கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வீடும் வெளியும்

Page 1
மஹாகவி
* அன்ருட நிகழ்ச்சிகளேயும் அனுபவங்களேயும் நோக்கி மஹாகவியின் கவிதை திரும்பியதே முக்கிய மான் ஒரு திருப்புமுனேயாகும். ஏனெனில், மஹா கவிபோல், தமிழ்நாட்டில் பிச்சமூர்த்தியோ, அல்லது வேறு எவரோ அன்ரூட வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்னும் ெ 1ளதீக அடிப்படையை அல்லது யதார்த்த அடிப்படைபை-நோ Fight இருந்தால் இன்று த
"மஹாகவி' ஒரு பு T கும் ஒர் சி-நா இன்னமும் பாரதி யுகத்தில் இருக்கிே ன்றுசேர்ல்வது தவறு. பாரதி பரம்பரையின்-இாதித்-தளிர்கள்
பழுத்துக்கெண்டிருக்கின் என்பது மெய்யே. శిక్స్టి விட்டது. அதன் ஒரு கின்மே அதன் மறுகிஃா மஹாகவியே. கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்னுல் அத் தோல்வி நிகழாமல் அதனே இன்னு பொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹா கவி எனலாம். ( கோடை, பக், 67 72 )
முகம் சிவலிங்கம்
have yet to experience et's rich personality. ectly recognised as a ited the more important trends
Daily News 47.7
if writing.
C H MT真亡-』」
 
 
 
 
 
 
 
 
 


Page 2

மஹாகவியின் வீடும் வெளியும்
வாசகர் சங்க வெளியீடு- 6

Page 3
ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தேன்மொழி, தினகரன், அறிவொளி, கவிஞன், கலைமகள், இளங்கதிர், கலைச்செல்வி முதலிய
M. VM ஏடுகளிலும் இலங்கை வாஞெலியிலும் கவியரங்குகளிலும் 1943க்கும். 1969க்கும் இடையில்
- அவ்வப்போது இக்கவிதைகள் வெளியிடக் காலானவர்களுக்கு s . மஹாகவியின் நன்றிகள்.
முதற் பதிப்பு: ஜூன் 1973
வெளியீடு: வாசகர் சங்கம், "நூறிமன்சில் கல்முனை - 6, இலங்கை,
உரிமை : திருமதி பத்மாசனி உருத்திரமூர்த்தி *நீழல் அளவெட்டி,
அச்சு: குகன் அச்சகம் கே. கே. எஸ். வீதி, தெல்லிப்பழை,
ஒவியம்: எஸ். கே. செளந்தராஜன் (சென).
விலை: ரூபா 3.00

சில அறிமுகக் குறிப்புகள்
ஜ"ன் மாதம் 29ஆம் திகதியுடன் மஹாகவி மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைகின்றன. மஹாகவி யின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு இப் போது " வீடும் வெளியும் " என்னும் இக் கவிதைத் தொகுதியை வெளியிடுகின்ருேம்.
உண்மையில் இத் தொகுதி 1969இல் வெளிவந்திருக்க வேண்டும்."கண்மணியாள் காதை" வெளிவந்த சூட்டோடு அடுத்து வெளியிடுவதற்காக மஹாகவியே தன் கைப்பட இதில் உள்ள கவிதைகள்ைத் தொகுத்திருந்தார். அதற் காக ஒரு முகவுரையும் எழுதினர். ஏ. ஜே.யிடம் இருந்து ஒரு முன்னுரை வாங்கும் எண்ணமும் அவருக்கு இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவரது காலத்தில் இது வெளிவர முடியாது போயிற்று. -
* வீடும் வெளியும் * மஹாகவியின் ஆருவது நூல் ஆகும். அவரது இரண்டாவது கவிதைத் தொகுதியும் இதுவே. இதற்கு முன்னர் வெளிவந்த கண்மணியாள் காதை", "ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் ஆகிய இரண்டும் காவிய வகையைச் சேர்த்தன. கோடை * ஒரு பாநாடகம். " குறும்பா " கவிதைப்பாங்கான விகடத் துணுக்குகளின் தொகுதி. 1955இல் வெளிவந்த "வள்ளி", இப்பொழுது வெளிவந்துள்ள " வீடும் வெளியும் " ஆகிய இரண்டுமே மஹாகவியின் கவிதைத் தொகுப்புக்கள் ஆகும். V
1943 க்கும் 69க்கும் இடைப்பட்ட காலத்தில் மஹா கவியால் எழுதப்பட்ட பல நூற்றுக்கணக்கான கவிதை களில் இருபத்தைந்து மட்டுமே இத்தொகுப்பில் உள்ளன. கவிதைகள் ஒவ்வொன்றும் எழுதப்பட்ட சரியான திகதி கள் தெரியவில்லை. பிரசுரமான ஆண்டுகளே கவிதைகளின் இறுதியிற் கொடுக்கப்பட்டுள்ளன. ஐந்து கவிதைகளின் பிரசுரத் திகதி திட்டமாகத் தெரியாததால் கொடுக்கப் படவில்லை.

Page 4
இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் கால ஒழுங்குப் படி வரிசைப்படுத்தப்படவில்லை. கவிதைகளின் வைப்பு முறை மஹாகவியுடையது. பத்திரிகைகளிலே பிரசுர மானதற்கும் இத்தொகுப்பிலே உள்ளதற்கும் இடையில் சில கவிதைகளில் சிற்சில மாற்றங்கள் உள்ளன. அவை ம்ஹாகவியினல் செய்யப்பட்ட இறுதி மாற்றங்களாகும்.
2. வீடும் வெளியும் " என்ற கவிதையின் தலைப் பையே மஹாகவி இத்தொகுதிக்கும் தலைப்பாக வைத் துள்ளார். தலைப்புக்கு ஏற்ப இத்தொகுப்பு இரண்டு கூறு களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாம் கூறு வீடு : பால் உறவும் அதுசார்பான தனிமனித, சமூகப் பிரச்சினைகளும் உணர்வு நிலைகளும் பிரதிபலிக்கப்படுகின்ற பத்துக் கவிதை கள் முதலாம் கூறில் அடங்குகின்றன. இரண்டாம் கூறு வெளி : பால் உறவு தவிர்ந்த, தனிமனிதனுக்கும், சமூ கத்துக்கும், இயற்கைக்கும் இடையிலான உறவு நிலைகளும் அவைசார்பான உளவியல், சமூகஇயல் நிலைமைகளும் பிரதிபலிக்கப்படுகின்ற பதினைந்து கவிதைகள் இரண்டாம் கூறில் அடங்குகின்றன.
மிகக் குறுகிய அர்த்தத்தில் சொல்வதானுல் அகம், புறம் என்ற பண்டைய தமிழ் இலக்கிய மரபை ஒட்டி இக் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன எனலாம். ஆனல் தற்கால வாழ்க்கை மூறைக்கும் இலக்கிய நோக்குகளுக் கும் ஏற்ப இத்தொகுப்பு மிகப் பரந்த அர்த்த விரிவைக் கொண்டுள்ளதை யாரும் சுலபமாகக் கண்டுகொள்ள (tpւգ պth. *
3. செய்யுள் இலக்கியத்தின் பிரிவுகளான கவிதை, காவியம், பா நாடகம் முதலிய துறைகளில் முக்கியத்துவம் உடைய அநேக பங்களிப்புக்களை மஹாகவி செய்துள்ளார். தமிழ்ச் செய்யுள் இலக்கியத்தை நவீனப்படுத்தியதில் மஹாகவியின் பங்கு கணிசமானது. அதிலும் குறிப்பாகக் கவிதைவடிவம் மஹாகவியின் மூலம் ஒரு புதிய பரிணு மத்தை அடைந்தது. மஹாகவி தற்காலத் தமிழ்க் கவிதை உலகில் ஒரு முக்கியமான சக்தியாகத் திகழ்ந்தார் என்பதற்கு இத் தொகுதி ஒரு சிறு உதாரணமாகும்.
தற்கால வாழ்க்கைப்புலத்தைக் களமாகக் கொண்டு இன்றைய நடைமுறை வாழ்க்கையை யதார்த்தபூர்வ

மாகச் சித்திரிக்கும் முறையைத் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்தமை மஹாகவியின் முக்கிய பங்களிப்புகளுள் ஒன்று எனலாம். இந்த வகையில் பாரதி - பாரதிதாசன் வழிக் கவிஞர்களில் இருந்தும் பிச்சமூர்த்தி வழிக் கவிஞர் களில் இருந்தும் மஹர் கவி தனித்துத் துலங்குகின்றர். இன்றைய அநேக கவிஞர்களைப்போல் நடப்பியல் வாழ்வில் இருந்து ஒதுங்கிச் செல்வதோ, அக உலகுள் அடையுண்டு கிடப்பதோ, மனுேரதியக் கற்பனை உலகில் சஞ்சரிப்டதோ மஹாகவியின் இயல்பு அல்ல. கற்பனுர்த்தப் பண்புகள் சில மஹாகவியின் சில கவிதைகளில் காணப்படும்போதி லும் யதார்த்தப் போக்கே அவரது பெரும்பான்மை யான படைப்புக்களில் முனைப்பாகத் தெரிகின்றது. இத் தொகுப்பில் உள்ள அநேக கவிதைகள் அதற்கு உதாரண மாக உள்ளன.
4. கவிதையின் வடிவ அமைப்புக்கு ஒரு முழுமை கொடுத்ததிலும் மகாகவியின் பங்கு முக்கியமானது. செய்யுள் உருவமும் கவிதை வடிவமும் ஒன்றே என மயங்கும் அநேகர் இன்றும் உள்ளனர். விருத்தம், வெண்பா, அகவல், சிந்து போன்ற செய்யுள் உருவங் களில் கட்டுரைப்பாங்கில் எழுதப்படும் கருத்துக்கள், சங்கதிகள் அனைத்தும் கவிதைகள் என்றே கருதப்படு கின்றன. இதன் மறுதலையில் புதுக் கவிதைக்காரர் எனப் படுவோர் வரிசை அமைப்புடைய உரைநடையில் எழுதப் படும் துணுக்குகள், நொடிகள், கிண்டல்கள், கருத்துரை கள் அனைத்தும் கவிதை என்றே கருதுகின்றனர். மஹா கவி இவ்விரு போக்கில் இருந்தும். மாறுபடுகின்றர். அவர் தனது கவிதைகளுக்கு மரபுரீதியான செய்யுள் உருவங்களையே கையாண்டபோதிலும், அவரது கவிதை களின் வடிவ அமைப்புக்கும் அவர் கையாளும் செய்யுள் உருவங்களுக்கும் இடையே - அவை கவிதைப் பொருளின், வைப்பு முறைக்கான ஓர் ஊடகமாக மட்டுமே பயன் படுகின்றன என்பதைத் தவிர - உள்ளார்ந்த பிணைப்புகள் எதுவும் இல்லை. அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் தம்மளவில் செய்யுளுக்குப் புறம்பான, முழுமையான வடிவ அமைப்பு உடையவையாக உள்ளன. ஒரு கவிதை யின் தொனிப்பொருள் அக் கவிதை முழுவதும் பரவி, படிப்படியாக வளர்ச்சியுற்று முழுமை அடைகின்றது அதனுல் ஒரு கவிதையின் ஒரு அடி அல்லது ஒரு வாக்கியம்

