியவனல்ல'
விற்மன், இப்போது நமது முறையாக இருக்கட்டும். நான் எனது பார்வைகளால் ஒரு ஏணி செய்கிறேன். என் காலடிகளை ஒரு தலையணையாய் நெய்கிறேன். நாம் காத்திருப்போம். மனிதன் சாகிறான். ஆயினும் அவன் சவக்குழியை விட அதிக காலம் நிலைக்கிறான். இப்போது நம் முறையாக இருக்கட்டும். மன்ஹற்றனுக்கும் குவீன்ஸ்"க்கும் இடையே வொல்கா பாயும் வரை நான் காத்திருக்கிறேன். ஹட்ஸன் நதி பாயும் இடத்தில் மஞ்சள் நதி வழியும் வரை காத்திருக்கிறேன். உமக்கு வியப்பாயிருக்கிறது. அல்-ஆஸி தைபர் நதிக்குள் ஒரு காலத்தில் பாயவில்லையா? இப்போது நமது முறையாக இருக்கட்டும். எனக்கு நடுக்கம்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
47

Page 30
கேட்கிறது வெடியோடுகள் விழுவது கேட்கிறது. வோல் ஸ்ற்றிற்றும் ஹாலெமும் சந்திக்கின்றன. காகிதமும் இடியும் சந்திக்கின்றன, தூசும் புயலும் சந்திக்கின்றன. இப்போது நம் முறையாக இருக்கட்டும். வரலாற்றின் அலைகளில் சிப்பிகள் தமது கூடுகளைக் கட்டுகின்றன. மரத்துக்குத் தன் சொந்தப் பேரைத் தெரியும். பூமியின் தோலில் ஒட்டைகள் உள்ளன, முகமூடியையும் முடிவையும் மாற்றிக் கரியதொரு கண்ணில் அழும் சூரியன். இப்போது நமது முறையாக இருக்கட்டும். சில்லை விட வேகமாக நம்மாற் சுழல முடியும். அணுவைப் பிளந்து, மங்கியதோ பிரகாசமானதோ, வெறியதோ, நிறைந்ததோ ஒரு இலத்திரனிய மூளையில் மிதக்கவும் நமக்கு முடியும், பறவையை நம் தாயகமாக்க நமக்கு முடியும். இப்போது நம்முடைய முறையாயும் இருக்கட்டும். ஒரு சிவப்பு நூல் எழுகிறது. சொற்களின் பாரத்தின் கீழ் ஒரு காலம் உக்கிய மரப்பலகை அல்ல, மாறாக விரிந்து வளரும் இந்தப் பலகை, பித்தத்தில் ஞானம் என்னும் பலகை, சூரியனை அடைவதற்காக விழித்தெழும் மழை. இப்போது நமது முறையாக இருக்கட்டும். நியூயோர்க் உலகின் நெற்றிக்குக் குறுக்காக உருளும் ஒரு பாறை. அதன் குரல் உமது ஆடைகளிலும் என்னுடையவற்றிலும் உள்ளது, அதன் கரிகள் உமது கைகால்களையும் என்னுடையவற்றையும் நிறமூட்டுகின்றன. முடிவை என்னால் ஆரூடங்கூற முடியும், ஆயினும் அதை நான் காணும் விதமாக என்னை உயிருடன் வைத்திருக்குமாறு காலத்தை நான் ஏற்றுக் கொள்ளச் செய்வது எங்ங்ணம் 2 இது நமது முறையாக இருக்கட்டும். நாம் இப்போது கோடரியை உயர்த்துவோம். இந்தச் சமன்பாட்டின் நீரில் காலம் நீந்தட்டும்: நியூயோர்க் + நியூயோர்க் - சவக்குழியும் சவக்குழியினின்று வரும் எதுவும்
நியூயோர்க்- நியூயோர்க் = சூரியன்.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
48

67607 Gø/
என் தோள்களில் கியூபாவைச் சுமந்து கொண்டு நியூயோர்க்கில் கேட்கிறேன். கஸ்ற் ரோ எப்போது வருவார்? கைரோவுக்கும் டமாஸ்கஸ்"க்கும் இடையே. போகும் வழியில் நான் காத்திருக்கிறேன். Gெவாரா" சுதந்திரத்தைச் சந்தித்தார், அவளோடு காலமெனும் படுக்கைக்குப் போனார், அவர்கள் உறங்கினர். எழுந்த போது அவள் இல்லை.
அவர் நித்திரை விட்டுக் கனவுக்குள் புகுந்தார். Bேர்க்லியிலும்" Bெய்ரூத்திலும் எல்லாமே எல்லாமாகிவிட ஆயத்தமாகும் பிற கூண்டுகளிலும்.
ஆனால் இருளினதும் மணல்களதும் ரோஜாவுக்கு அமைதி கிட்டுக Bெய்ரூத்துக்கு அமைதி கிட்டுக.
வால்ற் விற்மன் (Walt Whitman) சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த, அமெரிக்காவின் பெருமைக்குரிய கவிஞரும் நவீன சிந்தனையாளரும் வசனகவிதையின் மூலவரும்
ஆவார்.
வோல் ஸ்ற்றிற் (Wal Street) நியூயோர்க்கில் உள்ள உலகின் அதி முக்கிய பங்குச் சந்தை.
பச்சைத் தாள்கள் அமெரிக்க டொலர் தாள்கள்.
கிலெற்றின் வீழும் வெட்டுவாளை உடைய கொலைக் கருவி.
எம்பயர் ஸ்7ேற் (Empire State) அமெரிக்காவின் புகழ் பெற்ற வானுயர்ந்த கட்டிடம், சில தசாப்தங்கள் முன்பு வரை உலகில் அதிஉயர்ந்த கட்டிடமாக இருந்தது.
மெடூஸா (Medusa) கிரேக்கப் புராண மரபில் வரும் ஒரு பயங்கரமான பெண். தலையில் மயிர்கட்குப் பதிலாகப் பாம்புகள் இருக்கும்.
கர்குக் (Karkuk) ஈராக்கிலுள்ள எண்ணெய் நகரம்.
பால்ை - அடோனிஸ் கவிதைகள் சில
49

Page 31
டஹ்ரான் (Daham) சவூதி அராபியாவில் உள்ள எண்ணெய் நகரம்.
மெக்காவின் கல்லு : மக்கத்தில் உள்ள நபிகளின் கல்லறை.
திGக்ரிஸ் (Tigris) ஈராக்கில் உள்ள (மெஸபொடேமிய) நதி
இரண்டாவது வருகை இயேசுவின் மறுவருகை பற்றிய குறியீடு.
டயான் (Moshe Dayan) இஸ்ரேலிய ராணுவ ஜெனரலும் 1967 போரில் மிகுந்த முக்கியம் பெற்றவருமாவார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போக்கின் குறியீடாகவே இவரைக் கருதுவர்.
க்றைஸ்லர் கட்டிடம் (Chrysler Building) க்றைஸ்லர் மோட்டார் கார் கம்பெனியின் கட்டிடம்.
இலத்திரனிய மூளை கணினி (கொம்பியூட்டர்)
பொப்பியின் கஸ்தூரி (Musk of popples) அபின் வகைகளைக் குறிக்கிறது.
நிக்ஸன் நிக்ஸன் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இக் கவிதை எழுதப்பட்டது.
அலி இBன் முஹம்மது (Al ibn Muhammed) கி.மு. 9ம் நூற்றாண்டின் கறுப்பு அடிமைக் கிளர்ச்சியாளர்களின் தலைவர். சமத்துவக் கோட்பாட்டாளரான இவரது
படைகள் ஈற்றில் முறியடிக்கப்பட்டன.
அல்-திஃப்ஃபாரி (Muhammed ibn Abd al-Jabba) இஸ்லாத்தின் நான்காம் நூற்றாண்டின் பேர் பெற்ற சித்தர் சுதந்திரமான, அச்சமற்ற சிந்தனையாளர். ஸ0ஃபி போதனைகள் மீது இவரது நூல்களின் பாதிப்பு உண்டு.
உர்வா இBன் அல்-வார்த் (Urwa ibn al-Ward) இஸ்லாத்துக்கு முந்திய 7ம் நூற்றாண்டுக் கவிஞர். சட்டவிரோதியான இவர் செல்வரிடம் திருடி ஏழைகட்கு வழங்குவது பற்றியும் சமூக நீதி பற்றியும் நம்பிக்கை கொண்டவர்.
ஒக்சைடு (Oxide) பிராணவாயுவுடன் பிற மூலகங்கள் இணைவதால் உண்டாகும்
கூட்டுப் பொருள். இங்கு அழிவுத் தன்மை என்ற பொருளில் வருகிறது.
கலி (Caley) தென்வியற்னாமில் மிலாய் கிராமத்தில் நடத்தப்பட்ட படுகொலை நிகழ்வுடன் தொடர்புடைய அமெரிக்க ராணுவ அதிகாரி
மக்னமாரா (Machamara) அமெரிக்காவின் வியற்னாம் யுத்தக் காலத்தில்
அமெரிக்க பாதுகாப்புச் செயலராக கடமையாற்றியவர்.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
5O