Page 5
அல்லது ஒரு தனிச் செய்யுள் தனித்துப் பிரித்தெடுக்கப் பிடும்போது அக் கவிதையின் முழுமை கெட்டுப் பொருள் ஆறிவும், சின்தவும் நிகழ்கின்றது. அக் கவிதையின் தொனிப்பொருள் கவிதை முழுவதும் வியாபித்து முழுமை பெற்றிருப்பதே அதன் காரணம் ஆகும். அநேகமாக மஹாகவியின் எல்லாக் கவிதைகளிலும் இப் பண்பை நாம் காணமுடியும். பிற கவிஞர்களிடம் இருந்து மேற்கோளுக் குரிய வரிகளைத் தாராளமாக எடுத்தாள்வதுபோல் மஹா கவியிடம் இருந்து எடுத்தாளமுடியாமல் இருப்பதற்கு அவரது கவிதைகளில் காண்ப்படும் இப் பிரிபடா வடிவ முழுமையே காரணம் ஆகும். சங்ககாலக் கவிதை அமைப்பு முறையின் ஒரு தற்கால வளர்ச்சி நிலையாக நாம் இதனைக் கருதலாம். இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ஏறக் குறைய அனைத்தும் இப் பிரிபடா வடிவமுழுமை பெற் றிருப்பதைக் காணலாம்.
5 தமிழ்ச் செய்யுள்நடை வளர்ச்சியிலும் மஹா கவியின் பங்கு குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உடையது. தற்கால உரைநடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப்படுத்துவதில் மஹாகவி பல வெற்றிகள் கண்டுள்ளார். இன்றைய உரைநடை வாக்கிய அமைப் புடன் அதிகபட்ச ஒற்றுமையுடைய செய்யுள் வாக்கிய அமைப்பை மஹாகவி கையாண்டார். இத்தகைய வாக்கிய அமைப்பும் அன்ருட வழக்கில் உள்ள சொற் களையே கையாண்டதும் மஹாகவியின் செய்யுள் நடைக்கு உரைநடைபோன்ற ஒரு பேச்சோசைப் பண்பைக் கொடுத்தன. ஈழத்தில் இன்று ஆற்றல்வாய்ந்த கவிஞர் கள் எல்லோரும் செய்யுள் நடையை இடறலற்று அனயாச மாகக் கையாள்வதற்கு மஹாகவி ஒரு முன்னுேடியாக அமைந்திருக்கிருர். தமிழ்நாட்டில் செத்துக்கொண்டிருக் கும் செய்யுளுக்கு ஈழத்தில் ஒரு புது உயிர் கொடுக்கப் பட்டது. மஹாகவியே அதில் தலையாய பங்கு வகித்தார். பல்வகைப்பட்ட செய்யுள் உருவங்களின் ஒரு புதிய வளர்ச்சி நிலையை இத் தொகுப்பில் நாம் அவதானிக்க
6. மஹாகவியின் அலாதியான வெளிப்பாட்டுத் திறனும் குறிப்பிட்டுக் கூறப்படவேண்டிய ஒன்றே. அது அவரது தனித்துவத்தின் பிறிதொரு முக்கிய கூறு ஆகும்.
翌 够
W.

ஆரம்பகாலத்தில் பாரதிதாசனின் செல்வாக்கு அவரிடம் காணப்பட்டது. இத் தொகுப்பில் உள்ள "இரண்டாவது திருமணம் அதற்குச் சான்று. ஆனல், வெகு விரைவில் அவர் தனக்கென்று ஒரு பாணியை வளர்த்துக்கொண் டார். கூர்ந்த புலன் உணர்வும், ஆழ்ந்த அழகியல் ஈடுபாடும், அனயாசமான சொல்லாட்சியும் ஒன்றிணைந்த மஹாகவியின்) வெளிப்பாட்டு முறை அழகியல் மதிப்பு உடைய ஒரு தனிப் பாணியாக அமைந்துள்ளது. மஹா கவியின் ஆற்றல் வாய்ந்த இவ் வெளிப்பாட்டுத் திறனை இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்திலும் காணலாம்.
7. தமிழ்க் கவிதைத்துறையில் மஹாகவியின் தனிச் சிறப்பியல்புகள் இன்னும் சரியானமுறையில் பரவலாக இனங் காணப்படவில்லை. மஹாகவியின் படைப்புக்கள் அனைத்தும் நூலுருப் பெறுவதும், வரலாற்றுரீதியில் புறநிலைப்பட்ட ஆய்வுமுறைக்கு அவற்றை உட்படுத்து வதும் மஹாகவியைச் சரியான முறையில் இனங்காண உதவக்கூடும். ஈழத்தில் இங்பொழுது முளைவிட்டுக்கொண் டிருக்கும் புரட்சிகரக் கவிதை உணர்வு மஹாகவியின் கலைமுறையைக் கிரகித்துக்கொண்டு மேலும் செழுமை உறுவதற்கும் அது வழிகோலும்,
ஆகவே மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு வாசகர் சங்கத்துடன் இணைந்து இத் தொகுப்பை வெளியிடுகின் றது. எனது வேண்டுகோளுக்கிணங்கி இத் தொகுப்புக்கு ஒரு நல்ல முன்னுரை எழுதி உதவிய ஏ. ஜே. கனகரத்தின அவர்களுக்கும் ஒவியர் செளவுக்கும் எனது நன்றிகள். குறுகிய கால எல்லையுள் இந்நூலை வெளியிடுவதற்கு முன்னின்று உழைத்த நண்பர் மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்களுக்கும் குகன் அச்சகத்தினருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
எம். ஏ. நுஃமான் ஜூன் 1973 பதிப்பாளர், வாசகர் சங்கம்
viii

Page 6
viii.
சிறுகவிதை
சிறுகதை என்பது செட்டான புதிய இலக்கிய வடிவமாகும். சிறிய கவிதைகள் சிலவற்றை அவற் றின் பாங்கிலே வடிக்க நான் விரும்பியதால் கிடைத்தவை இத் தொகையிலே உள்ளன.
நவீன வடிவங்களான சிறுகதை, நாவல் ஆதியன நவீன உரிப்பொருளைக் கையாண்ட வேளை கவிதை மட்டும் பழைய பொருள் மரபைப் பற்றியே சுழன்றமையால் அருகிவரும் கலை எனக் கருதுமா ரூயிற்று. நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளை யும் கவிதையில் ஆண்டு அதனை இன்றைய யுகத் துக்கு இழுத்துவரல் அவசியமாகும்.
தனிச் சொற்களின் வளர்ச்சியின் அடுத்த நிலையே வாக்கியம் என்பதுபோல, வசனத்தின் அடுத்த உயர் நிலையே செய்யுள் ஆகும். நீளக் குறைவாலும், பார்வையின் அகலம் இன்மை யாலும் சுவைஞர்களை முழுமையாக ஆட்கொள்ள முடியாத சிறுகதையினது அமைப்பைக் கவிதை யாகச் செய்யுளில் வார்க்கும்போது நிறைவுற்ற
இலக்கிய வடிவம் ஒன்று தோன்றுதல் கூடும்.
சிறுகதை இரு பரிமாணப்பொருள் ஆஞல், அதன் un š66 அமைந்த கவிதை முப்பரிமாண அமைப்பை ஒத்து மிளிரலாம்.
* நீழல் ", * toghnfrasaíl ps அளவெட்டி, இலங்கை. 21 - 5 - 69

மஹாகவியின் வீடும் வெளியும்
தமிழ்க் கவிதைக்குத் தொடர்ச்சியான ஒரு மரபு உண்டு. அம் மரபினை அறிந்தவர்தான் அதனை எடை போட வல்லவர் தகைமையுடையவர். எனக்கு அத் தகைமை இல்லாவிடினும், முன்பு மஹாகவியும், இப் பொழுது நுஃமானும் இட்ட அன்புக் கட்டளைக்குக் கட்டுண்டு ஒரு சாதாரண வாசகன் என்ற முறையில் இத் தொகுப்பிலே இடம்பெற்றுள்ள கவிதைகளில் நான் சுவைத்தவற்றைக் குறிப்பிட விழைகின்றேன்.
அமரர் மஹாகவி, மரபில் ஊறித் திளைத்தவர். ஆனல், கட்டுப்பெட்டித்தனம் படைத்தவர் அல்லர். மரபும், புதுமையும் அவரிடம் சங்கமித்திருந்தன. இந் நூலிலே இடம்பெற்றுள்ள 'அகலிகை’ இதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு. பழைய் கதைதான். ஆனல், அவர் அதனைச் சொல்லும் பாணியும், நோக்கும், கோணமும் அதற்குப் புதிய மெருகினை ஊட்டுகின்றன. அவர் அக் கதைக்குக் கொடுத்திருக்கும் திருப்பம் உளவியல் முறை யிலே பொருத்தமானதாகவே படுகின்றது. வீடும் வெளியும் பிறிதோர் எடுத்துக்காட்டு. சங்ககால இலக் கியப் பொருளுக்குப் புதிய உயிர்ப்பினை அளித்து இன்றும் எமக்கு ஏற்ற ஒன்ருக, எமது நெஞ்சங்களைத் தொடு கின்ற ஒன்ருகப் படைத்துள்ளார். ۔۔۔۔
தமிழில் பொருளை அகம், புறம் எனப் பிரித்து இலக்கியம் கண்டார்கள். இம் மரபிற்கு ஏற்ப மஹாகவி தனது கவிதைத் தொகுப்பினை ' வீடும் வெளியும் ' என இரண்டு கூறுகளாகப் பிரித்திருக்கின்ருர். அதேசமயம் இலக்கணத்திற்கு அஞ்சிச் சில பொருள்களைத் "தீட்டுப் பொருள்களாகக்" கருதி அவற்றை ஒதுக்கவும் இல்லை. மனித குலத்தோடு தொடர்புடைய எப்பொருளும் கலைஞனுக்கு அன்னியமானதல்ல என்ற வாக்கிற்கு அமைவாக அவர் பழைய பொருள் இலக்கணத்திற்குப் புதிய விரிவினை அளிக்கின்றர்.
ίκ

Page 7
கவிதை என்பது முனைப்பாக்கப்பட்ட பேச்சே என்று சில ஆங்கில விமர்சகர்கள் கூறுவதுண்டு. மஹாகவி தமிழ்க் கவிதைக்குரிய பழைய யாப்புக்களையே தனது கவிதைகளிலே கையாளுகின்ருர். ஆனல், அவரது கைவண்ணத்தால், வரிகளை அமைக்கும்போது அழுத்தம் விழவேண்டிய இட்த்தில் விழும் சாதுரியத்தினல், அவரது கவிதைகள் முனைப்பாக்கப்பட்ட பேச்சாகவே செவியிலே படுகின்றன. பழைய யாப்புக்கள் அர்த் தத்தைப் பாழடிக்கும் சப்தக் கூடுகள், சிறைகள் என்று வாதிடும் புதுக் கவிஞர்களும், அவர்களுக்கு மிண்டு கொடுக்கும் விமர்சகர்களும் இக் கவிதைகளைப் படித்தல் நலம். தமது கையாலாகாத்தனத்தை மறைக்கவே இவர்கள் பெரும்பாலும் கவிதையை "அர்த்தம்”, “சப்தம்" என்றெல்லாம் கூறுகள் போட்டு, " சப்தத் தளைகளை அறுத்தெறியவே புதுக் கவிதை எழுந்தது என்று * சாக்குப் போக்குக் கூறுகிருர்கள். மேற்கத்திய பாதிப் பாலே தமிழில் புதுக் கவிதை பிறந்திருப்பதால், மேற் கத்தியர் சிலரின் கூற்றுக்களை ஈண்டு குறிப்பது சுவையாக இருக்கும். "Free Verse” (யாப்புக் கட்டுப்பாடற்ற செய்யுள்) குறுக்கு வலையின்றி " டெனிஸ் " விளையாடு வதற்கு ஒப்பாகும் என்பது காலஞ்சென்ற அமெரிக்க கவிஞன் ருெபேர்ட் ஃவுருெ ஸ்ரின் கருத்து. எலியட் என்ன 5.g6?aori Q5 fluqLDrt ? No vers is libre for the good Graftsman ( கைதேர்ந்த கலைஞனுக்கு எந்தச் செய்யுள் வகையும் கட்டுப்பாடற்ற ஒன்ருக இருப்பதில்லை) Forcing yourself to use restricted means is the sort of restraint that liberates invention 6T6ir cort gasurf distrGarn. (* வரையறுக்கப்பட்ட வழிவகைகளைக் கையாளுவதற் குத் தன்னை நிர்ப்பந்தித்தல் புதுக் கண்டுபிடிப்புக்களை விடுவிக்கும் கட்டுப்பாடாகும் ' ) * Free verse” இயக்கம் மேற்கத்திய நாடுகளிலேயே இன்று ஓய்ந்துவிட்டதை எமது புதுக் கவிதைக்காரர் சிந்தித்தல் நலம்.
கவிதையென்பது செம்மையான சொற்களைச் செம்மை யாக அமைத்தல் என்று ஆங்கிலத்திற் கூறுவது வழக்கம். மஹாகவி செம்மையான சொற்களைச் செம்மையாக அமைப்பதில் கைதேர்ந்தவர். "செம்மையான சொற்கள்? என்னும்போது இலக்கண சுத்தமான சொற்களை நான் குறிப்பிடவில்லை. இலக்கிய அந்தஸ்துள்ள சொற்களா
' X

யினும், கொச்சைச் சொற்களாயிலும் மஹாகவி பொருள் அறிந்து அவற்றைப் பிரயோகிப்பதில் வல்லவர். இத் தொகுப்பிலுள்ள, ஏறக்குறைய எல்லாக் கவிதைகளும் இதற்குச் சான்று பகரும்.
மஹாகவியின் கவிதைகள் எளிமையானவையாகத் தோன்றலாம். ஆனல், அவை கருத்தாழம் மிக்கவை. கல்லை நீரிலே விட்டெறிந்ததும் அலை வட்டங்கள் விரிந்து செல்வதுபோல் அவரது கவிதைகள் எமது மனதிலே கருத்து விரிவை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, "பல்லி" என்னும் கவிதையைக் குறிப்பிடலாம். சிறு வண்டு ஒன்றைப் பல்லி விழுங்கிவிடுகின்றது. அதைக் கண்ட குழந்தை " விம்மி வெடித்து விசித்தலறிற்று." "பூ, இவ்வளவுதான, இதில் என்ன இருக்கிறது ?" என்று சிலர் கேட்கலாம். சற்று ஊன்றிப் படித்தாற் புரியும். மனித உலகினதும் இயற்கை உலகினதும் வேறுபாட்டைக் கவிஞர் நாகுக்காக உணர்த்துகின்ருர், தன்னை அறியாமல் இயற்கைபற்றிக் குழந்தை பெற்ற "தீட்சை’தான் அதனை அலறத் தூண்டிற்று. ஆன்மீகத்திற்கும் புலன் உணர்ச் சிக்குமிடையே உள்ள போராட்டமே அகலிகையின் " மையப் பொருள். நகர நடைபாதையின் ஓரத்திலே வளர்ந் திருக்கும் "சிறுபுல்" மஹாகவியின் வண்ணத்தால் ஒரு குறி யீடாக விளங்குகின்றது.
மஹாகவியிடம் நாம் நேர்த்தியான நகைச்சுவை யைக் காணலாம். "நேர்மை" இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஆனல், நகைச்சுவைதான் அவரது தனி முத்திரை என்று நாம் எண்ணலாகாது. புள்ளி அளவில் ஒரு பூச்சி, மீண்டும் தொடங்கும் மிடுக்கு ஒரு தோற்றம், வீசாதீர், நீருழவன், தேரும் திங்களும், ஒரு கனவு, படலை திறமினே, விட்ட முதல், சீமாட்டி, இரண்டாவது திருமணம், கண்களும் கால்களும், கமலி - இவற்றின் சுவை தனித்தனி அவரின் தொனி வளத்திற்கு இவை நல்ல எடுத்துக்காட்டுகள். அவை வலிந்து செய்யப்பட்டவைகள் அல்ல. இயல்பான படைப்புகள் ; மஹாகவியின் உணர்வுச் செவ்வி எமது காலத்தது என்பதை எண்பிக்கின்றன.
எனவே, இனியும் நான் நந்திபோல் குறுக்கே நிற்காது வாசகர் நயக்க வழியை விடுகிறேன்.
மூன்ரும் குறுக்குத்தெரு, -0. Ga, a. யாழ்ப்பாணம், 8 - 5 - 73

Page 8

'ramw -- - ,--- .
முதலாம் கூறு

Page 9
கமலி, வீடும் வெளியும் ஒாகாயும் ஆட்டுக்குட்டியும் அகலிகை கண்களும் கால்களும் செத்துப் பிறந்த சிசு இரண்டாவது திருமணம் சீமாட்டி, விட்ட முதல் படலை திறமினுே

க ம லி
சிமிலி துடைத்து விளக்கேற்றிச், சிந்திக் கிடந்த தாள்களினைச் சீராய் அடுக்கி வைத்து விட்டுச் சிந்தை முழுதும் கொண்டு, பழந்
தமிழிற் கிடையாப் பல தகவல் தரும் ஓர் மேலை நூலோடு தனிய இருந்த தவத்தெதிரே தலைப் பூ கமழ நிற்கிறது -
கமலி, நீயா ? களவாகக் கதவு திறந்து மூடிவந்து, கவலை நிறைந்த பாங்காகக் கறுத்துக் கிடக்கும் விழிவாங்கி,
அமைதி குலைக்க நிற்கின்ற அழகா ? ஆண்மை பழிக்க வரல் அற மா ? அகல்க, அகல்கவே ! அப்பால் அகன்று மறைகவே !

Page 10
பெயலின் பருவக் கொடும் பொழிவால் பெருகிக், காடு நகர் முழுதும் பிடுங்கி எறிய வருகின்ற பெரும் பேராற்றுப் பிரளயத்தை,
* முயலின் அடக்கி ஆட்சிகொளல் முடியும், இவ்விம் முறையில்', எனும் முனிவர் மொழியை மோகித்துள் மூழ்கிக் கிடந்த கிடையின் முன்,
செயல்மேல் இட்ட நாட்டத்தைச் சிதறும் சிறப்புச் சிரிப்புடைய சிறுமி, நீயா எய்தியது ? சிறு போழ் தகல்க செம்மைபடர்
கயலை அனைய கண்ணி, அருங் கமலி, அகல்க, அகல்கவே ! கலையோ டமர முன்னர் சில கவலை உள ; போய்த் தொலைகவே !
-1964

வீரும் வெளியும்
செவ்விதழ்கள் சற்றுத் திறந்தால் உதிர்கின்ற அவ்வளவும் முத்தே, அழகி, நம்
so to
பேச்சாகக் கொண்டாள். பிறர் நெஞ்சைப் பிய்ப்பதே
மூச்சாஞள்.
மூச்சு முகம் சிவக்கும்
கூச்சத்தால் வெள்ளை உளத்தில் விசமேற்றிக் காமத்தைக் கொள்ளைபோல் யார்க்கும் கொடுக்கிருள், சுள்ளி இடை நோக நொடித்து நடக்கின்ருள், கால் தரையிற் பாவாம லேயே, பழந்தமிழர்
கோவிலிலே கண்ட திருச்சிலையே காலெடுத்து வைத்ததோ !
வண்டு முகைஇதழை விண்டு மது,
உண்டதே போலச் சுழன்று, பொருள்வழியே கைபோக்கி ஆல விழியின் அசைப்பினல் ஞாலத்தை
வானத்தில் தூக்கி வைத்தாள் ;

Page 11
மத்தளத்தோ டொத்தெழுந்த கானத்துள் நின்று கலப்பற்ற ஆனந்தக்
கூத்துப் பயின்ருள், குனிந்து நிமிர்கையிலே யாத்தாள் நறுங்கவிதை, யாவருமே பார்த்திருந்தார். s
சேலை சிறிது சிலும்பச், சிலம்பினங்கள் ஓலமிடக், கொங்கை உயர்ந்து விழக், காலமெலாம் வென்ற கலை அழகை வீசினுள்.
கல்லாக நின் ருர் நெடிது, நிறை கவிழ்ந்தார் நின் கணவர்.
தீக்கொழுந்தின் பேரெழிலைத் தின்றுவிட எண்ணியே போக்கிழந்தார் போகும் புலைவழியை
நோக்கினர், மாற்றியபொன் கொண்டு மணிமணியாய்ச் செய்திட்ட சோற்ருற் பசியைத் துரத்தவோ !
நேற்றுவரை வீட்டி லெரிந்த விளக்கின் ஒளி மழுங்கப், பாட்டிருந்து கேட்ட அடுக்களையில் மூட்டிவிட்ட செந்நெருப்புக் கூடச் சிணுங்கி அணைந்துவிட, மின்னிருந்து மாரி மிகப் பொழிந்தா லென்ன, நீ விம்மி விசிப்பதேன் ? வேண்டாம், அருகிலுள்ள அம்மி கரைவதனல் ஆவதுண்டோ !

கும்மிருட்டுப் பானைக் கரி தேய்த்துப் பாதி நகம் கிழிந்த மானைத், தனது மனகா க்கும்
தேனைத் தான், - அப்பளத்தை இட்ட அடுப்பில் அது கருகக் கப்படியில் நின்று கணுக்காணும் அப்பேட்டை, அன்னை நினைவும் அகல அருகிருந்தே உண்ண வைத் துண்ணல் உவக்கின்ற தென்னவளை விட்டுத் திரிவார் எனினும் வெறுக்காமல் சொட்டும் விழிநீர் சுட உதரத் தொட்டிலுள்ளே காத்திருக்கும் மொட்டுக் கலங்க இருந்திருந் வேர்த்ததனல் நன்று விளையாது.
போர்த்த இருள் நாளை விடியும் தாம் நட்ட மலர் விரியும் வேளை விரைந்து வரர் ரோ உன் ஆளரவர் ?
செங்கை மலர்க்காம் பசைத்துச் சிறிசொன்று பொங்கி அழுங்கால் புளகிக்கும் அங்கங்கள்
அன்பு வறண்ட அயலாள் மடித்துயிலா.
கன்று கடைவாய் ஒழுகவே
தின்றிடும்தன் காலின் பெருவிரலைக், காணுமல், வேற்றவளின் தோலின் நிறத்தைச் சுவைப்பதா ?
ஏலாது. w

Page 12
வாழ்விற் புதுமை வளர்க்கும் மகவை மறந்து ஆழக் கிடங்கில் அறவீழ்ந்தே
கீழ்மகளைச் சுற்றித் திரியும் சுகத்தை விரும்புவரோ ?
விற்றுப் பெறும் ஓர் வியப்பினல் முற்றன என்புருக்கும் காதல் எழுமோ ? அரைக் கணத்தின் இன்புயிரைப் பற்றி இழுக்குமோ?
உன்பெருமை தெட்டத் தெளிவாய்த் தெரியுமினி. முன் கதவைத் தட்டுவார் வந்து. தடுமாற்றம் இட்டழைத்துச் சென்ற வழிச் சேற்றில் திணறித் திரும்பிஉன் முன்றலிலே நிற்பார். முடியாதா
ஒன்றிவிட ?
ஆழி உவர்ப்பென் றறிந்தருவி நாடுவார். தோழி, அழாதே, போய்த் தூங்கு.
1958-ܝ

ஒநாயும் ஆட்ருக்குட்டியும்
வற்றல் இடுப்பை வளைப்பதுபோல் தோன்றுகிற முற்ரு இளநீர் முலையுடையாள் :
பற்ரு உடையாள் மிடுக்கு நடையாள் அவளோர் கடையாள் ; இதவள் கதை.
காளையர்க் கான கடைச்சரக்கை விற்பளவள் நாள்முழுதும் பூத்த நகையுடனே,
ஆளை விழுங்குகின்ற பார்வை விசக் கடிக்குள் ; பெண்மை ஒழுங்கிழக்கப் போகும் உடல்.
விற்ற பொருளை விரைந்தெடுக்கும் ஆண்விரல்கள் சற்றவளைத் தீண்டும் சமயத்தில்
கற்புத் துடிக்கும், அவியும் சுடர்போலத் தோளில், இடிப்பரேல், வேவாள் இவள்,

Page 13
1 0
இந்த விதமாய் இளைய இதயத்தில்
எந்தப் பொழுதும் எழுந்தடித்து
வந்த புயலிடையே ஓராள் புகுந்தான், விழியிற் கயல், அவன்மேல் வைத்தாள் கருத்து.
காணிவலில் ஒன்ருகக் கைகோத்தவர் திரிந்தார் * தோணி அடைந்த துறை !" என்று
பேணி அவனுடை மார்பில் அவள் போய்ப் படர்ந்தாள் ; எவள் அறிவாள் வையத் தியல்பு !
சேலைக் கடைகளுக்குச் செல்வார். சினிமாவின் மூலைமுடுக்குகளில் மொய்ப்பார்கள்
பாலை மொழியாய்ப் பொழிய, முழுகி அவள் கன்னக் குழிமேல் இதழ்குவிப்பான் கூற்று.
** காதலுக் கெங்கள் கதைஎடுத்துக் காட்டு ' என்றப் பேதை மயலிற் பிதற்றுவாள்.
"ஓ! தை பிறந்தால், மணம் நாம் பிணைந்தபின் துன்பம் பறந்துபோம் ' என்பான் பயல்

என்புருகப் பேசி, எழிலுருவின் சீர்குலைக்க, அன்புரு அன்னேன் என் றகமகிழ்வாள். இன்பத் திடையே சிலமாதம் ஏக, அவனின் கொடையாற் பருத்தாள் கொடி.
*" தை மட்டும் நாங்கள் தரிக்கலாகாது !" என்று பெய்தாள் விழிநீர். பிணைமானைக் கைவிட்டவ்
வோனுய் அகன்ருன், ஒடிந்த கொழுகொம்பள் ஆணுள், அழுதாள் அவள்.
பீதி அடைந்தாள். பிழையை மறைப்பதற்காய் ஏதோ ஒருநாள் எடுத்துண்டாள்,
போதழிந்து
போம் என்றே உண்டது, உயிர் இரண்டைப் போக்கிற்ரும். ஆமாம், இறந்தாள் அவள்.
1954 سس
11