ற்றசிற்றஸ் (Tacitus) ரோம சாம்ராஜ்யத்தின் கொடுமையையும் சிதைவையும் ஒட்டிய காலத்தில் வாழ்ந்த ரோமன் வரலாற்றாசிரியராக இருந்தவர்.
லத்தின் பகுதி (Latin uெare) நியூயோர்க்கின் ஒரு பகுதி.
பவ்லொவ் (Ivan Pavlov) 1904ல் நொBெல் பரிசுபெற்ற ரஷ்ய உளவியலாளர். நாய்கள் மீதும் பிற விலங்குகள் மீதும் நரம்பியல் நோய்களை உண்டாக்கி மனிதஉள்ளக் கோளாறுகள் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிக்கு வழிகாட்டியவர்.
GGa)HTTT - Che Guevara
Bேர்க்லி (Berkley) யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த கலிபோனிய பல்கலைக்கழக வளாகம் மாணவர்கள் மீது அமெரிக்கக் காவற்படைகளின்
துப்பாக்கிச் சூடு பற்றிய குறிப்பாக இது.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
51

Page 32
புதிய நோவா
படகில் நாம் பயணித்தோம் கடவுளின் உறுதிமொழிகளே நம் துடுப்புகள். மழையின் கீழும் அழுக்கின் கீழும் நாம் பிழைத்தோம், மனித இனம் பிழைக்கவில்லை. அலைகளுடன் நாம் சென்றே7ம் வானம் மரித்தோராலான கயிறுபோலிருந்தது நம் வாழ்வுகளை அதில் நாம் பிணித்திருந்தோம். பிரார்த்தனைகளாலான சாளரத்தூடு வானை அடைந்தோம்.
'தேவனே பிற மாந்தரையும் உயிர்களையும் விட்டு எம்மை நீர் காத்தது ஏன்? எம்மை நீர் எங்கு எறிவீர்? உமது மற்ற மண்ணுக்கோ, எமது பழைய மண்ணுக்கோ
மரணத்தின் இலைகட் கோ வாழ்வின் காற்றுக்கோ? தேவனே, சூரியன் பற்றிய அச்சம் நம் குருதியில் ஒடுகிறது. நாம் ஒளியில் நம்பிக்கை அற்றோம். புதியதொரு வாழ்வைத் தொடங்கி வந்த நாளையில் நம்பிக்கை அற்றோம் ஆ, ந7ம் மட்டும் சிருஷ்டியினது, பூமியினது ஒரு வித்தாக இல்லாது போயிருப்பின், நாம் மண்ணாகவோ சுடரும் நிலக்கரியாகவோ நிலைத்திருப்பின்,
உலகைக் காணாத விதமாக இருமுறை அதன் கடவுளையும் காணாத விதமாகப் பாதி வழியில் நாம் தரித்திருக்கக் கூடுமெனின்'
பாலை - அடோனரிஸ் கவிதைகள் சில
52

II
காலம் மட்டும் மீண்டும் தொடங்கக்கூடுமெனின் வாழ்வின் முகம் நீரால் மூடப்பட்டிருக்கப் பூமி நடுங்கக் கடவுள் பித்தராக நோவா என்னிடம் 'வாழ்வோரைக் காப்பாற்றுக’ எனக் கேட்டிருப்பின்
நான் கடவுளின் சொற் கேளேன், என் படகில் சரளைக் கற்களையும் குப்பையையும் மரித்தோரின் கட்குழிகளினின்று அகற்றி அவர்களது ஆன்மாக்கட்கு வெள்ளத்தைக் காட்டி அவர்களது நரம்புகளில் மெல்ல உரைப்பேன். நம் அலைச்சல்களினின்று நாம் மீண்டுள்ளோம். குகைக்குள்ளிருந்து வந்துள்ளே7ம். பழைய வானத்தை மாற்றி விட்டோம், நாம் பயணிக்கிறோம், அச்சம் நம்மைப் பிணிக்காது,
நாம் கடவுள் சொற் கேளோம்.
மரணத்துடன் சந்திக்க நமக்கு நேர நியமனம் உள்ளது. நமது விரக்தியின் கடலோரங்களுடன் நாம் பரிச்சயப்பட்டுள்ளேம். அதன் உறைந்த கடலையும் இரும்பு நீரையும் ஏற்கப் பழகிவிட்டோம்.
அதன் இறுதிவரை பயணிக்கிறோம் தொடர்ந்தும் போகிறோம், அந்தக் கடவுள் சொற் கேட்கிலோம்
புதிய ஒரு கடவுளுக்காகக் காத்திருக்கிறோம்.
(விவிலிய (பைபிள்) நூலில், உலகம் வெள்ளப் பெருக்கால் அழிவுக்குள்ளான போது ஒரு கப்பலில் ஒவ்வொரு ஜீவராசியிலும் இவ்விரண்டை ஏற்றி வெள்ளத்தினின்று நோவா அவற்றைக் காத்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு உயிரினங்கள் அழியாது காக்குமாறு கடவுள் நோவாவைப் பணிந்தார் என்பதை
வைத்து எழுதப்பட்டது இக் கவிதை.)
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
53