Page 14
12
அகலிகை
இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அடிவாரத்தே சந்தனம் கமழும் மார்புச் சால்வையில், சரிகை மீதில், பிந்திவந் தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந்நிலவு பட்டுச் சிந்திற்று, மிரண்டங்கே ஒர் சிள்வண்டு வாய் மூடிற்ரும்.
கற்களிற் படாத காலிற் கழல்ஒலி கிளம்ப வில்லை நிற்கவும் இல்லைத், தோள்கள் நிமிர்ந்தவன் நடந்து சென்று புற்றரை அடைந்தபோது பாதத்தைப் பொறுக்க வைத்தான். சிற்ருற்றின் அரவம் கேட்டுச் செல்கின்ருன் அதனை நாடி,

பாதையில், விடியும் போது பகல்போல விரியப் போகும் போதினைப் பிடுங்கிக் கைக்குள் பொத்தினன், முகர்ந்து பார்த்தான். ஆதலும் வாழ்ந்தோர் நாளில் அழிதலு மான இந்த மேதினிச் சிறப்பைக் கண்டு
வெறுத்தாலும், கவர்ச்சி கொண்டான்.
கையினில் நீரை அள்ளி க் குனிந்தவன் களைப்பைத் தீர்த்தான் ஐய, எச் சுவையும் அற்றும் தேவரின் அமுதை வென்றி செய்ததைச் சிந்தித் தானே, சிரித்தனன் சிறிது. முன்னர் கொய்தபூக் கீழே வீசிக் கு ைகஒன்றைக் குறுகலுற்ருன்.
முத்தினுல் நிறைந்த வான முடி, இந்த நிலத்தில் உள்ள அத்தனை பட்டும் ஒவ்வா அழகிய நிறமேலாடை கத்தி, காற் செருப்புக், காப்புக் கழற்றி, ஓர் ஒதுக்குத் தேடி வைத்துப், பின் திரும்பிப் பள்ள வழியினைத் தொடரலானன்.
13

Page 15
it 4
இருட்டிலும் நுழைய வல்ல இந்திர நோக்கிலே, அம் முரட்டுவான் மரங்கள் சூழ்ந்து முதிர்ந்த காட்டிடை நீர் ஓடும் புறத்திலே, கமுகும் தெங்கும் புலப்பட, இரண்டு கண்கள் உருட்டினன் ஊன்றி நோக்கி உள்ளதோர் குடிலும், கண்டான்.
வேலியில் முள்ளில் லாத வெண்டியை மெல்லத் தாண்டக் கோழிகள் விழித்துக் கொண்டு
குசுகுசுத்தன மாங்கொப்பில்.
ஒலையோ டிழைத்த தட்டி ஒட்டையில் நாட்டம் வைத்து மாலுண்ட வானக் காரன்
மறுகினன் நோக்கி நோக்கி,
அகலிகை தளிர்க்கை கொஞ்சம் அசைந்ததும் அருகில் தூங்கும் மிகுதியாய் நரைத்த நெஞ்சுக் கோதர் மேற்படர்ந்து புக, இவர் விழித்துப் பார்த்துப் பொழுதாயிற் றென்ப தெண்ணி அகன்றதும், ஆனயாவும் அவன் அங்கு நின்று கண்டான்.

ஆதரவு அயலில் தேடி அலைந்தகை விரல்கள் மீண்டு பாதிமூடா மென் மார்பிற் பதிந்தன. நெளிந்த வாயின் மீதுபுன் முறுவல் மீண்டும் விளைத்தனள், முயன்று u ୩ ବର୍ତrଭor if மாது குப்புறப் புரண்டு மணையினை அணைக்க லாஞள்.
கோதமர் நடந்து சென்று குந்திய கல்லின் மீது சாதலே நிகர்க்க ஏதோ தவம்புரிந் திருந்தார். வீட்டில் காதலின் பிடிப்பிற் சிக்கிக் கலங்கினுளது கால் மாட்டில் நீதிகள் நினையா ஞகி நெடும்பிழை இழைப்பான் நின்றன்.
காட்டுக்குள் அமைந்தும் அந்தக் கடுந்தவ முனிவர் செய்த வீட்டுக்குள் இன்று மட்டும் விலங்குகள் நுழைந்த தில்லை. பாட்டுக்கேர்ர் உருப்போல் வாளைப் பச்சையாய்க் கண்ட போதை ஈட்டிபோல் இதயத் தேற இந்திரன் எதுசெய் தானே ?
5

Page 16
6
துடித்தனள், எனினும் பாதித்
தூக்கத்துள், வலியோன் கைகள் பிடித்தது பிடித்ததால் அப் பிடிபிடி கொடுத்தாள், வந்த அடுத்தவன் அழுத்த மாக ஆசைகள் புதைக்கக், கண்கள் எடுத்து நோக்காது சோர்ந்தும், உலகையே இழக்க லாஞள். -
பித்தங்கொண்டவனைப் போலப் பிதுங்கிய விழியிற், காதல் அர்த்தங்கள் சிதறிப் பாய அவள் உடல் தனதே ஆக்கி முத்தங்கள் பறித்தான், அன்னுள் முகம்முழு வதுமே, இன்பிற் கத்துங்கால் மாது, சற்றே கண்ணிமை திறந்து போகப்
பார்த்ததும்; துவண்டு மேனி படபடத்திட, மேலெல்லாம் வேர்த்தது ; வேர்த்த போதே விறைத்தது ; விறைப்பு மூச்சை நூர்த்தது; நூர்ந்து போனள். நொடியிலே நொடிந்து கண்கள் பார்த்ததே பார்த்த பாங்கிற்
பாவை கல்லாகி விட்டாள்.

அந்தரத் தவர்கள் வேந்தன் ஆயிரம் உளைவை நெஞ்சில் தந்தவள் நிலையைக் கண்டு தர்ன் மிகக் குறுகிப் போனன். வந்தவர் முனிவர், நேர்ந்த வகையினை அறிந்து கொண்டு, தம் தொழில் பிறிதென் பார்போல்
தாடியை வருடி மீண்டார்.
நில்லாமல் நழுவி ஓடி நீங்காத வாழ்விலே, தன் பொல்லாமை நெடுக நோண்டப் புண்ணுண்டான் தேவராசன். எல்லாம் போய்க் கல்லொன் ருக எஞ்சிய பாழிடத்தே நல்லார்கள் மிதிக்கத் தக்க நாள்வரை கிடந்தாள் நங்கை.
1965-ܝ
7

Page 17
18
கண்களும் கால்களும்
பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பெண்ணுமே பின்னடைந்த வயதினள் அல்ல. என் ஆசைக் கெந்தப் பொருள் நிகர்நிற்கும் என்று ஆய்கிருள், தலை சாய்த்து. நுனி விரல் பூசித்தந்த சுண்ணும்பொடு வெற்றிலை போட்டனள். வெறும்வாய் சிவப்புற்றது. வீசிச் சென்றது காற்று, வெளியிலே. வீட்டுள்ளே அதன் ஆட்டங்கள் கேட்டன.
கூப்பிட்டாள். ஒரு பேடு நுழைந்தனள். கொண்டு வந்த விசிறியைத் தந்திவள்
காப்புச் செய்த கலகலப்பால் இரு
காதினுாடும் கவனத்தை ஈர்க்கிருள்.
தீப்பட்டே எரிகின்றது போற்சிறு திண்ணை மீதினிற் பாதி இருந்தனள், சீப்புக் கொண்டு சடையைத் திருத்தினள். சிந்தை தன்நிழற் பாலோ செலுத்தினுள், !

சின்ன வாயில் உதிரம் வழிந்தது. சிரித்த போதங்கு பாலே பொழிந்தது. கன்னத்தே இன் கனிகள் கனிந்தன. கடவுளே, அவள் பெண் ! என தாண்மையை என்ன பாடு படுத்த முனைகிருள் ! ஏதுக் காக உணர்வுள் மனைகிருள்? தின்ன வந்த புலியையும் கூடவா திட்ட மிட்டிவள் தூண்டத் துணிகிருள் ?
ஓசை தீண்டிமெய் ஒடிச் சிலிர்த்திட ஒற்றை மூச்செறிந்தாள் அவள். மூத்தவள் பேசிப் பேசித் தொலைத்த பொழுதொடு பேரம் நின்று, பிரியம் முன்னேறிற்று. கா சைக் கண்டந்தக் காந்தள் விரியுமோ ! கற்பெனச் சொல்லும் வெற்பும் சரியுமோ ! பாசி மூடிக் கிடக்கும் குளத்திலும் பச்சைத் தண்ணீர் பருகக் கிடைக்குமோ!
அன்பு காட்டிட ஆணை பிறந்ததோ ! அழகு கால்தொடரச் சென்றிளையவள் இன்பத்திற்கோர் கதவு திறக்கிருள். என் வழிக்கோர் கைகாட்டி மடக்கினுள். இன்றிதோ கட்டிடந்து பிடுங்கிய இளமைமுன் மறி ஒன்று நடந்தது. பின்புறத்தில் இவ் வையம் புதைந்தது. பிரளயம் சுவர்க் குள்ளோ சுழல்வது !
19

Page 18
20
நறுமணம் கமழ்கின்றது. மூலையில் நட்ட சந்தனக் குச்சி மலர்ந்ததோ ! திருவிளக் கொற்றை நாக்கை வளைத்தது, தின்று தின்றது கொன்றிட நின்றதால். இருள் இடுக்கில் ஒளித்துக் கிடப்பதை இங்கு காட்டிக் கிடப்பது யார்.எது? பெருநெருப்புக் கரியாய்ச் சமைந்தது. பெண்மையோ என்முன் பிய்ந்து விழுந்தது !
நெஞ்சிலே பல் நொடியிற் கழன்றிட நேர்ந்த கோலத்தை அள்ளி நிமிர்த்தி, நான் "கொஞ்சுவாய்' எனில் ஒப்பினள். ஆயினும் கோறை போன்ற விழிகளிற் சற்றுமே அஞ்சல், மோதல், அழைத்தல் கிடைத்ததா? அன்பைக் காலிட்ைத் தேடவும் கூடுமா ? கஞ்சன் முன்பு கொடுத்ததுண்டே, அது காசு பாரும் ! குளத்தில் இறங்கினேன்.
நேரம் கைகொட்டித் தாளங்கள் போட்டதா, நீண்டு நீண்டு நிமிடம் வளர்ந்தன. சோரம் போனதுண்டோ எனதாண்மையும் ! சோம்பிப் போவதுண்டோ இந்தச் சோலியும் ! பாரம்தான் சுமந்தாள். கற்புப் பாறைமுன் பாதியோ டெழுந்தேன். அது பாவையே ! ஒரக் கண்ணிலும் சேதி கண்டேனில்லை. ஒமப்பா, உயிர்க்காதல் உண்டேனில்லை.
-96

செத்துப் பிறந்த சிசு
தூங்கிக் கிடந்த துணைவி துயில் சிறிது நீங்கி நெளிந்தாள் ; நிமிர்ந்தாள் ; பின்
ஆங்கெனது கன்னத்தை மெல்லக் கடித்தாள்.
கருங்கண்கள்
சொன்னத்தின் காதற் சுமைதாங்காது இன்பத்துப்
பாதை பிடித்தேன் ; பழக்கம் நடத்த, மயற் போதை முடுக்கப் புயலொன்றுள்
மோதி த விழுந்தோம் ; கிழக்குச் சிரிக்க வெறுப்போ டெழுந்தோம், சில மாதம் ஏக
முழந்தாள் வலிவிழக்க அன்னுள் வயிறும் பருக்க
2.

Page 19
22
முலை பழுக்க, அன்று முயக்கின் விலைஅறியாது ஒடிக் களிப்புலகில் ஒன்றிப் புரண்டிட்ட வேடிக்கை முற்றி வினையாச்சு.
நாடிக்கை,
ஏக்க விழிகள், இமையா இமையிணை, தூக்கம் வறண்ட துயர்இரவு நாட்களெனச்
சொல்லுங்கால் எங்கள் சிறுகுடிலில் நாம்கடத்தும் வில்லங்க வாழ்வில் விரும்பாஅப் பொல்லாங்கு
நேர்ந்தது காண்.
இந்த நிலத்தின் நெரிசலிடை மாய்ந்து மடிய மறுபடியும் வாய்ந்ததொரு
பிள்ளை. அதுவோ பிறந்து குரல்கொடுக்க வில்லை. ** எதற்காக ? " என்ருளாம் இல்லாள் ; பின் கத்தாத காரணத்தைக் கண்டாள் ; கவலையற்றேம்
செத்துப் பிறந்த சிசு
-1956

இரண்டாவது திருமணம்
காற்றைப் பார்த்திருந்தாள் ஆற்றங் கரையிலே வள்ளி, அங்கே ஆற்றைப் பார்த்திருந்த வேலன் அவளைப் பார்த்துயிர் குழைந்தான். நூற்றுக்கோர் அழகி அவ்வாள் நுதல், நிமிர்ந்தவனைப் பார்த்தாள். தோற்றுப்போய், அவன்பார் வைக்குத் தொலைவிலே போய் உட்கார்ந்தாள்.
கண்ணைப் பார்த்தவன் நினைந்தான் கயலை. ஆற்ருேரம் பூத்த வண்ணமாதுளை பார்த்து, அன்னள் வாயினை நினைத்தான். தன்னை உண்ணப் பார்க்கிற அவன்நோக்கு உணர்ந்தவள் மணலை அள்ளி எண்ணப் பார்த்தாள். பாட்டுக்கள்
எழுதப் பார்த்ததவன் உள்ளம்.
28

Page 20
罗4
* மின்னைப் பார்த்தவன் கண்போல மிகவும்நான் மயங்கினேன். நீ என்னைப் பார்த்திரங்கிடாயோ ??? எனக்கேட்டான். இதனைக் கேட்டுப் புன்னைப்பூப் போற் சிரித்தாள். பூரித்தான் வேலன். அப்பெண் தன்னைப் பார்த்திருந்தான் ஓர் நாள் தனிய வந்தாள் அவ்வள்ளி.
இரவெல்லாம் அழுதாள் வள்ளி இனியதாய் தந்தையாரோ ** எருமையே, தொலைவாய்" என்ருர், * எது என்ன ஆகினலும் அருகிரு, போதும் " என்றே அவளிடம் அவன் மொழிந்தான் ஒரு நாட்போய் மணந்துகொண்டார்
உலகையே மறக்கலாஞர்.
அன்பு கண்டார். ஆனந்த ஆழியின் ஆழங்கண்டார். என்புமே ஒடிந்து போயிற்று எனும்படி அணைத்துக் கொண்டார். இன்பத்துக் கெல்லை இல்லை எனும் ஒரு மகவும் கண்ட பின்புதான் அவன் பிழைத்தான்.
பிறத்திபால் வேலன் வீழ்ந்தான்.

தான் கொண்டுமகிழ்ந்த வேலன் தன்னெடும் மகிழான் வள்ளி ஏன் கொண்டாள் துயர் ? விவாக எழுத்தினை அழித்துக் கொண்டாள். மான் கொண்ட விழியில் வாழ்வின் மயல்கொண்டாள் ஆதலாலே நான் என்று நிமிர்ந்த வேறேர் நல்லான மணந்தாள் வள்ளி.
-1953
35

Page 21
26
சீமர்ட்டி
நள்ளிரவு தூக்கம் நயனத்தை நாடாமல் தள்ளி இருக்கத், தலை இடிக்க,
மெள்ள நுழைந்துள்ளே வந்த நுளம்பு ஆளைநுள்ள, எழுந்தேன் எங்கெங்கும் இருள்.
வீதியிற் சென்றேன் வியர்த்துக்கிடந்த உடல் மீதினிற் காற்று விசிறிற்று
*" போதும், நகரத்து மூச்சே, உன் நாற்றம் பொறுக்கேன் அகல் 1’ என்று சொன்னேன் அதற்கு.
அப்பால் நடந்தேன் அடுத்த தெருவினிலே எப்போதும் என்றும் எவருக்கும்
ஒப்பற்ற தேநீர் அளிக்கத் திறந்த கடைவரையும் போனல் பொழுதுபோம் என்று.

வழியிற் கிளைபரப்பும் ஆல மரத்தின் நிழலுட் புகுந்தேன். என் நெற்றி,
விழிகளெலாம் w மோதும் இருளிடையே முன்வந் தெனத்தொட்டு, ஓர் மாது சிரித்தாள், மறித்து.
தொட்ட இடத்தைத் துடைத்துவிட்டுத் தூரத்தில் நட்டிருந்த தூணில் நகைத்திருந்த மொட்டு விளக்கருகை நாடி விரைந்தேன். தொடர்ந்தாள் அழுக்குருவே ஆன அவள்.
பூச்சடித்த கன்னம், புயல்கிளப்பும் கண் வீச்சு, மூச்செடுக்கு வீங்கும் முழுநெஞ்சம். ஆச்சரியம், பிச்சைக்கு வந்து பிடிசோறு கேட்பாளே, அச்சிறுமி அன்ருே இது !
தாடிக் குருட்டுக் கிழவன் தனைத்தொடரப் பாடி இரந்து பசிகிடந்து
வாடும் அரும்பாய் இருந்தாள். அவளா இன்றுாரின் விருந்தாகி விட்டாள் விரிந்து !
ጶ 7

Page 22
28
துட்டெறிந்து விட்டு " தொலையாய்" எனும் அவர்கள் கொட்டிடும் கண் வெட்டிற் குடைகவிழ்ந்து, கெட்டழிந்து
போகட்டும் என்றிப் புதியதொழில் கொண்டாளோ ! "வாகிட்ட " என்ருள் வலிந்து.
" வாடிக்கைக் காரர் வருவார் பிறர், எனக்கு இவ் வேடிக்கை வேண்டாம். விடுவாய்" ! என்று ஒடச்
சிரித்தாள். அவட்கென்ன, சீமாட்டி ! இன்னும் இரக்கவா வேண்டும் எமை ?
தேநீர் அருந்தித் திரும்பிப் படுக்கைக்குப் போனேன், புலர்கிறது. கூப்பிட்டாள்
ஏன்?" என்றேன்,
பிச்சைச் சிறுமி பிறிதொருத்தி ! மற்றவட்கிவ்
வெச்சிற் பிழைப்பின்றெதற்கு ?

விட்டமுதல்
பட்டணத்தில் உள்ள தெருவில், பகற்பொழுதில், எட்டி விரைவாய் ஏதோ ஒன்றில் இட்டஉளம் ஒடத் தொடர்ந்துசென்றேன்; ஓராள் வழிமறித்தாள்.
ஆடைக் குறைவின் அலங்கோலத் தீடுபட வைக்காள் பருவ வயதைக் கடந்தவள் ஈ மொய்க்கும் ஒருநோய், முகத்தினுள், V
கைக்கின்ற வாழ்விற் பழைய வரும்படிபோய், விட்டமுதல் பாழ்பட்டு, மேலும் பணம் ஈட்ட
29

Page 23
so
ஆன் அற்றுத் தோளிற் கிடந்து துவரும் மகவுக்கோர் வேளைக் குணவுதான் வேண்டுகிற ஏழ்மையிலே
கைநீட்டி
** என்னைக் கணவன் குடித்துவிட்டு நையப் புடைத்து நடுத்தெருவில் கைகழுவி விட்டுவிட்டான், பெற்றவளின் வீடு திரும்பவெனில் துட்டில்லை. வீடும் தொலை" என்ருள் நெட்டுயிர்த்து. X
நல்லுடலை விற்றவளின் நீirவிற் பிறக்கின்ற சொல்லிடை ஏதுண்மை சுவைக்கும்கால்
மெல்லிதழ்ப் பூவென் றிருந்து புகழ்ந்தோர்
"இனிப்போதும்,
போ " என்றி. இப் புறம்வந்து
சாஅஞ்சிப் - . பொய்த்திரந்தாள்.
ஆணின் பொறுப்பென் றவள்கரத்தில் வைத்தேன் பணம் நடந்தாள் மாது,

படலை திறமினுே
சடை இருந்து மலர் சரிய, மென்குதிகள் சமையல் உள்ளினிடை திரியவும், இடை இடைஞ்சல்படும் எனினும் இன் கணவர் இனி வருந்தருணம் எனவிரைந்து உடை கசங்கிடவும் உலையில் வெண்தரளம்
உவகை யோடுமிடு பாவையீர்.
பழைய செந்தமிழின் இசையை வினையொடு பழகிடும் தளிரின் விரலிலும் அழகு தந்து பொழுதவம் இழந்ததென அகம் உளைந்துளைய, எழில்நகம் பழுதுணும் கொடிய கரிபடிந்தும் அவர் பசி நினைந்துருகு பண்பினிர்
fi

Page 24
32
* சுவைவிருந்து " என நும்மவர் மொழிந்திடுதல் சுலபம் அன்றெனினும், அவர்கள் நா எவை விரும்பும்என எளிது கண்டுசெயும் இயல் பிருந்திடினும், இவைகளால் நவை யகன்று மனையறம் உயர்ந்ததிலை : நகைவலிர், இதயம் திறமினே !
உணவும் உண்பது தம் உரிமை என்பதனை உணர்கிலாத சிலர் திரிகிருர், * பிணம் நடந்தது!" என அவரை அஞ்சிடுதல் பிழை, பெரும்பிரமை. பொருளையே பணியும் உங்களது படியில் வந்தனர்கள் : பழியலக் கதவு திறமினே !
அடைய வந்ததிரு அகலும் என்றிதனில் அவலம் எய்துவ தென்னடி ? அனப் பெடை மறந்த நடை தெரிய நும்கொழுநர் பெயரும் " நாய்கவன 'ப் பலகையும் உடைய வெம்படலை திறமின் ஓடி, வயது ஒளிய வென்றஉடை ' கிடை" யினிர்.
l956س-

இரண்டாம் கூறு
வெளி

Page 25
பல்லி, ஒரு கனவு
தேரும் திங்களும் நீருழவன், வீசாதீர், தேர், திருட்டு
கண்கள் புரிந்துவிட்ட பாவம் கேர்மை, ஒரு தோற்றம், செல்லாக்காசு மற்றவர்க்காய்ப் பட்ட துயர் மீண்டும் தொடங்கும் மிடுக்கு புள்ளி அளவில் ஒரு பூச்சி
சிறு புல்

பல்லி
தாய் முலை உண்டு தழைத்து மகிழ்ந்து வாயினிலே தயிர் சிந்தியதொன்று. போய் உலை மூட்டிடுவாளை மறந்து பாயில் உருண்டது, பாதம் எறிந்து !
நீச்சலடிக்கும் நிலத்தில் மலர்க்கை வீச்சினில் விண்ணில் மிதக்க நினைக்கும் கூச்சலிடும் களிகொண்டு. எது கண்டும் ஆச்சரியக் கடல் ஆழம் அமிழ்ந்தும்.
காற்றில் எழும் கடுகோ எணமுன்னே தோற்றும் அவ்வண்டு. தொடர்ந்திருகண்கள் ஏற்றிய விற்புருவங்கள். இறக்கி ஈற்றில் அதோடும் இருந்தன கீழே.
35

Page 26
霸醇
விந்தை நிகழ்ந்தது வேறிலை அங்கே சித்திய மைத்துளி போற் சிறுவண்டு குந்த, இருந்த ஓர் பொந்தை அகன்று. வந்ததை உண்டு நடந்தது பல்லி.
அம்ம, அதோமிக ஆத்திரம் உற்றிவ் வெம்மையினுல் உளம் வெந்து வெகுண்டு
கும்மியடித்த " குழந்தை துடித்து
விம்மிவெடித்து விசித்தலறிற்று.
அன்னை நுழைந்தனள் அள்ளி அணைத்தாள் சுன்னம் நனைத்த கண்ணீரை அழித்தாள். என்ன எதற்கென ஏங்கி இளைத்தாள். தன் அருமார்பை அருந்த அளித்தாள்.
-1955

ஒரு கனவு
கட்டிலிலே வீழ்ந்தேன் களைப்போடு. இடியப்பம் சட்டி நிறைந்த சொதியோர்டு சாப்பிட்ட நீண்ட களைப்பு ; அதனல் நித்திரையை நான் விழைந்தேன்.
பூண்டோ டொழிக்கப் புகுந்து அன்று மாலையில்தான் நான் தெளித்து வெற்றிகண்ட நன் மருந்தால், மூட்டைகளின் சேனையோ தொல்லை சிறிதும் கொடுக்கவில்லை.
பஞ்சிருந்த மெத்தை பதமாய் நசிந்தபடி * துஞ்சு துஞ்சு" என்றே துணைநிற்கப் போர்த்துகிற
கம்பளியின் வெம்மை கடுங்குளிரைப் போக்கிவிட்டுத் * தம்பி உறங்கு ' என்று தாலாட்டே பாடியதாம்.
墨7

Page 27
38
ஆயிரம் தூண்கள் அடுக்கடுக்காய் ஓங்கிநின்ற கோயில் ஒன்று கண்ணெதிரே காண்கின்றேன். கோபுரங்கள் ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அளவுயரம். எவ்வா றுரைப்பேன் எழிலை ?
வளைவுகள். வாயில். மதில். மண்டபங்கள். முடுக்குகள் போய்முடியா நீண்ட நடைகள். பெர்லிவுடைய
ஓவியங்கள். V ஒகோ, தரை முழுதும் கோலங்கள்.
காவிருந்தாற் போல்விரிந்த கற்பளிங்கு மாளிகையுள் நான் நடந்தேன். எங்கும் நறும்புகையின் மென்நாற்றம் "ஏன் நடந்தீர்” என்றே எனப்பதின்மர் தூக்குகின்ருர்,
தூக்கியவர் பல்லக்கில் இட்டுச் சுகமாகச் சேர்க்கும் இடமோ கொலு விருக்கை; அங்குசில
தாடிவைத்த மந்திரிமார், தானை நடத்துபவர், ஆடி இருந்த அரம்பையர்கள் - எல்லோரும் தாளை வணங்கித் தவிசில் என ஏற்றி, "ஆளுதல் வேண்டும் அடியேங்கள் நாட்டை", என்று
விண்ணப்பம் செய்தார்.