Page 33
புண்
7.
காற்றுக்களின் அடியிற் துயிலும் இலைகள் புண்ணினின்று வந்த படகுகள் புதைக்கப்பட்ட கடந்த காலமே புண்ணின் மகத்துவம் உன் கண்ணிமைகளில் வளரும் மரங்கள்
புண்ணுக்குரிய தடாகங்கள்.
நமது தேசத்தினதும் மரணத்தினதும் முனைகளைச் சவக்குழி எட்டும் பொழுதின் பொறுமை எட்டும் பொழுதின் கடப்புத் தானமே புண்.
புண், ஒரு குறி.
L/6037, 5/- 1.15a, a 6767g/.
2&.
நெரிக்கப்பட்ட மணியொலியையுடைய பேச்சுக்கு நான் புண்ணின் குரலை வழங்குகிறேன் தொலைவினின்று வரும் ஒரு கல்லுக்காக காய்ந்து போனதொரு உலகுக்காக, வரட்சிக்காக, பனிக்கட்டிப் படுக்கைமீது சுமக்கப்படும் காலத்துக்காக
நான் புண்ணின் நெருப்பை மூட்டுகிறேன்.
என் ஆடைகளில் வரலாறு எரிகையில் என் நூல்களில் நீல நகங்கள் வளர்கையில் 'யார் நீ என் நூல்கள் மீதும் என் கன்னிப்பூமி மிதும் உன்னை எறிந்தவர் யார்?"
என் நண்பகலில் நான் கத்தும் போதும்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
54

என் நூல்களிலும் என் கன்னிப்பூமி மீதும் புழுதியின் விழிகளைக் காண்கிறேன். 'உனது சிறிய வரலாற்றிற் செழிக்கும் புண் நான்' என எவரோ சொல்வது கேட்கிறது.
3.
புண்ணே, பிரிவின் காட்டுப் புறாவே உனக்காக ஒரு மேகத்தை அழைத்துள்ளேன். உனக்காக ஒரு இறகையும் புத்தகத்தையும் அழைத்துள்ளேன் ஆயினும் நான் இங்கே
Bெய்ரூத் தீவுகளில் வீழ்ச்சியின் தீவுத் திரளில் பண்பானதொரு சொல்லுடன் ஒரு உரையாடலைத் தொடங்குகிறேன். ஆயினும் நான் இங்கே புண்ணே, பிரிவின் காட்டுப் புறாவே காற்றுக்கும் தெங்கு" மரங்கட்கும் உரையாடல் கற்பிக்கிறேன்
4.
கண்ணாடிகளதும் கனவுகளதும் தேசத்தில் ஒரு ஒதுக்கிடம் எனக்கிருந்திருப்பின் என்னிடம் ஒரு கப்பல் இருந்திருப்பின்
676ðrøðifol Lió குழந்தைகளதும் அழுகையினதும் நாட்டின் ஒரு நகரின் மீதங்களோ
ஒரு நகரோ இருந்திருப்பின்.
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
55

Page 34
புண்ணுக்காக
நான் இவையனைத்தினின்றும் மரங்களையும் கல்லையும் விண்ணையுந் துளைக்கும் ஈட்டி போன்றும்
நீர் போன்று மென்மையாகவும் வெற்றி கொள்ளல் போன்று ஆட்கொண்டு சிலிர்க்கவைக்கும்
ஒரு பாடலைச் செய்திருப்பேன்.
ó.
ஒரு கனவையுங் காத்திருப்பையும் கொண்டுள்ள வையகமே எங்கள் பாலைகள் மீது மழை பெய் புண்ணின் தெங்கு மரங்களான நம்மை மழைபெய்து உலுப்பு புண்ணின் மோனத்தை நேசிக்கும் மரங்களினின்று வளைந்த கண்ணிமைகளுடனும் கரங்களுடனும் புண்ணின் மீதாகக் காவலிருக்கும் மரங்களினின்று நமக்காக இரண்டு கிளைகளை முறித்துத் தா.
ஒரு கனவையுங் காத்திருப்பையுந் கொண்டுள்ள வையகமே, என் நெற்றி மீது வீழ்ந்து புண்போல் வரையப்பட்ட வையகமே, நெருங்காதே, புண் உன்னைவிட அருகிலுள்ளது, என்னைத் தூண்டாதே, புண் உன்னை விட அழகானது. இழந்த நாகரிகங்களின் மீது
உன் விழிகள் வீசுகின்ற
விதிக்கும் அப்பாலுள்ளது புண் அதற்குப் பாய்களும் மீதமில்லை
தீவுகளும் மீதமில்லை.
(* தெங்கு மரங்கள் தென்னை, பனை, ஈச்சை மர வகைகளைக் குறிக்கும்
பொதுவான கருத்தில் இங்கு வருகிறது)
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
56

அடோனிஸ் கவிதைகள்:
நவீனத்துவம், அழகியல், சமுதாய உணர்வு
அரபுக் கவிதைகள் பற்றி இன்று நம்மிடையே இருக்கும் சிறிதளவு அக்கறையின் தோற்றுவாய் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் எனலாம். இந்த அக்கறையை உருவாக்கியதில் முற்போக்கு இலக்கியவாதிகளது பங்கு முக்கியமானது. இலங்கையின் தமிழின விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியுடன் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு ஆன்மீக நெருக்கம் இருந்தது. 1960களில் தமிழரசுக் கட்சி (ஃபெடரல் கட்சி) இளைஞர் சிலரிடையே இஸ்ரேலின் 'வெற்றிகரமான இருப்பு' பற்றிய ஒரு பிரமிப்பு இருந்தது. 1967இன் யுத்தமும் 1970க்குப் பின் தேசிய இனப் பிரச்சனையில் ஏற்பட்ட திருப்பங்களும் பலஸ்தீனப் பிரச்சினை பற்றிய தெளிவான ஒரு பார்வையை இயலுமாக்கின. இதில் இடதுசாரிகளே முன்னோடிகளாக இருந்த போதும், காலஞ்சென்ற அமிர்தலிங்கத்தை ‘ஈழத்து அரஃபாத்' என்று தமிழரசுக் கட்சியின் இளம் வட்டங்களில் வர்ணிக்கக் கேட்கும் நிலை ஈழத் தமிழ்த் தேசியவாதத்தில் ஒரு முக்கியமான மாறுதல்தான். சில பலஸ்தீன விடுதலை இயக்கங்களுடன் ஈழவிடுதலை இயக்கங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டன. இத்தகைய ஒரு குழலில், 1980களில் நுஃமானால் தமிழாக்கப்பட்ட சில கவிதைகளின் தொகுதியான "பலஸ்தீனக் கவிதைகள்’ குறிப்பிடத்தக்க கவனிப்பைப் பெற்றது. நுஃமான் அறிமுகப்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மஹ்முத் தர்விஷ் (Mahmud Darwish). சென்ற ஆண்டு அவரது இருபத்தைந்து கவிதைகளின் தமிழாக்கங்கள் யமுனா ராஜேந்திரனால் தொகுக்கப்பட்டு நூல் வடிவு பெற்றன. சமகால அரபுக் கவிஞர்களில் தர்விஷ்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
57