இசைந்து மிடுக்கோடு பண்ணுகின்றேன், கொற்றம் : பழம், பால், பலகாரம் உண்ணக் கிடைத்த தெனக்கங்கே, உண்மையில் இவ்
வண்ணம் கனவெல்லாம் வந்து பலித்ததம்மா.
* குற்றம் புரிந்தான்,
எனக் கொணர்ந்தார் ஓர் ஆளை, அற்பன், அவன் என் அயல்வீட்டான் ! நேற்றுத்தான் காசு நான் கொஞ்சம் கடன் கேட்டு நிற்கையிலே ஏசித் தராமல் இருந்தோன் ;
இதுசமயம்
‘ஏற்றும் கழுவில் இவனை எனத் தீர்ப்பொன்றைச் சாற்றினேன். }. * ஆகா சரி ' என்ருர் மந்திரிமார் ! * செத்த உடலைச் சிறுதுண்டம் செய்து செய்து வைத்திடுவீர் காக்கைகளுக்கு ' என்றேன்
* வயிருர அந்தப் பறவை அருந்திப் பிழைத்தல் தகும் இந்தப் பயலை " என எவரும் ஒத்திசைத்தார்.
ஆடி அமர்ந்த அழகியினை நோக்கலுற்றேன். நாடி நான் நாளும் நடந்தும் நயந்தென்னை அன்போடு பார்த்தேதும் ஆதரவு செய்யாத துன்பச் சிறுமி
தொடர்ந்தென்னுடன் நெடுகப் பள்ளியிலே கூடப் படித்து வந்த பார்வதிதான் !
39

Page 28
蟹份
கள்ளி, இந்தப் போதோநான் காலாற் பணித்தவற்றைச் செய்யத் துடிக்கும் சிறுசேடி என் மனையில்
* ஐயா, அமைச்சரே ! பட்டத் தரசியர் வேற்றரை நீக்கி, இம் மெல்லியலை அவ்விடத்தில் ஏற்றி வைப்பீ ராக. " என ஆணை செய்தேனு
சுந்தரியோ, ஒற்றைச் சிலம்பைச் சுழற்றி, و fT-س2WL * இந்த நிலைக்கோ அரசும் இறங்குவது ? நீயோ பெருமன்னன் ? நீயே சிறு கள்ளன் ! பேயே, பிசாசே, பிணமே எனப் பேசித் தீயே விழியில் தெறிக்க, முலை பிடுங்கி, வீசி எறிந்தாள் வெகுண்டு !
வெடுக்கென்றென் மீசை பொசுங்க விழித்தேன் ! வெறுங்கட்டில் பக்கத் திருக்கப் பணிய விழுந்திருந்தேன் !
" போதும் தனி ஆள் கனவு ! பொதுக்கனவே ஏதும் உயர்வு புரியும்" என எழுந்தேன்.

தேரும் தீங்களும்
* ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை "' என்று
வந்தான் ஒருவன்.
வயிற்றில் உலகத்தாய் நொந்து சுமந்திங்கு நூருண்டு வாழ்வதற்காய்ப் பெற்ற மகனே அவனும், பெருந்தோளும் கைகளும், கண்ணில் ஒளியும், கவலையிடை உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.
வந்தான். அவன் ஓர் இளைஞன் : மனிதன்தான். சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே முந்தநர்ள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி !
4.

Page 29
42
"ஈண்டுநாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல் வேண்டும் " எனும் ஒர் இனிய விருப்போடு, வந்தான் குனிந்து வணங்கி வடம்பிடிக்க
** நில்! " என்ருன் ஒராள் ** நிறுத்து" என்ருன் மற்ருேராள் * புல்" என்ருன் ஒராள் * புலை ” என்ருன் இன்னுேராள் *" கொல் ' என்ருன் ஒராள் *" கொளுத்து " என்ருன் வேருேராள்.
கல்லொன்று வீழ்ந்து கழுத்தொன்று வெட்டுண்டு, பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு, சில்லென்று செந்நீர் தெறித்து நிலம் சிவந்து, மல்லொன்று நேர்ந்து மணிசர் கொலையுண்டார்.
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர் வேர் கொண்டது போல் வெடுக்கென்று நின்றுவிடப் பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாய்த் தான் பெற்ற மக்க ளுடைய மதத்தினைக் கண்டபடி.
முந்தநாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு வந்தவனின் சுற்றம், அதோ மண்ணிற் புரள்கிறது !
-1969

நீருழவன்
ஒட்டைக் குடிசை ஒழுக விழித்திரவில் நாட்டைக் கடந்தான். நடுக்கடலில் போட்ட
வலையை வலித்திழுத்தான். வந்ததோ பாசி !
குலையாத நெஞ்சைக் கொடுத்தே
அலையோடு முட்டி அதன் மேன் முகட்டில் மிதந்து விழும் மொட்டைப் படகை முடுக்கிஞன்.
வெட்டவெளி
நீரை உழுதான். நெடுநாட் பழக்கம் இது. பாரை சுரு என்று பார்த்திருக்கும் ஊரை மகிழ்விக்க வல்ல மனிதன், வயிற்றை அகழும் பசியால் அயரான்.
43

Page 30
44
பகல்முற்ற முன்னர் தன் வற்ரு முயற்சிக்கிவை ஈடே என்னும் படி நிறைந்த எவ்வளவோ மின்னுகிற
ÈGi65 e 6o யோடு மீள்கின்றன்.
பேருழைப்பு ஈனும் மகிழ்ச்சிக் கெதிரேது ? மானிடன்
தொட்டால் துலங்காத் தொழில் உண்டோ ?
வீட்டவள்
பட்டே புனைந்து பளிச்சென்று
மொட்டுவாய் ஏன் சிரிக்க மாட்டாள் இனிமேல் ? எழிற்சிறுமி தேன் தமிழைக் கற்றுவரச் செல்லாளோ ஏனையவர் பிள்ளைகள் போலப் பெரும் பள்ளியை நோக்கி வெள்ளை உடுத்த மிடுக்குடனே ?
உள்ளபடி
இந்தப் படகொன் றிருந்தால் முழு உலகும் சொந்தமே வந்து கரை தொட்டான்.

ஏதேது வந்தோர் பிறன் அவற்றை வாரிஅள்ளிக் கொள்கின்ருன் எந்த நியதிக்கிது ஏற்கும்.?
சந்தையிலே விற்றுப் பயனடைவோன் வேற்ருள் ! விளைவேதும் அற்றுப்போய் மாய்வான் அரும்வலைஞன்
முற்றியுள்ள பொல்லாக் கடனல் பொருந்தா வகையில் தன் செல்வம் தனக்களவு செல்லவிட்டு
மெல்ல நடக்கின்ருன் வீட்டுக்கு,
நாளும் உளத்தை ஒடிக்கின்ற ஏமாற்றத் தோடு.
959[-سس
45

Page 31
46
வீசாதீர்
ஏதோ அவதியிலே ஏகுகிறீர்,
ஏனப்பா
நீர்தாம் உலகு நிலைமாறிப்
பாதாளத் தாழ விழாமல் அதன் வாழ்வைக் காப்பவரோ ? வாழி, என் தாழ்மை வணக்கங்கள் !
ஆள் சுருளும்
வெய்யிலிலே நீர்போகும் வீதிநடைப் பாதையிலே உய்யும் வகை தெரியா ஒர் மனிதன், கை இல்லான், துரங்குகிறன் போலக் கிடக்கின்றன். துன்புறுத்தி வீங்கும் பசியால் விழுந்தானே !
ஆங்கயலிற் கொத்தவரும் காகத்தைப் பாரும் குறைஉயிரோ, செத்த உடலோ - தெளிவில்லை.

சற்றெனினும் நில்லாது, நெஞ்சில் நெகிழ்வேதும் காணுது, சில்லறையில் ஒன்றைச் செருக்கோடு செல்லுங்கால் வீசி விடுதல் விரும்பினீர் ;
வேண்டாம், ஒய். கூசும் அவமதிக்கும் கொள்கையேன் ?
ஆசைமிக ஆதலினல், காசு கணிரென்றிட அதிரும்
காதுடையர்ன் ;
அன்னேன் கடுந்தூக்கம்
பாதியிலே
கெட்டுவிடக் கூடும்;
கெடுக்காதீர். பாவம், இம்
மட்டும் புவியை மறந்திருந்தான் ;
கிட்டப்போய் மெல்லக் குனிந்து இடுக இல்லையெனில் உம்பாட்டில் செல்க.
இதுவே சிறப்பு.
--!958
47

Page 32
48
தேர்
அற்புதங்களை அடுக்கடுக்காய் எடுத்தடுக்கி விற்கும்போதிலும் விரும்புவார் எவரையும் காணுேம். தெற்கு வீதிக்குத் திரும்பிற்றுக் கிழக்கினில் இருந்தே, நெற்குவித்தது போல்உயர்ந்தொரு புது நெடுந்தேர்.
கண்ணெலாம் நிறைந் தன அதன் நிறங்கண்டு : கவரும் பண் எழுந்துவந் தலைந்தது நாயனத்திருந்தும். மண்ணி லன்றிச் செஞ் சுருட்டியில் மிதந்தந்த மணித்தேர் பெண் எனும்படி பிடி எனும்படி அடிபெயரும்.