Page 35
முக்கியமானவராகக் கொள்ளப்படுவதற்கு அவரது கவிதைகளின் அரசியல் முக்கியத்துவம் மட்டுமே காரணமில்லை. 1948இல் ஸியோனிஸம் பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்ற அரச அதிகாரச் சுவட்டைப் பதித்த போது அம்மண்ணின் அமைதி கெட்டது. அது மூன்று போர்கட்கும் பல லட்சக்கணக்கானோரின் புலப் பெயர்வுக்கும் காரணமாயிற்று. அரபு மக்கள் மீது சுமத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சுமை அதைச் சுமத்தியவர்களது நோக்கங்கட்கு எதிரான சில மாற்றங்களையும் துரிதப்படுத்தியது. எகிப்து, ஈராக், ஸ்பிரியா போன்ற நாடுகளில் 1950 களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களில் புண்படுத்தப்பட்ட அரபுத் தேசிய உணர்விற்கு ஒரு முக்கிய பங்குண்டு. ஆயினும் இந்த மாற்றங்களால் தமது சீர்திருத்தவாத அரசியல் நோக்கங்களை கூட முழுமையாய் நிறைவேற்ற இயலவில்லை. நெறிகெட்ட அரசர்களதும் ஷேக்குகளதும் ஆட்சிகளை ஒத்த புதிய அடக்குமுறை ஆட்சிகள், அமெரிக்காவினதோ சோவியத் யூனியனதோ தயவில், அதிகாரத்திற் தொடர்ந்த நிலைமைகளை நாமறிவோம். எனினும் 1960களிலும் 1970களிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அரபு நாடுகளிற் பலவற்றில் ஓங்கியிருந்தது. சமகால அரபுக் கவிதையில் இதன் பாதிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது செல்வாக்கைக் காட்டுகிறது. விரியாவில் 1930இல் பிறந்த அடோனிஸ் (இயற் பெயர்: அலி அஹ்மத் ஸாய்த் - Ali Ahmed Said) கவிதையொன்றால் தனது நாட்டு ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ந்தார். அவருக்கு மேற்கொண்டு கல்வியைத் தொடர உபகார நிதி வழங்கப்பட்டது. 1950இல் டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவரது எழுத்துக்களின் சமுதாய உணர்வு அரசாங்கத்தின் பகைமையைச் சம்பாதித்தது. 1956இல் லெபனானுக்கு நாடு கடத்தப்பட்ட அடோனிஸ் அதன்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
58

குடிமகனாகத் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். 1957இல் லெபனியக் கவிஞர் யூஸுஃப் அல்-க்ஹால் (Yusuf al-Kha) என்பவருடன் இணைந்து ஒரு வெளியீட்டகத்தை நிறுவினார். 1968இல் அவர் தொடக்கி வைத்த மெளoஃபிகிஃப் (Mawfqi) என்ற சஞ்சிகை பரீட்சார்ந்த அரபுக் கவிதையின் மிக விரிவான களமாக விளங்கியது. g5/ïønî7an, sy'GL/760farv, 6pv Lólabio egyai -6p6výluh (Samih al Qasim) ஆகிய மூவரது கவிதைகளையுங் கொண்ட தொகுதியொன்று
6ọớỹ (33777 / // ả6)yỏé9/7 L/6ỷu/7(ởaờ7/7/7’ (Victims of a Map) என்ற தலைப்பில் 1984இல் வெளியானது. அரபு சமுதாயத்தின் நவீன மயமாதலை மிகவும் வேண்டி நிற்கும் அடோனிஸின் கவிதைகளும் விமர்சனங்களும் அரபு இலக்கியத்தின் நவீனத்துவத்துக்கும் பெரிய பங்களித்துள்ளன என்ற கருத்தை நவீன அரபுக் கவிதைத் தொகுப்பாளர்களது குறிப்புகளின் மூலம் அறியலாம். அரபுக் கவிதைகள் நம்மை ஆங்கில வாயிலாகவே வந்தடைகின்றன. நான் இதுவரை வாசித்த முப்பது சொச்சம் அடோனிஸ் கவிதைகள் 1986 வரையிலான காலத்துக்குரியன. அவற்றுள் அதி முக்கியமானதாகக் கொள்ளத் தக்கது 'பாலை: முற்றுகையிடப்பட்பட்ட பெய்ரூத்தின் நாட்குறிப்பு, 1982 இது லெபனானுள் இஸ்ரேலியப் படைகள் புகுந்த காலம் தொடர்பானது. மொத்தம் 57 குறுங்கவிதைகளாலானதும் இரண்டு பகுதிகளாக அமைந்ததுமான இக் கவிதை அந்த முற்றுகைக் காலத்தின் அவலத்தை மட்டுமன்றி ஒடுக்குமுறைக்குள்ளான அராபியனது எதிர்ப்பு உணர்வையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூல வடிவம் 'ஒரு தேசப் படத்திற்குப் பலியானோரில் பிரசுரமானது. 1985இல் இது திருத்தி எழுதப்பட்டது. அடோனிஸின் கவிதைகளில் வெளிவெளியான போராட்டக் குரலோ எந்த விதமான இயக்கச் சார்போ இல்லை. ஆயினும் அவரது குரலில் அரசியல் பிரிக்க முடியாதவாறு
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
59