தேடிவந்தங்கு
திரண்டநம் ஊரவர் ஒருங்கு கூடி நீள்வடம் இழுத்தனர். குதித்தொரு சிலபேர் ஆடுகின்றனர் காவடியொடு. தவிலவனே போடுபோடென்று சொற்களைப் போட்டுலுப்புகிருன்.
மக்கள் தாம் செய்த ஓர் மரத்தேர் எதிர்க்குவித்த கைக்குள்ளோ பழங் கடவுளைப் பிடித்தனர் ! கனத்த சிக்கல் போய் இந்தச் செகம் மிகச் சீரடைந்ததுவோ? எக்களிப்பொடு
நிறைவும் இங் கெதிர்ப்படல் எதற்கோ !
பட்டுச் சேலையும் பற்களும் பளிச்சிடவருவோர்,
எட்டுமே வய V திலா இளஞ்சிறுவர்கள், இடுப்பு மட்டும் நீண்டவெண் தாடியும் பூண்டவர், மனையோர், பொட்டும் நீறுமாய்ப் போதிய மகிழ்ச்சியிற் புதைந்தார்.
49

Page 33
50
சேர்வையிற் செய்த
சில்லறைப் பொருள்விற்கும் கடையின் ஒரத்தே நின்று கடலைசப்பிய எனதுளமும் ஆர்வத்தோடெதற்கு அப்படித் துள்ளியது? அருகில் தேர்வந்துற்றிடச் சிந்தனை ஏன் சிதைந்ததுவோ !
தொட்டு நெஞ்சினைத் துழாவிடும் கவிதையின் எதிரில் நட்ட கட்டையும் நீட்டுமோ நாத்தளிர் ? கரையை முட்டிமோதிடும் நதிவெள்ளம் எனவரும் எழில்முன் எட்ட நின்றிடல் எங்ங்னம் இயலுமோ எமக்கே !
பற்றினேன் வடம் ; புளசித்ததுடல். பகல்வெயிலோ அற்றுப் போயினது. அழகெங்கும் பிறந்தது. மணலிற் சற்றுநின்ற சில் தடக்ககன் றுருண்டது. நகர்ந்து தெற்கு வீதித்தேர் மேற்றிசை போய்த் திரும்பியதே.
-l962

திருட்டு
ஐந்தடிக்கவும்
அலுவலகங்களின் அந்தப் பொந்துகள் திறந்தன. புறப்பட்டனர் மக்கள்
வந்து நின்றனர் வரிசையில். வண்டிகள் வரவும் முந்துமா ? வழிநோக்கிய விழிபிதுங்கினரே.
ஆதலால் அவர்
அழுதிடும் குழவியோடருகில் மாதொருத்தி மன் ருடல் கண்டிலர். ஒரு மனிதர்,
பாதிகண்டவர், பழக்கமில் லாதவர் கொடுத்து, ‘ எப் போதும் இத்தொல்லை பொறுக்கவொண்ணுது' எனப் புகன் ருர்
உய்யவே விழைந்து இரப்பதற் கொருப்படும் உளத்தள் கையில் ஏந்திய குழந்தையின் கண்குருடு
51

Page 34
52
அறியார் ' வெய்யதே விதி!"
என விளம்பினர்கள்,
அக்கனவான்
"ஐயையே!" என அருவருத்து எனக் கடிந்தார்.
அகல்
இட்டுவாழ்பவர் இருந்திடில், இரு நிலத்தினில் அம் மட்டும் வாழ்ந்திடும் இரப்பெனும் இழிதொழில், ஒற்றைத் துட்டும் ஈந்திடல்
துர்ச்செயல், துயரிடைச் சிலரை விட்டு வைத்திடவிரும்பிடுவோர் செயல் என்ருே !
ஏது வண்டியும் வந்தது? அவ்விடுக்கினில் ஏறும் போதிலே, பறிபோயின தவர் பணம் " பொருந்தாத் தீது !’ என்பார்கள் இத் திருட்டினை வாழ்வது பிறபேர்
ஈதலால் எனில்,
இறப்பதல்லால் விளைவுளதோ ?
-955

கண்கள் புரிந்துவிட்ட பாவம் !
காகம் கறுப்பு கருஞ்சிவப்பு வாயவள்மேல் மோகம் எதற்கு ? முழுதும் கடைச்சாயப் பச்சைப் பொய் அந்தி படைக்கின்ற மஞ்சள்வான்.
உச்ச அழகென் றுரைத்தும், தெருவில் நான் பள்ளத் திடருமற் பார்த்தும், கடுதாசி வெள்ளைப் புலத்தில் விளைந்து நிறைந்துள்ள அச்செழுத்துக் குள்ளே அனைத்தெழிலும் காட்டியும், இச்சகத்து வாழ்வை இனிப்பாக்கும் என்னிரண்டு கண் காள்!
அதோ, நம் கருத்தைக் கலக்கும் ஒரு பெண்பால் ! நிற்ையப் பிறரும்போம் வண்டியிலே, கிட்டத்தான் உள்ளபடக் கொட்டகைக்கோ செல்கின்ருள்.
53

Page 35
54
வட்டவிழி சுழற்றிக், காதில் வளையங்கள் ஆடக் கழுத்தசைத்தே, ஆனந்தமாகத் தன் கூட இருக்கும் அவனேடு குசுகுசுத்துக் கொண்டிருக்கும் போதும் குதப்புகிருள் வாயை, இதைக் கண்டோ குழந்தையொன்று கண்கள் இமையாத செப்புச் சிலையாச்சு ?
சேயிழையின் பல்லிடையோர் அப்பிள் பழமே அகப்பட்டிருக்க, அதைக் கொந்துகிருள் : அன்னுள் கொடுப்பின் அசைவினிலே சிந்தை பறிபோம் சிறிசோ அருகில்தன் * அப்பாவைக் கேட்டால் அடிதான் " என்றப் பாவை சப்புவதைப் பார்ப்பதிலே
சந்தோசம் கொள்கிறது.
நாவூற ஏங்கும் நயனம் இரண்டு.
இவற்றைச் சாவரையும் நாம் மறத்தல் சாத்தியமோ ? போர்த்தியுள்ள பூச்சு, ஆள் கவர்வதற்குப் போதாதென்ருே புதிய ஆச்சரிய உத்தியினை ஆண்டாள் அவள் ?
பழத்தைக் கவ்வும் திருச்செயலைக் கண்டுஇளைஞர் தம்முதடே கவ்வுண்ட தென்ருேர் கணம்பிரமை கொள்கவென எண்ணியோ கையில் எடுத்த பழத்தோடப் பெண் வந்தாள்? காணும் பெரும்பாவம் செய்தோம் நாம்.
* -1961

நேர்மை
கையிலே குடை இல்லை : கருக்கிடும் வெய்யில் மேனி வியர்த்தது; அயல் நின்ற தையலாள் விழி மை ஒழுகிற்று வந்து எய்துமோ வண்டி என்று நின் றேங்கினேன்.
ஆண்டோர் ஐம்பதுள் நாளும் அடிக்கடி நீண்ட நேரம் வரிசையில் நின்று, பின் மாண்டு போவது வாழ்வெனில் வாழ்வுதான் வேண்டுமோ ? அது வீண் என எண்ணினேன்.
வண்டி அவ்வழி வந்தது மெய். இதோ அண்டை நின்றதும் உண்மை ; அதற்குள்ளே ஒண்டி வாங்கில் ஒடுங்கியும், கைப்பிடி கொண்டு தொங்கியும் கூத்திட ஏறினேன்.
55

Page 36
56
ஆட்ட மிட்டுஅசைந் தோடும் அதிற் செல்லும் கூட்டத் தார்க்குக் கொடுக்கப்படுகிற சீட்டைத் தந்தவன் சில்லறையிற் சில கூட்டித் தந்தனன் கூறி விடுகிறேன்.
பெற்றுக் கொண்டதும், பேச்செடுத் தென் உளம் சற்றுக் கிண்டவும் சாகடித்தேன் அதை. கற்றுக் கொண்டதுண்டே ; கடும் நேர்மையிற் பற்றுக் கொண்டு பணத்தைத் துறப்பதா !
அன்றியும் மனை சென்றிடில், அவ்விளங் கன்றென் மீதில்என் கால்பிடித் தேறுங்கால், இன்றென்ருலும் அதன் கையிலே பழம் ஒன்றை இட்டின்பம் ஊட்டிட லாகுமே !
* கெட்ட திச்செயல், கீழ்மை " என என வெட்டிப் பேசுதல் வேடிக்கை. செல்வரின் நெட்டைப் பேச்சிது. நேர்மை எவர்க்குமே கட்டுமா, நண்ப? காசற்றவர்கள் நாம் !
-1955

ஒரு தோற்றம்
வண்டிருந்து பாட விரிந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் பூக்கள் குறையா மருதநிலப் பாதையிலே போனேன்; * பனித்த இளங்காற்றென் மீதினிலே வீச, வியக்கின்றேன் ;
நேற்றே தான் பெய்த மழையிற் பிறந்த சிறு வெள்ளம் நெய்தலுக்குச் சென்ற வழியே அது : நிலத்தில் வைத்த வெறும் பாதம் வாரடித்த மென்மணலின் மெத்தையின் மீது மிதிக்க, மிதக்கின்றேன் !
கண்பட்ட தூரம் கழனிவெளி : செவியிற் பண்பட் டிருக்கும், பறவைக் குரல்களிவை.
57

Page 37
Ꮥ58
சாமை அரிசி அளவில் !
மற்றக் கணம்எம் மருமத் திறத்தாலோ புற்றுப்போல் நாலு புறமும் நெடுவான முட்டி வளர்ந்தெனது மூச்சை அழுத்தியன, கட்டிடங்கள் நூறு !
கயவர் சிலர் கூடிக் கற்சொரிந்தார் நான் போம் வழியில் : கரும்தாரை அற்பர் சிலபேர் அதன் மேலே ஊற்றுகிருர்,
வண்டி என்று சீறி வருகின்ற பேய்களினைக் கண்டு விலகிடவும், காலடிக்குள் ஒன்றுவரும் ! ஏறுகின்றேன் உள்ளே ; இதுவோ வளிக்கடலைக் கீறிக் கறங்காய்க் கிறங்கிக் கிளம்பியதே.
திக்குத் திசைகள் கரைந்து சிதைந்ததுவாய், எக்காலும் ஆன இறவா நிகழ்காலம் ஒன்றே நிலைத்ததுவாய் உள்ள வெளியினில், அவ் வண்டி ஒளிபாயும் வாகான வேகத்தில் அண்டத்துப் பாழை அகழ்ந்து பறக்கிறதாம் :
என்ருே இருந்து இன்று இடிந்து தகர்ந்தொழிந்த பூமி அதோ, அருகிற் புள்பறந்தால் கீழுதிரும்
சலிப்போடு பார்த்தேன் ; நம் மண்ணின் பழநிலைய்ை நோக்கி, அதன் வார்த்தைக் கியலா வரலாற்றைப் பேசுகிறேன்.

மக்கள் கிராமம் மறந்து புதுப் பட்டணங்கள் புக்கதுவும்,
காற்றுப் புகாத நெடுமாடி வீடுகளின் உள்ளேபோய் வீணே கிடந்ததுவும், பாடு முழுதும் இவர்க்காய்க் கருவியினம் பட்டதுவும், பின்னர் படிப்படியாய் முன்னேறிக் கொட்டம் இவைகள் புரியத் தெர்டங்கியதும்,
ஆரம்ப காலத் தலைந்த விலங்கினம் போல் ஆரும் பதறும் படியாய்,
அளவில்லாக் கோடி மிசின்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஒடி உலகை உலுப்பிக் குலுக்கியதும் கூட்டிக் குவித்த கொலைக் கணையின் குப்பையில் தீ . . . . . . மூட்டியதால் யாவும் முளாசத் தொடங்கியதும் கண்டேன்,
அடுத்த கணத்திற் சிறு பூமி
வெளி விண்ணெல்லாம் துர சாச்சு !
புத்தி தடுமாறிப் போக,
ஒரு வெளிச்சம் அத்திசையில் தோன்றி அனைத்துலகும் கவ்வியது! சத்தமொன்று கேட்டுட்
சராசரங்கள் ஆடியன !
பித்தம் சிறிது பிறகு தெளிந்திடவும், நாட்டார், தமது நலிவழித்து மீட்டளிக்கும் பாட்டை மறந்த பழி இதென்று கத்தினேன்.
-964
59.

Page 38
செல்லாக்காசு
வண்டி செல்கிற தெந்த வழியிலோ 1 பல வாரமாய்ச் சூட்டினில் மாடுபோல், செயல் மண்டிய நகரிலே வளைய வந்ததால், மானிட மனமுமோ மரத்துப் போனது ! நொண்டிய அதனை அந் நோயின் நீக்கிடும் நோக்க மொன்ருல் சில தூரம் தாண்டினேன் கண்டது வழியிலே எழில். இறங்கினேன். காலடிப் பாதையிற் கால் நடந்தன.
புல்லில் என் பாதங்கள் பட உண்டாகிய போதையைச் சொல்லினிற் போட்டுக் காட்டுதல் அல்ல என் நினைவு, வெம்பகல் எரிந்ததே ஆதலால், புகை இருள் எனப் படிந்ததும், கல்லினில் அமர்ந்துஅரைக் கணம் மகிழ்ந்திட்டேன். காற்றெனை அணைத்தின்பக் களைப்புண் டாக்கிற்று.
செல்லுது பொழுது !" எனத் திரும்பினுல், அதோ,
60
செல்கிற தாம் இவ்வூர்க் கடைசி வண்டியும்.