Page 36
இணைந்துள்ளது. அது ஒடுக்குமைக்குட்பட்ட பிற மனிதர்களது குரல்களுடன் மிகுந்த ஒற்றுமையையுடையது. மிகவும் பாராட்டுக்குரியதான அவரது ஒரு மூன்றடிக் கவிதை 'கோபுரம்"
அயலவன் வந்தான்
கோபுரம் அழுதது
அவன் அதை வாங்கி உச்சியில் ஒரு
புகைபோக்கியை வைத்தான்.
இதற்குப் பல்வேறு வியாக்கியானங்கள் தரப்படக் கூடுமாயினும், எந்த வியாக்கியானத்தாலும் அதன் அயல் ஆதிக்க விரோதப் பண்பைப் புறக்கணிக்க இயலாது. இது போலவே, அக்கினி விருட்சம்' என்ற கவிதையிலும் இஸ்ரேலியக் குடியேற்றங்களது விளைவான பாதிப்பு மிகவும் செறிவாகத் தரப்பட்டுள்ளது.
கசங்கிய இலைகளின் குடும்பமொன்று
கணையருகே விழுந்தது.
அவை கண்ணின் தேசத்தை வாட்டின
நீரிடம்
அக்கினி ஏட்டை வாசித்தன
என் குடும்பம் எனக்காகக் காத்திருக்கவில்லை
நெருப்பையோ அடையாளங்களையோ
அவர்கள் விட்டுச் செல்லவில்லை. அடோனிஸின் குரல் ஏமாற்றத்தின் குரலாகத் தொனிக்கும் இடங்களிலும் எதிர்ப்புணர்வு ஓங்கியுள்ளது. போராட்டத்தின் மீதான வெளிவெளியான நம்பிக்கை அங்கு இல்லாவிடினும் விரக்தியை அவை வலியுறுத்தவில்லை. அவரது கவிதைகள் 1940கட்குப் பிற்பட்ட அரபுக் கவிதைகள் பல போன்று, சொந்த மண்ணிலேயே அராபியர் அயல7ர் போலாக்கப்பட்ட ஒரு நிலையையே மீண்டும் மீண்டும் கூறுவன. தமிழ்க் கவிதையுலகில் தலைதூக்கியிருக்கும் தன்னையும் தன்பாலான
கழிவிரக்கத்தையும் குழப்பமான உள்மனத் தேடல்களையும்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
6O

அடனோனிஸிடமோ பெருவாரியான பிற நல்ல அரபுக் கவிஞர்களிடமோ என்னால் இதுவரை காண இயலவில்லை. அங்கும் சுய அனுபவம் உள்ளது. ஆயினும் அது ஒரு பொதுமையை நோக்கி விரிகிறது. சமுதாயத்தைச் ச7ர்ந்து நிற்கிறது. (ஈழத்து கவிதைக்கு இன்றைய நெருக்கடி தந்த உந்துதல் இவ்வாறான விரிவைச் சார்ந்தது என்றே நினைக்கிறேன்). அடோனிஸின் 'பாலை'யில் வருகிற நான்', எல்லாருக்குமாகப் பேசுவதாகப் பம்மாத்துச் செய்யவில்லையாயினும், மெய்யாகவே எல்லாருக்குமாகப் பேசுகிறது. ஏனெனில் அவரது குரல் அராபியனது அவலத்தின் வெளிப்பாடு மட்டுமல்லாது அதனின்று விடுபடத் துடிக்கும் நெஞ்சின் குரலுமாகும். இதுவே அதன் பொதுமையின் ஆதாரம்.
எனது யுகம் பச்சையாகவே எனக்குச் சொல்கிறது:
நீ இவ்விடத்துக்கு உரியவனல்ல.
நானும் பச்சையாகவே பதிலளிக்கிறேன்:
நான் இவ்விடத்துக்கு உரியவனல்ல.
உன்னை விளங்கிக் கொள்ளவே முயல்கிறேன்.
நான் இப்பொழுது
பாலையில் தொலைந்து போய்
ஒரு மண்டையோட்டின் கூடாரத்துள்
பாதுகாப்புத்தேடும் ஒரு நிழல்
(77-7 رعة (760//L)
நான் முரண்பாடுகள் நிறைந்தவனா? அது சரியே. இப்போது நானொரு செடி நேற்று நெருப்பிற்கும் நீருக்குமிடையே இருந்த வேளை
நானொரு அறுவடை இப்போது நானொரு ரோஜாவும் எரியும் நிலக்கரியும்
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
61

Page 37
இப்போது நான் சூரியனும் நிழலும் நான் இறைவனல்ல நான் முரண்பாடுகள் நிறைந்தவனா? அது சரியே.
(Il-4) மேற் குறிப்பிட்ட கவிதைப் பகுதிகளை அவற்றுக்குரிய சூழலுக்குப் புறமாக வைத்து மேற்கொள்ளப்படும் வாசிப்பு தனி மனித மன உளைச்சலின் ஒரு வெளிப்பாடாகவே அவற்றைக் கருத இடமுண்டு. மறுபுறம் அடோனிஸின் தனிமனித இருப்புப் பற்றி ஆராய்வுகள் வேறு வியாக்கியானங்களையும் தரலாம். கவிதை குறிக்கும் களமும் காலமும் அடோனிஸின் நான்', பெய்ரூத் நகரின் அராபியன் மட்டுமல்லாது, பலஸ்தீனத்தையும் இணைத்து அராபியனது நெருக்கடி மிகுந்த இருப்பைக் குறிக்கிறது. படிமக் கவிதைகளைப் புரிந்து கொள்வதில் உள்ள இடர், மொழி மாற்றத்தால் மேலுஞ் சிக்கல் அடைகிறது. ஆயினும், அடோனிஸின் பாலையும் பிற கவிதைகளும் தம் குழல்களை ஒரளவேனும் அறிந்தவர்கட்கு அதிகம் தெளிவீனத்துக்கு இடமளிக்க மாட்டா. அடோனிஸ் மரபு சார்ந்த சில கவிதை வடிவங்கட்குப் புத்துயிருட்டும் முயற்சிகளில் இறங்கினாரென அறிகிறேன். அவற்றை ஆராயும் அளவுக்கு அரபுக் கவிதை மரபு பற்றிய அறிவு எனக்கில்லை. ஆயினும் அடோனிஸ் கையாளும் கவிதை வடிவங்களிலும் படிமங்களிலும் நாம் காணக்கூடிய வேறுபாடுகள் அவரது ஆளுமையைச் சாடையாகவேனும் நமக்குப் புலப்படுத்துவன.
நகரங்கள் சிதறுகின்றன இத்தரை ஒரு புழுதி மண்டலம் கவிதையால் மட்டுமே இவ்வெளியை
மணக்க முடியும் இங்கு 60கட்குப் பிற்பட்ட காலத்தில் பலஸ்தீனத்திலும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளிலும் கவிதை மூலமே
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
62

பலர் தமது இருப்பை வலியுறுத்தினர் எனக் கூறக் கேட்டுள்ளேன். மேற்கூறிய வரிகளும் அக் கருத்தையே நினைவூட்டுகின்றன. அடோனிஸின் கவிதைகள் இலக்கியத்தில் அழகியல் தொடர்பான கேள்விகட்குப் பயனுள்ள விளக்கங்களைத் தருகின்றன என நினைக்கிறேன். அடோனிஸின் எந்த அரசியல் இயக்கச் சார்பும் உடையவரோ தெரியாது. அவரது மத நம்பிக்கை பற்றியும் எனக்குத் தெரியாது. அவர் எழுதியவற்றில் அரசியலும் ஆழமான சமுதாய உணர்வும் உள்ளன. விடுதலைக்கான கோஷங்கள் இல்லாமை விரக்தியைக் குறிக்கும் என நான் நம்பவில்லை. ஆயினும் சொந்த மண்ணிலேயே அந்நியமாகிப் போன எவருக்கும் அதனுடன் நெருக்கமான உறவு பூண இயலும். இதற்கும் மேலாக எதையும் எழுதுவதைவிட, என் இயல்புக்கேற்ற சில தமிழ்ப்படுத்தல்களை இங்கு தருவது
தகும.
('காலச்சுவடு மும்மாத ஏட்டில் 1997ல் அடோனிஸ் கவிதைகள் சிலவற்றை அறிமுகப்படுத்தி எழுதிய குறிப்பு இது)
பாலை - அடோனிஸ் கவிதைகள் சில
63