போய் ஒரு படலையில் தட்டினேன். அது * பொக்" கெனத் திறந்தது. பொழுதைத்துரங்க ஓர் பாய்கிடைத்தது. கிள்ளும் பசிக்கு வீட்டவர் பச்சை அன்பொடு காய்ந்த பாண் கிடைத்தது. வாய் இருந்தது அங்கே நுளம்புக்கு ! ஆயினும் வந்தது மரணத்தின் துளியைப்போல் துயில். காய்கிற கதிர்களின் சவுக்குப் பட்டதும் கண்விழித்தேன். இளங் காலை ஆனது.
தூங்கினீரோ இருவிழி நிறைந்திட ? துன்புறுத்திய துண்டோ பனிக்கடுங்குளிர் ? ஏங்கிடு வாரன்ருே தேடி நும்மவர்? இப்பொழு துண்டொரு வண்டி பட்டணம் ! ஆங்கிவை மொழிந்திடும் அந்த வீட்டவர் அன்புமோ அதே கணம் மறக்கற் பாலது? * நீங்கள் செய் நன்றிக்கு நன்றி " என்று நான் நீட்டினேன், பலர்க்கும் நாம் நீட்டும் தாள்ஒன்றை.
அப்பொழு தலர்ந்தஇன் முகத்தின் மென்மலர் அப்படிக் குவிந்திருள் அடைந்ததேன்! துயர் கப்பியதேன் ஒளி விழிகள் மீதிலே! காசையோ அவற்றின் சந்நிதிமுன் வீசினேன் ! குப்புற வீழ்ந்தன நிலத்தில் என்விழி கூறுதற் கின்றி என் உதடு மூடின. எப்படியோ பின்னர் நகர் திரும்பினேன். எனினும் என் உளத்திலே உயிர் தளிர்த்தது."
-96
61

Page 39
62
மற்றவர்க்காய்ப் பட்ட துயர்
போட்டர் மணி அடிக்கப், " போகட்டும் " என்று சொல்லிக்
காட்டர் கொடி எடுக்துக் காட்டக், கனைத்தபடி ஒட்டம் தொடங்கிற்று உயிர் பெற் ருெருவண்டி
கட்டிடங்கள் கீரைக் கழனிகளாய், நீள் கடல்போல் வெட்ட வெளியாய் வெறும் புல் அளவே போல் நெட்டை நிலங்களிலே நிற்கின்ற தென்னைகளாய், மாறிவரக் கண்டு மனம்விட் டிருக்கையிலே காறி உமிழ்வதற்கென் யன்னற் கதவிடுக்கில் வேருெருவன் நீட்டும் தலைகண்டேன்.
வெள்ளை மயிர் ! பாவம், கிழவன், பழுத்த உடல் மீது சாவின் வெளுப்பு, சளியோடு வெற்றிலையின் காவி நீர் துப்பிக் கடைவாய் துடையாமல், நிற்கின்ருன் மீண்டும் நிமிர்ந்தும், நிமிராமல்.

கற்கொண்ட நெஞ்சம் கனிவுண்டெழுந்து கொண்டு உட்கார விட்டேன்,
உவகையோ டுட்கார்ந்தான்.
வண்டி முழுதும் சனங்கள்,
வலதுகையை மிண்டு கொடுத்து, விழிமுன் மரச்சுவரே கண்டபடி நின்ற என் கால்கள் கடுத்தன. யன்னலிலே வைத்த கரத்தில் தலை சாய்த்துச் சின்னக் கிழவனே சிற்றுலகை முற்றும் மறந்து என்ன நினைவும் இல்லாமல் துயின்றிருந்தான்.
ஆதலினல் இன்பம் அடைந்தேனே ? அப்பனே, வேதனையிற் கூட விளையும் சுகம் உளதோ ? சாதலிலும் பேரின்பம் காணல் தகும்போலும் ?
எட்டுமணிமணி நேரம் எழுந்து நின்ற அவ்வளவில் கிட்டும் நிறைவு மனதில் கிளுகிளுக்கச் * சிட்டெழிலூர் " என்றின்று செப்பப் படுகின்ற
* சிட்டுக்காடு ' என்னும் சிற்றுாரில்
வண்டிகொண்டு κ. விட்டுவிட, வீடு விரைகின்றேன். மற்றவர்க்காய்ப்
பட்டதுயர்
இன்பம் பயக்கும் என்று பாடுகிறேன்.
962!س۔
63

Page 40
மீண்டும் தொடங்கும் மிருக்கு
மப்பன்றிக் காலமழை காணு மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது. ஏர் r
ஏறது. காளை இழுக்காது. எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைப்பான் என் ஊரான்.
ஆழத்து நீருக் ககழ்வான் அவன். நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான். ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது.பார் நன்னெல்லு.
தங்க நகைகள் தலைக்கணிந்த பெண்களே கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும், காதினிக்கப் பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல், முற்றி, மனிதன் முயற்சிக்கு இறைகொடுக்கும்

பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும்
அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத எந்தச் சொல் உண்டாம் எமக்கு ?
அவ்வுழைப்பாளி
உள்ளம் நெகிழ்ந்தான். ஒருகதிரைக் கொத்தாகக் கிள்ளி முகர்ந்தான் கிறுகிறுத்துப் போகின்றன்.
வாடும் வயலுக்கு வார்க்கா முகில், கதிர்கள் குடும் சிறுபயிர்மேல்
Gair' வென்று நள்ளிரவிற் கொட்டும், உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய் எட்டுத்திசையும் நடுங்க முழங்கி எழும். ஆட்டத்து மங்கையர் போல் அங்குமொய்த்து நின்றபயிர் பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே கொள்ளைபோல் வந்து கொடுமை விளைவித்து வெள்ளம் வயலை விழுங்கிற்று.
பின்னர்அது வற்றியதும், ஒயா வலக்கரத்தில் மண்வெட்டி பற்றி, அதோபார், பழையபடி கிண்டுகிருன், சேர்த்தவற்றை முற்றும் சிதறவைக்கும் வானத்தைப் பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றேன் வாழி, அவன் ஈண்டு முதலில் இருந்தும் முன்னேறுதற்கு மீண்டும் தொடங்கும் மிடுக்கு !
-1957
6.5

Page 41
66
புள்ளி அளவில் ஒரு பூச்சி
புத்தகமும் நானும்,
புலவன் எவனேதான் செத்தபின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல, மனம்
ஒத்திருந்த வேளை !
ஒழுங்காக அச்சடித்த வெள்ளைத்தாள் மீதில், வரியின் முடிவினிலே, பிள்ளைத் தனமாய்ப் பிசகாகப் போட்டகாற் புள்ளியைக் கண்டு புறங்கையால் தட்டினேன்
நீ இறந்துவிட்டாய் ! நெருக்கென்ற தென்நெஞ்சு,
வாய் திறந்தாய், காணேன், வலியால் உலைவுற்றுத் * தாயே !’ என அழுத சத்தமுமே கேட்கவில்லை.

கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு ஒர்
கீருகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே ஓரங்குலம் கூட ஒடி இருக்கவில்லை.
காட்டெருமை காலடியிற் பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்தது போல், பூட்டா நம் வீட்டிற் பொருள் போல நீ மறைந்தாய்.
மீதியின்றி நின்னுடைய மெய்பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது. தீதை மறந்துவிட மாட்டாயோ சிற்றுயிரே !
காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து மோதிற்று : w மீண்டும் படிக்க முடியவில்லை. பாதியிலே பக்கத்தை மூடிப் படுத்துவிட்டேன்.
-1962
67

Page 42
6ó
சிறு புல்
கல்லடுக்கி மேலே கனத்த உருளைகளைச் செல்லவிட்டுச் செல்லவிட்டுச் செப்பனிட்ட நல்லநெடு
வீதி.
அதனில் வெகுண்டோடும் வண்டிகளில் மோதி நடப்போர் முடிவெய்தும் தீதகல
இட்டநடைப் பாதை.
இவை இரண்டின் ஓரங்கள் முட்டுகின்ற கோட்டின் முடுக்கினிலே பட்டவிழிக்
கின்ப விருந்தாய், இருளில் ஒளிமின்னல் முன் பல்லைக் காட்டி முறுவலித்த பின் போய் ஒளியா ததுபோல் ஒரு புல் இருகைத்

தளிர் நீட்டி நின்ருள், தலையில் மிளிர்கின்ற பூவொன்றைக் கூடப் புதிதாய்ப் புனைந்திருந்தாள்.
காவிக்குயில் வாயில் காட்டிடையே
பாவொன்று
கேட்டதனை ஒக்கும் கிடுகிடுத்துக் கொண்டிருக்கும் பாட்டை இடை அப் பசுமையே!
நாட்டம் பிறவாகிச் செல்கின்ற பித்தர் உளத்தோடு உறவாடித் தந்தாள் உவகை. ه
இறவாது வேரிற் கிடந்து, வெடுக் கென்று மாரிவரப் பூரிக்கக் கண்டால், புளகம் மெய் ஊராதோ !
ஆழப் புதைந்த அறம்போல் முளைத்தெழுந்தாள் வாழ அவளுக்கென் வாழ்த்து.
69

Page 43
மஹாகவியின் முனைவு
* மஹாகவியும் முத்தையனுடைய (ஒரு சாதாரண் மனிதனது சரித்திரத்தின் நாயகன்) அதே மத்தியதர வர்க்கத்தவரே என்பது விளங்கும். தனது மத்தியதர வர்க்கத்து ஸ்திரமின்மையை எதிர்நோக்கி அதற்கு இணக்கம் உறுவதே, அவருடைய படைப்பின் பிரதான பாத்திரத்தின் தன்மைய்ாய் அமைந்திருப்பதால் அவ ருடைய படைப்பும், அப் படைப்பின் தன்மையும் அவர் தமது மத்தியதர வர்க்க ஸ்திரமற்ற் நிலைமையின் துண்டலுக்குற்ற ஓயாமுனைவு இணக்கமே என்ருகின்றது. மஹாகவியின் இந்த வாழ்வியல் இணக்கம் பிற சந்தர்ப்பங் களிலும் புலப்படுகின்றது. தேரும் திங்களும் என்னுங் கவிதையில் "கவலையிடை உய்ய விழையும் உளமும் உடைய வன்தான் ' என வரும், தொடரில் உள்ள, கவலையிடை - உய்ய - விழையும் விழைவுதான், இப் படைப்பில் உள்ள முத்தையனுடைய முனைவும் ஆகும். அவருடைய சிறுபுல் என்னுங் கவிதையிலும் இந்த முனைவே காணக்கிடக்கின் றது. அதனை, டி. எஸ். எலியட்டின் தரிசு நிலத்தோடு ஒப்பிடும்போது அம் முனைவு இன்னுந் தெளிவாகின்றது. புல் என ஒன்றை எதிர்பார்க்க முடியாத அந்தக் "கிடு கிடுத்துக் கொண்டிருக்கும் பாட்டையிடை அந்தத் தரிசு நிலத்தில் ஒரு புல் இருகைத் தளிர்நீட்டி நின்ற தைக் கண்டவுட்ன் மஹாகவி மெய்யூர்ந்த புளகம் அதே கவலையிடை - உய்ய - விழையும் உளத்தின் இனங்காணலே யாகும். சிலர், டி. எஸ். எலியட்டைப்போல் ‘* இந்தக் கற்களிடை என்ன வேர்தான் முளைக்கப்போகிறது. இதனிடையில் என்ன தளிர்தான் தழைக்கப்போகிறது.’
What are the roots that clutch What branches grow Out of this stony rubbish?... (Wasteland 1-19-20) என்று வெறும் வெறுமையையே எதிர்நோக்கி விரக்தி அடைந்துள்ளார்கள். ஆனல், மஹாகவி போன்ற சிலர் எந்தக் கல்லிடையேயும், எந்தப் புதரிடையேயும் உயிரினது ஓயா முனைவைக் காணக்கூடியவர்களாகவே உள்ளார்கள். மஹாகவியின் புள்ளி அளவில் ஒரு பூச்சி கூட புள்ளி அளவிலும் ஒரு முனைவு உள்ளதே என்ற பிரமிப்பும், அந்த முனைவுக்குத்தான் எமனுகிவிட நேர்ந் ததே என்கின்ற தாழமுடியாத பச்சாத்தாபமுமே. இவ்வாறு சிறு சிறு கவிதைகளிலே சிறு சிறு உணர்வாய் வெளிப்பட்ட மஹாகவியின் " கவலையிடை - உய்ய - விழையும் ' விழைவாகிய முனைவே அவருடைய ஒரு சாதாரண மனிதனது சரித்திரத்தில் ஒரு வாழ்க்கைப் பரப்பளவில் வெளிப்படுகிறது எனலாம்."
- சண்முகம் சிவலிங்கம் (ஒரு சாதாரண மனிதனது சரித்திரம். பக். 70-71)